கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.11.01

Page 1

th
b @
宇Ló”T
ஜப்ப

Page 2
ஆத்மி
எல்லா உலகிற்கும்
ஜோதி இறைவன் ஒருவன்
C/)
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
مھ<کٹک ٹھیکھتے ھیتی ھی ھي ஓர் ஆத்மீக மாத வெளியீடு " சுத்தானந்தர்
சோதி 11 . விளம்பி வடு ஐப்பசி 1-11-58,
பொருளடக்கம்
குருவின் உபதேசம் பேரின் பத்தெள்ள முது வாழ்வின் இரகசியம் எப்படிவாய்க்கும் ஈழத்துக்குருபீடம்
அன்பு
வினயம்
குணங்குடியார்
யோக ஆசனம் ஐயங்தெளிதல் உபநிஷத்துண்மைகள் கல்லைக்கண்டால்.
ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ღწ. 75-00 வருடசந்தா ரூ. 3-00
தனிப்பிரதி சதம் -30 -
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன். பதிப்பாசிரியர்: நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
 

אלי"
குருவின் உபதேசம்
(தியான காலம்)
இதோ ஓர் உள்ளுலகும் ஒரு வெளி உலகமும் உள. ஆன்ம உலகம் ஒன்று. உருவ உலகம் ஒன்று. என்மகனே வெளி உலகத்தில் அற்புதங்களும் மறை பொருள்களும் விரி வத்தன்மையும், அழகும், மகிமையும் எப்படி உண்டோ அப் படியே அளவிறந்த மாட்சிமையும், சக்திகளும் சொல்லொ ணுச் சுகமும், சாந்தமும், மெய்ப்பொருளின் அசைக் கக்கூ டாத அத்திவாரமும் உள்ளுலகத்திலும் உள. உள்ளுலகத் தைப்போன்றதே வெளி உலகமும். உள்ளுலகத்துக்குள் ளேயே உனது உணமையான சுபாவம் இருக்கின்றது. நீ இங்கே நித்தியத்துள் வசிக்கின்ருய்; வெளி உலகமோ காலத்துட்பட்டது. உள்ளுலகின் கண்ணே முடிவற்ற அள வற்ற ஆனந்தம் உளது. வெளி உலகத்திலோ, உணர்ச்சி யானது இன்பதுன்பங்களோடு கலந்திருக்கின்றது. உள்ளு லகத்தினுள்ளும் துன்பம் இருக்கின்றது. ஆனல் அது என்ன பரமானந்தமான துன்பம். உண்மையை முற்ருயே அனுப விக்கவில்லையென்ற பெருந்துன்பம். அப்படிப்பட்ட பெருந் துன்பம் பரவசப்பட்டதுன்பம். அந்தத் துன்பம் இன்னும் அதிகமான மங்கள சுகத்திற்கு வழியாயிருக்கின்றது.
*மகனே வா! உனது இயற்கையை இந்த உள்ளுலகத் துக்குள்ளே இழு. என்மேலுள்ள பேரன்பாகிய இறகுகளை விரித்துக்கொண்டுவா. குருவுக்கும் சீடனுக்கும் இடையே புள்ள அன்னியோன்னியக் கலப்பைக் காட்டிலும் நெருங் கிய கலப்பு வேறெங்குமே இல்லை.

Page 3
பேரின்பத் தெள்ளமுது. - மகரிஷி சுத்தானந்தர் -
நீயே எனக்கன் னே ; நீயே யென க் கப்பன் ;
நீயே எனக்குச் சுற்றம் நீயே என க்குலகு, நீயே எனக்குறவு
நீயே எனக் கிகபரம்! நீயே எனக்கு நிதி, நீயே எனக்கு மதி,
நீயே எனக்குக் கதியே! நீயே எனக்குக் குரு, நீயே எனக்குமொழி
நீயே எனக்கு வழியே! நீயே எனக்குணர்வு, நீயே எனக்குயர்வு,
நீயே எனக்கனுபவம் ! நீயே எனக்கருமை, நீமே எனக்கபயம்,
நீயே எனக்கிறைவனே! ஆயிரங் கதிர்வீ சருட்பெருஞ் சோதியே
ஆன் மகிறைவே ஆதியே! அருள் பெருகு மறிவுவள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே! 11
உண்ணுவது முன் ஞல், உயிர்ப்பதுவு முன்னல்
உணர்வதுவு முன்ற ஞலே ஊருவது முன் ஞல், உரைப்பதுவு முன் ஞல்,
உவப்பதுவு முன்ற குலே! எண்ணுவது முன்னுள், இயங்குவது முன் ஞல்,
இருப்பதுவு முன் றஞலே! ஏதேது செய்திடினு மெல்லாமு னிச்சையே
எல்லா முன் ஆரா தனே கண்ணிருங்துங் கருத்தற்றவர்கள் காண்பரோ கண்ணுளே காண் கண்ணனே ! காட்சியே, ஜகஜீவ சாட்சியே, காட்சிதரு
கதிரே கதிர்ப் பிழம்பே அண்மைக்கும் அண்மையே அப்பாற்கும் அப்பால்
அதற்குமப்பால் இலங்கி அருள் பெருகு மறிவுவள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே! 12
 

வாழ்வின் சிகரம் (ஆசிரியர்)
பிரம தேவரின் சிருட்டிகளுக்குள்ளே ம னி த சிருட்டியே முதன்மை பெற்றிருக்கிறது. தேவர்களே மனித சிருட்டியைப் பார்த்துப் பொருமைகொள்ளு கின்றர்கள். “பூமியில்போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்ருேம் அவமே' எனத் தேவர்கள் வாய்விட்டுப்பிதற்றுகின்றனர். மனிதனே தன்னிலை யறியாது கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிருன். தான் ஆத்மா என்பதை அடிக்கடி மறந்துபோகிறன். தேக, மனே பாவமே அடிக்கடி தலையெடுக்கிறது.
மனித வாழ்க்கையால் பெறக்கூடிய பலன்கள் மிகப்பெரியனவும் நிகரற்றனவுமாகும். பிரதான மாக அது சரீர மன ஆத்ம நிலைகளென மூன்றல் ஆக்கப்பட்டிருக்கின்றது. இந்த மகத்தான வாழ்வை, அதன் நுண்ணிய உயர்ந்த நிலைகளைப் பேணுது? சர்ரத்தை மாத்திரம் பேணி நடத்தினுல் மனிதவாழ்வு மிருகங்களின் வாழ்வைப் பார்க்கிலும் த r ம் ந் த நிலையை அடைகின்றது. சாதாரண வாழ்க்கையில் உண்பதும் உறங்குவதுமே முக்கிய தொழிளாகக் காணப் பெறுகின்றது. நித்திரை விட்டெழுந்தால் மறுபடியும் நித்திரைக்குச் செல்லும்வரை தேகவியவ காரமேமனிதனை ஆட்டிவைக்கின்றது.
தேகதத்துவத்தைக் கடந்த மானசவாழ்க்கை, வாழ்வின் நுண்ணியமகிமையைச் சிறிது உணர்ந்த தாய்த் தேகதத்துவத்தைக் கொண்ட வாழ்வைப் பார்க்கிலும் பரந்த நிலையிலுள்ளது. ஆனல் கீழ்நிலை கள் இரண்டையும் கடந்துவிட்டால் உயர்ந்தவாழ்க்கை உதயமாகிறது. கீழ்நிலைகளிலே காணப்படும் குறு கியநோக்கங்கள் எல்லைகள் என்பன அளவில்லாத அகன்ற சிறந்ததான அனைத்தையும் தழுவி நிற்கும் ஆத்மீக உணர்வெனும் உயர்ந்த அறிவிலே மறைந்து விட்ட உன்னத நிலையை அடையும். தேகத்தையே

Page 4
4.
நினைக்துவாழ்பவன் அவா, பற்றுக்களுக்காளாகி அக் குணங்களே உருவாகிறன். மானசவாழ்க்கைக்குய ரும் போது அன்பு தோன்றுகிறது. ஆத்மீகவாழ் வில் அருளே மயமாகின்றன்.
இந்த உன்னத உணர்விலேதான் கணக்கிலா உயிர்களும் பொருள்களும் அடங்கிய உலகம் முழுவ தன் ஆணிவேர் தங்கி நிற்கிறது. ஆத்மாவை உண ரும் போதுதான் மற்றைய உயிர்களை அன்பு செய்து அருள்பாலிக்கும் மனுேபாவம் ஏற்படுகிறது. ஆத்மா எல்லைகடந்த மூலப் பொருளாகும். அது அறிவு, அன்பு, கித்தியம், இன்பம் என்னும் ஒளியை வீசும் சர்வசக்தியாகும். மக்களும் மற்றைய உயிர்களும் அறிந்தோ அறியாமலோ பிறவிதோறும் ஒவ்வொரு படி உயர்ந்து கொண்டே செல்கின்றன. அவற்றின் வாழ்வின் சிகரம் ஆத்மீக உண்மையே. மூலாதார உண்மையும் இதுதான். எங்களைச்சுற்றிலும் தின மும் எத்தனையோவித விவாதங்களும் போராட்டங்க ளும் நிகழ்கின்றன. இவையெல்லாம் தேகமனேநிலை களின் குழப்பங்களே. எந்த உண்மையைக் கண்டுபி டித்தால் இவை தீருமோ அந்த அடிப்படியான உண் மையை நாடித் தேடவேண்டும். மகாத்மா காந்தியடி கள் ஆத்மீக வாழ்விலேதான் இராமராச்சியத்தை அமைக்க முயன்ருர், தேகமனுேவாழ்வே சாசுவதம் என்று கம்பிவாழும் நாடுகளிலே தினமும் ஏதோ ஒரு குழப்பம் நடந்துகொண்டேதானிருக்கிறது. தனிமனி தன் வாழ்வே சமூக வாழ்வாகவும் உலக வாழ்வாக விரிவடைகிறது. - தன்னை ஆத்மா என உணர்ந்தவன், தன் ஆத் மாவே எல்லா உயிர்களிலும் பிரதிபலிக்கக்காண்ப வன் எங்ங்னம் பிற உயிர்களுக்குத் தீமை புரியமுடி யும்? குறுகிய இலட்சியங்களின் போராட்டங்கள், குறுகிய தன்னயங்கருதும் செய்கைகள், சுயநலவேட் கை என்பன வெல்லாம் ஆத்மாவை உணர்ந்தவனி டையே மறைந்துவிடுகின்றன. உண்மையான விடு தலை, ஒற்றுமை, சாந்தி என்பவற்றைக்காணுதலில்
 
 
 

5
உலகம் எப்போதுமே பின்னின்றதில்லை. சர்வவியா பகமானதும், நித்தியமானதுமாகிய இந்த இலட்சி யத்தை மனிதவாழ்வு அடையச்செய்வதற்கு வழியா தெனில் தேகமனே எல்லைகளைக் கடந்து சிறந்த ஆத்ம மண்டலங்களுக்குள்ளே சென்று எல்லா உயிர்கள் பொருள்களினதும் ஒருமைப்பாட்டை உணர்தலாகும். சக்தி ஞானம் இன்பமென்னும் சுக வாழ்க்கை வாழ் தலே வாழ்வின் உண்மை வழியும் இனிய நிறைவுமா G5ID.
இத்தகைய வாழ்வு வாழ விருப்ப மா? சரீரத்தை யும் மனதையும் ஆண்டவன் திருவடியிலே அன்புக் காணிக்கையாக வைத்து விடுங்கள். வாழ்வில் ஒளி பெற வேண்டுமானுல் இந்த நிவேதனம் அவசியமா கும். மேலான வாழ்வுக்காகக் கீழான வாழ்வை முற் றிலும் தியாகம் செய்தலே வாழ்வின் சிகரத்தை அடைய வழியாகும்.
மெய்ஞ்ஞானம் அடைந்த ஒருவன் மனிதனது உண்மை உருவத்தை உணர்த்தி, ஆயிரக்கணக்கா னேரின் உள்ளத்தில் இம்மின்சாரத்தை ஏற்றித் தங் கள் நித்திய, சர்வவியாபக நித்தியானந்த இயல்பை உணர்ந்து விழிப்புறச்செய்யமுடியும். ஆத்மீகவாழ்வு வாழ்ந்தால்தான் மனிதனும் உலகமும் புலன்களின் வேற்றுமை உணர்ச்சிகளிலிருந்து விடுதலையடைய முடியும். நிலையான ஒற்றுமையும் சாந்தியும் பெற முடியும்.
நித்தியப் பொருளைப் பற்றி அறியும் அறிவினல் ஏற்படும் இன்பமே உண்மையானது. உறுதியான ஆவலோடு அதிரகசியமான நன்மை பயக்கும் ஆத்ம மண்டலங்களுக்குள்ளே சென்ருல் அவ்வின்பம் ஒவ் வொருவருக்கும் கிடைக்கும். அங்கேதான் உண்மை யின் பலமும் இன்பமும் உண்டு. சரீரத்தை சுயநல மற்ற பணியில் ஈடுபடுத்தினுல் தேகபாவத்தை இலகு வில் கடக்கலாம். மனதிலிருந்து கீழ்த்தரமான விருப் பங்களை அகற்றினுல் மனுேவாழ்வைவெல்லலாம். அப் பால் ஆத்மீக வாழ்வு உதயமாகிறது. இதுவேவாழ் வின் உச்சிக்கோடாகும்.

Page 5
繼******劃 எப்படி வாய்க்கும்? : 米
4
莱来米米米米来米米米米米来来来来来莱
போதநூற் பயிற்சி யில்லை,
புனிதநன் முயற்சி யில்லை; சாதனைப் பழக்க மில்லை, ! ې/
தவறிடா ஒழுக்க மில்லை; காதலால் கரைத லில்லை;
கண்கள் நீர் சொரித லில்லை; மாதவப் பயனை வேண்டின்,
வாய்க்குமோ, மடமை நெஞ்சே?
சத்திய வேட்கை யில்லை,
சத்சங்க நாட்டமில்லை;
பித்துறும் ஆர்வ மில்லை;
பேரன்பர் பணியு மில்லை;
சித்தத்தில் உறுதி யில்லை,
திடமில்ல, பக்தி யில் ஆல;
முத்தியே வருக வென்றல்;
கிட்டுமோ, மூட நெஞ்சே? 2
சினவெறி அழிய வில்லே,
தீக்காமல் ஒழிய வில்ல; பணவெறி யகல வில்லை;
பந்தத்தைக் களைய வில்லை; இனவெறி தணிய வில்லே,
இதயமோ கனிய வில் ஆல; புனிதநல் லமைதி வேண்டின், -
பொருந்துமோ, இரும்பு நெஞ்சே?
3

பாசத்தைக் கடக்க வில்லை,
பாவத்தைத் தொஆலக்க வில் ஆல;
ஆசையை அகற்ற வில்ல;
அச்சத்தைத் தவிர்க்க வில்&ல;
மாசெலாம் துடைக்கவில் அல,
மமதைவே ரறுக்க வில்ல;
ஈசனுர் நேசம் வேண்டின்,
எப்படி வாய்க்கும், நெஞ்சே? 4.
வீதியைக் கடந்த பெண்ணின்
விருப்பினைக் கடக்க வில்ல;
பாதியிற் புகுந்த கல்வி,
பணம், புகழ் கடக்க வில்ல;
சாதியிற் கிடந்த நெஞ்சின்
தடையெலாம் கடக்க வில் ஆல;
பேதத்தைக் கடந்த பாதப்
பேறுண்டோ, பேதை நெஞ்சே? 5
(பரமஹம்ஸ தாசன்)
- பொன்மொழிகள் .
வாழ்வில் சாதாரணமாக அதின் இயற்கை அமைப்பாக ஏற்படும் கஷ்டங்களுக்கஞ்சுங் கோழைகள் தம்மைக் கூற்றுவன் கடைத்தெரு வில் விற்றுக்கொள்ளும் பேதைமைச் செய் கையே தற்கொலை எனப்படும்.

Page 6
நீலநீ மகாதேவ சுவாமிகளும் ஈழத்துக்குருபீடமும்.
முற்ருெடர்ச்சி
பருவ வாழ்விலேயே புலப்படத் தக்கதாக தன் லா டக்கம் செபதபம், விரதங்காத்தல், பெரியோர்ப் பேணல், ஆலய வழிபாடு, ஞான சாத னம் முதலியவற்றில் சிறந்து விளங்கினர். இவருக்கு மூன்று ஆண் சகோதரர்களும் இரண்டு பெண் சகோதரிகளும் இருந்தனர். இவர் குடும்பத்தின் முதல் பிள்ளை. தமது பெருமுயற்சியினுல் தமது குடும் பத்தைப் பேணிப் பாதுகரத் துவங்தார். ஒரு பக்கம் ஆத்மீகப் பசி எ டுக்க மறுபக்கம் தன் தாய்-தந்தையரை வ யி ற் று ப் ப சி யால் வாடாது பாதுகாத்து வந்தார், இதற்காக தமது கிராமத்தில் விவ சாயத்தில் ஈடுபட்டதோடு நில்லாது சங்குவேலியைச் சேர்ந்த மட் டக்கலப்பு வைத் கிலிங்கம் என்றும் ஓர் தன வந்தனுக்குக் கணக்கப் பிள்ளையாய் அமர்ந்து அதனல் வரும் ஊதியத்தைக்கெ ண் டே தன் னேயும் தமது பெற்முே ைரயும் ஓம்பி வர லானர். இதனுல் இவர் வாழ்க்கையில் பிறர் கையை எதிர்பார்க்கும் சூழ் கிலே ஏற்படவே யில்லே. தமது ஓய்வுநேரம் முழுவதும் சாத்திரம் பயிலுவதே தொழி லாகக் கொண்டிருப்பார். இப்படியாக நாட்கள் செல்லச் செல்ல ஞானதாகமும் அதிகரித்தது.
கீரிமலையில் ஓர் மடங்கட்டுவதற்கு மட்டக்களப்பு வயித்திலிங் கம், சுவாமிகளையே மேற்பார்வையாளராக அமர்த்தினர் மடங்கட் டப்படுங்காலை யில் ஆலய தரிசனேக்காக அங்குள்ள சிவாலயத்துக் குச் செல்வார். அங்கு ஒருநாள் கண்ணம்ம ச்சி என்ற அம்மையார்
ஒர் புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருக்கக் கண் டார். இவர்
அப்புத் தகம் ஓர் உயர்ந்த நூலாயிருக்க வேண்டுமென் றெண்ணி *ஓர் தரம் பார்த்து விட்டுத் தருகிறேன் தாருங்கள்’ என்று அந்த அம்மையாரைக் கேட்டார். அதற்கு அம்மையார் இது எமது குரு வின் உத்தரவின் றித் தருவதற்கில்லை. குருவின் மூலம் சான் இத்த கைய நூல்கள் கரப்படவேண்டும் என்று கூறினர் சுவாமிகளுக்கு உடனே அக்குருவைக் காணவேண்டும் - அப்புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்ற பேரவா எழுந்தது. எங்கே குரு இருக்கிருர்கள் என அம்மை யாரிடம் கேட்டறிந்து உள்ளம் சிர்க்க உணர்ச்சி வசப் பட்டு அம்மையார் காட்டிய இடத்திற்கு விரைந்து சென் ருர், கனக ரெத்தினம் சுவாமிகள் அதுவரையும் (சிருப்பர் மடத்து அறையில்) தியானித்திருந்து விட்டு ஞான குரவனத் தேடிவரும் தம்பையாவை நோக்கி வாசலண்டை வந்துசேர்ந்தார். அக்கணமே திரு. தம்பை யாவும் மெய்மறந்து அந்த ஞானகுரவரின் திருப்பாதங்களைப்பிடித்து வீழ்ந்து நமஸ்கரித்து ஆனந்தக்கண்ணிர் பெருகக் கிடந்தார். குரு 5ாதன் தன் குழந்தையின் பரிபக்குவ கிலேயறிக் து அவரைத்தேற்றி

9
வேண்டியதென் ன என்று வினவினர். பிறவாப் பெருவாழ்வுதரும் மெய்ஞ்ஞானம் பெறுவதே எமது அபிலாட்சை என்று தழுதழுத்த குரலில் கூறிப் பணிந்து கின் ருர், பூரீ கனகரத்தினம் சுவாமிகள் எதற்கும் அஞ்சேல் எனத் தஞ்சமளித்து எம்மிடம் அடிக்கடி வந்து போக வேண்டும்; எனப் பணித்து கண்ணம்மாச்சியின் கையில் இருந்த "மோட்ச சாதன இரகசியம் என்ற நூலேயும் தமது கரத் தால் வாங்கி திரு. தம்பையாவின் கையில் கொடுத்தார். அன்று தொட்டு திருநெல்வேலியில் உடையார் வீட்டில் பெரிய சுவாமிகள் நடாத்தும் வேதாந்த வகுப்பிற்குக் கிரமம் தவருமல் சென்று பாடங் கேட்டு வரலாஞர். திரு. தப்பையா பெரிய கடை தையல்நாயகி அம்பாளைத் தினமும் தரிசனே செய்வது வழக்கம். தேவிடபாசன யில் மிக்க ஈடுபாடுடையவராக இருந்தார்.
பின் யாத்திரைக்ள் பல சென் மூர்கள். தமது குருநாதருடன் இந்திய யாத்திரையில் சென்றபோதுதான் மணிவாசகர் ஞான தீட் சைபெற்ற திருத்தலமாகிய திருப்பெருந்துறையில் திரு. தம்பையா வுக்கு பூரீ கனகரத்தினம் சுவாமிகளால் ஞான தீக் கைவைக்கப்பட்டு மகாதேசுவாமி என்ற தீட்சா ஞானமும் சூட்டப்பட்டது.
யாத் திரையால் இலங்கை திரும்பியதும் தமது குருநாதனுக் கேற்ற ஓர் ஆச்சிரமம் அமைக்கத் திருவுளாட் கொண்ட மகாதேவ சுவாமிகள், பல அன்பர்களிடம் உதவி கோ ரிஞர். திரு. வை. சி. குமாரசாமி அவர்களின் தங்தையார் கிலம் அளித்தார்கள், வேறு பல அன்பர்கள் கட்டிடத்துக்குத் தேவைய, ன பணம் உதவிஞர்கள். சுவாமிகளின் மனதுக்கிசைந்த ஆச்சிரமத்தைத் தானே முன்னின்று கட்டி முடித்தார்கள். இதற்கு இவரின் உடன் மாணவாாகிய கை லாய நாதசுவாமிகளும் வேண்டிய உதவி புரிந்தார். அதற்கு சிவ குருநாதபீடம் எனப்பெயரிட்டு பூரீ கனகரத்தினம் சுவாமிகளே ப்ரமச சாரியராகக் கொண்டு குருபீடம் செயலாற்றத் தொடங்கியது. ஆண் பெண் இருபாலாருமாக நூற்றுக்கணக்கான அன்பர்கள் கூடி வேதாந்த சிரவணம் செய்து வரலா னர்கள். இதில் வேதாந்தம் போதிக்கப்பட்டு வரும்போது வேதாந்த சித்தாந்த மாறுபாடுகளுக் கிட மளியாது சமரச 5ே1 க்குடனேயே கல்வி போதிக்கப்பட்டது. இதனுல் கனகரத்தினம் சுவாமிகளாயினும் சரி அவர் பின் மகா தேவ சுவாமிகளாயினும் சரி தம்மையடுத்துவரும் மாணவர்களுக்கு அவ ரவர் தரத்துக்கேற்ற முறையில் உண்மையை விளக்கி வைத்து வந்தார்கள்.
மகாதேவ சுவாமிகள் உடல் தாங்கி உதித்த கிராமமாகிய கரம் ப்னிலும் சைவமும் தமிழும் வளர்க்கும் எண்ணங்கொண்டு அங்கு

Page 7
1 O
சண்முக வித்தியாசாலேயைத் தாபித்தார்கள். இதன் பின் பல விடங் களிலும் பாடசாலேகன் ஆரம்பிக்கப் பலரையும் தாண்டிமுயற்சித்து வந்தார்கள். இதன் பயனகத் துன்னுலையில் ஞானுசாரிய வித்தியா சாலேக்கு அத்திவார மிட்டு அதை ஆரம்பித்து வைத்தார்கள். அது இப்போஒர் கல்லூரியாகத் திகழுகிறது. அங்கு அத்திவாரக்கல்நாட் டிய தினத்தை இப்பெரியாரின் பெயரால் பெரு வைபவமாக இன் றும் கொண்டாடி வருகின் ருர்கள்.
இப்படியாகப் பல பொது வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு தாம் 9த்தியபிரமசாரியாக இருந்து வருநாளில் பூரீ கனகரத்தினம் சுவாமி கள் இவரை அழைத்துக் காவிகொடுத்து மடத்திலிருந்து கடமையாற் றும்படி பணித்தார். இதன்பின் தமது குடும்ப நிர்வாகத்தைத் தன் சகோதரர் பாஸ் விட்டுத் தமது குருநாதன் பணித்தசேவையில் (էք (ՆՔ வதும் ஈடுபட்டு வருவாராயினர்.
இப்பெரியார் ஆச்சிரமத்துக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதோடு ஆங்காங்கு ஆலயங்களிலும் பாடசாலேகளிலும் சென்று சமயப் பிரசங்கங்கள் செய்து மக்களிடையே அரிய உண். மைக் கருத்துக்களைப் பரப்பி வருவாராயினர். இவர் போதித்த வாறே சாதனேயிலும் ஈடுபட்டவராதலினல் மக்கள் இப்பெருங்த கையைப்போற்றி அவர் சொற்கேட்டு ஒழுகிவரலாஞர்கள். இவர் ஞான முதிர்ச்சியுடையவரன்றி அனுபூதிச்செல்வருமாவர். இவர் தம் தோற்றம், பேச்சு, கடை யாவும் எ வரையும் தம் பால் ஈர்க்கும் அன்புமயமான தன்மை வாய்ந்தவை. இதனல் எவரும் தமது சக் ஒரு விபரீதங்களைப் போக்குதற்குக் கூசாது அவர் முன் சென்று தமது குறையை விவர்த்தித்துக் கொள்ளுவர். அவரும் காட்சிக் கெளியராய் கடும் சொல்லரல்லராய் ஞான ஒளிபரப்புக் பரமா சாரியராக இருந்து பல ஞானக்குழங்தைகளே வளர்த்துவந்தார். இப் பெரியாரின் மானுக்ரர்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும்
இன்றும் இருக்கிருர்கள். சுவாமிகளின் காலத்தில் விபுலானந்த அடி
கள் வித்தியாலாந்த தயாராம், உருத்திர கோடீஷ்வர சுவாமிகள், ஞனுணந்த சுவாமிகளும் மாணவரும் சிவகுருநாத பீடத்துக்குச் சமுகமளித்துப் பலநாள் தங்கியிருந்து சென்றிருக்கிருர்கள்,
சுவாமிகள் இக்குருபீடம் தளர்வின்றி நடைபெற வருவாய் தரக்கூடிய தென்னங்தோப்புகள் வாங்கிவிட்டதோடு இதன் கிளே மடமொன்றை விளவேலி என்ற இடத்தில் ஆரம்பித்தும் வைத் தார்க்ள்.

f f
இப்படியாக வுளப்பெரும் சேவைகளில் ஈடுபட்டிருந்து வேதாந்த ஞானவெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்த பரமாசாரிய ஞானக் கொண்டல் தம் வினே முடிவெய்தும் காலம் நெருங்கிவிட்டதையு ணர்ந்தார். தாலஉடல் நீக்க ஒர் ஏதுவும் வேண்டுமன் ருே? சிலநாள் சுகவீன கிலேயில் இருந்தார். மருந்துசாப்பிட மறுத்துவிட்டார். மலசலம் கழிவதும் அவருக்குத் தெரியவில்லை. வினே முடிந்தது. உடல்தினேப் போதளவும் விற்கவில்லை. சமாதி எய்தும் சில நிமி ஷங்களுக்கு முன் படுக்கையை விட்டு எழுந்திருந்து கெம்பீரமாக இருந்தார். தமது கரத்தால் கீழே தொங்கியிருந்த கீழ்வாய் உதட் டைஅழுத்திப் பொருத்தி மூடினர். அதன் பின் பேச்சுமில்லே மூச்சு மில்லை. 1942ம் ஆண்டு ஐப்பசி மீ 30 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பூரீ மகாதேவ சுவாமிகள் சயாதி எய்திஞர். பூர் ணம் பூரணமாய் விட்டது. இக்குாவரின் பின் குருபீடத்தை பூரீஇரா மலிங்க சுவாமிகள் நிர்வகித்து வருகிருர்கள். சுவாமிகளின் உத்தம மணவராகிய இன்னேர் பெரியாராகும் திரு. க. வடிவேற்சுவாமி கள் பல விடங்களிலும் சமயப் பிரசங்கங்கள் செய்து கித்திய சங்கி யாசியாக விருந்து தன் குருநாதன் வரன் முறை வழுவாது வாழ்ந்து வருகிறர்: அவர் இப்போ உருத்திரபுரத்தில் ஜெயந்திநகர் என்ற கிராமத்தில் "மகாதேவ ஆச்சிரமம்” ஒன்றை கிறுவி அப்பகுதிக ளில் சைவப்பணி பல புரிந்து வருகிருர்கள்.
பூரீ சற்குரு பாதம் வாழ்க!
பொன்மொழிகள் 一米一
நாம் வளையாத தன்மையும் எதிர்ப்பும் எதிர்க்கும் இயல்பும் உடையோராயின் வாழ்க்கையின் கஷ்டங்க ளைப் பெருக்கி அதன் ஆனந்தத்தைச் சுருக்கிக் கொள் கிருேம். நாம் வளைந்து கொடுக்கும் இயல்பையும் எதிர்க் காத தன்மையையும் உடையோமாயின் நாம் வாழ்க்கை யின் கஷ்டங்களைச் சுருக்கி ஆனந்தத்தைப் பெருக்கிக் கொள்கிருேம்.

Page 8
e9l 60l L] (காந்தி)
பாரதத் தாய்க்குப் பலமும் தன்னம்பிக்கையும் வந்து விட் டால், தனக்குத் தீங்கிழைப்பவர்களைப் பகைப்பதை நிறுத்தி விடுவாள். ஏனெனில் அப்பொழுது அவளுக்கு அவர்க ளைத் தண்டிக்கவும் அதனுல் அவர்களிடம் இரங்கி அவர்களை மன்னிக்கவும் முடியும். இப்பொழுதோ அவளிடம் தண்டிக் கவும் சக்தியில்லை; அதனல் அவள் வீணே பகைமையைத் தான் பாராட்டி வருகிருள்.
துன்பத்தை மகிழ்வுடன் சகித்தால் அது துன்பமாய் இராது. சொல்லொளுனது இன்பமாய் மாறிவிடும், துன்பத் திற்கு அஞ்சி ஒடுபவன் துன்பம் வருமுன் முடிவிலாக் கஷ் டம் அனுபவிப்பான். துன்பம் வந்தபின் அரை உயிராய் விடு வான். ஆனல் வருவது எதையும் மகிழ்வுடன் அனுபவிக் கத் தயாராய் இருப்பவன் சகல துன்பத்தினின்றும் தப்பி விடுவான். அவனுடைய அகமகிழ்ச்சியே துன்பத்தை மாற் றும் மருந்தாகும்.
கொடியவனே மதியாது தலை நிமிர்ந்து நிற்பதற்குரிய வழி அவனை வெறுப்பது மன்று, அடிப்பது மன்று, துயருற்று வருந் தும்பொழுது நாமே கடவுள் முன்பணிந்து முறையிட்டுக் கொள்ளுதலேயாகும்.
அகிம்சா தர்மத்தை நம்புபவன் எதையேனும் காப்பாற் றுவதற்காக நேராகவோ அல்லது வேருகவோ பலாத்மாரம் உபயோகிக்கர் திருக்கக் கடமைப்பட்டவள், ஆனுல் அகிம் சையை ஆதாரமாகக் கொள்ளாத மனிதர்களுக்கும் ஸ்தாப னங்களுக்கும் உதவிசெய்யக் கூடாதென்பதில்லை. உதவி செய்யக் கூடாதென்ருல் என்மகன் அகிம்சையை நம்பாதி ருப்பதால் அவனுக்கு நியாயம் கிடைப்பதற்காகக்கூட பாதொ ருஉதவியும் செய்யக் கூடாது என்று ஏற்படும்.
ஒருவன் அகிம்சையை அனுட்டிக்க வேண்டியதவசியம். ஆணுல் அதற்கு அவன் சும்மா இருக்கவேண்டும் என்பது பொருளன்று.

f 3
ஒரு இயக்கம் பெரிதாயிருந்தாலும் சரி, விரைவாய் கடத்தினுலும் சரி, கஷ்டத்திற்குப் பயந்தால் அத்தகைய இயக் கத்தை ஒருபொழுதும் நடத்தமுடியாது. பெரிய கஷடங்களை எதிர்பார்த்துப் பெருங்காரியங்களைச் செய்யாமல் வாழ்வதால் பலன் ஒன்றும் கிடையாது.
மனிதனிடமுள்ள மிருகக் குணத்தை ஒழிக்க வேண்டிய தவசியம். ஆனுல் அதற்காக அவனைப் பேடியாக்கி விடக் கூடாது. அவ்விதம் மிருகக்குணத்தை ஒழிக்க முயலுகை யில் சில சமயங்களில் அது தலைக்காட்டவும் கூடும்.
பதிலுக்குப் பதில் செய்வது இரண்டுபக்கமும் கூர்மை யுள்ள ஆயுதமாகும். எவனுக்கு விரோதமாக உபயோகிக்கப் படுகிறதோ அவனுக்கு அது துன்பம் இழைக்குமாயின் உப யோகிக்கிறவனுக்கும் துன்பம் இழைக்காமல் இராது.
உண்மை பொய்யை அவித்துவிடும். அன்பு கோபத் தை அவித்துவிடும். துன்பம் நோற்றல் ஹிம்சையை அவித் துவிடும். இந்த அழியாத விதி ஞானிகளுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் உரியதே.
உலகத்தைத் தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுண்டு. அன்பில்லா வாழ்வு மரணமே.
எவ்வளவுக் கெவயளவு சக்தி வெளித்தோன்ருதிருக்கி
றதோ அவ்வளவுக்கவ்வளவே அது பலனுடையதாகும். அன்பு என்பதுவே உலகத்தில் எல்லாவற்றினும் வெளித்
தோன்ருமல் வேலைசெய்யும் சக்தியாகும்.
அன்பைச் சோதிக்கும் உரை கஸ்தவமாகும். தவம் என்பது துன்பத்தை நோற்பதேயாகும்.
gama-la esse

Page 9
米 米 65 ulti 米米兴米米来米米一〔örta@önq)一米米米米米米米米
வாக்கிலும், செயலிலும் நயமில்லாதவர் கோபத் திற்கு இலக்காவர். கோபத்தினுலேற்படும் அளவி றந்த தீமைகளை நாம் நன்கறிவோம்; அறிந்தும் அதைக் கட்டுப்படுத்திவெல்ல இயலவில்லை. காரணம் , மனி தனின் இயல்பு. இயற்கை பிறப்புடன் கூடிவருவது, மாற்ற இயலாதது; இயல்பு பழக்கத்தினுல் ஏற்படு வது, பயிற்சியினுலும் முயற்சியினுலும் மாற்றக்கூடி யது. கோபத்தை வென்றவன் நியதியின் எல்லைக் குள்ளே செயல்பட்டு கோபத்தைத் துறக்கிருன்; கோபத்தை வென்றதன் மூலம் மேன்மையை அடைகி ருன், கோபம் உண்டாவதற்கு முக்கியகாரணம் அஹங்காரமும், பொறுமையின்மையுமே. விநயத் தைக் கடைப்பிடிப்பவன் கோபமடைவது துர்லபம்.
விகயம் காட்ட பாத்திரத்தை நோக்கிக் கொண் டிருக்க வேண்டுவதில்லை. தோட்டிமுதல் தொண்டை மான்வரை, மூடன் முதல் புத்திமான் வரை, வீணன் முதல் ஞானிவரை எவருமே நமது விநயத்திற்குப் பாத்திரமானவரே. விநயம் பண்பின் இயற்கை; 15ல் வாழ்வின் இலக்கணம்; ஸ்த் ஸங்கத்தின் இயல்பு. முதுமைக்கு இளமை விநயம் காட்டவேண்டும்; பதியு டன் ஸ்தி விநயமாகப் பழகவேண்டும்; தோழமை விக யத்துடன் பரிமாறிக்கொள்ளப்படவேண்டும். ஆசா ரியனிடத்து பக்தி செலுத்த விநயம் முதற்படி; பெற் ருேரிடத்து அன்புசெலுத்த விநயம் ஆதாரச்ருதி: விகயம் ஸத்யத்தின் நியதி.
விநயமில்லாத வித்தை சோதனைக்காலத்துக்கு உதவாது; விநயத்துடன் கூடிய படிப்பே ஆண்டவன் அனுக்ரஹத்தை அள்ளிக்கொடுக்கும். விநயம், கற் றுணர்ந்த வித்தையை மேன்மேலும் மேரு மலைபோல்

15
வளர்க்கும். விநயம் மிகுந்தவரே ஆண்டவனுக்குகங் தவர். விநயமாகச் செலுத்தப்படும் அன்பு, ஆத ரவு, பக்தி எதுவும் அபரிமிதமான நன்மையைப் பயக்கும். வாழ்க்கையின் வெற்றி, இதரரை மகிழ் விப்பதில் அடங்கியுள்ளது. வாழ்வின் ஸஅசுஷ்மாகா ரத்தை அவலம்பிக்க விநயம் பழகவேண்டும். கர் மத்தை இடையருது மன அழுக்காறின்றி புரிய மனம் தவறின்றி செயல்புரியவேண்டும். மனத்தைத் தவருன வழிகளிலிருந்து காப்பவைகளில் விநயத் திற்குப் பெரும் பங்குண்டு. ஸத்யபாஷ்கியை உலகம் போஷிக்கும்; மித பாலுகிமக்கள் மதிப்புக்குகந்தவன்; விநய பாஷியோ எவர்க்குமினியன். ஸத்ய வசனத் தை உரைப்பவன் விநயத்தைக் கைக்கொள்வானேயா கில் அவன் ஸகலருக்கும் இஷ்டனவான். எக்கரும மும் நற்கருமமாவது அதன் விளைவிலே காணக்கி டைக்கும்; அவ்விளைவுக்கு விநயம் உறுதி கூட்ட வேண்டும்.
விநாயகன் விநயஸ்வரூபி. லோகத்தை ஒரு நொடியில் பிரதசுவினம் செய்துவர ஆக்ஞாபிக்கப் பட்டபோது லோக சரண்யர்களான லோக நாயக நாயகியரையே வலம்வந்து மாங்கனியைப் பெற்றவ ரன்ருே! விநாயகரின் விநயம் லோகநாயக நாயகி இருவருக்கும் பெ ருமி த த்  ைத உண்டாக்கியதில்
வியப்பு என்ன?
-வித்ய பாரதீயன்.
-பொன்மொழிகள்
சூளையில் வேகவைக்காத பானைகளை உடைத்து திரும்பவும் நமக்கிஷ்டமான வேறுவித உருவமுடைய சட்டிகளாகச்செய்து கொள்ளலாம். ஆணுல் சுட்ட பானைகளை அவ்விதம் செய்யமுடி யுமா? அதேபோல ஆத்ம ஞானமடையுமுன் சரீரம் அழிக்கப்படு மானுல், திரும்பவும் திரும்பவும் சரீரம் பெற்றே தீர வேண்டும்.

Page 10
மஹான் குணங்குடியார் அருட்பாக்களின் விளக்கவுரை.
- - சாந்தி
எது வந்து நேரினும் மாறினு மிரண்டு
மொன் றென் றிருப்பது சமாதி.
ஞானவழியிலே முன்னேறிச் செல்லும் சாதகனு க்கு சில சமயங்களில் சூழ்நிலையின் காரணமாக மாறு தல்கள் ஏற்படுவது சகஜமே. மேலும் வாழ்க்கையில் கஷ்டங்களும், துக்கங்களும் கிகழ்வதும் சர்வசாதா ரணமே. ஆனலும் சாதகன் எல்லா நிலைகளிலும் பாதிக்காது அதாவது வெளி மாறுதலினல் மனம் அசையாது இருக்கப்பழகவேண்டும். சாதகன் அடிக் கடி தியானிப்பதினல் அவனுடைய உணர்ச்சிகள் கூர்மையாக இருக்கின்றன. ஆகையினுல்தான் அவ னது மனதை எந்தக்காரணத்தினுலும் கலங்கப்படு த்தாது ஒருமைப்பாடுடன் வைத்துக்கொள்ளவேண்
டும். மனம் வெளித்தொடர்பினல் அசைந்துவிட்டால்
அல்லது ஆசையின் காரணமாக மயங்கி விட்டால் தியான வாழ்க்கையில் சலிப்புத்தட்டிவிடும். ஆகவே சாதகன் இன்பத்தையும். துன்பத்தையும் சமமாகக் கருதவேண்டும், சலன சஞ்சலமது தொலைத்தருண் மலைப்புடையில் சார்ந்திருப்பது சமாதி.
மனம் சலனமடைவதினுல்தான் சஞ்சலம் தோன் றுகிறது. எண்ணங்கள் ஆசையின் பிடியிலே அகப் படுவதினுல்தான் துக்கத்திற்கு ஏதுவாகிறது. அலை யும் மனம் வெளி விவகாரத்தில் சுழன்று கிம்மதியி ல்லாது நிமிஷங்தோறும் குழப்பத்தினுல் குமுறுகி றது. மனதை ஒன்றுபடுத்தும் விஷயத்தில் கஷ்டம் ஏற்படுவதற்குமுக்கிய காரணம் மனம் எதையாவது நி3னத்துக்கொண்டு இருப்பதேயாகும். கற்பனையின் துணைகொண்டு தான் மனம் பல எண்ணற்ற நினைவுக் கட்டங்களை எழுப்புகின்றன. ஒவ்வொரு எண்ண மும் ஆசையின் அத்தி வாரத்திலே கிழம்புவதினுல் ஆரம்பத்திலேயே அது அதிருப்தியிஞல் உளலுகி
 
 
 
 

1 7
றது. ஆகவே மனதினுல் பின்னப்பட்ட ஆசை வழி யில் மனிதன் சிக்கும் வரையில் அவன் ஓயாத் துக் கத்திலே சுழல வேண்டியதுதான்.
ஞான மார்க்கத்திலே அடி எடுத்து வைக்கும் சாதகன் மனதின் சலனத்தை உடைத்தெறிந்து உண்மையான சாந்தியில் இன்பத்தை நுகரவேண்
டும்.
பாயுமீராறு கலை பாயாது பக்குவம் பண்ணி வைப்பது சமாதி. பழவினை யிறக்கவுஞ் சுழிமுனை திறக்கவும் பழகி வருவது சமாதி.
மனிதனுடைய எண்ணங்களுக்கும் சுவாசத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனது மிகச் சூட்சும மானது. மனதில் பல ஆசைகள் கிறைந்து குழம்பிக் கொண்டு இருந்தால் சுவாசமும் ஒழுங்கின்றி ஒடிக் கொண்டே இருக்கும். மனதை நேரடியாக ஒன்று படு த்தமுடியாததினுல் சுவாசப்பியாசம் மூலமாக அதா வது மூச்சைக்கட்டுப்பாடுடன் ஒழுங்காகச் சுவாசிக் கப் பழகினல் மனம் அடங்கிவிடும். பிறகு தியானிப் பதற்கு இலகுவாக முடியும். இவ்வாருக தினந்தோ றும் தியானம் பழகிவந்தால் எத்தனையோ ஜென்மங் களில் சேகரித்த பழமையான வினைகள் யாவும் அதா வது துக்கத்திற்கு காரணமான ஆசைகள் யாவும் அழிந்துவிடும். பிறகு இரு புருவங்களின் மத்தி யிலே இன்ப உணர்வுடன் நடன மாடிடும் அறிவுக்கண் திறந்து ஆத்மீக வாழ்விற்கு வழிகாட்டும்.
ஓவியம் போலிருந்துள்ளுருகு நல்லமிர்த மொழுக வுண்பது சமாதி.
ஓவியம் எந்த வித அசைவுமில்லாது இருக்கி றது. அதுபோல்தான் ஆழ்ந்த அமைதியான தியா

Page 11
18
னத்திலே லயமாகிய மனமானது எந்தவித சலனமு மின்றி இருக்கும். ஆனல் இங்கு முக்கியமான வேறு பாடு என்னவென்றல் ஒவியம் உயிரற்ற உணர்வற்ற பிம்பம். ஆனல் உயர்வான தியானத்திலே ஒன்று பட்ட சாதகனுடைய மனமானது அமுதத்திலும் இனிமையாகிய ஆனந்தத்தை சதா காலமும் அனுப வித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் அறிவுத்தெ ளிவோடும் உணர்ச்சிகள் யாவும் முற்றிலும் ஆசைக ளின் பிடியிலிருந்து விடுபட்டு உயர்வான ஆத்மீக வெளியிலே பரந்து நிற்கிறது. அங்குதான் வாழ் வின் லட்சியம் பூர்த்தியாகிறது. அதுவே பரிசுத்த மான தெய்வீக நிலையுமாகும்.
பொன்மொழிகள்
உயர்ந்த சன்மார்க்க போதம் உலகில் எங் கேயாவது காணப்படுகிறதென்றல் அது ஏதே னும் ஒரு விதத்தில் இந்தியாவினின்று கொண் டுபோகப்பட்டதேயாம். ஆத்மன் அழிவற்றது எனும் பரந்த கோட்பாடு இப் பாருலகில் எவர்க் காவது தெரியுமென்ருல் அவர்க்கு அத்தகைய அமுத வெள்ளத்தை அளித்தது இந்தியா G36 huu umrlib!
 
 

யோக ஆசனங்கள் '
(S. A. P. சிவலிங்கம்)
一一来一一
63. பாதி மச்சேந்திராசனம்
(பழகும்விதம்)
சுத்தமானதும், சமதளமானதுமான கெட்டி விரிப்பின் மேல் இரண்டு கால்களையும் முன்பக்கம் நீட்டியுட்கார்ந்து கொள்ளவும்.
வலது காலை முழங்காலுடன் மடக்கி இடது கால் தொடைக்கு அடியில் அமர்த்தி ஆசனவாயில் வலதுகாலின் குதி தொட்டிருக்கும் வண்ணமமர்த்தவும். இந்நிலையில் இடது காலை வலது பக்கம். அதாவது வலது தொடையின் பக்கம்
இடுப்பின் மூட்டுப்பக்கம் குத்தலாக அமர்த்தவும். முழங்கால்
மேல்நோக்கியிருக்கவும்.
வலதுகையை இடதுமுழங்கால்மேல் அக்குள் படும்வண் ணம் அமர்த்தி வலது முழங்காலின்மேல் உள்ளங்கை படியும் வண்ணம் வைத்திருக்கவும். கை வளைவின்றி நேராய் வைத்திருக்கவும்.
இடது கையை முதுகின் பின்பக்கமாகக் கொணர்ந்து இடது கணுக்காலை நன்கு பிடித்துக்கொள்ளவும். இச்சமயத் தில் சுவாசம் முழுவதும் வெளிவிட்டு முதுகை இடப்பக்க மாய்த் திருப்பி முகத்தையும், கழுத்தையும் திருப்பிப்பார்வை ஓர் ஒரப்பக்கமாகப் பார்த்திருத்தல் வேண்டும். எவ்வளவு திருப்பயியலுமோ அவ்வளவு முதுகைத் திருப்புதல் வேண் டும். இவ்வாறு தீர்க்கமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவி டவும். சிலதடவைகள், சித்திரம் 63 பார்க்கவும். பின் ஆசனத்தைக் கலைத்து மற்றப்பக்கமும் இவ்வாறே செய்து பயனடையவும்.

Page 12
2O
ஆரம்ப சாதகர்களுக்கு முதுகை இவவாறு திருப்பும் சம யம் "கடமுட" என முதுகின் எலும்பு சத்தம்வரும். நேராக இழுக்கப்பட்ட எலும்பு நன்கு திருப்பப்பட்டு நெட்டியை எடுக் கின்றது. இவற்ருல் சகல பாகங்களுக்கும் நல்லது.
கலைக்கும்விதம்
சுவாசத்தை உள் ளிழுத்துக் கொண்டே வலது முழங்கா லின் மேல் " வலது கையை எ டு த் து முது  ைக நேராய்க் கொண்டுவந்து இடது காலையும் நேராய் எடுத்து பின் வலதுகா லையும் நேராய்நீட்டி மல் லாந்து படுத்து சிரமபரி காரம் செய்துகொள்ள 6)|ւ0. சாதாரணமாய் ஆரோக்கிய முள்ளவர் கள் இரண்டு பக்கமும் நான்குதடவைகள் வீதம் செய்யலாம். அதிகம் மெலிந்தவர்கள் அதிகம் செய்யக் Gol LT gb).
ஆண், பெண் அனைவரும் செய்யலாம். ஆணுல் பெண் மணிகள் யோகாசிரியன் உதவிகொண்டு செய்யவும்.
இளமை பாருக்குத்தான் தேவையில்லை? எல்லோருக்கும் இளமையும், அழகும் தேவையே! அவற்றிற்கு உடலமைப்பு அவயவங்கள் சரிவர இருத்தல், தசைப்பொருத்தம் இவைக ளும் அத்துடன் நோயற்ற வாழ்வும்சேர்ந்திருத்தல் வேண்டும். இந்த ஆசனம் சகலருக்கும் பல நன்மைகள் விளைவிக்கின்றது.
L J GDSsir ssir:- அடிவயிறு, முதுகு, விலா எலும்பு, இடுப்பு, முதலியவற்றிற்கு ஆரோக்கியத்தைகொடுக்கின்றது.
د
 

21.
அதிலேற்படும் வியாதியையும் குணப்படுத்தி, கூன்முதுகுள் ளவர்களையும் நிவிர்த்தி செய்கின்றது. முழங்கால், தொடை கள், கைகள் இவற்றிற்கு வலுவையும் எலும்புக்கு வீரியத் தையும் கொடுக்கின்றது. மலஜலம் நன்கு வெளியாகின்றது. முதுகெலும்பு நன் ருக முறுக்கப் படுகின்றது. துணியைத் துவைத்துப் பின் காயவைக்க அதைத்தCண்ணிர்போக முறுக் குகின் ருேம். பின் அவ்வாறு முறுக்கப்பட்டதுணி தண்ணிர் இன்றிச் சீக்கிரம் காய்ந்து போகின்றது. அவ்வாறு உடலில் இருக்கும் துர்நீர் யாவும் பஸ்மமாகி சகல அங்கங்களுக்கும் பூரண சுறுசுறுப்பையுண்டுபண்ணி ஆனந்தமுடன் இருக்கச் செய்கின்றது, முக்கியமாக "பஸ்சிமோத்தானஸனம்' பலனையும் கொடுக்கும்.
ஞாபகத்திலுறுத்துக:- சிரசாசனம் செய்து பின் இந்த ஆசனம் கண்டிப்பாய்ச் செய்யவேண்டும்.
இதன் பெயர்:- யோகி மச்சேந்திரர் விரும்பிச் செய் யும் ஆசனம். ஆகவே அவரது பெயரால் இன்றும் மாறுப டாது வழங்கி வருகின்றது. பாதிமக்சேந்திராசனம் என் பது சமஸ்கிருத மொழியில் அர்த்தமச்சேந்திராசனம் எனவும் பொருள்படும். முழுநிலையிலில்லாது பாதி நிலையில் இருப்பதால் ஆசனக்கடைசித் தோற்றத்தின் பெயரும் முன் பெயரின் பாகமும் இணைக்கப்பட்டிருப்பதால் இப்பெயர் உண் டாயிற்று. மச்சாசனத்திலிருந்து வேறு பட்டதே அர்த்தமச் சேந்திராசனம்.
-பொன்மொழிகள்
ஒருவன் பிரபஞ்சம் முழுவதற்கும் தலைமை பெற்ருலும், தனக் குங் தலைமைபெற வேண்டியவனுய் இருக்கிருன் , மனத்தினுல் அறி யக் கூடிய எல்லாவற்றையும் ஒருவன் அறிந்தாலும், தன்னேயுங் தானே யறிய வேண்டியவனுயிருக்கிருண். ஏனெனில் பிரபஞ்சவாழ் வின் நோக்கம் தன் இனத்தான் அறிதலாம்.

Page 13
* உபநிஷத் உண்மைகள்
(வித்துவான் மு. கங்தையா)
*விஸா' பெறுவதென் ருல் இன்று நம்மவர் எல்லோரும் இலகு விற் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயம். இங்கிருந்து இந்தியாவுக் குப்போக 'விஸா வேண்டும். விஸ்ா' பெற்றுக்கொள்ளுபவர் முத லில் தன் னே அத்தாட்சிப்படுத்தித் தான் தானே என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லவா! இதுபோலவே, வாழ்க்கையுலகிலிருந்து முத் தியுலகிற்குப்போக விரும்பும் ஒரு சீவன் தான் தானே யென்பதை நிரூபிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நிரூபித்த பின் புதான் *விஸா’ப்பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக ஒரு சீவன் முதலிலே தன்னக் கண்டறியவேண்டியுள்ளது; தன் சுயரூபத்தைத் தேடிப்பி டிக்கவேண்டியுள்ளது. இந்த விஷயம் சாதாரண 'விஸா’ விஷயம் போலல்ல. மிகமிகப் பொறுப்பானது; மிகமிக முக்கியமாலாது. மிகமிகச் சிரத்தையானது.
அறிவினுளெல்லாந்தலையாய அறிவுதன்னை யறியுமறிவு. உயி ரின் விமோசனம் இந்த அறிவிலேயே தங்கியுள்ளது. அதிலேதான் அது ஆறுதல் காண்கின்றது; ஆனந்தமும் அடைகிறது.
இந்த அறிவை பெற்றுக்கொள்ள வேண்டி நம்முன்னேர் மகத் தான புரட்சிகள் நிகழ்த்தியுள்ளார்கள். ஆயுதப் புரட்சியன்று, அக்னத்தும் ஆத்மீகப்புரட்சி. அதனு ற் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன; அயலவரறியாமல் அறிவாகிய அரங்கத்திலே அவை விகழ்ந்தன. அனேத்தும் அந்த ரங்கப் போராட்டங்கள். ஆயினும் அவை யக்னத்தும் எப்படியோ நூல் வடிவில் வெளிவந்து விட்டன. இரகசியத்தில் நடைபெற்ற அப்போராட்டங்களேயும் அவற்றின் பெறு பேறுகளையும் தொகுத்து இரகசியம் - உபநிஷத் - என்றே பெயரிட்டுள்ளார்கள். உபநிஷத்துக்கள் நூற்றுக்கணக்கில் மலிந்து கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை பத்து. மற்ற உபநிஷத் துக்களில் கடைக்தெடுக்கப்பட வேண்டிய உண்மைகள் இவற்றில் தாமாகவே மிதக்கின்றன. அவற்றுள் ஒன்று கடோபநிஷத் என்பது.
இந்த உபநிஷத்தைத் திறந்த மாத்திரத்தே 15ம் கருத்தைக் கவ்வு கின்ற செய்தியொன்று உண்டு. இரண்டு மகானுபாவர்கள், குரு வும் சீஷ னும், ஓரிடத்தில் அமர்ந்திருக்கிருர்கள். பாடம் ஆரம்பிக் கப்போகிறது. மிக உருக்கமான பிரார்த்தனேயொன்று நடைபெறு கின்றது. இருவரும் ஒரே குரலில் பாடுகின்ருர்கள்.

23
"ஓம் ஸஹ நெள அவது:- எங்கள் இருவரையும் சேர்த்துப் பிர
மம் காப்பாற்றுக. ஸ்ஹ நெள புனக்து:- எங்கள் இருவரையுஞ் சேர்ந்துப் பிர
மம் போ ஷிக்குக. ஸஹ வீர்யம் கரவர வஹை :- இருவருங் சேர்ந்து வீரியத்துடன்
உழைப்போமாக.
தேஜஸ்வினெ ள அதீதம் அஸ்து:- எங்கள் கல்வி ஒளியுள்ள
தாக இருக்க வேண்டும். மாவித்விஷா வஹை- நாங்கள் ஒருவரையொருவர் பகைத்துக்
கொள்ளாமலிருக்கவேண்டும். "ஓம்" ஸாந்தி: ஸாந்தி; ஸசந்தி:- முவ்வகையிலும் சாந்தி நிலவுக.
இந்தப்பிரார்த்தனே யில் ஐந்து வாக்கியங்கள் உண்டு. ஒவ்வொன் றிலும் குருவும் சீஷனும் தங்களை இணைத்துக்கொண்டே பேசுகின் முர்கள். ஸஹ (உடன்) நெள (நாங்கள் இருவர்) என்ற சொற்கள் மீள மீளத் தோன்றுகின்றன. மற்றவையும் இருமை காட்டும் சொற்கள். இந்த இணைப்பில் ஒரு இரகசியமுண்டு. இந்த உப நிஷத்தின் மற்ற இரகசியங்களுக்குமுன் இந்த இரகசியத்தைச் சற்று
அல5ர்ப்பார்ப்போம்.
கற்றல் என்ற தொழிலிலே இரண்டுபேர் சம்பந்தப்படுகிருர் கள். அவர்களுடைய உறவு எப்படியானது என்று காண்கிருேம் இங்கே, அவர்கள் உருவத்தால் இரண்டாயிருந்தபோதிலும் உற வால் ஒன்ருகி அத்துவிதமாகி விடுகிருரர்கள். உடலும் உயிரும்போல ஆத்மா வும் ஆண்டவனும் போல, குருவும் சீஷனும் அத்துவிதமாகி விடுகிருர்கள். உடலும் உயிரும் அத்துவிதமாகிவிட்டால் வாழ் வில்லை. ஆத்மாவும் ஆண்டவனும் அந்துவிதமாகாவிட்டால் இன்ப மில்லை. குருவும் சீஷனும் அத்விைதமாகாவிட்டால் கல்வியிலே சார மில்லே. இந்தக் குருவும் சீவுனும் ஒரு முகப்பட்டுக் கொண்டார்கள். ஒரே இலட்சியத்தை நோக்கி உழைப்பதாகச் சங்கல்பம் செய்துகொள் கின் மூர்கள்; உழைப்பிலே ஒளி பிறக்கவேண்டுமென்று விரும்புகிருர் கள். அறிவு வேற்றுமை யாவது அபிப்பிராய பேதமாவது இடை யிலே புகுந்து தங்கள் இலட்சியப்பாதைக்கு இடறுகட்டையாய் இருக் துவிடக்கூடாது என்று எச்சரிக்கையா யிருக்கிருர்கள். இந்த மூன்று வகையிலும் சாந்தி நிலவவேண்டும் என்று சர்வேஸ்வரனைப் பிரார்த் திக்கின் ருர்கள்.
அத்துவித பாவனே க்குரிய ஆத்மீக ஆராச்சியிலே செல்லும் இந்த இருவரும் அத்துவிதமாயியங்கும் அழகு இப்பிரார்த்தனேயின் அழகு.

Page 14
  

Page 15
கேள்வி:
பதில்:
கேள்வி:
கேள்வி:
பதில்:
துன்பத்தைத் து  ைட க் க வல்லதென்று பொருள்படும்.
ஜெபத்துக்குரிய உருத்திராட்ச மணிக ளைச் சுத்திசெய்வது எங்ஙனம்?
கோரோசனை, கஸ்தூரி, மஞ்சள், புனுகு, பச்சைக்கற்பூரம், சக்தனம் இவைகள் கரைத்த தண்ணிரில்கழுவி எடுத்து பஞ்ச கெள யத்தில் தோய்த்து எடுத்து மீண் டும் நன்னீரில் கழுவி எடுத்து குறித்த மங் திரங்களைக் கொண்டு நியாசம் செய்ய வேண்டும். பின்னர் மணிகளைக் கோக்கும்போது சிவ மந்திரம் அல்லது இஷ்டதெய்வத்தின் மங் திரத்தை ஜெபம் செய்து மாலையாகக் கோத்து பூஜை, சம்பாதம், ஸ்பர்சம் இவைகள் செய்து அணிய வேண்டும்.
நரகம் எங்கே இருக்கிறது?
எங்கிருந்தாலும் பண்படாத உள்ள த் தின் மத்தியில் சாதாரணமாக இருக்கின் fOgil ·
ஆத்மா என்ற லென்ன?
அண்ட சராசரங்களுக்கும் அடிப்படைத் தத்துவமாயிருக்கின்றது எ து வே ர அதுவே ஆத்மா.
யோக சாஸ்திரத்தில் கூறும் முத்திரைகள் எத்தனை வகைப்படும்?
இவை பத்து வகைப்படும். அவை மகா பெங் தம் மகாமுத்திரை மகாவேதம் கேசரி உட்டியான மூலபெந்தம்

கேள்வி:
பதில்:
கேள்வி:
ශ්‍රීථියක් කොෆි අ
27
ஜாலந்திர பெந்தம், விபரீதகரணி, வச்சி ரோலி, சக்தீசலனம். என்பனவாகும்.
பிராணுயாமம் மந்திர ஜெபத்தோடு செய் வது நல்லதா அல்லது சும்மா செய்வது நல்லதா?
பிராணுயாமத்தில் சகர்ப்பம், அகர்ப்பம் என இரண்டுவித முண்டு. சக ர் ப் ப ம் ஜெபத்தோடு செய்வது. அகர்ப்பம் ஜெப மில்லாமல் செய்வது. இதில் சாதகனுக்கு எது எளிதாயிருக்கின்றதோ அந்த முறை யைக் கையாளுவது நல்லது.
வேதாந்தம், சித்தாந்தம் என்ற பதங்க ளின் அர்த்தமென்ன?
முற்றன முடிவென்று இரண்டு பதங்களும் பொருள் பெறும், முற்றிய அறிவு என் றும் பொருள்படும். வேத + அந்தம் (வேத = அறிவு; அந்தம்= முடிவு) சித்த + அந்தம் (சித்-அறிவு, அங் தம்= முடிவு) எனவே வேதாந்தம், சித்தாந்தம் என்பன அறிவின் முடிவென்று பொருள் பெறும்.
மாயாசக்தி எ ன் று சொல்லப்படுவது 6T6öror?
பரம் பொருள் தன்னை ஜெகத்தாகவும். ஜீவனுகவும் காட்டிக்கொள்ளும் வல்லமைக் குமாயா சக்தி என்று கூறலாம்.
ஒருவர் யோக சித்தி அடையக்கூடிய சுருங்
கிய காலம்,எவ்வளவு?

Page 16
28
பூரணபிரம்மசரிய விரதம்பூண்டு யோகாங் கங்களை முறையாகப் பெருமுயற்சியுடன் ஒரு ஆண்டு செய்தால் சித்திகளில் சில வற்றை அடையலாமென்று சாஸ்திரங் கள் கூறுகின்றன.
உலகம் எப்பொழுதாவது சிறப்படையுமா
சிறப்படைய வேண்டியது நாம் தவிர உலக LD6)6)
சிவம் என்ரு லென்ன?
எது மங்கள கரமாயிருக்கின்றதோ அது
சிவம்.
சிவனை வழிபடுவதற்கு ஏற்ற நாட்கள் 6Ꭲ 6ᏡᎧ6Ꭷ1? முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நாட்கள் 6T60)6)/2 சக்தியை வழிபடுவதற்கு ஏற்ற நாட்கள் 6Ꭲ 6006ᏂᎥ?
இறைவனை வழிபடுவதற்கு ஞாயிறு, திங்
கள், செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி யாவும் நல்ல நாட்களே.
இறை வழிபாட்டிற்கு எந்த நாளையும் எந்த நேரத்தையும் உபயோகப்படுத்திக்கொள்
ளலாம். ஆனல் எப்போதும் கோவிலுக் குச்சென்று வழிபாடு நடாத்த வாய்ப்பு இல்லாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், பெளர்ணமி, அமா
வாசை, திருவாதிரை, கார்த்திகை,
மாதப் பிறப்பு, ஆண்டுப்பிறப்பு, சிவராத்
 

29
திரி, வராத்திரி, முதலிய காலங்களில் தவருது இறை வழிபாட்டைச் செய்து வருவது லேம் பயக்கும்.
சிவனை வழிபடுவோர் திங்கள், வெள்ளி (கார்த்திகைத் திங்கள், ஐப்பசிவெள்ளி முக்கியம்) சிவராத்திரி காலங்களில் வழி பாடு செய்வதாலும், முருகனை வழிபடு டுவோர் செவ்வாய், வெள்ளி, (ஆடிச் செவ்வாய் முக்கியம்) கந்தர்ஷட்டி விரத நாட்களில் வழிபாடு செய்வதாலும், சக் தியை வழிபடுவோர் திங்கள், வெள்ளி நவராத்திரி பத்துத் தினங்களிலும் வழி பாடு செய்து வருவாராயின் கற்பலனைப் பெறுவார்கள்.
பொன்மொழிகள்
தன்னறிவே பொன்னறிவுப் மெய்யறிவு, அதன் முன் நூலறிவு மிகவும் அற்ப மானது. உயர்ந்த நூல்களே அருட்புலவர் வாக்குக ளேச் சிலகாலம் ஆராய்; அதன் பிறகு படிப்பற்று கேள்வியற்று உன் னேயே உள்ளே ஆராய்; பிறகு நீயே உனக்கு வானினும் விரிந்த நூலாவாய். தன் னேயறிந்தவன் அங்கியங் கானன்; தானுகவே உலகைக்காண் பான்.

Page 17
* கல்லக்கண்டால் நயைக்காணுேம் :
兴 米
நடுவூரில் நல்லமரம் பழுத்தாற்போல ஒரு ஊரில் ஒரு பிரபு இருந்தார். அவர் வரையாது வழங்குபவர். அவரது கொடையினைப்பற்றி அயலூரவர்களும் அறிந்திருந்தனர். கொடையின் புகழ் உலகெங்கும் பரந்தது. மிகத்தொலைவி லுள்ள புலவர் ஒருவT கேள்விப்பட்டார். பிரபுவைத் தேடிப் புறப்பட்டார். பிரபுவின் வீட்டைநோக்கி வந்து கொண்டி ருக்கிருர், தூரத்தே வரும்போதே வாசலில் நிற்கும் காவற் கார%னக் கண்டார். அந்தக் காவற்காரனுக்குப் பக்கத்திலே பெரியதோர் நாயும் படுத்திருக்கக் கண்டார். புலவருக்கு நாய் என்ருல் பயம். நாயைக் கண்டதும் பரிசின் ஆசை பறந்தே போய்விட்டது. வந்த வழி யே திரும்பிவிட்டார். புலவர் வந்து திரும்பியதைக் காவற்காரன் கவனித்தான். கைதட்டிக் கூப்பிட்டான். புலவர் திரும்பிப்பார்த்தார். நாயின் பருத்த உருவம் கணமுன்னே வந்துநின்றது. எடுத்தார் ஓட்டம். கண்ணுக்கெட்டிய தூரம் ஒடிச்சென்று மறைந்து விட்டார். ஊரின் புறத்தே உள்ள சத்திரத்திற்கு சென்று தங் கினர். மறுபடியும் பரிசுபெறும் ஆசை உள்ளத்தே முகிழ்ந் தது. மறுநாட் காலை மனதை நன்கு திடப்படுத்திக்கொண்டு பரிசு பெறப் புறப்பட்டார். இன்று காவற்காரனை மாத்திரந் தான் தூரத்திலே வரும்போது பார்த்தார். காவற்காரனும் நேற்றைக்கு வந்த ஆசாமிதான் என்று கண்டுகொண்டான். புலவரும் 25 யார் தூர இடைவெளியில் வந்துவிட்டார். காவ ற்காரன் சிறிது விலங்கின்ை. நாயின்தோற்றம் காட்சி அளித் தது. புலவரையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டு படுத்துக் கிடந்தது. புலவரின் நெஞ்சு திக் என்றது. வேகம் குறைந் தது. நின்றே விட்டார். மெல்லத்திரும்பினுர், காவற் கா ரன் கவனித்துவிட்டான். மெல்லப்பின்னுல் ஒடிச்சென்று புலவ ரைப் பிடித்துக்கொண்டான். நீர் எங்கு வந்தீர்? ஏன் திரும்பிச் செல்கிறீர் எனக்கேட்டான். பிரபுவிடம் பரிசுபெற வந்தேன், உங்கள் நாயைப் பார்த்தவுடனே பரிசு ஆசை யெல்லாம்
 
 

3 1
பறந்துபோய்விட்டது என்ருர்புலவர், காவற்காரனுககுச் சிரிப்பு வந்துவிட்டது அந்த நாய் ஒருவ ரையும் ஒன்றுமே செ ய் யாது. நீங்கள் பயமில்லாமல் வாருங்கள என்று தைரியமூட்டினுன் காவற்காரன், புல வர் பயந்துபயந்து காவற்காரன் மறைவிலேயே சென்று கொண் டிருந்தார். நாய்க்குக் கிட்டச்சென்று காவற்காரன் நாயைத் தடவினன். நாய் பேசாமல் படுத்துக்கிடந்தது. புலவருக் கும் சிறிது தைரியம் பிறந்தது. மெல்லச் சென்று தடவி ஞர். ஒரே ஆச்சிரியமாகப் போய்விட்டது. இது என்ன ? கல்லா? என்ருர், சலவைக்கல்லினுல் செய் யப் பட்டு உண்மை நாய் போலத் தோற்றம் அளித்தது.
புலவா முதலில் அந்த உருவைப் பார்த்தபோது நாயின் உருவையே பார்த்தார். கிட்டச்சென்று பார்த்தபோது கல் லே தென்பட்டது. நாயின் உரு மறைந்துவிட்டது. இத னையே நம்முன்னுேர் ஒரு பழமொழியாற் கூறினர். கல் லைக்கcண்டால் நாயைக்காணுேம் நாயைக் கண்டால் கல்லைக்காணுேம். இதே தத்துவம் இவ்வுலகிலும் உள்ளது. உலகம் முழுவதும் இறைவன் நிரம்பி உள்ளான். இறை வன் இல்லாத இடமேஇல்லை. உலகைப்பாாத்தால் இறை வன் மறைந்து விடுகிருன், இறைவனைப் பார்ப்பவனுக்கு உலகம மறைந்துவிடுகிறது. மரத்தாற் செய்யப்பட்டதொரு யானை தந்தையும் மகனும் சென்றுபார்க்கின்றனர். மகன் கேட்கின்றன். அப்பா இந்தயானை அழகாக இருக்கின்றது. இதில் ஏறிச் சவாரிசெய்யவேண்டும் என்கின்றன். தந்தை சொல்லுகிருர், இது கருங்காலி மரத்தாற் செய்யப்பட்ட யானை, இதில் செல்லமுடியாது. மகன் உள்ளத்தில் யானை தெரிந்தது. மரம் மறைந்துவிட்டது. தந்தை உள்ளத்தில் மரம் தெரிந்தது. யானை மறைந்துவிட்டது. இதனையே திருமூலப் பெருந்தகையார்
மரத்தை மறைத்தது மாமத யானே மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்பெரும்பூதம் பரத்தில் மறைந்தது பார்பெரும்பூதம் என்கின்ருர், உலகத்தில் நல்லதைப்பார்க்கத் தொடங்கினுல்

Page 18
32
கெட்டது மறைந்து விடுகின்றது. உலகத்தில் நல்லதைப் பார்க்கத் தொடங்கினுல் நல்லது மறைந்து விடுகிறது. அன்னை சாரதாதேவியார் இராமேஸ்வரயாத்திரை வந்திருந்தார். எம் பிரான் முன் மண்டியிட்டுக் கண்ணிர்வாரப் பின்வருமாறு வேண்டினுர், எம்பெருமானே இவ்வுலகத்தில் எவருடைய தீமையும் என் கண்களுக்குத் தெரியா திருக்க வேணடும். கழுகு ஆகாயத்திலே உயரப்பறந்தாலும் அதனுடைய கண்க ளுக்குப் பூமியிலே உள்ள அழுகிய பொருட்கள்தான் தெரி யும். மனிதன் எதிலே பழகுகின்றனே அதேதான் வாழ்க் கையில் பிரதிபலிக்கின்றது.
ஒருநாள் துரியோதன மகாராசாவும் தர்மமகாராசாவும் பூரீகிருஸ்ணபரமாத்மாவுடன் ஊரினைச் சுற்றிப் பார்க்கச் சென் றிருந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் கிருஷ்ணபரமாத்மா இரு வரையும் ஒரு கேள்வி கேட்டு வைத்தார். ஊர் எப்படி இருக் கிறது என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த ஊரிலே ஒருகல் லவனுவது இல்லை என்று துரியோதன மகராசா பதில் அளித் தார். இந்த ஊரிலே ஒரு கெட்டவனுவது இல்லையென்று தரு மராசா பதில் அளித்தார். இருவரும் பார்த்த ஊர் ஒன்றே தான். ஒரே மக்களைத்தான் பார்த்தனர். விடையில் ஒன் றுக்கொன்று முரண்பாடு இருந்தது. காரணம் அவர்கள் உள் ளமே. பச்சைக் கண்ணுடியைப்போட்டுப் பார்ப்பவனுக்கு
உலகமெல்லாம் பச்சையாகவே தோற்றும். ஆகவே மனித
னது அபிப்பிராயம் அவனது உள்ளத்தின் உயர்வைப்பொறுத்
ததே. ஆதலினுல்தான் பெரியோர் நலமே நினைந்து,
நலமே பேசி, நலமே செய்க என்றனர்.
 
 
 

ܗܝܼܨ
சந்த நேயர்களுக்கு
சோதியின் 11-ம் ஆண்டு முதல் சுடர் இதோ தங்கள் கைக்கு வந்துள்ளது. இன்று வரை சந்தா அனுப்பாத நேயர்கள் தத்தமது சந்தாப்பணத்தை உடன் அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகின் ருேம் .
இந்தியாவிலுள்ள சந்தா நேயர்கள்
இந்தியாவிலிருந்து நேராக இவ் விடம் பணம் அனுப்புவதில்
சில தடைகள் இருப்பதால் அவர்கள் தமது சந்தரவைப் பின்வரும் விவா சத்திற்கு அனுப்பிவைப்பதோடு இவ்விடமும் அறியத்தர வேண்டுகின் ருேம்.
இந்தியாநேயர்கள் பணம் அனுப்பவேண்டிய விலாசம்
R. V E ER AS A MBU,
Sambu Industries, SALEM 2. மலாயா, தென்னுபிரிக்கா, பர்மாவிலுள்ள நேயர் கள் தமது சந்தாவை வழக்கம்போல் பிரிட்டிஸ் போஸ்ரல் ஒடர்மூலம் அனுப்பிவைக்கலாம்.
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி
- சர்க்கரை கொல்லி சூரணம் - (DIABITES) என்னும் நீரிழிவு மதுமேகத்திற்கு மிகச்சிறந்த சூரணம். யாவும் மூலிகையினுல் சித்தர்களின் அனுபவ முறைப்படி தயாரிக்கப்பட்டது. சர்க்கரை வியாதியினுல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அற்புத ஒளடதம். - தபாற்சிலவுட்பட டின் ரூபா 6-75. is SAMBU INDUSTRIES - SALEM 2 (S.I.
இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜோதி நிலையம்
நாவலப்பிட்டி - சிலோன்,

Page 19
Registered at the G-P-O as
உருத்திரபுரம் இலங்கையில் மாதர்கள் முன்னேறுவதற்கும், அந பதற்கும் தகுந்ததோர் ஸ் வருந்து தற்குரியதே. அச் யம் நோக்கமாக மாதர் ரோடு உருத்திரபுரத்தில் ள்ளோம். இக் கைங்கரி தார் 5 ஏக்கர் நிலம் வ பொருத்தமான இடத்தில் உருத்திரபுரம் சிவாலத்தி கோயிலிலிருந்து முக்க வின் அருகாமையில் அ கம் கொண்ட பல் தாய்ம்: வும் ஆச்சிரம வாழ்க்கை ளார்கள் நிலம் காடுவெட் றுள்ளது. ஆச்சிரம்த்தை முதலாக 2 கிணறுகளும் மண்டபமும் அவசியம் ( ஆரம்பித்து வைப்பதற்கு ரூபாயாவது தேவைப்ப ( டையானதும் ஜனவரி 1 டங்க உத்தேசித்துள்ளே ரும் தம்மாலியன்ற பொரு கரியத்தை நிறைவேற்றி வேண்டுகின்ருேம்.
1Diğ5
குறிப்பு: பணம் அனுப்ப
மாதர் ஆச்சிரமம் -- என்ற விலாசத்தி ஆத்மஜோதி நிலை என்ற விலாசத்தி Printed by N. Muthiah at the Published by N. Muthiah Ath

a News Paper M-L 59-300
மாதர் ஆச்சிரமம்
தமது ஆத்மீக வாழ்வில் ாதைப்பெண்களே ஆதரிப் தாபனம் இல்லாதது மிக குறையை நிவிர்த்தி செய் ஆச்சிரமம் என்ற பெய இப்பணியை ஆரம்பித்து
யத்திற்காக அரசாங்கத்
ழங்கியுள்ளார்கள். மிகப்
9 நிலம் வாய்த்துள்ளது. ற்குச் செல்லும் வழியில்
ால் மைல் தூரத்தில் தெரு
மைந்துள்ளது. ஞானதா
ர் ஆச்சிரமத்தை நடத்த 5 வாழவும் முன்வந்துள் டி நெல் விதைக்கப்பெற் த்தொடங்குவதற்குமுதன்
2 சிறிய வீடுகளும் ஒரு தேவையுண்டு. இவற்றை நக் குறைந்தது 15000 நிகின்றது. நெல் அறுவ மாதத்தில் இதனைத்தொ
ਕਹੋ ਕਟੇਹ6 நளுதவி புரிந்து இக்கைங்
வைக்குமாறு அன்புடன்
இங்ஙனம் ஆச்சிரம நிர்வாகிகள் விரும்புவோர்: -உருத்திரபுரம் கும் அனுப்பலாம் பம்-நாவலப்பிட்டி கும் அனுப்பலாம் Sri Murugan Press- Punduloya. majothi Niliyam Nawalapitiya