கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.03.14

Page 1
ශ්‍ර මුද්‍රා ලෑ9 මුත්‍ර බර්ට්රට් රැබ්
ܝܢܞ
e)
ལྷོ་
ε) (ς
சுவாமி நித்திய
ශ්‍රී ලාශ්‍ර මුල්‍ය ලාශ්‍ර
ଧୂ୨ රෝබ් රෑට් රැබ් රැබ්
මුද්‍රා
రెం
こ碁う
载
ခြီခ ရွှေခါ်ခ ငေါ
ග්බ් රෝ
 
 
 
 

ଧୂ୬ ଧୂ୬ ଧୂ୬ ଧୂ୬ ଧୂଓ ଧୂ୬ ଧୂ୭୯ යුද්ධ රට්ඨ ග්ලි ග්ට්ඨ රෑන ග්
1 ܙ*
ானந்த பகவான்

Page 2
→ග්බ් රෑට්ඨඨාණ්ඛණ්ඬු ශිෂ්ඨ*
SS *******************; ஜீ ஆத்ம ஜோதி:
%క్షి Pl T 号码 - (ஒர் ஆத்மீக மாத வெளியீடு) - P yOeOeOeOOOOBOOBOBOeOO LOOO OOOOOOLOOOBO OBO OBOO *
எல்லா உலகிற்கும் இறைவன் ஒரு வ ன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே. 袁
- சுத்தானந்தர்
ஜோதி 14 வூடுல் பங்குனி மீ" 1ந்வட (14-3-62) | 3. La 5
பொருளடக்கம்
MNMr. MMNMNMNMMMNMMNMNMMMNMNMMNV
சான்றேர்
அரியவற்றுள் அரிது சுவாமி நித்தியானந்த பகவான் பெருவாழ்வு
ஓங்கிய
கலியின் ஒலிகள் நாலு பேர் சொன்னபடி நடவுங்கள் நிலைபெறும் ஆனந்த முக்தர் 9 மெய்த் தேவர் 10 உண்மையில் உள்ளது அதுவே 11 தத்துவ விசாரண 12 தெய்வ வழிபாடு
13 அறிவின் ஆற்றல்
14 சொல் 15 திருவருளே எவ்வாறு பெறமுடியும்
ஆத்மஜோதி சந்தா விபரம் "
*→→→→→→→半+→→→→→→*
ஆயுள் சந்தா ரூ. 75-00 ә1 (I, I i і II, I, 1 м 1, 3-00
தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - க. இராமச்சந்திரவ பதிப்பாசிரியர்- bI I . ( 1 y) yj, o')) yʻy» u III
66 ஆத்மஜோதி நிலையம் நாவலப் பிட்டி /
 
 
 

சான் ருேர்
புல்லறி வகற்றி நல்லறிவு கொளிஇ எம்மனுேரையு மிடித்து வரை நிறுத்திச் செம்மை செய் தருளத் திருவுருக் கொண்ட நற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே.
- குமர குருபரர்.
பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந் தெருளுடையோரை முகத்தினுந்
தேர்ந்து தெளிவது போல் அருளுடையோரைத் தவத்திற் குணத்தி லருளி லன்பில் இருளறு சொல்லினுங் காணத்
தகுங் கச்சி யேகம் பனே.
- பட்டினத்தார்.
எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கி
யுபகரிக்கின்றர் யாவரந்தச் செவ்வியர் தஞ்செய ல?னத்துந் திருவருளின்
செயலெனவே தெரிந் தேனிங்கே கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர்
தமக்கேவல் களிப்பாற் செய்ய ஒவ்வியதென் கருத்தவர் சீரோ திடவென்பாய்
மிகவு மூர்வதாலோ,
- இராமலிங்க சுவாமிகள்.
தாபந்தண் சந்திரனுல் தைனியநற் கற்பகத்தால் பாபந்தான் கங்கையாற் பாறுமே - தாபமுதல் இம்மூன்று மேகு மிணையில்லா சாதுக்கள் அம்மா தரிசனத்தாற் றன்.
ܛ¬
- ரமண மஹரிஷிகள்.

Page 3
162 ஆத்மஜோதி
தான் அடையும் நலன்களைப் பிறர்க்குந் தந்து துய்ப்பவனே அறி ஞன். வானத்திலும் உயர்ந்தோர் இருவர்; எல்லையற்ற ஆற்றல் இருந் | || || தும் எந்தத் தீமை செய்யவும் பயன்படுத்தாதவனும், பொருளில்லாதிருப் பினும் பிறர்க்குக் கொடுப்பவனும் ஆவர். -
- மகா பாரதம்
எவன் தான் தவறு செய்யாதிருந்தும் பிறர் பழிச் சொல்லப் s பொறுத்துக் கொள்கின்றனுே அவன் சான்றேன்.
- புத்தர்.
தனக்கு ஆசிரியரைத் தேடிக் கொள்பவன் நலம் பெறுவான். ஆணவம் உடையான் அழிவான். கேள்வி கேட்பவன் அறிவு பெறுவான்.
- கன்பூவியசு,
சான்ருேர் வாழ்வில் பற்று வையார், மரணத்தை வெறுக்கார், வாழ்வு என்று மகிழார்; மரணம் என்று வருந்தார். அறியாமலே வந்தார், அறியாமலே போவார்,
- தாவோ மதம்.
தமக்கு நல்லது என்ற கருதாததைப் பிறர்க்குச் செய்யாதிருப்பவரே அறவோர் ஆவர்.
- ஜாரதுஷ்டிரர் .
மனிதன் அடையும் முதல் சால்பு நல்ல எண்ணங்களே எண்ணுதல் இரண்டாவது சால்பு நல்ல சொற்களைச் சொல்லுதல் மூன்ருவது சால்பு நல்ல செயல்களைச் செய்தல்,
皺 - எபிரேய மதம். 《
ஆண்டவனுக்கு அஞ்சி அறநெறியினின்று வழுவாதிருப்போரே சான் றேர் ஆவர். }
INSI
இஸ்லாமிய மதம்.
தோணியில் ஏறிக்கொள் வாழ்வாகிய கடல் ஆழமானது, கடக்க கஷ்டமானது. சான்றேருடன் உறைவதே கரையேற்றுந் தோணி,
- சீக்கிய மதம்
 
 
 

அரியவற்றுள் எல்லாம் அரிது
(ஆசிரியர்)
எமக்குக் கிடைப்பதற்கு அருமையான பாக்கியங்களி லெல்லாம் அருமையான பாக்கியம், பெரியவர்களை விரும்பி அடைந்து அவர்கள் நமக்குத் துணைவர்களாவதை அடை தல். இது வள்ளுவருடைய கருத்து
நாம் எல்லோரும் சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவு டையவர்கள். எமது வாழ்க்கை நேரான வழியிலே செல்ல வேண்டுமானல் எமக்கு வழிகாட்டிகள் இருக்க வேண்டும். நல்லது எது தீயது எது என்றே பகுத்தறியும் ஆற்றல் எம்மிடத்து இல்லை. அங்ங்னம் நல்லதையும் தீயதையும் பகுத்தறியும் ஆற்றல் இருந்தாலும் நல்ல வழியே நடக்கும் பலம் எம்மிடத்து இல்லை. நல்லதைச் சாதிக்கும் வைராக் கியம் எம்மிடத்து இல்லை. அந்த வைராக்கியம் பெரியோர் கூட்டுறவால்தான் ஏற்பட வேண்டும்.
கட்டுப்பாடான உள்ளத்தை வைத்திருத்தல் கஷ்டமா னது. நினைத்தபடி அலையும் நெஞ்சமே எம்மிடத்து உள் எாது. எமது உள்ளத்தை நாம் உள் நோக்கிக் கவனமா கப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது எம்மையும் அறியாமல் தன்னிச்சை கொண்டு வெளியே சென்று விடு கின்றது. இந்த நிலையில் நாம் எல்லாரும் நாம் விடுகின்ற பிழைகளுக்கு நியாயம் தேடிக்கண்டு பிடிக்கிருேமே தவிர எமது பிழையை ஒத்துக் கொள்ளும் நிலையிலும் இல்லை. ஒருவன் தான் விடுகின்ற பிழையை நேரடியாக எப்பொ ழுது ஒத்துக் கொள்கிருனே? அப்பொழுதே அவன் உத்த மணுகின்றன். சிலருக்குப் பழக்கத்தினலே தாம் விடுகின்ற பிழையெல்லாம் சரியாகவே தோன்றுகின்றது. அப்படிப் ப ட் ட வ ர் க ள் த ம து பி  ைழ  ைய ED GÖØT UT வேண்டுமானல் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும். இடித்துப் புத்தி சொல்லக் கூடிய பெரியாரை சேர்ந்தால் தாள் அவன் பிழையை உணர்ந்து திருந்த முடியும். அறி விலும் அனுபவத்திலும் ஆற்றலிலும் நம்மைக் காட்டிலும் பெரியவர்களாக இருப்பவர்களை நமக்குத் துணைவர்களாக
Ι και, இருக்கச் செய்து கொள்வது எமது கடமையாகும்.
சிலர் பிழையை உடனே ஒப்புக் கொள்வார்கள். ஆனல்
ஆத்ம ஜோதி 163

Page 4
164 - ஆத்ம ஜோதி
அதே பிழையை வாழ்நாள் முழுவதுமே திருப்பிச் செய்து கொண்டு இருக்கின்றர்கள். காரணம் கேட்டால் எனது பெலவீனம்! நான் என்ன செய்வேன் என்கின்றர்கள். இது முழுச் சோம்பல். பிழை என்று உணர்ந்ததை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அது மனிதனது கடமையும் தர்மமு மாகும். தான் விடும் பிழையை வெல்வதில் முயற்சி எடு த்து அதில் தோல்வி உறுபவர்கள் உடனே ஒரு பெரியா ரைத் துணைக்கொள்ள வேண்டும்.
அவருடைய சந்திப்பினலேயே அவன் புதுமை உணர்ச் சியைப் பெறுகின்றன். அடிக்கடி அவரைச் சந்திப்பதால் தைரியம் கூடுகின்றது. பலநாட் சந்திப்பினுல் பழைய நிலை மாறி புதிய நிலைக்கு உறுதி பெறுகிருன், பலநாட் சந்திப்பினல் மனதில் நிலைத்த உறுதி உண்டாகிறது. அவ ரைச் சந்தியாத போதும் நேரில் நின்று அவர் வழிகாட்டு வது போன்றதோர் அநுபவம் ஏற்படுகிறது. மனம் பிழை யான வழிக்கு இழுபடும்போது பெரியாரின் நினைவு முன் வந்து அதனைத் தோற்கடித்து விடுகிறது.
எமது ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் பணத்தினுல் செம்மைப்படுத்தி விட முடியாது. படிப்பு, பட்டம், பத விகளினலும் செம்மைப் படுத்திவிட முடியாது. தகுந்த பெரியாரைத் துணைக் கொள்ளாமையினலே பணமும், படி ப்பும், பட்டமும், பதவியும் மனிதனை மிருகமாக்கியமைக்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும்.
பெரியவர்கள் இருக்குமிடத்தை விரும்பிச் செல்லவேண் டியது எமது கடமையும் முயற்சியுமாகும். சுவாமி இரா மானந்தரைக் குருவாக அடைவதற்குக் கபீர்தாசர் பட்ட பாடு சொல்லுந்தரமல்ல. சுவாமி இராமானந்தரது ஆச்சிர மத்திற்குக் கபீர் முதலில் போனபோது அவர் ஓர் இஸ் லாமியர் என்று சீடர்கள் அடித்துத் துரத்தி விட்டார்கள். இராமானந்தரைக் காண்பதற்குப் பலமுறை முயன்றும் கள் வன் என்ற பெயர் கிடைத்ததே தவிர அவரது தரிசனை கிடைக்கவில்லை! இறைவன் இப்படி எல்லாம் சோதித் தTன.
ஈற்றில் கபீர்தாசர் ஒர் சூழ்ச்சி செய்தார். @ir truer ( ) னந்தர் அதிகாலையில் இருட்டோடு ஆற்றிற்கு நீராடச் செல்வது வழக்கம். கபீர் இராமானந்தர் வருவதற்கு

ஆத்ம ஜோதி 1.65
முன்பே படித்துறையில் சென்று படுத்துக் கொண்டார். இராமானந்தர் இருட்டில் நடக்கும்போது கபீரை மிதித்து விட்டார். உடனே இராமானந்தர் ராம், ராம் என்ருர், கபீர் மகிழ்ந்தார். ஆனந்தக் கூத்த டினர். ஒரேமுறை யில் குருவின் திருவடி தீட்சையும், ராமநாம உபதேசமும் கிடைத்து விட்டதே என்று ஆனந்த பரவசம் கொண்
டார். கபீர் வஞ்சனை செய்து உபதேசம் பெற்றுக் கொண்
டதாக இராமானந்தர் கருதினர். ஆனல் தன் உண்மைச் சீடனுக முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை.
கபீரோ, அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு முயற் சியினல் எல்லாவித அநுபூதியும் அடைந்தார். இதிலிருந்து நாம் அறியக் கூடியதொன்று எமது நன்மையை நாம் விரும்பி நாமே பெரியாரைத் தேடிச் செல்ல வேண்டும். அவர்கள் ஏசினலும் பேசினுலும் நீங்களே கதி என்று அவர்களைச் சரணடைய வேண்டும். அப்போதான் அவர் களுடைய உதவி எமக்குக் கிடைக்கும்.
யாழ்ப்பாணத்திலே யோகர் சுவாமிகள் என்னும் மகான் ஒருவர் இருக்கின்ருர், அவரைத் தேடிச் செல்ப வர்களுக்கு முதலிலே கிடைப்பது பேச்சு 11 அடியும்தான். அதனைச் சுவாமிகளுடைய ஆசீர் வாதமாகக் கருதி யார் மேலும் மேலும் செல்கின் ருர்களோ அவர்கள் சுவாமிகளு டைய கருணைக்குப் பாத்திரராகி உய்வடைந்துள்ளார்கள்.
நாம் பெரியாரைச் சென்றடைந்து விட வேண்டும். மேலும் மேலும் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொ ள்ள வேண்டும். பின்பு அவர்களே எமக்கு வேண்டிய உத வியெல்லாம் தாமாகச் செய்து வருவர்
உற்ற நோய் நீக்கி உருமை காக்கக் கூடிய பெரியார் கள் நமக்குத்தமராகக் கிடைக் து ஆலோசனைகள் சொல் வது மட்டுமல்லாமல் நமக்காக அவர்கள் நம்காரியங்களை நடத் துவதும் கிடைத்தால் இதைவிடப்பேறு வேறுஎன்னதான் இரு க்க முடியும்? இக்கருத்துக்களையெல்லாம் மனதிற் கொண்டே
வள்ளுவப் பெருந்தகை
* அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்' என்று குறிப்பிட்டார்.
நாமும் அவர் வழி நிற்போமாக,

Page 5
166 ஆத்மஜோதி
சுவாமி நித்தியானந்த பகவான்
சுவாமி நித்தியானந்தர் பல தனிச் சிறப்புகள் வாய்ந்தவர். இலட் சக்கணக்கான மக்கள் அவரது மகிமையை அறிந்து அவரைப் போற்றி
வணங்குகின்றனர். எனினும் அவர் ஒரு புரியாத புதிராகவே இருந்து
வருகிருர் ஒருவருக்கும் வணங்காத சக்திகள் அவரிடம் உள்ளன. கணேச
புரியில் வாழும் இத்துறவியின் க ரு னை யு ம் வள்ளன்மையும் விசால
f) To Gočijoð) 6 .
இக்கணேசபுரி மகானுக்கு வழங்கும் பெயர் பூரீ சச்சிதானந்த சத் குரு சுவாமி நித்தியானந்தர் என்பது.
யாதொரு விளம்பரமோ பிரசார மோ இல்லாமலே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் சென்று, பயனடைந்து வருகின்றனர். பெரியவர் சிறியவர். பணக்காரன் ஏழை, உயர்ந்தவர் தாழ்ந்தவர், அரசன் ஆண்டி, நல்லவர் தீயவர், சாது அயோக்கியன் என்பன போன்ற வேறுபாடு எதுவும் அவருக்குக் கிடை யாது. அவர் எங்கே பிறந்தார் என்றே, அவருடைய பெற்ருேர் யார் என்ருே, அவரது குலம் என்ன என்ருே தெரியாது. அவரது இளமைப் பருவ வரலாறு பற்றியும் எதுவும் தெரியவில்லை.
அவர் சிறு வயதில் வீட்டை விட்டுச் சென்று இமயமலையில் ஆறு ஆண்டுகள் 'வானரி' தவத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இத் தவம் பரங்களில் வானரங்களைப் போல இருந்து செய்யப்படுவது. அதன்
பின் அவர் தமது உடல், உடை முதலியவை பற்றிய நினைவற்றவராய்த்
தம்மையும் உலகையும் மறந்து, அவதூத நிலையில் நிர்விகற்ப சமாதியில் லயித்திருந்தார். அகிலமனைத்தையும் தமது உடலெனக் கருதும் சுவாமி கள் அனைவரையும் அகிலத்தையும் ஒன்றே போல நேசிக்கிருர், சாதி, சம யம், இனம் முதலியவைபற்றிய வேற்றுமை எதுவும் அவருக்குக் கிடை Ull Tģil.
பரிபூரணத்துவம் எய்தியதும் அவர் முதலில் தோன்றிய இடம் தென் கன்னட மாவட்டமாகும். அங்கு அவரது பக்தர்கள் பல அற்புதங்
களைக் கண்டனர். கஞ்சன் சாடில் அவர் பல குகைகளையும் தர்ம சாலைகளே யும் அமைத்துச் சுற்றிலும் பெரிய சுவரெழுப்பினர். இதற்கெல்லாம் அவர் ஒரு சல்லிக் காசு கூட எவரிடமும் வாங்கவில்லை. இதனுல் அவ ரைப் பற்றிச் சந்தேகங்கொண்ட பொலிசார், அவரிடம் புதிய ரூபா
நோட்டுக்களை அச்சடிக்கும் இரகசிய இயந்திரம் ஏதோ இருக்க வேண்டும் என்று எண்ணினர். எனவே அவரைக் கைது செய்து அந்த இயந்திரத் '
லதக் காட்டுமாறு ஏவினர். சுவாமிகள். அவர்களை ஒரு பள்ளர் தாக்குக்கு
 
 
 

ஆத்ம ஜோதி 167
அழைத்துச் சென்று அங்கிருந்த ஆழமான நீர்தேக்கத்தைக் காட்டித் தமது அச்சுயந்திரம் அதில் இருப்பதாகக் கூறினர். பிரமாண்டமான முதலைகள் வசித்து வந்த அந்த நீரில் மூழ்கிக் கத்தையாகப் புதிய ரூபா நோட்டுகளைக் கொண்டு வந்தார். அதைக் கண்ட பொலிசார் அவரை அங்கேயே விட்டுவிட்டு ஒட்டம் பிடித்தனர்.
குருபன் என்ற இடத்தில் நீர் வசதி இல்லாமலிருந்ததால் மலைகளில்
இருந்து நீர் கொணர்ந்து அது வழிந்தோடுவதற்கு ஒரு கோ மு கி யு ம்
அமைத்தார். அவர் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு பல வைதீகப் பிராமணர்களும் அவரது பக்தர்களாயினர்.
சுவாமிகள் உடுப்பியிலிருக்கையில் அவ்வூரார் அவரை ஓர் உப யோகமற்ற பைத்தியம் எனக்கருதி இகழ்ந்து பேசி அவமதித்தனர். மண்ணையும் குப்பையையும் அம்மகான் மேல் எறிந்தனர். சுவாமிக ளோ ஒன்றையும் இலட்சியம் செய்யாமல் வாளாவிருந்தார். அடுத்து அங்கு இரதோற்சவம் நடைபெற்றது. சுவாமிகள் இரதத்தின்மேல் மணலை வளரி இறைத்தார். அங்ங்னம் அவர் இறைத்த மணல் கீழே விழுந்தபோதும் வெள்ளி நாணயங்களாகவும் தங்க நாணயங்களாக வும் விழுந்தது. இதைக் கண்ட மக்கள் பீதியடைந்து, அவரை வன ங்கித் துதித்தனர். தங்களை மன்னித் தருளுமாறு இறைஞ்சினர். சுவாமிகள் மங்களூரில் இருந்த காலத்தில், தாம் நினைத்த எந்த விட் டுக்கும் செல்வார். தாம் விரும்பிய எவ்விடத்திலும் உணவு கொள் வார். பின்னர் ஒருநாள் அவர் திடீரென அவ்விடத்தை விட்ட கன்று பாரதம் முழுவதும் யாத்திரை செய்யலானர்.
முதலில் கொக்கரன் மகா பலேஸ்வரம் சென்று சில மாதங்கள் அங்கு தங்கிஞர். அங்கிருந்தபோது சுவாமிகள் ஒரு மாபெரும் நாக பாம்புடன் உணவு உட்கொள்வது வழக்கம். அந்நாகத்திடம் அவர் மிகுந்த பிரியம் வைத்திருந்தார். சனங்கள் இதைக் கண்டு அதிசயித் தனர். சுலாமிகளிடம் அச்சமும் மரியாதையும் கொண்டிருந்தனர். பலர் அவரது சீடராயினர். சுவாமிகளுக்கு எப்போதும் சிறு குழந் தைகளிடம் பிரியம் அதிகம். அவர் எங்கிருந்தாலும் இனிப்பு, பழம், தேங்காய், பிரசாதம் முதலியவைகளைக் குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்வது வழக்கம். N
தமது யாத்திரையில் சுவாமிகள் பழனி, இராமேஸ்வரம், காஞ்சி பூரீசைலம் ஆகிய தலங்களைத் தரிசித்து மல்லிகார்ஜ"னத்தையடை ந்து அங்கு சில காலம் தங்கித் தனிமையில் தியானத்தில் ஆழ்ந்திருந் தார். அங்கிருந்து ஜகளுத், பூரி முதலாய இடங்களுக்குச் சென்று நீ காசியை அடைந்து அங்கு சில காலம் தங்கினர். அங்கு தினசரி மணிகர்ணிகையில் நீராடுவது வழக்கம். பின்னர் அயோத்தி, பிரயா கை, ஹரித்துவாரம், ரிஷிகேசம், பத்திரிநாராயணன், கேதார்நாத்,
:

Page 6
68 ஆத்மஜோதி
கங்கேரத்திரி, ஜம்மனுேத்திரி ஆகிய தலங்களுக்குச் சென்று, மான சரோவர் உட்பட எல்லா இமாலய தீர்த்தங்களிலும் மூழ்கினர். அதன் பின் மதுரை, பிருந்தாவனம் குருக்ஷேத்திரம், துவாரகை, கிர்நார், உஜ்ஜயினி, நாசிக், பண்டரிபுரம் முதலாய ஸ்தலங்களுக்குச் சென்று இறுதியாகப் பம்பாய் சேர்ந்தார். பாரதத்திலுள்ள காவேரி துங்க பத்திரை, பாதாள கங்கை, கிருஷ்ணு, கோதாவரி, நர்மதை, சரயு, கோமதி, யமுனை பாகிரதி, பிரம்மபுத்திரா, இந்து உட்பட பல புண்ணிய நதிகளிலும், மான சரோவர் உட்படப் பல புண்ணிய جن ஊற்றுகளிலும் அவர் தீர்த்தமாடியுள்ளார்.
பம்பாய் அடைந்தபின் அவர் சிலகாலம் குறுலாவிலும் சிலகாலம் ஆக்ரா சாலையை அடுத்து விக்னேலியிலும் தங்கியிருந்தார். ஒருவரும் அவரை ஒரு மகான் என்று அறிந்து கொள்ளவில்லை. வழக்கம்போல் அவர் குழந்தைகளுக்குத் தின்பண்டங்கள் வழங்கி வருவார். அடுத்து கன்னேரி குகைகளில் சிலகாலம் இருந்தபின் அக்குருேலியில் இரண் பாண்டுகள் தங்கியிருந்தார். அக் காலத்தில் உமாதீர்த்தம், இராம தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம் என்னும் வெந்நீர் ஊற்றுக்களையும் வேறு பல ஊற்றுக்களையும் சீராக்கினர். தரும சாலையும் கிணறும் அமைத்தார். பின்னர் வஜரேஸ்வரியில் சில ஆண்டுகள் தங்கியிருந்து அங்கும் சில தர்ம சாலைகளும் கிணறுகளும் அமைத்ததோடு ஒரு கோ ரக்ஷ சாலையும் ஏற்படுத்தினுர், கடைசியாகக் கணேசபுரியை அடைந்து அக்கால முதல் அங்கேயே தங்கியுள்ளார்.
கணேசபுரி பஸ் நிலையத்திலிருந்து சர்வேஸ்வரர் கோயிலுக்குச் சுமார் ஒரு மைல் தூர மிருக்கும். முதலில் அங்கு ஒரு புதியசாலை அமைத்தார். பின்னர் பல தர்ம சாலைகள் ஏற்படுத்திக் கிணறுகளும் வெட்டுவித்தார். அங்குள்ள பிரமா, விஷ்ணு, ருத்திர தீர்த்தங்களைச் செப்பனிட்டார். கெளமதேவி ஆலயமும் பர்ணகுடியும் பின்னர் கட்டப்பட்டன. இக் கட்டிடங்கள் கட்டப்படும்போது சுவாமிகள் தொழிலாளிகளுடன் தொழிலாளியாய்த் தாமும் இரவு பகலெனப் பாராது உழைத்து வந்தார். இங்குள்ள பத்திரகாளி கோயிலும் அவ ரால் ஆமைக்கப்பட்டதே. ஏழை நோயாளிகளுக்கென ஆரோக்கிய விடுதி ஒன்று சுவாமிகளின் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளது. சுவா து மிகள் வஜ்ரேஸ்வரியில் இரு கட்டிடங்கள் கட்டி, ஸ்தல ஸ்தாபனப் பகுதிக்கு வழங்கியுள்ளார். ஒரு கட்டடத்தில் ஆரம்பப் பாடசாலை யும் தபாற் கந்தோரும் உள்ளன. மற்ருென்றில் வைத்தியசாலை ஒன்று உள்ளது.
一ー薬。G→ー
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 69
பெரு வாழ்வு
(செல்வி. சு. மாணிக்கம்)
சிடிட கோபுரங்களும், மாடமாளிகைகளும், கல்வி, செல்
வம் எல்லாவற்றையும் பெற்று இப்பூவுலகில் வாழ்வதே பெருவாழ்வு என்று ஆண்டவனைப் பற்றி அறியாதோர்
கருதுகின்றனர். ஆனல் அப்படி நினைப்பது முற்றும் தவறு.
ஆண்டவனை நினைத்து அதாவது எல்லாம் சிவமயம் என உணர்ந்து மனமொழி மெய்களால் நாம் செய்யும் கருமங் களெல்லாவற்றையும் சிவதொண்டாகச் செய்வோமானுல் நம் வாழ்வில் நிகழ்வதெல்லாம் சிவன் செயலாகி வாழ்வு முழுவதும் சிவமணம் கமழ்ந்து குறைவிலா நிறைவாய் பரி பூரனைந்தமாய் விளங்கும். இதுவே பெருவாழ்வு எனப் படும்.
மனிதனுக்கு வேண்டிய ஆத்மீக நலன்களையும் வாழ்க் கைப் பொருட்களையும் ஆண்டவன் தனது திருவருளில் மனிதனைப் படைக்கு முன்பே அமைத்து வைத்துள்ளார். 'வைத்த பொருள் நமக்கு எப்பொழுதும் உண்டு' இவ் வுலக வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. இவ் வுலகில் எவரும் நல்ல இன்பமான வாழ்வு வாழ இயலாது என்றிவ்வாறெல்லாம் மக்களிற் பெரும்பாலோர் கருதுகின்
றனர். நம்மவருட் பலர் எந்நேரமும் தம் விதியையும்
தெய்வத்தையும் நொந்த வண்ணமாய் அல்லல் மிக்க வா ழ்க்கை வாழ்கின்ருர்கள். இவ்வுலகில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நம்பிக்கை அவர்கட்குக் கனவிலும் உண் டாவதில்லை. "துன்பே நிறையும் மனப்பேருலகு' என்று அறிஞர்களே கூறுகின்ருர்களென்ருல், அறிவு குறைந்த சா தாரண மக்கள் அங்ங்னம் கூறுவது வியப்பல்லவே!
"மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளோடும் பெருந்தகை யிருந்ததே'
என்று ஆளுடைய பிள்ளையார் என அழைக்கப்படும்: திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டுள் ளது. இத்திருப்பாடல் ஒன்றே நாமெல்லாம் இவ்வுலகில்

Page 7
170 ஆத்மஜோதி
நல்லவண்ணம் வாழ்ந்து உய்தியடைவதற்குப் போதுமா
நம் சம்பந்தப் பெருமான் மேற்படி பாட்டில் அறுதி யிட்டுரைப்பது. எம் இறைவன் அம்மையும், அப்பனுமாக கண்ணுக்கினிய காட்சிகள் பொருந்திய திருக்கழுமலம் என்
ணும் சீகாழிப்பதியில் வீற்றிருக்கின்ருன் , அவன் அவ்வாறு
உயிர்களாகிய நமக்கு என்றும் அம்மையப்பனுயிருந்து அருள்புரிகின்றமையால், அவனை நாடோறும் இடையருது
அன்போடு சிந்திப்போ மாயின், நாம் இம்மையில் நல்ல
வண்ணம் வாழலாம் என்பதே சம்பந்தப் பெருமான் காட்டும் வழியை நாம் நன்கு கவனிக்க வேண்டும். அவ் வழிதான் பரங்கருனைத் தடங்கடலாகிய ஆண்டவனே அன் போடு இடையருது சிந்தித்தலாகும்.
கடவுளை முன்னிட்டே வாழலாம். கடவுளின்றேல்
நாமுமில்லை. இவ்வெல்லையற்ற உலகங்களுமில்லை.
வுளே உலகங்களுக்கு முதலாவர், முடிவுமாவர். உயிர்க
ளும் உயிரில் பொருள்களும் சேர்ந்த இவ்வுலகங்களெல்லாம்
அவரிலேயே தோன்றி நின்று ஒடுங்குகின்றன. நிலைமாறும் தன்பையுடையனவெல்லாம் பொய்ப்பொருட்கள் எனப்ப டும். என்றும் தன் இயல்பு மாருமல் இருப்பது எதுவோ அதுவே உண்மைப் பொருள் எனப்படும். ஒருபோதும் நிலைமாரு மல் என்றும் குறைவிலா நிறைவாய், பரிபூரணனந் தமாய் இருப்பவர் கடவுளே. அவரே உண்மைப் பொருள்.
மேலும் ஆண்டவனை அடைந்து தாம் பெற்ற பெற லரும் பேறுகளை மொழிக்கு மொழி தித்திப்பான தீந்தமி
ழால் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் முதலான
அருளாளர்கள் பாடித் தந்துள்ளார்களல்லவா? அருட் சுர ங்கங்களாகிய தேவார திருவாசகங்களை நாமும் உள்ளன் போடும் நம்பிக்கையோடும் ஒதுவோமானுல் காணுதற்க
ரிய இறைவனை நாமும் காணலாம். கண்டு அவனருளைப்
பெற்றுப் பேரானந்தப் பெருவாழ்வில் நிலைத்திருக்கலாம். ஆனல் நாம் மற்றெல்லாவற்றையும் கற்கின் ருேம். அருள் நூல்களை மாத்திரம் கற்கும் முறையிற் கற்கின்ருேமில்லை. என்னே நம் அறியாமை!
நாம் ஆசைப்பட்டு எதனையும் வேண்டக்கூடாது. ந11 க்கு வேண்டியதை, உண்மையில் நமக்கு நன்மையானதை
 
 

ஆத்மஜோதி 171
ஆண்டவனே அறிவான். அவனை நம்பி, நமக்கு வேண்டி யவை எல்லாவற்றையும் உரிய காலத்தில் உரிய வழியில்
அவனே தருவான் என்ற உறுதிப்பாட்டுடன் நாம் வாழ வேண்டும். அங்ங்லம் வாழ்வோமாயின் பொன்னும் பொ ருளும் முதலானவற்றைத் தேடி அல்லும் பகலும் அய ராது உழைத்துக் களைத்து மடியும் அல்லல் வாழ்க்கை நம தாகாது. ஆண்டவனை நம்பி ஒன்றிலும் ஆசையின்றிச் செய்வன வெல்லாவற்றையும் அவன் பணியாய்ச் செய்யும் வாழ்வு இளைப்புக் களைப்பற்ற துன்பந் துயரற்ற பெருவா ழ்வாக விளங்கும் இப் பெருவாழ்வை எல்லோரும் அடை யலாம். இம்மையிலேயே அடையலாம்.
‘'வேண்டுதல் வேண்டா மை யிலான டி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும் பை யில* திருவள்ளுவர்.
எண்ணமிட்டா லேபோதும்
எண்ணுவதே யவ் வின்பத் தண்ணமுதை யுள்ளே
ததும்பப் புரியுமட1. uTUSua Ti.

Page 8
72
கூதிருங் காருங் கூடிக் குலவிள வேனில் நாளில்
ஆத்ம ஜோதி ஓங்கிய வேலன்
(இராஜபாரதி)
عيسي دينيكيتمتعجرجس.
ーマて下ー
மாருதம் மயங்கி நிற்கும் மனமலர்க் காட்டி னுள்ளே
பேரதிர் இடியே ருேதை பிளிறிடக் கேட்ட பீதி மீறிட வெருவல் கொண்டே மேற்பர னேறி நின்றேன்!
2.
உட்பய மடக்க வாங்கோர் ஒங்கிய வேலன்' வந்தான்! கற்பனைக் கெட்டா வேகக் கதிரெழ விடுத்த கூர்வேல் அப்புற முருவித் தாவி அடுகளி றுடைய நெற்றி
முற்புற முகடு பேர்த்து மூச்சற வீழ்த்தக் கண்டேன்.
3.
மாக்கரி கொண்ட மாய மதத்தினை அடக்கி வென்முன் நோக்கவே முருகு ணர்ச்சி நுகருமென் நாட்டங் கெளவித் தாக்குநற் பார்வைக் கென்னத் தாரமாய்த் தந்தேன், அந்தோ! ஊர்க்கொரு புதியோ னுன்ை உருவழிந் தகலச் சென்றன்
4.
*கொண்டவன்" பெயர்ந்த மா?ல குறுகிடும் வேளை யெல்லாம் கண்டவன் பிரபை தோன்றக் கனவொரு கோடி காண்பேன்; வண்டெனும் விழிகள் முந்தும் வழியெலாம் பார்த்துச் சிந்தும், மண்டிய மதத்தை வென்றன் மனத்தினை யடக்க லென்றே.
 
 

ஆத்மஜோதி 173 கலியின் ஒலிகள்
(கோவை, கி. சுந்தரம்)
'கலி பிறந்தது! கலி பிறந்தது! தர்மத்திற்குப் பகை தோன்றியது. எதிரி தோன்றி விட்டான் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள் மக்கள். உலகில் உண்மையை மறைத்து போலியைக் காட்டும் நாள் நெருங்கி விட்டதே என்ற பயம், ஆம், கலி பிறந்திருக்கிருன் , எங்கே? தனி யாக ஒர் பேருருவம் கொண்டு அரக்கனைப் போல் வந்து அழிவு புரியத் தொடங்கியிருக்கிருன? இல்லை. இல்லை. அவன் நமக்குள்ளே பிறக்கிருன் நம்மையே அழிக்கிரு:ன். ஆனல் அவன் பிடியிலிருந்து தப்பி அவனை நாம் அழிக்கும் வழியும் நமக்குள்ளே இருக்கிறது. தர்மம் என்பது என்ன? கேவலம், வாய்ச் சொல்லாகப் பிரசாரம் செய்யவும் பெரு மையாகப் பேசவுமா அது உலவுகிறது? அல்ல. நமக்கு ள்ளே தோன்றும் உயர்ந்த எண்ணங்கள், இலட்சியங்களா கிய எல்லாம் செயலாக வெளிப்படுமளவு தர்மமாகிறது. ஆங்கிலத்திலே Practical கூறப்படுகிறதே. அதாவது செயல். அதைப் போன்றது தர்மம். செயல் நிகழ வேண்டுமெனில் கொள்கை வேண்டுமல்லவா? (Theorey), அந்தக் கொள் கையே சத்தியம். இந்த சத்திய இலட்சியம் தர்ம செய் கையாக வெளிப்படுமளவுக்குக் கலி மடிகிருன்.
- கீதையிலே கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து சொல் கிருன் 'அர்ஜ"னு! உலகிலே எப்பொழுதெல்லாம் தர் மம் குன்றி அதர்மம்தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் யுகந்தோறும் அதை அழிப்பதற்காக பிறப்பெடுக்கிறேன்’’. ஆம்! “சத்தியமே கடவுள்' என்பதற்கேற்ப சத்திய உரு தாங்கியவன் கண்ணன். அவன் நம்முள் பிறந்து கொண் டேயிருக்கிருன் நம்மைக் காத்து வருகிருன். இது மட்டு மல்ல. சத்திய சொரூபனன அவன் தன் பிரதிநிதிகளாக பல மகான்களை, சத்திய நெறி கொண்டவர்களை அனுப் பிப் பிரசாரம் செய்ய வைக்கிரு:ன். எங்கும் சத்தியத்தைக் கொண்ட எண்ணங்கள் உலவ, எங்கும் சத்திய வழி பிற ந்த தர்மத்தின் ஒலிகள் பரவ கலி இங்கு நிற்பான? அது மட்டுமல்ல. மக்கள் தங்கள் பேச்சையும், எண்ணங்களை யும், செயல் முறைகளையும் அவ்வழியே கொள்வார்களா னுல் காலன் தான் இங்கு அணுகுவாணு?

Page 9
17 ஆத்மஜோதி
மிக உயர்ந்த வழி இதுவென்று தெரியும். ஆனல் எப்படிக் கைக் கொள்வது? சத்தியம் என்ருல் கேவலம் பொய் பேசாமலிருப்பது என்பது மட்டுமல்ல. அஹிம்சை= அன்பு, பிரம்மச்சரியம், உள்ளத்தால் தூய்மைப் படுதலாய உண்மை, வாக்கால் தூயதான வாய்மை, சரீரத்தால் தூய்மைப்பட்ட மெய்மை. இவை கூடிய பெரு நிலையே சத்திய நெறி. சத் பொருளின் அழியாத் தன்மையே சத் தியம். இனி இவ்வாழ்வின் நிலையையும் சத்தியம் கொள்
வதும் காண்போம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு படித்திறத்திலும் மனிதன் போராடிக் கொண்டேயிருக்கிருன், ஒவ்வொரு கணமும் அப்போராட்டம் நிகழ்ந்து கொண்டே யிருக்கிறது. எச் செயலைச் செய்தாலும் சரியாகச் செய்ய முயலுவதால் அவற்றை எதிர்த்துப் போராட்டம். பேசுகிற பேச்சு பய னுள்ளதாக விரும் புவதால் பயனற்ற நிலையை எதிர்த்துப் போராட்டம். ஆக்கத்திலே முன்போகப் போக அழிவை எதிர்த்துப் போராட்டம். அன்பை விரும்புவதால் வன் மையை விரும்பாத நிலை விருப்பு ஒடிவர வெறுப்பைக்
கொள்ளாத போராட்டம்.
இங்கேதான் கலியின் ஒலிகள் கிளம்புகின்றன. தவறு வேண்டா ச் சொல், அழிவு, கோழைத்தனம், வேண்டாத வன்மை, வெறுப்பு, பலமின்மை இவையாகக் கலி வெளிப் படுகிருன் இவனை அடக்க ஒரே வழி மேற் சொன்ன சத் திய நெறிதான். காந்தியடிகள் சொன்னது போல் 'சத் தியம் என்பது ஒரு கத்தியின் கரிய முனையைப் போன் றது' தான். கத்தியின் மீது நடப்பது கடினம்தான். கயி ற்றின் மீது நடப்பது கஷ்டமாக இருந்தாலும் பழகியவ னுக்கு அது சுலபமே. இன்பம் தரும் எதுவும் முதலில் துன்பமாகத் தோன்றுவது இயற்கையே. ஆலுைம் நாம் கேலலம் இந்தக் கீழ்மைக்குக் கலிக்கு அடிமையாகக் கூடா தென்கின்ற எண்ணமே நமக்கு ஊக்கம் தருவதாக, வலிவு தருவதாக இருக்க வேண்டும். வெற்றி, வெற்றி என்று உயர்வு நோக்கிச் செல்லும் நாம் எமது வலிவை அறிவோ'
DfTu76öt LDL 51 g5 LDPT L." (BLT Lb.
சத்தியத்தை வாழ்வின் நடைமுறையில் எவ்வளவு தூரம் கைக்கொள்ளலாம் என்பது அவனவனுடைய குணத் தைப் பொறுத்தது. ஒவ்வொரு கணமும் நாம் இயற்கை
 
 
 

ஆத்மஜோதி 175
யோடு ஒட்டி ஒட்டி போவதும், தள்ளிச் செல்வதுமே நமது குணத்தை உருவாக்கும் கருவியாக இருக்கிறது. நா ம் (oகாள்ளும் உணவு பெரும்பாலும் நமது குணத்தை உரு வாக்குகிறது. சூழ்நிலையும், இருப்பிடமம் மனிதனின் ஒவ் வாரு பண்பிற்கும் காரணமாக அமைகின்றன. மரத் இன் நிறத்தையொட்டிப் பச்சோந்திக்கு நிறம் மாறுவது ' போல் சூழ்நிலையின் தகுதியொட்டி குணம் அமைகிறது. ஆகவே சத்திய சாதகன் எப்பொழுதும் தனது கொள் கையிலே குறியுடையவனுக விளங்க வேண்டும். தான் உண்ணும் உணவிலே சிந்தை செலுத்தி சிறந்த சைவ உண வாக, மிதமாக உண்ண வேண்டும். நண்பர்களோடு பழ குகையில் அவசியமற்ற விஷயங்களைப் பற்றிய விவாதிப் பையும், அவைகளைப் பற்றிய வேண்டாத சிந்தனையையும் விலக்க வேண்டும். பெரும்பாலும் தனித்திருந்து சிந்தித் துப் பார்க்க வேண்டும் 'நாம் யார்? ஏன் பிறந்தோம்?' நமது கொள்கைப்படி வாழ்வு எப்படி அமைந்திருக்கிறது? இனி மேலும் மேலும் முன்னேற இலட்சியத்தை அடைய கொள்ள வேண்டுவன யாவை?' என்று கண்ணுேட்டம் செலுத்த வேண்டும். மிக நீண்ட, எத்துணையோ கோடி ஆண்டுகள் கழிந்து போன இறந்த காலத்தையும், எதிர் நோக்கி நிற்கும் விரிந்த பரந்த மிகப்பெரிய எதிர்காலத் தையும் சிறிது நினைத்தோமானுல் மிக மிகக் குறுகிய அணு மாத்திரமான நம் வாழ்வுக் காலம் விளங்கும். இந்த அற் பமான காலத்தில் நாம் கேவலம் அழியும் பொருள்களி டத்தே ஆவலைக் கொண்டு அதனுல் கிடைக்கக் கூடிய இச் சிற்றின்ப அனுபவத்தைப் பெரியதாக எண்ணி வாழ் வோமேயானுல் அது எவ்வளவு பெரிய நஷ்டம் என்ப தைச் சிந்தனை செய்யவேண்டும். இந்தப் பெரிய உலகில் எத்தனையோ அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் வாழ்ந் திருக்கிருர்கள். அவர்கள் தங்கள் கொள்கையிலேயே சதா கருத்தூன்றி வாழ்ந்ததனல்தான் அவர்கள் இன்றும் போற் இறப் படுகிருர்கள். எல்லாச் சக்திகளும் அதிசயங்களும் நமக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் ஆத்ம சக்தி என்ற உயர்ந்த வைரத்தைப் பலப்பல கீழ் எண் ணங்கள் என்ற அழுக்குகள் மறைத்திருக்கின்றன. அழுக் | η που மறைக்கப்பட்ட வைரம் ஒளி காட்டா நிற்கின்றது. " விறகிலே தீ போலவும், பாலில் நல் வெண்ணெய் போல வும், மணியில் சோதி போலவும், மறைக்கப்பட்டிருக்கின் றது. அதன் இயல்பைத் தேவாரத்தில் கூட,

Page 10
76 ஆத்மஜோதி
விறகிற் தீயினன் ப லிற் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினுல் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.
என்று கூறியிருத்தல் காண்க. இறை நாம சங்கீர்த் தனமும், மானஸிக தீவிர ஜெபமும், நிஷ்காமிய கருமம் ஆகிய இவை மூடிக் கிடக்கும் அழுக்குகளையெல்லாம் நீக்கி" சித்த சுத்தி தந்தருள்கிறது. பரமஹம்சர் கூட இது பற்றி சொல்கிருர், "பித்தளைப் பாத்திரத்தைத் தினந்தோறும் தேய்த்து அலம்பினுல்தான் பளபளப்பாக இருக்கும். ஒரு நாள் விட்டாலும் களிம்பு கட்ட ஆரம்பித்து விடும். அது போல் மனமென்னும் பாத்திரத்தைத் தினமும் நாம சங் கீர்த்தனம், ஜெபம் என்னும் முறையில் அலம்பிக் களிம்பு எனப்படும் அழுக்குகள் ஏருது காப்போமாக!'
ஆக கலியை வெல்ல நல்ல வழி நாம ஸங்கீர்த்தனம. சத்தியப் பொருளைச் சகுணமாக்கி ஆனந்த கீதமிசைத்தல். எங்கும் அன்பு அருட் ஜோதி, கருணை வெள்ளம் பெருக் கெடுத்தால் பேராற்றலுக்கும், பெருஞ் சக்திக்கும் குறைவு முண்டோ?
'நாமtர்க்கும் குடியல்லோ ம நமனேயஞ்சோம்
நரகத்திலிடர்ப் படோம் நடலயில்லோ ம் ஏ மாப்பேம் பிணியறியோ ம் பணிவோ மல்லோ ம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை. தா மார்ககும் குடியில்லாத் தன் மைய ன
சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதில் கோ மாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்
கொய்ம்மலர்ச் சேவடியினேயே குறுகினுேமே.
என்ற அப்பனது அருள்வாக்கை நினைவோமேயானுல் நமக்கு வீரமும் இறையன் புந் தோன்றும். எல்லையற்ற பரமனின் கருணைக் கடலிலே கிடக்கும் நம்மை, இறையவ னின் தனிப்பெருமை பாடும் நம்மை கலி என் செயும்? நாளும் கோளும் என் செயும்? ஆக சதா இறை நாமத் தை ஒதுவோம். சத்திய வாழ்வு கொள்ளுவோம். அற வாழ்வைக் கடைப்பிடிப்போம். அன்பைப் பெருக்குவோம். உலகெலாம் சாந்தி பெறப் பிரார்த்தனை புரிவோம். தியா " னம் புரிவோம். ஒடுக்கம் தன் உண்மை அறிவு பெறுவோம்.
ஒம் சந்தி சாந்தி! சாந்தி!
 
 
 
 
 
 

ஆத்ம ஜோதி 177
- (ତ୍ଵ ଓତ e. - O b (T5) diff Colg (T60TGOTL I4 b L6), Eids 6T
(முத்து)
(இழந்த கைம்பெண்ணுவர். குலத்தை விளக்க மைந்தன் ஒருவன் இருந்தான். "கைம்பெண் வளர்த்த மகன் உருப்படான்' என்பது உலக வழக்கு. அதற்கு இலக்கியமாகவே வளர்ந்தான். பஞ்சமா பாதகங்களும் அவனிடம் உறவாடின. அவன் குற்றத்திற்குள்ளாகி மறியற்சாலையில் தள்ளப்பட்டான். எத்தகைய குற்றங்கள் புரிந்தா லும் பெற்ற தாய்க்கு அவன் மகன் தானே. பிள்ளைப் பாசம் விட வில்லை. மறியற்சர் லைக்கு மகனைச் சந்திக்கச் சென்ருள். மகனுடைய தோற்றம் உள்ளத்தை வருத்தியது. கண் கலங்கினுள் வாய் எதை யோ முணுமுணுத்தது. 'நாலு பேர் சொன்னபடி நடந்திருந்தால் இந்தப் பிள்ளைக்கு இக்கதி வந்திருக்குமா?' என்று வாய் விட்டுக் கூறினுள்.
இந்த அம்மையார் கூறிய நாலு பேர் யார் என்பது ஒரு கேள்வி. என்னைப் போல உங்களைப் போல நாலு பேரா? அப்படியிருந்தால் அந்த ஊரிலே ஆயிரக் கணக்கான நாலு பேரைச் சந்தித்திருப்பாளே. அந்த நால்வரும் யார் என்பதை அறிந்தால்தான் அவர்கள் சொல் வதை நாம் கேட்க முடியும். சமயகுரவர் என்றும், சமயாசாரியார் என்றும் சிறப்பித்துச் சொல்லப்படும் சம்பந்த, அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வருமே அந்த அம்மையார் குறித்த நாலு பேராவார்.
பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையிலே இந்த நால்வரும் வாழ்வோடு வாழ்வாகக் கலந்து மக்கள் வாழ வழிகாட்டியதாக அறி கின்ருேம். ஒவ்வொருவர் இல்லத்திலும் திருமுறை நூல்கள் இருந் தன வீட்டில் ஏதாவது கருமம் நடைபெறும் போது சந்தேகம் ஏற்பட்டால் திருமுறைக்குக் கயிறு சாத்திப் பார்க்கும் வழக்கம்
ண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றது.
பூரீ மெய்கண்ட தேவருடைய தந்தையார் அச்சுத களப்பாளரு க்குப் பன்னுளாகப் பிள்ளைப் பேறில்லாக் குறை இருந்தது. அவர் தம் குல குருவாகிய திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியரிடம் சென்று s அக்குறை நீங்குதற் பொருட்டுச் செய்வது யா தெ ன வினவி னர். அப்போது ஆசிரியர் திருமுறையைப் பூசித்துக் கயிறு சாத்திப் பார்த்தனர்.

Page 11
178 ஆத்ம ஜோதி
'யேடையாப் பிரிவெய்தும் பிள்ளையினுேடுள்ளநினே
வாயினவே வரம் பெறுவ ரையற வேண்டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயா வாந் தீவிலேயே, *
Ν
என்னும் திருப்பாட்டு அகப்பட்டது. இச் செய்யுளுள் திருவெண் காட்டிலுள்ள முக்குளநீரில் நீராடுபவர்க்குப் பிள்ளையினேடு எண்ணிய யாவும் கைவருமென்று அறுதியிட்டுக் கூறியிருத்தலின் ஆசிரியர், ೨;ಷ್ಟಿ சுத களப்பாளரைத் திருவெண்காட்டிற்குச் சென்று முக்குள நீரில் முழுகி அங்கெழுந்தருளியிருக்கும் பெருமானையும் அம்மையையும் வழி பட்டு வரும்படி கட்டளையிட்டார். ஞானசம்பந்தப் பெருமானது திருவருட் பாடலை நம்பி ஈண்டுத் தவங்கிடந்ததன் பயணுக அம்மை யப்பர் கருணை கூர்ந்து “ஞானசம்பந்தன் நம்மைத் துதித்த பாட்டின் கண் உறுதிவைத்து எம்மை வழிபட்டமையால் அன்னவன் போன்ற மகவினை நீவிரும் பெற்று வாழ்திர்' என்று திருவாய் மலர்ந்தருளி ர்ை. சைவ சித்தாந்த செஞ்ஞாயிருகிய மெய்கண்ட தேவர் நல் வேளையிலே நிலவுலகமுய்ய உதித்தருளினர்.
இப்படியாக நால்வரும் மக்கள் வாழ்க்கைக்கு அன்று தொடக் கம் இன்று வரை வழிகாட்டி வந்துள்ளனர். பன்னிரு திருமுறை களும் அவர்களுருவாக நின்று எமக்குப் போதனை செய்து கொண் டிருக்கின்றன. நாம்தான் அவற்றைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. அங்ஙனம் கேட்டாலும் அதன்படி நடப்பதில்லை.இந்தநாலு பேரும் என்ன சொன்னர்கள்? அதனை அறிந்தால் நாம் ஓரளவாவது எமது வாழ் வில் அவர்கள் சொன்னவற்றைக் கடைப்பிடித்து நடக்க வாய்ப்பு உண்டு.
அடியார் வணக்கம் கூற வந்த தாயுமானுர் நால்வரையும் முறை யே வணங்குகின்ருர்,
வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞான
சட் பந்தனே யருளாற் சாரு நாளென்னுளோ
கொடிய பிறவிப் பிணிப் பொழித்து இவ்வுலகை வைதிக சைவ நெறி நிறுத்திச் சிவபரஞ் சுடரே ஒப்பற்ற பரம்பொருளென நிலை நாட்டியாண்டருளிய திருஞான சம்பந்தப் பெருமானைத் திருவருள் வலத்தால் சார்ந்துய்யுங் காலம் எக்காலமோ?
ஏரின் சிவபோக மிங்கிவற்கே யென்னவுள வாரங் கொள் செங்கையர் தாள் வாரம் வைப்பதெந்நானோ
மேன்மை வாய்ந்த சிவபோகச் செல்வமாயது இவ்வகிலத்துள்ளே திருவாதவூரடிகட்காகவே யேற்பட்டதென்று மாறுகைக் கொண்டியற்
 
 

ஆத்ம ஜோதி 179
றியருளிய உழவாரப் படையைத் தாங்கியுள்ள சிவந்த திருக்கரத்து அப்பர் சுவாமிகளைப் பங்கிட்டு வணங்குவதும் எக்காலமோ?
பித்தரிறை யென்றறிந்து பேதை பாற்றுதனுப்பு வித்தகத் தமிழ்ச் சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ
சிவபெருமான், கேவலம் உன் மத்தரெனக் கொண்டே பேதமை யாளாய பரவை நாச்சியார்பால் தூது செலச் செய்வித்தவராகிய செந்தமிழ்ச் செல்வராம் சுந்தர மூர்த்தி சுவாமிகளது சத்தி தன்மை யைக் கொண்டாடுவதும் எக்காலமோ?
போதவூர் நாடறியப் புத்தர் தமைவாதில் வென்ற வாதவூரைய னன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ
மெய்ஞ்ஞானப் பிரதேசம் இன்னதென உலகெலா முணருமாற்றல் புத்த சமய வாதியரை வாதில் செயம் பெற்றருளிய திருவாதவூர னெனும் பூரீமத் மாணிக்கவாசக சுவாமிகளது அன்பின் பெருக்கை விரும்பி வாழ்த்துதல் எக்காலம்?
நாலு பேரும் சொன்னவையோ அளவிலடங்காத விஷயங்கள். அத்தனையையும் இக் கலியுகத்து மனிதனுக்குப் படித்து அறியும் (o) firறுமையில்லை. ஆதலால் இறைவனே வேண்டாதவற்றைக் கறையான் அரித்து மண்மூடச் செய்து விட்டான். மிச்சமாக இருக்கும் பாடல் களைத் தானும், பண்ணுேடு பாடிப் பொருளுணர்ந்து பாடிப் பக்தி செய்யவோ மனிதனுக்கு நேரமில்லை. ஆதலால் அவர்கள் சொன்ன தை அறியு முன்பு அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை அறிந் தால் அவ்வாழ்க்கை எமது வாழ்வுக்கும் முன்னுேடியாக அமையக் கூடும். இறைவன் ஒருவன். அவன் சிவபெருமானே என்பது நால் வரது வாழ்விலும் ஒப்ப முடிந்த முடிபாகும். இறைவனை அடைதற்கு நான்கு படிகளுள. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என் பன. நான்கு நிலையிலுள்ளாரும் இறைவனைப் பக்தி செய்தால் இறை வனை அடைந்து பேரின் பப் பெருவாழ்வு பெறலாமென்பது நால்வரும் வாழ்ந்து காட்டிய வாழ்வாகும்.
திருஞான சம்பந்தர் இறைவனைத் தந்தையாக அணுகிப் பிள்ளை போல அன்பு செய்தார் என்றும் அந்நெறியைச் சற்புத்திர மார்க்க மென்றுங் கூறுவர். ஆண்டானை அடிமை வழிபடும் நெறியில் அப் பர் ஒழுகினர். அது தாச மார்க்கமாகும். தோழமை வழி பற்றிய வர் சுந்தரர். அது சக மார்க்கம். தலைவனை நாடும் தலைவி போன்ற "நிலையுடையவர் மணிவாசகர். அதனைச் சன்மார்க்க மென்பர்.
சம்பந்தக் குழந்தைக்குத் திருமுலைப் பாலூட்டி ஞானக்குழந்தை

Page 12
SO ஆத்மஜோதி
யாக்கி திருநல்லூர்ப் பெருமணத்திலே முத்தி கொடுத்தருளினர். அப்பருக்குச் சூலே நோய் வருவித்து அதன் மூலம் தனது அடியவ னக்கி முத்திப் பேற்றைக் கொடுத்தார். சுந்தரரைத் திருமணப் பந் தலிலே தடுத்தாட்கொண்டு தோழமை பூண்டு வெள்ளே யானே முலம் கயிலாயத்திற்கு அழைத்துச் சென்ருர் . மணிவாசகரைத் திருப்பெ ருந்துறையிலே குருவாகி வந்து ஆட்கொண்டு சிதம்பரத்திலே முத்தி கொடுத்தருளினர்
கல்லு வைத்த கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன்'
என்று ஒரு தாய் வேண்டுதல் செய்தாள் இங்கே கல் என்றது சிவ லிங்கத்தையாகும். சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள் தோ றும் வனங்கினுள் என்பது கருத்து. அதே போல் நால்வரும் விரும்பி யுறையும் திருத்தலங்கள் தோறும் சென்று சென்று வழிபட்டார்கள். நால்வரையும் இறைவன் பாடவைத்தான். கஷ்டங்களைக் கொடுத் துப் பாடச் செய்தான் நால்வரும் இறைவன் புகழ்பாடுதல் ஒன் றையே தமது குறிக்கோளாகக் கொண்டனர். தெய்வத் திருத்தலங் கள் தோறும் சென்று பண்ணமைந்த பக்திப் பாடல்களைப் பாடினர். பக்தர்கள் ஒன்று கூடினர், சேர்ந்து பாடினர். ஆடினர். ஆனந்திங் கொண்டனர். நால்வரும் ஆண்டவனைத் தொழுதற்காக எழுப்பிய கோஷமே இன்றும் கேட்கின்றது. கூட்டு வழிபாட்டிற்கு வித்திட்ட வர்கள் அவர்களே. வாழ்ந்து காட்டி வழிபடச் செய்தவர்கள் அவர் களே. இன்று எத்தனையோ அரசியல் கட்சிகள் மக்களை ஒன்று சேர்ப் பதற்காகக் கோஷங்களை எழுப்புக் காண்கின்ருேம். முதன் முதலில் மக்களை ஒன்று படுத்துவதற்காக எழுந்த கோஷம் ஆண்டவனை நோ க்கியே எழுந்தது. ஒருவன் பாடுபட்டு நெருப்பு மூட்டினல் அதில் பலர் வந்து குளிர் காய்வது வழக்கம். அதேபோல ஒருவன் தவத் தில் சித்தி பெறும் போது உடனிருந்தாருக்கும் கிடைத்து விடுகின் றது. ஞானசம்பந்தப் பெருமானுருக்கு திருநல்லூர்ப் பெருமணத்திலே கிடைத்த முத்தி திருமணத்திற்குச் சென்ற அத்தனை பேருக்கும் உரி யதாயிற்று.
இன்பம் உலகில் இருக்கத்தான் செய்சிறது. துன்பக் கடலேக் கடந்து கரை ஏறி நீங்கள் அழியாத நித்திய இன்பத்தை அடைய வேண்டினல் சிவபெருமான இடைவிடாது சிந்தனை செய்யுங்கள்:
炎
இரவும் பகலும் தொடர்ந்து துதியுங்கள். சிவன் என்பதற்கே இன் பத்தைச் செய்பவன் என்றுதான் பொருள். அதைவிட இன்பம் வேறு என்னதான் இருக்கிறது? அதுவே பேரின்பம் என்கிருர் "அப்ப ரடிகள்.
துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர் 鷲 இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 18
என் பொன் ஈசன் இறைவன் என்றுள்குவார்க் கன்பனுயிடும் ஆனேக்கா அண்ணலே
உலகில் ஒரே ஒரு மதம் தானுண்டு. அது அன்பு மதமாகும் ஒரே ஒரு சாதி தானுண்டு. அது மனத சாதியாகும். உலகிற்குச் சமய குரவர் நால்வரும் விடுத்துப்போன செய்தி இதுவாகும். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. அன்பும் சிவமும் வேறென்ருல் அவரை அறிவிலார் என அழைக்கின்ருர் திருமூலர். -
ஒவ்வொருவருடைய பற்றுதல்களும் உலகிற் பலவாருகக் காணப் படுகின்றன. ஆனல் அவற்றை நாம் செவ்வனே ஆராய்ந்து அவற் றின் மூலம் எது என்று பார்த்தோமானுல் எல்லாம் நான் என்கிற முனைப்பிலே வந்து முடியும். ஒவ்வொருவனும் தன் உயிரை விடச் சிறந்த பொருள் வேறு இல்லை என்று மதிக்கிரு?ன். ஒருவன் மனைவி மக்களைக் காதலிப்பதும் பொருளீட்டலிற் புத்தியைச் செலுத்துவதும் பிறரை வெறுத்துத் துன்பம் செய்யக் கருதுவதும் எல்லாம் தன்ன லம் கருதியே அமைகின்றன. தன் உயிரே தனக்குப் பெரிதாகப் போய் விடுகிறது. அந்த உயிருக்கு அப்பால் யாது உளது? என்று மனிதன் சிந்திப்பதில்லை. அந்த உயிருக்கும் இருக்கிற மேலான பொ ருள் ஒன்றுளது. அதையே கடவுள் என்கிருேம். உடலுக்குள் உயிர் இருப்பது போல் உயிருக்குள் கடவுள் இருக்சிருர், அந்த உண்மை யை எவன் அறிகிருனே அவனுக்கு உயிர்தான் இனிமையான பொ ருள் என்ற எண்ணம் அகன்று விடும். அந்த உயிருக்காகவே பாடு பட்டுப் ப ைதத்துருகும் பல்விதச் செயல்களும் வெறும் பாச பந்தங் கள் எனப் பார்த்துக் கழிக்கப்படும் . நன்ருக உணர்ந்து பார்க்கு மிடத்துத் தானும் நிலையற்று அழியும் விதத்தில் தனக்கென ஒரு சக்தியுமின்றி அந்தகாரத்தில் ஒரு மின்னலைப் போல குறைந்த அறிவுடையதாகவே அந்த உயிர் காணப்படுகிறது. அந்த உயிருக்கு மேலாகவும் அதனைவிட இனிமை வாய்க்கப் பெற்றதாகவும் ஒரு பொருள் இருக்கிறது. அது மனித உள்ளத்தே நின்று, உயிர்ப்புளே வந்து உயிரோடு கள்ளத்தே கலந்து நிற்கிறது. அப்பொருள் தான் சிவபெருமான், அவனை உணர்ந்து அடைவதே இன்பமாகும். அவனே உயிரை விட மிகவும் இனியவன். இதனை அப்பர் மிக இனிமையாக பாடுகின்ருர்,
என்னிலாரு மெனக் கினியாரில்லே என்னிலுமினியா னுெருவன் உளன் என்னுளே உயிர்ப் பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே
இத்தகைய ஈசனை அடைவதற்கு ஒரே ஒரு மார்க்கம் நமச்சிவா யத்தை ஒதுதலாகும்.

Page 13
82 ஆத்மஜோதி
வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே'
நான் மறக்கிலும் சொல்லும் நா நமச்சிவாயவே" நற்றுணேயாவது நமச்சிவாயவே' 'நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்" "நான் துஞ்சும் போழ்து நின் நாமத்திரு எழுத்தஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே' ‘அரும் தவம் தரும் அஞ் செழுத் தோதினுல் பொருந்து நோய் பிணி போகத் துரப்பதோர்
ஆகுவர். '
'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’
போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லே. போற்றி ஒம் நமச்சிவாய புறம் எனப் போக்கல் கண் டாய் போற்றி ஒம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி
இங்ஙனமாக நால்வரும் நமச்சிவாயத்தையே வாழ்வின் உயிர் நாடியாகக் கொண்டு வாழ்ந்தனர். எமக்கும் வாழ வழிகாட்டினர். நாமும் அவ்வழி நிற்போமாக நாலு பேர் சொன்னபடி நடப்பீராக!
 
 

அகில இலங்கைத் தமிழ் மறைத் தேர்வு
தமிழ் மறைக் கழகம் நடத்தும் இத்தேர்வின் பாடப்பகுதி களிலும் விதிகளிலும் ஆசிரியர் பலருடைய கருத்துக்கிசையப் பின் வரும் மாற்றங்கள் செய்யப் பட்டுள
வயதுக்கட்டுப்பாடு
தொடக்கப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியப்பிரிவு எனும் பிரிவுகளுக்கு இப்பொழுதுள்ள வயதுக்கட்டுப்பாடு நீக்கப் பட்டுளது. எனவே எவரும் எந்தப் பிரிவுக்குந் தோற்றலாம். ஆனல் ஒவ்வொரு பிரிவிலும் இப்பொழுதுள்ள வயது எல்லை களுக்குள் உள்ளவர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும்
பாடப்பகுதிகள்
தேர்வுக்குரிய திருக்குறள் பகுதிகளும் குறைக்கப்பட்டுள. தொடக்கப்பிரிவுக்கு முதல் பத்து அதிகாரங்கள். கீழ்ப்பிரி வுக்கு பதினென்று முதல் முப்பது முடியவுள்ள இருபது அதிகாரங்கள். மத்தியபிரிவுக்கு முப்பத்தொன்று முதல் அறுபது முடியவுள்ள முப்பது அதிகாரங்கள். மேற்பிரிவுக்குத் திருக்குறள் முழுவதும்.
தேர்வுத் தேதி
1962 இலும் அடுத்த ஆண் டு களி லு ம் தேர்வுகள் செப்டம்பர் திங்களிலும் மூன்ருஞ் சனி க் கி ழ மை ய ன் று நடைபெறும்
விண்ணப்பங்கள் ஒவ்வோராண்டும் முதலாந்தேதிக்கு முன் அனுப்பப்படல் வேண்டும். இவ்வாண்டுத் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பங்கள் அனுப்பாதவர்கள் 1-4-62க்கு முன் அனுப்பலாம்.
இத்தேர்வும் திருக்குறள் மணித் தேர்வும் பற்றிய விபரங் களைத் தமிழ் மறைக்கழகம் 58, 34 ஆம் ஒழுங்கை கொழும்பு - 6 எனும் முகவரிக்கு, பத்துச்சத முத்திரை அனுப்பிப் பெற்றுக்
கொள்ளலாம்,
്. -
--్య#22 -

Page 14
நிலை பெறும் ஆனந்தமுக்தி -திமிலைக்கண்ணன்
சொல்லெலாம் இனிக்கும் துணிவெலாம் பிறக்கும்
தூயநற் தமிழின வாழ்த் தி! அல்லலத் தொலைப்போம் அயர் வினை யெரிப்போம்!
அறிவெனுந் தீயினை வளர்ப்போம்! அல்லவை யெல்லாம் ஆதனிடை G6) u urñ) iʼu (3 II FT ño ! அன்பெனும் பண்பின வளர்ப்போம்! நல்லவே செய்வோம் நல்லவே சொல்வோம்!
நானிலம் செழிக்க நாம் வாழ்வோம்! கொலேயினே விலக்கும் குடியினே வெறுக்கும்
குணமுடைக் குன்றென நிமிர்ந்து நிலதடு மாற நேர்மைய ராவோம்!
நித்தலும் தமிழமு துண்போ ம் ! பலகலை பயில்வோம் பண்ணிசைத் திடுவோம்!
பணிவுடை யின் சொல ராவோம்! தொலைவிலேத் தமிழா து ண ந்து முன்னேறு
தூயநல் முயற்சியே வெல்லும் மனத்தொடு வாய்மை மாசறக் காத்து, மனிதநற் பண் பினே வளர்த்து, சினத் தொடு பொறுமை இதற விலக்கித்
திருவுடைச் சிர் பெற வாழ்வோம்! கனத்ததோர் வறுமை கடமைகள் ஒளியக் களவொடு பொய்யினைக் கடிந்து, நினைத்தது முடிக்கும் நிலையினே யடைவோம்!
நில பெறும் ஆனந்த முக்தி!
மரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம்
Gór) Lio
பூணி வடிவாம்பிகா ஸ்மேத முன்னநாதஸ்வாமி தேவஸ்தான லக்ஷார்ச்சனே பூரீ வடிவாம்பிகா ஸ்மேத முன்னநாதஸ்வாமி லக்ஷார்ச்சனுரம்பம் 26–8– 6 2 ≤ger. பூர்த்தி 4-4-62 புதன் பூரீ மஹாவிஷ்ணு லக்ஷார்ச்சஞரம்பம் 5-4-62 வியாழன் பூர்த்தி 13-4- 62 வெள்ளி அன்பர்கள் பங்குபற்ற வேண்டுகிருேம்.
gG D சி. பாலசுப் பிரமண்யக்குருக்கள்
ஆதீன பரிபாலன கர்த்தா,
 
 
 

ஆத்மஜோதி 185 மெய்த்தேவர்
| м இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பலவிதமான எண் | ணங்களேயுடையவர்களாகவும், செயல்களேயுடையவர்களா கவும், குணங்களையுடையவர்களாகவும் இருக்கி ரு ர் க ள். அவரவர் மன நிலைக்குத் தகுந்தபடி ஒழுகுகிருர்கள். தாங் கள் செய்வதே சரியென்று எண்ணுகிருர்கள். தான் தவறு செய்வதை பிறர் சொல்லியும்கூட அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கிருர்கள். மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்ற பழமொழியும் இதனை வலியுறுத்து கிறது. மனதைப் போக்கில் விட்டு விட்டால் பலவிதத் துன்பங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகிருேம். இது போன்று தெய்வ வழிபாட்டிலும் பல தெய்வங்களை வழிபட்டு வ ரு கி ருே ம். ஆனல் தெய்வங்களுக்கெல்லாம் முதன் மையுடையது எதுவென்றும், நீக்கமற நிறைந்திருப்பது எது வென்றும், வாக்கு மனம் இவைகளைக் கடந்து நிற்கின்ற தெய் வம் எதுவென்றும், நம் பொருட்டாக அருவம்,உருவம் அருவு ருவம் என்ற மூன்று வடிவத்திலும் வந்து உய்யச் செய்யும் தெய்வம் எதுவென்றும், பிறவா பேரின்பம் தரும் தெய் வம் எதுவென்றும் நாம் அறிந்து கொள்ளல் அவசியம்.
நமது சமயத்தில் பல தெய்வங்களை வைத்து வழிபடு கிரு?ர்கள். இதனுல் கடவுளரின் எண்ணிக்கை அதிகமாகின் றது. இதனை நம்ப வேண்டுமா? என்கிருர்கள். நாமறி வது என்னவென்றல் பல கடவுளர்கள் இல்லை, அவரவர் மனப்பக்குவத்திற்குத் தக்க தங்கள் விருப்பப்படி வணங்கி வருகிருர்களென்பதும் எந்தத் தெய்வத்தை வணங்கியபோ திலும் அந்தத் தெய்வத்தினிடமாக நின்று அருள் செய்ப "வன் சிவனேயாகும். இதனையே சித்தியாரில் யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாகனுர்தாம் வருவர்' என்று அருணந்தி சிவாசாரியார் அருளியுள்ளார். இன்னும் சிவமும் சக்தியும் ஒன்றிலிருந்து ஒன்ருகத் தோன்றி ஒவ்வொரு தத்துவங்களில் நின்றுகொ ண்டு தத்தம் தொழில்களைச் செய்வார்கள். இவ்வாறு முத் திறத்திலும் ஒன்பது வர்க்கத்திலும் வேற்றுமையில்லாமல் நின்று அவ்வத் தொழில்களைச் செய்வார்கள். அவரே

Page 15
நிUது .
86. ஆத்மஜோதி
ஏகநாதர், அவரே மெய்த்தேவர் என்று சொல்லலாம்.
இனி வேதங்கள் கடவுளர்களைப் பற்றிக் கூறும்போது பல என்று கூறுகின்றன. முடிவில் யாவரையும் ஒருவரே என்று கூறுகிறது. அதனையே பிரமம் என்ற பெயரால் குறிக்கும். ரிக் வேதம் ஏகம் சத் என்றும், உபநிடதங்கள் ஏகம் ஏவ அத்விதீயம் என்றும் கூறுகின்றன. இதனேயே திருமூலர் ஒன்றவன்தான்' என்றும் , ஒன்றே தேவன் என்றும், ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒரு வன் அவன் யாவருக்கும் அருள் செயும் ஆதிப்பிரானே என்கிருர், பட்டினத்தடிகள் ஒன்றென்றிரு தெய்வம் என் றருளியுள்ளார். இறைவனை யாரொருவர் உள்குவார் உள் ளத்து அவ்வுருவாய் நின்று அருள் கொடுப்பவன் அரனே த் தவிர வேறு ஒருவரும் இல்லை. இதனையே சிவனேடு ஒக் கும் தெய்வம் தேடினுமில்லை' என்று திருமந்திரம் கூறுகி
இது சிவஞானபோத நூலில் அவனென்றும் அவளென் 1) ம் அதுவென்றும் சுட்டியுணரப்படும் பிரபஞ்சம் தோற் றம், நிலை, இறுதி என்ற முத்தொழிலையுடையதாகையால் அதனைத் தோற்றுவிப்பவன் ஒருவன் வேண்டும். அவனே அதனைச் சங்காரம் செய்கிருன் , அவரிடமிருந்தே திரும்ப உலகம் தோன்றுகிறது. சங்காரம் செய்யும் கடவுளே முதற் கடவுளாகும். இதனையே அந்தம் ஆதி என்மனர் புலவர் என்ருர், திருவள்ளுவரும் முதற்கடவுளை ஆதி பக வன் என்று தம் நூலில் அருளியுள்ளார்.
எல்லாச் சமயங்களையும் தன்னுளடக்கி எல்லாவற்றிற் கும் மேலாக நிற்கின்ற சமயம் எதுவோ அதுவே சைவ சமயம். இதனையே சைவ சமயமே சமயம் என்று தாயு மான சுவாமிகள் அருளியுள்ளார். அச் சமய உண்மை களைக் கூறும் சாத்திர நூற்களும், தோத்திர நூல்களும் ஒரு தெய்வத்தையே குறிக்கின்றன. அதுவே மெய்த் தெய் வம், அதுவே ஆகியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதி: அதுவே உலகையும் அதிலுள்ள பொருள்க ளனைத்தையும் படைத்துக்காத்து அழித்து மறைத்து அருளி வருகின்றது. அத் மதய்வத்தையே நாம் வணங்கல் வேண்டும். அவர் அங்கு இங்கு எனதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின் ருர், அவரே அநாதிமுத்த சித்தன். சத்து சித்து ஆனந் தமாக இருக்கின்றர். அவனுடைய சேவடியை அடைய முயலுவதே பிறவியெடுத் 5 கின் பயனுகும்.

ஆத்மஜோதி 187
இத்தகைய தெய்வத்தினிடம் மாணிக்க வாசக சுவா மிகள் தன் நெஞ்சைத் தூதாக விடுகின்ருர், இது சிவ  ைேடு இடையரு அன்பு கொள்ளும் முறையாகும். மன மாகிய வண்டை சிவபிரானுடைய திருவடித் தாமரைக வில் சென்று ஊத வேண்டுகின் ருர், இது திருக்கோத்தும்பீ என்றழைக்கப்படுகிறது. சிவபோதத்திற்கு பிரிவுண்டாக தன் மனதையே தூதாக விடுகிருர், அது:
அத்தேவர் தேவர் அவர் தேவர் தேவர் என்றிங் நுன் பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத் தேதுமில்லாது என்பற்றற நான் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்ககே சென்று தாய் கோத்தும் பீ
என்றருளியுள்ளார்.
ஆகவே சிவனேத் தவிர வேறு தெய்வங்கள் முதன்மை யாகாது. ஏனென்ருல் மற்றத் தெய்வங்கள் நம்மைப் போல் பிறக்கும், இறக்கும், மேல்வினையும் செய்யும். இவை இல்லாதான் சிவன் ஒருவனே. மற்றத் தெய்வங்களை வழி பட்டு வாழ வேண்டுமென்பதும் அவன் திருவடியைச் சேரு வதே சிறந்தது என்பதை சுவாமிகளின் வாக்கால் அறிந்து
அத்தகைய இறைவனை மனமொழி மெய்களால் வழி பட வேண்டும். மனம் இறைவனை நினைக்கவும், வாக்கு அவன் அவன் நாமத்தைச் சொல்லியும், மந்திரங்களை உச் சரித்தும், மெய்யானது பலவகையான வாசனை தரும் மலர் களினல் இறைவனை அர்ச்சனை செய்தும் சினத்தை மாற்றி அறத்தின் வழியிலே ஒழுகுவோமானல் முன்னைப் பழம் பொ ருட்கு முன்னைப் பழம் பொருளாகியும், பின்னைப் புதுமைக் கும் பேர்த்தும் அப்பெற்றியதாயுள்ள இறைவனுகிய சிவனே அதனிடமாக நின்று அருள் செய்வார். அவரே மற்றத் தெய்வங்களுக்கு அதிகாரம் ஈந்தவர். மற்றத் தெய்வங்கள்தத் தம் அதிகார எல்லைக்குள்ளே ஆணை செலுத்துவர். சிவனே எல்லா இடங்களிலும ஆணை செலுத்துவார். அவரே முதற் கடவுளும் மெய்த் தேவருமாவார்.
அத்தகைய மேம்பாடுடைய சிவனை வணங்கி வருவோ மாஞல் அயன் , திருமால் இவர்களுடைய செல்வமும் வாழ்

Page 16
188 ஆத்மஜோதி
வும் ஒரு வாழ்வாகுமா என்று சொல்லும்படியான தன்மை யில் நம்மை பெருவாழ்வு வாழச் செய்வார். ஆதலினல் சிவபெருமானை வழிபட்டு அவருடைய சேவடியை அடைய
முயலுவோமாக.
<><ジ><つ<ス<><><つ<><ジへ○ヘ<つか<スト○ <ス・<><ス<><><><ス<><><ス<><ス<つ*<><><><ジ
வாய்வு சூரணம்
உஷ்ணவாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்கட்டு, மலபந்தம், அஜிர்ணம், கைகால்அசதி பிடிப்பு, பசியின்மை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்தகுலை, புளியேப்பம், நெஞ்சுக் கருப்பு, முதலிய வாய்வு ரோகங் களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த சூரணம். தபால் செலவு உட்பட டின் ஒன்று 4ளூபா 25சதம்
(பத்தியமில்ல) சம்பு இன்டஸ்ரீஸ் - அரிசிப் பாளையம் சேலம் 2 (S.I.)
இலங்யிைல் கிடைக்குமிடம்:
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி
மலாயாவில் கிடைக்குமிடம்:- மறீ கணபதி அன் கொம்பனி (ஜவுளி வியாபாரம்) 66, பெல் பீல்ட் ஸ்ரீட் ஈப்போ போன் நெ. 39 7. த. பெ. 37. உபயோகிக்கும் முறை
இந்தச் சூரணத்தில் அரை தோலா அளவு எடுத்து அத்துடன் அரை தே லா அளவு சீனி அல்லது சர்க் கரை கலந்து ஆகாரத்துக்குமுன் உட்கொண்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தவும். காலை மாலை 6 தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும்போது அளவைக்கூட்டியும் குறைத்தும் உட்கொள்ளலாம், நெய், பால், வெண்ணெய், நிறையச்சாப்பிடலாம். வாரம் () ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்யலாம். () மூலிகையினல் தயாரிக்கப் பெற்றது. ()
<><><つ<つ<つ<つ<><><つヘ<つ<スト<><><><つ<つ<つ<><づみ<つ<つ<つ<ス、つ<><><スト<><ス<ス。 懿
R
 

ஆத்மஜோதி 189 உண்மையில் உள்ளது அதுவே
(திருமதி M. மதார் நாச்சியார்)
இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளின் ஏகத்துவக் கொள்கைப் படி அல்லாஹ் வைத் தவிர வேறு எதப் பொருளும் இல்லை. அந்த யதார்த்த வஸ்துவை அறிவின் துணைகொண்டு அறிய இயலாது, ஏனெனில் அறிவு இயங்குவதற்கு அந்த மூல வஸ்துவே ஆதாரமாக இருக்கிறது. ஆகவே அந்த வஸ்து அதுவாகவே தனிமயமாக அமைந்துள்ளது. உலகம், காலம் காரண காரிய நிபதிகள் யாவும் அந்த உன்னத வஸ்து வின் நிலையில் இல்லாத வெறும் மாயையேயாகும்.
காலம் என்று வர்ணிக்கப்படுவது தனித்து இயங்க ஒண் ணு த து. மனதின் மாறுதல்க%ள யொட்டி மாறிவிடுவதே காலத்தின் இயல்பு. காலம் மனதிலே நிகழும் அநுபவங் களே ஆதாரமாக வைத்து எல்லை நிர்ணயிப்பதாகும். தூங் கும் பொழுது கனவிலே காணுகின்ற காட்சி நணவு உல கில் ஒரு மணி நேரத்தைக் குறித்தாலும் சூட்சும உலகில் சொப்பன நிலையில் அந்த அநுபவங்களை மனது வருடக் கணக்கில் நிகழ்வது போல் தோற்றமளிக்கிறது. இதிலிரு ந்து நன்கு புலகிைறது மனது கற்பனை செய்திடும் இன்ப துன்ப உணர்ச்சிகளின் எல்லைக் கோடுகளே காலமாகும்.
மனதின் பல்வேறு நிலைகளை அனுசரித்தே காலம் கணக் கிடப் படுகிறது. நேரம் இருப்பது போல் நினைவுக்குத்தான் தெரிகிறது. எண்ணங்களின் இயக்கங்களே நேரம் இருப்ப தாக எத்தி வைக்கிறது. மனதின் செயல்களே நேரத்தின் அவசியத்தைக் குறி க் கி றது. ம ன மி ல் லா து போய்விட்டால் காலம் என்று ஒன்று தனியாக இல்லை. கால தேச வர்த்தமானங்கள் யாவும் மனதின் அசைவுக ளால் அநுபவிக்கப்படும் மாயா தோற்றங்களே. ஆகவே மனிதன் மனதின் கட்டுக் கோப்பில் வாழும் வரையில் காலத்தினின்றும் - ஆசைகளின் சிறையிலிருந்து விடுதலை பெற முடியாது. ஏனெனில் நினைப்புகளின் பிரதி பிம்பமா கவே நேரத்தைக் காண்கிருேம்.
யதார்த்த வஸ்துவாகிய அல்லாஹ் எந்தவித மாறுத லுமின்றி ஏகமயமாக அமைந்துள்ளது. அகண்ட மகா

Page 17
9) ஆத்மஜோதி
சமுத்திரத்தில் பல்வேறு அலைகள் அதன்மேல் பாய்வதுபோல் பார்த்ததும் அலைவேறு கடல் வேறு என்று கணிப்பது போல் அகண்ட வஸ்துவில் உலகம் தனித்திருப்பதாக நாம் : யூகிக்கிருேம். இதற்குக் காரணம் எண்ணற்ற ரூபங்களுக்கு
நாமம் சூட்டி அது வெவ்வேரு இருப்பதாக எண்ணுவதே
யாகும். மனம் ரூபங்களைப் பர்த்ததும் அதற்கு மனமே
வடிவங் கொடுத்து பெயர் மூலமாக பதார்த்த வஸ்துவி னின்றும் பிரித்து விடுகிறது இவ்வாறு பாகு படுத்தும்தன்மை * யே மனதின் தொழிலாக இருக்கிறது. இந்த மனமோ எண்ணற்ற எண்ணங்களின் பின்னமாக இருக்கிறது. முரண் பட்ட ஆசைகளின் கதம்பமே மனமாகும் இந்த மனமே ஒரு எல்லேயில் ஒய்ந்து ஒழிந்து விட்டால் அது கண்ட கணித்து வைத்திருந்த நாம ரூபங்களும் நாசமாகி விடும். மனம் இல்லாது ஒழிந்து விட்டால் மனிதன் சூனியத்தில் நின்று விடுவதல்ல; அல்லது வெறும் பூத வெளியில் கரை ந்து விடுவதுமல்ல. பொய்யிலே வளர்ந்தோங்கி பல்வேறு தோற்றங்களாகப் பவனி வந்து மயக்கத்தின் அறியாமை யினுல் உண்மை போல் தோற்றமளித்த உலகமும் அதை மெய்யெனப் போற்றி பூஜித்த மனமும் அடியோடு சுட் டெரிக்கப் பெற்று யதார்த்த வஸ்துவே மிஞ்சியிருப்பதா கும். உண்மையில் உள்ளது அதுவே.
சிறு பொறியேயாயினும் துருத்தி கொண்டு ஊதினுல் பெரு நெருப்பாவது போல் சிறிய தீமை செய்தவனேயா யினும் முகஸ்துதி பெறப்பெற அதிக கொடியவன் ஆகி விடுகிமு ன்.
- ஷேக்ஸ் பியர்.
அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தி லும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட் டால் போதும். அரைக்கணத்தில் அகில லோகமும் பரவி விடும்.
- ஷேக்ஸ் பியர்.
அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும். ே
- கோல்ட்ஸ்மித்

ஆத்மஜோதி 91.
தத்துவ விசாரணை
(சேதுபதி)
") # 1 to u Tiff2
ஆலயமே காயம் அறிவே சிவலிங்கம்.
(சித்தர்)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே!
(சுத்தானந்தர்)
நாம் யார்? என்ற தத்துவ விசாரணை மூலம் தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான். (ரமணரிசி)
ஒர் யுத்த முனையில் 1000 பேர்களே 1000 முறை ஜெயித்த வீரனைப் பார்க்கிலும் முக் குணங்களை ஜெயித்தவனே உண்மை வீரன்! (தர்ம பதம்)
முக்குணங்களுக்கு வசப்படாமல் எமது ஜீவாத்மா பர மாத்மாவுடன் இரண்டறக் கலப்பதே பேரின்ப நிலை யென கோயில் விக்கிரகங்களின் வலது கைவிரல் சின் முத்திரை குறிப்பிடுகின்றது.
இதன்படி எமது சரீரம் ஒர் நடமாடும் ஆலயமாகவும் கைகால்கள் ஆலயத்தின் நான்கு தூண்களாகவும் முது கெலும்பு மோட்டு வளையாகவும் விலா எலும்புகள் பக்க வளைகளாகவும் தசை நார்கள் கயிருகவும் மாமி சம் களிமண்ணுகவும் நவத்துவாரங்கள் கதவு யன்னல் களாகவும் நீண்ட கூந்தல் வைக்கோலால் வேயப்பட்ட 5F. GOD UT ULJET 5@J LID
மனச் சாட்சி மூலஸ்தானத்திலுள்ள பரம் பொரு ளான அண்டலிங்கமாகவும்
தத்துவ ஞானிகளால் அந்தக் கரணமென அழைக்கப் படும் மனம் இரண்டாவது மண்டபத்திலுள்ள சக்தி யாகவும் புத்தி மூன்ருவது மண்டபத்திலுள்ள சிவம் (நடேசர்) போன்றும் சித்தம், அகங்காரம் நான்கா வது மண்டபத்திலுள்ள பொறுமையுள்ள விநாயகர் பொறுமையற்ற சு ப்ர ம ணி ய ர் பே ன் று ம்

Page 18
192 ஆத்மஜோதி
9. கருவிகளென அழைக்கப்படும் பஞ்சேந்திரிய ஞானேந்தி ரியங்களாதி 92 தத்துவங்கள் ஒர் தொண்டர் சபையைப்
போன்றும்
10. எமது ஜீவாத்மா ஒர் அடியானைப் போன்றும்
இராவணன், கும்பகர்ணன், விபீஷணனைப் போன்ற' தும் மும்மலம் மூவாச்ைகளையுடைய முக்குணங்களான ரசோ , தமோ, சத்வ குணங்கள் எமது ஜீவாத்மாவை யும் கரண கருவிகளையும் அடுத்துக் கெடுக்கும் உட் பகைவர்கள் போன்றும்
12. இவர்களை ஜெயிக்கக் கூடியவர் பரம் பொருளைப் போன்ற மனச் சாட்சி போன்றும் இவர்களை ஜெயிக் கக் கூடிய ஆயுதங்கள் (வில் அம்புகள்) அவரவர் வேத மந்திரங்கள் போன்றும் தோன்றுகிறதல்லவா?
தத்துவ விசாரணையிலீடுபட்டுக் கொண்டிருக்கும் அன் பர்கள் தங்கள் அபிப்பிராயங்களை எமது ஆத்மஜோதி மூலம் தெரிவிப்பார்களானுல் சந்தேகங்களை நி வ ர் த் தி செய்து பேரின்ப நிலையடையலாமல்லவா?
உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதை நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்ததா கும்.
- ஷேக்ஸ்பியர்
செல்வத்தை உண்டாக்காமல் அனுபவிக்க முடியாது. அதைப் போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் அனுப விக்க உரிமை கிடையாது. స్ట్
- பெர்னுட்ஷா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வ வழிபாடு
(சாதுசுப்பையா)
தனமும் கல்வியும் நன்முய் தருவதெங்கே?
தளர்விலா மனதையும் பெறுவதெங்கே? தினமும் நின் அருள் வழி துணையுமெங்கே? தெய்வமே யெங்களே வை அன்பாயங்கே.
அன்பு அறிவு ஆர்வம் வருவதெங்கே?
அகந்தை பொருமை கோபம் அழிவதெங்கே?
இன்பமும் இன் செல்லும் இருப்பதெங்கே?
இறைவா எங்கட் கிடம் இடுவாயங்கே.
ஆணவத்திற்கடி பணியாத மாநிலயெங்கே?
யானென்ற இறுமாப்பு அகலுமிடமெங்கே?
காணுருவ மெங்குமொரு கடவுள் நிலையெங்கே?
கருணைசெய் தெங்களைக் காட்டுவாயங்கே.
சந்ததமும் சன்மார்க்கம் சத்தியம் எங்கே?
சாந்திதரும் இகழாமை சாதனைகள் எங்கே?
சிந்தை மகிழ நற்குணங்கள் செழித்திடலுமெங்கே?
சிறப்பாயிடந்தருவாய் எங்களுக்கங்கே.
நகைச்சுவையும் ஈகையும் நல்குமிடமெங்கே?
பகைச்செரிவும் பாபமும் பற்றததெங்கே? அகச்சுவை யருந்துமொரு அனுபவம்
அறிவு தந்தெங்களை அன்பாய் வையங்கே.
அகந்தைகள் அகன்றிடும் இடமும் எங்கே?
ஆண்மை வீரம்பெறும் திடமுமெங்கே?
ஜெகந்தனில் கேஷ்மங்கள் சிறப்பதெங்கே?
சிந்தனை தந்தெங்களை வை சிறப்பாயங்கே.
ஈகையும் இன்சொல்லும் இகழாமை (Թալեյ (835ք இனிமையும் பண்பும் இருப்பிடம் எங்கே?
யோகமும் ஞானமும் கூடுமிடமெங்கே?
ஏகமாய் எங்களை வை அவசியம் அங்கே?

Page 19
அ றி வி ன் ஆற் ற ல்.
யோகாசிரியர் பூரீ எஸ். ஏ. பி. சிவலிங்கம் இமயமலை.
இம் மானிடச் சட்டையிலுள்ள எண்ணற்ற நரம்புகளும், எலும் புகளும் இரத்தச் சுரப்பிகளும் இரத்தக் குழாய்களும் தத்தம் வேலை களைக் கவனித்து தினந்தவருது நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிரு ந்து, நல்லன, தீயன எனப் பாகுபாட்டுடன் பிரித்து, சுத்த இரத் தத்திற் கலந்து நமக்கு ஆனந்தம், ஆரோக்கியம், புஷ்டி, தேக நலம் இவற்றைக் கொடுத்து வியாதியற்று, தினந்தினம் நமக்கு ஊக்கத் தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது.
இஃதே போன்று நமக்கு இயற்கையன்னை எவ்வித துன்பத்தை யும், கஷ்டம், கவலை, மனே ஒட்டத்தையும் போக்குதற்கு ஜோதி யைப் போன்று அனைவரிடத்தும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். திளைக்கத் திளைக்கத் தெவிட்டாத ஊற்றெனப் பாய்ந்தோடும் அறி வைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ருர், இவ்வறிவை யாம் எவ்வகை யிற் பாகுபடுத்தி அதன் தன்மையையும், அரும் பெருங் குணங்களை யும் கண்டடைவது? ஒர் சிலர் செய்யுங் காரியங்களும், தன்மைக ளும் அறிவற்றவர் செய்வதைப் போன்றிருக்கும். இதன் காரணமாக ஐம்புலன்கள் அறிவை மயக்கி அதன் வழி இழுத்து ஆட்சி நடத்து வதால் அறிவென்பதென்ன? எனும் சந்தேகத்திற் கிடமாகின்ருேம் புலன்கள் அதனதன் வழிச் சென்று தன் வேலையைக் கிரமமாக, செய்து ஆட்கொள்கின்றன. அதே போன்று மன நிலையை ஒருமைப் படுத்தி அறிவைப் பெருக்கின் பேரறிவாளராவோம்.
தினசரி செய்யும் ஒர் குறிப்பிட்ட தெய்வீக சாதனையின் மூலம் அறிவைக் காணலாம். உலகில் எண்ணற்ற இயந்திரங்களையும் சொல் வதற்கரிய அரும் பெரும் செயல்களையும் அறிவாளர் செய்து ஆனந் தித்து பலருக்கு உதவுகின்றனர். இம் மாபெரும் சக்தியைத் தருவி தாயுள்ள அறிவை எப்படி அடைவது? எவ்வாறு அதன் வழி" சென்று அனுபவிப்பது? என்பதைப் பற்றி பூரீ பகவான் பதஞ்சலி யார் கூவுகின்ருர்,
‘யதாபிமத த்யானத்வா' . 1..... 39
பற்பல நூல்களில் மனதையடக்க எண்ணற்ற வழிகளைப் போதித்* திருப்பினும் தன் அனுபவத்தை தெள்ளத் தெளிய விளங்க வைக்கின்ருர் தீவிர தெய்வீக பக்தன், தெய்வீக பிரமத்திடம் அதி தீவிர இ ய ம நியமங்களுடன் கூடி தைல தாரை போன்று மனத்தை பரசொரூட த்தினிடம் சிந்தை வைத்து சிறிது, சிறிதாக மனத்தை நிறுத்தப் பழகி பின் அதன் வழியிலிருந்துண்டாகும் அறிவைப் பயன்படுத்தி தெய்வீக வழியிற் சென்று பேரண்டமாக தன்மையையடைய என விளக்குகின்
ருர்,
 
 
 
 

ஆத்மஜோதி 195
என்னே சிந்தனை? என்னே ஞானபொக்கிஷம்? இறைவன் கொடுத்த இவ்வுடலில் தெய்வீகம், ஆனந்தம், ஆத்ம சக்தி இவற்றைக்கான அறிவே மிக முக்கியமானதாகவும், சாதாரண மனித உரு வா ய் த் திகழ்ந்து நடமாடினும், மனத்தைச் செவ்வைப்படுத்தி இருப்பின், இறை வனின் தன்மையையும் அடைந்து தேவர்களாகின்ருேமெனின் அதன் தத்துவத்தையும், ஆரோக்கிய வாழ்வும் நமக்கு எவ்விதத்தில் உதவி ஊக்குவிக்கின்றதென்பதை நினைந்து இறைவனை கூப்பித்தொழல் வேண் p டும். திருமூலர் தன் அனுபவத்தில் அறிவைப்பற்றி,
'தன்னேயறியத் தனக்கொரு கேடில்லே தன்னை யறியாமல் தானே கெடுகின்றன். தன்னை யறியும் அறிவை யறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத் தானிருந்தானே'
இயம, நியம விரதம் தவருது பலகாலம் அறிஞனுராய்ச்சியால் சாதனை செய்யின் தான் யார்? எனும் நிலை தென்படும். மனதை யடக்கி மாயையிற் தளைக்காது, மயக்கமறுத்து அறிவாற் சிந்தித்து செய்யின் எவ்வித கேடும், துன்பமும், துக்கமும் நமக்கில்லை. இவ்வறி வையறியாது மனமயக்கத்தால் தன்னைத்தானே கெடுத்துக்கொள்கின் முன், மனவடக்கத்தால் அகத்தே ஆத்மா இருப்பிடமென்றெண்ணி தன்னைத் தானே ஒன்ருய்க் கலந்து விடுகின்ருன் என தெளிவிக்கின்ருர், வள்ளல் பூரீராமலிங்க ஸ்வாமிகள் அறிவிற்காக இறைவனிடம் கதறி கண்ணிர் மல்கி, துடித்து, இதயமெல்லாம் அன்பால் விட்டு அழுகின்ருர்
'கற்றதென்றும் சாகாத கல்வியென்றும் கண்டு கொண்டும் அற்புதச் சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் இறைவா'
இம்மனக் குரங்கையடக்கி ஆத்மானந்த அறிவடைந்து மெய்ஞ் ஞான நிலையுடன் தன்னையடைவேனே வென உருகுகின்ருர் நீண்ட நாட்களாய் இறைவனையே நினைந்து உருகி அதிலிருந்து ஒர் வித பயம் நீங்கி, அதுதான் தன்னையறியும் தன்மை வந்துற்ற பின்பு அதுவேயறிவென்றெண்ணி இன அதையே சிந்தித்து, சிக்கென உன்னை பிடிக்கின்றேனென புலம்புகின்ருர்,
பட்டினத்துச் சுவாமிகள் அனுபவத்தில் மனதிற் புகட்டி அதை நமக் கும் தெளிய வைக்கின்றர்கள்.
'நாட்டமென்றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்ம லாட்டமென்றேயிரு பொல்லாவுடலை யடர்ந்த சந்தைக்
கட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ் நீ ரோட்ட மென்றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதுவே'
என அகத்தைத் திறக்க எப்பொருளிடத்தும் திடமாய் நில்லாது,

Page 20
196 ஆத்மஜோதி
வாழ்வு, உடல், ஆசை இ ைவ கள் பொம்மலாட்டத்தைப் போன்று
நினைத்து, வைராக்கியத்துடன் தன் மனத்தை இறைவனிடம் நிறுத்தி அறிவைப் பெற்று அதில் திலைத்திருங்கள். எனக்கூவிநம்மையும் அதில் s திளைக்கச் செய்கின்ருர்,
விவேக சிந்தாமணி அறிவின் தன்மையையும், அறிவுடன் பகிர்ந்து சொல்வன்மையையும் பேசின் யா ம் எத்தன்மையை யடையலாமென் ருேதுகின்றது.
'அறிவுளோர் தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார் நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார் அறிவுளோர் தமக்கும் யாதோர் அசடது வருமேயாகில் வெறியரென் றிகழாரென்று மேதினியுள்ளோர் தாமே’
ஆற்றலும் மனவடக்கமும் கொண்ட அறிவுற்ருேரை நாடாளும் அர சரும், உலகிலுள்ள அனைவரும் உ ள ம் பொதிந்து பெரும் அன்புடன் போற்றி வணங்குவார்கள். அவ்வறிவுற்ருேர்கட்கு யாதும் அசம்பாவித கஷ்டம், நஷ்டம், அவமானம் முதலியன எதுவும் வருமாதலின் அவரை "இவர்தான் அறிவினர்' என பலரும் இகழ்ந்து பேச மாட்டார்கள். இவ்வாறே தாயமானவ சுவாமிகளும்
1.சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே ' .
தெய்வீகத்திற் திளைத்தால் அறிவு ஒர் பெரும் பேரானந்தமாகவும், இறைவனுகவும் ஆகுமென்று ஒப்பிட்டுக் குறிப்பிடுகின்றர். மனத்தை படக்கி ஆட்கொண்டிருக்கின்ற அறிவே நீயே எனக்கு தெய்வமும் அனைத்தும் உனையே தேடி அலைகின்றேன் என புலம்புகின்ருர்,
யாம் அறிவைப் பற்றி எவ்வாறு அறியவியலும்? தினமும் குறிப்பிட் ட நேரத்தில் குறித்த வேலைகளைச் செய்து இறைவனிடம் மனத்தை வைத்து அவன்பால் பக்திப் பெருக்கால் அழுது, புலம்பின் மனமடங்கி பளிங்கைப்போன்று அறிவு பிரகாசித்து நமக்கு ஜோதியைக் காட்டும், ஊடுருவி அறிவிற் சிந்தித்து ஆனந்தமடைவோமாக,
'ஜோதியும், தோழனும், மெய்க்காப்பாளனும், யோகமும், வாழ் வும், ஆத்மானந்தமும், யாவும் அறிவின் ஆற்றலால் உண்டாகின்றதென் பதையறிவோமாக,'
翠《婆 উর্দ)
 
 
 
 

ஆத்ம ஜோதி 197
(அரிகர கிருஷ்ணமூர்த்தி)
உலகின் கண் தோன்றிய பிறப்புக்கள் அனைத்திலும் சிறப்பு வாய்ந்ததும் முதன்மையானதுமான பிறப்பு மக்கட் பிறப்பேயாகும். இம் மக்கள் பிறவி மற்றைய பிறவிகளினின் றும் சிறந்த பிறவியாகக் காணப்படுவதற்குக் காரணம் இல் லாமலில்லை. ம னி த ன் மற்றையப் பிறவிகளிடம் காணப் படாத ஒரு தனிச் சிறப்பை பெற்றிருக்கிருன் அச் சிறப்புத் தான் பேச்சு என்பதாம். பேசுகின்றவன் மனிதன். அதிலும் நல்லதைப்பேசுகின்றவன் தான் சிறந்த மனிதன் எனக்கருதப் படுகின்றன். நல்லதைப் பேசுகின்றதை அல்லது நல்ல சொற் களைச் சொல்கின்ற நாளைத்தான் மனிதப் பிறவியை நன்கு பயன் படுத்திய நாள் என்று சொல்ல வேண்டும். நல்ல பயன் தரும் சொற்களைச் சொல்ல வேண்டும் பயனில்லாத சொற் களைச் சொல்லக் கடாது. இதனை வள்ளுவர்,
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்
என அறிவுறுத்துகிருர், ஒருவனுடைய உயர்விற்கும், தாழ் விற்கும் காரணம் வாயினின்று வரும் சொற்களைப் பொறுத்த தேயாம். அதினின்று குணம், பெருமை, சிறுமை, இயல்பு இவையனைத்தையும் நன்கு காணலாம்- தனக்கும் பயன்படாது மற்றவர்களுக்கும் பயன் படாத சொற்களைச் சொல்லி வாழ் நாளை வீணுகக் கழிக்கின்றவர்களையும், அவர் வழிசெல்கின்ற வர்களையும் மக்கள் இனத்தோடு சேர்த்துக் கொள்ளுதல் கூடாது. ஏனெனில் எவ்வாறு களை என்பது நெற்பயிரோடு தானும் பிறந்து வளர்ந்து கதிர் வீசி இறுதியில் தன் உள்ளே அரிசியைக் கொள்ளாமல் நெற் பயிருக்கும் கெடு தி யை க் கொடுப்பதால் மக்கள் அதனை பதர் எனக் கூறி ஒதுக்கின் றனரோ அதுபோல மனித இனத்தில் தோன்றி, மனித இனத் தோடு வளர்ந்து இறுதியில் மனித இனத்திற்கும் பயன் படா மல் மனித இனத்தையும் தீய சொற்களைச் சொல்லி கெடுக் கின்றவர்களை களைதல் வேண்டும் என்பதை வள்ளுவர்
பயன் இல் சொல் பாரட்டுவானை, மகன் எனல்;
மக்கள் பதடி எனல்.

Page 21
98 ஆத்ம ஜோதி
என்கிருர், இனிய சொற்கள் பல இருக்க இன்னுச் சொற் களைக்கூறுகின்றவர்களை நோக்கி
இனிய p at , , இன்னுத கூறல் * 。 கனி இருப்பு காய் கவர்ந்து அற்று என்கிருர்
நல்ல மார்க்கத்தைக் கற்பிக்கக் கூடிய நன்னெறிச் செய்
யுளை சற்று நோக்கின் இனிய சொற்களின் சிறப்பு நன்கு விளங்கும். கண்ணிற்குக் கரை தெரியாத மிகப் பெரிய கட லானது மிக்க ஒளி பொருந்திய தன்மையோடு கூடியதும் மக்கள் இனத்திற்கும், மரங்களின் இனத்திற்கும், மற்றும் இதர பொருள்களின் வளர்ச்சிக்கும் பயன் படுகின்ற சூரிய னைக் கண்டால் சந்தோஷமிகுதியால் அலைகளை எழுப்பாது; ஆல்ை மிக்கக் குளுமை பொருந்திய சந்திரனைக் கண்டாலோ சந்தோஷமிகுதியால் தன் அலைகளை வானளாவ அள்ளி வீசும். அதுபோல உலகமானது வன்சொற்களையும், பயனற்ற சொற் களேச் சொல்லுகின்றவர்களைக் கண்டால் சந்தோஷமடை யாது. இனிய சொற்களையும், பயனுள்ள சொற்களையும் சொல்லுகின்றவர்களைக் கண்டு இன்புறும். அ மாதிரி நடப் பவர்களே உலகம் மக்களாக மதிக்காது! மகாத்மாக்களாக மதிக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்றி இருநீர் வியனுலகம் வன் சொல்லால் என்றும் மகிழாதே - பென்செய் அதிர் வளேயாய்! பொங்கா (து) அழற் கதிரால் தண்ணென் கதிர் வரவாற் பொங்கும் கடல்.
"రీచ్తోఫ్రీక9
திருவருளே எவ்வாறு பெற முடியும் ? g அருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் திருவாய்
και η மலர்ந்த உபதேச அருள் மொழிகள் 。
அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்யம் என்பது ஜீவர்கள்' தயவு. ஆதலால், சிறு வெளிச்சத்தைப் பெறுவது போல், சிறிய தயவா கிய ஜீவ தயவைக் கொண்டு பெருந் தயவாகிய கடவுளருளைப் பெற வேண்டும். அக்கடவுள் தயவாகிய அருள் எத்தன்மையுடையது?
நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக் காட்டுவதாயும் வேதாகம கலைகளைக் கொண்டு நன்மை யாதி களே விதிப்ப்தாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர் கள் எந்த வஸ்துவை அறிகின் ருர்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.
 
 

ஆத்மஜோதி 199
அத்தன்மையான அருள் - பிண்ட அண்டத்தில் எவ்வண் 50 மாய் விளங்குகின்றது? காண்பார் காணுமிடம் காணப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், துரண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படு மிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம், கருதுவார் கருதுமிடம் கரு தப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம், கேட்பார் கேட் குமிடம் கேட்கப்படுமிடம் முதலியனவாய் விளங்கும்.
இவ்வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருலாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப் பணியைக் கைக் கொண்டு இடையருது செய்யில், அவ்வருளேப் பெற G.) (TLI).
நன்மை தீமை என்பவை யாவை ?
நன்மை தீமை யென்பவை புண்ணிய, பாவம்.
புண்ணிய மென்பது:-
ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவித்தற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும்.
பாவ மென்பது;-
பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன? மனம், வாக்கு, காயம் என் னும் மூன்றிலுைம் அடையும். மேலும் மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பனிரண்டு வகையாய் நம்மை அடையும், s960)6)IT 6).1607 -
LITT 6), ii) த் மனத்தினுல்: 1. பரதாரகமனம் பண்ண நினைத்தல்; 2 அன்னியருடை ய சொத்தைக் கிரகிக்க நினைத்தல்; 3 அன்னியருக்குத் தீங்கு செய்தல்; 4. முடியாத காரியங்களை நினைத்து, அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்தவை நினைத்துப் பொருமையடைதல். இவை நான்கும் மனத்தி ல்ை செய்யும் பாவங்கள்.
வாக்கினல் 1. பொய் சொல்லல்; 2 கோள் சொல்லல்; 3 புறங்கூறல்; 4 வீனுக்கழுதல் இவை நான்கும் வாக்கினுல் உண்டாகும் பாவங்கள். தேகத்தினல்- 1 பிறர் மனைவியை தழுவுதல்; 2: புசிக்கத் தகாத வேத விரோத ஆகாரங்களைப் பு சித் த ல், 3. அன்னியர்களை இ ம் சை செய்தல்; 4. தீங்கு செய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உப காரஞ் செய்தல், இந்நான்கும் தேகத்தால் உண்டாகும் பாவங்கள்.
இவை போன்றவைகளைத் தவிர்க்குக.
ஆரம்பத்தில் சுகமாவும், பின் துக்கமாயும் இருக்கும். புண்ணிய

Page 22
200 ஆத்மஜோதி
புண்ணியம் மனத்தினுல்:- 1. அன்னியர்களுக்கு நன்மையுண்டாகி நினைத்தல் 24 பொருமையடையா திருத்தல், 3, அ ன் னி யார் சொத்தைத் தனதாக்க | எண்(ணுதிருத்தல். 4. தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் 。 தாய், சகோதரி முதலியவர்களாக சிந்தித்தல், இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.
வாக்கினல்:- 1. பொய் சொல்லாமை; 2. கோள் சொல்லாமை; 3. இன் சொல்லாடல்; 4. தோத்திரம் செய்தல், இவை நான்கும் வாக்கினுலுண் டாகும் புண்ணியங்கள். தேகத்தினல்- அன்னியர்களுக்குத் திங்குண்டாகுங்கால் விலக்கல் முதலா ன நன்மையான கிருத்தியங்களெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணி
A fig67. -
அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வா று நீங்கும்? அறிந்த பாவங்கள் செய்த பின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்த பின் 'நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்கா ரத்தாலும். செல்வச் செருக்காலும், தாக்ஷண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோ 3 என்று பச் சாத்தாபப்பட்டுப் பெரியார்களையடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச் சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண் ணம் இச் சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வது மன்றி, யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென் று வசித்து, இயன்ற அளவில் அன்ன விர யஞ் செய்தால் நீங்கும்.மேலும் சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பகூத்தில், பச்சாத் தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட் டத்தில் பழகாலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற்கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும். ৭২০ அறியாத பாவங்கள் யாவெனில்:-
நடக்குங் காலத்திலும், நீராடுங் காலத்திலும், சயன காலத்திலும் தனக்குத் தோன்ருமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி, அவை மனத்திற் குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் - தினஞ் செய்யுஞ் ஜபத்தாலும், பாராயணத்தாலும், தோத்திரத்தாலும், விருந்துபசரித் தாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.
பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடை யுங் கதியென்ன?
மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீர முண்டாகும். வாக்காற் செ ய் பு ம் பாவங்கட்கு மி ரு கம் முதலான சரீர முண் டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீர முண்" டாகும்
 
 
 

f)
மூதூர்
ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
1962 பெப்ரவரி மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
சென்ற மாதக் கணக்கு பருத்தித்து)ை
f) வெள்ளவத்தை
கட்டுவன் திமிலைத்தீவு சென் ஜோட்ஜ், தோட்டம் மதுகெதறத்தோட்டம் மத்துகம - . பாந்திய தோட்டம் கல்வியல் நாகெனித் தோட்டம் நல்லூர் மத்துகம பட்டினம் இயக்கச்சி கந்தர் மடம் பென்ருேஸ் கலபொட ஆனைக்கோட்டை உடுப்பிட்டி பதுளை
ஊரெழு ஆலம்பட்டி நாவலப்பிட்டி கல்மடு மிருசுவில் 92 ᏧᎫ- ᎶᎼᎢ மஸ்கெலியா டம்பாறைத் தோட்டம் கெந்தக்கடுவு
sy
கார்த்திகை பள்ளக்கொடை ,
அடப்பத்து)
கீக்கிகைந்த கங்கரனேயா சச்சிதானந்த தபோவனம் திருக்கோன ம%ல LDPT 6of) I'll Tuft
ஒமாங்கந்தைத் தோட்டம் கலேவத்த 99 யட்டதொள
மொத்தம்
27688540
27052361 9:504 1920 32800 8000 34 200 2.3586 1996 3000 882
: 70 00 2325(s 3000 39.20 243 () I. 6600
83 2 () 1 000 ()
12 7 6 0 7 098 38,302 A 9986
485 () 62.49 67 ()4 I 0288 26 70 6 OO } 3000 224 O 20 00 3000 1 2208 742.57 I 24 40 394 76 48 I 68 5944
224 O
Cogolec

Page 23
Registered at the G.P.O. a
ஆத்ம ஜோதி நிலை
திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்தி 6 பூனி கதிரை மணி மாலே அறிவுரைக் கதைகள் ராதையின் காதல் இளங்கோவின் கனவு ஆத்ம நாதம்
ச ந் தா நே ய அன்புடையீர் இன்று 14-ஆம் ஆண்டுச்சோ கையில் கிடைக்கின்றது. சந்த உடன் அனுப்பிவைத்துச் ே ருேம். ஆத்மஜோதி நிலையம்,
இந்தியாவிலுள்ள அ6 R வீரசம்பு, சம்பு இன்ட்ஸ்ரீ என்ற விலாசத்திற்கு அனு தெரியப்படுத்த வேண்டுகின்
IETTUITLL160076öT 603.
தொல் புரம்
மாபிள் சீமென்றினுலா
செய்யப்ப மாபிள் மேசைத் தட்டுகள் களும், பூச்சாடி வகைக
சீமென்ற் முகட்டே கற்கள் யாவும் செ
எமது உற்பத்திப் பொருட்க சகல இரும்புக் கடைகளிலு
Printed & Published by Mr. N. M.
at At" Press, Na

s a Newspaper M. L. 59/300
}ய வெளியீடுகள்! -- �ܲ ܝ�ܲ ܝܛ.
(நா. முத்தையா) 1-50
3) TJ 9 75 (பரமஹம்ச தாசன்) 50- ܪ (சுவாமி சிவானந்தர்) ட65
ایی")) (சுவாமி சிவானந்தர்) 1-00 (செ. நடராசன்) 2-25
(சுத்தானந்த பாரதியார்) அச்சில்
ர்க ளு க் கு.
தி மூன்றுவது சுடர் உங்கள் தா இன்றுவரை அனுப்பாதோர் சாதியை ஆதரிக்க வேண்டுகின்
- நாவலப்பிட்டி
(சிலோன்.) ன்பர்கள் வழக்கம்போல் iu), ப்பிவைத்து, அதை எமக்கும்
സ്ത്രL).
த் தொழிற்சாலை
- சுழிபுரம்,
/寶
ன பொருட்கள் உற்பத்தி 事
படுகின்றன. s முதலாக எல்லாப் பொருட் "ടു ள், தண்ணிர்க் குழாய்கள்,
ாடுகள், மலசல கூடக் ய்து கொடுக்கப்படும்.
ள் வட மாகாணத்தில் உள்ள 1ம் பெற்றுக்கொள்ளலாம்.
thiah, Athmajothi Nilayam, N'pitiya walapitiya. (Ceylon) 14-3-62.