கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.04.01

Page 1


Page 2
coo
888০০০০০০০০০০০০ 90 OOOOOOOOOOOOOOOOOO O o 0000000000000000000000000ం
o ဒွ၀၀ o OC o O O ( - 8 g O 烈 o () g o g 8 O 8 OOC) 8 do O Ο Ο Odo 0 0 0 Oo OOOO0000 000 900 www. Ο Ό ο ο Οoooooo o ο ο Οο ο ο οο ο ο ο ο οο ο ο 666
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு) எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
. சுத் தானந்தர்.
சோதி 11 சுடர் 6. விளம்பி வடு) இத்திரை 1-4-59.
- பொருளடக்கம் -
பேரின் பத் தெள்ள முது 1 6 1 அரவிந்தரின் அறிவு  ைர 162 மாகாத் மாக்களும் ஞானிகளும் 1 63 முப்பொருள் தத்துவம் 165 பொன் மொழிகள் 1 6 8 பூரீமத் கோம்பை சுவாமிகள் 1 69 யோக ஆசனங்கள் 1 7 7 15ாம் காணும் சைதன்யர் 18 1 15டராஜா ஓம் 184 அபே தமும் ஆனந்தமும் 1 85 கடவுளைச் சரண் புகுதல் 1 9 O கபீர் பஜன் 1 92 சுவாமி இராமதாசன் 1 93
i ır.(O ann f s ஆத்மஜோதி Jibbi O) i) is ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடசந்தா ரூ. 3-00
- தனிப் பிரதி சதம் -30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்.
பதிப்பாசிரியர்: நா. முத்தையா,
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி (சிலோன்)
 

பேரின்பத் தெள்ளமுது.
(மகரிஷி சுத்தானந்தர்)
commune -n- sammad
எல்லாரு மின்புறுத லென்னின்ப மாக்கினை
எனதியா ணென்ப தறவே என்னுட் கலந்தவா றெங்கணும் விளங்கினை
யியல்பா யிருந்த படியே, தொல்லுலக முன்னுணை யாடலாய்த் தோற்றினை
தோற்றியதை மாற்றி மாற்றி தொழில்க ளெண்பதுகோடி சோர்வற இயற்றியுந்
தொழிலறு சமர்த்த ஞனய்; சொல்லரிய துரியமெய் விண்ணுெளிக் கப்பால்
துலங்கிடும் வெட்டவெளியே துதிக்கத் துதிக்கத் திதிக்குமுத் தமிழெனச்
சொக்குஞ் சுகப் பெருக்கே; இல்லையென் பாருளு மிருக்கிறே னிங்கென்னு
மெல்லையறு தில்லை யறிவே! எச்சமய மும்பணிந் தேத்தரிய பொதுநடத் தெந்தையே போற்றி போற்றி
18 இன்றுநே சித்தவர்கள் நாளையே வெருகுபோல்
இகல் வேட்டை பாடு முலகம், எமன்வரினும் இணையருேம் என்றென்று மன்புளோம்
என்றுருகு காதலாளர் சென்றுண் டுறங்கிமன மொன்றென்று கொஞ்சியென்
செல்வச் சிறப்பின் வளமே தேனினும் பாகினும் தித்திக்கும் இன்பமே
திருவே எனக் கலந்து நின்றவர் செருக்குறு சினம்வர நிலதவறி
நேர்பகை வராய்ப் பொருது வார் நிறைகெட்டு மதிகெட்டு நெறிகெட் டலைவரிது
நீசவுல கத்தி னியல்பே தொன்றுதொட் டிவ்வியலை நன்றுதேர்ந் துன்னையே
துணையாக நம்பி யுள்ளேன் சுத்தபரி பூரண சுகானந்த வாரியே
சுடர்பரவு சோதி மலையே!

Page 3
அரவிந்தரின் அறிவுரை
நாம் கருத்திற்கொண்ட முழு மாற்றம் நிகழவேண் டுமாயின். எவ்வளவிற்கு நமது மனமும் இதயமும் இறைவனுக் கர்ப்பணம் செய்யப் படுகின்றனவோ அவ்வளவிற்கு நம் செயல்களும் வெளிப்பிரவிருத்திக ளும் அர்ப்பணமாதல் அவசியமாம். செயல் புரியும் நமது திறமைகளை நமது மறைவில் கின்ற சீரியசக்தி யினிடத்து ஒப்படைத்தலை ஏற்றுச் சமர்ப்பணத்தை படிப்படியாக நிறைவேற்றல் வேண்டும். நாம் செயல் புரிகிருேம். நாம் தொண்டாற்று கிருேம் எனும் உண ர்ச்சி அறவே அகல வேண்டும், பொருள்களின் புறத் தோற்றங்களில் மறைபட்டு நிற்கும் ஆண்டவனது இச்சை, தனக்குகந்தவகையிற் பெரிதும் கேரிடை யாய் உபயோகப் படுத்துமாறு அவனது திருக்கரங் களில் அனைத்தையுமளித்தல் வேண்டும். திருவுள்ச் சம்மதமின்றியாதொரு செயலையும் புரியவியலாதாத லின், கரந்துகின்ற ஒர்சக்தியே நமது செயல்களைக் கூர்ந்து கவனித்துத் தடுத்தாளும் தலைவனும், அகங் தையிலமைந்த அறிவின்மையினின்றும், முரண்பாட் டினின்றும், நெறிக்குறைவினின்றும் உண்டாய இச் செயல்களின் முழுப்பொருளையும் முடிவான கருத்தை யும் உணர்ந்தவன் அவன் ஒருவனே. நமது குறுகிய சீர்கெட்ட அகந்தை பற்றிய வாழ்க்கையும் செயலும், தற்போது நம்மை உள்ளிடாய்த் தாங்கி நிற்கும் உய ரிய திவ்விய வாழ்க்கை, சங்கற்பம், சக்தி ஆகிய இவற்றின் பரந்தநேரான வெளிப்பாடாக முற்றிலும் மாற்றப்பெறல் வேண்டும் இவ்வுயரிய சங்கற்பமும் சக்தியும் இதுவரையிற்போல் மேல்கின்றே ஆதரித்து அனுமதித்துவரும் ஆற்றலாய் கிற்காமல், 15ம் உள் அறிவிலேயே பொருந்தி ஆளும் வகைசெய்தல் வேண் டும். தற்போது காந்தியங்கும் ஒரு, எல்லாமறிந்த ஆற்றலும் எல்லாம்வல்ல அறிவும் தமது தீர்க்க திருஷ் டியில் கொண்ட உத்தேசமும் சாதிக்கும் முறையும் நமது வாயிலாய்த் திரிபற்று வெளிப்பாடாகும்வகை யில் 5ம் சாதித்தல் வேண்டும்.
一※一ー
 
 

மகாத்மாக்களும் - ஞானிகளும்
(ஆசிரியர்)
மனித சரித்திரம் மிகமிகப் பழமையானது, இச்சரித்திரத்தை ஊடுருவிப் பார்த்தால் மூவகை மனிதரைக் காணலாம். தான்மாத் திரம் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கையுடையவர்கள் ஒரு வகையினர். தன்னேடு தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கையுடையவர்கள் இன்னெரு வகையினர். உலகமெலாம் வாழவேண்டும் என்ற பரந்த மனப்பான்மையுடை யவர்கள் பிறிதொரு வகையினர்.
மூன்ருவது வகையினர் மனிதர்களுக்குள் மிக மிக உயர்ந்த தன்மையுடையவர்கள். இவர் க ளே உலகின் மகாத்மாக்களும், ஞானிகளும், அவதாரங்களும், தீர்க்கதரிசிகளும், ஆவர். உலக வாழ்வில் இவர்களுடைய நோக்கம் மிகமதிப்பையுடையது. இவர் கள் உலகின்மீது புதுமையான வசீகர சக்தியைப் பரப்புகின்றர் கள். ஏனெனில் வாழ்க்கையில் குறுகியநோக்கத்தோடு வாழும்மக் கள், இம் மகாத்மக்களின் கம்பீரமான தோற்றத்தால் மயக்கப்பட் டுக் கவரப்படுகிறர்கள்,
ஆத்மாவை அறிந்தவர்கள் ஆத்மகணத்தைச் சேர்ந்தவர்களா வர் அவர்களே ஆத்மீகவீரர்கள் என்றும் அழைக்கப்படுகின்ருர்கள். மற்றவர்களிலிருந்து இந்த ஆத்மீக வீரர்களிடம் அமைந்த விசேட பண்புகள் எவை? எல்லாப் பிராணிகளிலும் உயிர்களிலும் கொண் டுள்ள சமநோக்கினல் ஏற்படும் சுயநல வெறுப்பே அவர்கள் வாழ் வின் அடிப்படையாகும். அவர்கள் உலகின் நிலையாமையை நன்கு உணர்ந்தவர்கள். அழிவில்லாததும் பேரின்பமானதுமான நிலையை எப்போதும் உணர்ந்து கொண்டே இருப்பவர்கள். இந்த உடல் செக்கன்தோறும் இறந்துகொண்டே இருக்கிறதென்பதை நன்கு உணர்ந்தவர்கள்; இதனுல், சாதாரண மனிதர்களை அச்சத்திற் குள்ளாக்கும் மரணபயத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருக் கிருர்கள்.
இவர்களுடைய உபதேசங்கள் யாவும் ஆண்டவனைப்பற்றியன வாகவ்ே இருக்கும். கீழ்த்தரமான எண்ணங்களினின்றும் நித்திய வாழ்வைப்பற்றிய உணர்வுக்கு மக்களை அழைத்துச் செல்கிருர்கள். அந்நிலையே அமரத்துவம் எனப்பெறும். அவர்கள் உபதேசங்கள் யாவற்றையும் ஒரு சொல்லில் அடக்கலாம், அது "ஆண்டவன்" ஆகும். ஒன்றைப்பற்றியே திரும்பத்திரும்பக் கூறுவதில் அவர்கள் சலிப்படைவதில்லை.

Page 4
64 ஆத்மஜோதி
வாழ்க்கை நித்தியமானது; அதாவது ஆத்மா என்றுமுள்ளது ஒவ்வோருயிரும் உண்மையாகவே தெய்விகம் வாய்ந்தவை; அதா வது இயல்பாகவே அழியா ஒளியும், இன்பமும் சாந்தியும் உடை, யவை. இவையே அவர்கள் அநுபூதிலிருந்த கிடைத்த அரிய மாணி க்கங்களாகும்.
பல்வேறு வகையான உயிர்த் தோற்றங்களிலும் ஒன்றிநிற்கும் அழிவில்லாததும் சர்வ வியாபகமானதுமான சத்துவப் பொருள் ஒன்றுண்டு, அதிலிருந்து வீசும் ஆத்மீகஒளி அவர்களிடம் எப்போ தும் உண்டு. வாழ்வின் மாட்சிமையாகிய அந்நிலையை அடைவ தன் பெருமையை மக்கட் கூட்டத்தினருக்குப் போதிக்கிருர்கள். மக்கள் விரும்பாவிட்டாலும் வலிந்து சென்று போதிக்கின்ருர்கள். அவர்களுடைய ஆத்மீக ஒளியினல் கவரப்பட்டு மக்கள் அவர்களைச் சுற்றிக் கூடுகின்ருர்கள். அவர்களைப் பின்பற்றுகிருர்கள். அவர்க ளின் அன்புகொண்டு போற்றிப்பணிகின் ருர்கள்.
அவர்களின் கூட்டுறவால் தமது பந்தநிலையை மக்கள் உணரு கின்றர்கள். அதனல் அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடையவே ண்டும். என்னும் ஆர்வம் உண்டாகிறது. அவ்வார்வத்தினல் தெய் விக நிலைக்குத் தாமும் உயர்த்தப்படுகின்றர்கள். மனிதவாழ்க்கை யின் சரித்திரத்தின் எக்காலத்திலாவது நித்திய வாழ்வைப்பற்றி அறிந்த ஆசான் யாராவது இல்லாது இருந்ததில்லை. அவர்களின் அளவற்ற சக்தி மனிதனின் மிருக உணர்ச்சிகளை அடக்கிப் பரஸ்பர நேயம், சாந்தி, நல்லெண்ணம் என்பவை நிறைந்த உலகை ஏற் படுத்தும்.
இத்தகைய மகான்களுள் ஒருவராக வாழ்ந்து பல மக்களை ஆத் மீக வாழ்வில் ஈடேறச்செய்த கோம்பை சுவாமிகளுடைய திருமுகப் பொலிவோடு சித்திரைச்சுடர் வெளிவருகின்றது. புதுவருடத்தில் புதுவாழ்வு மலர ஞானி ஒருவருடைய தரிசனம் வழிகாட்டும் அல்லவா? ஆத்மஜோதி நேயர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து உரி
ததாகுக. - - - -
பண்பாடு,
வீட்டைச்சுற்றிசுவர் எழுப்பவும் ஜன்னல்களை எல்லாம்வெளி யில்லாமல் துணிவைத்து அடைக்கவும் நான் விரும்பமாட்டேன். சகல தேசத்துப் பண்பாடுகளும் என் வீட்டில் வீசுவதையே விரும்பு கின்றேன். ஆனல் வீசலாமேயன்றி என்னைக்காலை வாரி விட்டு விட லாகாது. தான் பிறர் வீட்டில்போய் அக்கிரமியாகவோ பிச் சைக்காரணுகவோ அடிமையாகவோ இருக்கமாட்டேன்.
- காந்தி.
 
 
 
 

~~~~~~ =ജ
ஆ5 முப்பொருள் தத்துவம் )
(மாத்தளை-அருணேசர் எழுதியது)
மூன்று என்னும் எண்ணுக்குள் எத்தனையோ முக்கிய தத்துவங்க ளெல்லாம் அடங்கியுள்ளன அதில் அடங்காத தத்துவமே இல்லை எனலாம். உதாரணமாக இந்த உலகத்தையே எடுத்துக்கொள் வோம். அது இம்மூன்று என்னும் எண்ணுக்குள் தானே அடங்கியுள்ளது. அதனை ஈரேழு பதின லு உலகம் எனப் பகுத்துக் கூறப்பட்டாலும். அது மேல்-கீழ்-மத்தி என மூவுலகமாக மூன்றினுள் தானே அடக்கப்பட்டிருக்கிறது.
இந்த உலகமட்டு மென்ன? இதனைப் படைத்த இறைவனுங்கூட முத்தொழிலுடைய மும்மூர்த்தி யாக அன்ருே விளங்குகின்றர் ! தாம் ஒருவரே என் றலும் அவர் பிரமா. விஷ்ணு, சிவன், என்ற மூவகை நாமங்களுடன்-முறையே ஆக்கல், காத்தல். அழித்தல் என்னும் முத்தொழில்களை இயக்குபவ ராகப் பரிணமிக்கின்ற ரே.
அதுமட்டுமா? அவ்விறைவன், 'ஓம்' என்ற மூல மந்திரமாகிய பிரணவத்தின் உள்ளிருந்து அகர உகர, மகரங்களால் அ+ உ+ம்) ஆக்கப்பட்டுத் திரி மூர்த்தித் திவ்விய சொரூப லட்சணங்களாகவும் விளங்குகின்றர். அகரம் பிரமனுக்கிடமாகவும். உகரம் விஷ்ணுவுக்கு இடமாகவும், மகரம் சிவனுக்கு இடமாகவும் அமைந்துள்ள தத்துவத்தை இது குறிப் பிடுகின்ற தெனப் பெரியோர் கூறியுள்ளனர்.
இன்னும் இம்மூன்றின் தத்துவப் பொருள் என் னென்ன வகைகளாகப் பரிணமித்துள்ளது என்ப தையும் பார்ப்போம்.
கடவுளுக்கு “ரூபம் உண்டு-இல்லை' என்ற சந்தேகத்தை ஒழிப்பதற்காக அவரை ரூபி, அரூபி

Page 5
[ 6 6 ஆத்மஜோதி
ரூபா ரூபி. (அதாவது-ரூபமுடையவர், ரூபமில்லாத வர், ரூபமும் அரூபமும் சேர்ந்து விளங்குபவர்) என்று அவரவர் பார்வையில் தோற்றக்கூடிய வெவ் வேறு உருவ பேதங்களை வெளிப்படுத்துவதும் இம் மூன்றின் தத்துவமே. A.
கடவுளின் வடிவாகக் கொள்ளப்பட்டுப் பூசிக்கப் படும் கொள்கைகூட-மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற மூவகைப் பிரிவில் கடவுளின் வடிவாகக் கொண்டு பூசிக்கின்ற தத்துவத்தையே உள்ளடக்கி யிருக்கின்றது.
15ம் இந்துமத தத்துவங்களும் கடவுள் லட்சணம் ஆண்ம லட்சணம், மோட்ச லட்சணம், என்று மூன் ருகத்தான் இருக்கின்றன.
கடவுளின் தத்துவத்தை நன்கறிந்த ஞானிகள் அவரை சத். சித், ஆனந்தம் என்னும் மூன்று குண ரூபங்களில் கண்டுள்ளனர். அதனுல்தான் அவ்வி றைவனைச் சச்சிதானந்த ரூபி என உருவகப் படுத் திக் கூறப்பட்டுள்ளது.
முப்பொருளின் தத்துவமே கடவுள், உயிர். உல கம், என்ற உண்மைகள் அடங்கியுள்ளதை அந்த ஞானிகள் காட்டியுள்ளனர். இவற்றுக்கு நம் இலக் கண நூல்களில் குறிப்புச் சொற்களையும் அமைத்துக் காட்டியுள்ளனர். அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து ஆய்த எழுத்து என்ற மூன்றுக்குள் அடக்கப்பட்டு உயிரெழுத்து உயிரைக் குறிப்பதாகவும், மெய்யெ ழுத்து உலகத்தைக் குறிப்பதாகவும், ஆய்தமாகிய தனிகிலே கடவுளைக்குறிப்பதாகவும் கொள்ளப்பட் டுள்ளது. இப்பழங் தமிழ் வாய்ப்பாடுதான் வட மொழியில் பதி, பசு, பாசம் எனப்பட்டதும்.
சில ஞானிகள் கடவுளை அடி, 15டு, முடியில்லாத அகாதி (ஆதி அந்தம் அற்றவர்) என்று, அந்த
 
 
 

ஆத்மஜோதி I 67
மூன்று வரையறைக்குள் அடங்காதவர் என்பதைக் குறிப்பிடுகின்றனர்,
அக்கடவுளே வணங்கும் பக்தி முறையையும் மூவகையாகத்தான் பிரித்திருக்கிருர்கள். அவை உத்தம பக்தி, மத்திம பக்தி, அதம பக்தி, என்று மூன்று விதயானவையாம்,
அந்த மூன்றுவித பக்தி வணக்க முறைகளையும் கைக்கொண்டு நடக்கும்போதுகூட, அதற்கு முக்க ரண சுத்தியைத் தான் முக்கியமாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. முக்கரணம் என்பது மனம், வாக்கு, காயம் என்ற மூன்று காரணங்களாம். அவை பரிசுத்தத் துடனே இருக்க வேண்டுமென்பதுதான் நியமிக்கப் பட்ட விதிமுறையாகும். மனத்தை தீய வழிகளில் செல்லவிடாமல் கல் வழிகளிலேயே செலுத்திக் கட வுளை மனதினுல் வணங்குவதை மனச் சுத்தம் என்றும்; வாயை அடக்கித் தீச்சொற்களைப் பேசா திருத்தல்; வாயினுல் இறைவனே வாழ்த்தி வணங் குதல் ஆகியன வாக்குச் சுத்தம் என்றும்; காயம் எனப்படுகிற உடலினுல் பிறருக்கு நன்மையான வற்றைச் செய்தல், கடவுளுக்குப் பணிபுரிதல் ஆகிய இவை காய சுத்தி என்றும் கூறப்படும்.
ஆகவே இந்த மூன்று என்னும் எண்ணுனது
தன்னுன் அடக்கிக்கொண்டிருக்கும் தத்துவங்களின்
பேருண்மைகளையும் பெருமைகளையும் எவராலும்
அனவிடற்கரிது என்பது உணரத்தக்கது.
" ஓம்-தத்-சத்.

Page 6
நீமத் அபேதனந்த சுவாமிகளின் GLi si Girls.
愿萎 WN
(
/
W (விருத்தம்) B
f
*தலேமிசைக் கைகள் கூப்பி சத்தமிட்டுரக்கக் கூவி
2. உலேயுறு மெழுக தென்ன
உருகி நீ பஜனை செய்தால்
தலைவனும் இறைவன் பாதம்
சிரமிசைச் சூட்டு வானே వడి
d
W நி3லயென அதனைப் பற்றி
(
O
நன்னிலை சேர்க' என்ருன்.
P
நானெனும் அகந்தை யோடு
நாமத்தைச் சொல்வ தாலே W தேனினும் இனிய இன்பத்
t திருவருள் சுவைக்க வொண்ணு
சினியின் குன்றின் மேலே
0. சிற்றெறும் பொன்று வாயில் தீனியாம் அரிசி கவ்விக் K சென்றிடில் பயனுண்டோ தான்?
YeiLiuSiuu0YLiiiiiiLi iiLiiiiiiLikThYYL
 
 
 
 
 

6.
அவதூதர் ரீம } (}}lử6)ll Jolt fissil.
(மதுரானந்தா)
மதுரை ஜில்லாவில் பெரியகுளம் தாலுகாவில் கோம்பை என்ற கிராமம் ஒன்றிருக்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வட சாரலிலே திகழ்கின்ற இவ்வூரில் தமிழ் கலந்த கன்னடத்தைத் தாய்மொழி யாகக்கொண்ட கெளடர் என்ற கவுண்டர் இனத்தார் மிகுதியாய் வாழ்கின்றனர். அவர்களுக்கு முக்கிய
லியவையாம். இங் த க் கவுண் டர் குலத்திலே ஒரு கோடீஸ்வரருடைய திருமகவாக அவதாரம் பண்ணி யவரே நமது கோம்பை சுவாமிகள். இவரது தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை. இவரது மரபின
ராகவும் இப்போது யாருமில்ல. கர்ண பரம்பரை யாக இவரைப்பற்றி வழங்குகின்ற சில வரலாறு
களை கீழே தருகிருேம். இவர் சுமார் 200 அல்லது
அதற்கும் கூடுதலான ஆண்டுகட்குமுன் பிறந்திரு க்கவேண்டும். இவர்கள் சமாதியாகி இன்று 34 வரு டங்களாகின்றன. அதற்குமுன் 40 வருட காலம் நாகர் கோவிலிலும் அதற்குமுன் பலகாலம் தஞ்சா வூர் ஜில்லாவில் பல இடங்களிலும் வாழ்ந்திருந்தார் கள். இவர்களுடைய வயதைத் திட்டமாகச் சொல் லமுடியாது. அவரது பெயரும் யாருக்கும் தெரி
Ամո ձ5/.
* ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க்(கு) ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ??
என்றபடி, "கோம்பை" என்றவூரில் பிறந்தவராத லால் கோம்பை சுவாமிகள்" என்று உலகம் அழை த்தது. சிவஞானியைப் பெற்றதால் அவ்வூருக்கும் அழியாப் புகழும் புண்ணியமும் வந்தெய்தி யிருக்கி

Page 7
ஆத்மஜோதி . Ι 7 Ο
றது. சிவஞான வாரிதியிலே, நாமரூபமயமான சீவ போதச் சிற்ருேடை சென்று இரண்டறக் கலந்தபின் எஞ்சி கிற்பது அவ்வகண்ட ஸச்சிதானந்தக் கடல். அவதூதர்களுடைய உண்மை நிலை அதுவாகும். அத் தகையோரை உலக ம் ஏதாவது ஒரு பெயர் சூட்டி அழைக்கிறது.
நமது சுவாமிகளை கருவிலே திருவுடைய யோகப் பிரதிஷ்டர் அல்லது சாமுசித்தர் எனலாம். "ஸ"சீனும் பூரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோரிபி ஜாயதே' என்ற கீதா வாக்கியத்தின்படி, சிவபக்தி யும் செல்வமும் சிறந்த மரபிற்செனித்த சுவாமிகள் சுமார் 15 வயதிலேயே வீட்டைத்துறந்து வெளியே கினர். 'பொய்யை விட் டுப் புறப்பட்டேன்' என்றபடி இவர்கள் துறவறம் பூணுவதற் கான காரணம் ஒன்றுநேர்ந்ததாகக் கூறுவர். இவர்களுடைய மாட் டுமந்தையிலே ஒரு பசு கன்று போட்டது. ஆனல் பால் கறக்கவி டாது. அந்தப்பசு வழக்கமாக மலையில் மேயப் போகும்போது ஒரு குகைக்குள் போகுமாம். இதை ஒருநாள் சிறுபையனுயிருந்த நமது சுவாமிகள் கண்டு பசுவைப்பின்தொடர்ந்துகுகைக்குள் சென்றுராம் குகைக்குள் சென்ற பசு நேராக அங்கிருந்த ஒரு முனிவரண்டைச் சென்று நின்றதாம். முனிவர் பசுவின் அகட்டிலிருந்து பால் பருகியபின் பசுவைத் தொடர்ந்துவந்த பாலனைப் பார்த்தாராம். அந்த அருட்பார்வை சக்ஷ"தீகூைடியாயிருந்தது. ஸற்குருநாதர் திரு வருள் பதியப்பெற்ற சீடன் உலகையும் உற்ருர் உறவினரையும் மறத்தான். தாயினிடம் சென்று 'அம்மா என்னை நீ தேடக் கூடாது' என்று கூறி ஒரு சில நாட்களுக்குள் முற்றத் துறந்து வெளியேகினர். அதற்குப்பின் சில வருடங்கள் எங்கே எவ்வாறு கழிந்தன. என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனல் சுவாமிகள் நாகர்கோவிலுக்கு வந்து சுமார் 40 வருடங்களாக அங்கு வாழ்ந்து கடைசியாக 10மாதங்கள் ஈத்தாமொழியிலும் வாழ்ந்து சமாதியெ ய்திய வரலாற்றைச் சுருக்கமாகக் கீழே தருகிருேம்.
சிறுவயதிலேயே துறவறம் பூண்ட சுவாமிகள் தஞ்சாவூர் முத லிய இடங்களில் பல வருடம் சுற்றி அலைந்து இற்றைக்கு சுமார் 75 ஆண்டுகளுக்குமுன் நாகர்கோவில் நகரின் வடபகுதியாகிய வடசே ரியில் வந்து சேர்ந்தார். ஆனல் வடசேரி வந்து சேருவதற்குமுன் நாகர் கோவிலுக்கு 4 மைல் தொலைவிலுள்ள தாழக்குடியில் வந்த தாகவும், அங்கு ஒரு சிற்றுண்டிச் சாலையில் சென்று முதலாளியைப் பொருட்படுத்தாமல் தோசை ஒன்று எடுக்க அவர் ஏதோ பயித்தி யம் என நினேந்து அடிக்க அந்த உதையும் வாங்கிக்கொண்டு அவ் வூரை விட்டு நேரே வடசேரி வந்ததாகவும் கூறுவர். சுவாமிகள்
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 7
வடசேரி சன்னிதியிலுள்ள சந்தையிலும் சந்தைக்கு இரண்டு பர் லாங் சுற்றளவிலுமாக தங்கியிருந்ததைத் தவிர இந்த 40 வருடங் கள் வேறிடங்களுக்குப் போனதாகத் தெரியவில்லை.
பேய்போற்றிரிந்து பிணம் போற்கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி தரிபோல் உளன் றுநன் மங்கையரைத் தாய்போற்கருதித் தமர் போல் அனைவர்க்குந் தாழ்மை சொல்லிச் சேய்போல் இருப்பர்கண் டீர் உண்மை ஞானந்தெளிந்தவரே.
என்ற பட்டினத்தடிகளின் திருப்பாடற்கு விளக்கமாக அமைந்தது எனலாம் நமது சுவாமிகளின் வடசேரி வாசம். "சேய்போல இருப் பர்' என்றபடி அரையிலே கந்தைக்கோவணம் ஒன்று, கவனிப்பா ரின்றித் தொங்க சுவாமிகள் திகம்பரணுகவே காணப்பட்டார். * சித்தத்திலே சிவம் நாடுவர் -அதில் சேர்ந்து களித்துல கா ஸ்நவர் -நல்ல, மத்தமத வெங்களிறுபோல் நடைவாய்ந்து இறுமாந்து திரிகுவர்' என்ற பாரதி வாக்கின்டி ஆடையின்றி, சிவஞானிக்கு ரிய கம்பீரத்துடன் அலைந்த நம் பெருமானை மூவாசைப் பைத்தியம் பிடித்த உலகம் "பித்தன்' என்றே கண்டது. ஆனல் நாள் செல்லச் செல்ல சுவாமிகளது சீரிய நிலையை உலகம் அறிந்தது. தூற்றியவர் போற்றினர். பழித்தவர் புகழ்ந்தனர், பூசித்தனர். ஆனல் பெரு மான் எப்போதும் துவந்துவாதீத நிக்லயிலேயே நின்ருர்,
ஒருவரைப் பார்த்தமாத்திரையிலே, அவர் நல்லவரா; பொல் லாதவரா, அன்பரா ஆங்காரியா, என்ற அறியக்கூடிய ஞானக்கண் நம்அப்பனிடத்திலிருந்தபடியால், நல்லவர் தருகின்ற உணவையே உட்கொண்டு வந்தார். சிலர் இருக்குமிடம் தேடி உருக்கமுடன் உணவு கொண்டுவந்தாலும் உண்ணுர். சிலருடைய வீட்டிற்குள் தானே சென்று அடுக்கழைக்குள் நுழைந்த பானையிலிருந்து தானே உணவை எடுத்து உண்பார். சிலவேளை பெண்களிடம் 'அக்கா சோறு போடு' என்று கூடக்கேட்பார். சிலர் சுவாமிகளுக்குச் சாதம் ஊட்டுவதும் உண்டு. சாதம் கொஞ்சந்தான் சாப்பிடுவார். பெரும்பயற்றில் பிரியம் அதிகம். பனையிலுள்ள பதனீர், பனை வெல்லம் பேயன் வாழைப்பழம் இவை பிரியபாக உண்பார். மூக்குத்தூள் அடிக்சடி உபயோகிப்பார். வெற்றிலை, பாக்கு, பு  ைக யி லை , ச ரி ப் பி டு வ ரா ர். ஆ ஞ) ல் சுண்ணும்பு சேர்ப்பதில்லை. வேண்டிய பொருளெல்லாம் கொடுப்பதற்கு ஆட் கள் எப்போதும் காத்திருப்பர் என்ருலும் சிலவேளை சாப்பாட்டு விடுதியிலுள்ள எச்சிலை நாய்களுடன் சேர்ந்து நிம்மதியாக அருந்து வார். சாக்கடை நீரையும் சாப்பிடுவார். நன்மனம் படைத்த அன்பர்களது கடைகளிற்சென்று தோசை, பழம் வெற்றிலை முதலி யவை தானுகவே எடுத்துச் சாப்பிடுவார். கடைச் சொந்தக் கார

Page 8
I 72 ஆத்மஜோதி
ர்கள் அது கண்டு மிகவும் சந்தோஷப்படுவார். ஏனெனில் அன்றை க்கு அவர் க டையில் விற்ப%ன பெருவாரியாயிருக்கும். சுவாமிகள் மண்ணைத்தொட்டாலும், பொன்னுகும் என்பது எல்லோ குடைய வும் அனுபவம். ஒருவர் கையிலிருந்து ஏதாவது சுவா மி க ள் வாங்குவாராயின் அவருக்கு நன்மையுண்டாகும் என்பது திண்ணம் "நடமாடுங் கோயில் நம்பர்’ ஆகவிளங்கும் ஞானிகளுக்கு ஒன்று ஈந்தால் படமாடுங்கோயில் பகவற் கங்காகும் ஆதலாலே மக்கள் சுவாமிகளுடைய வருகையையும் தரிசனத்தையும் எதிர் பார்த்து நிற்பர்.
நம் சுவாமிகள் வடசேரியில் நெசவுத் தொழிலையுடைய சாலி யர் தெருவிலுள்ள கில அன்பர்களுடைய வீடுகளுக்கு நாடோறும் வழக்கமாகச்சென்று உணவு கொள்வார். அப்படி சுவாமிகளுக்கு உணவு ஊட்டியவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர் திரு வாளர் பிச்சாண்டித் தரகஞர் ஆவர். இவ்வன்பர் மிகவும் சிரத் தையுடன் சுவாமிகளுக்குத் தொண்டுசெய்துவந்த ஒர் செல்வந்தர் இவர்கள் கல்வி கேள்வியிலும் மிகச்சிறந்தவர். இறுதியில் திருச் செந்தூர் திருவிழா பார்க்கச் சென்று முருகப்பெருமான் திருவடி யிலேயே காலமானுர்,
அடுத்தபடியாக சுவாமிகளுக்குச் சிறந்த தொண்டு செய்த அன்பர், நாகர்கோவில் திரு சுப்பையன் ஆச்சாரி அவர்களாகும் இவர்களுக்குத் தொழில் பித்தளை, வெள்ளோட்டுப் பாத்திரங்கள் வார்க்கிறது இவர்கள் அடிக்கடி நம் சாமிகளுக்குப் பிரிய உணவு வகைகளைத் தயார் செய்து வடசேரிக்குக் கொண்டு செல்வார். இவர் அளிக்கும் உணவைச் சுவாமிகள் பிரியமாக உண்பார் இவ ரும் சுவாமிகளோடு நீண்டநேரம் உட்கார்ந்து, கை கால்களைத் தடவித் தொண்டு செய்வார். இருவருக்குமிடையிலுள்ள அன்பு அளவற்றது. திருநாவுக்கரசர்மீது பெரும்பத்திபூண்ட அப்பூதி நாயனுர், தன் குழந்தைகளுக்கும், வீடுவாசல்களுக்கும் திருநாவுக் கரசு, திருநாவுக்கரசு என்று பெயர்சூட்டி அடிமை பூண்டிருந்த தைப்போல நமது ஆசாரி அவர்களும் தமக்குப் பிறந்த குழந்தைக ளுக்கும் 'கோம்பை' என்ற திருநாமத்தை சூட்டினர். இவர் சுவாமிகளுக்குத் தொண்டுசெய்து வந்தகாலத்திலே இவருக்கு ஒர் ஆண் மகவு பிறந்தது, இது ஒர் அசாதாரணக் குழந்தையாகவே இருந்தது. தன் அறிவு வந்து நடக்கத் தொடங்கியதும் கோயில் களுக்குப் பிரியமாகப் போகும், பஜனை, ஜபம் தியானம் இவை களில் கூடுதல் ஈடுபடும், உலகத்தவர் உறவை விட்டு தன்னலந் தனியாயிருக்கும். சிறுவயது முதலே இதற்கு ஜடையிருந்தது. சில வேளை வரப்போகின்ற காரியங்களைத் திடீரென்று சொல்லிவி டும். குழந்தைகளுக்குரிய சஞ்சலம் இல்லை. நிம்மதி. இத்தெய் வீகக் குழந்தைக்கு சுமார் ஆறு வயது ஆனதும் வயிற்றுக்கழிச்
 

ஆத்மஜோதி I 78
சல் நோய் கண்டது. சிலநாள் படுக்கையிலிருந்தது. இறுதி நாளு க்கு முந்திய தினம் தான் அடுத்தநாள் புறப்பட்டு விடுவதாகக்கூறி அவ்விதமே மறுநாள் சிவலோகம் சேர்ந்தது.
இந்த சுப்பையன் ஆசாரியாருடைய மக்கள் இப்போதும் கூட அடிக்கடி நமது சுவாமிகளுடைய சமாதிக்கு வந்து தாங்களே பூஜை செய்து வழிபட்டுச்செல்வது வழக்கம். சுவாமிகளது குருபூஜை தின த்தன்றும் இவர்கள் வந்து பூசை அன்னதானம் இவைகள் செய்கி ருரர்கள்.
இரவுவேளை சுவாமிகளை அனேகமாக ஒருவருக்கும் காணமுடி யாது. சிவஸ்வரூபமான சுவாமிகள் இரவு வேளையை சுடுகாட்டி லேயே கழிப்பார். சுடுகாட்டில் நிலவுவது ஒரே அமைதி, சாந்தம் அச்சமில்லை, துயரமில்லை, ஆசையில்லை, சினமுமில்லை.
* அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
அறிவுதனை அருளினு லறியாதே யறிந்து குறியா தே குறித்தந்தக் கரணங்க ளோடுங்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயிற் பிறியாத சிவன் ருனே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெல்லாந் தானுய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்ல,வாகி
நின் றென்றுந் தோன்றிடுவன் நிராதாரணுயே.
என்ற சிவஞான சித்தியார் திருப்பாடலின்படி சுவாமிகள் ஒழுகின சேரி ஆற்றங் கரையிலுள்ள சுடுகாட்டிலே ஞான நிட்டை கூடிக் கழித்திருப்பார். "எல்லா வுயிர்களுக்கும் இரவு, யோகியருக்குப் பகல் என்ற கீதாவாக்கியத்திற்கு இலக்கியமாய் அமைந்திருந்தது சுவாமிகளின் வாழ்வு. சுவாமிகளுக்குப் பிரியமான ஒரு அன்பர் இரவில் சிலவேளை சுவாமிகளிருக்கும் சுடுகாட்டிற்குப் போவாராம் அப்போது அவருக்கு எப்போதுமே வெளியுலகில் மெளனியாயிரு க்கும்சுவாமிகள் திருவாய் மலர்ந்து ஞானவாசிட்டத்திலுள்ள அரி யகருத்துக்களை உபதேசிப்பதுண்டு. என்று மேற்படி அன்பருடைய நண்பர் வடசேரி திரு பி. சிதம்பரதாணுபிள்ளை அவர்கள் அடியேனி டத்தில் கூறியிருக்கிருர்,
இரவுவேளையில் சிலபோது பாதையருகிலும் சுவாமிகள் படுத் திருப்பதுண்டு. அப்போது தனது உடல் உறுப்புகளெல்லாம் துண்டு துண்டாய் வெவ்வேருகக் கிடப்பர். இந்த அதிசயம் பலதடவையி லும் பார்த்த சில அன்பர்கள் அடியேனிடத்தில் கூறியிருக்கின்ற னர். ஹடயோக சித்திவல்ல யோகிகள் இங்ங்ணம் செய்வது வழ 8585LD

Page 9
74 ஆத்மஜோதி
குழந்தை பெருத அனேகம் தாய்மார்கள் சுவாமிகளுக்கு உணவு ஊட்டியும், அவரிடம் பிராாத்தனை பண்ணியும், குழந்தை பேறு அடைந்திருக்கின்றனர். பலர் நோய் நீங்கினர். பலர் செல் வந்தராயினர். சில குருடர்கள் கண் பெற்றனர். சுவாமிகளைத்துன் புறுத்தி ஒருவர் தன் கண்ணை இளந்ததுமுண்டு. இம்மாதிரி சாபா னுக்கிரக சத்தியானது இன்னும் அவரது சமாதியிலே நிகழ் வதுண்டு.
பூரீ ராமக் கிருஷ்ணருடைய வாழ்க்கைத் துணைவியாகிய ஸ்ாரதா தேவியாருடைய பூரீ ஸ்ாரதா அன்னையின் சீடராய் விளங் கியவரும் அடியேனை ஆட்கொண்டகுருநாதருமாகிய பூரீமத் அம்பா னந்த கவாமிகள் தன் சிறுவயதில், ஒருநாள் நம் சுவாமிகளைத் தரி சிக்க, பழம், வெற்றிலை, பாக்கு முதலியவை வாங்கிச் சென்ற செய்தியை அடியேனிடம் குறிப்பிட்டிருக் கின்றனர். குருநாதர் சுவாமிகளை நெருங்கியதும் சுவாமிகள் எழுந்து ஒடி கொஞ்சத் தொலையில் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர். குருநா தர் அவ்விடம் சென்றபோதுஅவரிடமிருந்த வஸ்துக்களை வாங்கிச் சந்தோஷமாக்ச் சாப்பிட்டு குருநாதருடைய தாடி மயிரைத்தடவி அருள்புரிந்தனர்.
சுவாமிக்ளுடைய வடசேரி வாழ்க்கையிலே முக்கியமான மற் ருெரு சம்பவம் நடந்தது. அக்காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்ய த்தை ஆண்டிருந்த மூலத்திருநாள், ராமவர்ம மஹராஜா தனது தலைநகராகிய திருவனந்த புரத்திலிருந்து வடசேரிக்கு எழுந்தருளி வந்துகொண்டிருந்தார். பகல் முழுதும் பாதையோரத்திலே கழிக் கும், திகம்பரணுகிய நமது சுவாமிகளை’ போலீஸ் காவலாளர்கள் பாதையிலிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தி சந்தைமதில் சுற்று க்குள் (காம்பவுண்ட்) தள்ளி, வாசல்களைத் தாளிட்டு வெளியே நின் றனர். ஆனல் மகராஜாவின் குதிரைவாகனம், சந்தை வாசலுக்கு முன் வந்ததும் சுவாமிகள் அரசன் முன் தோன்றிவிட்டார்-போலீஸ் படை ஏமாந்தது. அரசன் சுவாமிகளுடைய பெருமையை அறிந்து கீழிறங்கி மரியாதை செய்து வணங்கினர். ஒரு புதிய வேஷ்டியொ ன்று வாங்கித் தந்தார், ‘கரித்துணிக் கந்தலைக்கட்டிய சுவாமிகள் மன்னன் தந்த வேட்டியை எட்ட எறிந்தார். மன்னன் தன்னுடன் சுவாமிகளைக் கொண்டுபோக நன்முக முயன்றபோதும் சுவாமிகள் சம்மதிக்காமல் தன்போக்கில் நடந்துசென்றுவிட்டார், வெகுநாள் கழித்து, சுவர்மிகள் வடசேரியை விட்டு ஈத்தாமொழிக்கு வந்து தங்கியிருக்கும்போது கொல்லமாண்டு 1099-வூல் ஆனியிலோ ஆடி யிலோ, மூலத்திருநாள் மன்னர் திருவன்ந்தபுரத்தில் காலமான அந்த நிமிஷத்தில், சுவாமிகள் திருவாய் மலர்ந்து 'மன்னன் இற ந்துபோனன்’ என்று கூறினர். -
 
 

ஆத்மஜோதி I 75
நீண்டகாலமாக நாகர்கோவிலில் தங்கி பற்பல திருவிளையாட ல்கள் புரிந்து அன்பர்களை அனுக்கிரகித்துவந்த அடிகள் திடீரென ஒருநாள் தென் திசையிலுள்ள கடலோரத்தை நோக்கிப் புறப்பட் டார்கள். இதுகண்ட அன்பர்கள் பலர் சுவாமிகளை நாகர்கோவிலி லேயே தங்கியிருக்கும்படி நன்முகக்கெஞ்சி வேண்டினர். பற்றற்ற பரமஞானியாகிய சுவாமிகள் ஒருவரையும் கவனிக்காமல் நேராக நாகர்கோவிலுக்கும் மேற்கே பதினன்காவது கல்லிலிருக்கும் குளச் சல்வரையும் நடந்துபோய்அங்கிருந்து கிழக்கே திரும்பி தருமபுரம் என்று பேர்போன ஈத்தாமொழி கடலோரத்தில் புன்னைகள் நிறை ந்த மணல்வெளியில் வந்து தங்கினர். முன்னமேயே உலகப்புகழ் பெற்றிருந்த சுவாமிகள் இந்த இடத்தில் வந்தது கண்ட மக்கள் சுவாமிகள் சமாதி கூடுவதற்காகத்தான் இங்கு வந்துள்ளார் என்று முடிவு கட்டினர். இதைப்பற்றிச் சுவாமிகளிடத்தில் நேரடியாக ஒரு அன்பர் கேட்டபோது சுவாமிகளும் அங்ங்ணமே ஒத்துக்கொண்
GOTIT.
'இராமன் இருக்குமிடம் அயோத்தி’ என்றபடி சுவாமிகள் இந் தக் கடலோரத்திற்கு வந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் தரிச னத்திற்காக வந்துபோகத்தொடங்கினர். சுவாமிகள் சன்னிதியில் எப்போதும் ஒரு கூட்டம் காணலாம், சுவாமிகளுக்குத்தேவையான தின்பண்டங்களாகிய பழம், பெரும்பயறு, தோசை. வெற்றிலே பாக்கு, முதலியவை விற்பனை செய்யும் சிறு கடைகளும் ஆங்கு தோன்றின. கடற்கரையிலுள்ளஒன்றிரண்டு செம்படவர் குடிசை யிலும் சுவாமிகள் தட்டுத் தடங்கலில்லாமல் புகுந்து பெரிய பச்சைமீன்கள், சாதம் இவற்றைக் கையாலெடுத்துத் தின்றுவிடு வார்கள். பரவர் குடியைச் சோர்ந்த திரு கபரியேல் வாத்தியார் என்ற ஒரு அன்பர் சுவாமிகளுக்குச் சிறந்த தொண்டு செய்தார். இந்த வேளையில் தென்காசியிலிருந்து நோய்வாய்ப்பட்ட ஒரு சுவா மிகளும் இங்கு வந்து நமது கோம்பை அப்பனுக்கு மிகுந்த தொண்டு செய்தார்கள். மெல்ல மெல்ல அவரது நோயும் நீங்கியது. ஈத்தா மொழியிலிருந்து இரண்டு மைல் தொலையிலுள்ள இராஜாக்கமங்க லத்திலிருந்தும் பல அன்பர்கள் தினந்தோறும் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் செல்வர். அவர்களில் முக்கியமானவர்கள் ஆசிரியர் பூரீ ஏ. நாராயணபிள்ளை பூரீ உலகுடைய பெருமாள் நாடார், ஆகி ரியர் பூரீ எம். ஆண்டி நாடார் முதலியவர்கள். பூரீ ஆண்டிநாடார் அவ்ர்கள் வழக்கமாக சுவாமிகள் திருமுன் பூரீ தாயுமானவர் பாடல் தேவாரம் திருவாசகம் பாடுவார்கள். இந்தத் தமிழ்மறை களைக் கேட்க சுவாமிகளுக்குப் பிரியம் அதிகம் ஆண்டி நாடாரை
கண்டதும் சுவாமிகளே கைச்சாடைக் காட்டி பாடும்படி பணிப் பார்களாம். சங்கீதத்தில் விருப்பம் அதிகம்.

Page 10
76 . ஆத்மஜோதி
சுவாமிகள் தங்கியிருந்த இடம்மணற்பரப்பு. அங்குக்கூறுகின்ற ஜனங்கள் தண்ணிர் கிடைக்காமல் மிக அவதிப்படுவதைக் கண்ட தென்காசி சுவாமிகள் நமது அடிகளிடத்திலே சென்றுநிலைமையைச் சொன்னர், அடிகள் திருவுள்ளம் இரங்கி தாம் தங்கியிருந்த இடத் திற்கு நேர் முன்பக்கம் சென்று ஒரு சிறு சுள்ளியால் ஒரு இடத்தை சுட்டிக்காட்ட அங்கே தரையைத் தோண்டினர்கள் எட்டு அடி தோண்டுவதற்குள் சுத்த ஜல ஊற்று கண்டது இன்றைக்கும் அது தீர்த்தமாகக் கருதப்பட்டு வருகிறது. கோயில் பூசை முதலியவை களுக்கு பயன்பட்டு வருகிறது. கடலோரத்திலுள்ளபல கிணறுக ளும் உப்புத்தண்ணிராயிருக்க, சுத்த ஜலக் கிணறுதந்த கோம்பை நாதன் அருள் வாழியவே!
சுவாமிகளுக்கு வெய்யிலில் இளைப்பாறுவதற்காக தென்னுேலை வேய்ந்த ஒரு சிறு குடிசைகட்டப்பட்டது, புன்னைமரத்தின் கீழமை ந்த அந்தக் குடிசையே சுவாமிகளது கடைசிவாசஸ்தானமாயிற்று. இங்ங்னம் டத்துமாதங்கள் கழியவே மாசிமாதம் 7-வ புதன்கிழமை இரவு 8மணி சுமாருக்கு பக்கத்தில் யாருமில்லாதபோது சுவாமிகள் தனது இகலோக லீலையை முடித்து நிர்விகற்ப சமாதிகூடி விதேக கைவல்யம் பெ ருர்கள். அன்றுகிருஷ்ணபசுஷத்து தசமி 34 நாளி கைக்குமேல் ஏகாதசி ஆரம்பம்; மூல நட்சத்திரம் சுவாமிகளின் தொண்டராகிய தென்காசி சுவாமிகள் இதுகண்டு மிகவருந்தி அன் அன்பர்களுக்கெல்லாம் தெரிவித்தார். உலகமெல்லாம் திரண்டுவந் தது. மறு நாள் பகல் சுமார் 4-மணிக்கு வேதவிதிப்படி சுவாமிகளது திருவுடலை அபிஷேகம் அல்ங்காரம் செய்து 10-அடி ஆழத்தில் கல்லறை ஒன்றுகட்டி கற்பூரம் திருநீறு பொன் வெள் ளிக்காசுகளிட்டு சமாதி செய்தார்கள், சமாதிக்குமேலே சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. அன்றுமுதல் இருவேளை பூசை வந்தனை வழிபாடுஆகியவை நடந்தேறி வருகின்றன, சுவாமிகளது சமாதி யைச் சுற்றியுள்ள 66 ஸென்ட் பூமியை மட்டத்திற்கு மான்யமாக விட்டிருக்கிருர்கள். சமாதியில் முக்கியமாக பெளர்ணமி தோறும் இரவில் 7மணியிலிருந்து 1மணிவரையிலும் திருவிாளர் எஸ். தங்க வேல்நாடார் B.A அவர்களின் தலைமையில் ஒரு ஆந்தர்யோகம் நடைபெற்று வருகிறது. அவ்வேளை விசேட பூசை, பஜனை, தியா னம், சமயச்சொற்பொழிவுயோகாசனப் பயிற்சி முதலியவைநடை பெறும் பூரீகோம்பைநாதருடைய திருவருளால் அவரது சமாதிம டத்ன்பர்கூட்டம் பெருகிவருகிறது. அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தாகவிளங்கும் நம் அடிகள் வாழ்க! அன்பர் வாழ்க. பித்தனய்த் திரிந்த சுத்தப், பிரமமே போற்றி கோம்பை அத்தனே போற்றி! ஈத்தா, மொழிவளர் அரசே போற்றி! சித்தனே போற்றி! தெய்வத், திகம்பரா போற்றி உந்தன் கைத்தலம் அளித்த மண்ணும் கனகமாய்த் தீரும் போற்றி!

யோக ஆசனங்கள்.
(S. P. A. சிவலிங்கம் - சேலம்)
- 67; பார்ஸ்வ கோஞசனம் - (பழகும் விதம்)
காற்ருேட்டமானதும், சுத்தமானதும், சமதளமானது மான விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் சற்று அகட்டி வைத்துக் கொண்டு நேராய் நின்று கொள்ளவும்.
பின் இடது பாதத்தின் முழங்காலை மடித்து பாதத்தைச் சிறிது திருப்பி வைத்துக்கொள்ளவும். முதுகுடன் சிறிது இடது பக்கமாய்க் குனிந்து (முன்பக்கம் குனியாது) இடது கையை மடித்து இடது பாதத்தின் விரல் மேல் உள்ளங் கை படும் வண்ணம் இடது கையை வைத்திருக்கவும் வலது கையை வலது காதை யொட்டியவாறு நேராய்த் தலைப்பக்கமாய் நீட்டி வலது காதைத் தொடும் வண்ணம் நேராய்த் தலைப் பக்கமாய் நீட்டியிருக்கவும். உள்ளங் கை மேல் பார்த்திருக்க வேண்டும்.
முகம் முன்பக்கம் பாாவை இருத்தல் வேண்டும். சுவா சம் சமநிலையில் இருக்கவும், வலதுகால் வளையாமல்

Page 11
78 ஆத்மஜோதி
நேராய்ச் சாய்வுடன் இருக்கவும். சித்திரம். 67. பாாக்கவும் பின் கால்களை மாற்றி வலது காலிலும் இவ்வாறு செய்யவும்.
ஆசனத்தைக் கலைப்பித் தல்.
இடது காலின் மேல் வைத்திருச்கும் இடது கையை எடுத்து சுவாசத்தை உள்ளிழுத்தவாறே நேராய் நிமிர்ந்து கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து சிரமபரிகாரம் செய்து கொள்ளவும்.
சாதாரணமாய் ஐந்தாறு தடவைகள் அவரவர்கள் சவு கரியத்தைப் போல் செய்யலாம். ஆண், பெண், அனை வரும் செய்யலாம்: பெண்மணிகள் கர்பகாலம், மாதவிடாய் ருதுசமயங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம்.
பலன்கள்:- விலா எழும்புகள். கால்களின் மூட்டு, தொடை, இடுப்பு, இவைகளுக்கு வலுவைக் கொடுத்து இரத்தோட்டத்தை அதிகரிச்கச் செய்யும். இருதயம் வலு வடையும், மலஜலம் நன்கு சுத்தியாகும்.
68, சதுர்முக கோணுசனம்
செய்யும் விதம் )
சுத்தமான சமதள கெட்டி விரிப்பின் மேல் நேராய் நின்று கொள்ளவும்.
பின் கால்கள் இரண்டையும் சற்று அகட்டி வைத்து, கைகள் இரண்டையும் தோள் பட்டைப் பக்கமாக நீட்டவும் இபபோது கைகளும் தோல் பட்டைப் பக்கமாக நீட்டியிருக் கவும்
இனி முன் குனிந்து பார்வை கீழே பார்க்கவும் கைகள் நீட்டியவாறு இருக்கவும். இது முதல் நிலை
 

I '79 ஆத்மஜோதி
இவ்வாறே இடுப்புடன் நேராய் நிமிர்ந்து பின் பக்க மாய் அதாவது முதுகுப் பக்கமாய் வளைக்ககவும். கால்கள் அகட்டிய நிலையிலும், கைகள் இரண்டும் நீட்டிய நிலையிலும் இருக்கவும். முதுகு நன்கு பின் பக்கம் வளைந்திருக்கவும். சுவாசம் சமநிலையிலிருக்கவும். இவ்வாறு தேவைக்கு தக்க வாறு செய்யவும். இது இரண்டாம் நிலை:
A
பின்பக்கமாக வளைந்த நிலையை நேராய் நிமிர்ந்து வலது
காலை இடுப்புடன் திருப்பிமுன் கொண்டுவந்து பாதங்களின்
விரல்கள் முன்னுல் இருககும்படி செய்யவும். கைகள் இரண் டும் தோள் பட்டையுடன் பக்க வாட்டில் நீட்டியிருக்கவும். விறைப்பாய் வளை பாது இருக்கவும். பார்வை கீழே பாாக்க வும். இதுமூன்ரும் நிலை. சித்திரம் 68 பார்க்கவும். சுவா சம் சம நிலையிலிருக்கவும். இவ்வாறு மூன்று நிலைகளிலும் தேவைக்குத்தக்கவாறு இருந்தபின் ஆசனத்தைக் கலைக்கவும்
கலைக்கும் விதம்
முன் குனிந்திருக்கும் நிலையில் சுவாசம் உள்ளிழுத் துக் கொண்டே நேராய் நிமிரவும். பின் வலதுகாலை இடது

Page 12
8O ஆத்மஜோதி
காலுடன் ஒன்றுசேர்த்து நேராய் வைத்து கைகளிரண்டை யும் தாளப்போட்டு சிரமம் தீர்த்துக்கொள்ளவும்.
பலன்கள்:- ஆரம்பநிலையில் முன் குனிந்திருப்பதால் இடுப்பு, கைகள் இவைகளுக்கு வலுவையும். வயிறு நல்ல பசியையும் உண்டாக்கும்.
இரண்டாம் நிலையில் பின் பக்கம் வளைந்திருப்பதால் முது கின் எலும்பு வீரியப்படும். விந்து கெட்டிப்படும். நரம்புகள் வீரியப்படும். புஜங்கள் அதிக வலிமையும், சதைகள் கெட் டியும் ஏற்படும். வயிற்றின் நரம்புகள் இழுத்துப் பிடிப்பதால் அஜிரணத்தைப போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்
LO
t1- மூன்ரும் நிலையில் வலதுகால் திருபபி முன் கொணடு வந்திருக்கின்றது. ஆகவே கால்களுக்கும், தொடை, இடுப்பு கைகள் முதலியவற்றிற்கும் நல்ல இரத்தோட்டத்தையும் மார் புக்குச் சமமான நாடித்துடிப்பையும் ஏற்படுத்தும்.
காக்காய் வலிப்பு, பித்தசம்பந்த அரோசிகங்களை நீக் கும், மூளை தெளிவுறும் அறிவு சுத்தப்படும். மூன்ரும் நிலை யில் கால்களை மாற்றிப்பயிலவும். ஆண், பெண் அனைவ ரும செய்யலாம்.
ಸ್ಥಿತೌ ಟ್ಠತಿಲಿಲಿತಿಣಣಅತಿ: 米°蕊 JI II. bl. II, II) ராமநாமத்தை இதயத்தில் வீற்றிருக்கச் இ செய்வதற்கு எல்லையற்ற பொறுமைதேவை யாகும். அனேக யுகங்கள் சென்றலும் செல் 醫 லும் ஆயினும் அதற்காகச் செய்யும் முய ே
ற்சி வேண்டப்படுவதேயாகும். ஆனல் எவ் : வளவு முயன்றலும் ஆண்டவன் அருளா இ
லேயே தான் வெற்றிபெறமுடியும். ※
தடு
இ9)
醫醫麗鱷麗瞿以H
BOSJseYL0LJSL LsSLLeLJeSO 0 JJ0LLLL S SSSS LScL LL L SJS 0S0LS siLLL LLL JLLLY S SS 0S S 0LS S 00eS

நாம் காணும் ಮಿತ್ರವಿ॥
(ருமதி சிவானந்த விஜயலஷ்மி)
பதினரும் நூற்றண்டில் பாரத பூமி ஒரு புரட்சி யைக் கண்டது. யோகம், யாகம், தவம், ஞானம், ஸ்நானம் தானம், போன்ற பற்பல நற்செயல்க ளாற்றி, முறைப்படி கர்மானுஷ்டானங்கள் செய்து வேத தர்மத்தைப் பயின்று வாழ்வதே பரமார்த் திக வாழ்வு. ஏனைய எம்முறையாலும், சுலபமாக எவரும் இறையனுபவம் பெற முடியாது என அன் றைய மக்கள் கருதினர். இங்கிலையை மாற்ற ஆண் பெண்; பாலர் விருத்தர், ஏழை, பணக்காரன், என்ற ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, இடையருத பக்தி யினுல், கில்லாத தைல ஒழுக்குப் (தாரை) போல் இறைவன் காம உச்சாரணத்தால், மரிக்கும் சரீரம் அம்ருதமயமாகிறது, அநித்தியமான உலகு கித்திய சுகம் தரும் பரமன் வடிவு எனத்தோன்றுகிறது. என்ற தத்துவத்தை உணர்த்தி ஜாதி, சமய பேதமின்றி அனைவருக்கும் ஹரி காம பஜனையில் பித்து ஏற்படும்படிச் செய்தார் வ ங் கா ள த் தி ல் உதித்த பக்தி, ஞான. வைராக்கிய ஜோதியாம் பூரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபு.
அணு சகாப்தமும், ராக்கட் யுகமுமாய் இருக்கும் இன்றைய உலகில் எங்கு நோக்கினும் வேதமும் சக்திவிரயமும், சாந்தி நாசமும் ஏற்படும் இந்நா ளில் அமைதியும், அழியாத ஆனந்தமும் இற வாத இன்பமும் துயர் கலவாத வாழ்வும், அஞ்சாத நெஞ்சமும் பெற, ஓர் எளிய, இனிய வழிஉளது இறைவன் திருநாமத்தை உணர்ச்சியுடன், உள்ள ம் கசிந்து, உரக்கக் கூவி, சிரம் மேல் கரம் குவித்து தான் எனும் அகந்தை ஒடத் தனை மறந்து தாளமிட்டு பாவபிணிபோக பர ம ன ப் ப ரி ங் து பா டி ன ல் போதும் என்னும் கீதை, உப கிஷத, புராண இதி

Page 13
32 - ஆத்மஜோதி
காசங்களின் சாரத்தை ஒதி, உள்ளுண்மையை உணர்த்தி தம் அருகில் வருபவர் உள்ளத்தில் பக்தி கனல் கனன்று ஒளிரவும், பாபம் பறந்து ஒடவும் பண்பு பரிணமிக்கவும், செய்கிறர். பேதமன்ற புனி தரும்; மாபெரும் கீதா அனுபவ யோகியும், சிறந்த சங்கீர்த்தன ஜோ தி யு மா கிய இந் நூற் ரு ண் டின் சைதன்யராம் பூரீமத் அபேதானந்த மஹ ரா ஐ "அவர்கள்.
மலையாளம் பயந்த மாணிக்கமாகிய பூரீ சுவாமி கள், மலையாளத்திற்கு மாத்திரம் உரிய ஒரு செல்வ மல்ல. அன்னரின் அன்பு மொழிகள், அருள் நாதம் ஆத்மீககர்ஜனை, ஆண்டவன் அர்ச்சனை, அகில பாரதம் எங்கும் பரவத்துவங்கியுள்ளது, அவர்கள் மேற்கொண்டுள்ள அகில பாரத காமப் பிரசார யாத்திரையின் ஒரு பகுதியாக சென்னைமா நகரம் வரை சுவாமிகள் சென்று திரும்பியுள்ளார்கள் தனி மனிதன் தபோவலிமையின் பெரும் சக்திக்கு ஒர் எடுத்துக் காட்டாக, சமீபத்தில் பூரீ சுவாமிகள் சென்னையிலும், திரு அனந்த புரத்திலும் நிகழ்த் திய கோடி அர்ச்சனைகள் அமைந்தன, திருவனந்த புரத்தில் ஊன், ஹக்கத்தை மறந்து அன்பர்கள் சத்சங்கம் என்ற பெரும் வெள்ளத்தில் பத்து தினங் கள் அல்லும் பகலும் திளைத்து ஆடி, இறுதியில் அரபிக்கடலில் சுவாமிகளுடன் கட லா டி ய காகூறி வானேர்கள் கண்டுகளிக்கத் தக்கதாய் அமைந்தது, உலகில் எங்குசென்ருலும், எதைப் பெற்றலும் பெற முடியா அமைதி இன்பம் சாது சங்கத்தில் சுலப மாய்க் கிடைப்பதை ஒவ்வொருவரும் அனுபவபூர்வ மாக உணர்ந்தோம்.
'சிவபெருமான் என்று நான் அழைத்தேத்த தவ பெருமான் என்று தான் வந்து நின்றன்" என்ற திருமூலரின் திருவாக்கின் உண்மையை சுவாமிகள் "சம்போ - நாராயணு - ராம்-கிருஷ்ண-ஹரி என்று
 
 
 
 

ஆத்மஜோதி 33
உரக்க, உணர்ச்சியோ டு அழைக்கையில், நாம் சுய மாய் உணர்ந்து மெய்சிலிர்க்கிருேம். அன்று சைத ன்ய மஹா ப்ரபுவைக் காணுதகுறை இன்று இப்புனி தரைக் காண்பதால் தீர்ந்து விட்டது என்று கம்கெஞ் சம் உரைப்பதுகூட கேட்கிறது!
காம்காணும் இச் சைதன்யரின் யாத்திரையால் பாரத நாடு எங்கும் பகவந் நாமத்தின் மகிமையும் பக்தியின் பெருமையும் பரப்பப் பட்டு, அனைவரும் பக்திப் பிரவாகத்தில் திளைத்து, நம்மாழ்வார் கவின் றபடி "போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நாக மும் நைந்து, நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை" என்ற திருவாக்கு நடை முறையில் கனவில் நிகழ வேண்டும் என்று பிரார்த்திக்கிருேம். பூரீ சுவாமி கள் இப்பூவுலகில் நெடுநாள் வாழ்ந்து, மக்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று அன்னரின் ஆசிரமத் தில் கோயில் கொண்டுள்ள பால கிருஷ்ணனைப் பணிந்து வேண்டுகிருேம்!
வாழ்க இறையருள்! ஒங்குக இறைவன் காமம்!!! வாழ்கபல்லாண்டு அவன் அடியார் அபே தானந்தர்!
O 米
Jlsbilslf 靈 x ராமநாமத்தைக்கொண்டு உடல், மனம், ஆன்மா 藻
சகலரோகங்களையும் ಙ್: டலாம். உடல் நோய்களை டாகடர்கள் உத * யைக் கொணடு குணபபடுத்திக கொள்ளலாம். 米
. ஆணுல் ராமநாமத்தை உபயோகித்தால் டாக்டர்சள்
u"(5 தேவையில்லை. அத்துடன் குணமாக்கமுடி 米 SK UT 35 நோபாயிருந்தால் அதைத் தாங்கக் கூடிய x
சகதியும் கிடைத்துவிடும். -
※米米米米米米来米米米米来米米米米米米米米来※※

Page 14
நடராஜ റ്റൂlf.
一米一
நடரா ஜாஒம் நடரா ஜா,-அருள் ஞான சிதம்பர நடரா ஜா; சுடர்வடி வாம்ஜய நடரா ஜா,-உயர் துரிய நடம்பயில் நடரா ஜா (நட)
கனக சபேச நடரா ஜா,-சிவ காமி சமேத நடரா ஜா முனிவர் அகந்திகழ் நடரா ஜா;-ஜகன் மோகன மாமுக நடரா ஜா ! (நட)
கங்கர தரசிவ நடரா ஜா,-ஜய கெளரி மனுேகர நடரா ஜா; பொங்கர வம்திகழ் நடரா ஜா-,இளம் பொன்பிறை மின்சடை நடரா ஜா (நட)
சாம்ப சதாசிவ நடரா ஜா,-ஐய சங்கர சுந்தர நடரா ஜா; தேன்பத மேந்திய நடரா ஜா,-உயர் தில்லையில் ஆடிய நடரா ஜா (நட)
சிற்பர தற்பர நடரா ஜா,-உயர் சின்மய நின்மல நடரா ஜா; அற்புத விற்பன நடரா ஜா,-சத்சி தானந்த நர்த்தன நடரா ஜா (நட)
எங்கும் நிறைந்தருள் நடரா, ஜ்ா தொழும் எம்மத மும் திகழ் நடரா ஜா; தங்கிடும் ஐந்தொழில் நடரா ஜா-ஓம் சந்தத மும்பயில் நடரா ஜா (நட)
-"பரமஹம்ஸ் தாசன்?
 
 
 

அபேதமும் ஆனந்தமும் டீ வானமr)
பிறவிகளுள் அரிதான மானிடப் பிறவியைப பெற்ற
வர்கள் பாகசியவான்கள்
பெரியவர் என்றும் சிறியவர் என்றும் மக்களை இருகூரு 3ü L9 fő, 3,6) TLb.
அரிய செய்கைகளைச் செய்து புகழோடு தோன்றும் பெரிய வர் ஒரு சாரார் செய்தற்கு அரியவற்றைச் செய்யத் தெரி யாது. கீழான செய்கைகளிலேயே ஈடுபட்டு நிற்கும் கீழ் மக்களாம் சிறியவர் மற்ருெரு சாரார்.
மனம் போன போககில் போகாது, அதை நன்கு அடககி நிறுத்தி சீரிய சாதனையில் முன்வந்து ஒற்றுமையை நாடி நிற்பவர்களே பெரியார். சிந்தையை அடககும் ஆற்ற லின்றி மனம் போன போக்கிலே சுற்றித் திரிந்து, புலன் களின் அடிமையாகி அழுக்காறு, அவா, வெகுளி. இன்னுட் சொல் முதலிய தீக்குணங்களைக கொண்டு, நல்வழிச் செல் லாது தீவழிச்செல்பவாகள் சிறியர்.
சிறியர் சிறியராகவே இருந்து விட்டால் உலகத்தில் வேற்றுமைகள் மிகும் என்றெண்ணி அவர்களிடமுள்ள சிறுமையை அகற்றிப் பெருமையைத் தோற்றுவிக்க முயலு வதே பெரியவர் பொறுப்பு எனவே இச்சிறியவர்களையும் புகழோடு தோன்றச் செய்ய ஆவனஞ் செய்வதில் பெரிய வர் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர்.
சிறியவர்களும் பெரியவர்களை அணுகிச் சிறுமை பைப போக்கிக் கொள்ள முனைய வேண்டும். ஏன் ? பெரியவர் கேண்மை, நாளும், பிறை போல் வரிசை வரிசையா நந்தும்எனவே தான் நல்லாரைக்காண்பதும் நன்று அவன் சொல் கேட்பதும் நன்று அவர் குணங்கள் உரைப்பதும் நன்று, என்று அவரோடிணங்கி இருபபதும் நன்று. என்று ஒளவைப்பிராட்டியும் அறவுரை தெரிவித்திருககிருர்கள்.

Page 15
I 86 ජැභණීt pගීඝ්‍ර ජී
உலகம் சாதி, மதம், மொழி, நிறம், நாடு முதலிய வேற்றுமைகளையுடையது. இவ்வேற்றுமைகளைக் கடந்து பொதுமையின் நிற்பதுதான் நல்லறம். வேற்றுமைகளெல் லாம். ஒற்றுமையெனும் உயர்பண் பின் முன் பாழாகும். வேற் றுமைகளுக்கு இலக்காகி விரோத மனப்பாண்மையின் நின்று வேண்டாத வெறிச் செயல்களில் சிக்குண்டு, விசனத்துடன் காட்சியளிக்கும் சிறியவராகத் தோன்ருமல், ஒற்றுமையின் உறைவிடமாய், அன்பின் உருவமாய், சத்தோஷத்திற்கிருப் பிடமாய் விளங்கும் பெரியவரை விளங்க வேண்டும என் பதையே சமயங்கள் எல்லாம் தெரிவிக்கின்றன.
பேதத்தைப் பார்ப்பது மதியினம், அபேதத்தைக் காண் பது அறிவுடமை, என்று இயம்புகிறது. வேதாந்தம் சகல ஜிவர்களின் ஒற்றுமையைப் போதிக்கிற உயர் தத்துவமாகிய வேதாத்தம் சூரியன், சந்திரன், அக்கினி, ஆகாயம். நட்சத் திர கள், மலைகள், கடல்கள், நதிகள், அனைத்தும் பரமாத்ம சொரூபம் என்ற அபேத நிலையை வெளிப்படுத் துகிறது. உங்கள் சொந்த ஆத்மன் தான் எல்லாவற்றிலும் தங்கி வருகிறது என்ற உயர் தத்துவத்தை உன்னிப் பார்க்க வேண்டுகிறது வேதாந்தம்: மனிதனை மனிடமிருந்த பிரித்து வைக்கும் மாயையின் மாய வேலையைத் தகர்த்தெறிந்து, எல்லோரும் ஒன்று என்ற ஒற்றுமை மனப்பாண்மையை அபேதபாவத்தை வளர்க்க வேண்டுகிறது வேதா ந் தம் ஜிவ ஐக்யத்தை, உணர்வின் ஒன்றுபட்ட தன்மையை உணருவதே மேலோர் பண்பு. எல்லா ஜிவர்களிலும் எல்லா மிருகங்களிலும் எல்லாச்செடிகொடிகளிலும் பிரிக்க முடியாத ஒரே ஆத்மனேக் காண முற்படுவதே செயற்கரிய செய்கை யாகும்; அதுவே நல்லறிவுடமையுமாகும். எனவேதான் திருவள்ளுவா தெரிவிக்கிருர்:-
* எப்பொருள் எத்தன்மைத்தாயினும்-அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' இவவரிய மெய்பபொருளைக் கண்டு, மகிழ்ந்து குண மென்னும் குன்றேறி நின்ருது பெருமையினுல்தான் உலகம் இயங்கி வருகிறதென்பது தாலோா கூற்று. அவ்வரிய

ஆத்மஜோதி I 87
பெரியார்களது தரிசனமே மிக்க பலனைத் தருமென்றெண்ணி அவர்களை நாடிச்செல்வார்
வேதாந்தத்தின் இலட்சியமான ஒற்றுமையுணர்ச்சியில் விருபபு-வெறுப்புகள் கரைந்து விடுகின்றன; அங்கே தோன்றி நிற்கின்றது. உயரிய ஆனந்தம் ஒற்றுமையில் தான் ஆனந்தம் ஓங்கி நிற்கிறதென்ற உண்மையை உணர்ந்த பெரியார்களைக காண்பது அரிது. அத்தகைய பெரியார்கள் இன்னும நம்மிடையே இருக்கத்தான் செய்கிருர்கள். அவர் களை நாடிச்சென்று. அபேதத்தில் நிலவும் ஆனந்தத்தைப் பெற முயலவேண்டுவது நம்மவர் கடமை!
பாரத நாட்டின் பெருமை பழமையானது. அவ்வப்பொ ழுது பல பெரியார்கள் தோன்றி நல்லறத்தை, ஒற்றுமையை அன்பை நிலைநாட்டி வருகின்றனர் என்பதை உலகறியும்.
இற்ற்ைக்கு இவ்வரிய பெருமையுடன் உலகனைத்திலு முள்ள மக்களின் உயர் வழிகாட்டியாக, ஒற்றுமையின் உறை விடமாக அன்பின் தோற்றமாக அமைந்து. சன்மர்ாக்கத் தந்தையாக அறிவெனும் ஜோதியாக அன்பரின் உள்ளத்தைத் துலக்கும உயர்குருவாக அமைந்து இமயமலைச் சிகரத்தில் வீற்றிருந்து அகில உலகத்தையும் ஒன்று படுத்தப் பாடு பட்டுவரும் இமயஜோதி பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் அபேத ஆனந்தமாக விளங்கி வருகிருருகள் அவர் கள் முன் சாதி, சமய, இன. நிற, மொழி. நாடு, முதலிய வேற்றுமை கட்கு இடம் கிடையாது. எல்லா வேற்றுமைகளும் சுவாமிகள் முன் நில்லாது நீங்கி வீடுகின்றன. சுவாமிகள் ஒற்றுமையின் உருவாகவே அமைந்து ஒற்று மை க் கு வழி வகுக்கின்றாகள் பல்வேறு மதத்தினர் பல்வேறு நாட்டினர் பல்வேறு நிறத்தினர். அனைவரும் சுவாமிகள் முன் ஒன்று பட்டு நிற்கும் உயர் தன்மையைக் கண்டு மகிழாதவர் யாா? சுவாமிகளுடன் சிண்னேரம் இருந்து விட்டு அவர்களுடன் அபேதமாக நிற்கும் ஆனந்த நிலையை அனுபவித்த பின் விடைபெற்றுச் செல்லும் அன்பர்கள் அனைவரும் கண்கலங்கி

Page 16
88 ஆத்மஜோதி
சுவாமிக2ளப் பிரிய மனம் வராதவராய்த் தேம்பித் தே மபித் தாயைப் பிரிந்து செல்லும் சேயைப் போல அவதிப்படும் அபூர்வ நிலைமையைக் கண்டவர் அபேதத்தில் ஆனந்தம் நிலவி நிற்கும் உண்மையை உணருவது உறுதி.
எல்லோரும் இமயமலைக்குச் சென்றுச் சுவாமிகளின் தரிசனத்தைப் பெறும் வாய்ப்புப பெற்றவர்களாக இருக்க முடியாது என்பதை அறிந்த கடவுள் தமிழ் நாட்டின் அருகி லுள்ள கோனத்தின் தலை நகரான திருவனந்த புரத்தில் மற் ருேர் பெரியாரைத் தோன்றச் செய்திருக்கிருர் எ ன் ப தை அறிந்தவா ஆனந்தககளிப்பெய்துவர் என்பதில் ஆட்சேபனை யுண்டோ ?
அபேதத்தின் உறைவிடமாய், அன் பின் திருவுருவாய் பக்திரசத்தின் பூரணமாய்ச் சிறந்து விளங்கும் பூரீ சுவாமி அபேதானந்தரின தரிசனத்திற்கு விரைந்து செல்லும் மககள் பெரும் பேறு பெற்றவர்களேயாவர். சுவாமிகளின் சொற்கள் ஒவ்வொன்றும் அன்பர்களின் உள்ளத்தில் உயரிய பக்தியை வளர்ப்பதுடன், சுவாமிகளின் தரிசனமே அனைவருக்கும் ஆனந்தத்தை ஊட்டுகிறது. அபேதமாக விளங்கும் தன்மை யில்தான் ஆனந்தம் தோன்ற முடியும் என்ற நியதிக்கொப்ப அபேதமாக விளங்கும் சுவாமிகளின் தொடர்பில் ஆனந் தத்தைத் தவிர மற்றெதையும் எதிர்பாாக்க முடியாதல்லவா?
சமீபத்திலே நடைபெற்ற கோடி அர்ச்சனையில் பங்கு பெறப பக்தர்கள் பல்லாயிரவர் பலவிடங்களிலிருந்தும் பறந்து வந்தனர். வந்தவர் அனைவரும் மூன்று நாட்கள் தொடர்ந்து சுவாமிகளின் உயர் தொடர்பில் ஆ ன ந் த மா க அமர்ந்த பின், சுவாமிகளிடம் விடைபெற்றுச் செ ல் லும் போது ஒவ்வொருவருடையவும் கண்களிலிருந்து வரும் கண் னிரே அவர்களின் போன்மைத் தெரிவிக்கும் "வாருங்கள்' உட்காரலாமே! சாப்பிடலாமே! " என்ற அன்பச் சொற்கள் அனைவரையும் பரவசத்திலாழ்த்திவிடும் தன் மையென விடை பெற்று வரலாமென்றெண்ணி சுவாமிகளிடம் சென் ருல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

89 ජැණීt ෆිෂිෂුit හි
இருந்து விட்டுப் போகலாமே! என்ற சொற்கள் கல்லுன்
ளத்தவரையும் கசிந்துருகச் செய்யும் தாயைப் பிரிந்த 鷲
சேயின் நிலைமையை அடைகின்ற அன்பர்களின் அன்புக்கும் பக்திக்கும் பாத்திரமாக விளங்கும் பூரீ சுவாமி அபேதானந்த ரின் புகழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாகச் சிறந்து விளங்கிச் சைதன்ய மகாப்பிரபுவின் திருவவ தாரமாகத் திகழுகின்ற தனிச்சிறப்பை என்னவென்றுரைப் பது?! ஆம்! பூரீ சுவாமிகளின் தரிசனமே அன்பர்களின் உள்ளத்தைத் துலக்கி, ஆத்மதரிசனத்தை அளிக்கும் என்பது உறுதி. 。
一米一
Leórt_r(B
அறிவுப்பண்பாடு இதயப்பண்பாட்டுக்கு அடங் கியதாகவே இருக்க வேண்டும். தனித்து வாழ விரும்பும் பண்பாடு எதுவும் வாழமுடியாது.
தொழில் செய்யாத-தொழிலில் பயனுக இல் லாத பண்பாடு பயனற்றதேயாகும். வாசிப்பதா லும் பேசுவதாலும் எழுதுவதாலும் மட்டுமே பண்பாடு அடங்கிவிடமுடியாது.
ஒரு தேசத்தின் பண்பாடு அதன் ஜனங்களு டைய இதயத்திலும் ஆ ன் மா வி லு மே குடி கொண்டிருக்கும் நம்மிடம் நாகரீகமும் பண்பா டும் சுயராச்சியமும் தேவைகளைப் பெருக்குவ தால் வாரா. தேவைகளைச் சுருக்குவதாலேயே வரும். (காந்தி)
அறிவில் ஆர்வமுடையவர் தாழ்ந்தவரிடமிருந் தாயினும் அறிவு பெற நாஞதவர் இவரே பண் பாடுடையவர் (கன்பூவ$யமதம்)

Page 17
o OOO
(ஹரிஹரராம்)
மை கு3லாம் மை குலோம் மைகுலோம் தேரா, தூசாஹிப்3மேரா ராமத#னி ராஜ்த4ணி ராமத#னி மேரா - (மைகுலோம்) ரூப நஹி ரங்க3 நஹி ப3ரனன ஹீ ச2ாயா/
நிர்விகார நிரஞ்ஐன, நிர்க்குணே ரகு4ராயா| (மை ஏக் ரொடி தே8 லங்கே3ாடீ துவோர் தேர்ர பாயை
காம க்ரோத4 சே2ாட3 கர்ஹரி குணே க3ாவை| (மை) மேஹர்ப3ான, மேஹர்ப3ான, மேஹர்கரோ தேரீ)
த3ாஸ் கபீ3ர சரண க2ட3ா நஜா தே8கத தேரீ|
பதவுரை - தேரா = உனது, உன்னுடைய, ராம் = ஹேராமா;
மை=நான்; குலோம்=அடிமை, உனதடிமை; தூ= நீ, நீயோ: மேரா = என்னுடைய, ஸா ஹிப்(3)=எஜமான்; த(4)னி=செல்வம் வாழ்வு; ராஜ்=செயல், பெருமை; (எல்லாம் ராமா நீயேதான் எனக்கு); (ராமா = உனக்குத் தனிப்பட்ட) ரூப்=உருவம்; ரங்க்(3) நிறம் என்பது; நஹரீ=இல்லை; ப(3) என ஹி=பக்தர்கள் எப்படி எப்படி உன்னை, உன் அழகை வர்ணிக்கிருர்களோ? அவ்விதமான; ச(2)ாயா = தோற்றந்தான் காட்டுகிருய், ரகுAராயா=ஹே ரகுகுல திலகனன ராமனே; நீயோ, நிர்விகார = பேதபாவமற்றவன், பிரிவு எண்ணுதவன்; நிரஞ்ஜன=மாசில்லாத, குற்றமில்லாத, நிர்கு(3)ண=குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, குணுதீதனன வன்; உனது அடிமையான எனக்கு; ஏக்=ஒரு; ரோடீ=ரொட்டித் துண்டும்; லங்கோடீ=லங்கோடும்; (இடைத்துணி); தே(3)= கொடு, தா; தோர =உன்னுடைய து(3)வார் = முன்னிலையில் சன் ன தி யி ல்; பாயை=அடைந்தேன்; காம = ஆசை, பற்று; க்ரோத(4)=கோபம் வெகுளல்; சே(2)ாட்(3)கர்=விட்டுத்தள்ளி: ஹரி=ஹே ஹரியே; கு(3)ண = (உனது புகழை, பெருமையை க(3)ாவை=பாடுவேன்; மேஹர்ப(3)ான் = தயவு செய்து; தேரீ= உன்னுடைய மேகர்கரோ = அருளைக்கொடு, அருள்செய்த8ாஸ் கபீ3ர் = தொண்டனன கபீர் சரணக (2)ட(3)ா- (உன் அருளைப் பெற) காத்துநிற்கின்றேன். நஜர்-அருட்பார்வையால் தே8கத்என்னைப்பார், பார்த்து ஆட்கொள் ராமா!
 
 

கடவுளைச் சரண் புகுதல். ନିଷ୍ଟି
அடிமைநானே அடிமைநானே அடிமைநானுன் னடிமையே
அடியனென் எஜமான் நீயே (அடிமை
அடியனென் வாழ்வு செல்வம் பெருமை யாவும் நீயே ராமா (அ)
உருவற்ருய், நிறமற்ருய், போற்றும் உருவே தோற்றுவை
பிரிவில்லாத மாசற்ற தூயவா ரகுநாதா (அடிமை) ரொட்டித்துண்டும் லங்கோடுந்தா கிட்டினேனுன் சந்நதி
கெட்டகோபம் ஆசையுமின்றி, திட்டமுன் புகழ் பாடுவேன்(அ)
தயாள குணசீலனன்ருே தயை புரிந்தெனை யாளவா! தாஸன் கபீர் சரணடைந்தேன் கடைக்கண் பாராய்தேவா (அ)
‘ஹரிஹரராம்
கருத்துரை:- ஹே ராமா! நீ என்னையாளும் எஜமானன். நான் உனது.அடிமை. என்வாழ்வு தாழ்வு, சீர்சிறப்பு, செல்வம் பெருமை, எல்லாம் நீயேதான்! மெய்யன்பர்கள், உண்மைத் தொண்டர்கள் உன்னை எவ்வெவ்வாறு புகழ்கிருர்களோ நீ அந்தந்த உருவில் அவர் களுக்குக் காட்சியளித்து ஆட்கொள்கிருய்! உனக்கெனத் தனி யான, குறிப்பிட்ட உருவமோ, நிறமோ இல்லை. நீ பேத பாவம் அற்றவன், எல்லாவற்வையுந் தன்வசமாக்கி யாவற்றுளும் உன்ம யமாக நீ இயங்குகிருய். அதனல் எதையும் வேறு என்றுபிரித்துப் பாராத (ஒருவனே) என்ற ஏகபாவம் கொண்டவன். நீ களங்கமில் லாதவன். குணதீதன். சுத்த நிற்குண சுயஞ்ஜோதி. ரகுகுலத்திலே மேன்மையுடையவன் நீதான். காமம், கோபம் முதலான ஆரு குணங்களையும் உதறித் தள்ளிவிட்டு. நான் உனது கல்யாண குண ங்களைப்பாடுவது என்ற உறுதியோ டு உன் திருச்சன்னதி அடைந் துள்ளேன். என் மானங்காக்க ஒரு லங்கோடும் (முழந்துணி,) உன் தொண்டு செய்வதில் ஈடுபடும் எனது உயிர்நிலைக்க ரொட்டித்துண் டும் (பிடிசோறு) எனக்கு நீ தரவேண்டும். ஹே கருணுமூர்த்தி இவ்வடிமை உன்னேயே சரணமாய், சஞ்சமாக அடைந்தேன். சற்று தயை காட்டிக் கருனே பொங்கக் கடைக்கண்ணுல்ப்பார்த்து அருள் செய்-என கபீர்தாஸ்வேண்டுகிருர்,

Page 18
சுவாமி இராமதாசர் :
-CK
அன்பினிற் கண்டேன் ஐயநின்னே
அருளொளி கண்டேன் நின்பால் என்பினே உருக்கும் உந்தன்
எழிலுரு கண்டேன் என்மனக்குருவே! இன்பமென் இதையக் காட்டில்
இராமதாச நின்னையான் கண்டால், என்பெரும் குறைதிரு மலவோ?
என்னருட் குருவே என்ன!
96% கிருஷ்ணுபாய்
அன்னை நின்னருட் பார்வை வேண்டும்
அடியனேன் நின்னுெளி காணவேண்டும் என்னேயே யானெண்ணும் ஞானம் வேண்டும்
இந்தஞாலமே யெனக்குப்பாலமா யமைய -வேண்டும்
அன்னேயின் அன்னே நீ-யேஆனந்த வெள்ளமே;
அருட்பெரும் ஜோதி கிருஷ்ணுபாயே! என்னையும் வந்துநின் திருவுருதாங்க
இக்கனம் அருள்புரி அமரத்தாயே!
-நா. சச்சிதானந்தன்.
 
 
 
 
 
 
 

உலகெலாம் வாழுந் தமிழர்க்கு ஒர் வேண்டு கோள்!
திருவள்ளுவர் திருகாளை ஆண்டுதோறும் ஒவ்வொரு வீட்டிலுங் கொண்டாடுக. இவ்வாண்டுத் திருவள்ளு வர் திருநாள் மே 22 வெள்ளிக்கிழமை (22-5-59). தமிழ்மறைக் கழகத் தலைவர் பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் எம்-ஏ-பி-ஓ-எல்) அவர்கள் விடுக்கும் அறிக்கை
எமது தமிழ்மறைக் கழகம் சென்றபல ஆண்டுகளாக வைகாசி அனுடத்தைத் திருவள்ளுவர் திருநாளாகத் தமிழ்கூறு நல்லுலக மெல்லாம் கொண்டாடச்செய்து வருகின்றது. தமிழகம், இலங்கை வடஇந்தியா, மலாயா, சிங்கப்பூர், பர்மா, தென்னபிரிக்கா, பீச் சித்தீவு, மொறிகியசு முதலிய பல நாடுகளிலும் வாழுந்தமிழர்கள் ஒன்றுபட்டுத் திருவள்ளுவருக்கு வைகாசி அனுடத்தில் விழா எடுக் கிருர்கள். கொழும்பு, சென்னை, திருச்சி, தெல்லி, சிங்கப்பூர், பி. பி. சி. (இலண்டன்) முதலிய வானெலி நிலையங்களும் எமதுமுயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கி வருகின்றன.
ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்று தமிழர்கள் ஒவ் வொருவருடைய வீடும் விழாக்கோலம் கொள்ளல்வேண்டும் என் பதே எமதுகழகத்தின் நோக்கமாகும். எனவே உலகெலாம் வ்ாழுந் தமிழர்களை ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளைத் தத்தம் வீடு களிற் கொண்டாடுமாறு வேண்டிக் கொள்ளுகிருேம், இப்பெருஞ் செயலை நிலைநாட்டுதற்கு ஆவன செய்தல் தமிழ்கூறு நல்லுலகெங் குமுள்ள தமிழ்ச் சங்கங்கள், மன்றங்கள் கல்விநிலையங்கள் முதலிய வற்றின் முதற்கடமையாகும்.
சென்ற ஆண்டுகளில் எமது முயற்சிக்கு ஆதரவளித்ததுபோல் இனிமேலும் ஒவ்வோராண்டும் தமிழ் மக்களுககுத் திருவள்ளுவர் திருநாளை நினைவூட்டியும், சிறப்புமலர் வெளியிட்டும் ஊக்கமளித் கலே , தமிழ் மக்கள் நடத்தும் பத்திரிகைகள் இப்பெருந் தொண்டு க்குச் செய்யும் பேருதவியாகும்.
கி. பி. 1969-இல் திருவள்ளுவர் தொடராண்டில் ஈராயிரம் ஆண்டு நிறைவி%ன எங்குஞ் பிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிருேம். திருவள்ளுவர் தொடர் ஆண்டைத் தமிழர்கள் யாவரும் வழக்குக்குக் கொண்டுவருதலும் இன்றியமையாதது. திருக்குறள் இ ன் னு ம் மொழிபெயர்க்கப்படாத மொழிகளில், மொழி பெயர்ப்பித்தற்கு அம்மொழிகள் வழங்கும் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் முயலவேண்டுமென்றுங் கேட்டுக்கொள்ளுகி ருேம்.
உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற திருக்குறளைச் செய்தருளிய திருவள்ளுவருக்கு உலகெலாம் வாழுந் தமிழர் எவ்வித வ்ேறுபாடு மின்றி ஒன்றுபட்டு ஆண்டுதோறும் ருைநாளிற் பெருவிழா எடுககிரு ர்கள் எனும் புகழுரையை நிலநாட்டுதற்கு உலகெலாம் வாழுந்த மிழர்கள் ஒன்றுபடுவோமாக வாழ்க தமிழ்மறை வளர்க தமிழி
գյոI / /,

Page 19
Registered at the G. P. O. as a
6) நல்ல விநாயக
நீ முன்னே திருக்குளத்திருப்பணித் திருவருள் நிறைந்த பரீ சிவதீர்த்தமென்ற திருக்குளத்திரு. ரூபாய் வரையாகுமென மதிப்பிட் வருகிறது. இப்பெருஞ் சிவ ை களனைவரும் தங்களாலியன்ற ெ வாம்பிகாஸ்மேத முன் நைாதப்ெ வேண்டுகிருேம்,
ქf', '_'mმე
KSKSKSKOKOKA-60-60-60-63 KOKA 函米米米米米米米米米米米米米米料
வாய் வு சூ உஷ்ணவாய்வு, முழங்கால்வாய்வு, இ பந்தம், அஜீரணம், கைகால் அசதி, பி
வலி, பித்தமயக்கம்,பித்த சூலை, புளிே
வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக் கும் மிகச்சிறந்த சூரணம். உபயோகி த்தில் த் தோல அளவு எடுத்து அத் அல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்து சம் வெந்நீர் அருந்தவும் காலை மான் வேண்டு தேகத்தை அனுசரித்து 3D வைக் கூட்டியும் குறைத்தும் உட்கொ6 ணெய் நிறையச் சாப்பிடலாம். வார GÖTLİ, GO) E ti'j LLJ GOTTLD.
மூலிகையினுல் தயார் (பத்தியமில்லை) தபாற்செலவு உட் சம்பு இண்டஸ் ரீஸ் ே இலங்கையில் கிடைக்குமிடம்:
ஆத்ம ஜோதி நிலைய
来来来来来来米米洛米来米来米、
Printed by N. Muthiah at the Sri Published by N. Muthiah Athmaji

News Paper M. L. 59,300
************
துணை it DJ Jif
கரும விஞ்ஞாபனம் ன்னேஸ்வர சேஷத்ரத்தில் ਰੰਭLD 60,000 டு கருங்கல் வேலே நடந்து கங்கர்யத்துக்கு புண்ய சீலர் ாருளுதவி செய்து பரீ வடி
ருமான் திருவருள் பெற
இங்ங்னம் சுப்ரமண்யக் குருக்கள்,
தர்மகர்த்தா.
ΣΕΙΣΚΣ ΣΙΣ ΣΙ ΚΑΙ ΣΙ ΚΑΙ Κ. 熙米米米粥米米崇崇棗崇米沙3
ர ண ம்
டுப்புவாய்வு, மலக்கட்டு, மல டிப்பு, பசியின்மை, வயிற்று யப்பம் நெஞ்சுக்கரிப்புமுதலிய திக்கும் தேகாரோக்கியத்திற் கிக்கும் முறை:- இந்தச் குரண துடன் த் தோலா அளவு சீனி க்குமுன் உட்கொண்டு கொஞ் தொடர்ந்து உட்கொள்ள ட்கொண்டு வரும்போது அள ாளலாம். நெய், பால், வெண் ம் ஒருமுறை எண்ணெய் ஸ்கா
க்கப்பெற்றது பட டின் ஒன்று ரூபா 3-75. hg. 6ncub 2. S. I.
D : நாவலப்பிட்டி 张来来来米米米来来来来米
Murugan Press - Punduloya. othi Niliyam - Nawalapitiya.
--