கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.06.01

Page 1
©ත ෆෆෆෆෆෆෆ ෆෆ දා ‘න උ න්‍යා භු දා ඊ ළූ ෆෆෆ තෙෆ් ෆ ට පෙර ඊ.ෆ්. ෆෆ Y/C L'ෆෙළ
“U, LUIDA,
@@@@會尊@@@@@@@@@@@↔3@@@@@@@@9@@9@@@@@@@@1
!: Bassassassssss....................................................oooooooooooooooooooooooooooooooo
*
 
 
 

ess 00s0000 0 s000e0000e 0000e L0L000L0L00000ee000LS 0seseY seL0 0
| sty சுவாமிகள்'
Y0s GL LLLLLLLL000 000Y LLLLLLYY0000YYYLL 0LL0LLLYYYZYY0LL L00LS AA

Page 2
qesssJeLLes0M00L0M0 sL s0 0 0000 000000000L00s0000000Y0000000000 0 0 c 0 0 L L 0 L00LLL0000G 0cS
c
ෆණු ෆෙපණ සංඝ ෙපස ෆථ පෙළ සංඥා වෙත දා ෆoo ඌo ඝණ ද්‍රා ෆෙo ඌ උණූ ෂෙත්‍ර චුචු පooෙෆෆෆෆෆෆෆෆෆෆෆoo.ooo 99 ෆඟ
c o
9 c o €ን Ο 용 c 5 C O
©ኽé
C
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
I( // ტუ)) (b. It. ל{: 3%. ...
( ਉ ) சுடர் 8. விகாரி வடு ஆனி மீ" 1-6-59
- பொருளடக்கம் -
ബ
பேரின் பத் தெள்ளமுது 25 g2, GI) 495 in) - - - 226 பூரீ பரம ஹம்ச ஓங்கார சுவாமிகள் 22 7. ཁར་ சக்தி ஒம் 23.3 எல்லாம் உணதே 234 கண்ணனையின்றி யாரைச் சரண் புகுவது - - - - 238 கபீர் பஜன் 2,39 பிறவிக்கடல் தாண்ட குரு உபதேசம்பெறு 4 () காசிக்கு போனுல் கர்மவினை போகும் 24 என் இருபத்துநான்கு ஆசிரியர்கள் 244 * சிந்தனையில் உதிர்ந்த மலர்கள் 246 யோக ஆசனங்கள் 2.48 உணர்ந்த நாள் - 25.3 பூரீகண்ணபிரான் காட்டிய பக்தன் 256
(Ό r ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூ.75-00 வருடசந்தா ரூ. 3-00 - தனிப் பிரதி சதம் -30 -
666 ਈ: ਉ0ਸੰ6ਹਿ
பதிப்பாசிரியர்: நா. முத்தையா,
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி (சிலோன்
 
 
 
 

தானென விளங்கு நிறைவே!
o o o o o oo 99 о cocood 28 @@@ ce e 999 9eo 992 co coco Ôტ ©°° ̊ Š õርጏõ Š ̆ ̊9o bes t; es 3 O3 6yQ SrLLLLLeeAS GGS00GGL SL0LGGGG 000ES S SLLL 0L00L Poo ته
t
பேரின்பத் தெள்ளமுது (மகரிஷி சுத்தானந்தர்)
21. எம்மொழியி லெவ்வகையர் எம்முறை வழுத்திடினும்
எல்லா முவக்கும் இறையே! இன்பத் தமிழ்மலரொ டெக்காலு முன்னையே
இடையரு தோதுகின்றேன் உன் மொழியும் என்மொழியும் வேறுபட் டுள்ளவோ
உள்ளதொரு மொழியல்லவோ? ஓங்கார உட்பொருட் குயிரே, அகாரமே,
யுலகெலா நிலவு மொன்றே சன்மயத் தீபமே, சின்மயக் கதிர்பரவு
சாட்சியே சக்தி விரிவே தாராத லத்திலெத் தகையர்திரு வுள்ளமுந்
அம்மையப் பாவுனக் காவியுட லன்றே அடைக்கலம் வைத்து கந்தேன்.
அருள் பெருகு மறிவுவள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே!
22 செவ்வழியி லேசென்று சென்மமீ டேறயான்
செய்த வத்தைக் கெடுக்கும் சிந்தை கலங்கச் சிரித்துவிளை யாடிடுஞ்
செகசால விழி காட்டிடும் வெவ்விய பசிக்குணவு தேடிவரு வேங்கைபோல்
விழைகொண்டு மேற் பாய்ந்திடும் வெம்முதலைபோலப் பிடித்ததை விடாதுடன்
விழுங்கி யேப்பம் விட்டிடும் ஒவ்விய சுகானந்த நிட்டைக்கு மிடற்கட்டை
ஒய்யாரமாய்ப் போட்டிடும் ஒட்டவோட் டச்சென்று வந்தின்னு மொட்டிடும்
ஓராயி ரஞ்சூழ்ச்சி யால் இவ்வுலக மாயத்தின் ஏமாற்று வித்தைகளை
என்ன லியம்ப வசமோ? ஏகாந்த மெளனத்தி லெனவைத்த கடவுளே
இன்பமே அன்பு மயமே!
ം භූඪ ඝ e Oo es 盤数三ーミ至影委室:盤:委ミ三影天ミ三選盤 QC) go Leశ878 Ο ΟΦ δΣ چھٹائیے تخت

Page 3
உலகம்
ஆத்மா யாவருடைய இதயத்தினுள்ளேயும் நித்திய சித்தவஸ் துவாதலால், உடலும் உலகமும் உண்மை என்றும் பொய்யறிவு மறு படி தலையெடுக்காதபடி அழியுமானல், அந்த ஆத்மாவின் அறிவு மிக எளிதே.
உலகம் உண்மை என்று எண்ணி, இலவம்பழம் புசிக்க எண் னின கிளிபோல் சுகம்பெரு மல் ஏமாந்த மனிதா, உலகம் உண்மை யென்று நீ எண்ணுவதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?
‘புலப்படுகிறது" என்பதால் மாத்திரம் உலகம் உண்மையெ ன்று எண்ணிஞல், கானல் நீரையும் உண்மை யென்று நிச்சயம் செய்; இரண்டுக்கும் பேதம் என்ன இருக்கிறது?
தேசகாலங்களால் பின்னமாகி, விகாரியாய் அநித்தியமாய் உள்ள இவ்வுலகம் எப்படி சத்தியமாகும்? தேசகாலங்களுக்கு அதீ தமான, விகாரமற்ற, நித்திய வஸ்துவே சத்தியம். மற்றது சத்திய
OrT Ġ5 nTiġb1.
மனச்சங்கற்பமிருக்கும் சொப்பனம் விழிப்பு என்ற இரண்டி லும் உலகம் தோன்றுகிறது; மனச் சங்கற்ப மற்றதுரீயமென்னுங் கைவல்யத்தில் தோன்றவில்லை; ஆகையால் உலகம் பொய்.
வேதங்கள் பலவிதமாய்ச் சொல்லும் உ ல க சிருஷ்டியைச்
சொன்னபடிக்கே அர்த்தம்செய்து கொள்ளத்தகாது. அவ்வேதங்
களின் உண்மைக்கருத்து, உலகஜீவன்களின் மூலவஸ்துவைக் காட் டித்தருவதே ஆம்.
ஜீவனும் உலகமும் உண்மையென்று கொள்வாயானல் பரன், பூரணன், என்பது எப்படிப் பொருந்தும்? அவனது பூரணத்தன் மையை மறுக்காமல் உலக ஜீவர்கள் உண்மை என்னும் வாதம் பொருந்தாது.
"அவனே எல்லாமாகவும், ஆணுன்? 'அந்தப் பரமாத்மாவே எல்லா வற்றையும் ஆக்கினன் ' என்னும் இரண்டு வசனங்களுக்கும் பொரு த்தமுள்ள கருத்தாவது ஆத்மவஸ்துவில் உலகம் விவர்த்தம். அதா வது பொய்த்தோற்றம் என்பதே.
(பகவான் ரமண மகரிஷிகள்.)
 

g0 像 o ரு பரமஹம்ச ஓங்கார சுவாமிகள் °ంoంg్యన్కైం9°్క
-(ஆசிரியர்)- - சமீபத்தில் இலங்கைக்கு விஜயம்செய்து, இலங் கையின் பல பாகங்களிலுமுள்ள மக்களின் மனதைக் கவர்ந்த ஜை சுவாமிகளைப் பல அன்பர்கள் கேரில்தரி சிக்கும் பாக்கியம்பெற்றிருப்பார்கள். ஓங்காரஜெப த்தில், சித்தி பெற்றவர்கள் ஆனபடியினுல் ஓங்கார சுவாமிகள் என்றும், பரமஹம்ச நிலையடைந்திருக் தவர்களானபடியினல் பரம ஹம்ச சுவாமிகள் என் றும் அன்பர்களால் அழைக்கப்பெற்றுக் கால கதி யில் பரமஹம்ச ஓங்காரசுவாமிகள் என்னும் பெயர் நிலைபெறலாயிற்று.
சுவாமிகள் இந்தியாவில் சித்தூர் ஜில் லா வி லுள்ள தும்மலசெருவு கன்றிகா என்கிற தெலுங்குக்
1 கிராமத்தில் 10-6-1921 இல் அவதரித்தார்கள்.
தந்தையாரின் பெயர் அஸ்தி வெங்கடராஜூ தாயா ரின்பெயர் அஸ்திசுப்பம்மா. வாழும்பிள்ளையை மண் விளையாட்டிலேயே தெரியும்? என்பரர்கள். அதற்கேற் பச் சுவாமிகளும் சிறு வயதிலே பூரீஇராமபிரானின் திருவுருவப் படத்தை அலங்கரித்து எ டு த் துக் கொண்டு சிறுவர் சிறுமிகளுடன் கூடி ஊர்வலம்வரு வார். எல்லாப் பிள்ளைகளும் பாடசாலைக்கு வருமு ன்பே பாடசாலைக்கு வந்துவிடுவார். வந்ததும் கண் மூடித் தியானத்திலே அமர்ந்துவிடுவார். மத்தியா னத்திற்காகக் கொண்டு வரும் உணவை உணவு கொண்டு வராத தமது கூட்டாளிகளுக்கு மகி ழ்ச்சியோடு பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்.
ஊரிலிருக்கும் பூரீ இராமர் கோயிலுக்குத் தின மும் செல்வார்கள். தனிமையில் இருக்கும் போது
கோயிலில் அமர்ந்து தியானம் செய்வார்கள். சிறு
வர்கள் ஒன்று கூடும்போது அவர்களையெல்லாம் ஒன் றுசேர்த்து பக்தியுடன் பஜனை செய்வார்கள் ராம5ாம பஜனையில் ஈடுபட்டிருக்கும்போது சுவாமிகளுடைய

Page 4
228 ஆத்மஜோதி
கண்களிலிருந்து அடிக்கடி ஆனந்த பாஷ்பம் பொழி யும். பூரீ இராமபிரான நேருக்கு நேராகத் தரிசனம் செய்யவெண்டும் என்பது சுவாமிகளுடைய நீண்ட காதலாகும். எப்பவோ ஒருநாளைக்குத் தரிசித்துத் தீருவேன் என்ற உறுதியும் தீவிர நம்பிக்கையும் சுவா மிகளின் திரு உள்ளத்தில் ஆழப்பதிந்து கிடந்தது.
1930ம் ஆண்டு சுவாமிகள் திருத்தணியிலுள்ள உயர் தரப் பாடசாலையில் சேர்க்கப் பட்டார்கள். வாழ்க்கை முழுவதும் ராமநாம ஜெபமே ஊறிக்கிடங் தது, திருத்தணிமலையின் மீது ஏறி முருகனைப் பக்தி யுடன் வணங்குவார். உலகமெல்லாம் சேமமாய் இரு க்கவேண்டும் எனக் கோயிலில் கின்று வேண்டுதல் செய்வார். விடுமுறை நாட்களில் தமது கிராமத்த வர்களின் வீடுகளுக்குச்சென்று கடவுள் வழிபாட்டின் அவசியத்தைப்பற்றி மக்களுக்கு அறிவுறுத்தி வரு வார்கள். தமது கிராமத்தில் முதன்முதல் இலவச நூல்நிலையம் ஒன்றைஏற்படுத்தி, அதில் கல்லநூல் களையெல்லாம் சேமித்து வைத்துக் கிராம மக்களை ஒய்வு நேரங்களில் வாசிக்குமாறு தூண்டிவந்தார்.
1939-ம் ஆண்டு சுவாமிகள் சென்னை பச்சை யப்பன் கல்லூரியில் ஆரம்ப பட்டதாரிகள் வகுப் பில் சேர்க்கப்பட்டார்கள். 39ம், 40 ம்-ஆண்டுகளில்
இராணுவப் பயிற்சிபெற்று இராணுவ அதிகாரியிட
மிருந்து வெற்றிப் பத்திரமும் பெற்றர். சென்னைக் கடற்கரை சென்று கடலில்ஸ்நானம் செய்வதும் கடற் கரையில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதும் சுவாமி களின் பொழுதுபோக்காக அமைந்தன. கடலின் நீல நிறத்தைக் கண்டவுடனே சுவாமிகளுக்கு இராமபி ரானின் திருவுருவம் ஞாபகத்திற்கு வந்து தியானம் உடனே கைகூடிவிடுமாம். சென்னை பகவத்கீதா ஆல யத்திற்கு அதிகாலை 5- மணிக்கே சென்று பகவத் கீதை பாராயணம்செய்து வருவது வழக்கம்.
*。
 
 

ජේෂ්ඨි” nශිෂුන් ඒ 229
1942-ம் ஆண்டில் சென்னை லைலா கல்லூரியில் பீ-ஏ. வகுப்பில் சுவாமிகள் சேர்க்கப்பட்டார்கள். பீ. ஏ. முதலாண்டு சித்தியடைந்ததும் சுவாமிகளுடைய சிற்றப்பாவின் கேள்விப்படி கல்லூரிப்படிப்பை முடி த்துக் கொண்டு ஏதாவது ஒரு தொழிலில் இறங்க உத்தேசித்தார்கள். சுவாமிகளுக்கும் சுவாமிகளின் தம்பியார் சீதாராம ராஜாவுக்கும் ஒரே காலத்தில் ரெயில்வேயில் உத்தியோகம் கிடைத்தது. உ த் தி யோகத்திற்குப் பலர் போட்டிபோட்டு வுேலையில்லாத் திண்டாட்டம் நிரம்பியிருந்த காலத்திலே ஒரு குடு ம்பத்தில் இருவருக்கு உத்தியோகம் கிடைத்தமை பூநீ இராமபிரானின் திருவருளே எனச் சுவாமிகள் முழுமனதுடன் கம்பினர்கள்.
1943ம்ஆண்டு திருப்பதிதேவஸ்தானத்தில்சுவா மிகளுக்கு ஒரு கிளார்க் வேலை கிடைத்தது. திருப் பதி தேவஸ்தானத்தில் வேலை கிடைத்ததும் மிகமிக ஆனந்தப்பட்டார். சிலகாலம் பூரீ இராமபிரான் தம் மைப்பிரித்துவைத்து மறுபடியும் சேர்த்துக்கொண் டதாகவே கருதினர். ராமநாம ஜபம் முன்னையிலும் பார்க்கமிகத்தீவிரமாக கடைபெற்றுவந்தது. கான்கு ஐந்து மாதங்களில் சுவாமிகளுக்கு வேறேர் உயர்தர கிளார்க் உத்தியோகம் சிடைத்தது. அதனுல் திரு ப்பதியை விட்டுப்பிரிய நேர்ந்தது. இராமன் இருக் குமிடம் அயோத்தி என்பதுபோலச் சுவாமிகள் எங் குச் சென்றலும் அங்கெல்லாம் இராமபிரான் இருப் பதாகவே கருதி வழிபாடாற்றி வந்தார்கள். தமது சம்பளத்தில் பெரும்பகுதியை ஏழைகளுக்கு அன்ன மிடுவதிலேயே செலவுசெய்து வந்தார். ஏழைகளை யெல்லாம் பூரீ இராமபிரானின் திரு அவதாரம் எனவே கருதினர். சுவாமிகள் பிறருக்கு கலம் பு ரி வ தி லே யே தமது கால ம் முழுவதையும் செலவு செய்தாரானபடியினல் தம்மைப் பற்றியோ தமது உடல் சுகத்தைப் பற்றியோ கருதினரில்லை.

Page 5
ජෙර්‍ ජීt a3ෂුද්‍රිස් හී 28O
இதையறிந்த சுவாமிகளுடைய இளேயதம்பி சீதாரா மராஜா, தமது உத்தியோகத்தை அறவே விட்டு முழு நேரமும் சுவாமிகளுக்குத் தொண்டு புரிவதிலேயே காலம் களித்துவந்தார்.
சுவாமிகள் உத்தியோகத்திலும் பலவித தொண் டுகளிலும் ஈடுபட் டிருந்தாலும் ராம காம ஜெபம் ஒழுங்காகவே நடைபெற்று வந்தது. ஒரு பெளர்ணி  ைமதினத்தன்று கடற்கரையில் இரவு 12 மணிக் குச் சுவாமிகள் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டிருக் கும்போது “ஓம் ராமா" என்ற மந்திர உபதேசத்தைச் சாது ஒருவர் செய்தருளினர். சுவாமிகளின் தீவிர நிலையை உணர்ந்த அச் சாது, சுவாமிகளுக்கு ஆத் மீக முன்னேற்றத்திற்கான பலவித சாதனைகளையும் உபதேசித்து வழிப்படுத்தினர்கள். குரு உபதேசம் கிடைத்தபின் சாதனை மிகமிக முன்னேற்றமாக கடைபெற்றது, ஜபம், தியானம், முடிந்ததும் சுவா மிகள் தமது உள்ளத்தில் எழும் கருத்துக்களைக் குறி த்துவரலாஞர்கள். ஒர் இரவு ஒம்ராம் ஜப சாதனை செய்துகொண்டிருக்கும்போது பூரீ இராம பிரானகே ருக்குநேராகத் தரிசிக்க வேண்டுமென்ற வைராக்கி யம் உதிர்த்தது. பத்து நாட்கள் கங்தோரில் விடு முறை பெற்றுக்கொண்டு தமது கிராமத்திற்குச் சென்று ஒர் அறையில் அமர்ந்து இரவு பகலாகச் ஜபசாதனையில் ஈடுபட்டார்கள். பத்தாம்நாள் இரவு சுவாமிகள் ஐபம் செய்து கொண்டிருக்கும் போதே இராமலட்சுமணர் சீதை அனுமார் யாவரதும் திருக் காட்சி கிடைத்தது. இக்காட்சி சுவாமிகளை மேலும் மேலும் தீவிரசாதனையிலீடுபடுத்தியது. சென்னை யில் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதியில் சு வா மி கள் சென்று தியானம் புரிவது வழக்கம். ஒருநாள் ஏகாம் பரேஸ்வரரைத் தரிசிப்பதற்காகத் தீவிர சாதனையி லீடு பட்டிருந்தார்கள், தியானத்தாலெழுந்து ஏகாம் பரேஸ்வரரது திரு உருவைத் தரிசனம் செய்யும் போது றுநீ இராமபிரானுகக் காட்சி கிடைத்தது. இதி
 

ஆத்மஜோதி 243
லிருந்து எத்திருவுருவமும் ஒரே பரம்பொருளேயென் னும் உண்மையை அறிந்தார்கள், குருவின் தரிசனை மறுபடியும் கிடைத்தது, ஓம்" என்று மாத்திரமே இனிமேல் ஜபம் செய்க என உபதேசிததயர்கள் ஓம்" ஜப சாதனையில் தீவிர சித்தியடைய விரும்பிய சுவாமிகள் பத்து காட்கள் விடுமுறை பெற்றுப் பத் து நாட்களும் இரவுபகலாகச் சாதனை செய்தார்கள். ஜபசர்தனையில் சித்தி பெற்ற சுவாமிகள் அந்த மந் திர சித்தியைக் கொண்டே பலரைத் தம் வசப்படு த்தி அவர்களையெல்லாம் ஆத்மீக வழியில் வாழவ ழிப்படுத்தினர்கள். கங்தோரில் சுவாமிகள் உத்தி யோகம் பார்த்து வந்தாலும் புளியம்பழமும் ஒடும் போலவே வாழ்ந்து வந்தார்கள். தாம் அ வ்வ ப் போது குறித்து வந்த விஷயங்களை ஒன்று சேர்த்து புத்தக உருவாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி ஞர்கள் சுவாமிகளிடம் பலர் உபதேசம் பெற்று அவர்களும் தீவிரமாகச்ஐப சாதனையிலீடுபடலாஞர்
கள், சுவாமிகள் ஒருமுறை இருந்தாற்போல் எவரும்
அறியாது தனிமையாக யாத்திரை செய்யப்புறப்பட் டார்கள். இராமேஸ்வரம், மதுரை, பழனி, பூரீரங்கம், சிதம்பரம் முதலான ஸ்தலங்களைத் தரிசித்துத் திரு ம்பினர்கள். கங்தோரில் ஒரு மாத விடுமுறை பெற் றுத் தனியாகவே வடஇந்திய யாத்திரை செய்தார் கள். காசி, கயா, பத்ரிநாத், கேதார் நாத் போன்ற பல தலங்களுக்கு யாத்திரை செய்தார்கள்.
1-10-1949 இல் விஜயதசமியிலன்று சுவாமிகள் "ஞானுேதய மன்றம் ஆரம்பித்தார். மன்றத்தின் சார்பாக "ஞானுேதயம்' என்னும் நூல் வெளியிட்டார்கள். ஹரிசனங்களுடைய சேரிகளுக்கு சென்றுஉபதேசம் செய்வதோடு அவர்கள்வாழ்க்கை முன்னேற்றத் துக்கான விஷயங்களையும் கவனித்தார் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்பச் சுவாமிகள் தாம் ஐெபசா தனையில் பெற்ற இன்பத்தை எல்லாரும் அடையவேண்டும் என்ற பேரவா உடையவர்கள். நாளிலும் பொழுதிலும் அவர்களுக்கு ஊக்கமளித்துச் ஜெபசாதனையில் ஈடுபடுத்துவார். க லி யு கத்தில் நாமஜெபத்தின்மூலமே கடவுளை அடையலாம் என்பது ஆன்ருேர் வாக்கு. அதில் சித்தியடைந்த ஒருவரது அநுபவம் எமக்குப் பேருத விபுரிவதாகும்
一米一

Page 6
22S:223 SN22, 4, SEW2
சித்தன் கேணி பெரியவளவு என்னும் திருப்பதியில் கோயில் கொண்டெழுந்
தருளி யிருக்கும் ; பூனி மகா கணபதிப் பிள்ளையாருக்கு : 33 ஓம குண்டங்களோடு கூடிய உத்தம மஹாயாக
கும்பாபிஷேக விஞ்ஞாபனம்.
நிகழும் விகாரி வருஷம் ஆனி மா த ம் 12-ம் தி க தி (26-6-59) வெள்ளிக்கிழமையும்
சட்டித் திதியும், சதய நட்சத்திரமும் பிரிதி யோக
மும், கரஜகரணமும், சித்தமுங் கூடிய சுத்தமங் கள பஞ்சாங்க சுபதினத்தில் உதயத்தின் மேல் 5 மணி 55 நிமிஷம் தொடக்கம் 7 மணி 7 நிமிஷம் வரையுமுள்ள மிதுன லக்கின சுபமுகூர்த்தத்தில்
33 ஓம குண்டங்களோடு கூடிய srfu Itä6DIU unöII (LJ II 5
கும் பாபிஷேக ஞ்
செய்யத் திருவருளே முன்னிட்டு நிச்சயித்திருப்ப தால் சிவநேயச் செல்வர்கள்; செ ல் வி கள் அனே
வரும் தவருது வந்து தரிசித்து இட்டசித்திகளைப் பெற்றுவாழ இறைவன் திருவருளே வே ண் டி க் கொள்கிருேம்.
பூரீ மகாகணபதிப் பிள்ளையார் கோயில்
தேவஸ்தானத்தார்,
2S2&NSS2: S327
ళ
 
 
 

བ་
墅
· oooooooooooo sa 兴 OOOOocco 6.30 Ooooooooooo 7. SY OOOOOOOOOO CO T &
கீ சக்தி ஓம். ஜ
米 一来米一
சக்தி ஓம் சிவ சக்தி ஓம்,-தவ சக்தி ஓம், ஜய சக்தி ஓம்; சக்தி ஓம், விஸ்வ சக்தி ஓம்,-அருட் சக்தி ஓம், சுத்த சக்தி ஓம், (சக்தி)
மூல குண்டலி சக்தி ஓம், - ஜகன் மோக கும்ருத சக்தி ஒம், நீல கண்டித சக்தி ஒம்,- சத்ய நித்ய தத்துவ சக்தி ஓம்! (சக்தி)
வீர்ய, தார்மிக சக்தி ஓம், ஐய விஜய, சாத்விக சக்தி ஓம், கார்ய காரண சக்தி ஓம்,-சிவ காந்த, சாந்த நற் சக்தி ஓம் ! (சக்தி)
துஷ்ட நிக்ரக சக்தி ஓம்.-சுயஞ் சோதி மாதவ சக்தி ஓம், சிஷ்ட ரட்சக சக்தி ஓம்,-இளம் சியாம சுந்தர சக்தி ஓம் ! (சக்தி)
பொங்கு மங்கள சக்தி ஓம்.-பரி பூர்ண ஞான சிற் சக்தி ஓம்; தங்கும் ஐந்தொழிற் சக்தி ஓம், ஜீவ சர்வ தாரக சக்தி ஓம்!
༈་
于
க்
தி
* பரமஹம்ஸ் தாசன்"
OC2 OOOOOOOOOO OO 600 Ooooooo 09 0003C9OO 69 GO Groe 米 米 CCC0 000 OOOO go
SK

Page 7
எ ல் லாம் உன தே ! (சுவாமி நிர்மலானந்தா)
ー※ー
இந்த லெளகீக உலகிலேபிறந்த மக்களனைவருக் கும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. கருப் பையினின்று வெளி வந்ததுமே குழங்தை த ன து தாயைக்கண்டு அழுகிறது. தனது உணவிற்கு அப் போதிருந்தே கவலை கொள்கிறது. காளாக ஆக அதற்கு உலக மக்களுடன் பழகிப் பழகி எல்லாம் : என்னுடையது, நான் உயர்ந்தவன் நான் பெருமை யுடையவன் என்று இந்த உலகமாயைக்காட்பட்டு இந்தப் பிரபஞ்சத்தை மெய்யென எண்ணி எண்ணி s அலைகிறது. இந்தப் பொய்ச்சரீரத்தினுள்ளே மறை ந்து கிடக்கும், அடைபட்டுக் கிடக்கும் சூட்சும சரீர த்தை அவன் அறிவதில்லை. உலக வாழ்க்கையிலே விஞ்ஞானத்தை முழுதும் நம்பி விஞ்ஞானப் புதிர் களையெல்லாம் கடவுளை வெல்லும் சாதனங்களாகக் கொண்டு கடவுளையே வென்றுவிட்டதாக, எண்ணுகி " றன். செயற்கையை, இயற்கையை அழித்துப் புதி தாகப் செய்யப்பட்டது என கொண்டு அறிவிழக்கி றன். என்னே மடமை! இயற்கையின்றி செய்கையி ல்லை என்று அறியவில்லையே அம்மனிதன்.
கோவிலுக்குச் செல்லுகிருன் மனிதன். பக்தர் கள் பாடுகிறர்கள். புகழ் பாடுகிறர்கள். ஆடுகிருர் கள். பகவானுக்கு அபிஷேகம் செய்து பி ர சா தம் படைத்து மகிழ்கிறர்கள். செல்லுகின்ற மனிதன் பகவானைப் பார்க்கிறன். இவனுக்கு கோக்கம் வேறு விதமாகத் திரும்புகிறது. பிரபஞ்சத்தை மெய்யென எண்ணும் மனமல்லவா? பக்த மக்களைப் பார்த்து அறி W விலிகளே! என்ன மடத்தனமான காரியம் செய்கிறீ ர்கள்? கல்லினுலும், செம்பினுலுமான கடவுள் உங் கள் பிரசாதத்தை உண்பாரா? உங்கள் ஆட்டத்தை யும் பாட்டையும் கேட்பாரா? உங்கள் வயிற்றை நிர ப்பி நீங்கள்வாழ உலகை ஏமாற்றுகிறீர்களா? என்று தாங்கள் முற்றுமுணர்ந்தவர்கள் போலக் கேட்கிருர்
 

*
ஆத்மஜோதி 235
கள். இவர்கள் மக்கள் தானு என்பது நமது கேள்வி? இறைவன் மலர்த்தாள் அறிந்து பணியாத வாழ்வு வாழ்வாகுமா? வள்ளுவர் பெருமான் சொல்கிருர், கற்றதனுலாய பயனென் கொல்.வாலறிவன் நற்ருள் தொழார் எனின்"
இந்தக் காலத்திலே ஆண்டவன் இல்லை என்று பித ற்றித்திரிவதுதான் நாகரீகம், இறைவனை வழிபடு வது அநாகரீகம். மக்களை ஏமாற்றும் முறை என மக்கள் தங்களது அருமையான நாகரீகத்திலே கண் டுபிடித்திருக்கிருர்கள். ஆண்டவன் கண் ணு க் கு காணப்படவில்லை என்பது இல்லையென்பதற்கு கார ணமாகுமா? காண்டற் கியலாப் பொருள்கள் ப ல இல்லையா? அதஞல் அவற்றை இல்லையென்றே முடிவு கட்டிவிடுவது சரியாகுமா? மேடையிலே தவழும் மெல் லியப் பூங்காற்றை நாம் உணருகிருேமே தவிர காண்பதில்லை. அதனுல் காற்று இல்லையென கூறி விடமுடியாது. ஆனல் காற்றைப்போல இறைவனைக் காணவே முடியாதா என்ற ஒருபிரச்சனை கமக்கு எழு கின்றது. இறைவனைக் காணலாம். இறைவன் எங் கும் நிறைந்து பரந்து விளங்குகின்றர். ஆணுல் அக ங்காரம், ஆணவம்கொண்ட பக்தியற்ற மக்களால் அவனைக்காண முடியாது.
நான் எனும் தன்மையொழித்து எனது, என்னுல்
எனக்கு எனும் பற்றழியும் மாத்திரத்திலே இறை வன் பளிச்செனத் தோன்றுவான். எப்பொழுதும் அவன் நினைவாகத்தான் இருக்கவேண்டும். காணுமி டந்தோறும் அவன் திருவுருவையே நோக்க வேண் டும். இந்த ஒரு முறையினலே மகாகவி பாரதியார் இறைவனை அனுபவித்து அனுபவித்துப் பாடுகிருர்,
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரியநிறந் தோன்றுதடா நந்தலாலா பார்க்கும் மரத்திலெல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா,

Page 8
4** ஆத்மஜோதி
இதைப்போன்ற முறையினலே தான் பரந்த மனத்
திலே பகவானைத் தொழமுடிகிறது. இறைவன் தன் மையை உணர்ந்து அனுபவிக்க விரும்புவோர் சதா
அவன் நினைவாகவே இருக்க வேண்டும். வட காட் டிலே ஒர் ஊரிலே ஒ ர் தொழிலாளி வாழ்ந்து வங் தான். அவ்வூரிலே இருக்த அருள் மார்க்க சங்கங்க ளினலும், பெரியோர்களது அருளுபதேசங்களிஞ லும் அவன் ம ன ம் பக்குவப்பட்டு எப்பொழுதும் சத்சிங்தனையிலேயே இருந்தான் எப்பொழுதும் இறை வன் நாமங்களையே ஓதி இறைவன் தியானத்திலேயே மூழ்கியிருப்பான். அவன் ஒர் தானிய வியாபாரக் கடையிலே வேலை பார்த்து வந்தான். தானியங்களை அளந்து சாக்கில் போடுவது அவன் தொழில். எப்
பொழுதும்போல ஒருநாள் காலைக்கடன்களை முடித்து"
இறைவனைத் தியானித்து, அருட் பாடல்களை யெல் லாம் பாடி தனது வேலைக்குச் சென்றன்.
கடையில் தானியம் வாங்கவந்த ஒரு வ னு க்கு தானியத்தை அளந்து போட ஆரம்பித்தான். ஏக். தோ.தீன். சார் இப்படியாக அளந்துகொண்டுவங் தவன் பாரஹ் .தேரா என்றதும் உடனே நிறுத்தி
*
м
ஞன். அருள் நெறியிலேயே அலைந்து கொண்டிருந்த
அவன் மனம் தேராலிலே நிலைத்தது. (தேரா எனில் ஹிந்தியில் உன்னுடையது என பொருள்) மறுபடியும் தேரா. தேரா. என அளக்க ஆரம்பித்தான். அவன் கை தானியத்தை அளந்து கொண்டிருந்தது. வாய் தேரா. தேரா. என்று கூறிக்கொண்டேயிருந்தது. மனம் இறைவனுடைய நெறியிலே சிந்து பாடிக்கொ ண்டிருந்தது. சாக்கோ நிறைந்துவிட்டது. தானியங் களோ தீர்ந்துவிட்டன. வேருெரு தானியக்குவியலும் உண்டாகிவிட்டது. ஆனல் அவன் பகவத் உணர்ச்சி யிலே ஊறிவிட்டான். -
 

ஆத்மஜோதி
மனிதர்கள் பலருக்கும் இதுபோன்ற உணர்ச்சி வேண்டும். எல்லாம் அவனதே. எனது சரீரம் அவன் அளித்தது. ஆகையால் இது அவனுக்கே உரிமை என தனது உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றை யும் அர்ப் பணிக்க வேண்டும். அப்போது தான் பற்றற்ற நிலை ஏற்பட்டு நான் எனும் அகக் ைதியொ ழிந்து, செருக்கழிந்து இறைவனைக்காணமுடியும்
一米一
அறிஞர்.
அறிவில்லாதவன் தன் அறியாமையை அறிந்தால் அந்த அள
வுக்கு அறிவுடையவனே. ஆனல் அறிவில்லாதவன் தன்னை அறிவு
டையவனுக எண்ணினல் அவனேமுற்றிலும் அறிவில்லாதவனுவான்
அறம்.
அறிவும் அறமும் உடையவனுய், உண்மை உரைப்பவனுய், நடு நிலைமை தவழுதவனாய், தன்கருமத்தில் கண்ணுடையவனுயிருப்ப வனைப் பெரியோர்கள் போற்றுவர். குலமும் குடியும் பெருமை தருவதில்லை பெருமைதருவன உண்மையும் ஒழுக்கமுமே. இனியவை கூறல், நல்லன ஈதல், உதவி செய்தல், நடுநிலை நிற்றல், இவற்ருல் தான் உலகம் உள்ளதாகும்.
மறம்.
வண்டியின் சக்கரம் வண்டியுடன் இருக்கும் காலையில் பின்தொ டர்ந்துபோவதுபோல, துன்பமானது : னம்மொழி மெய் மூன்றி னும் தீமையுடையவன் பின்னல்தொடர்ந்து செல்லும், மனிதன் நடக்கும்போது அவனுடைய நிழல் அவனைவிடாமற் செல்லுவது போல, இன்பமானது மனம், மொழி, மெய் மூன்றினும் நன்மையு டையவன் பின்னல் தொடர்ந்துசெல்லும்.

Page 9
பக்திக்கடல் அலே, 2. சென்ற இதழ் தொடர்ச்சி
கண்ணனையின்றி யாரைச் சரண் புகுவது?
- - - - -
என நீ கைவிட்டாலும், உனைப்பிரிந்து வாழேன்
உனைச்சரண் புகுவதல்லால், யாரை நாடுவேன் கண்ணு! (என நீ) நெடுமரம் நீயானல், நாடும் பறவையன்ருே நான் நிறைதடாகம் நீயாயின், நீந்துமீனன்ருே நான் (எனைநீ) படர்மலை நீயாயின், பசும் புல்லன் ருே நான் தண்மதி நீயாயின், சகோர மன்ருே நான் உயர்முத்து நீய யின், ஊடுறும் நூலே நான் அரிய பொன் நீயெனின், ஆபரணமாவேன் நான் (எனைநீ) பக்த மீராவின் ப்ரபோ! ப்ருந்தாவன நாயகா, நீயே என்நாதன், நான் உந்தனடிமை (எனைநீ)
கருத்துரை:-
கண்ணு! உன்னையே தஞ்சமென்று நம்பியனன்னை வெறுத்துத் தள்ளுவதாயின், நான் எங்குசெல்வேன்? யாரைநாடுவேன்! என்று மீரா,லோகநாயகனகிய, கோபாலனிடம்முறையிடுகிருள். மேலும் அவன் இல்லாதுதான் வாழமுடியாதெனவும்,கண்ணன் எந்தரூபத்தி லிருப்பினும்,அவனைச்சார்ந்து, அவன் கருணையின்றிதான்(தனித்து) வாழமுடியாது என்றும் அவன் அருளால் அவன் இயக்கியபடி யேதான் வாழஇயலும் என்றும், உறுதிபூண்டு, மனம்விட்டுச்சொ ல்கிருள். பட்சிஜாலங்கள் புகலிடமாக மரத்தைநாடுவதுபோலும், மீனினங்கள் நீரை நம்பிவாழ்வதுபோலும், மலைச்சாரலில் பசும்புல் இயற்கையாய் வளர்ந்து செழிப்பதுபோலும், சகோரபட்சி சந்திர னிடமிருந்து கிடைக்கும் அமிர்த தாரையை நம்பி வாழ்வதுபோ லும், நல்ல முத்துக்கள் ஹாரமாகத் திகழ, ஊடுருவிச்செல்லும் நூலெனவும், உயர்வான தங்கம், ஆபரணங்கள் (பல உருவங்கள்) ரூபத்தில் பிரகாசிப்பதுபோலும், தான் கண்ணனையே, தஞ்சமென அடைந்து ஒன்றுவதில்தான் பெருமை (உண்மை வாழ்வு ) என்றும்
கூறி அவனே தன் எஜமானன், (நாயகன்) எனவும் நான் அவனுக்கு
அடிமை எனவும் அர்ப்பணிக்கிருள்.
 
 
 

ஐ | கபீர் பஜன் ) స్త్రీక్ష
கெளன் ப3தாவே ப3ாட்? குருே பி3ன (கெளன)
ப3ட3ா விகட யமகAாட் (கெளன) ப்4ராந்தி கீ பஹாடீ3 நதி3யாம் பி3 சமோ"
அஹங்கார் கீ லாட் (கெளன), காம க்ரோத 4 தே8ா பர்வத ட2ாடே4 %、
லோப4 சோர ஸங்கAாத் - - - (கெளன) மத 3 மத்ஸர கா மேஹ ப3ரஸத் 8۔2ء*ے
மாயா பவன ப3ஹே த8ாட் . (கெளன) கஹத கபீ3ர ஸ"னே ப4ாயீ ஸாதே 4ா
- க்யோம் தர்னு யே கAாட் . (கெளன)
LugBO) oŪDU :- -- -
குருே = ஸத்குரு பி3ன = அன்றி, இல்லாமல்; கெளன் =[வேறு யார்? ப3ாட்-பாதை, உபாயம்; ப3தாவே=சொல்வார், சொல் லக்கூடியவராக இருக்கிருரர்? (இல்லை எனலாம்), யமக4ாட் = யம வாதை ( பா பி க ள் அனுபவிக்க வேண்டிய நர கம்) ப3ட3ா = மிகவும், அதிகமான, விகட - பயங்கரமானது, கோரமr னது; ப்4ராந்தி கீ= சந்தேகத்தா லாகிய (எண்ணுவதெல்லாம் சந் தேகமான நிலை) பஹாடீ3 நதி3 யாம்=மலையின் (உயர் சிகரத்திலி ருந்து வேகமாகப் பாய்ந்துவரும்) காட்டாறு, வேகமான நதிகள் (இவைகளின்); பி3க்மே-நடுவே, படுகை மத்தியில்; அஹங்கார் கீ= 'தான்’ எனும் அகந்தை, ஆணவம், லாட் = கற்றுரண் போல (நிமிர்ந்து நிற்க முற்படுகிறது)
கடிய வே க த்  ைத எதிர்த்து நிற்க இயலுமா? என்ற எண்ணம் ஆணவம் படைத்தோர்க்கு ஏது?-அகந்தை கொண்டவ னுக்குத் தன் நிலைதெரியாது); காம-காமம், ஆசை, க்ரோத4= கோபம்; தே8ா=[இவை) இரண்டும்; பர்வத-மலையளவு பெரிய தாக; ட2ாடே4=உயரும், உயர்ந்துவளரும்; மத8=மதம்,கர்வம்; மத்ஸர=பொருமை, அசூயை, கா-இவைகளால், ( இவைகளின் சேர்க்கை)யால்; மேஹ=மேகம், கார் மேகம் போல்; ப3ரஸத்= மழையெனப்பொழியத் தொடங்கும், (பெருமழை பல நாசங்களை ஏற்படுத்துவது இங்கு கவனத்திற் கொள்ளவும்); மாயாபவன்= மாயை எனும் (பேய்) காற்று; த8ாட்-கனவேகமாக; ப3ஹே= வீசும், நிலைகுலைக்கும்; பெருங்காற்றுடன் சேர்ந்தபெருமழையால் உண்டாகும் அழிவை நினைத்துப்பார்க்கவும்); யே கAாட்=(யமவா தைதரக்கூடிய மேலே விவரித்த அவஸ்தைகள் நிறைந்த) நிலையை, வாழ்வின் பிடியிலிருந்து; தர்ணு=கடந்துசெல்ல, விடுபட, (வழிதே டுவது, தேடவேண்டிய அவசியம்) க்யோம்=ஏன்? என்பது பற்றி: கபீ3ர்=கபீர்தாஸர் கஹத்-சொன்னதை; ஸ"னே=கேளுங்கள்" குரு உபதேசம் பெற வழிதேடுங்கள். -

Page 10
பிறவிக்கடல் தாண்ட குரு உபதேசம் பெறு.
d a 9 4) Q o ooooo." ; oo 9 ۵ و :
63 €3ʻk3 O» C}ʻOC3PO) O O 63) €O O O» 63 O O 0)
உபாயம் சொல்வார் யார்? ஸத்குரு அன்றி (2. Lufrub) கோர பயந்தரும் யமவாதை அகன்றிட (உபாயம்) ஸந்தேக மாகிய மலைநதிப் பெருக்கிலே அகங்காரம் உயர்ந்தெழுமே-உடைத்தெறிய (2-Lrru b}
காமமுங் கோபமும் மலைபோல் வளருமே
திருடு, பேராசை சேருமே-அழித்திடவே (உபாயம்) கர்வம் பொருமை கனமழையெனப் பொழியுமே மாயைக்காற்றிலு ழல்வாய் விடுபட (உபாயம்)
கபீர்சொல் கேளாய் ஸாது அன்பனே
யமவாதை யகற்றிடுவாய், அதற்குற்ற (உபாயம்
'ஹரிஹரராம்"
கருத்துரை:-
பிறந்தவர் இறப்பதும், திரும்பப்பிறப்பதும் உலகநியதி.அவரவர் செய்த பாப புண்யங்களின் பலனே மறு பிறவிக்கு வழிகோலுகின் றன. இக் கலிகாலத்தில் புண்ணியம் செய்யும் நினைவைக் காட்டி லும் பாப வழிகளிலேயே மனம் தூண்டப்படுவது பெரும்பாலும் இயல்பு. பாபஞ்செய்பவர்கள் கொடியயமவாதையடைய நேரிடு வதும் தவிர்க்கமுடியாத உண்மை. அதனல் பாவஞ்செய்யத்தூண் டுஞ் சூழ்நிலை யாவை? அவைகளைவெல்லும் மார்க்கம் எவை? என ஆத்மாவுக்கு, ஸத்குரு ஒருவர்தான் சரியான உபாயம்சொல்லமு டியும், என்று கபீர்தாஸர் உதாரணத்துடன் கூறி யாவரும் கடைத் தேற ஸத்குரு உபதேசத்தை நாடச் சொல்கிருர், உலகில், அநே கமாக எல்லோரையும் சந்தேகம் எனும்பேய் ஆட்கொண்டு வாட் டுகிறது. (பரம்பொருளைப் பூராவாக உணர்ந்து இரண்டற்ற நிலை எய்துபவர் வெகுசிலரே) சந்தேகம் என்பதுகாட்டாறுபோல வேக மாய் புரண்டுவர, அதனுாடே 'தான்" எனும் அகந்தை தலைதூக்கி ஒரு கற்றுாண்போல நிமிர்ந்து நிற்க முயல்கிறது பலிக்குமா என்ற நினைப்பு இல்லை. அந்த அகந்தையைப் போக்கவும், வாழ்விலே காமம், கோபம், கருமித்தனம் கரவு இவை கட்டுக் கடங்காமல் மலைபோல வளருவதைத் தடுக்கவும், கர்வம், பொருமை இவைபெ ரிய மழையாகப் பெய்து அழிக்காமல் காக்கவும், மாயை என்ற பேய்க்காற்று (சூருவளி) கலந்து உனைப் பாழ் செய்யாது காக்க வும், சரியான, உபயோகமுள்ள, நல்லுபதேசம் செய்யக்கூடியவர் ஸத்குரு ஒருவர்தான். ஆதலின் பவப்பிணியர ஸத்குருவை நாடுங் கள் என அன்புடன் அறிவுறுத்துகிருர் கபீர்தாசர்.

காசிக்குப் போனுல் கர்மவினை போகும். 岛 Logtລ(ະແດ ஓங்கார 6ರಾ ಆಚ್ರà: Lit. స్టో
ஒ 一、一
-
காசி என்பது வட இந்தியாவில் பெனறஸ் என்ற மாநகரில் உள்ள ஒர் புண்ணிய ஸ்தலம். அனேகர் தங்கள் கர்ம வினைகளிலி ருந்தும் விடுபடுவதற்காக அங்கு செல்வது வழக்கம். அங்கு சென்று விட்ட்டால் கர்ம வினைகளினின்றும் விடுதலை கிடைத்து விடுமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம் விசேஷ புண்ணிய ஸ்தலங் * கட்கு அப்படியான பெருமை இருக்கத்தான் செய்கின்றது.
காசியில் விசுவனதப் பெருமால் காட்சியளித்து கொண்டிருக் கின் ருர், காசி விசுவனுதப் பெருமானது தரிசனம் எல்லாருக்கும் இலகுவில் கிடைத்து விடக்கூடியதுமல்ல பல நாட்கள் பலவித மான கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு பிரயாணம் செய்தால் தான் அங்கு போய்ச் சேர முடியும். காசி விசுவனதப் பெருமா னைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பத்தை ஒருவன் தானுகவே ஏற்படுத்திக்கொண்டு; கடவுளின் பெயரால் சந்தோஷமாகவே பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கின்ருன், தரிசனம் கிடைக்கவேண்டுமென்ற அவாவின் காரணமாகப் பக்தி தானகவே ஏற்படுகின்றது. அதன் நிமித்தம் அடையும் கஷ்டங்கள் எங்கட்குக் கஷ்டமாகத் தோன்றுவதில்லை ஆனல் அனுபவிக்கும் கஷடங்களுக் கேற்ப நாம் செய்த கர்மவினை சிறிது எங்களை விட்டு அகல்கின்றது.
காசி என்ற புண்ணிய பூமியில் மிதித்துவிட்டாலோ கண்ணிற் குத் தென் படுபவர்களெல்லாம், சாதுக்களாகவும், சந்நியாசிசளாக வும், பக்தர்களாகவுமே காட்சியளிக்கின்ருர்கள். அப்புண் ணிய பூமியில் வசித்து வருவதன்காரணமாக அங்குள்ள மக்களின் முகத் தில் ஒர் லெட்சுமீகரமான தோற்றம். அவர்களைக் கண்டமாத்தி ரக்திலேயே யாருக்கும் கடவுளுடைய சிந்தனை தானுகவே ஏற்பட்டு /* விடும். அவர்கள் பேச்சும், செயல்களும் ஆண்டவனது ஆராதனை போன்றே தோன்றும். கங்கா நதியினுடைய பிரவாகம் அங்கு தான் மிகவும் அழகாகக் காட்சியளிக்கின்றது. ஒரு க ரை யி ல் நின்று பார்ப்போருக்கு மறுகரை நன்கு பார்க்க முடியாதவாறு அகன்று ஒடுகின்றது. இது வில் வளைவாக அதாவது கரையிலுள்ள 64 நீராடும் துரைசளும் எந்தக் கட்டத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் படியாக அமைந்து விளங்குகிறது. இங்கு தீர்த்தமாடு வதற்கு 64 துறைகள் இருக்கின்றன. எல்லாத்தீர்த்தததிலும் ஸ்நா னம் செய்ய முடியாதவர்கள் 5 துறைகளில் மட்டுமாவது ஸ்நா னம் செய்கின்றனர். இத்துறைகளை அங்கு “காட்' என அழைக் கின்ருர்கள். இவைகளில் ஒன்று 'அரிச்சந்திராக் காட்' என்று

Page 11
242 - ஆத்மஜோதி
அழைக்கப்படுகின்றது. இதற்குப் பக்கமாகத்தான் அரிச்சந்திரன் மயானம் காத்த இடம் இருக்கின்றது. அதனல்தான் இக்கட்டத் துக்கு அப்பெயர் வந்துள்ளது. இப்போதும் அம்மயானத்தில்
பிணம் சுடும் வழக்கம் இருந்து வருகின்றது
இவ்வூரில் எந்தத் தெருவில் சென்ருலும் இரு பாங்கிலும் அனேக கோயில்களைத் தரிசித்து விடலாம். காசியிலுள்ள ஒவ்வோர் வீடும் ஒவ்வோர்கோயிலென்று சொன்னுல் கூட மிகை யாகாது. இங்கு விஸ்வநாத சுவாமி கோயில், அன்ன பூரணி தேவி கோயில், விசாலாகூF தேவி கோயில் துண்டி வினயகர் கோயில், சாகழிவினுயகர் கோயில், ஞானவள்ளி கோயில், கெளரி கோதா ? ரீஸ்வார் கோயில்வைகள் ஆகியவைகள் முக்கியமாகக் கருதப்படுகி ன்றன விசுவநாதசுவாமி ஆலய ம் மிகவும் விசேடமானதாகிலும் சிறியதாகத் தோன்றும். கர்ப்பக் கிரகம் போன்று நான்கு புறமும் வாயில் உள்ள ஆலயத்தில் உட்பகுதியின் ஈசான பாகத்திலே சுமார் ஒவ்வொரு கஜ அகலநீளமுள்ள சமசதுர பள்ளமான வெள்ளித் தொட்டிக்குள், தங்கத்தகடு புனையப்பட்டுள்ள ஆவுடையா ரோடு விசுவேஸ்வரப் பெருமான் லிங்க ரூபமாக எழுந்தருளி விளங்குகிறர்
லிங்கம் அழகாகவும் மிக பலபலப்புள்ளதாகவும் மிளிர்கிறது சுவாமியின்சிரமீதுவடுப்போல ஒன்று தெரிகிறது. அதனைச் சிவபெரு மான் அர்ச்சுணனேடு போர் செய்த காலத்தில் அர்ச்சுணன் வில்லி ணுல் அடித்த வடுவின் அடையாளமெனச் சொல்லுகிருரர்கள். லிங் கம் சுவாமி தேவி என்னும் இரண்டு பாகமாக விளங்குவதும்
கூர்ந்து கவனித்தால் தெரியவரும்
தீண்டாமை, தீண்டாமை, கோயிலுக்குள் போகப்படாது. போனலும் சுவாமி இருக்கும் கர்ப்பக்கிரகத்துக்குப் போகக் படாது என்று சொல்லிச் சண்டையிட்டு க்கொண்டிருக்கும் இக்
காலத்தில் இப்புண்ணிய பிரசித்தி வாய்ந்த காசி விசுவநாதசுவாமி
*)
i
கோயிலிலோ, தரிசனத்துக்குச் செல்லும் பக்த கோடிகள் கங்கை
யில் தீர்த்தமாடிவிட்டுக் கையில் தீர்த்தம், வில்வம், புஷ் பம், பழம், ஆதியனவும் கொண்டு வந்து சுவாமியின்
பக்கமாகச் சென்று தாங்களே தங்கள் கையினல் அபிஷே .
கித்து வில்வஞ் சாத்திப் பூசிக்கின்றனர். அ வ் வூ ர் மக்கள் கடமைக்காகவும், மற்றவர்கள் கண்டு களிக்க வேண்டுமென்பதற் காகவும் கோயிலுக்குச் செல்பவர்களல்ல. காலையில் 4 மணிக்கே எழுந்து கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு ஆலயத்துக்குச் செல் வார்கள். அதுமட்டுமா, கோயிலில் சுவாமிக்கு வேண்டிவைகலெல் லாம்.செய்து பூசித்தானதும் ஒர் பக்கமாக அமைதியாக உட்கார்ந் திருந்து கையில் மாலையை வைத்துக்கொண்டு ஜெபம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்? கூட்டம் சேர்ந்து விட்டால் பஜனையில் ஈடு பட்டுவிடுவார்கள், இவைகளையெல்லாம் பார்க்கும் போது யாத்
 

ஆத்மஜோதி 248
திரைக்காக அங்கு செல்பவர்களுக்கும் பிரம்ம முகூர்த்தத்தில் உறங்க மனம் இடம் கொடுப்பதில்லை தாங்களும் அவர் களை ப் போலவே காலை 4 மணிக்கு எழுந்து ஸ்நானம் செய்து விட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபாடாற்றிவிட்டு ஜெபம், பஜனை, ஆகி யவற்றிலும் ஈடுபட்டுவிடுகின்றர்கள். அது ஏதும் கஷ்டமாகவும் வெட்கமாகவுமாதோன்றுகின்றது? இல்லை. ஒரே பரமானந்தமாயிரு க்கின்றது.இவ்வாய்ப்புக் கிடைக்கப்பெறுபவர்களுக்கர்மவினைபோய் விடுமென்பதில் என்ன சந்தேகமிருக்கின்றது. இப்புண்ணிய பூமியில் எங்கு பார்த்தாலும் சாதுக்கள் சந்நியாசிகள், அதில் எத்தனை உயர் ந்த ஞானிகள் இருப்பார்கள். அவர்களைத் தரிசிக்கவும் அவர்க ளுடன் உரையாடவும் அவர்களது ஆசீர்வாதத்தைப் பெறவும் வாய்ப்புக்கிடைக்கின்றதோ, "நல்லாரைக் காண்பதுவும் நல்லார் சொற்கேட்பதுவும் நல்லார் குணங்கள் உரைப்பதுவும் அவரோடி ணங்கயிருப்பதுவும், நன்றென ஒளவைப் பிராட்டியார் அறிவுறுத்தி யிருக்கின்றரல்லவா.
காசியில் அடிமிதிக்கக் கிடைத்தாலும் எங்கள் கர்மவினையில் சிறிது போய்விடுமென்பதில் சந்தேகமில்லை. இப்புண்ணிய பூமியில் சிறிது காலம் வாழ்வதற்கு வாய்ப் புக் கிடைத்தால் அது எங்கள் பூர்வ புண்ணிய மெனவே கருதவேண்டும். வாய்ப்புக் கிடைப்பவர் களும் அவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
علاج
ཚོ་ * */ア* ooooooooooocầởī 洽系 ocoooooooooes
: JT LD51 DD. C:
போதுமான தூய்மை இல்லை யென்று ராம நாம பஜனை செய்வதை நிறுத்தி விட வேண் டாம். ராமநாம பஜனையும் தூய்மையடைவ தற்கான சாதனமேயாகும். இதயத்திலிருந்து எழும் ராமநாமத்தால் மனஅடக்கமும் கட்டுப் பாடும் எளிதில் உண்டாகிவிடும்.

Page 12
ஏன் இருபத்துநான்கு 9full i hii.
0LG0G0LLLLGL0LL0LL0GLGLLALGG0000e0z 0L000 \() () {ధి భళి భిభి: 9(8ధి
( தத்தாத்திரேயர் ).
* ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஒருமுறை த ம் மை g) G) 55th ஜகத்குரு என்று அழைப்பதன் காரணத்தை விளக்கிக் கூறினதா கச் சொல்லப்படுகின்றது. தாம் ஜகத்தைக் குருவாக அடைந்து அதன்மூலமாகப் பல உண்மைகளைத் தெரிந்துகொண்டு வருவதால் 'ஜகத்தைக் குருவாகக் கொண்டவர்' என்றபொருளில் தாம் ஜகத் தி குரு என்ற பட்டத்திற்கு அவர்கள் வியாக்கியானம் செய்தார்க ளாம். பெரியோர்கள் சொல்லும் விஷயங்களில் சிறந்த உண்மை கள் அடங்கியிருக்கும் என்பதற்கும்இது ஒர் உதாரணம். புத்தகங் களும் போதகர்களும் சொல்லிக்கொடுக்க முடியாத பல உண்மை களை உலகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாகப் பல கவிஞர்களும் ஞானிகளும் தங்கள் தங்கள் நூல்களிற் கூறியிருப்பதையும் நாம் அறிவோம். பகவத் சிருஷ்டியில் அற்பம் என்ற ஒன்று கிடையாது என்றும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அற்புத சக்தி அட ங்கிக்கிடக்கும் என்றும், எதையும் அலட்சியம் செய்வதற்கில்லை யென்றும் ஒளவையார் கூறுகிருர், நம் ஆசாரியார் கூறியமாதி ரியே, வெகுகாலத்திற்குமுன்னே தத்தாத்திரேயர் என்ற மகாபு ருஷரும் கூறியதாகப் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
பூரீகிருஷ்ண பகவான் உத்தவர் என்ற பக்தருக்கு ஆத்ம தத்து வத்தை உபதேசித்தபோது "ஞானம்' விஞ்ஞானம் இவைகளில் நிச்சயம் உள்ளவனுகி சகல பிராணிகளிடத்திலும் சிநேகத்துடன், சாந்தியுள்ளவனுக ஜகத்தை என்னுடைய ஸ்வரூபம் என்று நினை ப்பவன் திரும்பவும் சம்சாரத்தை அடையமாட்டான், என்று கூறி அகங்காரம் முதலியவற்றேடு கூடிய மனுஷ்யன், விவேகம் அடை ந்து பரம்பொருளான ஆத்மாவை அறிந்துகொள்வதற்கு வழிகளை உபதேசம் செய்ய எண்ணி, முன்னெகு காலத்தில் யது என்ற மன்னனுக்கும் தத்தாத்திரேயர் என்ற அவதூதருக்கும் நடந்த சம்பாஷணை என்று இதிகாசத்தைக் கூறினர்1
தத்தாத்திரேயர் என்றவர் மகாவிஷ்னுவின் அம்சாவதாரங் களுள் ஒருவர். அவர் அத்திரி ரிசSயின் புதல்வராகத் தோன்றி சிறந்த யோகியும் ஞானியுமாகி அவதூதராக விளங்கி வந்தார் அவர் பிரகலாதன் அலர்க்கன் என்ற இருவருக்கும் ஆன்வீகூSதி என்ற சாஸ்திரத்தை உபதேசித்தார் என்று கூறுவர். அ வ ர் ஒன்றிலும் பற்றில்லாதவராயிருந்தும் மிகுந்த திருப்தியுடையவ ராய், பரமஞானியாய், லோகோபகாரியாய் நித்திய யெளவனராய் மிகுந்த தேச சுடன் விளங்கி வந்தார். அவருக்கு இவ்வளவு ஞானம் எப்படி உண்டாயிற்று என்பது ய யாதி மன்னனின் புதல்வனுன
 
 
 
 

ஆத்மஜோதி 245
யது என்ற அரசனுக்கு உண்டாயிற்று அவன் அவதூதரை வணங்கி தாங்கள் தர்மார்த்த காமங்களில் ஈடுபடாமலிருக்க, மிகுந்த ஆனந் தத்துடன் விளங்குகிறீர்களே! இதன் இரகசியம் என்ன? என்று வினவ, தத்தாத்திரேயர் தாம் பிரமஞானம் அடைந்த மார்க்கத் தை அவனுக்குக் கூறலாஞர்.
அவர் அரசனே! என்னுடைய புத்தியால் நான் ஆசிரியர் களை வணங்கினேன். அவர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்களினல் நான் முக்தனுனேன். அப்படிப் பட்ட ஆசிரியர்களில் 24 பேர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் பூமி, வாயு, ஆகாயம், ஜலம், அக்கினி, சந்திரன், சூரியன். மாடப்புரு, மலைப்பாம்பு, சமுத்திரம். விட்டிற்பூச்சி, தேனீ, யானை, வேடன். தான், மீன், பிங்களா என்றவள்; குரரம் என்ற பறவை, ஒரு சிறுவன், ஒரு சிறு பெண், பாணம் தீட்டும் கொல்லன், பாம்பு, பட்டுப்பூச்சி, குளவி, எதனிடத்திலிருந்து எதைக் கற்றுக்கொண்டேனே அதனை ச் சொல்கிறேன் என்று சொல்லி அவற்றை விளக்கலானர்.
பூமி,
பூமியைச் சகல பிராணிகளும் மிதிக்கின்றன. 'பலர் அதனை வெட்டிக்குழிதோண்டிப் புண்படுத்துகின்றனர். இவ்வளவு உபத்தி ரவங்களையும் அது பொறுத்துக் கொண்டிருப்பதோடு, அது எல் லாப் பிராணிகளுக்கும் பரமோபகாரம் செய்து வருகின்றது. அதன் மீதுள்ள மலைகள் தன் நீரருறுகளாலும், மரங்கள், கொடிகள், முதலியவற்ருலும் ஜீவபிராணிகளுக்குப் பெரிதும் பயன்படுகின்றன மரங்கள் கனிவர்க்கங்களை கொடுத்து யாவருக்கும் உபயோகப் படுகின்றன. இவற்றைப்போல் பொறுமையையும் பரோபகாரத் தையும் மனிதன் இடைய வேண்டும் என்று நான் அறிந்து கொண் டேன். பிறரால் ஹிம்சை உண்டாகும் போது அவர்கள் தெய்வத் தால் தூண்டப்பட்டு உபத்திரவிக்கிருர்களேயன்றித் தாமாக உபத் திரவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளவேண்டும். மலையையும் காட்டு மரத்தையும் போல் யாதொரு பிரதிப் பிரயோசனத்தை யும் எதிர்பாராமல் நம்மிடமுள்ளவற்றை வேண்டியவர்க்கு வேண் டிய மட்டும் கொடுக்க வேண்டும். (தொடரும்)

Page 13
மனமே! ஏன் துக்கத்தால் கலங்குகிருய். உலக வாழ்விலே இன்பம் இல்லையென உணர்ந்து அதைத் துறந்து ஆத்மீக வாழ்விலே முன்னேறிக் கொண்டு இருக்கும் உனக்கு ஏன் துக்கம்.
(செல்வி மாதர் நாச்சியா)
ஆசை ஆணவத்தை அழித்து, அகண்ட சத்பொருளாகிய இறைவனை அடைய இயன்ற சாத னையில் பயின்று வரும் உனது வாழ்விலே து க்க த் திற்கும், கலக்கத்திற்கும் காரணமே இல்லை.
நீ நித்தியன்! உனது குறிக்கோள் தூய்மையா னது: உனது எண்ணம் பரிசுத்தமானது! உ ன து பிரார்த்தனை மாசற்றது.! உனது வாழ்வு, உ ன து சபதம் யாவும் கலங்கமற்றது. பின் ஏன் யாருக்கு இவ்வுலகில் பயப்படவேண்டும். உனது லட்சியத்தி னின்றும் சிதைப்பதற்கு உன்னை ஆசைகாட்டி அழிப் பதற்கு இவ்வுலகில் எச்சக்திக்கும்வலிமை கிடையாது
பயமும் கவலையும் கொண்ட மனிதன் ஆத்மீக வாழ்விலே ஈடேற்றம் அடைய முடியாது. பயத்தை ஒழிப்போம் பாரினிலுள்ள யாவும் நம்மை எதிர்த்தா லும் நமது லட்சியத்தினின்றும் சிறிதும் பிறழோம்
மனித வாழ்வின் மகத்தான குறிக்கோள் என்ன வெனில் மனிதன் எந்தப் பொருளின் தொடர்பினுல் வாழ்வின் எல்லையற்ற இன்பத்தேக்கத்தில் மூ ழ்க முடியுமோ, எந்தப் பரிபூர்ண சக்தி யி ன் துணை கொண்டு யாவும் இயங்குகிறதோ எந்த இன்பம் என் றும் அழியாததோ எது யாவையும் கடந்து, காலத் தையும் கடந்து ஏகமயமாக எங்கும் பரவி கி ற் கி றதோ அது எது வென்று உணர்ந்து அதனுடன் லயித்து அது மயமாகிவிடுவதேயாகும்.
 
 
 
 
 
 

A
ஆத்மஜோதி 245
மனிதனுடைய மனே நி லை எவ்வித மென்ருல் மனம் எதைத் தீவிரமாகச் சிந்தனை செய்கிறதோ அதுவாகவே அம்மனம் மாறிவிடுவதேயாகும். எவ னுடைய இதய ம் எப்பொழுதும் எண்ணங்களின் எழுச்சியால் இங்கும் அங்குமாக ஓடி ஆடுகிறதோ அவன் மனதை ஒன்று படுத்தும் முயற்சியில் சித்தி யடையமுடியாது. ஆழ்ந்ததியானத்தில் மூழ்கி உலக இன்ப துன்பங்களை மறந்து அமைதியுடன் வாழ்க் து வருபவரை உலக ஆசா பாசங்களோ அல்லது தீய எழுச்சியூட்டும்கா மக்கருத்துக்களோ தீண்டுவதில்லே.
சாந்தியிலே ஓய்வு காணுத-மனம் சம்பூர்ண ஆன ந்தத்தை அடைய முடியாது. ஆழ் ங் த தியானத்தி ஞல்தான் இன்பத்தின் எல்லேயை எட்டிப் பிடிக்க முடியும், மனிதன் அழகைர சிக்க ஆசைப்படுகிருன். மனம் அமைதியாகவும் தெளிந்த அறிவோடும் கமது உணர்ச்சிகள் இருக்கும் போதுதான் உண்மையான அழகை இதயத்தில் உணரமுடியும். காணுகின்ற உலகம் நமது உள்ளத்தின் புகைப்படம். மனது மகி ழ்ச்சியாக இருந்தால் பார்ப்பது யாவும் இன்பமாக வும் இனிமையாகவும் காட்சியளிக்கும். மனம்போல் வாழ்வு. மனம் எதை அ தி க ம |ாக விரும்புகிறதோ அதுவாகவே மாறி விடும். ஆகவே எ ப் பே ா தும் பரிசுத்தமாகவும்: சாந்தமாகவும் இருக்கவேண்டும்.
一米一
J IDB DD:
ராமநாமத்தை இதயத்தில் வீற்றிருக்கச் செய்
வதற்கு எல்லேயற்ற பொறுமை தேவையாகும்.
அனேக யுகங்கள் சென்ருலும் செல்லும். ஆயினும்
அதற்காகச் செய்யும் முயற்சி வேண்டப்படுவதே
யாகும் ஆளுனல் எவ்வளவு முயன்ருலும் ஆண்ட
வன் அருளாலேயேதான் வெற்றிபெறமுடியும்.
--K-

Page 14
யோக ஆசனங்கள் 'சம்
71, ஹஸ்த திரிகோணுசனம் (செய்யும் விதம்)
சுத்தமான சமதள விரிப்பின்மேல் கால்கள் இர ண்டையும் அகட்டிவைத்து நேராய் நின்று கொள்ள வும்.
பின் கைகள் இரண்டையும் தலைக்குப்பின் பிடரி யில் கோர்த்து வைத்துக் கொள்ளவும். இந் நிலையில் சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டுக் கொண்டே இடது பக்கமாய் இடுப்புடன் வளைந்து இடது முழங் காலின்மேல் இடது முழங்கையை வைக்கவும். வலது கை கோர்த்த நிலையிலேயே மடக்கிய நிலையில் மேற் பார்த்த வண்ணமிருக்கவேண்டும். இந்நிலையில் சுவா சம் சற்று அதிதீவிரமாக நான்கு தடவைகள் வெளி விட்டு உள்ளிழுக்கும்படி செய்து ஆசனத்தைக் கலை க்கவும். கால்கள் இரண்டும் அகட்டிய நி ஆல யி ல் விறைப்பாய் இருக்கவேண் டும். பார்வை நேராய்ப் பார்க்க வேண்டும். சித்திரம் 71-பார்க்கவும்.
ஆசனத்தைக் கலப்பித்தல்
பிடரியில் கோர்த்திருக்கும் இரண்டு கைகளையும் கழற்றி எடுப்பதற்குமுன் சுவாசத்தை உள்ளிழுத்த வாறே இடுப்புடன் நேராய் நிமிரவும். பின் கைகள் இரண்டையும் எடுத்துக் கால்களை நேராய் ஒன்று சேர்த்து வைத்துச் சிரமபரிகாரம் செய்து கொள்ள வும். -
பலன்கள்;- விலா எலும்பு வலுவடையும், புஜச் சதைகள் கெட்டிப்படும். இருதயம், மார்பு நல்ல நிலை யிலிருக்கும். கால்களின் நரம்புகளுக்கு வலுவைக் கொடுத்து இரத்தோட்டத்தை அதிகரிக்கச்செய்யும் இருமல், வாய்வு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமா கும் வயிற்றுப் பொருமல் தீரும்.
 
 

ஆத்மஜோதி 249
72, யோகநித்திராசனம் (செய்யும் வழி)
சமதளகெட்டி விரிப்பின்மேல் பத்மாசனம், புஜங் காசனம், ஹலாசனம் (ம தலியன செய்து அவயவங் களை இளக்கிக்கொள் ளவும்.
լ Ո6ծr 6չն) If)ւյլ Ոճծr மேல் மல்லாந்து படு த்து கால்கள் இரண் டையும் நேராய் நீட் டிக்கொள்ளவும். நீட் டியே வைத்திருக்க வும் கைகளையும்,
பின் இடுப்புடன் இரண்டு கா ல் களை யும் மேல் தூக்கவும். சுவாசத்தைச் சிறிது சிறிதாக வெளி விட் டுக்கொண்டே இரண் டுகைகளினுலும் வல அகாலைப் பிடித்துத் தலைக்குப் பின் பக்கம் பி ட ரி யில் கொண்டு வந்து கணுக்காலின் ஆதிா ரத்தில் தலையை வைக்கவும். முழங்கால் கீழே படிந்திருக்க வும். இவ்வாறே இடது காலையும் இரண்டு  ைக க ளால் பிடித்துத் த லை க் கு ப் பின்பக்கம் பிடரியில் கொணர்ந்து வலது பாதத்தில் இடது பாதத்தைப் பின்னிக் கொள்ளவும். இடது முழங்காலும் நன்கு கீழே படிந்திருக்கவும். கைகள் இரண்டிற்கும் இடை
யில் நடுவில் கொணர்ந்து கால்களே தலைக்குப் பின்
பக்கம் மாட்டவும்.
கைகள் இரண்டையும் வலது, இடது கால் தொ
டையின்மேல் வைத்து பின்பக்கம் பிருஷ்ட பாகத்தில்
விரல்களால் கோர்த்துப் பிடித்துக்கொள்ளவும்.

Page 15
25 O ஆத்மஜோத
இந்நிலையில் சுவாசம் சமநிலையில் சுவாசிக்கவும். கழுத்து. தலை மேல் துரக்கப்பட்டு பாதங்கள் இரண் டும் மேல் தூக்கி, பாதங்களின் கணுக் கால்களின் மேல் தலையை வைத்திருக்கவும். முகம் நேராய் லிங் கஸ்தானத்தைப் (மூத்திரக்காய்) பார்த்திருக்கவே ண்டும். ஆசனவாய் மேல் தூக்கியிருக்கவும். தாடை மார்பில் பொருந்தியிருக்கவும். சித்திரம் 73 பார் க்கவும்.
இந்நிலையில் ஐந்து தடவை சுவாசித்தபின் ஆச னத்தைக் கலைத்து சித்த சாந்திக்காக சுவாசனம் செய்யவும்.
கலைப்பிக்கும் விதம்
一来一
பின் பக்கம் பிருஷ்ட பாகத்தில் கோர்த்திருக் கும் கைகள் இரண்டையும் எடுத்து சுவாசத்தை உள் ளிழுத்தவாறே வலது காலை தலைப்பக்கம் பிடரியில் வைத்திருப்பதை எடுத்தும், பின்-இடது காலையும் எடுத்தும் கால்களை முன் நீட்டி, கழுத்து தலையுடன் கீழேவைத்து, கைகள் இரண்டையும் விலாப் பக்க மாய்க் கீழே வைத்து சிரமபரிகாரம் செய்து கொள் ளவும். O O
சவாசனம் செய்யும் விதம்
一米一
கெட்டியான சமதள விரிப்பின்மேல் மல்லாந்து படுக்கவும். கால்கள் இரண்டையும் முன்பக்கம் நீட் டிவைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் பக் கவாட்டில் விலாப் பக்கமாய் கீழே வைத்துக் கொள் ளவும். சகல அவயவங்களுக்கும் ஒ ய் வு தரவும். அதாவது-கைகள், கால்கள், மார்பு, முதலியவற்றி ற்கு விறைப்பின்றி மரித்த சவத்தைப் போன்று படுத்துக் கொள்ளவும். முகம் மேல்நோக்கியே இருக் கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியே வைத்திருக் கவும்.

fly
ஆத்மஜோதி 25】
ஆரம்ப சாதகர்கள் ஒவ்வோர் நாளும் காலையில் யோகாசனம் செய்த பின் சவாசனம் கட்டாயம் செய் தேயாக வேண்டும். பதினைந்து நிமிடமாவது சவா சனத்திலிருந்து எழுந்திருக்கவும். எழுந்திருக்கும் சமயம் வேக மாக திடு திப்பென எழுந்திருக்கக் கூடாது. ஒவ்வோர் அங்கங்களுக்கும் புத்துணர்வு கிட்டியவுடன் முதலில் கைகளை அசைத்தும், கால்
களை அசைத்தும் பின் மெதுவாக எழுந்திருத்த லும் வேண்டும்.
இந்த யோக சித்திராசனம் சகல ஆசனங்களை யும் விட சற்று கஷ்டமானதே! ஆரம்ப சாதகர்கள் ஆரம்பத்தில் இந்த ஆசனம் செய்யும் சமயம் முன் கண்ட பல ஆசனங்களைச் செய்தபின் செய் தா ல் சிறிது லகுவாக இருக்கும். எவ்வளவு தூரம் செய்ய இயலுமோ அவ்வளவும் கல்லதே!
Uର)ରୀ ଅର୍ଗା :
மலப்போக்குவாய் எரிச்சலின்றி மலம் வெளி
யாகும். புஜ ங் க ள், மு ழ ங் கால் களின் மூட்டு தொண்டை, கால், கை எலும்புகள் முதலியவற்

Page 16
252 ஆத்மஜோதி
நிற்கு நல்ல பலனையும் வளர்ச்சியையும் தரும். இடு ப்பு வலுவடையும். ஹெர்னியா என்னும் குடல் பிது க்க ைத்தை நீக்கும். மலச்சிக்கல் ஏற்படாது. நித்தி ரையில் விந்து ஸ்கலித மாகாது. விந்து கெட்டிப்ப டும். முகப் பொலிவு ஏற்படும். ஆண்மையை நீடிக் இச்செய்யும். இருதயம், மTர்பு வலுவடையும், சகல
நரம்புகளுக்கும் ஓர் புது தெம்பை யூட்டுகின்றது.
வயிற்றின் உள் பாகம் கெட்டிப்படும். ஞாபக சக்தி அதிகமேற்படும். காய்ச்சல், மலேரியா ஜ7ரம் முத லிய வியாதிகளைக் குணமாக்கும்.
ஆப்பரேஷன் செய்தவர்கள் தக்க யோகாசிரி யனை க் கொண்டு செய்யவும். ஆண், பெண் அனைவ ரும் செய்யலாம். பெண்மணிகள் மாத விடாய், கெற்பகாலம் முதலிய நாட்களில் செய்யக் கூடாது.
இந்த ஆசனத்தை பாராயணுசனம், கீசகாச னம் எனவும் அழைப்பதுண்டு. (தொடரும்)
6)
நல்ல விநாயகர் துணை நீ முன்னேஸ்வரம் திருக்குளத்திருப்பணித் தரும விஞ்ஞாபனம்
திருவருள் நிறைந்த பூரீ முன்னேஸ்வர கூேடித்ரத்தில் சிவதீர்த்தமென்ற திருக்குளத்திருப்பணிக்கு சுமார் 60, 000 ரூபாய் வரையாகுமென மதிப்பீட்டு கருங்கல் வேலே நடந்து வருகிறது. இப்பெருஞ் சிவ கைங்கர்யத்துக்கு புண்ய சீலர் களனைவரும் தங்களாலியன்ற பொருளுதவி செய்து பூரீ வடி வாம்பிகாஸ்மேத முன் நைாதப்பெருமான் திருவருள் பெற வேண்டுகிருேம்,
இங்ங்னம் சி. பாலசுப்ரமண்யக் குருக்கள், தர்மகர்த்தா.

曦列
9 oc So @రిని 4 هم تنها نیز, a ՋԳօօ Oooo o2 ტQ Q
9. c Ꭷ } SXKo 9 وي 90 రోరింది 0° :(கி. ごテリ受『La /ooooooooooooooooo"
உலகம் தோன்றிய நாளிலிருந்து படிப்படியாக நுண்ணிய உயிர்களும், புல்லும் பூண்டும், பறவைகளும், தாவரங்களும், விலங் குகளும் பிறகு மனிதனும் தோன்றினன். மனிதன் முதலில் விலங்கு களைக்கண்டு அவற்றைப்போல் வாழ்ந்திருந்தான். பின்புசிறிதுசிறி தாக நெருப்பையும், உலோகங்களையும் பலவற்றையும் தனதுபகு த்து அறியும் அறிவினுல் கண்டுகொண்டான். மனிதனது எண்ணம் வளர வளர அவனது அறிவு விசாலமடைந்து விஞ்ஞான ஆராய்ச் சிகளினுல் இந்த நாகரீகப் பொருள்களையும், தேவையானபலபொ ருள்களையும் பெறஏதுவாயிற்று. அவ்வாறு இருக்கையில் பல பெரி யோர்கள் தங்களது அனுபவம் கொண்டு, ஆராய்ச்சி கொண்டு இறைவனது உண்மையை அறிந்து துதித்தனர். அவனைப்பற்றி பல நூல்களையும், பாடல்களையும் எழுதி வைத்தனர். சதா பகவத் சிந்தனையிலேயே மூழ்கினர். இறைவன் பல வடிவங்கள் எடுத்து பூமியிலே தோன்றி பல திருவிளையாடல்கள் புரிந்து தீமை தோன் றிய காலத்தே அதைப் போக்கி நன்மையை நலிவித்து உலகுக்கு அருள் புரிந்தான். அவன் தனது திருவிளையாடல்கள் மூலமாகவும் அவதாரங்கள் மூலமாகவும், தனது அளவிட்டுக் கூறமுடியாத ஆற் றலையும் சர்வவல்ல பியான தனது வடிவையும் தனது வேலையை யும் தன்னை அ டை யு ம் வழிகளையும் உலகிற்கு உணர்த்தினன்.
உடனே உலகிற் பல சமயங்களும். பல புராணங்களும், பல சத்
மார்க்க நூல்களும் எழுதப்பட்டன. அவனது அருட்புகழையே நாடும் பல பக்தர்களும், ஞானிகளும், துறவிகளும், தோன்றினர் கள் இறைவன் அவர்களுக்கு நலமருள அவர்கள் தங்கள் உடமை களாகிய உடல், பொருள், ஆவி, ஆகிய மூன்றையும் அவனுக்கு அர்ப்ப:ைம் செய்து அவனது திருவருட் பெருக்கினை எ ங் கு ம் பரப்பினர்கள் எங்கும் அமைதி பரவியது. சாந்தம் தழைத்தது.
காலச்சக்கரம் சுழலச் சுழல உ ல கி லே பல புரட்சிகள் ஏற் பட்டன. தொழிற் புரட்சி, விஞ்ஞானப் புரட்சி, கலைப்புரட்சி, என பலவற்ருல் நாகரீகம்முன்னிருந்ததைவிட அதிகமாக, விண் னிலே செயற்கைச் சந்திரனையும், செயற்கைகிரகங்களையும் விட்டு ஆராய்ச்சி செய்யுமளவு வளர்ந்து விட்டது. மக்கள் இவற்றிலே மனதைச் செலுத்தினர். விஞ்ஞானப் புதிர்களிலே மயங்கி, பொ ழுது போக்குகளிலே மனதை அலையவிட்டு உணவு வேண்டுமெனில் உழைப்பு வேண்டுமென்பதை மறந்து அழகு, இளமை, செல்வம், முதலியவற்றை மெய்யென எண்ணி அறிவிழந்தனர். ஆண்டவனை

Page 17
254 ஆத்மஜோதி
மறந்தனர். அவனது பெருங்கொடையை, அவனது பெரும் வள் ளற்றன்மையை. அவனது பேராற்றலை, அவனது பெரும் புகழை அவனது அருள் வடிவத்தை, அவனது ஒருமைப் பாட்டை! அவ னது ஆட்டுவிக்கும் தன்மையை மறந்தனர். அந்தோ! அவனே இல்லையெனக் கூறி நாஸ்தீகப் பிரசாரம் செய்யவும் தயங்க வில் லையே இம்மாக்கள்! என்னே மதியீனம்! என்னே அறிவீனம், இதை எழுதவும் என் கைகள் துடிக்கின்றன. எண்ணவும்! மனம் பதறுகின்றது. ஏ! மாக்களே! மதீயீனர்களே என்ன சுகம் கண்டீர் கள் இந்த அற்ப வாழ்விலே, நீங்கள் நினைக்கும் நீங்கள் விரும்பும் இந்த வாழ்வு நிலையானதா? இந்த இளமை நிலையானதா? இந்தச் செல்வம் தான் நிலையானதா? ஏ! அற்ப குணமுடையோரே, இந்த யாக்கை நாளை அழியும் நாளிலே நீங்கள் என்ன செய்வீர்கள் காலன் உங்கள் உயிரை எடுத்துச் செல்கையிலே நீங்க ள் கதறி யென்ன பயன் ! இப்போதே உணருங்கள் இன்றே அவனே நினையு ங்கள், அவன்நாமத்தை நெக்குருகி, நெஞ்சுறுகிப் பாடுங்கள். அவன் திருவருட்பெருக்கினை உன்னுங்கள். அப்பொழுது நீங்கள் அவன் பேரி ன்பத்தை அறிவீர்கள். பிறகு அடியேன் அழைத்தாலும் நீங்கள் வரமாட்டீர்கள். உங்களுக்கு ஒர் ஐயம் தோன்றலாம். அவ ன் அருட்பெருக்கினை பாடிக்கொண்டிருந்தால் உணவு கிடைத்து விடு மா? என்று உணவு வேண்டுமெனில் உழைக்கத்தான் வேண்டும். அதற்கான தொழில்கள் இருக்கத்தான் வேண்டும். தேவைகளை நிறைவேற்ற விஞ்ஞானம் பல வற்றைக்கண்டு பிடிக்கத்தான் வேண் டும். பகுத்தறிவு வளரத்தான் வேண்டும். ஆனல் அவற்றிற்கெல் லாம் மூல காரணமான, அடிப்படையான அந்த இறைவனை மறந்து விடக்கூடாது, “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா, உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் வையகத்தே,
என்ற தாயுமானவர் கருத்தைப்போல என்றும் அவனை நினை க்க வேண்டும். எல்லாம் அவன் செயல். அவனன்றி ஒரணுவும் அசையாது என்று என்ன வேண்டும்.
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" என்ற திரு மூலர் கருத்திற் கிணங்கதிடம் பட மெய்ஞ்ஞானத் தை நாடும் வழியை நினைக்க வேண்டும். உணவு, உணவு என அலை வதிலும், உலக சுகபோகங்களிலே ஈடுபடுதலிலுமுள்ள நாட்டத் தைக் குறைக்க வேண்டும்.
வடநாட்டிலே கங்கைக்கரையிலே ஒர் துறவியிருந்தான். அவன் கங்கைக்கரையிலேயுள்ள தனது குடிலில் அமர்ந்து சதா பகவானைத் தியானம் பண்ணுவதிலும் அருட் பாடல்களை பாடுவதிலும், நிஷ்
 

ஆத்மஜோதி 255
டையிலே அமர்ந்திருப்பதிலும், தனது வானுளைக் கழித்துவந்தான் ஒவ்வொரு நாளும், உணவிற்காக பிச்சை எடுப்பதற்காக மட்டும் வெளியிலே செல்லுவான். தனது தேவைக்கான உணவு கிடைத் ததும் திரும்பி வந்து பழையபடி நிஷ்டையில் அமர்ந்து விடுவான்.
* ,
ஒரு நாள் அவன் தனது வழக்கப்படி பிச்சை பெற்றுவரப்புறப் பட்டான். ஒரு வீட்டின் வாயிலிலே நின்று ‘பவதிபிக்க்ஷாண்டேகி* என்றதும் ஒரு அழகிய யுவதி வெளியே வந்து பிச்சையிடுகையில் சிறிது நிமிர்ந்தான். எதிரே ஒரு அழகிய இளம் பெண் மிக பொலி வுடன் நின்று பிச்சையிட்டு கொண்டிருந்தாள். அவளது இரு ஸ்த னங்களும் தெரிந்தன. துறவி இதற்கு முன் இத்தகைய ஒரு யுவதி யைக் கண்டதில்லை. பெண்களையே பார்த்தறியாத அவர் திடுக்கிட் டார். அந்த ஸ்தனங்களை ஏதோ வியாதியினலான காரணமோ என எண்ணி வினவினர். உள்ளே இருந்து அவளது தாய் வெளி யே வந்து அவருக்கு பதிலளித்தாள். பெரியீர்! அது வியாதி
யின் காரணமாக உண்டானதல்ல அவள் குழந்தையைப் பெறக்
கூடிய கர்ப்பவதியான நிலையிலே உள்ளாள். குழந்தை பிறந்ததும் அதற்கு உணவாகிய பாலைக் கொடுக்க இறைவனல் உண்டாக்கப் பட்ட பாற்குடங்கள் அவை” என்ருள் தாய். துறவிக்குட் ஒரு பெரும் பிரமை ஏற்பட்டது. திகைத்து நின்று விட்டார். உடனே அவர் தனது திருவோட்டை கீழே வீசியெறிந்தார். அவர் கூறி ஞர். ஹே பிரபு! உனது லீலைகளை நான் இன்றுதான் உணர்ந்தேன் நாளை பிறக்கப்போகும் குழந்தைக்காக இன்றே பாற்குடங்களை அனுப்பிய நீ பிறந்த எனக்காக உணவை அனுப்பியிருப்பாயல் லவா! இதோ புறப்பட்டு விட்டேன். உனது அருட் புகழை எங்கும் பாடிப்பறை கொட்டுவேன், இன்றே உணர்ந்தேன். இன்றே உய்ந் தேன். யான் பெற்ற பேறு பெறட்டும் இவ்வையகம். எனக்கு இனி உ வைப் பற்றி கவலையில்லை என்று புறப்பட்டு விட்டார்.
一米一
- $ _ órt_IG -
வீட்டைச் சுற்றி சுவர் எழுப்பவும் ஜன்னல்களை எல்லாம் வெ ளியில்லாமல் துணிவைத்து அடைக்கவும். நான் விரும்பமாட்டேன் சகலதேசத்துப் பண்பாடுகளும் என் வீட்டில் வீசுவதையே விரும்பு கின்றேன். ஆனல் வீசலாமேயன்றி என்னைக் காலைவா ரிவிட்டுவிட லாகாது. நான் பிறர் வீட்டில் போய் அக்கிரமியாகவோ பிச்சைக் காரணுகவோ அடிமையாகவோ இருக்க மாட்டேன். (காந்தி)

Page 18
ஓம் நமோ நாராயணு ய!
பூமத் பகவத் கீதையில் பூநீ கண்ணபிரான் காட்டிய பக்தன். -Xk X
நம்மை எல்லாம் பக்தர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கருணையுள்ளம் பாலித்து என்
அப்பன் கண்ணன் பேசுகிருர்,
1. உலகெலாம் ஆண்டவன் வடிவமாக கண்டுகொள்
பவன் பக்தன். 2. பிரதிபலனைக் கருதாமல் எல்லா உயிர்களிடத்
தும் அன்பைச் சொரிபவன் பக்தன் 3. ஆண்டவன் பால் எவ்விதத்திலும் அசைக்க முடி
யாத நம்பிக்கையுடையவன் பக்தன். 4. உடல், பொருள், ஆவி, பொறிகள் மனம் புத்தி இவைகளை ஆண்டவனிடம் ஒப்படைத்து கள்ளம் கபடமற்ற குழந்தைபோல் வாழ்பவன் பக்தன். 5. ஆண்டவனை பதியாக அடைந்து ஆண்டவனிடம்
கலந்து பொருத்தமாக வாழ்பவனே பக்தன். 6. ஆண்டவன் பால் சுரக்கும் ஆனந்தத்தை பருகி
பேரின் பத்தில் திளைப்பவனே பக்தன். 7. துன்பத்தை துடைத்து ஆண்டவன் அளித்த
இன்பத்தை ஊட்டுபவனே பக்தன்.
8. ஆண்டவனுக்காக அழுது அழுது முறையிட்டு
ஆண்டவனை அடைபவனே பக்தன்.
9. தரிசனத்தினுலும் ஸ்பர்சனத்தினலும் உலகத் தை எல்லாம் புனிதப்படுத்தும் கருணை வாய்ந்த வனே பக்தன்.
 
 
 

5
ජැෆුජී ( සුෆිඩ්‍රභූ ජී. 2
10. பிறரை துரஷனே செய்யாதவன் பக்தன்.
1 1 சுயநலம் கருதாதவன் பக்தன்.
12. நாளைய தேவைக்கு திட்டம் போடாதவன் பக்தன் 13. ஜாதி, குல, கோத்ரங்காாகிய உலக ஆசாரங்
களே கடந்த வன் பக்தன்.
14, 15ான், எனது" என்னும் பாப சிந்தனையை அறவே ஒழித்து பொரு ைமயை பூ ஷ ன ம க கொண்டவன் பக்தன்.
15 அபி என்ற வேதவாக்கியத்திற்கிணங்க பயம் அச்சம், அபிமானம், ரஹஸ்யம் இவைகள் இல் லாதவன் பக்தன்.
16. உலக மக்கள் பெரிதாகவும். ரஹஸ்யமாகவும் கரு
W * .
தும் போக சுகங்களே சிறிதாக எண்ணுபவனே பக்தன்.
17 பிறவி எடுத்ததின் நோக்கத்தை உணர்ந்து பிற வித் துன்பத்திலிருந்து உலக மக்களை விடுதலை செய்யும் வல்லமை உடையவனே பக்தன்.
18. தான் பெற்ற இன்பத்தை உலக மக்களுக்காக
அர்ப்பணம் செய்பவனே பக்தன்.
* 19. புகழ்ச்சி. இகழ்ச்சி, இன்பம், துன்பம் இவைகளை
ஒன்ருக காண்பவனே பக்தன்,
20 பந்துக்கள், சத்துருக்கள், என்ற வேற்றுமையில் லாமல் தேஹாபிமானத்தை துறந்தவனே பக்தன் புறத்திலிருக்கும் இந்த பக்தனின் லட்சனங்கள் நமது அகத்திலும் பதியட்டும் கண்ணின் மணி uu u uT u S kek S S u T S TS Y kukT sk SSY sssS kkk S TTS நான் அடிமை, -அபே தன்.

Page 19
ရှီး ရွှင္ ႏွင့္ပင္ ႏွင့္န္ဟင္ ႏွင့္ ႏွင့္ ႏွင့္အင္
K S S SKSKSYS S SYS SYLLS SYYS S S L L LLL LLL TK KK TTT L YYYS TTYTT LLLTTTTLLS LLS LLLS LLLL 0S0KK £60puả ở TỪ sol 60s), sur Jú, Nobelpop gỉ giỏi Q65, si civibraeito Qa jugomb.* , மூலிகையினுல் தயாரிக்கப்பெற்றது.souTéo Go ovo) o ¿LL \qoỹ gọ6, 3 osum 75 g ) |-(u jsou il slávov) ou 14 g), laivisosiv -- Go srub 2,(S. I.) © so šio suosi so sol iguo | lb |Loov T uusroslov § 60 Lä,516|| lb:—
**言
( , !!!56]]|1,5 %İ OEDOLlos, **)66 Gusssssssss sitsj) -+ů sous
咪咪咪咪慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘慘
* :
Printed by N. Muthiah at thesssssuruganPress, Punduloya. Published by N. Muthiah Athmajõthi Nillaiyam-Nawalapitiya,
så *
圣米迷迷迷迷迷迷迷迷迷迷
 

...- -- ,- ) ----ae” -,- sae±± ----
** -
霍e G. P. O.) as a News paper M. L.,2)_ 属をき∞r-- ،% 麟| }} }}|1||10|| J, J 6) is. Šo ※ *-G最員@上目已Q上 CPg已é目ép ?目已@上 é@已上 Gu目已é LoopééL@ Loap ------ 다 -唱- * 工歸即日。%恩目a日心 @出é目@