கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.05.15

Page 1


Page 2
ര
5码1 J)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்ல உடலும் இறைவன் ஆலயமே. சுத்தானந்தர்
சோதி 10 விளம்பிu வைகாசிமீ 15-5-58 சுடர் 7
பொருளடக்கம்
அப்பர் தேவ ரம் 189 சுத்தானந்தர் பாடல் 190 ஈண்டு வருங் துயருளவோ ஈ சன் அடியார்க்கு 19t போஷணையும் உடல்நலமும் 95 பாரத தர்மம் f :) (; அருள் 20) நாமதேவர் ... 203 அன்றும் இன்றும் யோக ஆசனங்கள் 213 உத்தமனே கேள் ... 216 விதி வலிது 19 உருளும் . உலகைத் துறந்தார் 223
ஆத்மஜோதி ஆயுள் சந்தா ரூபா 75 வருட சந்தா ரூபா 3.00 தனிப்பிரதி சதம் 30 கொரவ ஆசிரியர் க. இராமச் சந்திரன் பதிப்பாசிரியா HT. [sá, 5ð) HLIT
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி.
 
 

ஆத்மஜோதி 189. வைகாசி இதழ் அப்பர் தேவாரம்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திருப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே
பொருள்: புண்ணிய மூர்த்தியே! நான் புழுவாகப் பிறந்தாலும் அப்பிறவியிலும் உன் திருவடிகள் என் மனத்தினின் றும் கழுவாமல் இருக்க உன் திருவடித் தியானத்தை நான் மற வாமல் இருக்க எனக்கு வரம் தந்தருள வேண் டும். இவ்வுலகத்திலே உன் னே வழிபடும் அடி யவர்க்கு இரங்கித் திருப்பாதிரிப்புலியூரி3ே) கோவில் கொண்டு இருந்து அவர்களுக்கு அரு ளைச் செய்கின்ற வளப்பமிக்க நீரை யுடைய கங் கையைச் சிவந்த சடையிலே தரித்துள்ள தீப் போலும் செந்நிறமுடையவனே .
கருவுற்ற நாள்முத லாக உன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும் நானுங் கிடந்தழிந் தெய்த்தொழிந்தேன் திருவொற்றியூரா திருவாலவாயா திருவா ரூரா ஒருபற்று இலாமையுங் கண்டு இரங்காய் கச்சி யேகம்பனே
பொருள்: திருவொற்றியூரிலும், திருவால வாய் எனப்படும் மதுரையிலும், திருவாரூர் லும், திருக்கச்சியேகம்ப ஏத்தி ஒருங்கே எழுங் தருளியுள்ள பெருமானே! கர்ப்பத்திலே பொருந்திய நாள் முதலாக உன்னுடைய திரு வடிகளையே காண என்மனம் உருகுகின்றது. நானும் பலவாறு பிறவிக் கடலில் கிடந்து உழன்று சலித்துவிட்டேன். அவ்வாறு துன் புற்றதையும் எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள்புரிவாயாக. 。

Page 3
ஆத்மஜோதி 190. வைகாசி இதழ்
--சுத்தானந்தர் பாடல்ー米ー
1. அன்னையின் அருண்மிகுமென் அப்பனுயர் அறிவினுக்
காயிரம் பகல் போன்றவன் யானுரென் ருராய்க் தடங்குவோ ருள்ளத்தில்
அது நான் எனத் திகழுவோன். சின் மயக் கனல் வீசிச் செய்ய நல் லன் பர்பிணி
* செற்றிடுஞ் செங்கண் வேலன் சிந்தனைக் கமுதுதினுங் தீஞ்சுவை அளிப்பவன்
செக சிவ பரமொன்றெனத்
தன்னிலையி லுள்ளபடி சாந்தக் கதிர்பரவு
சந்நிதிப் பெருமை யாளன் தா னன்றி வேறிலா ஸதஸத் விலாசனங்
தத்வமஸி மந்திர வடிவோன். என்னிதய வெளியிலே யெப்போது நீங்காம
லின்ப5ட மாடு முதல்வன் ஏகனு மனேகளும் சிற்சக்தி போ கணும்
இறைவனென் குரு பரமனே.
2. சத்தாகி சித் தாய் சதானந்த மாய கியே
தானே தனக் குவமையாய்ச் சக்திமழை பொழிகின்ற சண்டம ருதமே தழைத்தோங்கு மருள் வெள்ளமே! உத்திமன மெட்டெரிய வுத்தம ரஹஸ்யமே
உள்ளன்பினுக் கமுதமே - உரையா லுரைக்க வசமோ?
சித்திக்கு மின்ப்ரச மெல்லாங் திரண்டொரு
தெவிட்டாத பேரின் பமே சிங்தையற நின்றே சிவானந்த முத்திவிளை
சித்துவிளை யாடு மரசே! தொத்துறு மிருட்பகைமை நிர்த்தாளி பட்டிடச் 彎
சுடர்காந்து ஞான மழுவே! தொந்தமறு கிர்க்குண சுகாதீத மேசுயஞ்
சோதிமய மான பரமே!
K
 
 

ஆத்மஜோதி ... 19.1 ... வைகாசிஇதழ்
ஈண்டு வருந்து யருளவோ ஈசன் அடியார்க்கு
- (ஆசிரியர்)-
கிட்லர் முதன்முதல் போலந்துக்குள் புகுந்தபோது உல கயுத்தம் ஆரம்பமாகிவிட்டதெனப் பத்திரிகைகள் பெரிய கொட்டைஎழுத்தில் பிரசுரித்தன. அப்போது நாமும் பத்தி ரிகைகளை விழுந்துகட்டி வாசித்தோம். விமரிசனம் எல்லாம் செய்தோம். உணர்ந்தோமா? அதுதான் இல்லை. ஆருயிரம் மைலுக்கப்பால் நடக்கும் யுத்தத்திற்கும் நமக்கும் என்னதொ டர்புஎன்று இருந்தோம். திடீரென ஒருநாள் யப்பான்காரன் தோன்றிக் குண்டு மாரிபொழிந்தான். அப்போதுதான் எங் கள் வீட்டுக்கும் யுத்தம் வந்துவிட்டதுஎன்று துடிதுடித் துப் போைேம்.
பிறருக்கு நேரும் துன்பத்தைப்பறறிக் கேள்விப்படும்போ தெல்லாம் நமக்கு அது இல்லையே என்ற எண்ணம்தான் இரகசியமாக முதலில்வந்து நிற்கிறது. அத்தைரியத்தில்தான் அவர்களுக்குப் புத்திகூறவும அதைப்பற்றி விமரிசனம் செய் யவும் தொடங்கிவிடுகிருேம். அதே துன்பம் நமக்கு வந்துவி ட்டல் நம்முடைய பாடு எப்படிஎன்று எவரும் உணருவதே யில்லை. நூறு ரூபா இழந்தவனுக்குப் புத்திமதி கூறுவோம்" நம்முடைய ஒருரூபா தொலைந்துவிட்டால் நாம் படும்பாடு கேட்கவே வேண்டாம். சிறிது நேரத்திற்கு கப்பல் கவிழ்ந்த வனைப்போல் ஆகிவிடுவோம். காரணம் என்ன? நூறு ரூபா வை எம்முடைய பணம் என்று நினைப்பதில்லை. ஒருரூபாவை எம்முடைய பணம் என்று நினைத்துவிடுகிருேம்.
இதேபோன்றுதான் பிறர் படும் துன்பத்தை நமக்குஎன்று உணருவதில்லை. அதேதுன்பம் நமக்கு வரும்போது அலறித் துடிக்கின் ருேம். வங்காளத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் வீடுவாசல் இழந்தனர். என்னும்போது அப் புதினம் வாசிப்பதோடு சரியாய் போய்விட்டது. வெள்ள

Page 4
ஆத்மஜோதி ... 193... வைகாசிஇதழ்
நிவாரணத்திற்கு உதவுங்கள் என்று பத்திரிகைகள் தலை அங் கங்கள் எழுதியபோது அவற்றைப் பார்த்தும் பாராததுபோல் இருந்தோம். நமது நாட்டுக்கும் வெள்ளப்பெருக்கு வந்தது. இல்லை? வீட்டுக்கே வந்துவிட்டது. அப்போதான் வங்காள மக்களின் நிலையை எம்மால் ஓரளவு நினைக்க முடிந்தது. இப் பொழுதும், வெள்ளநிவாரணத்திற்கு உதவுங்கள் என்று பலர் வேண்டிக்கொண்டனர். நான் கொடுத்துத்தான் நிறையப் போகிறதா? அல்லது என்னுடையவீட்டுக்குத்தான் வரப்போ கிறதா? என அத்தருணத்திலும் அதற்குச் சமாதானம் தேடிக் கண்டுபிடித்துவிட்டோம். மனிதன் தான் விடும் பிழைக்குச் சமாதானம் கண்டு பிடிப்பதிலேயே பெருந்தொகை நேரத்தைச் செலவிடுகின்றன். பிழையை நேராக ஒப்புக்கொண்டால் விஷயம் உடனே முடிந்துவிடுகிறது. வருடக்கணக்காகப் பணஞ்செலவு செய்து கற்றகல்வி பிழைகளை மறைப்பதற்கே பயன்படுகின்றன. பிழைகளைத் திருத்துவதற்காகப் பயன்பட வில்லை. இன்றைய அரசியல் வாதிகள் கூட இவ்வழியேதான் சென்று கொண்டிருக்கின் ருர்கள். அரசன் எவ்வழி? குடிகள் அவ்வழி!
நவகாளியில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டபோது எம்மால் அதனை உணர முடியவில்லை. பத்திரிகைகளில் பயங்கரமான செய்திகளைக்கண்டும் அது எப்படியிருக்கும் என்பதை உணர முடியவில்லை. இன்று நம்மிடையே பூசல் கிளம்பும் போது அப்புகை நம் கண்னேயே உறுத்துகிறது. பண்டைக்காலச் சரித்திரப் புத்தகங்களை நம்மில் எத்தனை பேர் கரைத்துக்குடித் துள்ளோம். சரித்திர பாடத்தில் விசேட சித்திபெற்ற எத்தனை அரசியல் வாதிகள் நம்மிடையே இருக்கின்ருர்கள். அவர்கள் படித்த சரித்திரம் அவர்களுக்கே பயன்படவில்லை. வகுப்புப் பூசல்களால் மக்கள் பட்ட கஷ்டங்களை எந்தச் சரித்திர ஏடு தான் கூறவில்லை. அதைப்படித்து அதிலே பட்டம் பெற்ற அரசியல்வாதிகள் நாட்டுமக்களிடையே போதிப்பதென்ன? வகுப்புவாதம். படியாத பாமர மக்களுக்குப் படித்த பேரறிவா ளிகள் வழிகாட்டுவதுமறைந்துபோய், இன்று படியாத பாமர
 

ஆத்மஜோதி ... 193... வைகாசிஇதழ்
மக்களைப் படித்த பண்பில்லாதவர்கள் கெடுக்கும் நிலைக்குக் கல்வி பயன்படுத்தப் படுகிறது. இவையெல்லாவற்றுக்கும் காரணம் பதவிமோகம், சுயநலம், புகழா சையே.
இன்று சுயநலம், வகுப்புவாதம் என்ற போர்வைக்குள் புகுந்து வேலைசெய்கிறது. வள்ளுவர் ஒரு இடத்திலே கூறு கின்ருர். தன்னைத்தான் ஒருவன் காதலிப்பாயிைன் அவன் தீய விடயங்களைச் சிந்திக்கவே மாட்டான். என்று, அது போல தம்மையும் தமது சமூகத்தையும் நல்வழியிலே வாழ வைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்று நடைபெறும் கரு மங்களுக்கு உடந்தையாக இருக்கமாட்டார்கள். அயல்நாட் டுச் சரித்திரமும் உள்நாட்டுச் சரித்திரமும் நமக்குப் போதித் தது என்ன? நாம் எதைக் கற்றுக்கொண்டிருக்கிருேம்.
சமயத்தலைவர்கள் நமக்குக் காட்டிச்சென்ற வழி என்ன? இன்று நாம் எதைப்பின்பற்றுகிருேம். புத்தபெருமான் தமது வாழ்வின் முன்னேற்றத்திற்காக எதைத் தியாகம் செய் தாரோ? இன்று அவரது வாரிசுகள் அவற்றை எவ்வாறு பெற
லாம் எனக் கங்கணம் கட்டுகின்ருர்கள். ஒழுக்கத்தின் அத்தி
வாரத்திலே, தியாகத்தின் திருவுருவிலே, அகிம்சையின் அடிப்படையிலே எழுந்தது புத்தசமயம். அதை உணர்ந்து வாழ்வோர் ஒருவருமில்லையே என்றுதான் நாம் மனம் வருந்த வேண்டியுள்ளது.
இன்பம் அநுபவிக்கும்போது இது இறைவனுல் கிடைத் தது என்பதை மனிதன் உணரத்தவறி விடுகின்றன். துன் பம் வரும்போது ஆண்டவனிடம் ஒடிச்செல்கின்றன். இன் பம் வரும்போது அதற்கு அதிகம் மகிழாது சாதாரண நிலையில் எவனுல் இருக்க முடியுமோ? அவன்தான் துன்பத்தையும் பொறுக்க முடியும். புத்தபிரான் அரசியல் இன்பங்கள் பெண் இன்டங்கள் பிள்ளை இன்பங்களைத் துறந்தவரான படியில்ை தான், தமது சாதனைகாலத்திலேற்பட்ட எத்தனேயோ கஷ்டங் களைப் பொறுக்கமுடிந்தது.

Page 5
ஆத்மஜோதி ... 194... வைகாசிஇதழ்
நன்மைவந்தாலும் அவனுக்கே! தீமை வந்தாலும் அவ னுக்கே! என ஆண்டவனிடம் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுப்பவன் எவனே? அவனேதான் இன்பதுன்பமற்று வாழ முடியும். நாவுக்கரசுப்பெருந்தகை சமணரிடமிருந்து பிரிந்து சென்று சிவபிரானுரை ஏத்தியிருந்தபோது சமணர் நாவுக்கர சருக்குத் துன்பம் விளைக்க நினைத்தனர். சூலைநோயை வரு வித்து தம்மை ஆட்கொண்டருளியவர் சிவபிரானே என்பது நாவுக்கரசரின் அசைக்கமுடியாத நம்பிக்கை, சிவபிராருை க்கே என்னையான் முற்றும் கொடுத்தபின் என்னை வருத்து வது யார்? வெயிலின் வெப்பம் தாங்கமாட்டாதவன் நிழலைத் தேடுவது இயற்கை. உலக வெப்பம் தாங்கமாட்டாதவன் சாந்திநிழலைத் தேடுகின்ருன் சமண வெப்பத்தைத் தாங்கமா ட்டாத அரசும் இறைவரைது தாள் நிழ%லத் துனையெனக்கொ ண்டார். ஈசன் எந்தை இணையடி நிழலேதஞ்சமென நாவுக் கரசுப் பெருந்தகை கொண்டிருந்தாரானபடியால் சுண்ணும் பறை பொய்கைபோன்று குளிர்ந்தது. நஞ்சும் அமுதாயிற்று கல்லும் தெப்பமாயிற்று.
இன்றைய நிலையில் நமக்குவேண்டுவதும் நாவுக்கரசரின் சரணுகதியே. யாரிடம் சரணுகதியடைய வேண்டுமோ அதை ப்பற்றிச் சிந்திப்பது, கூறுவது போய் வேறு என்னென்னமோ சிந்தித்துக் கூறி நம்மை நாமே கெடுத்துக்கொள்ளுகின்ருேம். அப்பரைச் சிந்தித்து அப்பர் தேவாரங்களைப்பாடினுல் கொதி ப்பெழுந்த நமது மனதில் ஒரு சாந்தி ஏற்படும். சூடு ஏறிய எதிராளி கூட நமது சாந்தியைக் கண்டு அடிபணிவான். நாவுக்கரசரைச் சமணர்கள் நீற்றறையிலிட்டபோது நாவுக்கர சர் இருந்த நிலையைச் சேக்கிழார் சித்திரிக்கும் வகையைப்
பாருங்கள்:
ஆண்டவர சதனகத்து ளனைந்தபொழு தம்பலத்துத் தாண்டவமுன் புரிந்தருளுந் தாணிழலைத் தலைக்கொண்டே ஈண்டுவருந் துயருளவோ வீசனடி யார்க்கென்று மூண்டமன நேர்நோக்கி முதல்வனையே தொழு திருந்த்ார்.
-X-
 

ஆத்மஜோதி ... 195... வைகாசி இதழ்
() ()
போஷணையும் உடல்நலமும்
| சுவாமி அவர்கள்)
போஷணையைப் பற்றிய 15ம் ஞானம் சென்ற முப்பது வருடங்க ளில் அடியோடு மாறியுள்ளது. உடற்கூறு சாஸ்திரத்தின் சீவசத்தின் கண்டுபிடிப்புக்களாலும், இன்னும் இதனுடன் தொடர்புகொண்ட ஏ னேய உணவுப் பொருட்களாலும் நல்ல போஷணை முறையை ஏற் படுத்த முடிந்திருக்கிறது.
இந்திய நாட்டின் இன்றைய மிகமுக்கியப் பிரச்சினை போஷ னேயே. இதைப்பற்றிச் சிறிதளவாவது நீங்கள் ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டும். கிடைக்கும் உணவை எப்படி நன்கு பயன் படுத்துவது என்பதை அறிந்திருக்கவேண்டும். இவ்வரிய ஞானத் தால் உங்களுக்கு மிகுந்த கன் மை ஏற்படுவதோடு மற்றவர்களுக்குப் போதிக்கும் நிலையிலும் நீங்கள் வந்துவிடுகிறீர்கள்.
உடற்கூற்றின் தேவைக்குத் தகுந்த உணவு வகைகளை நீங்கள் வேண்டுகிறீர்கள். நல்ல உணவு நல்லா ரோக்கியத்தை ஏற்படுத்துவ தில் மிகமுக்கிய பங்கைப் பெறுகிறது. உங்கள் உயர்கலன் மற்றெ தையும்விட கற்போஷணை யிலே அதிகமதிகம் நின்று நிலவுகிறது.
எங்ங்ணம் மோட்டார்காரின் என் ஜின் எண்ணெய் இன்றி கன்கு செயல் பெறமுடியா தோ, அதேபோல் இந்தச் சரீர மன என்ஜினல் நல்ல உணவின் றிச்செயலாற்ற முடியாது. சரீரமும் மனமும் சீரிய முறையில் வளர்ச்சியடைய வேண்டும். தீவிர உழைப்பினுல் மனமும் சரீரமும் பிரயோஈனம் மிகுந்த வேலையைச் செய்ய முடியவேண்டும். அப்படிச் செய்தால்தான் நீங்கள் நல்வாழ்வு வாழ்வதுடன் 5ல்லா ரோக்கியத்தோடு விளங்குவதாகக் கூறமுடியும்,
ரிக்கெட்ஸ், பெரியெரி, பெல் லக்ரா, இராக்குருடு, சிறுகுடல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள், கணையப் பிணிகள், டிராப்சி, சோகை, ஸ்கர்வி, ஒஸ்டொ மலேஷியா, பல்லரஃண, கர்ப்பக்கோ ளாறுகள் அனைத்தும் நேராகவோ, மறைமுகமாகவோ, போஷஃணக் குறைவினலேயே ஏற்படுகின்றன. சாதாரணமாக வளர்ச்சியடைய நிதானிக்கப்பட்ட உணவு தேவை. மோசமான தன்மையில் வளர்க்கப் பட்ட குழங்தை அதன் வயதுக்கு மிகச்சிறுத்தும் மெலிந்தும் காணப் படுகிறது. அதன் உயரத்திற்குச் சரியான நிறை சராசரி அளவுக்கும்

Page 6
ஆத்மஜோதி 196... வைகா சிஇதழ்
குறைந்துவிடுகிறது. பிணிகளுக்கு அக்குழந்தை எளிதிலே இரை யாகிநிற்கிறது. (5ல்ல முறையில் போஷிக்கப்படாத குழந்தை வேலை யிலும் விளையாட்டிலும் அக்கறைகொள்வதில்லை. அது மக்குப்பிடித்து உற்சாகமில்லாமல் இருக்கிறது.
நன்கு போஷிக்கப் பெற்ற மனிதனின் தோல் பளபளப்பாக இருக்கும். அவன் ஆரோக்கியம் மிகச்சிறந்ததாக இருக்கும். பிரகா சம் பொருந்திய கண்கள் உயரிய போஷணையைக் குறிக்கிறது. பிசு பிசுப்புடன் இரத்தம் கசியும் ஈறுக்குக் காரணம் சீவசத்துசியின் குறைவே. இதற்கு அதிகமான புதிய பழங்களையும் காய்கணிக்ளை யும் உட்கொள்ள வேண்டும். புண்ணுன வாய், நாக்கு, நாக்கில் வெடிப்பு முதலியன சீவசத்து ‘பி’ 3 இன் குறைவினல் ஏற்ப்டுகின்றன. அதிக மான பால் சாப்பிடுவதால் இவை குணமாகின்றன. இந்தியான் சனத்தொகையில் பெரும்பான்மையோரின் உணவ தரத்தில் குறை ந்திருப்பதோடு அநேகமாக அளவிலும் குறைந்திருக்கிறது. நம் நாட் டில் நிலவும் அனுரோக்கியத்திற்கும் நோய்க்கும் கூடுதல் காரணம் குற்றமுள்ள போஷணை யேயாகும்.
தேயிலை, காபி, புகை குடித்தல், வெற்றிலேயுடன் புகையிலையை யும் சுவைத்தல், சோடா, கலர் முதலிய குளிர்பாணங்கள், இவற் றைத்தவிர்த்து ஜாமும் தித்திப்புப்பொருட்களும் தின் பதற்குப் பதிலா கப் பால். ப்ழம், காய்கனிகள், ஊதா நிறரொட்டி, முதலியவற்றை உட்கொள்ளத் தலைப்பட்டால், நீங்கள் உங்கள் உணவுக்கான செல வைக் குறைப்பதோடு பிணியையும் அனுரோக்கியத்தையும் ஒழித் துக்கட்டுகிறீர்கள். உங்களிடம் உயரிய ஆரோக்கியமும் பல மும், வீரி
யமும், சக்தியும் அமைந்து நிற்கவும் செய்யும்.
கைக்குழந்தைகளின் அதிகமான மரண த்திற்கும் மற்றும் கூடுதல் சாவுக்கும் போஷணைக்கேடே காரணம். தாய்க்கு நல்ல போஷணை அளிக்கப்படவில்லையென்ருல் பிறக்கும் குழந்தையும் கைக்குழந்தை களும் போஷஃணக்கேட்டினுல் மிகவுங் கஷ்டப்படுகின்றன. தாய்க் குச் சரியான உணவு கிடைக்கவில்லை என் ருல் தாய்ப்பாலில் அவசி யமான சீவசத்து இல்லாதாகிவிடுகிறது. போஷணைக் கேட்டுக்கு இலக்கான தாய்மார்களின் தாய்ப்பால் தரத்திலும் அளவிலும்
 
 

ஆத்மஜோதி 。197。 வைகாசி இதழ்
குறைந்து வருவதால், குழந்தையின் தேவைக்குப் போதாதாகிவிடு கிறது. போசனைக்கேட்டுடன் கர்ப்பகாலத்தில் சோகை தோன்றுவ
தால்தான் தாய்மார்கள் அதிகம் இறக்கின்றனர்.
மக்கள், முக்கியமாகக் குழந்தைகள், அரிசி, சாமை முதலிய தானியங்களையே அதிகமாகக் கொண்ட உணவில் அதிலும் வேறு உணவு வகைகள் சேராத நிலையில், செழிப்பாக இருக்க முடியாது இந்நிலைமையில் அவர்கள் உரிய அளவில் பால், பச்சைக்காய்கனிகள்
பழங்கள் முதலியவற்றை உட்கொள்ள வேண்டும். "காப்பாற்றும் உனை வுகள் என இவை அழைக்கப்படுகின்றன. ஏன், தெரியுமா? இவை புரொட்டீன் ஸ். சீவசத்துக்கள், தாது உப்புக்கள் முதலியவற் W/ றில் செழிப்புற்றுச்சரீரத்தைப் பிணிசளிலிருந்து காப்பாற்றுகின்றன ! மில்-குத்தல் அரிசி முதலிய போ ஷணே குறைந்த உணவினலேயே
பல பிணிகள் தோன்றுகின்றன. கைக்குழந்தைகள், சிறிது வயதான
குழந்தைகள், தாயாகி நிற்பவர்கள், தாயாகக்காத்து நிற்பவர்கள்
அனே வரும் மோசமான உணவினல் அதிகம் அவஸ்தைப்படுகின்ற
னர். "காப்பாற்றும் உணவுகள்’ அவர்களைக் காப்பாற்றுகின்றன. நிதானிக்கப்பட்ட உணவுவகைகள் அவர்கள் ஆரோக்கியத்துடனும்
பலத்துடனும் வாழ வகை செய்கின்றன.
பொன் மொழிகள்
மெய்ப்பொருளும் ஆன்மாவும் ஒன்றே; இரண்டின் சாரமும் ஒன்றே: ஆன்மா தனது உண்மையான இயல்பை முழுதும் வெளிப் படுத்தும் போது பரம் பொருளின் இயல்பே அதன் வாயிலாகத் திகழ் கிறது. இறைவன் நம்மை அணுகிக்கொண்டிருக்க, நாமும் அவனை அணு வருகிருேம் இருவரும் ஒன்றுகூடியதும், ஒன்ருகிவிடுகின்றனர்.

Page 7
ஆத்மஜோதி ... 198. வைகாசிஇதழ்
பாரத தர்மம் 米
)கங்காதரன் - புதுவை( ܟܠ
சனுதனமானதும், எக்காலத்தில் தோன்றியதென்று மிகச் சிறந்த சரித்திர ஆராச்சியாளர்களாலும் வரையறுக்க முடியாத தும், அருளொளி படர்ந்து ஆத்மஞானக்கனல் வீசுவதுமான பாரத தர்மத்தைப்பற்றி எழுதுவது, அவ்வளவு சுலபமான காரியமன்று.
பாரத தர்மம் என்னும் போது பாரத நாட்டையும் பாரத நாடு என்னும் போது பாரத தர்மத்தையுமே குறிப்பிடுகின் றேன்; ஏனெனில் இவை இரண்டும் வெவ்வேருனவைக ளன்று. எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையும் தனிக்குணமும் உள்ள தோ, அதேபோன்று ஒவ்வொரு நாட் டிற்கும் தனிச் சிறப்பும், தனிப்பண்பும் அது இவ்வுலகிற்கு ஆற்ற வேண்டிய தனிப்பெரும் பணியுமுள்ளது.
மேலைநாடுகள் மனிதனுடைய புறவாழ்க்கையின், புல இன்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன; ஆனல் தொன்று தொட்டு பாரதம் மனிதனுடைய அக வாழ்க்கையின் ஆத்மீக வேட்கையின், தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தி ருக்கின்றது, இன்றும் வருகின்றது.
இந்த ஆத்மானு பூதியில், அத்யாத்ம ஐக்கியத்தில் தோன் றிய அருளொளியைத் தான், பாரத நாட்டின் மாபெரும் முனி வர்கள் கல, இலக்கியம், நாகரீகம், பண்பாடு, சமூக சமய தர்மங்கள் அரசியல் கோட்பாடுகளாக உருவாக்கி உலகின் முன்வைத்துள்ளனர். ط
பாரத தர்மம் என்றும் அழிபாத ஆனந்தமோன அகன டப் பெரும் கடலில் தோன்றி இயங்கி அருளொளி பரப்பிக் கொண்டிருக்கும், ஆத்மம் ஞான மென்னும் அலைத்திரள்களே யாகும். பாரத நாடு பழம் பெரும் நாடு. பாரதம் என்ற சொல்லைக் கேட்டதும், கல்லும், மண்ணும், மலையும் நீரோ
 

ஆத்மஜோதி 199... வைகாசிஇதழ்
டைகளும், அருவிகளும், நீர்வீழ்ச்சிகளும், மாகடலும், மக் கட் கூட்டங்களும், உள்ளத்தைக் கவரும் இயற்கைக் காட்சி களும், இன்பக்கலை வளங்களும் மட்டும் நம் மனக்கண்
முன் தோன்றவில்லை.
உலகின் இருளகற்ற அருளொளி விசும் மகோன்னத மான ஒரு திருக்காட்சியே தோன்றுகின்றது. வேதம், உப நிடதம், கீதை, பிரம்மசூத்திரம், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம், திருவாய்மொழி போன்ற மாமறைகள் உள்ளமட் டும் பாரதநாட்டை எவரும் மறக்கமுடியாது. அவ்வருள் மறைகள் என்றும் நின்று நிலைத்து மக்கட்குலத்திற்கு வழி காட்டி வருமென்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்று நாகரீகத் உச்ச நிலை யிலுள்ள தேசங்களிலெல்லாம் மனிதவர்க்கம் தோன்றுவதற்கு முன்பே பாரதம் தன்னிகரில்லாதச் தனிச் சிறப்புடன் விளங்கி உலகுக்கு மெய் வழிகாட்டி வந்திருக் கின்றது. இவ்வுலகின் கண் எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் தோன்றி மறைந்துவிட்டன. 27 கரிகங்கள் சிதைந்து அழிந்து விட்டன. அவைகள் இருந்த வடுகூட தெரியவில்லை. மாவீரர் கள் அலெக்சாண்டரும், ஆகஸ்டஸ் சீசரும், கட்டிய மனக் சோட்டைகளெல்லாம் தகர்ந்து சின்னுபின்னமாகிவிட்டன. ஆல்ை பாரத தர்மமும் அதன் பழம் பண்புமிக்க நாகரீகமும் இன்றும் என்றுங்குன்றளNலிளமையுடன், பூரணப்பொலிவு டன், புத்தம் புதியனவாகத்திகழ்ந்து, அல்லலுறும் மக்களுக்கு ஆறுதலையும், சாந்தியையும் அளிப்பதுடன் உலகப்பேரறிஞர் களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு உவகையிலாழ்த்து கின்றது. வியாசசர், வசிஷ்டர், வால்மீகி, திருமூலர், தாயு மார்ை, வள்ளுவர் வள்ளலார் போன்ற மாபெரும் முனிவர் களால் பேணி வளர்க்கப்பட்டதல்லவா? பாரத த ர் ம மு ம் அதன் மிகப்பழமையான நாகரிகமும், அதற்கு அழிவென் பதேது மாற்றந்தான் ஏது?
பாரதநாட்டின் தனிப் பெருங்குணங்களாகிய ஒழுக்கம் ஈகை, கற்பு, பதிபக்தி, முதலிய உயரிய குணங்களை உயிரெ னப் பேணிக்காக்கும் அறக்கோட்டைகளாக விளங்கிய அருந் ததி, நளாயினி, சாவித்திரி, கர்ணகி வாசுகி போன்ற உத்த

Page 8
ஆத்மஜோதி ... 200... வைகாசிஇதழ்
மத் தாய்மார்கள் பலர் வாழ்ந்து அவர்கள் திருவடி ஸ்பரிசம் பட்டு, புனிதமுற்ற பொன்னுடல்லவா நம் பாரதம்.
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்து தத்துவ ஆராச்சி யிலும், வேத வேதாந்தங்களின் உண்மைகளை உணர்ந்து அவற்றை உலகுக்கு வெளிப்படுத்துவதிலும், இந்து தத்து வத்தின் ஆறுத ரிசனங்கள் போன்ற அரிய நூல்கள் பல இயற்றி அழியாப் பெரும் புகழ் கொண்டவருமான; காண்ட்’ தத் துவப் பேராசிரியர் ஜெர்மனி நாட்டுப் பன்மொழிப்புலவர், தெளிந்த சிந்தனையாளர் மாக்ஸ் முல்லர் என்ற உலகப்பேரறி ஞர் கூறுகின் ருர்,
ஒ பாரத நாடே! தன்னிகரில்லாத தனிச்சிறப்புடைய தெய்வத்திருநாடே, உன் பெருமையை என்னென்றியம்பு வேன். பாரதம் என்றவுடன் மாமறைகளை அருளிய மாமு னிவர்களின் பரிசுத்தத்தோற்றமும், தவவாழ்வும், சலசல வென்ற இன்னெலி எழும்பத் தவழ்ந்தோடிக்கொண்டிருக்கும் அருவிகளும், அதனருகே கண்கவர் இயற்கைக்காட்சிகளுக் கிடையே அன்பும் அறமும் அழகும் தழைத்தோங்கும் ஆச் சிரமங்களுமே என் மனக்கண்முன் தோன்றுகின்றன; ஆத்ம ஞானச்சுடரொலி எங்கும் படருகின்றது' என்று பக்திபரவி பரவசத்துடன் கரங்குவித்து சிரம் வணங்கி அஞ்சலிசெய்கி GOTCST.
இம் மண்ணில் விண்ணின்பத்தை நுகரும் மார்க்கத்தை அருளும் மாமறைகளைத் தன்னகத்தேகொண்டு, அருட்செல் வங்கள் யாவற்றிற்கும் உறைவிடமாக விளங்குகின்ருள் அன்னை பார்வதி,
பாரத நாட்டில் இமய முதல் இலங்கைவரை வசிக்கும் மக்கள் பல இனம், மொழிசமயம், பண்பாடு, சமூக சம்பிர தாயம் பழக்க வழக்கங்களால் பிரிவுபட்டிருந்த போதிலும், பாலில் நெய் போல் ஒரு அத்பாத்மா உணர்வானது"எங்கும் பரவி வியாபித்திருப்பதைக் காணலாம். ஆழ்ந்து நோக்கும் திறன் உடையோர்க்கு இதன் உண்மை நன்கு விளங்கும்.

ஆத்மஜோதி ... 20.1 ... வைகாசிஇதழ்
இப்பேருணர்வுதான் மனிதனை குறுகிய மனக் கட்டுமா னங்களினின்றும், தனியுணர்வகந்தையினின்றும், விடு வித்து மலர்ச்சியுறுத்தி, உலகளாவப் பரந்து விரியச்செய்து அத்யாத்ம ஐக்கியத்தால், நேய ஒருமைப்பாட்டால், மக்கட்குல மனைத்தையும், தூய அன்பில் ஒன்றைச் செய்து ஆத்ம தீர ராய், அமரானந்தராய் இம்மண்ணில் தேவர் போல் வாழச் செய்கின்றது. மக்கட்குலம் இந்த உயரிய உணர்வின் மலர்ச் சியை அடைவதற்கு உதவ எல்லா வகையிலும் தகுதியுடை யது சதைனமான பாரத தர்மமே யாகும். -
பாரத நாட்டில் பிறந்து பாரத தர்மத்தில் திளைக்கும்பேறு பெற்றவர்களாகிய நாம் உண்மையிலேயே பெரும் பாக்கிய சாலிகள். அதை நாம் சரியான முறையில பயன்படுத்தி இம் மையில் இன்பத்தையும், மறுமையில் அடைவதற்கரிதாம் அரும்பெரும் வீட்டினையும் அடைவதுடன்; ஆசைவாய்ப் பட்டு துயரப் படுகுழியில், வீழ்ந்து அனல் வீழ்ந்த புழுவென துடிதுடிக்கும் இப்பூவுலகும் அப்பெருநிலையை அடைந்து ಫ್ಲಿ' அரும்பணி புரிய வேண்டுமென்பதுவே என்பிரார்த் தனே .
வாழ்க பாரத தர்மம். வளர்ந்தோங்குக அதன் அருட்பணி
ဒွိ ဒွါ ဒွါk * * * * * * * * * * * * * * * * * * * * စို့ 标 ஆத்மஜோதியாம் அமுதமலர்
(மகரிஷி சுத்தானந்தர்) 一米一
முருகிளந் திருவும் முத்தமிழ்ப் பண்பும் அருளறி வின்பமும் பொருளறி மேன்மையும் உலகப் பெரியார் உள்ளமுந் துடிக்கும் நலமிகு மலரே ஞான மா மலரே ஆத்தும ஜோதியாம் அமுத மலரே பூத்துப் பூத்துப் பொன்னகை விசி சாதி யறியாச் சோதி விளக்காய் சுத்த யோகச் சுடர்விரிந் தோங்கி வித்தகர் போற்றங் விளங்குக நன்றே.
来来来来来来来来来来来来来来来来来来来来来来

Page 9
ஆத்மஜோதி 202. வைகாசி இதழ்
-ஈத் அருள் :-
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்ருல் தேரின் அருளாதான் செய்யும் அறம்
கண்ணுேட்ட மென் னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ்வுலகு (வள்ளுவர்)
அருளால் எவையும் பார் என் ருன் - அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள் கண்டதல்லா ற் - கண்ட
என்னையுங் கண்டிலேன் என்னோடி தோழி. (தாயுமானவர்)
ஆருயிர் யாதொன்று இடருறும் ஆங்க தற்கு ஒருயிர் போல உருகி உயக் கொள் மின் கேரின் அதுமுடியாதெனில் நெஞ்சகத்து ஈர முடமை அருளின் இயல்பே (சூளாமணி)
தன் ஞெக்கும் தெய்வம் பிறிதில்லைத் தான் தன் னேப் பின்னே மன மறப் பெற்ருனே ல் - என் னை இருட்கண்ணே நோக்காது இருமையும் பெற்ருங்கு
அருட்கண்ணே நிற்பது அறிவு. (அறந்ெநிச்சாரம்)
அறவிய மனத்தராகி ஆருயிர்க்கு அருளைச் செய்யில் பறவையும் கிழலும் பே 3)ப் பழவினே உயிரொடு ஒட்டா.
(திருத்தக்கதேவர்)
என்னுடைய சகோதரர்களில் மிகத்தாழ்ந்தவர்க்குச் செய்த உதவியும் எனக்குச் செய்ததே. என் பின் வரவிரும்புவோர் தன் ன அறவே நீக்கிவிட்டு நாடோறும் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்பின் வரக்கடவர். நானே உலகத்தின் ஒளி. என் பின் வருவோர் இருளில் கடவார். வாழ்வாகிய ஒளியைப்பெறுவார். என்னே நேசித் தவன் என் சொற்படி நடப்பான் என் தந்தை அவனே நேசிப்பார். 15ான் சேவை செய்வதற்காகவே வந்தேன். சேவை பெறுவதற்காக வன்று. தேவலோகத்திலுள்ள என் தங்கையின் கட்டளை ப்படி 5டப் பவன், அவனே என் சகோதரன். என் சகோதரி, என் தாயார். என் னிடம் அன்பு செய்வதாயின் என்னுடைய கட்டளைகளை நிறைவேற் றுங்கள்.
- (கிறிஸ்துமத்ற்)
 

ஆர்மஜோதி ... 203. வைகாசி இதழ்
-: நாமதேவர் :-
(சாரதை)
நாமதேவர் கண்ணிருகுத்து சுவாமி, தேவரிரை இதுவரை என்ருவது ஒருநாள் பிரிந்திருப்பே?ை பிரிந்தால் என் உயிர் நிலைக்குமா? இம் மகானுக்கு தக்க சமாதானம் கூறி அனுப்பி விடுங்கள் என்று வேண்டினர்.
பகவான் புன்னகை செய்துபுத்திர! நாமும் உம்மை விட் டுப்பிரிய மனமில்லாதவராய் இருக்கின்ருேம். நீ இங்கில் லாதுபோல்ை யாருடன் உண்ணப் போகின்ருேம். உமது சுவையுள்ள கீர்த்தனைகள் கேட்டு மகிழ்ந்தாருக்கு வேற்றரின் சங்கீதம் ரசிக்குமா? எனினும் ஞானேஸ்வரரின் சொரூபம் அதாவது எமது பூரண அம்சம் என நினைக்கக் கடவாய். என் னுடன் நீயிருப்பதும் அவருடன் சஞ்சரிப்பதும் ஒன்றே. எங் கும் நான் வியாபித்திருப்பதை உணர்ந்திருந்தும் வியாகூலப் படுதல் நலனன்று. என்றும் இங்கிருத்தலில் பிரயோசன மில்லை. மக்களுடன் பழகி அனுபவம் பெறவேண்டும். அப் போதுதான்ஞானம் பூர்த்தியாகும். பல அடியார்களைத் தரிசித்து அவர்கள் கூடிச்செய்யும் பஜனையில் எவ்வளவு ஆனந்தம் பெறுவாய். இவ்வானந்தத்தில் என்னேயும் கூட மறந்துவிடப் போகிருய் ஜாக்கிரதை, பஜனையில் இறங்கி விடுவாயெனில் பண்டரி புரத்தையே ஞாபகமிருக்காது. என யாத்திரையின் மகத்துவத்தையும் அவசியத்தையும் அடியார்களின் பெருமை யையுங்கூறி ஞானேஸ்வரரை விழித்து நாமதேவன் எனது அடி
யார்களிலும் புத்திரரிலும் சிறந்தவனும், அன்புள்ளவனுமா
வான். எமது மனதை நன்ருக ஈர்த்தவனும் இவனே. இவ னுக்கு யாத்திரையில் ஆபாசந்தோன்ருது யாதொரு துன்பமும் இவனைப் பிடிக்காது கவனித்து அதிக காலந் தாமதியாது வேக மாக இவனை இங்கு கொண்டுவந்து ஒப்பிப்பது உன் கடன். இவனுக்குத் தந்தையும் தாயும்நீமே. உனககு இவனை அடைக் கலமாக ஒப்பிக்கின்றேன். 'சுகயே யாத்திரை செய்து வரு வீராக’ என்று உளம் கசிந்து கூறி நாமதேவரின் கரங்கள்

Page 10
ஆத்மஜோதி ... 204... வைகாசி இதழ்
பற்றி ஞானேஸ்வரரின் கைகளில் வைத்தார். ஞானதேவர் இக்காட்சியைக்கண்டு மனம் உருகிப்போர்ை. பண்டரிநாதன் தன்பக்தனுகிய நாமதேவன்மீது உள்ள அன்பை உணர்ந்து ஆனந்தம் கொண்டார். அவரை ஆலிங்கனஞ்செய்து பக வான் பாதங்களில் வீழ்ந்து பதிதபாவனே! உமது கிருபையால் யாத்திரை செவ்வனே முடிந்து மீண்டு தேவரீர்தரிசனம் பெறு வதற்காக விரைவிலேயே வருகின்றனம் என்று கூறி நாம தேவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். பகவான் துன் பம் நிறைந்த மனத்திரையாய் ஒப்பற்ற அவ்விரு பக்தர்களைப் பின்தொடர்ந்தார். அவர்களைச் சந்திரபாகா நதி வரைவழி கூட்டி அனுப்பிவிட்டு திருக்கோயிலுக்கு மீண்டார்.
நாள்தோறும் தீர்த்தங் கொணர்ந்து பாண்டுரங்கனின் திருவடித்தாமரைகளை அருச்சனை செய்து மகிழும் ருக்மணி பிராட்டியார் அன்றும் தீர்த்தமேந்திச் சன்னதி சென்று நோக்கும் போது பகவான் கண்களினின்று அருவி பாய்வதைக் கண் டாள். மிக நொந்தாள் சுவாமி! உலகங்கள் நிலைபேரினும் கலங்கா நெஞ்சம் படைத்தவர் இன்று கலங்கிக் கண்னிர் விடு வதன் காரணமென்ன? இத்தகைய கலக்கத்தை உண்டா வதற்கு இங்கு என்ன நேர்ந்தது? உயிர்க்குயிராய் மதிக்கும் பக்தன் எவனுவது தங்களை விட்டுப்பிரிந்தனைே அல்லது ஏதாவது விபரீதம் ஏற்பட்டுவிட்டதா என்று அன்புடன் கேட்
1 L_T 6া .
பகவான் அடியார்கள் பிரிவையும் நடந்தவற்றையும் கூறி என்னை இனி அலங்கரிக்கவும், இனிய அமுதை ஊட்டவும், கீதங்களை இசைக்கவும் யார் இருக்கின் ருர்கள் என்று கதறி அழத் தொடங்கிர்ை.
பிராட்டியாரும் கண்ணிர் மல்கி வேண்டிய ஆறுதல் கூறி ஆறிச்சாந்தியுற்ருர்,
சந்திரபாகாநதிக்கரையில்பகவான் அனுப்பிவிட்டுத திரும் பிய யாத்திரிகரிருவரில் பகவான் மறைந்ததைக்கண்டு நாமதே வர் கன்றைப்பிரிந்த ஆப்போன் மயங்கிக் கீழே விழுந்தார்.
 

ஆத்மஜோதி ... 205. வைகாசி இதழ்
ஞானேஸ்வரர் தீர்த்தங்கொண்டு மயக்கந்தீர்த்து @TাঃেLogy@haঠা லீலைகளையும் அவர்புகழையும்விரிவாக விளக்கிக் கூறித்தேற்றி வழிநடந்தார்.
ஞானேஸ்வரர் நாமதேவைப் பார்த்து; பக்தி மார்க்கம் இன்ன தென்றும் அதை எ ப் படி க் கடைப்பிடிப்பதென்று வாழ்க்கை முறையில் வாழ்ந்து காட்டிய உத்தமப்பெரியோய்! நெடுந்தூரம் வழிநடப்பதால் களைப்பு மேலிடுகின்றது. களைப் பும் தூரமும் தெரியாதவண்ணம் இனிய கானத்துடன் பக வான் மீது பண், பாடுவிராயின் நன்ருக இருக்குமே எனக் கூறினர். அதுகேட்ட நாமதேவர் பகவான் நாமசங்கீர்த்தனங் களைப்பாடஎன் நாமறுக்குமா? கரும்புதின்னக் கைக்கூலியா? என்னப்பன் மீது வேண்டிய அளவு பாடுவேன் என உருகிய உள்ளத்துடன் கூறி, ஹரிநாம சங்கீர்த்தனம் பாடிக்கொண்டே ஆனந்தக் கூத்தாடி ஜிப்ளாக் கட்டைகளையும் அடித்தவண் னம் ஞானேஸ்வரர் தம்புராவை மீட்டுக்கொண்டும் ஒடோடிச் சென்றனர்.
நாமதேவரின் வேண்டுகோளின்படி ஞானேஸ்வரர் துற வின் தன்மையையும் அனுஷ்டிக்கும் முறையையும் எடுத்து ரைக்கலார்ை. Χ
கர்மயோகம் துறவு எனும் இரண்டினில் எது உயர்ந்தது என்று ஆராய்வோம். இரண்டும் நன்மையே தருவன. இல் லறத்தானுக்குக் கர்மத் துறவைக் காட்டிலும் கர்மயோ கமே மேலானது. பகைத்தலும் விரும்புதலும் இல்லாதானே நித்ய சந்நியாசி என்று சொல்லப்படுகின்றன். பெருமையுடை யோய் இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தில் நின்றும் விடு படுகின் ருன் , யோக மில்லாதவன் சன்னியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரமத்தை யடைகின்றன். யோகத்திலே பொருந்தித் தூய்மையுற்ருேன், தன்னேத்தான் ஜெயித்தோன், பொறிகளை அடக்கியோன், எல்லா உயிர்களுந்தானேயானவன். தொழில்செய்துகொண் டிருப்பினும் அதில் அவன் ஒட்டுவதில்லை. தத்வம் உணர்ந்த

Page 11
ஆத்மஜோதி 306. வைகாசி இதழ்
யோகி நான் எதனையுஞ் செய்வதில்லை என்று எண்ணுகின்ற னிலை. பார்த்தாலும் கேட்டாலும் ஸ்பரிசத்தாலும், உயிர்த்தா லும், உண்டாலும், நடந்தாலும், உறங்கிலுைம் விழித்தாலும் எந்தக்காரியத்திலும் இந்திரியங்களியங்குகின்றன என்று கருது கிருன் சன்னியாசி.
தொழில்களை எல்லாம் பிரமத்தில் சார்ததிவிட்டுப பற்று தலை நீக்கி எவன் தொழில் செய்கின்றைே அவன் நீரில் தாமரைபோல் பாவத்தால் தீண்டப் பெறுவதில்லை. யோகிகள் பற்றுக்களைத் தொலைத்து ஆன்ம சுத்தியின் பொருட்டாகச் சரி ரத்தாலும் மனத்தாலும் புத்தியாலும் அன்றிச் சும்மா இந்திரியங் களாலும் தொழில் செய்வர். யோகத்தில் பொருந்தியவன் கர்மபயனைத்துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிருன் , யோகத்தில் இனங்காதவன் விருப்பத்திற்கு வசமாய் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகின்றன். தன்னை வ சங்கொண்ட ஆன்மா எல்லாக்கர்மங்களையும் மனதால் துறந்த எதனேயும் செய்வதுமின்றிச் செய்விப்பது மின்றி ஒன்பது வாயிற்கொண்ட உடற்கோட்டையில் இன் புற்றிருக்கின்ருன் அஞ்ஞானத்தால்
ஞானஞ்சூழப்பட்டிருக்கிறது. அதல்ை ஜிவர்கள் மயக்கமெய்
துகின்றன. அந்த அஞ்ஞானத்தை ஆன்மஞானத்தால் அழித் தவர்களுடைய பாவம் சூரியனேட் போன்றதாய், பரம்பொருளை
ஒளியுறக் காட்டுகின்றது. பிரமத்தில் புத்தியை நாட்டி அதுவே
தாமாய் அதில் நிஷ்டையெய்தி அதில் ஈடுபட்டோர் தம்பாவ மெல்லாங் கழுவப்பெற்றேராய் மீளாப்பதம் அடைகின்றனர்.
புறத்தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக் குள்ளே இன்பத்தைகாண்போன் பிரம்மயோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தைப் பெறுகின்றன். புறத்தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன் பத்திற்குக் காரணங்களாகும்.
அவை தொடக்கமும் இறுதியும் உடையன. நாமதேவரே!
அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
சரிரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தா லும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்கவல் லாைே அந்தமனிதன் யோகி. அவன் இன்பமுடையோன் ,

ஆத்மஜோதி ... 20?... வைகாசிஇதழ்
தனக்குள்ளே இன்பமுடையவனுய், உள்ளே மகிழ்ச்சி காண் பவனுய், உள்ளே ஒளிபெற்றவகிைய யோகிதானே பிரம்ம மாய் பிரம்ம நிர்வாணமடைகிருன் இருமைகளை வெட்டி விட்டு தம்மைத் தாம் கட்டுப்படுத்தி எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்கள் ஒழிந்து பிரம்ம நிர்வாணமடைகிருர்கள். விருப்பமும் சின மும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்தி ஆன்ம ஞானிகளா கிய முனிகளுக்கு பிரம்ம நிர்வானம் அருகிலுள்ளது. புறத் தீண்டுதல்களை நீக்கி பிராணவாயுவையும் அபான வாயுவை யும் சமமாகச் செய்துகொண்டு, புலன்களையும் மனத்தையும் மதியையும் கட்டி, விடுதலையிலக்கெனக் கொண்டு, விருப்ப மும் அச்சமும் சினமும் தவிர்த்தவன் முக்தனேயாவன். கர்மத் துறவுடைய ஒரு சன்னியபசியின் தன்மைகளைப் பகவான் அர்ச்சுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளியதைத் தேவரீருக்கு விபரித்தேன்- தேவரீர் அந்நிலையை இன்னும் அடைய வில்லை. அவ்விதம் அடைந்திருப்பின் பரப்பிரம்ம சொரூபி யாய் நிற்கும் பாண்டுரங்கனை விட்டுப் பிரிகின்ருேமேயென வருந்தியிருக்கமாட்டீர் என வேதாந்த வாதங்கள் செய்தும், கீதங்கள் இசைத்தும், இந்திரவிரஸ்த நகரை அடைந்தனர்.
இரு ஒப்பற்ற பக்தர்கள் வருகின்றனர் என்பதைக்கேட்ட
அவ்வூர் வாசிகள், மிகுந்த மகிழ்ச்சியுற்றவராய் அவர்களை
வரவேற்றனர். ஒர் பஜனை மடத்தில் அவர்களைத் தங்க ஏற் பாடு செய்தனர். அம்மடத்தினின்றும் இருவர் தலைமையின் கீழ் ஒர் பஜனை ஊர்வலம் நடந்தது. முதலில் சிலர் ஆரம்பித்த ஊர்வலம் பின்னர் பிரம்மாண்டமாகியது. சிறுகுழந்தைகள் வயோதிக ஆண்கள் பெண்கள் முதலியோர் பஜனையில்கலந் துகொண்டனர். நாமதேவர் பாடும் சங்கீர்த்தனங்களுக்கு இயைய குழந்தைகளும் கரதாளம் போட்டு நடனஞ் செய்தன. மிகுதியால் அனைவரும் மெய்மறந்தனர். சங்கீத மேன்மை ஒருபக்கம் இருக்க நாமதேவரின் கீர்த்தனங்களில் அடங்கியுள் ளமெய்ப்பொருளை யுணர்ந்து அடிக்கடி சிரக்கம்பம்செய்தனர்.

Page 12
ஆத்மஜோதி ... 308... வைகாசிஇதழ்
பசு முதலிய விலங்குகளே நாமதேவர் பாட்டின் சுவையை அனுபவித்து அசைவற்று நின்று அவரையே நோக்கினவென் ருல் இற்றைவரை அவ்வித சங்கீதத்தையே கேட்டிராத அவ் வூர் மக்கள் ஒருவரேனும் போக மனமில்லாதவராய் அமர்ந்தி ருந்தனர். மடத்திலும் மடத்திற்கு வெளியிலும் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இரவு முன்றுமனியாகியும் யாவ ரும் இமைகொட்டாது பஜனை கேட்டிருந்தனர். ஏன் ஒவ்வொ ருவரும் ஒவ்வொரு நாமதேவராய் விட்டனர். பொழுது விடிந் தது. நாமதேவர் பஜனை யை நிறுத்திர்ை. சனங்களும் தம் இல்லங்களை நோக்கினர்.
நித்திய கடன்களை முடித்துக்கொண்டு மீண்டும் மடத்தில் குழுமிவிட்டனர். ஆண் பெண் வித்தியாசமின்றி வந்து கீதங் கள் கேட்டனர். தூயபக்தியால் பரவசமாகும் மக்களிடை வேற்றுமை உண்டோ? பொழுது போனதும் ஞானேஸ்வரர் எண்ணினர், இரவிலும் பஜனை நடத்திக்கொண்டு போ ல்ை மக்கள் தவருது பஜனைக்கு வருவர். தூக்கமின்றி நோய்வாய்ப் படுவர். ஆதலால் இரவு நேரங்களில் பஜ"ன நடத்தலாகாது’ இதை நாமதேவரும் ஆமோதிக்கவே ஞானேஸ்வரர் சனங்க ளுக்கு அறிவித்தார். எப்போதும் பஜனை இருக்கலாகாதா என்று பேராவல் கொண்ட மக்கட்கு இவ்வறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. அவர்கள் மிகுந்த கவலையுடன் வீடு திரும்பினர். பொழுது எப்போ விடியுமெனக் காத்திருந்து காலைக்கடன் முடித்து உணவருந்தி வேகமாக ஓடோடிவருவர். அதற்குள் அவ்விருமகான்களும் மக்கள் வர விற்காகக் காத்தி ருப்பர். ஞானேஸ்வரர் வேதாந்த காலசேஷபஞ்செய்வார். நாமதேவர் பக்தியின் மேன்மைபற்றி 9 TQ Tử G +Lổ, செய்வார். பின்னரும் பஜனை இரவில் பஜனே ஊர்வலம் நடந்தேறும். இவ்விதம் மக்களனைவரும் தத்தம் தொழில்களையும் மறந்தவ ராயினுர், இராஜசேவகர்களுக்கு மரியாதை செலுத்துவதை
 

ஆத்மஜோதி 309 வைகாசிஇதழ்
யும், நாள்தோறும் இராஜசமூகஞ்சென்று அரசனை வணங்கி வரும் முறையையும் மறந்தனர். இராஜசபை பாலைவனம் போலாயது.
அவ்வூர் அரசன் இதல்ை கிலேசமடைந்து மந்திரியிடம் தன்னையும் செங்கோலையும் மக்கள் மறந்திருக்கக் காரணம் யாதென அறிவாயோ என வினவினர்.
அரசே! இவ்வூர்ச்சனங்கள் அரச சேவகர்யாரையுமே வனங்காது நாமதேவர் பஜனை செய்யும் மடத்திற்கு ஒடோடிச் செல்கின்றனர். நாமதேவர் இன் மருைவைேடு இருவாரங்க ளுக்கு முன்னர் நம் நகரத்திற்கு வந்தார். வந்த அன்றே பஜனே செய்யத்தொடங்கிவிட்டார். அவரை எல்லோரும் மகா பக் தன் என்று மதித்து அவரிடம் செல்வதையே நாளாந்தக் கட மைகளில் முக்கியமானதாகக் கொள்கின்றனர். இன்னுஞ் சில நாட்கள் கழித்தால் அனைவரும் பித்தராவார் என அஞ்சு கின்றேன் என் ருர் .
நாமதேவர் விஷயம் அறிந்த அரசன் அவரே இப்போதே பரிட்சை செய்து, கபடமுள்ளவராகில் தண்டனை என்று நிச்ச பித்து ஒர் இறந்த பசுவை நாமதேவர் இருக்கும் பஜனைக் கூடத்திற்கு எடுத்து வரச்சொல்லித் தான் மந்திரிகளு டன் முன்னதாகச் சென்றன். அரசன் வரவை அறிந்த நாம தேவர் வெளிவந்து அஞ்சலிசெய்து உபசரித்து நின்றர், அர சன் இதோ இப்பசு இப்போதுதான் இறந்தது. கன்ருே கத றுகிறது. அதைப் பார்க்கச் சகிக்கவில்லை. நீர் பரமபக்தன் எனக் கேள்வியுற்ருேம், இதை orմն. 13, 邸箭 உண்மை பான பக்தன் என மதிப் போம, இல்லையெனில் கபடன் எனப் பறைசாற்றப்படும், தண்டனையும் அடைவிர் என்றன். அரசன் மொழி கேட்ட நாமதேவர் பிரபோ! அடி யேனைப்பற்றி அதிகமாகக் கேள்விப்பட்டுத் தகுதியில்லாத

Page 13
ஆத்மஜோதி ..., 210... வைகாசிஇதழ்
கெளரவங் தருகின்றீர். அவ்வளவிற்கும் அடியேன் பாத்திரன் அல்லன். இறந்த பசுவை எழுப்பித்தருவதால் அடியேன் பக்தன் என்று ஸ்தாபிக்கப்படுமோ? அந்த முறையை யான் விரும்பவும் இல்லை. என்பிறவி ஈடேறுவதற்கே பக்தி புரிகின் றேன். அரியன செய்வதற்காகவன்று. எனினும் தாயை இழந்த கன்று வேதனையுறும் என்பதற்காகப் பகவானை மன்ற டுகின்றேன். அவன் திருவுள்ளம் போலாகட்டும் என உரைத்து பாண்டுரங்கா! அதைரட்சகா தீனதயாளா! அடி யார்க்கின்னமுதே! அடியேன் நாமம் நிலைநாட்டுவதற்காக அன்று, உமது புகழுக்குப் பங்கம் நேருமே! அதற்காகவா வது இறந்த பசுவை எழுப்பித்தருக. என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்ததும் 'அம்மா’ என்று அரற்றியவண்ணம் பசு எழுந்து கன்றை நாடி ஓடியது. அரசன் நாமதேவர்பாதங் களில் வீழ்ந்து அடியேன் செய்த பிழை பொறுத்தருளக! என்று வேண்டித் துதித்து தன் அரண்மனை திரும்பினுன். பக்தர்களும், பரமஞானியாகிய ஞானேஸ்வரரும் நாமதேவ ரைட் பாராட்டிப் பஜனை செய்து பரவசமார்ைகள்.
பொன்மொழிகள்
யோக சித்தியாலும் காயகல்பத்தாலும் சந்ததமும் இளமையோடிருப்பினும், பூத உடல் எ ன் ருயினும் அழிந்தே தீரவேண்டும். உடல் காலவரையறைக்குட் பட்டதாகும். பிரகிருதியினுலாய யாவும் அழிந்தே தீரும். எதற்குப் பிறப்புண்டோ அதற்கு இறப்பும் அழிவும் உண்டு என்பது நிச்சயம்.
 

ஆத்மஜோதி ... 2 I 1... வைகாசிஇதழ்
m-— அன்றும் இன்றும்
கோழைமனத் தொடு நடுங்கி, என் ஃனக் காத்துக்
கொளக்கருதிச் சிறு நிழற்கீழ்ப் பதுங்கி னேன் அன்(று) ஏழையினேன்; இப்பொழுதோ பேரின் பத்தேன் எழிலலையின் சிகரமென இறுகப் பற்றி,
வாழ்வு நதி தனில் இழுத்துச் செல்வதாலே, மறித்தெதையும் சுழித்தலைத்து மடிக்கும் பொல்லா நீள் துயரப் பாறையிலும், இலகு வாய், என் நெஞ்சமலர் தொத்திமகிழ்ந் திருத்தல் கண்டேன்
முன் பெனது வீட்டினிலோர் மூலை தன்னில், முடங்கிய வா(று), என நரடி வருவி ருந்தின் பண்பிற்குத் தகவிரிவில் லாதென் இல்லம் பலங்குறுகிக் கிடப்பதனை நினைந்து நோ வேன்.
அன்ப! எதிர் பாராப்பே ரின் பத் தால் என்
அகந் திறந்து கிடப்பதனுல் இன் (று) உனக்கும் மன் புவிக்கெ லாமுமிடம் தரத் தகுந்த
மனையென தென் றறிந்துணர்ந்து மகிழு கின்றேன்.
உடம்புக்கே முன் பெல்லாம் கவலை கொள்வேன் ஓயாமல் அலங்கரிப்பேன் வாசம் பூசி!
நடந்திடுவேன் கவனமுடன் நுனிக்கா லா லே; நற்பெரும! இப்பொழுதோ, நனிபே ரின் பத் தடங்காற்ருேன் றெனத் தூக்கில் புழுதி மீது தள்ளியதால், நின் பாதத் தளிரைப் பற்றிக் கிடந்தின்று புரள்கின்றேன் மண்மீ தெல்லாம், கிளுகிளுத்த சிரிப்பொலித்துக் குழந்தை போன்றே!
-X-
(தாகூரைத் தழுவியது) - "பரமஹம்ஸதாசன்'

Page 14
ஆத்மஜோதி ... 2 2... வைகாபி இதழ்
யோக ஆசனங்கள் (S. A. P. சிவலிங்கம்)
55. கலப்பை ஆசனம்: (பழகும்விதம்)
(குறிப்பு:- இந்த ஆசனம் ஐந்துவிதமாகப்பிரிக்கப்பட்டுள் ளது. ஆனல் முக்கியமாக ஒரு நிலைக்குமட்டும் சித்திரம்கொ டுத்து மற்ற நான்கு நிலைகளுக்கும் விளக்கம் எழுதப்பட்டுள் ளது. சாதகர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.)
காற்ருேட்டமானதும், சுத்தமானதுமான இடத்தில் சமதள விரிப்பின்மேல் கால்கள் இரண்டையும் முன்பக்கம் நீட்டி மல் லாந்து படுத்துக்கொள்ளவும். உள்ளங்கைகள் இரண்டையும் விரிப்பில் விலாப்பக்கமாய் கீழே வைத்துக்கொள்ளவும்.
பின் மூச்சை உள்ளுக் கிழுத்து அ L க் இ க் கொ
ண்டு இரண் டு கா ல் களை யு ம் சேர்ந்தாற் போல் தொ  ைட யு டன் மேல்தூக்கி, பின் இடுப்புடன் மேல் தூக்கவும். இச்சமயத்தில் மூச்சைச் சிறிது மெதுவாக வெளி விட்டுக்கொண்டே கால்களிரண்டையும் தலைக்குப் பின்பக் கம் கொணர்ந்து தரையில் கால்களின் விரல்கள் நன்குபடியும் படி தொட்டு, கால்களிரண்டும் சேர்த்தே வைத்திருக்கவேண் டும். முதுகுநன்கு வளைந்திருக்கவும்.
கழுத்து, தலை, தோள்பட்டை முதலிய பாகங்கள் நன்கு ழே படிந்திருக்கவேண்டும். இந்நிலையில் மூச்சை உள்ளி ழுத்தும், வெளிவிட்டும் சிறிது செய்து பின் ஆசனத்தைக் கலைப்பிக்கவும். இது முதல் பாக கலப்பை ஆசனமாகும்.
 
 

ஆத்மஜோதி ... 313. வைகாசி இதழ்
கால்களிரண்டும் மேல் தூக்கி பின்பக்கம் கால்விரல்கள் கீழே தொட்டிருந்து முழங்கால்கள் இரண்டும் மூக்குக்கு நேராய் இருக்கவேண்டும்.
இவ்வாறு முதல் விதம் செய்தபின் ஆசனத்தைக் கலைத் துப் பின் இதே நிலையில் அதாவது கால்களிரண்டையும் பின் பக்கம் தலைக்குப்பின் கொணர்ந்து பாதவிரல்கள் நன்கு கீழே தொட்டிருக்கவேண்டும். கைகள் இரண்டும் விலாட்பக்க மாய் உள்ளங்கைகள் கீழே படிந்திருச்கவேண்டும். முழங் கால்கள் இரண்டும் நெற்றிக்கு நேராய் இருக்கும்படி வைத்தி ருக்கவும். இந்நிலை இரண்டாவது கலப்பை ஆசன நிலை யைக் குறிக்கும். பின் இந்தப்பாக ஆசனத்தைக் கலைத்து அடுத்த பாகத்தைச் செய்யவும்.
இவ்வாறே கால்களிரண்டையும் தலைக்குப் பின்பக்கம் கொணர்ந்து கால்களின் விரல்களைக் கீழே தொடும்படி செய்ய வும். சுவாசம் உள்ளிழுத்தும், வெளி விட்டும் செய்யவும். கைகளிரண்டையும் தலைக்குப் பின்பக்கம் கொணர்ந்து கால்க ளின் விரல்களைத் தொடும்படி வைக்கவும். முழங் காலைச்சிறிது தலைக் குப்பின் பக்கம் தள்ளிவைக்கவும். முதுகு, இடுப்பு முத லிய பாகங்கள் நன்கு வளைந்திருக்கவேண்டும். இப்பாகம் மூன்ருவது கலப்பையாசனமாகும். இதைச்செய்து ஆசனத் தைக் கலத்து அடுத்த பாகத்தைச் செய்யவும்.
மல்லாந்து படுத்துக் கால்களிரண்டையும் தலைக்குப்பின் பக்கம் கொணர்ந்து கால்களின் விரல்களைக் கீழே தொடும் படிவைக்கவும். பின் கைகளிரண்டையும் தலைக்குப் பின்பு றம் கொணர்ந்து கால்களின் கட்டைவிரலைப் பிடித்துக்கொள் ளவும். பின்பக்கம் நீட்டியிருக்கப்பட்ட கால்கள் விறைப்பா யும், வளையாமலும் இருக்கவேண்டும். இந்தப்பாகம் நான்கா வது கலப்பை ஆசனமாகும். இந்த ஆசனம் செய்து முடிந்த பின் ஐந்தாவது பாகத்துக்கு வரவும்.

Page 15
ஆத்மஜோதி , , 3 14 , , , வைகாசிஇதழ்
இவ்வாறே மல்லாந்து படுத்து கால்களை மடக்கி விறைப் பாய் நீட்டிப் பின் பக்கம் தலைக்குப் பின்  ைல் கால்க ளின் விரல்கள் தொடும்படி செய்து, கைகளிரண்டையும் மடித்து தலைக்குப்பின்னுல் கோர்த்துக் கொள்ளவும். தாடை நன்கு மார்பில் பொருந்தியிருக்கவும். முதுகு, மிருஷ்டபாகம் யாவும் நன்கு வளைந்து இருக்கவும். இந்நிலை ஐந்தாவது கலப்பை ஆசனமாகும். இந்நிலைச் சித்திரம் 55. பார்க்கவும் இடுப்பிலிருந்து கால்கள்வரை வளையாது நேராய் இருக்கவும் சுவாசம் சமநிலையில் தேவைக்குத் தக்கவாறு இருந்தபின் ஆசனத்தைக் கலைக்கவும், தும்மல், கொட்டாவி, பலவித எண்ணங்கள், பேச்சு முதலிய பலகுனங்களை ஆசனங்கள் செய்யும் சமயம் கண்டிப்பாய் விட்டுவிட வேண்டும்.
ஆரம்ப சாதகர்களுக்கு-கற்று ஆரம்பத்தில் கடினமான ஆசனமாகும். ஆகவே ஆசனம் செய்யும் சமயம் பத்மாச னம், பத்தபத்மாசனம், குக்குமாசனம், உத்திதஹஸ்த பத்மா சனம் முதலியன செய்தும் கால்கள், கைகள் இவைகளை நீவிவிட்டுக்கொண்டும் செய்யவும், ஆரம்பத்திலேயே பூரா வும் வந்துவிட்டால் நலமென பலர் எண்ணுவார்கள். இது முடியாத காரியம். ‘சிறிதெனும் பாறை வளர்ந்து பெரிதெனும் கோட்டையைக் காக்கும்’ எனும் வாக்கியபடி சிறிதுசிறிதாகப் பலநாட்களில் பயிற்றலாம். சிலருக்கு இரண்டுகால்களையும் மேல்தூக்கி, தலைக்குப் பின் பககம் கொணர்ந்து தொட இய லாது. இடுப்பு, கால்களின் மூட்டு இவைகள் நோவெடுக் கும். ஆகவே இதுவரை பழகியதுபோதும் இதையும் செய்ய வேண்டுமா? எனப்பலருக்குக் கேள்வி எழலாம்- வருடம் முழுவதும் உணவு குறைவில்லாது உண்னு கின் ருேம். ஆனல், போதும் என்ற மனம் கிடையாது. 'போதும் என்ற மனம் புவியெலாம் கட்டியாளும்’ எனும் வாக்கியப்படி மனந் தளராதீர்கள். 'யாவும் செய்தே தீருவேன்' என உறுதி கொள்ளுங்கள். வசதி பட்டால் மாலையிலும் வயிறு காலியா யுள்ள சமயத்திலும் யோகாசனங்களைச் செய்யுங்கள் செய்து அவயவங்களை இளக்கிக்கொள்ளுங்கள்.

ஆத்மஜோதி ..315. வைகாசிஇதழ்
முரட்டுப் பிடிவாதமாகவும் செய்யாதீர்கள்! மனமே யாவும் உன் நன்மைக்காகவே, 'உடல்வளைந்தால் ஊக்கம்
வளரும்’ என மனத்திற்கு பல உற்சாகம் கொடுத்து செய்து
வாருங்கள். அல்லது சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வளி க்கும் பக்கம் தடவி விேவிடுங்கள்! இவைகளெல்லாம் செய் தபின் வலியும், சோம்பலும் ஏற்படாது.
கலைக்கும் விதம் தலைக்குப்பின் தொட்டிருக்கும் கால்விரல்களை எடுத்து சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, கால்களிரண்டையும் நேராய் மேல் தூக்கி கீழே கொண்டுவந்து வைக்கவும். கை க%ளயும் விலாட்பக்கமாய்க் கொண்டுவந்து கீழே வைத்துச்சி ரம பரிகாரம் செய்து கொள்ளவும். கால்களைக்கலைத்து மேல் தூக்கும் சமயம் தலை மேலெழும்பக் கூடாது. சுவாசமும் உள்ளடக்கியே வைத்திருக்கவும்.
கால்களைக் கீழே கொணர்ந்து, கைகளை எடுத்து கீழே வைத்தபின்பே சுவாசம் சவுகரியம் போல் செய்யவும். ஆண், பெண், அனைவரும் செய்யலாம்.
பலன்கள் - கழுத்து, மார்பு, புஜம், கைகள், புஜம், கைகளின் மூட்டு இவைகளுக்குப் புத்துணர்ச்சியையும் கொ டுக்கும் முதுகெலும்பு, விலா எலும்பு, கால் எலும்புகள், வலு வடையும், கால்விரல்கள், நரம்புகள் அதி துரிதமாக வலுவ டைந்து நல்ல முறுக்கேற்றும்.
முதுகுவலி இடுப்புவலி பிந்து சம்பந்தமான வியாதிக ளைக் குணப் படுத்தும். உடலை யெளவனமாக்கும். முள்ள ந்தண்டை இளமைப்படுத்தும். நரம்புப்பிடிப்பை சொஸ்த் தப்படுத்தும். அஜிரணத்தைப் போககி ஜிரண சக்தியை அதி கரிக்கும். எப்பதார்த்தம் சாப்பிட்டாலும் நன்கு ஜினிக்கக் கூடிய சக்தியை யுண்டுபண்ணும். கனுக்கால்களுக்கும், கழுத்துக்கும் நல்ல ரத்தோட்டத்தைக் கொடுக்கும்.
பெண் மணிகள் விரும்பிச் செய்யக் கூடிய ஆசனம். ஆல்ை மாதவிடாய், ருது, கெர்ப்பகாலம், ஆப்பரேசன் செய்தகாலம் முதலிய நாட்களில் தேக உடலைப் பொறுத்து தக்க யோகாசிரியன் மூலமே செய்யவும்.
இந்திய தேசத்தமிழ் நாட்டில் குடியானவர்கள் வயலில் ஏர் உழுவார்கள். அவர்கள் உழுவதைப் பார்த்தால் இந்த ஆசனத்தைப் போன்றிருப்பதால் இந்த ஆசனத்திற்குப் பெயர் கலப்பை ஆசனம் என பெயர் வழங்கலாயிற்று. மற்றும் இந்த ஆசனத்திற்கு ஹலாசனம் எனவும் பெயருண்டு.

Page 16
ஆத்மஜோதி 。2量6,,, வைகாசி இதழ்
உத்த மனே கேள்
(றுநீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள்) 'சித்தம் ஸம் ஜாயதே ஜென்ம் ஜராமரன காரணம” (ஜெனன மரணங்களுக்கு மனமே காரணம்)
--K-
அலையும் மனதை அகத்தடக்குமவனே சரியை கடந்தோனும் அலையும் மனதை அகத்தடக்குமவனே கிரியை முடித்தோனும் அலையும் மனதை அகத்தடக்குமவனே யோகதற்பரனும் அலையும் மனதை அகத்தடக்குமவனே ஞானி அதி சூரன்
சுகதுக்கங்களுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் காரணம் மனம். நண்பனுகவும் பரமவைரியாகவும் இருக்கின்றவனும் மனமேதான். காம குரோதாதிகளை உண்டுபண்ணுகின்றவ னும் அவைகளை அழித்தொழித்து அகண்டாகார சச்சிதானந் தப் பேரறிவை கொடுக்க மூலகாரணமாயிருப்பவனும் மனமே தான். மனம்தான் சங்கர்ப்பத்தால் சராசரங்களை உண்டாக் கும், அழிக்கும். மனமில்லையால்ை நீயில்லை. நீயில்லாத இடத்தில் ஆசாபாசங்களே து? ஆசாபாசங்கள் அற்றநிலையே மோனநிலை. நெறியான வாழ்வுக்கு மன அடக்கமே முக்கியம். மனம் விஷயாதிகளால் பெருகிக்கொண்டுபோகுமளவும் சுபீட் சமடையலாமென்று கனவிலும் எண்ணுதே. அலைவதும் நிலை யற்றது மாகிய மனதை ஒரு முகப்படுத்தக் கூடியவனே பெரு வாழ்வு வாழத் தகுதி புள்ளவன் .
பெளதீக விஞ்ஞானம் நல்லது. அது ஒருசில சுகங்களைத் தரலாம். சந்திர மணடலத்துக்கும் கூடில்ை ஏனைய மண்ட லங்கட்கும் உன்னை உயிருடன் அழைத்துச் செல்லக்கூடும். ஆல்ை உன் ஆணவ மலங்களை அகற்றிப் பரம சாந்தியைத்தர விஞ்ஞானக் கருவிகளால் முடியுமா? மனம் உனக்கு வசப்ப டாதகாலம் வரையிலும் மெய்யின்பமேது? உலகைச் சீர்திருத்த உன் ல்ை முடியாது. ஆல்ை உன் மனதைச்சீர்திருத்த உன்னல்
 

ஆத்மஜோதி - 217. வைகா6) இதழ்
நிச்சயம் முடியும். "மகத்" என்றழைக்கப்படும் அகண்டா கார மனதின் ஒரு சிறு பகுதியே உன் மனம். அதை அடக்கி யாளும் பட்சத்தில் ஏனேயமனங்களும் உனக்கு எளிதில் வசப் பட்டு நிற்கும். மனதின் அடக்கமே மனவலிமை, மன வலி மையால் ஆகாததென்ன?
மனம் அடங்குமிடத்திலுண்டாகும் பேரானந்தம் விபரிக்க முடியாதது. புலன்களுககு அதிதமானது. தெளிந்த அறி வால் அனுபவித்தறியவேண்டியது. மெய்யுணர்வால் உணரக் கூடியது. உனது கஷ்ட நஷ்டங்களுக்கு மனமே காரணமா ல்ை அதை ஒருமுகப்படுத்தி நல்வழியில்செலுத்தவேண்டியது தவிர்க்கமுடியாத உனது கடமையல்லவா? விதியைப் பழித் தும், கிரகங்களைக் குறைகூறியும் வீண் காலம் கடத்தாதே. அம்பியாசத்தில் ஒரு முகப்பட்ட மனதின் வலிமையால் இவை களின் தோஷம் அழிந்தொழிந்து போகக் கூடியவை. ஆகை யால் மனதை ஒரு முகப்படுத்தும் சிறந்த அப்பியாசியாக இப் பொழுதே உன்னை மாற்றிக்கொள். விவேகியான நண்பனே! மேற்கொண்ட விஷயங்களை ஆழ்ந்து சிந்தனை செய்தபின் ஒரு முடிவுக்கு வந்து கீழ்க்கானும் முறையை உறுதியுடன் பயிலத் தொடங்கு விரைவில் நீ இதன் அற்புதமகிமைகளை நேரிலே அனுபவித்தறிவாய். இது உறுதி.
சாத ைமுறை 采...,... 来
மனதை ஒரு முகப் படுத்தப் பல உபாயங்களும் பல விதிகளும் உண்டு. அதில் சிறந்ததும் எளிதில் அப்பியாசிக் கக் கூடியதும், ஆல்ை விரைவில் பலன் தரக்கூடியதுமான முறையைக் கீழே தருகின்ருேம். இது அனுபவத்திற் சிறந்தது. 'உன்மன் னிய வியாப்தயே சீக்கிரம் ப்ரூதியானம் மம் சம்மதம்' அதாவது உன்மணி (பேரானந்தநிலை) என்னும் உயர்நிலையைச் சீக்கிரமாக அடைவதற்குப் புருவ மத்திய தியானமேசிறந்த தென்றுயோக சூத்திரம் இயம்புகின்றது. புருவமத்தியதியானம் முழு முட்டா?ளயும் அதிவேகத்தில் உயர் நிலைப்படுத்துமானுல் விவேகியின் விஷயத்தில்சொல்லவேண்டுமா?

Page 17
ஆத்மஜோதி ... 318. வைகாசி இதழ்
ப்ரூவோற்மத்தியே சிவஸ்த்தானம் மனஸ் தத்ற விலியதே.
ஆத்ம சொரூபனுய சிவத்தின் ஸ்தானம் புருவ மத்தியாகை யால் மனதை அங்கு அடக்கு. மனம் எளிதில் அடங்கக் கூடியதும் அங்குதான்.
பிரம முகூர்த்தத்தில் ஈஸ்வர சிந்தையுடன் துயிலெழுந்த பின், நித்திய கடன்களை முடித்து கை, கால், முகம் நன்கு சுத்திசெய்து உடலாரோக்கியத்துக்காக யோகாசனப் பயிற்சி கள், அல்லது ஏனைய உடற்பயிற்சிகளை மன ஒருமையுடன் செய்யவும். அதற்குப்பின் ஸ்நான ஞ் செய்து தூய ஆடை அணிந்து (ஆடை மிக லேசாக இருப்பது நன்று) பூஜை அறை யில் சென்று குத்து விளக்கேற்றி வைக்கவும். விளக்கு நன்கு சுடர் விட்டெரியட்டும். முடியுமா ல்ை நறுமணம் வீசும் மலர் களாலும, தீப தூபத்தாலும் உனது இஷ்டதெய்வத்திற்குப் பூஜை செய்தபின் உலக சாந்திக்கும், உனக்கே சாந்திக்கு மாக மனமுருகிப் பிரார்த்தனை செய். பிரார்த்தனையில் வேறு எதையுங்கலக்காதே. ஒருசில தெய்வீகப் பாடல்கள், அல்லது தேவாரதிருவாசகத்தில் இரண்டொன்றைக் கருத்துடன் படி பின் பரிசுத்தமான ஆசனம் போட்டு (மான் தோலும் அதற்கு
மேல் வெள்ளை விரிப்பும் நல்லது) அதில் எளிதில் சுகமாய்
அமர்ந்திருக்கக் கூடிய ஆசன மொன்றில் அமர்ந்திரு. தலை முதுகு நேராக நிமிர்த்திவை, இப்பொழுது மனதை வெளி விஷயாதிகளிலிருந்து மெதுவாக உள்முகமாகத்திருப்பு, சிறிது நேரத்து முயற்சியால் இதுகை கூடும். இத்துடன் கண்களை யும் முடிக்கொள். உலகவிஷயங்கள் எதையும் என ேைத. அசைவற்றுக் கெம்பிரமாக வீற்றிரு. இதன்பின் உன் உள் ளும் புறமும் சுடர் விட்டெரியும் பிரகாச மொன்றிருப்பதாக நன்கு பாவனை செய்து சிறிது நேரம் அந்நிலையில் இரு. உடலைப் பற்றியும மூச்சைப் பற்றியும் நினையாதே.
இந்நிலையில் படிப்படியாக உன் மனதைப் புருவ மத்தி யில் கொணர்ந்து நிறுத்து. அங்கே ஒளிப்பிழம்புபோல் ஒரு சிறிய பொருள் கொழுந்து விட்டெரிகிறதாகப் பாவனை செய்து
(20 ம் பக்கம் பார்க்க)
ή
 

உத்தமனே கேள் என்னும் தொடர்ச்சியை மறுபக்கம் பார்க்க
(219 ம் பக்கம்)
விதி வலிது
உலகில் உள்ள் சகல ஜீவராசிகளும், மனிதன் உள்பட விதிக்கு உட்பட்டுத்தான் நடக்கவேண்டும் என்பது சான்றேர் தெரிவித்த உண்மை. அவ் விதியானது அவனவன் செய்த புண்ய பாபங்களுக்கு ஏற்ருற்போல் ஆட்டிவைக்கிறது. மனி தன் தன்னுடைய மதியில்ை புதிய ஆச்சரியகரமான பொருள் களைக் கண்டுபிடிக்கலாம். ஆல்ை, விதியின் முன்னே மதி மழுங்கிப்போகிறது. இதற்கு இராமாயணம், மஹா பாரதம் ஆகியவைகளையே திருஷ்டாந்தமாகக் கொணடு பார்ப்போமா ல்ை உண்மை விளங்கும்.
பூருமந் நாராயணன், உலகினைக் காக்கவும், துஷ்டநிக் ரஹ, சிஷ்டபரிபாலனம் செய்யவும், பூறுநீ இராமனுக உலகில் அவதரித்தார். அயோத்தியை விட்டுச்சீதையுடன் வனவாசம் செய்யும் காலத்தில், பொன்மயமான ஒர்மான் அவர்கள் முன் னேதுள்ளி விளையாடி ஓடிவிடுகிறது. தனது மனை வி யி ன்
வேண்டுகோளுக்கிணங்கி, மானேப்பிடித்துவர இராமன் சென்
ருர், ஆல்ை, சூழ்ச்சியால் சீதை அபஹரிக்கப்பட்டாள் என் பதை திரும்பியவுடன் காண்கிருர், பொன் மயமான மான் ஒரு மாயை, ஏதோ பொல்லாங்கு அதில் உள்ளது என்று பூரீஇரா மனுக்குத் தெரிய நியாயமில்லையா? மதியை உபயோகப்படுத் தியிருந்தால் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆணு ல், விதி யாரைவிட்டது. விதி பீடிக்க ஆரம்பித்தவுடன், மதியும் பிடிக் கப்படுகிறது.
பெளலஸ்தியணுகிய இராவணனுக்கு, அன்னியர் மனைவி யைத் தூக்கிச்செல்வது, பெரும் பாபம் என்று தெரியாதா? விநாச காலம் வந்து விட்டதால், இராவணேஸ்வரனுக்கும் புத்தி மழுங்கிவிட்டது.
(328 ம் பக்கம் பார்க்க )

Page 18
ஆத்மஜோதி ...319... வைகாசிஇதழ்
அதில்மனதை ஒருநிலைப்படுத்தி, மனக்கண்ணுல் பார்த் தவண்ணம் இருப்பாயாக. இப்பொழுது மனம் அடிக்கடி கலைந்து உலக விஷயங்களை எண்ணத்தொடங்கும். விடாதே உற்சாகத்துடன் மறுபடியும் புருவ மத்தியிலிருக்கும் ஒளிப்பி ழம்பையே தியானிக்க முயற்சிசெய். தொடக்கத்தில் அதிக நேரம் பயிற்சி செய்யாதே. படிப்படியாக நேரத்தைக் கூட்டி வருவது நலன் தரும். உடல் மனுேசக்திக்கு மீறிப் பயிற்சி செய்ய வேண்டாம். நிதானமாகப்பழகு. சிறிது சிறிதாகப் பயிற்சிக்காலத்தைப் பெருக்கி ஒரு மணித்தியாலம் வரையிலும் இடையூறேது மின்றி சுகமாகத் தியானிக்கப் பழகு. உடலு ணர்வு முற்றிலும் மறக்கும் வரையிலும் தியானத்தில் ஆழ்ந்து மூழ்கிவிடு. தியான காலத்தில் உலக எண்ணங்கள் பலதொல் லைகள் கொடுக்கும். ஒழுங்காக அப்பியாசம் செய்து வரும் பொழுது எல்லாக்கோளாறுகளும் தாமாகவே அழிந்தொழிந்து விடும். வரும் இடையூறுகளை விவேகத்தால், நற்சிந்தனே யால், சத்சங்கத்தால், உறுதியுடன் தவிர்த்துக்கொள். மனம் சிலகாலம் சோர்வடைந்து தியானத்தில் விரக்தியை உண்டாக கக்கூடும். பயப்படாதே. தளராநெஞ்சுடன் அப்பியாசம் செய்து கொண்டுவா. விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்து கொண்டுவரும்பொழுது மனதின் அலைகள் தானகவே அடங்கி விடும். இவவிதம் ஒரு மாத காலம் உறுதியுடன் இரண்டுவேளை யும் முறைதவருமல் அப்பியாசம் செய்து வருவாயானுல் வியக் கத்தக்க மாறுதல்கள் பல காண்பாய். இடைவிடாத தியானப் பயிற்சியால் மன ஒருமையும் வருணிக்கமுடியாத ஆந்தநிலை யும் வந்தெய்தும். தியானத்தைக் கலைத்தபின் உடனடியாக எழுந்து செல்லாதே. மெதுவாக ஆசனத்தைக்கலைத்து கொஞ் சநேரம் அந்நிலையில் இருந்து தியான சுகத்தைப்பற்றி விசாரம் செய்து இறைவணக்கத்துடன் எழும்பிச் சென்று ஏனைய கடமைகளைச் செய்யத்தொடங்கு.
சத்துள்ள சாத்வீக உணவாலும், தைலஸ்நானத்தாலும், உடலே நன்கு குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள். ஊண், உறக்கம், ஒய்வு, விழிப்பு, இவைகளே மித மாக ஒழுங்குபடுத்திக்கொள். வீரியத்தை வீண் விரயம் செய் யாதே. சத்தியம், தயை, கருனை, இவைகளை வளர்த்துக்

ஆத்மஜோதி ... 230... வைகாசி இதழ்
கொண்டுவா. அன் பின் இலக்கணமாக வாழ முயற்சிசெய். தூய்மையேவடிவெடுத்தவகை இரு, ஆழ்ந்ததியானம் கைகூ டும் பொழுது, எல்லாக்கஷ்டநஷ்டங்களும் உன்னை விட்டக லும். உன்னிடமிருந்து பரமசாந்தியின் அலைகள் நானு திசை களிலும் பரவத்தொடங்கும். நடையுடை பாவனையில் எளி மையும், அடக்கமும், பணிவும், உண்டாக்கும்.
உன் இஷ்ட தெய்வத்தின் தெரிசனம் அடிக்கடி கண்டு களிப்பாய். நிரந்தரமான சாந்தி, சந்தோஷம், ஆரோக்கியம் இவைகள் தியான வலிமையால் கைகூடும். நீ பழகும் ஜனங் களிடத்தில் வலிமையுள்ளவனுகவும், அதிக செல்வாக்குள்ள வகைவம் இருப்பாய். இனிமையான குரலும், அழுத்தந்திருத் தமான பேச்சும், தியானத்தால் கைகூடும், மிகுந்த நன்மைக ளாகும். இறுதியில் நீ சர்வ துக்கங்களினின்றும் விடுதலைய டைந்து பரமசாந்தியில் லயித்திருப்பாய். செல்வா! உலகின் அரிய சுகங்களனைத்தும் உன் காலடியில் வந்து குவிந்தாலும், நீ பூமண்டலத்தின் சர்வாதிகார நிலைக்கு உயர்ந்தாலுங்கூட, மனம் உள்ள டங்கிப் பரம் பொருளைச் சார்ந்து நிற்காத காலம் வரையிலும் மெய்யின்பம் காண முடியாதென்று அன்புடன் ஞாபகமூட்ட விரும்புகின்றேன். இன்றைய உலக நிகழ்ச்சிகளை மனத்தெளிவுடன் நன்கு சிந்திக்கும் பட்சத்தில் இது நன்கு புல குைம். ஆயிரம் ஆண்டுகள் ‘புன் மகய்ை வாழ்வதைவிட ஒரு நிமிஷம் புலனடக்கம் பெற்ற நன்மகனுக' வாழ்ந்தொழிவது சாலச்சிறந்ததல்லவா? அன்பனே! இன்பம்வெளியுலகிலில்லை. அது தியானத்தால் உன்னுள்ளே ஆழ்ந்து மூழ்கி எடுக்கவேண் டியவெண் முத்து. அதில் எவ்வளவு சாந்தி சமாதானம், ஒய்வு. உத்தமனே! நீ இவ்வழியில் உறுதியுடன் சென்று தியான முதிர்ச் சியால் அல்லலறுத்து சுகம் பெறுக மகனே.
"சர்வேஷாம் பூர்ணம் பவது'
(திரு. திருமதி. எஸ். வையாபுரிநாதன்)
, *

Page 19
ஆத்மஜோதி ... 233... வைகாசிஇதழ்
(விதி வலிது தொடர்ச்சி) - மஹா பாரதத்தைக் கவனித்தால், விதியின் வலிமை நன்கு புலப்படும். தரும புத்திரன், தம்பிமார்களுள் மூத்த வன், சாஸ்திரம். வேதம் முதலிய வித்தைகளில் கரைகணட வன், இவைகளுக்குச் சிகரமாக அவன் நற்குணம் நிறைந்த வகை விளங்கினன். இவ்வளவு சிரேஷ்டனுக இருந்தும், துரியோதனனுடன் சதுரங்கம் ஆட சம்மதித்தான் தருமபுத் திரன். பகவான் விதுரர், சதுரங்கத்தின் கெடுதலைப்பற்றியும் அது ஆட்டம் ஆடும் நபரின் மனத்தை வெறிபிடிக்கச்செய்யும் என்றும், துரியோதனுதிகளுடைய கபட எண்ணத்தையும் எடுத்துச் சொல்லியும், கேளாமல் சதுரங்கம் ஆடும் மாளி கைக்கு விரைகிருன் தருமபுத்திரன்;
விளையாட்டாக ஆடிய ஆட்டம், விபரிதமாக வளர்ந்து தருமபுத்திரன், தன் சொத்துக்களையும், ராஜ்பத்தை பும் இழக் கிருன். தன் மனைவியைக் கூட வைத்து, ஆடும் அளவுக்கு மதியை இழக்கிருன் தருமபுத்திரன். விதியின் விளையாடல் கொடிது என்பது தெரிகின்றது.
அவதார புருஷர்களுடைய நிலைமையே இப்படி இருக்
குமால்ை, உலகில் கஷ்டங்கள் அனுபவிக்கவே பிறக்கும்
மானிடர்கள் நிலைமையைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை.
நமது புண்ய பாபங்களுக்கேற்றபடி, விதிமனிதனைப் பீடிக்கிறது. விதியினுல் ஏற்படும் கஷ்டங்களை ஒரளவுக்குக் கட்டுப்படுத்த ஈசுவர பக்தியி ல்ைதான் முடியும். பக்தியின் மூலம் ஏற்படும் தெளிவான ஞானத்தின் மூலம் உலகினைப் பார்த்தால், விதியின் கஷ்டங்கள் புலப்படாது என்பதே Quirfi யோர் உபதேசம். ஆகவே, அச்சிறந்த உபாயமான ஈஸ்வர பக்தியின் மூலம் ஞானம் என்ற பலத்தை மானிட அதிகாரிகள் பெறுவார்களாக,
M. மஹாலிங்கம்.
சி

瓣
ལྔ
ஆத்மஜோதி ... 338... வைகாசிஇதழ்
உருளும் சக்கர வேகத்தைக் கண்டு உலகைத் துறந்தார்.
(சுவாமி நிர்மலானந்தா - ரிஷிகேசம்)
J.Lổ தன் னேந்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றிவருகிறது. அதுபோல் உலகில் அணுமுதல் அண்டம்வரை எல்லாம் சுற்றிக்கொண் டேதான் அருக்கின்றன. சிவனும் தாண்டவம் ஆடிக்கொண்டே தான் இருக்கிருர், இன்றைய விஞ்ஞான ரீதியிலுள்ள சகல யந்திரங்க ளும் ஒரு சக்கரச் சுழல் மூலம் தான் சுற்றி இயங்குகின்றன.
நம்பிறவிப் பெருங்கடலும் பொங்கி அலையும் ஆழ்கடல் போல் அலைமோதுகிறது, இந்தப் பிறவிக்கடல் விட்டு கரைஏறவேதான், பலஞானிகள் பலவழிகள் வகுத்து, நாம் இனிப்பிற்வாதிருக்க அரிய உபதேசங்கள் செய்துள்ளார்கள். நாமும் படிக்கிருேம்; கேட்கி ருேம், ஆனல் அனுபவத்தில் கொண் டுவர முடிவதில்லை. அப்படி முயற்சிப்பவர் ஒருவர் இருவர்தான் பிறவா வாழ்வை எய்துகிருர்கள்.
வட இந்தியாவில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 16 வயது நிரம்பிய ஒரு வாலிபன் இருந்தான். அவன் இயற்கையாகவே பல 5ற்குணங்
கள் அமையப்பெற்றவன் . சிறந்த விவேகியுங்கூட. ஒரு தாய்
கோதுமை மா அரைத்து வரும்படி மைந்தணுகிய அவ்வாலிபனை அனுப்
பினள். அந்த வாலிபன் கோதுமையை எடுத்துக்கொண்டு மா அரைக்
கும் இயந்திரத்திற்குச் சென் மூன். அங்கு அந்த இயந்திரத்தை இயக்
குவதற்காக பெரியதோர் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. அச்சக் கரத்தையும் அதன் சுழற்சியையும் வாலிபன் கூர்ந்து நோக்கினன்.
வாலிபனுடைய மனதும் சுழலத்தொடங்கியது. இந்தக் கோது
மைமாவுக்காக இந்தச் சக்கரம் இவ்வளவு வேகமாகச் சுழலுமானல்
இந்தப் பிறவி மாவாக்கப்பட எத்தகைய வேகத்தில் ம்ாயாசக்கரம் சுற்
றிக் கொண்டிருக்கும் என்று துடித்தார். இந்தச்சமயமே நாம் விடுப
டாவிட்டால் நம்மையும் பிறவிச்சக்கரம் சுற்றிச் சுற்றிப் பலபிறவிக ளில் பிறக்கச்செய்யும் என்று ஞான விசாரம் பிறந்தது. அரைத்தமா

Page 20
ஆத்மஜோதி 324 வைகாசி இகழ்
வுடன் அன்னேயிடம் ஓடினர். அன்ஆனயே இயந்திரத்தின் சுழலும் சக்கரம் இன்று எனக்கொரு படிப்பனையைக் கற்றுக்கொடுத்தது. பிறந் திறந்துழலும் இந்த உலகினில் இனிதான் இருக்க விரும்பவில்லை. பிறப்பில்லாப் பெரு வீட்டைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். என்னத் தேடாதீர்; எனக்காக வருந்தா தீர், என்று தாயின் மறு மொழிக்குக் காத்திராது புறப்பட்டுவிட்டார். இந்தச்சணமே தப்பி ணுல்தான் தப்பமுடியும். இத்தகைய வைராக்கியமும் முயற்சியும் யாரிடத்து உண்டாகின்றதோ? அவரைத்தேடி ஆட்கொள்ள ஆண்
டவனே மானிட உருத்தாங்கி வருகின் ருர்,
குருவாக்கில் உடல் உணர்வு இழந்து உடம்பில் உத்தமனேக்காண் பவர் பலர் இருக்கிருர்கள். ஒடிக்கொண்டே இருக்கும் புகையிரதத் தில் 'திருடர்கள் ஜாக்கிரதை' என்ற வசனம் எழுதப்பட்டிருப்ப தைக்காணலாம். அதைக்கண்ணுற்ற விவேகிகள் தம்முள் இருக்கும் ஆத்மஞானப்பொக்கிஷத்தைத் திருடமாயாவிகள் வருவார்கள் என்று சிந்தனையைச் சிவன் பால் திருப்புவர். அறிய விரும்புபவனுக்கு இயற் | කාණ ஒவ்வொரு செயலிலும்கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
; பொன் மொழிகள் :
நாடகமேடையில் பெண் வேடம் பூண்டு கடிக்கின்ற ஆடவ இனப் பெண் என R&னத்தவர்கள் மயங்குகிருர்கள். அவனைப் புருஷனென அறிந்தவர்கள் மயங்குவதில்லை. அதேபோல் பிர பஞ்ச விஷயங்களின் உண்மையை உணர்ந்த ஞானிகளை அவ்வி ஷயங்கள் பாதிக்கிறதில்லை. அஞ்ஞானிகள்தான் பாதிக்கப்படு கிருர்கள்.
 
 

* வாய்வுசூரணம் :
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்புவாய்வு, மலக் கட்டு, மலப்பந்தம், அ'  ைம், கைகால் அசதி, பிடிப்பு, பசியின் மை, வயிற்றுவலி, பித்த சூலை பித்தமயக்கம், புளியேப்பம், நெஞ்சுக் கரிப்பு முதலிய வாய்வு ரோகங்கள நீக்கி ஜீரண ரக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த சூரணம்.
- உபயோகிக்கும் முறை -
இந்தச் சூரணத்தில் தோலா அளவு எடுத்து அத்துடன் தோலா அளவு சினி அல் லது சர்க்கரை கலந்து ஆகாரத்திற்கு முன் உட்கொண்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தவும். காலை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும் போது அள் வைக் கூட்டியும் குறைத் தும் உட் கொள்ளலாம். நெய் பால் வெண்ணெய் நிறையச் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.
மூலிகையில்ை தயாரிக்கப்பெற்றது தபால் செலவு உட்பட டின ஒனறு 3 ரூபா 75 சதம் (பத்தியமில்லை) சம்பு இண்டஸ்ரீஸ் GJ is 2. (S. l.)
இலங்கையில் கிடைக்குமிடம்
த்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி

Page 21
Regd, at the G. P. O. as a
இந்தியாவிலுள்ள - சந்த ாநேய ர்களுக்கு
இந்தியாவிலிருந்து சிலோ குப் பணம் அனுப்புவதில் சில த கள் இருப்பதால் இந்தியாவிலு சந்த நேயர்கள யாவரும் பின்வி விலாசத்துக்கு தமது சந்தா ணத்தை அனுப்பி வைக்க வே6 ருேம். பனம் அனுப்ப 6ே գեւս 636ÙII & If:-
R. VeerasambL SAMBU INDUSTRIES
SALEM
மேற்ப டி விலாசத்திற்கு ப 6 அனுப்பியவுடன் இவ்விடமும் தபால் அட்டை மூலம் அறிய வேண்டுகின்ருேம். அங்ங்னம் பத் தந்தவுடன் இங்கிருந்து ே ரசீது அனுப்பிவைக்கப்பெறும்.
ஆத்மஜோதிநிலையப்
- r -
| (ဒီဗူ LL IJ 50
தபாற் வேன்
ഋ് ഇ|
Hony Editor. K. Ramachandra, P Athmajothi Nilayam Printed at Sri Murugan P
 
 

News Paper M. L. 59,300
னுக்
66)
Tត្រ
பரும்
L.
স্ত্রতা (6
16T
சக்தி அன் கோ.
35, கொத்மலை வீதி
| h] ) îl îi l).
ტბT | [] தி
2C5 SrTTeSLSqBLSSSJSS
ததர
அறி நமது
" சமய விளக்கம்
D என்னும்
ன்) புத்தகம்
|கி சுந்தானந்த பாரதி ால் எழுதப் பெற்றது) தம் பெறுமதியான
புத்தகம் 25 சதமாகக் கொடுக்கின்றுேம் ര#ഓഖ உட்பட 30சதமாகும். எடுவோர் 30 சத முத்திரை
ப்பிட் பெற்றுக்கொள்ளலாம்.
rinted & published By N. Muthiah.
- NAWAŁA PITIYA. ress - Pundu loya 15-5-58