கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டாரவன்னியன் காவியம்

Page 1


Page 2

IIIlliII
ՄiIIն]ԴԱյլի
நின்னாஹ் ஷரித்தீன்

Page 3
இந்நூலானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கமானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீட்டில் உள்ள பட்டியல் தரவு
ஷரிபுத்தீன் ஏ.ஜே பண்டாரவன்னியன் காவியம் 1 ஏ.ஜே.ஷரிபுத்தீன் தெஹிவலை : ஆசிரியர்: 2005.-ப.400: சித்திரம் : ச.மீ.21
ISBN 955-97349-3-8 விலை 500.00
i. 894.8111 Lçlqaf i தலைப்பு 1.கவிதைகள்-தமிழ்
ISBN 955-97349-3-8
Name of the Book : "BANDARAVANNIAN KAVIYAM"
Author : Dr. A. Jinnah Sherifudeen
(C) : Mrs. Hamsiya Fareeda Sherifudeen
No. 16, School Avenue, Off Station Road,
Dehiwela, Sri Lanka. Tell: 011-2730378
Number of Copies : 1000
First Published in : 16.05.2005
Cover Design : "RAMANI"
Type Setting : Mrs. Fathima (Puttalam)
Mr. A.M. Barakathullah (Kalmunai)
Printed By : AJ Prints (Pvt) Ltd.
44, Station Road, Dehiwela.
Price : 500/-

சமர்ப்பணம்
பிறந்தமண்ணின் சுதந்திரத்திற் காகப்போரிற் பலியான போர்வீரர் தமக்கா மிந்நூல்
iii

Page 4
தாதையின் ஆசிப்பா
பாரம் பரியம் பழுதாகா தென்மக்கள் பேரர் முதலோர் தமிழ்க்கவிதை ~ சீராக ஆக்குந் திறம்பெற்றமைகின்றா ரத்திறமை பூக்க விறையே தணை.
செந்தமிழிற் சீர்கவிதை செப்பமுடன் செய்தநலம் சொந்தமெனப் பல்பரிசைத் தொட்டுவரும் ~ என்தனையண் வைத்தியக் கலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் சித்தம் மலர்க சிறந்து.
வெண்பா வகவல் விருத்தம் பலவகையும் பண்பாகப் பாடும் திறம்படைத்து ~ நன்றாக நாட்டிற் பெயரும் புகழும் சிறந்தமைக ஏட்டிற் குலப்பேர் வரைந்து.
மருதமுனை புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் 1989
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிய
வாழ்த்துச் செய்தி.
நெ. 8,4வது தெரு (assurgolyth
(Up. கருணாநிதி சென்னை - 600 086
போன்: 8115225
23-3-2002.
வாழ்த்துச் செய்தி
நான் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய “பாயும் புலி பண்டாரக வன்னியன்” என்ற வரலாற்றுப் புதினத்தை டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் கவிதையாக எழுதி, அதனை நூலாக வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்ப்தை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகப் பெரும் முயற்சியாகும். முழுவதும் படித்து முடிக்க உடனடியாக நேரம் இல்லாத நிலையில் ஒருசில
பக்கங்களைப் புரட்டிய அளவில் நான் எழுதிய கதையின் சிறப்பு கெடாமல்
எழுதியிருப்பது நன்றாகத் தெரிந்தது. நல்ல முயற்சியிலே ஈடுபட்ட கவிஞர் ஷரிபுத்தீன் அவர்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
ఉtx"
ணாநிதி).
பண்டாரவண்ணியன் காவியம் V

Page 5
கவிக்கோ டாக்டர் அப்துல் ரகுமான் அவர்கள் வழங்கிய
வாழ்த்துப்பா!
6œët la 65 à 66u* - a 65 l'a زمی ۱لابیوقفه C۱ قهٔ با حط حکم و یا (O 3&ல் ஆதh செல்த
}\రాత71_a la&రంగిu&లా
اوجی هم ریوی با «cssلا (۱کیه (یا الاها ગેપ ઉઠત્ર્ય a On જો _nતૈ
த்தொடுத்தல்$ شدها Rese 1 Ο iù Rà பாத் 6 ۹G و B 齒黨" ப்ே தடுேத்2) ثاعر ٢٦ص\ (6 9ی حاصلى الله عليه وسلم فٹ (1) - ونش>l\
நிறைத்த છોડો ઉS ضروط وشحه لمل ܕܡܘG% 3ܙܤܧ%
తిట్టనీ U83*
C e&
vi
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

மறைந்த தமிழ்ப் பேரறிஞர் பத்திரிகை ஆசிரியர் மாண்புமிகு எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் வழங்கிய
பொதுப் பாயிரம்
நான்பார்த்த கவிஞரிலே நல்லதொரு கவிஞன்
நான்தேர்ந்த நண்பரிலே நல்லதொரு பண்பன் தேன்வார்த்த சொற்களினால் தெவிட்டாத கருத்தைத்
தென்றலென வீசியுளஞ் சிலிர்த்திவிடுஞ் சித்தன் கூன்நிமிர்ந்த தண்மதியம் பொழிநிலாவைப் போல
குளிர்பாயும் கற்பனையால் உலகாளும் புலவோன் மாண்தோற்ற கண்ணுடையாள் என்தங்கை பரீதா
மனம்நிறைந்த மன்னனவன் நற்குடும்பத் தலைவன்.
ஒருநாளில் ஏழுபத்துக் கவியெழுத வல்லான்
ஒருநூறு எழுதுவதும் இவனுக்கு இலகாம் வருநாளில் ஜின்னாஹற்வின் புெயர்கவிதை வானில்
வரகவியென் றேயொளிரும் அட்டியதற் கில்லை அருட்கவியாய்ப் பரிணமித்த கவி கா.மு. ஷரீபும்
அன்பொழுக ஈங்கிவனை மணிக்கவிஞன் என்றார் ஒருக்காலும் மறையாதே உள்ளத்தே உறையும்
ஒண்கவிதை இவன்கவிதை திண்ணமிது என்பேன்
எஸ்.டி.சிவநாயகம் (பிரதம8ஆசிரியர் தினபத" சிந்தாமணி சூடாமணி ) 15.12.1993
uætv-/r/r-Jet ofu si &/r-Sultið vii

Page 6
சிறப்புப்பாயிரம்
தமிழ்க் கவிதை ஊற்று
கவிமாமணி அகளங்கன்
வற்றாத வளம்மிக்க வன்னி நாடு
வந்தாரை வரவேற்று வாழ்வளித்து உற்றாரை உறவினரை பெரியோர் தம்மை
உபசரித்து உணவளித்து உலகுபோற்றக் கற்றாரை மதித்தவர்தம் கருத்தைக் கேட்டுக்
கலைவளர்த்துத் தமிழ்வளர்த்துக் கவிதைபோலும் பொற்றாம ரைக்குளங்கள் பொலிந்து தோன்றப் புகழ்பூத்து நின்றதொரு பொற்காலத்தில்.
வந்தார்கள் அந்நியர்கள் வாழும் மார்க்க
வகையறியாக் கல்நெஞ்சர் கப்பங்கேட்டார் தந்தால்தான் உறவென்றார் இல்லை என்றால்
தரைமட்டம் ஆகுமுங்கள் வன்னிஎன்றார் இந்தாகொள் எனக்கொடுக்க எங்கள் மன்னன்
இழிபிறப்பா இல்லையென்றான் மானங்காத்தான் வந்தாரை வாழவைத்த வன்னி மண்ணின்
வளத்தையெல்லாம் கைப்பற்றச் சதிகள்செய்தார்.
இடங்கண்டு கால்நக்கும் இழிந்தோர் தம்மை இனமாகச் சேர்த்திட்ட வெள்ளைக்காரன் படங்கொண்டு கொத்தவந்த பாம்பாய் ஆனான்
பல்வேறு படைக்கருவி கொண்டுவந்தான் அடங்காத பற்றென்னும் மண்ணை ஆண்ட
அஞ்சாத நெஞ்சுடைய வன்னிமன்னன் திடங்கொண்டு போராடிப் பார்த்தான் இந்தத்
தேசத்தைக் காப்பதற்காய் உயிரைநீத்தான்.
வன்னியென்னும் நாடாண்ட மன்னர் தம்முள்
வயிரித்த தோளாளன் வற்றாமானம் உன்னியெழும் நெஞ்சுடையோன் வீரங் காத்தோன்
உறுதியெனுஞ் சொல்லினத வடிவங்கொண்டோன் தன்னிகரில் வீரனெனச் சரித்தி ரத்தில்
தலைநிமிர்ந்த பண்டார வன்னிதன்னை ஜின்னாஹற்வாம் கவிவேந்தன் கவிதை தன்னால் நிலைநிறுத்திக் காவியமாய் ஆக்கித்தந்தான்.
viii
ஜிண்ணாவூர் 2fபுத்தீன்

வன்னியெனும் மண்ணினது வளத்துக் கொப்பாய்
வளங்கொண்ட கவிஞனிவன் பலநூல்தந்தோன் அன்னையெனத் தமிழ்த்தாய்மேல் அன்பு கொண்டு
அரியபல கவிமலர்கள் அவள்தம்பாதப் பொன்னடிக்குச் சூட்டியவன் புகழே யாகிப்
பொலிந்ததொரு பெரும்புலவன் பூவும்தோற்கும் மென்மையென மனங்கொண்டோன் மெலிந்த தோற்றம்
மெலியாத தமிழ்க்கவிதை ஊற்றாய் உள்ளோன்.
முன்னாளில் எத்தனையோ கவிஞர் வாழ்ந்தார் முடிந்ததினிப் புலவர்கள் சரிதமென்றார் இன்னாளில் எவருண்டு கவிதை கொண்டு
இங்கெழிதாய்க் காவியங்கள் படைக்கவென்றார் ஜின்னாஹற்வின் சொல்வளத்தால் வன்னி மண்ணின்
ஜீவனைநான் காவியத்தில் கண்டுசொன்னேன் என்னாவி னால்இசைத்தால் இசையும் என்றால்
என்ஜின்னாஹற் இருக்கின்றான் என்றேசொன்னேன்.
பண்டார வன்னியனைக் காவி யத்தில்
பாடிவைத்த ஜின்னாஹற்வாம் பெரும்புலவன் கொண்டாடத் தக்கதொரு குணக்குன் றாவான்
குவலயத்தில் தமிழ்க்குன்றின் கவிவிளக்காம் வண்டாடும் கவிச்சோலை வற்றா தாறும்
வளமான ஜீவநதிப் பெருக்கேயாவான் கண்டார்கள் நலம்பெறுவர் வைத்தியனும் ஆவான்
களித்தோங்கி வாழியபல் லாண்டுகாலம்.
uaorusirgavastafuasi baraSuyub ix

Page 7
பிரபலனழுத்தாளர்,நாவலாசிரியர் திரு.செ.யோகநதன் அவர்கள் அளித்த வாழ்த்துரை
இன்னொரு காவியம் கவிஞர் ஜின்னாஹற் எழுதிய பண்டாரவன்னியன் காவியத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் நான் படித்து மகிழ்ந்திருக்கின்றேன். இந்த வாசிப்பு தமிழ் மொழியின் செழுமையையும் கவிதா மேன்மையையும் எனக்கு உணர்த்தி பிரமிப்படைய வைத்திருக்கின்றது. கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி, இன்னும் சங்கச்சான்றோர் என்ற அற்புதங்கள் பழந்தமிழிலிருந்து இன்றுவரை நமக்குத் தந்துவிட்டுச் சென்றுள்ள செல்வங்களே இன்னும் பலதலைமுறையினரை அறிவின் செல்வங்களாக வைத்திருக்குமென்ற எண்ணமும் தோன்றுகின்றது. தமிழின் இந்த வளமே அதை மிக எளிதாக இணையமொழியாக கூர்மை பெறவும் செய்திருக்கின்றது.
உலகிலே இலக்கணச் சிறப்பால் பெருமை பெற்ற மொழிகளில் முன்வரிசையில் உள்ளது தமிழ். இதை வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. இவையே காலத்துக்குக் காலம் புதிய வடிவாயும் பாய்ச்சலாகவும் மாறி நமக்கு இலக்கியங்களை அள்ளித் தந்திருக்கின்றன. தமிழுக்குள்ள கவிமரபு, ஒரு ஆறென உருவகம் கொள்ளத்தக்கது. ஆறு எத்தகைய வீச்சுடையது என்பதை அதன் கனப்பரப்பு உணர்த்தி நிற்கும். உச்சியில் குதித்துப் புரண்டும், சமதளத்தில் அமைதியாய் பிரவகித்தும், மறுதவிப்புக்கு ஊடறுத்தும் ஒடும் ஆறெனவே கவிமரபும் ஆகும். நமது தமிழ்க் கவி மரபும் அத்தகையதே.
கம்பனைப் போன்ற மகாகவி, பத்து நூற்றாண்டு கழிந்தும் இன்றும் வாழுகின்றான். ஷேக்ஸ்பியர் இன்றளவும் ஆங்கில இலக்கியத்தின் தூணிலும் துரும்பிலும் இருக்கின்றான். இதன் காரணந்தான் என்ன? இவர்களின் கவிமரபு முன்னைய வளங்களை சுவீகரித்து. பின்காலத்துக்கு வளங்களை வழங்கி உள்ளது. இந்த வளத்தினைப் பயின்றோர் இதை அடுத்த தளத்திற்கு விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் தகைமை உள்ளவர்கள் ஆகிறார்கள்.
தமிழில் அற்புதமான கவிதை எழுத விரும்பும் ஆக்கத்திறனும், கவியுணர்வும் கொண்ட யாராயினும் தமிழ்க் கவிதைப் பொக்கிஷத்தைப் பயின்றாலே போதுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்படிப் பயின்றவன் தமிழ்க் கவிமரபின் சங்கிலித் தொடராக ஆகமுடியும். இதை அறியாமலே சொல்லை அடுக்கி கவியென்று சொல்வோரை காலம் சிறு துாசியென உதறி எறிந்துவிடும். இன்று நடந்து கொண்டிருப்பது அதுதான்.
பாரதிக்குப் பின் தமிழ்க் கவிமரபை விசாலித்த ந. பிச்சமூர்த்தி, தனது இலக்கியப் பிரவேசத்தை ஆங்கில மொழியிலேயே தொடங்கினார். தற்செயலாக பாரதி கவிதை ஒன்றினை ஒருவர் பாடக் கேட்டு அதில் மனம் நெகிழ்ந்து கசிந்துருகி அதைப் படித்தபின் ஆங்கிலத்தில் எழுதவதைத் துறந்து தமிழ்க் கவிதைக்குள் ஆழ்ந்தார். இதை இந்த இடத்தில் அவசியமாகப் பதிவு செய்ய வேண்டும்.
X ஜிண்ணாஜர் 2றியுத்தீன்

இவ்வளவு எண்ணங்களும் இங்கே ஒரு பீடிகையாகத் தோன்றுவதற்கு ஜின்னாஹற்வின் காவியமே காரணமாயிற்று. சொல்லடுக்குக் கவிதைகளிடையே மிடுக்குடன் விளங்கும் இந்தக் காவியம் தமிழ்க் கவிமரபின் செழுமை வாய்ந்த தொடர்ச்சி. மகாகவி பாரதி தமிழ்க் கவிமரபின் தேர்ச்சியினால் சிந்துக்கு தந்தையாகி இன்னொரு வீச்சைக் கொடுத்தான் வெண்பாவில் வியப்பை உண்டாக்கிய கவிப் பெருமகன் புலவர்மணி ஷரிபுத்தீன் என்ற மரபின் இணையற்ற பாய்ச்சலாக ஜின்னாஹ என்ற கவிஞன் இந்தக் காவியத்தை ஆக்கியுள்ளான்.
இன்றைய தமிழ்ப் பேசும் மக்களின் அவல வாழ்வினது நெருக்குதலே பண்டாரவன்னியன் கதையை கவிஞர் ஜின்னாஹற் பாடு பொருளாகக் கொள்ளக் காரணமாயிற்று என்பதை நூன் முகத்திலே அவர் தீர்மானமாகத் தெள்ளுதமிழில் சொல்கிறார்.
நூன்முகம் பிறந்தமண்ணில் சமவுரிமை பெற்று வாழும்
பேறற்றே அன்னியர்தம் மண்ணில் இன்று பிறப்புரிமை அற்றவராய் அகதிப் பேராய்ப்
பரிதவிக்கும் இலங்கைமண்ணின் மக்கள் முற்றுந் துறந்தவராய் ஆங்காங்கே இடத்துக் கேற்பத்
தமைமாற்றி வாழுகின்ற நிலைமை தன்னை அறிந்ததனால் மனம்நொந்து முன்னோர் வாழ்வை அகத்திருத்திப் பார்க்கின்றேன் பாடுகின்றேன்
இன்றைய தமிழ் மண்ணின் அவலநிலையை நீக்க விடுதலை உணர்வு கொண்ட குறுநில மன்னன் பண்டாரவன்ன்யனின் ஆளுமை தேவையென்பதை இக்காவியம் அழுத்தத் திருத்தமாக ஒப்புவிக்கிறது. காவியத்தின் அடிநாதமான இக்குரலின் சரட்டினை காவியத்தின் அர்த்தமும் அழுத்தமும் பொதிந்த சொற்கள் கவித்துவம் பொங்கச் சொல்லுகின்றன.
மரபுக் கவிதையை முதல் வாசிப்பிலே பூரணமாக உணர முடியாதென்பது மெய்யே. இலக்கியம் யோசிக்க விரும்பாத சோம்பேறிகளுக்குரியதல்ல. இந்தச் சோம்பேறிகளே தமிழ்க் கவிமரபு பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கிறார்களென்பது பெரிய சோகம். இவர்களை விட்டுவிட்டு இலக்கிய ஞானமுடையோர் இந்தக் காவியத்தில் புதுமையும் பேரழகும் கவிமேன்மையும் அமைந்திருப்பதைக் காண்பார்கள். இக்காவியத்தின் சிறப்பை அடைப்புக் குறிப்புக்கள் ஆங்கிலம் பெய்யாத பாரதி தமிழில் திறனாய்வாளர்கள் தெளிவாகத் திறனாய்வு செய்ய வெண்டுமென்பது என்போன்ற பலரின் விருப்பமும் ஆகும்.
கம்பனோடும், இளங்கோவோடும், பாரதியோடும், ஷேக்ஸ்பியரோடும், மாணிக்க வாசகரோடும், சங்கச்சான்றோரோடும் நட்புப் பாலித்தவன் என்பதாலே என் காலத்து நண்பன் ஜின்னாஹற்வின் காவியத்தை தமிழ்க் கவிமரபுக்கு கிடைத்த கொடை என்ற முடிவுக்கு நான் வருகிறேன். ஜின்னாஹற் காவியங்களைப் பயின்று தேர்ந்தவர். ரசித்து, வியந்து, பிரமித்தவர். ஏற்கனவே நான்கு காவியங்களை யாத்தவர்.
uaoru sargaulasikafuair apósrab3uyub xi

Page 8
கவித்துவ சூழலில் வாழ்ந்தவர், வாழ்பவர், கவிஞருக்கு இந்தக் காவியம் ஒரு உச்சம் என்று சொன்னால் தவறில்லை.
தமிழில் காவியங்கள் இன்று மிக அருந்தலாகவே வருகின்றன. அதற்கான காரணங்களை இங்கு ஆராயத் தேவையில்லை. ஆனாலும் காவியங்கள் இன்றும் தமிழில் பேசப்படுகின்றன.
நவகவிதையின் பிதாமகன் பாரதி, காலத்தின் தேவை கருதி பாஞ்சாலி சபதம் எழுதினான். இது போலவே பாரதிதாசன் உள்ளிட்ட இன்றைய பல கவிஞர்கள் காவியம் படைத்தனர்.
காவிய உட்கட்டமைப்பு, கவியாற்றல், வார்த்தைவளம், உணர்வைத் தொடும் தேர்ந்தெடுத்த செய்யுள் ஒசையமைப்பு, லாவகம் என்பனவற்றை வெகு நுணுக்கமாக இக்காவியத்தில் புனைந்திருக்கிறார் கவிஞர். இன்றைய இளந்தலைமுறைக் கவிஞர்கள் ஜின்னாஹற்வின் இந்தக் காவியத்தைப் பயின்று நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இன்னுஞ் சொன்னால் ஒரு பாடப்புத்தகமாகவும் கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் ஒருநாள் கலைஞர் கருணாநிதி என்னைச் சந்திக்க விரும்புவதாக முரசொலிமாறன் மூலம் செய்தி வந்தது. சென்றேன்.
கலைஞர் கருணாநிதி அப்போது தமழகத்தின் கவுண்டர் சாதியினரைப் பற்றி பொன்னர் சங்கள் நாவலை எழுதி முடித்திருந்தார். அப்போது வன்னியர் இயக்கம் மும்முரம் பெற்றிருந்தது. வன்னியர் சங்கத் தலைவர் அ. ராமதாஸ், இலங்கையில் வாழும் தமிழரில் முப்பது வீதமானோர் வன்னியர்கள் என்று கூறியதாகக் குறிப்பிட்டு, அவர், "செ.யோ, இலங்கையில் வன்னிய குலத்தில் விடுதலைகசூப் போராடிய வீரர் யாராவது இருந்தனரா" என்று கேட்டார். என் மனதில் உடனே பண்டாரவன்னியனின் நினைவு தோன்றியது. சுருக்கமாக அவனது வீரவரலாற்றைக் கூறினேன்.
நான் 1966ல் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லுாரியில் ஆசிரியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பண்டாரவன்னியன் கதை வன்னிப் பிரதேசமெங்கும் நாட்டுக் கூத்தாக நடிக்கப்பட்டு வந்தது. மனதை நெகிழவும் கிளரவும் வைக்கும் நாட்டுக் கூத்து இது. என்னை அப்போது மிகவும் பாதித்த வரலாறு இது. இதை முல்லை மணி வே. சுப்பிரமணியம் நாடகமாக்கினார். இது நூலாகி, பலபதிப்புகளைக் கண்டிருந்தது.
இந்த அறிவோடு நான் கூறியது கருணா நிதிக்கு மிகவும் பிடித்துவிட்டது. "மேலும் இவ்வீரனைப் பற்றிய விவரங்களை நான் தேடவிரும்புகிறேன்" என்றேன். அவரும் சம்மதித்தார். மிகப் பழமை வாய்ந்த கன்னிமாரா நூலகத்தில் ஆய்வாளருக்கென உள்ள பகுதிக்குச் சென்று அதற்கான நூல்கள் தேடிப்படிக்க எனக்கு அவர் விசேட அனுமதி பெற்றுத் தந்தார். மிக ஆர்வத்தோடு அங்கு சென்றேன்.
அந்த நூலகத்தின் இலங்கைக்கான தனிப்பிரிவு என்னைப் பிரமிக்க வைத்தது. இலங்கை பற்றிய மிக அருமையான நூல்கள், இங்கு இலங்கையில் கூட இருக்கவில்லை
xii ஜிண்ணாஜர் 2fபுத்தினர்

இலங்கை வரலாற்றில் பண்டாரவன்னியன் காலம் பற்றி அரசியல், புவியியல், விழாக்கள், உணவு, சடங்குகள், ஆடை, யுத்தமுறை, நாட்டுப்பாடல், சமகால தமிழ்நாடு என்பன பற்றி 500 பக்கம் வரை தகவல்களைச் சேகரித்து அவரிடம் கொடுத்தேன். வரை படங்களையும் கையளித்தேன். 3)6) (560).u வேண்டுகோளின்படி தொடர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று இந்த விஷயங்களைப் பற்றிப் பேசினேன். விவாதித்தோம்.
ஒரு எழுத்தாளன், கலைஞர் கருணாநிதியிடம் கற்றுக் கொள்ளப் பல விஷயங்கள் உள்ளன. ஒரு நாவலை எழுத முன் அவர் தடித்த அட்டையில் ஏ4 அளவில் ஒரு பெட்டியைச் செய்து கொள்வார். அந்த நாவல் பற்றித் தோன்றுகிற கருத்துக்கள், தகவல்களை எழுதி அந்தப் பெட்டிக்குள்ளே போடுவார். பின்னர் எங்காவது சுற்றுப் பயணம் போகும்போது அந்தப் பெட்டியையும் கூட எடுத்துச் சென்று, அதிலுள்ள தகவல்களைப் படிப்பார். பதினாறு வயதில் எழுதத் தொடங்கிய இவர், இன்றுவரை எழுதாத நாளே இல்லை. இங்கே தரமோ, அரசியல் நிலைப்பாடோ கருத்திற் கொள்ளப்படவில்லை. அவரின் கடுமையான எழுத்து உழைப்பினை பண்டாரவன்னியன் நாவலை எழுதத் தொடங்கிய வேளையில் நேராகவே நான் கண்டறிந்தேன்.
நாவல் எழுதத் தொடங்கிய வேளையில் எனக்கு அவர் சொன்ன செய்தி ஒன்று அதிர்ச்சியினைத் தந்தது. பண்டாரவன்னியனை அவள் பண்டாரக வன்னியனாக்கி தமிழ் மக்களின் அமோக செல்வாக்கினைப் பெற்றிருந்த விடுதலைப் புலிகளின் பெயரையும் சேர்த்து, "பாயும் புலி பண்டாரகவன்னியன்” என தலைப்பு வைத்திருந்தார்.
வரலாற்றுத் திரிபை நான் ஒத்துக் கொள்ளவில்லை. அதுபற்றி அவர் அக்கறைப்படவில்லை. தமிழ் நாட்டில் பண்டாரம் என்ற ஒரு பிரிவினர் இருப்பதால் பண்டார என்பதை பண்டாரக என மாற்றியக்ாக நியாயப்படுத்தினார்.
எனினும் இந்த நாவல் பலரையும் எங்கோ பாதித்திருந்தது. ஒவியம் வரைந்த கோபுலுவும் இதற்கு ஒரு காரணம்.
முல்லை மணியின் நாடகநூல், பண்டார வன்னியன் பற்றிய கட்டுரைகள், பண்டாரவன்னியன் நாவல் பதிப்பு என்பனவற்றோடு இன்றைய ஒடுக்கு முறையின் மனக்குமுறல்கள் என்பனவற்றின் உந்துதல் கவிஞர் ஜின்னாஹற்வை இந்தக் காவியத்தைப் பாட வைத்திருக்கின்றன. எனினும் ஜின்னாஹற் தனது காவியத்தில் தனது தனித்துவத்தை நிறுவி உள்ளார்.
பண்டார வன்னியன் வாழ்ந்த காலத்து புவியியல், சூழலியல், அணிகலன், பண்பாட்டுக் கோலங்கள் என்பனவற்றை கவிஞர் தீட்சண்யமாக சத்திரங்களாகப் பதிவு செய்திருக்கிறார். வன்னிப் பகுதியின் மரங்கள், பழங்கள், செடிகள், மிருகங்களெல்லாம் எம்மோடு பேசுகின்றன. சருகுகள் படர்ந்த வன்னியின் மண் மூக்கோடு மணக்கிறது. தேக்கமர இலைகளும் முசுறுகளும் தோளோடு வந்து உட்காருகின்றன.
செ.யோகநதன்
u&óru-/rg-Ust ofu si &sr-Susúb xiii

Page 9
இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளர்
கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் வழங்கிய முன்னுரை உலகில் மூத்த மொழிகளில் நம்தமிழ் மொழியும் ஒன்று. தமிழ்மொழியின் தொன்மையைத் தீர்மானிக்க முடியாது, வரலாற்று ஆசிரியர்கள் இன்றுவரை திகைத்து நிற்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மையதாய்க் கருதப்படும், தொல்காப்பிய இலக்கணத்தின் ஆழம்ஒன்றே, தமிழ்மொழி அதற்குமுன் பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்ததற்காம் சாட்சியாம். காலத்தொன்மையால், கலாசார நுண்மைகொண்டது நம்மொழி. "பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில” எனும் விரிந்தகொள்கையால், உலகெங்கனும் உள்ள நல்லவற்றை உள்வாங்கி, இளமை மாறாது ஏற்றங்கொண்டு இன்றும் நிலைக்கிறாள் நம் தமிழ்த்தாய். இயல், இசை, நாடகம் எனமுக்கூறாய்ப்பிரிந்து, இறைவனைத்தொடுமளவு நம் இனியதமிழ் வளர்ந்திருக்கிறது. அம்முத்தமிழ்களுக்கும் இயற்றமிழே அடிப்படையாம். எழுத்து, சொல், பொருள் எனவிரிந்த இயற்றமிழ், ஒருகாலத்தில் மனிதரால் வளர்க்கப்பட்டு, பின் மனிதஇனத்தை வளர்த்து நிற்கிறது. பல தலைமுறைச் சிந்தனைகளை உள்வாங்கி, மொழிக்கருவி இன்று அறிவுக்களஞ்சியமாய்ப் பொலிகிறது. வாழ்வனுபவங்களை ஆராய்ந்து, உயர்வுநோக்கி நகரும் தர்க்க அறிவும், தம் அனுபவங்களை அடுத்த தலைமுறைகளுக்குக் கொடுத்துச்செல்லும் மொழிவளமும், மனித இனத்துக்குமட்டுமே கிடைத்த பெருவாய்ப்புக்கள். இவ்வாய்ப்புக்களைப் பெற்றதால், பிரிவுபட்ட குழுக்களாய் வாழ்ந்த மனிதஇனத்தார், தத்தம் இன வரலாற்றுத் தொன்மைக்கேற் அறிவு விருத்தியுற்றனர். விருத்தியுற்ற அவர்தம் அறிவு, மொழியில் பதிவாக, குறித்த இனமும், அவ்வினம் சார்ந்த மொழியும், அம்மொழியிற் பிறந்த இலக்கியங்களும், உலகில் போற்றுதலோடுகூடிய முக்கியத்துவம் பெற்றன. அங்ங்ணம், உலகம் போற்றும் தகுதியை, நம்தமிழ்மொழியும், தமிழினமும் பெற்றிருப்பது நம்முன்னைத் தவப்பயன். நிதர்சனமான இப்பெருமையை, நம்மவரே உணராமல் இருப்பது நம் பின்னை அவப்பயன்.
Xiv ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

காலம் கடந்த நம்தமிழ்த்தாய், ஈழத்திலும் என்றோ உறைந்தனள் சங்ககாலம் தொட்டு, புலமைமரபில் ஈழத்தாரின் பேர்ப்பதிவுகளும் உள. தமிழ்த்தாயை அணிசெய்த புலவர்பலர் சங்ககாலம் தொட்டு இன்றுவரை, நம் ஈழமண்ணில் வாழ்ந்து வருகின்றனர். தமிழை உயிரினும் மேலாய்க்காதலித்து, கொண்டும், கொடுத்தும், அவளோடு உறவுகொண்டாடி, வாழ்ந்த, வாழும் அவ் ஈழப்புலவர்வரிசை மிகநீண்டது. அவ்வரிய புலவர் வரிசையில், ஈழத்தாயின் மடியில் இன்று உரிமையோடு உட்கார்ந்திருக்கும் ஒரு புலவராய்த் திகழ்பவர், என் அன்பிற்கும், நட்பிற்குமுரிய இந்நூலாசிரியர் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள்.
ஈழத்தின் வடக்கும், கிழக்கும் தமிழர் தம்தாயகமாம். வேறுவேறு திசையாய் மண்பிரிந்திருப்பினும், தமிழ்ப்பற்றில் மனம்பிரியாத மக்களைக் கொண்டது ஈழம். வடக்கைப்போலவே கிழக்கும் புலமைச்சிறப்புமிக்க ஒரு பாரம்பரியத்தைக் கொண்டது. அப்பாரம்பரிய விருட்சத்தின் உறுதிபட்ட விழுதுகளில் ஒன்றாக இனங்காணப்பட்டவர், பெரும்புலவர் ஷரிபுத்தீன் அவர்கள். தமிழ்த்தாயை நேசித்து, அவள்தந்த இலக்கியச்செல்வங்களை ஆழமாய்க்கற்றும் கற்பித்தும், புலவர் ஷரிபுத்தீன் ஆற்றிய பணி, கிழக்கின் தமிழ் வரலாற்றில் பதிவானது. உலகை நேசித்து, உயர்தமிழை உவப்போடு அள்ளிக்கொடுத்த அவ்வள்ளலுக்கு, பிள்ளையாய்ப் பிறந்தபெருமை கவிஞர் ஜின்னாஹற் அவர்களின் தனிப்பெருமை. தக்கார் எனத் தந்தையின் பெருமையை நிரூபிக்கும், எச்சமாய்த்திகழும் ஏற்றமுடையவர் ஜின்னாஹற். பல கவிதைக்காவியங்களைத் தமிழ் உலகிற்கு அர்ப்பணித்த அப்பெருமையாளர், "பண்டாரவன்னியன்” எனும் கவிதைக்காவியத்தை, தமிழுலகிற்கு மீண்டும் தந்து மகிழ்கிறார். அரிய பெரிய பணி. அறிவுடமையும், ஆற்றலும் ஒன்றுசேர, கடலளவான அப்பணி கையளவாக ஜின்னாஹற் அவர்களுக்கு ஆகியிருக்கிறது. தன் இலக்கியபயணத்தில் மீண்டும் ஒரு மைற்கல்லை, இந்நூல் மூலம் ஜின்னாஹ் அவர்கள் தாண்டுகிறார்.
器恐器
uæirv-/r/Jø2 at ofu st &/r-Öustið XV

Page 10
எல்லார்க்குமாக இறைவன் படைத்த இம்மண்ணைப் பகுதிகளாக்கி, தத்தம் வலிமைகொண்டு, இது எம்மண் என சிலர் உரிமைகொண்டாடுதலும், அம்மண்ணில் தம் அடையாளங்களைப் பதிக்கமுயல்தலும், அவரைவிட வலிமைமிக்கவர், அம்மண்ணைக் கைப்பற்றி அதனைத் தமதாக்கலும், வரலாற்றுப்பதிவேட்டில் மாறிமாறி நிகழும் நிகழ்வுகள். இவ்வாட்சி மாற்றங்களால் நிகழ்ந்த தீமைகள் பல. எந்தத் தீமையின் மறுபக்கத்திலும் நன்மை இருப்பது இயல்பே. அந்நன்மையில் ஒன்றாய் ஒருபிரதேச மக்களிடம் பதிவாகி, நீண்ட தொன்மையுடன் நிலைக்கும் மொழி, பிற, இன, மத படையெடுப்புக்களால், அவ்வினத்தாரதும், மதத்தாரதும் கொள்கைகளை, உள்வாங்கும் வாய்ப்புப் பெற்றது. அவ்வாய்ப்பைத் தமிழ்த்தாயும் பெற்றனள். மண்மேல் படையெடுத்துவந்தோர், மனிதர்மேல்கொண்ட உறவினால், தமிழைக்கற்று, அதன்மேல் காதலும், மயக்கமும் கொண்டனர். அங்ங்னமாய்க் காதல்கொண்டாரில் புலமை மிகுந்தவர், தமிழ் இலக்கியங்களுள் புகுந்து, அவற்றுள் ஆட்சியும், மரபு அறியும் வன்மையும் பெற்றனர். தமிழில் துறைபோன அப்பெரியோர், தாம் சார்ந்த இன, மத கருத்துக்களைத் தமிழ்மொழியில் பதிவாக்கவிரும்பி, மரபுமாறாமல் தம் கருத்தைத் தமிழிற் காவியங்கங்களாக்கி, தமிழ்த்தாய்க்கு வளம் சேர்த்தனர். அப்புலவர்தம் செயலால், "வடவேங்கடம், தென்குமரி, ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு” எனும், தமிழின் பிரயோக நில எல்லை, உலகளவாய் விரிவுற்றது. இவ்வரிய பணியை ஆற்றிய புலவர்வரிசையிலும், இஸ்லாமிய மதத்தவரான ஜின்னாஹ் தன்னை இணைத்துப் பெருமைகொள்கிறார்.
瓷器盛
இதுவரை கவிஞர் ஜின்னாஹற் அவர்கள் இயற்றிய நூல்களின் தொகை ஒன்பது. அவர் ஆக்கங்களின் வரிசையில் பத்தாவதாக, “பண்டாரவன்னியன்” எனும் இந்நூல் இணைகிறது. பத்தாவதாய் அமையினும் வேறொருவகையில் இந்நூலுக்கு முதன்மையுண்டு. இஸ்லாமியமதத்தார் தம்மதத்தின்மேல் வலிமையான பிடிப்புடையார். அதனால், அம்மதம்சார்ந்த தமிழ்ப்புலவர்பலர், தம்மதம்சார்ந்த கருத்துக்களையே காவியமாக்கினர்.
Xvi ஜிண்ணாஜர் 22றிபுத்தீன்

விதிவிலக்காய், மதத்தைக்கடந்து, இனத்துள் மாத்திரம் நிலைகொண்டு, இஸ்லாமியக் கவிஞரான ஜின்னாஹற் அவர்கள், இக்காவியம் படைத்திருப்பது ஒரு புதுமை.
பண்டாரவன்னியன் வடக்கின் ஒருபகுதியை ஆண்ட சிற்றரசன். தமிழ்மண்ணின் உரிமைக்காய் ஆங்கிலேயரோடு போரிட்டு மாண்டவன். அவன் வீரவரலாற்றை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நெடுங்கதையாய் வரைய, அந்நெடுங்கதையைக் கவிதைக்காவியமாக்கியிருக்கிறார் ஜின்னாஹற். மற்றொருவர் கருத்தை தனதாக்கி நூற்செய்யும் முறைமை, தமிழ்மொழி மரபில் அங்கீகரிக்கப்பட்டது. முதல், வழி, சார்பு என, நூல் ஆக்கத்தை வரையறை செய்து, தொல்காப்பியமே இச்செயலை அனுமதிக்கிறது. உயர்ந்தோர் தம் கருத்து வடிவமாற்றங்களால், புதியதலைமுறைகளிடம் சேர்ப்பிக்கப்படவேண்டும் என, நம் ஆன்றோர் கருதியிருப்பார்போலும், அம்மரபுணர்ந்து வழிநூல் செய்திருக்கிறார் கவிஞர் ஜின்னாஹற். அம்முயற்சியிலும் ஒரு புதுமை. கவிதைநூல்களை வசனநூலாக்குவதுதான் இக்கால மரபு. வசனநூல்கள் விரிந்து, கவிதைநூல்கள் அருகிவரும் இக்காலத்தின் நிலையுணர்ந்து, கவிதை மரபைக் காக்கும் நோக்கோடு, வசனநூலை கவிதைநூலாக்கி இருப்பது, ஜின்னாஹற் செய்திருக்கும் மற்றொரு புதுமை. மரபுத்தமிழ்நெஞ்சங்கள் மகிழ்வோடு அவரைப்பாராட்டும்.
铬器器 வெளியே சொல்லப்படக்கூடாத ஒர் இரகசியத்தை, ஜின்னாஹற்வின் பெருமையுணர்த்த இம்முன்னுரையில் சொல்லவேண்டியிருக்கிறது. வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகமாயினும், வடக்கர்க்கும், கிழக்கர்க்கும் இடையே, தம்முள் யார் உயர்ந்தார்? என, நூலிழையாய் உள்ளுரப் பதிந்த ஒரு போட்டி உண்டு. இது அனைவரும் அறிந்த, பேசப்படாத இரகசியம். இவ்வுணர்வினால், இவ்விருதிசை சார்ந்த புலமையாளர்தம் நூற்கருத்தும், பெரும்பாலும் தம் இடஎல்லையைத் தாண்டியதில்லை.
υι αστυ (τσαν σί στα στ σ5/ταδαιί, Xvii

Page 11
இப் புன்மை மரபைமாற்றி, வடக்கைச்சேர்ந்த ஒரு புரட்சியாளனின் சரித்திரக்கதை, கிழக்கைச்சேர்ந்த ஜின்னாஹற் அவர்கள் காவியமாக்கி இருப்பது, போற்றத்தகுந்த மற்றொரு புரட்சி.
器器窑 எண்பதுகளின்பின் கூர்மையுற்ற ஈழத்தமிழர் போராட்த்தில், சறுக்கலாய் நிகழ்ந்த ஒருசம்பவம் சரித்திரமாகி, இஸ்லாமியத்தமிழர்களின் நெஞ்சங்களில் வடுவுண்டாக்கியது வரலாற்றுச்சோகம். இந்நிகழ்வால், இஸ்லாமியப் பொதுமக்கள் மட்டுமன்றி புலவர்தாமும், அட்டையாய்ச் சுருண்டு, அகத்தால், ஈழப்போராட்டத்தினின்றும் அந்நியப்பட்டனர். மன்னிக்கும் மனப்பாங்கும், இஸ்லாமியர், தமிழர் ஒன்றுமையை உண்டாக்கும் உரிமையும் கொண்டு, வடக்குவாழ் போராட்டவீரன் ஒருவனின் கதையைக் காவியமாக்கியதோடல்லாமல், இக்காவியத்தை, ஈழத்தாயகப்போராட்டத்தில், உயிர்த்துறந்த போராளிகளுக்கு அர்ப்பணித்தும், வெடிப்புற்ற இஸ்லாமிய, தமிழ் இன உறவுப்பாலத்தை, ஜின்னாஹற் அவர்கள் புதுப்பித்திருப்பது, புதுமையிலும் புதுமை, 懿铬懿
இங்ங்னம் பலபுதுமைகளை இவ் ஒருநூலிற் படைத்திருக்கும், கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள், முதுசொத்தாய் வந்த தமிழ்த்திறத்தால், இக்காவியத்தை அழகுற நடாத்திச் செல்கிறார். புலிக்காட்டில் பூனை புகுந்ததாய், அவர் பாடியிருக்கும் அவையடக்கம் இரசிக்க வைக்கிறது. தமிழர்தம் தாயகம் ஒன்றாகி உருப்பட, இந்நூல் மங்களம் கூறுவதாய் எண்ணி மகிழ்கிறேன். ஈழத்தமிழர் வாழ்வு மீண்டும் ஏற்றமுற, இந்நூல் மூலம் முயன்றிருக்கும் கவிஞர்க்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பன்
இ.ஜெயராஜ்
xviii 28afarrotaz3 azeöfugié5aio

ஈழத்தின் முத்த கவிஞர் டாக்டர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் அளித்த
அணிந்துரை
ஈழத்துக்கெனத் தனித்துவமான தமிழ் இலக்கியப் பாரம்பரியம் ஒன்றுண்டு. அது ஈழத்துப் பூதந்தேவன் முதல் இன்றைய இலக்கிய கர்த்தாக்கள் வரை தொடர்ந்து வருகிறது. இப்பாரம்பரியம் தனித்துவமானது LDL (BLD606) தலைசிறந்ததுமாகும் என்பர் இரசிகமணி கனக செந்திநாதன். குறிப்பாகக் கவிதைத் துறையில் ஈழத்துக் கவிஞர்கள் தனிமுத்திரை பொறித்துள்ளார்கள். அண்மைக்கால விடுதலைப் போராட்டக் கவிதைகள் இதற்குச் சான்றாக உள்ளன. இவை வெறும் கற்பனைக் கவிதைகளாகவன்றி, உள்ளத்துணர்வுகளாக, அனுபவ வெளிப்பாடுகளாக உள்ளன.
தமிழ் கவிதைப் பரப்பை சங்ககாலத்திலிருந்து இன்றுவரை ஆராய்வோமாயின் அவற்றை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று ஏதாவதொரு சிறு சம்பவத்தை வைத்துக் கூறுகின்ற தனிப்பாடல்கள். மற்றையது பல சம்பவங்களை இணைத்துக் கூறுகின்ற கதைப்பாடல்கள். இக்கதைப் பாடல்கள் பல வடிவங்களில் ஆக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கிய மரபில் அவை காவியங்கள் எனப் பெயர் பெற்றன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என அறிஞர்கள் சில காப்பியங்களைக் குறித்துச் சென்றனர். இவை தவிர இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் என்பனவும் காலப்போக்கில் காவியங்களாக வடிவம் பெற்றன.
காலஞ் செல்லச் செல்ல பாரிய காவியங்களை எழுதும் வழக்கம் குறையலாயிற்று. காரணம் புலவர்களாலும் பொறுமையாக இருந்து பாரிய காவியம் பரிட முடியவில்லை. சுவைஞர்களாலும் பொறுமையாக இருந்து வாசிக்க முடியவில்லை. உண்மையில் ஆங்கிலக் கல்வியின் வருகையும், உரைநடையின் எழுச்சியும் இதற்குக் காரணங்களாகும். இதனால் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் அளவிற் சிறிய காவியங்களும், கதைப்பாடல்களும் எழலாயின.
இவ்விடத்தில் காவியம் பற்றி அறிஞர்கள் கூறும் சில கருத்துக்களை நோக்குவோம். காலத்திற்குக் காலம் ஆற்றல் வாய்ந்த பெருங்கவிஞர்கள் தமக்கு முன்பிருந்தோரது சிந்தனைகளையும், உணர்வுகளையும் பற்றுக் கோடாகக் கொள்ளும் அதே பொழுதில் அவற்றை மாற்றியும், பதுக்கியும் ஒரு வகையான இரசவாதம் செய்கின்றனர். தமது காலத்துச் சமுதாயத் தேவைகளுக்கேற்பவும், அறிவு நிலைக்கியையவும் பழைய கற்பனைகளுக்கு உருவ மாற்றம் செய்கின்றனர். மகா கவிஞன் ஒருவன் பழைய செம்பைக் கட்டித்தங்கமாக்கி விடுகின்றான்” என்பர் பேரா. கைலாசபதி,
காவ்ய என்பது வடமொழியில் அபரிதமான, கற்பனை கலந்த, செம்மையான மொழிநடையில் அமைந்த இலக்கிய வடிவத்தைக் குறிக்கின்றது. காவ்யவிலிருந்து பிறந்தது தான் காவியம் எனும் சொல். இது காப்பியம் என்றும் தமிழில் சொல்லப்படுகிறது.
uætv_/rg-2 støfuat &/r-Öuti Xix

Page 12
“காவியம் என்பது கவி என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து தோன்றியது என்பது இதன் பொருள். இதுவே காப்பியம் என்று தமிழில் திரிந்து வரலாயிற்று” என்பர் எஸ். வையாபுரிப்பிள்ளை.பெளரா என்பவர், “காம்பீரியம் நிறைந்தது காப்பியம் என்றும், அது போர்க் கொடுமைகளையும், அரிய வர்ணனைகளையும் கொண்டு விளங்கும்” என்பர்.
காவியத்துக்குரிய இலக்கணத்தை, காவியதரிஷ எனும் வடமொழி நூலும், அதைத் தழுவி எழுந்த தண்டியலங்காரமும் கூறுகின்றன. தண்டியலங்காரம் குறிப்பிட்ட சில உறுப்புக்களைக் கொண்டதே காவியம் எனவும் அவ் உறுப்புகளுள் அறம், பொருள், இன்பம், வீடு என்பன முக்கியமானவை என்றும் கூறுவர். நாட்டு வர்ணனை, நகள் வர்ணனை புனலாடுதல், காதல், வீரம் ஆதிய பல உறுப்புகளோடு அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றைக் கூறுவன பெருங்காப்பியம் என்றும் எல்லா உறுப்புகள் அமைந்தாலும் அறம், பொருள், இன்பம் வீட்டுள் ஏதாவது ஒன்று குறைந்தால் அது சிறுகாப்பியம் என்றும் தண்டியலங்காரம் கூறும்.
தொல்காப்பியரும், அவருடைய நூலுக்கு உரைவகுத்த அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் ஆகியோரும் காப்பியங்களுக்கு இலக்கணம் வகுக்கவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த தண்டியலங்காரம், "காவிய தர்ஷத்தை" அப்படியே பின்பற்றாது, தனக்கு முன் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய நூல்களையும் மனதிற்கொண்டு காவிய இலக்கணம் வகுத்திருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் காவியங்களை எழுத முற்பட்டோர், காவிய இலக்கணங்களை அச்சொட்டாகப் பின்பற்றி எழுதினர் என்று கூறுவதற்கில்லை.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் குறுங்காவியங்களும், சிறுசிறு கதைப்பாடல்களும் எழுந்தன. அவற்றுள் மஹாகவி பாரதியார் எழுதிய "பாஞ்சாலி சபதம்" திருப்பு முனையாக அமைகின்றது. அவரைத் தொடர்ந்து பாரதிதாசன் எழுதிய “பாண்டியன் பரிசு”
நாமக்கல் கவிஞர் எழுதிய "அவனும் அவளும்” கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை எழுதிய "ஆசிய ஜோதி" புலவர் குழந்தை எழுதிய "இராவண காவியம்" என்பன தமிழகத்தில் எழுந்த முக்கிய சிறு காவியங்களாகும்.
ஈழத்திலும் மஹாகவி உருத்திரமூர்த்தி, இ.முருகையன், சா.வே. பஞ்சாட்சரம், காரை செ. சுந்தரம்பிள்ளை, பண்டிதர் சச்சிதானந்தன், சம்பந்தன், திமிலைத் துமிலன், ஜின்னாஹற் ஷரிபுத்தீன் ஆகியோரும் குறுங்காவியங்களைப் படைத்துள்ளனர்.
போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடிய மாவீரன் சங்கிலியன். இவனுடைய வீரவரலாற்றை காவியமாகப் பாடியவர் காரை. சே. சுந்தரம்பிள்ளை (1969) இக்காவியத்தையடுத்து எழுகின்ற இரண்டாவது வீரகாவியம் பண்டாரவன்னியன் ஆகும். இதன் ஆசிரியர் வைத்திய கலாநிதி கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன். இவர் புலவர் மணி ஆ.மு. ஷரிபுத் தீன் என்னும் தமிழ் புலவரின் மைந்தர்.ஆ.மு.வடிரிபுத்தீன் யாழ்ப்பாணத்தில் தமிழ் பண்டிதர்களிடம் முறையாகத்
XX ஜின்னார் 2fபுத்தீன்

தமிழ் கற்றவர். வெண்பா, கட்டளைக் கலித்துறை என்பவற்றை யாப்பிலக்கணத்துக்கமைய அழகாகப் பாடவல்ல இஸ்லாமியப் புலவர். இவள் என்னுடைய நீண்டகால நண்பர். புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீனின் மைந்தர் மரபுக்கவிதையைக் கையாண்டு இக்காவியத்தைப் படைத்ததில் வியப்பில்லை. இக்காவியத்திலிருந்து இவருடைய கவிதை எழுதும் ஆற்றலையும், பழந்தமிழ் இலக்கியங்களிலுள்ள பயிற்சியையும் அறிய முடிகிறது. தமிழ் மொழி மீதும், தமிழ் மண்ணின் மீதும் இவருக்குள்ள பற்றினையும் சுதந்திர வேட்கையையும் உணர முடிகிறது.
இக்காவிய ஆசிரியர் மரபுக் கவிதையைக் கையாண்டு இக்காவியத்தைப் படைத்துள்ளார் என்று முன்னர் குறிப்பிட்டுள்ளேன். இன்று மரபுக்கவிதையா? புதுக்கவிதையா? சிறந்தது என்று பட்டி மண்டபமே நடைபெறுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் யாப்பிலக்கண அறிவு இல்லாதவர்களும் மரபுக்கவிதை பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களும், புதுக்கவிதைக்காகக் கொடி பிடிப்பதுதான் வருந்தத்தக்கது. உண்மையில் கவிதை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் புதுக்கவிதையும் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துவிட்டது. மரபுக்கவிதையின் உருவம் வேறு. புதுக் கவிதையின் உருவம் வேறு. ஆனால் இரண்டும் கவிதைகளே. இவ்விடத்திலொன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். மரபை உடைத்து புதுக்கவிதை செய்கிறோம் எனச் சொல்பவர்கள் மரபை அறிந்து அதைச் செய்ய வேண்டும். தமிழகக் கவிஞர்களுள் வாலியையும், வைரமுத்துவையும் இதற்கு உதாரணங்காட்டலாம்.
இதுவரை காலமும் மரபுக் கவிதைகளில்தான் காவியங்கள் படைக்கப்பட்டன. புறநடையாக வாலி எழுதிய பாண்டவர் பூமி, வைரமுத்துவின் கவிராஜன் கதை என்பன உள்ளன. ஆனால் மரபுக்கவிதைகளால் எழுதப்பட்ட காவியங்களின் உயிர் துடிப்பினை இவற்றில் காண முடியவில்லை. வலிந்து சொற்களைப் பெய்து, இவர்கள் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார்கள். ஆனால் இந்த இருவருமே நல்ல மரபுக் கவிஞர்கள் என்பதில் ஐயமில்லை.
பண்டாரவன்னியன் இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சியின் முற்பகுதியிலும் வன்னியை ஆட்சி செய்த ஒரு வன்னிமை ஆவான். வன்னிமைகள் காலப்போக்கில் தங்களை குறுநில மன்னர்கள் என்றும் கூறிக் கொள்ளலாயினர்.
ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது இலங்கையில் மூன்று இராச்சியங்கள் இருந்தன. அவை கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்றழைக்கப்பட்டன. முதலில் வந்த போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தையும், பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தையும்,கைப்பற்றி ஆட்சிசெய்தனர். கண்டி இராச்சியத்தையும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியான வன்னியையும் அவர்களால் தங்கள் ஆளுகைக்கு உட்படுத்த முடியவில்லை. இவர்களையடுத்து இலங்கைக்கு வந்த ஒல்லாந்தர் கோட்டையையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய போதும், கண்டியையும்,
υ, αστυ τσου σταται στα ιταδιμιί, XXi

Page 13
வன்னியின் பெரும் பகுதியையும் அடிபணிய வைக்க முடியவில்லை. ஆயினும் வன்னிப் பகுதிக்கு இவர்களால் அடிக்கடி அச்சுறுத்தல்கள் விடப்பட்டன. கி.பி. 1796இல் இலங்கையிலிருந்து ஒல்லாந்தரின் ஆட்சிப் பிரதேசங்கள் ஆங்கிலேயர் வசமாகிய,
ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் தமது ஆளுகைக்கு உட்படுத்தக் கடுமையாகப் போரிட்டனர். அதன் விளைவாக 1811 இல் வன்னி பிரதேசமும், 1815இல் கண்டி இராச்சியமும் ஆங்கிலேயர்களால் வெற்றி கொள்ளப்பட்டன. முதலில் ஒல்லாந்தரையும் பின்னர் ஆங்கிலேயரையும் எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த ஒரு தேசப்பற்று மிக்க மாவீரன்தான் பண்டாரவன்னியன்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக வன்னிப் பகுதி இருந்து வந்தது. வன்னியின் வடக்கு எல்லையாக யாழ்ப்பாணப் பரவைக் கடலும், தெற்கு எல்லையாக அருவி ஆறும், கிழக்கு எல்லையாக திருகோணமலை மாவட்டமும், மேற்கு எல்லையாக மன்னார் மாவட்டமும் இருந்தன. யாழ்ப்பாண மன்னர்கள் நிருவாக வசதி கருதி வன்னிப் பிரதேசத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும், ஒவ்வொரு வன்னிமையின் கீழ் பரிபாலனஞ் செய்யவிட்டனர். செட்டிகுளம், பனங்காமம், மேற்பற்று முள்ளியவளை, கரிக்கட்டுமூலை, தென்னமரவடி, கருநாவற்பற்று ஆகிய வன்னிமைப் பிரிவுகள் இருந்தன. ஐரோப்பியர்கள் யாழ்ப்பாணத்தின் மீது அடிக்கடி படையெடுத்து, யாழ்ப்பாண மன்னர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்களால் வன்னிமீது கவனஞ் செலுத்த முடியவில்லை. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வன்னிமைகள் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து, தங்களை விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினர். இவ்வாறு யாழ்ப்பாண மன்னர்களுக்கு அடங்காது, சுதந்திரமாக ஆட்சி செய்த காரணத்தால் வன்னிப் பிரதேசம் அடங்காப்பற்று எனும் பெயர் பெற்றது. அது இன்றும் பொருந்துகிறது. வலிமை மிக்க வன்னிமைகள் வலிமை குறைந்த வன்னிமைகளின் பிரதேசங்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். அத்தகைய ஒரு வன்னிமைதான் சுதந்திர வேட்கை கொண்டு அந்நியர்களை எதிர்த்து இறுதிவரை போராடிய பண்டாரவன்னியன்.
பண்டாரவன்னியனுடைய வீரவரலாறு வன்னிப் பகுதியில் நீண்டகாலமாக கள்ணபரம்பரைக் கதையாகவே நிலவி வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய அவனுடைய வரலாறு 1970 ஆம் ஆண்டுவரை வெளிக்கொணரப்படவில்லை. இப்பணியை முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்கள் தக்க சான்றுகளுடன் பண்டாரவன்னியன் எனும் நாடகமாக வெளிக்கொணர்ந்தார். இதை எழுதுவதற்காக வரலாற்று நூல்களையும், கல்வெட்டுச் சான்றுகளையும் ஆராய்ந்து உண்மை வரலாற்றை நாடறியச் செய்தார். அவருடைய பணிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் தலை வணங்கும் என்பதில் ஐயமில்லை.
பண்டாரவன்னியனின் வரலாற்றைப் பாயும் புலி பண்டாரகவன்னியன் எனும் பெயரில் ஒரு நாவலாக கலைஞர், மு. கருணாநிதி தந்துள்ளார். ஆனால் அவள் எழுதிய கற்பனை கலந்த நவீனத்தில் வரலாற்றுண்மைகள் தெளிவாகவில்லை. தென்னக வன்னியர்களுக்கும், ஈழத்து வன்னியர்களுக்குமிடையில் தொடர்பினைக் XXii ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

காட்ட முற்பட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவன், தமிழ் மறவன் சுந்தரலிங்கம் ஆகியோரை பண்டாரவன்னியனுடன் தொடர்புபடுத்தியுள்ளார். வன்னிப் பிரதேசத்தில் நடைமுறையிலுள்ள கர்ணபரம்பரைக் கதையில் குருவிச்சிநாச்சி என்பவள் பண்டாரவன்னியனின் காதலியாகச் சொல்லப்படுகிறாள். இவளைக் கருணாநிதி ஒரு மாபெரும் வீராங்கனையாகச் சித்திரித்துள்ளார். இதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. ஜின்னாஹற் ஷரீப்தீன் எழுதிய பண்டாரவன்னியன் காவியம் கருணாநிதியின் நாவலைப் பெரிதும் பின்பற்றியதாக உள்ளது. இதைக் காவிய ஆசிரியர் தனது நூலிலேயே குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருப்பினும் மூன்று நூலாசிரியர்களுமே பண்டார வன்னியனை ஒப்புயர்வற்ற விடுதலை வீரனாகச் சித்திரித்துள்ளனர். தமிழகம், யாழ்ப்பாணம், வன்னி, கண்டி, கொழும்பு ஆகிய பிரதேசங்களையெல்லாம் பண்டாரவன்னியன் காவியம் தொடர்புபடுத்திக் கூறிச் செல்கிறது. ஆங்கிலேயர்கள் கண்டி மீது படையெடுத்தபோது பண்டாரவன்னியனும், வன்னிமீது படையெடுத்த போது கண்டியரசனும் ஒருவருக்கொருவர் படை உதவி செய்திருக்கின்றனர்.
இலங்கையில் சுதந்திரமாக இயங்கிய கடைசி இராச்சியம் கண்டி அதன் கடைசி மன்னன் பூரீவிக்கிரமராஜசிங்கன் கண்ணுச்சாமி எனும் இயற்பெயர் கொண்ட இவன் ஒரு தமிழன். இவனைக் காட்டிக் கொடுத்து இலங்கை முழுவதையும் ஆங்கிலேயருக்கு அடிமைப்படுத்த உதவியவன் பிலிமத்தலாவை எனும் சிங்களத் திசாவை என்பது வரலாறு. இப்பிலிமத்தலாவையின் மகள் பியசீலி என்பவள் வன்னிக்கு வேவு பார்க்க வந்து ஆங்கிலேயர்களுக்கு உதவ முற்பட்டாள் என்று இக்காவிய ஆசிரியர் சொல்கின்றார்.
வன்னியின் வீழ்ச்சியும், கண்டியின் வீழ்ச்சியும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. இதற்கு ஆதாரமாக 1811 ஆம் ஆண்டில் வன்னியில் நடப்பட்ட கற்சிலையும், 1815 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கண்டி ஒப்பந்தமும் உள்ளன. இதிலிருந்து தெரிகின்ற உண்மை யாதெனில், இலங்கையின் சுதந்திரத்துக்காகக் கடைசி வரையும் போராடியவர்கள் தமிழ் ஆட்சியாளர்களே. அதாவது கண்டியில் கண்ணுச்சாமியும், வன்னியில் பண்டார வன்னியனும் ஆவர். ஆனால் துரதிஷ்டவசமாக உண்மை வரலாறுகள் திரித்து எழுதப்படுகின்றன. அதற்குப் புறம்பாக சொந்த மண்ணுக்காகப் போரிட்ட ஒரு மாவீரனின் வரலாற்றை ஜின்னாஹற் ஷரிபுத்தீன் காவியமாகத் தந்துள்ளமை பாராட்டுதற்குரியதே.
பண்டாரவன்னியன் காவியத்தை ஆசிரியர் அறுசீர்விருத்தம் எண்சீர்விருத்தம், வஞ்சிப்பா, சிந்து ஆகிய பாவகைகளைக் கையாண்டு எழுதியுள்ளார். சில பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன. சந்த நடையையும் ஆசிரியர் இடைக்கிடை கையாண்டிருக்கிறார். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 1569 பாடல்களைக் கொண்டது. முக்கிய சம்பவங்களைச் சொல்லும் பாடல்களுடன் பெரும்பாலான பாடல்கள் கதையை நடத்திச் செல்ல உதவுகின்றன.
uætu-/r/J-2 stafuai &/r-Suti xxiii

Page 14
பண்டாரவன்னியன் எனும் இக்காவியம் முதலில் காப்புச் செய்யுளையும், அதனையடுத்து அவையடக்கச் செய்யுளையும் கொண்டுள்ளது. அவையடக்கச் செய்யுளில் இக்கவிஞர் கையாண்டுள்ள உவமை மிகவும் நன்றாக அமைந்துள்ளது.
‘புலிகள்வாழ் கானகத்துள் பூனை ஒன்று
பேருவேட்டைக்காரன் போல் நுழைந்த தொப்ப----
தமிழ்ப்பெரும் புலவர்கள் மலிந்தள்ள தமிழ் பேசும் நல்லுலகில் சிற்றறிவுடையேன் ஆகிய யான் இக்காவியத்தைப் படைக்கத் துணிந்தேன் எனும் உள்ளுறை உவமம் இதில் தொக்கி நிற்கின்றது.
அவையடக்கத்தை அடுத்து நூன்முகத்தில் தன்னை இக்காவியம் எழுத தூண்டிய காரணிகளை ஆசிரியர் கூறுகின்றார். ஈழத்தில் தமிழ் பேசும் மக்களுடைய அவலநிலை, அகதி நிலை, புலம்பெயர் வாழ்க்கை என்பனவற்றைக் கண்டு வருந்திய ஆசிரியர், அன்றைய ஈழத் தமிழ் மக்களுடைய வீர வாழ்வை சற்றுச் சிந்தித்துப் பார்த்தார். ஆது இக்காவியத்தை எழுதத் தூண்டியது.
நூன்முகத்தை அடுத்துக் காவிய ஆசிரியர் ஈழவள நாடு பற்றியும், வன்னி வள நாடு பற்றியும் கூறுகின்றார். ஆனால் நகள் வர்ணனை சொல்லப்படவில்லை. எனினும் கண்டியை வர்ணிக்கும் பொழுது தலதா மாளிகை, கண்டி பெரஹரா என்பவற்றுடன் இணைத்து நகள்வர்ணனை சொல்லப்படுகிறது. இவைபற்றிப் பின்னர் ஆராய்வோம்.
இக்காவியத்தின் அடிநாதமாகத் திகழ்வது, வன்னி மண்ணின் சுதந்திரத்தைக் காப்பாற்ற நடைபெற்ற போரேயாகும். இப்போரில் ஈடுபட்ட பண்டாரவன்னியன் வெள்ளையரை எதிர்ப்பதற்காகக் கண்டியரசனின் நண்பனாகச் செயற்படுகிறான். தமிழக கட்டபொம்மன், வெள்ளையத்தேவன் ஆகியோருடைய வேண்டுதலை நிறைவேற்ற முயல்கிறான். காக்கை வன்னியன் போன்ற காட்டிக் கொடுக்கும் துரோகிகளை இனங்காட்டுகின்றான். இக்காவியத்தை நடத்திச் செல்வதற்காகக் கிளைச் சம்பவங்கள் சில சொல்லப்படுகின்றன. வற்றாப்பளை அம்மன் கோயில் திருவிழாவோடு சங்கிலித் தாத்தா எனும் தளபதியின் வீரமும், அவல மரணமும், பண்டாரவன்னியனின் காதலியாகிய குருவிச்சி நாச்சியின் வீரசாகசங்கள், பண்டாரவன்னியனின் சகோதரிமார் சம்பந்தப்பட்ட காதல், வீரம், மரணம் என்பனவும், காக்கை வன்னியனின் சூழ்ச்சிகளும், அவன் அரண்மனையோடு எரிக்கப்பட்டமையும், பிலிமத்தலாவையின் திட்டங்களும், பியசீலியின் வஞ்சகங்களும், தந்திரோபாயங்களும், பிரட்றிக் நோத்தின் தர்பாரும் சொல்லப்படுகின்றன.
இக்காவியத்தில் வரும் காக்கை வன்னியன் என்பவன் வன்னி மண்ணைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒரு கயவனாகச் சித்திரிக்கப்படுகிறான். போர்த்துக்கேயர் யாழ்ப்பாண மண்ணைக் கைப்பற்ற முயன்றபோது சங்கிலி மன்னனை (1வது சங்கிலி) காட்டிக் கொடுத்தவனும் ஒரு காக்கை வன்னியனேயாவான். அவன் ஊர்காவற்துறைப் பகுதியை நிர்வகித்து வந்த ஒரு
Xxiv ஜிண்ணார் 2ftத்தின்

வன்னிமை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே குறிப்பிட்டுள்ள காக்கை வன்னியன் வேறு. வன்னியில் சொல்லப்படுகின்ற காக்கை வன்னியன் வேறு. வரலாற்று ஆதாரப்படி பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் மேற்பற்று வன்னிமையாகிய கதிர்காமநாயக முதலியாவான் காட்டிக் கொடுப்பவர்களைக் காக்கை வன்னியன் என்று சொல்லும் மரபு இன்றும் உண்டு. அதனால் கதிர்காமநாயக முதலியும் காக்கை வன்னியன் என்னும் பெயர் பெற்றிருக்கலாம். கட்டப்பொம்மனை ஒரு எட்டப்பனும், சங்கிலி மன்னனை ஒரு காக்கை வன்னியனும், ழரீவிக்கிரம ராஜசிங்கனை பிலிமத்தலாவையும், பண்டார வன்னியனை கதிர்காமநாயக முதலியும் காட்டிக் கொடுத்து வரலாற்றில் தீராத பழிதேடிக் கொண்டனர்.
இக்காவியத்தில் பல்வேறுபட்ட பாத்திரங்கள் சித்திரிக்கப்படுகின்றன. அவற்றுள் பண்டாரவன்னியன், குருவிச்சி நாச்சி, சங்கிலித் தாத்தா, சுந்தரலிங்கம், காக்கை வன்னியன், தங்க நாச்சி நல்ல நாச்சி, ஊமைச்சி நாச்சி, தணிகை முத்துசாமி, பிலிமத்தலாவை, பியசீலி, மார்த்தனி, ஆகிய பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாத்திர வார்ப்பில் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக எம் கண்முன்னே நிறுத்துகின்றார். அவற்றுள் சில பாத்தரங்களை நோக்குவோம்.
பண்டாரவன்னியன் இக்காவியத்தின் தலைமை நாயகனாகச் சித்திரிக்கப்படுகிறான். தான் பிறந்த மண்ணின் மானங்காக்க வெள்ளையரோடு போரிட்ட இவன் யார்க்கும் அடங்காதவன். குடிகளிடத்தில் அன்பும், தெய்வ பக்தியும் மிக்கவன். நண்பர்களுக்குச் சிறந்த நண்பன். பகைவர்களுக்குப் பகைவன். சகோதர பாசமுடையவன். எதற்கும் அஞ்சாத இவன் ஒழுக்கம் மிக்கவன். உடலிச்சைக்கு இடங்கொட்ாது காதலியாகிய குருவிச்சி நாச்சியோடிணைந்து அறப்போர் நடத்திய வீரமறவன். இவனைப் பற்றி இந்நூலாசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
“யாருக்கும் அடங்காதான் அடங்காப் பற்றின் அரசனென ஆனவன்றன் மானங் காக்கப் போருக்கும் அஞ்சாதான் புலிபோல் வீரன்
புகழ்பூத்த தமிழ் மண்ணின் சொந்தக்காரன்" சங்கிலித் தாத்தா, சுந்தரலிங்கத்துக்கு பண்டாரவன்னியன் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.
பண்டார வன்னியன்னோர்
பேர்பெறு வீரன் யாரும் அண்டிட முடியா வாறோர்
ஆட்சியைத் தொடரும் தீரன் கொண்டனன் உறுதி யாரும்
கொண்டிடா வாறு மண்மேல்
கொண்டமெய்ப் பாசத்தாலே
கேளதைச் சொல்வே னென்றார் uTL6) : 80
uæru-/rgaratafuði að/r-Susúb XXV

Page 15
இக்காவிய நாயகியாக குருவிச்சி நச்சி திகழ்கின்றாள். இவள் வன்னியனின் காதலி அவனோடு தோளோடு தோள் நின்று மண் மீட்புக்காக போரிடும் அற்புதமான வீராங்கனை இந்திய ஜான்சிராணி தமிழகத்து மங்கம்மா, பிரெஞ்சு நாட்டு ஜோன் ஒவ்ஆர்க், ஆகியோருடன் ஒப்பிடக் கூடிய திறல்மிகு வீராங்கனை. இக்காவிய ஆசிரியர் பண்டாரவன்னியனை விட இவளுடைய வீரதீரச் செயல்களையெ பல இடங்களில் வியந்து போற்றுகிறார். அதனால் இக்காவியத்தைக் குருவிச்சிநாச்சி காவியம் என்றழைக்கலாமோ எனத் தோன்றுகிறது. இராஜதந்திரத்திலும் இவள் வன்னியனை வெல்பவளாகவே சித்திரிக்கப்பட்டுள்ளாள். தங்கநாச்சி என்பவளிடம் தமிழ் பயின்ற இவள் தமிழ் மறக்குடிப் பெண்கள் பற்றி நன்கு அறிந்ததோடு அவர்வழி நின்று பணியும் ஆற்றியுள்ளாள். இவளைப் பற்றி காவிய ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
ஊர்விளக்கின் சுடராக ஒளிர்கின்ற பெண்ணாள்
ஊர்காத்த தளபதியின் உதிரத்தின் சாரம்
போர்முனையில் தொடர்ந்தேதன் புயபலத்தைக் காட்டும்
வீரனுளம் வீற்றிருக்கும் வனிதையிள மயிலாள் பாடல் : 111
குருவிச்சி நாச்சி வாழ்ந்த கிராமம் சம்மளங்குளம் எனபப்டும். இவள் நீராடி வந்த குளம் காதலியார் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தை ஊடறுத்துப் பாயும் ஆறு குருவிச்சி ஆறு என்று புகழ்பெறுகிறது.
பண்டார வன்னியனைக் காட்டிக்கொடுத்ததோடு தமிழ் மண்ணுக்குப் பெருந் துரொகம் செய்தவன் காக்கை வன்னியன். இவனைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன். காவிய ஆசிரியர் இவனை துரோகத்தின் பிறப்பிடமாகவும், வஞ்சகத்தின் உறைவிடமாகவும், குள்ளநரிப்புத்தி கொண்டவனாகவும், காமுகனாகவும் சித்திரிக்கின்றார். இக்காவியம் இவனைப் பற்றி பின்வரும் பாடல்வரிகள் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது.
காக்கையெனும் அடைமொழிக்கு ஏற்ற வாறு
கருமைநிறம் கொண்டிருந்தான் காக்கை வன்னி காக்கும்இமை கண்களினைப் பாதி முடிக்
கொண்டிருக்கும் குடிகார முகத்தோற் றத்தின் வாக்கினிலே கரிக்பொம்பாம் பருத்த மேனி
வானரம்போல் வாயினித்துப் பேசும் பாங்கு. LIML-6) : 278 என்றும்.
தீக்கு ணன்பெருந் துரொகி யென்பதும்
சதிசெய் பாங்கினன் என்பதும் தேக்கி முகத்தினில் தோன்றி னான்னவன்
தப்பிப் பிறந்தவன் தமிழனாய்------
LJTL 60 : 367
XX vi ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

பண்டாரவன்னியனுக்கு இரு சகோதரிகள் இருந்தனர். ஒருத்தியின் பெயர் நல்ல நாச்சி. அவள் திருகோணமலை மாவட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தாள். மற்றவள் ஊமைச்சி நாச்சி. அவள் பனங்காமத்தை நிருவகித்து வந்தாள்.இவர்களைப்பற்றி நூலாசிரியர்பின்வருமாறு கூறுகின்றார்.
பேருக் கேற்ற குணவதியாய்ப்
பார்வைக் கழகாய் நல்லநாச்சி
ஒளரே உவக்கும் குலவிளக்காய்
ஒர்ந்தே அறியும் திறத்தினளாய்ச்
சீராம் அடக்கப் பண்போடு
திறமைகள் அனைத்தும் பெற்றிருந்தாள்---
usTL6) : 529 ஒளமைச்சிநாச்சியும் அழகியேதன்
உடன்பிறந் திட்ட குறும்புகளால் ஒளமையும் நகைப்பான் ஆள்மயக்கும்
அசைவும் நெளிவும் கொண்டிருந்தாள்---
usTL6 : 530
இக்காவியத்தில் சங்கிலித் தாத்தா முக்கிய இடம் பெறுகிறார். யாழ்ப்பாண வரலாற்றில் சங்கிலி என்ற பெயரில் இருபெரும் அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அந்நியர் ஆட்சியை எதிர்த்து இவர்கள் இறுதிவரை போராடி இருக்கிறார்கள். தமிழக வரலாற்றிலும் சங்கிலித்தேவன் என ஒருவன் பெரு வீரனாகச் சித்திரிக்கப்படுகிறான். சங்கிலி எனும் பெயர் கொண்டவர்கள் பெரு வீரர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். குருவிச்சி நாச்சியின் தாத்தாவாகிய சங்கிலி ஒரு காலத்தில் வன்னி தளபதியாக இருந்து காலை இழந்தவர். சுதந்திர வேட்கையும் நாட்டுப் பற்றும் பகைவர்க்கு அஞ்சா நெஞ்சுரமும் இதந்தரும் உள்ளமும்படைத்தவராய் இவரைக் காவியத்தில் காணமுடிகிறது.
இக்காவியத்தில் வரும் ஏனைய பாத்திரங்கள் பற்றி விரிவஞ்சிக் கூறாது விட்டுள்ளேன்.
நாட்டு வர்ணனை, நகள் வர்ணனை என்பவை ஒரு காவியத்துக்கு அணிசேர்ப்பனவாகும். இக்காவியம் ஈழநாடு பற்றி பின்வருமாறு புகழ்ந்துரைக்கின்றது. அவற்றுள் ஒரு பாடல் வருமாறு :
மாதமும் மாரிபெய்யும் எங்கள் மண்ணில்
மருதமொடு குறிஞ்சிநெய்தல் மகிழும் மேகம் தோதாகச் சுற்றியுள்ள வாரிதிக்குள்
தோய்தெழுந்து வானுயர்ந்து மழையாய்க் கொட்டும் சீதளத்து மலைப்புலத்தே குளிருஞ் சுற்றிச்
சீரான உட்டிணமும் இடைநிலங்கள் மீதமில்லா திருபாங்கின் சமமுங் கொண்டு
மனுக்குலத்தை வாழவைக்கும் மேன்மை நாடே. பாடல் 10 வன்னிவள நாடுபற்றி காவியாசிரியர் கூறும் பொழுது நாட்டுவளம், மரவளம், கனிவளம், உணவுவளம் என்பனவற்றை விரிவாகச்சொல்லிச் செல்கின்றார். எடுத்துக் காட்டாக ஒவ்வொரு பாடலை நோக்குவோம்.
uaoru Argas Jastraffuair apósra-Suyub XXνii

Page 16
மருதமொடு முல்லைநெய்தல் முன்றும் சேர்ந்து
முத்தமிழுக் கொப்பாகும் வன்னி மண்ணாம் பெரிதுமங்கே வயலைநம்பி வாழ்வோர் மிக்கோர்
பிறிதொழிலில் பெருநாட்டம் கொள்ளார் அன்று பெரும்பாலோர் படைகளில்முன் செல்லும் வீரர்
புறமுதுகிட் டோடவைக்கப் பொருதும் தீரர் திருவனைத்தும் கொண்டதனால் வேற்றார் முலம்
தேவையற்றுத் தன்னிறைவு கொண்டே வாழ்ந்தார்
JTL6) : 18
மரவகைகள் வருமாறு
தென்னைபனை கமுகுபலா
தோடைமா போன்றுபல வன்னியரின் வீடு சுற்றி
List L6) : 2
பாலைபன்னை சமண்டலையும்
பலாசுவீரை வன்னிநாகை ஆலமரம் அருநெல்லி
ஆவாரை அத்தி--------
JTL6) : 23
பழவகைகள் வருமாறு :
வீரைபாலை விளாமகிழம்
வெடுக்குநாறி துடரிஈச்சை காரைநாவல் நறுவிலியும்
கரையாக்கண் கரம்பையோடு சூரைகுழா பன்னைநுரை
சேர்கரம்பையோடுலுந்தை கார்கனுக்காய் முந்திரிகை
கானும்வன்னிக் கனிவளமே
பாடல் : 20
உணவு வகைகள் :
கானமரக் கொம்பரிலே
கவர்ந்தெடுத்த செந்தேனும் இளனிறைச்சி மீன்வகையும்
உறைதயிரும் பால்நெய்யும் தேனிகள்த்த முக்கனியும்
தூயமரக் கறிவகையும் மானுடரின் நோய்தீர்க்கும்
முலிகையும் செறிநாடே UTL6) ; 25
XXviii ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

நாட்டு வளம்பற்றிய மேற்படிபாடல்கள் காவிய ஆசிரியருடைய கவித்துவத்தைப் புலப்படுத்துகின்றன.
வன்னியில் இருந்த அரண்மனை பற்றியோ அல்லது அதனைச் சூழவிருந்த நகரம் பற்றியோ ஆசிரியர் எதுவும் கூறவில்லை. ஆனால் கண்டி நகரத்தையும், தலதா மாளிகையையும், அங்கு இடம் பெற்ற பெரஹரா பற்றியும் வர்ணித்துள்ளார். எடுத்துக்காட்டாக ஒரு பாடல்,
தலதா மாளிகை ஒளியால் மிளிர்ந்தது
தந்த தாதுபல் புத்தரின் நிலைகொண்டிருந்திடும் புனிதத் தலமென
நம்பி பெளத்தர்கள் ஏற்றிடும் உலகம் அறிந்தவோர் உன்ன தப்புலம்
உள்ளும் புறமும்வெண் மலர்களால் கலையின் வடிவமாய்க் காட்சி தந்ததே
கண்டி நகருயர் பொருட்டென பண்டார வன்னியன் ஒரு வீரகாவியம். இதில் யுத்தக் காட்சிகள் வருதல் இயல்பே. இந்நூலாசிரியர் யுத்த நிகழ்ச்சிகளை அழகுறச் சித்திரித்துள்ளார். எடுத்துக் காட்டாக பின்வரும் பாடலை நோக்கலாம்.
சீவுண்ட சிரசுகள் சிதறின எங்கனுைம் சிரசற்ற முண்டங்கள் வேறாய்ச் சாவுண்டு புரண்டன கைகளும் கால்களும் தெறித்தன வெட்டுண்டதாலே சோவென்று சொரிந்ததே குருதியும் நிலமெலாம்
சேறாகிப் போனதே கூற நாவுண்டோ நடப்பதை நினைந்திடாப் போழ்திலே
நிகழ்ந்திடும் கோரமீதந்தோ LITL6) : 1068 இக்காவிய ஆசிரியர் பல்வகைச் சுவைகளும் விரவி வரத் தக்கதாக இக்காவியத்தைப் படைத்துள்ளார். தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சுவைகளை எட்டாக வகுத்து, அவற்றை மெய்ப்பாடுகள் என்று கூறும், நகை . அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளாகும். இக்காவியத்தில் நகைச்சுவை சோகம், வீரம், அருவருப்பு (இழிவரல்) மருட்கை, காதல், கோபம், அச்சம் ஆதியன சொல்லப்பட்டபோதும் வீரம் பெருமிதம், கோபம் என்பனவே முதன்மை பெறுகின்றன. ஏடுத்துக்காட்டாக சில சுவைகளை நோக்குவோம்.
பண்டாரவன்னியனுக்கு குருவிச்சி நாச்சி அவசர அவசரமாக உணவு வகைகளைக் கொண்டு வந்து உண்ணும்படி துரிதப்படுத்தினாள். இதனை ஆசிரியர் பின்வருமாறு நகைச்சுவை ததும்பக் கூறுவார்.
பரபரப் போடு வேகம்
பணிகளிற் சுடர ஒளன்?ளண் விரைவினில் கொணர்ந்தாள் மன்னன்
விகடமாய் வார்த்தை சொன்னான் குருவிஏன் பறக்கின் றாய்நீ ----------- JIL6) : 299 என்பது நகைச்சுவை பயப்பதாக உள்ளது.
uæru-/rsjø) et øfu sir ösr-justið Xxix

Page 17
தணிகையின் மரணத்தின்போது, பண்டாரவன்னியன் அடைந்த சோகம் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
சாய்ந்ததோ வுன்னுடல் உயிர்மறந்தே
சென்றதோ வீரனே நம்கடமை ஓய்ந்திட விலையீங்கெனைத் தனித்து
உலவிட விட்டேன் முன்நடந்தாய் ---
UITL6) : 1178 இக்காவியத்தில் இழிவரல் (அருவருப்பு) பற்றிய குறிப்புக் காணலாம் காக்கை வன்னியனின் தோற்றத்தை அருவருப்புறும்படி ஆசிரியர் கூறுகின்றார். குருவிச்சி நாச்சி தனிமையில் நிற்கும் போது,
S S S S S S S LS SS LS S சட்டென்rோர் ஆண்ணுருவம் அவள்முன்னே
தோற்றிப் பல்லைக் கோரமுகங் காட்டிஇளித் திட்டபடி நின்றானது
காக்கை வன்னி UITL6) : 331
இக்காவியத்தில் அச்சம் எனும் சுவை சிற்சில இடத்தில் வரக் காணலாம். அந்நியர் படையெடுப்பு நிகழுமோ எனும் அச்சம் காட்டிக் கொடுக்கும் கயவர்களால் ஏற்படக் கூடிய அச்சம் கன்னியர்களின் கற்புக்குக் களங்கம் ஏற்படுமோ என்ற அச்சம் எனும் அச்சங்கள் வரும் இடங்களைக் காண முடிகிறது.
பண்டாரவன்னியனுக்குக் குடியரசனிடமிருந்து ஒலையொன்று கிடைக்கிறது. அவ்வோலை கண்டியரசனுடையதா அல்லது பிலிமத்தலாவையும் ஆங்கிலேயரும் செய்யும் சூழ்ச்சியா, என்ற அச்சம் குருவிச்சி நாச்சிக்கு ஏற்படுகிறது. ஒரு பாடல் வருமாறு.
படையொடு நீங்களே போவதாய் எண்ணமோ பறங்கியர் இடையினில் மறித்தால்
நடைபெறின் அதனையும் நேர்கொள்ள வேண்டுமே நாமதற் கஞ்சிடலாமோ
தடையிலை ஆயினும் பிலிமத்தலாவையின் சூழ்ச்சியை எண்ணுக என்றாள் LTL6) : 1300 பண்டாரவன்னியன் ஒரு வீரகாவியம். வீரச்சுவை இக்காவியத்தில் பல இடங்களிலும் விரவிவரக் காணலாம். பண்டாரவன்னியன் இறுதியாக வெள்ளையருடன் போரிடும் போது காட்டிய வீரத்தை ஆசிரியர் பின்வருமாறு கூறுவார்.
தீராத போர்வேட்கை நீண்ட காலம்
தரித்தவனை இருக்கவிடாக் காரணத்தால் போராட மீண்டுமவன் துணிவு கொண்டான்
பெற்றனனே கண்டிவீரர் உதவி தன்னைப் போராடப் பெரும்படையொன் றில்லாப் போதும்
பயங்கொண்டார் பறங்கியர்கள் பண்டார வன்னி கூர்மதியும் போர்வெறியும் கொண்டோன் என்னும்
குறிப்பறிந்தார் மண்காக்கும் மறவன் என்றே
LJIL6) : 1558
XXX ஜிண்ணாஜர் 2fபுத்தின்

சுற்றிவளைத் தெதிரிகளாற் சூழப்பட்டும்
தனித்துநின்று போர்செய்தான் வெற்றி வாகை பெற்றிடுவர் வெள்ளையர்தாம் என்ற போழ்தும்
புறமுதுகிட் டோடாது களத்தில் நின்றான்
UTTL6) : 1561
காதல் பற்றி இக்காவியத்தில் கூறப்பட்டபோதும் சிருங்காரரசம், மருட்கை என்பன மேலோங்கும் வகையில் பாடல்கள் அமையவில்லை. அவற்றை ஒரே இடத்து உணரமுடிகிறது.
இக்காவியத்தில் பலவகை அணிகளும் விரவி வருகின்றன. உவமையணி. உருவக அணி, சொற்பின்வரு நிலை அணி என்பன அடிக்கடி வரக்காணலாம். ஆசிரியருக்கு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வழக்கில் உள்ள பழமொழிகளில் நல்ல ஈடுபாடு உண்டென்பதை ஆங்காங்கே காண முடிகிறது. விரிவஞ்சி இவை பற்றி விளக்கப்படவில்லை.
பண்டாரவன்னியன் காவியம் ஆங்கிலேயர் வருகையின் போதிருந்த தமிழகம், யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் அரசியல் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும் வன்னி மக்களுடைய அரசியல் பொருளாதாரம், சமூகம், சமயம் வாழ்க்கை முறை என்பனவற்றையும் சித்திரிக்கின்றது. காலத்துக்குக்காலம் தமிழர்களுக்குள்ளேயே தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் கயவர்கள் தோன்றி விடுதலை வேட்கைக்கு ஊறு விளைவித்திருக்கிறார்கள். இக்காவியம் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
தமிழன்னைக்கு அருந்தமிழ்ப் புலவர்கள் அழகிய ஆபரணங்களை செய்து அளித்துள்ளனர். இப்புலவர்களுள் இஸ்லாமியப் புலவர்களும் நிறைய உள்ளனர். அவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு அளப்பரியது. அப்புலவர்கள் வரிசையில் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீனும் ஓர் இடம் பெற்றுவிட்டார் என்பதில் ஐயமில்லை. அவருடைய தமிழ்ப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
பண்டெங்கள் மண்ணில் படையொடு
வந்து நிலம்பிடிக்கத் தெண்டித்த ஆங்கிலர் திண்டாடி ஓடப் படைநடத்திக் கொண்ட மண்மீட்புக் கிலக்கண
மாகியோன் காவியத்தை உண்டு சுவைத்திடத் தந்தான்
ஜின்னாஹ் ஷெரிபுத்தமனே
கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை.
uæru-/rja at séu ok að/r-Sutið XXXi

Page 18
என்னுரை
1965களிலிருந்து தனித்தனிக் கவிதைகளாக எழுதித் தொகுப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருந்த என்னைக் காவியம் பாட வைத்தவர் இலக்கிய உலகிற்கு என்னை அறிமுகம்செய்து வளர்த்தெடுத்த, என் மரியாதைக்குரிய ஐயா பத்திரிகைத்துறை ஜாம்பவான் என்று போற்றப்பட்ட, திரு. எஸ் டி. சிவநாயகம் அவர்களாகும்.
அன்னாரின் தூண்டுதலின் பேரில் “மஹற்ஜயீன் காவியம்", "புனித பூமியிலே காவியம்" "ஜின்னாஹற்வின் இரு குறுங்காவியங்கள்” என்னும் தலைப்பில் "பிரளயம் கண்ட பிதா", "தாய்க்கென வாழ்ந்த தனயன்” என்னும் இரு குறுங்காவியங்களுமாக நான்கு காவியங்களைப் பாடினேன். இவை நான்கும் இஸ்லாமியச் சரித்திரங்களை அடியொற்றி எழுதப்பட்டவைகளாகும்.
இவைதவிரப் பொதுவாகத் தமிழ் பேசும் மக்கள் அனைவராலும் விரும்பிப் படிக்கத்தக்க வகையில், ஒரு காவியத்ததைப் பாடும்படி ஐயா எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்விருப்பத்தை நிறைவு செய்யும் நோக்கோடும், பண்டார வன்னியன் என்னும் இக்காவியத்தை, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பாடி முடித்தேன்.
பற்பல காரணங்களால் அச்சிடத் தாமதமான இக் காவியம், இவ்வாண்டுதான் பிரசுரம்பெறும் வாய்ப்பைப் பெறுகின்றது
பெரும்பாலும் சரித்திர சம்பவங்களே காவியத்திற்குப் பொருந்தும் என்பதனால், முன்போலவே எனது "பண்டார வன்னியன்” என்னும் இக் காவியமும் ஒரு சரித்திர நாயகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றது.
வழக்கமாய் காவியங்களுக்கே உரைநடை செய்யப் பெற்றுவந்த ஒரு மரபு, "மஹற்ஜமீன் காவியம்” என்னும் எனது காவியத்தின் மூலம் மாற்றப் பெற்றுள்ளது 660 பேராசிரியர் டாக்டர். 3)|6)6)TLDT. எம்.எம்.உவைஸ் அவர்கள், அந்நூலுக்களித்த அணிந்துரையில் கூறியுள்ளார். எனது இக்காவியத்திலும் "புனிதபூமியிலே" காவியத்தைத் தொடர்ந்து, அந்த முறைமைமாற்றம் தொடரப்பெற்றுள்ளது.
இக்காவியத்தின் கதையை நான் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி அவர்களின் “பாயும்புலி பண்டாரக வன்னியன்” என்னும் நாவலிலிருந்தே பெற்றுக் கொண்டேன்.
எனது முதலிரு காவியங்களும் சுல்தான் சலாஹத்தீன் என்னும் அரபுலக மன்னரின், ஒரு மாபெரும் வீர புருஷரின் தியாக வாழ்வை மையமர்கக் கொண்டு, இன்று பிளவுண்டு ஏகாதிபத்திய வாதிகளின் ஆதிக்க வெறிக்குள் அல்லலுறும் மக்களை எண்ணி, இந்திய நாவலாசிரியர் செய்யது முகம்மது ஹஸன் அவர்கள் எழுதிய நாவல்களை அடியொற்றி எழுதப் பெற்றவைகளாகும்.
XXxii ஜிண்ணாஜர் 2fபுத்தின்

அவ்வாறே இலங்கையின் வடபுலத்து மண்ணை, அன்னியரின் பிடிக்குள் சிக்கிவிடாது பாதுகாக்கப் போரிட்டு மாண்ட, ஒரு குறுநில மன்னனை, ஒரு வீரபுருஷனை இன்றைய உலகிற்கு நினைவுறுத்த, பண்டார வன்னியன் என்னும் அவன்பெயரில் இக்காவியத்தையும் பாடியுள்ளேன்.
மருதமும், முல்லையும், நெய்தலும் சார்ந்த நிலப்பரப்பான வன்னி, நான் பிறந்த மண்ணாம் கிழக்கிற்குப் பொருந்தும் மண்ணாதலால். அதனைப் பாடுவதில் எனக்குச் சிரமம் இருக்கவில்லை. கிழக்கைப்போல் இந்துக்களும் இஸ்லாமியரும் கூடிவாழும் பிரதேசம் இதுவாகும்.
கலைஞரின் கதையோடு எனது கற்பனையும் நிறையவே கலப்புற்று, இக்காவியம் பாடப்பட்டுள்ளது. காவியத்திற்குத் தக்கபடி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பெற்றுள்தோடு, சில பகுதிகள் தவிர்க்கப்பட்டும் உள்ளன.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் நூலுருப்பெறும் இக்காவியம், வெளிவர என்னை ஊக்குவித்துதவிய பலருக்கும் நான் மிக்க நன்றிக் கடமைப்பாடுடையவனாவேன்.
எழுதத்தூண்டிய ஐயா எஸ்.டி.சிவநாயகம் அவர்கள், தமிழ் கற்றுத்தந்த எனது தந்தையார் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் ஆகியோருடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதலவர் கலைஞர டாக்டர் மு. கருணாநிதி அவர்களுக்கும், அணிந்துரை தந்த கவிஞர் டாக்டர் காரை சுந்தரம் பிள்ளை, வாழ்த்துப் பா அளித்த கவிக்கோ டாக்டர். அப்துல் ரகுமான், வாழ்த்துரை தந்த எழுத்தாளர் செ. யோகநாதன், முன்னுரை தந்த கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆகியோருக்கும் சிரமம் பாராது இருமுறை செய்யப்பட்ட கணனிப் பதிவுகளையும் ஒப்புநேக்குச் செய்துதவியதோடு, சிறப்புப் பாயிரமும் பாடியளித்த கவிமாமணி அகளங்கன், கையெழுத்துப் பிரதியைக் குறைநீக்கப் பார்வை செய்த கவிஞர் அல் அசூமத், பண்டார வன்னியன் பற்றிய மேலதிக தகவல்களைத் தந்துதவிய எழுத்தாளர்கள் ஓ.கே. குணநாதன், முல்லைமணி ஆகியோரும் என்னால் மறக்கப்பட முடியாதவர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகும்.
மற்றும் கணனிப் பதிவு செய்த புத்தளம் திருமதி. பாத்திமா, கல்முனை ஜனாப் ஏ.எம் பறக்கத்துல்லாஹ் அட்டைப்பட ஓவியம் வரைந்தளித்த ஓவியர் ரமணி அச்சுப் பதிவு செய்த தெஹிவல ஏ.ஜே.பிறின்ஸ் உரிமையாளர் ஏ.ஏ.மர்சூக் ஆகியோருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும்.
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
uøtu-/r/JøJetafuaí ösr-justið xxxiii

Page 19
பதிப்புரை
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின்
அனுசரணையுடன்
பண்டார வன்னியன் காவியம் என்னும் இந்நூலை, மருதமுனை அன்னை வெளியீட்டகத்தின் சார்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இது
கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீனின்
ஐந்தாவது காவியப் படைப்பாகும். ஏற்கனவே மேற்படி சபையின் அநுசரணையுடன் “கருகாத பசுமை” என்னும் நாவலையும், “ஜின்னாஹற்வின் இரு குறுங்காவியங்கள்” என்னும் காவியங்களையும் வெளியீடு செய்தோம்.
முன்போல் எமது வெளியீட்டகத்தின் பிரசுரங்களுக்கு வாசகர்களின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.
பரீதா ஷரிபுத்தீன்
அன்னை வெளியீட்டகம்
மருதமுனை
Uரீ லங்கா.
XXxiv εξ στατιτική αρδι{όδοί

காப்பு
அண்டமெலாந் தங்குடைக்கீழ் ஆள எண்ணி
அடாதுசெய்து படைப்பலத்தால் வெற்றி கண்ட மண்டலங்கள் தமைக்கொடுங்கோல் ஆட்சி யாலே
மனம்வருத்திப் பொருள்வளத்தை உறிஞ்சிச் சென்ற பண்டையவெண் பறங்கியர்க்கு இறுதி மட்டும் பணியாது பிறந்தமண்ணின் மானங் காத்த பண்டார வன்னியனின் புகழைப் பாடப்
பண்ணவனே அருள்புரிவாய் நீயே காப்பு 01
அவையடக்கம்
புலர்வதுவிண் மணியெங்கள் புலத்தாம் என்னும் புலவர்மிகு மருதமுனை கிழக்கின் தீபம் புலவர்மணி ஷரிபுத்தீன் ஆயிஷா வின்சேய்
பெயர்ஜின்னாஹற் படைத்தேன்இக் காவி யத்தை புலிகள்வாழ் கானகத்துள் பூனை ஒன்று
புதுவேட்டைக் காரன்போல் நுழைந்த தொப்பப் புலமைமிகு தமிழ்நாட்டின் தலைவன் நாவல்
பாடவிழைந் தேன்தமிழ்த்தாய் ஏற்க வேண்டும் 02
நூன்முகம் பிறந்தமண்ணில் சமவுரிமை பெற்று வாழும்
பேறற்றே அன்னியர்தம் மண்ணில் இன்று பிறப்புரிமை அற்றவராய் அகதிப் பேராய்ப்
பேதலிக்கும் இலங்கை மண்ணின் மக்கள் முற்றும் துறந்தவராய் ஆங்காங்கே இடத்துக் கேற்பத்
தமைமாற்றி வாழுகின்ற நிலைமை தன்னை அறிந்ததனால் மனம்நொந்து முன்னோர் வாழ்வை
அகத்திருத்திப் பார்க்கின்றேன் பாடுகின்றேன்
03 தாம்பிறந்த மண்ணைப்பிற நாட்டா னுக்குத்
தாரைவார்க்கும் மனங்கொண்ட பேரி னையும் தாம்பிறந்த மண்ணையாள வந்த பேர்க்கும்
தமையெமனாய் மாற்றித்தம் விடிவிற் காகத் தாமேமுன் நின்றுகளம் கண்ட வீரர்
தமைநினைந்தேன் இன்றவர்தம் வீரம் ஓதல் தமேமிக வேண்டுமெங்கள் இனத்தோ ருக்குத்
தமதுபரம் பரைவீரஞ் சாற்று தற்கே 04
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 20
எதைஎடுத்துப் பாடுவது கருவாய்க் கொள்ள
ஏற்றதெது எனநினைந்தேன் முன்னர் நானிர் கதைகளினைக் காவியங்க ளாக்கி வென்றேன்
'ஹஸன்’ என்னும் தமிழ்நாட்டின் நாவல் மன்னர் கதைகளவை 'மஹற்ஜப்பீன் புனித பூமி
காவியங்க ளானதென்றன் கவிதை கொண்டு புதிதாக என்வேட்கை தணிக்க யாது
புகலுவதோ என்றிருந்த போதே ஈழத்
05 தலைநகரில் கொழும்புத்தமிழ்ச் சங்கம் ஒர்கால்
தந்ததென்றன் முத்துநகை” கவிநூலுக்கும் தலைவர்கரு ணாநிதியின் பண்டார வன்னித்
தமிழ்வீரன் பெயர்கொண்ட புதினத் திற்கும் தலைமைப்பரி சில்களென ஆயி ரத்துத்
தொளாயிரத்து எண்பத்து ஒன்ப தாண்டில் தலைவரொடு சேர்ந்தொன்றிப் பரிசில் கொண்ட
தகைமையினா லவர்தம்மின் தமிழைத் தேர்ந்தேன்
06 தொடர்ந்திரண்டு காவியங்கள் இஸ்லாத் தோடு
தொடர்புறவே பாடியப்போல் பொதுவாய் இன்றுந் தொடர்ந்தியற்ற வேண்டுமென்றார் எனது ஆசான்
எஸ். டி. சிவ நாயகரென் தமிழ்மா மேதை தொடர்ந்தேனவர் ஆணைதனைத் தமிழ்ப்பா யாப்பில்
தொடர்விகற்பம் செய்தேன்நான் படிப்போ ருக்காய்த் தொடர்ந்ததுபோல் பலசெய்ய நீண்ட ஆயுள் தேகநலம் தரஇறையை வேண்டி னேனே
07 PFpb(b
சுற்றிவங்கக் கடலன்னை தொட்ட ணைப்பாள்
சுகந்த முல்லைக் கான்பரந்து அழகு செய்வாள் பொற்புறுநல் வயல்கொழித்தே பஞ்சப் பேயைப்
போவென்றே துரத்திடுவாள் மருதப் பெண்ணாள் கற்புடைப்பெண் டீர்நெஞ்சத் தலங்கள் போன்றே கைதொடும்வா றாகாயப் பந்தல் அண்மி நிற்பவளோ குறிஞ்சிவஞ்சி நாப்பண் எங்கள்
நிறைநாட்டின் பேறுவேறெந் நாட்டுக் குண்டோ
08
υιτφου στAσίματα, (τα διαιίο
2

வான்நோக்கி உயர்ந்தமலைத் தொடர்கள் ஊறி வண்டலொடு கரைபுரண்டு விளைநி லங்கள் தான்தனக்கென் றள்ளியள்ளிப் பருகி எல்லாத்
தானியங்க ளாலும்வயல் கொழிக்கச் செய்யும் கோனளித்த கொடையாமே நதிகள் எங்கும்
குதித்தோடிக் கடல்சேரும் இயற்கை கொண்ட தானமன்றோ நாம்பிறந்த ஈழ மண்ணின்
தவமன்றோ நம்நாட்டின் சிறப்பா மன்றோ
09 மாதமும் மாரிபெய்யும் எங்கள் மண்ணில்
மருதமொடு குறிந்ஞ்சிநெய்தல் மகிழும் மேகம் தோதாகச் சுற்றியுள்ள வாரி திக்குள்
தோய்ந்தெழுந்து வானுயர்ந்து மழையாய்க் கொட்டும் சீதளத்து மலைப்புலத்தே குளிரும் சுற்றிச்
சீரான உட்டணமும் இடைநி லங்கள் மீதமில்லா திருபாங்கின் சமமுங் கொண்டு
மனுக்குலத்தை வாழவைக்கும் மேன்மை நாடே
O கடலளிக்கும் முத்தோடே பவளம் பூமி
கலந்துறையும் மற்றேழு மணிகள் சேர்ந்தே பிடியிடையர் தமக்கென்று சொந்தங் கூறும்
பொன்னணிசேர் நவமணிகள் கொண்ட நாடு கடல்வளமும் நிலவளமும் சேர்ந்தொன் றாகிக்
கவலறவே வாழ்கவெனத் தெய்வம் தந்த கொடையீதாம் எனப்பெருமை கொண்டோர் வாழும்
குவலயத்தில் ஈடாய்வே றில்லா நாடே
1 தொன்றுதொட்டு இன்றுவரை தேசந் தோறுந்
தேடிவந்தார் வருகின்றார் மணப்பொ ருட்கள் பொன்றாத பெருந்திருவாய் விளைவ தாலே
புவியுள்ளே முதன்மையுற்ற காரணத்தால் குன்றாத செல்வமெங்கள் நாட்டி லின்று
கொக்கோவும் தேயிலையும்பெருந் தருக்கள் தானே தெய்வத்தின் பரிசென்றால் பொய்ய தாமோ
12
ஜின்னாவூர் ஷரிபுத்தின்

Page 21
சிங்களமும் செந்தமிழும் மொழிக ளாகும்
சேர்ந்திருக்கும் ஆங்கிலமும் பொதுவ தாகும் இங்குபெளத்தம் இந்துஇஸ்லாம் கிறுஸ்த்து வேதம்
எனநான்கு மதத்தவர்கள் வாழுகின்றோம் தங்குதடை எங்குமிலை அவர வர்தம்
தெய்வவழி பாட்டினுக்கு அதிக முள்ளோர் சிங்களவர் பெரும்பான்மை பெளத்தர் அன்பால்
சேர்ந்தொன்றி வாழ்ந்தொருக்கால் இருந்தோ மம்மா
வன்னிநாடு
வடக்கினிலே யாழேரி தெற்கே எல்லை
வாரிதிக்கு முகங்கொடுக்கும் அரிவி ஆறும் உடன்ஒருபால் நுவரகலா வியமா வட்டம்
ஒன்றுந்திரி கோணமலை கிழக்காம் மேற்கே இடங்கொண்ட மன்னாரும் வன்னி மண்ணின் எல்லைகளாம் சுமார்நான்கு ஆயிரம் கல் உடையதது பரப்பளவில் அடங்காப் பற்றென் றோதினராம் ஒர்காலம் மண்சி றப்பால்
யாருக்கும் அடங்காது திறைசெ லுத்தா
திருந்ததனிப் பெருமைகொண்ட கார ணத்தால் பேர்வந்த தாம்அடங்காப் பற்று என்றே
பெருமைமிக்க வீரமன்னர் ஆண்ட நாடு சூரியனே அஸ்தமிக்கா நாட்டோர் கூடத்
திணறியதிம் மண்ணாண்ட வீர ராலே போருக்காய்ப் பீரங்கிப் படையோ டுற்றும்
போர்வாளும் ஈட்டியொடும்பொருதி னோர்கள்
அடங்காப்பற் றென்றிருந்த வன்னி மண்ணை
ஆண்டவனே இறுதித்தமிழ் மன்னன் பாரில் அடங்காத பற்றுடைத்தார் மக்கள் மண்ணில், அரசனுமவ் வாறேதம் மக்கள் மீதும் அடங்காத பற்றுவைத்தே ஆண்டான் யார்க்கும்
அடங்கவில்லை மன்னனொடு மக்கள் தாமும் அடங்காது சுதந்திரராய் இறுதி மட்டும்
அன்னைமண்ணைக் காத்தபுகழ் கொண்ட பேரே
13
14
15
υ σατι - τιταμ στατου στα τα δυυb

வன்னியர்கள் வாழ்ந்ததனால் வன்னி யென்றும்
வன்னியெனும் வனம்சார்ந்தே இருந்த தாலும் வன்னியெனும் நெருப்பையொத்த குணத்தால் கோபம்
வீரரோசத் தன்மானச் செருக்கி னாலும் வன்னியென்ற பெயராலே அழைக்கப் பட்ட
வரலாறு பலவுண்டாம் அனைத்தின் மேலாய் வன்னிசார்ந்த மண்ணென்றே கார ணப்பேர்
வழங்குவதே சிறப்பென்பர் வரலா றாய்ந்தோர்
மருதமொடு முல்லைநெய்தல் மூன்றும் சேர்ந்து முத்தமிழுக் கொப்பாகும் வன்னி மண்ணாம் பெரிதுமங்கே வயலைநம்பி வாழ்வோர் மிக்கோர்
பிறதொழிலில் பெருநாட்டம் கொள்ளார் அன்று பெரும்பாலோர் படைகளில்முன் செல்லும் வீரர் புறமுதுகிட் டோடவைக்கப் பொருதும் தீரர் திருவனைத்தும் கொண்டதனால் வேற்றார் மூலம்
தேவையற்றுத் தன்னிறைவு கொண்டே வாழ்ந்தார்
18 கண்காணும் இடங்களெல்லாம் வயல்கள் செந்நெல்
களஞ்சியமாம் வன்னியெனில் பொய்யே இல்லை உண்ணுதற்குப் போகளஞ்சும் நெல்லை மற்ற
ஊர்களுக்குந் தந்திடுவார் பண்ட மாற்றாய் விண்ணை முட்டும் கதிர்க்குவியல் வெட்டுக் காலம் வயல்நடுவே குவிந்திருக்கும் எருமை கட்டிப் பொன்மணியாய் நெல்லையுதிர்த் தெடுத்துத் தூற்றிப் பட்டறையில் சேர்த்துவைப்பர் வன்னி மக்கள்
19
(வேறு) பழவகை
வீரைபலா விளாமகிழம்
வெடுக்குநாறி துடாரிஈச்சை காரைநாவல் நறுவிலியும்
கரையாக்கண் கரம்பையோடு சூரைகூழா பன்னைநுரை
சேர்கரம்பை யோடுலுந்தை கார்கறுக்காய் முந்திரிகை
காணும்வன்னிக் கனிவளமே
20
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 22
மரங்கள்
வன்னியெனில் காடடர்ந்த
வலயமென்பர் ஆங்குவளர் பொன்னளிக்கும் பெருமரங்கள்
புகன்றிடவோ கொஞசமில்லை. தென்னைபனை கமுகுபலா தோடைமா போன்றுபல வன்னியரின் வீடுசுற்றி
வளருவன தவிர்ந்தின்னும்
மருதரசு மாவிலங்கை
முதிரைபுன்னை தில்லைவிழா அருநெல்லி காஞ்சூரை
ஆத்திஎட்டி குருந்துகூமா பிராசணிஞ்சில் தேவதாரு பூவரசு பாலைதேற்றா கருவாகை துவரைஅகில்
கள்ளிவில்வை சாளம்பை
பாலைபன்னை சமண்டலையும் பலாசுவீரை வன்னிநாகை ஆலமரம் அருநெல்லி
ஆவாரை அத்திகாஞ்ஞா வேல்இலுப்பை இத்திகூளா
வெப்பாலை சமுளைகருங் காலிஈச்சை விண்ணாங்கு
கறிவேம்பு கொண்டல்வேங்கை
வெடுக்குநாறி முரளிஉயில்
வெள்ளெருக்கு நெல்லிவாகை அடம்புமலை வேம்பிலவு
அகத்திகாட்டு ஆமணக்கு கடம்புபுங்கை முள்ளிலவு
கல்லால்தரணி சூலைநாவல் எட்டிஉயில் முரலிபம்பை
ஒதியம்நொச்சி போற்பலவாம்
21
22
23
பண்டாரவன்னியன் காவியம்

உணவுவகை கானமரக் கொம்பரிலே
கவர்ந்தெடுத்த செந்தேனும் ஊனிறைச்சி மீன்வகையும்
உறைதயிரும் பால்நெய்யும் தேனிகர்த்த முக்கனியும்
தூயமரக் கறிவகையும் மானுடரின் நோய்தீர்க்கும்
மூலிகையும் செறிநாடே
25 இரகசியத்துது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம்
பாரதத்தில் பறங்கியரை எதிர்த்தே யன்னார் அதிகார ஆதிக்க வெறிய டக்க
அஞ்சாதே கட்டபொம்மன் போன்றோர் தம்மின் உதிரவெள்ளம் ஒட்டிடவும் துணிந்த போழ்தே
ஒன்றியுள்ள இலங்கைமண்ணில் ஆங்கி லேயர் பதம்பதித்து நிலைக்காது விரட்டி யோட்ட
போர்க்குரலுங் கொடுத்தனனே வன்னிக் கோனே
26 காட்டாற்று வெள்ளத்தைக் கரங்க ளாலே
கடந்தோடா நிலைநிறுத்திக் கொண்ட தொப்பும் மேட்டிமையாம் செய்கையது வென்றிட் டாலும்
மனவோர்மை கொண்டிட்டான் வன்னி மன்னன் நாட்டின்நாப் பண்ணமைத்த கண்டி மன்னன்
நாசகரை எதிர்த்திட்டான் மண்ணைக் காக்கக் கூட்டாக இலையெனிலும் இருபே ருக்கும்
கொள்கையொன்றே வெள்ளையனை விரட்டல் தானே
27 அக்காலப் பகுதியிலோர் இரவுப் போழ்தில்
அடர்ந்தெ.கிக் கருமைசெறிந் திடாத வேளை மிக்கபுலன் சுற்றுமுற்றுங் கொண்டே மூவர்
மண்ணுமுணர்ந் திடாராகக் கடலை நோக்கித் திக்கெட்டும் விழிவேலைச் சுழற்றிச் சென்றார்
தமைப்பிறரின் கண்மறைத்தே ஒட மொன்று பக்கமவர் வரும்வரையும் ஆழி யோரம்
புறப்படற்குத் தோதாகக் காத்தே நிற்கும்
28
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 23
உடல்நோக்கிக் கால்விரைந்தோ ருள்ளே தன்னைக் கடினபட்டுத் தலைப்பாகை சரிகை யோடே உடல்மூடும் மேலங்கி முழந்தாழ் மட்டும்
ஒன்றியவா றமைந்திட்ட வேட்டி கட்டித் திடன்காட்டப் பெருவிழிகள் வீரம் காட்டச் சற்றுநீண்ட மீசைமனத் துணிவு காட்ட உடனிடையிற் புறந்தொங்கும் வாளி னோடே
ஒர்லிகிதம் மறைந்திருக்க ஒருவன் சென்றான்
தொடர்ந்திருவர் புறமிரண்டும் சற்றுப் பின்னே
சென்றார்கள் பொதுவுடையில் பணிவோ டன்னான் உடன்பயணம் செய்யவவன் நண்ப ராவர்
ஒருவன் 'பர தன்'மருதன் மற்றோன் மீனோர் கடல்தாண்டுந் தோணிக்குச் சொந்தக் காரர்
கால்பதியும் மண்ணுக்குஞ் சொந்தக் காரர் தடந்தோளின் வீரனவர் தலைவன் பேரோ
சுந்தரலிங் கம்மென்பான் தூதாய்ச் சென்றான்
30
வீரபாண்டி யன்கட்ட பொம்மன் நண்பன்
வீரசிங்கன் படைத்தலைவன் வெள்ளைத் தேவன் ஆருயிரா யானநண்ப னாவான் அந்த
ஆற்றல்மிகு சுந்தரலிங் கம்மென் வீரன் போர்முகத்தில் முதல்வன்தான் பிறந்த மண்ணைப்
பிறர்கொள்ள நினைப்பதையும் பொறுக்கான் தாழ்ந்தோர் சேர்ந்தகுடிப் பிறந்துதமிழ் மண்ணைக் காக்கத் தோள்தட்டி முன்நிற்கும் திண்தோள் வீரன்
31 உருண்டு திரண் டகன்றபெரு மார்பு தோள்கள்
உயர்ந்தபெரும் பருவதங்கள் உடலந் தாங்கும் இரும்பனைய கால்கள்கை யிரண்டும் வேல்வாள்
இயக்கியுரம் பாய்ந்தன.கன் துண்டம்: நோக்கும் பெருவிழிகள் வீரத்தின் பிரதிபாதம்
பதிந்தெழுந்து பயிலுநடை ஏறாம் வெற்றித் திருவனை யவுருவாமென் றைய மற்றே
செம்பும்வா றிருந்தனனே அரிமா போன்றே
பண்டாரவண்ணியண் காவியம் 8

தண்ணொளியைத் தூவுகின்ற நிலவு பாதி
தெரியாதே காய்ந்தனனே நிகழ்ந்த தென்னே வெண்சோற்றுப் பருக்களை இலையில் அள்ளி
வீசியது போலிருப்ப தவன்கூ றாமோ கண்ணையள்ளும் குறுணிகளாய்த் துலங்க
கூறிட்டே எறிந்ததுபோல் விண்மீன் கூட்டம் மண்ணணைக்கும் அலைக்கரமும் நிலமும் ஒன்றி
மினுங்கியெழில் காட்டிடல்போல் துலங்கி னானே
33 மறைந்தொளிந்து செல்லுமவர் மாற்றார் கண்ணில்
மோதுண்டால் அகப்படுவர் என்றோ வானும் மறைத்ததவர் வருகையினை மதியில் பாதி
மறைந்திடக்கார்ப் போர்வையினால் மூடி நின்றான் குறைந்தவொளி தனிலுமவர் கடலை நோக்கிக்
கால்தொடுத்தல் புலப்பட்டே வானை வென்றும் அறிந்திலர்யார் தனினுமவர் செய்கை தோணி
அருகூர்ந்து பயணிக்கத் துணிந்திட்டா டாரே
34 தொடர்ந்தொன்றின் பின்னால்மற் றொன்று மாகத்
தாவிவரும் அலைக்கரங்கள் தடுத்தும் அன்னார் விடாதொன்றும் முயற்சியினால் அலைகள் தோற்க
வீறுகொண்டே தோணிகடல் மீது தாவும் விடைகொண்டு கடலேக மன்னர் மீண்டும்
விழிச்சரத்தால் கரையாய்ந்தார் பார்வை தன்னில் தொடருமெவர் தாமுமிலா திருத்தல் கண்டே
திருப்தியொடு மூச்செறிந்தார் மகிழ்ந்திட் டாரே
35
கூடவந்த நண்பரிலே ஒருவன் முன்னர்
குதித்தமர்ந்தான் தோணியில்கைத் துடுப்பெ டுத்தே ஒடத்தை நிலைப்படுத்தி மற்றோர் தாவ
உந்துகையில் தொலைவிலவன் கண்ட காட்சி கேடுவந்த தெனப்பாங்காய் ‘உஸ்சென் றேமென் குரல்கொடுத்தே மறையுங்கள் எனப்ப னிக்க நாடியவர் தோணியின்பின் ஒளிந்தார் முன்னோன்
நெடுங்கிடையாய்க் கலத்துள்ளே நழுவி னானே
36
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 24
சீருடையில் பரியேறிச் சிலசிப் பாய்கள்
சென்றார்கள் மணற்பரப்பில் கடலோ ரத்தில் யாருமிலா திருப்பதனால் திருப்தி யுற்றோ
இடம்பெயர்ந்தார் துப்பாக்கி சகித மானோர் கார்சற்றுப் பெருகியேவான் மதியை மேகம்
குருடாக்கி நிலைத்ததனால் சிறிய போழ்து யாருமவள் மூவரையும் கண்டா ரில்லை
இயற்கையும்தன் பங்களிப்பைச் செய்த தன்றோ.
சூழ்நிலையும் ஒத்துவரத் தப்பித் தோர்கள்
தொடர்ந்தனர்தம் பணிநீரில் தரித்து நின்றோர் தாள்தொட்டுத் தடவுகின்ற அலைவி டுத்துத்
தோணியுள்ளே தனித்தனியாய் ஏறிக் கொண்டார் தோள்துணையாய்த் தலைவனொடு வந்தோர் தத்தம் துடுப்புகளைக் கையேந்தித் தொடுத்தார் மெல்ல ஆழ்கடலை நோக்கியவர் பயணம் மற்றோர்
அலையணைக்கும தரையிறங்கத் தொடங்கிற் றன்றோ
38 படகோட்டும் கலையினிலே ஆனை கட்டும்
பணிக்கருக்கு நிகராவோம் என்பார் போன்றே தொடர்ந்தெழுந்து மடிந்துவிழும் அலையுட் புக்கித்
தாவியவர் செல்லுகின்ற திறனைக் காணின் துடுப்பையுமோர் அங்குசமாய்க் கரியாம் தோணி
தோன்றுவதற் கொப்பாக விருந்த தோர்சாண் விடுத்தகலா வாறுசெல்லுந் திக்கை நோக்கி
விரையவிட்டார் விண்மீன்கள் திசைகாட் டிற்றே
39 தரைவிடுத்துச் சிறுதொலைவு சென்றே ஆழித்
தொல்லைகடந் தோடுகையில் தலைவன் தம்மின் அரையிருந்த மடிவிடுத்துத் தாம்பூ லத்தை
அசைபோடக் கையெடுத்து மடிக்க லானான் நரம்புருவி வெற்றிலையில் வெண்சாந் திட்டு
நறுமணப்பாக் குடன்கூட்டி ஏலம் சேர்த்துப் பொருந்துமள வாகவேநற் புகையி லையைப்
பக்குவமாய் ஒன்றாக்கி வாயி லிட்டான்
40
uaorv.srg-2 at stu si as/r-Susúb ()

தானுண்ணும் வாறேதம் நண்ப ருக்கும்
செய்தளித்தான் அவன்செய்கை உடன்வந் தோர்கள் தோணியோட்டும் பேரெனினும் தோள்தாங் குந்தன் தோழர்தாம் என்பதையும் உறுதி செய்யும் காணாக்கண் தொலைதூரம் கடல்தாண் டிப்போய்க்
கடமையொன்றை நிறைவேற்றும் கருத்தாய்ச் செல்லத் தோணுமிட மனைத்தும்நீர் தனைத்தான் நோக்கித் தோன்றாத கரைநோக்கித் தொடர்ந்திட் டாரே
41 தந்தையின்தோள் நழுவித்தாய் மடியில் பாயும்
சிறுமழலை போலும்சிற் றலைகள் மீதே உந்தியுந்திப் பாய்ந்தெழுந்து வீழும் தோணி
உடனிருப்போர் தமையுமென்ன தாலாட் டிற்றோ விந்திவிந்தி நடக்குமொரு நொண்டி போலும்
வானரத்தின் துள்ளலொடும் காற்றுக் கேற்பப் பந்தயத்தில் பாய்ந்தோடும் பரிக்கு வப்பாய்ப்
பயணத்தைத் தொடர்ந்ததுவே பாய்வி ரித்தே
42
நீளநெடுந் தொலைதூரம் விடியு முன்னே
நினைந்தகரை சென்றடையும் நோக்கி னோடு தோள்வலியுந் தோன்றாதே தோணி யோட்டும்
திறங்காட்டத் தப்படித்தார் தொடர்ந்தி சைத்தே ஆழிப்பெரு நீர்த்தடத்தைக் கீறிப் பாயும்
ஆற்றலொடு பயணிக்கும் தோணி தாங்கும் தோழர்கள் சோர்வகலத் துணிவுந் தோன்றச்
சப்தமிட்டுப் பாடிவந்தார் பொருள்பொ தித்தே
43
"வானமது பொழிந்திடவே தாங்கும் பூமி
விளைவுதர மன்னவனின் காணி கட்காய் ஏன்கொடுப்ப தாம்கிஸ்த்தி” என்றே நண்பர்
இருவருமே மாறிமாறிப் பாடக் காற்று வானலையில் கொண்டுசென்று திக்கெட் டிற்கும்
விரவிவிட்ட போதினிலும் செவிகொள் வோர்கள் தானற்றுப் போனதனால் மீண்டே யன்னாார்
தலைவன்தம் செவிப்பறையைத் தட்டிற் றன்றோ
44
ஜிண்ணாஜர் ஷரீபுத்தீண்

Page 25
பொருள்பொதிந்த பாடல்செவி புக்கி யந்தப்
படகிருந்த தலைவன்மனக் கொந்த ஸ்ரிப்பை உருவாக்கி விட்டதவன் பறங்கிப் பேரை
உறுதிகொண்டு போர்முனையில் விளித்த த..தே இரவெல்லாம் பயணித்து இலங்கைத் தீவின்
எல்லையொன்றாம் முல்லைத்தீ வடைதல் வேண்டும் இராமேசு வரம்பருத்தித் துறையின் தெற்கே
இருப்பதந்தப் படகுத்துறை முல்லைத் தீவாம்
45 வந்தபணி முடிந்தவுடன் தமிழ கத்தை
வந்தடைய வேண்டுமென்ற பணிப்பு நெஞ்சில் உந்திடவே அவன்பணிபால் கொண்ட ஆர்வம்
ஓங்கியதால் மனவேகம் உடன்சேர்ந் தோங்கும் பிந்தியிராப் போழ்தாகி வான்ப ரப்பில்
பரவியொளி தந்தவிண்மீன் கூட்டம் தம்மைச் சந்திரனின் துணையோடே இருட்போர் வைக்குள்
சென்றுதுயில் கொள்ளமறந் தொளிந்த தன்றோ
46 இருளடைந்த வானிற்கரு ம்ேகம் சூழ்ந்தே
எண்ணியொவ்வோர் துளித்துளியாய் நீரைத் தூவி உருமாறிப் பெருமழையாய்க் கணப்போழ் துக்குள்
ஓலமிடும் காற்றோடு கூட்டுச் சேர்ந்தே விரிவாகிப் புயலாக வடிவம் பெற்றே
வீறுகொண்டு பொழிந்ததுவான் விளங்கா வாறே புரியாதெத் திக்கதென்று திணறும் வாறாய்ப் போனதுமின் னோடுமிடி ஒன்றிற் றம்ம
47 காற்றோடு மழைகூடிப் புயலு மாகிக்
கடல்பொங்கி மேலெழுந்து புரண்டு வீழ்ந்து போர்க்கோலம் போடுகையில் பரதன் பாயால்
போர்த்துவிட்டான் தலைவனைத்தான் நனைந்த வாறு ஏற்பதன்றி வழியில்லாத் தலைவன் கேட்பான் ஏனெனக்கு மட்டும்நீ நனைய வென்றே மாற்றுவழி இலையுன்னோ டிருக்கும் அந்த
மடல்நனையா திருப்பதற்குந் தாமே என்றான்
பண்டாரவண்ணியண் காவியம் 12
 

தொடர்ந்துமழை பொழிந்ததுபேய்க் காற்றுச் சற்றுந்
தணியாது சிறியது கடற்பரப்பிற் படர்ந்துபுனல் அள்ளிப்பெரு வானை நோக்கிப்
பேரொலியோ டெறிந்தேவான் சினமுங் கொண்டே இடிதொடர மின்னலைமுன் அறிவிப் பாக்கி
எச்சரிக்கை செய்ததுகாற் றஞ்சா தின்னும் விடாதுதன தார்ப்பரிப்பை முடிவி லாதே
வாரிதிக்குத் துணைசெய்தே வென்ற தன்றோ
49 காற்றோடு மழையோய்ந்து புயலும் ஓய்ந்து
கடலமைதி கொண்டதுவான் வெளித்த பின்னே தோற்காதே அத்தனைக்கும் ஈடு தந்து
தோணியோட்டித் திசையறிந்தே வந்த பேர்கள் ஈற்றினிலே தொலைவினில்தாம் இறங்கு கின்ற
இலங்கைத்திரு நாட்டின்கரை யோரங் கண்டார் போற்றிநன்றி கூறினனே தலைவன் நண்பர்
பெருந்துணிவைத் தோளனைத்துப் புகழ்ந்திட் டானே
50 இத்தனைக்கும் அவன்கொணர்ந்த மடல்யார்க் கென்றும்
என்னஅதில் உள்ளதென்றும் அறியா நண்பர் ஒத்தகுரல் தனில்தலைவன் தன்னை நோக்கி உரையாயோ கடிதத்தின் விபரம் என்றார் சத்தியமாய் நான்தவறு செய்தோன் ஆவேன்
செய்தியென்ன தானென்றே சொல்வே னாயின் உத்தமனென் நண்பனுக்கும் நாட்டிற் கும்நான்
ஒரேசெயலால் துரோகமிழைத் திடேனே என்றான்
51 சேதியென்ன வென்றுசொல்லல் தவறே யார்க்குத் தானிதுவென் றுரையார்தான் தந்தார் என்றால் தீதெதுவும் உனக்குவரின் பொறுப்பை நாங்கள்
தாங்குகின்ற கடமையுண்டு அறிவாய் என்றார் ஈதளித்தோன் பாஞ்சாலங் குறிச்சி வேந்தன்
இணையில்லாத் தளபதியாம் வெள்ளைத் தேவன் ஒதிடவோ யார்க்கென்று இதோயில் வோலை
ஏவர்க்கென்று உரைக்கும்நீர் பாரும் என்றான்
52
13
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 26
வேண்டாமே வேண்டாமென் றிருபே ரும்தம்
வதனங்கள் வேறுபுறந் திருப்பிக் கொண்டே வேண்டாத விடயமிது எமக்கு ராஜ
விவகார ரகசியங்கள் வேண்டா மென்றார் வேண்டாத தொன்றில்லை வெள்ளைத் தேவன்
விபரமொன்றுஞ் சொல்லவில்லை அறியேன் நானும் வேண்டாத விபரங்கள் நமக்கு வேண்டாம்
விலாசமிட்ட வரிகளைநீர் பார்ப்பீர் என்றான்
53 முகத்திலிடித் தாற்போற்கை நீட்டி யந்த
முகவரியைக் காட்டினனே தலைவன் மற்றோர் அகத்தாசை முகத்தோற்றப் பொலிவில் காட்ட
ஆவலொடு இமைவிரித்து நோக்கி னார்கள் பகைக்கஞ்சாப் படைத்தலைவன் வெள்ளைத் தேவன்
பண்டார வன்னியருக் கென்றே ஒலை முகத்திரையில் பதித்திருந்த தாமே கண்டு
மன்னர்குல சேகரர்க்கென் றறியக் கண்டார்
54
வழியில் கண்ட வயோதிபர் ஆழ்கடல் தாண்டி வந்தோர்
அண்மிடும் கரைகண் டார்கள் பாழ்படு புயலும் வான்செய்
பருமழைப் பொழிவும் வென்றார் தோள்வலுக் கொண்ட தீரர்
தரைகண்டு தலைவன் நோக்கிக் கேள்வியொன் றுரைத்தார் எங்காம்
கரைசேர்வ தெனவாம் அ.தே
55 பரதனின் கேள்வி வாங்கிப்
பதிலென உரைப்பான் என்ன பரதாநீ அறியான் போன்றே
பேசுதல் வன்னிக் கோட்டை அருகமைந் திருப்ப தெ..தோ
அத்துறை நோக்கு என்ன மருதுரை செய்வான் சிலாவ
மரக்கலத் துறைய.. தென்றே.
56
uazrz_/r1g42 gasitasfaras abrub 14

மருதனின் முடிவு கேட்டு
வற்றாப் பளையைத் தாண்டி மருவுபண் டார வன்னி
மன்னனின் கோட்டை நாடிப் கரையடைந் தார்கள் சற்றுக்
களைநீக்கித் தலைவன் சொல்வான் இருவரும் ஈங்கு றைவீர்
இரவுநான் மீள்வேன் என்றே
57 சுந்தர லிங்கஞ் சொன்ன
சேதியைச் செவியுள் வாங்கி வந்தாலென் னொருவர் கூட
வழித்துணைக் கென்ன வெண்டாம் எந்தனுக் குதவத் தோன்றின்
இருப்பவர் தனிப்பார் வேறோர் சிந்தனை வேண்டாம் நானே
செல்கிறேன் தனித்தே என்றான்
58 கடலோரம் யாரு மெம்மைக்
கவர்ந்துசென் றிடார்கள் நீயோ கடந்துசென் றிடவுள் ளாயோர்
கானக வழியை ஆங்குக் கொடுவன விலங்கும் ஊரும்
கொடுவிட வுயிரும் உண்டாம் உடனெம்மில் ஒருவர் வந்தால்
உவப்பெனப் பரதன் சொல்வான்
59 யாருமே வேண்டாம் என்றே
இடையினில் தொங்கும் வாளைப் பாரெனச் சொல்வான் போன்றே
பிடித்திழுத் துயர்த்திக் காட்டி நேருவ தொன்றும் இல்லை
நீங்களிங் கிருங்கள் என்றான் சூரியன் சுடரில் வாளும்
துலங்கி "ஆம்" எனவொப் பிற்றே
60
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 27
வானினைத் தொடவோ அந்த
வனத்திடை மரங்கள் ஓங்கித் தேன்தரு வதைகள் தாங்கித்
திகழ்ந்தன அவற்றைச் சுற்றிக் கான்வளர் கொடிகள் மேவிக்
கணவனைத் தழுவும் பெண்ணப் நாணமற் றிருத்தல் கண்டே
நகைத்தடி தொடர லானான்
சொரிந்தன மலர்கள் கொன்றைத்
தார்விடுத் துதிர்ந்தே ைெ! போன் சொரிந்தனன் மரங்க ளுடே
செங்கதிர்ட் பூவைச் செங்கை விரிந்தன பங்க யங்கள்
வான்சுழல் பரிதிக் கென்றோ பொருந்திய தனைத்தும் அந்தப்
புயபலத் தானுக் கென்றோ
குயிலினங் கூவிற், றொன்றிக்
குதித்தன வான ரங்கள் மயில்களும் அகவப் பாயந்தே
மானினம் களிக்கும் பூவில் அயர்விலா மதுவை மாந்தும்
அளிகளும் பாடிற், றிந்தச் செயலெலாம் இவனுக் கென்றா
தெரிகில யாருக் கென்றே
புற்புதர் தாண்டிக் கானப்
பெருவெளி நடந்தான் கானின் அற்புத அழகில் நெஞ்சை
அளைந்தனன் சோர்வி ழந்தான் முற்பிறப் பொன்றி ருந்து
முல்லையில் வாழ்ந்தா னொப்பச் சொற்பமும் புதியோ னென்னத்
தேரிலா தேகி னானே
6
62
63
64
uørv-/r/J-2 ársful ot &/r-Sustið

ஒற்றனாய் ஒலை தாங்கி
உரியவர் கையில் சேர்க்கும் பொற்புறு பணிமேற் கொண்டே
பெருங்கானும் ஊரும் தாண்டி வற்றாப் பளைப்பா தைக்கு
வந்துசேர்ந் தனனே கோட்டை உற்றதப் பகுதி யென்னும்
உறுதியால் மகிழ்வு கொண்டான்
65 ஊர்களி னிடையே மக்கள்
உறைபதி வேறு வேறாய்ச் சீர்பெறச் சமைந்தி ருக்கும்
செம்மையைக் கண்ணுற் றேதன் ஆர்வமே லிட்டால் ஒவ்வொன்
றாய்ந்தனன் அழகு கண்டான் தேரிலன் எவ்வா றந்தத்
தலங்களைச் செய்தா ரென்றே
66 அமைப்பினில் வேறு வேறாய்
அமைந்திருந் தனவே ஒவ்வோர் அமைப்பிலும் புதுமை கூரை
அழகுற ஓலை வைக்கோல் தமைத்தொடுத் தழகாய்க் கட்டித்
தரைசுவர் களிமண் கொண்டும் சமைத்திருந் தார்கள் பர்ண
சாலைகள் தோற்றுப் போமே
67 முற்றத்தில் திண்ணை யோடே
முன்புறப் பந்தல் கூட்டிச் சற்றுமற் றனைத்தி லும்தன்
தனிமையைக் காட்டும் பாங்காய் உற்றன ஒன்றி ரண்டாம்
உறுதியாய் முதிரை காயா வற்றலாம் வைரம் பாய்ந்த
வகையறா மரங்க ளாலே
68
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 28
வீடுகள் தோறுஞ் சுற்றி
விளைந்திருந்த தனமா வாழை தோடைமா துளைப லாவும்
தென்னையும் பனையும் காய்த்தே ஆடுமா டெருமை வேறாய்
அமைந்துள தொழுவந் தன்னில் கூடிநெல் பொறுக்குங் கோழிக்
கும்பலும் கண்டா னாங்கே
முப்போகம் விளைந்த தாலே
முற்றத்தில் பட்ட றைகள் வைப்பிடம் மீறிச் சுற்றி
வீழ்ந்தநெல் குவியல் செல்வ ஒப்புதல் காட்டும் யார்க்கும்
உணவிலை இல்லை என்றே செப்புதற் கெளிதோ கொண்ட
திருநோக்கிக் களித்திட் டானே
மற்றொரு புதுமை கண்டான்
முற்றங்கள் அனைத்தும் அன்று அற்புதச் சோட னைகள்
அழகுசெய் திருத்தல் நன்றாய் முற்றிய காய்க ளோடே
முதிர்ந்தநல் வாழை கட்டிச் சுற்றியே தோர ணங்கள்
சேர்த்துமாக் கோலம் காணும்
கண்காணும் திக்க னைத்தும்
கண்டவவ் விழாக்கோ லத்தின் உண்மையை அறிய ஆசை
உந்திட விளைந்தும் ஆங்குக் 8560öTU(6 LDITABI uJT(bLD
காணாது கண்டே மீண்டும் தன்வழி தொடர்ந்தான் ஓர்இல்
திண்ணையில் கண்நி லைத்தான்
69
70
71
72
uatu Arpajakafusat stajuub

யாருமே அற்ற ஊர்கள்
இலைமன வாடை என்றே தேராத புதுமை விஞ்சிச்
சுந்தர லிங்கஞ் செல்ல ஒரில்லத் திண்ணை தன்னில்
உறங்குவார் போலோர் மூத்தார் வேரற வயதில் சாய்ந்தே
வீற்றிருந் தாரே கண்டான்
73 தெரியாத விபர மெல்லாந்
தெரிந்திட லாமே என்றே அருகினில் சென்றான் அந்த
அரவத்தால் எழுந்தி ருந்தே பெரியவர் பூார்நீ யென்றே
பேச்சினைத் தொடங்க மூச்சுக் கருகியே திணறிக் கக்கிக்
கொண்டசற் றயர்வ டைந்தார்
74 மார்பினைத் தடவி ஒரீர்
மிடறுதண் ணிரைத் தந்தே சீர்பெற மீண்டுந் தன்னைச்
சுதாகரித் தெழுந்தி ருந்து யாரப்பா நீயு னக்கு
என்னதான் வேண்டு மென்ன ஊர்தமிழ் நாடே இங்கோர்
உயர்பணிக் குற்றேன் என்றான்
75 அரண்மனை தன்னில் உங்கள்
அரசரைக் காண வந்தேன் வருவழி தன்னில் கண்ட
விசித்திரம் அறியச் சொல்வீர் தெருவெலாம் அலங்கா ரங்கள்
செய்துளார் ஊரில் மக்கள் ஒருவரும் இலாதி ருப்ப
தேனெனத் தெரிகி லேனே
76
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 29
திருவிழாக் கோலம் பூண்டித்
தெருவெலாம் இருப்ப தின்றாம்
இறுதிநாட் பூசை நந்நாள்
இன்பநாள் மக்க ளெல்லாம்
ஒருதிர ளாகக் கோயில்
ஒன்றுவர் கிழவர் என்போல்
வருவதும் இல்லை நாங்கள்
வீட்டிலே தஞ்சம் என்றார்
கண்ணகி அம்மன் கோயில்
கடைசிநாள் விழாவை இன்று முன்னின்று நடாத்த வுள்ளார்
முதன்முறை யாக வன்னிக் கன்னியாம் முதன்மைப் பெண்ணாம்
குருவிச்சி நாச்சி யார்நான் என்பவம் செய்தேன் காண
எனக்கிலை வரமென் றாரே
கூறுக யாரென் றந்தக்
குருவிச்சி நாச்சி யார்யான் யாரென அறிய வென்றான்
இளையவன் பதிலு ரைப்பார் வேறாரு மல்லார் எங்கள்
வன்னியர் இளவல் நெஞ்சில் வேரூன்றிப் போன பெண்ணாள்
விபரத்தைக் கேளென் றாரே
பண்டார வன்னி யன்னோர்
பேர்பெறு வீரன் யாரும் அண்டிட முடியா வாறோர்
ஆட்சியைத் தொடரும் தீரன் கொண்டனன் உறுதி ய்ாரும்
கொண்டிடா வாறு மண்மேல் கொண்டமெய்ப் பாசத் தாலே
கேளதைச் சொல்வே னென்றார்
77
78
79
80
uaoru Argau asikafuair apsar.Suyub

வன்னியின் மன்ன னாக
வந்தனன் பின்னர் மற்றும் தன்னைப்போர்க் களத்திற் கென்றே
தந்ததால் குடும்பத் தோர்கள் பெண்ணொன்றைக் கைப்பி டிக்கப் பரிந்தனர் மறுத்துப் பின்னே தன்னிலை எடுத்து ரைத்தார்
தவமெனக் கொண்டிட் டாரே
81 கண்டிப்பாய் உரைத்தார் என்னைக்
கரம்பிடித் தில்வாழ் வுக்கு முன்வரும் பெண்ணிப் போதே
மனமொப்பி என்ற னோடு மண்காக்க வெள்ளைக் காரர்
முறையிலா ஆதிக் கத்தை மண்விடுத் தோடச் செய்ய
முன்வர வேண்டு மென்றே
82 சுதந்திரங் காக்க என்றன்
தோள்துணை யாக நின்றே உதவிடும் ஒருத்தி யுண்டா
உண்டெனில் வரட்டும் ஒன்றி பொதுப்பகை தன்னை வென்றெம்
பூமியைக் காத்த பின்னே சதிபதி யாக லாம்என்
சபதமீ தென்றிட் டாரே
83 முதியவர் சொன்ன சொற்கள்
முற்றுலுஞ் செவிம டுத்துப் பதிலொன்றும் சொல்லா துள்ளப் பரபரப் பதிக மாகப் புதியவன் அசையா துற்றான்
புதுமையீ தென்ன நாட்டின் பதிதனை நாட்டுக் கென்னும்
படிதந்தார் எனவி யந்தான்
84
21
ஜிண்ணாஜர் 2றியுத்தீன்

Page 30
மன்னவன் நிபந்த னைக்கு
முன்வந்து தோள்கொ டுக்கத் தன்னையே தந்தாள் எங்கள்
தமிழ்க்குலப் பெண்ணாள் அன்னாள் தன்னையே ஏற்றார் மன்னர்
தனதுளத் திருவாய் இன்று கண்ணகி யம்மன் கோவில்
களைகொண்ட கார ணம்கேள்
காதலி யாக ஏற்றுக்
கொண்டதன் விளைவால் நாச்சி மேதக பூசை நாளின்
விழாவிலே அம்ம னுக்குத் தீதகன் றெங்கள் நாட்டின்
சுதந்திரங் காக்க வென்னும் ஆதங்கம் விளங்கச் செய்யும்
அருட்திரு நிகழ்வா லென்றார்
முழுமையாய் இலட்சி யங்கள்
முற்றுற்ற பின்னே தான்என் இளமைக்கு விருந்த விக்க
இசைகுவேன் என்னும் மன்னன் விழாவுக்கு வருதல் கூடும்
வஞ்சியோ டொன்றி நாட்டின் அழிவினைக் காக்கும் பூசை
அம்மனுக் கென்றே சொல்வார்
எல்லாமே என்னைக் கேட்டாய்
யாரென நீயாய் உன்னைச் சொல்லாது விட்டாய் நாடு
தமிழ்நாடு என்றாய் மட்டும் நல்லாய்உன் நாட்டின் இற்றை
நிலையென்ன முழுமை யாகச் சொல்லாய்என் செவிக ஞக்குத்
தீனியாய் அமைய வென்றார்
85
86
87
88
பண்டாரவன்னியண் காவியம்
22

செவிக்குய ருனவாய்ச் சொல்லத்
தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை புவிக்குயர் மகுட மென்றோர்
போழ்திருந்த ததுவே உண்மை இசைக்குமேல் என்ன சொல்ல
இன்றுள நிலையில் எல்லாம் கவைக்குத வாத பேச்சே
கவலைக்கே வித்தாய்ப் போகும்
89 விரக்தியோ டிளைஞன் சொன்ன
வார்த்தைகள் கேட்டே என்ன உரைக்கின்றாய் மகனே எல்லாம்
உள்ளநற் பூமி யன்றோ சரித்திரம் புகழும் எங்கள்
தாய்த்தமிழ் வாழும் நாட்டில் மரித்தது எதுதா னென்று
விளக்கமாய் புகலென் றாரே
90 மரித்தது உரிமை மக்கள்
மாற்றானின் கொடியின் கீழே உருத்திலார் மண்ணி லென்றே
உடல்சுமந் திருக்கின் றார்கள் கருத்திலை எவர்க்கும் கூடிக்
காப்போமெம் முரிமை என்னும் விருப்பிலை ஒற்று மைக்கும்
வழியிலை இழிவுற் றோமே
91 தன்மான உணர்ச்சி கொண்டோர்
சிறுதொகை அவர்கள் தத்தம் இன்னுயிர் இழந்தும் நாட்டின்
இறைமையைக் காக்க வுள்ளார் என்னதான் பவமோ சொற்ப
இன்பத்துக் காகத் தம்மை அன்னியன் தமக்கு விற்கும்
அடிமைகள் மலிவுற் றாரே
92
a$asiant (tagjiā azeîu4355air

Page 31
பதவிக்குப் பல்லி ஸ்ரிக்கும்
பாவிகள் அதிகம் இன்றோ உதவிடார் நாட்டைக் காக்க
உயிர்தர முயலு வோர்க்கே எதிரியைப் பலப்ப டுத்த
எம்மவர் தம்மை வீழ்த்தச் சதிசெய்யும் உலுத்த ருண்டு
சங்கதி போது மென்றான்
கண்கணிர் முத்துக் கோத்துக்
கன்னத்தில் எதிர்த்த ஏதோ தொண்டையை அடைத்தாற் போன்று
திணறியே ஆமாம் இங்கும் பண்டார வன்னி யர்தான்
பகைவர்க்குப் பகையாய் உள்ளார் மண்டியிட் டாரே மற்றோர்
மாற்றானுக் கடிமை யானார்
முல்லையில் வாழும் மக்கள்
முழுமையும் மன்னர் பக்கம் சொல்லவென் றிலாத போதும்
துரோகிகள் இருத்தல் கூடும் நல்லவோ இளைஞ! உன்றன்
நாமமென் இன்னும் நீயேன் சொல்லவே இல்லை என்றார்
சுந்தர லிங்கம் என்றான்
பாஞ்சாலங் குறிச்சி மன்னன்
படையிலோர் தளப திப்பேர் தான்சுமந் துள்ளேன் என்றான்
தாழ்குலத் துதித்த அந்த ஆண்சிங்கம் நீயோ என்றே
அதிசயித் தவருஞ் சொல்வார் வாஞ்சைக்கு உரியோன் அந்த
வெள்ளையத் தேவர்க் கென்றே
93
94
95
96
uazsik-Arqauastafuasi arbaraSurguib
24

எந்நாட்டு நிலைமை யெல்லாம்
எடுத்தோதி மன்ன ருக்கே இந்நாட்டின் நிலமை தம்மை
ஏதென்று அறிந்து செல்லும் நந்நோக்கில் நானிம் மண்ணின்
நலன்நோக்கும் ஒருவ னாக வந்துற்றேன் என்னைப் பற்றி
விபரங்கள் ஈதாம் என்றான்
97 அரண்மனைத் தொடர்புள் ளார்போல்
அனைத்துமே அறிந்துள் ளிர்கள் அண்மனைத் தொடர்புண் டாமோ
அறிந்திட லாமோ? என்ன அரண்மனைத் தொடர்பும் ஓர்கால்
அமைந்தது உன்போல் நாட்டின் அரண்படைத் தளப திக்குள்
ளாகினேன் கால ழந்தேன்
98 தளபதி யாகிப் போரில்
தன்னொரு காலி ழந்த தளபதி தன்னை யந்தத்
தளபதி நோக்கி னான்போர்த் தளம்பதித் தவனும் செய்த
தவமெலாம் நினைத்தான் மூத்த தளபதி யாரே தங்கள்
திருப்பெயர் சொல்வீர் என்றான்
99 சங்கிலித் தாத்தா வென்றே
தானெனை அழைப்பார் அன்றோ சங்கிலித் தளப தீதான்
சொல்லிடும் நாமம் என்னச் சங்கிலித் தாத்தா உங்கள்
சந்ததிப் பேரன் பேத்திச் சங்கதி யுண்டோ வென்றே
சிரிப்பொடு மிண்டுங் கேட்டான்
100
25
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 32
குழந்தைபோல் மாறிச் சற்றுக்
குறும்பொடு வினாத்தொ டுக்க உளம்மகிழ்ந் தவருஞ் சொல்வார்
உனைப்போன்று பேரன் இல்லை இழந்ததாய் தந்தை யாலே
என்னுடன் என்றன் பேத்திக் குழந்தைதான் உள்ளாள் பேரோ
குருவிச்சி நாச்சி யென்றார்
101 குருவிச்சி நாச்சியார்
முதியவரின் விடைகொண்டு வழியறிந்து மீண்டும் புதியவழி தொடரமிக விரைவாக ஏக எதிரிலொரு கானவழி இடைகொண்ட தாங்கே அதர்போன்றே வழிதொடர்ந்து அதுவுமறக் கண்டான்
102 கல்லோடு முட்செடிகள் கடந்தேஇருட் கானின் எல்லைதவிர்ந் திடவவனும் எண்ணிமனந் துணிந்தே வில்விடுத்த சரம்போலே விரைந்தனனே கடலில் தொல்லையுற்ற களைமறந்து தென்புடனே நடந்தான்
103 கடமைதனை முழுமையுறக் கருத்தினிலே கொண்ட திடமவனை யுந்தியேமுன் தள்ளியது வழியில் அடர்ந்தமலர்த் தடங்கள்மிக அழகொளிரச் சோர்வோ இடமறியா தொளிந்ததுடன் இம்மியிலா வாறே
104 மஞ்சள்நிறச் செவ்வந்தி மலர்களொடு சோபை கொங்சுவெள்ளை எருக்கம்பூ கானநில மெங்கும் வஞ்சனையி லாதுகொள்ளை விளைந்திருந்த பூவின் மஞ்சமென நெஞ்சுறைய மகிழ்ந்தவனுஞ் சென்றான் 105
வானுயர்ந்த மரங்களிலே வளர்ந்தமலர்க் கொடிகள் தேனுகரு வண்டினத்தின் தாவலினால் அதிர வானகத்து மீதிருந்து வண்ணமலர்த் தூவல் தானெனவே இருந்ததந்தத் தளபதிக்கென் றாமோ 106
தான்பிறந்த தமிழ்நாட்டின் தென்பகுதி மண்ணில் தானிருப்ப தாயுணர்வு தோன்றவவன் கடற்கோள் தானிரண்டாய்ப் பிரித்ததிந்தத் தமிழ்மண்ணை யதனால் தானிரண்டு மொன்றேபோற் சேர்ந்திருப்ப துணர்ந்தான்
107
uaturquotafuasi astradiuuuib 26

உறவுகொண்ட நிலம்போல ஒன்றான மொழியும் உறவுகொண்ட கலாசாரம் ஒன்றியபண் பாடும் உறவுகொண்ட வழிபாடும் ஒன்றான இனமும் உறவோடே உறவாக ஒன்றுவதும் உணர்ந்தான்
O8 சிலபொழுது தனைமறந்து செல்லுவழி யழகில் நிலைபெற்ற மனததுயின் நாடுதனை நினைந்தே விலகியது தனதுகடன் வேறென்ற உணர்வால் விலகாது வேறொன்று வருடவது நினைந்தான் 109
குருவிச்சி நாச்சியெனக் கேட்டபெயர் ஊரின் திருவான மகளாகத் தளபதியார் சொன்னார் உருவிலவள் எவ்வாறே இருந்திடுவாள் என்றே உருவகித்தான் மன்னனுக்கு உவந்தவள்தா மென்றே
110 ஊர்விளக்கின் சுடராக ஒளிர்கின்ற பெண்ணாள் ஊர்காத்த தளபதியின் உதிரத்தின் சாரம் போர்முனையில் தொடர்ந்தேதன் புயபலத்தைக் காட்டும் வீரனுளம் வீற்றிருக்கும் வனிதையிள மயிலாள் 111
அரும்பொன்று மலராகி அழகுதந்த போதும் இரும்பனை தோள்துணையொன் றிருந்திட்டக் காலும் மருவியவை மகிழாது மணவினைம றுத்தே பிரிவுசில போழ்துசில போழ்துநிழ லானார்
112 எல்லோரைப் போலுமொரு இல்லத்தில் வாழ்ந்தும் எல்லோரைப் போலுமவள் இல்லாத பெண்ணாள் வல்லபெருந் தளபதியின் வழிவந்த பேத்தி வல்லவனாம் பண்டார வன்னியனைக் கவர்ந்தாள்
113 வன்னிமுல்லைப் புலத்திலுயர் வடிவமைந்த பெண்ணார் பன்னுாறு பேரிருக்கப் பண்டார வீரன் என்னமனங் கொண்டனனோ இவள்மீது காதல் தன்னையிழந் தேகொள்ளத் தனிமுதன்மை யெதுவோ?
114 வீரர்கள் போற்றுமொரு வீரர்குலத் தலைவன் ஊராளு பூபதியும் உவந்தேற்க என்ன சீரறிவில் சிறந்தவளோ சிறந்தஎழி லாளோ வீரமிகு பெண்ணணங்கோ வேறுசிறப் பாமோ 15
27
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 33
சிந்தித்த வாறவனுந் தொலைதூரங் கடந்தே வந்தடைந்தான் கானகத்தின் விளிம்பனைய தலத்தே அந்திவெயில் வேளையது அடர்ந்திருந்த காட்டில் சிந்தவில்லை ஒளிகருமை செறிந்திருந்த தெங்கும்
6 இலையோடோர் இலையாக இலைசெறிந்தே வானும் இலையாமே எனும்வாறு எ.கியவக் கானில் இலையொருவர் அவன்தவிர இன்னுமதி தொலைவு இலையெனவே யுரைப்பதுவாய் இசையொன்று கேட்டான்
117 இடிமுழக்கம போன்றுமுர சொலிவெடித்து வானே இடிந்துவிழு மாமோவென் றஞ்சுவகை செய்ய உடன்கொம்பு தாரையதை ஒன்றியதப் பாட்டை உடனோங்கு மனக்குரலும் ஓங்கச்செவி யுண்டான்
118 காடோரம் வாழ்ந்திருந்த குரங்குகளின் கூட்டம் காடதிர வாத்தியங்கள் குரல்கொடுப்ப அஞ்சிக் கூடுதாவும் ஆவியெனக் கண்படாத வேகம் கூட்டிமரக் கொம்பர்களைக் கடந்தேகக் கண்டான்
119 ஒலியெழும்பு தலம்மிக்க அருகினிலே அண்ம அலங்காரத் தோரணங்கள் அவனைவர வேற்கும் மரல்கொண்டு செய்தபல வளைவுகளால் ஊரில் இலரொருவ ரெனச்செய்த எழில்கண்டு மகிழ்ந்தான்
120 நெய்யூற்றி எரிகின்ற நெய்விளக்கை ஏந்தி மைவிழியார் கூடியேவான் மின்லெனச் சுழல தையலரோ இவர்மோட்சத் தேவகன்னி யினமோ பொய்யோதம் விழிகளெனப் பார்ப்பவர்கள் அயர்ந்தார்
121 வணணப்ப டாடையொடு வகைவகையாய் மலர்கண் உண்ணவெனக் கூந்தல்களில் உறைந்தழகு காட்டப் பண்ணிசைக்கு ஏற்றபடி பாடியவ ராடும் வண்ணத்தைக் கண்டவர்கள் வியந்ததிர்ந்தே நின்றார்
122 கற்பீதென் றருந்ததிக்குக் கற்பித்த பெண்ணாள் கற்பரசி கண்ணகியின் கோயிற்றல மீது விற்புருவத் தெழில்மாதர் வளைந்து நெளிந் தாடப் பொற்சிலையொன் றவர்நடுவே பயிலுநடம் கண்டார் 123
uan diru-/Taya 1 airafuruari asmorajäu'ubi 28

நாப்பண்ணே நடமாடும் நங்கையிவள் யாரோ நாப்பண்ணின் தாளலய நேர்த்தியொடும் நெளிந்தாள் பூப்போன்ற பாதமலர் பூமகளை வருடத் தீப்பந்தந் தாங்கியுடல் சுழற்றினளே அழகே
ஆடுமயிற் றோகையென அலைகின்ற குழலாள் மூடியகண் இமையனைய பொட்டிட்ட நுதலாள் வேடுவன்கை வில்நிகர்த்து வளைபுருவ அழகாள் தோடனிந்த சங்கனைய செவிமலரின் எழிலாள்
வெண்மலரில் நறையுண்ணும் வண்டனைய விழியாள் கண்மடல்கள் தாமரையின் கரமனைய இளையாள் விண்மறையுஞ் செங்கதிரோன் வண்ணவிதழ்க் கணியாள் எண்ணிவைத்த முல்லைநிற இளஞ்சோள நகையாள்
சங்கொத்த கழுத்தினொடு சற்றதனின் கீழே செங்கனிகள் பெண்மையெழில் சொல்லுபவை போன்றாம் புங்கமுனை போலிடைபின் பெட்டகங்கள் குன்றாம் நங்கையெழிற் கரமிரண்டும் நீலமலர்க் கொப்பே
இடைதாங்குந் தொடைகரியின் இருதுதிக்கை யாகும் நடைபயிலும் பாதமலர் நாகபட மாகும் மிடுக்குமிளிர் அடிக்குஅடி மேவியவள் ஆடும் கொடைக்குரிய தனிமகளாய்க் காட்டிநடஞ் செய்தாள்
கற்புக்கொரு மாதரசி கண்ணகியாம் தேவி பொற்புடைய தமிழர்குலப் பெண்ணினத்தின் ஆவி கற்புயர்வால் மதுரையினைக் கொளுத்திவிட்ட தேவி பொற்சிலம்பால் புரட்சிசெய்த பெண்மையினோர் வேலி
கூடிநின்றோர் குதூகலிக்கக் கன்னியர்கள் ஆடக் கூடினர்பல் லாயிரம்பேர் கோயில்வெளி தனிலே பாடியஅப் பாடலினைப் பக்தியொடும் ஆங்கே கூடியபேர் அனைவருமே கூடமொழிந் தனரே
அம்மனுக்குப் படையலிட்டே ஆடிமகிழ் வேளை வம்மியதே வனமிருந்து வெறிகொண்டோர் யானை இம்மியுமே எதிர்பாரா திருந்தபக்தர் கூட்டம் தம்மினுயிர் காக்கவெனத் தறிகெட்டே பறந்தார்
124
125
126
127
128
129
30
131
29
aastarfra øeßųSari

Page 34
பெருமுரசத் தொலியோடே பாடுமொலி கூடக் கருவிகளின் அசையொலியும் காதுகளை உறுத்தப் பொறுமையிலா வனக்கரியும் பாய்ந்துவர உணர்ந்தே குருவிச்சி நாச்சியவள் குதிரையண்டை சென்றாள்
32 காவியவள் தன்பரியின் தோளமர்ந்து நொடிக்குள் ஏவிவிட்டாள் கைத்துணையாய் ஈட்டியொன்றைக் கொண்டாள் போவென்றே புகன்றமொழி புரிந்ததுவோ பரியும் தாவியதே கானகத்தில் தனித்தவளைச் சுமந்தே
133 கதிகலங்கி யோடுகின்ற கூட்டமது கண்டே கதிகலங்கிப் போனதுவோ கரியுமுடன் திரும்பி அதிவேகங் கூட்டியேகான் அதிரவெறித் தோட அதுதொடர்ந்து குதிரையொன்றும் அடல்நோக்கிற் றன்றோ
134 புறங்காட்டி யோடுகின்ற பெருமிருகம் தன்முற் புறங்காணும் மரங்களையும் பெயர்த்தெறிந்து போகும் பறந்தோடி வருகிறதோர் பரியென்று முணர்ந்தோ புறங்கொண்டு போனதது பாரிலெவ ரறிவார்
135 தனைவிரட்டும் பெண்சிங்கம் தனையடையு முன்னே தனைப்பொருந்து மிடத்தினிலே தானமர்த்திக் கொண்டால் வினைமுடிக்க லாமவளை வென்றிடலா மென்றோ சினங்கொண்ட கரிமனத்தில் சிந்தித்தே யோடும்
136 கரியோடும் திசைநோக்கிக் காரிகையாள் தனது பரியோட்டி ஈட்டியினைப் பாய்ச்சிடவென் றுயர்த்த மறுகியது வேறுபுறம் முகந்திருப்பி யோட மரஞ்செடியம் கொடிபிறவும் மிதியுண்டு துவையும்
137 மறுகிமுகந் திரும்பிவரும் மதயானை ஒலை தருகவென வன்னிமன்னன் தலம்நோக்கும் இளைஞன் அருகோடி வரவவனும் அதிர்ந்தனனே இ.தோர் வெறிகொண்ட யானையென வாளுருவிக் கொண்டான்
138 களங்கள்பல கண்டவனக் கருங்காலி யுடலான் இளமையுடல் துடித்தததை எதிர்த்திடவே எனினும் பிளிறிவருங் கொடுவிலங்கின் பலத்தைமிகைத் திடவே உளவுறுதி கொண்டாலும் உடலமது தோற்றான் 139
uasr (Truaskafaosir ab(reğSuyub 30

துதிக்கையைத் துண்டாடத் துடித்ததவன் கரமும் துதிக்கையின் துணையோடு தடுத்ததது மரத்தால் துதிக்கையின் பலத்தாலே தெறித்ததவன் வாளும் துதிக்கையுடல் சிக்கினனே துளிப்பொழுதுள் விதியோ
தனதுமுடி வெதுவெனவே தெரிந்திட்ட போதும் தனதுபணி தனையெண்ணித் துடித்ததவன் உளமும் அணையமுதல் வன்னிமன்னன் அவையிலதை யளிக்கத் துணையிலையோ எனவதரஞ் செய்ததுபே ரொலியே
சிங்கமெனப் படைநடுவே திரிந்தவனாம் களத்தில் பொங்கிவருங் கடலனைய பெருஞ்சேனை வென்றோன் இங்ங்னமாய் அழிவொன்றை ஏற்பதற்குத் துணிந்தும் பங்கமென எண்ணினனே பொறுப்பழிந்த தாலே
சுழற்றியவன் தனையுயர்த்தி தூக்கிநில மடித்தே அழித்திடவென் றோங்குகையில் அறியாத புலத்தே அழுத்தமொடு ஈட்டியொன்று ஆனைமுகந் தாக்க விழுத்தியது கரஞ்சோர வாய்ப்பையவன் கொண்டான்
உடல் கொண்ட பெருரணத்தால் ஒலித்திரத்தம் ஒட உடன்குதிரை மேலிருந்தே ஏவியவள் மீது கடன்கழிக்கத் திரும்பியது களிறுவெறி கொண்டே இடமறிந்து உயிர்காக்க இளைஞனுடன் பறந்தான்
மோதியவள் தனைத்தள்ளி மண்மீது வீழ்த்தத் தோதாகப் பரியண்மிச் சென்றததன் கழுத்தின் மீதுபல முறைவாளின் முனைசொருகி ஆழ்த்தி மீதமுள்ள குருதியையும் மறவனுமோட் டினனே!
கண்ணிருண்டு பலமிழந்து கரிநிலத்தில் வீழக் கண்ணகித்தாய் கோவிலிலே காண்டாரம் ஒலிக்கும் விண்ணதிரக் கேட்குமது விசேடத்திரு நாளில் மன்னங்கு வந்தசெய்தி மக்களறி வாரே
குதிரையிலே இருந்தபடி குருவிச்சி நாச்சி அதிர்ந்தனளே அவ்வொலியில் அவர்வந்தா ரென்றே அதிவேகங் கூட்டியவள் அகமறிந்த பரியும் குதித்தோடி மறைந்ததது காற்றினையும் வென்றே
140
141
142
143
144
145
146
147
31
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 35
யாரிவளோ எனைப்பெரிய இக்கட்டில் காத்தாள் ஊரறியா இவள்தனதாம் உயிரினைநான் காத்தேன் பேரறிந்து கொளவிலைநான் பாவையவள் தானும் பேரறியா தோடினளே புதுமையென நினைந்தான்
148 தனக்குத்தான் வினாத்தொடுத்துத் தெளிவற்ற நிலையில் தனைச்சுற்றி வீரர்சிலர் தமதுடைவாள் சகிதம் முனைந்தனரே கைதுசெய்ய மறுத்தவனும் உரைப்பான் எனைப்பிடிக்கக் காரணத்தை இயம்பிடுக வென்றே
149 அரசுடைமை யானவன ஆனையைநீ கொன்றாய் அரசபழி அ.தென்றே அறிந்திடுநீ அ.தால் சரணடைவாய் என்றவரைத் தடுத்துவினாத் தொடுக்க மரியாதை வேண்டுமெனில் வாயைழு டென்றார்
150
நாலுகால் மண்டபத்தில்
வேகமாய் வந்த வாறவ ளிறங்கி
விரைந்தனள் மண்டபத் துள்ளே ஏகமாய் ஓர்புறத் தொதுங்கியே விழிகள்
இமைகளுட் புதைந்திடக் கரங்கள் நாகமென் றுயர்ந்து படமெடுத் திருப்ப நினைவெலாம் ஒன்றியே கூப்பி மோகமே கொண்டிறை வணக்கத்தில் இருந்தவவ்
வன்னியின் மன்னனைக் கண்டாள்
151 ஒருபுற மவன்கண் ஒன்றிடா வாறவள்
ஒதுங்கியே நோக்கினள் அவன்றன் திருவுடல் மூடா திருந்தனன் இடையில்
தாங்கிய வத்திரத் தோடே பருவதம் அன்னவன் தோளினை மார்பெனும்
பரந்தகன் றிருந்ததிண் தலத்தைப் பருகினாள் பங்கயம் பூத்தகண் மலராய்ப்
பெருமையால் பூரித்து மகிழ்ந்தாள்
152
uaorargau akafuasi a:5 AralSuyub 32

திருவிலுந் திருவாய் தெய்வத்தின் அருளாய்
தனக்கென ஆணவத் திருவை அருளிய பேற்றினை அளந்தனன் இதுபோல்
ஆருக்கும் இலையெனப் பெருமிக் கருணையே ஈதெனக் கனிந்தனள் மனத்தால் கண்கணிர் சொரிந்திடத் தனைத்தான் உரியவ ளாக்கிட உவந்ததன் விளைவை
ஒர்ந்தவள் பக்தியுட் புதைந்தாள்
153 இளமையின் முறுக்கும் இணையிலா எழிலும் இணைந்ததாய் இருவரும் இணைந்தே களைகொளக் கண்ணகிக் கோயிலுள் பக்திக்
கடலெனக் கரங்குவித் திருந்தார் வழிபட வந்திருந் தோர்களாம் முல்லை வன்னியின் பக்தர்க ளெல்லாம் விழிமடல் விரித்தே வியப்புடன் நோக்கினர்
வழிபடும் பாங்கினைப் புகழ்ந்தார்
154 அம்மனை வணங்கிய குருவிச்சி நாச்சியார்
அடுத்தவள் அருகினில் நின்ற தன்மனத் தேந்தலின் தாள்பணிந் தனளே தோள்பற்றித் தூக்கியே அவனும் செம்மலர்க் கொத்தொன் றளித்தனன் அவளும்
தனக்குமுன் நீட்டிய தட்டின் செம்படத் திருந்த குங்குமந் தொட்டே
திலகமு மிட்டனள் தொழுதாள்
155 முந்திய ஆண்டில் மன்னனும் நாச்சியும் மணவினை கொள்ளுவர் என்றே சிந்தைகொண் டிருந்தோர். தோற்றனர் அந்தத்
திருவினை இவ்வாண்டி லென்றே முந்திய வாறுதம் மனங்களில் வகுத்தவர்
மீண்டுமிவ் வாண்டுமே தோற்றார் வந்திடும் என்றிவர் வாழ்விலோர் வசந்தம்
விரைவினில் வருமென அமைந்தார்
156
3
3
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 36
மண்டபம் விட்டவர் வெளிவரு வரையொரு வார்த்தையும் உதிர்த்தன ரிலையே கண்படு மாறவர் கூட்டத்தி னிடையிலே
கம்பீர மாய்நடை பயின்றார் பெண்மையின் இலக்கண மாயினும் வீரமும்
பெற்றவள் தானெனும் பாங்கில் திண்ணிய நெஞ்சினள் தமிழ்மறப் பெண்ணெனத்
தோள்துணை யுடன்வர நடந்தாள்
ஆண்சிங்க மொன்றொடும் அழகினைத் தனித்தெடுத்
தாக்கிய பொற்சிலை யொன்று காண்பவர் கண்கடத் திடாதுமே மொய்த்திடக்
கோயிலின் வாயிலை நோக்கி மாண்பொடும் ஏகுதல் கண்டவம் மக்களும்
மன்னனை வணங்கிடக் கூடே சாணிடை கூடவு மிலாதுமே சென்றிடும்
செந்தமிழ்ச் செல்விபுன் னகைத்தாள்
என்கண்ணே பட்டிடும் என்றனள் முதுமையை
எட்டிடும் தாயவர் கண்டே தன்கரங் கொண்டவோர் எலுமிச்சம் பழத்தினால்
திருஷ்டியுங் கழித்தனள் உடைத்தே புன்னகை உதிர்த்தனள் பக்கத்தி லிருந்தவோர்
பிஞ்சியஞ் சிறுக்கியும் சொல்வாள் என்னநீ கிழவியே மன்னனின் அழகிலே
இழந்தனை யோமனம் என்றே
மூடடி வாயைநீ விகடமோ வுனக்கிது மன்னனும் நாச்சியும் என்றும் வாடிடா மலர்களாய் வாழனும் நீடுநாள்
வாழ்த்துதல் கடனடி என்றாள் கூடாத வார்த்தைகள் கூறினோம் என்றிளம்
குமரியும் வாய்புதைத் தனளே ஆடவ ரிடையினில் தோன்றிய வார்த்தைகள்
அளாவுதல் அறிந்தன ரிலையே!
57
158
159
60
æru-/rq-Yataru st as/r-Gustið

இன்றுமே திருமணம் இலாதுமே போக்கினர்
என்னயி தென்றொரு இளைஞன் சொன்னனன் கேட்டமற் றொருவனும் சொல்லுவான்
செவிபடும் அமைதிகொள் என்றே முன்னைய வருடமோர் சந்திப்புங் காதலும் முறைமையாய்த் தொடரவிவ் வாண்டில் மன்னனும் தேவியும் முன்வரும் ஆண்டில்
மாறாது செய்குவர் என்றான்
161 சுற்றியே நின்றவம் மக்களுந் தமைப்பற்றிச் சொல்லிய வார்த்தைகள் தமையே சற்றுமே செவிகொளா திருவருஞ் சென்றனர்
சிந்தனை வெளிப்பட வெளியில் கொற்றவன் குதிரையும் குருவிச்சி நாச்சியார்
கதிரையும் ஓரிடம் நிற்கச் சற்றரு காமையிற் சமர்க்களப் பாங்கினில்
சிலபடை வீரரும் நின்றார்
162 அண்டிவந் திருவரும் ஆயத்த மாகினர்
அவ்விடம் விட்டகன் றிடவே அண்டிவந் தொருவனும் அணியுடல் பொருத்தினன்
அரைதொங்க வாளையுந் தந்தான் தண்டைகாற் கொலுசொடு சப்திக்கக் குதிரையில்
தாவியே மறமகள் ஏற மண்டலப் பதியவன் மேனியைப் பரியினில்
மிடுக்கொடு வீசிட நகர்ந்தார்
163 களத்தினில் கதிரவன் கதிர்படத் துலங்கிடும்
கைக்கொடு வாள்முனை போன்றே அழுத்தமாய் மன்னவன் வீசவோர் பார்வையை
அவளுமோர் பார்வையை எறிந்தாள் துளித்ததோர் ஐயம் அவளகம் மன்னவன் சோலவொன்று நினைக்கிறான் என்றே கழுத்தொடித் தவனைநேர் கொண்டனள் முழுமையாய்க்
கோமகன் வினாவொன்று தொடுத்தான்
164
35
ஜின்னாவூர் ஷரீபுத்தீனி

Page 37
"குருவிநீ யானையைத் துரத்தினை" என்றுநான்
கேட்டதும் உண்மையோ என்றான் குருவிநீ என்றவன் கூப்பிட்ட ஒலியுடல்
குளிர்ந்திடக் குழந்தைபோல் நகைத்தாள் பெருமலை யுச்சியில் படர்மூடு பனியினில்
போர்த்திய வாறுடல் குளிர மருவிடும் மகிழ்வினால் மங்கையின் மகிழ்வொலி
மழலைபோல் ‘களுக்கென் றதுவே
"குற்றமொன் றிழைத்தனன் கொற்றவ உங்களைக்
காணவென் றெண்ணிய துடிப்பால் சற்றதை முதற்கண் கேளுங்கள்” என்றனள்
"சொல்லதை என்றனன்” விரல்கள் கற்றையாய் முகத்தினில் கைகொண்ட வாள்முனைக்
கோலத்தின் மீசையைத் தடவச் சற்றவள் பக்கந் தலைதிருப் பின்னே
சிறுநகை அதரங்கள் தொங்கும்
மக்களுக் கெத்திய வினைகளும் வராதுவம் மதங்கொண்ட கரியினைக் காட்டின் பக்கமாய் விரட்டநான் பார்த்திரா மனிதரப்
பக்கமாய் வருவது கண்டேன் சக்திகொண் டுடைவாளைத் தூக்கியம் மனிதரும்
தன்னுயிர் காத்திட முனையத் தக்கதோர் சமயம் தடுத்தது அவரைத்
தன்கரங் கொண்டுபற் றிற்றே
விடுபட முடியா வேளையம் மனிதர்
வாள்கரம் நழுவிய நிலையில் திடுப்பென என்கரத் தீட்டியும் யானையைத்
தாக்கி நிலமிசை வீழ்ந்தார் அடுத்தெனை அண்மிட முயன்றது கரியும்
அகாலமப் போழ்திலம் மனிதர் எடுத்துடை வாளினை இதயத்துட் புதைத்தார்
என்னுயிர் காத்திட வென்றார்
165
! 66
168
uar largavatafuat abarojulio

என்னதான் நடந்ததென் றறிந்திடு முன்னமே எழும்மணி யோசையென் செவியுள் சொன்னது நீங்களுந் தனித்தீங்கு இருப்பதாய்ச்
சிட்டெனப் பறந்தோடி வந்தேன் அன்னவள் கொண்டவவ் வாதங்கம் முகத்திலே
அழியாத உணர்வெனப் பதிய சொன்னனஸ் தலைவனுஞ் சோர்வது வேண்டிடாய்
செல்லுவோம் ஆங்கெனச் சொன்னான்
169 குருவிச்சி நாச்சிதன் குதிரையை அத்திசை
கொண்டேக வைத்திட அவனும் விரைந்தனன் கூடவே வந்தவ் வீரரும்
வரிசையாய் இருபுறம் தொடர்ந்தார் தெருவினில் சிறுதொலை சென்றதும் கண்டனர்
தொலைவினில் ஒர்இளம் வேங்கை மருங்கினில் வீரரும் உடன்வர மலையெனும்
மார்பினை யுயர்த்திய வாறே
170 ஏறுபோல் நடையொடும் இளம்புலித் தென்புடன்
இளநகை முகத்திலு மாக வீறுகொண் டடிகளை வைத்தனன் அரிமா
வெள்கியே நோக்கிடா தொதுங்கும் கூறுகூ றாயெடுத் தடுக்கிய வாறுடற்
கட்டவன் அசைந்திடும் போது வேறுவே றாகவே திரண்டு மிதந்தன வலிமையைப் பறைசாற்று மாறே
17 கண்டவக் காட்சியைக் குருவிச்சி நாச்சியும்
காவலன் கண்படக் காட்டிக் “கண்டிரோ அவர்தான் காத்ததென் உயிரைக்
கூடவெம் வீரரும்” என்றாள் அண்டியே யவர்வரு முன்னரப் பாதையின் அருகினில் அமைந்தநாற் கால்கள் கொண்டவோர் மண்ட நிழலினில் நின்றனன்
கொற்றவன் துணையுமொன் றானாள்
72
ஜிண்ணாவூர் 2றிபுத்தீன்

Page 38
கூடவே வருவதெம் வீரர்தாம் ஆயினும் கைதுசெய் தல்லவோ அவரின் கூடவே வருகிறார் என்றவம் மன்னனும்
கூடவந் திருந்தவர் நோக்கிக் கூடவும் மோடவர் தமையழைத் திங்குநீர் கொண்டுமே வருகவென் றுரைக்க நாடியே சென்றவர் நாயகர் கட்டளை நிறைவுற மீண்டங்கு வந்தார்
ஏனவர் தனைக்கைது செய்தனர் முறைமையோ
எண்முதற் கேளுங்கள் என்றே தேனினும் இனியதாய்ச் செவியினுள் ஊதினாள்
தலைவனை முந்திட மறுத்தே ஊனமொன் றிலாதவன் வருவது கண்டவள்
உள்ளமும் ஆறுதல் கொள்ளக் கோனவன் முன்சென்று கட்டித் தழுவியே
குறைக்கென மன்னிப்பும் இரந்தான்
தசரதன் இராமரைத் தழுவிய வாறுதோள் தோள்கொண்டும் தழுவிமார் பளந்தும் இசைவொடு இருவரும் இளமையின் பலத்தையும்
எடையிட்டுப் பார்த்ததற் கொப்பத் தசையொடிந் திடுவபோல் தழுவிய காட்சியைச்
சுற்றியே நின்றவர் கண்டார் அசைவிலா தாகினள் குருவிச்சி நாச்சியவ்
அதிசய உறவினால் நெகிழ்ந்தே
மன்னவன் தழுவலில் மீண்டனன் தளபதி
மற்றுடன் வந்தவர் நோக்கி என்னதான் பெரும்பிழை இயற்றினிர் இவர்தமை
ஏன்கைது செய்தனை யுரைப்பிர் சொன்னவன் மன்னவன் செந்தழல் வார்த்தையால்
சாடினான் வீரரும் நடுங்கப் பின்னரோர் வீரன் பக்கம் வராமலே
பதிலையும் குரல்பதித் துரைத்தான்
173
174
175
176
பண்டாரவர்மனியள் தாவியம்
38

அரசரின் அனுமதி அற்றவர் எவருமே
ஆனையைக் கொல்லுதல் தடையாம் கரியினைக் கைக்கொடு வாளினால் குத்தியே
கொன்றவர் இவர்எனக் கூற அருகினில் இருந்தபெண் அரசரின் செவிகளில்
அவரையும் என்னையும் மிதித்தே உருத்தெரி யாதுமே ஆக்கிய,’. திருக்குமே உண்மையி தென்றுமே புகன்றாள்
177 சுற்றியும் நின்றவவ் வீரரைத் தன்விழிச்
சுடரினால் சுட்டிடு வான்போல் கொற்றவன் நோக்கினான் குளிர்ச்சியும் நெருப்பும்
கூடவே உறவாடும் பார்வை முற்றுமஷ் விழிக்கதிர் கொண்டதென் பொருளென
மின்னலில் புரிந்தவவ் வீரர் சற்றிடம் பெயர்ந்தொரு திக்கினில் நின்றனர்
தனித்தவர் மூவரும் ஆனார்
178 மீண்டுமோர் முறையவன் மன்னிப்புக் கோரினான்
மறுமுறை பேச்சினைத் தொடர நீண்டநாள் நண்பரென் றெளிதினில் நம்பினாள்
நடைமுறை கண்டவப் பெண்ணும் வேண்டுமிக் கன்னியே வன்னியன் மனத்தினுள்
வீற்றர சாள்பவள் என்றே தானுளே எண்ணினான் இந்தியத் தளபதி
சுந்தர லிங்கமப் போழ்தே
179 “என்னயி தரசரே ஏனிது நமக்குளே
எனையிவர் அறிந்திலர் அதுவே" என்றவன் நாச்சியை ஏறிட்டு நோக்கியே “இடையினில் ஒருவரைக் கண்டேன் முன்னையத் தளபதி சங்கிலி யுங்களின் முறைப்பாட்டன்’ என்றனன் அவளோ தன்னையே விஞ்சிடு வியப்பொடு இதழ்களில்
துவளவோர் புன்னகை உதிர்த்தாள்
180
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 39
“யாரிவர் என்றுநான் சொலவிலை யுனக்”கென
இளநகை பூத்தவள் நோக்கிக் கூறினன் மன்னவன் குருவிச்சி நாச்சியோ
கடந்ததக் காலமென் றுறுத்த “தேரிவன் சுந்தர லிங்கமென் றானவன்
தெரிந்ததே அணைப்பினில் என்றான் ஆருயிர் நண்பனாம் வெள்ளையத் தேவனின்
அன்புடை நண்பரும்” என்றான்
“தேவர்கு லத்தவர் வெள்ளையத் தேவரித்
தளபதி மற்றொரு குலமாம் தேவேந்தி ரர்குலம் தவிரவிவ் விருவர்ஒர் தாய்வயிற் றுடன்பிறப் பனையார் சாவொடு போரிடும் தளபதி எமைப்போல்
சொந்தமண் காத்திடத் தம்மின் கோவோடு தோள்தரும் கொள்கையில் உயர்ந்தவர்
குருவிச்சி அறிந்துகொள் என்றான்
மன்னவன் சொன்னவவ் விபரம் தெரிந்ததும்
முகத்தினில் புத்தொளி படர அன்பொடும் அவன்முகம் நோக்கினாள் இருகரம்
அறியாது கூம்பின ஒன்றி தண்டலைத் தாமரை மதியொளி தன்னிலே
துலங்குவ தொப்பவ. திருக்கக் கண்டதும் தளபதி தன்கரம் கூப்பினான்
கனிந்தவோர் மென்னகை யுடனே
"பேரிடர் தந்ததோ பயணத்தில் புயல்"எனப்
பண்டார வன்னியன் கேட்க "பேரிடர் கொண்டவிப் பறங்கியர் ஆதிக்கப் புயலிலும் புயலொரு பொருட்டோ!” கூறினன் தளபதி கேட்டுமே வேந்தனும் குருவிச்சி நாச்சியை நோக்கிக் கூறினன் பண்டையப் பெருமையைத் தளபதி
குறுநகை யாலதை ஏற்றான்
18
182
183
184
uatv-/rg-) otaru or &/r-23ustið
40

“பாண்டிய மண்புகழ் உரிமையைக் காத்திடப்
போரிட்ட வெட்டுமம் பெருமாள் பாண்டியன் பரம்பரை யுதித்தவர் என்பதைப் பார்த்தையோ வார்த்தையில்” என்ன “வேண்டியே வந்தவென் வேலையை மறந்துநான்
வேறெதோ செய்கிறேன் இன்றே மீண்டிட வேண்டுமென்” றுரைத்தனன் தளபதி
மன்னனோ மறுத்துரை செய்தான்
185 "அரண்மனை விருந்தின ராகவோர் நாளெனும்
அவசியம் தங்குக” என்றே அரசனும் வேண்டினான் அதைமறுத்(து) அன்றைய
அவசர நிலையெடுத் துரைத்தான் “உரியவா றோர்சில முக்கிய சேதிகள் உங்களோ டொன்றிநான் பேசக் கருதியே தளபதி வெள்ளையத் தேவரும்
கடல்கடந் திங்குறச் செய்தார்
186 ஒருசில குறிப்புகள் உண்டிந்த மடலிலும் உங்களுக்குக் கா”மென வுரைத்தான் முறையிலை என்றனன் மன்னவன் வீதியில்
மடல்படித் திடுதலும் ஒன்றிக் குறித்தவோர் சேதியைக் குறித்துரை செய்வதும்
கெளரவ மிலையெனப் புகன்றே “நெறிதவ றாகுமே நண்பர்கள் உங்களை
நான்மதித் திடாவிடில்” என்றான்
187 "இங்குபோல் அங்குமோர் பாங்கினில் நெருக்கடி
இருந்திடும் இக்கட்டில் இந்தச் சங்கைகள் வேண்டுமோ தவிர்ப்பதே உகந்தது
தாமதம் தவிர்த்திட வேண்டின் இங்கிருந் துரையாடல் செய்குவோம் இன்றுநான்
இந்திய மண்தொட வேண்டும் எங்குநாம் சென்றுமிப் பேச்சன்றி வேறிலை”
எனவுமே மன்னனும் இசைந்தான்
188
41
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 40
எள்ளள வேனுமே இடந்தராப் போழ்தினில்
ஏவினான் மன்னவன் நாச்சி முள்ளிய வளைவழி சென்றுநீ விழிப்பொடு
மாற்றானின் வருகையை நோக்கு வெள்ளையர் ஒற்றரை வைத்துளார் என்றுநான்
விபரமும் அறிந்துளேன் என்ன முள்ளிய வளைநோக்கி வீரர்கள் சிலருடன்
மறைந்தனள் நாச்சியக் கணமே
89 அதிவிரை வாகவே அவ்விடம் விட்டவள் அகன்றதும் மன்னவன் நிமிர்ந்தே எதிரினில் இருந்ததன் நண்பனை நொக்கியே
இனிமடல் தருவீர்கள் என்றான் இதோவெனக் கூறியே இடையினில் கரம்விடுத்
ததிர்ந்தனன் சிலையென வானான் புதிராம்.அம் மடலவன் பக்கலில் இலாதுமே
போனதைப் புரியாது நின்றான்!
190
கண்டியின் வாரிசுப் போட்டி
"யானைப் பொருதல் நடந்தவிடம்
எனநான் நினைந்தேன் அக்கடிதம் தானே வீழ்ந்து போயிருக்கும்
தேடிச் சென்றால் கிடைத்துவிடும் வீணே கடிதம் வேண்டாமவ்
விபரம் அனைத்தும் நானறிவேன் நானே வலிந்ததைப் பெற்று வந்தேன்
எனக்கெதும் நடந்தால் உதவுமென்றே
191 நடப்பவை ஆங்கே அத்தனையும்
நீங்களிங் கெமக்காய்ச் செய்பவையும் உடன்படும் உண்மைகள் மடலிலென உரைத்தனன் தளபதி மேலுமவன் படைத்தள பதிவெள்ளைத் தேவருடன்
பாண்டியன் கட்ட பொம்மனுமாய் விடையளித் தனுப்பினர் வாழ்த்துரைத்தார்
விபரங்கள் அனைத்தையும் சொல்லு"மென்றார்
uæiru-/rg-2 støfu sk &/r-Suib 42

"கடிதம் பற்றிய கவலழிக
கரியொடு சமர்செய் தலத்தினிலே விடுபட் டிருக்கும் முயன்றிட்டால்
வீரர்கள் கொணர்வார்” எனக்கூறி சொடுக்கினான் விரல்களைக் கையுயர்த்திச்
சுண்டிய பொழுதுகள் சிலவீரர் அடக்கமாய் வந்து தலைகுனிந்தே
ஆணையை முடிக்கத் தயாரானார்
193 "ஒடுங்கள் இவரைக் கைதுசெய்த
இடத்தினுக் காங்கே மடலொன்று தேடுவா ரற்றுக் கிடக்குமதில்
சேர்வது நமக்கெனப் பொறித்திருக்கும் கூடவே பாஞ்சா லங்குறிச்சிக்
கோனின் முத்திரை பதிந்திருக்கும் காடென நோக்கா தெங்கனுமே
கூடித் தேடுவீர்” எனப்பணித்தான்
194 "போனவவ் வீரர் மீளுமட்டும்
பேசலாம் நாங்கள் கடிதத்தில் ஆனவை பற்றி” எனமன்னன்
ஆரம் பித்தனன் அவன்கேட்டே ஏனைய பிறவெடுத் தோது(Dன்னே
இந்நாள் நடந்தவை சிலவற்றைத் தானே முதலில் சொல்வதெனத்
தொடங்கித் தளபதி தொடர்ந்தனனே
195 இலங்கையில் வெள்ளையர் தனையெதிர்த்தே
இயற்றும் மானப் போர்போன்றே விலங்கினம் எனப்பிறர் தமையெண்ணும்
வெண்தோல் அரக்கருக் கெதிராகப் பலங்கொண் டெதிர்க்கும் தமிழ்மண்ணால்
பெருமை கொண்டனன் வன்னியனும் துலங்கச் செவிப்பறை கூராக்கிச்
சேதிகள் அறியப் புலன்கொண்டான்
196
ஜிண்ணாஜர் ஷரீபுத்தின்

Page 41
இதுவரை இருந்த தளகர்த்தர்
எவர்க்கும் இயலாக் காரணத்தால் புதிதாய் ஜாக்ஷன் என்பவனைப்
பலங்கொள் கலெக்டராய் வெள்ளையர்கள் எதிர்க்கும் பாஞ்சா லங்குறிச்சி
இலாதே யொழிக்க வேண்டுமென மதிக்கூர் மையுடன் அனுப்பியுளார்
மனுக்குண மற்ற மிருகமென்றே
முரட்டுக் குணத்தான் மூடனவன்
மூர்க்கமே போரில் கொண்டிருந்தான் அரக்கன் எனவவன் கூறுகையில்
"ஆமாம் நானதை அறிவேன்’ என உரக்கப் பற்களை நெறுமியேயோர் இதயம் இல்லாப் பேர்வழியென் றுரைக்கவும் கேட்டுளேன் எண்மன்னன்
இயம்பினன் தொடர்ந்தே செவிகொண்டான்
வருடமும் ஒன்று முடிவதற்குள்
வளைத்துப் பிடிப்போம் என்றேசூள் உரைத்தார் வெள்ளைத் தளகர்த்தர்
உறுதியுங் கொண்டே முயல்கின்றார் நரிக்குணம் படைத்த சிலபேர்கள்
நயவஞ் சகராய் வெள்ளையரை இரந்து பணிந்து ஏவல்செய
இணங்கியு முள்ளார் இழிகுணத்தோர்
எவர்வந் தாலும் பணிந்துவிடும்
எட்டய புரத்துப் பாளையத்தார் அவரொடும் இன்னுஞ் சிலபேரும்
அரக்கன் ஜாக்ஷனைச் சந்திக்கக் கவலையி லாது நாமிருந்தோம்
கோபங் கொண்டான் பொறுத்திருந்தே அவர்போல் எமையும் பணிவிக்க
அஞ்சல் ஒன்றினை அனுப்பினனே
197
198
199
200
ucr_/rsjøet ofufat & /røSutið
44

வந்துடன் என்னைக் காணுமென
வந்ததே ஒலை கட்டபொம்மன் சிந்தையில் ஏற்கா துதாசீனம்
செய்தார் தொடர்ந்தே தொடர்புவரப் புந்தியாய் முடிவொன் றெடுத்தார்பின்
போய்த்தான் பார்ப்போம் என்றேதன் சொந்தப் பெரும்படை யோடேயோர்
தினமாங் கேகிட முடிவு செய்தார்
201 வேறு
திட்டமிட்ட படிநாங்கள் திருநெல் வேலி
சென்றடைந்தோம் படையொன்று சகித மாகத் திட்டமிட்டு எமைஏய்க்கக் குற்றா லம்போய்த்
தங்கினனே ஜாக்ஷன்நாம் தொடர்ந்து சென்றோம் திட்டத்தை மாற்றியவன் சொக்கம் பட்டி
சென்றனெனத் தெரிந்ததுமே கட்ட பொம்மன் திட்டமொன்று போட்டார்தான் மட்டுஞ் சென்று சந்திப்ப தாகவதை மறுத்திட் டோமே
202 புடைசூழ நாங்களுமச் சொக்கம் பட்டி
புறப்பட்டோம் அங்கிருந்து சிவகி ரிக்கும் தொடர்ந்துதிரு வில்லிபுத்தூர் பேரை யூர்க்கும்
சென்றோம்பா வாலிபள்ளி மடைக மூதி இடம்மாறி அவன்செல்ல நாமுஞ் செல்ல
இறுதியிலே இராமநாத புரத்தில் நின்றான் உடன்திரும்பி விடலாமென் றனைத்துப் பேரும்
உரைத்துமதை கட்டபொம்மன் மறுத்திட் டாரே
203 இராமநாத புரத்தினிலே இறுதி யாக
“இராமலிங்க விலாசம்”எனும் மாளி கையில் பெரும்படையோ டிருக்கின்றான் ஜாக்ஷன் என்னும்
படியாயோர் சேதிகொண்டோம் அதுபோன் றேயோர் திருமுகமும் வந்தததில் கட்ட பொம்மன்
தனியாகப் படையற்றே உதவிக் காக ஒருசிலரோ டொன்றிவர வேண்டும் என்ற
உத்தரவும் சேர்ந்திருந்த தேற்றுக் கொண்டோம்
45
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 42
204 பிறந்தமண்ணின் சுதந்திரத்தைக் காப்ப தற்கெம்
பிணங்களையே எருவாகத் தரவும் நாங்கள் உறுதி கொண்டே இருக்கையிலே எமக்கும் ஈடாய் ஒருவருமே இலைவெள்ளைக் கூலிப் பேரும் அறுதியிலே மன்னனொடு வெள்ளைத் தேவன் ஊமைத்துரை தானாபதி என்னோ டின்னும் சிறுபடையும் மொத்தம்நாம் நாற்ப தாகச்
சென்றவனைச் சந்திக்கச் செல்ல லானோம்
205 இராமலிங்க வாசத்தின் மேற்ற ளத்தில்
இருந்தபடி எமைக்கண்ட ஜாக்ஷன் யாரும் வரவேண்டாம் கட்டபொம்மன் தனித்தே என்னை
வந்திங்குப் பார்க்கட்டும் எனப்ப னித்தான் சரியென்று மன்னமர்மட்டும் முன்னே செல்லத்
தடுத்தவரை உதறிவிட்டு மாடி நோக்கி விரைந்தார்கள் தானாபதிப் பிள்ளை மற்றும்
வேந்தருடன் பிறந்தஊமைத் துரையு மொன்றாய்
206 வந்தவரை வரவேற்க அறியா ஜாக்ஷன்
வெற்றிகொண்ட இறுமாப்பில் கேள்வி யாலே சந்தித்தான் எனவிளக்க வன்னி மன்னன்
“செய்ததென்ன குற்ற”மெனச் சினந்தே கேட்டான் வந்தவனைக் காணாத குற்றம் ஒன்று
“வெள்ளையர்க்கு வரிதராத குற்றம் ஒன்று சொந்தமண்ணில் வரிவாங்கும் குற்ற மொன்று
சொல்லுகிறேன் இன்னுமெனத் தொடர்ந்தே சொல்வான்
207 ஆங்கிலேய தாசன்எட்டை புரத்தா னோடும்
இணங்கிவாழா திருப்பதொரு குற்றம் மற்றும் ஆங்கிலேயக்க ம்பனிக்குச் சேர்ந்த மண்ணை ஆக்கிரமித் திருப்பதென மற்றோர் குற்றம் ஆங்கிலேயர் தமக்கெதிராய்க் கூட்டுச் சேர்தல்
அதிபெரிய குற்றமென வந்து சேர்ந்த ஆங்கிலேயன் குற்றங்களைச் சுமத்தி னானாம் அறிந்ததிது எனக்கூற மன்னன் சொல்வான்
208
uatv-/rg-) et øfu or as/r-Sultið 46

என்மீது என்னென்ன குற்றம் இங்கே
ஏவினரோ அத்தனையும் தானே அங்கும் சொன்னார்கள் சொல்லுங்கள் இன்னும் என்ன
சேதியுண்டு எனtண்டும் வினவச் சொல்வான் மன்னரவன் சொன்னதனைக் கேட்டு மிக்க
மனங்கொதித்து எரிமலையாய் மாறி என்ன சொன்னனைநீ எனச்சூறைக் காற்றாய் வார்த்தை
சொரிந்தாரப் போதுஜாக்ஷன் மணியொ லித்தான்
209 சொல்லிவைத்த வாறுசுற்றி ஒளித்து வைத்த சிப்பாய்கள் கட்டபொம்மன் மீதுபாயப் புல்லைநகங் கிள்ளுவபோல் உடைவா ளாலப் புல்லர்களின் தலைசீவிக் குவிக்க லானார் சல்லடையாய்ப் போனான்க்ளாக் என்னும் ஜாக்ஷன்
தளகர்த்தன் மற்றோர்கள் சிதற லானார் வில்விடுத்த சரம்போலும் எமது வீரர்
வந்தார்கள் மோதல்மிகப் பலமா யிற்றே
210 குண்டுமாரி பொழிந்தார்கள் பறங்கி யர்கள்
கைவாள்கள் வேல்பிறவால் தடுத்தோம் நாங்கள் கண்டதுண்ட மாகப்பல வெள்ளை யர்தம்
கூலிப்படை வெட்டுண்டே அழிந்த தன்றாம் அண்டிவரா தெமைக்காத்த நாங்கள் சற்றும் அஞ்சாது படைவென்று வெளியி லேறக் கொண்டனரே தானாபதி தன்னைப் பின்னர்
கட்டவிழ்த்தார் வந்தவருஞ் சேர்ந்திட் டாரே
211 வெள்ளையத்தே வன்மிகவே காட்டி நின்ற
வீரத்தைச் சொல்லவொரு வார்த்தை உண்டோ வெள்ளையரை வெல்லவவர் துணிந்தே போரில்
வாளெடுத்து வரலாற்றில் பெயருங் கொண்டார் கொள்ளைகொண்டார் மன்னர்மனம் பகதூர்' என்னும்
கெளரவமும் பெற்றிட்டார் நண்பன் என்றன் உள்ளமது கொண்டபெரு மகிழ்வை இன்றும்
உணர்ந்தாலோ உடலெல்லாம் சிலிர்க்கு தென்றான்
212
47
ஜின்னாவூர் ஷரிபுத்தினர்

Page 43
சொன்னதெலாம் கேட்டிருந்த வன்னி மன்னன்
தோளுறுத்த முகமொளிரத் தமிழர் மண்ணில் அன்னியனின் ஆதிக்க வெறிக்கு மாறாய்
அவரியற்றும் தியாகத்தை வீரம் தன்னை எண்ணிமனம் பூரித்தான் பெருமை கொண்டான் இதயத்தால் பூசித்தான் வாழ்கவென்றே தன்னையறி யாமல்வாய் மெளன மாகச்
சொல்லுவதை நெஞ்சத்தால் உணர்ந்திட் டானே
சற்றமைதி கொண்டுமீண்டும் சொல்வான் “மன்னா
சொன்னதிது காறும்நான் தமிழ கத்தில் உற்றவைகள் இனிமேல்நான் கடிதம் தன்னில்
எழுதியுள்ள சேதிகளைக் கூறு கின்றேன் கொற்றவனாம் கட்டபொம்மன் சார்பாய் எங்கள்
கோன்படையின் நாயகனாம் வெள்ளைத் தேவன் உற்றநண்பர் உமைக்கேட்கும் வேண்டு கோள்கள்
உளம்கொள்க’ எனத்தொடங்கிக் கூற லானான்
“எண்ணேநான் என்னிடத்தின் வேண்டு கோளாய்
எனக்கிட்ட கட்டளையாய் ஏற்பேன் என்றன் நண்பனுக்கு நான்செய்யும் கடமை உண்டு
நவிலுங்கள் என்னவது” எனவுங் கேட்டான் “கண்டிமன்னன் இராஜாதி இராஜ சிங்கன்
கடிதிலிறந் திட்டசேதி அறிந்தோம் அ.தால் கண்டியிலே ஏற்பட்ட நிலைகு றித்துக்
கொண்டோம்நாம் தகவல்சில” எனவு ரைக்க
“சொல்லுங்கள் என்னவது” என்றே மன்னன்
தனக்கடங்கா ஆவலுந்த வினாத்தொ டுக்க “இல்லையொரு பிள்ளைமன்னன் தனக்காம் அ.தால்
ஏற்பதெவர் பட்டத்தை என்ப தாகும்” “நல்லதெங்கள் நாட்டினையும் பற்றி நீங்கள்
நன்கறிந்து வைத்துள்ளிர்” என்றான் மன்னன் சொல்வதெனில் நாமிருவர் எதிர்கா லத்தில் சந்திக்கப் போவதொரே எதிரி அ.தால்
213
214
215
26
uær frg-Jaiafuat a, sr-Guib
48

இரண்டுமனை கொண்டவராம் இராஜ சிங்கன்
இருமனைக்கும் தம்பிகளாய் இருவ ருண்டே ஒருமனையாள் தம்பிகண்ணுச் சாமி மற்ற
ஒருத்திக்கு முத்துச்சாமி தம்பி யாவான் இருவரிலே எவர்நமக்கும் உதவி யாக
இருப்பரென நாமறிய வேண்டும் வெள்ளைத் துரோகிகளை அழிப்பதற்குத் தோள்கொ டுக்கத்
துணைசெய்யும் துணைவரைநாம் அறிதல் வேண்டும்
27 இருவரிலே எவர்நமக்கோர் உதவி யாக
இருப்பரிந்த வெள்ளையரை எதிர்ப்ப தற்குச் சரியான ஒருவரினைத் தேர்ந்தெடுக்கத்
தாங்கள்வழி செய்திடுதல் வேண்டும் என்றே தெரிவிக்கச் சொன்னார்எம் மன்னர் அந்தத்
திருமுகத்தில் இருப்பதுவும் அதுதான் உங்கள் அருநண்பர் வெள்ளையத்தே வருமென் மூலம்
அறிவிக்கும் சேதியிதே உரைத்தேன் என்றான்
28 “இருவரிலே எவர்வெள்ளைக் காரருக் கீண்டு)
எடுப்பார்கைப் பிள்ளையென ஆவா ரென்று கருதுகின்றீர்” எனமன்னன் கேட்க நண்பன்
கூறிடுவான் கண்டிமன்ன னாகும் பேறு தெரிந்தபடி கண்ணுசாமி பெற்றிட் டாலோ
துணையிருப்பார் நமக்கென்றும் மற்றோன் பெற்றால் விருந்துவைப்பார் வெள்ளையர்க்குப் பணிந்தும் போவார்
வேண்டாத பேர்முத்துச் சாமி யென்றான்
219 “உண்மைதான்” என்றனனே மன்னன் கேட்டே
உடனடியாய்த் தலையிட்டு நீங்கள் அந்தக் கண்ணுசாமி பட்டமேற்க வெள்ளை யர்தம்
கைக்கூலி முத்துசாமிக் கிலாது செய்தால் நன்மையென நம்புகின்றோம் என்றான் மன்னன்
நல்லெண்ணம் நல்லாசை என்றிட் டாலும் கண்டிக்கு முதலமைச்ச னாக வுள்ளோன்
கெட்டவனாம் பிலிமத்த ளாவை என்றான்
220
49
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 44
சிந்தனையின் வசப்பட்ட வன்னி மன்னன்
சொல்லியவவ் வார்த்தைகளைச் செவியுட் தேக்கச் சிந்தனையில் தளபதியும் நிலைத்தான் அந்தச்
சந்தர்ப்பம் தனிலெங்கோ தொலைதுார ரத்தில் நந்திநுழைந் திட்டதுபோல் குண்டுச் சப்தம்
நாராசம் போல்காதைத் துளைக்க மன்னன் எந்திரம்போல் “இருங்களெனத்” தளப திக்கோர்
ஏவலிந்து பரியேறிப் பறந்திட் டானே
221 தீவுக்குள் தீயவர்கள் விரல்சுண்ட வேகமாய் வெடித்துப் பறக்கும்
விசைகொண்ட துப்பாக்கி ரவைபோல் அரைநொடிக் குட்பல நூறா யிரமாய்
அடிகடந் தேகிய பரியின் விரைவினை வென்றது வேந்தனின் மனரதம்
வேட்டொலி கேட்டதிக் கோடி மருவிட முன்னங்கு மோதலொன் றடங்கிய மருமத்தை அறிந்திட முனைந்தான்
222 தொலைவினில் வருவழி தோன்றி இருபடை
சமரினில் இருப்பது கண்ணின் வலையினுள் பட்டது வெள்ளைய ரோடுமே
வன்னியர் பொருதுவ தென்றே ஒலியொடு பீறிடும் குண்டுகள் ஒர்புறம்
ஓங்கிய வாளொடு வேலும் நிலமதிர்ந் திடச்செவி நீறிடப் பொருதின நாச்சியார் வாளொடு சுழன்றாள்
223 வன்னியன் வீரனின் வாள்திறன் தோள்வலு
விசைகொண்ட குண்டினை வீழ்த்தச் சென்னியில் கால்படத் தெறித்தனர் வெள்ளையர்
திசைகெட்டே ஓடிட லானார் தன்னைமற் றோர்தனித் திட்டே ஒருவனும்
தாமத மாகியே ஓடக் கண்டனள் நாச்சியார் குறிவைத்து அவனையோர்
கூரிய ஈட்டியால் சாய்த்தாள்
224
u arasırgavastauras arbaru ub 50

குருவிச்சி நாச்சியார் குறிவைத்துத் தாக்கிய
குற்றுயிர் வெள்ளையன் துடித்தான் அருகினில் வந்துதன் புரவியில் இறங்கினாள்
அக்கணம் மன்னனும் வந்தான் பொருதலின் காரணம் புகலுவாய் என்றனன்
பெருமூச்சே பதிலாகத் தந்தாள் உருவாக விருந்தவோர் பயங்கரம் நீக்கிய
உணர்வொடு மூச்செறிந் தனளே
225 கேள்விக்கு மூச்சையே பதிலாக வைத்தவள்
கீழ்வீழ்ந்து கிடந்தவன் அருகில் தாள்பதித் திடவவன் தன்விழிச் சரத்தினால்
சுட்டனன் அவள்காண மறந்தாள் தோள்பதித் தவன்கையுள் மறைத்திட முயல்வதைத்
தன்வசம் கொண்டிடக் குனிய மாள்வதே முடிவென அறிந்ததால் அவள்சிரம்
மடித்திடத் துணிந்தனன் உடனே
226 அணைந்திட முன்சுடர் ஓங்கியே ஒளிருமோர்
அகலினைப் போற்பலங் கூட்டித் துணிந்துகைத் துப்பாக்கி தனையெடுத் தவளின்
சென்னியைக் குறிவைக்க லானான் அணிந்ததன் ஆடை இழந்தவன் கையென
அரசனங் குதவினன் நொடிக்குள் பிணைந்ததோர் பாதம் பாதகன் கரத்தொடு
“பட்’டெனும் வெடிக்குரல் எழவே
227 வீசிய கால்கரம் விலக்கிட வெடியும் வேறொரு திக்கினில் பறக்க ஒசைகேட் டனைவரும் உற்றங்கு நோக்கினர் உயிர்ப்பலி இலையென வுணர்ந்தார் மாசிலாக் காதலன் மின்னலுள் தன்னுயிர்
மீட்டதை நாச்சியும் அறிந்தாள் நேசனை நோக்கினாள் நன்றியவ் விழிகளை
நனைப்பதைக் கண்டுளம் நெகிழ்ந்தான்
228
51
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 45
நாச்சியார் வெள்ளையன் மறைத்தவப் பொருளை
நீட்டிய கரத்தினால் பிடுங்க மூச்சையும் மறந்தனன் மண்மிசை கிடந்த
மண்ணாசை கொண்டவவ் வெறியன் பேச்சிலா திருவரும் பறித்தவப் பொருளைப்
பார்த்தனர் பார்த்தவப் பொருளால் ஆச்சர்யம் கொண்டனர் அதுதாங்கள் இழந்த
அஞ்சலென் றறிந்திட மகிழ்ந்தார்
காணாமல் போனவக் கடிதத்தைத் தேடிடக்
கானிடை சென்றவவ் வீரர் கான்நுழை முன்பதாய்க் கொடியவெண் படையினர்
கடிதத்தைக் கவர்ந்தகன் றிருந்தார் கோன்படை வீரர்கள் குறித்தவப் படையினைக்
குறிவைத்து மடக்கியம் மடலைத் தான்பெறச் சென்றதும் தொடங்கிய பொருதலில்
தலைவியுஞ் சேர்ந்துகொண் டாளே
ஒற்றர்கள் மூலம் உளவறிந் தெமக்காய்
ஓர்சேதி வருகுதென் றிடையில் பற்றிட வென்றே பறங்கியர் வந்தனர்
பெற்றும் பெறாதவ ரானார் "முற்றுமே தோல்வியில் முடிந்தவர் முயற்சி
முறியடித் திட்டவள் நீயே பொற்புறும் செய்கை இது”வென வன்னியன் பெருமையோ டுரைத்திட மொழிவாள்
"கடிதத்தைக் களவாய்க் கொண்டிடல் மட்டுமே
குறியிலை அன்னவர் தமக்கே திடமதாய் வேறுமோர் காரணம் உண்டது
தெய்வத்தின் தலத்தினுக் கென்றும் படயொடு வாராப் போதினில் உங்களைப் பகைவர்கள் தாக்கிட நினைந்தும் படையொடு வந்தனர் புனைந்தவத் திட்டம்
பொடிப்பொடி யாகிய" தென்றாள்
229
230
231
232
υαοί (τσαμ σταται στα ιταδιμιίο
52

சொன்னவவ் வார்த்தைகள் செவியுற்ற மன்னனும்
சொல்லுவான் காதலி நோக்கி
ஆவதோ நேரிடை யாக என்சொந்த மண்ணுளே என்னையே எதிர்த்திட
இலைமனத் திடமவர்க் கென்றே என்னயி தறிந்துமா இவ்வாறு எண்ணுதல்
உம்முள்ளும் அவர்நுழைந் துளரே”
233 மன்னனும் அவனொடு வந்தவர் அனைவரும்
மீண்டுநாற் காற்பதி நோக்கிச் சென்றிட இடைவழி தன்னிலே தளபதி தமைநோக்கி வருதலைக் கண்டார் என்னதான் நடந்ததோ மன்னவர் தமக்கென
எண்ணிநெஞ் சுறுத்திய தாலே தன்னிலை அறிந்துமல் வேளையில் துணையறத்
தனியனாய் வந்தனன் துணிந்தே
234 "நீங்களிங் கெனக்கெனக் கொணர்ந்ததிக் கடிதமோ
நோக்குக தளபதி” என்றே தாங்கிய தன்கரம் விடுத்துமே மடலையும்
தந்தனன் பண்டார வன்னி வாங்கிய போததில் வடிநதுகாய்ந் திருந்த
வேற்றவர் குருதிகண் டயர்ந்தும் தாங்கொணர்ந் திருந்ததத் திருமுகந் தானெனச்
சொல்லியே மீண்டுமே தந்தான்
235 வெள்ளையன் பண்டார வன்னியன் நிலத்துளும்
வந்தவர் திட்டங்கள் நிலைக்க உள்ளமுங் கொண்டதற் கிணங்கவே செயல்களை
இயற்றவுந் துடிப்பதை உணர்ந்தே எள்ளள வேனுமவ விடர்வந்து சூழ்ந்திடா திருக்கவும் வேண்டுமென் றுரைத்தான் வெள்ளையர் தமைப்பொது விரோதியாய் எண்ணியே
வெறுத்திடுந் தளபதி யடுத்தே
236
53
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 46
“பெரியதோர் ஆபத்தில் இருந்துமே மன்னரைப்
பாலித்த நாச்சியார் தமக்குப் பெருநன்றி சேரட்டும் பாரத நாட்டிலெம்
போர்வீரர் சார்பாக” என்றே குருவிச்சி நாச்சியார் தமைநோக்கி மகிழ்வொடு
கூறினான் சுந்தர லிங்கம் மருவியோர் புன்னகை மெல்லிதழ் தவழ்ந்திட
மன்னவன் காதலி ஏற்றாள்
237 செவ்விதழ் அரும்பிய புன்னகை இதழ்களைச்
செக்கச் செவேலென வாக்கப் பவ்விய மாகவே பகிர்ந்தனள் அதனைப்
பாரதப் பெருவீரன் தமக்கே “கொவ்வைவாய்க் கிளிக்கின்று குதுகலம் அதிர்ஷ்டநாள்
கடல்கடந் திருந்தும்நல் வாழ்த்து எவ்வளவென் றில்லையே” என்றவள் செவிப்புலன்
ஏற்றிட மன்னவன் உரைத்தான்
238 “வழியினில் நிறுத்திவைத் திவ்வாறு பேசுதல்
வேண்டுமோ அரண்மனை சென்றே அழகாகும் விருந்துண்டு அனுப்புதல் மரியாதை
அல்லவோ” எனக்குரல் தன்னில் இழையிடும் வீணையின் நாதத்தை மன்னனும்
ஏற்றிடச் செவியினுள் இசைக்க அழைத்தனன் பன்முறை ஏற்காத தளபதி “ஆகாது” எனமறுத் துரைத்தான்
239 “எனக்கென்று இலாதுவிட் டாலுமென் குருவியின்
இசைவினுக் கிசைவது இசைவாம்” எனத்தனை விடுத்தவள் சார்பினில் மன்னவன்
இசைவினைப் பெறமுயன் றிட்டான் எனைத்தவ றாகவே எண்ணிடல் வேண்டாமாங்
கெனக்குள பணியொடு மன்னன் எனைத்தவ றாகவே எண்ணிடல் கூடும்நான் இன்றுடன் செலவேண்டும்” என்றான்
240
uaorusragawasikafuasi arbarab3u.guib 54

சரியான வேளையில் சேராது போய்விடின் சேர்ந்ததோ இலையதோ வென்று புரியாத நிலையினில் பலபட எண்ணுவர்
பதிலறிந் திடவவர் துடிப்பார் ஒருவேலை தாமுமே ஓடாதெம் தளபதி
ஒன்றுவார் விழிவழி மீதே சரியாகா நானின்னும் தாமதித்திருப்பது
சென்றிட விடைதர இரந்தான்
241 அன்பொடு விடைதர வேண்டிடும் போதினில்
அருகினில் இருந்தவோர் வீரன் சென்றனன் ஒர்குலைச் செவ்விள நீரொடு
திரும்பியே வந்தனன் ஆங்கே மன்னனும் அறிந்திடா வாறுமே நாச்சியார்
மெளனமாய் ஜாடையால் பணித்தாள் தன்கரம் கொண்டுமே தலைசீவி இளநீரைத் தந்தனன் அரசனும் உவந்தே
242
விருந்தோம்பும் பண்பினில் வன்னியன் நாச்சியை
வென்றானோ அவள்மிகைத் தாளோ பொருந்தினர் பண்பிலும் பேடையும் அன்றிலும்
பொருந்திவாழ்ந் திருப்பது போன்றே அருந்தினன் தளபதி அவனொடும் ஒன்றியே
அருந்தினர் இருவரும் வீரர் அருந்தினர் மனிதருள் அனைவரும் ஒன்றெனும்
அதியுயர் பண்பினுக் குவந்தே
243 "முடிவாக நானென்ன சொல்வதாம் எங்களின்
முடிமன்னர் கட்டபொம் மனுக்கே விடைபெற முன்னதை அறிந்திடக் கூறுங்கள்
வன்னியின் மன்னரே” என்ன "அடியொடு தூர்ந்திடச் செய்குவேன் வேர்விட
அணுவேனும் இடந்தரேன்” என்றே பிடிவாத மாய்வார்த்தை புகன்றிட்ட போழ்தினில்
பனைவைரத் தோள்புடைத் தனவே
55
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 47
இருகரங் கூப்பியே ஏற்றனன் விடை “நன்றி”
என்றனன் உதடுகள் நெகிழ்ந்தான் ஒருசில மணிகளுள் உடன்பிறந் தாளையும்
உவந்தவன் தனையும்விட் டேகும் உரிமையில் கலங்குவான் போலவன் நின்றனன்
ஓரிரு அடிகள்முன் சென்றே மருவினான் மன்னவன் மார்பொடு மார்பொன்ற
மகிழ்ந்துமே நாச்சியார் நின்றாள் மெல்லவே செவியினுட் சேதியொன் றோதினாள்
மன்னவன் முகம்மலர்ந் திட்டான் “சொல்லுவாள் குருவியும் சிலபோது நல்லநற்
சிந்தனைக் குவந்தவை” என்றே "சொல்லுவாள் மறந்தேனென் வீரர்கள் கடல்வரை
துணைக்கென் றுடன்வரு வார்கள் செல்லலாம் குறுகிய பாதையில் நெடுந்துாரம்
செலாமலே’ என்றுமே பகர்ந்தான்
உடன்வரு வாரென உரைத்ததும் ஒருவீரன்
உடனவன் பரியிருந் திறங்கி இடந்தந்து விலகினான் ஏறிட வென்றுமே
ஏற்காத குருவிச்சி நாச்சி உடனவள் பரியினை உவந்தனள் தளபதி
ஒன்றிமற் றோருடன் ஏக திடமாகக் கண்ணியம் நல்லினப் புரவியில்
செலவைத்த லாமென நினைந்தாள்.
நெடுந்தொலைப் பயணத்தைத் தவிர்த்திடக் குறுவழி
நன்றென்ற மன்னவன் கூற்றை உடன்மறுத் துரைத்தனன் தளபதி 'அரசரே
ஒப்பிடா தெனைப்பொறுத் தருள்க திடமாக நான்மீண்டும் கிராமத்தின் ஊடாகச்
செல்லவே விழைகிறேன் அதற்கும் உடனொரு காரணம் உண்டது ஏனென
ஊகிக்க லாகுமோ” என்றான்
244
245
246
247
248
υ σοί -τσου στάσει στα (τα δυμυν
56

ஏனென்று கேட்டதோ டிருவரின் முகத்திலும்
எண்ணிலாக் கேள்விகள் துலங்க ஏனெனும் பார்வையோ டிருவரும் அவன்விழி
ஏறிட்டு நோக்கிடச் சொல்வான் நான்வரும் போதினில் நடுவழி கண்டவின் நாட்டினோர் தளகர்த்தர் தம்மைக் காணவென் றெண்ணினேன் காலத்தால் முதியவர்
காணப்பின் கிடைப்பனோ என்றான்.
249 செந்தமிழ் நாட்டில்நாம் செய்திடும் போரிலென்
செகவாழ்வு முடிந்திடல் ஒன்றும் விந்தையே இலையதன் மன்னர்நான் சென்றிந்த
வீரத் திருமகள் தம்மின் முந்தையர் எனுமந்த வீரரைத் தியாகியை
முகம்கண்டு ஆசிகள் பெற்று வந்தவென் வேலையும் முடிந்ததென் றுரைத்துமே
விடைபெற வேண்டுமென் றனனே
250 ஆவலோ டவன்சொன்ன வார்த்தைகள் கேட்டதும்
அர்த்தமோ டரசனின் பார்வை தாவிடக் குருவிச்சி நாச்சியார் கூறுவாள் “தாத்தாவின் இல்லத்தில் பேத்தி சேவைக்கு இலாளெனின் செல்லுவோர் தமையெவர்
சென்றுப சரிப்பரோ” என்றே கோவைக்க ண்யிதழ் கூறிடச் சொற்களைக்
கனிவினை யுமிழ்ந்தன விழிகள்
251 வேலொடு வாளும்நீள் ஈட்டியும் தாங்கியே வலுக்கொண்ட உடம்பத னுள்ளே சாலுமோ நாணமென் றோர்குணம் பெண்மையைச்
சொல்லிடும் பாங்கினில் ஒளிய வேலெனுங் கூரிய விழிகளுள் மென்மையும்
விரவிடும் படியவள் குழைந்தே சீலமும் இவளிடஞ் சிரங்குனிந் தெனுமால்
தலைவனுக் கருகவள் நின்றாள்
252
57
ஜிண்ணாஜர் ஷர்புத்தின்

Page 48
கருத்தினில் விதைத்தவவ் வீரன் உரைத்தனன் அவள்சொன்ன வார்த்தைக்குப் பகாரமாய்
ஒன்றும்நான் தங்காங்கு இல்லை ஒருசிறு பொழுதவ ரோடுநான் உரையாடி உடன்புறப் படுவனென் றுரைத்தே விரைவினில் விடைபெற்று வந்தவவ் வழிதனில்
விரைந்தனன் வீரர்பின் தொடர்ந்தார்
253 வழியினில் சங்கிலித் தளபதி யூர்வர வீடண்டி நிறுத்தினான் புரவி விழிவழி வாசலை ஆய்ந்தனன் எவருமே வீடற்ற நிலையங்குக் கண்டான் அழுதவா றோரிரு கிழவிகள் அவனண்டை
ஒடியே வந்துண்மை யுரைப்பார் “கிழவரை வெள்ளையர் கவர்ந்தனர் குருவிச்சி
கொன்றனள் ஒருவனை” என்றார்
254 காக்கை வன்னியன்
வெள்ளையர் கிழவரைக் கொண்டுசென் றாரெனும்
விபரங்கள் கேட்டதும் அதிர்ந்தே உள்ளமும் பதறினன் “உங்களில் எவர்க்கேனும்
ஊகிக்க இயலுமோ எங்குக் கொள்ளையிட் டவர்தனைக் கொண்டுசென் றாரெனக்
கூறுங்கள் எனவவன் கேட்கக் கள்ளர்கள் வெள்ளையர் கயவர்கள் கரிக்கட்டில்
குடிவைத்து இருக்கலாம்” என்றார்
255 “யாருக்குச் சொந்தம் எங்கது வுள்ளது”
என்றவன் அவர்களை வினவ “ஊருக்குள் ஊரென ஒருதனி ராச்சியம்
உள்ளதாம் அதுவன்னிக் குள்ளே பாராளும் ஆசைகொண் டொருவனெம் மன்னரைப்
பகைவராய் உள்ளத்தி லிருத்திப் பாராளும் வெறிகொண்ட பறங்கியர் துணையொடு
புரிகிறான் அர”செனப் புகன்றார் 256
uatu Aryatakafuat aprajuub 58

'காக்கைவன் னியனென்ப தவன்பெயர் கரிக்கட்டைக்
கொடுத்துள்ளான் வெள்ளையர்க் கென்றே காக்கவென் றவனையக் கொடியவர் சுற்றியே குடிகொண்டும் இருக்கிறார்” என்றார் “போர்க்குணம் கொண்டவப் பறங்கியர் அடிமையாய்ப்
போனனன் வன்னிமன் னர்க்கு ஏற்காத வாறுபல் இடையூறு செய்கிறான்
எதிரிகள் துணையொடும்” என்றார்
257 அனைத்தையும் எடுத்தோதி னாளொரு மூத்ததாய்
அதிசயம் நாட்டினுள் நாடோ எனவியந் துரைத்தனன் ஏனிந்தத் துரோகமோ
எம்மவர்க் கெம்மவர் பகையோ சினத்தனள் அன்னையும் செவிசுடும் சொற்களால்
“சிறுமையின் சிகரமாய்க் 'காக்கை இனத்துக்குத் துரோகமே செய்கிறான் மதியிலான்
இழிவுற்று அழிவ”னென் றனளே
258 வார்த்தையில் நெருப்பினைக் கொட்டினள் சபித்தனள்
வயதான போதிலுஞ் சினத்தால் சேர்த்தனள் நடுங்கினள் விழிகள் தீப் பிழம்பென
விளங்கிடக் கடுத்தனள் முகத்தால் போர்த்திறன் கொண்டபல் லாயிரம் வீரரைப்
பார்த்தவன் களத்தினில் எனினும் பார்த்திரான் மண்மீது பாசமுங் கொண்டதால் பொங்கிடும் இவள்தனைப் போன்றே
259 அன்னியன் ஒருபிடி மண்ணையும் தம்வசம்
ஆக்கிட இடந்தரா தவன்றன் சென்னியில் பிடித்தடித் தோட்டிட நினைந்திடும்
செந்தமிழ்ப் புத்திரி போன்றாள் மன்னவன் மீதுள மதிப்பொடு தணையீன்ற
மண்மீதும் அவள்கொண்ட உரிமை தன்னையும் கண்டனன் தளபதி யுளத்தினால் துதித்தனன் அவளண்டை சென்றான்
260
59
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 49
புதிதான சேதிகள் பலவற்றை அவளிடம்
பெறலாமென் றெண்ணியே அண்மி இதமாக வார்த்தைகள் உதிர்த்தனன் “அன்னையே
என்னவுன் பெயரென விளித்தான் பொதுவாக அனைவரும் "தங்கச்சி” என்றுதான்
புகலுவர் எனைத்'தங்க நாச்சி’ இதுதானென் பெயரென இயம்பிட இளையவன்
இதழ்களில் இளநகை படித்தான்
பண்டார வன்னியன் குருவிச்சி நாச்சியார்
பெற்றிலார் இச்சேதி என்றே உண்டான நிகழ்வினை உடன்சென்றே ஓதிட
ஒருவீரன் தனைப்பணித் தானே பண்டார வன்னியன் தனைக்காக்கை வன்னியன்
பகைத்ததன் காரணம் அறிந்து கொண்டிடத் தங்கச்சி தனையின்னும் கேள்வியால்
குடைந்தனன் அவள்பதில் உரைத்தாள்
வெள்ளையர் தமக்கவன் அடிமையாய் போனதும்
வனிதையால் ஏற்பட்ட இழிவும் கொள்ளையாம் வெஞ்சினங் கொண்டிடக் காரணம்
குறிப்பாக வேறில்லை என்றாள் துள்ளித் திரிந்திடும் பெண்சிங்கம் குருவியைத்
தனதாக்க முயன்றனன் காக்கை எள்ளள வேனுமஷ் விழிகுணன் தனக்கவள்
இஷடமே இலையென மறுத்தாள்
விருப்பத்தை மறுத்ததோ டல்லாது பண்டார
வன்னியை நெஞ்சத்துள் வைத்து இருப்பதாய் அவன்: ' கூறிய தாலுள1 இரும்புறக் கனத்ததால் வெகுண்டே குருவிச்சி நாச்சிமேல் கொண்டனன் பழியைக்
கூடவே மன்னனை வெறுத்தான் இருவரும் தன்முதல் எதிரிகள் தாமென
இயம்பியும் ஆனந்தம் கொள்வான்
26
262
263
264
υ αστυιτσαου στατου σταδιταδιμιίο
60

61
வேறு “தூக்கியே செல்வதற்குக் 'காக்கை கூடத்
துணையாக இருந்தனனோ” என்றே கேட்க “தூக்கிடத் துணையவன் தான்என்ப தெல்லாம் தெரியாத விடயங்கள் ஆனால் வந்தே தூக்கியே சென்றவர்கள் வெள்ளை யர்தாம்
திடமாகச் சங்கிலியை காக்கைக் கூண்டில் தேக்கித்தான் வைத்திருப்பர் உறுதி யென்றே
தங்கச்சி” கூறிடவே மீண்டுங் கேட்பான்
265 ‘கரிக்கட்டு மூலையுள்ள அரண்ம னைக்குக்
கொண்டுசென்றால் அங்குசென்று பார்க்க லாமா” சரிப்பட்டு வராதென்றாள் மீட்க ஆனால்
சென்றவரைப் பார்த்திடலாம் என்றுஞ் சொல்லி “அரசனந்த மாளிகைக்குக் காக்கை வன்னி
அனைத்துமங்கு வெள்ளையரே பாதுகாப்பு பெருந்தொகையால் வீரர்அதை முறிய டித்துப் போவதுவும் மீட்பதும் இயலா” தென்றாள்
266 “இயலாது என்றரைத்த தேனோ நாங்கள்
இயலாத பேர்களென்ற இழிவோ’ என்றான் “செயல்வீரர் துணிந்தவர்கள் இறுதி கொண்டோர்
தெரியுமது எனக்”கென்றே சொல்வாள் மீண்டும் “உயர்வான ஆயுதங்கள் வெடிம ருந்து
உடன்காவல் செய்கின்றார் வென்று மீட்க இயலாதிச் சிறுபடைக்கு எனுங்க ருத்தில்
இயம்பினென்நான்’ என்றுரைத்தாள் இளவல் கேட்டான்
267 அனுபவமும் உறுதயொடும் நிதானத் தோடும்
அளவளாவும் நீங்களுங்கள் பெயரை மட்டும் எனக்குரைத்தால் போதாதோ நீங்கள் முன்னம் என்னபணி செய்தீர்கள் என்றே சற்றும் மனங்கோணா துரைத்திடுதல் வேண்டும் என்றான் மன்னரில்லப் பணியாமோ எனவுங் கேட்டான் தனையவளோர் ஆசிரியை என்றாள் என்றும்
தொடருமுயர் கல்விப்பணி எனவுஞ் சொன்னாள்
268 ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 50
பெருமையுடன் எடுத்துரைத்தாள் இந்த வுரின்
பிள்ளைகள்என் மாணவரே இன்னுஞ் சொன்னால் அரியணையில் வீற்றிருக்கும் பண்டா ரவன்னி அவனருகில் நிழலாகச் சுற்று கின்ற குருவிச்சி நாகரியுமென் மாண வர்தான்
கெளரவமே எனக்கதுபோல் நினைந்தால் நெஞ்சில் அருவருக்கத் தக்கவனாம் காக்கை வன்னி
அவனுமென்றன் மாணவனே என்றே சொல்வாள்
26) மாணவராய் இருக்குங்கால் அனைத்துப் பேரும் மண்மானம் காக்குமுள்ளப் பாங்கி னோடே தானிருந்தார் காலமாற்றம் சிலபேர் நெஞ்சுள்
தன்நலத்தின் புற்றெடுத்துத் துரோகப் பாம்பு தானாக நுழைந்ததனால் பிறந்த மண்ணின்
துரோகிகளாய்ப் போனார்கள் திருந்தார் என்றாள் வீணாகிப் போகாத பொழுது அன்னாள்
விபரங்கள் பலதந்தாள் என்ப தாலே
270 “தாமதித்தால் கரிககட்டுச் செல்லும் நேரம்
சென்றுவிடும் விடைவேண்டும்” என்றான் சொல்வாள் “தாமதித்தால் சேதிகேட்டு மன்னன் கூடத்
துணைப்படையை அனுப்பிவைப்பான் பொறுப்பாய்’என்றே “ஆமவர்கள் தொடரட்டும் நாங்கள் மன்னர்
ஏகுகிறோம் வாழ்த்திவழி அனுப்ப வேண்டும் நாமெமக்கு வழிகாட்டோர் வீர ரைமுன்
நியமிப்போம் வழிதொடர்வோம்” எனவு ரைத்தான்
271 “எல்லாமே என்னிடத்தில் தெரிந்து கொண்டீர்
எனக்கும்மை அறிமுகஞ்செய் திடுவாய்” என்றாள் “சொல்லவென்ன உண்டுநாங்கள் வன்னி மன்னன்
சொல்லடிமைச் சேவகர்கள் வீர” ரென்றான் “நல்லதிவர் மாளிகையின் வீர ரேதாம்
நீர்மட்டும் வேறென்பேன்’ என்றே சொல்வாள் “சொல்மொழியின் பாங்கிலுள்ள பேதம் உம்மைச் சொல்கிறதே தமிழ்நாட்டின் செல்வன் என்றே”
272
uaokullargesyastafuasi asaraSurub 62

“சொன்னபடி தமிழ்நாட்டின் பிள்ளை தான்நான்
சிறிதேனும் உணர்வுகளால் இங்குள் ளோர்க்கு அன்னியனே இல்லைநான் கட்ட பொம்ம
அரசன்படைத் தளகர்த்தன் தூதாய் வந்தோன் என்பெயர்சுந் தரலிங்கம்” என்றான் சொல்வாள்
“இதுபோதும் வேறொன்றும் விபரம் வேண்டாம் உன்நாட்டின் ரகசியங்கள் அறியும் நோக்கும்
எனக்கில்லை” எனப்பேச்சை நிறுத்திக்  ொண்டாள்
273
சரிநாங்கள் வருகின்றோம் என்றே கூறித்
தட்டிவிட்டான் குதிரையினைக் காற்றோ டொன்ற ஒருவீரன் முன்சென்றான் பாதை காட்டி
உடன்வந்தோர் தொடர்ந்தார்கள் சிறிதே தூரம் புரவிகளும் வழிகடந்தே ஓரி டத்தில்
புதர்மண்டிக் கிடந்தவிடம் தயங்கி நிற்கப் புரியாதே அவர்தம்மை நோக்கிக் கேட்பான்
புகலுங்கள் காரணமேன் புரிய என்றே
274 கரிகட்டு அரண்மனைக்குச் செல்வ தாயின்
கவனமொடு நாம்செல்ல வேண்டும் அங்கே பெரியதொரு படையுண்டு ஆங்கி லேயர்
பன்மடங்காய்ப் பாதுகாப்புப் பணியில் உள்ளார் சரியாகா துணிவுமட்டும் போதா வேண்டும்
சேனையொடு ஆயுதங்கள் அதிகம் வேண்டும் புரிந்திதனை நடந்தாலே எமது எண்ணம்
பலிக்குமெனப் போர்வீரர் ஒன்றிச் சொன்னார்
275 கூடவந்த வீரர்களே தயங்கும் போது
குழப்பமுற்றான் தளபதியும் மன்ன னைமுன் நாடிவழி சென்றவீரன் சேதி சொல்ல
நமக்குதவிச் சேனைவரும் பொறுப்போம் என்றார் கூடாது இவர்சொல்லை மீறிச் செல்லல்
கருத்துண்டு அவர்பேச்சில் என்றே தன்னை நாடிவந்த பிரச்சினைக்கு முடிவு காண
நின்றிருந்தான் உதவிவந்து சேரு மென்றே
276
ஜிண்ணாஜர் 2றிபுத்தின்

Page 51
தங்கநாச்சி எண்ணியபோல் ஆங்கி லேயர்
தனித்திருக்கும் கரிக்கட்டு மாளி கைக்கே சங்கிலியைக் கொண்டுசென்றார் காக்கை வன்னி சமுகத்திற் காட்டவெனக் காத்தி ருந்தார் அங்கவனோர் அறையினிலே அணங்கொ ருத்தி
அணைப்பினிலே சுகித்திருந்தான் மதுக்கு எரிப்பில் சங்கைகெட்ட வாழ்வினையே இலக்காய்க் கொண்டோன்
சயனசுகம் ஒன்றேதான் வாழ்வாம் என்றே.
277
“காக்கை”யென்னும் அடைமொழிக்கு ஏற்ற வாறு
கருமை நிறம் கொண்டிருந்தான் காக்கை வன்னி காக்கும்இமை கண்களினைப் பாதி மூடிக்
கொண்டிருக்கும் குடிகார முகத்தோற் றத்தின் வாக்கினிலே கரிக்கொப்பாம் பருத்த மேனி
வானரம்போல் வாயிஸ்ரித்துப் பேசும் பாங்கு நொக்கமெலாம் உடலின்பம் காண்ப தொன்றே
நாநனைக்கும் இழிதொழிலும் நிறைந்தே வாழ்ந்தான்
278 பிறந்தமண்ணை மாற்றான்கைப் பொருளாய் மாற்றிப்
பதம்பற்றி வாழுகின்ற இழியோன் என்றே அறிந்திடலாம் முகம்நோக்கின் அடிமைப் பார்வை
அடங்காத பேராசை கொண்ட கண்கள் அறிந்தறிந்தும் பவஞ்செய்யும் மனப்பாங் குள்ளோன்
அடிமனத்தில் பொறாமைத்தீ வளர்த்து வாழ்வோன் மறந்துமொரு நன்மைவாழ்வில் செய்தி லான்தான்
மானத்தை இழந்தபெருங் கோடு கொண்டோன்காத்திருந்து
279 காத்திருந்து அலுத்துப் போன
காவலர்கள் பொறுமையற்றுக் கதவில் "நான்கு” சாத்தினார்கள் ஒடிந்ததுபோம் என்ற வாறே
திடுக்கிட்டு வெளிவந்தான் மதுக்கை யோடே பார்த்தனனே சங்கிலியை வெறிச்சூ டேறிப்
பீல்தெரிய நகைத்தனனே "தோற்ற நாய்”போல் சாத்தனின் மறுபிறவி என்றே வெள்ளைச்
சனிகளுமவ விழியோனைச் சபித்திட் டாரே
280
υ, αστυ (τσαμ στAσίμ στα ιταδιμιίο 64

ஒ:இந்த bாண்டியைநீர் கொணந்தீ ராமோ
என்றவரைக் கேட்டபடி அருகில் சென்றே 'ஒ. நொண்டிப் பயலேயுன் பேத்தி எங்கே
உலகப்பே ரழகியென்றாய் ரம்பை என்றாய் தாஎன்று கேட்டேன்நான் அன்று என்னைத்
தூசிக்கும் மதிக்காது இகழ்ந்து ரைத்தாய் பார்என்றன் தகுதியென்ன பெருவாழ் வென்ன
புகழென்ன பலமென்ன காண்பாய்” என்றான்
28
அச்சத்தின் நிழல்கூடக் கவலை கூட
அறியாத பாங்கினிலே சிரித்த வாறே துச்சனவன் முகம்நோக்கி நின்றார் கண்கள்
'து'வென்றே இகழ்வதுபோல் பாவங் காட்டும் எச்சிலிலை ஞமலியைத்தான் நோக்கும் வாறு
இருந்தானே பார்வைக்கு எரிச்ச லுற்றார் உச்சிமுதல் பாதம்வரை போதை ஏறி
உளறினனே வார்த்தைகளை ஒழுங்கில் லாதே
282 என்னநினைப் புனக்குநொண்டிக் கிழவா மண்ணில்
இன்னும்நீ வாழவேண்டும் எனநி னைந்தால் சொன்னபடி செய்யுன்றன் சிறுக்கிக் கின்றே சேரஒரு மடலெழுது மகளே! வந்து என்னைநீ காத்திடுதல் வேண்டும் என்றே
இல்லையெனில் பிணமாகிப் போவாய்” என்றான் சொன்னசொல்லில் செவிசுட்டுப் பொசுங்கச் சற்றுள்
சினங்கொண்ட புலிபோலச் சீறி னாரே
283 “என்னசொன்னாய் இழிமனத்தோய் என்றன் பேத்தி
என்னுயிரில் மேலாவாள் அவள்தம் வாழ்வை உன்சொந்தம் ஆக்கிடநான் மானம் கெட்ட
உன்மத்தன் இல்லையவள் வைரமுத்து வன்னியர்க்கே சொந்தமதை அறிவாய் நாச்சி
வாராள்உன் பஞ்சணைக்கு வீரம் மிக்காள் இன்னுமொரு முறையதனை யுரைத்தால் ஒன்று
இருப்பதுநீ அன்றேல்நான் இதயங் கொள்வாய்”
284
65
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 52
அப்படித்தான் சொல்வாய்நீ இரண்டு நாட்கள் அடிபட்டால்
இருட்டறையில் மாறிப் போவாய் உப்பில்லாக் கஞ்சிதந்து அகட்டைக் காய்த்தால்
உளறிடுவாய் தருவேன்நான் தருவேன் என்றே இப்போது அதுஒன்றும் வேண்டாம் இந்த
ஏமாளிக் கிழவனைநீர் இழுத்துச் சென்றே கப்பியிருள் கவிந்தமண்கீழ் சிறையி னுள்ளே
காவலிட்டு அடைத்திடுங்கள் எனப் பணித்தான்
28S
முத்து மாளிகை
வட்ட றப்பளைக் கண்ண கித்தல
விசேடத் திருவிழா முடிந்ததும் கட்டு டைத்தபேர் வெள்ள மாகவே
கூடு நோக்கிடும் பறவைபோல் முட்டி மோதியே மகிழ்ச்சிப் பெருக்கினால்
இல்லம் ஏகினர் ஊரவர் திட்ட மாகவித் திருவி ழாவில்இல்
தரித்தி ருந்தவர் இல்லையே
286 நடந்த தெதுவுமே அறிந்தி லாரவர்
நடந்து முடிந்தவத் திருவிழா நடந்த சிறப்பினைப் பேசிப் பேசியே
நடைந டந்தனர் நினைவெலாம் தொடர்ந்து மன்னவன் வைர முத்துவைத் துணைகொள் நாச்சியைப் புகழ்ந்தனர் கொடைய தாமிவர் இறைவன் அருளிய கருணை யென்றுமே புகன்றனர்
287 மன்னர் தம்படை வீரரோடுதன்
மனத்துக் குவந்திடு நாச்சியார் முன்னில் வருவதை முகங்கொ டுத்தவுர்
மக்கள் சூழ்ந்துமே மறித்தனர் அன்பு மேலிட்ட அம்மண் மாந்தர்கள்
அரச ரைப்புகழ்ந் தேற்றினர் “மன்னர் வாழ்கவே! மன்னர் வாழ்கவே!
மன்னர் வாழ்கவே!!!” என்றனர்
288
u awokullargou asiraofuair arr.Suyub 66

வாழ்த்தொ லித்தவர் விலகி வழிவிட
வந்தி றங்கிய மன்னவன் வாழ்த்தி வணங்கினான் வன்னி யன்திரு
வைரமுத் துக்குல சேகரன் தாழ்ந்து வணங்கினார் சிலபேர் சிரசினைத்
தரைப பதித்துமே வணங்கினார் நீள்நெ டுங்கிடை யாக வுஞ்சிலர்
நம்பிப் பதங்களைத் தொழுதனர்
289 மக்கள் அன்பினில் திளைத்த மன்னவன்
மகிழ்வு கொண்டுதன் அரண்மனை புக்கி னானவ னோடு நாச்சியும்
புகுந்த னஸ்இரு பேரலால் அக்க ணத்திலங் கெவருஞ் செலாமலே அனைத்து வாயிலுந் திறந்தவா றெக்க ணத்திலும் அழைப்பை ஏற்றிட
ஏது வாய்வீரர் நின்றனர்
290 திறந்து வைத்தவோர் சிப்பி பேலவே திகழ்ந்த தேவெளி மாளிகை திறந்த சிப்பியுள் பொதிந்த முத்தெனத்
தெரிந்த துட்புறத் தோற்றமே அறிந்த கலைத்திறன் அனைத்தை யும்அதன்
அமைப்பி னில்வைத் தேபெரும் திறமை மிக்கவோர் சிற்பி செதுக்கிய சிலைய தாமென மிளிர்ந்ததே
291 ஓங்கி வானுயர் கோபு ரங்களோ
ஒன்றிப் பெருத்துயர் தூண்களோ ஆங்கி லாப்பொழு தாயி னும்அதன்
அழகை நேர்த்தியைக் கூறிடும் பாங்கி னில்பெரும் அறைக ளுஞ்சிறு
பள்ளி யறையொடும் உணவறை தாங்கி யிருந்தது புதுமை எளிமையாய்ச்
சிறப்பு மிகுமுத்து மாளிகை
292
67
ஜின்னாவூர் ஷரிபுத்தீன்

Page 53
இருத யத்தினால் ஒன்று பட்டவவ் விருவ ருந்தனித் துட்புறம் ஒருமித் தேகிய போதி லும்அவர்
இதய சுத்தியோ டிருந்தனர் மருவி முயங்கிடும் வினையை வென்றவர்
மனமே காதலைத் தழுவிடப் பிரிய மிக்கவீர் அன்றில் போன்றுமே
பாச மழையினில் திளைத்தனர்
வருடம் ஐந்துசென் றிட்ட போதிலும்
வன்னி மன்னனோர் அசைவையும் விரும்பி ரசித்தனள் வதன மீதுறை
வசீக ரத்தினால் மயங்குவாள் குருவி நாச்சிதன் கொழுந னாய்வரும்
குலசே கரனாம் வன்னியன் உருவ அழகினில் உறுதி மிக்கசீர்
உடல மைப்பினால் உருகுவாள்
தங்க நாச்சியின் தமிழ்வ குப்பினில்
சேர்ந்து பயின்றநாள் இருவரும் தங்கள் தங்களின் மனமி ழந்தனர் தமிழர் பண்பெனும் கற்பினால் பங்க முற்றிடா திருந்த னர்.அவர்
பெரிதும் முல்லையின் சுதந்திரம் பங்க முற்றிடா திருக்கக் காப்பதே
பெரிதும் கடமையென் றெண்ணினர்
கொண்ட லட்சியம் கூடு நாள்வரை
கலந்து வாழ்திரு மணத்தினைக் கொண்டு வாழ்வதே இல்லை யாமெனுங்
கொள்கை மீதுற வாழ்ந்தனர் அண்டிப் பேசுவர் அளைந்து உண்ணுவர்
ஆங்கி லேயர்தம் ஆதிக்கம் விண்டி டாதுசெய் வழிகள் பற்றியும் விரும்பி யொன்றியே பேசினர்
293
294
295
296
பண்டாரவன்னியர் காவியம்
68

உள்ளு றைந்திடும் உடலின் ஆசைகள் உள்ளத் தளவிலே உறைந்திட வெள்ளை யர்தமின் ஆட்சி வெறியினில்
வளைந்தி டாதுநா டுய்த்திடக் கொள்ளும் கடமையே குறியென் றன்னவர்
கண்ண கித்திருப் பதியிலே தெள்ளு தூயநல் மனத்தி னோடுமே சத்தி யத்துறுதி கொண்டனர்
297 வேறு
திருவிழா முடிந்து இல்லம்
சேர்ந்திட இயலா வாறே அரும்பிய இடர்க ளைந்தே
அரசனும் பிறருஞ் சற்றே வருவதில் சுணக்கம் கண்டார்
வந்ததும் குருசி நாச்சி பெருகிய வயிற்ற ழற்குப்
பெருவிருந் தளிக்கச் சென்றாள்
298 பரபரப் போடு வேகம்
பணிகளிற் சுடர உண்ஊண் விரைவினில் கொணர்ந்தாள் மன்னன்
விகடமாய் வார்த்தை சொன்னான் “குருவிஏன் பறக்கின் றாய்நீ”
கூறென்றான் அவளுஞ் சொல்வாள் சிறகினைக் கட்டி நீங்கள்
செய்தவவ் வினையால் என்றே
299 “பதறாது பரிமா” றென்றான்
“பசியிலை எனக்காம்” என்ன “வதனமே காட்டு துங்கள்
வயிறுசெய் கொடுமை’ என்றாள் “முதலில்நீ உட்கார் நாங்கள்
மனம்விட்டுப் பேசிப் பேசிப் பதமான உணவைச் சேர்ந்து
பங்கிட்டு உண்போம்” என்றான்
300
69
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 54
“இல்லைமுன் வகள் உண்ண
இருக்கினற மிச்சம் கூட்டி எல்லாமே உண்பேண் சற்றும் எஞ்சிடா வாறே” என்றாள் “கல்லையைக் கூட வாநீ
கழித்திடாய்” என்றான் சேர்ந்தே கொல்லெனச் சிரித்தார் ஓசை
கலீரெனச் சதங்கை போன்றே (கல்லை : உண்ணும் பாத்திரம்)
பூரிப்பால் கன்னம் ரெண்டும்
பொலிந்தன பங்க யம்போல் சீராக இலைவி ரித்தாள்
செங்கரஞ் செயலில் முந்தும் சீரகச் சம்பா பாலில்
சேர்த்தெடுத் தவித்த கஞ்சி ஓர்கரம் பற்றத் தோளை
ஓர்கரம் பற்றித் தந்தாள்
முதலில்நீ அருந்தேன் என்று
முன்கரம் நீட்டி அன்னாள் இதழரு கிணைத்தான் பொற்கை
இணைந்தவன் வாயில் சேர்க்கும் “முதலில்நான் உண்ணல் வேண்டாம்
முந்துங்கள் நீங்கள்” என்றே மதுவினை உண்டாள் போன்றே
மயங்கினாள் பருகல் கண்டே
பனங்கிழங் கோடும் அல்லை
பாலினில் அவித்துத் தேனில் நனைந்திருந் தனவாம் அ.தை
நங்கைகை பரிமா றிற்றே பனியினில் குளித்த பாங்காய்ப்
பசுநெய்யில் அவிந்த அன்னம் கனியிதழ்ச் சிலையாம் பெண்ணாள்
கொட்டிட மன்னன் உண்டான்
301
302
303
304
uæru-/rg-2'airsfuaí &/r-Öuti
70

பூவிரல் அகப்பை பற்றிப்
பரிமாற மன்னன் கண்கள் தாவின கரத்தின் மீதே
தன்பசி மறக்க அந்தோ! நோவினைப் படுமே என்று
நினைந்தனன் கண்டாள் நங்கை கோவினின் நோக்கில் தன்னகை
கவர்ந்துமே மறைத்திட் டாளே
305
கரத்தினை மறைத்தா லுந்தன்
கண்படு வாறி ருந்த சிரத்தினை முகத்தை நோக்கிச்
சொல்லுவான் "அழகே யார்தான் பொருத்தினார் முகிலை யுன்றன் படர்முடித் தலத்தே நெற்றிப் புருவமாய் வளைத்த வில்லைப்
பூசிய கலைஞன் யாரோ?”
306 “போதுமே போதும் நீங்கள்
பார்த்தவீர் தலமும் இன்னும் காதுமூக் கிமைகள் கண்கள்
கன்னங்கள் அதர மென்றே ஓதிடத் துணிந்தே ஒவ்வோர்
உறுப்புக்கும் வேறாய் ஒன்றைத் தோதாக வர்ணித் தென்னைத்
திணறிடச் செய்தல்” என்றாள்
307 "நானென்ன செய்வேன் உன்றன்
நயனங்கள் என்னை நோக்கித் தேனுகர் வண்டு நாங்கள்
தெரிவையோ என்னும் போது வானுயர் பிறைநா னென்று
வாய்விட்டு நெற்றி சொல்லத் தேனுறுஞ் சுனைக ளென்றே
செவ்விதழ் அழைக்கு” தென்றான்
308
71
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீண்

Page 55
‘ஐயகோ! என்ன நீங்கள்
அடுக்கடுக் காக என்மேல் பொய்பூசி நாணச் செய்து
பார்ப்பதேன் பாவம்” என்ன ‘ஐயகோ இல்லை நானுன்
அழகிலா மயங்கிப் போனேன் பொய்யது” என்றான் கோபப்
படுவதை ரசிக்க வென்றே
309
சட்டென முகஞ்சி வக்கச்
சரிந்தன விழிகள் முத்துக் கொட்டின இமையொ டித்தே
கன்னங்கள் குளமாய் மாறும் தொட்டதும் சுருங்குந் தொட்டாச்
சுருங்கிபோல் சோர்ந்தே சொல்வாள் “விட்டகன் றிடவோ ஒர்நல்
வனிதையைக் கொள்ள” வென்றே
310 விரல்சுண்டு பொழுதுக் குள்ளே
விளையாட்டு வினையாய் மாறக் கரம்பற்றிச் சொல்வாள் மன்னன்
“கவலழி கண்ணே நானுன் சிரந்தொட்டுச் சொல்வேன் நீயென்
சிந்தையுள் நிறைந்த பெண்ணாள் புரிந்துமேன் கோபங் கொண்டாய்
புரிந்தது விகடம்” என்றான்
மாறிய வதனங் கண்டான்
மனமச்சம் தவிர்ந்த வாகாய்த் தேறிய நிலைமை கண்டு
சிரித்தனன் அருவி போன்றே கூறிய தழகாய்க் கன்னம்
குழிவிழ நகைத்தாள் பெண்மை மாறுமோ செயலில் வீரம்
மிகைத்தாலும் மிகைக்கு மன்றோ
312
uæirv /rg-ustafuer ösr-Sulið 72

ஊடலும் நீங்கி மீண்டும்
உடன்படு நிலைக்குள் ளாக தடியோர் வீரன் வாசல்
தலத்தினில் நிற்றல் கண்டாள் ஓடிவந் திளைத்தான் போன்றே
உடலெலாம் வியர்க்க நிற்க நாடினாள் அருகில் மன்னன்
நயனங்கள் நோக்கா வாறே
33
மன்னவன் காணா வாறு
வாசலில் நின்றோன் நோக்கி என்னதான் சேதி யென்றாள்
இன்றுங்கள் பாட்ட னாரை அன்னியர் வெள்ளைக் காரர்
அவரகம் தூக்கிச் சென்றார் என்னையிச் சேதி தன்னை
இயம்பிடப் பணித்தார் என்றான்
314 சுதந்தர லிங்கம் இந்துத்
தளபதி ஏனை யோரும் என்றனை அனுப்பிக் காத்தே
இருக்கிறார் மன்னன் ஆங்கே வந்ததும் ஏது செய்ய
வேண்டுமென் றறிய நாங்கள் பிந்தாது செல்ல வேண்டும்
பெருவினை கூடு மென்றான்
315 சரிசரி மன்னர் காதில்
சேர்த்திடாய் இங்கி ருந்து வருகிறேன் நானே அந்த
வீணரை வெல்வேன் என்றே திரும்பினாள் மன்னன் கேட்டான்
சேதிய,’. தென்ன வென்றே ஒருபுதுப் பதிலைச் சொல்லி
உடன்சென்று அமர்ந்திட் டாளே
316
73
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 56
கடல்மீனுக் கனுப்பி வைத்தேன்
கிடைத்திலை என்றா னென்று உடனொரு பொய்யைக் கூறி
உட்கார்ந்தாள் நாச்சி மன்னன் தடையென்ன இனியு னக்குச் சாப்பிட லாமே என்று அடம்பிடித் தானே தானே
இடுகிறேன் உணவா மென்றே
என்னதான் நடந்தி ருக்கும் எதிரிகள் தாத்தா மீது வன்மனங் கொண்டே ஏதும்
வினைசெய்து இருப்ப ரோநான் முன்னின்று அனைத்துஞ் செய்ய
முனைவதே முடிவாம் அ.தை மன்னனும் அறியா வண்ணம்
மறைப்பதாய் மனந்து னிந்தாள்
நாட்டினுட் பிரச்சி னைகள்
நிறையவென் றிருக்க என்றன் வீட்டொடு கொண்ட வற்றை
வன்னியன் செவியி லிட்டால் கூட்டொடு குடியாய் இன்னும்
கவலைகள் விஞ்சும் என்றே காட்டினாள் மகிழ்வு சற்றுங்
கவலையற் றுண்பாள் போன்றே
இருவரும் உண்ட பின்னர்
“இனிநீங்கள் ஒய்வெ டுங்கள் பிரசாதம் தந்து தாத்தா
பதம்பணிந் தாசி பெற்று வருகிறேன் நொடிக்குள்’
என்றே வேகமாய்த் துயில றைக்குள் சரிசெயச் சென்றாள் மன்னன்
சரியெனச் சம்ம தித்தும்
317
318
319
320
uætv-/rg-2'ai ofu si &/r-Suti
74

தாத்தாவைப் பார்க்க நானும்
சேர்ந்துடன் வந்தா லென்ன பார்த்துநாம் இரண்டு பேரும்
பதம்பணிந் தாசீர் வாதம் சேர்த்துமே பெறலாம் என்றான்
திருமகள் சொல்வாள் நெஞ்சுள் கோர்த்தவோர் சபத முண்டு
காவலர் மறந்தீர் என்றாள்
321 “திருமண நாளின் பின்தான்
தாத்தாமுன் நாங்க ளொன்றி வருவதாய்க் கூறி யுள்ளோம்
வேண்டாமின் றெனைத்த னித்து ஒருமுறை செல்ல விட்டால்
உடன்வந்து விடுவேன்’ என்றாள் “சரியுன்றன் விருப்பம் போன்று
செய்”யென விடைய யளித்தான்
322 “தனித்துநீ செல்ல வேண்டாம் துணைக்கொரு பத்து வீரர் உனைத்தொடர்ந் திடட்டும்” என்றான்
ஒப்பினாள் விடையுங் கொண்டாள் தனைத்தனித் தவன்மஞ் சத்தில்
சாய்ந்தனன் குதிரை நூறாய்க் கனைத்துமண் புரட்டி ஓடக்
கேட்டதும் அதிர்ந்திட் டானே சிலந்திவலையோ சிறிய பூச்சியோ
323 சிலந்திவலையோ சிறிய பூச்சியோ மாளிகையின் வாயிற்புறம் வந்தமன்னன்
அங்குநின்ற வீரன் நோக்கிக் கேள்வியொன்றைத் தொடுத்தனனே குதிரைப்படை
யோடுசெல்வ தெவர்தா மென்றே சூழநூறு படைவீரர் துணைக்கழைத்துத்
தேவியார்தான் வேகத் தோடே வாளுருவிச் செல்லுகின்றார் வேந்தரறி
யாததல்ல பணிவாம் என்றான் 324
75
søkar/r-B øgffussøk

Page 57
பிரசாதம் கொண்டவளின் பாட்டனாரைப் பார்ப்பதற்குப் போவ தாய்த்தான் உரைசெய்தாள் மன்னவர்க்கு உண்மைதனை
மறைத்தாளே வேறாய் ஒன்றும் தெரியாத காரணத்தால் சிந்தையின் வயப்பட்டே தெளிவு மற்றுப் புரியாத சூனியத்துள் நின்றனனே
வன்னிமன்னன் ஏனி தென்றே
காக்கைவன்னி தனைவெல்லுங் காரணத்தை
முன்வைத்துக் களமும் நோக்கி வாக்குரையா தேகினளே மன்னனையும்
துன்பத்தில் வீழ்த்தா வாறே மார்க்கமொன்றும் அறியாத வாறவனும்
கேட்பதற்கும் மார்க்க மற்றே நோக்கமற்று மாளிகையுள் நடைநடந்தான்
முன்பின்னாய் நிலைக்கா வாறே
ஒருவரொன்றை அறியாது மற்றவருந்
தனித்தெதுவுஞ் செய்யார் என்றும் இருவருமே ஒன்றியொன்றச் செய்வதிலே நிறைவு
கொள்வர் இன்பங் காண்பர் மருவிவந்த இடரொன்றை எதிர்த்திடவே சென்றிருப்பாள் எனினும் என்னைத் தெரியாது ஏன்சென்றாள் எனளண்ணித் துயருற்றான் தெளிவுற் றானே
பகைஎதுவாய் வந்திடினும் பகையெதிர்த்து
வென்றுவரும் பலமும் நெஞ்சில் மிகையான தைரியமும் மிஞ்சிநிற்கும்
வீரமொடு வேக முஞ்சேர் அகமுடலாம் இரண்டையுமே தனதுசொந்தம்
எனக்கொண்ட குருவி நாச்சி தகையுடையாள் வெற்றிவாகை சூடிவரு
வாளென்றே தெளிவுற் றானே
325
326
327
328
uæku-/r/re-2átíðru of as/r-Sustið
76

வந்துற்ற பகையெதுவோ தங்களது
வஞ்சனையால் ஆதிக் கத்தை இந்தமண்ணில் ஊன்றிடவென் றெண்ணிநிதம்
இடர்செய்யும் வெள்ளைப் பேரோ தந்தவற்றைத் தந்துவிட்டு எச்சிலுக்காய்
நடமாடும் டச்சுப் பேரோ சொந்தமண்ணின் பகையாமோ தெரிந்திலையே
யாரதுதான் தெரிகு வாரோ
329 யார்பகைவர் என்றாலும் எதிர்த்துவெல்வாள்
எனக்கதிலோர் ஐயம் இல்லை போர்நுட்பம் பலபடவும் அறிந்தவள்தான்
என்றாலும் ஏதும் நேர்ந்தால் நேராது நேரவவள் இடந்தாராள்
நெருப்பாகி எரிப்பாள் முன்னர் ஒர்நாளில் இளவயதில் நடந்ததொரு நிகழ்வுதனை நினைந்திட் டானே
330 நீர்நிலையின் படித்துறையில் வீற்றிருந்தாள்
ஒர்நாள்தான் அவளைக் கண்டு யாருமிலை எனுந்துணிவில் பின்னால் போய்க் கண்பொத்தும் அவவாவுங் கொண்டே ஊருகையில் சட்டென்றோர் ஆணுருவம் அவள்முன்னே தோன்றிப் பல்லைக் கோரமுகங் காட்டிஇளித் திட்டபடி
நின்றானது காக்கை வன்னி
331 “என்னநெடுஞ் சிந்தனையோ டிங்குற்றாய் குருவிச்சி” என்றான் சொல்வாள் “ஒன்றுமிலை சங்ககால இலக்கியங்கள் தனைப்பற்றிச் சிந்த னைதான்” என்றேமுன் நின்றவனும் சென்றருகில் அமர்ந்திட்டான் என்றன் நெஞ்சுள் என்னநடந் திடுமோவென் றோரச்சம்
தோன்றிடநான் அசையா துற்றேன்
332
77
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 58
அடங்காத ஆசையென்மேல் கொண்டவள்தான்
அவளென்றே அறிவேன் நானும் அடங்காத ஆசையினால் அவனுமுள்ளான்
அவள்மீது அறிவேன் அட்தை அடங்காத மோகத்தால் அவளையேதும் செய்யவென அவன்மு யன்றால் அடங்காத கோபத்தால் அவனையவள்
அவமதிப்பாள் அஞ்சி னேனே
ஏதேனும் நடக்குமுன்னே முன்சென்று
நேராது தடுக்க எண்ணித் தோதாக நடந்துகொள்ள நினைந்தாலும்
முன்செல்லல் நன்றே யாகா தீதாகா விடிலுமது நாகரீக
மற்றசெயல் என்ப தாலே மீதமென்ன நடக்குதென மறைந்திருந்து நோக்கமனம் கொண்டிட் டேனே
தங்கநாச்சி தமிழ்வகுப்பில் எங்களொடு கற்றவன்தான் காக்கை வன்னி சங்ககால இலக்கியத்தில் எமைப்போலப் பயிற்சியவன் றனக்கும் உண்டாம் சங்ககால இலக்கியங்கள் பற்றியெனக்
குருவிச்சி சொல்லக் கேட்டுச் சங்ககால இலக்கியத்தில் திளைத்தவன்போல்
பேசலுற்றான் அவளுங் கேட்டாள்
காதலிதன் தாய்வீட்டு வாசலிலே
தனித்திருந்தாள் அருகிற் சென்று காதலன்தான் பருகுதற்குத் தண்ணிரதர
வேண்டிநிற்கத் தாயும் சொல்வாள் காதலியாம் அவள்மகளைத் தண்ணிர்கொண்
டவனுக்குத் தருவாய் என்றே காதலனும் குவளையொடு கைபற்ற வெட்கத்தாற் கதறி னாளே
333
334
335
336
uæru-/rg-warafu si að/r-Öustið
78

தனைமறந்து அவளிட்ட அலறலொலி
கேட்டன்னை பதறி வந்தே எனையுனக்கு நடந்ததென இமைவிரித்துக்
கேட்கவவள் இடம றிந்தே எனக்கொன்றும் இல்லையவர் தமக்குவிக்கல்
ஏற்பட்ட தால்தான் என்று தனக்குவந்தோன் தனைக்காத்துத் தன்காதல்
தனையவளும் நிரூபித் தாளே
337 மனமிரங்கி அன்னையவள் வார்த்தைகளை
நம்பியவன் முதுகைத் தட்டத் தனைப்பின்னால் கொண்டுசென்றாள் தருணத்தைப்
பாழ்படுத்தா தவன்ந கைத்தான் தனைநோக்கி அவன்செய்த செய்கையைத்
தமிழ்ப்பெண்ணாள் மகிழ்ந்தே தம்மின் மனந்திறந்து “நகைக்கூட்டம் செய்தனனக்
கள்வன்மகள்” என்றிட்டாளே
338 அற்புதமாம் கற்பனையீ தென்றேதன்
அங்கலாய்ப்பை ஆகா வென்ற சொற்களினால் பொய்யாக வெளிப்படுத்தி
மகிழ்வுகாட்டிப் பேசி நிற்க மற்றுமொரு நிகழ்வைத்தான் அறிந்ததனை அவன்அறியச் சொல்வாள் காக்கை உற்றதனைச் செவிமடுத்தான் உளங்கொள்ள
உவந்தவளும் கூறி னாளே
339 தந்தையொடு தமையனையும் கொழுநனையும்
சமர்க்களத்தில் நீத்தா ளெங்கள் முந்தைத்தமிழ்ப் பெண்ணொருத்தி தான்வாழ்ந்த
மண்காக்க மானம் காக்கத் தந்தைவழி செல்லென்றே தான்பெற்ற
பாலகனை ஈற்றில் தந்தாள் விந்தையிது தானன்றோ வீரத்தை
உறுத்துதென விதந்திட் டாளே
340
79
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 59
“குருவிச்சி இவள்பற்றி நின்மனத்தின்
கருத்துரைப்பாய்’ என்றான் காக்கை “பெருமையவள் தனக்கவளின் பிள்ளையொடு
வாளேந்தித் தானும் சென்றால் உருவத்தில் அன்றவளாய் நானிருந்தால் அதற்குமாறாய் அன்றே அந்தச் செருக்களத்தில் செத்திருப்பேன் சொந்தமண்ணின்
புகழ்மானம் காக்க” வென்றாள்
இப்படியோர் பதிலையவள் புறத்திருந்தே
எதிர்பார்க்காக் காக்கை வன்னி தப்பிழைத்த பிள்ளைதன் தாய்முன்னே நிற்பதுபோல் தலைகு னிந்தான் ஒப்பில்லாப் பதிலிவளென் பத்தினிக்குப் பொருத்தமென்றெ பிறப்பெ டுத்தாள் செப்பிடில்தான் பெற்றபெருந் திருவிவள்தான்
எனவெண்ணிப் பூரித் தேனே
பதில்கேட்டுத் தலைகுனிந்தோன் பின்றன்னை
சமாளித்துத் தலையு யர்த்தி மதுவுண்ட மந்தியெனப் பல்லிளித்து முகம்நோக்கிப் புகலு வான்’என் விதியாமோ வளையேந்துங் கரங்களிலே
வாளேந்த வன்ம னத்தின் கதியுனக்கேன் ஆண்மரத்தில் படருங்கொடி
பெண்ணென்ப தறிவாய்” என்றான்
“புன்னகைத்தாள் குருவிச்சி காக்கைநோக்கிப்
புராணங்கள் அறிவீர்” என்றாள் “என்னவேண்டும் சொல்லெதிலே எதுபற்றிப்
பதில்வேண்டும்’ என்றான் சொல்வாள் "தன்வடிவைக் காளியென உருமாற்றிச்
சூலமேந்திச் சக்தி தேவி கொன்றனளே மகிஷாசூ ரனையவளும் பெண்தானே கொடிதா மென்றே
341
342
343
344
பண்டாரவன்னியன் காவியம்
80

அதிர்ந்தனனே காக்கைவன்னி பதில்கேட்டு
இருந்துமவன் வந்த நோக்கை மதியுறுத்த மெல்லவவள் அருகினிலே
நெருங்கவதை உணர்ந்தாள் போலும் குதித்தெழுந்து படித்தலத்தில் நிற்கவவள்
கரம்பற்ற விடுத்துக் கொள்ள மிதியுண்ட சிறுகுரங்கின் முகம்போலக்
கோணமுகம் மலைத்திட் டானே
345
“குருவீநீ இன்றெனக்குப் பதிலொன்று
சொல்லவேண்டுமுனை விருப்பங் காட்டித் திருமணத்தைப் பற்றியொரு தெளிவுமற்றுக்
காலத்தை ஒட்டு கின்ற ஒருவனையா நம்புகின்றாய் உன்னொருசொல்
வாயுமிழ்ந்தால் இன்றே நானும் திருமணத்தை நாள்குறித்து நடத்திடுவேன்
நீயென்றன் உயிராம்” என்றான்
346 உயிரையென்மேல் வைத்திருப்ப தறிவேன்நீர்
அவர்மேல்நான் அன்றி ருந்தென் உயிரைவைத்து இருப்பதுவும் அறிவீர்நீர்
அதுவன்றி நாட்டின் மீதே உயிரையவர் வைத்திருப்ப தறிவோம்நாம்
இருபேரும் அவரும் என்மேல் உயிரைவைத்தே இருக்கின்றார் இனியென்னைத்
தொடராது விடும்நீர் என்றாள்
347 இத்தனையுஞ் சொல்லியவன் மனம்மாறா நிலையிலவள் தன்னை நோக்கி “சத்தியமாய் உனையடைய விதியென்றன்
தலைபிடித்தே அழுத்த உள்ளம் பித்தாகிப் போகின்றேன் என்றவள்மேல் பாய்ந்திட்டான் மின்ன லொன்று பிய்த்தெறிந்த வாறவனைப் படித்தலத்து
நீர்நிலையில் வீசிற் றன்றோ
348
81
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 60
மின்னலெனப் பாய்ந்தவனைப் பிடித்திழுத்து
உலுக்கிப்பின் அடித்து வீழ்த்த என்குருவி தனக்குவலு எங்கிருந்து
வந்ததுவோ காக்கை வன்னி சென்னிமட்டும் தெரியக்கால் சேற்றிலுன்ற
கையடித்தே தவித்தான் கண்டும் என்னிலையில் உடன்சென்றால் முறையாகா
என்றேநான் தவிர்த்து நின்றேன்
படித்துறையின் நீர்நிலையில் புரண்டுவிழுந்
தவதியுறும் போது மூச்சு விடுத்திடுவ னோவென்றே எண்ணுவகை
கையடித்தே திணறப் பாய்ந்து விடுத்தவனை நீரிருந்து காத்தேன்நான்
வந்தந்தப் போதே என்றும் நடித்தவனாய் நடந்ததென்ன எனக்கேட்டேன்
பொய்யொன்றைப் புழுகி னானே
நடந்துவந்த நிகழ்வுஎன்றன் நினைவினிலே
நிழலாட நெஞ்சம் சொல்லும் எடுத்தாலோர் முடிவதனில் உறுதியொடு அச்சமின்றி முயல்வாள் என்றே படைநடத்தி இன்றவள்செல் காரியம்யா
தென்றேநான் அறியாப் போழ்தும் திடமாக வாகசூைடி வருவாளென்
றெண்ணிமனம் அமைதி கொண்டேன்
ஒருநூறு வீரருடன் படைநடத்திக்
குருவிச்சி சென்றாள் நெஞ்சில் பலநூறு சிந்தனைகள் தோன்றியதில்
நான் கொண்ட சிந்த னையில்
நிலைபெற்றார் காத்திருக்கும் தமிழகத்துத்
தளபதியை நேரில் கண்டு
நிலைமைதனை யறிந்ததற்கு ஏற்றபடி தந்திரமாய்ப் போரை வெல்ல
349
350
351
352
υ αστι (τσα, στατου στα ιταδιμιρ
82

காற்றோடு கலந்ததந்தக் குதிரைப்படை
குருவிச்சி காற்றை வென்றாள் தோற்றத்தில் ஆண்சிங்கம் போலிருந்தாள் பெண்மைதோற்றே படையின் முன்னே கூற்றுவனோ காக்கைக்குக் குதிரையிலே
செல்கின்றான் என்னும் பாங்காய்ச் சீற்றத்தால் கண்சிவக்க தொங்குமிடை வாள்துலங்கப் பறந்திட் டாளே
353 வாளெடுத்து வீசிடவும் வேலெறிந்து
படைவென்று நெஞ்சுண் டானைத் தோள்கொடுத்துக் காத்திடவும் துணிவுகொண்டு
பிறந்தமண்ணின் பெருமை காக்க வாழ்வினினையே தரத்துணிந்த வீரனுக்குக்
காதலியாய் வாழ்வு கொண்ட தோழமையும் பெற்றமகள் தருக்கர்களை மாய்க்கவெனச் சென்றிட் டாளே
354 காக்கைவன்னி மாளிகையில் தான்தனது
தாத்தாவை மறைத்தி ருப்பர் காக்கவெனப் பன்னுாறு காவலர்கள்
நிறைந்திருப்பார் என்றே தன்னுள் நீக்கமற நினைந்திருந்தாள் எனினுமவள் நெஞ்சுகொண்ட போர்க்கு ணத்தால் தேக்கமற்ற துணிவுடனே செங்கரத்தின்
பலமெண்ணித் தாவிச் சென்றாள்
355 சுந்தரலிங் கக்குடும்பன் தனைக்கண்டாள்
தேவியவள் அவனை நோக்கி “இந்தமுடி வெதற்குங்கள் நாட்டிலுங்கள்
பணியிருக்க நாங்க ளெங்கள் சொந்தமண்ணைக் காக்கவுயிர் கொடுப்பதற்கும் துணிந்துள்ளோம் வெற்றி கொள்வோம் வந்தவினை நிறைவுசெய்த மகிழ்வுடனே
புறப்படுங்கள் விரைவாய்” என்றாள்
356
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 61
எங்குவாழ்ந்த போதிலுமென் தமிழனெனில்
பிரிவில்லை ஒருதாய் மக்கள் பங்கமுறா தவன்மானம் காப்பதெனில்
பிளவில்லை இடுக்கண் தோன்றின் புங்கமெனப் பறந்தின்னல் போக்குவதே
பிறப்பினால்நாம் ஒன்று பட்ட சங்கமமாம் சமரிலும்நாம் சேர்ந்துவெல்வோம்
சந்தர்ப்பம் கொண்டேன்’ என்றான்
சரியென்றே உடன்பட்டாள் நாச்சியுடன் படையொன்று நம்மை நோக்கி வருகிறதென் றறிந்திட்டான் காக்கைவன்னி
போருக்காய் வியூகம் செய்தே வருமவளைச் சுற்றிவளைத் திடவேதான் துணிந்திட்டான் கைது செய்தால் சிறுபூச்சி சிலந்திவலைக் குட்பட்ட
கதியேதான் எனம கிழ்ந்தான்
அதிகாரி வழங்கிய ஆலோசனை
கோட்டை நோக்கிவரும் குதிரைப் படையினர்
குறித்த வாறெமைத் தாக்கவே நாட்டம் கொண்டுமே வருவ தாலுடன்
நாடு வாருடன் மோதுவார் தேட்டம் சாவெனத் தெரிந்தும் வருவதால்
தொலைப்ப மென்றுமே காக்கையும் கூட்டி னான்படை காத்து மிருந்தனன்
கேட்ட சேதிவே றாகுமே
வீர னொருவனங் கோடி வந்தெதிர்
வணங்கி நின்றனன் பணிந்துமே யாரோ ஒருபடை வீரன் தனித்துமே
எம்மை நோக்கியே வருகிறான் சேர விடுவதோ இல்லை யோவெனச்
சொல்ல வேண்டுமென் றுரைத்திடத் துார நின்றுமே தூத னுப்பிடும்
சேதியைக் காக்கை யுணர்ந்தனன்
357
358
359
360
uasi-tiya aitatagai a5ta3utub
84

அனும திப்பதோ இலையோ என்றுமே
அருகில் நின்றவோர் வெள்ளையன் தனைவி னாவினன் தாங்கொ னாப்பெரும்
தெளிவி லாதவுள் வியப்பினால் என்ன தவள்விடும் சேதி தாமென எமக்குத் தெரிந்திட வரட்டுமே எனவு ரைத்தனன் எமது பலமெதென் றெமக்குத் தெரியுமென் றவனுமே
361 தகவல் தந்தவவ் வீரன் பின்னொரு
தூதன் வந்தனன் சபையுளே பகைவ ரென்றுமே புரிந்தும் அன்னவன்
பயமொன் றின்றியே நுழைந்தனன் புகுந்த தொருபெருந் துரோகி யின்தலம்
புரிந்து மேயவன் புக்கினான் மிகுந்த மனப்பலம் கொண்ட வன்பலம் மிக்க வன்னென விளங்கினான்
362 சங்கி லித்தள பதியை மீட்டிடச்
சென்றாய் அவரொடு நீங்களும் சங்க மிக்கவென வேண்டு மோஇலை சேதி யறிந்துநான் வருகிறேன் எங்கே அவருளார் என்ப தோடவன்
இணக்க மெதுவென அறிகுவோம் இங்கு மீண்டுநான் வரும்வ ரையும்நீர்
இருப்ப தேநன் றென்றனன்
363 சொன்ன வார்த்தைகள் கேட்ட குருவிச்சி
சரியென் றொப்பினாள் தளபதி தன்னந் தனியனாய்க் காக்கை வன்னியன்
சபையுட் புகுந்தனன் ஆங்குபோய்த் தன்னை இருத்தினான் துணிந்தோ ரிருக்கையில்
சோபை மிளிர்ந்ததம் மண்டபம் என்ன ஈதென்று அதிர்ந்த காக்கையார்
இவனென் றெண்ணினான் புதுமையே
364
85
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 62
கடமை யுணர்வொடு காட்டும் ஆர்வமும்
கொண்ட நெஞ்சுரங் கண்டுமே குடும்பர் குலத்துவக் கொள்கை வீரனைக்
குருவி நாச்சியும் போன்றினாள் விடையுங் கொண்டவன் வேலை முடிந்தவுர்
விரையும் வழியினில் தோன்றி இடர்க ளைந்திட எமக்குத் துணைசெய எண்ணி னானென எண்ணுவாள்
மண்ட பத்தினுள் நுழைந்த வன்புது
மனித னாகவே தோன்றினான் தன்னை யவனொரு துரும்பென் றாகிலும்
தரித்தன னில்லையென் றெண்ணினான் மன்னர் வந்துமே மார்பி னில்கரம்
மடித்துக் கட்டியே பணிந்துதான் மன்ன வன்முனால் ஏவ லாளர்கள்
மதித்து நிற்பதை நினைந்தனன்
காக்கை வன்னியன் தோற்றம் கண்டுமே
கூசி னன்தமிழ்த் தளபதி தீக்கு ணன்பெருந் துரோகி யென்பதும் சதிசெய் பாங்கினன் என்பதும் தேக்கி முகத்தினில் தோன்றி னன்னவன்
தப்பிப் பிறந்தவன் தமிழனாய் நோக்கும் பார்வையில் நோக்கு வோர்விழி
நன்கு தேர்ந்திடும் நோக்கினான்
பண்பு வீரம்நற் பாசம் அன்பொடு
பழக எளிமையும் ஆனவன் கண்ட வர்விழி கண்ட நொடியினுள் கவரும் வாகுடைத் தூயவன் பண்டை மரபினில் ஊறித் திளைத்தவன்
பண்டார வன்னியென் றானவன் கொண்டு நோக்கிடில் இரண்டு துருவங்கள்
கவலை கொண்டனன் தளபதி
365
366
367
368
பண்டாரவண்ணியன் காவியம்
86

அமர்க வென்றுநான் சொல்லு முன்னமே
அமர்ந்து விட்டவன் யாரிவன் அமர்ந்த பதவிதான் என்ன வன்னியின்
அரச சபையிலே அறிகிலேன் திமிர்பி டித்தவன் போலு மென்முனே தைரி யத்துடன் இருந்ததால் சமர்க்க ளம்பல கண்ட வீரனாய்த் தானி ருப்பனென் றாகுமோ
369 தான்த னித்துமே தெளிவு தேடியும் தெரிந்தி டாததால் காக்கையும் “ஏன்’எ னப்பொருள் தோன்றும் பாங்கிலே
இருபெ ரும்விழி சுழற்றினான் நான்த மிழகத் திருந்து வந்தவன் நாடு பிடித்திடும் வெறியினோர் ஊன பூழித்திட உறுதி கொண்டவன்
உரைக்க உண்டெனத் தொடர்ந்தனன்
370 நாமம் சுந்தர லிங்க மென்பதாம்
நகரில் கட்ட பொம்மனின் வீம னெனும்பெருந் தானைத் தளபதி
வெள்ளைத் தேவனின் துணையெங்கள் பூமி காத்திடப் பறங்கி யர்தமைப்
பகைத்தெ திர்த்திடும் பெயர்கள்நாம் தீமை கண்டிடில் கொதித்தெ ழுந்திடும்
தமிழர் பரம்பரை யாமென்றே
371 யாரு மறிந்திலா வாறு தானேநான்
இங்கு நுழைந்திருப் பேனென யாரு முணருவர் எனினும் இங்குநான்
எடுத்தே உண்மையை உரைப்பது பேரா மதிசயம் போலி ருப்பினும்
பிறந்த மண்ணினைக் காத்திடச் சாரும் பகையினைத் துணிந்தெ திர்த்திடுந் திடனுங் கொண்டனம் இன்னும்நாம்
372
87
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 63
சொந்த மண்ணையும் சுதந்தி ரத்தையும்
சொந்த மானமும் காத்திடச் சொந்த வுயிர்களைத் தந்திடும்படி
தியாக நெஞ்சமுங் கொண்டதால் எந்தப் பொழுதிலும் இறப்பை நோக்கிடும்
எண்ண மிருப்பதால் தூதனாய் வந்த வாறுநான் செல்ல முடிந்துமோர் வாய்ப்பைப் பெற்றறனன் இங்குமே
பீடு பெருமிதம் பீறும் சொற்களைப்
புயலாய் வீசிய போதிலே சூடு சுரணையற் றாங்கி லேயர்தம்
தாள்ப னிந்துவாழ் காக்கையும் நாடு பிடித்திட நாடி வந்தவவ் நாச காரரும் அயர்ந்தனர் தேடி வந்ததேன் சொல்லும் காரணம் தூதைக் கூறுவாய் என்றனன்
நாச்சி யாருடைப் பாட்ட னாரினை
நீங்க ளிங்குதான் கொணர்ந்ததாய் நாச்சி யாரொரு யூகம் கூறினார்
நிலைமை யாதென அறிந்தபின் பேச்சைத் தொடங்கலாம் புதிரை அவிழுங்கள்’
பதிலை வேண்டினன் அன்னவன் கூச்ச மற்றுத்தன் கீழ்மைத் தனத்தினைக்
கூறு வான்செவி கூசவே
காக்கை வன்னியன் மீது வெள்ளையர் கொண்ட நம்பிக்கை புரிந்ததா சேர்க்க வேண்டிய தலமும் ஈதெனத்
தெரிந்து கொண்டதும் சரியென்றான் ஏற்க வேண்டுமென் பலத்தை வெள்ளையர்
என்றும் என்புறம் என்றவன் மூர்க்க மாய்ச்சில வார்த்தை மொழிந்ததும்
முகம்க றுத்தனன் தளபதி
373
374
375
376
uætv-srg-2 stafuøí að/r-Sustið
88

வன்னி மன்னனி தறிகிலான் இங்கு
வந்தி ருப்பது நாச்சிதான் தன்னை முற்றிலும் தாங்கி யோர்படை
தொடர வந்துளார் மோதிட முன்ன ரோர்முறை பேசிப் பார்ப்பது
முறையென் றோதினேன் ஏற்றதால் என்னைத் தூதனாய் ஏற்று வந்தனள் என்று விளம்பியே கூறுவான்
377 "மோதல் தொடங்கினால் முல்லைப் படையெலாம்
மோத லில்முழுப் பலங்கொளும் மீத மொன்றிலா வெள்ளைப் படையினை
முல்லைக் கழைத்திடும் நிலைவரும் ஏது எதுவென எண்ணிப் பார்ப்பது
இருபு றத்திற்கும் உவந்ததே சேதம் சிறிதிலை தெரிந்தும் வெள்ளையர்
தமைய பூழித்திடத் துணிந்திடார்”
378 கார ணங்களைக் கூறக் காக்கையும் கோப மிகுதியால் மீசையைக் கோல மாய்முகம் கொள்ள முறுக்கினான் கர்ண கடூரமாய் 'அதற்கென்றான்' சேர இருந்தவோர் வெள்ளைத் தலைவனும் சற்று வரச்சொலித் தொலைவில்போய்த் தேரும் ஈதெனச் சொல்லி னான்சில சங்க டங்களைத் தெளிவுற
379 தூதன் சொல்வதைத் தெரிந்தும் ஆய்ந்துமோர்
சிறந்த முடிவினைக் கொள்வதே தீதி லாவழி கொழும்புத் தலைமையின் தொடர்பி லாதுநாம் வன்னியன் மீது மோதிடில் மூழும் யுத்தமோர்
முடிவி லாதுமே விரிந்திடில் யாது செய்வது நம்மைத் தலைமையும்
ஏற்க மறுத்திடும் என்றனன்
380
89
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 64
வெள்ளை யன்மொழி வார்த்தை கேட்டதும்
வெகுண்டும் வெகுண்டிலாக் காக்கையும் கொள்ளை யிட்டதேன் கிழவ னையிவன்
கொண்டு வந்ததேன் என்றனன் தள்ளி வைப்பதும் தவிர்க்க நினைப்பதும்
தோன்றும் மாபெரும் போரையே கொள்ளும் சிறுசிறு தொல்லை கள்தனைக்
கைவி டும்நிலை இலையென்றான்
வன்னி யன்பிடி வாதம் சிதைந்திட
வேண்டு மென்பதில் நிலைத்ததால் கொன்றாள் ஆங்கொரு குதிரை வீரனை குருவி யென்பதால் கிழவனைக் கொண்டு வந்தனம் கொடுக்கும் பதிலெனக்
காக்கை வன்னியர் சமூகமே உண்டாம் இதிலொரு இராஜ தந்திரம்
உணரப் புரியுமென் றோதினான்
உரைப்ப தைமிக உணர்ந்து நோக்கிடில்
உம்மை நம்பிய என்றனைப் பிரித்தும் அவனொடு கூட்டுச் சேர்ந்திடும்
படியென் றாகுமோ என்றனன் விரிக்கும் வலையினில் வீழ்ந்தும் அவனெங்கள்
வழிக்கு வந்திடாப் போதினில் வரிக்கும் போரொன்றே வீழ்த்தும் அன்னவன் வலிமை குறைத்திடும் வழியென்றான்
உடைத்து வீழ்த்திட ஒண்ணாக் கல்லினை
உளியால் சிறுசிறு துண்டமாய் உடைத்து வீழ்த்துவ தொப்புமாம் இச்செயல்
ஒர்க என்றவன் உரைத்தனன் அடுத்தி ருந்துவாய் அசைவ தாகவே ஆரம் பித்தவன் இடையினில் கெடுத்த னன்அது தூதன் காதிலும் கேட்கும் வாக்கிலே வீழவே
381
382
383
384
υ, αστι-ιτσα, στ στου σταδιτα διαιb
90

இருந்த விடத்தினில் இருந்த வாறுமே இருவர் செவிசுடக் கூறுவான் பெருமை யோடுநீர் கூறி னிர்பெரும்
பாராங் கல்லினை உளியினால் உருக்கு லைத்திடும் திட்ட மென்றுமே
உணர்ந்து கொள்ளுவீர் உடைவது அரிய தோர்சிலை ஆகி வருவதை அழிவி லாததாய் என்றுமே
385
இன்றோ நாளையோ என்றோ ஒருதினம்
எங்கள் தமிழரில் இழிகுணர் ஒன்றா யும்மொடு கூடி எம்மையும்
ஒழிக்க உதவுவர் உண்மையே அன்றே உங்களின் சூழ்ச்சி வென்றிடும் உடல்கள் அழியலாம் உணர்வுகள் என்றும் தோற்றிடா என்னும் சேதியை
இன்றே கூறுவேன் என்றனன்
386 சுதந்தி ரப்பசி கொண்ட தீரர்கள் சாவ தென்பது பொய்யெனப் பதிந்த சரித்திரம் தொடர்ந்து செல்வதைப் பார்த்த தில்லையோ மண்ணினில் உதிர்ந்த போதிலும் உதிர்த்த போதிலும்
ஊன்றி மண்புதைந் திட்டநெல் புதிதாய் மீண்டுமோர் பயிராய்ப் பிறப்பது
பார றிந்தவோர் உண்மையே
387 காய்ந்து கணம்வெடித் திருந்த வெறுநிலம்
கொட்டும் மழையினால் உயிர்பெறும் வாய்ப்பு வருவது போலும் எம்மவர் வாகை சூடுவர் சோர்விலார் தேய்ந்த வெண்ணிலா திரும்பி முழுமையாய்த்
தோன்றல் அதிசயம் இல்லையே ஓய்ந்து போயிடோம் உலகம் உயிரொடும்
உள்ள நாள்வரை என்றனன்
388
91
ஜிண்ணாஜர் ஷரீபுத்தீன்

Page 65
உடலில் ஓடிடும் ஒவ்வோர் துளித்தமிழ்
உதிரம் வாழுநாள் மட்டிலும் கடமை எங்களின் மண்ணைக் காத்திடல்
கூறும் வார்த்தைகள் சத்தியம் அடிமை வாழ்வினுக் கடிப னிந்திடோம்
ஆண்ட பரம்பரை என்பதை மிடிமை கொண்டவெண் தோலை யுடையநீர்
மனத்தி ருத்தெனச் சீறினான்
வெஞ்சி னத்தொடு வீசுஞ் சொற்களால்
விழிப்புக் கொண்டவவ் விருவரும் அஞ்சி னாரிவன் அனைத்தும் அறிந்தனென்
றதிர்ச்சி மேலிட மறைத்துமே மிஞ்சும் போதையால் வந்த வினைதனை
மாற்றும் நோக்கினில் கூறுவார் கொஞ்ச மும்பிச கில்லை பொம்மனும்
கூடி நண்பரென் றாலென்றே
கட்ட பொம்மனும் கூட வன்னியும்
கொள்ளும் நட்புவே றாகுமே இட்ட பணிசெய ஏவ லாளன்போல்
இருப்ப ததற்கொப் பாகுமோ நட்பின் உயர்வினை நாமும் அறிகுவோம் நத்திக் கிடப்பதை வெறுக்கிறோம் உட்பொ ருள்தனை ஏதென் றறிகுவோம் உங்கள் பதிலுரைப் பீரென்றான்
பகையு ணர்வறப் பேத்தி பாட்டனைப்
பார்த்த ழைத்துமே ஏகலாம் பகையு ணர்வறப் பேசு வோம்எமைப் புரிந்து விருந்தினர் போலவே தகைபொ ருந்திட இருபு றத்தவர்
தாமும் நடந்திடல் நன்றென வகையும் செய்திட விழைந்தான் வெள்ளையன்
வந்த வன்பதில் நோக்கினார்
38')
39()
39
39
υαστι (τσαυστ στου σταδιτα δυιb
92

மன்னிப்பு யார் யாரிடம்? பேசிப் பார்க்கிறேன் நாச்சி யாரிடம் பேச்சில் பலனிருந் தாலுமே நாசம் விளைந்திடும் போரில் லாதுபோம்
நினைந்த வாறிலாப் போதிலே பேச்சில் நான்சொன்ன போலும் நடக்கலாம்
போரும் தொடங்கலாம் என்றுதான் பேச்சை முடித்தகன் றானே தளபதி
புரியா நின்றனன் காக்கையே
393 எதிர்த்துப் பேசுவான் என்றும் எண்ணினான்
எதற்கு நாச்சியார் என்னைநீர் மதிக்க மாட்டிரோ என்றே எரிந்துதன்
மனத்தின் வெறுப்பினைக் கொட்டியே குதிப்பான் சபதமும் கொள்ளு வானெனக்
காக்கை எண்ணினான் ஒன்றுமே உதிர்த்தி டாதுவாய் ஓங்கி டாதுமே
உடன கன்றனன் தூதனே
394 சுமுக மாயொரு முடிவு தோன்றிடச்
சுந்தர லிங்கமும் விரும்பியே எமையும் நாடிவந் திருக்க லாமென எண்ணி னானதை நாச்சியும் நமைப்போல் ஒப்பினால் நாடி அரண்மனை
நிச்ச யம்வரு வாளென இமைகள் மூடினான் இதயம் மலரவே
எண்ணத் துள்ளவள் ஆடினாள்
395 அன்னி யன்மனத் துறைந்த அணங்கினை
அகத்தால் நினைப்பதும் தீதென எண்ணி டாதவன் ஏங்கி னான்தனை
இழந்தா னன்னவள் அழகிலே மன்னர் அவளிலாப் போழ்தி லும்அவள்
முறுவ லிப்பதாய் எண்ணியே தன்னை விரும்பிச்செய் தானம் ஈதெனத்
தியங்கி மகிழ்ந்தனன் காக்கையே
396
93
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 66
வருடம் எத்தனை வாடிக கிடக்கிறேன் வஞ்சி மனத்திலோர் இடம்பெற தருவ எரில்லையே தயவு காட்டியென்
தனிமை தீரத்திட வருவளோ மருவும் இளமையும் வடித்த சிலையெனும்
மாசில் அழகியென் றாகிலும் சரியென் றென்மனத் தாசை தீர்ந்திடச் சார வேண்டுமென் றேங்கினான்
397
படைந டத்தியேன் பகைமை காட்டியப் பாவை எனைவெல வேண்டுமோ கடைவி பூழிச்சுட ரொன்று போதுமே காலம் காலம்நான் அடிமையே இடையொ டித்தவள் இளமை குலுங்கிட
எ.கி எ.கியே நடப்பதோர் கொடைய தாகுமோ கடவுள் வரமதோ
கோதை தேவப்பெண் ணாவளோ
398 விருந்துகண் தூர துளாவி முன்பெலாம்
தன்னைத் தானேநான் மகிழ்விப்பேன் ஆரத் தழுவிட ஆசை கொண்டுமென்
அதற்கோர் வாய்ப்பெனக் கில்லையே சேரும் இன்றொரு தவணை சந்திக்கர் சென்ற வன்னுரை கொண்டதும் போரை மறந்தவள் புறப்பட் டிங்கெனைப்
பார்க்க வருவளென் றெண்ணினான்
399 முன்னர் போலிலா தின்று பொறுமையை
மனத்தி ருத்தியே பழகினால் என்னை நல்லவன் என்றும் நம்புவாள் இதயம் திறந்தவள் பேசுவாள் முன்னம் குருகுல நட்பைக் காட்டியே முயன்று அவள்மனம் வெல்வதே மென்மை யானதோர் வழியென் றன்னவன் மனத்தில் கோட்டைகள் கட்டினான்
400
uaorurgauastafugas arbaraju ub 94

சற்றும் அவளெதிர் பார்த்தி டாவகை சங்கை கொண்டுப சரித்துமே முற்றும் நம்பிடச் செய்து தொடர்ந்துபின்
முயன்று கைக்கொள எண்ணினான் வெற்று வாழ்வினை விரும்பு வாளோபெண்
வன்னி யன்வலை வீழ்ந்தனள் கற்ற வித்தைகள் அனைத்துங் காட்டியே கவர நினைந்தனன் காக்கையே
401
கண்ட வாறெலாம் கற்ப னைதனில்
கண்ணை மூடியே கிடந்தவன் கண்ணைத் திறந்தனன் காரி ரத்தத்துள் கரிய உருண்டைகள் உருண்டன எண்ண மனைத்திலும் இருப்ப வள்வரும்
எண்ணம் ஓங்கிட அன்னவள் உண்ண உயர்தர உணவு படைத்திட
ஒழுங்கு செய்யுமா றுறுத்தினான்
402
சிறையில் வாடிடும் சங்கி லிக்கிழம்
சிறையில் இன்றுள நிலைகண்டால் குறைநி னைப்பளென் றெண்ணி வசதிகள் கூட்டப் பணித்தனன் காண்பளேல் நிறைவு கொள்ளுவாள் நிச்ச யம்அவள்
நினைவும் மாறியென் மேலுள கறையும் நிங்குமென் றெண்ணி மகிழ்ந்துமே
கலசம் பலநிறைத் துண்ணுவான்
403 அனைத்து வசதியும் ஆன தென்றொரு ஆளு ரைத்தனன் சிறைக்கவன் தனைத்து ணைக்குளோர் சேர்ந்து பின்வர
சென்று நோக்கிட விரைந்தனன் கணத்துள் மறைந்திடும் மின்னல் வேகத்தில்
செய்த மாறுதல் கண்டதும் மனத்துள் ஈதொரு சூழ்ச்சி என்பதை
முற்றும் நம்பினார் சங்கிலி
404
95
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 67
என்ன சங்கிலித் தளபதிக் கிங்கே
எல்லாம் திருப்தியோ என்றனன் சொன்ன வாயொடு சுற்றி விழிகளைச்
சுழற்றி ஒருமுறை நோக்கினான் தன்னை நல்லவன் போலும் உணர்ந்திடத்
தவறி ழைத்திடான் போலுமே கன்னற் சாற்றில்தோய்த் தெடுத்த வார்த்தையாய்க்
கூறி னான்பல பொய்களே
கடுமை யாகநான் நடந்து விட்டதாய்க் கவலை கொண்டிடல் கூடாநான் இடம றிந்துதான் நடக்க வேண்டுமே என்னோ டிருந்தனர் வெள்ளையர் நடிப்ப தன்றிவே றில்லை யவர்முன்னே
நமது பாசத்தைக் காட்டினால் பிடிக்கு மோஎனைப் பிழையாய்
பங்கம் வருமெனப் பிதற்றினான்
இவரைப் போலுண்டோ என்று யர்த்தியோ
இவனா இவனொரு மனிதனா இவையும் போலவே இழித்து ரைத்துமோ எவனோ இலாபங்கள் பெறண்மை அவைநீ றுத்துதல் இன்று நேற்றல்ல
அன்றி ருந்துமே தொடர்வதால் அவைக்கு நானொன்றும் வருந்தி டேனென
அரும்பும் நகைப்பொடு பதில்கொண்டான்
ஓங்கும் வாளின்கைப் பிடியைப் பிடித்திடும்
ஒர்மை மிக்கவோர் வீரன்கைப் பாங்கி ருந்தவவ் வார்த்தைக் கூட்டத்தால்
பலமி ழந்தனன் இருந்துமென் தாங்கும் அசடுகண் வழிந்து வீழ்ந்திடத் தன்னை நொடிக்குளே மாற்றியே திங்கின் பிறப்பெடுத் தான வன்தனைத் தூயன் எனப்பறை சாற்றுவான்
405
406
407
408
uaoru Argauastafuasi arbaras-Suyub
96

சிறையில் போட்டுடல் வருத்துங் கருத்தினைச்
செப்பி னர்தலை அசைத்துநான் சரியென் றொப்பினேன் கார ணம்அவர் திருப்தி யுறட்டுமென் றானதால் உரிய வாறுப சரிக்க வெண்டுமென்
றுள்ளம் உறுத்தவே உவந்துநான் பெரிய மாறுதல் செய்து ளேன்எனைப் பொறுத்து மகிழுக என்றனன்
409 சிறிது கனைத்திமை சொருகி விழிகளிர்
சரங்க ளாமென உறுத்திட வெறித்து நோக்கினார் வேங்கை தோற்றிடும்
வாகு சங்கிலித் தளபதி நிறைந்த போதையில் இருந்த போதிலும்
நஞ்சுப் பேச்சினில் நழுவிலான் நிறைந்த வஞ்சகன் என்ப துணர்ந்துமோர் நன்றி வார்த்தையை உதிர்த்தனர்
410 செய்தி தெரியுமோ தங்கள் பேத்தியார் தன்னோ டுங்களை அழைத்திட மெய்யாய் வருகிறார் முதலில் போர்செய்யும்
முயற்சி யோடுதான் வந்துபின் செய்தி யனுப்பினார் தூதன் மூலமாய்த் தங்கள் விடுதலை வேண்டியே செய்தி யனுப்பினோம் நேரில் பேசியோர் சுமுக முடிவினைக் கொள்ளவே
411 தொடர்ந்தும் விளக்கமாய்க் காக்கை கூறுவான்
தனிததென் விருப்பமே ஈதவர் எடுத்த முடிவதோ இல்லை யென்பதே
எனது நிர்ப்பந்தம் வென்றதே அடுத்தி ருப்பது அவர்கள் பக்கமே
அரண்ம னைக்கவர் வருவதே கிடைத்த வாய்ப்பினைக் கொண்டு உங்களைக்
கொண்டு சென்றிட லாமென்றான்
412
97
ஜிண்ணாஜர் டிரிபுத்தின்

Page 68
இருக்கப் போவது இல்லை குருவிச்சி இரந்து பெறவீங்கு வருவாளோ பறிக்கப் பட்டதைப் போரிட் டெடுத்திடும்
பரம்ப ரைக்குணம் மறப்பளோ உறுத்தி யுமக்கிதைச் சொல்வேன் என்றன்
உயிர்ப றித்துடல் சாயினும் இரக்க எந்தவோர் ஈன னிடத்திலும்
என்கு லக்கொடி வராளென்றே
கடத்தி வந்தவர் நாங்க ளில்லையே கனிவாய் அவரிடம் கூறிநான் விடுத்தி டச்செயும் பொறுப்பை ஏற்றனன்
வந்தா லிங்கவர் மன்னிப்பாய் எடுத்து வேண்டிடும் வார்த்தை ஒன்றினால் அனைத்தும் தீர்ந்திடும் என்றதும் அடித்து நொந்தவோர் அரிமா போன்றுமே
ஆவே சத்தோடு கத்தினார்
மன்னிப் பென்றொரு வார்த்தை கேட்டதும்
மனமும் உடலுமொன் றாகவே தன்னை மீறியே துடித்து நடுங்கிடும்
தினவு மேலிடச் சங்கிலி “என்ன குற்றமென் பேத்தி செய்தனள் எதற்கு மன்னிப்பை இரப்பதோ சென்னி சிதைப்பளென் செல்வி அறிந்திடில் “தூ”வென் றுமிழுவாள்” என்றிட்டார்
அன்னி யர்படை வீரன் உயிரினை அபக ரித்தோர் தவறன்றோ என்ன காரணம் இங்கு நீங்களும்
இருக்க வென்பதும் புரியுமே மன்னிப் பெதற்கெனும் விளக்கம் வேண்டுமோ
முன்னர் சொன்னவை போதுமென் றன்ன வன்சொல அடங்காச் சினத்தினால்
அனற்றுண் டாகின விழிகளே
43
414
415
416
υ αστυ τητα, στασίου στα τα δυιίο
98

வாளும் வேலும்ஆள் வீர நெஞ்சொடு
வருமி டர்களுக் கஞ்சிடா நீளுங் கரங்களில் வெற்றிக் கனிகொளும்
நிகரி லாதபே ராற்றலும் பாழ்ப டாதநல் லுள்ள மும்பொறை பதித்த விழிகளும் சேர்ந்துநான் தோள்சு மந்தவள் தனக்காய்ப் பிறரிடம்
தாழ்ப னிந்திட வருவளோ
417
எதிரி தம்மிடம் இரந்து வருவதாய்
எதிரி வாய்ப்படக் கேட்டதும் சதியென் றோருளம் சொல்ல மற்றுளம் சீயென் றெள்ளிந கைத்ததே எதுவென் றாயினும் என்று வருவளென்
றறியச் சங்கிலி வினவிட அதிவி ரைவினில் அவளை முதலினில் அழைத்து வருவதும் இங்கென்றான்
418
சிறையில் ஒருகுறை தானு மற்றுமே தனது பாட்டனார் இருப்பதை அறிய வேண்டுமே ஆறு தல்பெற
அழைத்து வருவதே முறையென்றான் சிறையில் எனக்கொரு குறையு மில்லைநான்
தனித்தி ருப்பதால் எழுதிடற் குரிய வாறுசெய் திடுவ தொன்றையிங் களித்தல் நலமெனக் கூறினார்
419
தருக வென்றவன் ஆணை யிட்டுடன் சிறையை விட்டகன் றிடுவழி ஒருவன் ஒடியே வந்து பணிந்தனன்
உரைத்த னன்உடன் நாச்சியார் வருவ தாகவோர் தூது வந்ததாய் வாய்விட் டலறினான் செவிபட உருவை விட்டுயிர் ஓடி மறைந்ததாய் ‘ஓ’வென் றலறினார் கிழவரே!
420
99
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 69
மான மரபை மறக்கலாமா
வீரர் புடைசூழ்ந் திடவோர் குதிரையில் வந்திருந்தாள் தூரத் திருந்தே தனைமறந் தின்முகத் தானெனவே சீராய் வதனமுஞ் சிந்திடு புன்னகை சேர்த்தவனும் வாராய் எனும்வா றிருகரம் நீட்டிமுன் வந்தனனே
42 காக்கைகண் கண்டது சுந்தர லிங்கக் குடும்பனையும் தேக்கிய நன்றி தெரிந்தது கண்ணிற் சிரித்தனனே போக்கினான் போரைப் புதுவழி காட்டியே நாச்சியாரை நோக்கிய வாறிங் கழைத்துமே வந்த நலத்தினுக்கே
422 வெள்ளையர் யாரும் வரவிலை கூடத் தமர்ந்திருந்தார் உள்ளத் திருந்த உணர்வுகள் முற்றுமே ஒன்றியதாய் எள்ளும் பொரியும் எரிச்சலைக் காட்டும் எழில்மரித்த கள்ளுண் வெறியுங் கலந்த முகத்துடன் கேவலமே
423 இருக்கைகள் தம்முடல் தாங்கிட வெள்ளையர் எள்ளளவும் செருக்கடங் காததம் சிந்தையின் பாங்கினால் தம்சிரத்தை ஒருக்கணித் துள்வர ஒப்புதல் காட்டிட ஒரவிழி தருக்கரை உண்டிடத் தன்பரி விட்டுமண் தாவினளே
424 குருவிச்சி என்றான் குருகுல நட்பினள் கற்றதொன்றாய்த் தெரியுவீர் என்றவள் தன்னையங் குற்றோர் தமக்குரைத்தே உரியவாறுள்ளம் உவகையால் உந்த உபசரித்தான் தெரியுவ னோவவள் தன்மனம் மாறாத் தலைவியென்றே
425 யார்க்கும் பணிந்திடாள் என்னும் படிபதம் ஊன்றிநடை போர்க்குணம் மாறாப் பெருவிழி நோக்கப் பறங்கியரைத் தேர்ந்திடச் செய்வேன் எனுமால் இருந்தது தோற்றமும்கண் பார்த்திரார் யாருமே பெண்ணவள் போலொரு பெண்ணினையே
426 முதல்முதல் என்றணின் மாளிகை வந்தாய் மகிழ்ச்சியென இதமாய் மொழிந்தனன் காக்கை முகத்தில் அசடொழுக எதற்கும் பொழுது இருக்குதென் றோதுவாள் இன்முகத்தில் மிதக்கும் சிறுநகை கூட்டியே காக்கை மகிழ்ந்தனனே
427
uaoistsyayarafuar assa5uguib 00

வந்துள நேரம் வளமே எனினும் வரவிருந்த முந்திய நேரம் மிகப்பொருந் தும்மென மென்நகைதான் சிந்தின னேயவன் சட்டென் றிமைகள் சிமிட்டியவா றுந்தினன் வார்த்தை உவப்பிலா தேதும் உரைக்குமுன்னே
428 சரிசரி உண்ணச் சரிபொழு தென்றே சகலரையும் வருகவென் றேயழைத் தான்முதல் வந்தவெம் வேளைதனில் ஒருமுடி வாய்ந்தே இணங்கி யதன்பின் உணவுணலாம் சரியது தானென நாச்சி மறுத்தனள் சொல்லுவனே
429 வந்தது ஏனென வேண்டுமோ வேறு விபரமுந்தான் உந்தனின் பாட்டனை உன்புறம் கூட்டிநீ ஏகுவதே முந்தியே நானதற் கேற்ற அனைத்தும் முடித்துவிட்டேன் எந்தனில் வந்தவுன் கைவெறுங் கையாய் அனுப்பிடனே
430 வந்திடச் சம்மதம் தந்ததும் சுந்தர லிங்கனுக்கே புந்தியோ டோர்மனப் பான்மையிற் பேசியே பாட்டனையும் தந்தலம் கூட்டியே செல்வதென் றாயினும் தன்னகத்தே எந்தவா றுள்ளனோ காக்கையின் நோக்கெதென் றாய்ந்தனளே.
431 பெரியதாய் ஒன்றும் நிபந்தனை இல்லையே பாட்டனைநான் உரியவா றொப்புவிப் பேன்நான் இணையாய் ஒருவரைநீர் சிறையினில் வைத்திடச் சம்மதம் தந்திடில் சொன்னதுபோல் பெரியவர் உம்மொடு வந்திட லாமெனப் பேசினனே
432 கண்கள் கனலுமிழ்ந் திட்டென கோபக் கடுமையினால் தண்தலத் தாமரைக் கன்னங்கள் மேலுமே செம்மையுற்றே வண்மையாய் வார்த்தையும் ஒவ்வோர் வெடியென வீசினளே பெண்மையெங் கோடியே போனதோ காக்கை பயந்தனனே
433 பாட்டனுக் கிடாய்ப் பிறிதொரு வீரனைப் பெற்றபின்தான் பாட்டனை விட்டிடப் போவதென் றாயிடின் முன்னரைப்போல் பாட்டனே இங்குப் பதிந்திட லாமே பிறரெதற்கு மீட்பது போலநாம் மீட்பது மீட்போம் மொழிந்தனளே
434
101 ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 70
வெஞ்சினங் கொண்டவள் வீசிய வார்த்தைகள் வெள்ளையரை அஞ்சிடச் செய்தன ஆதலால் காக்கையை அர்த்தமுடன் விஞ்சிட வேண்டாம் நிபந்தனை என்றே விழித்திடவே அஞ்சினன் காக்கை மறுத்தனன் “நா.னென்’ றிவித்தனனே
435 பிரச்சினை முற்றியே போயிடின் தோன்றும் பிரச்சினைகள் பெரிதென் றுணர்வார் வெள்ளையர் காக்கை புதியதொரு பிரச்சினைக் குள்ளாய் இருந்தான் குருவிதன் பள்ளியறைக் குரியவ ளாக்கும் முயற்சியாம் அன்னாள் அறிகிலளே
436 எதிரியை வீழ்த்துவ தன்றிச் சுமுகமாய் ஏற்றவழி எதிரியே வந்திடில் ஏற்பதும் இல்லையேல் இவ்வுலகே கதியென வெண்ணா துயிர்விட் டழிவதென் கொள்கைமிகு மதியினள் மானம் மறந்திடாள் கொள்கையை மாற்றிடாளே
437 அடங்காள் எதிலும் இவளென் றறிந்தும் அறிவழிந்தோன் தொடர்ந்தும் உரைப்பான் ‘துரைமார் தமைநான் தனிவழிக்கு உடந்தையென்றாக்கினேன் உன்வழி கொண்ட உவப்பதனால் நடந்ததை ஒப்பிநீ மன்னிப் பெனுஞ்சொல் நவில்எனவே
438 அடியுண்ட வேங்கையென் றாகினள் தன்னை அடக்கவொண்ணாப் படியவன் வார்த்தைமெய் பட்டவோர் குண்டாய்ப் பதறினளே துடித்தன வாய்மொழி சொல்லிட வார்த்தை தடங்கியெழ வெடித்தது “மன்னிப்” பெனவென அன்றியாம் வேறிலையே
439 சொன்னவர் வெள்ளைத் துரைமார் வருத்தம் தனையுரைத்தல் ஒன்றுமே போதும் எனநான் உரைத்தே உறுதிசெய்தேன் என்றனன் கேட்டே இறந்தனன் சிப்பாய் எனும்பொருட்டாய்க் கொன்றதற் கில்லை வருத்தம் முடிவாய்க் கூறினளே
440 உன்னுரை போலவே என்னுரை சொன்னேன் இருவருமே முன்னர் குருகுலத் தொன்றாய் இருந்த மனப்பொருத்தம் இன்னமும் ஏனோ தரிப்பது உன்வழி ஏற்றதனால் என்விருப் பாய்விருந் துண்ணுவோம் வாரீர்கள் என்றனனே
441
υΔοτι τηταυΔστασίου σε ανταδυαυίο 102

சிறையில் இருக்குமெம் சங்கிலித் தாத்தாவும் சேர்ந்திருந்தால் நிறைவாய் இருக்கும் எனவோர் கருத்தினை நாச்சியார்முன் குறுநகை யோடுமே சுந்தர லிங்கமுங் கூறிடவே சிறைக்கனை வோரும் செலலாம் எனச்சொலச் சென்றனரே
442 அழைத்தே வருவோம் எனஅனை வோரும் எழுந்திருக்க அழைத்திடாக் காவலன் ஓர்மடல் தாங்கியே ஆங்குவந்தே அளித்தனன் சங்கிலித் தாத்தா அவர்வழிப் பேத்திகரம் அளித்திட வென்றான் அதையவள் கைக்கே அளித்தனனே
443 வாங்கியே தன்கரங் கொண்டவக் காகித வாக்கியங்கள் தாங்கிய சேதிகள் நாச்சியைப் பற்பல சிந்தனைக்குள் தேங்கிட வைத்தன செம்முகம் மாறித் தனித்தனியாய் ஓங்கிடு மாறுதல் கண்டவர் காரணம் ஒருவரே
444 (36gs
அன்புடை மகளே என்றன் ஆருயிர்க் கிளியே இட்து முன்னரெம் தமிழர் வாழ்ந்து மரித்தமண் மானத் தோடே தன்னலம் அற்று நாட்டின் சரித்திரம் வீர ராலே பொன்வரித் தடம்ப தித்த பூமிநீ அறிதல் வேண்டும்
445 கோழைகள் ஒன்றி ரண்டு கோடரிக் காம்பாய் என்றும் வாழுவார் பயிர்க ளோடே வளர்ந்திடும் களைகள் போன்று தோள்வலுக் கொண்டு நாட்டின் சுதந்திரம் காக்கும் பேருள் வாழ்வையே பெரிதாய் எண்ணும் வஞ்சகர் இழிபி றப்போர்
446 அன்னியன் இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தா வாறே தன்னுயிர் தனையும் ஈந்து தனதுமண் மானம் காக்க எண்ணும்பண் டார வன்னி இணையிலா வீர னோடே உன்னையும் சேர்த்தாய் எண்ணி உடலெலாம் பூரித்தேன்நான்
447 நான்கொண்ட பூரிப் பில்ஏன் நீமண்ணை வார்த்தாய் செல்வி ஏனென்று கேட்பாய் நான்முன் எனதுமண் காக்கும் போரில் தானிழந் திட்டே னென்கால் தனையதை சொல்லு வேன்கேள் மானத்தைக் காக்க என்றன் மண்ணினைக் காக்க வென்றே
448
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 71
சுற்றியே வளைத்தார் என்னைச் சூழ்ந்தென்றன் உடலைச் சாய்க்க சற்றுமே அஞ்சா நானுஞ் சுழற்றினேன் வாளைச் சுற்றி நிற்பவர் எவரும் இல்லா நிலையினில் சிரச ரிந்தேன் குற்றுயி ரான பேரோ கணக்கினில் தேறா ரன்றோ
44) கையிழந் தோரும் காலைக் காணாது தவித்த பேரும் பொய்யுடல் நீத்தே ஆவி பயணித்த பேரும் சென்னி கொய்ததால் முண்ட மானோர் குரல்வளை அறுந்தோர் இன்னும் செய்யவொன் றில்லா வாறே திரும்பிப்பின் வாங்கி னோரும்
45() தூக்கிய ஈட்டி தன்னைத் தூக்கிய வாறே என்வாள் தாக்கிய தாலே மண்ணில் சரிந்தவர் பலபேர் கையால் தூக்கியே வானில் வீசத் துடிதுடித் தலறி மண்மேல் போக்கிய உயிர்கள் எண்ணிப் புகன்றிட அறியேன் பெண்ணே
45 வேட்டைக்கு வந்தோர் என்றன் வேட்டைக்குப் பலியாய்ப்போக ஒட்டிய சென்னிர் ஆறாய் உரியவர் தம்மோ டென்னைக் கூட்டியே நனைத்த தேகண் காண்பவர் அஞ்சும் வாறாய் நாட்டின்மேல் கொண்ட பற்றில் நான்செய்த விளையாட் ட'தே
452 சுற்றிய பிணக்காட் டுள்ளே துணித்துநான் கூற்று வன்போல் நிற்பது கண்டோர் கூட்டம் நீட்டித்தந் துவக்கி னோடே சுற்றியே வளைத்த தென்னைச் சுடநொடி யொன்றே போதும் பற்றற்றுப் போனேன் வாழ்வில் பலிப்படத் துணிந்தே நின்றேன்
453 ஒருபடை வீரன் முன்னால் ஊர்ந்தனன் விரலைச் சுண்ட வரும்உண்டை தனக்கு என்றன் வாழ்வையே அழிக்கும்நோக்கில் அருகினில் வந்து என்மேல் ஆக்ஞையிட் டானே செய்த
பெருவினைக் காக வெம்மைப் பணிந்திடு என்னும் வாறே
454 மன்னிப்புக் கேள்நீ என்றான் மற்றொரு டச்சுக் காரன் மன்னிப்புக் கேட்ப தெங்கள் மரபினில் இல்லை என்றேன் சொன்னவாய் முந்த என்னைச் சுட்டனன் ஒருவன் உண்டை பட்டதும் சுருண்டு வீழ்ந்தேன் பாவிகள் பறந்திட் டாரே
455
uair arga yasikafuasi apsaraSunguid 04

இழக்கநான் துணிந்தேன் என்றன் உயிரினை மானத் தைநான் இழக்கவா துணிந்தேன் காலை இழந்திலேன் துணிந்தி ருந்தால் இழந்தையோ இன்று நீயெம் இனத்தவர் காத்த மானம் இழந்தனை என்ற ஐயம் என்னுளத் துதித்த தம்மா
456 என்றனைக் கடத்தி வந்தே இங்குவைத் துள்ளார் என்னைக் கொன்றிலார் கார ணத்தைக் காக்கைதான் அறிவான் எச்சில் தின்றுவாழ் ஈனன் றம்மைத் தெரியாத பெண்ணா நீயேன் தொன்றுதொட் டிருந்த பேரைத் துடைத்திட துணிந்திட் டாயோ
457 மீட்டெனைக் கொண்டு செல்ல மனத்திடன் கொண்டிருந்தால் காட்டுமுன் வீரத் தாலே களம்வென்று காத்தி ருப்பாய் நாட்டினுக் குரிய சேனை நாடிய தவறுஞ் செய்தாய் வீட்டினுக் குரிய தொன்றை விரிவுறச் செய்திட் டாய்நீ
458 படைகொண்டு வந்தாய் நீஏன் பணிந்தனை மகளே கோட்டை உடைத்தெறிந் துன்றன் வீரம் உறுதிசெய் திருக்க லாமே அடையாது முயற்சி தோற்றால் அடயலர் முன்னே ஆவி விடைபெறச் செத்திருந்தால் வரலாற்றில் பெயர்மிஞ் சாதோ
459 எதிரியின் பாசறைக்குள் இரக்கநீ வந்துற் றாய்ஏன் இதுபெரும் ஈனம் என்றே எண்ணாதும் போனாய் மானம் விதிபிறழ்ந் தழிந்த தென்றே வெட்கிநான் தலைகு னிந்தேன் இதுவினை தோன்ற நானே ஏதுவாய்ப் போயிற்றே றேனே
460 உயிரன்று போயிருந்தால் உனக்கின்றித் தொல்லை இல்லை உயிரிலும் மேலாம் மானம் ஒழிந்திரா கண்ணே நீயென் உயிரினுக் குயிராம் மானம் உயிரிலும் மேலாம் என்றன் உயிரினைக் காத்து வைத்து உனைப்பழி கொள்ளச் செய்தேன்
461 வீரர்தம் மரபில் வந்த வீரப்பெண் என்பொருட்டே வீரர்தம் இலக்க ணத்தை விடைகொடுத் தனுப்பி விட்டு வீரனாய் வாழ்ந்து நாட்டின் வெற்றிக்காய் உழைத்துக் காத்த வீரத்தை மறந்தாய் இந்த விடுதலை எனக்கு வேண்டாம்
462
105
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 72
உணர்ச்சிகள் மாறி மாறி உள்ளத்தின் வெளிப்பா டாக கணம்கணம் வதனம் மாறக் கடிதத்தை முடித்த நாச்சி சணத்தினுள் காக்கை யோடே சுந்தர லிங்கம் நோக்கிச் சுணங்காது வருக நாங்கள் சிறைச்சாலை செல்ல வென்றாள்
4( கதவுகள் திறக்கப் பட்டுக் காக்கைமுன் செல்ல ஆங்கே ஒதுங்கியோர் மூலை தன்னில் உறங்குவார் போலவ் வீரர் முதுமையின் வாட்டம் தோன்றா முகப்பொலி வோடே வீழ்ந்து விதிமுடித் திருந்தார் ஆங்கு வந்தவர் அதிர்ந்திட் டாரே
46. ஆண்மையும் தோற்றுப் போகும் அஞ்சாமை வீரம் கொண்ட மாண்புறு பெண்ணாள் பாட்டன் மெய்யினைத் தொட்ட சைத்தும் வீணென மற்றோ ரெண்ணும் வாகினில் தலைகு னிந்தாள் ஊனுடல் சோர்ந்தாள் பெண்மை ஓங்கிடக் குமிறி னாளே
465
அவள் நடந்த பாதை
மடையொடித் தோடும் புனலென விழிகளின்
மடலிடை பொாழிந்தது கண்ணிர் இடைவெளி யில்லா வாறங்குக் கூடி இருந்தவர் கண்களில் சோகம் குடிகொண் டிருக்கக் கதறினர் சிலபேர் குழந்தைகள் முதல்வய தானோர் விடையது கொண்ட படைமுதல் வர்தம்
வாரிசாய் நாச்சியும் நின்றாள்
466 காக்கைவன் னியனின் கோட்டையில் இருந்து
கொண்டுவந் திருந்தனர் உடலை நோக்கிய புறமெலாம் சேதியறிந்தோர்
நாடினர் அவ்வூர் தனையே போர்க்கோல வீரர் புறமொன் றிருக்கப்
பண்டார வன்னியன் செய்யும் ஏற்பாட னைத்தையும் இருவிழி வாங்க
இதயமும் புண்ணுற நின்றான்
467
υιατυιτσαμ σταται στα ιταδιμιρ 106

இன்னுமோர் சிலமணித் துளிகளுக்கு ளே
இருப்பவர் அனைவரும் தவிக்கத் தன்னுடல் தனைமட் போர்வையுட் திணித்தே
தூங்கிடக் காத்துள பாட்டன் முன்னிரு கரங்களுங் கட்டிய வாறே முகமெலாம் சோகத்தாற் சிவக்க நின்றனள் நாச்சி நினைவெலாம் அவராய்
நயனங்கள் பொழிந்தன வன்றோ
468 பொங்குமீர் விழிகளின் பொழிவிடை பாட்டன்
பேருரு நோக்கிய வாறே பொங்குதன் உணர்வுகள் பொறுத்திட மாட்டாப்
பாவையின் தோள்களில் ஒர்கை சங்கம மாகத் தலைசரித் தெவரெனத் தோகையும் நோக்கினள் ஆங்கே தங்கச்சி நாச்சியார் தமிழ்தந்த தாயே தனையண்டி நிற்பது கண்டாள்
469 தாயிலாப் பெண்ணின் தாயென வானவள்
தமிழெனும் அமுதினை ஊட்டித் தூயநற் பண்பையும் சேர்த்தே தந்தவள்
துணிவையும் பென்மையுட் திணித்தோள் நேயமோ டருகில் நின்றவள் விரலால் நயனங்கள் பொழிபுனல் துடைக்க ஓயாது பொங்கும் ஊற்றென அவைகள் ஓங்கியே மிகைத்திட அயர்ந்தாள்
470 ஆறுதல் சொல்லிட அருகினில் வந்தவள்
அன்னையாய்க் கண்டனள் நாச்சி தேறாத துன்பச் சுமையினைத் தணிக்கத்
தன்னொடு தானென அணைத்தே கூறாதோர் வார்த்தையும் குரல்வரா நிலையில்
குமுறினள் தோள்முகம் புதைத்தே ஆறெனப் பெருகும் நீரன்னை தோளை
அனலெனச் சுட்டதை யுணர்ந்தாள்
471
107
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 73
இலங்கையின் தமிழர் எவ்வாறு தமக்காய்
இன்னுயிர் போக்கிடு வோனைக் கலங்கிடு கண்ணொடுங் குமுறிடு நெஞ்சொடும்
கெளரவம் செய்கிறார் என்றே துலங்கிட மனத்துள் தோய்ந்திட்ட வியப்பொடு
சுந்தர லிங்கமும் நின்றான் நலங்கொள் பூமியின் நிகரிலா நன்றிகொள் நன்மக்கள் இவரென நெகிழ்ந்தான்
472 தங்கச்சி நாச்சியார் தோள்களில் சாய்ந்துதன்
சோகத்தில் பாதியை மறந்த சிங்கநி கர்தரு செந்தமிழ்ச் செல்வி
சென்றதன் இளமையை நினைந்தாள் பொங்குபேரழகுப் பச்சிளங் குஞ்செனப்
பள்ளிசென் றிடுஞ்சிறு காலம் மங்காது நெஞ்சுள் நீற்றிடை நெருப்பாய்
மறைந்துள நிகழ்வொன்றை நினைந்தாள்
473 காலையில் எழுந்துதன் கடனெலாம் முடித்ததும்
கையினில் ஏட்டினைத் தந்தே காலத்தில் போய்க்கல்வி கற்றுவா எனஅன்னை
கூறியே வழிவரை வந்தாள் சாலையில் தந்தைதன் செல்வத்தைக் கண்டதும்
சேர்த்தணைத் தேமுத்தம் தந்தார் சோலையில் பூத்தசெம் மலர்களாய்த் தோழியர்
சகிதமாய்க் குருவிச்சி சென்றாள்
474 பள்ளியில் கழித்ததம் பொழுதுபோய் வீடு
பறந்தோடி வந்தனள் ஆங்கே கொள்ளிவைத் தெரிந்திடும் குடிசைகள் கண்டனள்
குழந்தையின் நெஞ்செரிந்ததுவே துள்ளியே ஒடினாள் தனதில்லம் கண்கள்
தாயையும் தந்தையும் காணக் கள்ளமில் லாதவவ் வுள்ளத்திற் சோகக்
கறையுறைந் திடவுணர் விழந்தாள்
475
u amorfirga yaitafugai Töfrabởuyub 108

ஒர்புறம் தாயின் உடல்செங் குருதியால் உறைந்துமோர் தடத்தினில் கிடக்க ஒர்புறம் தலைவேறு உடல்வேறு எனத்தந்தை உயிர்நீத்துக் கட்டையாய்க் கிடந்தார் யாரிதைச் செய்தனர் எனக்கூட எண்ணிடா திருந்தனள் பசுந்தளிர் போன்றாள் யாரிதைச் செய்தனர் ஏனெனும் விபரத்தை
இயம்பினார் சங்கிலி பின்னாள்
476 அறிந்திடும் வயதினில் அறிந்தனள் பாட்டன் அனைத்தையும் விபரமாய்ச் சொல்ல வெறிகொண்டு கண்கள் தீயெனக் கனன்றதை
வாழ்நாளில் மறந்தன ளிலையே குறிவைத்துத் தமையெதிர்த் திடுவோரை அன்னியர்
கொன்றொழிக் கின்றனர் முல்லை நிறுவிடும் அவர்தம் ஆட்சிக்குள் அடங்கவே நாசகர் கொலைத்தொழில் புரிந்தார்
477 துணையென்று வேறெவர் இலாவெனப் பாட்டன்
தங்கச்சி நாச்சியார் தம்மின் துணைநாடிச் சொல்லுவார் தாயேளன் உயிரினைத்
தருகிறேன் உன்னதாய் ஏற்றுத் துணைபுரி வளர்ந்திடத் தமிழொடு வீரமும்
சேர்ந்தொன்றத் தந்திடு என்னத் துணைநானே நீங்களெத் துயர்தனுங் கொண்டிடல்
தீதெனத் தங்கச்சி ஏற்றாள்
478 முல்லையின் தமிழ்ப்படை தம்மிலோர் தளபதி
மாவீரர் சங்கிலி என்னைக் கல்விக்குப் புறம்பாகக் காலங் கனிந்ததும் களங்காணப் பயிற்சிகள் தந்தார் சொல்லொணாத் துயர்தரும் வெள்ளையர் தமைநாடு
துரத்திடும் போரினில் என்றன் வல்லமை காட்டிட வேண்டுமென் ஆசையை
வளர்த்தவர் வீரர்க்கு வீரர்
479
109
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 74
வாளெடுத் தவர்வீசு வேகமும் ஈட்டியை
வீசிடு லாவகம் கண்டே தோள்வலுக் கொண்டவென் பாட்டன்போல் வீரரித்
தரணியில் இலையென நினைவேன் வாள்பற்றும் வாகதை வீசியே எதிரியை
வீழ்த்திடச் செய்திடும் பாங்கும் நீள்நெடு வேலெறிந் துயிர்பறித் திடும்வகை
நேர்த்தியும் கற்பித்த தீரர்
480 வந்ததோர் சேதியென் வாழ்வினில் சுமைதாங்கும்
வாறெனப் போரினில் காலைத் தந்தாரென் பாட்டனார் தாமெனும் சேதியே திருப்பமொன் றென்வாழ்வில் நிகழ எந்தையும் தாயுமன் றில்லாத போதென்
தாயாகத் தந்தையா யிருந்த சொந்தமென் றானவோர் துணைநொடிந் திட்டவோர்
சேதியாய் இருந்தத.". தன்றோ
481 என்னொடு கூடவே கற்றனர் காக்கையும்
எனதுளங் கவர்ந்தபண் டார வன்னியன் தாமும்நம் வளமான இலக்கிய வகைகளைக் கற்றாய்ந்து மகிழ்வோம் என்னையும் பண்டார வன்னியன் தம்மையும்
இணைத்ததும் செந்தமிழ் அன்றோ தன்னல மற்றவோர் வாழ்வுக்கும் எமைத்தமிழ்
தயார்செய்த தும்மந்த நாளே
482 இருவரும் மனத்தினால் இணைந்தனம் என்றுமே
எடுத்துரைத் தனன்நான் கேட்டுச் சரியென முதலினில் ஒப்பினா ரில்லையே
தன்கருத் தெடுத்தவ ருரைப்பார் உரியவா றவன்கரம் பற்றிடில் முதலினில்
உவகையால் மகிழ்பவன் நானே சரியதோ யுத்தமே வாழ்வென்று வாழுவோன் சொந்தமாய்ச் சேர்வதென் றுரைத்தார்
483
uæirv-/rg-Uataruar að/r-óutið 10

பெண்குலம் என்பது ஆணினத் தோடுமே புகுந்தில்லம் வாழ்வதற் கென்றே பெண்களும் ஆண்களின் பொறுப்பினில் சமபங்கு
பெறுவதில் தவறென்று முண்டோ உண்மையில் நானவர் உள்ளத்துள் புகுந்ததும்
உள்ளத்தில் கொண்டதும் ஒன்றி மண்மீது கொண்டுள்ள மாசறு பற்றினால்
மாற்றானை விரட்டவும் என்றேன்
484 நாட்டினை விட்டுப்பிற நாட்டானை ஒட்டிடும்
நாள்வரை திருமணம் செய்யும் நாட்டமெம் மிருவர்க்கும் இல்லவே இல்லையே
நாம்கொண்ட இலட்சியம் வென்றே நாட்டினில் ஒவ்வொரு நரனுமே சுதந்திர
நடைபயின் றிடுவரை அன்னை நாட்டினுக் காகவெம் முயிரையும் தந்திடும் நாட்டமுங் கொண்டுளோம் என்றேன்
485 இலட்சியம் பெரிதென இயம்பிய போதென்றன்
இருகரம் பற்றியே உரைப்பார் நலமிந்த உணர்வுகள் நெஞ்சத்தில் என்றுமே
நீடித்து நீவாழ்க என்றார் இலையின்று அவர்வெறும் சிலையாகிக் கிடப்பது
என்தவ றாகிய தன்றோ நலமென்று நாடிநான் செய்ததோர் பழியாக
நிரந்தரத் துயராகிப் போச்சே
486 மீட்டவர் தனைக்கொண்டு வரவென்று காக்கையின்
மாளிகை சென்றதோர் பிழையாய்க் காட்டவே தன்னுயிர் மாய்த்திடத் துணிந்தார
குடும்பத்தின் பிரச்சினை ஒன்று நாட்டினைக் கெடுத்திடும் போராக மாறாது நிறுத்தவே நினைந்திட்டேன் அ.து ஈட்டிய வெற்றியே எவருக்கும் பணியாத இராஜதந் திரமெனில் பிழையோ
487
1
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 75
போரொன்றைப் போக்கிடப் புந்தியைச் சிலபோது
பாவித்தல் பிழையிலை என்றே தீரநான் கொண்டவோர் தீர்மானம் பாட்டனின்
சாவுக்குப் பொருளான தென்றன் வீரத்தில் குறைகண்டு வாழ்நாளை முடித்தவவ்
வீரரின் றுயிரற்ற பிணமாய் ஒரிரு மணித்துளிக் குள்ளாக நிலமகள்
உறங்கிடச் சேர்ப்பன ரன்றோ
488 பாட்டனின் நினைவுபேரலையென நெஞ்சினுள்
பீறியே மீறிடச் செவியுள் கேட்டபே ரொலியினால் சுயநினை வடைந்தனள்
குருவிச்சி நாச்சியார் மக்கள் கூட்டமாய் நின்றுவான் கிழிந்ததோ எனும்வாறு
கூறினர் வாழ்த்தொலி பிரிவின் வாட்டமே யுருவான வாறிருந் தாலுமல்
வாழ்த்தொலி நினைவற்றுப் போமோ
489 வீரர்கள் வீரர்க்கு வீரவ ணக்கங்கள் வழங்கினார் பண்டார வன்னி வீரனும் மலரள்ளி வைத்தனன் பாடையுள்
வணங்கினன் பாதங்கள் தொட்டே நீரள்ளிக் கொட்டிடும் விழிமடல் மூடிட
நீலோத் பலக்கரம் நடுங்க தீராத சோகத்தைத் தாங்கியே குருவிச்சி
தெளித்தனள் மலர்களை நிறைத்தே
490 கண்மலர் சிந்துகண் ணிர்கொண்டு பாதங்கள்
கழுவினாள் கைதொட்டு வணங்கி மண்ணோடு கலந்திடும் மாவீரர் உடல்தனை
முடிவாக முழுவதாய்ப் பார்த்தாள் விண்ணோடே உயிர்கலந் திட்டவவ் வுடலினை
வைத்தனர். குழியுளே மக்கள் கண்ணிர்ப்பூச் சொரியவே குழியினை மூடினர்
கதையொன்று முடிந்ததே கனவாய்
491
uæirv_/rg-2 áratuat as/r-Sutið 12

ஊரவர் அனைவரும் உறைவிடம் நகர்ந்தனர்
உறைந்தவீர் உயிர்ச்சிலை யாகத் தேராது நின்றனர் தொடர்வது எதுவெனச்
சுந்தர லிங்கமும் வந்தே நேராத ஒன்றிங்கு நடந்தது நானின்று
நாட்டுக்குத் திரும்பிட வேண்டும் சோராது இனியென்ன செய்வதென் றெண்ணுங்கள்
தொடருங்கள் பணியெனத் தொடர்ந்தான்
492 என்னநான் பதிலாக உரைப்பது என்றனன்
இதுபற்றிக் கண்டியா ரோடு சொன்னவா றுரையாடிக் குறித்தவவ் விடயத்தில்
சரியான முடிவொன்று கொள்ளல் என்பொறுப் பென்றுமே இயம்புங்கள் நடைபெறும்
என்றுநான் சொன்னதாய் உரைப்பின் மன்னராம் கட்டபொம் மனைத்தேவ ரையும்நாம்
மறந்திலை எனவும்சொல் வீரே
493 விடைபெற்றுச் சென்றனன் சுந்தர லிங்கம்தன்
வழிசெலத் துணையாக வீரர் உடன்வழி காட்டிடக் கூடியே ஏகினரர்
உடன்நின்ற தங்கச்சி நாச்சி கடனொன்று உனக்குண்டு கூறுவேன் கேளெனக்
கூறினாள் வன்னியன் நோக்கி உடன்யாரும் இலைஇனி குருவிச்சி நாச்சியுன்
உதவியில் வைத்திரு என்றே
494 பரியினில் ஏறிய பண்டார வன்னியன்
பாரது குருவிச்சி தன்னைப் பரியினைத் தட்டிட முன்னவ னோடுதன்
பரியினில் ஏறிட முயல வரவேண்டாம் என்னொடு நீயெனப் புதுமையாய்
வார்த்தைகள் வீசினான் வெறுப்பாய்க் குருவிச்சி அதிர்ந்தனள் கால்தடு மாறவே குந்தினள் நிலத்தினில் வியந்தாள்
495
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 76
இருவர் உள்ளம்
பறந்தனன் புரவி மீது பழிவெறி கொண்டோன் போன்றே வறந்ததோ நெஞ்சில் நேசம்
“வராதேநீ என்னோ" டென்றே இறந்ததால் பாட்டன் கொண்ட
இதயத்தின் துயரம் சற்றுங் குறைந்திலாப் போழ்தில் வார்த்தை கொட்டினான் தனித்தே வந்தான்
என்றுமே இல்லா வாறே
இன்றுற்ற நிகழ்வை எண்ணித் துன்புற்றான் வன்னி மன்னன்
தன்னிடம் தானே தோற்றான் அன்பொடு நெஞ்சம் கூடி
ஆனநாள் தொட்டே என்றும் சொன்னதே இல்லை யோர்சொல்
குருவிச்சி வருந்த வென்றே
பிரிந்தொரு சிலநாள் வாழ்தல்
பெருந்துயர் தாரா கோபப் பிரிவினால் தோன்றுந் துன்பம்
பொறுக்கொணாத் துன்ப மாகும் பிரிந்திலை என்றும் அன்னார்
பகைத்திலை இன்றோ தன்னைப் பிரித்துமே வந்தான் நாச்சி
பொறுத்திடா வாறா மம்மா
கோபத்திற் காளாய்ப் போன
காரணம் அறிவாள் பாட்டன் கோபத்திற் கான அந்தக்
காரணம் தானே யென்றே கோபத்தை அடக்கா வேந்தன்
குதிரையில் பறக்க ஆங்கே கோபத்தால் மனஞ்சி தைந்து
குருவிச்சி தனித்திட் டாளே
496
497
498
499
uariturgajatatuat ata5utub
14

காக்கையின் கூட்டுக் கென்னைக்
கொண்டுசென் றிட்ட என்றன் போக்கினைக் கடிந்தி ருந்தால்
பொருத்தமே தண்டித் தாலும் ஏற்கநான் பின்னிற் பேனோ
ஏனவர் என்னை நோக்கிக் கேட்கவே இயலாத் தீயைக்
கொட்டினார் செவிகொள் ளாதே
500 பிடியுண்டு சென்ற என்றன்
பாட்டனை நானே சென்று விடுதலை செய்யாப் போழ்து
விளைவுமே வேறாய் மாறும் தொடருமோர் ஆட்சிப் போரைத்
தவிர்ப்பது நலமென் றெண்ணிப் படையொடு நானே சென்றேன்
பிழையெனப் போயிற் றன்றோ
501 எண்ணங்கள் நினைவில் ஒட
எதிர்பாராத் தாக்கத் தாலே புண்ணுண்ட மனத்தாள் மெல்லப்
பதம்பதித் தில்லம் நோக்கி நண்ணினாள் பரியும் பின்னால்
நாயகி மனம றிந்தோ மண்பார்த்து மெல்ல மெல்ல
மிதந்தது பதம்நோ காதே
502 உளம்நொந்து போக வார்த்தை
உமிழ்ந்ததால் தானும் நொந்து வழிதொடர்ந் தாலும் நெஞ்சை
விட்டுவந் துற்றான் போன்றே பழிதனைச் சுமந்தாள் உள்ளப்
பதிவிட்டே அகன்றா வில்லை முழுமையாய் உள்ளி ருந்து
மூச்சினைப் பிழிந்திட் டாளே
503
15
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 77
இழந்ததை எதிரி நீட்ட
ஏந்துதல் இழிவாம் நாமே இழந்தவா றெடுத்துக் கொள்ளல் என்பதே பெருமை யென்னும் விழுமியம் ஏன்ம றந்தாள்
வழமைக்கு மாறாய் என்னை முழுமையும் உணர்ந்த பெண்ணாள்
முறைகேடாய் நடந்திட் டாளே
வரவேண்டாம் என்ற வார்த்தை
வஞ்சியைச் சுட்டு நெஞ்சுள் விரவியே வேறாம் ஒன்றை
வாங்கிடா நிலைத்தி ருக்கும் உருகுவாள் கண்க ணரை
உகுத்துமே என்ற வாறே உருகினான் அவனும் மெல்ல ஊர்ந்தனன் புரவி மீதே
என்னொடும் வரவேண் டாமென்
றுரைத்ததைத் தவிர்த்தே ஒன்றும் என்னோடு உரையா துள்ள
எரிச்சலைக் காட்டி னால்நான் என்னவென் றறியக் கேட்பேன் என்குறை சுட்டிக் காட்டி என்னதான் தண்ட னைதன்
இட்டம்போல் தராதே னுற்றார்
மன்னிப்புக் கேட்டி ருப்பேன்
மறுத்தவர் இ.தீங் கொன்றும் மன்னிக்க முடிந்த தல்ல
மரணத்தை வரிக்கத் தக்க தொன்றெனச் சொன்னால் தீர்ப்பை
உடன்மகிழ்ந் தேற்றி ருப்பேன் என்னையே நான வர்க்காய்
இழந்தவள் ஏன்ம றந்தார்
504
505
506
507
uatl-stgauatai &/røSub
16

அவர்கொண்ட இலட்சி யத்தின்
அடியொற்றி நானும் என்னை அவர்தனுக் களித்தேன் எல்லா
இடரிலும் பங்கும் கொண்டேன் தவறொன்று செய்தேன் என்றால்
தண்டித்தால் தகுமே நெஞ்சம் தவிக்கவேன் சொல்லம் பெய்தார் தாங்காதென் றறிகி லாரோ
508 வெந்துநொந்துள்ளம் சோக
விபத்தினுள் தவிக்க நாச்சி எந்திரம் போலும் கால்கள்
இயங்கிட நடந்தாள் போன்றே வெந்தனன் உள்ளம் வன்னி வேந்தனும் எல்லை மீறி முந்தியொன் றில்லா வாறே
மதிசோர நடந்தேன் என்றே
509 பூசைக்கு வைக்கும் புத்தம்
புதுமலர் போல நெஞ்சுள் ஆசையாய் வைத்தே என்றன்
அன்பினைச் Jெரிந்தேன் என்மேல் நேசத்தைப் பனிநீ ராக்கி
நாளெல்லாம் பொழிந்தாள் இன்றேன் துாசிக்கும் மதிப்பற் றேநான்
துன்மொழி பகர்ந்தேன் அந்தோ
510 என்முகம் வாடி னால்தன்
இதயத்துள் செந்நீர் சிந்தித் தன்முகம் வாடிச் சோர்வாள்
செம்மலர் இதழ்வி ரித்தே என்னதான் நடந்திற் றென்றே
ஏங்கியே வினவு வாள்.அம் மென்மனம் வதங்க ஏன்நான்
மொழிந்தனோ சுடுசொல் ஐயோ!
5 1
17
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 78
எம்மிடை மலர்ந்த அன்பின்
இலட்சியப் பெருக்கால் காதல் தம்மையோர் போக நோக்கின்
தாழ்மையிற் பிறந்த தன்றே நம்மினோர் சுதந்தி ரத்தின்
நாட்டமே கொண்டோம் சோகச் சும்மையில் தவிக்க விட்டேன் சுமப்பது நானுந் தானே
கடுகள வேனும் நாங்கள்
கொண்டபேர் இலட்சி யத்தின் கடுமையில் முறைகே டொன்றுங் கூடிடா திருப்ப தென்னும் முடிவினைச் சற்றுக் கூட
மனத்தினில் எண்ணா வாறு உடனொரு முடிவு கொண்டாள் ஊனமொன் றுண்டா கிற்றே
என்னிடம் அன்றே சொல்லி
இருந்திருந் தாலோ வேறு தன்மையில் நடந்திருக்கும்
தன்பாட்டன் தன்னை மீட்க மன்னனுக் குரிய முல்லை
மறவரை வீரர் தம்மை தன்சுய நோக்கிற் காகத்
தேர்ந்தமை தவறா மன்றோ
நாட்டுடை நலனுக் காக
நமதுயிர் அளிப்போ மென்னும் நாட்டமுற் றுழைப்போர் தத்தம்
நலனெண்ணி நடத்தல் தீதே நாட்டினுக் குழைத்த வீரர்
நலத்தினைக் காத்தல் இந்த நாட்டினுக் குரிய தென்னும்
நியாயத்தை மறந்தாள் ஏனோ
53
514
55
υAαοί (τητου στέσίδυμ σταδιταδμυν
18

தாக்குண்டாள் தனக்கும் மேலாய்த் தோன்றுதே துன்பம் சொல்லால் தாக்கிய எனக்கு விட்டுத்
தனித்தவோர் நிலைமை தன்னில் ஏற்கின்ற ஏக்கம் சற்றே
இன்றுள்ள நிலைமை நோக்கின் போக்கவோர் வழிதான் என்ன
புரிகிலேன் எனத்த வித்தான்
516 ஒருவருக் கொருவர் தத்தம்
உளப்பாங்கிற் கேற்ற வாறே உருவகம் செய்தார் முற்றும்
ஒர்ந்திலார் அறிகி லாரே தெருவினில் சென்ற வாறே
தொலைவினில் வீடு நோக்கிக் குருவிச்சி திகைத்தாள் ஆங்கே
குதிரையில் சிலபேர் நின்றார்
517 அன்னியச் சிப்பாய் கூட
அவர்களில் இருந்தார் கண்டாள் என்னதான் வரினும் பார்ப்போம்
எனவுளம் சொல்ல வாயில் தன்னையுந் தாண்டி னாள்.அச்
சிப்பாய்கள் ஒதுங்கி னார்கள் கண்ணினால் சுட்டாள் உள்ளே காணக்கண் கூசி னாளே
518 கண்டனள் உள்ளே காக்கை
கைகூப்பி எழுந்து நின்று கண்ணியம் செய்வான் போன்றே காட்டியே “என்னை நாச்சி மன்னிக்க வேண்டும் பாட்டன்
மரணத்தில் பங்குக் கொள்ள எண்ணினேன் தவிர்த்தேன் அங்கே
இருப்பன்பண் டாரன் என்றே”
519
119
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 79
நேருக்கு நேராய்க் காணும்
நினைப்பெனக் கில்லை என்றும் போருக்குப் பழக்கப் பட்டோன்
பண்பாக நடக்க மாட்டான் நேராக இங்கு வந்தென்
நிலைமையை எடுத்துக் கூறித் தீராவுன் சோகந் தன்னைத்
தணித்திடத் தானே என்றான்
வெஞ்சினங் கணத்துள் கண்ணில்
வீசிட்ட போதும் அ.தை விஞ்சிடா துண்டாள் வாசல் வந்தவன் என்றே அந்த நஞ்சுண்ட நெஞ்ச னைத்தன்
நீள்விழி நோக்கா வாறே பிஞ்சுவாய் திறந்தாள் ஒர்சொல் பேசினாள் “நன்றி” என்றாள்
பண்டார வன்னி யன்பின்
போய்நீயும் இருப்பா யென்றே எண்ணினேன் ஆனால் வந்தாய்
"இரு'என்றான் இருக்கை காட்டி புண்ணுண்ட நெஞ்சாள் ஏதும் பேசாதே நின்றாள் கண்டு “கண்ணியம் என்மேல் என்றும்
காட்டுவாய்' எனவுட் காார்ந்தான்
“பண்டார வன்னி யன்பின்
போய்நீயும் இருப்பாய்' என்று சோன்னவவ் வசனம் நெஞ்சைத் துளைத்திடச் சோர்வாள் சட்டென்
றின்னுமோர் வார்த்தைக் கூட்டம்
இடியென வெடித்த த..தோ
“என்னொடு வராதே’ என்றே
இயம்பிய மன்னன் கூற்றே
52()
52
522
523
uært-svig-Uskæfuar æ(r-Sutb
120

தன்மனக் கிடக்கை தன்னைச்
சொற்பசொற் பத்தே அன்னாள் முன்னிலை யுதிர்க்கக் காக்கை முயன்றனன் அப்போ தூரார் திண்ணையில் காத்து நின்றார்
துயரறிந் திடவா மென்றே சொன்னனஸ் நன்றி ஊரார்
தனைக்காண வந்தார் என்றே
524 போவென்று சொல்லா தேகை
பொருத்தியே வணக்கம் சொல்லப் போவதை அன்றி யொன்றும்
பேசிடா நிலையில் காக்கை தாவினான் குதிரை மீது
தன்விழி வலையை அந்தப் பூவிழித் தோகை மீதே
படர்த்தினான் பார்த்தி டாளே
525 சண்டாளன் அரண்ம னைக்குச் சென்றனஸ் என்ற வள்மேல் கொண்டவெஞ் சினந்த தணிந்து
கவலையின் பிடியி லுண்டே அண்டினான் பண்டா ரவன்னி
அரண்மனைக் கவனைக் காணக் கண்டிமா மன்னன் தூதன்
காப்பதாய் அறிந்திட் டானே
526 பண்டார வன்னியன் சகோதரிகள் கண்டியி லிருந்தே ஒருதூதன்
காணவந் துற்றான் எனுஞ்சேதி உண்டது செவிகள் உடனவனை
உள்ளே அழைத்து வருகவென்றான் கண்டனன் அவனிரு சோதரிகள்
கூடத்தில் அவனைக் காத்திருந்தார் அண்ணா வணக்கம் என்றனரே
அவனும் வணங்கி மகிழ்ந்தனனே
527
12
ஜின்னாவூர் ஷரீபுத்தின்

Page 80
அண்ணனின் ஆட்சிக் குட்பட்டே
அமைந்த திருமலைப் பகுதியினைப் பெண்ணென் றாயினுஞ் சிறப்பாகப் பரிபா லித்தாள் நல்லநாச்சி அண்ணனுக் குதவியாய் பனங்காமம்
அமைந்தது ஊமைச்சி கையினிலே மண்ணுஞ் சிறக்க மக்களது
மனமும் மகிழப் பாலித்தார்
பேருக் கேற்ற குணவதியாய்ப்
பார்வைக் கழகாய் நல்லநாச்சி ஊரே உவக்குங் குலவிளக்காய்
ஒர்ந்தே அறியும் திறத்தினளாய்ச் சீராம் அடக்கப் பண்போடு
திறமைகள் அனைத்தும் பெற்றிருந்தாள் பாரா திரார்முன் நோக்கியவர்
பசும்பொனில் வார்த்த பாவையென்றே
ஊமைச்சி நாச்சியும் அழகியேதன்
உடன்பிறந் திட்ட குறும்புகளால் ஊமையும் நகைப்பான் ஆள்மயக்கும்
அசைவும் நெளிவும் கொண்டிருந்தாள் தாமாய் எதையும் சாதிக்கும்
திறனோ டச்சம் அறியாதாள் பூமியில் தமிழ்க்குலப் பண்பாடும்
பிசகாப் பெண்ணாள் மனந்துணிவாள்
இருவரும் ஒன்றாய் வந்ததற்கு
ஏதாம் காரணம் எனஅறிய விரும்பினன் வன்னியன் குறிப்பறிந்தே
விபரம் உரைத்தனள் ஊமைச்சி திருமண விடயம் பேசிடவே
திடீரென வந்தோம் எனவுரைக்கத் திருமணம் எனக்கா இலட்சியங்கள் தீர்ந்ததன் பின்தான் என்றனனே
528
529
530
53
பண்டாரவன்னியர் காவியம்
122

அடிக்கடி நானும் வற்புறுத்த
அதையே காரண மாய்க்கொண்டு பிடிக்கா தென்றே பிடிவாதம்
பிடிப்பது முறையோ எனக்கேட்க இடிவிழுந் தொழியும் மரமறிந்தும்
என்மேல் படருங் கொடியாக உடன்வரா தென்றும் உயிர்வாழ
உவந்தேன் குருவிச்சி தனையென்றான்
532 உன்றன் திருமண உடன்பாட்டை
ஒருநாள் விரைவில் முடிவுசெய்தல் நன்றே ஆம்அதன் முதல்இன்று
நான்வந் திருப்பது நல்லநாச்சி வென்றாள் ஒருவன் மனத்தையெனும்
விபரங் கூற என்முன்னே நின்றாள் அவளே நானறியேன்
நிலைமை எங்கே போயுளதோ
533 விபரஞ் சொன்னாள் ஊமைச்சி
விகடந் தொனிக்க அவன்சொல்வான் அபாரம் அபாரம் நானறியா
அவன்யார் உடனே சொல்லென்றே அபயம் கிடைத்தது போலன்றோ
அண்ணனின் வார்த்தைகள் எனளண்ணி சபையே நிற்றே சேதியெலாம்
சக்கரைப் பாகென விரித்தனளே
534 காதல் கதையோ என்றவனும்
கதையைத் தொடங்க மூத்தவளும் போதும் போதும் விகடமெனப்
போர்த்தாள் முகத்தைப் படாத்துள்ளே காதல் கதைதான் அவனைநான்
கண்டது மில்லை எனக்கவனை ஏதோ பொருளால் காட்டிடவும்
இவள்விரும் பாது மறைத்துவிட்டாள்
535
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 81
சரிசரி உள்ளதைக் கூறென்றே
சொல்லிடு போதில் ஒருவீரன் வரஅனு மதிபெற்றுள்நுழைந்தான்
வந்தனன் தூதனும் அவனுடனே வருகவென்றவனை வரவேற்று
வந்ததன் நோக்கம் அறியுமுன்னே தெரிந்திட விழைந்தான் அங்குள்ளோர் சுகநலம் யாதென வினவினனே
கண்ணுச் சாமி நலமாமோ
கூறுக வென்றான் தன்நண்பன் எண்ணம் முதலில் வந்ததனால்
இருப்பீ ரென்றெ உபசரித்தே கண்ணுச் சாமி இளவரசர்
கட்டளைக் கிணங்க நான்வந்தேன் என்னதான் விசேடம் எனtண்டும்
எழுந்ததோர் வினாவும் பதில்கொண்டான்
இராஜா திராஜ சிங்கரின்பின்
ஏற்பட்டுள்ள நிலைமைதனைத் தேசமே அறியும் நீங்களுந்தான்
தெரிந்தது வாரிசுப் புயலென்றான் நேசம் உடையேன் இருவரிலும்
நிறைய வாய்ப்பெவர் தமக்கென்பீர் பேசுவ தனைவரும் நீங்களென்னைப்
பேர்சொல்லிக் கேட்ட பேர்க்கென்றான்
கண்ணுச் சாமிக் கேயதிகம்
கண்டியின் அரசர் ஆகுகின்ற வண்ணம் சார்புகள் உண்டெனினும்
வெள்ளையர் தலையீ டுண்டதனால் எண்ணம் வேறாய் மந்திரியும்
இயங்கிட நினைப்பது போலுண்டு மண்ணாய்ப் போகும் இராச்சியமும் முத்துச் சுவாமி அரசேற்றால்
536
537
538
539
uaoöirul/tga2uasikaofugasir ob/ta6óuguib
124

ஆங்கி லேயர் தலையீடும்
அதற்கே உடந்தையாய் மந்திரியும் தாங்குஞ் சதியால் முத்துசாமி
தலைமேல் கிரீடம் வந்திடுமேல் ஆங்கி லேயர் காலடியில்
ஆகும் கண்டித் திருநாடே தாங்கார் மக்கள் அன்னியரால்
துன்பங் கொள்வார் எனவுரைத்தான்
540 மன்னவன் கூறக் கேட்டதனை
மிகச்சரி யென்றான் தூதுவனும் மன்னவர் உடனே இங்கிருந்து
மிகவிரை வாக வந்தாலே கண்ணுச் சாமி கண்டிக்குக்
காவல னாகும் பேறுண்டாம் எண்ணம் ஏதென எடுத்துரைத்தால்
இன்றே நான்செல லாமென்றான்
541 நான்வர முடிவு செய்துவிட்டேன்
நாளை வரும்வரை முடிவொன்றும் தானாய் அறியத் தராதுசற்றுத்
தாமதித் திருக்கச் சொல்லென்றான் போனான் தூதன் விடைகொண்டே
பொறுத்திருந் தவர்கள் அண்ணனிடம் போனார் மீண்டுந் தமதுகதை
புகன்றார் அண்ணன் செவியுற்றான்
542 “யாருனை மணக்கப் போகின்ற
இளவல் சொல்லென நல்லநாச்சி கூறென” அண்ணன் வினவஅவள்
கூறா தொன்றும் நிலம்பார்த்தாள் யாருனை அவளிடம் கேட்கவைத்தார்
எனைக்கேள் நானவை அத்தனையும் கூறுவேன் என்றனள் இடைபுகுந்தே குறுநகை யோடே ஊமைச்சி
543
25
asaatsrats aeffussai

Page 82
கண்டதுங் காதல் கொண்டுளராம் கடமைக் காக வெளிச்சென்ற பண்டார வன்னியன் தங்கைகண்ட “பிர்மா னந்தன்” என்பவர்மேல் கண்டிட மன்மதன் இலையெனிலும்
கவர்ந்தான் இவள்தம் மனத்தினையும் கொண்டதன் தொழிலை வணிகனெனக்
கூறின னாமிவள் சொல்லுகின்றாள்
மும்முறை தானாம் சந்திப்பு
மூன்றாம் முறையில் இருவருமே தம்மைத் திருமண பந்தத்தில்
சேர்த்திட முடிவுங் கொண்டனராம் “எம்பணி இதனோ டிறுதிபெறும்
இனிமேல் சகோதரி தொடருங்கள் தம்மைத் தாமே அண்ணனுக்குச்
சொல்லுக” எனச்சொலி நகைத்தனளே
நங்கை வார்த்தையால் உடன்பிறந்தாள்
நாணிட நெளிந்தாள் தண்டலைச்செம் பங்கயம் போன்றே முகஞ்சிவக்கப்
பார்த்ததும் அண்ணன் புன்னகைத்தே எங்கே சொல்நீ உனைக்கவர்ந்த
எழிலான் யாரென கேட்டதும்தன் அங்கையுள் இருந்த ஒவியத்தை
அண்ணன் கரத்தில் தந்தனளே
ஒவியம் வரையுந் திறனுடையாள்
உள்ளம் கவர்ந்த கள்வனையோர் ஓவியமாக வரைந்திருந்தாள்
உயிர்பெற்றவனாங் கிருப்பதுபோல் ஓவியங் கண்டான் உடன்பிறந்தான்
ஓங்கித் தலைமேல் அறைந்ததுபோல் ஓவியம் அவன்முகம் பார்த்தேயோர்
ஒவ்வாப் புன்னகை செய்ததுவே
544
545
546
547
பண்டாரவன்னியர் காவியம்
126

கண்டிப் பயணம்
சிங்கமெனப் போர்க்களத்தில் பாய்ந்திட்டாலும்
சீர்பெறவே தமிழ்மொழியில் புலமை கொண்டான் தங்கச்சி நாச்சியாரின் துணையி னாலே
சங்ககால இலக்கியங்கள் கற்றே ஆய்ந்தான் பொங்குந்தமிழ் சிலபோழ்து நெஞ்சத் துள்ளே
பண்டாரன் புலவனெப் போவான் இன்றும் தங்கிமன உளைச்சலினைத் தோற்று வித்த
சேதியினால் மனமுடைந்தே தவித்திட் டானே
548 இலக்கியங்கள் இன்பத்தைத் தோற்று விக்கும்
இன்னல்கள் வந்துறுகாற் கூட என்னும் சிலாக்கியத்தை அவனறிவான் துன்பம் சூழ்ந்தால்
தவறாது தமிழவனின் துன்பம் போக்கும் நிலைமையின்றும் அவ்வாறே ஆகிப் போக நாடினனே ஒலையொடு எழுது கோலை அலைபாயும் உணர்வுகளை அடக்கிக் கூட்டி
அழகியதோர் கவிபடைக்க நினைந்திட் டானே
549 ஏற்கனவே குருவிச்சி நாச்சி யோடு
உண்டான மனக்கசப்பும் சற்று முன்னே ஏற்றபெரும் இடியும்மன அமைதி தன்னை
இரண்டுபடப் பிளந்துதுன்பக் கடலில் ஆழ்த்தத் தோற்றனனே தனக்குத்தான் துணிந்த வீரன் தன்னவரால் தனக்குவந்த கேட்டி னாலே மாற்றவொரு வழிதமிழே என்றே எண்ணி
மண்டியிட்டான் தமிழ்த்தாயின் பதத்தில் வீழ்ந்தான்
550 உடன்பிறந்தாள் உள்ளத்தைக் கவர்ந்த வன்றன்
ஒவியத்தைத் கண்டதுமே தனக்கு என்ன நடந்ததுவோ எனஅவனே அறியா(து) நின்றான்
நிலைதளர்ந்து அசையாது சிலைபோ லானான் படிந்திருந்தான் சித்திரத்தில் காக்கை வன்னி
பார்த்தவனைச் சிரித்தததை மீண்டும் நோக்காப் படிசுருட்டி ஒருபுறத்தில் வைத்தே யார்க்கும்
பதில்கூறா தேநடந்தான் தனித்திட் டானே 551
127
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 83
காரிருளில் தோன்றுமொரு மின்னல் கீற்றைக்
கண்டுகளி கொள்வானே தனது வாழ்வைப் போராட்ட மாக்கியேமண் வாழு கின்ற
பிறவியவன் தலையினிலம் மின்ன லோடு சேரவொன்றி வீழுகின்ற இடியிற் றப்பிச்
சாகாது நெருப்பையுண்டே வாழ்வா னன்றோ சேர்ந்திருந்தே உயிர்தருவேன் என்னும் பேரும் சேர்ந்திருந்தே குழிபறிக்கின் றார்க ளந்தோ
உடன்பிறப்பாய் ஒரேவயிற்றில் பிறந்த பேரும்
உடனிருந்தே கொல்லுகின்ற நோயாய்ப் போனார் திடனளிக்கும் இதயத்தைத் தருவார் யாரோ
துன்பமிவை அனைத்தையும்நான் எதிர்த்தே நிற்க முடியாதே வானத்தில் துளைகள் போட
வல்லுாறு ஒருகோடி சேர்ந்திட்டாலும் தேடாரே தோற்பார்கள் தமிழன் மானம்
தேட்டையிட அன்னியர்கள் கோடி சேர்ந்தும்
553 தானெழுதி முடித்திட்ட கவிதை தன்னைத்
தானேயோர் முறைமீட்டிப் படித்தான் உள்ளம் தானாக அமைதிபெற்ற உணர்வு கண்டான்
தன்னுடலில் புதியதொரு தென்புங் கொண்டான் கோனவன்றன் அருகிருந்த மணியைத் தட்டக் காவலர்கள் இருவருள்ளே ஓடி வந்தார் ஆனவெல்லா ஒழுங்கினையும் செய்வீர் நாளை
அதிகாலை கண்டிசெல்ல வேண்டு மென்றான்
554 கவிதைதந்த அமைதியிடை காக்கை வன்னிக்
கயவனொரு புறத்திடையே மனத்தில் தோன்ற இவனெவ்வா றென்னிளையாள் நெஞ்சத் துள்ளே
இடங்கொண்டான் ஏனறியா துற்றாள் இந்தப் பவவினையின் முழுஉருவைக் காத லென்னும்
புனிதமன ஒருமையினைப் புரியா நெஞ்சன் தவறிழைக்கக் காதலினைத் துணையாய்க் கொண்டான்
தனைவணிகன் எனப்பொய்யும் உரைத்துள் ளானே
uæirv_/rg-vestøfuai &/r-Susuib 28

சதியொன்றின் தலைப்பட்டே காக்கை வன்னி
தொடங்கியுள்ளான் காதல்வலை வீச இ.தை எதுவாறாய் நல்லநாச்சிக் குணர்த்து வேன்நான்
உளம்நொந்து உயிரதனை மாய்த்தி டாளோ எதுவரினும் வரட்டுமினி தலைமேல் வெள்ளம்
ஏகுதென்றன் கையில்வாள் உண்டு நெஞ்சில் சதிக்கஞ்சா உரமுண்டு பார்ப்போ மென்றே சாய்ந்தானே மஞ்சத்தில் துயில பூழிந்தே
556 அதிகாலை எழுந்தபண் டார வன்னி
ஆணைப்படி அனைத்தும்நடந் திருத்தல் கண்டான் குதிரைப்படை ஒன்றுவெளி மைதா னத்தில்
காத்திருந்த திவன்வருகைக் காக வென்றே அதிவலிமை கொண்டபடை வழியில் ஏதும்
அபாயங்கள் எதிர்கொண்டால் எதிர்த்து வெல்ல மதிநுட்ப மாகவரு முன்னே காக்க
மனங்கொண்டான் ஆணைப்படி வீரர் நின்றார்
557 போருக்குப் புறப்படுவான் போன்றே தன்னைப்
போரணிகள் போர்த்தப்பெரு வாளினோடு சீருடையில் காத்திருந்த வீரர் முன்னே
சென்றானாங் கொருமுறைதன் விழிசு ழற்றி கூரியவோர் பார்வையினால் அளந்தான் எல்லாம் குறையின்றி நடந்துளதா என்றே பின்தன் போர்ப்புரவி யருகினிலே வந்தான் ஆங்கே
பார்த்திருக்கும் நங்கையரை விழியா லுண்டான்
558 அண்ணன்விழிப் பார்வையினைத் தாங்கார் பூமி
ஆழ்ந்த தவர் பார்வைஒரு கனைப்பால் மீண்டும் வெண்ணிலவு இரண்டொன்றாய்ப் பிறந்த தொப்ப
விழிபாதி மூடியவா றுயர அண்ணன் கண்ணவர்மேல் பதிந்தாலும் அவர்கண் நோக்கார்
கனைப்பினிலே தொனித்தமனச் சோகங் கேட்டார் புண்ணுண்ட மனத்தான்தன் இடையி ருந்த
படிவமொன்றைக் கையெடுத்தான் பார்த்திட் டாரே
559
129
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 84
கைகொண்ட படிவத்தை நல்லாள் கையில்
கொடுத்தனனோ திணித்தனனோ வாங்கிக் கொண்டாள் மைவிழியில் பணித்தசில முத்துக் கள்கண்
மடலிடையில் தழும்பினயின் மடையொ டித்துப் பெய்தனமென் கன்னங்கள் நனைய அண்ணன்
பார்த்தான்பின் சொல்வான்நீ படித்துப் பாரென் மெய்யான வாழ்வுதனை வரைந்துள் ளேன்நீ முன்தந்த ஒவியத்திற் கொப்பாய் என்றே
St;(} பாய்ந்தேதன் போர்ப்புரவி மீதில் ஏறப்
பாய்ந்தனபின் நூறுபடை வீரர் தாங்கிப்
புரவிகளும் புழுதிப்படை புரட்டிக் கொண்டே சாய்ந்துபொழு தடையுமுன்னே கண்டி நாட்டைச்
சேர்ந்திடவென் றெண்ணினவோ புரவிக் கூட்டம் ஓய்ந்திடோம்நாம் எனும்பாங்காய்க் காற்றைக் கீறி
ஓடினவோ பறந்தனவோ அறிவார் யாரே
5(, இரட்டைவாட் சின்னக்கொடி படபடக்க
இடைகொண்ட வாட்களொடு ஈட்டிகையில் சரங்குவிந்த தூணியொடு வில்லுந் தாங்குந்
தோள்குலுங்க நெஞ்சுயர்த்திச் சிம்மம் தோற்கும் பரிபறக்கப் பண்டார வன்னி மன்னன்
படைகண்டி நோக்கியது ஒற்றர் மூலம் தெரிந்துகொண்டார் கொழும்புநகர் வாழ்ந்த அந்நாள் தேசத்தைப் பிடிக்கவந்த வெள்ளைக் கூட்டம்
56. கண்டியைவந் தடையுமுன்னே பண்டார வன்னிக்
காவலனைப் படையோடு முடிவு கட்டக் கண்டனனோர் திட்டமந்த வெள்ளைக் கூட்டம் கூடாது இந்நிலையில் பொருதி னாலோ கண்டிப்படை யோடவர்கள் சேர்ந்தெ திர்த்தால்
கூடுவது தோல்வியென்றார் சிலபேர் ஏற்றுக் கொண்டனனோர் சூழ்ச்சியத னோடே செய்தார்
கூட்டாக வன்றித்தனித் தெதிர்ப்ப தென்றே
பண்டாரவன்னியன் காவியம் 130

கண்டிக்கும் வன்னிக்கும் இடையிலுள்ள
கூட்டினைமுன் பிரித்திடவும் வேண்டும் பின்னர் உண்டாகும் பகைமையைநம் பலமாய்க் கொண்டு
ஒவ்வொருவர் தமையுந்தனித் தழிக்க வேண்டும் என்றேயோர் முடிவுகொண்டார் எதிர்ப்பு மற்றே
ஏற்றனராங் கிருந்தவர்கள் அனைத்துப் பேரும் வன்னியனோ இவையொன்றும் அறியா தோனாய் விரைந்துகண்டி மாநகரைச் சென்ற டைந்தான்
564 நண்பர்கள் சந்திப்பு
வன்னியன் கண்டி வந்தடைந் திடுமுன்
வந்ததோர் சேதிமந் திரிக்கு முன்னையம் மண்ணினை ஆண்டுகொண் டிருந்த
மாமன்னர் ராஜசிங் கனின்மெய் அன்பினுக் குரியராம் நம்பிக்கை மிக்கராய்
அவையினில் இருந்தவர் இன்றும் முன்னிலை வகுக்கும் பிலிமத் தளாவை
மிகவதிர்ந் தாரது கேட்டே
565 கண்ணுச் சாமியைக் கைதுசெய் துடனே
காவலில் வைத்ததன் பின்னே மன்னனாய் முத்துச் சாமியை முடிகொளும்
மாறெலா முயற்சியும் செய்யச் சொன்னனன் “பிரடரிக் நோத்"எனும் கவர்ணர்
சேதியைத் தூதுவன் சொன்னான் என்னதான் முடிவு செய்வதென் றறியா இன்னலில் தலைசுழன் றிட்டார்
566 மன்னரின் மறைவின் பின்னரம் மண்ணின்
மன்னராய்த் தான்வர முற்றும் எண்ணியே இருந்தவர் இதயத்தில் ஆசையை
இமயமாய் வளர்த்தவர் அதற்காய் அன்னியன் தனையொரு ஆயுத மாகவே அவர்கொள நினைந்துமே இருக்க தன்னையே அவர்தம் ஆயுத மாக்கிடத்
துணிந்ததை எண்ணியே அதிர்ந்தார் 567
13
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 85
கண்ணுச் சாமியைக் கைதுசெய் திடிலது
கொள்ளும் பழிக்கவ ராக மன்னனாய் முத்துச் சாமியை அவரே முடிகொள வைத்திடில் பின்னே மன்னனால் மந்திரி தனையொழித் திட்டே முத்துவின் மூக்கையும் அரிந்தால் திண்ணமாய்க் கண்டியுந் தமக்குட் டானெனத்
தெளிந்தே 'நோத்சேதி தந்தான்
வெள்ளையர் சூழ்ச்சியின் விளைவைமுன் உணர்ந்தே
வைத்திருந் தாரவர் எனினும் வெள்ளையர் வெறுப்பையும் வரித்திடும் நிலையையும்
விரும்பிடா தவர்தம தெண்ணத் துள்ளவாறாட்சியைச் சுழற்றிட நினைந்தார்
உரியவோர் வழியையும் ஓர்ந்தே கொள்ளவென் றுள்ளக் குதிரையைச் சிந்தனைக்
காட்டினில் அலையவிட் டாரே
கண்ணுச் சாமியைக் கைதுசெய் யாவிடில்
கவர்ணரின் பகைவந்து சேரும் வன்னியன் பகையை வலுவினில் கொள்ளும்
வகைவரும் கைதுசெய் திடிலோ மன்னனாய் முத்துச் சாமியும் வந்தால் மற்றுமோர் வினையுமே வேண்டாம் என்னையே அழிப்பான் அவனெனும் எண்ணமும்
இணைந்திட எண்ணத்தில் ஆழ்ந்தார்
வெள்ளையர் சொல்லை வேதமாய் மதிப்பான்
வேந்தனாய் வரின்முத்துச் சாமி வெள்ளையர் தமக்கும் வேந்தனுக் கிடையிலும்
வேற்றுமை தோற்றியே முடியைக் கொள்ளலாம் எனுமவர் எண்ணமும் பிழைக்கும்
கண்ணுச் சாமியும் வரினோ வெள்ளையர் தமையவன் வெறுப்பவ னதனால்
வெற்றிநம் கரமென விருந்தார்
5(wW
570
571
uakultgauatatuai apata5agub
132

நினைந்தவா றெதுவும் நடந்தில முற்றும்
நேரெதி ராகவே செல்ல மனநிலை குழம்பி நின்றிடும் போது
மற்றுமோர் சேதியும் அறிந்தார் தனைக்கண் டிடச்சிறு சேனையி னுடனே
தமிழ்ப்புல மெனத்தனித் திருந்த வன்னியில் இருந்து மன்னவன் வன்னியன்
வந்துளார் எனும்வா றெனவே
573 செங்கோ லேந்துந் திறனும் வீர தீரமும் ஓர்மையும் கொண்ட சிங்கமாம் வன்னியன் செந்தமிழ்ச் செல்வன்
சற்றுமே வெள்ளையர்க் கஞ்சான் எங்குமே கீர்த்திபெற்றிருப்பவன் காழ்ப்பால்
ஏற்றிடார் பிலிமத் தளாவை இங்குள நிலையில் இன்றவ னுதவி
ஏற்றது என்பதால் சென்றார்
574 பண்டார வன்னியன் வருவதன் காரணம்
புரிந்தவர் தாமவர் முன்னே கண்ணுச் சாமியே அழைத்தனன் என்பதைக்
காட்டிடா வாறுமே தம்மின் எண்ணமும் வரவை எதிர்பார்த் திருந்ததே
எனும்வா றின்முகங் காட்டிக் கண்ணியந் தந்தே கூட்டியுஞ் சென்றார்
குறையற உபசரித் தாரே
575 கண்களால் எங்கனுந் துழாவினான் வன்னியன்
கண்ணுச் சாமியின் உருவை கண்களின் வினாவின் குறிப்பறிந் துடனே
கேட்டார் பிலிமத் தளாவை கண்ணுச் சாமியைத் தேடுதோ கண்கள்
கூறுக என்றுமே சொல்வான் கண்ணுச் சாமியின் அழைப்பினில் தானே
கண்டிக்கு வந்தனன் என்றே
576
133
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 86
ஆட்சிப் பொறுப்பினை ஏற்பதில் சிக்கல்
அமைவதாய் அறிந்தேன் என்ப ஆட்சியைப் பொறுப்பேற் பதுநாம் விரும்பும்
ஒருவரே சிக்கலொன் றில்லை மாட்சிமைக் குரிய மன்னராய் முடியை
முறைப்படி கண்ணுச் சாமி கேட்கிலா ரெனினுங் கொடுப்பது முறையே
கவர்ணரின் கருத்துவே றென்றார்
என்னதான் நடந்தது மந்திரி யாரே இயம்புக என்றனன் மன்னன் மன்னனாய் முத்துச் சாமியை யாக்கிட
முனைகிறார் கவர்னர்அத் தோடே கண்ணுச் சாமியைக் கைதுசெய் தடைக்கக்
கூறியு முள்ளார். என்றார் சென்னியில் தீயள்ளிக் கொட்டிய வாறே
சினந்தனன் வன்னியன் சொல்வான்
யாரவர் எமக்குக் கட்டளை இடஇது
எங்களின் தந்தையார் நாடு யாரர சோச்ச வேண்டுமென் பதுவும்
எம்மவர் கைவச மன்றோ பாரர சாளும் பேராசை கொண்டு
பலநூறு மைல்கடந் திங்கே வேரிடத் துணியும் வீணர்கள் எம்மை வழிநடத் திடத்துணிந் தாரோ
“வேண்டவே வேண்டாம் வேற்றவர் கட்டளை
வரித்ததற் கிணங்கிட வேண்டாம் வேண்டாத தலையீடு வேண்டுமோ அதற்குநாம்
வழிவிடில் அடிமையென் றாவோம் பூண்டோடு நமையவர் பணிசெயும் பேர்களாய்ப்
பதம்பற்றி வாழவைத் திடுவார் ஆண்டாண்டு தோறுமப் பழிதொடர்ந் திடுமென
அறியாது போவதேன்” என்றான்
57(,
577
578
579
uazikustgauastasifuasi abstraSurub
134

"பண்டார வன்னியர் பாயும் புலியெனப்
பாரறிந்ததுதான் வீரம் கொண்டஆண் சிங்கமென் றறிகுவேன் பகைமை
கண்டஞ்சி யோடாத தீரர் கண்டியின் படையொடு வன்னியர் படையும்
கூடிட்ட போதிலும் அன்னார் கொண்டிட்ட சேனையோ கடலென வாகும் கருத்தினில் கொள்க”வென் றுரைத்தார்
580 “முடிவென்ன செய்துளிர் மந்திரி யாரே முடிசூட்டுஞ் சிரசெது” என்றான் முடிவொன்று வைத்துளேன் மன்னவ வெள்ளையர்
மனத்தினை மாற்றிட என்றே முடிவொன்று கெண்டுளார் கண்ணுச் சாமியென்
மகளுக்குத் துணைவனென் றாக திடீரெனச் சேதி கேட்டதும் திகைத்தேன் சேய்வதே தென்றுநான் அறியேன்
581 என்றொரு சேதியை கொழும்புவாள் "நோத்"இடம்
இயம்பிட லாமெனக் கூற" என்னயி ததனை எப்படி நம்புவார்
என்றனன் வன்னியன் சொல்வார் “மன்னர்தம் மனம்வைத் தாலதை நம்புவார்
மகளினை மணவினை செய்யக் கண்ணுச் சாமியின் கருத்தினில் பதித்தால்
காரியம் வெற்றி"யென் றுரைத்தார்
582 “எவ்வாறு நானதைச் செய்வது முன்னர்நான்
இயம்பினேன் திருமணஞ் செய்ய ஒவ்வுமோர் தமிழ்ப்பெண் தானெனச் செய்யென
இன்றதை மாற்றுவ தழகோ கவ்விய பகையிருள் போக்கியே இன்றுநாம்
கண்ணுச் சாமியைக் காக்க ஒவ்வுமோர் வழியதே வேறில எனையவர்
ஒப்புவார்” எனமொழி புகன்றார்
583
5
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 87
“என்மீது நம்பிக்கை வெள்ளையர்க் குண்டதால்
எனக்கவர் மருமக ரானால் என்மீது கொண்டுள விசுவாசம் சலுகைகள்
ஏற்றிடத் துணையவர் செய்வார் என்றதும் வன்னியன் எமக்கது பொருந்தினும்
ஏற்பளோ மகளதை என்ன பொன்றாத ஆசைகொண் டிருக்கிறாள் மறுத்திடாள்
பேராசை அவர்மீதே" என்றார்
கும்பிடப் போனவத் தெய்வமே தம்முன்
காட்சித்த பாங்கினாய் ஆங்கே வம்மினான் மாப்பிள்ளை வியந்தனர் இருவரும்
விரைந்தவன் நெஞ்சோடு நெஞ்சாய்த் தம்முடல் இணைத்தனன் தோள்களோ மேருவின்
தொடரெனத் தோன்றின கண்டே தம்முடல் குறுக்கினார் தோன்றிய முதுமையின்
சாயலைப் போர்வையுள் மறைத்தார்
“கல்யாண நிச்சயம் முடிந்ததாம் உனக்கெனக்
கேள்வியுற் றேனது மெய்யோ சொல்லவே இல்லையே எனக்”கெனக் கேட்டனன்
சிமிட்டிய கண்ணொடு மன்னன் “இல்லையே! ஓமுன்பு சொன்னையே யாரோவோர்
இந்திய மன்னனின் பெண்ணா சொல்லிய நீயதைத் தொடரவே இல்லையே சொல்” லெனச் சொல்லியே நகைத்தான்
கேள்வியின் பொருள்கண்ணுச் சாமியோ அறிந்திலான்
கேள்விக்குக் கேள்வியொன் றுதிர்த்தான் "கேள்அவர் தமிழச்சி இவள்அவள் அல்லநான்
கூறவோ” என்றனன் மன்னன் "ஆள்மாற்றம் என்னயிது” அதிர்ந்தனன் இளவலும்
யாரென விழிகளால் வினவ ஈழத்துப் பைங்கிளி சிங்களப் பெண்ணவள்
என்றதும் சிலையென வானான்
58.
585
586
u attayarafut arresult

மனமில்லா மணவினை
மலைமீது தவழ்கின்ற கருமேகந் தனையள்ளி
மைகூட்டிச் சிரசின் மேலே அலைபாய விட்டதெவர் அதனோடு வான்வில்லை
அமைத்தெவர் நுதலு மெனவே சிலைதொடுத் தேவிடும் நிலையினில் வில்லாகச்
செய்ததெவர் புருவ மென்றே நிலையிலா துருளுமிரு கருமணிக ளாகவிழி
நிலைபெறச் செய்த தாரோ
588 உதிர்ந்தமலர் இதழ்களென விழிமூடி இருக்கின்ற
இமைகளினை வைத்த தாரோ புதிதாகக் கவர்ந்தவொரு பங்கய மொட்டினைப்
பாதியரிந் தெடுத்தீர் கூறாய்ப் பதியவே செவிகளெனப் புரட்டியே வைத்தழகு
பார்த்ததும் கன்ன மெனவே சதையாக மாதுளையின் கனிகளை வதனத்தில்
சேர்த்ததும் யாரோ எவரோ
589 செக்கச்சி வந்தமர முந்திரிகை யின்கனியைச்
சீராயீர் கூறிட் டொன்றைப் பக்குவமாய் முகத்தினில் நாசியெனப் பதித்துமே
பார்த்தழகு கண்ட தாரோ சொக்கியே போவரிதழ் காண்பவர் செஞ்சாந்தில்
தோடங்க ணிக்கூறி ரண்டை முக்கியே அடுக்கிவைத் திருப்பதாய் யாரதில்
முக்கனிச் சாறுபிழிந்தார்
590 செங்கனிச் சுவைதருஞ் செவ்விதழ் இடையில்வெண்
சங்கொடித் தடுக்கி வைத்தே கிங்கிணி ஒலியொடு குமிழ்ந்திடும் நகைப்பிலே
கிறங்கியே கிடந்த தாரோ புங்கமெனக் கண்களைப் பிழக்கவிரு பனங்கனிகள்
படைத்தார் நெஞ்ச கத்தே தொங்குமிரு புறம்கரியின் தந்தத்தில் கடைந்தெடுத்த
தேசுடைக் கைகள் எழிலே 59
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 88
ஒடியாது தாங்குமிவை யனைத்தையும் இடையிலே
ஒடியுவேன் ஒடிவேன் என்றே நடைபயில நெளிந்திடும் நாபியெனும் முத்தொளிர
நங்கையிடை செய்த தாரோ தொடையெனக் கரிமுகனின் துதிக்கைபோ லிரண்டினைத்
தந்ததிவள் தமக்கு அவனோ கொடையதோ இளஞைர்கண் கவ்விடவே பிட்டமெனக்
கொண்டஇளந் தெங்கி ரண்டே
5(). புல்நுனியில் படினுமவை புண்ணாகிப் போகுமெனும்
பாங்கினில் பதம்ப டைத்தார் மெல்லப் பதித்தாலும் மலரனைய பாதங்கள்
மிகநொந்து செம்மை யுறவே கல்லென்ன மண்கூடக் காணாத அவற்றினைக்
கொண்டவள் கண்டி நாட்டின் செல்வியாம் பியசீலி பிலிமத்த ளாவைமகள்
சொர்க்கத்துக் கன்னி போன்றாள்
593 கொண்டவிவ் வழகினைக் கொண்டுமே ஆட்சியைக்
கொண்டிடக் கனவு கண்டார் பெண்டிரைப் பகடையாயப் பாவிக்கும் ஈனத்தைப்
புரிந்துமே தந்தை யென்பார் அண்டினாள் அவள்கண்ணுச் சாமியைத் தந்தையின்
ஆசையின் வேக மறியாள் உண்டிட மறுப்பனோ உட்கையின் நறையினை
உவந்தனன் அடிமை யானாள்
594 கரும்புண்ண யாருமோர் கூலியுங் கேட்பரோ
காந்தள்மலர்க் கரம ணைத்தால் விரும்பாத பேருண்டோ விருந்துண்ண அழைத்திடில்
வேண்டாமென் றுரைப்ப ராரோ அருந்திட அமுதத்தை அருகிருந் திளமேனி
அளித்திடில் மறுப்ப ருண்டோ மருந்தெனினும் பொற்கரம் புகட்டினால் உண்பேனென
மடிமீது புரண்டா னவனே
595
υ αστυιτσαυΔστ στου σταδ/ταδιμιίο 138

இரவென்ன பகலென்ன யாரிருந் தாலென்ன
இருவரும் ஒருவ ரானார் இரந்துமே பெறவொணா திருப்பவர் ஏங்குகையில்
இன்பத்தில் திளைக்க லானார் விருந்துண்டு வீசிவிடும் எச்சிலிலை யெனவுளம்
வைத்திருந் தானே அவளோ பொருந்தினாள் அவன்மனக் கோயிலின் சிலையெனப்
போவதெனு மாறு தனையே
596 திருமணப் பேச்சுவந் துற்றதும் மனத்தினில்
தோன்றினள் நினைவில் சற்று அருவியெனப் பொழிந்துமறைந் தாளவளே பியசீலி
அவள்பற்றிப் பேசி இருப்பார் உருவான இந்நிலையில் உவந்தெது பேசவென
உணராது தவித்தல் கண்டே புரிந்தனன் வன்னியன் பிலிமத்த ளாவையிடம்
பிரிந்தகல வேண்டு மென்றான்
597 காதலெனும் வலையினில் வீழ்ந்தையோ நீயுமெனக்
கேட்டனன் பண்டார வன்னி காதலெனில் குருவிச்சி பண்டார வன்னிமேல்
கொண்டதுபோ லல்ல வென்றே காதலல்ல இதுவெறும் கூடுதலே உடல்களின்
கருத்தொன்றித் தொடர்வ தல்ல காதலுக்கு இலக்கணம் கற்பித்த நீயெனைக்
கேட்காதே இதனை யென்றான்
598 பொய்யான நாடகம் புரிகிறாய் என்பது
புரிகிறது இருந்து மென்ன மெய்யாக நீயவளை மணக்கின்ற திட்டமொன்று
முடிவாகி இருப்ப தறிவாய் செய்யவே இயலாத திருமணம் இதுவெனத்
திடமாக அவனும் மறுக்க செய்தாக வேண்டிய இக்கட்டில் நீயுளாய்
தெளிவாக யோசி என்றான்
599
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 89
உன்றனைச் சிறைதஸ்ளி உடன்முத்துச் சாமியை
ஊராளும் மன்ன னாக்கக் கொண்டனன் முடிவொன்று கவர்னர்நோத் வெள்ளையன்
கட்டளை பிறப்பித் துள்ளான் உண்டான இக்கட்டில் உனைக்காக்க வேண்டுமெனில்
உன்னைத்தன் மருக னாக்கக் கொண்டுளார் பிலிமத்த ளாவையோர் திட்டத்தைக்
கைக்கொள வேண்டு மென்றான்
கல்யாண மாகிடில் கைதுசெய் யார்களோ
கவர்னரும் ஒப்பு வானோ கல்யாண மாகிடில் கவர்ணர்க்கு நீரவர்
கூட்டான நண்பராவீர் கல்யாண பந்தமே கண்டிக்கும் மன்னனாய்க்
கொள்ளுமுனைக் கைகி டைத்தால் இல்லாத புதுப்புதுச் சூழ்ச்சிகள் நடக்குமுனக்
கென்துணை இருக்கு மென்றான்
வேறுவழி இல்லையோ விவாகமென் றொன்றில்லா
வந்தவினை தீர்க்க என்ன வேறுவழி உண்டுமுத்துச் சாமிக்கு முடிசூட்டி
வெள்ளையர்க்கு வாழ்வ ளித்தல் ஈறாக வழியதுதான் எனின்வெள்ளைப் பேய்களிந்த
எல்லைக்கே வராதி ருக்க தேறுவது பேயெனினும் திருமணம் செய்குவேன்
தட்டேனுன் வார்த்தை என்றான்
சதிவலை
கண்ணுச்சாமி திருமணத்தைச் சிறப்பாய்க் கண்டி கொண்டாடி மகிழ்ந்ததந்த விழாவி னுக்குக் கண்ணுச்சாமி தனைக்கைது செய்யு முன்னர்
கட்டளையும் பிறப்பித்த கவர்னர் நோத்தும் பெண்வீட்டின் அழைப்பினராய் வந்தி ருந்தே பாராட்டிப் பரிசளித்தார் கண்டி ருந்து எண்ணத்தில் ஏமாற்றம் உற்றான் ஆட்சி
எதிர்பார்த்துக் காத்திருந்த முத்துச் சாமி
600
601
602
603
uør-/ry-) akstu sk ösr-Guúb
140

பண்டார வன்னியனும் சிலநாள் ஆங்குப்
பொறுத்திருந்தான் வேறுபட்ட தந்தி ரங்கள் கொண்டுவரும் விளைவுகள்தான் என்ன வென்று கவனிக்கும் நோக்குடனே எதிர்கா லத்தில் கண்டிக்கு மன்னனெனக் கண்ணுச் சாமி
கிரீடத்தைத் தாங்குதற்குக் கவர்ணர் நோத்தும் கொண்டஎதிர்ப் பின்றில்லை எனவறிந்து
காத்திருந்த முத்துச்சாமி கவலுற் றானே
604 எப்படியும் சூழ்ச்சிசெய்து அதைநிறுத்த
இயன்றதெல்லாம் செய்தனனே முத்துச் சாமி ஒப்பியெவர் தாமுமவன் எண்ணத் திற்கே
உடன்பட்டா ரில்லையவன் ஒடிந்தே போனான் கப்பியநெஞ் சழலுடனும் கவலை யோடும்
கண்டிவிட்டுக் கொழும்புசென்றான் முடிசூட் டும்நாள் எப்படித்தான் இருக்கமணஞ் சொல்லும் காழ்ப்பே
இதயமெலாம் நிறைந்திருந்த கார ணத்தால்
605 கவர்னரிடம் சென்றுமுறை யிட்டான் வெள்ளைக்
காரனவன் தோள்தடவி அபயம் தந்தே கவல்கொள்ள வேண்டாம்நீ காரி யங்கள்
கொண்டநம தெண்ணத்திற் கியைபா யில்லை கவனத்தில் அனைத்தையும்நான் கொண்டுள்ளேன்நீ
கருத்திருத்த வேண்டாமோ ஆங்கி லேயர் கவனத்தில் குறைவான பேர்க ளென்று
காத்திருந்தே வெற்றிகொள்வோம் காண்பாய் என்றான்
606 எதிரியினைக் குறைத்துமதிப் பிட்டு நாங்கள்
எமையழித்துக் கொள்வதில்லை நிதானத் தோடே எதிரியைமுன் சிலகாலம் விட்டு வைத்தே
எதிரிபலம் அறிந்தவனைத் தோற்க டிப்போம் இதுவேதான் கண்டியிலும் எமது கொள்கை
இயல்வதனைப் பொறுத்திருந்து நோட்டம் இட்டே எதுபொருந்தும் காலமென எண்ணி ஆய்ந்தே
எமதுபணி தொடர்ந்திடுவோம் எனவுஞ் சொன்னான்
607
41
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 90
கவர்ணர்சொன்ன வார்த்தைகளால் அமைதி பெற்றுக்
கொழும்பினிலே வெள்ளையர்க்கோர் ஏவ லாளாய்த் தவமிருந்தான் முடிதலைக்கு மாறு மென்றே
தேராதான் வெள்ளையரின் சூழ்சி தன்னை கவர்னரொரு வாழ்த்துமட்டும் அனுப்பி வைத்தார்
கண்ணுச்சாமி முடிசூட்டு விழா வுக்காக அவன்வராத காரணத்தை எண்ணி மிக்க
அகமகிழ்ந்தான் வன்னிமன்னன் ஆங்குற் றானே
608 கவர்ணர்நோத் பிலிமத்த ளாவை கைக்குக்
கொடுத்தனுப்பி வைத்திருந்த கடிதம் கொண்ட தெவையென்று அறியவிய லாதி ருந்தான்
எண்ணத்தில் அவாவுற்றான் வன்னி மன்னன் அதுசூதின் சுரங்கம்பெருஞ் சூழ்ச்சி கொண்ட ஆவணமொன் றாகுமெனச் சந்தே கித்தே அதிர்ந்தான்சில நாட்கண்டி அரண்ம னையில்
அமர்ந்தனனே கண்டிமன்னன் விருப்பி னாலே
609 குருவிச்சி நாச்சியென்ன வானாள் ஆங்கே
காத்திருக்க வைத்தவிரு தங்கை மார்கள் கருத்திலென்ன கொண்டனரோ எனும்வா றெல்லாங் கலங்கியது வன்னிமன்னன் நெஞ்சம் ஈண்டும் இருந்துசில நாள்கண்ணுச் சாமி ஆட்சிக்
குதவிவிட்டுச் செல்வதுவே உயர்வா மென்று பொருந்தினனே மனத்தால்சற் றமைதி கொண்டே
பொறுத்திருந்தான் மனத்தைக்கல் லாக்கிக் கொண்டான்
610 கவர்ணர்நோத் அனுப்பிவைத்த கடிதம் தன்னைக்
கண்ணுள்ளே பதித்துவைக்கத் தாமோ மீண்டும் தவறாது பன்முறைகள் படித்தார் நெஞ்சுள்
துர்விட்டுப் படர்ந்ததது மறக்கொண் ணாதே கவர்ணர்தம் எண்ணப்படி வன்னி யன்மேல்
கண்ணுச்சாமி தீராப்பகை கொள்ள வேண்டும் எவர்தமக்கு முடியுமது முடிந்தால் கண்டி
என்கரந்தான் என்றுமணப் பால்கு டித்தார்
6
uat ag-aaraturai orasanib 42

பகைமையுண்டு பண்ணிடுங்கால் ஆட்சி யோடு பெரும்படையும் உதவிக்காய்த் தருவதாக நகம்சதையும் போலிருப்போர் தமைப்பி ரிக்க
நாடுகின்றார் கவர்ணர்நோத் பணமுங் கூட வெகுமதியாய்த் தருவமென வாக்க ளித்தார்
வசமான மார்க்கமொன்றைத் தேட வேண்டும் தகவில்லா வழிமுறையென் றான போதும்
செய்வதொன்றே வழியென்றெ துணிந்திட் டாரே
612 பகையோடு மட்டுமல்ல இரண்டு பேரும்
போர்தொடுக்கும் நிலைக்குள்ளாய் மாற்ற வேண்டும் வகையாக இங்குவன்னி மன்னனுள்ள
வாய்ப்பினைநான் பயன்படுத்த வேண்டு மென்றே வகைவகையாய்த் திட்டம்பல தோன்றி னாலும்
வெள்குமொரு திட்டத்தைத் துணிந்தே ஈற்றில் தகுமென்றே நெஞ்சத்துள் உறுதி கொண்டு
செயல்படவும் முடிவுசெய்தார் தொடங்கி னாரே
613 முல்லைமண்ணின் நிலைமையையும் இலங்கை நாட்டில்
மாற்றாரின் ஆதிக்க வெறியும் எண்ணி எல்லையற்ற மனக்குழப்பம் கொண்டி ருந்தே இறுதியிலே ஒருவாறாய்ப் பண்டார வன்னி தொல்லையறத் துயில்கொண்டான் தனித்தோர் மஞ்சம்
தனைச்சுற்றி நடப்பவைகள் அறியா தோனாய் மெல்லவவன் துயில்கொள்ளும் அறையுள் மற்றீர் மலர்ப்பதங்கள் நுழைந்ததனை அறிகி லானே
614 ஒளிசிந்தும் விளக்கைமெல்லத் தணித்துச் சற்றும்
ஒசையெழா வாறுமஞ்சத் தருகே சென்று சுழலவுள்ள திரையினொரு புறத்தை நீக்கித்
தன்னுடலை ஒருபுறத்தே இருத்திக் கண்ணைச் சுழலவிட்டுத் துயிலுகின்ற அழகன் மேனி
துளாவினளே நெஞ்சம்விசை கொண்ட டிக்க கழன்றதவள் மார்பணைத்த துகிலும் மெல்லக்
கரந்தொட்டாள் வன்னியன்தோள் பியசீ லிப்பேய்
615
143
ஜின்னாவூர் ஷரீபுத்தீன்

Page 91
கழுகும் குருவியும்
கள்ளுண்டாள் போல வானாள் கட்டுடல் கண்டே மேனி அள்ளியே புசிக்க நெஞ்சின்
ஆவலாய் தனைம றந்தாள் முள்ளென்றே அறியாள் தன்னை மோகிப்பான் என்றே தன்னுள் எள்ளள வேனும் நாணம்
இலையென உடைக ளைந்தாள்
விரிந்தகன் றிருந்த மார்பின்
வடுக்கள்நெஞ் சுரத்தின் மேன்மை புரிந்திடச் செய்த தன்னான்
புயபலம் பார்த்தா ள.'தில் சரிந்துடல் தழுவ உள்ளம்
தவித்திட்ட போதும் கண்கள் விருந்துண்ண விட்டே தேகம்
வேர்த்திடப் பதைத்தா ளந்தோ
அன்னியன் அருகில் மஞ்சம்
அமர்ந்தவள் மோகம் விஞ்சப் பெண்மையின் குணங்கள் யாவும்
போக்கியே துணிவுங் கொண்டு வன்னியன் மார்பில் சாய்ந்தாள்
விழிமூடிக் கிடந்தான் நெஞ்சுள் பொன்னெழிற் சிலையாள் நாச்சி
புகுந்துமுன் நிறைந்திருந்தாள்
தன்னிலை மறந்து தூங்கும்
தடந்தோளின் வீரன் மார்பில் தன்னையே இழந்து தாவித்
துணைகொள முயன்ற போழ்தில் வன்னியன் உணர்வு கொண்டே
விழித்தெழுந் துடல்த னித்தே முன்னமங் கிருந்தாள் தன்னை
முறைத்துற்று நோக்கி னானே
616
617
618
619
υ αστυ-Ιτσαυστ συμ στα (ταθυμιb
144

பியசீலி தானி ருந்தாள்
பதறினான் வன்னி மன்னன் பயமென்ப தறியான் வாழ்வில்
பயந்தனன் அவளோ சற்றும் பயமென்ப தறியா தாளாய்ப்
பசிகொண்ட விழிகள் நோக்க அயலினில் நெருங்கி னாள்தன்
ஆசையைத் தீரென் றாளே
620 “சீ”யென்ன செயத்து னிந்தாய்
தருமத்துக் கடுக்காச் செய்கை “போ’விங்கு என்னை விட்டுப்
பெண்மைக்கே இழிவு செய்தாய் “சா’வந்த போதும் யார்க்கும்
துரோகம்நான் செய்யேன் உன்றன் 'கோ'வென்றன் நண்பன் இந்தக்
கீழ்மைக்கு உதவே னென்றான்
621 முயன்றனள் பலவா றாக
மறுத்தனன் சினந்தான் எண்ணம் பயன்தரா தென்றான் மானம்
போமென அஞ்சித் தன்னை அயலிருந் தகற்றிப் பின்னால்
அடியெடுத் தகல முன்னே புயலெனக் கதவொ டித்துப்
பாய்ந்ததோர் உருவங் கண்டான்
622 நள்ளிரவு நாடகம்
எள்நெய்யில் தோய்த்தெடுத்தே எரியுமோர் பந்தத் தோடே உள்நுழைந் தானே அன்னாள்
உள்நுழைந் திடச்செய் திட்டோன் “கொள்ளிவாய்ப் பசாசு” என்ற
கதைக்கொரு விளக்க மாகத் துள்ளினான் தீயோன் பிலிமத்
தளாவைவாய் ஐயோ! என்றே 623
145
ஜின்னாவூர் ஷரீபுத்தின்

Page 92
ஐயகோ! ஐய கோவீ
தென்னதான் பாவம் இந்த வையமே கேட்டால் வெள்கும்
விபரீதம் நண்பனுக்குச் செய்யாத துரோகம் இந்தச்
சண்டாளன் செய்திட் டானே துய்யவென் மகளை இந்தச்
சீரகெட்டோன் கெடுத்தா னென்றான்
வாருங்கள் வாருங் கள்இவ்
விழிசெயல் காண்பீர் என்றே ஊரினைக் கூட்டு வான்போல்
உடன்பின்னால் வந்த அந்தப் பேரினை அழைத்தான் முன்னே
பாய்ந்தனன் அவனுங் கண்டான் சீரற்ற நிலையைக் கண்ணுச்
சாமிதான் கண்டி மன்னன்
கொடுநாக விடத்தைக் கண்கள்
கொப்பளித் திடுமாப் போன்றே கடுகடுத் தலறக் கோபக்
கனல்விழி இரண்டும் வீசக் கிடுகிடுத் தானே வார்த்தை
கோவையாய்ப் பீறிற் றன்றோ வெடியுண்டை பட்ட வேங்கை
வாறாய்வன் னியனும் நின்றான்
தன்முன்னே நின்ற கண்ணுச் சாமியை நோக்கி வன்னி மன்னனும் நாத்த ழுக்க
முயன்றனன் பேரைச் சொல்லி என்னதான் நடந்த தென்றே
இயம்பிட அவனை முந்தித் தன்மொழி பகர்ந்தான் பிலிமத்
தளாவையும் வெறிகொண் டோனாய்
624
625
626
627
uæru-/rg-WerøíFuøí að/r-öuti
46

அறியாயேன் பித்த னேநீ
அவர்பெயர் அதுவோ இன்று அறியுமே உலகம் நாட்டின் அதியுயர் மதபீடத்தார் ழரீவிக்கிர மராஜ சிங்கத்
திருவென நாமம் சூட்டிப் பெருமைசேர்த் திருக்க நீயேன்
பேர்சொல்லி அழைத்தாய் என்றான்
628
கண்டிக்கு மன்ன னென்ற
காரணத் தாலே நானும் வன்னிக்கு மன்ன னென்ற
வகையிலும் நாங்கள் எங்கள் முன்னைய நட்பை மீற
முகமனுக் காக மாறோம் சொன்னது சரியே கண்ணுச்
சாமிதான் என்றே சொல்ல
629
நட்பென்றோ சொன்னாய் சீச்சி
நடிப்புத்தான் அனைத்தும் வெட்கம் நட்புக்கு இலக்க ணம்நீ
நடுநிசிப் போழ்திற் சென்று கட்டிலுக் கழைத்தாய் நண்பன்
கைப்பிடித் தாளை உன்றன் திட்டத்தில் இருந்த தீமை
தெரிந்திரா திருக்க விட்டோம்
630
அவசரப் படாதீர் முற்றும்
அறிந்தபின் பேசும் நானோ பவமொன்றுஞ் செய்தே னில்லை
பாதகி உன்ம கள்தான் தவறினைத் தூண்ட வந்தாள்
தப்பித்தேன், துரோகம் செய்த தவளன்றி நானில் லைநீர்
தெரியாது பேசீர் என்றான்
631
47
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 93
துடித்தனன் கோபா வேஷம்
கொண்டவன் போன்றே நன்றாய் நடித்தனன் நினைந்த வாறே
நடந்திட வேண்டித் துன்சொல் வெடித்தனன் சோகந் தாளா
வாறவன் சுவரில் சென்னி அடித்தனன் அழமாட் டானாய்
அலறினன் அனைத்தும் பொய்யே
632 கண்ணினாற் கண்ட காட்சி
கற்பனை என்கின் றாயோ! என்மகள் என்ற தால்நான்
இதயம்நொந் தலற வில்லை மன்னனின் மனையாள் உன்றன்
மாசறு நண்பனுக்கும் புன்மைநி செய்தா யென்றே
புண்ணுண்டேன் நெஞ்சில் என்றான்
633 வெறிகொண்டோன் போல வார்த்தை
வீசிய பின்ன வன்றன் பொறுமையை இழந்தான் போன்றே
பாதிதன் உடல்மூ டாது வெறுமையாய் நின்ற வள்மேல்
வெஞ்சொற்கள் உமிழ்ந்தான் எல்லாச் சிறுமைக்கும் கார ணன்தன்
செய்கையை மறைக்கும் பாங்காய்
634 ஏனடி துரோகம் செய்தாய்
இந்நாட்டின் மன்னனுக்குத் தானடி வீழ்ந்து வுன்றன்
தயவினைக் கேட்டா லும்நீ சாணடி கொண்டு தைத்துத்
தள்ளிடா துன்றன் வாழ்வை வீணடித் தாயே ஏனிவ்
வன்னியன் றனைப்பு ணர்ந்தாய்
635
uørv-/ríj-2 støfuði as/r-Sultið 48

என்மகள் என்ப தொன்றே
என்றிருந் தால்நா னுன்னை மன்னிப்பேன் ஆனால் நீயோ
மகாமன்னன் மனைவி இந்த வன்னியன் குறுநிலத்தோன்
வெள்ளையர் விரோதி ஏன்நீ உன்னையே இழந்தாய் துரோகம்
ஒன்றிடத் துணையேன் செய்தாய்
636 தந்தையின் வார்த்தை கேட்டுத்
தவிப்பவள் போன்றே சொல்வாள் “எந்தன்மீதேனோ நீங்கள்
இழிசொற்கள் பகர வேண்டும் புந்திநான் இழந்தி ருந்தேன் பருகிய மதுர சத்தால் வந்தெனைக் கவர்ந்த திந்த
வன்னியன் தானே” என்றாள்
637 அரசாங்கக் காரி யங்கள்
அதிகமென் றுரைத்தே இன்று வரச்சிறு தாம திப்பேன்
வருகிறேன் எனஅ ணைத்தே அரசருஞ் சென்ற தாலே
அவரிலாத் துயரை மாற்றப் பருகினேன் மதுவை அ.திப்
பாவிக்குப் பலனா கிற்றே
638 வருகையை எதிர்பார்த் தேநான் வாசலில் மயங்கி நிற்கத் தருணமீ தென்றே என்னைத்
தழுவினான் மன்ன ரென்றே மருவினேன் நானும் என்னை
மஞ்சத்துக் கழைத்து வந்தான் இருளினில் நடந்த தெல்லாம்
என்தவ றில்லை யென்றாள்
639
49
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீண்

Page 94
தந்தையை நோக்கிப் பொய்மை சொல்லினாள் நம்பும் வாறே வந்தனள் பின்ன வள்முன்
வன்னியன் இருக்கக் கண்டே குந்தகம் செய்தா யோஎன்
கற்பினுக் கற்ப னேசொல் வந்ததவ வினைதான் என்றால்
வாழ்ந்திடேன் சாவேன் என்றாள்
தந்தையும் மகளும் சேர்ந்து செய்திடும் நாட கத்தின் அந்திமக் காட்சி மட்டும்
அணுவுமே பிசகா தொன்றித் தந்திரம் வெல்ல ஆடித்
தமக்குள்ளே மகிழ்ந்தார் அன்னார் சொந்தமே இனிமேல் நாடு
பகைமையை மூட்டி நாட்டைப்
பெற்றிட மகளை யேயத் தகவிலான் பகடைக் காயாய்த்
தள்ளினான் ஈன முற்றான் புகலவே இயலா வெந்தப்
பாவியுஞ் செய்யா வொன்றை அகமுவந் தியற்றி னானே
அவளுடன் பட்டு நின்றாள்
நடப்பவை அனைத்தும் நோக்கி
நிதானத்தை இழக்கா தென்ன நடந்ததென் றறியும் பாங்கில் நின்றனன் கண்டி மன்னன் கடிந்தனன் மருகன் என்ற
காரணத் தாலோ சொல்வான் இடிந்துபோய் நிற்ப தென்ன
இதற்கென்ன பொருளா மென்றே
64()
641
642
643
uaorargasasiraofuair ay5rra-Gurub
150

கற்பினை இழந்தே இங்கு
களங்கமுற் றிருப்பாள் நானே பெற்றபெண் என்பதல்ல
புவியாளும் மன்னன் ராணி பொற்புறும் பெண்ணின் மானம்
போனதென் றறிந்தும் நீங்கள் சற்றுமே உணர்ச்சி யற்றுத்
தனித்தது ஏனாம் என்றான்
644 நண்பன்தான் என்பதாலே
நடந்ததை மறப்போம் என்றால் பண்பெங்கே போவ தெங்கள்
பரம்பரைப் பெருமை என்னே மண்ணல்ல பங்கிட் டாள
மற்றவர்க் களிக்க வொண்ணாப் பெண்மன்னா இன்னு மென்ன
பேசாது மெளனம் என்றான்
645 மன்னனின் அமைதி கண்டு
மனந்தாங்கார் போன்றே மீண்டும் தன்தலை தன்னைத் தூணில்
தட்டினார் கண்ட செல்வி “என்னயி தையோ" வென்றே ஏகினாள் திட்டம் போலே தன்னையவ் வினையி ருந்து
தடுத்திட்டார் தந்தை கண்டே
646 பலகோடி நச்சு நாகப்
பாம்புகள் நரம்பாய்க் கொண்டு வலைபின்னி வைத்தாற் போன்றோ
வஞ்சகன் மூளை இந்தப் பிலிமத்த ளாவை போன்றோர்
பாரினில் இவனொன் றேதான் கொலையேனுஞ் செய்வான் நன்மை
கூடுமென் றாலே பொல்லான்
647
15
ஜிண்ணாவூர் ஷரீபுத்தின்

Page 95
நினைந்தனன் பண்டார வன்னி
நாசகன் எமைப்பி ரித்தே தனைக்கண்டி மன்ன னாக்கச்
சூழ்ச்சிசெய் கிறானே கண்டி தனை\வெளளைப் பறங்கி யார்க்குத்
தானமாய்த் தந்தே எச்சந் தனையுண்ண எண்ணு கின்றான்
துணையாக மகளைக் கொண்டான்
நிகழ்த்திடா தொன்றும் நின்ற
நிலைகண்டு வெறிகொண் டோனாய் முகத்தினைக் கோர மாக்கி
மன்னனின் தோள்கள் பற்றிப் பகைவனை மனைவி கற்பைப்
பறித்தவன் றனைநீ கொல்ல வகையிலா திருப்பின் நானே
வாங்குவேன் தலையென் றானே
சொன்னசொல் லோடு வாளைத் தூக்கியே வன்னி யன்மேல் தன்பலங் கொண்டு தாக்கத்
துணிந்தனன் ராஜ சிங்கன் முன்சென்று வாளைத் தன்கை
மாற்றியே சொல்வான் நீங்கள் என்னையே விடுங்கள் தாக்கி
எமனுக்குத் தரவே என்றான்
நட்பின் இலக்கணம்
கைகொண்ட வாளி னோடே
குறிதவறிட்டான் போன்றே கைநீண்டு பியசீ லிப்பேய்
குரல்வளை நெருங்க அன்னாள் ஐயகோ! என்றே வீழ்ந்து
அவன்பதம் பற்றிக் கண்ணிர் பெய்தனள் மழையாய் என்ன
பவமென்றும் புலம்பி னாளே
uæku-/r/Jøyersfuði as/r-Guúb
648
649
650
65
152

ஒருகோடி மின்ன லொன்றி
ஒருநொடிக் குள்ளாய்த் தேகம் பரவிய பாங்காய் நெஞ்சம்
பதறினாள் பயத்தாற் றன்னில் விரவிய அச்சத் தோடும்
வாய்வலுக் குன்றா தேதன் குரலினை உயர்த்திச் சொல்வாள் குற்றமற்றவள்நான் என்றே
652 பாவத்தை ஒருவன் செய்யப்
பழியென்றன் மீதில் தாவிச் சாவினைத் தருவ தாயின்
சகிக்குமோ நெஞ்சம் கையிற் பூவினைப் போல வைத்துப்
புகழ்ந்தெனை வாழ்த்தும் நெஞ்சில் தேவையோ ஐயம் என்னைத் தவறாக எண்ணல் பாவம்
653 நீங்களே அனைத்தும் என்றே
நினைவினில் நொடியுங் கூடத் தாங்கினேன் இல்லை மற்றோர்
தோள்தரும் அணைப்பை என்மேல் நீங்களே களங்கஞ் சொன்னால்
நாசுடும் வார்த்தை சொன்னால் தாங்கிடேன் உள்ளம் என்றே
தொடர்ந்தனள் மன்னன் சொல்வான்
654 என்னடி நடிக்கின்றாய்நீ
ஏரியும் குளமும் உன்கண் பின்னிருந் தெண்ணும் போது
பீறிட்டுப் பொழிவ தைநான் கண்ணுறேன் என்றா இட்து
கண்ணிரே இல்லை நஞ்சை உண்ணிராம் விடமாம் என்றே
உதைத்தொரு புறத்தில் சாய்த்தான்
655
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 96
ஒருவருக் கொருவர் மாறி
உரைசெய்தார் நினைந்த தெல்லாம் திருவினை யாகு மென்றே
திட்டமிட் டிருந்த தந்தை வருவினை மாறித் தோன்ற
வழிமாற்ற வேறோர் சூழ்ச்சி உருவுறச் சட்டென் றேஆங்
கிடையினில் பேச லானார்
மன்னவ! மருக ரென்னும்
முறைமறந் தமைச்ச ராக முன்வைக்கும் சமர்ப்ப ணத்தை
முற்றிலும் கேட்டல் வேண்டும் என்னதான் பழிய வள்மேல்
இருப்பினும் நட்பு என்னும் பண்பினை மறந்து செய்த
பாவத்தைப் பொறுக்க லாமோ
வந்துற்றாள் என்றால் இங்கே
வாராதே போஎன் றேகி வந்துறும் பழியை எண்ணி
வெறுத்தவன் நடந்தி ருந்தால் சந்தேகங் கூட நம்முள்
தோன்றிடா தன்றோ என்றார் விந்தையாய் முகத்தைக் கோணி விழித்தனன் ராஜ சிங்கன்
அமைச்சரே! என்று சற்று
அழுத்தமாய் அழைத்து முன்னர் அமைந்ததோர் நிகழ்வாய்க் கூறும்
அழகிய கதையொன் றுண்டாம் அமைதியாய்க் கேளும் அ.து
அச்சொட்டாய்ப் பொருந்தும் இன்றும் அமையும்பா ரதத்தில் அந்த
அற்புத நிகழ்வாம் என்றே
uæku-/rg-Watsfuøí að sr-Suib
656
657
658
659
54

துரியோ தனனின் நண்பன்
செஞ்சோற்றுக் கடனுக் காய்த்தன் ஒரேவயிற் றுதித்த பேரை
உதறிய கர்ணன் ஒர்நாள் துரியோ தனனின் இல்லத்
தரசிபா னுமதியி னோடே சரிசம மாயி ருந்தே
சொக்கட்டான் ஆடும் போது
660 துரியோ தனனன் றில்லை
தனித்தவ ரிருந்தார் கர்ணன் உரியவனானான் வெற்றிக்
குடன்பானு மதியுந் தோற்கப் பெருமிதம் கொண்டான் கர்ணன்
பூரிப்பில் மிதக்கும் போது துரியோ தனனும் வந்தான்
தலைவியும் கண்ணுற் றாளே
661 கண்டனன் இல்லை கர்னன்
கணவனைக் கண்ட தேவி விண்டெழுந் தாளே தோல்வி
வந்ததால் எழுவதாகக் கொண்டனன் கர்ணன் பாய்ந்து
கொடியிடை தொங்கும் மாலை அண்டிடப் பிடித்தான் அ.து
அறுந்திட அதிர்ந்திட் டானே
662 'கோக்கவோ பொறுக்க வோநான்
கூறெனக் கண்ணிற் சற்றும் தேக்கிடான் ஐயம் நெஞ்சின்
தூய்மையைக் காட்டு வான்போல் வாக்கினில் மெய்ம்மை கூட்டி
வினவினான் நண்பன் என்றே பாக்கடல் பார தத்தில்
படித்துள்ளேஸ் அறிவீ ரென்றான்
663
155
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 97
நட்பினைப் பொறுத்த மட்டில்
நான்துரி யோத னன்றான் திட்டமாய்த் தூயோ னென்றன்
தமிழ்மண்ணின் தலைவன் கர்ணன் கெட்டவுன் திட்டத் தாலே
கேடொன்று விளைத்தாய் என்னக் கட்டிநெஞ் சணைத்தான் வன்னிக்
காவலன் நெகிழ்ந்திட் டானே
664 வீரனல்ல வீராங்கனை
வந்திருந்த வேலைமுற்றும் முடித்தேதன் மண்ணைநோக்கி
வீரரொடு வன்னிமன்னன் பண்டாரவன்னி வந்திருந்தான் வாசலுக்கு விக்கிரம ராஜசிங்கன் வாசல்வரை வழியனுப்ப வேண்டுமென்றே வந்திருந்தான் பியசீலி உடன்வந்தாள் நெஞ்சுறவை
வதனத்தில் காட்டாதே மந்திரியாய் வந்திருந்தார் பிலிமத்த ளாவையுமே நடந்தவெந்த
விபரமெவர் முகங்களிலும் காணாவாறே
665 ஒவ்வொருவர் உளத்திலுமே வெவ்வேறாய் உணர்வலைகள்
ஓங்கிப்பாய ஒன்றிநின்றார் உண்மையில்லவ் வொவ்வொருவர் உளம்மட்டும் அறியுமது யாதென்றே
உண்டான முன்னிரவு நிகழ்வுகளால் கவ்வியதாம் அவைநான்கு பேரன்றி வேறெவரும்
கண்டோகேட்டோ அறியாத அக்கிரமம் ஒவ்வாத சூழ்ச்சியினால் ஒன்றியதே யாரெவர்க்கும்
ஒருமணியின் அளவேனும் நன்மையற்றே
666 பவச்செயலே பழியென்று கிடக்கின்ற பியசீலி
பவப்பிறப்பே பிறந்ததெவர் செய்தபெரும் பவமொன்றின் பலனோவென் றறியாதே தன்மனத்துள்
புகைந்தெழுந்த நினைவுகளை நெஞ்சுள்தேக்கிப் பவமென்ன செய்தேன்நான் இவள்கரத்தைப் பற்றிடவே
பவ்வியமாய்ப் பிறரினையும் மயக்குமிந்த பவத்தின்முழு உருவமிந்தப் பாரினிலேன் பிறந்தனளோ
படைத்தவனின் தண்டனையோ பாருக்காமே
667
பண்டாரவண்ணியன் காவியம் 156

விக்கிரம ராஜசிங்கன் நெஞ்சத்துள் பலவாறாய்
வினாக்கள்பல தோன்றியவ் வஞ்சகத்தாள் அக்கிரமம் ஒன்றிரண்டோ இன்னுமென்ன செய்யுவளோ
அருகிருக்கும் எனைக்கொல்லும் துணிவு கொண்டே எக்கணமும் முயலவழி யுண்டென்றே எண்ணினனே
எதற்குமஞ்சா வெறிகொண்ட நச்சுப்பாம்பாய்த் தக்கதொரு தருணத்தைப் பார்த்திருப்பாள் விஷமேற்றத்
தாமெனவே நெஞ்சத்துள் திடங்கொண்டானே
668 எத்தனைதான் அழகுமிளிர்ந் தென்னவுடல் காட்டியவன்
இதயத்தைப் பிழிந்தெடுக்க வார்த்தைபேசி எத்தனைதான் முயன்றுமென்ன என்வலையில் வீழ்ந்திடாதே
இதயத்தைக் கல்லாக்கி எனைவெறுத்தே எத்தனங்கள் அத்தனையுந் தோல்வியுறச் செய்தனனே இதயமிலான் இளகாநெஞ்சன் எந்தைஎண்ணம் அத்தனையும் பொய்யாக இடந்தாரா தொழித்தான்என்
இன்பத்தைச் சிதைத்தானே எனநொந்தாளே
669 கால்தொட்டுப் பணிவிடைகள் செய்தெனினும் வாழ்வுமுற்றும்
கண்போலக் காப்பதற்கும் பரிவுகொண்டே கால்பற்றக் காத்திருக்கும் காளையர்கள் கணக்கிலாதே
காத்திருக்கக் கணத்துக்காய் நானவன்றன் கால்பற்றி இரந்தேனே கண்டிமன்னன் தேவியென்னும்
கெளரவமும் மறந்தின்பம் ஒன்றேவேண்டிக் கால்தட்டித் தள்ளினனே கொடுங்கோலன் என்னுமொரு
காரணத்தால் பியசீலி வருந்தினாளே
670 என்மகளை வைத்தேதான் எனதுதலை முடிதாங்க
எண்ணமுற்றே நான்செய்த சூழ்ச்சியெல்லாம் என்னளவில் திரும்பியெனைத் துரோகியெனச் செய்ததொடு
எனதுமகள் தனையுமொரு இழிமகளென்(று) எண்ணும்படி செய்ததன்றோ வன்னியனின் இரும்புநெஞ்சால்
எனக்கிருந்த வாய்ப்புகளும் அற்றதேயென்(று) எண்ணிமனம் நொந்தாரே பிலிமத்த ளாவைஇன்னும்
என்னவழி யுண்டென்னும் எண்ணத்தோடே
671
57
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 98
சூதுவொரு ாதுருவில் சூழ்ச்சியொரு மந்திரியாய்
நேர்ந்தேதான் வந்தததற் கெதிர்ப்பாய்நட்பின் வேதமெனும் வாறுகண்டி மன்னனெனும் ராஜசிங்கன் வந்தேயென் மானத்தைக் காத்தேஎன்னைத் தீதறியான் னத்திடமாய் நம்பியென்றன் தூயநெஞ்சின்
துயர்துடைத்துத் தூயவுயர் நட்பைக்காத்து ஏதுமொரு இடர்குழா நாட்டினையும் காத்தனனே என்றுவன்னி மன்னனெண்ணி மகிழ்வுற்றானே
672 ஒவ்வொருவர் தம்நிலையில் ஒன்றையொன்றை எண்ணியெண்ணி
உடனிருக்கும் மற்றவரை ஓர்ந்து நோக்கக் கவ்வுமுளச் இராகத்தால் கண்கலங்க வன்னியனும்
கண்டிமன்னன் தனைநோக்க அவனும்நோக்க ஒவ்வுமவர் உளமிரண்டும் ஒன்றியிரு உடல்களையும் ஒன்றாக்கி அணைத்துவிடை தானுங்கொள்ள எல்கையின் உணர்ச்சிகளும் ஒன்றாத முகங்களொடு
இருந்தனரே மந்திரியும் மகளுமாங்கே
673 வருகின்றேன் எனவவனும் இறுதியிலே இருவருக்கும்
இதே விடையறவே வன்னிமன்னன் பரியேறித் தட்டிவிட்டான் பாய்ந்துதன் கால்களினைப்
பறப்பதற்குத் தயாராகப் பின்னிருந்தே பெரியதொரு கூச்சலொடு பியசிலி வன்னியனின் பின்புறத்தைத் தாக்கவொரு கூர்வாள்வீச அருகிருந்த ഉരൂഖ്ങ് அதைநெஞ்சில் வாங்கியுடல்
அடியற்ற மரம்போன்றே சாய்ந்திட்டானே
674 வெறிகொண்டு கூரியவாள் வன்னியனைத் தாக்குமுன்னே
வந்துநெஞ்சைத் தந்தவனைக் காத்தேவீழ்ந்த திறன்கொண்ட வீரனெவன் தானென்றே அதிசயித்தே
தரைநோக்கத் தலைப்பாகை யற்றேஆங்கு மறைத்துடலை ஆண்வேடந் தரித்திருந்தாள் மங்கைநல்லாள்
மன்னவனின் காதலியாம் குருவிநாச்சி மறத்தமிழன் வாரிசுநான் மரணத்திற் கஞ்சேனெனும் முகங்காட்டி மண்கிடந்தாள் மயங்கிச் சோர்ந்தே
675
ബ-ത്ത~് ̄ uarirurrarauakafuat ardır.Suyup
S8

பேய்மகள் பியசீலி
எறிந்தவாள் தன்னைத் தாக்கா திருந்திடக் காத்த நங்கை அறிந்தனள் வன்னி மன்னன் ஆருயிர்க் குருவி யென்றே பறந்தனன் அருகில் நெஞ்சில் புண்ணுண்ட மயக்கத் தாலே இறந்தவள் போலி ருக்க ஏங்கியே தவித்திட் டானே
676 மின்னலுள் நடந்து விட்ட விபரீதம் கண்ட கண்டி மன்னனும் தவித்தான் கோப வெறிகொண்டே பியசீ லிப்பேய் கன்னங்கள் வெடிக்க அன்னாள் காதொடு மாற்றி மாற்றிப் பின்னினான் கரங்க ளாலே பத்திர காளியானாள்
677 அடையுங்கள் இவளை அந்தப் புரத்தினில் கைதி யாய்ஒர் அடிகூட வெளியில் தோன்றா வாறுசெய் திடுவி ரென்றான் உடனவன் பணிமேற் கொள்ள ஓடினர் வீர ரன்னாள் வெடிகொண்ட மிருக மொக்க வாய்விட்டே அலறி னாளே
678 வாளுண்ட நெஞ்சில் சென்னீர் வடிந்திட மூர்ச்சை யாகித் தோள்வலு மறவன் கையில் துவண்டுமே கிடந்தாள் நாச்சி தோளன்றன் அருகில் வந்தே சொல்லுவான் மருத்து வர்க்கு ஆள்சென்றான் அரண்ம னைக்குள் அள்ளிவா அவளை என்றே
679 தண்டலை மலர்ந்தி ருந்த தாமரை மலரைக் கையால் தண்டொடு பிடுங்கி யேமன் தலையினில் எறிந்த தொக்க கண்டவர் எண்ணும் பாங்காய் குருவிச்சி வன்னி யன்கை கொண்டிடக் கிடந்தாள் நெஞ்சைக் கலங்கிடச் செய்திட் டாளே
680 கொடியெனத் துவண்ட வந்தக் கோதையைக் கைகள் தாங்க நடந்தனன் மாளிகைக்குள் நண்பனும் கூட வந்தான் விடவிழி கொண்டு வட்தை வெறுப்பொடு இருவர் பார்வை தொடரவும் கண்டார் அ.து தந்தையும் மகளுந் தானே
681 நினைந்தவா றுடலின் ஆசை நிறைவுறாப் போது கொல்ல நினைந்ததும் நடைபெறாத நிலையினால் பியசீ லிப்பேய் தனையேதான் நொந்து கொண்டாள் தலைவனும் வெறுத்தா னென்றே மனநிலை குழம்பப் பித்துப் பிடித்தவா றாங்குற் றாளே
682 மகள்நிலை கண்டார் தந்தை மாற்றிடத் தோள ணைத்தே அகங்கவல் கொள்ளா தேநீ அமைதிகொள் நமக்கா யான வகைசெய்வார் கவர்ணர் நோத்எம் விருப்பமும் நிறைவே றும்நாள் மிகஅண்மி யுண்டுஇந்த வீனரை அழிப்போ மென்றார் 683
159
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 99
கவர்ணர்நோத் என்பான் கெட்ட காமுகன் பெண்க ளென்றால் எதனையும் செய்வான் உன்மேல் கண்ணுண்டு அவனுக் கென்பேன் அவன்துணை கிடைத்தால் கண்டி ஆகுமெம் கையில் உன்னை அவன்மஞ்சம் அனுப்பேன் எண்ணம் அமைவுறா தெனில்நா னென்றார்
684 முன்னொரு பகையைத் தோற்ற முனைந்துநாம் தோல்வி கண்டோம் பின்தொடர்ந் ததுவே என்னும் பேதமை ஒழிப்பாய் நெஞ்சில் மன்னவன் வார்த்தை கொண்ட வாகுநீ அரண்ம னையுள் சொன்னவா றிருப்பாய் வெற்றி கிட்டுநாள் வரையும் என்றார்
685 இன்றில்லாப் போழ்தும் ராஜ சிங்கனை வீழ்த்து வோம்நாம் என்றுளம் வைநீ அந்த வன்னியன் தனையும் ஒர்நாள் சென்றுவெண் துரைமார் காலில் வீழ்ந்திட செய்வோம் நாங்கள் கொண்டுள சபதம் நெஞ்சில் தோற்றிய சினத்தா லென்றார்
686 சொன்னது போல்நான் செய்வேன் தீயவர் இருபேர் தம்மின் சென்னியை உருட்டி நாட்டைத் தங்கள்கை கொள்ளு மட்டும் என்னையே அதற்காய் ஈவேன் எவர்தனுக் கெனினும் இன்றும் வன்னியன் தனைக்கொல் லத்தான் வந்தேன்நான் தோற்றுப் போனேன்
687 இடையினில் புகுந்தொ ருத்தி என்குறி தவறச் செய்தாள் கடைப்பிறப் பவள்யார் என்று தெரிகிலேன் எனப்பெண் கேட்க விடையெனத் தந்தை சொல்வார் வன்னியன் உயிராம் அன்னாள் கிடைத்தனள் துணையாய் வீரக் குருவிச்சி நாச்சி யென்றார்
688 நடந்ததை விளக்கிய நச்சு நாக்கு
கண்டிமன்னன் மாளிகையில் குருவிச்சிக்குக்
கடிதினிலே சிகிச்சைகளும் தொடங்கிற் றன்னாள் கொண்டிருந்த குறுவாளை மருத்து வர்கள்
கண்ணிருந்து தூசகற்று வார்கள் போன்றே மென்னுடலுஞ் சிதைவுறாதே குருதி கூட
மிகவிழக்கா வாறகற்றி மருந்தும் இட்டார் கண்ணயர்ந்து தூங்கினளே வலிய டங்கக்
கண்ணிமையா யுடனிருந்தான் வன்னி மன்னன்
689
υ, αατι ιτσου σταται στα ιταδιμιί, 60

விழிக்கும்வரை காத்திருந்தான் வார்த்தை யாட
வந்ததவள் ஏனென்னும் விபரங் கொள்ள பழிக்குடந்தை யானவளின் பதியும் கூடப்
பார்த்தருகில் வீற்றிருந்தான் கவலை தோய்ந்தே உளம்பதைக்கும் அந்நிகழ்வில் பங்கு கொள்ளும்
உளமுடைத்தோன் போல்பிலிமத் தளாவை வந்தான் பிழைத்தனளோ என்றறியும் நோக்கத் தோடும்
பார்க்கவந்தே இருப்பரெனப் பகர லாமே
690 எப்படித்தான் இங்குவந்தாள் வீர ரோடே
எப்படித்தான் இருந்தனளோ வேடந் தாங்கி எப்படித்தான் உணர்ந்தனளோ எனக்கு இங்கோர் இன்னல்வரும் என்பதனை இடைபு குந்தே எப்படித்தான் வீசியவவ் வாள்த டுத்தே
என்னுயிரைக் காத்தனளோ இவற்றை யெல்லாம் எப்படித்தான் அறிவதவள் நலம்பெற் றாலே எலாமறிய இயலுமெனக் காத்திருந்தான்
691 தன்னுயிரைப் பொருட்படுத்தா தெந்தன் ஆவி
தனைக்காக்க முயன்றவந்தத் தியாகப் பெண்ணை தன்னிருகண் இமைமூடா வாறிருக்கத்
தொடந்துநொடிப் பொழுதேனும் அகலா தாங்கே வன்னியனுங் காத்திருந்தான் வாய்தி றந்தே
வார்த்தையொன்று பகருவளென் றாவல் உந்த வன்னியனை உடன்பிறப்பாய்க் கால மெல்லாம்
வரித்தகண்ணுச் சாமியுமங் கவனோ டுற்றான்
692 நீண்டநேரந் துயில்கொண்டாள் மருத்து வர்கள்
நிம்மதியம் ஆறுதலும் வேண்டு மென்றே தூண்டிவிட்டார் தூக்கத்தை மருந்து தந்தே
தாக்குண்ட உடலமைதி கொண்ட தன்றோ தாண்டியது நெடும்பொழுது காத்தி ருந்தோர்
சட்டென்றே முனங்கலொலி கேட்டார்; கண்கள் தூண்டிவிட்ட தீபத்தின் சுடர்போல் மெல்லத்
திறந்தனவே வன்னியனும் மகிழ்ந்திட் டானே
693
61 ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 100
நெஞ்சமலர் நெகிழ்ந்ததொப்ப மகிழ்வு கொண்டே
நெருங்கவவள் வதனத்தின் அருகில் சோகம் விஞ்சியதால் பனித்தவிழித் துளிகள் பூப்போல் வாடியவா றிருந்தமலர் முகத்தில் சிந்த பஞ்சிற்பொறி பட்டதொப்ப துலங்கிற் றன்னாள்
பாவைரெண்டும் இமைமடல்கள் துடிக்கக் கண்டான் அஞ்சியவா றில்லையவள் பிழைத்தாள் என்றே
அகத்துரமுங் கொண்டனனே வன்னி வேந்தன்.
6(), கண்மலர வாய்திறந்தாள் வார்த்தை மெல்லக் குழறினபின் நிதானித்தே பேச லானாள் பண்பார்ந்த பாசத்தின் விளக்க மாக
பண்டார வன்னியர்க்கு உடலில் எங்கும் புண்ணுண்ட தாமோவென் றுரைக்கச் சொல்வான்
புண்மனத்தில் தானுடலில் இல்லை உன்மேல் புண்ணுண்ட தாலென்றே இப்போ துன்றன்
பூவுடலின் நிலையென்ன சொல்லேன் என்றான்
695 இறப்பென்ப துறுதியேதான் நாங்கள் கொண்ட
இலட்சியப்போ ராட்டத்தில் இன்றோ என்றோ துறப்பதெனில் உயிரைநான் உங்கள் முன்னே
தந்திடவே ஆசைகொண்டேன் உங்க ளுக்காய் இறப்பதெனில் அதுபோன்றோர் பேறு முண்டோ
இன்றதுவும் நடந்திடில்நான் மகிழ்வேன் என்றாள் இறப்பென்ப தெமக்கில்லை யன்பே நாங்கள்
இலட்சியத்திற் காய்வாழும் பேர்க ளென்றான்
696 உன்னதமாம் இலட்சியத்திற் காகத் தம்மின்
உயிர்விட்டோர் இறந்தவராய்ப் போவ தில்லை மன்னுலகம் உள்ளவரை நிலைத்தி ருப்பார்
மங்காத புகழுடம்பால் என்றும் வாழ்வார் என்னிலையும் உன்நிலையும் அவ்வா றேதான்
இறப்பில்லாப் பேர்களுள்ளே இருவ ராவோம் என்றுமது பொருந்துமினி எதிர்கா லத்தும்
இலட்சியத்திற் காயிறப்போர் இறவார் என்றான்
697
uata-rpajakafuat sta5uyub 62

எப்படியோ நான்நினைந்த வாறே யொன்று
இங்குநடை பெற்றதுநான் வராது போனால் எப்படித்தான் நிலைமாறிப் போயி ருக்கும்
இன்னுயிரும் இன்னுயிரும். என்றாள் மேலும் செப்பிடவோர் வார்த்தைவராத் தடுமாற் றத்தால்
தேம்பினளே சிறுகுழந்தை போல நாட்டில் கப்பியவெம் பகையழிக்கத் துணிவு கொண்டாள் கண்கலங்கக் கலங்கினனே வன்னி வேந்தன்
698 எப்படித்தான் இங்கு வந்தாய் ஏன்நீ வந்தாய்
எனவினவ அவளுரைப்பாள் ஆமாம் என்றன் தப்பேதான் உடன்வந்தால் “வராதே’ என்று
சொன்னபின்னுந் கூடவந்தால் தவற தாமே இப்போது நான்தனித்தே வந்தேன் என்மேல்
ஏற்றவெறுப் பின்னுமுண்டோ உங்கள் மேலே தப்பில்லை நான்செய்த தவறே என்மேல்
சினங்கொள்ளச் செய்தது நியாயம் என்றே
699 என்தவறை நானெண்ணி வருந்தும் போது
எவ்வாறோ உங்கள்மேல் வருத்தங் கொள்வேன் என்சொந்தப் பாசத்தின் கார ணத்தால்
இலட்சியத்தை மறந்ததுவோர் துரோகம் அன்றோ அன்புஒன்றே காரணமாய்ப் பிணைக்கப் பட்டோம்
அரைநொடியின் பொழுதேனும் நான்வே றுற்றுத் தன்வழியில் பிரிந்தோமோ இல்லை என்றன்
தவறன்றோ சீற்றமுறச் செய்த தன்றே
700 திடீரென்றே எனைவெறுத்து ஒதுக்க நீங்கள்
செய்தவந்த முடிவிலொரு தப்பும் இல்லை குடிகேடன் குலவிரோதி நம்மைக் காட்டிக்
கொடுக்கவெண்ணும் காக்கைவன்னி மாளி கைக்கு அடியெடுத்து வைத்ததுவோர் துரோகம் எங்கள்
இலட்சியத்தை மறந்தசெய்கை எனவு ணர்ந்தேன் கொடியவினை செய்தவெனைத் தண்டி யுங்கள்
கவலையுறேன் எனநாச்சி கலங்கி னாளே
701
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 101
துரோகமெனும் வார்த்தையைநீ சொல்ல வேண்டாம் தாத்தாவைக் காத்துவரும் தடுமாற் றத்தில் விரோதமுற்ற துன்செய்கை நானுங் கூட
வக்கிரம மாய்நடந்தேன் என்றன் கூட வராதேயென் றுரைத்ததுவும் தவறே சற்று
வார்த்தைகளால் கண்டித்தே விட்டி ருந்தால் சரியாகிப் போயிருக்கும் அனைத்தும் நாங்கள்
செய்ததெலாம் இனிமறப்போம் எனப்பு கன்றான்
702 மலர்ந்தவவள் முகம்மலர்ந்த பங்க யம்போல்
மின்னியதோர் புன்னகையும் கடைவா யூடே அலர்ந்தவிழி மடலுயர்த்திக் கண்சு ழற்றி
அடுத்திருந்தோர் தமைநோக்கிப் பார்வை தாழ்த்தி சொலவானாள் இத்தனைநாள் ஏனாம் இந்தச்
சதிகாரர் கோட்டையுள்ளே தரித்தீர் என்றே நிலைகுலைந்தார் பிலிமத்த ளாவை கண்ணில்
நிறைந்துவழிந் திடும்அசட்டை மறைத்திட் டாரே
703 குருவிச்சி நாச்சிசொன்ன வார்த்தை கேட்டுக்
குழறினார்தம் கையுயர்த்தி ஐயோ கண்டி அரண்மனையோர் சதிகாரர் கோட்டை யாமே அடுக்காதே பகவானே ஈதென் றாரே சரியோயில் வார்த்தைகளேன் என்னும் பாங்காய் திரும்பினனே கண்டிமன்னன் வன்னி யன்பால் தெரியாயோ கண்ணுசாமி என்றன் நண்பன்
தூயவுள்ளம் கொண்டகண்டி மன்ன னென்றே
704 புரியவைத்தான் நினைப்பதவள் தவறா மென்றும்
பகைகொண்டே அவன்என்னைக் கொல்வ தாயின் பெரிதுவப்பேன் உயிர்நீக்க தமிழ்த்தாய் நாட்டில்
பாண்டியனாம் கட்டபொம்மன் வெள்ளைத் தேவன் இருவருமெல் வாறுநண்ப ராமவ் வாறே
இங்குநாங்கள் இணைந்துள்ளோம் என்றுஞ் சொல்லக் குருவிச்சி பதிலுரைப்பாள் ராஜ சிங்கன்
கவலழிந்து மகிழ்ச்சியுறும் வாகி னோடே
705
பண்டாரவன்னியண் காவியம் 64

அறிவேன் நான் உங்களிரு பேரின் நட்பும்
அதையொடிக்க நடக்கின்ற சூழ்ச்சி யெல்லா அறிவேன்நான் நாட்டைத்தம் வசமாய்க் கொள்
அவாவுற்று நடக்கின்ற திட்டம் கூட அறிவேன்நான் அதனாற்றான் ஆபத் துங்கள்
அருகிலென அறிந்தேதான் மற்றோர் என்னை அறியாது ஆண்வேடம் பூண்டு வந்தேன்
ஆபத்தில் அறிந்தபடி காத்தேன் என்றாள்
706 கூறியவா றருகினிலே குனிந்தி ருந்த
கொற்றவனாம் வன்னியனின் தலையைக் கோதி ஆறுதலாய் நெற்றியிலோர் முத்த மிட்டாள் அதுகண்ட பிலிமத்த ளாவை நெஞ்சில் நீறுபூத்த நெருப்பினிலே காற்று வீச
நீறகலத் தகிப்பதுபோல் சூழ்ச்சித் தீயும் வீறுகொண்டு எரிந்தததன் பயனாய் வார்த்தை விடமாகக் தாக்கியதே வழக்கம் போன்றே
707 ஆண்டவனே இதுவென்ன உலக மாமோ
அன்பென்னும் தூயபண்பு பொய்யி னாலே பூண்டதொரு கோபுரமாய்க் கண்டி மன்னன் பண்டார வன்னியனின் நண்ப னென்றே வேண்டாத சான்றற்ற பொய்யீ தென்று
விளங்கவைத்தால் விளங்காரிக் காத லர்கள் வேண்டியது ஆகட்டும் சொல்ல நானும்
வேண்டியதைச் சொல்லிவிட்டேன் என்ற 6in (33
708 பேசியதை முடிக்காதே தொடர்வார் இன்னும் பிலிமத்த ளாவையவர் விஷநாக் காலே கூசாது மீண்டும்பல பொய்கள் தம்மைக்
குருவிச்சி நாச்சியாரை விழித்த வாறே பேசுவதைக் கேளுங்கள் சாவின் வாயில்
போய்வந்தீர் நம்புங்கள் இல்லை யென்றால் யாசிக்க மாட்டேன்நான் கவலை யில்லை
எண்ணியதைச் சொல்கின்றேன் அனைத்தும் உண்ை
709
1.65
ஜிண்ணாஜர் ஷரிபுத்தின்

Page 102
பெருங்காதல் கொண்டீர்கள் நீங்க ளிந்தப்
பண்டார வன்னியர்மேல் உண்மை என்றன் அருமைமகள் பியசீலி கண்டி மன்னன்
அருகமரும் மணவினையில் பொருந்திக் கொண்டாள் ஒருநாளும் பிறர்மீது விருப்புக் கொள்ளா
உத்தமியாம் அவள்மீது பண்டார வன்னி ஒருவிழியைப் பதித்திருந்தார் நம்பிக் கெட்ட
உறவொன்றும் அரும்பியது அவர்கட் குள்ளே
70 அன்பில்லான் என்மருகன் கண்டி மன்னன்
அதனாலே அன்புகொண்ட வன்னி யன்மேல் தன்இதயந் தனைத்தந்தாள் உடல்மோ கத்தால் தனியிடத்தில் ஒன்றானார் கண்டான் மன்னன் தன்மனைவி கரத்தாலே அவனைக் கொல்லத் திட்டமிட்டான் அதன்பயனே வாளின் வீச்சு இன்னிலையில் சொல்லுங்கள் சதிகா ரர்யார்
எய்தவனோ? இல்லைஅம்போ? எ.தென் பீரோ?
71 அன்போடு அழகுகொண்ட அபலை நீங்கள்
அதையுணர்ந்தும் மறுத்துநண்பன் மனைவி மீது தன்மோகந் தனைத்தீர்க்கத் துணிந்தான் கெட்ட
துரோகியிந்த வன்னியன்தன் மனைவி கையால் தன்பழியைத் தீர்க்கவெண்ணிக் கொல்லச் சொன்ன சதிகாரன் ராஜசிங்கன் இவைதான் உண்மை இன்னிலையில் துரொகிகள்யார் இவரா? நானா?
இயம்புங்கள் எனப்பிலிமத் தளாவை சொல்ல
7 12 வெறிகொண்டான் போல்ராஜ சிங்கன் பாய்ந்து
வஞ்சகனே எனப்பிலிமத் தளாவை தம்மின் சிரசினையங் கருகிரந்த தூணின் மீது
சடசடவென் றோங்கியோங்கி அடித்தான் கண்டி அரசனது செய்கைகண்ட வன்னி மன்னன்
அதைத்தடுக்கப் பிலிமத்த ளாவை ஓங்கிப் பெருங்குரலில் ஓலமிட்டான் தன்னைக் கொல்லப் போகின்றார் இவர்களென்றே பாவி யானோன்
73
υ αστι (τσου στασίμ στα ταθυμιb
66

நோத்தும் நயவஞ்சகமும்
குருவிச்சி நாச்சி தேகநலங்
கொள்ளும் மட்டிலும் கண்டியிலே இருந்திடக் கேட்டனன் ராஜசிங்கன்
இருப்பதாய் வன்னியன் ஏற்றிருந்தான் வரும்வரை வன்னியில் காத்திருக்க
வேண்டுமென் றுரைத்த நங்கையர்க்கு அரண்மனை விட்டுத் தத்தமது
ஆள்பதி தமக்குச் செலப்பணித்தான்
71.4 காரண மறியாச் சகோதரிகள்
கட்டளை ஏற்றுச் சென்றார்கள் ஊரே அறியா வாறெங்கோ
ஒடியொ ழிந்தார் மந்திரியார் தேரார் பிலிமத் தளாவையார்
துணைகொள நாடினார் என்றெவரும் சேர்வார் வேறெங் கவர்தம்போல்
துஷ்டர்கள் பக்கம் தானன்றோ
75 காட்டிக் கொடுத்தேனும் நாடாளக்
கங்கணங் கட்டிய காரணத்தால் ஓட்டமாய் ஓடிக் கொழும்பினிலே
உலுத்தன் நோத்தின் பதம்பணிந்தார் போட்ட அனைத்துத் திட்டங்களும்
பொசுங்கிப் போயின வன்னியனும் சாட்டையும் கரமும் போல்கண்ணுச்
சாமியோ டொன்றினன் எனவழுதார்
சாட்டையும் கரமும் போலொன்றிச்
சாடியே வெள்ளையர் தமையவர்தம் வீட்டொடு சேர்ப்போம் எனச்சபதம்
வன்மையாய் நெஞ்சில் கொண்டுள்ளார் மாட்சிமை மிக்க நோத்துரையே
மிகப்பெரும் தீங்காம் அவர்ஒன்றின் தாட்சண்யம் பார்ப்பது தவறவர்க்குத்
தக்கதாய்ப் பாடம் புகட்டுமென்றார்
717
167
ஜிண்ணார் ஷரீபுத்தீன்

Page 103
பிலிமத் தளாவை அழஅதனைப்
பெரிது படுத்தா கவர்ணர்நோத் பலத்தை அறிவரோ தந்திரத்தில் புலிகள் நாங்கள் நீரறியும் பலமாய் எமக்குப் போலுள்ளான்
பகையாய்க் கண்ணுச் சாமிக்கும் சிலநாள் பொறுத்துப் பார்நாங்கள்
செய்யும் சாகசம் எனமொழிந்தார்
என்னதான் திட்டம் எனக்கேட்க
இங்கிருந் தேமுத்துச் சாமியைநாம் மன்னன் கண்டிக் கவனென்றே
முறையாப் பிரகட னம்செய்வோம் சொன்னசொல் வாயிருந் துதிர்ந்துமறு
துளிப்பொழு துள்ளே மந்திரியும் என்னதான் முடிவு ஈதென்றே
ஏற்படும் இடைஞ்சலை எடுத்துரைப்பார்
அறிந்திடில் மக்கள் கொதித்தெழுவார்
அனைத்தும் மறுபுறம் ஆகிவிடும் பொறுத்திடார் அனைவரும் ராஜசிங்கன்
பலம்பெற உயிர்தரப் புறப்படுவார் குறித்தவில் வார்த்தைகள் தனைக்கேட்ட
கவர்ணர் மகிழ்ந்தான் சபாஷ்என்றே அறியா தில்லை நானுமிதை
ஆலோ சித்த முடிவென்றான்
தொடர்ந்தும் பிலிமத் தளாவையிடம் செல்நீர் முதலில் கண்டியாங்கே நடந்ததை அறிய உன்னிடத்தே
நின்னை வினாவால் துளைத்திடுவார் நடப்பது அவரிடம் எவ்வாறு
நான்சொல வேண்டாம் நீரேகொள் நடிப்பதில் வல்லவன் நீயென்று
நானா அறியேன் போவென்றான்
718
71 ()
720
72
υ σατι-ιτσα, στ στου στα ιταδιμιίο
168

என்னிடம் விடுங்கள் அனைத்தையும்நான்
என்விழி நீரால் கரைத்திடுவேன் என்மரு மகனே மன்னவனே
என்மக ளோடே கண்டியையும் கண்ணெனக் காப்பாய் என்றிருந்தேன்
கூறிய அறிவுரை மறுத்தேநீ என்னையும் பகையாய் எண்ணிவிட்டாய் என்பத னாலே கொழும்புசென்றேன்
722
முன்னது போலும் சொல்லுவதாய்
மீண்டும் உரைப்பார் உன்ஆட்சி என்றும் நிலைக்க ராஜ்யத்தின்
ஏற்றம் வேண்டியும் உதவிடவே தன்னல மற்று நோத்துரையைத்
தயவாய் வேண்டி கொண்டேன்நான் என்மரு மகனுக் கெதிராக
எதையும் செயவிலை எனும்வாறே
723 சொல்லி முடித்ததும் கவர்ணர்நோத்
தலையைத் தடவிப் புன்னகைத்தே நல்லது கண்டி போய்ச்சேர்வாய்
நிலைமைக் கேற்ப நடந்திடுநீ நல்லவன் போல நடிகாலை
நக்கும் பாம்பாய் இருவென்றே சொல்லுவான் முத்துச் சாமியேதான்
தானே கண்டியின் மன்னனென்றே
724
அவனே பிரகட னம்செய்தால்
அரசியற் குழப்பம் தோன்றுமென்றார் தவறாம் உங்கள் கணிப்பென்றே
சொல்லுவார் பிலிமத் தளாவையிது கவர்னர் நோத்தின் பலம்கொண்டே
கூறிய சேதி என்பதனால் அவனை அடியெடுத் துள்வைக்க
அனுமதி யோமெனக் கொதிப்பரென்றே
725
69
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 104
அரசியற் குழப்பம் சிலநாட்கள்
அதன்பின் நோத்தின் படையோடு வருவான் முத்துச் சாமியங்கு
வாளும் துவக்கும் பீரங்கிப் பெருகன வாயுதம் போற்பலவும்
பொருதும் வெற்றி நமக்காகும் அரசு கட்டில் வெள்ளையர்க்கு
அதற்கொரு ஏஜன்ட் நீயென்றார்
கவர்னர் நோத்அது கூறியதும்
கண்டியின் துணையாய் வன்னியர்கள் கவனும் கல்லும் போலிருந்தால்
கைப்படும் என்பதில் ஐயமென்றார் அவர்களைப் பிரிக்கும் முயற்சியிலே அடியுண் டவராய் நீரிருந்தால் எவர்தான் அதனைச் செய்வதினி
என்றார் கவர்ணர் இகழ்வதுபோல்
கூறிய திட்டம் நாளையெனக் கூடும் எனநீர் எண்ணாதீர் ஆறேழு மாதமோ வருடமொன்றோ
ஆகலாம் அதன்முன் தமிழ்நாட்டில் சீறும் புலியாய்க் கட்டபொம்மன்
திகழ்கிறான் அவனை அடக்கியபின் தேறும் படைகள் இங்குவரின்
சிற்றெறும் பிவர்கள் எனக்கென்றார்
எதற்கும் தயாராய் இருக்கின்றேன் என்றார் மந்திரி ஏன்மாட்டீர் எதிர்கா லத்தில் எமதுரைஜன்ட்
எனவர விருப்போன் நீரன்றோ உதிர்த்தார் வார்த்தை நோத்நகைப்பாய்
இன்றும் அப்படித் தானென்றே சதியின் முழுவுரு வானவவர்
சந்தோ ஷத்தில் மிதந்தாரே
72()
727
728
729
uørv_/rg-West sfu sk & /r-Suúb
7()

இரண்டொரு நாளில் பிரகடனம்
இங்கிருந் தேநாம் வெளியிடுவோம் பிரகட னத்தை எதிர்ப்பதுபோல்
பாசாங் கியற்றிட வேண்டும்நீர் அரசரின் விசுவாச மந்திரியாய்
அனைவரும் நினைந்திட வேஷமிடு சரியெனத் தலையசைத் திடும்போது
தூதுவன் ஒருவன் உள்நுழைந்தான்
730 தூதுவன் உரைப்பான் தமிழ்நாட்டில் தானா பதியாம் பிள்ளைதனைக் கைதுசெய் தவர்சிரங் களைந்தரென்ற கேள்வியைக் கட்ட பொம்மனுக்கு ஏதுவாய் இருந்தார் வெள்ளையரை
எதிர்ப்பதில் என்ற காரணத்தால் காதினில் தேன்பாய்ந் திருப்பமணங்
களிகூர்ந்திட நோத்துங் குதித்தனனே
731 பரிவும் பிரிவும்
கேட்டவச் சேதியால் மனம்மகிழ்ந் திட்டனன்
கவர்ணர்நோத் கட்டபொம் மன்தம் கோட்டையும் வீழ்ந்ததாய்க் கூடவோர் சேதியும்
காதுறப் பெருமையால் ரிளைத்தான் சாட்டைகொண் டடித்ததாய்த் திணறினான் வன்னியன்
செவிசுட்ட வார்த்தைகள் தம்மைக் கேட்டிட வைத்தனன் கண்டியின் அரசனும்
கவல்மிகுந் ததிர்ந்துமே நின்றான்
732 உண்மையா இதுநடந் திருக்குமா எனப்பல உள்ளத்தில் தோன்றிய வினாக்கள் வன்மையாய்த் தாக்கிட வருந்தினான் கண்டியன்
வந்ததிச் சேதிதான் என்றே தன்செவி யுண்டதைக் கூறினான் வன்னியன்
தமிழ்நாட்டின் தகவல்கள் என்றே தன்னையே தாக்கிய இடியென நெஞ்சினில்
துயருற்று வெறிமிகுந் தலைந்தான்
733
7
asiarara aeĝųöffSøk

Page 105
கோட்டையைச் சென்றடைந் திடற்கிய லாதுமே
கோலார் பட்டிமா ஸ்ரிகையில் வேட்டைக்கு முயன்றனர் வெள்ளையர் சுற்றியே
வீரபாண் டியரவர் வென்றே மாட்டிடா தவர்தலwக் காத்துமே சென்றதால்
மிகச்சினங் கொண்டுமே வெற்றி ஈட்டிட எங்குமே படைகளை அனுப்பினர்
எட்டப்பன் துணையோடென் றறிந்தார்
ஆடிடும் வார்த்தைகள் குருவிச்சி நாச்சியின்
இதயத்தைப் புண்ணுறச் செய்யக் கூடுமோ வழியொன்று பாஞ்சாலங் குறிச்சியின்
காவலர் தமைநாங்கள் காக்கக் கூடுமோ இந்நிலை தன்னிலெம் முயற்சிகள்
கொடுங்கோலர் வெள்ளையர் இடத்தே கூடிய கவனமாய் இருங்களென் றெமக்குமுன்
கூறியோர் ஏமாந்தார் என்றான்
நம்பிக்கை உண்டெனக் கென்றுமே வெள்ளையர்
நினைப்பது நடைபெற மாட்டா தம்படை பெருக்கியே மீண்டுவந் தவர்களைத்
துரத்துவார் கோட்டையை மீட்பார் நம்பிக்கை மிகுந்தவா றுரைத்தனன் வன்னியன்
நாச்சியார் சொல்லுவாள் உங்கள் நம்பிக்கை நன்றதே பாஞ்சாலங் குறிச்சியில்
நடந்ததும் அவ்வாறென் றாயின்
இங்குள்ள நோத்உடன் கூடிய வெறியர்கள்
இச்சேதி கேட்டதும் பாதம் தங்கிடார் நிலத்தினில் கண்டியும் வன்னியும்
தம்பதத் தடியினில் என்றே அங்குமோர் எட்டப்பன் எமக்கொரு காக்கையும்
இருக்கின்றார் அவர்களுக் கீடாய் எங்களின் நண்பருக் கிருப்பதோ மாமனார்
எண்ணித் துணிகவென் மாறே
734
735
736
737
பண்டாரவன்னியன் காவியம்
172

ஏற்படும் இடைஞ்சலை எடுத்துரை செய்திடில்
என்னதான் பரிகாரம் என்றும் சாற்றுதல் வேண்டுமே குருவிச்சி என்னதான் செய்யலாம் சொல்லென்று கேட்கக் காற்றோடு கரைந்தன நாட்கள்நாம் முல்லையைக்
கைவிட்டுக் கண்டிக்கு வந்தே போர்ப்பறை கொட்டலாம் பொல்லாத வெள்ளையர்
புறப்பட வேண்டும்நாம் என்றாள்
738 குருவிச்சி நாச்சியார் கூறிய கருத்தினில்
காரணம் கண்டவன் னியனும் கூறுவான் நானின்று போகிறேன் வன்னிக்கு
கண்டியில் படைப்பலம் கூட்டு மருவாரும் வருவர்முன் முல்லைக்கே எனைக்கொன்றால்
மற்றது நீமட்டும் இங்கே உருவான பகைநாங்கள் இருவரே ஆதலால்
உடன்பலம் பெருக்குவோம் என்றே
739 பண்டார வன்னியன் கூறிய அனைத்தையும் பொறுப்பொடு செவிகளில் வாங்கிக் கண்டியின் மன்னனும் கூறுவான் உன்வார்த்தை
கொண்டுமே நாளையே நானும் கண்டியின் படைப்பலம் கூட்டுவேன் என்றுமே
கூறிட மீண்டும்பண் டாரன் கொண்டிட வேண்டும்நீ குறிப்பாக வேறொன்று
கூறுவேன் எனவொன்று சொல்வான்
740 பிலிமத்த ளாவையும் பியசீலி யுஞ்சேர்ந்து
பின்னிடும் விஷவலை தன்னை விலக்கியே உனைப்பாது காத்திட வேண்டும்நீ
வக்கிரங் கொண்டவக் கிழவன் விலகிடான் உனைவிட்டு வேறெங்கோ போயுளான்
வரும்போது வெறுங்கையோ டன்றி இலக்கொன்றைக் குறிவைத்துச் சாடிடும் திட்டத்தில்
இங்குக்கால் பதிப்பனென் றுரைப்பான்
74
73
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 106
அத்தோடு அரண்மனைத் தோட்டத்துள் அடைந்துள
அபாயத்தை மறந்திடல் வேண்டாம் புத்தியாய் நடவுனைப் பழிவாங்கப் பியசீலி பருவத்தைப் பார்த்திருக் கின்றாள் மெத்தச் சரியென பியசீலி தனைமணம் முடித்திடச் சம்மதித் துனையும் ஒத்திட வைத்ததை எண்ணிநான் கலங்கினேன்
உண்டான விபரீதம் அறிவோம்
எப்படி யாயினும் பிலிமத்த ளாவையின்
எண்ணத்தைத் தடுத்துநான் உன்னை இப்பெரும் ராஜ்ஜியத் தரசனாய் முடிசூட்டி
எல்லோர்க்கும் நல்லதைச் செய்தேன் அப்போது நானுனக் குரைத்தது போல்மதுரை
ஆள்பவர் மகள்காத்தே யுள்ளாள் தப்பாது நீயவள் தனைமணம் செய்வதால்
தோன்றிடும் பலநன்மை என்றே
பாளையக் காரரின் பெண்இள வரசியாம் பெயர்கூட அதுவேதான் அவளை நாளையோர் நாள்கரம் பற்றினால் உனக்கென
நல்லதோர் மனைவியும் கிடைப்பாள் பாளையக் காரரின் பெருந்துணை யோடுசேர்
பெரும்பொருள் கூடவே சேர்ந்தால் வேளைக்கு உதவிடும் வெள்ளையர்க் கெதிரான
வகையினில் படைப்பலம் கூட்ட
வன்னியன் இவ்வாறு விபரங்கள் சொன்னதும்
வியப்பினால் விழிமடல் உயர என்னநீ சொல்கின்றாய் இன்னுமோர் மணமதா
என்றனன் கண்டியின் அரசன் முன்னது சூழ்ச்சியை வென்றிடச் செய்தவோர்
முயற்சிதான் திருமண மல்ல சொன்னவா றினிச்செயப் போவதே திருமணம்
தயாராக நீயிரு என்றான்
742
743
744
74
Ufa*0ʻU-ftg62uasñkaofar arSub
74

அனைத்தையும் முன்கூட்டி அறிவித்து விட்டேனென்
ஆசைக்கு அவருடன் பட்டார் உனையங்கு அழைத்துமே மணவினை என்றதும்
உடனதை நான்மறுத் திட்டேன் மனைவியாய் உனக்கொரு மரகதப் பெட்டகம்
மதுரையில் இருந்திங்கு வருமே உனைவாழ்த்த வரும்நிலை இருக்குமோ எனக்கென
உறுதியாய்ச் சொல்லிடேன் என்ன
746 வருவனோ இலையவோ என்றென்ன சொல்கிறாய்
வராதுதான் விடுவையோ என்றான் வருவதென் றாயிடில் வன்னியின் பக்கமே
வெள்ளையன் வரானென்ற சேதி பரிமாறி உன்னுடன் பேசிம கிழ்ந்திடும் பேறுபெற் றிங்குநான் வருவேன் சரியாக இங்குமப் பேறுபெற் றிட்டநற்
சேதியும் கூடிட மகிழ்வோம்
747 olநஞ்சினை நெகிழ்த்திடும் வன்னியன் பேச்சினால்
நீர்தழும் பிடுங்கண்க ளோடே நெஞ்சோடு நெஞ்சையொன் றாக்கினான் கண்டியன்
நெஞ்சினைப் பிரிக்கவும் மறந்தார் நெஞ்சினில் கொண்டவெம் இலட்சியம் தன்னில்நாம்
நிச்சயம் வெல்லுவோம் என்றே அஞ்சாத நெஞ்சினர் அகங்களும் பேசின
அவர்முகம் காட்டிய த..தே
748 பியசீலி பிறந்தநாள்
கொழும்பிருந்து வந்ததும்போய் மன்னர் தம்மைக் காணாது தமதுபணி தனைத்தொ டர்ந்தார் வழமைக்கு மாறாக அமைச்சில் உள்ளோர்
வதனங்கள் இருப்பதையும் கண்ணுற் றாரே குழிபறித்து வந்ததனால் மந்தி ரிக்குக்
குற்றவுணர் வதிகரிக்க எவரினோடும் வழமைபோல் உரையாடா தொதுங்கித் தம்மின்
வேலைகளில் சிரம்புதைத்தார் போலு மானார்
749
175
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 107
இட்டபணி இட்டதுபோல் நடைபெற் றாலும்
இயற்றுமவர் செய்கையிலே வெறுப்புக் கொண்டார் திட்டமிட்டு ராஜசிங்கன் தன்னை வீழ்த்தித்
தானரசு கட்டிலேற வேண்டு மென்றும் வட்டமிடுங் கழுகுகள்போல் வெள்ளைக் கூட்டம் வந்துகண்டி மண்ணைத்தம் உடமை யாக்க ஒட்டியவர் தமக்குதவும் செய்கை தம்மை
ஒருவருமே ஆதரிக்க மறுத்திட் டாரே
75() கவர்ணர்நோத் தமைக்கண்டு பேசி வந்த
காரியத்தில் வெறுப்படைந்தார் அனைத்துப் பேரும் எவருமதை எடுத்துரைக்கத் தயங்கத் தம்மின்
எதிர்ப்பைமெல்லச் சொலவிஜயத் துங்க என்போன் அவரையொரு நாள்நெருங்கி னான வர்தம்
அந்தரங்கச் செயலாளன் அறையுட் சென்றான் எவருமிலாப் போழ்ததுதான் பொருத்த மென்றே
எண்ணினனே அமைச்சருமங் கிருந்தார் கண்டான்
751 பலநூறு மனுக்களொன்றாய்க் குவிந்தி ருக்கப்
பிரச்சினைக்குள் பிரச்சினைகள் என்னும் பாங்கில் அலாக்காகத் தூக்கியவர் அனைத்தை யும்தன் அருகிருந்த தொட்டியிலே வீசக் கண்டே எலாமொன்றே தீர்ப்பாகக் கொண்ட தாமோ
எனவினவி னான்கண்டார் திகைத்தார் என்ன சொலாதசொல்லைச் சொல்லுகின்றான் விஜயத் துங்க
சிரித்தபடி நையாண்டி யாமோ வென்றே
752 கேசமற்ற தலைசுரட்டை இழந்த தெங்கின்
காய்போலத் துலங்கமுகத் திரண்டு கண்கள் மாசுடைய நெஞ்சத்தின் விலாச மாக
மூடும்இமை தனைவிடுத்து வெளியில் தொங்கும் பேசாதே வாய்மூடி விழிக ளாலே
பேசினாரவ விழிகளினைப் புரிந்து கொண்டே பேசியது தவறென்றால் பொறுக்க வேண்டும்
பேசவின்னும் சிலவுண்டாம் எனத்தொ டர்ந்தான்
753
υ, αρτι (τσαμ σταδυ στα ιταιδυμιb 176

நெஞ்சத்தில் உதித்ததனை மறைப்ப தென்றும் நல்லதல்ல என்பதனால் கூறு கின்றேன் அஞ்சாமல் சிலவற்றைச் சொல்ல வேண்டும்
அதுவுங்கள் தமக்குமிந்த அரசாட் சிக்கும் கொஞ்சமேனும் நன்மைதரும் என்ப தென்றால் கூறாது விடுவதெனில் துரோக மாகும் விஞ்சுகின்ற நிலைவரினோ எங்கள் ராஜ
விசுவாசம் களங்கமுறும் என்றே சொல்வான்
754 ராஜவிசு வாசமெனச் சொல்லும் போதே
திணவெடுத்த தோள்களைச்சற் றுயர்த்தித் தம்மின் ஆஜானு பாகான உடலைக் காட்டி
ஆருக்கும் அஞ்சாதோன் போல நின்றான் மீசையென மேலுதட்டில் வீரம் காட்ட
முனைவளைந்த வாள்போல நோக்கும் பெண்டிர் ஆசைகொள வைப்பதுபோல் இருந்த தேதான்
ஆணழகன் எனச்சாற்றும் சின்னம் போன்றே
755 தோற்றத்தில் மெய்காக்கும் வீரன் போன்றோன் செயலாளன் என்றாலும் விஜயத் துங்க கூற்றையெண்ணி மந்திரியார் தலையைக் கையால்
கடமடிக்குங் கலைஞனைப்போல் தட்டித் தட்டி நேற்றுவரை நன்றாகத் தானி ருந்தாய்
நிகழ்ந்ததென்ன இன்றுனக்கு திடீரென் றேநி போற்றுகிறாய் ராஜவிசு வாசந் தன்னைப்
புதிதாக இருக்கிறதே அ.தேன் என்றார்
756 விசுவாசம் அற்றென்றும் இருந்தாற் றானே
விசுவாசி யாவதுநான் திடீரென் றாற்போல் விசுவாசம் அரசர்க்கு மட்டு மல்ல
வாழுகின்ற மண்ணையும்நான் விசுவா சிப்போன் விசுவாசம் அற்றவராய் மன்ன ருக்கும்
வாழுகின்ற பூமிக்கும் எதிராய் நீங்கள் விசுவாசங் கொண்டுவெள்ளைப் பேர்க ளின்மேல்
வஞ்சகத்தால் துரோகஞ்செய் கிறீர்க ளென்றான்
757
177
ஜிண்ணாஜர் 2றிபுத்தின்

Page 108
மீசையில்லை துடிப்பதற்கோ இருந்தி ருந்தால்
மேலுதட்டின் அசைவிலது தெரிந்தி ருக்கும் நாசவிழி செந்தணலாய்ச் சுழல நோக்கி
நினைவிழந்தோ பேசுகிறாய் என்னிடத்தில் கூசாது வாய்திறக்கக் கொழுப்பே றிற்றோ
கண்டபடி உளறாதே என்றார் கேட்கும் பேசினனே துணிந்தவனும் நெஞ்சில் நாட்டுப்
பற்றுமிகுந் திருந்ததனால் தொடர்ந்திட் டானே
உள்ளத்தில் இருப்பதனை முற்றும் சொல்வேன்
உளமேற்றால் ஏற்கட்டும் ஏற்கா விட்டால் கொள்ளவென்றும் ஆயத்தம் தண்ட னைகள்
கொடுமையென வானாலும் கவலு றேன்நான் எள்ளளவும் அஞ்சிடவே வேண்டாம் எம்முள்
அடங்கியுள்ள அந்தரங்கம் துலங்கு மென்றே உள்ளபடி சொல்லுகின்றேன் எதையும் சொல்வேன்
உங்கள்ராஜ்ய விசுவாசம் நிலைத்தல் வேண்டும்
அந்தரங்கம் என்றதுமே வேக மெல்லாம்
அடங்கியது பிலிமத்த ளாவை சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தவர்போல் இருந்து விட்டுத்
தன்பங்குக் கவனையவர் சாட லானார் உந்தனுக்கு விஜயதுங்க நெஞ்சில் சற்றும்
உரோசவெட்கம் சுரணைசூடும் இலையோ என்றே இந்த மண்ணை ஆளுபவன் கண்ணுச் சாமி
என்கின்ற தமிழனன்றோ என்றார் இன்னும்
சிங்களவர் நாமின்று தமிழன் ஆளச்
சேர்ந்தொன்றிப் பார்த்திருத்தல் வெட்கம் என்னத் தங்களுக்கு புதிதாயிச் சிந்த னைகள்
தோன்றியது என்றென்றே இன்னும் சொல்வான் சிங்களவர் இலாவிடிலும் சிங்க ளத்தோர்
சிங்கமெனும் பிலிமத்த ளாவை தம்மின் தங்கமகள் பியசீலி கணவன் தங்கள்
தமிழரென்ற போதினிலும் மருகர் என்றான்
υ αστι (τσαυΔστ στου στα ιταδιυιb
758
759
760
761
78

விக்கிரம ராஜசிங்கன் தனக்கும் ஏன்நான்
விவாகவினை செய்வித்தேன் என்ப தைநீ தக்கபடி புரிந்திலையேன் தெளிவற் றோனே
தகுந்தவொரு காரணமும் உண்டென் றாரே முக்காலும் அதையறிவேன் முத்துச் சாமி
முடிகொண்டால் வெள்ளையர்க்கே அடிமை யாவான் எக்கால மும்அவர்கள் ஆட்சி செய்ய
ஏதுமற்றுப் போவோம்நாம் என்றே இன்னும்
762 தடுப்பதெனில் அதைமுதலில் கண்ணுச் சாமி
தலையில்முடி ஏற்றியவர் தனையும் உங்கள் குடும்பத்தில் ஒருவரென ஆக்கிக் கொண்டால்
கெதியிலதைத் தங்கள்தலை மாற்றிக் கொள்ள முடியுமெனும் எண்ணந்தான் என்றான் கேட்டு
மிகச்சரியாய்ப் புரிந்துகொண்டாய் இன்னும் ஏன்நீ அடுக்காத வார்த்தையெல்லாம் சொல்லு கின்றாய் அறிந்தறிந்தும் பேசுவதேன் எனவி பூழித்தார்
763 அந்தரங்கச் செயலாளன் என்ப தற்காய்
அனைத்தையுமே நெஞ்சிலிட்டுப் புதைக்க லாமோ அந்தரங்கம் சொந்தமென்றால் ஆகும் ஆனால்
அதன்விளைவு நாட்டுக்குள் வாழு கின்ற சொந்தங்கள் ஆனதமிழ் சிங்க ளர்க்கும்
தோற்றுவித்தால் பிளவுகளை ராச்சி யத்தை வந்தவனின் கையிலகப் படவு மானால்
வாழாது இருக்களம்மால் முடியா தென்றான்
764 என்னிடத்தில் பணியாற்றும் நீயே என்றன்
எதிரியென வாகின்றாய் என்த லைக்குப் பொன்முடிசேர் பாக்கியத்தை வேண்டா மென்றாய் புரிகிறதே உனதெஜமான் விசுவா சம்தான் என்றாரப் போதுரைப்பான் கண்ணி ரண்டும்
இலாதொழிந்தால் ஓவியந்தான் எதற்கா மென்றே சொன்னபடி யானால்முடி நீங்கள் கொள்ளத்
தேசத்தை அன்னியர்கை பெறுமென் றானே
765
79
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 109
அவர்கள்தரும் உதவியன்றி கண்டி மண்ணை
ஆளுவது சுலபமல்ல பொருளும் பொன்னும் அவர்கள்தரும் படைபலமும் பாது காப்பும்
அவசியம்இன் றெமக்கிதைநீ நம்ப வேண்டும் அவர்களொடு பழகியபின் அறிவாய் அன்னார்
அன்புடையார் நம்மீது அதனாற் றானே அவர்கள்தம் உதவிதனை நாடு கின்றேன்
அறியாயோ நீயென்றார் அவனுஞ் சொல்வான்
மாலையிட்டு மஞ்சள்நீர் தெளித்தே ஆட்டை
மிகஅழகாய்ச் சோடனைசெய் தெடுப்ப தெல்லாம் தாலிகட்டிக் கல்யாணம் செய்வ தற்கா
சிறுபொழுதில் தலைசீவத் தானே எல்லாம் போலிவேஷம் என்பதனைப் புரிந்து கொண்டால்
பிழைக்குமிந்த நாடுமுங்கள் புகழும் என்றான் சாலாது இந்தவழி இவன்ம னத்தைத்
திருப்பவெனப் புதுவழிக்கு மாறி னாரே
விஜயா!நான் உன்னிடத்தில் வைத்தி ருக்கும்
விசுவாசம் கடல்போலாம் நீயும் என்மேல் நிஜமான பற்றுடையாய் பாசம் மிக்கோன்
நானதனை மிகஅறிவேன் சிங்க ளர்நாம் விசுவாச உணர்வுகொள்ள வேண்டும் எங்கள்
வழிவழியாம் இனத்தின்மேல் அதனால் சற்றே இசைகின்றேன் நன்றாகத் தெளிவு கொண்டே
இன்னொருக்கால் அழைக்கின்றேன் பேச என்றார்
பேசவேண்டும் எனக்காக அல்ல தங்கள்
புறத்திலுள்ள நன்மைக்கும் நாட்டி னுக்கு நாசமுறா திருப்பதற்கும் அன்றி இல்லை
நம்மைநாம் சிங்களவர் தமிழர் என்றே பேசியென்னை உங்கள்புறம் பிரித்தெ டுக்கப்
பிரயத்த னம்செய்ய வேண்டாம் நீங்கள் பேசிமுடித் திட்டதிரு மணத்தில் தங்கள் பியசீலி சிங்களத்தி மருகன் யாரோ?
766
767
768
769
−.
M4o“l-/fo?Javiraĉajio ar5u
180

மருகரென வரும்போது தமிழர் என்று
மறந்ததுமேன் புதிதாய்ஒர் ஞானம் பெற்றே உருவான புதுக்கருத்தோ வானி ருந்து
உருண்டுதலை சொரிந்ததுவோ விண்மீன் போன்றே புரிகிறது புரிகிறது விஜயா நீழுன்
பியசீலி தனைமணக்க ஆசை கொண்டாய் இருபேரும் மறுத்துவிட்டோம் என்ப தைநீ
இன்னும்மனத் திருத்தியுள்ளாய் மறப்பாய் என்றார்
770 இன்றுஉன்றன் பாதுகாப்பில் இருக்கும் அன்னாள்
என்றைக்கும் உனைக்காணும் வாய்ப்புக் கொண்டாள் என்றாரோர் உட்பொருளைப் பொதித்துக் கேட்டே
இவனுமொரு மனிதனேதன் மானம் வெட்கம் என்றொன்றும் இல்லாத பிராணி யாமோ
எனஎண்ணித் துரவென்றே உமிழ எண்ணிப் பின்தன்னை அடக்கியவர் தன்னை நோக்கப்
பிலிமத்த ளாவைபுது நகைசெய் தாரே
77 பொருள்பொதித்துப் புன்னகையொன் றுதிர்த்திச் சொல்வார்
பிறந்ததிரு நாளின்று பியசீ லிக்கு வரவேண்டும் நீயதற்கு விருந்தும் உண்டு
வாழ்த்திடவும் வேண்டுமென்றான் முடியா தென்றே திரும்பினனோர் கரம்தோளைத் தடவ நோக்கத்
தங்கச்சிலை போலபிய சீலி நின்றே வரமுடியா தேன்என்றே வினாத்தொ டுத்தாள்
விழிவழியே வழிந்தமதுச் சுனைகண் டானே
772 வெற்றிப் புன்னகை
புன்னகையொன் றிதழோரம் நெளியக் கண்கள்
போதையூட்டும் மதுச்சுனையாய் நோக்கத் தோளில் மென்மலர்போற் கரந்தவழ உடல்நெ ஸ்ரித்தே
மன்மதனே பதந்தழுவும் வாறாய் நின்றாள் தன்னுடலோ தான்தாங்குஞ் சுமையென் றெண்ணித் தன்னையேதான் நம்பாத நிலையில் எங்கோ விண்ணுலகில் சஞ்சரிக்கும் மென்மை யுற்றான்
வாளேந்துங் கரஞ்சோர்ந்தான் வலுவி ழந்தான்
773
181
aatavstas 2e5uö5ai

Page 110
முன்னொருகால் தன்னணைப்பில் கிடப்பா ளென்றே முயன்றுபல முறைதோற்றுக் கிடைக்கா தென்று தன்னைத்தான் தேற்றிடினும் காணும் போது தவிர்த்தவவன் தானாக வலுவில் வந்து மென்கரத்தால் தோள்தொட்டு அமுதை அள்ளி
முத்துமுத்துச் சொற்குவையில் புகட்டும் போது தன்னையவன் மறந்துசுவன் பதியில் ஆடும்
சுகங்கண்டான் தோகையவன் தோற்றல் கண்டாள்
774 எண்ணியவா றில்லாதே வண்டு சோர்ந்து
இதழிடையே வீழ்வதுகண் டுளம்ம கிழ்ந்த வண்ணமலர் தேனருந்த வாகாய்த் தன்னை
விட்டலர்ந்தே இடமளித்து தானுஞ் சோர்ந்து வண்டுடனே ஒன்றாகிக் கிடந்த துள்ளம்
வரித்தவினை வெற்றிபெறும் இறுமாப் பெய்தும் உண்டசுகம் விஞ்சியதால் மயங்கி வண்டும்
உளறுநிலை கொண்டதுவே விதிமா றிற்றே
775 பிறந்தநாளைக் கொண்டாட வருவேன் என்றான்
போதைகொண்ட மயக்கத்தில் பரிசாய் மிக்க சிறந்ததொன்றைத் தரவுன்னால் இயலா தென்றாள் தரவென்னால் இயலாத தேனாம் என்றான் சிறந்ததிலும் சிறந்ததனைத் தந்தாய் இன்னும்
சிறந்ததெது சபையினிலே தரவு னக்குத் திறனிருந்தால் தேன்சிந்தும் கன்னத் தேஜர்
சிறுமுத்தம் தந்தால்நீ வீர னென்றாள்
776 அச்சமுற்றான் முதலிலவன் இயலா தென்றான் அசடுமனத் துணிவில்லாப் பேடி யென்றாள் எச்சிலிலை புசிக்கின்ற ஞமலி தம்மின்
இயலாமை மறைக்கமிக முயன்றான் தன்னுள் மிச்சமுள்ள மகிடியெலாம் ஒன்றாய்க் கூட்டி
முயன்றனள்தன் எண்ணங்கனி யாக வென்றே துச்சமென்றான் அனைத்தும்நான் செய்வேன் உன்றன் திருவடியின் வரமெனக்கு வேண்டும் என்றான்
777
பண்டாரவண்ணியன் காறி 182

என்றும்நான் உனக்கேதான் என்றோர் பொய்யை
எய்தனளே அவன்நெஞ்சுள் பதிந்தி ருக்க வென்றுவிட்டேன் எனும்உறுதி தீர்க்க மாக
விடைகொடுத்தாள் தன்னையவன் விலக்கிக் கொண்டான் ஒன்றுமறி யாதேயோர் புறத்தில் வீசி
எறிந்திருந்த துணிமணிகள் மீண்டும் மேனி ஒன்றினவே தொங்கவிடங் கிடைத்த தென்றே
ஒருவெற்றிப் புன்னகையும் ஒளிவீ சிற்றே
778 மகளே உன் சமத்து
பிறந்ததிரு நாளையொட்டிச் சோட னைகள்
புதுப்பொலிவை அரண்மனைக்குத் தந்த தெங்கும் நறுமலர்கள் மணம்பரப்பத் தோர ணங்கள்
நீண்டுயர்ந்து நிமிர்ந்தனவே தென்னங் கீற்றால் திறன்கொண்ட கலைஞர்களின் கைவண் ணங்கள்
தனித்தனியே சிங்களத்தின் கலைத்தி றத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்த தெங்கள் மண்ணின்
பாரம்பரீ யசெல்வம் ஈதாம் என்றே
779 புன்னகைக்கும் மாதர்வழி தொடர்ந்து நிற்பப்
போலதென்னம் பாளையிளந் திட்டு வைத்த பொன்னிறத்துக் குடங்களொளி சிந்த வெள்ளைப்
பாவாடை நடந்துவர விரித்தி ருக்க பன்னுாறு அகல்கள்சுவர் எங்கும் மங்கும்
பொழுதைஒளி உமிழ்வதனால் பகல்போ லாக்கச் சின்னஇடைக் குமரிகள்வெண் துகில னிந்தே
தொடுத்தசரம் போல்ஒழுங்காய் நிரையில் நின்றார்
780 பூத்துவப் பலவண்ண மலர்கள் கொண்ட
பாத்திரங்கள் கரந்தாங்கப் பொன்ன னிந்து காத்திருந்தார் அழகுவண்ணச் சிலைக ளாகக்
காளையர்கள் சுற்றுவண்டாய் அலைய லுற்றார் கோத்தெடுத்த மலர்ச்சரங்கள் தாங்கி யோருங்
கூடவாங்கே நின்றிருந்தார் மாதர் கூட்டம் பூத்தமலர்க் காடெனவே அரண்ம னையைப்
பொலிவுறவுஞ் செய்ததுவே பிறந்த நாட்கே
781
183
ஜின்னாவூர் டிரிபுத்தீன்

Page 111
பிறந்ததினம் பியசீலி மகாரா னிக்கோ
பெருந்திரளாய்க் கூடியுள்ள பெண்க ளுக்கோ மறந்தனரோ அவரவர்தாம் பிறந்த நாளை
மகிழ்விலவர் சமமாகப் பொலிந்தே நின்றார் அறிந்தவர்யார் ஆங்கன்று நடக்கப் போகும்
அனர்த்தமொன்றை அறிந்திருந்தால் மகிழ்வே கொள்ளார் அறிந்திருந்தார் பிலிமத்த ளாவை யோடே அன்றுபிறந் திருந்தபிய சீலி தாமே
அரண்மனையின் வெளிப்புறமும் உள்ளும் வீரர்
அணிவகுத்துக் காத்திருந்தார் வேல்க ளோடே கரங்கொண்ட வாட்கள்நிமிர்ந் திருக்கக் கண்கள்
கூரியநேர் பார்வைகொண்டும் பல்லோர் நின்றார் இரும்பனைய நெஞ்சங்கள் நிமிர்ந்தி ருக்க
இம்மியுமோர் அசைவற்றுச் சிலை களாக இருந்தனரே கண்டிமன்னன் போர்வீ ரர்கள்
எவர்க்குமஞ்சோம் நாங்களெனும் பாங்கி னோராய்
783 பரந்தபெரும் மண்டபமொன் றலங்க ரித்தே
பார்ப்பவர்கண் கூசிடுமா றிருந்த தாங்கே பெருந்திரளாய்க் கூடிநின்றார் நிருவா கத்தில்
பங்குகொண்ட பொறுப்புடையோர் துணைக ளோடே அருந்தமதுக் கிண்ணங்கள் வகைவ கையாய்
அறுசுவையின் தீன்வகைகள் ஊனும் மீனும் பொருந்தினவே போதைக்கு ஏற்ற வாறு
பொரித்தெடுத்துச் சேர்த்திருந்தார் சமைய லாளர்
784 வானிலொளி காட்டும்வெண் மதியைச் சுற்றி
விண்மீன்கள் போலஇளம் பெண்கள் சூழத் தானிருந்த அறைவிடுத்து மணப்பெண் போன்றே
தளிர்ப்பாதம் நோகுமென மலர்கள் தூவித் தேனினிய குரலெடுத்து மாதர் பாடித்
துதிசெய்யப் பியசீலி நடந்து வந்தாள் வானிருந்து வந்ததேவப் பெண்ணோ வென்றே
வாய்பிளந்து நின்றனரே ஆங்குற் றோரே
785
u ovu tvojakafuu ok abrošuuub 84

’கொடிமாலை” “பெத்திமாலை”, “அகஸ்த்தி’ மாலை கொண்டஏழு வகைமாலை கழுத்தில் தொங்க கொடியிடையைச் சுற்றியவெண் “ஒசரி” மீதே
கொண்ட “மிணி மவுள’ நவ ரத்தினத்தால் வடிவுகொண்டு துலங்கப்பிறை நெற்றி மீது
வெண்மணிசேர் “நலல்பட்டம்” மின்னும் கொண்டை மடித்தழகாய் "இரஹந்த” குத்திக் கட்டி
மெல்லநடந் தாள் “பாத ஜாலா’ வோடே
786 பொன்னழகுச் சிலையோவிவ ளென்ன பெண்ணோ
பூக்களொன்றிச் சேர்த்தெடுத்த செண்ட தாமோ கண்ணென்ன காமன்கைச் சரமோ நெஞ்சைக்
கொள்ளையிடும் இடைநெளிவு மின்ன லாமோ எண்ணத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக
எண்ணினரே எண்ணமெல்லாம் அவளே யானாள் தன்னையெண்ணிப் பெருமைகொண்டாள் மலர்கள் தூவி
தரைவிரித்த படாத்தினிலே நடந்திட் டாளே
787 மனைவிவரும் வரைகாத்த ராஜ சிங்கன்
முதலமைச்சர் பிலிமத்த ளாவை முன்னால் தனைக்கண்டு வருவதுகண் டுரைப்பான் எங்குச்
சென்றீர்கள் பார்த்துவொரு யுகம்போ லென்றே எனதுமகள் தனைநீங்கள் அரண்ம னைக்குள்
அடக்கிவைத்த காரணத்தால் மனமு டைந்து போனதனால் முகங்காணுஞ் சங்க டத்தில்
போயிருந்தேன் நமதுபல ஊர்கட் கென்றார்
788 "அப்படியா கொழும்புமெங்கள் ராச்சி யத்துள்
ஆனதென்றோ அறியேன்நான்’ என்றான் மன்னன் தப்பிழைத்த சேவகன்போல் திணறிப் பின்னால்
தலைதடவித் தனைமாற்றிப் பேச லானார் துப்பொன்று கிடைத்ததுநோத் பிரபு நம்மைத்
தாக்கவருந் திட்டமொன்று வகுப்ப தென்ன எப்போதோ அறிந்தசேதி புதிய தாக
ஏதேனும் இருந்தால்நீர் சொல்லென் றானே
789
185
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 112
11:1ாக வந்தசேதி கேட்டால் நீங்கள்
பிரமித்துப் போவீர்கள் நான்தி கைத்தே அதிவிரைவாய் அங்குசென்றேன் என்றார் மன்னன் அதுவென்ன புதுச்சேதி யுரைப்பீ ரென்றான் எதிரிகளாம் காக்கைவன்னி பண்டார வன்னி
இருவரையும் ஒன்றாக்கி உதவி தந்தே பொதுநண்ப னாகிடநோத் திட்ட மிட்ட
புதுச்சேதி தானந்தச் சேதி யென்றார்
பகவானே அவதாரம் பெற்று மீண்டும்
பாருலகு தோன்றிடினும் பண்டார வன்னி பகைகொண்ட வெள்ளையர்க்குப் பணிய மாட்டான்
பணிவதிலும் பிணமாகி மண்ண ணைக்க வகைந்தாலும் அஞ்சிடானவ் வீரன் உங்கள்
வார்த்தைகள்என் செவிகளிலே நாரா சம்போல் புகுவதுபோ லிருப்பதனால் பேச வேண்டாம்
பறங்கியரைப் புறங்காட்டத் துடிப்போன் என்றான்
வெளுத்ததெலாம் பாலென்று நினைப்ப துங்கள் வேதாந்தம் வருமுன்னே காப்ப தென்றன் முழுப்பொறுப்பு அதனாற்றான் கொழும்பு சென்றேன்
மந்திரிக்கு அழகுவரும் பொருளைச் சொல்லல் அழுத்தமாக எடுத்துரைத்தேன் அணுவத் தேனும் அவர்களுக்குள் நட்புவரா வாறே என்றன் பழுத்தவுயர் தந்திரத்தால் தடுத்தேன் நோத்தும்
பணிந்துவிட்டார் வெற்றியொடு வந்தே னென்றார்
என்னதுதான் நீங்கள்செய்த உபாயம் அன்னார்
இடையினிலே நட்புவரா வாறே என்று மன்னன்தன் சந்தேகம் கிளறச் சொல்வார்
மனதுக்கு இனிக்கிறது கேள்வி என்றே என்னதுதான் நட்புறவு பாச மெல்லாம்
இருந்திடினும் அதனாலே தோன்று கின்ற இன்னல்களை வலிந்தழைத்துக் கொள்ளல் என்றும்
ஏற்புடைத்த தாகாதே எனவும் சொன்னார்
70()
79 |
792
793
uarlsruatayat arius
186

அறிவுரைகள் வேண்டாமே நடந்த தென்ன
அதுபோதும் சுருங்கிடவே சொல்க என்ன குறிப்பறிந்தே தன்னைத்தான் தேற்றிக் கொண்டே
குறிதவறிப் போகாதே வார்த்தை கோத்துப் பொறுமையுடன் கேளுங்கள் கொழும்பு சென்று பேசியது ஆங்கிலேயர் அதிகா ரத்தை உறவைநாம் ஏற்கத்தயார் எம்மோ டொன்றி
ஒடுக்குங்கள் வன்னியனை என்ப தாக.
794 வார்த்தையவர் வாயுள்ளே அடங்க மற்றோர்
வார்த்தைவெளி வாராதே வெறிகொண் டோனாய் கோத்தனனே வார்த்தைகளைக் கண்டி மன்னன்
கண்கள்செஞ் சாந்தடைத்த குவளை யாக நோத்திடம்போய் ஆங்கிலேயர் அதிகா ரத்தை நாம்பணிந்து ஏற்பதெனச் சொல்வ தாயின் சேர்த்ததுயார் நல்லுறவில் அதனை என்றான்
தடுமாறுஞ் சொற்களினால் அவருஞ் சொல்வார்
795 நெருப்பென்றால் வாய்பொசுங்கிப் போகா இன்று
நேர்ந்துள்ள நிலைமாற்றப் பொய்யே சொன்னேன் கருத்தினிலே நோத்திற்கும் வன்னி யர்க்கும்
கூடுகின்ற தோழமையைத் தவிர்க்க வென்றே மரியாதை உங்கள்மீ துண்டு என்றே
மந்திரியை வாழ்த்திமன்னன் மேலுஞ் சொல்வான் சரியாகா உங்கள்செய்கை என்றன் நெஞ்சைத்
துன்பத்தில் ஆழ்த்திடுதே தொடரேல் என்றே
796 வெள்ளையரோ டுறவெமக்கு என்னும் வார்த்தை
விளையாட்டுக் கெனினும்நீர் கூறவேண்டாம் உள்ளபடி அவமானம் வெட்கக் கேடு
ஒர்ந்தாலோ மாசுஇந்த மண்ணுக் கென்றான் எள்ளளவும் தவறில்லை கொழும்பில் செய்த எனதுதந்தி ரம்இன்று வெறுத்திட் டாலும் கொள்ளும்நாள் வரும்பின்னே நினைந்து என்னைக்
கெளரவிக்கும் மனம்வருமென் றுரைக்க லானார்
797
187
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 113
இருப்பதுவோர் உயிரேதான் இன்றோ என்றோ
இழப்பதுவும் உறுதியேநான் மானத் தோடே மரிப்பதற்கே விரும்புகின்றேன் வெள்ளை யர்க்கு
மாட்டேன்நான் அடிமையென வாக வாழ்ந்து இருந்திந்தப் பதவியினைத் தொடர்வ தாயின்
இன்றைக்கே எதிர்த்தவரைக் களத்தில் சாகும் கருத்துடையேன் வீரர்தம் மாண்பு காப்பேன்
கருத்திலிதை இருத்துவது பொருத்தம் என்றான்
798 இருபுறமும் இளமாதர் மலர்கள் தூவ
இடையொடித்துப் பியசீலி நடந்து வந்தாள் இருவர்தம் பேச்சினிலும் கடுமை தோன்ற
இடம்பொருத்தம் இன்மைகண்டு அமைதி யானார் மருவிவந்தாள் பியசீலி ராஜ சிங்கன்
மனத்திருந்த வெறுப்பையெலாம் துடைத்தாற் போன்றே உருவியவாள் ஒளிபட்டுத் துலங்கல் போன்றே
உதடகற்றிப் புன்னகையொன் றுதிர்த்திட் டாளே
79) புன்னகையாம் மின்னலிலே தனைம றந்தான்
புதுப்பெண்போல் அவளிருந்த கோலங் கண்டே மென்கரத்தால் தன்கரத்தைப் பற்ற வாழ்த்தி
மகிழ்வதுபோல் வதனத்தில் நகைப தித்தான் கண்ணிலிரு கரமொற்றி முத்தம் ஈந்து
கணப்பொழுதுள் அவனைத்தன் பக்கம் ஈர்க்கப் பின்னினளே மாயவலை ராஜ சிங்கன்
பிடியுண்டான் புரிந்துகொண்டாள் பாவை வென்றாள்
80() இசையோடு நடனமென வேறு வேறாய்
இணைந்தன்றே ஆங்குபலர் வயதிற் கேற்ப பசியடங்கப் புசிப்போரும் மதுவுண் போரும்
பரிசில்களைத் தந்துவாழ்த்தி மகிழு வோரும் இசைவாகத் தத்தமது விருப்புக் கேற்ப
இயங்குகையில் பியசீலி விழிகள் நான்கு திசைகளையும் சுழற்றினயார் வரவுக் காகச்
சிறுபொழுதுள் ஓரிடத்தில் தரிக்க லாச்சே
8O
uæru-/r/r-2atafuøk &/r-Suúb 188

விழிதரித்த இடத்தினிலே விஜய துங்க
வைத்தவிழி வாங்காதே அவளை நோக்கி அழகியதோர் பூச்செண்டைக் கைக ளேந்த
அசையாது நின்றிருந்தான் பார்வை மோத இளமயிலாள் இமையொடித்தாள் அவனும் வந்தான் இருகரமுஞ் சேர்த்துமலர்ச் செண்டைத் தந்தான் உளங்கொண்ட பயத்தாலே வாக்குப் போன்றே
இயங்காது நிற்கவவள் கரந்தொட் டாளே
802 கையோடு கைபுணரப் போதை ஏறக்
கடந்தபல நினைவுகளும் மனத்தில் ஊரச் செய்வதென்ன வென்றறியான் சொன்ன வாறே செய்தனனே அவள்பதறிக் கதற லானாள் செய்ததென்ன இவனென்றே அங்குற் றோர்கள்
திகைத்துணர்வு செத்தவராய்க் கல்லாய்ப் போனார் கொய்திடவோர் சிரந்தனித்து வீழ்ந்த போதே
சுயவுணர்வு பெற்றார்தம் நிலையு ணர்ந்தார்
803 குருதிதோய்ந்த வாளுடனே ராஜ சிங்கன்
குருதிபீறுங் கண்களுடன் நிற்கக் கண்டோர் குருதியுடல் முற்றிலுமே உறைந்தார் போன்று
குருதிகண்ட அச்சத்தால் இமையா துற்றார் கருதியவா றத்தனையும் நடந்த தாலே
களிப்புற்றார் பிலிமத்த ளாவை என்ன கருதுவரோ கண்டால்பிறர் என்றும் பாரார்
கண்சுண்டி மகளுக்கு வாழ்த்து ரைத்தார்
804 நிதானமான கையெழுத்து
பிறந்த நாளினில் பொற்கரந் தன்னிலே குருதி உறைந்த தேயென வருந்தினள் கரங்களை மார்பில் உறைந்தி டக்கவர்ந் தெடுத்துமே பதித்தனள் அவனும் மறந்த னன்மனங் கொண்டவெம் பகையைக் கணத்தே
805 முளைத்த பகைதனை முளையிலே கிள்ளியே எறிய விளைத்த தந்திரம் பலித்ததால் மகிழ்ந்தார் தாதை அழித்த பவத்தினை அன்னவர் ஏற்றிடா மகளின் கொழித்த அழகினால் கொற்றவன் சிரசினில் விதைத்தார்
806
89
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 114
தன்னையும் தன்மகள் தனையுமோர் தகவிலா வாறே அன்னியர் முன்னிலை அவமதித் தானெனக் கோவை என்னென் வகைவரு போதிலும் இழிவுறச் செயவே பின்னிய வலையினில் பெற்றமுன் வெற்றியாய் மகிழ்ந்தார்
8()) நெஞ்சினுள் பாம்பென வெம்பகை நெளிந்திடு போழ்தும் கொஞ்சமும் முகத்தினில் தேக்கிடா நடிப்பெனுந் திறத்தால் வஞ்சகர் மன்னரை வருந்துவார் போலவே அணுகி அஞ்சியே தன்மன உணர்வெனும் பொய்யினை அவிழ்த்தார்
80አ மன்னவ! தங்களின் பொற்கரத் தாலவன் உடலம் சென்னிவே றென்றுமே பிரித்ததைக் கண்டுநான் மகிழ்ந்தேன் என்னதான் கோபமுள் இருந்திடு போழ்திலும் கற்பை என்மகள் இழந்திட ஏற்கா நிலைதனை அறிந்தேன்
809 செத்தவன் தன்னுடல் தனையகற் றிடும்பணி தனைநான் ஒத்தியற் றிடுகிறேன் தாங்களோ மனநிலை மாறி இத்தனை நாள்தனைத் தனித்துமே வாழ்ந்தவென் மகளின் சித்தம் மகிழ்ந்திடச் செய்குவீர் நன்னாளில் என்றார்
81 () தந்தையின் வார்த்தையைத் தட்டிடாப் புதல்வியும் தம்மின் சொந்தமென் றுறுத்தவோ தோள்தனில் தாங்கினாள் கரத்தைப் புந்திபே தலித்தவன் போலுமே சகலதும் மறந்து பந்தியை நாடினான் பெருவிருந் தவள்தரப் புசித்தான்
81 கொலைசெய் மனநிலை கணத்தினுள் மறந்துமே அன்னாள் விலையிலா அழகினில் மோகித்த தால்தனை மறந்து பலகால் உண்டதென் றாகினும் புதுப்புது வகையாய் நலம்பெற நல்கிட நயத்தனன் நாயகன் நஞ்சே
82 தாகமே தோன்றிடா வாறுதன் இரைப்பை நிறைந்த தாகவே எண்ணிடும் நாலுகால் பிராணிபோல் மதுவின் தாகமே மறந்தனன் மன்னனும் தன்னுடல் மோகத் தாகமே எஞ்சிடு வானெனும் வாறவள் செய்தாள்
813
பண்டாரவன்னியன் தாவியம் 190

புகட்டினாள் ஆயினும் போதுமென் றளவள் புசித்தாள் புகட்டினார் தந்தையும் பவவினை யொன்றினை மகட்கு புகட்டிய வாறுமே புரிந்தனள் சூழ்ச்சியை அவட்குப் புகட்டிட வேண்டுமோ பிறப்பதே ஆகினாள் பெண்ணே
8l4 போதையில் மிதந்திடும் போதவள் கூறுவாள் நிதானம் போதா மன்னவர் தமக்கென மறுத்தனன் நிதானம் போதிய வாறுள தாமென நிரூபணம் செய்யப் போதுமே கையெழுத் தொன்றெனப் புகன்றிடப் பதித்தான்
85 அறியா வாறொரு பேழையுள் அடங்கிய மடலை அறிவழிந் திருந்தபோழ் தவனிடம் தந்தனள் முற்றும் அறிந்தவன் போலுமே கையெழுத் திட்டனன் அவனோ அறிந்திலன் அதுவெறும் எழுத்திலா வொன்றென அழிவே
816 விரும்பிய வாறுதன் வேலையும் முடிந்திட அவளும் விரும்பிய வாறுதன் வேலையும் முடித்தனள் அவனோ விரும்பிய வாறென மதுவொடு மாதுவும் கொண்டே விரும்பினான் வேறொரு பெண்ணையும் அவள்இராத் துயிலே
817 ஒப்பந்தப் பத்திரம் உலகத்தின் இருபுறமும் ஒளிவ ழங்கி
ஓய்வில்லாப் பணிசெய்யும் வெய்யோன் அன்றும் மலைநகரின் புறமனைத்தும் கதிர்கள் வீசி
மாளிகையின் மீதும்தன் கருணை பெய்தான் வலியவந்து மலைக்குளிரின் துன்பம் போக்க வீசியவப் பொற்கிரணம் இளமைக் காலம் வலியவந்து தனிமைத்துயர் போக்கும் மாற்று
வாலிபத்தின் துணைபோன்றாம் சுகமே வேறாம்
818 அனுபவித்தோர் தாமறிவர் கதக தப்பாய்
அள்ளிவீசும் காலைவெயில் உடலில் பட்டால் உணருமொரு தேகசுகம் உணர்ந்தான் போன்றே
உறங்கினனே கண்டிமன்னன் ஒருத்த னாக நிணவாடை வீசிடினும் மதும யக்கம்
நித்திரைக்குப் பங்கமற்றுத் துணையும் செய்யப் பினமொன்றின் துணையோடு பிறிதொன் றற்றும்
படுத்திருந்தான் கதவொடிக்கும் சப்தம் கேட்டான்
819
191
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 115
தாழிட்ட கதவுதிற படாமல் நிற்கத்
தட்டியவர் தாழொடிப்பார் போன்று தள்ள நீள்துயிலில் தனைமறந்தோன் எழுந்து வந்தான்
நீக்கினனே பிலிமத்த ளாவை வந்தார் பாழ்வனத்துள் தனித்துவிட்ட கன்றைத் தேடும்
பசுபோன்றே பியசீலி மகளே என்று ஆளில்லாப் பாலையிலே அங்கு மிங்கும்
அலைந்தலைந்து தேடுவபோல் தேடி னாரே
8) () பியசீலி! பியசீலி! மகளே எங்கே
போனாய்நீ வெளியில்வா என்றார் முற்றும் பயங்கொண்ட பார்வையிலே முகமி ருக்கப்
படபடத்தார் மார்பினிலே அடித்துக் கொண்டார் அயலிருந்த குளிப்பறையில் இருந்து தீபம்
அணைந்ததன்பின் வரும்புகைபோல் புகைதல் கண்டே அய்யய்யோ என்னபுகை அங்கே என்றன்
அன்புமகள் தனக்கென்ன நடந்த தென்றே
82 ஓடினாராங் கிதுவரையும் நடப்ப தொன்றும் ஊகித்தும் அறியவிய லாது நின்ற நாடாளும் மன்னன்தன் உணர்வு பெற்றே
நில்லுங்கள் நடந்ததென்ன இரவு முற்றும் கூடியிருந் தாளென்னைப் பேயா தூக்கிக்
கொண்டுசென்று போயிருக்கும் குழந்தை யாஏன் காடதிரக் கத்துகின்றீர் பொறுத்துப் பாரும்
கத்துதலை நிறுத்துமென்றான் கோபத் தோடே
எரிந்தபின வாடைஐயோ! ஐயோ! என்றார்
எங்கிருந்து வருகிறது அந்தோ! ஆங்கே இருந்தேதான் வருகிறது என்ற வாறே
இணைந்திருக்கும் குளியலறைப் பக்கம் நோக்க இரும்பாக இருந்தமனம் இளக மன்னன்
எட்டியுள்ளே பார்த்தவுடன் மின்னல் பட்ட துரும்பாகப் போயினனே அதிர்ச்சி யாலே
தனைமறந்து பியசீலி எனச்சப் தித்தான்
823
uætv_/ry-26t ofust ö(r«Suítið 192

என்னஅங்கே! என்னனன்றன் பெண்ணுக் கென்ன
என்றபடி ஏங்கிச்சோர்ந் திடுவார் போன்றே முன்னரொரு அடியெடுத்து வைத்து மெல்ல
முயன்றிட்டார் மற்றுமொரு அடியைத் தூக்க மன்னனிட்ட அலறலிலே நடந்த தெல்லாம்
மனத்திலிட்டு முடிவுகொண்ட வாகாய்த் தந்தை தன்னிடத்தில் தரையினிலே வீழ்ந்தார் கையால்
தலையினிலும் மார்பினிலும் அறைய லானார்
824 அடையாளங் காணவிய லாத வாறே
அவயவங்கள் எரியுண்ட நிலையில் செத்த உடலொன்று இருப்பதனைக் கண்டே மன்னன்
ஊகித்தான் அ.தவன்றன் மனைவி என்றே நடைதளர்ந்து பின்னோக்கி வந்தான் நிற்கும் நிலையற்றுச் சோர்ந்தேதன் கட்டில் மீது இடையொடிந்த ஏறெனவே சாய்ந்தான் தாதை இடியிடியென் றவன்மேல்வசை பாடி னாரே
825 கொன்றுவிட்டாய் கொன்றுவிட்டாய் பாவி என்றன்
குலக்கொழுந்தைக் கொன்றுவிட்டாய் என்ற வாறு சென்றுமன்னன் தோள்களினைப் பற்றிக் கூவத்
தேராதே ஒன்றினையும் வியப்பில் ஆழ்ந்து கொன்றதுநான் இல்லைஇரா முழுவ தும்நான்
குடிபோதை தனிலிருந்தேன் நடந்த தென்ன என்றெனக்குத் தெரியாது என்றே மன்னன்
இருப்பதுபோல் கூறினனே தந்தை சொல்வர்
826 திட்டமிட்டுச் சதிசெய்தாய் என்றன் பெண்ணைத்
தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டாய் வஞ்சம் தீர்த்தாய் திட்டமாய்நான் இதைக்கண்டி மக்க ளுக்குச்
சொல்லாமல் விடமாட்டேன் என்றார் கேட்டே இட்டப்படி எதையெதையோ நினைந்து நீங்கள்
என்மீது பழிபோட வேண்டாம் மானம் கெட்டுவிடும் என்மக்கள் இகழ்வார் நீங்கள்
கேட்பதனைத் தருகின்றேன் கேட்பீ ரென்றான்
827
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 116
தற்செயலாய் நடந்தவொரு விபத்தாம் இ.து
தெரிந்தாலிங் கிருப்பவர்கள் வேண்டு மென்றே கொற்றவர்க்கும் மனைவிக்கும் முன்னி ருந்த
கோபத்தால் நடந்தகொலை எனச்சொல் வார்கள் பற்றுமந்த வதந்தித்தீ நாடு முற்றும்
பாவியென முடிவுசெய்வர் மக்க ளும்தான் முற்றுமிந்த அவப்பெயரை அமைச்சர் என்றோ
மாமனென்ற முறையினிலோ தவிர்ப்பீ ரென்றான்
மகளைநான் பறிகொடுத்து வருந்து கின்றேன்
மருமகனே கொலைகாரன் நாட்டின் மன்னன் பகைகொள்ளா தவரைநான் காக்க வேண்டும்
பாரிலெங்கும் நடவாத புதுமை என்றார் மகளைநீங்கள் பறிகொடுத்த துண்மை நானும்
மனைவியையின் றிழந்துவிட்டுத் தவிக்கின் றேன்நாம் வகையிலான முடிவுக்கு வருவோம் இங்கு
வேறெவரும் இல்லையென மன்னன் கூறி
(וי.א வேண்டுவது அத்தனையும் தருவேன் நீங்கள்
வீணாகப் பொய்யுரைக்க வேண்டாம் தீயால் மாண்டுவிட்டாள் பியசீலி என்னும் உண்மை
மக்களுக்குத் தெரிந்தாலே போதும் என்மேல் தோன்றாது பழிநீங்கள் காத்தல் வேண்டும்
தவமெனக்கு நாட்டுமக்கள் என்றன் மீது வேண்டாத கருத்தெதுவுங் கொள்ள லாகா
விரும்பியென்னை நேசிப்போர் என்றுஞ் சொல்வான்
83) அறியாத பழிதன்மேல் கூடும் போது
அகற்றவழி பணிதலொன்றே என்றும் தோன்ற முறைதவறி மந்திரியை மன்னன் வேண்டும்
மாற்றமொன்று வந்ததனால் நிலைமை மாறி மறைக்கின்றேன் நீர்செய்த குற்றம் நாட்டு
மக்களுக்காய் நாட்டுமக்கள் அறிந்தா லும்மைக் குறைகூறிக் குழப்பங்கள் செய்வார் மாற்றார் கொள்வரதில் லாபமெனச் சம்ம தித்தார்
83
uariustacuataouait obstaîuub 194

நடந்ததொரு விபத்தென்று நானே சொல்லி
நாடகமொன் றாடுவதென் விதியென் றாயின் உடன்பட்டேன் நீயதற்குப் பிரதி யாக
உபகாரம் ஒன்றெனக்குச் செய்ய வேண்டும் உடன்படுதல் வேண்டும்நீ கண்டி நாட்டின்
ஒப்புக்காய் மன்னனென நிருவா கத்தை நடத்துவது நானென்னும் நியதிக் கென்றான்
நிர்க்கதியாய் ஆனமன்னன் ஆமென் றானே
832 என்சொந்த நலனுக்காய் அல்ல நாட்டின்
இறைமைக்காய் இந்நாட்டோர் நல்வாழ் வுக்காய் மன்னனென மட்டும்நீ இருந்தாற் போதும்
மாளிகையின் சுகவாசம் மகிழ்ச்சி யெல்லாம் என்னாளும் உன்றனுக்கே சொந்தம் என்றே
என்னவுன்றன் பதிலென்றார் ராஜ சிங்கன் நன்றென்றான் நன்றென்றால் போதா அ.தை
நீயெழுத்தில் தரவேண்டும் எனப்ப னித்தார்
833 மந்திரியாய் மட்டுமன்றி மன்னர் தம்மின்
முழுஆட்சிப் பொறுப்பினையும் நிருவ கிக்கும் சொந்தமுள்ள பேராயும் ஆங்கி லேயர்
தம்மோடு தோன்றுகின்ற பிரச்சி னைக்கு எந்தவிதத் தீர்வுகளைக் காண்ப தென்ப
துறுதிசெய்யும் உரிமையொடு வன்னி மன்னன் பந்தத்தைத் தொடருவதா இலையா என்று
பூரணமாய் முடிவெடுக்கும் பொறுப்பும் என்மேல்
834
தானுண்டு எனவாக எழுத்து மூலம்
தரவேண்டும் எனவுரைத்தார் தவிர்க்க மாட்டான் ஏனதனைப் பிரகடனம் செய்யும் மெண்ணம்
இருக்கிறதா உங்களுக்கு என்றான் கேட்டே ஏனென்னை முட்டாளாய் நினைந்திட் டாயோ
ஏற்கனவே சொல்லியுள்ளேன் திரைக்குப் பின்னால் தானிருந்து திட்டங்கள் தீட்டிப் பின்னே
செய்பவன்நான் என்பதனைப் பதில்சொல் என்றார்
835
195
ஜின்னாவூர் ஷரீபுத்தின்

Page 117
சொன்னபடி அனைத்துக்குந் தலையை ஆட்டிச்
சரியென்றான் கண்டி மன்னன் பொம்மை ஆனான் மன்னவனின் மனையாளின் சவஅடக்கம்
மக்கள்சோகக் கடலோடு சங்க மிக்கும் வன்னிநாட்டை நோக்கியதே வேளை காற்றாய்
விரைந்தனவீர் பரிகளதல் இருவர் சென்றார் பெண்ணொருத்தி அதில்ஆணின் வேடமிட்ட
பியசீலி ஜெயசீலன் ஆகிச் சென்றாள்
83 ( ) கடவுள் யார் பக்கம்
இளந்தாடி யோடு மீசை இசைவாகத் தலையிற் பாகை முழுமையாய் ஆணின் வேடம் முற்றுமே பெண்மை மாறி இளம்பெண்ணி னோடு சென்றாள் யாரவள் தீயி னாலே அழிந்தவ ளாகச் சொன்ன அரசனின் மனைவி தானே
831 “போகின்ற பாதை நேரா பியசீலி” என்றாள் கூடப் போகின்ற பெண்ணாள் மற்றாள் பொய்க்கோபம் முகத்திற் காட்டி ஏகமாய் ‘அடியேய்!”என்று ‘என்னநீ நானோ உன்றன் போகத்துக் குரியான் ஊமைப் புருஷனாம்” என்றிட் டாளே
838 சதங்கைகள் குலுங்கு மாப்போற் சிரித்தனர் இருவ ரொன்றிச் சிதைந்தது அமைதி யந்தத் தெருவெலாம் ஒலித்த தாலே இதந்தரும் காட்டுப் பாதை இரவியே தோன்றி னாப்போல் மிதந்தனர் காற்றில் அந்த மங்கையர் புரவி மீதே
839 இன்னும்நாம் போகுந் தூரம் எத்தனை கல்க ளென்றே தன்னொடும் ஒன்றிவந்த தோழியின் வினாவினுக்குச் சொன்னனள் “ஜெயசீலன்"நாம் சென்றிடு தூர மல்ல முன்னிலை வைப்ப தெங்கே முக்கியம் ஏதாம் ரெண்டே
84() வந்திடு தொடர்ந்தே என்னோ டென்றனள் வந்தே னென்றாள் வந்திடில் போதா ஒன்றி வாழ்திட வேண்டும் என்றாள் எந்தவோர் போழ்தும் நாங்கள் இனங்காணப் படலாம் என்றே சிந்தையின் வினாவுக் கென்ன சொல்லுவாய் என்றும் கேட்டாள்
84
υ, αατι τηταυΔσταται σταδιταδιμιίο 196

நமதுஎன் றேனோ சொல்வாய் நானென்ன வேஷங் கொண்டா உம்மைப்போ லிருக்கின் றேனா உன்வேஷம் கலைந்தால் என்றாள் நம்புவாய் உன்றன் தோழி நினைக்கும்வா றேமா றாதே நம்பிடச் செய்தாள் மன்னன் நான்செத்தேன் என்னும் பொய்யை
842 உன்பங்கு ஒருகாற் பங்கே உந்தையின் பங்கு முக்கால் பண்ணிய பாவ மென்ன “பாமினி" செத்தா ளென்றாள் என்னதான் செய்வோம் சூழ்ச்சி இயற்றிய போது வந்தாள் உன்னிலை அதுதான் அப்போ துடன்நீயு மிருந்தா லென்றாள்
843
“மாளிகை வாசி கட்கு மனமிலை" என்பார் இந்த வேளையில் நானு ணர்ந்தேன் வார்த்தைகள் மெய்யே என்றே வேளையெவ் வதுவோ என்னை வஞ்சித்துக் கொல்ல என்றாள் வேளையே வராது எல்லாம் விருப்பம்போல் நடந்த தென்றாள்
844 பரம்பரை பரம்ப ரையாய்ப் பணிவிடை அரண்ம னையில் விரும்பினால் நீங்கள் ராஜ விசுவாசம் தன்னை எண்ணித் தருவதற் கஞ்சேன் உன்றன் திருப்திக்காய் உயிரை என்றாள் தருவது எனக்காய் மன்னன் தனக்கல்ல என்றாள் ராணி
845 விசுவாசம் ராஜ னுக்கா வினையிந்த ராஜ னுக்கு விசுவாசம் கொண்ட தல்ல விரோதமாய் நாம்செய் கின்றோம் இசைவிலான் சுதந்தி ரத்தோ டெனைவாழ விடாது போல இசைவிலான் நண்பனாலே எமதுமண் தனையும் தோற்றான்
846 நண்பனாம் பண்டார வன்னி நமதெதிர்ப் பகைவன் அந்த நண்பனால் பறிகொ டுப்பான் நாட்டையும் என்ப தாலே அன்னைமண் மீது கொண்ட அழிவிலாப் பாசத் தாலே என்னையும் சேர்த்துத் தந்தை இத்தனை செய்கின் றாரே
847 "பியசீலி செத்தாள்" என்றோர் பொய்தனைப் பரப்பிக் கொண்ட பயனெது என்றாள் நண்பி பியசீலி சொல்வாள் அன்று உயிரோடு அவன்பு றத்தில் உறங்கிநான் இருந்தி ருந்தால் நயந்திடு சிறையை என்பான் நான்முந்திக் கொண்டேன் என்றாள்
848 என்சொந்த நலத்துக் காக எந்தையின் நலத்துக் காக முன்நின்றோம் இல்லை இந்த முயற்சிகள் அனைத்தும் என்றன் அன்னைமண் மீதுகொண்ட அன்பினால் அறிவாய் என்றே சொன்னனஸ் வெள்ளை யர்தம் சிறப்பினை மிகையாய்ச் சீலி
849
197
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 118
பெரும்படை கொண்டு நாட்டின் பகுதிகள் பலவற் றைத்தம் உரிமையாய் ஆக்கிக் கொண்டார் எஞ்சிநம் கண்டி யோடே பெரிதிலா முல்லை மட்டும் பிடியுணா தின்னும் உண்டாம் வருவினை பெரிதாம் மன்னன் வன்னியன் நட்பா லென்றாள்
85 ( ) மிகுபலங் கொண்டோன் முல்லை மன்னன்பண் டார வன்னி தகாதுநட் பவனோ டென்றே தந்தையுஞ் சொன்னார் நானும் பகைதவிர்த் தாங்கி லேயர் புறமொன்றி நாட்டைக் காக்க வகைபல செய்தேன் அந்த வன்னியன் நட்பைப் போக்கி
85 பகைகொண்டால் வன்னி யோடு பறங்கியர் சுலபமாகப் பகைபலம் இழந்த தாலே பிடிப்பரே நாட்டை முற்றும் தகுமோஅம் முயற்சி நாங்கள் தம்மைத்தாம் அழித்தல் என்ன மிகுதியைக் கேள்நான் சொல்ல “மர்த்தனி” என்றாள் ராணி
85 மனத்துயர் நமக்கேன் முல்லை மண்ணினைப் பற்றி நோக்கம் தனக்கெனத் தானே கண்டி தப்பினால் போதும் நாங்கள் நினைத்தவா றாகு மானால் நாம்செல்லும் பயணம் கண்டி மன்னனும் வன்னி யானும் மிகுபகை கொள்ளு வாரே
853 கண்டியின் உதவி யோடு கொள்ளும்போர் தன்னில் முல்லை வென்றிடப் படுமம் மண்ணை வெள்ளையர் நமக்க ளிப்பார் மண்ணுண்ட நானோ மீண்டும் மறுபிறப் பெடுப்பேன் ஆங்கு என்னைநான் அரசி யாக ஏற்றிடச் செய்வேன் என்றாள்
854 முடியுமோ இ.தென் றாளே மர்த்தனி பதிலாய்க் கொண்டாள் முடியாத தென்ன “நோத்"இம் மண்ணினில் இருக்கு மட்டும் கிடைத்திடில் ஓரி ராநான் கவர்ணரின் துணையாய் வாழ அடுத்தென்ன பண்டார வன்னி ஆண்டமண் எனதாம் என்றே
855 இருப்பரோ ராஜ சிங்கர் இருக்கின்றாய் எனவ றிந்தால் பொறுப்பொடு கேட்டாள் நண்பி பியசீலி பதிலு ரைப்பாள் இருக்கவே மாட்டார் மன்னர் எந்தையே நாட்டைக் காக்கும் பொறுப்பினி லிருப்பார் நாட்டின் பற்றினால் எனும்வா றாக
856 “எத்தனை பெரிய திட்டம் அம்மம்மா" என்றே தோழி முத்திரை வைத்தாள் பேச்சை முடித்திடும் வாறாய் வானம் சப்தித்த தெங்குங் காருஞ் சூழ்ந்தது மின்னும் வெட்டிப் பொத்தென வீழ்ந்த மேகப் பொழிவினால் நனைந்திட் டாரே 857
uar-fraatatuat orîuib 198

இடிந்ததோ வானம் கூறாய் எனும்வாறு இடைவி டாது இடியிடித் ததுவே காற்றும் ஏன்சீற்றங் கொண்ட தாமோ படையிரண் டொன்றிப் போர்செய் போதினில் வாட்கள் மோத அடுத்திடும் ஒளிபோல் மின்னல் அடித்திட அதிர்ந்திட் டாரே
858 விழியொளி வறள்ந்த தொப்ப விண்ணொளி விஞ்ச யார்செய் பழிதனுக் காமோ வானும் போர்க்கோல முற்ற தன்றே அழிமதி நெஞ்சிற் கொண்டு அணங்கிரண் டொன்றிச் செல்லும் இழிசெயல் விரும்பா துற்றோ இயற்கையும் சீறி னாளே
859 மேலுமோர் அடியெ டுத்து முன்செல்ல இயலா வாறே கால்தடு மாறிற் றன்னார் குதிரைகள் கண்டார் ஆங்கோர் நாலுகால் மண்ட பத்தை நேரங்கு சென்றார் அ.து சாலவே பொருந்த வைத்த தெய்வத்தின் அருளாம் போன்றே
860 எல்லோர்க்கும் ஒன்று போன்றே அருள்செய்யும் இறைவன் இந்தப் பொல்லார்க்கும் இடுக்கண் தோன்றப் பரிந்தனன் கருணை செய்தான் நில்லாது மழையுங் காற்றும் நிலைத்தன தொடர்ந்தே தேகம் புல்லரிப் பெடுத்த தாம்மின் பேரிடிப் பறையி னாலே
861 உடற்களைப் பாலே கண்கள் உறுத்தின பயணத் தைநாம் தொடரவும் முடியா தென்றே சிறுதுயில் கொண்டார் மேனி படிந்தமென் உட்ட ணத்தால் பகலவன் பிறந்தா னென்றே துடிதுடித் தெழுந்தார் மீண்டுந் தொடர்ந்தனர் வழிமீ தூர்ந்தார்
862
“இடிமழை பயணத் திற்கோர் இடையூறுஞ் செய்ய வில்லை கடவுளும் நம்பக் கந்தான்” கூறினள் தலைவி தோழி கடவுளும் சிறிதுபொல்லார் கூடவும் இருப்பார் பின்னர் விடாதுதண் டனையும் செய்வார் வினைக்கேற்ற வாறே என்றாள்
863 மெல்லென நடைந டந்து மிகுந்துசற் றோடிப் பின்னர் முல்லையின் வழிய ஹிந்து மிகுவேகங் கூட்டி ஒவ்வோர் எல்லையுந் தாண்டி ஊர்கான் எனப்பல கடந்தார் மாற்றார் கல்லையில் மண்ணைத் தூவும் கருத்தொன்றிச் செல்லும் அன்னார்
864
199 ஜின்னாவூர் ஷரீபுத்தீன்

Page 119
வந்தார்கள் ஆங்கே
கிழக்குவான் நெற்றி மீது கோத்தகார் இருளைப் போக்கி விளக்கினான் கதிரோன் எங்கும் வீசுபொற் கதிர்க ளாலே அளந்தனன் உலகை எங்கும் அவ்வொளி கண்டு சோர்வை இழந்தன உயிர்கள் வன்னி இளவலும் வாசல் வந்தான்
8(bay என்னாளும் தோன்று கின்ற இரவியை நோக்கும் கண்கள் மன்னனின் நெஞ்சுக் குள்ளே மகிழ்வினைத் தோற்றி ஏக்கம் தன்னையுந் தோற்று விக்கும் தமிழினம் என்று மாற்றார் புன்மையில் மீளும் என்றே புழுங்கியே மனமுஞ் சோர்வான்
866 வெள்ளையன் இந்த மண்ணை விட்டோடும் நாளே எங்கள் உள்ளமும் மகிழும் வெய்யோன் உதித்தாலும் எங்கள் வாழ்வில் எள்ளள வேனும் தோன்றா திரவியின் ஒளிபோல் தோன்றும் கொள்ளையாம் பிரகா சம்தான் காணுநாள் நினைந்தே நின்றான்
867 கடமையின் உணர்வி னாலே காலத்தை மதிப்பான் சற்றும்
விடியலைக் கண்டான் அன்றும் விண்மணி துலங்கத் தேச விடிவினுக் காகத் தன்னை வழங்கிய வன்னி வேந்தன்
868 மாடியில் உலவ மன்னன் மானெனத் துள்ளி ஆங்கே
நாடினான் குறும்பு செய்ய நாச்சியை நோக்கி என்ன மூடிய இமைய விழ்க்க மறந்தையோ விடிந்த தென்றான்
869 மூடினால் தானே அ.தை மீண்டும்நான் திறக்கக் கண்கள் மூடிட இமைகள் தோற்று முகிழ்திருந் தனவே என்றாள்
மூடியே இருந்த தென்றுன் மலர்விழி கூறு மென்றான்
870 காலையில் வருமொற் றர்கள் கண்விழித் திலையோ உன்போல் வேலையில் கருத்தற் றுப்போய் விடிந்துமே துயில்கின் றாரோ நீலக்கண் சிவக்க வென்றே நையாண்டி செய்தான் மன்னன் கோலத்தை அறிவாள் சற்றுங் கோபமற் றருகில் வந்தாள்
87
uætv-/rgs) støfu sír ösr-Suúb 200

வந்தார்கள் அவர்கொ ணர்ந்த விபரத்தைத் தாங்கித் தானே வந்தேநான் சொல்ல முன்னர் விகடமேன் என்றாள் கண்கள் சிந்தின செல்லப் பார்வை சொக்கினான் மன்னன் கண்டான் அந்திவான் மதிக்குப் பூக்கும் அல்லிகள் வதனம் மீதே
872
விருந்துதான் என்ன பார்வை விஞ்சுதே போது மென்றே திருப்பினாள் முகத்தை நெஞ்சுள் “சுள்”ளென்று ஏதோ செய்யப் பொருத்தினான் கருத்தை அந்தப் பொற்கொடி பேச லானாள்
873
“கண்டிமா ராணி செத்த கவல்தராச் சேதி யின்பின் கண்டியில் நடப்ப தென்ன கூறென்ன ஒற்றர் சொன்னார்” என்றனன் மன்னன் நாச்சி இயம்பினள் “முத்துச் சாமி தன்னையே மன்ன னென்று தெரிந்திட வைத்தான்’ என்றே
874
“சரியான கிறுக்கன்” என்று சொல்லிவாய் மூடு முன்னே “சரியிலை அதனை வெற்றுச் சொற்களென் றெடுத்தல் பின்னால் ஒருபெரும் பலமி ருக்கும் உறுதிதான் மன்ன னென்று பிரகட னம்செய் துள்ளான் புரிந்திட வேண்டும்” என்றாள்
875
பின்பலம் என்ன “நோத்”தின் படைபலம் தான்கொ மும்பில் மன்னவன் இருந்து கண்டி மண்ணினை ஆள்வ தெங்கே சொன்னவன் பித்தன் சொல்லச் சொன்னவன் மாப்பேர் பித்தன் விண்ணையீங் கிருந்தே ஆள வீணர்கள் நினைந்தார் என்றான்
876
படைநெஞ்சை நிமிர்த்தி முன்னால் போயவர் சுதந்தி ரத்தை அடைந்திடக் களத்தில் நின்றால் அதைவெல்லல் எளிதொன் றல்ல மடியாது இலட்சி யங்கள் மிகச்சரி யாமென் றுற்றால்
877
நகைத்தனர் சிலர்சி னத்தார் நிறைந்தபித் தவனுக் கென்றே பகைமொழி புகன்றார் மன்றோர் பாவியென் றுரைத்தார்'மாமன்” மிகைத்தவ ரனைத்துப் பேர்க்கும் மிகக்கடிந் துரைசெய் தாராம்
878
20
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 120
அரண்மனை வாச லுக்குள் அழைத்தவர் மக்கள் முன்னே உருக்கமாய்ப் பேசி அன்னார் உளத்தினை வென்று ராஜப் பொருத்தத்தைப் பெற்றார் தம்முன் பிரமாணம் வாங்கிக் கொண்டார் உருக்கமாய் இருந்த தென்றார் ஒற்றர்கள் நாச்சி சொன்னாள்
87) பிரகட னத்தைத் தூற்றிப் பிலிமத்த ளாவை பேச்சே பெருவியப் பளித்த தென்று பேசிட மற்றோர் சேதி பிரகட னத்தால் மக்கட் புரளியும் உண்டாம் வேறோர் உருவினில் முத்துச் சாமி உள்நுழைந் திடலாம் என்றே
88()
பெரும்படை யோடு வெள்ளைப் பறங்கியர் துணைமி துற்றே வருவது கூடும் கண்டி வென்றிட என்றே மக்கள் உருவகம் செய்கின் றார்கள் உண்மையும் உண்டாம் என்றே கருதுவார் ஒற்றர் என்றாள் குருவிச்சி நாச்சி யாரே
88 அதனொடு வேறோர் சேதி அறிந்தனர் ஒற்றர் அ.து மதுரையில் இருந்து ஈங்கு மணமகள் வந்தா ளென்றும் சதிபதி யானார் உங்கள் சோதரர் கண்ணுச் சாமி மதுரைப்பெண் அரசி யோடே மிகள்ளி தாமே முற்றும்
882
தமிழச்சி ஒருத்தி தம்மின் தாரமாய்க் கிடைத்தாள் வாழ்வு அமைதியாய்க் கழியும் என்றான் அகமகிழ் வாலே கேட்டே இமைசுண்டு பொழுதுக் குள்ளே ஏற்றவோர் உணர்வு மாற்றி அமைதியாய் நின்றாள் நாச்சி அறிந்தனன் வன்னிச் செல்வன்
சட்டென அவள்மு கத்தில் தோன்றியே மறைந்த மாற்றம் சுட்டது மன்னன் நெஞ்சைத் தன்னால்வந் துற்ற தென்றே எட்டிடாக் கனியாய் வாழ்வின் இன்பங்கள் துறந்த என்மேல் கொட்டிய அன்பால் வந்த கொடுவினை எனவு ணர்ந்தான்
884.
பிறர்வாழ்வை எண்ணி வாழ்த்தும் போதுநம் வாழ்வைச் சற்றும் அறிகிலா திருக்கி றேன்நான் என்றுநீ எண்ணி னாயோ உறுத்திட நெஞ்சம் மன்னன் உளம்நொந்த வாறாய் நாச்சி புறம்பார்த்த வதனம் மாற்றிப் பேசினான் அவள்தி கைத்தாள்
885
uæirv_/rg-) er ofufat &/r-Sustið 202

என்வாழ்வை எண்ணி என்றும் ஏற்றிலேன் கவலை முற்றும் என்வாழ்வு உங்கள் வாழ்வில் இணைந்ததாய்த் திருப்தி கொண்டேன் தன்மான முள்ள ஒவ்வோர் தமிழனும் வாழ்வ துங்கள் பொன்மணங் கொண்ட லட்சியப் போக்கொடு நானும் என்றாள்
886 எனக்கென்ன உன்னைப் பற்றி எண்ணங்கள் இலையா என்ன தனக்கென்று வாழும் வாழ்க்கை தூரத்தில் இல்லை நாங்கள் மனங்கொண்ட இலட்சி யங்கள் மங்கிடா வெற்றி கொள்வோம் நினைப்பது நடக்கும் சற்று நாம்பொறுத் திருப்போம் என்றே
887
கண்டியை வசப்ப டுத்தும் கனவது நிறைவே றாமல் வன்னியும் கைகூ டாமல் வெள்ளையன் ஒடு வான்அப் பொன்னான நாளே நம்மைப் பிணைத்திடும் நாள்அந் நாளை எண்ணியே வாழ்வோம் மட்டும் இதயத்தைக் கல்லாய்ச் செய்வோம்
888 கொண்டநம் இலட்சி யத்திற் கண்டிடும் வெற்றி தன்னில் என்றுமே ஐயம் கொண்டேன் இல்லைநான் இருந்தும் நம்முள் பண்டுதொட் டிருக்கும் “காக்கை” போன்றவர் துரோகத் தாலே குன்றுமோ வாய்ப்பு என்றே கவலைகொண் டுள்ளேன் என்றாள்
889 காட்டியே கொடுத்து வாழ்வைக் கொள்பவர் தமக்காய் அஞ்சி நாட்டிய கொள்கை தம்மை நாம்மறந் திடலா மோஅக் கேட்டினைச் செய்வோர் தம்மைக் கிஞ்சித்தும் நினைவி லற்றே ஈட்டுவோம் வெற்றி யென்ற இலட்சியம் தொடர வேண்டும்
890
சுதந்திரத் தாக மென்று சிந்தையில் ஊட்டு கின்ற விதையின்றே முளைத்து நாமே விளைவையும் காண்போ மென்னும் விதிவராப் போதும் நம்பின் வருமொரு சமூக மேனும் அதில்வெற்றி பெறுவா ரென்னும் அறத்தொடு முயல வேண்டும்
891 எச்சிலை உண்ணக் காக்கும் எட்டப்பன் போன்றோ ராலே அச்சமே தமிழ கத்தில் ஆங்கிலப் பறங்கி யோர்கள் துச்சமாய் மதிக்கும் பாங்காய்த் தம்பலம் பாது காப்பும் நிச்சய மற்றும் போன நிலைகண்டோம் துன்புற் றோமே
aitarrara aeffų5ai

Page 121
892 இங்குமவ வாறே எங்கள் ஈழமண் மீதும் “காக்கை” வெங்கணன் போன்றோர் தேச வெறியராம் வெள்ளை யர்க்குப் பங்கிட்டு நாட்டைத் தந்து பிச்சையுண் டிடவி ருந்தால் இங்குமல் வாறு போமோ எனுந்துயர் தோன்று தென்றாள்
893 குருவிநான் ஒன்று சொல்வேன் கேளெனப் பண்டார வன்னி புரிந்திடச் சொல்வான் வித்தைப் பதித்தவன் பழத்தைத் தானே அருந்திட வேண்டு மென்று அவாவுறல் தவறாம் தன்பின் வருபவர் வளர்த்துக் காத்து விளைவினை பெறலாம் என்றே
894 சுதந்திரத் தாய கத்தைத் தேடிட நாங்கள் ஊட்டும் சுதந்திரத் தாகம் வென்று தாயகம் காணு மட்டும் வதிந்திட நாமும் கூட வேண்டுமென் றெண்ண லாமோ பதிந்திடில் மக்கள் நெஞ்சில் பலனுண்டாம் பின்னர் என்றான்
895 நாமாற்றும் பணியும் இன்று நாம்செய்யும் தியாக மும்வீண் போமோபின் ஒருகால் வெற்றி பெறும்போது நாமும் வாழ்வோம் ஏமாறார் எம்மி னத்தோர் எடுத்ததை முடிப்பார் வாழ்வு பூமியில் நிலைத்த தல்ல புரிந்திட வேண்டு மென்றே
896 பிறந்ததன் பலனிவ் வாழ்வின் பின்னரும் நிலைக்க வேண்டின் அறிந்திட வேண்டும் ஆன அடித்தளம் அமைக்க என்றே பிறந்துமே உலகில் வாழ்ந்து பிரிந்தவர் பலகோ டிப்பேர் மறந்திலா தின்னும் வாழ்வோர் மிகச்சில பேர்கள் என்றான்
897 அன்பெனும் பிணைப்பால் ஒன்றாய் ஆனநாம் உடலால் என்றும் ஒன்றாது மரித்தா லுந்தான் உலகுள்ள மட்டும் வாழ்வோம் என்றனன் மன்னன் நெஞ்சில் ஏற்றநல் லிலட்சி யத்தில் பொன்றாத வைரம் கொண்டே பாவையின் உரைக்க லானாள்
898 பண்டார வன்னி யானும் போல்நாச்சி யாரும் தங்கள் மண்கொண்ட சுதந்தி ரத்தை மதித்ததற் காக வென்றே கொண்டார்கள் தியாகம் வாழ்வின் கூடிடும் இன்ப மெல்லாம் அண்டாது வாழ்ந்தா ரென்றே அறிந்துல கேற்றால் போதும்
899
uazilaryouairafuai orojulio 204

இருவரும் இவ்வா றாக இலட்சியம் பேச யாரோ வருவது கேட்டு மன்னன் வினவினன் யாராம் என்றே தெருவினில் அலைந்து பொய்யாய்ச் சாத்திரம் சொல்வோன் நின்றான் குருவிச்சி சொன்னாள் இந்தக் குடுகுடு எம்மாள் என்றே
900
கைக்கு வந்த கடிதம்
குடுகுடுப்பைக் காரன்போல் வேடம் தாங்கிக்
கொண்டிருந்த “தணிகை”யெனும் ஒற்றன் சொல்வான் குடும்பமாக வந்துள்ளார் இருவர் ஆண்பெண்
கண்டியென்றார் மாப்பிள்ளை ஊமை என்றே விடைதந்தால் அழைத்துள்ளே இருக்கச் செய்வேன்
வந்ததவர் மன்னரினைக் காண என்றான் உடன்குருவி நாச்சியையும் கூட்டிக் கீழே
ஒன்றிவந்தான் வன்னியனும் அவரைக் கண்டான்
901 காலையிலே ஒளிக்கதிரை அள்ளி வீசிக்
கடலலைகள் ஆர்ப்பரிக்கக் களத்தில் வீரன் போலவரும் பகலவனும் இரவுப் பெண்ணாள்
பட்டுடலைத் தொட்டணைக்கும் மதியும் ஒன்றிக் காலாற நடந்துவரும் காட்சி போலக்
கட்டழகன் வன்னியனும் நாச்சி யாரும் மேலிருந்து படியிறங்கி மெள்ள மெள்ள
மண்டபத்தை அடைந்தனரே வந்தோர் காண
902 மேலிருந்து வந்தவரைக் கண்டெ முந்து
மிகப்பணிவாய்க் கரங்கூப்பி வணக்கம் செய்து காலில்விழுந் தானே'ஜெய சில னென்பான்
கைகொண்டு தோள்துக்கி னானே மன்னன் சீலமிகு நாச்சியுடன் வந்தி ருந்த
செவ்விதழாள் மர்த்தனியின் தலையைக் கோதி நீளநெடுந் தூரமிருந் துற்றீர் சொல்க
நீர்வந்த காரணத்தை மன்னர்க் கென்றாள்
903
205 ஜிண்ணாஜர் 2றிபுத்தின்

Page 122
இவரென்றன் கணவர்"ஜெய சீலன் பேச
இயலாதார் என்றனளே கேட்டு மன்னன் கவலையொடு சொல்வானிவ் வழக னையேன்
கடவுள்ஊமை யாய்ப்படைத்தான் என்றே அன்னாள் பவம்இறைமேல் பழிபோடல் வேண்டாம் தானே பேச்சுவர முன்பாய்ந்தே வந்தார் என்ன அவனிருந்த அனைவருமே நகைத்தார் நாச்சி அழகுகண்டு ஜெயசீலன் காழ்ப்புற் றானே
904 காம்பீரத் தோற்றமவன் வார்த்தை தேனில்
குழைத்தெடுத்த இனிமையெனத் தோன்ற மன்னன் "ஏம்மாநீர் கண்டிநாட்டில் இருந்தோ ஈங்கு
எனைக்காண வந்தீர்கள் என்றே கேட்க "ஆம்பிரபு” என்றாள்'மர்த் தனி’தன் வார்த்தை
அடங்குமுன்னே "நான்பிரபு அல்லன்” என்றான் “ஆமாம்நான் மன்னரென்று சொலம றந்தேன்
அடியேனை மன்னிக்க வேண்டு மென்றாள்
905 மன்னனென்றும் பிரபுஎன்றும் வேண்டாம் நானோர்
மனிதனென்ற முறையிலிந்த மண்ணில் வாழும் தன்மையினால் இம்மண்ணின் விடுத லைக்காய்த்
திடத்தோடு போராடும் மனிதன் என்றே என்னளனைத் தேடிவந்த நோக்கம் என்னால்
ஏதேனும் உதவிசெய்ய இயலு மோநீர் சொன்னாலே முடியுமென்றான் கேட்டே அன்னாள்
சொல்லுகின்றோம் உதவவந்தோம் உமக்கா மென்றே
906 “என்னளனக் குதவுவதா எவ்வா’ றென்றே
இளநகைதன் முகம்விரவ மன்னன் கேட்க “என்னசெய்ய இயலுமென அறியோம் நாங்கள்
எமதுமன்னர் இயலுமென எண்ணு கின்றார்” “என்னகண்டி மன்னனையா சொல்லு கின்றாய்”
என்றனன்”ஆம் கண்ணுச்சாமி உங்கள் நண்பர் சொன்னதுதான்’ என்றனளே கேட்டு மன்னன்
சினங்கொண்டான் கண்ணுச்சாமி என்ற தாலே
907
υ αστυ-τιται σταται στα (τοδυώ 206

“மன்னன்தான் உங்களையீங் கனுப்பி னானா'
மர்த்தனியைக் கேட்டதுமே "ஆமாம்” என்றே “மன்னர்தந்த கடிதமுண்டு நம்பா துற்றால்
மாற்றுவழி இலையென்ற கார ணத்தால்” சொன்னதுமே “என்னவிது கடிதத் தைமுன்
தந்திருக்க வேண்டும்நீ தா'என் றேவ என்பரியின் இருக்கையொடு வைத்துள் ளேன்நான்
எடுத்துஇதோ வருகின்றேன் எனப்ப றந்தாள்
908 “குருவிச்சி இவர்களுக்கு உண்ண ஏதுங்
கொண்டுவரச் சொல்”லென்றான் “நானே சென்று பொருந்துவன கொணர்கின்றேன்’ என்றே செல்லப்
புறப்படுமுன் தணிகையினைப் பார்த்து "இங்கே இரு”என்று ஏவினளே பின்உட் சென்றாள்
இதனிடையில் மர்த்தனியும் மடலோ டுற்றாள் உரியபடி முத்திரையிட் டுளதா என்றே
ஏற்றவந்தக் கடிதத்தை மன்னன் பார்த்தான்
909 இணையற்ற இணை
அரண்மனையின் முத்திரையோ டனைத்தும் நன்றாய்
அமைந்திருந்த ததன்தோற்றம் வெளிப்பு றத்தே சரியென்று மனமொப்பக் கடிதப் பேழை
திறந்தனனே மடலைக்கண் துழாவிற் றன்றோ விரிவான லிகிதமது ஈற்றில் மன்னன்
வைத்தகர வொப்பமொடும் இருத்தல் கண்டே வரித்தனனே விழிகளையக் கடிதங் கொண்ட
வரிகளிலே மனத்தையுமத் துடண் ணைத்தே
910 அன்புள்ள வைரமுத்து அறிய உன்றன்
அன்புநண்பன் கண்டிமன்னன் கண்ணுச் சாமி அன்போடும் எழுதுவது நீண்ட நாட்கள்
அகன்றதுபோல் இருக்கிறது அரசு வேலை என்னோடு ஒன்றிவிடப் போராட் டத்தால்
எமக்குள்ளே பிரிவுஎன்னும் அகழ்தோன் றிற்று நன்மையொன்று செயவுனக்கென் றெண்ணித் தானே
நானிதனை எழுகின்றேன் நலமே சேர்க
911
207
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 123
வஞ்சகமே நெஞ்சமெலாங் கொண்ட மாமன்
வளைத்தென்னைச் சுற்றுகின்றார் மனையாய்க் கொண்ட நஞ்சுடைய மனத்தாளின் பிரிவினாலே
நலிந்தமனத் துயராலும் குழம்பிப் போனார் கொஞ்சமுமே சூழ்ச்சிமட்டுங் குறைய வில்லை
கவர்னர் 'நோத்" கொடுத்தபெருந் தைரி யத்தால் அஞ்சாதும் இருக்கின்றார் என்ப தென்றன்
அகத்திற்கும் புரிகிறது மேலும் சொன்னால்
9 அலைகின்றார் நோத் அனுப்பி வைத்த ஒற்றர்
அன்டிமக்கள் மனங்களினை வேறு பக்கம் நிலைபெறவும் முயலுகின்றார் அறியா ரென்றே
நாடுகின்றார் பிலிமத்த ளாவை தன்னைப் பலவாறுந் திறமைகொண்ட நமது ஒற்றர்
பகுத்தவரைத் தெரிந்தறிந்தே பின்தொ டர்ந்து பலதகவல் தருகின்றார் கொழும்பில் கூடப்
பலபேர்கள் இருப்பதையும் அறிவாய் இன்னும்
913 அவர்களிலே இருவரைத்தான் உன்னி டத்தே
அனுப்பியுள்ளேன் தம்பதியர் கணவன் ஊமை அவன்பேசும் பேச்சினையும் சேர்த்துப் பேசும்
அரட்டைப்பேர் வழியாவாள் மனைவி ஆனால் இவர்திறமை அறிந்தால்நீ திகைத்துப் போவாய்
இணையில்லார் துப்பறியும் துறையில் வல்லார் இவரிருந்தால் துணையாவார் உனக்காம் என்ற
எண்ணத்தில் அனுப்பியுள்ளேன் தவிர இன்னும்
914 காற்றெனவே கவர்ணர்நோத் கோட்டைக் குள்ளே
காவலையும் தாண்டியுள்ளே புகுந்து வேண்டும் பாற்பட்ட தகவல்கள் பலவற் றைஎம்
பாற்கொணர்ந்தார் அதிசயித்துப் போனேன் நானும் மேற்கொண்டு வெள்ளையர்கள் என்ன செய்ய
முனைகின்றார் என்னும்பல திட்டங் கள்தாம் ஏற்கனவே நாமறியும் வாறு தேடி
என்னிடத்தில் சேர்த்துள்ளார் கெட்டிக் காரர்
915
uætv-/rjøatafust æs/rosiuub 208

புலியைஅதன் கூட்டுக்குள் புகுந்தே கொல்லும்
புதியபல தகவல்கள் நோத்தின் கையில் வலிமைமிகு படைகொண்டு விலங்கு மாட்டி
வெளிக்கொணரும் வாய்ப்புவகை உண்டாம் அ.தில் வலம்வருமே வானத்தில் கழுகு நல்ல
வேட்டைகண்ட போதிலது போல நானும் பலமான திட்டங்கள் வகுத்துக் கொண்டு
பார்த்துள்ளேன் காலத்தை அறிவாய் இன்னும்
916 மர்த்தனியைப் பெண்ணென்றும் ஜெயசீ லன்ஒர்
வாய்பேசா ஊமையென்றும் இலகு வாக அர்த்தம்நீ கொள்ளாதே கொழும்பில் செய்த அசகாய சூரச்செயல் ஒன்றை ஈங்குப் பொருத்தம்நான் எழுதுவது கவர்ணர் நோத்தின் படுக்கையறை யுள்நடந்த சேதி யாகும் இருவருமே அங்கிருந்து தானே அந்த
அரியபெரும் ரகசியங்கள் தமைக்கொ ணர்ந்தார்
917 தினமுமொரு பெண்ணுக்காய் அலையும் நோத்தின்
தரகர்கள் எங்கலைந்தும் பொருத்த மான கணிகையொன்று கிடைக்காதே ஒருநாள் தேடிக்
கண்டார்க்ள் மர்த்தனியைப் பற்றிக் கொண்டார் கணவனின்றி நான்மட்டும் வரவே மாட்டேன்
கட்டியவர் தனையுமென்னோ டழைத்துச் செல்ல இணங்கிடில்நான் இணங்குகின்றேன் என்றாள் அன்னார்
இணங்கியுடன் அழைத்தே'நோத் கையில் சேர்த்தார்
918 வேண்டும்போ தொருத்தியுடன் இலாத போது
வேண்டாத அளவினையுந் தாண்டிப் போதை தூண்டவென மதுவை'நோத் உண்டான் தன்கால்
தரையினிலே நிலைத்துநிற்க இயலா வாறே தாண்டியது பொழுதெனினும் தரகர் தாங்கள்
தேடிவந்த கனியையவன் சுவைக்கத் தந்தார் வேண்டியதும் அதுவேதான் இருவ ருக்கும்
வாசலிலே ஜெயசீலன் தனித்தி ருந்தான்
919
ஜிண்ணாஜர் 2றிபுத்தின்

Page 124
மாதில்லாப் போதுமது மதங்கொண் டோனை
மட்டில்லாப் போதைதந்தே மயங்கச் செய்யத் தீதில்லா நிலைமையிது தானே இந்தத் தீயவனை ஏமாற்ற எனத்து னிந்தே போதையின்னும் ஏறியுடல் புரட்ட மேலும்
புகட்டினளே மதுவையவள் மீண்டும் உண்டான் ஏதுவிந்தப் பொழுதென்றே உள்நு ழைந்தே
எடுத்துவந்தான் ஜெயசீலன் விபர மெல்லாம்
சிங்கத்தின் குகைக்குள்ளே புகுந்தே அந்தச்
சிங்கத்தின் பிடரிமயிர் கவர்ந்து வந்த சிங்கங்கள் தாமிவர்கள் சிலநாள் வன்னிச் சிங்கத்தின் கூடவிருந் துதவி செய்யத் தங்கட்டும் ஆங்கென்றே அனுப்பி யுள்ளேன்
தங்கவைத்துத் தக்கதெல்லாம் தந்தே வன்னி தங்கியுள்ள வரையு மவர் தம்மி டத்தே
தங்கியுள்ள திறமையைநீ பயன்கொள் வாயே
வல்லவர்கள் மட்டுமல்ல இவர்கள் மிக்க
நல்லவர்கள் ஜெயசீலன் ஊமை மிக்க நல்லாளிம் மர்த்தனிதன் அத்தை பிள்ளை
நாவொடுங்கிப் போனாலும் வேண்டும் என்றே சொல்லிநின்றாள் திருமணத்தால் ஒன்றிப் போனார் தியாகமனம் கொண்டவராம் இருபே ராலும் நல்லபல நடக்குமுன்றன் வெற்றிக் கென்றே
நண்பன்தன் கடிதத்தை முடித்தி ருந்தான்
கைகொண்ட கடிதத்தை கண்ணுள் வாங்கிக்
கொண்டுமனங் குதுகலிக்கக் கண்ப னிக்கக் கையளித்தான் குருவிச்சி கரங்க ளுக்குக்
கூடநீயும் படித்துப்பார் என்றே சொல்வான் மெய்யான நட்பைநீ அறிவ தாயின்
மிகப்பொருந்தும் இதுவதனை உறுதி செய்யும் துய்யவிந்தத் தம்பதியர் திறனும் காண்பாய் திருவளித்த சான்றிதழென் றறிகு வாயே
92()
921
922
923
uætv-/rg-2 støfust æ5/r-öutið
210

கடிதத்தின் எழுத்துக்கள் ஒவ்வொன் றுந்தன்
கண்படிக்க நெஞ்சத்துள் பதித்தே ஈற்றில் விடுத்தனளோர் பெருமூச்சு குருவி நாச்சி
வசதிகள்செய் இவர்களுக்குத் தங்க என்றே அடுத்தவளுந் தணிகைக்கு ஏவினாளே
அரசன்விடை பெற்றவனின் தலம டைந்தான் துடித்தவிழிச் சைகையொடு தணிகை பின்னால் சென்றனரே தம்பதிகள் நாச்சி கண்டாள்
924 நரிவால் குஞ்சம்
உங்கள்பெயர் தணிகையா என்றனள் மர்த்தனி
“ஆமாமாம்" என்றான் அவளே உங்கள்பதில் என்னவெம் கடிதத்தின் முக்கியம்
உள்ளதா உரைப்பீ ரென்றாள் எங்களுக் கவரதைச் சொல்லாத போதினில்
என்றும்நாம் அறியோம் என்னத் தங்களின் பதில்மிகச் சரியான பதிலெனத்
தோள்தட்டி னானே கணவன்
925 என்னவுன் கைமலர்ச் செண்டுபோல் உள்ளதென
எண்ணியதைத் தணிகை வினவ மென்மைதான் அவர்தந்தை தாய்கூட மென்மைதான்
மலர்போல என்றாள் மனைவி தன்வீட்டுக் கவர்களைத் தங்கவென அழைத்துமே
தான்முந்தி நடந்து அவரைப் பின்தொடர்ந் திடவைத்துச் சென்றனன் சிறுதொலைவில்
போகுமிடம் சேர்ந்து நின்றார்
926 நின்றதேன் வாசலில் தனிக்கட்டை நானென
நினையுங்கள் வருக வென்றான் சென்றங்கு மாடியில் தங்கலாம் நான்கீழே
துயில்கிறேன் என்று ரைத்தே என்னதான் தேவையோ என்னிடம் கேளுங்கள்
இருநொடியுள் கொணர்ந்து தருவேன் என்றனன் தணிகையும் ஏற்றனன் ஜெயசீலன்
இருவரொன்றிப் படிகள் உயர்ந்தார் 927
211
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 125
மேல்மாடி தனியறை மிகநேர்த்தி யாகவே
மிளிர்ந்தது முகட்டில் நரியின் வாலொன்று தொங்கவே மர்த்தனி கேட்டாள்நரி
வாலெதற்கு இங்கே என்றே வேலையே ஒற்றரென ஒற்றரெனின் நரிவேலை
வால்தொங்கின் புதுமை யென்ன வேலையில் உத்திகள் தோன்றாத போதினில்
வருடுவேன் அதனை யென்றான்
சரியான உத்திகள் தோன்றிடாப் போதினில்
தடவியே மந்தி ரிப்பேன் உரியவா றொழுங்காகச் செயல்பட உத்திகள்
ஊறிவரும் மூளை துலங்கும் நரிவாலின் ரகசியம் இதுதானே என்றுமே
நவின்றனன் தணிகை கேட்டு நரிவாலின் மந்திரம் தெரிந்திடில் நல்லதே
நாங்களும் ஒற்றர் என்றாள்
“நாங்களும் ஒற்றர்கள்“ எனவவள் கூறிட
நரிவாலின் ஒற்றன் கேட்பான் "நீங்களும் ஒற்றரா" என்றுமே வியப்பொடு
நீங்களெமை அறிய விலையோ போங்கள்பொய் சொல்கின்றீர் என்றவா றுரைத்தனன்
பாம்பின்கால் பாம்ப றியுமே நீங்களும் அறியலாம் நெருங்கிய உறவொன்று
நமக்குள்ளே வரட்டு மென்றே
விட்டவர் தமையங்கு வந்தனன் தன்னறை
விடாதவன் தனையு மவர்கள் தொட்டுமே நின்றனர் சிந்தனை வயத்திலே
தனித்திருந் தெண்ண லானான் தட்டிய கதவொலி கேட்டதும் திறந்தனன்
தானெதிர் பார்த்தி டாத கட்டத்தில் ஆங்குமே குருவிச்சி நாச்சியைக்
கண்டதும் தணிகை அதிர்ந்தான்
928
929
930
931
uasi-stryagarafugar assauguib
212

தலைவனுந் தலைவியும்
கதவினைத் திறக்கக் கண்டான் குருவிச்சி நாச்சி யாரை அதிர்ந்தனன் “நீங்க ளா"வென் றறியாது வார்த்தை பாய எதிரிலே நின்றும் ஒன்றும் இயம்பிடா தானான் தன்இல் புதியதோர் வரவாம் என்றே பயத்தினால் பேத லித்தான்
932 அம்மணி! ஏனாம் இந்த ஏழைஇல் வந்த தென்றே வம்மிய தலைவி கண்டே வார்த்தைகள் ஒன்றி ரண்டைச் செம்மையாய்ச் சொல்ல மாட்டான் திணறினான் அதிர்ச்சி இன்னும் சும்மையாய்ச் சிரசில் தாங்கித் தணிகையும் நாச்சி சொல்வாள்
933 “ஏன்நானுன் இல்லத் திற்கு இசைந்துவந் திருத்தல் என்றன் மேன்மைக்கு இழிவு என்றா மதிப்பிட்டாய் தணிகை முல்லை மன்னனின் மாளி கைபோல் மறத்தமிழ் மறவர் மாற்றார் சென்னியைச் சீவு கின்ற செருக்களம் எனக்கு ஒன்றே
934
முட்புதர் மிகுந்த காடும் மலர்நிறை சோலை யும்நம் கட்புலன் காண்ப தொன்றாய்க் கண்ணியன் உன்றன் இல்லம் மட்குடில் என்றிட் டாலும் மாளிகைக் கொப்பம் என்றாள் உட்பொருள் உணர்ந்தான் “தாயே! உட்கார வேண்டும்" என்றான்
935 சொல்லவந் திருப்ப தென்ன சொல்கவென் றுரைசெய் யாதே சொல்லுங்கால் வரையும் தன்வாய் திறக்காது தணிகை நின்றான் “சொல்லுயார் வந்திங் குள்ளார் தெரிந்திருந்த தாலே" என்றாள் “சொல்லுவ தெவரை இங்கே தங்கியோர் தமையா” என்றான்
936 “ஆம்அந்த ஊமை யோடே அவன்மனை யாளென் டோரைத் தாம்"என்றாள் “கண்டி மன்னன் தேர்ந்தெடுத் தனுப்பி யோரா” ஆமென்றாள் மீண்டும் நாச்சி “அறிந்தாயோ எதுவும் அந்த ஊமையின் அசைவில்" என்ன உணர்ந்ததை உரைக்க லானான்
937 முதலில்நான் சந்தே கித்தேன் மன்னனாம் ராஜ சிங்கன் முத்திரை யோடு கொண்ட மடல்கண்டு விலக்கிக் கொண்டேன் சிதறிய மழைத்து விக்குச் சரியெனும் வாறே இன்னும் மிதக்குதே ஐயம் நெஞ்சுள் மீதியைச் சொல்க என்றான்
938
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 126
மிகச் சிறு துளியாய் நெஞ்சுள் மிதந்திடல் கூடா தேர்வீர் மிகச்சிறு துளிகள் ஒன்றின் மிகப்பெரு வெள்ள மாகும் அகத்தினில் உள்ள ஐயம் அக்கினிப் பொறியாய் மாறி மிகப்பெரும் தீயாய்ப் பற்றி மிகைத்திட வேண்டும் என்றாள்
93) சொல்லுவ தென்ன வென்றே தெளிவுறச் சொல்லின் ஏற்ப நல்லது செயலாம் என்றான் நாச்சியார் சொல்வாள் அன்னார் சொல்லிய வாறாம் இல்லை தந்தவக் கடிதம் கொண்ட எல்லாமே மன்னர் தம்மின் எழுத்தல்ல என்ப தாக
94() கடிதத்தில் எழுத்து மன்னன் கையெழுத் தல்ல ஒப்பம் கடிதமேல் முத்தி ரைமெய் கூறினாள் நாச்சி “மன்னன் கடிதங்கள் பலஇ.. தேபோல் கண்டுளேன் மன்னன் கூறக் கடிதம்வே றொருவர் தம்மின் கைப்பட” தணிகை சொன்னான்
94 "சொல்வது உண்மை ஆனால் சூழ்நிலை சந்தர்ப் பங்கள் எல்லாமே பொருந்தி னாற்றான் ஏற்கலாம் உண்மை என்றே” இல்லையவ் வாறு இங்கே” என்றதும் கேட்டான் “மன்னர் சொல்லுமஷ் வாறோ ஐயச் சூழலோ அங்கும்” என்றே
நெஞ்சுரம் வீரம் தம்தாய் நாட்டினர்க் காக என்றும் அஞ்சிடார் களத்தில் தம்மின் ஆருயிர் துறக்க வல்லார் கெஞ்சினால் எதிரி கூடக் கரைந்திடும் மனத்தார் எம்மான் பிஞ்சன்றோ உள்ளம் வீரப் பிழம்பென்ற போழ்தும் என்றாள்
943 நம்பினார் கடிதம் மன்னர் நம்பினார் கொணர்ந்த பேரை நம்பினேன் நானும் நீயும் நம்பாதே என்றேன் இல்லை நம்பிய போதும் நாங்கள் நாகமோ கயிறோ வென்று நம்பிக்கை அற்றுச் சற்று நோக்குதல் நலமாம் என்றாள்
944 நான்சொன்ன கருத்தைச் சற்றும் நினைவினில் இட்டு நோக்கத் தோன்றிடார் அனைத்தும் மெய்யாய்ச் சொல்கிறார் ஊமை யன்மேல் தோன்றிடும் அனுதா பம்அத் தங்கைமேல் பொழியும் பாசம் என்றுமே கண்ட தில்லை இதுபோலும் எனுமால் அம்ம
945 நம்பினால் முற்றும் நம்பும் நன்மனம் எத்த னைபேர் நம்பிக்கைத் துரோகம் செய்தார் நான்மட்டும் அறிவேன் முற்றும் நம்பினார் “காக்கை' யையும் நான்நின்று தடுத்தேன் இன்று நம்பினார் இவர்க ளையும் நமதுபோ ராட்டம் வெல்ல
946
uair_/rg-2.Jerstu si s/r-Suúb 214

எட்டிக்காய் தோற்கும் “காக்கை” இன்றவர் மனத்தில் உள்ள கெட்டவன் என்னும் எண்ணக் கருத்தினால் நானும் நீயும் பட்டிடும் வாறு நெஞ்சில் பதித்ததால் முன்னர் இன்றோர் திட்டத்தில் வந்தேன் அன்னான் சம்பந்தம் கொண்ட தென்றாள்
947 “கார்க்கோடன் நஞ்சே அந்தக் “காக்கை”யின் இரத்த மெல்லாம் பார்க்கவே கூடான்' என்றான் பதிலுக்குத் தணிகை நின்னைப் பார்க்கவந் துள்ளேன் மன்னர் பணித்ததால் காக்கை பற்றித் தீர்க்கவோர் சேதி யுண்டு சொல்லுவேன் கேளென் றாளே
948 “மன்னரா அனுப்பி வைத்தார்" மிகப்பணிந் தவனுங் கேட்டான் “மன்னர்தான் அதனைப் பற்றி மனந்திறந் துரைக்க மாட்டார் உன்னுடன் என்னைப் பேச உறுத்தினார் வந்தேன்” என்னத் தன்னையும் மீறித் துள்ளுந் தவிப்பொடு தணிகை நின்றான்
949 பந்தயக் குதிரை யொன்று பாய்ந்திட மணியொ லிக்காய் எந்திரம் போலும் காக்கும் இயல்பொடும் ஒட்டு வோனின் சிந்தையின் வேகங் கூட்டித் தணிகையும் நின்றான் என்ன வந்திடும் வாயி னாலே வார்த்தையாய் எனும்வா றாக
950
அறிவைநீ நல்ல நாச்சி அரசரின் தங்கை மூத்தாள் திரிகோண மலையை நன்கு திறம்படக் காத்திட் டாலும் சரியாகத் தன்னைக் காக்கத் தெரியாது போனாள் என்று வருந்துவார் உன்னைப் பார்க்க வந்தனன் பொருள. தென்றாள்
951 பாலினில் நஞ்சு சேர்ந்தாற் போலவும் சிவனா ருண்ட ஆலமும் அமுதும் ஒன்றாய் ஆனது போலும் தூய சீலமும் விலைமைப் பண்பும் துணைகொண்ட நிலைமை போலும் காலனைத் துணையாய் நாச்சி கொண்டனன் என்றே சொல்வாள்
952 "கொடியவன் காக்கை வன்னி காதலில் நாச்சி நல்லாள் பிடியுண்டாள்" என்றாள் கேட்டுப் பெருவிட நாகத் தாலே கடியுண்டான் போல வானான் “கைகூடா ததுபொய்" யென்றான் நடந்தது வேறு சற்று நிதானமாய்க் கேளென் றாளே
953 பெருந்திரு வணிகன் பெற்ற பிள்ளைநான் என்றுந் தன்பேர் "பிருமானந் தன்"னாம் என்றும் பொய்யுரை செய்து காதல் தருமத்தைப் பிழைத்தான் 'காக்கை தன்வலை வீழ்த்தி னான்ஒர் அரும்பிய நிலைதான் யார்செய் அறத்தினால் அறிந்தோம் என்றாள்
954
25
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 127
உண்மையை எடுத்த வர்க்கே ஓதினால் என்ன என்றான் உண்மையைத் தாங்கும் உள்ளம் உள்ளதோ உளம்ஒ டிந்தே பெண்ணுளம் தாங்கி டாது பாரிய விளைவாய் ஏதும் நண்ணிடக் கூடு மென்ற நினைவினால் குழம்பு கின்றார்
(), ', பொறுப்பினை நானேற் கின்றேன் பிழையேதும் நேரா வண்ணம் நெறிப்படச் செய்கின் றேன்என் நிலையிலும் கவலை யற்று உறுதியோ டிருக்க மன்னர் உள்ளத்தை அருகி ருந்தே பொறுப்புடன் நோக்குங் கள்நம் பற்றவர் மீதே என்றான்
95() ”இன்னுமோர் சேதி என்றே ’எடுத்தனள் வாயைச் சொல்ல ”முன்னரே தெரியும் தீயாய் மாறிடச் சொன்ன” தென்றான் ”என்மீது விடுங்கள் இந்த இருவரை நான்பார்க் கின்றேன’ என்றனன் குருவி அந்த இடம்விடுத் தகன்றிட்டாளே
957 பரியேறிச் செல்லு மட்டும் பார்த்திருந் துள்நு ழைந்தான் இருவர்கண் படாத வாறே ஏந்திய உணவி னோடும் ஒருதிரைச் சீலை யுள்ளே ஒளிந்திருந் தகன்றாள் கண்டான் மர்த்தனி ஊமை யன்றம் மனைவிமென் நகையி னோடே
958 பச்சைக்கொடி அடையாளம்
ஏற்கனவே தான்கொண்ட சந்தே கத்தை
இரட்டிப்பாய் ஆக்கிவிட்டு நாச்சி செல்ல மேற்றளத்தில் இருந்துசெய்த உணவி னோடு
மர்த்தனிவந் தவன்முன்னே நின்றாள் சொல்வாள் வேற்றிடத்தில் இருக்கின்றேன் என்னா லான
வகையிற்சில் உணவுகளைச் செய்து வந்தேன் ஏற்றிடுங்கள் உண்டுபார்த்து நன்றென் றாயின்
இயம்புங்கள் என்றனளே தணிகை நோக்கி
959 தன்வலையில் தணிகையினைப் போட்டுக் கொண்டு
தான்வந்த காரியத்தை முடிக்க எண்ணி முன்வந்தாள் தனையவனுக் கீந்தே வெல்ல
மறுக்காதே அவனுமதற் குடந்தை யானான் என்னவவள் எண்ணமெனச் சந்தே கித்தும்
இடங்கொடுத்து அவனும்அவள் போல ஆகி தன்வலையை விரித்தனனே ஒன்றுக் கொன்று
தோற்காத வாறவர்கள் தமைத்தாம் ஈந்தார் 960
uairlfriya sakatugai as ta5utub 26

ஒருவருக்கு ஒருவர்பொய் மாயங் காட்டி
உத்தமர்கள் போல்நடித்து ஒன்றுக் கொன்றாய்ப் பெருவிருந்தாய் ஆனார்கள் பார்ப்பா ரற்ற
போதினிலே பொழுது சற்றுப் போக அன்னாள் ஒருசிறிய பச்சைநிறத் துணியும் கம்பும்
உடன்வேண்டும் என்றனளே எதற்காம் என்றான் ஒருவருக்கு இவ்வீட்டை இனங்காட் டத்தான்
உதவுங்கள் எனச்சொல்ல அவனுந் தந்தான்
961 “யாருக்கு இனங்காட்ட' தணிகை சற்று
ஐயத்தை வெளிபடுத்தி வினவச் சொல்வாள் ஊருக்கு வெளியேனன் கணவர் தங்கை
ஒற்றறியச் சென்றுள்ளாள் வருவாள் என்றே பேரவளின் “கலா"கண்டி நாடி ருந்து
புறப்பட்டு எங்களொடு தானே வந்தாள் தேராளே நாமிருக்கும் இடத்தை அன்னாள்
தெரிந்திடத்தான் கொடியென்றாள் நம்பிக் கொண்டான்
962 ஒற்றறிய எங்குற்றாள் என்றான் கேட்டு
உண்மைதனைச் சொல்கின்றேன்"காக்கை”க் கூட்டில் முற்றுமவன் சேதிகளை அறிந்து கொள்ள
வேறுசில காரணமும் உண்டென் றாளே ஒற்றையாய்க் காமுகனின் கைக்குப் பெண்ணை எப்படித்தான் அனுப்பமணம் வந்த தென்றான் அற்பனவன் அவளழகில் மயங்கி னாலும்
அவள்பொல்லா நெருப்பவனைச் சுடுவாள் என்றாள்
963 வாசலிலே கொடிகட்டி விட்டு மேலே
விரையவவள் தணிகைதன் படுக்கை சாயக் கூச்சலொன்று கேட்டதுமேற் றளத்தில் ஒடிக்
கண்டனனே மர்த்தனியை அழுதே சொல்வாள் “போச்சன்றோ! அத்தனையும் போயிற் றன்றோ!
பாவியெனைத் தவிக்கவிட்டுப் போனா ரன்றோ பேச்சில்லா விட்டாலும் புருஷனென்ற
பாக்கியத்தைத் தந்தவரும் போனார்’ என்றே
964
217
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 128
'நாமிருவர் தனித்திருக்கக் கண்ட தாலே
நேர்ந்ததிந்தக் கதிஜயோ! என்ன செய்வேன் ஏமாந்து போனேன்நான் என்றே என்னை
இழித்துரைக்கும் வாறெல்லாம் இழித்து ரைத்தே தாமாக ஒருவழியைத் தேடி என்னைத்
தேடாதே என்றெழுதி வைத்துள் ளாரே ஏமாந்த தவரல்ல நானே உங்கள்
இணையில்லா அழகாலே" என்றாள் இன்னும்
965 எழுதிவைத்த கடிதம்இதோ என்று தந்தாள்
எழுத்தெழுத்தாய்ப் படித்ததனை முடித்தே கண்கள் அழப்பொலியும் பொய்ப்புனலை மெய்யென் றெண்ணி
ஆதரவாய் நெஞ்சணைத்துத் தணிகை சொல்வான் “அழுதொன்றும் ஆகாது நான்சென் றுன்றன்
ஆருயிரைக் கொணர்கின்றேன்” என்ற வாறு பொழுதடையு மட்டுமவன் தேடி இல்லாப்
போதுமீண்டும் வீடுவந்து சேர்ந்திட் டானே
966 சுந்தரிகள் சூழ்ச்சி
வீடுவந்து சேர்ந்தவனின் கண்க ளுக்கு
வாசலிலே தொங்கியவக் கொடி யிலாது நாடியவள் வந்தனளோ என்றோர் ஐயம்
நெஞ்சத்தில் தோன்றிடவே உள்ளே சென்றான் ஓடிவந்து விபரங்கள் கேட்பா ளென்று
எண்ணினனே மர்த்தனியோ இல்லை உள்ளே வீடுவீடாய்க் குறிசொல்லும் குறத்திப் பெண்ணாள்
வீற்றிருந்தாள் தணிகைகண்டு எழுந்திட் டாளே
967 'யாரோநி” எனக்"குறத்தி" என்றாள் "உன்பேர்
என்ன"எனக் "கலா"வென்றாள் “மர்த்த ெைசால் பேராநீ "என"ஆமாம்" என்றாள் “ஊமைப்
பேர்வழியின் தங்கையென' "ஆமாம் ஆமாம் ஊர்தெரிய வேண்டாமோ உனக்கு" என்றாள்
உறுத்தியது வார்த்தை"எல்லாம் என்னைப் பற்றித் தேர்ந்திருப்பீர் போலுளதே என்றாள் மீண்டும்
துணிவோடு ஒருமையிலே பேசி னாளே 968
பண்டாரவண்ணியன் காவியம் 28

“என்னசற்றும் மரியாதை இல்லாப் பேச்சு”
என்றதுமே “எனக்கதுதான் பழக்க" மென்றாள் ”என்குலத்தோர் பேச்சதுதான் குறத்தி பேச்சை
இதற்குமுதல் கேட்டிலையோ' என்றாள் "உன்றன் முன்னோரும் குறக்குலமோ” என்ன ”என்றன்
மூதாதை பற்றியுமக் கெதுவும் வேண்டாம் அண்ணன்ஜெய சீலனைநீ அறிந்தால் போதும்
அரசாங்கக் கடமைக்காய்க் குறத்தி’ யென்றாள்
969 “எத்தனைநாள் குறத்திவேடம்" என்றான் “ராஜா
ஏவியநாள் தொட்டென்றாள் “அவ்வா றாயின் சத்தியமோ காக்கைவன்னி குகைக்குள் நீபோய்த்
திரும்பிவந்தாய் என்பதுவும்" என்றான் சொன்னாள் மர்த்தனிதான்' என்றான்யார் சொன்னார் என்ன
“மர்த்தனியோர் நல்லபெண்ணாள் என்றே கூற அர்த்தமொடு புன்னகைத்தான் தணிகை கண்டு
அவளுமதன் பொருளறிந்து விழுங்கிக் கொண்டாள்
970 "துப்பேதுங் கிடைத்ததுவா குறத்தி யார்க்குத்
துன்மார்க்கன் காக்கைவன்னிக் கோட்டைக் குள்ளே” "தப்பாது கொண்டுவந்தேன் பலநற் சேதி
செவிதந்தால் கூறிடுவேன் முற்றும் கேளும் அப்பாவிப் பயல்காக்கை நம்பிக் கொண்டான்
அசல்குறத்தி நானென்றே குறியுங் கேட்டான் இப்போது சுக்ரதிசை அவனுக் கென்றேன்
இன்னும்கில நாட்களுக்குள் வெற்றி யென்றேன்”
971 “விரைவிலவன் முல்லைக்கு மன்ன னாவான்
வந்தசில நாட்களுக்குள் கண்டி நாடும் சிரம்பணியும் அவனுக்காம்'என்றும் சொன்னேன்
சொன்னவிதந் தணிலதனை நம்பிக் கொண்டான் பொருந்தவில்லை உறவென்று அறிந்தோம் காக்கை
“ ‘பிரபுநோத்" இருவருக்கும் அதனை நன்றாய்த் தெரிந்துகொள்ளத் தான்சென்றேன் தெரிந்துங் கொண்டேன்
தந்திரமாய் நான்சொன்ன கதைக ளாலே
972
219
εξστ στιταχή αρδερόδσί

Page 129
“எப்படித்தான் முடிந்ததது என்றான் மீண்டும்
எடுத்துரைப்பாள் “கலாதனது திறமை தன்னைச் ”செப்பினேனே முல்லையவன் கைக்கும் கண்டி
சிரந்தாளும் என்றும்”அவன் கேட்டான் என்னை எப்படித்தான் முடியுமது என்றன் கையில்
இல்லாத படைபலத்தால் எனநான் சொன்னேன் ”ஒப்பிவிட்டார் 'நோத்பிரபு என்றால் உம்மை
ஒருநாளும் கைவிடவே மாட்டார்” என்றேன்
()/ “நம்பினனோ அதையும்” என்றான் “இல்லை சொன்னான்
நோத்பிரபு இன்றவனை ஏறெ டுத்தும் தம்பார்வை அவன்மீது படும்வா றாகச்
செய்வதில்லை என்றான்தான் கொழும்பு சென்று நம்பிக்காத் திருந்தானாம் பேட்டிக் காக
நடக்கவில்லை கிடைக்கவில்லை பேட்டி என்றான் தம்தேவை இருக்கும்வரை தூக்கித் தேவை
தீர்ந்ததுமே எறிந்திடுவார் நோத்"என் றாளே
97.1 சுயநலத்தின் காரணமாய் இனத்தின் மேன்மை சிறிதேனும் சிந்திக்காத் துரோகிக் கூட்டம் நயந்துமாற்றான் பதம்பணிந்து வெட்க மற்று
நடப்பதனை எண்ணிமனம் வேகு தென்றான் அயலவனை நம்புகின்ற அறிவு கெட்டோர்
அவனோடு பிறந்துண்டு வாழ்ந்த பேரைச் சுயமிழந்து போகாதே சேர்ந்து வாழத்
தெரியாதேன் போனார்கள் எனவும் நொந்தாள்
இத்தகையோர் தமக்கென்றும் இந்நி லைதான்
ஏற்படுமே ஏற்படவும் வேண்டும் ஒவ்வோர் புத்தியுள்ள தமிழனுமே இனத்தில் மண்ணில்
பக்தி கொண்டு செயல்படுதல் வேண்டும் என்றான் நித்தியமாய் நம்மினத்தோர் நமது மண்ணில்
நிலைபெற்றே இருப்பதற்குக் 'காக்கைக் கூட்டம் மொத்தமாக அழிந்தொழிந்து போக வேண்டும்
மாற்றாரும் உதைத்திவரைத் துரத்த வேண்டும்
976
uarirlfriya atafugai asatagugub 220

தணிகைமனம் நொந்துமன உணர்வு மீறச்
சொன்னதனைத் தடுத்துக்கலா சொல்வாள் என்னை இனங்காரே "நோத் என்று வருந்தும் காக்கை
இயற்றவொரு வழிசொன்னேன் செய்தால் நோத்தை இணங்கவைக்க லாமென்றேன் இணங்கிக் கொண்டான்
என்னவது அறிவாயோ என்றே சொன்னாள் கண்ணகியாள் கோயிலிலே தனியாய் மூன்று காரிருளில் தவமிருக்க வேண்டு மென்றே
977 தனித்துவரச் சொன்னதென்ன மர்மம் என்று
தணிகையுமோர் ஐயத்தைக் கேட்கச் சொல்வாள் இனத்துரோகி படையோடு வந்தால் தப்பி
இருப்பிடத்தை அடைந்திடுவான் தடுத்தே அன்னான் தனியாக வந்தாலே தணிகை காக்கை
தலைவாங்கத் தோதாகும் என்றாள் சற்றும் நினையாத திட்டமிது என்னை வைத்தே
நடத்தவிவஸ் நினைந்தாளென் றதிர்ந்திட் டானே
978 “என்ன”என்றான் விழிமடல்கள் விரிய நெற்றி
ஏற்றமுற்றுச் சுருங்கிடவே அவளுஞ் சொல்வாள் தன்னலங்கொண் டன்னியரைத் துதிக்கும் இந்தத்
துரோகிகளை அழிப்பதொன்றே நீதி என்றே பின்னரெங்கள் பாதையிலே இடுக்கண் தோன்றா
பின்நிற்க வேண்டாம்நீ என்றே கண்டி மன்னர்தம் ஆணையிது காக்கை வன்னி
மடிந்தொழிய வேண்டுமவர் விருப்பம் என்றாள்
979 காக்கைவன்னி செத்தொழிந்தால் பிறகு எங்கள்
கண்டியரின் படையோடு முல்லை வீரர் சேர்க்கையினால் வெள்ளையரை வீழ்த்தி நாட்டைச்
சீரியநா டாக்கிடலாம் என்றாள் கேட்டு நோக்காது வேறெங்கும் புலனடக்கி
யோகத்திலே இருக்குமொரு தவசிபோலத் தேக்கினனே சிந்தனையைத் தோளில் மெல்லத்
துவண்டசில மலர்களினால் திடுக்கிட் டானே
980
22
ஜின்னாவூர் ஷரீபுத்தின்

Page 130
எதிரிகளென் றாயிடினும் உள்நோக் கோடு
எனைக்கூடி எமைப்பற்றி அறிய எண்ணும் புதுயுக்தி தனைமுள்ளால் முள்ள கற்றும்
பாணியிலே பணிவதுபோல் பணிந்து வெல்லும் மதிநுட்பம் வேண்டுமெனுஞ் சமாதா னத்தை
மனத்திருத்தி மர்த்தனிபோல் கலாவும் சேர இதமாகப் பொழுதினையும் மெள்ள மெள்ள
ஏகவிட்டான் இருவருமே திருப்தி கொண்டார்
98 வேண்டும்நான் அண்ணனையும் மன்னி யையும் விழிநுகரச் செய்திடவே என்றாள் மேலே காண்பாய்நீ மர்த்தனியை என்ற வாறு
கட்டிலிலே உடல்சாய்த்தான் தணிகை மேலே கண்டனளே கலாவென்றும் பியசீ லீதன்
கூடவென்றிப் பவஞ்செய்யும் துணையை அன்னாள் கண்டதுமே கட்டியணைத் தவளைக் கேட்டாள்
காரியங்கள் வெற்றியென்றே ஆமாம் என்றாள்
82 இன்றா நாளையா ஏன்? 9 என்னதான் முடிவு என்றாள் இறுகத்தன் மார்ப ணைத்தே எண்ணிய வாறு எல்லாம் இயற்றினேன் வெற்றி யென்றாள் சொன்னனன் தனிகை காக்கை சிரங்களைந் திடுவேன் என்றே அன்னவன் சிரசைக் காக்கை அரியவும் சம்ம தித்தான்
983 எப்படிச் செய்தாய் இந்த ஏற்பாட்டைச் சொல்லேன் என்றாள் செப்பாது விடேன்நான் முன்னர் சொல்லுநீ ஜெயசீ லன்போய்த் தப்பினான் என்ப தைநீ சமாளித்த வாறும் என்ன ஒப்பிடச் செய்திட் டாயோ ஒததை என்றாள் ராணி
984 ஆண்களை வலையில் வீழ்த்தும் அரியவக் கலையில் நாங்கள் வீண்பேரோ இலையே வெற்றி வீராங்க னைக ளன்றோ காண்போரைக் கிறங்க வைக்கும் கட்டுடல் எமக்குக் காமன் தான்கூடத் தவமி ருப்பான் துணைகொண்டால் ஒருநாட் போதே
985 இந்திரன் கண்டி ருந்தால் அகலிகை எதற்காம் என்றே தந்திரம் செய்வான் உன்னைத் தழுவிட நானும் உன்றன் மந்திரம் அறிவேன் செய்யும் மாயமும் அறிவேன் ஒர்நற் சந்தர்ப்பம் தணிகை யைநான் சொல்வதை நம்ப வைத்தேன்
986
uairlfrgauaitatagai apata3uub 222

எத்தனை அழகி ருந்தும் எத்தனைத் திறனி ருந்தும் வித்தைகள் அனைத்தும் வீணே வன்னியன் பண்டா ரன்மேல் புத்திபே தலித்தேன் நானே பணியவைத் திடாது தோற்றுக் குத்தியே உயிர்ப றிக்கக் குறிவைத்தும் தோற்றேன் என்றாள்
987 மர்த்தனி உவமம் கூறி மிகைப்படப் புகழ்ந்த போதும் அர்த்தமே இல்லை என்றன் அழகினில் என்பாள் போல வருத்தமுங் கொண்டாள் ராணி வருவினை எதுவந் தாலும் கருத்தினில் கொண்டாள் செய்யக் கூறிய இரண்டில் ஒன்றை
988
“கணவனைக் காணேன் என்று கலங்கினாய் அதன்பின் என்ன" “கணவனைத் தேடி இங்கே கொணர்கின்றேன்" என்றே சென்றான் “கணவனைக் காணாச் சேதி கூறாதேன் விட்டான்' என்ன "கணவனின் தங்கை நீழுன் கண்பட நின்றாய் அ.தே"
989 நம்மைநாம் அறிந்த தொப்ப நமையவன் புரிந்து கொண்டு சும்மாவோர் நடிக வேடம் சுமக்கின்றான் என்று கூட அம்ம!என் மனத்தில் சின்ன ஐயமும் துலங்கு தென்றாள் வெம்மையைத் தேடி யோடும் விரகமெல் உடலாள் ராணி
990 அனுபவத் திருவே நீயே ஐயமுங் கொள்ள லாமோ அனுபவம் இலையோ ஆண்கள் அவசரம் பலவீ னத்தில் கனியிதழ் மாதர் கண்டால் கரைவரே தமையி ழப்பார் இனியிவன் தணிகை கூட எம்சுட்டு விரலுள் என்றாள்
991 காக்கையின் கூட்டில் எல்லாம் கைகூடிப் போன தென்றாய் காக்கையைக் கண்டா யாநி கூறதை என்றாள் தோழி காக்கையின் காவ லாளர் கோட்டைக்குள் செலத்த டுக்கக் காக்கைக்கு எந்தை தந்த கடிதத்தைக் காட்டி னேன்பின்
992 கண்டிராஜன் முத்தி ரைசேர் கணையாளி தனையுங் கூடக் கண்டதன் பின்னால் உள்ளே காவலர் கூட்டிச் சென்றார் கண்டேன்நான் மதுவைக் காக்கை காலிசெய் திடுதல் கிட்ட அண்டினேன் ஆண்வே டத்தை அகற்றினேன் அலறி னானே
993 அலறினான் பெயரைச் சொல்லி அதிபசி கொண்டே எச்சில் இலைகண்ட ஞமலி போன்றே எனைக்கண்டு வாய்பி ளந்தான் பலவாறும் எனைநான் ஈந்தேன் பாவமென் றனுதா பத்தால் சொல்லநீ இலையோ எங்கள் திட்டத்தைத் தோழி கேட்டாள்
994
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 131
தந்தையின் திட்ட மெல்லாம் சிறந்தவை என்றே ஒப்பிச் சொந்தமாய்த் தானி யற்றுந் திருப்பணி தனையுஞ் சொன்னான எந்தெந்த நிகழ்ச்சி உண்டோ எல்லாமே கொழும்புக் கன்னான் சொந்தமண் நலன்நோக் காதே சேதியாய் அனுப்பு வானாம்
() )*, முல்லையை வெள்ளை யர்க்கு முற்றுமே தாரை வார்த்து முல்லைப்பண் டார வன்னி மன்னனைக் கைது செய்ய எல்லாத்தி வழியி னாலும் இணைந்தவன் “நோத்"தின் நட்பை வெல்லவென் றெண்ணுகின்றான் வாழ்வின்மெய்ப் பயன. தென்றான்
()). “கண்டியைப் பற்றி ஒன்றும் கூறவே இலையோ’ என்ன கண்டிக்கோர் கழுகு எந்தை காக்கைதான் முல்லைக் கென்றான பண்டார வன்னி யன்கொள் பலத்தினை ஒடிக்கு முன்னர் துண்டிக்க வேண்டும் அந்தத் தணிகையின் தலையை என்றேன்
() () | இராத்தவம் செய்ய மூன்று இரவுகள் காக்கை மட்டும் வருவனென் றுரைத்துக் கொல்ல வழிசெய்வ தாகச் சொல்லி வரவைக்கத் தணிகை யாங்கே வந்ததும் கொல்வ தென்றும் ஒருவழி சொன்னேன் காக்கை ஒப்பினான் சம்ம தித்தான்
998 இன்னொரு சேதி காக்கை இவனென அறியா வன்னி மன்னனின் இளையாள் நல்லாள் மனத்தினைப் பறிகொ டுத்தாள் தன்னையோர் வணிக னென்று சொல்லியே நாச்சி நல்லாள் தன்னையோர் நாட கத்தால் தனதாக்கிக் கொண்டுள் ளானாம்
99) அதுவொன்றே போதும் தங்கை அண்ணனைப் பகைப்ப தற்கு விதிவசம் வந்த திந்த வாய்ப்பினைப் பயன்ப டுத்திச் சதிசெய்தால் தங்கை காக்கும் திருகோண மலையில் அண்ணன் அதிகாரம் அற்றே போகும் அவளும்நம் கையி லாவாள்
100() அதன்பின்னே பனங்கா மத்தின் ஆட்சியில் பண்டா ரன்தம் உதவியாய் இருக்குந் தங்கை ஊமைச்சி நாச்சி யாரின் பதவிக்கு உலைவைத் தன்னாள் பகைமையை அண்ண னோடு விதித்திடச் செய்வோம் அன்றேல் வாழ்வினை அழிப்போம் செய்தே
100 பண்டார வன்னி யன்தம் பலமழித் திறக்கை யற்ற பிண்டமாய்ப் போகச் செய்து பறங்கியர் சிறைய டைத்தால் கொண்டநம் எண்ண மெல்லாங் கடிதினில் சித்த மாகும் என்றனள் தலைவி தோழி இனிவெற்றி நம்கை யென்றாள்
1002
øíu-frge Jaitafuasi 35 srediuyub 224

கண்ணகிக் கோயி லுக்குக் காக்கையும் தணிகை வேறாய்த் திண்ணமாய் வருவர் நெஞ்சில் தாங்கிய வெறியில் எங்கள் எண்ணமும் வெற்றி யாகும் எனத்தோழி தலைவி நாங்கள் ஒன்றிரா வவனை யுண்டு ஒப்புவோம் நாளை யென்றாள்
தேவை நூறு வீரர்கள் 1003
புலர்ந்தது காலை என்றும் புரியாத வாறு தூங்கச் சிலிர்த்ததாம் உடலம் வெய்யோன் சுடர்படத் துடித்தெ ழுந்தான் அலுத்ததால் தேகம் தன்னை அறியாது துயின்றான் மீண்டும் வலுப்பெறக் கடமை எண்ணி விரைந்திட விரைந்திட் டானே
1004 முற்றுந்தன் கடன்மு டித்தே மேற்றளம் சென்றான் தன்னை முற்றுமே சொந்தங் கொண்டோர் மூடிய திரைக்குள் தம்மை முற்றுமே மூடி மாற்றார் முகங்காணா வாறே தூங்க முற்றுமே பாசாங் கென்று மதிசொலத் தணிகை நின்றான்
1005 வந்ததை உணர்ந்தும் யாரும் வராததாய் நினைந்தார் போன்றே பந்தியில் மாதர் தூங்கப் புரிந்துமே புரியா தோனாய்த் தந்தனன் குரல்க னைத்தான் திடீரென எழுந்தார் கண்டார் முந்தைய இரவு பாதி மஞ்சத்திற் பங்குற் றோனை
1006 “என்னஇக் காலை வேளை எங்குதான்” என்றார் ஒன்றாய் “என்னஇக் கேள்வி காக்கை என்கையால் சாவா னென்றே சொன்னது நீங்க ளன்றோ செயல்பெற வேண்டா மோநான் சொன்னதைச் செய்யத் தானே செல்கின்றேன்” என்றான் கேட்டார்
1007 "துரோகியாம் காக்கை வன்னி தொலைந்தனன்” என்றார் ஒன்றிச் சரியென்றார் வாழ்த்தி னார்கள் 'சென்றுநீர் வருக வென்றார் வருகிறேன் என்ற வாறே வாயோரம்நகைய ரும்பப் பரிதனில் பறந்தான் வேகம் பார்ப்பவர் அறியா வாறே
1008 தலைகொணர் வானோ அன்றித் தலையற்று மீளு வானோ தொலைந்தனன் தணிகை எங்கள் திட்டத்தில் தோற்றான் என்றே நிலைபெற அவர்கள் மாற்று நினைவொடு தணிகை சென்றான் சிலமணித் துளிகளுள்ளே சேர்ந்தனன் மாளி கைக்கே
1009
225
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 132
தணிகைவந் துற்றார் உங்கள் தரிசனம் வேண்டி யென்றே உணவினைத் தந்து கொண்டே உரைத்தனள் குருவி நாச்சி வணக்கமென் றுரைத்த வாறே வந்தனன் தணிகை மன்னன் இணக்கத்துக் குரியோன் என்ற இணக்கத்தால் உள்நுழைந்தான்
() என்னதான் சேதி சொல்லேன் என்றனன் மன்னன் கேட்டே என்றனுக் குதவி யொன்றும் இசைந்திட வேண்டு மென்றே சொன்னனன் என்ன வேண்டும் சொல்லெனச் சொல்வான் வேண்டும் என்னையோர் சிறுப டைக்காய் ஏற்றிடத் தலைமை என்றான்
() வினாவிழி எங்குந் தோய வன்னியன் குருவி நாச்சி தனைவிழித் தானே யொன்றுந் தேரிலா னாக “நீங்கள் எனையுமோர் ஒற்ற னாக உடன்மெய்யின் காப்போ னாக நினைவது போலும் இன்றோர் நியமனம் வேண்டும்” என்றான்
(). என்னதான் சொல்கின் றாய்நீ எதற்கிந்தப் பதவி வேண்டும் சொன்னாலே புரியும் என்னச் சொல்கிறேன் பின்னே முன்னர் என்னொடு நூறு வீரர் இணைந்தேகப் பணித்தல் வேண்டும் என்றுமே வார்த்தை மீறி இயம்பிய திலைநான் என்றான்
10 காரணங் கூறி டாது கேட்கிறான் தணிகை நூறு வீரரைக் குருவி ஈதென் விசித்திரம் என்றான் மன்னன் காரணம் இலாது கேட்கக் காரணம் இலைநான் முன்னர் கோரிய பணிக்காய் என்றே குருவியும் நினைந்தே சொல்வாள்
1014
தணிகையொன் றுரைத்தால் அ.தில் தணிக்கையும் வேண்டு மோநற் பணிக்கன்றி வேறெதற்குப் படை வேண்டும் என்பார் கொண்ட பணியது முடிந்த பின்னர் பொருளறிந் திடலாம் என்றாள் துணைகொண்டுந் துணைகொ ளாத தூயவள் குருவி நாச்சி
10 15 வெள்ளையர் கூட்டம் ஏதும் வருவதாய் அறிந்தோ சென்னி கிள்ளிடத் துணிந்தாய் என்று கேட்டனன் வன்னி என்றும் கொள்வதே இல்லை நானுங் கேடான வழியை என்றே உள்ளத்தின் துணிவி னோடே உரைத்தனன் குருவி நோக்கி
10 6
uætv-/ríj-) at ofu sí a5/r-Suti 226

‘என்பணித் தேவை என்ன என்பது புரியும்'என்றே முன்புறம் நின்ற நாச்சி முகம் நோக்க "அவ்வாறாயின் என்மட்டும் மறைப்ப தென்ன” என்றனன் குருவி நோக்கிச் சன்னமாய் உரைப்பாள் இட்து தேவையில் வன்மை என்றே
1017 “காரணம் எதுவா னாலும் காரியம் இல்லை நூறு போர்வீரர் தம்மை வேண்டும் போதினில் தருவாய்” என்ன தேராத வாறு கண்ணால் தொடர்ந்துவா என்ற வாறே ஒரமாய்ச் சென்றாள் நாச்சி உடன்சென்றான் தணிகை பின்னே
1018
செவிவாங்க மாட்டாத் தூரஞ் சென்றாலும் கேட்கு மென்றே செவியோரம் சொற்கள் வீழ்த்தித் தணிகையைக் குருவி நாச்சி அவ்வளவு வீரர் ஏனாம் அதிகமே என்றாள் மெல்லச் செவியோரம் பணிந்தே ஏதோ சொல்லினன் செவிகொண் டாளே
1019
எல்லாம் நன்மைக்கே
எண்ணிய வாறு நூறாய் இளம்பல சாலி வீரர் கொண்டனன் தணிகை கூட்டிக் காடொன்றுள் நுழைந்தான் ஆங்கே தன்னொடு வந்த அன்னார் செய்வது என்ன வென்று முன்னமே சொல்லி வைத்தான் மாற்றுருக் கொண்டிட் டாரே
1020 போருடை மாற்றித் தாமோர் பக்தர்கள் கூட்டம் என்றே வேறுருக் கொண்டார் தம்கை வாட்களை மறைத்துக் கொண்டார் நீறணிந் தார்கள் நெற்றி நிறையவே உடல மெல்லாம் கூறிட்டே அரைத்த மஞ்சட் குழம்பினைப் பூசிக் கொண்டார்
1021 சிறுசிறு குழுக்க ளாகச் சேர்ந்தேயவ் வீரர் சென்றே மறுபடி கோயிலுள்ளே முன்போலும் ஒன்ற வேண்டும் சிறுபொழு தழிய ஆங்கே தணிகையும் வந்து சேர்வான் இறைதுதி செய்வான் காக்கை இறைபக்தி இதய மற்றே
1022 தனித்துமே வாரான் காக்கை தவஞ்செயக் கோயி லுக்கே தனித்தவன் இருக்க விட்டுத் தாம்சுற்றி மறைந்தி ருப்பர் நினைத்ததுவும் அழைக்க வீரர் நாடிடக் கொல்வா ரென்றே தணிகையும் நினைந்தான் ஏற்ற துணையொடு சென்றிட் டானே
1023
227
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 133
(მძნT6ზ6Ü(86)Jm பிடிக்க வோஆங் குற்றவர் தம்மை ஏய்த்து முல்லைக்குக் காக்கை யைத்தம் முயற்சியால் கொணர்வ தென்பே சொல்லிவைத் திருந்தான் வீரர் செயல்பெறத் தொடங்கினார்கள் சொல்லினார் பாடல் தெய்வத் திருவடி யார்கள் போன்றே
(). நினைந்ததின் மேலாய் வீரர் நடந்தனர் தணிகை தானும் நினைந்தது நடக்கு மென்ற நம்பிக்கை கொண்டான் தன்னால் வணைந்தவத் திட்டம் மற்றோர் வினைதரும் எனஅறிந்தால் புனைவனே வேறு வாகாய்ப் படைத்தவன் திட்டம் வேறே
()'' இதனிடை தணிகையோடும் இரவினைக் கழித்த பெண்கள் கதிதனைத் தொடர்ந்தார் தாங்கள் திட்டமிட் டிருந்த வாறே விதியதோ என்னும் வாறாய் ந்திருந் தாளே முல்லைப் பதிநல்ல நாச்சி அண்ணன் பாசத்தால் காண வென்றே
1() அண்ணனைக் காண நல்லாள் ஆங்குவந் துற்றாள் என்னும் உண்மயை அறிந்தே திட்டம் உருப்பெறச் செய்தார் பெண்கள் நன்மைக்குத் தெய்வம் கூடத் துணைசெய்த பாங்காம் அ.து மன்னவன் பதிவிடுத்து மற்றொரு பதயிருந்தாள்
() ) எங்குற்றாள் நல்ல நாச்சி என்பதை அறிந்து வைத்தே அங்குசென்றாளே கண்டி அரசனின் மனயாள் தம்மின் பொங்குபேரழகை முற்றும் புதைத்தனள் குறத்திக் குள்ளே சங்கையும் மானம் நாணம் துறந்தவள் ‘கலாவென்றானாள்
வாசலில் நின்ற வீரர் வழிதனை மறிக்கச் சொல்வாள் பேசிட வேண்டும் நாச்சி பேராபத் தொன்றிலுள்ளார் கூசாது பொய்சொன் னாலும் குறத்தியை நம்பும் வாறாய் வேசத்துக் கேற்ற வாறே வரித்தனள் நடிப்பைத் தீயாள்
102) அவசரம் சேதி யென்றே அவள்படும் பாட்டைக் கண்டே அவசரச் சேதி யென்றாம் அரசனின் நங்கை காதில் அவசரப் பட்டார் வீரர் அழைத்துவா என்னச் சென்றாள் அவசர மாக உள்ளே அவள்வர என்ன என்றான்
103() யாருநீ? என்றாள் நல்லாள் என்பெயர் 'கலா’வென் றாள்நான் யாருமே யற்றுச் சேதி இயம்பிட வேண்டு மென்றாள் யாருமே இலாது செய்தே என்னதான் சேதி யென்ன யாருமே சொல்லாச் சேதி இயம்பிடத் துடித்திட்டாளே 103
பண்டாரவண்ணியல் தி 228

”குறிசொல்லப் போனேன் உன்றன் கணவனாய் வரப்போ கின்ற குறியொடு காத்தி ருக்கும் கோடிப்பொன் தனவந் தர்இல். . . ” குறிகாரி பேச்சைச் சற்றுக் குறைத்தனள் வேண்டு மென்றே குறிப்பறி யாது நல்லாள் கொதித்தனள் அச்சங் கொண்டே
1032 "அவசரம் அதனால் என்ன அதைமுதற் சொல்நீ பெண்ணே அவருக்கு என்ன” என்றே அலறிடச் சொல்வாள் "அ.தே எவருக்கும் நடக்கக் கூடா தொன்றெனக் கூறி மீண்டும் அவள்முகம் பார்த்தார் நல்லாள் அழுநிலைக் காகி னாளே
1033 சொல்லடி என்றாள் நெஞ்சஞ் சினந்திடத் தோளு லுக்கிக் கொல்லாதே என்ன எல்லாங் கூறடி என்றாள் கேட்டு 'நில்லம்மா இதுவரைக்கும் நிகழ்ந்ததோ ஒன்றும் இல்லை சொல்லொணா தெப்போ துன்றன் துணையுயிர் அழிய மென்றே”
1034 காய்ச்சிய இரும்புக் கோலைக் காதினில் நுழைத்த தொப்ப வாய்ச்சொலால் தீய்ந்தாள் வார்த்தை வராதுமே துடித்தாள் ஒட்டிக் காய்ந்தநா உன்னி மீண்டுங் கேட்டனள் உயிருக் கென்ன ஏய்த்திடா தென்னைச் சொல்வாய் என்றுமே பதறி னாளே
1035 “கைதனை நீட்டி என்னைக் குறிசொல்லச் சொன்னார் என்னால் பொய்சொல இயலா துண்மை பகர்ந்திட்டேன் கேட்ட தாலே மெய்யாய்நான் அன்பு கொண்ட மாதினைக் கரம்பி டிக்கச் செய்யுமோ விதியென் றென்னச் செப்பினேன் உண்மை’ என்றே
1036 கரம்பற்ற இயலா தென்றேன் காரணம் கையிலுள்ள இரேகைகள் சொல்லு தென்றேன் இடிதலை வீழ்ந்த தொப்பக் கரத்தினை விடுத்துக் கொண்டே கலங்கினார் விடிவு சொல்ல இரந்திட மாற்றாய் ஒன்று இயம்பினேன் சரியென் றாரே
1037 “எண்ணுவ தியற்ற வேண்டின் இராமூன்று தனிய னாகக் கண்ணகி கோயில் சென்று கடுந்தவஞ் செய்வாய்” என்றேன் “எண்ணம்போல் என்னாள் வந்தே எனைமணம் முடிக்கா விட்டால் கண்ணகித் தாய்முன் என்றன் கண்டத்தை அரிவேன்’ என்றார்
1038 உயிரினைக் காக்க வேண்டின் உடனங்கு நீங்கள் சென்றால் செயலொன்றைத் தடுத்து வாழ்வின் துணைகொள்ள வாய்ப்பும் உண்டாம் பயந்திட இதுகால் ஒன்றும் போயிரா தென்றாள் கேட்டே வயமிழந் தாளே தன்னை விரைத்தனள் கோயி லுக்கே
1039
229 ஜிண்ணாவூர் ஷரீபுத்தின்

Page 134
கணையாழி மாற்றிக் கொண்டனர்
கண்ணகிக் கோயிலின் கர்ப்பக் கிருகத்தைக்
கடந்தமுன் மண்ட பத்தில் கண்களை மூடியே கடுந்தவம் இயற்றிடும்
கடவுளின் பக்தன் போலும் கண்களை இடையிடை திறந்துமே மூடிய
கோலத்தில் காக்கை வன்னி எண்ணத்தில் கொலைவெறி கொண்டுமே இருந்தனன்
இருள்கொண்ட மனத்தி னானே
காவடி கரகங்க ளோடுமே பக்தர்கள் கோயிலுள் நுழைய லானார் காவலின் படையினர் அவரென்று அறிகிலான்
காக்கையும் கண்கள் மூடிக் காவலன் பக்தியின் போலுமே இருந்தனன்
கோயில்பூ சாரி கையில் காவலர்ப் பக்தர்கள் காணிக்கை தந்துமே
கைகூப்பி வணங்கி நின்றார்
பக்திமான் போலவே பாசாங்கு செய்திடும்
பவவினை நெஞ்சி லுற்றோன் பக்கத்தில் வந்துமே பொய்யாக வார்த்தைகள்
பகன்றனர் பக்த ரானோர் “பக்தியில் மிக்கவோர் பெருமகன்’ என்றுவாய்
பொழிந்திட பதங்கள் தொட்டுப் பக்தியின் மேன்மையைப் புரிந்தவர் போலுமே
பணிந்திடம் பெயர்ந்து சென்றார்
காக்கையின் நோக்கினில் காணாத வாறுமே
கண்களால் பேசி னார்கள் ஏய்க்கிறோம் இவர்களை என்றுமே எண்ணத்தில்
இவனையே இவனும் பொய்யாய் ஏய்க்கிறான் காக்கைதான் எங்களின் நோக்கினில்
இலக்காக இருக்கும் கொடியோன் வாய்க்குளே மந்திரம் முணுமுணுத் தானவன்
வந்தவர் நம்பும் வாறே
()4()
104
1042
1043
uaorul Argau asiasifuair aos fra Suyub
230

ஆலய வாசலில் அமர்ந்தவப் பக்தர்கள்
ஆகார முடிச்ச விழ்த்தே நாலைந்து பேரென நகர்ந்தனர் தனித்தனி
நாருசித் துண்ண லானார் வேலொடும் வில்லொடும் வாளொடும் ஒருகூட்டம்
வளைந்ததக் கோயில் சுற்றி வேலென விழிஇமை வாங்கிடா வாறுமே
வாசலைப் பார்த்தி ருந்தார்
1044 தலைவனாய் இருந்தவன் கூறுவான் "ஈண்டொரு
சோற்றுப்பட் டாளம் வந்தே அலையுது அம்மனுக் கஞ்சலி செலுத்தியே
அகன்றிடும் எதற்கும் நாங்கள் அலையாது விழியவர் மீதிலும் பதித்திடல்
அவசியம் என்று ரைத்தான் சிலைபோலும் பிறரறிந் திடாதுமே ஒளிந்தவர்
சரியெனத் தலைய சைத்தார்
1045 கூட்டமாய் ஒழிந்தாங்கு இருந்தவர் காக்கையின்
காவலுக் காக வந்தோர் கேட்டனர் குதிரையின் குளம்பொலி கூடவே
கோயில்வாய் இருந்த பேரும் கேட்டனர் குதிரையில் தணிகைவந் திறங்கினான்
கோயில்பூ சாரி வந்தார் வீட்டுக்கு ஓடிடும் விரைவாக என்றனன்
விபரீதம் நடக்கு மென்றே
1046
பூசாரி போனதும் கோயிலின் வாசலின்
பக்தர்கள் தம்மை நோக்கி “யாசகக் கூட்டமே ஈங்கிருந் தோடுங்கள்
ஏனிங்குக் கூட்டம்” என்றான் பேசாதே அனைவரும் போயினர் புதரண்டை
பதுங்கிய வீரர் முன்னே பேசினர் இவனென்ன பித்தனோ பக்தரைப்
போவென்று விரட்ட வென்றார்
1047
23
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 135
பின்னாலே ஒளிந்துள்ள பேர்களின் செவிகளில்
பதியவே பேசி னார்கள் அன்னாரும் இவர்களைப் பக்தரென் றொப்பவே
அதுகூட வாசல் கண்டார் தன்பாத அணிகளைப் களைந்துபின் கோயிலுள்
தணிகைமலை உள்நுழைந்தான் தன்னைவிட வேறெவரும் காக்கையொடும் இல்லையெனத்
தீர்க்கமாய் நினைந்து சென்றான்
(), is கண்ணகிப் பக்தனாய்க் கண்மூடி இருந்தவக்
காக்கைதன் கண்ணி னிமைகள் கண்காணா வாறுமே குறுகத் திறந்தங்கு
கோயிலுட் புகுந்த தணிகை கண்படத் திரும்பவுங் காரிருட் பெட்டகக்
கண்ணிமையுள் ஒளிந்து கொள்ளக் “கண்ணகி முன்காக்கை கடுந்தவம் இயற்று” தெனக
கேலியாய் தணிகை உரைத்தான்
104) ஒன்றுமே சொல்லாதே ஊமையாய் இருந்தனன்
ஒருதட்டுத் தோளில் தட்டி “என்னநான் பேசுகையில் ஏதுமொன்று பேசாதே
இருக்கின்றீர் காக்கை” என்றான் சொன்னவாய் மூடுமுன் திடீரென விதானத்தில்
தமைமறைத் திருந்த வீரர் முன்னாலும் பின்னாலும் மும்மூன்று பேரென
முன்வந்தார் பிணைத்தெடுத்தார்
1050 சுற்றியே வளைந்தவர் தணிகையைச் சட்டெனச்
சங்கிலி யாற்பி ணைத்தார் தற்பாது காப்பினுக் கெண்ணவும் இயலாதே
துரிதமாய் இயங்கி னாரே ஒற்றையாய் வந்திருந் தாலவர் அறுவரில்
ஒருவரும் எஞ்ச மாட்டார் சொற்களால் உள்ளத்தைத் துளைத்தனன் காக்கையும்
தணிகையை நெருங்க லானான்
1051
பண்டாரவன்னியண் காவியம் 232

“என்னப்பா தணிகையுன் கேள்விக்குப் பதிலிப்போ
தெப்படி இருக்கு” தென்றான் வன்னிக்கு மன்னனென் றெண்ணிடும் பண்டார
வன்னியன் நிலைமை என்ன வன்னியில் இனியவன் வரலாறு முடிந்தது
விபரத்தை எடுத்துச் சொல்வாய் என்றவன் சொல்லுவான் எப்படிச் சொல்லுவாய்
இன்றொடும் இலாது போனால்
1052 சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் துடைப்பதே நல்லது
தெரிந்திடு நானும் உங்கள் சூழ்ச்சியை அறிந்துதான் வந்தனன் உங்களின்
சூரத்த னம்தான் எங்கே சூழ்ச்சியின் முதற்கட்டம் சூழ்ந்துனைப் பிடிப்பதே
செய்திட்டோம் நீங்கள் செய்த சூழ்ச்சிக்கு நடந்தது தோல்வியே காக்கையைத்
தூசாக மதித்தி ரென்றான்
1053 கன்னத்தில் ஒர்தட்டுத் தட்டினான் நெருப்பெனக்
கொதித்தாலும் செய்வதறியாது இன்னலில் மாட்டினான் எதிர்பாரா நிகழ்வென
இதயத்தால் நொந்து போனான் முன்னமே வந்தவர் மதியற்றுப் போனதால்
முறையாக நோக்கி லாதார் தன்னையும் நொந்தனன் தான்விட்ட தவறெனத்
தணிகைவாய் ஊமை யானான்
1054 கொண்டுபோய்க் கோயிலின் கொடிமரந் தன்னிலே
கட்டுங்கள் இவனை நன்றாய்த் தன்டிட்டு வாயையுங் கட்டுங்கள் ஈண்டிவன்
தப்பிட இடந்த ராதீர் கன்றினை இழந்தவோர் பசுவென வருவளென்
காதலி நல்ல நாச்சி இன்றெங்கள் திருமணம் இங்கதான் காணிக்கை
இவன்தலை யாகு மென்றான்
1055
3
ஜிண்ணாஜர் ஷரீபுத்தீன்

Page 136
பிடியுண்ட தணிகையைப் படையினர் கொணரவே
பதறினர் பக்த ரானோர் செடிபுதர் மரங்களுக் கிடையொளிந் திருந்தவர்
சந்தோஷக் குரல்கொ டுத்தார் உடனவர் தனைமுதற் துணிகையும் பின்னவர்
ஒன்றிய தலைவ னாலும் அடங்கினர் அமைதியுள் ஆங்கொரு புரவியின்
அடியொலி செவிபுணர்ந்தார்
பதம்படா வானிலே பறந்ததோ பரியெனும்
பாங்கிலே பறந்து வந்தே பதம்படாப் பாங்கிலே பறந்தனள் பரிவிட்டுப்
பார்த்தவர் பார்த்தி லாரே பதம்பட்ட பக்தனின் பாங்கிலே கோயிலுள்
பாசாங்கு செய்து காக்கை பதம்படக் கேட்குமொலி செவியுறக் கண்களைப்
பாதிதிறந்த தருளி னானே
பொய்யினை மெய்யென்று பற்றிய தாய்மனம்
பதறியே காக்கை அருகில் மெய்யாகப் புலம்பினாள் ‘மாதவங் கெட்டதே
மங்கையைத் தொட்ட ணைத்தே வையமே இருண்டது வராதுநீ போயிடில்
வாழ்வுமே அழிந்தி ருக்கும் பொய்யிலை நீகொண்ட அன்பென்றன் மீதிலே
பாக்கியம் பெற்றேன் என்றான்
ஏனுங்கள் இன்னுயிர் இழக்கத் துணிந்ததேன்
என்னையுங் கொல்லும் நினைவோ நானுங்கள் உயிரென நீங்களென் னுயிரென
நாமிரண் டென்றொன் றானோம் தேனன்றோ வாழ்வுநாம் தேர்ந்தொன்றி வாழ்ந்திடில்
தேராத தேனோ என்றாள் ஞானஒளி கொண்டபெரும் பக்தனைப் போலவே
நவிலுவான் காக்கை பொய்யே
()'
10 Հ |
1058
1059
uørv_/rg-2 &í stu si &/r-Sulti
2
3
4

உன்னையே உயிரெனக் கொண்டவன் நானென
உணர்ந்திருந் தாயே ஆனால் என்னைம ணப்பதில் எள்ளள வேனும்நீ
இதயமே இலாதி ருந்தாய் இன்னுமா பொறுப்பது என்றுள்ளம் வெறுத்ததால்
இவ்வாறு முடிவு கொண்டேன் என்னைநீ மன்னிக்க வேண்டும. தோடின்றே
எனைமணந் திடுவா யென்றான்
1060 அண்ணனின் வேலைகள் அதிகமே அவரைநான்
அவசரஞ் செய்ய வில்லை என்னுடன் பிறந்தாலும் பொறுசில காலம்நீ
என்றனள் தானே சென்றாங்கு அண்ணனின் சம்மதம் பெறுகிறேன் எனவுமே
அடங்காமல் அடங்கி வாழ்ந்தேன் இன்னிலை வருமென எண்ணினேன் இல்லையே
என்பிழை பொறுங்க ளென்றாள்
1061 இப்போதும் நானென்றன் முடிவினை மாற்றிட
எண்ணிடேன் அம்மன் முன்னே தப்பாது காந்தர்வத் திருமணம் நடத்திடத்
துணிந்திட்டேன் இதற்கு நீயும் ஒப்பாது போயிடில் உயிரினை மாய்த்திட
ஒருநொடி தவிர்க்க மாட்டேன் செப்பிடுன் பதிலெனச் சொல்லியே கைவாளைத்
தூக்கினான் நெஞ்சில் வைத்தான்
1062 நெஞ்சினில் வைத்தவாள் நின்றதும் நின்றதே
நூலேனும் பதிய வில்லை அஞ்சியே போயினள் அனைத்துமே பொய்யென
அறிகிலாள் நல்ல நாச்சி கெஞ்சினாள் கைகொண்ட வாளினைப் பறித்தனள்
கவலழித் திடுங்க ளென்றாள் நஞ்சினை உண்டிட நாயகி ஒப்பினாள்
நடந்ததே நினைந்த வாறே
1063
235
ஜிண்ணாஜர் ஷரீபுத்தீன்

Page 137
பூரித்துப் போயினன் பிரும்மா னந்தனும்
பாய்ந்தவள் தனைய ணைத்தான் தேரிலான் கண்ணகித் தேவியின் தலமெனச்
சூழ்ச்சியின் வெற்றி கண்டான் யாருமே இலையாங்கே இணைந்ததாய்க் கணையாழி
இருவரும் மாற்றிக் கொண்டார் ஊரறி யாதவத் திருமணம் கண்ணகி
உருவின்முன் நடந்த தன்றோ
கணையாழி மாற்றிய இருவருங் கைகோத்துக்
கோயில்வாய் வருதல் கண்டே பிணையுண்டு மரத்திலே கிடந்தவன் கொதித்தனன்
பவமொன்று நடந்த தென்றே இணையாக வந்தவவ் விருபேருந் தணிகைஆங்
கிருந்தவிடம் நோக்கக் காக்கை எனைக்கொல்ல வந்தவன் இவன்பிடி யுண்டனன்
என்றனன் சுட்டி நின்றான்
முகத்திரை கிழிந்தது
வார்த்தைகள் வாய்விடுத் தகன்றது மட்டுமே
வந்ததோர் கூட்டமும் முன்னர் பார்த்தவப் பக்தர்கள் கூட்டமே வேறிலர்
போர்க்கலத் தோடுமே வந்தார் கோத்திரு விமைகளை விடுத்திடு பொழுதினுள்
காட்சிமா றுண்டுமே போகப் பார்த்ததும் பதறினான் காக்கைதன் நிலைமையைப்
புரிந்தனன் துரிதமும் உற்றான்
முல்லையின் வீரர்கள் முந்திடும் ஆபத்தை
மின்னலுள் உணர்ந்துமே ஆங்கே இல்லாமை போலுமே இருந்ததன் வீரரை
இருப்பிடம் மாற்றவும் அழைத்தான் வல்லமை மிக்கதோர் படையொடு தணிகையும்
வந்திருந் தனனேயாம் அதனால் வெல்லுவார் யாரென விளங்கிடா வாறுமே
வலுத்ததோர் சண்டையும் அம்ம
1064
1065
1066
1067
uaorul rurauakafuair araSulub
236

சீவுண்ட சிரசுகள் சிதறின எங்கனும்
சிரசற்ற முண்டங்கள் வேறாய்ச் சாவுண்டு புரண்டன கைகளும் கால்களும்
தெறித்தன வெட்டுண்ட தாலே சோவென்று சொரிந்ததே குருதியும் நிலமெலாம்
சேறாகிப் போனதே கூற நாவுண்டோ நடப்பதை நினைந்திடாப் போதிலே
நிகழ்ந்திடும் கோரமீ தந்தோ
1068 வாளொடு வாட்களும் வேலொடு வேல்களும்
வாளொடு வேல்களும் வேறாய்த் தோளொடு தோள்களுஞ் சேர்ந்தொன்றிப் பொருதின
திக்கெலாம் குவிந்தன பிணங்கள் ஆளையாள் கொல்வதும் அறமென்ற போரினில்
ஆளையாள் கொன்றனர் அழிவே வாழுநாள் குறுக்கிட வாள்களே எமனென
வந்ததோ களத்திடை எனுமால்
1069 காய்த்துப் பழுத்ததைக் களைந்திட ஆளிலாக்
காரணத் தால்நிலம் வீழ்ந்து போய்க்கிடக் கின்றதோ குவியலாய்ப் பனங்கனி
போலுமே தலைகளும் ஆங்கே சாய்த்துக் கிடத்திய தூண்களாய் உடல்களும்
செறிந்ததக் களத்தினில் ஈற்றில் வாய்ந்திடும் யாருக்கு வெற்றியென் றெண்ணிட
வாகிலா வாறுபோர் தொடரும்
1070 என்னதான் ஈதென அறிந்திடற் கின்றியே
இருந்தனள் காக்கைகைக் கொண்டாள் வன்னியன் படையொடு வந்திங்கு பொருதிடும்
வேற்றவர் யாரென அறியாள் தன்னையே விரும்பிடும் பிரும்மா னந்தனைத்
தற்கொலை தனிலிருந் தகற்றித் தன்னையே தந்திடத் தணிந்தங்கு வந்தவள்
தோன்றிய நிலைகண்டே அதிர்ந்தாள்
1071
237
ஜிண்ணாஜர் ஷரிபுத்தின்

Page 138
மோதிடும் இருபடை தனிலொன்று காக்கையின்
மற்றொன்று பண்டாரன் என்றே ஒதினான் காக்கையே பிரும்மா னந்தனாய் உருமாறிக் கடிமணம் புரிந்தோன் ஈதென்ன புதிரெனும் ஐயமுந் தோன்றிட
ஏகிட முனைந்தனள் தணிகை மீதுள கட்டினை அவிழ்க்கவே நல்லாளை
மறித்துடன் பிடித்தனன் காக்கை
தணிகையை ஏன்கட்டுள் போட்டுளார் அண்ணனின்
துணையான ஒற்றராம் அவரே எனக்கொன்றும் புரிந்திட இயலாது உள்ளதே
என்னவிக் கோலமும் என்றாள் தணிகையா, அண்ணனின் ஒற்றனா எனக்கெங்கு
தெரியும. தென்றனன் உள்ளே உனக்காகத் தவஞ்செய்யும் போதிலே எனக்கவன்
உபத்திர வஞ்செய்தான் என்றான்
போரிடை கேட்டிடும் பெருங்கூச்ச லிடையிலே
பிரும்மா னந்தனை நோக்கிப் போருக்கும் ஈண்டுங்கள் பேருக்குந் தொடர்பென்ன
புகலுக என்றனள் சொல்வான் போருக்கும் எனக்குமோர் தொடர்பிலை இவர்களேன்
பொருதவென் றிங்குவந் தாரோ யாருக்குந் தெரியாது இங்கிருந் தோடுவோம்
எங்கேயுன் பரியென விழித்தான்
எதற்காகக் குரலிட்டுச் சைகையும் செய்தீர்கள்
என்றனள் காக்கையும் சொல்வான் எதற்கிண்டே இருப்பதாம் இருபடை பொருதிட
இடையினில் நாங்களென் றுரைத்தான் குதிரையை வரும்படி கூவிநான் அழைத்தேனென்
குதிரையிக் களத்தினுள் வருமோ? இதனிடை தரித்திடில் எமதுயிர் தரித்திடா தென்றவள் கரம்பிடித் தகன்றான்
1072
1073
1074
1075
uæirv_srg-Varafuat as/r-Sultið
238

கொடிமரத் தடியினில் தணிகையின் கைகளின்
கட்டவிழ்த் திட்டனர் வீரர் கடிதினில் கைகொண்ட வாளொடு சுழன்றனன்
கைகால்கள் தலையெனக் குவித்தான் மடிந்தபேர் கிடந்திட மற்றவர் ஓடினார் மறித்தவர் தமைப்பிடித் தரிந்தான் இடமிலா வாறுமே எங்கணும் பிணம்விழ
எஞ்சியோர் தனைத்தனித் தெதிர்த்தான்
1076 ஆடுடைக் கூட்டத்தில் அரிநுழைந் திட்டதோ
அறுவடைப் பயிரிடை வராகோ காடிடைக் குரங்கின் கைபடு நறைகொள் கூடெனப் படையதோ தணிகை வேடுவன் கரங்கொள் வில்லிடைப் பட்டது வாறென உயிர்களைந் திட்டான் தேடுவாரற்றே ஓடிடுங் காக்கை
தனையுமோர் கண்ணுளே வைத்தே
1077 காக்கையின் தளபதி காத்திடத் தலைவனைக்
கொண்டனன் வலுச்சமர் தணிகை தேக்கிடா துயிரைத் தூலத் திருந்தே துரத்திட முயன்றனன் எங்கு நோக்கினும் அங்கெலாம் நின்றனன் அவனெனும்
நிலையினில் சுழன்றனன் வேங்கை தாக்கிய தொக்கவே கணத்தினுள் அழிந்தனர்
தணிகைமுன் வந்தவ ரெல்லாம்
1078 தணிகையின் முன்னே தரித்தொரு சிலநொடி
சமர்க்களம் நின்றனன் என்ற கணக்கினில் வந்தவன் கூடியவ் வொருவனே
காக்கையின் தளபதி என்பான் பிணக்கடலிடையிடை பாய்ந்தாங் கீங்கெனப்
பொருதின ரிருவரும் எனினும் அணைப்பவன் அவனே அறுதியில் மரணம்
அறிந்தவர் தாமறி வாரே
1079
239
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 139
வீசினான் வாள்தலை வேறுண்டு வீழவே
விவேகமாய்த் தணிகைதன் தலையை நீசனின் தளபதி நிலைதடு மாறவே
நிலம்நோக்கிப் பணித்தனன் மீண்டும் வீசினான் கரம்புயம் விட்டகன் றிடவென
வில்லென எதிர்ப்புறம் வளைத்தே நாசகன் தளபதி நிமிர்ந்திட வாளவன்
நெஞ்சினைத் தளைத்திடச் சரிந்தான்
கண்விட்டு மறைந்தாலும் காக்கைசெல் திசையினைக்
கண்டதால் தணிகைதன் பரியில் விண்டனன் வளியையும் விஞ்சிடு வானெனும் வேகத்தில் தொடர்ந்தனன் தனித்தே கொண்டனள் ஐயமே குதிரையில் பறக்கையில்
காக்கையின் மனையென வானாள் தண்டனை தந்ததேன் தணிகைக்கும் போருக்கும்
சம்பந்தம் இவர்க்கென்ன வென்றே
பரிதன தென்றதால் பாவையே ஒட்டினாள் பாதையைக் காட்டினான் காக்கை ஒருசில கல்கடந் திருப்பதே அதனிடை
ஒருபரி தொடருதல் கண்டார் மருவிடும் பரியினில் வருவது தணிகைதான் மனத்திடங் கொண்டதும் நல்லாள் பரியினை நிறுத்தினாள் பதறினான் காக்கையும்
போஎனக் கத்தினான் வீணே
“வருவது தணிகைதான் வேற்றவர் இல்லைநான்
வேண்டிய தியற்றுவர்” என்றாள் “வருவது எவரென்ற போதிலும் என்னில்லம்
வரட்டுமே பேசலாம்” என்றான் உருவமொன் றாயினும் ஒன்றிய பொய்க்கோலம்
உடைந்திடும் என்பத னோடே விரும்பினான் அவளைத்தன் விருப்பத்துக் கிணக்கிட
வஞ்சகன் வார்த்தையால் குழைந்தான்
108()
108
1082
1083
uørv /rg--Jøtafust æs/r-Suti
240

தேடியே வந்தனள் என்மனை யாளெனச் சேர்ந்தனள் என்பதை அறிந்தே தேடாத அவமானம் தனைவந்து அடைந்ததாய்
தலைதாழ்த்தி வன்னியன் வெள்கக் கூடிட வேண்டுமென் கொள்கையும் என்றுமே காக்கையும் நினைந்தனன் அதனால் கூடிய விசைகொண்டு குதிரையைச் செலுத்தெனக்
கூறினான் வார்த்தையில் வென்றான்
1084 இத்தனைக் குழப்பத்தின் இடையிலும் நெஞ்சத்தில்
இருந்தனன் காக்கைதன் னிடத்தே யுத்தத்தில் பங்கிவர்க் கென்னஏன் தணிகையை
ஒப்பாது வெறுக்கிறார் என்றே சத்தியம் அறியாத நல்லநாச் சீமனத் தெளிவிலா திருந்தனள் "யுத்தம் முத்தித்தே இருக்குமோ காக்கைதம் படையினர்
மடிந்திருப் பாரர்களோ” வென்றாள்
1085 "காக்கையோ குருவியோ கழுகதோ வன்னியன்
கொண்டவெப் படையென்ற போதும் தாக்குப்பி டிப்பரோ பண்டார வன்னியன்
திறங்கொண்ட படையதன் முன்னே’ நாக்கினில் நஞ்சொடு நவின்றனன் நெஞ்சிலே
நல்லநாச் சியின்மனம் வெல்லும் நோக்கமே நிறைந்தது நாடிய வாறுமே நல்லாளும் பரிசெலுத் தினளே
1086 சட்டெனப் பின்புறம் கேட்டவோர் பேரொலி சொல்லாமல் நிறுத்திடப் பரியைச் சட்டெனத் திரும்பினள் தணிகையோர் பாறையில்
தடுக்கியே புரண்டிடக் கண்டாள் சொட்டிடக் குருதிதன் உடற்பலம் இழந்துமே
தள்ளாடி எழுந்தனன் தணிகை கிட்டவே செல்லவன் உதவிக்கு என்றுமே கூறினான் காக்கையும் சென்றான்
1087
24
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 140
உதவிக்குச் செல்லென உறுதித்திடப் பரியினை
உடனங்கு திருப்பிமுன் சென்றாள் உதவிடும் உள்ளமும் உண்டிவர் தமக்கென உவகையுங் கொண்டனள் நல்லாள் முதலவன் பேரிலே முழுப்பகை கொண்டுமே
மரத்தினில் கட்டினேன் என்றார் இதுவென்ன புதுமையோ என்றவள் எண்ணியே
இறங்குமுன் இறங்கினன் அவனே
குதித்தனன் முதலவள் குதித்திட முன்னவன்
குத்தினான் தணிகையின் நெஞ்சில் பதித்தவாள் பிடுங்கினான் பின்னுமவ வாறுடல்
பதித்தனன் வேறிடந் தனிலே பதைப்புடன் தடுத்திடப் பாய்ந்தனள் தோற்றனள்
பிடித்துடல் சரித்தனள் நிலத்தே விதித்ததேன் இந்நிலை வேண்டுமேன் உமக்கென
வாய்விட்டு அலறினாள் சொல்வான்
“வீரர்க்கு விதியிது தானம்மா தங்களின்
விதியென்ன காக்கையை மணக்க யாருக்கே எவரென்றே இல்லையோ உங்களை
இவன்கொளத் தக்கனோ” என்றான் “யாரவன் காக்கையீங் கெங்குளான் சொல்”லென
இயம்பினாள் தணிகையின் கையால் நேருக்கு நேர்நின்ற பிர்மா னந்தனை
நோக்கியே நீட்டிட அதிர்ந்தாள்
“இவனன்றி வேறிலை இவனேதான் காக்கையும்
ஏமாற்றி உங்களை மணந்த பவத்தினை இயற்றிய பிர்மா னந்தனும் பிறரில்லை இருவரும் ஒன்றே” சவமானான் கூறியே முடித்ததும் தணிகைதன்
தலைசாயக் கண்டதும் நல்லாள் இவனென்றும் பொய்சொலான் இதுவென்ன மர்மமோ
என்றுமே நொந்தழு தனளே
1088
1089
1090
1091
uætv-/rg-Lat séu or &/r-Öutið
242

கண்முன்னே பிணமான காட்சியைக் கண்டதும்
கவல்தாங்க முடியாது கதறக் ”கண்ணேயேன் அழுகிறாய் கூற்றெலாம் பொய்யிவன்
கண்களைச் ‘சாமறைத் ததுவே” 'புண்ணுண்ட உடலுக்குப் புரியலாம் நலமெனப்
பேசியே பேடியைப் போலும் கண்முன்னே கொன்றவக் கொடுமையைச் செய்தவன்
காக்கையே தானென’ச் சொன்னான்
1092 'உன்முன்னே நிற்பவன் உன்அன்புக் கிரையான
உத்தமன் பிர்மா னந்தன் கண்ணகி யம்மன்முன் கைப்பிடித் திட்டவுன்
கணவன்நான்’ என்றனன் காக்கை “கண்கண்ட கணவனா கயவனா” நீயெனக்
கூறியே தன்மலர் விரலுங் கொண்டவக் கணையாளி தனைப்பறித் தவன்முகக்
கண்டத்தில் எறிந்தனள் கனன்றாள்
1093 சூழ்ந்து வரும் பகை
காக்கையின் முகத்திலே கோபத் தோடே
கணையாழி தனையெடுத் தெறிந்தாள் “உன்றன் வாக்கைநான் நம்பினேன் வணிக னென்றே
வார்த்தைகள் ஆடினாய் பொய்யன்” என்றாள் “காக்கைதான் நானுன்றன் கணவ னானேன்
கண்ணகிச் சிலைமுன்னே இனிமே லுன்றன் போக்குக்கு விடே”னென்றே கரம்பி டிக்கப் பறித்தனள் சீயென விலகி னாளே
1094 புரிந்தனள் இப்போது அண்ண னன்று
பார்த்ததும் தான்தந்த சித்திரத்தைச் சரிந்தவோர் பெருமலைக் குன்ற மன்ன
சட்டென்று மாறிய நிலைமை தன்னைப் புரிந்தவர் தானிந்தத் துரோகி தன்னைப்
பாடலில் தன்மனக் குமுறல் தன்னை வரைந்தன்று தந்தாரே எனக்குச் சற்றும்
விளங்காது போனதே எனக்கு மைந்தாள் 1095
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 141
அவசரப் பட்டிவள் நாட்டி னுக்கும்
அவள்கொண்ட இனத்திற்கும் அண்ண னுக்கும் தவறான சேர்க்கையால் துரோகஞ் செய்தாள் தனையறிந் திடாதவள் தவறே செய்தாள் அவப்பெயர் கொண்டனள் நங்கை என்றே
அறிந்ததால் தானண்ணன் வெறுப்புக் கொண்டே தவறினைச் சுட்டித்தன் வாழ்வைப் பாட்டில் தந்தனன் என்றவள் வருந்தி னாளே
ஐயகோ! நானொரு துரோகி யானேன்
எனைப்போன்று வேறெந்தப் பெண்ணுஞ் செய்யாள் வையத்தில் தமிழச்சி யாக நானும்
வந்துற்ற தேனென்றே வருந்து கின்றேன் மெய்யாகத் தமிழ்க்குலம் என்ற னாலே
மாசுற்றுப் போயிற்றே இந்நாள் ஒன்றும் செய்திட வியலாதே அனைத்துங் கெட்டுச்
சிதைந்ததே உன்னாலே பாவீ என்றாள்
காசுக்குப் பொருளுக்குப் பதவிக் காகக்
காட்டிக்கொ டுக்கின்ற கயவன் உன்னை ஆசையாய் மனத்தினுள் இருத்தி வாழ்வை
அழித்தவென் நெஞ்சத்தைப் பிளந்தா லுந்தான் காசகன் றிடாவென்றன் குலப்பெ ரும்மை
கூடாதே அகன்றதால் கொண்ட விந்த மாசகன் றென்னைநான் காப்ப தற்கும்
முற்றும்உனை வெறுத்திடுவே னென்றிட் டாளே
சீறியெழும் எரிமலைபோல் கொதித்தாள் வார்த்தை தீக்குழம்பாய்க் கொட்டினவே கேட்டு நின்றே கூறிடுவான் “என்னபெருந் தமிழ்த்தாய் போன்றே
கதறுகின்றாய் குலப்பெருமை பேசு கின்றாய் வேறினமோ நாடோவென் றெனக்கென் றில்லை வந்தவனோ நானுமொரு தமிழன் றானே கூறிடவா வேண்டும்நான் இந்த மண்ணின்
குடிமகனே என்பதனை வாய்மூ”டென்றான்
1096
1097
1098
1099
υαρτ (τσαμ στατου στα (τα δυμυν
244

தமிழன்றான் நீஇனத்தால் மொழியி னாலே தீயவுன்றன் உடலோடும் குருதி யாலே தமிழன்றான் சுரணையற்ற தமிழன் நாட்டைத்
தாரைவார்க்கத் துணிவுகொண்ட தமிழன் கெட்ட தமிழன்றான் தன்னினத்தைப் பணத்திற் காகத்
துணிந்துகாட்டிக் கொடுக்கின்ற தமிழன் நீயும் தமிழன்றான் மானத்தை அடகு வைத்துத்
தாழ்ந்திழிவு கொண்டஇழி தமிழன் என்றாள்
1 100 தமிழனென்றால் தேராயோ பிறந்த தம்மின்
தாய்நாட்டில் பற்றுடையோன் மானம் மிக்கோன் தமிழனென்றால் இனத்தோடு மொழியை ஒன்றித்
தனதுயிராய் மதித்திடுவோன் ஞானம் கொண்டோன் தமிழனென்றால் துணிவுடையோன் வீரம் மிக்கோன்
தீமைகண்டால் கொதித்தெழுந்தே நீதி காண்போன் தமிழனென்றால் தம்மவர்க்காய்த் தம்மைத் தாமே
தந்துவிடுந் தியாகமணங் கொண்டோன் என்றாள்
101 "தமிழினத்தின் மீதுபற்றுக் கொண்டாள் போன்றும்
தமிழ்மொழியில் மோகமுற்றாள் போலும் பேசும் தமிழச்சி பதில்சொல்நீ கோயி லில்நாம்
செய்துகொண்ட திருமணக்தின் காரணத்தால் எமைநாமே சதிபதியாய் ஆக்கிக் கொண்டோம்
எப்படித்தான் எனைநோக்கிக் கயவ னென்றும் எமதினத்தின் துரோகியென்றும் கூறு வாய்நீ
இதுதானோ தமிழ்ப்பண்பாம்” எனவுங் கேட்டான்
1 102 பண்பாடு பேசித்தான் பெண்கு லத்தைப்
பலவீனம் செய்கின்றீர் பண்பா டென்று பண்பற்ற கணவனையும் பூசிக் கின்ற
பத்தாம்ப சலியல்ல நான்நீ உன்னை மண்ணாக்கிக் கொள்வதென்றால் கவலை கொள்ளேன்
மற்றவரைக் கெடுக்கின்றாய் தமிழன் என்ற பண்பினையும் கெடுக்கின்றாய் பதவிக் காகப்
பிளக்கின்றாய் வாயென்றே இன்னுஞ் சொல்வாள்
1 103
245
ஜிண்ணாஜர் 2fபுத்திண்

Page 142
தரங்கெட்டோர் தம்மிடத்தே தன்மா னத்தைத் தாமாக இழந்துவிடும் தரங்கெட் டோனின் கரம்பற்றி னேனதனால் வெட்க முற்றேன்
கயவனேநான் உனக்குமொரு மனைவி யாமோ மரணமெனை இந்நிலையில் அண்டி னாலும்
மகிழ்வுறுவேன் இருந்தும்நான் உன்னைப் போன்ற நரிகளையில் லாதொழித்தே இறப்பே னாயின்
நித்தியநற் பெயர்கொள்வேன் என்றிட் டாளே
(). என்னதான் உளறுகிறாய் நல்ல நாச்சி
இதயத்தால் ஒன்றுபட்டே இருபே ரும்நாம் சொன்னமொழி தனைமறந்த தேனாம் நீஏன்
சத்தியத்தை மீறுகிறாய் இருவரும்நாம் அன்னியமற் றொன்றாகிக் காணும் போதில்
ஆசையொடு வளர்த்தெடுத்த காதல் பொய்யோ என்ன விது கற்பனையோ கனவோ ஏன்நீ
எனைவெறுத்துப் பேசுகின்றாய் எனப்ப னிந்தான்
105 "கனவுமல்ல கற்பனையும் அல்ல தீயைக்
கண்டேதான் விலகாது குளிர்ந்த நீராம் எனநினைந்தே மிதித்துவிட்ட அபலைப் பெண்ணின்
எழுதாத சரித்திரமாம் இருந்தாலும்ஒர் நினைவகலாச் சரித்திரத்தைப் படைத்து விட்டே நிறையுமவள் வாழ்விப்போ எடுவுன் வாளை’ எனக்கூறி உருவினளே தன்கை வாளை
எடுத்ததனனே காக்கையும்வாள் கரத்தே காக்க
106 வாய்ப்பேச்சில் மட்டுமல்ல வீரத் தோடே
வாள்வீசும் திறத்திலுமே நல்ல நாச்சி தோய்ந்திருந்தாள் வீசினளே கண்டம் நோக்கித்
தடுத்தவனுந் தனைக்காத்துக் கொண்டான் மீண்டும் பாய்ந்தவனின் தோளறுக்கச் சரித்தாள் வாளைப்
பக்குவமாய் விலகியவன் தப்பிக் கொண்டான் மாய்ந்திடென மனமெண்ண மார்பை நோக்கி முன்கரத்தை நோக்கி வாள் வீசி னாளே
107
υαρτ τηταυσταται στα ιταδιμιίο 246

மார்பினையே நோக்கிவந்த வாள்மு னைக்கு மடிந்தானோ பின்புறமாய் மல்லாக் காகச் சேர்ந்திட்டான் பூமியொடு கால்த டுக்கித்
திடீரென்றே எழுந்துகொண்டான் மீண்டும் நல்லாள் சோர்ந்திடாதே முன்பாய்ந்தாள் இருவர் வாளும்
சேர்ந்தனவே பிடிக்குயர முகங்கள் நேராய்ப் பார்த்திருக்கப் பலப்பரீட்சை நடந்த தங்குப் பரிதாப மாகவவன் பார்த்திட் டானே
1108 பெண்ணுக்கே இப்படியும் பலமுண் டாமோ
பூவையென்ற பேரிவர்க்குப் பொருந்து மாமோ கண்ணிமைக்கும் பொழுதுள்ளே எதிரி யைத்தன் கரங்கொண்ட வாள்சரிக்கப் பாய்கின் றாளே ஆண்முன்னால் மோதுகின்றான் என்றே சற்றும்
அச்சமவள் நெஞ்சத்தில் தோன்றா வாறு நாண்விடுத்த அம்பனைய வேகங் கொண்டு
நாடுகிறாள் பகையொடுக்க நினையா வாறே
1 109 இடியில்லா மின்னலென ஒளியைக் காட்டி
இருவரது வாட்களுமே மோதக் காக்கை மடியவென்றே சுழற்றினளே வாளை நல்லாள் மிகஅருகில் போயவனைச் சாட லானாள் அடியெடுத்து முன்வைக்க மாட்டா னாக
அடிவைத்தே அடிவைத்தே முன்னே சென்றாள் பிடியுண்ட நிலைவரவே பேடி தன்னைப்
பின்னோக்கிப் பின்னோக்கி நகர்த்தி னானே
1 110 எதிர்பாரா வேளையது வெற்றி கையில்
ஏறிவரும் நிலையினிலே முற்புறத்தே குதிரைகளின் குளம்பொலியால் நிமிர்ந்தாள் நல்லாள்
காக்கையந்தத் தருணத்தைப் பயன்படுத்தி விதிவசமே தப்பித்தேன் என்றே தன்னைப்
பின்வாங்கிச் சிலஅடிகள் வைத்தே மீண்டும் அதிவேக மாகத்தன் கால்க ளுக்கோர்
ஆணையிட்டான் ஒடவென மனத்தி னாலே
1111
247
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 143
புறமுதுகிட் டோடியவன் சென்ற போதும்
பின்தொடர்ந்தாள் நல்லநாச்சி உயிர்ப றிக்க வெறிகொண்ட அவள்முன்னால் வந்தோர் முல்லை வீரர்கள் தாமெனவே மகிழ்வுங் கொண்டாள் குறிதவறிப் போனநிலை காக்கைக் கந்தக்
கூட்டத்தைக் கண்டதுமே நினைந்தான் வன்னி வெறியர்களே எனப்பின்னால் திரும்பிப் பெண்முன்
வந்துமுகம் பூதடவ வீழ்ந்திட் டானே
இரக்கமவன் மீதுசற்றும் தோன்றாப் போதும்
இணங்கவில்லை மனம்அவனின் முதுகில் வாளைச் சொருகிடவே அவளுரைப்பாள் "கபட னேநீ
செத்தழிய வேண்டியவன் எனினும் நெஞ்சில் பெருமையுடன் வடுக்கொண்டே பிரிந்து போஇப்
பாரிலுனைப் போன்றவர்கள் வாழ்தல் வேண்டா திரும்பென்றாள் திரும்பினனன திரும்பக் கண்டான்
தனதுபடை வீரரவர் எனம கிழ்ந்தான்
சண்டையிலே தோல்வியுற்றுத் திரும்பி யோடித்
தமைக்காக்க வந்தவர்கள் கண்ட காட்சி சுண்டெலியொன் றாயுதங்கொள் பூனை கையில்
சிக்கியதைப் போலிருக்கச் சூழ்ந்து கொண்டார் கண்டனனே காக்கையுந்தன் வீரர் சுற்றிக்
கொண்டிருத்தல் நல்லநாச்சி தானுங் கண்டாள் கொண்டனனே துணிவுகாக்கை படையை நோக்கிக்
கூறிடுவான் இவளையுடன் பிடிப்பீ ரென்றே
பண்டார வன்னியன் பதைபதைப்பு அடியுண்டு குற்றுயிராய்க் கிடந்த நச்சின்
அரவமொன்று துணிவுபெற்றுப் படமெடுத்தே அடர்வதுபோ லிருந்ததுவே காக்கை செய்கை அதிசயித்துப் போனாளே நல்ல நாச்சி பிடியுங்கள் இவளையொரு தீங்கு றாமற்
பக்குவமாய் அரண்மனைக்குக் கொண்டு வாரீர் உடனாங்கே விமரிசையாய்த் திரும ணத்தை
ஊரறியச் செய்யவழி செய்வீ ரென்றான்
1 12
1113
114
uaðru-/r/J-2'ai ofuði að/r-Sustið

கட்டளைக்குப் பணிந்தார்கள் வீரர் சுற்றிக்
கையெடுத்த வாட்களுடன் நெருங்க லானார் கிட்டவரும் வரைகாத்து நின்ற நல்லாள்
கம்பாட்டக் காரன்போல் சுழன்றே வீரர் வெட்டிவீழ்ந்த தலைகளொடு கையுங் காலும்
வளைத்தவளைச் சிதறிடவே பெண்ணென் றாலே வெட்கமச்சம் மடம்பயிர்ப்புக் கூட வீரம்
வாய்த்தவரே என்பதனை உறுதி செய்தாள்
1 16 சுழலுகின்ற பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றித்
திணறடித்தாள் வீரர்களைக் காக்கை வன்னி குளறினனே வாய்அதிர்ச்சி உடலைத் தாக்கக் கோழைகளே பிடியுங்கள் இல்லை யாயின் அழிவீர்கள் சிரங்களைவேன் தப்ப விட்டால்
ஆண்களாநீர் இத்தனைபேர் தணித்த பெண்ணை விழவைக்க இயலாதோ என்றான் வீரர்
வளைந்தொன்றாய்ப் பாய்ந்தனரே பலவாள் ஒன்ற
1 17 பலவாட்கள் ஒன்றாக ஒரேநொ டிக்குள்
பொருந்தியொரு தனிவாளில் பிணைந்து கொள்ளப் பலங்கொடுத்தே உருவினளவ் வேகத் தோடே பதித்தாளோர் வீரனடி வயிற்றில் மற்றோர் கலையாது ஒருங்கிணைந்தே சுற்றிக் கொண்டார் குத்தியவாள் மீட்குமுன்னே நல்ல நாச்சி சிலையானாள் விழிகளினால் சுட்டாள் காக்கை
தலைதப்பிப் போனதனால் மகிழ்ந்திட் டானே
1118 யார்கையும் அவளுடலில் படாத வாறாய்
அழைத்துடனே கோட்டைக்கு வருக சற்றும் பார்வைதனை விலக்காதீர் தருணம் பார்த்துப்
பறந்துவிடும் பட்சியென்றான் பயத்தி னோடே தேரூரும் பெண்பாதம் நோகு மென்று
தெரிந்தாலும் தண்டனையாய் வளைய மிட்டுப் போர்வீரர் புடைசூழச் சென்றாள் காக்கை
புரவிதனில் ஊர்ந்தனனே பின்பு றத்தே
1119
249
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 144
பிடியுண்ட போதிலுந்தான் எவர்கும் அஞ்சாப்
பலங்கொண்ட நெஞ்சுடையாள் பிறப்பி னாலே கொடியிடையாள் என்றாலும் வீரங் கொண்ட குருதியுடல் பாய்கின்ற தமிழ்ம றத்தி அடியொன்று ஒன்றாகப் பதித்தாள் பூமி
அகந்தைகொண்டு தாங்கியதே இவளைப் போன்றே விடிவுக்குப் போராடும் பலபெண் டீரை
வழங்கியவள் நானென்ற பெருமை யோடே
ஒநாயின் குகைக்குள்ளே வெள்ளா டொன்றே
உலவியது கையிரண்டுங் கட்டுண் டேதன் வாணாளில் என்றுமில்லா அனுப வத்தால்
வளைவையெண்ணிக் குமுறியது மனத்தி னுள்ளே தானாகத் தேடியவிப் பழிக்குத் தன்னைத்
தானேதான் நொந்தாலும் தொடர்ந்தும் என்ன ஆனாலும் எதிர்ப்பதெனுந் திடத்தி னோடே
அறிவுக்கு விசைகொடுத்துக் காத்த தன்றோ
சுற்றிவளைத் தெங்கணுமே காவல் வைத்துத்
தனிப்படுக்கை அறையினிலே கைதியாகப் பற்றுமொரு சிறுபந்தம் துணைகொண் டாடப்
பலவாறாய்ச் சிந்தனையுள் புதையுண்டேதான் இற்றரையில் வாழுமட்டும் எந்த வோர்ஆண்
இனத்தவரின் விரல்படவும் இணங்கேன் என்னும் முற்றியநெஞ் சுரத்தோடே முடிவுங் கொண்டே
மேலுமென்ன நடக்குமென அறியா துற்றாள்
காக்கைவன்னி கோட்டையிலே நல்ல நாச்சி
கைதியாகிக் கிடக்கையிலே முல்லைத் தீவில் தாக்குண்ட சிங்கமென அங்கு மிங்குந்
தவித்தபடி நடந்தனனே வன்னி மன்னன் நாக்கினிலே நஞ்சுகொண்ட மர்த்த முைன்
நின்றனளே குருவிச்சி கூட நின்றாள் ஏக்கமொடு “உண்மையோநி சொல்வ” தென்றான்
ஆமென்றாள் மர்த்தனிதன் தலைய சைத்தே
120
12
1122
123
uæru-/rg-Weisfuði æ5/r-Gufub
250

ஆண்டவன்மீ தாணைசொல்வ தனைத்தும் உண்மை
அடைந்தால்நான் காக்கையைத்தான் அடைவே னென்று பூண்டதம்மின் சபதத்தை ஊமைச் சிக்குப்
புரியவைக்க அவள்சொன்னாள் கவலை கொள்ள வேண்டாம்நீ இப்போதே காக்கை வன்னி
விரும்புவபோல் திருமணத்தைச் செய்து கொண்டால் வேண்டாத பேரெனினும் அண்ண னுக்கு
வார்த்தையில்லை பேசுதற்கே எனப்ப கர்ந்தாள்
1124 எப்படித்தான் இவற்றையுங்கள் செவியில் போட இயலுவதோ எனஎண்ணித் தணிகை யோடு செப்பினனே அவனென்னைக் கோயி லண்டை
செலப்பணித்தான் உடன்வந்தான் எனைக்கெடுக்கத் தப்பிதமாய் நடக்கமுயன்றானே நல்ல
தருணத்தில் என்கணவர் வந்தே எந்தத் தப்புமங்கே நடக்காது தணிகை தம்மின்
சிரசரிந்தார் பின்னெங்கோ மறைந்தார் என்றாள்
125
எப்படியும் என்கணவர் என்னைத் தேடி
இருக்கிமிடம் வந்தடைவார் கவலை இல்லை எப்படித்தான் சகோதரிகள் உங்களுக்கும்
எண்ணினரோ துரோகத்தைச் செய்ய என்றாள் சத்தியத்தைச் சத்தியஞ்செய் துரைப்ப தொப்பச்
சொல்லினளே வடித்தெடுத்த பொய்யை மன்னன் அத்தனையும் உண்மையென்றே நினைந்தான் கேட்டாங்(கு)
அக்கினியில் பதம்பதித்தோன் போலா னானே
1126 ஏமாந்தாள் ஒருதங்கை துரோகத்திற்கே
இணைநின்றாள் மற்றொருத்தி என்தன் மானம் நாமமற்றுப் போக்கவென ஒருவன் தோன்ற
நங்கையர்கள் இருவருமே அவனோ டுற்றார் நாமினிமேல் செய்தவதென்ன குருவி நீசொல்
நமக்குற்ற இடுக்கணெலாங் களைய என்றான் 'ஏமாறா தமைதியொடு சிந்தித் தல்தான்”
என்றனளே குருவிச்சி நிதானத் தோடே
1127
251
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 145
மனங்கொண்ட கருத்துகளைச் சொல்ல முன்னர்
“மர்த்தனிநீ வெளியிற்சற் றேபோ” என்றாள் தணைவிடுத்தாள் அவ்விடத்தே மர்த்த தைன்
தலைதாழ்த்தி வணங்கிப்பின் வெளியிற் சென்றாள் தனைமுதலில் நிதானத்தில் வைத்துத் தம்மின்
தலைவன்முகம் நோக்கியவன் கூர்ந்து நோக்க “எனைமுதலில் புரிந்திடுக பின்னர் நான்சொல்
ஏதுக்கள் தனையெண்ணிப் பார்க்க” என்றே
K “கண்ணாலே காண்பதுவும் பொய்யே காதால்
கேட்பதுவும் பொய்யாமே தீர்க்க நன்றே உண்மையினைத் தேடியொரு முடிவு கொள்ளல்
உயர்ந்ததென’ முன்னோர்கள் சொன்னார் இ.தாம் இன்னாளும் பொருந்துமொரு மொழியே நீங்கள்
எண்ணியிதைப் பார்த்திடுதல் வேண்டும் என்ன என்னவுன்றன் கருத்தென்றான் விளக்கிச் சொல்ல ஏவினனே வன்னியனும் குருவி சொல்வாள்
() “தணிகைமலை பலாத்காரம் செய்தான் என்றாள்
தாங்களதை நம்புவபோல் உண்டே” என்ன “தணிகைமலை சற்றதற்குத் தோதே’ என்றான்
"சரியெனினும் இவளதற்கு வேண்டாப் பெண்ணாள்” கணிகையிவள் என்றவளே சொல்லு முன்னர்
கூறினனே குறித்தமொழி முதலாய்க் கொண்டு "துணைக்கென்று கண்டிமன்னன் அனுப்பி வைத்தான் தெரியாயோ’ என்றதுமே மீண்டும் சொல்வாள்
113() “கண்டி மன்னன் கட்டளைக்கு வந்த தாகக்
கூறுவதும் இவள்கணவன் ஆண்தான் என்றும் எண்ணுவதை நானொப்ப வில்லை” என்றாள்
“எப்படித்தான் திட்டமாகச் சொல்வாய்” என்றான் “உண்மைதனை எடுத்துமுன்நான் சொன்னால் நீங்கள்
உடன்படாது போவீர்கள் என்பதாலே எண்ணத்தைத் தணிகையிடம் சொன்னேன் முன்னர்
எதற்கும்நீ கண்ணிவர்மேல் வைய்ப்பாய்” என்றே
113
uairr -/rgeuairafuair ao/rečiuub 252

காக்கைவன்னி தனைவணிகன் என்றே நம்பிக்
கண்ணகியாள் கோயிலுக்கு நல்ல நாச்சி பார்க்கவரப் போவதுவும் தணிகை யைமுன்
போகவைத்து வீரர்களால் கொன்றொ ழிக்கக் காக்கைவன்னி சூழ்ச்சியொன்று செய்வ தையும்
கேள்வியுற்றேன் தணிகைமலை மூலமாகத் தாக்கமுறும் நெஞ்சுதங்கை மீது கோபம்
தோன்றுமெனத் தான்தணிகைக் குதவி செய்தேன்
1132 நூறுவீரர் தமைக்கேட்டான் கார ணத்தை
நீங்கள்சற்றும் அறியாதே தருக வென்று கூறிநின்றேன் நானுமவன் செய்கை ஒர்ந்தே
குறிப்பறிந்தேன் இவையனைத்தும் செய்கு வோர்கள் வேறுயாரும் அல்லசூழ்ச்சி திட்ட மிட்டு
வெற்றிபெற நிற்பவர்கள் சற்று முன்னே கூறினேனே அவர்கள்தாம் மர்த்த னயும்
கணவனெனும் பியசீலி தாமும் என்றாள்
1133 பியசீலி என்றதுமே விறைத்துப் போனான்
பண்டார வன்னியனும் “அவள்தான் தீயின் வயமாகிப் போனாளே கண்டி மன்னன்
வாசகத்தை அறிந்திலையோ’ என்றான் வன்னி “பொய்யான கடிதமது எழுதி யோர்கள்
பியசீலி யோடுமர்த்த னியும்” என்றே செய்யவிதைத் தூண்டியவன் அமைச்சன் என்றே சதிசெய்யும் பிலிமத்த ளாவை என்றாள்
1134 சேதியிவை அத்தனையுங் கேட்டு மன்னன்
திகைப்புற்றான் நீயிவைகள் அனைத்தை யும்ஏன் ஒதாது விட்டனையோ என்ற னுக்கே
உரைத்திருந்தால் தடுத்திருக்க லாமே என்றான் தீதறியார் சகோதரிகள் தெரிந்தால் நீங்கள்
சட்டென்றெ அவர்மீது வெறுப்புக் கொள்ள ஏதுவரும் என்றேனன் தலைமேற் கொண்டேன்
இப்போது நிலைமுற்றிப் போன தென்றாள்
1135
ஜிண்ணாஜர் டிரிபுத்தின்

Page 146
இருவருமே இதுபற்றிப் பேசும் போதே
எவரோபின் புறத்திருந்தே ஒடும் ஓசை இருவர்செவி பட்டதுமே இடம்பெயர்ந்தார்
எட்டியாங்கு நோக்கினரே மர்த்த னிதான் இருவர்கண் படாதிருந்தே ஒற்றுக் கேட்டாள்
ஏகுகிறாள் எனஅறிந்தே குதிகா லுக்கு விரையவிட்டாள் கட்டாரி யொன்றை நாச்சி
எகிறிவிழுந் “தம்மே”யென் றலறக் கேட்டார்
எங்குற்றாள் அந்தக் குறத்தி
கண்ணுச்சாமி அனுப்பி வைத்த
கதையோர் கட்டுக் கதையன்றோ உண்மை எனில்நீ ஏனங்கே
ஒளிந்தே இருந்து செவிமடுத்தாய் உண்மை அம்பலம் ஆனதென்றே
ஒடி ஒளிந்திட முயன்றனைநீ பெண்ணே உண்மை சொல்லென்றே
பொரிந்தான் வினாக்களை வன்னியனே
வாயுரை யாதே இருந்துவிட்டால்
வருவினை இருந்தே தப்பிடலாம் நோயுண் டிருந்த குதிக்காலை
நினைந்தே வருந்துவள் போல்காட்டி மாயப் பிளம்பாம் மர்த்தனியும் மிரள மிரள விழித்தனளே பேயாய்ச் சினந்தாள் குருவிச்சி
புயலென மாறிப் பாய்ந்தனளே
என்னடி ஊமைப் பெண்ணானாய்
ஏன்வாய் திறக்கா திருக்கின்றாய் என்னிடம் உண்மையை மறைத்தாயேல்
இறங்கும் மார்பினுள் வாளென்றாள் உன்பதி யென்னும் ஊமையனும்
உனக்கும் இங்குச் செல்கவெனச் சொன்னவர் கண்டி மன்னனோடி
சீக்கிரம் பதில்சொல் எனச்சினந்தாள்
113s
137
1138
1139
uæru-/rír-2atefu er að/r-Öutið
254

கட்டாரி கழுத்தில் பதிந்திடவே
கதறினள் கொல்லா தீர்களென விட்டிட உண்மை உரையென்றாள்
விபரம் சொல்நீ முல்லைக்குத் திட்டமாய்க் கண்டி மன்னரினால்
துணைக்காய் எமக்கென அனுப்பிவைக்கப் பட்டவர் தாமோ கூறென்றே
பற்களை நறும்பினள் நாச்சியரே
1140 உண்மை அதுதான் என்றதுமே
உரக்கச் சிரித்தாள் குருவிச்சி உண்மை அதுதான் எனச்சொன்னால்
உயிரை வாங்குதல் உறுதியென்றே கண்ணைக் கூர்வாள் போலாக்கிக்
கனலை அவ்வழி செலுத்துவபோல் திண்ணிய மனத்தோ டுயிர்பறிக்கத்
துணிந்தனள் வன்னியன் தடுத்திட்டான்
141 இனிப்பொய் சொன்னால் உயிருடலில் இருப்பது கடினம் எனப்பயந்தே அனுப்பிய தெம்மை மந்திரிதான்
அவரே பிலிமத் தளாவையென்றான உன்னுடன் வந்த ஜெயசீலன்
ஊமைய னோவவன் ஆண்மகனோ எனவிழித் தனளே மீண்டுமவள்
ஏய்த்திட முயன்றாள் “ஆம்” என்றாள்
1142 மீண்டும் பொய்த்திரை போடாதே
மர்த்தனி அவனுன் கணவனல்லன் வேண்டுமென் றிருவரும் நடத்துகின்ற
வஞ்சக நாடகம் இதுவென்றாள் கூண்டுள் அடையுண் டிருக்கின்ற
கிளிபோல் அஞ்சியும் உரைத்தனளே வேண்டாப் பொய்யாய் ஜெயசீலன்
வாழ்க்கைத் துணைவன் எனஅவளே
1143
255
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 147
பிலிமத் தளாவை மந்திரியின்
பெண்பிய சீலி அறிவாயோ நிலத்தினில் இன்றவள் இலையென்றாள்
நெருப்பில் அழிந்தாள் உண்மையென்றாள் நிலைத்ததோ ஆவியும் ஜெயசீலன்
நின்பதி யுருவுங் கொண்டதுவோ அலுத்தவள் போலும் கூறினளே
'அம்மா புரிந்திட விலை”யென்றாள்
புரியா துனக்குப் புலிக்குகையுள்
பூனைகள் நீங்கள் புகவென்றே நரித்தனம் செய்தே வந்தீர்கள்
நன்றாய்த் தெரிந்துநீ கொள்ளென்றே நரிபுலி வாலை விழித்திருக்கும்
நிலையில் மிதித்த கதைதானே புரியா பிலிமத் தளாவைக்கும்
புரியச் சொல்வேன் கேளென்றே
“முதலில் உன்பதி ஜெயசீலன்
மீண்டே குறத்தி தன்னுருவில் விதம்வித மாக உருமாறும்
விதம்பிய சீலி பேயுருவில் கதைவிடுகின்றீர் சரிதானா
கூறடி’ என்றாள் மீண்டுமவள் எதையும் அறியேன் நானென்றே
அதிர்ச்சியுற்றவள்போல் நடித்தனளே
சொல்லடி சாகசக் காரிமுதல்
தணிகையின் மனத்தை உணர்ந்தவனை வெல்லவுன் உடலைத் தந்துன்னை விட்டகன் றானுன் கணவனென நில்லாது மீண்டும் குறத்தியெனும்
நிலைக்கும் மாறிப் பியசீலி பொல்லாள் மீண்டும் தணிகையினைப் பங்கிட் டீர்கள் பொய்யாமோ
14,
1145
1 146
47
uørv_/rg-2.Jetsfu sir as/r-Susi
256

வார்த்தையொன் றிலாது விழித்தவிழி
வாங்கிடா திருந்தாள் மயங்குவபோல் வார்த்தைக்கு வார்த்தை நடந்தவற்றின் விபரஞ் சொன்னாள் குருவிச்சி பார்த்தவள் போலும் அனைத்தையுமே
பகரக் கண்ட வன்னியனும் “சாத்திரம் சொல்பவள் போலவேநீ
சொல்வதை அறிந்ததெவ் வா”றென்றான்
1 148 எப்படி அறிந்தாய் இவையெல்லாம்
என்னிடம் ஏனோ மறைத்தனைநீ எப்படி அறிந்தாய் துரோகமிவர்
இருவர் வடிவிலும் வந்ததனை எப்படி அறிந்தாய் குறத்தி ஜெய சீலன் என்னும் பியசீலி செப்படி வித்தை செய்ததனைச்
சிறிதும் நம்பிட இயலாதேன்
1149 தெரிந்தது குறத்தி மூலமென்றாள்
தனையோர் ஆண்மகன் போலுமவள் உருமாற்றம்செய் திருக்கையிலே
உண்மை மறைந்ததே என்றாலும் குறிசொல் குறத்தி வேடத்தில்
கூர்ந்தே தெரிந்தேன் உறுதிகொண்டேன் அறிந்திட வென்றே அவளையாங்கோர்
அறையுள் வைத்துளேன் என்றனளே
1150 ஒன்றன் பின்னே ஒன்றாக
உரைப்பது அதிசயச் சேதிகளே என்றனன் அவளோ ஆண்வீரம்
அடங்கியோர் ஒன்றே வீரமொடு பெண்கள் விவேகம் மிக்கவர்கள்
புரிந்தால் சரிதான் எனவுரைக்கக் கண்டேன் மர்த்தனி பியசீலி
காரிகை யார்தாம் எனநகைத்தான்
1151
257
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 148
கூறிடு குறத்தி எங்குற்றாள்
கூட்டிச் செல்லாங் கென்றதுமே கூறினள் இன்னும் என்றன்மேல்
கொண்டில நம்பிக் கையாமே கூறிடு வேன்நான் அனைத்தையுமக்
குறத்தி சொன்னவை என்றேநான் கூறிடக் கலவரங் கொள்வீர்கள்
கேளுங்கள் எனச்சொலி நடந்தனளே
போதையில் ராஜ சிங்கனிடம்
பெற்றவோர் வெற்றுத் தாள்ஒப்பம் போதிய தானது பொய்க்கடிதம்
படைத்திடப் பியசீலிக்கென்றும் சேதிகொள் கண்டி மன்னனது
திருமுக மென்றே நம்கையில் மாதிரு பேரும் தந்ததந்த
மடலே கண்டியின் மடலன்றே
மாறினாள் கணவன் வேஷத்தில் மர்தனி மனையாய்ப் பியசீலி தேறிய வெற்றி முதலினிலே
தணிகை மயங்கிய செயலாகும் கூறியே வைத்தேன் இவர்களிடம்
கவனம் வையெனுங் காரணத்தால் தேறிட முடிந்தது இவர்கள்தம்
சூழ்ச்சியி லிருந்தே எனவுரைத்தாள்
வாரீர் என்னுடன் விபரமெலாம்
வாய்திறந் தந்தக் குறத்தியையே கூறிட வைப்பேன் எனக்கூறிக்
கைதட் டினளே இருவீரர் ஒரமாய் வந்தே நின்றென்ன
உரைப்பள் என்றே காத்திருக்கத் தேரீர் இவளைப் பத்திரமாய்த்
தனித்தே காவல் செய்கவென்றாள்
S
15
1154
1155
uaril/2Jaaua aasub
258

அரண்மனை தனிலொரு தனியறையுள் அடைத்தே வைத்து வீரர்களை இரவொடு பகலும கண்இமையா
திருப்பீர் எனவே ஆணையிட்டுக் கருத்தொடு வைத்துக் காத்ததனால்
கூண்டினுள் இருக்கும் கழுகென்றே இருவரும் சென்றார் அதிசயித்தார்
இலையாங் கதுவும் நடந்ததென்னே
156 தீவட்டி யொன்று தனித்தாங்கே
துலங்கா தொளியைப் பரவவிட யாவும் வைத்தவா றாங்கிருக்க
இல்லா தொளிந்தாள் பியசீலி காவலர் அஞ்சினர் குறிப்பறியாக்
கான்மரம் போலவே நின்றார்கள் கூவினள் வார்த்தைகள் தீப்பிழம்பாய்க்
கொட்டின வன்னியன் அமைதிசெய்தான்
1157 நெய்யை நெருப்பில் வார்த்ததுபோல்
நடந்தது மற்றோர் நிகழ்வாங்கே செய்தியொன் றறிந்தார் காக்கையினால் தணிகை இறந்தான் அத்தோடே கையொடு தன்மனை கொணர்ந்தனனாம் காக்கையும் நல்ல நாச்சியினைச் செய்யத் திருமணம் எனக்கேட்டே
சிம்மமொன் றெகிறிக் குதித்ததுவே
1158 மங்கையின் மயக்கம்
பலநூற்றுக் கணக்கான படைவீரர் புடைசூழப்
படையொன்று புறப்பட்டதே நிலமீதோர் இடிபோலப் படையேகும் ஒலிமேவ
நிரையாகப் பரிசென்றதே குலமானங் காக்குமொரு நிலையான மனதோடு
கடுவேக மாகஅடலார் நிலம்நோக்கித் தடையொடித் தகன்றிடும் காட்டாற்று
நீர்போல இடம்பேர்ந்ததே
1159
259
ஜின்னாவூர் ஷரீபுத்தீன்

Page 149
முதலாகப் பண்டார வன்னிமற வீரனொடு
மறத்திகுரு விச்சிநாச்சி சதிமாள முதலான திருவான இருபேரும்
சிம்மங்க ளாகவேக எதிரான பகைநிற இசைவான கலந்தாங்கி
ஏகினரே வன்னிவீரர் பொதுவான குறியாக அனைபேருங் கொண்டதவர்
புறங்காட்டக் காக்கைதனையே
1160 “நேராகக் காக்கைவன் னியன்தமது கோட்டைக்கு
நாம்செல்லல் நோக்கமதுவோ’ தேராது முதலிலவர் செல்லுமிடந் தெரிந்திடவே
தலைவனையும் நாச்சிகேட்டாள் “நேரிலேநாம் சென்றறிய வேண்டுமேநாம் தணிகைக்கு
நடந்ததென்ன” எனவுரைத்தே நேராகக் கண்ணகியின் கோயிலுக்குப் போவோமென
நினைந்ததனை வன்னிசொன்னான்
1 161 வன்னியன்தம் படைகயோடு வருவேளை மறுபுறத்தில்
வழிகெட்டுப் போனகாக்கை வன்னியனின் மாளிகையுள் வளையுண்டு கிடந்தனளே
வன்னியனில் தங்கைநல்லாள் என்னவங்கு வந்திடினும் எதிர்ப்பதெனும் முடிவினொடும்
இருகரமுங் கட்டிஎரிந்தே மின்னலிடும் தீப்பந்தந் தனைமட்டுந் துணையாக்கி
மனத்திடத்தி னோடுநடந்தாள்
62 தனித்தறையில் துயிலழிந்தே திரிந்தour. Jபனனாய்த்
தாழகற்றும் ஒலியுங்கேட்டாள் தனித்தொருவ னாகத்தனைச் சோடித்தே மணம்பூசிச்
சிரித்தமுகத் தோடுகாக்கை இனிப்பான வார்த்தையென எண்ணுமவன் இழிசொற்கள்
இளையவள் தன்னைநோக்கி ஜனித்தனவே செவியேற்றுச் சகிக்காது வேறுபுறம்
திரும்பினளே அருகில்வந்தான்
163
uaokullargau asiraofuair aðrre-Suyub 260

மலைமூடு வெண்மேகப் படாம்போல மார்புகளை
மூடியமுன் றானைதனையச் சிலைமீது களைந்தனன் சினஞ்சிரசி லடித்தாலும்
சிறுபொழுதில் நிலையுணர்ந்தாள் அலைபாயும் விழிகளவள் அங்கங்க ளெங்கணுமே
ஆலிங் னம்செய்யவே கொலைவெறியில் மனமிருந்தும் கொதிக்காதே அடங்கினவே
கட்டுண்ட கைகளதனால்
64 தீக்குண்டம் போலிருந்த விழியிரண்டும் சிறுபொழுதுள்
தண்டலையின் மலர்களாக வாக்கினிலே பொங்கவென வைத்தமொழி யத்தனையும்
வாழ்த்துமொழிச் சொற்களாக நாக்கினுக்கும் நெஞ்சினுக்கும் நெடுந்துார மாமென்னும்
நிலையுணராக் காக்கைவன்னி ஏக்கத்தில் துடித்தனனே எண்ணியதில் எளிதாக
எலாமும்நடை பெறுகுதென்றே
1165 ஆசைமொழி பேசினனே அவன்தனது துயிலறையின்
அந்தரங்க மெடுத்துரைத்தே பேசியவை செவிகளிலே பெருநெருப்பாய்ச் சுட்டிடினும்
பேசினளே வார்த்தையமுதாய் கூசாது வார்த்தைகளைக் கொட்டினனே காமுகனுங்
கூசினளே செவியுமேற்க வேஷமேதான் எனினுமவள் வசந்தமொழி பேசிடவே
வெள்கினளே நல்லநாச்சி
1166 பொய்யொன்றை அவிழ்த்தனளே பேரன்பு தானெனவே
புகன்றனளே என்னைநீங்கள் மெய்யாக விரும்பிடிலேன் வணிகரெனப் பொய்யொன்றை
வேண்டுமென் றுரைத்தலழகோ கையினையுங் கட்டியிவண் காவலுக்கும் ஆள்வைத்தால்
காதலோ வருமெனக்கு தையலர்தம் மணமறிந்த தாங்களேயித் தவறினையுஞ்
செய்திடிலென் செய்வதென்றாள்
167
261
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 150
என்மீது விருப்புற்ற போதினிலே விருப்பமதை
என்னண்ணன் தனக்கியம்பிப் பெண்கொள்ள விருந்தததன் பின்னாலே சொந்தமெனப்
போயிருந் திருக்கலாமே ஒன்றாக விருவருமே சேர்ந்திருந்தால் வெள்ளையரை
ஒட்டிடவும் வாழ்வுவருமே என்றனளே முழமையாய்க் காக்கையும் நம்பியவள்
இணங்கினளென் றகம்மகிழந்தான்
1 168 இப்படியோர் மாற்றத்தை எதிர்பாராக் காக்கைமுன்னே
இருப்பவளும் முன்னரென்னைத் தப்பிதமாய்ப் பேசியுயிர் பறிக்கவென முனைந்தவளோ
தப்போவிவஸ் வேறுபெண்ணோ ஒப்பாத மனத்தோடும் 'உண்மையா நாச்சிநீ
உரைப்பவைகள்’ எனவிளிக்க செப்பினளே அதரத்தில் நகையரும்ப ஆமென்று
சிங்கார மொழிபகர்ந்தே
69 கொடுத்தேனென் மனத்தினையும் காலமெலாம் வாழ்வதெனும்
கருத்தோடே கரத்தைநீட்டிக் கொடுத்தேன்நான் உங்களுக்குக் கணையாழி அணிவிக்கக்
கண்ணகிமுன் மறக்கலாமோ கொடுத்தாலும் என்னையும்நான் கரங்கொண்ட பின்நீங்கள்
கைக்கொண்ட வழிமுறைகள் கொடுத்தனவே வெறுப்பதனை விரோதிக்கும் மனவுணர்வை
காரணமும் நீங்களென்றாள்
170 எண்ணாத மாற்றங்கள் இன்னுமவள் கரங்களினை
இறுகப்பி ணைத்துவைத்தால் புண்ணான மனமின்னும் புண்ணாகிப் போகுமெனும்
பரிதாப உணர்வுதோன்றக் கண்ணேயுன் கைகளையிக் கயிறறுத்தே விடுமுன்னர்
கட்டவிழ்த்தும் விடுவனென்றே நண்ணினனே யவளண்டை நினைந்தபடி செய்தனனே
நிலைமையுடன் மாறிற்றன்றோ
7
sair-stajaia'uai sraSuui 262

கட்டவிழ்த்து விடக்கரங்கள் கானமயில் புலியெனவே
கோபத்தில் மாறிவெறியால் கட்டுண்ட வாறுமேயக் கூடத்துள் எரிந்தவொரு
கைப்பந்தந் தனையெடுத்தே திட்டமாய்க் குறிவைத்துத் தாக்கியதும் காக்கைமுகம்
தீயினால் வெந்துகருகப் பட்டஅடி தாங்காது போய்விழுந்தான் கதவினிலே
படீரென்று திறந்தததுவே
1172 மற்றொரு மதுரை
கண்ணி அம்மன் கோயிலினைக் கடுகள வேனும் இடமின்றிக் கண்ணொளி பாய்ச்சினர் வீரரெங்குங்
காணார் தணிகையை தலைவனிடம் உண்மையை உரைத்தார் எங்கனுமே
உடல்கள் மிதந்தன குருதியிலே நண்ணியே ஒவ்வோர் உடலினையும்
நன்றாய் நோக்கினர் இலாதிருந்தான்
1173 களத்தினில் தணிகை இலாதிருக்கக்
கண்டதும் வன்னியன் குருவியினை விளித்தனன் ஒர்வழி தனைக்காட்டி 'வாவிவ் வழிநீ படையோடே வழியினில் தணிகையைக் கண்ணுற்றால்
வேண்டிய அனைத்தையும் செய்யென்றோர் வழியினில் பிரிந்தொரு படைதுணையா:ப்
வன்னியன் பரியை ஒட்டினனே
1174 மாண்டனன் என்னுஞ் சேதியனை
மனமொப் பாத வன்னியனும் மாண்டிடா திருக்க வேண்டுமென்றே
மனத்தால் இறையை இறைஞ்சினனே மாண்டிட்ட போதில் அவனுடலை
மதித்தே காத்திட வேண்டுமன்றேல் மாண்டிடா திருப்பின் உடனவனை
மீட்டிடத் துணிவும் கொண்டனனே
175
ஜிண்ணாஜர் 2றிபுத்தின்

Page 151
கோவிலை விடுத்துச் சிலதொலைவு
கானகங் கடந்தார் ஒருவெளியில் ஆவிபி ரிந்த உடல்கண்டார்
அதுவவன் பிணமென உறுதிகொண்டார் சோவெனப் பொழியும் வான்போலும்
சொரிந்தன கண்கள் வன்னியனின் சாவிலும் மார்பினில் வடுக்கொண்டே
தனையிழந் திருந்தான் தணிகைமலை
அருகினில் முழங்கால் மடித்தமர்ந்தே
அன்புடை நண்பன் ஒற்றனெனப் பெரும்பணி செய்த தணிகையினைப்
பார்த்ததும் தன்னிலை மறந்தவனாய் உருகினன் உடன்பிறந் தானைவிட
உயிராய்த் தன்னை மதித்தவவன் பிரிவினைத் தாங்கவே மாட்டானாய்ப்
பிறரரு கிருப்பதும் மறந்தனனே
வாய்விட் டலறிட மாட்டானாய்
வார்த்தைகள் நெஞ்சுள் அடங்கிடவே தோய்ந்தன கன்னம் மார்பணியும்
தன்னுள் மனத்தால் பேசினனே "சாய்ந்ததோ வுன்னுடல் உயிர்மறந்தே சென்றதோ வீரனே நம்கடமை ஓய்ந்திட விலையீங்கெனைத்தனித்து
உலவிட விட்டேன் முன்நடந்தாய்
என்னுடை இலட்சியம் வென்றெடுக்க இரவும் பகலும் உதவினைநீ அன்னியர் சுவடெம் முல்லையிலே
அமைந்திடா திருக்க முயன்றவன்நீ என்னொடும் உன்றன் ஆசைகளும்
இசைவுற மன்னன் எனைவிடுத்தே சென்றனை ஏனோ தமிழ்த்தாயின்
சீரிய புதல்வ எனக்கூறி
17()
77
1178
1179
uaokullargas saitafuasi a:5 AralSuyub

தோளினைத் தூக்கித் தன்கழுத்தில தரித்தே இருந்தமுத் தாரத்தைத் தோழனின் கழுத்தில் போட்டவனைத்
தூக்கியெடுத்தான் பண்டாரன் தோழரே இந்தத் திருமகனைத்
தாங்குக சென்றே அரண்மனையில் தாழவோர் புறத்தில் புதையலெனச்
செய்வீர் என்றே பணித்தனனே
1180 நண்பனின் பிணத்தைக் கண்டதுமே
நங்கையை மறந்தான் பிணம்ஏகத் தன்பணி வேறொன் றிருப்பதனைத்
தெரிந்தான் வன்னியன் படையுடனே முன்னே நாச்சி தன்படையை
முடுக்கி இருந்தாள் எண்ணமெo rம் தன்னால் முடிந்தால் நல்லாளைத்
தேடிப் பிடிப்பது தானென்றே
1181 (36)g
காக்கையின் கோட்டையில் கைபபந்த அடிகொண்டு
கதவோடு வீழ்ந்தகாக்கை தீக்கொண்ட புண்ணாலே தன்முகம் வெந்திடத்
துடித்தானே கதவுவிரிய நோக்கினரே காவலிலே வெளிநின்ற வீரர்கள்
நொடிக்குள்ளே அங்குவந்தார் தாக்கினரே கட்டாரி ஈட்டிவாள் சகிதமெனத்
தடுத்தாண்டாள் நல்லநாச்சி
182 ஒன்றல்ல இரண்டல்ல ஒருகூட்ட வீரர்கள்
ஒன்றாக எதிர்த்தபோதும் தன்திறனைக் காட்டியே தனைக்காத்து மீண்டுமவள்
தாக்கினளே காக்கைதனையே தன்னைத்தான் காத்திடுமோர் திராணியுமற் றிருந்தவன்
செவிகொண்டான் குளம்பினோசை மின்னியதோர் சூழ்ச்சியவன் விஷமூளை தன்னுடனே
வாய்விட்டே அலறலானான்
11.83
265
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 152
கூப்பிட்டே அனுப்பியவென் குதிரைப்ப டையொன்று
குறித்தகாலிங் குற்றதென்றே ஆப்பிழுத்த குரங்கான அவன்கதற நல்லாளும்
ஆபத்தை அறிந்துகொண்டாள் காப்பாற்றக் குருவியேதான் வருகின்றாள் என்பதனைக்
காணாத காரணத்தால் காப்பாற்ற யாருமிலை கோட்டையைத்தான் எரிப்பதெனக்
கடிதினிலே முடிவுகொண்டாள்
1184 தனித்தொருத்தி யாய்நின்று சண்டையிடு போதினிலே
தன்னிலையை யுணர்ந்தவவளும் இனிப்பயனும் இலையெனவுள் ளோடினளே கைக்கொண்டே
எரிபந்தம் தனையுங்கொண்டே முனைந்தனளே தீமூட்ட மஞ்சமொடு திரைத்துணிகள்
மற்றுமுள ஆடையணிகள் அனைத்துமேசெந் தணலுக்கே ஆகார மாகினவே
அடுத்துமரப் பொருட்களெரியும்
185 பலநாட்கள் பசிகொண்டு பார்த்திருந்தே வேட்டையொன்று
பெற்றிட்ட வேங்கைபோல நிலைக்கதவு யன்னல்கள் நீண்டபெரும் மரத்துாண்கள்
நீறாகத் தீயுமுண்ணும் பலங்கொண்ட நெருப் பெதற்கும் பணிந்திடேன்
எனும்பாங்கில் பற்றியது சுற்றியெங்கும்
அலைகொண்ட கடல்பொங்கி ஆகாயந் தொடமுயலும்
186 அசைப்பினிலே சீறியுயரும்
உள்நுழைந்த வீரர்கள் உள்நுழைந்த வாறுடலும்
உருகியேதான் சாம்பரானார் எள்ளளவும் இடமின்றி எங்கணுமே தீநாக்கள்
இரைதேடித் தேடியுண்ணும் வெள்ளமெனப் படையோடு வந்தனளே குருவிச்சி
வெந்திடுமம் மாளிகைக்குள் உள்ளாளென் றறிந்திட்ட உத்தமியாள் நல்லநாச்சி
உடலையெண்ணி வருந்தினாளே
uaoru sarga Jasikafuasi a5 froSuub 266

எரியுண்ணும் மாளிகையுள் ளிருந்துமவள் கைக்கொண்ட
எரிபந்தத் தோடுநல்லாள் எரியுண்ண வந்தனனே இறுமாப்பு மேலிடவே
“எரிந்தனன் காக்கை”யென்றாள் துரோகியைத் தொலைத்தவனின் கோட்டையையும் அவனுக்கே
சுடுகாடாய் மாற்றிவிட்டேன் ஒருக்காலும் இனியவனின் உயிர்பெற்று வரானெனவே
உறுதியொடு கூறிநின்றாள்
188 முற்றாக உடலில்தீ மேலிடவே காத்திடமுன்
முயன்றோடி நாச்சிவந்தே பற்றுமுடல் தனைத்தரையில் புரட்டியுருட் டினள.'து
பரவாது மேதடுத்தாள் குற்றுயிராய்ப் போனதுடல் எரியுண்டு போனதனால்
கையேந்தக் குருவிசென்றாள் சற்றாங்கு நீநில்லே தொடொதேயெனை என்றதுமே
திகைத்தனளே குருவிநின்றாள்
189 அவள் கண்ட சொர்க்கம் நெருங்கிவர வேண்டாமென் றுரைத்தாள் நல்லாள்
நெருப்புண்ட உடல்பாதி வெந்தி ருக்க உருக்கமொடு பேசினளே துரோகம் செய்தேன்
உடன்பிறந்த அண்ணனுக்கும் இனத்துக் கும்நான் துரோகம்தான் செய்தேன்என் நாட்டி னுக்கும்
துரோகியென வானேன்ஏன் எனக்குங் கூடத் துரோகம்நான் செய்துவிட்டேன் தூய வள்நீ
தொடாதேஎன் சரீரத்தை வேண்டா மென்றாள்
1 190
யாருக்குந் துரோகம்நீ செய்ய வில்லை
என்பேச்சைக் கேள்நல்ல நாச்சி யுன்மேல் ஒர்பழியும் இல்லையேநீ இப்போ துன்றன் உயிர்காக்க உதவவிடு என்ற வாறே ஓர்அடியை முன்வைத்தாள் குருவி வேண்டாம்
உலகுக்கு நானோவோர் பாபப் பிண்டம் தேராயோ இனத்துக்கோர் பழியாய் நிற்கும்
துரோகியெனத் தன்னைத்தான் பழித்திட்டாளே
1.191
267
ஜிண்ணாஜர் 2றிபுத்தின்

Page 153
உதவியொன்றே எனக்கியற்ற வேண்டு மாயின்
உடன்செய்வாய் என்ஆத்மா சாந்தி கொள்ள உதவியென்ன வேண்டும்நீ சொல்லென் றாளே
உன்கைவாள் என்நெஞ்சில் பதிப்பாய் என்றாள் அதுபோதும் என்வாழ்வில் உய்வு கொள்ள
அழிவதற்கு முன்என்னை அழிப்பாய் என்றாள் இதுவுமென்ன கொடுமைநல்ல நாச்சி நீயேன் என்கையால் சாவதெனக் கேட்டிட் டாளே
1 9 “என்கையால் நீஏன்தான் சாக வேண்டும் இப்பெரிய பாவத்தைப் புரியத் தானா உன்னைநான் தேடிவந்தேன்’ என்றாள் நாச்சி
உண்மைதான் எனினும்நான் உன்கை யாலே என்னுயிரும் போவதைத்தான் யாசிக் கின்றேன்
ஏனெனில்நீ இனத்துக்காய் மண்ணுக் காகத் தன்னுடலை உயிரையுமே தாரை வார்த்த
தமயனுக்குத் துணையாக இருப்ப தாலே
193 இன்பசுகம் அனைத்தையுமே மறந்தே அண்ணன்
ஏற்றிருக்கும் சபதத்தை வென்றெடுக்க முன்னின்று நீயுமொரு தவசி போல
முனைந்துள்ளாய் நிழல்போலும் என்பதாலே தன்னிகரே இல்லாத தமிழ்ப்பெண் வாழ்வில்
தவத்தில் மிகு புனிதவதி உன்கை யாலே என்னுயிரும் போமெனிலோ சொர்க்கங் காண
இதுபோலோர் பாதையுண்டோ செய்வாய் என்றாள்
1194 எரிந்தவுடல் சரிந்ததுமேல் மூச்சு வாங்கி
இளைத்ததுவாய் உரைத்ததனால் நாச்சி சொல்வாள் புரியாயோ உனதண்ணன் உன்றன் மேலே
பேரன்பு வைத்திருக்கும் நிலையை என்றே புரிந்ததால்தான் சொல்லுகிறேன் என்றன் ஆவி போக்கிவிடு என்றேநான் தரிப்ப தேன்நீ வருமுன்னே அவரென்னைக் காணு முன்னே
வேண்டும்நான் பிணமாக என்றாள் மீண்டும்
195
பண்டாரவண்ணியர் காவியம் 268

நம்பிக்கை மிகக் கொண்டே என்றன் கையில் நாட்டிலொரு பாகத்தை ஆளத் தந்தார் நம்பிக்கைக் குரியபடி நானாண் டேனா
நினைந்தபடி காதலினால் துரோகி யானேன் நம்பிஇந்த மண்பெற்ற நிகரில் வீரன்
நங்கையெனத் துளிநீரும் சிந்தக் காணத் தெம்பெனக்கும் இலையுடனே யுன்றன் வாளைச்
செருகென்றன் மார்பிலென்றாள் களைப்புற் றாளே
1196 என்னாலே செய்யமுடி யாத வொன்றை
ஏன்செய்யச் சொல்கின்றாய் நாங்க ளெல்லாம் ஒன்றாக உயிர்வாழ்ந்தே அவரோ டொன்றி
இனம்மானம் மண்காக்க வேண்டும் என்றாள் இன்னிலையில் நான்பிழைக்க மாட்டேன் என்று
நானறிவேன் என்னிறுதி ஆசை தன்னைச் சொன்னதுபோல் செய்யென்றாள் முடியா தென்றாள்
தேர்ந்தனளே நடவாத செயலாம் என்றே
197
ஆசையுற்ற வாறுமவள் கரத்தால் மாள
ஆனவழி தேடினளே சொல்வாள் என்றன் ஆசைக்கோ உடன்படc வேண்டாம் நெஞ்சில்
அழியாத வீரவடு ஒன்றை யேனும் யாசித்தேன் கீறிடுவாய் உன்கை வாளால்
என்றனளே உயிர்பிழையாள் எனநினைந்தே யோசித்தாள் செய்வதென்ன என்றே நாச்சி
இறுதியாசை என்றதனால் கைவாள் கொண்டாள்
198 கைவாளைக் கையெடுத்து நுனியால் மெல்லக் கீறினளே நெஞ்சில்சிறு வடுவுந் தோன்ற செய்யுமந்தக் காரியத்துக் காகக் காத்தாள் சட்டென்றே கரம்பற்றிப் பதித்திட் டாளே ஐயோ!வென் றலறிவிட்டாள் குருவி நாச்சி
அணுவளவும் எண்ணாத நிகழ்வி னாலே கையகற்ற முயன்றனளே நல்ல நாச்சி
கைவாளோ டவள்கரத்தை இறுக்கிக் கொண்டாள்
11.99
269
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 154
குற்றுயிராய்ப் போனவுடல் தீயி னாலே
குருதிமிகப் பெருகியதால் மேலுஞ் சோர வெற்றிகொண்ட வீரன்முகந் தோன்றும் வாறே
வதனத்தில் மலர்ந்ததொரு நகைப்பூக் கண்டார் சுற்றிநின்ற அனைவருமே அத்தோ டன்னாள் சுவாசமுமே அடங்கியது குருவி ஆவி அற்றவுடல் தனைக்கரத்துள் அடக்கிக் கண்கள்
அருவியெனப் பொழிந்தனவே அண்ணன் வந்தான்
200 வீரர்கள் சாவதில்லை
காக்கைவன் னியனின் கோட்டை
கருகியே சாம்ப லாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்
வன்னியன் தங்கை இங்கே நோக்கமே கொண்டார் வெள்ளை
நரிகளும் தமிழ கத்தில் தூக்கினில் கட்ட பொம்மன்
தனையிடக் காலம் ஒன்றே
120 கயத்தாறு மண்ணில் வெள்ளைக் காரனாம் பானர் மே' னாம் கயவனோர் கயவர் கூட்டம்
கூடியாங் கிருக்க யார்க்கும் பயப்படான் கட்ட பொம்மன்
பெருவீரன் குற்றக் கூண்டின் வயப்பட நின்றான் முன்னே
வினாவொன்றை விடுத்திட் டாரே
1202 ‘பானர்மேன் கேட்டான் வீர
பாண்டியன் றன்னை நோக்கி “ஏனுன்னைக் கூண்டி லேற்றி
இருக்கின்றோம்” என்றே கேட்டு ஏனறி யாது போவேன்
என்நண்பர் புதுவை மன்னர் தானெட்டப்பர் தமையும் வென்றார்
துரோகத்தில் அதனால் என்றான்
1203
பண்டாரவண்ணியன் காவியம் 270

“காரணம் அதுவே யல்ல” _கூறினான் பானர் மேன்’ஆம் காரணம் வேறும் உண்டு
கூறுவேன் கேள்நீ” என்றே ”வேறுமோர் இனமும் உண்டோ
வேற்றுமை யால பூழிந்தோர் கூறுவேன் தமிழ ரொன்றே
கூறிடப் பிறர்வேண் டாதே
காழ்ப்புணர் வோடே கெட்ட
கசப்புணர் வும்பொறாமைத் தாழ்வுணர் வனைத்துங் கொண்டே
தனித்தனி யாக நிற்கும் வாழ்வெங்கள் தமிழி னத்தின்
விதியதன் விளைவால் இந்தக் கீழ்மக்கள் பார்த்திருக்கக்
கூண்டினில் நானென் றானே
ஒன்றொடு ஒன்றைக் கூட்டி
உங்களை வலுப்படுத்திச் சொன்னவோர் வல்ல ஆட்சி
தோற்றவே நாங்கள் ஞற்றோம் தன்னிகரற்ற வோர்நற்
றலைவனைத் தேர்ந்தெடுக்குந் தன்மையுள் ளோர்களும்மில்
தோன்றிலர் என்றிட் டானே
என்றுமே ஒன்றி வாழ
இணங்கிடா நிலைமை கண்டே வென்றிட முடிந்த தெங்கள்
வேலையும் எளிதா யிற்று என்றனன் பானர் மேன் தன்
இறுமாப்புக் குன்றா தோனாய் நன்றென்று நகைத்தான் வீர
நாயகன் இன்னுஞ் சொல்வான்
1204
1205
1206
1207
27
saikarara3 EzeổųSait

Page 155
சொல்லுநீ சொல்லு இந்தச்
சுரணையற் றிருக்கும் பேர்க்குச் சொல்லுநன் குணரும் பாங்காய்ச்
சொல்தமை விற்றுக் கொண்டே பல்லிளித் திருக்கின் றார்கள்
பதவிக்காய்ப் பணத்துக் காயுன் சொல்லுக்கும் பணிந்து வாழும்
தாசர்கள் விளங்கச் சொல்வாய்
பழந்தமிழ் இலக்கி யங்கள்
பேசிடும் வீரம் மானம் அழிவிலாப் புகழ்நற் காதல்
அருங்கொடைப் பண்பை நீத்தே வழிகெட்டோர் இனப்பற் றற்றோர்
வீரத்தில் சோரம் போனோர் விளங்கிடு வாறு சொல்லும்
விபரமாய்ச் சொல்லென் றானே
உம்மொழி தம்மி னுள்ளே
ஒளிந்துள்ள உண்மை தன்னை எம்மவர் புரிந்தி ருந்தால்
எம்மண்ணில் இருந்து கொண்டே உம்மவ ரோடு நீரும்
ஒன்றெனக் கூடி என்னை எம்மவர் முன்னே கூண்டில்
ஏற்றிட முடிந்தி ராதே
என்னதான் செய்வோம் நாங்கள்
ஈங்குற்ற பேர்க ளெல்லாம் என்ஊமைத் துரைபோல் மற்றும்
இணையிலா வெள்ளைத் தேவன் தன்னையும் போன்றே ஈழத்
தமிழனாம் வன்னி யன்போல் சென்னியில் ரோஷம் வீரம்
செறிந்திலா திருப்ப தற்கே
1208
1209
1210
121
υκοί υιτσου σταται στα ιταδιμιρ

தமிழின வயலி னுள்ளே
தேறிடுங் கதிர்கள் கொஞ்சம் அமைந்திடுங் களைக ளானோர்
அம்மம்ம அதிகம் அந்தத் தமிழினக் களைகள் முன்றான்
தனையொரு கதிராய்க் காட்டும் தமிழன்நான் நிற்கின் றேன்நீ
துணிந்தெனைக் கூண்டில் வைத்தாய்
1212 பாண்டியன் கட்ட பொம்மன்
பதிலுரை கேட்டுப் பானர் மேன் வெகுண் டெழந்தான் சொல்வான்
மதித்தவர் தம்மைப் பேசு வேண்டியோர் எனக்கு மிக்க
விசுவாசங் கொண்ட பேரை வேண்டிய வாறு பேசும்
வகையுனக் கில்லை என்றே
1213 ஆரம்ப மாகப் போகும்
ஆங்கில ஆட்சிக் கன்னார் ஆரம்பக் கற்கள் என்றே
அடித்தளம் போன்றோர் என்றான் வீரபாண் டியனோ பொல்லா
வேங்கைபோல் சினத்தே சொல்வான் கூறுநீ சுவைபடத்தான்
கோடரிப் பிடிகள் என்றே
1214 வாதங்கள் இனியும் வேண்டாம்
வழக்கினைத் தொடர்வோம் உன்மேல் ஒதிடுங் குற்றச் சாட்டை
ஒழுங்குறக் கேள்நீ என்றே நீதியின் சிகரம் போல
நின்றவன் சொல்வான் உற்றோர் காதினில் விழும்பாங் காகக்
குரல்தனை உயர்த்திக் கேட்டான்
1215
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 156
குற்றமொன் றாகும் எங்கள்
கும்பனி வரியைத் தாராக் குற்றமற் றொன்றாம் 'லுவிங்டன்’
கலெக்டர்தாம் அழைத்த போது மற்றவர் போன்றே ஏக
மறுத்தவோர் குற்றம் மேலும் மற்றுமோர் குற்றம் வீரர்
மாய்த்திபட குற்றம் என்றான்
வரியுமக் களிப்ப தாயின்
வளைந்திட்டோம் என்ப தாற்றான் வரிதர மறுத்தோம் எம்பால்
வருவோரை மதிப்போம் என்றும் உரியவாறுபசரிப்போம்
உள்ளன்பு கொண்டே ஆனால் சிரம்பணிந் தடங்கோம் தேடிச்
சென்றவர் பதமும் பற்றோம்
முற்றுகை யிட்டீர் எம்மை
முறைகேடாய் எமது மண்ணில் பற்றொடு பதம்ப தித்தீர்
பார்த்துநாம் இருக்க மானம் அற்றவரல்லர் வாழ்வை
அற்பமாய் மதிப்போர் என்றும் மற்றவர்க் கடிபணிந்தே
வாழ்ந்தோர்கள் இல்லை என்றே
சிரசுதாழ்ந் திடாது வாழ்ந்தோர்
தமிழினத் தார்கள் நாங்கள் சிரம்பணிந் திடாதே வும்மைத்
தொலைத்தெங்கள் மண்ணைக் காக்க சிரமரிந் திட்டோம் என்றால்
செய்கையில் தவறோ என்றே சிரந்தாழ்த்தா துரைத்தான் வீர fDLDLDTD 35ÜL GLITTLDLD6öT
2 ()
1217
1218
219
uatu-riyayatafurai otajub
274

275
காட்டியே கொடுக்குங் கெட்ட கூலிகள் உதவி கொண்டு கோட்டையை விட்டு வந்த
காலத்தைக் குறிவைத் தேநீர் மாட்டினிர் என்னை யுங்கள்
மர்மக்கூண் டுள்ளே இன்னுங் கேட்டிட என்ன வுண்டு
கூறிடு தீர்ப்பை என்றான்
1220
சொல்வது நீயென்றாயின்
சிரமமொன் றில்லை என்னச் சொல்லுநீ சொன்னால் இந்தச்
சுரணையில் பாளை யத்தோர் கொல்லெனச் சிரித்து மாள்வார் குற்றமும் தீர்ப்பும் முன்னே சொல்லாது தொங்க லேதான்
தொங்கநான் தயார்தான் என்றான்
1221
பாளையக் கார ரெல்லாம்
பார்த்தாங்கே இருக்க சுற்றுச் சூழலை நோட்ட மிட்டுத்
திருப்திதான் படைவீரர்கள் ஆழமாய்க் கருத்தோ டுன்னி
ஆயுதந் தாங்கி நிற்கக் கோழைகள் அஞ்சும் வார்த்தை கொட்டினான் பானர் மேனே
1222
"கயத்தாற்றுப் புளிம ரத்தில்
கட்டபொம் மனைக்க முத்தில் கயிறிட்டுத் தொங்கச் செய்யக்
கட்டளை” என்றான் கேட்டுப் பயமென்ப தறியான் வீரப்
பரம்பரை மறவன் சற்றுந் துயருற்றான் இல்லை நெஞ்சத்
துணிவொடு புன்ன கைத்தான்
1223
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 157
காட்டியே கொடுத்தோர் கண்கள்
கலங்கின தீர்ப்புக் கேட்டே மேட்டிமைச் சுகத்திற் காக
மண்ணுக்கே துரோகம் செய்தோர் தேட்டத்தின் பயனாய் நாட்டின்
சரித்திரந் தன்னில் துரோகக் கூட்டத்தார் என்னும் பேரைக்
கொள்வோமென் றெண்ணி னாரோ
அறிந்தவித் தீர்ப்புக் கென்றும்
அஞ்சிடேன் கவலை யெல்லாம் பிறந்தமண் தனிலோர் போரில்
பகைவரைப் பொருதி மாண்டால் பெருமையாய் இருந்திருக்கும்
பேறும்பெற்றிருப்பேன் என்றன் சரிதமும் துலங்கும் தூக்கில்
தொங்கிநான் இழிவுற் றேனே
பகைவரின் பாதந் தொட்டுப் பணிந்தவர் இட்ட ஏவல் தகையற்றுச் செய்து தத்தம்
தன்மானம் இழந்த பேரே! வகைவகைப் பேறுங் கொண்டே வாழ்கநீர் வாழ்க இ.து மகிழ்வினைத் தந்தி ருக்கும்
மகிழுங்கள் வணக்கம் என்றான்
வேண்டியோர் இருவர் மாய்ந்த
வருத்தத்தில் முல்லை மன்னன் பாண்டியன் கட்ட பொம்மன் பரிதாப மரணங் கேட்டே தோன்றிடும் துன்பத் தாலே
தளர்ந்திடா திருக்க வேண்டித் தானேமுன் வந்தாள் நாச்சி
சேதியைச் சொல்ல வென்றே
1224
1225
1226
1227
υ αστυιτσαμ σταθμα στα (ταδιμιί,
276

தோள்தொட்டுச் சொல்வாள் உங்கள்
சோகத்தைக் கூட்டுஞ் சேதி தோள்தரு வீரன் வெள்ளைத்
தேவரின் முதல்வ ரானோர் காழ்ப்புணர் வாலே காட்டிக்
கொடுக்கப்பட் டுயிர்து றந்தார் பாழ்படாப் புகழ்கொள் வீரர்
பாண்டியர் கட்ட பொம்மர்
1228
குருவிச்சி நாச்சி சொல்லக்
கேட்டபண் டார வன்னி உருகினான் சோகத் தாலே
உடல்விறைத் தசையா துற்றான் அருகினில் இருந்து நாச்சி
அவன்முகம் நோக்கிச் சொல்வாள் "ஒருநாளும் வீரர் தம்மின்
உயிர்போயும் சாகார்’ என்றே
1229 கொழும்பில் கொண்டாட்டமும் தப்பிய விதமும்
மகிழ்ச்சியின் ஆர வாரம்
மாளிகை முற்றுங் கேட்கப் பகலென இரவும் வண்ணப
பட்டாசு மத்தாப் பாலே ஜெகஜோதி யாக மின்னத்
துணைகொண்டே ஆணும் பெண்ணும் மிகமதுப் போதை கொண்டே
மயக்கத்தில் ஆடி னாரே
1230
கவர்ணர்நோத் மாளி கைக்குள்
காணுமிக் காட்சி காண்போர் புவியினில் பவத்தைத் தேடப்
பிறந்தவர் இவர்தா மென்பார் செவியதிர்ந் திடவே வானைத்
தொடுமொலி வாத்தி யங்கள் அவியவே இல்லை அந்த
இரவெலாம் ஒலித்த தம்மா 1231
277
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 158
கான்நரி ஊளை போலக்
கத்தினாள் ஒருத்தி கூடத் தானென்ன சளைத்த பேரா
சரியிதோ நானு மென்றெண் சானுடல் குலுக்கிக் காட்டித்
தனதுடல் அழகை யெல்லாம் வேணுமென் றள்ளி யார்க்கும்
விருந்திட்டாள் ஒருத்தி கண்டார்
சேர்ந்தொன்றி ஆடி னார்கள் சிரித்தார்கள் கூடிக் கூடி வார்த்தைகள் கோத்துக் கேலி
விதைத்தார்கள் நகைப்புக் கூடே பார்த்திரார் ஒருவர் தாமும்
பலபட மகிழ்ந்தார் கண்கள் போர்த்திரார் இமைகள் மூடார்
பறித்துண்ண வந்த பேரே
கொழும்பில்நோத் மாளி கையின்
குதுாகல நிகழ்வுக் கெல்லாம் முழுமையாய்க் கட்ட பொம்மன் மடிந்தனன் என்பதாகும் அழிந்தாலுந் தமிழ கத்தில்
ஆங்கிலத் தாரின் ஆட்சி ஒழிந்திட வேண்டும் என்றே
உழைத்தவன் அதனா லம்மா
தாயின்கைப் பிள்ளை போலும்
தமிழகத் தோடே ஒன்றிப் போயுள்ள இலங்கைத் தீவின்
பெருந்தமிழ்ப் பலமாம் வன்னித் தாய்க்கொன்று நேர்ந்தாற் பிள்ளை
தாமுமே வருந்த லொப்ப வாய்ந்ததே கட்ட பொம்மன்
வரலாற்று முடிவிம் மண்ணில்
1232
1233
1234
1235
uætv-/rg-Watsfuøt að/r-Suib
278

பரவினால் இங்கச் சேதி
பயத்தினால் இலங்கை வாழ்வோர் உரமற்றுப் போவார் தம்மை
எதிர்ப்பதை மறுப்பா ரென்றே கருதினார் ஆங்கி லேயர்
காரணம் அதுவே யந்தப் பெருவிழா தோன்று தற்குப்
போதுமென் றாயிற் றன்றோ
1236 பாண்டியன் வீழ்ந்தான் என்றால்
பண்டார வன்னி நெஞ்சில் தோன்றிடு பயத்தால் எம்மைத்
துதிசெயாப் போதும் வீணே தோன்றிய பகைம றந்தே
துணைகேட்க விருப்பங் கொள்வான் தோன்றிய ததுவே யந்தத்
தற்குறிப் பேர்களுக்கே
1237 உயர்மட்ட அதிகா ரத்தில்
உள்ளவர் நிருவா கத்தோர் செயலாளர் வீரர் மற்றுந்
தெரிந்தவர் அறிந்தோ ரெல்லாம் ஜெயவிழாக் காணும் போது
தலைவன்நோத் ஒர றைக்குள் துயிலிழந் திருந்தான் கூடத்
தனையிழந் தொருத்தி சேர்ந்தாள்
238 தினமொரு விலைமைப் பெண்ணின்
துணைதேடு 'நோத்தி னம்போல் தனைத்தேடி வந்த மானின்
துணைகொண்டான் மதுவின் போதை தனைவெல்லு வாகாய் அன்னாள்
தந்தவச் சுகத்தில் "நோத்தும் தனைமறந் திருந்தான் மோகம்
தலைக்கேறி ஆட்டிற் றன்றோ
1239
279
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 159
அவன்தர அவளும் உண்டாள்
அவள்தர அவனும் உண்டான் சுவனிது தாமே என்று
சுவைத்தனர் மதுவைத் தங்கள் அவலத்தை யாரும் காணா
அச்சமற் றிருந்தார் காணின் கவலிலாக் குழந்தையி ரண்டு காசினிக் குதித்த வாறாம்
எப்படித் தப்பி ஈண்டே
எனைத்தேடி வந்தாய் என்றே தப்பிதத் தொன்றி நின்ற
துணைமகள் தன்னை நோக்கிச் செப்பிடு என்றான் நோத்அத்
தேவடிப் பெண்ணுஞ் சொல்வாள் செப்புவேன் அ.தோர் காதை தந்திரம் வென்ற தென்றே
பியசீலி தானே யப்பெண்
பேய்முல்லைத் தீவி ருந்தே மயல்காட்டி வீரர் நெஞ்சை
மயக்கியே ஓடி வந்த செயல்தனைக் கூறக் கேட்டுச்
சபாஷ்என்றான் கவர்னர் நோத்தும் கயமைக்குத் துணைசெய் கின்ற
காரிகை பூரித் தாளே
முல்லையின் மாளி கைக்குள்
மறைத்தெனை வைத்தார் நான்கு மல்லரை ஈட்டி யோடே
முன்காவல் காக்க வைத்தே கல்மரங் கொண்டு செய்த
கவினுறு அறையாம் தப்பிச் செல்லவோர் வழியைத் தேடித்
திரிந்தேன்நான் கண்டு கொண்டார்
124()
124
1242
1243
uaxirlsrgajot afusait assraoulib
280

என்னதான் தேடு கின்றாய்
என்றனன் தலைவன் போன்றோன் ஒன்றுமே இல்லை யென்றே ஒருசிறு நடிப்புக் காட்டி நன்றையா முடிந்தால் என்மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் நன்மையொன் றியற்ற வேண்டும்
நரிக்குறப் பெண்ணுக் கென்றேன்
1244 புன்னகை கண்டான் என்றன்
பூரித்த உடலைக் கண்டான் தன்னையே மறப்பா னென்று
தாவணி இழந்தேன் பொல்லான் கன்னங்கள் சிவக்க என்னைக்
கடிந்தனன் சொல்லால் சொன்னேன் “சின்னவோர் இரும்புத் துண்டம் தருவீரோ ஐயா" என்றே
1245 இரும்புனக் கெதற்கோ என்றான்
இருப்பான மனத்தோன் என்னில் வருங்காக்கை வலிப்பு நானும்
வரும்முன்னே பற்றிக் கொள்வேன் வரும்வழி தன்னில் விட்டேன்
விபரீதம் தோன்று தற்குள் தருகவென் றிரந்தேன் நம்பிச்
சரியெனக் கொணர்ந்தே தந்தான்
1246 அவன்சென்று சிலபோழ் துள்ளே அடியுண்டு வீழ்வாள் போலும் சுவரண்டை வீழ்ந்தேன் கையில்
தாங்கிய இருப்பி னோடே அவசரம் கொண்டவ் வீரன்
அறையினுள் ஓடி வந்தான் கவலையுங் கொண்டான் காட்டுங்
காக்கையின் வலிப்புக் கண்டே
1247
28
aitar/ragi aeĝųSait

Page 160
வலிப்பினில் துடிப்பாள் போன்று
வாயையுங் கோணிக் கால்கை உலுப்பினேன் சிறிது நேரம்
உடல்வலு அற்றாள் போன்றே நிலத்தினில் கிடந்தேன் வாயில்
நுரைதள்ளி இருத்தல் கண்டே வலிப்போய்ந்து தூங்கு கின்ற
வாகுகண் டகன்றிட் டானே
1248 ஓங்கியே கதவைச் சார்த்தி
உள்ளெனை வைத்துப் பூட்டித் தாங்கினான் போலும் தன்னில்
திறப்பினை துணிவு கொண்டே ஈங்கிருந் தோட இ.தே
ஏற்றநற் றருணம் என்றே தூங்கிடு சாள ரத்தின்
துணிபற்றிக் குதித்தேன் என்றாள்
1249
பாவையின் முடிவும் பகையொன்றின் தொடக்கமும்
நீண்நெடு நேரமாக இரவு முற்றும்
நாடினரே சுகமிருவர் போதை முற்றிப் பூண்டனனே அடக்கவொண்ணா வெறியை நோத்தும் புரிவதென்ன எனவறியா நிலையில் நின்றான் காண்டாவின் கொம்புமாட்டிக் கொண்ட சின்னக்
குரங்கானாள் பியசீலி தடுத்துப் பார்த்தாள் வேண்டாத செய்கையெலாஞ் செய்தான் பாவி
வெற்றுடலை வெறிகொண்டு குதறி னானே
1250 தான்தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேனும் தனக்கியலா நிலையினிலே குடித்த தாலே கானமயில் போலவளும் ஓநாய் நோத்தின்
கைப்பிடியுள் அடங்கினளே சிதறிப் போனாள் வாணாளில் செய்தபெரும் பாவமெல்லாம்
வந்தொன்றிப் போனதென நினைப்ப தற்குள் காணாமல் பறந்ததுயிர் கட்டில் மேலே
கண்ணயர்ந்த பாங்காகக் கிடந்திட் டாளே 125
uørv_/r/r-veisfu sí að/r-Sutið 282

சூரியன்றன் உணர்வுகொண்டு பகலா கிப்போய்த்
திணித்தனனே ஒளிக்கரத்தை அறையினுள்ளே தேராது தனைமறந்து சோர்ந்து தூங்கித்
துயிலழிந்தான் கவர்ணர்நோத் பிணத்தைக் கண்டான் பாரியதோர் குற்றத்தைப் புரிந்தேன் என்றே
பிசைந்தனனே கரங்களினை அங்கும் இங்கும் யாருமற்ற அறையினுள்ளே கூண்டி லிட்ட
ஞமலியென அலைந்தனனே நிலையி லாதே
1252 இறந்தாலும் பிணத்தைவைத்தே அரசி யற்கண்
இலாபமொன்றைத் தேடவென்றே வெள்ளை யர்கள் மறந்திலையாம் மதியுரைப்போர் ஒன்று கூடி
மந்திராலோ சனையொன்றை இயற்றி னார்கள் அறிந்திருந்தார் கண்டிநாட்டின் நிருவா கத்தை அமைச்சரெனும் பிலிமத்த ளாவை அங்கே இறந்தவளின் தந்தையென்ற கார ணத்தால்
அதிவிரைவாய்க் கொழும்புக்கே அழைப்போ மென்றே
1253 அரசாங்க விடயமொன்று பேச வென்றே
அழைத்தாலும் நோக்கமென்ன சொல்வ தென்று விரும்பினனே அறிந்திடநோத் ஒருவர் சொல்வார்
வெஞ்சினத்தைத் தூண்டிடத்தான் ராஜ சிங்கன் மருமகனைப் பிலிமத்த ளாவை என்றும்
மதியாது வெறுத்திடவே செய்வோம் என்றார் அரசாங்கப் பொறுப்பனைத்தும் அவர்தம் கையில்
அவரேதான் வெறுத்திடுவார் எனநோத் கேட்டான்
254 திட்டமிட்டுப் பியசீலி தம்மைக் கொன்ற
சதிக்குடந்தை ராஜசிங்கன் என்றோர் பொய்யைத் திட்டமிட்டு நாம்சொல்ல வேண்டும் நம்பிச்
சினங்கொள்வார் அவர்சினத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டு மன்னனைமுன் வீழ்த்திப் பின்னே
தளாவையையும் முடித்துவிட்டால் நாங்கள் போடும் திட்டத்தில் முற்றாகக் கண்டி எங்கள்
தாள்பணியும் எனச்சொன்னார் நோத்தும் சொல்வார்
1255
283
aikarara aeĝųSai

Page 161
சொல்லுகின்ற திட்டம்மிக நன்றென் றாலும்
சேதியொன்றை நீயறியாய் தீயில் வெந்து சொல்லவைத்த கதையுண்ட பியசீலிக்குக் கண்டியிலே அரசமரி யாதை யோடு நல்லடக்கம் செய்ததுவாய் அவளே சொன்னாள்
நம்பிவிட்டான் கண்டிமன்னன் என்றாள் இந்தப் பொல்லாத திட்டத்தைச் செயல்படுத்தப்
பிதாவோடு மகளுமொன்றிச் செய்தார் என்றாள்
1256 சொல்லியவன் நம்பியிருந் தாலு மென்ன
தெரிந்துகொண்டான் பியசீலி கண்டி விட்டு நல்லபடி சென்றளெனப் பின்னர் மன்னன்
நாடெல்லாந் தேடவைத்தான் ஒற்றர் வைத்தே தொல்லையின்றிக் கைதானாள் தனித்தி ருந்த
சொகுசுமா விரிகைக்கவளைக் கொணர்ந்தே தானும் எல்லைமீறிக் குடித்தவளைக் குடிக்கச் செய்தே இரவுமுற்றும் வதைத்துள்ளான் என்றே கூறி
1257 பாதியுயிர் போனநிலை ராஜ சிங்கன்
பிடியிருந்து தப்பிவருங் காலை எங்கள் தீதறியா வீரர்கைப் பட்டாள் அன்னார்
துணையோடே நோத்பிரபு தம்மைக் கண்டே ஒதினளே நடந்தவற்றை உதவி செய்ய
ஒண்ணாதே உயிர்நீத்தாள் என்னும் வாறாய் சேதியொன்றைச் சிருஷ்டித்துச் சொல்வோம் தந்தை சினந்தெழுவார் நாமதனில் பயனைச் சேர்ப்போம்
1258 நல்லதொரு திட்டம்தான் மகளை இந்த
நிலையினிலே கண்ணுற்றால் துடிப்பார் தந்தை சொல்லாரோ வெள்ளையர்கைப் பட்ட பெண்ணைச் சேர்த்திருக்க லாமேயெம் மிடத்தி லென்றே சொல்லிய"நோத் வாய்மூடத் தொடர்ந்து சொல்வான்
சொல்வதற்கு மிகநல்ல பதிலும் உண்டாம் செல்லவவள் விழையவில்லை கண்டி மன்னன்
aொலைவெறிககாம் அஞ்சுவதாய்ச் சொன்னா ளென்றான்
1259
tu 4შött-frqrრთu4თtrრომლ14at თrrთSoutb 284

திட்டங்கள் திருப்தியெனக் கண்ட பின்னர்
தூதனுடன் பறந்தனனே கண்டி நோக்கிக் கட்டளைக்குப் பணிந்தவன்போல் கொழும்பு நோக்கிக்
கடிதினிலே பிலிமத்த ளாவை வந்தான் கொட்டிவிட்டார் கட்டிவைத்த கதைகளைத்தம் காதுகளே நம்பாத பொய்களைத்தான் திட்டவட்ட மாகவதை மறுத்தார் தந்தை
தன்மகளின் உடல்கண்டார் பதறி னாரே
1260 வடித்தெடுத்த பொய்களையென் முன்னால் பேசி
வளைத்தெடுக்கப் பார்க்கின்றீர் நீங்கள் சொல்லும் படியெதுவும் நடக்கவிய லாதே மன்னன்
படிதாண்டா வாறென்றன் கைக்குள் உள்ளான் விடிந்துபொழு தடங்கிமறு நாள்வி டிந்தே
வருமொவ்வோர் நாளுமென்றன் கண்ணுக் குள்ளே படிந்தவனும் இருக்கின்றான் பச்சைப் பொய்யைப்
பகருகின்றீர் பாவிகளே பெண்ணைக் கொன்றீர்
1261 எத்தனையோ எடுத்துரைத்தும் இணங்க வைக்க
இயலாதே போனதவர் நோத்தை நோக்கிச் சத்தியமே அவள்சபலங் கொண்ட பெண்ணே
சாதித்தேன் என்கருமம் அவளால் உண்மை இத்தனைபே ரநியாயம் செய்த உங்கள்
இணைப்பெனக்கு வேண்டாவே உறவுக் கின்றே முத்தாய்ப்பு வைக்கின்றேன் பழிவாங் காது
முடியேனென் வாழ்வென்று சபதம் செய்தார்
262 இறுதியாக ஒருமுயற்சி செய்தான் நோத்தும்
எல்லாமே உண்மையெனை நம்பும் என்றான் பொறுமையற்றுக் கதறினாரே தந்தை பெண்ணைப்
பதைபதைக்கக் கொன்றொழித்த பின்னும் நம்ப வெறும்வாயைச் சப்புகின்ற மூட னாநான்
வேஷமிடும் உங்களைநான் நம்பு வேனா அறிந்துகொள்ளும் நானுங்கள் விரோதி என்றே
அறிவித்தார் நோத்அதிர்ந்தே போய்நின் றானே
1263
285
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 162
பகையும் பண்பும்
காய்ந்துவரண் டிருந்தபெருங் கான கத்துள்
கனல்வைத்த நிலைபோன்றே வஞ்சம் நெஞ்சுள் தோய்ந்தெரிந்து கொண்டிருந்த தாமே ஏற்ற
சந்தர்ப்பம் வரும்வரையும் காத்தி ருந்தார் வாய்த்ததெல்லா வசதிகளும் வஞ்சம் சூழ்ச்சி வந்திருந்ததுடன்பிறப்பாய் மந்திரிக்கு ஆய்ந்தறிந்தே ஒவ்வொன்றும் செய்தார் நாட்டில்
அதிகரித்த தாம்படையின் பெருக்க மாமே
1264 எதிர்த்தழிக்கும் வல்லமையைப் பெற்ற பின்னே
எதிர்ப்புதனை வெளிப்படையாய்க் காட்டல் என்னும் எதிர்பார்ப்பில் படையோடு படைக்க லங்கள்
எண்ணிக்கைப் பெருக்கத்தால் அதிக ரிக்கும் எதிர்ப்பெதுவுங் காட்டவில்லை ராஜ சிங்கன்
எல்லாமே அவசரமாயப் போன தாலே எதிர்பார்த்தார் கண்டிமக்கள் முன்போல் நாட்டில்
எல்லாமே கிடைக்குமென ஏமாந் தாரே
1265 அரசாங்கக் கருவூலம் ராஜ்ஜியத்தின்
அன்றாட தேவைக்கோ வளத்திற் கென்றோ ஒருசிறிதும் பயன்படாது யுத்தத் திற்கே
உவந்தவெல்லாத் தேவைக்கும் செலவா கிற்றே அரசதுறை அத்தனையும் ஒருவா றாக
ஆங்கிலேயப் பழிவாங்கல் முயற்சிக் கென்றே திருப்பிவிட்டார் பிலிமத்த ளாவை அட்தைத்
தெரியாதே இயங்கினவத் துறைக ளன்றே
1266 மிகப்பெரிய போரொன்றை மனதில் கொண்டே
முயற்சிகளும் நடந்தனவே களமெப் போது வகுப்பதெனும் சிந்தனையில் கவன மெல்லாம் விட்டிருந்தார் மந்திரியார் படைப்ப லத்தை மிகைப்படுத்தத் தளகர்த்தர் தம்மைக் கூட்டி
மந்திராலோ சனைசெய்தார் பேச்சி னுாடே மிகைத்திருந்த திம்மண்ணில் ஆங்கி லேயர்
மிதிதளர்ந்தே திரும்பவைத்தல் என்னும் நோக்கே
1267
uakultipajakafuat staSuub 286

ஆத்திரத்தால் உடல்நடுங்கக் கோபங் கொண்டே அரிமாவின் சினங்கொண்டு கிழட்டு ஓநாய் கோத்தெடுத்துப் பொழிந்தவார்த்தைப் படையல் கேட்டே குதுாகலித்தார் நாட்டின்மேற் பற்றுக் கொண்டோர் ஆத்திரத்தின் காரணத்தை அறியார் அன்னார் ஆவேசம் தன்மகளைக் கொன்ற அந்த "நோத்தினையும் அவனினத்தைத் தானும் கொன்று
நினைந்தபடி பழிவாங்கத் தானே யன்றோ
1268 கண்டிநாட்டுப் படைகள்மட்டும் போதா நாங்கள்
கொண்டிருக்கும் பகைவெல்ல முல்லைத் தீவு கொண்டுள்ள படைகளையுஞ் சேர்த்துக் கொண்டால் கூடுமெங்கள் எண்ணமெனப் படைஞர் கூறக் கொண்டுள்ளோம் பகைவன்னி மன்ன னோடே
கைதருவான் நமக்கவனென் றெண்ண லாமோ என்றாரே பிலிமத்த ளாவை நெஞ்சில்
ஏற்பட்ட குற்றவுணர் வொன்றத் தானே
1269 வெள்ளையனை வெளியேற்ற நமக்குள் பேத
விரிசல்களை மறந்துவிட்டுச் செயற்ப டத்தான் உள்ளமவர் தமக்கெங்கள் நாட்டில் மற்றோர்
உதவவில்லை என்பதவர் கவலை யென்றொர் உள்நுழைந்தான் அவ்வேளை ஒருவன் சேதி
ஒன்றுரைக்க வேண்டுமென்றான் தனித்தே தன்னைத் தள்ளிவரச் சொல்லிச்செவி தன்னில் ஏதோ
சொல்லினனே "அப்படியா” எனஅ திர்ந்தார்
1270 தொடர்ந்துகாலை பேசிடலாம் என்றே கூறித்
தளபதிகள் விடைபெற்றார் வீரன் நோக்கி இடமுரைப்பாய் எங்காமவள் தங்கி யுள்ளாள்
என்றதுமே உங்கள்தனி அறையி லென்றான் உடனாங்கே சென்றார்தாழ் அகற்றி யுள்ளே
ஊடுருவும் விழிவேலைச் சுழற்றிடப் பார்த்தார் உடலமர்த்தி வைத்திருந்தாள் மர்த்த னியோர்
உல்லாச இருக்கையிலே எழுந்தா ளில்லை
1271
287
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 163
எப்போது வந்தாய்நீ என்றார் காலை
இங்குவந்தேன் என்றனளே பியசீலியை எப்டித்தான் பிரிந்தாய்நீ ஏன்பிரிந்தாய்
எனக்கேட்கக் குருவிச்சி பிரித்தாள் என்றாள் இருக்கின்றாள் எங்கே யுள்ளாள்
எனவினவச் சோகத்தால் நாத்த ழுக்க எப்படித்தான் சொல்வததை எனழு டித்தார்
ஏன்!ஏன்!ஏன்! ஏனென்றே தவித்திட் டாளே
1272
என்னவானாள் பியசீலீ எனவி ளக்க
எத்தனித்து வாய்வராத கார ணத்தால் தன்னைமறந் தழுதார்சில நிமிட நேரம்
தொடர்ந்தவளின் தவிப்பறிந்து வாய்தி றந்தார் என்மகளை கவர்ணர்நோத் தன்வெ றிக்கே
இரையாக்கிக் கொன்றுவிட்டான் சிறுத்தை வாயில் பொன்னழகுத் தேவதையென் பியசீ லிபோய்
புள்ளிமானாய் மாட்டடினளே பிணமா னாளே
1273 செதுக்கிவைத்த சிலைபோலும் சமைந்தே கண்கள்
தடையின்றிப் பெருக்கெடுக்குஞ் சுனைபோ லாக விதித்ததுனக் கிதுதானோ வென்றே கூறி
விம்மினளே மர்த்தனிதன் மனமொ டிந்தாள் பதுங்கியுடை ஒளிந்திருந்த கால்கள் சற்றுப் புறப்பட்டு வெளித்தெரியப் பாதங் கண்டு இதுவென்ன எனவதிர்ந்தார் அருகில் சென்று
இறுகவவள் புயமணைத்தார் விபரங் கொண்டார்
1274 “செத்திருக்க வேண்டியவள் நானே என்றன்
சாவுக்கு வழிவகுத்தாள் குருவி நாச்சி வித்திட்டாள் மறுபிறவிக் கவளே இன்று
வாழ்வதுவும் அவள்பொருட்டால்” என்றே கூற “அத்தனையும் ஒளிவுமறை வற்றே சொல்வாய்” ஆவலுந்த பிலிமத்த ளாவை கேட்டார் குத்தியதோர் போழ்தினிலே குருவி நாச்சி
குறிவைத்துத் தாக்கியகட் டாரி யென்றே
275
υατ (τσου σί στυμ σταδίτσοδιμιί, 288

விடங்கொண்ட கட்டாரி என்பதாலே
வடுவொடுங்க வில்லையொடு செல்லு மென்று உடனகற்ற வேண்டுமந்தப் பாதந் தன்னை
உயிர்வாழ்வ தென்றாயின் எனவ றிந்தென் னிடம்வந்தாள் குருவியுன்றன் துணையி னோடே ஏற்கவில்லை நானுடனோர் நிபந்த னைக்கே இடந்தந்தால் இணங்கிடுவேன் இல்லை யாயின்
இங்கேயென் னுயிர்பிரித்தே அழிவேன் என்றேன்
1276 “என்னவந்த நிபந்தனை”யென் றென்னைக் கேட்டார்
“இங்கிருந்து கண்டிக்குப் போக என்னை வன்னியனும் அனுமதிக்க வேண்டும்” என்றேன்
வழியின்றி இருவருமே சம்ம தித்தார் சொன்னபடி செய்தார்கள் உடன்பிறந்த
தங்கையெனப் பராமரித்தார் எதிரா ஸ்ரிக்கும் நன்மைசெய்யும் பண்புகொண்டார் இன்று கூட
நினைக்குங்கால் பகையுணர்வு மறக்கு தென்றாள்
1277 மங்கிவிட்டால் பகையுணர்வு கொண்ட திட்டம் முற்றாக அழிந்துவிடும் வெற்றி பிந்துப் தங்கமான குணமுடையோர் எதிரி யானோர்
தெரிந்தாலும் தெரியாத பாங்கு வேண்டும் எங்களுக்காய் உதவியவர் செய்திட்டாலும்
ஏற்றமறு கணமதனை மறக்க வேண்டும் பொங்குதவர் தமிலவர்க்கு நன்றி அன்பு
புரிகின்றேன் பொசுக்கதனைப் புரிவாய் என்றார்
1278 தன்னணைப்பில் மர்த்தனியைத் தொடர்ந்து வைத்தே
சொல்லொருநல் வழியென்றன் மகளைக் கொன்ற புன்மனத்தோர் தமைப்பழிக்குப் பழியும் வாங்கப் போகின்றேன் எனக்கேட்க மர்த்த னிதன் மென்விரலால் அவர்தலையைத் தடவி இந்த
மூளைக்குள் உதிக்காத வழியா என்றாள் கொன்றொழிக்கப் படையுண்டு வலிந்து போரைக்
கொள்ளவொரு திட்டமின்று தேவை என்றார்
1279
289
ஜிண்ணாஜர் ஷரிபுத்தின்

Page 164
“சொல்லுகின்றேன் நாணின்றோர் வழியை’ என்றே
சொல்லவவள் “சொல்லிடுவாய் நீயாம்' என்றார் மெல்லத்தொட் டணைத்தவரும் இறுக்கித் தன்மேல் மிகநெருங்கச் செய்தார்தன் நிலைம றந்தே மெல்லமுடி யாதுபல்லுக் கழன்று வாழ்வை
முடிக்கின்ற நிலைதாங்கும் நரியைப் போன்றே பல்லிளித்தார் பார்ப்பதற்குக் கண்க ளையேன்
படைத்தனனோ இறைவனென எண்ணும் பாங்காய்
128() போருக்கான புகைச்சல்
மந்திரத்தால் கட்டுண்டார் போலும் ஊதும்
மகுடிக்கே அடங்கிவிட்ட நாகம் போலும் தந்திரத்தைக் கேட்டதுமே மர்த்த னிசொல்
செயலுருவில் மந்திரியார் காட்ட லானார் முந்தியவர் கொண்டிருந்த எண்ணம் மாறி
மகளுக்காய் 'நோத் தினையும் அழிப்ப தற்கே எந்திரம்போல் இயங்கினரே முடுக்கி விட்ட
இயக்கியென மர்த்தனியே பேர்கொண் டாளே
1281 கொழும்புக்குச் சிறுதொலைவில் நகர மொன்றில் கூடுமொரு சந்தையிலே வெள்ளைக் காரர் கொழுத்தவரு மானத்தைப் பெறும்தி நோக்கில்
கொண்டுவிற்றார் பொருட்களையப் பகுதி மக்கள் விழுந்தடித்து வாங்கினரே வணிகர் கேட்கும்
விலைகொடுத்தார் வண்டிகளில் பறங்கிப் பேர்கள் முழுத்தொகைக்குஞ் சில்லறைக்கும் வியாபாரத்தை முழுமூச்சாய்க் கவனித்தார் மக்கள் சேர்ந்தார்
1282 இல்லாத தொன்றில்லை எனுமா றெல்லாம்
இருந்தனவே இயன்றவர்கள் எல்லாம் பெற்றார் இல்லாதோர் இயல்புக்கு ஏற்ற வாறே
எடுத்தவற்றை ஏற்றபடி கைசு மந்தார் இல்லாத வறுமையினால் இளைத்துச் சோர்ந்த
இளவயதுச் சிறுவனிவை பார்த்தே நெஞ்சம் இல்லாத வெள்ளையனின் பொருளி லொன்றை
எடுத்தனனே பசிதீர்க்கக் கண்ணுற் றானே
1283
uair iarrayaraituair a raiulib 290

வண்டிகளைச் சுற்றியென்றும் இல்லா வாறு
வந்துகூடி நின்றார்கள் புதிதாய் வந்தோர் கண்டதில்லை எவருமவர் தம்மை முன்னால்
கூட்டத்துள் கூட்டமெனக் கலந்தே நின்றார் வண்டியிலே திருடியவச் சிறுவன் றன்னை
வெள்ளையனும் உதைத்தனனே கண்ட வன்னார் கண்டபடி உதைத்தனரே வணிக னைத்தம்
கைகால்கள் கொண்டவனுங் கதறி னானே
1284 சிறுவனென்றும் பாராது உதைத்தா னிந்தச்
சண்டாள வெள்ளையனும் என்றார் மற்றோர் பொறுமையற்றுப் போகும்படி பேசி னார்கள்
பறித்தெடுங்கள் பொருள்களையும் என்றுஞ் சொன்னார் வெறுமையுற்ற தேயவர்கள் வண்டி யெல்லாம்
வந்தவரும் போனவரும் கவர்ந்தே சென்றார் உறுவினையால் அச்சமுற்ற பறங்கிப் பேய்கள்
ஒடினரே தரிக்கவிடம் அற்ற தாலே
1285 வலுவினிலே சண்டையொன்றைத் தோற்று விக்க விரும்பியதற் கிணங்கவந்தச் சிறுவன் மீது பலாத்காரம் செய்தனனவ வணிகன் அட்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் கண்டி வீரர் நிலைமைசற்றே அடங்கியதும் மக்களுக்கு
நன்மைசெய்த நாங்கள்யார் என்றுஞ் சொன்னார் பலவாறாய்ச் சேதிகளும் கொழும்பு நோக்கிப்
பறந்தனவே பறங்கியருங் கொதித்தெ ழுந்தார்
1286 கொதித்தெழுந்தான் 'நோத்பிரபு கோபந் தன்னைக் கிளறியது மேன்மேலும் கொழும்புக் கேயப் பொதிகளுமே வந்தனவாம் விற்ப னைக்குப்
பறந்ததாமோர் ஒலைகண்டி மன்னனுக்கே முதல்தடவை யாயும்மை எச்சரித்தோம்
முறையாக நஷ்டஈட்டைத் தருதல் வேண்டும் சதிசெய்தார் உம்வீரர் வெள்ளை யர்தம்
சொத்தெல்லாங் கொள்ளையிட்டார் என்பதாக
1287
291
oararar-Bj 2gfussør

Page 165
பிலிமத்த ளாவைகையில் கிடைத்த தோலை
பதில்வரைந்தாள் மர்த்தனிதான் மன்னர் சார்பில் பிலிமத்த ளாவைதான் ஒப்ப மிட்டார்
பறங்கியர்க்குக் கப்பமியும் நாடாய்க் கண்டி இலையென்றும் நடக்காத ஒன்று என்றே
எழுதியிருந் தாளதிலே பார்த்த நோத்தும் கலங்கிவிட்டான் கோபத்தால் சபையை அன்றே
கூட்டினனே நிலைமைதனை ஆய்வ தற்கே
28S ஆலோச னைசெய்ய அவையுங் கூட
அதில்“மேஜர் ஜெனரல்மெக் டோவல்' 'நோத்தின் ஆலோச கனாயிருந்தான் அவனே சொல்வான்
அவசரமே கூடாது எனுங்க ருத்தை ஏலாது போயினரே அனைத்துப் பேரும்
எதிர்த்ததற்குப் பதில்சொல்ல அமைதியானார் ஏலாது போயினரே கண்டிப் பேரும்
எதிர்பார்த்த படையெதிர்க்க வராத தாலே
1289 ஆதிக்க வெறிகொண்ட ஆங்கி லேயர்
அடிபதிக்க இடந்தராத அகமுள் ளார்போல் போதித்தார் மக்களிடை எதிர்ப்பைத் தானும்
போகுமிடம் அத்தனையும் முழுங்க லானார் ஒதுவது அத்தனையும் தனது சொந்த
உட்பகைக்காய் என்பதனை அறியா மக்கள் நீதிக்காய் போராடும் நல்லா ரென்றே
நம்பினரே மக்களும்தம் மனத்தால் ஒர்ந்தே
129() முதல்முயற்சி பிசுபிசுத்துப் போனதாலே
மீண்டுமொரு முயற்சியென ஓர்இ ராவில் சதியொன்று அரங்கேற்றங் கண்ட தெங்குஞ்
செல்லவிய லாதுவெள்ளைக் கூட்டம் ஒன்றின் வதிவிடத்தைச் சுற்றியொரே வீரர் கூட்டம்
வளைந்துவெறி யாட்டமொன்றைத் தொடங்கி னார்கள் எதிரியென்ற போதிலுமஷ் வீனச் செய்கை
எவராலும் பொறுக்கவிய லாத தொன்றே
12)
uæku-/r/J-26tafust &/r-öutið 292

விடுடைத்தே உட்புகுந்தார் வீரத் துக்கு
விருந்தான சமர்க்களம்போல் மாற்றி னார்கள் தேடியாங்கு உள்வெள்ளைப் பேர்கள் தம்மைத்
துணைவியரின் முன்னாலே அடித்து தைத்தார் வாடாத புதுமலர்கள் விரியா மொட்டு
வாழ்ந்துமகிழ்ந் திருக்கின்ற பூக்க ளெல்லாம் நாடிவந்த வெறியர்களால் கசங்குண் டேதம்
நிலையெண்ணிக் கதறினவே கேட்பா ரற்றே
1292 தண்டிக்க எவருமற்ற கார ணத்தால்
தம்மிட்டம் போலவர்கள் ஆடீ னார்கள் பெண்மைக்குக் களங்கஞ்செய் பாவி யர்கள்
பிரியம்போல் வேட்டையினை நடாத்தி னார்கள் மண்ணுக்கு இழிவுசேர்க்குஞ் செய்கை கண்டி மந்திரியாம் பிலிமத்த ளாவை திட்டம் பண்பற்ற செய்கையவை கேள்வி யுற்ற
பறங்கியர்கள் கொதித்தெழுந்தார் போர்தான் என்றார்
293 இதன்பின்னும் பொறுமையென்ன என்றார் "நோத்தும்
இல்லையென்றார் ‘மேஜஜெனரல் மெக்டோ வேலும் அதிசினத்தால் அனைவருமே கொதித் தெழுந்தார்
அரையிருந்த வாளுருவிப் போர்போர் என்றார் எதிர்த்தரப்பைப் பூண்டோடே அழிப்ப தென்னும்
எண்ணத்தில் படையினையீர் கூறென் றாக்கி முதலில்மெக்டோவேலொரு பிரிவைத் தாங்க
மற்றொன்றை பார்பட்டும் தாங்கிச் சென்றார்
1294 கண்டிநோக்கி வெள்ளைப்படை வழியில் என்று
கேள்வியுற்ற பிலிமத்த ளாவை நெஞ்சில் கொண்டமகிழ் வென்றுமிலா வாறாம் தன்னுள்
கொதிக்கின்ற வஞ்சத்தைத் தீர்க்க வென்றே பண்டார வன்னியற்கு ராஜ சிங்கன்
படையொன்றை அனுப்பென்றோர் ஒலை செய்து கொண்டேகும் படிச்சொன்னார் மர்த்த னிக்குக் காற்றாகிப் பறந்தாளே கடிதில் அன்னாள்
1295
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 166
வயோதிய வைத்தியர்
மர்த்தனி யோடே குருவிச்சி நாச்சியும்
முன்னவன் இருந்திட வன்னி மர்த்தனி கொணர்ந்த ராஜசிங் கன்தம்
மடலினைப் படித்துமே முடித்தான் பொருத்தமாய் வேளை படிந்து வெள்ளைப்
பறங்கியர் தமையெங்கள் மண்ணில் இருந்தோட்ட என்றனன் எழுந்தனன் தனது
இடைவாளைக் கரந்தொட நின்றான்
தாங்களும் ராஜ சிங்கனும் ஒன்றியே
தருக்கராம் நாடாள வந்த ஆங்கிலப் பறங்கியர் தமையொடுக் கிடவென
ஆவேசங் கொள்வதில் மிகையே ஆங்கிலப் பேர்களை வீழ்த்திட வியூகம்
தாங்கிய போர்க்கோலம் தாமிங்கு முக்கியம்
சொன்னவள் மர்த்தனி கேட்டான்
சட்டென நினைவுக்கு வந்தவ னாகினான்
தன்னையே கண்டியின் அரசன் சட்டத்தின் காவலன் தானெனும் 'நோத்துடைத்
துணைகொண்டு கூறிய தமிழன் பட்டத்துக் கோன்முத்துச் சாமியெங் குற்றனன்
புகலென வன்னியன் கேட்கத் திட்டமாய் வருவனாம் பார்பாட்டின் தலைமையில்
சென்றிடும் படையொடும் என்றாள்
சேதியை அறிந்ததும் தனதுகைப் படவொரு
தகவலைத் தந்தனன் கையில் போதிய படைபலத் தோடுநான் வருவதாய்
புகலுநீ இதிலும. துளவே தீதகற் றிடவவர் கொண்டநல் இலட்சியம்
தனையிட்டு மகிழ்ந்ததாய்ச் சொல்வாய் யாதுமோர் சிலமணித் துளிகளில் முடிந்திட
எழுந்துமர்த் தனியுடன் அகன்றாள்
1296
1297
1298
1299
υ αστυιτσαυστ στου σταδιτα δυιο
294

விவாதித்தார் செல்வது பற்றி “படையொடு நீங்களே போவதாய் எண்ணமோ
பறங்கியர் இடையினில் மறித்தால்” “நடைபெறின் அதனையும் நேர்கொள்ள வேண்டுமே
நாமதற் கஞ்சிட லாமோ "தடையிலை ஆயினும் பிலிமத்த ளாவையின்
சூழ்ச்சியை எண்ணுக என்றாள்
1300 “அச்சமேன் கண்டியின் மன்னனே ஒலையை
அனுப்பினான் என்பது நிஜமே” “அச்சணம் மன்னனை அடைத்துவைத் தவனிடம்
அஞ்சலைப் பெறலெளி’ தென்றாள் நிச்சயம் இதுபற்றி அஞ்சிநம் படைகளை நிறுத்தினால் விளக்கங்கள் பெறுமுன் எச்சிலுண் ணெம்மவர் துணையோடு வெள்ளையர்
எளிதினில் கண்டியுள் நுழைவார்
1301 ஒன்றுக்காங் கொன்றவர் ஒன்றாதும் ஒன்றியும்
உரைத்தனர் ஒருதலை யாக கொண்டனர் முடிவொன்று கூறினான் வன்னியன்
கேளுன்றன் தலைமையில் படையைக் கொண்டுசெல் இடையினில் குறித்தவோர் இடத்தினில்
காத்திரு நான்தனித் தேகிக் கண்டியில் பிலிமத்த ளாவைகண் மண்தூவிக்
காண்கிறேன் மன்னனை யென்றான்
1302 உண்மையை அவனிடம் அறிந்ததும் சேதியை
உனக்குடன் அனுப்புவேன் என்னத் திண்ணமாய் இதுநல்ல முடிவுதான் என்றனள்
தணைவிடுத் தங்கிருந் தகன்றான் சொன்னவன் போகுமுன் தளபதி மாருடன்
சிலபேசி வருவதாய்க் காலம் சென்றது வரவில்லை தேடியோர் மருத்துவர்
தாம்வந்த சேதியை அறிந்தாள்
303
295
ஜிண்ணாஜர் டிரிபுத்தீன்

Page 167
வெண்தாடி கூனுடல் வெற்றிலை உண்டவாய்
வந்தாரவ் வைத்தியர் உள்ளே என்னதான் காரணம் ஏனழைத் தாரென
எழுந்தவர் தனையவள் கேட்டாள் சொன்னாரவ் வைத்தியர் மருந்துண்ணத் தானென
திகைத்தனள் இதுவென்ன புதுமை என்னிடம் சொல்லாதே என்னநோய் அவருக்கு
என்றனள் மருத்துவர் நகைத்தார்
13(), 4 எல்லாமே உன்னிடம் சொல்லவும் இயலுமோ
என்றதும் வெகுண்டனள் நாச்சி சொல்லாத நோயவர்க் கில்லைநான் தெரிந்திடா
திருக்கவும் வழியிலை என்றாள் பொல்லாத பெண்ணம்மா நீயென்ன ஆண்களைப்
புரியாது பேசாதே என்றார் நல்லவர் பண்டார வன்னியர் அறிகுவீர் நடத்தையில் தூயவர் என்றாள்
1305 கொல்லென்று சிரித்தாரே கிழவரும் அன்னவள்
கோபத்தைக் கிளறிட வென்றே பல்லுமி ருந்தன முத்தென முடியெலாம்
பணிபோல இருந்துமே காணாள் எல்லையில் வெஞ்சினம் ஏறிடக் கிழவரை
எரிப்பது போலவள் நோக்கச் சொல்லிட வார்த்தைகள் தோன்றிடா நாச்சியும்
துடித்திடும் அதரத்தைக் கடித்தாள்
நல்லவன் என்றுநீ சொல்கிறாய் நல்லதே நம்பிக்கை கொண்டவுன் முன்னே நல்லவர் போலவர் நடிக்கிறார் என்கிறேன்
நீயிலை என்பாய்நான் அறிவேன் எல்லாமே வெளிவேஷம் இருக்கின்ற நோய்தனை
எடுத்தியம் பிடவவர் தம்மில் இல்லையே தையரிம் என்றாராம் மருத்துவர்
யாரிந்தக் கிழமென வெறுத்தாள்
13()7
uætv-sr-) arafuðir a5/r-Íiuti) 296

பதிலொன்றும் சொல்லாது பேசாது நின்றனள்
புன்னகை ஒன்றையும் உதிர்த்தே அதிமோச மானவொரு நோயுண்டு அவருக்கு
அறிந்திடில் மயங்குவாய் என்றே புதிதாகப் பரவுமொரு நோயது வன்னியன்
பற்றினான் பிறப்பிடம் அறியேன் எதற்கும்நீ கவனமாய் இருவந்த நோயுனை
எட்டாது பார்த்திடு என்றார்
1308 இன்னமும் கிழவனைப் பேசவிட் டாலவன்
எனக்கும. துண்டென்று சொல்வான் தன்னையும் மீறிய சினம்மேவச் சொல்லுவாள்
சரியவர் வருவரை யும்வாய் தன்னையும் சாத்திடும் என்றுமே வைத்தியர்
தடவினார் தாடியைக் கண்டே புன்னகை அடக்கியே பேசுவாள் கிழவரைப்
புதிதான மனமாற்றத் தோடே
1309 மருத்துவப் பெருமநீர் முன்சொன்ன அனைத்தையும்
மனமொப்பி னேன்இனி அவரைக் கருத்தினில் இருந்துநான் அகற்றினேன் என்னையும்
கருத்தினில் பொருத்திடல் கடனே பொருத்தமாய் இலைநம துடல்வாகு என்றதும்
பொருந்துமே மனமெனச் சொன்னாள் இருந்தாலும் எனக்கதில் இஷடமே இலையென
எழுந்திட முயன்றிடத் தடுத்தாள்
1310 விடுவிடு என்னயில் விபரீதம் நானெந்த வனிதையைத் தொட்டுமே அறியேன் அடியேனோர் பத்தினி விரதனுன் அவன்போல
ஆகிடேன் எனக்கரம் பறித்தார் விடுவனோ உங்களை என்றனள் கரத்தினை
வாரியே பிடித்தனள் நகைத்தாள் பிடியுண்ட வேகத்தில் பறந்தது தலைகொண்ட
பொய்முடி வன்னியன் நின்றான்
1311
297
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 168
இப்படிப் பிலிமத்த ளாவையின் முன்னிலை
ஏகினால் எப்படி என்றாள் எப்படி உன்னைநான் ஏமாற்ற லாமென எண்ணினேன் இப்படி வந்தேன் தப்பிலை நன்றாகத் தானே இருந்தது தொடக்கத்தில் நன்நம்ப வில்லை அப்பிய வெண்தாடி அகன்றதால் பிடிகொண்டேன்
அதுதவிர நடிப்புநன் றென்றாள்
132 மருத்துவர் வேடத்தில் மறைந்துதான் கண்டியில்
மன்னனைச் சந்திக்க வுள்ளேன் பொருத்தமாய் வேடத்துள் புதையாது போயினப்
பிலிமத்த ளாவையும் என்னைக் கருத்தோடு தொடருவார் கொண்டவென் எண்ணம்கை
கூடாது போயிடும் மன்னர் உரைத்தவா றுன்படை தொடரட்டும் என்றனன்
உடனவள் விட்டகன் றனளே
1313 அகன்றதன் மார்புக்கு அணிசெய்யுந் தோள்களை
அழகாக அசைத்துமே முதுகை வகுத்தவோர் குன்றமதை மறுபுறம் புரட்டியே
வைத்தவா றிருக்கவே வைத்து நகர்ந்திட உயரின ஏறொன்று சிலிர்த்துடல்
நடப்பதை யொப்பவே இருக்கப் பகர்ந்தனள் “வீரநடை புகலுமே யாரெனப்
புதைந்தாலும் வேடத்துள்’ என்றாள்
1314
செவிபட வேண்டுமெனச் சொன்னவவ் வார்த்தைகள்
செவியேற்க உடலினைத் திருப்பி நவிலாது வொன்றுஞ்சிறு நகையிதழ் அரும்பிட
நடித்தனன் கூனியே கிழம்போல் கவிபோலும் இசைமேவ அவன்செய்கை கண்டுமே
குலங்கினாள் அதரங்கள் விரியச் செவிமகிழக் கண்களும் தோன்றியவெண் முத்தொளியில்
சிலிர்த்திடத் திரும்பியே நடந்தான்
1315
பண்டாரவண்ணியன் காவியம் 298

வாசலில் நின்றதோர் பரிகரு மையினுள் வீழ்ந்தெழுந் தாங்குற்ற தொப்பப் பேசாத உயிரென்ற போதிலும் தலைவனைப்
பார்த்ததுங் கனைத்துவர வேற்கும் நேயமாய் முதுகிலோர் தட்டினைத் தட்டியே
நீண்டதன் கால்களைப் பதித்தே ஆசையோ டவனழகு நடைகண்டு மகிழ்ந்தவவ்
வணங்கிற்குக் கரமசைத் தகன்றான்
1316 தளகர்த்தர் தமையொன்று கூட்டினாள் குருவிச்சி
தகுந்தவா றரண்மனை தனக்கும் வளைத்தெல்லை தனக்குமாய்ப் பாதுகாப் பனைத்தையும்
வேண்டுவா றமைத்துமே எஞ்சும் முழுப்படை தனையுமே கூட்டிட ஏவினாள்
மதித்தவர் அங்கிருந் தகன்றார் அழுத்தமாய்ப் பதித்தவோர் குறியோடு தன்னையும்
ஆயத்தம் செய்தனள் அவளே
1317 முல்லையில் படைநடை பயின்றது போலவே
மற்றுமோர் புறத்தினில் கண்டி எல்லையை அடைந்ததோர் படைகொழும் பிருந்தே
இருகூறாய் வந்தொன்றி னாரே கல்மூன்று தொலைவினில் “மெக்டோவல் பார்பாட்
கண்டியின் அருகினில் இருப்பச் சொல்லினர் பிலிமத்த ளாவையின் ஒற்றர்கள்
சேதியை அறிந்தவர் பதைத்தார்
1318 கண்டிக்கு இன்னமும் வந்தொன்ற வில்லையே
கூறிய வாறுதம் படையைக் கொண்டிங்குப் பண்டார வன்னியன் தாமுமே கெட்டதே அனைத்துமென் றதிர்ந்தார் அண்டினார் மன்னனின் அந்தப்பு ரத்தினை
அறைமூடி இருப்பது கண்டே கொண்டாரே சினமுமிவ் வேளையில் துயிலென்ன
கேடெனக் கதவினில் அறைந்தார்
1319
299
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 169
அதிர்ந்தது போர் முரசு
திறநதது கதவு ராணி சுகமிலை மன்னர்க் கென்றாள் மருத்துவர் வந்துள் ளார்நம் மன்னரைப் பரீட்சிக் கின்றார் வருந்தினார் வயிற்றில் நோவாம் வருகவே அறையுள் என்றாள் கருமமே கண்ணாய்க் கொண்டே கட்டிலை அடைந்திட் டாரே
1320 மல்லாந்து படுத்தி ருந்தான் மன்னனும் வயிற்றில் கையை மெல்லவே வைத்தே ஏதோ மருத்துவர் தடவக் கண்டு பொல்லாத நோய்தான் எனப் பேசுவார் வலிவ யிற்றுள எல்லாமே சரியாய்ப் போகும் இனும்கில போழ்துள் என்றார்
32 உன்வேலை முடிநதால் நீயும் உடன்வெளி யேற லாமே மன்னரும் நானும் இங்கு முக்கியப் பேச்சுக் குள்ளோம் மன்னிக்க வேண்டும் என்றே மன்னனை நோக்கிச் செல்வார் இன்னுமீர் வேளை காலம் எண்ணியே மருந்துண் என்றே
1322 மந்திரி வணங்கி ராணி முகத்தையும் நோக்கி மெல்லப் புந்தியாய்க் கண்சி மிட்டிப் புறப்படப் பின்னால் அன்னாள் வந்தனள் கதவ டைத்தாள் வெளியேறு வாரே போலத் தந்திர மாயொ வித்தார் தனையொரு மறைப்பி னுள்ளே
323 உரையாடும் அவச ரத்தில் ஒளிந்ததைக் கண்டா ரில்லை அருகினில் வந்த டைந்தார் ஆங்கிலப் படையோர் நீங்கள் தெரிந்தது தானே என்னத் தெரியுமென் றுரைத்தான் மன்னன் இருந்துமேன் நோயென் றிங்கே இருப்பதாம் எனக்க டிந்தார்
1324 சந்திக்க இருந்தேன் நீங்கள தாமேயிங் குற்ற போதே எந்தனைக் காண வந்த தேனெனச் சொல்ல லாமே வந்திடும் படைக ளென்று வழிபாரத்து இருந்தோம் இன்னும் வந்திலை முல்லை வன்னி வராதெமை ஏய்த்தான் என்றார்
1325 நட்பினை நம்பித் தானே நான்சேதி அனுப்பி வைத்தேன் நட்டாற்றில் விடுவா னென்று நான்கூட எண்ண வில்லை நட்பென்ன நட்பு நானும் நம்பியே போர்தொ டுத்தேன் உட்பகை காட்டி எம்மை உதறியே விட்டான் என்றார்
uætv-fry-2.Jørøfufor as/r-Öuuti) 300

வேறு
சிந்தித்து முடிவொன்று செய்துள் ளேன்நான்
தாங்களதை ஏறறிடுதல் வேண்டும் என்ன எந்தமுடி வென்றறிந்தால் தானே நானும்
ஏற்பதுவா இலையாவென் றியம்பல் கூடும் முந்தியதைச் சொல்லுங்கள் எதிரி யானோர்
மூன்றேகல் தொலைவினிலே வந்துற் றார்கள் சிந்தித்துக் கொண்டிருக்கக் காலம் இல்லை
செப்பிடுங்கள் அவசரமாய்த் துரிதம் என்றார்
1327 'ஏனவரை எதிரிகளாய்க் கருதல் வேண்டும்
என்றதுமே அதிர்ந்தாரே முகத்தை மாற்றி நானரை நண்பரெனக் கொண்டே இங்கே
நல்வரவு கூறிடவா’ எனச்சி னக்க “ஏனவரை வரவேறறால் என்ன” என்றான்
இன்னுமவர் சினம்சிரசைக் கருக்கச் சொல்வார் நானவரைப் பகையாக்கிப் பழியைத் தீர்க்க
நண்ணியுள்ள தறிந்துமிந்தப் பேச்சேன் என்றார்
328 என்னைவிட அறிவினிலும் அனுப வத்தும்
இணையில்லாப் பேர்நீங்கள் இருந்த போழ்தும் என்முடிவும் என்னவெனக் தெரிந்தால் நீங்கள்
ஏற்றசினம் தணியுமென்றான் அலுத்துக் கொண்டே என்னவது என்னளன்றன் மூளை தன்னில்
எழாதபெரும் முடிவென்றார் அவனுஞ் சொல்வான் என்முடிவு நாட்டுக்காய்த் தியாகஞ் செய்வே"
எண்ணத்தில் தோன்றுகின்ற முடிவென் றானே
செவியுற்ற வார்த்தைகள்சொல் அம்பு போலும்
துளைத்ததவர் நெஞ்சத்தை 'அவ்வா றயின் எவருக்குச் சளைத்ததென்றன் தியாகம் என்பீர் என்றாரே மனச்சாட்சி உறுத்தி னாலும் அவசரமே வேண்டாம்நான சொல்வ தைமுன்
அறிந்திட்ட பின்னுரைத்தல் நலமாம் எங்கள் எவருக்கும் பொருந்துமிது நன்மை சேரக்கும்
என்றனனே பிலிமத்த ளாவை கேட்டார் 133()
301
ஜிண்ணாஜர் 22சிபுத்தின்

Page 170
வெள்ளையர்கள் வந்துவிட்டார் படைக ளோடே
வன்னியனின் படைகளின்னும் வரவே இல்லை கொள்ளையவர் படைப்பலம்நாம் அறிவோம் இன்று
கண்டிப்படை மட்டும்போர் செய்த தாயின் கொள்ளையிழப் பாகும்நம் படைக ளோடே குடிமக்கள் தாமுமழி வார்கள் என்றான் “உள்ளமென்ன சொல்கிறது வெள்ளை யர்க்கே
உடன்பட்டுப் போவதென்றா” எனவி எரித்தார்
1331 ஆங்கிலேய ரொடுபொருதிப் பழிவாங் கத்தான்
அடங்காத வேகமுங்கள் தமக்குள் என்னுள் தாங்கியுள்ள திட்டத்தை அறிந்தால் நீங்கள்
சந்தோஷம் அடைவீர்கள் என்றான் கேட்டுத் “தாங்களின்னும் சேதியினை முழுமை யாகச்
சொல்லவில்லை போலு” மென்றார் அலுத்தாற் போன்றே "தீங்கில்லாத் திட்டம.து” என்றான் மீண்டும்
தொடர்ந்திட்டால் நலமென்றார் சொல்ல லானான்
1332 தடையின்றி ஆங்கிலேயப் படைகள் இங்கே தாராள மாகவந்து நுழைந்தி டட்டும் தடைசெய்ய எந்தவொரு வீரர் தாமும்
தக்காது வாளுறையுள் உறங்க வேண்டும் தடையின்றி "நோத்தும்அவ ராட்கள் தாமும்
தேடியெனை வரட்டுமிந்த மாளி கைக்குள் தடையின்றி நாங்கள்ஆங்கி லேய ருக்குத்
தாள்பணிந்து நடப்பதாயும் கூற வேண்டும்
1333 அரசபரி பாலனங்கள் அனைத்தும் உங்கள்
ஆதிக்கத் துள்ளிருக்க வேண்டு மென்றே அரசாள வருமவர்க்குக் கூறி நீங்கள்
அரசகட்டில் ஏறுவதைப் பார்த்து விட்டு அரசைவிட்டு நான்பிரிந்து அண்டைத் தேயம்
ஆனதமிழ் நாட்டுக்குச் செல்வ தென்றான் அரசாளும் ஆசைகொண்ட மந்தி ரிக்கோ
அவர்செவியை நம்புநிலை அற்றுப் போச்சே
1334
υι αίτι (τσου στΔστυμ σταδ/τα δυμώ 302

முடிசூடா மன்னனென ஆட்சி செய்த
முறைமாறிக் கண்டிமண்ணை ஆட்சி செய்ய முடிசூடும் வாய்ப்பொன்று வருவ தெண்ணி
முகம்மாறி வருவதனை மன்னன் கண்டான் முடிமேலே கொண்டபெரும் ஆசை சொந்த
மகள்நிமித்தம் ஆங்கிலேயர் மீது கொண்ட முடிவில்லாப் பகையழிந்து போகச் செய்து
மகிழ்ச்சிக்கும் வித்தளித்த விந்தை சேர்த்தே
1335 அனைத்தையுமே கேட்டிருக்க அதிர்ச்சி யாலே
அசையாதே சிலநிமிடம் இருந்தார் நெஞ்சுள் நினைவுவந்த(து) ஆட்சிதன்னை ஆங்கிலேயர்
நிர்ப்பந்தத் துள்ஆள நாடா துற்றே எனையழைத்துத் தந்திரமாய்த் தலைசு மத்தி
இடம்பெயர நினைக்கின்றான் அதுவே தான்செய் தினையளவும் ஞானமற்ற செய்கை யென்றே
நினையாது விட்டனனே என்னும் வாறே
1336 கண்டிமன்னன் ராணியைஓர் நோக்கு நோக்கக் கண்டுமவள் வதனத்தில் சலன மற்றே பண்டார வன்னியனைக் கண்கா னாது
பார்ப்பதிலே புலன்பதித்தாள் அச்ச முற்றாள் கொண்டதில்லை கவனமவர் கவன மெல்லாம்
கண்டிமன்னன் ஆவதிலே கேட்போர் “இன்றே கண்டியெல்லைப் புறக்காவல் அனைத்தும் நீக்கக்
கூறுகின்றேன்’ எனமன்னன் ஆமாம் என்றான்
1337 படையினர்தம் பாசறையில் தரித்தி ருக்கப்
பறங்கியர்கள் நகரத்துள் அச்ச மின்றிப் படையோடு நுழையட்டும்அரண்ம னைக்குள் புகுந்துவர நானவரை வரவேற் றன்னார் உடன்பாடு கொண்டேஇக் கண்டி மண்ணை
உங்கள்வசம் தந்துவிட்டு நாட்டை விட்டே இடம்பெயர்வேன் கடல்கடந்தே என்றான் மன்னன் இதயத்துள் பனியுண்டார் போலா னாரே
338
303
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 171
தேன்குடத்தைத் துளையிட்டு வாய்க்குத் தந்த
தித்திப்பால் உழன்றவன்போல் கண்டி மன்னன் தான்தானே எனநெஞ்சம் இனிக்க மன்னன்
தோள்தடவிப் புன்னகைத்தார் நன்றி யென்று தானதற்குப் பொருளாகும் நடையுங் கொள்ளத்
தாடியையோர் கரத்தாலே தடவிக் கொண்டே போனதெனப் போயொளிந்தே ஏய்ப்புக் காட்டிப்
போனவந்த மருத்துவரும் வெளியா னாரே
33 () “என்னையா மருத்துவரே சொல்லித் தந்த
எல்லாமே சரியாகச் சொன்னே னாநான்’ என்றனனே ராஜசிங்கக் கண்ணுச் சாமி
“எல்லாமே அற்புதம்தான்” என்றான் நண்பன் “என்னபெரும் ஆசையந்தப் பெருச்சா ஸ்ரிக்காம்
இம்மண்ணின் மன்னனெனப் பதவி கொள்ள அன்னியர்க்கே அடிமைப்பட் டாலும் நாடோ
ஆட்சியவர் கைக்குவந்தால் போதும் போன்றே”
134() எண்ணத்தில் தூய்மையற்ற ஆங்கி லேயர்
எதிரியென மக்களுக்கு வேஷங் காட்டி என்னையின்று பழிகொள்ளச் செய்து தானே
எடுபிடியாய் வெள்ளையர்க்காய் ஏவல் செய்து மண்ணையாள நினைக்கின்றார் நடப்ப தொன்றோ
மாறான தெனச்சற்றும் அறிந்தி லாதே என்றனனே வன்னிமன்னன் இருவர் தாமும்
இடியிடியென் றொன்றாகி நகைத்திடாரே
1341 நினைந்தபடி அத்தனையும் நடக்கும் என்றே
நண்பனுக்குக் கூறிவிட்டு நாச்சியார்க்குக் கண்கெதியில் சேதியொன்றை அனுப்ப வேண்டும்
கவலையற்றே இருவென்று வன்னி மன்னன் கனகெதியில் விடைகொண்டே சென்றான் கண்டிக் கருகமைந்த ஓரிடத்தில் "மெக்டொ வெல்லும் இனமறியா மகிழ்ச்சியிலே துள்ளி னான்தான் ஏற்றவொரு சேதியினால் வீர ரோடே
uørv_/rg-)arsfuair að (r-iutib 304

கொள்ளைகொள்ளை யாய்மதுவில் குளித்தார் வீரர்
கூடவிருந் தேகுடித்தார் மெக்டொ வேலும் எள்ளளவும் எதிர்ப்பிலையாம் நகரத் துள்ளும்
எல்லையிலும் பகையிலையாம் என்றார் இன்றே கொள்ளுங்கள் உங்களுங்கள் ஆயு தங்கள்
கொட்டட்டும் போர்முரசம் எனப்ப னித்தார் வெள்ளம்போல் குவிந்தனரே வீரர் ஒன்றி
வெற்றிவெற்றி வெற்றியென்றே புறப்பட் டாரே
1343 கண்டிக்குள் களம் வீறு கொண்டதே வெள்ளை யர்படை
வெற்றி யொன்றதே நோக்கமாய்க் கூறு போட்டுடல் அரிந்து கண்டியைக்
கொள்ள வென்றதம் எண்ணமும் வேறு பட்டதால் வெற்றி முன்னமே வந்து கைப்படு வாகதால் ஏறு போல்நடை நடந்த னர்இனி
எதற்கும் அஞ்சிடோம் என்றுமே
1344
முத்துச் சாமிமுன் வந்தனன் 'ஜெனரல்
மென்டொ வால்அவன் நோக்கியே அத்த னைவழி தானும் அறிகுவாய் அரண்ம னைபிற அனைத்துமே மொத்த மாயுணர் ஒருவன் நீயென
மிகப்பு கழ்ந்துமே முன்செல ஒத்து ழைப்பாயென் றுறுத்தி னானவன்
உடன்பட் டேகின்றான் உவந்தனர்
1345
முன்ன மேதனை மன்ன னென்றுமே
முறையற் றறிவித்த பேரவன் அன்னி யன்னுடை அடிபற் றேகியே அற்ப சுகங்களைக் கண்டதால் தன்னை மன்னனென் றெண்ணும் பாங்கினில்
தலைநி மிர்த்தியே முன்செலச் சொன்ன வாறுமோர் எதிர்ப்பு மின்றியே
சென்ற னன்படை தொடர்ந்ததே 1346
305
ஜிண்ணாஜர் ஷரிபுத்தின்

Page 172
பாதை பாலைபோல் வெளிறிக் கிடந்திடப் பார்த்த "மெக்டொவல் வியந்துமே ஏதாம் இந்நிலை எனநி னைந்துமே இருகண் வீசினான் உடன்வரும் போது நிலையுணர் முத்து சாமியும் பொய்யு ரைத்தனன் தானேதான் ஈதுசெய்திடத் தூதை அனுப்பினேன்
என்று மேஅதை நம்பினார்
கண்ணுச் சாமிக்கும் பிலிமத் தளாவைக்கும்
கார ணத்தைநான் விளக்கியே “எண்ணி டாதீர்நீர் எதிர்க்க எதிர்த்திடில்
எவரும் எஞ்சிடீர்” என்றுமே உண்மை நிலையினை உறுத்தி னேனவர் உடன்பட் டிருக்கின்றார் என்பதை எண்ணும் பாங்கினில் இருக்கு திந்நகர் யாரும் இலாதவோர் சூன்யமே
கண்ணுச் சாமியும் பிலிமத் தளாவையும்
கண்டி விட்டோடி இருப்பரோ எண்ணம் அங்ங்னம் இலாது நமையவர் எதிர்கொண் டழைத்திட இருப்பரோ உண்மை மன்னன்நான் உலக றிந்திட உதவ வேண்டும்நீர் அவர்தமை எண்ணி டாதவர் உயிர்ப றித்திட
இடுக சிறையென இயம்பினான்
உன்னை விடவுமோர் உண்மை ஊழியன்
உதவி எமக்கென்றும் வேண்டும்முன் என்ன நிலையவண் இருக்கும் என்பதை
ஏற்ற பின்னரே கூறலாம் சொன்ன வாறவர் சரண டைந்திடில்
செய்வார் 'நோத்வேண்டும் அனைத்தையும் உன்னை மன்னனாய் ஆக்கு வாரதில்
உனக்கோர் ஐயமேன் என்றனன்
1347
1348
1349
1350
υ, κατ./τσου στατου στα ιταδιμιρ
306

எதிர்ப்பி லாதுமே இருப்ப இருவரும்
இணைந்து படைவர முன்சென்றார் எதிரி நுழைந்திடா வாறு கோட்டைமுன்
இருக்கும் வீரர்கள் எவருமே அதிச யித்திடு வாறாங் கிலாதமை
அறிந்தே மகிழ்ந்து "மெக் டொவெலும் கதியை அறிந்திடாக் கோலத் துடன்வரு
கொழும்புப் படையொடு சென்றனன்
1351 வீரர் எவருமோ வாழு மாந்தரோ
வழியில் கண்ணுறாப் போழ்தினில் விரன் ஒருவன்முன் வந்து வணங்கினான் வந்த படைஉசார் அடைந்ததே கார ணம்எது கேட்க முன்னவன்
கடித மொன்றினை "மெக்டொவெல் சாரத் தந்தனன் முத்துச் சாமியைத்
தவிர்த்து முகம்வெறுத் தகன்றுமே
1352 மகிழ்வு மிகுதியால் "மெக்டொ வெல்நகை
மோதி யொலித்ததப் புறமெலாம் “அகமு வந்தனன் கண்டி மன்னனும்
ஆட்சி கைவிட” என்றனன் அகம்ம கிழ்ந்தனன் முத்துச் சாமியும் அரசன் நானெனக் கூவினான் அகம்ம டக்கத்துள் அவச ரப்பட ஆகு மோவெனத் தடுத்தனன்
1353 தனது பதவியைத் துறந்தும் ஆட்சியைத்
தந்த னன்உனக் கில்லையே தனது பதவியைப் பொருந்த மாமனான் தமக்கே தகுதியுண் டென்றுமே இணங்கி எம்முடன் இருக்கப் பணித்தவன்
ஏக விழைந்தனன் தமிழகம் எனவு ரைத்தனன் "மெக்டொ வெல்'உடன்
ஏங்கி “என்கதி?” என்றனன்
1354
07
ஜிண்ணாவூர் ஷரீபுத்தின்

Page 173
"அதோக தீயதே' என்று புதியதோர்
அடுத்தக் கேட்டிட்ட ஒலியதால் அதேதி சையினில் அனைவர் கண்களும்
அதிர்ந்து நோக்கிடக் குருவிச்சி எதிரில் வந்தனள் இசைவாய் ஒளிந்தவோர்
இடத் திருந்துமே போரினில் குதித்த அணங்கெனக் கொண்ட வாளுடன்
கண்கள் சாமியை முறைத்தன
355 நன்றி என்றனஸ் முத்துச் சாமிக்கு
நமது திட்டம்போல் நகருக்குள் கொண்டு வந்ததைக் குறித்துச் சொல்கிறேன் கொழும்புப் படையினை எனச்சொல என்ன சொல்கிறாய் என்று நடுங்கினான் எவரின் திட்டமென் றுரைக்கின்றாய் சொன்ன தேனிந்தப் பொய்யி னைஎனைச்
சேர்த்துக் கொண்டதேன் என்றனன்
1356 சுற்றி வளைத்திந்த அடலார் படையினை
துவம்சம் செய்யவே வன்னியன் முற்றும் அவர்படை சேர்த்துக் கண்டியின்
மன்ன Eன்படை யோடுமே சுற்றி நிற்கிறார் தந்தி ரத்தொடு
சிக்க வைத்தனை "மெக்டொ வெல் மற்று மவர்படை தனையு மென்றனள்
மகிழ்ச்சி நன்றியென் றுரைத்தனள்
1357 “என்ன உளறல்நீ யார்தான் என்பையோ?”
என்ற னன்பயந் தொடுங்கியே “என்னை அறிகிலை யோநானே குருவிச்சி’ என்று "மெக்டொவெல் நோக்கியே சொன்ன அனைத்துமே உண்மை உங்கள்கைச்
சேதி ஒன்றுதான் பொய்யென்றாள் கண்டி மன்னனின் கடித மன்றது
கொண்ட தென்கர வரியென்றாள்
uærv_/r/r-vatafuair æs/r-Öuti) 308

கடிதம் உண்மையென் றெண்ணி நீங்களும்
கண்டி நகரினுள் நுழைந்திடில் கடிதில் உங்களைச் சுற்றி வளைத்துமே கொன்றொ ழித்திடல் எளிதெனக் கடிதம் எழுதினோம் முத்துச் சாமியும்
கூட உதவினார் என்பதால் கடிதில் உரைத்தனம் நன்றி யையவர்
கோபங் கொள்ளுவர் என்பதால்
1359 வேண்டு மென்றொரு துரோகி யையவன்
விரும்பு பேர்களால் தீர்க்கவே வேண்டு மென்றொரு பொய்யை உண்மைபோல்
விபரம் சொன்னனஸ் சாமியும் வேண்டாம் நம்பிட வேண்டா மென்றுமே வருத்தி வேண்டிடும் வேளையில் வேண்டா விருந்தினர் வந்து வளைத்தனர்
வேங்கைக் கூட்டம்போல் பாய்ந்தனர்
1360 மூடி இருந்தவா றிருந்த கதவுகள் மடீர்ம டீரெனத் திறந்திட ஓடி வந்தனர் வாளும் ஈட்டியும்
ஓங்கி யயர்ந்தவா றிருக்கவே தேடி இருந்ததம் வேட்டைப் பொருள்கரம் சேர்ந்த மகிழ்வினால் அரிகளும் கூடி உண்டிடக் கூடும் வாறவர்
கூடி வளைத்தனர் திகைக்கவே
1361 கூட விருந்துமே குழிப றித்ததாய்க்
கொண்ட “மெக்டொவெல் எரிமலை கூட அங்சிடுங் கோலங் கொண்டனன் கீழ்மை செய்தனை என்றிடக் “கேடு செய்திலை பிரபு நா’னெனக்
கூற விளைந்தனன் “மெக்டொவெல் சாடி னான்தலை தனித்து வீழவே
சரிந்த தோர்புறம் உடலமே
1362
309
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 174
எதிரி கரத்தினால் எதிரி வீழ்ந்ததை எதிரில் கண்டனள் நாச்சியும் எதிரில் இன்னுமோர் எதிர்வி ளைவினை எண்ணா வாறுமே நோக்கினாள் எதிரில் தலைவனை இருகூ றாக்கிட
எண்ணி இயற்றிய "மெக்டொவெல் எதிரி யாகினான் முத்துச் சாமியோ
டிணைந்து வந்தவர் தமக்குமே
தலைவ னைக்கொலை செய்த வன்றனைத்
தீர்த்துக் கட்டிட எண்ணியே வலைவி ரித்தனர் முத்துச் சாமியின்
வீரர் கள்அதை வரித்துமே நிலைமை முற்றுமே மாறி வன்னியன்
நீச ரைப்புறங் காட்டவே தலைமை தாங்கினான் இருப டைகளைச் சேர்த்துத் தலைகள்பந் தாடினான்
கூறுபோட்டுடல் குவித்த னர்தலை
கண்ட கண்டவா றெங்கணும் வேறு பட்டுடல் விலகித் தெறித்தன வீதி எங்கணும் பிணங்களே ஆறு போல்வடிந் தோடுங் குருதியால்
அனைத்து வழிகளும் நிரம்பியே சேறு மாகின செல்லும் பாங்கறச்
சறுக்கி விழுந்தன பரிகளே
கதிர வன்வெறி கொண்டு காய்ந்தனன்
கண்டிப் புனிதமண் மீதிலே எதிரக் காடொன்று உருவ மானதால்
உள்ளங் குமுறியே கரங்களை அதிக உட்டிணத் தோடும் எறிந்தனன்
அழிந்த வெள்ளையர் பிணங்களும் கொதியுண் டவிந்திட வேண்டு மென்றுமே கோபங் கொண்டனன் என்னுமால்
1363
1364
1365
1366
υΔοτι τσαμ σταται σταδ/τα δυμώ
30

குருவி நாச்சிதம் கைகொள் வாள்எமன்
கொண்ட புதுவடி வாகவே பொருதும் ஒவ்வொரு பேரை யும்நிலம்
புரட்டிச் சரித்ததே உயிரற அருகில் நெருங்குவோர் ஆவி யுடல்வெறுத்
தகன்று ஓடினர் பயத்தினால் உருவில் பெண்னென்ற போதும் ஆண்பலம்
ஒன்றில் நூறெனக் கொண்டனள்
1367 மாடிச் சாளரம் மீதி ருந்துயிர்
மாளப் பறந்தன சரங்களும் தேடிச் சென்றுவெண் தோலைத் துளைத்தன
சுமந்த வர்தமை அறிந்திடா(து) ஓடிச் சென்றுவான் உறைந்தே உயிர்களும்
உலகை நோக்கிடக் கண்டன வாடிக் கிடக்குந்தம் வாக னங்களை
வருந்தலை யவை மகிழ்ந்தன
1368 பாய்ந்த ஈட்டியின் முதுகில் ஊன்றிடப் பரியி ருந்துபின் முதுகிட்டோர் சாய்ந்து வீழ்ந்தனர் தாங்கும் பரிகளோ
தறிகெட் டிங்குமங் கோடின ஒய்ந்தி லாதுபோர் தொடர்ந்த தனைவரும்
ஒழிந்து வெள்ளையர் இலாதுமே மாய்ந்த பூழிந்திட வேண்டு மென்றொரு மனத்தின் ஒருமையா லாமரோ
1369 வன்னிய ன்பல சென்னி யறுத்தனன்
வரித்த தம்வலைக் குள்ளதாய் அன்னி யன்விழுந் தவதி யுறுவதை
அடங்கா மகிழ்வொடு கண்டனன் தன்னு டன்தனை யொன்றி வந்தவர்
சேர்ந்து கண்டியின் படைகளும் ஒன்றி நின்றுமோர் உளத்த ராகவே
உறுதி கொண்டதால் நிமிர்ந்தனன்
1370
311
ஜிண்ணாஜர் டிரிபுத்தின்

Page 175
வேங்கை போலவன் சுழன்ற நாச்சியை
வகைந்த போதொன்றில் "மெக்டொவெல் தாங்கும் வெடிசுடு துவக்கினா லொரு
சூடு வைத்தனன் மின்னலுள் தாங்கி னானொரு துணிந்த தாக்கலைத்
துவண்டு பரியொடு புரண்டனன் வேங்கை காத்தவோர் வேங்கை யாகவே
வீரங் காட்டினான் வன்னியன்
பட்ட அடியினால் பலமி ழந்தவன்
பின்னர் உயிர்பெற்ற பிறவிபோல் விட்ட கன்றனன் வந்த வழியிலே
விடுத்த கவண்விடு சிலையென திட்ட மிட்டவா றனைத்தும் நடந்தன திணறி ஓடினார் வெள்ளையர் பட்ட னன்கரம் ‘மேஜர் டேவி'யின்
படைத்து ணைத்தள கர்த்தனனே
உயிர்ப றித்திட உவந்து வந்தவர்
உயிர்வி டுத்துடல் தவிர்ந்திட உயிர்பி ழைத்தவர் தம்மில் பலர்சிறை
உறையும் பதியெனக் கொண்டிட உயிரைக் கையெடுத் தோடி யோர்தமை
ஒளித்த னர்சிலர் மறைவிலே உயிர்கு டித்திடும் ஓர்மை கொண்டவர் உயர்வு கொண்டனர் போரிலே
யுத்தம் நடந்திடு போதில் மந்திரி ஒன்றும் அறிகிலார் போலுமே யுத்தம் இல்லையென் றெண்ணி இருந்ததால்
ஒடி னார்மன்னர் நாடியே யுத்தம் இல்லையென் றிருந்த போதிலே
இணைந்த முல்லையின் படையினால் யுத்தம் செய்திடு முடிவு கொண்டதாய்
ஏற்ற னன்பொறுப் பரசனே
137
372
1373
1374
uæirv-/rg-76tafuer aðsr-Sulib
312

தோல்வி வெள்ளையர் தழுவி டும்நிலை தோன்றும் நிலையினில் மந்திரி சாலப் பொருந்துமீ தனைத்துப் பொறுப்புமென்
றலையில் வருமெனக் கவல்கொண்டேன் கால மறிந்துபண் டார வன்னியன்
கைகொ டுத்தனன் வாழ்கவென் றாலம் செறிந்தசொல் லுதிர்த்தார் தானிதை
ஏற்று மகிழுவார் போலுமே
1375 கண்டிப் படைகளும் முல்லைப் படைகளுங்
கூட்டு முயற்சியால் வெள்ளையர் கண்டி நாட்டினைக் கவர்ந்தி டாதுமே காத்துத் தந்தனர் என்பதால் கண்டி மன்னனோர் விழாவை நடத்திடக் கருத்தில் கொண்ட னன் கூறவே கண்டி மண்ணில்கண் கொண்ட மந்திரி
கருத்தை ஒப்பினார் துயர்மிக
1376 வெள்ளைக் கொடியும்
வெற்றி விழாவும் சண்ட மாருதம் போலும் கண்டியுள்
சென்ற டைந்தவர் மீண்டுபின் கொண்ட சோகத்தில் திரும்பி ஓடியே
கோட்டை யொன்றுளே நுழைந்தனர் கண்ட னர்இதை நேசப் படையினர்
காத்து வழிமறைத் தெவருமே அண்டி டாதவர் தமையுங் காத்துடல் அகற்றி டாதுகண் பதித்தனர்
1377 மறைந்தி ருந்தவர் தம்முள் மெக்டொவெல்
முதல்வ னாகினான் படையினர் அறிந்த தாலவன் றனையே முதன்மையாய் அழிக்க வேண்டுமென் றெண்ணினார் அறிந்த னன்இதை முல்லை மன்னனும் அழிவில் அவனுயிர் தடுக்கவே பறந்த னன்இடை "மேட்ஜின் படைகளைப்
பொருதும் தடையொன்றும் பறந்ததே 1378
313
gSatavstas 2eätösoi

Page 176
திரும லைதனில் இருந்து "மேட்ஜ்’ எனும் தளகர்த் தன்னவன் படையொடும் அருகில் எதிர்முகம் வருவ தாகவே
அறிந்த வன்னியன் எதிர்த்தனன் வருவ தையெதிர் கொண்டு வென்றிடும்
வலிமை கொண்டதால் துரும்பெனும் உருவ மாகினார் வன்னி யன்படை
ஊழிக் காற்றென வானதால்
பறந்தே உயிர்கொளப் பதறும் வெடிகளைப்
புறமொ துக்கியே தம்முடல் இறந்த பூழிந்திடா தேய்க்குங் கலையிலும்
ஏவு வோர்தமை எய்திடப் பறந்தே உயிர்கொளும் பாணக் காலனைப்
பிசகா தெய்திடுங் கலையிலும் திறன்மி குந்தபண் டார வன்னியன்
தீரர் "மேட்ஜ்படை சாடினான்
தாக்கு தல்வெகு கொடுமை யானதால்
தாக்குப் பிடிப்பது துர்லப நோக்க மாகிடும் செத்தும் அழிவதே
நிறைவில் முடிவென நினைந்ததால் தூக்கி னான்வெளிர் கொடியி னையது
தேர்ந்த வன்னியன் தகைந்தனன் போர்க்கு ணத்தினன் ஆயி னும்மவன்
புரியு வான்சமர் தர்மமே
இடையில் போரினைத் தடுத்து மேயுயிர்
இன்னும் தாங்கிய வீரரின் இடையில் தோன்றியே உரைப்பன் மேட்ஜ்'இனி
இருப்போர் உயிரினைக் காத்திட இடையில் போர்தவிர்த் திருக்கும் நிலையிலே
இங்கி ருந்தேபின் வாங்குவோம் இடையொ டிந்ததெம் மவர்க்கு என்றனன்
இனிது வெற்றியுங் கனிந்ததே
1379
1380
1381
1382
uæir frg-varafusar aðsr-Guib
314

(36)gs
இருமுறையும் வெற்றி கொண்ட களிப்பி னோடே
ஏகினனே மெக்டொவெல்லை மீட்க வன்னி இருபடையும் ஒருங்கமைந்து நின்றார் அன்னார்
இடைபுகுந்தான் இடம்பெயர்ந்து வழிவிட் டார்கள் இருப்பதிங்கு நல்லதுள்ளே செல்ல வேண்டாம்
எதிரிபழி தீர்க்கவெனுங் கருத்தி னோடே இருப்பார்கள் என்றனரே வீரர் மன்னன்
எதற்கும்அஞ்சேன் நானென்றான் உட்பு குந்தான்
1383 உட்புறத்துக் கோட்டையுள்ளே நுtைpயு மட்டும்
ஒருவருமற் றிருந்ததந்தக் கோ ட நன்றாய் உட்புகவே நாற்புறத்தும் துவக்குத் தாங்கி
ஓடிவந்தார் வெள்ளைத்தோல் வீரர் கண்டும் உட்புகுந்த தில்லையவன் நெஞ்சுள் அச்சம்
உதடுகொண்ட சிறுநகையோ டசையா துற்றான் உட்பொதிந்த பகைவிழியில் கொப்பு விரிக்க
ஒன்றினனே மெக்டொவெல்தம் வீர ரோடே
1384 "அரிமாவின் குகைக்குள்ளே அகப்பட் டாய்நீ
அறுதியின்று தானுனக்கே” என்றான் ஓங்கிச் சிரித்தனனே வன்னியனும் சினங்காட் டாதே
சேர்ந்ததனோ டுரைப்பானே அவனை நோக்கி “தெரிவாய்நீ மூடனோநான் உன்னை இங்குத்
துரத்திவந்த எனதுபடை வீரர் கையில் தெரிவாக்கி மீட்டுனக்கே உயிரின் பிச்சை
தரவந்தேன்’ என நெஞ்சத் துணிவி னோடே
1385 வன்னியனின் பெருந்தன்மை உணரா தோனாய்
வார்த்தைகளை உதிர்த்தனனே "மெக்டொவெல் நீ சொன்னதென்ன என்றனுக்கா நீயா பிச்சை
தருவதென்றாய்” எனவெகுண்டே வினவ “ஆம்நீ என்ன கொண்டாய் கண்டியிலே பொறியில் பட்ட
எலியெனவே விழித்ததனை மறந்திட் டாயா சென்னிதப்பி னால்போதும் என்றே ஒடித்
தப்பியிங்கே வந்ததைஏன் மறந்தாய்” என்றான் 1386
315
ஜிண்ணாஜர் 2fத்தின்

Page 177
“புறமுதுகிட் டோடுபவன் தனையும்அஞ்சிப்
பயந்தொழிந்து கொள்பவனை நிராயு தோனாய்க் குறிப்பறியா துற்றானைக் கொலலா காது
கொள்கையதைக் கொண்டதெங்கள் பண்பா டென்றே மறவாதே நான்வந்தேன்” எனவும் யுத்த
முறைதர்மம் எனக்காநீ உரைப்பாய் ஓடி மறையஇடம் இல்லாதிங் ககப்பட் டாய்நீ
மடிந்தொழிய வேண்டுமென்றன் கரத்தால்” என்றான்
1387 உண்டை கொண்ட துப்பாக்கி தனைமுன்நீட்டி
ஒடிக்கமுயன் றான்விசையை மின்ன லுள்ளே பண்டார வன்னியனின் கரத்துள் அன்னான்
புயந்திருக்க கரமொடுங்கப் பட்ட தன்றோ பண்டார வன்னியனைக் கொல்வ தொன்றும்
பெரிதல்ல உன்குகைக்குள் வெளியில் உன்னைத் துண்டாடப் பலநூறு வீரர் என்றன்
துணையாக வந்துள்ளார் அறிவாய் என்றான்
1388 நீட்டியகைத் துப்பாக்கி முன்னே சற்றும்
நிதானமிழக் காதவனாய் அச்ச மற்றுக் காட்டினனே இல்லைத்தன் ஆத்தி ரத்தை
கடுகளவும் பரபரப்புக் கொண்டி லாதான் மாட்சிமைகொள் வீரனது போன்றே வாழ்வில்
மெக்டொவெல்லுங் கண்டதில்லை என்பான் போன்று காட்டினனே வியப்பையவன் கண்கள் மீது கூறியது வாய்மீண்டுங் கடுத்தே ய..து
1389 'வன்னியனே உனதுயிணம் வீழ்ந்த மற்ற
வினாடியிலே காத்திருக்கும் உனது வீரர் தென்னை விட்டுத் தெறித்துவிழும் காய்கள் போலும்
தொலைதுாரம் ஓடு வார்கள் என்றதுமே “மெக்டொவெலும் "இங்கே தான்நீ எம்மவரைத் தப்பாக எடைபோட் டிட்டாய் என்னுயிரைப் பறித்துப்பார் நடப்ப திங்கே
என்னவென அறிவாய்நீ" எனவி எரித்தே
1390
utaoulstoyosaiafagasir arresuld 316

தலைவன்தலை சாய்ந்திட்டால் வீர ரெல்லாஞ் சிதறுண்டு போவார்கள் அணிக ளெல்லாம் அலங்கோலம் ஆகும்படை தாங்கி நிற்க
ஆளற்றுப் போகுமென நீநி னைத்தாய் கலங்காரே என்வீரர் தலைவன் தம்முன்
கொன்றொழிக்கப் பட்டாலும் துளிஇ ரத்தம் நிலைத்தாலே உடலிலது போதும் தம்மை
நீக்காரே களத்திருந்தும் அறிவாய் என்றான்
391 என்னைப்பழி வாங்கிவிட்டு நீயும் உன்னை
இணைந்தோரும் இங்கிருந்து தப்பி யோடும் எண்ணமது கொண்டீரோ இயலு மாயின்
இப்போதே செய்ததைப்பார் சுக்கு நூறாய் உன்னோடு உன்படையும் அழிந்தே போகும்
ஒருவரெஞ்சார் கண்காண உயிருக் கஞ்சிப் பின்வாங்கி ஓடிவந்தாய் உயிரைக் காக்கப்
பறந்துவந்தேன் இனியுமென்ன விளக்கம் வேண்டும்
1392 “இனியெந்த விளக்கமும்நான் சொல்லேன் இங்கே எவருமற்றுத் தனித்துவந்தேன் இயலு மாயின் எனைக்கொன்றே இங்கிருந்து செல்நீ பார்ப்போம்”
என்றனனே செவிமடுத்த மெக்டொ வெல்லுந் தனைமறந்தான் அதிசயித்தான் துணிவு கண்டே
தனது கையின் ஆயுதத்தைத் தலையில் வீழ்த்திச் சினந்தணிந்த மனிதனென வன்னி யன்கை
சேர்த்தணைத்துக் குறுக்கினனே மற்றோர் கண்டார்
1393 நெடுநேரம் கடந்துமன்னன் கண்கா ணாத
நிலைகண்டு கொதித்தெழுந்தார் வீரர் ஏதும் கொடுமையுள்ளே நடத்ததுவோ என்றே அஞ்சிக்
கூடியொன்றாய் உட்புகவே முயலும் வேளை கொடியொன்றைக் கையேந்தி மெக்டொ வெல்முன் கையசைத்து நட்பினடை யாளங் காட்டித் தொடர்ந்துமன்னன் பண்டார வன்னி சேரச்
சனத்தண்டை வந்தனனே தருமம் வெல்ல
1394
37
ஜின்னாவூர் ஷரீபுத்தின்

Page 178
வீரர்களே வெள்ளையர்க்கோர் எச்ச ரிப்பாய்
வந்தவர்க்கு இந்தமண்ணில் ஆதிக் கத்தைச் சேரவிட மாட்டோமென் றுறுத்து தற்கும்
ஜெனரல்மெக் டொவெலைநான் கொழும்பு மண்ணை) சேரவிடப் போகின்றேன் தோற்று வந்தே
தனையொளித்துக் கொள்வாரைப் பாது காத்தும் ஒருசிறிய தீங்குமற்றும் அனுப்பும் பண்பை
ஒர்ந்தறிந்து பார்ப்பதற்காய் அதற்குப் பின்னே
1395 ஆங்கிலேய ஆதிபத்யம் இந்தத் தீவை
ஆக்கிரமித் திடுஞ்செய்கை தவிர்த்து மீண்டும் ஆங்கிலமண் சென்றடைவார் என்றே நானும்
அவாவுற்றேன் இப்போது வெண்கொ டீயைத் தாங்கிஜென ரால்டோவல் படையி னோடு
செல்லவுள்ளார் அன்னவர்க்கு நீங்க ளெல்லாம் தீங்கிழைக்கும் எண்ணத்தைத் தவிர்த்துச் செல்லத்
துணைசெய்ய வேண்டுமென்றும் மன்னன் கேட்டான்
1396 “நன்றி”யென்று நன்றியொடு கூறி விட்டு
நகர்ந்தானே கொழும்பு நோக்கி மெக்டொ வெல்லும் ஒன்றானார் வீரரவ னோடே நின்றோர்
ஒருமித்துக் கரகோஷம் செய்து வாழ்த்திச் சென்றவரோ டவர்தம்மின் தலைவ னையும்
சேர்த்துவாழ்த்தி மகிழ்ந்தார்கள் சரித் திரத்தில் என்றும்பதி வாகுமிந்த நிகழ்வாம் எம்மோர்
இணையில்லாப் பெருந்தன்மை சாற்று தற்கே
1397 வெண்கொடியைத் தாங்கிவந்த மெக்டொ வெல்லை
வெறுப்போடே பார்த்தேநோத்' வெகுண்டெ முந்தான் கண்டியிலே நடந்ததையும் பின்னும் நேர்ந்த
கதைகளையும் விரிவாக எடுத்துக் கூறக் கொண்டனனே உடனடியாய்க் கூட்ட மொன்றைக் கலந்தாலோ சனைசெய்யக் கடைப்பி டித்துக் கொண்டவழி முறைகளையாங் கிருந்தோர் ஒன்றிக்
கண்டித்தார் 'நோத்தின்மேல் பழிசேர்த் தாரே
1398
uærv /ry-restafusir að/r-Sultið 3.18

பிரிட்டிஷ்சாம் ராஜ்ஜியத்தை அமைக்க வென்று பிலிமத்த ளாவையினை நம்பிக் கெட்ட பெரும்பிழையைச் சொன்னார்கள் முத்துச் சாமி
பதிந்திருக்கக் கொழும்பிலிடம் கொடுத்தே ஈற்றில் பெருந்தோல்வி கண்டதுவும் குற்றம் மற்றும்
பண்டார வன்னியனுங் கண்டி செல்லப் பொருந்தியது போல்விட்ட பழியைக் கூறிப் பிரிந்தார்கள் முடிவற்றே கூடினோரே
1399 குருதி படிந்த கொடுவாள்
கண்டியிலே தோல்விகண்ட கார ணத்தைக்
கொழும்பினிலே சபைகூட்டிப் பேசும் வேளை கண்டியிலே வெற்றிக்காய்க் கொண்டாட் டங்கள்
குதுகலமாய் நடத்தவழி மேற்கொண் டார்கள் கண்டிமன்னன் ராஜசிங்கன் நண்ப னுக்கும்
குருவிச்சி நாச்சிக்கும் வெற்றி கண்ட கண்டிமக்கள் துணையோடே கெளர வங்கள்
கொடுத்துமகிழ்ந் திடவென்றே எண்ணும் வேளை
1400 தந்தலையில் முடியேறும் விழாவுக் காகத்
தவித்திருந்த பிலிமத்த ளாவை நெஞ்சில் அன்னியனை விழாவெடுத்துக் கெளர விக்கும்
அரசன்மீ தடங்காத வெறுப்புத் தோன்ற என்னவித மாயெனினும் குழப்பிச் சோபை
இல்லாதே செய்திடவும் வேண்டு மென்றே தன்னோடு துணைநிற்க மர்த்த னியைத்
தூண்டிவிட முயன்றார்பின் தோல்வி கண்டார்
1401 நஞ்சனைய பேர்களென்றே நம்பி னேன்நான்
நாசகத்தைச் செய்யவேநான் முல்லை சென்றேன் வஞ்சகமே அறியாத மக்க ளென்றும்
வந்தோரை ஆதரிக்கும் பண்பார் என்றும் அஞ்சாத நெஞ்சத்தார் அன்னி யர்க்கே
அடங்காதார் பிறந்தமண்ணாம் இலங்கைத் தீவில் கொஞ்சமேனும் இடம்பிடிக்க இடந்த ராதார்
கொள்கைமிகு தீரரென்றும் அறிந்து கொண்டேன்
1402
319
ஜிண்ணாஜர் ஷரிபுத்தின்

Page 179
கண்டியென்ன வன்னியென்ன எல்லாம் எங்கள்
கொஞ்சுமெழிற் சுரங்கமெனும் இலங்கை நாடே அண்டிவரும் அன்னியரை எங்கென் றாலும்
அடக்கியொடுக் கிடவேண்டும் என்னும் எண்ணம் கொண்டதனால் தானன்றோ படையை முற்றாய்
கொண்டுவந்தார் வன்னிமன்னர் கண்டி காக்க எண்ணமெனக் கில்லையவர் தமக்குச் சற்றும் இடர்செய்ய என்றனளே அதிர்ந்திட் டாரே
1403 “என்னசொன்னாய் உன்னையொரு சிங்க ளப்பெண்
எனச்சொல்ல வெட்குகின்றேன் மாற்றார் தம்மை விண்ணளவு புகழுகின்றாய் என்த லைக்கு
வரவிருந்த மணிமுடியைத் தட்டி யோரை” சொன்னவரை மறுத்தவளுஞ் சொல்வாள் நீங்கள்
சொல்வதுபோல் சிங்களப்பெண் என்றால் தீமை ஒன்றுமட்டுஞ் செய்பவளா திருந்தி னேன்நான்
உங்களுக்கும் திருந்தவழி உண்டாம் என்றாள்
1404 கொண்டனையோ முடிவும்நீ தமிழ ருக்குக்
காட்டியெங்கள் சிங்களவர் தமைக்கொ டுக்க நன்றிகெட்ட பெண்ணாம்நீ என்றார் கேட்டு
நகைத்தனளே பின்னவளுஞ் சொல்வாள் இந்த மண்பிறந்தோர் அனைவருமிம் மண்ணின் மீது
முறையான உரிமைகொண்டோர் பிறந்தோ ரெல்லாம் கண்ணியமாய் ஒன்றுபட்டு வாழ்வ தொன்றே
காணநானும் விரும்புவது என்றே யன்னாள்
1405 முற்றாக மாறிவிட்டாய் மர்த்த னிநீ
மனம்மாறக் காரணந்தான் என்ன என்றார் அற்பநலங் கருதாது பண்டார வன்னி
அன்புகொண்டார் கண்டிமன்னர் மீத தாலே அற்பஉடற் சுகத்திற்கும் இடங்கொ டாதே
அவர்கொண்ட இலட்சியத்தை வென்றெ டுக்க முற்றுந்தனை அர்ப்பணித்தாள் குருவி நாச்சி
மாறாத பாசத்தின் அணியாய் என்றாள்
1406
uariturraya yarafuu air arariutub
3
2
O

என்னைநம்பி வாழ்ந்தவள் நீ இப்போ தந்த
இருவருக்கும் பக்தையென மாறி விட்டாய் என்னவுன்றன் முடிவதைநீ சொல்வாய் என்னை
இழிவுசெய்யும் திருவிழாவை அவலம் செய்ய உன்னுதவி தாராயோ என்றார் நானோ
உடன்பட்டேன் விழாவுக்காம் என்ப தாலே என்னவகை யாயுதவி செய்வேன் என்றே
எரிநெருப்பில் எண்ணையூற்றும் பதில வித்தாள்
1407 (36g
இலங்கைத் தீவினுக் கெழிலைத் தருபவள்
என்னும் பூரிப்பில் நாப்பண்ணே துலங்கும் மலைசெறிந் துற்ற குளிர்புலத்
தலைமை நகர்விழாக் கண்டிட இங்கு மேபல வண்ண வளைவுகள்
எங்கு மேயுயர் தோரணம் துலங்கும் மரங்களுந் துணிப்ப தாகையால்
சேலை கட்டிய மாதர்போல்
1408 வீதி அனைத்துமே வண்ணப் பூச்சரம் வழியில் நறுமணங் கலந்திட போதும் நெய்நிறைந் தகல்கள் எரிந்தன
பகலும் இரவும்ஒன் றாகவே காதும் இனித்திடக் கேட்கும் பிரித்'மதக்
கீத நாதங்கள் ஒலித்திட மாதர் இளையவர் முதியோர் குழந்தைகள்
மலிந்து நிறைந்தனர் எங்குமே
1409 தலதா மாளிகை ஒளியால் மிளிர்ந்தது
தந்த தாதுப்பல் புத்தரின் நிலைகொண் டிருந்திடும் புனிதத் தலமென
நம்பி பெளத்தர்கள் ஏற்றிடும் உலகம் அறிந்தவோர் உன்ன தப்புலம்
உள்ளும் புறமும்வெண் மலர்களால் கலையின் வடிவமாய்க் காட்சி தந்ததே
கண்டி நகருயர் பொருட்டென 1410
321
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 180
மிளிரும் மாளிகைக் கருகி லமைவுறு மதிலால் சுற்றியே அரண்கொளத் தெளிந்த புனல்செறிந் தழகு மிளிர்ந்துமே
துலங்குந் தொப்பக் குளமதே அளிகள் மீள்கிலாப் புஷ்ப வனத்தொடு
அமையும் நாப்பணோர் தீவினால் இயமை கொண்டவோர் எழிலாள் போலுமே இலங்கும் கண்கொளாக் காட்சியே
நூறு யானைகள் நின்ற னதயார்
நிலையில் ஊர்வலம் செல்லவே வேறு வேறென வண்ண முகத்திரை
வளையும் துதிக்கைகள் வரையுமே கூறின் அவைசில மலைந கர்மிளிர்
குன்றம் ஒன்றியே வந்ததாய்க் கூற லாமவை கொண்ட பேருருக்
கண்கள் இரண்டுபோ தாமரோ!
அறபிக் குதிரைகள் அணிவ குத்தன அவற்றில் வீரர்வாள் ஈட்டிகள் துறந்தே கொடிகளைத் தாங்கி நின்றனர்
திருவி ழாதனைத் தொடரவே மறந்த னர்துயில் மாந்தர் பலதினம்
மனத்தில் கொண்டபேர் எழுச்சியால் நிறைந்த னர்நகர் கொண்ட வெற்றியை
நினைந்த பூரிப்பில் மிதந்தனர்
பட்டத் தானையில் ராஜ சிங்கனும்
பக்கத் தொன்றியே ராணியும் கிட்ட அதன்பின்னே கரிய மலையினில்
குன்ற மொன்றென வன்னியும் ஒட்டி அதனரு காமை நாச்சியோர்
உயரினக்கரி மீதிலும் கொட்டும் 'ஜயபெர' கூடி உடன்வரக் குடைநி ழற்கிடை யூர்ந்தனர்
14
14
1413
1414
uairr -/rge, iarraíouair ab ar fiulio
3
2
2

தொடர்ந்து கரிபரித் தொடரும் வீரர்கள் தொகையும் மக்களும் பின்வர இடையி னிடையினில் கண்டி நாட்டியம்
எழிலைச் சேர்த்திட ஊர்வலம் நடைப யின்றதே நீண்ட "பெரஹர
நகரி னைச்சுழன் றெங்குமே முடிவ டைந்தது மாளி கைவர
மக்கள் கலைந்தவர் ஊர்சென்றார்
1415 மாளி கைக்கொலு மண்ட பம்ஒரு
மன்னன் மணிவிழா மேடைபோல் ஆழி முத்தொடும் அழகு மணிபல
அணிந்த இருக்கைகள் கூடவே நீள விழிமலர்த் தோகை யர்குழாம்
நின்று சாமரம் வீசிட ஆளப் பிறந்தவர் அரசர் வந்ததில்
அமர வாழ்த்தொலி அதிர்ந்ததே
1416 வண்ண மலர்களை அள்ளி வீசினர்
வளைந்து நின்றுமே மாதர்கள் கண்ணை அள்ளிடுங் காட்சி யாமது
கொலுவில் வீற்றுள பொம்மைபோல் கண்டி மன்னனும் முல்லை அரசனும்
கூட ராணியும் நாச்சியும் ஒன்றி இருந்தனர் ஒலித்த கரவொலி
ஒடுங்க நெடும்பொழு தானதே
1417 வன்னி மன்னனை வாழ்த்திப் பரிசென
வழங்க வென்றொரு வாளினைப் பொன்னின் பிடியொடு பொன்னின் கவசமும் பொருத்திச் செய்துமோர் மேடையில் பொன்னின் தட்டிலே இருத்தி வைத்தனர்
பார்த்த வர்மனம் பூரித்தார் என்ன கொடுப்பினும் ஏற்கு மோவிவன்
எமது மண்காத்த பணிக்கென்றார்
1418
323
ஜிண்ணாவூர் ஷரீபுத்தின்

Page 181
மண்ட பந்தனில் மிகுந்தி ருந்தனர்
மந்தி ரியர்பிர தானிகள் கொண்ட அறிஞர்கள் சான்றோர் பிறரையும்
கலைஞர் தமையுமே தன்னகம் கண்ட னர்இலை பிலிமத்த ளாவையைக்
கூடப் பெரஹர தன்னிலே அண்டி நின்றாரப் போது மன்னவர்
அருகில் புதுமையென் றெண்ணினார்
வாழ்க! மன்னவர் வாழ்க! வன்னியர் வாழ்க! குருவிச்சி நாச்சியார் வாழ்க! கண்டியின் வீரர் முல்லையின்
வீரர் வாழ்கவே! என்றுளோர் வாழ்ந்த மண்டபம் விடுத்து வெளியெலாம்
விரவி நின்றதே மன்னவன் வாழ்க! நீவிரும் வாழி யென்றனன்
வாழ்த்தி மதிலெதிர்த் தொலிக்கவே
எழுந்து மக்கள்முன் நின்ற மன்னவன் ஏற்ற வாழ்த்தொலி அடங்கிட "முழுக்க இவ்விழா நன்கு நடைபெற முல்லை மன்னனே காரணம்” எழுந்த தேகர வொலியும் மன்னவன்
எடுத்து வார்த்தைகள் முடிக்குமுன் தொழுத னன்கரங் கூப்பி வன்னியன் தனது நன்றியைக் கூறினான்
மங்க லத்திரு விழாவீ தென்றுமே
மன்ன வன்மீண்டுஞ் சொல்லிட மங்க லத்திரு விழாவி தல்ல.அ மங்க லம்என மாற்றிலா தெங்ங் னம்என் சபதம் தீர்வதாம் என்று மந்திரி மனதுள்ளே தங்கி டும்வெறுப் பிலங்க முகத்தினில் தனக்குள் பேசினார் கேட்டிலார்
1419
1420
142
பண்டாரவன்னியன் காவியம்

மாணபு மிகுந்தவெம் மந்தி ரியர்பிலி மத்த ளாவையே நாங்களிம் மாண்பு மிக்கநாள் தன்னிலே கண்டி
மண்ணை வெள்ளையர் கைக்கொளா மாண்பு மிக்கராய்ப் போர்தொ டுத்துமே
மாற்றாக விரட்டியே ஒட்டிய மாண்பி னுக்கொரு வாளி னைமனம்
மகிழ்ந்து வன்னியர்க் களிக்கிறோம்
1423 பொன்னில் செய்தவப் புத்தம் புதியவாள்
பெற்றி டும்வரம் பெற்றவெம் பொன்ம னத்தினன் முல்லை மன்னவன்
பெற்றி டத்துணை செய்வதாய் முன்னம் எடுத்தென்றன் கரத்தில் தந்திட
மந்தி ரியுமை கேட்கிறேன் என்ற னன்அவர் எழுந்து வந்துமுன்
ஏற்ற னன்பணி என்றுமே
1424 தன்னி டைதொங்கு வாளி னைக்கரம்
தூக்கி வணக்கமும் சொல்லிட முன்னி ருந்தபேர் அனைவ ரும்அதை
மிரண்டு நோக்கினர் குருதியால் சென்னி றத்தினில் தோய்ந்து காய்ந்தது
தோன்றக் காரணம் தேரிலார் என்ன ஈதென அதிர்ந்து மன்னனும் எழுப்பி னான்ஒரு வினாவையே
1425 மன்ன ரேயிந்த விழாவி னையொரு மரண விழாவென ஆக்கிட எண்ணி னள்ஒரு பாத கியவள்
எண்ணம் மன்னரை ராணியை விண்ண கம்செல வைப்ப தேவயள்
வினைக்கு முந்தினேன் நானவள் சென்னி அரிந்தேனத் துரோகி மர்த்தனி
செத்த னஸ்எனக் கூறினார்
1426
325
ஜிண்ணா ஆந் 2றிபுத்தின்

Page 182
பெண்ணின் பிராயச் சித்தம்
”கொன்றுவிட்டேன் மர்த்தனியை” என்றார் அந்தக்
கொடுமைகளின் பிறப்பிடமாம் மனிதன் கேட்டு மன்றினிலே இருந்தமற்றோர் அதிச யிக்க
“மர்த்தனியா இல்லைநான் நம்பேன்’ என்று தன்னைமறந் தெழுந்தலறி விட்டாள் நாச்சி
தனதுவிழி உருட்டியவன் தளாவை நின்றார் மன்னர்கள் இருவருமே அதிர்ந்தார் நாச்சி
மிகைப்பட்ட அதிர்ச்சிகண்டு வியந்தா ரற்றே
1427 இடைநடுவில் விழாநின்ற தெண்ணி மன்னன்
இதயத்தை வருத்தியது கண்டு வன்னி நடைபெறலாம் விழாவேறோர் நாள்வா வென்று
நடந்ததென்ன என்பதனை அறிவோம் என்றே உடன்படவைத் தனைவருமே மாளி கைக்கே
ஒன்றாகிச் சென்றார்த ளாவை சேர்ந்தார் நடந்தவற்றால் மனம்மகிழ்ந்த போதும் கண்கள்
நேர்நோக்கார் நிலம்பதித்தே நடக்க லானார்
1428 எங்குளது பிணமென்றே அறியா மன்னன்
இடைநடுவில் நடைதளர்த்தி அவரை நோக்கி எங்குளது மர்த்தனியின் பிணமென் றெல்லா
இதயத்தின் வெறுப்பினையுங் கூட்டிக் கேட்க எங்கும்வே றில்லையென்றன் அறையுள் ளேதான்
இருக்கிறது என்றதுமே மன்னன் கேட்பான் அங்குவந்த காரணந்தான் என்ன வென்ே
அரசனவன் வெகுண்டெழவே பேச லானார்
42) என் மகளின் நண்பியென்ற கார ணத்தால்
எனதுதுணை நாடிவந்தாள் வகுத்தெ டுத்த தன்திட்! ந் தனைச்சொன்னாள் வெகுண்டெ முந்தே60
துரோகமிது ராஜவிசு வாசத் தாலே என்னையறி யாதுவந்த சினத்தால் கொன்றேன் எனக்கூற இடைமறிந்தே நாச்சி சொல்வாள் உன்னையறி யாதவர்கள் முன்னே சென்று
உரத்துச்சொல் உன்துாய்மை தனையா மென்றே
143()
32()
aĝaskar/va23 42eÅfuĝ585asi

மன்னரையும ராணியையும் கொல்ல அநத
மர்த்தனிதான் திட்டமிட்டாள் லற பொய்யை உன்னையன்றி இங்கெவரும் நLப மாட்டார்
உளந்திருந்தி விட்டனளே அவளாம் என்று பின்னுமவள் சொல்லிடவே அவரை நோக்கி
பிலிமத்த ளாவைசொல்வார் என்றன் மீது அன்புகொண்ட அவளைநான் கொல்ல வேண்டும்
அவசரமேன் என்றேபின் னழைத்துச் சென்றார்
1431 அனைவருமே சென்றடைந்தார் அறைக்குள் ஆங்கே
அவள்பிணத்தை எவர்தாமுங் கண்டா ரில்லை தனைநோக்கி அனைவருமே கேள்வி தோயத்
திரும்பியதும் திகைத்தவவர் திகைத்தே நின்றார் தனையறியா தெப்படியப் பிணத்தை யாருந்
திருடவழி யுண்டாமென் றெண்ணும் போது தனைநோக்கி வந்தகேள்விக் கணைக ஞக்குச்
சொல்லவொரு பதிலற்றுத் திணறி னாரே
432 “இங்கேதான் இதேயிடத்தில் தானே நெஞ்சில்
ஏற்றினேன்என் உடைவாளை” என்றார் மீண்டும் பொங்கிவருங் கோபத்தில் மன்னன் சொல்வான்
புதுமையிது புதுமையிது எல்லாம்இங்கே சங்கதிகள் அத்தனையும் மர்மமாக
செத்தவளின் உடலையுயிர் தன்னோ டொன்றி எங்கேதான் கொண்டுசென்ற தறியா விந்தை
எப்படித்தான் நம்புவதோ எனச்சி னந்தான்
1433 இதுவரையும் நான்சொன்ன எதையும் நீங்கள்
ஏற்காது போயினுயிர் பறிக்க வென்றே இதோ இந்தக் கிண்ணங்கள் இரண்டி லுள்ள
இன்சுவையின் பால்காணிர் விஷங்க லந்து அதையேதான் மன்னருக்கும் ராணி யார்க்கும்
அருந்திடநான் தருவனென அடம்பி டித்தாள் விதிமாறிப் போனதவள் உயிரை வாங்க
வேண்டியதாய்ப் போனதென மீண்டுஞ் சொல்வார்
1434
327
ஜிண்ணாஜர் 2fபுத்தின்

Page 183
பாலிருந்த பொற்கிண்ணம் இரண்டி னையும்
பார்த்தார்கள் அனைவருமே அதிலி ருந்த பால்சற்றும் புலப்படாத பாங்கில் ஈக்கள்
படிந்திறந்து கிடந்தனவே நஞ்சி னாலே பால்வடிவில் விடமுடலுட் புகுந்து மெல்லப்
பரவியுடல் தனைக்கொல்லும் இதனை என்றன் பாலவளும் சொல்லவதைத் தடுத்தே மாறாய்ப்
பிடிவாதம் செய்தனளே கொன்றேன் என்றார்
1435 சொல்லுகின்ற வாகினிலே உண்மை என்று
தோன்றுகின்ற வாகினிலே முகத்தில் மாற்றம் துல்லியமாய்க் கண்டிமன்ன னிடத்தில் தோன்றத்
தொடவிடா ததனைத் தவிர்த் திடவென் றெண்ணி “நல்லதுநீர் செய்திருந்தால் உடலை ஏனாம்
நீர்மறைக்க வேண்டும் என்ன தேவை கொண்டிர் சொல்லுமதை” என்றனனே முல்லை மன்னன் செய்யவில்லை நானதனை எனம றுத்தார்
1436 யார்மறைத்தார் ஏன்மறைத்தார் என்றான் வன்னி
எதிர்பாரா நிகழ்வொன்று நடந்த தாங்கே யாருமெனை மறைக்கவில்லை நானே என்னை எவருமறி யாதபடி மறைத்தேன் என்றே ஓரிருசொல் வாய்முணுக்க உடல மெல்லாம்
உறைந்திருந்த குருதியொடு திரையை நீக்கி நேராகக் கண்டிமன்னன் முன்னே வந்தாள்
நிலைகொள்ளா நிலைகாண நிலத்தில் சாய்ந்தாள்
1437 இன்னும்நான் சாகவில்லை எண்ணம் போன்றே
எல்லோரும் வந்தீர்கள் என்னை முன்னர் மன்னிக்க வேண்டும்நீர் அனைத்துப் பேரும்
மங்கலமாய் நடந்தவிழா அமங்க லம்மாய் தன்னிஷ்டம் போல்மாற வேண்டு மென்றே
திட்டமிட்ட பாவியிவன் தானே என்னை முன்நிற்கச் சொன்னான்நான் மறுத்தேன் என்றே
மார்பினிலே வாள்பாய்ச்சிப் பொய்யு ரைத்தான்
1438
υ, αστυιτσου σταται σταδίτσδαμιρ 328

விட்டுவிட்டு மெல்லமெல்ல இயலா வாறே
வார்த்தைகளை மூச்சிளைக்க வெளிப்ப டுத்தி சட்டென்றே நிறுத்தினளே தாங்க மாட்டா தாகத்தால் நாவரள சற்றுத் தாழ்த்தி விட்டவிடந் தொட்டாள்இக் கொடியோன் எண்ணம் வாகாக நிறைவுகொண்ட தென்றன் நெஞ்சின் லட்சியத்தை நிறைசெய்வேன் சிங்க ளப்பெண்
இந்நொடியில் சிங்கமெனப் போவாள் என்றே
1439 நெய்வரண்ட அகலின்சுடர் அணையுமுன்னர்
நீண்டுயர்ந்தே எரிவதுபோல் நிலங்கி டந்தாள் செய்யவிய லாதவொரு காரி யத்தைச்
செய்தனளே எவருமெதிர் பார்க்கா வாறே பைபவுடல் அசைத்தாள்பின் மின்னல் போலப்
பாய்ந்துமன்னன் உடைவாளை உருவி ஓங்கி மெய்சரியத் தளாவைநெஞ்சிற் சொருகி னாள்தன் மெய்சரித்தாள் குருவிச்சி தாங்கி னாளே
440 கண்களில்நீர் பொங்கிவழிந் தோட நாச்சி
கைகொண்ட மர்த்தனியை நெஞ்ச ணைக்கக் கண்களில்நீர் கசிந்தாலும் பிராயச் சித்தம்
கொண்டவளாய்ப் புன்னகைத்தாள் நாச்சி நோக்கி கண்கலங்க வேண்டாம்நான் செய்த பாவம்
கழிந்ததின்று கொடியவனைக் கொன்றதாலே விண்ணகன்றான் பிலிமத்த ளாவை கூட
வஞ்சகமும் சூழ்ச்சியுமொன் றாகிற் றென்றான்
1441 பொங்கிவந்த செங்குருதி தடுப்பா ரற்றுப்
போனதனால் உடல்வரண்டு அதிற்சி யாலே தங்காது பிரிந்ததுயிர் இருபே ருக்கும்
தப்பிழைத்தால் தண்டனையில் வுலகில் சேரும் பங்கமுறப் பழிசுமந்து பிணமாய்ப் போன
பிலிமத்த ளாவைசெய்த பழிக ளெல்லாந் தங்கிநிற்கும் சரித்திரத்தில் என்றான் வன்னி
சரியென்றே தலையசைத்தான் ராஜசிங்கன்
1442
329
ஜிண்ணாஜர் ஷரிபுத்தின்

Page 184
மனத்தை மாற்றிய மடல்
தோல்வியைக் கண்ட வெள்ளையர்கள்
துரிதமாய்த் தம்மை வளப்படுத்திக் கால்பதி யாரே கண்டியுள்ளே
கொள்ளார் எண்ணம் முல்லையையும் ஏலார் பிடிக்க வன்னியனின்
எதிர்ப்பை அறிவர் என்பதனால் சாலப் பொருந்துஞ் சிலகாலம்
தங்குதல் கண்டியில் எனநினைந்தே. . .
வன்னியன் தனது படையோடே
வாழ்ந்தனன் விக்கிரமன் வேண்டுதலால் வன்னியை முற்றும் ஊமைச்சி
வரித்தனள் பாலனஞ் செய்வதற்கே என்னதான் தோல்வி கொண்டாலும்
எதிரியை எளிதாய் எண்ணுவது நன்மை விளைப்ப திலையென்றே
நாடினர் கண்டியைப் பலப்படுத்த
கண்டியைக் கொள்ளா தொருநாளும்
கண்பதி யார்கள் முல்லையின்மேல் கொண்டவவ் வெண்ணம் முல்லையின்மேல்
கவலழிந் திருந்தாள் குருவிச்சி கண்டனள் திருமுகம் ஊமைச்சி
கைப்படத் தனித்தவள் தனக்கென்றே கண்படா தெவரும் அறியாதே
கண்ணுண் டிடவவள் மகிழ்வுற்றாள்
தனதறை யுட்புகுந் தெவர்தானும்
தனைக்கண் டிடாதே தந்திரமாய்த் தனக்கெனத் தனித்தே ஊமைச்சி
தந்தவக் கடிதம் தனையேந்தி மனத்தினை ஒருமைப் படுத்தினளே முக்கிய சேதியொன் றில்லாது எனக்கெனத் தனியாய் என்றவளும்
எழுந்தாள் எனமணம் கூறியதால்
44,
1444
1445
1446
υ, αατι ιτα αυΔστασίμ σταδ/ταδιμιίο

ஆவலும் உந்த ஒலைதனை
அட்சர அட்சர மாய்ப்படித்தாள் ஆவலும் விஞ்சிய தவள்கடிதம்
அடங்கிய வாசகந் தொடர்வதற்கே ஆவலாய் இதுகால் காத்திருந்த
ஆசையைப் புரிந்தவள் தாமாக ஆவலோ டெழுதி இருந்தனளே
அண்ணியாய்க் கொள்ளும் ஆசையினால்
1447 வேறு
அன்புடைக் குருவி நாச்சியார் தமக்கே அன்புடன் எழுதும் அஞ்சலி தாகும் அண்ணியார் என்றே அழைத்திட மனத்தில்
எண்ணமி ருந்தும் இடந்தா ரீரே கண்டியில் தோல்வியைக் கண்டபின் வெள்ளையர்
கண்டவா றின்று குதிப்பது மிலையாம் இலங்கையில் எங்குமே இனிப்படை யெடுப்பில்லை
கலங்கினார் வெள்ளையர் கூறிய தறிந்தோம்
448 என்பதால் நீவிர் இனியேனும் உங்களின்
வன்பிடி வாதமும் விடுவது நலமாம் சபதமுங் கொண்டீர் சற்றேனும் பிசகாச்
சபதமுங் காத்தீர் சான்றோர் உண்மை வெள்ளையர் இனிமேல் வாரார் என்பதால்
தெள்ளத் தெளிவே சூளுரை வென்றது விரைவினில் உங்களின் திருமணந் தனைநீர்
நிறைவேற் றிடுதலே நன்றெனக் கொள்வீர்
1449 முல்லையில் திருமணம் நடத்திடும் எண்ணமும்
இல்லையோ அறிகிலேன் அதனையும் கண்டியில் கொண்டிடும் எண்ணமுங் கொண்டிரோ அறியேன் “போடி நீ” என்றுமே புகலுதல் கண்முன் நாடகம் போன்றென் நினைவில் காண்கிறேன்
வெட்கப் படுவதும் வெறுப்பது போன்றே நடிப்பதுந் தெரியுது நாச்சியே அண்ணன்
சம்மதம் பெற்றெடு சிறந்தநல் முடிவை
450
331
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 185
வேறு கடிதமும் படித்தே முடிந்தவுடன்
கற்பனைத் தேரில் நினைவலைகள் துடிதுடித் தவளை அலைக்கழிக்கத்
தனதறைப் பலகணி யூடாய்வான் தடத்தினை நோக்கினள் வெண்மதியாள்
தனைக்கரு மேகப் படாம்விடுத்தே விடுதலை பெற்று வெளிவந்தாள்
விடையொன் றுளத்திலுங் கிடைத்துவே
விடிவொன்று காணும் வரைதனித்து
வாழுவ தென்ற சூளுரைக்கு விடிவொன்றாகக் கண்டிப்போர்
விளைந்தது வெற்றியாய் வெள்ளையர்மண் பிடிப்பதை மறந்து வாணிபத்தில்
பூரண புலனைச் செலுத்துவதால் முடிந்தது சபதம் வெண்ணிலவு
மேகப் போர்வை நீக்கியபோல்
தனக்குள் தானே விவாதித்துத்
தானாய்க் கொண்டாள் முடிவாக எனக்கும் அவர்க்கும் பொதுவிந்த
இருமணங் கலந்த உறவதனால் தனக்கு விரும்பிய வாறுதனித்
தீர்மானி த்தால் தவறெதுவும் நினைக்காப் போழ்தில் வந்துற்றால்
நன்றொன் றல்ல எனளண்ணி
வன்னியர் தமக்கும் கடிதத்தை
வழங்கி அவர்தம் மனமறிதல் உன்னத மாகும் எனநினைக்க
ஒப்புதல் தந்தது உள்மனமே வன்னியர் விக்ரம மன்னருடன்
வரும்உலாக் கண்டாள் நிலவொளியில் தன்னை இருப்பிடந் தவிர்த்தெழுந்தாள்
தலைவனை நாடிச் சென்றனளே
1451
1452
1453
1454
uøtu- vJ --Jøtafuer as/r-Susvið
3
3.
2

வேறு விக்ரம ராஜசிங்க மன்ன னோடு
வன்னிமன்னன் அரண்மனையின் தோட்டத் துள்ளே மிக்கமனம் ஒன்றியபோல் பேசிப் பேசி
மகிழ்ந்துநடை நடந்தார்கள் நிலவின் வீச்சில் பக்கமொன்றிச் சிங்கமிரண் டசைந்து மெள்ளப்
பாதநகர் வுற்றனபோல் கண்டாள் நாச்சி பக்கமண்டிச் சென்றாள்கைக் கடிதத் தோடு
படபடக்கும் நிலைகொள்ளா மனத்தி னோடே
1455 கைகளொரு கடிதத்தைத் தாங்கத் தன்முன்
குருவிச்சி தனைக்கண்ட வன்னி மன்னன் பொய்கையிலே பகலிலன்றோ பூக்கும் வண்ணப் பங்கயமின் றென்நிலவில் பூத்த தென்ற ஐயத்தால் நன்றாக உற்று நோக்க
நாணத்தால் அவள்துவளக் கண்டி மன்னன் செய்வதறி யாது நின்றான் தனித்தோ னாகத்
திங்களுந்தான் வெட்கினளே மேகத் துற்றாள்
1456 தனைநாடித் தான்வந்தாள் குருவி யென்றே
தன்னைத்தன் சுயநிலைக்குக் கொண்ட பின்னர் வினவினனே வன்னியனும் வந்த தென்ன
விபரமெனக் குருவிச்சி தன்னை நோக்கித் தனிமனிதர் தனக்கென்ன இந்தவேளை
தண்மலரின் உறவுமன அமைதி காக்கும் தனித்தாங்கே அரண்மனையாம் தண்ட லைக்குள்
தலைவனுக்காய்த் தாமரையொன் றேங்கு தென்றாள்
1457 கொல்லென்றே நகைத்துவிட்டாள் குருவி சொல்லிக்
கண்டிமன்னன் றனைநோக்கி ஒளிர்ந்த தாங்கே பல்வரிசை கண்டுவன்னிச் சிங்கம் நெஞ்சுள்
பட்டென்றே தெறித்ததே யோர் ஐயம் மீண்டும் புல்நுனியில் தூங்குவெள்ளைப் பணித்து விக்குள் பொதிந்திலங்கும் பகலவன்றன் கிரணமாமோ இல்லையது மினுக்கியவெண் முகத்தில் தோன்றும்
எழிலார்ந்த ஒளியாமோ வேறோ என்றே
1458
3
3.
ஜிண்ணாஜர் டிரிபுத்திண்

Page 186
“அரசியெனக் காகவாங்கே காத்திருப்பாள்
அதைமறந்தேன் இவனாலே” என்ற வாறு சரமானான் அரண்மனையை நோக்கிப் பொய்யாய்ச்
சென்றாங்கோர் மறைவில்தனை ஒளித்துக் கொண்டான் அரசியெனைக் காத்திருப்ப தாகச் சொல்லி
அவனோடு தனித்திருக்க வேண்டு மென்றே துரத்துகின்றாள் இவளென்னை நல்ல பாடம்
தருகின்றேன் எனநெஞ்சுள் சொல்லிக் கொண்டே
1459 “என்னஇந்த வேளையிங்குத் தனியே” என்றான் “ஏன்வரத்தான் கூடாதோ’ என்றாள் கேட்டே "சொன்னதுயார் ஒருநாளும் இல்லாப் பாங்கில்
தனியாக இரவினிலே. . .” எனநி றுத்த “இன்றும்நான் நானாக வரவில் லைத்தான்
என்னைவர வைத்ததிந்தக் கடிதம்” என்றாள் “என்னநான் கடிதமுனக் கெழுதி னேனா”
என்றனனே அதிர்ந்தவனாய் அவளுஞ் சொல்வாள்
1460 "ஏனிந்தப் பதறல்உடல் நடுக்கம் முன்னர்
எழுதியதே இலையாமோ” என்றே கண்கள் தேனையள்ளித் தெளிப்பதுபோல் கடைக்கண் பார்க்கத்
திணறினனே மீண்டுமந்தப் பார்வை யாலே வானிலவு ஒளிப்பூவைச் சொரியும் வேளை
வண்ணமலர்க் காட்டிடையே அவனைக் கொஞ்சம் கூனற்பிறை நுதலழகால் துடிக்கச் செய்யக்
கொண்டனளே வார்த்தைகளால் முரண்டு செய்தாள்
1461 “நீங்களிதை எழுதவில்லை” என்றாள் கேள்வி
நெளி வதுபோல் ஒலிபிறழ “இல்லை” என்றான் "நீங்களிதை எழுதவில்லை என்றேன்” என்றாள் “நானன்றேல் யார்” என்றான் வேகத் தோடே "நீங்களென்ன கேள்வியிலே ஐயப் பாட்டை
நிரப்புவது என்றனளே பொய்யாய்க் கோபம் நீங்களென்னைச் சந்தேகம் கொள்வ தொப்ப
நான்நினைந்தேன் எனும்பொருளைத் தொக்க வைத்தே
1462
υ, αντι (τσου στατου σταδίτσδαμιρ 334

“என்னயிது நீயேதான் நினைந்த வாறாய்
எல்லாமே உனக்கியைப் பேசு கின்றாய் சொன்னாலே தெரியுமதை அனுப்பி வைத்தார்
தனையெனக்கு என்றனனே” வருத்தம் தோயப் புன்னகைத்தாள் சட்டென்றே போட்ட வேடம் பகலவன்கண் பட்டபனி போல வாக “என்றனுக்கு ஊமைச்சி தானே இ.தை
எழுதினளே” என்றாளவன் அதிர்வுற் றானே
1463 “என்ன அதில் எழுதியுள்ளாள் முல்லைத் தீவில் ஏதேனும் பிரச்சினைகள் உண்டு தாமோ” என்றதுமே "ஆமாமாப் பிரச்சி னைகள்
அதிபெரிய வை’ என்றே சொல்ல “நானும் முன்னரதைச் சொன்னேன்நீ மறுத்தாய் முல்லை
முழுவதையும் அவள்பொறுப்பில் வேண்டா மென்றே உன்விருப்பப் படியிங்கே தங்க வைத்தாய்
ஒன்றினவே பிரச்சினைகள்’ என்றிட் டானே
1464 எண்ணுவது போலொன்றும் இல்லை வேறும்
ஏதேதோ எழுதியுள்ளாள் என்ற வாறே கண்பார்வை மண்புதைய நாணத் தாலே
குறுக்கினளே வார்த்தைகளைக் குருவி நாச்சி என்னஇது வார்த்தைதடு மாறு கின்றாய்
எனவிழித்தான் அவளுரைப்பாள் கடிதம் தந்தே என்குற்றம் அல்லஅது உங்கள் தங்கை
எழுதியவிக் கடிதத்தின் குற்ற மென்றாள்
1465 "உன்பார்வை தனக்குமட்டுந் தானென் றேதான்
உறுத்தியுள்ளாள் நானிதனைப் பார்க்க லாமோ” “என்பார்வை உங்கள்தம் பார்வை தானே
ஒருவரன்றோ நாமிருவர் கேள்வி ஏனோ” மென்புருவம் மெள்ளஎழ இமைகள் பூக்க
முகத்தினிலே ஏக்கத்தின் சாயல் மேவத் தன்னைவிழிக் குவைக்குள்ளே பொதித்துக் கொள்ளத்
தவிக்குமவள் நிலைகண்டான் மனத்தால் சோர்ந்தான்
1466
335
ஜிண்ணாவூர் ஷரிபுத்தின்

Page 187
கடிதத்தில் கண்மேய கருத்தில் ஒவ்வோர்
கேள்விக்காய் தோன்றமுகம் வெவ்வே றாக நொடிக்குநொடி மாறியதே பார்வை மண்ணை
நோக்கியதால் குருவிச்சி கண்டா ஸ்ரில்லை அடிமனத்துள் நினைந்தாளப் பேதை தன்போல்
அவருணர்வும் மாறுமென உறுதி கொள்ளத் துடித்தவவள் மென்னிதயம் வேகங் கூட்டித்
தன்செவிக்கே ஒலிகேட்கும் வாறா யம்மா
1467 நோக்கினளோ அவனைஇலை நோக்கு கின்ற
நோக்கமற்றே நிலம்நோக்கும் நோக்கி ருந்தே நோக்கமற நோக்குந்தன் விழிகள் மீட்க
நோக்கமற்றாள் நோக்குவளோ எனவே அன்னான் நோக்கினனே நோக்காத முகத்தில் தோன்றும்
நோக்கத்தின் நோக்குதலை நோக்கா துற்றான் நோக்கினளே சிறுகனைப்பால் நோக்கின வேவிழிகள்
நோக்கங்கள் பகிர்ந்து கொள்ளும் நோக்கி னோடே
1468 நேருக்கு நேர்நின்று பிரச்சி னைகள்
நிறையவுமே பேசியுள்ளார் பாது காப்பின் போர்த்திட்டம் பலவுமவர் வகுத்து முள்ளார்
பேசவிய லாதின்று குருவி நாச்சி பார்வையினை நிலம்புதைத்து வெட்கி நின்றாள்
பார்த்தறியா தொருவன்முன் நிற்றல் போன்றே கூரியதன் விழிகளுக்கும் பார்க்கும் சக்தி
கூடாது போனதெண்ணி வியப்புற் றாளே
1469
வன்னியனின் கனைப்பினிலே தலையைத் தூக்க
விழியொன்ற ஓலைதனைக் கரத்தில் தந்தான் தன்னையறி யாதுகரம் நடுங்கக் கைகள்
தனைவிட்டு வீழ்ந்ததோலைக் குடுவை காலில் மென்விரலில் கசிந்ததுசென் நீரும் காணா
முகம்வலியின் உணர்வுமற்று அவனை நோக்க முன்னிருந்த முகம்மாறி வெறுப்பைக் காட்ட
மனமொடிந்தாள் மீண்டுந்தலை குனிந்திட்டாளே
1470
uao friyya afugar assrsity it 336

3
தோட்டத்தில் கேட்ட ஒலி நிலவொளியில் சிவந்தகண்கள் நெருப்பாய்த் தோன்ற நெஞ்சினிலே கொண்டமன வெறுப்பைக் கொட்டிச் சிலவார்த்தை பேசினனே குருவி யுள்ளம்
துன்பத்தால் கருகிடவே நோக்கி னான்கால் சிலையாக நின்றிருந்தாள் வேத னையும்
தோன்றாதே கசிந்திட்ட குருதி காலை நிலம்பூத்த செம்மலராய் வண்ணங் காட்ட நொந்தமனத் தோடுபதம் பற்றி னானே
1471
கால்பற்றிக் கசிந்திருந்த குருதி போக்கிக்
கைக்குட்டை கொண்டதன்மேற் கட்டு LÓDIGBL தோள்பற்றி உட்கார்நீ என்றே ஒர்கல்
தோட்டத்தின் ஆசனத்தில் அமரச் செய்தான் வேல்போன்ற வார்த்தைகளை வீசி னாலும்
வாஞ்சைமிகு நெஞ்சமிவர்க் கென்றே நிற்கும் கால்களினை வீழ்ந்துபற்றிக் கண்ணீர் மல்கக்
கூறினளே “மன்னியுங்கள்” என்ற வாறே
1472
உடன்பிறந்தாள் எழுதியவக் கடிதம் தன்னை
உங்கள்கையில் தந்தேன்நான் தராது போனால் கடன்பட்டாள் போலும்நான் ஆவேன் உங்கள்
கோபத்தின் வார்த்தையென்னைச் சுடுமே என்றே உடன்தந்தேன் ஏனிதற்குச் சினமுங் கொண்டே
உளம்நோகப் பேசிடத்தான் வேண்டும் என்றாள் திடமாக மீண்டுமவன் சொல்வான் செய்கை
தப்பென்றே தன்மனத்தைத் திறந்திட் டானே
1473
“எழுதியவள் தங்கையென்றாய் ஒப்பு கின்றேன் ஏனதனைப் படித்தபின்னர் தீயி லிட்டுக் கொளுத்தாது விட்டனைநீ" என்றான் நீங்கள்
கொண்டதென்ன உளத்திலென அறியா நானேன் கொளுத்துவனோ மறைப்பதுவுஞ் சரியோ” என்னக்
“கடந்திட்ட காலத்துள் என்னைப் பற்றி எழுந்துள்ள கருத்தென்ன என்னை நீயே
ஏனறியாய்” என்றனனே இன்னுஞ் சொல்வான்
1474
ஜின்னாஆர் டிரிபுத்தீன்

Page 188
இலட்சியங்கள் ஈடேறி விட்ட தென்றே
எண்ணுகின்றாள் தங்கைநீ ஒப்பு வாயா அலட்சியமாய் இருக்கின்றான் பறங்கி என்றே
அகங்கொள்ளல் தப்பன்றோ நாட்டைக் கொள்ளப் பலநூறு கல்தாண்டி இங்கு வந்தான்
பார்த்தநலம் கேட்டறிந்து செல்வதற்கா சிலகாலம் பொறுத்தாலும் வாய்ப்புக் கூட்டிச்
சட்டென்றே தாக்குவானே சூழ்ச்சிக் காரன்
1475 வாணிபமே காரணமாய்க் கொண்டு வந்தோன் வாணிபத்தில் ஈடுபாடு கொண்டான் என்று வீணாகும் நம்புவது தமிழ கத்தில்
வரிசெலுத்தச் சொல்லுகின்றான் எங்கள் நாடோ காணுதற்குக் கடுகளவு தானென் றாலும்
காரமுள்ள நாடெனநாம் காட்டு கின்றோம் பூணுகின்றான் அமைதியெனக் கொள்ளல் வேண்டா
பதுங்குவது புலிபாய வேறொன் றில்லை
1476 “கடிதமொன்று வந்ததென்று நாட்டுப் பற்றைக்
கழற்றிப்புறம் எறிந்ததுபோல் தானே செய்கை நடக்கிறது இங்கே’யென் றொருபு றத்தை
நோக்கியவா றெவரெவர்க்கோ சொல்வ தைப்போல் எடுத்தெறிந்தே தொடர்ந்தான்தன் பேச்சை நெஞ்சுள் எரிநெருப்பைக் கொட்டியபோல் குருவி நாச்சி அடுத்துமொழி பயின்றாளே அமைதி போக்கி
"அந்தளவு வந்ததுவோ ஐயம்” என்றே
1477 “பின்னென்ன கணவன்றன் பொறுப்பை எண்ணிப்
பக்கபலம் செய்வதுவே மனைவி செய்யும் தன்னிகரே இல்லாத சேவை அ.தை
தெரிந்துமறந் திருந்தால்தான் ஐயம்” என்றான் சென்னியிலே இருப்பெடுத்தே அடித்தாற் போன்று
சொன்னாளே” கணவனெனும் பாக்கி யத்தைச் சொன்னாலுங் கொள்வதில்லை மனைவி யென்னும்
தகுதியையும் தருவதில்லை” என்னும் வாறாய்
1478
uarajataat arz5uub 338

“எப்படித்தான் வந்ததிந்த உறவும்” என்றாள்
இடிந்துதலை மீதேவான் வீழ்ந்த தொப்பச் செப்பவொரு வார்த்தையின்றித் திணறும் போது
“சபாஷ்சவுக்கால் அடித்ததுபோல் கேள்வி யொன்றை அப்படித்தான் கேட்டிடுதல் வேண்டும்” என்றே அருகிருந்த பூம்பற்றை தனிலி ருந்தே தப்பிதத்தைச் பண்ணிய தோர் உணர்வு மில்லாச்
சிரிப்போடு ராஜசிங்கன் வெளியில் வந்தான்
1479 “இங்கேயா நீயிருந்தாய்” என்றே வன்னி
இயம்பிடவே முகஞ்சிவக்கக் கண்டி மன்னன் “எங்கேநான் போவதிந்தப் புவியி டத்தே
எனதுதங்கை எனும்மானைத் தனிக்க விட்டே பொங்குமுன்றன் சினமடக்குவாயென் மீதும்
பொரிந்துதள்ள எண்ணாதே’ என்ற வாறு தங்களிரு நெஞ்சுமொன்றாய்ப் பொருந்தச் செய்தான் தங்காளும் வெட்கித்தலை குனிந்திட் டாளே
1480 “ஒளிந்திருந்து பார்ப்பதெல்லாம் மன்ன ருக்கோ ஒவ்வாத செயலன்றோ” என்றான் வன்னி “ஒளிந்ததொன்றுந் தப்பில்லை ஒற்ற ருக்காய்
உவந்தசெயல் உன்மனதை அறிய" நீ யேன் இழந்தனையுன் முடியதனை எப்போ திட்தை
ஏற்றனைநீ ஒற்றனெனுந் தொழிலை” என்றே எழுந்ததொரு கேள்வி மீண்டும்” மன்ன ருக்கோ இதுவொன்றும் புதிதில்லை” என்றிட் டானே
1481 "ராணியென்னைத் தேடுவதாய்ப் பொய்யு ரைத்தே
எனைத்துரத்த லாமென்றால் வன்னி நாட்டின் ராணியைநான் விடுவேனா உண்மை காண
எனையொளித்துக் கொண்டேன்நான் அன்பு நண்பா தேராது போயிருந்தேன் உம்மைப் பற்றித்
தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக இதனைக் கொண்டேன் சீரான மனத்துடையோர் நீங்கள் சற்றுந்
தப்பிழைக்க மாட்டீரென் துணிவால்” என்றான்
1482
3
ஜிண்ணாஜர் 2றிபுத்தீன்

Page 189
தப்பிழைத்தேன் என்றால்நீ அதனைப் பற்றிச்
சிறிதேனுங் கவலையும்நான் கொள்ளேன் என்மேல் ஒப்பில்லா நட்போடும் உடனி ருந்தே
உதவுமுங்கள் சுகதுக்கம் தன்னில் நானும் எப்படித்தான் பங்கேற்கா திருப்பேன் நீங்கள்
இல்லறத்தில் ஒன்றாகி என்போல் வாழ ஒப்பாதே இருப்பதனைக் கண்டுங் காணா
தோய்ந்திருப்ப தெவ்வகையில் நியாயம் என்றான்
1483 “ஏனறியா துற்றாய்நீ ராஜ சிங்கா
எனக்குமவள் தனக்குமுள்ள உறவை நெஞ்சால் தேனோடு பால்கலந்த பாங்கா யொன்றித்
தானுள்ளோம் இலட்சியத்தால் ஒன்றே யானோம்” “ஏனாமோ உடலாலும் ஒன்றிப் போனால்
இருக்கின்ற இடரென்ன ஏற்ப தாலே தேனாகும் வாழ்வோடும் இலட்சி யங்கள்
தொடருமதில் ஐயமுமேன்” எனப்ப கர்ந்தான்
1484 பேச்சிடையிற் புகாததனைத் தவிர்த்துக் கொண்டே புறத்தொதுங்கி நின்றாள்தன் நிலையு ணர்ந்தே ஆச்சர்யம் உற்றான்முன் கண்டி மன்னன்
அறியாதே ஒளிந்திருந்தே வந்த போது நாச்சியைத்தன் உடன்பிறப்பாய் எண்ணி மன்னன் நன்றியொடு பேசியதோ டவளின் வாழ்வில் பாய்ச்சநினைந் தானொளியை எனவ றிந்தே பூரித்துப் போனாளே புலன்கொ டுத்தாள்
1485 “என்னஇது எல்லோரும் ஒன்றாய்க் கூடி
என்கழுத்தில் குறிவைத்தீர் என்றன் தங்கை முன்தொடர்ந்தே அத்தனையும் எனக்கு மாறாய் முகிழ்க்கிறதே’ என்றானே கண்டி மன்னன் “உன்கழுத்தைப் பற்றியொன்றும் கவலை இல்லை உனைநம்பிக் காத்திருக்கும் எனது தங்கை தன்கழுத்தில் ஏறுகின்ற தாலி பற்றித்
தானுரைத்தேன் நானென்’றான் புன்ன கைத்தே
uørv-frg-veirafuaí ösr-justið 340

எல்லாமே உங்களுக்கு விளையாட் டாக
இருக்கிறதே யார் கணித்தார் ஆரூ டம்தான் பொல்லாத வெள்ளையர்பின் வாரா ரென்று
பெற்றுவிட்ட வெற்றியினால் தடுமா றாதீர் செல்லாது இங்கவர்கள் தரிப்ப தெல்லாம்
தம்முடைமை யாய்எங்கள் நாட்டைக் கொள்ள இல்லாதே ஒழிந்தார்கள் என்று மட்டும்
எள்ளளவும் நம்பிடுதல் கூடா தென்றான்
1487 உனக்கிவள்மேல் இருக்கின்ற அனுதா பத்தில்
உடன்பிறந்தாள் கொண்டுள்ள பாசம் தன்னில் நனையளவுங் குறைவில்லை எனதாம் அன்பு
நானிவளை உயிராக நேசிக் கின்றேன் வினையகன்று போனதினி வெள்ளை யர்கள் விரல்கூடப் படாதிந்த மண்ணி லென்னுந் தினம்மட்டும் உடல்சேரோம் என்னுங் கொள்கை
தனைக்கொண்டோம் ஏன்குருவி மறந்திட் டாளோ
1488 மனங்கொண்ட சூளுரையை மறந்தா ளென்றே மிகவருந்துந் தோரணையில் பேசக் கேட்டு மனங்குமைந்தே கால்பற்றிப் பணிந்தே கேட்பாள்
“மன்னித்துக் கொள்வீர்கள்” என்றே வன்னி சினந்தணிந்தே மனக்கவலும் குறையத் தோளைத்
தாங்கியேமுன் நிறுத்தியிதில் “மன்னிப் பென்ன உனைநீயே அறிந்துகொண்டால் போதும் உன்றன்
இளமைக்குப் பணிந்துவிட்டாய்” எனவு ரைத்தான்
1489 சொன்னமொழி கேட்டுராஜ சிங்கன் சொல்வான்
"துணைவேண்டாக் கிழவன்நீ உணர்ச்சி யற்ற தன்மைகொண்ட மரமாநி” என்றே சற்றுத்
தடித்த மொழி கொண்டவனின் நெஞ்சைச் சாட “என்னஎனைச் செயச்சொல்வாய் விக்ர மாநீ”
என்றதுமே "வாவழிக்கே என்றன் ஆசை உன்னைநான் நாச்சியோடு மணக்கோ லத்தில்
ஒன்றிடக்கண் காணவேண்டும் அதைச்செய்” என்றான்
1490
4.
ஜிண்ணாஜர் டிரிபுத்தின்

Page 190
நீண்டநெடு யோசனைக்குப் பின்ன மைதி
நீடித்தல் தவிர்த்தவனாய்" என்றன் நண்பன் வேண்டுதலை நிறைவேற்ற மனமுங் கொண்டேன்
விரும்புவதும் ஒன்றுண்டு மணந்தால் கூடத் தீண்டோம்நாம் உடலொன்றோம் லட்சி யங்கள்
தீருமட்டும்” என்றனனே அதுவே போதும் வேண்டுவதும் அதுவேதான் நாளை தொட்டு
வழிவகைகள் தொடங்குகின்றேன் மணத்திற்கொன்றான்
1491 மூவருமே மனம்மகிழ்ந்தார் ராஜ சிங்கன்
மனம்விட்டு நன்றிசொன்னான் விருப்பங் கண்டு பூவிரிந்த தொப்பமுகம் மலர்ந்தாள் நாச்சி
புன்னகைத்தான் வன்னியனும் அப்போ தாங்கே தாவிவந்த முரசொலியைக் கேட்டுச் சற்றுத்
தயங்கினரே காரணத்தை அறிய என்றும் மேவுகின்ற ஆபத்தைச் சொல்லா நிற்க
முழங்குமது எனவறிவார் திகைத்தே நின்றார்
492 இன்பம் இமைப் பொழுதே ஓங்கியே ஒலித்திடும் ஒலிகேட்டு மூவரும்
ஒன்றியே அரண்ம னைக்குத் தாங்கிய வினாமனத் துறுத்திடச் சென்றனர்
தூதுவன் ஓடி வந்தே வேங்கைகள் இரண்டொடும் விபரங்கள் சொல்லிட
வளைந்துதன் தலைகு னித்தே தாங்கிய சேதியைச் சொல்லினன் மன்னர்கள்
சினத்தினால் வெகுண்டெ முந்தார்
1493 “வெள்ளையர் படைகூட்டி வளைத்தெமை மடக்கிட
வருவதாய் ஒற்றர் சொன்னார் வெள்ளையர் படையொன்று முல்லைக்குஞ் சென்றவோர்
விபரமும் அவரு ரைத்தார் கொள்ளையாம் அவர்படை முன்போல அன்றென்றும்
கூறினர் காண ஆற்றின் வெள்ளம்போல் இருந்ததாய் வந்தவள் கூறினர்
விபரங்கள் அ.தே’ என்றான்
494
uair larger faíraífuair ard/reiðutuib 342

சேதியைக் கேட்டதும் சினத்துடல் பதறிடச்
சொல்லுவான் வன்னி மன்னன் போதிய அரனுடன் செய்யுங்கள் படைகொண்டு
பகைவரைத் தடுக்க வென்றே ஒதிய ஆணையை உடன்செயற் படுத்திட
உடன்பட்டார் முல்லை வீரர் தீதது வென்றனன் விக்ரமன் தடுத்தனன்
தக்கதோர் கருத்து ரைத்தான்
1495 வசப்படில் ஒன்றவர் கையினில் மற்றொன்று
வசப்படல் எளிதே அ.தால் வசப்படு என்சொல்லுக் குன்படை யோடுநீ
வேகமாய் முல்லை செல்வாய் வசப்படு முன்னுடன் முல்லையை உன்வீரர் வளைத்தெல்லை காக்க வேண்டும் வசப்படா வாறுநான் கண்டியுள் வெள்ளையர்
வாராதுமே காப்பேன் என்றான்
1496 தோற்றோடிப் போனவர் திரும்பியும் வருவதைத்
தேர்ந்துதான் வைத்தி ருந்தோம் தோற்றவர் இத்தனை விரைவுகொள் வாரெனத்
தேராதும் நாமி ருந்தோம் தோற்றாலும் படைபலம் பெருக்கிட அன்னியன்
திறனைநாம் மதித்தோ மில்லை தோற்காதே இனியெம்மை நாம்காத்து வென்றிடத்
துணிவோமென் றானே வன்னி
1497 “கலகத்தின் சாயலுன் கண்களில் தோன்றுதேன்’
கேட்டணன் கண்டி மன்னன் “கலக்கமொன் றில்லைநான் கண்டியைக் காத்திடும்
கடமையை மறுத்தே என்னை விலக்குமுன் செயல்கண்டு தான்சிறு தயக்கமாம்
வேறிலை” எனவு ரைக்க இலக்கவர் இரண்டுமென் றிருப்பதால் காலைநீ
இங்கிருந் தகல்வாய் என்றான்
1498
ஜின்னாஷர் ஷரீபுத்தீன்

Page 191
காலையென் றேன்நாங்கள் காலத்தை யோட்டுவோம்
கடிதினில் இந்த நொடியே வேலையொன் றிங்கிலாப் போதினில் புறப்படல்
வாய்ப்பென வன்னி சொல்ல வேலையொன் றுள்ளதே வாக்குநீ தந்தனை
விவாகமொன் றொன்றும் இன்றே நாலுபேர் இருந்ததை நடத்துவோம் யாருமே
நோக்கிடா வாறே என்றான்
“விக்ரமா! என்னயில் விபரீத விளையாட்டு
வன்னியைக் கண்டி மண்ணை அக்ரமக் காரர்கள் அழித்திட முயல்கையில்
அவசியம் இதற்கும் என்னே தக்கதிவ் வேளையில் தருக்கரை அடக்கிமண்
தனைக்காத்தல் ஒன்று தானே எக்கார ணங்கொண்டும் இக்கட்டில் திருமணம்
இயற்றுவ தில்லை” என்றான்
பண்டார வன்னியன் பிடிவாதம் கண்டுமே
பக்கத்தில் தனித்த ழைத்தே கண்டியின் தலைவனுங் கூறுவான் யுத்தத்தில்
கண்டவா றுயிர்கள் மாயும் கொண்டனர் வெள்ளையர் நம்பலம் அறிந்துமே
கடும்பலத் தோடு வருவார் அண்டுமோர் பகுதிக்கு அழிவதை இன்றுநாம்
அறியாது போதும் என்றே
யுத்தத்தில் நாங்களும் அழிந்திட வாய்ப்புண்டு
யாரெனக் கூற வியலாச் சத்தியம் சிலபோது தோற்றிடல் கூடுமே
தயைகூர்ந்து அதற்கு முன்னர் சித்தத்தில் கொள்ளென்றன் ஆசையை நிறைவுசெய்
தவிர்த்திடத் துணிந்தி டாதே எத்தனைக் காலந்தான் இருப்பதும் இவ்வாறே
என்றனன் வன்னி கேட்பான்
1499
1500
150
1502
uairt.(rgeuair a fuair ab freiðurb
344

"திருமணக் கோலத்தில் தோன்றிட வேண்டும்நாம்
செய்கிறேன் திருப்தி தானே’ “சரியிலை நீசொல்வ தத்தோடு முடியுமோ
தெய்வமாய் உனைம தித்தே உருக்கிடும் உளத்தாசை உணராது பேசுதல்
உகந்ததோ இல்லை நண்பா அரசிக்கு அனைத்துமே அவள்சொல்லத் தெரியும் நீ
அகலினை ஏற்று” என்றான்
1503 நண்பனின் எண்ணத்தை நாச்சியின் ஆவலை
நிறைவேற்ற முடிவு கொண்டே நண்பனும் மனைவியும் நாச்சியும் தானுமாய்
நால்வரே யாங்கி ருக்க வெண்முத்து மாலையைச் சங்குக் கழுத்தினை
வளைத்திட வன்னி சூட கண்நிலம் பார்த்திடக் குருவிச்சி மாலையைக்
கணவனாய்க் கழுத்தி லிட்டாள்
1504 தனியறை யுள்ளொரு திருமண வைபவம்
தலைவியைத் தலைவன் நோக்கக் கனிவோடு அவளுந்தன் கண்களால் கணவனைக்
கருத்தோடு பார்க்க அவனும் நினைவெலாங் குளிர்ந்திட நாடினான் அவளண்டை
நெருங்கியவள் உடல ணைத்தான் மனங்களின் ஒருமைபோல் உடல்களும் ஒன்றின
மறுநொடி திகைத்தெ ழுந்தார்
1505 தட்டிய கதவின்றாழ் தானாகத் திறந்திடத்
துயர் கொண்ட முகத்தி னோடே தட்டியோன் விக்ரமன் தானேமுன் வந்தனன்
துயர் கொண்ட சேதி சொன்னான் வெட்டியே உயிர்துறந் திட்டனர் ஊமைச்சி
வெள்ளையர் வாளி னாலே திட்டமிட் டவர்முல்லை சென்றதாய் அறிகிறேன்
சோகமே எனவு ரைத்தான்
1506
345
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 192
பகைவர் கையில் பனங்காமம் தங்கையின் உயிர்பி ரிந்த
சோகத்தைத் தாங்க வொண்ணாப் பொங்குதன் மனத்தை வன்னிப் பெருவீரன் அடக்கி னாலும் கங்கையாய்க் கொண்டாள் தன்னிர் கண்களைக் குருவி நாச்சி எங்ங்ணம் பொறுப்பாள் அன்னாள் இழப்பினை நெருக்கத் தாலே
காக்கையால் ஒருத்தி சாகக்
களத்தினில் ஒருத்தி மாளத் தேக்கிய சோக மெல்லாம்
தனையாள விடாதே யென்றான் நோக்கினான் சேதி சொன்ன
நண்பனை நிமிர்ந்தே யார்தான் தாக்கினார் பனங்கா மத்தைச்
சொல்லென்றான் மன்னன் சொல்வான்
மும்முனைத் தாக்கு தல்கள்
மேற்கொண்டார் வெள்ளை யர்கள் அம்மூன்றில் ஒன்று மன்னார்
அணிமற்ற ஒன்று யாழின் வம்மிடு படையாம் மற்றும்
வருவதோ திரும லையில் சும்மைகொண் டிருக்கும் வெள்ளைச்
சனிகளாம் என்றிட் டானே
யாழ்ப்பாணத் திருந்து வந்த
எதிரிகள் படைதான் சென்று பாழ்படு கொடுமை செய்தார்
பனங்காமத் துன்றன் தங்கை வாழ்வையும் முடித்தார் முல்லை
வளைத்திடப் படையோ டாங்கே சூழ்வதா மிருப டைகள்
திக்கிரண் டிருந்தாம் என்றான்
1507
1508
509
υιαίτι τητα, στAσίδυμ στα ταθμιαί)

யார்முல்லைத் தீவைச் சுற்றும்
எதிரிகள் படையைத் தாங்கும் போரணி முதலாம் என்ன
“வொண்ரி பேர்க் மன்னார்ச் சேனைப் போரணித் தலைவன் மற்றும் புறப்பட்ட திரும லையின் பேரணி “எட்வாட் மேர்ஜ்ஜி’ன்
படைமுதன் மையிலே என்றார்
1511 “வென்ரிபேர்க்” என்றான் தன்வாய்
வெறுப்பினை உமிழ்ந்தே சற்றும் நன்றியே இல்லாக் கோழை
நடுவழி தன்னில் என்னோர் கொன்றிட முயன்ற போது
காத்துயிர்ப் பிச்சை தந்தேன் இன்றவன் எனது மண்ணை
எதிர்த்துமே வருகின் றானோ?
1512 ஆத்திரம் வெறுப்பெல் லாமோ
அணையாத கான்தீ போலக் கோத்துளத் தெரிய நெஞ்சிற்
கொண்டபோர் வெறியும் விஞ்சப் பார்த்தனன் நாச்சி யாரைப்
புறப்படு போர் முனைக்கு நேத்திரங் கசிதற் கி.து
நேரமே இல்லை என்றான்
1513 "பனங்காமஞ் செல்முன் ஈமப்
பணிதனை முடித்துப் பின்னர் எனைவந்து முல்லை யிற்காண்
இங்கிருந் துடன்நான் முல்லை தனையடைந் திடுவேன்’ என்னத்
"தங்கையின் சடங்கில் நீங்கள் எனைமட்டும் அனுப்புஞ் செய்கை
ஏற்றதா?’ என்றாள் கேட்டே
1514
347
ஜிண்ணாவூர் ஷரிபுத்தீன்

Page 193
போருக்குத் தலைமை தாங்கும்
படைத்தள கர்த்தன் நான்என் பேருக்கும் ஏற்ற வாறு
புறப்படும் வார்த்தை எல்லாம் போராணை உடன்நீ சென்று
பனங்காமப் பணிகள் செய்து சேரெனை எதிர்க்கும் பேரைச்
சிதறடி உடன்செல் என்றான்
வெளிப்படும் ஆணை கேட்டு
வறந்தது சோகம் வீரம் தொழிற்பட உடலம் ஆண்மை தோற்றது நெஞ்சி ருப்பாய் இழந்தது மென்மை வன்மை ஏற்றது எதற்கும் அஞ்சா அழுத்தமும் மனத்தில் தோன்ற ஆயத்தம் ஆகி னாளே
"உன்னுடன் நானி ருக்கும்
உணர்வினைத் தோற்று விக்கும் என்னுடை வாளை ஏந்து
இதோ”வெனக் கைய வித்தான் தன்கரங் கொண்ட வாளைத்
தலைவன்முன் முத்த மிட்டே தன்னிடை சேர்த்தாள் வன்னி
தனையணைத் திட்டாள் போன்றே
வன்னியன் பேச்சும் வீர
வனிதையின் செயலுங் கண்டே மன்னனும் மகிழ்ந்தான் வீர
மறவர்கள் இவராம் என்றே வன்னியின் அருகில் வந்த
விக்ரமன் நெஞ்ச ணைத்தே சொன்னான்’ முல்லை நோக்கி
வருங்கண்டிப் படையும் என்றே
1515
1516
1517
1518
பண்டாரவண்ணியர் காவியம்
348

வேண்டாமவ் வாறு செய்ய
வெள்ளையர் முல்லைத் தீவை வென்றிட மூன்று திக்கில்
வருகின்றார் அவ்வா றாயின் கண்டியை விடார்கள் அன்னார் குறியிங்குத் தானே என்றே என்னுயிர் இருந்தால் நானும்
இணைகுவேன் உன்னோ டென்றான்
1519 பொழுதெழுந் துலகை ஆளப்
போகுமுன் புலர்வை நோக்கித் தொழுதன மலைகள் வானைத் தொட்டிடு வாறி ருந்தே பழுதிலா உறவின் நேயப்
பாங்கொடு நெஞ்சம் ஒன்றத் தழுவியே விடையுங் கொண்டார்
தமிழ்மன்னர் இருவ ரன்றே
1520 தனித்தனி யாயி ரண்டு
தலைமையில் படைகள் ஆங்கே அணிதிரண் டகன்ற தேமண்
அதிர்ந்திட வடக்கை நோக்கிப் பனங்காமத் திசையில் நாச்சி
பறந்தனள் முல்லைத் தீவைத் தனதுசெல் திசையாய் வன்னி
தொடர்ந்தனன் காற்றை வென்றான்
1521 பனங்காமம் அடைந்தாள் ஆங்கே பறந்திடும் ஆங்கி லேயர் தனிக்கொடி கண்டாள் நெஞ்சில்
சினங்கொண்டாள் சற்றும் அன்னாள் நினைந்திடா வாறு யாரும்
“நில்" லென்று சொல்லா வாறே தனைவர வேற்றல் கண்டே
திகைத்தனள் தொடர்ந்திட் டாளே
1522
349
ஜிண்ணாஜர் ஷரீபுத்தின்

Page 194
இறந்தவள் தனக்குச் செய்யும்
இறுதிக்கெள ரவமாய் இந்த முறைமையோ அன்றி என்னை
மதித்துமோ என்றே முற்றும் அறிந்திடா வாறு செல்ல
அணிவகுத் திருந்த வீரர் முறைமையாய் வணக்கம் செய்தார் மிகவியப் படைந்திட் டாளே
கோட்டைக்குள் நுழைய முன்னோர் காவலர் தலைவன் வந்தே கேட்டனன் "தணிக” என்றே
குருவிச்சி தரித்தாள் ஆங்கே கேட்காது மலர்த்தட் டொன்றை
கொணர்ந்தனர் “எதற்காம்” என்ன கோட்டைக்குள் உறங்கும் நாச்சிக்
களிக்கும்கெள ரவத்திற் கென்றார்
மலர்க்கரம் மலர்க ளஸ்ளி
மிகுசோகம் மனத்தி லாடச் சிலர்துணை யாகக் கொண்டே
சென்றனள் மாளி கைக்குள் அலைந்தனர் சுற்றி ஈற்றில்
அரண்மனை வெளிப்பு றத்தே நிலத்தினைக் காட்டி னாரே
நீள்துயில் இங்காம் என்றே
உடலத்தை மாளிகைக்குள்
உரியநல் வண்ணம் வைத்த இடத்தினைக் காண வென்னும்
எண்ணத்தில் நுழைந்த நாச்சி துடித்தனள் மனத்தால் மண்ணைத்
தோண்டியோர் அனாதை போன்றே கிடத்திமண் மூடி யுள்ள
கோலத்தைக் கண்ட போதே
1523
1524
1525
526
பகர்டாரவன்னியன் காவியம்
350

பகலென்ற போதும் ஆங்குப் பற்றிய அகல்வி ளக்குப் பகர்ந்திடுஞ் சுடரில் நாச்சி
பார்த்தனள் ஊமைச் சீயை அகங்கையுள் அள்ளி வந்த
அனைத்துவெண் மலர்க ளையும் உகுத்தினள் சமாதி யின்மேல்
ஒருக்கினள் கரங்கள் கோர்த்தாள்
1527 கல்லென மனத்தை ஆக்கிக்
கொண்டாலும் கண்ணி மைக்குள் நில்லாதே ஒழித்துக் கன்னம்
நீண்டன விழிநீர் நெஞ்சுள் சொல்லாது புகுந்த சோகம்
சட்டென்றே அடங்க மீண்டுங் கல்லாக உள்ளம் நாச்சி
கூடத்துள் நுழைந்திட் டாளே
1528 இங்குதான் உயிரை விட்டார்
ஊமைச்சி நாச்சி நேரில் எங்களின் வீரர் தம்மை
எதிர்த்துவாட் கிரையு மானார் செங்கறை நாச்சி யாரின்
செந்நீரே” சுவரைக் காட்டி அங்குடன் இருந்த வீரன்
அறைந்தனன் அருகிற் சென்றாள்
1529 காய்ந்துறைந் திருந்த செந்நீர்
கண்டதும் அதையொ டித்தே தேய்த்தனள் நெற்றி மீது
திலகமாய் ஒளிர நெஞ்சுட் பாய்ந்ததோர் உணர்வி ரத்தம்
பட்டதால் மின்னல் போன்றே தோய்ந்தது நரம்பு தோறும்
துணிவினைச் சூட்டிற் றன்றோ
1530
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 195
கூடத்தில் அமர்க வென்றே
காட்டினான் இருக்கை யொன்றைக் கூடிய விரைவில் உண்டி
கொணருவர் என்றும் சொல்ல நாடிட வில்லை ய..தை
நன்றியென் றுரைக்கச் சொல்வான் நாடிடாப் போதும் இ.து
நிரந்தர விருந்தென் றானே
நிரந்தர விருந்தி னர்தான்
நீங்களென் றுரைக்கச் சொல்லின் பொருளறிந் தெடுத்தாள் வாளைப் பறங்கியர் கொக்க ரித்தார் பொருந்திய தொலிகள் வாளின்
பொருதலும் வெடியும் சேர்ந்தே திரும்பினாள் நாச்சி யாங்கே
தோன்றினான் தலைவன் போன்றோன்
பயப்பட வொன்று மில்லை
போரல்ல உங்கள் வீரர் வயப்பட்டார் எம்மி டத்தே
வலைகொண்ட சிறுமீன் போன்றே துயருற வேண்டாம் இன்னும்
சிறுபொழு துள்ளே கைகால் அயர்ந்திட அழிவார் அற்ப
ஆயுளைக் கொண்டோர் என்றான்
”அடிமைநி” என்றான் அந்த
ஆங்கிலன் ஆண்மை யற்றோன் துடியிடைப் பெண்ணைச் சுற்றிச்
சேர்ந்தனன் மற்றோர் வாளை எடுத்தனள் உயர்த்தி முத்தம் ஈந்தனள் பிடிக்கு மற்ற நொடியினுள் சுழன்றாள் அந்த
நிகழ்வினை என்னென் பாரோ
1531
1532
1533
uart-frg-Jørafu at æ5/r-SuNib

திறனை வென்ற திறன் குருவிச்சி நாச்சியாரின் தலைமை கொண்டு
கடும்யுத்தம் பனங்காமம் நடக்கும் போதே இருபுறத்தில் மன்னாரில் வென்றி பேர்க்கை
ஒன்றியொரு பெரும்படையும் மறுபு றத்தே திருமலையில் 'எட்வர்ட்மேர்ஜ் முதன்மை யாகத்
தொடர்ந்துவரும் படையிரண்டும் முல்லை நோக்கி வருவதறிந் திட்டானே வன்னி மன்னன்
வழியிலவர் தனைமடக்கச் சித்தங் கொண்டான்
1535 காடுவழி கடந்தேதான் முல்லைத் தீவைக்
கடுகவெள்ளைப் பேருக்கு இயலும் அந்தக் காட்டினிடை முன்சென்று பதுங்கிக் கொண்டால்
கோட்டைதனைக் காப்பதொடு பறங்கிப் பேரை நாட்டங்கள் கைகூடா தொதுக்கி ஓட்ட
நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றே போட்டனனோர் திட்டமதில் வெற்றி கண்டும்
பறங்கியர்தம் திறமையினால் முறித்திட் டாரே
1536 தற்காப்புப் படையொன்றை முன்ந டாத்தித்
தளபதியாய் ஜான்ஸ்டன் முன் வந்தார் கண்டோர் முற்றுமவர் படையென்றே எண்ணித் தங்கள்
மறைவிடத்தைத் தவிர்த்துப்புலி போன்றே பாய்ந்தார் சற்றுமெதிர் பார்க்காத தாக்கு தற்குத்
தலைகொடுக்க முடியாத பறங்கி வீரர் சொற்பபொழு துள்ளேதம் உடலம் வீழ்த்தத் தப்பிச்சிலர் தலைதெறிக்க ஓடி னாரே
1537 வன்னியனின் கவனத்தைத் திசைதி ருப்ப
'வொன்றிபேர்க் கும்’ ‘எட்வர்ட்மேர்ஜ் தாமும் ஒன்றிப் பின்னியவவ் வலையுள்ளே மாட்டிக் கொண்ட
போதினிலும் நெஞ்சுரத்தை இழக்கா வீரன் தன்மானங் கொண்டதமிழ்ப் போர்வீ ரர்காள்
தமிழுக்காய் இனத்துக்காய் தமிழ்மண் ணுக்காய் இன்னுயிரை இழப்பதற்கும் அஞ்சா தீர்கள்
எனஅரிபோல் கர்ஜித்தான் முந்தி நின்றான்
1538
3
3.
விண்ணாடிர் டிரிபுத்தின்

Page 196
தலைவன்குரல் போர்முரசம் போலும் காதுள்
சென்றடையத் தசைகள்முறுக் கேறி வீரர் அலையலையாய் வந்துற்றார் பறங்கிப் பேரை
அரிந்தார்கள் அவர்புறமும் அழிவு கொண்டார் நிலையுணர்ந்த ‘வொன்றிபேர்க் குண்டைப் பீய்ச்சும்
நாசகாரப் பீரங்கி தனையி யக்கக் கலையாத புகைமண்டிக் காடெல் லாமே
கண்மறைக்கும் வாறாகப் பரவிற் றன்றோ
காடுகள மாகிஇரு புறத்தும் எண்ணக்
கொடுக்காத பேரழிவாய்ப் பிணங்கள் விஞ்ச தேடினரே வன்னியனின் பிணத்தை ஆங்கு
தொகையறியார் வீரசொர்க்கம் எஞ்சி யோரைக் கூடாத வெற்றியினால் கண்ட பேருள்
கூட்டிமீண்டும் போர்தொடுக்கும் எண்ணத் தோடே காடுவிட்டு அகன்றிருந்தான் வன்னி மன்னன்
கோட்டையுள்ள புறமன்றி மறுபு றத்தே
நினைவுக் கல் ஆருக்கும் அடங்காதான் அடங்காப் பற்றின்
அரசனென ஆனவன்றன் மானங் காக்கப் போருக்கும் அஞ்சாதான் புலிபோல் வீரன்
புகழ்பூத்த தமிழ்மண்ணின் சொந்தக் காரன் நேருக்கு நேர்நின்று பொருதி னாலும்
நேர்கொள்ள முடியாத குண்டி னாலே போரொடுங்கு முன்னாலே பறந்திட் டான்தான் பெற்றவெற்றி தனில்மகுடம் ஈதாம் என்றே
கொக்கரித்தான் 'வொன்றிபேர்க்கு வெற்றி கண்டே
கூறிடுவான் தப்பியெங்கோ ஓடிட் டாலும் தக்கவொரு சமயத்தைப் பார்த்தே எம்மேல்
தாவிடலாம் புலிபதுங்கல் தாவு தற்கே மிக்கபெரும் ஆயுதங்கள் இருந்தும் அந்த
மாவீரன் றனைப்பிடிக்க இயலா துற்றோம் சக்திமிக்கோர் உணர்ச்சிகளால் உந்தப் பட்டோர்
சம்பளத்துக் காய்வருவோர் தமைப்போ லற்றே
1539
1540
1541
uariru-magaz gaika fugatik 275 mras5uguio

வெற்றியொடு விசனமுங்கொண் டுரைத்தல் கண்டு
வாய்பேசா திருந்த'எட்வர்ட் மேட்ஜும் சொல்வான் “முற்றுமவர் தமக்கிருக்க வேண்டா தொன்று
முன்நிற்குந் தலைவர்நமக் கிருத்தல் போன்றே உற்றவுணர் வோடாவல் ஆர்வ மெல்லாம்
உயிர்கொடுத்தும் தம்நாட்டைக் காக்க எண்ணம் பொற்புடையார் தமக்கன்றி நாடு கொள்ளப்
பொருளுக்காய்ப் போர்புரியும் இவர்க்கா மல்ல
1543 ஊக்கமொடும் உறுதியும்நெஞ் சோர்மை கொண்டு
உயிர்கொடுத்தும் பிறந்தமண்ணின் உரிமை மானங் காக்கவெண்ணும் பேரொன்றுக்(கு) அட்டி சொல்லக்
காசுக்காய்ப் போர்செய்யும் நூறு பேரைத் தீர்க்கவேண்டி யுளதேயென் றுரைப்பான் கேட்டுத்
தனதுஎண்ணம் அதுவேதான் என்ற "பேர்க்கும் “நோக்கமென்ன இனிநாங்கள் வன்னி யன்னை
நிற்குமிடங் கண்டறிந்து கொளலோ” வென்றான்
1544 இன்றுள்ள நிலையிலதை எண்ணுதற்கும்
இடமில்லை பலநூறு பேரை வன்னி கொன்றுவிட்டுத் தான்தப்பிச் சென்றான் தானும்
கொள்ளையுயிர் தமையிழந்தான் கூடச் சென்றோர் எண்ணிக்கை சிறிதெனினும் வீரம் மிக்கோர்
இப்போதோ அவனில்லா முல்லைதீவைத் தன்வயமாய்க் கொள்வதுவே சரியாம் என்றான்
சேர்ந்தொப்பி னான்'பேர்க்கும் உடன்பட் டாரே
1545 "திட்டமென்ன வாயிருக்கும் வன்னி யன்றம்’
தெளிவற்றே வென்றிபேர்க்கும் கேட்க ‘எட்வாட்’ விட்டோடிப் போனவன்றம் படைப்ப லத்தில்
வீழ்ச்சிகொண்ட காரணத்தால் விவேகத் தோடே திட்டமிட்டுக் காடுகளில் மறைந் திருந்து
தன்வலிமை தனைப்பெருக்கச் செய்வான் போன்றே திட்டமிட்டு நாமும்நம் வலிமை கூட்டத்
தேவையின்று முல்லைநோக்கிச் செல்வோம் என்றான்
1546
355
ஜிண்ணாவூர் ஷரீபுத்தின்

Page 197
'வன்னியனைத் தோற்கடித்த நினைவாய் ஈங்கோர் வரலாற்றுப் பதிவொன்றைச் செய்ய வேண்டும் என்பேரில் கல்லொன்றை நடுதல் வேண்டும்”
என்றனனே வொன்றிபேர்க்கும் கேட்டே எட்வார்ட் “என்னோடு சேர்ந்துபடை நட தி வந்தே
எனைவிடுத்துக் கல்லொன்றைச் சின்ன மாக உன்பேரில் நடவேண்டும் என்கின் றாயே
உன்விருப்பம் அதுவானால் செய்”யென் றானே
547 "ஆயிரத்தோ டெண்ணுாற்று மூன்றாம் ஆண்டில் அக்டோபர் மூபத்தோ ராம்நாள் தன்னில் தாய்மண்ணைக் காக்கப்போர் செய்த வன்னி
தனை”வொன்றி பேர்க்தோற்கச் செய்தான்’ என்னத் தோய்ந்தவரிக் கல்லொன்றை நட்டார் வெற்றி
தனையுரைக்கப் பண்டார வன்னி பேரை மாய்த்தாலும் நிலைநிறுத்தும் நினைவுச் சான்றாய் மிளிருங்கற் சிலைமடுவில் இற்றை நாளும்
1548 முல்லையினைக் கைப்பற்றும் எண்ணத் தோடே
முழுப்படையும் வழிநடக்கக் கான கத்தின் எல்லைகடந் திடுமுன்னோர் புதிய திக்கில்
இருந்தபரிக் குளம்படிகள் கண்ட "பேர்க்கும் நில்லுங்கள் எனப்படையைத் தடுத்தான் எட்வர்ட்
நின்றனனே “ஏன்” என்றான் வியந்தே முல்லை செல்லுகிற பாதையல்ல அதோபார் ஆங்கே
தோன்றுகின்ற பரியடிகள் எனக்காண் பித்தான்
1549 ஆமிதுகாண் வேறுபுறம் செல்லும் பாதை
அடிதொடர்ந்தால் எங்குள்ளான் வன்னி என்றே நாமறியக் கூடுமவன் முல்லைத் தீவு
நிச்சயமாய்ப் போயில்லை திட்டம் மாற்றி நாமுமவன் சென்றவழி செல்வோம் தன்னை
நிலைப்படுத்திக் கொள்ளுமுன்னர் வளைப்போம் என்ன ஆமென்றான் வொன்றிபேர்க்கும் படைகளுக்கும்
ஆணைமாற்றிப் பிறந்ததுவே பணிந்திட் டாரே
1550
பண்டாரவண்ணியண் காவியம் 356

குருவிச்சியின் சாகசம்
கைப்பிடி தனக்கு முத்தம்
கொடுத்தேவாள் சுழற்றச் சுற்றிக் கைகால்கள் சிரசு முண்டங்
குவிந்தன பொருந்தும் வேளை கொய்தனர் தலைகள் பின்னால்
கூடவந் திருந்த வீரர் செய்வதும் அறியா வெள்ளைத் துரோகிகள் கலங்க லானார்
வஞ்சகத் தோடு தன்னை
வரவேற்பார் போலுங் காட்டி நஞ்சுடை நெஞ்சார் வெள்ளை நாசகள் உட்கொ ணர்ந்தே வஞ்சமுந் தீர்க்கச் சுற்றி
வளைத்திடக் குருவி நாச்சி அஞ்சிலஸ் தன்னைக் காக்க
அரிந்தனள் ஆண்மை கொண்டாள்
கோட்டையின் வெளியே நாச்சி
கூடவந் திருந்த வீரர் வேட்டைக்குப் பொருளாய் எண்ணி
வெள்ளையர் தாக்கக் கொள்ளை ஆட்பலி கொண்டார் யார்க்கும்
அஞ்சிடோம் என்னும் பாங்காய்க் காட்டினர் வீரம் போரும்
கடிதினுள் அடங்கிற் றன்றோ
தனித்துள்ளே சென்ற நாச்சி
தனித்திடு வாரே என்று முனைந்தனர் உள்ளே செல்ல
முன்வந்தோர் உயிர்ம றந்தார் தனைப்பாது காக்க நாச்சி
செய்கின்ற சாக சத்தில் திணித்தனர் தமையும் பொல்லோர் திட்டமும் பொடியா கிற்றே
1551
1552
1553
1554
357
ஜிண்ணாவூர் ஷரீபுத்தினர்

Page 198
கூலிக்கு மார டிக்கக்
கொணர்ந்தவர் மண்ணைக் காக்குஞ் சீலமே முற்றாய் நெஞ்சுட்
திளைத்தபோர் வீரர் முன்னே வால்பிடி யுண்ட ஆப்பு
விலக்கிய குரங்காய் ஆனார் வேலையும் முடித்தார் வந்த
வீரர்தம் ஆணை கொண்டார்
1555 பனங்காமத் துள்ளி ருந்த
பறங்கியர் தமையொ டுக்கி முனம்சொன்ன வாறு முல்லை
மண்ணோக்கு மாறு தன்னை இணைந்தொன்றி வந்த வீரர்
இசைவொடு புறப்பட் டார்தம் துணையங்கு தனிக்கும் என்ற
தெளிவினால் நாச்சி யாரே
1556 வன்னியனின் இறுதிக்காலம்
வாளோடும் வேலோடும் வன்னி வீரர்
வெள்ளையரை மாய்த்தொழித்தல் கண்டு “பேர்க்'தன் நீளமுனை கொண்டபெரும் பீரங் கிக்கு
நெருப்புண்டை பிழியவென ஆணையிட்டான் தோள்வலிமை துணைசெயாது தப்பிச் செல்லும்
தந்திரத்தைக் கையாண்டால் உயிரைக் காத்து மீளவுமோர் போர்தொடுக்க லாமே என்ற
மதியூகங் கொண்டவன்னி களந்த விர்த்தான்
1557 எஞ்சியவர் ஐம்பதுபேர் என்ற தாலே
அரண்மனைக்குச் செல்லாது வனத்தில் தங்கி எஞ்சியுள்ள வெள்ளையரை அழிப்ப தென்னும் எண்ணத்தில் சிலகாலம் பொறுத்திருந்தான் துஞ்சாது வாழ்வினையே நாட்டுக் காகத்
தரத்துணிந்த மாவீரன் வாழ்ந்த தன்னாள் கொஞ்சசில வீரரொடும் நாச்சி யோடும்
கூறுவரே நுவரகளா வியாவி லென்றே 1558
υ αστυιτσα, στAσίευμ στα ιταδιμιίο 358

திராத போர்வேட்கை நீண்ட காலம்
தரித்தவனை இருக்கவிடாக் கார ணத்தால் போராட மீண்டுமவன் துணிவு கொண்டான்
பெற்றனனே கண்டிவீரர் உதவி தன்னைப் போராடப் பெரும்படையொன் றில்லாப் போதும்
பயங்கொண்டார் பறங்கியர்கள் பண்டார வன்னி கூர்மதியும் போர்வெறியும் கொண்டோன் என்னும்
குறிப்பறிந்தார் மண்காக்கும் மறவன் என்றே
559 என்றிருந்துந் தாக்கவரு வானே என்றே
எண்ணியதால் எல்லைகளைப் பலப்படுத்த வன்னியினோர் எல்லையெனும் வவுனி யாவில் வெடிவைத்த கல்தம்மில் படைகு வித்தார் தன்னோடு துணைநின்ற கண்டி நாட்டின்
திசாவையொடு தாக்கவரு கின்றா னென்றோர் முன்உளவு கொண்டாரே கலெக்டர் "ரோணர் மிகுந்ததங்கு பாதுகாப்பும் அச்சத் தாலே
1560 திருகோண மலையிருந்தும் யாழி ருந்தும்
தொகையறியா வீரர்கள் குவிந்த போதும் பெருவீரன் அஞ்சினனோ இல்லை போரில்
பொருதினனே வெள்ளையரை அடங்காப் பற்றில் சரியாயி தாயிரத்து எண்ணுறறுப் பதினொன் றில்தான்
தோல்விகண்டான் என்றிட்ட போதும் நாட்டின் சரித்திரத்தில் பதிவுகொண்ட சேதி யாகும்
தமிழன்புகழ் சொல்லுகின்ற நிகழ்வு மாகும்
1561 சுற்றிவளைத் தெதிரிகளாற் சூழப் பட்டும்
தனித்துநின்று போர்செய்தான் வெற்றி வாகை பெற்றிடுவர் வெள்ளையர்தாம் என்றபோதும்
புறமுதுகிட் டோடாது களத்தில் நின்றான் ஒற்றைவாளுக் குயிர்கொடுத்தோர் ஒன்றி ரண்டோ
ஒருநூறோ இருநூறோ யார்தேர் வாரோ முற்றுமந்தக் களத்திருந்தோர் எண்ணம் அந்த
மாவீரன் தனைக்களத்தில் வீழ்த்தல் ஒன்றே
1562
359
ஜிண்ணாஜர் 2fபுத்தீன்

Page 199
எங்கிருந்தோ வந்தாங்கோர் ஈட்டி மார்பில்
இறங்கியது எதிர்பாராப் போதில் நெஞ்சில் பொங்கியது செங்குருதி சுற்றி நின்றோர்
பார்வைதனை மறைத்தமுகம் பீறிப் பாயும் தங்கியவக் கொலைக்கருவி உருவி நின்றோர்
தனையழித்தான் இறுதிமூச்சை இழக்கு முன்னே வங்கத்தின் முத்தாமிவ் வீழ நாட்டின்
வங்கத்தின் சிங்கம்பண் டாரவன்னி
1563 மார்பினிலே கொண்டவீர வடுவி ருந்து
மடையொடித்த புனல்போல வீறுகொண்டே போர்க்களத்தை நனைத்ததுவே சென்னிர் இங்குப்
பிறக்குமொவ்வோர் ஆண்பெண்ணும் இவனைப் போலும் ஓர்மைகொண்ட மனத்தினராய்ப் பிறப்பீர் என்றே உரமளிக்கும் உரமாக அதனா லன்றோ ஓர்மைகொண்ட வீரமக்கள் வன்னி மண்ணில்
உலவுகின்றார் அன்றுமின்றும் என்றும் வாழ்வார்
1564 மார்பினிலே வேல்கொண்டு களத்தில் வீர
மரணத்தை அணைத்தான்தன் தலைவன் என்ற போர்ச்சேதி கேட்டணளே ஒர்பு றத்தே
போர்நடத்திக் கொண்டிருந்த குருவி நாச்சி கார்மேகம் சட்டென்றே மதியை மூடிக்
கொண்டதுபோல் முகங்கறுத்தாள் நொடிக்குள் ளாக ஓர்மைகொண்டாள் அவன்விட்ட பணியைத் தானே உடன்தொடர வேண்டுமெனும் உரத்தி னோடே
1565 நெஞ்சகன்று போனதுளச் சோகம் கல்லின்
நிலைகொண்டு கனத்தததில் வீரம் யார்க்கும் அஞ்சாத வன்னியனின் உறுதி யெல்லாம்
அவன்பிரிய அவளுள்ளத்துள் செறிந்த தாக வெஞ்சினத்தோ டவனிழப்பின் வெறுமை தீயாய்
வீறுகொண்டு பற்றியெழக் களத்தின் மீதே எஞ்சியதம் வீரரொடு சுழன்றாள் நாச்சி
இதுவரையி லிலாதபெரும் வெறிகொண் டாளே
uaorusraga yarafuasi a:5 stadiusub 360

ஒரொருவ ராகவுயிர் உண்ட வாளின்
உயிருறுஞ்சு வேகத்தைக் கரத்துக் கீந்து வேரறுந்த மரங்களென நிலத்தில் சாயும்
வெள்ளையரின் உடற்கட்டை மீதி லேறிச் சோராத நெஞ்சத்தின் துணிவுக் கேற்பத்
தலைவாங்கி னாளேயப் போழ்தில் பின்னால் தூரவிருந் தெறிந்தவொரு கைவாள் நெஞ்சைத்
துளைத்துமுன்னே வெளிப்பாய நிலத்தில் சாயந்தாள்
1567 ஆண்மையற்ற வெண்பேடிக் கயவன் கிட்ட
அண்டவிய லாதிவளை என்ப தாலே காணுமுதல் நொடிக்குள்ளாய் வேகங் கூட்டிக்
கைவிடுத்தான் கைவாளை நினைந்த வாறே பேணாதான் யுத்ததர்மம் புரிந்த செய்கை
பெண்ணுடலைச் செயலற்றுப் போகச் செய்ய ஊனுடலின் பெருக்காகச் சென்னீர் பூமி
உண்டதவள் வீரத்தின் உரமாகிற்றே
1568 பேராற்றின் கிளையாம்குரு விச்சி ஆறு
பேர்கொண்ட திவ்வீரப் பெண்பே ராலே ஊரறுத்துப் பாய்கிறது நாச்சி வாழ்ந்த
ஊரான சம்மளங்கு ளத்தை இன்றும் வீரவன்னி பண்டார வன்னி யோடே
வன்னிவர லாற்றினிலே பதியப் பட்டாள் யார்மறந்து போனாலும் மாதர் நெஞ்சில்
என்றுமவள் நிலைத்திருப்பாள் இன்று போன்றே
1569 கலைஞர்கரு ணாநிதியின் படைப்பை நானுங்
காவியமா யாக்கிமன நிறைவு கொண்டேன் நிலமாளும் பூபதியின் ஆசி யோடே
நேயற்றமிழ் என்பணியை ஏற்க வேண்டும் உலகுள்ள வரைஎன்றன் தமிழை மக்கள்
உவந்தேற்று போற்றிமனம் மகிழ வேண்டும் அலைதழுவும் ஈழத்திருத் தீவின் மேன்மை
அகிலமெலாம் பரவவழி செய்கு வோமே
1570 பண்டாரவன்னியன் காவியம் முற்றிற்று.
ஜிண்ணாவூர் ஷரீபுத்தீன்

Page 200
கவிஞரின் கால் தடங்கள்
முழுப்பெயர்
முகவரி
பிறப்பிடம்
பிறந்த திகதி தொழில் தந்தையார் g5Tu JIT)
மனைவி
மக்கள்
பேரர்:
உடன் பிறப்புகள்
ஞானத்தந்தை
இலக்கியப் பிரவேசம் சார்ந்துள்ள இலக்கியத்
துறைகள்
எழுதிய நூல்கள்
அகமது ஜின்னாஹற் ஷரிபுத்தீன் 16,SCHOOL AVENUE,
OFF STATION ROAD, DEHIWALA, SRI LANKA.
மருதமுனை, கிழக்கு மாகாணம்.
இலங்கை.
: 01.09. 1943.
தனியார் மருத்துவம் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் ஆயிஷா உம்மா ஹம்ஸியா பரீதா அர்ஷத் முஜிப் ஷரிபுத்தீன்
றோஷன் ஹமீத் ஷரிபுத்தீன் குர்ஷித் ஷாமிலா தாரிக் காஸிம் ஷப்ராஸ் முஹம்மத் ஷரிபுத்தீன்
அம்னா இப்பத் தாரிக் காஸிம் : ஆண்கள் 08
பெண்கள் 09
பத்திரிகைத்துறை ஜாம்பவான்
அறிஞர் எஸ்.டி.சிவநாயகம்
: 1965
கவிதை, சிறுகதை, நாவல்,
சிறுவர் இலக்கியம், கட்டுரை
1. பாலையில் வசந்தம் ------- 1989.
2.முத்துநகை ------- 1989. 3.மஹற்ஜயீன் காவியம்
(600 UTL6 856il) 1992. தென் இந்தியா புதுக்கோட்டையில் நடைபெற்ற முதலாவது அகில உலக இஸ்லாமிய தமிழ் சிற்றிலக்கிய மாநாட்டில் வெளியிடப்பெற்றது)
uaðr-/rjøy orsfust a5/røSuti
362

4. புனித பூமியிலே காவியம்
(1000 பாடல்கள்) 1998 (தென் இந்தியா மறைமலை அடிகள் நூலகத்தில் கவிஞர் மு.மேத்தா அவர்களின் விமர்சனத்தோடு வெளியிடப்பெற்றது) 5. பனிமலையின் பூபாளம் 1995.
(மலையகக் கவிதைத் தொகுதி) 6. கருகாத பசுமை (நாவல்) 2000.
(தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் வெளியிடப்பெற்றது) 7. ஜின்னாஹற்வின் இரு குறுங்காவியங்கள்
2001. (பிரளயங் கண்ட பிதா - தாய்க்கென வாழ்ந்த தனயன்) (தேசிய [ᏏlᎢ 6Ꭰ éᏏ ஆவணவாக்கல் சபையினால் வெளியிடப்பெற்றது) 8. கடலில் மிதக்கும் மாடிவீடு (சிறுவர் இலக்கியம்) 2002. (இலங்கை நூல் அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பெற்றது) 9.அகப்பட்ட கள்வன்
(சிறுவர் இலக்கியம்) 2003. (பிரித்தானிய யூனிசெப் நிறுவனத்தால்
வெளியிடப்பெற்றது) 10.எங்கள் உலகம்
(சிறுவர் இலக் கரியம் ) 2003. (இலங்கை நூல் அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பெற்றது) (தமிழகப் பேராசிரியர் எஸ்.முகம்மது அலி தனது முனைவர் பட்டப் படிப்பிற்காக மஹற்ஜமீன் காவியம் புனிதபூமியிலே காவியம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றார்) வெளிவரவிருப்பவை: 1. பண்டரவன்னியன் காவியம்
(1600 LTL6)56f) கலைஞர் மு.கருணாநிதி கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் (அச்சில்) 2. பெற்றமனம் (சிறுகதைத் தொகுப்பு) (அச்சில்)
3
6
3
ஜிண்ணாவூர் ஷர்புத்தீன்

Page 201
3.
4.
ஜின்னாஹற்வின் சிறுகதைகள் ஜின்னாஹற்வின் கவியரங்கக் கவிதைகள்
அகில இலங்கை ரீதியாகப் பெற்ற பரசில்கள்:
.
2.
1.
தேசிய ஹிஜ்ரி கவிதைப் போட்டி 1980 2ம் பரிசில் (கலாசார அமைச்சினால்
நடத்தப்பெற்றது) மீலாத் விழா கவிதைப் போட்டி 1986 1ம் பரிசில் (கலாசார அமைச் சினால் நடத்தப்பெற்றது)
மலையக கலை இலக்கியப் பேரவை நடத்திய மரபுக் கவிதைப் போட்டி 1987 1ம் பரிசில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைத் தேர்வுப் பரிசில் 1988 கொழும்புக் கலா மன்றம் நடத்திய "நமது நாடும் - தமிழும்” கவிதைப் போட்டி 1989 2ம் பரிசில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய அனைத்திலங்கை கவிதை உயர்நிலைத் துறைப் போட்டி (முத்துநகை) 1991 1ம் பரிசில்
புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப்பணி மன்றம் நடத்திய "புலவர்மணி ஒருபா ஒருப.து” கவிதைப் போட்டி 1989 3ம் பரிசில் கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி 1991 4ம் பரிசில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய "நாவற்குழியூர் நடராசன் கவிதைப் போட்டி” 1996 1ம் பரிசில் வடகிழக்கு மாகாண சாகித்ய மண்டலப் பரிசு (புனித பூமியிலே காவியம்) 1998 uu Typ LJUT 600T LĎ தமிழ் இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு (புனித பூமியிலே காவியம்) 1998
uaorul ArgaJulai affusai 35 Arad3uuuio

பெற்ற கெளரவங்கள் :
2.
2.
தினகரன் பத்திரிகை மலையக இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய ”அகஸ்த்தியர் நினைவுச் சிறுகதைப் போட்டி" 2000 2ம் பரிசில்
கலாசார அமைச்சு இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் இணைந்து நடத்திய மீலாத் சிறுகதைப் போட்டி 1ம் பரிசில்
இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த
காவியத்திற்கான பரிசில் 2002 (ஜின்னாஹற்வின் இரு குறுங்காவியங்கள்)
1992 D ஆண்டு சென்னை தமிழ் இலக்கியப் பேரவை கவியரசு வைரமுத்து அவரகளால் மஹற்ஜமீன் காவிய ஆய்வுரை நடத்தி அவராலும் நாவலாசிரியர் ஹஸன் அவர்களாலும் பொன்னாடை போர்த்து வித்து கெளரவம் செய்தது. 1994ம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கலாசார அமைச்சு வடிம்ஸஸ்ை ஸ°ஹாரா (கவிக் கதிரோன்) பட்டமளித்துக் கெளரவம் செய்தது. 1996ம் ஆண்டு பண்டாரவளை இந்து மாமன்றம் “கவிமாமணி" பட்டமளித்துக் கெளரவம் செய்தது. சென்னை தமிழகக் கவிஞன் கலைமன்றம் 1997ல் நடத்திய நான்காவது கவிஞர்கள் மாநாட்டில் "நற்கவிஞர்” பட்டயம் தந்து கெளரவித்தது. 1999ம் ஆண்டு தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் புதுச்சேரி கோட்டைக் குப்பத்தில் நடத்திய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் “ தமிழ் மாமணி" பட்ட மளித் துக் கெளரவித்தது. 1999ம் ஆண்டு இரத்தினபுரி சாமழரீ அமைப்பு “காவியத்திலகம்"
3
5
εξσί στιταρή κλειδιόδιστ

Page 202
இலக்கிய உலகில் வகித்த
7
2003ம் ஆண்டு மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் கெளரவித்தளித்த "தமிழ் முஸ்லிம் நல்லுறவு விருது”
பதவிகளும் வகிக்கும் பதவிகளும்.
l. 2.
3.
13.
14.
சிந்தாமணி கவிதா வட்டத் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிமன்ற உறுப்பினர் அதன் இலக்கியச் செயலாளர் தேசிய bT 6D 35 ஆவணவாக்கல் சேவைகள் சபையின் நுண்ணாய்வுக்குழு உறுப்பினர். அரசாங்க மின்னியல் ஊடக ஆலோசனை சபை உறுப்பினர்.
தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளர். கொழும்புக் கம்பன் கழக ஆட்சிமன்ற உறுப்பினர். திருமறைக் கலாமன்ற ஆலோசனைச் சபை உறுப்பினர். கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்.
. இலங்கை கலாசார அமைச் சின்
நுண்கலைப் பிரிவு உறுப்பினர்.
. இலங்கை இஸ்லாமிய இலக்கிய
ஆய்வகத்தின் தலைவர்.
2002ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால்
நடத்தப்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் அமைப்புக் குழு தலைவர் கொழும்புத் தமிழ் வளர்ச்சிக் கழக செயலாளர். தேசிய நூல் அபிவிருத்திச் சபை உறுப்பினர்
தொகுப்பு: ஓ.கே. குணநாதன்
uakularnyatakafuat astraSutub
366


Page 203
ஓர் அறிமுகம்
தொன்று தொட்டுத் தொடரும் இலக் மரபு பண்டைக் கவிதை நூல்களுக் உரை வகுப்பதாகும். இந்த முறைை நேர்மாறாக மாற்றியவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
gañas Ganruumalumii. உரைநடை நூல்களை அடிப்படைய வைத்து அவர் கவிதைகளாக்கியுள்ள காவியம் பாடியுள்ளார். அங்ங்னம் தொடர்ச்சியாக இரண்டு காவியங்கள் பாடியுள்ள பெருமை கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களையே சாரும். (பண்டார வன்னியன் கவிஞரது ஐந்தாவது காவியமாகும்) இதன் பயனாய் இவர் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்கு புத்துயிர் ஊட்டியுள்ளார். புது மெருகளித்துள்ளார்.
கவிதை இயற்றும் ஆற்றல் மிக்க :) பரம்பரையில் வந்தவர் புலவர்மணி ஆமூஷரிபுத்தீன் ஆவார்கள். அவருடைய தவப்புதல்வனாக வந்தவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள். அதன் 5 TOT 600TLDT5 இயற்கையாகவே கவியியற்றும் ஆற்றல் பெற்றவர். இவர் பணி போற்றுதற்குரியதொன்று மட்டுமல்ெ பின்பற்றுதற்குரியதொன்றுமாகும்.
பேராசிரியர் டாக்டர் ம.மு.உவைஸ். (புனித பூமியிலே காவியத்திற்காக
ཤུར་ཤུར་ཤུར་
ISBN 955-97349-3-8 500/-