கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.06.15

Page 1


Page 2
(ஒர் ஆத்மீக மாதவெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
--சுத்தானந்தர்
ஜோதி சுபகிருதுளுல் ஆனி மீ" 1வட (15-6-63) 3 Ls 8
பொருளடக்கம்
1. கீதாஞ்சலி 281 2. என் கூட்டத்தவர் 283 3. பிரஹ்ம பூனி ஷெய்கு நெய்கு முகம்மது 286 4. தர்மம் என்பது என்ன? 292 5. பொறிவாயிலைந்தவிததல் 302 6. வேதாகம நெறி 306 7. கஞ்சன் வலி கடிந்த கண்ணன் 309 8. மணிவாசகரின் சுயானுபவம் 34 9. சமூகமும் தனிமையும் 319 10. ஒளி வெள்ளம் (3ம் பக்க அட்டை]
ஆத்மஜோதி சந்தா விபரம்
*→→→→→→→单*→→→→→>< ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரூ.3-00.
தனிப்பிரதி சதம் 30. கெளரவ ஆசிரியர்: திரு. க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- திரு. நா. முத்தையா * ஆத்மஜோதி நிலையம்” நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண்: 353.
 

மகாகவி தாகூரின்
கீதாஞ்சலி
41. பொற் கனவு
என்னருமைக் காதல! நீ ஏணுே அனைவர்க்கும் பின்னுல் மறைந்திருளிற் பேச்சற்று நிற்கின்றய? உன்னை ஒருபொருட்டாய் உன்னு தொதுக்கி, அவர் முன்னுற் புழுதி யெழ மோதியடித் தேகுகின்றர்! பொன்னுர் நினது பதப் பூசைப் பொருட்களுடன் கண்ணுல் உனைப்பருகக் காத்திருக் கின்றேன்யான்! தன்ஞற் பொழுது சலிக்க, வழிப் போக்கர்களால் வண்ண மலர் ஒவ்வொன்றய மறைகின்ற தென்செய்வேன்!
காலே கழிந்து கடும் பகலும் போய்க்கொடிய மாலையும் வந்தென்னை மயக்கத்தில் ஆழ்த் திடுது! வேலை முடித்துப் பின் வீடு திரும்பிடுவோர், ஏளனஞ் செய்தென்னே, 'ஏனிங் கிருக்கின்றவ்? ஆளனுக் கோ? வென் றவமானம் செய்கின்றர்! சேலத் தலைப்பால் திரையிட்டுச் சென்றிடுமோர் ஏழைச் சிறு பெண்போல், ஏங்கி மிக நாணிக் கீழ்நோக் கியவண்ணம் கிறங்கித் தயங்குகின்றேன்!
'நிச்சயம் நான்வருவேன், நீயிங் கிருத்தி' யென, அச்சமயம் என்பால் அளித்தநின் வாக்கினையும், இச்சையுடன் உன்னையெதிர் பார்த்திங் கிருப் பதையும் பிச்சைச் சிறுமியான் பேசுவதெவ் வாறவர் பால்? இச்செகத் தானுனக்கு, என் இணையில் வறுமையையே நற்சி தனப்பொருளாய் நான்வைத் திருப்பதனை லச்சையின்றி எவ்வாறு நானுரைப்பேன்? ஆயினும், இப் பச்சை யுண்மை யன்றே, என் பரம் ரகசியமாம்!

Page 3
282 ஆத்மஜோதி
புற்றரையின் மீதமர்ந்து புனித விசும் பினயான் உற்றுற்றுப் பார்த்துனது ஒப்பில் திடீர் வருகை பற்றிக் கனவைப் படர விடுகின்றேன்; நற்றவவா னெங்கும் ஒரே ஞானப் பொன் வெள்ளம்! அதோ, சுற்றிப் புகழ்பரப்பும் சோதி மணிக் கொடி சூழ் பொற்றேரின் மீதோர் புனிதா சனத்திருந்து முற்றய இறங்கி, முளரிக்கண் கீழ் நோக்க, * நற்றள் சிவக்க நடந்துவரு கின்றய நீ!
மண்ணிற் புழுதியிலே வாடித் துவண்டாடும் சின்னக் கொடி போன்ற திக்கற்ற பேதையெனே, விண்ணவர் கோ நீதா ன் விரைந்து நடந்து வந்து விண்ணக் கரம்பற்றி, மார்போ டெடுத்தணத்து, **கண்ணே, உனக்கேன் கவலை? இனி அஞ்சேல் நீ!' என்னப் பலவா றிசைத் தரு கிருத்துகின்றய! எண்ணற் கரிதான இக்காட்சி கண்டவர்கள்,
மன்னி, மரம் போன்று வாயடைத்து நிற்கின்றர் !
காலம் கரைந்தென் கனவும் மறைந்தது காண்! மாலுற்ற நின்தேரோ, வந்தபா டில்லையின்னும்! கோலா கலப்பவனி கொஞ்சமா சென்ற திங்கு? நீளும் பவனி நிழலில் மறைந் தொதுங்கிச்
சீலத் தவ, நீ திருமோனம் கொண்டனையோ?
மீளாத் தனிமையிலே, வீணுன ஆசையினுல், ஏழையேன் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்து ஒலமிட் டேங்கி உழன்றிடுதல் தான் முறையோ?
* பரமஹம்ச தாசன் 1
 
 

ஆத்மஜோதி 283
எ ன் கூ ட் டத்த வர்
( ஆசிரியர் )
கடவுள் ஒருவஸ்து வோடும் கலந்ததில்லை கடவுளோடு ஒருவஸ்துவும் கலந்ததில்லை கடவுளைத் தவிர ஒன்று மில்லை இந்த நிர்ணயம் உடையவரே என் கூட்டத்தவர். (தாளையான் சுவாமிகள் )
இன்றைய உலகமே கூட்டம் சேர்க்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொருவரும் தத்தம் கூட்டத் திற்குக் கூடுதலாக ஆள் சேர்ப்பதில் தான் முனைந்துள் ளார்கள். எதிராளியைத் திட்டினல் தான் கூட்டம் அதிக மாகக் கூடுகிறதென்பது பலருடைய எண்ணம். அதற்காக எத்தகைய தீய சொற்களையும் பிரயோகிக்கப் பின் வாங் குவதில்லை. இத்தகையோரின் பேச்சுப் பத்திரிகையில் வந்து விட்டால் அந்தப் பழி பத்திரிகை நிருபரின் தலையிலே சுமத்தப்பட்டு விடுகின்றது. இன்னுஞ் சிலர், 'பத்திரிகை நிருபர் யாராவது இருந்தால் இந்தச் செய்தியை மாத்திரம் பத்திரிகையில் போட்டுவிடாதீர்கள்' என்று அவர்களை வேண்டிக்கொண்டு வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்லித் தீர்த்துவிடுவார்கள்.
வஞ்சகமே அறியாத பாமரமக்களுடைய உள்ளத்திலே கூட்டம் சேர்க்கும் கட்சியார் நஞ்சினைப் பூசிவிடுகிருர்கள். பால் போன்ற உள்ளம் விஷம் கலந்ததாகி விடுகின்றது. இத்தகையோருடைய நஞ்சு கலந்த வார்த்தைகளைக் கேட் காதவர்களே நல்லவர்கள்! நல்லவர்கள் !!
இலெளகீகர்களைப்போலவே ஆத்மீகத்தில் பரிபூரணத் துவம் அடைந்த மகான்களும் தம் கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்க்கின்றர்களா? என்ருெருகேள்வி எல்லார் உள்ளத்திலும் எழுகின்றது. ஆம், என்றே சொல்லவேண்டும். உலகெலாம் ஒடி அலைந்து ஆறுதல் தேடிவருகின்ற மனிதன் எவனுயினும் அவனைத் தம்மோடு சேர்த்து ஆறுதல் அளிப்பதே மகான் களின் பண்பாகும். தம்மை நாடிவந்த அத்தனைபேரையும் தம்மைப்போல ஆக்கிய தம் கூட்டத்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது அவர்கள் பண்பாடாகும்.

Page 4
284. ஆத்மஜோதி
கடவுள் ஒரு வஸ்துவோடும் கலந்தது இல்லை. கலவா மல் இருந்ததும் இல்லை. இதுதான் கடவுளுக்குரிய பெருஞ் சிறப்பாகும். தாமரையிலை தண்ணீரிலே தான் இருக்கிறது. ஆனல் தண்ணிர் தாமரையிலையிலே இல்லை. மகான்கள் உலகத்திலே தான் வாழுகின்றர்கள். உலகம் அவர்களுக் குள்ளே வாழவில்லை.
கடவுள் எங்கும் நிரம்பி இருக்கிருர் என்ற உண்மையை எவரும் மறுக்கமுடியாது. எங்கும் இருக்கிற இருப்பை உணர்ந்தவர்கள் மிக மிகக் குறைவானவர்களே. அதை உணர்ந்தவர்கள் எப்போதும் கடவுளுடனேயே வாழுகின் முர்கள். உணராதவர்கள் தூரத்திலே வாழுகின்றர்கள். கடவுளைத் தேடித் தேடி எங்கெங்கெல்லாமோ அலைகின் ருர் கள். அலைந்து அலைந்து; ஒய்ந்து ஒய்ந்து கடைசியாகப் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருகின்ருர்கள்,
உள்ளத்தில் தான் ஆண்டவன் இருக்கிருன் என்ற உண்மை வெளியாகிறது. உள்ளே ஆழ்ந்து செல்கிருர்கள். முத்துக் கிடைத்து விடுகிறது. தேடித்திரிந்த செல்வம் வீட்டுக்குள்ளேயே அகப்பட்டு விடுகிறது. உள்ளத்தில் ஒளிரும் இறைவனே எங்கும் இருப்பதைக் காணுகிருர்கள். இதன்பின் உலகத்தில் கடவுளைத் தவிர வேருென்றுமில்லை என்ற ஞானம் உதயமாகின்றது. இந்த ஞானத்தை அநு பவத்தில் கண்டவர்களே ஞானிகள் ஆகின்றர்கள்.
இனம் இனத்தை விரும்பும் என்பது உலக வழக்கு. ஞானிகளும் இத் தொழிலைச் செய்கின்றர்கள். வேட்டை வாளிஎன்ற குழவி, தான் எடுத்து வந்த புழுவைக் கொட்டிக் கொட்டித் தன்னைப் போலவே ஆக்கிவிடுகின்றது. அதுபோல ஞானிகளும் தம்மை நாடிவந்தவர்களைத் தம்மைப்போலவே ஆக்கித் தம்மைச் சேர்ந்த கூட்டத்தவர்கள் ஆக்கிவிடுகின் முர்கள், t
இராமலிங்கவள்ளலார், கொல்லாதவர்களே நல்லவர் கள், நல்லவர்கள். அவர்களே நம்மினத்தார். அல்லாத வர்களல்ெலாம் புறவினத்தார் என்று கூறுகின்ருர், ஜீவ காருண்யமே அவர் உள்ளத்தில் மிகுந்துநின்றது. ஆதலால் தமது கூட்டத்தில் ஜீவகாருண்யமுள்ளவர்களையே சேர்த் துக்கொண்டார்.
 
 

ஆத்மஜோதி 285
நாம் எல்லாரும் யாத்திரை செய்கின்ருேம். இறைவ ணுடைய திருவடியை நோக்கி யாத்திரை செய்து கொண் டிருக்கின்ருேம். ஆதலால் எங்கள் எல்லாருக்கும் ஒரே ஒரு பெயர் தான் உண்டு. அது திருவடியாத்திரைக்காரர் என்பது, இப்பெயர்க்குள்ளே அடங்காத ஜீவர்களில்லை. மனிதன் மாத்திரமல்ல, உலகிலுள்ள ஜீவகோடிகள் எல் லாமே இந்தத் திருவடி யாத்திரைக் கோஷ்டியுள் அடங்கு ன்றன. நாம் எல்லாம் அக்கூட்டத்தவரைச் சேர்ந்தவர் களே. ஆதலால் எக்கூட்டமும் என் கூட்டமே.
இன்பமே சூழ்க; எல்லாரும் வாழ்கி.
பூணீ முன்னேஸ்வரம் பூணி வடிவாம்பிகா ஸமேத மரீ முன்னநாதஸ்வாமி அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விஞ்ஞா ப ன ம் 23-6-1963 ஞாயிறு காலை-7.00-9.07 கர்மாரம்பம்
இரவு-பிரவேசபலி, கிராமசாந்தி 24-6-1963 திங்கள் காலே-நவக்ரஹஹோமம் S இரவு-திசாஹோமம் $ 25-6-1963 செவ்வாய் காலே-வாஸ்து சாந்தி
மாலை-அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம் S. 26-6-1963 புதன் காலை-உதயம் யாகாரம்பம்
மாலை-யாக பூஜை வியாழன் காலே-யாக பூஜை
மா?ல-யாக பூஜை 28-6-1963 வெள்ளி காலை-உதயம் அஷ்டபந்தனம்
தை லாப்யங்கம் மாலை-யாக பூஜை 29-6-19636 காலே-யாக பூஜை மாலை-யாக பூஜை 30-6-1963 ஞாயிறு காலே-யாக பூஜை
-- மாலை-யாக பூஜை, பிம்பசுத்தி 1-7-1963 திங்கள் பகல் -12 மணிக்கு மஹாகும்பாபிஷேகம்
மஹாபிஷேகம் இரவு-திருக்கல்யாணம் உத்ஸவம்
சி. பாலசுப்ரமண்யக் குருக்கள். ALALeLA AAeLLMALAALLLLLA AAAAALLLAeSLAeLLMASLMLASLMLALAeSMLAAMLALLMASeS MAALLAAAALL AAAALLAAAAALLAAAAALLAeAALMLM AAASLMLASLLASLMLALALALAMSLAMLALALMLMSMLALMSS
2
7
6
1.
9
6
3
Ᏸ
大

Page 5
286 ஆத்மஜோதி
பிரஹ்மணீர் ஷெய்கு நெய்னு முஹம்மது
( தாளேயான் சுவாமி )
ஞான தேசிகர் அவர்களின் சரித்திரச் சுருக்கம்.
திவராஜ சிங்கங்களில் ஒருவரான பிரஹ்ம பூரீ தாளையான் ஆண்ட கை ஷெய்கு நெய்னு முகம்மது மஸ் தான் பாவா அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா, நம்பு தாளை என்னும் ஊரில் கனம் முஹ்யித்தீன் அப்துல்காதிர்மீரா நாச்சியார் உம்மா ஆகியோருக்கு அருந்தவப்புதல்வராய் அவதரித்தார்கள்.
மெளலல் கெளம் ஷெய்குநெய்னு முகம்மது மஸ்தான் பாவா அவர்கள் உதயமாகு முன்னமே தமது தந்தை காலவியோகமடைந்து விட்டபடியால் அருமை மாதாவால் போஷிக்கப்பட்டு வந்தார்கள். குருநாதர் தமது பெற்ருே ருக்கு ஏக புத்திரராக இருந்தபடியால் அவர்களுக்குத் திருமணம் செய்து கண்ணுரப்பார்த்து மகிழவேண்டுமென்று வலியுறுத்திய அவரது தாயாரை நோக்கி, எனதருமை மாதாவே நான் தி ரு ம ன ம் செய்துகொள்ளக்கூடிய பருவத்தை இன்னுமடையவில்லை. அந்தக்காலம் வரும்போது தாங்கள் ஜீவித்திருந்தால், அதைச் செய்து கொள்ளலாம் என்று விடைபகர்ந்து கொழு ம் பு போ க உத்தரவு கேட்டார்கள். மகனின் இவ்வருமையான வார்த்தையை மகிழ்வோடு செவியேற்ற மாதா அவர்கள் மகனை வாழ்த்திப் போற்றி மகிழ்வோடு கொடுத்த அனுமதிப்படி சிலோன் வந்து சேர்ந்தார்கள்.
அங்கு சிலகாலம் தங்கி இருந்து, அதன்பின் தாயகம் திரும்பி முன்னைய வழக்கம்போல நேரே தொண்டிக்குச் சென்று, அங்கு அடக்கமாகி இருக்கும் மெளனகுரு ஷெய்கு மஸ்தான் ஆரிபுபில்லாஹ் அவர்களின் தர்கா ஷரீபில் தங்கி தியானத்தில் இருக்கும்போது, அச்சன்னிதியிலிருந்து இவர் களை நோக்கி ' உன்தாயார் சந்தூக்கில் வருகிறள் ஒடு ' என ஒர் அசரீரிவாக்கு உண்டாயிற்று. அச்சப்தத்தை
 
 
 

ஆத்மஜோதி 287
இவர்கள் பொருட்படுத்தாமல் மெளனமாகவே இருந்தார்
கள். உன் தாயாரின் சந்தூக்கு நெருங்கிவிட்டது, உடனே ஒடுக என்று மீண்டும் தொனி உண்டாயிற்று. அதையும் செவி மடுக்காதவர்போல் இருக்கும்போது, மூன்ரும் முறை யாக உரத்த தொனியில் வலியுறுத்தி 'சிக்கிரம ஒட்டா' என்னும் சப்தத்தோடு கன்னத்தில் ஒர் அடியும் விழுந்தது.
இத்தனைக்குப் பிறகு திரு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கட்குத் தெளிவுண்டாகித் தம் மிருப்பிடம் விட்டெழுந்து, ஒருமைல் தொலைதூரத்திலுள்ள தமது பிறப்பிடமாகிய நம்புதாளையை நோக்கி விரைந்தோடினர் கள். இதனிடையிலிருக்கும் (கபுருஸ்தான்) அடக்க ஸ்தலத் தில் தனது தாயாரின் திருமேனி வைக்கப்பட்டுவிட்டது. அதைக்கண்ட இவர்கள் நிலை தடுமாறி ஆவேசமுற்றவர் களாய் தாமும் கபுரினுள் விழுந்துவிட்டார்கள். இப்பரிதாப கரமான செயலைக்கண்ட இவர்களது சுற்றத்தார் இவ் வருமைமிகு வாலிபரைத் தூக்கி எடுத்து வெளியிற் சேர்த்தனர்.
அதற்கப்பால் தம்மில்லத்தில் தங்கி பாத்திஹா வகை யருக்களை நிறைவேற்றியபின், தாயாரின் பிரிவால் மனம் வெதும்பியவர்களாய் ஊரைவிட்டு வெளியேறிப் பற்பல இடங்களில் சுற்றித்திரிந்து பண்டையகாலக் காற்ருட்டிக் கப்பலொன்றில் சிப்பந்தியாக வேலையிலீடுபட்டுக்கொண் டிருக்கும் சமயம், கப்பலில் மேலதிகாரியானவர் மஹான் தாயுமான சுவாமி அவர்களின் பாடலைப்பாடிக்கொண்டிருந் தார். அ  ைத க் கூர் ந் து செவியுற்றுக்கொண்டிருந்த திரு ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் அவர்கள் மேலே நோக்கி, அடே நீ பாடுவது தப்படா என்று கூறி அப்பாட்டை முறையோடு உரத்த தொனியில் பாடினர்கள். அதைக்கேட்ட அவ்வதிகாரி இவர்களைக் கூவியழைத்துத் தம் மருகிலமர்த்தி அப்பாடலை மீண்டும் பாடச்சொன்னர்.
அதனைப் பேரானந்தத்தோடு செவியேற்ற அதிகாரி இவர்
களுக்கு வேலையொன்றும் கொடாமல் தன்னுடன் வைத் திருந்து இவர்களின் விருப்பப்படியே மீண்டும் கொழும்புக்கு அனுப்பிவைத்துவிட்டார்.
கொழும்பில் பல வருஷங்கள் தங்கி வர்த்தகத்தில் ஈடு பட்டு முன்னேறிக்கொண்டு இருக்கும்போதுதான் ஞான மார்க்கத்தில் உய்யவேண்டுமென்ற பெரியதோர் ஆர்வம் ஏற்

Page 6
288 ஆத்மஜோதி
பட்டு எங்கேனும் ஒர் மஹானின் சன்னிதானத்தை அடைந்து
தனித்திருக்கவேண்டுமென்ற அவாப்பூண்டவர்களாய்த் தமது வர்த்தகத்தொடர்புகள் யாவையும் வெறுத்துத் தள்ளிவிட்டு, கொழும்பிலிருந்து யாத் தி  ைர யா கி முத்துப்பேட்டை ஹக்கீமுல் ஹாக்கமா ஷெய்கு தாவூத் ஒலி நாயகம் அவர் களின் திருச்சன்னிதியில் வந்து சேர்ந்தார்கள்.
ஆங்கு அக்கரை இராவுத்தர் என்னும் பெரியாரைச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வமயம் இராவுத் தர் அவர்கள் இவர்களை ஆதரித்து தமது ஆண்டகை அவர்களின் முன்அறிவிப்பின்படி என்னுடைய அந்திய காலம் நெருங்கிவிட்டது. நீங்களும் வந்துவிட்டீர்கள். அடுத்து வரும் ஜமாதுல் அவ்வல் பிறை ஒன்றில் ஆண்டகை அவர்களின் கந்தூரி ஆரம்ப நாளன்று நான் தேகவியோக மாகி விடுவேன். நாமிருவரும் ஒரே நோக்கமுடையோராக இருப்பதால் நீங்கள் என்னேடு இருந்து என் மரணச்சடங் குகளை நிறைவேற்றிவிட்டு, இந்தக் குடிசையிலேயே தங்கி இருந்து மேன்மைதங்கிய ஆண்டகை அவர்களின் கிருபா கடாட்சங்களைப்பெற்று ஆனந்த நிலையடைவீராக என்று கூறி மஹான் ஷெய்கு தாவூத் ஆண்டகை அவர்களின் மகத்துவத்தைப்பற்றியும் அங்கு தாமடைந்துள்ள பாக்கியங் களைப்பற்றியும் எடுத்துக்கூறி இருவரும் நீண்டசம்பாஷணை செய்தனர்.
மேலே கூறப்பட்டுள்ளபடி ஜமாதுல் அவ்வல் பிறை ஒன்றில் இராவுத்தர் அவர்கள் தேகவியோகமடைந்து விட்டார்கள். அவர்களுக்குரிய மரணச்சடங்குகளைக் குறை வின்றிச்செய்து நல்லடக்கம் செய்தபின், அதே குடிசையில்
திரு ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் பாவா அவர்
கள் பன்னிரண்டு வருஷ காலம்வரை தங்கி இருந்து ஐங்
காலத்தொழுகை, நோன்பு போன்ற ஷரீஅத் விதிகளை
வழுவாது அனுஷ்டித்தவர்களாய் வாய் பேசா மெளன
யோகியாகவே இருந்தார்கள். அப்பன்னிரண்டு வருஷ காலங்களுக்கிடையில் தமக்கும் மேன்மைக்குரிய குத்துபு நானர் ஷெய்கு தாவூது ஆண்டகை அவர்கட்கும் இடை யில் நிகழ்ந்துள்ள அற்புதக்காரணுதிகளைப் பற்றிய அவர்
களின் திரு வாய்மொழிகளில் சிற்சில நிகழ்ச்சிகளை மட்டும்
கீழே விபரிக்கின்ருேம்.
 

ஆத்மஜோதி 289
கண்ணியமிக்க ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் அவர்கள் தவத்தில் ஸ்திர நிலைபெற பகலெல்லாம் நோன்பும், இரவெல்லாம் வணக்கமும் புரிபவர்களாகவும் மக்களெல் லாம் அயர்ந்து நித்திரை போனபின் அர்த்த சாமத்தில் ஆண்டகை அவர்களின் தர்கா திருவாயில் முன்பு அமர்ந் திருந்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவு பூராவை யும் கழிப்பார்கள். இடையிடையே தன்னை அறியாமல் நித்திரை வந்து மயக்கும்போது சன்னிதியினுள்ளிருந்து அடே! என்ற சத்தம் கேட்குமாம். அதைக்கேட்டு மீண்டும் தவநிலையிலிருக்கும் சமயம் இரண்டாம் முறையாக தூக்கம் வந்த முக்கும்போது முன்போன்றே அடே! என்ருெரு அசரீரி கேட்டதும் திடுக்குற்றவர்களாய்த் தெளிவடைந்து நிலையைச் சீர்ப்படுத்தியிருக்குங்கால் மறுபடியும் அப்படியே உறக்கம் வந்தாழ்த்துந்தறுவாயில் மூன்ரும் முறையாக அடே! என்ற அதட்டலோடு கன்னத்தில் ஒர் அறையும் விழுமாம். இவ்வாக்கினைக்குப்பிறகு தலைவிரிகோலமாய் ஒ டோ டி எதிரிலிருக்கும் ஷிபா குண்டாவென்ற திருக்குளத்தில் விழுந்து நீராடித் தூக்கத்தைப் போக்கிவிட்டு சன்னிதியில் வந்திருப் பார்கள். இப்படியே பல்லாண்டுகளாக ஊண் உறக்கம் உலகத்தின் வேறு சுகபோகங்கள் யாவையும் வெறுத் தொதுக்கிவிட்டுஹஸ்ரத் ஆண்டகை அவர்களின் திருவடியே தஞ்சமென நாடிக்கிடந்தார்கள்.
மேற்கண்டவாறிருக்கும் போது ஒ ரி ர வு கெளதுல் அஃலம் முஹிய்யீத்தீன் அப்துல்காதிர் ஜிலானிகுத்திஸ் ஸிர்ருஹ" அவர்களைத் தரிசிப்பதற்காகப் பகுதாதுக்கேக வேண்டுமென ஆண்டகை அவர்களின் திருவடியில் வேண் டுகை செய்துகொண்டே இருந்தார்கள். அ ப் போ து 'பகுதாதைக்காட்டுவோம்’ என்ருெரு தொனி கேட்டது பின்னேரிரவு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கள் தூக்கத்திலிருக்குங்கால் அவர்கள் சொற்பனத்தில் இதோ பகுதாதைப்பாரும் என்ருெரு பெரியாரின் வாக்குக்கேட்டது. அவ்வமயம் இவர்களின் குடிசைக்கு மேற்புறத்தில் காணப் படும் ஒற்றைக்கால் மண்டபத்தில் பல பெரியோர்களின் மத்தியில் அமர்ந்திருக்கும் வடிவழகுமிக்க பெரியாரை நோக்கி நானும் தங்கள் சமுகம் வரவேண்டுமே என்று இரந்து கேட்டதற்கு இதோ பக்கத்தில் காலியாக இருக்கும் ஆசனம் உமக்குரியதுதான். என்ருலும் வருஷம் பன்னிரண்டு ஆகவேண்டும் என மறுமொழி பகர்ந்தார்கள்.

Page 7
290 ஆத்மஜோதி
பிறிதொரு நாளிரவு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கள் துயில் கொண்டிருக்கும் போது பெரியா ரொருவர் இவர்களின் சொற்பனத்திற்ருேன்றி இவர்களை அழைத்தவர்களாய் அப்பெரியார் முன் நடக்க இவர்கள் பின் தொடர்ந்தவர்களாய் சில தூரம்போனதும் பெரியார் நடையை இவர்கள் தொடர முடியாமல் அவருக்குப்பின் னல் ஒடிக்கொண்டிருந்தார்கள். இப்படியே சில தூரம் சென்றபின் ஒடிவந்த ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா களைத்து வாடிவிட்டதைக் கிருபையோடு கவனித்த அப் பெரியார் தமது சோழியப்பையிலிருந்த குடுக்கையைத் திறந்து அதனுள்ளிருந்த ஒப்புவமை கூறமுடியாத பானத்தை இவர்கள் வாயில் ஊற்றினர்கள். அதைப்பருகி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினவர்களாய் அதிவிரைவோடு நடந் தார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு முன் வழிகாட்டியாக நடந்து சென்று ஷர்பத்தை நல்கிய அந்தப்பூமா ன் இவர் களுக்குப்பின்னல் நடந்தார்களெனினும், மு ன் போ கும் வாலிபரைத் தொடர முடியாமல் இப்பெரியார் ஒடிச்செல்ல வே ண் டி ய த T யி ற் று. இவ்வாறன காட்சிக்குப்பின் திரு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்களுக்குப் பெரியதோர் சக்தியும் இன்பநிலையும் உண்டாகிவிட்டது.
இம்மாதிரி எண்ணமுடியாத எத்தனையோ அற்புதக் காட்சிகளைக் கண்டு தெளிந்து பன்னிரண்டாம் ஆண்டின் இறுதியில் தமது சொற்பனத்தில் கம்பீரத்தோற்றமுடைய பக்கீர் (சன்னியாசி) ஒருவர் உதயமாகி இவர்களை நோக்கி, உமது தவம் முடிந்துவிட்டது எனவே இதோ குவிக்கப் பட்டிருக்கும் பொற்குவியலை அள்ளிக்கொண்டு போகலாம் என்றுரைத்தார்கள். அவ்வசனத்தைக்கேட்ட இவர்களுக்குக் கோபமுண்டாகி இவ்வுலகப்பொருள் அனைத்தும் துச்சம், எனக்குத் தேவை இல்லை யென்று அலட்சியமாக மறுமொழி கூறிவிட்டார்கள். உடனே அப்பெரியார் இவர்களைக்கட்டி யணைத்து முத்தமிட்டுத் தேவாமிர்தம் போன்ற குடிப்பைப் புகட்டியதோடு பல இரகசிய அறிவுகளையும் போதித்து மறைந்தார்கள். அதன் பின் முத்துப்பேட்டையை விட்டு வெளியாகிச் சிலகாலம் நாகூர் ஆண்டகை அவர்களின் தர்காஷரீபில் இருந்து, அதற்கப்பால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். கொழும்பில் தாளேயான் பிரின்டிங் வெர்க்ஸ் என்ற அச்சகத்தை ஸ்தாபிதம் செய்து பக்கீர்களுக்கும் சன்னியாசிகளுக்கும் வாசஸ்தலமாக அமைத்துதவினர்கள். இன்னும் பல தொழில்களுக்கும் உரிமையாளராக இருந்து
 

ஆத்மஜோதி 2.91.
அத்தொழில்களைச் செவ்வையாக நடப்பித்துக்கொண்டிருக் குங்காலத்து, ஹிஜ்ரி 1374. துல்ஹஜ்ஜுப் பிறை 14 க்கு சரியாகிய 3-8-1955 புதன்கிழமை காலை 9-30 மணி யளவில் முன் அறிவித்தல் செய்திருந்ததற்கேற்ப தங்களது அரவணைப்பில் வைத்திருந்த பக்கீர்களுடனும், சன்னியாசி களுடனும் வெகு ஆனந்தமாக உரையாடிக்கொண்டிருக்குஞ் சமயம் பரிபூரண நிலையென்னும் மகாசமாதியை அடைந் தார்கள்.
கணக்கான மக்கள் புடை சூழ கொழும்பு ரத்மலானே
கந்தவளை என்னுமிடத்தில் ஆலீஜனப் அல்ஹாஜ் முஹம்மது
பலில் அப்துல் கபூர் அவர்களால் நன்கொடை அளிக்கப்
பெற்ற பூங்காவில் இம்மஹானின் புனிதவுடல் நல்லடக்கஞ்
இசய்யப்பட்டது. அவர்களின் சமாதிப்பீடம் சிறந்து விளங்கு
AD gbl •
இறுதிக்கிரியைகளைக் குறைவின்றிச் செய்து பன்னூற்றுக்
X---- <><><><><><><><><><><><><><><><><><><>. அந்தர் யோகம்
ల6*ష్ట్రాట్టల్షత్రిక్చ.
கொழும்பு தெ ய் வ நெறி க் கழகச் சார்பில் ? யூலாய் 5-ம் திகதி வெள்ளிக்கிழமை மாலே தொடங்கி x 6-ம் 7-ம் திகதிகள் 2 நாட்களும் மோடி கலா ? கேந்திர மண்டபத்தில் அந்தர் யோகம் நடைபெற இருக்கிறது. பங்குபெற விரும்பு வோரும் விபரம் , அறிய விரும்பு வோரும் பின் வரும் விலாசத்திற்கு? எழுதி அறிந்துகொள்ளவும். {)
காரியதரிசி, தெய்வநெறிக் கழகம், தம்பையா சத்திரம். 30, அர்ச். அந்தோனியார் மாவத்தை, രം கொழும்பு-13, <><><><><><><><><><><><><><><><><><><><>4<><>><><>

<>


Page 8
292 ஆத்மஜோதி *
தர்மம் என்பது என்ன?
(R. நடேச ஐயர்)
பிரம்மாவின் மானஸ் புத்திரர்களுள் ஒருவரான ஸனத் குமாரர் பிருது சக்கரவர்த்தியை நோக்கிச் சொல்லுகிருர்,
‘சாஸ்திரங்கள் சொல்வது தர்மத்தை தர்மமோ உலகத்
திற்கு க்ஷேமத்தை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தையே உடையது. சாஸ்திரங்களை அலசி அலசி ஆராய்ந்த பெரி யோர்கள் மனிதர்கள் கூேடிமத்தைப் பெறுவதற்காகத் தே
டிக் கொள்ள வேண்டியது இரண்டே என்று தீர்மானித்து
விட்டிருக்கிருர்கள். அழிவற்ற பிரம்மமான ஆத்மாவினி டத்தில் அசைக்க முடியாத ப்ரீதி ஏற்பட்டு விட வேண் டும். மற்ற வஸ்துக்களை ஒருவிதத்திலும் ஒருக்காலும் ஸ்ம ரிக்கக் கூடாது'
கேஷமத்தைப் பெற ஆசையிருக்கிறதா? சாச்வதமான க்ஷேமத்தைப் பெற ஆசையுண்டா? சாஸ்திரப்படி நட. தர்மமிதுவே. சாஸ்திரம் என்ன சொல்லுகிறதென்று ஸனத்கும்ாரர் சொல்லிவிட்டார். சாஸ்திரத்தைப் பிரட்டப் போகவேண்டாம். அவர் சொல்லி இருப்பது சந்தேகமின்றிச் சொல்லப்பட்டு விட்டது. நம்முள்ளத்திலே இருப்பது ஆத் மாவென்று சொல்லுகிருேம். அந்த ஆத்மாவே பூர்ணப் ரம்மமென்று அறிந்து அவனை நேசிக்க வேண்டும். அவனி டம் அன்பு பாராட்ட வேண்டும். மற்றவைகளிடம் அன்பு வைக்காமல் இந்த ப்ரம்மமான ஆத்மாவினிடத்தில் அன்பு வைத்தால்தான் அது வளரும். வேர் பிடிக்கும். வாடாது. பிறகு அந்த அன்பு அசைக்க முடியாததாகி விடும். இவ் விதம் ப்ரம்மமான ஆத்மாவினிடத்தில் அசைக்க முடியாத
பிரியத்தை வைப்பதுதான் தர்மம். மற்ற வஸ்துக்களிடத்
தில் பற்றற்றிருப்பதும் தர்மத்திற்கு அவசியமே. இந்த இருமுகமான தர்மத்தை அனுஷ்டித்தால் கண்டிப்பாய் க்ஷேமமடையலாம்.
ஸனத்குமாரர் தர்மமென்பது யாது என்று மேலே விளக்கினரோ அவ்விதமே சூதரும் பாகவதத்தைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே சொல்லுகிருர், சூதர் சொல்லும் முறையைக் கவனியுங்கள்.

ஆத்மஜோதி 293
கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கத் தோன்றிற்றே! இது
வே என்னுடைய பாக்கியம்! என்று சொல்லி விட்டு, கார ணமற்றதும் அசைக்க முடியாததுமான அன்பு கிருஷ்ண னிடம் உண்டாகும்படி செய்து கொண்டு விடுவதுதான் மனிதன் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய தர்மம். இதை அனுஷ்டித்தால் அழிவற்ற ஆத்மாவைக் கண்டு விடலாம். நம்முள்ளத்தில் நம்மை விட்டுப் பிரியாமல் நமக்குப் பல விதங்களில் ஆனந்தத்தை அனுபவிக்க உதவும் இந்த ஆத் மாவே பரம்பொருளான கண்ணன் என்ற உண்மையையும் அறிந்து விடலாம். இதுவே சிறந்த தர்மம் என்று சூதர் சொன்னர்.
கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கத் தோன்றிற்றே! அப் பொழுதே கேடிமத்தை அளிக்கும் தர்மத்தின் பேச்சு பிறந்து விட்டதே! கிருஷ்ணனைப்பற்றி விசாரித்தால் போதும். கிருஷ்ண தர்சனம் கிடைத்து விடும். எப்படிப்பட்ட கிரு ஷ்ண தர்சனம்?
"ஒய் ப்ரம்மா! எல்லாவித தர்மானுஷ்டானங்களால் மனிதன் பெறக்கூடிய உத்தம பலன் என்னுடைய தாச னமே" எனப்பட்ட் கிருஷ்ண தர்சனம் கிடிைத்து விடும்.
கிருஷ்ணதர்சனம் என்பது உள்ளத்திலிருக்கும் ஆத்மா வின் தர்சனம் என்றும் விளங்கும்படி சொலலுகிருர்' "
ஆத்மதர்சனம் வேண்டும், ஆத்மாவுடன் நெருங்கிப் பழக வேண்டும். ஆத்மா அழைத்துச் செல்லும் பாதையி லேயே நடக்க வேண்டும் என்பது கடவுளின் அருளைப் பெற்று விட்ட மகான்களின் விருப்பம். இப்படிப்பட்டவர் கள் எப்பொழுதும் ஒரே காரியத்தில் கண்ணுயிருக்கிருர் கள். உள்ளத்தில் கெட்ட சேர்க்கையாலும் கெட்ட மனப் பான்மையாலும் படிந்திருக்கும் பாசி போன்ற அழுக்கு களைப் போக்கிக் கொண்டு அடியில் ஸ்படிகம் போல் அன் பேயுருவம் போல் பிரகாசிக்கும் ஆத்மாவைத் தேடுகிறர் கள். அழுக்குகள் விலக விலக ஆத்மா காணப்படுகிறது. ஆத்மாவும் காணப்படக் காணப்படச் சுயநலம், தேகாபி மானம், அகங்காரம், மமதை எல்லாம் பறந்தோடிப்போ கிறது. ஆச்சரியம் ஒருபக்கம், ஆனந்தம் ஒரு பக்கம்: இவ்வளவுக்கும் மேலான ஆச்சரியமும் ஆனந்தமும் அவர் களை எதிர்கொண்டு அழைக்கிறது. என்ன அப்படி? அவர் கள் தேடிக் கண்டு விட்ட் ஆத்மா அவர்கள் வழிபடும்

Page 9
294 ஆத்மஜோதி
தெய்வமென்று கண்டு விடுகிருர்கள். சிலருக்கு அவர்கள் வழிபடும் முருகனுகவும், சிலருக்குச் சிவனுகவும், சிலக்ருகு ஜகன்மாதாவாகவும், சிலருக்கு ஏசுவாகவும், சிலருக்கு அல் லாவாகவும் அந்த ஆத்மாவே காணப்படுகிறது. இவ்வ ளவு தெய்வங்களை ஒரே பெயரால் கூப்பிடுவது பல கார ணங்களால் நலமாயிருக்கும். ஆதலால் எல்லாத் தெய்வங் களையும் கிருஷ்ணன் என்று கூப்பிடுவோமே! அந்தக்கிருஷ் ணனும் இதற்குச் சம்மதித்திருக்கிருனே !
ஆத்மதர்சனம் செய்த மகான்கள் முடிவில் அவர்களு டைய ஆத்மாவே கிருஷ்ணன் என்று கண்டு விட்டபிறகு *அடேடே! கண்ணு! நீயேதான் என்னுத்மாவா? ரொம் பச் செளகர்யமாப் போச்சு' என்று சொல்லி, ஆனந்த பரவசமாகி விடுகிறர்கள். -
கிருஷ்ணனைப் பற்றி வினவத் தொடங்கிய போதே சிரத்தையுடனும் சுகத்துடனும் நற்குணங்களுடனும் ஆத்ம ஆராய்ச்சியும் கிருஷ்ண ஆராய்ச்சியும் தொடங்கி விடுகின் றது. மற்ற ஆராய்ச்சிகள் வெற்றியை அளிக்கலாம். தோல்வியை அளித்தாலும் அளிக்கலாம். ஆனல் கிருஷ்ண ஆராய்ச்சி மட்டும் தோல்வியை அளிப்பதில்லை. கிருஷ்ண ஆராய்ச்சி கிருஷ்ண தர்சனத்தைக் கண்டிப்பாய் அளித்து விடுகிறது. அது மட்டுமல்ல. கிருஷ்ண தர்சனத்தையளிப் பதற்கு முன்னரே கிருஷ்ணன் மனத்தின் தூய்மையையும் சாந்தியையும் அளித்து விடுகிறது. ‘கிருஷ்ணன் என்ற பெயர் காதில் விழுகிறதே! அதைக் காதால் கேட்கும் பொழுதே தேனைப்போல் இனிக்கிறதே! அவன் யார்? அவன் எப்படிப்பட்டவன்?’ என்ற எண்ணங்கள் மனத்தில்
உதிக்கும்போதே இவ்வளவு ஆனந்தம் பிறக்கிறதே!
இந்தக் கேள்வியாலே எவ்விதம் பிரம்மானந்தம் உண் டாகிறது? கிருஷ்ணன் என்ற பெயர் உச்சரிக்கப்பட்ட உடனே இருக்கிற இடம் தெரியாமல் எங்கேயோ எந் தெந்த நிலையிலோ மறைந்திருக்கும் பலகோடி சாதுக்கள், தெய்வங்கள், தீர்த்தங்கள், ரிஷிகள், கூடி விடுகிறர்கள். இவர்களில் சிலர் கல்லாய், சிலர் மண்ணுய், சிலர் நீர்த் துளிகளாய், சிலர் புல் பூண்டாய், சிலர் காற்ருய், சிலர் புழுக்களாய், சிலர் பறவைகளாய் இருந்தவர்கள். கிருஷ் ணனைப் பற்றியும் கிருஷ்ணனுடைய விளையாட்டு முறைக ளைப் பற்றியும் சொல்லமாட்டார்களா வென்று தவித்துக்
 

ஆத்மஜோதி 295
கொண்டிருந்த தபஸ்விகள் கூடி விடுகிருர்கள். பாகவதம் முழுவதிலும் இவ்விதம் கிருஷ்ண பிரச்சனையால் இழுபட் டுக் கூடின கூட்டங்களைப் பன்முறை பார்க்கிருேம். பாக வதம் சொல்ல ஆரம்பிக்கும்போது இப்படியே நைம்சா ரண்யத்தில் பாகவதர்கள் கூடினுர்கள். சுகர் பரீக்ஷித்து மகாராஜாவுக்குப் பாகவதம் சொல்லப் போகிருர் என்ப தை அறிந்து கங்கைக் கரையிலும் இவ்விதமே எல்லாப் பக்த சிரேஷ்டர்களும் கூடி விடவில்லையா?
தேவதைகளும் ரிஷிகளும் பாகவாதவதாரத்தை நாம் அறிந்ததே யில்லையே! இவ்வளவு சாதுக்களும் காரணம் இன்றிப் பகவானிடம் ஆசை கொண்டு கூடுமிடத்திற்குப் பகவான் வராமலெவ்விதமிருப்பான்? பகவான் தோன்றிய பிறகு கூடவா துன்பங்கள் ஒழியாமலிருக்கும்?
இவ்விதம் கூடும் கூட்டங்களில் ஒருவனுய் இருக்க ஆசை பிறப்பதுதான் தர்மத்தை நன்கு அனுஷ்டித்ததின் பயன் என்று சூதர் சொல்லியிருக்கிருர் .
எதை அனுஷ்டித்தால் பகவானுடைய கதையில் ருசி ஏற்பட்டு விடுகிறதோ அதற்குத்தான் தர்மமென்று பெயர் உண்டே? அது எப்படிப்பட்டது தெரியுமா?
நாகரீகம், பணம், நகை, ஸ்திரிபுருஷ விஷயங்கள் முத லிய பேச்சுக்கள் கசக்கும். இப்படிப்பட்ட பேச்சுக்கள் கா
தில் விழுந்தால் பாகவதனுக்கு ஹரிகதையில் ஆசை கொண்
டவனுக்குத் தலைவலி வந்து விடும். பூரீலபூரீ ராமகிருஷ்ண
பரமஹம்சர் இந்த நிலையில் இருந்தார். பகவானுடைய குணங்களை மட்டும் கேட்க ஆசை பிறக்க வேண்டும். மற்ற வம்புப்பேச்சுக்களில் வெறுப்பு உண்டாக வேண்டும். இவ்விதம் யாருக்கு ஏற்பட்டு விடுகிறதோ அவன் தர்மத்தை அனுஷ் டித்து விட்டான் என்று சொல்லி விடலாம் என்ருர் சூதர். இப்படிப் பட்டவனே பாகவதணுகிருன்.
பாகவதணுக எப்பொழுது ஒருவன் ஆகிருன் என்று பரம சிவன் ப்ரசேதஸ்ஸகுகளுக்கு வெகு அழகாய்ச் சொல்லியி ருக்கிருர்,
ஒருவன் விதிக்கப்பட்டிருக்கும் தர்மப்படி நூறு பிறவி
களில் நடந்தால் அவன் சிருஷ்டி கர்த்தாவின் அத்யந்த

Page 10
296 ஆத்மஜோதி
நண்பன கிருரன். அவ்விதமே தொடர்ந்து போனல் எனக்கு (பரமசிவனுக்கு) அத்யந்த நண்பனுகிருன். மேலும் தொ டர்ந்து அவ்விதமே நடப்பாணுகில் அவன் லிங்க சரீரத்தி லிருந்து விடுதலை அடைகிmன். லிங்க சரீரத்திலிருந்து விடு தலை பெற்றவனுக்குத் தேகாத்ம புத்தி இருக்காது. அகங் காரம் மமகாரம் கிடையாது. கர்மபந்தங்களில்லை. இந்த சமயத்தில் தான் ஒருவன் பாகவதனகிருன், அதாவது வைஷ்ணவன் ஆகிருன் . நானும் மகான்களும் இவ்விதமே பாகவதர்கள் ஆகியிருக்கிருேம் என்று பரமசிவன் சொன் (DT .
இதிலிருந்து என்ன தெரிகிறது? பரமசிவன் சொன்ன படி பாகவதன் ஆக ஆணுல்தான் தர்மத்தை விடாமல் அனுஷ்டித்திருக்கிருன் என்று கொள்ள வேண்டும். ஒருவ இனுக்குத் தேகாத்ம புத்தி ஒழிந்து அகங்காரம் மமகார ம சத்து வைஷ்ணவனுக ஆகிவிட்டால் அவன் தர்மத்தை அனுஷ்டித்திருக்கிருன் என்று ஒத்துக்கொண்டு விடலாம். இவனுக்கு ஹரிகதையில் ஏற்பட்டிருக்கும் ருசியும் உண்மை யாயிருக்கும். எக் காரணம் கொண்டும் கிராம் ய பேச்சுக் களுக்கும் வம்புப் பேச்சுக்களுக்கும் செவி சாய்க்க மாட் டான். இவனுடைய சித்தம் உலக வியவகாரங்களைவிட்டு விலகி அந்தக் கரணத்தில் ஆத்ம ஸ்வரூபியாயிருக்கும் கண் ணனையே கண்டு கொண்டு களித்திருக்கும். இப்படி இருப் பவனே சாது. இவனே பாகவதன். இவனே வைஷ்ண வன். இவனே பகவானுக்குச் சமானமானவன்.
இவனே ஹரிபக்தன். இவனைத் தேவர்களும் திரு மூர்த்திகளும் போற்றுவார்கள். இவனுடைய திருஷ்டி யார் மீது விழுகிறதோ அவர்கள் பாவனமாகி விடுகிரு' கள். ப்ரஹலாதர் நாரதர் முதலிய பரமபாகவதர்கள் இப்படிப்பட்டவர்களே! இதில் லவலேசம் கூட சந்தேகம்
இல்லை.
இந்த நிலையைப்பெரு மல் இருப்பவர் உலகத்தில் எவ்வளவு புகழினை உலகத்தில் பெற்றலும் எவ்வளவு உலகசம்பத்தை திரட்டினுலும் எவ்வளவு சித்திகளையும் பலத்தையும் காட் டினுலும் ஒருக்காலும் பாகவதர்கள் ஆகமாட்டார்கள்.
இவர்களைப் பின்பற்றுவது வீணே.

ஆத்மஜோதி 297
உலக வியவகாரங்களில் பற்று ஒழிந்து, உள்ளத்தில் ஆத்மாவின் ரூ பத் தி லி ரு க் கு ம் கிருஷ்ணனைக் கண்டே விடவேண்டும். கிருஷ்ண கதையில் ருசி ஏற்படவேண்டும். தேகாத்மபுத்தி போகவேண்டும். 'நான்' 'என்னுடையது' என்ற மனப்பான்மையும் ஒழியவேண்டும். இவ்வளவும் யாருக்கு வந்துவிட்டதோ அவன் செய்தது தர்மம். இவ் வளவும் யாருக்கு வரவில்லையோ அவன் செய்தது தர்ம மில்லை. இதுதான் தர்மத்தின் லக்ஷணம். இது மேலே கூறப்பட்டது. -
பரீமன் நாராயணனுடைய நாபியிலிருந்து பிரம்மா தோன்றினரே, அப்பொழுது பி ர ம் மா நாராயணனைக் கண்டார்.நாராயண தர்சனத்தால் பயம், சந்தேகம், குழப்பம் எல்லாம் ஒழிந்தது. உற்சாகமும் தைரியமும் பிறந்தது. ஸ்தோத்திரம் செய்தார். எப்படிப்பட்ட ஸ்தோத்திரம் தெரியுமா? அதைப்படித்தால் இன்று கூட நாராயணன் திருப்தி அடைவான். தர்சனமும் அளிப்பான். இதைப் ப க வா ன் நாராயணனே தெரிவித்தான் பிரம்மாவிற்கு, அதற்குக்காரணம் என்ன? பகவானுடைய அனுக்ரஹத் தாலேயே அந்த பிரம்மஸ்துதி ஏற்பட்டது. இப்படிப்பட்ட ஸ்தோத்திரத்தைக் கேட்டுவிட்டு பகவான் வெகு அன்புடன் பிரம்மாவுக்குப் பதில் அளித்தார். அப்பொழுது, 'தர்ம காரியங்கள், தபஸ் , . யாகங்கள், யோகம், சமாதி முதலியவைகளைத் தர்மம் என்று சொல்லுகிருர்கள். இவைகளை மனிதன் செய்ய வேண்டுமென்றும் சொல்லு கிருர்கள். ஆனல் திருப்தியைச்செய்வதே தர்மமானபடியால், எனக்குத் திருப்தியைத் தராத காரியங்கள், அவை எவை யானுலும் சரி, அவை தர்மமாகாது நான் திருப்தி அடை கிறேனு இல்லையா என்பதைக்கொண்டுதான் செய்யப்பட்ட காரியங்கள் தர்மமா இல்லையா வென்பதை நிர்ணயிக்க வேண்டும்' என்று சொன்னர். ஆகையால், பகவானுடைய திருப்தியையே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட காரியங்களே தான் தர்மம். பகவானைக் கண்டு, அவனுடன் பழகி, அவனுடைய விருப்பத்தை அறியவேண்டும். அவ னுடைய விருப்பத்தை அறிந்து, அவனுடைய விருப்பப்படி நடந்து, அவனுடைய சம்மதத்தையும் பெற்று வி ட வேண்டும். அவ னு ல் ஆமோதிக்கப்பட்ட காரியங்களே தர்மமாகும். கோபி குழந்தைகள் கண்ணனுடைய சரணத் தைத் தொட்டுவிட ஆசைகொண்டு காத்யாயனி விரதா னுஷ்டானம் செய்தார்கள். பகவான் அதை ஆமோதித் தான். அது தர்மம்.

Page 11
298 ஆத்மஜோதி
பக வான் ஆமோதிக்கிறவரையில், செய்யப்பட்டது
தர்மமோ இல்லையோவென்ற சந்தேகமிருக்கும். இந்தச் சந்தேகத்தைப் போக்கச்சொல்லிப் ப க வா னை வேண்ட வேண்டும்.
பகவானே! என்னுடைய சுயநலத்திற்காக நான்
ஒன்றும் செய்ததில்லை. நீ சந்தோஷப்பட வேண்டுமென்றே நான் காரியங்களைச் செய்துவந்தேன். உனக்கு என் காரியங் களில் சந்தோஷம் தான? தயவு செய்து பதில் சொல்லு' என்று பகவானைப் ப்ரார்த்திக்கவேண்டும். இந்த பிரார்த்தனை உண்மையாயிருக்க வேண்டும். பொய்யாக பிரார்த்தனை செய்தால், அவன் ஏமாறமாட்டான். உண்  ைம யா கச் சுயநலமற்று, பகவத்திருப்திக்காக நாம் நடந்து கொண்
டிருந்தால் அவன் நம்முடைய நடத்தையை ஆமோதிப்பான்.
அப்படிப்பட்ட நடத்தைக்குத் தர்மமென்று பெயர்.
பிரசேதஸ்ஸாசகளும், ருக்மணிதேவியும் மேற் கூறியவாறு பகவானைப் பிரார்த்தித்து அவனுடைய சம் ம த த் தைப் பெற்றனர். அவர்கள் செய்தது தர்மம் என்பதில் சந்தேக மில்லை.
ப்ரசேதஸ்ஸ ரகள்:- 'நாங்கள் தர்மப்படி வேத மோதி யிருந்தால், தர்மப்படி குருசேவை செய்திருந்தால், தர்மப் படி பெரியோர்களை வணங்கி இருந்தால், நண்பர்கள், சகோதரர்கள், மற்ற எல்லாஜீவர்களிடம்சுயநலம் கருதாமல் அசூயையின்றி நடந்து கொண்டிருந்தோமானல், பட்டினி யுடன் ஜலத்திலிருந்து கொண்டு வெகு காலம் ருத்ர கீதத்தை உண்மையாய்ச் சொல்லியிருந்தோமானல், நீ, ஒபகவானே! திருப்தி அடைந்திருந்தால் தான் எங்கள் வாழ்நாள் நேர்மையாகச் சிலவிடப்பட்டது என்று எண்ணு வோம் என்ருர்கள்.'
பகவான் 'எனக்குத் திருப்திதான்' என்று சொன்னன். ப்ரசேதஸ்ஸுகள் செய்தது தர்மம்.
ருக்மணிதேவியோ பகவானுன கண்ணனையே மணக்க வேண்டுமென்று திடமான நிச்சயத்திற்கு வந்தா ள் . ருக்மணிக்குக் கிருஷ்ணனை மணந்து கொள்ள ஆசைதான். ஆனல் கிருஷ்ணனுக்கு ருக்மணியின் கையைப்பிடிக்க ஆசை வேண்டாமா? கிருஷ்ணனுக்கு ருக்மணியைப் பிடிக்க வேண்

ஆத்மஜோதி 299
டாமா? கிருஷ்ணனுக்கு ருக்மணியிடம் திருப்தியிருக்க வேண்டாமா? கி ரு ஷ்ண ன் எ ன் னை ஆமோதிப்பானு? அவனுக்குத் தி ரு ப் தி யாய் இருக்கக்கூடிய நடத்தையை உடையவளா நான்? என்று ருக்மணிக்குச் சந்தேகம் ஏற் பட்டது. மணந்தால் கிருஷ்ணனை மணப்பது, இல்லா விட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தாள். இருந்தாலும் கிருஷ்ணனுக்கு அவளிடம் திருப்தி இருக்கிறதாவென்று அறிந்துவிடத் தீர்மானித்து கிருஷ் ணனை ஒரு க டி த மூ ல ம் இதைக் கேட்டேவிட்டாள். 'நான் பலராமனுடைய செல்லத்தம்பியான பரம்பொருளே என்னுடைய நல்ல கர்மங்களாலும், தானங்களாலும், விரதங்களாலும், தேவர்களின், பிராம்மணர்களின், குருவின் ஸேவையாலும் பூசித்திருந்தால், அந்தப் பகவான் என் கையைப் பிடிக்கட்டும். மற்றத் துஷ்டர்களோ, கெட் ட எண்ணங்களோ, பாபாத்மாக்களோ என்னைத் தீண்டாம லிருக்கட்டும்' என்ருள்.
பகவான் ஒடோடி வந்து ருக்மணியின் கையைப் பிடித் துத்துரக்கி ரதத்தில் வைத்துக்கொண்டு துவாரகைக்கு அழைத்துப்போய்எல்லோரும் அறிய உலகம் மகிழமணந்தான். ருக்மணி செய்து வந்தது தர்மமே என்று விளக்கினன்.
இதைப் போல் பல தடவை பகவானுடைய திருப்தி யைப் பலஞகக் கொண்டதே தர்மமென்று விளக்கப்பட்டி ருக்கிறது. பகவானுடைய திருப்தியோ உலக வியவகாரங் களிலிருந்து விடுபட்டு உள்ளத்தில் கோயில் கொண்ட கண் ணனைக் காணத் துடிப்பதால் மட்டுமே ஏற்படுகிறது. இப் படிப்பட்ட துடிப்பு உண்டாக, தேகாத்ம புத்தி அகங்கா ரம் ஒழிய வேண்டும்.
தர்மமென்பது யாது என்று ஒரு விதமாய் விளக்கப் பட்டு விட்டதாய்க் கொள்ள வேண்டும். நவயோகிகள் எனப்படுபவர்கள் ரிஷப யோகியின் குமாரர்கள். பரதசக் கரவர்த்தியின் தம்பிகள். பகவானுக்குச் சமமான பாகவ தோத்த மர்கள். இவர்களை நினைத்தாலே கர்மபந்தம் போ கும். வாஸுதேவன் திருப்தி அடைந்து ஒளியாமல் எதி ரில் தோன்றி அவனுடைய மகிழ்ச்சியை வெளியிடுவான். இவர்களுள் ஹரி என்றவர் சொன்ன ரத்னங்கள் போன்ற சுலோகங்களையும் கரபாஜனர் என்றவர் சொன்ன ஒரே சுலோகத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு இந்தப்

Page 12
300 ஆத்மஜோதி
பேச்சை முடித்தால் பகவான் கட்டாயம் திருப்தி அடை வான். பகவானுடைய திருப்தியைப் பெற்றுவிடக் கூடுமா கையால் இந்தப் பேச்சே தர்மமாகி விடும். வேறு என்ன வேண்டும்?
இந்த மூன்று சுலோகங்களும் நமக்குப் பகவானுடைய திருப்தியைப் பெற்றுக் கொடுக்கும். இது காரணமாக நாம் செய்ததும் தர்மமெனக் கருத நமக்கும் உலகத்தாருக்கும் தைரியம் ஏற்படட்டும்.
தேகம் பிறப்பிறப்பால் கஷ்டத்தை அளிக்கும். இந்
திரியங்கள் காம பீடைகளால் கஷ்டத்தைக் கொடுக்கும்.
பிராணன் பசியைக் கொடுத்து நம்மைக் கொல்லும். மனது எல்லா வஸ்துக்களையும் கண்டு பயந்து பயந்து நம்மைத் துன்பப் படுத்தும். புத்தி கண்ட வஸ்துக்களிலெல்லாம் தாகத்தை உண்டாக்கி நம்மை வாட்டும். இவ்வளவுதான் மனிதனுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்கள் என்று எண்
விட வேண்டாம். சம்சார தர்மங்கள் என்ற பெயர் பூண்டு ஒரு பெரிய போலி மகானிருக்கிருன். அவனிடும் கட்ட ளைக்குக் கணக்குமில்லை. முடிவுமில்லை. பல விதங்களில் இவன் பயமுறுத்தி வேலை வாங்குவான். இவன் கொடுக் கும் கஷ்டங்களுக்கும் மனிதன் உட்படுகிருன் . எவனுெரு வன் ஹரியை இடைவிடாமல் எண்ணி இவ்வளவு கஷ்டங் களையும் கண்டு பயப்படாமலும் ஸம்ஸார தர்மங்களைக் கண்டு மோஹிக்காமலுமிருக்கிருனே அவன்தான் சிறந்த பாகவதோத்தமன். ஸம்ஸார தர்மங்களைக் கண்டு மோ ஹிக்கக் கூடாதென்றல் 'குடும்பம் இடும் கட்டளைகளை
ஹரி சிந்தனையுடன் செய்ய முடிகிற வரையில் செய். செய்
யாததைக் குறித்துக் கவலைப் படாதே' என்று பொருள்.
எவனுக்குச் சரீரத்தில் நான் என்ற பிரக்ஞை இல்லை யோ அவன் ஹரியினுடைய செல்லக் குழந்தை. தேகாத்ம புத்தி அழிந்தவனைக் கண்டு விட்டால் பகவான் விடவே மாட்டான், அவனைத் தலையில் வைத்துக் கொண்டு கூத் தாடுவான். யானைமேல் ஏற்றி பவனி வரச் செய்வான். மலைமேல் தூக்கிச் சென்று அவனை உ சத்தியாகப் போற்று வான். அவனுக்கு ஜன்மத்தாலோ, ஐச்வர்யத்தாலோ, படிப்பாலோ, கலைகளாலோ கர்வ மேற்படுவதில்லையே! 'நான் பெரிய குலத்தில் பிறந்திருக்கிறேன், என்னைப் பூஜிக்க வேண்டும். நான் தான தர்மங்களைச் செய்திருக்
 

ஆத்மஜோதி 30
கிறேன். என்னைப் பாராட்ட வேண்டும். நான் படிப்பாளி, நான் நல்ல நடத்தையுடையவன், மற்றவர்களைப் போல் கெட்டவனில்லை' என்று சொல்லிக் கொள்ளத் தெரியாது. இவ்விதம் சொல்லிக் கொள்ளத் தெரியாதவன் பகவானு டைய அன்பன். குந்திதேவி கிருஷ்ணனை நோக்கி இப்ப டிப்பட்ட, நிஷ்கிஞ்சனன், "நானில்லை - நீ என்று சொல் லுகிறவன் கண்ணில்தான் நீ படுவாய்'
ஹரியின் கலடியை அன்புடன் பிடித்துக் கொண்டு மற்ற உலக விஷயங்களை ஒரு பாடாக மனத்திலிருந்து
ஒதுக்கி விட்டவன் ஹரிக்குப் பிரியனுகி விடுகிருன் இப்ப
டிப்பட்டவன் செய்யும் காரியங்கள் அருவருப்பைக் கொ
டுக்கக் கூடியதாயிருந்தாலும், அந்தக் காரியங்கள் தர்மமே
யென்று ஹ்ருதயேசனுன பகவான் ஆமோதித்து விடுகி முன். பகவானுடைய அன்புக்குப் பாத்திரம் ஆகி விட்ட வர்கள் எது செய்தாலும் அது தர்மம்தான். பகவான் அவர்களுடைய காரியங்களை ஆமோதிக்கிருன், ஜய விஜ யர்கள் செய்ததை அவனே திட்டமிட்டிருந்ததாகச் Gig Tai) லவில்லையா? பதிகளின் உத்தரவின்றி விப்ரபத்ணிகள் யாக சாலையை விட்டு வந்தது தர்மந்தான் என்று உலகத்தை யும் தேவர்களையும் ஒப்புக் கொள்ளும்படி செய்யவில்லையா?
பகவானுக்கு நம்மிடம் பிரியம் உண்டு என்பதை உண ரும்படி நம்மைச் செய்து அவனை மறக்காமல் இருக்கும்பு டியும் ஆவன செய்ய வேண்டும். அப்பொழுது நம்மால் செய்யப்படுவது சொல்லப்படுவது நினைக்கப்படுவது எல் லாம் அவனுடைய பிரஸாதமே. ஆகையால் அவை தர்மமே.
ஜய பூணூர் கிருஷ்ணு
கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் அருளிய
() பாட்டாளி பாட்டு ஒவ்வொரு பாட்டாளியும் படித்துப் பயன்பெற வேண்டிய பைந் 6
தமிழ்க் கவிதைத் தொகுப்பு. விலை ரூபா 1-50

Page 13
302 ஆத்மஜோதி
பொறிவாயிலைந்தவித்தல்
(பண்டிட். ஜி. கண்ணைய யோகி
பொறிவா யி லேந்தவித்தான் பொய்தீரொழுக்க நெறிநின்றர் நீடுவாழ்வார் (குறள்)
உலகம் தோன்றிய நாள் முதல் ஆன்ம நெறியில்,
இறை நெறியில் முன்னேறி வெற்றி கண்டவர்களெல்லோ
ரும், அவ் வழியில் முன்னேருத வெற்றி யடையாத மக் களைப் பார்த்து இப்படிச் சொல்லி வந்தார்கள்:-
'நீங்கள் வாழும் வாழ்க்கை நிறை வாழ்க்கையல்ல; வாழக் கூடிய அளவின் ஒரு சிறு பகுதியில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ; நிறை வாழ்க்கை வாழா மையால் இம் மண்ணுலக வாழ்வில் மனிதன்” எத்தனை எத்
தனை அனுபவங்களைக் குறை கூற முடியுமோ அவைகளில்
சில அனுபவங்களைத் தான் நீங்கள் பெற்றுக் கொண்டிருக் கிறீர்கள். வாழ்க்கையை நிறைவாக்குவதன் மூலம் நீங்கள் பெற்றிராத எத்தனையோ அனுபவங்களைப் பெறலாம் ; அவை உமக்கு இன்பத்தைப் பயப்பவையாகவே யிருக்கும். நிறை வாழ்க்கையில் துன்ப மிருக்காது; ஆகவே அந்நிறை வாழ்க்கையைப் பெற முயற்சியுங்கள்.'
ஆன்ருேர்கள் கூறிவந்த அந்நிறை வாழ்க்கையையே வள்ளுவனர் நீடிய வாழ்க்கை யென்கிருர், 'நீடுவாழ் வார்' என்பதற்கு 'நெடுங் காலஞ் சிரஞ்சீவியாக வாழ் வார்’ எனச் சிலர் பொருள் கொள்கிருர்கள். இது எந்த அனுபூதியாளரும் ஒப்புக் கொள்ள முடியாத பொருள். மண்ணுலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் பெளதிக இன்பங்களைத் தவிர வேருென்றையும் காண முடி யாது. பெளதிக வாழ்க்கையில் தெய்வ வாழ்க்கை கொண்டு வாழ்வதாகக் கருத்துக் கொண்டால் தெய்வ வாழ்க்கையினர் பெளதிகத்தில் நெடுங்காலம் இருக்க விரு ம்ப மாட்டார்கள். விரைவில் தம் பிராப்தத்தை முடித்து விட்டு, பெளதீக உடலிலிருந்தும் உலகிலிருந்தும் விடுதலை யைப் பெறவே விழைவர். தெய்வ வாழ்க்கையினர்க்குப் பெளதிகம் ஓர் வீண் சுமை. பெளதிகத்திலிருந்து அவர் கள் பெற வேண்டியது அனுபவிக்க வேண்டியது ஒன்றுமே

ஆத்மஜோதி 303
யில்லை. பிராரப்தத்தின் பயனுய் சில நாள் பெளதிகத் தில் இருக்க வேண்டியதைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கிருரர்களன்றி, அதில் அவர்களுக்குச் சிறிதள வும் பற்றே, விருப்போ இருக்காது. மேலான நிலையில் வாழக் கூடிய ஒருவன் கீழான நிலையில் வாழ விரும்பு வானு? தெய்வ சாம்ராஜ்யத்தில் வாழப் பக்குவப் பட்ட வன் சைத்தான் சாம்ராஜ்யத்தில் இருக்க விரும்புவானு? ஆகவே நீடுவாழ்தல் மண்ணுலகில் நெடுங்காலம் வாழும் பேற்றைக் குறிப்பதல்ல, இறையுலக வாழ்வையே குறிக் (55 LD .
"நீடு என்பதை நீண்ட, அதிகமான, நிலையானதெ னப் பொருள் கொண்டாலும் அவை மண்ணுலகில் வாழ் வ ைதக் குறிப்பவையாகா , ஏனெனில் மண்ணுலகில் எது வும் நிலையாயிருப்பதல்ல. நொடி, நொடி தோறும் மாறிக் கொண்டே யிருக்கும் இயல்பைக் கொண்டது மண்ணுல கம். மண்ணுலகம் முழுவதுமே ஒருநாளைக்கு அழிந்து போ கும். அப்படியானல் மண்ணுலக வாழ்வை நிலையென எப் படிச் சொல்லலாம்? பிரபஞ்ச முழுவதற்குமே இது பொ ருந்தும். பிரபஞ்சத்தைப் படைத்த நான் முகனே ஒருநா ளேக்கு இல்லாமற் போய் விடுவானஞல் அவன் படைத்த பிரபஞ்சத்தில் நிலையாயெது இருக்க முடியும்? மண்ணுல கம் சுவர்க்காதி தேவபோகங்கள் எதுவும் நிலையானதல்ல. மண்ணுலகைப் போலவே விண்ணுலகங்களும் ஒரு நாளைக் குப் பிரளயமாகி விடும். ஆகவே "நீடு என்பது மண்ணு லகச் சம்பந்தமான பொருளைக் குறிப்பதா யிருக்க முடி
LUFTgif .
“சாதாரணமாக மண் ணுலகில் மனிதர்க ளெல்லாம் நூறு வருடங்கள்தான் வாழ்வர். பொறிவாயிலைந் தவித்த வர்கள் மண்ணுலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்வர் என்ற கருத்தை "நீடு வெளியிடுவதாய்க் கொள்ளலாகா தோ' என்ருல் அதுவும் முரண்பட்ட கருத்தாகும். பொறி வாயிலேந் தவித்த ஒருவனுக்கு இவ்வுலகில் ஒன்றுமேயில்லை. காட்சியின்பம், கேள்வியின்பம், சுவையின்பம், மணஇன் பம், ஸ்பர் ச இன்பம் என்ற நிலைகளையெல்லாம் அவன் கடந்து போய் விடுகிறன். காணப்படும் காட்சிகள் யாதும் அவன் மனதைப் பொறியிலகப்படும் மான் போல் பற்றிச் செயல்படுத்துவதில்லை. எந்தப் புகழுரைகளும், இனிய இசை களும் அவன் மனதில் விருப்பைத் தூண்டாது, எந்த இகழு

Page 14
3.04. ஆத் 10 ஜோதி
ரைகளும், கொடுஞ் சொற்களும் அவன் மனதைக் கலக்கா. நறுமணம், தீமணம், நற்சுவை வெறுப்புச்சுவை, சூடு, குளிர், கடினம், மிருது எதுவும் அவன் மன நிலையைக் குலைக்காது. சித உஷ்ண, சுக துகிகேஷ9 சமத்வம்- எனும் கீதை கூறும் நடு நிலையை எய்தி விடுகிருன் கண்ணில்லாதவனுக்கு இன்ரிய காட்சிப் பொருள்களா லென்ன பயன்?செவியில்லாதவனுக்கு இனிய இசைகளாலென்ன பயன்? ஐம்பொறிகளையும் உள் நுழைய விடாமல், அவைகளின் வாயில்களை அவிழ்த்துவிட்ட வனுக்கு, அடைத்து விட்டவனுக்கு இம்மண்ணுலகம் என்ன பயன்? கண்ணிருந்தும் பார்க்காதவனுய், காதிருந்தும் கேட் காதவனுய், மூக்கிருந்தும் முகராதவனுயிருக்கும் அவனுக்கு மண்ணுலக வாழ்க்கையில் விருப்பம் தோன்றுமா? ஆகவே பொறிவாயிலைந்தவித்தவர், நீடு வாழ்வாரென் ருல் அது மண் ணுலகில் நீண்ட காலம் வாழ்வதைக் குறிப்பதாக ஒருநாளும்
பொருளாகாது. M
பொறிவாயில் களைந்தையும் அவிக்காமல், அடைக்கா மல் வாழும் வாழ்க்கை பொய்சேர் வாழ்க்கை, அவைகளை அவித்த பின் வாழும் வாழ்க்கை பொய்தீர்ந்த, உண்  ைம வாழ்க்கை. உண்மையை அறிந்த ஒருவன் பொய்யில் மயங்கு வான? உண்மை வாழ்க்கையைப் பெற்ற ஒரு வ ன் டு பாப் வாழ்க்கையில் வாழ விரும்புவானு? பொறிவாயிலைந்தவிக்கா தவன் ஒழுகும் ஒழுக்கம் பொய் சேரொழுக்கம்; அவைகளை அவித்தவன் ஒழுகும் ஒழுக்கம் பொய்தீரொழுக்கம். இவ் விரண்டு ஒழுக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. பொய்யே பொய்யாதிருக்க முடியாதல்லவா? பொய்யைச் சொல்லும் ஒருவன் அதே சமயம் மெய்யைச் சொல்ல முடி யாது. பொய்சேரொழுக்க நெறியில் நிற்பவன், பொய்தீ ரொழுக்க நெறியில் நிற்க முடியாது, இவ்விரண்டிலொன்றில் தான் அவன் நிற்க முடியும். ஆனல் பொறிவாயிலைந்தவிக்கா தவன் பொய்சேர்ஒழுக்கநெறியில் தான்நிற்கமுடியும்,பொறி வாயிலைந்தவித்தான் பொய்தீரொழுக்க நெறியில் தான் நிற்க முடியும். அப்படியிருக்க, பொறிவாயிலைந்தவித்தவன், பொய் சேர் மண்ணுலகில், அநித்தியமான, மனமயக்கத்தால் உண் மை போல் தோன்றும், மாயையின் தப்புதலால் உள்ளதும் தோன்றும், பொறிகளைக் கொண்டே வாழ்க்கை நடத்த வேண்டிய இம்மண்ணுலகில் நீடூழி காலம் வாழ விரும்பு வானு? வாழத்தான் முடியுமா?

ஆத்மஜோதி 305
ஆகவே, பொறிவாயிலைந்தவித்து, பொய் தீரொழுக்க நெறி நின்றர் நீடு வாழ்வார் என்பது 'அவர்கள் நித்தி யமான , பிறப்பிறப்பைக் கடந்த, மண் விண் முதலியவை. களேத் தாண்டிய, மாயையைப் பெற்ற அறியாமையைச் சிதைத்த, ஆணவமாதி மும்மலங்களையும் கழுவித் தள்ளிய பேரின்பப் பெருவாழ்வில் வாழ்வார்கள்' என்பதே பொரு GYTIT (E5LD .
கடவுளின் வழிபாட்டையும், யோகம் முதலிய சாத
னைகளையும் இம் மண்ணுலக இன்பங்களுக்காகவே மேற் கொள்ளும் மாயாவாதிகள் நீடு வாழ்வதை நெடுங்காலம் வாழ்வதாகப் பொருள் கொள்வர். ஏனெனில் அவர்க ளுக்கு இம் மண்ணுலகை விட்டால், மறுபடி இங்கு வரும் வரை வாழ்வே இல்லை. துரக்க நிலை போன்ற நிலையிலே யே விண்ணுலக வாழ்க்கையை முடித்துத் திரும்புகிருர்கள். எத்தனே ஜன்மங்கள் எடுத்தாலும் மண்ணுலகிலேயே பிறக்க வேண்டுமென அவர்கள் பிரார்த்திப்பார்கள். பொறி வாயில்களை அவித்துப் பொய்தீரொழுக்கத்தைக் கைவிடா இவர்கள் வள்ளுவனுரின் வாசகத்துக்குப் பொருள் கொள்ள வேண்டுமா?
பொறிவாயில்களைப் பற்றிய உண்மையைத்தான் புரா ணங்களில் மன்மதக் கதைகளாகவும், அவைகளை அவிப்ப தைப் பற்றித்தான் மன்மத தகனமாகவும் கூறப்பட்டுள் ளது. இது பற்றிய முழு விவரங்களைப் 'பஞ்சபாண இர கசியம்' என்னும் நூலில் படித்தறியலாம். இது ஆத்ம யோக ஞான சபா, அம்பத்தூர், சென்னை; பராக்ரம ரோட், கொழும்பு என்ற விலா சங்களில் கிடைக்கும்.
gr, L D
கடவுள் பேறு aðK
தீயொழுக்கம் விடாதவன், இதயத்தில் அமைதி ရှို့၌ இல்லாதவன், இவன் கடவுளை அறிவினுல் அறிய x வொண்ணுது. - உபநிடதம் SSS

Page 15
306 ஆத்மஜோதி
 ேவ த ரா க ம  ெந றி
(இந்து சமயம்)
- மா. பீதாம்பரன் -
ஆறெத் திலங்கு சமயங்கள்
ஆறுக்கும் ஆழ்கடலாய் வீறிப் பரந்த பரமான
ஆனந்த வெள்ளமொன்று தேறித் தெளிந்து நில பெற்ற மாதவர் சித்தத்திலே ஊறிப் பரந்தண்ட கோடியெல்
லாம்நின் றுலா வியதே. * சமயங்கள் எல்லாம், தம்(மண்மையை நோக்குமி டத்து நிஷ்ப்ரயோஜநங்களாய்ச் சென்ருெடுங்கு மிடமாத லால் "ஆருெத்திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய் என்ருர்,
தேறுதல் - சாத்திரங்களாற் றெளிதல். தெளிதல் - ஆசாரியனலும் சுவாதுபவத்தாலும் தெளிதில்
"ஆநந்த வெள்ளம்" என்பதற்கு 'இந்து g LDu Lib எனப் பொருள் கொள்ளல் சிறப்பு: இந்து அமெரிக்கா’ எனும் நூல் இதனை விளக்கும்.
ஆறு ஒத்து இலங்கு - நதிகளை ஒத்து விளங்குகின்ற சமயங்கள் ஆறுக்கும் - ஆறு சமயங்களுக்கும் ஆழ் கடலாய் - ஆழ்ந்த கடலுக்கு நிகராய் வீறி பரந்த - விஞ்சிப் பரவிய
பரமான - மேலான ஆநந்த வெள்ளம் ஒன்று - ஆநந்தப் பெருக்கொன்று தேறி - தெளிந்து
நிலைபெற்ற - நிலையை யடைந்த மாதவர் சித்தத்திலே - பெருந் தவத்தினரது ஹிருதயத்திலே ஊறி பரந்து - கசிந்து பரவி
அண்ட கோடி எல்லாம் நின்றுலாவியது - நின்று வியாபித்தது.

ஆத்மஜோதி 307
இந்து மதம், இந்து மார்க்கம் , இந்து தர்மம், என் னும் பெயர்களாலும் இன்னும் பல பெயர்களாலும் வழங் கப்படும் இந்து சமயம் 'பல்லாயிர வருட வாழ்வுடையது என்பதும், உலகத்திலுள்ள வேறெந்தப் பெரிய மதத்தைக் காட்டிலும் முதிர்ந்த வயதுடையது என்பதும் உண்மை
களே. இவைகளைப் பற்றி ஐயம் யாதும் இல்லை."
இந்து’ என்னும் பெயர் பல ஆண்டுகளாக வழக்கி
லுள்ள தெனினும், சமய நூல்களிலும் தொன்று தொட்டு
வழங்கப்பட்டு வந்த பெயர் அன்று. இப் பெயர் பாரசீக ரால் புதிதாக வழங்கப்பட்ட பெயராகும்.
இந்தியாவின் மேற்கிற் பாயும் ஆறு சிந்துப் பே ராறு. இப்பேராற்றுக்கு அப்பால் வாழ்ந்தவர் LITU GJ, flait முன்னேராகிய ஐரானியர். இவர்கள் (ஸிந்து என்னும் சொல்லை உச்சரிக்க இயலாமையினல்) ஸிந்துப் பேராற் றுக்கு இப்பால் வாழ்ந்தவர்கட்கு ஹிந்துக்கள் என்னும் பெயரிட்டு வழங்குவாராயினர். அதன், காரணமாக பரத கண்டம், ஹிந்துதேசம் என்னும் பெயர் பெற்றது. பரத கண்ட மக்கள் ஹிந்துக்கள் என்னும் பெயர் பெறுவாரா யினர். அவர்களுடைய மதமும் 'ஹிந்து மதம் (Hinduism) என்னும் புதுப்பெயர் பெறலாயிற்று.
ஹிந்து என்னும் சொல் தமிழ் மரபு பற்றி 'இந்து ஆயிற்று. வலிந்து என்பது ஹிந்து வாகி, ஹிந்து என்பது இந்து ஆயிற்று. இதுதான் இந்து என்னும் சொல்லின் ο) 1 μου Π ()Ι.
இந்து சமயத்துக்கு முன்னுேர் வழங்கிய பெயர்கள்:- வேதநெறி, வைதிகநெறி, வேதாகம நெறி, xஆகம வேத வழி, வைதிகஸநாதநதர்மம், ஸநாதநதர்மம் என்பன வாம். வேதாகம நெறி என்னும் தொடரில் வரும் 'ஆக
* இந்து மத சாரம் - பூரீ சுவாமி நிர்வேதானந்தர். x சாந்தலிங்க சுவாமிகள் அவிரோதவுந்தியார்.
z பூரீமத் சங்கராச்சாரிய சுவாமிகளை, ஷண்மத ஸ்தாபகர் என்று கூறுவர். 'ஷட் தரிசனங்கள் எனும் ஆறு சாஸ்திரங்கள் அடங்கி யது இந்து மதம்' (இந்து நேசன் 1934)

Page 16
308 ஆத்மஜோதி
மம்’ என்னும் சொல், சிவாகமங்களையும், சாக்த வைணவ ஆகமங்களையும் குறிப்பதெனக் கொள்ளுமிடத்து இந்து சம யம் என்பதனை வேதாகம நெறி என வழங்குதல் பொருத்த முடைத்தே. சநாதன தர்மம் என்னும் பெயர் இப்பொ ழுது பெருவழக்கிலுள்ளது. 'நமது வேத நூலிலே சொல்
லப்படும் மதத்திற்குப் பெயர் யாதெனின், பிறரால் இந்து
மதம்’ என வும் ‘ஸ்நாதந தர்மம் எனவும் பெயர்கள் வழங் கப் படுகின்றதாயினும், அவை தற்காலத்தவர்களால் ஏற் படுத்தப்பட்ட புதுப் பெயர்களே யன்றிப் பழைய பெயர் கள் அல்ல’’ (வேதமதம் - கணேச சாஸ்திரியார்)
இந்து சமயத்தின் பிரிவுகள் பல. பெரும் பிரிவுகள்
சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், ஸெளரம் , கெளமாரம் என்னும் ஆறுமாம். சிவனை வழிபடுவோர் சைவ சமயிகள், அம்மனை (இறைவியை) வழிபடுவோர் சாக்த சமயிகள், திருமாலை (விஷ்ணுவை) வழிபடுவோர் வைணவ சமயிகள்; கணபதியை (பிள்ளையாரை) வழிபடு வோரின் சமயம் காணபத்தியம் சூரியனை வழிபடுவோரின் சமயம் ஸெளரம், முருகக் கடவுளை (குமரக்கடவுளை) வழிபடு வோரின் சமயம் கெளமாரம். இவற்றைச் ஷண்மதம் என வும் கூறுவர். இப்பொழுதுள்ள பெரும் பிரிவுகள் (துறைகள்) சைவம், சாக்தம், வைணவம் என்னும் மூன்று மாம். சாக் தம், காணபத்தியம், ஸெளரம், கெளமாரம் என்பன சைவத் தில் அடங்கியுள்ளன; ஆ த லா ல் இப்பொழுதுள்ள இந்து சமயம், (வேதாகம நெறி/ சைவம், வைணவம் என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது.
ஈழநாட்டுச் சைவசமயிகள் பெருமாள் கோயில், வல்லிபுரக் கோயில் முதலிய விஷ்ணு ஸ்தலங்களுக்கும் சென்று பக்தியோடு வழிபடுதல் யாவரும் அறிந்ததே. திரு
நாவுக்கரசு நாயனர் 'அரியலாற்றேவியில்லை’ என்று திரு
வாய் மலர்ந்தமையை நோக்குங்கால், சைவ சமயத்தின் பரந்த சமரச நோக்கம் தெளிவாகின்றது.
x சாந்தலிங்கம் சுவாமிகள் - அவிரோதவுந்தியார் * பூரீமத் சங்கராச்சரிய சுவாமிகளை ஷண்மதஸ்தாபகர்' என்று கூறுவர். ஷட்தரிசனங்கள் எனும் ஆறு சாஸ்திரங்கள் அடங்கியது இந்து மதம்' (இந்துநேசன் - 1934)

ஆத்மஜோதி 309 கஞ்சன் வலி கடிந்த கண்ணன்
(பண்டிதர், செ. பூபால பிள்ளே, அவர்கள்)
மட்டக்களப்புப் பகுதியிற் பல கிராமங்களில் இந்த மாதத் திற் கிருஷ்ணன் கோவிற் கதவு திறக்கப்பட்டு பூசையும், வேள்வியும் விழாக்களுந் நடைபெறுகின்றன. பகலிரவாகக் கண்ணபிரான் கோயில்களிற் கஞ்சன் அம்மானை பாடப்படு கிறது. பக்த கோடிகள் நெல் வயல் வேலைகளை முடித்து விட்டு வயற் செய்கையாற் தமக்கேற்பட்ட களைப்பைக் கஞ் சன் அம்மானை கேட்டு இன்புறுவதால் நீக்குகின்றனர். கண் ணபிரானுக்குப் படைக்கப்பட்ட பாலுந் , தயிரும், நெய்யுங், கருப்பஞ்சாறும், பொங்கலும், பழங்களும் ஆகிய நைவேத் தியப் பொருள்கள் அவர்கள் நாவுக்கு நல்ல சுவை அளிப்ப தோடு, உடலுக்குச் சுகத்தையும், உறுதியையும் உண்டாக்கு கின்றன. அறம் வெல்லும்; மறந் தோற்கும், என்ற உண் மையை யாவரும் உணருகின்றனர். இ ன்  ைற ய வ சந்த காலத்துக்கேற்ற காதலையும், வீரத்தையும் வளர்க்குங் கஞ்
சன் அம்மானை இலக்கிய சுவை நிரம்பிய தொன் ருகும். பண்
டிதருக்கும் பாமரருக்கும் பொருத்தமான அழகு தமிழ் மொழி நடையில் இயற்றப்பட்டுள்ளது இந்த அம்மானை. கஞ்சன் அம்மானை ஒலைச்சுவடி ஒன்றினை ஆதார மா க க் கொண்டு கஞ்சன் வலி கடிந்த கண்ணன் என்ற இத்தலைப் பெயர்க் கட்டுரையை வரைகின்ரும்.
கஞ்சன் தோற்றம்
சூரிய குலத்தைச் சேர்ந்த மகேந்திர வம்சத்தில் வலிய உக்கிரசேனனென்பான் தோன்றி மதுரை மாகரில் வீற்றி ருந்து அரசாளுகிருன். அவன் மனைவிக்குத் தகாத முகூர்த்தம்
ஒன்றில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதனுல் அரசனுக்
குக் கெடுதல் ஏற்படும் என்றும், அதனைக் கொல்ல வேண்டும் என்றும் மாதவர் பலர் கூறினர். இதனைக் கேட்ட உக்கிர சேனன் மகவாசையாலும், வரவிருக்கும் இடராலும் இரு தலைக்கொள்ளி எறும்பு போல இடருற்றன். இடருற்ற அவன் இறுதியிற் கஞ்சபாத்திரத்து ஒரு பேழையுட் குழந்தையை வைத்து யமுனை ஆற்றில் அலைய விட்டான். யமுனையாற்றில்
தந்து வந்த அந்தப் பேழையை மந்தாகினி நகரினை ஆண்டு வந்த ஆனவாசன் மனைவி சந்திரகோதை என்பாள் நீராடச்

Page 17
310 ஆத்மஜோதி
சென்றவள் கண்டெடுத்தாள். எடுத்துத் தமது அரண்மனைக் குக் கொண்டு சென்று அரச மகவுக்குரிய வரிசைகளுடன் அன்பாக வளர்த்து வந்தாள். செந்தாமரைப் பூவடிவினதா கிய அழகிய ஒரு கஞ்ச பாத்திரத்துள் மகவைக் கண்டெடுத்த காரணத்தால் அந்த மகவுக்குக் கஞ்சன் என்று காரணப் பெயர் இட்டனர். ۔۔۔۔۔
(படைக்கலப் பயிற்சியுஞ் சிங்கவாகுவை வெல்லுதலும்)
இந்தக் காலத்துக் கஞ்சன் என்ற அந்த மகவு தனது வளர்ப்புத் தாயாகிய சந்திரகோதை அறியாது அவனை வஞ் சித்துச் சராசந்த புரத்தை அடைந்தான். அங்கு சராசந்தன் தனது மகவுக்குப் படைக்கலப் பயிற்சி கொடுப்பதைக் கண் ணுற்றன். கண்ணுற்ற அவன் அரச மகவுக்குப் படைக்கலம் பயிற்றும் வசுதேவனத் தோத்திரஞ் செய்து தொழுதான். அது கண்ட வசுதேவன் உவகையுற்றுக் கஞ்சனே நீ யார்? என வினவினன். அது கேட்ட கஞ்சன் மந்தாகினி நகரி மன்னன் மகன் நான்’ என விடை கூறினன். அதனேக் கேட்டு உவப் புற்று வசுதேவன் இவனுக்குப் படைக்கலப் பயிற்சி அளித்து
வந்தான்.
இந்தக் காலத்துச் சராசந்த மன்னனுடன் போர்புரியச் சிங்கவாகு என்பவன் ப  ைட தி ர ட் டி வந்தான். இதனைக் கண்டு அஞ்சிய சராசந்த மன்னன் போரில் சிங்கவாகுவை வெல்லுபவனுக்குத்தம் மகளிரை மணமுடித்து வைப்பதாகப் பறை சாற்றுவித்தான். கஞ்சன் சிங்கவாகுவைக் கடும் போர் புரிந்து ஆசிரியன் வசுதேவன் உதவியுடன் வென்றன். இது கண்டு மகிழ்வுற்ற சராசந்தன் தம் மகளிரைக் கஞ்சனுக்கு மணமுடித்து இராச்சியத்தையும் அரசாளுமாறு பட்டங்கட்டி வைத்தான். இதன் பின்பு . . கஞ்சன் வசுதேவனுக்குப்போரில் தனக்கு உதவியமைக்காக தனது இளைய இரு சகோதரிகளை யும் மணமுடித்துத் தருவதாக வாக்களித்தான். வசுதேவனை மதுரைக்கு அழைத்து வந்தான். மதுரையை ஆண்ட உக்கிர சேனன் என்ற தனது தந்தையை அடித்து வருத்திச் சிறையில் இட்டான். மதுராபுரியைத் தானே ஆண்டு வந்தான். வசு தேவனுக்குத் தனது வாக்கின்படி தேவகி, உரோகிணி என்ற இரு தங்கைமாரையும் சுபதினத்தில் மணமுடித்து வைத் தTன.
முனிவர் சாபம் பெறுதல்
வாசுதேவனும் மனைவிமாரும் மகிழ்வுடன்'மதுரை DIT
 

ஆத்மஜோதி 3.11
நகரத்துக் கஞ்சனுடன் வாழ்ந்து வந்தனர். சிறிது காலத் துட் தேவகி கருப்பமுற்ருள். அந்தக் காலத்திலே கஞ்சனும் வசுதேவனுந் தேவிமாரும் வேட்டையாடச் சென்றனர். கஞ் சன் தேவகி வேண்டுகோட்படி ஒரு முனிவரர் பன்னிரண்டு வருட காலமாகப் பாதுகாத்து வந்த இரு அற்புதமான மாங் கனிகளைச் சரம் விட்டு அறுத்து அவளுக்குக் கொடுத்தான்.
முனிவரவர் வழக்கம் போல மாமரத்தடிக்கு வந்தார். கனிகளைப் பார்த்தார். காணவில்லை. பெரு மூச்சுவிட்டார். நடந்தவற்றை ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டார். கஞ்சனே முனிந்தார். இவற்றை உண்டவர் வயிற்றுத் தோன் றும் மகவால் வீழ்த்தியவர் சந்ததியோடு அழிக! எனக் கடுஞ் சாபம் இட்டார். இதனைக்கஞ்சன் அறிந்தான். ஆவலித்தான். பின்பு தேறினன். தேறிய அவன் உடன் பிறந்த தேவகியைச் சிறையில் அடைப்பித்தான். தேவகி ஒன்றன் பின் ஒன்ருகப் பெற்ற ஆறு மகவுகளைக் கஞ்சன் தூணில் மோதிக் கொலை
செய்தான்.
பல தேவன் அவதாரம்
ஏழாவது மகவாகப் பல தேவர் தேவகி வயிற்றில் இருந்து புவிமாது மகிழத்திரு அவதாரஞ் செய்தார். இந்த மகவின் வெண்ணிறத்தையும் அழகையுங் கண்டு வசியப்பட்ட தேவகி இந்த அழகு குழந்தை வண்ணமான பெ ரி ய வெண் சங் கொன்றுள் இதனை மறைத்து வைத்தாள். அடுத்த நாள் இரவு மறைத்து வைத்த மகவைப் புரோகிதன் மூலம் ஆயர் பாடிக்கு அனுப்பினள். அத்தருணம் புரோகிதன் ஒரு இறந்த குழந்தையை இடுகாட்டில் அடக்கஞ் செய்ய வந்த நந்த கோன் என்ற அடையன் கையில் தான் கொண்டு சென்ற குழந்தையை ஒப்படைத்தான். நந்தகோனிடம் உள்ள இறந் த மகவை எவரும் அறியாத படி பெற்றுக்கொண்டு வந்து தேவகியிடம் ஒப்படைத்தான்.
தேவகி மகவின்றதை அறிந்த கஞ்சன், கோபாவேசமுற் று மயங்கி இறந்த குழந்தையைத் தூக்கித் தூணில் மோதி அடித்தான்.
இஃது இங்ங்னமாக நந்தகோன் தனது மனைவி யசோதை யம் மாளிடம் "உனது மகவு உயிர் பெற்றெழுந்தது, இதோ

Page 18
312 ஆத்மஜோதி
பாராய்' என்று அகமகிழ்வுடன் கூறித்தான் பெற்ற மகவை ஒப்படைத்தான். அதனை அவர் அன்பாகப் பாலூட்டி வளர்த்து வந்தார்.
கண்ணபிரான் காசினியில் அவதரித்தல்
உலகிற் பல நல்லுற் பாதங்கள் தோன்றின. துட்டர் களை அழிக்கவும், அன்பர்களை ஆதரிக்கவுந் திருமால் திரு மனங் கொண்டார். அதனுல் தேவகி அம்மையாரது திரு வயிற்றில் உலகமுண்ட கண்ணபிரான் நாலாறு மாதம் பள் ளிகொண்டார். பின்பு பூமிசைத்தோன்றினர். இஃது வை காசித் திருவோண வசந்த காலத்தாகும். இத்தருணம் தந் தை வசுதேவனும் கஞ்சனுல் கால் விலங்கு, கை விலங்குகள் இடப்பட்டு ஏழாவது கதவுகளுக்கு அப்பால் உள்ள இருட்ட றைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிருன் என்னே அதிசயம்! கண்ணபிரான் வைகாசித் திருவோணத்தன்று புவி மிசைத் திரு அவதாரஞ் செய்ததும் வசுதேவன் விலங்கு கள் உடைந்து பறந்தன. சிறைச்சாலை கதவுகள் திறந்தன. தேவகியை அடைந்து கருமுகில் வண்ணனைக் கண்ணுரக் கண்டு பெரு மகிழ்வுற்றன். ஆடினன், பாடினன். அத்தரு ணம் கஞ்சன் மீளா நித்திரைக்கு ஆளாகி மயங்கிக் கிடந் தான். வசுதேவனும் கருமுகில் கண்ட மயில் போல மகிழ் வுறுந்தே வகியாரும் ஒன்று கூடிப் பலப்பட ஆலோசித்தனர். ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தனர். பரபரப்புடன் வசுதே வன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வரவிருக்குங் கண் ணனை ஆயர்பாடியில் யசோதையம்மையாரிடம் ஒப்படைத் தான். அவர் பெற்றிருந்த துர்க்காதேவியாகும் பெண் மக வை அதற்குப்பதில் மகவாகப்பெற்றன். அதனை விடியு முன்பு கொண்டு வந்து தேவகியிடம் ஒப்படைத்தான்.
கஞ்சன் தன்னுடன் பிறந்த தேவகி பெண் மகவொன்று ஈன்றதாக அறிந்தான். அவள் உறையுஞ் சிறைச்சாலையை அடைந்தான். மகவைச் சீற்றத்துடன் தூக்கினன். தூக்க முடியவில்லை. திகைத்தான், பின்பு அந்த அற்புதக் குழந்தை யை முழு வலியுடன் தூக்க முயள்முன். இதற்கு முன்பு துர்க் கை தனது எடையைக் குறைத்துக் கொண்டாள். அதனைக் கஞ்சன் இலகுவாகத் துரக்கிக் கால்களைக் கரங்களாற் பற்றிக் கிழித்தெறிய முயன்றன். அக்குழந்தை அவன் பிடியிற் திமி றித் தப்பி ஆகாயத்துச் சென்று நின்று ‘கஞ்சனே' நீ என் னேக் கொல்ல முயன்ருய். உன்னைக் கொல்ல இடையர் தெரு
 

ஆத்மஜோதி 313
வில் எங்கோன் வளருகிருன் என்னுயிரை உன்னல் நீக்க முடி யுமா? என்றபடி திருவாய் மலர்ந்து துர்க்கா தேவியாகிய
அத்திருக் குழந்தை மறைந்தருளினுள். கஞ்சன் துக்கித்தான்.
எண்ணுததெல்லாம் எண்ணிச்சோர்ந்தான். பெருமூச்சு விட் டான். முகம் வாடியபடி ஆருத் துயருக்கு ஆளாயினன்.
கண்ணபிரான் ஆயர் பாடியில் வளர்தல்
இஃது மதுரை மாநகரத்து இங்ங்னமாக ஆயர்பாடியில்
யசோதையம்மையாரும், நந்த கோபாலனும் பெரு மகிழ்
வுடன் வசுதேவனிடந் தாம் பெற்ற அழகு திருக்குழந்தையா
குங் கண்ணபிரான கண்ணை இமை காப்பது போல ஈ எறும்பு
தீண்டாமல் கட்டிலிலுந், தொட்டிலிலும்; மார்மேலுந் , தோள் மேலும் வைத்துக் கொஞ்சிக் குலாவி அன்புடன் பாது காத்து வளர்த்தனர். பூணுவன பூட்டினர். உடுத்துவன உடுத்தினர். பாலும் பழரசமும் பருக்கினர். ஆயர் மகளிர்;-
கண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான் - இந்தக் காற்றதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ண முடையான் - மணி வண்ண முடையான் - உயர் தேவர் தலைவன் புவி மிசைத் தோன்றினன்
என்றெலாம் பாடிக் குரவை கூத்தாடித் தமது மகிழ்வினை ஆயர் பாடி முழுதும் வெளிப்படுத்தினர்.
யசோதையம்மையாரோ தமது பெருமகிழ்வினை
சின்னஞ் சிறுகிளியே - கண்ணையா செல்வக் களஞ்சியமே ! என்னைக் கலிதீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்.
என்றெலாம் பாடிப்பாடி வெ ளிப்படுத்தினர்.
(தொடரும்)

Page 19
34 ஆத்மஜோதி
DIT GIF. F j, g5 6d1 Tg.Jiff GöIT
சுயானுபவம் ( மட்டுநகர்- ஏ. படிக்கியமூர்த்தி ஆசிரியர் )
'இந்தியஞானி சொல்கின்ற பெரிய சான்று எது வெனில், 'நான் ஆன்மாவைக் கண்டேன்.' 'கடவுளைக் கண்டேன்’ என்பது. இதுவே பரிபூரணத்துவத்தை அடை வதற்கு இன்றியமையாத வழி. குறித்த கொள்கைகளை நம்புவதற்குச் செய்கின்ற முயற்சிகளிலே இந்து சமய தங்கியிருக்கவில்லை. உண்மையை நேரிலே சாக்ஷாத்கார மாகக் கண்டு அதுவே தானுக நிற்கின்ற நிலையே வேண்டப் படுவது. ' என்று 1893ம் ஆண்டில் அமெரிக் கா வில் வீராவேசத்தோடு கூறினர் சுவாமி விவேகானந்தர்.
ஆம், ஆக்கம் அளவு இறுதி இல்லாமல் அனைத்துலகும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் எம்பெருமான், தனது மெய்யடியார்கள் பொருட்டு தன் அளப்பருந் தன்மையை ஒர் சிறு பரப்புக்குள்ளாக்கி, வேண்டுவார் வேண்டும் தன்மையுடையணுகி அவர்கட்கு காட்சியளிப்பான் என்பது சைவசமய உண்மை .
அன்பு உருவினனை சிவபெருமான் நம் சமய குரவர் கள் பொருட்டு, அருள்புரிவான் வேண்டி, அம்மையப்ப ராகவும், பொதிசோறு சுமந்தும், தோழனுகவும் குருவடி வாக வந்து உபதேசித்தும், பிட்டுக்கு மண் சுமந்து அடி பட்டும், இன்னும் எத்தனையோ வகையான திருக்கோலங் களைக் காட்டியும் ஆட்கொண்டருளியுள்ளான்.
இறைவனை நாயகனுகவும் த ன் னை நாயகியாகவும் பாவனைசெய்து அ வ னை க் கண்ணுரக்கண்டு அகமகிழ்ந்த மணிக்கவாசகப் பெருந்தகை ‘கண்ணுல் யானும் கண்டேன் காண்க’ என்று மிக ஆணித்தரமாக உரைப்பதைக் காண்மின்கள். இ  ைற வ னை க் காண அல்லும் பகலும் அனவரதமும் அவர் அழுதார், துடித்தார், பித்தன் பேயன் உன் மத்தன் என்று அ வ  ைர உலக ம் கணக்கிட்டது. இறைவனைக் காண அடிகளார் அழுது துடித்த தனது பயபக்தி நிலையை V
* மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து -
- உன் விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி
ം
 
 
 
 

ஆத்மஜோதி 315
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சயசய பொற்றியென்னுங் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னக்
எனத் திருச்சதகச் செய்யுளில் மிக உருக்கமாகக் கூறுகின் முர். இறைவனை நினைந்து மனமுருகி அழுதால் அவனே அடையலாம் என்பதை அடிகளே
'யானே பொய் என்நெஞ்சும் பொய்
- என் அன்பும் பொய் ஆல்ை வினேயே ன் அழுதர்ல் உன்னைப் பெறலாமே’. என்று பிறிதோர் செய்யுளில் கூறிப் போந்தமை காண்க, மாணிக்கவாசகப் பெருமான் இறைவனைக் கண்டது குருவடிவில் குருந்த மர நிழலில் என்பது
'திருவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில்
செழு மலர்க் குருந்த மேவிய சீர் இருந்த வாறெண்ணி ஏசற நினைந்திட்
டென்னுடை எம் பிரான் என்றேன் . என்னும் பாடலால் பெறப்படும்.
பரமானந்தப் பழங்கடலாகிய இறைவன் கருமாமுகி லாகத் திரண்டு, திருப்பெருந் துறையென்னும் மலையிலேறி, பந்தம் பறந்தோட, பிறவித்துன்பம் கெட்டொழிய அரு ளொளி பரப்பி, கருணை மா மழைபெய்து, அன்பு வெள்ளம் பெருக்கெடுத்தோடி, பாச பந்த மென்னும் கரைகளை இடித்து, இருவினை மரங்களை அடியோடு பெயர்த்தெறிந்தது. என்று தன்னை ஆட்கொண்ட திறத்தை அடிகளார் இயம் புவதைக் காணலாம்.
இவ்வுலகத்தில் யாருக்குமே கிடைக்காத பெரும் பேறு நாயிற் க  ைடய ன ன தனக்குக் கிடைத்ததை வியந்து
‘கேட்டாரும் அறியாதான் கேடொன்றில்லான்
கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித் திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசிட்ட நாயினேற்கே காட்டாதன வெல்லாங் காட்டிப் பின்னுங்
கேளாதன வெல்லாங் கேட்பித் தென்னே மீட்டேயும் பிறவா மற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே' என்றும் 'நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' என்றும்

Page 20
316 ஆத்மஜோதி
நெக்கு நெக்குருகக் கூறுகின்றர்.
பிரமன் மால் அறியாத தேவதேவன் தன் மெய்யடி யார்கள் பொருட்டல்லாமல், பிறர் பொருட்டு எழுந்தரு ளான். ஞாயிற்றின் வெப்பம் பொருந்திய கதிர்கள் உல கெங்கணும் விரிந்து கிடந்தாலும், உருப்பெருக்காடி மூலம் அதன் கதிர்களைக் குவியச் செய்து அனலையுண்டாக்குவது போல், ஆன்பர்கள் இதயத்தில் உண்டாகும் பக்தியை அவன் குவியமாகக் கொண்டு அதன் மாட்டுத் தோன்றுவான். 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்' என்று சாதாரண வழ க் கி ல் ஒர் முது மொழியுண்டல்லவா? அடிகளாரும் தனது திருவண்டப் பகுதியில்
'பக்திவலையிற் படுவோன் காண்க' என்றும் * அருச்சனை வயலுள் அன்பு வித் திட்டுத் 剔 தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத் தரும் பெறன் மோகன் வாழ்க’ என்றும் அருட்பத்தில்
'பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யுஞ்சித்தனே' கூறியுள்ளமை காண்க.
திருப்பெருந்துறையில் அருட்குரவனுக வந்து தன்னை ஆட்கொண்டருளி, மீண்டும் தில்லையின் கண்ணே வந்து காண்மின் என விடுத்து, ஏனையோரைச் சோதியுள் கலக்கச் செய்து மறைந்தருளினர் சிவபெருமான். தனது அருட் குரவனை நனிகாணுது மனவருத்த முற்று வாசகர் ‘யாவரும் நின் மலரடி காணு மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினுய்,' அவ்வாறு செய்து விட்டு, உடன் அழைத்துச் செல்லாமல் 'நாயினேனை நலமலி தில்லையுட், கோலமார்தரு பொதுவினில் வருகென, ஏ ல எ ன் னை ஈங்கு ஒழித்தருளி. ' எங்கு சென்று விட்டாய்? ஐயோ! உன்னைப் பிரிந்தும் இன்னும் இறவாமல் இருக்கிறேனே. இனி ஒரு கணமேனும் உயிரோடு இருத்தலரிது. எப்போது என்னை அழைத்துச் செல்வாய்? என்று மனமுருகி இறைவனை வேண்டுவதை
என்றும்
* அறுக்கிலேன் உடல் துணியடத் தீப்புக்
கார்கிலேன் திருவருள் வகை யறியேன்
பொறுக்கிலேன் உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர் விடைப்பாகா
இறக்கிலேன் உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன் இது செய்க என்றருளாய்
 
 

“؟
ஆத்மஜோதி 317
சிறைக்கனே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே' என்னும் செத்திலாப்பத்துச் செய்யுளால் இனிதே விளங்கக் கூடியவாறு இருக்கிறது.
ஆண்டான் அடிமை என்னும் பா வ னை யி லி ரு ந் து இறைவனைப் பயபக்தியோடு வழிபட்ட அடிகளார், ஆட் கொள்ளப்பட்ட பின் தலைவி தலைவனைத் தேடும் பாவனையில் இறைவனைத் தேடியலைவதை மேற்காட்டிய செய்யுளால் நாம் அறியலாம். என் செய்கேன் இது செய்க என்றரு ளாய்' என்னும் இடத்தில் அடிகளார் அதுவே தானுகி விட்டார் என்று கூறலாம்.
எல்லா நிலைகளையும் விட மிக உயர்ந்த நிலையே தன்னை நாயகியாகவும் இறைவனே நாயகனுகவும் பாவனை செய்து பக்தி செலுத்தும் நிலை. இந்நிலையில் ஆண்டானுக்கும் அடிமைக்குமுள்ள தொடர்பும் தாய்க்கும் குழந்தைக்கு முள்ள தொடர்பும், தோழமையுணர்ச்சியும் இன்னும் பிறவும் ஒருங்கே கலந்திருப்பதை நாம் காணலாம்.
இறைவனருள் பெற்ற சான்றேர்கள் நான் எனதென் னும் அகங்கார மம காரங்களை விட்டொழித்து, எல்லாம் அவன் செயல் என்றிருப்பது இயற்கை உடல், பொருள், ஆவி, முழுமையையும் அவனுக்காகவே அர்ப் பணித் து அவன் புகழையே பாடியும் பேசியும், தொண்டு செய்வர். அவர்களை இருள் சேர் இரு வினையும் சேராது. இதையே வள்ளுவரும்
'இருள் சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு' என்று கூறியுள்ளார்.
வள்ளுவரின் இவ்வரிய இலக்கணத்திற்கு ஒர் சிறந்த இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர் மாணிக்கவாசகர் என்ருல் மிகையாகாது. இந்நிலையை அடைந்த மணிவாசகனர் 'அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லா முங் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலேயோ, இன்றேர் இடையூறெனக் குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் செய்வாய், நானுே இதற்கு நாயகமே .' என நல்வினையும் தீவினையும் தன்னைச் சாராது எல்லாம் உன் செயல் என்று எவ்வளவு உருக்கமாகக் கூறுகின்ருர் LIIT si LÉS) Gör J, Gŷr.
அடிகள் ஒலமிட்டலறி உலகெலாந் தேடியும் காணுத ஒருத்தனே, அவன் கட்டளைப்படி தில்லையுட் சென்று காண்

Page 21
3.18 / ஆத்மஜோதி
கின்ருர் கண்டதும் அவருக்கு பக்தர்கள் புடை சூழ பாச வேரறுத்த பழங்கருனேயில் திறத்தை நினையாமல் இருக்க முடியவில்லைப் போலும்.
'கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேன
வல்ல, ளனுய் வந்து வனப் பெய்தி இருக்கும் வண்ணம் பல்லோருங் காண எந்தன் பசுப சம் அறுத்தான் எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத் தேகண்டேனே எனக் கண்டபத்தில் 'கண்டேன்' என இடித்துரைக்கிருர், அடிகளார் அவனருளே கண்ணுகக் கீண்டார். எனவேதான் இறைவன் இப்படியன், இன்னிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் அவன் என்று தனது திருவாசக மறையில் ஆங் காங்கு கூறிப் போந்துள்ளார்.
ஆர்த்த பிற வித் துயர் கெட நாம் ஆர்த்தாடுந் தீர்த்தன், நற்சிற்றம் பலத்தே தீயாடுங் கூத்த னை க் கண்ணுரக் கண்ட அடிகளார் வாழ்வின் முடிந்த பேருகிய வீட்டின்பத்தை அடைந்தார். இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவரல்லவா? இனிப் பிறவாத தன்மை வந்தெய்திய தமது சுயானுபவத்தை அடிகளார்
நின்ற வித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தி வைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்' என மிக அழுத்தம் தி ரு த் த மா க எடுத்தோதுகின்ருர், அடிகளார் தான் பெற்ற சுயானுபவத்தை தனது திருவாசகத் திருமறையினுள்ளும் திருச்சிற்றம்பலக் கோவை யாருள்ளும் மிக அழகாகவும், மெய்மை குன்ருமலும் இனிதே எடுத்தோதியுள்ளார். இச் சைவத் திருமறைகளை உள்ளங்கனிந்து பொருளறிந்து பாடிப் பயில்வோருக்கும் அடிகளார் பெற்ற அதே அனுபவம் மிக எளிதில் கிட்டும் என்பது திண்ணம்.
YSeyyyyOBysy yyyByBy yyyyyyyyyyyy yy yyyyyyyy yy yyyyyyyyLyLyOLssyLylLOLsSY i து ற வு 斜
அறந்தானியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந் *용 துறந்தானவனிற் சதகோடி யுள்ளத்து றவுடையோன்  ேமறந்தா னறக்கற் றறிவோட்டிருந்திருவாதனையற் 3.றிறந்தான் பெருமையை யென் சொல்லுவேன் கச்சியே கம்பனே وه
-பட்டினத்தார்.
※ zDueeeOe kekeeeBmememeBeOOkeeeOeOeeBemueOeOmekOOe eeOeOekeY
 

*
ஆத்மஜோதி 319
சமூகமும் தனிமையும் (பூஜீ சுவாமி இராஜேஸ்வரானந்தர் 1
மனிதன் கூட்டுறவுடையவனுயிருப்பதால் அவன் சமூகத் தில் மகிழ்கிருன் சமூகத்தில் மனிதன் ஒரு மலர் போன்றவன். அவன் தன் இயற்கையான அரும்பில் மலர்ச்சியுறுவதாகத் தோன்றுகிருன் அவனது இயற்கைப்பெற்றிகள் விரிவடை கின்றன. பச்சோந்தி போன்று மனிதர் தம் பகட்டான தோற்றங்களை மற்ற ஒவ்வொருவரிலிருந்து எடுக்கிருர்கள்.
சமூகம் ஒரு சுவர். அது உறுதியாய் நிற்பது போற் காணப்படுகிறது. ஆனல் பல வருடங்களில் அதன் நிலை தகர்க்கப் படலாம் அல்லது ஒரு நாளிற் தாக்கப் படலாம். சமூகம் தொந்தரை செய்பவர்களும் தொந்தரைக்கு ஆளாகு பவர்களுமாகிய இரு குலங்கள் கொண்ட நாகரி நடத்தைக் கூட்டம். மேலும் அது பசியைப் பார்க்கிலும் அதிக சாப் பாடுகள் உடையவர்களையும் சாப்பாடுகளைப் பார்க்கிலும் அதிக பசியையுடையவர்களையும் பெற்றிருக்கிறது.
சமூகம் அடிக்கடி மாறுகிறது. அது தற்போது நாகரிக மற்றதாயிருக்கிறது. அது தற்போது நாகரிகமானதாயிருக் கிறது. அது தற்போது விஞ்ஞான முறையானதாயிருக்கிறது.
அது தற்போது சமயப் பற்றுடையதாயிருக்கிறது. அது தற்
போது ஏழ்மையானதாயிருக்கிறது. அது தற்போது செல்வ மிக்கதாயிருக்கிறது. அது தற்போது போர்ச் சார்புள்ள கா யிருக்கிறது. மேலும் இவ்வாறும் அவ்வாறுமே. பாம் பொருட்களை அவை இருக்கின்றபடி காண்பதில்லை. ஆனல் யாம் இருக்கிறபடி காண்கிருேம். இதுவே உண்மை.
சமூகம் புதுக்கலைகளைப் பெற்று பழைய இயல்பூக்கங்களே இகழ்கிறது. நீ வண்டியை உருவாக்கி உன் காலடிகளைப்பயன் படுத்துதலை இழக்கிரு?ய். ஏதோ ஒன்று பெறுவதற்கு, வேறே தோ ஒன்றை இழக்கிருய்.
சமூகம் தனியாட்களின் மண்டலம். அது உதவி செய் சிறது அல்லது தடை செய்கிறது. சமூகத்தில் ஒருவன் தன் மனமுடுக்குகளையும் ஈடுபாடுகளையும் கமுதாய வாழ்வின் முன் னேற்றத்திற்கு கீழ்ப்படுத்த வேண்டும்.
ஆரோக்கியத்திலும் பார்க்க பிணி மிகுதியாகத் தொற் றும் தன்மையானதாயிருப்பது போன்று சமூகத்தில் தனி யாட்கள் சுலபமாக மற்றவர்களின் அறங்களைப் பார்க்கிலும் மறங்களேக் கைப்பற்றுகிருர்கள். பணம் போன்று சமூகத்தில்

Page 22
320 ஆத்மஜோதி
நட்பு பேணப்படுவதிலும் பார்க்க அதிசுலபமாகச் சம்பாதிக் கப்படுகிறது. ஓர் எருது அதன் கொம்புகளாற் பிடிக்கப்படு வது போல் சமூகத்தில் ஒர் அறிவிலி அவனது மொழியாற் சிக்கிக்கொள்ளப்படுகிருன்.
சமூகத்தில் ஒரு கோட் சொல்லியின் மொழி உன்னைத் துன்புறுத்த இடங்கொடாதே. தனது வாயை ஒளிவு மறை வாக இன்னெருவருக்கெதிராகத் திறப்பவனுக்கெதிரே உன் காது களை மூடு. அவனது சொற்களை ஏற்காதே. அவை திரும் பி குறை தெரிவிப்போனைப் புண்படுத்தும். ஆனல் நீ ஏற்றுக் கொண்டால் அவையெதிரே ஒட்டம் பிடித்து ஏற்போனைப் புண்படுத்தும் ஒரு முதுமொழி கூறுவது போல் கோள் மூன்று பேரைக்-பேசுவோனையும், கேட்போனையும், பேசப்பட்டோ னையும்- கொலை செய்கிறது.
சமூகத்திற் சிறப்பு மனித இயல்பின் அறிவு. ஆழ்ந்த ஒழுக்கமுறையுணர்வு, பிறர்நலப்பற்றியல்பு, பயிற்சிபெற்ற நுண்ணறிவு, உண்மையான மரியாதைக் கருத்து, பேச்சுக் கெளரவம் முதலியவற்றை வேண்டுகிறது. இது சமூகத்தின் நிலைமையையும் முன்னேற்றத்தையும் விளக்குகிறது.
சிறந்த சமூகம் நற்பண்பைத் தீவிரப்படுத்துவதற்கு அறி வின் பொதுக் கலப்பையும் அறிவுத் தொழிற்சக்தியின் நேர்ப் பேரொளியையும் புதிய ஊக்கத்தைப்பெறும் ஒர்ந்தறிவை யும் தன் செல்வாக்காக வைத்திருக்கிறது.
சீலம் நன்ருக ஒழுங்குபடுத்தப்படும் களமாக சமூகம் பயன்பட வேண்டும். சீலமே வாழ்வில் ஒவ்வொரு விஷயத்தி லும் உயிர்நாடி. பொது அபிப்பிராய மாவட்டம், கருத்துக் குகை, உலக பல்கலைக் கழகம், சமய இசை விணக்கம், வாழ் வின் ஒருமை முதலிய யாவும் அசையாத ஆழ்ந்த அடிப்படை யில் நன்ருக விருத்தியாக்கப்பட வேண்டும்.
சமூகம் சில சீராக்கப்பட்ட குழாய்களை உடையது. கலர் வண்ணம் ஆள்கிறது. செயற்கை தன் ஆட்சியை நிலை நாட்டு கிறது. வழமை ஒரேயொரு சட்டமாயிருக்கிறது. தலைக்கு மாற்றம் பரவி நிலவுகிறது.
சமூகத்தில் மக்களுடன் முற்பட்டு நடப்பதற்கு ஒருவர் அவர்களின் கொள்கைகளுக்கு விட்டுக் கொடுக்கும் தன் சொந்த கொள்கைகளில் பரந்த மனப்பான்மையும் வைத்தி ருக்க வேண்டும். நடத்தை அறிவை அழகுபடுத்தி அதன் வழி யை உலகிடையே சமப்படுத்த வேண்டும்.
(தொடரும்)
 
 

s'
ஒளி வெள்ளம்
( கணேஷ் )
ܵ
இறைவ! உன்னருள் இன்னுெளி ஏழையின் இதய வீட்டினில் ஏற்றிட வேண்டிறேன். நிறைவு பெற்றவை நின்றிடத் தீயவை நீங்கி நின்னருள் நெஞ்சில் நிறையுமே!
காதல் நெஞ்சம் கலந்திடும் காதல! கால முற்றிலும் கண்டவை யாவிலும் காதல் கொண்டுவீண் காலங் கழிந்ததே, கால வெள்ளத் தமிழ்ந்து கலங்கிறேன்!
இளமை தந்த இன் பங்களும் எண்ணத்தில் இருந்து கூடிப்பின் ஏகிய பெண்மையும் மழலை தந்தவை மலர் பொன்னின் சேர்க்கையும் மறைந்த கால மளித்தவை யாவையும்
ஏக்க மும் துயர் இன்பத்தின் தேக்கமும் ஏறியுள் ளத்தை வாட்டிடும் நோய்களும் நோக்க மற்று நொடியினில் மாறிடும்
நுண்பு லன்களின் நுண்ணிய ஆட்டமும்
இதய வீட்டை யிடித்துடைத் தென்னுயிர் இருளில் மூழ்கி இறுதியில் ஏகுமுன் உதய ஞாயிறு ஒப்பஉன் நல்லொளி உள்ளத் தேற்றிடு வாயுயிர் நாதனே!
அண்ணல் உன்னருட் பேரொளித் தூமழை அடிய னேன்.அகம் வீழ்ந்திடும் போதிலுன் வண்ணம் மட்டும் வளர்ந்திடும் சிந்தையில் வந்து சேர்ந்தவை யாவும் தெளிந்திடும்.

Page 23
~-—
Registered at the G.P.O. as ஆத்மஜோதி நிலை
6 | || திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்திரை
றி கதிரை மணி மாலே
அறிவுரைக் கதைகள்
இளங்கோவின் கனவு ஆத்ம நாதம் (சுத்தானந், கீதா யோகம்
TIL TI sniff LITTLIG கந்தரநுபூதி - பொழிப்பு
DIT IT SED LITTL si
சந்தா கேய se rör son Luff இன்றுவரை 15ம் ஆண்டுக்குரி உடனுக்குடனேயே ரசீது அ கெல்லாம் எமது நன்றி உரி அனுப்பாதோர் உடனே அனு Lo6som så fåsou.
இந்தியாவிலுள்ள அன் R siis sol 36õLaiufaiu என்ற விலாசத்திற்கு அனுப்
தெரியப்படுத்த வேண்டுகின்ே
வாய்வு உஷ்ணவாய்வு முழங்கர்ல் மலக்கட்டு, மலபந்தம், அஜிர்
பசியின்மை வயிற்று வலி,
புளியேப்பம், நெஞ்சுக் கருப்
களை நீக்கி ஜீரண சக்திக்கு
மிகச்சிறந்த
தபால் செலவு உட்பட
(பத்திய சம்பு இன்டஸ்ரீஸ் - அரிசி இலங்கையில் சி ஆத்மஜோதி நிலேய
இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத்த திரு நாவியைகமூர்த்தியால் அச்சிட்

a Newspaper M. L. 59/300
(நா. முத்திையா) -50
(பரமஹம்ச σιτσετ). . 50ܚܒ C_50
(επολίτι ό இவ்ானந்தர்) . -65 1
(செ. நடராசன்) 2-25
g Lптит5) шлтгf) 300 2 5) 150 ரையுடன் -25 -20
----------
ர்களுக்கு
ய சந்தா அனுப்பியவர்களுக்கு னுப்பியுள்ளோம். அவர்களுக்
bய வெளியீடுகள்
1-25
தாகுக இன்று வரை சந்த
ப்ேபி வைக்க வேண்டுகின்ருேம்
ம், நாவலப்பிட்டி,
66)
ਹੈ - 353 பர்கள் வழக்கம்போல்
l, gerfingrugiau Tra'r unio, (go_9 பிவைத்து, அதை எமக்கும்
LD (LD -
சூரணம்
வாய்வு, இடுப்பு வாய்வு ணம், கைகால் அசதி பிடிப்பு
பித்த மயக்கம், பித்த சூலை பு, முதலிய வாய்வு ரோகங் ம் தேகாரோக்கியத்திற்கும்
சூரணம்
Լգ5ծI 526ծI դ 485ւIII 2555 մ),
சிப் பாளையம் சேலம் 9 (S.I.)
கிடைக்குமிடம் -
ம், நாவலப்பிட்டி
ாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் படுவெளியிடப்பெற்றது. 15-6-63.
འདོ།།