கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.02.13

Page 1
ವ್ಹಿ...
 
 


Page 2
జరిగిeణగిలగిలR NA NA NA
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலு ப் இறைவன் ஆலயமே
காந்தர்.
ஜோதி 16 | சுபகிருதுளுல் மாசி மீ" 1உ
( "| , 4
பொருளடக்கம்
மகாகவி தாகூரின் கீதாஞ்சலி 2. பூர் குரு மகானந்த ஒளியுல்லா சுவாமிஜி 23 3 தீமை எது? | 6 4 யூனி சங்கர விலாசம் 2) 5 ஆனந்தமாயி அம்மையிடம் அன்பர்கள் சம்ப வ ை37 8 சங்கரர் பொன்மொழிகள் 14 7 வீடு சொர்க்கமான கதை 15 S கேனுேப நிஷத சாரம் ISI
ஆத்மஜோதி சந்தா விபரம்
+++++++单*** A
ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரூ.3 00
தனிப்பிரதி சதம் 30,
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் とし பதிப்பாசிரியர் - நா. முத்தையா
לדו
* ஆத்மஜோதி நிலயம் ” நாவலப்பிட்டி (சிலோன் @至万兹uGL9arā- 353
 

மகாகவி தாகூரின்
கீ த ப ஞ் ச லி
38. உன்னுறவே!
உனேன்றி மற்றென்றிவ் வுலகில்யான் வேண்டிடா
உறுதியொன் றெனக் கருளுவாய்! ஒயாதென் நெஞ்சினை யரித்திடும் ஆசைகள்
ஒன்றிலும் பயன் ஒன்றிலே! பணியிருட் கங்குலில், ஒளிவேண்டி நின்றிடும்
பிரார்த்தனை அடங்கு மாப்போல் பஞ்சையென் நெஞ்சகம் துஞ்சிடும் நிலையிலும்
பரம நினே யே விழையுதே! இனிய நற் சாந்தியைச் சாடிடும் சண்டமா
ருதமும், அதி லே முடிவுறும்! ஏழையேன், வாழ்வின் தொடக்கத்தில் உன்னருளே
யே ,எதிர்த்துக் கிளம்பினும் , புனிதநின் உறவலால் பிறிதுவேண் டிலனெனப்
புலம்பித் தவிக்கு தின்றென் புந்திதான்! இன்னுமென் புகலுவேன்? சர்வ பரி
பூரண சுகா னந்தமே!

Page 3
2
ஆத்மஜோதி 39. பொழிக!
ஈரமில் லாதெனுளம் இறுகிக் கிடக்கையில்
இணையிலா அன்பு பொழிக! என்வாழ்வி லேயெழில் மறைந்திடும் பொழுது நீ
இன்னிசை யமுது பொழிக! தீராத வேலைக் குழப்பத்தில் மூழ்கித் தியங்கயான், திசையனத்தும் தீப்புயல்க ளால் எனத் தாக்கிடும் வேள யில்
திவ்யசாந் தம் பொழிகநீ! ஆராத வறுமையால் ஏழையோர் மூல யில்
அடங்கிக் கிடக்கை யில் , என் அகத்தைத் திறந்தெனது மன்ன, நி DI " 67 (GNU (T(p)
அருள்வளம் பெh லிய வருக! பேராசைப் பேய் பர்ல் மயங்கிக் கிடக்கையில்
பேதையேன் கண் திறக்க, பேரிடி முழக்குடன் சீரொளி பரப்பியருள்
பேரருட் குரு வேந்தனே!
40. பெய்யவில்லை!
காய்ந்திட்ட என்னுளக் கழனியிற் பலதி டைம்
கருணமழை பெய்ய வில்லை! ககனமிசை சிறுமுகிற் திரையுமில் லே, மழை
காட்டுநற் குறி தொலைவிலும் வாய்ந்திடற் கிலே நினது அந்தகக் கருமைசூர்
வஞ்சினப் புயலை ஏவி, மை யிருட் சாமுழக் கத்துடன் மின்னலால்
வானெங்கி லும் கலக்கி, தீய்ந்துருகி என்னகம் மாய்ந்தி டச் செய் மவுனர்
செந்தழல் அவித்தி டாய்; இத் தீக்கொழுந் தின் கொடுந் தாக்கம் பொறுக்கிலேன்,
செப்பருங் கொடிய தந்தோ ! சாய்ந்திடும் தந்தையின் கோபத்தின் முன்னர்)
பரிந்தெழும் தாய் முகம்போல் பீரம,நின் அருள்முகில் வறிஞனென் வாழ்வினிற்
டிரிவொ டென்றும் கவிகவே !
- "பரமஹம்)ெ தாசன்'
 

ஆத்மஜோதி 123
மறீ குரு மகானந்த ஒளியுல்லா
சுவாமி
(ஆசிரியர்)
சகோதரத்துவம், சமத்துவத்தைப் போதிக்கும் இஸ்
லாம் மதத்தில் பல மகான்கள் தோன்றி உலகிற்கு ஞான ஒளியைப் பரப்பியுள்ளார்கள். மகா னந்த சுவாமிகளும் இஸ்லாம் மதத்திற் பிறந்தவராயினும் சர்வ சமயத்தையும் சம்மதமாய்க் கொண்டவர்கள். இஸ்லாமியர்களின் நோன்பு மாசத்தில் சுவாமிகளின் சரித்திரத்தை வெளியிடுதல் மிகப் பொருத்தமானதே.
சுவாமிகள் இந்தியாவில் இராமநாதபுரம் ஜில்லாவைச் சார்ந்த கீழக்கரையில் அவதரித்தார்கள் இஸ்லாமிய குடும் பத்தவர்களாயினும் அக் குடும்பத்தினர் எல்லாச் சமயத் துறவிகளையும் தமது இல்லத்திற்கு அழைத்து உபசரிக்கும் பண்பினைப் பெற்றிருந்தனர். அக் குடும்பப் பண்பாடே சுவாமிகளை உலகத்திற்கு ஈந்தது என்ருல் அது மிகையான தொன்றல்ல. சுவாமிகள் மாதாவின் கர்ப்பத்தில் அமைந்த காலத்தில் அக் குடும்பத்தினர்க்குப் பல அற்புதங்களை நிகழ்த் தியதோடு பல நன்மைகளையும் செய்துள்ளார்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்; வாழும் பிள் ளையை மண் விளையாட்டிலே தெரியும் என்றபடி சுவாமிக ளின் பாலப்பருவ நிகழ்ச்சிகள் அவர் பிற்காலத்தில் ஒரு மகானுகத் திகழ்வார் என்றெடுத்துக் காட்டின. பலகாலம் அன்னகாரமின்றிக் கடுந்தவஞ் செய்த கல்வத்து நாயகம் அவர்களைப் பற்றி அறியாதார் இல்லை என்றே கூறலாம். நாயகம் அவர்கள் தமது கடுந்தவத்தை முடித்து தமது சீடர்களுடன் ஆச்சிரமத்திலமர்ந்திருந்த காலத்தில் ஒருநாள் வீதிவழியே சென்ருர்கள். அப்போ வீதியில் சிறர் களுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையாகிய பூரீ குரு மகானந்தாவைச் சந்தித்தார்கள். குழந்தையைச் சந் தித்த கல்வத்து நாயகம் அவர்கள் பூரீ குரு மகானந்த ஒளி புல்லா நாயகம் அவர்களைச் சுட்டிக் காட்டி
'இவர் ஒரு அவதார புருஷர், வருங்காலத்தில் இவர்

Page 4
124 ஆத்மஜோதி
பெருங்காரியங்களைச் சாதிக்கப் போகின்ருர்கள்' என்று தமது சீடர்களிடம் திருவாய் மலர்ந்தருளினர்கள். அதன்பின் தமது சீடர் ஒருவர் மூலம் மகானந்தாவை அழைப்பித்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை, ஆண்ட வனை ஆராதிக்கும் அவர்களுடைய உயர் கொத்துபா பள்ளி வாசலுக்கு அழைத்துச் சென்று பல பக்தர்களின் கூட்டத்து
மத்தியிலே அவரை உச்சிமோந்து உபதேசம் செய்து குரு
ஸ்தானத்தில் வைத்தார்கள்.
மகானந்த ஒளியுல்லா நாயகமவர் கட்கு உரிய பருவம் வந்ததும்திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று பெற்ருர் பெரிதும் முயன்றனர். நாயகம் அவர்கள் தமது வெறுப்பை உணர்த்தினர்கள். பெற்ருர் நாயகம் அவர்களின் உயர்ந்த
நிலையை உணரவில்லை. பெற்ருரின் வற்புறுத்தலைச் சகிக்க
முடியாது ஒருநாள் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென் ருர்கள். திருப்பத்தூர் என்னும் நகரைச் சேர்ந்து அங் கோர் மரத்திலேறி அம் மரத்தில் இரவு பகலாக அன்ன காரமின்றி இருந்து வந்தார்கள். ஒருநாள் திடீரெனப்
பூமியில் விழுந்தார்கள். விழுந்ததன் மேல் அவர்களிடமி
ருந்து அவர்களையும் அறியாமலே பல வித்துக்கள் வெளி யாயின. அதன்மேல் திருப்பத்தூரில் ஓர் பெருங் கட்டி டத்தில் அவ்வூரார் அமர்த்தி வைத்து ஆக வேண்டிய சிசு ருட்சைகள் யாவும் செய்து வந்தார்கள். அநேக உத்த மர்கள்'நான் முந்திநீழுந்தி' என்றுபோட்டி போட்டுக்கொண்டு சீடர்களானர்கள். பல வருடங்களாக அன்னகார மின்றிப் பால் மாத்திரம் பருகி வாழ்ந்தார்கள்.
பூரீ குரு மகானந்த ஒளியுல்லா சுவாமிஜி அவர்களின் பிரகாசம் இந்தியாவில் மாத்திரமன்றி மேலநாடுகளிலும் பரவத் தொடங்கியது. ஒவ்வொருநாளும் பல ஊர்களிலி ருந்தும் பல மதத்தர்களும் சுவாமிகளேத் தரிசிக்கக் கும் பல்கும்பலாக வந்து சேர்ந்தார்கள். அங்கு வருபவர்களுக்கு
அன்னகாரம் அளிக்கப்படும். அரிசி மூடைகளும் காய்கறி
சாமான்களும் வண்டிவண்டியாக வந்து சேரும் தீராத நோயாளர், நெடுநாள் பேய் பிடித்தோர் சுவாமிகள் முன் னிலையில் சுகம் பெற்றனர். சுவாமிகள் திரிகால முணர்ந்த ஞானியாக விளங்கினர்கள். பின்பு நடக்கப் போவதை முன்னதாகவே தெரிவித்து விடுவார்கள். ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஊடுருவிப் பார்ப்பார்கள். அவரவரின் பக்குவத்தையும் தெள்ளத் தெளிவாகக் காண்டார்கள்.
 

ஆத்மஜோதி 125
அவரவர் பக்குவத்திற்கேற்ப உபதேசித்து அனுப்புவார் கள்.
ஒருநாள் மதுரையிலிருந்து தரிசிக்கப் பிரபலஸ்தர் ஒருவர் வந்தார், சுவாமிகளிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத் தார். மதுரையில் வசதியான ஆச்சிரமம் ஒன்று அமைக் கின்றேன். சுவாமிகள் அங்கு எழுந்தருளி யிருந்து மதுரை மக்களை மகிழ்விக்க வேண்டும்’ என்று பணிந்து நின்ருர் கள். சுவாமிகள் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆச்சிரமம் அமைக்கப் பட்டது. சுவாமிகள் ஆச்சிரமத் திற்கு எழுந்தருளினர்கள். மதுரையிலுள்ள பக்தர்கள் தமிழ் வித்துவான்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள்,
பொதுமக்கள் யாவரும் சுவாமிகளைத்தரிசித்து உய்வடைந்தா
ர்கள். அங்குவேதாந்த உபந்நியாசங்கள் நடந்தன. சுவாமிகளு டைய பிறந்த நாட் கொண்டாட்டத்தைப் பல ஊர்களி
லுமுள்ள அவரது சீடர்கள் ஒன்று சேர்ந்து உயர்ந்த முறை
யில் கொண்டாடினர். வாரம் தோறும் கூட்டு வழிபாடும் நடைபெற்று வந்தது.
சுவாமியவர்களின் பிரதம சீடர் கலெக்ரர் நகுதா என்பவரின் புதல்வன் லண்டனில் உயர் வகுப்புப் படித் து வருங்காலத்தில் தனது சிநேகிதர்களுக்கு ஒருநாள் தேநீர் விருந்து வைத்தார். விருந்தின்போது சுவாமிகளின் பெரு மைகளைப் பற்றி உரைத்துக் கொண்டிருந்தார்கள். சுவா மிகள் அந்த நேரமே அவர்கள் முன்தோன்றித் தேநீர் அருந்தி உடனே மறைந்து விட்டார்கள். இவ்விடயத் தைப் பற்றி மகன் தந்தைக்குத் தந்தி மூலம் அறிவித் தார். உடனே நகுதா சுவாமிகளிடம் சென்று தந்திச் செய்தி பற்றித் தெரிவித்தார்.
இது பெரும் ஆச்சரியம் அல்லவே! எங்கும் நிறைந்த பரம்பொருள் எல்லாரிதயத்திலும் இருப்பது உண்மை தானே! பக்தர்களின் இச்சையை நிறைவேற்றி வைப்பது பரமனின் கடமையல்லவா? கவாமியவர்கள் தமது அநு பவ நிலையை அத்வைத கானம், மகானந்த கீதமென்ற நூல்கள் மூலம் தெரிவித்திருக்கிருர்கள். அவற்றைச் சுவா மிகளிள் பிரமானந்தநிலையென்றே கூறலாம். சுவாமிய வர்கள் 1960ம் ஆண்டு பூத உடலைப் பிரிந்து என்றும் அழி வில்லாப் பேரின்ப நிலையை எய்தினர்கள்.

Page 5
26 ஆத்மஜோதி
s ס தமை எது:
(கன்னயா யோகி அவர்கள்)
கடவுளே நம்பி, பக்தி பூசனைகளால் வழிபடும் பல
ரும் தம் மனதில் சில சமயங்களில் 'கடவுள் உலகில் துன்பத்தை, தீமையை ஏன் படைத்தார்' என ஐயுறுகி முர்கள். இதற்கு விடை கூற முற்பட்ட சில மதப் பிர சாரகர்கள் 'உலகில் துன்பத்தையும் தீமையையும் படைத் தது கடவுளல்ல, அவரைப்போல் தன் காரியத்தில் சம சக்தி கொண்ட, கிறிஸ்துவர்களால் சைத்தான் எனக் குறிக் கப் படும் தனியொரு ஆதிப்பொருளே அவைகளைப் படைத் தது என விளக்கம் கொடுத்தார்கள். "கடவுளின் சிருஷ் டியும், சைத்தானின் சிருஷ்டியும் ஒரே சமயம் ஆவதால் நன்மையுடன் தீமை கலந்திருக்கிறது' என்பது அவர்க ளின் வாதம், ஹிந்துக் கள் 'கடவுளையும் மயக்க வல்ல திறமை கொண்ட மாயையே உலகில் தீமையை உண் டாக்குகிறது' என்பர்.
'கிறிஸ்தவ விஞ்ஞானிகள்’’ எனும் ஒரு மனே தத்துவ சாஸ்திரக் கூட்டத்தினர் ' உலகில் துன்பமே இல்லை' என் கிருர்கள். அவர்கள் கடவுள் அன்புருவானவர், உலகம் அவர் படைப்பு, அன் பின் வடிவான ஆண்டவன் படைப் பில் தீமை எப்படி இருக்க முடியும்? என வாதாடுகிருர்
E () .
வேதாந்திகளில் ஒரு பிரிவினர் "மனமே துன்பத்துக்கு ஆதாரம், அஞ்ஞானத்தால் கவரப்பட்ட மனம் ஒன்றைத் தீமையமாகவும், ஒன்றை நன்மையாகவும் காட்டுகிறது, அஞ்ஞானத்தை அழித்தவர்களுக்கு உலகில் துன்பமே காணப் படாது' என்கின்றனர்.
இவ்வுலகில் பஞ்சத்தாலும், பிணிகளாலும், பூகம்பங் களாலும், வெள்ளங்களாலும், பகைமைகளாலும் பீடிக் கப்பட்டு வருந்தும் மக்களை நாம் காணவில்லையா? நம் கண் முன்னுல் நடைபெறும் இவைகளை இல்லையென நாம் எப்படிக் கூற முடியும்? இது வெறும் கற்பனை தானு? வேதாந்திகளைத் தவிர மற்றவர்கள் இதைக் கற்பனை என
ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். வேதாந்திகள், தாம்
 

飞”飞 ஆத்மஜோதி 127
சொல்வதைப் போல் உலகம் வெறும் கற்பனை என்பதை
நம்புவார்களானல், இக் கற்பனை உலகில் வாழ்வதற்காக அவர்கள் பெரு முயற்சி ஏன் செய்ய வேண்டும்? உணவும் உறவும் அவர்களுக் கெதற்கு?
உலகில் காணும் துன்பத்துக்கு என்ன ஆதாரம்? ஆண் டவன் படைப்பில் துன்பம் ஏனிருக்க வேண்டும்? இதற் குச் சரியான விடையை சிருஷ்டியின் இரகசியத்தை நேர் முகமாய் அறிந்து வரும் குரு பரம்பரையைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டுத்தான் நாம் ஐயந்திரிபற அறிய முடி սկւք. ஆகவே, இதற்கு விடையாக ஒரு யோகியர் என்ன சொல்கிருர் என்பதைக் கேட்போம்.
சிருஷ்டி யென்பதென்ன? ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்ருகி, மூன்று அளவற்ற வடிவங்களாவதே சிருஷ்டி! பலவாக மூலமான ஒன்று, இரண்டான பின், இரண்டும் ஒரளவாகக் கலக்க வேண்டும். அவ்வொன்று நாம ரூப அதீதமானது - சக்தியோ, ஜடமோ அல்லாதது. இது
சக்தி, ஜடம் ஆக தன்னை இரண்டாகக் கூறுபடுத்துகிறது.
மற்றனைத்தும் சக்தி, ஜடங்களில் பல அளவான கலப்பு வடிவங்களே. ஆன்மா என்பது அவ்வொன்றி லிருந்து வெளிப்படும் சிறுபொறி, ஜடக்கவசத்துள் தன்னை இருத் திக் கொண்டு ஆன்மா பரினமமடைகிறது; ஆன்மா தன் கவசத்தின் ஜடப் பகுதியில் இயங்கும் போது அதன் அனு பவம் இன்பம் எனப்படுகிறது. உண்மையில் உலகில் இன் பமோ, துன்பமோ இல்லை. ஆன்மாவின் அனுபவ வேற்று மையே இன்ப துன்பத்துக்கு அடிப்படை.
மேற்கண்ட யோகியரின் கூற்றை சற்று விரிவாக விளக் குவோம் - உலகில் இரவு பகல்கள் இருக்கின்றன, எதற்கு?
பகலில் நன்ருய் உழைக்கும் நாம் மாலையில் களைத்து விடுகி
ருேம், இதற்காக நமக்கு ஒய்வும், இழந்த சக்தியைப் பெ றும் வாய்ப்பும் தேவைப்படுகிறது; இதற்காக இரவில் தூங்குகிருேம்; இரவிலும் சூரியவொளி இருந்து கொண்டி ருந்தால், நாம் களைத்துப் போன தசைகளை நன்ருகத் தளர்த்தி விட்டு சக்தி பெற முடியாது; ஏனெனில் சூரிய வொளியும், வெப்பமும் நம் உடலணுக்களை ஓயாமல் தூண் டிக் கொண்டே இருக்கும், இதற்காகவே இரவு படைக் கப்பட்டது. ஒர் சிறு செடியும் தன் இழந்த சக்தியைப் பெற இரவை நாடி நிற்கிறது. சூரிய வெப்பத்திலேயே வளரும் செடி பட்டுப் போகும்.

Page 6
128 ஆத்மஜோதி
தன் பகல் நேர உழைப்பால் பெறும் சம்பாத்தியம் போதப் பெருத ஒருவன் இரவில் உழைத்துச் சம்பாதிக்க விரும்பலாம். இவனுக்கு இரவு தீமையானது, வீணுகப் படைக்கப் பட்டதாய்த் தோன்றும். இவன் 'கடவுள் இரவைப் படைத்து, மக்களுக்குத் தீமை பயந்து விட்டார்' எனக் குறை கூறலாம்.
ஆன்மா, சிருஷ்டி நிலையனைத்திலும் நல்லநுபவம் பெறு வதன் மூலம் தன் ஞானத்தை வளர்த்துக் கொண்டு தன் தந்தையுடன் சமநிலை பெறுவதற்காக சிருஷ்டியில் சக்தி யும், ஜடமும் படைக்கப் பட்டது ஆணுல் ஆன்மா சிருஷ் டியின் அநுபவத்தைப் பெறுவதற்குப் பதிலாக, ஜடத்தில் மூழ்கி தன் குறிக்கோளை மறந்து இல்லாததில் இன்பத் தைப் பெற முயற்சிக்கிறது.
இன்பமற்ற ஜடத்தில் இன்பம் பெற முயற்சிப்பத ல்ை துன்ப அனுபவத்தை ஆன்மா துன்ப அனுபவத்தை ஆன்மா பெறுகிறது. எந்த நொடியில் ஆன்மா தன் குறிக் கோளை ஞாபகப் படுத்திக் கொண்டு, சிருஷ்டியில் மூழ்கி விடாமல், அதன் விளையாட்டைக் காண்பதுடன் தன் நிறுத்திக் கொள்ளத் தொடங்குகிறதோ, அந் நொடியிலி ருந்து அது இன்ப துன்ப அனுபவங்களைக் கடந்து விடுகி றது. இயற்கை விளையாட்டின் தன்மை ஞானத்தை மட் டும் அது அப்போது பெறுகிறது.
இவ்வுலகம் தன் பரிணுமத்தை மேற்கொண்டாக வேண் டும், இதற்காக உலகில் பல மாறுதல்கள் நடைபெறுகின் றன. இதைத் தனக்குச் சம்பந்தமில்லாததாகக் கருதி வெறு மனே பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இவுைகளால் துன்ப மேதும் உண்டாகாது. ஆனல் உலகில் அனுபவம் தேட முயற்சித்தானுனல் எண்ணற்ற துன்ப அனுபவங்களைப் பெற்றேயாக வேண்டும்.
உலகின் ஜடத் தன்மையைத் தொடர்வது துன்பம், சக்தித் தன்மையைத் தொடர்வது இன்பம். தினமும் இர வுக் காட்சிகளைக் காண விரும்புபவனுக்கு இரவு துன்பம், ஒய்வு தேவைப்படுபவனுக்கு இரவு மிகவும் இன்பம். இவ் வுலகை விட்டுப் போக விரும்பாதவனுக்கு மரணம் கொடிய துன்பம், தன் ஜட பரிணுமத்தை முடித்து விட்டு, முக்திக் காகக் காத்திருப்பவனுக்கு மரணம் கடவுள் வரப்பிரசாதம். இவ்வுலகில் எப்படி, எதற்காக வாழ வேண்டுமென்று அறிந்து அதன்படி வாழ்பவனுக்கு இவ்வுலகம் இன்பமயம், வாழ்க்கை இரகசியத்தை அறிந்து கொள்ளாதனுக்கு உல கம் துன்பமயமே.
*

ஆத்மஜோதி 129 பூணூர் சங்கர விலாஸம்
(கவியோகி சுத்தானந்த பாரதியார்)
ܗ
ச்ருதி ஸ்ம்ருதி புராணுணும் ஆலயம் கருணுலயம் நமாமி பகவத்பாத ஸங்கரம் லோகலங்கரம்
ஸர்வம் ஹி ஏதத் ப்ரஹ்ம; அயமாத்மா; ஏஷ ஸர்வேச்வர ஏஷ Uெர்வஜ்ஞ: ஏஷ அந்தர்யாமீ ஏஷ ஸர்வஸ்ய யோநி: பூதானும் ப்ரபவர்ப்பயெள.
எல்லாம் பிரம்மம்; இதுவே ஆத்மா, இதுவே இறைவன் எல்லாம் அறிந்தது அந்தர்யாமீ ஆக்கமும் அழிவும் அனேத்தின் மூலம் அதுவே யானே.
இது மாண்டூக்ய உபநிஷத் வாக்யம்; பிரம்ம லக்ஷணம்; பன்னி ரண்டே பாசுரங்களைக் கொண்ட பாண்டுக்யத்திற்கு கெளடபாதர் ‘தத்வமஸி - அயமாத்மா ப்ரம்ம" - என்ற உண்மைகளை அடிப்ப டையாக வைத்து வியா க்யானம் செய்தார். அந்த உண்மைகளைப் பரம பிரம்ம நிஷ்டரான கோவிந்த பகவத்பாதர் இருந்து காட்டி ஞர். இருந்ததனே இருந்தபடி இருந்து காட்டிய கோவிந்த பகவத் பாதர் நர்மதை நதிக்கரையில் ஓங்காரக் குஹையில் தானே தானுயி ருந்தார்.
ப்ரஹ்மைவாஹம் ஸ்ம: சாந்த லச்சிதானந்தலக்ஷண: நாஹம் தேஹே ஹ்யஸத் ரூபோ ஞானமித்யுச்யதே புதை:
சாந்தன் சமத்துவன் சச்சிதானந்தன் அசத்துடல் அல்லேன் யானே பிரம்மம்
F' என்று தன்னுள் நிலைத்த பரமயோகியை யார் அறிய முடியும்? யாராவது வந்து குஹைக் கதவைத் தட்டிக்கேள்விகேட்டால், உபதேசம் கேட்டால் நாஹம்,கோஹம்,லோ ஹம் என்பார். நானுர், நீயார், உட லார், உயிரார், அல்லதை விட்டு உள்ளதை எண்ணு என்பார். நமது காலத்திலேகூடப் பகவான் ரமண மஹரிஷிகள் ‘நானுர்’ என்ற கேள் வியே உருவாக மலைமுன் மலைபோல விளங்கிஞர். எத்தனை பேர் ‘நானுர்’ என்ற கேள்விக்கு உள்ளே பதிலை அறிந்தார்களோ தெரிய வில்லை. பயாஃஜித் (Bayazid) என்ற எ0 அஃபி மஹாத்மா, "நான் கட வுளைத் தேடிச் சென்றேன். அவர் எனக்குள் இருந்து, "நான்’ என்று ஒலித்தார்' என்ருர், ஒரு நண்பர் கதவைத் தட்டி 'உள்ளே யார்’

Page 7
oങ്ങo
30 ஆத்மஜோதி
என்று கேட்டார். "நானுன ஒன்றைத் தவிர யார் இருக்க முடியும்: "அந்த நானே இது, அது உது' என்ருர் மஹான்,
அதைப்போல் கோவிந்த பகவத்பாதர் இருந்த குஹையின் கத வை ஒரு பையன் ஒருநாள் தட்டினுன் யார் நீ" என்ற ஒலி எழுந் தது,
ந பூமிர் ந தோயம் ந தேஜோ ந வாயு ந கம் நேந்த்ரியம் வா ந தேஷாம் ஸமு:க! அநேகாந்திகத்வாத் ஸுஷப்த்யேகஸித்த: ததேகோவசிஷ்ட சிவ கேவலோஹம்!
நான் யாரா? நான் பூமியில்லே நீரிலே, தீயிலை, காற்றிலை, மலேயிலே, புலனிலே, வேறிலே - பூரணசிவமே சீவன் சிவமே - சீவன் சிவமே,
பிறப்பிலேன் இறப்பிலேன் பெற்றரில்லேன் ஆசான் இல்லேன் சீடனும் இல்லேன்
என்ற பதில் வந்தது. இதைக் கேட்டதும் கோவிந்த பகவத்பா தர் கதவைத் திறந்து பார்த்தார் "வாடா ஞானக் கண்மணியே உனக்கே காத்திருந்தேன்’ என்று அன்புடன் வரவேற்ருர், வேதத் தின் சிரோமணியான வேதாந்தத்தைப் புகட்டினர்.
ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாயர:
உள்ளது ப்ரம்மம்; உலகம் இல்லை; ப்ரம்மம் அன்றிச் சீவன் வேறிலே
இந்த உண்மையை உலகிற்குத் தா என்ருர், பதினுறு வயதுள்ள அந்த வாலிபனே உலகின் ஞான சக்கரவர்த்தியாகவும் பரம ஸத் குருவாகவும் விளங்கும் பூரீமத் ஆதிசங்கர பகவத் பாதாசாரியார் ஆவார்.
ஐரோப்பாவில் ஸாக்ரெடிஸ், பிளேட்டோ, காண்டு, தெகார்த்து, ஸ்பினுேசா, ஷோபென்ஹெளர் போன்ற சிறந்த சிந்தனை யாளர்கள் செய்த ஆராய்ச்சியெல்லாம் சங்கராசாரியாரின் விவேக சூடாமணி யில் அடக்கம், சைன தேசத்து ஞானியான லெளத்சுவின் அனுபவ வாக்குகளெல்லாம் சங்கரரின் நாலு வரியில் அடக்கம். ஸதாசிவப் ரம்மேந்திரர் முதல் பகவான் ரமன மஹரிஷிகள் வரையில் விளங் கிய பரம ஞான சித்தரின் அனுபவங்களெல்லாம் தகதினுமூர்த்தி அஷ்டகத்தின் ஒரு சுலோகத்தில் அடக்கம்,

ஆத்மஜோதி | 3 |
நானுச்சித்ர கடோதர ஸ்தித மஹாதிய ப்ரபா பாஸ்வரம் ஞானம் யஸ்ய து சசுடிராதி கரண த்வாரா பஹீ: ஸ்பந்ததே
ஜானுமீதி தமேவ பாந்தமனுபாத்யேதத் ஸ்மஸ்தம் ஜகத் த ஸ்மை பூg குருமூர்த்தயே நம இதம பூரீ தகஷிணுமூர்த்தயே
ஒரு குடம் அதில் பத்துத் துவாரங்கள்; உள்ளே விளக்கு துவா ரங்கள் வழியாக வெளியே விளக்கொளி வீசுகிறது; அது போல் ஆத்மாவின் அறிவொளி நமது பொறி புலன் மன ஆதிகள் வழியாக வீசுகிறது. அதனுல் நாம் உலகை அறிகிருேம், ஒரு படக் காசுழியைக் காண்போம்; உள்ளே விளக்கு; அதன் ஒளி வெள்ளித்திரை யில் வீசுகிறது. அந்த வெள்ளி வெளிச்சத்தில் படம் எத்தனையோ மாயா ஜாலங்களாக விளையாடுகிறது. உள் விளக்கு அணைந்தால் ஆட்டம் பாட்டம் எல்லாம் இல்லாதுபோம். அதன் ஒளியாலே இது எல்லாம் ஒளிரும் 'தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி’ இந்த உண் மையைப் பகவான் சங்கரர் கீதை, உபநிஷத், பிரம்மஸஅத்ரம் ஆகிய மூன்று நூல்களின் விரிவுரையில் விளக்கினூர். விவேக சூடாமணி, அபரோக்ஷா நுபூதி, தசசுலோகீ. நிர்வாணுஷ்டகம், பஜகோவிந்தம் ப்ரச்ணுேத்தர ரத்னமாலிகா சிவானந்த லஹரி ஸெந்தர்ய லஹரி இன்னும் எத்தனையோ மஹா க்ரந்தங்களை பகவான் சங்கரர் அருளி ஜூர் அவை இன்றும் வழங்குகின்றன என்றும் எக்காலும் ஒளிதந்து நிலவும். 'கல்லாலின் கீழ் நால்வருக்குச் சின்முத்திரையால் மெளணுேப தேசம் செய்த பம குருவே இப்போது சங்கராசாரியராகப் பேசி உலா வுகிருர்" என்ருர் வித்யாரண்யர்.
முக்த்வா மெளனம் வடவிடபிநோ மூலதோ நிஸ்ஸரந்திதி சம்போர் மூர்த்திச்சரதி புவனே சங்கராசார்யரூபா
வேத தர்மத்திற்படிந்த மாசுக்களை எல்லாம் ஊதி எறிந்து எதிர்ப் புப் புயல்களை அஞ்சாது வீழ்த்தி, சங்கார் திக்விஜயம் செய்து காசி யிலும் வேதாந்த ஜயக்கொடியை நாட்டி கேதாரநாத்தில் மறைந் தார். பூர்ணு நதிக்கரையில் அவதரித்து ஸம்ஸார முதலையின் பிடிப் பிலிருந்து விடுதலைபெற்று. கோவிந்த பகவத்பாதர் குஹையில் அறிவு பெற்று, கால விநோதங்களைக் கண்டு, உலகிற்கு உள்ளுண்மையை விளக்கி, தனது அவதார காரியம் முடிந்ததும், கைலாசத்தை நோக் கிச் சென்று, கேதாரத்தில் பரிபூர்ண ஸமாதியடைந்தார் பகவான் சங்கரர். சிருங்ககிரி முதல் ஜோதிர் மடம் வரையில் மடங்களை நாட் டிஞர் சங்கரர். இவர் உலகில் உதித்த எல்லா மதங்களுக்கும் தத் துவங்களுக்கும் தக்க வழிகாட்டியிருக்கிருர், இப்போது உலக மதங் களையெல்லாம் அரு, உரு, குரு - மதங்கள் என்று பிரிக்கலாம். பெளத்த சமணுதிகள் குருவை வணங்குவன. சைவ, வைணவ, சாக்த

Page 8
32 ஆத்மஜோதி
ஸ்ெளர, காணபத்ய, கெளமார மதங்கள் உருத்தொழுகை செய்வன கிறிஸ்துவம், இஸ்லாமியம், பூதமாதி மதங்கள் கடவுளை அருவாக வணங் குவன. நமது வைதிக மதத்திலேயே ஒன்று, இரண்டு, மூன்று என்று பல வேறுபாடு உண்டு, த்வைதம் அத்வைதம், விசிஷ்டாத்வைதம்: சுத்தாத்வைதம், கேவலாத்வைதம், பேதாபேதம், புஷ்டு மார்க்கம், ப்ரே ம மார்க்கம் - இன்னும் எத்தனையோ உண்டு. அத்தனைக்கும் ஸோபான முறையாக வழிகாட்டுவது சங்கரசித்தாந்தம் கீதை, கர் மண்யேவ அதிகாரஸ்தே ந மே பக்த: ப்ரணச்யதி; ஞானி து ஆத் மைவ மே மதம்; தஸ்மாத் யோகி பவார்ஜ"ன" என்றெல்லாம் சொல்லி “மாமேகம் சரணம் வ்ரஜ' என்று சரணுகதி காட்டி முடிவில் வேதாந்த சித்தியை எட்டுகிறது.
நிர்மான மோஹா ஜித சங்க தோஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத காமா : த்வந்த்வைர் விமுக்தா ஸ"கது:க ஸம்ஜ்ஞை கச்சந்யமூடா பதமவ்யயம் தத்.
மனமோகம், சோகம் ஸங்கல்ப ஸம்ஸ்கார தோஷங்களை வென்று நிராசை அடைந்து, நிஷ்காம நிர்விகல்ப சமாதியில் குணபந்த த்வந் த்வமற்ற நித்தியசுத்தனுக சுக துக்கம் அற்ற சமத்துவஞக தத்வமஸி. அது நீ என்ற உன்னத வேதாந்த நிலையடைய வழிகாட்டுகிறது. ஆசாரிய சங்கரர் கர்மம், பக்தி, ஞானம், இம்மூன்றிற்கும் படிப்படி யாக நம்மை அழைத்துச் செல்லுகிருர்,
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம் சம்போ தவாரnதனம்
"செய்வதெல்லாம் சிவபூஜை' என்று பக்திக் கனல் மூட்டுகிறர் கீதையும் எதைச் செய்தாலும் எனக்கே அர்ப்பணமாகச் செய், முடி
வில் எல்லாம் விட்டு என்னைச் சரண் புகு' என்கிறது. 'முக்திக்கு வித்து
பக்தி' என்று சங்கரர் தொடங்கி
ஸ்வஸ்ரூபானு ஸந்தானம் பக்திரித்யபிதீயதே
தன்னை நினைத்துத் தானுயிருப்பதே பக்தி என்கிருர், பதஞ்ஜலி யோகி ஈச்வர ப்ரணிதானத்தை உபதேசித்து -
தத்ர நிரதிசயம் ஸார்வஜ்ஞ்யபீஜம் 'தஸ்யவாசகர் ப்ரனவ தஜ்ஜயஸ்ததர்த்தபாவனம் த்யான ஹேயாஸ்தத்வ்ருத்தய:
என்று படிப்படியாகத் தியான சமாதியை ஊக்குகிருர், பிரம்ம ஸஅத்ர மும் கதிஸாமாந்யாத், ஆனந்தமய அப்யாஸாத் என்று ஆத் மானந்தத்தை ஊக்கும். இவையெல்லாம் பகவான் ரமண மஹரிஷி களின் அனுபவ வாக்கில் முடிகின்றன.
 
 
 

ஆத்மஜோதி 33
ஹ்ருத்ஸ்தலே மன ஸ்வஸ்ததா க்ரிய பக்தியோகபோதாச்ச நிச்சிதம்
இதய குகையின் நடுவில் மனம் லயடைந்தே
இருந்தபடியிருந்து மகிழேனுே . ' ' ', உதய நிலையறிந்து கவலையற ஒடுங்கி
ஒருமையுற உணரப் பெறுவேனே அதனின் உயரவரு துரிய மலே முடியில் அம்ருத சஞ்ஜீவிரசம் - பருகேைே சுருதியும் இசையும் என மவுன வெளிகலந்து
சுகமருளும் இனிய பரமாத்மா,
இதுதான் பரமயோக வேதாந்த சித்தி.
மனிதன் வேண்டுவது இன்பம். அதுவே அவன்; ஆத்மா ஸச்சி தானந்தம். அதையே வேண்டி மனிதன் முயல்கிருன், ஆனந்தத்தில் பல படிகள் உண்டு. நல்ல உறுதி செல்வம், பலம் பேர் புகழுடன் நூருண்டு வாழ்வது மனுஷ ஆனந்தம். அதைவிட நூறு மடங்கு
மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம். இவ்வாறே தேவகந்தர்வர், பித்ருக்கள், !
ஆஜானதேவர், கர்மதேவர், தேவர், இந்திரன், பிருஹஸ்பதி, பிர ஜாபதி, பிரஹ்மா இவர்களின் ஆனந்தம் நூறு நூறு மடங்கு அதி கம் என்று ஆனந்தவல்லி கூறுகிறது. சுத்த ப்ரஹ்மானந்தத்திற்கு அளவே கிடையாது. இதையே வித்யாரண்யர் விஷயானந்தம், யோ கானந்தம், ஆத்மானந்தம். அத்வைதானந்தம், வித்யானந்தம் என்று அடுக்கிச் சொல்கிருர். இந்த சுத்தப் பிரம்மானந்தம் பெறும் மட் டும் மனிதனுக்கு நிம்மதி இராது. ஒரு மீனைப் பிடித்து மீனே, நீ என்னுடன் லட்டு லாடு சாப்பிடு, மெத்தையில் உறங்கு என்றல் இருக் குமா? தண்ணீரில் விட்டால்தான் அது ஆனந்தமாக நீர்தி விளையா டும். காட்டில் சுதந்திரமாகப் பறந்து உலாவும் கிளியைத் தங்கக் கூட்டில் அடைத்து, மாம்பழம் தந்தாலும் இன்புறுமா?'பந்தவீடல்ல; சுதந்திரக் காடே அதன் இயலிடம், தன் சுயநிலையும் சுதர்மமுமான சுத்த சச்சிதானந்தத்தை மறந்து கானல்நீர் சுகத்தில் மயங்குதல் உள்ளங்கையில் வார்த்த அமுதத்தை விட்டுப் புறங்
مشکل
கையை நக்குவது போலத்தான் இருக்கும். உலகில் உண்டான தத்துவ சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் பார்த்தால் புக்தி - முக்தி என்ற இரண்டு முனைகள் காணும். கேவலம் புக்தியை, உலக இன்பத்தை, புலன் மகிழ்வை வேண்டினுேர் உலகாயதர் (எபிகூரியன்கள்). கேவலம் முக் தியை மட்டும் வேண்டினேர் பரமஞானிகளான கேவலாத்வைதிகள்: புக்திக்கும் முக்திக்கும் நடுவே தார்க்கிகன் யுக்தியை நிலைநாட்டுகிருன். புத்தியை ஊன்றுகிருன் மத்வரமானுஜ சைதன்யாதிகள் பக்தியை

Page 9
34. ஆத்மஜோதி
நாட்டினர்; அரவிந்தாதி தாந்திரிக யோகிகள் சக்தியை நாட்டினர். துறவிகள் விரக்தியை நாட்டினர்; பூரீ சங்கர பகவத்பாதாசாரியார் புக்தி, யுக்தி, பக்தி, சக்தி, விரக்தி - அனைத்தையும் காட்டிக் கேவ லாத்வைத சித்திக்கும் முக்திக்கும் வழிகாட்டினர். எல்லாம் வேத வழிதான். குமாரிலபட்டரை மாடியிலிருந்து புத்தமதம் உருட்டித் தள்ளியது. வேதமே உண்மையானுல் நான் பிழைப்பேன்’ என்று கீழே விழுந்தார் குமாரிலர். பிழைத்தார்; புத்த மதத்தினரைக் கண் டித்தார்; ஒழித்தார்; பிறகு அக்னிப் பிரவேசம் பண்ணினர்; அவரே சங்கரரை கர்ம ஸாதகரான மண்டன மிச்ரரிடம் அனுப்பியது! குமா ரிலபட்டரின் தங்கை சாரதாதேவியே மண்டனர் மனைவி. கர்மகாண் டப் புலியான மண்டனர் ஞான சிம்மமான சங்கரருடன் வாதாடி ஞர். சங்கரர் வென்முர். மண்டனர் பணிந்தார். அவர் சுரேச்வரா சாரியாராகி சாரதா பீடத்தைக் காத்தார். சங்கரர் இரண்டு வரி களில் மண்டனரை ஞானியாக்கினர்.
தேஹபுத்யா து தாலோஹம் ஜிவபுத்யா த்வதம்சக: ஆத்மபுத்யா த்வமேவாஹம் இதி மே நிச்சிதம் மன:
உடலயிமானம் உள்ளமட்டும் நான் அடிமை: கர்ம மார்க்கமே என் தலைவனைக்கூட ஏற்றது. நான் ஜீவன், அம்சன் என்னும்போது பக்தி யோகம் தலைக்கூடி தெய்வப் பங்கா கிருன் மனிதன், ஆத்ம புத்தி டைந்ததும், நான் நீ த்வமேவாஹம் என்ற வேதாந்த உண் மை புலப்படும். அப்போது மனக்கட்டுமானங்களான ஜாதிகுல கோத் திரங்கள் விலகிப்போம்.
ப்ரஹ்ம தத்வமஸி பாவயாத்மனி
நீ பிரம்மம்; நீ அது தத்வமஸி - இதை நினே என்பதுதான் விவேக சூடாமணி (சு, 255) சங்கரர் கண்ட ஞானமணி - யோக ஸ்தானங் களுக்குக்கட் ஞானப்பொருள் அளித்தார் சங்கரர்.
நிவேதனம் ப்ரபஞ்சஸ்ய ரேசாக்ய ஸ்மீரன; ப்ரஹ்4மைவாஸ்மீதி யா வ்ருத்தி பூரகோ வாயுtரித:
ததஸ்த் த்வ்ருத்திநைச்சல்யம் கும்பக: ப்ராணஸம்யம! -o-y ulti y T if ப்ரபுத்தாநாம் அக்ஞாநாம் ப்ராணபீடனம்
விஷய வைராக்யம் வேண்டும். சமாதி ஷட்களம்பத்தி பெறவேண் டும்.
(1) சமம் - நினவடக்கம், (2) தமம் - புறம்போகாமை, உயரதிவிஷபாதிகளே விடுதல், (4) திதிசுைஷ் - துயர் பொறுத்தல், (5) சிரத் எத வேதாசிரியன் வாக்கில் கருத்தான்றல், (5) ஸமாதானம் - உள்
 
 
 

ஆத்மஜோதி 135
ளொருமை, முமுகஷத்வம் முக்தியார் வம், விடுதலை வேட்கை உறுதி, இஹாமுத்ர பலபோக விராகம் - இங்கும் அங்கும் சிறு இன்பத்திற்கு அலேயாமல் தன் நிலையில் இருத்தல்.
இவ்வாறு ஆத்மவிசாரம் செய்தல் வேண்டும். கோஹம் கதம் இதம் ஜாதம் கோ வா கர்தா அஸ்ய வித்யதே உபாதானம் கிமஸ்தீஹ விசார ஸோயமித்ருச: . ப்ரஹ்மைவாஹம் ஸம: சாந்த: ஸ்ச்சிதானந்த லக்ஷண:
நாஹம் தேஹோ ஹ்யஸ்த்ரூபோ ஏஞானமித்யுச்யதே புதை!
இதுதான் ஞானசாரம்.
நானுர் இங்கே நாடிய தென்னே? ஊனுர் உடலார் உலகார், உளமார் மண்ணுர் கலம்போல் மனதால் உலகம் மனம் உல கில்லா மாசறும் ஆன்மா நானது சாந்தன் நலிவிலாப் பொருளோன் சச்சிதா னந்தன் சர்வ சுதந்தரன் எனதுடல் என்னின் யானுட லில்லேன் எனதுவி டென்னில் யான்வீ டல்லேன் மனதால் நினப்பேன் மனம்யா னல்லேன் உயிரால் உயிர்ப்டேன் உயிர்யா னல்லேன் கண்யா னல்லேன் கண்ணுல் காண்பேன் செவியாற் செவிப்பேன் செவியா னல்லேன் அறிவும் யானே அறிவது யானே அறிபொருள் யானே ஐயமொன் றிலேயே ஞானம் ஞேயம் ஞாதா யானே நான்சுயஞ் ஜோதி நலந்தீ தில்லேன் ஆடையும் நூலும் அணிகளிற் பொன்னும் போல்நான் என்றும் பொருளா யுள்ளேன் பேர்வடிவாதிய பெருஞ்சுமை எனக்கேன்?
ஊர்ச்சுமை எனக்கேன் உள்ளவா றிருப்பேன் படகிற் செல்வோன் பார்ப்பவை யெல்லாம் படகுடன் செல்லும் பான்மையே போலும் காமாலை கொண்ட கண்ணுக் கெல்லாம் மஞ்சளாய்க் காணும் வழக்கம் போலும் வட்டம் சுற்றும் வாண நெருப்பு ay "La பொறிகளை வழங்கல் போலும் மரமே வீடு, மண்னே சுவர்கள்

Page 10
**T
36 ஆத்மஜோதி
* scy (80 g (96Jub as" 3,610 863,6628
1ஞ்சே ஆடை பட்டே புடவை ஆவது போலே ஆன்மா ஒன்ரும்.
வலர் பத்வேன யதா ரஜ்ஜூ ரஜதத் வேன சுக்திகா கடதவே ன யதாப் த்வி படத் வேன இவ தந்தவ: கனகம் குண்டலத்வேன தரங்கத்வே ன வை ஜலம் சோரத்வேன பதா ஸ்தானு: ஜலத் வேன மரீசிகா . லர் வம் பாதி ப்ர மாத் மகம்
உருப்பெ ருக்கியால் உள்ளது பெரிதாம் தொலே வால் சிறிதாய்த் தோன்றுத லொப்வே சந்திரன் குளத்தில் சஞ்சலிப் பதுபோல் w மன விகா ரத்தால் மாற்றமே தோற்றும் இதயப் பரம்பொருள் என்றும் ஒன்றே ஒரு கூ ராக உள்ளே உணர்மின் எல்லாம் ஒன்றே - என்றே அறிவீர்.
இதுதான் வேதாந்த முழக்கம் - இதை அறிந்து தத்போதம் விட்டு ஆத்மபோதத்தால் ஆனந்தம் உறுவோமாக.
ஸ்வதேஹல் 3D 6 of a க்ருத்வா ப்ரன வம் ச உத்தராரணிம் த்யான நிர்மதனப்யா லத் தேவம் பச்யேத் நிகூட வத்
காலன் நெருங்குகிருன். நீ பயின்ற கலைகளும் ஒயா மல் செய்துவரும் வியாகரன சாத்திர ஆராய்ச்சிகளும் உன்னைப் பாதுகாக்குமென நினைத்தால் நீ மூடனேயாவாய். கோவிந்தனிடம் அன்பு செலுத்தி அவனை வழிபடு. யம னின் பாசக் கயிற்றினின்று தப்ப இதுவே வழி.
பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததை வைத்துக் கொண்டு திருப்தி அடைவாயாக.
- சங்கரர்.
 
 
 

* リエ
ஆத்மஜோதி 37
ஆனந்தமாயி அம்மையிடம் அன்பர்கள் சம்பாஷணை
சோலன், செப்டெம்பர் 11, 1948,
ஒர் அரசாங்க அலுவலாளரும் அவரது மனைவியாரும் மாதாஜியின் தர்சனத்திற்காக வந்திருந்தார்கள். அவர்கள் அவரை முதன் முறையாகச் சந்தித்தார்கள். அவர்களின் வினு ஒன்றுக்கு மாதாஜி விடை கூறியது:
உங்களுக்கு விசுவாசம் இல்லையென்று சொல்லுகிறீர்க ளாயின் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்னும் திடநம் பிக்கையில் நீங்கள் உங்களையே நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும். எங்கு இல்லை இருக்கிறதோ அங்கு "ஆம்" உம் உள்ளார்ந்த இயல்பாய் இருக்கிறது. மறுப்புக்கும் விதியுரை கூறுதலுக்கும் அப்பால் இருப்பதாய் யார் உரி மை கொண்டாட முடியும்? விசுவாசம் வைத்திருப்பது தவிர்க்க முடியாதது. மனிதனில் ஆழ்ந்து நிலையாயிருக்கும் ஏதோ ஒன்றில் விசுவாசம் வைக்கிற இயல்பான மனமு டுக்கு கடவுட் பற்ருய் மலர்கிறது. இதற்காகவே மனிதப் பிறப்பு ஒரு பெரும் வரப்பேறு. யாரும் விசுவாசம் பெற் றிருக்க வில்லையென்று சொல்ல முடியாது. ஒவ்வொருவ ரும் ஏதோ ஒன்றில் அல்லது வேருென்றில் நிச்சயமாக விசுவசிக்கின்றனர்.
மனுஷ் (மனிதன்) என்னும் சொல் ‘மந்' (மணம்) இலும் ஹ"சவு (உணர்வுள்ள) இலுமிருந்து தருவிக்கப்பட் டது. அது மனதின் உணர்வையும் விழிப்பையும் குறிக்கி றது. மனிதனின் இயல்பான தொழில் தன்னறிவு (ஆன்ம அறிவு) பெறுதலே என்பதை இது காட்டுகிறது. பிள்ளை கள் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ளும் பொழுது அவர்கள் கடிதலையும் கண்டிப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் கூட எப்போதாயினும் மென்மையான தண்டனை மனிதனுக்கு வழங்குகிருர் - இது அவரது கரு ணையின் அறிகுறி மாத்திரமே. உலகியல் நோக்கு நிலையி லிருந்து அவ்வகையான அடிகள் அற முடிவாக வேதனையுள் ளதாகக் கருதப்படுகின்றன; ஆனல் உண்மையாக அவை ஒரு மனமாற்றத்தை உண்டாக்கி அமைதிக்கு வழிகாட்டு

Page 11
38 ஆத்மஜோதி
கின்றன. உலகியல் மகிழ்ச்சியைக் கலைப்பதினுல் அவை மனிதனைத் தலைசிறந்த பேரின் பத்திற்குப் பாதையைத் தேடும்படி தூண்டுகின்றன.
மனிதவுடல் மூச்சுவிடுவதாற் சீவிக்கிறது என்பது நியத மாக உண்மையானது; இதனுல் அங்கு துன்பம் இருக்கி றது. வாழ்வின் பயணத்தில் இரு வகையான யாத்திரிகர் இருக்கின்றனர். ஒருவர் சற்றுப் பிரயாணஞ் செய்பவர் போல் பொழுதுபோக்குக் காட்சி, ஊர் ஊராய்ச் சுற்றித் திரிதல், ஒர் அனுபவத்திலிருந்து இன்னென்றுக்குப் பொ ருந்தச் செய்தல் முதலியவற்றில் ஆர்வமுடையவராக இருக் கிருர் பற்றவர் தம் மெய் வீட்டிற்கு, தன்னறிவிற்கு நடத்திச் செல்லும் மனிதனின் உண்மையான தத்துவத் திற்கு முரணில்லாத நெறியில் நடக்கிருர், பொழுதுபோக் குக் காட்சியும் இன்ப நுகர்ச்சியும் நோக்கமாக மேற் கொண்ட பயணத்தில் துயரம் கட்டாயமாக நேரிடும். ஒரு உண்மையான வீடு கண்டு பிடிக்கப்படாத வரைக்கும் துன்பம் தவிர்க்க முடியாதது, வேருந் தன் மைக் கருத்தே கடுந்துயரத்தின் மூலகாரணம். ஏனெனில் அது திரிபில், இருமைக் கருத்தில் அடிகோலப்பட்டது. இது காரணமாகவே ஞாலம் டு-நியர் (இருமையை ஆதார மாகக் கொண்டது) என்று சொல்லப்படுகிறது.
ஒரு மனிதரின் நம்பிக்கை அவரது சூழ்நிலையாற் பெரும் பாலும் தூண்டப்படுகிறது; ஆகையால் அவர் பரிசுத்தரி னதும் அறிஞரினதும் சங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண் டும்.நம்பிக்கைஎன்பதுஒருவரின் ஆன்மாவில் நம்பிக்கைகொள்
* மனித சீவியம் பொதுவாக உயிரினச் சீவியம், மூச்சு விடுத
விற் றங்கியிருக்கிறது; அது சர்வ சம நிலையினது குழப்பத்தின் அடை
யாளமே. இக் குழப்பத்தால் முழுப்படைப்பும் தனிச் சிறப்பாகக்
குறிக்கப்படுகிறது. மூச்சு விடுதற் செயன் முறை உள் நோக்கியதும்
வெளி நோக்கியதுமான இருமை இயக்கத்தையும் இரண்டிற்கும் இடை யில் ஒர் ஒழுங்கான ஓய்வையும் குறிக்கிறது. இயக்கத்திற்குரிய தூண் டுதலை அகற்றுவதனுல், உறக்கம், ஒடுக்கம், சாந்தம் அடையப் பெறு வதனுல் இசைவிணக்க அடையப்படலாம். இது யோக மூலம் நிக ழக் கூடியது. எப்போது ஒருவர் நிறை சமநிலையில் இருக்கிருரோ அங்கு மூச்சு விடுவதற்கு ஆவசியகம் யாதும் இல்லே.
 

'' 39 மஜோதி وفي ولوية
வது என்று பொருள் படுகிறது; அணுத்மாவை ஒருவரின் ஆத்மாவாகத் தவருகக் கருதுவது நம்பிக்கையின்மை.
கடவுட் கிருபையால் தன்னையறிதல் நிகழ்வதற்கு எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன; என்ருலும் வேறு சம யங்களில் அவர் சிலரில் உண்மையை நாடி ஆர்வத் துடிப் பான ஆவலை எழுப்புகிருர், முதல் நிலைமையிற் பேறு தான கவே சம்பவிக்கிறது; இரண்டாவதில் அது ஆய்வுகளால் உண்டாகும்படி செய்யப்படுகிறது. ஆனல் யாவும் அவ ரது கருணையால் மட்டும் அனுகூலமாகிறது.
தன் வினைகளைச் செய்பவன் தான் என்று மனிதன் எண்ணுகிருன் ஆணுல் உள்ளபடி யாவும் அங்கு நடத் தப் படுகிறது; இணைப்பு அங்கு உண்டு உற்பத்தி நிலை யமுங் கூட - ஆயினும் 'நான் செய்கிறேன்' என்று மக் கள் சொல்கிருர்கள். எத்துணை அற்புதமானதாய் அது இருக்கிறது ! எல்ல முயற்சிகள் செய்தும் ஒருவர் புகை வண்டியைப் பிடிக்கத் தவறுகிருர் . எங்கிருந்து ஒருவரின் எல்லா இயக்கங்களும் இயக்கப்படுகின்றன என்பதை இது தெளிவாக்குகிறதில்லையா? ஒருவருக்கு எங்கேனும், ஏதா வது நேரத்தில், ஏதேனும் நிகழ வேண்டியது, யாவும்
அவரால் தீர்மானிக்கப்படுகிறது; அவரது திட்டங்கள் நிறை
Gվ 63) - Ա 16ծ) .
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு நித்திய சம்பந்தம் இருக்கிறது. ஆனல் அவரது லீலையில் அது
ஒரொரு காலம் இருக்கிறது; ஓரொரு காலம் பிரிக்கப்பட்
டிருக்கிறது அல்லது திட்டமாகப் பிரிக்கப்பட்டது போற்
தோன்றுகிறது; அது உண்மையாக அப்படியன்று; ஏனெ
னின் அச் சம்பந்தம் நித்தியமானது. மேலும் வேருெரு நோக்கிலிருந்து பார்க்கும்போது சம்பந்தம் போன்ற வகை யான விஷயம் யாதும் இல்லை. 'நான் தங்களிடம் புதி
தாக வந்தவன்' என்று இவ்வுடம்பைச் சந்திக்க வந்த
யாரோ ஒருவர் சொன்னர். 'உண்மையாக என்றும் புதி தும் என்றும் பழையதுமே!’ என்னும் மறுமொழியை அவர் பெற்ருர் .
உலகத்தின் ஒளி தோன்றி மறைகிறது; அது நிலையில் லாதது. நித்தியமாயிருக்கும் ஒளி ஒருகாலும் அழிக்கப் பட முடியாது. இந்த ஒளியால் நீங்கள் புற ஒளியை 11ம்

Page 12
40 ஆத்மஜோதி
உலகிலுள்ள யாவற்றையும் பார்க்கிறீர்கள்; அது என்றும் உங்களுக்குட் பிரகாசிக்கும் காரணத்தினுல் மட்டும் நீங்கள் புற ஒளியைக் காண முடிகிறது. இவ்வுலகில் உங்களுக் குக் காட்சியளிக்கும் எதற்கும் காரணம் உங்கள் உள்ளே உள்ள பெரும் ஒளியே; மேலும் பொருட்களின் சத்தா கிய தலைசிறந்த அறிவு உங்கள் உருவின் அகத்தில் மறைந் ருட்பதன் காரணமாக மட்டுமே நீங்கள் யாதொரு வித மான அறிவையும் ஈட்டத்தக்கதாயிருக்கிறது.
மனித மூளையை ஒரு மரத்தின் வேருக்கு ஒப்பிடலாம். வேருக்கு நீர் பாய்ச்சினல் செடியின் ஒவ்வொரு பகுதிக் கும் ஊட்டம் பரவுகிறது. நீங்கள் உங்கள் மூளைகளைப் படைத்திருக்கிறது என்று சொல்லுந் தறுவாய்கள் உள. இது எப்போது நிகழ்கிறது? நீங்கள் புற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி இருக்கும்போது. ஆனல் நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிப்போய் உங்கள் அன்பிற்குரிய வர்களுடன் உரையாடியதும் உங்கள் தலைப்பாரம் குறைந்து நீங்கள் மகிழ்ச்சி நிரம்பியவர்களாய் இருக்கிறீர்கள். உங் கள் மூளை உங்களுக்கே உரியதாயிருப்பதால் உங்கள் சொந் தப்பணி களைப்பை உண்டாக்குவதில்லை என்று சொல்லப் படுவதற்கு இதுவே காரணம். உண்மையாகப் பேசுகில் எல்லாப் பணியும் உங்கள் பணியே - ஆயினும் இதை எப் படி நீங்கள் புரிந்து கொள்ள முடியும்? உண்மையாக முழு வுலகும் உங்களுடையதே. உங்கள் ஆன்மாவினது, உங்கள் உண்மையானசொந்தம்-ஆனல் நீங்கள்' மற்றவர்களைப் பார்ப் பதுபோலவே அதை வேருடினதாய்க் காண்கிறீர்கள். உங்களு டைய சொந்தமானதாய் அறிவது மகிழ்ச்சி தருகிறது; ஆனல் அது உங்களுக்கு வேருக இருக்கிறது என்னும் சிந் தை துயரம் உண்டாகச் செய்கிறது. இருமையைக் காண் பதென்பது துன்பம், சச்சரவு, கடுமுயற்சி, சாவு என்று பொருள்படுகிறது. பிதாஜி* ஏதோ ஒருவிதமான சாதனை யில் ஈடுபடுங்கள். /
வினுவுபர்- அது எல்லாம் கடவுளைப் பொறுத்தது.
மாதாஜி:- அப்படியே! இதை எப்பொழுதும் மனதில் வையுங்கள். ஒவ்வொரு விஷயமும் கடவுளைப் பொறுத்ததே;
* பொதுவாக மாதாஜி ஆடவர்களே இவ்வாறே விண்ணப்பிக்கிருர்,
f's

it, " ", "'", ,'ँ']"
ஆத்மஜோதி 4.
அவர் விரும்புவதுபோல் அவர் பயன்படுத்த வேண்டிய அவரது கைக் கருவியே நீங்கள் யாவும் அவருடையவே
என்பதின் உட்பொருளைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்; உடனே எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் கவாதீனமானவ ராய் உணர்வீர்கள் . அவரை நீங்கள் சரணடைந்ததின் பயன் என்னவா யிருக்கும்? யாதும் அயலாய்த் தோன்ருது; யாவும் உங்கள் சொந்தமானதாய், உங்கள் ஆன்மாவாய் இருக்கும்.
வேருந் தன்மைச் சிந்தையை பக்தியாய் உருக்குங்கள் அல்லது ஞானத்தால் எரியுங்கள் - ஏனெனின் யாது உருகு கிறது அல்லது எரிகிறது? எது தன் இயற்கையால் உருக் கப்பட அல்லது எரிக்கப்படக் கூடுமோ அது மட்டுமே: அதாவது உங்கள் ஆன்மா வைத் தவிர ஏதோ ஒன்று இருக் கிறதென்னும் கருத்தே. பிறகு யாது நிகழும்? நீங்கள் உங்கள் ஆன்மாவை அறிகிறீர்கள்.
குருவினது சக்தியின் பயனுல் யாவும் நிகழக் கூடிய தாகிறது; ஆகையால் ஒரு குருவை நாடுங்கள். அதற்கி டையில், எல்லா நாமங்களும் அவரது நாமமாயிருப்பதால், எல்லா ரூபங்களும் அவரது ரூபமாயிருப்பதால், அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் இணைபிரியாத கூட்டா யாய் வைத்திருங்கள். அதேசமயம் அவர் நாமரூபமற் றவர் கூட, ஏனெனின், பரமனுக்கு யாவுமாய் யாவும் அல்லவுமாய் இருப்பது சாத்தியமானது. நீங்கள் ஒரு குரு வைக் கண்டு பிடியாத வரையில் உங்களுக்கு மிகவதிகமா கப் பிடித்தமாயிருக்கும் அவரது நாமம் அல்லது ரூபத் தைப் பற்றிக் கொள்ளுங்கள்; மேலும் அவர் தம்மை உங் களுக்குச் சிற்குருவாய் வெளிப்படுத்துமாறு ஒயாது பிரார்த்தியுங்கள். உண்மையான உண்மையில் குரு அகத் திலே வசிக்கிருர் ; மேலும் உட்குருவை நீங்கள் கண்டு ணர்ந்தாலொழிய ஒன்றும் அடைதல் முடியாது. உங்க ளுக்குக் கடவுளை நோக்கித் திரும்ப நாட்டம் இல்லாவிட் டால், ஒரு வகுத்த கால அட்டவணையைப் பின்பற்றும்
கடமையுடைய பள்ளிப் பிள்ளைகள் போல ஒரு தினசரிச்
சாதனைக் கிரமத்தால் உங்களைக் கட்டுப்படுத்துங்கள்.
பிரார்த்தனை உங்கள் இருதயத்திலிருந்து இயற்கையா கப் பெருகாதிருக்கும் பொழுது, "எதற்காக நான் யற்ற இவ்வுலகப் பொருட்களில் இன்பம் காண்கிறேன்?'

Page 13
42 ஆத்மஜோதி
என்று உங்களையே விணுவுங்கள். ஏதும் புறப்பொருளே நீங் கள் வாஞ்சித்தால் அல்லது ஒர் ஆளில் சிறப்பாகப் பற்றுக் கொள்வதாய் உணர்ந்தால், நீங்கள் தயங்கி, 'கூர்ந்து பாருங்கள். இதன்பகட்டால்நீமயக்கப்படுகிருய்!' என்று உங் களுக்கே சொல்ல வேண்டும். கடவுள் இல்லாத இடம் ஒன்று இருக்கின்றதா? வீட்டுக்காரரின் ஆசிரமாகிய குடும்ப வாழ்க்கையை ஒர் ஆசிரமமாய் ஏற்றுக் கொண்டால் அது வும் உங்களை அவரை நோக்கி நடாத்தும். இவ்வியல்பில் வாழப்பட்டால் அது தன்னிறைவுப் பேற்றை நோக்கி மணி தன் முன்னேறுவதற்கு உதவி புரிகிறது. எனினும், நீங் கள் பெயர், புகழ் அல்லது பதவி போன்ற ஏதேனும் ஒன் றுக்குப் பேராசை கொண்டால் கடவுள் அதை உங்களுக் குக் கொடுத்தருள்வார். ஆனல் நீங்கள் மன நிறைவு கொள்ள மாட்டீர்கள். கடவுளின் இராச்சியம் ஒரு முழு மை; நீங்கள் அதன் முழுமைக்குள் உட்புக விடப்பட்டா லொழிய நீங்கள் மன நிறைவுள்ளவராயிருக்க முடியாது. அவர் உங்கள் மன நிறைவின்மையை கிளர்ச்சியாய் வைத்
திருப்பதற்காக கொஞ்சம் மட்டும் கொடுத்தருள் கிருர்;
ஏனெனின் மன நிறைவின்மையின்றி முன்னேற்றம் இருக்க முடியாது. அழிவில்லாதவரின் சந்ததியினராகிய நீங்கள் ஒருகாலும் சாவின் அரசுக்குப் பொருந்துமாறு அமைய முடியாது; அன்றியும், கடவுள் உங்களை அதற்குள் நிலைத் திருக்க விடுவதில்லை. உங்களுக்கு ஒரு சிறிய விஷயத்தைக் கொடுப்பதனுல் அவர் தாமாகவே உங்களில் பற்ருக்குறைச் சிந்தையை எழுப்புகிருர்; ஏனெனின், உங்கள் நாட்டத்தை அதி மேன்மையான ஒன்றுக்குத் தூண்டுவதற்காக மட்டுமே. உங்களைத் தூண்டும் அவரது முறை இதுவே. இப்பாதை யிற் செல்லும் வழிப்போக்கர் அதைக் கடினமானதாய்க் கண்டு மனக் குழப்பமடைகிருர் ; ஆனுல் காண்பதற்குக் கண்கள் உடையவொருவர் யாத்திரிகர் முன்னுேக்கிச் செல் கிருர் என்பதைத் தெளிவாகக் காண முடியும். பட்டறி யப்படும் துன்பம் உலகப் பொருள்களிலிருந்து பெற்ற இன் பம் அனைத்தையும் சாம்பலாகும்படி எரிக்கிறது. 'தபஸ்யா' என்று அழைக்கப்படுவதும் இதுவே. யாது ஆன்மிகப்பா தையில் ஒருவருக்குத் தடை செய்கிறதோ, அது தனக்குள் எதிர்கால துன்பத்தின் விதைகளை வைத்திருக்கிறது. ஆயி னும் துயரம், இத்தடைகளின் விளைவைப் பற்றிய கடுந்து பர் முதலியன உள் உணர்வை நோக்கிய ஒரு விழிப்பின் ଜି, SITE_$3, $ld.
 
 

0: '' ... কেলজ" "
ஆத்மஜோதி 143
சோலன் , செப்டெம்பர் 21, 1948,
ஒர் இளஞ் சிறுமி மாதாஜியுடன் பேசிக் கொண்டி ருந்தாள். அவள் சொன்னது.
"நான் தியானிப்பதற்கு அமரும் பொழுது ஏதேனும் ஒர் உருவத்தைத் தியானிக்கக் கருதவில்லை; ஆனல் எப்படி உருவற்றதிற் றியானிப்பது சாத்தியமாகும்? நான் தியா னிக்க முயலும்பொழுது ஒரொரு காலம் தெய்வங்களின் உருவங்கள் என் மனதிற்கு முன்னிலையில் மிதந்து தோன்றுவ தை நான் கவனித்திருக்கிறேன்.
மாதாஜி: உன் மனதில் எழும் உருவம் எதுவெனினும் அதை நீ தியானிக்க வேண்டும்; எவ்வடிவத்தில் கடவுள் உனக்குக் காணப்படுகிருர் என்பதைத் திட்பமாக அவதானி, ஒரே வடிவம் எல்லாருக்கும் பொருத்தமா யிருப்பதில்லை. சிலருக்கு ராமர் உறுபல உதவியளிக்கிறதா யிருக்கலாம்; சிலருக்குச் சிவன், மற்றவர்களுக்குப பார்வதி இன்னும் மற்றவர்களுக்கு உருவற்றது. அவர் உறுதியாக உருவற் றவரே; ஆனல் அதேசமயம் அவர் உனக்கு வழிகாட்டுவ தற்காக எக் குறிப்பிட்ட வடிவில் உனக்குத் தோன்றலாம் என்பதைக் கவனி. அதன் பயனுக அவர் வடிவங்களில் எது உன் மனதிற்கு வருகிறதோ அதையே நீ அதன் நுட்ப விபரங்கள் அனைத்தினதும் வழியே தியானிக்க வேண்டும்.
பின்வருமாறு பிரார்த்தி தியானிப்பதற்கு அமரும் பொழுது முதலில் ஒரு தெய்வத்தின் உருவத்தைத் தியானி பிறகு அவர் தம் ஆசனத்தில் எழுந்தருளியதாய்க் கருதி அவருக்கு முன்பாகத் தலைவணங்கி செபம் செய். நீ செபத் தை முடித்ததும் இன்னும் ஒருமுறை வணங்கு; மேலும் அவரை உன் இருதயத்தில் நிறுவியதும் உன் ஆசனத்தை விட்டு விலகு, உன்னுல் பிரம்மத்தில் தியானிக்க முடியா விட்டால் இதுவே சுருக்கமாக உன் பயிற்சியாய் இருக்க G) IT | D.
எந் நேரங்களிலும் புறனடையின்றி உனக்கு மிகச் சிறந் ததை அவர் செய்வார், செய்கிருர் என்று எக்காலத்திலும் நம்பிக்கை கொண்டிரு. இவ்வாருகச் சிந்தி எனக்கு உதவி செய்வதற்காக அவர் குறிப்பிட்ட தோற்றத்தில் எனக்குத் தம்மை வெளிப்படுத்தியிருக்கிருள். அவர் உருவத்துடனும்

Page 14
44 ஆத்மஜோதி
உருவம் இல்லாமலும் கூட இருக்கிருர்; முழுவுலகும் அவ ருக்குள்ளும் அவரால் வியாபிக்கப்பட்டு மிருக்கிறது. சற் குருவே உலக குரு; உலக குருவே சற்குரு' என்று இதற் காகவே சொல்லப் பட்டிருக்கிறது.
முன்சொல்லப்பட்டது சிறப்பாக உனக்கே கருதப்பட் டுள்ளது. அதுவே ஒவ்வோர் ஆளுக்கும் பொருந்துவதில்லை. எவ்வளவுக் கெவ்வளவு அதிகம் நீ அவரைத் தியானிக்கிரு யோ அவ்வளவுக் கவ்வளவு உன் முன்னேற்றம் அதி விரை வானதாயிருக்கும். திட்பமாக அவர் உருவற்றதாயு மிருப் பது போல ஏதாவது உருவம் உன் மனதில் உதித்தால் அது அவரே; யாது தானுக வருகிறது என்பதைக் கவனி.
சங்கரர் பொன்மொழிகள்
பெண்ணின் உடலழகைக் கண்டு மதிகலங்காதே. அழ கிய உடலானது இறுதியில் அழியும் சதைதானே என்பதை அடிக்கடி யோசித்துப்பார்! புலன்களை அடக்கு. உலகப்
பற்றை விடு.
நோயும் 'நான் என்ற அகந்தையும் ஆட்சி செலுத்
தும் இவ்வுலகம் சோகமயமானது; தாமரை இலை மீதி
லுள்ள நீர்த்துளிபோல நிலையற்றது. இதனை உணர்வா EJ T 35 ,
நீ சம்பாதிக்கும் வரையில்தான் சுற்றத்தார் உன்மீது பரிவு காட்டுவர். வளம் குன்றியதும் உன்னை ஏனென்று கேட்போர் அரிதாய் விடுவர்.
உன் உடலில் மூச்சுள்ள வரையில்தான் உனக்கு உப சாரம் நடக்கும். கடைசி மூச்சு விட்டதும், உன் மனைவி
பும் உன் சடலத்தைக் கண்டு அஞ்சுவாள்.
 

జాTFలో "j"
ஆத்மஜோதி 45
விடு சொர்க்கமான கதை
(சுவாமி சிவானந்தர்)
ஒருநாள் மாலை தேக்சந்த் தன் குருநாதர் கபீருடன் பேசிக் கொண்டிருந்தான். கபீர் அவனிடம் இல்லறத்தி லிருந்து கொண்டே இறைவனை அடைய ஒருவன் எடுத் துக் கொள்ள வேண்டிய முயற்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.
‘'நீ விரும்பினுல் சாஸ்திரங்கள் கூறுவதை அனுசரித்து உன் வீட்டையே சுவர்க்கமாக மாற்றலாம்' எனவும் அவர்
கூறினர்.
தேக்சந்த் மிக ஆச்சரியமடைந்தான். ' என்ன மக ராஜ்! வீட்டைச் சொர்க்கமாக்கவா? அது என்றும் முடி யாதது ஒன்று என்றல்லவா நான் இதுவரை கேள்விப்பட் டிருக்கிறேன். தவிர கானகம் புகுந்து பல வருடங்கள் கடுந்தவம் செய்தாலொழிய இறைவனை அடைதல் கை கூடாதென்றும், மனைவி, குழந்தைகள், செல்வம் முதலிய வை சாதகனெருவனின் முன்னேற்றத்திற்கான இடையூறு கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். இது இவ்வாறிருக்க வீட்டை சுவர்க்கமாக்கலாம் என்று நீங்கள் கூறுவது மிகுந்த விந்தையாகவல்லவோ இருக்கிறது' என்று கூறி ன்ை தேக்சந்த்.
* அதை நான் உனக்கு விளக்குகிறேன். அது மிக எளிது. இக் காரியத்தை முடிக்கத் தேவைப்படுவது அடக் கமும் அமைதியும் கூடிய ஒரு மனைவி. தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி, அவனது விருப்பங்களை உடனடியாகப் பூர்த்தி பண்ணுவாளேயாகில் தான் வசிக் கும் வீட்டைச் சுவர்க்கமாக மாற்றி விடுவாள். இவ்வாறு செய்வதால் அவள் தான் வாழ்க்கையின் குறிக்கோளை அறிவதோடல்லாமல் தனது கணவனையும் ஆத்மஞானத்தை அடையச் செய்கின்ருள். குழந்தைகளும் அறிவுக் களஞ்சியங்களாகி மாபெரும் யோகிகள் ஆவார்.

Page 15
*T
46 ஆத்மஜோதி
இன்னும் உன் முகத்தில் சந்தேகக் குறிகளை நான் காண்கின்றேன். உனக்குச் சந்தேகம் இருக்குமானுல் நீ ஒருநாள் என் வீட்டுக்கு வா. நான் கூறுவதிலுள்ள உண் மையை உனக்கு உணர்த்துவேன்.
ஒரு வாரம் கழித்து ஒருநாள் திடீரென்று தேக்சந்த் கபீர் வீட்டிற்குச் சென்றன். கபீர் துணிநெய்துகொண்டிருந் தார். அவரது மனைவி நூல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். கபீர் எழுந்து தேக்சந்தை வரவேற்றுத் தன்னருகே அம ரும்படிச் செய்தார். தேக்சந்தின் குடும்ப நலத்தைப் பற் றியும் அவனது சாதனையில் முன்னேற்றத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த கபீர் தன் மனைவியிடம் சிறிது களி மண் கொண்டு வரும்படி கூறினுர், மறுவார்த்தையின்றி அவளும் அவ்வாறே கொண்டு வந்தாள். அடுத்ததாக அவர் சிறிது நெய் கொண்டு வரும்படி கேட்க அதுவும் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அவர் தன் மனை வியை நெய்யைக் களிமண்ணுடன் கலந்து நன்ருகப் பிசை யும்படி கேட்டுக் கொண்டார். பின் அதைச் சிறு சிறு உருண்டைகளாகச் சட்டியிலிட்டு வறுக்கும்படி கூறினர். தேக்சந்த்இதையெல்லாம்பேச்சுமூச்சின்றி கவனித்துக்கொண் டிருந்தான். உருண்டைகள் வறுக்கப் பட்டவுடன் அவற் றைத் தூர எறியும்படி தன் மனைவியைக் கபீர்கேட்டுக் கொண் டார். அவளும் அவ்வாறே செய்தாள். இதைப் புரிந்து கொள்ள தேக்சந்துக்கு முடியவில்லை. இது கபீரின் குடும்ப வழக்கம் என எண்ணி அவன் சும்மா இருந்து விட்டான். பிறகு கபீரும் அவரது மனைவியும் தத்தம் வேலையில் ஈடு படத் தொடங்கினர்.
* மகராஜ்! அன்று நீர் என்னிடம் வீட்டைச் சுவர்க்க மாகமாற்ற எளியதொரு வழியைக்காண்பிப்பதாகக் கூறினீர் களே. இன்று அதை உங்களால் நிரூபிக்க முடியுமா?’ என தேக்சந்த் கேட்டான்.
'ஏன்! அன்று நான் கூறியதை அனுபவத்தில் செய்து காட்டியதை நீ இப்பொழுது பார்த்தாயே, உனக்காகவே நான் இவ்வளவு நெய், நேரம், உழைப்பு முதலியவற்றைச் செலவழித்தேன். ஆனல் நீ இன்னும் புரிந்து கொள்ள வில்லை’ என்று கூறினர் கபீர்.
'இவ்வளவுதான? இதை என் மனேவியும் எளிதில்
 

'''S' T.C.
ஆத்மஜோதி 47
செய்வாளே! வீட்டைச் சொர்க்கமாக மாற்ற இவ்வளவு தானு செய்ய வேண்டும்?' என்ருன் தேக்சந்த்.
'சரி முயற்சி செய்து பார். இதன் விளைவை நீயே அனுபவிப்பாய்' என அறிவுறுத்தினர் கபீர்.
தேக்சந்த் உடனடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். சோதனையை சீக்கிரத்தில் செய்து பார்க்க அவன் விழைந் தான். அவன் மனைவி தன் தோழிகளுடன் தனதறையில் சீட் டாடிக் கொண்டிருந்தாள். தேக்சந்த் பொறுமையிழந்தான். மறுபதிலுக்குக் கூடக் காத்திரா மல் அவளைப் பல தடவை கள் உரக்கக் கூப்பிட்டான். தன் கணவனின் தொந்தரவு பொறுக்க முடியாமல் உள்ளே நுழைந்த அவளிடம் தான் அவளுடன் முக்கிய காரியம் செய்ய விருப்பதால் அவளது சிநேகிதிகளை அனுப்பிவிடுமாறு கூறினன். அவளோ மறுத் தாள். ஆணுல் துரண்டுதலின் பேரில் சில நிமிடங்கட்குள் விளை யாட்டை முடித்து விட்டு வருவதாகக் கூறிச் சென்ருள். தேக்சந்த் தனதறையில் தன் முயற்சியைப் பற்றி நினைத் துக் கொண்டு ஒவ்வொரு நிமிடமாக எண்ணிக் கொண்டி ருந்தான்.
தன் தோழிகளிடம் விடைபெற்றுக் கொண்ட அவள் மறுமுறையும் தன் கணவன் முன் வந்தாள். தேக்சந்த் சிறிது களிமண் கொண்டு வரும்படி கூறினன்.
இந்திரா- அட கடவுளே! இந் நேரத்தில் களி மண்ணைக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தத் தலை போகும் காரியத்திற்காகவா என்னுடைய விளையாட் டைக் கெடுத்தீர்கள்.
தேக்சந்த் - என்னுடன் இப்பொழுது தர்க்கம் செய்யாதே. சொன்னபடி கொஞ்சம் களிமண் கொண்டுவா. (களிமண் கொண்டுவரப் படுகிறது.)
இந்திரா:- இதோ களிமண், என் தோழிகளுடன் விளை யாட நான் செல்கின்றேன். இதற்கிடையில் உங்கள் கையி லிருக்கும் பொருள் உங்கள் தலைக்குள்ளிருப்பதுதானு என் பதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். (உடனே வாசலை நோக்கிப் பறந்தோடுகிருள்.)

Page 16
*丁蕙*”
148 ஆத்மஜோதி
தேக்சந்த்- போகாதே. காரியம் இன்னும் முடிந்துவிட வில்லை. கொஞ்சம் நெய் கொண்டு வா.
இந்திரா - ஏன் இன்று ஒரு மாதிரியிருக்கிறீர்கள். நீங் கள் பேசுவதும் புதிதாயிருக்கிறது. உங்களுக்கு உடல்நலம் சரியாகத்தானே இருக்கிறது? உடல்நலம் சரியில்லையேயா கில் டாக்டருக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறேன்.
தேக்சந்த் - நான் நலமே. இன்னும் சில நிமிடங்களில் நான் இவற்றைக் கேட்கும் காரணங்களை நீயே புரிந்து கொள்வாய். இப்பொழுது கொஞ்சம் நெய் கொண்டுவா.
இந்திரா:- சரி சரி. உங்களிஷ்டப்படி. (நெய்யைக் கொண்டு வருகிருள்.) இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்.
தேக்சந்த் - இவ் வீட்டை சுவர்க்கமாக்கப் போகிறேன்.
இந்திரா:- ஹா! ஹா! வீடு சொர்க்கமாகப் போகிறதா? அது உண்மையாகவே இப்பொழுது சொர்க்கம் தான்நான் என்னுடைய தோழிகளுடன் சேர்ந்திருப்பேனே யா னல். உண்மையாகவே இப்பொழுது உங்களுக்குப் பைத் தியம் பிடித்து விட்டது. இன்று உங்களைப் பார்த்தவுடனே எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது.
தேக்சந்த் - அணுவசியமாக உளருதே. களிமண்ணுடன் நெய்யைக் கல.
இந்திரா - (கோபத்துடன் ) என்ன உங்களைப்போல் பைத் தியத்தின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நான் இவ்வுயரிய நெய்யை வீணுக்கப் போவதில்லை. நான் இன்னும் நல்ல நிலையிலேயே இருக்கின்றேன். என்னையும் பைத்தியம் என்று நினைக்கிறீர்களா? இன்று குடித்திருக்கிறீர்களா என்ன? உங்கள் அறைக்குச் சென்று இரண்டு மணிநேரம் தூங்குங் கள். எல்லாம் சரியாகி விடும். ' (நெய்யை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைகிருள்.)
தேக்சந்த் - (அவளைத் தடுக்கிருன் :) நான் சொன்னபடி செய், கேள்வியொன்றும் கேட்காதே. தர்க்கம் செய்வா யாகில் உதை விழும்.

ஆத்மஜோதி 149
இந்திரா - நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? களிமண்ணு டன் கலந்து நெய்யைப் பாழாக்க நான் விரும்பவில்லை.
தேக்சந்த் - (ஆத்திரத்துடன்) நான் சொன்னபடி செய் யாவிட்டால் உனக்கு நன்முக அடி விழும். நம் வீடு சுவர்க்க மாவதில் உனக்கு விருப்பமில்லையா?
இந்திரா - இந்த வினுேத எண்ணங்களை உங்கள் தலைக் குள் திணித்தது யார்? நீங்கள் விரும்பினுல் கடைக்குச் சென்று கொஞ்சம் நெய்யை வாங்கி அதை உங்கள் விருப் பம் போல் எங்கு வேண்டுமானுலும் கொட்டுங்கள், நான்
விசேஷமாகத் தயாரித்த இந்த நெய்யை வீணுக்கமாட்
டேன். வீடு சொர்க்கமாகப் போகிறதாம். (தேக்சந்த் அவளை அடிக்கிருன்.)
இந்திரா:- ஏ! கமலா, வளந்தா, சுலோசஞ) இங்கு வாருங்கள். எனது கணவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. என்னை உதைக்கிருர் பாருங்கள். என்னைக் காக்க ஓடி வாருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் என் னைக் கென்று விடுவார். (அக்கம் பக்கத்தவர் வீட்டினுள் நுழைகின்றனர். கபீரும் வருகிருர், அவர்கள் தேக்சந் தைத் தடுத்து நிறுத்தி ஒரு பெஞ்சியில் அமர்த்துகின்ற
னர்.)
நந்தலால் :- (அடுத்த வீட்டுக்காரர்) என்ன விஷயம் தேக்சந்த்? ஏன் இப்படி.
இந்திரா - ஒ அதுவா! இன்று அவருக்குப் பைத்தியம்
பிடித்து விட்டது. தயவு செய்து யாராவது அவரை ஆஸ் பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். இன் றேல், என்னை இன்று கொன்று விடுவார்.
தேக்சந்த்- நந்தலால் நான் பைத்தியமல்ல. இந்த வீட் டைச் சுவர்க்கமாக மாற்ற விரும்பினேன். என்னுடன் ஒத்துழைக்க அவள் மறுத்தாள். எனவே அவளே நான் அடித்தேன்.
நந்தலால்:- என்ன? வீட்டைச் சொர்க்கமாக்க முயற்சித் தீர்களா?

Page 17
150
தேக்சந்த் - இதோ பாருங்கள்! மனைவி யொருவள் அவ ளது கணவனுக்குக் கீழ்ப் படிந்து நடப்பாளாகில், அவர்கள் வசிக்கும் வீடு சுவர்க்கமாக மாற்றப்படும். நான் சொன்ன படி அவளைச் செய்யச் சொன்னேன். (நடந்ததை விவ ரித்துக் கூறுகிருன்.) அவள் செய்ய மறுக்கிருள். ஆத லால் நான் அவளே அடித்தேன்.
(அவனது கதையைக் கேட்ட அனைவரும் 'கொல்’ லென்று நகைத்து உண்மையிலேயே அவன் பைத்தியம் தான் என முடிவு கட்டுகின்றனர். இத்தருணம், கபீர் முன்னே வந்து தான் தேக்சந்தைப் பார்த்துக் கொள்வ தாகவும். எல்லோரும் அவரவர் வீட்டிற்குச் செல்லும்படி பும் கேட்டுக் கொள்கிறார். எல்லோரும் சென்ற பிறகு கபீர் அவனிடம் கீழ்வருமாறு கூறுகிருர், -
கபீர் - வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி இது வல்ல. சொன்னதற்கு மாருகச் செய்து இப்பொழுது வீட்டை நரகமாக்கி விட்டீர்கள். எந்த வீட்டில் கணவனும் மனை வியும் சண்டையிடுகின்றனரோ அதுவே மிகக் கொடிய நரகம்- அங்கிருந்து அமைதி அனைத்தும் மறைந்து விடுகி றது. கணவனும் மனைவியும் இணைந்து செல்லாத வீட்டில் துளியேனும் இன்பத்தைக் காணுதல் அரிது. நான் அன்று
என் வீட்டில் செய்து காண்பித்ததின் அடிப்படைத் தத்து வத்தை நீ அறவே புரிந்து கொள்ளவில்லையெனத் தெரிகி றது. நான் செய்த செயலை மட்டும் திருப்பிச் செய்வ தால் நீ வீட்டைச் சுவர்க்கமாக்கிவிட முடியாது. ஒரு ரூபாய் பெறுமானமுள்ள நெய்யைச் செலவழிப்பதால் ஒரு வன் சொர்க்கத்தை அடைவானேயாகில், இவ்வுலகிலுள்ள அனைவரும் அவரவர் வீட்டைச் சுவர்க்கமாக்கி விடுவர் அல்லவா? அது அவ்வாறல்ல. அன்று நீ பார்த்ததன் தத்துவம் இதுவே. தன் கணவனுக்கு மனைவியொருவர் எப்பொழுதும் கீழ்ப்பணிய வேண்டும். ஆனல் மனைவி தான் இவனை மணந்து கொண்டோமே என்பதற்காகக் கடனே என்று காரியங்களைச் செய்வதல்ல இதன் பொருள். அவள் செய்வதெல்லாம் பணிவு, அன்பு, அடக்கம், பொ ருந்தியதாக ஒரு மனதுடன் செய்யப்பட வேண்டும். இதை அவளது விருப்பங்களே அவள் வெளியிடுவதற்கு முன்பே பூர்த்தி செய்வதாலும், உனது நற்குணங்களாலும் எளிதில் பெற்று விடலாம். அவளது இதயத்தை நன்கு அறிந்து அவளது குனங்களை அறிந்து அவளிடத்தில் அன்
 

ஆத்மஜோதி 5.
கேனுேப நிஷத சாரம்
(யூரீ சுவாமி சிவானந்தர்)
-மு ன் இதழ்த தொடர்ச்சி
25. சுருதிகள் பிரம்மத்தை 'நேதி, நேதி' (இது அன்று, இது அன்று) க்கோட்பாட்டின் மூலம் விளக்குகின்றன.
26. சிஷ்யன் நுட்பமான, கூர்ந்த, துரய, ஒன்றித்த அறிவாற்றல் பெற்றிருக்க வேண்டும்.
27. பிரம்மம் உலகப் பொருட்கள் போல் அறியப் பட முடியாது. அது உலகப் பொருட்களின் இயல்பை மற்றவர்கட்கு விளக்கிக் கூறுவது போல் வெறுஞ் சொற் களால் விரித்துரைக்க முடியாது.
28. பிரம்மம் அறியப்பட்டதிலிருந்தும், காணப்ப டும் முழுவுலகிலிருந்தும் அறியப்படாததிலிருந்துங் கூட வேருனது.
29. பிரம்மமே தனிமெய்ப்பொருள்; அது அனைத் திற்கும் அடிப்படையும் மூல முதலும்,
30. பிரம்மம் ஒரு விடயமன்று. அது சர்வ வியா பக, இரகசிய, புரியாத சைதன்யம் அல்லது தூய தன்ன
றிவு,
31. பிரம்மம் உள்ளுணர்வு மூலம் அறியப்பட வேண்
டும்.
முன்பக்கத் தொடர்ச்சி புடன் நடந்து கொள்ள வேண்டும். இது உன் மனைவியை உன் கட்டளைகளை உடனே செய்து முடிக்கத் தூண்டும். உன் கட்டளைக்கு எதிர்பாராமல் அவளாகவே எல்லாவற் றையும் செய்து முடித்து விடுவாள். எந்த வீட்டில் கண வனும் மனைவியும் இத்தகைய நல்வாழ்க்கை வாழ்கின்ற னரோ அதுவே உண்மையில் சொர்க்கம்'

Page 18
152 ஆத்மஜோதி
32. பிரம்மத்தின் இயல்பை ஒர்ந்தறிவது மிகக் கடி னம். பிரம்மத்தின் இயல்பை விளக்குவது மிகக் கடினம்; ஏனெனின் அப்படிச் செய்வதற்குச் சாதனமோ மொழியோ இல்லை.
33. தூயதும் நுட்பமுமான அறிவாற்றல் இயற்பண் பாகப் பெற்றவர்கள் உபநிஷதங்களின் நுட்பக் கருத்துகளை எளிதாகக் கிரகிக்க முடியும்.
34. பிரம்மம் புலன்களினதும் மனதினதும் அடையும் ஆற்றலுக்கப்பாலிருப்பதால் நாடுபவன் உபநிஷதங்களின் ஆராய்ச்சியும் ஒர் ஒளிபெற்ற ஆசிரியரின் அறிவுறுத்தல்க ளும் மூலம் மனதாற் கிரகித்தற்குரிய பிரம்மத்தின் விளக் கத்தை முதலிற் பெற வேண்டும்.
35. நாடுபவன் சாதனு சதுட்டயம் (விவேகம் வை ராக்கியம், சட்சம்பத்து, முமுக்கூடித்துவம்) துணைச் சாத மைாகப் பெற்று இடையருத தியானம் பயில வேண்டும். அப்போது மாத்திரம் அவன் பிரம்மஞானம் அடைவான். அவன் தன் கையிலுள்ள நெல்லிக்கனிபோல் பிரம்மத்தை அறிவான். அப்போது எல்லா ஐயங்களும் மயக்கங்களும் மறைந்து போகும்.
36. அறியப்பட்டதிலிருந்தும் அறியப்படாததி லிருந் தும் வேருனது பிரம்மம்.
37. பிரம்ம ஞானம் குருவிலிருந்து சிஷ்யனுக்கு பரம் பரையாக வரப் பெற்றது. கெளடபாதர் பிரம்ம வித் தையை கோவிந்த பாதருக்குக் கற்பித்தார். கோவிந்த பாதர் சங்கரருக்கும் சங்கரர் பத்மபாதருக்கும் மற்றவர் கட்கும் அறிவுறுத்தினர். மேலும் அவ்வாறே.
38. ஒர் ஒளி பெற்று ஆசிரியர் அல்லது அனுபூதிய டைந்த ரிஷியின் அறிவுறுத்தலால் மட்டும் பிரம்மம் அறி யப்படும். ஆனல் தருக்க வாதங்களால் அல்லது நுண்மதி, பெரும் விளக்கவுரைகள், தவம் அல்லது யாகக் கிரியை கள் முதலியவற்ருல் அன்று.
39. மனிதனின் ஆன்மாவே ஆத்மன். உலகின் ஆன் மாவே பிரம்மம். ஆத்மன் பிரம்மத்துடன் அநந்நியமா னது. (அதுவேயானது)
 

"חללא היירר לחוגי עץ ק"מ לא יית זו
ஆத்மஜோதி 53
40. எதை வாக்கு விளக்குகிறதில்லையோ ஆனுல் எது வாக்கை விளக்குகிறதோ அது மாத்திரம் பிரம்மம் என்று
அறிக.
41. வாக்கு பிரம்மத்தை புலப்படச் செய்ய அல்லது விளக்க முடியாது. பிரம்மம் வாசாம கோசரமானது. (வாக்கிற் கெட்டாதது). வாக்கு பிரம்ம சக்தி அல்லது ஒளியால் தன்னை வெளியிடுகிறது.
42. வாக்கு எல்லையுள்ளது. எல்லைக்குட்பட்ட வாக்கு எவ்வாறு அநந்த பிரம்மத்தை வெளிப்படுத்த முடியும்.
43. பிரம் மம் மாத் தி ர ம் வா க்  ைக யும் அதன் உறுப்பு அல்லது வாக்கு இந்திரியத்தையும் விளங் கச் செய்கிறது. பிரம்மமே வாக்கின் வாக்கு. நாவின் நா.
44. பிரம்மம் வாக்கினுள்ளிருந்து அதை இயக்குகி flOgl.
45. இவ்வாத்மன் பிரம்மம் அல்லது பூமா. (அநந் தம் அல்லது அகண்டமானது.)
46. பிரம்மம் மேம்பட ஒண்ணுதது, பெரியது, வலி யது, அனைத்திலும் மேலானது, சர்வ வியாபகமானது. ஆகையால் அது பிரம்மம் என்று அழைக்கப் படுகிறது.
47. பிரம்மம் நித்தியமானது, நிர்விகாரமானது, தற் பிரகாசமானது, அரூபமானது, வர்ணமின்றியது, குணமின் றியது, காலாதீதமானது, தேசாதீதமானது, பகுக்க முடி யாதது, பிறவாதது, தானுக வுண்டாயது, சுயம்புவானது), தேய்வின்றியது, அழிவில்லாதது.
48. வேதாந்தம் பக்திமைக்கு எதிரானதன்று. அது தன்யைக் கருத்துடன் வழிபடுதலை வேண்டாமென வாதிக் கிறது.
49. ஒரு வேதாந்தி அல்லது ரிஷி ஒரு நிறைவான பக்தனே.
50. பராபக்தி அல்லது தலைசிறந்த பக்திமையும் ஞா னம் அல்லது மெய்யறிவும் ஒன்றே.

Page 19
T
154 ஆத் மஜோதி
51. மக்கள் வழிபடும் ஈஸ்வரன் ஒருவரின் சொந்த ஆன்மாவென்று வேதாந்தம் பகர்கிறது. அது ஒரு விரிந்த பக்தி நியமத்தை, உறுபல உயர்தர பக்திமை முறையைக் கற்பிக்கிறது.
ஆன்மாவும் மனமும்
52. பிரம்மம் மனதினதும் கரணங்கள் அனைத்தினதும் செயல்களின் மெளன சாட்சியே.
53. எது மனதாற் கிரகிக்கப்பட முடியாதோ ஆனுல் எது ஒரு பொருளைச் சிந்திக்கவும் புரிந்து கொள்ளவும் மன தைத் தூண்டுகிறதோ அதை மாத்திரம் பிரம்மம் என்று அறிக.
54. மனம் எல்லாக் கரணங்களுடனும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளது, அது எல்லா ஊக்க ஆற்றல்களின் முக்
கிய ஆணையாளர்.
55. ஆசை, இச்சை, சூழ்ச்சி, சிரத்தை, அசட்டை, திண்மை, கோழைத்தனம், வெட்கம், நுண்மதி, அச்சம்இவையனைத்தும் முடிவில் மனமே.
56. மனமே திருக்கு அல்லது காண்போன்; அல் லது காணப்படுவது. ஆத்மனே காண்போன்; மனமே காணப்படுவது.
57. புலன்கள் விடயங்களின் பதிவுகளை மனதிற்குக் கொண்டு செல்கிறது. மனம் அவற்றை ஆத்மனின் முன் னிலையில் வைக்கிறது. ஆத்மன் அவற்றை மனதிற்குத் திரும்பக் கொடுக்கிறது. அப்போது மட்டும் விடயங்களைக் கிரகித்தல் நிறைவடைந்து முடிவுறுகின்றது.
58. எது கண்களாற் காணப்பட முடியாதோ ஆனுல்
எதனுல் கண்கள் காண முடிகிறதோ - அதை மட்டும் பிரம் மமாக அறிக.
59. பிரம்மம் கண்களாற் காணப்பட முடியாது; ஏனெனில் அது காட்சிப் பொருளன்று.

ஆத்மஜோதி 55
60. கண் விடயங்களின் வர்ணம், வடிவம், தரம், பருமன் முதலியவற்றை மனதிற்கு எடுத்துச் செல்லும் ஒரு வரையறை யுள்ள கருவி.
61. கண் தனது காணுஞ் சக்தியை அதன் மூலமுத லாகிய பிரம்மத்திலிருந்து மாத்திரம் பெறுகிறது.
62. கண் பிரம்மத்தின் ஒளியூட்டும் நுண்மதியால் விடயங்களை நோக்கி நகரச் செய்யப்படுகிறது.
63. பிரம்மமே காட்சியின் மெய்யான காணுத காண் போன். அது கட்செயல்களின் மெளன சாட்சி.
64. பிரம்மமே மனத் தொழிலகத்தின் ஆண்டை அல்
லது உரிமையாளன். கண்கள் காதுகள் முதலியன பொது
எழுத்தாளர் மனமே தலை எழுத்தாளன். நுண்ணறிவே காரியாதிகாரி.
65. எது காதுகளாற் கேட்கப்படாததோ ஆனுல் எத னுல் காதுகள் கேட்க இயல்கின்றனவோ - அதை மாத்தி ரம் பிரம்மம் என்று அறிக.
66. பிரம்மம் ஒலியை நோக்கிக் காதுகளைச் செலுத் துகிறது.
67. காது ஒரு வரையறையுள்ள கருவி. அது ஒலிப் பதிவுகளை மனதிற்கு எடுத்துச் செல்கிறது. காதின் செயல் கள் மனச் செயல்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
68. காது தன் கேட்கும் ஆற்றலை அதன் மூல முத லாகிய பிரமத்திலிருந்து பெறுகிறது.
69 காது பிரம்மத்தின் ஒளியூட்டும் நுண்மதியால் ஒசை, அல்லது இசை முதலியனபாற் செல்லச் செய்யப்ப
டுகிறது.
70. பிரம்மமே உண்மையான, கேட்காத கேட்போன், அது காதின் செயல்களின் மெளன சாட்சி
71. எதை முகருஞ் சக்தி அறிகிறதில்லையோ ஆனல்

Page 20
156 ஆத்மஜோதி
எது முகருஞ் சக்தியை அதன் விடயங்களுக்குச் செலுத்து கின்றதோ - அதை மாத்திரம் பிரம்மம் என்றறிக.
72. எதை யொருவர் சுவாசத்தால் சுவாசிப்பதில்லை யோ ஆனுல் சுவாசம் எதனுல் சுவாசிக்கப் படுகிறதோ - அதை மாத்திரம் பிரம்மமாக அறிக.
73. எது பிராணனல் உயிர்ப்பூட்டப் படுவதில்லையோ ஆளுல்ை எது எல்லாப் பிராணிகளையும் உயிர்ப்பூட்டும் ஆற் றலை பிராணனுக்குக் கொடுக்கிறதோ - அதை மாத்திரம் பிரம்மம் என்றறிக.
74. பிரம்மம் ஒரு காட்சிப் பொருளன்று. பிரம்ம
ஞானம் என்பது உள்ளுணர்வான தெரிநிலையே.
75. பிராணன் பிரம் மத்தின் ஒளியூட்டும் நுண்மதி யால் அதன் விடயங்களை நோக்கி நகரச் செய்யப்படுகின் П05/.
அதீத உண்மை
76. ரிஷிக்கு விடய - விடயி அறிவில்லை. விடயி யும் விடயமும் அவருக்கு ஒரே மாதிரியானவை. அவர் எங்கும் பிரம்மத்தையே காண்கிருர்,
77. ஒவ்வொருவரின் ஆன்மா பிரம்மமே.
78. பிரம்மம் இன்னென்றின் அறிபொருளாகச் செய்
யப்பட முடியாது; ஏனெனின் அதைத் தவிர அறிவு யாது மில்லை. -
79. பிரம்மம் அறியப் பட்டதிலிருந்து வேருனது. அது அறியப் படாததிலிருந்துங் கூட வேருனது.
80. சாதனு சதுட்டயம் துணைச் சாதனமாக வுடை
யவனும் தூய்மையும் நுண்மதியுமுடையவனும் உபநிஷதங் களின் படிப்பினைகளை ஒர்ந்தறிய முடியும்.
81. பிரம்மம் என்றும் மெளன காட்சியாளராயிருக் கும் உள்ளுணர்வே. தன்னறிவே.

ஆத்மஜோதி 157
82. காண்போன் ஒருகாலும் காணப்பட முடியாது.
83. அறிவோன் ஒருகாலும் நுண்ணறிவால் அறியப் LdL GALLLLITigil .
84. புலன்களால் உணர்ந்தறியப்படுவதும் மனதாற் கருதுப் படுவதுமாகிய யாதொன்றும் பிரம்மமாக இருக்க முடியாது.
85. ஓர் உலகப் பொருள் மட்டுமே புலன்களாற் புரிந்து கொள்ளப் படலாம். மனதாற் சிந்திக்கப்படலாம்.
86. பிரம்மம் மனம், நுண்ணறிவு, புலன்களால் அறி யப் படாதது.
87. பிரம்மம் சமாதியில் நேர் உள்ளுணர்வுக் காட்சி மூலம், ஆன்மா அல்லது ஆத்மாவாக, ஐயமற அறியப் படுகிறது.
83. ‘அனைத்தும் உண்மையிற் பிரம்மமே; ஆன்மா வைத் தவிர யாதுமில்லை' என்று உணரும் உறுபல உயர் நிர்விகற்ப சமாதி நிலையை நீ யடையும்வரை நீ மேலும் மேலும் விசாரணை, சிந்தனை, தியானம் பயில வேண்டும். எல்லா நாம ரூபங்களிலும் அதன் இருப்பை நீ உணர வேண்டும்.
89. ஒரு விடயத்தை யறிவது போல் நீ பிரம்மத் தை யறிய முடியாது. பிரம்மம் உள்ளுணர்வான அல்லது நேர் அனுபவம் அல்லது ஒளிர்வது மூலம் ஒரு விடயமாக அன்று ஆணுல் தூய தன்னறிவாகவே அறிய அல்லது அடை யப்படுகிறது. விடயியும் விடயமும் ஆன்மீக அனுப வத்தில் ஒன்றே.
90. பிரம்மம், சாக்கிர, சொப்பன, சுழுத்தி நிலைக GfgðI g fTL * G)Gui.
91. பிரம்மம் தன்னியல்பில் நுண்மதியே. அது ஒரின இயல்பான தூய அறிவுப் பிண்டமே.
92. பிரம்மம் பிறப்பிறப்புத் தேய்வின்றிய நித்திய

Page 21
158 ஆத்மஜோதி
மான தூய, தட்டுத் தடங்கலற்ற இரண்டற்ற ஒன்றே. அது எல்லாப் பிராணிகளினதும் ஆன்மா அல்லது ஆத்மனே.
93. மனமாற்றங்கள் அனைத்தும் பிரம்மத்தில் ஒன் ருகிய நிர்விகற்ப சமாதியில் சாட்சியில்லை.
* 94, பிரம்மம் நித்திய, தூய, தற்பிரகாச தேய்வின் றிய பூரண சச்சிதானந்தமே. დაა,
95. பிரம்மஞானி அபூர்வ ஆன்மிக ஆற்றலை வைத் திருக்கிருர் .
96. இவ் ஆத்மன் ஆற்றலற்ற ஒருவரால் அடைய (ift f-ti líf gil - -
97. மெய்யாற்றல் ஆன்மீக அறிவு மூலமாகத்தான் விளைகிறது. -
98. பிரம்மஞானி முற்ருகப் பயமின்றியவராகிருர்,
99. இவ் வாத்மன் சேதப்படுமியல் பின்றியதும் வெல்ல முடியாததுமாயிருக்கிறது.
100. வெப்பமே அக்கினியின் உண்மை யியல்பாயிருப் பதுபோல் அழிவின்மையே பிரம்மத்தின் மெய்யியல்பாயி ருக்கிறது.
101. கருதவோ அல்லது சொற்களால் விவரிக்கவோ முடியாத நிர்விகற்ப சமாதி ஒரு விழுமிய அறிவுச் சக்தி யைத் தூண்டும் அனுபவமே மனம், நுண்ணறிவு, புலன் களின் தொழிற்பாடு ஒயும்போது நீ அதை நீயாகவே சமா
தியில் அனுபவித்தறிய வேண்டும். V
சமீபத்தில் விடுதலே
102. ஒளி இருளே பழிப்பதுபோல் பிரம்மஞானம் அஞ்
ஞானத்தை யழித்து உள்ளார்ந்த அழிவின்றிய இயல்பை *"
வெளிப்படுத்துகிறது.

ஆத்மஜோதி 59
103. அஞ்ஞானமே மனித துன்பம் அனைத்திற்கும் மூலகாரணம்.
104. ஒருவன் பிரம்மத்தை யறியாதிருந்தால் அவன் பிறப்பிறப்புகளாகிய வட்ட வழியிற் சிக்குகிருன்.
105. உண்மையாகத் தீவிர நாட்ட முடையவர்கள் 'நான்', 'எனது' என்னும் திரிபுச் சிந்தையைத் துறந்து உலக வாழ்விலிருந்து அருவருப்புடன் விலகுகிருரர்கள். ஏனெ னின் இங்கு அனைத்தும் அழியுமியல்புள்ளதும் கண்மாயமா னதும் கணபங்கமானதுமாயிருக்கிறது. -
106. அவர்கள் ஆத்மனைத் தியானித்து எல்லாப் பொ ருட்களிலும் ஆத்மனின் ஒரே யுள்ளுறையுந் தன்மையைக் காண்கிருர்கள். அவர்கள் அனைத்திலும் ஆன்மவொரு மையை அல்லது ஆத்மனின் ஒன்ருந் தன்மையை அறிந்து அழிவின்றியவர்களாகிருர்கள். அவர்கள் பிரம்மமாகிருர் அதள் .
107. உறுபல உயர் பிரம்மத்தை யறிபவன் լ իր լք மமே யாகிருன்.
108. பிரம்மத்தில் வாழ்பவன், ஆத்மனை எய்தப்பெற் றிலன், மெய்யாக மெய்வாழ்வு நடத்துகிருன்,
109. உலகியல் வாழ்வு அல்லது புலன் வாழ்வு பொய் யானதே. -
110. பிரம்மஞானி சீவிக்கும் போதே விடுதலை (ஜீவன்முக்தி) பெறுகிருன்.
111. பந்தத்திற்குக் காரணமாகிய அஞ்ஞானம் பிரம்ம ஞானத்தால் அகற்றப்பட்டதும் ஒருவன் உடனடியாக விடு தலை பெறுகிருன்.
யகூஷ் - உபக்யான நீதி
112. நன்னட்டங்களுக்கும் தீய நாட்டங்களுக் மிடை யில், சத்துவம், இராஜசம், தாமசங்களுக் கிடையில், எளிய அசுத்த மனதுக்கும் உன்னத சுத்த மனதுக்கு மிடையில் உண்மைப் போர் உள்ளே உண்டு.
113. புலன்களும் மனமும் பிராணனும் சச்சரவு செய் யத் தொடங்குகின்றன; "யாம் இவ்வுடலை ஒருமித்து நிலை நிறுத்தி ஆதரிக்கிருேம் . பிராணன் வெற்றியடைகிறது.
114. பிராணன் சுட உயிர்ப்பற்றது. இப் பிரானணு டைய பிறப்பிடமும் பிரம்மமே. புலன்களும் மனமும் பிரா

Page 22
ணனும் அவற்றின் ஒளியையும் ஆற்றலையும் பிரமத்திடமி ருந்து மட்டும் பெறுகின்றன.
115. உபநிஷத் என்பது பிரம்மஞானம் அல்லது இர கசியக் கோட்பாடு என்று பொருள்படுகிறது. அறிவுறுக் தல்கள் வேண்டி சிஷ்யர்கள் பற்றுறுதியுடன் ஆசிரியரைச் சூழ்ந்திருக்கிருர்கள். 'உப - அருகில், நி’ விருப்பத்து டன், - ஷத்ர் இருக்கிருர்கள். உபநிஷத் என்பது பிரம் மத்தைப் பற்றி எடுத்துரைக்கும் மூலபாடம் என்றும் பொ ருள்படுகிறது.
116. தவம், தன்னடக்கம், தன் மறுப்பு முதலியன பிரம்மஞானம் பெறுவதற்குத் துணைகளே. -
117. ஞானம் தீவினைகளின் அழிவால் மனிதரில் உதய மாகிறது.
118. பிரம்மஞானம் இப் பிறப்பிலேயோ அல்லது பல முற் பிறப்புகளிலேயோ தவம், தன்னடக்கம், நற்கர் மங்களால் தங்கள் மங்களைப் புனிதப் படுத்தியவர்களில் உதிக்கிறது.
119. மனமாசுக்களை யகற்ருதவர்கள் பிரம்மத்தை விளக்கும்பொழுது விரோசனனின் சம்பவம் போன்று விசு வசியாதிருக்கிருர்கள்.
120. யாரது இறைபக்தி பேரளவானதோ, யாரது குருபக்தி இறைபக்தியைப் போன்று பேரளவானதோ, அம் மேன்மையான ஆன்மாவிற்கு இவ்விரகசியங்களை விளக்கப் படும்போது தெளிவாகின்றன.
121. பிரம்மஞானம் தன்னடக்க முடையவர்களும் தவமியற்று கிறவர்களுமாகிய மனிதர்களிடம் மட்டும் ஒரு நிலையான ஆதாரம் பெறுகிறது.
122. உண்மையே பிரம்ம வித்தையின் அல்லது ஆன்
மீக அறிவின் இருப்பிடம், தவமும் தன்னடக்கமும் அதன்
ஆதாரமே.
123. உண்மை என்பது ஏமாற்றத்திலிருந்து, வாக்கு, மனம் அல்லது செயல் வஞ்சனையிலிருந்து சுவாதீனமே.
124. பிரம்மஞானம் பேச்சு, மனம், செயல்களில் இறு மாப்பும் வஞ்சனையுமின்றியவனும் நல்லியல்புடையவனும் ஆகிய ஒரு மனிதனில் மட்டும் உதிக்கும்.
125. பிரம்மஞானம் ஏமாறச் செய்கிறவரும் பொய்மை கூறுபவருமாகிய ஒரு மனிதனிடம் உதிப்பதில்லை. ஆகை யால் உண்மையே ஞானத்தின் இருப்பிடம் அல்லது தங்கு மிடம் என்று சொல்லப்படுகிறது.
126. உண்மை ஒரு ஞான உதவியாக மற்றெல்லாவற் றையும் மேம்படுகிறது. முற்றும் ,

\ } 27 ܝ).
திருக்கோணமலைத்
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்
மேற்படி மகா கும்பாபிஷேகம் 1963 ஏப்ரில் 3ந் திகதி நடைபெற இருக்கிறது. குறைக் கட்டிடம் முடிப்பதற்கு பத்தாயிரம் ரூபா வரையும் கும்பாபிஷேகத்திற்கு இருப தினுயிரம் ரூபா வரையும் தேவைப்படுகின் றது. பாடல் பெற்றஇத் திருத்தலத்தின்
புனருத்தாரணத்திற்காக
அன்பர்கள் யாவரிடமும் பண உதவி யை எதிர்பார்க்கிறேம், எந்த ஒரு சிறு உத வியும் ஏற்றுக் கொள்ளப் பெறும். இப் பணிக்கு அனுப்பப்படும் நன்கொடைகள் யாவும் ஏற்றுக்கொண்டு பற்றுச் சிட்டுக் கொடுப்பவர்
திரு. சி. ஆறுமுகநாதன்
தபால் பெட்டி இல 9,
^N , ; గది . . திருக்கான 10 பல

Page 23
Registered at *
ஆத்மஜோதி நில தெய்வீக வாழ்க்கைச் சங்க வழிபாடு திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்திரை பூனி கதிரை மணி மாலே அறிவுரைக் கதைகள் இளங்கோவின் கனவு நவராத்திரிப் பாடல் ஆத்ம நாதம் (சுத்தானந்த கீதா யோகம் கந்தரநுபூதி - பொழிப்பு
மார்கழிப் பாடல்
அன்புடையீர்
இன்றுவரை 15ம் ஆண்டுக்குரிய உடனுக்குடனேயே ரசீது அடு கெல்லாம் எமது நன்றி உரித்
அனுப்பாதோர் உடனே அனுட்
9.5, in Gang, 52nui
(s
இந்தியாவிலுள்ள அன் R. வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ்,
என்ற விலாசத்திற்கு அனுப் தெரியப்படுத்த வேண்டுகின்ருே
հ II մ16ւ உஷ்ணவாய்வு, முழங்கால் மலக்கட்டு, மலபந்தம், அஜிர் பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கருப்பு களை நீக்கி ஜீரண சக்திக்கும்
மிகச்சிறந்த
தபால் செலவு உட்பட
(பத்திய சம்பு இன்டஸ்ரீஸ் - அரிசி இலங்கையில் கி
ஆத்மஜோதி நிலேய
Printed & Published by Mr. N. Muth at Athmajothi Press, Naw

Newspaper M. L. 59/300
ս Glonginաննեhir!
LD6) 1-25
- -25 (நா. முத்தையா) 50 -75 (பரமஹம்ச தாசன்) -50 சுவாமி சிவானந்தர்) 65 (செ. நடராசன்) 2-25
25 LITU 40 u Tri) 3 OO 2 50
ரையுடன் -25 -20
iП8661536(з5.
சந்தா அனுப்பியவர்களுக்கு னுப்பியுள்ளோம். அவர்களுச் தாகுக. இன்று வரை சந்தா பி வைக்க வேண்டுகின் ருேம் , Ер - 5п6160йлаа. கிலோன்) போன் - 353 பர்கள் வழக்கம்போல்
பிவைத்து, அதை எமக்கும் ரம்.
(35 U 6.00I D
வாய்வு, இடுப்பு வாய்வு ணம், கைகால் அசதி பிடிப்பு பித்த மயக்கம், பித்த சூலை , பு, முதலிய வாய்வு ரோகங்
தேகாரோக்கியத்திற்கும் சூரணம்.
டின் 526šта) 48ருபா 25சதம்
டைக்குமிடம்: D - IBո5նsսնւհւլգ.
iah, Athmajothi Nilayam, No pitiya. lapitiya. (Ceylon) 13-2-63