கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.05.15

Page 1
பாரதியாரின் UITUp IILIT 600 9. (Th GT
 

క
(бђП 50т (з505 |。 த்துச் சாமி 2 ம்பலம். නිති {{++++++++++++C

Page 2
స్టోణణRణణీ 露鳥 ஜே ಕ್ಲಿ; s
ஆத்ம & ஜோதி : స్టో L 9ử ஆத்மீக மாதவெளியீடு) ତିର୍ୟ୍ଯ
{
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
--சுத்தானந்தர் .
ஜோதி 15 |சுபகிருதுளு வைகாசி மீ" 1 வட (15-5.63) | 3. La 7 பொருளடக்கம
l.
பாரதியாரின் ஞானகுரு யாழ்ப் பணத துச்
சுவாமியின் புகழ் 241.
2. சான்றேர் 242 3. JT J 2 uisi si? 243 4. ஸந், கிதானத்தில் ஒருநாள் 246 5. பாரதியாரின் ஞானகுரு 253 6. தூண்டு தவ விளக்கன யார் 26. 7. யாழ்ப்பாணத்துச் சாமி அருளம்பலம் 265 8. கடோப நிஷதக் கருத்து 267 9. ஆனந்தமாயி அம்மையிடம் அன்பர்கள் சம்பாஷணை 271 10. முத்தீச் செல்வம் 277 11. கருணை செய்வாய் கந்தனே (அட்டை 3ம் பக்கம்)
ஆத்மஜோதி சந்தா விபரம்
*→→→→→→→Y+++→→→→→ ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரூ.3-00.
தனிப்பிரதி சதம் 30,
கெளரவ ஆசிரியர் :- திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் :- திரு. நா. முத்தையா
* ஆத்மஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண் 1 . 353.
 
 
 

பாரதியாரின் ஞான குரு யாழ்ப்பாணத்துச் சுவாமியின் புகழ்
(பாரதியார்)
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான், தேவிபதம் மறவாத தீரஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான் பாவியரைக் கரையேற்று ஞானத் தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன் காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.
தங்கத்தாற் பதுமை செய்தும் இரத லிங்கம்
சமைத்து மவற் றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர் பலர் புவிமீ துள்ளார்;
தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் , யாழ்ப்பாணத் தீசன்றன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வசித்தி.
குவளைக் கண்ணன் புகழ்
யாழ்ப்பாணத் தையனேயென் னிடங் கொணர்ந்தான்
இணையடியை நந்தி பிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பர்ன கயிலைமிசை வாழ்வான், பார் மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்,
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்;
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்;
தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணைகொண்டார்.

Page 3
242 ஆத்மஜோதி
J T 651 (3 (n; i.
அறம் என்றும் இன்பம் என்றும் இரண்டு பொருட்கள் உள. சான்ருேர் இன்பத்தை விட்டு அறத்தையே கொள்
வர். அறிவில்லாதவர் ஐம்புல இன்பத்தை நாடுவர். நாடி மர ணத்தின்வலையில்வீழ்வர். அறிஞர் நிலையற்றவற்றை நிலையின என்று கருதார். - உபநிடதம் ,
எவன் மனத்தூய்மை, அடக்கம், அறிவு உடையவனே, எவன் மனத்தில் செருக்கும் தீமையும் இல்லாதவனே, அவனே சான்றேன். எவன் எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையவனே, அவன் சான்றேன். எவன் தான் தவறு செய்யாதிருந்தும் பிறர் பழிச் சொல்லைப் பொறுத்துக் கொள்கின்ருனே அவன் சான்றேன்.
- புத்தர்.
அடக்கமுடையவன், பிறரை இகழாதவன், சினத்தைப்
போற்ருதவன், செருக்கில்லாதவன், பிறரிடம் குற்றம் கா ணுதவன், புறங் கூருதவன் - இவனே சான்றேன்.
- ஜைன மதம்.
சான்ருேர் போற்றுவன மூன்று பொருட்கள்; கடவுள்
கட்டளை, பெரியோர், அறிஞர் அறிவுரைகள். சான்ருே ரி
டம் காணப் படாதவை நன்கு; ஆராயாமல் வெறுத்தல்,
ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவாதம், ஆணவம்.
சான்றேர்க்குரிய பட்டம் சான்ருேர் எனப்படுவதே.
- கன்பூவிய மதம்,
சான்ருேர் துன்பம் நேரினும் சோர்வுரு?ர். நன்மை செய்யினும் புகழ் விரும்பார். தம்முடைய இதயத்தை
மனித குலத்துக்குரிய தாக்குவர். தங்களைப் பார்த்த மாத் திரத்தில் மக்கள் தந்தை தனயன் போல் நடப்பர். சான் ருேர்க்குப் பகைவரிலர். சான்றேர்க்குத் தாழ்ந்தவர் என் பவர் கிடையார். சகலரும் அவருடைய அன்புக்கு உரிய | . חו (6
- தாவோ மதம்.
 
 
 

ஆத்மஜோதி 243
பாரதி யார்? (ஆசிரியர்)
பாரதி யார் என்ற சொல்லுக்குப் பக்கத்திலே ஒரு வின அடையாளம் இடப்பட்டால் எல்லாரும் ஒரு விடை இறுக்க மாட்டார்கள். பாரதியாரின் கவிதைகள் மூலம் ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்திலே நின்று பார்த்துள் ளார்கள். இன்று நாம் பாரதியாரைப் பார்க்க வேண்டு மால்ை அவர் எழுதிய பாடல்களுக் கூடாகத்தான் பார்க்க வேண்டும். அவர் மக்களுக் களித்த பிரசாதம் அவர் எழு திய பாடல்கள். அவர் எழுதிய பாடல்கள் அத்தனையும் மக்கள் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டும் கண் ணுடியாகும். பாரதியார் வாழ்வையே படம் பிடித்துக் காட்டும் கண்ணடி என்ருல் மிகையல்ல. இறைவனின் இருப்பைச் சொல்ல வந்த திருமூலர்
பூதக் கண்ணுடியிற் தோன்றிலன் போது ளன் வேதக் கண்ணுடியில் வேறே வெளிப்படுமே நீதிக் கண்ணுடி நினைவார் நெஞ்சுளன் கீதக் கண்ணுடியிற் கேட்டிருந்தேனே
என்கின்றர். முகத்துக் கண்ணே பூதக் கண்ணுடி, முகத்துக் கண் கொண்டு பார்ப்பவர்களை மூடர்கள் என்றே கூறுகின்றர். இறைவனை முகத்துக் கண் கொண்டு பார்க்க முடியாது என்கின்ருர் . ஏன் என்ருல் அவன் இருக்குமிடம் அகமாகும். அகத்திலிருப்பவனை அகத்துக் கண் கொண்டு பார்த்தா லல்லவா ஆனந்தம். அங்ங்ணம் பார்த்தால் வே முக வெளிப்படத் தோன்றுவான் இறைவன். இறைவனைத் தத்துவ ஞான மூலமாக நினைந்தால் நினைப்பவர் மனத் துள்ளேயே இருக்கின்றன். இங்ங்னம் ஞானக் கண் பெரு தவர்கள் அதனைப் பெறும்வரை கீதக் கண்ணுடியில் இறை வனைக் கேட்கலாம் என்கின்ருர் திருமூலர். கீதம் என்பது இசை அல்லது பரம்.
இதே வகையில் பாரதியாரை அவர் எழுதிய பாடலா கிய கண்ணுடியைப் போட்டே பார்க்க வேண்டும். அப் போதான் பாரதி யார்? என்ற வினவுக்கு விடை வரும். பாரதியார் வரகவியா? தேசீய கவியா? தெய்வீகக் கவியா? தமிழ்க்கவியா என்று சர்ச்சைகள் எழுப்புவதைப் பார்க் கின்ருேம். எல்லாம் சேர்ந்தவரே பாரதியார். உணர்ச்சி

Page 4
244 ஆத்மஜோதி
மிகுந்தவர், பக்தி மிகுந்தவர் பாரதியார். எதன் மீதும் பக்தி உண்டாகா விட்டால் உணர்ச்சி வெளிப்படவே வெளிப் படாது. தேசத்தை ஆதிபராசக்தியாகப் பக்தி செய்தார். தமிழைத் தமிழ்த் தேவியாகப் பக்தி செய்தார். அதனல் உணர்ச்சி மிகுந்தது. ஆவேசப் பாடல்கள் பொங்கி வழிந்
தன. பாரதியார் வேண்டுமென்று பாடவில்லை. பாடா
மல் இருக்க முடியாமையினலே பாடினர். ஆனபடியினல்
தான் அப்பாடல்களிலே ஒரு அருள் ஆவேசத்தைக் காண்
கின்ருேம்.
பாரதியார் உலகத்தை அகத்துக் கண்கொண்டு பார்த்
தார். அவர் எவரையும் வெளித் தோற்றத்தைக் கொண்டு
மாத்திரம் மதிக்கவில்லை. அகத்துக் கண்கொண்டே பார்த் தார். தேசீயத்திலோ தமிழிலோ இடம்பெருத எத்தனை யோ மகான்கள் அவருடைய கவிகளிலே இடம் பெற்றிருக் கின்ருர்கள் என்ருல் அது அவருடைய அடியார் பக்தியைக் காட்டுவதாகும்.
அருளம்பலம் சுவாமிகள் என்று யாழ்ப்பாணத்தவர்க ளால் அழைக்கப்பட்டு வந்த மகானைப் பாரதியார் யாழ்ப் பாணம் சுவாமிகள் என்று பெயர் சூட்டிக் கொண்டாடி யிருக்கின்றர். அம்மகானைப் பாரதியார் குறிப்பிடும்போது
குவலயத்தின் விழிபோன்றயாழ்ப்பாணத்தான் என்கின்ருர்,
உலகத்திற்கே கண்போன்றவர் எனும்போது அம் மகானின் ஆத்ம ஒளியின் மகிமைதான் என்னே!
தேவிபதம் மறவாத தீரஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
நடராஜப் பெருமானே இவ்வுருவில் வந்துள்ளார் என் பதுதான் பாரதியாரின் முடிபு. ஞானிகள் மூலமே இறை வனைக் கண்டார், அநுபவித்தார் பாரதியார் என்பதற்கு
இது ஒரு அத்தாட்சியாகும்.
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி
இது ஞானிகளுடைய இலட்சணங்களுக் குள்ளே மிக
முக்கியமானதொன்று. நாம் உய்த்துணர்ந்து அனுபவிக்க வேண்டிய தொன்று.
 
 

ܢܬ
ஆத்மஜோதி 245
சுவாமி இராமதீர்த்தர் எளிய பொருள் ஒன்றைக் குறிப்பிடுகின்ருர் . சகலமான பேர்களும் இந்தப் பொருளை மிகத் தாராளமாகக் கொடுக்க முன்வருவார்கள்; ஆனல் இதையே பிறரிடமிருந்து பெற்றுக் கொள்வதை எவருமே விரும்புவதில்லை. அந்தப் பொருள் என்ன?
அதுதான் உபதேசம் அல்லது அறிவுரை.
பாரதியார் ஊருக்கு உபதேசி மாத்திரமல்ல. பல மகான்களின் உபதேசத்தினல் தமது அறிவை ஞானவளம் படுத்திக் கொண்டவர்.
புதுவையில் புகுந்த பாரதி வேறு; புதுவையிலிருந்து வெளிவந்த பாரதி வேறு. உள்ளே புகுந்தவர் வீரர்; வெ ளியே வந்தவர் ஞானி. பாரதியாருக்குத் தேசப் பிரஷ்ட வாழ்வும், கஷ்ட ஜீவனமும், நஷ்ட நம்பிக்கையும் அறிவை வளர்க்கும் சாதனங்களாக உதவின. கல் லூரியில் கற்காததைக் கடற்கரையில் கற்ருர், புதுவையில் கடற்கரையில் பல புதுமைகள் உதித்தன. புது வையிலேதான் பாரதியாருக்கு அரவிந்தர், யாழ்ப்பாணத் துச் சுவாமி போன்ற மகான்களின் தரிசனம் கிடைத்தது. மகான்களின் தரிசனத்தினுல் பாரதியார் ஞானவீரரானர். இயற்கையிலிருந்து செயற்கையை அறிந்தார். மனிதவாழ் வின் மூலமந்திரத்தை அறிந்தார். சம பாவம் பிறந்தது; நிஷ் காமம் தொடர்ந்தது. வீரம் வைராக்கியமாக மாறிற்று. தர்மம் சேவாஸ்வரூபம் பெற்றது. பாரதியார் இவ்வுல கை விட்டு மறையும் போது பழுத்த ஞானியாகவே மறைந் தார். அதற்கு அவரது மறைவின் காரணமே சாட்சி.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் O
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 懿 அலகிலா விளையாட்டுடையார் எவர் தலைவர் స్తోక్ష அன்னவர்க்கே சரண் நாங்களே. 鬍 o 浚
2 res= 55 AC I JIT SSSSSSR 裘
ಟ್ವಿಟ್ಲೀ

Page 5
246 ஆத்மஜோதி
- na O ● ஸந்நிதானத்தில் ஒருநாள்
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்)
பகவான் நரசிம்ம பாரதிகள்
யூனிசிருங்கேரி ஆசார் யாளுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1909ல் பகவான் நரஸிம்ஹ பாரதியாரே என்னைக் 'கவியோகி பாரதி' என்று அழைத்தவர். அவர் வாக்கிலிருந்து வந்த பட்டம் நிலைத்துவிட்டது. அவரே எனக்கு சிறந்த மந்திரங்களை உபதேசித்து என் வாழ்விற்கு வழி வகுத்தார். அவர் அந்தக்காலம் தமது சாரதா ஸ்தோத் திரத்தைப் பாடினர். அதில் ஒன்று இன்னும் என் செவியில் ஒலிக்கிறது.
நவநவ கவந ஸமர்த்தம் படுதர வாக்துரத வாஸ்வாசார்யம்/ வனஜாலந வர மாநிணி வர தே குரு சிக்ரமங்க்ரிநதம்//
புதுப்புது அருட்கவிகள் அன்று முதல் என் உள்ளத்திற் பூத்து வாக்கில் மணந்தன.
பகவான் சந்திரசேகர பாரதிகள்
பதினைந்து ஆண்டுகள் கழிந்து அடுத்த பெரியவாள் பூரீ சந்திரசேகரபாரதிகளை 1924ம் ஆண்டு நான் அரசியற் சுழ ழில் ஈடுபட்டிருந்த சமயம் தரிசித்தேன். அவர் விவேக சூடா மணியிலிருந்து ஒரு சுலோகம் அருளி விளக்கினர்,
கடாகாசம் மஹாகாச இவாத்மானம் பராத்மனி/ விலாப்ய அகண்ட பாவேன தூஷ்ணிம் பவ ஸ்தாமுனே//
ஒரு குடத்திலுள்ள சிறிய ஆகாசத்தை (வெளியை) மஹாகாசத்துடன் (பரந்த வெளியுடன்) சேர்ப்பது போல்
பரமாத்மனில் தேஹாத்மனன ஜீவாத்மனை ஆழ்த்து. அவ்
விதம் ஆழ்த்தி அந்த அகண்ட ப்ரஹ்மமாக அமைதியாக மெளனமாக இரு. அதுவே இன்ப நிலை,
இந்த ஒரு வாக்கு சுயராஜ்யாவிலிருந்து என்னைச் சூரு வளி போல் அடித்துச்சென்று பகவான் ரமண மஹரிஷிகள்

ஆத்மஜோதி 247
முன்னிலையில் சேர்த்து விரூபாகS குகையில் புகுத்தியது. இருபத்தைந்து ஆண்டுகள் மெளனத்தில் மகாதுரிய ஸ்மாதி யில் ஆழ்ந்து சித்திபெற்று உலகையும் மூன்றுதரம் சுற்றிச்
சன்னையில் யோக சமாஜம் கண்டு சதா சகஜ மகா துரிய
சமாதியிலிருந்த காலத்திலேதான் தற்போதுள்ள மஹா
ஸந்நிதானத்தின் தரிசனம் கிடைத்தது. எனக்கு சங்கல்ப
கல்பங்கள் இல்லை. பகவத் அனுக்ரஹத்தால் எல்லாம் நடக் கிறது. அந்த மஹா அனுக்ரஹத்தால் சிருங்கேரி மணிகளான
ரண்டு பக்தர்கள் வந்தனர். ஒருவர் பூணீ வெங்கடராம ஐயர், மற்ருெருவர் யூனி பஞ்சாபகேச ஐயர். இருவரும் எனக்கு சிருங் கேரி மஹா ஸந்நிதானத்தின் அருமை பெருமைகளைச் சொல் லி சங்கர கிருபாவும் தந்தனர். மஹா ஸந்நிதானத்தைப் பார்க்கவும் அவர்களே ஏற்பாடு செய்தனர். இது பகவான்
கட்டளை என்று பார்க்க முனைந்தேன். அப்போது சில கவிதை
கள் உதித்தன. அவற்றையும் எழுதிக்கொண்டு சென்றேன்.
ஆசாரியாள் தரிசனம்
திருவல்லிக்கேணியில் ஆசாரியாள் எழுந்தருளியிருந்தார் கள். தை வெள்ளிக்கிழமை-மாலை நான்கு மணி. அன்பர் உள்ளே அன்புடன் அழைத்துச் சென்றனர். பகவான் வித்யா தீர்த்தர் கம்பீரமாக வித்வான்களிடையே அமர்ந்திருந்தார் கள். முன்னவர்களுடன் தெலுங்கில் பேசினேன்-இவர்களு டன் இந்தியில் பேசினேன். அவர்கள் அழகான இந்தியில் அரிய விஷயங்களைச் சொன்னர்கள். அவர்களுக்கு நான் எழுதி வந்த பாடல்களைப் படித்து இந்தியிலும் விளக்கினேன்.
தேனினும் இனிய சொல்லான் தீச்சுடர் போன்ற தூய ஞானி என் குருவாய் வந்த நரசிம்மனிடத் தமர்ந்த கோனிவன் இதயமான குகையினில் ஒளிரப்பெற்றேன் ஏனினிக்கவல;யான்செய் தவமெலாம் பலித்ததின்றே சில தரு சிற்பிபோல சிந்தனைச் சிற்பியாகிக் கலேபெற ஞான தீரர் கணத்தினைக் கணத்திற் கூட்டி மலேயருவியைப்போல் அன்னுர் மாமறை வழங்கும் இன்ப நிலைபெற வேண்டியிங்கே நிலைதவம் புரிகின்றேனே.
என்று நான் பாடியதும் ஆசார்யாள் தனிச் சம்பாஷணை தொடங்கினர்.

Page 6
248 ஆத்மஜோதி
அத்யாத் மசிங்கம்
ஆசார்யார் கம்பீரமான இளம் பொலிவுள்ளவர். அஞ் சா நெஞ்சு படைத்த அத்யாத்மசிங்கம். சந்திரசேகர பாரதி யாரிடம் இருபதாண்டுகள் இருந்து பழகினவர் என்ருல் வேறு விரிவுரை தேவையில்லை, சந்திரசேகரர் பரமயோகி, தியான சீலர், அனத்ம சிந்தனையை வேரறுத்த முனிவர். அவரது சை தன்ய சக்தி இவர் உள்ளத்தில் துடிக்கிறது. பாஷ்யங்களிலும் ஆர்வு கிரந்தங்களிலும் விசேஷமான பயிற்சி உள்ளவர். அத்துடன் காலப்போக்கை நன்முக அறிந்து நடக்கிறவர். அவருக்கு வைதிகமும் தெரியும் லெளகிகமும் தெரியும். இக மும் தெரியும் பரமும் தெரியும். சிருங்கேரி பீடத்தில் அமர்ந்த சிங்கம் வித்தியாதீர்த்தர். என் உள்ளத்தில் துடிக்கும் கருத்
துக்களை அன்று மூன்று மரிை நேரம் பெரிய கூட்டத்தில் பேசி
னேன். ஆசாரியாள் முன்னிலையில் பேசும் பாக்கியம் கிடைத் ததே பெருமகிழ்ச்சி.
எ ன் ஆர்வம்
நான் அறுபது ஆண்டுகள் செய்த தவயோகத்தின் கருத் தெல்லாம் சணுதனமான ஹிந்துதர்மம் உலகெல்லாம் பரவிப் பொலிய வேண்டும் என்பதே. அதற்கேற்ற வேதாந்த அறி வாளிகளைப் பயிற்ற வேண்டும் உலகெங்கும் அவர்கள் சென்று நமது பாரத தர்மத்தைப் பிரசாரம் செய்ய வேண்டும். புத் தர் சிலையை உலகெங்கும் நாட்டுவது போலவே ஆதி சங்கரர் சிலேயை ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், ஊரிலும், நாட்டிலும், உலகிலும் நாட்டி அவர் பெயரால் பாரத வேதாகமதர்மங்களைப் பரப்ப வேண்டும் என்றஆர்வத் தை அன்று ஆசார்யாளிடம் தெரிவித்தேன்.
அன்பிலே ஆழ ஊன்றி அழகிய மலர் குலுங்கிப் பொன்பழுத் தமுத மூறும் பூரண வேதாந்தத்தின் பண்புகள் பரவியிந்தப் பாரெல்லாம் அமைதி சேரும் இன்பநாள் கண்டபோதே என்னுயிர்க்கின்பமாமே!
ஆசாரியாள் :- இது உயர்ந்த எண்ணம். இதற்காகத் தான் சங்கர சேவா சமிதி ஏற்பட்டிருக்கிறது. சென்னையி லும் மடம் ஏற்பட்டு சேவை நடக்கிறது. நூல்கள் வெளி வரு கின்றன. உங்கள் சேவை வேண்டும்.
 
 

ஆத்மஜோதி 249
நான்:- எல்லாம் நலமே. ஆனல் இந்தப்பாரதபூமியில் ஆதியில் எல்லாரும் வேதாகம சீலர்களாகவே இருந்தனர். இ ன் று பார்த்தால் கோடிக்கணக்கான ம க் க ள் பரமதம் புகுந்து நமக்கே விரோதிகளாயிருக்கிருர்கள். விடிந்தெழுந் தால் பரமதப் பிரசாரகர் ஆயிரக்கணக்காக, கிராமம் கிரா
மமாகச் சென்று பாமர மக்களை மாற்றுகின்றனர். தினம் 2000 பேர் மதம் மாறுகிருர்கள். வேதம் ஆகமம் எல்லாம்
சில பண்டிதர்களிடம் உயிர் துடிக்கின்றன. சாதாரண மக் களுக்கு நமது சமய ஞானமோ, தத்துவமோ தெரிவதில்லை.
ஒரு கிறிஸ்தவனுக்கு பைபிள் தெரியும், ஏசுநாதர் சரித்திரம்
தெரியும், கிறிஸ்துவின் உபதேசம் தெரியும், ஞாயிறுதோறும் சர்ச்சுக்குப் போகத் தெரியும், தினம் சிலுவை முன் முழந் தாள் பணிந்து பிரார்த்தனை செய்யத் தெரியும். சூரியன் உதிக்கும் போது ஆயிரக்கணக்கான பிரசாரகர் தமது சம யத்தைப்பரப்பக் கிராமம் கிராமமாகச் செல்கின்றனர்.அதே மாதிரி பெளத்த மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் பலர் வேலை செய்கிருர்கள்; பள்ளிக்கூடங்களும் வைத்தியசாலை களும், அணுதை இல்லங்களும் வைத்து மக்களிடம் தமது மதத்தைப் பரப்புகிருர்கள் ஆதிசங்கரர் குமரிமுதல் இமயம் வரையில் காலால் நடந்து வேதாந்த முழக்கம் செய்தார். அதே மாதிரி வேத வேதாந்தத்தைப் பரப்பிப் பொது மக் களுக்கு விழிப்புண்டாக்கி ஹிந்து தர்மப்பிரசாரம் செய்ய நாமும் தொண்டர்களைத் தயார் செய்ய வேண்டும். இது தான் இப்போது அத்தியாவசியமான சேவையாயிருக்கிறது.
மஹாசந்நிதானம் மனதுவைத்தால் நடக்காததில்லை.
ஆசாரியாள் :- இது யுக்தமான சேவை. இப்போது சங் கர ஞானம் நாடெங்கும் பரவ ஆங்காங்கு பக்தர்கள் கைங்க ரியம் செய்கிறர்கள். இருட்டை விரட்ட வெளிச்சம் வேண் டும். மனத்தில் படர்ந்த அஞ்ஞானம் விலக ஞானவொளி வேண்டும். முதலில் படிக்கத் தெரிந்தவர்களுக்கு வேதாந்த ஞானம் ஆழப்பதிய வேண்டும். அதற்குப் பகவத்பாதாள் வேண்டிய கிரந்தங்களை அருளியிருக்கிருர்கள். அவற்றை வெளியிட்டுப் பரப்புகிருேம். அவற்றைக் கற்று ஆர்வம் இருப் பவர் முன்வந்து சாதனம் செய்து சமம், தமம், திதிகூைடி, உபரதி, சிரத்தைமுமுகூr"த்வாதி சம்பத்துக்கள் அடைந்தால் போதும். அவர்கள் மூலம் சமயம் பரவும்.
நான் - மிக உயர்ந்த கருத்து; நமது தர்மம் வற்புறுத்தி மதம் மாற்றுவதில்லை; மனமாற்றமே நமது குறிப்பு, மத

Page 7
250 ஆத்மஜோதி
மாற்றமல்ல உண்மை அறிவு பரவ வேண்டும், அதற்கு என் ணுல் ஆகிய சேவையை சந்நிதானத்தில் நிவேதிக்கிறேன். நான் இதோ ஜப்பான் அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் செல்கிறேன். அடுத்த ஆண்டு இங்கிலாந்து பிரான்ஸ் தேசங் களுக்குச் செல்வேன். இரண்டு முறை உலகைச் சுற்றியிருக்கி றேன். மேற்கும் கிழக்கும் வேத வேதாந்தத்தை வரவேற் கின்றன. ஆனல் பைபிள், குரான், புத்த தர்மம்போல நமக்கு நிர்ணயமான ஒரு புனித நூலை உண்டாக்கி - இதுதான்
எங்கள் சமய நூல், இதுதான் ஹிந்து தர்மம், இதைத்தான் நாங்கள் பின்பற்றி வாழ்கிருேம். இதுதான் மாணவ ஜீவனத்
திற்கு வழிகாட்டி என்று ஒரு நூலைக் கோத்து உலக மொழி களிலெல்லாம் அது உலாவச் செய்ய வேண்டும். மற்றென்று சங்கரபகவத்பாதாள் சரித்திரத்தை இனிய எளிய நடை யில் எழுதி எல்லாரும் படிக்கச் செய்ய வேண்டும். மூன் ருவது சங்கரப்பிரபாவத்தை கதாகாலசேஷபத்திற்கு ஏற்ற படி இனிய கீர்த்தனை வடிவில் ஆக்கி ஆங்காங்கு சங்கீத உபந்யாசங்களை ஏற்பாடு செய்யவேண்டும். அக் கீர்த்தனை யில் பகவான் சங்கரரின் உருக்கமான பாடல்களைப் பெரி தும் சேர்க்க வேண்டும். இந்த மூன்று கைங்கர்யங்களே யும் நிறைவேற்ற பகவத்பாதாள் ஆசீர்வாத பலம் வேண் டும்.
1. சங்கரவிலாசம் :- (பகவத்பாதாள் ஜீவன சரித்திரம்) 2. சங்கர சங்கீர்த்தனம்:- (சங்கர வாக்குகளுடன் கீர்த்
தனை வடிவில் பகவத்பாதாள் சரித்திரம்.)
3. வேதாந்த தீபிகை- (அத்வைத மதத்தின் தொகுப்பு
நூல்)
இந்த மூன்றையும் முதலில் தமிழில் செய்து வெளியிட் டுப் பிறகு ஆங்கிலம் இந்தி தெலுங்கு முதலிய மொழிக
ளிலும் ஆக்கவேண்டும்.
இந்தமாதிரி நூல்கள் தவத்தினலேதான் வரும். சிருங் கேரியில் சில மாதங்கள் தவம் புரிந்து வேதாந்த தீபிகை
யை எழுத விரும்புகிறேன்.
ஆசாரியாள்:- (அச்சா ஐஸா கர்னு சாஹியே) நல்லது
அப்படியே செய்ய வேண்டும். சிருங்கேரிக்கு வந்து உசிதம் போல் இருக்கலாம்.
 
 

ஆத்மஜோதி 25.
இன்னும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசி னுேம்.
பீடத்தின் பெருமை
ஆசார்யாள் அபாரமான அறிவும் அருளும் நிரம்பிய வர்; காலத்திற்கேற்றவாறு அறிவைப் பரப்பும் ஆர்வம் கொண்டவர். இந்த மஹான் பீடத்திற்கு வந்த பிறகு சங்கர மடங்கள் பல கிளை பரவிப் புது விழிப்புடன் அரிய காரியங்களைச் செய்கின்றன. மகா சந்நிதானத்தைக் கண் டதும் எனக்குத் தோடக விருத்தம் நினைவிற்கு வந்தது.
பவதா ஜனதா ஸாஹிதா பவிதா நிஜபோத விசாரண சாரு
மதே கலய்ேச்வர ஜீவ விவேக விதம் பவ ஸங்கர தேசிக மே சர னம்// மெய்யறிவறிந்த துய்யறிவோனே மாந்தர் நின்னுல் மங்கல மெய்தினர் வச ஞானந்திகழச் செய்வாய் காவாய் சங்கர குருவே சரணம்
ஆசாரியாள் அருளியது போல முதலில் ஆஸ்திகர்க ளுக்கும் படித்தவர்களுக்கும் நமது சமய ஞானம் உறுதி யாக வேண்டும். பிறகு பக்குவத்திற்கேற்றபடி அதை எளிய நடையிலும், பாடல்களிலும் பொதுமக்களுக்குப் பரப்ப வேண்டும்.
பிரம்மஞானம்
உள்ளத்தை அள்ளும்படியான அற்புத வாக்குகள் சங்
கர பகவான் இதயத்திற் பூத்து இன்றும் ஞானமணம் வீசு
கின்றன. ஆத்ம போதத்தில் ஒரு வாக்கைக் காண்போம்.
தத் யுக்த மகிலம் வஸ்து வ்யவஹாரஸ் தன்வித:/ தஸ் மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம கக்ஷ்ரே ஸர் பிரிவாகிலே/(சு.59)
பிரம்மம் ஒன்று; அது சச்சிதானந்தம்; எல்லாப் பொ ருள்களும் அந்தப் பரப்பிரம்மத்துடன் கூடியவை; எல்லா விவகாரங்களும் அதைச் சுற்றித்தான் நிகழும். அஃதின்றி எதுவுமில்லை. பால் முழுதும் நெய் பரவியிருப்பது போலப் பிரம்மம் எங்கும் பரவியுள்ளது.

Page 8
252 ஆத்மஜோதி
பாலில் நெய் உள்ளது. ஆனல் அதை எப்படிக் காண் பது? பாலைக்காய்ச்சி, உறைகுத்தி அப்படியே வைத்து காலை யில் கடைந்தால் வெண்ணெய் வரும்; அதை உருக்கினல் நெய் ஆகும். அதுபோல மனித ஜீவன் பால்; அதற்குள் உறைந்த பரமாத்மப் பிரம்மத்தை அடைய வேண்டும்; எப் படி? முதலில் அதைக் குரு கைங்கர்யத்தில் காய்ச்ச வேண் டும். அருளால் சூடேற வேண்டும்; சூடு சமமாக வேண் டும் , அதன் பிறகு தத்வமவலி (அது நீ) என்ற மஹாமந் திரத்தை உறைகுத்த வேண்டும். உறைகுத்தின மனம் சலிக் 蠱 காது சமதமதிதிக்ஷாதி நிலைக்க தனித்திருந்து நிதித்யாச னம் செய்ய வேண்டும். தக்க காலத்தில் தியானத்தால் பிரணவத்தால் கடைந்தால் ஆத்ம போதமான வெண்ணெய் வரும்; அதை மஹா குண்டலினிக் கனலில் உருக்கியதும் கம கம வென்று வாசனை வீசும் நெய் ஆகும். அரணி கடைந்து ஆத்மத்தீ பற்ற வேண்டும். தேகத்தை விறகாக்கி, பிரணவத்தைக் கொண்டு தியானத்தால் கடைந்து பிரம் மச்சுடர் கொளுத்த வேண்டும். இப்போது அரணி கடை யும் காலம். ஜடமான யூரேனியத்திலிருந்தும் ஹீலியத்தி லிருந்தும் மகத்தான சக்தி புறப்பட்டு உலகில் அற்புதம் செய்கின்றன. சித்தான ஆத்மாவை தியானமான ஸைக் ளோட்ரோனில் (அணுமுறி யந்திரம்) சுழற்றினல் சுத்த பர மாத்ம சக்தி புறப்படும். அதனல் அதி அற்புதமான சேவை செய்யலாம். உலகெல்லாம் அந்த ஞானவொளி பரவினல் பிறகு யார் யாரை வெறுப்பது; யார் யாரைப் பொருது வது? எங்கும் அன்பும், அறிவும், அருளும் பொங்கிப்பொ லியும். உலக சமாதானத்திற்கு ஒரே வழி பாரதநாட்டு யோக வேதாந்த ஞானத்தை எங்கும் பரவச் செய்வதுதான்.
தவயோகிகள் அடக்கமாக அமைதியாக அத்யாத்ம மின்சார நிலையங்கள்போல் ஆங்காங்கு தவம் புரிய வேண் டும். அவர்களுடைய அருள் மின்சாரத்தைப் பிடித்துக் கொண்டு தக்க வித்துவான்கள், வேத வேதாந்த தத்து வப் புலவர்கள் நாடெங்கும் அறிவுப்பணி புரிய வேண் டும். இந்தப் பணி செய்யத் துணிவுள்ள தொண்டர் வருக ! வருக!
ஒம் தத் ஸத்
 
 
 
 
 

ஆத்மஜோதி 253 பாரதியாரின் ஞான குரு
(புலோலி மேற்கு - பொ. சபாபதிப்பிள்ளை)
*யாழ்ப்பாணத்துச் சாமி என்று கவி சுப்பிரமணிய பாரதியார் புகழ்ந்து பாடிய தவ சிரேஷ்ட மகான் இலங்கையில் யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலை என்னும் இடத்தில் உத்தம வேளாள குலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சின்னேயா வேலுப்பிள்ளை முதல் தாரமாகச் செல்லம் என்னும் பெண்ணை விவாகம் செய்து கொண்டார்; இவர்களுக்குப் பிறந்த மகளின் பெயர் காமாட்சி அம் மாள். செல்லம் காலம் சென்ற பின்பு கரவெட்டி வடக்கு வதிரிக் குறிச்சி வேளாண்மையைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் லட்சுமி என் ஒனும் பெண்ணை வேலுப்பிள்ளை மணந்து பெற்ற மக்கள் அருளம்பலம், பொன்னச்சி என்னும் இருவர். இந்த அருளம்பலத்தைத் தான் யாழ்ப் பாணத்துச் சாமி” என்று சுப்பிரமணிய பாரதியார் புகழ்ந்து பாபி யிருக்கிருர், அருளம்பலம் சிறு பிராயமாக இருந்தபோதே தந்தை யார் காலம் சென்று விட்டார்.
அருளம்பலம் 1878 - ஆம் ஆண்டளவில் அவதரித்தார். இவர் இந்த நாளில் மேலைப் புலோலி சைவ லித்தியாசாலை என்று குறிக் கும் தம்பசிட்டிப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்று வந்தார். அப்படிக் கல்வி கற்கும் காலத்தில் மகா வித்துவசிரோ மணியான சதாவதானம்
நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் அந்தப் பாடசாலையில் உபாத்தியா
யராக இருந்தார். (அப்போது, கதிரைவேற்பிள்ளை சாதாரண மனி தர்). பள்ளியில் நம் அருளம்பலம் ஒரு விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார். எதிலும் தர்க்கந்தான்; எவரோடும் சேர்வதில்லை.-தனிப் பிறவி. ஆனல் வித்துவசிரோமணி கதிரைவேற்பிள்ளை அவர்களின் நண்பராகி அவரோடு மட்டும் கூடித் திரிவார்.
இவர் பாடசாலையை விட்டபின் சில காலம் ஊரில் இருந்தார். தம்முடைய தந்தை வழிப் பாட்டி காளியம்மை என்னும் மூதாட்டி யின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தம் இனத்தாரான பரமப் பிள்ளை என்பவருடன் சிலகாலம் கம்பளையில் கடையிலே இருந்தார் பின்பு கம்பளையை விட்டு வியாபாரி மூலைக்குத் திரும்பி வந்தார். தாமே தனியாக ஒரு கடை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினர். தம்முடைய காணிகளை ஈடு வைத்தும் விற்றும் பணந் திரட்டினர்,

Page 9
254. ஆத்மஜோதி
வியாபாரம் செய்ய மட்டக்களப்புக்குப் போனர். அங்கே வியா பாரம் செய்யுங் காலத்தில் இவருடன் இருந்தவர் இவரை ஏமாற்றி யதாலும், இவருடைய விளையாட்டுத் தனத்தாலும் அதிக நஷ்டம் வந்த நிர்ப்பாக்கிய நிலையில் நோயும் பீடிக்கவே, பல ஸ்தலங்களுக்கும் சுற்றியாடித் திரிந்துவிட்டு ஒர் உன்மத்தனைப் போல் துறவுக் கோலத் துடன் வியாபாரி மூலைக்குத் திரும்பினுர், இதை இவர் பிற்காலத்தில் பாடிய நீலலோசனி அம்மை ஊஞ்சலில் 16 - ஆம் பக்கத்தில்
சுட்டபணிகார மெல்லாம்
சுமையாக வந்திறங்க
மட்டக்கிழப்பதனில்
வாங்கிய புண்ணென்றரே
என்றும், அருவாச தேவாரம் 3 - ஆம் பதிகத்தில்
நோன்பெலாங் கொண்டே யாடி
நோய்கொண்டே தேக மெங்கும் மான்படு புள்ளி போல
வடுக்கொண்டே வருத்த முற்றேன்; வான்படு முனதுசேவை
வழிநடைப்படி நடந்தேன் ஏன்பட்டே னிந்தப் பாட்டை,
இறையவா விளம்புவீரே. தலமெலாஞ் சுற்றியாடித்
தாள்வலி கொண்டலைந்தேன்; நிலமெலாம் மெழுகிப் பூசை
நிவேதனம் படைத்து நின்றேன். ; கலமெனக் காட்டும் யோகக்
கடுநடை கொண்டே யேகி உலகெலாம் பழிப்பதாக
உன்மத்தணுயலைந்தேன்
என்றும் பாடியிருக்கிருர். சுவாமிக் கோலத்துடன் ஊருக்கு வந்த இவர் எவருடனும் பேசுவதில்லை. இடையிடையே கதிர்காமத்துக்கும் வேறு ஸ்தலங்களுக்கும் போய் வருவார். பிரதானமாக மெளனம்
1910 - ஆம் ஆண்டளவில் ஊரைவிட்டு மறைந்து விட்டார். எங்கே போனுர் என்று எவருக்கும் தெரியாது. சிதம்பரம் போவ தற்காகப் பருத்தித்துறையிலிருந்து தோணியேறி நாகப்பட்டணத்தை அடைந்தார். நீலலோ சனி அம்மன் ஸ்தோத்திரத்தின் முகவுரையில் இதுபற்றி இப்படிக் கூறியிருக்கிருர், A.
 
 

ஆத்மஜோதி 255
"நாகப்பட்டணம் மவுன சுவாமி என்று பெயர் பூண்ட நான் யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு என்னும் ஸ்தலத்திலிருந்து புலன் பொறி கரணம் சிறியாடும் நடைப்படி காலடியாக அலைந்து திரிந்த போது, தன் நிலை படியாததால் நிஷ்டை நிலையைப் படிக்க வேண் டும் என எண்ணிச் சிதம்பரம் போவதாக நாகபட்டணம் வந்த போது, நீலலோசனி அம்மாள் என்னைக் கண்டு, ‘அங்கே ஏன் போகி முய்? என்னிடத்தில் ஞான நிஷ்டையைக் கற்றுக் கொள் என வேண் டியபடி அவ்விடத்தில் நான் ஞான நிலையான ஞான நிஷ்டையைக் கற்று அதில் தேர்ச்சியடைந்த போது, பரிசோதிக்க வேண்டிய காலமாயிற்று' என்றும்
அருவாச தேவாரம் 34 - ஆம் பக்கத்தில் வசன நடையில் நாகப் பட்டணத்தில் சிலகாலம் ஒரே தூக்கமாகவே துரங்கினேன் என்றும்
ஊஞ்சலில் 14 - ஆம் பக்கம் தாலாட்டு’ என்பதில்
நிலைகொண்டு நிற்பதற்கு
நிஷ்டை கொண்டே யிருப்பதற்கு விலைகொண்டு வேண்டும்பொருள் விளங்குநாக பட்டணமே
என்றும் சொல்லியிருக்கிருர், நீலலோசனி அம்மனிடம் உபதே
சம் பெற்ற இவர் நான்கு வருஷ காலமாக நீலலோசனி அம்மன்
கோவில் வாயிலில் நிஷ்டையிலே கிடந்திருக்கிருர், கங்காள ரூபமாகக் காணும் இவருடைய படத்தைப் பார்க்க அது விளங்கும். நான் 1939, 1940 - ஆம் ஆண்டுகளில் சுவாமியைத் தரிசிக்க நாகப்பட்டி
னம் போனேன். இவர் நிஷ்டையிலிருந்த காலத்தில் நாகப்பட்டினத்
தில் வைத்திலிங்கம் செட்டியார், கணபதியா பிள்ளை, இராமசாமிப் பிள்ளை என்பவர்கள் பிரபலமானவர்கள். நிஷ்டை கலைந்ததும், ‘என் பெயர் அருளம்பலம், அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்’ என்று சுவாமி ஒரு சுவரில் எழுதினராம். அந்த இடத்தில் உள்ளவர்கள் அல்வாய் வடக்கு விதானையாருக்கு அந்தச் செய்தியை அறிவித்தார் கள். அவர் சுவாமியின் மைத்துனரான தம்பிப்பிள்ளை என்பவருக்கு அறிவித்தார்.
தம்பிப்பிள்ளை நாகப்பட்டினம் சென்று சுவாமியைச் சந்தித்தார். பின்பு ப்லர் போய்ச் சந்தித்தார்கள். நிஷ்டையில் இருந்த காலம் 1910 - 14 எனத் தெரிகிறது.
நிஷ்டை கலைந்து சிலகாலம் நாகப்பட்டினத்தில் தங்கியிருந்து

Page 10
256 ஆத்மஜோதி
இடையிடையே வேதாரண்யம். அகத்தியாம்பள்ளி, மாயவரம், காரைக் குடி போன்ற பல இடங்களுக்குச் சென்று தங்கியிருந்தார். ஆணுல் இவருடைய பிரதான வாசஸ்தலம் நாகப்பட்டினந்தான்.
புதுவையிலுள்ள பல அன்பர்களின் அழைப்புக்கு இணங்கிச் சுவாமி புதுவைக்கு 1914 - ஆம் ஆண்டுக்குப் பின்னே சென்றிருக்கிருர் புது வை அன்பர்களில் பிரதானமானவர் மரியநாதன் என்னும் பெரியார். மரியநாதன் 1940 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் 10 ஆம் - தேதி அங் கேயிருந்து சுவாமிக்கு நாகப்பட்டினம் அனுப்பிய போஸ்ட் கார்டு ஒன்றைச் சில காரியத்தை எனக்கு விளக்குவதற்காகச் சுவாமி எனக்கு ஒரு காகிதம் எழுதி அதனேடு இணைத்து அனுப்பியிருந்தார். அது என்னிடம் இன்னும் இருக்கிறது.
எந்தை எம் பருமானிசன் அருளம்பல மோன குருநாதர் அருளிச் செய்த நூல்களில் சந்தேக நிவிர்த்தி' என்னும் ஒன்று புதுவையில் ஜகந்நாதம் அச்சுக்கூடத்தில் 1934 - ஆம் ஆண்டிலும் "கற்பு நிலை, என்னும் நூல் புதுவையில் கலாநிதி அச்சுக் கூடத்தில் 1926 - ஆம் ஆண்டிலும், 'சிவதரிசி , அருவாச தேவாரம்" என்னும் நூல்கள் புதுவைக் கலாநிதி அச்சுக்கூடத்தில் 1927 ஆம் ஆண் டிலும் அச்சாயின. பிற நூல்கள் எல்லாம் 1928 - ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னும் அச் சாயின. நூல்கள் அச்சான காலம் அவற்றை எழுதிய காலத்துக்கு மிகப் பிந்தியதே. ஒரு நூலை வரிசைக்கிரமமாக எழுத மாட்டார். கையில் கிடைத்த கடுதாசிகளில் எழுதி அப்படி யே போட்டு விடுவார். எதிலும் பற்று இல்லாதவர். நான் இவரு டன் மெத்த நெருங்கிப் பழகியவன். இவருடைய போக்கை எனக்கு நன்முக உணர்த்தியிருக்கிருர், எவரும் கிட்டப் போய்க் கதைக்க முடி யாது. எவருக்கும் பயம். சம்மனங்கூட்டி அமர்ந்திருக்கும் இவரது திருவுருவப் படத்தைப் பார்க்க, இது ஏன் என்று விளங்கும். திரு விழியால் அருளைப் பெய்யும் அறங் கனிந்த உள்ளம். முன்னிலையில் சுட்டுப்பார்வையில்லாமல் தங்கப் பதுமை உருவான ரிஷியாகக் காட்சி அளிப்பார். அன்பர்கள் நாளுக்கு நாள் இரந்து கேட்கும் வேண்டு கோளுக்கு இணங்கியே தம் நூல்களை அச்சிடச் சம்மதித்திருப்பார். முக்கியமான நூல்கள் புதுவையில் அச்சானதிலிருந்து, புதுவைக்கும் சுவாமிக்கும் நெருங்கிய போக்குவரத்தும் தொடர்பும் இருந்திருக்கின் றன என்பது தெளிவு.
இந்தியாவில் இவரை “யாழ்ப்பாணத்துச் சாமி என்று குறிப்பது சர்வ சாதாரணம். ஒர் உதாரணம்; நான் 1939 - ஆம் ஆண்டு டிசம் பர் மாசம் முதல் முறை இந்தியாவுக்குப் போனபோது, சுவாமியைத் தரிசனம் செய்ய நாகப்பட்டினம் சென்று ஸ்டேசனிலிருந்து வெளியே

ஆத்மஜோதி 257
நடந்தேன். ஒரு கரத்தை (வண்டிக்) காரன் அங்கே நின்றன். அவ னேப் பார்த்து, "அருளம்பலச் சாமியாருடைய இடத்துக்குக் கொண்டு போய்விடு' என்று கேட்டேன். ‘அப்படி இந்த ஊரில் அருளம்பலச் சாமி என்று ஒரு சாமி இல்லையே” என்ருன்; சொற்ப நேரம் அவன்
தலையை அசைத்து மேலும் கீழும் பார்த்து விட்டு 'மவுனு குரு சாமி யோ?” என்று கேட்டான். நான் பதில் சொல்ல வாய் குவிக்குமுன் மீண்டும், “யாழ்ப்பாணத்துச் சாமியா? பூந்தோட்டத்தில் ஐயாவா? என்று கேட்டான். நான், "ஆமாம் என்றேன். அவன் என்னை அவ
ருடைய வாசஸ்தானமான நீலலோசனி அம்மன் பூந்தோட்டத்தில்
கொண்டு போய்விட்டான். அவர் பூந்தே ட்டத்தில் இருந்த படியால் அவரை அங்கேயிருந்தவர்கள் பூந்தோட்டத்தில் ஐயா" என்று சொல் லுவார்கள்.
'தேவிபத மறவாத தீரஞானி, பாவியரைக் கரையேற்றும் ஞா னத் தோணி 'திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர் கோன் 'சங்கரன்' என்றெல்லாம் இவரைப் பாரதியார் வியந்து பாடியது சாலப் பொருந்தும்.
தென்புலோலியூர் புற்றளையாம் பதியில் கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் என் குல தெய்வமான விநாயகப் பெருமான் திருவ ருள் கூட்டி வைக்க 1929 - ஆம் ஆண்டு நான் எனது பத்தொன்ப தாம் வயசில் வலிய யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். பாவியரை கரையேற்றும் ஞானத் தோணியில் அப்போ என்னைத் தூக்கிப் போட்டு என்னை ஆட்கொண்ட அந்தத் திருவிழியால் அருளைப் பெய்யும் வான வர்கோன் யாழ்ப்பாணத்தீசன், கல்லும் கரையும்படி பூரீநாகை நீல லோசனி அம்மன் பேரில் பாடியிருக்கும் ஸ்தோத்திரமும், அந்த அம் பாள் பேரிலேயே பாடியிருக்கும் ஊஞ்சலும் இதற்குச் சான்ருகும்: சர்வலோக நாயகியான நீலலோ சனி அம்பாள் தமக்கு நேரே வந்து நிஷ்டை நிலையை உபதேசித்த சந்தோஷத்தால் 7 - ஆம் தோத்திரத் தில்
குவலயம் படைத்திட்ட
நாகை நீலாட்சியே குருவாக நின்ற கொடியே
என்றும் 18 - ஆம் தோத்திரத்தில்
குருவான நாகையிலே
கொடியாக வெழுகின்ற குமரியே நீலாயதாட்சியே

Page 11
258 ஆத்மஜோதி
என்று அந்த அம்மையாரை அன்பினுல் குமரியே என்று ச ரசமாக அழைத்தும், 4 - ஆம் தோத்திரத்தில்,
பரநேய நிஷ்டை செய்து பலருக்கும் பேரின்ப
நி?லகட்டப் பணிக்குவாய் பார் பூத்த பரையினளே
என்றும், பலரும் பெரிய நிலையை அடைய வேண்டு மென்ற ஜீவ காருண்ய நிறையோடு திருவிழியால் அருளைப் பெய்து அறங் கனிந் தொழுகும் உள்ளத்தோடு பாடிய பாடல்கள் எந்தக் கல்நெஞ்சையும் கரையச் செய்யும். மேலும் ஊஞ்சலில்
அண்டமான ஊஞ்சலிலே
அடிமுக்கோணப் பலகையிலே
கொண்டபடி மூவுலகும்
கொடியேறும் முச்சுடரால்
தண்டலாக வளர்ந்தபடி
சடைநாகங் குலுங்கியாடக்
கண்டதிருமாலைக் கண்டு
கண்வளராய் நீலாட்சி
என்று கசிந்துருகிப் பாடி, அந்த உலக மாதாவை ஊஞ்சலாட்டு வதை நினைக்கும்போது இரும்பும் உருகுமே.
"தேவிபத மறவாத தீரஞானி’ என்று சொல்லவும் வேண்டுமோ? சர்வலோக நாயகனுன பூரீ பாலசுப்பிரமணியனை வாரி அள்ளிஅனைத்து முத்தமிடும் அருமைத் திருக்கரங்களால் மகாபாவியான எனக்கு 1939 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் சாதங்கறி சமைத்து இலை போட்டு அதில் சாதங்கறியைப் படைத்து, கீரைக் கறிக்கு 'நல்லெண்ணெய் மெத்த உவப்பு' என்று சொல்லி அதில் கொஞ்சம் நல்லெண்ணையும் ஊற்றி என்னைச் சாப்பிடும்படி சொல்ல, நான் சாப்பிடும்போது ஒரு குழந்தைப் பிள்ளை போல் என் முன்னேயிருந்து மழலையாகவும் சரச மாகவும் உள்ளம் விட்டு என்னேடு பேசிக் கொண்டிருந்த திருமுகூர்த் தத்தை உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் என் உள்ளம் உருகுகிறது மேலும் அந்த யாழ்ப்பாணத்தீசர் 1931 - ஆம் ஆண்டளவில் எனக் குப் புற்றளையில் பிள்ளையாரின் முதல் மண்டபத்தில் தரிசனத்தில் தோன்றி நான் பாடுவதைக் கேட்கத் தமக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் தம்மைக் குறித்துப் பாடும் படியும் கட்டளையிட 'நான் படிப் பில்லாத மூடன்; எனக்குப் பாடத தெரியாது சுவாமி” என்று சொல்ல 'தத்துவம் தொண்ணுாற்ருறு' என்று டாடும்படி திருவாய் மலர்ந்தரு

ஆத்மஜோதி 259
விப் பல பாடல்களைப் பாடுவித்தது அவருடைய சர்வ வல்லமையை யும் சர்வசித்தியையும் விளக்குகின்றன. என்னைப் போல் மொக்கனும் முடனும் இந்த உலகத்தில் உண்டோ?
எட்டுநாளாக வூட்டி
ஈரெட்டுப் பதினுறென்று திட்டமா யெண்சட்டத்தில்
திருத்தமாய் விளக்கி வைத்தும் மட்டமாய்ப் பதினெட்டென்று
மற்றநாள் சொல்வேனென்றல் சட்டம்பி யாரென்செய்வார்
சாற்றுவீர் சாந்தமூர்த்தி கண்ணிலான் குருடனென்றும்
காதிலான் செவிடனென்றும் தொண்ணுாறு நாளாய்ச் சொல்லிச்
சொல்லடா இப்போ என்னக் கண்ணிலா னுமையென்றும்
காதினுற் பார்ப்பானென்றும் அண்ணலே சொல்வே
னென்றல் அசட்டினை மொழியலாமோ?'
என்று என்னுடைய அசட்டுத்தனத்தை நான் பாடியதும் பொ ருத்தமே. ஆயினும், சுவாமி இன்றும் அன்றும் என்றும் எனக்கு மழலையைப் பொழியும் குழந்தை" அருளம்பலந்தான். மானிடப் பத ரான எனக்கே இப்படி என்ருல், அருட்செல்வத்தைத் தமது பிறப்பு ரிமையாகக் கொண்ட திருவருட் செல்வம் சுப்பிரமணிய பாரதியா ருக்கு எந்தவிதம்திருவிழியாலருளைப் பெய்திருப்பார் என்றுநினைக்கத்தான் போமோ, சொல்லத்தான் போமோ? அருளம்பழ ரசத்தை மூக்கு முட்டக் குடித்த பாரதியாருக்கு ஆனந்த மேலீட்டினுல் இவரைப் பல படியாகத் துதித்துப் பாடியது ஒரு புதுமையோ?
சுப்பிரமணிய பாரதியாருக்கு இவர்தான் வாய்த்த குரு; பாரதி யாரை அருளம்பலம் முற்ருகத் தன்மயமாக்கி விட்டார். சுவாமியின் திருவுருவப் படங்களுடன் பாரதியாரின் படத்தையும் வைத்து ஒப்பு நோக்கிப் பார்க்கும்போது எதையும் மதியாத, எதிலும் பதியாத பிரம்ம நோக்கான அக்கினிப் பார்வை இருவரிடமும் புலப்படும், பார தியாருக்குச் சுவாமி தம்மை நன்முக உணர்த்தியிருக்கிருர், சுவாமி யைப் பற்றிப் பாரதியார் வர்ணித்துப் பாடியதெல்லாம் முற்றும் பொருத்தமே. சுவாமியின் திருமேனி உருக்கி வார்த்த சொர்ணலிங் கம். ஒரு தங்கப் பவுனை அவருடைய திருமேனியில் வைத்தால் அதன்

Page 12
260 ஆத்மஜோதி
ஒளி அந்தத் திருமேனியின் பிரபையில் லயித்துவிடும்.
1929 - ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சுவாமி இங்கே வந்தார். வியாபாரி மூலையில் தம் பிதா வழி உறவினர் சிலரோடும் வதிரியில் தம் சகோதரியுடனும் தங்கி யிருந்தார். 1930 - ஆம் ஆண்டின் பிற் பகுதியில் திரும்பவும் இந்தியாவுக்குச் சென்று விட்டார். வியாபாரி மூலையில் பிரபல வர்த்தகராயிருந்து காலஞ்சென்ற திரு. வெ. க. சிவப்பிரகாச பிள்ளை அவர்கள் நாகப்பட்டினத்தில் அக்கரைக் குளத் துக்குச் சமீபமாக ஒரு காணி வாங்கி மடம் கட்டி, அதில் சுவாமி யை இருத்தினர். 1940 - ஆம் ஆண்டு நான் நாகப்பட்டினம் போன போது, சுவாமி அந்த மடத்தில் இருந்தார். பின்பு 1942 - ஆம் ஆண்டு நவம்பர் மாசம் 27 - ஆம் தேதியளவில் சிவப்பிரகாசபிள்ளை யோடு இந்தியாவிலிருந்து திரும்பி வியாபாரி மூலைக்கு இவர் வந்தார். சிவப்பிரகாச பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார். நாகப் பட்டினத்திலிருந்து வெளிக் கிளம்பியபோது சுவாமிக்குச் சடை வள ர்ந்திருந்ததால், அதை நீக்கி இவர் நிர்வாணக் கோலத்திலே குந்தி யிருக்கும் நிலையில் ஒரு படம் எடுத்தோம். 1942 - ஆம் ஆண்டு டிசம்பர் மாசம் 3 - ஆம் தேதி சம்மனங் கூட்டியபடி நிஷ்டையில் அமர்ந்திருந்து மகா சமாதி நிலையையே அடைந்தார். டிசம்பர் மாசம் 5 - ஆம் தேதி மாலையில் இவரை வியாபாரி மூலை வீரபத்திர சுவாமி கோவிலுக்கு அருகாமையில் அரசாட்சியாரிடம் உத்தரவு பெற்று வே தாகம விதிப்படி சமாதி வைத்தோம். சமாதி ஆலயமுங் கட்டி நித் திய பூசையும் நடந்து வருசிறது. இதைத் தர்ம பரிபாலனம் செய்ப வர் சிவப்பிரகாச பிள்ளையின் குமாரரும், திரிகோணமலை, பூரீ கிருஷ்ண
படமாளிகையின் சொந்தக்காரருமான திருவாளர் பாலசுப்பிரமணிய
sir26T.
பொருளாகக் கண்ட பொருள் எவைக்கும் முதற் பொருளாகிப் போதமாகித்
Ο தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப்
பருகவந்த செழுந் தேனுகி
அருளானுேர்க்கு அகம் புறமென்று உன்னுத
பூரண ஆனந்தமாகி
இருள்தீர விளங்கு பொருள்யாது அந்தப்
பொருளினையே இறைஞ்சி நிற்பாம்.
క్ష
- தாயுமானவர்.
O
o
ס
s
o
o
 
 

ஆத்ம ஜோதி 261
6 g.
தூண்டு தவ விளக்கனையார் ’
( வித்துவான்: வசந்தா வைத்தியநாதன்.)
திகழ்வது திருமுனைப்பாடி நாடு. அங்கு தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர்' என்ற தலமுண்டு. அத் திருத்தலத்தின் கண் ஒழுக்க நெறி குன்றது.
உலகின் வளங்கள?னத்தையும் தம்முள்ளே கொண்டு
* வேளாளர் என்பார் விருந்திருக்க உண்ணுதார் ' என்று பேசப்படுகின்ற வேளாண் குலத்திலே வந்து குறுக் கையிர் குடியில் தன் பெயருக்கேற்ப கொடைத் தன்மை யிலும் சிறந்து விளங்கினர் 'புகழனுர்’ என்ற பெரியார். அவர் தம் குடிப் பெருமைக்கேற்ப ஒர் மாசில் மகளாம் * மாதினியார் ' என்பவரை திருமணம் நேர்ந்தார்.
மாதினியாரின் மணிவயிற்றிலே செந்தாமரையினில் திகழும் திருமகளாம் ' திலகவதியார் ' பிறந்தார். திலகவதியார் பிறந்து சில ஆண்டுகள் கழிந்த பின் எல்லை யில்லாத கலைத்துறைகள் தழைக்கவும், அருந்தவத்தை மேற்கொண்டார் தம் நெறி வழாமல் நிற்கவும், உலகின் புற இருளை நீக்கி, ஒளி யுமிழ்கின்ற கதிரவனைப் போன்று , மக்கள் மன இருள் இரிய மருள் நீக்கியார் ' என்ற மகனுர் திருவவதாரம் செய்தார்.
புகழஞரும் தன் மகனுக்குச் செய்யவேண்டிய மங்கல வினைகள் யாவும் குறைவறச் செய்தார். மருள் நீக்கியாரும் இளங் குழவிப் பதங்கடந்தார் மயிர் வினை மங்கலம் முதலிய சடங்குகளை முறையாக நடத்திப் பின்பு, முகிழ்ந்த மனத்தினை மலர்விக்கின்ற கல்வியைப் பயிலுவித்தனர். ** மறுவொழித்த இளம் பிறை போல் ' மைந்தனரும் வளரலுற்றர். திலகவதியாரும் பன்னிரண்டு அகவைகள் கடந்து மணப்பருவம் அடைந்தார். சிறந்த ஆணழகரும், அரியேறு ஒப்பாரும் தானைத் தலைவரும், செஞ்சடை அ ண் ண லி ன் சீரடிகளில் ஆழ்ந்த பற்றுடையவருமான * கலிப்பகையார் ' என்ற பெரியார் மகள் வேண்டிப் புகழ னரிடத்துச் சிலரைத் தூது அனுப்பினர். புகழனரும் மணவினைக்கு இசைந்தார்.

Page 13
262 ஆத்ம ஜோதி
இந்நிலையில் மணம் முடிவதற்குள்ளாக பகைவர்கள் கலிப்பகையாரது நாட்டின் மேல் படையெடுத்தனர். அவர்களை வெற்றி கொள்வதற்காக, மன்னனின் ஆணைக் கிணங்கிய அவர் போர்க்கோலம் தாங்கி வடபுலம் சென் றர். இடைக்காலத்திலே
* நெருநல் உளனுெருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்தி வ் உலகு ' .
என்ற நிலையாமையையே அணிகலனுகக் கொண்ட இவ் வுலகத்திடமிருந்து புகழனர் விடைபெற்ருர், என்றும் பிரியாத பெரு வாழ்வெய்தும் அமர உலகை விரும்பி, சுற்றத்தையும், மக்களையும் துகளாக நினைத்து கற்பு நெறியினின்று வழுவாமல் கணவனுடன் மாதினியாரும் சென்ருர்,
பெற்றேர்களை ஒருமித்து இழந்த திருவனைய திலக வதியார், மன்னவற்காக போர் மேற்கொண்டு வடபுலம் சென்ற கலிப்பகையாரும் பொருகளத்திலே உயிர் கொடுத் துப் புகழ் கொண்ட செய்தியைக் கேள்வியுற்ருர் எந்தையும், தாயும் என்னை அவர்க்கு மணம் புரிவிக்க இசைந்தமையால் அவ்வினடி முதல் நான் அவர்க்கே உரியவள். ஆகையால் எனது உயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என உறுதி பூண்டார். அவ்வமயம் மருள் நீக்கியார் அங்கு போந்து * அன்னையும் அத்தனும் அகன்ற தன்பின் உம்மிலே அவர் களைக் கண்டு யான் வணங்குகின்றேன். தாங்களும் என் னைத் தனியாகத் தவிக்கவிட்டு ஏகுவீர் எனில், யான் உமக்கு முன் உயிர் துறப்பேன் இஃது உறுதி' என அழுது அரற் றித்தமக்கையாரின் தாளினை பணிந்தார். தம்பியாரின் நிலை கண்டு வருந்திய தேவியாரும், உடலால் வாழாது உள்ளத்தினுல் வாழத் துணிந்தார். இதனைச் சேக்கிழார் சுவாமிகள்
* தம்பியர் உளராக வேண்டும் ' என வைத் ததயா உம்பருல கணையவுறு நிலை விலக்க உயிர்தாங்கி அம்பொன்மணி நூல்தாங்கா தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர் மனத் தவம் புரிந்து திலகவதி யாரிருந்தார்.
எனச் சுவைபடச் சுட்டுகின்ருர்,
 

ஆத்ம ஜோதி 263
காலதேவனது கைவண்ணத்தினுல் மருள்நீக்கியாரும் வளர்ந்தார். நன்நெறியைப் பகுத்துணர ஈசன் அருளாமை யால் கொல்லாமை நோன்பு கொண்ட சமண சமயத்தைச் சார்ந்தார். பாடலி புரத்திலுள்ள சமணப் பள்ளியை அணுகி அருக சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இவரது நுண்ணறிவின் திறப்பாட்டை உண ர் ந் த சமணர்கள் வருக்குத் தர்ம சேனர் ' என்ற பட்டம் கொடுத்துச் சிறப்பித்தனர். தருமசேனரும், பலரையும் தனது சொல் வன்மைய ல் வா தில் வென்று தலைமைப் பதவி ஏற்றுச் சிறப்புடன் திகழ்ந்தார்.
தீ நெறியிலே தம்பியார் ஒழுக, சிவநெறியாம் செந் நெறியிலே ஒழுகும் தமக்கையார் அட்ட வீரட்டங்களுள் ஒன்முகிய திருவதிகை வீரட்டானத்தை வந்தடைந்தார். செம்பவளக்குன்ரும் அ தி  ைக அத்தனுரை ப் பணிந்து கோதில் சிவ சின்னங்கள் தாங்கினர். தமது திருக்கரங் களாலேயே புலர்வதன்முன் திருவலகிடுவார்; ஆன் சாணத் தினல் திருமெழுக்கிடுவார். நறிய மலர்களைக்கொய்து, இண்டைகளும், மாலைகளும் சமைத்து ஆண்டவனுக்கு அளிப்பார். இவ்வண்ணம் இறைவனின் திருப்பணிகளிலே தன்னை ஒருமைப்படுத்தி நாட்களைக் கழித்தார். அவ்வமயத் திலே தம்பியார் பரசமயப் படுகுழியிலே விழுந்ததைக் கேள்வியுற்றுத் துயருழந்து
* தூண்டுதவ விளக்க%னயார் சுடரொளியைத் தொழு(து) ‘என்னை ஆண்டருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனே ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தாள வேண்டும்'.
என விண்ணப்பம் செய்தார். தவமென நினைத்துத் தலை பறித்து நின்றுண்ணும் தீ நெறியிலே வீழாமல் அவனுக்கு அருள்புரியும் என அதிகைப் பெருமான் அடி பணிந்தார். அணங்கனையாரின் வேண்டுகோட்கு இரங்கிய அண்ணலும் *சூலை நோய் கொடுத்து அவனைத் தடுத்தாட்கொள்கிருேம்'. என அசரீரியாகத் திருவாய் மலர்ந்தார்.
உடன் பாடலிபுரப் பள்ளியிலுள்ள தருமசேனரின் குடருக்குள், வடமுகாக்னியும் கொடிய விடமும், வச்சிரம் போன்ற கொடிய ஆயுதங்களும் ஒன்று சேர்ந்து வருத்து வதைப் போன்று சூ லை நோ ய் புகுந்து வருத்தியது. தாங்கலாற்ருது தருமசேனரும் அரற்றினர்; அழுதார்;

Page 14
264 ஆத்ம ஜோதி
துடித்தார் சமணர்களின் மருந்தும் மந்திரமும் பயனற்றுப் போயின. முந்தைய உணர்வுகள் வரப்பெற்ற அவரும் தனது சமையற்காரனை அழைத்து தனது நிலையினைத் தமக் கையாருக்கு உணர்த்தி வருமாறு பணித்தார். அவனும் அவ்வாறே செய்தான். ஆணுல் அம்மையாரோ 'நன்னெறி அறியாத சமண் பள்ளிக்கு யான் வரமாட்டேன்' என மறுத்தார். அடுதல் தொழில் வல்லானும் மீண்டு சென்று இதனைத் தருமசேனருக்குக் கூற, அயர்வெய்திய அவரும் தமக்சையாரிடம் மன்னிப்புக் கோர திருவதிகை நோக்கி விரைந்தார்.
பாய், உறியிலே தொங்கும் கு ன் டி  ைக முதலிய சமணச் சின்னங்களை ஒழித்துத் திலகவதியார் வதியும் திருமடத்தை வந்தணைந்தார். பின்பு தமக்கையாரது பாதமிசைச் சென்னியினைச் சூட்டி
'நந்தமது குலஞ் செய்த நற்றவத்தின் பயன் அனேயீர்! இந்தவுடற் கொடுஞ் சூலைக் கிடைந்தடைந்தேன்
இனி மயங்கா(து)
உய்ந்துகரை ஏறுநெறி உரைத் தருளும்'.
என உரைத்தார். தா ளி னை யி ல் விழுந்த தம்பியை ஆர் வ மு ட ன் எடுத்தனைத்துக் கற்றை வேணியாரது கழலினைப் பணியப் பணித்தார். " திருநீறு அளித்தார். அக இருள் நீங்கப் பெற்ற தரும சேனரும் திருவதிகைக் கோயிலினுள் புகுந்து, பிறை சூடிய பெம்மானுக்குத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு வரப் பெற்றவராய், மாற்ருர் புரம் எரிய நகைத்த வேதியரை மருட்டுகின்ற பிணி ஒழுக்க இறைஞ்சி ' கூற்றயின வாறு விலக்ககிலிர்' என எடுத்து பாமாலை புனைந்து சூட்டினர். பிணி நீங்கப் பெற்ருர், இறைவன் திருவாக்கினல் 'திருநாவுக்கரசர்' என்ற திருநாமம் சூட்டப் பெற்ருர்,
இவ்வாறு சமண் சமயத்திலிருந்து சைவ உலகிற்கு திருநாவுக்கரசரைத் திருப்பிய பெருமை தூண்டு தவ விளக்கனையாரைச் சேர்ந்தது என்று கூறல் மிகையோ?
* மயிர்வினை மங்கலம் என்பது குழந்தையைப் பள்ளியில் வைக்கும்
காலத்தில் முன் மயிரை நீக்குவது வழக்கம். இதனைச் ' செளளக் கல்யாணம் ' என்று கூறுவர்.
 

ஆத்ம ஜோதி 265 பாரதியாரின் ஞானகுரு
யாழ்ப் பா ண த் து ச் சா மி
அருளம்பலம்.
ー・S委。2・一
யாழ்ப்பாணன்.
தெங்கினுெடு பனமரமும் கமுகும் சேரத்
தேன்கதலி பலா வினுெடு மாவும் மண்டி இங்கிதஞ்சேர் வதிரிதனில் எழுந்த கோவே
இளமைதரும் காலமதி லெமது வூரில் பொங்கியெழும் அலை படியும் கடலி ஞெரம்
புன்னமரம் வளர்ந்தவுயற் கோயில் சாரல் தங்கியுயர் விளையாட்டுத தோழ ரோடும்
தலமதில் நீ தினமமர்ந்தாய் சார்ந்தும் நீதான்
பள்ளிதனில் கல்வியதும் பயின்றவ் வித்தன்
பார் புகழும் கதிரைவேற் பிள்ளை தன்னின் உள்ள முறை சீடனுகி யுயர்ந்து நின்றய
உயர்மலை சேர் கம்பளையில் கடையிற் சேவை கொள்ளலுமே தனிக்கடையும் வைக்க வோர்ந்தாய்
குணதிசையூர் மட்டுநகர் சிலகால் சென்றே மெள்ளவுநீ துறவியென மாறி வந்தாய்
வியாரி மூலதனில் விளக்க மானுய்
ஈரிரண்டு வருடமது வுணவே யின்றி
எழில்மிகுந்த பாரதத்தின் நாகை தன்னில் பேரரிய ஞானியென நிட்டை யெய்திப்
பெருங்கவியோன் பாரதியும் புகழ வைத்தாய் ஊரறிய இன்றுனது வுண்மை காட்டி
உளமதிலேன் ஒளியெனவே தோற்றம் காட்டிச் சாருமு ன தருஞ்சிடன் சபா பதியைத்
தமியனுமுன் தூண்டவுநீ யன்று வைத்தாய்

Page 15
266 ஆத்ம ஜோதி உன் திருவை உன்பதத்தை உளத்தே போற்றி
உன்பெருமை உலகமதி லறியக் காட்டி என் புருகும் பதமெடுத்தும் இங்கு வந்தோர்
எழிற்கவிஞர் புரவலர்கள் அறிஞ ரெல்லாம் நன்தமிழில் பாடல்களும் உரையுந் தூவி
நற்பதத்தைப் போற்றுவர்தாம் ஞானி நீதான் அன்பினையும் அருளினையும் பொழிவா யிந்த
அறிஞர் முற் போக்கினரை வாழ்த் தி வைப்பாய்.
SkereTeMTeLSeLerSLrLTLTeLekLeMLeLSLLMLMLMSMTeMMLMMLTLLTeeTekTeTeL kTMkTrerLerLeLeTeLLTeTSTMLSSTLkS eLS T eSESLeeS
ஆன சமயம் அது இது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் உளங் கடந்த உருவது வாமே.
-திருமூலர்.
வேறுபடும் சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம் பொருளே! நின் விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம் மா!
-தாயுமானவர்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லே நாணுமே சென்றே புகுங்கதியில்லை நுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
-திருமூலர்,
சைவ முதலா மளவில் சமயமும் வகுத்துமேற்
சமயங் கடந்த மோன சமரசம் வகுத்தநீ யுன்னே யான் அணுகவுந்
தண்ணருள் வகுக்கவிலையோ பொய் வளரும் நெஞ்சினர்கள் காணுத காட்சியே
பொய்யிலா மெய்யறிவிற் போதபரி பூரண வகண்டிதா காரமாய்ப்
போக்குவரவற்ற பொருளே.
கூதாயுமானவர்.
ஆஆேபிபி.ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.
 
 
 

ஆத்மஜோதி 267
கடோப நிஷதக் கருத்து
(ழறி சுவாமி சிவானந்தர்)
- முன் இதழ்த் தொடர்ச்சி -
பிரணவம்
70. ஒம் பிரணவம், ஏகாக்ஷரம், ஒங்காரம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது.
71. ஓம் பிரம்மத்திற்கு ஒரு பிரதிமை அல்லது சின் னம் அல்லது பகரப் பொருள். அது சப்தப் பிரம்மம்.
72. ஒம் எல்லா ஒலிகளுக்கும் அடிப்படை. அது பிரம்மத்தின் முதல் வெளிப்பாடு
73. ஒம் பிரம்மத்தின் மிக நிரம்பப் பொருத்தமான ஒலி அல்லது குறியீடு. அது மூ வெழுத்துக்களை - அ, உ, ம் - உட்கொண்டிருக்கிறது.
74. ஒலி, சொல் அல்லது பெயர் பிரிக்க முடியாத வகையில் எண்ணம் அல்லது கருத்துடன் சம்பந்தப்பட்டி ருக்கிறது.
75. ஓம் உண்மையாகபிரம்மமே. ஓம் உண்மையாக உறு பல உயர்வானது. யார் ஒம் என்னும் சொல்லை அறிகி ருணுே அவன் தான் விரும்பும் ஏதேனையும் உண்மையாகப் பெறுகிருன்.
76. ஓம் பிரம்மம்தானே. ஓம் என்பதும் பிரம்மமும் பிரிக்க முடியாதபடி தொடர்புடையன. ஓம் பிரம்மமா கவே தியானிக்கப்பட வேண்டும்.
இ 77. ஓம் o: பிரம்மம் நிர்க்குணப் பிரம்மம்
ரண்டினதும் சின்னமே .
78. ஒருவன் சகுண பாவகத்துடன் பிரம்மத்தைத்
தியானித்தால் அவன் சகுண அல்லது காணப்படும் பிரம் மத்தை அடைவான்.

Page 16
268 ஆத்மஜோதி
79. ஒருவன் நிர்க்குண பாவகத்துடன் ஒம் என்ப தைத் தியானித்தால் அவன் நிர்க்குண பிரம்மத்தை அடை வான் ,
80. புலப்பாடான (வியக்த) பிரம்மம் அடையப்பட வேண்டும். புலப்படாதது (அவ்யக்தர் அறியப்பட வேண்
டும்.
81. ஒம் என்பதே சிறந்த ஆதாரம் அதுவே புலப் பாடான அல்லது சகுணப் பிரம்மத்தையும் உறுபல உயர் அல்லது நிர்க்குணப் பிரம்மத்தையும் எய்தப் பெறுவதற் குச் சிறந்த சாதனம்.
82. யார்பிரம்மத்தைத்தியானிக்கிருனே அவன் பிரம்மத் துடன் அநந்நியமாகி பிரம்மம் போல வழிபடப் படுவதற் குத் தகுதியானவனகிருன்,
83. பிரம்மஞானி பிரம்மமே யாகிருன்.
84. ஒம் என்பதே உறுபல உயர் ஆதாரம். யார் இவ்வாதாரத்தை யறிகிருனே அவன் பிரம்மமாக இவ்வு லகில் வழிபடப் படுகிருன். அவன் பிரம்மம் போன்று வழி படப்படுகிருன் ,
தலைசிறந்த ஆன்மாவின் இயல்பு
85. ஆத்மன் பிறப்பிறப்பற்றது. அது ஏதேனும் ஒன் றிலிருந்து உண்டாகவில்லை. அது ஆதியந்த மில்லாதது, புராதனமானது. உடல் கொல்லப்பட்டாலும் அது கொல் லப்படுவதில்லை.
86. மண்ணிலிருந்து கடம் உண்டாக்கப் படுவதுபோல் பிரம்மம் உண்டாக்கப் படுவதில்லை. அது காரணங் கடந் தது. அது உருவாக்கிய பொருட்களுக்குச் சம்பவிக்கும் எல்லா மாற்றங்களிலிருந்தும் சுவாதீனமானது.
87. L lg LöLolb தேய்வின்றியது, நிர்விகாரமானது.
பிரம்மம் முடிவற்றதாயிருப்பதால் அது ஒருகாலும் தேய் வதில்லை.
 
 

ஆத்மஜோதி 269
88. மாற்றங்களும் முதிர்ச்சிகளும் பிரம்மத்தில் நிகழ் வதில்லை. ஏனெனின் அது மாறுவதில்லை, என்றும் நிலையா னது. ஆகையால் அது புராதனமானது.
89. கடம் உடைந்தாலுங் கூட கடாகாயம் பாதிக் கப் படாதிருப்பது போல் உடல் கொல்லப்பட்ட போதி லும் இவ்வாத்மன் அழிக்கப் படுவதில்லை, பாதிக்கப்படுவ தில்லை.
90. இவ் வாத்மன் அற முடிவாக நுட்பமானது. அது வாளினற் கொல்லப்பட முடியாது.
91. அறியாமை மிகுந்த மக்கள் இவ் வுடம்பை ஆன் மாவாகக் கருதி ஆன்மாவை உடம்புடன் ஒன்றிக்கிருர்கள்.
92. கொல்வோன் இவ்வுடம்பை ஆன்மாவாகக்கருதி 'நான் கொல்கிறேன்’ என்று எண்ணினல், கொல்லப்படு வோன், "நான் கொல்லப்படுகிறேன்" என்று எண்ணினல் அப்போது அவர்கள் இருவரும் ஆத்மனை அறிகிருர்களில்லை. அவர்கள் இருவரும் அறியாமை மிகுந்தவர்களே. ஆன்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை.
93. நுட்பமானதிலும் அதி நுட்பமான, பெரியதிலும் அதி பெரிய ஆத்மன் ஒவ்வொரு உயிர்ப் பிராணியின் இரு தயத்தில் வீற்றிருக்கிறது. யார் ஆசையின்றியவனே அவன் அமைதிப் படுத்திய மனம், புலன்களுடன் ஆன்ம - மாட் சிமையைப் பார்க்கிருன். மேலும் துன்ப துயரத்திலிருந்து விடுதலையாகிருன்.
94. எறும்பின் ஆன்மா ஆனையின் ஆன்மாவினின்றும் மாறுபாடில்லாதது. எல்லாப் பிராணிகளிலும் ஒரேயொரு பொதுத் தன்னறிவு உண்டு.
95. இவ் வுலகப் பொருட்கள் அனைத்தினதும் அடிப் படை அல்லது ஆதாரம் ஆத்மனே
96. கயிற்றிற் பாம்பு அத்தியாசிக்கப் பட்டது போல் முழுவுலகும் ஆத்மனில் அத்தியாரோபிக்கப்பட்டிருக்கிறது.

Page 17
270 ஆத்மஜோதி
97. இவ்வுலகம் ஆத்மன் அல்லது பிரம்மத்திற்கு வேருக தற்சார்புடைய இருப்பு பெற்றிருக்கவில்லை.
98. அமர்ந்து கொண்டு ஆத்மன் வெகு தூரத்திற் குச் செல்கிறது. படுத்துக் கொண்டு அது எங்கும் திரிகி றது. ஏனெனின் அது சர்வ வியாபகமாகவும் அநந்தம்ா யுமிருக்கிறது.
99. ஆத்மன் மகிழ்ச்சி யடைகிறது. அது மகிழ்ச்சி யடைகிறதில்லை. அது தன் சார்பு நிலையில் துய்த்து மகிழ் கிறது. ஆணுல் அது தன் தனி இயல்பில் மெளன சாட் சியே. ஆகையால் அது மகிழ்ச்சியடைகிறதில்லை.
100. நுட்ப, கூரிய, தூய நுண்ணறிவும் படிப்பும் சாதனு சதுட்டயமும் இயற் பண்பாகப் பெற்றிருக்கும் திறமை வாய்ந்த நாடுபவர்கள் ஆத்மனை அறிய முடியும்.
101. ஆத்மனை உடம்பற்றதாயும் உறுதியாக இவ்வழி யுமுடலில் நிலைத்திருப்பதாகவும் மகத்தாகவும் சர்வவியாபக மாகவும் அறியும் கூரறிவுள்ள ரிஷி ஒருகாலும் துயரப் படுவதில்லை.
102. இவ் வாத்மன் உடம்புகளுக்குள்ளே உடம்பற் றிருக்கிறது. அது நிலைமாறும் பொருட்களின் நடுவே மாரு திருக்கிறது.
103. தன்னிறைவுப் பேறடைந்த அதாவது ஆத்மனை நேர் உள்ளுணர்வுக் காட்சி (அபரோக்ஷானுபூதி) மூலம் அறிந்த ரிஷிகள் துயரப் படுவதில்லை. - தொடரும்
சாதியுமதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக்
ப்பையுந் தணந்தேன் நீதியுநிலையுஞ் சத்தியப் பொருளு நித்திய வாழ்க்
கையுஞ் சுகமு மாதியுநடுவு மந்தமு மெல்லா மருட்பெருஞ்
சோதி யென்றறிந்தே குேதியவனைத் துநீயறிந்தது நானுரைப்ப
தன்னடிக் கடியுனக்கே.
- இராமலிங்க சுவாமிகள்
 
 

ஆத்மஜோதி 271.
ஆனந்தமாயி அம்மையிடம் அன்பர்கள் சம்பாஷணை.
முன் இதழ் தொடர்ச்சி. )
விணுவுபவர் :- (tք(Լք 6ծ) ԼDԱյIT 6ծ" நாசத்தைப்பற்றி நான் கருதினேன்.
மாதாஜி:- நாசம் அல்லது இலயம்? நச 'அவன் அன்று என்று பொருள்படுகிறது. நஸ்வ * ஆன்மா அன்று’ என்று பொருள்படுகிறது. இதுவே நிச்சயமாக நாசம் என்று சொல்லப்படுகிறது. எங்கு நாசம் அழிக்கப்பட்டுள்ளதோ அங்கு அது உண்டு. மனேனுசத்தை நீங்கள் இலயம் என்று சொல்கிறீர்களோ? - -
வினவுபவர்- இதை எங்ங்னம் நான் கி ர கி க்க வேண்டும்?
மாதாஜி:- முறையைச் சுட்டிக் காட்டுவது குருவைப் பொறுத்தது. அவர் ஒர்ந்தறியும் வழியைக் காட்டி உலக சாதனையை உங்களுக்கு அறிவுறுத்துவார். விசுவாசமாக அதை விடாது பயில்வது உங்களைப் பொறுத்தது. ஆனல் பலன் தன்னருட்டெரிப்பு வடிவில் தானுக வருகிறது. கிரகிக்கப்படாததை உங்களைக் கிரகிக்கப்பண்ணும் சக்தி தானுக- குருவின் முன் மூலம் உரிய காலத்தில் வெளிப் படையாகிறது. எங்கு எப்படி நான் பிரவர்த்திப்பது என்ற வின எழுகிறதோ நிறைவேற்றம் ஐயமின்றி இன்னும் அடையப்படவில்லை. ஆகையால் மெய்யறிவு ஏற்படும் வரையில் உ ங் க ள் முயற்சிகளைத் தளரவிடாதீர்கள். இடை முறிவுகள் யாதும் உங்கள் முயற்சியைத் தடை செய்யா திருக்கட்டும். ஏனெனில் ஒர் இடைமுறிவு ஒரு சுழலை உண்டாக்கும். அவ்வாறிருத்தலால் உங்கள் முயற் தைல தாரைபோன்று தொடர்ச்சியானதாயிருக்கவேண்டும்; அது வலிமையளிக்கப்படவேண்டும்; நிலையானதாயிருக்க வேண்டும்; இடையருத நீரோட்டம் போலிருக்கவேண்டும்.
* வங்காளப் பாஷையில் சவும் ஸ்வவும் ஒரேமாதிரி ஒலிக்கின்றன,

Page 18
272 ஆத்ம ஜோதி
உடம்பு உணவையும் உறக்கத்தையும் தேவைப்படுவதை நீங்கள் ஆட்சிகொள்ளவில்லை யென்பது முக்கிய மன்று. சாதனை செய்வதில் இடையீடுவிடாதிருப்பதே உங்கள் நோக்கமாயிருக்கவேண்டும் உணவு, உறக்கம் வகையில் நீங்கள் தேவைப்படும் யாவும், ஒவ்வொன்றும் நியமிக்கப் பட்ட வேளையில், புறனடையின்றி என்றுந் தொடர்ந்து வரும் தேவையானதாயிருக்கிறதென்பதை நீங்கள் கவனிக்க திட்டமாக அதே பிரகாரம் உண்மையைத் தேடுதலைப் பொறுத்த வகையிலும் இடையீடின்மையை நோக்கமாகக் கொள்ளவேண்டும். ஒரு தடவை மனம் தன் இயக்கவழியில் அபிமானத்தின் தொடுதலை உண ர் ந் த பின் - அக்கண நேரத்தை நீங்கள் கிரகிக்கக் கூடியதா யிருந்தால் மட்டும் - அப்பரம நேரத்தில் எல்லா நேரங்களும் உட்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் அதை நீங்கள் கைப்பற்றிக் கொண்டபோது எல்லா நேர ங் களு ம் உங்களுடையனவாகும்.
உதாரணமாக புலர்காலை, நடுப்பகல், அந்தி வேளையில் சந்திப்பு நேரங்களை (சந்திக்ஷன) எடுங்கள். அவைகளில் வருதலும் போதலும் சந்திக்கும் சம்யோக நிலையின் இயல்பான சக்தி வெளியீடாகிறது. 'மின் வெடித்தல் என்று நீங்கள் சொல்வது ஈர் எதிரான வற்றின் சேர்க்கை யன்றி ஒன்று மில்லை - அவ்வாறே பரம்பொருளும் சம் யோக நேரத்தில் திடீரென்று மனதிற்ருேன்றுகிறது. உள்ளபடி அது ஒவ்வொரு தனிக்கண நேரத்திலும் உடனிருக்கிறது. ஆனல் நீங்கள் அதை எப்போதும் தவற விடுகிறீர்கள். எனினும் இதையே நீங்கள் அகப்படுத்த வேண்டியது. எதிரானவை ஒன்ருக உருகும் சமையத்தில் அது செய்யப்படலாம், யாரேனும் குறிப்பிட்ட தனிய னுக்கு இம் முக்கியமான கணநேரம் தன்னை எப்போது வெளிப்படுத்து மென்று முன்னறிவிக்கத் தக்கதாயில்லை. ஆகையால் இடையருமல் விடாது முயற்சிக்கவும்.
அப்பெருங் கண நேரம் யதார்த்தமாக எது என்பது ஒவ்வொருவருக்கும் அவனின் குறிப்பிட்ட அணுகைவழியைப் பொறுத்துள்ளது. நீங்கள் பிறந்த கண நேரம் உங்கள் முழு வாழ்வின் வழியை நிச்சயித்து ஆளவில்லையா? அதே மாதிரியாக உங்கள் உண்மைப் பொருளின் அசைவு, முற்போதல், அதாவது பெரும் யாத்திரையாகிய ஒட்டத் தினுள் நீங்கள் நுழையும் கண நேரமே உ ங் க ஞ ள்

ஆத்ம ஜோதி 273
முக்கியம். இது நிகழ்ந்தாலொழிய நிறைவு அடையப்பட முடியாது. இதுவே சில சீடர்களுக்கு ஒரு புலர்காலை, அந்திவேளை, நடுப்பகல், நள்ளிரவு போன்ற விசேட நேரங் களைச் சாதனைக்கு நிச்சயிப்பதின் காரணம், இவையே வ ழ க் க ம |ா க நியமிக்கப்படும் நான்கு காலப்பகுதிகள். நாடுபவனின் மனப்பாங்கினதும் முற்சார்பினதும் பிரகாரம் மாறுபடும் குருவின் கட்டளைகளை நேர்மையாகச் சாதிக்க வேண்டியது சீடனின் கடமை. ஒரே ஒழுங்கு ஒவ்வொரு வருக்கும் பொருத்தமாயிருப்பதில்லை. பொது மனிதன் இது வரை கவனிக்கப்படாத தன் இருப்பின் பகுதிகளை நிறை வாக்குவதற்குத் தேவையான குறிப்பிட்ட மூலக் கூறுகளின் சேர்க்கையறிவை வைத்திருக்க முடியாது. இக்காரணமாகக் குருவின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிவது முக்கியமா யுள்ளது. உங்கள் மன நோக்காலும் உங்கள் வினைகளாலுங் கூட நீங்கள் அதற்கு ஆயத்தமாயிருக்கும்போது முடிவான கன நேரம் வெளிப்படக் கடமைப்பட்டுள்ளது. ஆகையால் குருவால் தெரிவிக்கப்பட்ட பாதையைத் திட்டமாகப் பின், பற்ற முயற்சி செய்யுங்கள். எங்ங்ணம் ஒவ்வொரு விஷயமும் தானுகவே பொருத்தமாக நிகழ்கிறதென்பதைக் கவனிப் பீர்கள்.
நாளின் 24 மணித்தியாலத்தில் ஏதோ ஒரு காலம் நியதமாகக் கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்யப்படவேண்டும். சா த் தி ய மா யின் ஒரு தனியாசனத்திலிருந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட நாம அல்லது மந்திர ஜபத்தில் ஒழுங்காக ஈடுபடுவதாக மனவுறுதி கொள்ளுங்கள் படிப்படியாகக் காலத்தை அல்லது ஒது ந் தொகையைக் கூட்டுங்கள். தினசரி கூட்டுதல் தேவையில்லை. நீங்கள் மிகுதிப்பாடாக் கும் விதத்தையும் இடைவேளையையும் நி ய மி த் து க் கொள்ளுங்கள். பட்சம் அல்லது வாரத்திற் கொருதரம் என்று அங்கீகரிக்கலாம்.
இம் முறையாக உங்களை, கடவுளை நாடலுக்குக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அவரிடம் தஞ்சம் புகுங்கள். அவரே உங்கள் அடைவாய் இருக்கட்டும். இம் முயற்சியின் பயனக நீ ங் க ள் அவ்வோட்டத்தில் ஆழ்ந்து தோய்ந்தவராகி என்றும் அதற்கு அதிக நேரம் ஒதுக்கும்போது நீங்க ள் குணமாற்றம் அடைவீர்கள். உங்கள் புலன் மகிழ்ச்சி நாட்டம் நொய்மையடையும்.
இவ்வாறு நீங்கள் உங்கள் சேகரித்த முயற்சிகளின் பலனைப்

Page 19
274 ஆத்ம ஜோதி
பெறுவீர்கள். உடம்பு எந்நேரத்திலும் இறக்கக் கூடியது, மரணம் எக்கண நேரத்திலும் வந்து சேரலாம் என்பதை நீங்கள் உணரவும் நேரிடலாம்.
உலகில் என்றும் புதுப் படைப்பு இருப்பது போன்று அதற்கு உங்கள் மானசிக, அத்தியான்ம எதிர்த்தாக்கல் இடையருத மாற்றம் படுகிறது. சுட்டிக்காட்டிய வகையில் நீங்கள் முன் சென்றல், அதன் பயணுக உங்கள் வெளி ஈடுபாடுகள் படிப்படியாகத் தேய்ந்து மாயும். மேலும் உ ன் பார்  ைவ அகமுகமாகத் திரும்பும். எவ்வளவுக் கெவ்வளவு உங்கள் நாட்டம் தீவிர தரமாயிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குத் திறக்கப்படும் சாத்தி யங்களும் அளவிறந்ததாயிருக்கும். மேலும் உங்கள் முன் னேற்றத்திற்குத்தக்க வீதம் துன்பம் குறையும். மறுபடியும் பெருகமாட்டாது. கர்மம் கர்மத்தால் அழிக்கப்படுகிறது. - அதாவது கழிந்த வினைகளின் விளைவுகள் எதிர் வினைகளால் மட்டுப்படுத்தப்படுகின்றன - என்றுங் கூட ச் சொல்லப் பட்டிருக்கிறது, அப்படியல்லவா? யாரேனும் ஒருவனின் விதி அவ்வாருயின் உண்மையாக இது மிகக் குறுகிய காலத்தில் எய்தப்பெறலாம். சிந்தித்துப்பார், உடம்பு உணவு கொடுக்கப்படா திருக்கும் போதுங்கூட அது ஊட்டத்தைத் தன் வயப்படுத்து தலை நிற்பாட்டுவதில்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் அது தன் சொந்தச் சதையை அழிக்க ஆரம்பிக்கிறது. ஆகையால் உங்கள் உடம்பை நன்ருக ஊட்டி வைத்திருப்பது போல் உங்கள் ஆன்மிக அபிவிருத்தியைப் பொறுத்தளவில் நீங்கள் சமமாக நற் சாவதானம் எடுக்க வேண்டும். அப்போதுமாத்திரம் நீங்கள் அவ்வகையில் செழித்தோங்குவீர்கள். எக்கண நேரத்தில் ஒளிர்வாகிய அனற்பிளம்பு பிரகாசிக்குமென்று யார் சொல்லமுடியும்? இக்காரணம் பொருட்டு உங்கள் முயற் சிகளைத் தளர்ச்சியின்றி விசுவாசமாகத் தொடர்ந்து செய் யுங்கள். படிப்படியாக நீங்கள் அவரில் மேலும் மேலும் ஆழமாக இலயப்படுவீர்கள். அவர் அவர் மட்டுமே. உங்கள் எண்ணங்களினதும் மனவெழுச்சிகளினதும் முழுக்கவனத்தை யும் முகர்வார். ஏனெனில் மனம் தனக்குத் த குந்த ஆதாரம் தருவதை எப்போதும் நாடுகிறது. இது பரம் பொருளைத் தவிர வேறேதேனும் ஒன்ருல் அளிக்கப்பட முடியாது. அப்போது உ ங் க ள் ஆன்மாவை நோக்கிச் செல்லும் ஒழுங்கின் பிரகாரம் நீங்கள் செலுத்தப்படுவீர்கள். எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் அகவாழ்வில் மகிழ்வுறு
 

ஆத்ம ஜோதி 275
கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு புற விடயங்களில் நீங்கள் குறைவாக மனங் கவரப் படுகிறீர்கள் என்று கண்டுபிடிப்பீர்கள். அதன் பயணுக ஆன்மாவுடன் தன் அனன்னிய அநுபூதி எக்கண நேரத்திலும் நிகழும் வண்ணம் மனம் செம்மைவகை உணவால் ந ன் ரு க ஊ ட் ட ம்
பெற்றதாகிறது.
இலயத்தைப்பற்றி அதற்குள் மனதில் ஒடுக்கத்தைக் கருதினிர்களாயின் நீங்கள் சொன்னது சரியே. ஜட சமாதி விரும்பத்தக்கதன்று. மாருக, மனம்யாது, யார் அது என்று நீங்கள் நிச்சயிக்க வேண்டும். மனம் அதற்குள் அடங்கு கிறது - இது தானே நீங்கள் வெளியிடக் கருதினிர்கள். இலயம் என்பது ம ன ம் ஒடுங்குவதற்கு ஒரிடமுமில்லை. அதாவது மேலும் அதன் வழியைக் கண்டுபிடிக்க முடியாது என்று பொருள்படலாம். இ த னு ல் உள்ளார்ந்தமாக ஒடுங்குகிறது. அன்றேல் தன் வெளிப்பாடாகிய அதற்குள் ஒன்ருகிறது, இரண்டறக்கலக்கிறது. அதன் பயணுக மனதின் தனி இருப்பு சாத்தியமானதாயிருக்க முடியாது. தன் வெளிப்பாடு இருக்குமிடத்தில் எங்ங்ணம் மனம் ஒழிகிறதா அன்ரு என்னும் வினு எவ்வகையிலும் எழக்கூடும்?
எந்நோக்கும் நிலையிலிருந்து வினவினிர்களோ அந் நிலையிலிருந்தே இப் பதில் தரப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு குறிப்பிட்ட பகு தி  ையத் தியானிப்பது முழுமையைத் தியானிப்பதற்குச் செலுத்து மென்று வினவுதலுடன் ஆரம் பித்தீர்கள். ஐயமின்றி முழுமை பகுதியில் உட்கொண் டிருக்கிறது. இவ்வுண்மையின் அநு பூதியை யடைவதன் வண்ணம் நீங்கள் குருவின் சக்தியுடன் இயற்கையான தாயிருக்கின்ற போதனைகளைப் பி ன் பற்ற வேண்டும். முன் கூறப்பட்டது முழுச் செய்தியினதும் ஒரேயொரு நிலையின் அற்ப கருத்தை மாத்திரம் தருகிறது.
மேலும் ஒருவர் தியானத்திலிருக்கும் வேளை யி ல் உணர்வை இழந்து விடுகிருர் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். சில ம க் க ள் மகிழ்ச்சியால் ஆவேசங் கொண்டு தாம் மயக்கமடைவது போலும் எதிர்ப்பட்டிருக்கிருர்கள். இந்நிலைமையில் மிக நெடுங்காலம் இருந்திருக்கிருர்கள். இந் நிலையிலிருந்து மீண்ட பொழுது ஏதோ ஒரு விதமான திவ்விய இன்பம் அனுபவித்ததாய் உரிமையாடுகிறர்கள். ஆனல் நிச்சயமாக

Page 20
276 ஆத்ம ஜோதி
இது அனுபூதியன்று. தியானத்தில் மிக மகிழ்ச்சியுணரும் ஒரு தசை உண்டு. ஆங்கு ஒருவர் அதில் மூழ்கியது போன்று இருக்கிருர் . ஆனல் யாது மூழ்கப்படுகிறது? நியதமாக மனமே. ஒரு குறிப்பிட்ட படியிலும் சில சூழ் நிலைகளிலும் இவ்வனுபவம் ஒரு தடையாகலாம். அடிக்கடி இந் நிலை ஏற்பட்டால் ஒருவர் அக்குறிப்பிட்ட படியில் தங்கக்கூடும். அதன் விளைவாக பொருள்களின் உள்ளுறைத் தன்மையின் சுவையைப் பெறுவதிலிருந்து தடுக்கப்படலாம்.
ஒரு தடவை உண்மையான தியானம் ஏற்படுத்தப் பட்டதும் உல கி ய ம் கவர்ச்சியூட்டும் பொருள்கள் தம் கவர்ச்சியாற்றல் அனைத்தையும் இழக்கின்றன. பரம்பொருள் அல்லது ஆன்மாவைப் பற்றிய ஏதேனும் ஒன்றின் அனு பவம் நிகழ்ந்தால் 'யான் எங்கிருந்தேன்? அந்நேரத்தில் நான் யாதொன்றும் அறியவில்லை' என்று ஒருவர் சொல் வதில்லை. அங்கு ‘அறிகிறதில்லை’ எ ன் ற மாதிரியான விஷயம் இருக்க முடியாது. ஒருவர் அனுபவித்த இன்பத் தைச் சொற்களால் விவரிக்க முடியுமாயின் அது இன்னும் இன்பநுகர்ச்சியே - ஆகையால் ஒரு தடையே. ஒருவர் முற்ருக உணர்வுக்குரியவராயிருக்க வேண்டும். மயக்கம் அல்லது யோக நித்திரை கொள்வது ஒருவரை ஒரிடத் துக்கும் வழி நடத்தாது.
உண்மையான தியானத்திற்குப்பின் உலக இன்பங்கள் கவர்ச்சியற்றதாய், எழுச்சியற்றதாய், முற்ாகச் சுவையற்ற தாயிருக்கின்றன. வைராக்கியம் என்னத்தைக் குறிப்பிடுகிறது? அதிர்ச்சியிலிருந்து பின்வாங்குவதுபோல் ஒருவரைப் பின் வாங்கும் வண்ணம் ஒவ்வொரு தனி உலகப் பொருளும் தியாகமாகிய நெருப்பைக் கொழுத்துமாப்போலிருக்கும் போது அகம்புற விழித்தல் ஏற்படுகிறது. அப்படியாயினும் உலகப்பொருள் ஏதேனினும் வெறுப்பு அல்லது புறக் கணிப்பை வைராக்கியம் குறிப்பிடவில்லை. அது உள்ள வாருக ஏற்கத்தக்கதன்று. உடல் அதை மறுக்கிறது. வெறுப்போ சி ன மே 1ா எழமாட்டாது. வைராக்கியம் இயக்கமுள்ள ஊக்கமாயாகும் போது ஒருவர் உலகத்தின் உண்மையியல்பைப் பி ரித் த ஹி ய த் தொடங்குகிருர், இறுதியாக நேர்க்காட்சியின் உணர்ச்சி மிகுந்த பணிவுடன் அதன் போலித்தன்மையின் அறிவு எழுகிறது. உலகுக்குரிய ஒவ்வொரு பொருளும் எரிவது போற் தோன்றுகிறது. ஒருவர் அதைத்தொடமுடியாது. இதுவும் ஒரு குறிப்பிட்ட தறுவாயில் நிகழக்கூடிய நிலையே. - தொடரும்

ஆத்மஜோதி 277 மு த் தீ ச் செ ல் வ ம்
(மட்டு நகர். ஏ. பாக்கியமூர்த்தி ஆசிரியர்)
நம் பண்டைத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அங்கிங் கெனதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த சொரூபியாகிய எல்லாம் வல்ல எம் பெருமானை அவன் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்றவாறு ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று கிய அனல் வடிவில் வைத்து வணங்கி வந்தனர். இவ்வ னல் வழிபாட்டிற்குப் பழம் பெருஞ் சான்றுகள் பலவுள் ளன. அவற்றை மறைமலையடிகள் போன்ற பல பெருமக் களின் கூற்றைக் கொண்டு இக் கட்டுரையில் ஆராய்வாம்.
'கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த் தொடு கண்ணிய வருமே'
என்னும் தொல்காப்பியரின் கூற்றுப்படி ஞாயிறு, தீ, திங்கள் என்னும் கட்புலகுைம் ஒளியுடைப் பருப் பொருட் களே, அவை கடவுளினியல்போடு ஒத்திருப்பன கண்டு நம் பண்டையோர் கடவுளென மதித்தமை கண்கூடு. இம் மூன்றையும் இறைவனுக்கு முக் கண்களாகப் போற்றிப் புகழ்ந்து வந்திருக்கிருர்கள். இதனுலன்றே நம் முழுமுதற் கடவுளாம் சிவபெருமானை “முக்கட் செல்வர்’ ‘முக்கண் ணன்' என்றெல்லாம் நம்மவர்கள் அழைக்கின்றனர்.
*அருக்கனிற் சோதியமைத் தோன் திருத்தகு மதியில் தண்மை வைத் தோன் திண்டிறல் தீயின் வெம்மை செய்தோன்'
என்று திருவண்டப் பகுதியில் திருவாதவூரடிகள் இயம் பியிருப்பதையும் காண்மின்கள்.
கொடிநிலை கந்தழி வள்ளி என்னும் இம் மூன்றினுள் ளும் நடுவணுள்ள கந்தழி என்னும் தீயானது முற்றிலும் கடவுளியல்புக்குப் பொருத்தமானதேயாகும். தீயை நம்ம னேர் கடவுளியல்புக்கு ஒப்பதாகக் கண்டு வழிபட்டது என் னையெனின் கூறுதும். நிலமும் நீரும் கண்ணுக்குத்தோன் றும் பருப் பொருட்களாக இருந்தாலும் அவை பிற ஏதுக்

Page 21
278 ஆத்மஜோதி
களின் சேர்க்கையால் தூய்மை கெடக் கூடியன. அதே போல் வளியும் வானும் கட்புலனுகாத பருப் பொருட்க ளேயானுலும் அவையும் பிற ஏதுக்களால் தூய்மை கெடக் கூடியன. ஆனல் தீயோ தூய்மை யல்லாத பிற பொருட் களைத் தூய்மையாக்குவதோடல்லாமல் தானும் தூய்மை கெடாது, தன்னிலமை மாழுது நிற்பதை நாம் காணலாம். இவ்வாறே இறைவனும் தூய்வன வல்லாத ஆன்மாக்களைத் தூய்மைப் படுத்தி அவற்றைத் தன் வயமாக்கித் தான் மாருது நிற்கிருன். அத்தோடல்லாமல் இறைவனுக்கு இயல்பாகவே யுள்ள அருவம், உருவம், அருவுருவம் என் னும் இம் மூன்று தன்மைகளும் அனலின்பாலுள்ளன.
அனல் பிற பொருட்களோடு சேர்ந்திருக்கும் போது கட்புலனுகாமல் அருவமாய்க் கிடக்கிறது. இரண்டு கட் டைகள் வெவ்வேரு ய்க் கிடக்கும் போது அவற்றில் அமைந் துள்ள அனலின் தன்மை புலனுவதில்லை. ஒன்றையொன் ருேடு தேய்த்ததும் அது கட்புலனுவதைக் காணலாம். இறை வனும் இவ் வுலகத்துப் பொருட்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாக நின்று இயக்குகிருன். இதைச் சம்பந் தப் பெருந்தகை
**விறகிற் றியினன் பாலிற்படு நெய் போன்'
என மிக அழகாகக் கூறுகிருர், விறகிற் றீயினணுய் நிற்கும் அவன் செயல் அருவத் திருமேனியைக் காட்டுகி றது. அனல் எரியும் போது கட்புலனுகத் தோன்றுகின் றது. அவ்வாறே இறைவனும் மெய்யடியார்கள் பொருட் டுத் தன் திருக்கோலத்தைக் காட்ட எழுந்தருளி வரும் போது தன் திருவுருவத் திருமேனியைக் காட்டுகின்றன். அனல் கட்புலனகத் தோன்றினலும் அதைக் கையால் தொ டவோ பிடிக்கவோ முடியாமல் இருப்பதால் அது இறை வன் தன் அருவுருவத் திருக்கோலத்தை ஒப்பதாக இருக் கிறது.
தீக் கொழுந்தில் பரந்த செவ்வொளியும் அதால் சூழப் பட்ட சிறு நீல ஒளியையும் நாம் காணலாம். வெம்மை யான செவ்வொளியை ஆண்டன்மை பொருந்திய சிவன கவும், குளிர்ச்சியான நீல ஒளியைப் பெண் தன்மை பொ ருந்திய சக்தியாகவும் கொண்டு வழிபாடாற்றினர்கள்.
இறைவன் தன் மெய்யன்பர்கட்கு அனல் வடிவாகவே காட்சியளித்திருக்கிருன் என்பது அன்னர்களின் திருப்பா

ஆத்மஜோதி 2.79
டல்களால் பெறப்படுகிறது. திருவாசகத்தின் கண்ணே மாணிக்கவாசகப் பெருந்தகை
"மொக்கனியருளிய முழுத் தழல்
சொக்கதாகக் காட்டிய தொன்மையும்' என்றும்
'திருவார் பெருந்துறைச் செல்வனுகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்' என்றும்
“அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவு கொண்டு)' என்றும்
*மூலமாகிய மும் மலம் அறுக்குந்
தூய மேனிச் சுடர் விடு சோதி' என்றும்
கீர்த்தித் திருவகவலில் கூறியிருப்பதும் அப்பரடிகள்
* அங்கமலத் தயனுெடு மாலுங்காணு
அனலுருவ நின் பாதம் போற்றி போற்றி'
என்று புகழ்ந்திருப்பதும் உய்த்துணரற் பாலது.
ஞாயிறு, தீ, திங்கள் என்னும் மூவகை ஒளியுடைப் பொருட்களையும் தங்கள் அருகிலேயே வைத்து வணங்க விருப்புக் கொண்ட நம் மூதாதையர் தாம் வாழ்ந்த இடங் களில் முத்தீ வளர்த்து வழிபடலாயினர். ஞாயிற்றுக்குப் பதிலாக வட்ட வடிவத்திலும் தீக்குப் பதிலாக முக்கோண வடிவத்திலும் திங்களுக்குப் பதிலாகப் பிறை வடிவத்தி லும் குழிகள் வெட்டி அதில் தீ வளர்த்து அத்தீக்கு நெற் பொரியும் மலர்களும் தூவி நெய் வார்த்து வழிபடலாயி னர். இவ்வாறு முத்தீ வளர்த்த செய்தியை முதற் சங்க காலப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் பெரும் புலவர் புறநானூற்று இரண்டாம் செய்யுளில்
* . . . . . சிறுதலே நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற் கோட்டிமயமும் பொதியமும் போன்றே'

Page 22
280 ஆத்ம ஜோதி
என்று இமயம் முதல் பொதியம் வரை இவ் வழி பாடு நடந்ததைக் கூறுகின்றர்.
* மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து ' என்று திருமுருகாற்றுப் படையில் நக்கீர தேவர் பாடிய வாற்ருனும் அறியக் கிடக்கிறது. இம் முத்தியையே வட நூலார் ஆகவcயம், சாருக பத்தியம், தகSணுக்கினி என வழங்குவர்.
த ங் க ள |ா ல் வழிபடப்படும் அனலை அபிடேகித்தும் மலர் மாலை சாத்தியும் தொட்டும் தூக்கியும் வழிபட விரும்பிய சான்ருேர், அவ்வனலைப் போல்வதான ஒர் உருவை உண்டாக்கினர். அத்திருவுருவே சிவலிங்கமாகும். சிவலிங்கத்தின் நீண்டு குவிந்த பாகம் தீக்கொழுந்தின் வடிவத்தையும், வட்டமான பாகம் தீக்குழியையும் குறிப் பதாகும் என்பதையும் நம் முன்னேரின் ஒளி வழிபாட் டிற்கு அடையாளமாக இன்றும் அச்சிவலிங்கத்திருவுருவுக்குத் தீபாராதனைகள் காட்டப்படுகின்றன என்பதையும் மறை மலையடிகள் தனது ஆ ரா ய் ச் சி நூ ல் க ளி ற் கூறிப் போந்துள்ளார்கள்.
சைவப் பெருமக்களுடைய தீக்கடவுள் வழிபாட்டைப் பிற மதத்தவர் உண்மை விளங்காது கே லி செய்வது அவர்களின் அறிவின்மையேயாகும். அந்தோ பரிதாபம். புறவிருளை அகற்ற ஞாயிறு, தீ, திங்கள் என்னும் ஒளி யுடைப் பொருட்கள் எவ்வாறு மனிதனுக்கு உதவுகின் றனவோ, மனிதன் கொடிய அக இருளாகிய அகங்கார மமகாரங்களை அகற்ற இறைவனின் அருளொளி வேண்டற் பாலதான தொன்ருகும். அருளொளி பெற்று அகவிருள் நீக்கிய மணிவாசகப் பெருந்தகை
* இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலாற் பிறிதுமற் றின்மை. 9 9 என்று
இறைவனை மனத்தின் கண்ணே உதயமாகும் கதிரவனுக்கு ஒப்பிட்டமை காண்க. சிவஞானமாகிய தீபம் அகத்திலே ஏற்றப்பட்டால் நாம் சிவத்தைக் காணலாம். எனவே நம் பண்டைச்  ைச வ த் தமிழ்மக்கள் ஒளிவடிவிலேயே

இறைவனை வழிபட்டனர். ' சோதியே சுடரே, சூளொளி
விளக்கே, சுரிகுழற் பணைமுலே மடந்தை பாதியே ' என்று போற்றினர்; பேரின்ப மடைந்தனர். அவர்கள் சென்ற
வழியே நாமும் சென்று பேரின்ப மடைவோமாக.
S is
எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவருக்கமதாவது உணர்கிலார் அரி அயற்கு அரியான அயர்த்துப் போய் நரி விருத்தம தாக்குவர் நாடரே ' - அப்பர்.
கருணை செய் வாய் கந்தனே
( சங்கீதபூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி )
இராகம்:- சண்முகப்பிரியா, ஆ. ஸ ரிசமபத நிஸ் 36வது தாளம் :- ஆதி, அ. ஸ்நிதபமகரிஸ் மேளகர்த்தா
கருணை செய்வாய் கந்தனே கயி"ல மலே
ஈசன் தந்த மைந்தனே கதிர் காமனே
அநுபல்லவி
அரிய சென்மமிதனே அவமாய்க் கழித்திடாமல்
அல்லும் பகலு முனக் கன்பு செய்து வாழவே (கருணை)
சரணங்கள்
மண் பெண் பொன்னுசையினில் மயங்க விடாதே மறலியை யெந்தனிடம் அணுக விடாதே
பண்டு செய் பவ வினை நீக்கிடு வாயே
பாற்கடலோன் மருகா வேற்கரனே குமரா (கருணை)
பக்குவ நில வருங் கால மென்றே வென்று
பதைக்கின்றேன் பேதையேன் பல சென்ம மெடுத்திட்டேன்
விக்கினந் தீர்க்கு மானே முகக் கடவுள் சோதரா
வீர சூர சங்கரா வள்ளி நாயகி நாதா (கருணை)
குத்திரனெத்தன் கடுஞ்சின மத்தருணம் பொறையற்ற னகந்தையுளுன் இத்தகை மற்கடகத்தொடு புவிதனில் நித்த மிடர்ப்படுதல் தகுமோ பத்தி பழுத்திட நித்தம் நினத்திடு பத்தர் களிப்புற முத்தியருள் சத்திய நித்திய சங்கரி புத்திரி சற்குரு நீ சிவ சண்முகனே (கருணை)

Page 23
Registered at the G.P.O.
ஆத்மஜோதி நீ
தெய்வீக வாழ்க்கைச் சங் வழிபாடு திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்தின் யூனி கதிரை மணி மாலை தீங்கனிச்சோலை அறிவுரைக் கதைகள் இளங்கோவின் கனவு ஆத்ம நாதம் (சுத்தான
தாயே (கம் கந்தரநுபூதி - பொழிப்
மார்கழிப் பாடல்
சந்தா ே அன்புடையீர்
இன்றுவரை 15ம் ஆண்டுக்கு உடனுக்குடனேயே ரசீது
கெல்லாம் எமது நன்றி உ அனுப்பாதோர் உடனே அணு
ஆத்மஜோதி நி3
இந்தியாவிலுள்ள அ R வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீ
என்ற விலாசத்திற்கு அனு தெரியப்படுத்த வேண்டுகின்
வாய்வு உஷ்ணவாய்வு முழங்கா மலக்கட்டு, மல பந்தம் அ2 பசியின்மை, வயிற்று வலி புளியேப்பம், நெஞ்சுக் கரு களை நீக்கி ஜீரண சக்திக்
மிகச்சிற
தபால் செலவு உட்பட
[uá5ý சம்பு இன்டஸ்ரீஸ் - அ
இலங்கையில்
5 T يقع ش) 10 وقف ووي இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத் திரு.நா.வினுயகமூர்த்தியால் அச்சி
 

as a Newspaper M. L. 59,300
36 so6h)ff 1-25 25 ح
(நா. முத்தையா) 1-50
இ) ஐ -75 (பரமஹம்ச தாசன்) -50 2_50
(சுவாமி சிவானந்தர்) -65 (செ. நடராசன்) 2-25
ாந்த பாரதியார்) 3-00 sis 2-50 புரையுடன் -25 -20
நயர்களுக்கு.
ரிய சந்தா அனுப்பியவர்களுக்கு அனுப்பியுள்ளோம். அவர்களுக் ரித்தாகுக. இன்று வரை சந்தா னுப்பி வைக்க வேண்டுகின்ருேம். லயம் - நாவலப்பிட்டி
(சிலோன்.) -
G ਹੈ - 353
ன்பர்கள் வழக்கம்போல் ஸ், அரிசிப்பாளையம், சேலம்-9, |ப்பிவைத்து, அதை எமக்கும் ருேம்.
(35 U 505 it ல் வாய்வு, இடுப்பு வாய்வு ஜீர்ணம், கைகால் அசதி பிடிப்பு , பித்த மயக்கம், பித்த சூலை , }ப்பு, முதலிய வாய்வு ரோகங் கும் தேகாரோக்கியத்திற்கும் ந்த சூரணம்.
டின் ஒன்று 4ளூபா 25சதம் ,
ஸ் கிடைக்குமிடம்: நிலையம் - நாவலப்பிட்டி,
ந்தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் சிட்டுவெளியிடப்பெற்றது. 15-5-63.
s