கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.12.16

Page 1
மாணிக்கவாச * திருப்பெருந்துறையி,
*
 
 
 
 

கப் பெருமான் லுள்ள மூலப்படிமம்

Page 2
'
бутиит/лтw (ஒர் ஆத்மீக மாத
స్థథN%గ్గిస్త్ర%A%N%N%NANANANANWNy
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
- க த்தானந் தர்.
வெளியிடு
(), is .2
ஜோதி 15 | சுபகிருதுளுல மார் கழி மீ" 1உ (16-12-62)
பொருளடக்கம்
1 திருவாசகத் தேன் 41 2 திருவாசகத்தில் நாய் 43 3 வாசகமும் வாழ்க்கையும் 47 4 மணிவாசகனுர் 5. 5 அம்மையே அப்பா 58 6 சிதம்பர மகிமை 63 7 யோகத் தெளிவு 66 8 ஈஸா வாஸ்ய உபநிஷத சாரம் 70 9 சித்த சோதனை 71. 10 ஈசா வாஸ்ய உபநிஷத சாரம் (தொடர்ச்சி 74 11 உண்மை இன்பம் 79
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூ. 7500 வருடச் சந்தா ரூ.3-00
- தனிப்பிரதி சதம் 30.
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா * ஆத்மஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி (சிலோன்ே) தொலைபேசி எண்: 353.
 
 
 

ருவாசகத் தேன்!
அன்பால் மேனி புளகமுறும்;
அரும்பு விழிகள் புனல் சொரியும்; என்பும் நெக்கு நெக்குவிடும்;
இதயக் கனகல் நெகிழ்ந்துருகும்; துன்பச் சுமைகள் பறந்தோடும் ;
ஜோதி இன்பச் சுடர் பொலியும், பண்புத் திருவ சகத்தேனைப்
பருகக் கிடைத்த பக்தருக்கே!
ܬܬ
பாவச் சுமைகள் நீறுபடும்;
பந்தப் பிறவிப் பிணியகலும்;
கோபக் காமக் குரோதமெனும்
கொடிய பகைவர் கொட்டமறும்;
ஆர்வக் கனல்தான் பொங்கியெழும்,
அகக்கண் திறக்கும், அருள்பெருகும்;
தீபச் சுடர்நெஞ் சகத்தொளிரும்
திருவா சகத்தேன் உண்டவர்க்கே!

Page 3
/לו לל
2 ' ' } ',
த்மஜோதி
ஊனே உருககும், தோய்ந்தவர் உள்
ளொளியைப் பெருக்கும், ஆனந்தத்
தேனச் சொரியும், உண்ண உண்ணத்
தெவிட்டா திணிக்கும், திருவருள் மெய்ஞ்
ஞானம் துலக்கும் , என்றென்றும்
நம்மை வளர்க்கும் நன்நெஞ்சே!
மாணத் திருவா சகத்தேனே வாரி வாரி உண்ணுகநி!
பல்லா யிர40ா யிரமாண்டு
பகர்ந்தும் மறைகள் பகரவொன எல்லே கடந்த பரம்பொருளே
எளிலாய் இதயத் தினிதுனர்த்தும், வல்ல திருவா சகத்தேனின்
மகிமை யுரைக்க வசமாமோ? - அல்லற் பிணியிற் கிடந்துழலும்
நெஞ்சே, அஞ்சேல், அருந்துகநீ!
வாத வூரிற் பிறந்தபிரான், .  ܼ ܼ ܼ மதுரை யமைச்சாய்த் திகழ்ந்த பிரான், கோ தில் லாத பெருந்துறையிற்
குருந்திற் குருவைக் கண்டபிரான்
கடவுட் கழலிற் பொழிந்திட்ட தீதில் மணிவா சகத்தேனேச்
சிந்தை மடுத்துய்ந் திடுமனமே!
'பரமஹம்ஸதாசன்'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத் "శో 43 על רקע של
திருவாசகத்தில் நாய்
(ஆசிரியர்)
நாய் நன்றி உள்ள மிருகம் என்பதுஎம்முன்னுேரால்ஒப்புக் கொண்டுள்ள முடிபாகும். புதிய ஆராய்ச்சியாளர் சிலர் நாய் நன்றியற்றது என்ற முடிபுக்கு வந்துள்ளனர். நாங்கள் எல்லோரும் நாய் நன்றியுள்ள மிருகம் என்று தான் படித் துள்ளோம். நன்றி மறந்தவர்களை நன்றி கெட்ட நாயே’ என்று இன்றும் ஏசுவதைக் கேட்டுள்ளோம். ஆத லா ல் நாய்க்கு நன்றியிருக்கிறது என்பது புலப்படுகின்றது. மணி வாசகப் பெருமானுர் தமது திருவாசகத்தில் நாயை அறுபத் தேழு இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.
தம்மை இழித்துக் கூறும் பொருட்டு அடிகள் நாய் என்ற சொல்லைப் பலவிடங்களில் வழங்கியிருக்கின்றனர். தம்மை மிக இழிவு படுத்திக் கூறுவது பெரியோர்கள் இயல்பும் மர புமாகும். தம்மை உயர்த்திக் கூறுவது கீழோரின் தன்மை யாகும். ‘நாயிற் கடையாம் நாயேனை செய்வதறியாச் சிறுநாயேன், ஊர்நாயிற் கடையானேன்; நாணமில்லா நாயி னேன் முதலிய பல சொற்ருெடர்களில் அச் சொல் வந் துள்ளமையைத் திருவாசகத்திற் பரக்கக் காணலாம். இன் னும் 'நாயேன், நாயனையேன்” என்றும் 'நாயினுங் கடை யேன்” என்றும் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பொருள்க ளில் நாய் என்ற சொல்லை எடுத்தாண்டுள்ளார்கள்.
பெரியோர்கள் பெரும்பாலும் மற்றவர்க ளிடத்தில் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழிகுணங்களைத் தம்பால் ஏற்றிக் கூறுவர். அதனல் நாயினுங் கடையேன்” என்று கூறுங்கால், நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் சில நல்ல குணங்கள் மக்களிடத்தில் இல்லை என்று பொரு ளாகும். நாயினிடத்துள்ள இயல்பான நல்ல குணங்கள்:-
தன்தலைவனைப்போலவேபல்லாயிரம்மனிதர்ஆடை முதலியவ
ற்றைப் புனைந்து கொண்டு வரினும் சிறிதும் ஐயுருது விரை
ந்து அவனை அறிந்து கொள்ளும் இயல்புடைமை. ஒரு பிடி சோறு ஒருகாலத்தில் ஒருமுறை ஒருவன் உதவிஞணு யின் அவனைத் தன் வாழ்நாள் உள்ள வரையும் நினை விற் பதித்து வைத்திருத்தலுடன் அவனை எங்கேனும் கா

Page 4
44
னின் தான் எத்துணைத் துன்ப நிலையிலிருப்பினும் அதனேச் சிறிதும் பொருட்படுத்தாது தன் வாலைக் குழைத்து இன் முகங்காட்டல் முதலியவற்ருல் தன் நன்றி அறிவை அவ னுக்குக் காட்டல்.
தன் தலைவன் ஒரு பணியின் கண் தன்னை ஏவினையின் அப்பணி தன்னுற் செய்தற்கரிதாயினும் அதிற் செல்லின் அதன் உயிர்க்கு ஈறு நேருமாயினும் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாது அப் பணியிற் செல்லுதல். இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு.
மேற்கூறிய மூன்றுபண்புகளும் பல மக்களிடத்தில் இல்லை
என்பதைக் கண்ணுற்றே மணிவாசகப் பெருமானார் நாயி னுங் தடையேன் எனக் கூறினர். மக்களிற் சிலர் தலைவன் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சியே யின்றித் திரிகின்ற னர். சிலர் பொருள் முதலியவற்ருற் சிறிது சிறந்த ஒரு சில மக்களையே தலைவராகக் கருதித் தடுமாறுகின்றனர். சிலர் இறைமைக் குணங்கள் இலராயினரைத் தலைவர் எனத் திரிபுணர்ச்சி கொண்டு திரிகின்றனர். சிலர் தலைவன் ஒரு வன் இருக்கலாம்; ஆனல் அவன் இவன்தானெனத் துணி ந்து கூற இயலாது என்பர். மற்ருெரு சிலர் இன்ன இன்ன
லக்கணம் உடையவன் தலைவனுவான் என அறிந்து வைத் தும் அதற்கு மாறுபட வாழ்கின்றனர். இங்ங்ணம் மக்கள் தம் தலைவனை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாது தலை தடு மாறுகின்ருர்களாதலின் தன் தலைவனை நன்குணர்ந்து கொள் ளும் நாயினுங் கடையராயினர். -
இறைவன் இருட்டறையில் குருட்டுச் சேய்போல் கிடந் துழன்ற உயிர்களைத் தன்பெருங் கருணையால் எடுத்து, உடல், கரணம், உலகம் முதலியவற்றை உதவி அவ்வுயிர் கள் நிலைத்தற் பொருட்டு ஒன்ரு யும் பொருள்களை அறி யும்படி அறிவித்தற் பொருட்டு வேரு யும் நின்றருளும் தலை வனது கைம்மாறில்லாத நன்றியைப் பெரும்பான்மையான மக்கள் மறந்தார்களாதலின் அவர்கள் ஒருபொழுது உணவு கொடுத்தவனைத் தன்னுயிர் உள்ள அளவும் நினைத்துப்பா ராட்டும் நாயினுங் கடையராயினர்.
உயிர்களுக்குப் பொது வகையாக உதவியதன்றியும் மக்களுக்குச் சிறப்பு வகையில், தன் திருவருள் பெற்ற பெரி யார் பலர் வாயிலாகப் பல அற நூல்களையும் அறிவு நூல்
 
 
 

கள் பலவற்றையும் அளித்தருளினர். இறைவனது இப்பெ ருங் கருணையை மறந்து அந்நூல்களைக் கல்லாதும் அதன்
படி ஒழுகாதும் அவற்றைக் கண்ணெடுத்துப் பாராதும்
வாழ்கின்றனர்.
- நாயின் தலைவன் அதற்கு இடும்பணியின் பயன் தன் னதாதலேயும் உயிர்களின் தலைவன் அவைகளுக்கு இடும்பணி யின் பயன் அவற்றிற்கே உரியதா தலையும் உய்த்துனரின் நாயினும் மக்கள் எத்துணைக் கடையராவர்.
தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமுமின் றித் தனக்கு எத் துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட்டடுத் தாது அத் துன்பம் தன்னுட லின் கண்ணதாயிருக்கும் போழ்தும் தன் வாலேக் குழைத்து அவனுக்குத் தன் நன்றி அறிவைக் காட்டுதல் ஆகும். கட
வுள் நம்பிக்கையுடையராய்ச் சிறிது அன்பினையும் மேற்
கொண்ட மக்களிற் பெரும்பாலோர் கமக்குத் துன்பம் நேர்ந்துழி அதுதாம் முன்செய்த தீவினை காரணமாக வந்
தது என அறிந்து வைத்தும் பாழுங் கடவுளே, நீதியற்ற கடவுளே’ என்று கூறுவதைக் காண்கிருேம். இதனுல் மக்
கள் நாயினுங் கடையராகின்றனர்.
நாயினிடம் செயலுக்குக் காரணம் காணும் இயல்பு உண்டு. மக்களிற் பெரும்பாலோரிடம் அஃது இல்லை. இல் லாதது மட்டுமில்லை. திரிபாகக் காணுதலையும் அறிகின் ருேம், ஒரு நாயை ஒரு இளைஞன் மறைவில் நின்று கல் லால் அடிக்கிறன். தன்மீது பட்டதும் தனக்குத் துன்பம் செய்தது கல். ஆனல் எந்த நாயும் அந்தக் கல்லைக் கடிப்பதில்லை. அடித்தவனைக் கண்டால் அவன் மேலே வீழ் ந்து கடிக்கும். இன்றேல் வாளா போய்விடும்.
மக்களுள் யாருக்கேனும் ஓர் துன்பம் வந்தால் அதற்கு மூல காரணம் தாம் முன் செய்த வினையென்று அறியா தது மட்டுமன்று, அவ்வினையினுற் செலுத்தப்பட்டு துன் பம் செய்தவர்களிடம் பகைமை பூண்டு அவர்களைத் துன் புறுத்தக் காண்கிருேம். எனவே நாயின் மேல்பட்ட கல்
லைப்போன்று துன்புறுத்தியவர்களே காரணமாக உள்ளவர்
கள் என்று தவருகக் கருதுகின்ற மக்களைவிட உண்மை யான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்து ணேச் சிறந்தது. மக்களின் அத் தவருண செயலேக் குறிக்

Page 5
கத்தான் எய்தவ னிருக்க அம்பை நோவது என்ற பழமொ ழியும் வழங்குவதாயிற்று.
மேற்காட்டிய பலநற் குணங்களையுடைய நாயினிடத்து ஒரு இழிகுணங் காணப்படுகின்றது. அதாவது தான் வயிறு நிறைய உண்டு தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும் அரு வருப்பில்லாமல் புதியதாகவே நினைத்து உண்ணுதல் மக்க ளும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப் பும் அருவருப்புமில்லாமல் நுகர்கின்றனர். 鱷
மற்ருெரு இழிகுணம் குறிக்கோளில்லாது அலைதல். அது மக்களிடத்தும் காணப்படுவது. இத் தன்மையால் மக்க ள் நாய்க்கு ஒப்பிடப் படுகின்ருர்களாதலின் மணிவாசகப் பெருமான் இதனை நினைந்தே நாயைப் பற்றிப் பல இடங்க ளில் எடுத்தாண்டுள்ளார்.
திருக்கோணமலைத் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்
டிெ மகா கும்பாபிஷேகம் 1963 ஏப்ரில் 3ந் திகதி நடைபெற இருக்கிறது. குறைக் கட்டிடம் முடிப்பதற்கு
பத்தாயிரம் ரூபா வரையும் கும்பாபிஷேகத்திற்கு இருபதி
ஞயிரம் ரூபா வரையும் தேவைப்படுகின்றது. பாடல் பெற்ற இத் திருத்தலத்தின் புனருத்தாரணத்திற்காக அன் பர்கள் யாவரிடமும் பண் உதவியை எதிர்பார்க்கிருேம். எந்த ஒரு சிறு உதவியும் ஏற்றுக் கொள்ளப்பெறும். பணிக்கு அனுப்பப் படும் நன்கொடை யாவும் ஏற்றுக் கொண்டு பற்றுச் சீட்டுகள் கொடுப்பவர்
திரு. சி. ஆறுமுகநாதன் தபால் பெட்டி இல. 9,
Wo திருக்கோணமலை
 
 
 
 
 
 
 
 

செகமும், ழ்ெக்கையு D.
്. @u၅၈), or,၈,၈r:;tj
மலரென்பது ஏனையவற்றை யொழித்துத் தாமரையைக்
கருதுதல் போல வாசகமென்பது மணிவாசகர் தந்த திருவா
சகத்தையே கருதும். 'வாக்குன் மணி வார்த்தைக் காக்கி'
என்ருர் மணிவாசகனுர். 'மாசில் மணியின் மணி வார்த்
தை பேசி' என்றும் பிறிதுமோரிடத்தில் திருவாய் மலர்ந்
துள்ளார். சிவமணிமேல் மாணிக்கவாசக மணி பாடிய வாக்
கே மணி வாக்காகும். மனங் கரைத்து, மலங் கெடுக்கும் திருவாசக வாக்கானது நிலமிசைப் பிறக்கும் மக்கட் கெல் லாம் வான் மிசை உலகை வலிந்திய வல்லது ஆண்டவன் அருளுருக்கரந்து மனிதவுருக்கொண்டுமணிவாசகரை வலிந்து வந்து ஆட்கொண்டான். தன்னை அப்பேரடியார் பாடச் செய்து உலகம் திருவாசகம் என்னும் பெருவாசகம் பெற்று அயரா அன்பின் தன் கழல் செல ஆன்மாக்களுக்கு வழியும் வகுத்தான் ஆண்டவன்.
வாசகத்திற்கும்வாழ்க்கைக்கும் பெருந்தொடர்புஉண்டு, ஏனைய அருள் மொழிகளிலும் பார்க்கத் திருவாசகம் ஆன்ம கோடிகளுடைய வாழ்வோடு நெருங்கிப் பிணைந்திருக்கு மாற் றை எம்பெருமானுரருளிய பத்துக்களின் பெயர்களைக்கொண் டே நாமறிந்து கொள்ளலாம். இருளிடை உறங்கியிருந்த
ஆன்மா தன் விழிப்பு நிலையை ஆண்டவன் மேலேற்றி அவ
னுறங்கி ஆன்ம கோடிகட்கு அருள் செய்ய விழிப்பது போன் ற பாவனையிற் பாடப்பட்டது திருப்பள்ளி யெழுச்சி. அவன் திருமுகத்து அருள் மலரும் எழில் நகை கொண்டு ஆன்மா அவன் திருவடி தொழும் நிலை பள்ளி எழுச்சி நிலையாகும்.
ஆன்மா தெய்வம் தொழுதெழும் நிலையை - வாழ்வை ஆரம்
பிக்கும் நிலையை - திருவாத வூர்ப் பிள்ளையார் திருப்பள்ளி
எழுச்சியாக - நம்மை உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பும் நிலையாக - அமைத்துத் தந்திருக்கின்றர். இருளில் உறங்கிய
ஆன்மா இப்பொழுது உடலழுக்குக் கழுவி அவ்வாற்ருல் அவன் அருட்கடலிற் படிந்து உயிர் அழுக்காம் மல அழுக்கை யும் கழுவும் நிலை திரு வெம்பாவையாகும். இங்ஙனம் ஆன்ம கோடிகளை அருளில் முழுக மணிவாசகர் அழைப்பதனே

Page 6
K S "KI AF ":
'மலவிருளுற் றுறங்காமல் மன்னு பரி பாகரருள்
செல. முழுக வருக வெனச் செப்பறிரு வெம்பாவை'
என்ற இவ்வரிகள் சிறப்புற நமக்குக் காட்டுகின்றன. விழித் தெழுந்து தன்னைச் சுத்தி செய்த ஆன்மா உலகம் விடிவெய் தும் நேரத்தில் இயற்கைப் பொருள்களைப் புத்தெழுச்சியுட னும் புதுநோக்குடனும் பார்க்கின்றது. இயற்கைப் பொருள் களிலெல்லாம் ஆண்டவனுடைய சின் முத்திரை பதிந்திருப் பதை ஆன்மா உற்று நோக்கி அவற்றுடன் தா ன் நெருங்கி உறவாடுகின்றது. தும்பியோ ஆன்மாவிற்கு இறைவன் அரு ளொன்றையே எடுத்து ரீங்காரம் செய்வதால் திருக்கோத் தும்பியென்னும் இராச வண்டாகின்றது. பொழிலிடை வதி யும் குயிலோ, மென்தளிரும் இன் பழமும் கோதி அவன் புக ழை மிழற்றுவதால் அது பொன் வண்ணக் குயிலாகின்றது. வண்ணக் குயிலின் தண்ணிய இசை கற்பாம் பொற்பு நிறைந் த மண்டோதரியின் ஞாபகத்தை மணிவாசகர் மனத்திடை எழச் செய்கின்றது,
புலரிக் கால மாகின்றது. கலகலெனப் புள்ளினங்களும் பெண்ணினங்களும் சோலைகளிலும் நீர்க்கரைகளிலும் களிப் புறு நிலையை யெய்திப்பற்பல விளையாட்டுகளிலும் திளைக்கின் றன. இவ்விளையாட்டு வகைகளை வண்ணப் பாக்களில் பண்ண மைதி ததும்ப மணிவாசகனர் அமைத்துத் திருத்தெள்ளே ணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோணுேக்கம் என்ற பெண்களுடைய ஆடல் வகையொடு பொருத்தி விளையாட் டிடையே ஆன்மா ஈசன் அருள் பெற நேசவழி அமைக்கின் ரூர். ஆன்மாவுடைய வாழ்க்கையில் எத்தனை யெத்தனை இடர்ப்பாடுகள் குறுக்கிடுகின்றன. எத்தனை ஆசைகள் அதனை ஆட்டி அடக்கி அலைக்கின்றன. வாழ்வே போதுமென்றுஆன்மா செத்திலாப்பத்தும் வாழாப் பத்தும் பாடும் நிலையில் மாணிக் கவாசகனர் பதிகங்களை அருளுகின்றர். N
இருளிடைதான் எத்துணைத் திவ்விய ஒளி தோன்றுகி ன்றது! அலமரல் உறும் ஆன்மா எத்துணை அமைதி பெறு கின்றது! இந்த நிலையில் ஆன்மா பாடுவதாக அதிசயப் பத் தும், அற்புதப்பத்தும், அவனைக்கண்ட பத்தும் மணிவாச கர் வாயில் மலர்கின்றன. /
இடையே ஆன்மா ஆசைகள் நிறை வேருமையால் குழை வெய்து கின்றது. தான் காண விரும்பாத ஒன்றை
S.
 
 
 
 
 
 

ו ז"ן ש" "י
49
கண்டமையால் அச்சம் எய்துகின்றது. பிறவி அல்லலுக்கு மருந்து அவன் திருத்தாள் ஒன்றே ஒன்றுதான் எனத்தெளிந்து 'இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தரு ளுவதினியே’’ என்று விடாத் துடிப்புடன் அவன் ப்ாத மல ரைப் பற்றறப் பற்றுகின்றது. இன்பதுன்பங்களினுல் ஊடியும் உவந்தும் இறைவனை நோக்கி 'ஊடுவதுன்னுேடு உவப்பது முன்னே. . வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்' என்று காதல் மொழியும் பேசுகின்றது.
இப்பொழுதோ உறங்கும் நேரமாகின்றது. புள்ளினம் உறங்க இருட்கணம் புவியைக் கவ்வுகின்றது. ஆன்மா பொறி கள் ஒடுங்கி உடலை நீக்கும் நிலையை எய்துகின்றது. வேறு துணையற்ற நிலையில் தன்னை அது பரிபூரணமாக ஆண்டவனிடம்
ஒப்புக் கொடுக்கின்றது. அவன் அருளார் முகத்தை அதிகம்
வாரி வாரி உண்டமையால் அது விழி பிதுங்கி விக்கும் நிலை யெய்துகின்றது. தெள்ளிய அருள் நீரை அள்ளி அவன் தனக்கு ஊட்ட வேண்டுமென்று கெஞ்சி உடையானடித்துணையில் அடங்கி விடுகின்றது. மனிதர் யாவரும் இரவில் உறங்கும் போது, பாடி உறக்கமெய்தி இறைவனடியை மறவாதிருக்க வழி செய்வது அடைக்கலப் பத்தாகும். அவன் அடியை விட ஆன்மாவிற்கு அறுதியும் உறுதியும் தருவதுவேறென்றின்மை யால் திருவாச க தொடக்கத்திலேயே அவனடியை வாழ்த்தி வணங்கி வரும் பயனையும் உரைக்கின்ருர் மணிவாசகளுர்ை.
வாழ்வின் ஆரம்பந் தொடங்கி அதன் இறுதி வரை பற் பல படிகளையும் காட்டி அவ்வப்படிகளில் நாம் ஒதக் கூடிய பல அருட் பாடல்களையும் தந்த மணிவாசகனர் ஆன்மா சிவ லோக யாத்திரை செய்வதையும் சொல்ல மறந்திலர். இந்த யாத்திரையினிடையே வருமிடையூறுகள் தடைகள் எண்ணற் றன. இவற்றைக் கண்டு ஆன்மா வாயைப் பிளந்து தாமதித் தால் இலட்சியம் நிறைவேரு தென்று 'பின்னே நின்று பேழ்
கணித்தால் பெறுதற்கரியன் பெம்மானே' என எச்சரிப்பும்
கொடுக்கின்ருர் . அடிகளார் தடைகளாம் எதிரிப்படைகளை
அடித்துப் புடைத்துப் புற முதுகு காட்டி ஒடச் செய்யத்
தொண்டர்களே முற்படையில் செல்லுமாறு திருப்படை
யெழுச்சியில் போர் முரசறைந்து தூண்டுகின்ருர், வெல்ல லாம் என உன்னிய எதிரிகளின் வாய் மண் கவ்வச் செய்யு
மாறு 'வாயிற் பொடியட்டும்’ என்று அடியார்களுக்கு கட் டளை இடுகின்றர்.

Page 7
, ༣ " ་ , '_
YSMS Z S TTLSSSMMSSSMMSSSLES S SLL LSS S S 50 " ":" ","റ്റ"(
உலகிற்க்கு ஆன்ம ஞான குருவாய் அமைந்துள்ளது பாரத தேசம். பாரதத் தியாகச் செல்வர்களின் அருந்தொண் டால் அது சுதந்திர பீடத்தில் வீற்றிருக்கத் தொடங்கிற்று. பற்பல ஆண்டுகளாக அடிமை இருளில் உறங்கி காந்தி ஒளி யில் முழுகியமையால் அம்மென் மலராக விழித்தது. சிறப்பு றும் மலர்களைச் சில நச்சு வண்டுகளும், பூச்சிகளும், புழுக் களும் சிதைப்பதற்கு முயலுதல் வழக்கம் மஞ்சட் புழு வொன்று பஞ்சசீலக் குழுவில் உட்கார்ந்து விட்டு கஞ்சத்தன மாக மலை கடந்து உள் நுழையப்பார்க்கிறது. அரும் மலரை
மண்ணுக்கப் பார்க்கிறது. இத்தருணத்தில் மணிவாசகர்ை படையெழுச்சிப் பாக்கள் குருதியிற் கலந்து தாயின் மானம் காக்கத் தாய் நாட்டினரைத் துரண்டுவனவாகுக !
அடிகளார் திருவடி வாழ்க! அன்பு உலகை ஆளுக!
LLcS MEc SAeAS eALeS A eA A AS YS cqOeS SqTL sL స్థి;&&********? భూ
திருவ TS-95)
வாணுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோணுகி பானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வாணுகி நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே.
மேலே வானவரும் மறி யாத தோர் கோல மேயென ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பே இவை வந்துபோங் கால மேஉனே யென்றுகொல் காண்பதே.
வாழ்கின்றப் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றம் ஆழமற் காப்பான ஏத்தாதே சூழ்கின்ருய் கேடுரைக்குச் செல்கிறேன் பல்காலும் , வீழ்கின்றாய்நீ அவலக் கடலாய வெள்ளத் தே.
 
 
 
 
 

மணிவாசகனுர்
(பண்டிதர். செ. பூபாலபிள்ளை அவர்கள்)
மாதங்களுட் சிறந்தது மார்கழி மாதம். தோத்திரங்களுட் சிறந் தது திருவாசகம். திருவாசகம் என்ற சொற்ருெடருக்கு பிறிதொன்
மற்கும் இல்லாத அழகினையுடைய வாசகம் என்பது திரண்ட பொரு ளாகும். இத்திரு வாசகத்தை அருளிச் செய்தவர் மணிவாசகனுர்,
மணிவாசகனர் சைவத் திருநெறித் தலைவர் நால்வருள் முற்பட்ட வர். இவருடைய காலம் மூன்ரும் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இவருடைய நாடு பாண்டிவளநாடு. ஊர் திருவாதவூர். மரபு ஆதிசைவர் மரபு. குலம் அமாத்தியர் குலம் என்று கூறுவர். அமாத்தியர் என்ற சொல் அரசர் பக்கம் அமரும் அமைச்சரைக் குறிக்கும். இவருடைய தந்தையார் சம்புபாதாசிரியர். தாயார் சிவஞான வதியார். இவர் தமது பதினருவது வயதுள் சகல கலைகளேயுங் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார். இதனை அறிந்த அரிமர்த்தன பாண்டிய மன்னன் இவரை அழைத்துத் தனது முதன் மந்திரியாக அமர்த்தினன்.
இவர் தென்னவன் ஆட்சியைச் சீருறச் செய்தார். இந்தக் காலத் திலே அரசன் ஆணைப்படி திருப்பெருந்துறைக்குக் குதிரை வாங்கச் சென்ற முதன் மந்திரியாரை இறைவன் உருவத் திருமேனி தாங்கிக் குரு வடிவாக வந்து ஆட்கொண்டருளினன். அத் தருணம் அடிகளார் நின்ற நிலையினை
'சிரித்த முகமுங் கவின்குழலுந் தீரா அருவிக் கண்மலரும் விரித்த கரமுஞ் செபவடமும் வெண்ணுால் மார்புந் திருநீறும் தரித்த திருவா சகமொழியுஞ் சாந்த மெய்யுங் குறுவியர்வும்
அரித்த மனமும் புளகமுமாய் நின்றர் வாத வூர் முனிவர்
என்று அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிருர் திருவாதவூரடிகள் புராணம் இயற்றிய கடவுள் மாமுனிவர். அடிகளாரது திருவா சக மொ
பூழியினைக் கேட்டுவந்த சிவபெருமான் இவருக்கு மாணிக்கவாசகன் என் ஒனும் திருப்பெயரைச் சூட்டினர். இறைவனைக் குருவடிவிற் கண்டு சிவஞானம் பெற்றுச் சித்தஞ் சிவமாகப் பெற்ற வாதவூரடிகளார் அத்
திருக் காட்சியினை
தேவரு மறியாச் சிவனே காண்க கண்ணுல் ழானுங் கண்டேன் காண்க

Page 8
’ ”ं"णी".
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
ܠܗ
ሆምዖ '\?\! O
52
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனே ஆட்கொண் டருளினன் காண்க )
என்ற மணிவாசக மூலம் உலகுக் கெடுத்தோதி உவப்புறுகின்றர். என்னே இவர் புரிந்த புண்ணியத்தின் பெரும்பேறு! திருப்பெருந் துறை உற்றுக் கடமை உணர்ச்சியற்ற முதல் மந்திரியார் நிலையினை அரிமர்த்தன பாண்டியன் உடன் சென்ருேர் வாய்க் கேட்டு அறிந்து கடுஞ் சீற்றம் அடைகிமுன், உடனே மதுரைக்கு வருமாறு கண்டித் துக் கடிதம் எழுதுகிருன். இதனைக் குரு வடிவு தாங்கிய இறைவ னுக்கு மணிவாசகனுர் அறிவிக்கின்றர். இறைவன் அஞ்சற்க. ஆவணித் திங்கள் மூல நாளன்று குதிரைகள் வருமென்று அரசனுக்கு உறுதியாக அறிவிக்குக. யாம் குதிரைகளுடன் அச் சுப
தினத்தன்று அங்கு வருவோம். இந்த மணியினே அரசர்க்குப் பரிசி
லாக வழங்குக. அவன் இதனைக் கண்டதும் தான் கொண்ட சீற்றம் அடங்கி மகிழ்வுறுவன் எனத் திருவாய் மலர்ந்தருளி விலை மதித்தற் கரிய ஒர் அழகு மாணிக்கத்தை அடிகளாரிடம் ஈந்து அருள் புரிகி ருர், குருவாணைப்படி முதல் மந்திரிக் கோலத்துடன் அடிகளார் மது ரையை அடைந்து அரசனே அண்டி மகிழ்விக்கின்றர்.
சில நாட்களின் பின்பு வஞ்சகச் சூழ்ச்சியுள்ள மந்திரி ஒருவன் துர்ப் புத்தியினைக் கேட்ட மன்னன் முதல் மந்திரியாரின் கூற்றினைப் பொய்யென ஆராய்ந்தறிகிருன், அவரைத் தண்டித்துக் குதிரை வாங்கக் கொண்டு சென்ற பொன்னேப் பெறுமாறு தண்டலாளருக் குக் கட்டளை இடுகிருன் , தறுகளுளர் அடிகளாரை வருத்திச் சிறைச் சாலையில் அடைக்கின்றனர். இது கண்ட மதுரை நன்மக்கள் மனம் வருந்தினர். பின்பு தண்டலாளர் அடிகளாரை வெய்யிலில் நிறுத்தி வருத்தினர். அத்தருணம் மணிவாச கஞர் இறைவனே நோக்கி வாழாப்
பத்து, அருட்பத்து, அடைக்கலப்பத்து, குழைத்தத்து, முதலியன பாடி
னர். இவற்றைக் கேட்டருளிய இறைவன் தமது கூற்றுப்படி நரிக் ளைப் பரிகளாக்கிக் குதிரைச் சேவுகக் கோலத்துடன் மதுரை மா நக ரைக் குறுகிஞர். என்னே தென்னுடு செய்த பெருந்தவப் பயன். குதிரை வரவறிந்த அரிமர்த்தன பாண்டியன் மனமடிவுற்று மணிவா சகனரை அழைப்பித்து மன்னிப்பு வேண்டி அவருக்குரிய முதல் மந் திரிப் பதவியை உதவி, அவருடன் வீற்றிருந்து குதிரை வரவு கண்டு
பெரு மகிழ்வுற்றன். குதிரைகள் அனைத்தையும் கைமாறிப் பெற்று லாயத்துக்கு அனுப்பிஞன்.
அரசன் பெற்ற குதிரைகள் அனைத்தும் அன்றிரவே நரிகளாக மாறி நகரத்துட் புகுந்து பேரிடையூறு புரிந்தன. இத%ன அறிந்த
 
 
 
 
 

அரசன் கடுஞ்சீற்றங் கொண்டான். நச்சு நாகம்போல் அடிகளார் மீது சிறிஞன், தண்டலாளரை அழைத்தான். நரிகளைப் பரிகளாக்கும் இந்த மாயச் சரிதியை நடு வெய்யிலில் ஒரு வளைப்புக் கோட்டினுள் நிறுத்தி வருத்தி விரைவில் நமது பொன்னனைத்தையும் பெறுமின் என்று ஆவேசத்துடன் உரப்பிக் கூறிஞன். பாவம்! அங்ங்னமே அடிகளார் வைகைக் கரைக் கொதி மனலில் நிறுத்தப்பட்டார். வாடிஞர், வதங்கினர். துன்புற்றர். துன் புற்ற அவர் சிவபெருமானே நினைந்து
“பாருரு வாய பிறப்புற வேண்டும் பத்தியை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங்கமல மலர்ப்போதும் ஒருரு வாயநின் திருவருள் காட்டி என்னேயும் உய்யக்கொண்டருளே’
என்பது முதலாகவுடைய எண்ணப் பதிகங்கஃப் பாடியருளினுர், இவற்றைக் கேட்டதும் இறைவன் தனது திருச் சடா பாரத்திருந்த ஆகாய கங்கையைப் பார்த்துப் ‘பூவுலகுக்கு நீ போய் வைகையைப் பொங்கச் செய்து மதுரை மா நகருட் புகுந்து உள்ளத்தைக் குளிர்விக்குக. மதுரை மாறனுக்கும் அவன் குடிகளுக் கும் அச்சத்தை உண்டாக்குக எனக் கட்டளே இட்டருளினர். கணப் பொழுதில் வைகை கடலைப் போலப் பெருக் கெடுத்தது. செய்வது யாது என்றறியாது மதுரையுள்ளார் கவற்சி கொண்டனர். அரசன் வைகைக் கரையை விரைந்து அடைந்து பொற்பூவும் முத்தும் பொ லம் பூந்துகிலும் பூணுரமும் நல்கிப் பூசனை புரிந்து உலகுளார்க்கு உயிரனைய தாயே, உனது கடுங்கோபம் தணிந்தருள வேண்டும்' என வேண்டி இறைஞ்சி நின்றன். ஆற்றுப் பெருக்கோ குறைந்த பாடில்லை. மென்மேலும் பெருகி மலையெனத் திரைகள் உயர்ந்து எழுந்தன. அரசன் அறிஞர்களை அழைத்து வைகைப் பெருக்குக்குரிய காரணத்தை ஆராய்ந்தான். அவர்கள் அனைவரும் சிவபக்தராகிய மணிவாசகப் பெருமானை வருத்திய தீவினைப் பயனே இஃது என ஒரு மனதாக எடுத்து உரைத்தனர். அரசன் அச்சமுற்ருன் வைகைக் கரை மணல் வெய்யிலில் வளைப்புக் கோட்டுள் நின்று உடல் உருகி உளம் உருகித் திருமறை ஒதும் அந்தணுளரை அழைப்பித்தான். அவரிடம் "நீங்கள் புரிந்த புண்ணியத்தை உள்ளவாறு உணராது பொருட்பற்ருல் மயங்கி ஆணவங் கொண்டு உங்களை வருத்தியது எனது தவறு. முழுத்தவறு. பெரியோய், நீங்கள் அதனைப் பொறுத்தருள வேண்டும். வைகைப் பெருக்கைத் தணித்தருள வேண்டும்" என்றெல்லாங் கூறி குறையிர ந்து நின்றன். இவற்றை திருச்செவி மடுத்தருளிய மணிவாசகப் பெரு மான் சுந்தரப் பரிமேல் வந்த சிவபெருமானது திருவடியைத் தியா னித்து வைகைப் பெருக்கு அமருமாறு வேண்டி அவர் பதம் பணிந் தார். பணிவே வைகைப் பெருக்கு அடங்கிற்று. அதுகண்ட அர
*N? ऐ " " ,
- 53

Page 9
சின் மணிவாசகனுரையே  ைவகைக் கரையை முன்னின்று அடைத்த ருளுமாறு வேண்டிஞன். காரியதரிசிகள் உதவியுடன் அத் திருப்பணி யை மணிவாசகஞர் புரிந்தார். காரியதரிசிகள் பறைசாற்றி மதுரை மாநகருள்ளாருக்கு வைகைக் கரையைப் பிரித்துக் கொடுத்துத் துரித மாக அடைப்பித்தனர்.
அத்தருணம் செம்மனச் செல்வி என்ற ஒரு நரை மூதாட்டி தனச் குரிய கரையை அடைக்க்க் கூலியாள் இன்றி மனங் கலங்கினுள். g, TT fif) யதரிசிகள் அவளை நெருங்கி வருத்தினர். என் செய்வாள் பாவம்! அச்சுற்ற அந்தப் பரம ஏழைப்பாட்டி ஏழை பங்காளனுகிய மதுரைச் சொக்கலிங்கேசர் திருமுன்னிலையை அடைந்து நின்று
* நெட்டரவக் கச்சுடையாய் நீல நிறத் திருமாதின் வட்டமுலத் தழும்புபட வந்தனையுந் திருமார்பா கட்டியசெஞ் சடையாயுன் கண்ணருள் கொண்டெப்பொழுதும்
பிட்டினேவிற் றுண்பேர்க்குப் பேரிடும் பை உளதாமோ
தாயுமில தந்தையிலை தமருமிலத் தமியேனைப் பேயினுடன் நின்றலும் பிரித்தறிய ஒண்ணுது தீயதென திலம்பாடென் சிந்தனையில் வெந் துயர்தீர நீயருளா தொழிலுயிர் நீப்பேன் மற் றென்செய்கேன்?
என்றெல்லாங் கல்லுங் கரைந்து உருகுமாறு மட்டறத் தளர்ந்த கொங்கை மார்பினிற் கண்ணிர் வாரப் பாடி அழுது புலம்பினுள். வேண்டுவார் வேண்டுவனவற்றை வேண்ட் வெருது உதவும் சொக்க சிங்கப் பெருமான் செம்மனச் செல்வியின் புலம்பலைத் திருச்செவி மடுத்து அருள்புரியத் திருவுளங் கொண்டார்.
"ஆடையுந் துணிந்த சீரை ஆகியே கூலி யாளாய் கூடையுந் தலைமேற் கொண்டு கொட்டுடைத் தோள ராகிப் பீடைகொண் டயர்வாள் காணப் பெரும்பசி யுடையார் போல
வேடைகொண் டொல்லே வந்தார் வேண்டிய வடிவங் கொள்வார்’
வந்த அவர் ‘வேலை, வேலை, வேலை இருக்கிறதா வேலை" என்று வேண்டினர். இதனைக் கேட்டதும் வேலையாளரைப் பாட்டியார் பணி வுடன் சென்று அடைந்து பிட்டுக் கூலிக்கு மண் வேலை பொருந்திக் கொடுத்தார். -
வேலையாளர் கடமையுணர்ச்சியுடன் கரிசனையாக வேலை செய்தா ரல்லர். விளையாடிஞர். பிட்டு உருசி பார்த்தார். நெட்டலர்க் கொன்றை நீழலில் துரங்கிஞர். தூங்கிய கடமை உணர்ச்சியற்ற இவர் திருமேனியில் சோம்பலுக்குக் கூலியாகக் காரியதரிசி ஒருவனின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

55
பிரம்படி கிடைத்தது. அதனை കൂ.ഞഥ Liri, கொட்ாது தம் பாகங் கொடுத்துப் பெற்ற எம்பெருமான் துணுக்கமெய்தி மறைந்தருளினர். உலகெலாம் நிறைந்த இறைவன் மீது பட்ட அப்பிரம்படி யாவருக் கும் உறைத்தது அந்த அற்புதத்தை அறிந்து மணிவாசகர் அழு தார். அரசன் அழுதான் பாண்டிமாதேவி அழுதாள். LÐ g/ @0) IT LO f3"
நகர் அனைத்தும் ஆனந்தக் கண்ணிர் சொரிந்து அழுதது.
இறைவன் சுந்தரப் பரிமேல் வந்தும் வைகைக் கரைக்கு மண்க மந்தும் புனிதப் படுத்திய
*சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும் செளந்தர பாண்டியன் எனும்தமிழ் மாறனுள், சங்கப் பலகையுந் தழைத்தினி தோங்கும் மங்கலப் பாண்டி வள'
நாட்டையும் குருமணியாகச் சிவகனங்களுடன் எழுந்தருள் புரிந் தும் அந்தணனுக வந்து தமிழ் மறையெழுதியுந் தூய்பை செய்த சோழ வளநாட்டையும் எல்லாம் உள்ளடக்கி மரி/ாசகஞர் போற்
றித் திருவகவலுள்
*தென்னுடுடைய சிவனே போற்றி என்னுட் டவர்க்கும் இறைவா போற்றி"
இதன் பின்னர் மணிவாசகனுர் அரசினரிடம் விடைபெற்று மீண் டும் திருப்பெருந்துறையை அடைந்தார். குருமணியை வணங்கினர். சிவ கணங்களாகிய சிவனடியாரைச் சேர்ந்தார். தித்திக்கத் தித்திக் கத் திருவாசகம் பாடினர். இறைவன் இவற்றை விருப்புடன் கேட் டுத் திருவாதவூரருக்கு அருள் புரிந்து தில்லையிற் பரமுக்தி தருவதா
கத் திருவாய் மலர்ந்து சிறிது தூரஞ் சென்ருர், சென்ற அவர் தாங்
கொண்டருளிய குருவடிவத்தைக் கரந்தருளினர். இவற்றை யெல் லாங் கண்ட மணிவாசகனுர்
"அன்புடன் நோக்கி நிற்பர் அழுவர்கை தொழுவர் வீழ்வர் இன்புற எழுவர் GöITL IT லேகுவன் இரங்கி வீழ்வர் நண்பகல் கங்குல் காணுர் ஞானநல் லறிவே கொண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யாளுர்
இறைவனது ஆணேப்படி திருவாதவூரர் உத்தரகோசமங்கை திருக் கழுக்குன்றம் முதலிய பல திருப்பதிகளுக்குச் சென்று திருவாசகம் பாடிப் பாடி வழிபட்ட பின்பு தில்லைக்குச் சென்ருர், சென்று நட ராஜப் பெருமானையும் சிவகாம சுந்தரி அம்மையையும் அகத்தும் புறத்
துங் கண்டு ஆன்ந்தித்துப் பக்தி மிகுதியால்

Page 10
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதஃனத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே"
என்பது முதலிய கண்டபத்துப் பாடியருளினர். இவற்றைக்கேட்ட
அங்குள்ள சிவனடியார் 'திருவாசகத்துக்கு இணையாக ஒரு வாசகமும் இல்லே என்றெடுத்தோதி அற்புதமும் ஆனந்தமும் ஒருங்கு எய்தி GOI fi .
அங்கிருக்கும்போது ஈழவள நாட்டில் இருந்து சோழவள நாட் டுக்கு வந்த புத்த குரவரை வாதில் வென்று ஈழமன்னன் மகள் ஊமையை நீக்கியருளினர். அங்கிருக்கும்போதே அம்பலவாணர் வேதிய வடிவம் தாங்கி மங்கலப் பாண்டிவள நாட்டின் புதுமைகளை எடுத் துக் கூறி இவர் பாடியருளிய திருவாசகங்களைத் திருக்கரத்தால் எழுதி எடுத்தார். திருக்கோவையார் பாடும்படி ஏவி அதனையும் எழுதிக் கொண்டார். எழுதி எடுத்த பின்பு அந்தணுளர் மாயமாக மறைந் தருளினர். இறைவன் செயல் கண்ட மணிவாசகஞர் ஒடிஞர். அவ ரை எங்குந் தேடினர். அழுதார். தொழுதார். அலறினர். மண் மீது புரண்டார். எழுந்தார். பரமானந்தம் அடைந்தார்.
இஃது இங்ங்னமாக இறைவன் எழுதிய ஏட்டின் இறுதியில் வாத வூரன் விளம்பிட அம்பலவாணன் எழுதியது என்று எழுதி 'அழகிய சிற்றம்பலம் உடையார்' என்று திருக் கையெழுத்தும் இட்டும் பொன்
னம்பலத் திருவாயிற் படியில் அதனை நடராசர் வைத்தருளினர். இத
னைக் கண்ணுற்ற பூசகரும் ஏனையோரும் பேரானந்தம் அடைந்தனர்.
இதனை வாதவூரடிகளாருக்கு அறிவித்தனர். அவர் உவகை மெய்ப்
பாட்டுடன் கனகசபைக்கு வந்தார். அதனைக் கண்ணுற்றுத் திருவ ருளை மெச்சினர். அங்குள்ள தில்லைவாழ் அந்தணரும் ஏனையோரும் திருவாசக திருக்கோவை நுண்பொருள்களைக் கூறுமாறு அடிகளாரைப் பக்தி விநயத்தோடு வணங்கி வேண்டினர். அடிகளார் இத் தமிழ் மாலைப் பொருள் சிற்சவேசனே எனச் சுட்டிக் காட்டிபடியபடி திரு மன்றினுட் புகுந்து மறைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தருளி ர்ை. இதனைக் கண்ணுற்றேர் யாவரும் பக்தி மேலீட்டால் அற்புதம் அற்புதம் என்று கூறிச் சிரமேற் கரங்கூப்பியபடி திருவருளை மெச்சி மனம் நெக்குருகிக் கண்ணீர்மாரி பொழிந்து பரமானந்தம் அடைந் தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சைவ சமயத்தவர் யாவ ரும் அன்றுமுதல் இன்று வரையும் திருவாசகத்தேனை நுகர்ந்து இகப பத்து இன்புறுவாராயினர்.
 
 
 
 
 
 

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
is 'ே
ஆஜூஜ" ஆத்மஜோதி - 57 வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
இதுகாறுங் கூறியவற்ருல் நாங்கள் மணிவாசகரைப் போன்று
இளமையில் கற்றுப் பேரறிவடைதல் வேண்டும் என்பதும், பக்தியிற்
சிறந்து திருவருட் துணையுடன் சைவசமய ஆராய்ச்சி செய்து உண்மை அறிவடைதல் வேண்டும் என்பதும் அது காரணமாய் பற்றற்று பர முக்தி அடைய அவாவுதல் வேண்டும் என்பதும் தக்க குரரை அடைந்து உபதேசம் பெற்று அவரைத் திருவருளாக மதித்துத் துே ழவேண்டும் என்பதும் திருக்கோவில் யாத்திர்ை செய்து பிறர் புரியம் துன்பங்களைப் பொருட்படுத்தாது தமிழ் மறைகளைப் பக்தியுடன்பா வழிபடல் வேண்டுமென்பதும் கோவில் திருமடங்களில் இருந்து கட் வுளைத் தியானித்தல் நலமாகும் என்பதும் பிறமதக் கொள்கைகளை நீக்கிச் சைவ மதமும் அதன் கலாசாரமும் பாமர மக்களிடையேயும் பரவி வளர உறுதுனை புரிய வேண்டு மென்பதும் சைவ சமயத்தவர் துயர் நீக்கி அவர்கள் மத்தியிற் தலைவர்களாக மணிவாசகரைப்போல இருந்து பிரகாசிக்க ஒரு சிலராவது முயலுதல் இக்கால நமது சமூக த்துக்கு இன்றியமையாதது ஒன்று என்பதும் திருவருள் பெற்றேர் இறைவன் மீது பக்திப் பாடல்கள் இயற்றி அவன் புகழை உலகெலாம் பரப்ப வேண்டும் என்பதும் இவற்ருல் நமது சமூகம் இன்றுள்ள துன்ப நிலையில் நீங்கி இன்பம் எய்திச் சுடச் சுடரும் பொன்போலப் பிர
காசிக்கும் என்பதற்குச் சிற்றம்பலமும் சிற்ச வேசனும் மணிவாசகமும்
தக்க சான்றுகளாக இன்றும் நமது மத்தியில் உள்ளன என்பதும் நா மெலாந் தொன்மை மறவாது மதப் பற்றுடன் ஒழுகி இகபரத்து' இன்புற்று உய்ய வேண்டுமென்பதும் ஒருவாறு புலப்படுவனவாகும்.
கடமையுணர்ச்சி அற்றேர் கடவுளானுலும் கடவுட் பக்தரான
லும் தண்டிக்கப் படுவார் என்ற உண்மையை ஒளிப்பு மறைப்பின்றி
எடுத்துக் கூறும் மணிவாசகனர் வரலாறு இன்றைய நமது மக்களுக்கு
இன்றியமையாத பொன்போன்ற புத்தியினைப் புகட்டுகின்றது என்ப தற்கு ஐயமும் உண்டோ?
கறைமிட ற்றெம் பரம்போற்றி நரியரிய வரவழைத்துக் கயற்கண் மூங்கை இறைவளையைப் பேசுவித்துப் புத்தரை வென்று அம்பலத்தின்இனிதின்ஆடும் பிறைமுடித்த பிரான்எழுதக் கோவைதிரு வாசகப்பேர் பிறங்கு பாடல்
* மறைவகுத்த வாதவூர் மாணிக்க வாசகர்தாள் மனத்துள் வைப்பாம்.

Page 11
அம்மையே அப்பா!
4 (ர, பி. நாகராஜன்)
பெண்ணைப் பெற்ற பெற்றேர் நல்ல மாப்பிள்ளே ஒரு வருக்குத் தம் புதல்வியைத் தி ரு ம ன ம் செய்து வைத்து, தேவுைப்பட்ட சீர் வரிசைகளைக் கொடுத்து மாப்பிள்ளையுடன் மகளை/மறு வீட்டுக்கு அனுப்பும்போது பெண்ணைப் பெற்ற தகப்பன் மருமகனின் கையைப் பிடித்துக்கொண்டு கன்களில் நீர் கலங்க, 'மாப்பிள்ளை அவர்களே! செல்லமாக வளர்த்த பெண்ணை இன்று உங்கள் கையில் ஒப்படைத்து விட்டோம். இனிமேல் எங்கள் பெண்ணிற்கு நீங்கள் தான் தாய் தந் தை எல்லாம்' என்று சொல்லி, மனம் கலங்கி, மகள் கையை மருமகன் கையில் வைத்து நாங்கள் பெற்று வளர்த்து ஆளாக் கியிருந்தாலும் இனி தாங்கள் தான் பெண்ணிற்கு தாய் தந்தை என்று சொல்வது அன்றும் இன்றும் தொன்று தொட் டு நடந்து வரும் பழக்கம்.
'உன்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்
SLLLSSL S L S SL S LSL S SL S S S S S S L L S S S . . . பழஞ்சொல்'
(திருவெம்பாவை சைவசமயத்தை உயர்த்திய நாயன்மார்களில் படிப்போர் மனம் உருகும்படி 'திருவாசகம்' பாடிய மாணிக்கவாசக ரும் ஈசனை வழிபடும் போது நீதான் இனி எனக்குத் தாயும் தந்தையும் என்று பாடுகின்ருர்,
பெற்று வளர்த்து ஆளாக்கிப் பேரும் புகழும் பெருமள விற்குப் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வளர்த்தாலும் பிறர் ஒரு வரிடம் பிள்ளையை ஒப்புவிக்கும்போது இனிமேல் நீங்கள் தான் பிள்ளைக்கு தாய் தந்தை சகலரும் என்று சொல்லி ஒப் : புவிப்பார்கள். அதுபோல மாணிக்கவாசகரும் தன்னைப் பெற் று வளர்த்த பெற்றேர்கள் இருந்தாலும் சைவத் தொண்டு செய்யுமளவிற்குத் தன்னை ஆளாக்கிய ஈசனை தன் வாழ்வில் சகலத்தையும் இனி உனக்கே சொந்தம் என்று ஒப்புவித்த இறைவனை' எனக்குத் தாயும் தந்தையுமாக இருப்பவனே!' என்று பாடுகின்ருர்,
ஒரு பிரபல ரத்ன வியாபாரி பல வைரங்களும் நவரத் தினங்களும் பற்பல முத்துக்களும் பலவித மணிகளும் கொண்
 
 
 
 
 
 
 
 

டு வந்து ஒரு செல்வந்தன் வீட்டிலே காண்பித்து எல்லாவற் றையும் மிகையாக வர்ணித்து சகலத்தையும் ஒரே இடத்தில் விற்பனை செய்து விடலாம் என்ற நோக்கத்தோடு வந்தாலும் எல்லாவற்றையும் செல்வந்தன் வாங்குவதில்லை. தனக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றை வாங்கிக் கொண்டு பிறரிடம் தான் வாங்கிய ரத்தினத்தைக் காட்டி இதற்கு ஒப்பு உவமை கூற வேறு எதுவுமே இல்லை. தான் வாங்கிய பொருள் ஒப் பிலாத ரத்தினம் என்று வர்ணிப்பது வழக்கம். அதுபோலவே உலகுக்கு ஒருவனுய் நிற்கும் இறைவனை ஒப்பு இல்லாத மணி யே என்று பாடுகின்றர்.
'ஒப்பிலா மணியே'
குழந்தையைப்பெற்றதாய் அது கொஞ்சிப்பேசுவதைஎல் லாம் கேட்டுப் பூரிப்படைவாள். குழந்தை மழலை மொழி பேசும் போது அன்னை மெளனமாக இருந்து ரசிப்பாள். பின் அந்தக் குழந்தை மெளனமாக உறங்கும்போது அதன் பெரு மைகளை எல்லாம் சொல்லிப் பிரியமாகத் தாலாட்டுப் பாடு வாள். 'ஆராரோ - ஆரிராரோ, ஆரமுதே ஆராரோ' என் றெல்லாம் பாடிப் பாராட்டுவாள். தன் அன்பையெல்லாம் குழந்தை மேல் வைத்திருப்பாள். ஆரமுதே உன் அன்புக்கு ಟ್ವಿ??? பாடுவாள். அதபோல் மாணிக் வாசகரும் ஈசனை அன்பிற்கு உறைவிடமான கடவுளே ஆர முதே' என்று பாடுகின்ருர் .
'அன்பினில் விளைந்த ஆரமுதே'
,
ஏதாவது ஒன்றை ஊர்ஜிதம் செய்து பேசவேண்டும் என்று நினைத்தால் (ஏ) காரம் போட்டுப் பேசுவது எல் லோருக்கும் இயல்பு, ஒருபெர்ருளை ஒருவர் எனக்கு வேண் டுமென்று கேட்டால் தேவைப்படும் அளவுக்கு வைத்துக் கொண்டு பிறகு திருப்பித்தந்து விடுவார் என்று பொருள் அது எனக்(கே) வேண்டும் என்று (ஏ)காரம் போட்டுக் கேட் டால் தனக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் தென்படுகிறது. அதேபோல் ஒரு முதலாளியிடம் அவருக்கு வேண்டிய நண்பர் ஒருவர் ஒரு வேலைக்காரனை சிபாரிசு செய்வதற்கு அழைத்துப் போனுல் அந்த ஊழிய னேப் பற்றிய ஒழுக்கங்களைச் சொல்லும் பொழுது இவன் உண்மை(யே) பேசுவான் என்று ஏகாரம் போட்டுச் சொன் னுல், பொய்களைக் கனவிலும் நினைக்க மாட்டான் என்று

Page 12
  

Page 13
*Վ 62
* 732, Y.Y.M
ལྷ་ தி
'இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருவதினியே’
இவ்வாறு தன்னைத் தாழ்த்திக்கொண்டு இறைவன் பக்தி வழியைப் பின்பற்றுகிருர், நமக்கு சைவப்பற்றை உண்டாக் கிய மாணிக்கவாசகர்.
'அம்மையே! அப்பா ! ஒப்பிலாமணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே!
HLSSASSLLASLSASSSLSLLSSLSS LSSLS SASLLLLLLASLSa AAASLSL SASLSSASSSLSL LSASSMSSeSa SLESSLSLSASSaSASJeSaSAAAAASSSAAS
யோகிராஜ் பூரிலழறீ சச்சிதானந்த
சுவாமிகளது 49வது பிறந்த தின விழா
கண்டி திவ்ய ஜீவன சங்கச் சார்பில்
eta
22-12-62 சனிக்கிழமை
1 , " Y''' ്.
தென்னக்கும்பர சச்சிதானந்த தபோவனத்தில் இனிது
கொண்டாடப்படும்.
முற்பகல் உயர் திரு. A. C. C. ரத்வத்தை I.P. அவர்கள் தலேமையிலும் பிற்பகல் உயர்திரு. C. தனபாலசிங்கம் அவர் கள் தலேமையிலும் கொண்டாடப்படும்.
V
 
 

"I AM 5.
I
"g,j; மஜோதி 63
சிதம்பர மகிமை
ஆறுமுகநாவலர் )
அறிவும் எல்லா முதன்மையும் எல்லா அநுக் 66. உடைய முழுமுதற் கடவுள் தாம் ஒருவரே யாய்ப், பசுக்களாகிய ஆன்மாக்கள் எல்லாம் தமக்கு என் றும் உடைமைப் பொருள்களேயாகத் தாம் என்றும் உடை பவராயே நின்று, பசுபதி எனப்படுஞ் சிவபெருமான் பிர பஞ்சம் எங்குமாகி நீக்கமற வியாபித்து நிற்பர்; ஆயினும் அவ்வுண்மை யாவருக்கும் விளங்காது. ஆதலினலே, முத்தி யடைதல் எளிதன்று. இதனைச் சிவபெருமானே திருவுளங் கொண்டு தம்மை ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருட்டு எண்ணில்லாத முக்கிய ஸ்தலங்களைப் பூமியில் வைத்தருளி னர். அவைகளுள்ளே, அறுபத்தெட்டுத் தலங்கள் சிறந்தன. அவ்வறுபத்தெட்டுத் தலங்களுள்ளே திருவாரூர் காசி சிதம் பரம் என்னும் மூன்று தலங்கள் சிறந்தன. திருவாரூரிலே பிறந்தவர்களும், காசியிலே இறந்தவர்களும் சிதம்பரத்திலே சிவபெருமானுடைய திருவடிகளை தரிசித்தவர்களும் முத்தி
யை அடைவார்கள்.
திருவாரூரிலே பிறத்தல், முன்செய்த புண்ணியமிகுதி யினலே தானே நேர்படினல்லது செயற்கையால் அடையத் தக்கதன்று.காசியில் இறக்கலாமெனின் பிறர்பொருள்கொள் ளாது பாவத்துக்குப் பயந்து தருமநெறியினலே சம்பாதித் தபொருள் கொண்டு சென் மதேசத்தை விடுத்து வழியிலே இறவாது உயிர்தாங்கிச் சென்று காசியை அடைந்து இறக் கும்வரைக்கும் நல்லொழுக்கத்தோடும் அத் தி ரு ப்ப்தியில் இருந்து இறப்பது எளிதின் முடிவதன்று. சிதம்பரத்திலோ வெனிற் சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்தமாத் திரத்தே முத்திசித்திக்கும். இன்னும் தட்சிண தேசத்தார். சிதம்பரத்தை நீங்கி முத்தியைத் தேடிக் காசியிலே சென் ருரல் அது முத்தியைக் கொடுப்பதில்லை. உத்தர தேசத்தார்
தியைக் கொடுக்கும். ஆதலினலே சிதம்பரமே எல்லாத் தலங்களிலும் சிறந்தது. W"、
சிதம்பரம் முத்தி தரும் என்று வந்து சேர்ந்தால் இது முத்

Page 14
64. ஆத்மஜோதி
'"j":"ം"
பிண்டமும் பிரமாண்டமுஞ் சமம். பிண்டமாகிய சரி ரத்தில் இடப்பக்க நாடியாகிய இடைக்கும் வலப்பக்க நாடி யாகிய பிங்கலைக்கும் நடுவில் உள்ள சுழுமுனு நாடியும், பிரமாண்டத்தில் உள்ள இப்பரத கண்டத்தில் இலங்கைக் கும் இமய மலைக்கும் நடுவில் உள்ள தில்லையும் சிவபெரு மான் ஆனந்த நிருத்தஞ் செய்யுந் தானமாகும்.
சரீரம் பிரமபுரம், சரீரத்தினுள்ளே இருக்கும் இருத யத் தானந் தகரமாகிய புண்டரீக வீடு, இருதயத்தானத் திலுள்ளே இருக்கும் பிரமமாகிய சிவம் ஆகாசம். புறத் தும் இப்படியே பிரமாண்டம், பிரமபுரம், பிரமாண்டத்தி னுள்ளே இருக்குந் தில்லைவனம் புண்டரீக வீடு. தில்லை வ னத்தில் நிருத்தஞ் செய்யுஞ் சிவம் ஆகாசம். இவ்வாகா சம் பூதாகாசம் போற் சடமாகாது சித்தேயாம். ஆத
லாற் சிதம்பரம் எனப்படும். இச் சிதம்பரம் எக்காலமும்
நீக்கமின்றி விளங்குந் தானமாதலால் இத் தில்லையுஞ் சிதம் பரம் எனப் பெயர் பெறும்.
சிதம்பரத்திலே ஞான சபையிலே சிவபெருமான் சிவ காமி அம்மையார் காண ஆன்மாக்கள் பொருட்டு அநவ ரதமும் ஆனந்த நிருத்தஞ் செய்தருளுவர். சபாநாயகர், கோடி சூரியருடைய ஒளிபோலும் ஒளியும், திருப்புன்முறு வலையுடைய ஒரு திருமுகமும், மூன்று திருக்கண்ணும், கங் கையையும் பிறையையும் கொன்றை மாலையையுந் தாங்கிப் பின் தூங்கா நின்ற திருச்சடையும், சங்கக் குண்டலம் பொருந்திய வலத்திருச்செவியும், திருநீல கண்டமும், டம ருகம் பொருந்திய திருக்கரம் அபயகரம் என்னும் வலத் திருக்கரம் இரண்டும், அக்கினியகல் பொருந்திய திருககரம் டோளகரம் என்னும் இடத் திருக்கரம் இரண்டும், புலித் தோலே ஆடையாகக் கொண்டு கச்சை உடைத்தாய் நெறி
ப்புப் பொருந்தி விளங்கும் திருவரையும், முயலகன் மேல்
ஊன்றிய வலத் திருப்பாதமும், தூக்கி வளைத்த இடத்தி ருப் பாதமும் உடையர். சிவகாமி அம்மையார், பச்சை நிறத் திருமேனியும், திருக்கழுத்திலே பொருந்திய திருமங் கல சூத்திரமும், செங்கழுநீர் மலர் பிடித்த வலத் திருக் கையும், கடிக்கீழ்த் தொங்க விட்ட இடத் திருக்கையும் மிக ஒடுங்கிய திருநிலையும் உடையவர்.
சபாநாயகருடைய வடிவம் பூரீ பஞ்சாட்சர வடிவம். வாச்சிய மந்திரமாகிய சிவசக்தி அவருக்கு உண்மை வடிவம்.
།
/。
\
 
 
 
 

ஆத்மஜோதி 65
வாசக மந்திரம் அவருக்குக் கற்பித வடிவம். -96) (560)LL
ஆனந்த நிருத்தம் பஞ்ச கிருத்தியம் சிருட்டி கிருத்தியம் டமருகத்தினும் திதிகிருத்தியம் அபயகரத்தினும் சங்கார கிருத்தியம் அக்கினியினும் திரோபவ கிருத்தியம் ஊன்றிய பாதத்தினும் அநுக்கிரக கிருத்தியம் குஞ்சித பாதத்தினும் தோன்றும். அவ்வானந்த நிருத்தத்துக்கு நிலைக்களமாகிய சபை சிவசக்தியால் அதிட்டிக்கப்பட்ட சுத்த மாயாமயம்.
சிவசக்தி அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு உள்ள திருவருள்.
வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர், உப்மன்
flu முனிவர், திருவுடை யந்தணர்கள், வியாச முனிவர், சுக முனிவர், செளனக முனிவர், சைமினி முனிவர், சூத
முனிவர் முதலாயினேர் எண்ணிறந்தோர்கள், சிதம்பரத் திலே நியமமாகச் சிவகங்கையிலே ஸ்னனம் செய்து, நடே சப் பெருமானுடைய ஆனந்த நிருத்தத்தைத் தரிசித்து வணங்கித் துதித்துச் சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தார் கள். உபமன்னியு முனிவர் கிருஷ்ணருக்குச் சிவதீட்சை செய்து சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொடுத்த சைவா
சாரியர். சைமினி முனிவர் நடேசப் பெருமானை வேத
பாதஸ்தவத்தினுலே துதித்தவர். வேதபாதஸ்தவமாவது முதன் மூன்று பாதமும் தமது வாக்காகவும் நான்காம் பாதம் வேதமாகவும் செய்யப்பட்ட தோத்திரம்.
பரங்கருணைத் தடங்கடலாகிய நடேசப் பெருமானு டைய இலக்கணங்களை உண்மை நூல் வாயிலாக அறிந்து நல்லொழுக்கத்தின் வழுவாது நிலைகொண்டு, அவருடைய விளக்கத்துக்கு இடமாகிய திருவுருவை, விராட்புருடனுகிய பிரமாவினது பிரமாண்ட சரீரத்தின் இருதய கமலமாகிய தில்லையிலே நாடோறும் விதிப்படி அன்போடு தரிசித்துக் கொண்டு வந்தவர் அந் நடேசப் பெருமானைத் தமது பிண்ட சரீரத்தினது இருதய கமலமாகிய தகரத்திலே தியா
னித்துத் தரிசித்துப் பாசம் நீங்கி முத்தி அடைவர். வேதான் தகர வித்தை தகரவித்தை சாந்தோக்கியோப
நிடதத்திலுங் கைவல்லியோப நிடதத்திலும் பேசப்பட்டது,
தொல்லே யிரும் பிறவிச் சூழுந் தளேநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்.

Page 15
鷺*.,
A "72-772.
66 ஆத்
யோகத் தெளிவு
(பண்டிட். ஜி. கன்னைய யோகி, அம்பத்தூர்)
'இறைவன் பேரருளைப் பெற்று, பிறவிப் பயனப் பெற கர்மம், ஞானம், தவம், பக்தி, ஜெபம், மந்திரம் முதலான பல வழிகள் இருக்க எல்லோராலும் எளிதில் பின்பற்ற முடியாத யோக மார்க்கத்தைப் பற்றி அறிய வேண்டிய தேவை யென்ன?’ என்று பலர் ஐயுறுகின்ற னர். இத் தகையோர்களில் பலர் தாம் கூறும் சொற்க ளின் பொருளையே புரிந்து கொண்டவர்களல்ல. நல்ல தீய கர்மங்கள் நல்ல, தீய பிறவிகளைக் கொடுக்குமானுல் விடுத லைக்கு, மோக்ஷத்துக்கு அது எப்படி வழிகோலும்? சாதா ரணமான ஞானத்தால்தான் மயக்கமும், கலக்கமு முண் டாகிறதென்ருல் அது தெளிவை யெப்படித் தரும்? தவம் - உழைப்பு, உழைப்பின் பயன் உறுவினை, தவம் எப்படி மாயையைத் தாண்டச் செய்யும்? பத்தாயிரம் முறைகள் சப்தித்தாலும் சப்தம் சப்தமே யாகுமானுல் ஜெபம் பய னளிக்குமா? வார்த்தைகளின் கோர்வையான மந்திரங்கள் வாழ எப்படி வழி செய்யும்?
இவையெல்லாம் இறையருள் சாதனங்களாக வேண்டு மானுல் யோகத்துடன் இணைத்து கர்மயோகம், ஞானயோ கம், தபயோகம், பக்தியோகம், ஜெபயோகம், மந்த்ர யோகமாகச் செய்யப்பட வேண்டும். "யோகஸ்த குருகர் மாணி - யோகத்தில் நின்று கர்மங்களைச் செய்' என்கி றது கீதை. இப்படியே மற்றவைகளையும் கொண்டு ‘யோ கத்தில் நின்று, ஞானம், தவம், பக்தி முதலியவைகளைச் செய்’ என்று பொருள் கொண்டால்தான் இவைகள் இறை யருட் சாதனங்களாக ஆக முடியும்.
யோகம் என்பது என்ன என்று புரிந்து கொண்டால் யோகமில்லாத எந்த சாதனையும் இறையருள் சாதனைக ளாகா தென்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். யோ கம் என்ற சொல்லுக்கு சேர் என்று பொருள். இறைவ னுடன் சேர்வது யோகம். இறைவனுடன் சேர்ந்தபடி, அவனுக்காக அவனுணைப்படி கர்மங்களைச் செய்வது கர்ம யோகம், ஞானம் பெறுவது ஞானயோகம், பக்தி செய் வது பக்தி யோகம், மந்த்ரம் ஜெபிப்பது மந்த்ர யோகம்,
 
 
 
 
 
 

67
இறைவருடன் சேராமல், யோகத்தில் நிலைக்காமல், பிர பஞ்சப் பொருள்களில் நிலைத்துச் செய்யப்படும் கர்மம், ஞா னம், பக்தி முதலியவை வினைப்பயனை ஆக்கிப் பிறவிகளைக்
கொடுக்கவே உபயோகமாகும். யோகம் என்பது இறைவ
னுடன் தன்னைச் சேர்த்துக் கொள்வதானல், யோக நிலை
யில் செய்யப்படாத எதுதான் இறையருளைத் தர முடியும். ஆகவே யோகத்தை அறிய வேண்டியது இறையருள் பெற விரும்பும் அனைவர்க்கும் இன்றியமையாத தொன்ருகும். யோகமின்றிச் செய்யப்படும் அனைத்தும் ஏதோ உலக இன் பங்களைத் தர சற்று உதவுமன்றி உண்மையான இறைய
ருளைத் தர உதவா.
'இறைவனேடு சேர்தல் என்ருல் என்ன? எப்படிச் சேருவது?’ என்பவைகளை அறிந்து கொள்வதே யோகத் தை அறிந்து கொள்வதாகும். இதற்கு முதலில் இறைவன் யார்?, அப்படியொன்றுண்டா? அதற்கும் பிரபஞ்சத்துக்கும் உயிரினங்களுக்கும் என்ன தொடர்பு என்பவைகளைப் பற்றி
ஐயந் திரிபறத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இட
த்தில் யோகத்தைப் பற்றி மக்களிடை உலவிவரும் ஒர் பெருங் குழப்பத்தைப் போக்க வேண்டுமெனக் கருதுகின் ருேம்.
இராஜயோகம், ஹடயோகம், லயயோகம் என்றிப்ப
டிப் பல பல முறைகளை யோகம் என்ற சொல்லால் பிர
சாரம் செய்யப்பட்டு வருகிறது. இராஜயோகமே சிறந்த தென்பர் சிலர், சிலர் ஹடயோகமே மேலானதென்பர், குண்டலினி யோகத்தால் உடனே பயன் கிடைக்குமென் பர் சிலர், லய யோகத்தால் உடனே லயமடையலாமென் பர் சிலர். இவையன்றி அவ்வப்போது சிலரால் சிலவகை
யோகங்கள் வெளியிடப் படுகின்றன. அரவிந்த யோகம்,
ரமண யோகம், அந்தர் யோகம், ஸ்தம்பன யோகம் என் றிப்படிப் பலப்பல தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. இவைகளால் யோகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்
புபவர்கள் பெரிய குழப்பத்துக்குள் ளாகிருர்களன்றி பயன்
பெற முடியாமற் போகின்றனர்.
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னுல் கலியுக ஆரம்பத்துக்கு முன் ஞல் யோகத்தின் பெயரால் இத்தனை சாதனைகள் இருக்க வில்லை. யோகம் என்ற சொல் ஒரே சாதன முறைக்குத்

Page 16
தான் உபயோகிக்கப்பட்டு வந்தது. வேதங்களில் யோகம்
என்ற சொல்லுடன் கர்மம், அந்தர் முதலான யாதொரு சொல்லும் சேர்க்கப்படவில்லை. யோகம், யோகி என்ற சொற்களில் யாதொரு குழப்பமும் இருக்கவில்லை. பார் தத்தில் மட்டுமில்லை. எகிப்து, கிரேக்கம், ரோமானிய நாகரிகங்களிலும் இதே யோகவித்தை யாதொரு மாறுத
லுமில்லாமல் மொழி மட்டும் வேறில் கற்பிக்கப்பட்டு வந்
அறிந்து கொள்ளலாம்.
தது. பிற்காலத்தில் பாரதத்திலும் சரி, மேலேய நாடுக ளிலும் சரி யோக வித்தையை எல்லோருக்கும் பொது வாய்க் கற்பிக்கக் கூடாது. பக்குவமறிந்து தகுதியானவர் க்கே கற்பிக்க வேண்டும்' என்ற கட்டுப்பாடு ஏற்பட்டுப் பொதுமக்க ளறியா வண்ணம் மறைக்கப் பட்டதால் பார தத்தில் அது "குப்த வித்யா மறைக்கப்பட்ட வித்தையெ ன்றும், மேலேய நாடுகளில் மிஸ்டிஸிசம் (Mysticism) என் றும் கூறப்பட்டு வந்தது.
அந்த மூலமான யோக வித்தையின் விளக்கங்களைப் பிற்காலத்தில் அநுமதிக்கப்பட்ட அளவு பாதஞ்சலர் சூத் திர வடிவில் செய்தருளினர். அதையே பாதஞ்சல யோக மென்றும் பொதுவாக யோக நூல் என்றும் கூறுகிருேம். சிலர் "பாதஞ்சல யோகம் இராஜயோகம்' என்று தவரு கச் சொல்வர். பாதஞ்சல யோகத்தில் எங்கும் "தான் விளக்கும் யோகம் இராஜயோகமென்று' சொல்லப்பட வில்லை. பாதஞ்சல யோகமே பழங்கால யோகவித்தையின் சுருக்க நூலாகும். NI
பாதஞ்சல யோகத்தை நன்முகப் புரிந்து கொண்டு படித்தால் குண்டலினி, லய, ஹட் போன்ற பல யேர்கங் களால் பெறக் கூடுமெனக் கருதப்படும் சித்திகளெல்லாம் இந்தவொரு யோகசாதனையாலேயே பெறப்படுமென்பதை
மனதை உலக வழியோடாமல் கட்டுப் படுத்தி உள் முகப் படுத்த முடியாத இடைக்கால மக்கள் சித்திகளில் மட்டும் அவாக் கொண்டு மோசு:மின்றி வெறும் சித்திகளை மட்டும் தரவல்லதான சாதனைகளை யோகத்திலிருந்து தனி யாகப் பிரித்து, அதைத் தனியோகம் என்றழைத்து வந் தனர். உதாரணமாக ஹட யோகத்தின் குறிக்கோள் ஆயுள், பலம், சில அற்புதங்களைச் செய்யும் திறமை இவை
களே பன்றி இறையருள் மோகம் இவைகளுக்கு இடமே
η
 
 
 

స్ట్
ஆத0
யோகம்’ எனும் நூலின் முகவுரையில் நன்ருக விள்க்கியி ருக்கிருர். இது போல்தான் குண்டலினி யோகம், லய யோகம் முதலியவைகளும். சன்மார்க்க மனமில்லாத ஒரு வன் குண்டலினி யோகம் செய்தால் காமாந்த காரணுகி அழிந்து போவான். இறைவனில் நிற்காமல் லய யோகம் செய்தால் மரண பேர்கத்தில் லயித்துப் போவான்
யில்லை. இதுபற்றி பூரீ விவேகானந்தரும் தமது இராஜ
அதனுல் குழப்பம் வேண்டாம். யோகத்தை யோக மாகவே அறிவோம். அப்படி அறிந்த அதை நம்பக்தி, ஞானம், தவம், மந்த்ரம் முதலானவைகளுடன் இனத்து, அவைகளின் வழியே இறையருள் பெற்றுய்வோம். .
முடிவாக இன்னுெரு விளக்கம். ' சரி, சரி இறைப் ருள் மோக்ஷம் வேண்டுபவர்களுக்குத்தானே யோகம். உலக வாழ்வில் இன்பமாக வாழமட்டும் விரும்பும் நமக்கது எதற்கு?' என்று கேட்பவர்க்கோர் விளக்கம்.
பிறந்த போதிருந்து மறையும்வரை ஒரே இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவித்தவர் யாருமில்லை. இரண்டும் மாறி மாறித்தான் வாழ்க்கையில் வருகின்றன. இன்பத்தை நா டியபோது துன்பம், துன்பத்தை நாடியபோது இன்பம். இன்ப துன்பங்கள் ஏன், எப்படி வருகின்றன. கர்மவினைப் பயன் என்று விடை பகர்ந்தாலும் அவ் வினைப்பயன் மன் தின் வழியாகவே செயல்பட வேண்டும். நினைத்துச் செயல் படும் பிராணி மனிதன். மனமே இன்ப துன்பங்களின்
மனுஷ்யாணும் காரணம் பந்த மோக்ஷயே.
தொடங்கினுல் வாழ்க்கையைத் தன் விருப்பம் போலே
வதே யோகம். யோகம் பயின்றவன் மனதில் சரியான நன்மையை நாடிச் செய்யும் காரியங்கள் நன்மை பயக் கும். கர்ம வினையின் பிரபாவம் அவனைப் பாதிக்காது. வாழ்க்கையின் எஜமானனுக வாழ்வான்.
காரணமென்பதைக் கீதை நன்முகச் சொல்கிறது. மனஏவு
அமைத்துக் கொள்ள முடியும். இதற்கான வழிகளைக் கூறு
மனிதன் மனதைப் பலப்படுத்தி, வசப்படுத்தி ஆளத்
ܘܐ 。 . சூக்ஷமங்களைக் காணல், பிறர் மனமறிதல், கர்மாவை வெல்லல் வேண்டுமானதை மனச் சக்தியால் ஆக்கிப்பெ
' , *。" '。リ/m s : . றல், உண்மையை உணர்தல் போன்ற திறமைகள் யோகத்

Page 17
70 ஆத்மஜோதி
ஈசாவாஸ்ய உபநிஷத சாரம் (ஜீ கஷாழி சிவானந்தர்)
ஒம் பூர்ண மத பூர்ணமிதம் பூர்ணுத் பூர்ணமுதச்Uதே
பூர்னஸ்ய பூர்ண மாதாய பூர்ணமே வவ வலிஷ்யதே
ஓம் ஸாந்தி: ஸாந்தி! லாந்தி!!!
ஓம் பூரணமே அது அனைத்தும். பூரணமே இது அனைத் தும். பூரணம் பூரணத்திலிருந்து பிறந்துள்ளது. பூரணத்தி லிருந்து பூரணத்தை யெடுத்தும் எஞ்சியிருப்பது பூரணமே.
ஓம் அமைதி அமைதி!! அமைதி!!!
உபநிஷத மகிமை
1. பிரம்ம வித்யா குருமார்கள் அல்லது பிரம்ம அறி வாசிரியர்களுக்கு வந்தனைகள்.
2. அனைத்திற்கும் ஆதாரமும் அடிப்படையும் மூல (Cதிலுமாகிய சச்சிதானந்தப் பரப் பிரம்மத்துக்கு சாஷ் டாங்க வணக்கங்கள்.
3. ரிஷிகளது மெய்யுணர்வின் உச்சம் உப நிஷதங்க எளிற் காணப்படுகிறது. -
(74ம் பக்கம் பார்க்கவும்)
தாலுண்டாகுமானுல் யோகம் முக்தி நெறியாளர்க்கு மட் டும் பயன்படு மொன்றென எப்படிக் கூறலாம். யோகம் பயின்றவன்தான் மண்ணுலகில் இன்பமாய் வாழ முடியும். காரியங்களில் த வருது வெற்றியடைய முடியும்.
á மனிதனுய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் யோகப் பயி ற்சி தேவை. ஆத்ம யோக ஞான சபை, அம்பத்தூர் - சென்னை; கொழும்பு - இலங்கை, மூலமாக யோக தத்து வங்களைக் கற்றுச் சரியான முறையில் பயின்று பயனடைய (6) ; f : Â) .
 
 
 
 
 

og g" 7.
صور ഴ്ച്
نی%)
சித்த சோ த னே
- (சுவாமி கெங்காதரானந்தா)
ஆத்ம சகோதர! "
புறநாட்டங் கொண்டு உழலும் மனதை அகமுகப் படுத்தி ஆத்மாவின் கண் ஏவிவிடுவதென்பது எளிதான காரி மன்று. நீ நெல்லிக்கனியை உண்டு சுவைத்திருப்பாய். அல்லது அதன் குண விசேடங்களேயாவது கேள்விப்பட்டிருப்பாய் அல் லவா? மு ன் னே க் க ச க் கு ம் , து வ ர் க் கு ம் , பின் இனிக்கும். ஆத்மப் பயிற்சியும் இத்தன்மை வாய்ந்தது என்று அறிக. தோன்றும் நெருக்கடிகள் உன்னைப் பொறுத்தவையா லுைம் சரி அல்லது உலகை ஒட்டியவையானுலும் சரி அவை கள் உமது ஆத்மீக முன்னேற்றத்தைச் சோதனை செய்து பார்க்கும் உரைகல்லாகக் கருதிக் கொள்வாயாக. இடர்கள் பலவற்ருல் சோதிக்கப்படும் பொழுது மனக்கிளர்ச்சியின்றி நிதான புத்தியுடன் காரியகாரணங்களின் சரியானவசத் தைக் கண்டறியத் தகுதிவாய்க்காவிட்டால் உனது ஆத்மீக முன்னேற்றம் தீவிரம் அடையவில்லையென்று அறிவீராக. நாளிது வரையிலும் மிகப்பற்றுடன் தனி உரிமையும் விருப் பும் பாராட்டி வந்த ஒன்றிற்கு ஆபத்துக்களும் எதிர்ப்புகளும் திரண்டு வரும்பொழுது உள்ளெழும் உணர்ச்சி வேகங்களை ஊன்றிக் கவனிக்கவும். அத்தகைய சோதனைமிக்க சந்தர்ப்பங் களில் பொங்கியெழும் மனவிகாரங்கள் நீதி நியாயங்களை சாவகாசமாக விசாரணை செய்ய சந்தர்ப்பமளிக்காமல் சின மும் சீற்றமும் கொண்டு அவசர செய்கைக்குத் தூண்டுமாகில் உனது யோக முயற்சிகள் இன்னும் சிற்றுணர்வின் ஆதார நிலையை போதிக்கவில்லையென்று கருதுவீராக. விபரீத புத்தி யின் விளைவால் நன்னெறியுணர்வற்ற ஒரு சுற்ருடலில் வசிக்க வேண்டியிருக்கிறதே என்று வேதனைப்படுகிருயா? ஆத்மீகப் பண்பாடற்று தன்னலத்திற்காகக் கூச்சமில்லாமல் எதையும் பேசவும் செய்யவும் பழகிவிட்ட உலக சூழலில் சீரிய இலட் சியத்திற்காக தார்மீக சிந்தனையுடன் வாழும் உன்னைப் போன் றவர்களின் வாழ்வுசோதனைக்குரியதுஎன்பதில் சந்தேகமில்லை எனினும் நீ விரும்பும் ஒர் களங்கமற்ற சூழ்நிலையை அகில மெல்லாம் தேடினலும் கிடைப்பது அரிது என்பதை ஞாபக மூட்ட விரும்புகிறேன். யோக முயற்சியால் உருவாகும் ஐக் கிய உணர்வின் கிரணம் மனேயுத்தி பிராணங்களில் ஊடுரு வல் செய்யும் பொழுது இத்தகைய வெறுப்பும் பீதியும் மன

Page 18
GD 5 விட்டகன்று அனத்திலும் ஒரு அன்புத் தொடர்பு மனுே
பாவம் உதயமாகும்.
தாமிரத்தை செம்பொ ன்னுக் மாற்றும் இரசவாத வித்தை போன்று துன்பம் நிறைந்த உலக வாழ்வு தெய்வீக மாக மாற்றுவது யோகம். இதைத் தெளிவாய் நன்கு கருத் திற் கொள்ளவும். பயம் பீதி,அச்சம் முதலியவற்றின் காரிய காரணங்களை அல்லது அவற்றின் இரகசியத்தை உனது அந் தராத்மா தெளிவாக விளக்கிக் காட்டும் காலம் வரும். அப் பொழுது எதைப் பார்த்து சஞ்சலமும் அச்சமும் பீதியும் கொண்டாயா அதைப் பார்த்து புண்முறுவல் கொள்வாய். அந்த அரிய நிலைவரும் வரையிலும் இலட்சியத்திற்கு இடை
* g(?37 சூழலால் தீண்டப்படாமலும் நீ அவற்றைத் தீண்டா
மலும் பார்த்துக்கொள்ள வேண்டியது உனது கடமை அன் ருே. அநீதிகளையும் அக்கிரமங்களையும் எதிர்க்க வேண்டிய இடத்தில் அவதான புத்தியுடன் நிதானமாய் செயலாற்ற
வேண்டும். இன்றும் இதைவிட உத்வேகமானதும் விரைவில்
பலன்தரக் கூடியதுமான தெளிவான வழியும் இருக்கின்றன. தார்மீகப் பண்பாட்டின் உருவடிவாய் மெளன யோகத்தில்
ஆழ்ந்திருப்பதே அந்தச் சீரிய முறையாகும்.
அன்புக்குரிய இளைஞனே! சரி பிழைகளை வரையறுத் துக் கூற ஞானிகளாலும் கஷ்டமென்று கீதை கூறுகின்றது. உன்னல் சரியாக நிர்ணயிக்க முடியாத விஷயத்தால் தடுமா றும் பொழுது ஆழ்ந்த மெளனத்தை மேற்கொண்டு அந்த ராத்மாவின் தீர்ப்புக்களை எதிர்நோக்கியிருப்பாயாக! விரை வில் அல்லது சிறிது தாமதித்தேனும் தெளிவாய்நிர்ணயிக்கப்
பட்ட முடிவுகள் உனது காதில் விழும். அந்த முடிவின் படி
சஞ்சலமில்லாமல் செயலாற்றுவீராக! இன்னும் சிலவற்றை கருத்தில் ஊன்றுக விடுதலையும் அதனுலேற்படும் பூரணத்து
வமே யோகசாதனையின் குறிக்கோள் என்பதை அறிந்திருப் பீர் இந்த முடிவில் வைத்திருக்கும் ஆர்வத்திற்கும், நம்பிக் கைக்கும் தக்கப்படி சாதனையின் பலாபலன்கள் கைகூடும். முழுமையை நாடி மனம் புத்திகாயங்கள் அதிதீவிரமாய் முயற்சிக்கும் பொழுது அதன் உத்வேகம் அல்லது அலைகள்
சகல ஜீவராசிகளுக்கும் நலனையும் சுகத்தையும் கொடுப்பதை நேரில் உணர்வாய் சாதனையின் முயற்சியால் இத்தகைய பலானுபவங்கள் காணும்பொழுது அகந்தையும் செருக்கும்
。 தலைப்படாமல் விழிப்பாய் இருக்கவும். இறைவனின் (ତl (୬
மையம் உனது சிறுமையும் எண்ணிப்பார்த்தால் பரம்ப்ொ
 
 
 
 
 
 
 

ஆத்மஜ்ேதி
73
ருளின் மகா சன்னிதானத்தில் அனைவரும் பிபீலிக (ஊர்ந்து செல்லும் புழு) ஞக்கு சமானமென்று உணர்வீர். இத்தகைய விசாரணையாலும் உணர்வினலும் தற்பெருமையும் தன்செருக் கும் விலத்திக் கொள்க, அவசர புத்தியாலும் உடலுணர்ச்சி வசத்தாலும் உனது உலகியல் கடமைகளை ஒரேயடியாய் விட் டுவிடுவது அவ்வளவு உசிதமாய் இருக்குமென்று தோன்ற வில்லை. முறைதவறி கடமைகளை விட்டுவிட்ட பலரும் ஆத் மீகத்திற்கும் லெளகீகத்திற்கும் உதவாக்கரைகளாய், அங்
கும் இங்கும் அலைந்து திரியும் ஒரு கூட்டத்தினரை நீ நேரிலே பார்த்திருக்கக்கூடும். இலட்சியத்தின் கண் ஊக்கமுடையவ னுய் முறைப்படுத்திய பயிற்சியை தீவிரப்படுத்தும் பொழுது உன்னையொட்டியிருக்கும் பசை, கோதுகள் யாவும் தானுக வே கழரத் தொடங்கும்.
ஆத்ம சாசஷ்ாத்காரத்துக்குரிய உள்ளெழுச்சியின் வேகம் வலுவடையா விட்டால் அனுட்டான சாதனைகள் வெறும் மன உடல் பயிற்சியில் முடிவடையும் என்பது கருத் தில் கொள்க. உறுதியான வைராக்கியத்தாலும் நித்தியா நித்திய விசாரணையாலும் ஆத்ம தாகத்தைப் பெருக்கிக் கொள்க. சத்சங்கம், தூயசாதுக்கள் உறவு, தீர்த்தயாத்தி ரை, மகான்களின் தரிசனம் இவைகளினுலும் அனுகூலம் உண்டாகும். அற்ப, சொற்ப அனுபூதிகளை அன்யோன்னியம் கைமாறும் போது உன்னை ஒரு ஆத்மீக ஆசிரியனுக்க கரு தும் மோகம் எழுமாயின் அதனிடத்தில் கடும் காவலாயிரு. அகண்ட சச்சிதானந்த வடிவுமுன் பரம ஞானிகளும் நித்திய மாணுக்கன் என்பதே அவர்களும் உணர்ந்திருக் கின்றனர். தன்னைத் தான் விளம்பரம் தேடும் ஆவலுக்கு சிறிதளவும் இடமளியாதே. சுருங்கக்கூறின் இறைவனிடத் தில் பூரண சரணு கெதியும், நன்னெறி நழுவாத சிந்தனையும் செயலும், லட்சியத்தில் தளராத முயற்சியும் இருக்குமா யில் நாளடைவில் உனது அருள்தாகமும் ஆத்மானுபூதி என்ற புனித நீரால் தணிக்கப்படுவது நிச்சயம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே வீட்கத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடிகச்சீர் மணிக்குன்றே இடையற அன்புனக்கென் ஊடகத் தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே

Page 19
4
ஈசாவாஸ்ய உபநிஷத சாரம்
(70 ம் பக்கத் தொடர்ச்சி)
4. உபநிஷதங்கள் தனியொருமைத் தத்துவ தர்சனத் தைக் கற்பிக்கின்றன.
5. உபநிஷதங்களின் அறிவு சம்சாரத்தின் விதையா கிய அஞ்ஞானத்தை அழிக்கிறது.
6. நாம ரூபங்களுக்குப் புறத்தே நித்திய, அநந்த சச்சிதானந்தப் பரப் பிரம்மம் வசிக்கிறது.
இவ்வுலகம் பரப்பிரம்மத்தால் அல்லது தனி முதலால் வியாபிக்கப் பட்டுள்ளது.
8. ஆசைகள் அனைத்தையும் துறக்குக. அகந்தை, தன்னலம், ஆன்மாவை உடலுடன் ஒருமை காணல் (தேக அத்தியாசம்) முதலியவற்றை ஒழிக. அப்போது மாத்தி ரமே நீ மோட்சம் அல்லது விடுதலை அடைவாய்.
9. மோட்ச சிச்சை உலக ஆசைகள் அனைத்தையும் அழிக்கும்.
10. சமயக் கிரியைகளையும் தினசரிக் கடமைகளையும் பலன் கருதாது செய்குக. நீ இருதயத் தூய்மை பெறு
| 6)ITU.
11. ஆத்ம பாவனையுடன் மனித வர்க்கத்திற்கு இடை யருத தன்னலமற்ற சேவை புரிக. நீ தூய்மை பெறுவாய்.
12. நீ அகந்தையின்றி பயன் நோக்காது கர்மங்கள் புரிந்தால் கர்மங்கள் உன்னைப் பந்தியா.
ஆத்ம இயல்பு ཅིང་མ་
13. இவ்வாத்மன் அசைவற்றது; ஆனுல் அது மனதி லும் பார்க்க அதி வேகமானது. ஏனெனின் அது எங்கும்
ཀ་
 

AT NA I *。臀,、
ஆத்மஜோதி"
75
வியாபித்துள்ளது. எங்கும் நிறைந்துள்ளது.
14. ஆத்மன் எங்கும் வியாபித்து அநந்தமா யிருப்ப தால் மனம் ஒரு தளத்தை யடையுமுன் அது அங்கு ஏற் கெனவே இருக்கிறது.
15. ஆத்மன் சேய்மையானதும் அண்மையானதுமாயி ருக்கிறது. அது இது (இவ்வுலகம்) அனைத்துள்ளேயும் வெ ளிப்புறத்திலும் இருக்கிறது.
16. அது அறிவற்றவர்களுக்குத் தூரமானதாயிருக்கி றது. இம்மை வாழ்வில் மூழ்கியிருப்பவர்களுக்கு அது மிகு தொலைவில் உள்ளது. அது விசாரகனுக்கு, தூய மனமும் சாதனு சதுட்டயமும் பொருந்தியவனுக்கு மிகவும் அண் மையில் உள்ளது.
17. இவ்வாத்மன் மிக நுட்பமானது. அதுவே அந்த ராத்மா, எல்லாப் பிராணிகளினதும் உள்ளான்மா. அது அனைத்தையும் நிரப்பி மூடுகிறது. அது சர்வ பரிபூரணமா னது. இதனுல் அது உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது.
18. ஆத்மனே எல்லாப் பிராணிகளின் அடிப்படை அல் லது ஆதாரம் (அதிஷ்டானம்).
19. ரிஷி எல்லாப் பிராணிகளையும் ஆத்மனிலும் ஆத் மனை எல்லாப் பிராணிகளிலும் பார்க்கிருர்,
20. யார் ஆத்மன் அனைத்தையும் ஆத்மனிலும் காண் கிருனே அவன் தன்னைக் காப்பாற்றுவதற்கு விரும்புவதில்லை. ஏனெனில் அவன் எவனுக்கும் பயப்படுவதில்லை.
21. ஆத்மனை யறிந்த ரிஷி எல்லாப் பொருட்களையும் எல்லாப் பிராணிகளையும் தம் சொந்த ஆத்மனிலிருந்து தூரமானவை அல்லனவாயும் தம் ஆத்மனே அனைத்தின தும் ஆத்மன் என்றும் பார்க்கிருர்,
22. ஆத்மனே எல்லாப் பிராணிகளிலும் பொது உள் ளுணர்வு.

Page 20
23. ஆத்மன் அரசனிலும் உழவனிலும், பக்தனிலும் பாவியிலும், சக்கிலியனிலும் நாவிதனிலும், எறும்பிலும் யானையிலும், மரத்திலும் கல்லிலும் அபின்னமானது. பிறி தல்லாதது.
А
24. தன் சொந்த ஆத்மனிற் சார்ந்திருக்கும் உன்னத பேரண்ட உணர்வைப் பெற்றிருக்கும் பந்தம் நீக்கிய ஆன் மா எவ்வாறு வெறுப்பெண்ணத்துடன் யாதேனு மொரு பிராணி அல்லது பொருளிலிருந்து பின்னிடக் கூடும்? எப் படி ஏதேனும் ஒன்றை அவன் வெறுக்கக் கூடும்? எவ்வ கையில் ஏதேனும் ஒன்றை அவன் பகைமை கொள்ளக் கூடும்.
25. ஒரேயொரு ஆன்மா எல்லாப் பிராணிகளிலும் தங்கியிருக்கிறது என்று வெறும் புத்திச் சம்மதம் காணுது. உண்மையான தன்னிறைவுப் பேறு அல்லது நேர்க்காட்சி அபரோட்சானுபவம் தவிர்க்க முடியாததாகத் தேவையா னெது.
26. பிரம்ம ஞானி பயமின்றியவனுகிருன். பிரம்ம ஞானி மயக்கத்தையும் துக்கத்தையும் கடக்கிருன்.
27. இருதய முடிச்சு (ஹிருதயக் கிரந்தி மூன்றும் - அவித்தை (அறியாமை), காமம் (ஆசை), கர்மம் (வினை) பிரம்ம ஞானத்தால் துண்டு துண்டாகப் பிளக்கப் படுகின் றன. அறிவர் முற்முக விடுதலையாகிரு?ர்.
28. ஒர் அறிவர் என்றும் ஆத்மானந்தத்தில் உவகை
கொள்கிருர், உறுபல உக்கிரமான துயரங்கூட அவரைச் சற்றும் அசைக்க மாட்டாது.
29. இவ்வாத்மன் சர்வ வியாபகமானது, பிரகாசமா
னது, அரூபமானது, தூய்மையானது, பாவம் அல்லது தீ
வினைகளாற் தீண்டப்படாதது, அனைத்தும் அறியும் (சர்வ ஞானமுள்ளது) அதீதமானது, தானுய்த் தோன்றியது அல் லது சுயம்புவானது. அது பழுது படாததும் தன்சயற்றது மாயிருக்கிறது.
30. இவ்வாத்மன் தூல. சூக்கும, காரண சரீரங்கள்
இன்றியது,
ജൂ
 

77
31. မ္ဘိန္f? ‚ါ၊ சுவாதீனமானது. அது ஒருகாலும் இன்னென்றை ஆசிரயித்திருப்பதில்லை.
32. இவ்வாத்மன் புலன்களினதும் மனதினதும் அடை
பும் ஆற்றலுக் கப்பாற் பட்டது.
33. இவ்வாத்மன் மனதின் மனம், செவியின் செவி
34. பிராணனுக்கும் புலன்களுக்கும் மனதிற்கும் புறத் தே பரப் பிரம்மம் அல்லது தனிமுதல் இருக்கிறது.
35. பிரம்ம ஒளியால் மாத்திரம் மனமும் பிராணனும் புலன்களும் தொழிற்படுகின்றன.
பிரம்ம ஞானத்தின் ஆதாரங்கள்
36. கர்மம் பலன் எதிர்பாராது செய்யப்படும்பொழுது அது மனதைத் தூய்மைப் படுத்தி முடிவான வீடு பேற் றிற்கு தீவிர இச்சையை நாடுபவனிற் பிறப்பிக்கிறது.
37. யார் தூய்மையும் அமைதியுமான மனப் பேறுள் ளவரோ , யார் ஆசையற்றவரோ, யார் இம் மாயாவுல கின் புலனுகர்ச்சி விடயங்களில் அருவருப்புக் கொண்டவ" ரோ அவரிடம் மாத்திரம் பிரம்மத்தை யறிவதற்கும் பிற ப்பிறப்புகளிலிருந்து சுதந்தரம் அடைவதற்கும் இச்சையெ ழக் கூடும்.
38. பிரம்மம் வெறும் தர்க்க வாதத்தால் அடையப் t. L (Up Lill Tgl.
39. பிரம்மத்தை யறியும் பொருட்டு நாடுபவன் கை யில் யாகச் சுள்ளி (சமித்) களுடன் வேதங்களில் வல்லமை வாய்ந்தவரும் பிரம்மத்தில் மையங்கொண்டவருமான ஒர் ஆசிரியரை அணுகட்டும் என்று சுருதிகள் கூரு நிற்கும்.
40. யார் ஓர் ஆசிரியருக்குக் கீழ் கற்றுள்ளானே அவன்
அறிகிருன் என்று சுருதிகள் பகர்கின்றன.

Page 21
ஆத்மஜோதி
78
41. ஓர் ஆசிரியருக்குக் கீழ் படித்து அறிவு மாத்திரமே நன்மை பயக்கிறது.
42. ஒருவர் பிரம்ம ஞானம் அடையும்போது பந்தத் தின் ஆசனமும் இச்சிக்கும் பொருட்களைப் பெறுவதற்குச் செய்த கர்ம காரணமுமாகிய அவித்தை அல்லது அறியா மை முற்ருக அழிக்கப் படுகிறது.
43. ஒரேயோர் ஆத்மனைப் பார்க்கும் ஆன்மஞானிக்கு துக்கமோ மயக்கமோ இல்லை. ஆத்மனை யறிபவன் கவலை யைக் கடக்கிருன் என்று சுருதிகள் சொல்கின்றன.
44. மோட்சம் கர்மத்தினலோ அல்லது கர்மத்துடன் கூடிய ஞானத்தினுலோ (கர்ம ஞான சமுச்சயத்தினுலோ) அடைய முடியாது. ஞானம் மாத்திரம் மோட்சம் அளிக் கும். கர்மம் மனதைத் தூய்மைப் படுத்தி ஞானம் பெறு வதற்கு நாடுபவனுக்குத் துணை புரிகிறது.
45. கர்மச் செய்கை ஒருவரைப் பிதுர் லோகத்திற்கு நடாத்தும்; ஆனல் அது ஒருவரை அழிவில்லாதவராகச் செய்ய மாட்டாது.
46. ஒரே யொரு மெய்ப்பொருளாகிய பிரம்மம் ஆன்ம அறிவின் மூலம் அறியாமையை அகற்றுவதனுலன்றி வேறே தேனும் சாதனத்தால் அடையப்பட முடியாது.
47. பிறவாததும் நிர்விகாரமானதும் பிறப்பற்றதும் தேய்வின்றியதும் அழிவில்லாததும் அச்சமற்றதும் நித்திய மானதும் தற்பிரகாசமானதும் சர்வானந்தமானதும் ச்ர்வ யாபகமானதுமாகிய பரப்பிரம்மத்தை ஒருவர் அடையும் போது அவர் பிறப்பிறப்புகளிலிருந்து விடுவிக்கப் படுகிருர்,
48. பரப் பிரம்மம் அல்லது தனிமுதல் மனம், பிரா ணன், புலன்கள் முதலியவற்றை ஒழுங்கு படுத்தி றடத்து கிறது.
49. பிரம்மமே செவியின் செவி, மனதின் மனம், நாக் கின் நாக்கு, வாக்கின் வாக்கு, பிராணனின் பிராணன், கண்ணின் கண்.
50. இவற்றில் நான் தன்மையைத் துறந்தும் புலன்
வாழ்வுக் கப்பா லெழுந்தும் அறிவாளிகள் அழிவற்றவர்க
ாாகிருர்கள்.
 

79
உண்மை இன்பம்
(குரு. ஆ. கந்தசாமி ஐயர்)
இறைப்பொருள் படைப்பின் கண் நினைவூன்றிய (சங் கல்பித்த) காலத்து உளதாகும் ஆற்றல் மாயை எனப்ப டும். ஆன்மாவின் நினைவுநிலை அவித்தை எனப்படும். இற்ை யும் உயிரும் (ஆன்மாவும்) ஒன்று எனத் தக்க தொடர்பு டையவை. அவற்றின் இயல்புகள் தம்முள் ஒத்தவை. ஆன் மாவை (உபசாரத்தால்) கட்டுண்ட இறை என்றும் அவி த்தையை ஆற்றல் நிறைந்த மாயை என்றும் கொள்ளல் வேண்டும். மாயை தோன்றியவாறே இறைப் பொருளி லும் அவித்தை தோன்றியவாறே ஆன்மாவிலும் ஒடுங்கி நிற்ப ஆன்மா இறைப் பொருளில் கலப்பதே வீடு பேறு என்பது வேத முடிபு. ஆகவே இறைப் பொருளை யன்றிப் பிறிது எதுவுமில்லை என்பது இதனுல் புலனுகின்றது.
மாயையால் அவித்தை தாக்கப் படுகிறது. அவித்தை யால் ஆன்மா தாக்கப் படுகிறது. அவித்தை என்பது நினை வாற்றல் எனப்படுவதனுல் அந் நினைவுக்கு இடனுகிய உள் ளம் அவித்தைக்குத் தாயகமாகும். அது பற்றியே ஒப்பு வமை நோக்கி உள்ளத்தையே அவித்தை எனவும் மாயை எனவும் ஆன்ருேர் கூறுவர். மன மாயைதனை ஏவினல் மனமெனும் ஒரு மாயை எங்கே இருந்து வரும்? என்பன போன்ற ஆன்ருேர் கூற்றுக்களின் உண்மைகளை நாம் ஆராய்தல் வேண்டும். , ,
V,, அவித்தை என்பது அறிவின்மை (அஞ்ஞானம்) என்று பொருள்படும்(வித்தை-ஞானம்,அவித்தை-அஞ்ஞானம்)என வே உள்ளம் அறியாமைக்குநிலைக்களம் என்பதுஇதனல்போந்த உண்மையாகும்.`உள்ளம் உலகியல் செய்திகளையும் பொருள் களேயும் உணரவல்லதன்ருே? அஃது எவ்வாறு பேதமைக்கு நிலையமாகும். எனின், ஈண்டு உலகியலறிவு அனைத்தும் பொய் யறிவு எனவும் ஆன்மாவை அறியும் அறிவே மெய்யறிவு என் றும் உணர வேண்டும் என்க. உள்ளத்தின் அறிவு நினைவறிவு ஆராய்ச்சி அறிவு. ஆன்ம ஞானம் உண்மையறிவு ஆராய்ச்சி யற்றது. தூய அறிவு. உள்ளம் உண்மை ஞானத்தை அவித் தை என்னுந் திரையால் மறைக்கிறது, St.

Page 22
"US". ". - (y7 SO ஆத்மஜோதி
சித்தம் பிறந்து செகம் பிறந்து ၂၅။ @န္ကြ်န္း'ဖီ၈)၊ ဇုli கத்தன் பிறந்த வழி கண்டோமே - சித்த
TL TTT TTTttTtt LtLLL ttttttLL LLLltLLtLLLL ttt L tmLTTT T திடந்தானே சாயுச்சியம்.
என்னும் சொரூப சாரத்தின்படி ܓ உள்ளத்தின் நினைவுகளாகிய அலைகள் ஒய்ந்த இடம் ஞானத் தோற்றம் ஒளிவிடும் இடமாகும். உள்ளம் முழுதும் நினை வலைகளின் பிழம்பு எனப்படும். அந்நினைவலைகள் ஒய்வுபெ றின் உள்ளத் தடம் அமைதி பெறும். அப்பொழுது உள் ளம் ஆன்மாவில் ஒடுங்கும். உள்ள ஒடுக்கமே ஒழிவிலொ டுக்கம். உள்ள ஒடுக்கமே அறிவின் தோற்றப் படும். நினை வலைகள் பற்று (ஆசை) அடியாகப் பிறந்து சினம், பொ முமை, தீங்காற்றல், கரவு, பொய்மை, கொலை முதலிய வடிவங்களாக வினை செய்கின்றன. பற்று அறுங்கால் நினைவு அலைகள் ஒடுங்குகின்றன. அல்லது நினைவு அலைகள் ஒடுங் கின் பற்று அறுகின்றது. பற்று ஏதுவாக நினைவுகள் உண் டாமிடத்து அவற்றை நீக்குதல் எங்ஙனம்? யோகம், ஞா னம், பயிற்சி முதலியவற்ருல் நினைவுகளை நீக்கலாகும் என்
பார் உளராயினும் அவற்றை உஞற்றவும் பற்றறுதி இன்
றியமையாது வேண்டப்படும் என்க.
பற்றற்று கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப்படும்.
பற்றுக பற்றற்ருன் பற்றினே அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
என்பன ஈண்டு ஆராயத் தக்கவை. (தொடரும்)
ሐ
ஆடுகின்றிலே கூத்துடையான்கழற் கன்பிலே என்புருகிப் V, பாடுகின்றிலே பதைப் பதுஞ் செய்கிலே பணிகிலே"பாத மலர் சூடுகின்றிலே சூட்டுகின்றது மிலே துணையிலி பிணநெஞ்சே தேடுகின்றிலே தெருவுதோ றலறில செய்வதொன் றறியேனே
 

ஈழத்துச் திருக்கூடடம் திருக்கேதீச்சரத்தில் திருவாசக விழாவும்
சாதனை நாட்களும்
நிகழும் சுபகிருதுவடு மார்கழிமீ" 16ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் (31, 12.621 முதல் (9.1 . 63) வரையுள்ள திரு வெம்பாவைத் திருநாட்களில் திருக்கேதீச்சரத்திலுள்ள திரு வாசக மடத்தில் திருவாசக விழாவும் சாதனை நாட்களும் நடைபெறும்,
இவற்றில் சென்னே, "கலே மகள் ஆசிரியர் மரீ கி. வா. ஜகந் நாதன், திருவாசகமணி K M.பாலசுப்பிரமணியன், பூg P.A.S. இராஜசேகரன் ஆகியோரும் ஈழத்துப் பேரறிஞர்கள் பலரும் பங்குபற்றுவர். வண்ண மரீ C.S.S. மணி பாகவதர், கொக்கு வில், மரீ த. குமாரசாமிப் பிள்ளை, மரீ வ. க. ஆறுமுகம், பூரீ த. இராசலிங்கம், மரீ சி, விநாசித்தம்பி, ஆகியோரின் கதாப் பிர சங்கங்களும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். தினமும் திருவாசக இன்னிசை மணிகளின் திருவெம்பாவையும் திரு வாசக பாராயணமும் நடைபெறும். தாய் நாட்டிலிருந்து வரும் பெருமக்கள் (4, 5, 6 1-63) வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கலந்து கொள்வர்.
நி க ழ் ச் சி க ள்
காலையில் திருவெம்பாவை, வேதபாராயணம், திருவாசக பாராயணம்,
தியானம், புரானபடனம், விரிவுரைகள்,உரையாடல் ஆகியனவும் மாலையில் கூட்டு வழிபாடு, கருத்தரங்கம், வேதபாராயணம், தியானம்,
விரிவுரைகள்,திருவாசகபாராயணம்,கதாப்பிரசங்கம் ஆகியனவும்.
நடைபெறும்.
விபரங்களே நிகழ்ச்சி நிரலில் காண்க
சாதனையில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு வேண்டிய வசதிகள் யாவும் திருவாசக மடத்தில் செய்து கொடுக்கப்படும். இவர்கள் திருக் கூட்டச் செயலாளருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள் ளப்படுகின்றனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேம் .
சி. சரவணமுத்து
10/1 தெமட்டகொ ட பிளேஸ், G guja) TGT si கொழும்பு -9 5-12-62
, , ,
ஈழத்துர் சிவனடியார் திருக்கூட்டம்
': '.*'), ' ' *: '

Page 23
ஆத்மஜோதி நி? தெய்வீக வாழ்க்கைச் சங்க வழிபாடு திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்திை பூனி கதிரை மணி மாலை அறிவுரைக் கதைகள் இளங்கோவின் கனவு நவராத்திரிப் பாடல் ஆத்ம நாதம் (சுத்தானந், கீதா யோகம் 9 is கந்தரநுபூதி - பொழிப்
மார்கழி மாதப் பாடல்
சந்தா நே அன்புடையீர்
இன்றுவரை 15ம் ஆண்டுக்குரி உடனுக்குடனேயே ரசீது அ கெல்லாம் எமது நன்றி உரி அனுப்பாதோர் உடனே
ஆத்மஜோதி நி
இந்தியாவிலுள்ள அன் R வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ் என்ற விலாசத்திற்கு அனுட் தெரியப்படுத்த வேண்டுகின்ே
வாய்வு
உஷ்ணவாய்வு, முழங்கால் மலக்கட்டு, மலபந்தம், அஜீா பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கருட் களை நீக்கி ஜீரண சக்திக்கு - மிகச்சிறந்த
தபால் செலவு உட்பட : |Lt சம்பு இன்டஸ் ரீஸ் - அரி!
லங்கையில்
ஆத்மஜோதி நிலே
Printed & Published by Mr. N. Mu at Athmajothi Press, Nay
 
 
 
 
 

ರಾVspaper TWA 22/3 وصلاՄՆ
வெளியீடுகள்!
1-25 -25 (நா. முத்தையா) 1-50 risJ -75
(பரமஹம்ச தாசன்) -50 (சுவாமி சிவானந்தர்) -65 (செ. நடராசன்) 2-25
-25
த பாரதியார்) | 3-00 2-50 ரையுடன் -25 -20
யர்களுக்கு.
ய சந்தா அனுப்பியவர்களுக்கு னுப்பியுள்ளோம். அவர்களுக் த்தாகுக. இன்று வரை சந்தா ப்பி வைக்க வேண்டுகின்ருேம். யம் - நாவலப்பிட்டி,
GunT Gör ;- 353. பர்கள் வழக்கம்போல் ), அரிசிப்பாளையம், ○子sm)○ー2。
பிவைத்து, அதை எமக்கும்
(Մ ԼD.
சூரணம்
வாய்வு, இடுப்பு வாய்வு *ணம், கைகால் அசதி பிடிப்பு பித்த மயக்கம், பித்தகுலே, பு, முதலிய வாய்வு ரோகங் ம் தேகாரோக்கியத்திற்கும் 5 சூரணம்.
டின் ஒன்று 4ருபா 25சதம் u fisio 25o) -
கிடைக்குமிடம்: யம் - நிாவலப்பிட்டி,
hiah, Athmajothi Nilayam, Nopitiya.
talapitiya. (Ceylon) 16-12-62.
* 。