கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.08.17

Page 1
W3CS ご බ්‍රිෆිලි R o ം ۔۔۔۔۔۔۔۔۔۔۔
W
o  ܼܓ -- NANA
s
 


Page 2
%N%N/NWN%
ஜோதி
- R ( ) (ஒர் ஆத்மீக மாதவெளியிடு) 25,
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
லு ம் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர் -
میی
14 சுபகிருது வடு ஆவணி மீ" 1 வட (178-62) J, Li | ()
பொருளடக்கம்
கண்ணு சரண்! 361 தியானம் 362 3 கீதா யோகம் 363 4 ைேதயும், இராமாயணமும் 366 5 நம்பிக்கையுடன் சாதன செய்யுங்கள் 367 சகுன - நிர்குண பக்தி 37 l. 7 கீதாபோகத்திலிருந்து திரட்டப்பட்ட மணி வாக்குகள் 375 உள்ளத்தில் கெய்த கனிகள் 378 கரும யோகத்தின் முடிவு 380 10 மண் அமைதி 38 محصبر Σ 1 ஈவாமி பிரேமானந்தா 337 ழ் நூல் பாயிரவியல் 393 397 :ன்றெண்டர் பொன்னடிக்கே கவர் 3.
ஆத்மஜோதி சந்தா விபரம்
*+++++→Y→→*****
நீதா शु5 75-00 за от , , , , , , 3-00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - 4. இராமச்சர்,டுன்
நா. முத்தையா
*** ( )(3) is
------ וישי בן
 
 
 
 
 
 

ஆத்ம ஜோதி
கண்ணு சரண்
(சுத்தானந்த பாரதியார்) 一や一○○e→ー
உன்னடியில் அன்பு வைத்தோம் உலககெல்லாம் நீ யெ மக்குக் வன்ன மலர்க் காலேயிலே
வசந்தமனம் பரப்புகின்றய பொன் பரவும் அருணனிலே
புன்னகை செய் அருளடிதா மின்னுெளிரும் மேகத்திலே
மின்னுவதுன் வண்ண மடா வஞ்சனை செய் பூதகியைக்
வட்டமுலை உண்டு கொன்றய பிஞ்சிளஞ் சேய் தளிரடியால்
பேய்ச்சகடை உதைத்தவனே கன்றரக்கன் உடலை வீசிக்
கலகலெனக் கணியுதிர்த்தாய் குன்றெடுத்துக் கோகிலத்தில்
கொடும்புயலைத் தடுத்துநின்றய
நஞ்சரவு மேலிருந்தே
கண்ணபரமாத்: 35 6öñor 5rovo :: :: DJ LD n , ĝi for "*.
கண்ணபரமாத்மt கண்ணபரமாதத் கண்ணபரமாத் மா கண்ணபரமாத்மா கண்ணபரமாத்மா கண்ணபரமாத் ம; கண்ணபரமாத்ம கண்ணபரமாத் 16: கண்ணபரமாத்மா கண்ணபரமாத்மா கண்ணபரமாத் ம கண்ணபரமாத் ம கண்ணபரமாத்ம கண்ணபரமாத்மா
நர்த்தனஞ் செய் அர்த்தமென்னே-கண்ணபரமாத் in
அச்சமில்லை அச்சமில்லே
அருளெம்மைக் காக்குமப்பா
காற்றினிலுன் பூங்குழலே
காதில் வந்து கொஞ்சுதப்பா ஆற்றினிலுன் வேதவொலி ஆத்மசுகம் பேசுதப்பா ஆவியிலே கலந்துவிட்டாய்
அறிவினுக்கு அறிவானுய் நாவினிலே சொல்லச் சொல்ல
நல்லமுதம் போலினிப்பாய்
கண்ணபரமாத் , கண்ணபரமாத் மீ” கண்ணபரமாத்ம்,
கண்ணபரமாத் :ா கண்ணபரமாத் : கண்ணபரமாத்மா கண்ணபரமாத் : கண்ணபரமாத் : $ୋfff শিক্ষা 1 ? :p স্ট্র 附 翌 tit frig

Page 3
362 தி யா ன ம்
நமோ விஸ்வஸ்வ ரூபாய் விஸ்வஸ்தித் யந்த ஹேதவே!
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோநம:
உலக வடிவோன், உலகைக் காப்பவன், அழிப்பவன், உலகநா
தன், உலகேயானவன். அத்தகைய கோவிந்தனுக்கு வணக்கம்.
வஸாதேவஸாதம் தேவம் கம்ஸ் சானூரமர்தனம் தேவகி பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
வசுதேவன் பிள்ளை, தாய் தேவகியின் பரமானந்தன், கம்ஸ் சா ணுாராதிகளான அரக்கரைக் கொன்றவன். கிருஷ்ணன்; அவனே ஜகத்குரு. அவனை வணங்குகிறேன். ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே ஞானமுத்ராய க்ருஷ்ணுய கீதாம் ருத துஹேநம:
தன்னைச் சரணடைந்த அன்பருக்குக் கற்பகம் போல் இனியன தருவோன், கையில் பசுவோட்டக் கம்பு கொண்டவன். ஞான முத் திரை வகித்தவன் - கீதையமுதைக் கறந்து தந்தவன், கிருஷ்ணன்அவனுக்கு வணக்கம். மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதேகிரிம் யத்க்ருபா தமஹம் வந்தே பரமானந்த மாதவம் * எவன் அருள் ஊமையைப் பேச வைக்குமோ, நொண்டியை மலே தாண்டச் செய்யுமோ, அந்தப் பரமானந்த ஸ்வரூபியான மாதவனை வணங்குகிறேன்.
யம்ப்ரஹ்மா வருனேந்த்ர ருத்ர மருத ஸ்துன் வந்தி திவ்யை ஸ்தவைர் வேதை ஸாங்க பதக்ரமோப நிஷதைர் காயந்தி யம் ஸாமகா: த்யானுவஸ்தித தக்கதேன மனஸா பஸ்யந்தி யம் யோகினுே யஸ்யாந்தம் நவிது: ஸாரா ஸ"ரகணு தேவாய தஸ்மை நம:
பிரம்மா, வருணன், இந்திரன், உருத்திரன், வாயு முதலிய தேவர் களால் எவனைத் துதிப்பரோ, சாமவேதப் புலவர் அங்கம், பதம், கிரமம் உபநிஷத்துடன் கூடிய திருமறையால் எவன் புகழ் பாடுவரோ, தியானத்தில் ஊன்றி, அதுவேயான மனதால் யோகிகள் எவனைக் காண்பரோ, எவன் முடிவைத் தேவரும் அசுர கணமும் அறிய முடி* யாதோ அந்தப் பரமாத்ம தேவனுக்கு வணக்கம்.
நமோஸ்துதே வ்யாஸ் விஸால புத்தே புல்லார, விந்தாய தபத்ர நேத்ர
யேற த்வயா பாரத தைல பூர்ண :
ப்ரஜ் வாலிதோ ஞானமய ப்ரதீப:
மஹா பாரதமாகிய தைலத்தால் நிறைந்து, ஞானம் பொலியும்
இந்தக் கீதா தீபத்தை ஏற்றிய வியாச பகவானே, நன்கு மலர்ந்த
தாமரையிதழ் போன்ற கண்ணனே, விசால புத்திமானுகிய உமக்கு
GI GŐGÖT jg5 Lfð.
 
 
 
 

ஆத்மஜோதி 363 கீதா (3u I [Tg5ırD
(ஆசிரியர்)
பார்த்தாய ப்ரதி போதிதாம் பகவதாம் நாராயனேனஸ்வயம் வ்யாஸேன க்ரதிதாம் புராணமுனினும் மத்யே மஹாபாரதம் அத்வைதாம்ருத வர்ஷிணிம் பகவதீம் அஷ்டா தலாத்யாயினிம் அம்ப த்வாம் அனுஸர்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணிம்
பொருள்;- பார்த்தனுக்கு சாக்ஷாத் பகவான் நாரா
யணனே உபதேசித்தது; வியாசரே மஹா பாரதத்தின் மத்தியில் இணைத்தது; அத்வைதமாகிய அமுதம் பொழி வது. பதினெட்டு அத்தியாயங்களுடன் கூடியது. பவத்
தை வெறுப்பது. இத்தகைய பெருமை கொண்ட பகவதி,
தாயே கீதாம்பா! உன்னை எப்போதும் தியானிக்கின்றேன்.
உலக குருவும், பூரண அவதாரமாகப் போற்றப் படு
பவருமாகிய கிருஷ்ண பரமாத்மாவின் ஜென்ம நட்சத்திர" மாகிய ஆவணி - ரோகிணி இம் மாசம் ஏழாந் தேதி (23-8-62) வியாழக்கிழமை பொருந்தியுள்ளது. இப் புண் னிய தினத்தை முன்னிட்டு, இம்மாத ஜோதியை அப் பெருமானின் திருப் பாதங்கட்குகந்த மலராக அர்ப்பணம் செய்ய விரும்பினுேம். இந்த அரிய சந்தர்ப்பத்தில், கவி யோகி பூரீ சுத்தானந்த பாரதியார் அவர்களால் வரை யப் பெற்று, சென்னை, அடையாறு சுத்தானந்த நூலகத் தினரால் பிரசுரிக்கப்பட்ட கீதா யோகம் வெளிவந்துள் ளது. எனவே இக் கட்டுரையானது அந்த அரிய நூலின் விமர்சனமாக அமைவது சாலவும் பொருத்த முடைத்து. குறித்த நூல் மிகவும் விசேடித்த முறையில் வரையப் பட்டுள்ளது. ஆரம்பத்தில், பாரத சக்தி மகா காவியம்*கெளரி காண்டம் - பகவத் கீதைப் படலத்திலுள்ள எளிய இனிய பாடல்கள் கீதா மிருதம்’ என்ற தலைப்பின் கீழ்
சேர்க்கப் பட்டுள்ளன. வட மொழிப் பயிற்சியில்லாத தமிழர் எளிதாகப் படிப்பதற்குக் கீதையின் மூல சுலோ கங்கள் தமிழ் எழுத்தில் தரப்பட்டுள்ளன. உச்சரிப்பைச்
" சரியாகக் கற்பதற்குத் தேவையான புள்ளியும் கோடும் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுலோகத்தின் பொருளும் முதலில் தெளிவான தமிழில் விளக்கம் பெறுகின்றது. இது

Page 4
364 ஆத்மஜோதி
ஒர் புதிய, அரிய முறை. வாசகர்களைக் கருத்தூன்றிப் படிக்கச் செய்வதோடு, அவர்கள் அதிகப் பிரயாசமின்றி வடமொழியைக் கற்பதற்கும் இது பெருந் தூண்டுதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதினெட்டு அத்தியாயங் களும் அறுபத்தொன்பது தலைப்புகளில் பிரிக்கப் பட்டிருப் பதால், எவரும் எளிதாகப் பொருளை உணர்ந்து கொள்ள லாம். இனி, நூலுட் புகுந்து ஆதின் அற்புதமான கருத் துக்களைச் சிறிது ஆராய்ந்து ரசிப்போம்.
சின்னஞ் சிறுவயசில் மோகன முரளியால் கோபிகைக ளேயும், பசுக்களையும், கன்றுகளையும் பரவசப்படுத்தி விளையா டிய வாசுதேவன் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் பாஞ்ச ஜன்யம் முழங்குகிருன். அந்த வீர முழக்கத்தைப் பின் வரும் மின்சார வேகத்தில் கவியோகியார் நமக்கு விளக்கு β)(ηρff:-
'யான் ஸர்வ சரீரி, அந்தர்யாமி, யானே அனைத்தும்; அனைத்திலும் யானே ஆத்மா! என்னைச் சரண் செய்! உன் 2னக் காக்கிறேன்! அடியார் அழியார்! வாழ்வை எனக்கே 'வேள்வியாக்கு பணியும் பயனும் எனக்கே நிவேதி! வாழ் வெல்லாம் யோகம் உலகெல்லாம் எனது லீலை; நானெ னும் அகந்தையறு. ஆசை, அச்சம், சினம், பொருமை, தளர்வு, தன்னலப் பற்றுகளை நீக்கு மனக் கட்டுமானங்களை உதறித்தள்ளு! கடவுளுணர்வில் வாழ்வாங்கு வாழ். காலத் திற்கேற்றபடி ஆண்டவன் உன்னுள் ஏவும் பணிகளைத் துணிந்து செய்! அறிவினுல் உணர். அன்பிஞல் நெருங்கு; யோகத்தால் ஒன்றுபடு. அனேவருள்ளத்தும் யானுெருவன் உள்ளேன், எங்குமுள்ளேன்! நம்பு, நினை, முயல் தீரனுக நிமிர்ந்து நில், வெல்!'
ஆன்ம கோடிகள் உய்யும் பொருட்டு, பகவான் போ ரினை உபலசஷ்யமாகவும், அர்ச்சுனனை நிமித்த காரணமாக வுங் கொண்டு, வேதக் கடலைக் கடைந் தெடுத்து அருளிய கீதா அமிர்தத்தின் சாரம் மேற்கண்ட வசனத்தில் அட்ங்கி
ட்டது. ஆர்வமுள்ள சாதகர்களைக் கடைத்தேறச் செய்ய இந்த ஒரு வசனமே போதும் எனலாம்.
DAN
கீதை உலக முழுவதற்கும் பொதுவான சத்திய வேதம். அது அறிவுப் பசிக்கு அரு விருந்து; பந்த வினைகளைக் ) களைந்தெறியும் வீர சக்தி; மனப் பகைகளை மாய்த்துக் காமக் குரோதாதிகளைக் கடிந்து, ஆசை ஆணவக் கூட்டங்
 

ஆத்மஜோதி 365
களை அழித்து, நம்மைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் சஞ் உலகாட்சி, மனையாட்சி முதல், மனிதன் தன்னைத் தானளும் ஆத்ம சுயாட்சி வரையுள்ள ஒவ்வொரு செய லுக்கும் கீதை யோக மார்க்கத்தைப் புகட்டுகின்றது. கீதைக்கு இதுவரையில் பலர் விரிவுரைகள் வரைந்துள் ளார்கள். காந்தியடிகள் ஒர் சந்தர்ப்பத்தில் கூறியபடி அது இன்னும் 'பழைமை’ என்னும் பட்டத்தைப் பெற வில்லை. என்றும் புதிதாகவே மிளிர்கின்றது. அதில் வரும் "பெருஞ் சொற்களின் பொருள்கள் ஒவ்வோர் யுகத்திலும் மாற்றமும் விரிவும் எய்திக் கொள்கின்றன.
பொதுவாக உலக முழுவதும், முக்கியமாகத் தமிழ் இனத்தாரும் கீதையை உண்மையாக அனுஷ்டிப்பதற்குக்
காலம் வந்துள்ளது. உலகின் நாலா பக்கங்களிலும், சிறப் பாக ஜப்பான், அமெரிக்கா, ஜேர்மனி, ரூஷியா முதலாய நாடுகளில் கீதையை மூலத்தில் படிப்பதற்காக சமஸ்கிருத மொழிப் பயிற்சி சர்வ கலாசாலைகளில் அளிக்கப்படுகின் றது. தமிழ் நாட்டின் சில மூலைகளில் மாத்திரம் அதற்கு எதிர்ப்பிரசாரம் இருப்பதை வெட்கத்துடனும் துக்கத்து டனும் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்தச் சூழ் நிலையில் “கீதா தோன்றியிருப்பதானது காலதேவி வேண்டி நிற்கும் அருந் தொண்டைத் தமிழ் அறிஞர்களின் உள்ளத் தில் பதியச் செய்வதற்காகவே யெனப் பூரணமாக நம்பு கின்ருேம். கீதா யோகத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில மணிவாக்குகள் பிறிதோர் பக்கத்தில் இடம் பெறுகின் றன.
கவியோகியார் விடுத்துள்ள விண்ணப்பத்தை எடுத்துக் கூறி இக் கட்டுரையை முடிக்கின்ருேம்.
“கீதா தர்மம் பாரத ஜாதியை வீர தீரராக நின்று நடக்கச் செய்யும். அதைப் பின்பற்றுவோம். நமது புண் ணிய நாடே அவதார பூமி. கண்ணனை நாம் எதிர்பார்க் கிருேம்; நமது அன்பையும் ஆர்வத்தையும் அவன் எதிர் பார்த்து நிற்கிறன்; இதுவே தருணம் கண்ணன் வரு
வான்; வந்திருக்கிறன்! அச்ச மொழிக! தலை நிமிர்க! எட்டுத் திசையும் கீதை முழங்குக: ஒம் ஓம் ஓம்’

Page 5
3. ஆத் மஜோதி
கீதையும் இராமாயணமும்
(10காத்மா காந்தி)
ஹிந்து மதத்தில் பல மதிப்பிற்குரிய நூல்கள் இருப் பினும், தினமும் பாராயணம் செய்யவும், ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யவும், வடமொழியில் கீதையும், ஹிந்தி யில் துளசி தாசருடைய ராமசரித மானஸ்கும் (இராமா யணம்) இரண்டு தலைசிறந்த நூல்களென்றும், பொதுவாக யாவருக்கும் போதுமானவையென்றும் கூறலாம்.
நுண்ணிய தத்துவ ஆராய்ச்சிக்குக் கீதையும், காவிய ரசத்துடன் கலந்த கவிதையின் மூலமாக, பக்தி, ஞானம், வைராக்கியம் ஆகிய பேறுகளின் மகிமையைச் சாதாரண மக்களும் உணரும்படி செய்வதில் துளசி ராமாயணமும் ஹிந்து மதத்தின் இரண்டு ஒப்பற்ற நூல்களாகும்.
அனுஸக்தி யோகம் (பற்றற்றுப் பணியாற்றல்) என்பது கீதையின் போதனையின் மத்திய பிந்துவாகும், அதாவது பயனை விரும்பாது, இடைவிடாமல் கடமையை ஆற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்ற அதனுடைய போதனையை என்றும் மறத்தலாகாது. இதில் காரியங்களெல்லாம் விலக் கப்படவில்லை. காரியத்தைச் செய்ய பகுத்தறிவு தேவை யில்லையென்றும் கூறவில்லை. இதில் தீய செயல்களை விலக்கி நற்செயல்களையே பயன் கருதாது புரியும்படி போதிக்கப் பட்டிருக்கிறது. சத்தியம், அஹிம்சை ஆகியவற்றைப் பூர ணமாக அனுசரித்தால் அல்லாது இந்த முறைப்படி நடப் பது சாத்தியமில்லை.
கீதையை எவ்வளவு படித்தாலும், கேட் டாலும், சிந்தித்தாலும் அது பழமைப் படுவதில்லை. இத னைச் சிந்தித்துக் கொண்டேயிருந்து, இதையொட்டி நடக் கவும் தொடங்கி விட்டால், இதைப் படிக்குந் தோறும் புதிய புதிய போதனைகள் தோன்றிக் கொண்டே யிருக் கும். இது மட்டுமின்றி கீதையில் வரும் பெருஞ் சொற் களின் பொருள்கள் ஒவ்வொரு யுகத்திலும் மாற்றமும் விரிவும் எய்திக் கொண்டே இருக்கும். p
 

ஆத்மஜோதி 367
நம்பிக்கையுடன் சாதனை செய்யுங்கள் (சுவாமி சிவானந்தரின் குருபூர்ணிமைச் செய்தி)
ஆன்மீக முன்னேற்றம் நம்பிக்கையிலேயே தங்கி யுள்ளது. கடவுளிடமும் சமய நூல்களிலும் குருவிடமும் நம்பிக்கை வேண்டும் முன்னேற்றத்துக்கு நம்பிக்கையே அடிப்படை.உலகியல்முன்னேற்றமும் விஞ்ஞான வளர்ச்சியும் நம்பிக்கையை - தன்னம்பிக்கையை - அடிப்படையாகக் (O)35ITGö07 - 6006).
மனிதர்கள் வானவெளியிற் பிரயாணம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இவ்வானவெளி வீரர்கள் வான வீதியில் வலம் வருவதற்கு வழிகோலிய விஞ்ஞானிகள் அது சாத்தியமாகுமா என்று வியந்து கொண்டும் அதற்கான சக்தி தங்களிடம் உண்டா என்று சந்தேசித்துக் கொண்டும் இருப்பார்களாயின் வானவெளிப் பிரயாணம் இன்னும் ஒரு கனவாகே இருந்திருக்கும்.
தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இறைவனை நம்புங்கள். குருவிடம் நம்பிக்கை வையுங்கள். கணித சாத்திரத்திலும் வாணவெளிப் பெளதீகத்திலும் தெரிந்த விஞ்ஞான விதிகளி லும் நம்பிக்கை வைத்து, உங்கள் நோக்கத்தைச் சாதிப்ப தற்காக உழைப்பது எளிதாயிருக்கலாம். ஆனல் காணுத விதிகளும் காணுதவிளைவுகளும், கொண்ட ஆன்மீகத் துறை யிலே நம்பிக்கை ஏற்படுவது அரிது. ஆனல் ஆரம்ப நம்பிக் கை அத்தியாவசியானது.ஒராண்டு காலம் சாதனை செய்து வந்தாலே சில அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படும். காணுத சக்திகள் சில உள்ளன என்பதற்கும் விஞ்ஞா ன த் தா ல் விளக்க முடியாதவையுமான விதிகள் சில உள்ளன என்பதற் ' கும், நேரடியான சான்றுகளைக் காண்பீர்கள். சாதனை எவ்வளவுக்குத் தீவிரமாக உள்ளதோ அவ்வளவுக்கு இவ்வ னுபவமும் பரந்ததாயும் ஆழமானதாயும் இருக்கும். ஒவ் வொரு அனுபவமும் குருவிடத்தும் இறைவனிடத்தும் சமய நூல்களிலும் உங்களுக்குள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்தும். நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் இன்னும் தீவிரமாகச் சாதனை செய்வீர்கள். இங்ஙனம் சங்கிலித் தொடர்போல ஏற்பட்டுவரும் விளைவுகளுக்கிடையே, எல்

Page 6
368 ஆத்ம ஜோதி
லாச் சாதகர்களுக்கும் ஏற்படும் சோதனைகளுக்கு இரையா
காமல் விழிப்புடன் இருப்பீர்களாயின், ஒருநாள் அனுபூதி நிலையை அடைவீர்கள்.
சாதகர்கள் தங்களுக்கு நம்பிக்கை ஏற்படாமையைப் பற்றி அடிக்கடி என்னிடம் வந்து குறைப்பட்டுக் கொள்கின் றனர். அவர்களுக்கு நான் கூறுவது இதுதான்; "கவலைப் படாதீர்கள். சாதனை செய்யுங்கள். நம்பிக்கை உண்டாக்கு வதற்காகவே சாதனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ’
நம்பிக்கை வைப்பது என்பது சிரமமான காரியந்தான்.
தோமஸ் தம் குருவான ஏசுநாதரைச் சந்தேகித்தார். சீடர்
களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக அம்மாபெருந்தலைவர் அற்புதங்களை நிகழ்த்திய பின்னும், அச்சீடருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஏசுநாதர் இன்னும் அற்புதங்களைக் கட்ட வேண்டுமென அச்சீடர் விரும்பினர். இதுதான் சந்தேகத் தின் இயல்பு, இது மனத்தின் சூழ்ச்சி. முன்னேற வேண்டு மென்ருல் இச்சந்தேகப் பேயை அடியோடு ஒழித்து விடுங்
56T.
'யான் மனமும் அல்லேன், உடலும் அல்லேன்; அழி வற்ற "ஆன்மா வே யான்' என்று பாடுவது எளிது. ஆனல் ஏகாதசியன்று இரவில் ஒருவேளை உணவைத் தானும் விட் டுவிடும்படி கேட்டால், விடமாட்டீர்கள். அப்படியிருக்க, ஆன்மீக முன்னேற்றம் ஏற்படவில்லை என்று குறை கூறுகி ஹீர்களே!
ஒருவரது சாதனையின் முன்னேற்றம் ஏற்படாமைக்குக் குருவைக் குறைகூறுவது தற்காலத்தில் வழக்கமாகிவிட்டது.
குதிரையை நீரருகிலே கொண்டுபோக முடியுமேயன்றி,
நீரைக் குடிக்கச் செய்ய முடியாது. குரு வழிகாட்ட மட்டுமே
முடியும்; சீடன் தான் சாதனை செய்ய வேண்டும். தம்மிடம் நம்பிக்கை வைத்துச் சாதனை செய்யுமாறு சீடனைக் கேட்கக் குருவால் முடியும். அதற்குமேல் அவர் எதுவும் செய்வதற்.
கில்லை.
தனிப்பட்ட குருவைப் பற்றிய பிரச்சினை இருக்கட்டும். உலகில் பல மகான்கள் தோன்றித் தெய்வீக வாழ் க் கை
வாழ்ந்து, எமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். அவர்களது
போதனைகளை நாமனைவரும் அறிவோம். திருடக்கூடாது;
 
 

N
M
ஆத்ம ஜோதி 369
உண்மையே பேசவேண்டும் என்பது பள்ளிப் பிள்ளைக்கும் தெரியும். பொய்ச்சாட்சி சோடிக்கக்கூடாது என்பதை வழக் கறிஞர் அறிவார். வர்ணக் கலவைகளைக்கொடுத்துஏழைகளைக் கொள்ளையடிக்கக் கூடாது என்பதை வைத்தியர் உணர் வார். மனைவிக்குத் துரோகம் செய்யக்கூடாது என்பது கண இனுக்குத் தெரியும். இருந்தாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை உங்களில் எவ்வளவு பேர் அனுபவத்தில் கடைப்பிடிக்கிறீர்கள்? நல்லன என்று அறிந்தவற்றை அப்பி யசித்து, தீயன் என்று அறிந்தவற்றைத் தவிர்க்க ஒருவர் தொடங்கிவிட்டால், அங்ங்ணம் செய்துவரும்போதே இறை வன் அவருக்கு மென்மேலும் வழிகாட்டி வருவார். தூல உடலில் ஒரு குரு அவர்களுக்குத் தேவைப்பட்டால் இறை வனே ஒருகுருவையும் அனுப்பிவைப்பார்.
பொய் வேடங்களை விட்டொழியுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்க்கையில் புதியதோர் திருப் பத்தை ஏற்படுத்தி, நீங்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்பினுல் உங்களையாரும் தடுக்க முடியாது; உலகம் முழு வதும் சேர்ந்தாலும் தடுக்க முடியாது. ஆனல் நீங்கள் உண் மையான அக்கறை கொள்ளாமலும், சொல்வதை உளப் பூர்வமாகச் சொல்லாமலும், ஏற்றுக்கொள்வதைக் கடைப் பிடியாமலும் இருந்தால், கடவுள் கூட உங்களுக்கு உதவ முடியாது. விளைவுகள் யாவும் அடிப்படையில் உங்களிடமே தங்கியுள்ளது.
குரு ஒரு கைவிளக்கைப் போன்றவர். உங்கள் பாதையில்
அவர் ஒளிகாட்டுகிருர். ஆனல் நீங்கள்தான்பாதையில் நடக்க
வேண்டும். குரு உங்களுக்காக அடியெடுத்து வைக்கமுடியாது. இவ்வுண்மை மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பதற் காகத்தான் இதைத் திரும்பத்திரும்பக் கூறுகிறேன். விஷய மறியும் ஆவல் மட்டுமுள்ள சிலர் என்னைத் தனியே பேட்டி காணவேண்டுமென்று கேட்டு வருகின்றனர். 'உங்கள் உள் ளத்தையே பேட்டிகாணுங்கள்’ என்று அவர்களுக்கெல்லாம் கூறுகிறேன்.தனியேயிருந்து உள்நோக்குங்கள். உங்கள் குறை பாடுகளைக் கண்டறிந்து அகற்றுங்கள். நற்பண்புகளை அனு சரிக்கப் புதுவழிவகைகளைத் தேடியறிந்து மே ற் கொள் ளுங்கள்.
அனுபவத்துக்குக் கொண்டுவரப் பட்டாலன்றி வெறும் கோட்பாடுகளாற் பயனில்லை. சோதித்துப்பார்க்காமல்கோட்

Page 7
370 ஆத்ம ஜோதி
பாடுகளைக் குறை கூரு தீர்கள். 'சேவைபுரி. அன்புசெலுத்து தர்மம் செய். தூய்மையடை. தியானம்பயில். அனுபூதி விசிறு' இதுதான் ஆன்மீக சூத்திரம். நோயாளிகளுக்கும் துன்பப்படுவோருக்கும் கல்வியறிவற்ருேருக்கும் சேவைபுரிந்து வருகிறீர்களா? உங்கள் அயலார் குழந்தையை உங்கள் குழந் தையைப்போல நேசிக்கிறீர்களா? உங்கள் வருமானம் எவ்வ ளவாயினும் சரியே, அதில் பத்தில் ஒருபங்கைத் தருமத்தில் செலவளிக்கிறீர்களா? ஜபத்தின் மூலமும் சத்சங்கத்தின் மூல மும் சமயநூல்களை ஒதுவதன் மூலமும் ஏகதாசி விரதத்தின் மூலமும் உங்கள் இதயத்திலிருந்து காமம், குரோதம், மோகம் உலோபம், மதம், மாத்சரியம் என்பவற்றை அகற்ற முயற் சிக்கிறீர்களா? இவற்றைச் செய்யவில்லையெனில் நீங்கள் ஒரு நிமிடங்கூடத்தியானத்திலிருக்க முடியாது. தியானம் பயிலா மல், ஆயிரம் பிறவிகளெடுத்தாலும் இறைவனை அடைய (ԼՔԼԳ ԱմFT35].
குருமார்களைக் குறைகூருதீர்கள். ஏசுநாதர், புத்தர், சங்கரர், இராமானுஜர், சீக்கிய சமண குருமார்கள் அனை வரும் உங்களுக்காக வாழ்ந்து உயிர்துறந்தவர்கள். உங்களு டைய தகுதிக்கு அதிகமாகவே இக் குருமார்கள் உங்களுக்கு அளித்துச் சென்றுள்ளனர். அவர்களைப் பணியுங்கள். அவர் கள் முன் விழுந்து வணங்குங்கள். அவர்கள் படங்களுக்கு மாலே அணிவியுங்கள். அவர்கள் அருளிய நூல்களை ஒதுங்கள். அவர்களுடைய உபதேசங்களைப் பின்பற்றுங்கள்.
பரிசுத்தமான குருபூர்ணிமைத்தினம் நினைக்கவும் நன்றி செலுத்தவும் ஏற்பட்டது. குருவிடம் உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி குருவின் உபதேசப்படி புதிய வாழ்க்கை தொடங்கும் தினம் இது. புதுவாழ்வு வாழ இன்று உறுதி பூண்டு அங்ங்ணமே வாழ்ந்து வாருங்கள்.
இறைவன் உங்கள் அனைவரையும் காப்பாராக. பிரம்மவித்யா குருக்களின் ஆசிகள் உங்கள் அனைவருக்கும் கிட்டுவதாக.

هي :
ஆத்மஜோதி 371.
சகுண - நிர்குண பக்தி இரண்டும் ஒன்றே - சொந்த அனுபவம்
(ஆசாரிய வினுேபா)
இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட் சுமணனும் போல் தான் உத்தவனும் அர்ஜ"னனும், கிருஷ்
ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிருன் உத்தவனல் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க
முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவி
* அனுப்பினர்.
டையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொ
(pது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் &- תע"ח
மில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ண னுக்குத் தோழன். ஆனல் அவன் தொலைவில் அஸ்தின புரத்தில் இருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய
காரியத்தைச் செய்பவனே. ஆனல் கிருஷ்ணன் துவாரகை யிலிருக்க, அஸ்தினபுரத்திலிருந்து வந்தான். இருவரின்
சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்
தவனிடம் "ஊதோ, நான் போகிறேன்’ என்றன். அதற்கு உத்தவன், ‘என்னை உடன் அழைத்துப் போகமாட்
டீரா? நாம் இருவரும் சேர்ந்தே போவோமே என்றன். ஆனல், கிருஷ்ணன் எனக்கு அது பிடித்தமில்லை. சூரி யன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்து விட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப் போகின் றேன்’ என்ருன். இவ்வாறு பகவான் இறுதிக் கால ஏற் பாட்டைச் செய்து உத்தவனுக்கு ஞானத்தை அளித்து
பிறகு யாத்திரையில் உத்தவனுக்கு மைத்திரேய ரிஷி யின் மூலம் பகவான் தம் ஊருக்கு (வைகுண்டத்திற்கு)ப்
போய்விட்டாரென்று தெரிய வருகிறது. ஆனல் அதனல்
அவன் மனம் சிறிதும் வருந்தவில்லை. விசேஷமான்து ஏதோ நடந்ததாகவே அவனுக்குத் தோன்றவில்லை. குரு இறந்து விட்டாரென்று சீடன் அழுதான். இருவரும் கற்ற வித்தை பாழாயிற்று' என்று சொல்லுவதுண்டே, அந்நிலை யில் உத்தவன் இல்லை. பிரிவு நேர்ந்ததாகவே அவன் நினைக்

Page 8
372 ஆத்மஜோதி
கவில்லை. அவன் தன் ஆயுள் முழுவதும் சகுண உபாசனை செய்தவன். ஆண்டவன் அருகிலேயே இருந்து வந்தவன். ஆனல் இப்பொழுது அவனுக்கு நிர்குணத்தில் இன்பம் தோன்றத் தொடங்கி விட்டது. இவ்வாறு அவன் நிர்க் குணத்தின் வழியைக் கடக்க வேண்டியதாயிற்று. சகுனம் முதலில், ஆனல் அதை அடுத்தாற்போல் நிர்குணத்தின் படி ஏறியே ஆக வேண்டும். இல்லையேல் பூரணத்துவம் ஏற்படாது.
அர்ஜுனன் நிலையோ இதற்கு நேர்மாறனது. கிருஷ் ணன் அவனை என்ன செய்யச் சொல்லி யிருந்தான்? தனக் குப் பிறகு எல்லாப் பெண்டிரையும் பாதுகாக்கும் பொறுப் பை அவன் அர்ஜூனனிடம் ஒப்புவித்திருந்தான். அர்ஜ" னன் அஸ்தினபுரத்தினின்று வந்து துவாரகையிலிருந்து பூரீ கிருஷ்ணனது ஸ்திரிகளை அழைத்துக் கொண்டு போனுன் வழியில் ஹிபொருக்கருகே பஞ்சாபிலிருந்து வந்த திருடர் கள் அவனை வழிப்பறி செய்து விட்டார்கள். அந்தக் கா லத்தில் அவன் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லப்பட் டவன், தலைசிறந்த வீரனென்று புகழ் பெற்றவன், தோல்வி என்பதையே அறியாதிருந்தது காரணமாய் விஜயன் (வெற்றி வீரன்) என்று பிரசித்தி பெற்றிருந்தவன், சிவனையே நேரு க்கு நேராய் நின்று எதிர்த்துப் பணியச் செய்தவன். அதே அர்ஜுனன் ஆஜ்மீருக்கருகில் ஒட்டமாய் ஒடித் தப்பினன், கிருஷ்ணன் போய் விட்டதனுல் அவன் மனம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது. உயிரே போய் விட்டது போ லும் உயிரும் ஆதரவுமற்ற வெற்றுடலைப் போலும் அவன் ஆகி விட்டான். அதாவது இடையருது கர்மம் புரிந்து கொண்டு கிருஷ்ணனிடமிருந்து விலகியே இருந்த நிர்குண உபாசகனுன அர்ஜுனனுக்கு இறுதியில் இந்தப் பிரிவு தாள முடியாததாகி விட்டது. அவனுடைய நிர்குணம் இறுதி யில் பிரிவின் மூலம் பீறிட்டுக் கொண்டு வெளி வந்தது. அவனது காமம் அனைத்துமே முடிந்து விட்டது போல் ஆயிற்று. அவனுடைய நிர்குணத்திற்கு இறுதியில் சகுணத் தின் அனுபவம் ஏற்பட்டது. சகுணம் , நிர்குணத்திற்குப் போகவும் நிர்குணம் சகுணத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்பது கருத்து இவ்வாறு இரண்டுமே ஒன்று மற்றதி ஞல் நிறைவுறுகின்றன.
ஆகையால் சகுன உபாசகன், நிர்குண உபாசகன் ஆகிய இருவரிடையில் உள்ள வேற்றுமை என்ன வெனச் சொல்ல முயலும் பொழுது அதைச் சொல்லுவது சிரம
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 373
மாகி விடுகிறது. சகுணமும் நிர்குணமும் இறுதியில் ஒன்
முகி விடுகின்றன. பக்தியின் அருவி முதலில் சகுனத்தி லிருந்து தோன்றிய போதிலும் இறுதியில் நிர்குணம் வரை ஒடுகிறது. பழைய காலத்தில் நடந்த விஷயம் ஒன்று. நான் வைக்கம் சத்தியாக்ரஹம் பார்க்கப் போயிருந்தேன். மலேயாளத்தின் எல்லையில் சங்கராச்சாரியர் பிறந்த ஊர் இருக்கிறது. பூகோளம் பற்றிய இவ் விஷயம் என் நினை
லிருந்தது. நான் போய்க் கொண்டிருந்த மார்க்கத்தின் பக்கத்திலேயே எங்கோ சங்கராச்சாரியரது "காலடி கிரா மம் இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் உடன் வந்த மலையாளியைக் கேட்டேன். அவர், இங்கிருந்து 10, 12 மைல் தொலைவு இருக்கும். நீங்கள் அங்கே போக வேண் டுமா?’ என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல் லிவிட்டேன். நான் சத்தியாக்ரஹம் பார்க்கப் போய்க் கொண்டிருந்ததால்எனக்குவேறெங்கும்போவது உசிதமென்று தோன்றவில்லை. அவ்வாறு செய்தது சரியே என்று எனக்கு இப்பொழுதும் தோன்றுகிறது.ஆனல் இரவில் நான் தூங் கத் தொடங்கிய பொழுது அக் காலடி கிராமமும் சங்க ராச்சாரியரது உருவும் மீண்டும் மீண்டும் என்னெதிரில் வந்து சுழன்று கொண்டிருந்ததால் தூக்கம் கலைந்து போ யிற்று. அந்த அனுபவம் எனக்கு இன்றும் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. அந்த ஞானச் சிறப்பும், அவ ரது அத் தெய்வீக அத்வைத நிஷ்ட்ையும், எதிரில் வியா பித்துள்ள சம்சாரம் அனைத்தும் பொய் என்று முடிவு கட் டும் அசாதாரணமான ஒளிபொருந்திய வைராக்கியமும், அவருடைய கம்பீரமான மொழியும் அவரிடமிருந்து நான் பெற்றுள்ள அளவிலடங்காத உதவியும் எனக்கு அடிக் கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. இரவில் இப் பாவ னைகளெல்லாம் எதிரில் வந்து நின்றன. அப்பொழுது இந்த நிர்குணத்தில் சகுணம் எப்படி நிரம்பி வழிந்து கொண்டி ருக்கிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நேருக்கு நேராய்ச் சந்தித்திருந்தாலும் அவ்வளவு நேசம் இருந்தி
ராது. நிர்குணத்திலும் சகுணம் பூரணமாய் நிரம்பியே
இருக்கிறது. நான் பெரும்பாலும் நண்பர்களுக்கு க்ஷேமங் களை விசாரித்துக் கடிதம் எழுதுவதில்லை. ஆனல் எந்த நண்பருக்கும் கடிதம் எழுதாவிட்டாலும் உள்ளுக்குள் அவர் நினைவு எப்பொழுதும் இருந்து கொண்டே தா னிருக்கும். கடிதம் எழுதாதிருப்பினும் அவர் நினைவு உள்ளே பூரண மாய் நிரம்பியிருக்கும். நிர்குணத்தில் இவ்வாறு சகுணம் மறைந்து நிற்கிறது. சகுணம், நிர்குணம் ஆகிய இரண்டும் ஒன்றே. விக்கிரகத்தை எதிரில் வைத்துக் கொண்டு பூஜை

Page 9
374 ஆத்மஜோதி
செய்தல், வெளிப்படையாய்ச் சேவை செய்தல், உள்ளுக் குள் இடையருது உலகின் நன்மையைக் கோரியவாறே புறத்தே தெரியும்படி எதையும் செய்யாதிருத்தல் ஆகிய இவ்விரண்டிற்குமுள்ள மதிப்பும் சிறப்பும் ஒன்றே.
(கீதைப் பேருரைகளிலிருந்து)
நயினை நாகேஸ்வரி
ஆசிரியர்:- குல சபாநாதன் அவர்கள்
விலை . ரூபா 1, 00.
நவசக்தி பீடங்களுள் ஒன்ருகக் கருதப்படும் நயினை நாகேஸ்வரி அம்மையின் திருத்தல வரலாற்றையும் தோத் திரப் பாடல்களையும் சேர்த்து திரு. குல சபாநாதன் அவர் கள் தமக்கே உரித்தான தனி நடையில் எழுதி வெளியிட் டுள்ளார்கள். சைவ நன்மக்கள் ஒவ்வொருவரும் போற் றிப் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவு மொன்ருகும். ஆசிரியரின் தொண்டு நீடு வாழப் பிரார்த்திக்கிருேம்.
క్రైగ్గిస్గ
鬣
சமத்துவம்
வெற்றி தோல்வி விருப்பு வெறுப்பு
வெம்மை தண்மை விகற்பங்க ளின்றிப் பற்று நீங்கிப் பலன்விழை வின்றிப் பழுதறப் பணி செய்வது யோகம் முற்றும் உள்ளச் சமத்துவம் யோகம் மூளையைக் கலக்கும் புல னேந்தைச் செற்று சுற்று மனத்தைச் செயித்தே
சேம நல்லறஞ் செய்பவர் மேலோர்,
(கீதா மிருதம்)
 
 
 

ஆத்மஜோதி 375
கீதாயோகத்திலிருந்து
திரட்டப்பட்ட மணிவாக்குகள்
அழிவற்ற ஆன்மா
உடல், பொறி புலன் உணர்வுகள், மன எழுச்சிகள், எல்லாம் ஜடவியல்பின் காரியமான அஸ்த்துக்கள், நிலை யாப் பொருள்கள், இன்மைகள். சுத்தாத்மாவே மெய்ப்
ஆகவே' என்றும் உள்ளபடி யுள்ளது. உண்மை யறிந்த தத்துவஞானிகள் ஸத்து அளுத்து ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்கிருர்கள்.
சுத்தான்ம ஞானத்தில் மலர்ந்த வாழ்வும், அருட் பணியுமே கீதை போற்றும் வேள்வியாகும். வாழ்வே புரு ஷோத்தம வேள்வி: உலகமே இறைவன் ஆணையால் அவன் மகிழ இயற்கை நடத்தும் பெரிய வினை வேள்வி தான். கடவுளை நோக்கிக் கனலெழுந் தோங்கும் தவ சக் தியே வேள்வித் தீ. அதில் தனிச் செருக்கை வார்ப்பதே ஆகுதி. அடைக்கலமே வேள்வி முறை.
மூன்று படிகள்
வாழ்க்கை வட்டம் பரம்பொருளிடமிருந்து தொடங்கு கிறது. பரம்பொருளுக்கே மீளுகிறது. அது பிரம்ம சக்கி ரம். தன்னலம் விட்டுப் பிறர்க்கென வாழ்வது அது முன் னேறும் முதற்படி. பலப் பற்றின்றி இறைவனுக்கே வாழ் வது அடுத்தபடி, தன்னறிவுடன் தற்பரனைக் கலந்து உள் ளும் புறமும் அவன் மயமாயிருப்பதே அதன் முடிவான ஞானநிலை. தானே தானுயிருக்கும் இந்த நிலையிலேதான் நைஷ்கர்ம சித்தி எய்தும்.
பொருள், ஸத்து, உண்மை. அன்மையான அஸத்திற்கு இருப்பில்லை; உண்மையான ஸத்திற்கு இன்மையில்லை; இ

Page 10
376 ஆத்மஜோதி
அவதாரம்
அவதார மென்பது மானிடம் பூண்ட தெய்வ சிற் சக்தியே. சாதாரண பிறப்பு அக்ஞானத்தில் உண்டாகி றது. தெய்வப் பிறப்பு கடவுளறிவில் விளங்குகிறது. அது தூல உற்பத்தியல்ல. ஆன்ம விளக்கமே. மானிடத்தில் பரமாத்ம சக்தியிறங்கி விளங்குவதே. பரமாத்ம உணர்வி லிருந்தே அந்த அவதாரம் தனது ஆத்ம யோக சக்தியால் உலகில் நடமாடும்.
கேவலம் ஒரு நீதி நெறியைக் காட்டவோ சமூகப்பணி யாற்றவோ அவதாரம் வருவதில்லை. இவற்றைத் தெய்வ விபூதி பெற்ற பெரியோர்களே செய்து முடிக்கலாம். மனித உணர்வில் பெரிய மாறுதலகள் ஏற்பட்டு, உட்புறச் சாந் தத்திற்காகவும் அத்யாத்மப் பசி தணியவும் ஆண்டவனை உலகம் ஆர்வமுடன் கூவும் போதே அவதாரம் இங்கு விளங்குகிறது.
அவதாரம் அற்புதச் செயல்களின் வாண வேடிக்கை யல்ல. அது மனிதர் பின்பற்றத் தக்க ஒரு உதாரணம். அன்பருக்குத் தெய்வ வழி காட்டுவது. அவதாரம் புறச் செயலுக்கே தோன்றியதன்று. மனித அறிவில் தெய்வ மாறுதல் உண்டு பண்ணி, மனிதனைத் தெய்வமாக உயர்த் துவதற்கே அவதாரம் விளங்குகிறது.
ஞான மகிமை
ஞானம் புத்தகப் படிப்பால் வராது. ஒரு குருவின் உபதேசம் வேண்டும். குருவுபதேசத்திற்குப் பாத்திரமாக வேண்டும். குரு யார்? எப்படிப் பாத்திரமாவது?
தத்துவ தரிசிகளான பிரம்ம ஞானிகள் ஞானேபதே சம் செய்வர். அதைப் பணிவுடன் தொண்டு செய்து செவ் விய கேள்விகளால் நீ அறிவாயாக.
உண்மையான அறிவு
உண்மையான அத்யாத்ம அறிவு உள்ளிருந்து மலர் வது உள்ளே யிலகும் பரமாத்மாவுடன் உள்ளுறவு பேணிப்

ஆத்மஜோதி 377
GL160of யொளிர்வது. எதை யறிந்தால் அனைத்தும் அறிந் ததாமோ அதுவே அறிவு; அத்தகைய அறிஞன் உள்ளத் தானை உலகிலுங் காண்பான்.
வேருக எதுவுமில்லை
‘நான்’ என்னும் அகந்தை யுணர்வே மடவிருள்; எல் லாம் அவன் என்னும் அறிவே அதை யொழிக்கும் ஞான தீபம். ஞானிக்கு அவனன்றி வேருக எதுவுமில்லை. அனைத் தையும் ஒரு யோகநாதனின் நித்திய சக்தி லீலையாகவே அவன் அறிகிருன்
ஐந்தொழில் முதல்வன்
தெய்வ சக்தி படைத்தல், அளித்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறது. எல் லாம் சமமாகப் பாவிப்பதே அறிவு. இன்ப வடிவையே வேண்டித் துன்ப வடிவை, அச்ச வடிவை வெறுத்துத் தீக்கோழி போலத் தலையை மண்ணிற் புதைத்துக் கொள் ளுதல் பாங்கன்று.
நான்கு வேத சாரம்
பிரக் ஞானம் ப்ரஹ்மம் (அறிவே கடவுள்) அஹ" ப்ரஹ்மாஸ்மி (நான் பிரம்ம மாயிருக்கிறேன்). தத்வமஸி (அது நீயாயிருக்கிருய்), அயம் ஆத்மா (இவன் ஆன்மா) என்பதே வரிசையாக நான்கு வேதங்களின் சாரழுமாகும்.
தெய்வ ஜீவனம்
எல்லா வுடலும் இறைவ னலயமே; எல்லாம் இறை நிறைவு; ஒவ்வொருவரும் அது மயமாகலாம்; அது மய வாழ் ఆమె ஆன்மீகம் அல்லது தெய்வ ஜீவனம்.
பூரண சரணுகதி என் பணியை இயற்கையே உன் மூலம் செய்கிறது. அதில் தீமைகள் வருமென அஞ்சுகிருய். எல்லாத் தீமைக ளினின்றும் நான் உன்னைக் காப்பேன். செய்வதை என் வேள்வியாகச் செய். என்னை முற்றும் நம்பிச் சரண் Hகு. அறிவாலறிந்து, பணியால் அணிந்து, அன்பாற் கலந்து
என்னுடன் ஒன்றுபட்டு இன்புறுவாய்.

Page 11
378 ஆத்மஜோதி
உள்ளத்தில் கொய்த கனிகள்
(திருமதி M. மதார் நாச்சியா)
ன்ெறும் அழியாத மாருத ஆக்மாவை உணர்வதற்கே மனிதன் உலகத்திற்கு வந்துள்ளான்
நித்திய இன்பத்தில் நிலைத்திட நிமிடந்தோறும் தியா னத்தினுல் 'தன்னறிவு பெறவேண்டும்.
臀
தடையின்றி வளர்ந்திடும் தெய்வீக இன்பத்தை இத்த
ரணியிலே கண்டிட வேண்டும். இதுவே ஆத்மீக வாழ்க்கை.
நினைவொன்றும் நினையாமல் நின்றுவிட்டால் நிர்மலத் தைத்தரிசிக்கலாம். மன அசைவற்ற இடமே இன்பம் நிறைந்த இனிய நிலையம் அமைதியிலே ஆனந்தம் காண்பதே அறிவு.
எல்லா நிலைகளிலும் அசைவற்று யாவற்றையும் விளங்
கிக் கொண்டு சாந்தியிலே தெளிவு காண்பதே அறிவு.
மனது இச்சைகளின் பிடியிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று மகா வெளியில் மெளனமுறுவதே தெய்வீக வாழ்வு.
அதிகமான ஆசைகளும் அதனுல் உண்டாகும் மனக் குழப்பங்களுமே துக்கத்திற்குக் காரணம்.
சாந்தியற்றமனம் சஞ்சலம் நிறைந்த இடம், தெளிவற்ற மனம் குழப்பம் நிறைந்த இடம், மயங்கிய மனம் மட்டரக
எண்ணங்கள் மண்டிக் கிடக்கும் இடம்.
மனது எதைப்பற்றி நினைக்கிறதோ அதுவாகவே ஆகி விடுவதால் அது எதுவும் எண்ணுது எல்லா நிலைகளிலும்
சும்மா இருப்பதே சுகம்.
ஆசைகளின் வீச்சினிலே செயல் படுவது யாவும் செத்துப்
போன பழைய எண்ணங்களின் மறு ஒலிபரப்பு.
இச்சைகளினல் தூண்டப்பெற்று இன்பத்தை நுகர வேண்டும் என்று நினைப்பதே பெரும் மயக்கம்.
எக்காலத்திலும் மனதின் உத்தரவுகளுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது. ஏனெனில் முன்பின் முரண்பட்ட கருத் துக்களையும் பற்பல இச்சைகளையும் திணித்துத் திண்டாடும் நிலைமைக்கு ஆக்கிவிடும்.
 
 

ஆத்ம ஜோதி 379
அறிவை மயக்கிடும் அற்ப இன்பங்கள் யாவும் வரட்சி ONU | ULJIT6OT பாலைவனத்திலே தோன்றிடும் கானல்நீர்.
மோக வெறியின் வீச்சல்களுக்கு ஆட்டம் போடும் அன
வர்களும் அருவருப்பான அஞ்ஞான இருட்குகையிலே முடிவில் அடைபட நேரிடும்.
மனம் ரூபங்களிலே தொடர்பு கொள்வதினலே ஆசை களுக்குத் தடிப்பு உண்டாகிறது. யாவற்றிலும் பற்ருதுபார்ப் பதே அறிவு.
சகல கலைகளிலும் தேர்ச்சியடைந்தாலும் "தன்னை வினங் கும் அறிவு' இல்லார்க்கு ஈடேற்றம் இல்லை.
மாண்டு போன எண்ணங்களை மீண்டும் புத்துயிர் அளிப் பதே கீழான மனதின் ஓயாத வேலை. மனதை நசிப்பதே மகத்தான சாதனை.
கணக்கற்ற எண்ணங்கள் உள்ளத்தில் கொதித்தெழுந் தாலும் சாந்தமாக இருப்பதே பொறுமை.
ஆசை உணர்ச்சிகள் வெகு உக்கிரமாகப் புகுந்தாலும் அசைவற்று அமைதியாக நோக்குவதே பொறுமை.
பற்பல எண்ணங்கள் உள்ளத்தில் பவனி வந்தாலும் யாவற்றையும் விருப்பு - வெறுப்பில்லாது கவனிப்பதே பொறுமை.
நிலையில்லாது ஒடிக்கொண்டிருக்கும் வாழ்வைச் சாசுவத மாகக் கருதுவதே கண்மூடித்தனமான மூடநம்பிக்கை.
میلا"
சிராத்தப் பிராமணரிடம் பிதுருக்கள்
பூனிராமன் சிராத்தம்செய்கையில் பிராமணர்களுக்கு அன் னமிட்டசிதாதேவி தனது மாமனுர்தசரதரையும் மற்றிருவர்களை யுங் கண்டு வெளியே சென்றள். இலட்சுமணன் பரிமாற சிராத்தம் முடிந்தது. ஏன் வெளியே சென்றாய் என்று கேட்க எனது மாமனுரும் மற்றிரு மன்னர்களும் உட்கார்ந்திருந்த னர். போதிய வஸ்திர மில்லாததால் வெட்கமடைந்து சென்

Page 12
380 . ஆத்ம ஜோதி
கரும யோகத்தின் முடிவு.
(சுவாமி விவேகாநந்தர்)
புறம் நோக்கிச் செல்லுதல் என்னும் பொருள்படும் *பிரவிருத்தி' உள்நோக்கிச் செல்லுதல் என்னும் பொருள் படும் “நிவிருத்தி' ஆகிய இரண்டு சமஸ்கிருத பதங்களின் கருத்தை ஆராய்வோம். பிரவிருத்தி உலக மார்க்கமாகும் *நான், எனது'
றை யெல்லாம் அந்த நிலையத்தைச் சுற்றித் தேடிக் குவித்து
வைக்க விரும்பும் இயற்கையே பிரவிருத்தியாகும். அறநெறி
ஒழுக்கநெறி என்னும் இவற்றைச் சிந்தித்து அந்த நிலையத் தை விட்டகன்று போவதே நிவிருத்தி மார்க்கமாகும். பிர
விருத்தியும் நிவிருத்தியும் தொழிலாந் தன்மைய முன்னையது தீமையான தொழில். பின்னையது நற்ருெழில். நிவிருத்தி
மார்க்கமே எல்லா ஒழுக்க நெறிக்கும் பல்வேறு வகைப்பட்ட
சமயநெறிகளுக்கும் ஆதாரமானது. அதன் பூரணத்துவமே பிற உயிரின் நன்மைக்காகத் தனது உயிரையுங் கொடுக்கச்
சித்தமாயிருக்கும் முற்ருன தன்னல மறுப்பு. இந்த நிலையை
யடைந்தவன் கரும யோகத்தின் முடிபையடைந்தவனுவான்.
இதுவே நற்ருெழில் செய்வதனுல் விளைகின்ற பயனுகும்.
ஒருவன் ஞான சாஸ்திரப் பயிற்சியில்லாதவன யிருப்பி
னும், சீவியத்தில் நம்பிக்கை யில்லாதவனுயிருப்பினும், அவன் தனது சீவியத்தில் ஒரு முறையாவது கடவுளை நோக்கிப் பிரார்த்தித் திராவிட்டாலும், நற்கருமத்தின் வலியினலே
மற்றவர்களுக்காகத்தன்னுயிரையும் கொடுக்கச்சித்தமாயிருக் கிற நிலையை யடைந்து விட்டானெனில் அத்த
கைய மனிதனுனவன், பக்திமான் பக்தியினுலும், ஞானவான்
ஞானத்தினுலும் அடைந்த நிலையை யடைந்தவனுவான்.
ஆகவே ஞானவான், கருமயோகி, பக்திமான் ஆகிய அனை வரும் முற்ருன தன்னல மறுப்பு ஆகிய நிலையில் ஒன்று பட் டவர்கள். தாம் கைக்கொண்டொழுகுங் கொள்கைக்கு மாறு பட்ட சமயக் கொள்கை, தத்துவக் கொள்கைகளை யுடை யவனுயிருப்பினும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனைக் கண்டமாத்திரத்தே உலகத்தார்.அன்பினேடும் ஆர்வத்தினேடு மவனைப் பணிந்து நிற்பார். இந்த நிலையிற் சமய வேறுபாடும்
என்னும் எண்ணத்தை நிலையாகக் கொண்டு செல்வம், செல்வாக்கு, பெயர் கீர்த்தி என்றின்னேரின்னவற்

ஆத்மஜோதி 38.
கொள்கை வேறுபாடுங் கருதப்படுவதில்லை. சமயக் கொள் கைக்கு முற்றும் விரோதமான மனிதர் தாமும் பூரண தன்னல மறுப்பைக் கண்ட மாத்திரத்தே கைதொழுது நிற்பார். புத்த தேவர் கடவுளைப்பற்றிப் பிரசங்கம் பண்ணவில்லை ஆயி இனும் அவருடைய சரித்திரத்தைக் கூறுவதும் எட்வின் ஆர் ாைல்ட் என்னும் ஆங்கிலக் கவி செய்ததுமான 'ஆசியாவின் பேரொளி விளக்கம்' என்னும் நூலைப் படிக்கிற ஒருவன் கடுங் கிறிஸ்தவனுயிருப்பினும், புத்த தேவரை உள்ளத்திற் ருெழுகிரு:ன்.
வேறுபட்ட சமயவாதிகள் தாமெல்லாங் கருதிச்செல் லுகிற முடிபு ஒன்றே யென்பதை யறிவார்கள். பக்தி மார்க் கத்தில் செல்பவன் எப்பொழுதுங் கடவுளைப் பற்றி நினைத் துக் கொண்டிருப்பதனலும், நன்மையினுற் சூழப்பட்டிருப்ப தனலும், ஈற்றிலே தனக்கென ஒன்று உண்டு என்னும் எண் ணத்தை யொழித்து "ஆண்டவனே, உம்முடைய சித்தப்ப டியே யாகுக' என்று சொல்லுகிருன். இதுவே பூரண தன் னல மறுப்பு. ஞானவானும் தன்னுடைய ஞான சாஸ்திர, ஆராய்ச்சியினல் "நான்' என்று எண்ணுகிற எண்ணம் மயக் கத்தினலேற்பட்டதென்று அறிந்து அதனை யொழித்து விடு கிருன். இதுவும் முற்ரு:ன தன்னல மறுப்பு ஆகும். கருமம் பக்தி, அனைத்துஞ் சந்திக்குமிடம் இந்த முடிபு ஆகும். முற் காலத்திலிருந்த ஆசாரியர்கள் இறைவன் பிரபஞ்சத்துக்குட் பட்டவனல்லன் என்று சொன்னதன் பொருளிதுவேயாகும். இறைவனேடு சம்பந்தப்பட்டு வாழுகிற வாழ்க்கை யொன்று: உலகத்தில் வாழும் வாழ்க்கை இதனின்றும் முற்ருக வேறு பட்ட மற்ருென்று. சுயநலங்கருதுதல் உலக வியூற்கை; தன் னலமறுப்புத் தெய்வவியற்கை பொற் சிம்மாசனத்தில் வீற்
றிருப்பவனும் பூரண தன்னலமற்றவனுக விருத்தல் கூடும்.
அந்த நிலையில் அவன் கடவுளுக்கு உவந்தவன்; தெய்வத் தன்மையில் கந்தைத் துணியுமுடையவனுய் வறியவனுய் வாழ்ந்தாலும், சு ய ந ல வி ரு ப் பு உடையவனுயிருந்தால் உலகத்தில் அமிழ்ந்தியவனுவான்.
x -
ܠ ܝ ܚ ܐ

Page 13
மன அமைதி
(பற்பல தோப்புகளிலிருந்து சேர்த்த நறுமண மலர்கள்)
- யூனி சுவாமி இராஜேஸ்வரானந்தர் -
அமைதி அமைதியானவர்கட்கு அரிதாக மறுக்கப் LJ(S) கிறது.
யாம் எமக்குள் அமைதியைப் பெருவிட்டால் அதை
வெளிப் பொருள்களிற் தேடுவது வீணே.
எங்கு பகுத்தறிவு மனதை ஆளுகிறதோ அங்கு அமைதி நாட்களே ஆளுகிறது.
அமைதி மனிதனின் இன்பமான இயற்கை நிலை. போர் அவனின் சீரழிந்த தன்மை, அவனின் இழிவு.
அறம் ஆன்மாவின் கதிரவனுயிருப்பது போல் அமைதி
அதன் மாலை நட்சத்திரமாய் இருக்கிறது. இரண்டும் ஒரு காலும் பிரிந்திருப்பதில்லை.
அமைதியின் ஐந்து பெரிய பகைவர் எம்முடன் குடி யிருக்கின்றனர். அவையாவன, பேராசை, போரெண் ணம், பொரும்ை, கோபம், தற்பெருமை.
அழகிய மன இசைவும் மிகப் புனிதமான அமைதியும் அறத்தைப் பேணுகின்றன. உறுதியான நட்பை வளர்க் கின்றன.
அமைதி ஒர் அருமையான அணிகலன். அதனல் உண் மையை யன்றி வேறெதையும் நான் அதற்காகக் கொடுக்க விரும்புவேன்.
அமைதி ஆன்மாவிலன்றி வெளிப் பொருள்களில் இருப் பதில்லை.
உன்னையன்றி ஒன்றும் உனக்கு அமைதியளிக்க மாட் டாது. வாழ்க்கைக் கோட்பாடுகளில் வெற்றியன்றி ஒன் றும் அமைதி யளிக்க மாட்டாது.
 
 
 

ஆத்மஜோதி 383
அமைதி கலைகளினதும் வளமைகளினதும் அரும் பரி g|Trigg,
ஒரு வெற்றியின் இயல்பே அமைதி. அப்பொழுது தான் இரு கட்சிகளும் மேன்மையாக வசமாக்கப் படுகிறர் கள். ஒரு கட்சியும் தோல்வியடைவதில்லை.
ஊக்கமான முயற்சியாலும் நேர்மையான இலக்காலும் தன் நேரத்தைத் திருப்பணிக் கொதுக்கி வைக்கும் மனிதன் இயற்கையுடன் நடக்கிருன்; அவனின் பாதைகள் அமைதியே.
நீ வழிபாட்டில் இருக்குமாப் போல் அமைதியிற் பேசு , நகர், நடி. உண்மையில் இதுவே வழிபாடு. 属 மனித மனதை ஆராய்ந்து அதை ஆக்கியோனின் ஞானத்தின் அதி உறுதியான அறிகுறிகளைக் கண்டு பிடி
பயிற்சியே மன வலிமை, ஒய்வன்று.
உபயோகிப்பதாற் குறைவாகும் வாணிகச் சரக்கன்று மனம்,
அபிவிருத்தி யின்றிய மனம் ஒருகாலும் நற்பயனை விளை
க்க மாட்டாது.
தெய்வீக தத்துவங்களாற் தொடர்ச்சியாய் வளமுறச் செய்து வளமூட்டா விட்டால் மனம் பயனற்ற நிலம் மட்
டுமே.
ஆன்மா அசுத்தம் அடையும் வீதம் மனம் குறுகுகிறது.
鳴 யார் மனதின் இருப்பை ஐயுறுகின்ருனே அவன் ஐயு
றுவதினுல் அதை நிரூபிக்கிருன். இதுவே சடப் பொருளுக் கும் மனதிற்கு மிடையிலுள்ள வேற்றுமை.
மெய்யியற் பள்ளியிற் செம்மையாய் நிறுவப்பட்ட மனம் சீமை ஆலின் உறுதி நிலையையும் கூடைப் பிரம்பின்
வசப் படுந் தன்மையையும் பெறுகிறது.
ஒன்று துன்புறும் பொழுது மற்றது அனுதாபப் "R"| || வதால் உளமும் உடலும் திருமணம் செய்து கொண்டதி
صو

Page 14
384 ஆத்மஜோதி
லும் பார்க்கக் கூடியதாயிருக்கின்றன.
உறு பல உயர் மனதின் முழுவளர்ச்சிக்கும் விரிவிற் கும் ஏதோ ஒரளவு தனிமை தேவையாய்த் தோன்றுகி
Digil. 9ܨܐ
தன்னைத்தானே தொழிலில் ஈடுபடுத்துவதும் மற்றவர் கட்குத் தொழில் கொடுப்பதுமே ஒரு முயற்சியான மன
ன் நன்மை.
ஒர் உண்மையாக உறுதியான நிறை மனம் பெரும் பொருள்களையும் அற்ப பொருள்களையும் சமமாகத் தழுவு கிறது.
நீ ஒய்வை விரும்புகிருயாயின் முதலில் மனதின் ஒய் வைப் பற்றி அக்கறை கொள்.
முடிவுள்ள மனம் உண்மையின் அகண்டத்தைப் பற் றுதற்கு அவாவுவதில்லை.
உடல் எழுச்சியற்ற நிலையிலிருக்கும் பொழுது உளம் ஆர்வ மிகுந்த செயற்படுத்தலுக்கு அழைக்கப்பட முடியாது.
மனம் பச்சோந்தி போன்று வெளியிலிருந்து சாயல்க ளைப் பெற்றுக் கொள்கிறது. ஆனல் அது அவற்றை விடா மற் கொள்வதினுற் பச்சோந்தி போன்றல்லாமலு மிருக்கி நிDது.
பிரயோகிக்கப் படாத மனம் நுகர்ந்து மகிழாத மனமே.
களைதல் உழுதல் கிண்டல் பரம்படித்தல், விளை நிலத் திற் கெவ்வகைப்பட்டதோ அவ்வகைப் பட்டதே கருதல், தியானித்தல், ஆராய்தல் மனதிற்கு.
உன் மனதும் உன் நடத்தையும் இன்றியமையாத வச மாகுந் தன்மையும் இணங்குந் தன்மையும் பெறுவதற்கு அவற்றிற்கு எண்ணெயிடு.
ஒரு பூரணமாக நேர்மையான திட மனம் ஒர் அரிய விலை மதிக்க முடியாத இயற்கைத் திறமே.
 
 

ஆத்மஜோதி 385
யாதும் முன்சார்பு நிலையால் மனம் வசப்படுத்தப் பட் டால் அது ஒழுங்கற்ற முறையாலன்றித் தொழிற்பட 'மாட்டாது.
மனித மனம் மாதிரி தன்னிலைக்கு மீளும் இயல்புடை யது யாதொன்றுமில்லை.
ஓர் அறிஞன் தான் தனித்திருக்கும் பொழுதிலும் பார்க்க ஒருகாலும் குறைவாய்த் தனித்திருப்பதில்லை.
மனம் தனக்குள்ளேயே நரகத்தை சுவர்க்க மாகவும் சுவர்க்கத்தை நரக மாகவும் ஆக்க முடியும்.
மிக அருகலான மனங்களே தேய்கின்றன. அதிகமா னவை துருவாகின்றன.
மனதின் குறைபாடுகள், முகத்தினுடையவை போல், யாம் விருத்தாப்பிய மடையும் வீதப்படி மோசமடைகின் நிறன.
உடலின் பிரகாசமே மனம்.
ஒருமுறை பண்படுத்தப்பட்ட மனம் விதையாதுழுத நிலம் போலிராது.
மனித மனதின் இயற்கையான உயர்வுகள் இன்பத்தி லிருந்து இன்பத்திற்கண்று. ஆணுல் நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கே,
வலுவற்ற மனம் அனுகூலத்திலும் பிரதிகூலத்திலும் மூழ்கின்றது.
மனவேதனை ஆயிரம் பேர்களைத் தற்கொலைக்குத் தூண் டியிருக்கிறது. சரீர வேதனை யாரையுமில்லை.
மனம் கைகளை ஆளவேண்டியது போல், ஒவ்வொரு சமூகத்திலும் நுண்மதியுள்ள மனிதன் தொழிலாளிக்கு வழி காட்ட வேண்டும்.
மேன்மையான, நன்மையான, செம்மையான மனம் சதையுடலில் தங்க வைத்த ஒருவிதமான தெய்வீகமே.

Page 15
386 ஆத்ம்ஜோதி
மனிதனின் மேன்மையான தொழில் தன் மனதைச் செம்மையாக்கித் தன் நடத்தையை ஆள்வதே. 彎
உளத்தின் உடலTட்இ உயர்வான தாயிருப் பதால் வல்லமை யற்றவர் ஒரொரு கணம் மிகவும் வல் லமை யுள்ளவராகின்றனர். t
சிறந்த சிந்தனைக்கு மனம் திரும்புவதற்காக மனஞ் சிற்சில வேளைகளில் திருப்பப்பட வேண்டும்.
குறுகிய மனம் மூர்க்க குணத்தைப் பெறுகிறது; நாம் காண முடியாததை நாம் நம்புவதில்லை.
மனமே நன்மை அல்லது தீமையை உண்டாக்குகிறது. அதே பாவியை அல்லது புண்ணிய சீலனை, தனவானை அல் லது தரித்திரனை உண்டாக்குகிறது.
குறுகிய மனங்கள் தம் சொந்தத் திறமைக்கு மேலே ஒருகாலும் யாதுஞ் செம்மையானதைக் கருதுவதில்லை.
உருப்பெருக்கி போல் வலுவற்ற மனம் அற்ப விஷயங் களைப் பெருப்பிக்கிறது; ஆனல் மேன்மையானவற்றை ஏற் றுக் கொள்ள மாட்டாது.
விருத்தாப்பியத்தில் மனதின் குறைபாடு பல்காலும் இயற்கைத் தேய்விலும் பார்க்க வழங்காமையின் விளைவே.
மனம் தானுக, மற்றப் பொருட்களைப் போல் சிற்சில வேளைகளிற் சிறிதும் தளராதிருக்க வேண்டும்; அன்றேல் அது வலுவறக் கூடும் அல்லது சிதையக் கூடும்.
மனவின்பம் ஒருகாலும் துதியா. அவை புனருத்தி யால் அதிகரிக்கப் படுகின்றன. ஆழ்ந்து நினைப்பதால் ஆமோ) திக்கப்படுகின்றன. நுகர்வதால் வலுப்படுத்தப் படுகின்றன.
இவ்வுலகிலும் ஏதோ ஒரு அளவுக்கு ஒரு விதமான சுவர்க்கானந்தமே ஒரு தூய சீல மனம் அனுபவிக்கிறது.
என் மனம் ஒர் இராச்சியமாவதற்கு இழுக்கிறது; பூ , வுலகம் கொடுக்கக் கூடிய மற்றெல்லா இன்பத்தையும் மேம் படும் வண்ணம் உடனிருக்கிற மகிழ்ச்சியை அங்கு நான் காண்கிறேன்.
இ
 
 
 

ஆத்மஜோதி 387 s சுவாமி பிரேமானந்தா
(மா. மகாதேவா. பீ. ஏ.
பூரீ இராமகிருஷ்ணர் ஒரு சில சீடர்களை நித்திய முக்தர்கள் என்று கூறுவார். இவர்களை எந்நேரத்திலும் பந்தத்தினுல் கட்டுப் படுத்த முடியாது. மும்மலங்களுக்கு அப்பால் நின்று எந்த நேரத்தி லும் ஈசுவர சிந்தையிலோ, பக்தியிலோ ஈடுபட்டிருப்பார். இப்படிப்பட்ட வர் சுவாமி பிரேமானந்தா. இவர் வங்கத்திற் பல வளங்களும் சிறந்த ஆந்பூர் என்னும் கிராமத்திற் காயதர் குலத்தில் மார்கழி மாதம் பத் தாம் திகதி ஆயிரத்தி எண்ணுாற்றி அறுபத்தோராம் ஆண்டில் தோன் றியவர். தந்தையார் தாறயிஷண்ண கோஷ். தாயார் மாதங்கினி. இருவரும் மகா பக்தர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் மூன்று ஆண் குழந்தைகளும் இருந்தனர். பெண் குழந்தையின் பெயர் கிருஷ்ணபவானி, ஆண் குழந்தைகள் துளசிராம், வாவுராம், சாந்தி ராம். இம் மூவரில் வn வுராமே பிற்காலத்திற் பிரேமானந்தா என் னும் பெயரால் அழைக்கப்பட்டார்.
கிருஷ்ணபவானி கல்கத்தாவிலுள்ள பலராம் கோஷ் என்பவரை மணந்தார். இவ்விவாகமே தாறயிரஷண்ணர் குடும்பத்தைப் பிற்கா லத்தில் பூரீ இராமகிருஷ்ணரை அறியச் செய்தது. பலராம் அடிக்கடி பூரீ இராமகிருஷ்ணரைக் கண்டு தரிசித்தார். ஒருமுறை தனது மாமி யாராகிய மாதங்கினியை தக்கினேஸ்வரத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் பூரீ இராமகிருஷ்ணரை அறிமுகப்படுத்தினர். மாதங்கினியார் மகிழ்ச்சியுற்று, இம்மகானேக் கண்டது பெரும் புண்ணியமெனக் கரு தினர்.
பக்தர்களுக்குப் பிறந்த பிள்ளையும் பக்திமானகவே இருக்கும். இளம்பிராயத்திலேயே தான் துறவியாக இருக்க வேண்டுமென்ற எண் ணம் உதித்தது. யாராவது நண்பர்கள் இவருக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லும் போது இவர் எனக்கு விவாகம் வேண்டாம், நான் இறப்பேன்’ என்று சொல்லி விட்டு ஓடி விடுவார் " தனது எட்டாவது வயதில் தான் துறவியாக வேண்டும் என நினைத்
தார். துறவிகள் நட்பை நாடினர்.
கிராமப் பாடசாலைக் கல்வி முடிந்தபின் கல்கத்தாவிற்கு மேற் படிப்புப் படிப்பதற்காகச் சென்று உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். இப்பாடசாலையிற் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர் பூரீ இராமகிருஷ்ணர் மொழியமுதம் என்னும் நூலாசிரியராகிய மகேந்திர நாத் குப்தா. விதிவலியால் இருக்கலும் (சுவாமி பிரேமாநந்தா) இப்'

Page 16
388 ஆத்மஜோதி
பாடசாலையிற் படித்தார். இருவருடைய நட்பே பாவுராமை இராம கிருஷ்ணருடைய பாதத்திற் கிழுத்தது.
臀 பாவுராம் ஹரி சபைக்குச் சென்று "பாகவதம்’ படிப்பதைக் கேட் பார். ஒரு முறை இச் சபையில் முதன் முதல் இராமகிருஷ்ண ரைக் கண்டார். ஆனல் இராமகிருஷ்ணர்ை யாரென்று அறியவில்லை" தனது தமையன் தக்கிணேஸ்வரத்திலிருக்கின்ற மகான், கடவுள் நாமத் தை உச்சரித்து மெய் மறந்து நிற்பார் என்று கூறியது ஞாபகத் திற்கு வந்தது. இருக்கல் தக்கினேஸ்வரத்திற்குச் சென்று வருவதை அறிந்தார் பாவுராம். இருவரும் அடுத்த சனிக்கிழமை தக்கினேஸ் வரத்திற்குச் சென்று பூரீ இராமகிருஷ்ணரைச் சந்திப்பதாகத் தீர்மா னித்தனர். குறிக்கப்பட்ட நாளில் இருவரும் பாடசாலை முடிந்தவு டன் தோணியிலேறி தக்கினேஸ்வரம் சென்றனர். தோணியில் இராம்தயால் சக்கரவர்த்தி என்னும் நண்பரைச் சந்தித்தார். இராம் தயாலும் இராமகிருஷ்ண பக்தரும் இரவை அங்கே கழிப்பதா என எண்ணினர். பரவுராம் அங்கு தங்க இடமுண்டா எனக் கேட்டார். *இடமிருக்கும்’ என்ருர் இருக்கல். இராச் சாப்பாடு எவ்வாறு கிடைக் கும் என வினவ எவ்வாருயினும் கிடைக்கும் என்ருர் இருக்கல்.
சாயங்காலம் தக்கினேஸ்வரத்தைச் சென்று அடைந்தனர். பாவு ராம் இடத்தைக் கண்டு மகிழ்ந்தார். பூரீ இராமகிருஷ்ணர் தங்கியி ருக்குமிடத்தை யடைந்தனர். ஆனல் அச் சமயத்தில் அவர் அங்கு இல்லை. இருக்கல் இருவரையும் அமரச் செய்து விட்டு கோயிலுக் குச் சென்ருர், சில நிமிடங்களில் இருக்கல் பூரீ இராமகிருஷ்ணரைக் கூட்டிக் கொண்டு வந்தார். இராமகிருஷ்ணர் மெய்மறந்து சமாதி நிலையில் சில நிமிடங்கள் நின்ருர், சில நிமிடங்களில் சுயநிலை பெற் ருர், இராம்தயால் பாவுராமை அறிமுகப் படுத்தினர். ‘ஒ நீர் பல ராமின் உறவினரா? அவ்வாருயின் நீர் எங்களுக்கும் உறவினராவீர் என்ருர் பூரீ இராமகிருஷ்ணர். இராமகிருஷ்ணர் பாவுராமை உற் றுப் பார்த்துத் திருப்தியடைந்தார். இராமகிருஷ்ணர் இராம்தயா லைப் பார்த்து நரேந்திரர் (சுவாமி விவேகானந்தா) பல நாட்களாக இங்கு வரவில்லை. அவரைக் காண விரும்புகிறேன். நீ அவரை மறக் காமல் வரச் சொல்லுவாயா? என்று கூறினர். ‘நான் நிச்சயமாக வரச் சொல்லுவேன்" என்ருர் இராம்தயால், இரா உணவு உண்ட/ தன் பின் இராமகிருஷ்ணர் இவர்களை எங்கே உறங்க விடலாம் என்று எண்ணினர். இருக்கல் இராமகிருஷ்ணருடன் உள் அறையில் உறங் கினர். இராம்தயாலும் பாவுராமும் வெளியே உறங்கினர்.
இருவரும் நன்கு நித்திரையாகி விட்டனர். நள்ளிரவில் ஒரு சத் தம் கேட்டது. அவ்விடத்தில் இராமகிருஷ்ணர் நிற்பதைக் கண்ணுற் றனர்' "நீங்கள் நித்திரையா' என இராமகிருஷ்ணர் கேட்டதற்கு
BRN
( ހ.
 
 
 

ஆத்ம ஜோதி 389
"இல்லே' என்ற பதில் வந்தது? பகவான் ஆவல் மேலிட்டவராய் தயவு செய்து நரேந்திரரை வரச் சொல்லவும். என் உள்ளத்தை யாரோ முறுக்கிப் பிழிவது போலிருக்கிறது" என்ருர், அவருடைய ஒவ்வொரு சொல்லும், நடத்தையும், செயலும் நரேந்திரரைப் பற் றியதாகவே இருந்தது. இவ்வளவு அன்புடையவரிடம் நரேந்திரர் வராமலிருப்பது ஆச்சரியந்தான் என எண்ணினர் பாவுராம்.
ஒரு மணித்தியாலம் சென்ற பின் இராமகிருஷ்ணர் திரும்ப வந்து நரேந்திரர் தூயவுள்ளம் படைத்தவர். அவரை நான் நாரா யணனுடைய சொரூபமென்றே கருதுகின்றேன். அவரில்லாமல் வாழ மாட்டேன். அவர் இங்கே ஒரு முறையாவது வரட்டும்' என்று பல தடவைகள் இராம்தயாலிடம் நினைவூட்டினர்.
அடுத்த நாட்காலையில் இராமகிருஷ்ணர் பாவுராமை பஞ்சவடிக் குப் போகச் சொன்னர். பின் காளி கோவிலுக்குப் போகச் சொன் னர். பின்பு பாவுராம் வீட்டிற்குச் சென்ருர்,
அடுத்த ஞாயிற்றுக் கிழமை திரும்பவும் பாவுராம் இராமகிருஷ் ணரிடம் சென்ருர், "நீர் வந்தது நல்லது. பஞ்சவடிக்குப் போகவும் அங்கே நரேந்திரர் முதலானேர் இருக்கின்றனர் என்ருர் இராமகிருஷ் னர். பஞ்சவடியில் இருக்கல் பாவுராமை நரேந்திரருக்கு அறிமுகப் படுத்தினர். பாவுராம் நரேந்திரரிடம் விருப்புக் காட்டினர். அவ ரைப் பார்ப்போர் அவரை நேசிப்பர். அவர் அத்தன்மை வாய்ந்த வர். நரேந்திரர் ஒரு பக்திப் பாட்டு பாடினர். நரேந்திரரின் திற மையை மெச்சி, "ஒப்பு நிகரற்றவர்' என்ருர் பாவுராம்.
இராமகிருஷ்ணரைச் சந்தித்த பொழுது பாவுராமிற்கு இருபது வயது. இராமகிருஷ்ணருடைய அன்பும் தூய்மையும், தெய்வத்தன் மையும் பாவுராமைக் கவர்ந்தன. இராமகிருஷ்ணருடைய தொடர்பு தொன்று தொட்டு வந்ததென் பதைக் காலத்தாலறிந்தார் பாவுராம். இராமகிருஷ்னரில், வாழ்க்கையில் அடைய வேண்டிய இலட்சியங்களைக் கண்டார். பாவுராமோ குற்றமற்றவர். அன்பின் சொரூபி. குழந்தை புள்ளம் உடையவர். யாவருக்கும் நோவாமல் நடப்பவர். இறுதிக் காலம் வரை அவரது குழந்தையுள்ளம் மற்றவர்களிற் குறைகளைக் காணவில்லை. இராமகிருஷ்ணர் இவரின் தூய்மையைப் பாராட்டி ஞர். இராமகிருஷ்ணர் பாவுராமை ஒருமுறை கனவில் ஒரு தேவதை அட்டியல் அணிந்திருக்குமாப் போல் கண்டார், பாவுராமின் உடலின் ஒவ்வொரு அணுவும் தூய்மை வாய்ந்தன. அழுக்காறு அவர் மனத்தையோ அல்லது உடலையோ ஊடுருவ மாட்ட்ர என் , ருர் இராமகிருஷ்ணர், "
தூய்மையுள்ளவர்கள் தான் இராமகிருஷ்ணரைக் கண்காணிக்க"

Page 17
390 ஆத்மஜோதி
வல்லவர்கள், 1879ம் ஆண்டு இராமகிருஷ்ணருடைய நெருங்கிய சீடர்கள் வந்து சேர்ந்தனர். இவர்களுள் இருக்கலும் இலாட்டுவும் தொடர்ச்சியாகப் பகவானைக் கண்காணித்து வந்தனர். இருக்கல் இடை யில் தொடர்ச்சியாகத் தக்கினேசுவரத்தில் நிற்க முடியவில்லை. தன் னேப் பார்ப்பதற்கு ஒருவருமில்லையென நினைத்து இராமகிருஷ்ணர் ஒருநாள் இந்நிலையில் என்னுடைய மெய்யை எல்லோரும் தீண்டுதல் பொறுக்க முடியாது. நீ இங்கே நின்ருல் நன்று என பாவுராமிடம் கூறினர் பாவுராம் தனது வீட்டார்கள் தொந்தரவு கொடுப்பார்க ளென எண்ணி, தக்கினேஸ்வரத்தில் இடைக்கிடை தங்கினர்.
இராமகிருஷ்ணருடைய தொடர்பு பாவுரா மின் மனத்தைக் கட வுளின் பாதத்திற்குத் திருப்பியது. படிப்பில் கவனம் குறைந்தது. 1884ம் ஆண்டில் பாவுராம் பிரவேசப் பரீட்சைக்குச் சென்ருர், ஆ ணுல் சித்தியடையவில்லை. இதை அறிந்த இராமகிருஷ்ணர் "மிக நன்று அவர் கட்டுப் பாட்டிலிருந்து விடுபட்டார்’ என்ருர், இது பாவுரா மிற்கு வியப்பாயிருந்தது. பாவுராம் படிப்பில் கவனக் குறைவு என் பதை இராமகிருஷ்ணர் அவதானித்தார். தனது சீடரைச் சோதிக்க எண்ணி, உன் புத்தகங்கள் எங்கே? எனக் கேட்டார். பின் மகேந்திர குப்தாவைப் பார்த்து இவருக்கு இரண்டும் தேவையாம். மிகக் கடி னமான பாதை, சிற்றறிவு என்ன பயனையளிக்கும் என்ருர், வசிட் டர் தனது மகனை இழந்த போது மிகத் துக்கமடைந்தார். இலக்கு மணன் வியப்புற்று இராமனைக் காரணம் கேட்டார். இராமன் திரும்பி வியப்படையத் தேவையில்லை. யாரிடம் அறிவுண்டோ அவ ரிடத்தில் அஞ்ஞானமுண்டு. நீ இவ்விரண்டிற்கும் அப்பால் செல்க. அதுதான் எனக்கு வேண்டுமென்ருர் பாவுராம் என இராமகிருஷ்ணர் கூற, "என்னை அங்கு வரும்படியாக இழுங்கள்’ என்ருர் பாவுராம்.
பாவுராமின் அன்னையார் இராமகிருஷ்ண பக்தர். ஒருநாள் இவர் இராமகிருஷ்ணரைக் காண்பதற்கு வந்தபொழுது அவருடைய மகனு கிய பாவுராமைத் தன்னுடன் விடும்படி கேட்டார். அதற்கு அன் னையார் மகிழ்ச்சியோடு உடன்பட்டார். தான் கடவுள் பக்தராகவும் தனது பிள்ளை இறக்கும் வரையில் தான் உயிரோடு இருக்கப்படாதெ னவும் இரு வரங்கள் கேட்டார். அவர் கேட்டவை அளிக்கப் பட்
டன. இந்நாள் தொடக்கம் பாவுராம் இராமகிருஷ்ணரோடு சேர்ந்'
திருந்தார். இராம கிருஷ்ணர் அன்பு பாராட்டிப் பாவுராமைத் தனது ஜீவனின் தோழன் என அழைத்தார்.
பிறகாலத்திற் பாவுராம் சுவாமி பிரேமானந்தா ஆகிய பொழுது தனது குருவின் அன்பைப்பற்றிஇராமகிருஷ்ண ஆசிரமத்திலுள்ள இளஞ் சந்நியாசிகளுக்குக் கூறுவார். நான் உங்களை நேசிக்கிறேனு? இல்லை. உங்களை நேசிப்பேனுகில், எல்லோரையும் அன்பினுல் கட்டி விடுவேன்.
9,
 
 
 

ஆத்மஜோதி 391
குருவின் அன்பு அளவற்றது. அவர் காட்டிய அன்பில் நூற்றில் ஒரு பங்கேனும் உங்களிடம் நான் காட்டவில்லை நான் அவருக்கு விசிறி யால் வீசிக் கொண்டிருக்கும் பொழுது சில வேளைகளில் நித்திரையாகி விடுவேன். அவர் என்னைத் தனது நுளம்பு வலைக்குள் கொண்டு போய்த் துரங்கச் செய்வார். நான் ஆட்சேபித்தால் வெளியே நுளம்பு உன்னைக் கடிக்கும். வேண்டிய நேரத்திற்கு உன்னை எழுப்பலாம் என் பார் என்று கூறினர் சுவாமி பிரேமானந்தா. பகவான் இராமகிருஷ் ணர் அடிக்கடி பாவுராமைக் காண்பதற்குக் கல்கத்தாவிற்கு வந்து, அவர் கையால் பாவுராமிற்கு உணவூட்டுவார். பாவுராமைக் கான விடில் குழந்தையைப் போல் அழுவார் பகவான்.
பகவானுடைய அன்பும் இன்சொற்களும் சீடனுடைய ஜீவனை மாற்றியமைத்தன. அவர் வாழ்விலே பெரும் அசிரியர். வினேத முறைகளால் பலவற்றையும் போதித்தார். ஒர் இரவு பாவு ராம் பக வானுடைய அறையில் படுத்திருந்தார். பகவான் அங்கும் இங்கும் சமாதி நிலையில் நடந்து கொண்டிருப்பதைப் பாவுராம் கண்டார்: அவர் முகத்தில் வெறுப்பிருப்பதைக் கண்டார். "கொண்டு வந்ததை திருப்பிக் கொண்டோடு அம்மா. வேண்டாம் வேண்டாம். அம்மா எனக்குப் புகழ்ச்சி வேண்டாம் என்ருர் பகவான். அன்னையார் புகழ்ச் சியைப் பகவானுக்கு அன்பளிப்பதற்காகப் பகவானைப் பின் தொடர்ந் தது போல் பாவுராமிற்குக் காட்சியளித்தன. இந்நிகழ்ச்சி பாவுரா மின் மனத்திற் பதிந்து, தனது வாழ்நாள் முழுவதிலும் புகழ்ச்சியை வெறுக்கச் செய்தன.
பகவான் இராமகிருஷ்ணருடைய தெய்வீக வாழ்வு, பாவுராமின் தெய்வீக ஆசையைப் பெருக்கியது. பகவானுடைய உறவினல் பல பக்தர்கள் பக்திப் பாடல்களைக் கேட்டபொழுது பரவச நிலையை அடைந்ததைக் கண்ட பாவுராம் தானும் அந்நிலையை அடைய வேண் டுமென்று வேண்டினர். பல வேண்டுகோளின் பின் பகவான் அன் னையை இதையிட்டு வழிபட்ட பொழுது பாவுராமிற்கும் பரவச நிலையை விட ஞானம் கிடைக்குமெனத் தெரியப் படுத்தப்பட்டது.
பகவான் மகிழ்ந்தார்.

Page 18
392 ஆத்ம ஜோதி
யாழ் நூலுள் பாயிரவியல்
( பண்டிதர், செ. பூபாலபிள்ளை அவர்கள் )
1. யாழ் நூல்:
1892 ஆம் ஆண்டில் எழுதா எழுத்தில் சிலப்பதிகாரம் வெளிவந்தது. அதிற் பொதிந்துள்ள இசைத்தமிழ் நுட்பங் களை இனிதெடுத்து விளக்குதற்குரிய முத்தமிழ் வித்தகப் புலவர் விபுலானந்தரையும் இதே காலத்தில் இறைவன் திரு வருள் தோற்றுவித்தது.
அண்ணுமலைப்பல்கலைக் கழகத்தமிழ்ப் பகுதித் தலைவராக அடிகளார் தொண்டாற்றிய காலத்தே இசைத்தமிழ்ஆராய்ச் சியினைத் தொடங்கினர்கள். 1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக ஆதரவிலே இசை பற்றிப் பேசிய போது ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பழந்தமிழர் யாழின்
இயல்பினைச் சங்க இலக்கிய நூற்சான்றுகொண்டு விளக்கி
گھر
அதனை ஒவிய உருவில் முதன் முதல் வெளிப்படுத்தினர்கள். இதனைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயர், தமிழவேள், உமாமகேசுவரம் பிள்ளை முதலிய பேரறிஞர்கள் இதனை நூல் வடிவில் வெளிப்படுத்து மாறு அடிகளாரை அடிக்கடி வேண்டினர்கள். அடிகளார் இசைத் தமிழை ஐயீராண்டு ஆராய்ந்தார்கள். ஆராய்ந்து இமயத்து இருந்து இதனைப் பூர்த்தி செய்தார்கள்.
இந்நூல் சிலப்பதிகாரத்தில், அரங்கேற்று காதையினுள் ளே, யாழ் நூல் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்ததொரு விரிவுரையாக அமைந்துள்ளது.
இசைத் தமிழ் படிப்படியாக வளர்ந்து பண்பட்ட வரலாற்றினை
se
நுட்பங்களை உருவாக்கி உதவும் சிறந்த நூலாகத் திகழுகிறது.
நமக்கு எடுத்துக் கூறுகிறது. நாம் இழந்த இசைத்தமிழ் நூல்
2. யாழ் நூல் தோன்றிய வரன் முறை:-
மட்டக்களப்புப் புளியந்தீவுக்கும் கல்லடிக்கும் இடையே உள்ள வாவி நடுவுக்கு அடிகளார் ஒரு பாணனுடன் இள
வேனிற் காலத்திலே, நிறைமதி நாளில், தோணியிற் சென்று
NN
N
 
 
 
 

ஆத்மஜோதி 393
ஆர்ப்பரவமின்றி அமைதி நிலையில் இருந்தார்கள். இருந்த அவர்கள் காதிலே
'நீல வானிலே நிலவு வீசவே
மாலை வேளையே மலேவு தீருவோம் சால நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரொ டாடுவோம் நிலவு வீசவே மலேவு தீருவோம் சலதி நீருளே பலரொ டாடுவோம்’
என்று எழுந்தது ஒரு இன்னிசைப் பாடல். இதனுல் இசை நூற்பொருளில் அடிகளார் மனம் இறங்கியது. இத்தருணம் எழுவர் அரமகளிர் நீரினுள் இருந்து எழுந்து தமது பெயரை கிளை தாரம் உழை குரல் இளி துத்தம் விளரி கைக்கிளை என்ற ஏழிசைப் பெயரிற் கூறி இசை அடைவினைப் புலம் வல்ல இவ ருக்குப் புலப்படுத்திக் கூறினர்கள். இதுவே இந்த நூலுக்குத் தோற்றுவாய் ஆயிற்று.
இந்த ஆராய்ச்சி நடக்கும் போதே மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்திலும், பிற கல் விக் கழகங்களிலும் அடிகளார் இதுபற்றி விரிவுரைகள் ஆற்றி னர். கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாகிய தமிழ்ப் பொழி லில்இந்த ஆராய்ச்சியினைத்தொடர்ந்தெழுதிநிறைத்தார்கள்,
3. நூற் பகுப்பு:-
யாழ் நூல் பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம் பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழி பியல் என்ற ஏழு இயல்களை உடையது.
* பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும்’
ஆதலால் இத்தருணத்து யாழ்நூற் பாயிரவியலுள் ஆசி ரியர் கூறுவனவற்றின் சாரத்தைச் சுருக்கி ஒருவாறு கூறுகின் (OPLD.
பாயிரவியற் தெய்வ வணக்கத்தின் கண்ணே ?میل طلب யிசை இயமென உருவு கொள் பரனே' என மூத்த பிள்ளை யாரையும், 'இளியொன்றி நின்ற இசை தந்த மஞ்ஞை எழி P

Page 19
394. ஆத்மஜோதி
லொன்ற ஊரும் இளையோன்' என இளைய பிள்ளையாரையும், *விளரியிசை ஆனிரைகள் விழைமுல்லைக் குழலிசைத்து வில்
விரற்குக், களரியினில் மறையிசைத்த கடல்வண்ணன்' எனத்
திருமாலையும், 'தாரம் உய்த்தது பாணர்க்கருளொடே' எனச்
சிவபெருமானையும், 'குரல் இசையவண்டுழுத குழற்கோதை'
எனக் கொற்றவையையும், துத்தத் திசைபயில் கிளிமொழி
மலர்மகள்' எனத் திருமகளையும், "கைக்கிளை ஈருகக் 5tau
நரம்பின் மெல்லியல்' எனக் கலைமகளையும் ஆசிரியர் உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளைனன்ற ஏழு இசைப் பெயர்களையும் முதன் மொழியாக அமைத்துக்கடவுள் வாழ்த் துப் பாடியமை நாமெலாம் எண்ணி எண்ணி இ ன் பு ற க் கூடியதொன்று. சகோட யாழிலுஞ்,செங்கோட்டி யாழிலும் இந்த முறையாகவே இசை நரம்புகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலே புனத்திலும்,பொழிலிலும், குன்றத்தின் மீதும், மருதத் தண்பனையிலும், முல்லைப் புறவத்திலும், கட்ற்கானலிலும், கான்யாற்றடை கரையிலும், அருஞ்சுரத் திலும், மனையினகத்தும், மன்றத்தினுள்ளும், தேவர் கோட் பத்தும், அறவோர் பள்ளியிலும் பண்டு இசை வழங்கியது என்கிருர் ஆசிரியர்.
"புனத்தகத்தே பொழிலகத்தே புறவார்தண் பனையகத்தே
புன்னைக் கானல் கனத்ததிரை தவழ் மருங்கே கான்யாற்றே யருஞ்சுரத்தே
காத லின் மனத்தகத்தே மகிழ்சுரக்கும் மனையகத்தே மன்றிடத்தே
மற்று மாங்கே இனித்ததமிழிசைபரவு மியல்கண்டார் இன்பநிலை யெங்குங்
கண்டார்'
என இதனை இவர் தலையாய மாணவர் சிறப்புப் பாயிரத்துப் பாட்டில் இனிதாக அமைத்துக் கூறுகிருர்,
மக்கள் இன்பத்திலுந் துன்பத்திலும் பாட்டு உதித்து மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றது. இன்பந்துய்த்த உள்ளத் தில் நின்று மலர்ச்சியும், உயர்ச்சியுந் தோன்றுகின்றன. துன் பூந் தோய்வதனுலே மனத்து அசைவும், கலக்கமும் ஏற்படு 'ன்ெத மலர்ச்சி, உயர்ச்சி, அசைவு, கலக்கம் என்ற நான்கி லும் நின்று உவகை, பெருமிதம், இளிவரல், வெகுளி என் னும் நான்குந் தோன்றுகின்றன. உவகையில் நின்று நகையும்
பெருமிதத்து நின்று மருட்கையும், இளிவரலில் நின்று அச்ச
 
 

ஆத்ம ஜோதி 。395
மும், வெகுளியில் நின்று அவலமுந் தோன்றுவன. இவற்ருேடு சமநிலையையுஞ் சேர்க்கப் பொருட்சுவை ஒன்பதாகும். இந்
தச் சுவைகளும், பண்ணுந் தாளமும்ஒருங்கமைந்ததே பரதம்
என்பது.
|鶯。 இசை பிறத்தற்குரிய தானங்கள் மூன்று. அவை மெலிவு சமன் வலிவு என்பன. இவற்றைப் பிற்காலத்தார் மந்தரம் மத்திமம் தாரம் எனப் பெயரிட்டு வழங்கினர். ஏற்ற இறக்க இசைகளைப் பிற்காலத்தார்ஆரோகணம் அவரோகணம் என்ற பெயர்களால் வழங்கினர். ,、
இயற்கை வனப்புந் தெய்வ வனப்புமே பண்டு இசைப் பாடலுக்கு உவந்த பொருள்களாக அமைந்துள்ளன. இவற் றைப் பரிபாடலும், தேவாரங்களும் நமக்கு அறிவிக்கின்றன. இன்ருே அவற்றிற்கு மாருகப் பொய்க்கோலம் பூணும் கும ரர், குமரியர் செயற்கை வனப்புக்களும் சிற்றின்பங்களுமே இசைப் பாட்டுக்குப் பொருளாக அமைகின்றன. தேவரை முன்னிறுத்திப் பாடும் பாட்டுப் பண்டு தேவபாணி எனப்பட் டது. இத்தேவபாணிக்கு
'மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட அடைத்தவன் இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்
இனநிரைத் தொகைகளை இசைத்தலில் அழைத்தவன் முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன்
முடிகள் பத் துடையவன் உரத்தினை அறுத்தவன் உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன்
ஒளிமலர்க் கழல்தரு வதற்கிணி யழைத்துமே'
என்ற இந்த அழகுப் பாடல் எடுத்துக் காட்டாகும்.
பாடல்கள் மிடற்றுப் பாடல், கருவிப் பாடல் என இரு திறப்பட்டு நடக்கும். இசைக்கருவிகள் பல ஒருங்கியைந்து ஒலிப்பதனைப் பழந் தமிழ் மக்கள் ஆமத்திகை எனக் கூறினர். இந்த உண்மையினை
*குழல்வழி நின்ற தியாழே யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு N
。
கூடிநின் றிசைத்த தாமந்திகை'
எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதைச் செய்யுள் அறிவிக் கின்றது.

Page 20
3.96 ஆத்ம் ஜோதி
பழந்தமிழ் நாட்டிற் பாணர், பறையர், துடியர், கடம் பர் என்ற நாற்குடி மக்களே வாழ்ந்து வந்தனர். இவருட் பாணரும் பறையருந் துடியரும் இசைக்கருவி வாசித்து அத னல் வரும் ஊதியங்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இந்த உண்மையினை 'பாணன், பறையன்,துடியன், கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை' என்ற பழந்தமிழ்ச் செய் யுள் நமக்கு எடுத்து விளக்குகிறது. பறையினை முழக்குவோன் பறையன், துடியினை முழக்குவோன் துடியன், யாழினை இசைப் " போன் பாணன்,
தமிழ் மக்கள் தாம் வாழும் நிலப்பரப்பினைக் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலையென ஐந்து பகுதிகளாகப் பகுத்து உள்ளனர். இந்த ஐந்திணைக்கும் உரியனவாக முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என முப்பொருள் கூறுகின்றனர். கருப்பொருள், உள்ளேயாழும், பண்ணும் அமைகின்றன. குறிஞ்சிக்குரிய யாழ் குறிஞ்சி, அதற்குரிய பண்ணுங் குறிஞ்சியே. பாலைக்குரிய யாழ் பாலே, பண்ணும் பாலையே, முல்லை நிலத்துக்குரிய யாழ் முல்லை. அந்த நிலத்துக் குரிய பண்சாதாரி. நெய்தல் நில யாழ் நெய்தல். அதற்குரிய பண் செவ்வழி. மருத நில யாழ் மருதம். பண்ணும் மருதமே
யாகும்.
இந்த இயலுள் இசையும், இசை எழுப்பும் யாழ்க் கருவி யும் தெய்வமாகப் போற்றப்பட்டன என ஆசிரியர் பல திறப் பட்ட எடுத்துக் காட்டுக்கள் மூலம் நிலை நாட்டுகிருர், யாழுக்
குரிய தெய்வம் மாதங்கி. மூத்த பிள்ளையாரைக் குறிக்கும்
பிரணவ ஒசை உழையிற் தோன்றிற்று. கண்ணன் ஒசை குழ
லில் உதித்தது. ‘ஓசை ஒலியெலாம் ஆணுய் நீயே" என்ற திரு
ஞானசம்பந்தர் திருவாக்குச் சிவபெருமான் இசைவடிவினர்
என்பதைக் குறிக்கிறது என்றெல்லாம் ஆசிரியர் எடுத்துக் காட்டும் உதாரணங்கள் அவரது திட்ப நுட்பங்களை நமக்கு இனிது விளக்குகின்றன. இங்ங்னமாகவும் ஆசிரியரோ ‘ஐயி ரண்டாண்டுகளாக நேரங் கிடைக்கும் நேரமெல்லாம் முயன்று குருவருளினுலும், தமிழ்த் தெய்வத்தின் கடைக்கண் நோக்" கத்தினுலும் இவ்வாராய்ச்சி நூலே ஒருவாறு எழுதி முடித் தேன்’ என்கிருர். இந்த இசைத் தமிழ் நூலைக் கரிசனையாகக்
கற்றுணர வேண்டியது தமிழ் மக்களது கடனுகும்.
 
 
 

ஆத்மஜோதி 397.
கலை வாய்மையார் கண்ட கயிலை
(வித்து வாட்டி -சாந்தா, வைத்தியநாதன்)
ந்தியாவின் இயற்கை அரணுக வடதிசைக்கண் கிழக்கு மேற்காக ஏறக்குறைய இரண்டாயிரம் கல்பரந்து விளங்குவது இமயமால்வரை . இமம் என்பதற்குப் பணி என்பது பொருள். அளக்கலாகா அளவும் பொருளும்,துளக் கலாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் இதன் வண்மையை நோக்கியே, நன்றிமறவா நற்றமிழ்ப் புலவர் பெருமக்கள் தன்னைப்புரந்து வந்த புரவலனை 'வடதிசை இமயம் போல் மன்னுக பெரும' என வாயார வாழ்த்தி னர் இத்தகைய இமயம் வாலாற்றுக் சிறப்பு, புராணச் சிறப்பு, சமயச் சிறப்புகளைப் பொருந்தித் திகழ்கின்றது.
உலகின் பழமையினை அறியும் வரலாற்று வல்லுநகர் களுக்கு இமயம் வற்ரு வளச் சுரங்கமாக விளங்குகின்றது. பர்வதராஜன் எனப்படும், இமயத்தரசன் மகளாகிய பார் வதியை, சிவபெருமான் மணந்தது சைவ சமயத்திற்கும் இமயத்திற்கும், உள்ள தொடர்பை உறுதிப் படுத்தி, புரர ணச் சிறப்புடன் இலங்குகின்றது. மேலும் இமயம் சைவர்க ளின் திருத்தலமான திருக் கைலையும் வைணவர்களின் திருத் தலமான பத்திரிநாத்தையும் தன்னுட் கொண்டு இந்தியா வின் இருபெரும் சமயங்களான, சைவத்தையும், வைண வத்தையும் இணைக்கும் சமாதானப் பாலமாக ஒளிர்கின்றது.
பொன்னிற மேனியிலே வெ ண்ணிறு புனைந்ததைப் போன்று ஒளிரும் அப்பனி மாமலையின் உயர்ந்த முடியே திருக்கயிலை யாகும். அம்மலை அன்பர்க்கு எளிவந்து அல்லா தார்க்கு அறிய ஒண்ணு எம்பெருமானகிய சிவபெருமான் அருளர சோச்சும் பெற்றிவாய்ந்தது. அண்ணல் வீற்றிருப் * பதனல் மூன்றுலகங்களும், நான்கு வேதங்களும் செய்த தவப்பயனும், புண்ணியத்தின் திருவுரு திரண்டது போன்று விளங்குவது. எண்ணில்பல் தலங்களாகியதளிர்களைக் கொண்ட உலகமாகிய கொடியினிலே தோன்றிய வெண்மலர் போன்று
இலங்குகின்றது. N th 鷲
எம்பெருமானின் திருவோலக்கக் காட்சியினைக் காணி வந்த நான்முகன் தனது ஊர்தியாகிய அன்னத்தைப் புறத்
-

Page 21
,”
398 ஆத்ம ஜோதி
தே நிறுத்தி உட்புகுந்தான். தரிசிக்க உரிய காலமல்லாத காரணத்தால் மலரோன் மீளும்பொழுது, திருக்கயிலையின் தூயவெண்மையிலே அன்னத்தின் வெண்மையும் இரண்டறக் கலந்திருந்ததனுல் மயக்கமடைந்தான். அத்தகைய வெண் னிறப் பொலிவுடன் காட்சி அளிப்பது திருக்கயிலை, சேக்கி ழார் "செய்ய் கோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயி லாய நீள் சிலம்பு’ என நன்றிமறவா மனத்தினனப்ச் சுட்டு கின்ருர்,
சீர்மைமிக்க இவ்விமயத்தைப் பேரிமயம், சிற்றிமயம், எல்லைகடந்த இமயம் எனப் பிரித்துள்ளார்கள். பேரிமயத் தில், திருக் கேதாரம், அநேகதங்காவதம் (கெளரீகுண்டம்) பத்ரீகாச்ரமம், தங்கோத்ரீ, யமுனேத்ரீ, அமரநாதம், பசு பதிநாதம் என்னும் புண்ணியத் தலங்கள் உள்ளன. எல்லை கடந்த இமயத்திலே ஒளிர்வதுதான் திருக்கயிலாயம்.
இது திபெத்து நாட்டின் எல்லையில், வெண்பனி உறை -
வினுல் சூழப்பெற்று, கடல் மட்டத்திற்கு மேல் 22,028 அடி உயரமும், 32 மைல் சுற்றளவும் கொண்டது. எப்பொரு ளையும், அம்மையும், அப்பனுமாய்க் காணும் மரபு கொண்ட நமது முன்னுேர், திருக்கயிலையைச் சிவனுகவும், மானஸ் ரோவர நீர்நிலையைச் சக்தியாகவும் கண்டார்கள். இவ்வி ரண்டினையும் கெளரி சங்கர் என்று அழைப்பர்.
அழித்தலைத் தனது தொழிலாகக் கொண்ட சிவபிரான் உறையும் இம் மலையை நொடித்தான் மலை எனக் கூறுவர். நொடித்தல் என்ற சொல்லுக்கு அழித்தல் என்பது பொ ருள். சுந்தர மூர்த்தி சுவாமிகள் தனது திருப்பதிகங்களில் 'நொடித்தான் மலை உத்தமனே' என நெக்குருகிப் போற்று கின்ருர்,
விண்ணுேரும் அணுகுதற்கரிய இத்தகைய திருக்கயிலை
யைக் காணும் அவா, திருக்காளத்தியில் இறைவனை இறைஞ்சும் பொழுது கலை வாய்மைக் காவலராகிய திரு நாவுக்கரசுப் பெருமானின் திருவுள்ளத்திலே எழுந்தது. அவர் காளத்தி மலைக் கொழுந்தைக் கயிலாயத்து உச்சி ள்ளரன் காளத்தியான் என்றே போற்றியுள்ளார். கயி (நாதனைக் காண வேண்டும் என்ற காதல் மீதூர, 'காடும் மலேயும் கடந்து வடதிசைக் கண் திருப் பருப் பதம் என்னும் தெய்வத் தலத்தைப் பணிந்து பாமாலை சாற்றி
W
தெலுங்கு, கன்னடம், மாளவம், இலாட தேசம், மத்திம
 
 
 
 

ஆத்மஜோதி 399.
பைரவம், முதலிய நாடுகளே அகன்று வாரணுசியைவிடுப் பினுடன் பணிந்து மானுடர் நண்ணுதற்கரிய திருக்கயிலா யப் பெருநெறியிலே செல்லலுற்ருர்,
அவ்வமயம் தீங்கிழைக்கும் தீயவிலங்குகள் ஒதுங்கி வழி
விட்டன. நஞ்சு காலும் நாகங்கள் தங்கள் பணத்திலே
மாணிக்கக் கற்களே விளக்காக எடுத்தன. ஆஊண் உறக்கத் தை நீத்து ஒன்றிய சிந்தையராய் நாவுக்கரசர் நீள் சுரத் திலே நடக்கலுற்றர். பரற் கற்களினிடை நடந்து நடந்து கால்கள் தேய்ந்தன. நரம்புகள் வெளிப்பட, குருதி சோர உடல் தளர்ந்தும் தளராத உள்ளத்தினராய் இறைவனேக் காண வேண்டும் என்ற ஆவல் மீதூர மேலும் ஏறுகின் ருர், கை கால்கள் செயலற்றன. சலிக்கவில்லை. மார்பி ஞல் தவழ்ந்து ஏறினர். மார்பின் எலும்புகள் முறிந்தன. குருதி பெருக்கெடுத் தோடியது. தன்நிலை மறந்தார். தமி ழாளியார் இளைப்பாறும் பொருட்டு ஓரிடத்தில் தங்கினூர்.
திருநாவுக்கரசர் மீண்டும் தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்கள் பாட வேண்டும். அதற்குள் தன்னிடம் அழைத் துக் கொள்ளுதல் கூடாது என்று திருவுளம் பற்றிய தீ வண்ணன் ஓர் பொய்கை யொன்றைப் படைத்து, முனிவர் வேடம் தாங்கி அங்கு தோன்றினர். பின்பு வாகீசரை ‘உறுப்புகளின் நலனழிய இந்த வெங்கானகத்திற்கு வந் துற்றதென்’ என வினவினர். முனிவரைக் கண்டு சிறிது நீங்கிய மருள் நீக்கியார் வண்டுவாங்குழல் மலைமகளுடன் வடகயிலையில் மேவியிருக்கும் அண்டர் நாயகரைக் கும்பிடும் விருப்பொடு தான் வருவதாக இயம்பினர். அது கேட்ட அங்களுளர், கயிலை மால்வரை காசினியிலுள்ளோர் நெருங் குதற்கரிதாகையால் மீள்வதே சாலச் சிறந்தது என்று கூற "என்னை ஆளும் நாயகன் கயிலையிலிருக்கை கண்டல்லாமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என மறுத்தார் மருள் நீக்கியார்.
அப்பரது ஒப்பற்ற உறுதியினைச் சோதித்த சோதிவா னவன் விசும்பிடைக் கலந்து நாவுக்கரசனே எழுந்திரு' என்று அசரீரியாய்க் கூற தாண்டக வேந்தரும் தீங்கு நீங் கிய யாக்கையைப் பெற்று எழுந்தார். எழுந்து
*அண்ணலே! என ஆண்டுகொண் டருளிய .ol dp )3بو விண்ணிலே மறிைந் தருள்புரி வேதநா யகனே! *

Page 22
தண்ணி நீெேதாழ நயந்தருள்புரி
ஆத்மஜோதி
ീൈ ணுல்திருக் கயிலையில் இருந்தநின் கோலம்
என இறைஞ்சி நிற்கும் அடிகளை நோக்கி ஆண்டவன் “இப் பொய்கையில் மூழ்கி ஐயாற்றில் கயிலைக் காட்சியைக் காண்க 6:னப் பணித் தார்.
இறைவனது ஆணையைச் சிரமேற் கொண்ட வாகீசப் பெருந்தகை, பொய்கையில் அஞ்செழுத்தேன தி மூழ்கி, திரு * யாற்றில் உலகெலாம் வியப்ப எழுந்தார். அப்பதியில்
துபனவும், சரிப்பனவுமாகிய எல்லா உயிர்களும் சிவசக்தி பாய்த் துணையொடும் பொலியக் கண்டார். ஐயாற்றுத்திருக்
கோயில் கயிலை மால் வரையாய்க் காட்சி அளித்தது.
மால், அயன் இந்திரன் முதல் முப்பது முக்கோடி தேவர்
கள், இருமருங்கும் இறைவனைப் போற்றி நின்றனர். வேத
ஒலி முழங்கியது. அசுரர், சித்தர், விச்சாதரர், இயக்கர் முத லானேர் எம்பெருமானைச் சூழ்ந்து நின்றனர். வாள்விழி அரம் பையர் கீதமிசைத்தனர். பூத, வேதாளங்கள் பூமி நாயகன்
புகழ் பாடின. இறைவன் திருவுலா வரும், திருமாலாகிய
எருது இரண்டாவது வெள்ளிமலையோ என முன் நின்றது. நந்தி பெருமானுக்கும் சிவபிரானுக்கும் இடையே நாவுக்கர
சர் நின்றர்.
ఫ్రో
8. Prirateco es
வெற்பின்மேல் மரகதக் கொடியுடன்
விளங்கும் தெள்ளு பேரொளிப் பவள வெற் பென இடப் பாகம் கொள்ளு மா402ல யாளுடன் கூடவீற் றிருந்த வள்ள லா ரைமுன் கண்ட .
fo கின் மன்னவஞர் ஆடினர், பாடினுர் அழுதார். கயிலை சி மறைந்தது. மனம் வருந்திய கலை வாய்மைக் காவலர் "ம் எம்பெருமான் செயல் எனத் தெளிந்து தாம் கண்ட களை “ம்ாதர் பிறைக் கண்ணி யானை' என்ற திருப் கில் அமைத்துப் பாடினர். இப்பழம் பெரும் பதியே
லாயம்' என வழங்கப்படுகிறது. ஐயாற்றில் அப் காட்சியைக் கண்ட நாள் ஆடி அமாவாசை
%N
| || Y. FAG,
و من لديها " .
*
0%;
 
 
 
 

வன்றெண்டர் பொன்ன டிக்கே
| டு மிலக்கண்ணன்)
X- Y Y
முன் வின் ) பித்தா! பேயா!! என முனியும்; வன்றெண் டர் சுந்தரனே; வாழ்த்தி வணங்குதுமே
ܬ ܬ ܥܳ.
பொன் செய்ய மேனிப் புண் ணியனப் போற்றி! செய்து
ரெ என்ம லே ரு, ட்டிக் தொழுதழுத சுந்தரனே, நன்ம நாவலூர் : நல்குமா
ரொன் மணினே வைத் துடுமணி யைப் போற்றுதுமே!
ХW ХW ХW)
அடியாற் கடியான் ஆவலாய்ப் பெம்மன்; முன், பிடிவாதங் காட்டிப் பேசும் ) ருரானே :
டிவாத : י (י" ויים" வடிவான மணக்கோல வன்றெண்டர் சுந்தரனே,
அடிபரவி, அஞ்சலித்து, அன்புமலர் சூட்டுதுமே!
ܥܳܔ ܬ ܬܔ
பொற்குவையும், நெற்குவையும், புகட்குவையும்
பெற்ரு
சற்குருவை, ஆரூரிற் சைவ சிகா மணியை;
SStTtt ttSSSS S S ttttt LLTT tTt TT TTTT T SS S பொற்பிளியைப் பெற்றனப் போற்றி வணங்குத
Ү. Ү )х
ாே மான் முேழப் திருவடிவைப் போ:
அரு ந், அருட்பதிகம் ஒதுகவே !
ஆ , வ செய்து அர்ச்சனே" "
- . ' | ர | ல | யும் அருட்குருவும் தாகிைச் . பின் மா வந்தமாய்த் தெளிந்தசிவ தத்துவனின்,
W

Page 23
"Z9-8-t, (uoÁ2O) eÁJdeti od, N uueÄe Nunoeuuv 'ue
率 t
"ѣтллпдsпsш4 - O) ੭। ( | Տ) 2 Վ (ՆՔ9ց Inաշար է: Լ(192(19ց: JISÉ Egz. I 19à, sữnggé Igg til 门 009[] ' ܂ ܢ ܠഥn
'GETLLഴ♔ C
ASSSS S M 0 S OOO T S L | * (1966 fropoli, i * gл4ер попур фил
H. I hig i G Fl6-09 Lisp Pegg og i 1999 foгли по Нил9)(6 ногти по
01டிற14 : ஏஇழ011 கிருஸ் கிழிா99ரு
τ-σιας Εg) αι τη μη μπΠ Εμ σε
αθ μπροσπερφήπο 19φ μΓι (* 19911(19ფეცნვ "ѣллуппasп9шчі - а
டிருகுடிere) ஐழழகி"ே mo95 L. шш4:g) шпілI(69і6г бо9 г910ї g96ў 1 це је у се и је 19. до 1.9, p. г. (в. 1.
ஐெபிடுகழா
00-9 (4) 1յrn 9 նա 1 ն SZー
ー gび一Z (1ց9Ք Լյն 14 , Քց)) | - g9— (ш974/109шгt98 улшгt9ар)
0s- (டித இயகி திராகுரா ) ് SZ @@
09-1 (U੭f L)
f
SC– 冥三 szーI J(90) | Ա9%9ԵnԱ91ւ99 In
 

*:-
ny, N նյA ճզ poկտիգո
* gegn:celgeS
ggle - (gng 16 గన్స్గా m&gin]
se sa
ਫ99 Ғgіaіta peoployi 二三
ஒெருசி 193 குழுது ஜம ('A ML ':[11ng)||9|| -
חשודשg9-199תft9 107qf Un R9 °C 99* ਓl67੭ ੬੭ gயerff) 19றயா919க்கு
2) HU9 nJUG ஒழுகுகுடிமருது எஒDாழ
எே ரெகுஓவியருகு ஏற
1960 1916 ப99டுருபாகு ஏடு
ΠΠη (92 ξύ Ֆաե39ցight
gidog Fஐ ஒஒோ99ருரனே ழ எர்வி வேடிகுழு மறகு அருமை ー@子○リ エーテI エリ
பூn 9 டிசன்
5gilсо цgфар) ол*шчі сл
(: , մո- րայ Ցն: f9199 )ം 199 Fros F Fítos (u92 LJOI. yo.Q9O1EI (Gs{ ա9 95 գ ն n աՑ Քո։
*團f 要*重*