கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்மொழி வரலாறும் இலக்கண மரபுகளும் பகுதி 2

Page 1
韋
鲁
事
琶
算
U
தெ7
பண்டிதைசென்
%
 

巳亨荃三- ܐ ܒܓ qSAAAAAAS S SAAAA S qAAA AAAA AAAA Y AAAA AAA
தப்பாக்கம்
ി 6/7, 680%
ரியிடு - 04

Page 2

(.......... ଝୁ リ@『
தமிழ்மொழி வரலாறும் மரபுகளும்
பகுதி 11
தொகுப்பாக்கம் பன்டிதுை.செல்வியோசோமசுந்தும் 6ിങ്ങി.ീ; - 04

Page 3

என்னுரை
பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் மேற்கொள்ளும் மாணவர்களே! உங்களுக்கோள் வரப்பிரசாதம் 2007ஆம் ஆண்டில் “இலக்கண வினா விடைகள்” என்ற நூலை வெளியிட்டுள்ளேன். அதில் இடம் பெறத் தவறிய சில வினாக்களும் விடைகளும் இச்சிறிய கையேட்டில் இடம் பெற்றுள்ளன. எனவே இதனைப் பயன்படுத்துவீர்கள்
என நம்புகிறேன்.
"முயற்சி திருவினை ஆக்கும்"
முயன்றால் வாழ்வில் வெற்றி கிட்டும் பாடுபட்டவர் பட்டம் (ിഖണ്ണൂഖി. படிப்பதற்கு வாயில்கள் பல. எங்கு இருந்தாலும் தேடிப் பெறுவதே மனித வாழ்வின் இலட்சியம். தேடுங்கள் பலன் கிட்டும். உங்களுக்காகவே
எழுதப்பட்ட இக்கையேட்டை வாதித்துப் பயன்பெறுங்கள்.
நன்றி
"தமிழ்ச் சோலை” இங்ங்னம் இல 30/2 10 வது ... " பண்டிதைசெல்வியோசோமசுந்தரம் ܕ ܗ .
ஒழுங்கை, வைரவபுளியங்குளம், வவுனியா.

Page 4

(0) தமிழ் இலக்கரை ரயில் வீரசோழிந்தும் பெதும் இடத்தினை மதிப்பீடுக.
தமிழ் இலக் கன மரபில் வீரசோழியம், Gց, H Gծ 3, H ! ! ! ht! ! ! Ի ,
இலக்கணவிளக்கம், தொன்னுரல்விளக்கம், நேமிநாதம் முதலியன ஐந்து
இலக்கணம் கூறும் நூல்கள் எனக்கொள்ளப்பட்ட போதும் வீரசோழியமே
ஐந்து இலக்கணங்களையும் தெளிவாக விளக்கும் நூல் என்ற வகையில் சிறப்பிடம் பெறுகிறது.
எழுத்து, சொல், யாப்பு, பொருள், அணி ஆகியவையே ஐந்து இலக்கணங்கள் ஆகும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள். ஆகியவற்றைத் தெளிவாக விளக்குவதுடன், பொருளதிகாரத்தில் இடம்பெறும் உவமையியல், செய்யுளியல் ஆகிய இரண்டுமே அணி, யாப்பு, இலக்கணங்களை சுருங்கிய வடிவில் விளக்குவதாக அமைந்துள்ளது. இலக்கண விளக்கம் யாப்பு, அணி ஆகியவற்றை விரித்துக் கூறிய போதும் பொருள் அதிகாரத்தின் கண் னே அவற்றை விளக்கி உள்ளது. தொன் னுல விளக்கம் பொருளதிகாரத்தை சுருங்கக்கூறினும் யாப்பு, அணி ஆகியவற்றை விளக்கிக் கூறுகிறது. எனவே “ஐந்து இலக்கணங்களையும் தனித்தனியாக விளக்கும்
தொன்மையான நூல்’ என்ற வகையில் வீரசோழியம் சிறப்பிடம் பெறுகிறது.
வீரசோழியம் பொருள் இலக்கணத்தை அகப்பொருள், புறப்பொருள் என்றும், இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் என்றும் கூறுவதால் இரண்டுமே ஐந்து இலக்கணங்களைத் தெளிவாக விளக்குகிறது
என்பர். எனினும் ஐந்து இலக்கணங்களை முறைப்பட வகுத்துரைக்கும் நூல்
வீரசோழியம் என்பதுவே இலக்கணகாரர் கருத்து. வீரசோழியம் ஐந்து
இலக்கணங்களையும் சுருக்கித் தருவதால் அதனை வழிநூல் என்பர். எவ்வாறாயினும் வடநூல் மரபினைத் தமிழ் இலக்கணத்துடன் இணைத்து வழங்கும் முதல் முயற்சியாக இந்நூல் கொள்ளப்படுகிறது. வடமொழி தமிழில்
கலந்து உறவாடிய போது வடமொழி இலக்கணத்திற்கு ஏற்ப தமிழ்
○

Page 5
இலக்கணத்தையும் மாற்றி அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவே வீரசோழியம். வடமொழிப் பரீட் சயம் நிறைந்தவரான “புத்தமித்திர”னாரால் பதினொராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெளத்தமதச் 3FITDL60)Lu நூலே வீரசோழியம்.
வீழசோழியக்காரர் வடமொழி இலக்கண மரபை தமிழில் புகுத்தவும், தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்படும் இலக்கணங்களைச் சுருக்கி அமைப்பதனையும் நோக்கமாகக் கொண்டே இந்நூலை எழுத முற்பட்டுள்ளார். அதாவது தொல்காப்பிய இலக்கணத்தை மறுத்து, தமிழ் இலக்கணமும் சங்கத இலக்கணமும் ஒன்றெனக் கொண்டு, சங்கத இலக்கணத்தை தமிழுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சியே வீரசோழியம் என்பர். எனினும் தொல்காப்பியத்திற்கு பின் தமிழ் மொழி வளர்ச்சியிலும், அதன் போக்கிலும் ஏறப்ட்ட மாற்றங்களை தமிழ் மொழி ஆய்வுக்கு வழங்கும் நூலாக வீரசோழியம் இருப்பதால் அது முக்கியத்துவம் பெறுகிறது.
வீரசோழியம் அமைப்பு முறையிலும் ஏனைய இலக்கண நூல்களோடு ஒப்பிடும் இடத்து வேறுபட்டது. அதாவது இலக்கண நூல்கள் யாவும் சூத்திர வடிவில் அமைய வீரசோழியம் மட்டும் "கட்டளைக் கலித்துறை ” என்ற பா வகையில் அமைந்து "வீரசோழியக் காரிகை” என்ற பெயரைப் பெற்றுள்ளது. காலத்தின் மொழிநிலை மாற்றங்கண்டு மொழிப் பொதுமையை உணர்ந்திட இந்நூல் உதவுவதுடன் வடமொழி இலக்கணம் அனைத்தும் கொண்ட புதிய இலக்கண விதிகளையும் அறிய உதவுவது. வடமொழி அறிவுடையவர்கள் தமிழ் மொழியை எளிதாக கற்றுக்கொள்ள உதவுவது இந்நூல், வடமொழி இலக்கண மரபைப்பின்பற்றி பெரும் பிரிவுகள் அதிகாரம் என்றும் உட்பிரிவுகள் படலம் என்றும் பெயர் பெறுகிறது. எனவே வடமொழி மரபை தமிழ்மொழியில்
சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதே வீரசோழியம் என்பர்.
பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் காணப்பட்ட மொழி வழக்குகள்
G6)

பல இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
9) I DITEs :- - ... "
நிகழ்ச்சி - நிகட்சி புகழ்ச்சி - புகட்சி பதின்மூன்று - பன்மூன்று -
இச்சொற்கள் சமகால பேச்சு வழக்கை மனம் கொண்டு இந்நூலில் எழுதப்பட்டிருக்கலாம். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையிலும் வீரசோழியம் ஏனைய இலக்கண நூல்களில் இருந்து வேறுபடுகிறது. அதாவது காவிய காலம் எனக் குறிப்பிடுகின்ற சோழர் 35T6) பகுதியில் வீரசோழியம் எழுந்ததால்
காவிய அமைப்பின் சாயலைக்கொண்டு விளங்குகிறது.
உயிர் எழுத்துக்களுக்கு “ஆவி' என்ற பெயரை முதன்முதல் பயன்படுத்தியவர் புத்தமித்திரனாரே. மேலும் ஐ.ஒள ஆகிய கூட்டெழுத்துக்கள் பற்றி தொல்காப்பியம் கூற வீரசோழியத்தார் பழையனவற்றை நீக்கி புதிய இலக்கணத்தை வகுத்துள்ளனர். முதன்நிலை எழுத்துக்கள், வினா எழுத்துக்களின் பிறப்பு வேற்றுமை, தொகைகள், காலம் காட்டும் உறுப்புக்கள் ஆகிய இலக்கண மரபுகளிலும் தொல்காப்பியத்திற்கும், வீரசோழியத்திற்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு.
எனவே அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப வீரசோழியகாரர் மொழித்தூய்மை பேணப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எழுத்துப்பிழை சொற்பிழை, வராவண்ணம் இலக்கணத்தை அமைத்தார் எனலாம். ஆனால் பழந்தமிழ் இலக்கண மரபைப் புறக்கணித்தமையே இலக்கணக்காரர் இவர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு. எனினும் இடைக்காலத் தமிழின் இயல்போட்டங்களைத் தெளிவாக ബിബ്ള്യു நிற்கும் நூல் என்ற வகையில் வீரசோழியம் முக்கியத்துவம் பெறுகிறது. -
C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 Cp3C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3
○

Page 6
CO2) ចyBrun வடமொழி மரபை தழுவி அமைந்துள்ளது ஆராய்க.
கி.பி பதினொராம் நூற்றாண்டில் எழுந்த வீரசோழியம் வடமொழியை சேர்ப்பது தமிழ்மொழி இலக்கணத்தை சுருக்கி அமைப்பது என்ற இரு நோக்கங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. வட நூல் மரபைச் சேர்த்து சொல்ல வேண்டும் என்பதே இவரது நோக்கம். ஆதலால் இந் நூலில் வடமொழிச் செல்வாக்கு காணப்படுகின்றது.
1. வடமொழி இலக்கண கலைச் சொற்களைக் குறிப்பிடுதல்.
2. வடமொழிச் சொற்களுக்குரிய இலக்கணத்தைக் கூறுதல். - 3. வடமொழி இலக்கண அமைப்பை விளக்குதல். 4.
வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல்.
ஆகிய பாகுபாட்டை வீரசோழியம் கொண்டுள்ளது என “மொழியியல்
ஆய்வு” என்ற நூலில் சண்முகம்என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் புணர்ச்சி பற்றிய சூத்திரத்தில் “அம்,நாம்” உலோகத்தோடு
எழுத்து விகாரம் பற்றியும் நிலைமொழி ஒடு வருமொழி சேரும் போது அடையும்
மாற்றங்கள் பற்றியும் வீரசோழியக்காரர் விளக்கி உள்ளார். அதாவது புணர்ச்சி விதியில் வடமொழி மரபையும் தமிழ் மொழி மரபையும் இணைத்துள்ளனர். எனவே வீர சோழியம் வடமொழி மரபைத் தழுவியது எனலாம். காரகம் பற்றி
சொல்லினும் வடமொழி வாடையே காணப்படுகிறது.
வடமொழிச் சொற்களுக்கு உரிய இலக் கணங்களாகிய பெயர்ச்சொல்லின் எதிர்மறை வடிவத்தையும், புணர்ச்சி மாற்றத்தையும், காரகப்பதத்தைப் (வேற்றுமை உருபுகள்) பற்றியும், தாதுக்கள் அமையும் முறை பற்றியும் வீரசோழியம் வடமொழி மரபைத் தழுவி தண்ணிய தாதுக்களின் முறைபோல தமிழுக்கும் படைத்துக்கொள்க. என்று கூறியிருப்பதில் இருந்து வடமொழி மரபைத் தழுவி இருக்கிறது என்பது புலனாகிறது.
வடமொழி இலக்கண அமைப்பில் ஒருமை, இருமை, பன்மை என்ற அமைப்பு காணப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் ஒருமை, பன்மை மட்டுமே உண்டு. வீரசோழியத்திலும் ஒருமை, இருமை, பன்மை எனக் குறிப்பிடப்படுவதால்
Gs)

TT L T LL LLLLS S LLLL TT JJ LHL SaaTLL ASA LS0T LL T LLLL SS LCL CLL 0 LALLSL பொறுத்தவரையில் கருத்தா கருமம் காரணம், சம்பிரதாயம், அவதி, சம்பந்தம், அதிகரணம், என வேற்றுமையை ஏழாக வகுத்துள்ளார். ஒவ்வொரு எண்ணிற்கும் வேற்றுமை 2-Ա5Լ! தனித்தனியாக உண்டு. எனவே எழுவாய் வேற்றுமைக்கும் உருபு உண்டு எனக் கூறுவர். இது வடமொழி மரபை ஒட்டியது. மேலும் வேற்றுமை உருபில் எண்ணிக்கையைச் சொல்லும் போது ஆண், ஆண் சிறப்பு, பெண், பெண்சிறப்பு, பலர்பால், பலர்பால் சிறப்பு, ஒன்று, ஒன்றன்பால் drift, என்று எட்டாக பகுத்து எட்டு வேற்றுமைகளும் (8x8) = 64 உருபுகள் 6i bÙ| வகுத்துள்ளார். இதற்கு வடமொழி இலக்கண மரபை தழுவியவையே காரணம். வீரசோழியத்தில் வடமொழி மரபைத் தழுவி 4ம் வேற்றுமை சம்பிரதாயம் கொள்பவன் எனக் குறிப்பிடப்பட்டதால் தமிழிலும் அதனை கோளி என மொழி பெயர்த்துள்ளார். 5ம் வேற்றுமையை அவதி என்றும் நீக்கம் எனத் தமிழுக்கும் உரியதாகக் கொண்டார். எனவே தான் வீரசோழியம் வடமொழி இலக்கண
மரபைத் தழுவி அமைந்துள்ளது என்பர்.
தொல்காப்பியர் கூறிய தமிழ்ச் சொற்களை வீரசோழியக்காரர் வடமொழிச் சொற்களாக மாற்றி அமைத்துள்ளனர்.
மிடறு - 35600TLL.D (G - 6) ♔ങ്ങബ - சிரசு (சூ - 6) நீக்கம் - அவதி (சூ - 6) நெஞ்சு - உரம் (சூ - 6) இனம் - வர்க்கம் (சூ - 12)
இவ்வாறு வீரசோழியம் வடமொழி அமைப்பை gọi lọ தமிழ்ச்சொற்களின் அமைப்பையும் விளக்க முற்படடமை குறிப்பிடத்தக்கது. வடநூல் மரபு பற்றி பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். வடமொழி இலக்கணம் பற்றி குறிப்பிடவில்லை. எனவே வடமொழியாளர் தமிழ் படிக்க வேண்டும் என்று கருதி தமிழ்
இலக்கணத்தை அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வீரசோழியத்தின் மொழிநடை எளிமையானதாக இல்லை. ஏனெனில் வடமொழி பெரும்பான்மையாகப் புகுந்துள்ளது. அதற்கு அக்கால மொழியில்
ஏற்பட்ட மாற்றமும் காரணமாக இருக்கலாம். பல்லவர் ஆட்சியில்
G9D

Page 7
பேச்சுமொழியில் வடமொழிச்சொற்கள் நிறைய புகுந்தன. இக்காலப் பகுதியில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் கூட தமிழையும் வடமொழியையும் சமமாகக் கருதினர். எனவே காலத்தின் தேவை கருதி மொழிமாற்றத்தின் வழி நின்று இலக்கணத்தை படைத்தமையால் வீரசோழியம் அளவிறந்து வடமொழியைத் தழுவியுள்ளது. -
வீரசோழியம் மொழிப்பொதுமையை ஒருவர் உணர்ந்துகொள்ள உதவுவதுடன் தன்னுடைய மொழியின் இலக்கண அமைப்பையும் அறிந்து கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்று கருதியதால் வடமொழி மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வீரசோழிய ஆசிரியர் தமிழ் அமைப்பிற்கு ஏற்ப ஆய்வு மேற்கொண்டமையால் வடமொழி அறிவுடைய ஒருவரால் தான் வீரசோழியத்தை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். எனவே வீரசோழியம் வடமொழி இலக்கண மரபைத் தழுவி அமைந்துள்ளது என்பர்.
CO3CD3CO3CD3CO3CD3CO3CD3CO3CO3Cl3 CO3CO3Cl3CO3CD3Cl3C93CO3Cp3CD3G3CD3
(03) திராவிட மொழிக்குடும்பம் பற்றி விளக்கி, தமிழ் ஒரு திராவிடமொழி என்று
சுடறுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்துக.
விஞ்ஞானத்துறையில் ஏற்பட்ட ஆய்வுத்துறை பற்றிய வளர்ச்சி மொழி பற்றிய ஆய்வுக்கு வழிவகுத்தது. அதாவது மொழி எது? மொழியின் இனம் என்ன? மூல மொழி எது? என்ற வினாக்கள் மொழி பற்றிய சிந்தனையை தோற்றுவித்தது. அதன் விளைவே திராவிடக் குடும்பம் பற்றிய ஆய்வு மனித இனத்தை குடும்பங்களாகப் பாகுபாடு செய்யும் போக்கு காணப்பட்டது. அதனை ஒட்டியே மொழிகளையும் குடும்பங்களாகப் பாகுபாடு செய்தனர். அதாவது ஒலிகளிலும், சொற் கூறுகளிலும், சொற்களின் இணைப்பிலும், அவை தரும் பொருளிலும் ஒற்றுமை காணப்படுகிறது. இத் தொடர்பே இனத் தொடர்பு எனப்படும். இத்தகைய இனத்தைச் சேர்ந்த மொழிகளை ஒன்றாக அமைக்குமிடத்து அவை மொழிக்குடும்பம் எனப்படும்.
Go)-

தென்னிந்தியாவில் தமிழ், ഥഞ്ജutണ്ട്, கன்னடம், தெலுங்கு ஆகிய திருந்திய மொழிகளும், வடமத்திய தென்னிந்திய பிரதேசங்களில் திருந்தாத பல மொழிகளும் காணப்படுகின்றன. ஒரு மொழி பேசுகின்றவர்கள் சூழ்நிலைகளால் பிரிந்து போன போது அவர்கள் பேசிய மொழி திரிந்தும், வளர்ந்தும் பிறமொழிகளுடன் பேசப்படுவது இயல்பு. எனவே இவை வேறு மொழிகள் போல காணப்படினும் அவற்றிடையே ஒருமைப்பாடு காணப்படுவதால் அவற்றை திராவிட மொழிக்குடும்பம் என்பர்.
"கால்ட்வெல்" அவர்கள் 18566ు "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதினார். இவரது நூலே மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. 8ம் நூற்றாண்டில் “குமரில பட்டர்’ என்பவரால் திராவிட மொழிக்குடும்பம் என்ற சொற்றொடர்ை கையாளப்பட்ட போதும் 19ம் நூற்றாண்டிலே இதன் வளர்ச்சியைக் காணலாம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற நான்கு இலக்கிய வளமுள்ள மொழிகளையும், ஏனைய வளமில்லாத மொழிகளையும், திராவிட மொழிக்குடும்பம் கொண்டுள்ளது என "கால்ட் வெல்” சுட்டிக்காட்டியுள்ளார். திராவிடம் என்ற சொல் தமிழ் சொல்லின் திரிபு. திராவிட மொழி இந்து ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத தனித்துவமான மொழி. எனவே தான் தென்னிந்தியாவில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளையும் பொதுவாகக் குறிப்பிட "கால்ட்வெல்” “திராவிட மொழிக்குடும்பம்” என்ற பதத்தை அறிமுகம் செய்தார்.
திராவிட மொழிக்குடும்பத்தில் இலக்கிய வளமுள்ள மொழிகள் தவிர்ந்த ஏனைய துளு, குடகு, துத, தோத, கோந்த், கூயி, ஓரான், ராஜ்மகால் ஆகிய இலக்கிய வளமில்லாத மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. திராவிடம் என்ற சொல் தமிழ் சொல்லின் திரிபு. ஆதலால் தமிழ் ஒரு திராவிடமொழியே தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தனது நூலில் கால்ட்வெல்லின் தமிழ் சொற்களில் தொன்மையும், தூய்மையும் கலந்ததனால் அவர் திராவிட மொழிகளை ஒப்பிட்டுக்காட்ட தமிழ்மொழியை பயன்படுத்தியிருக்கலாம் என்பர். தமிழ்மொழி ஒரு திராவிடமொழி என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று உடன்படுமெய் காணப்படுதல்
@_十D- பப், ஷ், ம், ன், ர்
தே + gഞ6) (8gbuf606u (u)
77°) -

Page 8
岛守 十 39}LQF சேவடி(வ்) சே + அடி என உடன்படுமெய் தமிழில் உள்ளது. சாசனங்களில் தேவரடி ஆர், திசை ஓர், நெற்றி இல் என அவ்வாறே எழுதப்பட்டது. தற்கால வழக்கிலும் ஆங்கில மொழிச் செல்வாக்கால் சொற்கள் தனித்தனியாகப் பிரித்து எழுதப்படுகின்றன. எனவே இன்று தமிழ் வழக்கில் உடன்படுமெய் புணர்த்தாத நிலையே காணப்படுவதாக பேராசிரியர் வித்தியானந்தன் "தமிழர் சால்பு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வேலுப்பிள்ளை ஆகியோர் கூற்றுக்களும் இங்கு நோக்கத்தக்கன. அதாவது தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்போ உடன்படுமெய் புணர்த்துதல் நியதியாக இருந்தது என்றும் பாகவதமொழி திராவிட மொழியில் புகுந்தபோது அது தமிழ்மொழியிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்பர்.
நச்சினார்கினியார்க் "உடன்படுமெய்யே” யகார வகாரம் 6160186 குறிப்பிட்டுள்ளதனால் பாகவத மொழிச் செல்வாக்கினால் தொல்காப்பியர் காலப்பகுதியில் உடன்படுமெய் கட்டாய விதியாக அமையவில்லை. ஆனால் நன்னூலார் உடன்படு மெய் பற்றி, “இ, ஈ, ஐ வழி யவ்வும்” என்ற நன்னூல் சூத்திரத்தின் வாயிலாக விளக்கியுள்ளார். 米 தொல் திராவிட மொழியில் உள்ள “அ” தமிழிலும் “அ” என்றே
குறிப்பிடப்படுகிறது. உயிர் ஒலியன் "ஆ" தமழிமொழியிலும் அவ்வாறே ஒலிக்கப்படுகிறது. - ஈ, ஊ தமிழ் மொழியிலும் இடம் பெறுகிறது. “ஞகர மெய்” மொழிமுதல் ஞமலி, ஞாலம், ஞெகிழி, என இடம் பெற்றுள்ளமை. ஞகர மெய் நகரமாக ஒலித்தல். (ஞாண் - நாண்) UlébJ மெய் மொழி முதலில் வருதல். (யானை - யாமை) ஏனைய மொழிகளில் யகரம் குறைந்துவிட்டது. ழகரம் மலையாளத்திலும், தமிழிலும் தனி ஒலியனாக இருத்தல் தொல் திராவிட மொழியிலும் உண்டு.
G12)

தொல் திராவிடத்தில் காணப்படும் மகர ஈற்றுச் சொல் தமிழிலும் "அத்துச்சாரியை’ பெற்று மரத்தை மரத்தினால் என வருகிறது. நான்கு என்ற சொல் நால் + கு என் இடம்பெற்றுள்ளமை,
.k> "க" கர மெய் மொழிக்கு முதலிலும் இடையிலும் வருதல்כ 来 வல்லின எழுத்து மெல்லின எழுத்தாக ஒலிக்கப்படுதல். உ+ம் சிலப்பு - சிலம்பு -
குரக்கு - குரங்கு
கு, டு, து, று ஆகிய இறுதிகளை உடைய ஈரெழுத்துச் சொற்கள் ஈறு இரட்டிப்பது இயல்பு. உ+ம் பகு - பக்கு
மென்மை புகுத்தும் காரணமாக இது பங்கு என அமைந்துள்ளத. அதுபோல அது, உது, என்ற சொற்கள் அத்த, உத்த என வந்து அந்த, உந்த என மருவியிருக்கலாம்.
பாற்பாகுபாட்டைப் பொறுத்தவரையில் ஆண், ஆண் அல்லாதவை என்ற பாகுபாடே இருந்தது. தமிழில் ஆண், பெண் பாகுபாடும் உயர்திணை, அறிணை பாகுபாடும் உண்டு. எனவே இவற்றினை ஆராய்ந்து பார்க்குமிடத்து தொல்திராவிட மொழியின் சிறப்பியல்புகள் தமிழ் மொழியிலும் காணப்படுகின்றன. அதாவது ஒருவித ஒழுங்கான ஒலிமாற்றம் நிலவுகிறது. ஒலி ஒற்றுமையை விட ஒலி ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பதுவே மொழியியல் அறிஞர்கள் கருத்தாகும். எனவே இவற்றை ஆராய்ந்து நோக்குமிடத்து தமிழ் ஒரு திராவிட மொழி என்று ஏற்றுக்கொள்ளலாம்.
C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3CD3CO3Cl3C3CO3CO3CD3

Page 9
(04) தமிழ் மொழியின் வரலாற்றினை செவ்வனவே அறிந்துகொள்ள உதவும்
மூலங்களை வகுத்துக்காட்டி அவற்றினை விளக்குக.
ஒரு மொழியின் வளர்ச்சியையும் அதன் செம்மையையும் அறிந்து கொள்ள எமக்கு ஆதாரங்கள் தேவை. ஆதாரங்கள் இன்றி எவற்றையும் வரையறை செய்துகொள்ள முடியாது. எனவே தான் மொழியியல் அறிஞர்கள் மொழி வரலாற்றுக்கான மூலாதாரங்களை வகுத்துக் காட்டியுள்ளனர்.
இலக்கிய நூல்கள்
2 இலக்கண நூல்கள்
3 ஓலைச் சுவடிகள்
4. கல்வெட்டுக்கள்
5 புதை பொருட் சான்றுகள்
6 பிற நாட்டார் குறிப்புக்கள்
என்பனவாகும் . இலக்கியம் காலத்தின் கண்ணாடி 61 675 LI j . மொழிச்செம்மையே இலக்கியத்தின் தோற்றத்திற்கு உதவியாக உள்ளது. எனவே இலக்கியங்கள் மூலம் முன்னோக்கிய வரலாற்றையும், எழுந்த வரலாற்றையும், பின்வரும் வரலாற்றையும் அறிய முடியும். காலவரன் முறைப்படி மனித பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்துகொள்ள இலக்கியங்களே பெரிதும் உதவுகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் மொழிமாற்றுத்தன்மை, பிறமொழிக்கலப்பு, எளிமைத்தன்மை ஆகியவற்றை அறிய இலக்கியங்கள் பெரிதும் உதவுவதால் அவை மொழி வரலாற்றுக்கான மூலாதாரமாகத் திகழ்கின்றன. - -
மொழி வரலாற்றுக்கான மூலாதாரங்களுள் இலக்கியங்கள் முக்கியம் பெறுகின்றது. ஏனெனில் ஒரு மொழியை அதன் கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்க இலக்கணங்களே பெரிதும் உதவுகின்றன. பேச்சு வழக்கையும், எழுத்து வழக்கையும் ஆதாரமாகக்கொண்டு எழுதப்படுவதால் ஒரு காலகட்டத்தின் மொழி வழக்கை அறிந்துகொள்ள இவை உதவுகின்றன. அகத்தியம் முத்தமிழ் இலக்கணம் கூறுவதற்கு உதவும் நூல், தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், பிரயோக விவேகம், இலக்கணகொத்து, நன்னூல் ஆகியன தமிழ்மொழி வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் மூலாதாரங்களாகக்
G14)

கொள்ள முடியும். அத்துடன் உரைகள், நிகண்டுகள், அகராதிகள் ബ சான்றாதாரங்களாக உள்ளன. இலக்கண நூல்கள் சில எழுத்து வழக்கிற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. வேறு சில நூல்கள் பேச்சுத் தமிழுக்கு முக்கியம் கொடுக்கின்றது. எனவே உண்மையான வழக்கை அறிய முடியாது. மேலும் வடமொழியைப் பின்பற்றி தமிழ்மொழிக்கு இலக்கணம் செய்தமை இன்னோர் குறைபாடு: அத்துடன் காலத்திற்கு ഔഖ[]
இலக்கணநூல்கள் மாற்றம் செய்யப்பட்டமையால் கூறியது கூறல் என்ற
குற்றத்திற்கு உள்ளாகின்றன. எனவே இவற்றை சான்றாதாரங்களாக கொள்வது சர்ச்சைக்கு உரியதே!
மொழி வரலாற்றுக்கான சான்றாதாரமான ങു. செப்பேடு, கல்வெட்டுக்கள் என்பவற்றை “சாசனவியல்' என்று குறிப்பிடுவர். ஆரம்ப காலத்தில் மொழி சம்பந்தமான தகவல்கள் எழுதப்பட்டும், UIQ எடுக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தன. ஆனால் ஒலைச்சுவடிகள் பழுதடைந்தும், செல்லரித்தும் போவதற்கு காலநிலை சாதகமாக அமைந்தது. எனவே மொழி மாற்றங்கள் ஏற்படலாம். ஆகவே உண்மையான தகவல்களை அறிய முடியுமா என்பது சந்தேகத்திற்கு இடமானது. கல்வெட்டுக்கள் நிரந்தரமானவை. அவை உண்மையான வரலாறுகளை அறிந்துகொள்ள உதவுபவை. காலத்தால் அழிவடைந்தவை. எனவே ஏனையவற்றை விட கல்வெட்டு சான்றுகள்
வரலாற்றுக்கான நம்பிக்கைக்கு உரிய மூலாதாரங்களாகக் கொள்ளக்கூடியவை.
தொல்பொருள், புதைபொருள், சான்றுகளாகிய கட்டடம், சிற்பம், ஒவியம்,
முத்திரைகள், அலங்காரப்பொருட்கள், மட்பாண்டங்கள் ஆகியவற்றையும்
மூலாதாரங்களாகக் கொள்ளலாம். பண்டைய எகிப்திய, பலோமிய சிந்துவெளி
நாகரிகங்கள் தொல்பொருள் சான்றுகள் மூலமே நிறுவப்படட்டன. இவற்றுள் உண்மையும், பொய்மையும் கலந்திருப்பதுடன் ஊகங்களே முக்கியத்துவம் பெறுவதனால் வரலாற்றைத் திசை திருப்பக்கூடியன. எனவே இவற்றையும்
மூலாதாரமாகக் கொள்வதில் பல பிரச்சினைகள் எழவே செய்கிறது.
பிறநாட்டில் இருந்து வந்த வணிகர்களும், யாத்திரிகர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதி வைத்த குறிப்புக்களும் வரலாற்றுக்கான
- - - . - மூலாதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. பாகியன், இபன் பத்துத்தா,
-
G15)

Page 10
கொலம்பஸ் போன்றவர்கள் எழுதிவைத்த குறிப்புக்களும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளபோதும் இவை உண்மையான ஆதாரத்தின் பின் எழுதப்பட்டதா? அல்லது மேல் எழுந்தவாரியாக எழுதப்பட்டதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. எனவே மேற்குறிப்பிட்ட மூலாதாரங்கள் யாவும் முழுமையான ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்பதுவே அறிஞர் கருத்து.
“கமீல்சுவெலியில்” என்பவர் கருத்துப்படி சாசனங்களே தமழிமொழி வரலாற்றுக்கான முழுமையான ஆதாரங்கள் ஆகும். தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். சாசனங்கள் பேச்சுத் தமிழை ஒட்டி எழுந்தவை. பேச்சு வழக்கு காலத்திற்கு காலம் மாற்றமடையும். இலக்கிய வடிவில் ஏற்படும் மாற்றம் மிகச் சிறிய அளவே மொழி வழக்கு மாற்றமும், சமுதாய மாற்றமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை. எனவே இலக்கியத் தமிழின் மூலம் சமூக வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியாது. ஆகவே சாசனங்களே தமிழர் பண்பாடு பற்றிய விரிவான தகவல்களைத் தரக்கூடியவை. சாசனங்கள் ஒரு வகையான மெய்க்கீர்த்திகள் ஆகும். சாசனங்கள் சிங்களம், பாளி சங்கதம் எனப் பல மொழிகளில்
அமைந்தவை. இவை இன்றும் காணக்கூடியதாக உள்ளன.
யாழ்ப்பாணம், மன்னார், பதவியா, திருகோணமலை, கந்தளாய், புல்மோட்டை, அனுராதபுரம், பொலநறுவை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டன. அவை காலத்திற்கு காலம் படி எடுக்கப்பட்டதால் எழுதப்பட்ட படியே உண்மையைக் காட்டி நிற்கின்றது. எனவே தமிழ் மொழியின் வரலாற்றுத் தொன்மையை அறிய உதவுகின்ற மூலாதாரங்களில் ஏனைய சான்றுகளை விட கல்வெட்டுச் சான்றுகள் வலிமை பெற்றன என்பர்.
C3C4C3 C3 C3CogCo3O3Co3O3C03 C3C3Co3O3C03Co3O3C3C3C03C3C03
6)

(05) ஐரோப்பிய பாதிரிமார் தமிழ் இலக்கண வளர்ச்சிக்கு ஆற்றிய uristfö Finar
மதிப்படுக.
ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள் தம் தொண்டாலும், தூய உள்ளத்தாலும்
அறிவுத்திறத்தாலும் மக்களை கவர்ந்ததுடன் அவர் தம் அறியாமையைப்
போக்கி அவர்கள் வாழ்வில் நாட்டம் கொள்ளும் வகையில் கல்வி அறிவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். எனவே தமிழ் மொழிக்கும் அரிய I 1691]] ஆற்றினர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கருத்துச் செலுத்தினர். மேலை
நாட்டு இலக்கியங்களைத் தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்தனர். தேமதுரத்
தமிழோசை உலகமெலாம். பரவும் வகை செய்தனர். உரைநடையின் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். திறனாய்வுக் கலையையும் மொழி ஆராய்ச்சியையும் தமிழில் புகுத்தினர். -
நாட்டுப்பாடல்கள், பழமொழிகள், வழக்குச் சொற்கள், கல்வெட்டுக்கள் முதலியவற்றைப் பேணித் தொகுத்தனர். ஒட்டுச்சுவடியில் இருந்த நூல்களை அச்சு வழியில் கொண்டு வந்தனர். எழுத்து வடிவில் சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். பொருள் உணரத்தக்க வகையில் குறியீட்டு ഗ്രഞ്ഞgbഞ്ഞബ്
பயன்படுத்திக் கற்கும் முறையை எளிமைப்படுத்தினர். இலக் கிu
இலக்கணங்களை இயற்றி தமிழ் அன்னைக்கு புதிய அணிகலன்களை
அணிவித்தனர். ஐரோப்பிய தமிழ் அறிஞர்களுள் வீரமாமுனிவர் G.U.போபீஜயர்,
Dr ST6) வெல், சீகன்பால்கு ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தாலிய
நாட்டை சேர்ந்த "பெஸ்கி' என்பவரே வீரமாமுனிவர் ஆவார். இவர் தமிழ் இலக்கணத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது. "உரைநடையின் தந்தை' எனப் போற்றப்படும் இவர் பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம், UTJéféBLD, (LPg565)u. பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இவர் ஐந்து இலக்கணம் பற்றிக் கூறும் "குட்டித் தொல்காப்பியம்' என்று போற்றப்படும் ஒரு தொன்னூலை இயற்றினார். பேச்சுத்தமிழ் வழக்கினைக்கொண்டு கொடுந்தமிழ் இலக்கணம் என இலத்தீன் மொழியில் ஓர் இலக்கணநூல் செய்தார். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரது இலக்கணநூல் திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்ட் வெல்லுக்கு பெரும் துணையாக அமைந்தது.
(2)

Page 11
இவர் தமிழ் மொழியில் எழுத்துச் சீர் திருத்தத்தையும் மேற்கொண்டவராகக் கருதப்படுகின்றார். பண்டைத்தமிழ் இலக்கியங்களில் உயிர் எழுத்துக்களாகிய எ, ஒ நெடிலைக் குறிக்கும் இடத்து புள்ளியிட்டு எழுதும் வழக்கம் காணப்பட்டது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இக் குழப்பத்தை நீக்கும் வகையில், "எ" என்ற வடிவத்தின் கீழ் ("ஏ") காலைப் பயன்படுத்தி “எ” என்பது குறிலையும் "ஏ" நெடிலையும் குறிக்கும் என்ற புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை அவர் ஏற்படுத்திய புதிய வடிவமே வழக்கில் உள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்களில் முற்றுப்புள்ளி முதலான குறியீடுகளை பயன்படுத்தும் வழக்கம் இல்லை. எனவே மொழித் தெளிவு குறைவாக இருந்தது. வாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை நீக்கும் வகையில் குறியீடுகளை LLLLLTTTTTT LLLTTTMTTLL TgLLLTTL LLA LLTLSS STLTTL LLLLL K LLLTL LLO வளர்ச்சி, காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் முதலியவற்றை அமைத்தும், திருக்குறள் போன்ற நூல்களை மொழி பெயர்த்தும் "அகராதியின் தந்தையாக"
அகராதி முறையை தோற்றுவித்தும் தமிழ் மொழிக்கு அளப்பருந்தொண்டு செய்துள்ளார்.
GU.போப் என்ற ஆங்கில அறிஞரும் தமிழ் இலக்கண வளர்ச்சியில் அக்கறை செலுத்திய ஐரோப்பியர் ஆவார். 20 ஆண்டுகளுக்கு மேல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவர் தமிழில் மேற்கொண்ட காதலால் தம் கல்லறை மீது தான் ஓர் தமிழ் மாணவன் என்று பொறிக்கும்படி வேண்டினார். தமிழ் மாணவர்கள் உணரும் வகையில் Ecementary Tamil Grammer எனும் - தமிழ் இலக்கணத்தை எழுதி இலக்கணவளர்ச்சியிலும் கருத்துச் செலுத்தினார். திருவாசகத்தை "எலும்புருக்கும் பாட்டு” என புகழ்ந்துள்ளார். திருக்குறள், நாலடியார், புறநானூறு, மணிமேகலை ஆகிய நூல்களை மொழி பெயர்த்தும் தமிழுக்குத் தொண்டாற்றினார். -
அயர்லாந்து நாட்டை சேர்ந்தவரான "DT கால்ட் வெல்” தமிழ் இலக்கண மரபின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். “திராவிட மொழியின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர். அவர் எழுதிய இந்நூலே தமிழ் முதலிய திராவிட மொழிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை
Ᏻ8X

என்பதையும், அவற்றுள் தமிழ் மொழியே இலக்கிய வளத்தாலும், GLDnı
- - . . அமைப்பாலும் சிறந்த உயர்தனிச் செம்மொழி என்பதை இன்றும் உலகுககு
உணர்த்தி நிற்கின்றது. அதாவது சங்கத இலக்கணமும், திராவிட மொழிகளின் -
இலக்கணமும் வேறுபட்டவை எனவும் தமிழ், கன்னடம், தெலுங்கு, ഥങ്ങഖങ് ஆகிய மொழிகளின் அடிப்படை இலக்கணம் ஒன்றே எனவும் சான்றுகள் காட்டி நிறுவி தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர் "திராவிட மொழியின் தந்தை” எனப் போற்றப்படுகின்றார்.
அடுத்து "சீசன் பாக்கு” என்ற ஜேர்மனியர் தமிழ் மொழியின் இலக்கணத்திற்கு வளம் சேர்த்த பெருமைக்கு உரியவர். தரங்கம்பாடியில் இருந்த காலத்தில் "தமிழ் - இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு” என்ற இலக்கண
[ᏏfᎢ60Ꭰ6u இயற்றியுள்ளார். இவரது நூல் ஆய்வுத்துறையின் ஒரு பரிமாணமாக
கருதப்படுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த "ஆடன்’ என்பவர். “A Progressive Grammer Of Common Tamil” 6T6őTAMB EQ6ADésaB6OOT DIT 60)6No எழுதி தமழி மொழிக்கு வளம் சேர்த்தவர். ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த
"ரேனியஸ்" என்ற அறிஞரும் தமிழில் தமிழ் இலக்கண நூல் என்ற உரைநடை
நூல் ஒன்றை 61ួយវាត្រាj.
இவ்வாறு ஐரோப்பிய பாதிரிமார், தமிழ் இலக்கண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் எனலாம்.
Cp3Cp3CD3Cp3Cl3C3 C3 C3 C3 C3 C3, C3C3C3CD3C3C&C3CD3CrgCo.3C4C3

Page 12
(06) ஐந்து இலக்கணமரபு என்றால் என்ன? தமிழ் இலக்கணநூல்களில் இம் மரபு
எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குக.
தமிழ் மொழியில் இலக்கணம் என்பது மொழி மாத்திரம் அன்றி அம் மொழியிலான இலக்கியம் அவற்றின் பொருள், வடிவம் ஆகியவற்றை ஆராய்கின்ற ஒரு தெறியாகவே இருந்து வந்துள்ளது. எனவே எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு, ஆகிய ஐந்து இலக்கண மரபுகளையும் பற்றிப் பேசுகின்ற இலக்கணமே ஐந்து இலக்கணம் எனப்படும். தமிழில் எழுந்த முதல் இலக்கணமாகிய தொல்காப்பியம் ஐந்து இலக்கண நூலாகக் கொள்ளப்பட்ட போதும் அதற்கு முன்பும் இலக்கணங்கள் தோற்றம் பெற்றிருக்கலாம். வீராேசழியம், தொன்னூல் விளக்கம், இலக்கண விளக்கம், நேமிநாதம் என்பன ஐந்து இலக்கணம் கூறும் நூல்களாகும். ஐந்து இலக்கணத்தையும் தனித்தனியாகக் கூறும் நூல்கள் பிற்காலத்தில் பல தோன்றியுள்ளன. எனினும் - ஆரம்ப காலத்தில் ஐந்திலக்கணங்களை ஒன்றாக தொகுத்துத் தந்த நூல் தொல்காப்பியம் என்றே கூறப்படுகின்றது.
தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் உவமையியல், செய்யுளியல் இடம்பெற்றமையாலே அது ஐந்து இலக்கண நூலாகக் கொள்ளப்படுகிறது. எனவே அதனை ஐந்து இலக்கண நூல் எனக் கொள்வது மரபன்று எனவும், வீரசோழியம் ஐந்து இலக்கணங்களையும் கூறும் பழமையான நூல் என்றும் கூறுவர். ஒரு முழுமையான இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்தையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். வீரசோழியம் பொருள் இலக்கணத்தை அகப்பொருள், புறப்பொருள் என வகுத்துள்ளது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள் பாட்டியல் என பகுத்துள்ளது. நேமிநாதம் ஐந்து இலக்கணம் கூறும் நூல் எனக் குறிப்பிட்டாலும் முழுமையாக வெளிவரவில்லை. நன்னூல் பாயிரத்திலே, "ஆகும் பொருள் அனைத்தையும் யாவரும் உணர” - - எனக் குறிப்பிட்டுள்ளதனால் நன்னூலும் ஐந்திலக்கணம் கூறும் நூல் என்பர். ஆனால் இக்கருத்திற்கு நன்னூலில் எந்த வித ஆதாரமும் இல்லை. நன்னூல் எழுதப்பட்ட போதே பாயிரமும் எழுதப்பட்டது எனக் கூற முடியாது. எனவே பிற்காலத்தில் ஐந்து இலக்கண மரபினுள் நன்னூலையும் அடக்குவதற்கு

மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இதுவாகும்.
ஒரு மொழியின் தோற்றத்திற்கு பேச்சு மொழியே உயிர் நாடி தமிழ் இலக்கணநூல்கள் எழுத்துக்களின் பிறப்பு, அளவு, முதல் எழுத்துக்கள், சார்பு, எழுத்துக்கள், சுட்டெழுத்துக்கள்,வினா எழுத்துக்கள், முதல் நிலை எழுத்துக்கள், இறுதிநிலை எழுத்துக்கள், இடைநிலை மெய்மயக்கம், ஆகியவற்றைப் பற்றியே எடுத்துக் கூறுகின்றன. பேச்சு மொழிக்கு g) fu ஒலியன்கள், உருபன்கள் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. கூறப்பட்ட
இலக்கணங்களின் உள்ளும் இலக்கணகாரர் இடையே சார்பு எழுத்துக்கள்
மூன்று என்றும், பத்து என்றும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறே முதன்நிலை எழுத்துக்களிலும், இடைநிலை எழுத்துக்களிலும் காணப்படுகிறது. தமிழ்மொழி வாழுகின்ற வளருகின்ற மொழி. எனவே காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப சில எழுத்துக்கள் வழக்கிழப்பதும் சில எழுத்துக்கள் வழக்கில் இடம்பெறுவதும் உண்டு. எனவே ஐந்திலக்கணம் பற்றித் தெளிவாக அறிய காலந்தோறும் அதன் வரலாற்றைச் சான்றுகள் கொண்டு நோக்க
வேண்டும்.
ஒரு எழுத்தாலாயினும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களாலாயினும் ஆக்கப்பட்டு பொருள் தருவதே சொல் எனப்படும். கருத்துத் தொடர்பு சாதனங்களில் முக்கிய இடம் பெறுவது சொல். வீரசோழியம், நன்னூல், நேமிநாதம் முதலிய நூல்கள் யாவும் சொல் இலக்கணத்தைப் பற்றியே விளக்கியுள்ளன. ஆண்ால் காலஓட்டத்தில் பேச்சு வழக்கிலும் சரி, எழுத்து வழக்கிலும் சரி சொற் பிரயோகம் வேறுபடுவதை அவதானிக்கலாம். எனவே
தமிழ் இலக்கணமரபு மீறப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இறையனார் களவியலுரை தமிழில் தோன்றிய பொருள் இலக்கணம் கூறும் நூல்களில் குறிப்பிடத்தக்கது. பொருள் அதிகாரம் கிடைக்காததால்
இந்நூலே கிடைத்தவற்றுள் ஏற்புடையதாக உள்ளது.
பதினேழாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நம்பியகப்பொருள் இலக்கணம் கூறும் நூல், பொருள், இலக்கணம் பற்றித் தொல்காப்பியம்
(2)

Page 13
பொருள் கூறினாலும், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொன்னூல் விளக்கம் என்பன அகப்பொருள் இலக்கணத்தையும், புறப்பொருள் வெண்பா மாலை புறப்பொருள் இலக்கணத்தையும் விளக்குவதாக அமைந்துள்ளது. எனவே பொருள் என்பது அகப்பொருள் புறப்பொருள் பற்றி அதாவது காதலும் ஆன்மீகமும் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.
ஐந்து இலக்கணங்களுள் யாப்பு என்ற மரபு ஆரம்பத்தில் வழக்கில் இருந்திருக்கவில்லை. ஆனால் காலப் போக் கில் இலக்கியங்களை
வரையறைக்குள் இட்டுச் செல்வதற்கு யாப்பு இலக்கணமே முக்கியமாகும்.
தொல்காப்பியர் செய்யுளியலில் விரிவாக விளக்கியிருப்பதனால் அவர் காலத்தில் யாப்பு பற்றித் தனியாக ஆராய்ந்திருக்கலாம். தொல்காப்பியர் காலத்தவரான காக்கை பாடினியார் யாப்பிலக்கணம் செய்தவராக அறிய முடிகிறது. கி.பி.10ம் நூற்றாண்டில் எழுந்த யாப்பருங்கலம், யாப்பருங்காரிகை ஆகியன யாப்பிலக்கணம் கூறும் நூல் களாகும் . யாப்பிலக்கணம் செய்யுள்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இலக்கணம் இலக்கியத்தை நயப்பதற்கு அனுசரணையாக அமைவது என்ற கோட்பாடே இம்மரபு வேரூன்றுவதற்கு காரணமாக அமைகிறது. எனவே யாப்பு இலக்கணம் என்பது செய்யுள் ஆசிரியரும் உரை ஆசிரியரும் கையாளும் பொதுவழக்கு பற்றிய அறிவாகும்.
அணி என்பது அலங்காரம் என்று பொருள்படும் அது சொல் அணி பொருள் அணி என இருவகைப்படும். செய்யுளுக்கு அழகையும் ஓசைச்சிறப்பையும் ஏற்படுத்தி அதன் மூலம் இலக்கியத்தை நயப்பதற்கு அணிகள் பயன்பட்டன. தண்டியலங்காரம் அணி இலக்கணம் கூறும் நூல், இவற்றுடன் மாறன் அலங்காரம், தொல்காப்பியம், வீரசோழியம் முதலியனவும் அணி இலக்கணத்தை விளக்கி நிற்பனவாகும்.
ஐந்திலக்கண மரபு தமிழிலே நீண்ட வரலாற்றை உடையது. பிற்காலத்தில் மேலைத்தேய சார்பு ஏற்பட ஐந்திலக்கணங்களையும் சேர்த்து சொல்வதே சிறப்பு எனப்பட்டது. எனினும் தமிழ் மொழியில் ஐந்திலக்கண LD U L- கையாளப்பட்ட போதும் அவற்றின் முக்கியத்துவம் குறைந்து

காணப்படுகிறது. ஒவ்வொரு இலக்கணமும் தனித்தனி ஆய்வுக்கு உரிய னவாகக் காணப்படுகின்றன. காலத்தின் தேவையை ஒட்டி தற்காலத்தில் 6(955), Оғl:60 பற்றிய ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொருள், யாப்பு, அணி
பற்றிய ஆய்வு முயற்சிகள் குறைவாகவே உள்ளன எனலாம்.
c3c3c3c3c3c3c3c3cc3.Cc3 Cc3 CO3CO3CO3CO3CO3CO3CO3CO3CO3CO3CO3CO3
(07) ஐரோப்பியர் காலத்தில் உரைநடை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கியவை எவை என்பதையும், உரைநடை வளர்ச்சி தமிழ்மொழி இலக்கியத்துறைகளில்
ஏற்படுத்திய தாக்கத்தினையும் தெளிவுறுத்துக.
ஐரோப்பியர் தமிழ் இலக்கிய வரலாற்றில் 18ம், 19ம் நூற்றாண்டுகளைக் கொண்ட காலப்பகுதி ஐரோப்பியர் காலப்பகுதி எனலாம். காலப்பகுதியில் தமிழ் இலக்கியம் புது வழியிற் செல்லத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் வாழ்க்கைத் தொடர்புடைய இலக்கியங்களை வழக்கிலிருந்த மொழிகளில் சாதாரண கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புறக் கூடியதாய் காலத்தின் போக்கிற்கேற்ப உயிர்த்துடிப்புடையனவாய் இயற்றத்தொடங்கினர். 5760 (8:6)FLOLIů பிரச்சாரத்தின் பொருட்டு தமிழ் நாட்டிற்கு வந்த ஐரோப்பியர் வாயிலாக தமிழ் இலக்கியங்களின் போக்கிலும், நோக்கிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவக் குருமார் தம்முடைய சமயத்தைப் பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் உரைநடை வளர்ச்சிக்கு பெரிதும் உந்து சக்தியாக அமைந்தன. மக்களின் அன்பைப் பெறுவதற்கு 2)6)ij மொழியைக் கற்று அவர்களோடு கலந்து உரையாடுதல் சிறந்ததென எண்ணினர். எனவே சாதாரண கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புறக் болуш 6)]65). Busi) காலத்தின் போக்கிற்கேற்ப உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. உணர்ச்சியோடு கூடிய அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு உரைநடை இலக்கியங்கள் பெரிதும் உதவுமென்பதை அறிந்திருந்த போதும் அச்சியந்திரம் இல்லாமை பெரும் குறைபாடாக இருந்தது. ஐரோப்பிய பாதிரிமாரும், கத்தோலிக்க மதகுருமாரும் தத்தம் சமயக் கொள்கையினை

Page 14
மக்களிடையே பரப்புவதற்கான நிரூபங்களையும், உரைநூல்களையும் எழுதி வெளியிடுவதற்காக தரங்கம்பாடி, அம்பலக்காடு ஆகிய இடங்களில் அச்சியந்திர ՑFII6D608560)6II நிறுவினர். இம்முயற்சியானது உரைநடையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது.
உரைநடை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆங்கிலம் கற்ற மத்தியதர வகுப்பினரின் எழுச்சியும் ஒரு காரணமாக அமைவது. அதாவது ஆங்கில இலக்கியங்களைத் தழுவி தமிழிலும் நாவல்கள், கதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் முதலான உரைநடை நூல்கள் பல தமிழில் எழுந்து உரைநடை வளர்ச்சியின் வேகத்திற்கு வித்திட்டது. -
தமிழ் உரைநடை கடினசந்தி விகாரங்களை உடையதாய் வாசிப்பதற்குக் கடினமாக அமைந்தது. இந்நிலையில் ஆங்கில மொழிக்குரிய குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கும் புலப்படக்கூடிய வகையில் உரைநடையில் ஒரு புதிய மாற்றத்தைப் புகுத்தி வசனநடை கைவந்த வல்லாளர் என்ற பாராட்டையும் பெற்ற நாவலர் உரைநடை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார் எனலாம்.
19ம் நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சிக்குப் பத்திரிகையும், பெருந்துணை புரிந்தது எனலாம். சமயப் பிரச்சாரத்துக்கான பத்திரிகைகள் தோற்றம் பெற தமிழ் இலக்கியத்தில் பத்திரிகை நடை என எளிய உரைநடை ஒன்று தோற்றம் பெற்றது. இது முற்கால உரையாசிரியர் 60)85u Islé55 L உரைநடையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய் பொதுமக்கட்கான எளிய உரைநடையாக அமைந்தது. எனவே சமயப் பிரச்சாரம், அச்சியந்திர வளர்ச்சி, மத்தியதர வகுப்பினரின் எழுச்சி, குறியீட்டுப் பயன்பாடு, பத்திரிகை வளர்ச்சி, அறிவியல் மறுமலர்ச்சி ஆகியவை உரைநடை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தன. - -
எனவே 19LD நூற்றாண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியானது இலக்கியத்துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழில்
ஏராளமான சமயநூல்கள் செய்தனர். பழைய செய்யுள் இலக்கியங்கள் அச்சு 24

வாகனம் ஏறின. புதிய உரைநடை நூல்கள் தோற்றம் பெற்றன. திங்கள் இதழ் வார இதழ் எனப் பல சஞ்சிகைகள் தோன்றின. ஊர்தோறும் கல்வி நிலையங்கள் தோற்றம் பெற்றமையால் மாணவர்களுக்கேற்ற பாடநூல்கள் வெளிவந்தன. நூல்களை வாங்கிப் படிப்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தமிழிலே நூல்களும் கட்டுரைகளும், ஆராய்ச்சி நூல்களும் எழுந்தன. .
உரைநடையின் வளர்ச்சி, நாவல்கள், சிறுகதைகள் போன்ற புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவதற்கு வித்திட்டன. பிறமொழியிலிருந்து தமிழ் மொழியில் ஏராளமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. மொழி பெயர்ப்புத்துறை வளர்ச்சியுற்றது. அறிவியல் நூல்கள் தோற்றம் பெற்றன. எழுத்தாளர்கள் பலர் உருவாகினர். அகராதிகள் தோற்றம் பெற்றன. நாடகங்கள் உருப்பெற்றன.
இவ்வாறு தமிழ் இலக்கியத்துறையில் பன்முகப்பட்ட வளர்ச்சி ஏற்படுவதற்கு
உரைநடை வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
G6C3 C2C3 C3, Cp3Cl3Cl3Cl3O3CD3 CO3CD3CD3CD3CD3CD3C9x3CDgCD3CD3CogCcg
(08) “பிற மொழிக் கலப்பை அனுமதித்தால் தமிழ் மொழி சிதைந்து விடும்”. உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விடும் இன்றைய சூழலைக் கருத்தில் கொணர்டு
இக்கடற்றை மதிப்பிடுக.
பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் புகும் போது அம் மொழிக்கே உரிய தனித்தன்மை சிதைந்துவிடும். ஏனெனில் ஒவ்வொரு மொழிக்கும் பிரத்தியேகமான ஒலிகள் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் தமிழில் கலக்கும் போது அவற்றைத் தமிழில் எப்படி எழுதுவது? என்பது பிரச்சினை, தொல்காப்பியர் காலத்தில் பிறமொழிக் கலப்பு தமிழில் பெருமளவு இல்லாததனால் போலும் தொல்காப்பியர் விரிவாக விதிகள் கூறவில்லை. ஆனால் நன்னூல் சங்கத மொழிக்கு உரிய ஒலிகள் தமிழில் எவ்வாறு அமையும் என விதி கூறியுள்ளார். எனவே அவர்காலத்திலும் அதற்கு முன்பும் தமிழில் பிறமொழிக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம். -
Gs)

Page 15
அறிவியல் வளர்ச்சி, போக்குவரத்து வசதிகளின் பெருக்கம், பல்லின மக்களின் தொடர்பு ஆகியவற்றின் காரணமாக இன்று ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிச் சொற்கள் தமிழில் பெருந்தொகையாக கலந்துள்ளன. எனவே அவற்றை எப்படி எழுதவேண்டும் என்றும், தமிழ் ஒலி மரபுக்கு ஏற்ப அமைக்க வேண்டும் என்றும் கூறுவர். எனினும் தமிழின் ஒலி மரபினையும் இனிமையையும் காப்பாற்ற வேண்டுமாயின் பிற மொழிக்கலப்பை அனுமதித்தல் கூடாது என்பர். தமிழ் உரை நடையில் சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தலாம் உன்றும், பிற மொழிகளின் சிறப்பொலிகளைப் பயன்படுத்த இடும் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுவர். எவ்வாறாயினும் பிற மொழிச் சொற்கள் தமிழில் புகும்போது தமக்கு இயல்பாக இல்லாத புதுப்பொருளைப் பெற்று வீடுதல் மொழி வரலாற்றில் இடம் பெறுகின்ற ஒன்று. ஏனெனில் பிற மொழிச் சொற்களின் பொருளை முற்றும் உணர்ந்தவர்கள் அதனை வேறு பொருளில் பயன்படுத்துவதாலும், சொற்பொருளை முன்பு அறியாதவர்கள் அச் சொற்களை கேட்கும் போது புதிய பொருளுடன் தொடர்புபடுத்தலாலும் அந்நிலை வேறுபடுகிறது.
உதாரணம் "அதிசய” என்பது ஒரு சங்கதச் சொல். மேன்மை வாய்ந்த, மிகச் சிறந்த என்ற பொருளை உடையது. வடசொல்லில் இருந்து தமிழில் வரும்போது இதனை அதிசயம் என்பர். இந்நிலையில் வியப்பு என்று பொருள்படும். இவ்வாறு பிறமொழிக் கலப்பை அனுமதித்தால் தமிழ் மொழி சிதைந்துவிடும். தமக்கு இயல்பில் இல்லாத பரந்த பொருள் புகுந்து வீடும்.
பிறமொழிச் சொற்களின் கலப்பு சில தனித்தமிழ் சொற்கள் வழக்கொழிந்து போவதற்குக் கூட காரணமாக உள்ளது. சோழர்காலத்து கல்வெட்டுக்களில் “ஒற்றடை” என்ற சொல் வழக்கு வீழ்ந்து விட துவாய் என்ற பிறமொழிச் சொல் நிலை பெற்றுவிட்டது. அதே போன்று “நாற்காலி’ என்ற தமிழ் பெயருக்கு பதிலாக "கதிரை” என்ற பெயர்ச் சொல்லே இன்று நிலைபெற்றுவிட்டது. எனவே பிறமொழிக் கலப்பை அனுமதித்தால் தமிழ் மொழி சிதைந்துவிடும். -
பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் அமையும் போது அம்மொழியில் தமக்கு இயல்பாக இல்லாத புதுப் பொருள்கள் வந்து அமைந்து விடுகின்றன.
С26)

மேலும் சில தனித் தமிழ் சொற்கள் பொருள் வழக்கு இழந்து போய்விடும். உதாரணம்: நாற்றம், கதலி, பொன் முதலிய சொற்கைள நோக்கினால் ឆ្លាញ இச் சொற்கள் பொருள் மாறுபட்டு வழங்குகின்றன. அதே போன்று சில தனித் தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து போய்விட்டன. இன்னும் நில தனித் தமிழ் சொற்களோ பிறமொழியின் கலப்பினால் உரிய ஒலிகள் மாறுபட்டு ஒலிக்கின்றன. வணிகத் தொடர்பு, அரசியல் தொடர்பு, திருமணத் தொடர்பு, போக்குவரத்து வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், சமயத்தொடர்புகள் பொன்ற தொடர்புகளினால் இன்று இலக்கிய வழக்கிலும் பேசசு வழக்கிலும் பிறமொழிச் சொற்கள் பரவலாகக் கலந்து பேசப்படுகின்றன, எழுதப்படுகின்றன. மொழியின் வரப்பினை வகுத்துக் கூறும் இலக்கண நூலில் கூட பிறமொழிக் கலப்பு மிகுதியாக இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியர் காலத்தில் இருந்தே பிறமொழிக் கலப்பு இடம் பெற்றதனால் போலும் தொல்காப்பிui “ஜந்தில் $6ùWyặ). தொல்காப்பியன்” என சிறப்பிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு பிறமொழிச் சொற்கள் தமிழிலே புகுந்தமையால் தமிழ் மொழி சிதைந்துவிடும். வீரசோழியத்துக்கு உரை செய்த உரையாசிரியர் தமிழ் சொல்லிற்கெலாம் வடநூலே தாயாகித் திகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழிக்கும் பொருந்தும் என்று கூறிuஸ்லாமை சிந்திக்கத் தக்கது. பேராசிரியர் வையாபுரியப்பிள்ளை “தமிழின் மறுமலர்ச்சி” எனும் நூலில் தமிழ் மொழியில் சங்கதச் சொற்களும், பாகத் சொற்களும் எவ்வாறு கலந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். சுவாமிநாததேசிகர் பிரயோக விவேக நூலார் பிறமொழிக்கலப்பு இடம் பெற்றுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். பிறமொழிக் கலப்பை அனுமதிக்குமிடத்து தமிழ் மொழி சிதைந்துவிடும் என்று கருதியே சூரிய நாராயன சாஸ்திரிகள், மறைமலை அடிகள் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தை ஏற்படுத்தி தமிழ் மரபைப் பேணும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே இன்று பல்வேறுபட்ட மொழிகளில் இருந்து சொற்கள் தமிழிலே புகுந்து தமிழின் தனித்தன்மையை சிதைத்து வருகின்றன என்றே கூறலாம்.
cgogcogcogcogcogcogcogcogcogcog Cp3CO3CD3CD3CD3Cp3CD3Cp3C3 C3 C3 C3
27)

Page 16
(09) தற்காலத் தமிழ் மொழியின் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு பழைய இலக்கண நூல்கள்அதிகம் பயன்படா, புதிய இலக்கண நூல்கள் எழுதப்பட வேண்டும்
இக்கடற்றை நீர் ஏற்றுக்கொள்வீரா? காரணம் காட்டி விளக்குக.
இலக்கணம் பற்றிய தமிழ் அறிஞர்கள் கருத்துப் பற்றி முதலில் சிந்தித்தல் வேண்டும். தொல்காப்பியத்தில் இலக்கணம் என்ற சொல் இரண்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியர் இலக்கணம் என்பது மொழிகளின் நெறிகளைக் கூறும் துறை என்றார். அதாவது மொழியிலான இலக்கியம் முதல், கரு, உரி, என மக்கள் வாழ்வைக் குறிப்பிட்டுள்ளாரே அன்றி இலக்கணம் என்பது மொழி பற்றிய விபரணத்தைக் கூறுவது என்னும் பொருளில் குறிப்பிடவில்லை. எனவே மொழியின் நெறிகளைக் கூறும் துறையே இலக்கணம் எனப்படும். இதுவே நவீன மொழியியல் கோட்பாட்டுக்கும் பொருந்தும். இந்த வரைவிலக்கணம் பற்றி பழந்தமிழ் இலக்கண ஆசிரியர் சிந்தித்ததாகத் தெரியவில்லை. தொல்காப்பிய பாயிரம் எழுதிய பனம்பாரனார் நூலைக் குறிக்க புலம், பனுவல், ஆகிய இரு சொற்களைக் கையாண்டுள்ளார். புலம், பனுவல் என்ற இரண்டு சொற்களும் சாத்திரம் அல்லது மெய்ஞ்ஞானத்தைக் குறிப்பது. அங்ங்னமாயின் மொழிபற்றிய ஆய்வு சாத்திரநூல்களின் பொருளைத் தெளிவாக அறிவதற்கு என்ற பொருளையே தரும். எனவே பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்கள் மொழி ஆய்வு என்பது மொழியின் இயல்பை அறியவல்ல இலக்கியங்களைக் கற்கவும், அவற்றை ஆக்கவும், சூத்திரங்களை விளங்கிக்கொள்ளவுமே மேற்கொண்டனர் என்பது புலனாகின்றது.
இறையனார் அகப்பொருள் உரையில் உரைகாரர் "எழுத்தும் சொல்லும் . யாப்பும் ஆராய்வது பொருள் அதிகாரத்தின் பொருட்டனறோ பொருள் அதிகாரம் பெற்றிலோம் எனின் இவை பெற்றும் பெற்றிலோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலைத்தேய
அறிஞராகிய “றொபின்ஸ்” என்பவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். சபாபதி நாவலர் எழுத்தும் சொல்லும் கருவியாக பொருள் உணரப்படும் என்று கூறியுள்ளார்.
எனவே மொழி ஆய்வைத் தனியாக மேற்கொள்ளாது எழுத்தையும் சொல்லையும் ஆராய்ந்து அதனைக் கருவியாகக் கொண்டு ஏனைய பொருள்
Gae)

விடயங்களையும் சேர்த்து ஆராய்வதே இலக்கணம் என்று ஒரு சாரார் கருதினர். இலக்கணத்தின் தலையாய பணி எழுத்தையும் சொல்லையும் to Gib ஆராய்வதே என்று இன்னோர் சாரார் கருதினர். -
இலக்கணம் என்பது மொழி ஆய்வு என்பதை உணர்ந்தமையும், பொருள் பற்றிய அக்கறையின்மையால் பொருளை ஆராயாது இருந்தமையும் இலக்கணம் பற்றிய கருத்து முரண்பாட்டுக்கு காரணமாகலாம். சபாபதி நாவலர், “முகத்தில் கண்ணுடையார் அது கருவியளாகக் கொண்டு உடலைப் பார்க்காதது போன்று எழுத்தும் சொல்லும் அறிந்தோர் பொருள் ஆராயாமல் இருக்கின்றார்களே” என கருத்துக் கூறுவர். எழுத்தும் சொல்லும் ஆராய்ந்து வல்லவராக முயல்வார் பலர் இக் காலத்தில் உளர். ஆனால் இவ் ஆராய்ச்சியைக் கருவியாகக்
கொண்டு பொருள் காண முயல்பவர் அரியர் எனக் கூறுவர்.
இலக்கணம் பற்றிக் கருத்து தெரிவித்தோரில் ஒரு சாரார் உயர்ந்தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும் அறிய உதவுவதே இலக்கணம் எனக் கொண்டனர். ஆறுமுகநாவலர் இதற்கு சிறந்த உதாரணம் ஆவார். இலக்கணம் என்பது உயர்ந்தோர் வழக்கத்தையும், செய்யுள் வழக்கத்தினையும் உணர்த்தி விதிப்படி எழுதுவதற்கும் பேசுவதற்கும் கருவியாகிய நூல் என்பர். நாவலர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழி அதிகாரம் என இலக்கணத்தை மூன்றாக வகைப்படுத்தியுள்ளார். இதில் உயர்ந்தோர் வழக்கு, செய்யுள் வழக்கு எடுத்தாளப்படுவதைக் காணலாம். எனவே நாவலர் பேச்சு வழக்கிற்கு இலக்கணம் புரியாது விட்டார். எனினும் நாவலரின் சில கொள்கைகள் pഖങ്ങ மொழியியல் கோட்பாடுகளுக்கு உதவியுள்ளது என்று கூறுவர். இவர்கள் மத்தியில் இருந்து ប្រb அவர்களின் கோட்பாடுகளை ஆராயும் போது இலக்கணம் என்பது, - -
1. பொருளை ஆராய உதவும் ஒரு கருவி.
2. எழுத்தையும் சொல்லையும் ஆராயும் ஒரு முறை
3. உயர்ந்தோர் வழக்கையும், செய்யுள் வழக்கையும் உரைப்பது.
என்ற கருத்தைத் தருகின்றது. இவ்வாறு இம் மூன்று கோட்பாடுகளில் இருந்து உருவாகியதே "இலக்கியத்திற்கு இலக்கணம்” என்ற கொள்கை.
அதனாலேயே இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் வேண்டும் எனக்
(29)-

Page 17
கூறுவர். அதனாலேயே "இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே' ஏனெனில் எள் இன்றேல் எண்ணெயும் இல்லை. எள்ளினுள் இருந்தே எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் எடுபடும் என்றார். நாவலர் செய்யுள் வழக்கை கூறுவதே இலக்கணம் என்பர். இதனால் சாதாரண பேச்சுவழக்கு நிராகரிக்கப்பட்டது. எழுத்து மொழிக்கு முதன்மை கொடுத்தனர். ஆகவே இலக்கணம் எனும் சொல் பேச்சு வழக்கில் உள்ளவற்றை அறியும் திறனுக்கு உதவவில்லை. எழுதப்பட்ட இலக்கிய மொழியின் திறனை அறியவே உதவுகின்றது. -
"புல்லா எழுதினர் கிளவி பொருள் ഖlഖt இல்லா இலக்கணத்தை ஏற்று ஒழிக.” என நேமிநாத ஆசிரியர் கூறுவார்.
தொல்காப்பியர் பிறப்பியல்பற்றிக் கூறுகையில் எழுதப்படும் எழுத்துக்களின் பிறப்புப்பற்றி கூறுகின்றாரே அன்றி பேச்சில் இடம்பெறும் ஒலிகளின் பிறப்பைப் பற்றிக் கூறினாரல்லர். இதனால் "வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது புலனாகின்றது. இதற்கு உரை எழுதிய பேராசிரியர் வழக்கு என்பது உயர்ந்தோர் வழக்கே என்றும் அல்லாதவற்றை இழிவழக்கு, இழிஞர் வழக்கு என்றும் குறிப்பிட்டார். ஆனால் தமிழ் மொழி இரு வழக்குகளை உடையது பண்டைய மொழிகளில் எல்லாம் இவ்விரு வழக்குகளும் உண்டு. தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கு அன்று. “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலில்” என தொல்காப்பிய பாயிரம் எழுதிய பனம்பாரனார் கூறியுள்ளார். ஆனால் இலக்கியமே இலக்கணத்தை உள்ளடக்குகின்றது என்ற கோட்பாட்டினை உடைய இலக்கண ஆசிரியர்கள் உலக வழக்கைவிட செய்யுள்
வழக்கையே பிரதானமாகக் கொண்டனர்.
இலக்கணக் கூறுகளுக்கு விளக்கம் கூற முற்படுகையில் குறிப்பிட்ட இலக்கணக்கூறுகள் செய்யுள் மொழியாகவே அமைக்கப்பட்டன என்று விளக்கம் கூறும் மரபு தோன்றியது. எனவே பண்டைய செய்யுள் மொழியே பொருத்தமும் தூய்மையும் வாய்ந்தது என்ற எண்ணம் உருவானது. பண்டைய இலக்கியங்கள் சிறப்பு இலக்கியங்கள் என்றும், ஏனையவை சிறப்பற்ற இலக்கியங்கள் என்றும் கருத்து உருவாகிறது. திராவிடப் பிரகாசிகை ஆசிரியரான சபாபதி நாவலர் இலக்கிய மரபியலில் தமக்கு முந்திய சங்க இலக்கியங்கள் போன்றவற்றைக்
குறிப்பிட்டனரே அன்றி முக்கூடற்பள்ளு, குறவஞ்சி, சித்தர்பாடல் போன்றவற்றைக்
3ᎴᏅ

குறிப்பிடவில்லை. இலக்கணம் விதி முறை அன்று. ஆனால் எமது பண்டைய . இலக்கண ஆசிரியர்களின் கோட்பாடே இலக்கணத்தை விதிமுறை ஆக்கிற்று. எனவே மரபுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டது. "மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை” எனவே மரபு வழிபட்ட சொல்லினால் முன் எப்படி எச் சொல்லில் சொன்னாரே அப்படி அச்சொல்லில் கூறுவதே செய்யுள் மரபு எனக் கூறப்பட்டது. நன்னூல் "மரபு நிலை திரியில் பிறிது பிறிதாகும்" என்று கூறுகின்றது. எனவே மரபு எனும் பண்பு அழுத்தம் பெறுவதைக் காண்கின்றோம். மரபு விதிப்படியே இலக்கணம் விதிப்படி எழுதவும் பேசவும் கருவியாக அமைகிறது என்பர். - .
இவர்கள் கூறிய கருத்துக்களை எல்லாம் தொகுத்து நோக்கும்போது தற்காலத் தமிழ் மொழியின் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கு புதிய இலக்கண நூல்கள் எழுதப்பட வேண்டும். பழைய இலக்கண நூல்கள் அதிகம் பய்னபடாது
என்பது உண்மை.
C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C2CO3Cl3 CO3Cl3CO2C3 C3 C3 C3 C3 C3 C3CD3CD3
(10) சொல் முதலில் இடம்பெறும் எழுத்துக்கள் பற்றி தொல்காப்பியனார் சுடறுவனவற்றை வெளிப்படுத்தி இடைக்காலத் தமிழில் முதல்நிலை எழுத்துக்களில்
ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்க.
ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையான உயிர் ஒலிகளும், மெய் ஒலிகளும் உண்டு. ஒலிகள் ஒன்றன்பின் ஒன்று தொடரும். எந்த மொழியிலும் ஒலியன்களின் சேர்க்கை முறைக்கு விதிகள் உண்டு. எனவே, எழுத்து வழக்கில் எல்லா எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வருவது இல்லை. எவ்வெவ் எழுத்துக்கள் மொழி முதலில் வரவேண்டும் என்பதற்கு தமிழ் மொழியில் சில ஒழுங்குகள் உண்டு. அவ் எழுத்துக்களே மொழிக்கு முதலில் வரும்.
சொல் ஆக்கத்தில் ஒரு சொல்லின் முதலில் நிற்கும் எழுத்தினையே முதன்நிலை எழுத்து என்று இலக்கணகாரர் கூறுவர். தொல்காப்பியர் மொழிக்கு
G3F)

Page 18
முதலில் வரும் எழுத்துக்களாக உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் வரும்
என விளக்கியுள்ளார்.
"பன்னிருயிரும் மொழி முதலாகும்” (தொகு59) 2 Lib
அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊசி, எறும்பு, ஏணி, ஐவர், ஒட்டகம், ஓனான், ஒளவை -
என பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் மொழிக்கு முதலாக வந்துள்ளன.
மெய் எழுத்துக்களில் ஒன்பது (9) எழுத்துக்கள் மட்டும் அதாவது க, ச, த, ந, ப, ம, வ, ஞ, ய ஆகியன மொழிக்கு முதலில் வரும் என்றும் 6Ꭻ60Ꭰ60IᏓll எழுத்துக்களான ங், ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய இவை மொழிக்கு முதலில் வராது என்றார். வரக்கூடிய ஒன்பது எழுத்துக்களிலும் எழுத்துக்களும் பன்னிரண்டு உயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வருவதில்லை. க. 鲇 ந, ப, ம ஆகிய ஐந்து எழுத்துக்களே மொழிக்கு
முதலில் பன்னிரண்டு உயிரோடும் வரும்.
உதாரணமாக
க என்பது
கண், காது, கிளி, கீரி, குயில், கூடு, கெண்டி, கேணி, கைதி, கொக்கு, கோழி, கெளதாரி
函
தடி, தாடி, திரை, தீ, துவக்கு, தூள், தென்னை, தேள், தையிர், தொட்டி, தோடு, தெளவை -
ந -
நடி, நாரை, நில், நீர், நுங்கு, நூல், நெல், நேர்மை, நைடதம், நொண்டி
நோன்பு, நெளவி -
படி, பாடு, பிடி, பீடை, புல், பூடு, பெண், பேடு, பை, பொறுமை, போத்தல், பெளவம்
G2)

மண், மாடு, மிளகு, மீன், முள், மூளை, மெட்டி, மேன்மை, மைனா,
என மேற் கூறிய 5 எழுத்துக்களும் பன்னிரண்டு | 9) u fij எழுத்துக்களோடும் கூடி மொழி முதலாக வரம் (60) -
மொட்டு, மோடு, மெளவல்
சகரம் என்னும் எழுத்து அ,ஐ, ஒள தவிர்ந்த ஏனைய ஒன்பது உயிரோடும் மொழி முதலாக வரும்.
உதாரணமாக ச
சாந்து, சிலை, சீர், சுளகு, சூடு, செடி, சேவல், சொல், சோலை, என ஒன்பது எழுத்துக்கள் மொழி முதலாக வந்துள்ளது. (09)
வகரம் உ, ഉണ, ஒ, ஓ, தவிர்ந்த ஏனைய எட்டு உயிர்களோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் உதாரணமாக -
வட்டி, வாள், விளக்கு, வீடு, வெள்ளி, வேல், ഞഖങ്ങ8, வெளவால், என மொழிக்கு முதலில் வந்துள்ளது. (08)
ஞகரம் ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிரோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
உதாரணமாக ஞ ஞாபகம், ஞெகிழி, ஞொள்கிற்று (03)
என மொழிக்கு முதலில் வரும். யகரம் ஆ என்ற எழுத்துடன் மட்டும் மொழிக்கு முதலில் வரும். @_十tb - LLUIT GODGOT (01)
இவ்வாறு மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாக உயிர் எழுத்துக்களான பன்னிரண்டும், மெய் எழுத்துக்கள் எண்பத்தொன்றும் ஆக மொத்தம் தொண்ணுற்று மூன்று எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுடன் சேர்த்து குற்றியலுகரத்தில் முன்னிலை
G3)

Page 19
முறைப் பெயராகிய “நுந்தை” என்பதும் மொழிக்கு முதலில் வரும் என தொல்காப்பியர் கூறுவர். -
இடைக்காலத் தமிழில் முதனிலை எழுத்துக்களில் பிறமொழிச் - செல்வாக்கு காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது தொல்காப்பியர் கூறிய சில எழுத்துக்கள் இன்று வழக்கு இழந்து போயுள்ளன. அவர் சொல்லாத சில எழுத்துக்கள் சொல் முதலில் இடம்பெற்றுள்ளன. அதாவது க, த, ந, ப, ம ஆகிய ஐந்து எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் என்றார். ஆனால் இடைக்காலத்தில் ஒள, கெள, தெள, நெள, பெள, மெள மொழிக்கு முதலில் வருவதில்லை. சகரம் மொழிக்கு முதலில் வராது என்று குறிப்பிட்டார். இன்று சட்டி, சகடம், முதலிய சொற்கள் மொழிக்கு முதலில் வந்துள்ளன.
சைவம், செளகரியம், முதலிய சொற்கள் வடசொற்கள். ஆதலால் அவையும் மொழிக்கு முதலில் வருவதில்லை. வகரத்தில் “வோட்டு” என ஒகாரம் மொழிக்கு முதலில் வந்துள்ளது. ஞகரத்தில்எகரம், ஒகாரம், இன்று வழக்கில் இல்லை. அவை திசைச்சொற்களாகவும் இழிவழக்குகளாகவும் வழக்கு இழந்துவிட்டன. யகரத்தில் யவனர், யுக்தி, யூகம், யோகம், யெளவனம் ஆகிய வடசொற்கள் தமிழில் கலந்து மொழிக்கு முதலில் வந்துள்ளன.
இவை தவிர்ந்த மொழிக்கு முதலில் வராத ஒன்பது எழுத்துக்களில் L, U, 6), AB ஆகிய எழுத்துக்களும், பிறமொழிச் செல்வாக்கின் காரணமாகவும், தம் பெயர் உரைக்கும் இடத்தும் மொழிக்கு முதலில் வந்துள்ளன. இவ்வாறு இடைக்காலத் தமிழில் முதல்நிலை எழுத்துக்களில் கால வேறுபாட்டின் காரணமாக சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறும் இறுதிநிலை எழுத்துக்கள். -
இறுதி நிலை என்பது சொல்லின் இறுதியில் இடம்பெறும் எழுத்துக்களைக் குறிக்கும். தொல்காப்பியர் உயிர் எழுத்துக்களில் ஒள தவிர்ந்த ஏனைய எழுத்துக்களும், மெய் எழுத்துக்களில் ந், ம், ன், ஞ், ண் ஆகிய மெல்லின மெய்களும் ய், ர், ல், வ், ழ், ள், ஆகிய இடையின மெய்களுமாக மொத்தம் பதினொரு மெய்கள் மொழிக்கு இறுதியில் வரும்
என்றார்.
GID

தற்கால வழக்கில் எ, ஒ ஆகிய எழுத்துக்கள் மொழி இறுதியில்
இடம் பெறுவது இல்லை. இவை அளபெடைகளாகவே வருகின்றன.
-
ஒள என்பது கெள, வெள எனவரும் இவை கெளவு, வெளவு என பிற்காலத்தில் வடிவ மாற்றம் அடைந்துள்ளன. ஏ, ஓ, ஆகியன இடைச் சொல்லாகவே பயன்படுகின்றன.
ஜ, ஹற், ஷ, ஸ் ஆகிய எழுத்துக்கள் இடைக்காலத்தில் இடப்பெயர்களாகவும், ஆள் பெயர்களாகவும் மொழிக்கு இறுதியில் வருகின்றன.
2 - b -
ஜோஜ் புஷ், சதீஷ், நிக்காஹற் ங், ஞ், வ் ஆகிய எழுத்துக்கள் மிக அரிதாகவே வருகின்றன.
@_十D '
உரிஞ், வெரிஞ், தெவ் ந் பெயர்களில் ரஜனிகாந், விஜயகாந் எனவும், ங் இடப்பெயர்களில்
ஹொங்கோங், பீக்கிங் எனவும் வரும்.
இவ்வாறு பிறமொழிச் செல்வாக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, வர்த்தகவிருத்தி ஆகியவற்றின் காரணமாக மொழி வழக்குகள் காலந்தோறும் மாற்றம் அடைதல் இயல்பு, அதற்கு ஏற்ப மொழி முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்களும் மாற்றமடைந்துள்ளன. -
○gCg○gCg○gCgCg○gCg○3C3 C3 C3 C3 C3Cogcogcogcogcogcogcogcog

Page 20
(11) நன்னூல் சுடறும் ஐந்தாம் வேற்றுமை பற்றிக்கடறி, தற்காலத் தமிழைப்
பொறுத்தவரை அது பொருந்துமா என ஆராய்சு,
இலக்கணகாரரிடையே வேற்றுமை பற்றிய கருத்து வேறுபாடு தொடர்ந்து காணப்படுகிறது. வேற்றுமை பற்றிக் கூறுமிடத்து இரண்டாவது, என எண் அடிப்படையில் கூறுவதா? ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி என உருபு அடிப்படையில் கூறுவதா? யாதன் உருபிற் கூறிற்று ஆயினும் பொருள் செல் மருங்கில் வேற்றுமை சாரும் என பொருள் அடிப்படையில் கூறுவதா? என்பது
பிரச்சினை. அத்துடன் ஒரு வேற்றுமைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உருபுகள்
வரலாமா? ஒரு உருபு இரண்டு வேற்றுமைக்கு வரலாமா? எனப்பல கருத்து
வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே ஐந்தாம் வேற்றுமை பற்றி நன்னூலார்
கூறும் கருத்தையும், தற்காலத் தமிழைப் பொறுத்தவரை அது பொருந்துமா?
என்பதையும் பற்றி சிந்திப்போம்.
நன்னூலார் ஐந்தாம் வேற்றுமையின் உருபுகளாக இல், இன் ஆகியவற்றைக் குறிப்பிடுவதுடன் அதன் பொருள்களாக நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகியவற்றைக் கூறுவர். உதாரணமாக மலையின் வீழ் அருவி - நீங்கல் பொருள் - இன் உருபு, பாலின் வெளிது கொக்கு ஒப்புப்பொருள் - இல்
உருபு, இலங்கையின் வடக்கு இந்தியா - எல்லை - இன் உருபு, கல்வியில்
பெரியன் கம்பன் - ஏது - இல் உருபு.
நீங்கல் பொருளாவது ஓர் இடத்திலிருந்து விலகுவதைக் குறிக்கும். ஒப்புப்பொருளாவது உவமேயப் பொருளிலும் தன்னிலும் இருக்கின்ற
பொதுத்தன்மையால் உவமானமாகும். பொருள், கொக்கு - உவமேயம், பால்
உவமானம், பொதுத்தன்மை - வெண்மை, எனவே இது ஒப்புப் பொருளில் வந்துள்ளது. எல்லைப் பொருளாவது அறியப்படாத பொருளினது திசையளவு,
வழியளவு காலவளவு பண்பு முதலியவற்றைக் குறிப்பிடுவது. அறியப்பட்ட
G6)

பொருளாக இலங்கை நிற்பதால் 666606)f பொருள் ஏதாவது ତପ୍ତ பொருளின்
பெருமை முதலியவற்றிற்கு ஏதுவாகும் பொருள் ஏது. கம்பனின் பெருமைக்கு
ஏது கல்வியாதலால் கல்வி ஏதுப்பொருள், இவற்றை விட நீங்கற் பொருளிலும்,
எல்லைப்பொருளிலும் இல், இன் உருபுகளின் GDs) நின்று, இருந்து ஆகியவை
-
சொல்லுருபுகளாக வரும்.
உதாரணமாக ஊரிலிருந்து போயினான் - ஊரினின்று போயினான் - நீங்கல் பொருள் வீட்டிலிருந்து ஆலயம் கூப்பிடுதூரம் - வீட்டினின்று ஆலயம் கூப்பிடுதூரம்
- எல்லைப் பொருள் தற்கால வழக்கில் இவ்வழக்கு மாற்றமுறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. மரத்திலிருந்து தேங்காய விழுந்தது. தூக்கத்திலிருந்து விழித்தேன் எனவும் அங்கிருந்து மேலிருந்து எனவும் அங்கு, இங்கு, மேல், கீழ் முதலிய பெயர்ச்சொற்களுடன் இருந்து என்ற சொல்லுருபு இணைந்தும் நீங்கல் பொருளைத் தருகின்றது. இல், இருந்து உருபுக்குப் பதிலாக இடமிருந்து என்ற உருபு இணைந்து பூனையிடமிருந்து எலி தப்பிச் சென்றது என நீங்கற் பொருளில் வந்துள்ளது. - -
ஒப்புப் பொருள் தற்காலத் தமிழில் ஐ உருபு ஏற்றபெயரை அடுத்து
விட, காட்டிலும், பார்க்கிலும் போன்ற இடைச்சொற்கள் இணைந்து
தம்பியை விட அண்ணன் உயரமானவன்
ராதாவைப் பார்க்கிலும் சீதா மென்மையானவள்.
சிறுகதையைக் காட்டிலும் நாவலையே மக்கள் விரும்புகின்றனர். என வரும்.
- எல்லைப் பொருளை உணர்த்த "இன்" உருபுக்கு பதிலாக "கு"
உருபும் திசைப்பெயர்களைக் குறிக்க இன் உருபு ஏற்ற பெயரை அடுத்து
முன், பின், மேல், கீழ், உள்ளே, வெளியே முதலிய சொற்கள் இணைந்தும், @

Page 21
பாடசாலையின் முன் கோயில் உண்டு. வீட்டின் பின் வாய்க்கால் இருக்கிறது என வருகின்றது. ஏதுப்பொருளை “இல்” உருபுக்குப் பதிலாக “6ړيږىo” 2D ([5L
பயன்படுகிறது. -
கல்வியால் உயர்ந்தான் கம்பன் என வரும். இவ்வாறு உருபுகள் மாற்றமடைவதுடன் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களாகிய நீங்கல் பொருளையும், ஒப்புப்பொருளையும், இரண்டாம் வேற்றுமையும், ஏதுப்பொருளை கற்பால் உயர்ந்தாள் கண்ணகி, என மூன்றாம் வேற்றுமையும், எல்லைப்பொருளை வீட்டிற்கு எல்லை வீதி என நான்காம் வேற்றுமையும், உணர்த்துவதால் ஐந்தாம்
வேற்றுமை என ஒன்று தேவையற்றது. ஒரு உருபு ஒரு வேற்றுமையை மட்டும் உணர்த்த வேண்டும். ஆனால் “இல்” உருபு ஐந்தாம் வேற்றுமைக்கும், 6Jp|TLD வேற்றுமைக்கும், பொதுவாக வருவது தவறு. “இல்’ உருபு ஐந்தாம் வேற்றுமையின் பொருளை உணர்த்தவில்லை. உருபை அடுதது வரும் சொற்களே வேற்றுமையின் பொருளை உணர்த்துகின்றன. ஊரிலிருந்து நீங்கினான்
- என்பதில் நீங்கினான் என்ற சொல்லே நீங்கற் பொருளை உணர்த்துகின்றது. எனவே வேற்றுமைகள் மீளாய்வு GFULLLJL- வேண்டியவை. ஐந்தாம் வேற்றுமை
என ஒன்று தேவையற்றது என்பதே தற்கால மொழியியலாளர் கருத்து ஆகும்.
Co3O3Co3O3C3C3 C3 C3 C3C3 C3 C6C3G3CD3Cp3C3 C3 C3 C3 C3 C3 C3,

(12) திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வின் வளர்ச்சியை எடுத்து கடறி தமிழில் இருந்த பிற திராவிட மொழிகள் எல்லாம் தோன்றி வளர்ந்தன என்பர். இக்கடற்றை
மதிப்பிடுக.
ஒரு மூலமொழி பல தனிப்பட்ட மொழிகளாகப் பிரிந்து காலத்தாலும்
இடத்தாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வெவ்வேறு மொழிகள் போல
தோன்றினாலும், பொதுப் பண்புகள் பல ஒன்றாகக் காணப்படுமாயின் அவை
ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனப்படும். சொற்களில், இலக்கண அமைப்பில், எண்ணும் பெயர்களில் மூவிடப்பெயர்களில் ஒற்றுமை ஆராயப்பட்டு
மொழிக்குடும்ப கோட்பாடு உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு மொழி பேசுகின்ற
குடும்பத்தில் உள்ளவர்கள் பிரதேச வேறுபாடு இயற்கைச் சூழ்நிலை
என்பவற்றால் பிரிந்து போன போது அவர்கள் பேசிய மொழி திரிந்தும், வளர்ந்தும் பிறமொழிகளுடன் கலந்தும் பேசப்படுதல் இயல்பு.
திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலம் "தொல் திராவிடமொழி' ஆகும். தொல்திராவிட மொழியிலிருந்து கிளைத்து வளர்ந்த மொழிகளை இலக்கிய வளமுள்ள மொழிகள், இலக்கிய வளமில்லாத மொழிகள் என இரண்டாக வகுப்பர். -
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகள் இலக்கிய
வளம் உள்ள மொழிகளாகும். இவற்றுடன் துளு, குடகு, துத, தோத, கோந்த்,
கூயி, ஒரான், ராஜ்மகால் ஆகிய எட்டு இலக்கிய வளமில்லாத மொழிகளையும் சேர்த்து அவை, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என "கால்டுவெல்” குறிப்பிடுவர். தென்னிந்திய மொழிகளை இலக்கண €)! Lọ LČ LJ60) L LS6ð நோக்குமிடத்து அவற்றுக்கிடையே ஒரு அடிப்படையான ஒற்றுமை உண்டு. அதாவது மொழிக்கு இன்றியமையாத "வேர்ச் சொற்கள் பலவற்றைக்
கொண்டுள்ளன.

Page 22
தென்னாட்டில் வழங்கும் மொழிகளை விட பாகிஸ்தான் முதலிய இடங்களில் வழங்கும் மொழிகளையும் திராவிட மொழி என்பர். கால்டுவெல்லுக்கு பின் வந்த அறிஞர்கள் பறோ, மெனோ, கமில்சுவெலபில், அகஸ்தியலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, வி.ஐ.சுப்பிரமணியம் போன்ற மொழியியல் அறிஞர்களால் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வானது பரந்து வளர்ந்து விரிந்துள்ளது.
திராவிடம் என்ற சொல் தமிழ் என்ற சொல்லின் திரிபு என்பர். பழங்காலத்தில் இந்திய நாடு முழுவதும் ஒரு மொழியே பேசப்பட்டு வந்தது. அம்மொழி "பழந்திராவிட மொழி” இந்திய உபகண்டமும், இலங்கையும் ஒரு காலத்தில் திராவிட நாடாக இருந்திருக்கலாம், எனவே திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய உறவுகள் உண்டு என அறிஞர்கள் கூறுவர்.
ஐரோப்பிய அறிஞர்கள் திராவிட மொழிக்குடும்பத்திற்கு ஆரம்பத்தில் வழங்கிய பெயர் தமிழ் மொழிக்குடும்பம் என்பர். கால்டுவெல் அவர்களே தமிழையும், தமிழ் மொழியையும் சிறப்பாகக் குறிப்பினும் தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் பலவற்றையும் சேர்த்துக் குறிக்க திராவிடமொழிக்குடும்பம் என்னும் பதத்தைக் குறிப்பிட்டுள்ளனார்.
தொல் திராவிட மொழியில் காணப்படும் அம்சங்கள் யாவும் தமிழிலும் காணப்படுவதால் தொல்திராவிட மொழிகளுள் தமிழே மிகத் தொன்மையான மொழி என்பது அறிஞர் முடிவு. அதாவது திராவிட மொழியின் தாய் மொழி, தமிழ் மொழி என்பர். ஒலி மாற்றங்கள், ஒலி ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில் திராவிடமொழியே தாய்மொழி என விளக்க தொல்காப்பியம் பாயிரச் செய்யுள் உதவுகின்றது.
“வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகு” என்பர்.
GaoD)

. . . . தமிழ்மொழி வழங்கிய பகுதிகளாக பெருநிலப்பரப்புக்கள் மட்டுமன்றி கடல் கடந்த நாடுகளிலும் தமிழ்மொழி பரந்திருந்தது. ஏனைய மொழிகள்
- வடமொழிச் செல்வாக்கால் தம்நிலை மாறுபட்டபோதும் தமிழ் தனித்தன்மை
குன்றாது வழங்கி வரும் சிறப்புடையது.
கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும்
உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்
ஆரியம் போல் வழக்கொழிந்து அழிந்தொழியா - உன்
சீர் இளமைத்திறம்வியந்து போற்றுதுமே”
என்ற மனோன்மணியச் செய்யுள் மூலம் தமிழிலிருந்தே LAND திராவிட மொழிகள் தோன்றியிருந்து வளர்ந்தன என்று உண்மை பெறப்படுகின்றது. ஏனைய மொழிகளை விட தமிழ்மொழி இலக்கண, இலக்கியச் சிறப்பு
வரிவடிவச்சிறப்பு, கிளை மொழிகளின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்
பல சிறப்புக்கள நிறைந்த ஒரு மொழி.
தென் திராவிட மொழிகளோடு தமிழ் மொழியை ஒப்பிடும் இடத்து மொழி ஒலியன்களில் காணப்படும் ஒற்றுமை, உடன்படுமெய், புணர்ச்சியில்
இடம்பெறுதல், யகர மெய்யை, முதனிலையாக கொண்ட சொற்கள்
காணப்படுதல்
சிலப்பு - diso DL - நாற்கு - நான்கு என வல்லழுத்துக்களின் ஆற்றல் குறைந்து
மெல்லெழுத்துக்கள் பொருந்தும் பண்பு ஞகர மெய்க்குப் பதிலாக ஞகரம் பயன்படுதல், ஞண்டு - நண்டு ஆகியவை தென் திராவிட மொழிகளில் உள்ள தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. எனவே தமிழிலிருந்தே
பிறத்ராவிட மொழிகள் எல்லாம் தோன்றி வளர்ந்தன என்பர்.
C3 C3 C3 C3 C3 C3 C3CD3Cp3C3 C3, C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3 C3, CD2C2,
(4)

Page 23
(13) முதல்எழுத்து சார்பெழுத்து என்பன பற்றி விளக்கி சார்பெழுத்துத் கோட்பாட்டைப் பொறுத்தவரை தமிழ் இலக்கண நூல்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைத்
தெளிவுபடுத்துக.
தமிழ்மொழியில் அடிப்படையான எழுத்துக்களாக விளங்கும் உயிர் எழுத்து பன்னிரண்டும் (12), மெய் எழுத்து பதினெட்டும் (18) ஆக "முதல் எழுத்து முப்பது (30)’ என்றும் முதல் எழுத்துக்களைச் சார்ந்துவரும் எழுத்துக்களை "சார்பெழுத்துக்கள்” என்றும் வகைப்படுத்துவர். முதல் எழுத்து சார்பெழுத்து என்ற பாகுபாட்டை முதல் முதலில் கூறியவர் நன்னூலாரே.
இவர் தமது சூத்திரத்திலே மொழிக்கு முதற்காரணமாம் அணுத்திரளின் - காரியமுமாகிய ஒலி எழுத்து என்றும் அது முதல் சார்பு என இரு வகைப்படும் என்பர். "தொல்காப்பியர்” எழுத்துக்களைப் பொதுவாக கூறினாரே அன்றி
அவற்றை முதல் எழுத்து, சார்பு எழுத்து என வகைப்படுத்தவில்லை.
தொல்காப்பியர் தமிழில் உள்ள எழுத்துக்களில் சில தமக்கு என தனியான பிறப்பிடத்தை உடையன. அவற்றையே முதல் எழுத்துக்கள் என்று வரையறை செய்துள்ளார். வேறு சில எழுத்துக்கள் தமக்கென தனியே பிறப்பிடமின்றி முதல் எழுத்துக்களைச் சார்ந்து பிறக்கின்றன. இவ்வாறு பிறக்கும் எழுத்துக்களையே "சார்பு எழுத்து” எனக் குறிப்பிடுவர். தொல்காப்பியர் எழுத்துக்களை "அகரம் முதல் னகரம்” வரையான முப்பது (30) எழுத்துக்களையே முதல் எழுத்து என்று குறிப்பிட்டார். ஆனால் அதே சூத்திரத்தில் சார்ந்த வரல், மரபு என குறிப்பு ஒன்றைத் தந்துள்ளார். எனவே சார்ந்து வருதலையே தமக்கு இலக்கணமாக உடைய எழுத்துக்களும் உண்டு என்பது தெளிவு. அதனை அவர் சார்பு எழுத்து என்று குறிப்பிடவில்லை. நன்னூலார் தான் "எழுத்து முதல் சார்பு என்று இருவகைத்தே' என வகைப்படுத்தினார். எனினும் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு
காணப்பட்டது.
G2)

முதல் எழுத்து, சார்பெழுத்து பற்றிய கருத்துக்களில் தெளிவின்மை காணப்பட்டது. சார்பெழுத்து என எது குறிக்கப்படுகின்றது என்பதிலே கருத்து முரண்பாடு காணப்பட்டது. சார்பெழுத்து என்பது தனித்து நிற்கமாட்டாதவையும் தமக்கு எனப் பிறப்பிடம் அற்றவையும் முதல் எழுத்துக்கள் பிறக்கும் இடத்தை சார்ந்து பிறப்பனவற்றையுமே குறிக்கும். ஆனால் நன்னூலார் இதனைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர் வடிவமாற்றம் அடைபவையும், மாத்திரையில் θυνlΩ ஒலிப்பனவற்றையும், குறைந்து ஒலிப்பனவற்றையும் சார்பு எழுத்துக்கள் என
வகைப்படுத்தினர்.
தொல்காப்பியர் அவை தாம் "குற்றியலுகரம், முற்றியலுகரம், ஆய்தம்” என்ற முப்பால் புள்ளியும் எழுத்தோடு ஒரே தன்மையானவை என்று குறிப்பிட்டார். எனவே சார்பெழுத்துக்கள் என்பது பிறக்கும் இடத்தால் மாத்திரம் சார்தல் தன்மை உடையன. வடிவினாலும், ஒலித்தன்மையினாலும் தனித்துவமுடையன. சார்பு எழுத்து என்பது பற்றிய கருத்துக் கள். மொழியியலாளர்களால் முன்வைக்கப்படுகின்றது. குற்றியலுகரத்தில் உகரம் குறுக்கப்படுகின்றது. குற்றியலுகரத்தில் உள்ள குறுக்கம் இயல்பாகவே குறுகியுள்ளதா, சேர்க்கையான சூழலில் இடம்பெற்றதா என்பதுவே பிரச்சினை. இந்த ଭୁବର୍ଣ୍ଣ
நுட்பங்களை நன்னூலார் கவனத்திற்கு எடுத்ததாக தெரியவில்லை. அதனாலேயே
சார்பெழுத்து கோட்பாடு என்ற ஒன்று தமிழ் இலக்கண நூல்களில் சிறப்பிடம் பெறுவதற்கு காரணமாயிற்று. குற்றியலுகர உகரங்கள் தனித்து தோன்றும் ஆற்றல் அற்றவை. அது போன்றே ஆய்தமும் சார்ந்து வரும், வல் எழுத்தை உரசு எழுத்து ஆக்கித் தோன்றுகின்றது. எனவே இம் மூன்றுமே சார்பு எழுத்துக்கள் என்பதே பொருந்தும் ஒரு மொழியில் ஒலியன்களே செல்வாக்குப்
பெறுகின்றன. ... "
நன்னூலார் முதல் எழுத்து, சார்பெழுத்து என வேறுபடுத்தும் பொழுது
அவர் மாத்திரை அளவிலும் வடிவிலும் வேறுபடுவனவற்றையே *TÜL எழுத்து
43) -

Page 24
என்றார். "நேமிநாதம், வீரசோழியம், இலக்கண விளக்கம், ஆகியவற்றிலும் முதல் எழுத்துக்களில் யாதாயினும் வடிவமாற்றம் ஏற்படின் அது சார்பெழுத்து என்று குறிப்பிடப்படுகின்றது.
சங்கர நமச்சிவாயர், மயிலைநாதர், முதலியோர் முதல் எழுத்தாந்தன்மை அவற்றிற்கு இன்மையால் அவற்றை சார்பு எழுத்து என்பர். எனவே தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக் கோட்பாடு பற்றிய கருத்துக்களில் தெளிவின்மை காணப்பட்டது. உயிர் GLDLů வடிவமாற்றம் ஏற்படுமாயின் அதனைப் புள்ளியில்லா மெய் எனலாமே அன்றி சார்பெழுத்து எனக் கருத முடியாது. சிற்சில சந்தர்ப்பங்களில் சில எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரையில் நின்றும் கூடியோ, குறைந்தோ ஒலிப்பது இயல்பு மாத்திரையில் துவடி ஒலிக்கும். எழுத்துக்களை உயிரளபெடை, ஒற்றளபெடை எனவும் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களை குற்றியலுகரம், குற்றியலிகரம் ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக்குறுக்கம் என்றும் குறிப்பிடுவர். இவற்றை சார்பெழுத்துக்கள் என்று கருதினால் ஒரு மரம் பெருத்தபோதோ சிறுத்தபோதோ வேறு ஒரு மரம் ஆகாது. அதாவது 'சந்தனக் கோல் குறுகினால் பிரப்பம் கோலாகாதவாறு போல குறுகி ஒலிக்கின்ற இகர, உகரங்கள் குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆகாது. இந்த ஒலி நுட்ப வேறுபாட்டை அறிய முடியாமை அல்லது கருத்தில் கொள்ளாமை சார்பெழுத்துக் கோட்பாடு என ஒன்று தோற்றம்
பெற வித்திட்டது எனலாம்.
Co3O3CsC3 C3CsC6C3 C3 C3 C3 C3 C3CsCacoscogcogcogcogcogcogcog


Page 25
G. H. Printin

g, Vavuniya. 024 - 2223 115