கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவமலர்: விஜயதசமி 2001

Page 1
9 -
யாழ். இந்து இந்து இளைஞர்
விஜயதசமி
பொங்குருச் செல்வம் கல்வி ெ இங்கெமக் கருளவல்ல இணை பங்கயத் தடஞ்சூழ் கூடற் பவலி அங்கயற் கண்ணி மங்கை அடி
விஷ9 வருஷம் புரட்
7-O
 

D6YD
க் கல்லூரி கழக வருடாந்த
வெளியீடு
பாருவிலா வாய்மை தூய்மை பிலா எம்பிராட்டி ாமால் வரையை நீங்கா க்கமலங்கள் போற்றி
வேப்பத்தூரார் திருவிளையாடல்
டாதி மாதம் 31 ஓட
200
لبرسے

Page 2
இந்து இளைஞர் கழக 2001 ஆம் ஆண்டு
புரவலர் துணைப்புரவலர் பெருந்தலைவர் பெரும்செயலர் பெரும் பொருளர் தலைவர் செயலர் பொருள் உபதலைவர் உபசெயலர் பத்திராதிடர்
நிர்வாகக்குழு
திரு. அ. சிறீக்குமரன் (அதிபர்) அவர்கள் திரு. பொ. மகேஸ்வரன் அவர்கள் திரு. ந. தங்கவேல் அவர்கள் திரு. மு. பா. முத்துக்குமாரு அவர்கள் திரு. சி. இரகுபதி அவர்கள் செல்வன் வே. சுதாகரன் : அ. கஜேந்திரன்
உ. திலீபன் செல்வன் சு. தேவகுமார் செல்வன் தி. ரஞ்சன் செல்வன். கு. குருபரன்
ஏனைய இடறுப்பினங்கள்
வ. ஹேமகுமார் கு. சாண்டில்யன் இ. கயானன் வை. பவந்தன் ம. நிரஞ்சன் ந. நவசாந்தன்
D. grȶör
T. 9.56
க. கரேஸ்குமார் தி. திவ்யன்
Y. அஜீத்
R. &. Dug6ër
T. சுதாஸன் வை. தினேஸ் சி. சபேசன் ச. தினேஸன் ச. நடராஜசர்மா ம. அன்பரசன் ப. டெனோஜன் ஜீ கோகுலன்
ஆலோசனைக்குழு
திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா திரு. பொ. ஞானதேசிகன் திரு. கி. கிருஸ்ணகுமார் திரு. வ. தவகுலசிங்கம் திரு. வா. சிவராசா திரு. தி. பத்மநாதன் திரு. ஐ. கமலநாதன் திரு. சி. ஜெயபாலன் திரு. சு. கோகுலன் திருமதி. ர. கதிர்காமநாதன் செல்வி பரமேஸ்வரி கணேசன் திருமதி. சா. அருந்தவபாலன்

"கற்க கசடறக் கற்பவை
அதற்குத் தக'
“Acquire thoroughly the knowledge that is worth acquiring,
and after acquiring it walk thou in accordance there with.”
கற்றபின்
நிற்க

Page 3
இந்து இளைஞர் கழக 2001 ஆம் ஆண்டு
புரவலன் துணைப்புரவலர் பெருந்தலைவர் பெரும்செயலர் பெரும் பொருளர் தலைவர் செயலர் பொருள் உபதலைவர் உடசெயலர் பத்திராதிடர்
நிர்வாகக்குழு
திரு. அ. சிறீக்குமரன் (அதிபர்) அவர்கள் திரு. பொ. மகேஸ்வரன் அவர்கள் திரு. ந. தங்கவேல் அவர்கள் திரு. மு. பா. முத்துக்குமாரு அவர்கள் திரு. சி. இரகுபதி அவர்கள் செல்வன் வே. சுதாகரன் அ. கஜேந்திரன்
உ. திலீபன் செல்வன் சு. தேவகுமார் செல்வன் தி ரஞ்சன் செல்வன். கு. குருபரன்
ஏனைய இடறுப்பினங்கள்
/
வ. ஹேமகுமாள் கு. சாண்டில்யன் இ. கபாணன் வை, பவந்தன் ம. நிரஞ்சன் ந. நவசாந்தன்
ub. [[$ରାଣୀ
பா. அருன்
க. கரேஸ்குமார் $., ଝୁଣ୍ଟିଭିiuଖି
Y. அஜீத்
R இமயகரன்
T சுதாஸன் வை. தினேஸ் ਸੰ ச. தினேஸன் 5. LJ regati LDT ம. அன்பரசன் ப. டெனோஜன் ஜீ. கோகுலன்
ஆலோசனைக்குழு
திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா திரு. பொ. ஞானதேசிகன் திரு. கி. கிருஸ்ணகுமார் திரு. வ. தவகுலசிங்கம் திரு. வா. சிவராசா திரு. தி. பத்மநாதன் திரு. ஐ. கமலநாதன் திரு. சி. ஜெயபாலன் திரு. சு. கோகுலன் திருமதி. ர. கதிர்காமநாதன் செல்வி பரமேஸ்வரி கணேசன் திருமதி. சா. அருந்தவபாலன்

"கற்க கசடறக் கற்பவை கற்றபின் - நிற்க
அதற்குத் தக' “Acquire thoroughly the knowledge that is worth acquiring, and after acquiring it walk thou in accordance there with.”

Page 4

அதிபர் அவர்களின் ஆசியுரை
வரலாற்றுப் பெருமைமிக்க எமது இந்துக்கல்லூரியின் இதயத் துடிப்பாக விளங்குவது இந்து இளைஞர் கழகமாகும். இக் கல்லூரியின் மூத்த கழகமாகிய இக்கழகம் நவமலர் எனும் நூலை வெளியிட்டு வரலாற்றுச் சுவடுகளிற்குப் புகழைத் தேடித் தந்துள்ளது. ஆயினும் கடந்தபல ஆண்டுகளாக நவமலர் வெளிவராதிருந்த போதும் சென்ற ஆண்டிலிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கி இவ்வாண்டு புதுப் பொலிவுடன் வெளிவருகின்றது. ஞான சொரூபினியாகிய சத்தியின் நவராத்திரிக் காலத்தில் மாணவர்கள் படித்தும் ஒதியும் வழிபாடு செய்வதற்குப் பொருத்தமாக நவராத்திரி நாள்கள் ஆரம்பிக்கும் நாளிலேயே நவமலர் வெளியிடுவது கண்டு நாவினிக்க வாழ்த்துகின்றேன்.
சைவப் பாரம்பரியமும் தமிழ்ப் பண்பாடும் வளருவதுடன் மாணவர்கள் ஆன்மீக பாதைகளில் செல்வதற்கும் உறுதுணையாக அமையுமென நம்புகின்றேன்.
2001 ஆம் ஆண்டு நவராத்திரி நோன்பு சிறப்பாக நடந்தேறவும் நவமலர் தொடர்ந்து வெளிவரவும் எனது ஆசியும் வாழ்த்துக்களும்
உரித்தாகுக.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, அ. சிறிகுமாரன் யாழ்ப்பாணம்.

Page 5
பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம் பண் : பழம்பஞ்சுரம் தாளம் : ஆதி இராகம் : சங்கராபரணம் தலம் : திரு ஆலவாய்
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின்புகழேமிக வேண்டுந் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
- திருஞானசம்பந்தர்.
திருவாசகம் இராகம் : மோகனம்
வினைப்பிறவி யென்கின்ற
வேதனையிலகப்பட்டுத் தனைச்சிறிது நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை யெனைப் பெரிது மாட்கொண்டென் பிறப்பறுத்த வினையிலியை யனைத்துலகுந் தொழுந்தில்லை
யம்பலத்தே கண்டேனே.
2001 2 நவமலர்
 

திருவிசைப்பா
இராகம் : ஆனந்தபைரவி
தற் பரம் பொருளே! சசிகண்டா சிகண்டா
சாமகண்டா! அண்ட வானா ! நற் பெரும் பொருளாய்! உரைகலந்து உன்னை
என்னுடைய நாவினால் நவில்வான் அற்பன் என உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்த பொன்னம்பலத் தரசே! கற்பமாய், உலகாய், அல்லை ஆனாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே.
திருப்பல்லாண்டு இராகம் : ஆனந்தபைரவி
குழல் ஒலி யாழ் ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம் பெருகி விழ வொலி விண்ணளவும் சென்று விம்மி
மிகு திருவாரூரின் மழ விடையார்க்கு வழி வழி ஆளாய்
மணஞ்செய் குடிப்ப பிறந்த பழ அடியா ரொடுங் கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் இராகம் : மத்தியமாவதி
வைய நீடுக மாமழை மன்னுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தாம் தழைத்து ஓங்குக
தெய்வ வெண் திருநீறு சிறக்கவே. திருச்சிற்றம்பலம்
நவமலர் 3 200

Page 6
அபிராமி அந்தாதி
மனிதருந் தேவருமாயா முனிவரும் வந்து சென்னி குனிதருஞ் வேசடிக் கோமள மேகொன்றை வார்சடைமேற் மனிதருந் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும் நீயுமென் புந்தியெந் நாளும் பொருந்துகவே.
சொல்லும் பொருளு மெனநட மாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தா ளல்லும் பகலுந் தொழுமவர்க் கேயழி யாவரகஞ் செல்லுந் தவநெறி யுஞ்சிவ லோகமுஞ் சித்திக்குமே.
வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிங் பேணுதற் கெண்ணிய வெம்பெரு மாட்டியைப் பேதை நெஞ்சிற் காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியைக் காணுமன்பு பூணுதற் கெண்ணிய வெண்ணமன் றோமுன்செய் புண்ணியமே.
சக்திதோத்திரம் வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய். - காளமேகம்.
ஆயகலைகள் அறுபத்து நான் கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே இருப்பாள் இங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரைப்போற் கையும் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால் கல்லும்சொல் லாதோ கவி.
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத்தேவி செஞ்சொற்றார் தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியும் போருசுத்தாளை வணங்குதுமே.
thUhrܬܵܐs ܚ 2001 4. நவமலர்

சரஸ்வதிதோத்திரம்
1. உள்ளத்தி எழுந்தருள வேண்டுதல்.
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளை யுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித்
- தாகவுண் டாக்கும் வண்ணங்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
2. நாற்கவி பாடும் திறம் அருள வேண்டுதல்
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைப்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே
சகலகலா வல்லியே.
நவமலர் 5 2001

Page 7
3. தமிழாகிய அமுதை சுவைக்கும் திறன் வேண்டுதல்
அளிக்குஞ் செந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே!
சகல கலாவல்லியே.
4. சொற்சோர்வுபடாமற் பேசும் நாவன்மை வேண்டுதல்
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற் கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
8. நெஞ்சத் தாமரையின் எழுந்தருள வேண்டுதல்
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்ந்தோன் செந் நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
2001 6 நவமலர்

6. முத்தமிழிலும் முழுமையான பயிற்சி வேண்டுதல்
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமரையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
7. சொல்லிய பாட்டின் பொருள் உரை வேண்டுதல்
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே.
8. அட்டாவதானம் முதலியன அருளும்படி வேண்டுதல்
சொல்லிற் பனமு மவதான
முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள்
வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதன் றொருகால்
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
நவமலர் 7 2001

Page 8
9. சொல்லுக்கும் பொருளுக்கும் உயிர் உண்மை அறிவு.
உண்மை அறிவின் உருவே கலைமகள் எனல்.
சொற்கும்பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாண நடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே.
10. மன்னர்களும் மதிக்கத்தக்க அறிவுப்பெருக்கம் வேண்டல்
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பி லுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
- öiLiLD -
2001
8 நவமலர்

வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் கொள்ளையின்பம் குலவுகவிதை
கூறுபாவலர் உள்ளத்திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உண்ணின்றொளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத் துட்பொருளாவாள்.
(வெள்ளைத்)
வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்
நகள்களெங்கும் பலபல பள்ளி தேடுகல்வியிலாத தொருரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல் கேடுதிர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.
(வெள்ளைத்)
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனியநீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்.
(வெள்ளைத்) - LJOTIJASMANITår.
நவமலர்
9 2001

Page 9
(கற்றலும் தொழுதலும்)
கல்வி கற்கும் இடம் பாடசாலை, கடவுளைத் தொழும் இடம் ஆலயம். இந்த இரண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதை நம் முன்னோர் நமக்குணர்த்தும் வகையில் பாடசாலையை “வித்தியாலயம்” என்றே அழைத்தனர். வித்தை பயிலும் ஆலயமாக பாடசாலை இருக்க வேண்டும் என்பது அவர்கள் முன்வைக்கும் சிந்தனையாகும். வித்தையாகிய கல்வியை கற்பதற்கும் கல்வியில் பயனாகிய கடவுளைத் தொழுவதற்கும் உரிய இடம் வித்தியாலயம் என்பதை நாம் உணரமுடிகிறது.
உயர்ந்தோர் போற்றும் உலகப்பொதுமறையாகிய திருக்குறளில் கல்வி கற்றலைப் பற்றிச் சொல்லும் போது
“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
என்கின்றார் வள்ளுவர். கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்க, கற்றபின் அதற்குத்தக நிற்க என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிய வள்ளுவர் கற்றபடி வாழவேண்டும் என்பதே கற்றலின் பயன் என்பதை உணர வைக்கின்றார். இதனை மேலும் தெளிவாக வலியுறுத்த இன்னொரு குறளில்
“கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’
என்பதன் மூலம் கற்றதன் பயன் தூய அறிவு வடிவான இறைவனைத் தொழுதல் தான் என்பதை அறுதியிட்டு உரைக்கின்றார்.
2001 - O நவமலர்

இதன் மூலம் கல்வி கற்றலும் கடவுளைத் தொழுதலும் ஒன்றாகவே பயிலப்படவேண்டியவையென்பதையும் அதற்குரிய இடமே வித்தியாலயம் என்பதையும் நாமுணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் நம்பெரியவர்கள் பாடசாலைகள் தோறும் கோயில்களை அமைத்து வழிபாட்டுக்கும் வகை செய்தனர். மகாகவி யெனப்போற்றப்படும் பாரதியார்
“கல்வித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்”
எனப்பாடியிருப்பதும் நாம் அறிந்ததே.
யாழ்ப்பாணத்தின் அதியுயர் தேசியக்கல்லூரியாக விளங்கும் யாழ் இந்துக்கல்லூரியில் இக்கூற்றுகள் செயல்வடிவம் பெறுவதைக் கண்டு போற்றாதாரில்லை. இக்கல்லூரியில் கல்வி கற்றலும், இங்குள்ள ஞானவைரவர் ஆலயத்தில் கடவுளைத் தொழுதலும் ஒருசேர நடைபெறுவது கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் முன்மாதிரியான செயல் என்பதில் ஐயமில்லை.
தமிழர்கள் சைவசமயத்தவர்களின் வாழ்வு, வழிபாட்டில் தான் ஆரம்பமாகின்றது.
“மாதா பிதா குரு தெய்வம் - அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்”
எனும் மகாகவியின் வாக்கைச் சற்றுச் சிந்திப்போமானால் எம்மைப் பெற்றுப் பாலூட்டித் தாலாட்டி வளர்க்கும் தாயைத்தான் நாம் முதலில் அறிகின்றோம். அந்தத் தாய் தான் எமக்குத் தந்தையை அறிமுகம் செய்து வைக்கின்றார். தந்தை எமக்கு அறிவையும், ஒழுக்கத்தையும் பெறுவதற்குரிய கல்வியை நாம் பெறுவதற்காகிய வழிவகைகளைச் செய்து குருவை அறிமுகம்
நவமலர் 11 2001

Page 10
செய்து வைக்கின்றார். குரு நமக்குரிய வித்தைகளைக் கற்பிப்பதுடன் கல்வியின் பயனாகிய கடவுளைத் தொழவும் கற்பித்து கடவுளையும் அறியவைக்கின்றார். எனவே எம்மைப் பெற்ற தாயையும், வளர்த்த தந்தையையும், கல்வி தந்த குருவையும், இதற்கெல்லாம் மூலமுதலாகிய கடவுளையும் தினமும் வணங்குவதன் மூலம் நம் வாழ்வு மலர்கின்றது. கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல் எனக்கண்டோம். கற்றபடி வாழ்வதின் பயன் என்ன என்பதைச் சிந்திப்போமாயின் “வாழ்வின் பயன் இறைவன் திருவடியாகிய பேரின்பத்தை அடைதல்தான் என்பதை அறியமுடியும். இதனையே எல்லாச் சமயங்களும் உணர்த்துகின்றன. நாவலர் பெருமான் நமக்குச் சொல்லும் ஒருசெய்தி
“இந்தச் சரீரம் எமக்குக் கிடைத்தது நாம் இறைவனை விதிப்படி வணங்கி முத்தியின்பம் பெறும்
לל פי
பொருட்டேயாகும்
என்பதாகும். ஆதலால் இறைவனை வழிபடும் முறைபற்றியும் நாம் அறிதல் வேண்டும்.
நாம் ஆலயத்தில் எம் உடல் கொண்டு செய்யும் வழிபாடு புறவழிபாடு ஆகும். இது அகவழிபாடாக மலரவேண்டும். இறைவனுடைய அருள் எமக்கு எம் அகத்தினுடாகத்தான் கிடைக்கும். ஆகவே அகவழிபாட்டுக்குரிய வகையில் சைவ ஆலய அமைப்பும் எம் உடல் அமைப்பும் ஒரேவிதமாயிருப்பதை அவதானிக்கலாம்.
ஆலயத்தில் கருவறையாகிய மூலஸ்தானம் எமது தலையாகவும், அடுத்த ஒடுங்கிய அந்தரான மண்டபம் எமது கழுத்தாகவும், அதற்கடுத்த அகன்ற மகா மண்டபம் எமது மார்பறையாகவும், அதற்கடுத்த கொடித்தம்பம் உள்ள ஸ்தம்பமண்டபம் எமது
2001 12 நவமலர்

தொப்பூழ்த்தானமாகவும், உருவகிக்கும் வகையில் ஆலயமும் எமது உடலும் ஒரே அமைப்பாக இருக்கின்றன. இதன் பொருத்தப்பாட்டை மேலும் ஆழமாக அறியப்புகுவோமாயின் - கருவறையில்தான் மூலமூர்த் தி இருக்கின்றார். அவர் ஊறு எதுவுமின்றி முழுப்பிரகாசத்துடன் இருந்தால்தான் ஆலயத்தின் ஏனைய அங்கங்கள் அனைத்தும், பூசை விழாக்களும் ஒழுங்காக நடந்து அவரது அருளும் பாலிக்கும். மூலமூர்த்தியில் ஊறு ஏதும் ஏற்படுமாயின் அனைத்தும் தடைப்பட்டுவிடும். அது போல எமது தலையுள்தான் மைய நரம்புத் தொகுதியாகிய மூளை இருக்கிறது. மூளை சரியாக இயங்கினால்தான் உடலும் சரியாக இயங்கும். மூளையில் ஏதும் ஊறு ஏற்படுமாயின் உடலும் செயல்தடுமாறிப் பயித்தியமாகிவிடும்.
அந்தரான மண்டபத்தில் நின்றுதான் பூசகள் மந்திர நாதம் எழுப்பிப் பூசை செய்வார். எமது கண்டத்தில் இருந்துதான் நாதம் ஆகிய ஒலி (சத்தம்) உண்டாகின்றது.
மகா மண்டபத்தில்தான் மூலமூர்த்தி எழுந்தருளியாக இருந்து அருள்பாலிக்கிறார். மார்பறையில் தான் இதயம் இருந்து இடையறாது துடிப்பதன்மூலம் இந்த உடலை இறவாது இயங்கவைக்கிறது.
ஸ்தம்பமண்டபத்தில் சிவமாகிய தம்பத்தில் ஆன்மாவாகிய கொடிச்சீலை தூய பாசமாகிய தர்ப்பைக் கயிறு கொண்டு ஏற்றப்படுகிறது. சிவமும் ஆன்மாவும் ஒன்றிப்பது போல உயிரும் உடலும் ஒன்றிக்கும் உயிர்த்துடிப்பு தாயின் வயிற்றில் உருவான நாள்முதல் உயிர் உடலைவிட்டுப்பிரியும்வரை இணைந்திருக்கும்.
இப்படியே ஆலயத்தின் ஒவ்வோர் அங்கமும் உடலின் ஒவ்வோர் அங்கமுமாய் அமைந்திருப்பதை ஆழமாகச் சிந்தித்து அறியமுடியும்.
நவமலர் 13 2001

Page 11
எனவே ஆலயத்தில் விதிப்படி வழிபடுவது போல எமது உடலினுள்ளும் இறைவனை வழிபடவேண்டும். ஆலய வழிபாடு முடிந்ததும் ஆலயத்துள் வடக்கு நோக்கி இருந்து கண்மூடித் தியானிக்கும் வழக்கம் ஆலயத்தில் ஆங்காங்கு கண்டு வணங்கிய காட்சியை உடலினுள்ளும் அகக் காட்சியாகக் காணும் முறையேயாகும். ஆதலால் ஆலயத்தில் செய்யும் புறவழிபாடு அகவழிபாடாக எமது உடலினுள் மலரவேண்டும். அதுவே உண்மை வழிபாடாகும்.
இதற்கு உபகாரமாக, ஆலயத்தை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கின்றோமோ அதேபோன்று இந்த உடலையும் புனிதமாக வைத்திருக்கவேண்டும். மது, மாமிசம் புசிக்காமலும் பொய் முதலாய பஞ்சமா பாதகங்கள் செய்யாமலும், தினமும் நீராடிச் சிவ சின்னங்கள் (தரித்து அகமும் புறமும் தூய்மையாக இருக்கவேண்டும்) அப்போதுதான் வெண்திரையில் படம் தெரிவது போல புனிதமான உடலினுள் புனிதமான மனத்தில் இறைவன் குடிகொண்டு நம்வழிபாட்டை ஏற்று எம்மை முத்திக்கு வழிப்படுத்துவான்.
கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல், வாழ்வின்பயன் இறைவனை அடைதல் (பிறவியின் பயன் இறைவனை அடைதல்) என்பதை அறிந்து உணர்ந்து கடைப்பிடித்து உய்திபெறுவோமாக.
சைவப்புலவர் சு. செல்லத்துரை
ஓய்வு பெற்ற அதிபர்
இளவாலை,
(30-03-2001) இல் சங்காபிஷேக வழிபாட்டில் நிகழ்த்திய
இடரையின் சுருக்கம்)
2001 4. நவமலர்

நன்றியுரை
எமது கல்லூரி சமய செயற்பாடுகளுக்கு பிரதமகுருவாக விளங்குகின்ற கல்லூரி பழைய மாணவ ராகிய சிவபூரீ - ச. முறிஸ்கந்தராயக்குருக்கள் அவர்களுக்கும் (கோண்டாவில்) கோயில் அருச்சகராக விளங்குகின்ற ந. சதானந்தசர்மா அவர்களுக்கும்
தைப்பொங்கல் திருநாள் முதல் மார்கழித் திருவாதிரை நாள் வரையுள்ள பெருநாள்களைச் சிறப்பாக அனுட்டிப்பதற்கு பலவழிகளில் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும்
சிவஞான வைரவர் ஆலய சங்காபிஷேக விழாவிற்கு உதவிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும்
நாடோறும் காலைப்பிரார்த்தனைகளை நெறிப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், திருமுறைகளை ஓத பயிற்றுவிக்கும் இசை ஆசிரியர்களுக்கும்
நாவன்மைப்போட்டிகளுக்கு மத்தியஸ்தராக கடமையாற்றிய நடுவர்களுக்கும்
நாவன்மைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கிய யாழ்ப்பாண இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினருக்கும்
நவமலர் 15 2001

Page 12
O
X
நவமலர் சஞ்சிகைக்கு ஆக்கமளித்த் சைவப்புலவர் சு. செல் லத்துரை இளைப் பாறிய அதிபர் இளவாளை அவர்களுக்கும்
* சமய விசேட தினங்களில் சிறப்புச் சொற்பொழிவாற்றிய சைவபெரியோர்களுக்கும் இந்தியாவிலிருந்து வருகை தந்து சொற்பொழிவாற்றிய சேக்கிழர் அடிப்பொடி தில்லைஸ்தானம் நடராஜன் இராமச்சந்திரன் அவர்களுக்கும் அவர்தம் பாரியாருக்கும்
* இம்மலரை வெளியிடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து ஆசியுரைவழங்கிய கல்லூரி முதல்வர் அ. சிறிகுமாரன்
அவர்களுக்கும்
* சகல வழிகளிலும் தோளோடு தோள்நின்று உதவி வழங்கிய கல்லூரி ஆசிரியர்குழாத்தினருக்கும் மாணவர்களுக்கும்
எமது உள்ளம் கனிந்த நன்றிகள்
இந்து இளைஞர் கழகம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி,
யாழ்ப்பாணம்.
2OO1 16 நவமலர்


Page 13
@_
aflaj Duut
கல்லூரிக்
வாழிய யாழ்நகள் இந்துக் வையகம் புகழ்ந்திட என்
இலங்கை மணித்திரு நா இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒருபெருங் 8 இளைஞர்கள் உள மகி
கலைபயில் கழகமும் இ கலைமலி கழகமும் இது தலைநிமிர் கழகமும் இ:
எவ்விட மேகினும் எத்து எம்மன்னை நின்னலம் ம என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே ! இறைவன் தருள் கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் அ அவைபயில் கழகமும் இ ஓங்குநல் லறிஞர்கள் உ ஒருபெருங் கழகமும் இது ஒளிர்மிகு கழகமும் இது உயர்வுறு கழகமும் இது உயிரென கழகமும் இது
தமிழரெம் வாழ்வினிற் த
ம
தனிப் பெருங் கலையகப்
வாழ்க 1 வாழ்க ! வாழ் தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
ஏழாலை மஹாத்மா அச்சு

கல்லூரி
றும் (வாழி)
ட்டினில் எங்கு
b
கலையகம் இதுவே pந் தென்றும்.
துவே - பல
வே - தமிழர்
துவே!
பர் நேரினும் றவோம் ரம்
நன்றே :
ஆரியம் சிங்களம் இதுவே! வப்பொடு காத்திடும் துவே !
வே !
வே !
வே !
ாயென மிளிரும் ) வாழ்க !
王 !
برسے
Fகம், கந்தர்மடம்.