கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேரறுந்த நாட்கள்

Page 1


Page 2

Eblupīti bThī

Page 3
ஆசிரியரின் பிற நூல்கள்
காவியங்கள்
1. மஹஜபீன் காவியம் 2. புனித பூமியிலே காவியம் 3. பிரளயங் கணிட பிதா 4. தாய்க்கென வாழ்ந்த தனயன் 5. பணிடாரவன்னியன் காவியம்
6. திருநபி காவியம்
கவிதைத் தொகுதிகள்
7. முத்து நகை 8. பாலையில் வசந்தம் 9. பனிமலையின் பூபாளம்
10. திருமறையும் நபிவழியும்
சிறுகதைத் தொகுப்புகள்
11. பெற்றமனம் 12. வேரறுந்த நாட்கள்
சிறுவர் இலக்கியம்
13. கடலில் மிதக்கும் மாடி வீடு 14. அகப்பட்ட கள்வன் 15. எங்கள் உலகம்
16. சிறுமியும் மந்திரக்கோலும்
நாவல்
17. கருகாத பசுமை
1992
1998
2001
2001
2005
2006
1989
1998
1995
2007
2008
2002
2003
2003
2008
2000

வேரனுந்த நாட்கள்
- Bili Iplit) ili filiji. -
慢,
Daða Dao SDIIDI LAJ,
D(b5(p60)6O.
III

Page 4
o இந்நூலானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள உள்ளடக்கமானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கை தேசிய நூலகம் - வெளியிட்டில் உள்ள பட்டியற் தரவு
ஷரிபுத்தீன் அகமது ஜின்னாஹற்
வேரறுந்த நாட்கள்/ அகமது ஜின்னாஹ ஷரிபுத்தீன், - தெஹிவலை : நூலாசிரியர், 2008- ப. XVI + 105; ச.மீ.21
ISBN: 978-955-96932 - 2 - 2 6f 606): eb. 250.00
i. 894.81 13 çıç9, 21 i. தலைப்பு 1. சிறுகதை
வேறுந்த நாட்கள்
சிறுகதை
எழுதியவர் : ஜின்னாஷ்ற வடிரிபுத்தீன்
வெளியீடு : 86T6O)6OT 66.6s. L85(f)
ls (b5(D60)6O7.
16, LJITLEFT606) 816)65ub, புகையிரத வீதி, தெகிவலை.
முதற் பதிப்பு : 920O8
அட்டை வடிவமைப்பு : ஆசிப் ஏ புகாரி
கனணி வடிவமைப்பு : ஜெலீலா காதர் முகையதின்
Ls)(b5(D60)6OT.
அச்சுப்பதிப்பு : 6].ജ. ിങ്ങ്, ി85ിഖബ.
6ിബ : bl_is – 25O/–
IV

சமர்ப்பணம்
என் தமிழில் தானும்
அவர் தமிழில் நானும்
மண்ணின் மனங்கொண்டு
இறுமாப்புக் கொள்ளவைத்த
சிறுகதை மன்னன்
வ.அ.இராசரெத்தினம் ஐயா
அவர்களுக்கு.

Page 5
எனது சில வார்த்தைகள்
2003ம் ஆண்டில் எனது முதலாவது சிறுகதைத் தொகுதி “பெற்றமணம்” வெளிவந்தது. “வேரறுந்த நாட்கள்” எனினும் இத் தொகுதF எனது இரணி டாவது தொகுதியாகும். நீண்டகால இடைவெளியில் இது பிரசவமாகின்றது.
வழமைபோல என் சொந்த வாழ்வின் அனுபவங்களே இங்கும் கற்பனையோடு கூடிக் கதைகளாகியுள்ளன.
பத்திரிகைகளில் வெளிவந்த, வெளிவராத சிறுகதைகள் இதனுள் அடங்கும். இத்தொகுப்பு வெளிவர தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை பொருளுதவி செய்கின்றது.
அணிந்துரையை நாடறிந்த சிறுகதை எழுத்தாளர் கே.ஆர். டேவிட் அவர்கள் வழங்கியுள்ளார். அட்டைப்படத்தை மகன் ஆசிப் புஹாரி அழகுற வரைந்தளித்தார். இவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
- ஜின்னாஷ்ற வடிரிபுத்தீன் -
VI
 

வெளியீட்டுரை
ஏற்கனவே ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் கவிதைத் தொகுப் புக் கள், காவியங்கள், நாவல், சிறுகதைத் தொகுதி, சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றையும் எமது அன்னை வெளியீட்டகத்தின் சார்பாக நாம் வெளியிட்டுள்ளோம்.
"வேரறுந்த நாட்கள்” என்னும் அவரது இச் சிறுகதைத் தொகுதி எமது மற்றுமொரு வெளியீடாகும். இதுவரை வெளிவந்த அவரது எமது வெளியீடுகள் அரச சாகித்திய விருது, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருது, யாழ். இலக்கிய வட்ட விருது, கொழும்புத் தமிழ் சங்க விருது போன்ற பல விருதுகளோடு வாசகர். களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள்சபையின் பொருளுதவியுடன் இந்நூலை இம்முறை வெளியிடுவதில் நாம் மகிழ்வடைகின்றோம். முன்புபோல இனியும் வாசகர்களின் ஆதரவை நாம் எதிர்பார்க்கின்றோம்.
- வறம்ஸியா பரீதா
96്ഞങ്ങ് ിഖണീL5b,
LD(bğ5CqgD6O)6OT.
VII

Page 6
எனது சில வார்த்தைகள்
2003ம் ஆண்டில் எனது முதலாவது சிறுகதைத் தொகுதி “பெற்றமணம்” வெளிவந்தது. “வேரறுந்த நாட்கள்” எனினும் இத் தொகுதF எனது இரணி டாவது தொகுதியாகும். நீண்டகால இடைவெளியில் இது பிரசவமாகின்றது.
வழமைபோல என் சொந்த வாழ்வின் அனுபவங்களே இங்கும் கற்பனையோடு கூடிக் கதைகளாகியுள்ளன.
பத்திரிகைகளில் வெளிவந்த, வெளிவராத சிறுகதைகள் இதனுள் அடங்கும். இத்தொகுப்பு வெளிவர தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை பொருளுதவி செய்கின்றது.
அணிந்துரையை நாடறிந்த சிறுகதை எழுத்தாளர் கே.ஆர். டேவிட் அவர்கள் வழங்கியுள்ளார். அட்டைப்படத்தை மகன் ஆசிப் புஹாரி அழகுற வரைந்தளித்தார். இவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
- ஜின்னாஷ்ற வடிரிபுத்தீன் -
VI
 

வெளியீட்டுரை
ஏற்கனவே ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் கவிதைத் தொகுப் புக் கள், காவியங்கள், நாவல், சிறுகதைத் தொகுதி, சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றையும் எமது அன்னை வெளியீட்டகத்தின் சார்பாக நாம் வெளியிட்டுள்ளோம்.
"வேரறுந்த நாட்கள்” என்னும் அவரது இச் சிறுகதைத் தொகுதி எமது மற்றுமொரு வெளியீடாகும். இதுவரை வெளிவந்த அவரது எமது வெளியீடுகள் அரச சாகித்திய விருது, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருது, யாழ். இலக்கிய வட்ட விருது, கொழும்புத் தமிழ் சங்க விருது போன்ற பல விருதுகளோடு வாசகர். களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள்சபையின் பொருளுதவியுடன் இந்நூலை இம்முறை வெளியிடுவதில் நாம் மகிழ்வடைகின்றோம். முன்புபோல இனியும் வாசகர்களின் ஆதரவை நாம் எதிர்பார்க்கின்றோம்.
- வறம்ஸியா பரீதா
96്ഞങ്ങ് ിഖണീL5b,
LD(bğ5CqgD6O)6OT.
VII

Page 7
அணிந்துரை
கே. ஆர். டேவிட (ஒய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)
காட்டில் தனித்தனியாக வாழ்ந்த மனிதன் நாளடைவில் தனது தேவைகளை ஓரளவு உணர்ந்து குழுமமாக வாழ முற்பட்டான்.
இங்குதான் 'ஊர்' என்ற சிறிய குழும எல்லை ஆரம்பமானது. சிறு சிறு குழுமங்களாக வாழ்ந்த மனிதன் நாளடைவில், சிறு சிறு குழுமங்கள் ஒன்றிணைந்து பெரும் குழுமமாக மாறினார்கள்.
இங்கு தான் நகரம் என்ற பெரும் குழும எல்லை ஆரம்பமானது. காட்டில் தனித்து வாழ்ந்த மனிதன் பின்னர் சிறிய குழும நிலையை அடைந்த மனிதர்களும் காட்டு மிருகங்களை வெட்டையாடி உண்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். வேட்டையாடும் போது, மிருகங்களைத் துரத்துவதும், பிடிப்பதும், அவற்றினைக் கொலை செய்வதும், கொலை செய்யும் போது மிருகங்கள் அவலப்படுவதும், கத்துவதும் போன்ற சம்பவங்களில் ருசிகரமான சம்பவங்களைத் தங்களோடு சேர்ந்தவர்களோடு பரிமாறிக் கொள்ளுகின்ற ஒரு உணர்வுந்தல் ஏற்பட்டபோது.
VIII
 

GGJYMTO GQfyös Gഗ്ഗമഗ്ര ഗ്രീമമ്
மிருகம் மாதிரி ஓடினான். மிருகம் விழுந்ததுபோல விழுந்து காட்டினான். மிருகம் கத்தியது போலக் கத்திக் காட்டினான். இயல்பாகவே நடந்த ஒரு சம்பவத்தைத் தான் ‘உணர்ந்தவாறு வெளிப்படுத்தினான்.
அவைகள் நடிப்பாகவும், பிரதி செய்யப்பட்ட ஒலிகளாகவும் இருந்தன. இங்குதான் இலக்கியங்கள் ஆரம்பமாகின. பதிவுகளற்ற எல்லைகள் வகுக்கப்படாத புரிதலுக்கு மட்டுமான இலக்கியங்கள்.
மிருகங்களை வேட்டையாடி அவைகளைத் தீயிலிட்டு வேகவைத்து உண்கின்ற ஒரு நிலைமாற்றம் ஏற்பட்டபோது, குழுவின் தலைவனாக மதிக்கப்பட்டவன், அல்லது அந்தக் குழுவுக்குள் வலிமையுள்ளவன் வேகவைத்த மிருக இறைச்சியில், சுவையுள்ள ஈரல் போன்ற பகுதிகளைத் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்குமென எடுத்துச் சேமிக்க ஆரம்பித்தான்.
இங்குதான் சுயநல அடிப்படையிலான மேலாதிக்கத்தன்மை உருவானது. "நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் மிருகத்தைத் துரத்தினோம். எல்லோரும் சேர்ந்துதான் கொலை செய்தோம். நெருப்பில் வாட்டினோம் என்பன போன்ற பொதுச் செயற்பாட்டின் உண்மைகளை சுட்டிக்காட்ட எவருமே துணியவில்லை. அவர்களையறியாமலேயே அவர்களுக்குள் இருந்த பயந்தான் காரணம்.
இங்குதான் 'அடிமைத்தனம் ஆரம்பமானது.
தர்மம், அதர்மம். இவ்விரு சக்திகளுக்குமிடையில் ஓயாது நிகழ்கின்ற இழுவீச்சின் பிரதிபலிப்புக்கள் தான் இன்றைய சமூக, தேசிய இயங்கியல் வெளிப்பாடுகளாகும்.
இந்த இயங்கியல் வெளிப்பாடுகளின் பிரதிகள்தான் இலக்கிய வடிவங்களாகும்.
தனிமனித சமூக தேசிய நிலைகளுக்கிடையில்
IX

Page 8
ësirSTaip Gqfigësi ബഗ്രഗ്രീശരീ ஏற்படுகின்ற முரணிப்புகள் பற்றியும், அந்த முரணிப்புக்குள் புதைத்து கிடக்கும் தர்மங்களைப் பற்றியும் கூறுகின்ற நிஜங்கள் பற்றிய கற்பனை கலந்த நிழல்கள் தான் ‘இலக்கியங்களாகும்.
இலக்கியம் படைப்பதென்பது இலகுவான செயலல்ல!
அதனால்தான் இலக்கியம் படைக்கின்ற சிருஷ்டிகர்த்தாக்கள் சமூகத்தில் மேம்பட்டவர்களாக மதிக்கப்படுகின்றனர்.
இந்த மேம்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் -
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களும். ஒரு மருத்துவனால் உடற்கூறுகளின் இயக்கம் பற்றியும், அவற்றின் பலம், பலவீனங்கள் பற்றியுந்தான் கண்டறிய முடியும். அதே உடலுக்குள் இரத்தம் தோய்ந்த சதைக்குவியலாய் கிடந்து துடிக்கும் இதயத்திலுள்ள அரூபியான சிந்தனைகளைக் கண்டறியும் வல்லமை ஒரு எழுத்தாளனுக்குத்தான் உண்டு.
எழுத்தாளன் என்பவன் அடிக்கடி துயரத்தின் எல்லையைத் தரிசித்து மீளுகின்ற ஒரு துயரச் சுமைதாங்கியாவான்.
'மனித தர்மம். இந்தத் தளத்திற் தான் சகல எழுத்தாளர்களுமே ஜீவனம் செய்கின்றனர். அன்று தொடக்கம் இன்றுவரை படிப்படியாகச் சகல தர்மங்களும் அடக்கப்பட்டு வாய்க்கரிசி போட்டு கொள்ளி வைக்கப்பட்டு. சாம்பலாகி விட்ட இந்தச் சமுதாயத்தில் அந்த சாம்பல் மேட்டின் மீது குந்தியிருந்து தனது பேனா முனையினால் கிளறிக் கிளறி தனது ஆத்மாவின் கண்ணிரை மையாக்கி. மனித தர்மத்தைப் பாதுகாக்கும் இலக்கியங்களைப் படைப்பவன்தான் எழுத்தாளன்.
இலக்கியங்கள் பஞ்சணையில் பிறப்பதில்லை. இலக்கிய
முட்டைகள் பஞ்சத்தின் வெக்கையில்தான் பொரித்து குஞ்சுகள்
வெளிவருகின்றன. வரலாறுகளும், இதிகாசங்களும், புராணங்
களும், காவியங்களும், இலக்கிய வடிவங்களும் எழுதப்படாதிX

ssirlGJITTSD Googfgjfissi Gഗ്രഗ്രീശരീ ருந்தால் மனிதன் தனது இறந்த காலத்தையே மறந்திருப்பான். மிகச் சக்திவாய்ந்த இந்த இலக்கியங்களைப் பிரசவிக்கின்ற பிரம்மாக்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள்.
கடந்த நாற்பத்திமூன்று ஆண்டுகளாக கவிதையாகவும், சிறுவர் இலக்கியமாகவும், சிறுகதையாகவும், நாவலாகவும், கட்டுரையாகவும் இவைகளுக்கு மேலால் காவியமாகவும் எழுதிக் குவித்தவர் ஜின்னாஹற் அவர்கள். அதனால்தான் அவரை மிக முக்கியமானவரெனக் குறிப்பிட்டேன்.
1943ம் ஆண்டு பிறந்த ஜின்னாஹற் அவர்கள் 1965ம் ஆண்டு, தனது இருபத்தியிரண்டாவது வயதில் இலக்கியப் பரப்பில் காலடிபதித்தார். அதன் பின் 1989ல் 'பாலையில் வசந்தம்' என்ற நூலை வெளியீடு செய்தார். இதுதான் இவரது முதற்பிள்ளை. அதன்பின் இன்றுவரை எத்தனையோ பிரசவங்கள் நிகழ்ந்து விட்டன.
கவிஞனாக இலக்கியப் பிரவேசம் செய்த ஜின்னாஹற் அவர்கள் இன்றும் 'கவிஞர் ஜின்னாஹற்’ என்றே வாசகர்களால் அழைக்கப்படுகின்றார். ஆனால் இலக்கியப் பரப்பில் அவர் நடத்திய தேடல்களாலும் ஆத்ம பலத்தோடு அவர் நடத்திய எதிர்நீச்சல்களாலும் இலக்கியப் பயணத்தில் அவர் பல மைல்களைத் தாண்டி வெகுதூரம் சென்று விட்டார்.
கவிதை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, நாவல், கட்டுரை இவைகளுக்கு மேலால். காவியங்கள்.
அவரது முள்ளந்தண்டுக்கூடாக முண்ணாண் என்கின்ற பிரதான நரம்புத் தொகுதிக்குப் பதிலாக அனுபவத்தினூடாக ஏற்பட்ட 'ஆத்மபலமே ஊருருவியுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இன்னமும் இவர் தனது இலக்கிய முயற்சிகளில் சோர்ந்து போய்விடவில்லை.
ΧΙ

Page 9
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ൭ശ്രഗ്രീശരീ
அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட 14 போட்டிகளில் பரிசில்கள் பெற்றிருப்பதோடு 07 கெளரவப் பட்டங்களையும் பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புக்களில் 14 பதவிகள் வகித்திருப்பதையும், தற்போதும் சில பதவிகளை வகிப்பதையும் இவர் பற்றிய பதிவுக் குறிப்புகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதென நினைக்கிறேன்.
இவரது வெளியீட்டுத் தொடர்ச்சியில், இப்போது 'வேரறுந்த நாட்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவுள்ளது. இதற்குமுன் 2003ம் ஆண்டு "பெற்றமணம்' என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது.
"வேரறுந்த நாட்கள்’ என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. இப்பன்னிரண்டு சிறுகதைகளில் ஆறு சிறுகதைகள் இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளை விளக்குவனவாகவும், "சுறாமீன்குளம்பு', 'கானல் நீர் ஆகிய இருகதைகளும் யுத்த பூமியின் தரிசனங்களாகவும், 'வருமுன் காப்போன்’ என்ற சிறுகதை, வெளிநாடொன்றுக்குப் பணிப்பெண்ணாகச் செல்லவுள்ள ஒரு பெண்ணின் அவலத்தை வெளிப்படுத்துவதாகவும், ஏனைய இரு சிறுகதைகளான தீண்டத்தகாத தானம்', 'அன்னையும் பிதாவும் பொதுவான சமூக நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
பெரும்பாலான சிறுகதைகள் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பினும் அவைகளை மதத்திணிப்புக்களின்றி சக மதத்தவர்களையும் அணைத்துச் செல்லும் பண்புகளிலேயே அமைந்துள்ளன.
சமயங்கள் அனைத்துமே மனித ஆத்மாவுக்குப் பலம்
சேர்க்கும் தத்துவ நடைமுறைகளையே போதிக்கின்றன. ஆனால்,
அதே சமயங்கள், தங்களின் ‘சமய எல்லைகளைத் தாண்டி’
வெறியாக மாறும் போதுதான் அவைகள் தங்களின் புனிதத் ΧIΙ

gits)IThio Gigligii (ഗ്രഗ്രീശബ്ദ
தன்மைகளை இழந்து மனித வேள்விகளுக்கு வழிகோலுகின்றன.
ஜின்னாஹற் அவர்கள் மதக் கோட்பாடுகளை மிகவும் அவதானமாகவே கையாண்டுள்ளார்.
'வருமுன் காப் போன்’ என்ற சிறுகதையில் , வெளிநாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக செல்லவுள்ள ஒரு பெண்ணின் கணவனானவனின் அப்பாவித்தனமான ஒழுக்க நம்பிக்கையைப் புலப்படுத்தும் வகையில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரிதாபத்துக்குரிய அந்தக் குடும்பம் நமது மனதில் பதிந்து கருவண்டாக நமது இதயத்தைச் சுரண்டுமளவிற்கு எழுத்தாளர் அக்கதையை நகர்த்தியுள்ளார். அதே வேளை வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்பவர்கள் பற்றிய ஒழுக்கம் தொடர்பாக இதுவரை இருந்து வந்த கேள்விக்குறி அகற்றப்பட்டு, முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று யாராவது ஒரு வாசகன் குற்றம் சாட்டினால், அதையும் முற்றுமுழுதாக மறுத்து விடமுடியாது.
"வேரறுந்த நாட்கள் என்ற இச்சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு குறிப்பு எழுதவேண்டியதொரு பொறுப்பை நண்பர் 'ஜின்னாஹற் என்மீது சுமத்தியிருந்ததால் இத்தொகுப்பிலுள்ள பன்னிரண்டு சிறுகதைகளோடு இருபத்தியொரு சிறுகதைகளையும் சேர்த்து மொத்தமாக முப்பத்திமூன்று சிறுகதைகளையும் படித்தேன்.
ஜின்னாஹற் அவர்களின் முப்பத்திமூன்று சிறுகதைகளையும், படித்து முடித்தபோது இவரது சிறுகதை முயற்சி பற்றி எனது மனதில் ஏற்பட்ட பதிவுகளையும் இங்கு கூறி வைப்பது பொருத்தமானதென நினைக்கிறேன். l) இவரால் தெரிவு செய்யப்பட்டுள்ள கதைகளுக்கான பெருமளவு கருக்கள் விவாதத்திற்குரியனவைகளாகக் காணப்படுவதால் வாசகரை கதையை மீண்டும் வாசிக்ககத் தூண்டும் கவர்ச்சிப் பண்பு குறிப்பிடக் கூடிய அம்சமாகும்.
XII

Page 10
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (ഗ്രീ.മീ
2) கதை நிகழ்கின்ற சூழல்சார்ந்த இயங்கியல் நுணுக்கங்கள் பற்றிய கூர்மையான பதிவுகளை இவரது பெரும்பாலான ஆக்கங்களில் காண முடிகின்றது.
3) நாகரிகமான மொழிவாண்மைப் பிரயோகம் இடம்
பெற்றுள்ளமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.
அண்மைக்காலங்களில் இலக்கிய வெளியீடுகளிலும், தினசரி, வார, மாதாந்த வெளியீடுகளிலும் மொழிப்பிரயோகம் மிகவும் வறுமை நிலையிலுள்ளதாகப் பரலாலும் குற்றஞ்சாட்டப்பட்டு, வருகின்றது.
மொழியின் வறுமைக்கு மனித மனத்தின் வெறுமை நிலைதான் காரணமாகும்.
எழுத்தை ஆளுதல்' என்பது -
தொடர்பாடலின் கதைக்கேற்றவாறு, இலகுவானதாக இயல்பானதாக தேவைக்கேற்றளவிலான சொற்பிரயோகங்களையே குறிப்பதாகும்.
எழுத்தாளர் ஜின்னாஹற் அவர்கள் இலக்கியத்திலும், மொழிவாண்மையிலும், மிகவும் வல்லவர். அவருக்கோ, அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கோ அறிவுரை கூறும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் தெரிந்தவற்றைக் கூறிக் கொள்வதிலும் எனக்கு அச்சமில்லை.
"இலக்கியங்கள்’ என்பன -
தனிமனித சமூகப் பலம் பலவீனங்களை வாழ்வியலுக்கூடாக நாடி நரம்புகளோடு பிரதி செய்யப்படும் பதிவுகளாகும். தனிமனித சமூக இயங்கியலின் வரலாற்றுப் பதிவுகளாகவும் விளங்கிக் கொள்ளலாம்.
நேற்றைய வரலாற்றுப் பகுதிகளின் மீதுதான் இன்றைய
XIV

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ബബ്രു,ശ്രീശബ്
மனிதன் தனது வாழ்வியல் கட்டுமானங்களை மேற்கொள்கின்றான். அதேபோல் நாளைய மனிதன் இன்றைய வரலாற்றுப் பகுதிகளின் மீதுதான் தனது வாழ்வியல் கட்டுமானங்களை மேற்கொள்ளப் போகின்றான்.
ஒரு நாகபாம்பு படம் விரித்தாடுவதிலுள்ள நளினத்தன்மைகளைக் கூறுவதும் இலக்கியந்தான்.
அதே நாகபாம்பும் கீரியும் மூர்க்கத்தமாகப் போரிடுவதைக் கூறுவதும் இலக்கியந்தான்.
அதே நாகபாம்பின் தாக்குதலுக்குள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கும்படி மனிதர்களை அறிவுறுத்துவதாக அமைவதும் இலக்கியந்தான்.
அதே நாகபாம்பினால் கடியுண்ட ஒரு மனிதனின் மரண அவலங்களைக் கூறுவதும் இலக்கியந்தான்.
அதே பாம்பின் வாழ்விடமான புற்றுக்களை அழித்து பாம்புகளையும் தப்பவிடாமல் அழித்தொழிப்பதாகக் கூறுவதும் இலக்கியந்தான்.
மேற்கூறப்பட்ட அனைத்து இலக்கியங்களும் சமூகத்திற்கு ஏதோவொரு செய்தியைக் கூறுபவைகளாகவே அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை நாகபாம்பிடம் மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடியவிஷம் உள்ளடங்கியுள்ளதென்ற செய்தி கூறப்படாத செய்தியாகவும், அதே நேரம் புரியப்பட்ட செய்தியாகவும் உள்ளடங்கியுள்ளதென்பதை சிருஷ்டிகர்த்தாக்கள் புரிந்துகொண்டு தீர்க்கதரிசன நோக்கோடு இலக்கியங்கள் படைக்கவேண்டுமென்பதுதான் பலரதும் எதிர்பார்ப்பாகும்.
XV

Page 11
உள்ளே. பக்கம்
1. மாற்றுவழி 01 - 13
2. தீண்டத்தகாத தானம் 14 - 21
3. பச்சக் கஞ்சன் 22 - 27
4. வருமுன் காப்போன் 28 - 34
5. பெருநாள் பரிசு 35 - 40
6. அன்னையும் பிதாவும் 41 - 53
7. வேரறுந்த நாட்கள் 54 - 65
8. கானல் நீர் 66 - 70
9. பாவ பரிகாரம் 71 - 82
10. ஒரு விடிவினுக்காய் 83 - 90
11. ஹராம் 91 - 96
12. தேட்டம் 97 - 105
XVI
 

மாற்றுவழி
ஒன்றிரண்டாய்ப் பத்துப் பன்னிரண்டு அடிகள் உற்சாகமாக, மிக உற்சாகமாக இன்னும் இரண்டு. மூன்று. நான்கு. ஐந்து.
தத்திவரும் அந்தச் சின்னஞ்சிறு குறுகுறு நடையில் தன்னை மறந்து நின்றான் அஹற்மத், கைகள் இரண்டையும் பக்கங்களுக்கு உயர்த்தி, மேலும் கீழும் அசைத்துத் தான் விழுந்து விடாதபடி முகம் நிறைந்த நகைப்போடு, மெல்ல மெல்ல நடந்து வந்தது அது.
இப்போது கால்கள் சோர்ந்து போயிருக்க வேண்டும். குழந்தையின் கால்கள் தடுமாறின. தீடீரெனக் குழந்தை முகம்குப்புற.
சட்டென முன்னே பாய்ந்து வீழ்ந்த குழந்தையை வாரிக்கொண்டான் அஹற்மத், மூக்கு நுனி நிலத்தில் பட்டு இரத்தம் கசிய வீறிட்டு அலறியது அது. தன் கைக்குட்டையால் மூக்கில் கசிந்த குருதியை மெல்லத் துடைத்தெடுத்தான்.
Ol

Page 12
offGMTGT) Gigssi ബഗ്ഗ ഗ്രീശരീ
ஒருசில வினாடிகளுக்குள் இத்தனையும் நடந்துவிட்டன. தங்கள் சின்ன மழலையின் அழகு நடையில் மகிழ்ந்து நின்ற அந்த இளம் பெற்றோர் துடித்துப் போனார்கள். இரத்தத்தைக் கண்ட தாய் குழந்தையோடு குழந்தையானாள். இருவரையும் அமைதிப்படுத்த அந்த இளைஞனுக்குப் போதுமாகி விட்டது.
மூக்கின் இரத்தக் கசிவு சிறுபொழுதில் நின்றுபோனது. இருவரும் அஹற்மத்துக்கு நன்றி கூறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் போன திக்கையே சிறிது நேரம் பார்த்தபடி நின்ற அவன் நெஞ்சிலிருந்து அந்தப் பிஞ்சின் நினைவைப் பிரிக்க முடியாதிருந்தது.
தோளில் தொட்ட கைவிரல்கள் அவனைச் சுயஉணர்வுக்கு கொண்டுவரத் திரும்பி நோக்கினான். மனைவி ஜெசீமா நின்றுகொண்டிருந்தாள். அட. இத்தனை நேரமும் இவளை மறந்தல்லவா நான் நின்றிருக்கின்றேன் என்னும் நினைவு தோன்ற,
"பாத்திங்களா ஜெசீ நல்லாவே மூக்கு உராஞ்சுப் பட்டிருக்கு. இவ்வளவு ரெத்தம் வந்திரிக்கே” என்றவாறு தன் கையிலிருந்த கைக்குட்டையை விரித்து மனைவியிடம் காட்டினான். ஜெசீமா அமைதியோடு அவன் முகத்தை ஆராய்ந்தாள். அந்தக் கைக்குட்டையைவிட அவன் மனம் சிவந்திருப்பதை அது வெளிக்காட்டியது.
“வீட்டுக்குப் போவோம்.” என்றாள் ஜெசீமா,
"இதுக்குள்ளவா..? இப்பத்தானே வந்தோம் கொஞ்ச நேரம் இங்க இருந்திட்டுப் போகலாம். இப்பிடி உக்காருங்க.” என்றபடி அவள் கையைப் பற்றினான் அஹற்மத், அவன் வார்த்தைகள் மிக மென்மையாய் வெளிவந்தன.
உற்சாகமாகவே இருவரும் கடற்கரைக்கு வந்தனர். சிறு பொழுதுதான் கடந்திருக்கும், அதற்குள்தான் இத்தனையும் நடந்து விட்டிருந்தன.
02

ஜின்னாஹ் ஷரீபுத்தின் (ഗ്രീശരീ
அவன் மனம் குழம்பிப் போயிருப்பதை அவள் உணர்ந்தாள். மேலும் அங்கிருந்தால் அவன் மனம் அந்த நிகழ்ச்சியையே அசைபோடும், என்பதை அவள் அறிவாள்.
"இல்லங்க நாளைக்கி வரலாம் இப்ப போவோம் வாங்க” என்றாள் சற்றுப் பிடிவாதமாக அவள்.
பகலெல்லாம் உலகுக்கு ஒளியூட்டக் காய்ந்த கதிரவன் களைப்புற்றவனாய் காலிமுகக் கடலில் வீழ்ந்து மறைந்தான். அவர்களின் நீலநிறக் காரும் தெஹிவலையை நோக்கி நகர்ந்தது.
MZ. NSZ. V. Z 7 ZY 7 ́9N
வேலையில் இருந்து வீடு திரும்பிய அஹற்மத், வந்ததும் வராததுமாக தன் அலுமாரியைத் திறந்து எதையோ தேடிவிட்டு, அது இல்லாமையால் ஏமாற்றம் அடைந்தவனாக, ஜெசீமாவைக் கூவி அழைத்தான்.
அழைப்பின் அடுத்த வினாடி அவள் அவனண்டை நின்றாள். “என்ன?’ என்றாள் அமைதியாக. "இங்கிருந்த கைக்குட்டை எங்கே?’ அவள் பதிலுக்காக அவன் படும் அவசரத்தை வார்த்தைகள் தெளிவாக்கின.
"ஏன் கழுவிக் காயப் போட்டுட்டேன். நேத்துப் பட்ட ரத்தக்கறை அப்.பிடியே. எவ்வளவு கழுவியும் போகலெ” என்றாள் பதிலுக்கு அவள்.
இந்தப் பதில் அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்ததை அவன் முகம் வெளிப்படுத்தியது. அதை ஜெசீமா கவனிக்கத் தவறவில்லை. அவன் அங்கிருந்து விலகிப்போனதும், ஜெசீமா சிந்தனை வயப்பட்டாள்.
எப்போதுமே ஒரு நாளைக்குமேல் ஒரு உடையை அவன் அணிவதில்லை. ஒரு கைக்குட்டையைக் கூட நீரில் அலம்பத் தெரியாதவன். எல்லாம் அவளே செய்தாக வேண்டும். ஆனால்
03

Page 13
ஜின்னாஹ் ஷரிபுத்தின் ബബ്രു,ശ്രീശബ്ദ
நேற்று மட்டும் அந்த இரத்தக்கறை படிந்த கைக்குட்டையை அவன் தரவில்லை. அது ஏன்?
திருமணமாகி வருடங்கள் ஐந்தும் ஓடி மறைந்தன. விரும்பி இருவரும் தெரிந்து கொண்ட வாட்கைப் பொருத்தம், ஜெசீமாவின் அழகு, உயர்வான பண்புகள், மார்க்க ஞானத்தோடு கூடிய அறிவு, நிம்மதியான ஒரு குடும்ப வாழ்வுக்குப் பொருந்தும் ஒரு உத்தமப் பெண்ணாக அவளைக் காட்டின. அஹற்மத் அவள் மேல் எல்லையற்ற அன்பும். அவள் நற்பண்புகளில் நிறைந்த மதிப்பையும் வைத்திருந்தான்.
அவள் மனம்நோக, ஒருபோதும் அவன் பேசியதேயில்லை. பேச எண்ணியதும் இல்லை. அப்படி ஒரு சூழலை ஜெசீமாவும் ஏற்படுத்தியதுமில்லை எல்லாவற்றிலும் அவர்கள் ஒன்றிப்போனார்கள்.
பிறர்கண் பட்டவாறாய் இறைவன் அவர்கள் வாழ்வில் ஒரு பெருங் குறையையும் சேர்ந்து போகவிட்டான். எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாத ஒரு வெறுமையை அது அவர்களுக்குத் தந்தது. கொஞ்சி விளையாட ஒரு குழந்தைப் பாக்கியத்தை இறைவன் தரமறுத்தான்.
நகரிலிருந்து எல்லா மருத்துவமனைகளும், பெரும்பாலான மகப்பேற்று மருத்துவர்களும் முயன்றும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் அனைவருமே நம்பிக்கையூட்டவே செய்தனர். எவ்வளவோ மருத்துவப் பரிசோதனைகள், எவ்வளவு பணவிரயம், அலைக்கழிவு, காலவிரயம். எல்லா முயற்சிகளிலும் ஜெசீமாவைப் பொறுத்த அளவில் விடை சாதகமற்றே இருந்தன.
இனி முயற்சிகளுக்கு முழுக்குப் போட்டுவிடுவதே புத்தியென ஜெசீமா முடிவுக்கு வந்தாள். பரிசோதனைகள் அவளுக்கு, அலுப்பையும், வெறுப்பையும் தந்தன.
-04

ஜின்னாஹ் ஷரிபுத்தின் (ഗ്രഗ്രീശരീ
ஒருநாள் பேச்சு வாக்கில் ஜெசீமா அஹற்மதிடம் கேட்டாள், "ஏங்க புள்ளையொண்டு எடுத்து வளப்பமா?’ என்று.
மேலும் மேலும் வைத்திய முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருந்த அவன் ஆசையை, ஒரு குழந்தைக்கு ஜெசீமா கருக்கொள்ள வேண்டுமென்ற அக்கறையைக் கண்ட அவள், அவைகள் பயனற்ற முயற்சிகள் என்பதைத் திட்டவட்டமாக அறிந்து கொண்டதால், படித்த மனைவியான அவளுக்கு இதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை.
“என்ன ஜெசி திடீரென்னு இப்பிடி ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க? ஏன் நமக்கொரு புள்ள பொறக்க மாட்டான்னு தீர்மானிச்சிட்டீங்களா?”
எதிர்பார்ப்பில் நம்பிக்கை, அவன் பதில் கேள்வியில் தொனித்தாலும், ஏமாற்றத்தின் சாயல் முகபாவத்தில் தோன்றின. "வேறென்னங்க நாலஞ்சு வருஷமா எவ்வளவு முயற்சி பன்னிட்டோம், யார்யாரயெல்லாம் பார்க்கணுமோ எல்லாரையும் பாத்தாச்சி இனிப்பாக்கனுமெண்ணா புதுசாப் படிச்சு வாற டாக்டர்மாரத்தான் பார்க்கணும்” என்றாள் ஜெசீமா அலுத்துக் கொண்டவளாக.
சோபை இழந்த முகத்தோடு அவள் சொன்ன வார்த்தைகள் அஹற்மதின் மனத்தை வருத்த அவன் சொன்னான்,
"ஜெசீ எனக்கொரு சந்ததி வர்ரதா இருந்தா அது ஒங்கட ரத்தத்தோட சம்மந்தம் உள்ளதாகத்தான் இருக்கணும் ஆண்டவன் அப்பிடித் தரல்லாட்டி ஏண்ட ஆசையெல்லாம் மனசுக்குள்ள மறஞ்சே போகட்டும். "என்று.
அதைச் சொல்லும் போது அவன் வார்த்தைகளில் உறுதியும், நிதானமும் இருந்தது.
இரத்தக் கறைபடிந்த கைக்குட்டையை அஹற்மத் ஏன்
05

Page 14
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ബബ്രു,ശ്ര,ശ്രീശമീ இவ்வாறு பத்திரப் படுத்தினான்? ஜெசீமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைத் தேடியபோது அவனுக்கிருந்த அவசரம், "அதை நான் கழுவி விட்டேன்” என்ற போது முகத்தில் தோன்றிய ஏமாற்றம்.
அப்போது அவளுக்கொரு நாட்டுப் பழமொழி நினைவுக்கு வந்தது. அவளுடைய ஆச்சரியத்திற்கு அது பதிலாகவும் அமைந்தது.
"பிள்ளை இல்லாதவன் பிள்ளைக்கு ஆசைப்பட்டு சாணையை முகர்வானாம்.”
குழந்தைக்கு இடையில் கட்டும் அணையாடையைப் பிள்ளை இல்லாதவன் ஆசைக்கு முகர்ந்து பார்ப்பானாம். அது போலல்லவா இதுவும் இருக்கின்றது என ஜெசீமா எண்ணினாள்.
குழந்தைப் பேறு இல்லாததால் அஹற்மதிற்கு, அவன் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாதிருந்தது. குழந்தையின் இரத்தக் கறையைக்கூடக் கழுவி அகற்றிவிட அவன் மனம் இடந்தரவில்லை. அதனை ஒரு நினைவுப் பொருளாகப் பத்திரப்படுத்த அவன் மனம் எண்ணியிருக்கின்றது.
ஜெசீமாவுக்கு வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் தலைச்ை சுவரில் ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது அவளுக்கு. படுக்கையில் முகம்புதைத்து நீண்ட நேரம் அவள் அழுதாள். அது குறையாப் பெருஞ் சுமையாய் மனத்துள் கனத்தது.
தோளில் தொட்ட விரல்களின் ஸ்பரிசத்தால் திடுக்கிட்டுத் திரும்பிய ஜெசீமா பக்கத்தில் நிற்கும் கணவனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தாள். அருகில் அமர்ந்து ஆதரவாக அவள் தலையை அவன் கோதிவிட, அவள் அவன் மடியில் சாய்ந்து குமுறினாள்.
06

osT)gigi ബമൃഗുരശ് சிறிது நேரம் அவளை அப்படியே விட்டுவிட்ட அவன், சற்று அமைதியடைந்ததும் மிக நிதானமாக அவளோடு பேசலானான். அவன் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குக் குழந்தையின் தாலாட்டுப் போலவும், அவள் நொந்து போன நெஞ்சுக்கு இதமான ஒத்தடம் போலவும் இருந்தது.
“என்ன மன்னிச்சிடுங்க ஜெசீ. எவ்வளவுதான் நான் என் மனச மறைக்க நெனச்சாலும் என்ன அறியாம என் செய்கைகள் என்னக் காட்டிக் கொடுத்திடுது. எம் மேலே நீங்க வெச்சிருக்க அன்பால, ஏன்ட ஏமாத்தத்த ஒங்களால பொறுக்க முடியாம நீங்க இப்பிடியெல்லாம் கஷ்டப்படுறீங்க. அத நான் தெரிஞ்சுதான் என்னையே நான் மறச்சு வாழ்ந்திக்கிட்டிருக்கேன். எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்குது ஜெசி நமக்கு நிச்சயமாக ஒரு கொழந்த பொறக்கும்”
ஜெசீமாவுக்கு அழுகையை மீறிச்சிரிப்பே வந்தது. "இலவுகாத்த கிளியான’ அவனை எண்ணி அவள் வாய்விட்டே சிரித்தாள். அவன் அதற்கு தனக்குள் வேறு காரணம் கற்பித்துக் கொண்டான். அவள் தன்சமாதான வார்த்தைகளால் துன்பத்தை மறந்தாள் என்று.
தனியறையில் தன் பணிகளில் துரிதமாக இருந்தான் அஹற்மத் தொலைபேசி மணி அலறியது. றிசிவரைக் கையிலெடுத்து "ஹலோ!...” என்றான். ஜெசீமாதான் பேசினாள்.
கண்டியில் சிறிய தாய்க்கு கடுமையான சுகயினம் என்றும் நிலைமை கவலைக்கிடமாம் என்றும் கூறினாள். உடன்போக வேண்டுமென்ற அவள் ஆதங்கம் அவள் சொற்களிற் ஒலித்தது.
அஹற்மத் உடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டான்.
அவர்கள் இருவரும் அங்கு போய்ச் சேரும்வரை உயிர் காத்திருக்கவில்லை. இறுதிக் கிரிகைகளுக்காக காரியங்கள் 07

Page 15
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் (ഗ്രഗ്രീശബ് அனைத்தையும் அவர்களே முன்னின்று நடாத்தினர். பொருளாதார வசதியற்ற தனது சிறிய தந்தைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் கொழும்புக்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.
காலைத் தென்றலுக்குக் குயில்கள் இசை கூட்டும் இதமான வேளை சுபஹற் தொழுகைக்குப் பின் தினமும் திருக்குர்ஆனின் தூய வரிகளை ஒதும் ஜெசீமாவின் இனிய குரல் அதனோடு ஒன்றி ஒலித்தது. வழக்கம் போல தான் ஒதிய திருமறை வசனங்களின் பொருளையும் அவள் படிக்கலானாள்.
“அவன் விரும்பியதைச் சிருஷ்டிக்கின்றான். ஆகவே அவன் விரும்பியவர்களுக்கு, பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்தே கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களைச் சந்ததியற்ற மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் (அவர்களின் தகுதியை) நன்கறிந்தோனும் (தான் விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோனுமாக இருக்கின்றான்.” (42:49,50)
என்றுமில்லாதவாறு அந்த வசனங்களை அவள் மனம் பலமுறை மீட்டுக்கொண்டே இருந்தது. அவள் சிந்திக்கலானாள். இறைவனின் நாட்டம் இல்லையானால் எதுவும் நடக்க மாட்டா. என்னளவில் நான் ஒரு சந்ததி உருவாகத் தகுதியற்றவளாக இறைவனே முடிவு செய்துவிட்டான் போலும் என எண்ணும்பொது, அதனை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது போயிற்று.
நெஞ்சம் கணக்க கண்கள் ஆறாய்ப் பெருகின. ஏன் இந்தத் தண்டனையை இறைவன் எனக்குத் தந்தான்! என எண்ணி அவள் தேம்பினாள். இருந்தும், இறைவன் மீது அவளுக்கிருந்த எல்லையற்ற பக்தியால் காரணமின்றி அவன் எதையுமே செய்யான்
08

ஜின்னாஹ் வடிரிபுத்தின் ബഗ്ഗ ഗ്രീശബ്ദ
என்ற நம்பிக்கையால் அமைதி கொண்டாள். அத்தோடு "இந்தச் சோதனையை ஏன் என்னோடு, எந்தவித குறையுமற்ற என் கணவரும் அனுபவிக்க வேண்டும்” என்ற எண்ணமும் அவள் மனத்துள் கனத்தது. அதற்காக ஒரு மாற்று வழியையும் அவள் தேடலானாள். தினமும் ஒதும் திருமறையே அதற்கோர் பதிலையும் அவளுக்குத் தந்தது.
அன்றும் வழமைபோல ‘சுபஹற்’ தொழுகையின்பின், நீண்டதொரு பிரார்த்தனையில் தனைமறந்திருந்தாள் ஜெசீமா. பள்ளியில் தொழுகையை முடித்துக் கொண்ட அஹற்மதும் வீடுவந்து சேர்ந்தான். பருகத் தேனீர் தயாரித்துத் தந்துவிட்டுக் கணவன்முன் அமர்ந்து கொண்டாள். ஏதோ அவள் சொல்ல முனைகின்றாள் என்பதை அவள் பார்வையிலிருந்து அஹற்மதும் புரிந்து கொண்டான். அவள் பேசலானாள்.
"ஏங்க நீங்க இன்னுமொரு கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள் திடீரென்றே. எதிர்பாராத அந்த வார்த்தைகள் அஹற்மதை ஆச்சரியப்பட வைத்தாலும், அவள் விளையாட்டாகக் கூறுவதாய் எண்ணி,
"ஏன் ஜெசி என்னோடு வாழ உங்களுக்குப் பிடிக்கலியா?” எனக் கேட்டான். "இல்லங்க, என்னால ஒங்களுக்குத் தரமுடியாத ஒண்ன இஸ்லாத்தின் அனுமதியோட நீங்க வேறொருத்தி மூலம் பெத்துக்கலாம் என்னுதான்”
"நீங்க எதச் சொல்லுறீங்க ஜெசீ? ஒங்களால எனக்கு எதத் தரமுடியாமப் போச்சி! நீங்கதானே என்ன நல்லாவே பாத்துக்குறிங்க. நமக்கு ஒரு கொழந்த இல்ல என்கிறது தானே நமக்குள்ள உள்ள ஒரே கொற”
“பாத்திங்களா அது ஒரு கொறயா ஒங்களுக்குத்
தெரியுதில்ல” என அவனைச்சுட்டினாள் அவள். “மன்னிச்சுக்குங்க ஜெசீ, நீங்களே என்ன கிண்டிட்டு வேடிக்க பாக்கலாமா?”
09

Page 16
ஜிள்ளாஹ் ஷரிபுத்தீன் ബബ്രു,ശ്രീശമ്
"இல்லிங்க நான் ஒரு சுயநலம் புடிச்சவளா இருக்க
விரும்பல்ல. ஒங்களுக்கெண்னு ஒரு சந்ததி உருவாகனும், அதனால நீங்க இன்னுமொரு கல்யாணம் பண்ணிக்கணும்”
“நீங்க சொல்லுறாப்பல பண்ணிக்கிட்டா அவ ஒரு கொழந்தைய பெத்துக்குவான்னு எப்பிடி நம்பலாம் ஜெசீ”
"ஏன் முடியா? என்னப்போல பாக்கியமில்லாத பொம்பிளைங்க ஆயிரங்களுக்கு ஒன்னுதானே. ஒங்களில ஒரு கொறையும் இல்லாததனால, அது நடக்குமென்னு நான் நம்பறேன். எனக்காக எண்னாலும் நீங்க அத செய்யணும்.”
"ஜெசீ! முந்தியே நான் ஒங்களுக்கு சொன்னனில்ல அதத்தான் நான் இப்பவும் சொல்லுறேன் எனக்காக ஒரு சந்ததி வர்ரதா இருந்தா அது ஒங்க ரத்த ஒறவாலதான் வரணும். அதறீங்க மறந்திட்டிங்களா?”
"அப்பிடின்னா அது இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வழி தராதே’ கூறிவிட்டு அஹற்மத் வாய்விட்டுச் சிரித்தான்.
“இதுலே சிரிக்க என்ன இரிக்கிங்க, அதுக்கான வழியத் தேடிக்கிட்டுத்தானே நான் அந்த முடிவுக்கே வந்திரிக்கேன்” என்றாள் ஜெசீமா வார்த்தைகளில் அழுத்தம் சேர்த்தே.
அவள் வார்த்தைகளைச் செவியேற்ற அஹற்மதின் சிரிப்பொலி சட்டென அடங்கியது. அவளை அவன் ஏறிட்டு நோக்கினான். விழிகளில் ஆச்சரியம் பீறி நின்றது. வார்த்தைகளால் வினாத்தொடுக்க வழியில்லாது, அவன் விழிகளே பேச முயன்றன. அதற்குள் அவள் முந்திக் கொண்டாள்.
"கேளுங்க ஏண்ட ஒரு சின்னத் தியாகத்தால இரண்டு நல்ல காரியம் நடக்குமுண்ணா, அதச்செய்ய நான் தயாரா இரிக்கேன். என் அளவில நான் மனத்திடமாயும் இரிக்கேன்,
10

sisngip angtigil (ഗ്രീശബ്ദ அதில மத்தவங்க தியாகமுங் கொஞ்சம் கலந்தாகணும்”
அத்தோடு பேச்சை நிறுத்திய அவள் அஹற்மத்தின் முகத்தை அளந்தாள். அவன் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தபடி பேசாதிருந்தான். அவளே தொடர்ந்தும் பேசலானாள்.
"நீங்க ஒங்கமனசில என்னோட இன்னொருத்திக்கும் எடங்கொடுக்கணும்.
அதுமாதிரியே கல்யாணம் பண்ணி ஒருத்தியோட குடும்பம் நடத்துற ஓங்களோட விரும்பி வாழுற மனப்பக்குவம் ஒங்களுக்காக நான் தெரிவு செய்யும் பொண்ணுக்கும் இருக்கனும்” என்று நிறுத்தினாள்.
இந்த வார்த்தைகள் அஹற்மதுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. என்ன இவள் மணப்பெண்ணும் பார்த்துவிட்டாளா? என அவன் உள்ளம் அவனையே வினவியது. அடுத்த வினாடி அவள் சொன்ன சொற்கள் அவன் செவிப்பறையை சூடாக்கின.
"முஸம்மிலாவை நீங்க ரண்டாந் தரமா ஏத்துக்கணும். அவ இப்ப நம்ம பொறுப்பிலதானே இரிக்கிறா. நாதியில்லாத பொண்ணுக்கு நாமே தொணையாகவும் இரிக்கலாம்.” என்றாள்.
அஹற்மத் அதிர்ந்து போனான். ஒரு வாரத்திற்கு முன்தான் அவள் தன் தகப்பனோடு கண்டியிலிருந்து கொழும்புக்கு வந்திருந்தாள். இரத்த உறவுகள் எவருமில்லாத இடத்தில் தனித்து வாழ்வதைவிட தன்னோடு வந்து தங்கும்படி ஜெசீமாவே அஹற்மதின் விருப்பத்தோடு அழைத்திருந்தாள்.
"ஜெசி! நீங்க என்ன சொல்றீங்க. ஒங்களுக்கேன் இந்த விபரீத ஆசை வந்திச்சி?”
"நிதானமா யோசியுங்க. ஒரு படிச்ச மனைவி, மார்க்கத்தில கொஞ்சம் தெளிவுள்ளவள். ஆண்டவனால மனுஷனுக்குத் தரப்பட்ட சலுகைகள, அவன் கட்டுப்பாட்டுக்குள்ள, பயன்படுத்த 1

Page 17
ஜின்னாஹ் ஷரீபுத்தின் ൭ശമ് ஏங்க தடயா இருக்கணும்? தன்ன உசிரா மதிக்கிற புருஷனுக்காக ஒரு மனைவி இப்பிடியொரு தியாகத்தப் பண்ணக்கூடாது? சரியாகச் சொன்னா இது ஒரு தியாகமே இல்லிங்க. அதச் செஞ்சுகாட்ட நான் புறியப்படுறேன்!
அவள் வார்த்தைகள் செவிசுட அஹமத் பொறுமை இழந்தவனாய் உரக்கக் கத்தினான்.
"ஜெசீ ஒங்க அர்த்தமில்லாத தியாகத்திற்கு ஏன் ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்வு பலியாகணும். அதுட வாழ்வோட விளையாட நீங்க ஏன் துணியனும், ஒங்க சுயநலத்திற்கு இன்னொருத்தி பலியாகணுமா? சொல்லுங்க ஏன் பலியாகணும்”
"நியாயமான இந்தக் கேள்விக்கு நிச்சயமாக நான் பதில் சொல்ல வேண்டிவரும். இது எனக்கு முன்னமே தெரியும். அதுக்கான பதிலும் ஏங்கிட்ட தயாரா உண்டு கேளுங்க” என்ற அவள் மீண்டுந் தொடர்ந்தாள்.
"முஸம்மிலாவும், அவ வாப்பாவும் அதுக்குச் சம்மதிச்சிட்டாங்க” என முடித்தாள். அஹற்மத் நிலைகுலைந்து போனான். எவ்வளவு திட்டமிட்டு இவள் இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்திருக்கிறாள். அவனால் நம்பவே முடியாதிருந்தது. மீண்டும் அவளே பேசினாள்.
“நீங்க ஒருதரம் சொன்னிங்க எனக்கு ஒரு சந்ததி வருவதானா அது ஒங்கட ரத்தத்தோட சம்மந்தமுள்ளதா இரிக்கணும் எண்ணு, ஒங்களுக்கு நல்லாவே தெரியும். முஸம்மிலா என்ர சொந்தச் சாச்சிக்கும், வாப்பாவின் ஒரே வயிற்றுத் தம்பிக்கும் பொறந்தவ. இதிலும் பார்க்க நெருக்கமான ஒரு ஒறவு ஒலகத்தில இரிக்கவே முடியா, ஒங்க தீர்மானத்திற்கும் இது நல்லாவே பொருந்தும். அதனாலதான் நான் அவளத் தெரிஞ்செடுத்தேன். ஏண்ட விருப்பத்த நான் அவளுக்குச் சொல்ல ஆரம்பத்தில் அவ அத மறுத்திட்டா. என்வாழ்வில் பங்கு போட்டுக்க அந்த
12

ddOTITSio Gigligii ബ്ലേഗു ഗ്രീ.മീ
நல்ல பொண்ணு புறியப்படவேயில்ல. என் இக்கட்டான நெலமைய நான் வெபரமாச் சொன்னதுக்கப்புறம்தான் ஏத்துக்கிட்டா. மகள் சம்மதிச்சதாலே, சாச்சாவும் ஏத்துக்கிட்டார். இப்போ ஒங்க பதில் மட்டும்தான் எனக்கு வேணும்”
“இத்தனையும் பேசி முடிக்கும்வரை எதுவும் பேசாது அசைவற்றிருந்த அஹற்மத் திடீரென எழுந்து எதுவும் பேசாது அந்த இடத்திலிருந்து வெளியேறிச் சென்றான். ஜெசீமா அவனைத் தொடரவில்லை. அவனுக்குச் சிந்திக்கச் சந்தர்ப்பம் தந்து அமைதியானாள்.
வானில் தவழ்ந்துவந்த ஒலிஅலைகள், முடுக்கிவிட்ட வானொலியினுாடே புகுந்து "நற்சிந்தனை” களாகச் செவிகளிற் படிந்தன. சாளரத்தினுடே ஏகாந்தமான வானவெளியைப் பார்த்தவாறு தனித்து விடப்பட்ட அஹற்மதின் சிந்தனையையும் அவற்றின் சில திருமறை வசனங்கள் தூண்டி விட்டன.
”................ உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மூன்றுமூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (குர்-ஆன் 4:3) என இறைவன் கூறுகின்றான்.”
சொல்லி வைத்தாற்போல் அப்போதைய அவன் மனநிலைக்குப் பொருந்த அந்த இறைவசனங்கள் கூறப்பட்டன. அஹற்மத் சிந்திக்கலானான். சிறிது நேரத்தில் அவன் மனத்தில் ஒரு தெளிவு பிறந்தது. தீர்க்கமான ஒரு முடிவோடு அவன் மனைவி இருந்த இடம் நோக்கி நடந்தான்.
NSM X4 NAZİ ※ 米 ※
13

Page 18
தீண்டத்தகாத தானம்
61லைப் பத்திரிகை கண்ணில் பட்டதும் கையில் எடுத்துக் கொண்டான் கேசவன். பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் தன்னை அமர்த்திக் கொண்டு, பக்கங்களைப் புரட்டினான்.
மேலோட்டமாகத் தலைப்புச் செய்திகளில் மேய்ந்த கண்கள், கட்டமிடப்பட்டுப் புகைப்படத்தோடு கூடிய ஒரு விளம்பரத்தில் குத்திட்டு நின்றன.
வியப்போடு விழிகள் விரிய “பெரியப்பா” என்றது அவன் வாய்! எழுத்துவிடாமல் படித்து முடித்தாலும் உள்ளுணர்வுகளால் தூண்டப்பட மீண்டும் ஒருமுறை அதனை வாசித்துப் பார்த்தான்.
பெரியப்பாவை அவனுக்குத் தெரியும். ஆனால் அவரோடு ஒரு வார்த்தை தானும் பேசியதில்லை அவன். வளர்ந்து இத்தனை வயதாகியும் நேருக்குநேர் அவரை அவன் பார்த்ததும் இல்லை.
பெரியப்பா பெரும் பணக்காரர். பலவழிகளிலும் பொருள் சேர்த்து கிராமத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவராகவும் 14

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் (ഗ്രഗ്രീശ്മീ
திகழ்ந்தார். இரண்டு ஆண் மக்கள் அவரின் வாரிசுகள். பெரியம்மா இறந்துபோய் இரண்டு மூன்று வருடங்கள் ஆகிப்போனது அவனுக்குத் தெரியும்.
அண்ணன்மார் இருவரும் மேலைத்தேய வாசிகள் படிப்புக்கேற்ப தொழிலும் கிடைத்ததால் அங்கேயே நிரந்தரக் குடிகளாகினர்.
தகுதிக்கேற்ற குடும்பங்களில் திருமணம் செய்து வைக்கப்பட்டதால் ஆங்கிலத்தேசத்தின் அரவணைப்புக்கு அவர்கள் பொருந்திப் போனார்கள் பிறந்த மண்ணை மதிக்கும் பாக்கியம் வருடங்களாக நீண்டன.
பெரியப்பாவுக்கு வயது அறுபத்தைந்தைத் தாண்டி இருக்க வேண்டும். அப்பா சென்ற ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டதால் அதுவே சாத்தியம்.
நல்ல ஆரோக்கியமான தேகம் அவருக்கு. எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பாரென அறியப்பட்டவர். மேல்மட்டச் சகவாசம், மேல்நாட்டுச் சரக்குகளை உண்டு சுகிக்கும் பழக்கத்தை அவரோடு ஒன்றச் செய்தது. பொருளாதாரக் குறைவின்மையும், பெரியம்மாவின் இழப்பும் அப்பழக்கத்தை மிகைப்படுத்தின.
அப்பா பள்ளி வாத்தியார் அதற்குமேல் அவரால் உயர முடியவில்லை. அம்மாவும் அப்படியே கூடித்தொழில் செய்ததால் ஏற்பட்ட நெருக்கம், கூடிவாழும் நிலைமைக்குள்ளாக்கியது. குடும்பத்தின் பலமான எதிர்ப்புக்களையும் மீறி அப்பா அம்மாவைக் கரம்பிடித்தார். அதுவே அண்ணருக்கும் தம்பிக்குமிடையில் ஆறாப்பகையாக உருமாறியது.
அண்ணனின் வெறுப்புக்குள் வாழப்பிடிக்காத அப்பா அம்மாவோடு மலைநாட்டு வாசியானார். நானும் பிறந்தேன். எனக்கொரு தங்கையும் கிடைத்தாள்.
5

Page 19
ஜின்வாஹ் ஷரீபுத்தின் ബ്രക്രഗ്രീശ്
அப்பாவின் ஊர் எங்களுக்கு விடுமுறைகால வதிவிடம் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை போய்வருவோம். அங்கு அம்மாவின் சொந்தக்காரர்கள் மட்டுமே எங்கள் உறவுக்காரர்கள் தந்தைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட தொடர்புகள்.
உறவுக்காரர்களை அறிந்திருந்தும் அணுக முடியாத தொலைதூரத்தில் அவர்கள் தங்களை அமர்த்திக் கொள்ள அப்பாவோடு அம்மாவின் உறவு காலாக அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் புரியாதிருந்த ஒரு உண்மை நான் விபரந்தெரிந்தபோது அறிந்து கொண்டேன். அதன் பின் நானாகவே என்னையும் ஒதுக்கிக் கொண்டேன்.
அகன்றதொலைவில் அண்ணன்மார் வாழ்ந்தாலும் அவர்களே எனக்கு ஆதர்ஷமானார்கள். கல்வியில் அவர்கள் காட்டிய ஆர்வமும் உயர்ச்சியும் அப்பா சொல்ல நான் கேட்டு வந்ததால், எனக்குள்ளும் ஒரு வெறியை நானாகவே உருவாக்கிக் கொள்ள உதவியது.
வெளிப்புலன்களில் அதிகம் நாட்டம் கொள்ளாத நான் இன்று பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்குள் புக என்னை உயர்த்திக் கொண்டேன்.
கையில் பிடித்திருந்த பத்திரிகையோடு நினைவுகள் சுழல கடந்த காலத்துக்குள் மூழ்கியிருந்தவனை நண்பனின் குரல்தான் உணர்வு பெறச்செய்தது.
“என்ன மச்சான் லெக்சருக்குப் போறதில்லையே. போய் குளிச்சிற்று வாவன்ரா பேப்பரில என்ன போட்டிரிக்கினம்”
தலையை உயர்த்தி நண்பனைப் பார்த்த கேசவன் “பெரியப்பாவுக்கு கிட்னி பெயிலியராம் கிட்னி கேட்டுப் போட்டிரிக்கினம்’ என்றபடி விளம்பரத்தைக் காட்டினான்.
அதனைப் படித்த நண்பன் மிக அலட்சியமாய் "இதுக்கேன்
16

dhBITito Gigligësi ബ്രുരശ്രീശബ്ദ
நீர் இடிஞ்சுபோய் இருக்கிறீர். உம்மிட்ட கேட்டவியளே”
இருவருக்கிடையிலும் இருந்த நெருங்கிய உறவு ஒருவரைப் பற்றி மற்றவர் முழுமையாகத் தெரிந்து கொள்ள வைத்திருந்தது. கேசவனின் குடும்பத்தை அவன் தந்தையின் குடும்பத்தார் எத்தனை ஒதுக்கிவைத்திருந்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்கு முற்றுமுழுக்காரணமே இந்தப் பெரியப்பாதான். அவன் சொல்ல நண்பன் தெரிந்திருந்தான். கேசவன் அமைதிகாத்தான். நண்பனே மீண்டும் பேசினான்.
"அட அவங்க பணக்காரங்கடா. காசிருந்தா இப்ப எதையும் வாங்கலாமடா. உதபாத்தா நூறுபேர் கியூவில் நிற்பாங்க. அதுதான் கிட்னி தாறவியளுக்கு நல்ல சன்மானம் உண்டு எண்டு போட்டிரிக்கினமல்ல' என்றான்.
“இல்ல மச் சான்.' கேசவன் ஏதோ சொல்ல வாய்திறந்தான்.
“என்ன இல்லமச்சான் லொள்ள மச்சான். நீ என்ன கிட்னி தரப் போறிய. விசரா போடா போய் குளிச்சிற்று வா நேரம் போகுது” என்றபடி சங்கரன் தோள் துண்டப் போட்டபடி சவற்காரமும் கையுமாய் குளியல் அறைக்குள் நுழைந்தான்.
நண்பன் போனதும் கேசவனின் மனம் பழைய நினைவுகளுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு தேடலாயிற்று. பிறந்த மண்ணைத் துறந்து பேர் ஊர் அறியாத இடத்தைப் புகலிடமாக்கிக் கொண்டு வாழும் நிலைமை ஏற்படப் பெரியப்பரே காரணமாக இருந்ததை எண்ணி எண்ணி அவன் மனம் வருந்தியது. தந்தையார் செய்து கொண்ட திருமணம் அவரை அவ்வாறு செய்யச் செய்திருந்தது.
மீண்டும் ஒரு முறை விளம்பரத்தைக் கண்கள் மொய்த்துக் கொள்ள விளம்பரங்களைத் தேடினான். தனக்குரிய இரத்தப்
பிரிவே பெரியப்பாவுக்கும் "ஏ-பொசிடிவ்' என்றிருந்தது.
7ן

Page 20
airGITipagtigit ബഗ്രഗ്രീശബ്ദ
அவனுக்குத் தெரியும் தானம் தருவதில் முதற்தெரிவு நெருங்கிய உறவுக்காரர்கள் என்பது. அண்ணன்மார் இருவரில் ஒருவர் பொருத்தப்பாடாக அமைந்திருந்தால் தந்திருக்க வாய்ப்புண்டு. இந்த விளம்பரத்துக்கே அவசியம் ஏற்பட்டிருக்காது. தன்னிலும் அவர்களே சாலப் பொருந்தவும் செய்வார்கள் என அவன் மனம் எண்ணியது.
எது எவ்வாறாயினும் இன்று பெரியப்பாவுக்கு "கிட்னி” ஒன்று வேண்டும். அவர் உயிர் வாழ வேண்டும். அதற்கான பொருத்தப்பாடு தன்னில் முற்றும் இருப்பதாக அவன் எண்ணிய போது மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒரு ஒளிக்கிற்றுத் தோன்றுவதை அவன் உணர்ந்தான்.
மறுநாட்காலை சூரிய ஒளியால் வெளிறிக்கிடந்தது வானம். கேசவன் மனமும் அவ்வாறே துலக்கமுற்றுக் கிடந்தது. அவன் குளித்து உடைமாற்றிக் கொண்டான். நண்பனிடம் பேச்சுக் கொடுக்க அவன் மனம் துணியவில்லை. தனது முடிவை நண்பன் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தன்மீதுள்ள பற்றும் சாதி வெறி கொண்ட பெரியப்பாமீது அவன் கொண்ட வெறுப்பும் மனத்தை மாற்றக்கூடும் என அவன் அஞ்சினான். பொய்யான ஒரு காரணத்தைக் கூறிவிட்டு புறப்பட்டான்.
பெரியப்பா அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்குள் கேசவன் நுழைந்தபோது கோவிந்தர் அவன் கண்களில் பட்டார். உறவுக்கு அவர் மாமன் முறையாவார். பெரியம்மாவின் தம்பி முறைக்காரர்.
தன்னைக் கண்டதும் தலையைத் திருப்பிக் கொள்வார். என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. கேசவனைக் கண்டதும் ஏனோ அவர் விழிகள் மலர்ந்தன. அவராகவே பேசலானார்.
“என்ன கேசவா ஆரப்பாக்கவந்தநீ” என்றார் ஒரு
18

di Tin) fissifi (ഗ്രീശ്
இளநகையை முகத்தில் இளையவிட்டவாறே.
"பெரியப்பாவைப் பத்திப் பேப்பரில படிச்சன் இப்ப எப்படி இரிக்கறார்’ என்றான். வார்த்தைகள் வெறுமையாகவே வெளிவந்தன உறவு சொல்லிப்பேசும் உரிமையற்றுப் போனதால்.
"ஒமப்பா மேல்மாடியில பத்தாம் நம்பர் அறை. வாரும் போவம். நான் அவருக்குச் சொல்லுறன்” என்றார்.
“வேணாம் சொல்லாதீங்கோ. என்னப்பாக்க அவர் புறியப்படமாட்டார். இப்ப என்ன செய்யினம்”
"இப்ப" "டயலிசிஸ்” எண்டு செய்கினம் கிட்னி கெடச்சா "ஒப்பரேசன்” செய்வினையாம்” என்றவர் தொடர்ந்து.
‘அணி ணன் மார் ரெணி டு பேரும் ஆளுக்குப் பத்துப்பத்தெண்டு என்ர பேருக்கு அனுப்பி இரிக்கினம். வேணுமெண்ட மட்டும் காசு அனுப்பறதாக சொல்லுகினம். இண்டைக்கும் பேசினவய’ என்றவாறு தன் கையடக்கத் தொலைபேசியை பெருமையோடு காட்டினார்.
"நானும் பேப்பரப் படிச்சநான் பெரியப்பாவுக்கு என்ற கிட்னியில ஒண்டக் குடுக்க எனக்குப் புறியம். அதச் சொல்லத்தான் வந்த நான்”
கேசவன் வார்த்தைகள் கோவிந்தரின் செவிகளில் தேனாக இனித்தன. இத்தனை எளிதாக ஒரு காரியம் ஆகுமென அவர் எண்ணி இருக்கவில்லை. முகம்மலர அவனை வாஞ்சையோடு நோக்கினார்.
நொடிக்குள் அவருக்கோர் சந்தேகமும் தோன்றி மறைந்தது. இது இரத்த பாசத்தின் விளைவா அல்லது பதிலுக்குக் கிடைக்கும் சன்மானத் தொகைக்காகவா என்று.
"ஒப்பரேஷேன் முடியுமட்டும் நான் பெரியப்பாவுக்கு கிட்னி
19

Page 21
ஜின்னாஹ் ஷரிபுத்தின் ്വമൃമിശീ தாறவிசயம் ஒருவருக்கும் தெரிய வேணாம். அவருக்கும் தெரிய வேணாம் என்ர அம்மா அப்பாவுக்கும் தெரிய வேணாம்' என்றான் கேசவன்.
அதன் உள் அர்த்தங்களை நன்றாகப் புரிந்து கொண்ட கோவிந்தர் மூச்சுவிடப் போவதில்லை எனச் சத்தியம் செய்தார்.
சிகிச்சைக்குள்ளாக்கப்பட்ட பெரியப்பாவும் தானம் செய்த மகனும் ஒருவாறு குணமாகி ஊர் வந்து சேர்ந்திருந்தனர்.
ஆரம்பத்தில் அழுது புரண்ட அம்மா, பிள்ளையின் தியாகத்தால் பூரித்துப்போன அப்பா இருவரின் வேறுபட்ட உணர்வுகளுக்குள் திணறிப் போனான் கேசவன்.
மாதங்கள் இரண்டு ஓடிக் கழிந்தன. எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் ஆனபோது அண்ணரிடமிருந்து அழைப்பொன்று வந்தது கேசவனின் தந்தைக்கு.
எதிர்பாராத அந்த அழைப்பு அவரை அதிர்ச்சி கொள்ளச் செய்யவில்லை. தனது மகனின் பரோபகாரத்தை வாயாரப் புகழத்தான் வரும்படியான அழைப்பு என்று அவர் எண்ணினார். ஏற்பட்டிருந்த பகைமையை மறந்து தம்மை ஏற்றுக் கொண்டதற்கான உவகை அவருக்கு. மனைவியை அழைத்தார் ஆரம்பத்தில் மறுத்தாலும் சுமுகமான ஒரு சூழ்நிலை தோன்றவேண்டும் என்ற எண்ணத்தில் கணவனுக்கு உடன்பட்டாள் கேசவனின் தாய்,
தம்பியும் மனைவியும் வரும் செய்தி அறிந்த அண்ணன் வாயில் வரை வந்து காத்து நின்றார். வரவேற்பு பலமாக இருப்பது வந்தவர்கள் இருவருக்கும் வியப்பைத் தந்தது. படியேற முயன்றனர். அண்ணன் முந்திக் கொண்டார். கையில் தாங்கியிருந்த பொட்டலத்தைத் தம்பியின் முன் நீட்டியவராய்.
"இதுல பத்துலெச்சம் இரிக்கி உன்ர மகன் எனக்கு
20

siGITip agliliit (ഗ്രഗ്രീ.മമ്
கிட்னி தானம் பண்ணினதுக்கு வாங்கிக்கோ” என்றார் முகத்தில் எந்தவித களையுமற்றவராய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும் எண்ணியதற்கு மாறாய் ஏற்பட்ட அனுபவம் அவர்களை நிலை குலையச் செய்தாலும், பெண்மனம் நிதானித்துக் கொண்டது. கணவனின் கையைப் பற்றிக் கொண்டாள் கேசவனின்தாய்.
“வாருங்கோ நமது பிள்ளை தானம்தான் செய்தான். இது நாம் தீண்டத்தகாத பணம்” என்றவாறு அவருக்கு புறம்காட்டி நடக்கலானாள்.
அவர்கள் திரும்பிச் செல்வதை, தீண்டத்தகாதானால் உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெரியப்பா வெறித்து நோக்கிய வண்ணம் கல்லாய்ச் சமைந்து நின்றார்.
N零/ ゞ愛/ >愛/ 7′N 77°V 277 &
21

Page 22
பச்சக் கஞ்சன்
“f. பச்சக்கஞ்சன். ஒரு சதத்தையும் எளக்கமாட்டான். போலிரிக் கி. இவனுக் கெல்லாம் அல்லா பணத்தக் குடுத்திரிக்கானே'
வெறுப்போடு. மிகவெறுப்போடு அந்த மனிதன் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் புறப்பட்டன. புனித ரமலான் மாதத்தை இரக்கும் மாதமாக மாற்றிக் கொண்ட பஞ்சத்தாண்டிகளில் அந்தமனிதனும் ஒருவன்.
"இஸ்மாயீல் முதலாளி புதுப்பணக்காரர்தான்” பதினைந்து இருபது வருடங்களுக்குள் இத்தனை சொத்துக்கள் எப்படித்தான் சேர்ந்ததோ” என்று அறிந்தவர்கள் எவரும் அங்கலாய்க்க
DIT LILLITTG56T.
இளமையில் இருந்தே அவரின் கடுமையான உழைப்புக்கு இறைவன் தந்த வெகுமானந்தான் அது. வெறும் மாதச்சம்பள ஊழியனாக ஆரம்பித்த வாழ்க்கை. நம்பிக்கையும் நாணயமும் 22

dahSThio Gigligii (ഗ്രഗ്രീശബ്ദ
மூலதனமாக, நல்வழியில் பொருள் சேர்ந்தது.
பாடுபட்டுச் சேர்த்த பணமாதலால் எதிலும் வீண்விரயம் இல்லாதவாறு, எல்லாமே அசையாச் சொத்துக்களாகத் தேறின.
நான்கு குழந்தைகள் ஒருத்திதான் பெண் அதிலும் இறைவன் குறைவைக்கவில்லை. எல்லாவற்றிலும் நல்ல சொத்துக்களாக அவர்களும் வளர்ந்தனர்.
வருடாவருடம் வரும் நோன்பு மாதத்தில் ஊர் பணக்காரர்களின் வீடுகளின் முன்னால் சேரும் கூட்டம், எந்த வருடத்திலும் இஸ்மாயீல் முதலாளியின் வீட்டின் முன் கூடுவதில்லை.
மற்றமாதங்களில் திறந்து கிடக்கும் வாயிற்கதவுகள் அந்த மாதத்தில் மூடியே கிடக்கும். நோன்பு மாதங்களில் உருவாகும் தற்காலிக யாசகர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நாட்டமிருக்கவில்லை.
தட்டப்பட்ட கதவு திறக்கப்படாமையால் ஏற்பட்ட வெறுப்புத்தான் அந்த மனிதனை அவ்வாறு இகழ்ந்துரைக்கச் செய்தது.
கூடவந்த மற்ற மனிதன் ஒத்துப்பாடினான் "எச்சித்தனம் இருந்ததால்தான் இவனுக்கெல்லாம் பணஞ்சேந்திச்சி வாங்க அந்தப் பெரிய ஊட்டுக்குப் போவம் சனங்களெல்லாம் ஒதுங்குது” என்றவாறு தோளில் தொங்கும் தற்காலிக "சோளியல்” பையை தன் தோள் பட்டையை உயர்த்திச் சரிசெய்தவாறு நடக்கத் தொடங்கினான்.
வெளியூரில் வசிக்கும் ஒரு உள்ளுர் ஹாஜியார் ஆளுக்கு ஐம்பது கொடுப்பதாகக் காற்றில் கரைந்த சேதி ஊர் மக்களை அவர் பரம்பரை வாசஸ்த்தலத்தில் கூட வைத்தது. அந்தக்
23

Page 23
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் வேரனுந்த நாட்கள்
கூட்டத்தோடு அவர்கள் இருவரும் காணாது போனார்கள்.
சேர்ந்த கூட்டத்தில் அரைப்பங்கு முடிய முன்னரே 'பை காலியாகிவிட்டதால், கதவுகள் இழுத்து மூடப்படமுண் ஹாஜியாரின் வாகனம் வாயு வேகத்தில் வெளியேறிச் சென்றது.
முந்திக்கொண்ட ஒருத்தி சொன்னாள். "ஆண்டவனே ஹாஜியாரின் "ஹயாத்தை நீளமாக்கு” என்று. வருடம் முழுவதும் தன் உழைப்பால் சோறிடும் தன் கணவனை எண்ணி என்றாவது ஒருநாள் இவ்வாறு பிரார்த்தித்தது இருப்பாளோ ஆனால் ஒருவருடத்தில் ஒருநாள் கிடைத்த அந்த ஐம்பது ரூபாய்க்காக அவள் மனம்நெகிழ்ந்து பிரார்த்தித்தாள்.
மாறாக எதிர்பார்த்து வந்தும் கிடைக்காத சிலரின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளாகக் கொட்டிச் சபித்தன.
தன் சொத்தில் நூற்றுக்கு இரண் டரை வீதம் வறியவர்களுக்கு கொடுப்பதன் மூலம் தன் தேட்டங்களைத் தூய்மைப்படுத்த இறையிட்ட கட்டளையை, ஒவ்வொருவரும் எவ்வாறெல்லாமோ நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
முன்போல் ஊரறியச் செய்பவர்களும், தாங்களே வீடுவிடாய்ச் சென்று தம் கைகளாலேயே தருபவர்களும் ஆட்களை அமர்த்தி, பட்டியல் போட்டுப் பங்கிடுவோரும், இரண்டாம் பேருக்குந் தெரியாமல் தனக்கும், பெறுபவருக்கும் தவிர படைத்தவன் மட்டும் பார்த்திருக்கத் தருபவர்களுமாக எத்தனை வகைகள்.
இஸ்மாயீல் ஹாஜியார் இந்த வகையில் எந்தவகையைச் சேர்ந்தவரோ? எவரும் அறிந்திருக்கவில்லை. பொதுவாக நோன்புகாலம் வந்தால் எல்லோரும் அவருக்குச் சூட்டுவது கஞ்சன் என்ற திருநாமமே.
பொதுவாக ஊர் தேவைகள் வரும்போது மட்டும் மற்றவர்களுக்கு ஈடாகத் தன்பங்களைச் செய்தாலும் அவருக்கு 24

ஜின்னாஹ் ஷரிபுத்தின் வேரனுந்த நாட்கள
இந்தப் பெயர் தற்காலிகமாக வந்தே போகும். அவர் அதனை அறிந்தே இருந்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை.
தினமும் வழக்கம்போல "தராவிஹற்’ தொழுகை முடிந்து 11ள்ளியில் இருந்து வெளிவந்த இஸ்மாயீல் முதலாளியின் கண்களில் முதற்பட்டது காசீம்தான்.
காசீம் சலாம் சொன்னான். அவரும் பதில் சொன்னார். இருவரும் புன்னகைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
வழியை மாற்றி நடக்கமுயன்ற காசீமை இஸ்மாயில் (முதலாளி பெயர்சொல்லி நிறுத்தினார்.
“காசீம் இப்ப எப்பிடி பிசினஸ்' என்றார்.
“இப்பவும் பெமண்ட்’ யாவரந்தான் முதலாளி” என்றான் காசீம் பதிலுக்கு.
“வரும்படியெல்லாம் எப்பிடி? தொழில் நல்லா நடக்குதா?” “ஒருமாதிரி ஓடுது முதலாளி. நல்ல மொதலிருந்தா, தெண்டிச்சி கொஞ்சம் கூடச் சம்பாதிக்கலாம். இப்ப இரிக்கிற மொதல்ல அல்லா ஒதவியால வயிறு காயாம போகுது”
தன் கேள்விக்கு காசீம் தந்த பதில் அவர் அடிமனத்தைச் சற்று உசிப்பிவிட்டதை முதலாளி உணர்ந்தார்.
பதில் சொல்லிமுடித்த காசீம் தன்னைவிட்டால் போதுமென எண்ணியவனாக விடைபெற முயன்றான். இவரிடமெல்லாம் மேலும் விளக்கம் சொல்லுவதால் என்னதான் பயன்வந்திடப் போகின்றது. தரவா போகின்றார் என நினைத்தான். அவரைப்பற்றி ஊரின் 1ணிப்பும் அதுதானே.
காசீம் நல்ல முயற்சியுள்ள உழைப்பாளி என்பதும் நாணயமானவன் என்பதும் இஸ்மாயீல் ஹாஜியாருக்குத் தெரியும். பொருளாதார வசதிக்குறைவே அவன் முயற்சிக்குக் கைதர. வில்லை என்பதனை இப்போதுதான் அவரால் அறியமுடிந்தது. 25

Page 24
#BaiiiGTITalio Gingflugiōfil (ഗ്രഗുരശമീ
“காசீம் கொஞ்சம் என்னோட வீட்டுப்பக்கம் வாறியா” என்றார் அவள் அவனை ஏறெடுத்தவராக. காசீமுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தும் ஏனென்று அறியும் ஆவலோடு “ஏன் முதலாளி” என்றான்.
"வாவேன்” என்றபடி அவன் மறுகேள்விக்கு இடந்தராமல் அவர் வீடுநோக்கி முன் நடந்தார். காசீமுக்கு மறுக்க வழியில்லாது அவரைப் பின் தொடர்ந்தான்.
வாயிற்படியில் நின்றவாறு அழைப்புமணியை அவர் அழுத்தினார். சில வினாடிகளுள் கதவு திறந்து கொண்டது. அவர் மனைவி தன்னைப் பிறிதொருவர் கண்டு கொள்ளாதவாறு தன்னை மறைத்துக் கொள்ள உள்ளே சென்றாள்.
வீட்டினுள் கால்வைத்த முதலாளி பின்நோக்கி காசீமை உள்ளே அழைத்து உட்காரும்படி கூறி தானும் முன்வராந்தையில் உட்கார்ந்து கொண்டார்.
காசீமுக்கு அத்தனையும் ஆச்சரியத்தையே தந்தன. இதுகாலவரை அந்த வீட்டின் வாயிற்படியைக் கூட மிதிக்க முடியாதவாறு அந்தஸ்த்து என்னும் பொய்த்திரை தடையாக இருந்தது.
வந்தவரை உபசரிக்க அவர் மனைவி சில திண்பண்டங்களையும் தேனிரையும் தன் சின்னமகன் மூலம் அனுப்பிவைக்க தானும் எடுத்துக் கொண்டு காசீமையும் உண்ணும்படி கூறினார். இஸ்மாயீல் முதலாளி.
அமைதியாக இருவரும் தேனிர் அருந்தியபடி சிறிது நேரத்தைக்கடக்க விட்டனர். அதன்பின் முதலாளி எழுந்து தன்தனி அறையுட் புகுந்தார். சில நிமிடங்கள் காத்திருந்த காசீம் அவர் உள்ளே அழைப்பதைக் கேட்டதும். ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, இயக்கிவிட்ட இயந்திரமானான்.
26

AiiGMTgano Gingflugilfin (ഗ്രഗ്രീശബ്ദ
"உட்கார்” என்றார் தன் மேசைக்கு எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டியவாறே. அறைக்குள் மின்விசிரியின் ஆதிக்கம் பலமாக இருந்தபோதும் அவன் மேலுதட்டில் வியர்வை துளிர்த்தது.
எதுவும் பேசாது அவர் காட்டிய ஆசனத்தின் ஓரத்தில் அவன் தன்னை அமர்த்திக் கொண்டான்.
இஸ்மாயீல் முதலாளி பேசலானார். “காசீம் நீ நல்ல உழைப்பாளி. நாணயமானவன் என்பதும் எனக்குத் தெரியும். ஹலாலாக உழைக்க முயற்சிப்பவன். ஒருகாலத்தில் நானும் உன்னைப் போல்தான் இருந்தேன். என் நேர்மையான உழைப்புக்குப் பலன்தான் ஆண்டவன் எனக்கு இப்போது தந்திருக்கும் வாழ்வு. எனக்கோர் நம்பிக்கை உண்டு. எதிர்காலத்தில் நீயும் என்னைப்போல் வாருவாயென்று. இப்படித்தான் ஒருநாள் என் முதலாளி எனக்கும் ஒருவாழ்வு காட்டினார். அவர் பெயர் நிலைக்க நானும் ஒரு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். இது வழிவழி தொடரப்படவேண்டும். அந்த நல்ல மனிதரின் பங்கில் நன்மைகள் சேர வேண்டும்.
இதோ இதை மூலதனமாக வைத்துக்கொண்டு ஒரு நல்ல தொழிலை ஆரம்பி. இதில் இருபதாயிரம் ரூபாய் இருக்கின்றது. இந்தவருடம் எனது சக்காத்துப் பணத்தின் ஒருபகுதிதான் இது. இன்ஷா அல்லாஹற் ஆண்டவன் உனக்கு உதவுவான். எனக்கு நீ செய்யும் ஒரு உதவி இதைப்பற்றி எவரிடமும் சொல்லி விடாதே. என்றவாறு ஒரு பணக்கட்டை அவன் கையில் திணித்தார். இஸ்மாயில் முதலாளி.
காசீம் கற்சிலையானான். முதலாளியை இமைக்காது நின்ற அவன் கண்கள் கசிந்தன. பேச நா எழவில்லை. மனம் மட்டும் பேசியது.
கஞ்சன். பச்சக்கஞ்சன் என்று.
27

Page 25
வருமுன் காப்போன்
அன்று வழக்கம் போல் காலை ஒன்பது மணியிருக்கும். எனது 'டிஸ்பென்சரி யுள் நான் கால்வைத்த போது எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. சிலர் நின்று கொண்டும் இருந்தனர்.
அங்கிருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு நான் உள்ளே நுழைந்தேன். பலர் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்தனர். இயலாதவர்கள் தங்கள் சங்கடத்தை முகத்தில் காட்டினர். நகர்ப்புறத்தை அடுத்துள்ள பிரதேச மக்களாதலால், பழைமையான நமது மரபுகள் இன்னும் பேணப்படுகின்றன. அதில் எனக்கு எப்போதும் ஒருவகைத் திருப்தி இருந்து வந்தது.
கொழுத்துப் பருத்த ஒரு மூதாட்டி தானும் எழுந்திருக்க முயலுவது கண்ட நான், வேண்டாமென்று சைகை காட்டியபடி அறைக்குள் புகுந்தேன்.
தரப்பட்ட இலக்கப்படிதான் ஒவ்வொருவரும் உள்ளே நுழைய வேண்டும். அது எங்கும் பொதுவான விதி. அந்தப்
28

aldıEITalip Glaflığü G്യഗ്രൂശ്മീ
பிரதேச மக்களுக்கும் பழக்கப்பட்ட முறை. இருப்பினும், அவசர நிலைமைகளைச் சமாளிக்க வேண்டின், சிலபோதுகளில் விதிமுறை மாறுவதும் உண்டு. அதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை. மனித நேயம் முன் நிற்கும்.
அறையுள் சென்று சுழல் நாற்காலியில் என்னை இருத்திக் கொண்ட எனக்கு முதலில் அழைக்க அந்த மூதாட்டியே நினைவில் வந்தாள். சில நாட்களாக தனது நீரிழிவு வியாதிக்கு றளசிபோட்டுக் கொள்ள என்னிடம் வந்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு மருந்து ஏற்ற வேண்டிய நேரம் கடந்து போனாலும் வேறுவழி இருக்கவில்லை. எனக்கு ஒன்பது மணிக்கு (முன் கொழும்பிலிருந்து வர முடிவதில்லை.
எனது மருத்துவத் தாதி நன்கு பயிற்சியுள்ளவள். பல வருடங்களாக என்னிடம் வேலை செய்கின்றாள். எனது நடவடிக்கைகளில் அவளுக்கு நல்ல அனுபவம் இருந்தது. என் முதற் பணி அந்த மூதாட்டிக்கு ‘இன்சுலின் மருந்து ஏற்றுவதாகத் தான் இருக்கும் என்பதால், அதற்குரிய ஆயத்தங்களை அவள் செய்தாள்.
மூதாட்டிக்குச் சிரமம்தர மனமில்லாத நான் வெளியில் அவளண்டை சென்று மருந்தை ஏற்றினேன். அங்கிருந்த சிலர் கண்களை இறுக மூடிக்கொண்டனர். ஊசி தோலைத் துளைக்க, மூதாட்டியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் பக்கத்தில் இருப்பவர்களின் முகங்களையும் கோணச் செய்யும் பாவனைக்குத் தூண்டியது.
மருந்து தோலிடையுட் புகுந்ததும், ஊசியைப் பின்வாங்கச் செய்தேன். அத்தோடு பக்கத்தில் இருந்த பெண்மீது என் பார்வை படர்ந்தது. பரிச்சயமான முகம். நீண்ட நாட்களின் பின்
காணுவதால் பெயர் மறந்து போயிருந்தது. அவள் பெயரை நினைவுகொள்ள முயன்றேன்.
29

Page 26
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ബ്രീശുശ്രീശബ്ദ
முன்போலல்லாது இப்போது எதுவும் நினைவுக்கு வருவதில்லை. வயதும் ஒரு காரணம்தான். முன்னர் பச்சைக் குழந்தையிலிருந்து படுகிழவர்கள் வரை எனது மனத்தில் அவர்களின் பெயர்களை, ஊன்றிப் பதிய வைத்திருந்தேன். எனக்கு அத்தனை நினைவாற்றல்.
கல்லூரிக் காலங்களிலும் நான் விரிவுரைகளை செவியூடேதான் மனத்தில் பதித்துக் கொள்வேன். பரீட்சைக் காலங்களில் புத்தகங்களின் உதவியே பெரிதும் கைகொடுக்கும். எழுதும் பழக்கம் எனக்கிருந்ததில்லை.
நாற்பதைத் தாண்டும் போது என்னையும் அந்த இன்சுலின் வியாதி நண்பனாக்கிக் கொண்டதால் இன்று என்னோடு அதற்கும் வயதேறிப்போய் நினைவாற்றலையும் குறையச் செய்துவிட்டது.
அந்த நாட்களில் ஊர் கிராம சேவகர் சொல்வார். “மாத்தையா இந்தப் பகுதி மக்களில் அனேகரின் பெயர்கள் உங்களுக்கும் எனக்கும்தான் தெரியும்” என்று. ஒரு சிரிப்பான நிகழ்வினை இங்கு குறிப்பிடுவது பழைமையை நினைவூட்டும் ஒரு மகிழ்வான அனுபவம்.
ஒரு நாள் சுரத்தோடு சிறுவனொருவனை அவன் தந்தை என்னிடம் அழைத்து வந்தார். சிறுவனுக்கு வயது ஐந்துதான் இருக்கும். வழக்கமாக அந்தக் குடும்பம் என்னிடம்தான் வைத்தியத்திற்கு வரும். பெரும்பாலும் தாய்தான் அழைத்து வருவாள்.
சிறுவனைப் பரீட்சித்து முடிந்ததும் பெயரென்ன என்று தகப்பனிடம் கேட்டேன். அவர் ஒரு பெயரைச் சொன்னார். அதனை எழுத என் கை மறுத்தது. பெயரில் ஏனோ எனக்கோர் சந்தேகம். அவரைப் பார்த்து 'பெயர் சரிதானா? என்றன். அவர் "ஆம்" என்றார். எனக்கு அப்போதும் திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் “சரிதானா?” என்றேன். அந்த மனிதருக்கு எரிச்சல் வந்திருக்க
30

sii.III fiii (ഗ്രഗ്രീശബ്ദ
வேண்டும். அவள் பதிலில் அது தொனித்தது. "எனது பிள்ளையின் பெயர் எனக்குத் தெரியாதா என்ன? அவன் பெயர் அதுதான்.” என்றார் அவர் கூற்று சரியாக இருந்தாலும், இன்னும் எனக்குப் பெயரில் நம்பிக்கை பிறக்கவில்லை. பெயரை எழுத என் கரம் மறுத்தது. சிறிது நேரம் நான் எனது சிந்தனைக்கு இடந்தந்தேன். பெயர் நினைவுக்கு வந்தது.
எனக்குத்தான் வெற்றி. அவரைப் பார்த்து பிள்ளையின் பெயரை நான் சரியாகச் சொன்னேன். மனிதனின் முகத்தில் ஈயாடவில்லை. வெட்கிப்போனார். “மன்னியுங்கள் ஐயா நான் சொன்னது எனது மூத்த மகனின் பெயர்” என்றார்.
இதுபோன்ற பல நிகழ்வுகள் என் நினைவாற்றலை நிறுவ என்னால் சொல்ல முடியும். ஆனால் இன்று.
மூதாட்டியின் பக்கத்தில் இருந்த பெண்ணின் பெயருக்காக என் மனம் தேடலுற்றது. அவளுக்கும், அங்குள்ள மற்றவர்களுக்கும் என் நினைவுத் திறனை வெளிப்படுத்த வேண்டும்போல் ஒரு அவசியமற்ற ஆசை.
சிறிது நேரத்தில் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது. நான் அவளைப் பார்த்து “ஒயா சோமா நேத?’ என்றேன். அவள் பெயரை நான் நினைவில் வைத்திருப்பதில் அவளுக்கொன்றும் ஆச்சரியம் இருக்கவில்லை. முன்பெல்லாம் என்னிடம்தான் மருத்துவத்திற்குப் பிள்ளைகளோடு வருவாள். எல்லோருடைய பெயர்களையும் கேட்காமலேயே நான் எழுதிக்கொள்வேன்.
என் கேள்விக்கு அவள் முறுவலித்தாள். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவள் கணவன் என்னைப் புன்னகைத்துத் தன்னை அவள் கணவன் என்பதை உறுதிப்படுத்தினான்.
இருவரும் நேர்த்தியாக உடையணிந்திருந்தனர். வெளிநாட்டு வாசனைப் பொருளின் மணம் காற்றோடு கலக்க, மின்விசிறி அறை முழுவதும் வியாபிக்கச் செய்தது. சிலர்
31

Page 27
sikillilis) klasöfái (ഗ്രഗ്രീശരീ
அவர்களைப் பார்த்து முகம் சுளித்தனர். மணத்தோடு மனம் பொருந்தவில்லைபோலும்.
வெளிநாட்டிலிருந்து மனைவி வரும்வரை தபால்காரனை வழிபார்த்துக் காத்திருக்கும் சிலர் மனைவி வந்ததும் புது மாப்பிள்ளை வேடம் போடுவது இப்போது சகஜமான ஒரு விடயம்.
புத்தம்புதிய கைக்கடிகாரம், புதிய ஜீன்ஸ், ஷேட், சப்பாத்து அனைத்தும் அவனை பத்து வயது குறைத்தே காட்டியது.
நான் என் அறைக்கு மீண்டேன். அவர்களை மறந்தும் போனேன். இலக்கப்படி ஒவ்வொருவராக வந்தனர். நேரமும் பன்னிரெண்டைத் தாண்டியது. வெளியில், நான் கண்டவர்களைத் தவிர புதியவர்கள் பலரும் வந்து சென்றனர். அப்போது எனக்கு முன்னர் நான் வெளியில் கண்ட சோடியின் நினைவு சட்டென நினைவுக்கு வந்தது.
மின்மணியை அமுக்கினேன். தாதியில் ஒருத்தி உள்ளே வந்தாள். அந்தச் சோடியைப்பற்றி விசாரித்தேன். இன்னும் இருப்பதாகச் சொன்னாள். உள்ளே அனுப்பு என அவளுக்குச் சொன்னேன். சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளே வந்தனர்.
"ஏன் இவ்வளவு நேரமும் காத்திருந்தீர்கள். உங்களுக்குப் பின் வந்தவர்களெல்லாம் போய்விட்டார்களே?” என நான் சொன்னபோது, மாப்பிள்ளைக்காரன் ஒரு அசட்டுப் புன்னகையை வெளிப்படுத்தினான். பின்,
“மாத்தயா! சோமா 'டுபாயிலிருந்து வந்து ஒரு மாதமாகின்றது. மீண்டும் நாளை கட்டார்’ போகின்றாள்" என நிறுத்தினான்.
வெளிநாடு போகுமுன் வழக்கமாகப் பலர் என்னிடம் வருவார்கள். எனது வாடிக்கையாளர்கள்தான், அவசர தேவைக்கான சில மருந்து வகைகளை என்னிடம் வாங்கிச்
32

ndingNTalip ang Gigit (ഗ്രീശരീ
செல்வார்கள். ஆபத்தில்லாத சில முதலுதவி மாத்திரைகளை நான் அவர்களுக்குத் தருவேன். அதற்காகத்தான் அவர்களும் வந்திருக்க வேண்டுமென நான் எண்ணினேன். அப்படியானால் முன்னரே வந்திருக்கலாமே! ஏன் இப்படிக் காத்துக்கிடக்க வேண்டும். எனக்குப் புரியாதிருந்தது. அவன் மீண்டும் பேசினான்.
“மாத்தயா! சோமாவுக்கு ஒரு ஊசி போடவேண்டும்” என்றான். “எதற்கு சோமா முன்னரை விட இப்போது ஆரோக்கியமாக இருக்கின்றாளே. ஊசி என்ன வேண்டிக் கிடக்கின்றது' என்றேன் நான். எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவாறே.
“மூன்றுமாத ஊசி” என அவன் மீண்டும் அசடுவழிந்தான். என் வியப்பு அதிகமாயிற்று. இவன் என்ன சொல்லுகின்றான்? அவள்தான் நாளைக்கு நாட்டை விட்டுப் போகின்றாளே. பின் நானேன் அவளுக்கு ஊசி போட வேண்டும்?
அவன் மூன்றுமாதஊசி என்றதும், எனக்குப் புரிந்தது. அவன் அவளுக்கு போடச்சொல்வது என்ன என்பது. கருத்தடைக்கு பெரும்பாலான மருத்துவர்கள் மறுக்காமல் தருவது. நாட்டின் சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களே மக்களை ஊக்குவிக்கும் ஒரு மனிதனின் உடலோடு கூடிய விளையாட்டு. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்தும் எல்லோரும் செய்கின்ற மகத்தான நாட்டுப்பணி.
“நாளைக்குத்தான் அவள் வெளிநாடு போகின்றாளே, அவளுக்கு ஏன் இந்த ஊசி போடவேண்டுமென்கின்றாய்? நீ இங்கிருக்க அவளுக்கு அது தேவைப்படாதே’ என நான் அவனிடம் விளங்காது வினவினேன்.
அவன் மேலும் குழைந்தான். சோமா பேசாதிருந்தாள். அவன் தொடர்ந்தான். "எதற்கும் பாதுகாப்பாக இருப்பது நல்லது
33

Page 28
GIT) pi ്യമൃഗുരശ്മീ தானே” என்றான் அந்தப் புதுமாப்பிள்ளை வேஷக்காரன்.
எனக்கு உடல் வியர்த்தது. இப்போதும் சோமா பேசாமலே இருந்தாள். அவள் முகத்தில் எவ்வித சலனமும் இருக்கவில்லை. எனக்கோ வியப்பு இன்னும் அடங்கவில்லை. அவர்கள் இருவரதும் முகத்தைப் பார்க்கக் கண்கள் கூசின. அவள் எதற்கும் ஆயத்தமாக இருக்கின்றாள். "அப்படியொன்று நடந்து விட்டாலும் அதனையும் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் பணத்திற்காக அவனுக்கும் இருந்தது.
நான் சொன்னேன், “அந்த மருந்து என்னிடம் இல்லை” என்று.
34

பெருநாள் பரிசு
திடீரென விழித்துக் கொண்டாள் சுபைதா. நடு இராப் பொழுது, இரண்டாம் சாமத்தை அறிவிக்க சேவல் கூவியது.
தலைமாட்டில் இருந்த மரப்பெட்டியின் மேல் மங்கலாய் எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கின் ஒளி, அந்தச் சின்ன அறையினுள் அரைகுறையாய் வீசியது.
நாளைக்குப் பெருநாள். நினைத்ததும் அவள் நெஞ்சு கனத்தது. பார்வை தூங்கிக் கொண்டிருக்கும் தனது இரண்டு பெண் குழந்தைகளின் மேல் படிந்திருக்க கண்கள் பனித்தன.
கனவொன்று கண்டதால்தான் கண்விழித்தாள் சுபைதா. அது கண்ணயர்ந்து தூங்கும் தன் குழந்தைகளைப் பற்றியதால், விழித்ததும் அவர்களையெ அவள் கண்கள் தேடின.
ஸினத், எட்டுவயதுக்காரி மும்தாஜுக்கு வயது ஐந்தேதான். கையிலிட்ட மருதோன்றி காய்ந்து உதிர்ந்து சிதறிக்கிடக்க, நாளையப் பெருநாளை எதிர்பார்த்து அவைகள் தூங்கிக் கிடந்தன.
35

Page 29
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் (ഗ്രഗ്രീശബ്ദ சற்றுத் தொலைவில் முதுகைக் காட்டித் தூங்கும் தன் கணவன் மேல் அவள் பார்வை படர்ந்தது.
கண்டித்துக் காய்த்துப்போன தோள்ப்பட்டைகள். திட்டுத்திட்டாய் கறுத்துக் கிடந்தன. காலை தொட்டு மாலை வரை தான் சுமக்கும் சுமைகளால் அவன் பெற்ற தொழிலின் அடையாளங்கள்.
மெல்லிய விளக்கொளியில் தன் கைகளையும் அவள் விரித்து நோக்கினாள். அங்கும் அதே தோல் கனத்த கறுப்புக் கறைகள். பெண்மையின் மென்மை அழிந்து போன வடுக்கள்.
வாழ்வின் எதிர் நீச்சுப்போட எத்தனை நிரந்தர வடுக்களைத் தாங்கவேண்டி இருக்கின்றது ஏழையர்க்கு. மாவிடித்துக் கொடுக்கும் கூலிப்பணியால் பலவீட்டு வாயிற்படிகளை தினமும் அவள் மிதித்து வந்தாள்.
கையில் தினமும் கிடைப்பதை இருவரும் ஒன்றாக்கி நான்கு வயிறுகளையும் போஷித்து வந்தார்கள். குச்சுவீடு எனினும் கூலி வீடுதான். மாதாமாதம் படியளக்க வேண்டும்.
நிலுவைகள் அதிகமாகிவிட்டதால் மின்சாரத்தைத் துண்டித்து விட்டார்கள். வீதியோர நீர்விநியோகம் தண்ணிர் பஞ்சத்தைத் தரவில்லை. பலமாதங்களாக குப்பிவிளக்கே வெளிச்சம் தந்தது.
ஸினத் புரண்டு படுத்தாள். சோர்ந்து கிடந்த அவள் பாவாடையைச் சரிசெய்து விட்ட சுபைதா சின்னவளை ஒருதுணி கொண்டு போர்த்தி விட்டாள்.
குழந்தைகள் இரண்டும் முகத்தில் எந்தவித சலனமுமின்றித் தூங்கிக் கொண்டிருந்தன. நாளை பெருநாள் கொண்டாடும் மகிழ்ச்சியில் தூங்கச் சென்றதால் அந்தச் சந்தோஷம் முகங்களில் அப்பிக்கிடந்தது.
36

ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (ഗ്രഗ്രീശ്
பெருநாள் உணவுக்காக சிறிதளவு அரிசியை மீதம் வைத்திருந்தாள் சுபைதா. தேவையான மற்றவைகளும் சிறிதுசிறிதாய்ச் சேகரித்துக் கொண்டாள். அன்றேனும் வயிறாற குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற அவா அவளுக்கு.
ஆனால் குழந்தைகளின் உடுப்புக்கு என்னசெய்வது? அதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைத்தான் வீட்டுக்காரர் முன்பாக்கியோடு பறித்துக் கொண்டு சென்று விட்டாரே. அவர் வாய்க்கு பயந்து உள்ளத்தையெல்லாம் சுருட்டி மறுபேச்சில்லாமல் கொடுத்து விட்டாள். சென்ற மாதம் தாமதித்ததால் அவர் பொழிந்த வசைமாரி பக்கத்தவர்களுக்கும் கேட்டது. நல்லநாள் பெருநாள் வேண்டாததை அவள் வரவழைக்க விரும்பவில்லை. இப்போது என்ன செய்வது நாளைக்கு குழந்தைகளின் முகத்தில் எப்பிடி விழிப்பது.
நாளாந்தம் தேடிக்கொள்ளும் அவள் நாட்டாமைக் கணவன் கொண்டு வருவது உணவுக்கே போதுமாகும். தன்னுடைய உழைப்பையும் சேர்த்தே மற்றத் தேவைகளை நிறைவு செய்தாள் சுபைதா.
தூக்கம் வரவில்லை அவளுக்கு. குழந்தைகளையே இமைமூடாது பார்த்துக் கொண்டிருந்தாள். நாளை இவர்களை எப்பிடிச் சமாளிப்பது. தோட்டத்தில் மற்றக் குழந்தைகள் புது ஆடைஅணிந்து வரும் போது என் குழந்தைகள் ஏங்கிப் போகுமே. நீண்ட சிந்தனையின் பின்னும் விடை சூன்யமாகவே இருந்தது.
சேவல் கூவியது. அது விடியலை அழைக்கும் குரல் என்பது அவளுக்குத் தெரியும். தினமும் அவள் விழித்துக்
கொள்ளும் நேரம்.
பள்ளியில் பாங்கொலியும் மெல்லக் காற்றில் இதமாய்க் கலந்து செவிகளில் செறிந்தது. கணவனை எழுப்பிவிட்டு தானும் 37

Page 30
ஜின்னாஹ் ஷரிபுத்தின் ൭ശ്രീശരീ
தொழத் தயாரானாள். இன்னும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன.
வழக்கம் போல அன்றும் 'சுபஹற் தொழுகையின்பின் 'கதீப் சில நல்ல விடயங்களைப் பற்றி ஜமாஅத்'துக்கு விளக்கினார்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெருநாள் தினத்தன்று வீதிவழி வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் ஒரு சிறுவன் அழுது கொண்டிருந்தான். அவனை அணுகி அன்போடு விசாரித்தார்கள். தனக்கு யாருமில்லை எனவும், அனாதையென்றும் கூறினான். இதுகேட்ட நபியவர்கள் அவனை தனது இல்லம் அழைத்துச் சென்று புத்தாடை அணிவித்து, நல்லுணவு புகட்டி மகிழ்ந்தார்கள்.
தனக்கு யாருமில்லை என்று அவன் குறைபோக்க வள்ளல் நபியவர்கள் தானே தந்தையாகவும், ஆயிஷா பிராட்டியாரே தாயென்றும், பாத்திமாவே சகோதரியென்றும் கூறி அவனைத் தன் பிள்ளையாக்கிக் கொண்டார்கள்.
அன்பர்களே!
இந்த நல்ல நாளில் இல்லாதவர்களுக்கு எம்பெருமானார். போல இரங்குங்கள். அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள். இன்றைய பெருநாளை நபிகளாரைப் பின்பற்றி நீங்களும் கொண்டாடுங்கள்.” என்று முடித்தார்.
அமைதியாக அனைவரம் கேட்டுக் கொண்டிருந்தனர். தக்பீர் ஒலி தொடர்ந்து முழங்கியது.
கதீபின் ஒவ்வொரு வார்த்தைகளும் சுபைதாவின் கணவன் பரீதின் செவிகளில் புகுந்து நெஞ்சில் உறைந்தன. அவன் கண்கள் பனித்தன. இமைக் கபாடங்களையும் மீறி கன்னத்தில் வழிந்தன கண்ணித்துளிகள். அவன் தலைகுனிந்து கொண்டான்.
38

si GITipagtigil ്യഗ്രൂശ്മീ
பக்கத்தில் இருந்து இவற்றை அவதானித்து விட்ட காசீமின்
மனம் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள ஆசையுற்றது. மெல்ல அவன் பக்கம் திரும்பி அவன் செவிகளுக்குள்
பேசினான். “பரீது கொஞ்சம் வெளிய வாறியா..?”
ஏற்கனவே காசீமின் வீதியோர வியாபாரத்திற்குப் பொதிகள் தூக்குபவன் பரீது. அவ்வப்போது பத்தும் இருபதும் தருவான் அன்றைய வேலைக்கேற்றபடி இன்று அவன் நிலைகண்டதும் அவன் மனம் சஞ்சலப்பட்டது. வெளியில் வந்த பரீதிடம் அவன் கவலைக்குக் காரணம் கேட்டான்.
“தம்பி காசீம் நாயகம் இருந்த காலத்தில் நாமளும் பொறக்காமப் போனமே. பொறந்திருந்தா நாயகம் நமக்கும் ஒதவி இருப்பாங்கல்ல. அதநெனச்சிதான் கவலையாப் போச்சி.” என்றான் பரீது.
“என்ன பரீது என்னநடந்திச்சி. நீயேன் இப்பிடி பேசறே. ஒனக்கும் ஏதாச்சும் கஷ்டமா?”
"இல்ல இண்டைக்கிப் பெருநாள் புள்ளையஞக்கு உடுப்பு ஒண்ணும் வாங்கல்ல. வாங்கக் காசில்ல அதுகள் எழும்பினா புதுச்சட்ட கேக்குங்கள். என்னத்த குடுக்க. ஊட்டுக்குப் போகவும் மனமில்ல. அத நெனச்சா மனசு கேக்கல்ல. அதான்.” என மனம் சோர்ந்து பேசினான் பரீது.
காசீமுக்கு நிலைமை புரிந்தது. பெருமானார் வாழ்வு அவர்கள் வாழ்ந்த காலத்து மட்டுமல்ல மனுக்குலம் வாழுங்காலமெல்லாம் வழிகாட்ட வல்லதல்லவா.
அந்த உன்னத வழிமுறையை "ஹயாத் தாக்குவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாக்கப்பட வேண்டும் என அவன் மனம் எண்ணியது.
'பரீது ஏங்கூட வா..! என்றவாறு அவன் முன் நடந்தான்.
39

Page 31
ஜின்வாஹ் ஷர்புத்தீன் ്യഗ്രഗ്രീശമ് பரீதும் எதுவும் புரியாது அவனைத் தொடர்ந்தான். காசீமின் வீட்டை இருவரும் சென்றடைந்தனர்.
வீட்டினுள் காசீம் செல்ல பரீது வெளியில் நின்றான்.
சிறிது நேரம் கழிந்ததும் காசீம் ஒரு பொட்டலத்தோடு வெளியில் வந்தான். "இந்தா பரீது இதுல ஒங்க நாலு பேருக்கும் உடுப்பு இரிக்கி கொண்டுபோ.”
"நாயகம் இல்லாட்டிலும் நாயகத்தின் வழியப் பின்பத்த நாம இருக்கமே. கொண்டு போ எல்லாரும் உடுத்து சந்தோஷமா பெருநாளைக் கொண்டாடுங்க..” என்றான்.
பரீதின் கண்கள் குளமாகின. எக்காலத்துக்கும் பொருந்த வாழ்ந்து காட்டிச் சென்ற அந்த வள்ளல் நபியை எண்ணி அவன் மனம் பூரித்தது. பள்ளியின் ஒலிபெருக்கிகள் அல்லாஹ? அக்பர். அல்லாஹ? அக்பர். அல்லாஹ? அக்பர். எனவான்பிளக்க தக்பீரை ஒலித்தன. பரீதின் அதரங்களும் அவனை அறியாமல் அல்லாஹ9 அக்பர். என முழங்கின.
YNAM YAM NAQ/ ※ ※ ※
40

அன்னையும் பிதாவும்
சோமநந்த அரசாங்க அதிபராக கண்டிக்கு மாற்றம் பெற்று, மாதமொன்று கழிந்திருந்தது. மலைநாட்டின் ரம்யமான சூழல் கொழும்பு வாசியான அவரை விட அவர் மனைவிக்கே மிகவும் பிடித்திருந்தது.
மனித நடமாட்டம் அதிகமில்லாத வாகனச் சந்தடியற்ற ஒரு சுற்றுச் சூழலில் அமைந்திருந்தது. அவர்களுக்கான அரசாங்க 36b6)lb.
நகரில் இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிச் சுற்றிச் செல்லும் சிறிய பாதையில் மெல்லிய இளங்காற்றில் காரைச் செலுத்துவதே ஒரு சுகானுபவமாக இருக்கும். அது அவருக்குப் பிடித்திருந்தது. பகல் போசனத்திற்கும் வீடு வந்து போவதை அவர் விரும்பினார்.
வேலைக்காரர்கள் தவிர வேறு எவருமில்லாது ஆங்கில நாவல்களுடன் சங்கமமாகிக் கிடக்கும் அவர் மனைவியின் தனிமையைப் போக்கவும் அவரின் வருகை வேண்டியிருந்தது.
41

Page 32
isITip anghi (്യമൃഗുരശരീ
சோமநந்தவும் பிரியமாலனியும் திருமணம் செய்து ஆண்டுகள் பத்தினைத் தாண்டியிருந்தது. பள்ளியில் துளிர்த்த காதல் பல்கலைக்கழகம் வரை சென்றும் திரைந்து போகாத பசும்பாலாக, தேனோடு கலந்து திருமணத்தில் முடிந்தது.
குழந்தைகள் பிறக்காத குறை தவிர அவர்கள் வாழ்வில் எல்லாமே நல்லனவாய் நடந்தன. செய்த எல்லா முயற்சிகளும் பலனற்றுப் போனதால், விதியை எண்ணி மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு தாங்களே தங்களுக்குக் குழந்தைகளாக எண்ணித் திருப்தியுற்றனர்.
ஒருநாள் வேலைக்காரி வேலாயியைப் பார்க்க அவள் கணவன் வந்திருந்தான். கூட ஒரு குட்டிப் பெண்ணும் வந்திருந்தாள். வயதை ஒரு ஆறு ஏழுக்குள் மதிப்பிடலாம். வறுமைக் கோட்டின் பிரதிபலிப்பாகத் தோன்றினாலும் துருதுருவென அழகாக இருந்தாள்.
மாலனியைக் கண்டதும் கன்னங்குழிய ஒரு புன்னகை அவள் முகத்தில் இழையோடி நின்றது.
முதல் பார்வையிலேயே நெஞ்சுக்குள் புகுந்து விட்டது போன்ற ஒரு உள்ளக் குளிர்ச்சி மாலனிக்கு. அவளை அருகில் அழைத்து அவள் உயரத்திற்கு தன்னையுங் குள்ளமாக்கிக் கொண்டு.
"உனக்குப் பெயரென்ன?’ என தமிழில் கேள்வியொன்றை மெல்ல உதிர்த்தாள். மாதமொன்றுக்குள் வேலாயியுடன் பேசவேண்டிய நிர்ப்பந்தம் சில தமிழ் வார்த்தைகளை மாலனி கற்றுக் கொண்டாள்.
கேள்விக்குச் சட்டெனச் சிறுமி பதில் சொன்னாள். அதே முழுத் தெளிவுடன். கன்னங்குழிய கண்களைச் சுழற்றி. ᏭllpèᏏfᎢéᏏ .
"செவ்வந்தி”
42

Irpaafilisi ്യമൃഗശരീ ஆ. நல்ல பேர்” பொருள் தெரிந்தோ தெரியாமலோ, அந்தச் சொல்லின் ஒசையழகால் அவள் வார்த்தைகள் முகம் பொலிவுடன் மகிழ்வை வெளிப்படுத்தின.
“இல்லை”
“ஏன்”
“சப்பாத்து சட்டை இல்லை”
அழவேண்டும் போல் இருந்தது மாலனிக்கு. அந்தப் பிஞ்சு முகத்தில் தோன்றிய மாற்றம், அது. தாங்கிய பொருள், படித்தவளான மாலனிக்குப் புரிந்தது. படிக்க எனக்கு ஆசை. ஆனால் போட உடு துணி இல்லாமையால் நான் பள்ளிக்குப் போகமுடியவில்லை. என்று பேசுவது போல் அவள் வார்த்தைகளில் தொனித்த ஆதங்கம் கண்களில் வழிந்தது.
பேசும் அவள் விழிகளைப் பார்த்தவாறு இருந்த மாலனியின் கணி கள் கலங்கிப் போயின. இவையொன்றையுங் கண்டுகொள்ளாதவனாக வேலாயியின் கணவன் ஒருபுறம் ஒதுங்கி நின்றான்.
சிறுமியைக் கட்டியணைத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது மாலனிக்கு. அவளால் முடியவில்லை. அந்தஸ்த்து பேதம் அவ்வாறு செய்ய முடியாதபடி தடுத்தது என்பதைவிட பெற்றவர்கள் தன் செய்கையால் தன்னைத் தாழ்த்தி விடுவார்களோ என்று பயந்தாள்.
செவ்வந்தியைக் கையில் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். ஒரு சிறிய நாற்காலியில் அமர்த்தினாள். அவள் கால்கள் உள்ளே நடந்து ஒரு வெளிநாட்டுச் சொக்லேட்டுடன் மாலனியை முன்வாசலுக்குக் கொண்டு வந்தன.
43

Page 33
ENATO angsflugih ബഗ്രീശ0്
தனக்கென ஒரு நாற்காலியை செவ்வந்தியின் அருகில் கொணர்ந்து தன்னை அதில் இருத்திக் கொண்ட மாலனி அதன் மேலுறையைக் கழற்றி அவள் கையில் கொடுத்து, "தின்னு” என்றாள்.
என்றுங் கண்டிராத ஒரு பொருளைத் தந்து உண்ணச் சொல்லும் அந்த அம்மாவை வியப்போடு பார்த்த சிறுமி, உண்ணத் தயங்கினாள்.
“இது நல்லம் தின்னு’ என்றாள் மாலனி. அவள் அச்சத்தைப் போக்க அதில் ஒரு சிறு பகுதியை ஒடித்து தன் வாயில் போட்டுக் கொண்டு அவள் கையில் கொடுத்தவளாக.
சிறுமி வாயிற் கதவருகில் ஒண்டிநின்ற அப்பாவைப் பார்த்தாள். அவர் சாப்பிடு என்னும் பாங்கில் கையசைத்ததும், அதனை வாயில் திணித்துக் கொண்ட செவ்வந்தியின் கண்கள் பூப்போல விரிந்தன.
என்றும் உண்டிராத ஒரு பொருள் தந்த சுவை அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும். மீண்டுஞ் சொல்லாமலே அனைத்தையும் உண்டு முடித்தாள். ஆசையோடு அவள் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்த மாலனிக்குச் சிந்தனை எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று வந்தது.
காலை தொட்டு மாலை வரை காணும் கொக்கோ மரங்கள் அதன் உற்பத்திக்குக் காரணமானவர்களே அவர்கள் தான். மூலப்பொருளின் மூலமே அவர்கள்தான் எனவிருக்க அதனை உண்டு சுவைக்கும் வாய்ப்பற்ற ஜீவன்களாகின்றனர் அவர்கள்.
பனிக்குளிரில் சுருங்கி பகல் வெயிலில் கருகிக் கொழுந்தெடுத்துத் தேயிலையின் உற்பத்திக்குத் தம்மை உருக்குலைக்கும் தோட்டத்து ஜீவன்கள் நமது உடற் தெம்புக்காய்க் காய்ச்சிக்குடிப்பது நாள்தோறும் கூட்டிப்போடும் குப்பையைத்தானே.
44

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ്യമൃഗശമ്
கண்ணால் காண்பதும் காணாது அறிந்ததும் அவள்
சிந்தனைக்குக் கருக்களாயின. செவ்வந்தி தந்ததைத் தின்று
முடித்திருந்தாள். மகிழ்ச்சியாய் இருந்தது மாலனிக்கு.
// *\/4 NZ MY. ※ MSN
மஞ்சள் வெயில் அகன்று, மெல்ல இருள் கவியும் நேரம், சில்லிட்ட உடலைக் கம்பளிச் சட்டையால் போர்த்திக் கொண்டு கணவன் வருகைக்காகக் காத்திருந்தாள் மாலனி.
"அம்மா கோப்பி தரவா?’ என்றாள் வேலாயி. பழகிப்போன குளிர் அவளை ஒன்றுஞ் செய்யவில்லை. வயது நாற்பத்தைந்து தானிருக்கும். வறுமையின் பிடி வயதைச் சற்று அதிகரித்துக் காட்டினாலும், சட்டையும் சேலையுமே அவள் குளிரைத் தாங்க அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
"ஐயா வரட்டும்” என்றாள் மாலனி. அந்தப் பதிலின் முழுப்பொருளும் என்ன என்பதைப் புரிந்து கொண்ட வேலாயி, இரவுச் சாப்பாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்ய வீட்டினுள் சென்றாள்.
வீட்டு முற்றத்தில் பூத்துக் கிடந்த பல வண்ண ரோஜா மலர்களில் தன் பராக்கைத் திருப்பிய மாலனி ஒவ்வொன்றாய்த் தன் கண்ணுள் வாங்கி அவற்றின் படைப்பின் உன்னதத்தை எண்ணி வியந்து நின்றாள்.
முற்றத்திலிருந்து வீதியை நோக்கிச் செல்லும் தனிப்பாதை நெடுகிலும் பல வண்ணப் பூக்களின் மலர்வு வழியை அழகு படுத்தின. தோட்டக்காரன் மாயாண்டி பல வருடங்களாக அவற்றை அக்கறையோடு பாலித்து வந்தான்.
அழகிய கருநீல ஹொண்டா காரின் அமைதியான நுழைவு அரசாங்க அதிபர் சோமநந்தவின் வரவைக் கூறியது. மாலனி மகிழ்வோடு அவரை வரவேற்றாள்.
45

Page 34
ggiGini Ggsgiri Gഗ്രഗുഗമമ്
முன்வாசலில் பிரம்பு நாற்காலியில் அவர் அமர அருகில் மற்றொரு நாற்காலியில் மாலனியும் அமர்ந்து கொண்டாள்.
முழுநாளின் வேலைப்பளு முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது. மிகவும் களைத்துப் போயிருந்தார்.
வேலாயி கோப்பி பரிமாறினாள். இருவரும் பருகினர். சிறிது நேரம் ஓடி ஒடுங்க சோமநந்த உடல் கழுவி உடைமாற்றிக் கொண்டு வாசலுக்கு வந்தார். ஹீட்டரில் கிடைத்த இளஞ்சூட்டு நீர் அவருக்கு புதிய உற்சாகத்தைத் தந்திருந்தது. மனைவி அருகில் மீண்டும் தான் முன்னிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
“மாலனி இண்டைக்கு என்ன நாவலைப் படித்து முடித்தாய்”
தினமும் கேட்குங் கேள்விதான் தனித்திருக்கும் அவளுக்கு துணை செய்யும் அந்தப் பொழுதுபோக்குக்கு அவர் மிகவும் துணை செய்தார். இருவரும் அடிக்கடி கொழும்புக்கு வரும் போதெல்லாம் அப்போதைக்குப் பிரசித்தமாயுள்ள எல்லா நல்ல நாவல்களையும் வாங்கி வருவார்கள். படித்து முடித்த நாவல்களே ஒரு குட்டி வாசிகசாலைபோல் வாசல் அலுமாரியை நிறைத்துக் கொண்டிருந்தன.
கணவன் கேள்விக்குப் பதிலாய் மாலனி சொன்னாள்.
"சோமே! இண்டைக்குக் காலையில வேலாயி புருஷன் வந்திருந்தான். கூடவே அவ மூத்த பொண்ணும் வந்திருந்தா. பாக்க லெட்ஷணமா இருந்தா சோமே”
தன் கேள்விக்குப் பொருந்தாத பதிலைச் சொன்ன மாலனியை ஏறிட்டு நோக்கிய சோமநந்த அவள் எதையோ சொல்ல விரும்புகிறாள் என்பதை யூகித்தவராய் அவள் பேச்சுக்கு செவிதரத் தன்னைத் தயாராக்கிக் கொண்டார். அதனைப் புரிந்து கொண்ட மாலனி மீண்டும் பேச்சைத் தொடரலானாள்.
46

irīDiņ ļši ബബ്രു,ശ്രീശ്
“சோமே! அவளுக்கு ஏழு வயதாகிறதாம். ஆனால் பள்ளிக்கு இன்னும் சேரவில்லையாம். ஏனென்று கேட்டேன். சட்டை சப்பாத்து இல்லை என்றாள்.” இதனைச் சொல்லும் போது வார்த்தைகள் மெலிந்து வெளிவந்தன.
அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சோமநந்த அவள் வார்த்தைகளில் இழையோடும் அனுதாபக் கோடுகளைக் கண்டு ஆச்சரியமடையவில்லை. வழமையான அவள் மனப்பாங்கை அவள் அறிவார். மாலனி தொடர்ந்து பேசினாள்.
“ஏன் சோமே இங்கே நாங்க அவளை வெச்சுக்கிட்டா என்ன அவ அம்மா கூட இங்கேயே இருக்கட்டும். நாமளே பள்ளிக்குஞ் சேத்திடலாம்"
சட்டென அவள் சொன்ன அபிப்பிராயம் அவரைச் சிறிது உலுக்கிவிட அவர் கேட்டார். வார்த்தைகளில் அலட்சியம் தொனித்தது.
“என்ன மாலனி நீயாகவே முடிவுக்கு வந்திட்டா அவ் அம்மா அப்பா சம்மதிக்க வேணாமா?”
“எனக்கு மனசில பட்டிச்சி. ஒங்கக்கிட்ட கேக்காம நான் எதத்தான் செஞ்சேன். மொதல்ல நீங்க சம்மதிக்கணும் அப்புறமாக கேட்டுப்பாக்கலாம்.
கொஞ்சம் பொறு மாலனி. இதப்பத்தி நாம் நெறைய யோசிக்கணும். வேலைக்கி ஆள் சேக்கிறாப்போல எதையும் பண்ணிடக்கூடாதே. நிதானமா ஒரு முடிவுக்கு வரலாம்” என்றவாறு பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் நந்த.
வாரங்கள் இரண்டு வாடி உதிர்ந்தன. கணவனே கேட்கட்டும். என்று காத்திருந்தாலும், செவ்வந்தியைக் கண்ட நாளிலிருந்து அவள் அடிக்கடி மாலனியின் நினைவில் வந்து கொண்டிருந்தாள். வீடு திரும்பி தன்னை இரவு உடைக்குள்
47

Page 35
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ്വമൃഗശമീ திணித்துக் கொண்டு வேலாயி தந்த தேனீரில் தன்
முழுப்புலனையும் செலுத்தி சுவைத்து முடித்தார். அவர் எதிரே மாலனி அன்றைய தினத்தாளை புரட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன மாலனி அந்தப் பொண்ணு. அதான். வேலாயியின் மகள். இப்ப பள்ளிக்குப் போறாளா?’ ஒரு மெல்லிய புன்னகையோடு கண்கள் விரிய சோமநந்த மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
சட்டெனப் பிறந்த கேள்வியால் மாலனியின் முகம் உயர, அதில் தோன்றிய பல்வேறு எண்ணங்களின் வினாக்கள் அவரையே மீண்டும் பேசவைத்தன.
“மாலனி நானொண்டும், பகிடி பண்ணல்ல, சீரியசாகவே கேக்கிறேன். அந்த பொண்ணு பத்தி நீ என்ன முடிவுக்கு வந்திரிக்கே.”
மாலனி சிறிது நேரம் இவர் முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்துவிட்டு ஒரு சிறுநகை முகத்தில் தவழ பேசத் தொடங்கினாள்.
அவளுக்குத் தெரியும். எப்படியும் இந்தப் பேச்சு மீண்டும் தொடங்கப்படுமென்று. தானாகத் தொடங்காமல் அவராகக் கேட்கட்டும் என்றே இத்தனை நாளும் பொறுமையாக இருந்தாள்.
தனக்குள் ஒரு முடிவு ஏற்கனவே தயாராகி இருந்ததால் அவர் கேள்விக்கு உடன் பதிலளிக்க மாலனியால் முடிந்தது.
“சோமே, அம்மாவும், நம்ம கூடவே இருக்கிறதாலே அவள நாம இங்கேயே எடுத்துக்கலாம். நகர் புறத்தில் உங்க செல்வாக்கப் பயன்படுத்தி பள்ளியில சேத்திடலாம். என்னால அவள நல்லா திருத்தி எடுத்திட முடியும்.”
"ஆமா அவங்க அம்மா அப்பாக்கிட்ட கேட்டியா தாயும் தகப்பனும் விரும்பாம நாம ஒரு முடிவுக்கு வர முடியுமா என்ன?” 48

BiGJYAraio Gagsgi മൃഗശരീ
பதில் பட்டென்று பிறந்தது. "அவ அம்மாக்கிட்ட கேட்டுட்டேன். அவவும் இங்கேயே இருக்கிறதால ஆமா போட்டிட்டா. அப்பா குடிகாறன் மாசாமாசம் கொஞ்சம் கையில கொடுத்திட்டா அடங்கிடுவான்.”
சோமநந்த வாய்விட்டுச் சிரித்து விட்டார். “திட்டம் போட்டுத்தான் வேலை செய்யுறே எல்லாமே நீ நெனச்சமாதிரி நடக்குமெண்ணா எனக்கொண்ணும் ஆட்சேபனையே இல்ல!”
அவர் பதில் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எப்போதுமே தனக்கு இசைந்து போகும் கணவனாக சோமநந்த இருந்ததால் அவள் பூரிப்படைந்தாள். குழந்தை இல்லாக் குறையைப் போக்கும் குழந்தை அவர்.
எண்ணியவாறு எல்லாம் நடந்தது. செவ்வந்தி பிரியமாலனியின் பிரியத்துக்குரியவளானாள். ஒன்றுக்கு இரண்டு தாய்மாரின் கவனிப்பு அவளுக்குத் தோட்டத்தை மறக்கச் செய்தது.
குடித்து விட்டு அடிக்கும் அப்பாவை விட புதிய வீட்டு அப்பா அவளுக்கு பிடித்திருந்தார். தினமும் புதிய புதிதாய்க் குவியும் தின்பண்டங்கள் அவளை மகிழ்வித்தன. புதுச்சட்டையும், புத்தகங்களும் பள்ளியும் அந்தப் பிஞ்சு மனத்திற்கு புதுத்தெம்பு தந்தன.
ஒவ்வொன்றாய் உதிரும். தென்னை ஒலைபோல், மாதங்கள் உதிர்ந்தன. வருடங்கள் தங்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டன.
செவ்வந்திக்கு வயது பதினைந்தானது மூன்று
மொழிகளிலும், சிறந்து விளங்கினாள். செவ்வந்தியின் பத்தாவது
வயதில் தந்தை குடியின் அடிமையாகிச் செத்து மடிந்ததால்,
தனித்து விடப்பட்ட இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க தாய்
பிறந்த மண்ணைச் சென்றடைந்தாள். அவ்வப்போது செவ்வந்தியின்
49

Page 36
gsiBIThio hghgii ്യമൃഗുരശ്
புதுப் பெற்றோரால் கிடைக்கும் உதவிகள் அவர்களைப் போஷிக்கச் செய்தன.
சட்டென்று ஒருநாள் சேதி வந்தது. தோட்டத்திலிருந்து அவள் மாமன் வந்திருந்தான். வேலாயிக்குக் கடும் சுகவீனம் என்றும் பிள்ளையைக் கூட்டிப்போக வந்ததாகவும் சொன்னான்.
கட்டாயம் போகவேண்டுமென்பதை மாலனி உணர்ந்தாலும், தனி பிள்ளையை தனித்து அவனோடு அனுப்ப மனமின்றிப்போனது.
கணவனை நோக்கினாள். அவள் இவழ்டம் என்ன என்பதைக் குறிப்பால் உணர்ந்த சோமநந்த புறப்பட ஆயத்தமானார்.
புத்தம் புதியதோர் வாகனத்தின் வருகை தோட்டத்தைக்
குதுகலிக்கச் செய்தது. பிள்ளைகள் பின்னால் ஓடிக் கொண்டாடினர்.
முன்னரும் பலமுறை வந்து போனதால் மாலனிக்கு லயமும் காம்பறாவும், தெரிந்திருந்தது. வேகமாக நடந்தாள்.
லயத்தைச் சுற்றிக் கூட்டமிருந்தது. வேலாயிக்கு நோய் முற்றி இறுதிக் கட்டத்தில் இருப்பதைக் கூடியிருந்த கூட்டமே துல்லியமாகச் சொன்னது.
மாலனி உள்ளே நுழைந்தாள் வாசலில் நின்றவர்கள் வழிதந்து விலகினர். செவ்வந்தியின் கால்கள் தாயை நோக்கித் தொடர்ந்தன.
காம்பறாவின் ஒற்றை அறையின் நடுவே வேகமாக
மூச்சிரைக்க வேலாயிபடுத்துக் கிடந்தாள். முதுகிலிருந்து தலைவரை மடித்து வைக்கப்பட்டிருந்த கோணிச் சாக்குகளால்
50

SUNTO Gngfugiai ്യമൃഗശമ്
அவள் மூச்சுக் கஷ்டத்தைக் குறைக்க இயலவில்லை. கண்கள் இறுக மூடிக்கிடந்தன.
சட்டென உயிர் பெற்றுத் திறந்த இமைகள் அந்த 'அம்மா’ என்ற உயிர் மூச்சைத் தந்த முகத்தினைத் தன் விழிகளுக்குள் வாங்க அகல விரிந்தன. அதற்குள் மாலனியும் சங்கமமானாள்.
ஒரு வினாடிதான் ஒரேயொரு வினாடிதான்.
வாயின் ஒரு மூலையில் ஓடி மறைந்தது ஒரு பொருள். பொதிந்த புன்னகை. மறுவினாடி விரிந்த கணிகள் விரிந்தவாறிருக்க, அவள் சுவாசப்பைகள் இயங்க மறுத்ததை அவள் அசைவற்ற மார்பகம் காட்டிநின்றது. அடுத்த வினாடி செவ்வந்தியின் அலறல் சுவரெல்லாம் ஓங்கி மோதின.
இறுதிக் கிரிகைகள் அனைத்தும் இறுதியாகின. பக்கத்து நகரின் வாடிவீட்டில் நின்றபடி சோமநந்தவே அனைத்தையும் செய்து முடித்தார்.
லயம் வழமையான நிலைக்கு மாறியது. மரண வீட்டின் மணமே மூன்று நான்கு நாட்களுக்குள் இல்லாது போனது.
குடும்பத்தின் ஒவ்வொருவரும் தோட்டத்தில் கால்களில் ஒட்டிக் கழன்றுவிழும் அட்டைகளாகினர். செவ்வந்தியின் தாய் மாமன் மட்டும் தனித்து நின்றான். பிறந்ததிலிருந்து அதே லயத்தின் பங்கு தாரனாய் அக்காவுடன் ஒன்றி வாழ்ந்தவன் அவன். அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.
சோமநந்தவும், மாலனியும் புறப்படத் தயாராகினர்.
மாலைக்குள் தோட்டத்தைக் கடந்து விடவேண்டும். பாதைகள்
சீரில்லை. என்பதால் சோமநந்த தன் அவசரத்தைக் காட்டினார்.
மாலனி செவ்வந்தியின் முகத்தை நோக்கினாள். அது
வெளிறிக் கிடந்தது. அவளருகில் சென்று மிகப்பவ்யமாக காதருகில் போவோமா என்றாள்.
5

Page 37
a9aii6JFET) Gingflugigfä ബഗ്രഗ്രീശമീ
திடுக்கிட்டுப்போன செவ்வந்தி "அம்மே மம அதம என்ட ஒனத” என்றாள். இன்றே நான் வர வேண்டுமா என்ற பொருள்பட, “இருதலைக் கொள்ளி எறும்பு” போல இருந்தது அவள் நிலை.
தன் உடன் பிறந்தவர்களை விட்டுச் செல்ல அவளுக்கு மனம் இடந்தரவில்லை. மாமாவை நம்பி எப்படிச் செல்வது. அவளை அங்கு தனித்து விட்டுச் செல்ல மாலனிக்கு இயலவில்லை. மாமன் முன்வந்து இளையவர்களை ஏற்றுக்கொண்டாலும் செவ்வந்தியின் மனம் ஏனோ தவித்தது.
அவள் கேள்வி மாலனிக்குக் குழப்பத்தைத் தந்தது. சில வினாடிகள் பொறுத்து மீண்டும் பேசினாள். “தாத்தா வெடட்ட யன்ட ஒன நேத துவே” என்றாள். தன் கணவன் வேலைக்குப் போக வேண்டுமென்ற அவசியத்தைச் சொல்லுவதைவிட அவளுக்கு வேறொன்றுந் தோன்றவில்லை.
நிலைமையை அறிந்து மாமனும் வலியுறுத்தினார். “பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கின்றேன். நீ போய் வா” அவர் கையணைப்புக்குள் அவர்கள் இருவரும் நின்றிருந்தனர்.
எதையும் புத்திக் கூர்மையுடன் செய்து பழக்கப்பட்ட செவ்வந்தி இப்போதைய நிலைமையில் தான் புறப்படுவதுதான் சரி என முடிவுக்கு வந்ததும் மறுபேச்சின்றிப் புறப்பட்டாள்.
தோட்டத்தை கடந்து விட்ட வாகனம் நகர்ப்புறத்தை ஊடறுத்து மீண்டும் தேயிலைச் செடிகளின் செழிப்பில் மிதக்கும் மலைகளினுாடே மெதுவாய் நகர்ந்தது.
வாகனத்தின் பக்கத்து முன்னிருக்கை காலியாகவே இருந்தது. பின்னாசனத்தில் செவ்வந்தி தாயின் மடியில் கிடந்தாள். சோமநந்தா அமைதியாகத் தன் கட்புலனைப் பாதையில் செலுத்தினார்.
யாரும் பேசிக் கொள்ளாவிட்டாலும், தம்பதியரின் மனத்துள்ளே ஒரு தெளிவு பெற முடியாத நிலையில் ஒரே 52

signgio Gigsli ്വമൃഗശരീ
பிரச்சினை சிக்கித் தவித்தது. அது மாமனிடம் விட்டு வந்த செவ்வந்தியின் உடன் பிறப்புக்களைப் பற்றியதே.
மலையில் சுற்றித் தவழும் தார்ப்பாதையினுTடே மெல்லெனப்பாயும் சிற்றோடைபோல பள்ளத்தை நோக்கி சென்றது அந்த வாகனம்.
அதன் மெதுவான நகர்வும் சுற்றுச் சூழலின் மோன அமைதியும் மாலனியின் மனதுக்குள் ஒரு தெளிவைத்தர அவள் சட்டென கணவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். சொல்லி வைத்தாற்போல செவ்வந்தியின் விம்மலும் அவளைப்பேச வைத்தது.
“சோமே காரெக்க நவத்தன்ன”
வேகம் குறைந்து வாகனம் ஓரமாகி நின்றது. மாலனி வாகனத்திலிருந்து இறங்கினாள். அவள் செய்கை சோமநந்தவுக்கு வியப்பைத்தந்தாலும், அவள் செய்கையில் ஏதேனுமொரு உட்பொருள் இருக்குமென அவர் அறிவார்.
சில அடிகள் முன்னால் நடந்த அவள் கணவனை சைகையால் அழைத்தாள். இருவரும் சில நிமிடங்கள் அமைதியாகப் பேசினர். சில நிமிடங்களே ஒருமித்துப்போன இதயங்கள் மீண்டும் அவர்களை வாகனத்தில் ஏற்றியது.
மீண்டும் வாகனம் வந்த வழியே சற்று வேகமாக ஓடி தோட்டத்தை அடைந்தது. மாலனி மட்டும் மாமனின் வீட்டை நோக்கி நடந்தாள்.
53

Page 38
வேறுந்த நாட்கள்
0ெ6யில் எடுத்த மீன் துண்டைவாயில் போடவிடாது ஏதோ என்னைத் தடுத்தது. எனக்குப் பரிச்சயமான ஒரு நெடி என்னைச் சுற்றியுள்ள காற்றிற் கலந்திருப்பதை என் மூக்கு மூளைக்குச் சொல்லுகின்றது.
அன்று காலை சந்தைக்குப் போயிருந்தேன் கறிக்கு மீன்வாங்கவென்று. மீன்காரன் சொன்னான்
"கிலோ முப்பது தானையா பால்சுறா விடியக்குள்ள பட்டது புத்தம் புதுசு”என்று.
பார்வைக்கும் புதிதாகத் தேன்றியதால் பேரம் பேசாது காசை நீட்டி வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
மணி இரண்டிருக்கும். பசி என்வயிற்றைப் பிசைந்தது வழக்கமாகவே வேளைக்குச்சாப்பிட்டுவிடும் நான், அன்று வெளிவேலை காரணமாக வீட்டுக்குவரத் தாமதமாகிற்று.
வயிற்றைக் கைகள் தடவிச் சாந்தப்படுத்தின. இன்னுஞ்
54

AsiaGOLD Gagagiariu ്യഗ്രൂശമ്
சிறிது தாமதித்திருந்தால் என் இரைப்பையே சீரணமாகிப் போயிருக்கும். அத்தனை நெருப்புப்பசி.
கைகால் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன். தட்டில் பரிமாறிய உணவில் ஒரு கவளம் மட்டுமே உண்டிருப்பேன். மீன் துண்டைக்கையில் எடுத்த போதுதான் எனக்கு இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. தலை ஏனோ சுற்றுவதுபோல் இருந்தது.
யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வந்து ஒரு மாதம் சொல்லாமற் கழிந்து போயிற்று. நான் அறிந்த பலர் அங்கிருந்தும் எவருடைய விலாசமும் என்னிடம் இருக்கவில்லை. நெஞ்சிற் பதிந்திருந்த ஒன்று தவிர
நான் முன்னொரு பொழுது யாழ்ப்பாணம் வந்திருந்தபோது சில நாட்கள் தங்கிஇருந்த அந்த வீட்டின் சூழலை நினைவுத்திரையிற் போட்டுப் பார்க்கின்றேன். அந்த நாட்கள் என் நினைவில் பசுமையாகப் பதிந்திருந்தன.
ஊரும் பேரும் நினைவில் இருந்ததால் போகவேண்டுமென்ற உள்ளத்தின் உந்தல் என்னை “பஸ்” ஏறவைத்தது.
சுற்றுச் சூழல் மாறாமல் இருந்தால் மட்டுமே ஒருசில நாட்களே தங்கியிருந்த அந்த வீட்டினை என்னால் அடையாளங் கண்டு கொள்ள முடியும். ஆனால்.நீண்டுசென்ற அந்தப் பாதையின் இருபக்கங்களிலும் நான்கண்ட காட்சிகள் நான் தேடிச்செல்லும் வீட்டின் சூழலிலும் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உறுதி செய்வதாக அமைந்திருந்தன.
வீதியோரக் காட்சிகள் என்சிந்தனையைக் குழப்பின. எங்கும் ஒன்றுபோல், இடிந்த இல்லங்கள், உடைந்து போன
55

Page 39
airGHTipangtigit ിഷ്ടേ ശ്രീശ് சாளரங்கள், சாய்ந்து வீழ்ந்த மரங்கள், தீயுண்ட குடிசைகள் ஆங்காங்கே நிலக்கண்ணிகளுக்குத் தம்மைத் தியாகஞ் செய்து கொண்ட பாதைகள் தற்காலிகமாகச் செப்பனிடப்பட்டதால் குன்றுங் குழிகளுமாகக் காணப்பட்டன. சாரதி தன் புலனையெல்லாம் பாதையிற் பதித்திருந்தான்
நான் பிரயாணஞ் செய்த அந்தச் சூழல்கள் ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தி எட்டில் கிழக்கில் வீசிய புயலை எனக்கு நினைவுக்கு கொண்டு வந்தன.
அதன் பயங்கர வெறியாட்டத்தால் ஏற்பட்ட அனந்தங்கள், பெருநஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை. ஐம்பது யார்களுக்கு அப்பாலிருந்த, நான் பிறந்து வளர்ந்த எங்கள் வீட்டையே என்னால் அடையாளங் காண முடியாது போன கோரம். ஒன்றுவிட்ட என் சகோதரனைப் பலிகொண்ட வேதனை. பெரும் போருக்குப்பின்னால் ஒரு சமர்க்களத்தின் நிலைபோல எங்கும் அழிபாடுகள், பேரிழப்புகள். நினைத்தால் இன்றும் நெஞ்சம் தாங்காதவை.
மனஞ்சற்றுத் தளர்ந்து போயிற்று. போகும் இடத்தைத்
தேடிக் கொள்வேனா? என்பதில் எனக்குப் பலத்த சந்தேகம் தோன்றியது. ஆயினும் போக வேண்டும் என்ற என் எல்லையற்ற ஆவல் என்பிரயாணத்தைத் தொடர வைத்தது.
பெயர் சொல்லி நான் குறிப்பிட்ட இடத்தை பஸ் அடைந்திருக்க வேண்டும். காசு சேர்க்கும் பையன் என்னைத் தொட்டுச் சொன்னான்.
"ஐயா இறங்குங்கோவன்”
அவனுக்குச் சுணங்குகின்றது என்பதை உணர்ந்து கொண்டநான் விரைவாக இறங்கிக் கொண்டேன்.
நீண்டதுாரம் குதிரைச்சவாரி செய்தது போன்ற உணர்வு. உடல் சோர்ந்திருந்தது.
56

alisingb ng higit ്യഗ്രൂ,ഗ്രീശമീ
எனக்கு இன்னும் சந்தேகம், இறங்கிய இடம் சரிதானா என்பதில். பக்கத்தில் என்னோடு இறங்கிய அம்மாளிடம் பெயர் சொல்லி விபரம் கேட்டேன்.
அவர் பதில் சொல்லவில்லை நான் ஊருக்குப் புதியவன் என்பது புரிந்திருக்க வேண்டும். விறைப்பான ஒருபார்வை. அவ்வளவுதான் பனையோலைப் பெட்டியை முழங்கை இடுக்கில் சொருகிக் கொண்டு விறுவிறு வென்று நடையைக் கட்டினார். காலில் அத்தனை சுறுசுறுப்பு.
சுற்று முற்றும் ஒருமுறை பார்வையைச் செலுத்தினேன். நினைவில் இருந்த குறுக்குப் பாதை வழியாக என் கால்கள் நடந்தன.
சில குறிப்பிட்ட இடங்களின் அடையாளங்கள் நான் செல்லும் பாதை சரியெனச் சாட்சிகூற தெம்போடு நடக்கலானேன். ரோட்டில் இருந்து குறுக்குப்பாதை வழியாக "கால் கட்டை தூரந்தான்” என்பது என்நினைவுக்கு வந்ததும் என்கால்கள் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டன.
குறிப்பிட்ட இடத்துக்கு நான் வந்து விட்டதை உணர்ந்தேன். இடப்பக்கம் வீடு முற்றத்தில் ஒரு தென்னை மரம் “முடக்குத் தென்னை நல்ல அடையாளம்”
முன்னொருமுறை நானே எனக்குச் சொல்லிக் கொண்டது நினைவுக்கு வந்தது.
தென்னையைக் கண்டேன். ஆனால் சந்தேகம் அதுதானா என்று. "ஷெல்" அடிபட்டு வட்டுப்பறந்த மொட்டைக் கோலம் கோடைவெயிலில் குளிர்நீர் தந்த கற்பக விருட்சமது.
நெஞ்சை ஏதோ அழுத்தியது. கீழே அதே வீடு. ஒட்டுக்கூரை இடைஇடையே சூரிய ஒளிபுக நுழைவாயில்கள். 57

Page 40
ஜிள்ளாஹ் ஷரீபுத்தீன் ൭ശ്രീശബ്ദ வெடிப்பு விழுந்த சுவர்கள். “இன்னுஞ் சில நாட்கள்தான் தாக்குப் பிடிப்போம் என்று சொல்லாமற் சொல்லின. சுற்று மதில் நொருங்கி இருந்தாலும் என் நினைவில் வீடு இதுதான் என்பதில் சந்தேகம் நீங்கிற்று.
வெளிக்கதவு பூட்டி இருக்கவில்லை. உடைக்கப்பட்டதால், பூட்டுத்தெறித்திருந்தது. சாத்தி இருந்த கதவை மெல்லத்தள்ளி உள்ளே நோக்கினேன். யாரும் இருக்கும் சப்தம் கேட்கவில்லை. ஒருமுறை தொண்டையைக் கனைத்துக் கொண்டேன். தொடர்ந்து,
அம்மா! என்று குரல் கொடுத்தேன்.
எந்தவித பதிலும் என் காதுகளுக்கு எட்டவில்லை. மீண்டும் சற்று உரத்த குரலில்,
ஆ. ரது? கேள்வியோடு மட்டும்தான். எவரும் வெளிவரவில்லை. ஆனால் அந்தக் குரல் 1 ஆம் அது அம்மாவுடையதுதான். வெளிச்சூழலைக்கண்டு பதறிப்போயிருந்த என் நெஞ்சை அந்தக்குரல் குளிரச் செய்தது.
மீண்டும் பதிலுக்குக் காத்திருக்க என்கால்களுக்குப் பொறுமை இருக்கவில்லை. குரல் வந்த திசையை நோக்கி விரைந்தன. ஆனால் அங்கே நான் கண்ட காட்சி என்னை ஒருகணம் அசைவற்று நிற்க வைத்தது.
முன்னர் நல்ல சுமாரான தோற்றம் அம்மாவுக்கு. இன்றோ எலும்பும் தோலுமாக ஒரு கட்டிலில் படுத்துக் கிடந்தாள். கண்கள் குழிவிழுந்து காணப்பட்டாலும் அதில் ஒரு பிரகாசம். தீட்சண்யமான பார்வை, உடல் இழைத்தாலும் குரலில் இருந்த அழுத்தம் போல
என்னை ஒரு வினாடிக்குள் இனம் கண்டு கொண்ட அந்த
58

BaiuGIIITibD 6ngdRtgöğti (ഗ്രഗ്രീശ്
விழிகள் திடீரெனக் கண்ணிரை ஆறாகச் சொரிந்தன அப்பப்பா! காய்ந்துபோன அந்த உடலில் எங்கிருந்துதான் இத்தனை கண்ணிர் வெள்ளம்
பக்கத்தில் சென்றேன். என் கண்கள் அகல விரிந்தன. நெஞ்சு பிளப்பது போல் ஒரு வேதனை.
"அம்மா. உங்கள் கால்” என்றேன் நான் அதிர்ச்சி தாங்காமல் மேலும் பேச எனக்கு நா எழவில்லை. கண்ணிருக்கிடையில் வாய் குளற சொற்கள் தடுமாறின.
"கடவுள் பறிச்சுப் போட்டார்” வார்த்தைகள் விம்மலில் கலந்து வெடித்தன.
நிலைமையைப் புரிந்து கொள்ள எனக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. வானொலியில் வடக்கு, கிழக்கு மரண அறிவித்தல்கள் அனேகமாக அகால மரணங்களாகவே சொல்லப்பட்டு வந்தன. அம்மாவுக்கு அது காலோடு போய்விட்டது போலும்.
அம்மாவின் அருகில் கட்டிலோரத்தில் போய் அமர்ந்து கொண்டேன். என் தோளில் முகம் புதைத்து அவள் கதறி அழுதாள் அந்த வேதனையில் அவளுக்குச் சமாதானம் சொல்லத் திராணியற்ற நான் அவளோடு அவள் அழுகைக்குத் துணைநின்றேன்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தன் தலையை உயர்த்திய அவளே முதலில் பேசலானாள்.
“எப்படா மோனே வந்தநீ? எல்லாந் தெரிஞ்சிதான் வந்த நீயே" என வினவினாள்.
முதற் கேள்விக்கப் பதில் சொல்ல முடிந்தாலும் இரண்டாம் கேள்விக்குப் பொருள் எனக்குப் புரியவில்லை.
59

Page 41
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ബമൃഗശരീ
தொடர்ந்தும் எனக்குப் பதில் அம்மாவே பேசினாள் அடமோனே!. செல்வம். அவளால் வார்த்தைகளைத் தொடர முடியவில்லை. விம்மி விம்மி அழுதாள். நான் திடுக்கிட்டுப் போனேன்.
ஓரிரு வினாடிகள். எனக்கு ஒரு உண்மை புரிந்தது. செல்வத்திற்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது தடுமாறிப்போன நான்.
அம்மா! செல்வத்திற்கு என்ன? என்றேன் தவிர்க்கமுடியாத வேகத்தோடு.
“சாவடிச்சுப் போட்டினம்டா மோனே’ என்ற அவள் தன் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டாள். நான் சிலையெனச் சமைந்து போனேன்.
விழிநீரைத் துடைத்துக் கொண்ட நான் அம்மாவின் விசும்பல் நிற்கும் வரை காத்திருந்தேன் அதனிடையில் எத்தனை கடந்தகால நினைவுகள்.
எனக்கும் செல்வத்திற்கும் கொழும்பில் ஒரு வாடகை வீட்டில்தான் முதற் சந்திப்பு நடந்தது அன்று தான் அவன் கொழும்புக்கு வந்திருந்தான். எனக்கும் அதுதான் முதல்நாள். அறிந்தவர்கள் மூலம் அந்த வீட்டிற்கு இருவரும் தங்கு வசதிதேடி வந்திருந்தோம். ஒரே ஒரு சிறிய அறை மட்டுந்தான் காலியாக இருந்தது. இரண்டு கட்டில்கள் போட முடியாத சிறிய அறை. வீட்டுக்காரி சொன்னாள்.
ஒத்துப்போக முடிந்தால் சமாளித்துக் கொள்ளுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை தலைக்கு இருபது ரூபா தரவேண்டும் சாப்பாடு வெளியில்தான்.
முதல் சந்திப்பில், கண்டமாத்திரத்திலேயே மானசீகமான ஒரு பிடிப்பு எங்களுக்குள் ஏற்பட்டுப்போயிற்று. ஒருவரை ஒருவர்
60

ஜின்வாஹ் ஷரிபுத்தின் ്യമൃഗശബ്ദ
விரும்புவது போன்ற ஏதோ ஒரு உணர்வு. ஒருவரை ஒருவர் பார்த்தபோது இருவரும் அதற்கு ஒப்புவதை எங்கள் முகங்களே காட்டிக் கொடுத்தன.
ஒரேஒரு கட்டில் மற்றவர் பாயில்தான். மாறிமாறி படுக்க ஒப்புக் கொண்டோம். ஆரம்பமே எமக்குள் நன்றாக இருந்தது.
இரணி டொரு நாட்கள் தான். ஒருநாட் காலை கட்டிலுக்கடியில் சுருண்டு கொண்ட பாய் மீண்டும் வெளிவரவே gൺങ്ങബ.
தனித்தனி என்றிருந்தவைகளெல்லாம் நாளடைவில் ஒவ்வொன்றாகப் பொதுவுடிைமையாகரின. எங்கள் எண்ணங்களைக்கூட நாங்கள் மறைப்பதில்லை தோழமை முற்றி நாங்கள் ஒருவர்போலானோம்.
கோடைவெயிலில் கொட்டும் வியர்வையால்கூட எம்மைப் பிரிக்க இயலவில்லை. கட்டில் ஒன்றுதான். மார்கழிக்குளிரில் போர்வையும் எங்களுக்கு ஒன்றுதான்.
ஒருவரின் மனத்தையும், ஏன் மணத்தையும் மற்றவர் அறிந்திருந்தோம்.
என்னைப்போல் செல்வமும் தமிழின் மேல் ஆழ்ந்த பற்றுக் கொண்டவன். அதைவிட அவனுக்கு தன் இனத்தின் மீது பக்தி அதிகம். தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று அடிக்கடி கூறுவான். மிகத்தீவிரமான கொள்கை உடையவன்.
இறைவனின் படைப்பை, இயற்கை அழகுகளை நான் கவிதைகளாப் பாடுவேன். அவன் இரசித்து மகிழ்வான். ஆனால் அவன் அவன் விரும்புவது, என்னைப்பாட வற்புறுத்துவது வேறாக இருக்கும்.
ஒருநாள் என் கற்பனையில் தோன்றிய ஒரு தலைவியின்
தவிப்புகளை, அவள் அழகினைப் பாட்டாக எழுதிப்பாடிக் 61

Page 42
SiGITi) bagi ബഗ്രഗശമ്
காட்டினேன். பொறுமையோடு கேட்டிருந்து விட்டு அவன் சொன்னான்.
"ஏனடா விசரா! உனக்கு இது மட்டுமே பாடவரும் பாரதி, பாரதிதாசனைப்போல உணர்ச்சியோட, நெஞ்சில குத்துறாப்பல பாடுவன், பூவையும் பொம்புளயளயுந்தானே பாடுறநீ” என்றான்.
நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அவன் முகம் கோணிப்போயிற்று.
அன்றிலிருந்து அவ்வப்போது அவனுக்காக அவன் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பாடல்கள் எழுதுவேன். அவன் எண்ணங்களை உணர்வுகளை நான் பாடலாக எழுதிப்பாடும்போது என்முகத்தைப் பார்த்தபடி அசைவற்று வீற்றிருப்பான். என்னை என் கவிதைகளை மனமாரப் பாராட்டுவான் அவற்றின் ஒவ்வொரு வரிகளையும் தன் குறிப்பேட்டில் பதித்தும் வைப்பான். அவன் மகிழ்வில் நான் மனநிறைவு கொள்வேன். ஒரு மனித உள்ளத்தை மகிழ்வு செய்த திருப்தி எனக்கு.
“புஹாரியின்” பொரித்த கோழியும், புரியாணியும் பொரல்லைக் கடையின் நண்டுக் கறியும், மிளகாய்ப் பொரியலும் எங்களுக்குச் சுவையான உணவுகள்.
இப்படி எத்தனை எத்தனை அனுபவங்கள் அத்தனையும் அப்போது என் மனத்திரையில் நிழல்படங்காட்டின.
உத்தியோக மாற்றங்கள் எம்மை வெவ்வேறாகப் பிரித்தன. கடிதப் பரிமாற்றங்கள் எங்கள் தொடர்பைத் தொடரச் செய்தன. சில காலம் மிக இறுக்கமாகவே இருந்தது. பின்னர் இடைவெளி சிறிது சிறிதாக அதிகரித்து, நாட்டின் அமைதி இன்மையும் கூடி, எமது தொடர்பினை அடியோடு துண்டித்து விட்டது.
வருடங்கள் ஒன்றிரண்டாகி தொடர்பும் அற்றுப்போன நிலையிலேயே நான் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலானேன்.
62

Grīņfiši ്വഗ്രീശ്മീ
வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து வருவது பெரும்பாடாயிற்று. பதவி உயர்வு ஆதலால் எதுவும் செய்ய இயலவில்லை.
வந்து சேர்ந்த மறுநாளே செல்வம் என் நினைவுக்கு வந்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் நாட்களைத்தள்ளி ஒரு மாதத்தைக் கடக்க விட்டன.
அம்மாவின் பேச்சுக் குரல் மீண்டும் என்னைச் சுயஉணர்வுக்கு கொண்டு வந்தது.
அப்போது அம்மா அழவில்லை. ஏதோ ஒரு புதுத்தெம்போடு பேசினாள். இப்படித்தான் செல்வத்தை நினைந்து அழுவதும், மீண்டும் பொய்யான இந்த வாழ்வை எண்ணித் தானே தன்னைத் தேற்றிக் கொள்வதும் அவளுக்குப் பழக்கப்பட்டுப் போயிருந்தன.
இப்படி ஒன்றிரண்டா? எத்தனை அம்மாக்கள் அக்காலத்தில் இழந்துபோன தங்கள் குழந்தைகளை எண்ணி எண்ணித் துன்புறுகின்றனர்.
“வரிசம் ஒண்டடா மோனே, ஒனக்குத் தெரிஞ்சிரிக்க ஞாயமில்ல. காலையில போனவன் ராவாகியும் வீட்டுக்கு வரல. இடைக்கிடை இப்படிச் செய்கிறவன் தானெண்டதால பேசாம விட்டிட்டம். ரண்டு நாள் கழிச்சித்தான் விசகளம் வந்திச்சி சாவடிச்சிப் போட்டினம் மெண்டு. நடுக்கடல்ல வள்ளத்தோட பத்துப் பெடியன்கள். ஒருத்தருந் தப்பல்ல. சவங்களுங் கெடய்க்கல்ல.” அவள் பேச்சை நிறுத்தினாள்.
நீணி டநேர அமைதி இருவரும் பேசவில்லை. கல்லாகிப்போன என் உடலின் கண்களில் மட்டும் உயிர் மிஞ்சி இருப்பதுபோல் நீரைப் பொழிந்தன.
சிறிது நேரத்தின் பின் அம்மா மீண்டும் பேசினாள்.
“செல்வம் சிவபதம் போய் நாப்பது நாளில இஞ்ச கடுஞ்
63

Page 43
SsisTio Spsilöi ബമൃഗശരീ
சண்டை "ஷெல்" லெல்லாம் தாறுமாறா அடிச்சினம். சிறிசும் பெரிசுமா எத்தினபேர் பாடலபோனதெண்டு இப்பவுங் கணக்குத் தெரியா நடுறோட்டில போட்டு "டயர்” கொழுத்திச் சுட்டினம் பதுங்கு குளியள்ள ஒளிச்சவியள் மட்டுந்தான் தப்பினம். அண்டுதான் ஊட்டிலயும் "ஷெல்" ஒண்டுபட்டு கூரையின்ர வளைதெறிச்சி என்ர காலில விழுந்து அதைக் கொண்டு போட்டுது. உசிர் மட்டுந்தான் மிச்சம்.”
“என்னால பெட்ட ரெண்டுக்கும் கஷட்டம் மருமக்கள் நல்லதுகள் பாத்திக்கினம்’ என்றாள்.
அன்று நீண்ட நேரம் அம்மாவுடன் நானிருந்தேன் என்னைக் கண்டதில் அவளுக்கோர் திருப்த்தி என்னைச் செல்வம் எனஎண்ணி ஆறுதல் கொண்டாள்.
ஒருவாறு நீண்ட சிந்தனையில் இருந்து விடுபட்ட எனக்கு, காலையில் பஸ்தரிப்பு நிலையத்தில் கேட்ட உரையாடல் நினைவுக்கு வந்தது.
ஒருவர் சொன்னார். “மீனுக்குப்போன ரண்டு பெடியன் வள்ளம் பிரண்டுந் தப்பி வந்திரிக்கினம்’ மற்றவர் பதிலுக்கு
“இப்ப நம்மட கடல்ல சுறாமீன் நடமாட்டம் மிச்சமடா தம்பி எப்படித்தான் தப்பினதுகளோ தெரியாதடா!” என்றார் ஆச்சரியத்தோடு.
“மனிசன் திண்டு பளதிப் போச்சுதுகள் தலைதப்பினது தம்பிராண் புண்ணியம்.”
இந்த வார்த்தையாடல்கள் மீண்டும் மீண்டும் என்நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.
கையில் இருந்த சுறாமீன் துண்டு என்னை அறியாமல்
64

airGETip ngipit Gമൃശ്രീശ്
தட்டில வீழ, என் நெஞ்சே படபடப்பது போலிருந்தது.
என்நினைவுகளில் இப்போது கடலில் அனாதையாகச் செத்துப்போன என் செல்வம், சுறாமீன்கள், எல்லாம் மாறிமாறித் தோன்றின. என்னை அறியாமல் என்கண்கள் ஆறாகப் பெருக அந்தச் சூடான கண்ணிர் சோற்றோடு கலந்தது.
4 No.4, No64 VYN 7YN YN
65

Page 44
öITGOTốo fij
6Iக்கைகள்கூடக் கண்விழிக்காத இருளாட்சியின் இறுதிச்சாமம் மூர்க்கமான பட்டாசுகளை மொத்தமாய் எரித்தது போன்ற கர்ண கடூரமான வேட்டொலி, மக்களின் செவிப்புலன்களைச் செவிடாக்கின.
ஒழுங்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தமதாக்கிக் கொண்ட பாதஅணிகளின் அட்டகாசம், நெஞ்சில் ஏறி மிதிப்பது போல் மார்பைக் கனக்கச் செய்தது.
சிறிது நேரம்தான் சப்பாத்துச் சப்த்தங்கள் அடங்க வீதி வெளிச்சேறிப்போனது. விழித்துக் கொண்ட மனித உடலங்கள் பேச்சடங்கி மெளனிக்க, மரங்களின் வாசம் செய்யும் பறவைக் கூட்டங்கள் அச்சத்தால் குய்யோ முறையோ எனக் குரலெழுப்பின.
வெடிச் சப்த்தங்களுக்குப் பழகிப்போன சேவல்கள் விடியலுக்குக் கட்டியம் கூறிவிட்டு, மீண்டும் பேடைகளுடன் கண்மூடிக் கொண்டன.
66

si Tipagtigil (ഗ്രഗുരശരീ
தேவகி வாசலின் முன்கதவைத் திறக்கப் பயந்தவளாய் கண்ணாடி யன்னலின் தடித்த திரையை ஒதுக்கி ஒருமுறை ஒழுங்கையை ஏறிட்டாள். பீதியால் முகம்வெளிற இமைகள் அகலவிரிந்து பார்வைக்கு வெளிச்சம் தந்தன.
மெய் வெள்ளை வெளுத்து, இருளைத்துரத்தும் விடியலின் முன்னறிவிப்பு எங்கும் பரவிக் கிடந்தது. அவள் கண்கள் சுழலமுடிந்த மட்டும் திறவுபடாத கண்ணாடி வழியே அணுக்களைத் தேடின.
நேற்றுப்போல் அனைத்தும் அப்படியேதான் இருந்தன. இருந்தும் அவள் கதவைத்திறக்க அஞ்சியவளாய், திரைச்சீலையை மூடிவிட்டுப் பாயில் சரிந்தாள்.
தேவகிக்கு அன்று திருமணம். சாதிக் கொடுமையால், பத்து வருடங்கள் பாழாகிப்போன வாழ்வு, வேறு வழி இன்மையால் கைகூடி இருந்தது.
முப்பத்துமூன்று வயதுகள் முதிர்ந்த நிலையில் பள்ளி ஆசிரியையான அவளுக்கும், அவள் நேசித்த நகுலனுக்கும் பெற்றோர்கள் பசுங்கொடி காட்டி இருந்தனர்.
அடிக்கடி நடக்கும் முன்னைய நிகழ்வுகள் சிலமணி நேரங்களை அச்சத்தின் பிடியில் அடக்கி விட்டு அடங்கிப்போகும். அன்றும் அப்படித்தான் வெடில்காரன், வீட்டுக்கோழிபோல மனம் அடங்கிப்போனது.
முன்னர் போலெல்லாம் இப்போது திருமணங்கள் நடப்பதில்லை. சீன வெடிகளும், வானவேடிக்கைகளும் காதுக்கும்
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.
திருமணம் என்றால் அன்றைய நாட்களில் எத்தனை சிறப்பு. ஒரு நாளின் நிகழ்வுக்கு நடைபெறும் ஆயத்தங்கள்,
67

Page 45
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ്യഗ്രഗ്രീശരീ
ஆரவாரங்கள் அப்படியே குன்றிக்குறுகி இல்லாதும் போயின.
முகூர்த்த வேளையில் கோயிலில்தான் மணமக்கள் தாலிகட்டி, மாலைமாற்றி, அம்மி மிதித்து அருந்ததி கண்டனர். வீட்டில் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஒரு சிறிய விருந்து நடைபெற்றது.
பகல்போசனம்தான். மாலைக்குள் அனைவரும் இருள் கண்டு ஓடியொடுங்கும் பறவை இனம்போல இருப்பிடங்களை அடைந்து விட வேண்டிய அவசியம். அன்றும் அப்படியே.
வந்தவர்கள் அனைவரும் கலைந்து போனபின் வீட்டில் நிரந்தரமானவர்கள் மட்டுமே எஞ்சினர். புதிதாய் மாப்பிள்ளை மட்டும் கூடியிருந்தார்.
வாசலில் போடப்பட்டிருந்த தளவாடங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. கதிரையொன்றில் மாப்பிள்ளை நகுலன் புத்தாடை சகிதமாய் வீற்றிருந்தான். எத்தனை நாளையக்கனவு. பத்துவருடங்கள் தேவகியின் அன்புக்குள் தன்னைச் சங்கமமாக்கிக் கொண்டு காத்துக் கிடந்தான்.
தேவகி வந்தாள். மணப்பெண்ணுக்குரிய அனைத்து அலங்காரங்களும் அவளைச் சொந்த வயதில் சிறிதாய்க் காட்டின. பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் மனைவிக்கு இடம்தந்தான் நகுலன்.
முன்பும் இவ்வாறு அவனருகில் இருந்து பலமணிநேரம் தொடர்ந்து எதையெதையெல்லாமோ பேசியிருக்கின்றாள். எத்தனை எத்தனையோ உணர்வுகளின் பிடியில் அவர்கள் தங்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர்.
துள்ளிப் பெருகும் அன்பின் மேலீட்டால் பிறந்த சந்தோஷ நிகழ்வுகள் குட்டிக் குட்டிக் கோபங்கள், சின்னச் சின்னச் சிணுங்கல்கள் நெடிக்குள் அடங்கிப்போகும் கண்ணிர் பிரவாகங்கள்.
68

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ്യഗ്രഗ്രീശരീ
நேரமறியாது பேசி இருக்கின்றனர். ஆயினும் அந்த நாட்களுக்கும் இன்றைக்கும் தான் எத்தனை வேறுபாடு. மனத்தளவில் அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாக வரித்து மகிழ்ந்தாலும், இன்று ஊரறிய, உலகறிய உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிப்போன உரிமையுடன் அவர்கள் அருகருகே. தேவகியை நகுலன் நோக்கினான். அவன் பார்வையின் வேகம் தாங்காது அவள் தலை தானாகச் சரிந்தது. முகம் வியர்த்து நாணத்தால் சிவந்தது.
“தேவகி' நகுலனின் அழைப்பு அவள் காதுகளில் தேனாகப் பாய்ந்தாலும், கண்கள் இன்னும் நிலத்தையே துளையிட்டுக் கொண்டிருந்தன.
"இஞ்சாருமப்பா கொஞ்சம் தண்ணி கொண்டு வாருமன்”
அவனுக்குத் தாகமில்லைத்தான் இருப்பினும் அவள் கையால் எதையேனும் பெற்றுப் பருக வேண்டும் என்ற அவா அவனைக் கேட்கத் தூண்டியது.
சட்டென எழுந்தாள் தேவகி. அவன் முகத்தை ஒருமுறை அரைக்கண்ணால் சுண்டிவிட்டு உள்ளே நடந்தாள். சென்றவள் திரும்பி வருமுன் வானம் குமுறி இடி இடித்ததுபோல தோன்றிய பேரொலியால் அந்தக் கிராமமே அதிர்ந்தது.
வேகமாகப் பறக்கும் அந்த வண்டியின் மூர்க்கத்தால் பாதைகள் புளுதியுள் புரண்டன. மூடப்படாத திறந்த வண்டியின் பின் கதவின் வாய்விரிய உள்ளே இருப்பன தெளிவாய்த் தெரிந்தன.
ஷெல்லடியின் கோரத்தால் சிதறியோடும் மக்களிடையே அந்த வாகனம் ஒரு இலக்கைக் குறிவைத்துக் காற்றில் மிதந்தது.
69

Page 46
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ൭ശ്രീശരീ
இரத்தத்தில் தோய்ந்த புத்தாடைக்குள் ஒருமனித ஜீவன் வாழத்துடிக்கும் ஆசைமீறிடத் துடித்துக் கொண்டிருந்தது. அதனோடு.
ஒரு புதுமணப்பெண் கூந்தலில் சூடிய மலர்ச்சரத்தின் பூக்கள் கூட வாடாத நிலையில் பீறிட்டுப் பெருகும் செங்குருதியின் அபிஷேகத்தால் மார்பு நனைய அந்த உடலைத் தாங்கிக் கிடந்தாள்.
70

LITourilöTgh
உச்சி வெயிலின் அகோரம் தாங்காது துண்டுச் சால்வையை மடித்து வலது கையாற் தலைக்கு மேல் பிடித்தவாறு ஒட்டமும் நடையுமாக வந்த சேகுமதாரை வழிநித்து முகம்மது தண்டையல் கேட்டார்.
“சேகுப்புள்ள இன்னமும் பாத்துக்கிரிக்க மாட்டன். வரிசம் ஒண்டரையாப் போச்சி நீ என்னடா எண்டால் கணக்கெடுக்காம இரிக்காய் எழுத்துப்படி இன்னும் ஆறுமாசத்தில ஒண்ட ஊடுவளவு என்ர பேரில சின்னக்கறையாகப் போகுது.
அதுக்குள்ள ஏலுமெண்டா மூண்டெடுத்துக்க வேண்டியது தான் பொறகு தலகீழா நிண்டாலும் வேலெல்ல.
ஊரில பணக்காரர் தண்டையல். ஏழை எளியவர்களின் வீடு வாசல்களை தன் பெயரில் எழுதிக்கொண்டு கடன் கொடுத்து உதவுகின்ற பரோபகாரி.
தவணைக்குள் மீட்டுக் கொண்டால் ஒரு சிறு
சந்தோஷத்தோடு ஒத்திக்கு வைத்தவைகள் தப்பிக்கொள்ளும்.
71

Page 47
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ബമൃഗശരീ
காலங்கடந்து போனால் கடலில் போட்டது போலதான் மீளமாட்டா.
கடற்கரையில் தோணி, வலையோடு தொடங்கிய தொழில் தண்டயலுக்கு.
கடலை மட்டும் நம்பி காலந்தள்ள அவர் விரும்பவில்லை. பக்க உழைப்பாக ஒத்திக்கு எடுத்த வயற்காணிகளில் குத்தகை இல்லாமல் வேளாண்மை செய்து வந்தார். எல்லாமே பாய்ச்சல் நிலம்தான். நீர் பஞ்சம் இல்லை. ஆதலால் எல்லாப் போகங்களிலும் விளைச்சல் பொன்னாகக் குவிந்தது.
காலையில் கடலில் விட்ட தோணி பத்து மணிக்குத்தான் முதற்பாடு கரையேறியது.
அரைமடிக்கு மேல் கீரிமீன் பிடிபட்டிருந்ததால் தண்டயலுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அன்று மற்ற வலைக்காரர்களுக்கு அவ்வளவு லாபம் இருக்கவில்லை. சிலருக்கு வெறும் வலைதான் கரையேறி இருந்தது.
மீன் வாடிக்கு வந்து குரும்பை ஒன்றைக் குடித்துக் கொண்டு ஆயாசம் தீர்ந்ததும் இரண்டாம் பாட்டிற்கு வலை ஏற்றுவதைப் பார்க்கப் போகும் வழியில்தான் அவர் சேகுமதாரைக் கண்டார்.
"தண்டயல் இன்னும் ஆறுமாசம் இரிக்கி, அதுக்குள்ள ஆண்டவன் ஒரு வழி காட்டுவான். மருமகனும் சவுதிக்குப் போறத்துக்கு அலை அலையெண்டு அலையிறார். அதுக்கே ஒரு கொள்ளக் காசு செலவழிஞ்சி போச்சி. இந்த மாதக் கடசிக்குள்ள எல்லாம் எப்பிடியும் செரி வருமாம்.
தண்டயல் வாய்விட்டுச் சிரித்தார்.
“என்னடம்பி ஒண்ட மருமகன் இஞ்சினியர, இல்லாட்டி டொக்டர? வேலைக்கிப் போய் ரண்டுமூணு மாசத்துக்குள்ள
இருவதினாயிரம் அனுப்பி ஊட்ட வளவ மூளுகத்துக்கு” என்றார் கிண்டலாக,
72

ஜின்னாஹ் ஷரீபுத்தின் ബ്ലേഗു ഗ്രീശബ്ദ
சேகுமதாருக்கு அவர் வார்த்தைகள் சரியெனபட்டாலும், ஏதோ ஒரு நம்பிக்கை. ஆண்டவன் ஒரு நல்ல வழி காட்டுவான் என்று.
கடற்கரை மணல் மதிய வெயிலில் தணல் போல தகிக்க, உச்சிக்கு மேல தலையில் இருந்த துணியையுந் தாண்டி சூரியன் மொட்டைத் தலைக்குக் சூடேற்றினான். அத்தோடு தண்டயலின் குத்து வார்த்தைகள் அவர் நெஞ்சைக் கருக்கின. நிற்க முடியாமல் அவர் தடுமாறினார்.
குடையின் கீழ் நின்ற தண்டயலின் செருப்புகளில் நிலத்தின் சூடு தாவ,
"ம்.சரி பாப்பமே” என்றவாறு அவர் தோணி இருந்த பக்கம் நடக்கலானார்.
மீன் வாடியைற்சுற்றி நின்ற சிறு தென்னை மரங்களில் ஒன்றினடியில் ஒதுங்கிக் கொண்டார் சேகுமதார் வான்நோக்கி நேராக நின்ற அந்த மரம் உச்சி வெயிலில் தனக்குத்தானே குடை பிடித்துக் கொண்டிருந்தது. அடிமரத்தோடு சேர்ந்து ஒற்றைக் காலை மடக்கி மரத்தில் முட்டுக் கொடுத்து நின்றவாறு ஒரு நீண்ட பெருமூச்சசைக் காற்றோடு கலக்க விட்டார்.
வெயிலில் ஓடி வந்த களை ஒருபுறமும் தண்டயம் நினைவு படுத்திய விடயம் ஒருபுறபும் அவரை வாட்டின.
அவருக்குத் தாகமாக இருந்தது. வாடிக் கிணற்றில் நீரைமொண்டு தாகந்திரக் குடித்தார் சிறிது நீரை தலையில தப்பிக் கொண்டு மிகுதி நீரை காலில் ஊற்றினார்.
இவைகள் அவரின் உடலில் சூட்டை ஓரளவு குறைத்தன. வேயன்றி உள்ளத்தின் நெருப்பை அணைக்க முயலவில்லை.
சேகுமதாருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவை இரண்டும் பெண்கள். கடைக்குட்டி ஆண். பெண்பிள்ளைகள் இரண்டும்
73

Page 48
ஜின்வாஹ் வடிரிபுத்தின் (ഗ്രൂരശ്
குடும்பநிலை காரணமாய் இடையில் படிப்பை நிறுத்திக் கொண்டனர் மகன் தொடர்ந்து படித்தான். பதினோராம் ஆண்டு முடிந்து பரீட்சையும் எழுதிவிட்டு தேர்வுக்காய் காத்திருந்தான். நல்ல கெட்டிக்காரன் பொறுப்புள்ள பிள்ளை.
இடையில் நின்றுவிட்ட தங்கள் படிப்பைப்போல தம்பிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என சகோதரிகள் எண்ணினர். முதலில் நெசவுத் தறிக்குத் தார் சுற்றியும், பின்னர் நெசவு செய்யவும் பழகிக் கொண்டனர்.
பக்கத்து வீட்டுக் காதர் காக்கா இரண்டு மர நெசவுஇயந்திரங்களைப்போட்டுக் கொடுத்தார்.
நல்ல மனிதர். தனது சக்திக்கு ஏற்றபடி முடிந்தால் பிறருக்கும் உதவுகின்ற நல்ல மனம் அவருக்கும் தனக்கும் வருமானத்தோடு பிறருக்கும் உதவிய திருப்தியோடு அந்த நல்ல காரியத்தைச் செய்திருந்தார். அவர். தன் தம்பியின் படிப்புக்கான செலவுகளை சகோதரிகளே ஏற்றுக் கொண்டனர். சேகுமதார் காலையில் கடற்கரைக்குப் போவதும் வருவதுமாக இருப்பார். கிடைத்தால் கிடைக்கும் இல்லையென்றால் அவ்வளவுதான்
பசியும் பட்டினியும் அவருக்குப் பழகிப்போன செய்திகள்.
காலம் வளர்த்துவிட்ட இரண்டு பருவக்குமரிகளைப் பார்க்கும் போது சேகுமதாருக்கு நெஞ்சம் கணக்கும். இவர்களை எப்படிக் கரைசேர்ப்பது என்று எண்ணிப் பெருமூச்செறிவார். அப்போது.
“யாரை நம்பியும் இறைவன் எவரையும் படைக்கவில்லை படைத்தவனே காப்பான்” என்ற அசையாத நம்பிக்கை அவருக்குச் சாந்தி தரும். பக்கத்து வீட்டுக் காதர் காக்கா ஒரு நாள் சேகுமதாரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். தனக்குத் தெரிந்த ஒரு மாப்பிள்ளையைப்பற்றி கூறி மூத்த பெண்ணுக்குப் பேசி முடிக்க அவர் சம்மதத்தையும் கேட்டார்.
74

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ്യമൃഗശരീ
கரும்பு தின்ன கூலியும் வேண்டுமோ? சேகுமதார் நெஞ்சம் மகிழ்ந்து போனார். ஆனால் கொடுக்கல் வாங்கல்களைக் கேட்டபோது அவருக்கு உள்ளம் பகீரென்றது.
எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இருபத்தைந்து தாண்டும் போலிருந்தது.
அன்றாடம் கரைவலையை நம்பி காலத்தையோட்டும் அந்த ஏழைத்தகப்பனால் இந்தப் பெருஞ் சுமையை எவ்வாறு தாங்க (Up!9uqLb.
காதர் காக்கா சொன்னார் “நல்ல பொடியன் கொஞ்சம் படிச்சும் இரிக்கான். தாத்தா தங்கச்சி எண்டு ஒரு பாரமும் இல்ல தம்பி ஒருவன் மட்டுந்தான்.
ஏழையள் எண்டாலும் நல்லதுகள். ஒண்ட கொமருகளும் நல்ல ஒழுக்கமானதுகள் எண்டதால அவியளுக்கு நல்ல சம்மதம் தலையால வாறச்தேவி கைதவறினா தேடினாலும் கெடைக்கா’ என்று.
"குந்தியிருக்க ஊடுவளவத்தவிர எனக்கிற்ற வேறு என்ன இரிக்கி அத வித்துத் திண்டா பொறகு நடு றோட்டிலதான் நிக்க வேணும்” என்றார் பதிலுக்கு சேகுமதார்.
“ஒனக்குப் பிரியமெண்டா நானொண்டு சொல்லுறன். ஊடுவளவ மம்மது தண்டயனுக்கிட்ட ஒத்திக்கு வெச்சா இருவது வாங்கலாம். ரண்டு வருசத்திக்கி கேட்டுப் பாப்பம் ஒண்ட வளவுக்குள் நிக்கிய தென்னமரங்களால வாறத்தால சேத்துக் கணக்குப் பாத்தா மனிசன் கட்டாயம் தருவார்” என்றார் காதர் காக்கா.
“ஒத்திக்கி வெச்சா மூழுகத்துக்கும் வழியிருக்க வேணும் எனக்கிற்ற என்ன வழி இரிக்கி காதர் காக்கா”
“அதுக்கும் ஒரு வழி இரிக்கி சேகுப்புள்ள இப்பதான்
75

Page 49
Asirio Gigligësit ൭ശ്രഗ്രീ.മമ്
கொமர்களும் செளதி, துபாய் எண்டு போகுதுகளே சின்னவள ரண்டு வரிசம் அனுப்பி எடுத்தா ஒரு மாதிரி செரிக்கட்டிப் (8LITL6)Tib.
சேகுமதாருக்கு இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நிலம் அதிருவதைப் பேல தோன்றிற்று. காதினுள் விண்ணென்று தெறித்தது அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை எழுந்து கொண்டார்.
வீட்டை விற்று விட்டு நடுத்தெருவில் நின்றாலும் கன்னிப் பெண்ணை கடல் கடந்து கண்காணாத் தொலைக்கு அனுப்ப அவர் மனம் ஒப்பவில்லை. யோசித்து சொல்லுவதாகக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
மனைவியிடம் விடயத்தைக் கூறிவிட்டு செய்யத் தகுந்த வேறு மார்க்கங்கள் உண்டாவென இரவுபகலாக சிந்தித்தார். எந்தவோர் நல்ல வழியும் அவருக்குத் தோன்றவில்லை. வெறுமனே மூளையைக் குடைந்தது தான் மிச்சம்.
ஒரு வாரம் ஓடிக்கழிந்தது. காதர் காக்கா மீண்டும் கூப்பிட்டு அனுப்பி இருந்தார்.
மாப்பிள்ளை வீட்டார் அவசரப்படுத்துவதாகவும், என்ன முடிவினைத் தான் சொல்வது என்றும் சேகுமதாரைக் கேட்டார்.
பதில் கூற வழியில்லாது தலை குனிந்து நின்ற அவரை, அவரின் இளைய மகளின் குரல் நிமிர வைத்தது.
"மாமா! எனக்கி எல்லாந் தெரியும். நான் துபாய்க்கிப் போக முடிவெடுத்துப் போட்டன். தாத்தாட கலியாணம் நடக்க வேனும் நீங்க சொன்ன மாதிரி ஊடு வளவ ஒத்திக்கி வெச்சி கலியாணத்த எப்படியாவது முடியிங்க”
இந்த வார்த்தைகளைக் கேட்ட சேகுமதார் அதிர்ந்து போனார். அப்போது அவளை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை.
76

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ബ്രക്രമീശമ്
இவளுக்கு இந்த விடயம் எப்படித் தெரிய வந்தது. தானாக முடிவுக்கு வந்திருக்கிறாளே என அவர் ஆச்சரியப்படலானார்.
திடீரென வந்த இந்தப் பதிலைக் கேட்ட காதர் காக்காவும் வியப்பு மேலிட்டால் அவளை ஏறெடுத்து நோக்கினார். அத்தனை எளிதாக இப்படி ஒரு பதிலை அவனிடத்தில் இருந்து பெறமுடியுமென அவர் எதிர்பார்க்கவில்லை.
எவ்வளவோ எடுத்துச் சொல்லி தந்தை தடுக்க முயன்றும் தன் சகோதரியின் வாழ்க்கை ஒன்றே பெரிதென எண்ணிய அந்த இளையவளின் தீர்க்கமான முடிவின் முன் அவைகள் செயலற்றுப் போயின.
காதர் காக்காவின் முயற்சியும் அவரின் பொருளாதார பக்க பலமும் இறைவனருளால் மூத்தவளின் திருமணம் இனிதே நடந்தேற உதவியது.
வந்து சேர்ந்த மருமகனும் எதிர்பார்த்ததை விட நல்ல மனமுள்ளவராக இருந்தார். பட்டகடனை ஈடு செய்ய தனது மைத்துணி வெளிநாடு செல்ல இருப்பதை அறிந்து அவர் மனம் வருந்தினார்.
தன்னால் ஏற்பட்ட கடன் பழுவை தானே தீர்த்துப் பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டுமென எண்ணிய அவர் தனது மைத்துணிக்குப் பதில் தானே வெளிநாடு செல்லுவதென தீர்மானித்து தனது முடிவை மாமனாரிடம் கூறினார்.
மருமகனின் இந்த முடிவு சேகுமதாரின் நெஞ்சத்தை நிம்மதியடையச் செய்தது. இறைவனின் கருணையை எண்ணி நெகிழ்ந்து போனார்.
வாரங்கள் மாதங்களாக நீண்டு நடந்தன. எத்தனையோ முகவர் நிலையங்களுக்கு ஏறி இறங்கியாயிற்று. எதுவும் பொருந்துவதாக இருக்கவில்லை.
77

Page 50
ஜின்வாஹ் ஷரீபுத்தீள் ബബ്രു,ശ്ര,ശ്രീശരീ
கையில் இருந்த பணமும் சிறிது சிறிதாகக் கரைவதை எண்ணும் போது எல்லோருமே அச்சங்கொண்டனர்.
முயற்சிக்கே இவ்வளவு ஆனால் முடிவு சரியாக அமைந்தால் குறையும் பணத்திற்கு எங்கு போவது. எவ்வாறாயினும் இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு தொடர்ந்து முயன்றனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை சுபஹத் தொழுகையை முடித்துக் கொண்டு நேரே வழக்கம் போல் கடற்கரைக்குச் சென்றுவிட்டார் சேகுமதார்.
அந்த நாட்களில் நன்றாக மீன்கள் பிடிபட்டன. தொடர்ந்து சூரை மீன்கள் பிடிபட்டு வந்ததால் வேடிக்கை பார்க்க ஊரே கூடி நின்றது.
சின்னப் பையன்களுக்கு ஒரே கொண்டாட்டம் நீண்ட வலைகளில் தொங்கும் ஒண்றிரண்டு மீன்களை பெரியவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பிடுங்கிச் செல்வதும், பிறருக்குத் தெரியாமல் ஓரிடத்தில் ஒவ்வொன்றாகச் சேர்த்தெடுத்துப் புதைத்து வைப்பதுமாக இருந்தனர்.
ஆழ்கடல் வலையின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நீராடும் சிறுவர்கள் ஒருபுறம். ஒருவரை ஒருவர் முந்தத் தலைப்பட்டு நீந்தும் இளைஞர்கள் ஒருபுறம். கடற்கரை ஒரே அமளி துமனிப்பட்டுக் கொண்டிருந்தது.
திடீரென ஓர் இடத்தில் சிறுவர்களின் கூக்குரல். கரையேறிக் கொண்ட அவர்கள் கடலைச் சுட்டிக் காட்டியபடி அலறினார்கள்.
"நிசாம் தாண்டுட்டான்! நிசாம் தாண்டுட்டான்!! என்று ஏகோபித்துக் குரல் கொடுத்தனர்.
மடிவலை கரையேறும் அந்த வேளையில் எல்லோர் கவனமும் அதன் மேலேயே நிலைத்து நின்றதால் சிறுவர்களின்
78

ஜின்னாஹ் ஷரிபுத்தின் ്യഗ്രൂഗ.മമ്
கூக்குரல் எவரின் காதுகளிலும் விழவில்லை. ஆனால் அங்கு அந்த மடிவலையின் பின்னால் நின்ற ஒருவரைத் தவிர.
நொடிப் பொழுதில் நீரினுட் புகுந்த அந்த உருவம் ஒரு சிறுவனைத் தலை முடியைப் பிடித்துத் தூக்கியவாறு அவசர அவசரமாகக் கரையேறியது.
சிறுவனைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, தரையிற் கிடத்தி உள் புகுந்த நீரை வெளியேற்ற முயற்சித்தது. இப்போது பலரும் பக்க உதவிக்கு வந்து சேர்ந்தனர்.
சிறிது நேர முயற்சியின் பின் சிறுவன் மூச்சு விட்டான். திணறிக் கொண்டிருந்த அவனை வேறு இருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
நீண்ட நாள் முயற்சியின் பின் சேகுமதாரின் மருமகன் மக்கமா நகரில் இறைபள்ளிக்கு அருகாமையில் தொழில் வாய்ப்புப் பெற்றுப்போய் இரண்டு மாதங்கள் கழிந்து போயிருந்தன.
எதிர்பார்க்காத அளவு பணமாக ஒரு பெருந்தொகையைக் காதர் காக்காவின் பெயருக்கு அனுப்பியும் இருந்தார். தாங்கள் வேலை செய்யும் இடத்தில் சிலர் கூடி மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி தமக்குள் ஒருவருக்கொருவர் உதவுவதெனத் தீர்மானித்ததாகவும் சீட்டிழுப்பில் இரண்டாம் மாதமே தனக்கு அந்தத் தொகை கிடைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கிடைத்த தொகையை அப்படியே அனுப்பி இருப்பதாகவும் வீட்டை மீட்டு எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை வீட்டுத் தேவைக்குப் பாவிக்கும் படியும் எழுதியிருந்தார்.
ஆண்டவனின் திருப்பொருத்தத்தை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர். தன்னை நம்பிப் பிரார்த்தனை செய்பவர்களை அவன் ஒரு நாளும் கைவிடுவதில்லையே.
79

Page 51
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் (ഗ്രഗ്രീശരീ
காசு இருபதினாயிரத்தைக் கவனமாக எண்ணி, அத்தோடு
இன்னும் மூன்று ஆயிரம் ரூபாய்களையும் சேர்த்துக் கொண்ட
சேகுமதார், அதனை காதர் காக்காவின் கையில் கொடுத்தார்.
பணத்தை அவரும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டதும் இருவருமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்.
வாசலைக் கடந்து சிற்றொழுங்கையால் மாறி வீதிக்கு வந்த அவர்கள் முதலில் சந்தித்தது தண்டயலைத்தான். கூட நொத்தாசியார் ஐயாவும் வந்து கொண்டிருந்தார்.
காதர் நானா நினைத்துக் கொண்டார். "யாருடையவோ வீடு, காணி தண்டயல் பேருக்குக் கைமாறப் போகின்றது” என்று.
“என்ன தண்டயல் எங்க போறயள் ஒங்களத் தேடித்தான் நாங்க போறம்” என்றார் சேகுமதார் முந்திக் கொண்டே
"என்ன! நாங்க ஒங்களத் தேடித்தான் போறம் சேகுப்புள்ள” என்றார் முகம்மது தண்டயல். ஆச்சரியத்தோடு
ஏன் எதற்கு என்ற கேள்வி எதுவுமில்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார் சேகுமதார்.
வாசல் திண்ணையில் எல்லோரும் பாய்போட்டு அமர்ந்தனர். சிறிது நேர மெளனத்தின் பின் தண்டயலே பேச ஆரம்பித்தார்.
“சேகுப்புள்ள ஒனக்கு எப்பிடி நண்டி சொல்லுறதெண்டே எனக்குத் தெரியா. அண்டைக்கி ஒண்ட உசிரையும் பாக்காம என்ர புள்ளைய நீ காப்பாத்தி இரிக்காய். ஆண்டவனுக்குப் பொறகு நீ அண்டு அவடத்த இல்லாம இருந்திருந்தா என்ர
புள்ள எனக்கில்ல.
ஆயிரமாயிரம் பணத்தையும், எத்தனையோ ஊடு வாசல், காணியள் இருந்தும். உள்ளதும் ஒரு புள்ள. அண்டைக்கி 80

ஜின்னாஹ் ஷரீபுத்தின் ്മൃമര്ശമ്
கண்ண மூடி இருந்தா என்ர கெதி என்ன? நீந்தத் தெரியாதவன் கூட்டாளிமாரோட சேந்து வந்திரிக்கான்.
தண்டயல் பேச்சை முடிக்கவில்லை. சேகுமதார் குறுக்கிட்டார்.
அது ஒங்கட பொடியன் எண்டு அப்ப எனக்கித் தெரியா தண்டயல்”
அந்த நிகழ்ச்சியை அவர் மறந்தே போயிருந்தார்.
"அதுக்கு இப்ப என்ன தண்டயல்” என்றார் சேகுமதார் தொடர்ந்தும்.
"ஹயாத்து மவுத்தொண்டு இரிக்கி சேகுப்புள்ள. செல நேரம் நான் முந்திக்கிற்ரா இந்த ஊடு வாசல் ஒனக்குச் சேராமப் போகுமோ எண்டு பயந்துதான் வந்திரிக்கன். என்ர புள்ள கடல்ல தப்பின பொறகு எனக்கு மவுத்த எண்ணிப் பயமா இரிக்கி
மத்தவங்கட காணி, பூமி ஊடுவாசல என்ர பேரிலே வெச்சிக்கிட்டு மவுத்தாக எனக்குப் புறியமில்ல, ஒனக்கும் கையில காசு சேர்ந்ததும் நீதா. இப்பவே ஒண்ட ஊடு வளவ மாத்தி எழுதுவம். இதச் செய்யாட்டி நான் ஒரு மனிசனில்ல” என்றார். தண்டயல் அவருடைய வார்த்தைகளில் அச்சமும் பயமும் நிறைந்து காணப்பட்டது.
பேச்சின் இடையில் புகுந்து கொண்ட காதர் காக்கா, தனது சட்டைப் பையில் இருந்த காசை வெளியில் எடுத்தபடி "இல்ல தண்டயல் நாங்க காசை இப்பவே தந்திருகம். அதுல இருவத்தி மூவாயிரம் இரிக்கி. இருவது ஒங்கட மத்தது சந்தோஷம்”
தண்டயலுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி வந்தது என்று அவர் ஆச்சரியப்படுவது அவர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
81

Page 52
aiGIArio Gigi (ഗ്രഗ്രീശരീ
இதனைப் புரிந்து கொண்ட காதர் காக்கா நடந்த எல்லாவற்றையும் விவரமாகக் கூறி காசை எண்ணி தண்டயலின் கையில் கொடுத்தார்.
பணத்தை வாங்கிக் கொண்ட தண்டயல் அதில் ஐயாயிரத்த சேகுமதாரின் கையில் கொடுத்து “எனக்கி சந்தோஷம் ஒண்டும் வேணாம். இனிமேல் அந்த "ஹறாத்த’ நான் வாங்க மாட்டன். மத்த ரண்டாயிரத்தையும் நீயே வெச்சிக்க. இவ்வளவு நாளும் ஒண்ட வளவுக்கு நான் அனுபவிச்ச லாபத்துக்கு என்றார்.
சேகுமதார் எவ்வளவு மறுத்தும் அவர் கேட்கவில்லை. நொத்தாசியார் ஐயாவும், காதர் காக்காவும் தண்டயலுக்குச் சாதகமாக இருந்தனர்.
நல்ல ஒரு முடிவு வந்ததும் எழுத்து வேலைகள் முடிந்து உறுதிகள் கைமாறப்பட்டன.
சேகுமதாரின் மனைவி வாழைப்பழமும் தேனிரும் கொண்டுவர எல்லோரும் உண்டு பருகினர். பின்னர் தண்டயல் நொத்தாசியாரோடு விடைபெற்றுக் கொண்டார்.
இந்த நேரம் பார்த்து மாலைத் தொழுகைக்கான பாங்கொலி கணிரெனச் செவிகளில் பாய்ந்தது.
"அல்ஹம்துலில்லாஹற்” என்றவாறு ஒரு நீண்ட பெருமூச்சு சேகுமதாரிடமிருந்து வெளிப்பட்டது.
அதில் இருந்த நிம்மதியின் சாயலை காதர் காக்காவால் உணர முடிந்தது. இருவரும் பள்ளிவாசலை நோக்கி நடந்தனர்.
82

ஒரு விடிவினுக்காய்
கோடொன்றாய்ப் பிறந்த பிறைகண்டு குழந்தைகள் குதுாகலித்து மகிழ்ந்தன. வயது வந்தவர்களுக்குங்கூட மனதில் ஏற்பட்ட மகிழ்வுக்கு ஒன்றும் குறைவில்லை.
ஒவ்வொன்றாய்க் கூட்டிக் கூட்டி பிடித்த நோன்புகளைக் கணக்கிட்டு அத்தனை நோன்புகளையும் பிடித்துவிட்ட பூரிப்பில் பிஞ்சு நெஞ்சங்கள் நாளை விடியும் பெருநாளை எண்ணிப் பூரித்துப் போயின.
"இஞ்சாருங்கோ நாளைக்கிப் பெருநாள். கழுவி வெச்ச பழைய உடுப்புக்கள் போட்டுச் சமாளிச்சுப் போடலாம். சாப்பாட்டுக்கு ஏதாச்சும் உதுகளுக்கு வாங்க வேணாமே"
சலீமா பிறை கண்ட சூட்டோடு காதர் நானாவைப் பிடுங்கத் தொடங்கினாள். நோன்பு ஒருவாறு பிடித்து முடிந்தாயிற்று. தரும சிந்தனையுள்ளவர்களால் ஒரு நேரமாவது வயிரார உண்ண முடிந்ததால் நோன்புக்கு எந்தவொரு இடர்பாடும் இருக்கவில்லை. ஆனால், பெருநாளைக்கு.
83

Page 53
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ്വമൃശ്രമരശരീ
பசித்திருந்த வயிறுகளுக்கு பிரியாணியும், வட்டிலப்பமும்
இல்லாவிட்டாலும் கொஞ்சம் நாவுக்கு ருசியாக ஏதேனும் சமைத்துப் போடவேண்டுமென சலீமா விரும்பினாள்.
நேற்றிலிருந்தே இப்பிடியொரு கேள்வி பிறக்கும் அதற்கு எவ்வாறு நிவாரணம் தேடுவது என்பதில் காதர் நானா கருத்தாகவே இருந்தார். பலவாறு முயன்றும் பயனற்றுப் போனதால் கேள்விக்கான பதில் மெளனமாகவே இருந்தது.
ஏன். நீங்கள் பேசமாட்டியளே. நான் சொல்லுகிறது காதில விளல்லயே’ சலீமா மீண்டும் அறுக்க ஆரம்பித்தாள்.
என்ன பதில் சொல்லுவது. அப்போதுதான் “ம."ரிப்” தொழுகையை முடித்துக் கொண்டு வாய் நிறையத் "தக்பீருடன் வந்த அவருக்கு சலீமாவின் கேள்விகள் நெஞ்சுள் சூடாக இறங்கின.
அவர் எதுவும் பேசவில்லை படி இறங்கி மீண்டும் பள்ளியை நோக்கி நடந்தார். கொடையாளன், தயாளன் ஏதாவது ஒரு வழி காட்டுவான் என்ற நம்பிக்கை வெறுமையாய்க்கிடந்த நெஞ்சுள் முகிழ்வது போல அவருக்குத் தோன்றியது.
சோனகத் தெருப் பள்ளியின் ஒலிபெருக்கிகள் ஓங்காரமாய் ஒலித்தன.
"அல்லாஹ9 அக்பர். அல்லாஹ? அக்பர். அல்லாஹ? அக்பர். வானலையின் ஒவ்வொரு நெளிவிலும் இறைநாமத்தின் புகழ் பாடல் கரைந்து, அனைத்துச் செவிகளிலும் தேனாகப் பாய்ந்தது.
அது முஸ்லிம்களுக்கு மட்டுமா! இந்துக்களும், கிறிஸ்தவர். களுங்கூட மன ஒருமைப்பாடு அங்கு மத பேதங்களை மறந்து, எல்லோரும் ஒன்றே என்னும் சமபாட்டில் உறுதி கொண்டதால்,
84

GHTo angsa ്യഗ്രമീശരീ
கோயில் மணிகளின் பேரொலியும் தேவாலயங்களின் மணியோசையும் எல்லோருக்கும் பொதுவாகி செவிகளில் இனித்து மனத்திற்கும் இதமாகின.
இளைஞனான காதர் நண்பர்களுடன் பள்ளிவாயில் முகப்பிலில் பேசிக்கொண்டிருந்தான்.
"அடேய் என்னடா மச்சான் நாளைக்கிப் பெருநாளில்லயே. ஏனடா இன்னும் அழைப்பொண்டையும் காணல்ல. பாட்டி கீட்டியொண்டும் இல்லையே”
வீதியால் பைசிக்கிளில் சென்று கொண்டிருந்த அவன் பள்ளித் தோழன் மூர்த்தி காதரைக் கண்டதும் நிறுத்தி விசாரித்தான்.
"ஏனில்ல பெருநாள் சாப்பாடு உனக்கும் கேசவனுக்கும் என்ர கணக்கிலடா, ஹோட்டல்தான். போன தீபாவளிக்கு நீ விருந்து போட்ட அதே ஹேட்டல்தானடா. மறக்காம வந்திடு மச்சான். கேசவனுக்கு நான் சொல்லுறேன். கண்டால் நீயுஞ் சொல்லுமன்”
“பின்னென்ன கட்டாயம வாறண்டா. தண்ணி கிண்ணியுங் கிடைக்கிமே”
“ஓமடா பச்சத்தண்ணி கிடைக்கும். வேணுமெண்டால் சோடா வாங்கித்தாறன்"
நண்பர்கள் ஒன்றிச் சிரித்தனர். மூர்த்தி விடை பெற்றுக் கொண்டான். காதரும் கூட இருந்த நண்பர்களிடம் கூறிக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்தான்.
வசதியான குடும்பம் தந்தையாரின் இரும்புக் கடை வியாபாரத்தில் கணிசமான வருவாய் இருந்தது. தெருவில்
85

Page 54
BúGJITD Gaņshi ്വമൃഗശരീ
பணக்கார வீட்டுப்பிள்ளைகளில் ஒருவனாக அன்று காதரும் இருந்தான்.
கேட்டது கிடைக்கும் வசதிகளும் அள்ளிக் கொடுத்தாலும் குறைந்து போகாத செல்வமும் காதரின் வாழ்வில் நிலைத்து நின்றன. இல்லாமையின் இருண்மையை என்றும் அவன் கண்டிக்கவில்லை. அறிந்த காலத்தில் இருந்தே அவன் செல்வத்துள் திளைத்தான்.
பொருள் படைத்தவர்களுக்கு எப்போதும் நண்பர்கள் சேர்ந்து கொள்ளும் இயல்புக்கு காதராலும் விலகி இருக்க முடியவில்லை.
மனிதருள் பகுப்பைக் காணாத இஸ்லாத்தின் கொள்கைப் பிடிப்பு அவனுக்கு எல்லா வகுப்பாரிடத்தும் நண்பர்களைத் தேடித்தந்தது.
கொள்ளை வருவாயின் செல்வச் செழிப்பு காதரை வென்றுவிடவில்லை. மார்க்கத்தின் பக்கம் அவன் வாழ்வு சாய்ந்திருந்ததால் ஒரு நல்ல இளைஞனாகவே அவன் வாழ்ந்தான்.
இக்கால கட்டத்தில் தான் அந்தச் சோக நிகழ்வு ‘மின்னாமல் முழங்காமல் வந்துற்ற மழைபோல் நிகழ்ந்தது. மணிகளைக் கணக்காக வைத்து உடுத்த உடையுடன் பிறந்து வளர்ந்த மண்ணைப் பிரிந்து போகும்படி ஏவப்பட்ட கட்டளை.
ஒரே நாளில் அனைவரும் ஒன்றுமற்ற ஏழைகளாகச் சமப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டனர். ஒரு இனத்தின் புலப்பெயர்வு ஒரு நீண்ட நடைப்பயணமாய், கண்ணிருள் புதைந்துபோன ஒரு சோக வரலாறாய் இன்றைய இந்நிலைக்கும் காரணமாய் ஆனது.
N4 N4 W4 Nik ZYN Z
பள்ளிவரை நடந்து வந்த காதர்நானா, “வுழு’ச் செய்துகொண்டு “இஷா”வுக்கான “அதான்” ஒலிக்கு முன்னமே
86

ginip angdi മൃശുശ്രീശരീ
பள்ளியுள் நுழைந்தார்.
ஆட்கள் அதிகமற்ற அந்த வேளையில் சில "ரக்காஅத்' தொழுதுவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தி அடுத்தடுத்து ஆண்டவன் நாமத்தை உற்சாடனம் தொடங்கினார். “யா அல்லாஹற். யாரஹற்மான்.யாரஹீம்”. மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளின் மறுபிறப்புக்கள். கண்களில் கண்ணிர்ப் பெருக்கு. கைகளை மேலே உயர்த்திய அவர் நெஞ்சுருக இரக்கலானார்.
“யா அல்லாஹற் அத்தனை சுகங்களும் காலடியில் தந்து என் இளமைக்காலத்தை அழகுபடுத்தினாய். இன்று ஏன் இப்படி எங்களை ஏங்கச் செய்கின்றாய்.
நாங்கள் ஒருவரா இருவரா. நூறாக ஆயிரங்களாக வல்லவா துன்புறுகின்றோம். ஒரே நாளில் எம்மை அநாதைகளாக்கிய நீ எங்கள் துன்பத்திற்கு ஏன் ஒரு முடிவைத்தரக்3inLT5.
ஒரு பொழுது அள்ளிக் கொடுத்த நாங்கள் இன்று பிறரிடம் கையேந்தும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டோம். சோதனைகள் மூலம் நீ எங்களைத் தூய்மைப்படுத்த எண்ணினால் உன் எண்ணத்துக்கு நாங்கள் அடிபணிகின்றோம்.
யா அல்லாஹற் இந்தத் துன்பங்களைத் தாங்கும் மனப்பக்குவத்தை எங்களுக்குத் தந்தருள். ஒரு விடிவுக்கான வெளிச்சத்தை நாம் உனக்காகப் பிடித்த நோன்புகளின் பொருட்டால் காட்டியருள்.”
இஷாவுக்கான “அதான்’ ஒலி காதர் நானாவின் பிரார்த்தனைக்கு முற்று வைத்தது. எல்லோருடன் சேர்ந்து தொழுது கொண்ட பின்னரும் சிறிது நேரம் தனியாய் இருந்து பிரார்த்தித்து முடித்து எழுந்தபோது பள்ளியில் “முஅத்தினை'த் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
நோன்பு காலத்தில் இரவுகள் அனைத்தும் ஒரு
87

Page 55
ஜின்வாஹ் ஷரீபுத்தீன் (ഗ്രീശമീ வினாடியுமற்று "ஹயாத்'தாக்கப்பட்டன. நாளை பெருநாள் என்பதால் சற்று முன்னதாகவே பள்ளியை வெறுமையாக்கி மனிதர்கள் கலைந்து போயிருந்தனர்.
காதர் தம்பி என்ன இண்டைக்கி “துஆ” மிச்சம் நீண்டு போயிற்றது. நான் பார்த்தனான் நீங்கள் "இஷா’ முந்தியும்
அழுதழுது "துஆ” கேட்டியள் ஏன். சொல்லுங்கோவன் ஏதேனும் கரைச்சலே என்னால ஏண்டதச் செய்யிறன்.
“முஅத்தினும்” அவரைப் போன்ற ஒரு புலம்பெயர்ந்த அடியார்தான். இருவருமே வடக்கின் சோனகத் தெருவில் பிறந்தது முதல் வாழ்ந்தவர்கள். அங்கு பள்ளியில் “முஅத்தீன்” ஆக வேலை செய்ததால் அனுபவம் அவருக்கு இங்கும் இலகுவாக வேலை தேடித்தந்தது.
"ஒண்டுமில்ல மோதினார். நாளைக்கிப் பெருநாளில்ல
9s
"ஏன் ஏதாவது கரைச்சலே. சொல்லுங்கோவன். முடிஞ்சத செய்யிறன்” அவரது வார்த்தைகளில் உதவி செய்யத்துடிக்கும் ஆர்வம் மிகுந்திருந்தது.
"பாம்பின்கால் பாம்பறியும்" என்பார்களே அதுபோல. காதர் நானாவின் பிரச்சினை எதுவாக இருக்கும் என்பதில் ஓரளவு திடங்கொண்ட பள்ளி "முஅத்தின்” வார்த்தைகளால் அவரை நிர்ப்பந்தம் செய்தார்.
“ஒண்டுமில்ல மோதினார் நாளைக்கிப் பெருநாள் தெரியாதே. பொம்பிள்ளையஸ். புள்ளையஞக்கு சாப்பாட்டுக்கு ஏதாச்சும்.”
அதற்கு மேல் அவரால் எதுவும் பேசமுடியவில்லை நாத் தடுக்கியது.
முஅத்தின் கண்கள் பனித்தன. எப்படி வாழ்ந்தவர்கள்.
88

giGITip angfigit (ഗ്രഗ്രീശരീ
கேட்காமலேயே கொடுத்துப் பழகியவர்கள். தான் எத்தனை முறை காதரின் தந்தையிடம் பெருநாள் “ஹதியா’ பெற்றிருக்கின்றேன்.
மற்றவர்கள் ஐந்தும் பத்தும் தந்தபோது அவர் மட்டும் ஐம்பதும் நூறுமாகவல்லவா தருவார். இன்று அவர் பிள்ளை யாரிடமும் கையேந்த மனமில்லாமல்.ச்.சே! என்ன கோரமிது.
இந்த இழிநிலைக்குத் தங்களை ஆளாக்கியவர்களை எண்ணும்போது அவர் நெஞ்சம் கொதித்தது. வெளியே செல்லப் பள்ளியைப் பூட்டத் தயாராக நின்ற அவர் சட்டெனத் திரும்பித்தன் தனி அறைக்குள் சென்றார்.
கையில் சுமந்த ஒரு பெரிய பொதியுடன் மீண்ட அவர், அதனை காதர் நானாவின் முன்வைத்தார். தனது சட்டைப் பையில் கைவிட்டு அதிலிருந்த அன்று கிடைத்த பணம் முழுவதையும் ஒன்றாக்கி அந்தப் பொதியுடன் மேல் வைத்தார். அவை ஒன்றையும் காதர் நானாவின் கையில் தர அவர் மனம் ஒப்பவில்லை.
"தம்பி நீங்க கோபிக்கப்படாது. இப்ப ஒங்கட நெலமையை என்னால புரிஞ்சுக்க முடியும். அதனாலதான் எனக்கு மிச்சமா உள்ளத ஒங்களுக்குத் தர நெனச்சன். உங்கட குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டவன். உங்கட வாப்பாக்கிட்ட நான் கேக்காமலே வாங்கிப் பழகினவன். அதனால தான் இத ஒங்கட கையில தூக்கித் தர என்னால முடியல்ல. நீங்களே எடுத்திட்டுப் போங்க. இந்த நோன்பு காலத்தில உதுவள் எனக்குக் கெடச்ச “ஹதியா’க்கள் தான். திருப்பித்தர நேரத்தில தாங்க. இப்ப எல்லாத்தையும் எடுத்துப்போங்க.
முஅத்தின் செய்கை காதர் நானாவுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் கனிவான வார்த்தைகள் அவர் நெஞ்சை வருடின. மெய்சிலிர்த்துப் போக அவர் முஅத்தின் முகத்தை நோக்கினார்.
89

Page 56
98siiı6YRATSD Gigrfiiygö6i ്യഗ്രൂരശമീ
கண்ணுள் ஊறிய நீர் அவரை மறைத்தாலும் அந்தக் கலங்கலுள் "முஅத்தினை” நெஞ்சாரத் தழுவி தன் நன்றியைத் தெரிவித்த காதர் நானா. கிடைத்த பொருட்களுடன் படி இறங்கி வீடு நோக்கி நடந்தார்.
அவர் செல்லும் திசையில் கண் பதித்து நின்ற முஅத்தின் “யா அல்லாஹற் இந்த நிலைமாற எங்களுக்கு நாங்கள் பிடித்த நோன்பின் பொருட்டால் உதவுவாயாக’ என "துஆ” கேட்டபடி பள்ளிக் கதவுகளுக்குத் தாழிட்டு மூடினார்.
அவ்வேளை, எங்கிருந்தோ வானொலியில் அல்லாஹ? அக்பர் அல்லாஹ? அக்பர் என்னும் தக்பீரின் பேரொலி அவர்கள் இருவரினதும் செவிகளில் பாய்ந்து அமுதாய் இனித்தது.
XM X4 N ブリーズ ズリマ ブ
90

GIMTOJITIÓ
குற்றைந்தது தினமும் இருபது சிகரட்டுக்கள் என் வாயின் துணையோடு நெருப்புக்கு இரையாகும். ஒவ்வொன்றோடும் ஒவ்வொரு இனிப்பு மிட்டாய் சேர்ந்து கரையும்.
ஏதோ காரணத்தால் அது இடையிடையே சில நாட்கள், சில நாட்கள் மட்டுமே. தடைப்படுவதுண்டு. விட்டு விடும் முயற்சிதான். நான்காம் ஐந்தாம் நாட்களில் தோல்வி தானாக வந்து சேரும். மீண்டும் பழைய குருடி கதைதான்.
இரண்டு மூன்று முறை மாலைதீவுக்கு விடுமுறை தேடிச் சென்று வந்தேன். அப்போதெல்லாம் போகும் போது புகைப்பதை நிறுத்தி விட்டுத்தான் போனேன். ஆனால் அங்கு போனபின் நண்பர்கள் இனாமாகக் கொண்டு வந்து தரும் "பென்சன்” வெண் சுருட்டுக்கள் என்னைத் தன் வயப்படுத்தி, உதடுகளுக்கிடையில் புகுந்து கொள்ளும்.
"என்னால் முடியவில்லை" என்ற மனத்திடமற்ற தன்மையை எவ்வாறு மறுப்பது. என் செய்கையும் தொடர்ந்தது.
91

Page 57
GIGTINTO Gņfıgı ബഗ്ഗമശമ്
ஒரு நாள் ஒரு சிகரட் என் கையில் புகைந்து கொண்டிருக்க ஒரு "மைலேடி” மிட்டாய் தனது "மெந்தோல்” மணத்தை சிகரட் புகையுடன் கலந்து என்னைச் சுற்றிப் பரிமாறிக் கொண்டிருந்தது.
எனக்கு அடுத்து ஒரு “ஸ்ரூடியோ’ அதில் 'பிரியா” என்று ஒரு இளவயதுப் பெண். அவள் தான் சொந்தக்காரி.
அவள் அண்ணனின் அகால மரணத்தின் பின் அழிந்து போகவிருந்த அந்த ஸ்தாபனத்தை நான் தான் தோள் கொடுத்து நிறுத்தினேன். அதற்காக எத்தனை தியாகங்கள், எத்தனை பகைமைகள் நான் சந்தித்தேன். இருந்தும் இன்று கிளைவிட்டு நிலைபெற்று நிற்கும். அதனைக் கண்டு மனம் பூரிக்க என்னால் முழுமனதுடன் முடியாதவாறு மனம் நோகச் செய்து விட்டார்கள் என்பதும் ஒரு புறமிருக்க, அன்று அவள் என்னுடன் வலிந்து பேசினாள்.
"என்ன டாக்டர் எத்தனை முறைதான் இப்படி போனவாரம் தான் புகை பிடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள். உங்கள் வாக்கு என்னவாயிற்று இந்த ஆண்களே இப்படித்தான் ஆத்ம சக்தி இல்லாதவர்கள்” என்றாள் நகைத்தபடி
எனக்குச் சுரீரென்றது மூளைக்குள். 'இவள் என்ன சொல்லிவிட்டாள். மொத்தமாய் ஆண்களையே என்னொருவனின் செய்கையால் இகழ்கின்றாளே என்றது நொந்துபோன மனம்.
அவள் சொல்வதைச் சொல்லிவிட்டு என் கண்களை ஊடுருவி எதையோ தேடினாள். அவள் வார்த்தைகள் எனக்கு உறைத்து விட்டதை அறிந்து கொண்ட அவள் முகம் சற்று வியர்த்தது.
பாதி எரிந்த சிகரட்டின் தீ முன் என் விரல்களைச் சுட்டதும் நான் நிதானமடைந்தேன். மனத்தில் ஏற்பட்ட மாற்றங்களின்
92

ஜின்னாஹ் ஷரீபுத்தீன் (ഗ്രഗ്രീശ്മീ
முகப்பிரதிபலிப்பை மறைத்தவனாக, வலிந்து வதனத்தில் மென்னகை உமிழ்ந்தேன்.
என்னுள் ஏனோ ஒரு வைராக்கியம் ஒரு மின்னலைப் போல தோன்றி வெடித்தது.
'பிரியா! இன்றிலிருந்து ஆண்டவன் மீது ஆணையாக சிகரட் குடிப்பது "ஹராம்” என்றேன். என் வார்த்தைகளின் அர்த்தம் அவளுக்கும் புரிந்தது. விளங்காத சொல்லாக ஒன்று இருந்தாலும், அதுவே என் வார்த்தைகளின் உயிர் என்பதை நான் சிகரட்டை எறிந்த வேகம் அவளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.
அவள் அதிர்ந்து போனாள். விளையாட்டாக தான் சொன்னது. இப்படி ஒரு உணர்வு மயமான மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. அவளுக்கு அச்சத்தைத் தந்திருக்க வேண்டும். அவள் சட்டென என் பார்வையில் அவளை மறைத்து கொண்டாள்.
"ஹராம்” என்ற வார்த்தை எத்தனை பொருள் பொதிந்தது? சில போது அது ஆகுமாகி, சில போது அது ஆகாமலும் போகின்றது.
விலக்கப்படாதவற்றை வேண்டுமென்றே விலக்க முயல்வது பாவம். இறைவன் தனது இறுதி நபியைக்கூட எச்சரித்துள்ளான்.
அது எனக்குத் தெரியும். ஆனால் நான் விலக்கிக் கொண்டது. விலக்கப்பட வேண்டிய ஒன்றைத்தான். சிலவகை அமிலங்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு ஆனவையும் தடைசெய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் புகையில் சேர்ந்துள்ள நிகோடின்' விலக்கப்பட்ட வகையில் சேர்ந்தால் என் செய்கை சரியானதே.
பாக்கு புகையிலையும் தீங்கில்லாத வெற்றிலையுடன் சேர்ந்து வாய்க்குள் அரையுண்டு சிவப்பாய் கழியும். “அதிகம் வெற்றிலையுண்டால் புற்று நோய் வருமாம்”
93

Page 58
AiiSITSio Gigligësi Gമ്ര ശ്രീശ്
யார் சொன்னது. ‘அப்படியானால் தொண்ணுற்று இரண்டையும் தாண்டிய என் தந்தைக்கு அது வந்திருக்க வேண்டுமே. என்று என் உள்மனம் கேட்கின்றது.
இரவுப் படுக்கைக்குப் போகு முன்னர்தான் அவர் வாயில் வெற்றிலை இல்லாதிருக்கும் மற்றும்படி இருபத்து நான்கு மணியும் என்பார்களே. அந்த வகையில்தான் அவரும் சேருவார்.
இன்றும் அவருக்கு ஒன்றும் இல்லை. புகைப்பழக்கமே வெற்றிலை மெல்லலோ இல்லாத என் மருமகனை இருபத்து மூன்று வயதில் அந்தப் பாழும் நோய் பறித்துக் கொண்டது வேறு. யதார்த்தம் சில போது சறுக்கிப் போவது முடிவு அல்ல.
மருத்துவத்துக்கு வரும் பல நோயாளிகளுக்கு அவர்கள் நோய்ககு ஏற்றபடி "சிகரட் நஞ்சு” என்பேன். அப்போது நானும் தான் புகைத்துக் கொண்டிருந்தேன். எனது நோயாளர்கள் பலருக்கு அது தெரியும். சிலர் வாய்விட்டும் என்னைக் கேட்டிருக்கின்றார்கள்.
“எனக்குத்தான் உனது நோய் இல்லையே” என்று என்னால் எனது மனச்சாட்சியை மீறி அன்றெல்லாம் அப்படிச் சொல்ல முடிந்ததே. இன்றும் என் நோயாளர்களுக்கு நான் துணிவாகவே சொல்லுகிறேன் "சிகரட் நஞ்சு” என்று. அது உண்மைதான் என்பதை புதுப்புது ஆய்வுகளால், வெளியாகும் மருத்துவ ஏட்டுக் குறிப்புகள் முன்போல் இப்போது என் நெஞ்சைக் குடைவதில்லை.
எல்லோராலும் சில வேண்டாப் பழக்கங்களை எண்ணிய போதில் விட்டுவிட இயலுவதில்லை. அந்தவகையில் நானும் சில காலம் இருந்தவன் தான் ஆனால் இன்று.
“ஹராம்” என்ற ஒரே வார்த்தை எனது பல வருடப் பழக்கத்தை ஒரே நொடியில் நிறுத்தச் செய்தது.
ஈமானில் பலமுள்ளவர்களுக்கு "ஹராம்” என்பது கூட
94

giGITipagtigil ്യമൃഗുരശമ്
வேண்டாம். இறைவனை எண்ணி இத்துடன் முடித்துக் கொள்வதாக எண்ணுவதே போதும்.
இதற்கு ஒரு நல்ல உதாரணம் எனது நெருக்கமான ஒரு நண்பர். அவர் ஒரு நல்ல கவிஞர். இந்துவாய் இருந்து இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்.
சிகரட் குடிப்பதில் என்னை விஞ்சிப் போனவர். ஒரு காலத்தில் தண்ணியில் புரண்டவர். யூசுப் இஸ்லாம், “கற்ஸ்டீப'னாய் இருந்த போது வாழ்ந்த வாழ்க்கை போல் இல்லாவிட்டாலும் தண்ணியும் புகையும் தம்பாடுபட வைத்த ஒரு குடிமகனாய்த் திகழ்ந்தவர்.
இறை நாட்டம் எவ்வாறு ஒரு மனிதனை மாற்றுகின்றது என்பதற்கு என் நண்பன் ஒரு நல்ல உதாரணம்.
எப்போதோ குடிப்பதை இஸ்லாம் மாற்றி விட்டாலும், புகைப்பதை மாற்றியது அவர் மக்காப் பயணமே. ஹஜ்ஜுக்குப் போக இறைவன் நாடினான். போகும் போதே சொல்லி விட்டுப் போனார். இனிமேல் புகைப்பதில்லை என்று. அந்த வார்த்தைகள் அது வெளிவந்த அடுத்த நிமிடமே செயலாகியது.
ஈமானில் அவர் என்னை வென்று நின்றார். அதனால் தான் கோடிப் பணத்துள் வாழ்பவனுக்கும் இல்லாத பெரும் பேற்றை இறைவன் அவருக்கு அளித்தான்.
நண்பர் ஒருவர் வந்திருக்கிறார். இருதய நோய்க்காக சில காலமாக இலங்கையின் முதன்மை மருத்துவர்களிடம் பரிகாரம் தேடுபவர். குடும்பம் எல்லாவற்றிற்கும் என்னையே தேடிவரும் பொதுநோய்களுக்காய்.
தனது வாழ்க்கை முறைகளை முற்றாக மாற்றிக் கொண்டு முகம் நிறைந்த தாடியுடன் அடிக்கடி நாட்கள் சிலவற்றை இறை
95

Page 59
ஜின்னாஹ் வடிரிபுத்தின் ്യമൃഗുരശമ്
பாதையில் செலவு செய்யும் மனிதர்.
இருவரும் என்னைப்போல், என் நண்பனைப் போல் புகை மண்டலத்துள் தன்னை மறந்தவர்தான். கடுமையான ஒரு இருதயத் தாக்கம். சில நாட்கள் வைத்தியசாலை கட்டிலில் அசையாது வைத்து புகைக்கும் பழக்கத்தையும் மாற்றி அனுப்பியது. எல்லோரும் எண்ணியது அது நிரந்தர மாற்றம் தான் என்று.
"கற்ஸ்டீப'னின் வாழ்க்கை நடத்தியவர்தான். என்றாலும் அவரால் ஒரு “யூசுப் இஸ்லாம்” ஆக மாற முடியவில்லை.
நண்பனின் இரத்த அழுத்தத்தைப் பரீட்சித்தேன். மிக அதிகம் இல்லாவிடினும் இருக்க வேண்டிய அளவை ஓரளவு மிகைத்தே தாண்டி இருந்தது. நெஞ்சில் சிறிது வலிக்கின்றது என்றார். சிறிதளவு வியர்வையும் உடலில் கசிந்ததும். பயத்தால் என்னிடம் வந்திருந்தார்.
மனைவி சொன்னார் மீண்டும் பழையபடி சிகரட் குடிக்கிறார்
6160|0}}.
எத்தனை மருத்துவ உபதேசங்களும் அவரை மாற்றத் தோற்றன. எனக்குப் புரிந்து இப்போது என்னால் எதுவுமே செய்ய இயலாதென்று. உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லப் பணித்தேன். அதற்கு முன் அவர் கைகளைப் பற்றி "இனிமேல் சிகரட் ஹராம் என்று சொல்லுங்கள்” என்றேன். அவர் சொன்னார். மிகத்திடமாக அந்த வார்த்தைகளில் உண்மை இருப்பதை நான் உணர்ந்தேன். அவர் கண்களில் ஈமானின் சுடர் வீசியது.
N愛/ >登/ N?必 シリーズ ジリー フリー
96.

தேட்டம்
சர்ருட்டு புகையின் கொடூர வாசனை மூக்கைத் துளைத்தது. எங்கோ பக்கத்தல் தான் சேகு நானா நிற்கின்றார் என்பதை உறுதி செய்வதாக.
தலையை உயர்த்தி வெளியில் பார்க்கிறேன். பக்கத்துக் கிணற்றோடு சேர்ந்துள்ள எல்லைச் சுவரைத் தாண்டிக் குதிக்க அவர் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.
உதட்டிடையில் இறுகிக் கிடந்த சுருட்டை இரு விரலிடைக்குள் கவனமாக வாங்கிக் கொண்டு கொடுப்புக்குள் அடங்கிக் கிடந்த உமிழ்நீரை வெளியில் பிரசவமாகச் செய்தார். போனது போக எஞ்சி வடிந்த விணியை தான் உடுத்தியிருந்த கரிக்கட்டைத் துணியில் தேய்த்துக் கொண்டார் சேகுநானா.
மீண்டும் சுருட்டை உதடுகளுக்கிடையில் திணித்து ஒருமுறை ஆழமாக ஒரு தம் இழுத்துவிட்டு பக்கத்தில் வைத்திருந்த அழுக்குநீர் வாளியை இயன்றும் இயலாமலும் தூக்கி, நிறைந்திருந்த வாளியின் வாயில் தழும்பிய அழுக்குநீர்
97

Page 60
ஜின்னாஹ் ஷரீபுத்தின் ്മൃഗൂഗ്രീശരീ
அவரை நனைத்தாலும், அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
எப்படியாயினும் அடுத்துக் கிடந்த பாழ்நிலத்துள் உரியவன் காணாமல் ஊற்றிவிட வேண்டும்.
"ஏன்டம்மோ! பொணப் பாரம்டா.” என்றார் தனக்குத்தானே. வழமைக்கு மாறாகச் சுமை அதிகமாக இருந்ததால், அவரை அறியாமலேயே வார்த்தைகள் வெளியாகின.
மூன்றடிச் சுவர்தான். தினமும் பலமுறை தாண்டிக் குதிக்கும் தடைதாண்டி, தேநீர்க் கடையில் தினமும் சேரும் எச்சங்களுடன், எஞ்சிவரும் தேநீர்க் கழிவுகளும் ஒன்று கூடிய திரவச் சேர்க்கைதான். நாளும் பலமுறை அந்த வாளி நிரம்பும். ஒன்றுமாறி ஒன்றை அப்புறப்படுத்துவது சேகுநானாவின் அன்றாட வேலைகளில் ஒன்று. மற்றப்படி நீண்ட கழிவுக் கால்வாயைச் சுத்தம் செய்வது, எச்சில் பாண்டங்களைக் கழுவுவது, விறகு கொத்துவது இவ்வாறு இன்னும் இன்னும்,
வெற்றுடம்போடு இடையில் கட்டிய துணியும் கழுத்தைச் சுற்றிய ஒரு கைக்குட்டையும்தான் அவை அவர் தூரத்தில் வரும்போதும் இனங்காட்டிவிடும் அடையாளங்களுமாகும். சேகுநானாவுக்கு வயது எழுபதைத் தாண்டினாலும், பாடுபட்டு உண்ட உடம்பானதால் இன்னும் வயதுக்குக் குறைந்த பலங்கொண்டிருந்தது. அதை மீறிய மனத்துணிவும் நிறையவே அவருக்குக் கூடி இருந்தது.
சுவரின் மேற்பரப்பில் கைகளை ஊன்றி வலக்காலை லாவகமாக மேலே உயர்த்தினார். முழங்காலுக்கு மேல் இடைத்துண்டை உயர்த்திக்கட்டி இருந்ததால், அவருக்குச் சிரமம் இருக்கவில்லை. பிறரின் பார்வையில் தனது மறைவு வெளிப்படுவது பற்றி அவருக்கு ஒன்றும் கவலை இருப்பதாகத் தோன்றவில்லை.
கால்களோடு இடுப்பும் மேலுயர உடம்பின் முழுப்பாரத்தையும் தாங்க இயலாது கைகள் நடுங்கின.
98

GJITD Gaggi ്യഗ്രഗ്രീശരീ
ஒரு விரல் சுண்டும் பொழுதுதான். அதற்குள் அவள் எண்ணாத ஒன்று நடந்து முடிந்தது. முன்னர் வாளியால் தழும்பிய நீர் அவரை அபிஷேகம் செய்ததோடு சுவரையும் நனைத்திருந்தது. உடற் பாரத்தைத் தாங்கிய கைகள் நீர்பட்டு நனைந்த சுவரில் சறுக்க, அவர் சுவரின் மறுபக்கமாய் புரண்டார். முழங்கால் வேகமாய் நிலத்தில் மோத அல்லாஹற்’ என்று அலறியது அவர் வாய் அவரை அறியாமலே.
முழங்காலில் கல்லொன்று ஆழமாய் பதிந்து தன்னை மீட்டிக் கொண்டதால் காயத்திலிருந்து இரத்தம் பெருகியது. நெஞ்சில் பதிந்தது எதுவோ கண்களும் கசிந்தன.
அவரின் அலறல் கேட்டு கடைச்சிப்பந்தி ஒருவன் அங்கு ஓடி வந்தான். இரத்தம் வடிவதைக் கண்ட அவன், அவன் உள்ளங்கை கொண்டு காயத்தை இறுக்கமாகப் பொத்தினான்.
பச்சைப் புண்ணில் கையின் அழுத்தம் கடும் வேதனையைத் தந்திருக்க வேண்டும். அவர் பதறினார்.
"ஏண்டம்மோ! நோவுது புள்ள. ஒரமா அமுக்க வாணாம்” என்றார் காலை இழுத்தபடி.
"கொஞ்சம் பொறுங்கோவா ரத்தம் வாறலியன்.” என்றான் கடைச்சிப்பந்தி, பிடியை நழுவ விடாமல்.
சற்றைக்கெல்லாம் சுற்றிலும் பலர் கூடிவிட்டனர். ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பலதும் சொல்லத் தலைப்பட்டனர். அவர்மீது கொண்ட அனுதாபங்கள், கனிவாயும் கண்டனமாயும் வெளிப்பட்டன.
"கெழட்டு வயசில ஏத்துக்கன்னவா இப்பிடிச் சாகிய.?” என்றான் ஒரு அனுதாபி.
பக்கத்தில் நின்ற ஒருவன் அவர் வார்த்தைக்குப் பதில் சொன்னான்.
99

Page 61
ஜின்னாஹ் ஷரீபுத்தின் ്വമൃഗശരീ
"திங்கியதுக்கு தாருவா குடுக்கிய.?’ அந்த மனிதன்
பாவம். தாரு ஈக்கிய பாக்க.?”
"ஏம்வா அந்த ஹறபாபோன சினுான் ஈக்கியலியன்.
வாப்பாவ பாத்தா எனித்தியன்.” என்றான் முன்னவன்.
காயத்தின் வேதனை இப்போது சேகுநானாவுக்குத் தோன்றவில்லை. நெஞ்சை அழுத்தும் அந்த உரையாடல் காயத்தின் வேதனையை மழுங்கச் செய்தது. மெல்லக் கசிந்த கண்கள், மடையொடித்துப் பெருக்கின.
VIZ YN.IZ NSZ
YF YN 77x 7.
காலுக்கு மருந்திட்டு நான்கு நாட்கள் வேகமாய் நகர்ந்தன. முதல்நாள் மருத்துவச் செலவு கடை முதலாளியின் கருணையில் அவர் கணக்கில் பதிவாகியது. ஒரு நாள் கழித்த மறுநாள் வரும்படி டாக்டர் சொல்லியிருந்தார்.
"வெறுங்கை முழம் அளக்குமா?’ கையில் காசில்லாமல் எப்படிப் போவது? தினக்கூலிக்கு உணவோடு கொஞ்சம் சில்லறையும்தான். குட்டிச் செலவுகளால் அது அன்றே கரைந்து போகும். இரவாகும்போது வெறுங்கையே எஞ்சும் அவருக்கு.
காசு கிடைத்தால் நாளை போகலாம் என்றிருந்தார். காசு கைப்படாதபோது நாட்கள் இரண்டாகி மூன்றுமாக, கொடுத்திருந்த கிருமி கொல்லி வில்லைகளும் தீர்ந்து போயின. முழங்காற்புண் விண்விண் என்று தெறித்தது. காயத்தின் வேதனையோடு, உடலும் நெருப்பாய்க் காய்ந்தது. வீட்டின் கொல்லைப்புறத் திண்ணையில் வெற்றுப் பாயில் தன்னைப் பாம்பாய்ச் சுருட்டிக் கிடந்தார் சேகுநானா.
வயோதிபத்தில் அவருக்குத் தங்குமிடமாகக் கிடைத்தது அந்தக் கொல்லைப்புறத் திண்ணையொன்றுதான். அந்த வீட்டைக் கட்டி முடிக்கத் தன் உழைப்பின் பெரும்பங்கோடு தன்
சரீரப்பாட்டினையும் முழுமையாக அவர் அர்ப்பணித்திருந்தார்.
100

IGJET Gngfugii മൃശ്രീശ്
சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அவர் மனைவியின் பிரிவு அவரை அனாதையாக்கியது. இரண்டே பிள்ளைகள்தான். மூத்தவள் ஸ்ரீனா. மற்றவன் ஸினுான். பரம்பரைக் காணியில் வீட்டை ஒருபுறமாக கட்டி, மகளையும் சொந்தத்தில் ஒருவனுக்குத் கொடுத்து அதில் நிரந்தரமாக்கினார் சேகுநானா. மகளுக்கு வந்தவன் கையாலாகாதவன். மனைவிக்குத் தொடர்ச்சியாக அரபு நாட்டின் உட்டணத்தை இரவுக்குளிரின் இன்ப நுகர்வில் அனுபவிக்க விட்டுவிட்டு தபால்காரனுக்காய்த் தவங்கிடந்தான்.
காணியின் வெற்று நிலத்தை மகனுக்குத் தந்திருந்தார். அதில் அவனே ஒரு குடிசை அமைத்துக்கொண்டு தன் விருப்பத்துக்கு ஒருத்தியைக் கைப்பிடித்துக் கொண்டு குடும்பம் நடத்தினான்.
தந்தையைப் பற்றிய கவலை அவனுக்கு என்றும் இருந்ததில்லை. ஊரவர்கள் இழித்துரைத்தும், அவன் செவிகள் வாங்க மறுத்தன. பொண்டாட்டி தாஸன். அவள் சொல்லுக்கு ஆடினான். ஒருவேளைச் சோறுகூட அவன் உழைப்பில் அவர் உண்ண அவள் இடமளிக்கவில்லை.
சொந்தத்தின் ஒருவனை மருமகனாக ஏற்றுக் கொண்டதன் பலனே என்னவோ அந்தப் புறக்கடைத் திண்ணையாவது ஒதுங்கிக் கொள்ளக் கிடைத்தது.
மகளுக்கும் அவருக்குப் போல் இரண்டு பிள்ளைகளே. அதிகம் பெற்றுக்கொள்ள அவள் சொந்த நாட்டின் சுற்றுலாப் பயணியாகி விட்டதால் முடியவில்லை.
ஒன்று பெண் கடைக்குட்டி. பத்தே வயதுதான் ஆகியிருக்கும். சேகுநானாவைச் சிறிதேனும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளும் காருண்ணிய ஜீவன்.
அன்றும் அவ்வாறுதான் ஒரு கோப்பைத் தேநீரைக் கையில் ஏந்தியபடி "ஏவா அப்பா இதக் குடிச்சியோ” என்றபடி அருகில்
வந்தது.
101

Page 62
siGIri) Gigi ്യമൃഗശരീ
அவள் அழைப்பு அவர் செவிகளில் பட்டது. ஆனால் அவருக்குப் பேச நா எழவில்லை. கண்களைத் திறந்து அவளைப் பார்த்தார். விழி மடலுள் கோர்த்துக் கிடந்த கண்ணிர் சூடான திரவமாக கன்னத்தில் வடிந்து காதுள் உறைந்தது.
தொடர்ந்தும் அவர் கண்கள் அந்தப் பிஞ்சு முகத்தில் பரவிக் கிடந்த பாசத்தின் வெளிப்பாட்டை நேசமாக நோக்கின. மெல்லியதோர் புன்னகை அவர் மனதில் நெகிழ்வை அதரங்களில் காட்ட, அவளைப் பக்கத்தில் அமரும்படி சைகை காட்டினார்.
"அப்பா! ஏத்தியன் அழுகிய.?’ என்றாள் குழந்தை. அவர் அவள் கையைப் பற்றினார். அதன் வெப்பந்தாங்காது கையை உதறிக் கொண்டு வேகமாய் எழுந்தாள் அவள்.
"நானா!” என்றபடி வெளியில் ஓடிவந்தாள். பக்கத்துத் தோட்டத்தில் விளையாட்டில் மும்முரமாய் நின்ற சமீமின் செவிகளில் அவள் அழைப்பு துளியும் விழவில்லை. பலமுறை கூவி அழைத்தும் அவன் செவிப்பறை அந்த அழைப்புக்களை ஏற்க மறுத்தன.
ஏதோ ஆபத்தை அறிந்து அலறும் பட்சி போல அவனை அழைத்தாள். குழந்தையின் பதைபதைப்பும் அவள் வார்த்தையில் தொணித்தன அவசரமும், பள்ளிவாயிலில் "அஸர் தொழுகையை முடித்துக் கொண்டு அவ்வழியாக வந்த சரீப் மாஸ்டருக்கு வியப்பைத் தந்திருக்க வேண்டும். குழந்தையிடம் விசாரித்தார்.
"அப்பாட மேல் கொதிக்கிய. அப்பா நடுங்கிய. அப்பா அழுகிய.” என்றபடி அவரைப் பொருட்படுத்தாமல்.
9.
“அட நானா வாயடா..” என்றபடி பொறுக்க மாட்டாமல் அழத் தொடங்கினாள். இதற்கிடையில் சரீப் மாஸ்டர் சேகுநானாவின் புறக்கடைத் திண்ணையை அடைந்து விட்டார். வழக்கமாக அவர் இருப்பிடம் அதுதான் என்பது அவருக்குத் தெரியும்.
102

Sirghgi (മുഗ്രമര്ശമ്
அங்கு அவர் கிடந்த நிலையைக் கண்டதும், அவர் நெஞ்சமும் கலங்கிக் கண்களும் கசிந்தன. நொடிக்குள் கடந்தகால நினைவுகள் கணணி வேகத்தில் அவர் மனத்திரையில் மீள்பதிவாகிக் கொண்டிருந்தன.
ஒருகாலத்தில் தனது தந்தையின் நெருங்கிய நண்பர் அவர். இருவரும் மாட்டுவண்டி வைத்திருந்தனர். கிராமத்துக் கடைக்காரர்களின் பட்டணத்துக் கொள்வனவுகளைத் தினந்தோறும் சேர்த்து வருவது அவர்கள் தொழில். கணிசமான வருவாயும் பெற்று வந்தனர். ஒன்றாகவே சென்று ஒன்றாகவே வருவார்கள். கிடைக்கும் ஊதியத்தில் பங்குக்குப் பாதி பிரித்துக் கொள்வார்கள். இருப்பினும் சில விடயங்களில் மட்டும் கொள்கையில் வேறுபட்டு நின்றனர்.
சேகுநானா தேடும் பணத்தைப் பத்திரமாகச் சேர்த்து தனது இரு குழந்தைகளும் எதிர்காலத்தில் கஷடமுறாதவாறு, பயனுறும் பணிகளில் செலவிட எண்ணினார். அதன் பயனாகவே ஒரு விடும் அமைந்தது.
சரீப் மாஸ்டர் தந்தையார் பணத்தைப் புத்தகங்களுக்கும் பிள்ளைகளின் கல்வி சார்ந்த வெவ்வேறு தேவைகளுக்கும் வீண்விரயம் செய்வதை விட பொருளாகச் சேர்த்து வைப்பதே நல்லது என்னும் சேகுநானாவில் முற்றிலும் மாறுபட்டு தனது இரு பிள்ளைகளையும் நன்கு படிப்பிக்க வேண்டுமென எண்ணினார். பல்கலைக்கழகம் வரை அவர்களும் கல்வியைத் தொடர்ந்தனர்.
ஆணும் பெண்ணுமான தனது இரண்டு பிள்ளைகளையும் அவர் கல்விக்கென்றே வளர்க்கலானார். மகன் பள்ளி ஆசிரியனாக, மகள் வங்கியொன்றில் தன்னைச் சேர்த்துக் கொண்டாள். தங்களின் உயர்ச்சிக்காகத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டு தமது தந்தைக்குமேல் அவர்கள் அளவிலாப் பாசங் கொண்டிருந்தனர். தந்தைக்கு உவந்து வாழ்ந்த தாயும் அவர்கள்
03

Page 63
siGITi) Sigi ്യമൃഗശരീ
பாக்கியமாக அமைந்தார்.
மூப்பின் கொடுமையை அவர்கள் அனுபவிக்க விடாமல் உடற்பலம் இருக்கும் காலம்வரை வாழவிட்டு, அவர்தம் இரண்ட்ாம் தலைமுறையையும் காணவைத்து, இறைவன் ஒரு நல்ல சந்ததியை உருவாக்கிய மனநிறைவோடு தன்னிடம் சேர்த்துக் கொண்டான். அவர்களும் பிறப்பின் பயன் கொண்டு நிரந்தர சுவனவாழ்வின் சொந்தக் காரரானார்.
பெற்றோரின் இயலாத காலத்தில் அவர்களும் பணிவிடை செய்யும் பாக்கியம் தனக்குக் கிட்டாதபோது சரீப் மாஸ்டர் மிக நொந்து போனவர். அடிக்கடி பெற்றோரை எண்ணிக் கலங்குவார்.
அன்றும் சேகுநானாவைக் கண்டபோது தன் தந்தையின் நினைவே முந்தி நின்றது. தன்னாலான உதவிகளை அவர் அவருக்கு அவ்வப்போது செய்து வந்தாலும், கடந்த சில நாட்களாக அவர் அவரைக் காணவில்லை.
நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் நீண்டநேரம் தாமதிக்காமல் இயங்கலானார். சேகுநானாவை வைத்தியசாலையில் சேர்த்து விட்டு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்த அவர், தன் தந்தைக்குப் பணிவிடை செய்த மனநிறைவோடு வீடு திரும்பினார்.
பாடசாலை வேலைகளும், பொதுப் பணிகளும் அதிகமாகிவிட்டதால், இரண்டு மூன்று நாட்கள் சரீப் மாஸ்டரால் சேகுநானாவைப் பார்க்கப்போக முடியவில்லை. மறுநாள் அவரைப் பார்க்கச் சென்றார்.
உடல்நிலை தேறி கட்டிலில் உட்கார்ந்திருந்த சேகுநானா, மாலைவேளை நோயாளர்களைப் பார்க்க வரும் கூட்டத்தேடு வரும் சரீப் மாஸ்டரைக் கண்டு கொண்டார். அவர் கண்கள் நன்றியுணர்வோடு அவரை அங்கிருந்து கட்டில்வரை அழைத்து வந்து நிறுத்தியது.
04

GGITaio assifi ്യമൃഗശരീ
“ஏத்தியன் மாமா இப்ப எப்பிடியன்.?” என்றார் சரீப் மாஸ்டர் ஆதரவாக. சேகுமாமா எதுவும் பேசவில்லை. அவர் கண்கள் மட்டும் பணித்தன. சரீப் மாஸ்டர் சிந்தனை வயப்பட்டார். இந்தக் கண்ணிரின் பொருள்தான் என்ன? ஏன் இவர் இன்னும் அழவேண்டும்? நான் செய்த உதவிகளை எண்ணிவரும் மகிழ்ச்சிக் கண்ணிரா? அன்றித் தன் பிள்ளைகளை எண்ணிக் கலங்குகின்றாரா? மெல்லிய விம்மல் ஒலி அவரைச் சுய உணர்வுகளுக்குக் கொண்டு வந்தது.
சற்றைக்குள் நிலையைப் புரிந்து கொண்டார். சரீப் மாஸ்டர். படித்தவரானதால் சேகுநானாவின் நெஞ்சுக்குள் புகுந்து வெளிப்பட்டார்.
“இப்ப எல்லாருஞ் செரியெலின். புண் சோமானா ஊட்டுக்குப் போகிய தானே.” என்றார். சேகுநானாவின் தோளை ஆதரவாகத் தடவியவராக.
சேகுநானாவின் கண்கள் சொரிந்த நீரைக்கண்ட சரீப் மாஸ்டரின் நெஞ்சுங் கனத்தது. தன் தந்தையாரின் நண்பரல்லவா? எத்தனையோ உணர்வுகளால் நெஞ்சு நெருடுமுன் அவர் சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, “மாமோ தொஸ்த்தர் செல்லிய இப்ப நல்ல சொகமென்டு. ஏத்திக்கியன் அழுகிய..? என்றார்.
பார்வை நேரத்தின் முடிவை மணி அலறிப் போங்கள் என்றது. சரீப் மாஸ்டர் ஒரு நூறு ரூபாவை அவர் கைக்குள் திணித்துவிட்டு நாளை வருவதாகக் கூறியவாறு அங்கிருந்து நகர்ந்தார்.
தலையை மட்டும் அசைத்து சேகுநானா விடையளித்தார். கண்கள் சரீப் மஸ்டரைப் பின் தொடர நெஞ்சத்தின் குமுறலால் கண்கள் பொங்கிப் பொழிய பார்வை அழிந்தது.
உள்மனம் சொல்லியது. "நீ உன் இலட்சியத்தில் தோற்றுப் போனாய் சேகுநானா.” என்று.
105

Page 64


Page 65
மருத்தவக் கலாநிதி ஜின்ன இலக்கியப் பரப்பில் நீண்ட நல்லுலகம் எங்கும் தலை சிர தமிழ் இலக்கிய ஆர்வ தந்தையாரின் இலக்கிய வழி தொன்று தொட்டு இருந்து அதனைச் செழுமைப்படு இலக்கியப்பணியை ஆற்றி வி
மரபுக்கவிதை, க இலக்கியப் பணியாற்றாத சி பரந்த இலக்கியத் தளத்தில் செய்து வருகின்றவர். இவ விருதுகளைப் பெற்றவை. இலக்கியப் படைப்புக்க வட்டாரங்களில் தனக்கென
சகல வேறுபாடுக ஜின்னாஹற் அவர்களின் தர் தலைமை ஆசிரியராகப் இளமையைக் கழித்தவர். இ வாழ்க்கை அவலங்கள், த புரிந்துணர்வைக் கொண்டவ மலையக மக்களின் வாழ் மேலும், நான் கொழும்புத் செயலாளராகத் தெரிவு செ அவர்கள்.
 
 
 
 
 

ாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் பரந்த தமிழ்
காலமாகத் தடம் பதித்த, தமிழ் கூறும் )ந்த ஒரு இலக்கிய படைப்பாளியாயும் தமிழ், லராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். யில் நின்று பல காப்பியங்களைப் படைத்த,
வரும் இலக்கிய மரபின் காப்பாளராகவும் த்தபராகவும் மிகச் சிறந்த தமிழ் பருபவர்.
ாப்பியங்கள் என்ற வரம்புக்குள் மட்டும் நிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் என்ற நின்று இத்துறைகளில் பெரும் பங்களிப்புச் ரது இலக்கியப் படைப்புக்கள் பல சாகித்ய தேர்ச்சியும் செழுமையும் மிக்க தனது ள் காரணமாகத் தமிழக இலக்கிய ஒரு இடத்தை சுவீகரித்துக் கொண்டவர்.
ளுக்கும் அப்பாற்பட்ட மனித நேயமிக்க தையார் மலையகத்தில் (உடத்தலவின்ன)
பணியாற்றிய போது மலையகத்தில் தன் காரணமாக மலையகத் தமிழ் மக்களின் துயரங்கள், வேதனைகள் பற்றிய விரிவான ர். இவரது பல கவிதைகளும் நாவல் ஒன்றும் வியலை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் சங்கத்தில் தலைவராக இருந்தபோது ப்யப்பட்டு அரும்பணியாற்றியவர் ஜின்னாஹ்
ព្រូហ្សែ சோ. சந்திரசேகரன். (பீடாபதி,கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்