கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.12.01

Page 1


Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும்
క్తిత్స இறைவன் ஆலயமே. ஓர் ஆத்மீக * சுத்தானந்தர்
சோதி 2 איון \ & ? יי יולי || . * *** Gömt tot (ഖ് கார்த்திகை 1-12-08
பொருளடக்கம்
சுவானுபூதி பேரின் பத் தெள்ள முது பூரண வாழ்க்கை போதித்த புண் ணியவதி உபநிஷத் துண்மைகள்
பெறுவேனு
ஐயம் தெளிதல்
ஞானப் பழம்
ஏன் பள்ளி கொண் டாய் இராமலிங்கரும்-இரமணரும் பூரீ ஞானனந்த சுவாமிகள் ஆசியுரை
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடசங் தா ரூ. 3-00
தனிப் பிரதி சதம் -30 -
கெளரவ ஆசிரியர்: a. @町rLaキラ島尋gór。 பதிப்பாசிரியர்: நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
 
 

--- ஓம் mmmmm
: Jr ఏl | | U. శ్రీ :
(தியான காலம்)
நன்மையாவது பாவத்தினும் ஆழமானது, தீமையினும் ஆழமானது. இந்தப் பிரபஞ்ச அமைப்பும், அதன் சாரமாகிய மூலப்பொருளும், எல்லையில்லாததும், உவமிக்கக்கூடாதது மாயிருக்கின்ற நன்மையாம். கடவுள் இருக்கின்ற இடத்தே யாதொரு தீமையும் இருக்காது. தீமையானது வெளித்தோற் றம், ஒருகாலமும் உண்மையானது அல்ல. ஆன்மாவாகிய கடலில் அதி ஆழத்தில் அசைகக முடியாத கற்பார்களாகிய ஞானமும் உண்மையும் இருக்கின்றன. இவைகளின் முன் னிலையில் எல்லாப்பிழையும், எல்லா இருளும், எல்லாத்தீ மையும் அழியவேண்டும். ஆசையென்னும் விரை காற்றின் மும்முரமான சப்தமும், வேகமுள்ள காமப்புயலும், பாவமும் இருளும் நிறைந்த நேரங்களும், மேற்பரப்பில் இருக்கலாம் ஆணுல் சுவானுபூதி - ஒருகணத்தனுபவம் சர்வ வல்லமையு டையது! அது உக்கிரமானதும் துள்ளும் குணம் வாய்ந்தது மான எல்லாத் தீமைகளையும் துடைத்து ஒரு புறத்திலே தள் ளும். அது சகல இருளையும் போக்கடிக்கும் சூரியப்பிரகாச த்தை ஒத்தது. ஆகையால் இருளிலும் அந்த ஒளியை நினை நீ பாவஞ்செய்கின்ற வேளையிற்ருனும் இறைவன் நாமத்தைக் கூவியழை இறைவன் உனது வேண்டு கோளிற்குச் செவி சாய்ப்பான். அவர்தனதுகணங்களை உனக்கு உதவிபுரிய அணு ப்புவார். ஆன்மாவின் சொந்தச் சத்தியைவிட மேலானசக்தி வேருென்றில்லை. அதி ஆழத்திலே, இடையருத ஒருமையென் னும்தெய்வீகப் பிரவாகம இருக்கின்றது. அதன் தரிசனம்கண ப்பொழுதேனும் கிடைத்தால், அறியாமைக்கும் பாவத்திற்கும் இருப்பிடமாகியபேதவுணர்ச்சி அற்றுப்போகும். உற்பத்தியில் நீ சுதந்திரன், நீ பரிசுத்தன், நீ தெய்வத் தன்மை உடைய வன். பிரபஞ்ச சக்திகள் எல்லாம் நீ நினைத்ததும் வந்துசேரும்.
SLSLS0SLSLGGLSLSSSMSSSMSSSSkkS

Page 3
-% பேரின்பத் தெள்ளமுது k
(மகரிஷி சுத்தானந்தர்)
18. என யுனக் கின் பமாய் ஈந்தனன் இறைவனே
ஏற்றுன் ஆன என்னுள் வைப்பாய் என் மாய இருளெ லா மில்லாம லோடியான்
என்றென்று முன்ற னுடனே இணைவுற் றருட் சுடர் குளித்தங் குலாவுவேன்
ஏகாந்த மோனத்திலே இயற்கை விளையாட்டையுன் இச்சை விளையாடலென்
றெண்ணியே பார்த்திருப்பேன் தனே யீந்த உயிரினுக் குனே முற்று மீந்தருள்
சக்திச் சுடர்ப் பிழம்பே தர்க்கவா தங்களைத் தாண்டியொளிர் உண்மையே
தாயிற் றயா மூர்த்தி யே அனைவர்க்கு மெளியனே யாதினும் அரியபரம்
மாகரர சக்தி மயனே அன்பருடன் அணுவளவும் அகலாத நேயனே
ஆருயிர்க் குயிர் நாதனே,
14. தாராத லத்தினிற் சாற்றுமொழி யாவிலும்
தமிழினிது தமிழினிது கரண் ! தாராள வாஞ்சையுள தமர் சுற்ற முறவினுத்
தாயுறவு மிகவினிது காண்! || பாராதி தனிலுள்ள கண்டங்க ளிற்புனித
பரத கண் டம்பெரிது காண்! பண்புற முயல் வினைகள் பலவினுந் தனை வென்ற
பரமதவ மினி தினிது கர ண் ! சீராதி பெருமை க ளியாவினுஞ் சீரியது
சித்தவை ராக்கியம் காண் தேடரிய சித்திகளி லோங்கியது, தேடற்ற
சிவதுரிய சகஜநிலை காண் ! பன ரா ரெனக்கினிது செய்திடினு மாரா யின்
யானே எனக்கினிது காண் ஆன்மபர பூரண வகண்ட சுக வாரியே
அறிவான பர தெய்வமே.
 

பூரண வாழ்க்கை போதித்த புண்ணியவதி (ஆசிரியர்)
சென்ற நூற்ருண்டில் உலகின் காலா பக்கங்களி லும் அறிவுச்சுடர் மணிகள், ஆன்ம வீரர்கள் பலர் தோன்றியுள்ளனர். பாரததேசத்திலும் வட இலங் கையிலும் வாழ்ந்த பெரியார்களின் வரலாற்றை நாமெல்லோரும் நன்கறிவோம். அதேபோல் ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றிய டால்ஸ்டோய் (0ே/5for), கேதே (CecMe), பிளவஸ்க்கி அம் மையார் அப்துல் பகாய் (7ே6a/7GaAa), எமர்ஸன் (Z mergon), 65.665ulb (g thei) (sci//iam /ames), 65மன் (WAitman) முதலாய பெரியார்களின் வரலாறு களையும், உபதேசங்களையும் ஆங்கிலத்திலும், இங் திய மொழிகள் பலவற்றிலும்படித்தின்புறும் பாக்கி யம் பெற்றுள்ளோம்.
ஆணுல், இவர்கள் எல்லாரிலும் பார்க்கப் பன்ம டங்கு உயர்ந்த மேதாவியாய், அரிய தீர்க்கதரிசியாய், இணையற்ற இல்லற ஞானியாய் விளங்கிய ஜப்பானி யப் பெண்மணி "மிக்கி நகயாமாவின்" பெயரை இந்தியநாட்டு எம் மொழியினும் இதுவரையில் பார்த் ததில்லை. இந்த அம்மையாரின் திருநாடு, நாம்வா ழும் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த தென்னும்போது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள் ளோம். இற்றைக்கு நூற்றறுபது வருடங்களுக்கு முன் அன்னர் அவதரித்த 'சோயாளிலிக்கி’ என் னும் கிராமம், எளிய கமக்காரர் வாழ்ந்த முப்பது சிறு குடிசைகளைக் கொண்டதாய் இருந்தது. இன்று அந்த இடம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டில் எழுந்த **டென்றி" என்னும் அழகான பெரிய நகரமாய், ஜப்பான் தேசம் முழுவதற்குமே பெருமை தேடிக்கொ டுக்கும் புதிய பட்டணமாய், பல்வேறு நாடுகளிலும் இருந்து யாத்திரீகர்களை அழைத்துக் கொண்டிருக்

Page 4
36
கும் புண்ணிய நிலையமாய் மிளிருகின்றது. நிாந்த ரமாய் அங்கு குடியிருப்போர் தொகை 60,000 ஆகும்.
அம்மையாரின் வாழ்க்கை வரலாறு மிகவும் அற் புதமானது. அதன் முதற் கூறன நாற்பது ஆண்டு களில் அன்னரை அரிய புத்திரியாய், பிரிய பத்தினி யாய், அன்பே உருவான தாயாகக் காண் கிருேம். அவருக்கு தெய்வீகக் காட்சி கிடைத்தது கி. பி. 1838ஆம் ஆண்டு பொருந்திய நாற்பத்தொராவது வயதில் ஆகும். இவர் குலம், கோத்திரம், சொத் துரிமை, பதவி முதலாயவைகளின் தொடர்புடன் ஆத்மீக வாழ்வில் முன்னேற முடியாது, உண்மை யான சமயத் தொண்டும் செய்ய முடியாது என்று ணர்ந்து அவற்றை யெல்லாம் முற்றிலும் துறந்தனர். அதன்பின் ஐம்பது ஆண்டுகள், உடலோடு உலாவி செயற்கரும் செய்கைகள் பல செய்து முடித்தனர். ஆத்மீக வாழ்வின் ஆரம்ப தசையில் அவர் அருளிய பாடல்கள்,
“எல்லாரும் இன் புற் றிருக்க நினேப்பதுவே அல்லாமல் வேருென் றறியேன் பராபர மே”
* அன்பர்பணி செய்ய என ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந் தெய்தும் பராபர மே” என்னும் தாயுமானவர் திருவாக்கை நமக்கு நினை வூட்டுகின்றது. நம் இனத்தாரைப் பொறுத்தமட் டில் இன்றும் ஏட்டளவில் பாட்டாக இருக்கும் இவ்விரு பாடல்களும் என்ன அற்புதமான முறையில் கருமமாக மாறியுள்ள தென்பதை உண்மையாக உணரவேண் டுமாயின், ஒருவர் டென்றி நகருக்கு கட்டாயம் யாத்திரை செய்யவேண்டும், எழுத்தாலோ, பேச் சாலோ எவ்வளவு விளக்கினுலும் அதனை முற்றிலும் அறிந்து கொள்ள முடியாது.
ஜப்பானில் தொன்று தொட்டு இருந்து வந்த *ஷின்ருே மதம், சென்ற நூற்றண்டில் பதின்மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள்கடை

37
சியாகத் தோன்றியது இந்த அம்மையார் நிறுவிய *டென்றி மதம் என்னும் அன்பு மார்க்கம். அதன் அடிப்படைத் தெய்வக்கொள்கை அருட்பிரகாச வள் ளலார் விளக்கிய, -
“தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகரில்லாத தனித் தலேமைத் தெய்வம் வாயா p வாழ்த்துகின் ருேர் மனத்தமர்ந்த தெய்வம்' என்னும் அரிய தத்துவத்தைப் பூரணமாய் ஒத்துள் ளது. வள்ளலாரைப் போலவே அம்மையாரும் தமது புகைப்படமெடுக்க எவருக்கும் உத்தரவு கொடுக்க வில்லை; வேறு எவ்வித உருவமாவது வரைந்து வழி பாடு செய்யவும் சம்மதிக்கவில்லை. இந்த மதம் பழைய சம்பிரதாயங்கள் பலவற்றிற்கு முரண்பட்ட தாயும், சக்கரவர்த்தியைத் தெய்வமாகப் பேணும் நெறியைப் புறக்கணிக்கும் முறையிலும் போதிக்கப் பட்ட காரணத்தினுல், அம்மையாரும், அவரது அடி யார்களும் அரசாங்கத்தின் சீற்றத்திற்கு ஆளாயி னர். 1875ம் ஆண்டுதொடக்கம் அம்மையாரின் மகா சமாதித்தினமான 1887-ம்ஆஜனவரி 26-ங்வுவரை யில் உள்ள பன்னிரண்டு ஆண்டு எல்லைக்குள், அன் னர் பதினேழு முறை சிறைவாசம் இருந்து சொல் லொணுத் துன்பம் அனுபவித்ததாக அறிகின்ருேம். அம்மையார் மறைந்து 21 ஆண்டுகள் கழிந்தபின் தான் (அதாவது 1908-ல்) அவர் நிறுவிய அன்பும தம் அரசாங்கத்தினுல் அங்கீகரிக்கப்பட்டது. 115 ஆண்டுகள் பூத உ ட லி ல் வாழப்போவதாக நம்பி இருந்த அடியார்கள், அவர் தமது 90ஆவது வயசில் உடலைவிட்டுப் பிரிந்தபோது அளவற்ற கவலைக்குள் ளாயினர். அவர்களின் கிலேசத்தை முன்கூட்டியே நன்குணர்ந்த அம்மையார், தாம் உடலை உதறித்தள் ளியபோதிலும் நீடித்த காலம் அந்த இடத்தில் அவர் களுடன் கூடஇருந்து காப்பாற்றப்போவதாக வாக்க ளித்த பின்னரே மரைந்தனர். அவரின் பூதவுடல் அடக்கஞ் செய்யப்பட்ட இடத்தில் அழகான பெரிய ஆலயம் எழும்பியுள்ளது.
அதனைச் சுற்றி மக்கள் தொண்டிற்காக நிறுவப்
பட்டுள்ள அறநிலையங்கள் அளவற்றன. ஆரம்பபா டசாலை முதல் சர்வகலாசாலை வரைக்கும் கல்வி நிலை
யங்கள் பல உள்ளன. சர்வகலாசாலைக் கருகில்

Page 5
38
பெரிய நூல் நிலையமும், நூதனசாலையும் அமைந்துள் ளன. குறித்த நூதனசாலை யில் அம்மையாரின் சொந்தக் கையெழுத்திலேயே அமைந்த அவர் இயற் றிய 17 11 பாடல்கள் நீண்டக ண்ணுடி அலுமாரிகளில் காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளன. 15,000 மாணவ மாணவிகள் தங்கி யிருப்பதற்கு ஆறடுக்கு மாளிகை யொன்று விடுதிச்சாலையாய் அமைந்துள்ளது. அகா தைப் பிள்ளைகட்கும், வயோதிகர் கட்கும் தனிப்பட்ட இல்லங்கள் உள்ளன, நோயாளிகளை வைத்துப் பரா மரிக்க வைத்தியசாலையும், கூடியரோக ஆராய்ச்சிக் கூடமொன்றும், மருந்துச் சாலைகளும் நிறுவப்பட் டுள்ளன.
சர்வகலாசாலையில் பிறமொழிப் பயிற்சிக்கூடம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் சீனம், ஆங்கிலம் ஜேர்மன், பிரைன்சு, ரஷியன், ஸ்பனிஸ், இந்தோ னேஷியன், கொரியன் ஆகிய எட்டுப்பிரிவுகள் உண்டு. சர்வகலாசாலைப் படிப்பு, முடிந்து சமயத்தொண் டுக்கே தம் வாழ்வை அர்ப்பணம் செய்வோர் பயிற்சி பெறுவதற்காக சமயபோதனு பாடசாலையும், தியான மண்டபமும் நிறுவப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக்கு வேண்டிய நிலையங்கள் நவீனமுறையில் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இந்த நிலையத்தில் கொண்டாடப்படும் தினங் கள் மூன்று. அவற்றுள் அம்மையார் தெய்வக்காட்சி பெற்ற தினமாகிய ஒக்டோபர் 26-ந்தேதி, மாதங் தோறும் கொண்டாடப்படும் விழாவாகும், அவரின் பிறந்த தினமாகிய ஏப்ரல் 18- ங் தேதியும், மகா சமாதி தினமாகிய ஜனவரி 26-ந் தேதியும் வரு டாந்த விழாக்களாகும். அட்டையில் காணப்படும் படம் 1956-ம் ஆண்டில் மகாசமாதியின் எழுபதா வது விழாவின்போது கொடியேற்றும் காட்சியைக் குறிக்கின்றது. இவ்விழாக்களில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் நாலாபக்கங்க
 

39 ளில் இருந்தும், பிறநாடுகளில் இருந்தும் வந்து கூடு வர். அவர்கள் தங்குவதற்கென மொத்தம் இரண்டு லட்சம் மக்களை ஒரேமுறையில் அடக்கக்கூடிய விடு திச் சாலைகள் இதுவரையில் 150 அமைக்கப்பட்டுள் ளன. வேறு பல புதுக்கட்டிடங்களும், கட்டப்படுகின் றன: "அந்த மில்லாக் கட்டிடவேலை" என்பது அங்கு வாழும் அடியார்கள் பலரின் வாயில் அடிக்கடி மிளி ரும் வாக்கியமாகும். கட்டிடவேலையில் நிலையத்தின் தலைவர் முதல், ஐந்துவயதுக் குழந்தை வரை மண் சுமந்தும், மரந்துரக்கியும் உடலால் உழைக்கின்றர்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விஷயமா கும். அம்மையார் சாதனைமூலம் விளக்கிய போதனை யின் படி, சமய சாத்திரம் சொல்லிக்கொடுப்பதும், சமையல் அறையில் பாத்திரம் கழுவுவதும், இடத் தைச் சுத்தப்படுத்துவதும் ஆகிய எல்லாம் ஒரேவித தொண்டாகும். சேவையில் உயர்வு தாழ்வு என்பதே இல்லை. "டென்றி நகரில் வாழும் மக்களின் குறிக்கோள் இதுவாகும்.
இப்புதிய சமயத்தின் பேரால், ஜப்பானின் பல பாகங்களிலும் வேறு பல நாடுகளிலும் 15, 151 கோயில்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் தொண் டாற்ற இதுவரையில் ஒருலட்சத்தோராயிரம் போத கர்கள் போதன சாலையிற் பயிற்சிபெற்று வெளிவங்
துள்ளனர். இந்த ஒரு உண்மையைக் கொண்டே ஒரு
தனிப் பெண்ணின் ஆத்மசக்தி எவ்வித அற்புதமான சமயத் தொண்டைப் புரிந்து வருகின்ற தென்பதை அன்பர்கள் ஊகித்துக் கொள்ளலாம். விரிவஞ்சி
மிகவும் சுருக்கமாகவே விபரங்கள் தந்துள்ளோம்.
சமயப் பூசலும், சாதிப் பிணக்குகளும், மொழிப்பி ரச்சனைகளும் இல்லாத இடத்து, மக்களின் பொதுநல சேவை. அரசாங்கத்தினதும், அரசியல் வாதிகளின தும் தொடர்பெதுவுமே யின்றி, எவ்வாறு மக்களின் வாழ்வை எல்லாத் துறையிலும் முன்னேற்றக்கூடும் என்பதற்கு “டென்றி’ நிலையம் ஓர் ஒப்பற்ற எடுத் துக்காட்டாகும். ത്ത-—ത്ത

Page 6
உபநிஷத் உண்மைகள் (2. நசிகேதஸ் (வித்துவான் மு. கந்தையா)
மக்களிற் சிலர் பிறக்கும்போதே கருவிலே திருவுடையர் களாகப் பிறந்துவிடுகிருர்கள். மெய்ப்பொருள் விழையும் விடு தலைமோக்மும் அவர்களிடம் தாமாகவே உற்பவித்து விடுகின் றன. அவர்களிடத்தில் தணியாத மனுேவிசாரமும் குறையாத சிரத்தையும் குடிகொண்டு விடுகின்றன. அத்தகைய ஒருமகா னுபாவர் கடோபநிஷத்திலே காட்சியளிக்கின் ருர் அவர் பெயர் நசிகேதஸ் என்பது. அவர் வாழ்வில் இருந்து இரண்டு உண்மைகள் புலனுகின்றன.
நசிகேதஸ் வாஜசிரவசின் புத்திரர். வாஜசிர வஸ் ஒருமுறை உயர்ந்த பலன்கருதிச் சிறந்த யாகமொன்று இயற்றினர். யாக முடிவிலே தானங்கொடுககிருர் . ஏனே தெரியாது அந்தத்தானத்துக்கென்று கொண்டுவரப்பட்டிருந்த பசுக்கள் அனைத்துமே வற்றிக்காய்ந்த வெறும் கிழப்பசுக்கள். இதைப்பார்த்தபோது நசிகேதசுக்குச் சிரத்தையின் ஆவே சங்கிழம்பிவிட்டது, பின்வருமாறு சிந்திக்கலானுன் :-
*உபயோகமற்ற இந்தக் கிழப்பசுக்களைத் தானங்கொடு க்கிற ஒருவர் அடையும் பலன் உபயோகமற்றதாகத்தானே இருக்கும். இந்தத்தானம் நம்தகப்பணுருக்குச் சிறந்தபலனைய ளிப்பதாக இல்லையே. தமக்குப் பிரியமான் தும் பிறருக்கு உப யோகமானதுமான ஒருபொருளையாவது தானஞ் செய்தாலல் லவோ இவர்க்குத் தானபலன் சித்திக்கும். நான்தான் இருக்
கிறேனே. வேருெனறுமில்லாதபோது இவர் என்னையாவது
தான ஞ் செய்யலாமே; தான் க்ருதிய பலனைப் பெறலாமே?
*இந்தச் சிந்தனைக்கிடையில் அவன்தகப்பனரை நோக்கி
என்னை யாருக்கையா தானமாகக்கொடுப்பீர்கள்? என்று அவ சரமாகக் கேட்டான். பதிலில்லை. திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தடவைகள் கேட்டான் மகன் தன்னைக் கிண்டல் பண் ணுகிருன் என்பது தகப்பன் அபிப்பிராயம். பொறுமையிழந்த வாஜசிரவஸ் ‘உன்னை யமனுக்குக் கொடுக்கின்றேன்"
 

4. 1
என்று ஒரேயடியாகத் தமது வெறுப்பைக் கொட்டித் தீர்த்து விட்டார். நிலைமை தர்ம சங்கடமாயிற்று. தகப்பன் சொற்படி செய்ய நசிகேஸ் தயங்கவில்லை. ஆல்ை, தகப்பனுே ஏணி தைச் சொன்னே னென்று பச் சாத்தா பப் படும்படி யாயிற்று யாகவிஷயத்தில் சொன்னதைச் செய்தேயாகவேண்டும். அவ ரால ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. நசிகேதஸ் உடனே விடை பெற்றுக்கொண்டு யமலோகம் நோக்கி விரைந்தான்.
அவன சென்றபோத யமனங் கில்லை. மூன்று நாள் ஊன உறக்கமின்றி யமனுக்காகக் காத்திருந்தான் நசிகே தஸ். யமன் வந்தபோது அவன் வீடு தேடிவந்த விருந்தாளி யாக யமன ஏற்றுக்கொண்டான். தன் வீட்டுக்குவந்த விருந் தாளியை மூன்று ந1ள ஊணுறக்கமிறிைக் காக்கவைத்தபழிக் காக யமனே முதலில் பரிகாரம தேடவேண்டியிருந்தது. இய மன் நசிகேதஸிடம் மன்னிப்புக்கேட்டு அப்பழிக்குப்பரி காரமாக, விரும்பியபடி ஏதேனும் மூன்று வரங்கேட்கும்படி கூறினன்.
தானப் பண்பு
தானங் கொடுக்கிறபோது இயன்ற அளவுக்குச் சிறந்த உபயோகமான பொருளைக்கொடுத்தல் இன்றியமையாதது. கொடுக்கும் பொருளாற் பிறர் பலன் பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் அதனினும் முக்கியமானது. நாம் உபயோ கித்துக் கழித்த பொருளைத் தான மென று கொடுப்பது தவறு.
நமக்குப் பிடிக்காத பொருளைப் பிறர்க்குத் தானஞ்செய்வது
தவறினுந் தவறு, நம் தானப்பொருள் பிறர்க்கு எவ்வளவுக் குப் பலன் படுமோ அவ்வளவுதான் நமகசூக் கிடைக்கும் பல னும், இது இத்தொடர்பில் நாம் ) f னும ஒரு உணமை. நசிகேதஸ் யமனிடங்கேட்ட வரங்கள்:-
1. என் தகப்பனுர் கோபமும் பச்சாத்தாபமும் நீங்கிச் சசக்தி
யடையவேண்டும்.
3. சுவர்க்க வாழ்வுக்கு ஆதாரமான அக்கினி வித்தையை என
க்கு உபதேசிக்கவேண்டும்.
3. பூதவுடளை விட்டுக் கிளம்பின சீவன் அப்படிச்செல்லும் இப்ப டிச்செல்லும் என்று அபிப்பிராய பேதம் இருக்கிறதே. அதன் உண்மையாது? அதை எனக் குபதேசிக்க வேண்டும்.

Page 7
42
முதல் இருவரங்களும் கொடுத்தாயிற்று. மூன்ருவதுவரங் கொடுக்குமுன் இயமன் நசிகேதஸைச் சோதிக்கின்ருன், அதன் மூலம அவனிடத்தே சுவாலிக்கும் சிரத்தை வேகத் தைத்தூண்டிவிடுகிருன், அப்போது இயமன் சொல்லியது:- நசிகேதஸ்ே! சிரஞ்சீவிகளாகிய பெளத்திரபுததிரர்களைத் தருமபடி கேள். பொன் பொருளாதிய செல்வங்களைக் கேள். உனக்குத் தீர்க்காயுஸ் வேண்டுமென்று கேள் அப்படியே தந்துவிடுகிறேன். இவையன் ருே உனக்கு வேண்டியவை."
இந்தக்கூற்று நசிகேதஸின் விவேகத்தின் வாலை முறுக்கிவிட்டது போலாயிற்று. அவன் சிந்தனை ஒடிப் பரக் கின்றது. இந்தப் பொருள்களை யமன் கொடுப்பான் ; கொடுத் தடடியே திரும்ப எடுப்பான். இவற்ருல் நமக்காவதென்ன? இயமன் நமக்குப் பூச்சாண்டியல்லவோ காட்டுகிருன் என்று யோசித்தான். அவன் யமனுக்குக் கூறியது:-
யமதேவனே! இவையெல்லாம் இன்றிருக்கும்; நாளே பழியும். அவை தாம் அழிவது மட்டுமன்றி நமது இந்திரியங் களையுமே அழித்துவிடும். நீ தருவன வெல்லாம் மீளவும் உன்னிடமே வருகின்றன. ஆன்மா ஒருபோதும் இவ் வகைப் பொருள்களால் திருப்தியடைய முடியாது. அன்றி யும் இவற்றுக்காக உன்னைப் பிரார்த்திக்கவேண்டியதில்லையே! ஆதலால் இதைவிட்டு நான் கேட்டதையே எனக்கு உபதே சித்தருளும்.
யமனுடைய ஜம்பம் பலிக்கவில்லை. அவன் கேட்ட
படியே உபதேசிக்கத் தொடங்குகிருன் .
பிரார்த்தனைப்பண்பு
மனிதன் தனக்கு எதுவேண்டுமோ அதை ஆண்டவனி டம் பிரார்த்திக்கவேண்டும். இகவாழ்வுக்கு வேண்டியவற்
றையுஞ்சரி மோகூடிவாழ்வுக்கு வேண்டியவற்றையுஞ்சரி ஆண்
டவனேதான் கொடுக்கின்றன். வாழ்வில் முக்கியமானது மோகூடி வாழ்வு. வறுமையிலே அமிழ்ந்தினுலும் சரி செல்வத்
 

43
திலே மிதந்தாலுஞ்சரி இகவாழ்வு இகவாழ்வுதான். வறு மைத் துயரால் ஆன்மாவுக்கு வந்த அதிகேடு மில்லை. செல்வக்களிப்பால் அதற்கு வந்த அதிஆக்கமுமில்லை. செல்வம் பெறுவதால் பெரும்பாலும் உலகவா தனை அதிகரிப்பதே பன்றி உண்மை யுள்ளம் உருப்படுவ
தில்லை. செல்வம் தரவேண்டுமானுல் ஆண்டவன் தரட்டும்; அல்லது ஒழிபட்டும். அதற்காக கவலைப்படுவதில் அர்த்தமே கிடையாது. இது விவேகிகளின் அபிப்பிராயம். ஆகவே
அவர்கள் ஆண்டவனைப் பிரார்த்திக்கும்போது வாழ்க்கைச் செல்வத்தைப் பற்றிக் கனவுகூடக் காண்பதில்லை. விவேக முள்ள எவனும் மோகூடி வாழ்வுக்கான விஷயங்களைமட்டுமே ஆண்டவனிடம் பிரார்த்தித்துக் கொள்கின்றன். இந் த ப் பிரார்த்தனை காலகதியிலே தன் பலனுகிய தன்னிழப்பைத் தந்துவிடும். தன்னையிழக்கும் நிலைபெற்ற பக்தைெருவன் இதைத்தானும் ஆண்டவனிடம் வாய்விட்டுக் கேட்கமாட் டான், மாணிக்கவாசக சுவாமிகள் பிரார்த்தனை இப்ப டிப்பட்டது.
**வேண்டத்தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டு மயன்மாற் கரியோய் நி
வேண்டி யென்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானு மதுவே வேண்டி னல்லால் வேண்டும் பரிசொன் றுண்டாயின் 燃 அதுவும் உன்றன் விருப்பன்றே’
நசிகேதஸின் உள்ளத்தில் ஊன்றிக்கொண்டு பார்க்கின் மணிவாசகர் உள்ளம் மலைவிளக்கு.

Page 8
N
%
- fs
பெறுவேனே?
一来一
வேத முடியில் மிளிரும் சிவக்கொழுந்தே ஆதார மில்லேசை, அஞ்சலெனக் காவாயோ? I தாயுமாய்த் தந்தையுமாய்ச் சர்வமுமாய் நின்ரு யே! சேயனேன் உய்யத் திருக்கடைக்கண் பாராயோ? 2 ஐம்புலமா வேடர்கள் தம் ஆட்சி தனைக் கடந்துன் பைம் பொற் கழற்தேன் பருகப் பெறுவேனுே? உன்னைச் சரணடைய ஒட்டாத மும்மலத்தின் புன் மை யறக் கழுவும் போதம் பெறுவேனுே? 4. மாயத் திரைகிழித் துன் மாண் புத் திருவடித்தேன் வாய்மடுத்துச் சொக்கிநிற்கும் வாய்ப்பைப்பெறுவேனு? 5
மண்டிரு ளாணவத்தை வாட்டி, மனத்த கத் துன் புண்டரி கச்சுடர்த்தேன் பொங்கப் பெறுவேனுே? 6 முன் எளியேன் செய்த வினை முற்றும் அழிந்துனது பொன் னடியை விட்டகலாப் போதம் பெறுவேனுே? ? புத்தகக் குப்பையிலே போதைக் கழிக்காமல், சுத்தமெய்ஞ் ஞானவொளி தோன்றப் பெறுவேனுே? 8 அன்புப் பெருங்கடலுள் ஆழ்ந்து திளைத்தடங்கா இன்பவெறி கொள்ளும் இயல்பைப் பெறுவேனுே? 9 ஓங்காரத் தாலாட்டில் உள்ளங் கரைந்துருகத் தூங்காமல் தூங்கும் சுகத்தைப் பெறுவேனுே! 10 இன் பத் திருவடிக்கீழ் என்றும் சுகித்திருக்கும் அன்பர் பணிக்கெளியேன் ஆளாய் அமைவேனுே? 11 இதய கமலமலர்ந் தின் பத்தேண் பொங்கிட,நின் உதயக் கதிரென் உளத்திற் பொருந்திடுமோ? 12 திருக்கழலிற் பூண்டநின்றன் செம்பொற்சிலம்பொலி என் உருக்குலைந்த நெஞ்சத் தொலித்து முழங்கிடுமோ? ே அன்பிற் பழுத்தார் அகத்தில் நடமாடும் இன்பக் கழலென் இதயத்தில் மேவிடுமோ? 14
 

45
தெள்ளியருள் ஆடும் திருக்கருணை ச் சேவடி, இப் புல்லியனுள் ஞானப் புனிதத்தேன் பாய்ச்சிடுமோ? 15
நடமாடும் கோயில்களில் நாதனைக் கண்டுணர்ந்து,
திடமாகப் போற்றிசெயும் சித்தம் பெறுவேனுே? 6 இதயச் சுரங்கத் திலங்கும் அருட்செல்வப் புதையளைப் பெற்றுப் பொலிந்து மகிழ்வேனுே? 17
புருவத்தின் மத்தியிலே பொங்கும் பரஞ்சுடரைத் தரிசித்து வாழ்வு தழைக்கப் பெறுவேனு? 18 இதுவோ அதுவோலென் றேங்கித் திரிந்தலையும் பதிதன் எனக்கும், அரூட பாங்கு கிடைத்திடுமோ? 19 அது நானென் ருய்ந்த அறிஞர் இதயக் கதிரொளி, என் உள்ளத்தே கால் வீகிப் பூத்திடுமோ? 20 உள்ள தெலாம் ஒன்றென்னும் ஒப்பற்ற பேரான்மத் தெள்ள நிவில் ஊறித் திளைக்கப்பெறுவேனுே? 2. தேனுருய்ப் பாய்ந்து தெவிட்டா நல் வாழ்வருளும் ஆன்மா வே நானென் றறிந்த துவாய் நிற்பேனுே? 22
முற்றுசிவ யோகம், முதிர்பக்தி, மெய்ஞானம், பற்றற்ற கர்மம் இந்தப் பண்பிலனுக் குற்றிடுமேச 23 பன்னிருவர் போல், நின் பதத்தில் அடைக்கலமாய் என்னையே தந்துன் னே எய்தப் பெறுவேனுே? 24
அறுபத்து மூவரைப்போல் அன்புறுதி கொண்டுன் திருவடிப் பற்றில் செழிக்கப் பெறுவேனுே? 25 அப்பர்போல் உள்ளுறுதி, அஞ்சைமை, வாசகர்போல் ஒப்பற்ற பக்தி உளமெனக்கு வாய்த்திடுமோ? 26
பட்டினத்துப் பிள்ளையைப்போல், பாசமெலாம் ஓர் கணத்தில் சுட்டெரித்துன் பொற்பதத்தேன் துய்க்குநிலை கிட்டிடுமோ 27
அருணகிரிப் பெம்மான் அடைந்த சுகானந்தக் கருணைப்ர வாகம் கடையனுக்குக் கிட்டிடுமோ? 28
அமிழ்தத் தமிழ்த்தாயு மானவர்போல், தூய சமரஸ ஞானம் தழைக்கப் பெறுவேனுே? 29
அருட்சோதி வள்ளலைப்போல், ஆவி; உடல் யாவும் உருக்கும் அருட்பர ஒளியெனக்குள் பொங்கிடுமோ? 30 "பரமஹம்ஸதாசன்"

Page 9
ஐயம் தெளிதல்
一来一
1. விஞ: சமயம் ஏன் கீழ்நிலை அடைகின்றது?
விடை:- நமது சமயம் கீழ் நிலை அடைவதற்குக் கீழ்க்
காணும் காரணங்கள் முக்கியமானவை.
ஒன்று சமயத்தைப் பற்றிசரியானமுறை யில் அறிவில்லாமை. இரண்டாவது சமயக் கோட்பாடுகளை சுயநலத்திற்காக சிலர் உப யோகிப்பது. மூன்றவது, தவறுதலான சமயானுஷ்டான விதிகள். (உயிர்ப் பலி போன்றவை) ஜாதி, தீண்டாமை இவைக ளும் காரணங்களாகின்றன.
சமயத்தின் உண்மைகளை அனுஷ்டா னத்தில் அனுபவித்தறிவதற்குரிய முயற் சிக்குறைவு. இவைகட்குத் தக்க படி கடவ டிக்கைகள் எடுத்தால் சமயம் இன்னும் மேலோங்கி வளரும். கால தேச வர்த்தமா னங்களை உணர்ந்து மக்களின் மனுேவளர்ச் சிக்குத் தக்கபடி சமயத்தின் உண்மைகளை அறிவுறுத்தல் வேண்டும். விசேஷமாக இன் றையக் கல்வித் திட்டத்தில் சமய வளர்ச் சிக்கு முக்கியமான இடமளித்தல் அவசியம்.
ஆத்மீக அலைகளைப் பரப்பி மக்களுக் கிடையில்தெய்வீக உணர்ச்சியூட்டும் தபோ நிலையங்களும், தவசிகளும் சமய வளர்ச் சிக்கு அவசியம் தேவை. கோவில் களிலி ருக்கும் ஊழல்களை அகற்றி நெறிதவருத பூஜகர்களால் பூஜை முதலியவைகளைச்செய் வித்து ஸ்தலங்கள் தோறும் மறைகளையும் முறையாக ஓதி உரிய விளக்கங்களையும்

6960) -
3. 69 (co):
47
முறையாகக் கொடுத்து வந்தால் சமயம் வெகுவாக வளர்ச்சியடையும்.
கோவில் தொண்டு இழிவான தொண்டா?
ஒருபோதும் இழிவானதொண்டல்ல, கோவி லுக்குச் செய்யும் தொண்டு கோவிலில் வீற் றிருக்கும் இறைவனுக்குச் செய்யும் தொண் டாகின்றது. இறைவனுக்குச் செய்யும் தொ ண்டால் உயிரினங்களும் நலம்பெறுகின்றன ஆகையால் கோவில் தொண்டு மேலான வழிபாடும் உயிரினங்களுக்குச் செய்யும் சிறந்த சேவையும் ஆகின்றது.
இறைவனை வணங்குதற் கேற்ற இடம் கோவிலா? அல்லது வீடா?
விடை:- கோவிலின் பரிசுத்தம் வீட்டில் இருந்தால்
வீட்டையும் வழிபாட்டிற்குரிய ஸ்தலமாக்க லாம். ஆணுல் கோவில் இறை வழிபாட்டிற் கென்று தனித்து அமைக்கப்பட்டிருக்கின் றபடியால் அங்குசென்றுசெய்யும் வழிபாட் டினல்நலம்மிகவும் உண்டு. வீட்டில்இருந்து வழிபட விரும்புகின்றவர்கள் அதற்கென்று
தனி அறை அமைத்து வழிபாட்டிற்கேற்ப
4. කෆිG:
- :O۵ به انگلاe
சூழ்நிலையையும் உண்டுபண்ணி வழிபடு வது நல்லது.
ரிஷிகளும் முனிவர்களும் மனிதசஞ்சார மற்ற கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் தவம் புரிவது ஏன்?
மனதைப் பூரணமாக ஒடுக்குவது தவத் தின் நோக்கம். மனம் ஒடுங்கா நிலைக்குக் காரணம் ஆசாபாசங்கள். ஆசாபாசங்கள் லெளகீகத்தொடர்பினுல் உண்டாகின்றன.

Page 10
48
மனித சஞ்சாரமற்ற காட்டில் லெளகீக சம் பந்தமான தொடர்புகள் நேரடியாக உண் டாகுவதற்கில்லை. உலக மோகங்களை உண்டு பண்ணும் காட்சிகள் ஒன்றும் அங்கே தென் படுவதில்லை. நாட்டில் ஏகாந்த வாசத்துக் குரிய இடத்தை அமைத்தாலும் அண்மை யில் சூழ்ந்திருக்கும் சூழ்நிலைகள் இவனுக் குத் தெரியாமற் போகாது. அதேபோல் இவனைப் பற்றியும் மக்களுக்குத் தெரியா மற் போகாது. இந்த இரண்டு அவஸ்தை களும் சாதகனின் மன ஒடுக்கத்திற்கு இடை யூருயிருக்கின்றன. இறைவனைத் தவிர வேறுயாரும் தனக்குத்துணையில்லையென்று ஒரு சாதகன் உணருவது அவசியம். இதற் குக் கொடிய விலங்குகள் வாழும் அடர்ந்த வனங்கள் ஒரு அளவில் துணைபுரிகின்றன தான் இதுகாறும் நாடியிருந்த உலகம், இப் பொழுது தனக்குத் துணைபுரிய வருவதற் கில் 2ல என்று சாதகனின் மனம் உணர்ந் தால், இறைவனிடம் சரணுகதி புகும் ஒரு மன நிலை அவனிடம் தானுக வந்தமைகின் நிறது.
ஆசாபாசங்களை ஊட்டும் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் வனந்தரத்தில் இல்லாதபடி யாலும் பொருள், வஷயாதி களின் தாக் குதல் அங்கு எளிதில் உண்டாவதற்கு இட மில்லாதபடியாலும், கடவு ளை த் த விர வேறென்றும் தனக்குத்துணையில்லை என்று உணரக்கூடிய சூழ்நிலை உள்ள படியாலும் வனவாசம் சாதகனுக்கு தகுதி யுடைய தென்று சொல்லப்படுகின்றது. போதிய மனே பரிபாகம் வந்த பின் அவன் எங்குவ சித்தாலும் வ சிக்க லா ம். அத்தகையவ னுக்கு நாடும், வீடும், காடும் ஒன்றுதான். தொடரும்
 

- சந்தா நேயர்களுக்கு :- --K- சோதியின் 11-ம் ஆண்டு இரண்டாம் சுடர் இதோ தங்கள் கைக்கு வந்துள்ளது. இன்றுவரை சந்தா அனுப் பாத நேயர்கள் தத்தமது சந்தாப்பணத்தை உடன் அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகின்ருேம்.
இந்தியாவிலுள்ள சந்தாநேயர்கள் இந்தியா விலிருந்து நேராக இவ்விடம் பணம் அனுப்புவதில் சில தடைகள் இருப்பதால் அவர்கள் தமது சந்தாவைப் பின் வரும் விலாசத்திற்கு அனுப்பிவைப்பதோடு இவவிடமும் அறியத்தர வேண்டுகின்ருேம்.
இந்தியா நேயர்கள் பணம் அனுப்பவேண்டிய
66੦੦:-
R. VEERASAMBU. Sambu Industries, SALEM 2. மலாயா, தென்னுயிரிக்கா, பர்மாவிலுள்ள (35u
கள் தமது சந்தாவை வழக்கம்போல் பிரிட்டிஸ் போஸ்ரல் ஒடர் மூலம் அனுப்பி வைக்கலாம்.
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி - (சிலோன்)

Page 11

ஞானப் பழம்
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் முதற் பல்வேறு பழங்கள் உலகில் உண்டு. அவற்றை நாம் கேட்டிருக்கிருேம்; கண்டிருக்கிருேம்; சுவைத்திருக்கிருேம். ஞானப் பழத்தைக் கண்டோர் சிலர். காணுதார் பலர். இது இலகுவிற் பணம் கொடுத்து வாங்கும் பழமன்று; பழம் வேண்டு மொருவன் தாமே மரம் நாட்டி நீரூற்றிப் பழத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
“ஞானப் பழம்’ என்ற தொடர் ஞானமாகிய பழம் என்ற பொருள் படும். (ஞானம் வேறு, பழம் வேறல்ல) ஞானமே பழமாகும். இந்தப் பழம் எத்தகையது? அதன் சுவை அளவிட்டுக்கூறமுடியாத தித்திப்பை உடையது. பழங் களுட் சிறந்தவை வாழை, மா, பலா. அவை முக்கனி எனப்படும். மூன்றுகனிகளையும் தனித்தனி பிழிந்து ரசத்தை எடுத்தல் வேண்டும். பின் அவற்றை ஒன்று சேர்த்துக் கலத் தல் வேண்டும். கலந்த கனிரசத்தில் தூள் செய்த கற்கண் டும், சக்கரையும் சேர்த்து நறுந்தேனும், பசும்பாலும் போடல் வேண்டும். உணவிற்குத் தனித்ததோர் உருசிதருவது தேங் காய். எனவே பசும் பாலுடன் தேங்காய்ப் பாலும் சேர்த்து நல்ல பருப்பும் தூவுதல் வேண்டும். பின் இனித்த நறு நெய்யும் கலந்து காய்ச்சி இளம் சூட்டில் இறக்க வேண்டும். இத்தனை தித்திப்புப் பொருள் சேரக் காய்ச்சிய கட்டியின் சுவை எத்தகையது என்று சொல்லவும் வேண்டுமா! ஆணுல் இத்தனை சுவையினையும் வென்று விடும் பொருள் வேருென் றுண்டு. அது என்ன? இராமலிங்க சுவாமிகள் சொல் லுவோரின் வாய் இனிக்கக், கேட்போரின் செவி இனிக்கக் கூறுகின்ருர்,
**தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தெடுத்
தொன்ருய்க் கூட்டி யதிற் சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக்
கலந்தே

Page 12
50
தனித்த நறுங்தேன் பெய்து பசும் பாலும்
பெய்து தெங்கின் தனிப்பாலும் சேர்த்தொரு தீம் பருப்பிடியும்
விரவி இனித்த நறுநெய்யளைந்தே இளஞ் சூட்டிலிறக்கி எடுத்த சுவைக்கட்டியினுமினித்திடும்
தெள்ளமுதே'
வள்ளலார் எடுத்துவிளக்கிய அத்தெள்ளமுதே தான் ஞானப் பழம். அது உண்ண உண்ணத் தெவிட்டாத தீஞ்சுவைக் கனி, இத்தனை இனிய ஞானப் பழம் எங்கே இருக்கின்றது? எப்படிப் பெற முடியும்? ஒருவருக்கு மாம்பழம் வேண்டுமா யின், மற்ருெருவர் மரத்தை நாட்டி நீரூற்றி வளர்க்கலாம். பூத்துக் காய்த்துக் கனியானதும் பறித்துக் கொடுக்கலாம்.
உலகில் மாமரத்தை ஆக்க மற்றவர்கள். பழத்தை அனுப வித்து ஆனந்திக்க முடியும். ஞானப் பழத்தை ஒருவரிடமி
ருந்து மற்றவர் பெறவியலாது. தாமே அத்தருவை ஆக்கல் வேண்டும். ஏற்ற காலத்தில் அது தரும் கனியை உண்டு பேரின்பமடைய முடியும். ஞானப்பழம் தரும் மரத்தினை நாட்டுதற்கு உள்ளமே பூமி. அப்பூமி முதலில் பண்படுத்தப் படல் வேண்டும். கல்லும், முள்ளும், காடும், செடியும், புல்லும், பூண்டும் நிறைந்து கிடக்கும். நிலம், மனது. மக் கள் மனதில் கல்லேது? முள்ளேது? புல்லும் பூண்டும் அங்கே முளைக்குமா? காமம், கோபம், கள்ளம், கப டம், சூது, வாது, பொய், பிரட்டுப், பித்தலாட்டம்
என்ற குணங்கள் இருக்கின்றனவே, அவைதான் மனத்திருக்
கும் பற்றைக்காடு. அக்காடு அழிக்கப்படல் வேண்டும். செடி கள் அழிக்கப் பட்டாற் போதாது. கற்பாறைகள் தகர்த்துத் துகளாக்கப் படல் வேண்டும்.
'காராரும் ஆன வ க் காட்டைக் களைந்து அறக்கண்டு அகங்காரமெனும் கல்லைப் பிழந்து' என்று தாயுமானவர் கூறியுள்ளார். பண்படுத்தப் பட்ட நல் நிலத்தில், இறைவன் அருளாகிய வித்தை நடுவார்.
 
 
 

51
அருள் வித்து மரமாகிக் கனிதருதற்கு, மனம் மாசற்று விளங்குதல் வேண்டும். பற்றுதலே மனத் தூய்மையைக் கெடுக்கின்றது. நிலையற்ற உலகப்பொருள்களிலுள்ள பற்றுதல் இறைவனை மறக்கச் செய்கிறது. பணம், பட்டம், பதவி,
அழகு இவை நித்தியமென்று எண்ணுகின்றனர். பணமும்,
பதவியும், அழகும், ஆடம்பரமும் சில நாளில் அழிவனவே; அவற்றின் நிலேயாத் தன்மையைப் பல முறை அனுபவத்தில் காண முடிகின்றது.
பாரத நாட்டில் ஒரு புகையிரத ஸ்தானம். அங்கு ஒரு மனிதன் அவனது அழகிய உருவமும், கெம்பீரமான தோற்ற மும், இராச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அவன் பிரயாணிகளுக்குத் தேநீர் வியாபா ரம் செய்கிறன். மனைவி தேநீர் தயாரிக்கிருள். மக்கள் இரு வர் தேநீர்ப் பாத்திரம் கழுவிச் சுத்தம் செய்கின்றனர். அனு தாய உள்ளங்கொண்டு அவர்கள் யாரென உசாவிய போது உண்மை புலனுகிறது.
பணம் படைத்த பிரபு ດ້ວຫລງົGum அந்தப் புரத்தில்
பல பல வசதிகளோடு வசித்த தங்கை. பாலகரோ பாடசா
லைக்குக் காலால் நடந்தறியார். புத்தகங்களை எடுத்துச் செல்லவே வேலைக்காரர். இத்தனை ஐஸ்வரியமும் எங்கே? பாகிஸ்தான் யுத்தத்தில் பறிபோய் விட்டது. பணத்தின் தன்மை இத்தகையது தான். 'குடைநிழலிருந்து குஞ் சர மூர்ந்தோர் நடை மெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர்"
பதவிதான் நிலை நிற்கிறதா? நாட்டின் முதல்மந்திரியாய் இருக்கும் போது எத்தனை மதிப்பு அவருக்குத் தலையிடி வந் தால் அன்றைய பத்திரிகைகளில் முதற் தலைப்பு 'முதன் மந்திரிக்குத் தலையிடி' என்றிருக்கும். அவர் வானுெலி கேட்கிருர், தேநீர் அருந்துகிருர், விளையாட்டுப் பார்வையிடு கின்ருர் என்று படங்களுடன் பத்திரிகைச் செய்தி வெளிவ ரும். மந்திரிப் பதவி நீங்கிய அடுத்தகணமே அவர் மதிப்பு மறைந்தொழிகிறது. மரணப் படுக்கையில் இருந்தாலும் மக்கள்

Page 13
52 அறிய மாட்டார்கள். அழகுதான் நிலை நிற்கிறதா? இளமை யின் அழகு முதுமை வரும்போது அழிந்து போகிறது. 1954ல் அழகுராணியாய் விளங்கியவர் மதிப்பு 1956ல் மற்ளுேர் அழகு ராணி முன் மங்கிப்போகிறது. இவ்விதமே உலகப்பொருளனே த்தும் அழியும் தன்மையினதே.
மக்கள் நிலையற்ற பொருளை நிலையென்று எண்ணுகின்ற னர். அதனுல், தமது உபயோகத்திற்கேயுரியது. பொருளுக் காகத் தாம் என்று வாழ்கின்றன. பொருள் மக்களுக்கன்றி
மக்கள் பொருளுக்குரியராகார், மனிதன் பொருளுக் அடிமை
பாகும்போதுதான் சுயநலம், பேராசை முதலாம் பற்றைக் காடு மனதில் முளைக்கின்றன. கடல் நீரில் தோணி செல்லு கின்றது. தோணியில் ஏறி மக்களும் கரை சேருகின்றனர். கடல் நீர் கப்பலுட் சென்ருல் என்னவாகும். தோணிக்கும் அழிவு; தோணியுள் இருப்போர்க்கும் அழிவே, பொருளுக்கு அடிமையாகி வாழ்வோர் நிலையும் அத்தகையதே.
இறைவன் தந்த சொத்து உலகில் உள்ள வரை நல்லவ கையில் பயன்படுத்தல் வேண்டும். இப்பிறப்பில் அமையும் கல்வாழ்விற் கேற்பவே மறுபிறப்புமாகும், பொருளுக்கும், சுக வாழ்விற்கும் அடிமையாகி அறிவுமயங்கின் அல்லலுறும் வாழ் வேஉண்டாகும். வாழ்க்கை அறத்தோடியைத்துவிளங்கவேண் டும். பல்லக்கிற் பவனி வருபவன் ஒருவன், அதனைச் சுமப் பவர் சிலர். இவர்கள் உயர்வையும் தாழ்வையும் எடுத்துக் காட்டுகிருர் திருவள்ளுவர். அறத்தின் பெருமையை நினை வுறுத்துகிருர், 'அறத்தாறிது வெனவேண்டா சி வி கை பொறுத்தானுேடு ஊர்ந்தானிடை’ எ ன் ப து பொது மறை.
அறத்தோடியைந்த உள்ளமே பண்பட்ட நிலமாகும். அதில் இறைவன் அருள் வித்து, நல்மரமாய் வளரும். அன் பெனும் நீரூற்றச் செழித்து வளர்ந்து, பக்தியென்ற பூவிந்து பரிமளிக்கும்; பராசக்திஎன்ற கனிவிளகுங்டம், உண்ண உண் னத் தெவிட்டாத அந்த ஞானப்பழத்தைப் பெற்ருர் பெறுவது பேரானந்தமே.
ஓம் சாந்தி, சாந்தி சாந்தி.
(திரிகோணம&ல முத்துக்குமார சுவாமி கோவிலில் யோகிராஜ் சிச் சிதானத்த சுவாமிகளால் ஆற்றப்பட்ட சொற்பொழிவின் சுருக்கம்)
 

g6 Ligi G31 Gjo' LTij ஐOன
கன் என்னுள் பள்ளி கொண்டாய்? பூஜீ ரகு ராமனே நீ (ஏன்)
துன்ப உலகிலே அல்லற் படும் ஒரு திக்கற்ற ஏழை நான் ஐயா (ஏன்)
ஞான தவம் சுபயோகமறியேன் நல்லாருடனுே ருறவு மறியேன் என்னுளும் பொல்லாத் துயரமேகானும் ஐம்பூதச் சேர்க் கையால் எடுத்தபிறவி! (ஏன்)
அன்னேசுற்றமெலாம் அடுத்திருந்தாலென்ன-இந்த அவனியோர்புகழ்ந்திட வாழ்ந்தும் பய னென்ன? ஆணவப் பேய் கொண்டே அலறித் திரியுமென் உளந்தணிலுறைந்து இரவும் பகலும் இராமா (ஏ ன்)
கர்மத்தை நீக்கிடுங் கருத்தையளிக்கவோ - வன் கொடுமைகள் திர்த்துக் கருனையளிக்கவோ, துன்பக் குழியினில் வீழாமற் றடுக்கவோ துய்மை வழியினிற் காட்டிச் செல்லவே:-
-அந்தரங்கமாய் (ஏன்)
-யூரீமதி சிவபாக்கியம் - குமாரவேல்

Page 14
இராமலிங்கரும் இரமணரும் ರು.೧೧Tarcoor: 一米一
(உலக மக்கள் அறத்தை மறந்து மறச் செயல்களே மேற்கொண்டு அறியாமை இருளில் மூழ்கி அல்லலு றும் காலத்தில் எல்லாம், விளங்கிய அறிவினையு டைய பெரியோர்கள், மகான்கள், ஞானிகள் தோன் றித் தம் அறிவுரைகளால் அறிவொளியுண்டாகச் செய்வது வழக்கம். அவ்விதம் வந்த மகான்களில் 19-ம் நூற்றண்டில் உதித்த இராமலிங்க சுவாமிக ளும், 20-ம் நூற்றண்டில் தோன்றிய இரமண மகரி ஷியும் குறிப்பிடத் தக்கவர்களாவர். மக்களிடையே ஞானவொளியைப் பரப்பிய இப்பெரியார்கள், இரு வரும் இறைவனின் திருவருட் சோதியில் இரண்டறக் கலந்தது குறிப்பிடத்தக்கது.)
**அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி'
என்ற ஒரு பெரு முழக்கம் வானமு கட்டை முட்டி எதி ரொலி செய்தது. சிதம்பரத்துக்கு வடக்கே 5, 6, மைல் தூரத்திலுள்ள வடலூர் என்னுமிடத்திலி ருந்தே மேற்படி பேரோசை எழுப்பிக் கொண்டிருந் ඊශ්‍රී#•
அன்று தைப்பூசம். ஆகவே, வடலூரில் அதை யொட்டி திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதற்கு ஏராளமான ஜனங்கள் தி ர ண் டு வந்திருந்தனர். *அண்ட பிண்டக் காட்சி"யை விளக்கும் தைப்பூசத் தரிசனங் கண்டால் இஷ்டசித்திகள் உண் டா கும் என்று கூறப்பட்டிருப்பதால் பல பாகங்களிலும் இருந்து மக்கள் வந்து குழுமி யிருந்தனர். இந்த மக் கள் கூட்டத்தின் நடுவே சத்திய ஞானத் திருச்சபை
 

55
கம்பீரமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. அச்சபை யின் முற்பாகத்தில் பல பேரறிஞர்கள் பிரசங்கஞ் செய்து கொண்டிருந்தனர். மற்ருெரு பக்கத்தில் சத்திய தருமசாலேயில் சதா மகேஸ்வர பூசை நடந்து கொண்டிருந்தது. ஒவ்வோரிடத்திலும் மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.
இவ்விதம், மக்களின் கூட்டத்தையும் பேராரவா ரத்தையுங் கடந்து, ஞானசபையில் நுழைந்தா ஒன் றன் பின்ஞென்ரு க ஏழு திரைகள் விடப்பட்டிருப்ப தைக் காணலாம். முதலில் கறுப்புத்திரையும், அதை யடுத்து நீலத்திரையும், மூன்ருவது பச்சைத்திரை யும், நான்காவது சிவப்புத்திரையும், ஐந்தாவது பொன்னிறமான திரையும், ஆருவது வெள்ளைத்தி ரையும், கடைசியாக ஏழாவது கலப்புத் திரையும் தொங்கவிடப் பட்டிருந்தது. இவைகளை யெல்லாம் ஒவ்வொன்ருக நீக்கிக்கொண்டு போனல், சோதி த சனத்தைக் கா ன லா ம், பெரியதோர் கண்ணுடி யின் முன்னிலையில் சோதியாகிய திருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதன் தத்துவம் என்னவென்றல் மக்களின் ஆன்மப் பிரகாசத்தை மறைத்திருக்கும் மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் விலகினுல் ஞான சொரூபனன அருட்பெருஞ்சோதி ஆண்டவனின் தரி சனங் கிடைக்கும் என்பதாம்.
சத்திய ஞானசபையில்சோதி தரிசனஞ் செய்து கொண்டு அன்பர்கள் வடலூருக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள மேட்டுக்குப்பத்தில் இருக ம் "சித்தி விளாகம்" என்னும் புனிதஸ்தலத்தின் சிறப்பைக் காணத் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தனர். இங்கு வந்ததும் மக்களிடையே யிருந்து மீண்டும்,
*அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனே
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி'

Page 15
56
என்ற முழக்கம் எழலாயிற்று. எல்லோருடைய கரங் களும் த&லமேல் கூப்பின. 'இதுதான் சத்தியஞா னத் திருச் சபையின் தலைவரான பூநீ இராமலிங்க சுவாமிகள் இருந்து சோதியில் கலந்த இடம்' என்று ஒரு பெரியவர் கூறினர்.
பூரீ இராமலிங்க சுவாமிகள் தைப்பூசத்தன்று தரும சாலை யையும் சத்திய ஞான சபையையும் நிறுவி ஆண்டுதோறும் தைப் பூச விழாவைக் கொண்டாடி 6ᏂᏗ ᎱᎬ55fᎢ IᎱ .
பூரீ இராமலிங்க சுவாமிகள் அருட் பெருஞ்சோதி ஆண்டவனைக் கண்ட பெரியார். சமரச சுத்த சன் மார்க்க சமயத்தைக்கண்டவர், ஜீவகாருண்யக்கொள் கையை எங்கும் பரவச் செய்தவர். "இரக்கம் என் உயிர்' என்று உருக்கமாக மொழிந்தவர். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற சிறந்த கொள்கையில் அன்னதானத்தைச் சிறப்பாக நடத் தியவர். அவரது இரக்கம் அதாவது ஜீவகாருணி யம் வெறும் பேச்சளவில், ஏட்டளவில் நிற்கவில்லை. செயலளவிலுஞ் சிறந்து கின்றது. அதுவும் மனிதர் களிடம் மட்டும் அவர் ஜீவகாருண்ய முடையவரா யில்லை. புழு பூச்சி, பறவை, விலங்குகளிடத்திலும் கூட அவர் ஜீவகாருண்ய முடையவரா யிருந்தார். அதுமட்டுமா! ஓரறிவுயிராகிய புல், பூண்டு, செடி, கொடி களிடத்திலும் கூட அவர் ஜீவகாருண்யஞ் செலுத்தினர். மக்கள் துன்பப்படுவதையும் மற்ற ஜீவராசிகள் துன்புறுவதையும் கண்டு அவர் மனம் பதைத்தது போலவே, செடி, கொடிகளின் வாட்டத் தைப் பார்த்தும் உள்ளம் துடித்தார். "வாடிய பயி ரைக் கண்டால் என்னுள்ளம் வாடும்" என்று அவர் ஆற்றமையோடு கூறிய பெரியாராவர். சிறு தெய் வங்களுக்கு இடும் உயிர்ப்பலியைநிறுத்த அவர்வெகு பாடு பட்டார். அவர் சாதி, சமய வேற்றுமைகளைப் போக்கிச் சமரச சன்மார்க்கத்தை மக்களுக்குப்போ திக்கலானர்.
 
 
 
 

57
ஒரு சமயம், திருவாதிரை விழாவுக்குச் செல்ல விரும்பிய சில அன்பர்களுக்கு வள்ளலார் சத்தியதரு மசாலையில் நடுவே திரைபோடச் செய்வித்து, அவர் களைத் திரைக்குள்ளே சென்று தரிசிக்கும்படி செய் தாா.
இதனிடையே அவர் அறிவு வெள்ளம் பெருகி வழிய, பாவெள்ளம் பொழியலானர். அத்திருப்ப திகங்களை யெல்லாம் திரட்டி தொழுவூர் வேலாயுத
முதலியார் "திருவருட்பா" என்ற பெயருடன் வெளி uý LLIT iii.
வள்ளலார் சிதம்பரம், கடலையாற்றுார், விருத் தாசலம், திருவதிகை, திரு இரும்பைமாகாளம், திருப்பா திரிப்புலியூர் தியாகவல்லி, முதலிய கூேறத் திரங்களுக்கு மத்திய இடமாயும், தென் பெண்ணை யாறு, கெடில நதி, வெள்ளாறு, மணிமுத்தா நதி
முதலிய நதிகளால்சூழப்பட்டதாயும் இருந்த வடலூர்
பெருவெளியை தேர்ந்து எடுத்து சத்திய தருமசா லையைக் கட்டி பசியால் வருந்தும் மக்களுக்கு அன்னம ளிக்க ஏற்பாடு செய்தார்;
ஜன சந்தடியற்ற இடத்திலிருந்து அருள் நிலை யில் திளைக்க வேண்டுமென்று விரும்பியதால், அவர் அங்கிருந்து நோக்கினல் சிதம்பரத்தின் ஸ்தூல லிங்கமாகிய நான்கு கோபுரங்களும் தரிசனமாகும் இடமாகிய வடலூரைத் தேர்ந்தெடுத்தார். பின், அவர் சத்திய தருமச்சாலை இருந்த இடத்துக்கு உத் தரஞான சிதம்பரம் எனப் பெயர் சூட்டினர். அதற் கேற்ப அங்கு ஒரு ஞான சபை கட்டத் தீர்மானித்து அவர் சபைநிர்மாணப்படத்தைத் தம் கரத்தாலேயே எழுதிக் கொடுத்து, அஷ்ட கோணமாகத் தாமரை மலர் போன்ற அழகிய தோற்றத்தில் ஞான சபை யைக் கட்டச் செய்தார். அதில் ஐந்தடி உயரமுள்ள ஒரு சீமைக் கண்ணுடியையும் திரு விளக்கையும் பிர திஷ்டை செய்தார்.

Page 16
58
கடைசியாக. அவர் அன்பர்களை நோக்கி “நீங்கள் திருவருள் பெறுவதற்கு இந்தத் தீப வொளியைச் செம்பொற் சோதிப் பெருமானுகக் கொண்டு வழிப் பட்டுவாருங்கள். ஜீவ காருணிய முடையவராக இருங் கள் என்று உபதேசித்தருளினர்.
ஜீவ வொளியையும் சிவ வொளியையும் எங்கும் பரப்பிவந்த திருவருட் பிரகாசவள்ளலார் சித்த சாங் தம் பெற்று பூரீமுக ஆண்டு தைத் திங்கள் புணர்பூசத் தன்று, செம்பொருட் சோ தி யி ல் இரண்டறக் கலந்தார். -
பிறவியிலேயே துறவியான பெரியார்.
"அண்ணுமலைக்கு அரோகரா! அண்ணுமலைக்கு அரோகரா!" என்று முழங்கியவாறு சுமார் பதினறு வயதுள்ள இளைஞனெருவன் திருவண்ணுமலை வீதிக ளில் ஒடிக்கொண்டிருந்தான். வழிப் போக்கர்கள் அவனுடைய நடத்தையை ஆச்சரியத்துடன் நின்று
Lm f5560 Tu)60T ff.
வாலிபனே எதையுங் கவனியாது அருணுசலேஸ் வரரின் கோயிலை நோக்கி மலைமீது பரபரப்புடன் ஒடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கெல் லாம் கோயிலை அடைந்தும் விட்டான். இவ்விளைஞனை நல்வரவேற்பது போல் , அ ச் சமய ம் கோயிலின் வாயிற் கதவுகளெல்லாம் பரக்கத் திறந்திருந்தன. ஆயினும், கோயிலில் ஜன நடமாட்டமே சிறிதும் இல்லை. உட்பிரகாரத்தை அடைந்து பார்த்தபோது எங்கும் ஒரே அமைதி நிலவியிருந்தது. சிறுவனின் அப்போதைய மன நிலைமைக்கு, கோயிலின் அமை தியான நிலை மிகப் பொருத்தமா யிருந்தது. துவ ஜஸ்தம்பம், ஆயிரங்கால் மண்டபம், நந்தி முதலிய வைகளைக் கடந்து, உட்சென்ற அச்சிறுவன் தாய்ப் பசுவைக்கண்ட இளங்கன்றுபோல், கருப்பக் கிருகத் தில் எழுந்தருளியிருக்கும் அருணுசலநாதரை நோக்

59
கித் தாவியோடினன். 'அருளுணசலம்! அருணசலம்! அருணுசலம்! உன் அடைக்கலம்! உன் திருவடிக்குத் தஞ்சம்’ என்று வாய்குழறக் கூறியவாறு, கண்களில் நீர்மல்க, உடல் பதற, சிவபெருமானின் திருவடிக ளில் வேரற்ற மரம்போல் வீழ்ந்தான். அம்மையப்ப ரான அருணுசல ஈசுவரரும், "குழந் தாய்! எப்போது வந்தாய்?" என்று ஆதரவோடு கேட்டுத் தம் திருக்க ரங்களால் அணைத்து அபயம் அளிப்பவர்போல் அவ ரது அப்போதைய தோற்றமிருந்தது. இளைஞன் பக்தி பரவச நிலையில் வெகு நேரமிருந்தான்.
இவ்வளவு இளவயதிலேயே கடவுளிடம் பரமபக்தி கொண்டுள்ள இவ்விளைஞன் யார்? வேறு யாருமில்ல. பிற்காலத்தில் ரமண மகரிஷி எனப் பிரசித்தி பெற் றவர்தான். நம்மால் மட்டுமல்லாமல், மேனுட்டு அறி ஞர்களும் போற்றி வணங்கும் நிலையில் இருந்த ரம ணர் பாலப்பருவத்திலேயே பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்தவர். பள்ளியில் படிக்கையிலேயே லெளகீக வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டு பரமன் அடியில் பக்தி பூண்டொழுகும் பாரமார்த்திகத்துறை யில் புகுந்தவர். கருவிலேயே திருவுடையவர். கரு விலேயே அருட்செல்வத்தைப் பரிபூரணமாகப் பெற் றதனுல்தான், பள்ளிப் பிராயத்திலேயே உற்ருர் உற வினரைத் துறந்து, வீட்டைத் துறந்து எதிர்கால இகபோகங்களைத் துறந்து முற்றுந்துறந்த முழு முனி வர்போல வீட்டை விட்டு வெளியேறித் திருவண்ணு மலையை அடைந்தார். பிறவியிலேயே துறவியாய் விட்டார் என்ருல் இவருக்குத்தான் தகும். இவருக்கு இவ்விதப் பக்குவத்தை யுண்டுபண்ணியது திருவண் ணுமலை என்றகூேஒத்திரப் பெயர்தான்.
வேங்கட ரமணன் என்ற பெயருடன் விளங்கிய ரமண மகரிஷி இளமையில், ஒரு பெரியவர் வாயி லாக, திருவண்ணுமலையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அந்த கூேத்திரத்தைக்காணும் ஆர்வத்தோடு, சதா

Page 17
60
*அருணசலம், அருணுசலம்" என்று மனனஞ் செய்து கொண்டிருந்தார்.
சிவனடியார் வாழ்க்கை வரலாறுகள்: 'உலகம் நிலையாது; தேகம் நிலையாது; இளமை நிலையாது; செல்வம் நிலையாது; எல்லாம் அநித்தியம் என்ற சமய போதனை ஆகியவை ரமணரை மிக இளமையி லேயே ஆத்ம விசாரணை செய்யத் தூண்டின. இவ் விசாரணையால் அவருக்கு ஆத்ம தரிசனம் கிடைத்து விட்டது. அதன் பின்னே அவர் வீட்டைவிட்டு வெளி யேறித் திருவண்ணுமலையை அடைந்து, அதைத் தன் இருப்பிடமாகக் கொண்டார். பதினுேரு ஆண்டுகள் வரைமோகனத்தவங்லையில் இருந்தரமணர் பின் அன் பர்களுக்கு இதோபதேசஞ் செய்யலானர்.
ரமண மகரிஷிகள் பிறவியிலேயே துறவியாயி னும், இல்லறத்தி லிருந்தும் ஞானமார்க் கத்தைக் கடைப்பிடித்து முத்தி பெறலாம் என்ற கருத்துடை யவர். "இல்லறமோ துறவறமோ ஜன சமுதாயத் துக்கும் ஜீவ ராசிகளுக்கும் சேவை செய்வதா யிருக்க வேண்டும். அப் பொதுநல உணர்ச்சியில்லாவிடில் எந்த அறமும் பயன்படாது; மோட்சத்தை யளிக் காது" என்று அறிவுரை அருளிவந்தார். "ஆண்ட வன் முன்னிலையில் அனைவரும் சமம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சாதிசமய வேற்றுமை சிறிதுங் கூடாது; எல்லாச்சாதியினரும் மகளிரும் ஞானமாக் கத்தைக் கடைப் பிடிந்து மோட்சமடைய உரிமை யுண்டு என்று அழுத்தங் திருத்தமாகத் தெரிவித்து 6)/ (Β 5 Π. Π.
இத்தகைய சிறந்த கொள்கைகளாலும் ஞானே பதேசங்களாலும் உலக மக்களின் உள்ளங்கவர்ந்து வந்த ரமண மகரிஷி 14-4-50-ந் தேதியன்று ஜோதி யில் கலந்துவிட்டார்.
 

| 6, 1
‘அண்ணு மலையை நிஜனக்க முத்தி என்ற பெரும் பெருமை பெற்ற திருவண்ணுமலை சேஷத்தி ரத்துக்கு ஏற்கனவேயுள்ள பெருமையும் பிரசித்தியும் போதாவென்று இந்த இருபதாம் நூற்ருண்டில் ஒரு விசேஷப் பெருமையைத் தமது அரிய யோக முதிர்ச் சியில் விளைந்த அறிவொளியாலும் சைதன்யத்தா லும் ரமணர் ஏற்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
தானு சொரூபமாய் எழுந்தருளியுள்ள அருணு சல ஈசுவரன் தம்முடைய ஜோதிப் பிளம்பில் ரம
னரை ஐக்கியமுற வைத்தது அதிசயமாகும்.
(பிரசண்டவிகடன்)
வடலூர் குருகுலத் திறப்பு விழாவில் தியான மண்டபத்தைத் திறந்துவைத்த திருக்கோவலூர்த் தபோவனம்
நீலநீ ஞானுணந்த சுவாமிகளின் ஆசியுரை
I-S)-IS)58
இவ்வுலகத்தைத் தோற்றுவித்த இறைவனை அருட்பெ ருஞ்சோதித் தனிப்பெருங் கருனையென நேருக்கு நேராகக் கண்டனுபவித்துத் தான் பெற்ற ஞானச் செல்வத்தை உலக செல்வத்தை உலக மக்களுக்கு வாரிவழங்கின வள்ளலார் பெருமான் வசித்ததிவ்வியதேசம் உத்தரஞான சிதம்பர மெனும் புகழ்வாய்ந்த இவ் வடலூராகும். சிதம்பரத்திலிருந்து தன் பக்தி விசேஷத்தாலும், ஞானசக்தியாலும் பூரீ சிற்சபேசனன நடராஜப்பெருமானை இந்த கூேடித்திரத்திற்கு அழைத்து வந்து இங்கே விளங்கும் ஞான சபையைத் தோற்றுவித்து, அதில்,

Page 18
62. பெருமானை சோதிவுருவாய்ப் பிரதிஷ்டைசெய்தார் பூரீ இராம லிங்க அடிகள். இந்த ஊரிலுள்ள மண்னெல்லாம் அவர் அடிவைப்பில்ை அவர் பாததுாளியாக ஆகி இங்கே வரும் அன்பர்களெல்லோரையும் புனிதப்படுத்திக் கொண்டிருக்கி றது. சுமமகா புருஷனுடை அருட்சக்தி இவ்வூரில் எப்பொழு தும் வீசிக்கொண்டிருக்கிறது.
சென்னை அரசாங்கத்தின் முன்னுள் முதலமைச்சராக இருந்து அறநெறியில் நின்று அதிகார ஆட்சி செலுத்திப் பின் னர் பூர்வ புண்ணியம் காரணமாக பூரீ ராமலிங்கப் பெருமா னின் அருட் கருவியாக அமைந்து இந்தப் புனிதமான கூேடித்திரத்திலேயே வாசம்செய்துகொண்டு, மக்கள் இம்மை மறுமைப்பயன்களை ஒன்றுக் கொன்று முரணின்றி எளிதில் பெறுவதற்குச்சாதனமாக இந்த குருகுலத்தைப் பெருமுயற்சி செய்து ஏராளமான பொருட்செலவில் தோற்றி வைத்திருக்கி ருர் பூரீமான் ராமசுவாமி ரெட்டியார்.
மக்களின் வாழ்க்கை லசுவியமென்பது மன அமைதிரூப மான சுகமேயாகும் என்ற கருத்தை அடிப்படையாகக்கொ ண்டு இந்தக்குருகுலத்தில் மாணவர்களுக்குக் கல்விகற்பிக்கப் படும். வள்ளலார் பெருமான் வழிகாட்டியபடி உலகத்தை இறைவன் திருக்கோலமாகவும் ஜிவகோடிகளை நடமாடும்கோ யில்களாகவும் உணர்ந்து வழிபடவேண்டும். இவ்வித தெய்வ உணர்ச்சியை மாணவர்களிடம் படிப்படியாய் வளரச் செய் யும் வகையில் இந்தக்குருகுலம் கல்வி முறையை அமைத்துக் கற்பிக்கும்
புறத்திலே மக்களுக்குத் தன்னலமற்ற சேவையால் உள்ளத்தில் அன்பு பெருகிப் பெருகி, அலையும் மனம் சித்தமறியாதபடி சித்தத்தில் நின்றிலகும் திவ்விய தேஜோ மயத்தைச் சித்தமிசை குடி கொண் ட அறிவானந்தத் தெ ய் வத் தை நா டிக் கு விந்து நிற்கும் பக்குவத்தை நாளடைவில் பெற்றுத் தியானஞ்செய்வதில் உருசியையடை கிறது. இந்நிலையில் இவ்வழகிய தியான மண்டபம் தியானம் முன்னேறத்தக்க வசதிகளையளித்துப் பேருபகாரம் செய்யும் பெருமை வாய்ந்தது. முறைப்படி தியானம் செய்ய அமர்ந்த
 

6 3
அன்பர்களுக்கு வள்ளலார் பெருமான் போன்ற ஞான சித்தர் களனைவரின் துணையும் கண்ணுக்குப் புலனுகாத நிலயில உணர்ச்சி மூலமாய் இங்குநிச்சயம் வந்தமையும்.
இனித்தியானம் பழகவேண்டிய முறையைப்பற்றிச் சிறிது கூறுவோம்-சோபானக்கிரமமாக, அதாவதுபடிப்படியாக இறை வனைத் தியானம் செய்யவேண்டும். ஆண்டவன் திருவுரு த்தைத் தம் மனநிலைக்குஏற்றபடி ஹிருதயம், புருவமத்தி, புத லிய இடங்களில் அகூடிரம், இஷ்ட தெய்வம் முதலிய குறிப்பு களுடன் மனத்துக்குத் தியான லயம் சித்திக்கும் வ ைரயில் தினந்தோறும் காலை மாலை விடாமல் பழகிவந்தால் மன மட கி ஹிருதய ஜ்யோதியில் லடயடையும்.
ஒடும் மாட்டை இழுத்து இழுத்துவந்து கட்டுத் தறயில கட்டிப்பழக்கினுல் நாளடைவில் அந்தமாடுதானே கட்டுத்தற யில் வந்துநின்று வசப்படுவதுபோல்; ஒடும் மனதை லகவியத் தில் தினந்தோறும் குறித்த வேளைகளில் இழுத்து வைத்துப் பழக்கில்ை சிறிதுகாலத்தில்; அது லகவியத்தில்தானே வந்து லயிக்கும், பூரீமத் பகவத்கீதை 6-வது அத்தியாயத்தில் பூரீ பக வான் இவ்வாறு உபதேசிக்கிருர், இன்பத்தைத் தேடிப்புறத்தே அலையும் மனம் ஹிருதயத்திலுள்ள அமைதியையும், இன்ப த்தையும், சிறிது உணரத் தொடங்கிவிட்டால் அதுவே ந1 முயற்சியின்றி லக்ஷயத்தை நாடிவந்து முடிவில் லயமடையும.
அலையுமனத்தை அகத்தடக்குமவனே சரியைகடந்தவனும் அலையுமனத்தை அகத்தடக்குமவனே கிரிமை முடிந்தோனும் அலையுமனத்தை அகத்தடக்குமவனே யோகதற்பரனும் அலேயுமனத்தை அகத்தடக்குமவனே ஞானி அதிசூரன்
-(நிஷ்டானுபூதி) எண்ணு யிரத்தாண்டு யோகமிருப்பினும் கண்ணு ரமுதனைக் கண்டறிவா ரில்லை உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கில் கண்ணுடி போலக் கலந்து நின் ருமே. --(திருமந்திரம்)
ஸாது சங்கம், ஸத்குரு சேவை, தேவ பூசை, அருள் மொழிகள் பாராயணம், பஜனை இரப்பவர்களு க்கு இல்லை எனுமல் இடுதல் முதலியவைகள் இம்முயற்சிக்கு

Page 19
64
மிக்க ஊக்கமளித்து லக்ஷியத்தை விரைவில் கைகூடச் செய் யும்.
மூர்த்தித்தியானம் செய்பவர்கள் அவரவர்களுக்கு ஸத் குரு உபதேசித்தபடி அல்லது பூர்வஜன்ம வாசனைப்படி அமை யப்பெறும் இஷ் ட தெய்வத்தின் திருவுருவத்தை ஹிருத பத்தில் பாவனை மூலம் அமைத்துக்கொள்ள வேணடும். ஹிரு தயம் தத்தம சோதனையில் உணரப்படும்.
*சிந்தை பிறந்தது மாங்கே, அந்தச் சிந்தையிறந்து தெளி ந்ததுமாங்கே, எந்த நிலைகளுமாங்கே, எந்த நிலைகளுமாங்கே யான் ருனிரணடற்றிரருந்தது மாங்கே " என்கிருர் அனுபூதிச் செல்வரான பூரீ தாயுமானப் பெருந்தகை.
மக்கள் ஆத்மீக வாழ்க்கை வாழ்ந்து ஆனந்தம் அடையும் பொருட்டு ஏற்பட்ட இந்தக் குருகுலத்தில் இருதத் தியான மண் டபம் சூடாமணிபோல் விளங்குமாக. இக்குருகுல அமைப்பு ஒர் ஞான வேள்வியாகும்.
இக் குரு குலம் நீடு வாழ்க. இதையமைத்தவர் இம் முயற்சியில் மனமொழி மெய்களாலும பொருளாலும் பங்கெ டுததுக்கொண்ட பெருமக்கள். இக்குருகுலத்திற்குக் வரப்போ கும் ஆசிரியர்கள் கல்வி பயிலப்போகும் மாணவர்கள் எல் லோரும, அருட்பெருஞ்சோதித் தனிபபெருங் கருணையான இறைவனின் அருள் பெற்று எலலா நலன்களுடன் வாழ்க, வாழ்க என்று ஆசிகூறுகிருேம், (ஞான ஒளி)
 
 
 

வாய்வு குர  ைம்
=O=
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கட்டு, மல பந்தம், அஜீரணம், கைகால் அசதி, பிடிப்பு, பசி யின்மை, வயிற்றுவலி, பித்த சூலை, பித்தமயக்கம், புளியேப்பம், நெஞ்சுக்கரிப்பு முதலிய வாய்வு ரோ கங்களே நீக்கி ஜீரண சக்திக்
கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த சூர கனம்.
உபயோகிக்கும் முறை:-
இந்தச் சூரணத்தில் தேச இர அளவு எடுத்து அத்துடன் தேர் லீ சீனி அல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்துக்குமுன் உட் கொண்டு கொஞ்சம் வெந்நீரும் அருந்தவும். கரலே மரலே தொடர்ந்து உட்கொள்ள லே இண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும்போது அளவைக் கூட்டி யும் குறைத்தும் உட்கொள்ளலாம். நெய் பால் வெண் ணெய் நிறையச் சாப்பீட லாம், வன ரம் ஒரு மூறை எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.
மூலிகையினுல் தயாரிக்கப்பெற்றது.
(பத்தியமில்லை)
சம்பு இண்டஸ்ரீஸ்-சேலம்2 எஸ். ஐ. மலாயாவிற்கு ஏஜண்டுகள் தேவை. இலங்கையில் கிடைக்குமிடம் :-
ஆத்மஜோதி நிலையம்
நாவலப்பிட்டி (இலங்கை)
தபாற்செலவு உட்பட டின் 3ரூபா 75சதம்

Page 20
1 ) || n
Registered at the G. P. O.
உருத்திரபுரம் இலங்கையில் மாதர்கள் முன்னேறுவதற்கும். அே பதற்கும் தகுந்ததோர் வி வருந்து தற்குரியதே. அக் யும் நோக்கமாக மாதர் ரோடு உருத்திரபுரத்தில் ளோம். இக் கைங்கரியத் 5 ஏக்கர் நிலம் வழங்கிய தமான இடத்தில் நிலம் 6 马万ü手a(ac圭考剑芭寺@引
ਓਹ
டபலதாய்மார் ஆச்சிரமத் ඛණ්ථූණිණත ජී. බණ්ෂුද්‍රාණිජුවාස (12| காடு வெட்டி நெல் விை ਈ. ਨੂੰ 6கிணறுகளும் 2 சிறிய வி அவசியம் தேவையுண்டு
●cm。あの@学 @の○あ逸 தேவைப்படுகிறது. நெல் @* CT శ్రా శ్రీశ్రGు @gశింUTశ్ర (QTTa. ఆeaరీr_#EGT ఆత్ర பொருளுதவி புரிந்து இ வேற்றி வைக்குமாறு ருேம்.
Longst
பணம் அ ـ بيث وفرع மாதர் ஆச்சிரம என்ற விலாசத்தி ජැෆිජී දුගීඝ්‍රෙෂ් ශී්ථික:
என்ற விலாசத்தி
Printed by N. Muthiah at the Published by N. Muthiah Al
 

| a News Paper M. L.
i 9 juni தமது ஆத்மீக வாழ்வில் தைப்பெண்களை ஆதரிப் 157-6ರ್ರಯೊ @@@Tತಿತ್ತು ... ಹ | ತರಾpಹಾರಾ · #@$#ಟ್ವಿ: ೧೬ ರು.! ஆச்சிரமம் என்ற பெய இப்பணியை ஆரம்பித்துள்
ਉਕਤ ਨੂੰ
ਨੂੰ வாழ்த்துள்ளது உருத்திர ல்லும் வழியில் கோயிலி あTリー○受○○?cm ータ@
66
あ孝キー - ○○ー三 ーをき よ三う。@ ○。三う。 ○。GCエテ 三 டுகளும் ஒரு மண்டபமும் ...ਕ ਨੂੰ 茎 0006 ප්‍රථි ග්‍ර බෝග්‍ය - ඝණ ප්‍රීඞා මුද්‍රණ ,
உத்தேசித்துள் ತಿಹಾರ: ಗ್ರ: ದಿ 5:೧೭೧: 69 Leip | ಕಿರಾ ಹಾಡೋ ಹಾಗೆ'- *ರಾತ ಔರಾದ್ಪ |
.,1 ܐ
இங்ஙனம் ஆச்சிரம நிர்வாகிகள்
னுப்ப விரும்புவோர்,
- 2-@あ幸エ ற்கும் அனுப்பலாம் பம்-நாவலப்பி கும் அனுப்பலாம்.
Sri Murugan Press -- Pundu loya. majothi Niliyam Na Wallpitiya