கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.05.14

Page 1

s
s

Page 2
X-++++++++++++
x
- 3
++++++++++++++++++++Y
ஆத்ம ஜோதி
半→++++++++++++++++ *** ܠ݂ܳ
t
*+++++*+++》++++++*++++++++++++→→→+++++++++++++++++++半
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு 1 எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.-சுத்தானந்தர்
ܬܹܐ
ஜோதி 13 பிலவ வடு) வைகாசி மீ" 1-ந் உ(14 5-61) சுடர் 7
பொருளடக்கம்
1 திருக்குறளின் சிறப்பு 193 2 திருவள்ளுவரின் திருவுள்ளக்காட்சி 194 3 கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் சாதனை 195 4 உலகம் உவப்ப உதித்தது திருக்குறல் 199 5 தன்வாழ்வும் சமூக வாழ்வும் 202 6 திருவள்ளுவர் 205 7 சுத்தானந்தரின் கடிதங்கள் 10 208 8 கொடுங்கோலாட்சி கெடுங்கோனுட்சி 213 9 எது இழிவு ? 215 10 வாழ்க்கையின் இலட்சியம் 218 11 எல்லாம் - பதினெட்டே 220 221 13 நான் யார் ? 222
ஆத்மஜோதி சந்தா விபரம்
++++++++激++++++++ ஆயுள் சந்தாரூ. 75-00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் :- க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா
* ஆத்ம ஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி. (சிலோன்]
வருடச் சந்தா ரூ. 3-00
d
 
 

22S2§ಿ 滋溢 2S2S2S2S
t
2
S. 2.
s
}
YY
திருக்குறளின் சிறப்பு
S. syesgese SYKSYLASKAS
--- リ乏 WANY
*
YfVAN
2S2 筠
asN
S2S232.32s2S2S2.
செய்யொத்த புயிர்போலச் செந்தமிழுஞ்
செழும் பொருளுஞ் சேர்ந்த செல்வம்;
மையொத்த மனவிருளை மாற்றி யொளிர் மணிவிளக்கு; மாந்த ரெல்லாம்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த மர
வாழ்வெய்த வழி நடத்துங்
கையொத்த நற்றுணவன்; வள்ளுவனுர் திருக்குறளெங் கண்க ளன்றே!
காதொளிருங் குண்டலமுங் கைக்குவளை
யாபதியுங் கருணை மார்பின் மீதொளிர்சிந் தாமணியு மெல்லிடையில் மேகலையுஞ் சிலம்பார் இன்பப் போதொளிர் பூந் தாமரையும் பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடு வாழ்க!
நல்வரிசை யமுதிருக்க நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின் பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று ஞாலத்தி லறம்விளக்கும் நாயனுர் குறளிருக்க,நமது நற்றய காலத்தை வென்றேங்குங் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ!
§:2S):Syl:2S:
SSSSS 然蒸蒸蒸蒸源
2s2S2s2S25
8ይ§om%T
畿 S2S2S2S
a
\*A

Page 3
திருவள்ளுவரின் திருவுள்ளக் காட்சி
LBTM SYM MM MThTThu0EESM SiS S C CCJSASAEEEBTSYMSCSSLSSSBSSMBLSBB S E EJ S LSSS
வாழும் உயிர்கள் வருபிறவித் துன்பொழியச் சூழும் நிலைகளில் தோயாமல் - ஏழுணர்வாம் மேலறிவில் நின்றுநிலை மெய்யுணர்தல் கற்பிக்கும் வாலறிவன் மேடைக்கு வந்து
மூவா உலகிற்கு முப்பால் முதலளித்த தாவா இனிமைத் தனித்தமிழன் - தேவாரன் ஒவாத ஒண்குணச் செல்வத்தை ஒவ்வொன்ரு ய் நாவாரச் சொல்வர் நயந்து
ஆதி பகவன்; அறவாழி அந்தணன் ஏதும் தனக்குவமை இல்லாதான் - ஒதிறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதான், வாலறிவன் ஈண்டெண் குணத்தவனே என்று
ஐந்தவித்தான்; அந்தண் மலர்மிசை ஏகினுன் எந்தமிழ் வள்ளுவர்என் றேத்தியே - முந்தும் பிறப்புத் துயர்க்குப் பெருமருந்தென் றெண்ணிச் சிறப்புத் தொழுதார் சிரம்.
பன்னுட் பிரிந்ததாய் சேயைப் பரிந்தணைத்து என்னனும் ஈதற் கிருத்துவள் போல் - அன்னுரை வீற்றிருத்தி வள்ளுவனர் வேண்டும் உளத்தமிழ்தைத் தேற்றி அளிப்பர் செவிக்கு
போரே போரென்றுதினம் பொல்லாத் துயரத்தில் நேரே ஒடிந்துழன்ற நெஞ்சரெலாம் - ஏராக
வான வெளிநிலவில் மான விதானத்தில் 蠶 ஞானமுறக் கேட்பர் நயந்து.
- திருவள்ளுவர் காவியத்திலிருந்து -
 
 
 

ஜோதி 19 5
AATiS ATSiSAiiS ATLiiS AASiiS AAMiS ATiqiqS ATqiSASiiSAiqiS ALiiSATiSASii
Massa NSY حسعصر محلاتیح
கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் சாதனை )
( 魏
2. LqiAMS SqiMTM SqSAMMq qqMMTA SAMMA LqA LSqS A LqAL LqA LqA LSqSAAA LSqSAAA LqSA SLSqMA qLqLSMA LqMA LMA
( ஆசிரியர் )
ள்ெளுவர் குறளிலே முதன் நான்கு அதிகாரங்களையும் இடைச் செருகல் என ஒதுக்கித்தள்ளுபவர்களை இன்று கா ண்கின்ருேம். வள்ளுவர் காலத்திலே இந்த ஆட்சேபனை எழு ம்பவில்லை. பாயிரவியல் நான்கினுள்ளே முதலாவது கட வுள் வாழ்த்தாகும். அதனை வள்ளுவர் செய்தாலும் சரி; அன்றி இடைச் செருகலானலும் சரி; கடவுள் வாழ்த்தில் கூறப்படும் விஷயங்கள் எமது வாழ்விற்கு எந்த அளவில் பொருந்துகின்றன.
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
கடவுள் வாழ்த்தில் மெய்ப்பொருள் இருக்குமானுல் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.
இறைவன் பெருமையை எவரும் அளவிட்டுரைக்க முடி யாது. வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்றநூண்ணியன் அத்தகைய இறைவனை உள்ளத்திலே அன்புசெய்வதற்கு அவ னது திருவடியை நினைக்கவேண்டுமென்கின்ருர், எத்தனையோ சிறந்த உறுப்புக்கள் எல்லாம் இருக்க அடியை ஏன் நினைக்க வேண்டுமென்கின்ருர் என்பது ஒரு கேள்வி. உலகவழக்கிலே கூட அவன் காலைப்பிடித்துக் காரியத்தைச் சாதித்து விட் டான்' என்று சொல்லக்கேட்கின்ருேம். ஆண்டவன் காலைப் பிடித்து விழும்போது நான் என்ற அகங்காரம் அற்றுப்போ கின்றது. அகங்காரம் அற்ற இடத்திலே தான் ஆண்டவன் எழுந்தருளுகின்றன்.

Page 4
I 96 ஆத்ம
அடியைத்தேடிச் சென்ற பூரீமகா விஷ்ணுமூர்த்தி அறிவு
பெற்றுவந்தார். முடியைத் தேடிச்சென்ற பிரமதேவர் பொய் \
யணுகி வந்து சேர்ந்தார். ஆகவே ஆண்டவனது திருவடி, ஞா னத்தைக் கொடுப்பது என்பதாகின்றது. ஞானமுள்ள இட மே திருவடிநிலையம். ஆண்டவனின் ஊன்றிய திருப்பாதம் ஆணவத்தைப் போக்குகின்றது. தூக்கிய திருப்பாதம் ஆன் மாக்களுக்கு ஆறுதலைக் கொடுக்கின்றது. காரைக் காலம்மை யாரும் நீ ஆடும்போது உன் அடியின் கீழிருக்க வேண்டுமெ ன வேண்டுகின்ருர்,
வள்ளுவர் பெருமான் கடவுள் வாழ்த்திலே ஏழுஇடங்
களில் இறைவனது திருவடியைக் குறிப்பிடுகின்ருர்,
“ வாலறிவன் நற்ருள் '
* மலர்மிசையேகினுன் மாணடி’ * வேண்டுதல் வேண்டாமையிலா னடி ’’
தனக்குவமையில்லாதான் தாள் ' * அறவாழியந்தணன் தாள்' * எண்குணத்தான் தாள்' * இறைவனடி '
எழுத்தைக் கொண்டு எழுதினவனை எண்ணிப்பார்க்கின்ருேம். அதேபோல உலகத்தைக் கொண்டு அதை உண்டாக்கினவனை எண்ணவேண்டும். அவனை எண்ணுதற்கு ஏற்றபொருளாக இருப்பது அவனது திருவடியாகும். தூய அறிவு சொரூபமாக விளங்குபவன் ஆண்டவன் ஆனபடியினுல் வாலறிவன் நற் ருள் என்ருர், இப்படிப்பட்ட இறைவன் எங்கே இருக்கின் முன்? நம்முடைய மனத்தாமரையில் கூடவே வந்தவன். அக ங்காரத்திரையை எடுத்துவிட்டால் திருவடிதானேயுமக்குவ ந்து வெளிப்படுமே.
அப்பகவானை எப்படி வணங்க வேண்டும்? அவனிடத்தி
லே சரண்புகவேண்டும். பிணம் சுடுதடிபோல நான்வேறு அவன்வேறு என்று இல்லாது ஒன்ருக வேண்டும். இறைவனே வேண்டியவன்,வேண்டாதவன் என்று வேற்றுமைபாராட்டா
 
 

ஜோதி 197 ^ی
மல் தன்னைச் சரண் என்று அடைந்தவர்கள் எல்லார்க்கும் அருள் செய்பவன். அப்படி விருப்பு வெறுப்பில்லா இறைவ னைச் சரண்புகுந்தால் நல்வினை, தீவினை ஆகிய இருவினைக ளும் சேரமாட்டா. நல்வினை தீவினைக்குக் காரணம் விருப்பு வெறுப்பாகும். விருப்புவெறுப்புக்காரணம் ஆசையாகும்.
ஆசைப்படப்பட ஆய்வருந்துன்பம் ஆசைவிடவிட ஆனந்தமாமே. உலக வாழ்க்கையில் நமக்கு அடிக்கடிவருகிற மனக்க
வலைகளை மாற்றுவற்கு மருந்து அவனது திருப்பாதமே. நம க்கு ஒருமனக் கவலை வந்தால் அதைப்போக்கிக்கொள்ள நம் மைக்காட்டிலும் சிறந்தவனன வேருெருவனிடம் போகின் ருேம். அவன் காலில் விழுந்துகூடக் கேட்டுக்கொள்ளுகின் ருேம். அவனுல் அதுமுடியவில்லையானல் அவனைக்காட்டிலும் சிறந்தவனென்று இன்னெருவனிடம் அடைக்கலம் புகுகின் ருேம். இப்படிப்பலரிடத்தில் சென்றும் நம்மனக்கவலை நீங் காதபோது எல்லாருக்கும் மேலானவனன இறைவனது கா லேப்பிடிக்கின்ருேம். அவனுெருவணுலே தான் எமது மனக்க வலையை நீக்கமுடிகின்றது.
இறைவன் தர்மங்களின் சமுத்திரம். ஆனல் சாதாரண சமுத்திரம்போல் அலைமோதிக் கொண்டு அமைதியற்ற சமு திரம் அல்ல. அசைவில்லாத சாந்தமயமான சமுத்திரம். அந் தச் சமுத்திரத்தை அணுகினல் நமக்கு அறஉணர்ச்சியும் அமைதியும் கிடைக்கும். சகலகுணங்களுக்கும் இருப்பிடமா
னவன் பகவான் என்பதை உணர்ந்து அவனுக்கு வணக்கம்
செலுத்த வேண்டும் என்று அறியாதவனுடைய மூளை இரு ந்தும் இல்லாதது போல்தான். தெய்வநம்பிக்கையை விடா மல் அவனே கதிளன்று அவனிடம் சரண் அடைந்தவர்கள்
தாம் பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்.
மனிதன் பிறந்த நோக்கத்தை அறியான். இறந்தபின் செல்லும்மார்க்கத்தையும் அறியான். பிறக்குமுன் எங்கிரு ந்தான் என்பதையும் அறியான். இவற்றுக்குரிய விடையறி

Page 5
1 98 ஆத்மி)
ந்து மயக்கந்தெளியவேண்டுமானுல் இறைவனது திருவடிஞா னமொன்றே வழிகாட்டியாகும். ஆனபடியால்தான் ஜீவராசி கள் எல்லாம் திருவடியாத்திரைக்காரர் என்னும் பெயரைப் பெறுகின்றன. ஜீவகோடிகள் எல்லாம் இறைவனது திருவடி யைநோக்கியே யாத்திரை செய்கின்றன. இப்பேருண்மையை உள்ளுறைப்பொருளாகவைத்தே வள்ளுவர் பெருமான் கட வுள் வாழ்த்தில் ஏழு இடங்களில் திருவடியைப் பற்றிக் குறி ப்பிட்டுள்ளார்.
மூன்று ஞானிகள்.
வள்ளுவர், காந்தி, வினுேபா ஆகிய மூவரை ப்பற்றியும் மூன்றுஞானிகள் என்ற தலையங்கத்து டன் புத்தகம் ஒன்று உருவாகி உள்ளது. வள்ளு வர் கருத்துக்கள் பிந்திய இருவரது வாழ்வுக்குள்ளும் எவ்வாறு புகுந்துள்ளன என்பதைப் பிடித்துக் காட் டுகின்றர் நூலாசிரியர் திரு. நெரூர் சுப்பரமணியம் அவர்கள். மூவரும் பாரதத்தின் தீர்க்கதரிசிகள் பர ம்பரையில் வந்தவர்கள். அவர்களுக்குள் வள்ளுவ ரே முதலிடத்தையும் முதன்மையிடத்தையும் வகிக் கின்றர் என்றல் எந்தத் தமிழ் மகன்தான் ஆனந்தி க்காமலிருக்கமுடியும். மூவரையும் ஒரேகண்ணுடி யில் காண இந்நூல் வாய்ப்பு அளிக்கின்றது.
75 நயாபைசா. வேண்டுவோர்
u_חוr( சர்வோதயப் பிரசுராலயம் , தஞ்சாவூர், (தென்இந்தி
என்றவிலாசத்திற்கெழுதிப் பெற்றுக்கொள்க.
SA 00SLsA00S0eSeS00YSLL0YSLL00S SJSLA0YS00YSLLL 0 SYYL0YSA00YSAL 0SLL 00YSeSSAS 00YSL 00SLS 0SL0eSJs0eSASMSSseSLL eeSS 0S00SALA0SL0SL0MSAL0JS
()
(4 م
s
•
 
 

ஜோதி 199
ஒம் * உலகம் உவப்ப உதித்தது திருக்குறள்.
24 4, 60 இல் நடந்த கொழும்பு தினகரன் தமிழ் விழாக்
கவியரங்கில் ஒலிபரப்பப்பட்டது.
Ay
(ப ர ம ஹ ம் ஸ தா ச ன்)
-<@పాస్త్ర
στου 2ου கடந்தும் எதிலும் கலந்தும் உள வல்ல பரமன் மனங்கொண் டருள்வெளியில் அண்டங்கள் கோடியமைத் தாடவதி லோர்சிறிய பிண்டந்தான் பூமி: இதிற் பேராழி சூழ்கண்டம் ஐந்தாம்; அவற்றினுளே, ஆசியா வேபெரிதாம். விந்தைத் துணைக்கண்ட மாய் அதனி லேவிளங்கும் பாரதத்தில், இன்பப் படைப்பாய், முதல் மனித வேர் முளைக்கும்தூய விளைநிலமாய்ச்செந்தமிழ்ப்பொன் நாட்டைப் படைத்திட்ட ஞாலத்தான், வையகத்துள் ஏட்டுக் கடங்காப்பல் இன்பதுன் பத்தினையும் வைத்தான்; அவற்றின் வகைதெரிந்த மேதைசிலர், 'இஃதெல்லாம் ஈசன் எழில்விளையாட்டே, அவனின் வண்ணக் கழல்சார்ந்து வாழுவதே வாழ்க்கை'யெனும் உண்மை உணர்ந்து ஒழுகி, அதனைப்பல் சமய நெறியாகத் தந்தார் உலகிற்கு! அமர நிலையுணர்த்தும் அருள்நெறியஃ தென்ருலும் வல்ல தவத்தவர்க்கே வாய்த்தவழியன்றி அது எல்லோரும் பின்செல்லற் கேற்றதாய்த் தோற்றவிலே, புன்மைச் சமயப் புறவேடங் கொள்வதலால், உண்மைச் சமயத் தொழுகுவார் எத்தனைபேர் ? அன்ருடம் கஞ்சிக் கலையும் அபலையர்க்குப் பொன்ருத வேதப் பொருளுரைத்த தாற்பயனென்?
எல்லையற்ற மக்கள் குலம் இவ்வுலகை நன்குணர்ந்து
வல்ல பெருவாழ்வு வாழவழி காணுது, பொய், களவு, சூது, புலை, கொலே, கட்காமம்,

Page 6
200
ஆத்ம
ஐயுறவு, வஞ்சம், அழுக்காறவா, வெகுளி, இன்னு வகந்தை, இடுக்கண், மடமை, மிடி, என்னும் கொடிய பல இருட்பேய் வசப்பட்டுத் தத்தளித்து மாயும் தருணம், பரமன், தன் முத்தமிழ்ச் செல்வி முகம்நோக்க, முன்மொழியாள், பொன்றத் தமிழ்ச்சங்கப் பூந்தொட்டிலில் வளர்ந்த ྾འི་ என்றென்றும் குன்ரு இளமை எழிலரசி, பொங்கி யெழுந்து பொருமைக் கடலழித்தும் மங்காத செல்வ வளம்படைத்த மாதரசி, தொல்காப் பியம்போன்ற தூய இலக்கணங்கள் பல்காப் பியமாய்ப் படைத்தளித்த பாவை, உயிர்க் கற்புக் கனற்சிலம்பி, கனகமணி மேகலையாள், அற்புதசிந் தாமணியாள், அழகுவளை யாபதியாள், குண்டலகேசி, குளிர்கா வியவிழியாள், எண்டிசையும் போற்றும் எழிற்கம்ப நாடகத்தாள் சிந்தை மகிழ்ந்தாள்; திருமுடிக்குத் தக்கதொரு விந்தைமணிமகுடம் வேண்டுமென்பதும் உணர்ந்தாள்! உலகை நினைந்து ஒருகணம் உட்குவிந்து எழில்முறுவல் ஒன்றை இதழில் தவழவிட்டாள்! முத்து நகையில் முகிழ்த்தபொய்யா மொழியாய், வித்தகப் பொற்கதிர்கள் வீசித்தினகரனய், உலகம் உலப்ப உதித்தது திருக்குறள்தான்! கலக மடமையிருட் கட்டுக் குலைந்ததம்மா! அன்பை மலர்த்தி, அருட்தேன் மணம்பரப்பி, பம்பி அறிவொளியும் பாய்ந்து படர்ந்ததம்மா! மூவுலகும் போற்றும் முழுமுதல்போல் மொய்த்தகுறட் பாவடியை வையம் பணிந்துவர வேற்றதம்மா! கொஞ்சும் அழகுமொழிக் கோதையர்கள் பற்பலரும் தஞ்ச மடைந்து தமதாக்கிப் போற்றலுற்ருர்! உய்வோம் இனியென்றுரைத்துப் பணிந்தேத்தி வையம் புகழ்ப்பொன் மலர்துவி வாழ்த்தினகான்! அகரம் எழுத்தனைத்தின் ஆதியாய் நிற்பதுபோல் மகிதல வாழ்விற்கு வாய்த்த முதன்மறையாம்! சாதிமத நாடுநிறத் தாழ்வுயர்வுப் பேதமற்ற
 
 

ஜோதி 201
நீதிநெறி காட்டும் நிகரில் தமிழ்மறையாம்! உள்ளத்தாற் பொய்யா தொழுகி, உலகத்தின் உள்ளத்தி லெல்லாம் ஒளிரும் பொதுமறையாம்! எப்பாலும் எந்நாடும் எம்மதமும் எவ்வுலகும் ஒப்பிமகிழ்ந் தேற்ற ஒருவாழ்க்கைப் பேரறநூல்! வாழ்க்கை நுணுக்கம் அனைத்தும் வகுத்தெடுத்து ஏக்கத் துழல்வார்க் கினிதுணர்த்தும் பேரருள்நூல்! அன்பும் அறமும் அருளுமே இல்வாழ்க்கைப் பண்பும் பயனுமெனப் பாருக் குணர்த்திடுநூல்! பழுதுண்டு மற்றப் பணிக்கெல்லாம் என்றுணர்த்தி உழுதுண்டு வாழ்வார்க் குயர்வுதரும் ஒப்பருநூல்! அருளால் உவந்தீந் (து), அறத்தாற் பொருளிட்டி, மருவற் றிருவர் மனங்கலந்த காதலினுல் இன்புற்று வாழும் இயல்பமைந்தார், இறைவன் இன்பவீ டெய்தல் இயல்பென்று காட்டிடுநூல்! அப்பால் உளவீ டதனை அகத்தடக்கி முப்பால் அமுதாய் முகிழ்த்த தமிழ்ச்செல்வம்! வாழ்க்கைத் துணையாய் மறுமைக் குறுதுணையாய்க் காக்கப் பிறந்த கனகமணிக் காவலனும்! மக்களைப் போன்றுலகில் வாழும் கயவர்தமைச் சிக்கென்றிடித்துத் திருத்தும் உயிர்த்தோழன்! வண்ண முகம் திருத்த வாய்த்த பளிங்கினைப்போல் எண்ணம் தனைத்திருத்தற் கேற்ற அகக்கண்ணுடி. வண்ணத் தமிழரசி வான்புகழும் பேரரசி என்னத் தனைப்பெற்ருட் கேற்றம்அருள் கண்மணியாம் ஆயிரத்து முன்னுற்று முப்ப தருங்குறளாம் தூய மணிமகுடச் சோதி யினல் நீதிமுறை
ஆளும் தமிழ்த்தாப் அரசென்றும் வெல்கவென்று வாழ்த்திப் பணிவோம் மகிழ்ந்து !
YLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLLLL0zLLLL0000LL0L0L000LLLY

Page 7
2O2
ஆ
t
தன்வாழ்வும் - சமூகவாழ்வும்
கா. பொ. இரத்தினம் தலைவர் தமிழ் மறைக்கழகம்
இன்பத்தை நாடுவது உயிர்களின் இயல்பு என்கின்றனர் அறிஞர்கள். மக்கள் யாவரும் இன்பத்தை நாடி அலைவதை நாம் நாடோறுங் காண்கிருேம். மக்கள் இன்பத்தைப் பெறும் வாயில்கள்பலவாகும். தாம் தாம் விரும்பியதன் வாயிலாக இன்பத்தைப் பெறுதற்கு மக்கள் முயல்வது இயல்பு.
குழந்தைகள் விளையாட்டுக்களின் வாயிலாக இன்பம் பெற
முயல்வர்; கலைஞர்கள் கலைப்படைப்புக்கள் வாயிலாக இன்பம் பெற முயல்வர். போர் வீரர் போரிலே செய்யும் மறச் செயல் களால் இன்பத்தைப் பெற முயல்வர். களவு முதலிய பாதகங் களைச் செய்பவர்கள் அவற்றைச் செய்வதால் இன்பத்தைப் பெற முயல்வர். இவ்வாறு பலரும் பலவாயிலாக இன்பத் தைப் பெற முயல்வதால் இவர்களுக்கிடையிலே போட்டியும் பூசலும் மாறுபாடும் உண்டாகிவிடுகின்றன. சிலவாயில்கள் சமூக வாழ்வுக்கு மாறுபட்டனவாகவும், சில வாயில்கள் தன் வாழ்வுக்கு மாறுபட்டனவாகவுமிருக்கின்றன.
எனவே, இன்று தன் வாழ்வு, குடும்பவாழ்வு, நாட்டு வாழ்வு, உலக வாழ்வு என்பவற்றில் உண்டாகும் போட்டி பூசல்களுக்கும், பொருமை புழுக்கங்களுக்கும் மக்கள் தகாத வாயில்களால் இன்பம் அடைய முயல்வதே அடிப்படைக் காரணமாகும்.
மக்கள் வாழ்வை ஒவ்வொருவராக வாழும் தன்வாழ்வு என் றும் எல்லோரும் கூடிவாழும் சமூகவாழ்வுஎன்றும்இருபெரும்
பிரிவாகவும் பிரிக்கலாம். இந்த இருவகை வாழ்வும் இசைந்து சென்ருல் இவ்வுலகில் இன்பமும் அமைதியும் என்றும் நிலைத்து
நிற்கும். இரண்டும்மாறுபட்டு முட்டிக்கொண்டால்துன்பமும் "
துயரும் நிறையும். எனவே, இந்த இரன்டையும் முரண்படா மல் நடத்த மக்கள் பயின்று கொள்ளல் வேண்டும். தனக்கும் சமூகத்துக்கும் நல்லதை அறிந்து முறையாக வாழுதலையே
 

ஜோதி 203
வள்ளுவர் பெருமான் 'வையத்தில் வாழ்வாங்கு வாழும்
நெறி' என்கிருர்,
சமூகத்துக்குஎவ்வித இடர்ப்பாட்டையும் உண்டாக்காத முறையில் ஒருவன் இன்பத்தை அடைய முயல்வதிலே பிழை யில்லை. சமூகத்துக்கு இடர் விளைவிக்கும் எதனையும் தன் இன்பம் கருதிச் செய்தல் கூடாது. இவ்வாறு பலர் செய்வதா லேயே தன்வாழ்வும் சமூகவாழ்வும் கேடடைகின்றன. எனவே மனிதர் தாம் செய்யும் ஒவ்வோர் அலுவலையும், பிறருக்கு - சமூகத்துக்கு - எவ்வித இடரையும் விளைக்காது என்று ஆய்ந்தறிந்தபின்னரே செய்தல் வேண்டும்.
பொய், கொலை, களவு முதலியன சமூக வாழ்வைப் பாதிப்பன வாதலின் இவற்றை ஒழிக்குமாறு உலகத்திலே அறங்கூற முற்பட்ட நூல்கள் யாவும் உரைத்துள. இவற்றை ஒழிக்க வேண்டுமென்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர்.
இவற்றைப்போல ஒழிக்கப்பட வேண்டியன பலவுள. தீண்டாமை பாராட்டுதல், நிற வேற்றுமை பாராட்டல், வாழ்தற்கு வகையின்றிப் பலர் வாடச் சிலர் பொருளைக் குவித்துக் குபேரராக வாழுதல், சமயப் பூசல்கள், மொழிப் பூசல்கள், வகுப்பு வாதங்கள் முதலியன குறிப்பிடத்தக்கன. இவற்றை ஒழித்தற்கு எல்லோரும் முயலுதல் வேண்டும். இந்த முயற்சியில் அளவுக்கேற்பவே தனிவாழ்வும் சமூகவாழ் வும் சிறப்படையும்.
இன்று தமிழினத்தின் வாழ்வைச் சிதைத்துப் பாழாக்கு வனவற்றில் சாதி வேற்றுமைகளைப் பொருட்படுத்தித் தீண் டாமை பாராட்டுதல் தலையிடம் பெற்)ளது. தீண்டாமை பாராட்டுதலே ஒழித்தாலன்றித் தமிழரில் தன்வாழ்வும் சமூக வாழ்வும் சிறப்படைதற்கு வாய்ப்புண்டாகாது.
அரசியற்றுறையிலும் தன்வாழ்வை வளப்படுத்துதற்குச் சமூகவாழ்வைப் பாதிக்குஞ் செயல்களைச் செய்யச் சிலர்

Page 8
204 ஆத்ம
முற்படுகின்றனர். இதனுலும் தமிழினத்தின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படுகிறது. بي(;{
தன் வாழ்வை வளம்படுத்த முயல்வது போலச் சமூக வாழ்வையும் ஒவ்வொருவரும் வளம்படுத்த வேண்டும். சமூக வாழ்வு எப்படிப் போனுலும் தன்வாழ்வு சிறந்தாற் போதும் என்று எண்ணுகிறவர்கள் சமூகத்துரோகிகளாவர்.
இன்று தமிழர் பலர் இனவாழ்வைப் பற்றிச் சிறிதுஞ் சிந்தியாது தன் வாழ்விலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கின் றனர். இதனுலேயே தமிழினம் நல்வாழ்வு வாழ முடியாது தவிக்கிறது.
சமூகத்திலே பெரியார்கள் எனப் போற்றப்படுவோர் சமூக வாழ்வினைத் தம் சொற்களாலுஞ் செயல்களாலுங் கெடுத்துவருகின்றனர். தாம் அறிந்த உண்மையை உரைக்கத் தக்க நெஞ்சுறுதி இவர்களிற் பலரிடம் இல்லை. சமூகத்துக்கு கேடுவிளைக்கும் கண்மூடிப் பழக்கவழக்கங்களை ஒழிக்க முயல் வோர் மிகச்சிலரே. இப்பழக்கவழக்கங்களைத் தழுவுவதால் மக்கள் எண்ணத்திலே பிறழ்ச்சி உண்டாகிறது. இதனுல், அவர்கள் நன்மை தீமைகளுக்குள்ள வேறுபாட்டைஉணராது வாழும் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். தீமைகளைக் கண்டு பொங்கும் உளப்பாங்கு அவர்களிடத்து இல்லாமற் போய்விடுகிறது.இந்நிலைமையை ஒழித்தற்குச் சமூகவாழ்வினை உயர்த்த முயல்வோர் உழைத்தல் வேண்டும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமான் தாம் பிறந்த குடியை - குலத்தை - உயர்த்துதல் ஒவ்வொருவருக் கும் இன்றியமையாத கடன் என உரைத்துளர். “குடிசெயல்
எடுத்துக் காட்டியுளர். தன்வாழ்வை மட்டுமன்றித் தமிழினத் தின் வாழ்வையும் உயர்த்த முயலுதல் தமிழர் ஒவ்வொருவர
வாழ்தல் வேண்டும்.
குற்றமிலனுய்க் குடிசெய்து வாழ்வானேச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு - தமிழ்மறை 1025
வகை’ என்ற அதிகாரத்தில் தம்முடைய கருத்துக்களை அவர்
தும் முதற் கடமையாகும் என்பதைத் தமிழ்மக்கள் உணர்ந்து
*
 
 

ஜோதி 205
TMTMeTee eSeTeLeMzMeMeMMSM SMeMeMeSMeMeMeSYMYSMeSeeSeeeeeBee
స్థిత్మిళ్ళి
திருவள்ளுவர் త్కి
9 SeSeSkeLTeSTeSLLMSMMS LESLMLSrMeSTeSreMeSTeLSLMSTeSkeSkLeSeeeekeeS
శ్రీగా
గా
| நெரூர் சிவசுப்பிரமணியம் )
திமிழ்நாட்டில் தோன்றிய தத்துவதரிசிகளுள் வள்ளு வரே முதலிடம் வகிக்கின்ருர், அவர் நூலாகிய திருக்குறள் அளவில் சிறியதேயாயினும் மனிதனுக்கு ஆகும் அறிவையெ ல்லாம் நிறைவாகப் பெற்று அமைவதொன்று. அது தமிழ் இலக்கியங்கள் பலவற்றிற்கும் முதனுாலாகவும், அறநூலாக வும், சமுதாய அமைப்பு நூலாகவும் பலவிதத்தும் தோற் றம் அளிப்பது. அவர் போதனைகளைக் கொண்டு அவர் சித்தி ரித்த சமுதாயம் இது, இது எப்படி மனிதனை மேலெழ வழி வகுக்கின்றது என்பதை ஆராய்வது பபனுடையதாகும். இன் று உலகம் விஞ்ஞானம் முதலிய பல சாதனங்களால் உரு மாறி நிற்கிறது. நாகரீகம் மிகவளர்ந்ததாகக் கருதப்படும் இன்று மனிதசமுதாயம் நிறைவும் அமைதியும் இல்லாமல் மிகவும் அல்லற்படுகின்றது. பண்டையில் சீரமைப்பு மிகஅவ சியமாயிற்றே இல்லையோ இன்று சீரமைப்பு இன்றேல் மணி தவாழ்க்கை ஒருகணமும் கூடாதநிலை தோன்றியுள்ளது. இந்நிலையைப் பரிகரிக்க பிறநாடுகளில் பலமுயற்சிகள் எழுகி ன்றன. நாம் அவைகளையெல்லாம் இங்கு ஆராய்வதெனில் அது நீண்டுவிடும். இந்நாட்டில் சென்ற நூற்றண்டுகளுக்கு மேலாகச் சீர்கேடு வளர்ந்து வருகின்றது. அதைமாற்றவும் அமைதியையும் மேம்பாட்டையும் நிலைக்கப் பல பெரியார்கள் முயன்று வந்துள்ளார்கள்.அவர்களில் ஒரிருவரைமட்டும் மகா த்மா காந்தியடிகளேயும் அவர்சீடர் விநோபாபாவே அவர் களையும் இங்கு ஆராயப்புகலாம். அவர்களும் ஆன்ருேர் மர பில் அமைவதால் அவர்களை நம்தமிழ்மறைவகுத்த திருவள்

Page 9
206 ஆத்ம
ளுவருடன் ஆராய்வதையே இச்சிறுநூலின் பொருளாகக் கொள்ளப்படுகின்றது.
தமிழ்மறை நல்கிய புலவர் திருவள்ளுவர் உலகை உய் விக்கவந்த பெரியார்களில் ஒருவர். அவரது சரிதம் இற்றெ
ன தெளிவு பட்டதொன்றன்று. அது பல கர்ணபரம்பரைக்
கதைகளின் கோவையாகவே அமைகின்றது. அவைகளைப்புற த்திட்டு அவர் உதவியுள்ள நூலைக்கொண்டு அவரை ஓரள விற்கு யாரென அளவிடலாம். உலக அறிவைப் பலதுறை களிலும் பேரளவில் பெற்றவரென்பதை அவர் நூல் வெளி யிடுகின்றது. உழவன் எருவிடுதல், தூதுவன் தூதுரைத்தல் அரசனது மாண்பு, தானே போர்முனையில் அணிவகுப்பது இவை பலவும் அவரால் தெளிவாகக் கூறப்படுகின்றன. அதே போன்று இளமையில் காதல் செய்தல், அது இல்லறமாக மி ளிர்வது, முதுமையில் துறந்து மெய்யறிவு பெறுதல், இவை யும் நுட்பமாக விளக்கப்படுகின்றன. இவைகளைக் கொண்டு அவர் கல்வியின் கரைகண்டவர், பேரறிஞர், வாழ்க்கையை முறைப்பட நடத்தியவர், ஆன்றவிந்தடங்கிய பெரியார் என் பதை நாம் துணிகின்ருேம். அவர் பேரிலக்கியம் எழுதவில்லை. சிறுநூல் குறளையே எழுதியுள்ளார். ஆயின் அந்நூல் மனிதன் ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கையின் பலபகுதிகளிலும், பல சந்தர்ப்பங்களிலும் வாழ்க்கையை நிறைகாக்க வேண்டியனல் லா அறிவையும் புகட்டுவதாக நிற்கின்றது. வாழ்க்கையின் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினேயும் பெறுதல். அப்பயன் முற்றுமாகப் பெற உதவுவது திருக்குற ள். சிறுகுறட்பாக்களின் எளிய மொழியில் விரிவுரைகளின்
விளக்கமின்றி பலருக்கும் பொருள் விளக்குவதாயுள்ள குற
ட்பாக்கள் 1330 கொண்ட நூலே திருக்குறள்.
அந்நூல் தமிழில் ஒரு தொன்னூலாகவும் முதல் நூலா கவும் நிற்கின்றது. பின்னெழுந்த பல நூல்களிலும் அதன் '
பொருளும் நடையும் தெளிவும் ஆசிரியர்களால் பயன்படு த்தப்பட்டுள்ளன. எப்பெருநூலும் திருக்குறளேக் குறிப்பிடா
 

ஜோதி 207
மலோ,அதன் பகுதிகளைத் தன்னுள் பொருத்தாமலோ இருப் பதில்லை. அதனலேயே அது, மறைபோன்ற சிறப்புடன் திக ழ்கின்றது. அந்நூலை அவ்வப்பொழுது தமிழர் முழுதுமாகப் பயன் படுத்திமேம்பாடடைந்துள்ளார்கள். தமிழர் பண்பாடு என்று தமிழர் தம்மைச் சிறப்பித்துக் கொள்வதெல்லாம் இந்நூலினின்றே உண்டாயது என்று கொண்டால் மிகையா காது. அன்றுமட்டுமன்று இன்றும் பயன்பட உள்ளது இந் நூல். குறட்பாக்கள் வாழ்க்கைச் சூத்திரங்களாக அமைகின் றன. இந்நிறைந்த நூல் மனிதனுக்கு உற்றுழி உதவியும் இழுக்கலுடையுழி ஊன்றுகோல் போலமைந்தும், உடுக்கை இழந்தவன் கைபோன்றும் இடுக்கண்களைய உதவி நிற்கின்றது இத்தனிப்பெருமை அது பெறுவதால் அதைப் பல சமயத் தவரும் பாராட்டி நிற்கின்ருர்கள். அறிவு பெற்றேர் அதற் கு விரிவுரைகளை எழுதுகின்ருர்கள். அதை மறுப்பவர் யாருமி ல்லை. என்றும் தனிச்சிறப்புடன் நிற்பது அது. F LDLITF IT f) யார்களையும் தத்துவதரிசிகளையும் ஆன்ருேர்களையும் எள்ளி நகையாடுபவர்களும், திருவள்ளுவரை அவ்விதம் செய்வது கூடாமல் அவர் தம் கருத்துக்களை அவருக்கும் ஏற்றிப்பொ ருத்த அவர் நூலிற்கு தம் வழி விரிவுரைகளையும் எழுதுகின் ருர்கள். அவர்களும் திருவள்ளுவரின், அநுமதியைப் பெற் றவர்களாகத் தோற்றமளிக்க முயல்கிருர்கள். ஆயின் இவர் களால் திரிக்கப்படா அளவில் தெளிவும் நிறைவும் கொண் டுள்ளது திருக்குறள்.
( மூன்று ஞானிகள் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது )
AA eAS eLeSeS AAS eAS AAS AS AAAS esS eALS ASAS AAAAS es S ALASAS ALALS sS AeAAS AAAAS ALS eASAAA LAS ALS eLSAS AAALLLSS SeeLSe ALAS LALS AAAAAS AeS eeLA eALA LA AeLe Ae ee ee eeeeeL Le eee eAe eAeAe LLA AAAAA AAAA eA eLA LALeA LSLAL ALeAe eeeS ME G00 00e 0e00 0S0e0e0eL0 0 000 000 JY 00000ee0000 00 0e000 G0 G000GG00GG c0G GG G0GG0GG JG0G0G0L000000LeLeLc K 0e00e ce cLe LeLe LeLeLee eL
உலோபியைப் போல் உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலக்
குடிசையிலே வாழ்கின்றது.
- ஷேக்ஸ்பியர் -

Page 10
2 O 8
சுத்தானந்தரின்
象
பூரீரங்கம்
அருமை நண்பரே \p)
இங்கே வைஷ்ணவ சித்தாந்தம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தேன் நம்மாழ்வாரின் பாசுர த்தில் மூழ்கியிருந்தேன். இப்படியே தவத்திலும் பரமாத்மா ஐக்கியத்திலும் அவன்மயமான ஜிவேசரின் கைங்கர்யத்திலும் வாழ்க்கை சென்ருல் நல்லதென்றே நினைத்தேன். காசி, பிரு ந்தாவனம், பத்ரிநாராயணம் முதலிய தலங்களுக்கு யாத்தி ரை செய்யவும் முனைந்துள்ளேன். இறைவன் திருவுளம் வே ருெரு பணிக்கு ஆணையிடுகிறது. என் அரிய நண்பர்பூரீ ဤပ္ပိ . சுந்தர மையர், தேவகோட்டையில் தேசிய கலாசாலை நாட்டி என்னை அழைக்கிருர், ஐம்பது ரூபாய் சம்பளம் பேசி ஒப்பு க்கொண்டு விட்டேன். கட்டுப்பாடற்ற தேசிய கலாசாலை யாதலால், வந்தே மாதர கோஷத்துடனும் இராட்டினத்தி ன் ஒங்காரத்துடனும், கீதா நா தத்துடனும் கல்வி நடக்கும் என்றே நினைக்கின்றேன். பூரீ சுந்தர மையர் பெரிய அறிவாளி தேசபக்தர், நட்பிற்கினியவர் ஆதலால் நான் மீண்டும் தெ ற்கே வரக் காலெடுக்கிறேன். அடுத்த புதன்கிழமை மதுரை யில் தங்களைச் சந்திக்கிறேன்.
நான் இதுகாறும் எழுதிய நூல்களையெல்லாம் ஓர் அரிய நண்பரிடம் கொடுத்துவைத்துள்ளேன். ஏனெனில் என் வாழ் க்கை, சாதனைக்கும் ஆத்ம சோதனைக்குமே எங்கெங்கோ செ ன்று கொண்டிருக்கிறேன். அவர் குறித்த சமயத்தில் எல்லாம் கவனமாகத் திருப்பி அனுப்புவார். வனவாசம் செய்த அர்' ஜ"சனன் ஆயுதங்களை மரப்பொந்தில் வைத்துச் சுற்றியது போல் நானும் எனது நூல்களே அன்பர் வீடுகளில் வைத்துச்
 
 
 
 
 
 
 
 

ஜோதி 209
சுற்றுகிறேன். அவை கறையானுண்டு அழிந்ததுபோக இருந் தமட்டும் லாபம் மகான்களுடைய திருவாக்குகள் எத்தனை யோ, மூவர் தேவாரங்கள் எத்தனையோ, தமிழ்க்கலை நூல் கள் எத்தனேயோ அழிந்தொழிந்தன. எனது எழுத்து உல கிற்கு ஏதாவது பயணுகும் என்பது இறைவன் இச்சையானல் த எல்லாம் அவன் பாதுகாப்பிலிருக்கும். எனது பேர் புகழுக் கும் சுயநலத்திற்கும் அவை எழுதப்பெற்றதெனில் அவை அழிவதே நலம். பேணுவிலிருந்து பூத்த மலர்களெல்லாம் இறைவனுக்கே அர்ச்சனையாகட்டும் நான் எழுதுவது எனது வாழ்விற்கொரு ஞானசாதனம்; மனித சமுதாயத்திற்குச் செய்யும் கைங்கரியம். இறைவனை மகான்கள் எப்படி அறிந் தார்கள் என்று நான் ஆராய ஒருவழி. சீனத்து மகான் லவோத்ஸன் போல் அந்தர்முகப்பட்டுபரமோனியாக இறை வனை இரண்டறக்கலந்து ஆளே தெரியாமல் ஏகாந்தமாக யிருந்தாலும் நல்லதுதான் என்று தோன்றுகிறது.
ஏதோ என் மனதில் உதித்ததைப் பேணுமுனையில் நகாசு செய்து தங்களைப் போன்ற நண்பர்களிடம் தந்துவிட்டுக் கா ற்றைப்போலத் திரிகிறேன். என்னை மறந்தாலும் என்னுள் யானுயிருக்கும் உங்கள் அந்தராத்மனை மறவாதீர்கள். ஒம் தத்ஸத் !
தேவகோட்டை
நண்பா
எனது பாடல்களைத் தாங்கள் மாணவருக் குச் சொல்லிவைப்பது பற்றி மகிழ்கிறேன். அவை தமிழக த்தில் பரவ இன்னும் காலம் வரவில்லை. என் வாக்கும் கனி
யவேண்டும்.
நிற்க, இங்கும் நான் சாரணரைப் பயிற்றிவருகிறேன். ஆனல், எனது தேசாபிமானம் அவர்களுக்குக் கதர் அங்கி தான் தருகிறது. மாணவர் இங்கே அழகாக நிற்கின்றனர்.நா னும் அவர்களுடன் நிற்கிறேன். சுற்றிலுமுள்ள கிராமத்திலிரு

Page 11
210 ஆத்ம
ந்து நானும் பூரீ சங்கரையர் என்ற நண்பரும் நூல்க ண்டுகள் வாங்கிவருகிருேம். சின்ன மைனர் வீட்டுக் கொ ல்லையில் தறி வைத்து நெய்கிருேம். நாங்கள் நூற்ற கதரை யே அணிகிருேம். சாரணருக்கு இது முதற்பாடம், சுதேச விரதம் தன்னுதவி.
நானும் காலை மாலை ஒழிந்த போதெல்லாம் மக்கம் ஒட் டிப் பழகுகிறேன். ஆனலும் அதெற்கென்று பிறந்த செள ராஷ்டிர லிங்கையாவின் பொறுமை எனக்கு இல்லை.
சாரணர் சுதேச கீதங்கள் நன்ருக பாடுகிருர்கள்; திரு விழாக்களில் தொண்டு செய்கிறர்கள். ஸ்கெளட் (Scout) பத்திரிகையில் சமீபத்தில் அவர்கள் பலி நிறுத்தம் செய் ததை பற்றிப் படித்திருப்பீர்கள். காளி கறுப்பன் என்று கல்லைநட்டுஆடுகோழி பலியிடும் இரத்தபூஜைஅடியோடுஒழிய வேண்டும். இது மூடப்பழக்கம். இப்படி நடக்குமிடங்களில் கல்லை எடுத்தெறிவது நல்லது. கோயில்களெல்லாம் கலா சாலேகளாய்விட்டாற்கூட நல்லதென நினைக்கிறேன்.
சமீபத்தில் சில தலங்களுக்குச் சென்றிருந்தேன். திருப்பெ ருந்துறைக்கும் சென்று மாணிக்கவாசகரைத் தரிசனம் செ ய்தேன். கோயில் இருள் அடர்ந்திருக்கிறது. கடவுட்சிலைகள் மெழுக்குப் பிடித்து நாறுகின்றன. கர்ப்பக்கிரகத்தில் மனிதன் நிற்க முடியாது. சாமி எப்படித்தான் இருக்குமோ? சர்ச்சுகள் ஜைனமந்திரங்கள் போலக் காற்ருேட்டமாகக் கோயில்களை
அமைத்து சுத்தமான சலவைக்கல் லால் தெய்வ தத்துவங்
களைத் துலக்கும் நடராஜா போன்ற வடிவங்களை நாட்டி, கல்லை நினைக்காமல் அதன் உட்பொருளைத் தியானிக்கும் படிக்கும், அருட்பாடல்கள் பாடி வழிபடும்படிக்கும் நம்மவ
ரைப் பழக்க வைக்கவேண்டும். உணவு நிவேதனங்கள் வெளி யே ஒரு ஹாலில் வைத்து ஏழைகளுக்கு விநியோகமாக வே
ண்டும். கடவுள் பெயரால் பிரமசாரிகளுக்கும், கல்விமான் களுக்கும்,தொழிற்புலவருக்கும் வேதபாரகருக்கும் உணவளி ப்பதே சிறந்த நிவேதனமாகும். கோயிலில் குறித்த நேரம்
s t
 

。
物
ஜோதி 21 I
மணியடித்ததும் அன்பர் வந்து முறையாகத் தோத்திரம் செய்து செல்ல வேண்டும். வணங்குமிடந்தவிர மற்ற இடங்களில் தமிழும் ஆரியமும் ஆங்கிலமும் சமயநூல்க
ளும்புகட்டும் சன்மார்க்கப் பிரசாரகர்களைத் தயாரிக்க வகுப்பு நடத்த வேண்டும். மனிதர் அனைவரும் சாதிமத வேறுபாடில்லாமல் வந்து வணங்கச் சம்மதிக்க வேண்
டும். அப்படியானல் நமது கோயில்கள் உருப்படும். இன்றேல் வருங்காலத்தில் அவற்றிற்கு மதிப்பிராது. நாம் சிதம்பரத்தில் நடராஜ தரிசனம் செய்தபோது கோ யில் விஷயமாகப் பேசினுேம். இப்போது என் கருத்து இப் படி மாறியிருக்கிறது. சாரணரும் காலை மாலை என்னுடன் தியானமும் கடவுள் வணக்கமும் செய்கிருர்கள். நான் எங் கே குழலூதிலுைம் அவர்கள் வந்து உதவுவார்கள். சிலர் இந்தி கற்கிருர்கள்.தினம் ஏதாவதொரு பரோபகாரம் உண் மையாகச் செய்கிருர்கள். அனைத்திலும் மிக்கது தேசபக்தி சாரணர், பத்திரிகை மூலம் உலக நடப்பை அறிந்து எனக் குக்கூடச் செய்தி சொல்லுகிருர்கள். ஒவ்வொரு சாரணனு க்கும் இந்திய சரித்திரமும் காங்கிரஸ் செய்தியும் தெரியும்.
வாராவாரம் நாங்கள் சுற்றுக்கிராமங்களில் முகாம் போட்டு அங்கேயே எல்லாரும் சமைத்துச் சாதிவேறுபாடி ல்லாமல் உண்டு கிராமசேவை செய்து, உயர்ந்த விஷயங்க ளைப் பற்றிப் பேசிக்கொண்டு வருவோம். ஒரு நடைப்பள்ளி க்கூடமாகவே எங்கள் வாரஉலா நடக்கிறது. தங்கள் சார ணருக்கும் இப்படி தேசபக்தியும் பொதுநல சேவையும் பழ க்க வேண்டுமென்றே இவ்வளவும் எழுதினேன். தமிழன் தமி
ழையும் தமிழ்நாட்டையும், தன்னவரையும் மறக்கக்கூடாதுச்
இந்தியனும் அவ்வாறே. தமிழரான நாம், தமிழ்வீறுடன் பா
ரதமாதா கைங்கரியம் செய்வோம். வந்தேமாதரம் அன்புள்ள
Rev. H A. பாபுலிதுரை அவர்கட்கு
தேவகோட்டை

Page 12
212 ஆத்ம
அன்பிற்குரிய மாண்புள்ள பூரீ பாபுலி அவர்களுக்கு
பரமபிதா நலமருளுக! தங்களை சிவசுப்பிரமணிய ஐயர் என் ஸயன்ஸ் ஹாலுக்கு அழைத்து வந்ததுமே இவர் உத்தம நண்பர் என்று அந்தராத்மா சொல்லியது. ‘என் அறநூலை' மெச் சித் தாங்கள் எழுதிய கடிதத்தைக் கண்டதும், இறைவன் கருணைக்கு நன்றி செலுத்தினேன்!
எனது ஞானத்தெளிவுக்குத்தான் நர்ன் ஏதோ பாடி எழு திக் குவித்தேன்; முதலில் ஒரு நாடகமும் சில பாடல்களும் வெளியிட்டேன். அவற்றை இரண்டொரு ஆப்த நண்பர் தவிர வேறு யாரும் பாராட்டவில்லை. இன்னும் சமயம் வர வில்லை என்று மறுபடியும் மறைவில் மெளனமாக எனது பேணு ஆடிக்கொண்டிருந்தது. சிறிதுகாலம் பொறுத்தே எனது நூல்களை வெளியிடத் துணிவேன். ஏனெனில், எனது ஞான த்தாகம் இன்னும் தணியவில்லை. நான் ஞானஅருவி யானுலன் ருே உலகம் அள்ளிக் குடிக்கமுடியும்? ஏசுநாதர் சரிதையை உரிய காலத்தில் தங்களுக்கு அனுப்புவேன்.
நமது நட்புரிமை பரமபிதாவின் அருளால் மேன்மே லும் வளம்பெற நான் எங்கே சென்ருலும் அவ்வப்போது தங்களுடன் அளவளாவிக்கொண்டிருப்பேன். அறநூலுக்கே யோகசித்தி ' என்ற பெயரைத் தருவதாகயிருக்கிறேன் அதற்கு எனது யோகசாதனம் இன்னும் தீவிரமான பயனை க்காணவேண்டும். இறைவன் செயலுக்கு நான் சுத்தமான கருவியாயிருத்தலே என் இச்சை; நான் யாழ்; அவன் யாழோ ன். நான் எழுதுகோல்; அவன் எழுதுவோன். நான் உள் ளம்; அவன் அதில் உயிர்க்கும் அன்பு.அன்பு என்னுள் அன்பாயி ருக்கும். ஆண்டவன் தங்களுள் அன்பாக வளர்கிருன். அன் பும் கூடி அருட்பணிசெய்க. எல்லா உலகிற்கும் இறைவன்
ஒருவனே, எல்லா உடலும் இறைவன் ஆலயமே. ஒம், ஆமன்!
ஆம் அவன்.
 

ஜோதி 218
yOyOOysyyyyyy yyyyyyyy yy ryry ryyyyyeyy yy yyyyyyyyyyyyyyyyyyyyyyyOyOyDs கொடுங் கோலாட்சி கெடுங்கோனுட்சி
keOkkO Okekkkekkkekekeke OkkOkeOOkyeOOkeke ekeOkeOkyeOeeOke OekeOeeOek eOOekee0e Oek000eOe0e
கொடுங்கோல் செலுத்திக் குடிகளை அச்சுறுத்தி துரியோ தனன், நீரோ, கம்சன் போல வாழும் அரக்கரின் 'சைத்தான் இராஜ்யம்' தனது கொடுமையாலே குமையும். மன்னருக்கு அரசும் புகழும் நிலைபெறுதல் எதனல்? செங்கோலால் அற நெறிச் செங்கோல் இல்லாமல் கொடுமை செய்தால், மன்ன ரின் புகழும் ஒளியும் மன்னது, நிலைபெருது, மங்கியணைந்து போகும்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; யஃதின்றேல் மன்னுவா மன்னர்க் கொளி.
கடுவரிகளாலும், அடிமைச் சட்டங்களாலும், அடக்கு முறைகளாலும் அநீதியான தண்டனைகளாலும், வீண்போர் களாலும் குடிகளை அலைத்துச் சீரழித்து, அறமில்லாத செயல் களைச் செய்யும் மன்னன் கொலையாளியை விடக் கொடியன். அவன் தனது கொடுங்கோலால் குடிகளைச் சித்திரவதை செய் கிருன், கொடுங்கோல் பிடித்து, போடுவரி, செய் அதை! என்று குடிகளைக் கொடுமையாக அதிகாரஞ் செய்து கேட் போன் 'கொடு உள்ளவெல்லாம்; இன்றேல், குத்துவேன்' என்று வேல்காட்டி நின்று பயமுறுத்தும் வழிப்பறித் திருட னுக்கே இணையாவான்.
வேலொடு நின்று விடுவென்றதுபோலுங் கோலொடு நின்மு னிரவு.
இவ்வாறு முறைதவறிக்கடுமையாக வரிகளை வாங்குங் கொடுங்கோலாட்சியின் கீழ், செல்வனுயிருப்பது வறுமையைக்
காட்டிலும் துன்பமாகும். அரசன்விடாமற் பணம்கேட்பான்; தராவிட்டால் கொடுமை செய்வான். இந்த வரிக்கொடுமை யாலே தான் பெரும்பாலுங் குடிகளின் பகைமுற்றி அரசன்

Page 13
214 ஆத்ம
அழிவது. இங்கிலாந்தில் சார்லெஸ், ஜேம்ஸ், ரஷ்யாவில் ஜார் பிரான்சில் லூயி ஆகியோர் ஆட்சிகள் உதாரணம். நமது ஆட்சிமுறையில் இன்ன குறைகள் உள்ளன; 'அவற்றை இந்த வழியில் தீர்த்துக் குடிகளை மகிழ்விக்க வேண்டும்’ என்று மன்னன் நாடோறும் ஆராய வேண்டும். பெரியோர்களையும், மந்திரிகளையும், நாடி அவர்கள் சொல்லும் நன்முறை தழுவி நலஞ்செய்ய வேண்டும். அப்படியின்றித்தான் தோன்றித்தன மாக ஜார் போலக் கடுவரியும், கொடுவினையுங் கொண்டு ஆண்டால், அத்தகைய கொடுங்கோல் மன்னன் நாளுக்கு நாள் நாட்டையிழந்து கெடுவான். பதினரும் லூயி இதற்கு உதாரணம். அவனது கொடுமையால் பிரெஞ்சுக் குடிகள் சுதந்தர வெறிகொண்டு புரட்சி செய்து, அரசனைத் தூக்கிட் டுக் குடியரசு நாட்டினர். தனது கொடுமையின் விளைவைக் கருதாது, முறைதப்பி, அதர்மம் செய்யும் அரசன் தனது செல்வத்தை இழப்பான் அரசை இழப்பான்,"ஐயோ கொடுங் கோல் தாங்கமுடியவில்லையே! தெய்வமே, காப்பாற்று! என்று
அல்லற்பட்டுத்தாங்க முடியாது, ஏழை எளியவர் அழுத கண்
னிரே, மன்னன் செல்வத்தைத் தேய்க்கும் வாட்படையாகும்.
அல்லற் பட்டாற்ற தழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
மழைத்துளியில்லா நிலம் எப்படித் தழைக்காதோ, அப் படியே அன்பில்லாத கொடியன் கீழ் வாழும் உயிர்களும் தழைக்கமாட்டா.
- திருக்குறளின்பம்.
LLLLLLLLL0LSLL0L0LLLLLLLLTLLLLLLL LLLLLLLL0LLL00SL0LLL0LLLLLL0LLLLLLLLLLLLL LLLLLLLLL00SLLLS
* ___。。二 தத்துவ ஞானத்தை "அறிவை அறியும் அறிவு' என்பர். ஆணுல் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும்; அல்லது காண்ட் கூறுவது போல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும்.
- மாக்ஸ்முல்லர்
LLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLL0LLLLLLLL LLLLLLLLSLLL0LLLL0LLLLLLLSLLLLLLLYLLYLLS
 
 

ஜோதி 215
(திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் )
துெ இழிவு? என்று வள்ளுவர் சொல்லுவதற்கு முன்பு ஒரு புலவன் சொன்னன். அவன் சொன்னதைச் சொல்லிச் சொன்னுல் தான் உங்களுக்குச் சுவைக்கும் எது இழிவு? எது இழிவு? என்று எதை எதையோ இழிவு என எவனெவனே சொன்னன். பிரித்தானியன் சொன்னன் எங் களுடைய கொடியிலே இருள் பட்டால் இழிவு என்று. யே ர்மனியன் சொன்னுன் காலனி இல்லாமல் வாழுகிறது யே ர்மனிக்கு இழிவு என்று. உருசியாக்காரன் சொன்னன் உழை க்கிறவன் உழைக்காதனுக்குக் கீழே இருந்து வரிசெலுத்திக் கொண்டு வாழ்வது மிகவும் இழிவு என்று. யப்பான்காரன் கூறினன் உலகத்திலே வணிகத்திலும் கைத்தொழிலிலும் சிற ந்திருக்கும் யப்பான் அது செய்த பொருளை உலகத்திலே விற்பதற்குச் சந்தையில்லாமல் இருக்கிறதே, அது உலகத் தாருக்கு இழிவு என்று சொன்னன். தனக்கு இழிவு என்று அவன் சொல்லவில்லை. உலகத்திலே வணிகத்திலும் கைத்தொழிலிலும் சிறந்த நாடுஎன்று ஒப்புக்கொள்ளப்பட்ட யப்பான் அது செய்த பொருளை உலகத்திலே விற்கக்கூடா தென்று சொன்னனே அது உலகத்தானுக்கு இழிவு. எங்க ளுக்கு என்ன? என்று கூறிப்போனுன் அவன். சீனுக்காரன் நண்டு, நத்தை, பாம்பு, முதலியன தின்று, உலகத்திலே இழி வு என்று ஒன்றுமே இல்லை என்று கூறி, எல்லாமே தின்னத் தொடங்கினுன்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிருேம், கொல்லை அள்ளு

Page 14
216 ஜோதி
வதும் சாக்கடைதள்ளுவதும் தான் இழிவு என்று, பழம்த மிழ்ப்புலவனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே செ ன்று எது இழிவு? என்று கேட்டால், ஒன்றுதான் இழிவு என் ரு ன். உழைக்காமல், வாழாமல், பொருள் தேடாமல், தன் னைப்போன்ற ஒரு மனிதனிடம் சென்று கையைநீட்டி * ஐயா ஒரு காசு கொடு’ என்று கேட்பது இருக்கிறதே! அதுதான் இழிவு என்றன். இவனும் மனிதன்; அவனும் மனிதன். அ வன் உழைப்பான், சேமிப்பா ன் தானும் உண்பான், மீத்தும் வைத்திருப்பான், நமக்குக்கூட அளிப்பதற்கு வைத்திருப்பான் என்று எண்ணிக்கைநீட்டுகிருனே, அப்போதும்கூட இவன் அவனேப்போல உழைக்காமல் முயற்சியை இழந்து விட்டுப் பிச்சை கேட்டுவாழுகிருனே, அதுதான் இழிவு! என்ருன், இதைவிட இழிவு இல்லையா? என்ருன் ஒருவன். இல்லை இல் லை என்ருன், நன்ருய் எண்ணிப்பார் என்ருன். எண்ணிப்பா ர்த்து இன்னும் ஒன்று இருக்கிறது என்ருன். அது என்ன? என்று கேட் டான். இப்படி மானங்கெட்டுப் பல்லைக்காட்டி கையைநீட்டி ' ஐயா காசு ' என்று கூறுகிறவனிடம் போய்
இல்லே ' என்கிருனே, அதுதான் அதைவிட இழிவு.
9 9
புறநானூற்றிலே ஒரு பாடல் இது.
' ஈஎன இரத்தல் இழிந்தென்று அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்றே '
கன்னத்திலே அறைந்தது போலக் கூறியிருக்கின்ருர், இந்த நடை என்ன? உங்களுக்கு இரும்புக்கடலைநடையாயிருக்கிறதா? அந்தப்பாட்டினுடைய அடி இது, “ ஈஎன இரத்தல் இழி ந்தன்று ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்றே ' இது அந்தப் புறநானூற்றுப் பாடலின் ஆசிரியருடைய கருத்து.
வள்ளுவர் கருத்து அதற்குமேலே சென்றுவிட்டது. இ வர் என்ன சொன்னர் தெரியுமா? தனக்கு என்று இதைச் சொல்லவில்லை. பாதையிலே ஒருவன் போகிருன் பசுமாடு ஒன்று சாகப்போகிறது. நாக்கை இழுத்துக் கொண்டு தண் னிர் வரட்சியினலே சாகக் கிடக்கிறது,இவன் சென்று வேடி
s
 

ஜோதி 217
க்கை பார்க்கிரு ஒருன், பெரியவர் போய் ' அட பாவிப்
பயலே ' வேடிக்கை பார்க்கிருயே! கொஞ்சம் தண்ணிர்
கொண்டுவந்து பசுமாட்டுக்கு ஊற்றடா ' என்ருர், இவன் போய் ' அம்மா ' என்று ஒரு வீட்டின் கதவை தட்டி பசுமாடு சாகப்போகிறது. கொஞ்சம் தண்ணீர் கொடுங் ? கள் ' என்கிரு:ன். அங்கே போய்க் கன்னத்தில் அறைகிருர்
வளளுவா .
* ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் '
என்று அறைகிருர், உனக்கு என்றில்லை. சாகப்போகிற பசு மாட்டுக்கும் கூட தண்ணிர் வேண்டுமென்று பிறர்கதவை தட்டிப் பிச்சைகேட்காதே! அதைவிட நாவிற்குவேறே என்ன இழிவு இருக்கிறது? என்கிருர், அந்தநிலையிலுங்கூட, எழு வாளியை எடு! கயிற்றை எடு! கிணறு எங்கே இருக்கிறது? தொட்டி எங்கே இருக்கிறது? குழாய் எங்கேயிருக்கிறது? போ! எடுத்துக்கொண்டுவந்துஊற்று!பிச்சையெடுத்து அறம் செய்யாதே! முயற்சி செய் என்று கூறுகிறர்.
*ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இழிவு வள் ளுவர் ஒன்று சொல்வார். சொல்லாதது ஒன்பது சுற்றிக்கட் டித் தொங்கும், இரப்பது நாவிற்கு இழிவு என்ருல் அப்பு றம் என்னென்ன தொங்கிநிற்கிறது? இரக்க எண்ணுவது மனதிற்கு இழிவு! கேட்பது வாய்க்கு இழிவு! நீட்டிப்பெறு வது கைக்கு இழிவு பெற்று உண்பது வாய்க்கு இழிவு! எல் லாம் தொங்கும் அதில், ஒன்றைச் சொல்லாமல் சொன்னவர் திருவள்ளுவர். இது எவ்வளவு பெரிய சிறந்த பண்பு, எண் னிப்பாருங்கள்.
ஆத்மஜோதி அச்சக நன்கொடைகள்
சென்ற மாதக்கணக்கு 1927-50
திரு. P. நடேசபிள்ளை - கம்பளை 5-00 செல்வி. மதார்நாச்சியா - வியாங்கொடை 7-00 திரு. கா. மு. பரமசிவம் - வல்வெட்டித்துறை 1-00 மொத்தம் 1940-50

Page 15
218 ஆத்ம
வாழ்க்கையின்
ful
(செல்வி, C, மதார் நாச்சியா )
Tெழ்க்கையில் நாம் யாபேர்களும் பிரச்சினைகளால் சூழப்பட்டு இருக்கிருேம். இவ்விதமான பிரச்சினைகளை மன தினுல் ஆராய முடியுமா என்பது ஆலோசனைக்குரிய விஷ யம். ஏனெனில் பிரச்சினையை அணுகும் மனம் விருப்பினுலோ அல்லது வெறுப்பினுலோ பாதிக்கப்படாதிருத்தல் வேண்டும் பிரச்சினைகள் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்குக் காரணம் மன மே. வெவ்வேறு விதமானதுயர உணர்ச்சிகளும் சலனங்களும் இல்லாது போய் விட்டால் மனம் என்பதே மறைந்து விடும்.
எண்ண எழுச்சிகளின் பல ரூபங்களின் கதம்பமே மனம் ஆகவேதான் மனது பிரச்சினைகளைச் சதா சிந்தித்து சிந்தித்து சித்தம் கலங்கி தெளிவற்ற நிலையில் அநேக பிரச்சினைகளை கற்பனையின் மூலமாக வடிவங் கொடுக் கிறது. பிரச்சினைகளின் வெப்பத்திலிருந்து விடுதலை பெறவே ண்டுமானல் முதலில் நாம் மனதின் பிடியிலிருந்து எவ்வாறு அகல்வது என்ற மர்மத்தை அறிய வேண்டும்.
மனிதன் எண்ணத்தின் சூட்சுமத்தை முற்றிலும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவரை ஆசையின் நெருப்பிலே
வெந்து மடிய வேண்டியதுதான். ஏனெனில் எண்ணத்தில் 7
நினைப்பில் உணர்ச்சியைத் தூண்டிவிடும் ஆசையும் சேர்ந்தே
இயங்குகிறது. அனுபவம் முற்றிலும் பூர்த்தியாகாத நிலையி லே தான் ஆசைகள் வேரூன்றுகிறது பல்தரப்பட்ட எண்
 
 

ஜோதி - 219
ண எழுச்சிகளின் புரட்சியே அமைதியை அறிவை ஆட்டி
அசைத்து விடுகிறது. மனம் வெவ்வேறு ஆசைகளின் முடிச்சு ஆகவேதான் எண்ணத்தை நினைப்பின் ஆதாரத்தால் அறிய முடியாமல் இருக்கிறது. எது எண்ணத்தை அறியலாமென ஆராய்ச்சி செய்கிறதோ அந்த நினைவின் தொகுதியே கிளர் ஆச்சி தந்திடும், கீழ்த்தர உணர்ச்சியினுல் கவரப்படக் கூடும் அல்லது ஆராயப் புகுந்தவன் எந்த உணர்ச்சியை ஆராய்கிரு னே அதுவாகவே மாறிவிடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. நமது மனம் எப்பொழுதும் ஒரு ஆசை உணர்ச்சியைக் கவ் விக் கொண்டே இருக்கிறது. இவ்விதமாக மட்டரக எண்ண ங்களில் சுழலும் மனம் துக்கவடிவமாக இருப்பதில் ஆச்ச ரியமில்லை.
மனிதன் கற்பனைக் கோட்டில் வாழும்வரையில் ஒழுங் காக வாழமுடியாது. உலகம் நம்மை மீறி எந்த விதஉணர் ச்சிகளையும் திணித்து விட முடியாது. நமது மனம் அந்த உண ர்ச்சிகளின் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந் தப்படுவதினுல் தான் வாழ்வு துக்கமாகவும் சோகமாகவும் காட்சியளிக்கிறது. தினசரி வாழ்வில் நிகழும் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமானுல் மனதை முற்றிலும் அறிந்து மன சற்ற மெளன நிலையில் இருக்கவேண்டும்.
உண்மையிலேயே மனதிற்கு அப்பாலே உள்ளங்கடந்த நிலை உண்டு. அங்கு இன் பத்திற்கும், துன் பத்திற்கும் சந்த ர்ப்பம் இல்லை. காலத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது மனி தனின் அறிவுக் கண்கொண்டு அலசுவதற்கு எட்டாதது. அந்தத்தெய்வீக நிலயை அனுபவிக்க முடியாதவன் வாழ்க் கையில் இன்பத்தை நுகராதவன், விடுதலையை விளங்காத வன், சோகமென்னும் வறட்சியினல் வாடி வதங்குகிறவன் கல்வி கற்றும் கற்பனையின் வட்டத்தில் கட்டுப்பட்டவன், கா லத்தினுல்சா வென்ற பிறப்பென்ற விலங்கு பூட்டப்பட்டவன்.
எங்கு மனம் ஒய்கிறதோ எங்கு ஹிருதயம் பரிசுத்த மாக இருக்கிறதோ, எங்கு இதயம் சாந்தியினுல் மெளன முறுகிறதோ அங்குதான் அகண்ட சக்தியின் அற்புத அழகை

Page 16
220 ஆத்ம
ரசிக்க முடியும். வாழ்வெனும் சோலை வனப்புடன் வளர
வேண்டுமானல் மனம் பூமியிலே வட்டமிடாது ஆகாயத்"
தில் கிடைக்கும் அபூர்வ நீரினுல் பசுமை பெறவேண்டும் அதாவது இருளைவிட்டு மனமற்றதோர் வெட்ட வெளியில் ஜெக ஜோதியைக் காணவேண்டும். அந்த அறிவே வாழ்க்
கைக்கு ஆதாரம். அந்த அறிவு பெறுவதே வாழ்க்கையின்
இலட்சியம்.
எல்லாம் - பதினெட்டே
மக்கள் உய்ய வேத வியாசமுனிவர் இயற்றிய மகாபா ரதம் என்ற பொக்கிஷம் பதினெட்டு பருவங்களைக் கொண் டது. குருக்ஷேத்ர யுத்தம் ( வாழ்க்கைப் போராட்டம் என் னும் யுத்தம் ) நடைபெற்றதும் பதினெட்டு நாட்களே. இர ண்டு பக்கங்களிலும் சேர்ந்து போர்முனையில் வந்த படை களும் பதினெட்டு அஹோகனியே. மேலும் கீதா சாஸ்திர மும் பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இப்படி பா ர்க்கப்போனுல் எல்லாம் பதினெட்டாக முடிவதைக் காண லாம். வாழ்க்கையில் நாம் படிப்படியாக ஏறி கடந்து செல்ல வேண்டிய படிகளும் பதினெட்டுதானே? ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து, விஷயங்களாகிய தன் மந்தி ரங்கள் ஐந்து, அகங்காரம், மகத் தத்துவம். அவ்யக்தம் என் ற மூன்று. இத்தகைய பதினெட்டுப் படிகளும் தாண்டினல் தான் அவனுடன் கூடி வாழமுடியும். நம் வாழ்க்கையும் பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டதுதான், துக்கயோக த்தில் ஆரம்பித்து மோட்ச சந்நியாச யோகத்தில் முடி வது தான் மனித வாழ்க்கை. இந்த பதினெட்டு படிகளில் உள்ள வாசல்களைத் தாண்டி செல்ல அந்த யோகேசுவரனின்
ல்லாம் திறக்க வேண்டும். அதற்கு திரிகரண சுத்தியுடன் அ வனை அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால் அவன் உ டனே ஒடோடியும் வருவான்.
( சுவாமி ஜி அபேதானந்தா)
f
கிருபை வேண்டும். அவன் வந்துதான் இந்த ೩॰!

ஜோதி 221
مبنى C
a - - - - - - - - - - - - - - -
6 GBL go LDj GGiÖ 25) Gunt
MS SSL S L S LL S L L S L S L L L S L SL SL L L S L S SLLL L S LL S LSL
(சங்கீதபூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி) இராகம்:- சாமா ஆரோகணம்:- ஸ ரி ம ப த ஸா k 28வதுமேள
கர்த்தாவிற் தாளம்: - ஆதி அவரோகணம்:- ஸ் த ப ம க ரி ஸா பிறந்தது **********ふふふふふふふふふふふふふふふ。 ***●●を々***************。
பல்லவி
வீடே உமக்கில்லையோ விணிலேன?லந்தீர்
விரும்பிவந்தோர்க்கு நல்ல வீடளிக்கும் பரனே
அநுபல்லவி காடே கதியென்று களித்தங்கே ஆடினீர்
ஒட்டினை ஏந்தியே ஊரினிலே அலைந்தீர் (வீடே)
சரணங்கள்
ஆடையின்றி ஒருகால் அகிலத்தினிலே திரிந்தீர்
ஆடைகிடைக்காமலோ அரும்புலித்தோலணிந்தீர் ஒட்டையும் பாம்பையும் ஒளி அணியாய் அணிந்தீர்
கேட்பவர் இல்லே யென்று கேவலமாய்ப் போகலாமோ
2 தேடினுர்க் கடிமுடி தெரியாது நின்றீர்
தேவிக்குப் பாதியைக் கொடுத்தே மகிழ்ந்தீர் ஆடியா டியே எம்மை ஆட்டுவிக்கின்றீர்
அன்பர்கட் கிரங்கியே ஏவல் செய்கின்றீர் (வீடே)
3 தந்தை தாய் இல்லாது தான் தோன்றியாய் முளைத்தீர்
- தலையிலுமொரு பெண்ணே மறைத்துவைத்திருக்கிறீர்
மைந்தனுமோ குறமங்கையை மணக்கவிட்டீர்
மோடி செய்யாது காட்சி தாருமையா அரனே (விடே)

Page 17
222 ஆத்ம
toggggggggggggggiରା
höll u III i ?
LYYLSLzYL0LLL0LLLLLLLL LLLLLLLLHLLLzLLLLLLLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLzLLLLLY
(சங்கீத பூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி)
அங்கிங்கெனதபடி எங்கும் நிறைந்து எல்லா உயிர்க
ளையும் ஆட்டுவிக்கப் படும் பொருளின் தன்மையை, எம் போன்றவர்க்ளால் எடுத்துரைக்க இயலாது. கடலாழம் பார்க்கச் சென்று கடலினுள் இறங்கிய உப்புப் பொம்மை மீண்டுவராது கடலோடு கலத்தல் போல, அருட்கடலாகிய இறைவனேடு கலந்தவர்களும், மீண்டுவந்து அவர்தன்மையை உரைக்கமாட்டார்கள் எனக்கூறியுள்ளார் இராமகிருஷண
பரமஹம்சதேவர். தேன் இனிமையுள்ளது எனக்கூறலாம்,
தேனினிமையெப்படியென்று யாராவது கேட்டால், சொல் லில் விளங்கவைக்க இயலாது. தேனை உண்டவரே அதிலுள்ள இனிமையை அறிவார்.
சிறியேன் பஞ்சப்புலன்களை வென்றவனல்ல மோகாந் தகாரத்தில் உழலுபவன். என்னுடைய வாழ்க்கையிற் கண் டசில அதிசயங்களை இங்கே தருகிறேன். இவை நான் இசை க்கலையைக் கற்கமுன் நடந்தவை.
எனது பதிஞருவது வயதிற் பள்ளிக்கூடப்படிப்பை நிறு த்த நேர்ந்தது. கற்க ஆவலிருந்தும் தந்தையாரின் தோட்டப் பயிர்ச்செய்கைக்கு உதவி தேவைபட்டதால் துக்கத்தோடு
படிப்பை நிறுத்தினேன். அக்காலத்தில் ஆடுகளை வளர்த்தல்
எனக்குப் பிரியமாகவிருந்ததால் ஆடுகளும் வளர்த்துவந்தே ன். ஆடுகளுக்குக் குளே அறுப்பதற்காகத் தினமும் ஒரு காட் டுக்குச் சென்றேன்.
வழக்கம் போல் ஒருநாள் அக்காட்டினுட் சென்றேன் நேரம் காலை ஒன்பது மணி இருக்கும் விரைவாகப் பற்றை
 
 
 

ஜோதி 223
களில் படர்ந்த கொடிக் குளைகளை அறுத்தேன்
திடீரென்று, நான் யார் ? என்ற கேள்வி என்னுள்ளத் தினுள் எழுந்தது. நான், அக்காலத்தில் நாவல்களைத் தவிர ஆத்மா சம்பந்தமான எந்த நூலேயும் படித்திருந்தவனுமல்ல ஏன் இப்படி எண்ணினேன் என்பது எனக்கே தெரியாது.
இந்த எண்ணம் மிக்கவலுவடைந்தது. தடைசெய்யமுடிய வில்லை. நான், நான் என்று உள்ளே, ஆழ்ந்து சென்றேன். உடனே எனது உடலிலிருந்து வேரு ய் நின்றேன். எனக்குப் பெயர் ஒன்றுமில்லை எனக்கண்டேன். இவ்வுலகத்தோர்க்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லையென உணர்ந்தேன்.
கடவுளே நீ எங்கே இருக்கிருய். நான் இங்கே எப்படி யிருப்பேன். இதென்ன மாயம்! இந்த உடற் சிறைக்குள் நான் கட்டுப்பட்டு நில்லேன்! நில்லேன்! என எண்ணினேன்.
அச்சமயம் யான் சுதந்திரமாக எங்கும் போகத்தக்க ஒரு அதிசய நிலையடைந்தேன். சிறிது நேரத்திற்குள் தேகத் திலிருந்து வேறுபடாத நிலைவந்தது. இருதயம் மாத்திரம் ஒடிக்களைப்பட்ைந்தவர்களைப் போல் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பயமாகவும் இருந்தது.
அறுத்த குளைகளை எடுத்துக்கட்டித் தலையில் வைத்துக் கொண்டு வீடு நோக்கி வந்தேன். வரும்போது மறுபடியும் உடல்வேறுபட்டுத்தோற்ருதிருப்பதற்காகத்தாய்தந்தைசகோ தரர் ஆகியோரை நினைத்துக்கொண்டு வந்தேன். ஒரு அரை மைல் வரையில் வத்ததும் எனது ஏமாற்றுக்குக் கட்டுப்ப படாமல் பழையபடி உடலும் நானும் பிரிந்து நிற்கும்நிலை
வந்துவிட்டது. அப்போது மேலும் ஒர் அதிசயம் நிகழ்ந்தது.
திடீரென்று நான் நிலத்திலிருந்து மேலே பதின்நான் கு பதினைந்து அடிமதிக்கத்தக்க உயரத்தில் நின்றேன். எனது உடல் குளையைச் சுமந்தபடி நிலத்தில் நிற்பது தெரிந்தது. நான் எவ்வடிவத்தில் மேலே நின்றேன் என்பது எனக்கே

Page 18
2 24 ஆத்ம
தெரியவில்லை. இரண்டு மூன்று நொடிப்பொழுதிற்குள் உட லோடு ஒட்டிய நிலையையடைந்தேன். அப்போதும் இருத யம் மிகவேகமாக அடித்துக்கொண்டிருந்தது. ஒருவரிடமும் இதை அன்று கூறவில்லை. சில நாட்கள் சென்றபின் என்னு டன் சிநேகமாயிருந்த சிலரிடம் உங்களுக்கு எப்போதாவ து உடல் வேருகத் தெரிகிறதா என்று கேட்டேன். என் கே ள்வியே அவர்கட்கு அதிசயமாகவிருந்தது. அதிலிருந்து சா தரணமாக எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதில்லையென அறிந்தேன். வேறுபட்ட நிலை தோன்றும் போது மாற்று மரு ந்தாக உறவினர்களை எண்ணுவது வழக்கமானது.
இந்நிலையில் இரண்டு மூன்று வருடங்கட்கு முன் 'சீவப் ரம்மைக்கியவேதாந்தரகசியம்' என்ற ஒர்நூலைநண்பர்தந்தார் அதைப்படித்த பின் தான் உடல் வேறுபட்டுத்தெரியும் நிலை யின் ரகசியம் புலப்பட்டது.
ஒரே கிளியைத் தங்கக் கூட்டிலும் அடைக்கலாம். தக ரக்கூட்டிலும் அடைக்கலாம். கூடுகளின் தன்மை தான் வித் தியாசம். உடல் வேறுபட்டுத் தோன்றும் நிலையில் நாம் s-%Ꮣ©ᏛᎧ! மல்லப் பெண்ணுமல்ல, எச்சாதி சமயங்கட்கும் கட்டுபட்ட வர்களல்ல என்பதை அனுபவத்தில் உணர்வோம். வாதத் தை விடுவோம். கல்வி அறிவுக்கு எட்டாத புதுமைகளைக் கா ண்போம் வான ஆராய்ச்சியைக் கண்டு வியக்கும் இக்கா லத்தில் ஞானத்தின் எல்லையில்லாத சக்தியை அறிவோம்.
* காட்டுவித்தாலாரொருவர் காணுதாரே "
- I - I - -
இன்று உன்னுல் கூடியமட்டும் நன்றகச் செய். நாளை அதனினும் நன்றகச் செய்யும் ஆற்றல் நீ பெறக்கூடும்.
-- நியூட்டன்.
t
 
 
 
 

சென்ற மாதக் கணக்கு பருத்திதுறை நாவலப்பிட்டி அல்லித்தோட்டம் இயக்கச்சி உசன் மிருசுவில் இராமநாதபுரம் - கிளிநொச்சி கொக்குவில் பண்டாரவளை மாத்தளை திரிகோணமலை மூதூர் பதுளை கட்டுவன் லேன்ஸ்டவன் - இரத்தினபுரி உடுப்பிட்டி கல்லெல்ல நல்லூர் திமிலைத்தியு மாணிக்கவல்லி ரத்தோட்டை மத்துகமப்பட்டினம் சென் ஜோட்ஜ், தோட்டம் மதுகெதறத்தோட்டம் சீக்கினக்கர், ‚ዛ፡
மத்துகIத்
இலப்பந்துறப் பட்டினம்
பாந்திய தோட்டம் கல்வயல் டம்பாரைத்தோட்டம் 霹 】 நாகெனித் தோட்டம்
மொத்தம்
ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் 5. வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
ஏப்ரில் மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
19078975
2O 605
1234 10 50 608
18000
I 94 O2
6,384
5025 4 7 Ι 2
1200 1 0 160 13280 4 4020 I 3200
I 3600
57.432 10 000
6 720
I 9530
8000
20 000 6000 16 000 204 00 3000
4 160
2000
2000
I 475
6732
3000
-------س こー”
19609030

Page 19
Registered at the G. P. O. as
蟹 சர்க்கரை கொ
(DIABETES) at Girgo கரை வியாதிக்கு மிகச் சிற நீரில்வருகிற சர்க்கரையை குறைத்து கொழுப்பு ரஸ்னே ததாதுக்களின் தித்திப்பைக் யாவும் மூலிகையினுல் சித்தா தயாரிக்கட் தபால் செலவு உட்பட
இலங்கையில் கி ஆத்ம ஜோதி நிலை
இந்தியாவில் கிை சம்பு இன்டஸ்ரீஸ்
Lpa)fra」srg?á)●
மு. கணபதி
சந்தா நே
ஜோதி எடுக்கும் சந்தா நேயர் பணங்களை அனுப்பிவைக்குமாறு பணம் அனுப்பும்போதும் விலாச
இலக்கத்தைத் தவருது குறி
இந்தியாவில் உள்ள அன் R வீரசம்பு, சம்பு இ என்ற விலாசத்திற்கு
இவ்விடமும் ஆத்ம ஜோதி நிலை
rinted 3 Published by Mr. N. Muthi a { ATHMA JOTHI PRESS MAWA

a News Paper M. L. 59-300
ல்லி சூரணம்
ம் நீரழிவு மதுமேகம் சர்க் 535 GU5 UTGIÕÕTLD" ப் போக்கி புளிப்புச்சத்தை கள் போதைத் தடுத்து சப் குறைக்கும் அற்புதலுளடதம் ர்களின் அனுபவ முறைப்படி ப்பட்டது
டின் ஒன்று 6 ரூ 75 ச டைக்குமிடம்: - யம், நாவலப்பிட்டி டக்கும் இடம்: - சேலம் 2(S.I.)
ਨ: அன் கம்பெனி
5iuffo EFIGLIII
ய ர் களுக்கு
கள் அனைவரும் தமது சந்தாப் அன்புடன் வேண்டுகின்ருேம். மாற்றம் செய்யும்போதும் சந்தா ப்ெபிட வேண்டுகின்ருேம்,
பர்கள் வழக்கம் போல *— ன் டஸ்ரீஸ், சேலம்-2
அனுப்பிவைப்பதோடு அறியத்தருக. பம், நாவலப்பிட்டி,
-
ath. A thimajoth i N i l:yiam Naw all ar litiya. LAPITY A. Ceylon , 145 (1.