கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.04.14

Page 1
臀
@@@@@@ggఫాస్త్రపౌత్రో ఆఫ్రిత్ర ఆతాత్రూ
公還 |-km :灣 !瓮 :*
灣
|-泛 $! 灘 ! ! 影
·鱷劑 |-: 影冷 !劑
·:臺澎澎澎澎繁臺澎靈臺澎澎繁臺澎繁臺 シ ! ミ::::::::::::::::::::::::::::::::::::::::
* ·******************屬屬,<>屬屬>屬*****灣 シ ·szosz sysz£|- 靈臺澎靈鷲影鯊影澎澎繁臺澎鬆彎彎影影臺澎巖影澎靈巖臺澎
JYLS0LSJ0SL0LS0S0LSJ0S:。、。、、、。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

----
R2&S
NASNS7
12ܠ
い
****屬,***,******************
→ → → → → → → → → → → → ∞
遂溢
২১:2২
9
22
--
ANANAW KWIZIN
o.
eM eS sTS MeASATT qT MTS qMMS qsMe AeAM A ese S eAe eTMeT SqTAT SMAeMS
ബ

Page 2
籃 (.
வெளியீடு)
N2, 2. எல்லா உலகிற்கும் இறைவன் ஒரு வ ன்
எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
2リ
ஜோதி 14 |சுயகி ருதுளுல் சித்திரை மீ" 1 வட (14-4-62) / J, Lir" 6 பொருளடக்கம் 1 கீதாஞ்சலி M 201 2 மர ம் போல்வர் 203 3 கீரை வெந்தாச்சா? 205 4 ஒரு வருடம் ஒடிக் கழிந்தது 208 5 ஆளாவது எப்படியோ 209 6 பூரீ கிருஷ்ண ஜெயந்தி 26 7 தெய்வ வழிபாடு 218 8 நாம் பகவானை விரும்புவது (3)6üზau) 220 9 அன்பே எங்கள் வாழ்வு 223 10 மன உறுதி மா?ல 225 11 பூரீ ராதா ஸ"தா நிதி 229 12 வாடிச் சோர்கிறேன் 230 13 திருச்சிற்றம்பலக் கோவையாரில் சித்தாந்த சைவம் 231 14 அஞ்செழுத்தின் மகிமை 233 15, 9, 6 m), 95 ino (OLDuriur? Gur Tuil uIII ? 236 16 நான் தான் 238 ᏛᏙᏁᏗᏛᏙᏁᏗᎹᏙᏁᏗᏛᏙᏁᎲᏛᏙᏁzᎹᏙᏁᏗᏈᏁ,ᏛᏙᏁᏗ 17VVVVVVVVVVVVVVVVVVVV RVWAYAM
புத்தாண்டு வாழ்த்து!
அன்பு 106) f5.!
அறம் வளர்க! ஆன்மநெறிப் பண்பெங்கும் ஓங்கிப்
படர்ந்தொளிர்க! - துன்பமெலாம் வீழ்க! புதுமைநல
றுடனே மக்கள் குலம் வாழ்கடித் தாண்டில் மகிழ்ந்து!
"பரமஹம்ஸதாசன்'
 
 
 
 
 
 
 
 
 
 

அன்றலர்ந்த தாமரையை
அறியாமல் அலைந்தேன்; இப்
பொன்றத்தேன் மலர்வாடப்
பூக்குடலே வறிதாச்சே!
சோகமெனச் சில பொழுதிற்
சோர்ந்ததுயி லாழ்த்திவிடும்
வேகமுடன் கனவினிற்போல்
விழித்தெழுவேன் திடுக்கிட்டே!
தென்றலுடன் வந்தணையும்
தேன் மணத்தை யாருகர்வேன்;
குன்றத அச்சுவையில்,
குதுகலித்து மெய்மறப்பூேன்
கோடைமுதிர்ந் தே இசைக்கும் குரலாய்த் தொனிக்குதிது; நீடுதொலை யல்ல, இதோ
நெருங்கியே தானுளது! புறத்திலல, என்னகத்துட்
பொங்கிமலர்ந் திட்டதுவே , அருட்சுவையாம் இஃதென்று
யானறியேன் அப்பொழுதே!
21 மறைந்தது வசந்தம்
தொலைத்திட் டேனே கடற்கரையில்
சோம்ப லா லே பொழுதையெலாம்! செலுத்த வேண்டும் படகையினி:
செய்வ தொன்றும் அறியேனே!

Page 3
ஆத்மஜோதி
பூத்துக் குலுங்கி விடைபெற்றுப்
போயிற் றினிய பொன்வசந்தம் ;
காத்துக் கிடக்கின் றேன் யாகுே
கருகற் குப்பை தனச்சுமந்தே!
அலைகள் முழங்கிக் கடலின்மிசை
ஆர்ப்ப ரிக்க, அதனருகே
இலைகள் பழுத்து மரங்களினின்
றிழியும் நிலையை உணர்மனமே!
வெட்ட வெளியில் எதைப் பார்த்தாய்?
மிதந்தப் பால்நின் றசைந்துவரும்
தெட்டத் தெளிந்த இசைக்காற்றுன்
சிந்தைக் குணர்ச்சி தரவிலேயோ?
22 மறவேல்! வாடைக் காற்றில், அடைமழையில்,
மருண்ட நிழலில் மறைந்திருள் போல்,
நீடு தனித்துப் பிறர் அறியா
நிலையில் நடந்து செல்கின்ருய்!
காலைப் பொழுதின்(று) ஒளியற்றுக்
கண்மூ டியதால், காற்றலற,
நீளத் துயிலா விசும்பிடையும்
நெளிந்து படர்ந்த திருட்திரைதான்!
வீட்டின் கதவுகள் அடைபட்டு
விட்டன முற்றும்; காடுகளின்
பாட்டும் ஒலியும் அடங்கினகாண்;
படர்ந்த தெங்கும் பாழமைதி ! 6.
அன்பார் நண்ப, தனிவழியே
அகலn தோடும் உயித்துணைவ,
இன்பக் கனவாய்த் திறந்துள, என்
இதய மனேக்குட் புகமறவேல்!
- "பரமஹம்ஸதாசன்'
 
 
 
 
 

ஆந்மஜோதி 203
மரம் போல்வர்
(ஆசிரியர்)
யார் மரம் போல்வர்? மக்கட் பண்பில்லாதவர்' என் பது வள்ளுவர் வாக்கு, ஒரறிவுடைய மரத்தை ஆறறிவு வுடைய மனிதனுக்கு ஒப்பிடலாமா? என் ருெரு ஐயம் எழு கின்றது. செயலில் மரத்தைப் போன்றவர்கள் என்பது கருத்து. மரம் பிற உயிர்களது துன்பத்தை அறிந்து கொள்வதில்லை. அதுபோல மனிதனும் பிற உயிர்களது துன்பத்தை அறியாது வாழ்வானேயானுல் அவன் மரமே என்பது வள்ளுவர் கருத்தாகும். ஒளவையார் ஓரிடத்திலே "சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றன் குறிப்பறிய மாட்டாதவனே நன் மரம்' எனக் கல்வி உணர்ச்சி இல் லாதவனே மரம் என்று கூறுகின்றர். உணர்ச்சி இல்லாத அளவிலே பிறருடைய துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை மரத்தினிடத்து இல்லையாயினும் சில விடயங்களில் மனிதனைவிட மரம் விசேடமென்றே கூற வேண்டும். மரத் திற்குப் பகுத்தறியும் அறிவோ பேசும் சக்தியோ இருந் தால் மனிதனை மரத்திற்கு ஒப்பிட்டுக் கூற மரம் சம்மதிக் é#5 PTg5I.
தன்னை வெட்டியவனுக்கும் மரம் நிழல் கொடுக்கி றது. தனக்கு எறிந்தவனுக்குக் கனி கொடுக்கிறது. இந் தப் பண்பு மனிதனிடத்தில் எதிர்பார்க்க முடியும். ஐய றிவு அடங்கியிருக்கும் ஒன்றினிடத்தில் இத்தகைய நற்செய ல்களை நாம் கற்றுக் கொள்ளக் கூடுமானல் ஆறறிவும் வெளிப்பட்டிருக்கும் மனிதனிடத்தில் எத்தகைய உயர்ந்த பண்பாடுகளேயெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ னிடத்தில் அவை யெல்லாம் வெளிப்பட்டு எல்லா ஜீவ கோடிகளுக்கும் பயன் உள்ளதாக வேண்டும்.
ஆறறிவும் வெளிச்சமாக உள்ள மனிதனிடத்தில் பண் பாடு ஏன் மறைந்து விட்டது? என் ருெரு கேள்வி. ஆசை யும் சுயநலமும் அகம்பாவமும் அதைக் கொலை செய்து விட்டன. அங்ங்னம் கொலை செய்யப்பட்ட பண்பாட்டை மீட்டும் மனித உள்ளத்தில் உயிர்த் தெழச் செய்ய வேண் டுமானல் ஆசையையும் சுயநலத்தையும் அகம்பாவத்தை யும் வேரோடு களைந்து அன்பையும் பரநலத்தையும் தளிர்

Page 4
204 ஆத்மஜோதி
க்கச் செய்ய வேண்டும். அத்தகைய உள்ளத்திலேதான் பண்பாடு தோன்றும்.
மனிதனுக்கு மற்றைய பிராணிகளிலும் பார்க்கக் கூடு தலாக உள்ளது அறிவு அறிவினுல் சிறந்தவன் மனிதன், அறிவுடையவன் என்பது ஒருவன் கல்வியினுலும் கேள்வியி னலும் சேகரித்துக் கொண்ட அறிவுகளை ஆராய்ந்து தன் வாழ்க்கைக்குப் பயன் படுத்திக் கொள்ளுவது. அதாவது வாழ்க்கையில் நேரிடுகின்ற சூழ்நிலைக்குத் தகுந்தபடி சொ ந்த அறிவோடு நடந்து கொள்ளுவது. தீங்குகளை விலக்கக் கூடிய ஒரு மனிதனின் ஆயுதம் அறிவுதான். மனம்போன போக்கெல்லாம் மனிதனைப் போகவிடாது தீய இடங்களை விலக்கி நல்ல இடங்களுக்குச் செலுத்துவது அறிவு அறி வுடையவர்கள் மற்ற எது இல்லாவிட்டாலும் எல்லாம் இருப்பவர்களாவார்கள். அறிவு இல்லாதவர்கள் மற்ற என்ன இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர்களே.
இத்தகைய அறிவின் சிறப்பைப் பெற்ற மனிதனிடத் திலே பண்பாடு இல்லையேல் அவ்வறிவின் பயன்தான் என்ன? அரம் என்பது ஒரு ஆயுதம். அதுதான் தேயாமல் பிற பொருள்களைத் தேய்த்து விடக் கூடிய கூரிய பற்களையு டையது. அரம் போலும் கூர்மையர் என்ருல் அரத்தைப் போலத் தமக்கு ஒரு தீங்கின்றி பிறரை வென்று விடக்
கூடிய கூர்மையான அறிவுடையவர்கள் என்பது கருத்து.
பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு யார் ஒருவன் மனமிரங்குகின்றனே அவனே மனிதன். அந்த ஈரம் இல் லையேல் அவனுக்கு மனிதன் என்ற பெயர் மிகையானதா கும். யோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் மனித இலக்கணத்தை மிக அழகாகச் சொல்லுகின்றர்.
“யாருக்கும் அஞ்சாமல் அன்பறங்காப்பவன்
யாரவனே மனிதன்! பேருக்கும் கீர்த்திக்கும் பேராசையில்லாப்
பரியவனே மனிதன்! வேருக்கு வார்த்திடும் நீரினைப்போல
விருப்புடனே வாழ்க்கையெல்லாம் ஊருக் குபகாரமாக உதவிடும்
உத்தமனே மனிதன்' இக் கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கி வள்ளுவர் பெருமான் இரண்டே இரண்டு அடிகளில் கூறுகின்றர்.
'அரம் போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லாதவர்'
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 20s
கீரை வெந்தாச்சா?
ܵ (
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி துரயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது மன மாசுகளை அவன் நாமமாகிய தீயினில் தூசாக்கி மற்றுள்ள கர்மங்களை மாற்ற வந்த சிறந்த மகான்கள் பலர் வாழ்ந்து வருகிற பண்டைப்
பெருமை நம் செல்வப் பாரத நாட்டிற்கு மட்டுமே உண்டு.
ܗܝ 馨
அம் மகான்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள். மொழிகள் தான் இன்றும் நாத்திசம் பலமாக பறையறை பும் இந் நாட்களிலும் ஆத்தீகம் தலைதூக்கி நின்று தன க்கு நிகரில்லை என இயங்கி இருக்கின்றது என்பது அறிந் தோர் தெளிவு. ܦ ܝ ༽།
நாத்திகம் பேசுபவனும் ஆத்திகம் பேசுபவனும் ஆண் டவனது சொரூபமே. இறைவன் எங்கும் உள்ளான். எதி லும் உள்ளான். ஆகவே எல்லா உயிரினங்களிடத்தும் அன்பு பூண்டு வாழ வேண்டும் என்பது பெரியோர் கொ ள்கை. இவ்வாறு கொள்கை பூண்ட அம் மகான்கள் ஊர் ஊராகச் சென்று இறைவனின் நாமத்தைப் பரப்பிக் கொ ண்டே இருக்கின்றனர். அவ்வாறு வரும் மகான்களை வர வேற்று உபசரித்து அவர்கள் களைப்பைப் போக்கி வயிற்றி ற்கு ஆகாரம் கொடுக்க வேண்டியது நமது முக்கியமான கடமைகளில் முக்கியமானதொன்ருகும். அவ் வாறு அளிக் கும் உணவு நமது வினைகளேயாகும். உலக சேஷமத்திற் காக அம் மகான்கள் நமது வினைகளை உணவு உருவில் பெற்றுக் கொண்டு ஜீரணித்து அதற்குப் பதிலாக மேலான செளபாக்கியத்தைக் கொடுத்துச் செல்கின்றனர். பெரி யோர் மகான்களுக்குக் கொடுத்த உணவின் அளவு குறை தாலும் மனநிறைவோடு கொடுக்கப் பட்டிருக்குமேயா யாகில் பலன் கனவில் கூட எண்ண முடியாத அளவிற் குப் பெரியதாக இருக்கும். உதாரணமாக ஒரு த்யான் நிஷ்டருக்கு அளித்த அரை வேக்காட்டுச் சோறும் குடியா னவனை மறுபிறப்பில் அரசனுக்கியது என்ருல் சகல ருசியு டன் அளிக்கும் உணவு எத்தகைய பலனைத் தராது. விந்தை!
கங்கைக் கரையில் த்யான நிஷ்டரான ஒரு பெரிய மகான் இருந்தார். அவர் அடிக்கடி த்யான சமாதிமில்
I

Page 5
ஆத்மஜோதி
ஆழ்ந்து விடுவார். ஒருமுறை சமாதி கலைந்து எழுந்த போது அவருக்குப் பசி ஏற்பட்டது. உதர பூர்த்திக்காகச் சிறிது உணவு உட்கொள்ள வேண்டி அருகிலிருந்த ஒரு சிறு கிராமத்தை அடைந்தார். அங்கு ஒரு குடியானவர் வீட்ே டின் முன் வந்து சிறிது உணவளிக்குமாறு கே ட் டா ர் குடியானவன் ஸ்வாமி, சிறிது பொறுங்கள் உலையில் அரிசி பாதி கொதித்துக் கொண்டிருக்கிறது. கீரையும் இருக்கி றது. அதையும் பக்குவம் செய்து தருகிறேன் என்று சொx ன்னன். தபஸ்விக்கோ மிகுந்த பசி, ஆகவே அவர் பர வாயில்லை. பாதி வெந்திருந்தாலும் போதும் கொண்டு வா என்றதும் வேறு ஒன்றும் பேசவோ செய்யவோ தெரியா மல் குடியானவன் சிறிது பாதி வெந்த அரிசியைக் கொ ண்டு வந்து கொடுக்க அதில் ஒரே ஒரு பிடி அளவுள்ளதை மட்டும் உண்டு திருப்திப் பட்டு அப்போதைக்கு சாந்தி ஏற் பட்டதும் அங்கேயே உட்கார்ந்தார். சமாதியில் ஆழ்ந்து Gil Tri .
அவர் சமாதி நிலையில் இருக்கிருர் என்பதை அறியாத குடியானவன் கீரை வெந்தவுடன் நல்ல பக்குவமான சோ றும் கீரையும் கொண்டு வந்தான். தபஸ்வியைக் கூவிய ழைத்தான். அவர் விழிக்க இல்லை. ஒரு நாளா? இரண்டு நாளா? நாட்கள் ஊர்ந்து வாரமாகி வாரம் சென்று மாத மாகி மாதம் கடந்து வருடங்கள் பலவும் உருண்டன. கா லச் சக்கரத்தின் சுழற்சியிலே குடியானவனின் ஆயுளும் அடிபட்டுப் போயிற்று.
அவனுக்குப் பிறகு அவனுடைய குமாரன் தன்னுடைய தகப்பனுர் காலந் தொட்டுத் தன் வீட்டிலேயே இருக்கும். அந்தத் தபஸ்விக்காக அவரைச் சுற்றி அரண் போல சிறு கோயில் போலக் கட்டிடம் கட்டினுன் காலை மாலை வேளை களில் அவரைப் பணிந்து வந்தான். அப்போதும் அவர் நிஷ்டை கலேய வில்லை. ஆயிற்று பல வருடங்கள். காலம் என்னும் வெள்ளம் நிசமாகவே வெள்ளத்தை (நீர்ப்பெருக் கை) உண்டாக்கியது. அந்த இயற்கையான கோரச் சுழ ' லிலே அந்தக் கிராமமே மூழ்கி நீர்க்காடாகி விட்டது. நீர் வடிந்து மண்மேடிட்டு மரம் செடி கொடிகள் வளர்ந்து அடர்ந்த காடாகவும் ஆகிவிட்டது.
ஒரு தடவை அந்தக் காட்டில் வேட்டையாட அந்தத்
தேசத்து அரசன் அங்கு வந்தான் வரும்போது அரசன்
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 207
ஏறியிருந்த யானை குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டும் மிதியாமல் வலமாகவே வரவே அறிவிற் சிறந்த அரசன் விட்டிறங்கி வந்து அந்த இடத்தைத் தோண் டிப் பார்க்க யாதொரு சேதம் இன்றி ஒரு தபஸ்வி மகா தேஜசுடன் வீற்றிருக்கக் கண்டான். பணிந்து வணங்கினன். எழுந்தான். அப்போதே கண் விழித்தார் தபஸ்வி. எதி ரிலே நிற்கிருன் அரசன். தபஸ்வி கேட்டார். கீரை வெந் தாச்சா? கொண்டு வா. அரசன் இதைக் கேட்டு விழித் தான். அவனுக்கு யாதொன்றும் புலப்படவில்லை. ஆகவே "ஸ்வாமி, கீரையா? வெந்தாச்சா? ஒன்றும் எனக்குத் தெரி யவில்லையே? தாங்கள் யார்? யார் கீரை தருவதாகச் செ7 ன்னது என்று பணிவுடன் கேட்டான். உடனே தபஸ்வி யார் சொல்லியதா? நீதான் சொன்னுய், கீரை பக்குவமா கட்டும் தருகிறேன் என்று முற் பிறப்பில் நீ குடியான வ கை இருந்தாய். நான் உணவு தரக் கேட்டபோது சொ ன்னுய் கீரை தருவதாக இப்போது கேட்டேன் என்று சொ ன்னுர், -
அரசனுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ஆகா பசி த்தவருக்கு அதிலும் மகான்களுக்கு இட்ட ஒரு கவளம் உணவு இத்தகைய உன்னதமான பதவியைக் கொடுக்குமா ல்ை பூர்வ ஜன்ம கர்மங்கள் தீயனவாகவோ நல்லவையா கவோ இகுப்பதற் கேற்ப பல பிரகாரங்களிலும் பிறவியெ டுக்கும் என்பதை அறிந்து கொண்டான்.
ஆகவே இம் மனித வாழ்விலே பூர்வ ஜென்ம (முற் பிறவி) பலாபலன்களே இப்பிறவியில் மனிதனுகவும் அரச ணுகவும் ஆண்டியாகவும் பக்தனுகவும் ஆக்குகிறது என்பது சத்திய வாக்கு.
எனவே நாமும் நமது குறுகிய கால வாழ்விலே நல் லனவே எண்ணி நல்லனவே செய்து நல்வாழ்வு வாழ எல் ர்ேம் வல்ல இறைவன் இன்னருள் நல்குவான் என்று நம் பிக்கை கொண்டு வாழ்வோம். உலகெங்கும் இறை உணர் வும் பெரியோர்களையும் மகான்களையும் போற்றிப் பரவும் பண்பும் நிலவுவதாக;
அன்பு இன்பம் அமைதி
ఒళ్మలిళ్ళ.

Page 6
208 ஆத்மஜோதி
ஒரு வருடம் ஒடிக் கழிந்தது
(சு, பிரேமசம்பு)
ஒரு வருடம் ஒடிக் கழிந்தது. அடுத்த ஆண்டு ஆரம்பம். மழை பெய்யும் பொழுது, நீர்த்துளிகள் ஒன்றன் பின்னென்ருக மண்ணில் வீழ்ந்து குமிழியிட்டுப் படிவது போலவே, மனிதன் உட்பட எல்லா ? இன ஜீவராசிகளினதும் சடல வாழ்வு அமைகிறது. உடலின் 66ts ச்சி, எழுச்சி, வீழ்ச்சி எல்லாமே சொற்ப காலத்திற்குத்தான். ஆனல் உடலுள் செறிந்துள்ள உள்ளமோ வேகமானது மட்டுமல்ல. ஆழம" னதுமாகும். அது தொடக்கமும் முடிவுமற்றுப் பரந்துள்ளது. எனி னும், ஒருவன் ஒரு குறித்த வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற் குள் செய்து முடிக்க வேண்டும் என்கிற வரம்பு போல ஒரு உடலுள் பிணைந்து செயலுறும் உள்ளம் அந்த உடல் அழியுமுன் செயலாற்ற வேண்டுமென்பது இயற்கையின் சட்டமாகும் உள்ளத்தின் கொந்த ளிப்பு உடலின் எக்களிப்பிலும் பார்க்க நீண்ட காலம் இருப்பது உண் மையேயானுலும் அந்த உள்ளத்தின் கொந்தளிப்பு உடலில் எக்களிப்பு இருந்தபோது தோற்றியது என்பதனைக் காணும்போது, ஒரு வருடம் ஒடிக் கழிந்து மறு ஆண்டு ஆரம்பமாவது எவ்வளவு பொன்னை காலம் எம்மைத் தாண்டிச் சென்று விட்டது என்ற உண்மை திகைப்
பைத் தரவே செய்யும்.
"நாம் ஏன் வந்தோம்’ என்கிற கேள்வி எம்மிடையே அதுவும் பகுத்தறிவாளராகிய மனிதரிடையே தோன்றித்தானுக வேண்டும். ஆணுல் அதற்கு விடை மிகவும் சுலபமானது. ஒரு சிறு குழந்தையி டம் சென்று கேட்போம். அதன் மனம் களங்கமற்றது. ஏன் பிறந் தாய் மகனே' என்ருல் அந்தக் குழந்தை சொல்வதென்னவெனறு தெரியாமல் விழிக்கும். சற்று விளக்கமாக 'நீ நல்லவனுக வாழப்பிறந் தாயா அல்லது கெட்டவணுகப் போகப் பிறந்தாயார் என்று கேட் டால் உடனே அந்தக் குழந்தை தட்டுத் தடக்கில்லாமல் "நான் நல் லவனுக இருக்கவே பிறந்தேன்’ என்று சொல்லி விடும். இது இயற் கையிலேயே - நன்மையிலேயேதான் என்பதன் பிரதிபலிப்பாகும். *அறஞ் செய விரும்பு’ என்று ஒளவையும் 'நல்வினை மேற் சென்று செய்யப் படும்’ என்று வள்ளுவரும் புத்தி புகட்டியுள்ளார்கள், சிறு குழந்தை சந்தர்ப்ப சூழ் நிலைகளினலே கெட்டுப் போவது போலவே மனிதரும் மனம் போன படி சென்று திண்டாடித் தவிக்க இடமுண்டு. k அப்படி அல்லலுரு மல் சரியான வழியில் சென்று பயனடைய நல்ல வர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி நல்லோர் கூட்டுறவில் கலந்து விட வேண்டும்.
நிலையற்ற மிகச் சிறிய வாழ்வுக் காலத்தில் நிலையான மிகப்பெ ரிய நன்மைகளைச் செய்து முடிக்க வேண்டும். அதுவே உலகத்துத் தோன்றி வாழ்வதன் நோக்கமாகும். கடமையுமாகும். அதனைச் செய்ய இப்பொழுதே முயல வேண்டும். இனியும் தாமதிக்கக்கூடாது. ஏனெனில். ஒரு வருடம் ஒடிக் கழிந்தது.
 
 
 
 
 

ஆத்மஜோதி
ஆளாவது எப்படியோ?
(கோவை - கி. சுந்தரம்)
݂ ݂ அந்தி மயங்கும் நேரம். புள்ளினம் இல்லம் நோக்கி எங்கும் "கீச் கீச்" என்ற சப்தம். சூழ்ந்திருந்த மலைகளோடு கொஞ்சி வரும் ஒடையின் சல சல சப்தம். மலைகளோடு மோதி ஆடிவரும் காற்றின் ஓ’ என்னும் ஒலி. இவைய னைத்தும் சேர்ந்து வேதாந்தத்தின் தகைமையாம் ஒரெழுத் தாம் 'ஓம்' எனும் நாதம் காட்டி இயற்கையாகப் படர் ந்த இறையவனைக் காட்டிக் கொண்டிருந்தன. அருகே மலையோரம் அமைந்திருந்த தட்சிணு மூர்த்தியான சிவ பெருமான் கோவிலில் மணியோசை 'டாண் டாண்’ என முழங்கி ஒங்காரத்தோடு இணைந்து எழுந்தது. அக்கோவி லின் வாயிலில் ஒர் துறவி நின்றிருந்தார். அரையில் கட் டிய ஆடையே அவரது உடைமை யார் அந்தத் துறவி? கேவலம் 5 ரீரத்தால் மட்டும் துறந்தவரல்ல அவர் மனத் தாலும் துறந்த மாபெரும் துறவி. கருத்தாயும் கருத்தின் பொருளாயும், கருதுவோணுகியும் யாவுமாய், எவையுமாய் யாண்டுமாய் நீக்கமற நினைந்த நமசிவாய தேனைப்பருகித் திளைத்திருக்கும் சதானந்த யோகியல்லவா அவர் பற்று விடற்கு அவர் பற்றிய திருவடியையே எண்ணி நின்றிருந் தார். இன்று அவர் நிற்கும் நிலையும் சில ஆண்டுகட்கு முன்பு அவர் இருந்த நிலையும் நினைக்கையில் நமக்குப் பெரும் வியப்பாகவன் ருே இருக்கிறது. அரசனே கண்டு வியக்கும்படி பெரும் செல்வத்திற் கதிபதியாய் நவகோடி நாராயணனுக வாழ்ந்தவராயிற்றே அவர். பொன்னும் பொருளும் புரளும் பட்டினத்திலே தலைசிறந்த வைர வியா பாரியாக அவர் அன்று வாழ்ந்த நிலையை என்னென்பது! கடல் கடந்து கப்பலோட்டித் திரவியம் தேடிய பெரும் வணிகரன்ருே அவர். 'கருவியாதி விரிவினையும் கூட்டி உயிர்த்திரளையாட்டும் விழுப்பொருளின் பேரருள் நோக்கு அவர் மீது படிந்தது. அலகிலா விளையாட்டுடையானின் திருவிளையாடல் ஆரம்பித்தது. தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும் சிறு குழவியாய் பட்டினத்தடிகளைச் சாருகிருர் இறையவர். சிறு முகம் காட்டி சிரித்து விளே யாடுவது முதல் எந்தையே! என விளித்து சுற்றி மாய நாடகமாடுவது வரை வளர்ப்புத் தந்தையின் அன்பினைப் பெறுகிருர், அற்புதச் செயல்கள் காட்டியும் அறிவின்

Page 7
210 ஆத்மஜோதி
திறத்தினில் உறுதி ஊட்டியும் கடல் கடந்து வணிகம் புரிந்து எருவும் மணலும் கொணர்ந்து வணிகத்தில் ஈட்டிய
பொருளென் கிருர், சினத்தால் மகனெனப்பாராது வெறி
கொண்ட அடிகள் உணவின்றி வாடுமாறு ஒர் அறையிலே அடைத்து வைக்கிருர், இரவு உறக்கமில்லை) அவருக்கு, வருத்தமும் சினமும் மாறி மாறித் தோன்றுகிறது, காலே
யிலே எழுந்ததும் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்கிருர், மகனையா அங்கு கண்டார். ஆஹா ?
பார்வதி சமேதகை ரிஷப வாகனத்தில் மான் மழுவேந்தி
அமர்ந்த மருதேசனின் ஆனந்த திருக்கோ லத்தை யல்லவா
gi; 6ðõT - Tri .
'நீலமே கண்டம், பவள மே திருவாய்
நித்திலம் நிரைத்து இலங்கினவே போலுமே முறுவல்; நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம்; ஒருவர் கோலமே, அச்சோ; அழகிதோ! என்று
குழைவரே கண் டவர் ; உண்டது ஆலமே ஆகில் அவரிடம் கரந்தை
அணி திகழ் ஆதித் தேச்சுரமே'
என்று கருவூர்த்தேவர் இறையனர் திருமேனியில் ஈடு பட்டது போல் மயங்கினர். என்ன தோற்றம்! உடலெல் லாம் திரு நீறு துலங்குகிறது. அந்த நீறு தடவிய செந் தாமரை மேனி செவ்வானத்தில் வெள்ளியோ டிருப்பது போன்று மின்னியது. கழுத்திலே ஆபத் பாந்தவன் நானே என அறிவிப்பது போன்று மிடறு தோற்றம் தந்தது. ஜடா முடியில் வீற்றிருந்த பிறைச் சந்திரம் மகா பாபி யான, குருத் துரோகியான தன்னையும் திருவடி சம்மந்தத் தால் தூயவனுக்கி திருமுடியிலிட்ட பிரானின் பேரருட் கருணையை விளக்குவதாகிக் காட்சி கொடுத்தது. மகா கர்வம் அழிவிற்கே காரணம். அக் கர்வம் அடங்கி சர
ணடைந்தால் மிக மேன்மை என்பதைத் தன்மூலமாக
*
விளக்கிக் கொண்டிருப்பது போன்று, கங்கா தேவி பிரான் திருமுடியில் தங்கிய காரணத்தால் மிக மிக தூயவளாகி வெளிப்பட்டுக் கொண்டிருந்தாள். இவையெல்லாம் அனு பவித்தபடியே சொக்கிப்போன அடிகள் அப்படியே மயங் கிப் போனுர். மகனைக் காணவேண்டி வந்த அடிகள் மரு தேசனையல்லவா கண்டார். காட்சி மறைந்தது. பழைய நினைவடைந்த அடிகள் நிதானித்து அவ்வறையிலே வைக்
鶯
 
 
 

ஆத்மஜோதி 211
கப் பட்டிருந்த சிறு பெட்டியை அணுகினர். திறந்து பார்த்தார். அதிலே ஒர் ஒலை. அதன் பின்னே ஒரு காத றுந்த ஊசியும் நைந்த நூலொன்றும் மாட்டப்பட்டுக் காட்சி தந்தது. ஒலையை எடுத்துப் படித்தார் அடிகள். அதிலே கண்டது என்ன? "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’’ என்று எழுதப் பட்டிருந்த வரி அவருக்கு உபதேசமாக எழுந்தது. உடனே தான் அணிந் திருந்த மிக உயர்ந்த உடையை உதறினர். இருந்த பொ ருளேயெல்லாம் சேந்தனுரை விட்டு வாரி வழங்கச் சொல்லி விட்டு கோவணுண்டியாகப் புறப்பட்டார். உறவினர்களும் நண்பர்களும் திடுக்கிட்டனர். ஒடிவந்து சுற்றித் தடுத்த னர். இல்வாழ்வை விட்டுச் செல்லாதீர்! எனத் தடுத்த னர். அவர்களைப் பார்த்ததும் சிரிப்புத்தான் தோன்றியது அடிகளுக்கு. அவர்களைப் பார்த்துப் பாடுகிருர்,
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே
விழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மி இரு கைத் தலை மேல் வைத் தழுமைந்தரும்
சுடு காடு மட்டே பற்றித் தொடரும் இருவினைப்
புண்ணிய பாவமுமே'
கேவலார்த்தத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களே, இந்த ஊரும் சதமல்ல, உற்ருர் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ்சதமல்ல. இறையனர் கச்சி ஏகம்பனின் இரு பொன்னடிகள் தானப்பா சதம். அவ ற்றை நம்புங்கள்’ எனக் கூறி விடு விடென்று வேகமாக
நடந்து மறைகிருர்,
பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளை
ou Girá ஆருந் துறக்கை அரிதரிது. நேரே மனத் துறவும் அப்படியே எனப் பெருந் துறவி தாயுமானவரே
திகைக்கும்படியான துறவி வேந்தர் இறையவனேப் பார்த்த படியே நின்றிருந்தார். அவர் கண்களிலே நீர் முத்துப் போல் திரண்டு நின்றிருந்தது. அதிலே விளக்கின் ஒளி பட்டுக் கண்னேக் கூசும்படியாகப் பிரதிபலித்தது. ஆனல் அவர் மனமோ இறையவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. எத் துணை விதங்களிலே தொண்டர்கள் இறையவன் அருளைப் பெற்றர்கள்!

Page 8
212 ஆத்மஜோதி
குயவனுகப் பிறந்த திருநீலகண்டன் 'நீலகண்டம், திரு நீலகண்டம்' என்று சதா இறையவன் நாமத்தைப் பாடி ஜெபம் செய்து, அந்த நாமத்திலே மூழ்கி, அடியார்களுக்கு வேண்டிய பாண்டங்களை இலவசமாக வழங்கிப் பக்தி புரி Se யவில்லையா? மனைவி மீது இறையவனைப் பழித்த காரணத் தால் வெகுண்டெழ அவள் 'திருநீல கண்டன் மீது ஆணை என்னைத் தொடாதீர்' எனக் கூவ அடிக்க வந்த தடியை கீழே போட்டு அவள் கூறியது போல இனிமேல் உன்னைத் தொடப் போவதில்லை என்று மாது சொன்ன சூளால் இளமையைத் துறந்து வாழவில்லையா? என்ன பக்தி என்ன உறுதி!
இறையவனே அடியானுக வேடம் புனைந்து உணவு தேடி சிறுத் தொண்ட நாயனர் இல்லம் நாடி புகுந்தா ரன்ருே ! வெறும் உணவு உண்ண மாட்டேன், பிள்ளைக் கறியே உண்ணுவேன் எனக் கூறி தனது ஒரே மகனை சீராளனைத் தன் கையாலேயே சமைத்து வரும்படி உத் தரவிட்டு பின் உண்கையிலே சீராளா ! ஓடிவா! என விளி த்து, அவனை முத்தமிட்டு அடியானின் தீவிர பக்தியைச் சோதனையிட்டானே கெளரிநாதன். அந்நிலையிலும் உறுதி கொண்டு வாளால் மகவரிந்து ஊட்டி அடியார் சேவை புரிந்த சிறுத் தொண்டரின் வீர பக்தியை எப்படிப் பாரா ட்டுவது!
அடர்ந்த வனம் நிறைந்த பெருத்த மலை தரித்த காளஹஸ்தியிலே சுயம்பு லிங்கமாகத் தோன்றி நின்றன் தான் தோன்றியான இறைபவன். வேட்டையாடும் குலத் தொழில் கொண்ட வேடுவன் கண்ணப்பன் ஒருநாள் இத னைக் கண்டான். ஆஹா! அவன் அடைந்த ஆனந்தத் திற்கு அளவேயில்லை. தனியாக இருந்த இறைவனுக்கு உணவு வேண்டுமே என இறைச்சி கொணர்ந்து சுவையா னதா என எச்சில் படுத்திப் பார்த்துச் சமர்ப்பித்து மகிழ் ந்தான். இதுமட்டுமா, எங்கு போனுலும் எதைக் ''
லும் பெருமானின் திருமேனியே தோன்றுகிறது ಙ್' தன்னைப் பற்றிய நினைவே இல்லை. சதா இறையவன் மீதே நினைவு. ஒரு கணமும் பிரிய மனமேயில்லை. தினமும் அரு கிலிருந்த குளத்தில் வாய் நிறைய நீர் கொண்டு இரு கை
றைய காட்டுப் புஷ்பங்களேந்தி வந்து வாய் எச்சில் நீ ரால் இறையவனுக்கு அபிஷேகம் செய்து புஷ் 1ம் தூவி இறைச்சி படைத்து மகிழ்வது அவ் வேடுவனது வழக்கமா யிற்று.
 
 

ஆத்மஜோதி 23 ஒருநாள் வழக்கமாக நீரும் புஷ்பமும் கொணர்ந்த வேடுவன் இறையவனின் ஒரு கண்ணிலிருந்து குருதி பொ பூழிவதைக் கண்டான். தன்னை சோதனை செய்யும் இறைய * னின் திருவிளையாடலைப் புரிந்து கொள்ளாத வேடன் திடு க்கிட்டான். அலறினன். இரத்தத்தை நிறுத்த முடியவி ல்லை. காடுகளில் அலைந்து பல மூலிகைகளையும் பச்சிலைகளை யும் கொணர்ந்து மருந்திட்டான். முடியவில்லை. தன் முய * ற்சி பயனற்றதாகப் போக வேடனுல் பொறுக்க முடிய வில்லை கீழே விழுந்து புரண்டான். அரற்றினன். திடீ ரென ஒரு எண்ணம் உதித்தது. உடனே ஒரு கூரிய அம் பெடுத்து தன் ஒரு கண்ணை நுங்கு எடுப்பதுபோல் குத்தி எடுத்து பிரானுடைய கண்ணின் மீது பொருத்தினன். ஆஹா! என்ன ஆச்சரியம். இரத்தம் வடிவது நின்ா: விட்டது. ஆனல் இது என்ன? மற்ருெரு கண்ணிலிருந்து இரத்தம் வடிகிறது. ஆனல் இம்முறை வேடனுக்கு வருத் தமில்லை. ஏனென்ருல் அவனுக்குக்தான் இருக்கிறதே! ஆனந்தத்தால் பூரித்த அவ் வேடுவன் தன் இடது காலை ” பிரான் கண்ணின் மீது அடையாளத்திற்கு ஊன்றி மற்றக் கண்ணேப் பிடுங்க முனைந்தான். இப் பக்தியை இறையவ னல் தாங்க முடியவில்லை. கண்ணப்பா! சற்று நில்! என அவன் கையைப் பிடித்து தடுத்தபடியே ஆனந்த தரிசனம் தந்தான் இறையவன். ஆஹா ! என்ன பக்தி. பக்திக்கு சிகரம் வைத்தானே கண்ணப்பன் தொண்டு செய்து நா ளாறில் கண்ணிடந்து அப்பிய கண்ணப்பனின் பக்தியில் சிறிதேனும் எனக்கு இல்லையே எனக் கலங்குகிருர் அடிகள். அவர் துயரம் ஒரு பாடலாக வெளிப்படுகிறது.
* வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்
அல்லன் மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன்
அல்லன் நாணினிச் சென்று நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன்
அல்லன் நாணினிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்
காளத்தி அப்பருக்கே’ என்று கதறிய அடிகளைப் போலவும் கல்லால் எறிந்தும் கை வில்லால் அடித்தும் கனிமதுர சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டரினம் எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான் இனி ஏது செய்வேன் கொல்லா விரதியர் நேர் என்ற முக்கண் குருமணியே’’
என்று துதித்த தாயுமானவரைப் போலவும் இறைய ருளைப் பாடி நலம் பெறுவோமாக! -

Page 9
214 ஆத்மஜோதி
* பூரீ கிருஷ்ண ஜெயந்தி ' (சுவாமி அபேதாநந்தா)
MsTeSMseAeSMeAeS SLTeSeS eeeS LLeLeeS SeTS STSMeTS STSSSTSSSTSS
இந்தப்புனிதநாளில் நாம் எல்லோரும் கூட்டமாகப் பாலக்கிருஷ்ணன பக்தியுடன் தியானிப்போமாக, கிருஷ்ணன் ஜெயந்தியி உண்மைத் தத்து வத்தை ஆராய முற்படுவோம்.
பகவான் கண்ணன் மதுராபுரியில் அவதரித்தார்.இந்தப்பிறப்பு அந்த ஒரு முறையுடன் நின்றுவிடவில்லை. மறுபடியும் மறுபடியும் நடைபெற்றுச் கொண்டே இருக்கிறது. பகவான் கிருஷ்ணன் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தன் அவதரித்தார். பிறகு தோன்றவில்லை என்று நாம் எண்ணினுல் அது நம் அறியாமல்மயேயாகும். 9 19, LI (9001 DTI ch மொழிவது போல் பக வான் தோன்றுவதுமில்லை, மறைவதுமில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஏன்! ஒரு விடிையின் ஒவ்வொரு சிறு பகுதி நேரத்
திலும் பிறந்து கொண்டே இருக்கிருர், எப்படி? -
வசுதேவரும் தேவகியும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சமயம், இருளடைந்த சிறையில் பின்பு அவதரித்தார்.
உலக விஷயங்கள் ஓங்கி நிற்கும் காலத்தில், அதாவது அதர்மம் மிகுந்து இருக்கும் காலத்து, பக்தன் இறைவனைக்க வி அழைக்கிருன் இந் த அழைப்பு இறைவன் செவியில் விழுகிறது. பக்தனது இருதயம் மலர்ந் து பக்திரசம் வழிகிறது. இந்த அமுதமே இறைவன் சொரூபமாகும். இங்ஙனம் பகவான் பக்தனுடைய இருதயக் கமலத்தில் எல்லாக் குணங் களுக்கும் "அதீதமான, அவனு'க்கே உரிய குணத்துடன் தோன்று கிருர் இந்தக் குணம் சத்துவ ரஜோ தமஸ் ஆகியவற்றிற்கும் அப்பாற்பட் டது .
இவ்விதம், அழகிய கற்பனை புள்ளம் படைத்த பக்தன் அந்த மோஹ
ேைனத் தோற்றுவிக்கிருன் இதை யொத் த அ ழ கு இந்த உலகில் வேருென்றும் இல்லை. இறைவனுடைய பிறப்பு காமாதி விகாரங்களால்
ஏற்பட்டதல்ல. இதன் கார 515 மாகத் தான் கீதை:-
ஜன்ம கர்மச மே திவ்யம் ஏவம்யோ வேத்தி தத்வத தத்வா தேஹம் புனர்ஜன்மம் நேதி மாமேதிலோ அர்ஜ"னு!!
என்று பகர்ந்து, இறைவனது பிறப்பு தெய்வீகமானது என்பதை நிரூபிக் கிறது. வசுதேவரும் தேவி. கியும் சிறையில் வெவ்வேறு மூலைகளில் சங்கிலி யால்பினைக்கப்பட்டிருந்ததால் அவர்களிடையில் எந்த சரீர தொடர்பும் இல்லை. காமாதிவிகாரங்களினுல் ஏற்படும் பிறப்பு தெய்வீகமானதல்ல. எந்த மதமாயினும் அவதார புருஷர்கள் காமத்தின் காரணமாகத் தோன்
 
 
 
 

ஆத்மஜோதி 215
றி இருந்தால் தெய்வீகப் பிறப்பாக இருக்க முடியாது.
கண்ணபிரான் இந்த உலகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை
நிலைநிறுத்தத்தோன்றினர் என்று சொல்லப்படுகிறது. அதர்மம், தர்மம்
6f6öI L_1605) 34 6 TGöT GöT? -
எல்லா தர்மங்களை யும் கைவிட்டு அவனது திருவடிகளில் பரிபூரண சரணுகதி அடையுமாறு பகவான் பகர் கிருர், அகந்தையின் காரணமா கத் தோன்றும் உலக நீதியான தர்மங்களை ஈண்டு பகவான் குறிப்பிட வில்லை. உண்மையான தர்மம் அவனது மலரடிகளைச் சரணடைவதேயா
கும். இதுவே பகவான் குறிப்பிடும் தர்மமாகும் பரிபூரண சரணுகதியே
பக்தியின் பாற்பட்ட தர்மமாகும்.
இந்தத் தர்மத்தை அனுசரிக்கும் பக்தனுடைய உள்ளத்திலேயே பக வான் தோன்றுகிருர் பக்தனுடைய உள்ளத்தின் வாயிலாகப் பகவான் உலகத்திற்கும் காட்சிஅளிக்கிருர், பாகவதத்தின் முக்கிய கருத்து இதுவே
шп (5 tib.
பகவான் அவதரித்த புனிதநாள் இது. பக்தனுடைய தவிக்கும் உள் ளத்தில், கடும் இருளில் பகவான் தோன்றிஞர் பக்தனுடைய உள்ளத் தில் அகந்தை அணுவளவும் இல்லை.அகந்தை குடிகொண்டிருப்பதே இருள் உலக விஷயங்களில் ஆசை கொண்டிருப்பதே சிறைவாசம். இருளில் தான் ஒளியின் தேவை உணரப்படுகிறது. பக்தனுடைய உள்ளத்தில் சம்சார பந்தமாகிய இருள் மறைந்து, அகந்தை ஒழிந்து சரணுகதி அடைந்த மறு வினுடியே பகவான் என்ற உருவத்தில் பேரொளி உதயமாகிறது. இருள் அகன்று விடுகிறது. பக்தனுடைய விரக வேதனை தணிகிறது. இடருற்று தவிக்கும் இந்த உலகத்தில் அமைதியையும், தர்மத்தையும் நிலை நிறுத்த பகவான் தோன்றினர். நாம் இந்த உலகம் ஒரு சிறைச்சாலை என்பதை உணர்ந்து விட்டால் 1. நம்மை கடையவனுக்கும் கடையணுக உண ருவோம். இந்த உணர்ச்சியே ஆண்டவனே சிந்திக்க உறுதுணையாகும் அப்பொழுது பகவான் நிச்சயமாகத் தோன்றுவார்.
வாழ்க்கை வெறும் மாயை. அது அழியக் கூடாது. எந்த நிமிடத்தி லும் அது அணைந்துவிடும். அற்பர்களாகிய நாம் இந்த உண்மையை உணர்ந்து விட்டால் அந்த அழிவற்ற பொருளை உடனே சிந்திக்க ஆரம் " பித்து விடுவோம். படிப்படியாக அந்த அழிவற்ற பரம்பொருளை நோக்கி முன்னேறுவோம். இதுவே ஜன்மாஷ்டமி அல்லது பூரீ கிருஷ்ண ஜயந்தி யின் மகாத்மியம். -
உலக ஆசைகள் நம்மைப் பற்றி இருக்கும் வரை அவற்றை அழிக்கும் பொருட்டு பகவான் கிருஷ்ணன் அவ்வப்பொழுது ஆங்காங்கு தோன்றிக் கொண்டிருப்பார். இது எல்லாக் காலங்களிலும், எல்லாயுகத்திலும், எல் லாப் பருவங்களிலும், ஒவ்வொரு நிமிடமும் நேருகிறது.

Page 10
216 ஆத்மஜோதி
பரித்ராணுய ஸாதுனும் வினுஷாய ச துஷ்க் துருதாம்! தர்மஸம்ஸ்தாபனுர்த்தாய ஸம்பவாமி யுகே யுகே!
என்ற கீதாவாக்கியத்தின் பொருள் இதுவே.
கீதையின் நான்காவது அத்தியாயத்தில் பகவான்கண்னன் தர்மத்தை ஸ்தாபிக்கவுய் அதர்மத்தை அழிக்கவும் தாம் பிறப்பதாக அருளியுள் GiffTrif.
ஸர்வதர்மான் டரித்யஜ்ய மாமேகம் சரணம் வரத அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோகடியின்யாமிமா ஷ"ச!!
என்று 18வது அத்தியாயத்தில் எல்லாத்தர்மங்களையும் விடுத்துத் தன் சிே சரணடையுமாறு பகர்ந்துள்ளார். பகவானுடைய இந்த வார்த்தைகள் ஒன்றுக்கொன்று முரணுனவையல்ல. நாம் இந்த உலகத்தில் தி"பி" என்று அனுசரிப்பவை உண்மையில் தர்மம் அல்ல என்று ஏற்கனவே பக வான் கூறியுள்ளார். நேர் மாமுக அவை அதர்மமேயாகும். ப க வா ன் கூறும் தர்மம் ஒன்றேயாகும். அதுதான் அவரது மலரடிகளை சரணடைந் து அங்கு மட்டுமே புகலிடம் கொள்வதுதான்.
ஆகவே இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் முதலிய மதங்கள் லெளகீக விஷயங்களே அடைவதற்குப் பின்பற்றுமாறு கூறும் தர்மங்கள் உண்மை யில் நேர்மாரு?னவை. தர்மம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதல்ல. புலன்களால் நுகரக் கூடியதல்ல தர்மம். ராஜரிஷி ஜன கருடைய வாழ்க் கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. அவருடையதர்பா ரில் முனிபுங்கவர்கள், ரிஷிகள், பண்டிதர்கள் மற்றும் கற்றவர் பலர் வீற் றிருக்கின்றனர். அஷ்டவக்கிரர் என்ற கோர உருவத்தைக் கண்டவுடன் அங்கிருந்தவர்கள் நகைத்தனர். அஷ்டவக்கிரரும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தார். அதைக் கண்ட ஜனகர் அவர் சிரிக்கக் காரணம் என்ன என் று கேட்டார்.
முனி புங்கவர் ;- நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? ஜனகர்:- உங்களுடைய உருவத்தைக் கண்டு முனி - நானும் உங்களை டெல்லாம் கண்டு சிரித்தேன் ஜனகர் ;- தாங்கள் கூறுவது புரியவில்லையே முனி;- இங்கு வந்தால் சத்சங்கம் கிடைக்கும் என்று எண்ணினேன்' ஆணுல் இங்கு புறத்தோற்றத்தைக் கண்டு மதிப்பிடும் சக்கிலியர்களையும் தோல்பதம் இடுபவர்களை யும் தான் காண்கிறேன். ஒருவன் தன்னை பிரா மணன், ரிஷி என்றெல்லாம் சொல்லிக்கொள்வதில் பயனில்லை. ஒரு மனி தனை அவனது தோற்றத்தைக் கண்டு மதிப்பிடுவது சரியல்ல. அவனுடை ய உண்மைக் குணங்களைக் கொண்டே அவனைப்பற்றி தீர்மானிக்க வேண் *) டும். இதை நீங்கள் இன்னும் அறியவில்லை என்றுகூறிச்சென்று விட்டார் இதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் வெட்கமடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

ஆந்மஜோதி , 217
கீதை இதை மேலும் 'சாதுர்வர்ணயம் மயா ஸ்ரூஷ்டம் குண கர்ம விபாக்ஷ’ என்று விளக்குகிறது. ஆகவே தர்மம் என்பது இறைவனிடத் து கொள்ளும் கலப்பற்ற தூய பக்தியேயாகும். இதை நிலை நிறுத்தவே பகவான் தோன்றுகிருர், இதை முன்பு செய்தார். இப்பொழுது செய் கிருர் . இனியும் செய்வார். இந்த பக்தி தர்மம் ஒங் கட்டும்! நம் எல்லோ ருடைய உள்ளத்திலும் பகவான் பரிபூரணமாகத் திகழட்டும்!!
துவாபரயுகத்தின் இறுதியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தேவகிக் கும் வசுதேவருக்கும் புத்திரனுக பகவான் கிருஷ்ணன் அவதரித்தார். அவர் கோகுலத்தில் வளர்ந்து வரலானர் . பல அற்புத லீலைகளைப் புரிந்து விட்டு மறைந்தார். இந்த லீலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்க் கும் பொழுது, அவற்றில் அடங்கியுள்ள உண்மை தத்துவத்தை மறக்க முடியாது. தூய எண்ணங்களின் பலனுக நம் உள்ளத்தில் தோன்றும் கண்ணன் துவாபர யுகத்தின் முடிவில் அவதரித்த கண்ணனே என்பது தான் அந்த உண்மை. இந்த விளையாட்டுகள் அனைத்தும் உண்மையான வையே. மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவதற்காக எழுதப்பட்ட கட் டுக்கதைகள் அல்ல அவை. அவை தூய எண்ணங்கள் தோன்றுவதற்குக் காரணமான லீலைகள். அவனே மறந்து அகந்தை கொண்டு வாழ்வது அதர் L2மாகும். இந்த அதர்மத்தை நாம் பின்பற்ற மல் இருப்போமாக,
gJT ULI எண்ணங்கள், தியானம் ஆகியவற்றின் காரணமாக நம் உள் ளத்தில் உதிக்கும் கண்ணனும், (கிருஷ்ண தத்துவம்) அன்று துவாபர யுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை ஸ்தாபிக்கத் தோன்றிய கண் ணனும் ஒருவரே. இதை உணராமல் வெவ்வேருகக் கருதினுல் தியானத் திற்கு பொருளே யில்லை. அது உண்மையான தியான மாகாது.
கிருஷ்ண தத்துவமும், புராணங்களில் குறிப்பிடப்படும் கிருஷ்ண னும் ஒருவரே. இந்தப் பேருண்மையை நாம்தெரிந்து கொண்டு லிட்டால் அப்பொழுது உண்மையான பக்தி தர்மத்தை உணர்ந்து கொண்டதாகும்
கர்மயோகம், ஞானயோகம், ராஜயோகம், தியானயோகம் அனைத் தும் பக்தியோகத்தின் பிரிவுகளே. அதாவது இந்தப் யோகங்கள் அனைத் திலிருந்தும் தோன்றுவதே பக்தியோகம், இந்த பக்தியோகம் எந்த எந்த காலத்திற்கும் நம் உள்ளத்தில் ஆழ்ந்து நிலைபெறுவதாக!
ஓம் நமோ பகவதே வாசுதேவாய அன்பு! இன்பம்! அமைதி!!!
LMeLMMMLSS eeLSLeLeeLSLALLSMLeLeLJS SeeeSLHeLeLeLS SLA S LASMeSeLeLLeLSLcLLS
மனதிலே ம ட் டு ம் திருப்தி உண்டாயிருந்தால் அவன் வாழ்வு வறுமையில் சிக்கியதானுலும் போதியசெல்வம் உடை
யதாகும்.
ஷேக்ஸ்பியர்

Page 11
தெய்வ வழிபாடு
(சாதுசுப்பையா)
தூய்மை துணைமை துணிவுடமை யெங்கே?
துயரமும் வஞ்சமும் துடைபடுவதெங்கே?
வாய்மை வழிகள் வருவதும் எங்கே?
வகையாக அறிவித்து எங்களை வையங்கே.
வறுமையும் வம்பும் மாறும் திறமை யெங்கே?
வளமையும் சிறப்பும் ஓங்கும் வகையுமெங்கே?
பொறுமையும் புகழும் நல்கும் புனிதமெங்கே?
பொருந்து மாறெங்களைவை இறைவாஅங்கே,
துன்பம் துடைக்குமோர் துணைவனெங்கே?
தோன்று முயிரில் ஒமென்ற தலைவனெங்கே?
இன்பம் பெருகு மோர் இடமுமெங்கே?
இனிமை தந்தெங்களை வைத்திடுவாயங்கே.
சங்கரன் கண்ணன் சாற்றிய அன்பெங்கே?
சார்ந்த கெளதமடித்தர் போற்றிய பண்பெங்கே?
மங்கள காந்திஜி மகிழ்ந்த தோ ரன்பெங்கே? மாசற எங்களை வை மகிழ்வித்தங்கே.
அகவிருளை யகற்று மொரு தீபமெங்கே?
அருள் விளக்காய் உயிர்களிடம் ஒளிர்வதெங்கே?
ஜெக உணர்வில் சுகபதங்கள் தருவதெங்கே?
சிந்தனே தந்தெங்களை வை சிறப்பாயங்கே,
காந்திவழி மனதில் எழுவதெங்கே?
கண்ணன் ராமன் அருளைப் பெறுவதெங்கே?
சாந்திதரும் வள்ளுவர் குறளுமெங்கே?
சன்னதியிலெங்களைச் சேர்ப்பாயங்கே,
சுவாமி விவேகானந்தர் சம்பூர்ண நிலையெங்கே?
சன்மார்க்க ராமகிருஷ்ணர் சாற்றிய சத்தியமெங்கே?
பூமியில் ஏசுநபி போதித்த புனிதமெங்கே?
புண்ணியம் தந்தெங்களைப் புகழவையங்கே.
அப்பர் சுந்தரர் அறிவித்த முறையெங்கே?
அருள் மணிவாசகர் அருளிய நெறியெங்கே?
இப்புவி சம்பந்தர் இனிமையாமுறையெங்கே?
இன்பம் தந்தெங்களவை இனிதாயங்கே,
 

ஆத்மஜோதி 219
அனைத்தையும் ஏகமாயறிவதெங்கே?
அதுவல்லால் வேறென்றும் காணுததெங்கே?
மனத்தின் கண் சாட்சியாய் திகழ்வதெங்கே? மகிழ்வித்து எங்களை வை சிறப்பாயங்கே.
ஐயுணர் வொளிர் வ தோரிடமுமெங்கே?
ஆண்டவனின் தோற்ற மென்றறிவதெங்கே?
பொய்யுணர்வு பொடிப்பொடியாய்ப் போதெங்கே? புகலிடமா யெங்களப் போகவையங்கே.
கல்லினுள்த் தேரையினைக் காப்போணெங்கே?
கருத்தினில் நின்றென்னே உணர்வோனெங்கே?
புல்லினுள் நெல்லினைப் புகுத்தோனெங்கே?
புனிதனே எங்களை வை யறிவாயங்கே.
கானல்நீர் போலுலகு காண்பதெங்கே?
வானவில் வடிவமாய்த் தெரிவதெங்கே?
ஞானம் சுயம் ஜோதி ஒளிர்வதெங்கே?
தியானம் தந்தெங்களைவைப்பாயங்கே.
நாடிடும் பொருள் கை கூடுதலுமெங்கே?
ஞானமும் புகழுமுண்டாவதும் எங்கே?
வீடியல் வழி நான்கும் விளககுதல் எங்கே?
விபரமாய் எங்களைவைப்பாயங்கே.
மரணமிலாப் பெரும் வாழ்வு வாழ்வதெங்கே?
மதியினுல் விதியாவும் மாள்வதெங்கே?
திரண மிலாதச்சம் பழி தீர்வதெங்கே?
திவ்வியமாய் எங்களவை தெரிவித்து அங்கே.
LMLMLMLMAMeMLMLMLMLMMLALeLeeLeASLeLeA LLL
நாம் எப்போது அதிர்ஷ்ட தேவதையை பெரிதும் விரும் புகின்ருேமோ, அப்போதுதான் அவள் நம்மை அதிகமாக
அதட்டி மிரட்டிப் பார்க்கிருள்.
- ஷேக்ஸ்பியர்
பெரிய கொடையே ஆனலும் அன்பின்றிக் கொடுத்தால் அது கொடையாகாமல் மாய்ந்து போகும்.
- ஷேக்ஸ்பியர்
திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.
ஆங்கிலப் பழமொழி,

Page 12
220 ஆத்மஜோதி
நாம் பகவானை விரும்புவது இல்லை
- சுவாமி நிர்மலானந்தா -
நம் பாரதத்தில் பெரிய பெரிய ஆலயங்கள் ஏன் வந்தன. எங்கும் நிறைந்த சர்வேஸ்வர பகவானை நினைவு செய்யவே தான்வந்தன என்றுவேதங்களும் சாஸ்திரங்களும் முறையிடுகி t ன்றன. மகான்களும் பகவானை நினைக்க அறிவுறுத்துகிருர்கள். ஆனல் உலக மாயை மறக்கச்செய்கிறது. மாயையில் தான் பகவானும் மறைந்துள்ளான்.
ஒரு சமயம் பகவான் விஷ்ணுவும் பூரீ லசஷ்மி தேவியும் பிருந்தாவனம் வந்து இங்கு பக்தர்கள் பகவான் சியாம சுந் தரனையும் பூரீ இராதா தேவியையும் வழிபடுவதைக் கண்டு பகவான் தேவியிடம் மக்கள் உன்னைத்தான் மதிக்கிருர்கள். என்னே அப்படி மதிப்பதில்லை. ஆனல் எல்லாம் பகவான் தான் என்றுநடத்துகிருர் என்று வெறும் பிரார்த்தனைகளையே நடித்துக் காட்டுகிறர்கள் என்ருர்,
அப்போது றீ வசஷ்மி மாதா இல்லை என்று மறுத்
முடிவு செய்தார்கள். பகவான் ஒரு சாது வேடத்திலும் தேவி ஒரு பெண் துறவி வேடத்திலும் பிருந்தா வன வீதி யில் சுற்றி அங்கு சாதுவும் பக்தி சம்பந்தமான உபன்யா சம் செய்து வந்தார். ஒரு ஆச்சிரமத்தில் சென்று இங்கு நான் நாலு மாதம் சாதுர் மாச விரதம் அனுஷ்டிக்க இடம் தந்தால் தினம் பக்தி ஞான யோக சம்பந்தமான உபந்நியாசம் செய்யலாம் என்ருர். அதன் நிர்வாகிகள் மகராஜ் நீங்கள் எத்தனே காலம் ஆனலும் இங்கு இருக்க லாம். அறைகள் நிறைய இருக்கின்றன. பிடித்த இடத் தில் இருக்கலாம் என்ருர்கள். நீங்கள் இங்கு தங்கினல் உலகுக்கே பாக்கியமாகும். நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ என்று சொன்னுர்கள். 鬣
சாது வேடம் கொண்ட பகவான் நீங்கள் விரும்பிய படி தங்குகிறேன். என்னுடைய சாதுர்மாத விரத காலம் வரையும் என்ன வந்த போதும் இடத்தை மாற்றும்படி சொல்லக் கூடாது. இதற்குச் சம்மதம் இருப்பின் தங்கு கிறேன். இல்லையானல் வேறு இடம் போகிறேன் என்ருர் . நிர்வாகிகள் மகராஜ் எத்தனை கூட்டம் வந்தாலும் தங் களை இடம் மாற்றும்படி சொல்லவில்லை என்ருர்கள். அதன்
 

ஆத்மஜோதி 221
படி சாதுவும் ஒரு மூலையில் உள்ள அறையைக் காட்டி இங்குத் தங்குவதாகச் சொல்வி அமர்ந்தார். தினம் சத் சங்கம் நடந்து வந்தது.
ஒரு வாரத்திற்குப் பின் பெண் துறவி அம்மாள் வந் தாள். தானும் பக்தி மார்க்கம் பற்றி உபன்னியாசம் செய்வதாகச் சொன்னுர், அம்மாவின் மேனி அழகையும் இனிய மொழியையும் கேட்டு உபன்னியாசம் செய்தார் Յ56NT .
தினம் வருவதாகச் சொன்னபோது இல்லை இவ்விட மே தங்கி உணவும் கொள்ள வேண்டும் என்ரு?ர்கள். அம்மா சரி என்று கூறி இரண்டு தினம் கழித்து இங்கு தங்குகி றேன். உணவு பரிமாறச் சொன்ன போது என் வசம் தட்டு வகைகள் உள்ளன என்று கைவசம் உள்ள பையி லிருந்த ஒரு தங்கத் தாம்பாளமும், தங்கச் செம்பும் எடுத் துக் கொடுத்தார். அனைவருக்கும் ஆச்சரியமாயிருந்தது. உணவுக்குப் பின் தாம்பாளம் செம்பு சுத்தி செய்து கொ டுக்க வந்தார்கள். ஒருநாள் ஆகாரம் செய்தபின் மறுபடி அந்தப் பாத்திரம் உபயோகிக்க மாட்டேன். அதை விசி விடுமாறு சொன்னர். இது என்ன அகிசயம். தங்க சாமா ன்களை யார் விசுவார்கள் மூன்று நாட்கள் உணவு செய் க தல்ை விலை மதிப்பில்லாத் தங்கம் கிடைத்தது. நான் வேறு இடம் திபோக விரும்புகிறேன் என்ருர் அம்மா நிர்வாகி கள் தினம் தங்கப் பாத்திரம் கிடைப்பதால் இங்குதான் தங்க வேண்டும் என்ரு?ர்கள். இங்குள்ள கட்டிடத்தில் எதி லும் தங்கலாம் என்ருர்கள்.
அச் சமயம் பெண் துறவி அம்மா இடத்தைக் காட் டுங்கள் பார்க்கலாம் என்று கேட்டார். எனக்கு எந்த இடம் பிடிக்கிறதோ அதைக் காலி செய்து தருவீர்களா என்ருர், அதற்கென்ன அம்மைக்கு எது விருப்பம் உள்ள கோ அதைச் செய்யச் சித்தமாய் இருப்பதாகச் சொல்ல சகல அறைகளையும் சுற்றிப் பார்த்து விட்டு மூலையில் உள்ள இடம்தான் ஏகாந்தம் என் சாதனைக்குரியது. அதைத் தாருங்கள் என்ருர், அப்போது அங்கு ஒரு சாது உள் ளார். அவர் சதுர் மாச விரதம் அனுஷ்டிக்கிருர், ஒரு வாரம் தான் ஆகிறது. அவர் நாலு மாதம் வரையும் அந்த இடத்தை விடமாட்டார் என்ருர்கள். சரி நான் போகிறேன் என்று அம்மாள் சொல்ல அந்தச் சாதுவுக்கு

Page 13
222 ஆத்மஜோதி
வேறு அறை கொடுத்துக் காலி செய்து தருவதாகச் சொன் ஞர்கள். காரணம் தினம் தங்கம் கிடைப்பதும் பெண் என்பதும் தான்.
அந்தச் சாதுவிடம் சென்று இதைக் காலி செய்யுங் கள் இப்படி ஒரு அம்மா வந்துள்ளார். அவவுக்கு இந்த அறைதான் பிடித்திருக்கிறது. உங்களுக்கு வேறு அறை தருகிருேம் என்ருர்கள். சாது பகவான் நான் கேட்ட போது நீங்கள் என்ன வந்த போதும் காலி செய்ய மாட் டோம் என்று சொன்னீர்கள். இன்று இப்படிச் சொல்வது ஒரு பெண் மோகத்திலும், தங்க ஆசையிலும் தான் போ லும் என்ருர், இந்த ஆச்சிரமம் விருத்தி அடைய வேண் டாமா? தினம் எவ்வளவு மதிப்பு உள்ள தங்கம் கிடைக் கிறது. நீர் இருப்பதில் என்ன பயன் கிடைக்கிறது? உட னே காலி செய்யவும் என்று சொல்ல பகவான் உலகமே பெண்ணையும் பொன்னையும்தான் விரும்புகிறது. நடிப்புத் தான் பகவான் பகவான் என்பது என்று சொன்னபோது இருவரும் மறைந்து விட்டார்கள். இப்படியேதான் இன்று நடக்கிறது: பகவானை உண்மையில் விரும்புபவர் இல்லை
SeLeLeeLeSLTSeMeTS TTTS MeMMS MMS MTL SLTeM MLeSLe TMMS MLeS TTLS MMeS MAS TLS TTLS LTLSLTLSLTLS qTALe MTS ALS LSMALS MSMeTA qeeLeS MLLLSSLASLLSSLLSSLLS
திருமுறை விழா
கொழும்பு விவேகானந்த சபை ஆதரவில் 20, 21,
22-4-62 ஆகிய மூன்று தினங்களிலும் திருமுறை விழா
நடைபெற இருக்கிறது. குன்றக்குடி அடிகளார், திரு. கி. வா. ஜகந்நாதன் ஆதியோர் பங்கு பெறுகின்றர்கள். திரு முறைகளைப் பற்றிய நல்ல கருத்துக்களை அறிவதற்கு அன் பர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பாகும்.
qTSLSLSTLSLSTSLSSSLS S SLSSLSLeLeSSSLSLSLMLSS TeSMLTLS TeS TLSSSLSLLTS TLS LLTLSSSLSMSLS S LTLSSLsMMSMLMeMLMLseT S sM MS TTe MsTMeS MeTLeS LTSLSSSMLTLSSSLTLLLSLLS
 
 

அன்பே எங்கள் வாழ்வு.
|திருமதி. M. மதார் நாச்சியா.)
எந்தக் காரணத்தினலும் துக்கமோ சோகமோ அடை
யாதே. பார்ப்பது யாவும் பயனற்றுப் போய் விடும், காண்பது
யாவும் காலத்தின் வேகத்திலே குனியமாக மாறிவிடும். எங்கு நின்ருல் மனதின் அசைவு ஏற்படாதோ அங்கே சதாவும் இரு
அதுவே உனது சொந்த நிலை.
காணும் உலகம் காணப்படுவது பார்ப்பவன் பார்ப் தி ல்ைதான். உலகம் உண்டு என்பதற்கு அத்தாட்சி,பார்ப்பவன் இருப்பதினுல்தான் உலகம் தன்னளவில் நிருபிக்க முடியாது.
நொடிப் பொழுதில் நூற்றுக்கணக்கான கற்பனை உலகங் களை உருவாக்கி உயர்வான ஆத்மீகச் சக்தியை பாழ்படுத்தி டும் மனதை எல்லா நிலைகளிலும் உணர்வதே விவேகம்.
தொன்று தொட்டு தோன்றி வந்த வினையின் ப ய னே ஆசையின் உத்வேகங்களாகும். ஆசைகளற்று அமைதி பெறு வதே ஆனந்தகரமாக வாழ்வதற்கு சிறந்த மார்க்கம்.
நிலையற்ற வாழ்வை நிலையெனக் கொள்வது பேதமை. கூrண நேரத்தில் சரிந்து விழுந்திடும் சரீரத்தைத் தானேயென் று எண்ணுவது அறியாமை.
மெளனம் என்பது கண்மூடி வாய் பேசாது ஊமை போல் இருப்பதல்ல; எல்லா நிலைகளிலும் மனம் கலங்காது நிதானத் துடன் மனமகிழ்வுடன் தியான நிலையிலே இருந்து எல்லா வேலைகளையும் திறமையாகச் செய்வதேயாகும்.
அன்பின் பண்பினிலே நின்று இன் பத்தின் உணர்வினிலே லயமாகி உயர்வான தியானத்திலே காணப்படுவதே கற்பனை கலவாத மோனம்.
சகலவித ஆசைகளுக்கும் அப்பால் இருந்து கொள் அது G36 (o)gF Trijgb. V
வெளி உலகில் இன்பங்கான நி னை ப் ப து அர்த்தமற்ற உணர்ச்சியின் கிளர்ச்சி அல்லது மயக்கிடும் மனதின் எழுச்சி.
ஆசைகளின் பின்னலிலே வாழ்வதே நரகம், வெப்பம் நிறைந்த இச்சைகளுக்கு அடிமையாவதே சிறைச்சாலை,

Page 14
224 ஆத்மஜோதி
மனிதன் பிடியிலிருந்து மனிதன் விடுதலை பெறுவதே மானிட ஜீவியத்தின் மாபெரும் லட்சியம்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கலங்காது இருப்பதே நாம் வாழ்க்கையில் கற்க வேண்டிய முதற் பாடம்.
மயங்காது மருட்சியடையாது மாண்புடன் வாழ்வதே அறிவுக் கலையில் தேர்ந்ததின் பலன்.
உயர்வான உன்னத தியானப் பூங்காவிலே - துரிய நிலை யிலே வாழ்பவன் என்றும் பிறந்ததில்லை, ஆகவே சாக வேண் டிய அவசியமில்லை.
தன்னையே தான் தத்துவரீதியில் ஆராய்ந்தால் "நான் என்பது வெறும் எண்ணங்களின் கூட்டு என்பதை அறியலாம்.
உடலினுல் நுகரப்படும் இன்பங்கள் புலன்களுக்கு மயக்க மூட்டி அறிவுக்கு சாவு மணி அடிக்கிறது.
மனிதன் சரீர இச்சைகளுக்கு சாய்ந்து கொடுக்கும் மனப் பான்மை இருக்கும் வரையில் உயர்வான வாழ்வை ஒழுங்காக அனுபவிக்க முடியாது.
என்றும் எங்கும் எப்பொழுதும் உள்ளது துரியம்-உணர் வெளி. அதில் ஐக்கியமாவதே யோக-ஞான சாதனைகளின் (U) j o . ܓܡ
u JT Gay, Leħ மாறிக்கொண்டிருக்கும் இவ்வையகத்தில் யாவற் றிற்கும் சாட்சியாக இருப்பது எதுவோ அதுவே உன் ஆத்மா,
அமைதியே எங்கள் ஆசனம்; அறிவே எங்கள் ஆயுதம்; அன்பே எங்கள் வாழ்வு.
长大大长大大长
அதிர்ஷ்ட தேவதை அதிகமாக அருள் செய்யும் போது அவளைப் பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.
- ஷேக்ஸ்பியர்
வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியது to T(a) ib.
- பேர்ணுர்ட்ஷா
 

ஆத்மஜோதி 225
மனவுறுதி மாலை
|யூரீ சுவாமி கிருஷ்ணனந்தர்)
1. இது முதற் கொண்டு நான் என் திறமைக்கு இயலும் அளவு தகுதியுடையவர்க்கும் தரித்திரர்க்கும் எப்பொழுதும் உதவி செய்
வேன்.
2. இது முதற் கொண்டு நான் யாதாயினும் ஒழிப்பு மறைப் பின்றி ஒவ்வொரு நினைக்கக் கூடிய நிலைமையிலும் கபடமற்ற கருத் துடன் யாவரையும் நேசிப்பேன்.
3. இது முதற் கொண்டு நான் யாரையும் சுத்தமாக அறிய எப்பொழுதும் முயல்வேன்; மேலும் யாரையும் மயக்கமாக அறியும் தவறு செய்ய மாட்டேன்.
4. இது முதற் கொண்டு நான் சக்தி வாய்ந்த அன்புச் சுடரு டன் என்னை நோக்கிச் செலுத்தப்படும் பகைமையைப் பஸ்பமாக்கு வேன்.
5. இது முதற் கொண்டு நான் என் குறைபாடுகளை வெளிப்ப டையாய் ஒப்புக் கொள்வேன்; மேலும் மனப்பூர்வமாய்ப் பொருத்த மான ஈடு செய்ய முயற்சிப்பேன்.
6. இது முதற் கொண்டு நான் வாக்குறுதிகள் செய்வதில் விரை வின்றியும் அவதானமாயும் இருப்பேன்; ஆனல் ஒரு தடவை வாக் குறுதிகள் செய்ததும் அவைகளை மனப் பூர்வமாயும் விரைவாயும் நிறைவேற்றுவேன்.
7. இது முதற் கொண்டு நான் மற்றவர்களின் தயவைத் தகாத முறையில் வாய்ப்பாகக் கொள்ள மாட்டேன். அதுவுமன்றி அறிவற் றவர்களைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பாய்ந்து இறங்க மாட்டேன்.
8. இது முதற் கொண்டு நான் விசேஷ சலுகைகளை யெதிர் பார்க்கவும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். ஆனல் முறைமை
யான உரிமைகளை யனுபவிப்பதுடன் மன நிறைவு கொண்டிருப்பேன்.
9. இது முதற் கொண்டு நான் யாரொருவரினதும் செய்திகளைத் துருவிப் பார்க்கவும் அவைகளிற் றலையிடவும் மாட்டேன்.
10. இது முதற் கொண்டு நான் சமூகத்தைச் சீர்திருத்தும் செயல் களில் ஈடுபடுத்துமுன் முதலில் என்னையே நிறைவு படுத்துவேன்.

Page 15
226 ஆத்மஜோதி
11. இது முதற் கொண்டு நான் அனைவரின் வயதும் வாழ்க் கைப் பதவியும் எப்படியிருப்பினும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள் வதற்கு முழுப் பணிவுடன் சித்தமாயிருப்பேன்.
12. இது முதற் கொண்டு நான் திருமறையிற் கூறப்பட்டுள்ள முக்கிய தடை விதிகளுக்குப் பணிவாக மறு சமயங்களையும் அவற் றின் பக்தர்களையும் வெறுப்புக் கொள்ளவோ அல்லது ஏளனம் செய்
யவோ மாட்டேன்.
13. இது முதற் கொண்டு நான் ஒருபொழுதும் என் தினசரி வாழ்வின் போக்கில் என் எண்ணம், பேச்சு, செயல்கள் மூலம் யார் ரொருவரையும் புண்படுத்த மாட்டேன்; யாரொருவருக்கும் தீங்கு செய்ய மாட்டேன்.
14. இது முதற் கொண்டு நான் யாரொருவரையும் ஏமாற்ற வோ அல்லது அவமதிக்கவோ ஒருபொழுதும் முயற்சி செய்ய மாட்
டேன்.
15. இது முதற் கொண்டு நான் எனது எண்ணங்களையும் திட நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மீது புகுத்த மாட்டேன்.
16. இது முதற் கொண்டு நான் தீய வழக்கங்களையும் ஐதிகங்க ளையும் பின்பற்ற மாட்டேன்.
17. இது முதற் கொண்டு நான் யாரொருவரையும் அல்லது யாதொன்றையும் பற்றி நிச்சயமாகாத, துரிதமான, பாரபட்சமான அபிப்பிராயங் கொள்ளும் தவறு செய்ய மாட்டேன்.
18. இது முதற் கொண்டு நான் என் ஆறுதலையும் ஆதரவை யும் தேவைப்படுகிற, தேடுகிற துயருற்றவர்களையும் யோக்கியதையு டையவர்களையும் கைவிடவோ அல்லது நிந்திக்கவோ மாட்டேன்.
19. இது முதற் கொண்டு நான் நோய்கள், மருந்துச் சரக்கு கள், வைத்தியர்களை யகற்றக் கூடிய வகையில் என்னை நடத்துவேன்.
20. இது முதற் கொண்டு நான் உணவு தேர்ந்தெடுப்பதில் : செயல் நோக்குடைய மிதம் கடைப்பிடிப்பேன்.
21. இது முதற் கொண்டு நான் மயக்கம் தரும் மருந்துகளையும் கிளர்ச்சி தரும் பொருள்களையும் மேலும் உடனடியாகவும் ஒரொரு காலம் நிலையானதாயும் கூட என் உடல் நலத்தைப் பழுதாக்கக் கூடிய அப்படிப்பட்ட வேறு பொருள்களையும் முற்று முழுதும் தவிர்ப் ଔuଙt.
 
 
 

ஆத்மஜோதி 227
22. இது முதற் கொண்டு நான் மித மிஞ்சி உணவு உண்ணலை யும் பசியின்றி உண்ணலையும் தவிர்ப்பேன்; அதேபோல் என் உடலைப் பேணுகைக்கும் வளர்த்தலுக்கும் அவசியமற்ற உணவுப் பொருள்களை யும் தவிர்ப்பேன்.
23. இது முதற் கொண்டு நான் வெறும் இன்றியமையாத் தேவைக்குத் தக்க அளவில் என் தேவைகளைக் குறைத்துக் கொள்
ଜ}] ତ0T. ܬܬ
24. இது முதற் கொண்டு நான் பலன் தரும் ஆன்மீகப் பயிற் களுக்கு நேரந் தவமுது சில காலம் செலுத்துவேன்.
25. இது முதற் கொண்டு நான் திடசித்தத்துடனும் தீவிரத் துணிவுடனும் இவ்வுலகிற் செய்து முடிக்க இயலாதது ஒன்றுமில்லை யென்று நினைவு கூர்வேன்.
26. இது முதற் கொண்டு நான் அற்பமாய் உரையாடுவேன், போதியதாய் உற்றுக் கேட்பேன், மிகுதியாய்ச் செயலாற்றுவேன்.
27. இது முதற் கொண்டு நான் பற்றற்ற மன நிலையை நிச்ச
யமாய் வளர்ப்பேன்.
28. இது முதற் கொண்டு நான் தூய்மையும் பக்தியுமுள்ள இருதயம் படைத்தவர்களின் சங்கத்தை நாடுவேன்; நீசர்களையும் துஷ்டர்களையும் தவிர்ப்பேன்.
29. இது முதற் கொண்டு நான் நலன் தரும் தெய்வீக ஊக் கம் அளிக்கும் இலக்கியங்களையே வாசிப்பேன்.
30. இது முதற் கொண்டு வெறும் தற்பெருமையைச் சித்திகர மாய் அழிப்பேன்.
31. இது முதற் கொண்டு நான் நேரத்திற்குப் படுத்துறங்கு வேன். அதேபோல் நேரத்திற்குத் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பேன்.
32. இது முதற் கொண்டு நான் மற்றவர்களின் குற்றங் குறை பாடுகளை உற்றுப் பார்ப்பதற்கு என் எண்ணங்களுக்கு இடங் கொடு
க்க மாட்டேன்.
33. இது முதற் கொண்டு நான் எனது தினசரி உணவில் ஒரு பங்கைப் பறவைகள், பூச்சி புழு போன்ற சிற்றுயிர்கள் விலங்குகளுக் குக் கொடுப்பேன். -
34. இது முதற் கொண்டு நான் எல்லா மருட்டுதல்களுக்கும் வசமாகாதபடி எதிர்த்து நிற்பேன்.
35. இது முதற் கொண்டு நான் ஒர் இலட்சியமான, ஒழுங்கான
திட்டஞ் செய்த வாழ்க்கை நடத்துவேன்.
s.

Page 16
228 ஆத்மஜோதி
36. இது முதற் கொண்டு நான் செய்யும் ஒவ்வொரு முயற்சி
யிலும் உடனடியாக வெற்றி எதிர்பார்ப்பது சரியானதன்றென்னும் பகுத்தறிவுள்ள நம்பிக்கையுடன், நான் என் கடமையை நன்குசெய்
வேன்; மிகுதியைக் காலத்திற்கு விடுவேன்.
37. இது முதற் கொண்டு நான் என் எண்ணங்கள், பேச்சுகள், செயல்கள் தூய்மையானதாயும் ஒவ்வொன்றும் மற்ருெவ்வொன்றுட
னும் முழு இணக்கமுடையவையாயும் இருக்கும்படி சிறப்பாகக் கவ 6.
னிப்பேன். -
38. இது முதற் கொண்டு இறந்த நாட்களும் பிறவா நாட்க ளுமாகிய கற்பனை நீரில் நீந்தி என்னை முடமாக்க மாட்டேன்; அதற் குப் பதிலாக, இருக்கிற தற்காலமாகிய சமுத்திரத்திற்குள் மனமள மந்து ஆழமாக மூழ்கி அங்கிருந்து அனந்தமாகிய அருமையான முத் துக்களைப் பெறுவேன்.
39. இது முதற் கொண்டு நான் எல்லா முதியோரையும் அறி ஞரையும் நன்கு மதித்துக் கண்ணியமாய் ஆதரிப்பேன். -
40. இது முதற் கொண்டு நான் சிற்றின்பம், சொகுசுப் பொ ருள்களாகிய வசியங்களால் என்னை இணைப்பதற்கு இணங்க மாட்
டேன்.
41. இது முதற் கொண்டு நான் பலவித மறையச்சங்களுக்கு ஆளாக மாட்டேன்.
42. இது முதற் கொண்டு நான் நிலையற்ற செல்வத்திற்கும் புகழிற்கும் வாஞ்சை கொள்ள மாட்டேன்.
43. இது முதற் கொண்டு நான் ஊன் உண்ணலாகிய பாவமான
மனிதத் தன்மையற்ற செயலில் இறங்க மாட்டேன்.
44. இது முதற் கொண்டு நான் பிறர் கருத்தைத் திருடுஞ் செயலில் இறங்க மாட்டேன்.
45. இது முதற் கொண்டு நான் பயனின்றிய குண தோஷங்
கள் ஆராயும் வாத சம்பந்தமான மறுத்துரைக்கும் வாக்கு வாதத் தில் பங்கு பற்றி என் அரும் நேரத்தைத் தவருன வழியிற் செலுத்த
DIT "Gu GỗT.
46. இது முதற் கொண்டு நான் நிலையற்ற பொருள்களிலிருந்தும் லெளகிகச் செயல்களிலிருந்தும் நிலையான இன்பத்தையும் நிறைவான அமைதியையும் எதிர்பார்க்கும் தவறு செய்ய மாட்டேன்.
 

ஆத்மஜோதி 229
47. இது முதற் கொண்டு நான் பொய் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஒருவகையிலும் அபிவிருத்தியாக்க மாட்டேன்.
48. இது முதற் கொண்டு நான் கீழ் நோக்கும் காமக்குரோத லோப, மோக, மத மாற் சரியங்களை யகற்றி ஆன்மிக மலர்தலாகிய உயர் திக்கு மண்டலங்களுக்குள் இட்டுச் செல்லப்படுவதற்குத் தகுதி :-15/ಿಣಿ(5®ಖಪ! என்னும் மாருத திட விசுவாசத்துடனிருப்
G.
49. இது முதற் கொண்டு நான் பிரார்த்தனைகளுக்கு நிச்சயமா னதும் விரைவானதுமான விடைகளைப் பெறுவதற்கு ஒரேயொரு வழி யாகிய மனவுறுதியுடன் நிற்கிற நம்பிக்கையுடன் என் பிரார்த்தனை களைப் பக்குவப் படுத்துவேன்.
50. இது முதற் கொண்டு நான் மனிதப் பிறப்பின் உயர்வு நலமாகிய பிரம்ம ஐக்கியத்தின் அடைவிற்காக மாத்திரம் என் வாழ் க்கை தரப்பட்டிருப்பதாய்க் கருதி அதை நடத்துவேன்.
பூரீ ராதா ஸ்தா நிதி
(ஹித ஹரி வென்வR மகராஜ்)
“யத்ர யத்ர மம ஜென்ம கர்மபி நாரே கேதாபரே மேபதே தவ ராதிகா ராதி நிகுஞ்ச மண்டலி தத்ர தத்ர ரேதிமே விராஜ தாம்'
பல ஜன்மங்களின் கர்ம பலனுக நான் எவ்வளவோ விதமான பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கலாம். எவ்வளவோ இடங்களில் எவ் வளவோ சூழ்நிலைகளிலும் வசிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். நரகத்தில் வசிக்க வேண்டியுமிருக்கும் சுவர்க்கத்தில் வசிக்க வேண்டியி ருக்கும். இவ்வளவு மாறுதல்களுக்கும், அவைகளால் ஏற்படும் கஷ்ட சுகங்களுக்கும் நான் அஞ்ச மாட்டேன். ஒன்று மட்டும் என்னுள்ளத் தை விட்டு விலகாமலிருக்க வேண்டும். அது என்னவென்ருல், ராதை கிருஷ்ணனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குஞ்ச கிருகங்கள் என் மனத்தை விட்டு விலகாமலிருக்க வேண்டும்.

Page 17
230
ஆத்மஜோதி வாடிச் சோர்கிறேன்!
(கி. பரமகுரு
எங்கிருந்தோ நீயழைத்த
எழில் மணிக் குரல் - இறைவே என்னிதயப் பாறைமோதி
எதிரொலித்தது! பின்னும் மங்குமிந்தப் பொய்மை வாழ்வில்
மதிமமயங்கியே - நின்றன் மாண்புமிக்க குரல் மறந்து
வாடிச் சோர்கிறேன் !
குழலிசைத்துத் தொலைவினின்று குழைந்தழைத்தன - என்றன் கொடுஞ்செவியில் தேனருவி
குளிரப் பாய்ந்தது! - பின்னும் உலகச் சந்தைக் கூச்சலிலே
உணர்வை யிழந்தேன் - இன் னுயிரிசையின் சீர் மறந்தேன்! வாடிச் சோர்கிறேன்!
தங்கள் நிலாத் திங்கள் வானில்
தவழ்வதைப் போலே இதயத் தனிவெளியி லே மிதந்து
தகதகத்தன - பின்னும் பொங்கியங்கு பஞ்ச நெறி
முகில் மறைத்ததால் - அந்தப் புன் மயக்கில் நினைமறந்து வாடிச் சோர்கிறேன்!
 
 

ஆத்மஜோதி 231 திருச்சிற்றம்பலக் கோவையாரில் சித்தாந்தசைவம்,
அ. சிவசுப் பிரமணிய பிள்னை
திருச்சிற்றப்பலக்கோவை என்னும் நூல் மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட செந்தமிழ்ப் பெரு நூல் கோவை என்பது 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. கட்டளைக் கலித்துறை செய்யுளால் ஆக்கப்பட்ட இந்நூல் 400 பாடல் களே உடையது. திருக்கோவையார் என்பதற்கு தில்லையில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். இதனை எட்டாம் திருமுறை வரிசையில் திருவாச கத்தோடு சேர்த்துக் கூறுவாரும் உளர்.
மெய்த்தவவாதவூரடிகள்விளம்ப திருவாசகத்தைஎழுதிய எம்பெருமான் அன்பரை நோக்கி தில்?லயம்பலவரைத் தலைவ ராய்க்கொண்டு திருச்சிற்றம்பலக் கோவை பாடுக என்று பணிக்க, அவரும் அன்பினுல் உருகிகண்ணிர்வார மயிர்சிலிர்க் க யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்பதற்கொப்ப தாம் அனுபவித்த இறையருள் இன்ப நலங்களை உலக மக் களும் பெற வேண்டுமென்ற பேரருளினல் பாடினர். இது அகப்பொருள் இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்டும், சித்தாந்தசைவத் திறத்தினை இலைமறைகாய் போல் கொண் டும் மிளிர்கின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நூலில் கூறும் கருத்தினைப் பார்ப்போம். மாணிக்கவாசகப் பெருமான் தன்னை வலிய ஆட்கொண்ட பெருமானை 'கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத்து அழுத்தி வினை கடிந்தான்' (திருவம் மானை) என்றும் 'கல்லை மென் கனியாக்கும் விச்சை கொண் டென்னை நின் கழற்கு அன்பனக்கினுய்' (திருச்சதகம் ஆனந்த கீதம்) என்றும் கன்னருரித்து என்னையாண்டு கொண்டான் (திருப்பூவல்லி) என்றும் திருவாசகத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறு என்னை அடிமை கொள்வதற்கு முன்னுல் வலி யனவற்றை வசமாக்கி பயின்ற பிறகுதான் என் கல் போன்ற மனதையும் வயமாக்க முடிந்தது என்கிருர் இதனை சிற்றம் பலக் கோவையாரில் 'தெய்வரை மெய்யெரிகாய் சிலையாண்டு
என்னையாண்டு கொண்ட செவ்வரை மேனியன்' என்று கூறு

Page 18
232 ஆத்மஜோதி
கின்றர். இன்னும், முத்தொழில் புரியும் அவ் இறைவன் சத் திக்கு கணவனுகவும், தந்தையாகவும் மகனுகவும் இருக்கிருன். என்ற சித்தாந்தக் கருத்தையும் தெரிவிக்கிறது. இதை
தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணறன்னுெருபா லவளத்தஞ மகனுந்தில்லை யானன் றுரித்தன்ன கவளத்த யானை கடிந்தார்காத்த கண்ணுர் தழையுந் துவளத் தகுவனவோ சுரும்பார் குழல் தூமொழியே
இச்செய்யுளில்,வெண்மையான நீறணியும் அண்ணல் உடலில் தன்னெரு பாகத்தில் சக்தியுடையவராக இருக்கிருர், உலகத் தைப் படைத்தற் பொருட்டு இறைவன் சத்தியும் சிவமும் ஆனபோது கணவன் என்றும், இனி அவள் அத்தனும் (தந் தையாம்) என்பதற்கு சிவதத்துவத்தினின்றும் சத்திதத்துவம் தோன்றுவதினுல் சத்திக்கு தந்தையென்றும், மகனும் என் பதற்கு சத்தி தத்துவத்தினின்றும் சதா சிவ தத்துவம் தோன் றுவதினுல் சக்திக்கு மகனென்றும் பொருள்படுகிறது. ஆகவே தில்லையான் கணவன், தந்தை, மகன் என்ற மூன்று முறை களில் அமைந்திருப்பது உலை ரத்தக்கது.
இதனை திருவாசகம் திருப்பொற் சுண்ணத்தில், ‘எம்பெருமானிம வான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன், தகப்பன் தமையன்
என்று பாடியருளியிருக்கிருர், இதில் கூடுதலாக தமை யன் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை ஆராய்ந்தால் சுத்த மாயையிலிருந்து இறைவனுடைய ஞானசக்தி அதிட்டிக்க சிவதத்துவமும் கிரியா சக்தியும் அதிட்டிக்க சத்திதத்துவமும் தோன்றுவதினுல் ச த் தி க் கு தமையன் என்பதும் தெளிவா கிறது. ஆகவே திருச்கோவையாரும் திருவாசகமும் ஒருங்கே சித்தாந்தக் கருத்தினைத் தெளிவாக உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம். இதை சிவஞான சித்தியாரில் 'சிவம் சத்தி தன்னையீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்று முவந்திருவரும் புணர்ந்திங்குலகுயிரெல்லா மீன்றும் பவன் பிரமசாரியாகும் பான்மொழி கன்னியா குந் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன் மைதான் தெரியுமென்றே தரும் வடிவான வெல்லாம் சக் தியுஞ் சிவமுமாகுஞ் சத்திதான் சத்தனுக்கோர் சத்தியாஞ் சத்தன் வேண்டிற்றெல்லாமாஞ் சத்திதானே'. -
என்ற சாத்திரக் கருத்தும், முற்கூறிய தோத்திரக் கருத் தும் இங்கு அறிந்து இன்புறத்தக்கது. இத்தகைய கருத்துக்கள் சிந்திப்பவர்க்கு சிறந்த செந்தேனை முந்திப்பொழிவனவன்றி «Ալէք முக்தியும் கொடுக்கும், என்பதில் ஐயமில்லை.
 

ஆத்மஜோதி 233 அஞ்செழுத்தின் மகிமை
(சி. நல்லதம்பி)
அகரத்தை முதலாகவுடையன தமிழ் எழுத்துக்கள். அது போன்று இறைவனே முதலாகவுடையது உலகம், இறைவனே முதலுமில்லான்; நடுவுமில்லான், ஈறுமில்லான், படைப்புக் கீ லத்து எல்லாப் பொருட் களையும் படைத்த இறைவன் தனக்கோர் பிறப்பில்லாப் பெற்றியன். ஊழிக் காலத்தில் தோற்றிய அனைத்தையும் அழிப்பவனகிய இறை
வன் தனக்கோர் இறப்பில்லாத் தன்மையன், பிறப்பிறப்பில்லாப் பெற்றியணுகிய இறைவனைச் சிவனென்னும் செம்பொருளாகக் கொள் வர்.
'நமசிவாய' அல்லது சிவாயநம என்ற சொல்லுத்தான் ஐந் தெழுத்துக்களை உடையதாகும். சிவாய' என்பது சிவனுக்கு என்று பொருள்படும். 'நம என்பது வணக்கம் என்று பொருள்படும். ஆத லின் நான் சிவனை வணங்குகின்றேன் என்பதுதான் அஞ்செழுத்தின் கருத்து.
'அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் அஞ்செழுத்தி லோரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல் அஞ்ச லஞ்ச லென்று நாதன் அம்பலத்தி லாடுமே'
இத் திருநாமத்தை மிகவும் மகிமைஉடையதென்றுசைவசமயகுரவர் கள் தாங்கள் பாடிய தேவார திருவாசகங்களில் வற்புறுத்தியுள்ளார் கள். தேவாரம் பாடிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் அஞ்செழுத்தின் சிறப்பை விளக்குதற்கென்றே பதிகம் பாடியுள்ளார்
கள்.
நான்கு வேதங்களிலும் கூறப்பட்ட மெய்ப் பொருளாகிய ஐந் தெழுத்தைக் காதலோடும் ஒதுவார்க்குப் பெரு நன்மை உண்டென்று சம்பந்தர் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர் தம்மைச் சமணர் கல்லோடு கட்டிக் கடலில் எறிந்த போதும் 'நமச்சிவாயதான் நற்றுணையாக இருந்து நம்மைக் காத்தது என்று பாடியுள்ளார்.
இறைவன் திருவடிகளை மறந்திட்ட நாட்களைச் செத்த நாட்க ளென்று எண்ணி வேருெரு பற்றுமின்றி இறைவனுடைய திருப்பாதங் களைத் தியானித்த சுந்தர மூர்த்தி சுவாமிகள் தாம் மற

Page 19
234. ஆத்மஜோதி
ந்தாலும் தம்முடைய நாக்கு அஞ்செழுத்தை இடையருது சொல்லிக் கொண்டிருக்கும் என்று மகிழ்ந்து பாடியுள்ளார்.
திமிங்கிலங்களும் சுருக்களும் பெருங் காற்றுகளும் மலைபோன்ற
திரைகளும் உடைய பெருங் கடலில் தத்தளிக்கும் தம்முடைய உயி ருக்கு ஒரு தோணி போல நமசிவாய' என்னும் மந்திரம் உதவிய படியால் நமச்சிவாய வாழ்க என்று அதனே வாழ்த்தி உள்ளார் மணி வாசகப் பெருந்தகை.
இங்ங்னம் சைவ சமய குரவர்கள் நால்வரும் பின் வந்த அடியா ர்கள் எண்ணில்லாதவர் எல்லாரும் 'நமச் சிவாய' என்னும் அரிய
பெரிய மந்திரத்தை நாம் ஓதி உய்ய வேண்டு மென்பது படச் சொல்லிக் சென்றிருக்கிருர்கள்.
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.
வேதம் ஆகமம் தேவார திருவாசகங்கள் மற்றும் சமஸ்கிருதத் திலும் தமிழிலுமுள்ள ஞான சாஸ்திரங்களின் சாரம் என்ன? எல் லாம் அறிபவருமான ஒரு முழு முதற் கடவுள் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் நடத்துகிறபடியால் உயிர்கள் பக்குவப் படு கின்றன.
இதனை மறந்து உயிர்கள் தம்முடைய கெட்டித் தனத்தை இரா வணன் போலவும், சூரன் போலவும் வியந்தால் துன்பங்கள் மலியும் என்பதுதான் சாரம். இச் சாரத்தை மிகவும் சுருங்கிய முறையில் பொதிந்துள்ளது "நமசிவாய' மந்திரம். எனவே ஞான சாத்திரங்க
ளேப் பலகால் ஒதி அவற்றின் தாற்பரியத்தை உணர்ந்தவர்களுக்கு
'நமசிவாய என்னும் திருமந்திரத்தின் பெருமை விளங்கும்.
உயிர்களுடைய கெட்டித்தனமெல்லாம் அவனுடைய அனுக்கிரக
த்தினல்தான் வந்தன. இதனை அறிந்து இவ்வுண்மையை மறவாமல்
வாழின் உயிர்கள் துன்பமடையா.
நம்மையும் நம்முடைய செயல்களையும் வியவாமல் ஆண்டவனை வாழ்த்துதல்தான் உய்யும் நெறி அல்லது உண்மையான ஞானம் ஆனபடியால் 'நமசிவாய' என்னும் திருநாமம் ஒர் ஒப்பற்ற மந்திர மாகும்.
ag
ஞான சாத்திரங்களை விரும்புபவர்கள் அவற்றின் சாரமெல்லாம் வைத்திருக்கும் 'நமசிவாய' என்னும் மந்திரத்தை மிகவும் விரும்புவர்.
 
 
 
 

ஆத்மஜோதி 235
ஓம் நமசி வாய
ஓம் நமசிவாய மெனவே தினமும்
உச்சரித்தால் நமக்கபாய மிலேயே (ஒம்)
காமிய ராலும் நிஷ் காமிய ராலும்
காணலா மெனில் தியானம் செய் நாமம் (ஒம்)
ஆதியு மாகி அணுதியு மாகி
நீதியுடன் நடிையாளும் தயாபர%ன (ஒம்)
சந்திர சூரியர் அந்தரர் யாவரும்
சந்ததமும் தொழும் மந்திரம் இதே (ஒம்)
g, 6 snġ LL1 (Anguiu t ii Tg-D 6 LIT uiii
ஆன சிவபூசை பண்ணுய் நேசமுடன் ஐந்தெழுத்தை
நீ நினையாய் - சிசி சினமே தவிராய்
திரு முறைகள் ஒதாய் மனமே உனக்
கென்ன வாய்,
鰲讀凝絮淤讀些讀澳讀奧
நமக்கு அதிர்ஷ்டம் தராதவைகளேயெல்லாம் திருப்தி யிடமிருந்து பெறுவோமாக.
--கோல்ட் ஸ்மித்
பெருந்தகைமையைக் காண்பதிலோ, பிறருக்கு அன்பு செய்வதிலோ இன்பம் காண்பதே கருணையின் முழு உரு 6 to .
ரஸ்கின்
எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெருமல் செய்யப்பட வேண்டும் என்பதே நல்லோர் எண்ண்ம்.
ரஸ்கின்

Page 20
உலகம் மெய்யா? பொய்யா?
(திருமலை வர்ணன்)
உலகம் மெய்யா? அல்லது பொய்யா? ஒரு பெருங் கேள் வி. சத்யமான ஆத்மதாபமுடைய பெரியோர்கள் இதை ஒரு பெரிய கேள்வி என்று கருதமாட்டார்கள். உலகம் பொய்யா னலென்ன? உண்மையானுல்தான் என்ன? அதை அறிவதால் நமக்கு உண்டாகும் ஊதியம் ஒன்றுமில்லை. உலகில் சுகதுக்கங் களிருக்கின்றன வென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிருர்
கள். ஆதலால் சுகதுக்கங்களை யொழித்து நித்தியானந்தத்தை
அடைய வேண்டுமானுல் உலக ஆசைகளைத் துறப்பது நன்று, நிலையற்ற இன்பதுன்பங்களை மறந்து நித்யமான இன்பத்தை அடைய வேண்டுமென்ற லட்சியம் மனதிற்குப் பிடிபடுகிற பொழுது உலகம் மெய்யானலென்ன? பொய்யானலென்ன? புத்திமான் ஆத்ம விசாரம் செய்ய வேண்டும். ஆத்மா இன்ன தென்றும் அநாத்மா இன்னதென்றும் அறிந்துகொள்ள வேண் டும். (நான்] என்பது இந்த சரீரத்தைக் குறிக்கவில்லையென் றும் ஆத்மாவையே குறிக்கப்படுகின்றதென்றும் உணர்ந்து அநாத்மாவாகிய தேகத்தில் அபிமானம் கொள்ளாமல் ஆத் மாவின் தன்மையை விசாரிக்க வேண்டும். ஆத்மா அழிவில்லா தது என்பதை ஏற் nக்கொள்ளாத மதஸ்தர் எவருமில்லை. கடவுள் உண்டா? என்ருல் சிலர் இல்லையென்று நாஸ்திகவா தம் செய்வார்கள், உலகம் உண்டா? என்ருல் சிலர், இல்லை யென்று தர்க்கம் செய்வர். பிரம்மம் உண்டோ என்ருல் சிலர் அதைக் கண்டது யார் என்று மறுப்பர். ஆனல் எந்த மனித னும் தானுண்டா? என்பதைப் பற்றிச் சந்தேகிப்பதே கிடை யாது. ஆதலின் எது நிச்சயமானது என்று ஒவ்வாருவனும் நம்புகிருனே, அதைப்பற்றிமுதலில் ஆராயத்தொட்ங்கட்டும் தனக்குள்ளிருக்கும் ஆத்மாவின் சொரூபத்தைப்பற்றி விசாரம் பண்ணத் தொடங்குகிறவன் வேகாந்தியாகித் தன்னுடைய ஆத்மாவே அதாவது தானே எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமென்றுநன்கு அறிந்து கொள்கிருன் அதனல் ஆத்மாக் களிடத்தில் அவனுக்கு காருண்யம்-அன்பு உண்டாகிறது. அன்பென்னும் ஆற்றின் வழியே செல்பவன் ஆனந்தசுகமென் னும் சமுத்திரத்தையடைகிருன். s
உலகம் பொய்யா? மெய்யா? என்பதைப்பற்றி அத்வை திகள் உலகத்தைப் பொய்யென்றும் சொல்வதில்லை, மெய் என்றும் கூறுகிறதில்லை. அத்வைத மதஸ்தாபகரான ஆதிசங் கரர் உலகம் பொய்யும் மெய்யும் கலந்ததென்கிருர், அங்ங்ணம் பொய்யும் மெய்யும் கலந்த ஒரு வஸ்து உண்டா? எனில் உண்
لة،
 
 

ஆத் 237
டு. நமது தேகத்திலிருக்கும் நகமும் மயிரும் தேகத்தைச் சேர்ந்தவைகளாயுமிருக்கின்றன. சேராதவைகளாயுமிருக்கின் றன. நகத்தையும் மயிரையும் தேகத்திலிருந்து சிறிது சீவினுல் வலி உண்டாகிறது. ஆனல் நகத்தைச் சதையினின்றும் முற் றிலும் பிரிக்கமுயற்சித்தால் உபத்திரவமுண்டாகிறது. நகமும் சதையும் போல’ என்று உலகத்தில் ஒர் பழமொழி வழங்கு வதையும் நாம் கேட்கின்ருேம். ஆதலின் நகம் தேகத்தில் சம் * பந்தப்பட்டதாயும் படாததாயும் இருக்கின்றது. உண்மை யில் தேகமும் நகமும் மயிரும் வெவ்வேருயினும் நகமும் மயி ரும் தேகத்தினின்றே முளைக்கின்றன. அதனல் அவை சரீரத் திலிருந்து உண்டானவை என்று சொல்லத்தடையில்லை இது பற்றியே அத்வைதிகள் உலகம் பொய்யும் மெய்யும் கலந்த தென்றே கூறுகின்றனர்.
తూ్యూస్థాష్ట్రాకెళ్ళికి
வீ ட் டி லே யே க டவு ள ஒனு பூ தி
அழிவற்ற ஆத்மனே!
வணக்கங்கள்,
அனுபூதி குகைவாசிகளினதும் மலேயேறும் நாடோடி களினதும் தனி உரிமை. வெளி நிலைமைகள் ஓரொரு காலம் உதவியளிக்கலாம்; ஆனல், அகநோக்கே முக்கியமான விஷ யம்-மேலும் புறச் சூழ்நிலைகளும் இந்த நோக்கினலேயே இழுக்கப்படுகின்றன. நீயே உன் சொந்த மனக்கவலைகளும் கலகங்களுமாகிய உலகைப் படைக்கிருய், ஒருவரும் அதை உன் மேற்றிணிக்கவில்லை.
கர்த்திருத்துவக் கருத்கின்றி உன் குடும்பக் கடமைகளை நிறைவேற்று. இறைவனின் இச்சை உன் மூலம் தொழிற்படு கிறது என்றும், அவருக்கே, அவருக்குமாத்திரமே உன் குடும்ப உறுப்பினர் வழியே தொண்டு செய்கிருய் என்றும் உணர். உன் குடும்பத்திற் பகையான அங்கத்தவனும் அவரே; அறி வற்ற மகனும் அவரே தவருய் நடந்து கொண்ட உடன் பிறந்தார் மகனும் அவரே. அவர் உனக்குப் பயிற்சியளிப் பதற்காகப் பற்பல உடுப்புக்களை உடுக்கிருர், அவரிடத்தில் ஆதரவாயிரு, முகமலர்ச்சி காட்டு, புன்முறுவல் கொள்! அனை வரிலும் அவரின் இருப்பை அறி! ஆனந்த ஆடலாடு,
பிரேமையுடன் ஒம்,
உன் சொந்த ஆத்மா
சிவானந்தா

Page 21
238 ஆத்மஜோதி
b T 66t g5 IT ன் சாத்தானந்து ஹரித்துவார்)
" அரிது அரிது மானிடராதல் அரிது’ என்ற ஒளவைப் பாட்டியின் சொல்லுக்கிணங்க பல கோடி ஜன்மங்கள் கழிந்த பிறகு மிஸ்ர கர் மத்தி குல்ை இந்த மானிட ஜன்மம் கிடைத்திருக்கிறது. சர்வதுக்க நிவிருத்தியும் பிரமானந்தப் பிராப்தியுமாகிய மோசஷத்தை அடைவது தான் இந்தப் பிறவியின் உயர்ந்த லகதியமாகும். துக்கத்தை ஒருவரும் ஒருபொழுது' விரும்புவதில்லை. எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தத்தையே விருமி-1 கிருர்கள். ஆகையால் எல்லோரும் மோசஷத்தையே விரும்புகிருர்கள் என்பது சித்தமாகின்றது.
கடவுள் நம் எல்லோரையும் தம்பால் இழுத்துக் கொண்டே இருக் கிருர் எவ்வாறு ஒரு காந்தக்கல் ஒரு இரும்பை இழுத்துக்கொண்டிருக்கிற தோ அந்த விதமாக, ஆறல் இரும்பு துருப்பிடித்து இருந்தால் காந்தக் கல் இழுத்தாலும் இரும்பு ஆகர்ஷிக்கப்படமாட்டாது. ஏனெனில் துரு காந்தக் கல்லுக்கும் இரும்புக்கும் மத்தியில் ஒரு தடையாக இருக்கின்றது அதே விதமாக கண்ணபிரான் எல்லோருடைய சித்தத்தையும் காந்தக்கல் போன்று இழுத்துக் கொண்டிருக்கின்றர். ஆனல் ஜீவர்களுடைய மனதா கிய இரும்பில் துரு பிடித்து இருக்கின்றது என்ன அந்த துரு எ ன் ரு ல் அவை (1) மலம் (2) விசேஷபம் (3) ஆவரணம்.
மலதோஷம் என்ருல் பூர்வ தன்மங்களில் செய்யப்பட்ட பாபகர்மங் கள் அந்த மலதோஷத்தை நீக்கினுல் தான் நம்முடைய சித்தமானது நிர்மலமாகும். இந்த மலதோஷத்தை நீக்குவதற்கு சாஸ்திரங்களில் 'நிஷ்கா மகர்மம்' தான் உபாயம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
கர்மம் இரண்டு வகை: (1) சகாம கர்மம் (2) நிஷ்காம கர்மம். பலனை இச்சித்து செய்யும் கர்மத்திற்கு சகாம கர்மம் என்று பெயர். சகாம கர்மம் செய்வதிஞல் அந்தக் கர்மத்தின் பலன் மாத்திரம் கிடைக் குமோ ஒழிய இந்த சித்தி உண்டாகாது. மேலும் பகவான் கீதையில்' கிரு பணு பல ஹே தவ:1 பலனை எதிர்பார்ப்பவர்கள் கிருபனர்கள் என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கின்ருர், "கர்மண்யேவதிகாரஸ்தே மா LC36.63 a 52, IT Fait.' I Arjunal your duty is to work and not to the fruit thereof ஹே அர்ஜ"னனே! உன்னுடைய கடமை கர்மம் செய்வது ஆணுல் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிருர், இது வே நிஷ்காம கர்மம் என்று சொல்லப்படுகிறது. ܗܝ
நிஷ்காம கர்மத்தில் இரண்டு வி ஷ ய ங் க ள் முக்கியமாக கவனிக்க வேண்டும்:-(1) நான் இந்த கர்மத்தை செய்கின்றேன் என்ற அகங்காரத் தை விட்டு விட வேண்டும். (2) இந்த கர்மத்திற்கு எனக்கு இந்த பலன் வேண்டும் என்பதையும் விட்டுவிட வேண்டும்.
اعة،
༔
 
 

ஆத்மஜோதி 239
"நிர்மமோ நிரஹங்கார ; ஸ் ஷான் திமதி கச்சதி' மமதை அஹங் காரம் அற்றவன் தான் சாந்தியை அடைகின்றன்.
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானேர்க்கு உயர்ந்த உலகம் புகும் (குறள்)
என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது
பிறகு ' யக்கரோஷி யதஷ்ணுவி யஜ்ஜிஹோஷி ததாஸி யத் யத் தபஸ்பஸி கெளந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம்!!'
நீ எதை எதை செய்கிருயோ, எதை எதைச் சாப்பிடுகிருயோ எதை யாகம் செய்கிருயோ, எதைத் தானம் செய்கிருயோ, எதை தவம் செய் கிருயோ அதை குந்தி புத்திரனே! எனக்கு அர்ப்பணம் செய்து விடு என் று பகவான் பகவத் கீதையிலே பகருகின்ருர்,
சிலர் நல்லதைச் செய்தால் தான் நான் செய்தேன் என்றும், கெட்ட வைகளைச் செய்தால் கடவுள் செய்தார் என்றும் சொல்லுகிருர்கள். இது தவருகும்.
ஒரு சமயம் ஒரு சாது ஒரு இடத்தை செப்பனிட்டு சரிப்படுத்தி பல Hவிபச் செடிகளே எல்லாம் வைத்து ஒரு ஆஸ்ரமத்தை நிறுவி இருந்தார். அதில் அவருக்கு மிகுந்த ஆசை உண்டாயிற்று. தன் பஜனை, தியானங் களேயும் விட்டு அவர் அதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பக வான் ஒரு பசு வேஷமாக ஆஸ்ரமத்தில் வந்து மலர்களை எல்லாம் சஈப் பிட ஆரம்பித்தார். அதைப்பார்த்த சாதுவானவர் பசு, மலர்ச்செடிகளை அழித்து விட்டது என்று நினைத்து ஒரு தடியினல் லேசாக அதன் பேரில் ஸ்பரிசம் செய்தார்.
அதற்குள் அந்தப் பசு உயிர் துறந்தது. இதனுல் எனக்கு “கோஹத்தி தோஷம்' வந்து விட்டது என்று எண்ணி அந்தச் சாதுவானவர் மிகவும்வருத்தமடைந்தார்.ஆனல் சிறிதுநேரத்தில் கைக்குத்தேவதைஇந் திரன்' ஆகையால் இந்தப் ப ய ம் என்னேச் சாராது. இது இந்திரனைச் சாரும் என்று எண்ணி தன் குடிசையில் போய் உட்கார்ந்து விட்டார். அதற்குள் அந்தப் பயமானது இந்திரலோகத்தில் இருக்கிற இந்திரனைக் சார அவர் உடனே பயமடைந்து விட்டார். எல்லோரும் கையால் பாபம் செய்தால் பிறகு அந்தப் பயங்கள் எல்லாம் என்னையே சார்ந்து விடும் என்று நினைந்து பகவான் விஷ்ணுவினிடத்தில் சென் று பிரார்த்தனை செய்து கொண்டார். எல்லா தேவர்களும் நின்றுகூடி அந்தச் சாதுவின் ஆஸ்ரமத்திற்குச் சென்ருர்கள். சென்றவுடனே ஆஸ்ரமத்தில் புகும் போதே ஆஹா ! இந்த ஆஸ்ரமம் எவ்வளவு அழகாக இருக்கிறது எவ் வளவு பூச்செடிகள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லிக் கொண்டே வர உடனே அதைக் கேட்ட சாதுவானவர் தன் குடிசையி லிருந்து வெளியே வந்து இதை நான் தான் செய்தேன் முழுவதும் சரி

Page 22
240 - ஆத்மஜோதி 3.
யில்லாத பூமியாக இருந்தது. அதை எல்லாம் சரிப்படுத்தி நான்தான் இந்தப் பூஞ்செடிகளை எல்லாம் வைத்து அழகு படுத்தியிருக்கிறேன். என் முர். அப்போது அந்த தேவர்கள் எல்லாம் இதை நீங்கள் தான் செய்தீர் 鲑 களா என்று மூன்று தடவை கேட்க அ வ ரு ம் "ஆம், நான் தான் செய் தேன் என்று மூன்று தடவையும் சொன்னர்'
ܟܠ
ܢ\*
பிறகு எல்லாத் தேவர்களும்'இந்தப் பூமியைச் சரிபடுத்தியது தாங் கள். இந்தச் செடிகளை வைத்து அழகுபடுத்தியது தாங்கள் ஆனல் பசுமாட்டை அடிப்பதற்கு இந்திரலோகத்திலிருந்து இந்திரன வருவான். ஆகையால் இந்தப் பாவமும் உங்களையே சாரும் என்று சொ ல்ல அந்தப் பாவமும் அவனைப் போய் சார்ந்தது .
ஆதலால் நல்லதைச் செய்யும் போது நான் செய் தன் என்றும் கெட்டதைச் செய்யும் போது கடவுள் செய்தார் என்று சொல்லாமல் வர்ணுஸ்ரமத்திற்கு அனுகூலமான காரியங்களைக் செய்துகொண்டே அதைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்தவிதமாக பகவானிடததில் கர்மங்களை சமர்ப்பணம் செய்வதால் சித்தம் நிர்மலமடைந்து பகவத் தர்சனத்திற்கு ஹே துவாகின்றது. -
ஆத்மஜோதி சந்தா விபரம்
*→***+++举+++→+++→ Քt, սկ հir சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரூ. 3-00
தனிப் பிரதி சதம் 30, கெளரவ ஆசிரியர் - க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா * ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி சிலோ ன்) புத்தாண்டு வாழ்த்துக்கள்i 一ーの獲G→ー ஆத்மஜோதி சந்தாதாரர்கட்கும் மற்றும் எல்லோருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்தும், வணக்கமும் உரித்தாகுக! ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி.
ASAeSeAAMSASe SLAMAe ASe ASAS MSeee LA SAeLSLSeLASAe AeB SAeB SAe SASAe SAe ASALL LL AeLAe AeBL S LkLeLeLcAeAe ASMMASeLAeAASeLLAeMLAeMMAeMM AeMAAeMM AMeM AAAAL வாடிக்கையாளர்கள் அனே வருக்கும் இப்புனித புத்தாண்டின் வாழ்ததுக்கள் உரித்தாகுக! ஆத்மஜோதி அச்சகம், 15 சொய் சாத்தலை - நாவலப்பிட்டி,
t
 
 
 

ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்
வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
1962 опії 3 от дъ йо (1p ilш :» 6ігын கணக்குவிபரம். *
சென்ற மாதக் கணக்கு 276 88 54 C. இயக்கச்சி 2784 G கட்டுவன் 38.420 கந்தர்மடம் 27.733 பருத்தித்துறை 96.48 திமிலைத்தீவு 9 600 மத்துகம it 455.8 முள்ளியவளை 24.066 சச்சிதானந்த தபோவனம் 20320 திருக்கோணமலை I 7 5 82 காங்கேசன்துறை 29520 மதுரை 7 OOO மஸ்கெலியா t 8.36 2. பதுளை I 9000
2799.2 189
ote
-
சித்திரை மாசத்துடன் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின்
வெள்ளிவிழாவுக்காக எழுதப்பட்ட நாமலிகித ஜெபக்கணக்கு முடிவடைகிறது. அடுத்த மா சத்தில் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் எழுதக்கூடிய நாமலிகிதங்களை எழுதி h -5-62க் கிடையில் அனுப்புக, தொடர்ந்து எழுத விரும்புவோர் எழுதி வரலாம். ஆனல் அவற்றை ஆக்ம ஜோதி நிலையத்திற்கு அறிவிக்க வேண்டியதில்லை.
))
s

Page 23
Registered at the G.P.O. as
ஆத்ம ஜோதி நிே
திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்திை பூனி கதிரை மணி மாலை அறிவுரைக் கதைகள்
ராதையின் காதல்
இளங்கோவின் கனவு ஆத்ம நாதம்
சந்தா நேt
ܥ�ܲܝܛܐ
அன்புடையீர் இன்று 14-ஆம் ஆண்டுச்சோ கையில் கிடைக்கின்றது. சந்த உடன் அனுப்பிவைத்துச் ே ருேம்.
ஆத்மஜோதி நிலேய
இந்தியாவிலுள்ள அன் R வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீள் என்ற விலாசத்திற்கு அனுப் தெரியப்படுத்த வேண்டுகின்ே
வாய்வு R Փ–6%8016/Ամool, Фрурћић те மலக்கட்டு, மலபந்தம், அஜி பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கரு களை நீக்கி ஜீரண சக்திக்கு மிகச்சிறந்
தபால் செலவு உட்பட
() R () (பத்தி P다. இன்டஸ்ரீஸ் - அரி () இலங்கையில் () ஆத்மஜோதி Éa) U ()
பூர் கணபதி oe: 557 Gogorri"
* * 66, பெல் பிட்
| Girir. Gör G15. 39 || 7. isis. Published by Mr. N. M. at Athimajothi Press, Nav
 
 

a Newspaper M. L., 59/300
ய வெளியீடுகள்! - ܼܝ�ܲܚܛܥܐ
(நா. முத்தையா) 1-50 ) [] 9 75 (பரமஹம்ச தாசன்) -50 (சுவாமி சிவானந்தர்) -65 (சுவாமி சிவானந்தர்) 1-00 (செ. நடராசன்) 2 25 (சுத்தானந்த பாரதியார்) அச்சில்
பர்களுக்கு.
*→→→一
. . தி நான்காவது சுடர் உங்கள்
5ா இன்றுவரை அனுப்பாதோர் Fாதியை ஆதரிக்க வேண்டுகின்
ம் - நாவலப்பிட்டி (சிலோன்) எபர்கள் வழக்கம்போல் ஸ், அரிசிப்பாளையம், சேலம்-2 ப்பிவைத்து, அதை எமக்கும் *(07ւի.
குர ை10 Խ 6յոմioվ, 976)ւնւ հմոմioլ, ர்ணம் கைகால் அசதி பிடிப்பு, பித்த மயக்கம், பித்தகுலே, ப்பு, முதலிய வாய்வு ரோகங் ம் தேகாரோக்கியத்திற்கும் த சூரணம். R 6 . 4 : 25
YLEsi)žs) 扈 சிப் பாளையம் சேலம் 2 (S.I.) கிடைக்குமிடம்:
கிடைக்குமிடம்:- பனி (ஜவுளி வியாபாரம்)
த. பெ. 37.
墨
thiah, Athimajothi Nilayam, Nipitiya Pada politiya. (Ceylon) 14-4-62.