கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.01.14

Page 1


Page 2
ஆதம
(ஒர் ஆத்மீக மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
ஜோதி 15
Η 0
2 I 3 1 4
பொருளடக்கம்
வீர விவேகானந்தம்
அம்புவியில் அறந்த ைமுக்க 9 வதரித்த ஆனந்தப் உவமைக்கு உட்படாத உத்தமர் அருளின் அளப்பெரும் பெருமை
அன்னை சாரதா தேவியாரின் அருள் மொழிகள் குடும்ப மிடிதீர பொருள் கோபி குவலய இருவ கல
அருள் பெற்ற அற்புதம்
திருவடித் தீஷை அமரநாத யாத்திரைக்குப் பின் தெய்வத் தன்மையும் ம விதத் தன்மையும் சிதாகாச கீதை பிராண பிராணுயாம விளக்கம் சித்த சோதனை சிறு மொழி ஏற்றருளே
வேதாந்தம்
கேைேப நிஷத சாரம்
ஆயுள் சந்தா ரூ. 7500
" ஆத்மஜோதி நிலையம்” நாவலப்பிட் டி.
ஆத்மஜோதி சந்தா விபரம்
、*→→→→→→→单→→→→→→→→
தனிப்பிரதி சதம் 30. கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா
தொலைபேசி எண் : - 353.
ஜோதி
சுபகிருதுளுல் தை மீ" 1 வ (11-1-63) , 3
W "N"/ }\*/
, , ),ானந்தர்.
8
83 88 90 91.
95 97 II () () I (3 05 07 0. l l 4 I 6 | 9
வருடச் சந்த Ph.3-00
(சிலோன்)
 
 
 
 
 

5fy விவேகானந்தம்
سحيمينجق عجرجس
பாரத நாட்டின் தவப் புதல்வன், - கோடி
பானு வின் பேரொளி சூழ்வதனன்;
விர நரேந்த்ரன எண்ணிவிடில் நெஞ்சம்
விண்முட்ட விம்மிப் பூரிக்குதம் மா!
மையிருள் வாழ்வில் மயங்கித் தவித்திடும்
மாந்தரைக் காத்திட ஆழ்ந்தகன்ற
வையகம் போற்றிடும் ராமகிருஷ்ணன்' எனும்
வாரியில் தோன்றிய சூர்யனிவன்
விண்ணிற் பொலியும் கதிர் மதியம் - வந்து
மே விபர் வெற்றி விழிச்சுடரோன்;
தண்ணருள் வெள்ளம் பொழிந்தடைந் தோர்தமைத்
தாங்கும் தயாள குணு ளனிவன் !
காமனும் மயங்கும் பேரழகன் - இளங் காளையர் காமுறும் தோளழகன்
வாய்மைப் புலவர் மயங்கப் பொழியும் நா
வன்மை படைத்த மதியழகன்!
இமயம் முதலாய்க் குமரி யீ றகவே
எங்கிலும் கால்நடை யாய்நடந்து
அமரர் தொழும் அன்னே இன்னல் நிலைகண்டு
அங்கம் உருகிய தங்கமிவன்!
பர்வத ஜோதியாய் எங்கும் விளங்கிடப்
பாரத சக்தி மணிக்கொடியைச்,
சர்வ சமய உலகினில் நாட்டியே
தாயின் பணிநிறை வேற்றியவன்!
கைம்பெண்ணின் கண்ணிர் துடைக்கா மதமும்
கடவுளும் வேண்டா மென்றே யறைந்தோன் என்புருகி ஏழை இன்னல் களைந்திட
எத்தனை ஜன்மமும் ஏற் பெனென்றேன்!

Page 3
82
ീ', ' '
剑
ஆத்மஜோ
"ஆண்டவனே எங்கு தேடுகின்றீர்? - ஏழை,
அல்லலுற் ருேரை அருகில் வைத்து! தோண்டு பவருண்டோ கங்கைக் கரையிலே
சால்வீர்?" என்றுண்மையைத் தோன்ற வைத் தோன் !
"இரும்புத் தசைகளும், எஃகு நரம்பும் ,
எதற்கும் அஞ்சாத மனுேவலியும்
விரும்பிப் பெறுங்களென் றேயிள ஞர்க்கெலாம்
வீறளித் திட்டசிங் கேறு இவன்!
விண்ணும் அதிர்ந்திட மின்னிக் குமுறியே
வேதாந்த கர்ஜனை மாரிபெய்த
திண்ணிய வீர விவேகானந் தக்கொண்டல்
செய்த எழில்வளம் செப்பரிதோ!
சத்திய வேட்கையால் மெத்தத் துடித்துத்
தயங்கா திறைவனைக் கண்டதுண்டோ? வென
வித்தகனைத் தேடிக் கண்டுகொண் டின்ப
வெறியடங்கப் பெற்ற முத்தனிவன்!
சற்குரு நாதன் திருப்புகழ் என்றும்
தழைத்திடச் சங்கம் வளர்த்து விட்டோன்
பொற்பதத் தாளேநம் நெஞ்சில் அணிந்திருட்
புன்மையற் றின்பம் பொலிந்து நிற்போம்!
வீரப் புதல்வணு கப்பிறந்து - அஞ்சா
வீர இளங்காளை யாய் வளர்ந்தே
வீரத் துறவியர் வேந்தனுய் வாழ்ந்தநல்
வீரனேப் போற்றிமெய் வீறு கொள்வோம்!
சுத்தப் பைத்தியம் என்றுல கம்சொன்ன
தூய பரமஹம் சனருளை இத்தல மெங்கும் இறைத்திடத் தோன்றிய
எந்தையின் பொன்னடி சிந்தை வைப்போம்! 霹
- ‘பரமஹம்ஸ தான்'

தேவர்
ஷண பரமஹமச
సౌx
●
பிபூரீ இராமகிரு

Page 4

ஆத் േ 83 அம்புவியில் அறந்தழைக்க அவதரித்த ஆனந்தர்
(ஆசிரியர்)
இன்று மகர சங்கிராந்தி; உத்தராயண புண்ணியகா
லம்; இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று. தென்
திசை நோக்கிச் சென்ற சூரியன் திரும்பவும் வடதிசை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும் நாள். தென்திசை குறிப் பது மரணத்தை வடதிசை விளக்குவது வாழ்வை தாழ் வுற்றிருந்த இந்து சமுதாயத்தை மறுபடியும் தலைநிமிர்ந்து வாழ்வுறச் செய்த சுவாமி விவேகானந்தர் அவதரித்த திரு நாள் இது. 1863ஆம் ஆண்டு மகர சங்கிராந்தியன்று தோன்றிய அம்மகானின் நூற்ருண்டு நிறைவு விழாவை மிகவும் விசேடித்த முறையில் கொண்டாடுவதற்கு பூரீஇராம கிருஷ்ண சங்கம் பல ஒழுங்குகள் செய்துள்ளது. வடக்கே அவர் பிறந்த கல்கத்தா நகரில் அவர் திருப்பெயரால் ஒர் சர்வகலாசாலை நிறுவப் பெறுகின்றது; தெற்கே அவர் அருந் தவம் புரிந்து தீர்க்கதரிசனம் பெற்ற கன்னியாகுமரியில் ஒர் பெரிய நிலையம் எழும்பப் போகின்றது. அவரது உப தேசங்களனைத்தும் திரட்டப்பட்டு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் அடக்கவிலைப் புத்தகங்களாக வெளிவருகின் றன. உர்து மொழியில்கூட அவை வெளிவர இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். 'ஆத்மஜோதியும் இந்த இதழை விவேகானந்த மலராக்கி அப் புண்ணிய புரு ஷன் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றது. இத் தொண்டு சிறிதாயினும் அதைப் பெரிய ஆர்வத்துடன் புரிகின்ருேம்.
மேல்நாட்டு நவீன நாகரிகத்தின் வளர்ச்சியையுந் தளர்ச் சியையும் பற்றி ஆராய்ச்சி செய்த சரித்திர விற்பன்னர்கள் அது கி. பி. 1871ஆம் ஆண்டை அடுத்து ஆரம்பித் ததாக முடிவு செய்துள்ளார்கள். ஏறக்குறைய அதேகால எல்லையில்தான் பாரத நாட்டில் சனதனதர்மத்தின் மறும லர்ச்சி உதயமான தெனலாம். இந்து மதத்தின் கால சக்
கரத்தில் கீழ் தரப்பட்ட ஏழுகால எல்லைகள் திட்டமான
ஏழு சட்டங்கள் போல் அமைந்துள்ளன.

Page 5
84 ஆத மஜோதி
| 1| வேதகாலம், (2) உபநிடதகாலம் , (31 இரா மர் அவதாரமும் ஞானவாசிட்டமும், (4) கிருஷ்ணர் அவதாரமும் கீதோபதேசமும், (5)புத்தர் தருமம், (6) சங் கரர் அத்வைதம், (7) விவேகானந்தர் திக்விஜயம்.
ஆகையால், பாரத தேசத்தின் வரலாற்றை, புராதன சமயரீதியாகக் கூறின், இப்போ நடப்பது இராமகிருஷ்ண - விவேகானந்த சகாப்தமாகும். முன்னையோர் நமது நாட்டில் முனிவரர் தேடிவைத்த முழுமுதல் ஞானமெல் லாம் மூடநம்பிக்கை' என்ற கொள்கை பரவிய காலத்தில் அவர்கள் தோன்றி இந்துக்களின் உள்ளத்திருளைக் களைந்த னர். பரமஹம்ஸரும் விவேகானந்தரும் மணமும் பூவும், ஆற்றலும் அறிவும், மணியும் ஒளியும் போன்று ஒன்றே யானவர்கள். விவேகானந்தர் வாக்கில் வீர கர்ஜனையாக வெளிவந்த அத்தனையும் பரமஹம்ஸரின் ஆத்ம சக்தியே யாம். இராமகிருஷ்ணதேவரை சர்வ மத சமரஸ்க் கோயி லின் மூலவரென்ருல், விவேகானந்தரை அக் கோயிலின் எழுந்தருளி விக்ரஹமெனலாம்.
“நரேந்திரன் என் பக்கத்திலிருந்தால் போதும், நான் பிரம்மானுபூதியை அடைந்தவண்ணமே யிருப்பேன்’ என ஒருமுறை கூறிய பரமஹம்ஸர் மேலுந் தொடர்ந்துரைத்த அரிய பாராட்டு மொழிகள் சிலவற்றை இங்கு வாசகர்க ளுக்கு நினைவூட்ட விரும்புகிருேம்:-
"என்னைச் சுற்றி மலர்களை யொத்த மனமுடைய பக் தர்கள் பலருளர். அவர்களுள் சிலர் பத்து இதழ்கள் உள்ள மலர்களாகவும், சிலர் பதினறு இதழ்களுள்ள மலர்களாகவும் இன்னுஞ் சிலர் நூறு இதழ்களுடைய மலர்களாகவும் பல திறத்தினராக இருக்கின்றனர். அவர்
களுள் சகஸ்ரதள அரவிந்தணுய் விளங்குகின்ருன் நரேந்
திரன்'
இதுவே அந்த அவதார மூர்த்தியின் அருள் வாக்கு. அவர் எவரையும் புகழ்ந்து பேசும் சுபாவமுடையவரல்லர். ஆனல் அவர் எதையும் ஒளித்து மறைத்துப் பேச மாட் டார். நரேந்திரனின் பெருமையை அவர் அடிக்கடி பேசி யது கேட்டவர்கட்கு வியப்பையும், நரேந்திரனுக்கே அதே
வித உணர்ச்சியையும் கொடுத்தது. பின்னர்தான் அவை
யெல்லாம் மெய்யென்று புலனுயிற்று.
י

85 த்மஜோ தி تھی۔
பரமஹம்ஸர் மஹாசமாதியடையுமுன் ஒருநாள் தமது அடியார்களை விளித்து, "எனக்குப் பின் நரேந்திரனை உறுதி யாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அவன் அவதார புருஷன் என்று கூறினுர். இந்த வாக்குக்குப் பொருந்தவே அவர் களும் நடந்து கொண்டனர். விவேகானந்தரின் குருபக்தி விளக்குந் தரத்ததல்ல. ஞான வாழ்க்கைக்கு அது ஒர் இணை யற்ற எடுத்துக் காட்டாகும். 1898ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் குருதேவரின் இல்லற சீடர்களில் ஒருவரான பாபுநாபா கோபால் கோஷ் என்பவர் தமது வீட்டில் ஒர் அழகான பூஜை அறைகட்டி, அதில் ராமகிருஷ்ண தேவ ரின் சிலை ஒன்றைப் பிரதிஷ்டை செய்யும் பொருட்டு சுவாமி விவேகானந்தரையும் அவரது சகாக்களையும் அழைத்திருந் தார். அதற்குரிய கிரியை நடக்கும்போது சுவாமிகளின் வாக்கிலிருந்து ஒர் சமஸ்கிருத சுலோகம் அற்புதமான முறை யில் வெளிவந்தது. அதின் கருத்தைக் கீழே தருகின்ருேம்.
ஹே1, ராமகிருஷ்ணதேவா! சமயோத்தாரண சம் பன்ன மூர்த்தி சர்வ மத தாத்பர்ய சொரூபி! அவதா ரங்களிற் சிறந்த விளக்கே! உனக்கு மங்களம்!"
குருதேவரின் அவதார மகிமையையும் உன்னத நோக் கத்தையும் எவ்வளவு அருமையான கருக்க முறையில் இந்த சுலோகம் நமக்கு எடுத்து விளக்குகிறது?
குருதேவரின் வாழ்க்கையின் முன்பகுதியில் நாம் கானும் காளிப் பித்தை சுவாமிகளின் பிற்கால வாழ்க்கையில் ஒரே தன்மையில் காண்கின்ருேம். இருவர்க்கு மிடையேயுள்ள சாதன ஒற்றுமைக்கு இது ஒர் உதாரணமாகும். அமரநாத யாத்திரைக்குப் பின்னரே இந்தத் தீவிர தேவிபக்தி சுவா மிகளின் உள்ளத்தில் வீறிட்டு எழுந்ததாகும். அதின் விப ரங்களைப் பிறிதோரிடத்தில் காண்க.
தமிழ்நாட்டுப் பக்தி முறையில், தமிழ் இலக்கிய மரபில் விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை விளக்கப் புகின் கடவுண் மாமுனிவர் பாடல்கள் சாலவும் பொருத்தமுடை யது. மாணிக்கவாசகர் தோன்றிய காலத்திலிருந்த சமய நிலையை அந்த முனிவர் மிகவும் அழகான முறையில் நமக் குப் படம் பிடித்துக் காட்டுகிருர், விண்ணிலிருந்து இரவு வேளையில் ஒளிவீசும் நட்சத்திரங்கள் பகலில் நமது கண்க ளுக்குத் தென்படுவதில்லை. அவைகள் விண்ணிலிருந்து மண்

Page 6
S6 ஆத்மஜோதி
ணில் வீழ்ந்து மறைந்து விடவில்லை; இரவில் இருந்த இடங் களிலேயே உள்ளன. ஆணுல், பகலில் சூரியனின் பிரகாசத் தின் முன் அவற்றின் ஒளி மழுங்கி விடவே, அவற்றை நாம் காண முடிவதில்லை. அதேபோல் அநாதியான சைவத் தின் மறுமலர்ச்சிச் சூரியன் உதயமாகவே, ஏனைய சமயங் களின் ஒளி மழுங்கி விட்டது என்கிருர் திருவாதவூரர் புராண ஆசிரியர்.
“பொய்மையா முலகின் மாயப் பொங்கிருளகல வன்னுேர் தம்மையாள் நரகிற்றள்ளுஞ் சமயதாரகை மழுங்க
எம்மையா ஞடையா னன்பரிதய தாமரைக ளெல்லாஞ் செம்மையாய் மலர ஞான தினகர ருதயஞ் செய்தார்’
இதே சமய நிலையையே இராமகிருஷ்ணர் - விவேகா னந்தர் வருகைக் காலத்திலும் காண்கின் ருேம்.
சின்னஞ் சிறு வயசிலேயே புத்தரின் துறவு விவேகா னந்தரின் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. அவரது சாதனையும் குருவைத் தேடியலைந்து அருள் பெற்ற விதமும் கடவுண் மாமுனிவர் பாடல்களை மேலும் நமக்கு நினைவூட் டுந் தரத்தில் அமைந்திருந்தன. பரமஹம் ஸ்தேவரின் திருப் பாதங்களில் அவர் சரண் புகுந்த விதம் முற்றிலும் கீழ்க் கண்ட பாடலைத் தழுவியதாகும்:-
‘மின்னினு நிலைமையில்லா விழுப்பொருள் யாவும் வேண்டேன் உன்னடியணைந்து நாயேன் உறுபவ மொழித்தல் வேண்டும் என்னேயின்றடிமைக்கொள்வாய் எம்முயிர்க்கிறைவா வென்று முன்னுற வணங்கி நின்றர் முகமெலாங் கண்ணிர் வார
விவேகானந்தர் உபதேசங்களெல்லாம் உபநிடதக் கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். அவர் வாழ்க்கையின் மகாமந்திரம், கடோபநிஷத்து 3ம் வல்லி 14ஆம் சுலோகத்தில் வரும் 'உத்திஷ்ட்ட ஜாக்ரத ப்ரா ப்ய வராந் நியோதத' என்பதாம். இதன் பொருள்: எழுமின் ! விழிமின் ! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் உண
ܬܐ ܠ ܐ
ருமின்' என்பதாம். சம்ள)ாரமாகிய சொர்ப்பனத்திலிருந்து
சீவனைத் தட்டியெழுப்பும் மந்திரம் இது. எல்லோருஞ் சொன்னுேங்கேள் வெவ்வேறய் இன்னந் துயிலுதியோ வன் னெஞ்சப் பாவையர் போல் வாளாக்கிடத்தியால் என்று மணி வாசகரும் ‘உன்னைக் கூவுவான் வந்து நின்றேம்; கோது
கலமுடைய பாவாய் எழுந்திராய் இனித்தான் எழுந்திராய்

厂*
ஆத்மஜோதி 87
ஈதென்ன பேருறக்கம்" என ஆண்டாளும் இடித்துரைத்தது இதே உபநிடத மணிமொழியையேயாம்.
சுவாமிகள் அருளிய சந்நியாசி கீதத்திலும் இந்த மந் திரத்தின் சாரம் அடங்கியுள்ளது. அக்கீதத்திலிருந்து சில வரிகளைத் தந்து இக் கட்டுரையை முடிக்கின்றுேம் ;-
'அஞ்சுதல் அறியா நெஞ்சநற் றுறவீ! "எவன் எதை விதைப் பான் அவன் அதை அறுப்பான்' காரணம் உள வேல் காரியமும் உள நன்மை விதைத்தவன் நன்மை அறுப்பன் தீமை விதைத்தவன் தீமை அறுப்பன். இவ் விதியினின்றும் விலக்கா வார் இலர் உருப் பெற்றேர்க் கெலம் உறுதுணை உண்டெனப் புகல்வர். இதனிற் பொய் இலே. ஆயினும் , நாமரூபம் ஆம் இவற் றப்பால் என்றும் தடையற நின்றுள தான் மா. அதுவே நீயென் றறியக் கடவை ஒதுக நீஓம் தத் ஸத் ஒம் என'
*விவேகா நந்த வித்தகன் அடிஇணே தவநெறி எய்தத்தான் பணிகுவமே'
உலகில் உயர்ந்த காரியங்கள் அனைத்தையும் சாதித்த வர்கள் மனிதர்கள். அவர்கள் உன்னையும் என்னையும் போன் றவர்களே. ஆண்மை மாத்திரம் இருந்தால் நம்மைப்
போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும்.
எனவே தைரியத்தை மேற்கொள்! எழுந்திரு! விழித்திரு! கருதிய கருமம் கைகூடும்வரை உழைத்திடு!
குழந்தாய்! நாம் வேண்டுவன யாவை தெரியுமா? இரும்பினை ஒத்த தசைநார்கள், எஃகினை ஒத்த நரம்புகள். இவற்றினுள்ளே இடியேறு போன்ற வலிவுள்ள மனம் - இவையே நமக்கு வேண்டும், பலம், ஆண்மை, க்ஷத்திரிய வீரத்துடன் கூடிய பிரம்ம தேஜஸ் இவை வேண்டும்.
- விவேகானந்தர்,

Page 7
SY:
88 ஆத்மஜோதி
உவமைக்கு உட்படாத உத்தமர். சுகோதரி கிறிஸ்தினுவின் ஞாபகக் குறிப்பு)
அப்பொழுதும் இப்பொழுதுமாக, நீண்ட காலத்திற்கு இடையில் ஒரு தடவையாக, பெரியார் ஒருவர் இவ்வுலகிற்கு வந்து சேர்கின்றர். வேருெரு பிரதேசத்தினின்றும் வந்த ஒரு பிரயாணியே அவர் என்பது ஐயமறத் தெரிகின்றது. தாம் எந்த இடத்தினின்றும் வந்தாரோ அந்தத் தூரமாக வுள்ள தொலைப் பிரதேசத்தின் மகிமை, சக்தி, பேரொளி ஆகியவற்றில் கொஞ்சத்தை அவர் தம்முடன் துக்கம் நிறைந் த இவ்வுலகிற்குக் கொண்டு வருகின்றர். உலகத்து மக்கள் இடையே அவரும் வசிக்கின்ருர், ஆனல் இங்கு அவருக்கு இருப்புக் கொள்ளுவதில்லை, அவர் ஒரு யாத்திரிகர், அன்னி யர், ஒரிரவே அவர் இங்கு தங்குகின்றர்.
தம்மைச் சுற்றியுள்ளவர்களுடையவாழ்க்கையில் அவரும் பங்கு கொள்கின்றர். அவர்களுடைய சுகதுக்கங்களில் கலந்து கொள்கின்றர். அவர்களுடன் இன்புறுகின் ருர், அவர்களுடன் சோகப்படுகின்றர். ஆணுல் இவற்றிற்கு இடையினில் தாம் யார், தாம் எங்கிருந்து வந்தவர், தரம் வந்ததினுடைய நோககம் யாது என்பதை அவர் ஒருபொழுதும் மறப்பது கிடையாது. தம்முடைய தெய்விக இயல்பை அவர் ஒருக் காலும் மறப்பதில்லை. மகத்தான, மாட்சிமை பொருந்திய, காம்பீரியம் மிகுந்த, ஆத்மாவே தாம் என்ற நினைவு அவரி டம் இருக்கின்றது. ஒளிகளுக்கெல்லாம் பேரொளியாக உள்ள ஜோதியினுல் பிரகாசமுற்றிருப்பதால் சந்திர சூரியர்களும் அவசியமில்லாமல் இருப்பதும், சொற்கொண்டு விவரிக்க முடியாததுமான அந்த வானுலகப் பிரதேசத்தினின்றும்
தாம் வந்ததை அவர் நன்கு அறிந்துள்ளார். 'ஈசுவரபுத்தி
ரர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆனந்த கானம் செய்த’ அந் தக் காலத்திற்கும் வெகு முன்பாகவே தாம் இருந்ததை அவர் அறிவார்.
இத்தகைய ஒருவரை நான் கண்டுள்ளேன், கேட்டுள் ளேன், போற்றியுள்ளேன். எனது உள்ளத்தின் பக்தியை
அவர் பாதங்களில் சமர்ப்பித்துள்ளேன்,
இத்தகைய ஒரு புருஷர் உவமைக்கெல்லாம் உட்படாத வர். ஏனெனில் சாதாரண ரீதிகள், இலக்ஷயங்கள் யாவை

ஆத்மஜோதி 89
யும் அவர் கடந்து நிற்கின்ருர், பிறர் மேதாவிகளாக இருக் கலாம். ஆனல் அவருடைய மனமோ பேரொளி நிறைந்த தாக உள்ளது. எல்லா ஞானத்திற்கும் உற்பத்தி ஸ்தானமாக வுள்ளதெதுவோ அதற்கும் தமக்கும் வெகு ச மீ ப ம ர ன தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வன்மை அவருக்கிருக் கின்றது. சாதாரண மானிடர் பின்பற்றியே ஆகவேண்டிய மெதுவான முறைகளையே பின்பற்ற வேண்டிய நிபந்தனே அவருக்கு இனி இல்லை. பிறர் மகிமை யுடையவர்களாகவிருக் கலாம். தம்முடைய இனத்தைச் சேர்ந்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே அவ்வாறு அவர்கள் மகிமை பொருந் தியவர்களாவார்கள். பிறர், நல்லவர்களாக, சக்திமான்க ளாக, விசேஷாம்சம் படைத்தவர்களாக, தம்முடைய கூட் டத்தாரில் மற்றவரைவிட அதிக நல்லியல்பு படைத்தவர் களாக, அதிக சக்தியுடையவர்களாக, அதிக மேதை பொருந் தியவர்களாக இருக்கலாம். இதெல்லாம் ஒருவருடன் மற்ற வரை ஒப்பிட்டுக் கூறும் விஷயமேயன்றி வேறில்லை. முனிவர் ஒருவர் சாதாரண மாந்தரைக் காட்டிலும் அதிகமான புனி தத் தன்மை வாய்ந்தவராய், அதிகத் தூய்மை கொண்டவ ராய், விசேஷித்த முறையில் ஒரே நோக்குடையவராக இருக் கின்றர். ஆனல் சுவாமி விவேகானந்தர் விஷயத்திலோ அவரைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது முடியாத காரியமாயிருந்தது. தம்மில் தாம் ஒரு தனிரகமாக இருந்தார் அவர். அவர் வேருெரு வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந் தார், அவர் இவ்வுலகக்காரர் அல்லர். வேருெரு உலகினின் றும் இறங்கி வந்த, குறிப்பிட்ட ஒரு காரியத்தின் பொருட்டு உயர்ந்த பூமியொன்றினின்றும் அவதரித்த ஜோதி மூர்த்தி யாக இருந்தார் அவர். அவர் நீண்ட காலம் ஈண்டு தங்கி யிருக்க மாட்டார் என்பதை நாம் தெரிந்து கொண்டிருக்க (GNI) TLD .
Ꭽ*
இத்தகைய மகானுடைய ஜனனத்தை முன்னிட்டு இயற் கையே இன்புறுகின்றது. வானுலகம் திறந்து, தேவர்கள் புகழ்க் கீதங்கள் பாடுகின்றனர் என்பதில் வியப்பென்ன உள் ளது!
அவர் பிறந்த நாடு பாக்கியமுடையது. அவர் காலத்தி லேயே இப்புவியின்கண் வாழ்ந்தவர்கள் பாக்கியசாலிகள். * அவரது அடிகளில் அமர்ந்த சிலரோ மும்மடங்கான பாக்கி
யம் பெற்றவர்கள். -

Page 8
ר החיר", "זה
9 () ஆத்மஜோதி
அருளின் அளப்பரும் பெ ருமை
கிருபையின் திறமையைத் பற்றிப் பல நூல்கள் பல வாறு பேசுகின்றன. பகவான், தமது விஸ்வ ரூபத்தை அர்ச்சுனன் காணும் திறமை பெறுவதற்காக, ஞானக் கண் ணைக் கொடுத்தது அருளின் செயல் என்கிறது கீதை, கார ணம் பற்ருதெழும் கடவுளின் கருணையைப் பெறலாம்
என்று புராணங்கள் கூறுகின்றன. ஜகை மாதை என்னும்
இரு மூர்க்கர் பூரீ சைதன்யரது அருளால் நல்லோரானர் என வங்காள வைணவர் எழுதி வைத்துள்ளனர். பாவிக ளாகிய உலக மக்கள் நல்ல கதியை அடையும் பொருட்டு இயேசுநாதர் அவர்களுடைய பாவங்களைத் தாம் ஏற்றுச் சிலுவையில் உயிர் துறந்தார் என்று கிறிஸ்தவ மதம் பறை யறைகின்றது. இவைகளையெல்லாம் கேட்டிருந்தும் பூரீ ராம கிருஷ்ணரது வாழ்க்கையில் அருளின் செயல்களை யாம் கண் னரக் கண்ட பின்பே கிருபை உண்மையானதென்ற தெளி வும் உறுதியும் எம்மிடம் எழுந்தன.
ராமகிருஷ்ணர் தமது அந்திம காலத்தில் நோயால் வருந்தும்போது, ஒருநாள் தாம் கண்ட காட்சியொன்றைப் பற்றிப் பின்வருமாறு கூறினர் :- 'எனது சூக்கும உடல் தூல உடலை விட்டுப் பிரிந்து என் முன் உலாவிற்று; அதில் முதுகுப் பக்கம் முழுவதிலும் பல புளவைகள் தென்பட் டன. ஒரு பாவமும் அறியாத யான் அதன் காரணம் தெரியாது திகைத்தேன். அப்போது அம்பாள் தோன்றி, "பலவகைப் பாவங்களும் புரிந்தோர் உன்னைத் தொட்டு வணங்குகின்றனர். நீ மனமிரங்கி அவர்களுடைய பாவங் களேயெல்லாம் ஏற்றுக் கொள்கின்றன. அடிக்கடி அவ்
வாறு செய்ததன்பயணுக அவ்வுடல் அப்படியாயிற்று' என்று
காட்டி யருளினுள். என் தொண்டைப் புளவைக்கும் கார ணம் அதுவே என்ருர், இன்னெரு சமயம் உடலில் வெண்
குட்டம் உண்டான ஒருவன் குருதேவரை அடைந்து, உமது
கையால் வெண்குட்டமுள்ள இடத்தை நீர் தடவுவீராயின் எனது நோய் தீர்ந்து விடும் என்று மனமுருக வேண்டி னன். அவரும் இரக்கம் மிகுந்து, ‘அம்பிகையின் திருவுள மானுல் உன் பிணி நீங்கட்டும்’ என்று சொல்லித் தட
னர். அவனது நோய் மறைந்தது; ஆனல் அன்று முழுதும்
கையில் பெரும் வலி உண்டாகி அவரை வருத்தியது. அவ
3.
னது நோய் தீர்ந்தது. அவனுக்குரிய துன்பம் இவ்வுடலைப் பற்றியது' என்ருர் குருதேவர். இவ்விரண்டு செயல்களிலிருந் ?
தும்நாங்கள் அருளே இன்ன தன்மைய தென்று அறிந்தோம்.

ஆத்மஜோதி 9.
அன்னே சாரதாதேவியாரின் அருள்மொழிகள்
(R. இராமகிருஷ்ணன்)
ஆத்ம சாதனையைப் பற்றிய பொது விபரங்கள்
துறவிச் சீடரொருவர் அன்னையாருடன் ஆத்ம சாதனை யைப் பற்றிய பொது விபரங்கள் சம்பந்தமாக நிகழ்த்திய தொடர்ந்த சம்பாஷணைகளின் குறிப்புகளாகும் இவை:
பிராணுவிாமம், யாத் திரை, குண்டலினி.
சிடர் தாயே, யோகாசனம், பிராணுயாமம், இவற்றை அப்பியசித்தல் நலம் தானே?
அன்னே யார் இவ்வப்பியாசங்களால் சித்திகள் கிட்டுகின் றன. இந்தச் சித்திகள் ஒரு மனிதனை மோக்ஷமார்க்கத்தி னின்றும் தவறி விடுமாறு செய்கின்றன.
சிடர் புண்ணிய சேஷத்திரம் ஒன்றிலிருந்து இன்னென்றுக் காக யாத்திரை செய்து கொண்டே இருப்பது நலம்தானு?
அன்னயார்; குறிப்பிட்ட இடமொன்றில், மனம் அமைதி யுற்றிருக்குமானல், பாத்திரை செய்ய வேண்டிய அவசிய மேயில்லை.
"சிடர் என்னல் தியானம் செய்ய முடிவதே இல்லை. தயை கூர்ந்து என்னுடைய குண்டலினியை எழுப்பி விடுங்கள்.
அன்னயார்: காலக்கிரமத்தில் அது விழித்தெழும். ஜப மும் தியானமும் செய்வீராக, அது தானகவே (முயற்சி யின்றியே) விழிப்புற்று, எழாது. தொடர்ந்த தியானத் தால் மனம் வெகுவாக ஸ்திரப்பட்டுப் போகின்றது; அதன் பயனகத் தியானத்தை விட்டுவிட வேண்டுமென்ற மன உணர்ச்சியே உமக்கு வராது. தியானம் புரிவதில் மனம் பிடித்தம் கொள்ளாமலிருக்கும் பொழுது, தியானம் புரியு

Page 9
. 92 ஆத்i) ஜோதி
மாறு அதை வற்புறுத்தாதீர். அத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது, நமஸ்காரம் செய்துவிட்டுத் தியானுச னத்தினின்றும் எழுந்துவிடும். உண்மையான தியானம், சுய மாகவும் தங்கு தடையின்றியும் எழும் இயல்பினதாம்.
மனச் சஞ்சலமும் ஜபமும்
இசீடர், தாயே, மனம் ஸ்திரப்படாமல் போவது ஏனுே? நான் பகவானைப் பற்றிச் சிந்திக்க முயலும் பொழுது, மனம் மற்ற விஷயங்களில் பிரவிர்த்திப்பதைக் காண்கிறேன்.
அன்னயார் : இலௌகிக விஷயங்களில் மனம் பிரவிர்த்தித் தால் அது தவருகும். இலௌகிக விஷயங்கள் என்றல் L-10TLD குடும்பம் முதலியவற்றைக் குறிக்கும். ஆனல் நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அந்தத் தொழி லேப் பற்றி மனம் சிந்திப்பது இயல்பேயாகும். தியானம் புரிவது கூடாது போனுல் ஜபம் புரிவீராக, ஜபத்தின் மூலம் சாக்ஷாத்காரம் கிட்டும். தியானம் புரிவதில் பிடித்தமுள்ள மனேநிலை ஏற்பட்டால், மிகவும் நல்லதாயிற்று, ஆனல் ಜ್ಞೇ''ತಿ॥ மனத்தைப் பலவந்தப் படுத்தித் தியானம் புரி
LJsTSGIT.
சாதனக்கேற்ற இடம்
சிடர்; தனிமையான ஓரிடத்தில் இருந்து சாதனை புரிவ தைக் காட்டிலும் மடத்திலோ அல்லது காசியிலோ இருந்து கொண்டு அவ்வாறு செய்வது சிறந்ததாகுமா?
அன்னயார் ஹ்ரிஷிகேசம் போன்றதொரு தனிமையான இடத்தில் இருந்துகொண்டு கொஞ்சக் காலம் சாதனை புரி ரானல், உமது மனம் பலமுற்றுள்ளதைக் காண்பீர், அதன் பின்னர் எச்சங்கத்திலேனும், அதனுல் சிறிதளவேனும் பாதிக் கப்படாமல் வசிப்பது சாத்தியமாகும். இளஞ் செடியாக இருக்கும் பொழுது அதைச் சுற்றி வேலியமைக்க வேண் டும். ஆனல் அது வளர்ந்து விட்டால் பசுக்களும் வெள் எாடுகளும் அதற்கு எவ்விதத் தீங்கும் இழைப்பது முடி யாது. தனிமையான இடத்தில் சாதனை புரிதல் வெகு அவசியமாகும். நீர் ஒளியை வேண்டும் பொழுதெல்லாம் அல்லது ஏதோ சந்தேகமோ கஷ்டமோ உமக்குச் சம்பவிக் கும் பொழுதெல்லாம் கண்களில் நீரைப் பெருக்கிக்கொண்டு
 
 

ஆத்மஜோதி 93
பகவானைப் பிரார்த்திப்பிராக பகவானும் உம்மிடத்துள்ள எல்லா அசுத்தங்களையும் அகற்றுவார், உமது மனுே வேத னேயை ஆற்றுவார், உமக்கு ஞான ஒளியையும் தருவார்.
வேலேயும் சாதனையும்
சீடர் சாதனை புரிவதற்கான சக்தியற்றவனுயிருக்கின்றேன் நான். உங்களுடைய பாதங்களை நான் புகலிடமாகக் கொண்டு விட்டேன். எனது முன்னேற்றத்திற்கு அவசிய மானதையெல்லாம் தயைகூர்ந்து செய்யுங்கள்.
கூப்பிய கைகளுடன் அன்னையார் குருதேவருக்குப் பிரார்த்தனை செய்யலானுர், 'உம்முடைய தியாக புத்தி யைக் குருதேவர் காப்பாராக!' என்று அவர் கூறினர். மீண்டும் அவர் இவ்வாறு மொழிந்தார். "குருதேவர் உம் மைக் கவனித்து வருகின்ருர், நீர் அச்சமுற வேண்டிய காரணமே இல்லை குருதேவருடைய வேலையைச் செய்யும்; அத்துடன் கூட, சாதனையையும் பயின்று வருவீராக சோம் பலான சிந்தனைகளை ஒதுக்கி வைப்பதற்கு வேலையானது உதவுகின்றது. செய்வதற்கு வேலை ஏதும் இன்றி ஒருவன் இருப்பாணுகில் மனத்தில் அத்தகைய சிந்தனைகள் அவனுள் டாக வேகமாக எழுகின்றன.
ஆசனம், பிராணுயாமம், இவற்றின் பயிற்சி
சீடர் எனது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் இருத்தும் நோக்கத்துடன் சில தினங்களாக நான் யோகாசனம் பயின்று வருகின்றேன். உணவை ஜீரணிப்பதற்கும் பிர்ம்மசரியத் தை அப்பியசிப்பதற்கும் இவ்வாசனங்கள் உதவுகின்றன.
அன்னயார்; அதைப் பற்றிக் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும். நீண்டகாலம் அத்தகைய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் மனம், உடல் விஷயத்தில் கவனம் கொண்டுவிட லாம். மேலும் அப்பயிற்சிகளை நீர் விட்டு விட்டாலும், அது உம்முடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஆகவே நீர் உம்முடைய சமயோசித புத்தியை உபயோகிக்க வேண்
டும்.
சீடர்: தாயே, நல்ல ஜீரணம் ஏற்படுவதற்காக நான் ஐந்து அல்லது பத்து நிமிஷ நேரமே அதை அப்பியசிக் கின்றேன்.

Page 10
T'R7 "
94. ஆத்மஜோதி
அன்னயார் அது மிகவும் சரியாகும். உந்த அப்பியாசத் தையும் பயின்றுவிட்டுப் பின்னர் அதைக் கைவிட்டீரா கில் அத ஞல் இறுதியில் உமது ஆரோக்கியம் கேடுறும் என்பதனுலேயே நான் உம்மை எச்சரித்தேன். அன்பரே பகவத் சைதன்னி யத்தை நீர் சாக்ஷாத்கரிக்குமாறு நான் உம்மை ஆசீர்வ திக்கின்றேன்.
சிடர் கொஞ்சம் பிராணுயாமத்தையும் கூட நான் அப்பி யசிக்கின்றேன். நான் அதைத் தொடர்ந்து செய்யட்டுமா?
அன்னயார்: ஆம், கொஞ்சமாக அதைச் செய்து வரலாம். ஆணுல் அளவு மீறிச் செய்து உமது மூளையும் நரம்புக் கூறும் கொதித்துப் போகுமாறு செய்து கொள்ள வேண் டாம். மனம் தானகவே அமைதியுறுமாகில், பின் பிரா ணு யாமம் எவ்வாறு அவசியமாகும்?
(யூரீ ராமகிருஷ்ண விஜயம்)
எப்பொழுதும் தன்னம்பிக்கையை வளர்த்துங்கள். தீரச் சிறுவர்களே! நீங்கள் அரும்பெருங் காரியங்களைச் செய்யப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள். உண்மையில் நீங்கள் என் குழந்தைகளானுல் யாதொன்றுக்கும் அஞ்சமாட்டீர்கள். சிங்க ஏறுகளை ஒத்திருப்பீர்கள். இந்தியாவை மட்டுமன்று உலகம் முழுவதையும் நாம் எழுப்பியாக வேண்டும்.
மனிதனுடைய மனுேசக்தியைத் தன்வயப் படுத்திப் பயன்படத்தக்க துறையில் அதைச் செலுத்துவதே கல்வி எனப்படும். ஒழுக்கமளிப்பது, மனேவலிமை தருவது, புத் தியை விசாலிக்கச் செய்வது, ஒருவனைத் தன் வலிமை கொண்டு தன்னம்பிக்கையுட னிருக்கச் செய்வது, ஆகிய இவையளிக்கும் கல்வியே நமக்குத் தேவை. பிரம்மச்சரியம், சிரத்தை, தன்னம்பிக்கை இவைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி அளிக்கப்பட வேண்டும்.
e-- விவேகான தந்ப்,
',

ദം 95 குடும்ப மிடிதீர பொருள் கோரி குவலய இருளகல அருள்பெற்ற அற்புதம்,
கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகா
காவியத்திலிருந்து)
வழக்கறிஞராந்தந்தை மரணத்தின் பின் குடும்ப வருத்தத்தாலே உழக்குற்றுப் பசிகவலே அமைதியினே உண்ணும் போதருமைச்சிடன், 'கிழக்குற்ற ஒளியென்னக் கிளர்ந்த குரு தேவாவென் கேடுதீரம் பழக்குற்ற உன்வாக்கற் பரசக்தி பரிந்தருளவேண்'டென்ருனே.
'இவ்வாறு கேட்குமியல்பெனக்கில்லே நீயேகேள்' என்ன ஹம்ஸன்
முவ்வாறு ஜயகாளி சந்நிதியில் முழந்தாளேப் பணிந்து தன்ன எவ்வாறு வறு ைமயிடர் செய்கிற தென்றியம்பிடவுமியலா ஞானச் செவ்வாயினின்றந்தச் சிந்தனேயே வரவில்லை செய்ததென்னே!
'அன்பினே மிகவுந் தாராய்! அறிவொளி துண்டிமாய்த துன்பினத்தீராய்; சக்தி, சுதந்தரச் செல்வமீவாய்! இன்பத்திலின்பமாகும் இடையருத் தியானமீவாய்; உன்பரமென்று வாழும் உறுதியை நல்குவாயே!'
என்னையானறிந்து மண்ணில் இலகுயிர்க்குயிராய் நிற்கும் உன்னேயானறிந்துன்னுடல் உலகையானறிந் துன்சக்தி தன்னையான் அடைந்துன் இச்சை தாங்கிடுந் தொண்டனுகி மன்னுயிர்க் குதவிசெய்யும் வாழ்வை நீயருளுவாயே!
கற்பக நிழலைச்சார்ந்தும் காஞ்சிரங்காய்கேட்பாரோ? அற்பமாங் கீரைவேண்டி அரசினே யிறைஞ்சுவாரோ? கற்பனைச் செல்வம் வேண்டிக் கடவுளைத் தொடருவாரோ? சிற்பரஞ்சோதி யின்பஞ் செறிந்திட நோற்குந்தூயர்?
உட்கினேன் வறுமையாலே என்னினும், உன்னவேண்ட வெட்கினேன்; குடும்பமெல்லாம் விடுத்தனன் உனக்கேயென்று மட் பொருள் வெறுத்த ஞானமணியினைப் பார்த்து நாதன் 'நட்புல தெய்வத் தொண்டர் நலிந்திடமாட்டார்' என்ருன்,
"மற்றென்றும் வேண்டேன் உன் மனமேயென்றன்
மன மாகி வாழ்ந்திடவே மனது வைத்தேன். பற்றென்றும் வந்த
பயனெல்லாம் பரம் பொருளேuறிந்துதுயு

Page 11
T. חיא" או אף "ק
96. ஆத்மஜோதி
நற்ருெண்டும் நல்லடியார் உறவும் ஒன்றே
நானறிந்து கொண்டேனிந்நாளில் ஐயா,
முற்றின்பப் பெருக்கே, யென்மோகந்திர
முன்னிற்குங் குருவே யுன்னிருதாள் போற்றி!'
என்றிறைஞ்சிடும் அன்பன் இதயத்தில், வன்றவக் குரு சக்தியை வார்த்'திணி ஒன்றுமே குறையில்லே விவேகத்தால் வென்றுலகை விளங்'கெனக் கூறின்ை.
கோணேசர் ஆலயக் கும்பாபிஷேகம்
கோணேசர் ஆலய கும் பாபிஷேகம் 3-4-63 ல் நடைபெறவிருக்கிறது.
கட்டிடக் குறை வேலைகளை முடிக்கவும் கும்பாபிஷேகம் செய்யவும் சுமார் முப்பதினுயிரம் ரூபா தேவைப்படுகிறது அனுப்புவோர்
திரு. சி. ஆறுமுகநாதன், தபால் பெட்டி இல. 9, திருக் கோணமலை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
யந்திர ஸ்தாபனத்துக்கு பவுன், வெள்ளி அனுப்புவோர் களும், தனியாக யாகஸ்காரப் பொறுப்பேற்றுச் செய்ய விரும்புவோர்களும்
புலவர் வை. சோமாஸ்கந்தர் , 339, பெருந் தெரு திருக் கோணமலை என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ள வேண்
டும்.
திருக்கோணேஸ்வர வரலாறுகள், சரித்திர சம்பந்தமான குறிப்புகள், கல்வெட்டுகள் வைத்திருப்போர்
பண்டிதர் இ. வடிவேல், 15 , வித்தியாலயம் ஒழுங்கை, திருக்கோணமலை என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ள
తెణ్యశ70.
கோணேசர் ஆலய கும்பாபிஷேக பிரசாரர் குழு.

| "سمبولین "TAA" اکتبر ۱ ஆத்மஜோதி 97
திருவடித் தீகூைஷ
(அ பூீரீனிவாலாசாரியார்)
ஏறக்குறைய ஒரு திங்கள் கழிந்த பின்னர், நரேந்திர நாதர் தனிமையாக இரண்டாமுறை குருதேவரைக் காணச் சென்றனர். இம் முறை இருவரும் தலைக்கூடிய ஞான்று நிகழ்ந்த நலஞ்சான்ற செயல்களை நரேந்திரர் நவின்றவாறே வரை குதும் :- 'அவர் தனிமையாய் ஒருசிறு கட்டிலின் மீது அமர்ந்திருக்கக் கண்டேன். என்னைக் காண மகிழ்ந்து ஆர்வத் தோடும் அருகழைத்துக் கட்டிலில் ஒரு மருங்கில் என்னை உட் காரச் செய்தனர். ஆனல் மறுகணம் அவர் தமது உள்ளத் துத் தோன்றிய ஒர் உணர்ச்சியின் வயப்பட்டிருப்பதை யான் கண்டேன். தமக்குள் ஏதோ முணு முணுத்துக் கொண்டு என் மீது பதிவைத்த கண்களோடு அவர் என் மருங்கு மெல்ல நெருங்கினர். முதன் முறை இயற்றியதே போன்று ஏதேனும் புதுமையான செயலைச் செய்வர் போலும் என்று எண்ணி னேன். ஆனல் இமைத்து விழிக்குமுன் அவர் என்னை மெத்த வும் அணுகித் தமது வலது திருவடியை என் உடலின்மீது ஊன்றினர். திருவடி தீண்டப் பெறுதலும், என்னுள்ளே புத்தம் புதியதோர் அனுபவம் உண்டாயிற்று. விழித்தி ருக்கும்போதே, சுவர்களும் அறையின் கண் உள்ள ஒவ் வொரு பொருளும் யாதுமின்றி மறைந்தன. யான் எனும் உணர்ச்சியும் அண்ட முழுமையின் உண்மையும், எதனையும் விழுங்கும் இறும் பூது சான்றவறும் பாழின்கட் புகுந்து ஒரு மித்து விடும்போலத் தோன்றின! யான் பேரச்சமெய்தி யானெனும் உணர்ச்சியையே இழக்க நிற்றலின் உயிரிழக் / கும் தறுவாயில் நிற்பதாக நினைந்தேன். என்னையே யான் அடக்ககிலாது, ‘எற்கு யாது இழைப்பான் நின்றீர்? எனது இல்லத்தில் இருமுதுகுர வரும் உளரால் 1’ என்று கூச்சலிட் டேன். இதனைக் கண்டு நகுதலுற்று, அவர் தமது கையை எனது நெஞ்சகத்திற்கு நேரே அதனைத் தொடாது தடவு தல்போல் அசைத்து, ‘சரி, இப்பொழுது இவ்வாறே கிடக்க. அனைத்தும் காலத்தால் வந்தெய்தும்! என்று மொழிந் தார். அது என்ன விந்தையோ அறியேன்; அம்மொழியை அவர் உரைத்து முடிந்ததும், யான் எய்திய புதுமையான அனுபவமும், மற்ையலாயிற்று. யான் முன்னிருந்த வண்

Page 12
\\
98 ஆத்மஜோதி
ணமே இருக்க, அறைக்கு உள்ளும் புறமும் உள்ள பொருள் களும் கிடந்த வண்ணமே கிடப்பக் கண்டேன்.
'யான் இதனை ஒதுதற்குச் செல்லும் கால அளவினும் சுருங்கிய பொழுதில் அனைத்தும் நிகழ்ந்ததெனினும், அந் நிகழ்ச்சியால் எனது உள்ளம் முழுதும் மாறுபாடடையலா யிற்று. பெருவியப்பெய்தி, இவ்வியத்தகும் மானிடர் விரும்பி யாங்கே வருவதும்போவதுமாயிருந்த இவ்வனுபவம் யாதோ என்று நினைக்கலானேன். ஒருக்கால் அது பிறருள்ளத்தை வயப்படுத்தும் தொழின் முறைகளுள் ஒன்றே என்று ஐயுற் றேன். ஆனல் அத்தொழில்பயன்பெறுவதுவலியிலாரது உள்ள தன் கண்ணேயே ஆகலானும், யானும் அத்தகைய நெஞ்சினணு காது அதற்கு எதிராகத் திண்ணிய மனமுடையேனுகவே என்னை மதித்து வருதலானும், அதுவும் அத்துணைப் பொ ருத்தமுள்ளதாகத் தோன்றவில்லை. அன்றியும் திண்ணிய நஞ்சுடையார் ஒரு வ ர் க் கு எ ன து உள் ளத்தை அதுவரை யான் அடிமைப் படுத்தியதும் இன்று அம்மட்டோ! அவரை அத்தகையராகக் கருதாது ஒரு துறைப் பித்தேறிய உன்மத்தரென்றலவோ யான் நினைத் திருந்தேன், ஆக, யான் சடுதியில் அடைந்த மாறுபாட் டின் ஏதுதான் யாதோ என்று திகைத்தேன். ஒரு முடி புங் காணுது உழன்றேன். இப்பிசியினை ஒர முடியாது விடுதலே நலம் என்று நினைந்தேன். ஆயினும் இஃதே போல அவர் இனியொருமுறையும் வயப்படுத்த இடங்கொ டாது விழிப்போடிருத்தல் வேண்டும் என்னும் உறுதியுடை பணுனேன்.
"மறுகணம் என்னனைய மனத்திட்ப முடையான எண் னிய அளவானே மாற்றவல்ல மனிதரைப் பித்தரெனக் கருதுதல் யாங்ங்ணம் பொருந்தும் என்று உன்னத் தலைப்
பட்டேன். ஆயினும் யான் முதன்முறை அவரைத் தலைக் "
கூடியபோது அவர் பொழிந்த உரைமாரியினை உள்ளுவே கிைல் எவரும் அவரைப்பற்றி எய்து தற்குரிய முடிபு பித்த ரென்பதொன்றே யன்ருே? ஆனல் அவர் மானுட வடி விற் போந்த இறைவனுகிலோ அம் முடிபு இயைபுரு:து; எனினும் அத்தகைய அவதார புருடர்க்கும் இவர்க்கும் வெகு தொலையன்ருே?" என்று இருவழியானும் முரண்ப டச் சிந்தித்து, யான் எய்திய அனுபவத்தின் உண்மையிய லேயும் வெளிப் பார்வைக்குச் சேய்போன்ற தூய்மையை யும் எளிமையும் உடைய இம்மேதகையாரின் உண்மை நிலையி
 
 

". . . . . . . .
ஆத்மஜேர்தி 99
னையும் அறிய வொண்ணுது மனங்கலங்கினேன். எதனையும்
நுணுகியாராய்ந்து முடிபு கூறவல்ல எனது அறிவு முன் னின்ற பொருளினை உள்ளவாறறிய இயலாமை பற்றி இன் தை தோல்வியை எய்தித்தலை கவிழ்ந்தது. ஆயினும் எவ் வாற்ருனும் இவ் அரும் பொருளினை அளவிட்டறிவல் என உறுதி கொண்டேன்.
இத்தகைய எண்ணங்கள் அந்நாள் முழுதும் என் உள் ளத்தே அகலாது உறைந்தன. ஆனல் அவரோ இந்நிகழ்ச் சிக்குப் பின் பிறிதொரு மனிதர் போல் ஒழுகுவாராய், முந் திய முறையில் நடந்ததுபோல் என்னுடன் பேரன்போடும் முதிர்ந்த பழமையோடும் உறவாடி வருவாராயினர். நெடுங் காலம் பிரிந்துபோய்ப் பின்னர்க்கூடிய பழைய நண்பன் மாட்டு ஒருவன் ஒழுகுவதேபோல் என்பால் அவர் ஒழுகி வந்தார். என்னை அகனமர்ந்து வரவேற்று இயன்றவாறு பல வகையானும் எனது நலத்தினைப் பேணிவந்தும், உள் ளம் அமைதியுருர் போலத் தோன்றினர். காணவரிய பெருங் காதலை என் மாட்டு அவர் செலுத்தி வரவர, அது மேலும் மேலும் எனது கவனத்தையும் அவர் பால் இழுப்பதாயிற்று. இறுதியில் பகற்பொழுது சென்று அந் திப்பொழுது அணுகுவதை யறிந்து, யான் அவரொடும் பிரிவதற்கு விடையை அவாவி நின்றேன். இம்மொழி கேட் டலும் அவர் மிகுதியும் மெய்தளர்ந்தாற்போற் ருேன்றின ராக, யான் ஒல்லையில் இசைவு வாய்த்ததும் அவண் செல் வதாக வாக்களித்த பின்னரே என்னைப் பிரிவதற்கு ஒருப்
பட்டனர்.
'பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, காயம் என்ற
மூன்றிலும் எல்லா இட்ங்களிலும் சந்தர்ப்பங்களிலும் பரி
சுத்தமாக இருப்பது. புறத்தூய்மை மாத்திரம் போதாது. பரிசுத்தமில்லா எண்ணங்கள், பரிசுத்தமில்லாச் செய்கை களைப் போலவே கெட்டதை விளைவிக்கக் கூடியன. பிரம் மச்சாரியாக இருக்க விரும்புகிறவன், தான் எண்ணும் எண் ணங்களிலும், பேசும் வார்த்தைகளிலும், செய்யும் காரியங் களிலும் தூய்மையுடையவனக இருக்கவேண்டும்.
- விவேகானந்தர்.

Page 13
***"*" جمري ,"ia:**"SY:"W" ," 100 ஆத்மஜோதி
அமரநாத யாத்திரைக்குப் பின்
(திரு. S. V. வரதராஜ ஐயங்கார்)
அமரநாத யாத்திரையில் அப்பஞன சிவபெருமானைத் தரிசித்து வந்ததிலிருந்து சுவாமிகள் (விவேகானந்தர்) அன்னையான உமாதேவி யைத் தியானத்தில் தரிசிப்பதும் தகFணேஸ்வரத்தில் தாண்டவமா டுந் தாயை - அகிலாண்ட கோடிப் பிரமாண்ட நாயகியை அநவரதம் துதிப்பதுமாக விருந்தார். அடிக்கடி சாமப்பிரசாத் என்னும் பக்த சிகாமணியருளிய 'தேவி ஸ்தோத்திர'த்தை சுவாமிகள் திவ்யமாகக்
கானம் பண்ணுவதுண்டு. இக்காலங்களில் மோன நிலையையே பெரி தும் வகித்திருந்தார். முன் போல அவர் தமது சிஷ்யைகளுடன் அதி கம் பேசுவதில்லை. அவருடைய சித்தம் பெரிதும் சூக்ஷ சமத்திலேயே பிரவேசித்திருந்தது. மாலை நேரங்களில் பூரீநகருக் கருகாமையிலுள்ள நதியில் படகேறி அக்கரையை யெய்தி ஏகாந்தமான இடத்தில் வீற் றிருந்து நிஷ்டையிற் கூடி அருட்தாயை ஆனந்தானுபவத்தால் தரி சித்து 'ஜெகதீஸ்வரி! என்னை நீ விரைவில் அழைத்துக் கொள்' என் நிரந்து தாம் நிலைநிறுத்தற்குரிய மத உத்தாரண வேலைக்காக அன் னேயிடத்தில் ஆசிபெற்று மீள் வார்) இந் நாட்களில் அவரிடம் அனு தினமும் உபதேசம் பெறவந்த புதிய பக்தரான பிரம்ம சமாஜ வைத்திய ரொருவருக்கே யன்றிச் சுவாமிகள் வேறெவருக்கும் உப தேசம் செய்ததே இல்லை. வரவர அவர் அதிக உக்ர மூர்த்தியா யிருந்தார். சில வார்த்தைகள் கூட அவர் பேசியதில்லை. இத்தன் மையைத்தான் யோகிகள் ‘குலகுண்டனி'யில் ஜாக்கிரமென்று கூறு வார்கள். ஒரு சமயம் சுவாமிகள் தியானத்திலிருந்து திடீரென வெளிப்பட்டு அவசரமாய் எழுதுகோலை எடுத்து 'ஜெகன்மாதா காளி தேவி' என்று தலையங்கமிட்டு அபூர்வமான ஆங்கிலக் கவியொன்றை யியற்றி யருளினர். இதுவே இன்றும் பெரிய ஞானப்பிரகாச தரங்க மென்று அவருடைய அடியார்களால் போற்றப்படுவது இக்கவியின் ༡༡ கடைசிப் பதத்தை விரைந்து முடித்ததும், எழுதுகோல் அவர் கையி னின்றும் நழுவியது; அவர் அப்படியே தரையில் சார்ந்து பாவ சமா தியிற் சேர்ந்தார்.
அமரநாதத்திலிருந்து சுவாமிகள் திரும்பிய பின்னர், அவருடைய நிலைமையைக் கண்டு சிஷ்ய கோஷ்டிகள் அஞ்சினர். தலையில் தீப்பிடித் தவன் எவ்வாறு தண்ணீரைத் தேடியலை வானே அது போல சுவாமி கள் 'தாயே! தாயே!” என்று காளிதேவியைத் தோத்தரிக்கலானர். " பரவசராகி 'காலாந்தகியாய், பக்தர் மனதைக் கொள்ளை கொள்

ஆத்மஜோதி ()
ளும் பாகீரதியாய், சக்தியாய் விளங்குகிருள் ஈஸ்வரி' என்றும், 'நீ என்னை வாள்கொண்டு வீசிலுைம் நான் உனது சரணுர விந்தங்களே விடவே மாட்டேன்' என்றும், 'சுகமடைவதையே நோக்கமாக உள்ள மக்களெல்லாம், மானிலத்தில் பாவங்களை யியற்றவே பிறந்தவர்களா வர்; கஷ்டத்தைத் தேடித் துன்பத்தை யனுபவிப்பவர்களே பரம சுகத்தை யடைவோராவர்; அப்பேர்ப்பட்ட மகான்களுக்குச் சித்திர வதையிலும் பிரம்மானந்த மேற்படும்; நாம் பயங்கர ஸ்வரூபத்தை காமக்ரோத பயந்திர உபாசிப்போம்' என்றும், சுவாமிகள் கண் மாரி பெய்து பேசுவார். சில சமயம் அவர், 'தேவியைச் சித்த தீன மில்லாமல் தீமையிலும் பயங்கரத்திலும், துக்கத்திலும் சர்வநாசத்தி லும் பஜியுங்கள்; அஃதே பேரின்பத்தை நல்கும்' என்றியம்புவார் 'அறிவிலிகள், 'தாயே! உன்னுடைய திருமேனியில் ஒர் மாலையைச் சாத்தி, பயத்தோடு திரும்பி உன்னைக் காருண்ய ரூபியென்று ஸ்தோத் திரம் செய்கிருர்கள்' என்று பழிப்பார். பயங்கர ரூபத்தை பக்தி செய் வதணுலேயே பயங்கரஈஷணுத்திரயங்கள் நசிக்கப் பேரின்ப நிலையைணய் துதலாம் மரணத்தைத்தியானியுங்கள்; இயமனை வாழ்த்துங்கள்; பயங்க ரத்தைப்போற்றுங்கள் தேவியே பிரம்மமாய் விளங்குகிருள் அவளுடைய சாபமும் அன்பினுல் அனுக்கிரகமாகிவிடும்; ம ன மே ஒரு பெரிய சுடுகாடாக வேண்டும்; அகந்தையும், தன்னலமே நாடுந்தன் மையும் ஆசைகளும் அச் சுமசானத்தில் சாம்பராக வேண்டும்; அப் பொழுதுதான் ஜெகதீஸ்வரி பிரத்யக்ஷ மாவாள்' எனப் பெருமிதமு டன் பேசா நிற்பார். இந்தக் கால முழுதும் எந்நேரமும் அவர் காளி தேவியைப் போற்றியவண்ணமே யிருந்தார். ' தேவியையே ஜெகத் தை ஆட்டுவிப்பவள்; அவளிடத்தில் பக்தி செலுத்த அச்சமென்பது சிறிதும் வேண்டியதில்லை. அவளுடைய பக்தர்கள் அஞ்சலொழிந்து சிம்மங்களாகி விடுவர். அவர்களுடைய நடையின் அதிர்ச்சியால் அண்ட கோளகைகளெல்லாம் தூளியாய்ப் பறக்கும். தேவிக்கு உங்க ளிடத்தில் தயையுண்டாமாறு நடந்து கொள்ளுங்கள்; அவளே சர்வ சக்தை யென்பதை மறவாதீர்கள்' என்னுமிது போன்ற உபதேசங் களை அவர் புரியுங்கால் சிஷ்ய கோடிகள் சிரத்தையுடன் சிரவணஞ் செய்வார்கள்.
இவ்விதம் காளிதேவியின் தியான வயப்பட்ட சுவாமிகள் செப் டெம்பர் மாதம் 30 ந்வ தமது சிஷ்யைகளிலொருவரும் தம்மைப்பின் தொடரலாகா தெனக் கண்டிப்பாய் ஆக்ஞா பித்து விட்டு, 'வண்ன அருவிகள் வளமுடன் பாயும் கrரபவானி யென்னும் ஏகாந்த ஸ்தலத் தை யெய்தினர்; சென்றவர் அக்டோபர் மாதம் 6ந்வ தான் மீண் டும் பூரீ நகருக்கு வந்தார். அந்த கூrரபவானி தேவியின் சன்னிதா னத்தில் சுவாமிகள் ஹோமம் வளர்த்து, கூரம், அன்னம், வாதுமை முதலியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட்டார். தேவியிடத்தில் எழுந்த பக்தியால் சுவாமிகள் 'தாயே!

Page 14
§ಳ್ದ."
02 ஆத் மஜோதி
'ஒளிமருவு நின துதிரு வருளணுத் துனேயேனும்
உற்றிடிற் சிறு துரும்பும் உலகம் படைத்தன் முதல் முத்தொழி லியற்றுமென
உயர் மறைக ளோர நந்தம் தெளிவுற முழக்கவது கேட்டுநின் றிருவடித்
தியானமில் லாம லவமே சிறுதெய்வ நெறிசெல்லு மானிடப் பேய்கள்பாற்
செல்லாமை யெற்க ருளுவாய்'
என்று தோத்தரித்து வணங்கினர். விசேஷ சாதனமாக ஒவ் வொருநாட் காலையிலும் ஒர் பிராம்மணச் சிறுமியை உமா குமாரி யாகப் பாவித்துப் போற்றினுர், பயங்கரமான பல ஹடயோக சாத இனங்கள் அவருக்கு அந்த க்ஷேத்திரத்தில் சித்திக்கலாயின. இங்ங்ணம் ஐந்து நாட்கள் கூrர பவானியிற் கழிந்த பின் சுவாமிகள் பூரீநகரை யடைந்தார். அவர் ஏதோ திவ்ய தேகியாய் பிரம்ம தேஜசுடன் விளங் குவதைக் கண்டு சிஷ்ய கோடிகள் அதிசயித்தார்கள்.
கூrரபவானி ஆலயத்தின் பல பாகங்கள் முகம்மதியப் படையெடுப்பால் தகர்க்கப் பட்டிருப் பதைக்கண்டு அவர் மனந்தாளாது சீற்றங் கொண்டு இத்துணை தூரம் இந்த மூட சனங்கள் தங்கள் கோயிலைப் பிறர் இடித்துத் தகர்க்க எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? நான் அந்தக் காலத்தில் இருந்திருப்பேனுயின் இவ்வாறு நடக்க விட்டிருப்பேனு? என்னுயிர் போமளவும் இந்த சேஷத்திரத்தைக் காக்க ஒருகை பார்த்தேயிருப் பேன்’ என்று தமக்குள் எண்ணிக் கொண்டிருக்கையில், பவானி சங் கரி அசரீரியாக 'குழந்தாய்! என்னை நம்பாதவர்கள் ஆலயத்தினுட் புக்கு விக்ரஹத்தைக்கூட தூள் தூளாக்கினுலும் நான் இல்லா மற் போய் விடுவனே? அதனுல் எனக்கு உன்னிடமுள்ள அன்பு குறை யுமா? உனக்கு என்னிடத்தேயுள்ள பக்திதான் போமா? கவலையொழி! அபிமானத்தை விடு' என்றருளினள். சுவாமிகள் கூrரபவானி யிலி ருந்து பூரீநகரை யடைந்ததும் இதுபோன்ற தமது தீர்த்தாடன அனு
பவங்களைச் சிஷ்யைகளிடம் புகன்று அன்னையின் அருட்திறத்தையுன்னி ,
உவகை பூத்தார். அவர் வேலூர் மடத்தை அமைப்பதற்குச் சாஸ் வத நிதியாக வைத்திருந்த பொருளைக் கொண்டு கூrரபவானி கோயி லைச் சீர்ணுேத்தாரணஞ் செய்ய எண்ணியக்கால், பவானி சங்கரி 'அப்பா ! எனக்குப் புதியதொரு கோயில் வேண்டியிருந்தால், நான் ஆயிரக் கணக்கான கோயில்களை அடையக்கூடும். இதே இடத்தில் ஏழு கூட கோபுரங்களமைந்த ஒர் சுவர்ணமயமான ஆலயத்தை நான் இச்சாமாத்திரத்தில் உண்டாக்கிவிடுவேன்' எனலும் சுவாமிகள் அடக்க மாய்த் தேவியின் திருத்தாள்களைத் தியா எரித்த வண்ண மிருந்து விட்
f

চাি"1" , " , " ".":"। P. لlې"
ஆத மஜோதி () 3
தெய்வத் தன்மையும்
மனிதத் தன்மையும்
உலக மக்கட்கு ஞானச் சுடர்களென மிளிர்ந்து ஞான விழிப்பை யுண்டுபண்ணியும், ஞான நெறிகளைத் தெளிவாகக் காட்டியும் த மது வாழ்க்கையாலும் உபதேசங்களாலும் ஞான உலக உண்மைகளை விளக்கியும் போந்த பெருங் குர வர்களது வாழ்க்கைச் சரிதங்கள் பல நமது பரதமா ந்ாட்டில் பொன்னே போற் போற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளன: ஆயினும் ஒவ்வொரு சரிதத்தினும் இருந்திருக்கவேண்டியதும் பிறர்க்கு மிக்க பயன் தரக்கூடியதுமான சாதன வாழ்க்கைப் பகுதி பொதுவாக மிகச் சுருங்கிய அளவினதாகவும், ஏறக் குறைய இல்லையென்றே தோன்றும்படிக்கும் வரையப்பட் டுள்ளது ஒரு பெருங் குறையே என்பதை எவரும் மறுக்க முடி யாது. உலகத்துள்ள சாதாரண மக்கட்கு ஞான நெறியும் ஞான முயற்சியும் இத்தன்மையன என்பதை நேரில் எடுத் துக் காட்டுவதற்கெனவே தோன்றியுள்ள பெரியார்களது வாழ்க்கையில் சாதனம் பழகும் அவசியம் ஏற்படவேயில்லே என்று கூறுதல் அறிவிற்குப் பொருத்தமானதாகாது. அப் பரியார்கள் பிறக்கும் பொழுதே மாயையை வென்றவராய் சாதனம் பழகும் அவசியத்தை உணராதவராய்த் தோன்றி னர் என்னில், அன்னர், ஐம்பொறிகளை அவித்தற்கிம் அகங் காரத்தை மாய்த்தற்கும் மக்களிற் பெரும்பாலார் படும் உரைத் தற்கரிய அரும் பெரும்பாட்டை ஒரு சிறிதும் அறியா தவராகியும் அக்காரணத்தால் அவர்கட்குப் பொருத்தமான உதவியைப் புரியும் ஆற்றலில்லாதவராயும் போவார்; அப் போது அவர்களது பிறவியின் நோக்கமே நிறைவேரு தொழி கின்றது. பிறவியிலேயே, தம்மினும் பெரிதும் வேறுபட்டவ ராகக் காணப்படுவாரை மக்கள் தாம் பின்பற்றுதற்குரியா ராக நினையார். அன்றியும், உத்தம குரவரென அனைவரா லும் வணங்கப்படும் பெரியார்கள் தமது பாடல்களிலும், மனதை அடக்க முடியாத போது அனுபவித்த பெருந்துயரத் தை நன்கு சித்திரித்து எழுதி வைத்துள்ளார்கள்; சில பெரி யார்கள் தமது வாழ்க்கையில் மெய்ந்நெறியினின்றும் வழுவிச் சிற்றின்பப்படுகுழிகளில் சிறிது காலம் வீழ்ந்து தாம் அல்ல லுற்றதையும், பின்னர் மிக வருந்தி நன்னெறியில் நிலையாக நின்றதையும் உள்ளவாறே பாடல்களில் ஒப்புக்கொண்டுள்ள

Page 15
(4. ஆத்மஜோதி
னர்; பெரியார்களான வரும் ஞான் சாதனங்களைப் பழகியுள் ளனர் என்பதும் ஒரு சிறிதே சரிதங்களினின்றும் புலனுகின் றது இந்நிலையில், அவர்களது சாதன வாழ்க்கையைப்பற்றி நம் முன்னுேர்கள் எழுதிவையாததற்குக் காரணம், மனிதத் தன்மைக்குரிய குறைகளை அவர்களிடத்துக்காணினும் அவை களைக் கூறுதல் பாகவத அபசாரம் (அடியார்களைப் பழித்தல்) என்னும் பெருங்குற்றத்திற்கு உடலாகும் என்ற மேன்மை யான கருத்தே போலும்; அன்றேல், அப்பெரியார்களது தெய்வத் தன்மையையும் தெய்விக ஆற்றலையும் அற்புதச் செயல்களையும் மட்டும் கூறுவதினுல் பலர் அவைகளில் எளிதே ஈடுபட்டு, அவர்களைப் புகலாகப் பற்றிக் கடைத்தேறக்கூடும் என்னும் நன்னுேக்கம் போலும். எக்காரணமாயினும் ஆகுக', மனித இயல்பிற்குரிய வழுவொன்றுமில்லாத தெய்வப் பிறப் பினரை மக்கள் தம்மினத்தாராக எண்ணுர்; அவர்களோடு நெருங்கிப் பழக மாட்டாது வெகு தொலையில் நிற்பார்; அவர்களைப் பின்பற்றுவது இயலாததென்றே ஆரம்பத்திலே அம்முயற்சியைக் கைவிடுவர். இத்தகைய எண்ணங்களை ஒழித்தற்கெனவே அவதார புருடராகிய பூரீராமர், தம்மைப் பிறர் (இருடியர்) நாராயணரது அவதார மென்று கூறும்போது 'என்னை யான் மனிதனுகவும் தசரத குமாரனுகவும் நினைக் கிறேன்' என்று கூறியும், பெரும்பாலும் தமது தெய்வத் தன்மையை மறைத்து மனிதனுக நடித்தும் வந்தார்; பூரீ கிருஷ்ணரும் 'நான் உங்கட்குப் பந்து வாகவே பிறந்தேன்' என்று கூறியும், சாதாரண மனிதனைப்போல அருச்சுனணுேடு தோழமை கொண்டும் தேரோட்டியும், தூது போயும், பல ரோடும் நெருங்கி உறவாடியும் பிறர் தம்மோடு கலந்து பரி மாறுவதற்குரிய வேடம் தாங்கி நின்ருர், உண்மையை உரைக் குங்கால், தெய்விகப் புருடர்களது வாழ்க்கையில் தெய்வத் தன்மையும் மனிதத் தன்மையும் பரவியிருப்பதாகவே காணப் படுகின்றன; ஆதலின் அவர்களது சரிதங்களை எழுதி வைப் போர் அவ்விரு பகுதிகளையும் ஆராய்ந்து, உள்ளவற்றையெல் லாம் உள்ளவாறே எடுத்துரைத்தல் அக்காலத்தினர்க்கும் பிற்காலத்தினர்க்கும் பெரு நன்மை யளிக்கக் கூடியதாகும். இக்கொள்கையினைப் பின்பற்ற, பூரீ ராம கிருஷ்ண தேவரது வாழ்க்கைச் சரிதம் பலவகையான சான்றுகளைத் துணை க் கொண்டும், உண்மை நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி வாயிலாகப் புடைத்தெடுத்தும், உள்ளதை உள்ளபடியே கூறும் முறை
யைப் பின்பற்றியும், பலரால் பல சமயங்களில் சோதனைக்குட் ,
படுத்தப்பட்டும், இயன்ற மட்டில் விரிவாகவும், சரித ஆராய்ச்சி முறையினை அறிந்தவர்களான சீடர்களால் எழுதி
سمعہ

ஆத்மஜோதி 105
'சிதாகாச கீதை'
- சத்குரு நித்யானந்த பகவான் - மொழி பெயர்ப்பு, பூரீ கிருஷ்ணுனந்த பாபா
முன் இதழ் தொடர்ச்சி.
13. தங்கப் பாத்திரத்தில் சமைத்த ஆகாரத்தை நாய் சாப் பிடுகிறது. மண் பாண்டத்தில் சமைத்த உணவையும் அது உட்கொள்ளுகிறது.
14. சூரிய பிரகாசமானது சமுத்திரத்திலிருக்கும் உப்பு நீரி லும் மலை உச்சியில் குளத்திலிருக்கும் தெளிவான தண்ணிரி லும் பிரதிபலிக்கின்றது. இதை நாம் புறக் கண்ணுல் பார்ப் பதுமின்றி நாமே அகத்தில் அனுபவிக்க வேண்டும்.
15. ஒரு மரத்தில் எண்ணற்ற மலர்கள் ஒரு காலத்தில் தோன்றி நாளடைவில் அழிந்து போயினும் மரமானது அழி யாமல் நெடுநாள் நிற்கிறது. அதன்படி புலப்படுவது அனைத் தும் அழிந்து போகும். ஆணுல் புலனுகTதது அழிவற்ற மரத் தைப் போலாகும்.
16. நெருப்புப் பெட்டியில் குச்சிகள் இருந்த போதினும், அந்தக் குச்சிகளை பெட்டியின் பக்கத்தில் கிழித்தாலன்றி நெருப்பு வராது அதைப் போல் மனமென்னும் நெருப்புப் பெட்டிக்கு அறிவானது பக்கமாகும். மனதை புத்தியினல் தீட்டினுல் நமக்கு சுயாட்சி கிடைப்பதற்கு சந்தேகமில்லை. இந்த சுயாட்சியினல் மட்டும் நம்மால் பிறப்பு இறப்பு என்ற
வைக்கப்பட்டுள்ளது; அவ ரது சாதன வாழ்க்கைப் பகுதியும் அனுபூதி வாழ்க்கைப் பகுதியும் கூடிய அளவிற்கு விபரமாக வே வெளிவந்துள்ளன. ஆதலின் அவரது வாழ்க்கையைப் பல்வேறு உத்தம குரவர்களின் வாழ்க்கைகளோடு ஒப்பிடுதல் நமக்கு ஒருவாறு எளிதாகின்றது. தென்னுட்டில் வாழ்ந்த சைவ வைணவப் பேரடியார்கள், குரவர்கள், உலகத்திலே நிலைபெற்று விளங்கும் பெருஞ்சமயங்களைநிலைநாட்டிய மதா சாரியர்கள்-இவர்களுடைய அனுபூதியை பூரீராம கிருஷ்ண ருடைய அனுபூதியோடு இயன்றவரை ஒப்பிட்டுப் பார்த்தல் தற்காலத்தில் பெரு நன்மை பயத்தற்குரியதாகும்.
( 'திரு அருள் மொழி'யிலிருந்து )

Page 16
06 ஆத்) ஜோதி
இருவகை கால சக்கரத்திலிருந்து விமோசனமடைய முடியும்.
17. ஒரு மனிதன் கீர்த்தியையும் அபகீர்த்தியையும் பொருட் படுத்தலாகாது, தன் சரீரத்தின் மேல் சிறிதளவும் பற்றுதல் வைத்துக்கொள்ளலாகாது இப்படிப்பட்ட ஒருவன் கடவுளை எந்த இடத்திலும் எப்பொழுதும் காண்பான் .
18. ஜகஜ்ஜோதியும், பரஞ்ஜோதியும் வேறு இல்லை- இரண் டும் ஒன்றேயாகும்.
19. ஒரே பலகையிலிருந்து எப்படி மேசை என்றும், நாற் காலி என்றும் வ ஸ் து க் க ள் உருவெடுத்து வேற்றுமையாக விளங்குகின்றனவோ, அதைப்போல் பிர்ம்ம த த் து வ த் தி லிருந்து எண்ணற்ற புவனங்கள் வெளிப்பட்டு தோற்றமளிக் கின்றன.
20. ஆத்மாவும் மனமும் மானிடர்கள் அனைவருக்கும் ஒன்று தான். பிரபஞ்சத்தின் அந்தி காலத்தில் எல்லாம் ஒற்றுமைப் பட்டு நிற்கும். ஆனல் இப்பொழுது சுவாசிப்பதிலும், சிந்தனை யிலும், மனப்போக்கிலும் வேற்றுமை இருக்கிறது.
21. அக்னி, வாயு, நீர், பூமி இவைகள் எல்லோருக்கும் பொது. இவைகளை வித்தியாசமின்றி யாவரும் அனுபவிக்க லாம். இவ்வண்ணமே குழாய்த் தண்ணிரை பிராமணன், பறையன், குழந்தைகள் முதலியோர் வித்தியாசமின்றி உப யோகிக்கலாம். 22. மனது எள், புத்தியானது செக்கு, அமுதம் எண்ணெய் ஆகும். 23. புத்தி அரசன், மனது மந்திரி, ஆனபடியால் மனதை புத்திக்குக் கீழ்ப்படியச் செய்ய வேண்டும். 24. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் பாதையின் நடுவில் குதிரை வண்டியைச்செலுத்துவது மிகச் சிரமம். ஆத லால் வண்டிக்காரன் சிரத்தையுடன் வண்டியைச் செலுத்த வேண்டும். சைக்கிள் ஒட்டுகிறவன் எப்பொழுதும் தன்மேல் கவனம் செலுத்தாமல் வழிப்போக்கர் மேல் க வ ன த் தை ச் செலுத்துவான். 25. குளிர்ந்த தண்ணிருக்குள் நன்கு மூழ்கியிருப்பவன் தண் சீைரின் தன்மையை அறியான். நிஷ் களங்கமான ஒரு வ ன் கோபத்திற்கு வசப்படுவதில்லை. (தொடரும் /
臀
 

ஆத்மஜோதி '" 107 பிராண, பிராணுயாம விளக்கம்
(பண்டிட். ஜி. கன்னேயயோகி, அம்பத்தூர்)
பலவகை நிறங்களில் எண்ணற்ற வடிவங்களில் காணப் படும் பொருள்களனைத்தும் மூலமாய் ஒரே காரணப் பொரு ளின் திரிபுகளே எனத் தொன்று தொட்டு ஆன்ம ஞானி கள் கூறிவந்தனர். தற்போது விஞ்ஞான உலகமும் இதைச் சரியாகக் கண்டு பிடித்துள்ளது. சில நாட்களுக்கு முன் வரை அணுக்கள்தான் அண்டத்தின் மூலம் எனக் கூறிவந்த விஞ்ஞானம் அணு ஆராய்ச்சியின் பயணுக அக் கொள்கை யைக் கைவிட்டு அணுக்களும் மற்ருேர் சூசுஷ்மப் பொரு ளின் திரிபே எனக் கண்டுள்ளது. அம் மூலப் பொருளை விஞ்ஞானிகள் ஈதர் என அழைக்கலாயினர். ஆன்மஞானி கள் அம் மூலப் பொருளை ஆகாயம் எனக் குறிப்பிட்டு வந் தனர். ஹிந்து சிருஷ்டியின் முறைப்படி ஆகாயம்தான் முதலில் படைக்கப் பட்டது. அதிலிருந்தே மற்றப் பொ ருள்கள் தோன்றின. நானவகையாகத் தென்படும் பொ ருள்களனைத்தும் அவ்வாகா யப் படுக்கைகளின் பல்வேறு வகைத்தான அமைப்பு வே ற் று  ைம யே என்பர், ஆன்மஞானிகள்.
ஜடப் பொருள்களை இயக்கும் மின்சாரம், காந்தம், ஆகர்ஷணம் போன்ற எண்ணற்ற சக்திகள் மூலத்தில் ஒரே சக்தியின் இயக்க வேறுபாடுகளே என்று பல்லாயிரம் ஆண் டுகளாக ஆன்ம ஞானிகள் கூறிவந்த உண்மை. அணுசக்தி கண்டு பிடித்ததன் பயனுக விஞ்ஞானிகளும் தற்போது ஒப் புக் கொண்டுள்ளனர். அம்மூல சக்தி ஒன்றே ஒரு அலை வேகத்தில் இயங்கும்போது ஒரு சக்தியாகவும், மற்ருெரு அலைவேகத்தில் இயங்கும்போது மற்ருெரு சக்தியாகவும் செயல்படுகிறது. அம் மூல சக்தியை விஞ்ஞானிகள் அண்ட சக்தி யென்கின்றனர். ஆன்ம ஞானிகள் இதையே பிரா ணன் எனக் குறித்து வந்தனர். ஒளி, சுவை, ஒசை முத லான புலன் துடிப்புகள் பிராணனின் ஒர்வகை அலைவேக வேற்றுமையே. பிராணனே மனப் பொருளை இயக்கி நினைக்கச் செய்கிறது. பிராண நடை வேகம் குறைந்தால் மனதின் நினைப்பு வேகமும் குறையக் காணலாம். ஆகவே மணுேவசியத்துக்கும் பிராணுயாமம் இன்றியமையாததாகின் றது. பிராணன் எல்லா உயிருள்ள, உயிரற்ற பொருள்க

Page 17
" " لا تجتمعا .
08 ஆத்மஜோதி
ளிலும் வியா பித்து உள்ளது. இரசாயன மாறுதல் என் பது உறை பிரானனின் வெளிப்பாடே.
பிராணன் இருக்கும் வரைதான் மனித வாழ்வு, மர ணம் பிராணனின் வெளிப்பாடே. இதனல்தான் இறந்து போனவர்களைக் கண்டு பிராணன் போய்விட்டது என் ருேம். 'ஆன்மா போய்விட்டது' என்று சொல்வதில்லை. ஆன்மாவை உடலுடன் பிணைத்து வைத்திருக்கும் பாசக் கயிறு பிராணனே. ஒர் குளத்தின் மேற்பரப்பில் நிறைய அலைகள் அலைக்கழித்துக் கொண்டிருந்தால் அதன் அடியி லுள்ள பொருள்களை நாம் காண முடியாது. அலை நின் ருல் தான் கீழுள்ளி தைக் காணமுடியும். எல்லாப் பொருள் களிலும் பிராணன் அலைக்கழித்துக் கொண்டிருப்பதால்தான் பொருள்களின் உண்மையை நாம் உணர முடியவில்லை. ஆன்மா மனக் கவசத்துள் இருக்கிறது. மனமோ எப்போ தும் பிராணனல் அலைக்கழிக்கச் செய்யப் பட்டுக்கொண்டே யிருக்கிறது. இதனுல்தான் நாம் ஆன்மாவைக் காண முடிய வில்லை. மன அலை நிற்கும்வரை யாரும் ஆன்மாவைக காண முடியாது. பிராண அலை நிற்கும்வரை மன அலை நிற்காது. ஆகவே சாக்ஷாத்காரம் பெறுவதற்குப் பிராண அலையை நிறுத்தும் சாதனையான பிராணுயாமப் பயிற்சி இன்றியமையாத தாகின்றது. அண்ட ஆன்மாவாகிய இறைவனைக் காண அண்டப் பொருள்களில் அலைக்கழியும் பிராண அலையை நிறுத்தியாக வேண்டும். இதற்குத் தனிச் சாதனை தேவையில்லை. இறைவன் ஆன்ம வடிவாய் ஆன்மா வுக்குள் ஆன்மாவா யிருப்பதால், பிராணுயாமத்தால் பிரான சலனத்தை நிறுத்துவதன் மூலம் மனச் சலனத்தை அடக்குவதே இறைவனைக் காணும் சாதனையாகவும் அமை கிறது. பிராணயாமம் என்பது உடலில் அலைக்கழியும் பிரா ணனைக் கட்டுப்படுத்துவதே. இதனுல் உடல் சக்தி வீணுக வெளிப்படுவது தடுக்கப் படுகிறது. சாதாரண நிலையில் பிராணன், ஐம்புலன்கள், மனம், சித்தங்களின் வாயிலாக வெளிப்படுகிறது. இப்படி வெளியில் பாயும் பிராணனைத் தடுத்து உள்முகப் படுத்திக் கட்டுப்படுத்துவதே பிராணுயா மம். பிராணன் கட்டுப்படாதவரை மனமோ, சித்தமோ கட்டுப்படாது. மனமும் சித்தமும் கட்டுப் படாதவை. ஆன்ம தரிசனமோ இறைவன் சாக்ஷாத்காரமோ உண்டா காது. அண்டத்தில் எங்கும் பரவியுள்ள பிராணன் சுவா சத்தின் வழியே நம் உடலில் புகுகிறது. நுரையீரலே இயக் கும் நரம்புகள் இதை உறிஞ்சி உடலனைத்துக்கும் நரம்பு
 
 

ஆத் மஜோதி 09
கள் வழியாகப் பரப்புகளே மூளைக்குப் பரவும்போது அங் கிருந்து செயல்படும் மனதைத் தாக்கி அலைக்கழிக்கச் செய் கிறது. ஆகவே பிராணுயா மமென்பது சுவாச நடையைத் தடுப்பதன் மூலமாகச் செய்யப்படுகிறது. சுவாசம் இழுக் கும்போது காற்றுடன் பிராணவாயு பிராணன் இரண்டை யும் நாம் உள்வாங்குகிருேம். பிராணவாயு இரத்தத்தில் கலந்து செல்ல பிராணன் நுரையீரல் நரம்புகளால் உறிஞ் சப் படுகிறது. ஆன்மா எப்போதும் உயரச் செல்லவே பார்க்கிறது. ஆனல் பிராணன் அதைக் கீழ் முகமாய் இழுத்து மனக் கவசத்துக்குள்ளேயே செயல்படச் செய்து கொண்டிருக்கிறது. இதனுல் ஆன்மா சம்பந்தப்பட்ட புலன்களின் அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே உயர்நிலை செல்ல விரும்புபவர் பிராணுயாமத்தின் மூலம் மனக் கவசத்திலிருந்து விடுபட்டாக வேண்டும். மேற் சொன்ன உண்மைகளால் நாம்ஒர் பேருண்மையை நன்கு அறியலாம். ஆன்ம தரிசனமோ இறைவன் சாக்ஷாத்கா ரமோ பெற விரும்புபவர் பிராணுயாமம் பழகியே ஆக வேண்டும். கடவுள் பராசக்தி, அப்பரா சக்தியின் வெளி யியக்கமே பிரானசக்தி, பிராணனை வசப்படுத்தாதவன் பராசக்தியை வசப்படுத்த முடியாது. பிரானுயாமத்தைத் தகுந்த குருமூலம் கற்றறிந்தும் பழகுவதில் யாதும் தீமை
ல்லை. எந்த வயதினரும் இதைப் பழகலாம். அநேக கிழவர்களும் இதைப் பழகிப் பெரும் பயனடைந்திருக்கி முர்கள். நம் அடுத்த பாடங்களில் தொடரும் பிராணுயா மச் சாதனைகளைத் தவறில்லாமல் பழகி வந்தால் நீரும் பெரும் பயனடைந்து பெருமிதம் கொள்வீரென்பதற்கு உத்திரவாதம் செய்கிருேம்.
இத்துடன் வரும் ஆணைப்பத்திரத்தைப் பூர்த்திசெய்து அனுப்புவதன்றி அடுத்த பாடத்துக்குள் தீக்ஷாகட்டணம் அனுப்பி வைக்கவும்.
முக்கிய குறிப்பு
இப்போது நீர் தீக்ஷாக்கட்டணம் அனுப்பினுல் உபதே சம் உடனே தரப்படமாட்டாது. யோக ஆரம்ப சாதனை களான பிராணுயாமம், ஏகாக்கிரகம், தியானம், உத்வேக வஸ்ய சாதனைகளை நீர் அறிந்து முடிந்த பின்பே தீகூைழ் மானத தந்தி மூலம் தரப்படும். திகைடியைப் பெறுவதற் காக நீர் மேற்கொள்ள வேண்டிய விதிகளும் அப்போது
தெரிவிக்கப்படும். ஆகவே அதுவரை நிதானமாகச் சாதனை
களைப் பழகி வரவும்.

Page 18
'ವಾJಘ್ನ'F'
ஆத்மஜோதி
சித்த சோதனை
(சுவாமி கெங்காதரானந்த1)
இறை இணக்கத்தைக் குறியாய் வைத்து வாழும்
உனக்கு மிதமிஞ்சிய சாஸ்திர அறிவும் ஆராய்ச்சியும் அவ் வளவாகவே தேவையில்லையென்பதே நமது கருத்து. ஆத்ம ஞான விருப்பங் கொண்ட மெய்யடியானுக்கு அவைகள் சஞ்சவத்தையும் தருக்க புத்தியையுங் கிளப்பி அருள் நாட் டத்தில் விக்கினங்களை விளைவிக்கக் கூடும்.
'சித்தாந்த சார சபல பூர்வபட்சhந்த லோசணு
கர்த்தே பததிவை மோகால்’’
என்று வேத வியாசர் பல சந்தர்ப்பங்களிலும் உபதே சித்துள்ளார். சாஸ்திரங்களில் கூறும் பூர்வபட்சாந்தக் கருத்துகளைச் சரிவரத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு அது விரோத பாவத்தை யுண்டாக்கும். பருவத்தை மீறிய உரமும் நீரும் செலுத்தினுல் பயிர் பிஞ்சிலே அழுகிவிடு மல்லவா? எல்லாம் பருவத்திற் கேற்றபடி அளவுடன் செய்ய வேண்டும். ஆத்ம ஞானத்திற்குரிய சாஸ்திரங்க ளின் சாரத்தை மாத்திரங் கிரகித்து அதைத் திரும்பத் திரும்ப மனனம் செய்து போஷணை செய்துவந்தால் போது LRT aÕf ģil .
ஈசனின் திருமகனே! உனது அந்தரங்க உணர்ச்சிகளும், விருப்பு வெறுப்புகளும், மற்ருரையும்விட நன்கறிந்து நேர் வழி நடத்திச் செல்லத் தகுதி மிக்க ஒரு நுண்பொருள் உனது இதயக் குகையில் வீற்றிருக்கின்றது. செயல்களுக் கெல்லாம் அதுவே சாட்சிப் பொருள். அணுவைச் சலிப் பிக்கும் ஜீவ அணுவின் ஆதார தத்துவம், உயிர்களின் அந் தராத்மா. குற்றங் குறைகளை அறிந்து திருத்தக் கூடியவ னும், ஆர்வக் கனலை உணர்ந்து அதன் குறியில் கைதுரக்கி
விட வல்லவனும், அவனே யாவான். அந்த மெய்ப்பொ ருளே சிறந்த குரு, பிரதிபலன் கருதாத உபதேசகன், உற்ற நண்பன், விஸ்வாசத்திற்குரியவன். தக்க சமயத்தில்
கைகொடுத்துதவ மிக அண்மையில் சதா உனது நினைவுகள் தோன்றுமிடத்தில் மறைவாக வீற்றிருக்கின் முன். உனது
م"
彎

ஆத்மஜோதி
வேண்டுதலை முதல் முறையாகக் கேள்ப்பவனும், பாவபுண் னியங்களை நினையாமல் தக்கதே செய்து உய்ப்பிக்கத் தகுதி யுள்ளவனும் அவனுெருவனேயாவன். விருப்பங்களை நொடிப் பொழுதில் நிறைவேற்றத் தகுதியும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பேரறிவும் அவனுக்கிருப்பது போன்று சாஸ்திர சித்தாந்தங்களுக்கில்லை. காரணம் அவன் சர்வக்ஞன், சர் வேஸ்வரன், வேண்டுவார்க்கு வேண்டுவதைக் கொடுக்கும் கொடை வள்ளல். அவன் ஒருவனே உன்னை நன்கறிப வன். மைந்தனே! அந்தத் தீன தயாளன் உன்னிடம் இணங்கி நிற்பது போன்று மற்ற எவரும் இணங்கி நிற்ப தில்லை. ஈடு இணையற்ற அதன் இணக்கத்திற்கும் பரிவிற் கும் நெருங்கிச் செல். அந்த இணக்கமே யோகம், உனக்கு வேண்டியவற்றை அது சதா உபதேசித்த வண்ணம் இருக் கின்றது. மோகத்தால் கெதி கலங்கிய நெஞ்சம் அந்த உபதேச மொழிகளைக் கேட்பதில்லை. தியானத்தால் மன விகாரம் அடங்கிநின்று புத்தியும் தெளிவடைந்த உத்தம யோகிகளால் அது கிரகிக்கப் படுகின்றது. சாஸ்திர விசா ரணையால் அறிய முடியாததை, குருவால் உபதேசிக்கப்பட் டும் விளக்க முருததை, தனது தனித்த இனிய குரலில் புரியும் மொழியால் விளக்கி யருளுவான், அந்த அமுத மொழிகளே அசரீரி வார்த்தை எனப்படும். ஸ்பரிசக மணி யால் தொட்டதெல்லாம் பொன்ஞகுமென்று சொல் வ துண்டு. நித்திய முக்தனும் பரமேஸ்வரனின் திருக்கர ஸ்ப சம் ஒருமுறை பட்டவர்களெல்லாம் ஜீவன் முக்தர்களே யாகும். உனது ஒவ்வொரு எண்ணங்களும் உணர்ச்சிகளும் அவை தீயவையானுலுங்கூட ஈசனிடம் இணக்கி நிறுத்து. சாக்கடைநீரும் கெங்கா நதியில் கலக்கும்போது புனித ம டைவது போல் இறையிணக்கத்தால் மாசு படிந்த மனமும் தூய்மைடையும். மகா மாயையில்ை அஞ்ஞான வசப் பட்டு ஜென்ம ஜென்மாந்தரங்களில் தேடி வைத்திருக்கும்
' கொடும் வினைகளின் முடிச்சறுக்கும் சந்திரகாசம் அவனி
டந்தானுண்டு.
கருணை வள்ளலின் இரக்கத்தைப் பெற்ருல் சுமந்து திரியும் மூட்டை முடிச்சுகளை நொடிப்பொழுதில் அறுத்தெ றியலாம். இறைவன்பால் வைக்கும் நம்பிக்கை வீண் போ வதில்லை. தவறி விழுந்தாலும் அவன் திருவடியிலேயே விழு. நகராதே. தூக்குவான், கொஞ்சுவான், அறிவளிப்
பான், ஆறுதலைத் தருவான், ஞானக் கதவைத் திறந்தருள்
சொன், அவனை விட வேறு தெய்வமில்லே, அவனே ஏகன்.

Page 19
2 ஆத்மஜோதி
ஜடாதரனின் உச்சியில் நின்றுாறும் அமிர்த தாரையால் சகல சராசரங்களும் உயிர் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
மகனே! அந்தச் சேதனு சக்தியைப் பிரிந்து வாழும் ஒவ்வொரு நிமிஷங்களும் வெறும் ஆசைகளால் ஏமாற்றப் பட்ட ஜீவனற்ற வினடிகளேயாகும். அதன் முடிவு சோக மும் துயரமும், தீர்த்தால் தீராத கர்ம வியாதிகளுக்கு ரிய சித்த ஒளஷதம் அவனிடமுண்டு. நோயின் தராதர மறிந்து விலை கூற மல் மருந்தளிக்கும் தீனதயாளன். அவன் தாள் வணங்கி நிற்பதே அவனளிக்கும் மருந்தின் பத்தியம். திருவருளாம் காயகற்பம் ஒருமுறை உட்கொண்டாற் போ தும். நோயும் பிணியும், ஏன்? மரணமுங்கூட அணுகா மல் அமிர்த நிலையடையும்.
இரவு முழுதும் அயர்ந்து துரங்கிக் காலையில் எழுந்து ஒன்றும் தெரியாமல் நன்ருய்த் துரங்கினேன் என்று அனை வருங் கூறுவதுண்டு. ஒன்றும் தெரியாத கழுத்தி நிலையில் சுகமாய்த் தூங்கினேன் என்று உணர்த்திய பொருள் யாது? புலனறிவுஒடுங்கியநிலையிலும் அறியுமென்றும் அறியாததென் றும் உணர்த்திக் கொண்டிருக்கும் பொருள் ஏதோ அதுவே வேதாந்திகளால் ஆராய்ந்தறியப்பட்ட வேதப் பொருள். சாட்சிமாதிரனென்றும் இதயக் குகையில் வீற்றிருப்பவ னென்றுங் கூறப்பட்ட பொருள் அதுவேயாகும். அதுவே நமது வாழ்வின் குறி.
பணிவினுல் கடவுளும் பணியுமென்பதை முன்னுெரு முறை கூறியிருப்பது உனக்கு ஞாபகமிருக்கலாம். இறை வன்முன் பணிந்து பணிந்து மாந்துளிர்போல் உன்னை மிருது வாக்கிக் கொள். மிருதுவான துளிரே அர்ச்சனைக்குத் தகுதி Այ6ծ) L- Ա 16ծ) 6}},
உன்னே ஒரு அர்ச்சனைப் பொருளாக்கித் தன்னைத்தானே அர்ச்சனை செய். அதுவே விரைவில் ஏற்றுக் கொள்ளப்ப டும் சிரேஷ்டமான அர்ச்சனையாகும். அர்ச்சனை மலருக் காகக் காடு மலே தடாகங்களைத் தேடி அலைந்து திரியும் நீ உள்ளப் பொய்கையிலிருக்கும் உள்ளத் தாமரையைக் கொய்து அங்கே இருக்கும் சிவலிங்கத்திற்குப் பூஜை செய் யத் தெரியவில்லையே என்று ஆதி சங்கராச்சாரியார் UITL4 யிருக்கின்றர். இறைவனின் பணிமகனே! பிரதிபல் திருஷ் டியில் (திறந்துந் திறக்காமல்) மெளனயோகத்தில் சலன
 

ஆத்ம ஜோதி 13
மற்றிருக்கும் பரமயோகியின் முக்கண் பார்வையை விழிக் கச் செய். நீ பயின்ற கலைகளும், தேடிய செல்வமும் அடைந்த பெருமையும் உன்னைப் பாதுகாக்கு மென்று நினைப்பது மடமை. அவற்ருல் நீ நிச்சயம் வஞ்சிக்கப்படுவாய். பந்த பாசங்களால் பாசி பிடித்து நாற்றமெடுக்கும் நெஞ்சில் அவன் திருவடிகளை மெல்லெனத் தூக்கி வை. பொற்பா தம் பட்டதும் நெஞ்சில் பற்றிய தூசி துரும்புகள் கருகி விடுமல்லவா? உனது பூஜா பலன் குறையுமுன் இதயத் துடிப்பு உன்னை விட்டகலுமுன் அதைச் செய். உனது பக்தி யின் நுனியை அம்பின் நுனிபோல் கரியதாக்கி அசைவற்
றிருக்கும் யோக சிரேஷ்டனின் இதய கமலத்தைக் குறி யாய் வைத்து எய்துவிடு. பானம் திருநெஞ்சில் தைத்த தும் நிஷ்டை கலைந்து திருக்கண் பார்வை அருள்வான். உன்னைக் காக்க அந்தத் திருக்கண் பார்வை ஒன்றே போது மானது. திருவருட் பார்வையால் அழுத்தப்பட்டவர் மீண் டும் உலக துன்பங்களில் மிதப்பதில்லை. ஆத்ம வீரனே! கற்பன உலகில் வாழ்ந்தது போதுமன்ருே உறுதியுடன் எழுந்து நில், நானென்ற உணர்ச்சிக்கு ஆதாரமாய் நிற் கும் அந்தச் சேதன சக்தியை வணங்கி நில். எக்காலமும்
சரனம்! சரணம்!! சரணம்!! !
(தொடரும்)
பன்னிரண்டு வருடங்கள் பிரம்மச்சரிய விரதத்தைத் தவருது அனுஷ்டித்து வருபவன் அளவற்ற சக்தியைப் பெறுகிருன் . பிரம்மச்சரியம் சரியாகக் கையாளப்பட்டால் உயர்ந்த புத்தியையும் ஆத்மீக சக்தியையும் அது நமக்க ளிக்கும். காம உணர்ச்சியை அடக்கி அதை மகத்தான ஆத்மீக சக்தியாக மாற்றிக் கொள்ளுங்கள். ஆத்மீகசக்தி அதிகமிருக்கும் வரையில் ஒருவன் மாபெருங் காரியங்க ளைச் சாதிக்க முடியும்.
நமக்குச் சிரத்தை வேண்டும்; தன்னம்பிக்கை வேண் டும்; பலமே உயிர்; பலவீனமே மரணம்; நாம் மரணமற்ற சுதந்திரமுள்ள, தூய்மையே இயல்பாகக் கொண்ட ஆத்மா அல்லோமா? நாம் பாவம் எவ்வாறு செய்யமுடியும்? முடி யவே முடியாது. இத்தகைய நம்பிக்கை நம்மை மனிதர் களாககும.
- விவேகானந்தர்.

Page 20
சிறுமொழி ஏற்றருளே!
(கோவை கி. சுந்தரம்)
அற்புதமான மயிற்பீலி! அதைக்கொண்டதோர் அழகிய ரத்தின கிரீடம்! கஸ்தூரி திலகம்! வில்லொத்த புருவம்! செந்தாமரைக் கண்கள்! அருளொழுகும் பார்வை! பூரண சந்திரன் போன்ற திருமுக மண்டலம்! எழிலான கெளஸ்து பம்! அழகிய பூரீ வத்ஸம்! வைஜயந்தி மாலை! ரத்ன கங் கணம்! நீண்ட கைகள்! அழகிய இடை மூன்ருக வளைந்து நிற் கும் வண்ணக் கோலம்! ஒளி பொருந்திய நீல மேகச்சியாமள வண்ணம்! கையிலோர் முரளி கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ! திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ என்றபடி குறுவியர் புருவம் கூடலிப்பு ஊத, அதனின்று கிளம் பும் இனிய கானம்! w
இவ்வரிய காட்சியை கண்ணுற்ருர் அகல்வரோ! ஒரு கண் போதாதே! கண்ணுயிரம் வேண்டும் அன்றல்லவோ கத றுவர் 1 ஆம்! அழகன், சியாம சுந்தரன் ராதையோடு கூடி வேறு காட்சி கொடுத்தால் திகட்டுமோ! இனிமை! இனிமை! இனிமையேதான் அது. கண்டதோடு மட்டுமல்ல. அதைப் பற்றி நினைவு எப்பொழுதுமே இருந்தால் அவைதான்!
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்தமந்த ஹவலிதான ஞம்புஜம் ! நந்தகோப தயைம் பராத் பரம்
நாரதாதி மு னிப்ருந்த வந்திதம்! என்று நினைத்து நினைத்து சுவைக்கிருர் குலசேகராழ்வார்! பிறவிப்பிணி தீர ஒரே மருந்து கண்ணன் நாமா மிர்தம் தான்! இது மட்டுமா! இவன் லீலைகளைப் படித்தாலேபோதுமே. குழந்தை உள்ளமான, பிரேமை மயமானகோபியர்களின் உள் ளமாம் வெண்ணெயைத் திருடி உண்ணும் மாயக் கள்ளனல்ல வா அவன்! கோபியர்களோடு கூடி அவன் ஆடும் ஆட்டமும் பாடும் பாட்டும் ஆஹா! என்ன ரஸம்! பிரேமை ரஸமல்ல வா அது! இவ்வினிய லீலைகளைப் பற்றி படித்தாலும் படிக்க நின்று கேட்டாலும் நெஞ்சுருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆற் ருது எழும் கண்ணிரதல்ை உடல் நனைந்து நனைந்ததல்லவா போகிறது.
ஆம்! இதோடு காட்சி நின்று விடுகிறதா! பரிந்து உள் உணர்ந்த நிலையே மிக உச்ச நிலை. இந்தப் பிரேமை என்ன செய்யத் தூண்டுகிறது பாருங்கள். ஈர்த்தாலும் ஆயினும், பிடிக்க, கட்டியணைக்கவல்லவா இழுக்கிறது. அந்நிலை யசோ தைக்கு கிட்டியது. என்னம்மை ராதைக்கு கிடைத்தது. அப்
 

T' T.
ஆத்ம ஜோதி 115
பெரும் பேறு!ஒருகணம் அந்நிலைமறந்தால் என்ன ஏற்படும்! 'யுகாயிதம் நிமேஷேண கம்கூrஷா பிரவிந்கஷாயுதம் சூன்யா யிதம் ஜகத் ஸர்வம் கோவிந்த விரஹனேமே'
விர கதாபத்தால் உலகே இருண்டுவிடும் சூன்யமாகிவி டும். பின் வாழ்வு எங்கே! அவன்தானே மூச்சு! அவன்தானே பிராணன். பிரேமை பாவம் உடலெல்லாம் ஒடுகிறது. உலின் ஒவ்வொரு அணுவும் அப்பிரேமை வெள்ளத்திலே அமிழ் ந்திருக்கிறது. ஒவ்வொரு உரோமமும் அவன் புகழ் பாடிக் காண்டேயிருக்கிறது. கேட்கின்ற ஒலியெல்லாம் பாட்டெல் லாம் அவனையே போற்றி புகல்வதாயிருக்கிறது. நீண்ட மலேகளெல்லாம் அவனது தோற்றமாய் விளக்கம் தருகிறது நெடுவானம் அவனது பரந்த உருவையே புலப்படுத்துகிறது சப்தித்து ஒடி வரும் நீரோடைகள் 'கிருஷ்ணு! கிருஷ்ணு' என்றே ஒலிக்கிறது. நெடுந்தருக்களும் மலர்ச்சோலைகளும் அவன் வருகையைக் காட்டுகின்றன புஷ்பங்களெல்லாம் அவன் கழுத்திலே மாலையானுேம் என்கின்றன ரீங்காரமிட்டு வரும் வண்டுகள் அவன் குழலொலிக்கு ஒத்து இசைக்கின்றன. மயில்களெல்லாம் அவனது முரளியின் கானத்திற்கேற்ப நடம் புரிகின்றன. எங்கும் பிரேமை! எங்கும் பிரேமை! எங் குமே பிரேமை! அவ்வெள்ளம் பெருக்கெடுத்து விட்டது. அதற்குத் தடையில்லை! அகில உலகமும், சராசர முழுவதுமே அதனுள் மூழ்கிவிட்டன.
இவ்வானத்திற்கு எல்லையுண்டா! எல்லை கூறத்தான் முடி யுமா! இதை எப்படி வர்ணிப்பது. அறப்பொருள்களின் சுவையோடுதான் கூறமுடியுமா? அப்படியாயின் தித்திக்கும் இனித்த சுவை கரும்பு என்பதா அல்ல! அல்ல! வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே என்பதா மெய்ம்மையறி வானந்தம் விளக்கும் அருளமுதே! என்பதா அல்ல அல்ல அவன் நடிப்பை, அவன் ஆட்டத்தை சொல்லமுடியவில்லை யே..!
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்க நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந் தாலும் ஈர்ததாலும், பிடித்தாலும் கட்டியனைத்
தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே, வேர்த்தாவி மயங்காது கனிந்த
நறுங்கனியே, மெய்யறி வானந்தம் விளக்கும் அருளமுதே தீர்த்தா வென்று அன்பரெலாந்
தொழப் பொது வில் நடிக்கும் தெய்வநடத்தரசே-வ என் சிறு மொழி யேற்றருளே.

Page 21
116 ஆத்மஜோதி
வேதாந்தம் (யூரீ சுவாமி இரா ஜேஸ்வரானந்தர்)
வேதாந்தம் மேல்நாட்டுச் சிந்தனையாளர் காலத்துக் குக் காலம் கூறும் இன்னுெரு வெறும் மெய்யியல் அன்று.
வேதாந்தம் மனித வர்க்கத்தைப் பிடிக்கும் பயத் திற்கும் துன்பத்திற்கும் ஒரு விளக்கம் கொடுப்பதற்கு உரி மை கொண்டாடுகிறது. அவ்வகையானதால் இச் சிந்தனை முறைக்கும் இதரமுறைகளுக்கும்முக்கியவேற்றுமைகள் உள.
வேதாந்தம் பகுத்தறிவில் அடியிடப் படவில்லை; ஆனல் அருள் வெளிப்பாட்டில் ஆதாரங் கொண்டுள்ளது. சொப் Gl 165TG35|Tri (Schopenhaner), (3) bu73ň (Neitzche), 5ITJ55|| (Kant) தாங்கள் ஆழ்ந்தாராய்ந்த விளக்கங்களுடன் எப் போதும் திடமாகத் திருப்தி கொண்டிருக்கவில்லை.
வேதாந்த வுண்மை திருவருளா லுணர்த்தப்பட்டவர் அமைதி, ஒளிர்வு, மாட்சிமை, வல்லமை வாய்ந்த பிரப லரே. அவர்கள் என்றும் சிறந்த தெய்வீக மறை உண் மையில் பாதுகாட்பில் வாழ்ந்து மறைந்து போனர்கள்.
வேதாந்தத்தை யாராய்பவர்களுக்கு அது ஒரு பயிற் சியை விதித்து அவர்களுக்கு மெய்ப்பொருளின் வெளிப் பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இயலச் செய்கிறது. பயிற்சி தூய்மையினதும் ஒழுக்க நேர்மையினதும் மிகவுயர் தரத்தை வேண்டுகிறது.
வேதாந்தம் அறியப்பட்டதையும் பார்க்கப் பட்டதை யும் தெரிந்து கொள்வதுடன் அதிகமாக அக்கறை கொள் ளவில்லை. அதன் நாட்டம் ஏற்கெனவே உள்ள ஆனல் அஞ்ஞானத்தாற் கறைப்படுத்தப்படாத மனத்தாலும் நுண் ணறிவாலும் அங்கீகரிக்கப்படாத ஒர் இருப்பு நிலையில் நிறுத்தப் பட்டிருக்கிறது.
தெய்வீகத் தன்மையில் விழிப்பாயிருக்கும் ஒர் ஆசிரி
யரின் வழிகாட்டல் எம் உண்மையியல் பின் விளக்கத்துக்கு எம் இயற் பெற்றிகளின் புத்தொழுங்கமைப்பைக் கொண்டு
 

ஆத்மஜோதி 17
வருகிறது. இவ்வாருக ஒவ்வொரு ஆன்மாவும் மற்றதிலி ருந்து தூண்டுகையைப் பெறுகிறது. குருடர் குருடருக்கு வழிகாட்டுவதில்லை.
அக்காரணத்தால் வேதாந்தம் கல்வியாலன்று ஆனல் ஆன்மிக ஊக்கத்தையும் சீவிய முறையையும் அனுபவத்தில் தன்வயப்படுத்துவதாலும் முயற்சியாலும் ஆட்சி கொள்ளப் படுகிறது அதன் அடிப்படை யொழுங்கு முறைகள் மனி தனின் உட்கண்ணையும் செவியையும் ஒர் அதியுயர்தரமான தலைசிறந்த உள்ளுணர்விற்குத் திறக்கின்றன.
வேதாந்தம் தனிமுதலனுபூதிக்கு அறிகுறியாக இருக் கிறது. தனிமுதல் அனந்தமாயும் நித்தியமானதாயு மிருக் கிறது. அது ஒன்றுமில்லையன்று. அது ஒரு மறுப்பன்று. அது மத்யா மிக பெளத்தரின் பாழ் வெளியன்று. அது மாறு படுகிறதன்று. அது தெளிவற்ற ஏதோ வொன்றன்று. அது 'ஆதல்’ அன்று. அது மனதின் அறியுஞ் சக்திக்கு அகப்படாமற்றப்புகின்றது.
வேதாந்தத்தின் தனிமுதல் தலைசிறந்த உள்ளுணர்வே. அதுவே உயிர், ஆற்றலின் ஆற்றல், மனதின் மனம், கண் னின் கண். அதுவே உலகினதும் அதன் நுணுக்கப் பிரிவு களினதும் ஆதாரம். அதுவே கால தேசத்தின் அடிப்படை. அது சச்சிதானந்தம். அது எல்லாக் குணங்களின் இருப் பிடம். அது ஒவ்வொரு தோற்றப் பாட்டினதும் பிறப்பு, வளர்ச்சி, இறப்புகளின் ஒரேயொரு மூலமுதல். தனிமுதலே விவரிப்பதற்கு நியதமாக வகைதுறை யில்லை.
தனிமுதலே வேதாந்தத்தின் பிரம்மம். அது கருத்து கள், கனவுகள், கற்பனை அருட்புலமை போல அகப்பொ ருளாக்கலும் கால - தேச - காரண Փ 6035 G Tan) அயற்பொருளாக்கலும் போன்ற ஆக்கச் சக்தியை வைத்
திருக்கிறது.
தனிமுதலின் அதிசயமானதும் மயக்கமானதுமான சக்தி -அகத்தானதும் அயலானதுமான வுலகு போன்று அ க ப் பொருளாக்கலும் புறப் பொருளாக்கலும் - மாயை என்று
சங்கரரால் கூறப்படுகிறது.தனி முதல் மாயாவி என்று சொல்
லப்படுகிறது .

Page 22
18 ஆத்மஜோதி
தனிமுதலே ஒருநிலையில் திரையும், இசைக்குழுவும், நடிகரும், உலக நாடகத்தின் மூல பாடமும், உ ன் கனவுகளை இவ்வகண்ட தோற்றத்துடன் ஒப்பிடுக. நீயே வானம், வனம், முகில், ஞாயிறு, ஆழி, நதிகள், மலைகள், நீ உன் கனவுகளிற் காணும் யாவும்,
தனிமுதலே இன்னுெரு நிலையில் தலைசிறந்த கூத்தாடி, எண்ண முடியாத அங்கிகளைத் தரிப்பதால் தன்னையே வேடிக் கையாற் களிக்கச் செய்கிறது. தனிமுதலே வானவர் தந் தை (Zeus) பிரேமேதியர் (remetheus) இராமர், கிருஷ் மணர், ராகுன் (Rohuns) புத்தர், கிறிஸ்து, சொராஸ்தர், (Zoroster) நானக், மற்றும் யாவரும்.
ஒவ்வொரு மனிதனும் ஒரே தனிமுதல். அவனது மாயை ஆசையையும், வெறுப்பையும், அமைதியையும், போரை யும் மேலும் வாழ்வின் எல்லா இருமைக் கூட்டங்களையும் உண்டாக்கும் மனமே. அவன் தன்னை, ஆன்மாவாக, தனி முதலாக உணரட்டும். தீமைக் கோட்பாட்டுக்கோ அல் லது நன்மைக் கோட்பாட்டுக்கோ இடங் கொடாது ஒரு தெய்வீகக் காட்சியாளனுக வாழட்டும். எல்லா மாற்று ருக்களுக்கும் பெயர்ப் பட்டிகளுக்கும் அப்பால் தெய்வீக இருப்பை உணரட்டும்.
தனிமுதல் தன்னையே மறந்ததா? தனிமுதல் ஒரு மயக் கத்துடன் இருக்கிறதா? இல்லை, சற்றேனுமில்லை. அதுவே யாவுமாகவும், வேறல்லாததாகவும் இருக்கும்போது மறப் பதற்கு யாது உண்டு? நினைவு கூர்வதற்கு யாது உண்டு? அது இரண்டாவதற்ற ஒன்று மட்டுமே.
மனதை ஒருமுகப் படுத்துகிற அளவிற்கு அறிவு வளர்ச் சியும் அதற்கேற்றவாறு அதிகமாகும். பணம் சம்பாதிப்ப திலாகட்டும், கடவுளைத் தொழுவதிலாகட்டும், எதைச் செய்வதிலாகட்டும் மன ஒருமை அதிகமாக இருக்கும்வரை அது நன்ருக நடைபெறும். இயற்கையால்மூடப்பட்டிருக் கும் அறிவுச் சுடரைப் பெறுவதற்கு இஃது ஒன்றே சிறந்த
நெறியாகும்.
- விவேகானந்தர்.

ஆத்ம ஜோதி 9
கேனுேப நிஷத சாரம்
(யூறி சுவாமி சிவானந்தர்)
ஹரிஓம்! என் அங்கங்கள், வாக்கு, பிராணன், கண் காது, பலம், புலன்கள் அனைத்தும் ஆற்றல் வாய்ந்த 々 வையாகுக, அனைத்தும் உப நிஷதங்களின் பிரம்மமே. யான் ஒருகாலும் பிரமத்தை மரு திருப்பேனுக. பிரம் மம் என்னை ஒருகாலும் இகழாதிருக்குமாக. பிரம்ம மறுப்பு இல்லா திருக்குமாக. பிரமத்தால் இகழ்தல் இல் லாதிருக்குமாக. உபநிஷதங்களிற் சொல்லிய அறங்கள் அனைத்தும் ஆத்மனில் ஆனந்தித்துக்கொண்டு என்னில் உற்ையட்டும்! அவை என் னில் உறையுமாக !
ஓம் அமைதி அமைதி!! அமைதி!!!
உள்ளுறையும் சக்தி
1. யார் மனதின் இயக்குநர்? யார் மனதை அதன் விடயத்தில் அமர்த்துவதற்குத் தூண்டுகிரு?ர்? பிரம்மமே.
2. யாருடைய உத்தரவில் பிராணன் தொழிற்படத் தொடங்குகிறது? பிரம்மம் அல்லது தனி முதலின் கட்டளை யிலேயே.
3. யாருடைய கட்டளையில் மனிதர் பேச்சுப் பேசுகி ரு?ர்கள்? பிரமத்தின் கட்டளையிலேயே.
4. எவ்நுண்மதி கண்களையும் காதுகளையும் அவ்வவற்
"நிற்குரிய விடயங்களுக்குச் செலுத்துகிறது? பிரமத்தின்
நுண்மதியே.
5. பிராணனுக்கும் புலன்களுக்கும் புறத்தே பிரம்மம் அல்லது தலை சிறந்த ஆன்மா உண்டு.
6 , அறிவற்ற மக்கள் அறியாமை அல்லது அவித்தை காரணமாக உடல், உளம், பிராணன், புலன்கள் முதலிய வற்றுடன் ஒன்றிக்கிருர்கள்.

Page 23
120 ஆத்ம ஜோதி
7. அவர்கள் இப்பொய்யான, அழியும், எல்லைப்படுத் தும் உபாதிகள் அல்லது ஊர்திகளை தூய, அழிவின்றிய ஆத்மன் என்று தவருகக் கருதுகிருரர்கள். ஆகையால் அவர் கள் பிறப்பிறப்புகளாகிய வட்டவழியில் சிக்கிக்கொள்கிருர்
GF.
8. ஆனல் சில அறிவுள்ள மக்கள் இப்பொய்யான ஒருமை காணலை நீக்கி, விசாரணை, விவேகம், அன்வயவிய திரேக யுக்தி, ‘நேதி, நேதி’க்கோட்பாடு - "நான் இவ்வு டல் அல்லேன் நான் பிராணன் அல்லேன் நான் இம்மனம் அல்லேன். நான் புலன்கள் அல்லேன்'-மூலம் தங்களை இக் கட்டுப் படுத்தும் உபாதிகளிலிருந்து பிரித்துச் சர்வவியா பக, அழிவின்றிய, தூய பிரமத்துடன் ஒன்றித்துப் பிரம்ம
ஞானம் பெறுகின்ருர்கள், அழிவின்மை அடைகிருர்கள்.
9. புலன் வாழ்வுக்கு மேலெழுந்து ஆத்மனில் வாழ்க. நீ சாவாமையும் நித்தியானந்தமும் அடைவாய்.
10. 5 பிரம்மஞானம் அடைந்தால் இவ்வுடலில் வா ழும் போதே அழிவின்றியவனவாய். இவ்வுடலைவிட்டு நீங் கும்வரையில் நீ காத்திருக்கத் தேவையில்லை.
11. கிண்ணத்திலுள்ள நீர் தன் சூட்டைச் சூரியன் அல்லது அக்கினியிலிருந்து இரவல் வாங்குவதுபோல் மன மும் பிராணனும் புலன்களும் தங்கள் ஒளியையும் சக்தியை யும் ஆத்மனிலிருந்து கடன் பெறுகின்றன.
12. காது ஆத்ம சக்தியாற் கேட்கிறது. நா ஆத்ம சக்தியாற் பேசுகிறது. மனம் ஆத்ம சக்தியாற் சிந்திக்கிறது
பிராணன் தன் செயல்களை ஆத்ம சக்தியால் மட்டும் நிறை,
வேற்றுகிறது.
13. மனமும் இந்திரியவுறுப்புகளும் உயிர்ப் பற்றவை நுண்மதியற்றவை. அவை ஆத்ம ஒளியாலும் சக்தியாலும் நுண்மதியுள்ளனவாய்த் தோன்றுகின்றன.
14. ஒரு வீடு அதன் சொந்தக்காரனின் பாவிப்புக் காக இருப்பதுபோன்று கண்களும் காதுகளும் மனமும் பிரா
ணனும் ஆத்மனின் உபயோகத்திற்காக இருக்கின்றன. அதி'
காரி பிரம்மம் அல்லது ஆத்மனே.
s

15. பிரம்மம் தன் ஒளியாற் பிரகா சிக்கிறது. அதன் ஒளியால் சர்வ உலகமும் ஒளிபெறுகிறது.
16. அதன் ஒளியால் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங் களும் தீயும் மின்னலும் பிரகாசிக்கின்றன.
17. சுயஞ்சோதியான பிரம்மம் இல்லாதிருந்தால் யாரும் சீவிக்கவும் சுவாசிக்கவும் முடியாது.
օվ வு f) li 'l Ul I IT gfb
18. பிரம்மம் பிரானனையும் அபான%னயும் அதிகரித்து நின்று நடாத்துகிறது.
19. ஒருவன் ஆசைகள் அனைத்தையும் துறப்பதனல் அழிவின்றியவனுகிருன்.
உள்ளுணர்வான உண்மை - உணர்தல்
20. "கர்மங்களால் அன்று, கொடைகளால் அன்று, செல்வத்தால் அன்று ஆணுல் துறத்தலால் மட்டும் ஒருவன் அழிவின்மை அடைகிறன்' என்று சுருதி பகருகிறது.
21. எப்படிக் கண்கள் காட்சியைக் காண்போனுகிய சூரியனைக் காணமுடியும்? கண் மனதுக்கும் ஆத்மனுக்கும் ஒரு காட்சிப்பொருள். ஒருவர் தன் தோள்கள் மேற்குதிக்க (LDL 4 (11 ITöle
22 பிரம்மம் காட்சிப் பொருளாயிருக்க முடியாது. ஏனெனின் அது சுவகதபேதமின்றியது (பகுதிகளின்றியது) குணங்களின்றியது, அறமுடிவாக நுட்பமானது, அநந்தமா னது.
23. பிரமத்திற்கு வரை விலக்கணங் கூறுதல் பிரமத் தை மறுத்தலே. s
24. சச்சிதானந்தம்' என்பது பிரம்மத்தின் தற்கா
விகமான வரைவிலக் கனம் ,
(தொடரும்)

Page 24