கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பசிப் பிணி மருத்துவன்

Page 1
22”乙
•
އަހަރު→
柔
 

ଠୁଁ
CA). Ο صراع
ལྷོ་་་་་་་་་་་་་་་་་་་
磁
డ్లే ఫెర్ల Şනු * క్ష్ 8 F/7.:
AKS*becర్చింE2)

Page 2


Page 3

பசிப்பிணி மருத்துவன்
A
கவிதைத் தொகுதி
L]GIGAJ i ID... la TGOJ ĝis Jgå6) b
வெளியிடுபவரி : tu T. LDas (7 65 näa as6ß aI nib B. A. ( Hons. ) கூடலகம்,
மயிலங்கூடல், இள வரலை ,

Page 4
பசிப்பிணி மருத்துவன் ; நூற் பெயர்
புலவர் ம. பார்வதிநாதசி வம் !
ஆக்கம்
2001 மார்ச் : முதற் பதிப்பு
2002 ஏப்ரல் இரண்டாம்
ஆசிரியருக்கே
epuir. 100/=
பதிப்பு
gdsoape
விலை
ஏழாலை மஹாத்மா அச்சகம் : அச்சுப் பதிவு
கந்தர்மட்ம்,
Pasippini
( A Callection of Poems )
Author : Pulavar VM. Parvathinathasivam
First Edition : March 2001
Second Edition ; April 2002
Copy rights : Author ; , , , , )
Priec : Rs... 1001=
Printers : Earlalai Mahathma Printing works
Kandarmr adam.

அணிந்துரை வித்துவான் க. சொக்க லிங்கம் எம். ஏ. ( சொக்கன் )
ரையாசிரியர்'என்ற பட்டத்தினை,வித்துவசிரோமணி பென்னம்பலபிள்ளை அவர்களிடம் பெற்றவரும் நாவலரின் தலை மாணக்கருள் ஒருவருமான மட்டுவில் க. வேற் பிள்ளை திருவாதவூரர் புராணத்துக்கு எழுதிய உரையி னாலும் "ஈழமண்டல சதகம்" என்ற பெயரில் உருவாக்கிய பிரபந்தத்தினாலும் "தமிழ் கூறும் நல்லுலகம்" எங்கணும் தம் புகழ் நிறுவியவர்; நாவலர் அவர்களது சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராய் விளங் கியவர். இவர்தம் மக்களுள்ளே தமது கவித்துவத்தால் தமிழ்ச் சுவைஞர்களின் இதயங்களைக் கொள்  ைள கொண்டவர் சகுருகவி' மகாலிங்கசிவம், தமது ஆற்றலே துணையாய்க்கொண்டு தமிழிலக்கண இலக்கியங்களிலே துளைந்து துளைந்தாடிப் வேண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை மு த லா ம், தமிழ்ப் பேரறிஞர்களுக்குத் தாம் பெற்ற இன்பத்தைப் போல் நினைந்தூட்டும் தாயாய்ப் பருக்கி வளர்த்திட்ட பெருமையும் இவருக்கு உண்டு. பரீட்சை சுடாத பண்டிதரான மகாலிங்கசிவத்துக்கு மைந்தரி, புலவர் ம. பார்வதிநாதசிவம்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்.
என்பது பொய்யாமொழியாரின் பொன்மொழி. மகாலிங்க சிவம் அவர்களின் தகுதிப்பாடுகள் எஞ்சி நிற்கும் எச்சமே புலவர் பார்வதிநாதசிவம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே பேரறிஞர்களான மு. அருணாசலம்பிள்ளை, தண்டபாணி தேசிகர்( ம. க. வேற்பிள்ளையின் மாணாக்கர் ) முதலியோரிடம் மரபுவழி
iii ܕ ܪ ...
--

Page 5
அமைந்த உயர்தமிழ்க் கல்வி பெற்றுப் பு ல வ ரா ன பார்வதிநாதசிவம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நெருங் கிய தொடர்பினாலே புதிய சிந்தனைகளையும் உள்ளீர்த்து இன்று பண்டிதரும் அல்லாதாரும் போற்றிடும் நற்கவிஞராய் விளங்குகின்றமை வியப்பிற்குரியதன்று. மகாலிங்கசிவம் வித்திய வித்து, இன்று எவரும் விதந்து பே ா ற் றி டு ம் நடுவூர்ப் பழுத்த நன்மரமானது இயல்பேயாகும்.
புலவர் பார்வதிநாதசிவம் யாப்பறி புலவர். ஆனால்
காரிகை கற்றுக் கவிமாடு தலினும் பேரிகை கொட்டிப் பிழைத்தல் நன்றே. என்ற உண்மையையும் அவர் அறியாதவரல்லரி. யாப்புக்காய் வெற்றாரவாரச் சொற்களைப் பாட்டு வடிவில் வேலிகட்டி விளம்பும் கானல்நீர் நாடிகளின் வரிக்கத்தைக் கண்டு புன்னகை செய்பவர் அவர். கருத்துச் செறிவு, கற்பனை வளம் இலக்கியச் சுவை என்பன பொதுளும் வகையிலே கவிதை படைப்பது, தந்தை வழிப்பெற்ற முதுசொமாய் அவருக்கு அமைந்துள்ளது. இவ்வுண்மைக்கு எடுத்துக்காட் டாய் இன்று அவர் வெளியிடும் பசிப்பிணி மருத்துவன்" என்ற கவிதைத் தொகுதியினைத் தயங்காது காட்டலாம்.
இத் தொகுதியிலே பசிப்பிணி மருத்துவன்" என்ற குறுங்காவியம், "காதலும் கருணையும்" என்ற குறுங் காவிலும், மெய்யின்பம்", வாழ்க தமிழ்", "தெய்வம் மகிழ்ந்தது" முதலிய தனிப்பாடல்கள் பலவும் அடங்கி யுள்ளன.
சங்க நூலாகிய "புறநானூறு'ம், பின்வந்த இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான “மணிமேகலை’யும் பசி என்னும் கொடும்பிணி பற்றிப் பலபடப் பேசுகின்றன. மனிதரைப் பிணித்து வருத்தும் பெருங்கொடுமை பசிக்கு உண்டு.
மாணம், குலம், கல்வி வண்மை, அறிவுடைமை தானம், தவம், முயற்சி, தாளாண்மை - தேனிற் கசிவந்த சொல்லியர் மேற் காமுறுதல் பத்தும் பசிவந்திட்ப் பறந்து போம்.
ív

என்று கூ மு க் கு ப் பாடிய் ஒளவைப் பிராட்டி தனது பட்டறிவால் உணர்ந்து கூறிய பாட்டு சத்திய வாக்கே என்பதற்கு ஐயம் இல்லை.இதே பசியினைப் பட்டுணர்ந்தமை யாற் போலும் மகாகவி பாரதியும்,
தனிஒருவனுக்கு உண்வில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம். என்று சீற்றம் மிக்கு முழங்கினான்.
உடற் பிணியினைப் போக்கிடும் மருத்துவனிலும் உடலைச் சுமந்திடும் உயிர்க்கு வரும் பிணியாகிய பசியினைப் போக்கும் மகுத்துவன் உயர்ந்தவனே. இப்பசிப்பிணி மருத்துவன் பற்றிப் புறநானூற்றிலே (178) வந்துள்ள பாடல் அடிகள் ( 5 - 12 ) இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கன.
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்ட்ை கொண்டு வற்புலஞ் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக் கேம்ப்பச் சோற்றுடைக் கையர் வீறுவீற் றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே.
சிறு குடிக்குத் தலைவனான பண்ணன் என்ங்வனே இப் பாடலில் வரும் பசிப்பிணி மருத்துவன். அவனுடைய இல்லம் அண்மையிலோ, சேய்மையிலோ உள்ளது." என்பது பசிப்பிணியாளரின் வினா. வினாவப்பட்டவனோ சோழ மன்னன். (குளமுற்றத்துத் துஞ்சிய கி ள் வி வ ள வ ன் ) 'மழை பெய்தற்கு அறிகுறியாகத் திரள்கின்ற முகில்களைக் கண்டதும், பாதுகாப்புக் கருதித் தமது முட்டைகளோடு திட்டையான இடம் நோக்கி வரிசையாய் ந க ரி கி ன் ற எறும்புகள் போல, சோற்றுத் திரளைகளை ஏந்தியவண்ணம் வருகின்ற சிறுவர் கூட்டத்தைக் கண்ட பின்னரும், பசிப் பிணி மருத்துவனின் இல்லம் அணித்தோ சேய்த்தோ? என்று வினவுகின்றீர்களே" என்ற சோழனின் விவப்பு இப் பாடலிலே புலப்படுத்தப்படுகின்றது.

Page 6
புலவர் பார்வதிநாதசிவத்தின் மரபுணர்ச்சி பசிப்பிணி போக்கிடும் மருத்துவன் மூலம் பசிப் பரிகாரம் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுகின்றது. ஆனால்,
உடற்பசி நீக்குவது போதுமா? உள்ளப் பிணியாகிய கல்வியின்மையும் களையப்பட வேண்டியதன்றோ? என்ற வினாவை எழுப்பி அதற்கு வழிகாணும் செயற்பாட்டினைக் குறுங்காவிய நிகழ்ச்சியாய் அவரி வளர்த்தெடுக்க முற்படுகை யிலே, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வழியினருமாகும் தமது புதுமைப் போக்கினையும் இனங்காட்டி விடுகின்றார்.
on see • • • • • • • • • • • • • • • • • • - - ---- ---- « • • DifsB SINNULIůe கொடுக்கின்ற தர்மமே பெரிதாம் என்றே கூறிடுமே நீஅந்த ஈகையோடு அடுப்போர்க்கே உழைப்பாற்றல் கல்வி ஆற்றல் அத்தனையும் வழங்கிைே உயரச் செய்வாய்.
என்று, பசிப்பிணி மருத்துவன் பண்ணனுக்குக் கூறப்படும் அறிவுரை, சங்ககாலத்துக் களத்துக்கே இட்டுச் சென்றாலும், புதுமைக் கவி பாரதியின்,
அன்னசத்திரம் ஆயிரம் நாட்ட்ல்"
*ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற முழக்கத்தின் எதிரொலியாகவும் திகழ்ந்து புலவரின் புதுமை வேட்கைக்குக் கட்டியம் கூறுகின்றதெனலாம். "மலைவாழை அல்லவோ கல்வி? அதை வாயார உண்ணு வாய் நீ என் புதல்வி எனப் பாரதிதாசன் தனது புதல்விக் குக் கூறிய அறிவுரை புலவரின் குறுங்காவியத்திலே அனை வர்க்கும் பொதுவாக வடிவம் எடுப்பதும் குறிப்பிடத் தக்கதே.
தமிழுக்கு மட்டுமல்ல உலக மொழிகள் யாவிற்குமே காதலும், காதல் தியாகங்களும் அவற்றை உணர்ச்சிபூர்வ மாக இலக்கியச் சுவை குன்றாது எடுத்துக் கூறுவதும் புதியனவல்ல. சங்க காலத்து அகத்திணைப் பாடல்களிலும் பின்வந்த காவியக் காதல்களிலும் (ஆங்கிலக் காதற் கவிதை கீள், நாடகங்களிலும் கூட) துறை தோய்ந்த புலவர்.
V1

பார்வதிநாதசிவம் ‘காதலும் கருணையும் சிறுகாவியத் தைப் படைத்தளித்தமை வியப்பிற்கு உரியதன்று. தன்னாற் காதலிக்கப்பட்டவள் பிற ன் ஒருவனைக் காதலித்துத் தன்னைச் சகோதரனாக ஏற்றிட அதனால் விளைந்த சோகத்தில் வாழ்நாள்களை வேதனையோடும் விர க்தி யோடும் எண்ணிக்கொண்டிருக்கும் தலைவன், அந்த உடன் பிறவாச் சகோதரிக்காய் - அவள் மணவாழ்வில் மகிழ்வுடன் குலவுதற்காய் - அவள் இழந்த கண்களுக்குப் பதிலாய்த் தன் கண்களைக் கொடுத்திட முன்வரும் தியாகக் கதையாக அற்புதப் புனைவாக (Romantic)க் "காதலும் கருணையும்" புனையப்பட்டுள்ளது. கதையிற் புதுமை இல்லையெனினும் சொல்லும் முறையும், கற்பனை வளமும், வருணனைத் திறமும் படிப்போர் உள்ளத்தில் இன்பத்தை ஊட்டத் தவறவில்லை.
த ன் ன 7 ல் காதலிக்கப்பட்டவனின் சேர்க்கையைக்
காணாது தவித்திடும் உள்ள நிலையினைப் பின்வரும் பாடலின் உவமை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
நெய்யில்லாக் காரணத்தால் நேரம் ஒருவிதமாய்ச் செய்ய சிறுவிளக்குச் சீரழிந்தே மங்குதல்போல் நங்கையே நின் சேர்க்கை நான்காணாக் காரணத்தால் இங்கென் சிறுவாழ்வும் என்றெல்ாறும் தேய்வதிணை.
தமிழினைச் சுவைத்துச் சுவைத்துக் கனிந்திட்ட நிலை யினனான தலைவன் அந்தத் தமிழின் இன்பம் அனைத் தையும் காதலித்தவளின் கயல்விழித் துடிப்பிலே காண் பதும், அவளின் காதலுள்ளம் வேறொருவன் சொத்தம் என்று அறிந்ததும்,
இன்னும் என் ஆவி நிலையினிற் சிலநாள் இருக்குமோ இல்லையோ அறியேன் மன்னுவல் வினையால் உலகில்யான் இருப்பின்
வருகுவேன் இனிஎனக் கென்றும் துன்பமும் நோயும் அன்றிவே றெந்தத்
துணையுமே உலனிெல் உண்டோ ?
yi

Page 7
என்று கையறு நிலையில் கருத்தழிவதும் முதலாம் இடங்கள் மிகுந்த சுவை பயப்பன. அவற்றைச் சுவைஞர் படித்துத்தான் உணர்தல் வேண்டும்.
புலவரின் தன்னுணர்ச்சிப் பாடல்களாய் அமைந்த தனிப் பாடல்களில் அவரின் மானிடம் ஆங் காங் கே மேலேழுந்து அவர் காணும் காட்சிகளோடு எங்களையும் இணைத்து, உருகவும் பொங்கவும் உணரவும் வைக்கும் இடங்களும் பலவாகும்.
கஞ்சமலர் முகத்தாலே காதலினை நிதம்வளர்க்கும் துணைவி அந்தப் பஞ்சணையை எடுத்துவிடு பாயொன்றே போதுமினிப் பாரில் நாளும் துஞ்சுவதே அதனில்தான் ஏனென்றா கேட்கின்றாய் துயரால் வாடும் பஞ்சையர்கள் தெருவினிலே படுக்கின்றார் நமக்கு மட்டும் பகட்டும் வாழ்வா ?
என்பது போன்ற கேள்விகள், அகதிகளால் நிரம்பிவரும் எமது ஈழமணித் திருநாட்டில் இதயம் உள்ளவரைக் குத்திக் குதறிச் சித்திரவதை செய்யத் தவறமாட்டா.
பரம்பரையாக வந்த கவித்துவமும் கருத்துவழி வந்த உணர்வு நலமும் சங்கமிக்கும் கவிதைகளைப் படைத்திடும் புலவர் மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரி விக் க க் கிடைத்த வாய்ப்பை எண்ணி மிகவும் மகிழ்கின்றேன்.
வாழ்க அவர் தமிழ்ப் புலமை

முன்னுரை
கிேப்பிணி மருத்துவன் என்ற இனிய தொடரைப் புறநானூற்றிற் பார்த்த போது அதன் அழகும் பொருள் நயமும் கண்டு சந்தோஷப்பட்டேன். அந்தத் தொடரி வரும் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் புலவர் அல்லர் சோழப் பேரரசர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
அரசன் புலவனாக்வும் இருக்கும் காலத்தைத் தமிழின் பொற்காலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவது மிகவும் பொருத்தமான ஒன்றே.
வள்ளல்களைப் புலவர்கள் பாடுவது மரபு. வள்ளலை ஒரு பேரரசன் பாடுவது புதுமை,
இந்தப் புதுமையை நிகழ்த்திய சோழ மன்னன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் அவனாற் பாடப் பெற்ற பெருவள்ளல் பண்ணனும் என்னைக் கவர்ந்தனர்.
புகழ் கல்வியால் வரும் ; வீரத்தால் வரும் ; ஈதலாலும் பிறவற்றாலும் வரும் - எனினும் ஈதலால் வரும் புகழை - பசிப்பிணி நீக்கும் புகழை - திருவள்ளுவர் ஈதல் இசைபட வாழ்தல்" என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
பண்ணனின் ஈதலால் இசைபட வாழ்ந்த வாழ்வைக் குறுங் காவியமாக எழுத வேண்டும் என்ற ஆவல் என் மனத்தில் எழுந்தது. அதன் விளைவே பசிப்பிணி மருத்துவன் குறுங்காவியம். இது சஞ்சீவி வாரமலரில் தொடர்ந்து சில வாரங்கள் வெளிவந்தது. குறுங்காவியத்தை வாசகர்கள் பலரும் பாராட்டினரி. சிலர் பாராட்டிக் கடிதமும் எழுதினர். அவர்கள் தந்த ஊக்கம் பசிப்பிணி மருத்துவன் குறுங் காவியத்தை நூலாக வெளியிடத் தூண்டியது.
குறுங்காவியத்துடன் வேறு சில கவிதைகளையும் சேர்த்து வெளியிட்டால் பொருத்தமாக இருக்குமென நினைத்தேன்.
ix

Page 8
நூலாக வந்த காதலும் கருணையும், இரண்டு வரம் வேண்டும் குறுங்காவியங்களையும் வேறு சில தனிக் கவிதை களையும் சேர்த்துப் பசிப்பிணி மருத்துவன் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளேன்,
குறுங்காவியத்தைச் சஞ்சீவி வாரமலரில் தொsர்ந்து வெளியிட்ட பத்திரிகைத் துறை வல்லுநரும் பண்பாளரும் ஆகிய உதயன் சஞ்சீவி பிரதம ஆசிரியர் திரு. ம. வ. கானமயில் நாதன் அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.
இலக்கணப் புலமை - இலக்கியப் புலமை - சிறு க  ைத ஆற்றல் - நாடகத் திறமை எனப் பலவும் நிறைந்த முது பெரும் அறிஞர் க. சொக்கலிங்கம் எம். ஏ. அவர் க ள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். தமிழ்ப்பணி - கற்பித்தற் பணி என்று ஓயாது பணிபுரியும் அந்தப் பெருமகனுக்கு எனது நன்றிகள்.
ஒரு மாத காலத்துக்குள் பசிப்பிணி மருத்துவன் நூலை அச்சிட்டு உதவிய ஏழாலை மஹாத்மா அச்சக உரிமையாளர் திரு. ந. தெய்வேந்திரன் அவர்களுக்கும் அங்கு சுறுசுறுப்பா கப் பணிபுரியும் அன்பரிகளுக்கும் எனது நன்றிகள்.
அட்டைப் படத்தை அழகுற வரைந்து உதவிய ஓவியக்
கலைஞர் சபா அவர்கள் என்றும் என் அன்புக்குரியவரி, அவருக்கு எனது நன்றி.
புலவர் ம, பார்வதிநாதசிவம்

4
EF"
இரண்ர
l.
2.
3.
4.
5.
6. 7.
10. ll. 2. 13.
4. 15.
6. 17. 8. 9. 20.
.
22。 23.
24. 25。
உள்ளே ... !
குறுங்காவியb பசிப்பிணி மருத்துவன்
பல்வகை மலர்கள்
மெய்யின்பம் வாழ்க தமிழ் வருக புத்தாண்டே தெய்வம் மகிழ்ந்தது உழைப்பும் பொருளும் அபூர்வ வைத்தியர் வாடகை வீட்டு வாழ்வு குளிர் மதுவினில் ஒருவர் இல்லக விளக்கு கவிஞனும் துறவியும் கொழும்பு நகரில் சிறுபொழுது
காதல் மலர்கள் வாரஈரோ அன்பர் காதல் நெஞ்சைக் கவர்ந்த காட்சிகள் கனவு நனவாமோ ? தலைவன் தலைவி நாணமே தடை குறும்பாய் நகைத்தான் அவன் வாழி பந்தாடும் பாவை நீராடல் தேன் சிந்தும் செம்மலர்கள் காதலை அங்குக் கண்டேன்
குறுங்காவியம் காதலும் கருணையும் இரண்டு வரம் வேண்டும்
Lu &š4Sb
1 - 17
9 - 20
2 2 ܚ ܐ 29
23
24一 85
26 - 27
28 - 29
Ꭶ0 -- Ꮽ I
92
33 34 - 35 36 - 37
41 - 42
4.
44
45 - 46 47 - 48
49
50 - 5 52
历3
54 - 58
76 - 109

Page 9

பசிப்பிணி மருத்துவன்
(குறுங்காவியம் )
திங்கனியைப் புவித்தலத்தோர் உண்ண நல்கும் சிறப்புடைய பழமரத்தின் செயலைப் போற்றி ஆங்க வற்றின் மேனியிலே ஞாயி றென்பான் அன்புடனே பொன்னாடை போர்த்துங்காலை பூங்கொடிகள் விழிமலர்ந்தே இதனைக் கண்டு புவித்தலத்தே மிகமகிழ்ச்சி கொள்ளும் காலை! தீங்குயிலும் பிறபுள்ளும் இசைச் செல்வத்தின் சிறப்பதனைக் கூறுகின்ற இனிய காலை
அவ்வினிய காலையிலே பண்ணன் என்னும் அருளுடையோன் அறிவுடையோன் ஈகை வல்லோன் செவ்வியதாம் சிறந்ததுவாம் குதிரை ஏறிச் செல்கின்றான் வீதியிலே வீதியோரம் இவ்வுலகின் அழகெல்லாம் மலர்களாக இலங்குவதைக் கண்டே நல் இன்பம் கொண்டான்! எவ்வெவர்க்கும் நன்மையே ஆற்றும் மேலோன்! ஈத்துவக்கும் இன்பத்தை நுகரும் நல்லோன்!
ஆண்டவனைக் கண்ணாரக் கண்டு விட்ட அடியவர்தம் முகம் போல மலருமி பூவும் வேண்டியவன் வரக்கண்ட காதற் பெண்ணின் மிக அழகுமுகம் போல மலரும் பூவும் துண்டுமொரு பசியுடைய சேய்க்குச் சோற்றை ஊட்டுகின்ற தாய்முகம் போல் மலரும் பூவும் ஆண்டுவரும் வழியெல்லாம் மலரக் கண்டான் அன்பார்ந்த பண்ணன் உளம் மலரலானான் !

Page 10
கண்ணுக்கு விருந்தளிக்கும்; வண்டு வந்தால் கருத்துடனே தேனளிக்கும்; அழகு வாய்ந்த பெண்ணுக்குக் கூந்தலிலே அழகு சேர்க்கும்; பெரும் பொருளாம் இறைவனடி தானும் சேரும் மண்ணுக்குள் படைப்புகளில் மலரைப் போல வாய்ப்புடைய பிறவிகளும் உண்டோ? என்றே எண்ணிக் கொண்டே பண்ணன் செல்லலானான் இதயமெல்லாம் அன்பொன்றே விளங்கும் பண்பன்
நாட்டுக்குத் தோள் கொடுத்தான் வறியோர் தங்கள் நலிவுக்குக் கரமீகொடுத்தான்! புலவர் பாடும் பாட்டுக்குப் புகழ் கொடுத்தான்! திக் கற்றோர்க்குப் பரந்த பெரும் நிழலானான் மூவேந்தர் தம் ஆட்சிக்கும் இல்லாத பெயரைப் பெற்றான்! அறம் தெரிந்தான் என உலகாற் போற்றப் பெற்றான் ஏட்டுக்குப் பொருளானான்! எனினும் மற்றோர் எல்லோர்க்கும் பணிகின்ற பண்பு பெற்றான்!
இல்லை எனும் சொல்லறியான்
இல்லையென்றோர்க் கில்லையென்னா தீயும் வள்ள இதயமெலாம் கருணைமழை பொழியும் வள்ளல் அல்லலுற்றோர்க் கென்றென்றும் உதவும் வள்ளல் அன்பு பொதி இன்சொல்லே வழங்கும் வள்ளல் தொல்லுலக அறநூல்கள் சொல்வதான தூநெறியில் என்றென்றும் விலகா வள்ளல் முல்லையூர் என்கின்ற கிராமத் தோரை முழுவிருப்பால் பார்ப்பதற்குச் செல்லுகின்றான்!
2

பண்ணவள்ளல் வருகின்றான் என்ற செய்தி பாகாகத் தேனாக இனித்ததாலே திண்ணிய ராம் முல்லையூர் மக்கள் எல்லாம் திரண்டார்கள் வள்ளலினை வரவேற்றார்கள்
'ಹಣೆ:ರ್ರಾ ಇಂಶ್ಲಿಕೆ உமைக்கான இன்று வந்தேன்
காலமெல்லாம் உழைக்கும் உமை வாழ்த்துகின்றேன் இன்னுமுங்கள் சிற்றுாரின் உயர்வுக்காக என்ன பணி யான் செய்ய வேண்டும்” என்றான்!
"வள்ளலே நாம் வாழ நிலத்தை ஈந்தீர் வளமாக்கி வயலாக்க நிதியும் ஈந்தீர்! கொள்ளரிய ஏர், எருதும் விதைக்கும் நெல்லும் கொடுத்துதவி புரிந்திட்டீர் இன்று நாமும் பிள்ளைகளும் குறையேதும் இல்லாராகிப் பசிப்பிணியில் விடுபட்டே, வாழுகின்றோம்! வள்ளலே இதுபோதும்" என்றார் மக்கள் மனமகிழ்ந்து பண்ணனவன் சொல்லுகின்றான்
என்னருமை மக்களே! பசியை வெல்ல எல்லோரும் உழைத்தீர்கள் மகிழ்ச்சி உற்றேன் இன்னுமொரு பசி உண்டே அதையும் நீங்கள் இக்கணமே வெல்லுதற்கு முயல்தல் வேண்டும் மன்னுயிர்க்குப் புவியினிலே பசி ஒன்றாகும் மானிடர்க்கோ என்றென்றும் பசி இரண்டாம் துன்னுமுயர் கல்வியினைப் பெறுவோமென்று துடிக்கின்ற அறிவென்னும் பசியதாகும்!

Page 11
யார்க்கும் வேண்டும் கல்விச் செல்வம்
பசிப்பிணியை வென்றாலும் கல்வி என்னும் பகரரிய விழிபெறார் குருடர் அன்றோ? நசிப்பதற்கும் நலிவதற்கும் பல்லோர் வாழிவு நைந்திற்றுப் போவதற்கும் கல்வி என்னும் இசைப்பொருளை எய்தாமை என்ற ஒன்றே இருக்கின்ற காரணம் நீர் அறிதல் வேண்டுமி திசை தோறும் உமைமதிக்க வேண்டும் என்றால் திகழ் கல்விச் செல்வம் நீர் அடைதல் வேண்டும்
*ஏடென்றால் என்னென்றும் அறியா வண்ணம் எமீ பெற்றோர் வாழ்ந் திட்டார்!" என்றே நீங்கள் கேடொன்றும் மற்றவரைக் கூறல் வேண்டாம்! கிளக்கரிய கல்வியினைக் கற்பதற்கே நாடென்றும் வயதென்றும் தடைகள் இல்லை நல்லார்வம் ஒன்றிருந்தால் எளிதாம் யார்க்கும் பீடெய்த வேண்டுமெனில் இன்றே நீங்கள் கற்றிடுவீர்! பிள்ளைகட்கும் அதுவே வேண்டும்.
உயர்ந்த மொழி நம் தமிழே. உலகிலுள்ள பலவாய மொழிகளுள்ளும் உயர்ந்த மொழி நம் தமிழே அதைக் கற்காமல் நலமிழந்து வாழ்வதுவோ? இதனைப் பற்றி
நன்கே நீர் சிந்தித்துப் பார்த்ததுண்டோ? பலகலையும் நம் சொந்தம் உலகம் கானாப்
பண்பாடும் நம் சொந்தம் சுவைகுன்றாத இலகுபல நூல் சொந்தம் இதனை யெல்லாம் இனியேனுமீ நீர் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
4.

அறமிதென்றும் மறமிதென்றும் எடுத்துக் கூறும் அற்புத நூல் திருக்குறளும் நமக்குச் சொந்தம் உறுவிதியின் ஆற்றலினை விளக்கிக் கூறும் உயர் நூலாம் சிலம்பும் தான் நமக்குச் சொந்தம் திறமை தரும் போர் நூல்கள் நமக்குச் சொந்தம் தித்திக்கும் காதல் நூல் நமக்குச் சொந்தம் பெறலரிய இலக்கியமாம் செல்வம் பெற்றும் பின்னிவற்றைக் கற்றிலமேல் பிறவி ஏனோ?
அருவிஒலி தருமீ இன்பம் மழலை இன்பம் அன்பான காதலியின் இதழின் இன்பம்! பெருவளம் செய் நல்லாற்றில் நீந்தும் இன்பம் பேரெழில்கொள் சோலையிலே உலவும் இன்பம் தருவெல்லாம் தருகின்ற கனியின் இன்பம் தக்கசுவைப் பொருளெல்லாம் நல்கும் இன்பம் பொருவில் தமிழ் இன்பத்தின் பின்னே என்ற புதுமையினை அறியாது வாழ்தல் நன்றோ?
நாளை முதல் தமிழ் கற்ற புலவர் தமிமை நன்கிங்கே அனுப்பிடுவேன் அவர் பால் நீங்கள் வேளை தொறும் கற்றிடுங்கள் கருப்பஞ்சாற்றின் மிகுசுவையை அறிந்திடுங்கள்! என்றும் சொன்னான் ஏழைகள் பால் அன்புவைத்த பெரியோய் நிதான் ஈதலினால் வள்ளல் எனும் சிறப்புப் பெற்றாய் நாளை கல்வி நமக்களிக்கும் காரணத்தால் நமக்கெல்லாம் நீ இறைவன்தானும் ஆவாய்"

Page 12
என்றுரைத்தார் மக்களெல்லாம் இதனைக் கேட்டே இன்புற்ற பண்ணனவன் தன் வீட்டுக்குச் சென்றிட்டான் அப்போது மதியவேளை திரண்டிருந்தார் ஏழையர்கள் அவன் தன் வீட்டில் *நற்பண்பு மக்களே! பசியை நீக்க நாடி என்பால் வந்தீர்கள் உவகை உற்றேன்" என்றுரைத்தான் குரல் கேட்ட ஏவலாளர் ஏழையரை உணவளிக்க இருத்தினார்கள்.
ஈத்துவக்கும் இன்பம் முதியோர்கள் பலர் இருந்தார்! உழைத்தல் ஆற்ற முடியாதோர் பலர் இருந்தார் முன் வராத புதியோரும் அங்கிருந்தார் சுற்றத்தோரால் புறக்கணிக்கப்பட்டோரும் அங்கிருந்தார்1 இதயமெலாம் ஆண்டவனை இருத்தும் பண்ணண் இவர் நடுவே நின்றிட்டான் ஏவலாளர் அதுபோதில் எல்லோர்க்கும் உணவிட்டார்கள் அன்பாகப் பண்ணன் 'உண்ணும் உண்ணும்" என்றான்
வயிறார உண்ட இளம் சிறுவர் தாமும் மற்றுளரும் பசிக்களைதான் தீர்ந்ததாலே உயிராக விளங்குகின்ற பண்ணனுக்கே
e-60yurgy Lb குறிப்பாலும் நன்றி காட்டி நயமாக மிகுதிச் சோற்றினை உருட்டி நல்லொழுங்கிற் சென்றார்கள் இந்தக் காட்சி அயராத எறும்பு மழை வருதல் எண்ணி அதன் முட்டை கொண்டு செலல் போன்றதாலோ,
6

இரவென்று வந்தாலும் பகல் வந்தாலும் எப்போதும் சோறளிக்கும் பண்ணன் வீட்டில் பெருவெள்ளம் வருவது போல் பசித்தோர் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கும் பழுத்ததான மரமொன்றிற் பறவையின ஆரவாரம் மண்ணிடையே கேட்பது போல் ஒலிதான் கேட்கும் உரமுடையான் பண்ணன் போற் பலர் இருந்தால் ஒடி ஒளித்திடப் பசிதான் இடம் தேடாதோ?
வற்றா ஆற்றினைக் கடந்தும் வளர் மரங்கள் வகை வகையாய் ஓங்கிய காட்டினைக் கடந்தும் கற்றோரும் வியக்கின்ற புலமை வாய்ந்த கவி ஒருவன் வந்திட்டான் * பண்ணனே நீ அற்றோர்க்கே உதவுகின்ற வள்ளல் தமிமுள் அதிசயக்கத்தக்கவன் காண் அதனால் அன்றோ சற்றேனும் பிறரை வியவாத சோழன் தமிழ்க்கவியால் நின்புகழைப் பாடினானே!"
என்றந்தப் புலவனுரை செய்த போதில் இனியகுணப்பண்ணனுமே அவனை நோக்கி
நன்றுங்கள் போற்றுதல்கள் சோழன் கிள்ளி நயமாக வள்ளல் எனப்புகழ்ந்தான் என்னை கொன்றொழிக்கும் பசிபோக்கும் காரணத்தால் பசிப்பிணிக்கு மருத்துவன் நான் என்றும் சொன்னான் ான்றும் நான் மருத்துவன்தான் முல்லையூரில் விருப்போரின் கல்வி இன்மை என்னும் நோயும்
7

Page 13
நீக்கவெனத்துணிந்திட்டேன் இதற்கு நும்போல் நிறைகுடங்கள் உதவி தேல் வேண்டும்" என்றான்! வாக்கதனைக் கேட்டதுமே புலவர் சொன்னார் *வள்ள லே பண்ணனே! உன்னுள்ளத்தின் நோக்கமதை நானறிந்தேன் ஓரிடத்தில் நிலைத்திருந்து கற்பிக்க நேரங்காணேன் வாழ்க்கையெல்லாம் பெருங்குடும்பம் தன்னைத்தாங்கும் பொறுப்புடையேன் இங்கிருக்க வழிதான் உண்டோ?
முரசுறங்கும் கட்டிலிலே உறங்கிவிட்ட முத்துறங்கும் கவிவல்லோன் மோசிகீரன் பெருமையை நீ கேட்டிருப்பாய்! திண்டோன் வாய்ந்த பெருமன்னன் இரும்பொறைதான் அவனுக்கன்று அருமையுறச் சாமரை விசினனே அன்றோ? அப்பெரிய புகழ் மோசி கீரனாரின் பெருங்குடியில் ஒரு பெண்ணாள் தமிழ்நாடெங்கும் கல்விக்குப் பெருந்தொண்டு செய்கின்றாளால்
அருள்விழியின் தியாகம்
தாமரைபோல் எழில்முகத்தாள் விழிகள் என்றே தண் கயத்துக் குவளைகளைச் சேர்த்துக் கொண்டாள் பாமலர இடமாகும் மேனிபெற்றாள்! பாலோடு தேன் கலந்த வார்த்தை பெற்றாள்! பூமலரும் நகை பெற்றாள் கூந்தலாகப் புவித்தலத்தே கார்முகிலைப் பெற்றுக்கொண்டாள் பூமிதரும் எழில் பெற்றாள் எனினும் நாடிப் புவித்தலத்தே துறவுநெறி வாழ்வு பெற்றாள்!
8

இளமைதரும் பொலிவெல்லாம் சிறக்கப்பெற்றாள்! இடைபெற்றாள்! கொடியானாள் அங்கம் எல்லாம் வளமிகுந்த பொழிலானாள் காண்போர் நெஞ்சை வாட்டுகின்ற தோற்றத்தாள் ஆனபோதும் இளமையிலே துறவு பெற்றாள்! ஏனோ என்றால் இவ்வுலகிற் கல்வி இலார் வாடுகின்ற நிலைநீக்கிக் கொள்வதற்கே! என்றும் சொன்னாள் அருள் விழியே எனும் பெயரைக் கொண்டான் பாவை!
இவ்வுலகை வெறுத்ததனால் துறவி ஆனோர் இருக்கின்றார் மிகப்பலபேர் இவனோ மற்றும் இவ்வுலகை விரும்பியதால் துறவி ஆனாள் ! எண்ணுங்கால் இது மிகவும் வியப்பே அன்றோ? இவ்வுலகோரி கல்விபெற வேண்டும் என்றும் இவ்வுலகோர் தமிழ் கற்க வேண்டும் என்றும் இவ்வுலகில் நல்லொழுக்கம் வேண்டும் என்றும் இனியபணி புரிவதற்குத் துறவி ஆனாள்!
"பண்ணனிது கேட்டதுமே மகிழ்ச்சி எய்திப் பாவையினை உடனழைத்து வருதல் வேண்டும் ாண்ணரிய கல்வியெனும் செல்வம் தன்னை இச்செல்வி முல்லையூரார்க்கு நல்கித் கிண்ணியதன் துறவினையும் காத்திடட்டும் திகழ்சமய வளர்ச்சியையும் பார்த்திடட்டும் பெண்ணவளின் வருகையினால் முல்லையூரார் பெருங்கல்வி உடையவராய் விளங்கக் காண்போம்!
9

Page 14
பொறிஐந்தை இளவயதில் வென்றாள் என்றால் போற்று தமிழ்ப்பணியினிலே நின்றாள் என்றால் அறிவென்ற செல்வத்தை வழங்கும் ஆற்றல் அவளுக்கே மிகப் பொருத்தம் ஆகும் அன்றோ? செறிவுடைய நல்லறிஞ! சென்றிப்போதே சேயிழையை அழைத்துவந்தே எனது மக்கள் அறிவு பெற வழிசெய்க துறவு கொண்ட அருள் விழியின் தமிழ்த்தொண்டு நமக்குத் தேவை?
பண்ணன் இவ்வாறுரைத் திடலும் புலவர் தாமும் பாரிடையே மிகமகிழ்ச்சி கொண்டாராகி எண்ணுங்கால் நின் போன்ற வள்ளல் யாருத் இருப்பதாய் என்ற னுக்கே தெரியவில்லை உண்ணுதற்குச் சோறளிப்பாய் சோம்பிடாதே உழைப்பதற்கு நிலம் கொடுப்பாய் அதும் அல்லாமல் கண்ணனைய கல்வியினைக் கற்பதற்கும் கருத்துடனே வசதியெல்லாம் செய்து வைப்பாய்!
உழைப்பை உணர்த்தி உயரச் செய்வாய்
எடுப்பான தோற்றத் தோய் ஈகை தன்னால் இன் சொல்லால் யாவரையும் கவர்ந்தநல்ல குடிப்பிறந்த சிறப்புடையாய்! பண்ணனென்னும் குணக்குன்றே என்றும் தான் இந்த வையம் கொடுக்கின்ற தர்மமமே பெரிதாம் என்றே கூறிடுமே! நீ அந்த ஈகையோடு அடுப்போர்க்கே உழைப்பாற்றல் கல்வி ஆற்றல் அத்தனையும் வழங்கியே உயரச் செய்வாய்!
10

என்றந்தப் புலவன் உரை செய்தே சென்றான் சிலநான்கள் ஏகியபின் உள்ளம் எல்லாம் நன்றிருக்கும் அருள் விழியாள் பண்ணன் வீடு நண்ணினாள் நல்வரவேற்பவட்குச் செய்தே *என்று மெழில் வீசுகின்ற முல்லையூர்க்கே ஏந்திழையே நின்தொண்டு வேண்டு " மென்றான் "நன்றிந்தப் பணிபுரிவேன்” என்றே பின்னும் நல்லுளஞ்சேர் அருள் விழியாள் கூறலானாள்!
*போரென்னப் பொலிகின்ற தோள்கள் பெற்றும் புகழ் ஒன்றே விளைக்கின்ற வாழ்வு பெற்றும் பாரெங்கும் நமிழ்மொழியைப் பரப்புகின்ற பணியினிலே கூறரிய சிறப்புப் பெற்றும் நேரின்றி விளங்குகின்ற பண்னனே! நின் நேர்மைக்கு வணக்கங்கள்! தமிழர் தங்கள் பேரிருளை நீக்கியே ஒளிசேர்க்கின்ற பெருஞ்சுடரே! நீ வாழ்க! நீடுவாழ்க!
ஒழுக்கத்தால் நற்குணத்தால் உயர்ந்தாய் என்றும் உயர்தமிழைத் தெய்வமாய்த் தொழுவாய் என்றும் பழுத்த தமிழ்ப் புலமையினால் சிறந்தாய் என்றும் பழுதில் தமிழ்நலம் காக்கப் பிறந்தாய் என்றும் வழுத்துகின்றார் புலவர் எல்லாம் நீ செய்கின்ற வளமான பணிசிறக்க வாழ்த்துகின்றேன்! இழுக் கறியா நெறியினிலே மக்கள் வாழ இயன்றபணி ஆற்றிடுவேன்” என்றும் சொன்னாள்
1

Page 15
"தமிழ்மொழியின் பெருமையினை உலகத் தோர்கள் தாமறியத் தொண்டெல்லாமி ஆற்றுகின்ற அமிழ்தனைய குணக்குன்றே நின்றன் தொண்டால் அருந்தமிழின் கலாசாரம் தூய்மை எல்லாம் இமயமதில் இட்டதொரு தீபமாக எல்லோர்க்கும் ஒளிநல்கக் காணுகின்றோம்! தமிழறிந்த வள்ளல்களுள் பெரியோன் ஆகும் தகுதியெல்லாமி நின் சொத்தே" என்றும் சொன்னாள்
"துறவியே தங்களது வருகை நன்று தூய எங்கள் முல்லையூர் மக்கள் எல்லாம் நிறைவாய கல்வி நலம் வாய்க்கப் பெற்றும் நிலையான பண்பெல்லாம் வாழ்விற் பெற்றுமி அறிவாலும் குணத்தாலுமீ அன்பினாலும் அவனியிலே சிறந்திட்டார் என்றதான செறிவான வார்த்தையினை நான் கேட்டற்குச் செவ்விய தொண்டினை வேண்டுகின்றேன்? என்றான்
இளந்துறவி இவ்வாறு பண்ணன் கூற இனிதுவந்தே முல்லையூர் தன்னைச் சேர்ந்தாள்! வளமிகுந்த குடிசை ஒன்றை அமைத்தே அங்கு அருள் விழிதான் வசிப்பதற்கு வசதி செய்தார். உளம் நிறைந்த மனத்தினராய் இருந்த அந்த ஊரவரெல்லோரையுமே அழைத்தே ஓர் நாள் பழம் கனியும் இன் குரலில் அவரை நோக்கிப் பகர்ந்திட்டாள் துறவி அருள் விழியான் தானே!
2

பெண் கல்வி அவசியம்
"பண்ணன் எனும் பெருவள்ளல் கல்விநல்கப் பண்புடனே எனை உம்பால் அனுப்பி வைத்தான்! கண்ணனைய கல்வியைநீர் பெறுதல் வேண்டும்! கற்பதெல்லாம் ஏன் எனவும் அறிதல் வேண்டும்! எண்ணரிய நூல் கற்றும் கற்ற கல்வி இணையவில்லை வாழ்வில் என்றாற் பயனும்'உண்டோ? பெண்களும் தான் ஆண்களும் தான் கற்றல் வேண்டும் பேசுமுயர் கல்விவழி நிற்றல் வேண்டும்!
கற்றதனால் ஆயபயன் இறைவன் பாதம் காலமெல்லாமீ தொழுதிடுதல் தொழும் போதே நாம் மற்றிறைவன் நோக்கத்தை அறிதல் வேண்டும் மனதார அவன் நெறியில் வாழ்தல் வேண்டும்! பற்றதனால் பிறஉயிரை நோக்க வேண்டும் பாரிலவை நன்மைபெற உழைத்தல் வேண்டும் குற்றமிலா உயர்வாழ்வு வாழ்தல் வேண்டும் குவலயத்தே அறிவு பெற்றோர் செயல் வேறுண்டோ?
காடாக இருந்த இடம் தனைத் திருத்திக் கழனிகளும் சோலைகளும் ஆகும்வண்ணம் நாடாகச் சிறப்பதற்கு நன்மை செய்த நல்லுளத்தோன் பண்ணனே என்றும் பற்றுக் கோடாக இருக்கின்றான் என்ற ஒன்றே குவலயத்தே தனிப் பெருமை உமக்குச் சேர்க்கும் வாடாத மலர் போலக் கிராமம் என்றும் வளமாகத் திகழவுங்கள் உழைப்பே வேண்டும்.
13

Page 16
நாடாக இருந்தாலும் நலங்கள் மேவாக் காடாக இருந்தாலும் உயர்ந்த தான மேடாக இருந்தாலும் பள்ளமாக மேதினியில் இருந்தாலும் உயர்வே எல்லாம் பீடான ஆடவரால் என்றே அவ்வை பாடியதைப் பெருமையுடன் மனத்திற் கொள்வீர் ஏடேயும் பண்பெல்லாம் சிறக்கும் வண்ணம் இவ்வுலகில் இனிதாக வாழ்ந்தும் கொள்வீர்".
என்றெல்லாம் பலமொழிகள் கூறிப்பின்னர் ஏற்ற தொரு நாளினிலே அவர்க்குக் கல்வி என்ற தொகு பேர முதைத் துறவி நல்க ஏற்கும் நற்பாத்திரமாய்ச் சிறந்தார் யாரும் குன்றன்ன குணப்பண்ணன் ஒருநாள் வந்தே குணம் விளங்கும் துறவியே நீவிர் ஆற்றும் நன்றாய பணிக்கெல்லாம் நன்றி சொன்னேன் நாளை நான் சோழனிடம் செல்ல உள்ளேன்.
சோழன் எனைச் சிலநாள்கள் தன் பால் வந்தே தங்கிடவேண்டும் என்ற சேதியோடு ஆள் அனுப்பி யிருக்கின்றான் அதனால் நாளை அவனிடம் நான் செல்கின்றேன் முல்லை ஊரில் வாழுகின்றோர் கல்விநிலை என்ன என்றே மண்ணிடையே அறிய விழைகின்றேன் என்றான் நான் எல்லாம் கல்வியினை உவந்தே நல்கும்
நல்லஉளத் துறவியும் தான் மகிழ்ந்தே சொல்வாள்.
14

தங்குதற்கும் இடம் இன்றி ஊர்கள் தோறும் கடும் பசியால் அலைந்தோரை எல்லாம் நீதான் இங்கழைத்துக் காடழித்து நாடேயாக்கி இருக்கும் இடம் முதலாக அனைத்தும் ஈந்தே தங்கள தாம் உழைப்பினிலே நன்றாய் வாழும் தன்மான நிலையினிலே அவரை வைத்தாய் இங்க வரை கல்வியிலே உயரச் செய்யும்
இனியதொரு பணியினையும் எனக்குத் தந்தாய்,
தன்னிறைவு பெற்ற முல்லையூர்
என் பணியால் இன்றவர்கள் கல்விபெற்றார் கல்யியினால் பண்பாடும் இனிதிற் பெற்றார் நன்மை திகழ் சிற்றுாருள் முல்லை ஊரே நன்கு முதலிடத்திருக்கக் காணுகின்றேன் பொன்னனயை குணத்தினராய் உழைப்பினாலே புவித் தலத்தே தம் காலில் தாமே நிற்கும் தன்னிறைவும் பெற்றிட்டார் பண்ணனே நீ தரையினிலே பெருவெற்றிகண்டாய்” என்றாள்.
ஊர்மக்கள் திரண்டார்கள் நன்றி என்றே உவப்புடனே கைகூப்பி மேலும் சொன்னார் பார் போற்றும் கல்வி எல்லாம்தன்பாற் கொண்ட பைந்தமிழ்ச் சொல் அருள் விழியார் காலமெல்லாம் சீர் மிகுந்த முல்லையூர்தன் னில் வாழ்ந்தால் செய்தவத்தை நாம் பெற்றோம் ஆவோம் என்றார் ஊரவரின் வேண்டுகோள் தன்னைக் கேட்டே உவப்புடனே துறவிதான் நின்ற வேளை
15

Page 17
அங்கமிகும் மலர்சுமந்தும் தூயதான பெருநோக்கைத்தான் சுமந்தும் L6v2SMI QB5 & C5 fò பங்கமிலாப் பணிசெய்ய ஓடுகின்ற பேராற்றை நீஇங்கே நிற்பாய் என்றே இங்கெவரும் சொல்வதுண்டோ? ஆற்றின் தேவை எல்லோர்க்கும் உரியதன்றோ? அதே போலத்தான் இங்குதுற வியின் பணியும் பலர்க்கும் தேவை என்பதனை அறிந்திடுவீர்" என்றான் பண்ணன்
"யாதும் ஊர் யாவருமே கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் உரை அறிவீர் அன்றோ! ஏதிலராய்த் தமிழ்நாட்டில் பலர்சிற்றூரில் இருக்கின்றார் மக்கள் பலர் அவருக்கெல்லாமி நீதிதரு நற்கல்வி கற்பித் தற்கு நினைக்கின்றேன் விழைகின்றேன் அதனா லேதான் போதலினை விரும்புகின்றேன் வார மொன்றிற் போகஉளேன் " என்றேதான் துறவி சொன்னாள்
அருள் விழியின் மொழிகேட்ட பண்ணன் தானும் அருள்விழியின் பணிக்கெல்லாம் நன்றி கூறிப் பொருள்விரும்பா யானாலும் முல்லை ஊரார் புவியிடைத்தம் நன்றியினைக் காட்டற் கென்று தருநிதியைப் பெற்றிடுவாய் என்றும் சொல்லித் தன்கையால் நிதிகொடுத்தே ஊர்க்குச் சென்றான் அருள் விழியாள் ஒருவாாம் முல்லை ஊரில் அன்பமைந்த மக்களுடன் வாழ லானாள்.
16

ஆசிரியத் தொழிலினர்க்கு மிச்சமெல்லாமீ ஆயிரம் மாணவர் நமக்குச் சொத்த மென்ற பேசுமொரு புகழினொடு மனத்தின் கண்ணே பெருகுமொரு நிம்மதிதான் என்ற உண்மை தேசு நிறை அருள் விழியாள் செயலிற்காட்டிச் சென்றிட்டாள் இன்னும்தான் கல்வி காணார் தேசமெங்கும் இருக்கின்றார் அவர்க்குக் கல்வி செகத்தினிலே வேண்டுமென்றே செல்லலானாள்
முல்லையூர் கல்வியினால் உழைப்பா லேமு ன் மாதிரியாய் மற்றுள்ள சிற்றுார்க்கெல்லாம் நல்லொளியைப் பரப்பியது பண்ணனார்க்கும் நல்லுள்ளத் துறவிக்கும் முல்லை ஊரால் சொல் லரிய புகழ்வளர வள்ளல் எல்லாம் தேடி வந்து முல்லையூர் வளத்தைப் பார்த்தார் இல்லையெனும் சொல்லன்றி முல்லை ஊரில் இல்லாத பொருள் இல்லை என்றே கண்டார்.
17

Page 18

O O O6) s 656
raise arrasp warp Wrap

Page 19

மெய்யின்பம்
அன்பொடும் என்னைத் தாயாரி
அணைத்தலும் கதைகள் கூறி நன்மை சேரி உணவு யாவும்
தல்கலும் இடங்கள் தோறும் பொன்னுடை சிறப்புக் கூட்டிப்
போதலும் தாமே மண்ணில் இன்றுமென் றெண்ணி னேனே
சிறு வனாய் இருந்த நாளில்
ஆற்றினிற் குதித்தல், கொம்பரி
அளித்திடும் காய்கள் உண்ணல், சேற்றினை அள்ளிப் பள்ளிச்
சிறுமியர் மீது சிற்தல், நூற்றுவர் நண்பர் சூழ
நோவன பலவும் கூறல், ஆற்றுதல் இன்பம் என்றே
எண்ணினேன் பள்ளி வாழ்வில்,
கன்னியர் விழியாற் கொஞ்சும்
கவிளினில் மயங்கல் அன்னாரி, பொன்னுடல் தழுவல், பேச்சிற்
புவியினை மறத்தல், மற்றும் கன்னலை இதழிற் கண்டு
களித்திடல், இன்பம் என்றே எண்ணினேன் பருவம் என்னும்
எல்லையை அடைந்த காலை,
செல்வத்தை ஈட்டல் தேர்தற்
செருவிலே வெல்தல், மற்றோரி சொல் புகழ் எய்தல், என்னால்
தொல்லுல கியங்கு மென்றே மெல்லவே நினைத்தல், என்னை
மெச்சுதல், இவையே இங்கு சொல்லரும் இன்ப மாகத்
தோற்றிய இடைநாள் வாழ்வில்,
19

Page 20
20
இன்றியான் முதுமை என்னும்
இருட்டறைப் புகுந்தேன், பார்வை குன்றிற்றுச் செவியும் கேட்கும்
குணத்திற்குத் தொலைவில், ரத்தம் என்பதும் வற்றிக் கையில்
எடுத்தனன் ஊன்றுங் கோலை அன்றின்பம் பயந்த வெல்லாம்
அவனியிற் பொய்த்த வென்பால்.
பருவங்கள் தோறும் இன்பம்
பாரினில் மாறும் என்ற மருமத்தை யானும் இன்றே
மண்விடை உணர்ந்தேன் என்றும் திரிபின்றிப் பருவம் தோறும்
திகழ்ந்திடும் பிறவி தோறும் ஒருபொருள் இன்பம் செய்யும்
உரைக்கரும் தெய்வம் ஆகும்.
口●口

வாழ்க தமிழ்
கனிமொழியே தனிமொழியே
கவின்மொழியே வாழ்க கற்பனையே அற்புதமே
பொற்புருவே வாழ்க பனிமலரே எனதுயிரே
தனிசுவையே வாழ்க பாணிலவே வானமுதே
தேனனையாய் வாழ்க,
இயலென்றே நீவளர்ந்தாய்
இவ்வுலகோர் மகிழ்ந்தார் இசையென்றே நீ செழித்தா
இவ்வுலகோர் நெகிழ்ந்தார் நயமெல்லாம் மிகக்கொண்ட
நாடகமாய் எழுந்தாய் நாட்டினரும் உலகினரும்
நாடிநிதம் உயர்ந்தார்.
அகப்பொருளாய் புறப்பொருளாய் அரும்பொருளாய் வாழ்க அகத்தியனால் காப்பியனால்
வளர்ந்தனை நீ வாழ்க மிகப்பலவாய் இகப்புகழாய்
விளங்கிடுவாய் வாழ்க மென்மொழியே சேந்தமிழே
என்னுயிரே வாழ்க,

Page 21
22
பாட்டாக முன் நடந்தாய்
உலகநிலை கண்டாய் பாரினிலே உரை நடையாம்
புதுநடையும் கொண்டாய் காட்டாறு போல்நீயோ
காலமெல்லாம் விரைந்தாய் கட்டழகு குன்றாத
மேனியினாய் வாழ்கி
கவிதைஎனப் புலவோர்கள்
உனைவியந்தே நிற்பார் கதையென்றும் நாவலென்றும்
பலரீகூடி நயப்பாரி புவிபோற்றும் புகழ்படைத்தாய்
பூங்கொடியே வாழ்க புதுமொழியே மதுமொழியே
பழமொழியே வாழ்க,

வருக புத்தாண்டிே
செங்கதிரி வந்தது வானத்திலே - இருள் சென்று மறைந்ததிந் நேரத்திலே எங்களை வாழ்விக்க வந்தனையே - உனை
ஏத்தினம் ஏதிதினம் புத்தாண்டே,
வெம்பும் நிலையினை நீக்கிடுவாய் - எம்கள் வேதனை யாவையும் நீக்கிடுவாய் நம்பிக்கை என்ற கரம்குவித்தே - உன்னை நாடி அழைத்தனம் புத்தாண்டே,
வானச் சிரிப்பினை மாரினன்போம் - இந்த வையச் சிரிப்பைதெற் காணிஎன்போம் ஏனைச் சிரிப்புச் சிரிப்பதற்கே - இந்த இரண்டு சிரிப்பையும் நீதருவாய்.
பஞ்சத்தைப் போக்கிடு புத்தாண்டே - எங்கள் பாரத்தை நீக்கிடு புத்தாண்டே நெஞ்சம் எனும்எழில் வாவியிலே - இன்ப நீரினைத் தேக்கிடு புத்தாண்டே.
嫌囊
23

Page 22
24
தெய்வம் மகிழ்ந்தது
தாங்கவொணாப் பெருஞ்சுமையைத்
தாங்கியோரு சிறுமி தளர்ந்தநடை யுடன்தெருவில்
இளைத்தபடி சென்றாள் ஆங்கவளின் துயர்கண்டே
அல்லலுற்றங் கோடி "அருந்தங்காய் பெருஞ்சுமையைத்
தாங்காதுன் உடல்தான் !
சங்கதனைத் தாஉனது
வீடுவரை நானே எடுத்துவத்தே தருகின்றேன் என்றிட்டேன் அவளோ *"தீங்கனிநேரி சொல்லாலே
தங்கை யென்றே அன்பைச் செகத்தினிலே மழையாக்கிப்
பொழிந்தீரி யாரெ"ன்றாள்.
"வள்ளுவரின் குறளதனை வழியாகக் கொண்டே வாழ்கின்ற தமிழன் நான்
நீயார்" சொல் லென்றேன் * "உள்ளமிலாச் செல்வர்தம்
LADaup GruflashGav Lorrrr at உழைக்கின்றேன் எனை "வேலைக்
காரி"யென உரைப்பார் !
எள்ளளவும் இன் சொல்லை
நான் கேட்ட தில்லை எருமையென்றும் கழுதையென்றும்
நித்தமெனை விளிப்பார் துள்ளிவரும்” பசித்தீயை
ஒரகப்பை சோற்றால் துடைப்பதற்கு முயல்கின்றார்
இதுதான்என் கூலி.

என்றழுதாள் அவளுக்கோ
உதவிசெய என்பால் எத்துணையும் பொருளில்லை ஆதலினால் நானும் "இன்றிந்தச் சுமையதனை
வீடுவரை உனக்காய் எடுத்துவர அனுமதிதா'
என்றிட்டேன் இசைந்தாள்
சென்றிட்டேன் சுமையதனைச் சுமந்தவளின் பின்னே "சீச்சீச்சீ பனிப்பெண்ணின்
பணியாளன்" என்றே சென்றவர்கள் நகைத்தார்கள்
ஆனாலும் என்றன் செயல்கண்டு மகிழ்ந்ததுவே
எனைப்படைத்த தெய்வம்,
se
25

Page 23
உழைப்பும் பொருளும்
"ஓங்கிவளர்ந் திடருறுத்தும் வறுமை (Buršs உரைத்திடுவீர் வழி"யென்றேன் நண்பர் கூட்டம் ஆங்குவல மணிநேரம் முயற்சி செய்தே ஆய்ந்தெடுத்த வழியெல்லாம் கூற லானார் "தேங்கிவரும் செல்வத்தை உடைய மங்கை செவிடாகிச் சிறுகுருடாய் இருப்பா ளாகில் ஈங்கவளை மணப்பதனால் செல்வம் சேரும் இதுவெறுப்பைத் தந்திடுமேல் இன்னும் சொல்வோம்"
"பணமிழந்த காலத்தே நம்மை விட்டுப் பாய்ந்தோடும் சுற்றம்போல் வேக மாகக் கணமொருகல் ஓடுகின்ற குதிரைக் கேநீ காசுகட்டின் முதற்பரிசு பெறலா மின்றேல் பணமுனது முன்னோரிகள் புதைத்தி ருப்பாரி பார்த்தெடப்பா சோதிடத்தால்" என்றும் சொல்லித் திணறவைத்தார் நண்பர்கள் அவர்தம் சோம்பல் சேர்த்தென்னைத் தழுவிடவே சோர்ந்து நின்றேன்
"பட்டாணிக் கடலையுண்டு சுவைமி குந்த முருப்புண்டு மணிக்கடலை யுண்டென் றங்கே கட்டான உடலசையக் கடலைப் பெட்டி கையினிலே கொண்டங்கு சிறுமி வந்தாள் எட்டேதான் வயதென்று தோற்றம் காட்ட இடையிலுள்ள கந்தை அவள் வறுமை காட்ட விட்டேனா உனையென்றே வறுமை தன்னை வெலமுயலும் உழைப்பாளி அங்கே வந்தாள் !
26

தன்னுடைய சிறுமிசெய்த உணவு தாய்க்குத் தனியினிமை அளிப்பதுபோல் கடலை அங்கே என்னுடைய நாவினிலே இனிமை சேர்க்க இதயமெலாம் அவள்திறனை வியந்து நோக்க 'உன்னுடைய உழைப்புக்குப் பரிசி" தென்றே உவற்தளித்தேன் மேலதிக மாய்ப்ப ணத்தை தன்னுடலால் உழைக்காது செல்வம் சேர்த்தல் தவறாகும் எனச்சிறுமி சொல்லி னாளே!
சொல்லியபின் எனதுயன மிகுதி தந்து சோராத உழைப்பாளி அப்பால் சென்றாள் செல்வமிங்கு தேடுதற்கு வழிகள் சொன்ன திறமைமிகு நண்பர்கள் தரையைப் பாரித்தே நல்வழியில் உழைத்தேநாம் சோம்பல் போக்கி நலமுறுவோம் என்றார்கள் சிறுமி அங்கே செல்வழியைப்பார்த்து நின்றேன் அவளின் தோற்றம்
செல்லாது நெஞ்சிருந்தே உழைக்கத் தூண்டும்!
27

Page 24
28
அபூர்வ வைத்தியர்
நோகொன் றுவரளன் யாக்கை
நொந்திட அரசாங் கத்தாரி நேயங்கொண் டெமக்கென் றீற்த
நெடும்மருத் துவசா லைக்குப் போயென்றன் நோயை மாற்றும் புத்தாசை தோன்ற நானும் மாயங்கள் பலவும் செய்யும்
மருத்துவ சாலை சென்றேன்!
வரிசையில் நூற்று வரிப்பின்
வதங்கியே உயிரைக் காக்கும் புருஷரை ஈற்றில் கண்டேன்
"புதல்வனே! நினக்கென்?" னென்றார் வருஷமொன் றாக நோயால்
வாடுகின் றேன்யா" னென்றேன் சரிசரி எல்லாம் மாறும்
தருவதைக் குடிபோய்!" என்றார்!
நாடியைப் பார்த்தார் இல்லை!
நயனத்தைப் பாரித்தார் இல்லை! மாடியைப் பார்த்த வாறே
மருந்தினை எழுதித் தந்தார் "நாடியைப் பாரித்துத் தந்தால்
நன்”றென்றேன் 1 அயலில் நிற்கும் "லேடி"யைப் பார்க்க வேண்டும்
லேட் இன்னே செல் செல்" என்றார்.

"நோயாளைப் பார்த்தி டாதே
நோயினைக் கூறும் மன்னர் ஓயாமல் அரசாங் கத்தில்
உயரீபணி செய்வ தாலே நோயேதும் மறைவ தில்லை"
என்றுநான் நுவன்றேன் "சுத்த வாயாடி" என்று கூறி
வார்த்தைகள் மேலும் சொன்னார்
"எங்களின் கண்ணைப் பற்றி
ஏதும்நீ அறியா யப்பா/ அங்குனைக் காணும் போதே
அறிகுவோம் நோயை மற்றும் இங்கெமைச் சார்வோர்க் கெல்லாம்
எம்மிடம் மருந்து மொன்றே பங்கம்செய் உயர்வும் தாழ்வும்
பார்த்திடோம் அதனா" லென்றார்.
29

Page 25
30
வாடகை வீட்டு வாழ்வு
ஆடவர் மகளிர்க் கெல்லாம்
அவசர உலகம் தன்னில் வாடகை விட்டு வாழ்வு
வருத்தத்தைத் தருவ தொன்றே! பாடுவட் டுழைத்த காசிற்
பாதியை விழுங்கினாலும் வாடகை வீட்டு வாழ்வை
விலக்கிட வழிதான் உண்டோ?
அம்மியிற் பலத்த ஓசை
எழுந்தி. அரைப்பதாலே "மம்மி"யின் இதய நோய்தான் வரவரக் கூடு தென்பார் எம்வீட்டில் இருக்கு மட்டும்
இரவெட்டு மணிக்கு முன்னர் இம்மியும் இடர் செய்யாதே
இவண் வரவேண்டு மென்பார்
*வீட்டிலே குமர்கள் உண்டு
வீணரை நண்ப ரென்றே கூட்டிநீர் வந்தீரி என்றால்
குடிஎழும் பிடுவீர் என்பார் ஏட்டிக்குப் போட்டியாக
எதுவுமே செய்திடாமல் வீட்டுக்குன் பூனை போல
இருந்திடல் வேண்டும்" என்பாரி,

"பத்தென லயிற்றை நூத்துப்
படுத்திடல் வேண்டு மெந்தச் சத்தமும் போட்டே எம்மை
சங்கடம் செய்ய வேண்டாம்
மித்திரர் இங்கே வந்து
தங்குதல் விலக்கி யுள்ளோம் புத்தியாய் நடக்க வேண்டும்
புரிந்ததா?" என்றும் கேட்பாரி.
குளிர்
நீள்நகரி வீதியில் ஒரிகடை வாயிலில் ஏழைமை என்ற வான்பகை வருத்திடக் கொல்லும் மார்கழிக் குளிர்மிக வாட்டிட அன்னை ஒருத்தி தரையினிற் கிடந்தனள் அன்னவள் பெற்ற அதிட்டமில் சேயோ போர்வையோ சட்டையோ அற்றதாம் நிலையில் மார்புடன் சேர்ந்தே பாலிலா முலையினைச் சுவைத்த வாறே நடுங்கிக் கிடந்தது சற்றவர்க் கயலிற் கிடந்ததோர் நாயிற் குட்டிகள் பாலைக் குடித்துக் கிடந்தன நாய்க்கோ இறைவன் குளிரைப் போக்க உடலெலாம் மயிரெனும் போர்வையை அளித்தனன் தாய்க்கும் சேய்க்கும் எவ்வகைப் போர்வையும்
ஈந்திட ஈசன் மறந்தனன் ஏனோ?
31

Page 26
32
மதுவினில் ஒருவர்
போத்தல் ஒன்றைக் கையினில் ஏந்தியும் போவோர்க் கொவ்வொரு சொட்டையே கூறியும் குடும்பப் புகழைத் தெருவினில் சிதறியும் அறிவைப் போலவே கண்ணையும் மதுவெறி முற்றாய் மறைத்திடத் தெருவினிற் சென்ற பொற்றொடி மீது மோதியே அயலுள கற்றுாண் ஒன்றிடம் மன்னிப்புக் கேட்டும் அழகிய வாயினை இழிவுறக் கோணியும் மழலையில் மேலும் வார்த்தைகள் கூறியும் சந்தி சிரிக்கும் வண்ணம் மதுவினிற் புந்தியை வைத்தவர் போகின் றாரிஅதோ கத்தை உடுக்கும் மனைவியை நினையார் கஞ்சியே குடிக்கும் மக்களை நினையாரி அவர்தம் வளர்ச்சி கல்வி திருமணம் என்பன பற்றி ஏதுமே நினைப்ாரி ஒரிகுடி செய்த பாவம் ஈதென ஒர்குடி காரரி போகின் றார்.அதோ!


Page 27

என்றவண் துறவி கூற
இளங்கவி சிரித்தான் "ஐய குன்றிடா ஒளிசெய் கின்ற
கொழுஞ்சுடரி விளக்குக் காலை துன்றிடின் ஒளியிற் குன்றித்
தோற்றமும் இழந்து போகும் என்றதை நன்றி யின்றி
எறிபவரி தாமும் உண்டோ?
காலையில் அழகு செய்த
கதிரவன் உச்சி யெய்தும் வேளையில் அழகு குன்றும்
வெண்முழு நிலவும் மெல்ல நாளொரு விதமாய்க் கொண்ட
நல்லெழில் குறையும் என்றே ஆழிசூழ் உலகில் யாரும்
அவற்றினை வெறுப்பாரி உண்டோ ?
மாதரின் அழகும் ஓர் நாள்
மாறிடும் இயற்கை இன்றேன் தீதென ஒதுக்க வேண்டும்
தேர்ந்துசொல் பெரியோய் ! என்றே கோதிலாக் கவிஞன் கேட்டான்
கூறிட விடையை ஆய்ந்தே யாதொன்றும் காணா னாகிப்
போயினான் துறவி தானும்!
35

Page 28
36
கொழும்பு நகரில் சிறுபொழுது
விடியுமுன் எழுந்தே ஒ4
விரைந்துபல் மினுக்கித் தேநீர்சி குடியினை நயந்து நண்பர்
குளிக்குமுன் குளித்துப் உடையினை அணிந்தே உண்டி
உண்டிடும் கடிைக்குச் சென்று படையென ஈக்கள் மொய்க்கும்
பண்ணியம் பலவும் பார்த்தேன்.
நாயொன்று வாலை ஆட்ட
நன்கணம் பூனை கத்த ஈயெலாம் இலையில் வீழ
இருந்திட்டேன் என்னை நோக்கி நோயெலாம் சமயம் unt fatgh
நுட்பமும் அறிந்தேன் மெல்ல வாயொைம் பற்கள் தோன்ற
வந்தனன் ஒருவன் ஆங்கே,
1 Gastraeg gurr ? L9tell-nr? அன்றிச் சொல்லரும் அப்பம் தானா ? ஆசையை எதன்மேல் வைத்தீர்
அதைஇப்போ துரையும்" என்றே மேசையில் கையை ஊன்றி
வேங்கையின் குரலிற் கேட்டான் ! பூசையை நாயைப் Guré 6Gua
போய்த் தோசை கொணர்க" வென்றேன்


Page 29

臀

Page 30

வாராரோ அன்பர்
வாராரோ அன்பரிவண்
வந்தினிய தோள்பற்றித் தாராரோ முத்தங்கள்
தந்துள்ளத் தாசையெல்லாம் தீராரோ பெண்மையது
பொலிந்து சிறந்திருத்தல் பாராரோ என்றென்றே
பாவையுள்ளம் ஏங்கிடுமால்,
ஆற்றைக் கடல்அணைக்கும்
அருமதியை வான் அணைக்கும் ஊற்றை நதிஅணைக்கும்
ஒவியத்தைச் சுவர் அணைக்கும் நாற்றை வய்ல்அணைக்கும்
நன்மலரை வண்டணைக்கும் கோற்றொடியாள் மார்பகத்தைக்
கொழுநனலலால் யாரணைப்பார்.
அன்பு மொழியாலும்
அணைத்திடுமோரி சுகத்தாலும் முன்பு தெரியாத
முழுச்சகத்தைக் காட்டிவிட்டுப் பின்பு பிரிவானால்
பேதையவள் என்செய்வாள் அன்பின் வழிவந்தோரி
அல்லல்செயின் ஆர்கேட்பார்,
4.

Page 31
42
ஈசனிலாக் தோழில்
இரக்கமிலா மானிடர்கள் வாசமிலாப் பூக்கள்
வண்டுலவாப் பூம்பொழில்கள் பாஷையிலா இனத்தோரி
பண்பறியாக் கற்றோரிகள் GBæ Gaflsvirð utresa
நிலத்திருந்தும் பாதுபயன் 9
போரின் பயன் அறிந்தே
பொங்கிக் குதித்திடுமோர் வீரன் கரவாளும்
வித்தைகற்போரி தம்மனமும் ஆரும் உயிர்க்குலத்தின்
அரும்பசிக்கீ வோரிகரமும் மாரன் கணைப்படுமோர்
மனமுமென்றும் ஒய்வதுண்டோ ?
 

காதல் நெஞ்சைக் கவர்ந்த காட்சிகள்
'நீலநிறக் கடலெனும் நல் உண்டி யற்கண் நேற்றினிதின் விழுந்தஎழிற் பொற்கா சென்னும் கோலமிகு கதிர்இன்று தோன்றும் காட்சி கூறரிய அன்புடையீசி காண்க 1" என்றே பாலினொடு தேன்கலந்த சொல்லாற் கூறிப் பருகுதற்குத் தேநீரும் கொண்டே வந்து காலைநிதம் என் அன்புக் குரியாள் உள்ளம் கணியன்னைத் துயில் எழுப்பும் காட்சி ஒன்றே !
முற்பகலில் விரைந்தோடும் நேரக் காற்றின் முன்விரைந்து காலைசெயும் கடன்கள் ஆற்றி நற்பணிக்குப் புறப்படுங்கால் ஏதோ ஏதோ நாடிவந்து கிடைத்திடுமோ ? எனும்றோக் கோடு பொற்பமைந்த சோங்கரும்பும் நெஞ்சின் நீங்காப் புதுமைசெயும் பங்கயமும் தாங்கி நெஞ்சிற் பற்பலவாம் நினைவெனக்குத் தோன்றும் வண்ணம் பாவையவள் நிற்கின்ற காட்சி ஒன்றே !
பணியாற்றிச் சோரிவினொடு வீடு நோக்கிப் பாலநடை பயில்கின்ற மாலைப் போதில் அணிமாடத் திணில்நின்றே கண்ணாற் பற்றி அகந்தாவ அதைத்தொடர்ந்தே வாயில் நாடிப் பிணி போக்கும் குரலினிலே "வருக ! " என்றே பேரழகுப் பாவை நிதம் அழைப்ப தோடு பணிவினுடன் பண்பினையும் விளக்கிக் காட்டும் பகரரிய எழில்மேவும் காட்சி ஒன்றே!
அந்தியெனும் நறும்போதில் இளமை என்னும் அரியமலரி மலரிந்தசைல இனிய தென்றல் வந்துபல கதைகூற இதய வானில் வய்ங்குகின்ற இன்நினைவாய் மீன்கள் தோன்றப் பைந்தொடியின் ஒலியினொடும் மெல்ல வந்தே
பவளத்தேரி தெய்வமே உமக்கே" யென்று செந்தமிழிற் சொலநினைத்தும் சொல்லா நிற்கும் சீரான சுவைபனடித்த காட்சி ஒன்றே !

Page 32
கனவு நனவாமோ?
சந்தனமும் சண்பகமும் சிறந்து தென்றல் தனக்கினிய மணம்புரிந்து மகிழும் காவில் செந்தமிழிற் பண்கலந்து தோழிமார்கள் செயுங்குறும்பில் உவந்திருந்தேன் இருந்தாற்போலப் பந்தனைய விரலினர்கள் மறைந்தார் நானும் "பாவையரே வம்மி"னென அழைத்தேன் அங்கே வந்தனனே ஓர் இளைஞன் "மதியே உன்னை வருந்தவிட்டம் மீனினமேன் போன"தென்றான்
அஞ்சாதே நானுள்ளேன் என்றான் பின்னர் ஆவலினால் தோள்தொட்டான் காத லென்னும் கஞ்சாவால் மயக்கினான் இன்ப மென்னும் காவியத்தின் முதலடியைப் பாடி என்னை எஞ்சியதைப் பாடென்றான், மெளனம் கொண்டேன் எதையுமவன் நோக்கவில்லைக் காவியத்தை நெஞ்சாரப் பாடிவிட்டான் வண்டு தன்னை நில்லென்று சொல்கின்ற பூவும் உண்டோ ?
பின்னவனென் கழுத்தினிலே மாலை யிட்டான் பேருவகைக் கடலினுக்கே அழைத்துச் சென்றான் "என்ன இது ? என்ன அது ? " என்ற தன்றி எவ்வுரையும் சொலலின்றி மகிழ்ந்தேன் அன்னான் கன்னலிது வெல்லமிது தேவர் தாமும் காணரிய அமுதமிதென் றுடலாம் யாழைத் தன்னுடைய கைகொண்டு மீட்டான் இந்தத் தரையினிலே முன்கேளா இசையைக் கேட்டான் !
செவ்விதழும் எழில்மார்பும் இனிய தோளும் செகந்தனிலே புதுப்பயிற்சி உற்ற வென்றான் அவ்வரிய பயிற்சியினைக் கால மெல்லாம் அடைவதற்கு விரும்பினேன் தோழி! நேற்றைக் கிவ்விதமோர் கனவுகண்டேன் கண்ட தான இக்கனவு நனவாமோ இயம்பாய் என்றே மைவிளங்குங் கண்கொண்ட தலைவி மெல்ல மனமுவந்த தோழியினைக் கேட்க லானாள்.
44
 

தலைவன் தலைவி
தலிைவன் வானத்து நிலவொன்று
மீனொத்த விழிகொண்டு மண்மீது வருகின்றதோ ? - அது கானத்துக் குயிலொன்றின் தேனொத்த இசை கொண்டு கனிவான பண்பாடுதோ ?
தலைவி : ஆணென்ற கேரி கொண்டு
அழகென்ற உருவொன்று காணென்று முன்வந்ததோ ? - அது தூனென்ற தோள் கொண்டு தோகையே நில்லென்று சொல்லாமற் சொல்கின்றதோ ?
தலைவன் ! கனி துஞ்சும் கொடியொன்று
தனி இன்பம் இதுவென்று நெஞ்சாரத் தருகின்றதோ ? - அது நணி ஓங்கும் மலைமீது நாள்தோறும் தவறாமற் படராமற் படரிகின்றதோ ?
அன்பென்ற சொல்லுக்குப் பொருளான வடிவொன்றென் கண்முன்னரி வருகின்றதோ ? - அது இன்பென்ற சொல்லுக்குப் பொருளென்ன என்றிங்கு சொல்லாமற் சொல்கின்றதோ ?
4

Page 33
தலைவன்
250) as
46
அயல் வீட்டுச் சிலையொன்று மயலுTட்ட உயிர்கொண்டு கயலோடு வருகின்றதோ ? - அது எழில் வாய்ந்த உலகத்தின் பொழில் தாங்கும் மலர் யாவும் என் முன்னர் தருகின்றதோ ?
கொடுக்கின்ற கையொன்று எடுக்கின்றேன் உனையென்று கேளாமல் வருகின்றதோ ? - அது துடிஒத்த இடை கொஞ்சம் இடர் உற்று விடுமென்று அணையாமல் அணைக்கின்றதோ ?
སྲིད། 龜

நாணமே தடை
பொங்கியெழும் வாத்தியமும் பண்பு கொண்டோர் புகழ்ந்துரைத்த நல்வாழ்த்தும்
ஒலிக்கும் வேளை மங்கலநாண் பூட்டியனன்
கணவர் தேன்சேரி மலர்துயிலும் கட்டிலினைச்
சுட்டிக் காட்டி "இங்கிதுவேன் எனக்குறும்பாய்க்
கேட்டார்" அன்பரி இவ்வுலகை மறப்பதற்கென்
றுரைப்போ மென்றே அங்குநினைத் தேன்.ஆயின் நானம் என்பாள் அதன்முன்னே என்நாவைத் தடுத்து விட்டாள்.
மெல்லனனை அணைத்துப்போய்ப்
படுக்கை மீது மேவரிய தோழியர்கள்
பரப்பி வைத்த எல்லமைந்த மலரையெல்லாம்
சிதறச் செய்தே எண்ணற்ற முத்தங்கள்
அளித்த போது நல்லதல்ல ஒருவர்மட்டும் கொடுத்தல் ஒன்றை நானும்தான் கொடுப்வோமென்
றெண்ணும் போது நில்லென்று தடுத்திட்டாள்
முன்னரிப் போல நிலைமைசற்றும் அறியாத நாணம் என்பாள்.
47

Page 34
48
செங்கதலித் தண்டிருப்ப
மென்மை முற்றும் சேர்ந்திருக்கும் வேயிருப்ப
மயங்கும் வண்டோ அங்கயத்தில் தாமரையின் அரும்பை மட்டும் அடுத்தடுத்துச் சுவைக்கிறதே
sy60alas A &rt as இங்கெவரும் பேசுதற்கும்
இலையோ என்றே இனிதவரைக் கேட்பதற்கு
முயன்றேன் ஆயின் அங்குமெனை நாணமெனும்
பாவி நோக்கி அமைதிதான் பெண்மைஎன்றே
தடுத்துவிட்டாள்.
என்மொழிக்கும் செயல்களுக்கும்
வார்த்தை இன்றி இன்னகையை மட்டும்நீ
அளிக்கின் றாயே அன்பருடன் பேசுதலும்
தவறோ என்றே அவர்கேட்டார் அவ்வேளை
அவரை நோக்கி என்னஇது பக்தரது
தேவை யெல்லாம் இறைவனுக்குத் தெரியுமெனசி சொல நினைத்தேன் அந்நிலையி லேயும்தான்
நாணம் என்பாள் அமைதிதான் அணிஎன்றே
தடுத்து விட்டாள்.

குறும்பாய் நகைத்தான் அவன் வாழி
குன்றிற் பிறந்தே வெள்ளருவி
குதித்துக் குதித்தே கீழ்ஓட நின்றங் கதனை நான் நோக்கி
நிலத்தே மகிழ்ந்தேன் என்தோழி ! நின்றங் கதனை நான்நோக்கி
நிலத்தே மகிழ அன்னவனோ கொன்றே விடுவான் போல்நோக்கிக்
குறும்பாய் நகைத்தான் அவன்வாழி.
சோலை மலரில் வண்டொன்று
தேனை அருந்தி மதுவெறியில் சா ைஅதன்மேல் துயில்வதினைத்
தரைமேற் பாரித்து நான் நின்றேன் சால அதன்மேல் துயில்வதினைத்
தரைமேற் பார்த்து நான் நிற்பக் கோல மயிலே வாவென்று
குறும்பாய் நகைத்தான் அவன் வாழி,
கிள்ளை இரண்டோ ஆவலினால்
68 இச்ச்ே " என்றே ஒலிஎழுப்பிக் கொள்ளை இன்பம் காணுமொரு
கோலம் நோக்கி நான் நின்றேன் கொள்ளை இன்பம் காணுமொரு
கோலம் நோக்கி நான் நிற்ப அள்ளி அணைப்பான் போல்வந்தே
அன்பே என்றான் அவன் வாழி. வானில் மதியம் தோன்றிடுங்கால்
வையம் யாவும் கோலமுறும் தேனாம் காட்சி தனைநோக்கிச்
சிறியேன் அங்கே நின்றிட்டேன் தேனாம் காட்சி தனைநோக்கிச்
சிறியேன் நிற்கும் வேளையிலே தானே வந்தென் கரம்பற்றித்
தரைமேல் மகிழ்ந்தால் வாழியவே.
ア 49

Page 35
50
பந்தாடும் பாவை
இருபந்தினை நிதமேந்திடும்
எழில்மேவிடும் இனியrள் ஒருந்ேதொரு கரமேற்தவும்
பிடிநாணவும் ஒயிலாய் வருகின்றனள் அவளாடிடும்
வகைகண்டிட விழிகாள் பெருமன்பொடும் உறநோக்குவிர் இமையீரி அது பிசகால் !
எறிகின்றனள் பந்தேஅது
மேலேகியும் இவள்பால் வெறிசெய்திடும் சுவையுண்டெனும்
விழைவால்மிக விரைவாய் குறிகொண்டவள் தனமேலொரு
குதிபோட்டது மீண்டும் சிறிதங்கது மேலேகினும்
திரும்பும் நணி காணிரி1
ஒடும்பரி மேலுTர்பவன்
வீசும்கசை ஒயிலாய் ஆடும்விதம் இதுகாண்என ஆடும்அவள் கூந்தல் பாடும்கரு வண்டேதிகரி
விழியோஇது போழ்தில் ஆடும்ஒரு பந்தின்வழி
ஒடும்தனி அழகால்!

செவ்வாழையின் இருதண்டுகள்
சேரிந்தே இவள் தம்மை இவ்வாறிடரி செய்வானென
எதிரிபார்த்திலம் எனவே எவ்வாயினும் அவளே உளஸ் எனுமாறவள் க்ணிநேர் செவ்வாயெழில் நகைகூடிட
மிகஆடினள் இனிதே !
காற்றிற்படு பூவோ ? இது
கடலிற்படு கொடியோ ?
ஆற்றிற்படு தளிரோ ? என
அசைந்தேவெகு விரைவாய்
சாற்றில் சுவை சாற்றும்இதழ்ப்
பாவைகுரற் பூவை
ஆற்றல்கொடு பந்தாடினன்
அடடா அதும் அழகே !
பருவம்தரு மெருகால் உடல்
பசும்பொன்னென மிளிர வருமோர்ரதம் இதுவேயென வந்தாளவள் அழகைப் ருகும்பொழு திதுவேவிழி
**urruti Lurrño "" g0.ga Gurrgbgood) உருகும்மணம் உருகாவணம்
தடையும்செயல் முறையோ ?
5.

Page 36
நீராடல்
மன்னு செங்கதிர் பாய்தலின் நல்லுடல் மாசில் தேசில் விளங்கிச் சிறப்பவும் பொன்னை யொத்த முகத்தினில் நீர்த்துளி பொலியும் முத்தை நிகரித்து விளங்கவும் இன்னிசை கொண்டு பாடியும் பேசியும் இளமை நல்கும் துடிப்பது தோன்றவும் அன்ன மென்னடை மாதரி குளத்திலே அழகு தோன்றரீ ராடுதல் செய்வரால்
அரும்பை வெல்லும் தனத்தினில் மீனினம் அரிதில் முட்டி விலகிடும் போதெல்லாம் விரும்பு காதலரி செய்யும் குறும்பினை மெல்ல எண்ணியும் நாணியும் அப்புறம் திரும்பு போதினில் தாமரைப் போதினில் சீரிசால் வண்டு துணையினைக் காதலால் விரும்பிச் சேர்ந்திடும் செய்கையைக் கண்டுமே வேறோர் எண்ணம் உதிக்க நகைப்பரால்! ஆவி யன்ன உடையினால் மேனியின் அழகை மூட முயன்றிடும் மாதரார் காவி யன்ன விழியினா லாயிரம் காவி பங்களை ஆக்கியும் காதலர் ஒவி லாது மயங்கிடச் செய்திடும் ஒளி கொள் தோளினைத் தாமே ரசித்துமே மேவு நீர்கொள் குளத்தினில் இன்பமே விளங்கக் கண்டும் மகிழ்ந்துநீராடுவாரி ! "கண்டும் கேட்டும் உயிர்த்தும் இனிதினில் உண்டும் உற்றும் கொளுஞ்சுவை நல்கிடும் கெண்வை ஒத்த விழியுடை மாதரீர் 1 கேள்வர் தம்மிடம் எங்களில் யாரையோ கொண்ட காதல் உரைக்க அனுப்புவீரீ கூறுவீர்" என்று கேட்டவர் பக்கமே வண்டும் தென்றலும் வந்திடக் கண்டுமே மகிழ்ந்து மாதரார் நீரினில் ஆடுவார்!

தேன் சிந்தும் செம்மலர்கள்
மெல்லக் காலை மலரிந்து துணைவியின் செல்லச் சிரிப்பை மொழிந்தது முன்றிலில் நின்ற பூஞ்செடி நோக்கினன் ரோஜா ஒன்றில் அரும்பு முகிழ்த்தமை கண்டனன் கிளியின் வாயிடைக் கிளக்கரும் நாக்கென ஒளிசெய் ததுவே 1 செடியின் அரும்பு இன்னும் சிலநாள் சென்றதன் பின்னரி துன்னி நோக்கினன் துகள்தீர் அரும்பு கோழிச் சேவலின் கொண்டையை ஒப்ப பெருத்து நின்று பேரெழில் செய்தது ! இடையே பகல்சில ஏகிய பின்னர் அடடா நோக்கினன் அச்செடிக் கண்ணே பனிநீ ரினிலே நனிநீ ராடிப் "பார்தான் பருவ மலரென" ரோஜா ! மெல்லச் சிரித்ததும் மேவரும் மகிழ்வால் என்னை மறந்தேன் எழில்மிகு வண்டின் வடிவம் பெற்றேன் மலர்க்கண் விரைந்தேன் புதிதாய்ப் பூத்தி பூவை நோக்கினேன் ஆவலைத் தேனாய் அது எனக் களித்தலும் பருகி அதன்மேல் தங்கினேன் என்னுளம் உருகும் தன்மை உணர்ந்தனள் மனைவி "என்ன சிந்தனை" என்றுதோள் பற்றினள் பின்னர் மனித வடிவம் பெற்றேன் மற்றுமோரீ ரோஜா என்பது தெரிந்தே பற்றினேன் தேனைப் பருகெனத் தந்தே
53

Page 37
காதலை அங்குக் கண்டேன்
அன்றுமுதல் இன்றுவரை
ஆண்மணத்தும் பெண்மணத்தும் தின்று செழித்துவரும்
நீள்உணர்வாம் காதலினைப் பாவலர்தம் பாட்டினிலும்
பல்கும் கதைகளிலும் ஒவியரீதம் சித்திரத்தும்
ஒப்பற்ற சிற்பத்தும் கண்டுணர்ந்த என்னெஞ்சம்
கண்டவிதம் மானிடரிகள் கொண்டிருக்கும் வாழ்வினிலும்
காணுநசை கொண்டமையால் சொய்யும் வழுவும்
உலவும் புவித்தலத்தே பையநடை மேற்கொண்டேன் பார்க்கும் மனத்தோடே !
வானளவும் மாடிதனில்
வாசனையே வீசுகின்ற தேனுலவும் பூப்வொலிற்த
தேசலவும் பஞ்சணையில் கூற்றுவனைப் பற்றிப்
புராணங்கள் கூறிவைத்த தோற்றத்தைக் கொண்டோன்
சுகம்நாடி நிற்பதையும் அண்மையிலே பேரழகின்
படைப்பாய் அமைந்துள்ள பெண்மயிலாள் பொய்ச்சிரிப்பை
பெற்றவனை நோக்கியே "காதலரே செய்தவமே
காண்கதிணி" என்பதையும் மேதினியிற் கண்டே
மிகவும் துயரிஅடைந்தேன்

அன்புபற்றி ஒன்றாகும்
ஆண்பெண் இதயங்கன்
பொன்பற்றிச் சேர்ந்திட்டால்
பொய்வாழ்விற் காதலுண்டோ ?
அப்பாலும் சென்றேன்
அடுத்தோரி பெருமனையில் ஒப்பேதும் இல்லா
உயர்ந்த பதவிபற்றி இப்பாரோரி எல்லாம்
இேவன்பெரியன்" என்றுரைக்க எப்போதும் கேட்கும்
இயல்புபெற்ற ஓரிமுதியர் வாலிபத்தின் வாயிலிலே
வற்துநின்ற பெண்ணழகைத் தாலிகட்டி வந்தே
தமக்கு மனைவியென ஆமென் றவளும்
அருகிருத்தே "காதல்வழிப் போமென் றுரைத்தேயோரி
பொய்ந்நகையைச் செய்வதையும் பார்த்தேன் மிகநொந்தேன்
பாரினிலே அன்பென்னும் சீர்ப்பாதை தன்னிலே
சேர்கின்ற ஆண்பெண்ணுளம் ஏதோ பதவிபற்றி
இன்னலுடன் ஏய்வதெனில் தீதான அவ்வாழ்வைச்
சீர்க்காதல் மேவிடுமோ ?
மேலும்நான் சென்றேன்
விளங்குமொரு சோலையிலே
கோலம் நிறைந்த
ஒருத்தி குயிலனையாள்

Page 38
$6
பூதலத்தைப் பார்த்தாளாய்ப்
புன்னகையே பூத்திருப்ப ஆதரவு கொண்டோனாய்
அங்கேயோர் ஆணழகன் *பொன்கொண் டமைத்த
புதுச்சிலையே! இன்னமுதே மின்கொண் டமைத்தஇடை
கொண்டிருக்கும் நற்பொருளே பட்டனைய மேனியிலும்
பால்வண்ணப் பற்களிலும் மொட்டவிழ்ந்த பூப்போல்
விளங்கும் இதழினிலும் ஆடாமல் நெஞ்சத்தை
ஆட்டிவைக்கும் தாமரையின் பிடேயும் நல்லரும்பின்
பேர்உணர்த்தும் தோற்றத்தும் உள்ளம் இழந்தேன்
ஒண்டொடீ ! ஆசையெனும் வெள்ளம் தலைக்குமேல்
மேவிடவே தத்தளித்தேன் என்றுரைத்துத் தாவி
எடுத்தனைத்தால் அன்னவளும் தன்றென் றுணரிந்தனளாய்
நாணினள்போல் நின்றிட்டாள்
அவ்விடத்தும் காதலையான் கண்டிலேன் ஆக்கையது செவ்விதனில் கொள்கின்ற
தீப்பசியைக் காதலென்றால் மான்குட்டி நல்லழகில்
வேட்கையுறும் ஒநாயும் தோன்கா தலன்" என்றே
நன்குரைத்துப் போட்டியிடும்

பின்னர் நான் அவ்விடத்தை
நீங்கியொரு பேரில்லைத் துன்னினேன் அவ்விடத்துத் தூயஇரும் பின் நிறத்து மங்கை ஒருத்தி
இருந்திட்டாள் வந்தவனோ "தங்கமே" என்றவள்பால்
தான் பெற்ற சீதனத்தை எண்ணி நனைபுரிந்தான்
இவ்வீடத்தே காதலினைக் காண விழைதல்
கடுமிருளில் தாமரையைக் கான விழைதல்
நிகர்க்குமென மேற்சென்றேன்
ஒட்டைக் குடிசைதனில்
ஓர் சிறிய பாயினிலே வாட்டுகின்ற நோய்க்கு
வருந்தி ஒருமுதியள் சோர்ந்து கிடந்திட்டாள்
இவ்வுலகப் பள்ளியிலே சேர்ந்து படிக்கின்றான்
ஆண்டெண்ப தாக அவள் அன்னவளின் பக்கத்தே
ஒரிமுதியன் அன்புடையோன் நன்கிருந்தான் அன்னான்
நரைதிரையைச் சேர்ந்தமையால் தாமிருக்கோம் என்றுபற்கள் தாமே புறப்பட"நீர் போ"மென்று கூறிப்
புவினகையே செய்துவிட்டுப் போயிற் கிடந்திட்ட
பண்ங்ார் முதியவளின் நேயத்தே நின்றுலவும்
நெஞ்சுடையோன் மெல்ல அவன்
57

Page 39
58
தன்னுடைய அன்பு
ததும்பும் துணைவியினோரி இன்னல் நிலைகண்டே
ஏங்கி உயிரிதுடித்துக் "கஞ்சி உளது
குடி'என்றான் காற்றின்மைக் கஞ்சி விசிறியினால்
வீசினான் அன்னவளோ !
*நேற்றிரவு முற்றிலுமே
நித்திரையை விட்டெனக்குத் தேற்றுமொழி கூறியே
செய்தீர் உதவியெலாம் இவ்வேளை என்றாலும்
சற்றுறங்கும்" என்ன அவன் 'இவ்வேழை உள்ளமுன்றன்
இன்னல்நிலை கண்டபின்னும் நண்ணுமோ நித்திரைதான்
நான் உறங்கல் நீசுகத்தை நண்ணிய பின்" என்று
நவின்றிட்டான் ஈருயிர்கள் ஆக்கை அழகில்
மயங்காமல் அன்பென்னும் வாழ்க்கைக் கடலினிலே
ஒன்றாகி ஒருயிர்க்கா ஒருயிர்நின் றேங்கும்
உயர்நிலையிற் காதலது பேரழகைக் கண்டேன்
பெரிதும் மகிழ்ச்சியுற்றுக் "காதலரிகள் வாழ்"கவென்று வாழ்த்திக் கணித்தவர்தம் பாதமலர் தொட்டேன் பணிந்து

காதலும் கருணையும் {குறுங்காவியம் )
மன்னுயிரி வாழ்தல் வேண்டி
வாழ்ந்திடும் உழவ ராலும் இன்னுயிர் கொடுத்தும் நன்றே
இயற்றிடும் சான்றோ ராலும் பொன்னினும் விருந்தை மேலாய்ப்
போற்றிடும் மாத ராலும் மன்னிய புகழ்சேரி ஒரூர்
மண்ணிடை விளங்கிற் றாலோ,
எழில்நிலம் எனுமள் வூரின்
இனியவோரி ஆற்றின் ஒரம்
அழகுசேர் குடிசை ஒன்றில்
அறமெனுங் கொடி தந்திட்ட
பழமென ஒருவன் வாழ்ந்தான்
'பல்கிடும் துயரைப் போக்கும்
முழுமருந் தவனே" யென்று
மொழிந்தனர் ஊரோரி எல்லாம் !
பெருகிய தமிழ்நூல் யாவும்
பிழையறக் கற்றோன் காணும் இருவிழி இழந்தோன் கல்வி
எனும் விழி ஒன்றுள் ளோனாய் அருளெனும் இன்சொல் லிற்கோரி அரும்பொருள் தானே யாகிக் *குரு"வெனப் பாரோரி ஏத்தக்
குடிப்புகழ் வளர்த்தே வாழ்ந்தான்.
சிறுவர்க்கு மிளைஞர் கட்கும்
செந்தமிழ் அமிழ்தை ஊட்டல்
நெறியினை உணரா தோரிக்கு
நீதியை எடுத்துக் காட்டல்
59

Page 40
அறிவினை வளர்க்கும் நூல்கள்
அங்குளோரி படிக்கக் கேட்டல்
முறைதவ றாதே நாளும்
முழுமணத் துடன் செய் தானே.
வாழ்விலோரி ஒழுங்கு கொண்டே
வருத்தமோர் சிறிது மின்றித் தாழ்விலும் இன்பங் காணும்
தகுதியோ டிருந்தோன் தன்னை ஊழ்வினைக் கஞ்சி யஞ்சி
யொவ்வொரு கணமும் சாகும் வாழ்வுடைச் சிறியேன் நானும்
மனம்விழைந் தனங்காண் டற்கே.
விரும்பிய வாறே அன்னான்
வீட்டினிற் கொருநாட் சென்றே அரும்பணி அனைத்தும் செய்தே
அமைதியாய் இருந்தோன் தன்னைப் 'பெருங்குணக் குன்றே இந்தப்
பேதையான் நின்னைக் காண ஒருங்குளந் தூண்ட வந்தேன்
உவந்தனன் உவந்தேன்' என்றேன்.
வேறு என்னுரை கேட்டே அமைதியாய்ப் 'புதல்வ இருக்கவென்" றுரைத்தலும் யானும் முன்னரோரி இருக்கை தன்னிலே அமர்ந்தே முற்றிய அறிவினோன் தன்னை மன்னுபே ராவல் தூண்டவே அனைத்தும் மறந்தனன் ஆகியே நோக்கி “நின்னையான் கண்ட பேற்றினால் துயரம் நெஞ்சினில் துறந்தனன் பெரியோய்!
 
 

தீதிலா நெஞ்சப் பண்புளோரி முகத்தே திகழுமோர் ஒளியெனப் பெரியோபி ஒதினார் யானும் உணரிந்தனன் றின் தன் ஒண்மைசேர் முகத்திலே நல்ல மாதரார் தமக்கும் இளகிடா நெஞ்சும் பார்த்ததும் பார்த்திடும் அந்தப் போதிலே உருகும் வண்ணமே செய்யும் பொலிவுசாரிந் திருத்தல் கண்டனனே
நெஞ்சமோ நிலையின் நீங்கியே தீய நினைவினில் மூழ்கவே சிறியேன் அஞ்சியே நின்தன் மொழியினைக் கேட்டே அதன்வழி நடக்கவே விழைந்து வெஞ்சிலை விடுத்த கணையென விரைந்தேன் வினையெனும் ஆற்றலோ டென்னை நஞ்சினும் கொடிதாய் வருத்துமென் மனக்கு நல்லன உரைத்திநீ" யென்றேன்.
"இற்றைநாள் உள்ள இளைஞருட் பலரும் இன்னறம் தனை மறந் தனராய்க் கற்பதும் செவியாற் கேட்பதும் எல்லாம் கானுமோர் தேர்வினிற் கென்றே பிற்றைநாள் உலகு தாமென மறந்தே பிழைபல புரிந்திடுங் காலை நற்பெரு வாழ்வு வாழுமோர் நெறியை நவில்கென நீயெனைக் கேட்டாய்."
'உன்னையே போல இளைஞர் எல்லோரும் ஒங்கிய அறத்தினை விழைந்தால் என்னையொத் தோர்கள் இனியன அவர்க்கே இயம்பவும் மறுப்பரோ குழந்தாய்! மன்னுவல் வினையால் இளைஞர்தீ நெறியில் வாழ்வினில் விரைவது கண்டே என்னதான் இப்போக் கெய்துமோ? வென்றே ஏங்குமே எம்முடை நெஞ்சம்.
61

Page 41
62
நெருநலுள் ளவனின் றில்லையா மென்னும் நீரிமைத்தா கியவுல கிதனில் பெருகுமா சையின்பாற் பட்டவரிக் கென்றும் பெருகுமே துன்பமாம் அதனால் வருவதே தெனினும் வருகவென் றெண்ணி வருபயன் ஆய்ந்திடா தினிய கருமமே புரிக பயனைநோக் காதோரி கவலையும் காண்பரோ புவிமேல்
உறுப்பெலாம் செயலற் றொடுங்கியே ஆவி உடலினிற் பிரிந்திடுங் காலிப் பிறப்பிலே தெரிந்து புரிந்தபல் செயலும் பிழையற நினைந்துபார்க் கையிலே பிறர்க்கிமான் தீமை புரிந்திலேன் என்னும் பெருமையும் அமைதியும் கொள்ளும் அறப்பெரு வாழ்வு வாழநீ முயல்தல் அன்பகேள்! கடனதே யாகும்
எண்ணிலா நீதி நூல்பல ஒரிந்தும் ஏதமில் அறிஞரைச் சார்ந்தும் மண்ணிலே யாக்கை நிலைத்திடா தென்னும் மறுவிலா உண்மையை நினைந்தும் எண்ணிடா தின்னல் புரிந்துபொய் யின்பம் ஏற்பவர் தம்மை எய்தாதே உண்ணவொன் றின்றி யிறப்பினும் 'அறத்தை ஒம்புவோர்ச் சார்கரீ' யென்றான்
'ஜயநின் மொழிகேட் டளப்பிலா மகிழ்ச்சி அடைந்தனன் அதன்வழி நடப்ப மெய்யிலே முயல்வேன் வேறுமொன் றுன்னை வினவிட விழைந்தனன் தீயோ பொய்யிலா மனத்தோ யாயினும் கண்கள் போயதெவ் வாறென உரைத்தி ஐய்நான் வினவல் அறமிலை யெனினும் அன்பினால் பொறுத்தி துென் றுரைத்தேன்!

'குற்றமொன் றில்லைக் கேட்டதில் யானும் கூறுவேன் இதுவரை யாரிக்கும் சொற்றிலேன் எனினும் நின்னையொத்தோர்க்குச் சொல்வதால் நன்மையே உண்டாம் சற்றுநீ அமைதி யாயிரு யாவும் சாற்றுவேன்" என்றதன் பின்னர்ப் பற்றிலா நெஞ்சப் பண்பினோன் சரிதம் பகர்ந்திடத் தொடங்கினான் மாதோ
வேறு எண்ணிறந்த பயனளிக்கும் குன்றும் மற்றும் எழில்நிறைந்து பயனளிக்கும் இனிய காடும் மண்ணனைத்தும் உயிருடனே வாழ்வ தற்கு வகைசெயும் நல் வயல்களொடும் தகுதி யாலே கண்ணையிழுத் திடும்மணியும் தருவ தான கடற்சிறப்பும் உடையதுவாய் இலங்கு கின்ற எண்ணரிய நலம்படைத்த இந்த நாடே எனையீன்ற இயற்கைவளம் நிறைந்த நாடாம்
இவ்வுயர்ந்த நாட்டினிலே கண்டி என்னும் இரும்பதியில் நான்பிறந்தே துன்ப மென்ப தெவ்விதமென் றறியாதே நண்ப ரோடும் இன் கிள்ளைக் கூட்டமென மகிழ்ந்தே மாதர் கொவ்வையிதழ் விழைந்திடுமோர் பருவம் எய்திக் குறைவின்றி நானிருக்கும் போதவ் வூரில் எவ்விதமோ தொற்றுநோய் புகுந்த தாலே எண்ணற்றோர் நோய்க்காளாய் இடருற் றாரே.
தொற்றுமந்த வன்னோயைத் தடுப்ப தற்கும் சுகவாழ்வின் இயல்புதனை உணர்த்து தற்கும் கற்றறிந்த ஆண்களொடு பெண்கள் தாமும் கடனியற்ற முன்வந்தார் நானு மந்தத் தொற்றுவன்னோய்த் தடைத்தொண்டரி குழுவிற் சேர்ந்தே தொண்டுபுரிற் தேன் அந்தக் குழுவில் நின்ற பொற்றொடியாள் ஒருத்தியிடம் என்றன் நெஞ்சம் போயதுபின் திரும்புதற்கு விரும்பி டிாதே!
63

Page 42
é4
அறத்தைவளர்த் திடச்சிலரும் தமிழுக் கேநல் லாக்கமளித் திடச்சிலரும் இசையின் மேன்மைத் திறத்தைவிளக் கிடச்சிலரும் தமிழ்க்கூத் திவிநறி சீரைவிளக் கிடச்சிலரும் அன்பு வாழ்வின் மறத்தைவிளக் கிடச்சிலரும் அறத்தின் நீங்கr மாண்பைவிளக் கிடச்சிலரும் இவ்வை யத்தே பிறத்தலினைப் போன்றவளும் முழுமை வாய்ந்த பேரழகை விளக்குதற்கே பிறந்தாள் போலும்
பிறர்க்கியன்ற வரையினிலே உதவும் பண்பு பிறந்ததுகாண் என்னுடனே அஃதே போற்றான் பிறர்க்குதவும் செயலினிலே இன்பம் காணும் பெற்றியவட் கிருந்ததுவே அதனால் யாமே அறப்பணியை இயற்றுவதில் அனைவர்க் குள்ளும் அதிகமாய்ப் பழகுமொரு வாய்ப்பைப் பெற்றோம் முறைப்படியாம் தோண்டுசெய்யக் கண்ட வூரார் முழுமனத்தோ டெமைமகிழ்ந்து வாழ்த்தி னாரே
பற்றுடனே தொண்டர்குழு முயன்று செய்த பணியாலே தொற்றும்நோய் நீங்கிப் போகி நற்பணியைப் பாராட்டி ஊராரி எல்லாம் நல்விருத்தங் கெமக்களித்தார் விருந்தின் பின்னர்த் தொற்றியநோய் தடைசெய்த தொண்டர் எல்லாம் தொடங்கினரே பயணத்தைத் தத்த மூர்க்குப் பொற்றொடியும் புறப்பட்டாள் "நமது நட்புப் புவியிடையே வளர்ந்திடுதல் வேண்டும்" என்றேன்
அன்னமென அவள் நகூப்ப வளைசு மந்தும் அதுவற்றி வருந்தாவாய்க் கையி ரண்டும் இன்னலெதும் இடைக்குவரு மோவென் றஞ்சி இருபுறத்தும் காவலரிபோல் அசையு மாண்பும் புன்னகைசெய் திடுங்காலை முகத்திற் தோன்றும் புத்தழகும் செங்கதிர்க்குக் கூகம் கண்ணும் Ayaằrører 6 áî G3Lunar யினள் எனினும் அகத்தின் கண்ணே அழியாத ஓவியமாய் நிலைத்த வாலோ,

ஊராரின் நோய்நீக்கப் போன என்னை உண்டதுகாண் காதலெனும் வெய்ய நோய் அத் தீராத நோய்நீக்க மருத்து வரிக்கும் திறனில்லைப் பொற்றொடிக்கே உண்டா மென்று பாரோதும் திருக்குறளும் கூறக் கேட்டே பாவைக்கென் கருத்தனைத்தும் ஒலை மூலம் சீராகத் தெரிவிக்க எண்ணி நானும் சிந்தனையை எழுத்தாக்க முயற்சி செய்தேன்
வேறு
நெய்யில்லாக் காரணத்தால்
நேரம் ஒருவிதமாய்ச் செய்ய சிறுவிளக்குச்
சீரழிந்தே மங்குதல்போல் நங்கையே நின்சேரிக்கை
நான் காணாக் காரணத்தால் இங்கென் சிறுவாழ்வும்
என்றென்றும் தேய்வதினை ஏட்டில் எழுதத்
துணிந்தே எழுதுகிறேன் ஏட்டில் வெறுமெழுத்தென்
றெண்ணாதே இத்துணையும் வாட்டும் பெருநினைப்பால்
வாடியளன் னுள்ள மதைக் காட்டத் தமிழ்ச்சொற்கள் காணும் முயற்சியடி பொன்னின் னிறமும்
புதுமைத் தமிழ்ச்சுவையும் உன்னை விரும்பி
உடனே பொருந்தியதால் குன்றா அழகுதனைக்
கோதறியா நற்குணத்தை என்றும் விழைந்தலையும்
ஏழை யுளமுமுனை
S. 65

Page 43
66
நாடி அடைக்கலமாய்
நன்கிருக்க வேண்டுவதைக் கோடி முறைவிழியாற்
கூறினேன் நின் கருத்தை நன்குரைக்க எண்ணாதே
நங்காய் நடந்துவிட்டாய் என்கருத்தை ஏற்கா
இதயம் படைத்தனையோ?
ஏது மறியேன்
எழிலணங்கே உன்னையொரு போதும் மறவாப்
புதுவாழ்வு பெற்றுவிட்டேன். உன்னை மணந்தால்
மணப்பேன் உனைமறந்து பின்னை யொருத்தியையான்
எண்ணேன் பிறப்பிலெலாம்
இவ்விதம்என் எண்ணத்தை ஏட்டில் எழுதியந்தக் கொவ்வை யிதழியிடம்
கொண்டுசென்றே சேர்க்கவென நண்பன் ஒருவனிடம்
நான்கொடுத்தேன் நண்பனுமே பண்பு தவறாமற்
பாவையிடம் சேர்த்தலுமே
முற்றும் படித்து
முடித்தபின்னர்த் தன்னுள்ளே? சற்றேதோ சிந்தித்துத்
தன்கருத்தைக் கூறாமல் நேரில் வருகவென
நீயவர்க்குச் சொல்லுகென நேரிழையாள் நண்பனிடம்
நெஞ்சை ஒளித்துரைக்கக் "கொம்பின் உரையி"தெனக்
கூறினான் நண்பன்நான் அம்பில் விரைந்தேன் அவண்

வேறு மண்ணகத்தே உடலிருப்ப நெஞ்சற் தன்னை வானகத்தே விடுத்தவள் போல் எதையோ ஊன்றி எண்ணியவா றவளிருந்தாள் எனைத்தான் எண்ணி இருக்கின்றாள் என நினைத்தே அவளின் பக்கம் நண்ணியொரு நகைபுரிந்தேன் கண்டாள் இல்லை நங்கையவள் இருந்தநிலை சிற்ப வல்லோன் பண்ணியநற் சிற்பம்போல் இருத்தல் கண்டே பருகினேன் அழகுதனை விழிவாய் நானே!
வேறு
"சீரெலாம் நிறைந்த தீந்தமிழ்ப் பாடல் செவிவழிச் செய்யுமோர் இன்பம் காரெலாம் திரண்ட கூந்தலாய் நின்றன் கயல்விழித் துடிப்பிலே கண்டேன் பாரெலாம் ஒருங்கே எதிர்ப்பினும் நெஞ்சம் பற்றெலாம் துறப்பினும் என்றும் நேரிழாய் நின்னை மறக்கிலே" னென்றென் நினைவினை அவட்கெடுத் துரைத்தேன்
தூயபா லனைய நெஞ்சினேன் உள்ளத் துடிப்பெலாம் சொல்லினால் விளக்க வேயெலாம் நாணும் தோளினாள் தரீனும் விழியினால் நீர்விடுத் தனளாய் தேயமே வடிவாய் நிற்குநும் முள்ள நினைவெலாம் உணர்ந்தனன் உங்கள் தூயநெஞ் சதனை வாழ்த்தினேன்! எனினும் சொல்லுவேன் மற்றுமொன் றென்றாள். மற்றவர்க் குதவும் பண்பெலாம் நும்பால் மலிந்தமை கண்டவென் னுள்ளம் அற்றைநாள் தொடங்கி உடன்பிறப் பெனவே ஆவலோ டெண்ணிய தியானோ பற்றெலாம் ஒருவர் தமக்களித் தவரைப் பல்கிடும் பிறப்பினில் எல்லாம் சற்றுமே பிரியேன் என்றுளச் சொற்கள் சாற்றினேன் என்றவ ளுரைத்தாள்
67

Page 44
68
பற்றெலாம் கவர்ந்த தனிச்சிறு மகனைப் பாய்புலி கவர்ந்திடத் துடித்த பெற்றவள் போலும் கற்பினை இழந்த பெருங்குடி மகளினைப் போலும் உற்றபே ரிடரால் உளம்மிகத் துடிப்ப உடலெலாம் ஆற்றலை இழப்பச் சொற்களெ ல்னாவில் வரமறுத் திடவும் சொல்லினேன் முயற்சியாற் சிலவே.
"ஆவலால் சிறிதும் ஆய்ந்திடா தொருவன் அரும்பொருள் தன்னையான் விழைந்தேன் பாவியேன் இனியிங் கிருப்பதும் முறையோ? பண்பெலாம் கொன்றனன் அந்தோ சாவிலும் பிறர்க்கு நன்மையே செய்யும் சால்புளோரி வாழும் இம்மண்ணில் ஆய்விலா துளத்தின் வழிச்செல்வோன் வாழ்தல் அறத்தினைக் கொலும் செயல் அன்றோ
என்றியான் கூறித் துடித்தமை கண்டே ஏந்திழை மிகத் துயர் கொண்டே "ஒன்றும்நீரி தீங்கு செய்திவீர் வீணே உளம்மிக வருந்துதல் வேண்டா அன்றுநீர் என்னை மற்றவன் பொருளென் றறிந்திடாத் தன்மையால் அன்றோ பொன்றிடா ஆவல் தன்னையே கொண்டீர் புவியில்என் நிலையைஒாந் ததுவும்
நெஞ்செலாம் நொந்தீர் இச்செயல் அன்றோ நேர்மையின் அணியதாய் ஆகும் வஞ்சமே இல்லா அன்பியான் கொண்டேன் வாழ்வெலாம் உமக்கியான் தங்கை எஞ்சலார் எதுவும் உரைப்பரென் றெண்ணி இவ்விடம் வருதல் நீக்காதீர் அஞ்சிடா தென்றும் வருகரீர் வருதல் அறத்தினிற் கொவ்வுமே" யென்றாள்

உன்னையே என்றன் வாழ்வென நினைந்தே உலகினில் வாழ்ந்தனன் அதனால் இன்னும் என் ஆவி நிலையினிற் சிலநாள் இருக்குமோ இல்லையோ அறியேன் மன்னுவல் வினையால் உலகில்யா னிருப்பின் வருகுவேன் இனியெனக் கென்றும் துன்பமும் நோயும் அன்றிவே றெந்தத் துணையுமே உலகினில் உண்டோ ?
எனக்குவாழ் வதனைத் தருவதும் துயரால் இடைவிடா தியான்வருந் திடினும் மனக்குநல் லனவே மொழிவதும் அன்பாம் மருந்தினால் உயிரை ஒம்புவதும் தனித்துணை யாக இருப்பதும் என்று தரையினில் நீண்டபன் னாட்கள் நினைத்ததாம் பொருளை இழந்தனன் ஆவி நிலைக்குமேல் வருகுவேன் என்றேன்,
எண்ணினால் மண்ணில் இன்னலே அன்றி ஏந்திழாய் இன்பமொன் றில்லை உண்மையாம் இன்பம் பற்றெலாம் துறந்தோர் உறுவரே என்னையொத் தோர்கள் நண்ணுமோர் இன்பம் சிறிதுமே இல்லை நலனெலாம் இழந்தவென் வாழ்வு உண்ணுநீர் அற்றோர் உயிரென மெல்ல ஒழிந்திடும் உண்மையே என்றேன்.
ஒருதுயர்க் காக உலகையே துறக்கும் உள்ளமும் நல்லதோ அண்ணா பெருமையும் உரனும் ஆடூஉவின் மேன என்றிடும் பெருந்தமிழ் நூலின் பொருளினை ஒர்ந்தும் துயரினுக் கஞ்சும் புன்மைமேற் கொண்டதும் ஏனோ ? வருவதே வருமென் றுரியநற் கடனை வாழ்வினில் கொள்வதே மேலாம்.
69

Page 45
70
தனக்கென வாழ்வு பயன்படா விடினும் தக்கவரிக் கென்று வாழாது மனக்குறும் துயரைத் தவிர்த்திட இறக்கும் வாழ்வுமோ தன்னல வாழ்வாம் எனக்கென வாழ்க 1 என்பொருட் டாய்நீர் இறப்பது காண்பனே ஆயின் எனக்குமோ வாழ்வே இல்லையாம்" என்றே இருவிழி நீரீவிடுத் துரைத்தாள்,
"எண்ணியே யாரும் உலக மீதினிலே இதுவரை பிறந்திலர் அதனால் எண்ணிய வாறே இறப்பவும் யார்க்கும் எட்டுணை உரிமையும் இலையாம் புண்ணியம் யாது பாவமும் யாது புவியிடைக் கொள்வதும் யாதென் றெண்ணியே நன்றைப் புரிந்துறு பயனை ஏற்பதே மே"லென உரைத்தாள்,
'எனக்கென இந்த வாழ்வினிற் கணமும் இருப்பதே இல்லைதான் வாழ்தல் உனக்கென வென்றே முடிவுசெய் தனன் யான் உலகினில் இக்கணம் முதலாத் தனிப்புது வாழ்வு கொண்டனன்" என்று சாற்றியே அவட்பிரிற் தனனாய் எனக்குறு துணையாய்த் துன்பமே தொடர இல்லெனும் சிறையடைந் தனனால்,
வேறு பொங்கியிடர் செயும் துயரில் அமைதி காணப் புகழ்படைத்த தமிழ்மங்கை உதவிசெய்தாள் திங்கள் சில சென்றதன்பின் ஒலை ஒன்றைச் சேர்த்தனனே ஓர் இளைஞன் அதிலே அந்த மங்கையின்கை யெழுத்திருப்பக் கண்ட நானும் மகிழ்ச்சியுடனே விரும்பிப் படித்தேன் அஃதில் "உங்களது நலமறிய விரும்புகின்றேன் உரைக்கின்றேன் எனதுநலம் இன்னும் ஒன்றே !

என்னுள்ளம் ஒருவருக்கே உரிய தென்றே இயம்பினன்யான் முன்னேயே வரும்நன் னாளில் அன்னாரும் நானும்மே உயர்ந்த தாமில் லறவாழ்வை மேற்கொள்ளப் போகின் றோம்நீர் இன்னுரையால் எமைவாழ்த்தி யேக வேண்டும் ! இதுவுங்கள் தங்கையது விருப்பம் என்றே நங்கையவள் எழுதியமை கண்ட நானும் நறுமணத்திற் கேகிடவே முடிவு செய்தேன்.
இங்கெனக்கென் றாசையோ எதுவும் இல்லை ஏந்திழையின் நல்வாழ்வே என்வாழ் வென்று மங்கையவள் விருப்பத்தை அவண்நான் சென்று மறவாது நிறைவேற்றல் விழைந்தேன் ஆகி அங்குசென்றேன் எல்லோரும் ஒசை யின்றி அழுதவண்ணம் இருந்தார்கள் அவளின் வாழ்வில் பங்குகொண்டோன் வருந்தியவா றிருத்தல் கண்டே பகர்கதுயர்க் காரணத்தை என்றே கேட்டேன்.
பண்புடையோய் எதிர்பாரா வண்ணம் நேற்றுப் பற்றியதாம் வெம்நெருப்பால் உயிரே போல்வrள் கண்களினை இழந்துவிட்டாள் மற்றென் சொல்வேன் கலங்குகிறோம் என்றுரைத்தான் அந்தோ அந்தோ ! மண் ணிடையான் துயருற்றேன் எனினும் அன்னாள் மகிழ்ந்திருப்பின் எனக்கின்பம் ஆகும் என்றே எண்ணினன்யான் அப்பேறும் இழந்திட் டேனே ! எணத்துடித்தேன் 1 செயலறிவா தேங்கி னேனே !
வருத்தமெனும் கடலடியில் கிடந்த என்னை வந்தொருகை தீண்டியது யாரோ என்றேன் "மருத்துவன் நான் உன்னுடைய நண்பன் என்னை மறந்தனையோ எனநண்பன் கேட்க இப்போ திருக்குநிலை தனில்யாரும் நினைவில் இல்லை ஏற்றமுறு மருத்துவன் நீ தானே யாகில் இருப்பவர்யா வரும்மகிழத் தீயாற் கெட்ட இருவிழியும் குணப்படுத்து வாயோ" என்றேன்
7

Page 46
72
என்னுடைய ஆவலினை உணர்ந்த நண்பன் 'ஏந்திழையில் வையகத்தைப் பார்த்தல் வேண்டின் இன்னொருவர் தம்விழியை ஈதல் வேண்டும் இச்செயற்கிங் குடன்படுவோர் யாரு மில்லை பொன்னனைத்தும் கொடுப்போரும் உள்ளார் கண்கள் புவியிடையே பிறர்க்களிக்கும் பண்புள் ளோரிகள் இன்னுமுதித் திடவில்லைத் தியாக நெஞ்சம் இலையெனினும் அதுகுற்றம் இல்லை" என்றான்
மருத்துவனைத் தனியிடத்திற் கீழைத்துச் சென்றே மாண்புடையோய் ! நீஎன்றன் நண்பன் என்றன் வருத்தத்தில் பெரும்பங்கு நினக்குண்டென்றேன் மறுப்பென்ன நீழன்னர் உதவாவிட்டால் இருப்பேனோ இந்நிலையில் உனக்காய் என்னால் இயன்றதெல்லாம் செய்திடுவேன் அதனை இன்னே உரைத்தினனச் சொன்னானே நானும் என்றன் உளத்திருந்த அனைத்தையுமே உரைக்க லானேன்
இன்று விழி தனை இழந்தா ளிடத்தி லேதான் இருக்கின்ற தென்னாவி அவள்நோக் கண்டே குன்றுகின்ற தென் வாழ்வு அவளின் துன்பம் குறையாது போமா கில் என்றன் ஆவி சென்றுவிடும் இஃதுடலில் நிலைத்தல் வேண்டின் சேயிழையான் விழியுடன் தான் விழைந்த வாறே மன்றல்புரிந் திடல் வேண்டும் இதற்கே உன்றன் மருத்துவத்தின் ஆற்றலெலாம் உதவல் வேண்டும்
மண் ணிடையே அவளுக்காய் உயிரும் ஈய மணந்துணிந்தேன் ஆதலினால் என்றன் நல்ல கண்ணிரண்டும் அவளுக்குக் கொடுப்பேன் பாரைக் காணுமொரு நிலையினிலே அவளை வைத்தி ! எண்ணரிய பிறவிகள்தான் எடுத்திட் டாலும் இவ்வுதவி புரியினுனை மறவேன் என்றேன் எண்ணாமற் கூறுகின்றாய் கண்ணின் மாண்தை இன்னும்நீ உணரவில்லைப் போலு" மென்றான்.

வேறு
திங்களினைக் குன்றதனைசி சீர்படைத்த கடலதனைத் திருவாய்ந் திட்ட செங்கதிரை மின்னலினை விண்மீனைத் தெரிவித்தே இயற்கை என்னும் மங்கையவள் உரைக்கின்ற உண்மைகளை அறங்களினை வாழ்விற் பற்ற இங்கெனக்கு நல்லுதவி இயற்றியவை என்னரிய இருகண் ணன்றோ! பல்கியதீந் தமிழ்நூல்கள் ஒய்வின்றிப் படிப்பதற்கும் பாடோரிந் திட்ட நல்லவரைக் காண்பதற்கும் வாடியோரிக் கினியசெயல் நான்செய் தற்கும் ஒல்லுகின்ற வகையிலெலாம் உதவியவிக் கண்மிகவும் உயர்ந்த வேனும் மெல்லியட்கே இன்றுதவக் கண்ணன்றி ஆயுங்கால் வேறொன் றில்லை,
வேறு எனக்கென்றே வாழ்வில்லை என்று நானும் எண்ணற்ற முறை உரைத்தேன் நண்ப நீஎன் மனக்கினிய செய்வதெனில் என்சொற் கேட்டி மறுப்பதெனில் கொடும் நஞ்சைத் தருதி என்றேன் "உனக்குரைத்துப் பயனில்லை உன்றன் எண்ணம் உனைக்கெடுப்ப தாயின் நான் என்ன செய்வேன்? எனக்கென்ன இதுகடனென் றாற்று கின்றேன்" எனஉரைத்தே இருகண்ணில் நீர்சொ ரிந்தான் என்னுடைய கண்ணென்றால் அந்த மங்கை ஏற்பதற்கு மறுத்திடுவாள் கொலைத்தண் டத்தால் தன்னுயிரை விடுமுன்னர் ஒருவன் மற்றோரி தமக்காகத் தன்கண்ணைக் கொடுக்க வென்றே இன்னுரைசெய் திறந்தனனென் றவட்கு ரைத்தே என்னுடைய கண்களினை அவட்கே வைத்தி பின்னிவண்நான் வாழாதே இவ்வூர் விட்டே பிறவூர்க்குச் செல்கின்றேன் என்றே சொன்னேன்.
1 Ο 73

Page 47
74
எண்ணியவா றனைத்துமே நடந்த மங்கைக் கிருவிழியும் உதவினேன் மங்கை தானும் எண்ணியவன் தனை மணந்தே இன்ப மாக இருக்கின்றாள் என அறிந்தேன் அவ்வூராரிதம் கண்களுக்குத் தெரியாதே அற்றை நாளே கிருத்துவப்ப இவ்வூர்க்கு வந்து நானும் மண்ணகத்தே இயன்றவரை பிறர்க்கு நன்மை வழங்கியவா றிருக்கின்றேன் என்றே சொன்னான்
காதலென் றொருநாட் கொருத்தியை நாடும் கயவர்கள் வாழ்ந்திடும் நாளில் காதல்யா தெனவே காட்டினை உன் தன் கண்ணையும் அவட்கென அளித்தாய் தீதெலாம் ஒருங்கே சேரினும் நெஞ்சைத் திருடியோர் வாழ்ந்திடல் வேண்டிச் சாதலும் புரியுந் தன்மையோர் தாமே தரையினில் காதலர் ஆவார்.
நிலையிலா யாக்கை தன்னெழில் கண்டே நினைப்பதும் எழில்மறைந் ததுவும் விலையிலாப் பண்டம் எனவிடுப் பதுமே மேவியிந் நாளிடைப் பலரும் அலைவுறும் காலை அறம்சொலும் காதல் அறிகவென் றுணர்த்திய பண்பாம் மலையெனத் திகழும் மாண்புளோய் உலகோரி மனத்தெலாம் உள்ளனை நீயே.
உன்னையான் கண்ட முதலென துள்ளம் உயர்நெறிச் செல்லவும் அதற்காய் இன்னலெத் தனைதான் வரினுமேற் றிடவும் எண்ணிய தாதலாற் சிறியேன் இன்னுமெத் துணைதான் பிறப்பெடுத் திடினும் இட்டியும் அறம்வில காதே மன்னுதல் வாழ்வு வாழ்ந்திட உரை நீ வழங்குக என்றியான் இரந்தேன்.

உனக்கென எதைத்தான் உரைக்குவேன் யார்க்கும் உரைப்பதே உனக்குமிங் குரைப்பேன் வினைப்பயன் வசத்தால் நன்றதும் தீதும் விளைற்திடும் யார்க்குமே அதற்காய்த் தினைத்துனை தானும் தீங்குநீ என்றும் செய்திடல் நினைக்கவும் வேண்டா மனத்தினைக் கொல்லும் இன்னலை ஏற்றும் மற்றவர்க் கின்பமே செய்வாய்.
என்றவன் உரைப்ப ஐயநின் னெறியில் என்றனைச் செலுத்துவேன் மற்றும் இன்றுநின் காட்சி கண்டதும் புதிய இன்பிறப் பெடுத்தனன் இனிவான் நன்றினை வளர்க்க உயிரையும் சயும் நல்லதோரி உறுதியும் பூண்டேன் சென்றிட விடைதா என்றனன் அன்னான் செல்கெனச் சென்றனன் நானே.
( முற்றும் )
75

Page 48
இரண்டு வரம் வேண்டும் கலைஞன் வருகை
லின் வரை உயர்ந்தும் வளமார் கிளைகள் தான்பல பரப்பியும் தழைத்தும் அன்னையின் கருணை ஈதெனக் காட்டும் வண்ணம் தண்ணிழல் செய்தே நின்றதோர் விருட்சம் அவ்விருட் சத்தில் பறவைகள் ஆயிரம் சேர்ந்தே வாழும் செய்திடும் பேரொலி பள்ளிச் சிறுவர் அதன்கீழ் நின்றே பந்தினை அடித்துத் துள்ளிஆர்ப் பரிப்பர் மேய்ந்த பசுக்கள் அதன்நிழல் Αδπιφ, ஓய்ந்திருந் தங்கே இரையினை மீட்கும் வேலை யில்லா வீணரி சில்லோர் போவோர்க் கெல்லாம் சொட்டைகள் சொல்வரி மகளிர் சிலர்ஒர் மூலையில் இருந்தே சத்தியல் கொண்டே கல்லினை உடைப்பரி நோயினால் வாடும் குடும்பம் தன்னையும் சோம்பிக் கிடக்கும் குடும்பம் தன்னையும் குடித்தே அழியும் குடும்பம் தன்னையும் தாய்க்குலம் உழைத்தே காத்திடல் விரும்பி விருட்சத் தின்கீழ்க் கல்லுடைத் ததுவால் முதியரும் இருந்தனர் இடைவய தினரும் புதியரும் கூட இருந்தனர் அங்கே அக்கூட் டத்தில் கயல்விழி என்பவள் அழகும் பொலிவும் சொத்தெனக் கொண்டவள் பள்ளிப் படிப்பை முடிக்கு முன்னரே கொல்லும் வறுமைத் தீயினைத் தணிக்கச் சுத்தியல் கொண்டே உழைத்திட வந்தனள் முழுநிலா நிகர்த்த அவள் எழில் முகமெலாம் கல்லின் தூசு படிந்ததே, ஒடும் முகில் மறைத் தாலும் நிலாநிலா அன்றோ ! மற்றுள மாதரி பேசியும் சிரித்தும் பேரொலி செய்யும் வேளையிற் கயல்விழி
76

மட்டும் அமைதி உடையவள் ஆயினள் ஏதோ சோகம் அவளின் அகத்தில் தோன்றி முகத்தில் புலப்பட் டதுவால் அந்த வேளை அவ்வழி யாக வந்த ஸ்கூட்டர் யந்திரத் தவறினால் விருட்சத் தின் கீழ் நின்றது ஸ்கூட்டரில் வந்த இளைஞன் வையகத் தெழிலை ஒவிய மாகப் படைத்திடும் கலைஞன் இளமையும் அழகும் கொண்ட அவ் வாலிபன் தோற்றத் தேலுரி தனித்துவம் மிளிர்ந்தது ஆல மரத்தின் கீழே இருந்தே கல்லுடைப் போரைக் கண்டனன் அவனே! புனையா ஒவியம் எனவே இருந்த கயல்விழி மீது சென்றதும் பார்வை அப்பாற் செல்ல மறுத்தது. அவனோ, பார்வையில் வசதி படைத்ததாம் குடியிற் பிறந்தாள் போலத் தோற்றிடும் இவளேன் கல்லுடைக் கின்றாள் என்ற கருத்தினன் மேலும் பற்பல எண்ணினன் மனத்தே.
அழகுக் கைகள்
வீணையினை மீட்டவென்றே அமைந்த கைகள் விளங்குமலர் தொடுப்பதற்கே ஏற்ற கைகள் பூணனைத்தும் தாங்குதற்கே உகந்த கைகள் பொன்மணியைத் தொடுவதற்குத் தகுந்த கைகள் பேணுமனை அலங்கரித்தற் குற்ற கைகள் பேசுமுயர் கவிதைக்குப் பொருளாம் கைகள் நீவிலத்தே கல்லுடைத்தல் தகுமோ என்றே நெஞ்சமெலாம் நொந்தேகண் கலங்க லானான்,
காதலினை வளர்க்கின்ற சக்தி கொண்டும் கலைகளினை வளர்க்கின்ற ஆற்றல் கொண்டும் மேதினியை வசப்படுத்தும் அழகு கொண்டும்
77

Page 49
மெல்லுளத்தை உரைக்கின்ற பாங்கு கொண்டும் ஒதரிய வலங்கொண்ட இளைஞரி நெஞ்சை ஒரீகணத்தே உடைக்கின்ற இயல்பு கொண்டும் சோதிசெயும் திருவிழிகள் உடைக்கும் கல்லின் தூசிக்கே இடமாமோ என்றும் நொந்தான்.
பஞ்சனையில் மலர்மீது இன்னும் வேறோர் மலராக விளங்குதற்கே ஏற்ற மேனி நெஞ்சுவக்கக் காதலனைத் தழுவி அன்னான் நினைத்தபடி சுகம்வழங்கற் கினிய மேனி கஞ்சமலர்த் தாதெனவே மென்மை கொண்டு கண்ணிரண்டை அசையாமல் நிறுதிதும் மேனி பஞ்சமொன்று கண்டோஇக் கல்லு டைத்தே பாரினிலே துன்பமுறும் என்றே நொந்தான்.
என்றுபல அவன் நினைத்தே ஏங்கும் காலை எழில்வானம் இருண்டதுவே இரைச்ச லோடு நன்றுபுரி மழை பொழியத் தொடங்கிற் றங்கே நனையாமல் நிற்கமுடி யாமை கண்டே நின்றவரிகள் விரைந்திட்டாரி அவனும் சற்று நிற்பதற்கே இடம்நாடி அயலின் வீடு ஒன்றின்தா வாரத்தே ஒதுங்க லானான் உள்ளிருப்போரி யாரென்றே நோக்க லானான்.
வீட்டில் முதுமகள் வீட்டிலுள்ள படுக்கையிலே கிடந்த ஒரியென் வெளியினிலே நின்றவற்குக் கேட்கும் வண்ணம் 'வீட்டுக்குள் வாருங்கள் மழைதான் விட்டி பின்னரிநீர் வெளியினிலே செலலாம்" என்றே காட்டுகின்ற கருணையுடன் அழைத்த போது கடுங்குளிரில் நின்ற அந்த இளைஞன் தானும் வீட்டுக்குள் சென்றே ஒர் ஆசனத்தில் மெல்லஅமரிற் தான்நன்றி உணர்வி னோடே,
78

"அம்மாநான் ஒவியங்கள் தீட்டு கின்ற அழகுவளர் தொழில்புரிவோன் அதற்கே ஆக இம்மா நிலம் எங்கும் சுற்றிப் பார்த்தே இயற்கையெழில் இருவிழியால் நுகர்தல் செய்வேன் இம்மாலை இவ்வழியால் வந்த வேளை என்ஸ் கூட்டர் பழுதடைந்து போன தாலே உம் வீடு வரநேர்ந்த" தென்று சொன்னான் உற்றவனை நோக்கியே அப்பெண் சொல்வாள்.
*ஒருவருக்கிங் கொருவர்தான் உதவ என்றே உவப்புடனே நமைஈசன் படைத்தான் நின்றன் வரவுபற்றி மகிழ்கின்றேன் பல்லாண் டாக வாதமெனும் கொடுநோயின் பிடிக்காளாகி பெருமிடர்கள் அநுபவித்தே பாயின் மீது கிடக்கின்றேன் என்மகட்குப் பார மாக, ஒருசிறுமி உழைத்தென்னைக் காக்கும் செய்கை உள்ளமதைத் துன்புறுத்தும்" என்றும் சொன்னாள்.
இதயங்கள் கலந்தன
அவ்வேளை கயல்விழியாள் தேநீர் கொண்டே அவ்விடத்தே வற்திட்டாள் ஒவி யங்கள் செவ்விதினே வரைகின்ற குமாரி என் கின்ற சீர்மிகுந்த கலைஞனுமே நோக்க லுற்றான் இவ்வுலகின் அழகெல்லாம் ஒருங்கு சேர்ந்தே இவளாக வந்ததுவோ ! என்னும் வண்ணம் கொவ்வையித ழாள் அங்கு கோலம் செய்தாள் ; கோடியாம் கற்பனைகள் அவனும் செய்தான்.
தூசுடனே கல்லுடைத்த அப்போ தும்தான் சுடர்விட்டாள் அழகுடனே வீடு வந்து பேசுமொரு ஒப்பனைசெய் திப்போ தும்தான் பேரெழிலில் திகழ்கின்றாள் இந்தப் பாவை நேசமுறு நகையினிலும் அழகே செய்வாள்
79

Page 50
நிலத்தினிலே சினந்தாலும் அழகே செய்வாள் ஆசையுடன் பார்க்கையிலும் அழகே செய்வாள் அதுதவிர்ந்தே அழுதாலும் அழகே செய்வாள்
மணிமுடியில் இருந்தாலும் நிலத்தின் கண்ணே வைத்துவிடப் பட்டாலும் ஒளிசெய் கின்ற அணிவயிரம் தன்னியல் பிற் குறைதல் உண்டோ ? அதுபோல்தான் இவளுமென நினைத்துக் கொண்டான் பிணிவிளையப் பாாக்கின்ற இந்தப் பாவை பின் மருந்தும் தருவாளோ என்றே எல்லாம் அணிமார்பன் குமார் மனத்தே எண்ணும் நேரம் அவள் தேநீர் அவன் கையிற் கொடுத்து நின்றாள்
ஒவியத்தைத் தீட்டுகின்ற கலைஞர் யாரும் ஒவியம்போல் இருப்பாரோ? பாவை யார்தம் ஆவியினைக் கவர்கின்ற கலைகள் யாவும் அவர்கற்றும் இருப்பாரோ ? என்றே எல்லாம் தேமதுர மொழியுடையாள் மனத்தே எண்ணித் தெய்வநகை செய்திட்டாள் கணத்தின் பின்னே பூமலரும் கொடியொன்றே அசைதல் போலப் பொற்றொடியாள் கயல்விழியும் திரும்ப லானாள்
பேசாது தேநீரைக் கொடுத்து விட்டுப் பெண்ணழகு சமையலறை சென்ற வேளை "பாசமுளாள் உம்புதல்வி" என்றே அந்தப் படம்வரையும் கலைஞனுமே கூறி விட்டுத் "தேசுமிகும் இக்கன்னி கல்லு டைக்கச் செய்தவிதி யாதென நான் அறிய லாமோ மாசறியா நல்மணத்தீர் என்றன் கேள்வி வருத்தத்தைத் தருமென்றாற் பொறுப்பீர்' என்றாள்
இக்கேள்வி கேட்டதுமே படுக்கை மீது இடருற்ற மூதாட்டி தலையின் மீது மிக்கதுயர் உடன் அடித்தே உள்ளம் நொந்து விழியிரண்டும் நீர்சொரியத் துடிப்பாள் ஆகி இக்கேள்வி கேட்டதிலே குற்ற மில்லை
80

இயம்புகிறேன் எனக்கூறிச் சுவரின் மீது தக்கமலர் வழிபாட்டை ஏற்றி ருந்த தன் துணைவன் புகைப்படத்தை பார்க்க லானாள்,
அழுகின்ற மூதாட்டி தன்னைப் பார்த்தே "அழாதீர்கள் ! தாயேநான் குழப்பி விட்டேன் மழைசிறிது விட்டுளது என்றன் ஸ்கூட்டரி வளவினுள்ளே நிற்கட்டும் நாளைக் காலை பிழைதிருத்தி எடுத்தேநான் கொள்ளு கின்றேன் செல்வதற்கே உத்தரவு தருவீர் ?" என்றான் அழுதாள்கை தொழஅவனும் தொழுதா னாகி அவ்விடத்தாற் புறப்பட்டே படலை சேர்ந்தான்
திரும்பியவன் பாரிக்கையிலே யன்ன லூடே திகழ்கின்ற முழுநிலவை கண்ணாற் கண்டான் விரும்பிஅதும் நகைத்திடவே அவனும் அன்பை விளக்குகின்ற நகைபுரிந்து செல்ல லானான் பெருமழையும் காதல்களும் எப்போ தெங்கே பொழியுமெனக் கூறுதலும் இயலுமாமோ? பருவத்தின் ஆட்சியினை மீறு வோர்கள் வாரினிலே கோடியினுள் ஒருவர் அன்றோ
கருணையிலா ஒரு கொடியன்
ஈவி ரக்கம் சிறிதுமி லாதவன் இன்சொல் என்பது யாதெனத் தேர்கிலான் பாவி யரிக்குளே பாவியும் ஆகுவான் பண்பர் தம்மைவெறுக்கு மியல்பினன் மேவி நின்ற உடன்பிறப் பொன்றையும் வீணில் வாடிடச் செய்வதில் வல்லவன் ஒவி யன்சென்ற ஓர்சிறு நேரத்தில் உரத்த பேரொலி செய்தவண் வந்தனன்
"யாரி திங்கொரு ஸ்கூட்டரை விட்டது ? யான றித்திடல் வேண்டு"மென் றே அவன்
பேரி டிநிகர் சத்தத்திற் கேட்டலும் பேதை யாயமுதுமகள் சொல்லுவாள்
1 8

Page 51
'யாரோ வந்தனன் ஸ்கூட்டர் பழுதென்றால் நாளை வந்தே எடுத்திடு வேனென்றான் பாரில் எங்கும் நடப்பது தான் இதிற் பாய்ந்து கொள்ளுதற் கேதுள தென்றனள்.
வாதம் என்றிடு தோயிற் கிடந்தவள் வாதம் தன்னிற்கொ டியதோரி நோய் வந்தே வாதம் செய்தலும் கண்கள் கலங்கியே மறுபு றத்திற் திரும்பிச் சுவரினில் தீதி லாத்தன்து ணைவன்ப டத்தினை நோக்கிக் கண்களின் நீரைச்சொ ரிந்தனள் நீதி என்பது சற்றுமி லாதவன் நின்ற திக்கையும் நோக்க மறுத்தனள்
நோயிற் கால்கள் வழங்குத லற்றதும் நுவலும் அன்புத் துணைவன் மறைந்ததும் நேயம் வைத்திட வேண்டிய தம்பியே நித்தம் நித்தம் குடித்திடர் செய்வதும் "மாயமோ ? விதியோ?"என எண்ணியே மயங்கி ஏங்கிடும் அந்தமூ தாட்டியைப் பேயை ஒத்தஉ டனபிறப் பானது பெருங்கு ரலினில் எங்குன் சேய் என்றதே.
"என்னை மாமன் என் றேஉன்றன் புத்திரி என்று மேமதிக் கின்றனன் இல்லையே இன்னும் தேநீரை ஏன் கொண்டு வந்திலள்" என்றுமே அவன் கர்ச்சிக்கும் வேளையில் சின்ன வண்ணக் கயல்விழி மெல்லவே தேநீர் கொண்டு கொடுத்தனள் தெய்வமே ! என்ன செய்குவம் என்றும் இப்பாரிலே இழிந்தோர் செய்கையால் நல்லவர் மாய்கிறார்.
"கல்லு டைத்த உழைப்பினில் நாளைக்குக் காலை யில் ஒரு பத்தினைத் தந்திடு தெல்லி யூர்வரை உன்றனுக் காகவே சென்று நான்வர வேண்டியும் உள்ளதே??
82

தொல்லை செய்திடும் மாமன் உரைத்தலும் தோகை போன்ற கயல்விழி தானுமே இல்லை யென்றுமோ மென்றும் சொல் லாமலே இடத்தை விட்டுமே மெல்லவே சென்றிட்டாள்
"உன்ம கட்கு மணத்தினைச் செய்திட ஊரெ லாம்.அலை கின்றனன் நானுமே இன்னு மோர்வரன் வந்திலன் நல்லனாய் என்ன செய்குவேன் சொல்லுவாய்" என்றுமே தன்த மக்கையைக் கேட்டகு டியனை தலைநி மிர்த்தியே பார்த்தமூ தாட்டியும் "உன்ற னுக்கதில் அக்கறை உண்டெனில் உலகிலே அது தாமத மாகுமோ ? "
என்றி யம்பியே மேலுமே சொல்லுவாள் "என்னு டன் பிறப் பாகவிருந்தும்நீ என்தன் சேயினில் அன்பினைக் கொண்டிலை ஏதும் செய்ததாயக் காண்கிலன் அப்பனே இன்று மந்தக்கு ழந்தைஉ ழைத்திட இருந்து நீயுமே எனனுடன் உண்கிறாய் நன்று தான் இது வென்றுநீ நெஞ்சினில் நாணி லத்திடை எண்ணிய துண்டுகொல் ?”
இவ்வி தம்அவள் மெல்ல உரைத்தலும் இடியெ னுங்குரல் தன்னில்க முறுவான் "எவ்வி னைப்பய னோ ?ாவரி தேர்வரோ ? எங்கு தேடியும் நல்வரன் இல்லையே செவ்வி திற்கற்ற ஆசிரி யர்களோ ! செகத்தில் ஒரீலட்சம் சீதனம் கேட்கிறார் எவ்வி டமும் மதிக்கும் மருத்துவரி இரண்டு லட்சங்கள் சீதனம் கேட்கிறார்.
மன்னு சங்கக்க டையின்ம னேஜரும் மற்றும் ஆயிரம் பற்பல கேட்கிறாரி இன்னும் பஸ்ஸின் நடத்துநர் தாமுமே
83

Page 52
இதற்கு மேற்படச் சீதனம் கேட்கிறார் என்ன செய்குவம் சீதனம் இன்றியே ஏந்திழை மணம் எய்துதல் ஐயமே." என்ற வன்சொல ஏழையின் கண்களே இரண்டும் நீரைப் பெருக்கிடல் ஆயின.
கயல்வி பூழியின் அழகை விழைந்துமே பற்ப லர்மணம் செய்திட முன்வர நயமி லா இவன் நின்று குழப்பினன் நன்கவள் மணம் தானும் முடிந்திடின் சுய உழைப்பினில் வாழ்ந்திட நேருமே துன்பமே என எண்ணினன் கீழ்மகன் சுயந லம்பற்றிப் பெண்கள் மணத்தினைத் தடுக்கும் துட்டர்கள் எத்தனை கோடியோ ?
இனிய சந்திப்பு
மற்றநாள் மாலையிலே கல்லு டைத்தே வழக்கம்போற் கயல்விழியாள் திரும்பும் வேளை அற்புதமாம் ஓவியங்கள் தீட்டு கின்ற அழகார்ந்த குமார் என்பான் வழியிற் கண்டான் "பொற்றொடியே நின்னுழைப்பைப் போற்று கின்றேன் புவித்தலத்தைக் காக்குங்கை உழைக்கும் கையே பெற்றவளைக் காக்கவென உழைத்தல் செய்யும் பெண்களுன்போல் வேறெவரும் இருக்கின் றாரோ ?
இவ்விளமை வாழ்வினிலே அந்தஸ் தென்றும் இதுஎன்றும் அது என்றும் பாராய் ஆகி செவ்வியது நல்உழைப்பே என்று நம்பிச் சிறுவயதிற் கல்லுடைக்கும் துணிச்சல் தன்னை இவ்வுலகில் உன்போல இன்னும் யாரும் இதற்குமுன்னர் கொண்ட துண்டோ? அறியேன் பெண்ணே! எவ்வெவர்க்கும் அடிமைசெய்து பிழைத்தி டாத இனியசுதந் திரத்தொழிலைக் கொண்டாய் நன்றே.
84

தொழிலினிலே பேதமில்லை என்று மேலோர் சொல்லிவைத்த தத்துவத்தை உணர்ந்தோ அன்றிப் பழுதநியாத் தொழிலிதுதான் என்று நீயே பாரினிலே தெரிந்தெடுத்த இயல்பி னாலோ எழுதரியாய் தொழில்புரிவாய் நின்னைப் பெற்ற தாய்இனியள் நாடினிது நேற்று மாலைப் பொழுதுமுதல் நானும்தான் இனியன் ஆனேன்" என்றவனும் புன்முறுவல் உடனே சொன்னான்
'நன்றுங்கள் ஸ்கூட்டரினைத் திருத்து தற்கு யாருமே வந்திலரோ" என்றே கேட்டாள் "இன்று நான் திருத்திடுவேன் இல்லாவிட்டால் இரண்டோமூன் றோ தினத்தில் திருத்திக் கொள்வேன் ஒன்றுக்கும் கவலையுற வேண்டாம்" என்றான் ஒண்டொடியாள் சிரித்துநிலம் நோக்கலானாள் ஒன்றுபட்ட நெஞ்சினர்தம் கற்ப னைக்கே உலகினிலே எல்லையெதும் இருக்கு மாமோ
பொங்குகின்ற நினைவுகட்கே ஆளா கின்ற புதுமையுடன் அவரிவீடு சென்ற வேளை அங்குபடுக் கையிற்கிடந்த முதிய பெண்ணாள் அன்புடனே "வாதம்பி ?" என அ ழைத்தே "எங்களுக்கும் உமக்குமே முற்பி றப்பில் ஏதோஒர் தொடர்புதான் இருந்த" தென்றாள் அங்குதன துள்ளத்தே இம்மைக் கண்ணும் "அதுதொடர வேண்டுமென" அவன்நி னைத்தான்
துன்பச் சம்பவம் அங்குசுவரி மீதிருந்த படத்தைப் பார்த்தே அதன்மேலும் சொல்லுதற்குத் தொடங்கலானால் எங்களுக்கு நன்மைசெய இருந்த தெய்வம் இவ்வூரில் வியாபாரத் தொழிலைச் செய்தே எங்களுக்கோர் குறையுமின்றிக் காத்த நாளில் இருந்தாற்போ லேஓருவன் வீடு வந்தே
85

Page 53
"உங்களுக்கோர் நற்செய்தி" என்று விட்டே உற்றகுர லில்மேலும் சொல்ல லானான்.
என்றனுக்குச் சொந்தமாய்க் கடைதான் ஒன்றே எழிலார்ந்த கொழும்பினிலே சிறப்பாய் உண்டு குன்றொத்த செல்வத்தை இந்நாள் நானே கொண்டிருக்கின் றேன்என்றால் எல்லாம் அந்த நன்றுசெயும் கடையாலே வந்த லாபம் நானின்றோ உடல்நலத்தை இழந்த தாலே இன்றந்தக் கடைதன்னை விற்றல் பற்றி எண்ணினேன் உமைநினைத்தேன் உடனே வந்தேன்
"பலவல்லச் சிலலட்சம் கடன்பட் டேனும் பாரினிலே நீரிஅந்தக் கடையை ஏற்றால் நலமெல்லாம் உமைஎய்தும் நீவிர் எல்லா நாளுமே சிறப்புடனே வாழ்தல் கூடும் பலவெண்ணிக் காலத்தை வீணாக் காதே பாரினிலே வாங்கிடுவீர்" என்றே சொன்னான் சிலலட்சம் கடன்பட்டே துணைவ னாரும் திடீரென்றே கடையதனை வாங்கிக் கொண்டார்.
பொருளாசை தூண்டுதலும் முன்னரி என்றும் புவியினிலே நமைப்பிரிந்து செல்லாத் தெய்வம் ஒருமாலை நமைப்பிரியும் துன்பம் தன்னை உள்மறைத்தும் புறம்நகைத்தும் கலங்கிக் கொண்டே "வருகின்றேன்" எனக்கூறி ரயிலில் ஏறி வையகத்தைப் பிரிவார்போல் எமைப்பி ரிந்தே பெருநகராம் கொழும்புெெசன்றார் என்று கூறிப் பேதையவள் கண்கலங்கி மேலும் சொன்னாள்.
"சென்றவரின் கடிதத்தை நோக்கி நோக்கிச் சிலதினங்கள் சென்றனவே இரவில் ஒர்நாள் என்துணைவரி கனவினிலே காசி தந்தாரி எழிலாரிந்த அவரிமுகத்திற் சோகம் கண்டேன் ஒன்றுமே பேசாத என்னைப் வாரித்தும்
86

உருகுகின்ற விழிகொண்டு மகளைப் பார்த்தும் நின்றவரை நான் பார்த்தே என்ன என்றேன் நிமிடங்கள் சிலசெல்ல அவரோ சொன்னாரி"
"உயிரனையாய் கயல்விழியும் நீயும் இந்த உலகில் அலைந் திடப்போநீர் அதனா லேதான் துயரடைந்தேன்" என அழுதாரி சற்றுப் பின்னர் துயில்நீங்கிக் கண்விழித்தேன் கனவின் அர்த்தம் நயமிலையே என நினைத்தேன் எனினும் என்றன் நங்கைகயல் விழிக்கதனை உரைத்தேன் இல்லை அயலவரோ அவ்வேளை இங்கு வந்தே அதிர்ச்சிதரும் செய்திஒன்றைக் கூற லானார்"
இவ்வாறு முதுமகளோ வருந்திக் கூற எழிலார்ந்த கயல்விழியாள் நடுங்கிக் கொண்டே செவ்வாணம் இருண்டதுபோல் முகம்தான் மாறத் "தெய்வமே என் அப்பா அப்பா" என்றே அவ்வேளை கதறுதலும் முதிய பெண்ணாள் "அம்மாஇவ் விருந்தினர்க்குத் தேநீர் வேண்டும் இவ்வேளை அழலாமோ முதலில் தேநீர் எடுத்துவா" எனமகளை அனுப்ப லானாள்.
மகள் அழுதல் தனைப்பொறுக்கா அன்புத் தாயை மனத்துள்ளே குமார் என்பான் வாழ்த்தும் வேளை அகமெங்கும் முகமெங்கும் துன்பம் தோன்ற அந்தமுது மகள்மேலும் சொல்ல லானாள் "மிகவருந்தி அயல்வீட்டுப் பெண்ணாள் வந்து வேதனை நீர் அடையாதீர் கொழும்பே யென்று புகல்கின்ற பதியினிலே கலவ ரம்தான் பெருநெருப்பாய்ப் பரவியதாம்" என்றே சொன்னாள்
**கண்டகன வும்பாவை சொன்ன சொல்லும் கலந்தொன்றாய்ப் படுக்கையிலே கிடந்த என்னைக் கொண்டபெரும் விடமாகத் துன்பம் செய்மக் குவலயத்தே எதும்செய்தல் அறியேன் ஆகிக் கண்டுநிகர் மொழிச்சிறுமி கேட்பா ளாகில்
87

Page 54
கலங்குவளோ எனமேலும் ஏங்க லானேன் கொண்டதுயர் வளர்ந்ததன்றிச் சிறிது தானும் குறையவில்லைக் குறையவில்லைத் துடிக் கலானேன்
சுற்றத்தாரி ஒருவரோ மறுநாள் வந்தே "சொலவேண்டும் ஒருசேதி முதலில் நீதான் பெற்றசேய் தனை அப்பால் அனுப்பென் றிட்டார் பிள்ளையை நான் அனுப்பினேன் அவரோ தானும் உற்றதுயர்தனை மறைத்தே "விதியை வெல்ல உலகினிலே முடியுமோ ?" என்றே கேட்டாரி "பற்றுடையீர் விடுகதையை விட்டேசேதி பட்டென்று சொல்லு" மென் றேன்துடிப்பினோடே
கொழும்பில் நிகழ்ந்தது "அம்மாநின் துணைவனாரி கொழும்பின்கண்ணே அமர்ந்திருந்தாரி கடையினிலே அந்தவேளை இம்மா நிலம்ஒருங்கே திரண்டாற் போல எண்ணற்றோரி கூடினராம் அவரைக்கண்டே தம்மேனி நடுக்கமுறத் தமைமறந்தே தடுமாறிக் குழறினராம் அத்தவேளை எம்மாலே சொலமுடியாச் சம்பவம்தான் "எய்திற்றாம் எய்திற்றாம்" அந்தோ என்றார்
"கேட்டதுமே மயக்குற்றேன் தெளிந்தபோது காலடியிற் கிடந்தழுதாள் புதல்விநானோ வாட்டமுற்ற என்மகளைத் தேற்றத்தானும் வையகத்தே எனைத்தேற்றிக் கொள்ளத்தானும் மாட்டேனாய்ப் புரண்டழுதேன் எங்கள்வாழ்வு காட்டெருமை மிதித்திட்ட சிறுபூவாகிக் கசங்கிய்ே சிதைந்ததென' அழுதேசொல்வாள்.
பின் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து சொன்னாள் ?"பேரிடரில் நாம்மூழ்கி இருந்த வேளை முன்னெமக்குக் கடன்கொடுத்தோர் எரிந்த வீட்டில் பிடுங்கியதே அறுதியென எடுத்துச் சென்றாரி
88

அன்புடையோர் போல்நடந்த கற்றத் தாரும் அவலமென நம்முற்றம் மிதியா ஆனார் அந்நிலையில் கயல்விழியான் ரோசத் தோடே கல்லுடைக்கப் புறப்பட்டாள் அந்தோ அந்தோ !
எவ்வளவோ நான்தடுத்தும் கேட்டாள் இல்லை ! எண்ணுங்கால் அதைவிடுத்தால் வழியும் இல்லை ! செவ்வியதாம் சிறியமலர் ஒவ்வோரி நாளும் செகத்திடையே வாடிடுதல் காணக் காண இவ்விதயம் பொறுப்பதில்லை விரைவில் தெய்வம் இச்சிறிய மலருக்கே அருள்செய் யாதோ ? இவ்வினிய மலர் தனக்கே ஏற்ற தான இடமதனை அந்தஸ்தை எய்திடாதோ ?
என்றந்த மூதாட்டி இயம்ப யாவும் இருசெவியால் பொறுப்புடனே கேட்டோ னான குன்றன்ன குணச்செம்மல் கண்ணீர் சிந்திக் 'குவலயத்தே இதுபோன்ற சோக வாழ்வை என்றும் நான் கதைகளிலும் கண்டேன் இல்லை ! எனினும் நான் ஒன்றுமக்குச் சொல்வேன் அம்மா இன்றுடனே துன்பமெல்லாம் தீர்த்த தாக எண்ணத்தே முடிவுசெய்து கொள்ளல் வேண்டும்?
"தாரமற்றும் பொருளற்றும் கால்தான் அற்றும் தவிக்கின்ற நேரத்தே உதவி - T5 ஈரமற்ற உறவினர்போல் எனையும் நீங்கள் எண்ணாதீர்! இன்றுமுதல் நான் உம் சொந்தம் ! பாரதனிற் கலையுள்ளம் பெற்றோர் எல்லாம் பிறர் துயரைத் தீர்ப்பதிலே இன்பம் காண்பார் ! நீருலகில் அமைதியுற வேண்டும் யாவும் நிகழ்த்துவேன் இன்றுமுதல்" என்றும் சொன்னான்.
அவ்வேளை கயல்விழியாள் தேநீ ரோடும் அங்குவரக் குமார்என்பான் அவளைப் பார்த்தே "இவ்வேழை உங்களுக்குச் சொந்தம் என் றே இயம்பினேன் தாயார்க்கே ! உன க்கும் சொன்னேன்
12 89

Page 55
இவ்வேளை முதல் நீங்கள் ஆரும் இல்லை என்கின்ற எண்ணத்தை நீக்கிக் கொள்வீர் எவ்வேளை வேண்டினுமே உதவற் கென்றே இருக்கின்றான் ஒருவன்என மனத்திற் கொள்வீர்
"மாநகராம் கொழும்பினிலே நிகழ வுள்ள ஓவியக்கண் காட்சியிலே பங்கு கொள்ள நாணின்னும் சிலதினத்தில் கொழும்பு செல்வேன்" என்றவனோ நவிலுதலும் அழகுப் பாவை
"ஏனங்கு செல்கின்றீர் வேண்டாம்" என்றே இயம்பிவிட்டுப் பின் தயங்கி மனத்தி னுாடே நானிங்கு தடுப்பதற்கு யாரோ என்றே நன்குநினைத் தேஉள்ளம் நாண லானாள்
இதுகேட்டுக் குமார்என்பான் சிரிப்பான் ஆகி "இப்பயணம் முன்னேயே ஒப்புக் கொண்டேன் எதுவுமே தேராது கொழும்பு சென்றே இனியகலைக் காட்சிதனிற் கலந்து விட்டு மதியுடையார் வாழ்த்தினொடும் பாராட் டோடும் வந்திடுவேன்" என்றுரைத்தான் அதனைக் கேட்டே மதிமுகத்தாள் புன்முறுவல் செய்து நின்றாள் மற்றவனோ பின்மேலும் சொல்ல லானான் :
"பிறந்து சில காலத்தே பெற்றோர் தம்மை இழந்தபெரும் பாவியாய் இருந்த என்னை அறந்தெரிந்த ஒருபெரியார் வளர்க்க லானார் அன்னையெனத் தந்தையென அவரே ஆனார் மறந்துமெனை அவர் வருந்தச் செய்தார் இல்லை மகிழ்ச்சிஒன்றே என்வாழ்விற் கண்டு வாழ்ந்தேன் சிறந்த அந்தப் பண்பாளர் சில ஆண் டின் முன் செகமதனைப் பிரிந்திட்டார் தனியன் ஆனேன்"
"பற்றமைந்த அப்பெரியாரி விட்டுச் சென்ற பணம்பொருள்தான் மிகுதியாய் இருப்ப தாலே மற்றவர்பால் தொழில்கேட்டுச் செல்லேன் ஆகி வாழ்வெல்லாம் ஒவியத்துக் கடிமை ஆனேன்
90

நிற்கையிலும் இருக்கையிலும் செல்லும் போதும் நினைவினிலே அக்கலையை வழிபட் டேனாய் இற்றைவரை வாழ்கின்றேன் திருப்பம் ஏதும் ஏற்பட்டால் அதும்இனித்தான்" என்றும் சொன்னான்
நோயினுக்கே ஆளான முதுபெண் தானும் நொடிப்பொழுதில் முகம்மாறக் குமாரைப் பார்த்தே "பேயொன்று சிறுபொழுதில் இங்கே வந்து பெருங்கூச்சல் இடஉளது அதனால் தம்பி ! போயின்னோர் நாள்வருக" என்றே சொல்லப் புறப்பட்டான் குமார் என்பான் இருஉள் ளங்கள் நேயத்தைப் புலப்படுத்தும் விழிக ளாலே நிமிடத்துக் காயிரம் சொல் உரைத்தவன்றே
குடிகாரன் சிற்றம் தன் வாழ்வைப் பிறர்வாழ்வை நாசம் செய்யும் தன்மைமிகு குடிகாரன் பின்னர் வந்தே "இன்னுமந்த ஸ்கூட்டர் இங்கே தானா உண்டு யாருமிதை எடுத்திலரோ ? என்றே கேட்டுக் கன்னியுள்ள வீட்டினுக்கே வருதற் காகக் காரணங்கள் ஏற்படுத்தும் இளைஞர் தம்மை முன்னிருந்தே நான் அறிவேன் இவனை நானோர் முறைபார்த்துக் கொளல்வேண்டும்" என்றும் சொன்னான்
புத்தகம்தான் இரவலென ஒருவன் வந்தே புவியினிலே பல்லிழிப்பான் மற்றும் ஓரிஆள் அத்தைக்குத் தலையிடியாம் இஞ்சித் துண்டே அவசரமாம் எனவருவான் வேறோர்காளை மெத்தநல்ல தமிழ்ப்படமாம் ரீ. வீ. பார்க்க விரும்புகிறேன் எனவருவான் இன்னும் ஓரி ஆள் பத்தியத்துக் கொருகோழிக் குஞ்சு வேண்டும் பார்த்திருந்தால் தாருங்கள்' என்று கேட்பான்.
91

Page 56
"இளமாதர் இருக்கின்ற வீடு நோக்கி இதுபோல ஆயிரமாம் சாட்டுச் சொல்லி இளைஞர்கள் வருவார்கள் இதற்கே எல்லாம் ஏமாந்து போவதற்கே நான் ஆள் இல்லை பழுதான ஸ்கூட்டரினைச் சாட்டு வைத்தே பலநாளும் வர அவன்தான் முயலு கின்றான் பழிக்கஞ்சேன் அவனை நான் காண்பே னாகில் பந்தாக உதைத்திடுவேன்" என்றும் சொன்னான்.
குடிப்புகழைக் குடியாலே மாய்க்கும் அந்தக் கொடும்பேயோ பலவாய கொடும் சொற்கூறிப் படிப்படியாய் வெறிகுறையச் சத்தம் தானும் படிப்படியாய்க் குறைந்திடவே இருந்த தங்கே நொடிப்பொழுதும் உடன்பிறப்பைப் பிறப்பின் சேயை நொந்துதுடி த்திடச்செய்யும் அந்தப் பேய்போல் குடிதோறும் பெரும்பாலும் ஒவ்வொன் றென்றும் குவலயத்தே இருந்திடுதல் புதுமை தானோ ?
அரியபல ஒவியங்கள் தீட்டு கின்ற ஆற்றல்சேர் கலைஞனாம் குமாரி என் பானும் பெருநகராம் கொழும்புசென்றான் பண்பு வாய்ந்த பெண்ணழகி கயல்விழியாள் நினைப்பி னாலே இரவுபகல் மனம்குழம்பி ஈற்றில் நெஞ்சை எடுத்தியம்பும் வகையினிலே இனிய தான திருமுகமொன் றவளுக்குத் தீட்ட லானான் சிறந்தபல ஒவியங்கள் தீட்டும் கையால்
காதற் கடிதம் "வானடைந்த அழகனைத்தும் புவியடைந்த வனப்பனைத்தும் திரண்ட பாவாய், தேனடைந்த இதழுடையாய் நீயடைந்த துயரங்கள் தெரிந்த போது நானடைந்த வேதனையை எடுத்தியம்ப நற்றமிழில் சொல்தான் உண்டோ கானடைந்த மலர்க்கூந்தல் கவலையுறல் கலையுள்ளம் தாங்கு மாமோ?"
92

பட்டுநிகர் நின்மேனி கல்லுடைக்கும் தொழிலாலே பாரில் நாளும் பட்டுவரும் துயர் கண்ட அப்போதே என்னிதயம் துடிக்க லானேன் கட்டுடலை உழைப்பென்றும் ரோஷமென்றும் பகூைறி வருத்தி டாதே மட்டமைந்த நறுமலர்க்குத் தேன்வழங்கல் அதுவொன்றே வேலை ஆகும்"
'எழும்பரிதி எழில்விளைக்கும் செழும்பொழிலின் மத்தியிலே இருக்கச் செய்து வளம்மலிந்த நின்மேனி வனப்பதனை ஓவியமாய்த் தீட்டித் தீட்டி உளம்மகிழ்ந்து கொளவேண்டும் உன்மொழித்தேன் என்றென்றும் நுகர்தல் வேண்டும் இளம்பருவ சுகம் யாவும் எவ்வாறென் றெல்வாறென் றறிதல் வேண்டும்"
'உலகமெனும் பாவையவள் இயற்கையென் வழங்குகின்ற அழகை எல்லாம் நிலமனைத்தும் அலைந்தலைத்தே இதுவரையும் அநுபவித்தேன் நீயும் சேர்ந்தால் உலகனைத்தும் அன்றிலென இருவருமே பிரியாது செல்வோ மாகி
நலமனைத்தும் துய்திடலாம் நன்கிதற்குச் சம்மதமோ? நங்காய் கூறாய்"
சிவாவிதனில் மலர்ந்திலங்கும் வண்ணமலரி எனவிளங்கும் விழியால் என்றன் ஆவிதனைக் கவர்ந்தவளே நீஎனது துணையானால் அகிலம் போற்றும் ஓவியங்கள் முன்னிலுமே பன்மடங்கு வனப்புடனே தீட்டிக் கொள்வேன் மேவுமொரு மகிழ்வன்றி வேறெதுவும் காணாதே வாழ்ந்தும் கொள்வேன்"

Page 57
"வான்மழையின் பயணதனை உழுதொழிலில் வாழ்வோரே தெரிதல் போலும் தேன்கவியின் சிறப்பனைத்தும் கவியுள்ளம் கொண்டாரே உணர்தல் போலும் வானுலவும் நிலாச்சுகத்தை வாலிபத்தில் நிற்பாரே அறிதல் போலும் மீன்நிகர்க்கும் விழியுடையாய் நின்னழகின் ! பெருமையினை நானே தேரிவேன்"
"எத்தனையோ ஒவியங்கள் தமை இங்கு பொருட்காட்சி தனிலே கண்டேன் அத்தனைக்கும் நின்னழகின் முன்னிற்கும் ஆற்றலிலா இயல்பும் கண்டேன் முத்துநகை மென்மையுடல் கோலவிழி நாணுமுகம் இவைகள் எல்லாம் சித்திரங்கள் நின்போல அழகுடனே கொண்டிருத்தல் கண்டேன் இல்லை"
இ&ம் தவறிய கடிதம்
பொறுப்பற்ற தபாற்காரன் குமாரி என்பானின் பொன்னான கடிதத்தை எடுத்துச் சென்றே பொறுப்பற்ற குடிகாரன் கையில் வைத்தே போயுங்கள் மருமகள்பால் கொடுங்கள்" என்றான் வெறுப்புற்ற முகத்தினனாய் அதனை வாங்கி மெல்லமெல்ல ஒவ்வொன்றாய் எழுத்துக் கூட்டிச் சிறப்புற்ற மந்திரத்தைக் கல்வி g)dard சிறுகுழந்தை படிப்பதுபோல் படிக்க லானான் !
படித்ததுவும் வெகுண்டெழுந்தே விடு சென்று படுக்கையிலே கிடந்திட்ட தமக்கை யார்தான் துடித்தெழுமோர் வகையினிலே பேய்போற் கத்தி "தெரியாதோ? நின்புதல்வி செய்த வேலை 1 அடித்தவளைக் கொன்றிடுவேன் ! எங்கட் கெல்லாம் அவமானம் தேடிவிட்டாள் ! என்றும் சொன்னான்
94

நடுக்கமுடன் மூதாட்டி "என்ன ! என்ன !" நடந்ததெனத் திடுக்குற்றே கேட்க லானாள்
'உன்மகள்மேற் காதலென ஸ்கூட்டர்க் காரன் ஒருகடிதம் வரைந்துள்ளான் எம்வம் சத்தில் முன்னெவரும் காதலெனும் கொடும்பா வத்தை மொழியாலும் வாய் தவறி உரைத்த துண்டே? உன் அன்னை காதலித்தா ? மணந்து கொண்டாள் ? உன்பாட்டி காதலென்றாற் பனாட்டா ? என்பாள் என்ன இவள் வம்சத்தின் புகழை மாய்க்க இவ்வாறு தொடங்கிவிட்டாள்" என்றும் கேட்டான்
"நானொருவன் வீட்டினிலே இருப்ப தாக நன்கவள்தான் மதிப்பதுண்டா ? நாயைக் கூட ஏனென்ன உண்டாயா ? என்று கேட்பாள் என்னை உன்றன் அன்புமகள் கண்டாற் கூட வானிருந்து வந்தவொரு பூத மாக மனத்துக்குள் நினைக்கின்றாள் காதல் என்ற வீணரது கற்பனையை இந்த வீட்டுள் விடமாட்டேன் ? விடமாட்டேன் !" என்றும் சொன்னான்
பொறுமையுடன் வாழ்ந்திட்ட மூதாட் டிக்கும் பொல்லாத பெருங்கோபம் வந்த தன்றே "சிறியவனே உன்குடியாற் போகா மானம் சிறுமிசயல் விழியாலே போமா ? என்றாள் நெறுநெறெனப் பற்கடித்த குடிகா ரன்தான் நெடுஞ்சுவரை உதைந்து விட்டே மேலும் சென்னான் "அறியாது பேசாதே 1 இன்னும் பல்லோரி அவனிமிசைக் குடிக்கின்றார் குற்றம் இல்லை"
அயல்வீட்டின் ஆசிரியர் பள்ளி விட்டால் அவசரமாய்த் தவறணைக்கே ஓடக் கற்கும் பயல்களுமே திருடர்கள்போல் அங்கும் இங்கும் பார்த்தபடி தவறணையை நாடு கின்றாரி நயமாகப் பிரசங்கம் செய்வோரி கூட நாள்தோறும் பனைமரத்தை வணங்கு கின்றார் !
95

Page 58
பய்மென்ன நானும்தான் மருந்து போலப் பயன்படுத்திக் கொள்கின்றேன் மானம் வோமா?
என்றந்தக் குடிகாரன் பிதற்றக் கேட்டே ஏந்திழையாள் சினந்தாலும் அவள் உள் ளத்தில் குன்றன்ன குமார்என்பான் கடிதச் செய்தி கூறரிய மகிழ்ச்சியையே கொடுத்த தங்கே "இன்றுவரை என்புதல்வி எதிர்கா லம்தான் எவ்வாறோ அமையுமென ஏங்கி நின்றேன் இன்றுமுதல் அவள் வாழ்வு சிறக்கும் என்றே நம்பினேன் 1" எனநினைத்தாள் உள்ளத் துள்ளே
"கல்லுடைத்த எனது மகள் குமார்என் கின்ற கட்டழகன் தனைமணக்கும் செயலி னாலே எல்லையிலாப் பொருளுக்கும் சொந்தம் எய்த இருக்கின்றாள் இருக்கிள்நாள் இருக்கின் றாளே ! செல்வமிகு குடும்பத்தில் வாழ்தற் கேற்ற செழிப்புடனே அழசமைந்த எனது பிள்ளை அல்லலுற்ற நிலைமாறி இனியென் றாலும் அதிட்டமுறும் நிலைவருமோ ? வருக ; நன்றே
"தேவமகள் போன்றிலங்கும் என்றன் செல்வி திருமணத்தின் ஒப்பனையால் கண்டோர் யாரும் ஆவலுறும் ஒப்பற்ற அழகு கொண்டே ஆணழகன் குமாருடனே மணவ றைக்கண் மேவியமர்ந் திடுவாளே அந்தக் காட்சி விரைவில் நான் கண்டிடுவேன் ! அதற்குப் பின்னே சாவுவரி னும் மகிழ்ச்சி யுடனே ஏற்பேன் சந்தோஷம் !" எனமனத்தே எண்ண லானாள்
இப்போதே பொறுப்புடைய எனது செல்வி இல்லறமாம் பொறுப்பதனை ஏற்கும் போதும் தப்பேதும் நிகழாத விதத்தில் தானே சமத்தாக நடந்திடுவாள் இவர்தம் வாழ்வை இப்பாரே வியப்புடனே நோக்கிக் கொள்ளும் "இனியதுவாம் குடும்பத்திற் கிதற்கு முன்னே
96

ஒப்பேதும் இல்லை" என்றே உலகம் சொல்லும் என்றும்தான் உள்ளத்தே எண்ண லானாள்.
குமார் வந்தனன் மற்றநாள் மாலையிலே குமார்என் பானும் மாநகராம் கொழும்பதனால் திரும்பி வந்தே கற்பனைக்கே ஆளாகிப் படுக்கை மீது
கிடந்திட்ட கயல்விழியின் தாயைப் பார்த்தே பற்றுடனே வணக்கத்தைக் கூற அன்னாள் பதிலுக்கு நன்றிசேர் நகையைச் செய்தே "வெற்றியா உம்பயணம் ? என்று கேட்டாள் "வெற்றிமேல் வெற்றி"யெனச் சிரித்தே சொன்னான்
அங்கு மிங்கும் அவன் எதையோ விழியால் தேடி அல்லலுறல் தனைக்கண்ட முதிய பெண்ணாள் "மங்கைகயல் விழியாள்என் துணிகள் தோய்க்க வளவிலுள்ள கிணற்றடிக்குச் சென்று விட்டாள் இங்கெனக்குத் தேநீர்தான் வேண்டும என்றே இயம்பிடு வீரா ? அவட்கே என்றும் கேட்டாள் "தங்களது புதல்வியிடம் சொல்வேன்" என்றே தாமதியா தக்கணமே எழுந்து சென்றான்.
பொன்னனைய மேனியிலே மாலை வெய்யில் போய்ப்பட்டே புத்தழகை இனிதிற் செய்ய மின்னனைய இடைமாது சேலை தோய்க்கும் வேளையிலும் பேரெழிலில் விளங்கக் கண்டே "என்னுயிரே ! அப்படியே சிறிது நிற்பாய் ! எழிலார்ந்த ஒவியமாய்ப் படைப்பேன்" என்றான் அன்னவளம் மொழிகேட்டுத் திடுக்குற் றாலும் ஆரெனவே அறிந்ததுவும் மகிழ்ச்சி கொண்டாள்,
விரைந்துடனே ஆடையினைத் திருத்திக் கொண்டு விழிப்பயனாய் நிற்கின்ற குமாரை நோக்கி "அருங்குணத்தாய் ! ஒவியமாய் என்னைத் தீட்டி அவனியெலாம் பார்த்திடவே வைத்தல் வேண்டாம் ! பெருந்திரையாம் உன்னுளத்தே என்னைத் தீட்டிப்
3 97

Page 59
பிறப்பெல்லாம் பேணிடிலோ போதும் !" என்றாள் அரும்பணியாம் அப்பணியைக் கண்ட அன்றே ஆக்கிவிட்டேன் எனஉரைத்தான். சிரித்தாரி நன்றே
வீணையும் பாணனும்
"தாயினில் அன்பு கொண்டோரி தரையினில் நின்போல் யாரும் ஞாயிற்றின் ஒளியில் வாழும் நானிலம் தன்னில் உண்டோ? நேயமே மிகுந்த பாவாய்! நின்னிடம் இருப்ப தான தூயதாம் குணத்தைப் போற்றிச் சொல்லவோ வார்த்தை தேரேன்"
'அழகிய பொற்கிண் ணத்தே அமிழ்தமே இருத்தல் போல அழகிய நின்னி டத்தே அருங்குணம் அனைத்தும் கண்டேன்! அழகொடு குணமும் சேர்ந்த அற்புதப் படைப்பே நீதான் பழகிடற் கினிய வீணை பாணன் நான் வாஎன் கையில்"
"செங்கதிர் உதிக்கும் நேரம் சிரித்திடும் வானின் கண்ணும் பொங்கியே இந்தப் பாரைப் போற்றிடும் கடலின் கண்ணும் அங்க்யல் துள்ளிப் பாயும் அழகிய கயத்தின் கண்ணும் எங்குதான் அழகே என்று பிரித்தெடுத் தியம்பல் ஆமோ ?"
"மங்கையே நின்னி டத்தும்
மயக்கிடும் அழகுச் செல்வம் எங்கெனப் பிரித்துக் கூற
98

இன்னுமே அறிந்தேன் இல்லை சங்குநேர் கழுத்தின் கண்ணோ தனத்திலோ விழியின் கண்ணோ பங்கய வதன மெங்கும் பரந்ததோ அறிகிலேனே.
"சுருள்மிகும் கூந்தற் கண்ணோ ? துடித்திடும் உதட்டின் கண்ணோ ? மருங்குலின் மென்மைக் கண்ணோ ? பெருநலம் விளைப்ப தான பேரொளிச் சிரிப்பின் கண்ணோ ? தெரிகிலேன் அழகெங் கென்றே செகத்திடைப் பிரித்துக் காண"
எனப்பல குமாரிதான் கூற ஏந்திழை நிலத்தை நோக்கி மனத்துள மகிழ்ச்சி தன்னை வார்த்தையாற் கூறாள் ஆகி இனித்திடும் நகையாற் கூறி ஈற்றிலே "நன்றி" என்றாள் மனத்தினை அறிந்தோன் அந்த மங்கையின் அயலிற் சென்றான்.
அன்னவன் அருகிற் செல்ல அவன் செயல் தன்னைப் வாரித்த கன்னலை அமுதைத் தேனைக் கவின் மொழி அதனால் வெல்லும் மின்னிடை நாணி நோக்கி மென்னகை ஒளியைச் சிந்தி சொன்னவாம் வார்த்தை தன்னில் தோய்ந்தன உணர்ச்சி யாவும்.
முத்தமழை அழகால் என்னை முன்கவர்ந்தும் அன்பால் என்னைப் பின்பிணித்தும்
99

Page 60
எளிதில் உன் தன் இதயத்தே ஏற்றுக் கொண்ட ஆணழகே எளிதில் உன்றன் இதயத்தே ஏற்றுக் கொண்ட செயலெல்லாம் அழுதே ஒரிநாள் புலம் புநிலை ஆகா வண்ணம் பார்ப்பாயோ ?"
என்னை விரைந்தே விழைந்ததுவும் என்றன் விழைவை ஏற்றதுவும் உன்போற் கலைஞர் தமக்கெல்லாம் ஒப்பில் கலையே என்பார்கள் உன்போற் கலைஞர் தமக்கெல்லாம் ஒப்பில் கலையே ஆனாலும் என்னைக் கண்ணிர்க் கடல் தன்னில் ஏங்கா வண்ணம் காப்பாயோ ?
துன்பக் கடலில் இதுகாறும் துடித்துக் கிடந்த சிறியேற்கே அன்புக் கரையை நீகாட்டி இன்பப் படகில் ஏற்றிவிட்டாய் அன்புக் கரையை நீகாட்டி இன்பப் படகில் விட்டதெலாம் பின்போர் காலை பேரிடராய் நேரா வண்ணம் காப்பாயோ ?"
தெருவிற் கிடந்த ஒருமலரைத் தேடி எடுத்தே இந்நாளில் பெரிதாய் மதித்தே நின்சிரசிற் பேணிச் சூட விழைகின்றாய், ! பெரிதாய் மதித்தே நின்சிரசிற் பேணிச் சூடி விழையும்நீ அரிய மலரை ஓர் நாளும் 6urru-FT avačv607 Lb assTL’ium (Burr l'"
"ஊரார் உறவோர் அயலார்கள் உரைக்கும் வார்த்தை எதுவென்றே
100

பாரா திந்நாள் மலர்த்தேனைப் பருக விழைந்தாய் ! ஆவலினால் பாராதிந் நாள் மலர்த்தேனைப் பருக விழைந்த செயல் எல்லாம் தீரா இன்னல் தனில் என்னைச் சேரா திருக்கக் காப்பாயோ ?"
காதல் கொண்ட நின்வழியிற் கருணை வெள்ளம் அதுபொங்கிப் பாய்தல் கண்டே எனைநானும் பார்மேல் இழந்தேன் இந்நாளில் பாய்தல் கண்டே எனைநானும் பார்மேல் இழந்த செயல் எல்லாம் நோயாய் ஒருநாள் மாறாதே இருக்க நீயே காப்பாயோ?"
"பொன்னைப் பொருளை நாடாதும் புவியோர் மொழியை நாடாதும் உன்னை நானும் எனை நீயும் உலகில் விரும்பி ஒன்றானோம் ! உன்னை நானும் எனை நீயும் உலகில் விரும்பிச் சேர்ந்ததெல்லாம் இன்னோர் நாளில் இடராக எய்தா வண்ணம் காப்பாயோ ?"
தீதில் வார்த்தை பலகொண்டே தேனார் இதழாள் இவைகேட்க மாதர் குலம்தான் ஆடவரை மண்மேல் ஐயம் உடன்பாரித்தல் தீதே அன்று காப்புணர்வே தெரிந்தேன் தெளிந்தேன் மிகநன்றே கோதில் மொழியாய் நான்இன்னே கூறும் மொழிகேள் !" எனச்சொல்வான்.
"வாழும் காலம் சிறிதேனும் வானில் அதுதான் பெரிதேனும்
10

Page 61
தோளும் தோளும் சேர்ந்தபடி தோகாய் வாழ்வோம் காலமெலாம் ! குழும் ஐயம் அதுதவிர்ப்பாய் துலங்கும் சுகமென் றவனுரைப்ப நீளும் பேச்சை இடைநிறுத்தி நனைந்தார் முத்த மழையினிலே,
அன்பாலே இணைந்திட்ட இருவர் தாமும் அவசரமாய் மூதாட்டி இடத்தே சென்றார் பொன் போன்ற புதல்வியையும் பொன்போன் றாளைப் போற்றுகின்ற குமாரினையும் கண்ட பெண்ணாள் "என்ணேஇச் சோடியது பொருத்தம்" என்றே இதயத்துள் எண்ணியே இவர்கள் என்றும் "இந்நாள்போல் அன்பினராய் இனிதின் வாழ்க!” என்றேதான் அன்பாக வாழ்த்த லானாள்.
பொழிலிடிை மந்தி
பாவொன்றைக் கற்றோர்கள் ஆயும் வேளை பண்பறியா ஒருமூடன் புகுதல் போலும் பூவொன்றும் சோலையிலே அருமை சற்றும் புரியாக மந்தியொன்று புகுதல் போலும் மூவருமே மகிழ்வுற்றே இருந்த வேளை முழுவெறியிற் குடிகாரன் அங்கே சென்றான் "ஆஉன்னைப் பலகாலம் தேடி நின்றேன் அகப்பட்டாய்" எனச் சொன்னான் குமாரைப் பாரித்தே
கயல்விழியாள் திடுக்குற்றாள் முதிய்ள் தானும் கலங்கினளே செய்வதினை அறியாள் ஆகி அயல்நின்ற குமாரினன்பான் அஞ்சு வானா அவன் இளைஞன் துணிவுடனே சிரித்த வாறே "நயவுரையே அறியாத கீழோய் நீயாரி நாவடக்கம் இன்னதென அறியாய் போலும் தயவுடனே சொல்கின்றேன் அப்பாற் செல்வாய் தாமதித்தால் நான்பொறுமை இழப்பேன்" என்றான்
102

"இவ்வீட்டின் அனைத்திற்கும் பொறுப்பு நானே என் தமக்கை அவள்என நீ அறியாய் போலும் வெவ்வுரையும் நயவுரையும் நானே தேரிவேன் விளக்கங்கள் நீஎனக்குத் தருதல் வேண்டாம் செவ்வியதா நின்செய்கை என்று தானும் சிந்தித்து நீபார்த்துக் கொண்ட துண்டா? இவ்வேளை நீஅப்பால் செல்தல் ஒன்றே ஏற்றதுவும் பொருத்தமுமாம்" என்றும் சொன்னால்
"அன்னத்தைத் தூதுவிட்ட அரசன் கூட அதிர்ச்சிஉறும் வகையினிலே நீதான் இந்நாள் என்னத்தைத் தூதுவிட என்றே ஆய்ந்தே ஈற்றினிலே ஸ்கூட்டரினைத் தூது விட்டாய் ! உன்னொத்தார் குணமெல்லாம் அறிவேன் நானே ஒர்நாளிற் காதலென்பார் மறுநாள் வந்தே பொன்னொத்த மாதர்தம் கற்பை வாங்கிப் போய்விடுவார் பின்பாதை மாற்றிக் கொள்வார் "
"என்னுடைய மருமகளின் வாழ்வை நீதான் ஏப்பமிடப் பார்க்கின்றாய் விடுவே னோநான் உன்னுடைய ஸ்கூட்டர் இனக் கலகத் தாலே ஒள்ளெரிவாய்ப் படாதன்று பிழைத்த தெல்லாம் என்னுடைய கையாலே சோதி தன்னில் இரண்டறவே கலந்துவிடத் தானே போலும் இன்னுமிங்கு தாமதித்தால் உன்றன் ஸ்கூட்டர் இமைப்பொழுதில் முத்தியுறும்" என்றும் சென்னான்.
துணைவனது படத்தினையே பார்த்த வாறு துயர்ப்பட்ட கயல்விழியின் தாய் அவ் வேளை துணிவுதனை வரவழைத்தே வாய்தி றந்தே சொல்லலுற்றாள் சிலவார்த்தை பொறுமை யோடும் "எனதுமகள் நான் இருவர் இதுநாள் மட்டும் இருந்திட்டோம் அடிமைகள்போல் இந்த வேளை எனதன்பன் முன்புரிந்த புண்ணி மத்தால் இவ்விளைஞர் வந்திட்டார் எம்மைக் காக்க"

Page 62
"உடன்பிறந்தே கொல்லுகின்ற கொடிய நோயே உபத்திரத்தை இனியேனும் நிறுத்திக் கொள்வாய் படம்வரையும் இவ்விளைஞன் என்றன் சேய்க்குப் பல்பிறப்பும் துணை ஆவான் இவர்கள் வாழ்க ! இடமறிந்தும் நிலையறிந்தும் நின்ம திப்பை இனியேனும் காத்திடலாம் என்றும் சொன்னாள் குடியுடையான் இதுகேட்டு வெகுண்டோ னாகிக் குழறுகின்ற வார்த்தைபல கழற லானான்
"நேற்றுவந்த இவ்வாளைப் பெரிதாய் எண்ணி நின்னரிய உடன்பிறப்பை வெறுத்தி டாதே வேற்றுமைகள் இருந்தாலும் நீநான் ஒன்று வீணனிவன் யார் நம்மைப் பிரிப்ப தற்கே ஆற்றலுடன் இனிமுயன்றே நின்றன் சேய்க்கே அழகான மணமகனைக் கொணர்வேன் நானே நேற்றுவந்த இவ்வாளால் நாளை நீங்கள் நெடுந்தெருவில் அலையுநிலை எய்தல் வேண்டாம் !
"ஆயிரம்தான் சொன்னாலும் உம்மேல் அன்பே அவனிமிசை நெஞ்சின்கண் எனக்கே உண்டாம் நாயெனநான் பாய்கின்ற ஒன்றைக் கொண்டே நானுங்கள் விரோதியென முடிவு செய்தே தீயனிடம் சிக்காதீர் ! என் சொற் கேளும் ! சிந்தித்தே முடிவினை நீர் செய்தல் நன்றாம் வாய்மொழியை நீர்விடுத்தே அவன் சொல்கினற மொழியினிலே வாய்மை உண்டா என்றே நோக்கீர்
இவ்வார்த்தை தனைக்கேட்ட முதியள் தானும் "இருக்கட்டும் உபதேசம் நமக்கு நீதான் எவ்வாறும் உதவிபுரிந் திடுதல் வேண்டாம் எம் வாழ்விற் குறுக்கிடா திருப்பா யாயின் அவ்வரிய செயல்ஒன்றே முன்னர் நீசெய் அக்கிரமம் தனைப்பொறுக்கப் போதும்" என்றாள் அவ்வேளை குடிகாரன் அவளைப் பாரித்தே "அதுசரிநான் ஒன்றுரைப்பேன் கேட்பாய்" என்றான்
104

"உங்களது பிரச்சினையைக் சேட்டுக் கொள்ள உரிமையெனக் கில்லையே தான்ஆ னாலும் உங்களது மானத்தில் என்றன் மானம் ஒட்டியுள தென்பதினை மறுத்தல் ஆமோ தங்கநிகர் நின் மகளை மணக்க உள்ளோன் சாதியிலே குறைந்திருந்தால் குடும்பம் முற்றும் இங்கிதனால் மானத்தை இழக்க நேரும் இதனாலே இவன் சாதி தனைச்சொல்" என்றான்
எது சாதி
"வேலையிலாத் தரகரிசளும் இந்த மண்ணில் வேறுசிறப் பற்றோரும் தம்மைக் காக்க ஞாலமிசை சாதியெனும் பசுத்தோல் போர்த்தே நல்லோரைத் தின்றிடுவார் அதனைப் பற்றி வேலையற்றோர் ஆயட்டும் நீதான் இங்கே வீண்வார்த்தை பேசாதே என்றென் றைக்கும் ஞாலமிசை இரண்டேதான் சாதி உண்டு நான் உரைப்பேன் நீஇதனைக் கேட்டுக் கொள்வாய்!
"மற்றோர்க்குத் தீங்கென்றும் எண்ணி டாத மனிதாபி மானத்தோன் உயர்ந்த சாதி உற்றோர்க்கும் எஞ்ஞான்றும் இடைவி டாத உபத்திரவம் செய்திடுவோன் மிருக சாதி சற்றெண்ணிப் பார்த்தாலே நீளச் சாதி தயைகாட்டும் இவ்விளைஞன் தான் எச் சாதி முற்றாக நீவிளங்கிக் கொள்ளல் கூடும்?" என்றந்த மூர்க்சனுக்கே சொன்னாள் பெண்ணாள்.
"இன்றுடனே என் தமக்கை இறந்தாள் என்றும் என்மருகி கயல்விழியாள் மறைந்தாள் என்றும் சென்றுடனே நானம் நான் செய்து கொள்வேன் செசுத்திடையே உறவினர்பாற் சொல்லி உம்மை இன்றுடனே சாதியினால் நீக்கிக் கொள்வேன் இங்கிருந்தால் என்மானம் தானும் போகும்" என்று பல உரைத்தபடி வெளியே சென்றான் இதன் பின்னர் குமார் என்பான் அவரை நோக்கி
105

Page 63
“வெறியினிலே செல்கின்ற இவன்தான் மீண்டும் வெறிநீங்க இங்குவந்தே உங்கட் கெல்லாம் நெறியினிலே நீங்கிய வரம் வார்த்தை கூறி நீதியின்றி இடர் செய்வான் அதனால் நீங்கள் சிறுபொழுதிற் புறப்படுவீர் வெளியிற் சென்று செல்வதற்குக் கார்கொணர்வேன் என்னில் லத்தில் சிறுகுறையும் காணாதே காலம் முற்றும் சிறப்புடனே வாழ்ந்திடலாம்" என்றும் சொன்னான்
'தம்பிஉமை எம்குலத்தைக் காக்க வந்த தண்ணளிசெய் தெய்வமெனக் கருதிச் சேயை நம்பிஉம்பால் ஒப்படைத்தேன் எனினும் இந்த நாடறிய மணம் முடித்த பின்ன ரே நீர் அன்பமைந்த என் சேயை மனையை விட்டே அப்பால்நீர் கொண்டேகல் முறையே ஆகும் செம்மையிலாக் குடிகாரன் தனக்கே அஞ்சிச் செகத்திடையே பிழை விடவோ ?' என்றும்கேட்டாள்
"தங்களது வாரித்தையிலே உண்மை உண்டு தரையிலதை நான் ஏற்றேன் அதனால் இந்தத் திங்கள்முகத் தெழிலாளை மணந்து கொள்வேன் திருமணம்தான் முடிந்ததுவும் என்ம னைக்கே உங்களையும் இவளையுமே அழைத்துச் செல்வேன் உளமார்ந்த எண்முடிவு இதுவே" என்றான் இன்குரலாள் அப்போது தாயை நோக்கி இயம்பினாள் சிலவார்த்தை துணிச்ச லோடே.
"என்னுடற்கும். இவருடற்கும் உயிர்ஒன் றென்ற எண்ணத்தை நானுடையேன் அன்பினாலே என்னையிவரீ பிறப்புக்கள் கோடி கோடி எடுத்தாலும் காத்திடுவாரி மனத்தின் முன்னரி தன்மைதரும் வரம் இரண்டு கேட்டல் வேண்டும் நல்வரங்கள் நான்பெற்ற பின்ன ரே தான் என்னுயிராம் இவரை நான் மனப்பேன்" என்றே இயல்பாய நானுடனே கூற, லானாள்,
105

இதுவென்ன புதியவரம்?" என்பான் போல இருவிழியால் கயல்விழியைக் குமார்தான் unt dabsorb மதுவன்ன மொழியுடையாய் இதென்ன கேள்வி?" மனம்ஒன்றிப் போனபின்னர் என்றாள் அன்னை அதுவொன்றும் ஆபத்தே ஆன தன்றாம் அடுத்துவரும் காலத்தின் காப்பே" என்றே மதிமேவும் கயல்விழியாள் கூறி விட்டே வரம்கேட்கக் குமாரிமுகத்தை நோக்க லானாள்.
கேட்டி வரம்
"பல்கலைக் கழகம் சென்றோ பட்டிமன் றங்கள் கேட்டோ நல்லநூல் நிலையம் சென்றோ நாம்பெற முடியாப் பண்பை சொல்லரும் முறையில் சொல்லித் துணிவினை எனக்குத் தந்த நல்லதோர் தெய்வம் அன்னை நான் மறந் திடுதல் ஆமோ?
புராணங்கள் இதி காசங்கள் போதிக்கும் நீதி யாவும் இரவினில் பகலில் எல்லாம் இனிதுற எடுத்துக் கூறி வருதுயர் அதனைத் தாங்கி வாழ்வினில் உழைக்கத் தூண்டிப் பெருநலம் விழைத்த தெய்வம் பிரிந்திடல் இயலு மாமோ??
"வறுமைகள் துயர்கள் இன்னும் வார்த்தையால் விளக்கொ ணாத சிறுமைகள் பலவும் எம்மைச் சேர்ந்திடரி செய்த போதும் பொறுமையைப் பண்பைக் கூறி புவியினில் அவற்றைத் தாங்கும் திறமையை எனக்குத் தந்த தெய்வம் என் அன்னை அன்றோ"
107

Page 64
சமணத்தின்பின் பெற்ற தாயை மறப்பவர் தொகைஇந் நாளில் கணத்துக்குக் கணமே யாகக்
கதுமென வளர்தல் கண்டேன் எனைப்பெற்ற தாயே மேலும் எழுமைக்கும் தாயாம் வண்ணம் நினைப்புற்ற நாளி ருந்தே
நிமலணை வேண்டு கின்றேன்"
கோலிழத் திருக்கும் அன்னை கண்கலங் காத வண்ணம் ஞாலமேல் கடன்கள் செய்ய நான்மிகக் கட்டுண் (36 Trra) சாலவும் இனியை என்தன் காய்க்கென்றும் கடமை ஆற்ற கோலமாரி வரம் தான் இன்று கொடுத்தருள்" என்று கேட்டாள்
ஓவியக் கலைஞன் கேட்டே உகட்டினில் நகைதான் தோன்ற 'ஆவியில் இனியை நானிவ் அனைத்தையும் நினைத் ததுண்டு மேவிய அன்புத் தாய்க்கு விரும்பிய வாறே தொண்டு பூவுல கில்நீ செய்யப் பெருந்துணை ஆவேன்" என்றான்
இருவரின் உரையைக் கேட்ட முதியவள் துணைவ Gormr riflesãờ திருஉருப் படத்தைப் Lumtrfé0333 இந்தினாள் மகிழ்ச்சிக் கண்ணிரி அரியதற் படங்கள் தீட்டும் அற்புதக் கலைஞன் தானும் கேசரிசரி மற்ற தான
வரத்தையும் GBs - umri !” ST6îYADnréão
108
 

"அன்னையை என்னை என்றும் அளப்பரும் செல்வத் தோடும் மண்ணிடை வசதி யாக வாழ்விக்க விழைந்த தந்தை இன்னலை நோக்கார் ஆகி இடர்மலி கொழும்பு சென்றே தன்னுயிர் இழந்தார்" என்றாள் தயங்கிப்பின் கண்ணிர் விட்டாள்
" "இரக்கமோ சிறிதும இன்றி எந்தையைக் கொன் றோரான அரக்கர்கள் வாழும் அந்த அநீதிசேர் கொழும்புக் கென்னை வரச்சொல்லி எந்த நாளும் வையமேற் கேட்டல் வேண்டாம் தருகஇவ் வர மும்" என்றே தயவுடன் கேட்டாள் பெண்ணாள்
"தாயினைத் தந்தை தன்னைத் தரையினில் மதிக்கும் பெண்ணே நாயகன் தனையும் காப்பாள் நன்கென உலகோர் சொல்வார் நேயமார் அன்பே இந்த நீணிலம் தனில்என் றைக்கும் தீயதாய் நினைக்கும் அவ்வூர்த் திசைக்கும்நீ வருதல் வேண்டாம்."
என்றவன் உரைப்ப அன்னாள் அவன்பதம் வணங்க லானாள் நன்றென முதியள் கண்டே தானிலத் திவர் ஒன் றாகத் துன்றிடு செல்வம் யா வும் எய்தியே சுகத்தி னோடும் என்றென்றும் வாழ்க என்றே இயம்பினள் ஆசி வார்த்தை,
★
199

Page 65


Page 66


Page 67

&)
----
尧) ----!
----- 氦