கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1982.03-04

Page 1


Page 2
οOMMISSION
CONSUMER GOODS
AGENTS
* .
VARIETIES OF
OILMAN GOODS
TN roops
GRANS
晕
o ܠ ܐ .
&
CD: 霹 6 # NEEDS Iš 2, 6 58 7.
”ܐܠܟ
Ay
* يtssAL°
E. STTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி பாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
555
リリ。
Malika' Progressive Monthly Magazine
59
LDT首庄 ஏப்ரல் 1982
அன்புள்ள வாசகர்களுக்கு.
அடுத்த இதழ் பாரதி நூற்ருண்டு சிறப்பு மலராக மலர இருக்கின்றது.
பாரதி அன்பர்கள் கூடிய சீக்கிரம் தமது படைப்புக்களைப் பாரதி மலருக்கு அனுப்பி வைக்க வேண்டுஇன்ருேம். பாரதியை வழமைபோலப் பாராமல் புதிய கோணத்தில் அணுகிப் புதுப் புதுச் செய்திகளைத் தந்துதவும்படி கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
தமிழகத்திற்கு அடிக்கடி போவதால் மல்லிகையின் உழைப்பு நாட்கள் துண்டு விழுகின்றன. அதனுல் மல்விகை வெளிவரும் மாதங்களில் மாற்றங்கள் கூட ஏற்பட்டு விடுகின்றன. மல்லிகை ஒர் இலக்கிய மாசிகை. பல தொடர்புகளைத் தொடர்ந்தும் வளர்த்து அபிலிருத்தி செய்து வந்தால்தான் அதன் உள்ளடக்கத்தில் விக்கம் மலர்ச்சியும் புதிய தெம்பும் ஏற்பட வழி பிறக்கும். ஆகவே தமி ழகப் பயணம் தவிர்க்க முடியாததொன்று
அதே சமயம் அடிக்கடி இப்படித் தடங்கள் ஏற்படுவதும் மாத ஒழுங்கு சீர்குலைவதும் நல்லதல்ல எ ன் ப ைத யு ம் நாம் உணரத் தவறவில்லை.
- ஆரிசியர்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
மவ்லிகையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

Page 3
கடிதம்
நான் சமீபத்தில் தமிழ் நாடு சென்று திரும்பியிருந்தேன். முக் கியமான சில ஊர்களுக்குப் போக வேண்டிய நிலை எனக்கு ஏற் பட்டது. முக்கியமாக மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், சென்னை போன்ற தமிழ் நாட்டின் முக்கிய ஊர்களுக்கெல்லாம் போய் வந்தேன்.
நான் ஒர் எழுத்தாளனல்ல. ஆணுல் இலக்கிய ஆர்வமும் ஆசை யும் நிரம்பப் பெற்றவன். ஆகவே அங்கு முக்கியமாக இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. பல தகவல்களை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தில் நானே பலரை இலக்கிய சம்பந்தமாக அணுக வேண்டியிருந்தது
ஒரு சந்தோஷமான சமாச்சாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் தமிழகம் சென்றிருக்கிறேன். அப்பொழுது இலங்கை பற்றித் தெரிந்திருந்ததை விட, இன்று அதிகமாக நமது நாட்டைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிருர்கள்.
ாவ பட்டினங்களில் பலர் உங்களைப் பற்றி ரொம்ப விரிவாக விசாரித்தார்கள் உங்களையும் மல்லிகையையும் அநேகமாக எல்லா ஊர்களிலும் விசாரித்தார்கள். அங்கு அநேகமாக மூன்றே மூன்று பேர்களைப் பற்றித்தான் மிகவும் அக்கறையாக விசாரித்தனர். உங்களைப் பற்றி அடுத்து கைலாசபதி, சிவத்தம்பி பற்றி,
சில இடங்களில் உங்களே எனக்கு நேரில் தெரியுமா எனவும், மற்றும் உங்களைப் பற்றி - நீங்கள் ஈழத்து இலக்கியத்துக்குச் செய்யும் ஆக்க வேலைகள் பற்றி - எனக்குத் தெரியாத பல தக வல்களைக் கேட்டு என்ன விசாரித்தார்கள்,
உங்களே எனக்கு நேரில் தெரியாது. பத்திரிகைத் தகவல்கள் மூலமும் மல்லிகையின் சில ஆண்டுத் தொடர்பு மூலமுமே உங்களை எனக்கு அறிய வந்தது. தமிழகத்தில் உங்களைப் பற்றிப் பலர் என்னை விசாரித்ததின் பின்னர்தான் உங்களுடன் முன்னரே நட் பாக இருந்திருக்கவில்லையே என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. திலிருந்து ஒன்றை உணர்ந்து கொண்டேன் உண்மையான சீரிய உழைப்பு காலக் சிரமத்தில் தகுந்த பலனை அளித்தே தீரும். இதை நான் தமிழகத்தில் நேரடியாக உணர்ந்து கொண்டேன்.
உங்களைக் கொழும்பில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு இனிமேல் கிடைத்தால் ரொம்பவும் மகிழ்ச்சியடைவேன்.
இந்தத் தகவலை உங்களுக்கு எழுதுவது ஏகோ மல்லிகையில் கதை பிரசுரிப்பதற்காகவல்ல. எனக்குக் கதை எழுதும் வல்லமை யும் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து வந்ததும் உங்களுடன் தொடர்பு கொள்ள 6ே ன்டும் என்று என்னுள் ஏற்பட்ட அவா வின் காரணமாகவே இதை எழுதுகிறேன்.
எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. எனது நாட்டு எழுத்தா ளன் ஒருவனைத் தமிழகத்திலுள்ள தரமான இலக்கிய நண்பர்கள் பலர் தெரிந்து வைத்திருப்பதுடன் அவர்மீது இத்தனை தனி மதிப்பு வைத்திருப்பதைக் கண்டு நான் நெஞ்சம் பூரித்துப் போனேன். இ
கொழும்பு - 9. எல். முகம்மது யாசின்
 

அறிவுக்கு இன்று ஆடம்பர விலை:
இன்று ஒரு பொதுமகல்ை படிக்க முடிவதில்லை!
உலகச் செய்திகளே, உள்ளூர்ச் செய்திகளை அறிய வேண்டியி ருந்தால் கூட அறிய முடியாத அளவிற்கு பொதுவான விலைவாசி விலையேற்றம் அறிவுத் துறையை மிக மிக மோசமான நிலையில் பாதித்துத் தாக்கி வருகின்றது,
பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் விற்பனவுக் கடை களில் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத அளவிற்கு விலையேறியுள்ளன.
பொதுவாக அறிவுத் துறையே முடங்கி விடுமோ என அச்சப் பட வேண்டியிருக்கின்றது.
இன்று தரமான ஒரு வாசகனுக இருப்பது முடியாததாகும். உலகப் புதினங்களையும் உள்ளூர்ச் செய்திகளையும் அறிந்து தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விரும்பி ஒருவன் தன்னை வளர்த்துக் கொள்ள நினைத்தால் அதற்குப் பெருந் தொகைப் பணம் அடிப் படைத் தேவையாக இருக்கின்றது.
சோஷலிஸ் நாடுகளில் அறிவுச் சாதனங்களின் விலேதான் சொம்ப ரொம்ப மலிவு எனக் கேள்விப்பட்டிருக்கின்ருேம்.
ஆனல் நமது நாட்டைப் போன்ற நாடுகளில் அறிவு க் கு ரொம்ப ரொம்ப விலை கொடுத்துத்தான் பெறவேண்டியிருக்கின் றது. காரணம் நாளுக்கு நாள் புத்தகம், சஞ்சிகை, பத்திரிகை களின் விலை ஏறிக் கொண்டே போகின்றது.
இந்த விலையேற்றமும் பண உயர்வும் கட்டுக்கடங்காத உற் பத்தி அடக்க விலை கூடியதால்தான் என்ற நியாயமான வாதங் களை நாம் ஏற்றுக் கொண்டால் கூட, இந்த உயர்ச்சி எங்கு போய் நிற்குமோ என நியாயமாகவே நாம் அச்சப்படுகின்றுேம்

Page 4
எதிர்கால இளைய தலைமுறையினர்தான் இதனுல் ரொம்பவும் பாதிக்கப்படப் போகின்றனர்.
இதன் காரணமாக மலிவான பொழுதுபோக்கு கோலகலங் களில் தமது நேரத்தையும் காலத்தையும் செலவிடுவதுடன் ஆன் மிகச் சீரழிவுக்கே தம்மையறியாமல் அவர்கள் உட்பட்டு விடக் கூடிய ஆபத்தும் எதிர்காலத்தில் அவர்களுக்கு வரலாம்.
எனவே அரசாங்க, நிறுவன மட்டங்களில் அறிவு வளர்ச்சிக் கும் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் போதிய மானிய உதவி கண்டிப்பாகக் கொடுக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகின்ருேம். முன்னர் ஒரு வீட்டில் பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், புத்த தங்கள் வாங்கிப் படித்துப் பத்திரப் படுத்தும் நல்ல பழக் கம் இருந்தது. ஆனுல் இன்று இந்த நல்ல பழக்கம் அருகிப்போய் விட்டது.
காரணம் பொருளாதார முடைதான்;
இந்தத் தேசத்தில் குடும்பங்களைப் பாதித்த விலைவாசியேற்றம் இன்று ஒவ்வொரு குடும்பத்தவரின் அறிவுத் தொடர்புகளையும் பாதித்து வருகிறது. உடனடியாக இதன் தாக்கத்தை நாடு புரிந்து கொள்ள முடியாது போனுலும் நாளா வட்டத்தில் இது நிச்சய மாகத் தாக்கத்தான் செய்யும்.
இதற்கான மாற்று வழிகளைக் கண்டாக வேண்டும். நூல் நிலையங்க்ள் பெருகுவதுடன் மலிவு விலையில் புத்தகங்கள் கிடைக் கக் கூடிய வாய்ப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
வயிற்றுக்கு உணவு எத்தகைய அத்தியாவசியமோ அப்படியே அறிவுக்குத் தீனி அவசியமானது. இதை உணர்ந்து செயல்பட் டால்தான் இந்த மண்ணில் அறிவைத் தொடர்ந்து பாதுகாத்து வளர்த்தெடுக்க முடியும்,
அறிவுக்கு இந்த நாட்டில் இன்று ஆடம்பர விலை கொடுக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. ஆடம்பரப் பொருட்களுக்குக் கிடைக்கும் சமூக மதிப்புத்தான் வருங்காலத் தில் அறிவுக்குக் கிடைக்குமோ என அஞ்சுகின்ருேம்.
அறிவு ஒரு ஆடம்பரப் பொருளாக மாருமல் பார்த் துக் கொள்வது அறிவுடையோர் கடமை,
 
 

1981- ம் ஆண்டு.
தமிழ்ப் புத்தாண்டுத் தினத் திற்கு அடுத்த தினமோ அல்லது அதற்கும் அடுத்த தினமோ என் பது என் நினைவு.
கொழும்பிற்குப் @ 山r 駐 வேண்டும். எனது மாதாந்தக் கொழும்புப் பிரயாணத்தின் திட் டம் செல்வச்சந்நிதியில் நடந்த
சமூக முன்னேற்றச் சங்க மகா
நாட்டு விழாவிற்காக ஒருவாரம் பின்போடப்பட்டு விட்டதால் அதில் கலந்து கொண்டுவிட்டு
அன்றுதான் கே. ஜி. பஸ்ஸில் கொழும்பு புறப்பட ஆயத்த
மானேன்.
என்னுடனேயே அந்த மகா நாட்டில் கலந்து கொண்ட நண் பரும் என்னுடன் பஸ்ஸிற்கு வந் திருந்தார். அவர் கொழும்பில் தொழிலகம் வைத்து நடத்து பவர். வாழ்வின் ஆரம்ப காலத் தைச் சிங்கப்பூரில் கழித்தவர். பழகுவதற்கு மிக மிக இனிமை
LITGÖTGATT கொழும்பிற்குப் போஞலும் இவ ரைச் சந்திக்காமல் வருவதில்லை. * தண்ணீரும் கண்ணிரும் எனது சிறுகதைத் தொகுதிக்கு கொழும் பில் வெளியீட்டு விழா நடை பெற்ற சமயம் இவரது நட்பு எனக்குக் கிடைத்தது. எந்தப் பிரச்சினை என்ருலும் என்னுடன் மனந் திறந்து உரையாடுவார்.
நான் எப்பொழுது
சாதனைகள் பற்றியும்
டொமினிக் ஜீவா
பல நோக்குப் போக்குகளில் நாம் இருவரும் மாறுபட்ட கருத்துக் கள் கொண்டிருந்த போதிலும் இவர் மீது எனக்கு ஒரு வித தனி அபிமானம். அதுபோலவே அவரும் என்மீது தேவதா விசு வாசம் வைத்திருந்தார்,
அவரது அந்தப் பயணம் கொழும்பில் வர்த்தக சம்பந்த மானதல்ல. டில்லிக்குப் போக கட்டுநாயக்கா விமான நிலையத் திற்குப் போகிருர், அவர் குரு மகராஜின் பக்தன். குருமகராஜ் அமெரிக்கவில் இருந்து இந்தி யாவுக்கு - தலை நகரான டில் விக்கு - வந்திருப்பதை அறிந்து, அவரை நேரில் தரிசிப்பதற்கு இந்தியா செல்ல, அடுத்த நாள் காலை 9 மணிக்கு விமானப் பய னம் செய்ய ஆயத்தமாகி என் னுடன் பஸ்ஸில் வருகிருர்,
இருவரும் ப்ேசிக் கொண்டே பிரயாணம் செய்தோம்.
குரு மகராஜின் மேன்மை கள் பற்றியும் அவரது உபதே சங்களில் உள்ள ஆத்ம நிறைவு பற்றியும் அவரது மகத்தான எனககு வழி நெடுகஷம் உபதேசம் செய்து வந்தார் அந்த நண்பர்.
எனக்கென்ருெரு கட்டு ப்
பாட்டை நான் எனக்குள்ளேயே வகுத்து வைத்திருக்கின்றேன். எந்த ஒருவருடைய நம்பிக்கை

Page 5
களையும் நோக்கங்களையும் வழி பா ட் டு எண்ணங்களையும் ம அவைகளில் எனக்கு உடன்பாடு இல்லாதிருந்த பொழு தி லும் கூ  ைஎக்காரனங்களைக் கொண் டுs அவமதிப்பதோ அல் ல து நுண்ணிய உணர்வுகளைப் புண் படுத்தவோ செய்யக் கூடாது என மனச் சங்கல்பம் செய்து வைத்திருக்கின்றேன். கூடியளவு அதைக் கடைப்பிடிக்கப் பெரிதும் முயன்று லருகின்றேன்.
இதற்கமைய அந்த நண்பர் எனக்குப் பல கோணங்களில் விளங்கப்படுத்திய குரு மகராஜின் தத்துவ விளக்கத்தையும் மகத் தான பெருமைகளையும் மிக உன் னிப்பான அவதானத்துடன் மறு GSLig:grs (31 Jap TLPG) .ே க ட் டு க் கொண்டு வந்தேன்.
இடையில் நீர்கொழும்பில் இறங்குவது நண்பரின் நோக்கம்: அங்கு இறங்கி ஒரு தெரிந்தவ ரின் வியாபாரக் கடையில் தங்கி, சிரம பரிகாரம் செய்து கொண்டு பின்னர் கட்டுநாயக்கீா சர்வதேச விமான நிலையத்திற்குப் போவது அவரின் திட்டம். அதற்கமைய விமான நிலையமும் நீர்கொழும் பிற்குப் பக்கத்தேதான் இருக் கின்றது.
அப்படியே வி டி காலை ப் பொழுதில் அவர் நீர்கொழும்புச் சந்தியில் இற ங் கி என்னிடம் விடை பெற்றுச் சென்றுவிட் LITI".
நான் தொடர்ந்தும் பிரயா ணத்தை மேற் கொண் டு கொழும்பை நோக்கிப் புறப்பட் (L.
அதற்கடுத்த மாதம் எனது கொழும்புப் பிரயாணம் வழமை போல இடம் பெற்றது.
பகல் உத்தர தே வி யி ல் யாழ்ப்பாணத்திலிருந்து கிழம்பி
நி%னயாப் பிரகாரமாக அதே ரெயிலில் அதே பெ ட் டி யில் அந்த நண்பரைச் சந்தித்துக் (o) 5 пади (31 обr.
டில்லியில் இருந்து திரும்பிய பின் நாம் இருவரும் முத ன் முதல் சந்திக்கும் சந்திப்பு இது,
என்னை ரெயிலுக்குள் சந்தித் ததும் அவருக்குப் பெருத்த சந் தோஷம் ஏற்பட்டு விட்டது.
நான் போன கிழமைதான் ପୌ), ଜଣu୩ଇଁ) ருந்து வந்தனன்
நினைச்ச ன்ை மல்லிகைக்கு வருவமென இருந்தன். ஒரே வேலையாப் போ ச் சு. இண்டைக்குத்தான் கொழும்புக்குப் போறன், இடை
ஒரு மாசமாப் போச்சு உங்களை நான் இங்கை சந்திப்பன் எண்டு கனவு கூடக் காணேல்லை என முகத்தில் மகிழ்ச்சி ததும்ப ஏ ன் இர ப் பேச வி டா ம ல் தொடர்ந்து பேசினர். எனக்கும் மனதில் மகிழ்ச்சிதான்.
முதன் முதலில் தான் டில் லிக்குப் போய் இறங்கிய அணு பவங்களையும் டு முன்னேயில் தான் டில்லி போகப் பட்ட சிரமங்களை யும் ஒன்று கூட விடாமல் எனக் குச் சொன்னர் நண்பர், குரு மகராஜிற்காக நான் எத்தனை சிரமப் பட்டாலும் தகும். அவர் இன்றைக்கு எனக்குக் கண்கண்ட கடவுள் மாதிரி. அவரை நேரில் பார்த்தவுடனேயே எ ன க் குத் தேகமோடிப் புல்லரித்தது. என்று கைகளை எனக்குக் காட் டினர்: "இப்பவும் புல்லரிக்குது!" அவரது ஆழ்ந்த நம்பிக்கை யைக் கண்டு நான் வழக் கம் போலவே பேசாமல் இருந்தேன்.
"அவரைத் தரிசித்ததற்கு ஓர் -960) 1–UI Tøll LDT b 6T63T60TL-60ஒ ட் டி க் கொண்டிருந்த ஒரு கெட்ட பழச்கத்தையும் இப்ப
彎

விட்டிட்டன். உங்களுக்குத் தெரி யும், நான் போயிலையைப் ( ' பி டு கொடுப்புக்குள்ளே குதப்பி வைத்திருக்கிறவன். இசிங் சப்பூரிலே புடிச்சுக் கொண்ட நீண்ட நாளையப் பழக்கம் இது. அந்தப் பழக்கத்தை அவரை நேரில் கண்டு ஆசி பெற்ற அன் றைக்கே விட்டிட்டன்" என்ருர், இதைப்பற்றி நீங்க எ ன் ன கருதுறிங்க. '
இதெல்லாம் அவரவர் மனப் பான்மையைப் பொறுத்தது. தவ முன பழக்கம் ஒன்றை விட்டுவிட வேண்டுமென்ருல் ந ல் ல மன ஒர்மம் இருந்தாலே போதும், கட்டாயம் விட்டு விடலாம். அதற்கு இத்தனை தூரம் போய்த் தான் விட்டுவிட வேண்டும் என் பதல்ல. உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இது அதனுல் நடக்க லாம். என்னேப் பாருங்க எனக்கு மனிதர்களைத் தவிர, வேறு மேம் பட்ட அதிசயங்களில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. என்னுல் கூட எங்கும் போகாமலே மன ஓர் மத்துடன் இருக்க மு டி யும், இதைத்தான் வில் பவர் என்று சொல்வது என்று சொன்னேன்,
உங்களால் இப் படி விட முடியுமா?"
நிச்சயமாக."
"அப்பிடியெண்டால் வெத் திலை போடுவதை விடுங் கள் பார்க்கலாம்"
கடந்த இருபத்தியெட்டு வருடங்களாக நான் வெற்றிலை போட்டுப் பழக்கப்பட்டவன். அதுதான் எனக்கு ஒரேயொரு துணை வெற்றிலே போட்டு மன தைக் குஷிப்படுத்தி விட்டுத் தான் நான் எழுதப் பேணுவைப் பிடிப்பது வழக்கம் அப்பொழுது கூட அவ. சி. சி. கு. வெற்றிலே
போட்டுக் கொண்டுதான் அவரு
டன் சம்பாஷித்துக் கொண்டி ருந்தேன்.
"இதோ பாருங்கள், இது தான் நான் க  ைட சி யாக ப் போடும் வெத்திலை. நீங்க ள் குரு மகராஜைக் கண்டு போயி லேயை விட்டீங்கள். நான் உங் களைக் கண்டு விடுகிறேன் வெத்தி லையை, இன்று துவக்கம் விட்டு விடுகிறேன்!
அன்று தொடக்கம் வெற்றிலை போடுவதை நான் விட்டு விட் GLêt.
அடுத்த மாதத்திற்கு அடுத்த
மாதம்.
கொழும்பு சென்ற நா ன் அந்த ந ண் பரு டன் பேசிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் ஏற்
L-L-gil a
அடிக்கடி எச்சில் துப்ப அவர் வெளியே போய் வந்தார்.
எனக்கொரு சந் தே கம். கொஞ்சம் வஈயைத் திரவுங்கோ பாப்பம்' என அவரைக் கேட் டேன்.
* மன்னிச்சுக் கொள்ளுங்கோ. என்னுலை வெ று ம் வாயோடு இரு க் க ப் பத்தியப்படேல்லை. கொஞ்சங் கொஞ்சந்தான் இப்ப போயிலே போடுறன்"
சொல்லிவிட்டு அவர் ரொம் பவும் பரிதாபமாக என் முகத் தைப் பார்த்தார்.
நான் இதை முன்னரே எதிர் பார்த்தவன்தான். நம்பிக்கை களே - அதிசயங்களே - அற்பு தங்களே விட, மனத் திண்மையை நான் முற் று க நம்புபவன். எனவே எனக்கு இது ஒரு அதிர்ச் சியாக இருக்கவில்லை
இன்று என்னைப் பொறுத்த வரை வெற்றிலே மறக்கப்பட்ட சங்கதியாகி விட்டது.

Page 6
சாந்தங்கள் - 4
சாந்தன்
1. អ្វីហ្វិកាក៏
ஐந்து பேரை இடம் மாற்றுகிற உத்தரவு அந்தக் கடிதத்தில் இருந்தது. தொழிலானர்கள். பழைய தலத்தில் கட்டிட வேலைகள் முடித்து விட்டன. புது இடத்திற்குப் போகும்படி
கடிதம் தமிழிலிருந்தது. ஒரு பெயருக்கு முன்னுல் மட்டும் திரு இருக்கவில்லை. காத்தான். ஒவசியருக்கோ கிளாக்கருக்கோ இந்தப் பெயர் சந்தேகமில்லாத கேஸாகத் தெரிந்திருக்க வேண்டும்.
2= மஹத்
இரண்டு தோழர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பரம்பரையாக அடிமை செய்த குலத்தில் பிறந்தவன் நான்.
இன்று மனிதனுக நாலுபேர் மதிக்க நடக்க முடிகிறதென்ருல் எங்
கள் இயக்கத்தை நான் சார்ந்ததினுல்தான். என்ருர், அ. நன்றியுடன்,
. . நீங்களும் அப்படித்தான?
இல்லை. - ஆ. ஒரு மயிரிழை முறுவலுடன் செரன்னர்
* . என் தந்தை ஒரு நிலக்கிழார் 3. பானையும் சட்டியும்
போன வருஷம் கந்தோர் கன்ரீனில் ஒருநாள் பேசிக் கொண் டிருந்தபோது, சோமன் தன் ஈரான் பயண ஏற்பாடுகளை விவரித் துக் கொண்டிருந்தபோது மஹிந்த வந்தான். "உனக்குப் பைத்தி யமா, சோமா? அங்கை இப்ப போறது உயிராபத்தான வேலை.
இங்க மட்டும் எங்களுக்கு என்ன வாழுது - சோம்ன் டக் கென்று கேட்டுச் சிரித்தான். -
4“ 960)LuIII6TLD
சைலன்ஸ்ரைக் கழற்றிக் கழுவக் கொடுத்துவிட்டு, கார்பரேட் உரைக் கவனிக்க வந்தான் அந்த இளைஞன் எண்ணெய் படிந்த உடைகள், காலில் வழுக்க வழுக்க ரப்பர் செருப்பு, சுறுசுறுப்பா யிருந்தான் மோட்டார் சைக்கிள்கள் இடைக்கிடை உறுமின, குரைத்தன, கர்ஜித்தன.
பெட்ரோல் குழாய்களைக் கழற்றிஞன், பிறகு தன் கையுதவிப் பையனிடம் சென்றன். அந்தப் பெட்டிக்குள்ளை குழந்தைப்பிள்ளை போல ஒரு ஸ்க்ரூ ட்றைவர் இருக்கு. அதை எடு" நான் வியந்து போய் அவனைப் பார்த்தேன் பெடியனுக்கும் விளங்கவில்லை.
அதுதான் அந்த மஞ்சள் பிடி போட்ட கட்டை ஸ்க்குட்றைவர்? பெடியன் எடுத்துவந்ததை ஆவலுடன் பார்த்தேன். கார்பரேட் டருக்கான திருப்புளி அது உாேலகப்பகுதி நீளமில்லாமல் ஒன்றி ரண்டு இஞ்சிதான் அடியில் தடிப்பான மொத்தப் பிடி, குழந் தைப்பிள்ளை போலத்தானிருந்தது.
நண்பன் சத்தியனே நான் முதலில் சந்தித்தது இப்படித்தான்

այն հնարյthiնդույր"tithրոյ"hitn :
அட்டைப் படம்
"ቫዛuuጾህዛዛዛካimህፆዛዛዛmህፀሠዘህዛumህ
சிந்துபூந்துறை அண்ணுச்சி
வல்லிக்கண்னன்
திருநெல்வேலி ஜங்ஷனை அடுத்துள்ள சிந்துபூந்துறை என்ற சிற்றுாரின் வடக்குத் தெரு' ஒரு வீட்டின் திண்ணே. ஈலிச்சேரில் சாய்ந்திருக்கு முதிய உருவம், மகாத்மா காந்தியை நினவுபடுத் தும் தோற்ற்ம் சிரித்த முகம் வருகிறவர்களை மிகுந்த சந்தோஷ உணர்வோடு வரவேற்று, அன்பு உபசரணைகள் செய்து, வயது வித்தியாசம் பாராட்டாது பழகும் தோழமை உள்ளம் 86 வது வயது நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும், ஓய்வை நாடாத மனம் படிப்பதிலும் எழுதுவதிலும் குறையாத உற்சாகம் சிறு பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் தணியாத ஆர்வம் மக்களுக் கும் நாட்டிற்கும் பயன்படக் கூடிய விதத்தில் உ  ைழத் துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை. தன்னக் கானவரு கிற இளைஞர்களையும் நண்பர்களேயும் அவ்வாறே உழைக்கும்படி தூண்டுகிற ஊக்கம். இவற்றையும் இன்னும் சிறந்த பல நற் பண்புகளையும் கொண்டு விளங்குபவர்தான் அண்ணுச்சி சண்முகம்
இந்துபூந்துறை அண்ணுச்சி என்றும் சண்முகம்பிள்ளே அண் ணுச்சி என்றும், திருநெல்வேலி வட்டாரத்தில் நன்கு அறிமுக மாகியுள்ள சோ சண்முகம் அரசியல்வாதியாக வாழ்ந்தவர். இந் திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற விடுதலை வீரர் தீவிர காங்கிரஸ்வாதியாகச் சிறை சென்று, உள்ளே பயிற் சியும் அறிவு விழிப்பும் பெற்று கம்யூனிஸ்ட் ஆக வெளியே வந்து பணியாற்றிய அவர் ஒரு எழுத்தாளராக வளர்ந்தார். இன்றும், தன்னே ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை யும் மகிழ்ச்சியும் அடைகிருர்,
மார்க்சிஸ்ட் தத்துவ நூல்கள் பலவற்றையும், மாக்சிம் கார்க் இயின் சிறுகதைகளையும், மற்றும் வீர உணர்வு ஊட்டும் நூல்களை யும் சோ. சண்முகம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிருர் சோவியத் இந்திய நட்புறவையும் சமாதான உணர்வையும் போற்றி வளர்ப் பதில் உற்சாகம் க்ாட்டியவர் அவர் அண்ணுச்சியின் சேவையைப் பாராட்டும் வகையில், சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசும் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Page 7
அண்ணுச்சி சண்முகம் அவர்களின் வாழ்க்கையும் வரலாறும் இலட்சியப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு வழிகாட்டக் கூடியன.
சிந்துபூந்துறை என்ற சிற்றுாரில் - இப்போது இது திருநெல் வேலி ஜங்ஷன் எனும் நகர்ப் பகுதியின் ஒரு உட்கிடை போல் ஆகிவிட்டது - நடுத்தர வகுப்பில், 11 - 10 1896 அன்று பிறந்த வர் சண்முகம். தந்தை - சோணுச்சலம்பிள்ளை. தாய் - லட்சுமி அம்மாள்,
1912 ல் எஸ். எஸ். எல். சி. தேர்ச்சி பெற்றதும், அவருடைய பதினேழாவது வயதில் தந்தை மரணம் அடைந்தார். அதனுல், பெரிய குடும்பத்தைக காப்பாற்றுவதற்காக சம்பாத்தியம் பண்ன வேண்டிய நிர்ப்பந்தம் சண்முகத்துக்கு ஏற்பட்டது. தச்சநல்லூர், கடையநல்லூர் பஞ்சாயத்து போர்டுகளில் குமாஸ்தாவாக அவர் பணியாற்றினர். பிறகு, 9 முதல் 1929 வரை சிவகிரி ஜமீ னில் குமாஸ்தாவாக உழைத்தார்.
இலக்கிய ஆர்வமும், உரிமைக்காகப் போராடும் குணமும் இளமையிலேயே சண்முகத்திட்ம் இருந்தன. சிவகிரியில் இலக்கிய சங்கம் ஒன்றை அமைத்து, மூன்று ஆண்டுகள் நடத்தினர். அந் நாட்களில் ஒரு சந்தியாசியிடம் ஐந்து ஆண்டு காலம் வேதாந்தப் பயிற்சியும் அவர் பெற்ருர் சிவகிரி ஜமீனில் லேலை பார்த்த காலத் தில், அங்கு பணிபுரிந்த சிப்பந்திகளுக்கு நாலேந்து மாதங்க ள் சம்பளம் கொடுக்கப்படாததால், ஜமீந்தாரிடம் பன்முறை அவர் முறையிட்டார். அதனுல் பயன் விளையவில்லை. எனவே, வேலை நிறுத்தம் செய்ய சண்முகம் ஏற்பாடு செய்தார். உடனே ஜமீன் வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஜமீன்தார் இப்படிப் பழிவாங்கிவிட்ட பிறகு, சண்முகம் 1929 ல் சங்கரன் கோயில் தேவஸ்தானம் மானேஜர் ஆனுர், அது வும் ஒத்துக் கொள்ளாததால், அவர் சொந்த ஊரான சிந்து பூந்துறையில் குடியேறிஞர்.
சண்முகம் சிவகிரி ஜமீனில் வேலே பார்த்தபோதே, அவருக் குத் திருமணம் நிகழ்ந்துவிட்டது. மனேவி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். 1130 முதல் 19 6 வரை மனைவி வீட்டாரின் உண்டி யல் கடையை சண்முகம் நிர்வகித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் மும்மரமாக நிகழ்ந்து கொண் டிருந்த காலகட்டம் அது 1910 - 2 ல் திருநெல்வேலி வட்டாரத் திலும் அன்னியத் துணி பகிஷ்காரம், சாத்வீக மறியல் தீவிரமாக நடைபெற்றது. அப்போது மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு சண்முகம் உளக் கிளர்ச்சி பெற்ருர், - -
என் தாய்நாடே எனது சுவர்க்கம்" என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் நூல்களைப் படித்ததால் சண்முகத்தின் தேசபக்தி
O
 

பெருகியது. தேசபக்தர்கள் சிலரது அறிவுரைகளும். தோழர் ஜீவானந்தத்தின் நட்பும் அவரை சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளத் தூண்டியது. "என் தந்தை நெல்லை சுதேசிக் கலகத்தில் பங்கு கொண்டிருந்தார். அதுவும் என் தேசிய உணர் வுக்குக் காரணம் என்று சண்முகம் குறிப்பிடுகிருர்,
சண்முகத்தின் தேசபக்தி உணர்வு வளர்வதை அறிந்த உறவி னர்கள் உண்டியல் கடைப் பொறுப்பிலிருந்து அவருக்கு விடுதலை அளித்து விட்டார்கள், அதனுல் அவர் தேசீயப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபடுவது சாத்தியம்ாயிற்று,
194 க்குப் பின், திருநெல்வேலி ஜில்லா, நகர காங்கிரஸ் கமிட்டிகள் செயலற்றிருந்தன. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் அவை 1938 ல் புதுப்பிக்கப்பட்டன. அது முதல் 1938 முடிய சண்முகம் காரியதரிசியாகச் செயலாற்றினுர், அந்த மூன்றுண்டுக் காலத்தில் தேசீய காங்கிரஸின் வளர்ச்சிக்கும் வெற் றிக்கும் அண்ணுச்சி செய்த சேவை பெரிது.
அந் நாட்களில் நடைபெற்ற சட்டசபை, ஜில்லா போர்டு, நகர் மன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்குப் பெருவாரியான ஸ்தா னங்கள் கிடைக்கும்படி செய்த பெரும்ை சண்முகத்துக்கு உண்டு. மாவட்டம் முழுவதும் நடந்து நடந்தே போய், கிராமங்கள் தோறும் கிராமக் கமிட்டிகள் அமைத்து, எங்கும் சுதந் தி ர ப் போராட்டச் செய்தியும் உணர்வும் பரவுவதற்கு அவர் அதிகம் Lumr@LIL LITrio.
அக்காலத்திய நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டால், இது எத்தகைய பெரிய சாதனை என்பது புரியும். இப்போது தூர தொலைச் சிறு கிராமங்களுக்குக் கூட பஸ்கள் போய்வருகின் றன. அந்நாட்களில் பஸ் போக்குவரத்துக் கிடையாது. கிராமங் களைச் சென்றடைவது சிரம காரியமாக இருந்தது. மேலும், அர சின் அடக்குமுறைகள் தாண்டவமாடின. வேலை செய்வதற்குப் பணமோ மற்றும் வசதிகளோ விடுதலை வீரர்களிடம் இல்லை. என்ருலும், அவர்கள் நாட்டுப் பற்றுடன், விடுதலை வேட்கை யுடன், லட்சியப் பணி புரியும் கர்ம வீரர்களாக உழைத்தார்கள்.
அப்போது விக்கிரமசிங்கபுரம் ஆர்வி மில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக மூன்று மாத காலம் வேலைநிறுத்தம் நடத்தினர்கள். தச்சநல்லூர் சர்க்கரை ஆலைத் தொழிலாவர்கள் வேலைநிறுத்தமும் நடைபெற்றது. ஜில்லா காங்கிரஸ் கமிட்டி அவற்றுக்கு ஆதரவு கொடுத்தது. காரியதரிசியான சண்முகம் அயராது பாடுபட்டார். அக்காலத்தில் ஷாப் சட்டம் அமுலில் இல்லை. வியாபாரிகள் இரவு 10 மணிக்குத்தான் கடைகளை அடைப் பார்கள். ஆகவே, டவுணில் இரவு 10 மணிக்கு மேல்தான் பொதுக் கூட்டம் ஆரம்பமாகும்; இரவு 1 மணிவரை நடக்கும் அதற்கப் புறம் டவுணிலிருந்து நடந்து 2 மணி அளவில் சிந்துபூந்துறை

Page 8
வீட்டுக்கு வருவது அண்ணுச்சிக்ரு இயல்பாக அமைந்தது. அந் நாளைய அனுபவங்களைப் பற்றி அண்ணுச்சி சொல்லிக் கேட்க வேண்டும்!
1940 ல் சண்முகம் நெல்லை நகர் மன்ற உறுப்பினரானுர். மூன்று மாதகாலம் பணியாற்றினர். யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். அதனுல் 1940 நவம்பர் 23 அன்று கைது செய்யப்பட்டார், 1942 மார்ச் 16 முடிய வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தார். அங்கேதா எனது எழுத்து வேலை தொடக்கம் மறைந்த மேதை எம். கி. வீரபாகுவும், கிங்கை உலக நாதனும் தூண்டுதல் தந்தனர் பாஷ் ஸ்லீன் எழுதிய சோவியத் ஜனநாயகம் என்ற நூலை தமிழாக்கினேன். எழுத்துப் பிரதியை மறைத்து வைத்து வெளியில் கொண்டு வந்து நானே அச்சிட்டேன். அரசு பறிமுதல் செய்து விடுமோ என்ற அச்சம். அதனல், அச் சான ஆயிரம் பிரதிகளையும் சிந்துபூந்துறை விசுவநாதச் செல்வி கோவிலில் மதைவாக வைத்திருந்து, கிறிது சிறிதாக விற்பனை செய்தேன். தெரிந்தவர்களுக்கு இனமாகக் கொடுக்கவும் பயம்
முற்போக்கு இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆர்வம் பற்றி அண்ணுச்சி இப்படிக் கூறும் பொழுது, அவரிடம் நமக்குள்ள மதிப் பும் அதிகரிக்கவே செய்யும்.
சண்முகம் தொடர்ந்து பல முற்போக்கு நூல்களைத் தமிழாக்கி வெவியிட்டார். இறுதியாக தே நெள லெனின்" என்ற நூலை அவர் மொழிபெயர்த்தார். மாஸ்கோ பதிப்பகம் அதை வெளியி டும் என்று நம்பியிருந்தார். அவர் எதிர்பார்ப்பு நிறைவேருதது . அண்ணுச்சிக்கு பெரும் மனக் குறைதான். "சிறந்த நூல் அது. அது தமிழில் அவசியம் வெளிவர வேண்டிய புத்தகம்' என்பது அவர் கருத்து.
முற்போக்கு இலக்கியங்களை வெளியிடுவதற்காக திருநெல்வேலி யில் அண்ணுச்சி, சிலர் துணையோடு, நெல்லே பப்ளிஷிங் ஹவுஸ் ஆரம்பித்து, இருபது வருடங்கள் அதை இயக்கினர். நல்ல பல நூல்களே இப் பதிப்பகம் வெளியிட்டது. பிறரு, நல்ல நூல்களை மக்களிடம் பரப்புலதற்கென்று, சண்முகம் நிர்வாகத்தில் நெல்லை புத்தக நிலையம் நடந்தது. இது பத்தாண்டுகள் செயல்பட்டது.
அண்ணுச்சி, திருநெல்வேலியில், இந்திய - சோவியத் நட்புற வுச் சங்கம் அமைத்து, அதன் மூலமும் முற்போக்ரு இலக்கி யங் களே விநியோகித்து வந்தார். பஸ் தொழிலாளர், அச்சுத் தொழி லாளர், ஒட்டல் தொழிலாளர், பீடித் தொழிலாளர் சங்கங்களும், மற்றும் விவசாய சங்கங்களும் ஆரம்பித்தும் அமைத்தும், அவற் றின் நிர்வாகப் பொறுப்பு ஏற்றும் பொதுப்பணி புரிந்திருக்கிருர், பெரும்பாலும் மாவட்ட அளவிலேயே அவரது செயல்கள் நிகழ்ந்தன.
இலங்கை வாழ் இந்தியர் சங்கத்தின் அழைப்புக்கு இணங்கி 1938. 1948 ஆண்டுகளில் சண்முகம் இலங்கை சென்று, இந்திய ரின் உரிமைப் போராட்ட வரலாற்றை பொதுக் கூட்டங்களில் எடுத்துச் சொன்ஞர். 149 ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் ஜில்லா கவுன்சில் உறுப்பினராகச் செயலாற்றினர்.

1986 ல் நெல்லை ம்ாவட்ட விடுதலை வீரர் சங்கம் அமைத்து நவிவுற்றிருந்த தியாகிகளுக்கும் அவர்களின் மனைவியருக்கும் டென் ஷன் கிடைக்க வகை செய்தார். தொடர்ந்து அத் தொண்டில் ஈடுமட்டார். ஏழைகளுக்கும், வயோதிகர்களுக்கும், வாழ்விழந்த பெண்களுக்கும் பென்ஷன் கிடைக்கச் செய்வது குடியிருக்க வீடு இல்லாத கி ராம ஏழைகளுக்கு எழுத்தறிவில்லாதவர்களுக்கு
மனுக்கள் எழுதிக் கொடுத்து வழிகாட்டுவதும் அண்ணுச்சியின்
வேலையாக இருக்கிறது.
அரசியல் தலைவர்கள் - தோழர் ஜீவானந்தம், தோழர் பாலதண்டாயுதம் போன்றவர்கள் - அண்ச்ைசி வீட்டில் ೨]logவந்து தங்கியிருக்கிறர்கள். திருமதி பார்வதி சண்முகம் அரசியல் வாதிகளுக்குத் தாயன்பு காட்டி உபசரித்தது குறிப்பிடத் தகுந்தது.
தனது நீண்ட வாழ்வில், பொதுநல நோக்குடன், நேர்மை யுடனும் தேசபக்தியோடும் மனிதாபிமானத்துடனும் நடந்து வந் ததால், சண்முகம் அவர்கனின் மனைவி சீதனமாகக் கொண்டு வந்த நன்செய் நிலத்தை அவர் 2 ஆண்டுகளுக்கு முன் ? கிரயத்துக்கு விற்க வேண்டியதாயிற்று மனைவியின் சீதன வீட்டில் கு டி யிருந்து வருகிறர் அது பழங்கால வீடானதால், 19து பார்க்க வகையின்றி, ஆபத்தாள நிலையில் இருப்பது அண்ணுச்சிக்கு மன வேதனை தருகிறது. , -
மேலும், அறிவு வளர்ச்சிக்காக - சொந்த உபயோகத்துக்
காக - அண்ணுச்சி வாங்கிச் சேர்த்த நல்ல நூல்கள் புலவற்றை விற்க வேண்டிய அவசியமும் அவருக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சோதனைகளும் வறுமையும் குழ்ந்திருக்கும் லும் "அண்ணுச்சி சண்முகம் சோர்வோ முதுமை உணர்வோ
விரக்தியோ கொள்ளாது. நட்பு உணர்வோடும், மனிதாபிமானத்
தோடும் தனது 86 வது வயதிலும் உற்சாகமாக 2  ை9 த் து க்
கொண்டிருப்பது இளைய தலைமுறையின்ருக்குச் சிறந்த எடுத்துக்
அாட்டாக விளங்க வேண்டும்.
அண்ணுச்சிக்கு ஒரு கண்ணில் ஆப்பரேஷன் நிகழ்ந்து பார்வை சரியில்லாது போய்விட்டது என்ருலும், பகலிலும் இரவிலும்
புதிய நூல்களை ஆர்வத்துடன் படித்து அறிவை விரிவு செய்து
கொள்ளும் பசி அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. இது போற்று தலுக்குரிய அரிய பண்பாகும்.
பொதுவாக 60 வயதானதுமே மணி விழா கொண்டாடி விட்டு ஓய்வு பெற்று சுகமாக வாழ்வதில் ஆசை கொள்கின்ற பெரியவர்கள் மலிந்த சமூகத்தில் அண்ணுச்சி சண்முகம் ஒரு விதி விலக்கு என்பதில் சந்தேகமில்லை. -

Page 9
இலங்கை முற்ப்ோக்கு இலக்கியத்தில்
மூன்றவது தலைமுறை
தெணியானின் கழுகுகள் ஒரு நோக்கு
B வலி ன் பண்புகளி லொன்று அது ஒரே வேளையில் ஒன்றுக்கொன்று (LP IT (G5) GDI இரண்டு பணிக%ளர் செய்து கொண்டிருப்பது வெகு ஜன இலக்கியம் என்ற வகையில் இன்று அது சராசரி வெகுஜன வாசகர் களுக்கான ஒத்தடக் கனவுகளைத் தோற்றுவிக்கும், கோ ஆற்று" இலக்கியமாகப் பயன்படுத்தப் படுமதேவேளையில் மனித உணர் வூற்றுக்களை இனங் கண்டறிந்து சிந்தனைக் கிளர்ச்சி" யை ஏற்ப டுத்தும் காத்திரமான இலக்கிய
மாகப் பயன்படுகின்றமை இதன்
பண்புகளில் ஒன்று. ஹறல்ட் ருெபின்சும் நாவலாசிரியர்தான்; வில்லியம் ஃபோக்னரும் நாவலா சிரியர்தான். தமிழ் நிலை நின்ற உ தா ர ன ம் வேண்டுமெனில் இந்துமதி என்பவரும், ராஜம் கிருஷணனும் ஒரே சம்யத்தில் நாவலபசிரியைகளாகக் கொள் ளப்படும் இலக்கியத் துரதிர்ஷ் டத்தை எடுத்துக் காட்டலாம்.
பெரும்பான்மையான வெகு ஜன" வாசகர்கள் இரண்டாவ தாகக் காட்டப்பெற்ற நாவல் களை வாசிப்பதில்லை. காரணம், அந்த நாவல்கள் வாழ்க்கையைச் சித்திரிக்கும் முறையும், அத்த கைய சித்திரிப்பின் மூலம் எடுத் துக் காட்டும் வாழ்க்கை உண் மைகள் காலும் கூசவைக்கும்
கார்த்திகேசு சிவத்தம்பி
ஒளியும் அந்த வாசகர்களை நிலை
குலையச் செய்துவிடும். தன்னு டைய நோயின் பயங்கரத்தை அறிய விரும்பாது தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் நோயாளி போன்றவர்கள் இந்த வாசகர்கள். இவர்களிற் பலர் இந்த வாசக ருசியிலிருந்து விடு படுவதில்லை. மிகச் சிலர் விடு சென்றுவிடுவ
LG G D G a துண்டு.
சமூக சிந்தனைகளை வழிப்
படுத்துகின்ற காத்திரமான இலக் கியங்களைப் பற்றிய கணக்கெடுப் புகளிலும் ஆய்வுகளிலும் மேற் குறிப்பிட்ட முதலாவது இலக்கி யங்கள் இடம் பெறுவதில்லை. அத் த  ைக ய இலக்கியங்களிற் கூறப்பட்டவை ஆராயப்படுவதி லும் பார்க்க அத்தகையவை ஏன் எழுதப்படுகின்றன என்ற இலக் கிய வி சார (மே ) 8ண யே மேலோங்கி நிற்கும்
தெணியானின் 'கழுகுகள் என்ற இந்த நாவல் எவ்வகை யிலும் முதலாவது வகையைச்
JFATTTTT ğ5/ 6
கழுகுகள் என்ற இந் 湾( நாவல் இலங்கையிலிருந்து வரும் இன்னுெரு நாவல்,
 
 
 
 
 
 
 
 
 

எழுபதுகளின் நடுக்கூற்றில் இலங்கையில் மேற்கூறிய ஒத் தட நாவல்கள் தோன்றுவதற் கான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனல் 1977 இல் ஏற் பட்ட இறக்குமதிக் கொள்கை மாற்றங் காரணமாக தென் இந்திய ஒத் தட நாவல்கள் கட்டுப்பாடின்றி இலங்கையினுள் அநுமதிக்கப் படவே, சுதே ச ஒத்தட உற் பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனுல், அறுபதுகளில் இலங் கையிற் காணப்பட்ட ஆக்க இலக்கியக் காத்திரம் மீண்டும் வலுவுறுவதற்கான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தெணியானின் கழுகுகள் இந்த நம்பிக்கையை
ஊர்ஜிதம் செய்கிறது.
தெணியான் இலங்கை முற்
போக்கு இலக்கியத்தின் மூன்ரும் தலைமுறையைச் சேர்ந்தவர், முத ul-ITG)) gif த லே மு  ைற யி னர் கே. கணேஷ், அ. ந. கந்தசாமி ஆகியோர். இவர்கள் மார்க்ஸிய இலக்கியக் கருத்து நிலை  ைய இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் நிறு வி ய வ ர் க ள், டானியல், டொமினிக் ஜிவா, ரகுநாதன், பெனடிக்ற் பாலன் போன்ருேர் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள்தான் இலங்கைத் தமிழ் மக்களிடையே
நிலவிய நிலவுடைமையின் இலக்
கிய மேற்கட்டுமானங்களை தகர்த் துச் சுரண்டலற்ற புதிய ஒர் உலகம் பற்றிய சிந் த னை  ைய ஆக்க இலக்கியத்தின் பொருள் மரபாக்கியவர்கள், !
இந்தப் புதிய ஆக்க இலக் கிய பொருண்மை ஏற்படுத்திய தாக்கங்களினுல் பழைமையொ
தூங்கிற்றெனினும், சர்வதேசீயப்
பிற்போக்குவாதத்தின் கலாசாரக் கேடயமான இலக்கியமிதவாத அணி சுதாகரித்துக் கிளம்பிற்று.
சர்வதேசியப் பொதுவுடமையின்
மைதிதான்,
கருத்து நிலைப்பிளவும் இதே காலகட்டத்திலேற்படவே, கையில் இலக்கிய முற்போக்கு வாதம் பல நெருக்கடிகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அந் தத் தீக்குளிப்புகள் முடிந்த பின் னர் மீண்டும் ஒரு புதிய துளிர்ப்பு இADபட்டது.
அந்தத் துளிர்ப்பின் வெளிப் பாடுகள்தான் தெணியான், சட்டநாதன், சாந்தன் போன் Gფf. இவர்களுள் தெணியா னுக்கு இயக்க ஈடுபாடு அதிகம் உண்டு.
தமிழகத்திலும் முற்போக் கின் மூன்றம் தலைமுறையினர் உண்டு. பொன்னீலன், ஜெயந் தன் முதலியோரை 95-פ]T!J600TI DIT கிக் கூறலாம்,
தமிழ் முற்போக்கு எழுத் தாளர்கள் எழுதியுள்ள நாவல் கள் பெரும்பாலானவற்றிற் சமூக ஒடுக்கு முறையும், வர்க்கப் பிரக் ஞையும் நாவல்களில் அடிப் படைப் பொருளாக அமைந்துள் ளன. முற்போக்கு நாவல்களே யும் நாவலாசிரியர்களையும் மற் றைய நாவல்களிலிருந்தும் நாவ லாசிரியர்களிலிருந்தும் பிரித்துக் காட்டுவதே இந்தப் பொருள
இதனுல் முற்போக்கு நாவ லாசிரியர்கள் மீதும் நாவல்கள் மீதும் பிரசாரம் என்ற குற் றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. கட்சிப் பிரசாரங்கள் என்று கூட எதிர் வாத ம் கூறப்பட்டது. கலைத்துவம் பற்றிய ஞானுேப தேசங்கள் கூறப்பட்டன.
முன்னர் கூறப்பட்ட மூன்
ரும் தலைமுறையினர் இந்த வாத
விவாதங்களினூடே வளர்ந்து கிளம்பியவர்களாதலால் அவர்
கள் தங்கள் நாவல்களில் (சிறு
്

Page 10
கதைகளிலும்) தாங்கள் கூற
விரும்புவனவற்றைத் தமது கருத்து நிலையினை வெளிப்படை யாகக் கூறுவதிலுப் LITij, களத்தையும் பாத்திரங்களையும் சித்திரிக்கும் முறையில் தொனிப் பொருளாக, தவிர்க்க முடியாத் தர்க்க வெளிப்பாடாகத் தமது
கருத்து நிலையினே முன்வைக்கும்
ஆற்றலேப் பெற்றனர்.
முற்போக்கு இலக் கி ய வளர்ச்சியில் இது ஒரு முக்கிய கட்டம், இரண்டாம் தலைமுறை யினரால் தமிழின் இன்றியமை யாத இலக்கியம் பொருளாக்கப் பட்டவற்றை இலக்கியமயப்படுத் தியது இவர்கள் பணியெனலாம்.
ού ή, θε), III τρίί η ί Γτί φώι υ: சிறிது நுண்ணியதாக நோக்குதல் அத்தியாவசியமாகும். முதலாம், இரண்டாம் கட்ட வளர்ச்சி நிலை
களில் கருத்துருவ வடிவங்களில்
எடுத்துக் கூறப்பட்டவை இம்
மூன்ருங் கட்டத்தில் முற்றிலும்
அகவயமாக்கப் பெற்ற நோக்குத் திறனுல் தெளிவுடன் எடுத்துக் கூறப்பெறும் பண்பு தெரியத் தொடங்கிற்று. ஒரே ஆசிரியரி லேயே இக்கட்ட வேறுபாடுகளே யும் காணலாம். அவ்வக் கட்டங் க ளி லே தோன்றியவர்களின் எழுத்துக்களிலிருந்தும் இவ்வளர்ச் சியை அறிந்து கொள்ளலாம்.
மார்க்ஸிய நோக்கு மேலும்
தமிழ் நிலைப்படுத்தப்படும் ஒரு கட்டம் இதுவெனலாம்.
இந்நிலையில் முற்போக்கு வாதம் அல்லது மார்க்ஸிய வாதம் வெறுமனே கருத்துருவத் திலோ அல்லது அதற்குரிய பரி பாஷைகளிலோ வைக்கப்படா
மல், விறகில் தியாக எடுத்துக்
கூறப்படும் நிலே ஏற்படுகிறது.
கழுகுகள் என்ற இந் நாவல் மேற்கூறிய வளர்ச்சிக் கட்டத் தைச் சுட்டி நிற்கின்றது சமுக
யிருப்பதில்லை.
மேற்கட்டுமானத்தில் புத்திஜீவி உணர் நிலையில் கருத்து நிலையா கத் தொகுத் தறியப்படுவன வற்றை கருத்து நிலை விவாத மாக முன்வைக்காமல், அந்த மேற்கட்டுமானங்களின் அடித் தள உண்மைகளே, யதார்த் தத்தை அந்த ச் சமூகத்தின் இயல்பான அசைவியக்கப் பின் எனணியில் வைத்துக் காட்டும் ஒரு பண்பு இப்பொழுது படிப் மேற்கிளம்புகின்றது. வெகுஜன நாவல்களின் வளர்ச்சி யும் அங்கு சமூக யதார்த்தம் துஷ்பிரயோகம் பண்ணப்படும் மு  ைற பும் மேற்குறிப்பிட்ட வளர்ச்சியினை விளங்கிக் கொள் வதிற் சில சிக்கல்களே ஏற்படுத் தியிருப்பது உண்மையெனினும், இந் த வளர்ச்சி துல்லியமாக இனங்கண்டு கொள்ளத்தக்கதாக வுள்ளது என்பதிற் கருத்து வேறு பாடு இருக்க முடியாது.
இலங்கைத் தமிழ் நாவல் களேப் பொறுத்த எ ரை யில் தெணியானுடைய இந்த நாவ வில் அந் த வளர்ச்சி யை ட இலக்கிய முதிர்ச்சியைக் கான G) ITED
。 நாவலே வெறும் கி  ைத ப்
பின்னலாக நோக்கும் கண்னேட்
டத்தை நான் பெரிதும் வெறுப் பவன். ஒரு நாவலின் சிறப்பு அதன் கதை யிலேதான் தங்கி கதை' தமிழ் நாவலில் பெ ரு முக்கியமாவ தற்கு இர ண் டு காரணங்கள் உள்ளன. ஒன்று பாரப்பரியச் சமூக நோக்கு முறை இன்னும் முற்றிலும் மா ரு த தன்மை, மற்ற து தொடர்கதைகளின் தொடர்ந்து வரும் ஆதிக்கம்" பாத்திரங்களின் கதை நிலைப் பட்ட அசைவியக்கங்களை நுண்
Eதாகச் சித்திரிக்கும் பொழுது மேற்கிளம்புவது நாவல் யாதே

னும் ஒரு மாறும் நிலைதான் அதன் ஆதார சுருதி நிலையூன்றி நிற்கும். ஆணுல் மாற்றப்பட வேண்டிய ஒன்றை, அதன் சமூக நிலை ப் பாட்டு முறைமையில் வைத்துச் சித்திரிப்பதே மாறும் நிலை" அல்லது மாறவேண்டிய நிலை" யை வற்புறுத்துவதாகவிருக் கும். அன் ர ன் செக்கோவின் நாடகங்களில் அத்தகைய ஒரு சித்திரிப்பைக் காணலாம். கடல் நாரை, செரித் தோட்டம் ஆகிய நாடகங்களில் இப் பண்பைக் GİTG5ØT GJITILIË).
கழுகுகள் என்ற இந்த நாவ லின் கதை நீண்ட ஒன்றல்ல. ஆறுமுசத்தார் என்னும் இரண் டாந்தாரக்காரரான கிராமத் தரகர் ஒருவரின் உடல் நலச் சிதைவுதான் கதை" ஆனல் அந்த உடல் நலச் சிதைலினூடே அத்தகைய சூழலில் அன்ருடம் நடைபெறும் மா னு டத் தி ன் சிதைவு காட்டப்படுகிறது.
இந்த நாவலின் சிறப்பு அது g5ᎱᎢ 6ᏈᎢ .
நாவல் நவீன உலகிற் பரா தீனப்பட்ட மனிதனின் அவலம் பற்றிச் சித்திரிக்கும் அற்புதமான இலக்கிய வடிவமாகப் பரிணமித் துள்னது. மனித உறவுகளே முத லாளித்துவம் மனிதாயுத நெறி யினின்று வழு வ ச் செய்யும் பொழுதுதான் இந்தப் பராதி னம் அல்லது அந்நியப்பாடு ஏற் படுகின்றது. தமிழ்ச் சூழலில் இது பெரும்பாலும் நகர் நிலைப் பட்ட ஒரு சமூகத் தொழிற் பாடுதான். ஆனுல் இந்தியாவைப் போல, தமிழ் மக்களின் வாழ்க் கைக் களம் அடிப்படையில் கிரா LDESIGG26őT தொகுப்புத்தான். தமிழ் நாட்டிலும் சரி இலங்கை யிலும் சரி கிராமங்கள் கிராமங்
வறுமை மிஞ்சி தலே தவறிக் கெட்டுப் பாழ்பட்
கள்தான். அதாவது அவை இன் னும் நிலவுடமை அமைப்பிலி
ருந்து மாருதவை. ஆனல் இந்த
Gov), G) / (60), L— GÖ) LD) 96ÕLDLLI கொலோனியலிசத்துடன் இணைந் துபோன நிலவுடைமை. ஆட்சி யதிகாரத்திலிருந்து பராதீனப் படுத்தப்பட்டு, நிலவுடைமை நிலைநிறுத்தம் அடிநிலை ஒருமை தகர்ந்த நிலையில், ஆள்பவன் இராமனுே இராவணனுே என்று கூட உணர முடியாத அளவுக் குத் துர நிலைப்பட்டுக் கிடக்க, தமக்குத் தமக்கென வாழ்ந்து, தமக்கெனவே வாழும் அந்த வாழ்க்கைக்கு வே ண் டிய ன வற்றை மாத்திரம் போற்றி அவற்றைப் போற்றுவதும் பேணு வதுமே வாழ்க்கையின் பெறுமா னங்களெனக் கொண்டு அதற்கு மேல் எதைப் பற்றியும் சிரத்தை கொள்ளாது, சிரத்தை கொள் ளத் தெரியாது தாழ்வுற்று, (ஆன்ம) விடு
டுக் கிடக்கும் வாழ்க்கைதான் இந்தக் கிராமங்களிலே காணப் படுகின்றது. அத்தகைய ஒரு நிலையிலேதான் கிராமத்துப் பட் டிக்காட்டுத்தனம் மேற்கிளம்பு கின்றது.
இந்த மட்டத்தில் வாழுகிற மக்கள் தங்களைத் தாக்கும் புறச் சக்திகள் பற்றிய பிரகஞையே
இல்லாமல் கு ளத் து மீன்கள்
போல ஒன்றையொன்று தின்று கொண்டு, கிணற்றுத் தவளைகள் போல வெளியுலகையறியாது,
அதற்குள்ளே கிடந்து அதற்
குள்ளே ம டி யு ம் தன்மையின் சோகத்தை நாவலிற் சித்திரித் துள்ளவர்கள் மிக மிகக் குறைவே. கிராமங்கள் நவீனமயமாக்கப் படுவது பற்றி கிராமத்து இளே ஞர்கள் வர்க்க உணர்வு பெறும்
முறைமை பற்றி, கிராமத்தில்
17

Page 11
நடக்கும் சமூக அடக்குமுறை பற்றிப் பேசும் நாவல்கள் நிறைய உள்ளன. ஆனுல் இந்தப் பிரக் ஞைகள் எதுவுமேயில்லாத நிலை யில் கிராமவாசி கிராமவாசியா கவே உணர்ந்தும் இயங்கியும் வாழும் வாழ்க்கையின் தன்மை களை உள்ளது உள்ளவாறே சித் திரிக்கும் நாவல்கள் த மி பூழிற் குறைவு. ஹிந்தி நாவலாசிரியர் பிரேம்சந்த்தின் கோதான்" போன்ற நாவல்கள் எம்மிடத்தே இல்லை. ஐந்து சதத்துக்காகச் சண்டையிடும் கிராமத்து மக்க ளின் பாமரத்தனம் பற்றிப் பச் சாத்தாபப்படும் பலர், அந்த ஐந்து சதம் எவ்வாறு முக்கிய மாகின்றது என்பதை அறிவ தில்லை. பிரேம்சந்த்தின் கோதா னில் அதற்கான விளக்க ம் உண்டு. தமிழில் சண்முகசுந்த தின் நாவல்களில் இத்தகைய சூழலிலுள்ள பெண் களின் வாழ்க்கை சில சமயங்களில் சித் திரிக்கப்பட்டுள்ளது.
பிற பிரக்ஞை எதுவுமின்றித் தமது சமூக ஒட்டத்தின் பரி
மாணம் ஒன்றுக்குள்ளேயே அடை
பட்டு நிற்கும் கிராமத்தவர்களி டையே மனித உறவுகள் எவ் வாறு மலினப்படுத்தப் படுகின் றன என்பதற்கு இந்த நாவல் ஒரு நல்ல உதாரணம்,
சொத்துரிமையுணர்வு யாழ்ப் பாணத்து நிலவுடைமையின் அடி நிலை விவசாயிகளின் வாழ் க் கையை எவ்வாறு சின்னுபின்ன மாக்குகின்றது என்பதற்கு இந்த நாவல் ஒரு தலைசிறந்த எடுத்துக் காட்டு. சொத்றுரிமையுணர்வு மனிதாயதக் சிவுகளை உறிஞ்சி யெடுத்து இந் த மனிதர்களை மானுட நோக்கு எனும் நீர்ப்ப சையங்றவர்களாக்கி விடுகின்றது என்பதைத் தெணியான் அணு
அணுவாகச் சித்திரித்துள்ளார். வெறும் உடலுறவுக்காகவே ஏற் படுத்தப் பெற்ற ஆறுமுகம்செல்லம்மாவின் திருமண உறவு சொத்துரி ை யுணர்வால் ଜTଇଁ] வாறு விகாரப்படுத்தப்படுகின் றது என்பதையும், அவர்கள் இருவரையும் மாத்திரமல்லாது சொத்துடைமையும் இல்லாமை யும் அந்தச் சமூகமட்டத்தின் உறவுகள் முழுவதையுமே தீர் மானிக்கும் த ன் மை  ைய யு ம் வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வு பெரிதாகக் காட்டும். கண்ணுடியின் உதவி கொண்டு ஒருபிடி மண்ணைப் பார்க்கும் பொழுது அதற்குள் நெளியும் புழுக்கள் தெரியும் பொழுது ஏற்படும் மனச்சுளிப்பினை ஒத்த தாகவே தோன்றுகிறது. புழுக் களில்லாத மண்தான் எமக்கு வேண்டும்.
இந்தச் சொத்துரிமை ஆசை ஏதோ ஏக்கர்க் கணக்கில் வரு வதுமல்ல. குழிக்கணக்குள், பரப் புக் கணக்குள் நின்று விடுவது தான். ஆனல் அதுதான் அங்கு பெரிய செல்வம் புழுக்களின் வாழ்க்கைதான் ம னி த ர்கள் புழுக்களாக, சொத் துரி ைம என்ற ஒரேயொரு புழுத்தலைச் சிந்தனையுடன் கிடந்து நெளியும் அவலமும் சோகமும் கழுகுகள் மூலம் வெளிவருகின்றன. நெல் லாக வாழவேண்டிய மனிதர்கள் உள்ளே அரிசி மணியற்ற பதரா
கக் கிடக்கும் சோகம் இங்கு தெரிகிறது.
அந்த ச் சேற்றுக்குள்ளும்
(அதற்குள்ளேயே) இரைதேடும் டொக்டர் க ருணே நாயக ம் போன்ருே?ரின் மனித விரோதத் தொழிற்பாடுகளைத் தங் கள் அன்ருட வாழ்க்கையின் ஒர் அம்ச மாக ஏற்றுக் கொள்ளும் கிரா
மத்தவர்களின் பாமரத்தன்மை,
அந் த ப் பாமரத்தன்மைக்குள்
18

ளேயே தமது பரம்பதங்களை அவர்கள் காணும் பச்சாத்தா மம் - இவைதான் கழு கு கள் என்ற இந் நாவலை ஈழத்தின்இன்றைய தமிழின் - அசாதா ரண படைப்புகளுள் ஒன்ருக்கு கின்றது.
நாவலின் முடிவில் ஆறு முகத்தாரின் பிரேதம் சுடலையை நோக்கிப் புறப்படுகின்றமை சொல்லப்படுகிறது. ஆல்ை அந்த வாழ்க்கை முறைமை இறப்பதற்
கான அறிகுறி எதுவும் தென் படுகிறதா? தெணியானின் இந்த நாவல் சிந்திக்க வைக் கின்றது.
இந் நாவலில் வரும் யாரைக் குறை கூற முடியும்? அந்த அந் தக் கட்டத்துள் ஒவ்வொருவரும் செய்வது சரிபோலத்தான் தெரி கிறது. மயங்கிக் கிடந்தவரை இறந்தவராகக் கொண்ட இன் யா கூடச் செய்தது சரிதான் போலத் தெரிகிறது. அவனைப் போன்றவர்கள் வேறு எப்படி நடப்பார்கள்?
கழுகுகள் யாழ்ப்பாணத்துக் கிராமங்களின் ஆத்ம அவலத் தைக் காட்டும் நாவல் யாழ்ப் பாணத்து நிலவுடைமையின் இருண்ட பகுதிகள் இதில் பூதா கரமாய்த் தெரிகின்றன. எமது பாரம்பரியப் பண்பாட்டின் மறு புறம் இதுதான்.
நாவ ல் இலக்கியம்தான், ஆல்ை இந்த இலக்கியவகை வர லாற்று நேர்மையுடைய ஒர் ஆவ ணமாக - வாழ்க்கையை எடுத் துக் காட்டும் மூலங்களில் ஒன் முக =ா அ  ைம ந் துள்ளமையை டி. எச். லோறன்ஸ் முதல் டானி யல் வரை பல நாவலாசிரியரி டத்துக் கண்டுள்ளோம். இந்த நாவல் யாழ்ப்பாணத்துக் கிராம் வாழ்க்கையினை அறிவதற்கான இன்னெரு வரலாற்று மூலம்,
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 28 - 00
(மலர் உட்பட) தனிப்பிரதி 2. 00 இந்தியா, மலேசியா 35 - 00
(தபாற் செலவு உட்பட) புத்தாண்டில் புதிய சந்தா தாரராக சேருங்கள். ஒராண்டுக் காலம் உறவுகள் தொடரட்டும்.
ஆணுல் இதன் பலம் அது இலக்கியமாகவே தரப்பட்டிருப் பதுதான்.
தெணியான் இந்த நாவலை
ஒழுங்குயடுத்தியுள்ள முறைமை
யில் அவரது இலக்கிய வளர்ச்சி தெரிகிறது.
கழு கு கள் வாசிக்கப்பட
வேண்டிய நாவல். விரும்பத்தக்க நாவலோ என்பதைத் தீர்மானிப் பதற்கு முதலில் நாவலை வாசித் தல் வேண்டும். உண்மையான வாசிப்புத்தானே மனிதனை முழு மையான மனிதனுக்குகின்றது.
முழுமையான மனிதனல் தான் நல்லது கெட்டதை, தக் கது தகாததைச் சரிவர இனங் கண்டு கொள்ள முடிகிறது. கு

Page 12
சோவியத் நாடு நேரு பரிசு
சோ. சண்முகம்
 ைவ ய கத் தீர் புதுகை காணிர் என வியந்தோதிய மகாகவி பாரதியின் நூற்ருண்டு விழாவாகிய இப்புனித நன்னு ளில் சோவியத் நாடு நேரு பரிசு எனக்குக் கிடைத்துள்ளது.
உலக மக்களின் இன்ப பாழ் வுக்காகவும், நிரந்தர சமாதா னத்திற்காகவும் இரவு பதிலாகப் பாடுபடுகின்ற சோவியத் நாடு நேருஜி ப்ெயரால் பரிசைப் பெறுகி ற இந்நாள் என் வாழ்க்கை வரலாற்றில் சிறந்த தொரு பொன்னன் எ ன து 86 வது வயதில் மகிழ்ச்சிப் பெருக்கால் பெருமிதம் அடை கின்றேன்.
மிகச் சாதாரண மனிதனை இந் நிலைக்கு உருவாக்கிய சூழ் நிலைதான் என்னே 1917 முதல் 1929 ம் வருடம் வரை சிவகிரி ஜமீனில் அலுவலராக இருந்த காலத்தில், வேதாந்த சித்தாந் தங்களையும், குறள் பைபிள் குரான் ஆகிய வேத நூல்களை யும், சங்க இலக்கியங்களையும், ம ற் று ம் காப்பியங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்பே அதன் அடிப்படை. பன்னிரண்டு வருட ஆய்வின் விளைவாக நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அதா வது எல்லா மதங்களின் கருப் பொருள் மனித குல இன்ப வாழ்வு' என்பதே.
இந்நிலையில் என் பிறப்பி டமான சிந்து பூந் துறைக் கு 1930 ல் வந்தேன். நெல்லை pflឆ្នាំ) நடைபெற்ற உண்டியல்கடையை
மேல்பார்ப்பதற்காகத் தினமும்
நெல்லைக்குப் போய்வருவது வழக்
ନିଷ୍ଟ
இருந்த சித்தாந்தத் தெளிவு ஏற்பட்டது.
சும் அப்பொழுது, தாய் நாட் டின் விடுதலைப் போர் மிகத் தீவி ரம்ாக நடைபெற்றது. காந்திஜி யின் ஆணைப்படி பிற நாட்டுத் துணிகள் விற்பனைக் கட்ைகள் முன், வந்தே மாதரம் மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கங் களுடன் சாத்வீக மறிய செய்த தொண்டர்களை, போலீஸ் குண் டாந்தடிகளால் அடித்துத் துன்
புறுத்திய கோரக் காட்சிகள், விடுதலைப் போரில் என்னையும் ஈடுபடச் செய்தது. எனினும்,
அந்நேரத்தில் குடும் பக் கட மையா? நாட்டுப் பற்ற? என்ற தயக்கம் ஏற்பட்டது. என் உளம் கவர்ந்த சுவாமி விவேகானந்த ரின், தாய் நாடே என து சொர்க்கம்" என்ற உண்மை என்னைச் சரியான வழியில் இட் டுச் சென்றது.
933 முதல், ஆண்டுகள் மாவட்ட நகர காங்கிரஸ் காரி யதரிசியாகச் செயலாற்றினேன்" சுதந்திரப் போராட்டத்தையும், சட்டமன்றம், ஜில்லா போர்டு, நகர் மன்றத் தேர்தல்களையும் நடத்தினேன். காங்கிரஸ் பெரு வாரியான வெற்றி பெற்றது.
1940ல் தனிநபர் சத்யாக் கிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டேன். 1940 நவம்பர் முதல் 1942 ஏப் ரல் வரை வேலூர் சிறையில் காலத்தில் மார்க்சிய
பேரறிஞர் பலர் கற்பனை செய்த மனித குல இன்ப வாழ்வை
நடைமுறைச் சாத்தியம் ஆக்கி

ததத்தில்,
யது மார்க்ஸ் தத்துவம் என்ற உண்மையை நன்கறிந்தேன். அந்த இன்ப புரிக்குக் குறுக்கே நிற்பது ஆதிக்க வெறியும் உடை மைப் பித்தும் என்பதையும், தனி உடைமையைப் பொது உடைமையாக்குவதன் மூலம், இன்ப வாழ்வு மனிதகுலம் முழு மைக்கும் கிட்டும் என்பதையும் உணர்ந்தேன். இந்த உயிருள்ள மார்க்சீயத்த மேதை லெனின் முதன் முதல் 1917 ல் ரஷ்யாவில் நடைமுறைக்குக் கொண்டு வந்து அதை பூலோக சுவர்க்கம் ஆக் கிஞர் என்பதையும் கண்டேன். மேலும் பல நூல்களையும் அங்கு படித்தேன். அவற்றுள் மிக முக் இயமானவை:
சோவியத் ரஷ்யா தரகரின் ரஷ்யக் கடிதங்கள். ஷ"யூலட் ஜான், கேண்டர்பரிடீன் எழுதிய உலகில் ஆறில் ஒரு பகுதி சேயஷ லிசம் ஆகிய மத நூல்கள் பறை சாற்றுகின்றன. "அன்பு மனிதா பிமானம், நல்வாழ்வு, சமாதா னம் ஆகிய நற்பண்புகள், தனி உடைமை சமுதாயத்தில் சொல் அளவில் இருப்பது, பொது வுடைமைச் சமுதாயத்தில் நடை முறையில் இருப்பதை டீன் புத் மதமும் கம்யூனிசமும் என்ற அத்தியாயத்தில் மிளிரக் கண்டேன். மனித குல இன்ப வாழ்விற்காகவும் உலக சமாத" னத்திற்காகவும் சோவியத் யூனி யன் இரவு பகலாகச் செயலாற் றுவதையும் தெளிவாகக் கண்
'யாதும் ஊரே, யாவரும்
கேளிர் என்ற பழந் தமிழன்
கணியன் பூங்குன்றன் கனவு அங்கு நனவாகி இருப்பதையும், ஜாதி மத இனப்பாகுபாடுகளால் உல கம் பிளவு படாமல் இருக்க வேண்டும் என்ற கவி தாகூரின் விருப்பமும், இல்லாருமில்லை
魯靈
நேரு ஜி யின்
னந்தப் பெருவெள்ளம்.
உடையாருமில்லை என்ற க்விச் சக்கரவர்த்தி கம்பனின் கற்பனை யும் சேசவியத் யூனியனில் நடை முறை உண்மையாகி இருப்பதை யும், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ் வுலகியற்றியான் என்ற வள்ளு வன் சீற்றத்திற்கும் அங்கு ஞாய மில்லை என்பதையும் தெளிலய கக் கண்டேன், களித்தேன்.
'யான் பெற்ற இ ன் பம் பெறுக இவ்வையகம் என்பதற் கிணங்க சோவியத் ரஷ்யா பற் றிய ஆங்கில நூல்களை சிறை யிலேயே தமிழாக்கத் தொடங் கினேன். சிறையிலிருந்து வெளி வந்ததும் அதை அச்சிட எவரும் மு ன் வராத காரணத்தால், நானே என் பொறுப்பில் அச் சிட்டு சிந்துபூந்துறை செல்வி கோயிலில் மறைவாக வைத்தி
ருந்து, விற்பனை செய்தேன்; இந்த அனுபவத்தால் முற் போக்கு நூல்களை அச்சிட
நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் கம் பெனியையும், விற்பனைக்காக நெல்லைப் புத்தக நிலையத்தை யும்" நடத்தினேன். தோழர்கள் ஒத்துழைப்பால் இந்திய சோவி யத் நட்புறவுக் கழகத்தையும் அம்ைத்தேன். இத் த கைய உழைப்பின் பலனே என்ளே இப் புனிதப் பேரவையில் நிறுத்தி அறிஞரின் ஆசிக்கு ஆளாக்கியது SMG), JERS சமாதானத்திற்காகவும் உலக மக்களின் இன்ப வாழ்வுக் காகவும் செயலாற்றி வருகின்ற அந்த சோவியத் நாடு, பேரா அது வற்ருத ஊற்று அள்ளிப் பருக சேரவாரீர் ஜெகத்தீரே! என்று பரிவுடன் அழைக்கிறது.

Page 13
பாரதியின் - சமகாலத்தவரும்பாரதி பரம்பரையினரும்
க. கைலாசபதி
LT
ரதியைப் போன்ற ஒரு மகாகவிஞனை முழுமையாக விளங் கிக் கொள்வதற்கும் அவ்னது ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் தெளிந்து கொள்வதற்கும் பல ஆசிரியர்களை நுணுகி ஆராய இண்டியுள்ளது. பாரதிக்கு முன்னரும் பின்னரும் வாழ்ந்த வாழ் கின்ற ஆசிரியர்களைய்ே அன்றி அவனது சமகாலத்து லத்திய கர்த்தாக்களையும் சிந்தனையாளரையும் அறிந்து கொள்வதால் அவ னேச் சிறப்பாக்த் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. பாரதி நூற்ருண்டையொட்டி வெளிவரும் சில நூல்கள் இத்த கைய ஆய்வுகளுக்கு உகந்தனவாயிருக்கின்றன.
வ. வே. சு. ஐயர் கட்டுரைகள்
என்னும் நூல் சென்ற வருடம் ஐயரின் நூற்றண்டு நிறைவு நினைவு கூரப்பட்ட வேளையில்?வெளிவந்தது. இதன் தொகுப்பாசி ரியர் பெ. சு. மணி மகாகவியின் நெருங்கிய நண்பராயும், புதுவை யில் அரசியல் அகதியாக அரவிந்தர், பாரதி முதலியவர்களோடு வாழ்ந்தவராயும், வீரமிக்க தேசபக்தராயும், தமிழ் இலக்கிய விமர்சன முன்னேடியாயும், ஒப்பியல் ஆய்வு வழிகாட்டியாயும் பாராட்டப்படுபவர் வ. வே. சு. ஐயர். பாரதியாருக்கு ஒரு வய தால் மூத்தவரான ஐயர் (1881 - 1925) பல வழிகளில் தனிச் சிறப்புடையவர். ஆயினும் ஜயரின் ஆக்கங்கள் கிடைப்பது அரிது. மொழிபெயர்ப்புகளும், சொந்த நூல்களும்ாக அவர் பல நூல்கள் எழுதினர். பெலாரி சிறைவாசத்தின் போது (1921) அவர் எழு திய (முற்றுப்பெருத) ஆங்கில நூலே கம்பராமாயண ஆராய்ச்சி" என்பது. பல வருடங்களுக்குப் பின்பே அது வெளிவந்தது. ஐய ரின் நூல்களில் 'மங்கையர்க்கரசியின் காதல்" என்ற சிறுகதைத் தொகுதியே ஒரளவேனும் பொது நிலை வாசகர்களால் அறியப் படுவது. தமிழில் விமர்சனத் துறையின் மூலவர்களில் ஒருவராகக் கொள்ளப்படும் அவரது விமர்சனக் கட்டுரைகள் பெரும்பாலானே ரால் பெயரளவிலேயே அறியப்பட்டிருந்தவை. சிற்சில மேற்கோள் களே மீண்டும் மீண்டும் எடுத்தாளப்பட்டன. இத்தகைய சூழ் நிலையில் பெ. சு. மணி பிரயாசைப்பட்டு ஏரத்தாழ இருபது கட் டுரைகளை இந்நூலிலே தொகுத்தளித்திருக்கிருர், ஐயரின் தினக்
馨鑫
 
 

குறிப்பிலிருந்து எடுக்கப் பெற்ற கவிதையொன்றும் நூலில் இடம் பெற்றுள்ளது. தமிழ்', 'மறுமலர்ச்சி இரு கட்டுரைகளும் இங்கு சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவை. ("மறுமலர்ச்சி என்னும் கட்டுரையை 19 18 ம் ஆண்டு சுதேசமித்திரன்' பத்திரிகையில் ஐயர் எழுதினர், மறுமலர்ச்சி என்னும் பதத்தை முதன் முதலில் கையாண்டவரும் அவரே. Renaissance என்னும் ஆங்கிலப் பதத் துக்கு நேராக அதனைப் பயன்படுத்தினுர். இக்கட்டுரையை 1958ல் வ. விஜயபாஸ்கரன் தனது "சரஸ்வதி சஞ்சிகையிலும் 9 3 ல் ஏ. கே செட்டியார் தன்து குமரிமலர்' சஞ்சிகையிலும் மறுபிர சுரஞ் செய்தனர். எனினும் பலர் அவற்றைப் படித் திருக்க மாட்டார்கள்.)
மேலே குறிப்பிட்ட இரு கட்டுரைகளிலும் இடம் பெறும் கருத் துக்கள் பாரதியார் கட்டுரைகள் சிலவற்றேடு ஒப்பு நோக்கி ஆராயத்தக்கவை. புத்துயிர், புனர்ஜென்மம்" முதலிய தொடர் களைப் பயன்படுத்தியவர் பாரதியார். நவீன தமிழ் இலக்கியத்தின் தோற்றத்தை ஐயர் இனங் கண்டு விவரித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்ருகும். பாரதியார் புதுவையிலிருந்து வெளிக்கொணர்ந்த இந்தியா ஏட்டில் ஐயர் புனைபெயர்களில் இங்கிலாந்திலிருந்து எழுதிய கட்டுரைகள் "லண்டன் கடிதம்' என் னும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டவை. அன்றைய அரசியல் ஒட்டத் தின் சில அம்சங்களைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, அவை ஐயரையும் நமக்கு நன்கு சித்திரிக்கின்றன. அதுபோலவே பிர யோக இலக்கணம்' என்னும் தலைப்பில் புதுவையிலிருந்து வெளி வந்த 'கலைமகள் இதழ்களில் ஐயர் எழுதிய மொழிக் குறிப்புகள் சொல்புதிது பொருள்புதிது" என்று பாரதி பாடிய உணர்வைப் புரிந்து கொள்ள உதவுவன. இவ ைமொழிநூல் ஈடுபாடுடை யோர்க்ரு விருந்து
ஐயரைப் பற்றிய ஆய்விற்கு மட்டுமன்றி, பாரதி ஆய்வு களுக்கும் இந்நூல் இன்றியமையாதது. வ. வே. சு. ஐயர் தரிசனம்" என்றே இதற்குப் பெயரிட்டிருக்கலாம். தக்க குறிப்புகளுடன் இக் கட்டுரைகளை நூலாக்கியுள்ள திரு. மணி நிச்சயம் பாராட்டுக்குரி யவர். ஐயர் எழுதிய கட்டுரைகளில் இவை மிகச்சிலவே. உதார னமாக காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்" சஞ்சிகையில் 1925 ல் அவர் எழுதிய புத்திலக்கியங்கள் என்னும் கட்டுரை இதில் இடம்பெறவில்லை. ஏனைய ஆக்கங்களையும் திரு. மணி வெளி யிடுவாராணுல் பெருந் தொண்டு புரிந்தவராவர். இக்கட்டுரைகளைப் படிக்கும் பொழுது ஐயரின் சிறப்பியல்புகளைக் கண்டுகொள்ளும் அதே வேளையில், பாரதியிலிருந்து அவர் வேறுபடும் வகையினையும் அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஐயரின் ஹிந்து தீவிரவாதம் தாய்மைவாதம் முதலியனவும் ஆங்காங்கு புலப்படுகின்றன. சமூக சீர்திருத்தத்தில் ஐயர் அத்துணை ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. இவையெல்லாவற்றையும் தெளிந்து கொள்வதற்கு அவரது நூல் கள் மறுபிரசுரஞ் செய்யப்படுதல் அவசியம். பழம் பெரும் தேச பக்தர் நெல்லை எஸ். என். சோமயாஜுலுவின் பதிப்புரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலை 150 ஏ, என். ஜி. ஒ. "ஏ" காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலி-7 தமிழ்நாடு. என்னும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் விலை ரூபாய் ஆறு.
Ο O
霹

Page 14
ே
மயூரம் ஏ. வி. சி. கல்லூரித் துணைத் தமிழ்ப் பேராசிரியர் கி. செம்பியன் எழுதி வெளியிட்டிருக்கும் நூல் பட்டுக்கோட்டை யின் பாட்டுத்திறம் (டிஸம்பர். 1981) என்பது. சுப்பிரமணிய பாரதியாரின் நூற்ருண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவனது மரபில் வந்த ஆற்றல் மிக்க கவிஞனுெருவனின் ஆக்கங் சுளை மதிப்பீடு செய்யும் ஆய்வு நூலொன்று வெளிவருதல் சாலப்
பொருத்தமானதே. ஏனெனில், பெருங்கவிஞஞன பாரதி, புதிய
வொரு இலக்கிய சகாப்தத்தைத் துவக்கி வைத்தவன் மாத்திரம் அல்லன், தனக்குப் பின் வரக்கூடிய கவிஞர்கள் பலருக்கு வழி காட்டியுமாவான். அந்த வகையில் பாரதியின் பெருமை அவனது சொந்தப் படைப்புக்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அவன் அளித்த உந்துவிசையினுல் - அவனைப் படித்த அருட்டுணர்வினுல்அவனுக்குப்பின் வந்தோர் படைத்தவற்ருலும் அவ னு க் கு ப் பெருமை சேரும் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்" என்று வள்ளுவன் கூறியதுபோல, அவனது ஞான பரம்பரையினராலும் அவன் மதிக்கப்பெறுவது இயல்பே.
பாரதி பரம்பரையினரைப் பற்றிச் சில கட்டுரைகளும் நூல் களும் வெளிவந்துள்ளனவெனினும், அவர்களின் படைப்புகளுக்கும் பாரதியின் படைப்புகளுக்கும் உள்ள உறவு - ஒப்புமை வேற்றுமைசரி றுட்பமாயும் கூர்நோக்குடனும் இன்னும் , ஆராயப்படவில்லை. நவீன இலக்கிய ஆய்வுகளின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. பாரதிதாசன் தவிர்த்த ஏனைய பல கவிஞர்களுக்கும் பாரதியாருக் கும் இருக்கக் கூடிய கவிதா சம்பந்தம் இன்றுவரை தக்கபடி ஆராயப்படவில்லை என்றே கூறிவிடலாம். (தி. க., தி. மு. க. ஆர்வலர்கள் பாவேந்தரைப் பாரதிக்கு நிகரானவராகவும் அவரை விஞ்சியவராகவும் நிலைநாட்டும் முயற்சியிலேயே பொழுதைப் போக்கிவிட்டனர்.) ஆர். கே கண்ணன், சி. கனகசபாபதி முதலிய சிலரே பாரதி - பாரதிதாசன் தனிச்சிறப்பியல்புகளை அ ல சி யுள்ளனர்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே திரு கி. செம்பியன் எழுதி யுள்ள நூலின் பொருத்தப்பாடும் முக்கியத்துவமும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியனவாயுள்ளன. பட்டுக்கோட்டையின் பாட்டுத் திறம் பற்றிய இந்நூல் பாரதி பரம்பரை பற்றிய ஒரு நூலாகவும் திகழ்கிறது. பாரதி பரம்பரையினர் என்று நாம் குறிப்பிடுகையில் அவர்கள் அனைவரும் பாரதியின் பிரதிகள் என்று எண்ண வேண் டியதில்லை. பாரதிக்குப் பின் வந்தவர்கள் அவனை ஒட்டியும் வெட் டியும் இயங்கியிருப்பதைக் காணலாம். காலத்தின் இயல்பையும் மாறுதல்சளையும் அநுசரித்துப் பாரதியின் கருத்துக்களுக்கும் உணர் வுகளுக்கும் புதுவிளக்கம் செய்த கவிஞர்களும் உண்டு பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் அத்தகையோரில் ஒருவன். இவ்வுண் மையை மனங்கொண்டு திரு. செம்பியன், இந்நூலிலே ஒப்பியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். பாரதியையும், பாரதிதாசனை யும், கலியாணசுந்தரத்தையும் ஒப்பாய்வு செய்வதன் முலமாகவே மூவருக்குமுள்ள பொதுப் பண்புகளையும் தனித்தன்மைகளையும் ஒர்ந்தறிதல் சாத்தியமாகும் ஒப்புமைப்பகுதிகள் பொருள் விளக்க மும் மொழிவிளக்கமும் தருகின்றன. பட்டுக்கோட்டை மற்றிருவ ரிலும் இருந்து வேறுபடும் தன்மையையும் நுட்பத்தையும் இவ்
இத்

வொப்புமைப் பகுதிகள் துலக்கிக் காட்டுவனவாயுள்ளன. சில நேரங்களில் பாரதியிடம் காணமுடியாத எளிமையைத் தெளிவைத் தெளிவில் பிறக்கும் முடிலைப் பட்டுக்கோட்டையிடம் காண முடி யும் என்பது செம்பியனின் அடிப்படை வாதம். பட்டுக்கோட்டை யின் சமூக உணர்வைப் பல இடங்களில் சுட்டிக்காட்டும் செம்பி யன் சமுதாயச் சூழ்நிலைகளைப் பொருளியல் அடிப்படையில் இன் னும் தூலமாகவும் மேலதிகமான சான்றுகளுடனும் நிறுவி விளக்கி இருப்பின் கவிதைகளின் யதார்த்தப் பண்பைக் கூர்ந்து கவனிக்க வும், சுவைத்து அநுபவிக்கவும் கூடுதலான வாய்ப்பு ஏற்பட்டிருக் கும். இக்குறைபாடு ஆய்வாளரின் முறையியற் குறைபாடு என லாம். மேலே நான் குறிப்பிட்டது போல இந்நூலிலுள்ள இரு ஒப்பியல் ஆய்வுகளினல் (பட்டுக்கோட்டை - பாரதி; LIL (5)j, கோட்டை - பாரதிதாசன்) பாரதி பரம்பரையின் சில ஒட்டங் களைத் தெளிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகியிருக்கிறது பாரதி ஆய்வுக்கும் இப்பங்களிப்பு உரியதொன்ருகும். இது காலத்தின் தேவைக்கும் ஏற்றதாயுள்ளது. இந் நூ லி னை வெளியிட்டோர் திங்கள் பதிப்பகத்தினர் / 170 எச், நெடுஞ்சாலை, மேலப்பாதி,
மாயூரம் வட்டம், தமிழ்நாடு விலை ரூபாய் பன்னிரண்டு. *
Հ որո"hin:tr"Կենայtr"titinnin"titայt"httihain"Անդորր"ht:ntift"inning"htinuit"Կn artin'"hiրում"Կու93
சகலவிதமான தானிய வகைகளுக்கும்
மற்றும் பொருட்களுக்கும்
கே. செல்வராஜா அன் கம்பனி
204, காஸ்வேக்ஸ் வீதி,
கொழும்பு - 11
SLSLSLEEE aMEELaaSSELaSSMEEE aaaaaaSLSES aaaLLLL S EEE aaaLtE L0MaaaCtEEEL0LLaaLLEEELLLLLLtttttttLE L0aLtLLEELLLLLEEEE
| 25

Page 15
முஸ்லிம் ஹோட்டலில் படு இரகசியமாக உட்கொண்ட சுக் ஈவும் கொத்து ருெட்டியும் ஏப்பம் ஏப்பமாகப் பு விரி ச் ச ல் எடுத்தது. விமலாவும் அவனைப் போலவே விழி மூடாமல் முகட் டையே பார்த்தபடி ரப்பர் படுக் கையிலே புரண்டு கொண்டிருந் தாள்
வீடியோ கேம்ஸ் இயந்திரத்
தோடு சின்னப் பிள்ளை போல் விடிகின்ற பொழுது வரை விளை யாடிவிட்டு வந்த ரவீந்திரதா ஸ7க்கு எலக்ருேனிக் வடிவெடுத்த குண்டெல்லாம் கண்ணுக்குள் விளையாடின. விளையாட்டு என்ன வெனில் மலைக்க பட்டு உச்சியில் நின்றிருந்தபடி எதிரியின் படை களேத் துவகம் செய்வது, ரெலி விஷன் ஸ்கிறீனின் கீழ்க்கோட் டிலே கடந்து போய்க் கொண்
டிருக்கிற முதலுதவியாளர் மீது குண்டு பாய்ந்தால் கிடைப்பதோ
தண்டம், எத்தனை நுணுக்கமான இதமுட்டும் வீடியோ கேம்ஸ். ஹொங்ஹொங் நகரமே படை
யெடுத்து வந்துவிட்ட காரணத்
தால் ரவீந்திரதாஸ் மணித்தியா லக் கணக்கில் ரூபாய்க் குத்தி களே இழப்பதையும் நேரம் கரை வதையும் மற ந் த இலயிப்பில்
மிதந்தான் வீடு திரும்பியபோது
a
சூத்திரப் is 66 ge
@ சுதந்திரராஜா
விடிகாலை மூன்று மணிக் @ மேலாகி விட்டிருந்தது
ராஜகுமார் என்னுேட்ட வயசு, வாசிற்றி என்ற பண் னேல்லாம்ல் எக்கவுண்டன்சி
செய்தவன். அவனுக்கு இப்ப
து ம் பள ம் பத்தாயிரத்துக்கும் மேலேயாம். :'ഖ',ിഞ്ഞു.ഇ : 51 ഞ1) மிஸிஸ் லயனல் வென்ட்டில
கண்டு எவ்வளவு புழுகப்படுரு
வாழைப்பழத்தில்
ஊசியேற்றினுள்
இருவருமே பட்டதாரி ஆசி ui, ரவீந்திரதரஸ்"க்கு வயது நாற்பத்திரண்டையும் மீறி யிருக்கலாம், விமலாவுக்கு வயது மூன்ருே நான்கோ குறைவாயிருக் கலாம். பட்டதாரி ஆசிரிய வாழ்க்கையின் சலிப்பு அவர்கள் முகத்திலும் கோலமிட்டிருந்தது. *న్లో, ନୌ, (δη, (β) Η ί ή στου லாம் ச ரி யான டஃப்பப்பா ஆட்டிக்கிள்ஸ்லே ஜஞ்சு வரிகம் உலேஞ்சு பத்துத்தரம் பெயில் வி ட் டு கஸ்டப்பட்டாத்தான் ஏ. ஸி. ஏ எண்ட மூண் டு சொல்லு பேருக்குப் பின்னுலே சேரும்
器6
 

"அந்த மூண்டு சொல்லுல் கும் எவ்வள பெரிய றெஸ்பேக்த் ஸ்றேற்றஸ்
வெறும் ஏமாத்தும் தான்
பேய்க்காட்டும்
நீங்கள் இனியெண்டாலும் ஆட்டிக்கிள்ஸ் சைன் பண்ணுங் கோவன், நாங்கள் நல்ல வசதி LTij GolšJ.G.OTLib”
ஜி. ஸி: கேயில களனி கங் கையில எத்தினை பா ல ங் க ள் இருக்குதெண்டு வெங் கி ரு ஸ் கேள்வியள் எல்லாம் கேட்கிருங் கள், வயகம் போட்டுது என் னெண்டு இருந்து உதையெல் லாம் படிக்கிறது .
'சீவியத்தில இவ்வள நாளும் கஷ்டப்பட்டிட்டம். இனியெண் டாலும் நிம்மதியா சந்தோஷ மாச் சிவிக்க வேறை என்ன வழி யிருக்கு நீங்கள் எக்கவுண்டன் பொஷிஷனுக்கு வந் தி ட் டா கான் குக்கர், பொலிஷர் எயர் கொண்டிஷன் பிளான்ற் எல் லாம் வாங்கி வசதியாய் இருக் கலாந்தானே அப்பிடிச் சீவிக்க ஆசைப்பட்டா என்ன பிழை
எல்லாத்துக்கும் லக் இருக்க வேனுமப்பா
ராஜகுமாருக்கு σταδή φύΤ
கிழிஞ்ச லக்கிருந்தது"
அப்ப - உமக்கு லக் கி லே நம்பிக்கையில்லை
அவன்ற பேர்த்டே நம்பர் வன்தான்
பாத்தீரா? வன்னிலை பிறந் தால் தன்பாட்டிலே எழு ப் பி வைக்கும். ஸிக்ஸில் எயிற்றிலை பிறந்தவை எவ்வளவுதான் கஷ் டப்பட்டு முன்னேற நினைச்சா லும் மேலே வரேலா?
ராஜகுமார் வாசிற்றி என் றன்ஸில் ஆகத் தனிய ரூ எஸ்"
அதிலேயென்ன குறையிப்ப"
முன்னெரு காலத்திலே இரு வருமே போஸ்ட் - கிராஜூவேற் டிகிரி செய்யத்தான் திட்டம் தீட்டினர்கள். பின்னர் ரியூஷன் மூலம் வருவாய் பெருகுவதைக் கண்டு படிப்பை ஒத்திப்போட்
டார்கள், பசையுள்ள பள்ளிப் பையன்மார்களின் அநுக்கிரகத் தால் கொஞ்சக் காலத்திற்கு
ஒஸ்ரின், கேம்பிரிட்ஜ் ஊர்தியும் வாங்கி ஒடித்திரிந்தார்கள் பெற் ருேல் விலையேறிய பின் அவர் களது கையைத் தி ன் கி ன் ற போக்குவரத்துச் சாதனமாகவே அது மாறியதால் விற்றுத் தள் ளினுர்கள். ரவீந்திரதாஸ் கெம் பீ ர மா க ப் போய்வர புதுச்
Tெப்பர் வாங்கிச் சில நாளே வைத்திருந்தான். காலிமுகத் திடலோரம் லொறியொன்று
அதனைப் பதம் பார்த்து மதம் தீர்த்துக் கொண்டது.
*நீர் இப்ப என்ன செய்யச்
சொல்றீர் சலிப்போடு கேட் LIT" Gör.
* GLIFITLD ஆட்டிக்கிள்ஸ் சைன் பண்ணுங்கோ
அப்)ே டியெண்டா ஐஞ்சு வருஷம் கட்டாயமாய் ஒடிட்
கொம்பனி வாசிய வேலை செய்து
பழக வேணும் இ ல் லா ட் டி சைன் பண்ணேலா, வாத்தித் தொழிலை றிசைன் பண்ணினு
எங்கட இப்பத்தைய வருமானங் கூடக் குறைஞ்சிடும் செலவுக்கு என்ன பண்ணிற 。
விமலாவுக்கு அப்போதுதான்
ஏ. ஸி. ஏ. என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் தாற்பரியமே புரிந்

Page 16
தது. ஏதோ மிக மிக எளிதா
னது என்று நினைத்துக் கொண் டிருந்தது பயங்கரமூட்டி கானல் நீராகவே மாறியது, விழலுக்கு நீரிறைத்த பல்கலைக்கழகப் பட்ட தாரிக்காக நாலு வருட வாழ்க் கையழிப்பும் கங்கையின் காற்
முகி நெ ஞ்  ைச யு ம் வருடிச் சென்றது.
ரவீந்திரதாஸுக்கு வாழ்க்
கையின் முதற்கட்டத்திலே உயர் வாகித் தெரிந்ததெல்லாம் இறு திக் கட்டத்திலே தாழ்வாகிப் போன நெருக்குவாரம் ஏற்படவே செய்தது.
ராஜகுமார் வைத்திருந்த மாஸ்டாக் காரின் சொகுசெல் லாம் சிந்தையிலிருந்து சி த று
தேங்காய்த் துணிக்கைகளாகி வருத்தியெடுத்தன விமலாவை, சன்ற மாதச் சம்பளத்தை
அப்படியே புருஷன் படிப்புக்குச் செலவிட வேண்டும் ள் என் திற கெடுவில் யூ கே. இன்ஸ்டிடியூட் டுக்கு செலாவணி பெற்று அனுப் பியும் விட்டாள். அவளது கன வெல்லாம் உ ரு க் கு லை ந் த து. குறுக்கு வழியிலோ நேர்வழி யிலோ வான் முகட்டை முட்டு மளவுக்கு உயர்ந்து விட வேண் டும் மஸ்டாக் காரேறிப் மவனி வரல் வேண்டும் என்பதிலேயே கண், எதனைத் தேர்ந்து கற்றி டல் வேண்டும் எதனுல் சுயஅறிவு விருட்சமாகும் என்பதில் எல்லாம் விம்லா அக்கறைப்பட் டவளாயில்லை. அவளது பதட்ட மும் பரபரப்பும் பண முதலையை வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டிப் போடுவதிலேயே முனைப்பாகி விட்டிருந்தது. அவளது கல்விப் பணி சுமார் இருபது ஆண்டு காலம் லரை விரிந்தது. அவள்
魯蘇
ஊட்டி வளர்த்த விதைகள் இன் றெல்லாம் பூத்துக் குலுங்கிக் கனிகள் கொடுக்கின்றன. இருந் தும் விமலா கல்வி பற்றிய அடிப் படைத் தெளிவு இல்லாத முருக்கை முள்ளு மரமாகி மதர்த் திருந்தாள். கிளிப்பிள்ளை கூட விமலாவிடம்தான் பாடம் கேட்
டிருக்கும். கீறல் பட்ட கிராம போன் தட்டுகள் விமலாவின் வாயிலிருந்துதான் எதிரொலித் திருக்கும்.
ரவீந்திரதாஸும் தாம்பத்தி யத்தால் எந்தவித இனிமையை யும் உணர்ந்தவனுமல்ல. அவனு டைய புகலிடமும் போக்கிட் மும் களியாட்ட விடுதிகளாகின. இருக்குமிடத்தில் இல்லாததை இல்லாத இடங்கள் எல்லாம் தினந்தோறும் தேடிக் கொண்டி ருந்தான்
விமலா எரிச்சலோடு எழுந்து சென்று மேசையில் பரப்பி வைத் திருந்த பொதுப் பரீட்  ைச விடைத் தாள்களின் மீது தன் கையாலாகத்தனத்தை காட்டத் தொடங்கினள். நான் விரும்பும் தொழில் என்கின்ற தலைப்பிட்ட கட்டுரை இப்படித்தான் தொடங் கியது: இந்தத் தேசத்தை யுகம் யுகமாகப் பீடித்துள்ள பிணிக்கு என் பேணுவில் இருந்து இறங்கு கிற மை கொஞ்சமாவது மருந் தாக் வேண்டும். விமலாவுக்கு அந்த வாசகம் பிடிக்கவேயில்லை. அவளுக்குப் பிடித்ததெல்லாம் ஒரு ஏ. ஸி. ஏக் கணவனுடனுன வாழ்க்கை வளம், பொறுப்புத் தாளாமல் அந்தப் பந்தியையே வெட்டி கட்டுரைக்கான மதிப் பெண்ணை கோழி மு ட்  ைட வடிவில் போட்டாள்.
இன்னும் இருட்டுக் கலைய ଗ୍ଯାଦି)%).

தமிழ் நாட்டிலிருந்து வந்து குவிந்த வர்த்தக சஞ்சிகைகளால் ஈழத்து இலக்கிய ஏடுகள் ஆட் L_産s cmの高rs_ リa)。二s-th W57。 கவர்ச்சிகளைக் கலையாக்கி வந்த மாசிகைகளுடன் போட்டி போட முடியாது நம்மகத்து ஒரு சில சஞ்சிகைகளே தள்ளாடிய அந்த நாட்களில் தலைநகரில் இருந்து வெடித்துக் கிளம்பியது ஒர் தமிழ் இலக்கியப் பேரவை நமது சஞ் சிகை பத்திரிகைகளை ஊக்குவித் தும் வெளியாகிக் கொண்டிருந்த நூல்களைப் பாராட்டியும் நீண்ட ஒரு எதிர்கால சாதனைப் பட்டி யலைத் தன்னகத்தே கொண் டு மா நகரில் தளிர்விட்ட அந்த இலக்கியப் பேரவை த மிழ் க்
கதைஞர் வட்டம் என்ற தகவம் ,
ஆக மூன்று கட்டங்களில் வேரோ டியது
எழுபத்து நான்குகளில் இலக் கியக் கலந்துரையாடல்களையும் தன்தங்கத்தவர்களின் நூல் அறி முக விழாக்களையும் நடாத்தி முதற் கட்டத்தில் நின்ற அந்த வட்டம் மா வட்டமாக ஈழம் முழுவதும் பர்னமித்து ஈழத்தில் வெளியாகி வந்த சிறுகதைகளை காலாண்டு ரீதியில் மதிப்பீடு செய்து பரிசில்கள் வழங்க ஆரம் பித்த எழுபத்தைந்துகளில்தான். ஈழத்தில் வெளியான, வெளியா கின்ற நூல்களை விநியோகித்து உதவுகின்ற தூய பணியினை தமது மூன்றுவது கட்டமாகக் கருதும்
鱷雛
தகவத்துடன் ஒர் கலந்துரையாடல்
ஆ. இரத்தினவேலோன்
தகவம் அரசியல் சமயக் கலப்
பற்ற, ஆரவாரம் ஆடம்பரம் விரும்பாத, எந்த முகாமும் சேராத ஈழத் தமிழ்ப் புனைகதை இலக்கிய நிறுவனமாக விளங்கி வருவது குறிப்பிட்டுக் கூறக் கூடிய சிறப்பு அம்சமாகும்.
கலந்துரையாடல்கள், கருத் தரங்குகள் நடாத்தியும் நூல் அறிமுக விழாக்கள் மூலம் நூலா சிரியர்களை ஊக்குவித்தும், அந் நூல்களை ஈழம் முழுவதும் விநி யோகித்தும், பெரும் பணியாக பத்திரிகை மாசிகைகளில் வெளி யாகும் அதி சிறந் த மூன்று கதைகளை காலாண்டு ரீதியில் தேர்ந்து ஈழத்து இளந் தளிர் களே ஊக்குவித்தும் வரும் தக வம் தன் பணியில் நிறைவாகக் கருதும் நாவல் மதிப்பீட்டினை எண்பதுகளிலிருந்து ஆரம்பித் துள்ளது.
புனைகதை இலக்கிய நூலக மொன்றை நிறுவியும் புனைகதை எழுத்துப் போட்டிகள் நடாத்தி யும் தான் தெரிவு செய்த பரி சுக் கதைகளைத் தொகுத் து நூலாக வெளியிடவும் உத்தே சித்துள்ள தகவம் பாரதி நூற் முண்டிற்கென வேறு விசேட பட்டியலையுந் தயாரித்துள்ளது!
இத்தகைய சிறப்பு மிக்க இந்த இலக்கிய வட்டத்தைச் சந்தித்துக் கலந்துரையாடி அதன் சாதனை சிந்தனைகளை ஈ ழ த் து

Page 17
கதைஞர்களுடன் பரி மாறி க் கொள்வதற்காக தகவத்தின் தலை வர் திரு. வ. இ ரா  ைச யா, பொதுச் செயலர் திரு. வேல் அமுதன், இணைப் பொருளாளர் கள் திரு. மா. குலம்ணி, திரு. .ே குமாரசாமி ஆகியோ  ைர அணுகுகிறேன்!
நீ ய த் த ல், படைத்தல்,
வளர்த்தல் மதித்தல், உயர்த் தல் புரியும் புனைகதைவினைஞர் என தம்ம்ைப் பாரதி இரத்தி னச் சுருக்கமாக முன்னுரை பகன் றவர்கள் மிகவும் அக்கறையாக உரையாடல்களை ஆரம்பிக்கிருர்
56.
கடந்த காலங்களில் கதை கட்கு மட்டும் பரிசில்கள் வழங்கி
கதைஞர்களை மட்டுமே ஊக்கு வித்திருக்கின்றீர்களே தங்கள் கவனம் கவிஞர்கள், கட்டுரை
யாசிரியர்கள் பக்கம் திரும் ப வில்லையா என்ற எனது முதலா வது சந்தேகத்தை முன்வைக் கிறேன்.
எங்கள் வட்டத்தின் பெயரே
கதைஞர் வட்டந்தானே. கவி ஞர் வட்டமல்லவே! புனைகதை களை ஊக்குவிக்கின்ருேம் கவி த8ள வரவேற்கின்றுேம் சம
காலத்தில் எமது திட்டம் இந்த வரையரையுள்தான் இயங்கி வரு கிறது என்ற பதில் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது!
காலாண்டிற்கான சிறந்த சிறுகதையை தெரிவு செய்யும் போது தெரிவு செய்பவரை ஏன் அறிமுகப்படுத்துவதில்லை என்ற எனது அடுத்த வின எழுந்த போதுதகன் கதையினைத் தெரிவு செய்கையிலே தகவம் கையாளும் ஈர் கட்டங்கள் பற்றித் தெரிய வந்தது.
முதலாவது கட்டத் தேர்வு தகவ உறுப்பினர் கட்சியிடையே நடைபெறுகிறது. சிறந்த சிறு
கதைகள் சிலவற்றினை இவர்கள் தெரிவு செய்தபின் மறுகட்டத் தேர்வு தலைசிறந்த ஈழத்து சிறு கதை முன்னுேடிகளிடம் கைய
ளிக்கப்படுகிறது. அ வ ர் க ளே
சிறந்ததாக மூன்றினைத் தெரிவு செய்கிருர்கள். இந்தத் தேர்வா ளர்கட்கு ஒரு பட்டியலே தகவத் தின் கைவசம் உண்டு வேறு பட்ட காலங்களில் மாறுபட்ட முன்னுேடிகள் இப்பணியில் ஈடு படுகின்றர்ன.
இக்காலாண்டிற்கான சிறந்த கதையினத் தேர்வு செய்தவர் இவர் என்று அறிமுகப் படுத் தின் பிரச்சினைகள் பல தோன் றும். இந்த எழுத்தாளர் இந்த முகாமைச் சேர்ந்தவர் அதனுல் தான் அந்த எழுத்தாளருக்குப் பரிசு கிடைத்தது போன்ற வீணுன விவாதங்களை விலக்கவே தேர்வாளர்களே நாம் அறிவிப்ப தில்லை என தகவத்தினர் கூறி ଜୋt(f.
எங்கள் தேர்வு முழுமையா னது, நிறைவானது என்று நாம் கூறவில்லை பொது வாசு த் தொடர்ச்சியாக ஈராண்டுகள் வெளிவந்த மாசிகைகளையே எங் கள் தேர்வில் நாம் சேர்த்துக் கொள்கிருேம். மல்லிகை, சிரித் திரன், சுடர், கதம்பம் போன்ற மாசிகைகளே இவ் வ  ைக யாக உருப்படியாகத் தொடர்ச்சியாக
வெளிவருகின்றன. இது தவிர
(2)6) Jofilu Irg) g; கொண்டிருக்கும் சிறு சஞ்சிகைகளை ஏன் தேர்வில் சேர்த்துக் கொள்வதில்லை என் (ஐல் அத்தகைய சஞ்சிகைகளைப் பெறுவதில் எமக்குள்ள சிரமத்தை இங்கு நாம் குறிப்பிட வேண் டும்.
உங்கள் தெரிவில் இடம் பெறும் சஞ்சிகைகளை விட தற்போது வெளியாகி வரும் தீர்த்தக்கரையினிலே, தாரகை, ம்ேகம், புதிசு அலை, நான்

போன்ற சிறு சஞ்சிகைகளின் தரமான சிறுகதைகள் இடம் பெற்ருல் தகவத்தின் தேர்வு அர்த்தமற்றதாகி விடுமே என்ற எனது கேள்விக்கு தகவத்தினர் அவ்வாறு பதிலுரைத்தார்கள்.
ஈழத்தில் வெளியாகும் சிறு கதைகளைத் தேர்வு செய்கிறதா கக் கூறுகின்றீர்களே, நூலாக வெளிவரும் சிறுகதைத் தொகுப் புகளிலும் சிறந்த சிறு க  ைத வெளிவருகிறதே அது பற்றிச் சிரத்தை எடுப்பதில்லையா?
ந ல் ல கேள்விதான். அது தான் நாம் முதலிலேயே கூறி விட்டோமே. முழுமையாக எமது மதிப்பீட்டினை மேற்கொள்ள நாம் முயற்சிக்கின்ருேம். உங்க ளது இந்தக் கருத்தை எங்கள் நிர்வாகத்தில் கலந்துரையாடி அமுல்படுத்துவதில் அக் கறை கொள்கிருேம்
அப்படிச் செய்வதனுல் சிறு கதைத் தொகுப்புகட்கும் ஒர் ஊக்குவிப்பாக அது அமையும் என்றே எண்ணுகின்றேன். இப்
போதெல்லாம் சிறு க  ைத த் தொகுப்புகள் ஈழத்தில் நிறைய வெளிவந்து கொண்டிருக்கின்
றன! மு. நித்தியானந்தன். கண பதி கணேசன், காவலூர் ஜெக
நாதன் போன்றவர்கள் இம்முயற்
சியில் தம்மை முற்று முழுதாக அர்ப்பணித்து வருகின் ருர்கள். கதைஞர்கட்கு மட்டுமல்ல இவ் வாறு தொகுப்பை வெளியிடுப பவர்களுக்கும் இது உற்சாகத் தைக் கொடுக்கும்.
பரிசுக் கதைகளே மீண்டும் தகவத்தின் பரிசுக்கதையாகத் தெரிவு செய்யும்போது பரிசு பெற க் காத்திருக்கும் ஏனைய கதைகளை நிராகரிப்பதாக இல் லையா? உதாரணத்திற்கு கடந்த ஆண்டு சிரித்திரன் பரிசுக் கதை களை மீண்டும் உங்கள் பரிசுக்
கதைகளாக்கி இருந்தீர்களே. . அதைத்தான் கேட்கிறேன்.
அந்தக் சஞ்சிகைக்கு வந்து சேர்ந்த கதைகளில் மட்டுமே அது பரிசுக்கதை, பின் வர ர் அதுவே ஓர் காலாண்டில் அகில ஈழத்திலுமே வெளியான கதை களில் முதன்மை பெறுகின்ற தென்ருல் அதுவே ஒரு தகமை தானே? தவிரவும் தெரிவு பல கட்டங்களில் தகவத்தில் நடாத் தப்படுவதில் கதையின் இரசனை மாறுபடலாந்தானே? உதாரணத் திற்கு நீங்கள் சொன்னதையே எடுத்துக் கொள்வோம். சிரித்திர னில் முதல் இடம் பெற்ற கதை தகவத்தில் இரண்டாம் இடத் தையே பெற்றது. மாருக அங்கு இரண்டாம் இடம் பெற்ற சிறு கதையே எமது கணிப்பில் முத லாம் இ டத்  ைத த் தட்டிக் கொண்டது இந் த ரீதியாகப் பார்க்கும் போது ஏனைய கதை களின் பரிசுபெறும் வாய்ப்பினை நிராகரிப்பதாக அது அமையாது என்பதே எங்களது கருத்து.
பாரதி நூற்றண்டு இது. பெண்களின் உரிமைபற்றி புது மைக்கவி சொன்ன புரட்சி க் கருத்துக்களைப் புதுப் பொலிவு டன் கூறப் பெண்களே பிரமாக் களாக மாறிய யுகம் இது, அந்த ரீதியில் ஈழத்திலே தலைசிறந்த பல பெண் எழுத்தாளர்கள் இ ன ங் காணப்படுகின்ருர்கள். முன்னுேடிகளை விட வளர்ந்து வருபவர்களில் பலர் திறமைமிக்க வர் க ளா க மிளிர்கின்றனர். சாகித்திய மண்டலப் பரி  ைச தன் கொன்றைப் பூ க்க ள் நூ லிற்கு தட்டிக் கொண்ட மண்டூர் அசோகா, ஈழத்தின் தலைசிறந்த நூல் வெளியீட்டு நிறுவனமான வி ரகே ச ரி யி ன் நாவல் வரிசையில் பல விமர்சகர் களாலும் பாராட்டைப் பெற்ற "சுமைகள் நாவலாசிரியர் தாம

Page 18
ரைச் செல்வி ம்ற்றும் குந்தவை, கோகிலா மகேந்திரன், தமிழ்ப் பிரியா போன்ற தரமான பெண் எழுத்தாளர்கள் இங்கிருந்தும் தகவத்தின் பரிசினை இதுவரை எவருமே தட்டிக் கொள்ளவில் லேயே என வானுெலியில் வேல் அமுதன் ஒருமுறை கூறியிருந் தாரே இது பற்றி என்ன கூறு கிறீர்கள்?
இந்தச் செய்தியை தகவம் மிகுந்த மன வேதனையுடன்தான் தெரிவித்துக் கொள்கின்றது. இதற்குக் காரணம் பெருகிவரும் எழுத்தாளர் தொகைக்கேற்ப பெண் எழுத்தாளர்கள் தொகை பெருகாததோ அன்றி பரிசு பெறும் அந்தத் த ரத்தி னை த் தகவம் எதிர்பார்க்கின்ற அந்த எல்லைக் கோட்டினை இன்னும் அவர்கள் பெறவில்லையோ என்று கூட எண்ணந் தோன்றுகிறது.
இந்த இடத்தில் இதையும் கூற
விருப்புகிருேம் (3 é5 fT G) (où Tr மகேந்திரன், மண்டைதீவு கலைச் செல்வி, தமிழ்ப் பிரியா போன்ற பலரது கதைகள் எங்கள் முதல் கட்டத் தேர்வில் வருகின்றன. ஆனல் முன்னுேடிகளின் தேர்வில் ஏணுே அவை எடுபடுவதில்லை. அத்துடன் ஒர்முறை கோகிலா மகேந்திரனின் கதை ஒன்று பரிசு பெற்றிருந்தது. ஆனல் அதே கதை அதற்கு முன்பு ஒர்முறை பிரசுரமாகியிருந்ததாக நடுவராக இருந்த ஒரு பெண் எழுத்தா ளரே குறிப்பிட்டதால் இறுதிக் கட்டத்தில் அது தவறி அவ் விடத்திற்கு வேருேர் கதை தே ர் வா ன து. இது தவிர வேறெந்த பெண் எழுத்தாளரது சிறுகதைகளும் ஏழாண்டுகளாக
நாம் நடாத்திவரும் தேர் வில்
முன்னிற்கவில்லை. இந்த நேரத் தில் எங்களது வேண்டுகோள் என்னவெனில் பெண் எழுத்தா ளர்களே நிறை ய எழுதுங்கள் அத்தோடு தரமான கதைகளா
கப் ப  ை த் து முற்படுங்கள். இந்தப் பாரதி நூற்றுண்டிலா வது உங்களது திறன் முன்னு ரிமை பெறுகிறதா பார்ப்போம்!
இத் த னே பணியெல்லாம் ஆற்றிவரும் தாங்கள் தமிழகத்து ச ஞ் சி  ைக ஆசிரியர்கள் ஈழம் வரும் வேளைகளில் இலக்கியக் கருத்தரங்குகள் வைக்க முயற்
சிப்பதில்லேயே ஏன்? (1,1 1
தமிழ் வளர்த்த நா வலர் பெருமானையும், நாயகம் அடிக ளாரையும் தெரியாத தென்னிந் தியச் சஞ்சிகை ஆசிரியர்கட்கு தக வத் தி னே த் தெரியாததில் வியப்பேதுமில்லைத்தான். ஆணுல் நாங்களாகச் சென்று அவர்களை அழைத் துக் கலந்துரையாட விரும்பினுலும் மேல்மட்டத்துச் செல்வர்களுடன் ஒட்டி உறவா டும் அவர்கள் தகவத்தினரைச் சந்திப்பதை விரும்புவதில்லே என் பது ஒர்புறமிருக்க எங்க ளே ச் சந்திப்பதால் தங்களது பத்திரிகை கவர்ச்சி பெறுமென் அவர்கள் எண்ணுவதுமில்லை. இதனுல் இப் படிப்பட்டவர்களே சந்தித் து இலக்கியக் கருத்தரங்குகள் வைப் பதை இ லக் கி ய சேவையாக தகவமும் கருதவில்லே. ஆனல்
எம்மேல் அக்கறையுடன் ஈழம் வரும் கோதண்டம் போன்ற
அறிஞர்களே கெளரவிக்க நாம் தவறுவதில்லை. ,
இ லக் கி யச் சந்திப்புகள் இலக் கி யக் கருத்தரங்குகளே வைத்து இளந் தலேமுறையினரை ஊக்கும் எண்ணமில்லையா?
சை உண்டு ஆணு ல் நிலைமை இடம் கொடுப்பதில்லை. அந்தளவிற்கு பொருளாதார வசதி இல்லாததைத்தான் இங்கு குறிப்பிடுகிருேம். உண்மையில்
சிறந்த சிறுகதைகட்கோ மதிப்
பிட்ட நாவல்களுக்கோ சன்மா னமாக நாம் கொடுக்கும் தொகை
βα

படைப்பிற்குப் பெறுமதியான தாக அல்ல! எம்மால் இயன்ற தொகைதான் அது. ஆ ஞ ஸ் அதை கதைஞர்கள் பெரிதாக ன் ன வேண்டும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலேயே கூறிக் கொள்ள விரும்புகிறுேம்,
கல்வியில் அக் கறை செலுத்துகின்ற ஒரு ஆசிரி யரிடம்தான் மாணவரைப்பற்றி, மாணவரின் தரத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். ஈ ழ த் துப் புனைகதை வ9ர்ச்சி பற்றி தக வத்தின் கருத்து என்ன?
க ட ந் த ஏழாண்டுகளாக எமது கணிப்பின்படி புனைகதை இலக்கியம் ஈழத்தில் மிக வும்
வேகமாக வளர்ச்சியடைந்துள்ள
தாகவே கூறவேண்டும். LIG இளந்தளிர்கள் இத்துறையில் உருவாகியுள்ளார்கள். அதற் கேற்ப அவர்களது தரமும் பின் நின்று விடவில்லை. த ர மான
புனைகதைகளைப் படைத்து வரு
கின்றர்கள். முடிவாகக் கூறுவ தானுல் புனைகதையைப் பொறுத் தமட்டில் தமிழ் நாட்டிற்கு ஈழம் சளைத்ததல்ல!
மல்லிகை, சஞ்சிகையே எம் பரிசு பெற்ற கதைகளில் கூடுத லான கதைகளைப் பிரசுரித்துள் ளது. சுடர், சி ரித் தி ர னு ம் இதற்குக் கன தூரம் பின் நிற்க வில்லை அதனுல்தான் நாம் மேலும் வலியுறுத்துகின்ருேம். ஈழத்தில் புனைகதை வளர வேண் டுமானுல் சஞ்சிகைகள் நிறைய வெளிவர வேண்டும். பத்திரிகை கட்குப் பல பணிகள் தால் புனைகதை வளர்ப்பதில்
சஞ்சிகைகளே முன் நிற்க வேண் சிரித்தி
LD3) 69ì6ồ).5&{36YTTr g ரன்களோ, சுடர்களோ வெளி வந்தால் மட்டும் போதாது. கலாவல்லி மீண்டும் வெளிவர
டும்.
களும் கடமையாற்றி
இருப்ப
இருப்பதாக அறிகிருேம். இது போல் இன்னும் நிறைய அத் துடன் தொடர்ச்சியாக வரவேண்
டும். இதுவே எமது ஆசை
அத்துடன் புதிதாக வெளி வரும், வெளிவந்து கொண்டிருக் கும் மாசிகைகட்டு தகவத்தின் தயவான வேண்டுகோளை இந்த உரையாடல் மூலமே வெளியிடு வதில் மகிழ்ச்சியடைகின்ருேம், உங்கள் சஞ்சிகைகளை மதிப்பீடு செய்வதற்காக அதனைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமத்தை தவிர்ப்பதற்கு சஞ்சிகையின் ஒரு பிரதியை மட்டும் தகவத்திற்கு
அனுப்பிவையுங்கள்
தகவத்தின் நிரந்தர விலா சத்தைக் குறிப்பிட்டீர்கள் ஆளுல் சஞ்சிகை ஆசிரியர்கட்கு சிரமம் இருக்காது அல்லவா?
ந ல் ல து தருகின்ருேம். தகவத்தின் மு க் வரி 16/9, சாந்த லூசியஸ் வீதி, கொழும்பு 13 என்பது எமது செயலருடன் தொடர்பு கொள்ள வேண்டின், கொழும்பு, 14, 67 கிராண்ட் பாஸ் வீதி என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
தகவத்தின் நிர்வாக உறுப் பினர்கள் தாங்கள் நூல் வரும் தானே?
எம்முடன் gift Lil FT en grr5 திரு. த சண்முகசுந்தரம் அவர் வருகின் றர்கள்.
நல்லது. பொதுவாக இறுதியாக பேட்டிகளில் கேட் கப்படும் கேள்வி. ஆனல் சற்று மாறுதலாக நான் கேட்டது, தகவத்தினை தங்களின் ஒர் அளவு கோலாக மதித்து வரும் ஈழத்து தமிழ் கதைஞர்கட்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
33

Page 19
இந்த நாட்டிலே இ ன் று எதையும் சுதந்திரமாக எழுத முடியவில்லையே என்று எண்ணி விடாது படிப்படியாக உள்ளதை உள்ளபடி எழுத முன்வாருங்கள். பிரசுர களத்திற்காக கதை எழு தாது உங்கள் கதைக்கு ஒரு களத்தைத் தேடுங்கள். வளர்ந்து வரும் புனைகதை இலக்கியத்திற்கு ஒர் மைல் கல்லைப் பெறித்து விடுங்கள். -
NAWR. YN YN MYNYNY.
ஈழத்திலே இலக்கிய பேர வைகள் வட்டங்கள் பல தோன்றி மறைந்துள்ளன. இ ன் ை [MO ULI இலக்கியவாதிகட்டு ஒர் பக்க துணையாக இருந்து வரும் ஒரெ யொரு வட்டமான த கவ ந் மேலும் பர்ணமித்து பத்து ஆண் டுகளை மட்டும் என்ன பல ஆண் டும் நீடித்து த மி ழ் வளர்க்க வேண்டுமென்ற ஆ சி யு டன் தகவத்திடமிருந்து விடைபெறு கிறேன். O
MMLMLMLMMcMcLq AMMMMMMAMALAMALALALAALLAAAAALLAMeAALLAAAAALA
காவலூர் ஜெகநாதனின் *யுகப்பிரசவம் ஓர் அறிமுகம்
ாயுகன்
காவலூர் எஸ். ஜெகநாதனின் பத்தொன்பது சிறுகதைகளைத் தொகுத்து யுகப்பிரசவம்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் வெளி யிட்டுள்ளார்கள் நர்மதா பதிப்பகத்தினர். .
சமூகம், காலம், மாற்றம் பிரக்ஞை என்ற பொருள் தொகுதி தொகுப்பிலுள்ள கதைகளின் கருவாக உள்ளது. துன்ப விவரணத் திலும் பார்க்க துன்பம் துடைத்தழிப்பதிலேயே அதிக அக்கறை காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக் கிராம வாழ்க்கையிலிருந்த உயிர்த்துடிப்புகள் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து இக்கதைகளில் உலவவிட்டிருக்கிருர், பெரும்பாலான கதைகளில் சாதி வேற்றுமை யும் பூசல்களும் பிரச்சனைகளாகத் தென்படினும் உண்மையில் 9|Lബ வர்க்கப் பிரச்சனையின் கூறுகளே என்பது ஆரவ ரமற்ற முறையில் சுட்டப்பட்டுள்ளன. நூலின் முன்னுரையில் படைப்புகளை அ ை போட்டு கைலாசபதி எழுதியவற்றில் குறிப்பிடத்தக்கவை இவை. தமிழ்நாட்டு எழுத்தாளருடன் ஒப்பிட்டுக் கூறுவதானுல் அண் மைக் காலத்தில் நிரம்ப எழுதிவரும் சு. சமுத்திரம் அவர்ஜ ஜெகநாதனுடன் ஒப்பிடலாம். ஜெகநாதன் சமூகப் பிரச்சஆனதுஆது கையாளும் அதே நேரம் பிரச்சனைகளை மிகை எளிமைப் படுத்தியும், அளவுக்கு அதிகமாகப் பொதுமைப் படுத்தியும் சமூகலியற் கோட் பாடுகளாக மாற்றிவிடாமல் உயிரோவியங்கள் மூலம் - உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் தனித் தனி பாத்திரங்கள் மூலம் வாழ்க்கைப் பிரச்சனைகளை இலக்கியங்களாக்கு கிருர், அவரது திறமையின் அடிப்படையே இது என்பேன். LJпj திரத் தேர்விலும் வார்ப்பிலும் தனது தலைமுறை எழுத்தாளரி டையே த னித் தன்மைகளுடன் விளங்குகிருர் ஜெகநாதன் . தொகுப்புக் கதையினூடாக ஆசிரியர் பற்றிய கைலாசபதியின் மதிப்பீடு இது,
ஓவியர் ரமனியின் கைவண்ணத்திலான அட்டையுடன் கச்சித மான அமைப்பில் வெளிவந்துள்ள யுகப்பிரசவம் 210 பக்கங்கள் கொண்டது. இந்தியாவில் விலை 11 ரூபா.

மேட்டுவட்டை
பாண்டியூரன்
வாத்தியார் ஐயா வணக்கம், நெடுநாளாய் சாத்திரம் பார்க்கவும் சந்தித்துரையாடி நேர்த்தியாய் நாட்டு நிலைமை யறிதற்கும் காத்திரமான கடிதமொன்றை நும்கையால் கோர்த்து எழுதவும் காத்திருந்தோம்; சந்தர்ப்பம் கைகூடிற் றின்று பலனுங்கை மேலென்போம்.
கைலாயர், காதர், கலந்தர், கணபதியர்
பட்டி வயிரர், வடிவேல், அகமது, முத்தர், முருகர், முகம்ம திசுமாயில்,
புள்ளயான் தம்பி முதல் போடிப் பரம்பரையர்
எல்லாரும் கூடி இதனையா யோசித்தோம்.
விண்ணப்பம் ஒன்று விரிவாய் எழுதுதற்குத் தங்களைக் கண்டு தகவல்தர வந்துள்ளோம். எங்கள் குறைகள் இதோ கேள்மின் கூறுகின்ருேம்.
மேட்டுவட்டை எங்கள் விளை பூமி பாய்ச்சலின்றி மாட்டு வட்டையாகி மலடாய்க் கிடக்கிறது.
உப்பங் கழியால் உறைந்த துறையைச் செப்ப மிடற்குச் சிரமம் எடுத்தென்ன? துப்புரவாய் நன்மை துளியும் கிடைக்கவில்லை. இப்படி எத்தனை நாள் ஏங்கிக் கிடப்பதையா?
பொன்விளை பூமியிவை, பொக்கிஷமே ஊருக்கு தின்பார்க்குத் தேனளிக்கும் தெய்வீக வாவி! பெரிய குளம்  ைசின்னக் குளம் = ஒட்டன் குளம் மற்றும் நரிக்குளம் வட்டிகுள முதலாய்ப் பிள்ளை வளத்தான் குளமும் நபியான் குளமும் இறுவாகி எத்தனை ஆண்டுகள் எத்தனையோ சித்திரைப் புத்தாண்டு பத்துக்கு மேலாச்சு, கர்ணன் மனம்போல் கனிந்த பசும்பயிர் சொர்ணம் விளைத்துச் சொரிந்த வயல், இன்று முத்தக்காச் சிக்கோரை மூதேவி வாழையினம் சண்டியன் பற்றை, சடைத்த படைமுள்ளி, விப்பிரி, சாப்பை, விறைத்த சுறுகுவகை, தப்பிலிகள் போலத் தரை விழுங்கி விட்டதையா! கிட்டங்கி யாற்றைக் கிழித்து ம்ெசின் பூட்டி திட்டப்படியே திறந்து நீர் பாய்ச்சநெடு வாய்க்கா லமைத்தார் - வருஷங்கள் ஏழாச்சு பாய்ச்சலும் இல்லை; பரிகாரமும் இல்லை; குளங்க ளுடைந்தும், குழிகுண்டு தேய்ந்தும் கிழவன் வாய் போல இழவாய்க் கிடக்கு விடிவா உழவர்க்கு விண்ணப்பம் ஒன்று வடிவா யெழுதி வழியைத் திறவுங்கள்.
9.

Page 20
மாரியின் பின், வட்டிலில் வார்த்த பசும்பால் போல் சீராகத் தேக்கிச் சிறந்த குளமிவை மாப்பிள்ளை தீண்ட மலரும் மணப் பெண் போல் பூப்பெய்தி நிற்கும் பொலிபூமி: பொட்டலின்று! சன்னற் குழிவயல், சந்திப்புப் பள்ளவயல், முல்லை முத்தட்டு, முதுசொக் களப்பத்து, சேற்றுக் குடாவல்லை, சின்னன் புரம்வெளி, ஆற்றுக் குசவன் வெளி, நீலன் பத்தென்று பொன்னிலை பூமியின்று பொட்டல், பொறுத்திட்டம், என்னையா குட்டல் எழுதி உதவுங்கள் ஒப்பமிட்டு நாங்கள் உசக்க அனுப்புகிருேம் தப்பாது உங்கள் தமிழ் செய்யும் மகராசி செப்பம் - சிறப்பு - சிரமம் அபிவிருத்தி இப்படிச் சீரழிவில் எத்தனை நாள் தூங்குவது?
இன்னும் ஒரு பகிடி என்னவென்று கேளுங்கள் சொன்னல் சிரிப்பு; சுவையான சம்பவம்தான் கிட்டங்கி தொட்டுக் கிடந்த துறை நீலன் கட்டை உயர்த்திக் கணஞ் செய்ய ஒவ்வோர் வருஷம் மும்மாரி வரும் சீசன் பார்த்து தெருவில் மண் கொட்டி திறமையைக் காட்டும் பொறியியல் நுட்பப் பொறிவையென் சொல்ல அறிவுத் திறனுல் அரச பணம் ஆற்ருேடே. .
மாரி பொழிந்து வடியத் தளதளெனப் பாரித்து நிற்கும் பசும் மேட்டு வட்டையில் ஏர் நாள் எடுக்க இறங்குவது வேளாளன் சீராக வேலை வெட்டி செய்வதும் எந்நாளோ? மாட்டால் மிதிப்போர், மறித்து உளவிடுவோர், பாட்டால் மனதைப் பசுமைப் படுத்துவதும் காவற் பரணில் கவியிற் சமராடி தாவன்மை காட்டி நயந்து ரசிப்பதுவும் காட்டுக் குருவி கதிர் கொறிக்கும் பாட்டத்தை ஒட்டும் விசையின் இசைப்பேதம் கேட்பதுவும் சூட்டுக் களவட்டிச் சோறு சுமப்பவர் வாடா, புளிச்சப்பம், மற்றும் பணிகாரம் தேடிக் கொணர்ந்து தரத் தின்று சுவைப்பதுவும் ஏடு களில்தான் இனிப் பார்க்க வேண்டுமையா! வாய்க்கொழுப்புச் சீலை வடிசலாய்ப் போனது போல் ஆப்பிழுத்த மந்தி அகப்பட்டாற் போலானுேம்!
பாட்டன் முப்பாட்டன் பரம்பரையா யெங்களது மேட்டுவட்டை பாழாய் விடுதலை ஆனதில்லை!
சீனட்டி வாணன் உவர்கறுப்பன் - பொக்கனியன்.
தீனுக்குகந்த சிறு சம்பா, நெல்லினம் பொன்னுய் விளைந்து பொலிந்து வயலூடே நெற்சூடு மேருமலை போல்நின்ற தோர்காலம்! வற்றி வரண்டு மலகூட மண்ணுகிப் பற்றில்லான் போலப் பசையற்று மாள்கிறதே!
鲁镇

-
స్టో
கூட்டங்கள் போட்டுக் குழுவும் தெரிந்தார்கள் நாட்டின் விளைவுதனை நாட்டல் கடனென்ருர்! கேட்டு ரசித்துக் கிழநரி பின்சென்ற ஆட்டுக்கு நேர்ந்த அவலம்போல் ஆனதையா போடிமார் நாங்கள் பொறுப்போடு சிந்தித்துக் கூடியா ராய்ந்தோம் குளங்கள் திருத்தவும் வாடிக்கையான விளைவை வளர்க்கவும், மாடு கன்று விற்றும், மனேவாசல் தாலிநகை. ஈடுவைத்தும், ஈற்றில் எடுத்த முடிவிதுவே!
நாட்டின் நலமும் நமது தொழில்வளமும் மேட்டிமை பெற்று விளங்க வழிகாண்போம்! இன்றில்லை நாளை நிலைமாறும் என்றேங்கி சென்றநாள் செல்க, சிறக்கும்நாள் இன்ருக! விண்ணப்பம் ஒன்றை விரிவா யெழுதுங்கள் கண்மூடிக் கொண்டெம்து கையொப்பம் வைக்கின்ருேம்! பாடால் இவ் வையப் பசிதீர் உழவரும் நாடாள் அரசும் நலஞ்செய் அலுவலரும் கூடியா ராய்ந்து குறைகளைச் சீர்தூக்கி வேடிக்கை யின்றி விடுவிக்க வேண்டுமையா! மாரியும் பொய்த்தது, மழையும் மறுகிவிட ஊரார் பழிசொல் ஒரு கொள்ளை எங்களுக்கு மோடியாய் வேளாண்மை செய்ய முனைந்தக்கீால். போடியார் நாங்கள் புதுப்பணக் காரராம்!
வேளாண்மை யென்ருல் விருந்தாம்; களவட்டி பாழாவ தெங்கள் பவருண போக்காலாம் ஏழை எளியோர்க்கு எள்ளுந் தெறியாமல் நாளைவா வென்று நறுக்காய்த் தறிப்போமாம்! கூலிக்கா ரர்க்குக் கொடுப்பனவு செய்கையில் போலி மரக்கால் பொருத்தி அளப்போமாம்! பட்டடை நெல்லிற் பதர்கலந்து விற்பதோடு. . கட்டும் வயலிற் கதிர் பொறுக்கும் கைதிருகி உப்பட்டி யிற்போட்டு ஒட அடிப்போமாம்! எப்படிச் சங்கதி.? யாருக் கிதுவெளிச்சம்!
வாத்தீயார் ஐயா, வடிவா யெழுதுங்கள் நேர்த்திக் கடனென்றும் நிச்சயம் வைக்கின்ருேம்!
மேட்டுவட்டைப் பூமியிது மீண்டும் பொலிவுபெறக் காட்டுக தங்கள் கருணை யெனவுறுத்தி பாய்ச்சல் வடிச்சற் பணிசெப்ப மாகவும் காய்ந்த குளங்கள் கனிந்து வளம்பெறவும். ஏப்பம் விடாமல் இதற்கான காசுகளை செப்பமுடனே செயற்படுத்த வேண்டுமென்று கட்டாயமான கவனத்தை ஈர்த்தற்கு வட்டை விதானைக்கு ஊடாக . வான்வாய்க் கருணை பொழியும் கழனி அமைச்சர் வருணனுக்கோர் ஆழ்ந்த மடல்
姆?

Page 21
பகீரதனுக்கு மறுப்பு
திரு. பகீரதன் அவர் கள் அறந்தை நாராயணனுக்கு பதில் சொல்வதில் ஆத்திரம் அடைந்து கம்யூனிஸ்ட் எதிர்ப்புச் சாக்க டையை அள்ளி வீசியிருக்கிருர், பாரதியின் பெயரை ச் சொல்லித் தங்கள் சர்வாதிகாரக் கட்சியை வளர்த்து வருகிறவர் கள் கம்யூனிஸ்ட்கள். பாரதியின் புகழைத் தங்களுக்குச் சாதகமாக் கிக் கொண்டு வாழ்ந்து வருகிற வர்கள் கம்யூனிஸ்ட்டுகள், இவர் களுக்குப் பாரதியைப் பற்றிப் பேச வாயே கிடையாது" என்று தனது வயிற்றெரிச்சலைக் கொட்டி யிருக்கிருர்,
கம்யூனிஸ்ட்டுகள் மீதுள்ள வெறுப்பில் வரலாற்று உண்மை களை மறைக்கப் பார்க்கிருர்,
பாரதி மணி மண்டபத்துக்கு கல்நாட்டு விழா நடந்த போது நான் கல்லூரி மாணவனுக இருந் தேன். எனது சொந்த ஊரான பூரீவைகுண்டத்தில் கலைத்தொண் டர் கழகச் செயலாளராக இருந் தேன். நண்பர்களுடன் சேர்ந்து மணிமண்டப நிதி வசூல் செய்து அனுப்பியதால், எட்டயபுரம் விழாவில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன்,
ஆகையால் சில உண்மை களைச் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறேன்.
பாரதிக்கு மணிமண்டபம் கட்டுவதில் பேராசிரியர் கல்கி அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை இன்னும் தமிழ்நாடு பாராட்டுகிறது. போராட்ட காலத்தில் சிறந்த சிறுகதைகள், நாவல்கள் படைத்த
விடு த லைப்
|- sଇ୩
ஆர். நல்லகண்ணு
கல்கி" யைக் குறைத்துக்
ஆனல் பாரதியைக் கணித் தக் கூறுவதில் "கல்கி தவறி யிருக்கிருர் என்பதை திரு பகி ரதலுைம் மறுக்க முடியவில்லை. வ. ராவின் முயற்சிக்கு ஆதரவு தருவதற்காகவே கல்கி அவர்கள் தமக்கே உரிய முறையில் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டார், எதிர்க் கட்சி ஒன்றை எடுத்து விட்டால், காரசாரமான விவா தம் தொடர்ந்து, எல்லோரு டைய கவனமும் அந்த விஷயத் தில் திரும்பும் என்று நினைத்தார், பாரதி மகாகவி இல்லை என்று புதிய வாதத்தை எடுத்து விட்
Ta
திரு பகீரதனின் விவாதம் கல்கி அவர்களே வேடிக்கை மனிதராகக் காட்டுகிறது.
θη. Ο
கல்கி அவர்கள் வெறும் விவாதத்தோடு நிற்கவில்லை. விடு தலை பெறுவதற்கு முந்திய 40 ம் ஆண்டுகளில் பாரதி மகாகவியா? வெறும் தேசியக்வியா? பக்திப் பாடல்களைப் பாடிய வேதாந்தக் கவியா? என்ற விவாதம் கார சாரமாக நடைபெற்றது. இதெல் லாம் தமிழறிஞர் வ. ரா. அவர் களின் கருத்தைச் சாடிப் புறப் LL " .LGOT.
ராஜாஜி அவர்கள் 1948 ல் *அச்சமில்லை" என்ற நூலை எழு தினர். பாரதி வேதாந்தக்கவி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நேரத்தில்தான் தமி ழறிஞர் வ. ரா. அவர்கள் "மகா பாரதி” என்ற சி ற ந் த வரலாற்று நூலை
வாழ்க்கை
 

வெளியிட்டார். பா ( தி யை வேதாந்த சிமிழுக்குள் அடைக்க முயற்சிக்காதீர் என்று ராஜா ஜிக்குப் பதில் கொடுத்திருந்தார். இது கல் கி குழுவினருக்கு ஆத்தி ரத்தை உண்டாக்கியது.
கல்கி அவர்கள் துவக்கிய பாரதி மணிமண்டபக் கல் நாட்டு விழாவுக்கு நாடெங்கும் இருந்து பாரதி அன்பர்கள் கலந்து கொண் டனர். கம்யூனிஸ்டு தலைவர்கள் ஜீவானந்தமும், ராமமூர்த்தியும் விழாவில் பேசினர்கள். பத் து நிமிடத்துக்கு மேலும் விடாமல் ஜீவா அவர்கள் பாரதியின் பெரு மையை எடுத்துரைத்த பேச்சு,
பாரதி அன்பர்களை மெய் சிலிர்க்க
வைத்தது.
பாரதி விழாவில் இரண்டு
அறிஞர்களை மட்டும் காணவில்லை.
அதுவே அன்று கேள்விக் குறியா கவும் இருந்தது. பாரதியோடு வாழ்ந்து, பா ர தி யி ன் பெரு மையை இனம் கண்டு, தமிழகத் தில் பாரதி புகழ் பரப்பிய இரு அறிஞர்கள் தமிழறிஞர் வ. ரா. புரட்சிக்கவி பாரதிதாஸன் இவர் களைக் காணவில்லை. இவர்கள் இருவருக்கும் அழைப்பே அனுப் பப்படவில்லை வேண்டுமென்றே புறக்கணிக்கப் பட்டார்கள் என்ற வேதனைக்குரிய நிகழ் ச் சி  ைய ஜனநாயக வாதியாகத் தம்பட் டம் அடிக்கும் பகீரதன் மறுக்க GLOL-ll (Tigil o
மேலும் ப கீ ர த ன் இந்த வாதத்தில் அந்த நாளில் பங்கு கொண்டவர்களில் கம்யூனிஸ்ட் டுகளாகிய ஜீவானந்தமோ, பால தண்டாயுதமோ, ரகுநாதனே. ஜெயகாந்தனே நிச் ச ய மா க இல்லை" என்று கூறுவதில் அசட் டுப் பெருமையடைகிருர்,
யும் அடைகிருேம்,
அந்த விவாதம் நடந்துவந்த நேரத்திலும் அதற்கு முன்பிருந்தே ஜீவாவும், பாலதண்டாயுதமும் பாரதி மகாகவி என்று இனம் கண்டு வ. ரா. வழியில் தமிழ் மக்களுக்கு பட்டி தொட்டி எங் கும் படித்தவர்கள் பாமரர்கள் மத்தியில் பாரதி பெருமையைப்
பரப்பி வந்தார்கள் என்பதை திரு. ரகுநாதனும் எழுத்துத் துறையில் பாரதியும், ஷெல்லி
யும், கங்கையும் காவிரியும் என்ற அருமையான நூல்களையும் சிறந்த கட்டுரைகளையும் எழுதி பாரதி யின் புகழைப் பரப்பி வருகிருர், திரு. ஜெயகாந்தனும் த ன் து "ஞானகுரு' வாகக் கொண்டு பாரதி பாடல்களை எடுத்துக் கூறி வருகிருரென்பதை தமிழ்நாடு நன்கு அறியும்.
929 ல் புதுவையில் நடை பெற்ற முதல் பாரதி விழாவில் தமிழறிஞர் சோமசுந்தரபாரதி தலைமை வகித்தார். εξολίπ μπιτ தியின் கவிதைச் சிறப்புக்களை ஒடுத்துக் கூறியதைக் கேட்டுத் இரு சோமசுந்தர பார தி யே மெய்சிலிர்த்துப் பாராட்டியதா புதுவைத் தலைவர் வி. சுப்பையா அவர்கள் அண்மையில் கூறிஞர்.
மகாகவி பாரதியின் உலகப் பார்வையும், தொலைநோக்கும், மனித நேயமும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், முற்போக்குக் கருத் துக்களும் - கவிக்குயில் சரோ ஜினிதேவி சொல்லியிருப்பதைப் போல் உலகுக்கே சொந்தமா னவை. பாரதியின் இப்பெருமை களை கம்யூனிஸ்ட்டுகளான நாங் கள் பாராட்டுகிருேம் உள் நோக் &nb கிடையாது. இதில் பெருமை
இதற்கா திரு பகீரதன் ஆத்திரம் அடைய வேண்டாம்
89

Page 22
கடிதம்
அன்பு நண்பர்க்கு வணக்கம் தங்களின் வருகையால் இலக்கிய நிழலில் சற்றே இளைப்பாறினேன்!
எனினும், இலக்கிய தாகம். உவேட்கை. ஒன்றிரண்டு பொழுது சந்திப்பில் தணியுமா? நீண்ட நேரப் பேச்சுக்கும் சந்தர்ப்பமில்லை. உள்ளக் கிடைக்கைகளை கருத்துக்களை அபிலாஷைகளை மனம் திறந்து G) 5 TTL " .L. பரிமாற இயலாத இன்னர் இன்னக் குறுக்கீடுகள். இதற்கேற்ற இடம்
இலங்கைதானே என்னவோ..!
ஜனவரி மல்லிகை * தூண்டில் பகுதியில் சில வரிகள் என் உள்ளத்தில் ரீங்காரம். படித்ததும்,
நான். நீங்களானேன்! பூச்சொரியும் மெல்லிசை
இன்பங்களும் துயரங்களும் மண்வாரித் தூற்றி காலயாத்திரையின் நெடும்பாதையில் ஊடாடிய போது அமைதியாக ஜீரணித்தீர்கள்
ஓ! அந்த
துரஷனைகள் தூவிய மலர்களாயின
யாழ்வாசிகளுக்கு
《0
எனது ஆத்மா சொல்லொணு
SH5g - 4 GG) வேதனையில் தத்தளித்து நொந்து நைந்து கந்தலானதுண்டு. பின்னுேக்கி அசைபோடுகையில் அத்தனையும் என் உள்ளுணர்வை புடம் போட்டு பதப் படுத்தவே ஆனது போன்ற உணர்வே,
என் ஆத்மாவை கொச்சைப் படுத்தி சேற்றைப் பூசிய பலர் இன்றென்னை மதிக்கும் கால் ஏன் மனம் கம்பீரமாய்ச் சிலிர்க்கிறது!
உள்ளத்தால் அவர்களை வணங்குகிறேன்! என் சோதர மக்கள் - லேசாகவும் சுலபமாகவும்
ஒரு திறமையை அங்கீகரியார்!
இந்தஅனுபவங்களும மோனக் கனவுகளும் ஞானக் கருவாகி,
h (5.
எழுத்தாகி
சிறகெடுத்து மண்கடந்து கடல் கடந்து குரல் கொடுக்கும் மக்கள் இதழாக. வசந்த விடிவுகளாக.
மல்லிகை பந்தலிடும் தத்துவ வணக்கம்
த. பீ. செல்லம்

தாஷ்கெண்டில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கப் படவிழா
GBun fain) Go LuňDGŠTI
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழாவது சர்வதேசப் படவிழா, வருகிற மே 24 ல் தாஷ்கெண்டில் தொடங் கும் முந்திய ஆண்டுகளை விட இவ்வாண்டில் அதிக நாடுகள் பங்கு கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
14 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முதலாவது தாஷ் கெண்டுப் படவிழாவில், 49 நாடுகளின் திரைப்படங்கன் காட்டப் பெற்றன. 1980 மே மாதத்தில் நடைபெற்ற ஆருவது தாஷ் கெண்டுப் படவிழாவில் 97 நாடுகளும், தேசிய மற்றும் சர்வு தேசிய ஸ்தாபனங்களும் பங்கேற்றன. "சமாதானத்திற்காக சமு
தாய முன்னேற்றத்திற்காக நாடுகளின் சுதந்திரத்திற்காக" என்
னும் தாஷ்கெண்டுப் படவிழாவின் குறிக்கோள், அவற்றைக் கவர்ந்துள்ளன.
தாஷ்கெண்டு விழாவில் காட்டப்பெற்ற படங்கள் இன்றைய காலகட்ட்த்தில் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடு களில் ஏற்பட்டு வரும் ஆன்மீக, அரசியல் எழுச்சியைக் காட்டு கின்றன. -
தாஷ்கெண்டுப் படவிழாவின் ஸ்தாபனக் கோட்பாடுகள் மாருதவை என்றும், விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து நாடுகளும் தமது புதிய படங்களேத் திரையிடுவதற்கான வாய்ப் பைப் பெறும் என்றும், ஏழாவது தாஷ்கெண்டுப் பட விழா க் கமிட்டித் தலைவரும், தாஷ்கெண்டுக் குடியரசின் துணைப் பிரத மருமான ரானுே அப்துல்லாயேவா கூறிஞர் படவிழா விதிகளின் நான்காவது ஷரத்து, இத்தகைய ஜன்நாயக முறைக்குச் சான்ரு கும்; தாஷ்கெண்டுப் படவிழா, போட்டி அடிப்படையில் டத் தப்படவில்லை. படவிழாலில் காட்டப்படும் எல்லாப் படங்களுக் கும் டிப்ளமாக்கள் வழங்கப் படுகின்றன என்று அந்த ஷரத்து கூறகிறது. இதற்குக் காரணம், படத் தொழில் வளர்ச்சியில் நாடுகள் மிகவும் மாறுபடுகின்றன. உதாரணமாக, ஜப்பான் மற்றும் இந்தியாவின் படத் தொழில் வளர்ச்சியுடன் இளம் நாடான மொசாம்பிக்கின் படத் தொழில் வளர்ச்சியை ஒப்பிட முடியாது
தாஷ்கெண்டுப் படவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, திரைப்படங்களின் பாத்திரம் பற்றிய விவாதமாகும் சமாதா னம், சமுதாய முன்னேற்றம், நாடுகளின் சுதந்திரம், இவற்றுக் கான போராட்டத்தில் திரைப் படங்களின் பாத்திரம் பற்றி ஒவ்வொரு தாஷ்கெண்டுப் படவிழாவிலும் விவாதிக்கப் படுகிறது. மே 24 ல் தொடங்கும் விழாவில், வளரும் நாடுகளின் படத் தயாரிப்பாளர்கள் தமது சகாக்களுடன் கருத்துப் பரிமாற்றம்
。
தாஷ்கெண்டு விழாவின் திரைப்படச் சந்தையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படுகின்றன. ஜுமா 0 நாடுகளைச் சேர்ந்த

Page 23
திரைப்பட வணிகர்கள், இது சம்பந்தமான பேச்சு வார்த்தை களில் பங்கு கொள்வர் நிகரகுவா, ஜிம்பாப்வே, செஷல்ஸ் முத லிய நாடுகளும் இதில் பங்கேற்கும் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கேற்பு, இம்முறை அதிகமாக இருக்கும்.
கூட்டுத் தயாரிப்புகளுக்கான பேச்சுக்கள், மிகவும் பயனளிக் கின்றன. இந்தியாவுடன் கூட்டாக அலிபாபாவும் நாற்பது திரு டர்களும், கங்கைக் கரையில் சூரியோதயம்' ஆகிய படங்களும், ஜப்பானுடன் கூட்டாக வெள்ளே இரவுகளின் கீதங்கள்" என்ற படமும், துருக்கியுடன் கூட்டாக என் காதல், என் சோகம் என்ற படமும் சோவியத் யூனியஞல் தயாரிக்கப பெற்றுள்ளன: சோவியத் படத் தயாரிப்பாளர்களாகிய நாங்கன் எமது இந்திய சகாக்களுடன் கூட்டாக மேன்மேலும் படங்களேத் தயா ரிப்போம் என்று சோலின் பிலிம் நிறுவனத்தின் துணைத் தலைவர் போரிஸ் பாவ்லோவ் கூறினுர், "மெக்சிகோ, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் நாங்கள் தீவிரமாக ஒத்துழைத்து வருகிருேம்: வியத்நாம் மற்றும் கொல பியாவுடன் கூட்டுத் தயாரிப்புகளுக் கான ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்திடுவோம்' என்று குறிப்பிட்டார். - O
இந்துமா சமுத்திரமும் சமாதான மண்டலப் பிரச்சனையும்
ஏ சொ?
இந்து மாகடல் சம்பந்தமான மாநாட்டை வெகு சீக்கிரத் தில் கூட்டுவது பற்றிய இந்தியாவின் அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. பொருளாதாரக் கண்ணுேட்டத்தின் யடி பார்த்தாலும் கூட, இந்து மாகடலில் சமாதான மண்டலத்தை உருவாக்குவது நாட்டின் பந்தோ பஸ்தை உத்தரவாதம் செய்வதற்கு இந்தியா வுக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்து மாகடல் படுகையிள் மத்தியில் இருக்கின்ற ஒரு நாடாகிய அ த ற் கு நீடித்த சமாதான பந்தோடஸ்து நிலைமைகளில் இந்திப் பிரதே சத்தை நாடுகளிடையே சகல துறை ஒத்துழைப்பு நிலவும் பிராந் தியமாக மாற்றுவது வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
இப்பிரச்சினேக்குத் தீர்வு காண்பதில் சோவியத் யூனியன் தனது அணுகு முறையில் அதே நோக்கங்களைக் கடைப்பிடிக்கி றது. இந்தியாவைப் போன்றே, சோவியத் யூனியனும், அதன் பந்தோபஸ்து உத்தரவாதம் செய்யப்படுவதில் அக்கறை கொண் டுள்ளது. ஏனெனில் இந்து மாகடல் பிரதேசத்தில் பதற்றம் முனைப்பாக்கப் படுவதும் கரையோர நாடுகள் அல்லாதவற்றின் பிரதானமாக அமெரிக்காவின் ராணுவ நடமாட்டம் இங்கு விரி வடைவதும் தெற்கிலிருந்து சோவியத் யூனியனுக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அபாயமாகும். இப்பிரதேசத்தில் சோவி யத் யூனியனின் பொருளாதார நலன்களும் புறக் த்திப்பட முடியாததாகும். சோவியத் யூனியனின் ஐரோப்பு இதியை அதன் தூரகிழக்கு மாவட்டங்களுடன் இணைக்கும் "பீனிக்கட்டி உறையாத ஒரே வர்த்தகப் பாதையாகும் இது மேலும் இங்கு சோவியத் விஞ்ஞானிகள் எண்ணற்ற #: Քեմն வுகள் உட்பட நடத்துகின்றனர்.
 
 

இரு நாடுகளின் நலன்களும் ஒன்று சேர்வதும். இந்து மாகடலை ஒரு சமாதான மண்டலமாக மாற்றுவதற்கான அவற் றின் நிரேகளின் நெருக்கமான தன்மையும் இக்கருத்தைச் செயல் படுத்துவதில் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சர்வதேச மாநாட் டைக் கூட்டுவதில் நடைமுறை சாத்தியமான பலன்களே அடை வதற்கான அவற்றின் முயற்சியை விளக்குகின்றன. மாநாடு கூட்டு வதைத் தாமதப் படுத்துவது என்ருல் பிரச்சினை முழுவதற்கும் ஆன தீர்வை இழுத்தடிப்பது என்று பொருள். மிகப் பெரும்பா லான இந்துமாகடல் நாருகள் இதை உணருகின்றன: அவற்றுக்கு
சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிச நாடுகளின் ஆதர
வும் உண்டு. எனினும், சமாதான மண்டலத்தை உருவாக்கும் கருத்தை ஆதரிப்பதில் அக்கறை கொள்ளாத நாடுகள் வேறு கருத்தைக் கொண்டுள்ளன. பிரதமமந்திரி இந்திராகாந்தியிஞல் சுட்டிக் காட்டப்ப்ட்டது போல, சில நாடுகள் அண்மை எதிர் காலத்தில் இத்தகையதொரு மாநாட்டைக் கூட்டுவது சாத்திய மல்ல என்று நம்புகின்றன. அதற்கு ஒரு சாக்காக தென் மேற்கு ஆசியாவின் சம்பவங்களையும் ஐ நா விசேஷக் கமிட்டியின் உறுப் பினர்களிடையே ஒப்பந்தம் ஏற்படாதிருப்பதையும் அவை பயன் படுத்துகின்றன"
மாநாட்டைக் கூட்டுவதற்கு எதிரான முதலாவது வாதத் தை அதாவது தென்மேற்கு ஆசியாவின் நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண் டால், இந்து மாகடல் குறித்த மாநாட்டைக் கூட்டுவதை கால வரம்பின்றி ஒத்தி வைப்பது அல்லாமல் அதைச் சீக்கிரத்தில் கூட்டுவதுதான் அப்பிரதேசத்தில் நிலைமை சகஜமடைவதற்கு உதவி புரியும் என்று கூறியாக வேண்டும். இந்து மாகடல் சம்பந் தமாக ஐ.நா விசேஷக் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உடன் பாடில்லை. இந்து மாகடலில் ஒரு சமாதான மண்டலத்தை உரு வாக்குவது சம்பந்தமான இத்தகையதொரு முக்கிய, சிக்கலான பிரச்சினையின் விசேஷ அம்சங்கள் சம்பந்தமாக கருத்து வேற்றுமை நிலவுகிறது என்னும் இரண்டாவது வாதத்தை எடுத்துக் கொண் டால், அது முற்றிலும் இயல்பே. இந்த வேறுபாடுகளே யாரும் மறுக்கவில்லை. ஆனுல் இவை தீர்க்கப்பட முடியாதவையாக யாரும் நினைக்கவில்லை. மாநாட்டின் முதல் கட்டத்திலேயே இப்பிராந்தி யத்தின் சகல பிரச்சினைகளும் உடனே தீர்க்கப்பட்டு விடும் என்று இம்மாநாடு சீக்கிரம் கூட்டப்பட வேண்டும் என வவியுறுத்தும் எந்த ஒரு இந்துமாகடல் பிராந்திய நாடும் கருதும் என்று நினைப்பது அசாத்தியம்
1981 இல் இம் மாநாட்டைக் கூட்டுவதற்கான ஐ.நாவின் முடிவை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சீர்குலைத்தன எனினும் ஐநா பொதுச் சபையின் மிக அண்மைய கூட்டமானது அத்தகைய மாநாடு கூட்டப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஊர்ஜிதம் செய்தது.
N
மாநாட்டுக்கான தயாரிப்புகள் சம்பந்தமான நடைமுறைப் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்கு கமிட்டி கவனம் செலுத்தி ல்ை, இந்து மாகடலில் சமாதான மண்டலத்தை உருவாக்கும் நலன்களுக்கு இது உதவி புரியும். இதற்காகத்தான் இந்தியாவும் இதர பெரும்பாலான கரையோர மற்றும் கண்டத்தினுள்ளே இருக்கும் நாடுகளும் பாடுபட்டு வருகின்றன் O
4魯

Page 24
நவீன இந்திய இலக்கியம் குறித்து
அடிப்படை ஆய்வு
நவீன இந்திய இலக்கிய வரலாறு குறித்து பேராசிரியர் இ. செவிஷேவ் எழுதி யு ள் ள நவீன இந்திய இலக்கியம் என்னும் நூலை,
குடோவெஸ்ட் G) Gənfi GöT Göz qılfır ? இ லக் கி யப் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இந்நூலின் ஒரு பகுதி, யஷ்பால், அமிர்த்லால் நகர், அமிர்தா பிரீதம், ஜி. எம். முக்திபோ த் ஆகியோரின் எழுத் துக்கள் பற்றிய ஆய்வாகும். இந்திய இலக்கியத்தை வளப் படுத் துவ தற் காகப் புதிய படைப்பு முறைகளும் திசை வழிகளும் தந்து உதவிய ரவீந் திரநாத் தாகூரின் LJ 60l-üLjé5 ளுக்கு இந்நூலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் இலக்கி யமானது தனியொரு முழுமை யானது என்றும் தனது உரு வாக்கம் மற்றும் வளர்ச்சியில் பொதுப் போக்கைக் கொண்டது என்றும் நூலாசிரியர் கருது கிருர்,
நவீன இந்திய இலக்கியம் உருக்கொண்டது பற்றி விவரிக் கும்போது, இ. செவிஷ்ேவ் குறிப்
பிடுகிருர் 19 ம் நூற்ருண்டில் இரண்டாம் பாதி, 16 ம் நூற் முண்டின் ஆரம்பம் இவற்றைச் சார்ந்த இந்திய இலக்கியம், கல்வி போத% நூல்களுக்கே யுரிய கி ற ப் பு அம்சங்களைக் கொண்டுள்ளது
ஆசிரியரின் அபிப்பிராயத் இல், 20 ம் நூற்றுண்டின் மூதல்
鑫
LID FT GÅ G3 s mr
ஏ. சுகசோல்
பத்தாண்டுகளில், அதீதக் கற்ப : இலக்கியங்கள் தீவிர மாக வளர்ந்தன. இத்தகைய போக்கிற்கும் தேசத்தில் காற் தீய சித்தாந்தத்தின் வளர்ச்சிக் கும் தெர்டர்பு உண்டு என்று செலிஷேவ் கருதுகிருர், இது புதியதொரு அணு கு முறை IIII GLO
விமர்சன= யதார்த்தவாத இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற அத்தியய யம் மிக முக்கியமானது, இந் தக் காலகட்டத்தில் இந் தி ய இலக்கியத்தின் யதார்த்தவாதத் தன்மையைப் புரிந்து கொண் டால், நவீன இந்திய எழுத்தா ளர்களின் படைப்புக்கள் பல வற்றைப் புரிந்து கொள்ள முடி
யும். அந்தக் காலகட்டத்தில் இ லக் கி ய ம், அப்போதைய தேசவிடுதலே இயக்கத்தோடு
நெருக்கமான தொடர்பு கொண் டிருந்ததாக செலிஷேவ் கூறு கிருர்,
நவீன ஜனநாயக, இந்திய இலக்கியத்துக்கும், யதார்த்த வாதப் பார்வையற்ற இலக்கி யப் போக்குகளுக்கும் இடையே ஒரு மோதல் நிலை ஏற்பட்டு வருவதை இந்நூலில் காட்டி சில எழுத்தாளர்களின் மர சார்ந்த பழமைவாதக் கோட் பாடுகள், மேற்கத்திய முதலா வித்துவ கலாச்சாரம் மற்றும் தத்துவத்தின் செ ல் வா க்கு இவற்றின் விளைவாக, யதார்த் வாதப் பார்வையற்ற இலக்கி யப் போக்கு சில எழுத்தாளர் டையே தோன்றியது என்கிழுர்,

எல் சால்வடாரில் அமெரிக்கத் துருப்புகள்
எல் சா ல் வடாரிலுள்ள அமெரிக்கத் துருப்புகன் சிவிலி யன் ஆடை அணிந்துள்ளனர். டெலிவிஷன் காட்சிகளில், தமது முகங்களே அவர்கள் வெட்கத் துடன் மறைத்துக் கொள்கின் றனர். வியத்நாமில் அனுபவம் பெற்ற இந்தக் கொலைகாரர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் ஆவர். வெட்கம்" என்பது, பொதுமக்களே ஏமாற்தும் முயற் சிபில் ஈடுபட்டுள்ள ரீகன் குழு வுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்ப தற்காகச் செய்யப்படும் முயற்சி யாகும். உண்மையில் எல் சால் வடார் மக்களைக் கொன் று குலிக்கும் கொள்கையைத்தான்
அமெரிக்கு ராணுவத் «54 GÖ)|D) பின்பற்றுகிறது.
அமெரிக்க நிர்வாகத்தின்
பிரதிநிதிகள் கையும் களவுமா கப் பிடிபட்டபோது கூட அமெ ரிக்க ஆட்சியாளர்கள் புளு கு மூட்டைகளே அவிழ்த்து விடுகி முர்கள் உண்மைகளைத் திரித்து மறைக்கிருர்கள். எம் - 16 துப் பாக்கிகளேக் கையிலேந்திய அமெ ரிக்க ஆலோசகர் குழுவொன் றைக், "கேபிள் நியூஸ் நெட் வொர்க் இன் காமிராக்கள் எல் சால்வடாரில் படம் பி டி ந் து விட்டன; அப்பொழுது வெள்ளை மாளிகை ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விட்டது. அவர்கள் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந் தவர்கள் என்றும், பாலங்களைக் கட்டுவதற்கான ஆலோசகர்கள் என்றும் பசப்பியது. "எல் சால் வடார் யுத்தத்தில் பங்கெடுப் இது எ மது கொள்கையல்ல,
யூரி. குவஸ்தேவ்
என்று அமெரிக்க ஜனதிபதியும் போலி அறிக்கை ஒன்றை வெளி
யிட்டு உள்ளார். ஆளுல் ஹாரி
மிலாண்டர் என்பவர், எல் சால் வடார் யுத்த களத்தில் துப்பாக் கியுடன் பிடிபட்டவர்களில் ஒரு வர் இவர் ஒரு கர்னல் என்பது குறிப்பிடத்தக்கது
எல் சால்வடாருக்கு மேன் மேலும் அமெரிக்க ஆலோசகர் கள் அனுப்பப்படுகின்றனர். எல் சால்வடாரைச் சுடுகாடாக்க முனைந்துள்ள ராணுவ ஆட்சி யின் அதிகாரிகளில் இவர்கள் பத்துச் சதவிகிதத்தினராக உன் ளனர். எல் சால்வடார் நகரங் சள் மற்றும் கிராமங்கள் மீது அமெரிக்க விமானிகள் நப்பாம் குண்டுகளைப் பொழிகின்றனர் வியத்நாமில் அமெரிக்கா நடத் திய கழிசவட" யுத் த த்  ைத இது நினைவூட்டுகிறது
அடுத்த பதினெட்டு மாதங் களில் எல் சால்வடாரி ராணுவ ஆட்சிக்கு மீண்டும் பல கோடி டாலர்களை ரீ க ன் நிர்வாகம் வழங்கப் போகிறது. சால்வ டார் மக்களைப் படு கொ இல் செய்யவே இ ந் த டாலர்கள் பயன்படுத்தப்படும். கொடிய வ ன் மு  ைற என்பது, இப் பொழுது அமெரிக்க அர சி ன் தேசியக் கொள்கையாக மாற் றப்பட்டுள்ளது:
மத்திய அமெரிக்கா முழுவ திலும் த  ைது ஆக்கிரமிப்புச் செயல்களைப் பரப்பும் திட்டங் களே ரீகன் நிர்வாகம் வகுத்து
鱷霧

Page 25
வருகிறது. நிகரகுவா மற்றும் கியூபாவுக்கு எதிராக சி. ஐ . ஏ யின் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமெரிக்காவுக்குப் பிடிக்காத ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என் றும் தெரிகிறது. இதற்காகப் பல கோடி டாலர்கள் ஒதுக்கட் பட்டுள்ளன. இத்தகைய அந கரிகச் செயல்கள், 182 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன! மத்திய அமெரிக்காவில், அமெ ரிக்காவின் அப்பட்டமான தல்ை யீட்டைத் தடுத்து நிறுத் த உலக நாடுகள் உடனடியாக முன்வர வேண்டும்.
வாஷிங்டனின் செயல்கள்
காரணமாக அந்தப் பிராந்தியத்
nalon. அழகியல்
தி  ைது
皺 எழுந்துள்ள நிலவரமானது மத்கிய அமெரிக்கா மற்றும் கரி
பியன் பிரதேசத்தின் சமாதா
னம் மற்றும் பந்தோபஸ்துக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அச்சு றுத்தல் அல்ல. இதர நாடுகள் மீது ரீ க ன் குழுவினர் மேற் கொள்ளவிருக்கும் நடவடிக்கை களுக்கு இது ஒரு ஒத்திகையா கும். அமெரிக்கி நிர்வாக ம் அடாவடித்தனங்களே நிறுத்திப் பே ச் சு வார்த்தை களேத் தொடங்க வேண்டும் என்றும், உலக நிலவரத்தை மதிப்பிடுவதில் நிதானத்தையும் விவேகத்தையும் காட்ட வேண் டும் என்றும் கோருகின்ற சக்தி களின் குரல், அமெரிக்காவிலும் அதன் எல்லைகளுக்குத் தெற்கி லும் உயர்ந்து வருகிறது. ே
EGi) Ganj, JAETT GÖTA ஒரு சாதனம்
குழந்தைகள்ளின் அழகியல் கல்விக்கான ஒரு சாதனமாகச் சினிமா விளங்க முடியுமா? விளங்க முடியும் என்ற எல் லோரும் பதிலளிப்பர் என்று
நான் எண்ணவில்லை. ஏனெனில்
சினிமா என்பது ஒரு பொழுது போக்குச் சாதனம் எ ன் றே இன் லாமும் பலர் கருதுகின்ற னர். ஆஞல், வெறும் பொழுது போக்குக் சாதனமாக மட்டும் சினிமாவைக் கருத இயலாது
சோவியத் நாட்டின் சினிமா
குழந்தைகள் ஆவர்
இ. கிரசஷ்சென்கோவா
சினிமா என்பது கல்வி கான ஒரு சாதனமாக விளங்க வேண்டும் என்றும், இது தமது கடமையில் ஒரு முக்கியமான அ ம் சம் என்றும், சோலியத் படத் தயாரிப்பாளர்கள் பலர் கருதுகின்றனர்:
சோவியத் படத் தயாரிப் பாளர் சங்கத்தில் சினிமா மூலம் கல்வி புகட்டுவதற்கான கவுன்
சில் ஒன்று இருக்கிறது. அதன்
துணைத் தலைவராக நான் விளங் குகிறேன்; சினிமா விமர் அகர்
魯象

கள், மன இயலாளர், பள்ளி ஆகிரியர்கள், விரிவுரையாளர் கள் ஆகியோர் எமது கவுன்சி
விசேட நிகழ்ச்சி
நிரல்களை நாங்கள் வகுக்கின் ருேம், பள்ளிகளிலும் கல்லூரி களிலும் விசேடமான வகுப் புக்களுக்கு ஏற்பாடு செய்கிண் ருேம் கிடைத்துள்ள அநுபவங் கனத் தத்துவ ரீதியில் பொது மைப் படுத்துகிருேம்.
கல்விக்கான சாதனம் என்ற முறையில் சினிமாவைப் பயன் படுத்துவது, கடந்த பதினேந் தாண்டுகளில் சோவியத் நாம்
டில் தீவிரமடைந்துள்ளது. சூர்
கான், கலினில் வரோனெஷ் (ரஷ்ய சமஷ்டி), மின் ஸ் க் (பைலோர لأنه لا L1 ft ( نقية في و tipnir ينتس
அதா (சுஜாக்ஸ்தான்), தார்த்து (எஸ்தோனியா) ஆகிய நகரங் கள். சினிமா கல்விக்கான கேந் திரங்களாக மாறியுள்ளன. எஸ் Gsnrajur ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்குச் சி னி மா க் கலை பற்றிய பாடங்கள் நடத் தப்படுகின்றன. சினிமாக் கலை யின் அடிப்படை என் யது, கஜாக்ஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு விருப்ப பாட மாக வைக்கப் பெற்றுள்ளது. வரலாறு, பூகோளம், உயிரியல், இலக்கிய வகுப்புக்களில் டாக்கு மெண்டரிப் படங்களும், விஞ் ஞானப் படங்களும், கதைப் படங்களும் காட்டப்படுகின்றன.
சினிமா சம்பந்தமான கல்வி
ஆானது, வகுப்புக்களில் மட்டு மின்றி வெளியிலும் நடைபெறு கிறது. இதற்கென விடு
சினிமா அரங்குகள் உள்ளன. அங்கே படங்களைக் குழந்தை களே திரையிடுவதோடு விவர தங்களிலும் பங்கேற்கின்றனர்.
அம்சங்கள்
உள்ள அலெக் சாந்தர் தாவ்ஷெங்கோ மியூசி
யத்தைப் போன்று பல சினிமா
மியூசியங்களும் உள்ளன. பிர பல சோவியத் படத் தயாரிப் பாளரான தாவ்ஷெங்கோவின் படைப்புக்கள் சம்பந்தமான விஷயங்கள், மானவர்களால் சேகரிக்கப் பெற்றுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவிலுள்ள 91 ஆம் எண் பள்ளியில் பெளதீக ஆசிரியரான ரோமன் குஜ்மானும் நானும் சினிமா மன்றம் ஒன்றை நிறு வினுேம் பல மாணவர்கள் இந்த
மன்றத்திற்கு வந்தனர்; சினி மாக்களேப் பார்த்தனர்; அவை பற்றி விமர்சித்தனர் படத் தயாரிப்பாளர்களைச் சந்தித்த
60 ਸ਼ੇ ਨੂੰ ரொட்டி மற்றும் சினிகா விமர்
சத்திற்கான போட்டிகளில் பங்கு கொண்டனர் இவர்கள் தொழில் முறையில் சினிமாத்
துறையில் ஈடுபடவில்லை எனி னும் இவர்களில் பலர் உண் மையான சினிமா ரசிகர்களாக EDITElitsi GTarti: * 壹”@ 颚 ஆழ்ந்த பிரச்னைகளை எழுப்பு கின்ற, படைப்பாளியின் கலைத் திறனையும் அன்மீகத் தேடல் களேயும் வெளிப்படுத்துகின்ற சினிமாப் படங்களை நேசிக்கும் உண்மையான் ர சிகர்களாக அ வர் கி ஸ் வளர்ந்துள்ளனர். கக்ஷின், தரகோவ்ஸ்கி, ஈசன் ஸ்தீன், ரோம், இயாசெவியான்,
சாப்னின், குரசோவா, பாப்ரி ஆகியோரை உலக சினிமாத் கலேயின் தலைசிறந்த நிபுணர் களாக இவர்கள் கருதுகின்ற
鶴霞。

Page 26
ண்கள் எரிந்தன.
வெளிச்சத்தைப் பார்ப்பதற்
குப் பார்வை கூசிற்று.
இரவு முழுக்கச் சிந்தித்துச் சிந்தித்து விழிப்பிருந்து எழுதிய தால் மண்டை ஒடு விண்விண் னென வலித்தது.
தேகமெல்லாம் கொடுத்துப்
போயிருப்பதாக ஒரு நினைவு
ნტზე!“ L— 彦QJróp店、 @ (Ա)
திருப்பத்தைக் கடந்து தோட் டத்து எல்லையில் காலடி வைத் தான் தவவிநாயகன்,
இன்னும் சிறிது தூரம் நடந் தால் ஆழக்கிணற்றடி வந்து விடும், வாயில் உமிக் கரியைத் திணித்துப் பற்களை விளக்கிய வண்ணம், தோளில் துவாய்த் துண்டு ஒன்றைப் போர்த்திக் கொண்டு ஒரு கையில் சோப்புப்
பெட்டி சகிதம் நடந்து வந்து
கொண்டிருந்தான் அவன்
தோட்டத்து இருந்து ஒன்றைக் குயிலொன்று சு. கூ எனக் குரல் கொடுத்துக் கூவியது. அதைத் தொடர்ந்து எங்கோ தொலைவில் இருந்து வேருெரு குயில் குரல் கொடுத்தது.
இவனது காலடி ஓசை கேட்டு
சருகுகளின் ஊடே அணிலொன்று
யிருந்ததுடன் இடைப்
மாமரத்தில்
கடுவன்
டொமினிக் ஜீவா
வாலைச் சிலிர்த்துக் கொண்டு ஒடியது. தோட்டத்து வாழைப் பாத்திகளுக்கு அருகே மைனு ஒன்று குஞ்சுகளுக்கு இ  ைர கொடுப்பதற்காகப் பூச்சி புழுக் களே அலகில் அழுத்தி வைத்த
வாறு மேலும் இரையை அங்கும்
இங்கும் தேடித் திரிந்தது.
இதரை வாழை குலை தள்ளி பழமும் பழுத்திருந்தது. பாவற் கொடி யொன்று அம்மரத்தில் தாவிப் படர முயற்சித்துக் காற்றில் ஊஞ்சலாடியது.
சென்ற தடவை ஊருக்கு வந்து பார்த்ததை விட, இன்று இவைகள் எல்லாம் ரொம்பவும் அழகாயிருப்பது போலப் பட் டது தவவிநாயகன் கண்களுக்கு,
இவைகளே ஏதோ அதிசயங் களைப் பார்க்கும் பாவனையுடன் உற்று உற்றுப் பார் த் தா ன் அவன்
மனதுக்கு இந்தக் காலை வேளை ரொம்பவும் ரம்மியமாக இருந்தது.
இப்படியான இயற்கையின் குதூகலங்களை ரசிப்பதற்கும் பிறந்த மண்ணின் அருமை பெரு
மைகளே மறக்காமல் இருப்பதற்
காகவுமே தவவிநாயகன் மாதத் துக்கு ஒரு தடவையாவது ஊர் வந்து வழக்கமாக
編營
 

வைத்துக் கொண்டான் அத்து டன் கொழும்பில் வாழ்க்கைச்
செலவை அவனுல் தாங்க முடிவ ip Pag GG GO) uli.
தில்லை. ஆகவே, ஊரில் சொந்த வீட்டில் இருப் பதற்கு விட்டு விட்டு அவன் மாத்திரம் அ டி க்க டி வந்து போய்க் கொண்டிருந்தான்.
தவவிநாயகன் கொழும்பில்
ஓர் ஆங்கிலப் பத்திரிசையின் வாரப் பதிப்புக்குக் கட்டுரைப் பொறுப்பாளன்; உதவி ஆசிரியர்
சர்வ தேசப் பிரச்சினைகள் பற்றி அவ் வாரப் பதிப்பில் வெளிவரும் ஆழமான கட்டுரை களுக்கு அவைகள் பெரும்பா லும் ஒருதலைப் இருந்த போதிலும் கூட படித் தவர்கள் மத்தியில் ஒரு தனி
மதிப்பு இருந்தது. செய்திகளைப் நோக்குக்காகவும்
பார் க்கு ம் அதைக் கையாளும் ஆங்கி ல நடைக்காகவும் அந் த வாரப் பதிப்புப் பந்தி பிரபலம் பெற் றுத் திகழ்ந்தது.
அக் கட்டுரைகளே of T Η π. எழுதுவது
வாரம் தொடர்ந்து தான் தவவிநாயகனின் வேலே,
எந்நேரமும் படிப்பதும் சிந்
திப்பதும் எழுதுவதுமே அவனது தினசரிக் கடமைகளாக அமைந்து இதற்காகவென்றே அமெரிக்காவில் இருந்து டைம்" மகஸினுக்கும் நியூஸ் விக்' சஞ்சி
கைக்கும் மற்றும் என்னவென்
னவோ பெயர் தெரியாத பத்தி
ரிகைகளுக்கும் நேரடியாகச் சந்தா
செலுத்தித் தருவித்துக் கொண் டிருந்தான்.
அது தவிர மேற்கத்தையத் தூதரகங்களுடன் தொடர் பு கொண்டு பல்வேறு பிரசுரங்களை
படுத்தி வந்தான்.
தனிப்பட்ட கருத் தோ கொள்கையோ Gé68חו 1" ו"חתf_ח
霹9
| | gloff 5(86) .
யும் பெற்றுப் படித்துப் பயன் கொடுத்து
என்று அவனுக்கென்று ஒன்று மில்லை. அதற்காக அவன் சிரமப் படுவதுமில்லை. புத்திஜீவிகளுக் கென்றே அமைந்துவிட்ட அறிவு
நோய் அவனையும் நான் ரு கப்
பிடித்திருந்தது. படித்ததைக் கிர கித்துப் பின் படி த் த  ைத யே த ன து பார்வையில் அதைப்
போன்று நகலெடுத்து வெளியிடு வதுதான் அவன் கற்றுத் தெரிந்த கலை, பத்திரிகையின் கொள்கை களுக்கும் கருத்துக்களுக்கும் அபிப்
ராயங்களுக்கும் அ  ைம ய த்
தனது சர்வ தேசப் பார்வையை
அவன் தக்க வைத்துக் கொண்
ET GÖT.
ஆகவேதான் அவனுல் அந் தப் பத்திரிகையில் நீண்ட கால
மாகச் சேவையாற்ற முடிகிறது.
இருந்த போதிலும் கூட அவனது மொழி நடையில் ஒரு தனித்துவமும் செறிவும் - சார்
பாக இருந்த போதிலும் கூட
ஒருவித ஆழ் ந் த பார்வையும் மிளிர்வது வழக்கம்
இதற்காக வே அவனுக் கென்று ஒரு ரசிகர் கூட்டம் ஆங்கிலம் படித்த வட்டாரத்தில் இருந்தது என்னவோ உண்மை
இந்த வாரம் ਨ। G5 Ft.
பிரச்சினே சம்பந்தமாக எல் -
சல்வடார் பிரச்சினையைத் தனது கட்டுரைக்குக் கருவாக எடுத்துக் கொண்டிருந்தான் 。°
சென்ற மாதங்களில் சர்வ தேசச் சூடான பிரச்சினைகளில் ஒன்ரு:ன ஆப்கானிஸ்தான் ஆக் கிரமிக்கப்படுகின்றது στ ούτ το
தலைப்பில் அங்கு நடைபெறும்
சம்பவங்களை அமெரிக்கத் தகவல் துணை கொண்டு அதையொரு சோவியத் ஆக்கிரமிப்பாக உருக் அ த ஞ ல் ஆசியா வுக்கே கம்யூனிஸ் ஆ ப த் து நெருங்கி வருவதைச் சூசகமாகத் தொட்டுக் காட்டிக் கட்டுரை வரைந்திருந்தான்.

Page 27
அடுத்துப் போலந்து விவ BESITT UTLD).
அந்த நாட்டின் அரசியல் ஆதிபத்திய உரிமையில் சோவி யத் ராணுவத் தலையீடு என்ற உப தப்புகளால் அமெரிக்க அர சாங்க அதிகார பூர்வமான செய் திகளை மேற்கோள் காட்டி சோவி யத் நாட்டை - தான்கண்ட ஆக் கிரமிப்பு மனுேபாவத்தை - கண் டித்துக் காரசாசமாக நீண் ட க ட் டு  ைர ஒன்று தீட்டியிருந் தான்.
இந்தச் சர்வதேசக் கட்டுரை களின உள்ளீடாக ஒன்று தெளி வாகத் தெரிந்தது.
பத்திரிகை நடத்தும் எஜமா னர்களுக்குச் சர்வ தேச நடுக்கம் ஏற்பட்டுள்ளதையும் அவர்களது உறவு முறைகளுக்கு பாரி ய நெருக்கடி தோன்றியுள்ளதையும் அவர்கள் உணர்ந்ததற்கமைய அவன் அவர்களது சர்வதேசக் கூட்டாளிகளின் கருத்துக்களையே தனது சொந்தக் கருத்துக்களாக எழுத்தில் வெளியிட்டு தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொண் டான். அதற்காக வாதிடவும் செய்தான்.
அந்த நியதிக்கமையவே எல்சல்வடார் பிரச்சினையையும் எழுத ஒப்புக் கொண்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண் டான். சகலவிதமான குறிப்புக் களையும் தகவல்களையும் தான் தருவித்துப் படிக்கும் அமெரிக் கப் பத்திரிகைகள், சஞ்சிகைக ளில் இருந்தெல்லாம் தி ர ட் டி எடுத்துக்கொண்டான் போதாக் குறைக்கு மேலேய நாடுகளின் தூதுவராலயங்களில் இரு ந் து மேலும் பல தகவல்களேப் பெற் றுப் பூரணமாகத் த ன் னே த் தயார்ப்படுத்தி விட்டான்
அக்கட்டுரை சென்ற வாரமே அச்சுக்குப் போயிருக்க வேண்டும்.
முடியவில்லை. பிரதம ஆசிரியர் அக் கட்டுரை அந்த வாரமே பிரசுரமாக வேண்டும் எனத் துடிப்பாயிருந்தார். அவ னு ல் கட்டுாையை மு டி க்க முடிய
ஊருக்கு அவசர அவசியமாக வந்துபோக வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது.
ஐந்து ஆண்டுகளாக மேற்கு ஜெர் மனி யி ல் உத்தியோகம் பார்க்கும் சகோதரன் திடீரென்று
கொழும்பு வந்து சேர்ந்து விட்
டான். அவனை விமான நிலையத் தில் இருந்து சுங்கப் பரிசோதனை களையெல்லாம் முடித்து ஊருக்கு
அழைத்து வரவேண்டிய அவனுக்கு ஏற்பட்டு விட்டது. உடன்பிறப்பைச் சாமான்களு
டன் தனியாக ஊருக்கு அனுப்ப எனவே அ வ னு ம் கூட அழைத்துக் கொண்டு வர வேண்டியதாகியிட்டது.
தவவிநாயகன் தொழி லை அலட்சியம் செய்பவனல்ல.
அதிலும் பத்திரிகைத் துறை யின் நேர காலங்களைப் பற்றியும் நுட்ப, நுணுக்கங்களைப் பற்றி யும் நன்கு தெரிந்து கொண்ட
6}ჭ(áტT
ஒரு செய்தியின் மகத்துவத் தையும், ஒரு கட்டுரையின் கால
அத்தியாவசியத்தையும் ந ன்கு அறிந்தவன்.
இரவோடு (3) του τεί, ή
கொழும்பில் வைத்து அக் கட்டு ரையை எழுதி அ ச் சு க் கு க் கொடுத்து விடலாம் என்றுதான் ஆரம்பத்தில் அவன் பெரிதும்
முயற்சித்தான் முடியவில்லை.
சகோதரன் பூரீதரன் வந்த விமானம் ஐந்து மணி நேரம் தாமதித்து வந்ததால் அவனது திட்டங்களே நெருக்கடிக்கு உள்
50

துக் கிணற்றடிக்கு
ளாகின. இரவு எழுதிக் கொடுக் கும் ச ந் த ர் ப் ப ம் இல்லாமல் போய்விட்டது.
பிரதம ஆசிரியரிடம் எப்படி யாவது ஊரில் இருந்து கட்டுரை அனுப்புவதாக ஒப்புதல் பெற்றுக் கொண்டான். பிரதம ஆசிரிய ருக்கும் அவ ன து θ, 1 ώ0) 1 D. உணர்ச்சி நன்கு தெரியும் இருந் தும் கட்டுரை இந்த வாரமே அச்சாக வேண்டும் என்ற ஞாபக எச்சரிக்கையுடனேயே அவனுக்கு ஊர்போக அனுமதி வழங்கி
வைத்தார்.
அவர்
நேற்றே பூரீதருடன் வந்து சேர்ந்தாகி விட்டது.
அவன் அம்மா வீட்டுக்குப் போக இவன் மனைவி வீட்டில் தங்கி இரவு இரவாக அக் கட்டு ரையை எழுதி முடித்தான்.
ரீகனின் நேர்மையையும் துணிச்சலையும் வெகு வாக ப் புகழ்ந்து கியூபாவும் நிக்கரகுவா
வும் திட்டமிட்டே எல் - சல்வ
டோர் அரசாங்கத்தைக் கவிழ்க் கச் சூழ் ச் சி செய்வதாகவும் இதற்குப் பின்னணியாக சோவி யத் யூனியன் இருப்பதாகவும் அக் கட்டுரை முழுவதும் சோவி யத் எதிர்ப்பை - ஓர் அமெரிக்க் ஆளும் கட்சிக்காரனைப் போலவாந்தியெடுத்து எழு தி யி ரு ந் Յ5IT6ծT.
9lt'll IT.. ... எத்தனை சிரமம்!
ஒரு பெரிய பாரம் தலையை விட்டு இறங்கிவிட்டது போன்ற நிம்மதி,
காலை புலர்ந்தது.
துவாயைத் தோளில் போர்த் திக் கொண்டு, சோப்புப் பெட்டி சகிதம், உமிக் கரியால் பற்களை விளக்கிய வண்ணம் தோட்டத் குளி க் க ப் புறப்பட்டான்
வீட்டிலிருந்து சு ப் பி டு தொலைவில் இருந்தது கிணறு.
வீட்டிலுள்ள கிணற்றுக்குத்
துலா இல்லை. கைவாளி கொண்டு
இழுத்து இழுத்து அள்ள வேண் டிய சிரமத்திற்குப் பயந் து அவன் ஊருக்கு வரும் நாட் களில் எல்லாம் தோட்டத்துக் கிணற்றில்தான் குளிப்பது வழக் கம். அத்துடன் அதில் வாளியை மொண்டு அள்ளிக் குளிப்பதில்
உள்ள சு.இத்தை அவன் நன்கு
ரசிப்பவன். பைப்புத் தண்ணீரில் காகக் குளிப்புக் குளிப்பவனுக்கு நல்ல தண்ணிர்க் கி ண ற் றி ல் நீரை அள்ளியள்ளி ஊற்றுவதில் அப்படியொரு ஆசை
வாழை வரம்பில் கா சி பதித் து மெதுவாக நடந்து கொண்டிருந்தான் தவவிநாயகன்
பனை வடலிக்குள் இருந்து புறப்பட்டு வந்த பக்கத்து வீட்டு சுருட்டுக் கொட்டில் மார்க்கண் டர் பார்த்துவிட்டார். வாயில் சப்பிக் கொண்டிருந்த வேப்பங் குச்சியைக் கையில் எடுத்துவிட்டு வலக்கையைப் புருவ விழிம்புக்கு அனுசரணையாகச் சேர்த் து வைத்து வெளிச்சத்தை மட்டுப் படுத் தி க் கொண்டே அவர் கேட்டார்: "ஆரது? பேப்பர்க் காரத் தம்பியே அங்கை நிக்கி றது?
ஒமோம் அம்மான்; நான் தான்
எப்ப வந்தனியள்? தம்பிக் காரனும் சீ  ைம ய ர லே வந்த தெண்டு கே ள் வி. உண்மை தானே?
ஒமோம் அம்மான். அவ னும் இங்கை வந்திட்டு அம்மா
விட்ட்ை ரெண்டு பேரும் நேத்து
வந்தனங்கள்
எப்பிடி கொழும்பிலை மழை தண்ணி?'

Page 28
*தோட்டக் கி ண த் தி லே குளிக்கப் போறன்"
அப்ப நான் வரட்டே?
என அவனது பதிலுக்குக் காத் இமாமல் மரவள்ளிச் செடிகளின்
மறைவினூடாக அவர் வந்தது
போலவே மறைந்து விட்டார்
தவவிநாயகன் குளிப்பதற்கு ஆயத்தமானன் துலாக் G0)asrrLqயைப் பிடித்து இழுத்து மெல்ல மெல்ல வாளியைத் தண்ணீருக் குள் அமுக்கி மீண்டும் துலாக் கொடியை இழுத்து முதல் வாளி தண்ணிரைத் தலையில் ஊற்று
மல் சற் றுத் தாமதித்தான்
குளிரும் என்ற தயக்கம், இப்பு டித்தான் அவன் எப்பொழுதும், சிறிது நேரம் சுணங்கிவிட்டுத் தலைமீது தண்ணீர் வாளியைக் கவிழ்த்தான்.
அப்பா அப்பப்பா,
தொடர்ந்து குளிப்பதில் ஒரு fg:Lb.
உடல் அழுக்கை அழுத்தித் தேய்த்துலிட்டு முது கு அழுக் கைத் தேய்ப்பதற்காக துலாக் கதியால்களுக்குப் பக்கத் தே நிற்கும் - வழக்கமாக மு து கு தேய்க்கப் பயன்படும் - செவ் விளநீர் மரத் தரு கே ப்ோய் முதுகை இவேசாக அழுத்தித் தேய்க்க முயன்ருன் ஹாம்! அந்தக் கலை மறந்து போய் விட் டது. அப்படித் தேய்ப்பதற்கும் ஒரு தனி தொடர் ப யிற் சி வேண்டும். 。
தற்செயலாக அவன் பார்வை திரும்பிய பொழுது - பார்த்து அறிந்த ஆல்ை பெயர் மாத்
எங்கை துலேக்கே போறி
நாளே க்கு க்
திரம் தெரிந்திராத சிறிமி ஒருத்தி இரண்டு பூனே க் குட்டிகளைப் பனை வடலிக்குள்ளே வி ட் டு விட்டு 'சூ சூ என அவைகளை விரட்டுவதைப் பார்த் தான்.
குட்டிகள் இரண்டும் மியா. மியா என்று கத்திக் கொண்டி ருந்தன. குரலில் இருந்து பிறந்து, சில நாட்கள்தான் ஆகியிருக்கும் என ஊகித்தான்.
இந்தா பிள்ளை தங்கச்சி ஏன் அதுகளை இதுக்குள்ளே விடு முய்? பச்சை மண்ணுகள் பாவ மில்லையா? அதுகளைத் தூக்கிக் கொண்டு போ'
இதுகள் உங்கட வீட்டுப் பூனை போட்ட குட்டிகள்தான். உங்கட அவதான் இது களை இங்கை கொண்டுபோய் விட்டு வரச் சொன்னவ. வளந்தால் கரச்சல் எண்டு சொன்னவ. அதுதான் இதுகளே இங்கை விடுறன்
இவனது மறுமொழிக்குக் காத்திராமல் அ ந் த ச் சிறுமி பாவாடைத் தலைப்பைத் தூக்கிப்
பிடித்துக் கொண்டு ஓட் டம்
பிடித்தாள்,
குட்டிகள் தங்கள் பாஷை யில் அழுது ஒய்ந்தன.
இவனுக்கு மனதில் எங்கோ நெருடல்.
குளித்து முடித்தான். வீட் டுக்கு வந்தான்.
ரஞ்சிதம் முட்டைக் கோப்பி யுடன் விருந்தைக்கு ஏறினுள். மன நெருடல் அவளேக் கண்ட தும் வார்த்தைகளாக வடிவெடுத் த60
இந்தா ரஞ்சிதம்; காலங் காத்தாலே நீ இப்பிடிச் செய்ய
彎彎

லாமே? ம் அதுவும் வாயில் லாத சீவன்களுக்கு."
இவன் என்ன சொல்லுகி முன் என்பதைப் புரிந்து கொள் ளாமல் அவள் ஒரு கண ம் தயங்கி அவனது முகத்தைப் பார்த்து விழித்தாள், சொல்லு றதை கொஞ்சம் விளப்பமாச் சொன்னுல் என்ன? கோப்பிக் அவனிடம் கொடுத்துக் கொண்டு அவன் முகத்தையே பார்த்தாள். காலங் காத் தா லே தோட்டத்துக்குப் போய்க் குளிச்சுப் போட்டு வந்து பாவ புண்ணியத்தைப் பற்றி ஏதேதோ சொல்லுறியளே! 皺 தாருங்கோ கோப்பியை முதலி குடியுங்கோ சொல்லுறன் ம், ! பிடியுங்கோ, இனிச் சொல்லுங்கோ உங்கட் பாவ புண்ணியக் கதையை."
எங்கடை பூனை போட்ட குட்டியள் ரெண்டை புளியடி வீட்டுப் பொட்டையிட்டக் குடுத் துத் தோட்டக் கிணத்தடியிலே விட்டுட்டு வர ச் சொன்னணி உனக்கிது பாவம்ாத் தெரியல்லையா? ம்.
அவள் அவனது முகத்தை விசித்திரமாகப் பார்த்தாள். என்னது. ! என்னது. எங்கையாவது கடுவன் பூனையும் குட்டி போடுமே. ? எங்கட் கடுவன் பூனேயெல்லே. ஐஞ்சு வருஷமா நிக்குது. இது தெரி யாதோ, உங்களுக்கு ?"
ஒ. அப்பிடியா?
அவளுக்குச் சிரிப்பு வந்தது. கலகலவென்று வாய் வி ட்டு ச் சிரித்தாள்.
த  ைது அறியாமையைக் கண்டு அவன் அப்படிச் சிரிப்ே தாக அந்தக் கணத்தில் அவனுக் குப் பட்டது. -
garr
இ கொழும்பில் நடக்கவிருக்கும் இந்து மாநாடு சம்பந்தமாக உங்களது கருத்து என்ன?
பதுளை, ம. ராஜன்
உலக இந்து மாநாடு நடை
பெறுவது இது தா ன் முதல் தடவை என நினைக்கின்றேன்,
மாநயடு நடைபெறட்டும். முத லேயே ஏன் அபிப்பிராயங்களைச் சொல்வான்? நடைபெற்றதின் பின்னர் எனது கருத்துக்களைச் சொல்லுகிறேனே.

Page 29
இ கணையாழிக்கு தி ஜானகி ராமன் பொறுப்பேற்றுள்ளா
ராமே, இப்பொழுது எப்படி
இருக்கிறது கணையாழி?
கிளிநொச்சி. எஸ். பரமநாதன் தி ஜா. பொறுப்பேற்றதின்
இரண்டொரு இதழ்கள் தான் வெளிவந்திருக்கிறன. நல்ல அனுபவமும் ஆற்றலும் எழுத்து வண்மையும் உள்ளவர்; அவர் ஒரு படைப்பாளி. பொறுப்பாளி யாக இருந்து என்ன செய்யப் போகின்ருர் என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
O தமிழக சினிமா பற்றிச் சில தகவல்களைச் (6) კვ-prმერT6უforff களே, புதுத் தகவல்கள் ஒன்றும் இல்லையா?
கைதடி, ஆர். சந்திரதாஸ்
நடிகர் மதாலா ரங்கராவ் எழுதி இயக்கி நடித்து தயாரித் துள்ள தெலுங்குப் படம் 'விப் ளவ சங்கம் புரட்சிச் சங்கு இதே இவர்தான் சிவப்பு மல்லி என்ற படத்தையும் தெலுங்கில் முதலில் தயாரித்திருந்தவர்.
இந்தப் படத்தை இந்தியத் தணிக்கையாளர் தணிக்கைக்கு உட்படுத்தாமல் தட்டிக் கழித்து நாளைக் கடத்தினர். மார்ச் 15 ந் திகதி தணிக்கைக் குழு அலுவ லகத்திற்கு முன்னுல் ரங்கராவ் உண்ணுவிரதத்தை மேற்கொண் டார். தோழர் கல்யாணசுந்தரம் GTLib. 19. உண்ணுவிரதத்தை ஆரம்பித்து வைத்தார் இதற்கு முன்னரே ராஜ்ய சபாவில் இந் தப் படத்தை ஏன் தணிக்கைச் சபை தணிக்கை செய்து வெளி யிடத் தயங்குகின்றனர் எனக் காரசாரம்ாக வா தி ட் டு இப் பிரச்சினையை அகில இந்தியப் பிரச்சினையாக்கி ஆரோக்கியமாக கலைஞர்களின் ஆத் மக் குரலை அனைத்திந்தியாவுக்கும் எடுத்துச்
நேரத்திற்குள்ளாகப்
క్ష్స
சொல்லி வைத் தவ ர் இதே
எம். கே. தான்.
இதனையடுத்து சில மணி பிராந்திய த னி க் கை க் குழுத் தலைவர் தோழர் கலியாணசுந்தரத்துடன் பேச்சு நடத்தியபின் மேலதிகாரி களுடன் பேசிய பிறகு சில தினங் களுக்குள் அப் படத்திற்கு அனு மதி வழங்கப்படும் என உறுதி தந்தார்.
தமிழகத்தில் இன்று சகல
கலைஞர்களும் ஒற்றுமையாகப் போராடித் கங்கள் தங்கள் உரிம்ைகளை நிலைநிறுத்திக் கொள் ளுகின்றனர் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
இ சமீப காலமாக நமது பல எழுத்தாளர்கள் தமிழ் நாட்
டிற்குப் போகிருர்களே. அது
பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அ. திரவியம்
நமது எழுத்தாளர்கள் அடிக் கடி போய் வருவது நல்லது. உறவுகள் பலப்படுவதுடன் பரஸ் பர ம் பிரச்சினைகளை ஒருவருக் கொருவர் புரிந்து கொள்ள அது வாய்ப்பாக அமையும். இங்கி ருந்து ந ம து எழுத்தாளர்கள் போகும் அளவிற்கு அங்கிருந்து எழுத்தாளர்கள் வருவதில்லை என் பதுதான் இங்குள்ள நண்பர்களின் மனக் குறை.
மன்னர்.
e இலக்கிய உலகில் சர்ச்சை கள், பிரச்சினைகள் எப்படி உள்ளன? முன்னரைப் போல இப்பொழுது ஒன்றும் பரபரப் பில்லையே காரணம் என்ன?
பதுளை. ந. காசிநாதன்
சர்ச்சைகளும் விவாதங்களும் ஆரோக்கியமான வழிகளில் நடந் த ரி ஸ் அது ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு அறிகுறி. வயிற்றெ ரிச்சல் காரணமாக ஆ வ தூ று

பொழிந்தால் அது வளர்ச்சியல்ல கையாலகாத்தனம் பரபரப்புப் புக்காகச் சர்ச்சை செய்வதை வளர்ச்சி எனக் கணிக்கமுடியாது. இலக்கிய உலகில் வழமையான சர்ச்சைகள் ந  ைட பெற்று க் கொண்டுதான் இருக்கின்றன.
இ மணியனின் மயன் நிறுத்தப்
பட்டு விட்டதாமே உண் மையா? சஞ்சிகை உலகப் புதி GOTLİ) GİTGõTGOT?
இணுவில்.
மணியனுல் எப்படிச் சங்கி லித் தொடர்போன்ற சஞ்கிகை
ராமநாதன்
களே நடத்த முடிகின்றது என
ஆரம்பத்தில் நான் அதிசயப்பட் டதுண்டு. அதீதப் பரபரப்பும் விளம்பரமும் இப்படியாகத்தான் போய் முடியும் என்பதை இப் போ து உணர்ந்து கொள்கின் றேன்.
இன்று தமிழகத்தில் சஞ்சி கைகள் வாரத்திற்கு ஒ ன் ரு க முளைவிடுகின்றன. தவிர்விடும் இவைகளில் எத்தனே காலத்திற் தாக்குப் பிடித்து நின்று நிலைக் கும் என்பதை இப் போதே சொல்லி வைக்க முடியாது. இதி லிருந்து ஒர் உண்மை தெரிகிறது.
வாசகர் வட்டம் இன்று என்று
மில்லாத அளவிற்குப் பெருத்துப் போய் வளர்ந்துள்ளது. ஆணுல் தரமான வாசார்கள் வளர்ந்துள் ளார்களா என்பதே இன்றுள்ள முக்கிமபான தேவையயான கேள் வியாகும்.
இ சொல்லக் கூடிய இலக்கியப் புதினம் ஏதாவது இந்த மாதத்தில் உண்டா?
வவுனியா, LAD,. வேந்தன்
கா. சிவத்தம்பி இம்மாதம்
6 ந் திகதி தமிழ் நாட்டிலுள்ள
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்
கழகத்திற்கு ஆறுமாத ஆராய்ச்
மலர இருக்கின்றது.
சிக்க கப் புறப்பட்டுச் சென்றுள் ளார். பாரதி விழாக்கள் தேசம் பூ ரா வும் பல மட்டங்களில் நடைபெறுகின்றது. அடுத் த மல்லிகை இதழ் பாரதி மலராக ஈழத் து எழுத்தாளர்களின் பல நூல்கள் வெளிவர இருக்கின்றன. தகவம் நடத்தும் 81 ம் ஆண்டுக்கான நாவல் போட்டி முடிவுத் தேதி 28 6 - 8.2 என அறிவித்துள்ளது. திரு. ஆ. சண்முகதாஸ் எழுதிய புதிய நூலொன்று சமீபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இன்னும் இவைபோலச் சில.
இ நீங்கள் சமீபத்தில் படித்த முக்கியமான விஷயம் ஒன்றைப்
பற்றிச் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
கெக்கராவ. கே. தங்கவேல்
மேரிலாண்ட் பல்கலைக் கழ
கம் என்ருெரு அமெரிக்க யூனி
动岛L历 பாகிஸ்தானிலுள்ள லாகூர் என்ற பட்டினத் தி ல் பாகிஸ்தான் மருத்து ஆராய்ச் சிக் கேந்திரம் எ ன் ருெ ரு அமைப்பை இயக்கி வருகிறது.
இந்த ஆய்வு கூடத் தி ல் விஷக் கிருமி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. "அயிட்ஸ் ஈஜிப்டி" என்ருெரு பயங்கரமான நோய் பரப்பும் ஆப்பிரிக்க ரகக் கொசுவை உற்பத்தி செய் து வருகின்றது இந்த நிறுவனம் , இந்த நுளம்பினுல் பீ டிக் கப் பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் பலருக்குப் பைத்தியம் பிடித்த தாம். மற்றும் பல்வேறு நோய் களுக்கு ஆளானர்களாம். இந்த அமைப்புகளுக்குப் பின் ஞ ல் சி. ஐ. ஏ இயங்குவதாக அஞ்சப் படுகின்றது. நாளேக்கு உலகில் ஒரு விஷக் கிருமி யுத்தம் வந் தால் அதற்கு த் தேவையான சர்வதேச விஷக் கிருமி உற்பத்

Page 30
  

Page 31
* ● エ
realsTERED as a Newsreer
S S S S S S S S S S S S S S S S
EILSWS
Phoe: 2462s
 
 

MARCH, APRIL 1982
Dealers in
WALL PANELLING (CHIPBODARD &.
TMBER
140, ARMOUR STREET.
COLOMBO-12.
வரும் ஆசியரும் ப்யான்ம் பரீல்ஸ்க்