கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.07.17

Page 1

|- ---- --
|- -- ( |-|- |-
----|
----*************************** 蓝菇辩
|
毒毒森森)
++ ++ 44 *::
-|- |-
前
பரதேசியா
· · · · ·
●
6
廖 ***
శ్రీ ల్లో * * 李
*్క * 粽
鳢
----
*** * 梦 *
**** ξε * *

Page 2
(ஒர் ஆத்மீக மாதவெளியீடு) 鞭 క్ష$ 1. ܘܐܵ2 ಘೀಣ್ರ எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலு ம் இறைவன் ஆலயமே.
-சுத்தானந்தர்.
ஜோதி 15 சுபகிருதுளுல் ஆடி மீ" 1 வட (17-7-63) | GrLst 9
பொருளடக்கம் 1. கீதாஞ்சலி 321 2. கடவுள் தரிசனம் 322 3. பூனிலழறீ நாகலிங்கப் பரதேசியார் 33 4. கஞ்சன் வலி கடிந்த கண்ணன் 327 5. அப்பரின் அருள் வரலாறு 332 6. சமூகமும் தனிமையும் 337 7. கடோப நிஷதக் கருத்து 340 8. உண்மை இன்பம் 3 47 9. ஆனந்தமாயி அம்மை யிடம் அன்பர்கள் சம்பாஷணை 348 10. குஹாலய பஞ்சரத்னம் ,354 11. எது வேண்டும்? 357 12. ஆன்றேர் அருள் மொழிகள் 360
ஆத்மஜோதி சந்தா விபரம்
*→→→→→→→Y*******→ ஆயுள் சந்தா ரூ. 75-00. வருடச் சந்தா ரூ.3-00
தனிப்பிரதி சதம் 30.
கெளரவ ஆசிரியர் :- திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் :- திரு. நா. முத்தையா
* ஆத்மஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி (சிலோ ன்)
தொலைபேசி எண்: 353.
 
 
 
 

r
மகாகவி தாகூரின் " 。然
கீ த ப ஞ் ச லி
42. இன்பப் பயணம்?
*வைகறையில் தனிமையில்நாம் இருவருமாய
உலகினர்கள் அறியா வண்ணம் , துய்ய மணிப் படகொன்றில் தொலைப் பயணம் புறப்படுவோம்; தொல்லே நல்கும் பொய் மனித சஞ்சாரப் புழுதியிலா
தெல்லையற்றுப் பொலியும், இந்த மெய்யுலக யாத்திரை'யென் றென்காதில் ரகசியமாய் விழுந்த தோர் சொல்!
கற்பனைப்பொற் கனவு கண்டு களிப்புற்றேன்;
மகிழ்வொடுநீ கனிந்து கேட்க, அற்புதநம் யாத் திரையில் ஆனந்த
சாகரத்தின் அலைக ளோடு, பொற்புறும் என் பாட்டலைகள் சொற்றளே யாப் (பு)
அணைதகர்த்துப் பொங்கி, ஆழி வெற்பல போல் நர்த்தமிடும் விந்தையெழிற்
காட்சிகண்டு வியப்பாய் நீயே!
இன்னுமந்த நல்வேளை வரவிலேயோ?
பணிகளெனக் கின்னு முண்டோ? பொன்மாலைப் பொழுதும் வந்து புகுந்ததுவே:
அந்தோ, நற் பொலிவு மங்கும் தண்மாலை, கடற்பறவை இனம்தமது மனேநாடிக் கரையைச் சார்ந்தும் பின்மாலைச் சுடர்போலப் பட்கவிழ்ந்து
காரிருளிற் பிணிவ தெப்போ?
- "பரமஹம்ச தாசன்'

Page 3
322 ஆத்மஜோதி
க ட வு ள் த ரி ச ன ம்
இ *2 క్విన్ ܝܚ,ܓܗ*
மெய்யன்பர் மனத்தன் பின் விளைந்த இசைக் குழலோசை வையந்தன் னையும் நிறைத்து வானம்தன் வயமாக்கிப் பொய்யன் புக் கெட்டாத பொற்பொதுவில் நடம் புரியும் ஐயன்தன் திருச்செவியின் அருகணையப் பெருகியதால்
- சேக்கிழார்.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும்
தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி
இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.
பரஞ்சோதி முனிவர்.
உற்றரையான் வேண்டேன்
ஊர்வே ண்டேன் பேர் வேண்டேன் கற்றரை யான் வேண்டேன்
கற்பனவும் இனியமையும் குற்றலத் தமர்ந்து றையுங்
கூத்தா உன் குரைகழற்கே கற்றவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.
- மாணிக்கவாசகர்,
 
 
 
 

*
ஆத்மஜோதி 323
---- மரீலழறீ நாகலிங்கப் பரதேசியார்
LqqAA LqSAAA LLA LqSAAA LLA qLq A LqA qLA LqA qA qLA LqA LqA qALA LqLA qAA LqLA q A SiMAq LqAAAAAAAA
( ஆசிரியர் )
1932 ஆம் ஆண்டு என்று நினைவு. கொட்டடி நம சிவாய வித்தியாசாலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன
கப் படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் பாடசாலையில்
மகர தோரணங்கள் கட்டிச் சோடிக்கும்படி எங்கள் ஆசி ரியர் கூறினர். ஏன் என்று நாங்கள் கேட்கவில்லை. அந்
தக் காலத்து மாணவர் இயல்பு அது. பாடசாலை வாச லில் நிறைகுடம் வைத்துக் குத்து விளக்கேற்றிப் பாட சாலை ஆசிரியர்களும் மாணவரிற் சிலரும் யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு நின்றர்கள். சரியாக மணி ஆறு இருக்கும். பாடசாலை வாசலில் மோட்டார் ஒன்று வந்து நின்றது. தலைமையாசிரியர் ஒடிச் சென்று மோட்டார்க் கதவைத் திறந்தார். மோட்டாரிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. நாவுக்கரசுப் பெருமான்தான் வந்தாரோ என்று சொல்லும் வண்ணம் அத் திருவேடப் பொலிவு அமைந்திருந்தது. தலைமையாசிரியர் பாதங்களை நீராற் கழுவித் துடைத்து மாலையணிந்து மேடைக்கு அழைத்துச் சென்ருர்,
அவர் யாரென்று எங்களைப் போன்ற மாணவர்களுக் கோ தெரியாது. அவர் யாரென்பதை அங்கு வந்திருந்த பெரியார் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். ஆனந்தம் பொங்கி வழிந்தது. அறிய முடியாததை அறிந்து
விட்டோம் என்ற இறுமாப்பு. இவர்தான் நாகலிங்கப் பர
தேசியார் என்று கூறினர் பெரியவர். சங்கீத கதாப்பிர சங்கம் செய்ய வந்திருக்கின்ருர் என்ருர், காரைக்காலம் மையார் சரித்திரம் வெகு அற்புதமாய் நடந்தது. சுவா மிகள் முப்பது ஆண்டுகளுக்கு முன் பாடிய திருமுறைகள் இன்றும் காதில் ஒலிப்பன போல் இருக்கின்றன. மாண வர்களாகிய நாங்கள் அநுபவிக்கத் தக்க வகையில் இலகு வான தெளிந்த நடையில் கதை அமைந்திருந்தது. இனிய சாரீரம். கேட்டார் பிணிக்கும் தகையவாம் பேச்சு.
அன்றைய பிரசங்கத்தின் பின்பு வாழ்நாளில் இரண்டு மூன்று முறை மாத்திரம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்

Page 4
324. ஆத்மஜோதி
தது. சமீபத்தில் திருக்கோணமலையில் அன்பர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கதாப்பிரசங்கத்தைப் பற்றிய பேச்சு நிகழ்ந்தபோது நாகலிங்கப் பரதேசியாரைப் பற்றிய பேச்சு வந்தது. அவரைப் பற்றி அறிந்ததை எல் லாம் கதை கதையாகக் கூறினர்கள்.
தந்தையும் தாயும் குழந்தை ஒன்றில்லாமல் கல்லு
வைத்த கோயில் எல்லாம் வழிபாடு செய்தார்கள். ஒரு
கந்த சஷ்டிக்குத் திருச்செந்தூர் சென்று இரு வரும் கடும் நோன்பு நோற்றனர். தாயார் கந்தன் அருள் பெரு:விடில் 。 திருச்செந்தூர்க் கடலிலே இறப்பதாக முடிவுசெய்து கொண்
டார். தந்தையார் பலமுறை புத்திமதி கூறியும் தாயார் கந்தன் அருள் கிடைக்காமல் உண்பதில்லை என்று நோன்பு
நோற்றர்.
சாது ஒருவர் அம்மையாரின் கனவிலே தோன்றி, உங் களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கும். அதுவும் அவ னுக்குரிய குழந்தையாகவே கிடைக்கும் என்று சொல்லி மறைந்தார். விடிந்தெழுந்ததும் அம்மையார் கணவனுருக் குக் கனவைக் கூறித் தமது நோன்பையும் முடித்துக்கொண் LTTITT ...
யாத்திரையால் வந்து சரியாக ஒரு வருடத்தில் அம் மையார் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். சுற்ற மித்திரர் யாவரும் களிபேருவகை கொண்டனர். எட்டு வயதாக இருக்கும்போதே பாடசாலையில் நடந்த அரிச்சந் திர நாடகத்தில் சந்திரமதியாக நடித்துப் பலருடைய அபி மானத்தைப் பெற்றர். ஒருநாள் வீட்டுக்கு வெளியே இருந்து கூத்துப்பாட்டைப் படித்துக் கொண்டிருந்தார். அவ்வழி யாகப் பெரிய சரவணைச் சாமியார் அவர்கள் வந்தார்கள்.
இந்த நாகலிங்கத்தைக் கண்டார். அவர் பாடிய கூத்துப்
பாட்டையும் கேட்டார்.
நான் இரவு ஒரு கனவு கண்டேன். தம்பியின் மேனி யெல்லாம் மயிலிறகு முளைத்திருக்கக் கண்டேன். தம்பியை ஒருமுறை கொஞ்சி விட்டுச் செல்ல வேண்டுமென்று வந் தேன் என்று கூறி, இப்படிப்பட்ட குழந்தை இந்தக் கூத் துப் பாட்டையா படிக்க வேண்டும் என்று சுவாமியார் கூறினர். இதைக் கேட்டதும் அம்மையாருக்கு வருத்தம்
தாங்க முடியவில்லை. அரிச்சந்திர புராணப் பாடலும் நல்
*
ܝܐܵ܂
 
 

ஆத்மஜோதி 325
லதுதானே என்று அம்மையார் கூறினர். சுவாமிகள் நான் சும்மா கூறினேன் என்று சொல்லிப் பையனைத் தூக்கி ஆனந்தக் கூத்தாடி னுர்,
நாகலிங்கத்திற்கு வயது பன்னிரண்டு நடக்கும்போது ஒருநாள் ஒரு கனவு கண்டார். கனவிலே ஒரு சாது திருச் செந்தூருக்கு வா என்று சொல்லிப் போனர். தாய் தந் தையருக்கு இதனைச் சொன்னுல் தாய் தந்தையர்கள் விட மாட்டார்கள் என்பதை நாகலிங்கம் அறிந்திருந்தார். ஒரு நாள் இரவு தந்தையின் பணப் பெட்டியிலிருந்து பத்துத் தங்கப் பவுன்களை எடுத்துக் கொண்டு திருச்செந்துரருக்குப் புறப்பட்டார். புறப்பட்ட நேரம் நடுச்சாமம். சுடலையைக் கடந்தே செல்ல வேண்டியிருந்தது. சுடலையில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதைக் கண்டார். சிறிது நேரம் உற்றுக் கவனித்தார். எனது உடலும் ஒரு நாளைக்கு இப் படித்தானே எரியும் என்று மனதில் வைராக்கியம் கொண் 4 ITI, -
காங்கேசன்துறைக்குச் சென்று வத்தைக்காரன் ஒருவ னிடம் ஒரு தங்கப் பவுணைக் கொடுத்தார். அதைப்பெற்ற வத்தைக்காரன் மிகுந்த சந்தோஷத்துடன் அக்கரை கொண்டு சென்று சேர்த்தான். இந்தியாவில் திருவாவடுதுறை ஆதீ னத்தைச் சார்ந்து, சமஸ்கிருதமும் திருமுறையும் கற்றுச்
சங்கீத கதாப்பிரசங்கியானுர்.
வீட்டிலே மகனைக் காணவில்லையெனத் தந்தையார் இலங்கை முழுவதும் ஊடுருவிப் பார்த்துவிட்டார். கடை சியில் இந்தியாவில் இருக்கிருர் எனக் கேள்விப்பட்டு அங்கு சென்று தேடினர். தற்செயலாக ஒரு புகையிரத ஸ்தா னத்தில் மகன் நிற்பதைக் கண்டார். ஒடிச் சென்று கட் டித் தழுவினர். வீட்டுக்கு வருமாறு மன்ருடினர். புகை யிரதம் வந்ததும் திடீரெனப் புகையிரதத்தில் ஏறிக்கொண் டார். புகையிரதம் நகர்ந்தது. தந்தையார் புகையிரத
மேடையில் கிடந்து அழுது புரண்டார். "நான் அருட்
தந்தையை நாடிச் செல்கின்றேன். கவலையை விடுங்கள் என்ற வார்த்தைகள் தந்தையார் காதிலே ஒலித்தன. * கடைசி காலத்தில் உங்களிடம் வருவேன்’ என்ற வார்த் தைகளும் கடைசியில் ஒலித்தன. தந்தையார் கண்ணுக் கெட்டிய தூரம் புகையிரதம் மறையும்வரை நின்று பார்த் தார். ஒருவாறு மனந்தேறி ஊர் திரும்பினுர்,

Page 5
326 ஆத்மஜோதி
மகனைப் பிரிந்த சோகம் தந்தையை வாட்டியது. மர ணப் படுக்கையாகி விட்டார். கடைசி நேரத்தில் மகன் வந்து சேர்ந்தார். தந்தையின் வாயிலிருந்து
*நடராசா நடராசா
சிதம்பரேசா 5 LUT 3FT
என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் காட்சி மகனின் கல்நெஞ்சையே உருக்கி விட்டது. தந்தையிடம் சென்று விபூதி பூசி
'இடரினுந் தளரினு மெனதுறுநோய்
தொடரினு முன கழல் தொழுதெழுவேன் கடல் தனி லமுதொடு கலந்த நஞ்சை மிடறினி லடக்கிய வேதியனே.'
என்ற சம்பந்தர் தேவாரத்தை மனமுருகிக் கண்ணிர் வார ஒதினர். தந்தையாரும் மனமாரக் கண்குளிரக் காதா ரக் கேட்டுக் கண்ணிருகுத்தார்.
'இதுவோ எமையாளு மாறிவ தொன் றெமக் கிலேயேல்
அதுவோ வுனதின் னருளா வடு துறைiரனே.
என்ற வரிகளைப் படித்து முடிக்கும் போது தந்தையின் உடலை விட்டு ஆவி பிரிந்தது.
இதன்பின் நாகலிங்கம் நாகலிங்கப் பரதேசியாராகி சங்கீத கதாப்பிரசங்கத்தினுல் மக்கள் அனைவரையும் மகிழ் வித்திருந்தார். சுவாமிகள் சங்கானையில் இருந்த வீட்டுக் குள் ஒரு பெரிய பாம்புப் புற்று. அதற்குள் ஒரு கரு நாகம் நீண்ட காலமாக வசித்து வந்தது. சுவாமிகளிடம் ! ஒருநாள் அன்பர் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது கருநாகம் புறப்பட்டு வெளியே வந்தது. அன்பர் துடி துடித்துக் கூக்குரல் வைத்தார். சுவாமிகள் அவரை ஆறு தலாக இருக்கச் செய்து "அதைப் பார்க்காதே’ அப்பா, உள்ளே பார்’ என்று உபதேசம் செய்தார்கள். கருநா கத்தையே கடவுளாகக் காணும் டக்குவ நிலை யடைந்தி ருந்தார்கள். சுவாமிகள். அவரது திருப்பாதத்தைப்போற் றுவோமாக. །
 

ஆத்மஜோதி 327
கஞ்சன் வலி கடிநத கணனன
பண்டிதர், செ. பூபாலபிள்ளை அவர்கள், !
கஞ்சன் கண்ணனைக் கொல்லச் செய்த சூழ்ச்சிகள் .
கண்ணபிரானது திரு அவதாரத்தால் இடையர் வாழும் முல்லை நிலத்து மாதமும் மாரி ம்ாருது பொழிந்தது. மேதியும், ஆணினமும் மென் மேலும் பால் சுரந்தன. தாழ்வற்று, இடரற்றுக், கலக்கமற்றுப் பொதுவர் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். இக்காலத்துத் துர்க்கை வாக்காற் துயருற்ற கஞ்சன் ஒற்றர்களை அனுப்பி உளவு பார்ப்பித் தான். அவனுல் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் உலகெலாஞ் சுற்றி ஆராய்ந்து இறுதியில் ஆயர் பாடியை வந்து அடைந்தனர். நந்தகோன் வாயிலில் நின்றனர். கண்ணனைக் கண்டனர். ஐயமுற்றனர், தேவகி மகனென அறிந்தனர். அதனைத் தமது அரசனுகிய கஞ்சனுக்கு அறிவித்தனர். கஞ்சன் கொடிய பேய் மகளாகிய பூதனையை அழைத் தான். அவளுக்குப் பரிசில்கள் பல வழங்கினன் . நஞ்சுப் பாலூட்டிக் கண்ணனைக் கொல்லுமாறு இரவில் ஆயர் பாடிக்கு அனுப்பினன். கஞ்சனல் அனுப்பப்பட்ட பூதனை மானிட மகளிர் உருத்தாங்கி, ஆயர்பாடி புகுந்து யசோதையம்மையார் வீட்டில் வளர்ந்த கண்ண பிரானைக் கைதட்டிக், கையை விரித்து அழைத்தாள், கண்ணன் அரவ மின்றிப் படுக்கையில் இருந்து எழுந்து வந்து அவளது மடிமீது தாய் தந்தையர் அறியாதபடி ஏறி இருந்தான். அவளது முகத்தைப் புன் முறுவலுடன் பார்த்தான். நச்சு முலையை நாவினுல் ஒதுக்கி நல்ல
பாலையெல்லாம் உண்டு பூதனை உயிரையும் உண்டருளினன். அத்தருணம்
பூதனை மானுடப் பெண் வடிவு நீக்கிச் சுயரூபம் எடுத்து ஒ ஓ என்று அலறி அறிவுகெட்டு வீழ்ந்து இறந்தாள். இந்தப் பேரிழவினைத் தூதுவர் கஞ்சனுக்கு அறிவித்தனர். பிரேதத்தை நந்த்கோனும் யசோதையாருங் கண்டு மருண்டனர். இதனைக் கேட்ட கஞ்சன் துக்கித்து மன்ருடி பாலகனைச் சகடுருவாக இனபோசனனுடன் சென்று,
கண்ணன் உயிரைப் பருகுமாறு ஏவினன். சகடனும், இனபோசனனும்
இடையர் சேரியை அடைந்தனர். அத்தருணம் தெருவில் விளையாடிக்
கொண்டு நின்ற கண்ணன் இவர்கள் தன் மீது விட்ட சகடத்தைத் திருப்பாதத்தால் உதைத்து வீழ்த்தினன். இந்தத் தாக்கத்தால்
சகடனும், இனபோசனனும் மாண்டு மடிந்தனர். பூதனை பிணத்தை முன்பு சுமந்து சுமந்து அலுத்த பொதுவர் இறந்த சகடனதும்? இனபோசனனதும் பேருடல்களைக் கண்டு தலைநடுங்கினர். தம் விரல் களே மூக்கில் வைத்தபடி நந்தன் பெருந் தவஞ் செய்தபடியால்

Page 6
328 ஆத்மஜோதி
வலிமை மிக்க கண்ணனை மகவாகப் பெற்ருன், என்று கூறி வியந்தனர். வியந்த அவர்கள் பின்பு கூறுவன வற்றைக் கவனியுங்கள்:-
' கொழுந்தி நந்தன் மகன் கொல்லக்கட னிவரை நாளும் பிணஞ்சுமக்க நமக்குக்கடன் ஈதென்று கொட்டு மளுவுங் கொடுவாளுங் கொண்டு சென்று வெட்டிச் சுமந்து வேசற்றரம் மானே வாட்டமுறச் சுமந்து வண்டிலிட்டு எல்லேவிட்டுப் போட்டு முழுகி மனபுகுந்தார் அம்மானே. '
இதனை அறிந்த கஞ்சன் மனமடிவுற்று வருந்தினன், தேறினன். தேறிய அவன் மத்தன், மதாமத்தன் என்ற இருவலிய அசுரர்களை அழைத்துக் கண்ணனை முடிக்குமாறு அனுப்பினன். அவர்கள் யசோதையம்மையார் மனை அருகே நின்ற இரு மருத மரங்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு அவை நின்ற இடங்களிலே இரு மருத மரங்களாக உருமாறி நின்றர்கள்
இத்தருணத்துக் கண்ணபிரான் இடைச்சியர் வீடு தோறும் புகுந்து பால், தயிர், வெண்ணெய்களைக் களவாடி வாரி வாரி உண்ணுகிறர். இடைச்சியர், பால், தயிர், வெண்ணெய்களுக்குக் காவலாக வைத்துச் சென்ற கன்னியரைக் கட்டித் தழுவி முத்தமிட்டு மெய்யுறு புணர்ச் சியால் மகிழ்வித்துத் தன் வசமாக்குகிறர். இவற்றை மறைந்திருந்து கண்ணுரக் கண்ட பொதுவர் மகளிர் கொய்யோ முறையோ வென்று கூக்குரல் இட்டுச் சென்று யசோதையம்மையாருக்கு முறையிடுகின்றனர்? இதனைக் கேட்ட யசோதையம்மையார் நடைகற்றறியாத எனது இந்தச் சின்னஞ்சிறு குழந்தையா இங்ஙனஞ் செய்தான்? போங்கடி போங்கோ? இந்தப் பொய்யைக்கேட்டு எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது ' என்று கூறி இடைச்சியரை உரப்பி அனுப்புகிறர். இத்தருணம் தாயைப் பொய்க்க விடலாகாது என்று எண்ணிய கண்ணன் யசோதையார் காணும்படியாகப், பொதுவர் மனதோறுந் தவழ்ந்து புகுகின்றன். அங்குள்ள உரல்களில் ஏறிநின்று உறிகளில் தொங்கிய பால், தயிர்? வெண்ணெய்களை வாரி வாரி விழுங்குகிருன், இதனைக் கண்டு புன் முறுவல் பூத்த யசோதையம் மையார் கண்ணனை பிடித்து வந்து யாது செய்கிருர் பாருங்கள்:-
*" செவ்வாய் மதலைதனைச் சிக்கெனத் தான்பிடித்துக் கன்றினிற் தாம்பாலே கனவுரலிற் கட்டிவைத்து மன்றில் யசோதை மணித்தாம்பு தானெடுத்துப் பூமலேயுஞ் சோரப் பொருகின்ற மத்தகயம் தாமரை நூலில் தரிபட்டு நின்றதுபோல் பசலே விழிவிழித்துப் பயந்து மிகக் கண்பிசைந்து
 
 

ஆத்மஜோதி 329
செயலே மறந்து சிறுநீரும் பெய்து கொண்டு பாய்ந்து ஒதுங்கும் பவளவாய்ப் பாலகனே ஏந்து கையிற் தாம்பாலே என்சொல்லி மோதுகிறன் கொட்டில் புகுதேனென் கோதையரைப் புல்கேனென் மட்டும் உறிதனிலே வைத்தவெண்ணெய் தின்னேனென் சிற்றில் சிதை யேனென் தீமைபல செய்யேனென் என்றென் றவள் மோத இல்லையென்று கண்ணன் அழ'
இத்தருணம் அழுத கண்ணனை இனி அடிக்க வேண்டாம் அம்மா’
என்று அவன் காதல் புரியும் அரம்பையர் போன்ற இளங் கன்னியர் யசோதையார் தாடையைத் தாங்கியபடி கெஞ்சி வேண்டினர். இதனேக்கண்ட கண்ணன் கட்டுண்ட உரலுடன் புறக்கடைக்குத் தவழ்ந்து சென்று பெரு மருதுகளாக அங்கு நின்ற இரு மரங்கள் இடையேயும் பேருரலைப் பொறுக்கச் செய்து எழுந்து நடந்து இழுத் தான். இழுத்த தாக்கத்தால் மருத LDULDT5 மாறி நின்ற மத்தன் மதாமத்தன் என்ற இரு அசுரர்களும் வீழ்ந்து உயிர் துறந்தனர் இதனைக்கேட்ட கஞ்சன் கண்கலங்கி அறிவு கெட்டுச் சோர்ந்து தள்ளாடினர்.
அத்தருணம் பாரைப் பிளப்பேன், பாம்பின் மணிபறிப்பேன், காரைப் பிடிப்பேன், கடலைக் குடிப்பேன் என்ற வீரவார்த்தை பல பேசிக்கொண்டு புட்கரன் என்ற அசுரன் கஞ்சன் முன்பு தோற்றினன். தோற்றிய அவன் கண்ணனே அழிக்கக் கஞ்சன் கட்டளைப்படி புள்ளுருவமாக மாறி ஆயர் பாடிக்குச் சென்ருன், அத்தருணத்திலே கண்ணபிரான யசோதையம்மையார் அலங்கரித்துக், கையிற் கோல் கொடுத்து, இடைச் சிறுவருடனே கன்று காலிகள் மேய்க்கக் காட்டுக்கு அனுப்புகிருர் காட்டுட் புகுந்த கண்ணனைப் புட்கரன் அலகாற் கெளவி இருஞ்சினன், அந்தத் தருணத்தில் கண்ணன் மலைபோல வளர்ந்தான். அந்தப் புட்கரப் புள்ளின் அலகைப் பிளந்தான். புட்கரன் மாண்டு மடிந்து மலைபோலக் கீழே சரிந்து வீழ்ந்து இறந்தான்.
இதன் பின்பு கிருட்டினனும், பலபத்திரனும் இடைச் சிறுவருடன் கூடி ஆனினம் மேய்த்தனர். ஒரு தினம் இருவரும் தனித்திருந்து தமது நிலைமைகளை ஆழ்ந்து எண்ணினர். ஆயச் சிருர் மேய்த்த பசுக் களுக்கு வெவ்வேறு கன்றுகளை முலை முட்டிக் குடிக்க ஏவி அவர்களே அல்லல் கொடுத்துத் துள்ளி விளையாடினர். இவற்றைக் கண்ணுற்ருேர் கஞ்சனுக்கு அறிவித்தனர். கஞ்சன் பிரலம்பன், கிறுத்துமன் என்ற இரு தானவரைப் பலபத்திரனேயுங், கண்ணனையுங் கொல்லுமாறு ஆயர் பாடிக்கு அனுப்பினுன்.

Page 7
330 ஆத்மஜோதி
அவர்கள் ஆயர் சிருர் ஆணினம் மேய்க்குங் காட்டுக்குச் சென்றனர். அங்கு பிரலம்பன் ஒரு மதகரியாக மாறிப் பலபத்திரனேக் கொல்ல நின்றன். கிறுத்துமன் கிருட்டினனைக் கொல்ல எண்ணி அவன் முன்பு ஒரு கழுதையாக மாறி நின்றன். கழுதை உருத்தாங்கிய, கிறுத்துமனை அட்டவசுக்களைக் கடியணுக மாற்றிக் காது மூக்குத் துவாரங்களுட் புகுந்து கடிக்குமாறு கண்ணன் ஏவிக் கொல்வித்தான். மதகரியாகிய பிரலம்பனேச் சங்குவண்ணன் மலையிற் தூக்கி மோதி அடித்துக் கொன்ருன், இதன் பின்பு அசுரர் கொடுக்குந் தொல்லைக்கு ஆற்ருத கோவலர் தமக்கு உறைவிடமாகிய ஆயர் பாடியை விட்டுப் பிருந்தா வனத்துக்கு நந்தகோபன் அனுமதியுடன் குடிபுகுந்தனர்."
கோவலரது பிருந்தாவனவாசம்.
காடு வெட்டிக் கட்டைகளைக் களைந்து மேடு பள்ளந் திருத்தித் தெருக்கள் வகுத்து வீடு கட்டிக் கிணறு தோண்டி ஆலயம் அமைத்து ஆயர் பிருந்தாவனத்துக் குடியேறி வாழ்ந்தனர். இகனைக் கஞ்சன் அறிந்தான். அறிந்த அவன் சுகந்தன், விகந்தன் என்ற துட்டர் இரு வரை யசோதையார் மகவைக் கொல்லுமாறு பிருந்தா வனத்துக்கு அனுப்பினன். NI
அவர்கள் ஆலகால விடம்போல சீறிக் கோபித்து ஒரு விளா மரமுங், கன்றுமாக உருமாறி கண்ணன் கன்று காலி மேய்த்துவரும் காட்டு வழியில் நின்றனர். இடைச் சிறுவர் விளாங்காய் நிறைந்து நின்ற அந்த மாய விளாமரத்தைக் கண்ணனிடங் காட்டித் த்ங்களுக்கு விளாங்காய் பறித்துத் தருமாறு வேண்டினர். அவர்களைக் கண்ணன் கையமர்த்திவிட்டு, அங்கு வந்து நின்ற வஞ்ச வேற்றுக் கன்றினைக்" கால்வாரிச் சுளற்றி வஞ்ச விளா மீது எறிந்தனன். கன்ருல் விளா வெறிந்த கண்ணன் கண்கான, ஆயர் சிருர் எல்லாம். அச்சம் உற்று நடுக்கம் எய்தச், சுகந்தன், விகந்தன் என்ற இருவரும் இறந்து பட்டனர். ஆயர்களும் பாலர்களும் இதன் பின்பு பிருந்தா வனத்தில் அச்சம் இன்றி இன்புடன் வாழ்ந்துவந்தனர்.
இத்தருணம் இளவேனிற்காலம் வந்துற்றது, ஆயர் மகளிர் எல்லோரும் அன்பாக ஒன்றுகூடிச் சுனைநீர் ஆடச் சென்றனர், சுனை யாடுமுன் பூணுரங்களைக் களற்றியும், பூந்துயில்களைக் களைந்தும் கரையில் வைத்துவிட்டு நீராடிக் குதூகலித்தனர். இவர்களை அறியாது பின்தொடர்ந்து வந்த கண்ணன் இவர்கள் கலைகள் அத்தனையையும் யாவரும் அறியாவண்ணம் வாரி எடுத்துக்கொண்டு ஒரு புன்னை மரத்தின் மீது ஏறி இருந்தபடி புல்லாங் குழல் வாசித்தான். இதனைக் கண்ட இளமங்கையர் அவனை மன்ருடித் தமது கலைகளைத் தருமாறு
 

ஆத்மஜோதி 331
ட வேண்டினர். இவர்கள் கலைகளையெல்லாம் ஒரு வன்னி மீது வைத்து
விட்டு இவர்கள் ஒவ்வொருவருக்கும் விருப்பமான ஒவ்வொரு மாப் பிள்ளைக் கோலத் தாங்கி இவர் கரம் பற்றி நீராடிவிளையாடி இன் புறுத்தினுன் கண்ணன். பின்பு இவர்கள் கண்ணனை வாழ்த்தி வணங்கித் தத்தம் மனை புகுந்தனர். இவர்கள் மீதுள்ள நகக்குறி, கட்குறி,
நுதற்குறி தனக்குறிகளைக் கண்டு இவர்க்குற்றதை உள்ளவாறு ஆராய்ந்தறிந்த தாய்மார் மனமடிவுடனும், முகவாட்டத்துடனும்
யசோதையம்மாளிடம் சென்று அவர் திருமகன் திருவிளையாடல்களே
முறையிடுகின்றனர்;-
** தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை - தீராத
பின்ன?லப் பின்னின் றிழுப்பான் - தலே பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான் வன்னப் புதுச்சேலே தனிலே - புழுதி வாரிச் சொரிந்தே வருந்திக் குலைப்பான் - தீராத
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன் - பொய்மை குத்திரம் பழிசொல்லக் கூசாச் சழக்கன் ஆளுக் கிசைந்தபடி பேசி - தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் - தீராத
யசோதையம்மா, உங்க பிள்ளையை அடக்கி வளர்க்கிறமாதிரி வளர்க் கிறீர்களா? இல்லையா? பிள்ளையைப் பாரு பிள்ளை, எங்க குமர், குஞ்சுகளுடைய மானம், மரியாதையைப் போக்கிற பிள்ளை, இந்த மாமிமாருடைய முறையிட்டை எல்லாம் கேட்ட கண்ணன் சிறு திறுத்து விழித்தபடி தாயார் முன்னிலையில் நிற்கிருன் (தொடரும்
AqAqAMLeALAMMAALLAAAAALLAAMAMAMAMAMAMAAMAMAYS
மணி மொழி.
'அறிவே சிவமாய் அமர்ந்திருப்பாரே' என்பது திரு மந்திரம் 'அறிவுடையார் எல்லாமுடையார்' என்பார் தெய் வப்புலவர். அறிவு ஆழ்ந்து அகன்று நுணுகி விளங்கும். 'ஆழ்ந்தகன்ற நுண்ணியனே' என்பார் மணிவாசகனர். அறிவு ஆழத்தில் அமைந்துளது. அறிவையடைவதுவே இன்பப் பேறு ஆகும். "அறிவை யறிபவர் அறியும் இன்பந்தனை' என்பார் அருணகிரி நாதர். - கிருபானந்தவாரியார்,
qAMA SeA AeeSAMSASeASASaAeSeAeSBA SSAAeSeAeSeAeeLAeSeAMSeSeMAMeAMeAAeAMeMAeMAeM ALALSAeSeSASeMAAeSeMAeM ASeM AeM AALeMALeSALii

Page 8
332 ஆத்மஜோதி
அப்பரின் அருள் வரலாறு
(வித்துவான் வசந்தா வைத்தியநாதன். )
' கருங்கதலிப் பெருங்குலேகள் களிற்றுக்கைம் முகங் &s i L மருங்குவளர் கதிர்ச்செந்நெல் வயப் புரவி முகங் காட்டப் பெருஞ்சகடு தேர்காட்ட வினேஞர் ஆர்ப் பொலி பிறங்க நெருங்கியசா துரங்கபல நிகர்ப்பனவாம் நிறை மருதம் , '
இவ்வாறு நால்வகைச் சேனைகளைப் போன்று மருதம் காட்சி நல்க இயற்கை வளம் சூழ விளங்குவது திருமுனைப் பாடி வளநாடு. அந் நாட்டிலே 'திருவா மூர்' என்ற சிறந்த தலமுண்டு. அங்கு விருந்து புறந்தந்து, உறவினரைப் பாதுகாத்து எல்லாத் திசைகளிலும் நின்று நிலவும் புகழ்பெற்ற குறுக்கையர் குடித் தோன்றலாகிய "புகழஞர்' என்பவர் வாழ்ந்திருந்தார். அவரது இல்லறத் துணையாக விளங்கியவர் மாண்புகள் நிறையப் பெற்ற 'மாதினியார்' என்ற பெருமாட்டி, அவர்களுக்கு, அலகில் கலைத்துறை தழைக்கவும், அருந் தவத்தை உடையோர் நன்னெறி நிற்கவும், உலகின் புற இருளே நீக்கும் கதிரவனைப் போன்று மக்களின் அக இருளைப் போக்கும் ஞானக் கதிரவனும் 'மருள் நீக்கியார்' பிறந்தார். மங்கல வினைகள் யாவும் முறைப்படி நடந்தன.
அருங் கலை பயிலுதல்:-
மருள் நீக்கியார் குழந்ப்ை பருவம் கடந்தார். புகழனரும் குழந்தைக்கு சிகை களையும் சடங்கினை நடத்தி வறியவர்களுக்குப் பெரும் பொருளை தானமாக அளித்தும், கல்வி புகட்டும் சிறப்பைச் செய்தார். மருள் நீக்கியாரும்,
' மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்ருன் கொல்எனுஞ் சொல் '
என்ற செந்நாப்போதாரின் செம்மொழிக் கிணங்க பெற்றேர் மனம் மகிழ எல்லாக் கலைகளிலும் வல்லுநராய் 'மறுவொழித்த இளம் பிறை போல் வளர்ந்தார்.
தமக்கையின் திருமணம்:-
மருள் நீக்கியார் நாளும் அருங்கலையும் பயில அவரது தமக்கைத் 'திலகவதியாரும்' பன்னிரண்டு அகவைகள் கடந்து மணப் பருவம் வந்தடைந்தார். அது போது “கலிப்பகையார்' என்னும் தானத் தலைவரும் திலகவதியாரை மணக்க விரும்பி பெரியோர்களைப் பெண் பேசி வருமாறு போக்கினன். கலிப்பகையாரும் புகழனருக்கு ஒத்த வேளாண் குடியிலே வந்தவர். சிவபெருமானுக்கு அடிமை புரிவதில்
 
 

ஆத்மஜோதி 333
பேரார்வம் உடையவர். சமர் புரிவதிலே அரியேறு ஒப்பாவார். தம்மைப் புரக்கும் அரசன் மாட்டு அன்புடையவர். இத்தகைய மேதகு நற்குணங்களைப் பொருந்திய கலிப்பகையார்க்குப் பெண் கொடுக்கப் புகழஞரும் இசைந்தார்.
கலிப்பகையார் துறக்கம் புகுதல்:-
இவ்வமயம் வடநாட்டிநின்று பகைவர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்தார்கள். அரசனும் கலிப்பகையாரைப் போர் மேற் கொண்டு செல்லப் பணித்தான். கலிப்பகையாரும் படைகளுடன் வட புலம் நோக்கிச் சென்ழுர், போர் நெடுங்காலம் நீடித்தது.
புகழஞர் முன்வினைப் பயனினுல் கொடிய நோயுற்று வருந்தி அமரருலகு அடைந்தார். கற்புநெறி வழாத மாதினியாரும், உட னுறையும் பெற்றியை விரும்பி, சுற்றத்தையும், மக்களையும் துகளாக நீத்து கணவனுடன் ஏகினர். பெற்ருே?ர்களை இழந்த சேய்கள் துயர்க் கடலிலே மூழ்கின. இந்நிலையில் மக்களின் துன்பம் துடைக்கச் சென்ற கலிப்பகையாரும் துறக்க உலகம் புகுந்தார்.
தம்பியார் பால் வைத்த தun ;-
கலிப்பகையார் போர்க்களத்திலே உயிர் கொடுத்துப் புகழ் கொண்டசெய்தியைத் திருவனைய திலகவதியார் கேட்டார். 'எந்தையும், தாயும் என்னை அவர்க்கே மணம் புரிவிக்க இசைந்தமையால் யான் அவர்க்கே உரியள். ஆகையால் எனது உயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன்’ என எண்ணி இறக்கச் சித்தமானர். தமக்கையாரின் துணிபைக் கண்ட மருள் நீக்கியார் அவரது திருவடிகளில் வீழ்ந்து *தாயும் தந்தையும் அகன்றதன் பின் யான் தங்களையே வணங்கப் பெற்றேன். தாங்களும் என்னைத் தவிக்க விட்டு ஏகுவீர் எனில், உமக்கு முன் யான் உயிர் துறப்பேன் இது உறுதி “என உரைத்தார். இம் மொழிகளைக் கேட்ட அம்மையாரின் மனம் இளகியது. தம்பி
யார் பால் வைத்த தயாவினல், அம் பொன்மணி நூல் தாங்காது,
அனைத்துயிர்களிடத்தும் அருள் தாங்கி துறவு வாழ்வை மேற்
கொண்டார்.
மருள் நீக்கியார் 'தருமசேனர்' ஆதல்;-
மருள் நீக்கியாரும் இளமைப் பருவம் கடந்தார். நன்னெறியினை
அறிவதற்குச் சிவபெருமான் அருளாமையால் கொல்லாமை நோன்பு மேற்கொள்ளும் அமண் சமயமே சிறந்தது என எண்ணி அதனைச்
சார்ந்தார். பாடலிபுரத்திலுள்ள சமணப் பள்ளியை அணுகி அருகி சமய நூல்களேக் கற்றுத் தேர்ந்தார். இவரது நுண்ணறிவினைக் கண்டு வியந்த சமணர்கள் இவருக்குத் 'தரும சேனர் என்ற பட்டம் கொடுத்துச் சிறப்பித்தனர். இவரும் ஏனைய சமயத்தாரை வாதில் வென்று அருக சமய உண்மைகளை உலகிற்கு விளக்கி வித்தகராய் விளங்கினர்.

Page 9
334 ஆத்மஜோதி
திலகவதியாரின் புனிதத் தொண்டு:-
தம்பியார் தம்மை விட்டு அகன்றதன் பின் திலகவதியார் கெடில நதியின் வடபால் அமைந்த அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்ருகிய திருவதிகைக்குச் சென்று செம்பவளக் குன்ரும் சிவபெருமானை அடி பணிந்தார். சிவ சின்னங்கள் தாங்கி தமது கரத்தால் திருப்பணிகள் புரிந்து வந்தார். நாளும் புலர்வதன் முன் திருக்கோயிலில் திருவல கிட்டு, திருமெழுக்கிட்டு, நறிய மலர்கள் கொய்து ஆண்டவனுக்கு மாலைகள் அமைப்பார். இவ்வாறு திருப்பணிகள் பல புரிந்தும்
அவரது மனம் அமைதியின்றியே இருந்தது. தம்பியார் அமண் சமயம் சேர்ந்ததே அமைதி குலைவுக்குக் காரணம். நாளும் இறைவன் திருமுன்
நின்று தேவரீர் என்னை ஆண்டு கொண்டு அருளுவீராகில் பரசமயப்
படுகுழியில் வீழ்ந்துழலும் எனது பின் பிறந்தானை மீட்டருள வேண்டும்”
என்று விண்ணப்பம் செய்வார்.
a
தரும சேனரும் சூலை நோயும் ;-
'தவமென நினைத்துப் பாயினை உடுத்தியும், தலை மயிரைப்
பறித்தும், நின்றவாறே உணவு கொள்ளும் சமணர்களது தீ நெறியில் வீழாமல் எனது தம்பியை மீட்டருளும்' என வேண்டிய தவச் செல்வி திலகவதியாரின் கனவில் இறைவன் தோன்றி 'நீ உனது மனக்கவலையை விட்டொழி. உனது தம்பியார் முற்பிறவியிலேயே வாகீச முனியாகிய என்னை அடையத் தவம் புரிந்தான். நான் அவனுக்குச் சூலை நோயைத் தந்து தடுத்தாள்வேன்' எனத் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.
நோயின் கொடுமை:-
கொடிய ஆலகால நஞ்சும், வடவைக் கனலும் கொடிய ஆயுதங் களும் ஒருங்கே புகுந்தாற்போல் கொடிய சூலை நோய் தரும சேனரைப் பற்றியது. அமணர்கள் மந்திர நீரைத் தெளித்தனர். நோய் மேலும் மேலும் பெருகியது. மயிற் பீலி கொண்டு தடவினர். ஆயினும் நோயின் கொடுமை தணியவில்லை. கொடிய விடம் தலைக்கேறுவதைப் போன்று நோய் வருத்தியது. தரும சேனரும் வெய்துயிர்த்து மயங் கினர். சமணர்களும் மந்திரங்கள் பயனளிக்காமையால் கைவிட்டனர். தரும சேனருக்குத் தமக்கையார் நினைவு எழுந்தது. சமையற்காரனிடம் தமது உடல் நிலைமையை எடுத்துக்கூறி திலகவதியார் பால் விடுத் தார். அவனும் சென்று கூறினன். ஆனல் திலகவதியாரோ புன்மை நெறி புகும் சமணப் பாழிக்குச் செல்ல மறுத்தார். இதனை அறிந்த தரும சேனரும் செய்வகையறியாது திகைத்துப் பின் தமக்கையாரிடம் செல்லத் துணிந்தார்.
சூலே நீங்கித் 'திருநாவுக்கரசராதல்’’;-
பெருந்தவச் செல்வியாம் திலகவதியார் வதியும் திருவதிகைத் திருமடத்தை வந்தடைந்தார். பின்பு தமக்கையாரைத் தொழுது,
 

ஆத்மஜோதி 335
தமது குற்றங்களே மன்னிக்குமாறு வேண்டினர் அம்மையாரும் திரு நீற்றை அஞ்செழுத் தோதிக் கொடுத்தார். தரும சேனர் தமக்கை யாருடன் திருக் கோயிலை அடைந்து, வலம் வந்து பெருமானுக்குத் தமிழ்ப் பாமாலைகள் சாத்தும் விருப்புடையரானர். மாற்ருர் புரமெரிய நகைத்த பெம்மானை மருட்டுகின்ற பிணியை ஒழிக்க வேண்டி
' கூற்ரு யினவா றுவிலக் ககலிர் !
கொடுமை பலசெய் தனநா னறியேன்
ஏற்ற யடிக்கே யிரவும் பகலும்
பிரியா துவனங் குவன்எப் பொழுதும்
தோற்று தென்வயிற் றினகம் படியே
குடரோ டுதொடக் கிமுடக் கியிட
ஆற்றேன் அடியேன் 1 அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே ! "
என்ற திருப்பதிகம் பாடிப் பரவினர். கேடு செய்யும் சூலையும் மறைந்தது. மட்டற்ற மகிழ்ச்சியுற்று பொல்லா நெறி நின்ற புன்மை யனன தனக்கும் திருவருள் பாலித்த இறைவனது வற்ருக் கருணையினை நினைந்து நினைந்து உருகினர்.
அப்போது மாதொரு பாகனும் அசரீரியாய் 'செந்தமிழின் சொல் வளம் நிறைந்த திருப்பதிகத் தொடையை சூட்டிய பான்மை யால் இனி "திருநாவுக்கரசு' என நின்று நிலவுக' என்று அருளினர். இதனேச் செவியுற்ற திருநாவுக்கரசரும் இறைவனது பெருங் கருணைத் திறத்தை வியந்து அது முதல் உழவாரப் படைதாங்கி, திருக் கோயில் களில் வளரும் புற்களை நீக்கும் திருப்பணியில் ஈடுபட்டு வாழ்ந்து
வந்தார்.
சமணர்களின் சூழ்ச்சி
தரும சேனர் திருநாவுக்கரசராகி சமணத்தை விடுத்துச் சைவராக
மாறியதைக் கேட்ட அமணர்கள் தமது மன்னனும், காஞ்சியை ஆளும்
பல்லவ ஏந்தலுமாகிய முதலாம் மகேந்திர வர்மனிடம் சென்று
நிகழ்ந்ததைக் கூறி, அவனும் திருநாவுக்கரசரைத் தண்டிக்க எண்ணி அவரை அழைத்து வருமாறு அமைச்சர்களைப் போக்கினன். அமைச்
சர்களும் அவ்வாறே சென்று அரசனது ஆணையினைக் கூறினர்.
செவியுற்ற நாவுக்கரசரும் புன் சிரிப்புடன்
" நாமார்க்கும் குடியல்லோம்; நமனே யஞ்சோம்:
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை யில்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோ மல்லோம்;
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை;
தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளாவாளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னுேமே '

Page 10
என்ற மறுமாற்றத் திருத்தாண்டகத்தை உறுதியுடன் உரைத்தார். ஆனல் அமைச்சர்களோ அவரது அடிகளில் தாழ்ந்து வேண்ட திரு நாவுக்கரசரும் அவர்களுடன் செல்வதற்கு இசைந்தார். அமைச்சர் களும் அவரை அரசன் முன் அழைத்துச் சென்றனர்.
நீற்றறையில் இடுதல்:-
கொடிய சமணர்களது யோசனையின் வண்ணம் அப்பர் பெருமான நீற்றறையில் இடப் பணித்தான். காவலர்களும் அவ்வாறே வெந் தழலை ஒத்த நீற்றறைக்குள் நாவுக்கரசரை விடுத்துக் காவல் புரிந் தனர். ஆனல் நமது பெருந்தகையாரோ நீற்றறையினுள் சென்ற போதும், திருவம் பலத்தில் நடமிடுகின்ற பெருமானது குளிர்ந்த திருவடிகளை யே நினைவில் இருத்தித் தொழுத வண்ணம் இருந்தார். எம் பெருமானது கருணையினுல் அனல் வீசும் நீற்றறையும் மாருதம் தவழும் மலர்த் தடாகமெனக் குளிர்ந்தது கற்றை வேணியாரது கருணையினை வியந்நு அடிகளாரும்
* மாசில் வீணையும் மாலே மதியமும் s
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே ’ எனப் பாடித் திருவடித் தியானத்திலே திளைத்திருந்தார்.
ஏழு நாட்கள் சென்றன. அரசனும் அமணர்களே அழைத்து நீற்றறையைத் திறக்குமாறு பணித்தான். அவர்களும் அறையைத் திறந்தார்கள். உள்ளே அவரகள் கண்ட காட்சி! ... எவ்வித ஊறு மில்லாமல் சிவானந்தப் பெருவெளியில் இரண்டறக் கலந்த நிலையில் இருந்த பெருந்தகையாரைக் காண்டார்கள். ஒரு கெடுதியும் இல்லையே இஃது என்ன அதிசயம் என வியந்தார்கள். (தொடரும்
மணி மொழி SSSR
o
} இறைவன் உருவம் நாமம் குணம் குறியாவும் 鬣 இல்லாத பரம பொருள், ஆனல் அப்பரமபதி x g உயிர்களை உய்விக்கும் பொருட்டு அருளுருத் தாங்கு இ 麗 கின்றன். கருனைதான் அவனுடைய வடிவம் , x 2 தண்ணீர் அதிகமாகக் குளிர்ந்தபோது கட்டியாக இ ஆகின்றது. மீண்டும் அது தண்ணீராகக் கரைந்து x விடும். அதுபோல் கருணையின் மிகுதியால் இறை இ { வன் எல்லேற்ற அருளே Gштаъ திருமேனியாகக் 添 2 கொள்கின்றன் அவ் வடிவம் மாயா சம்பந்தமான S
தன்று; ஏழுதாதுக்களாலானதன்று.
ପିଠିଁ
- கிருபானந்த வாரியார்
標
g
*
 
 

ஆத்மஜோதி 337 சமூகமும் தனிமையும்
(யூனி சுவாமி இராஜேஸ்வரானந்தர்)
x சென்ற இதழ்த் தொடர்ச்சி X
சமூகத்திற் சித்தியின் இரகசியம் ஏதோ ஒர் ஊக்க மும் பரிவுமே. மக்கள் தம் தனி நெறிகளில் விருத்திபெற வேண்டும். அனேத்தையும் ஒர் அச்சுக்குள் நெருக்க முயலப் படாது. நீ எவ்வளவு காலம் சமூகத்தில் அல்லது தனி மையில் வாழ்கிருய் என்பது முக்கியமன்று. ஆனல் எப்படி வாழ்கிருய் என்பதே முக்கியம். எவ்வளவு தூரம் நீ பய ணம் செய்கிருய் என்பதன்று. ஆனல் எத்திசையிற் செல் கிருய் என்பதே.
தனிமையை விரும்புவது மேன்மையான சீலத்தைப் பெறுவதற்கே. அதன் சுவையைப் பெறுவது உயர்குணம் வாய்ந்தவராயும் விறமைதியுடையவராயும் ஆகுவதற்கே. மனம் பலம் பெற்றுத் தன்னிலேயே சாய்வதற்குக் கற்றுக் கொள்கிறது. பலம், செல்வம், பிறப்பு, கல்வி முதலிய வற்றிலிருந்து வரும் செல்வாக்கிலும் பார்க்கச் சீலத்திலி ருந்து மாத்திரம் வரும் செல்வாக்கே மெய்ச் ச்ெல்வாக்கு,
தனிமை நற்பயன் விளைவிக்கிறது. தனிமையே அதி விவேகியின் பள்ளி. அது ஒரு நற் பாடசாலை. உலகம் மிகச் சிறந்த நாடக அரங்கம். தனிமை ஒழுக்கப் பயிற்சி நயத்தைப் பெற்றிருக்கிறது. சமூகம் நிறைவின் வாய்ப்பை வைத்திருக்கிறது. தனிமை மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. சமூகம் அவன் எவ்
வாறு இருக்கிருன் என்பதைக் காட்டுகிறது.
தனிமையொரு தெய்வீக ஒதுக்கிடம், அது மதியுள் ளவர்களின் சுவேச்சை. அது பெரியோர்களின் பொரு மைக்குரியது. அதுவே சிறந்த பரிசாரிகை, அது மனித குறுக்கு ஞானம் ஊட்டுகிறது. பட்டறிவே சிறந்த ஆசிரி பன்; ஆனல் ஊதியம் பெருந்தொகை. -
ஓர் அறிவாளி தனிமையில் ஒருகாலும் தனித்திருப்ப தில்லே. தனிமை சிற்சில வேளைகளிற் சிறந்த சமூகம்.

Page 11
338 ஆத்மஜோதி
யார் பெரும்பாலாகத் தனிமையில் ஒழுங்கு படுத்திய சீலத் துடன் தனிமையைச் சகித்து நிற்கக் கூடியவனே அவனே உறுபல வலிமை வாய்ந்தவன்.
எப்பொழுதாயினும் இயலும்போது கூட்டத்திலிருந்து விலகு உன்னை உன்னிலேயே நிலைப்படுத்து. குறுகிய ஒதுக் கம் இனிமையான விளைவை விரைவுபடுத்துகிறது. உலக முன்னேற்றத்திற் பெரும்பகுதி அப்படியான தனிமையிலி ருந்தே விளைந்திருக்கிறது.
தனிமை எல்லாயுகங்களிலும் அறிவுவிருத்தியடைந்ததும் தனித் திறமையால் உயர்த்தப் பட்டதுமாகிய மனங்களை யுண்டாக்கி யுள்ளது. உண்மைச் சமயம் உள்ளுணர்வுக் கண் திறப்பதுடன் ஆரம்பிக்கிறது.
தனிமை தன் சொந்த ஏற்ற இறக்கங்களை வைத்தி ருக்கிறது. அது உறுபல கொடிய, விவரித்துக் கூற முடி யாத, பொறுக்க முடியாத கடுந்துயரின் ஊற்றயிருக்கப் படாது. தனிமையும் சமூகமும் சார்புப் பதங்கள் மட்டுமே.
ஒன்று மற்றதிற் காரியப் படுகிறது.
தனிமை ஒருவருக்குத் தம்மைப் பற்றி மிகுதியான உயர் அபிப்பிராயத்தைக் கொடுக் கப்படாது. முழுத்தனி மை வாழ்வு ஒருவரது இருப்பின் நோக்கத்தை மறுக்கப் படாது. தனிமையின் நன்மையும் சமூகத்தின் நன்மையும் தன்னலமற்ற தன்மை, தியாகம், சேவையாகிய நெசவுத் தறியின் பாவுநூலும் ஊடுநூலுமாயிருக்கின்றன. தனியா ளின் நன்மை சமூகத்தின் சேமத்துடன் ஒன்றுசேர வேண்
டும்.
தனிமையில் தன் சொந்த ஆன்மாவின் தனி நிலையில் வசிப்பதனுல் தன் சொந்தத் தெய்வீகத் தியானங்கள், கருத் துகள், மெய்விளக்கத் துறை முதலியவற்றின் இருப்பிலி ருந்து தன்னை மன மகிழச் செய்வதும் மனங் கவரச்செய் வதும் பிரியப் படுத்துவதும் ஒரு சிறந்த மனிதனின் சிறப் புக் குறி. -
சமூகத்தில் ஒரு மனிதன் யுகதர்மத்திற் கிணங்க வாழ் கிருன், தனிமையில் அவன் சனதன தர்மத்திற் கேற்ப வாழ்கிருன், சமூகம் மனித வர்க்கத்தில் அன்பை யுண்
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 339
டாக்குகிறது. தனிமை சகவாசத்தினதும் சனக் கூட்டத் தினதும் பிணியைத் தணிக்கிறது. தங்களையே ஆதரிப்பத (ல்ை இரண்டும் ஒன்றை யொன்று குணப்படுத்துகிறது.
சமூகம் எவ்வாறு வாழ வேண்டும் என்று அதாவது வாழ்வின் மகிழ்ச்சியை மனிதனுக்குப் படிப்பிக்கிறது. தனி மை எவ்வாறு சாக வேண்டும் என்று அதாவது சாவின் மகிழ்ச்சியை மனிதனுக்குக் கற்பிக்கிறது. தனிமையாக மனி தன் தனிமையில், கிரகிக்க முடியாததைக் கிரகிக்கிருன், விவரிக்க முடியாததை விவரிக்கிரு:ன். மனித நுண்மதிக்கு மிக ஆழமானதாய்க் காணப்படுவதை மனப்பான்மையின் அல்லது அனுபவத்தின் எல்லையில் விரைவாகப் பார்த்தறி கிருன் ,
உன் கைகள் சமூகத்திலிருக்கும் போது உன் தலையைத் தனிமையில் வைத்திரு. எமேர்சன் (Emerson) சொல்கிருர், 'உலக அபிப்பிராயத்தைப் பின்பற்றி உலகில் வாழ்வது எளிது. தனிமையில் உன் சொந்த அபிப்பிராயத்தைப் பின்பற்றி வாழ்வது எளிது. ஆனல் யார் மக்கள் திரள் மத்தியில் தனிமையின் தன்னுண்மையைப் பூரண அமைதி யுடன் கைக் கொள்கிருனே அவனே உயர் மகன்.
மணி மொழி
கடலில் மேலோடு நோக்கினுல் அலைகள் தெரியும்; சிறிது ஆழத்தில் சென்றல் மீன்கள் கிடைக்கும், இன் னுஞ் சிறிது ஆழத்தில் சென்றல் நத்தையும் சங்கும் கிடைக்கும், மிகுந்த ஆழத்தில் சென்றல் முத்துக்கள் கிடைக்கும் , அம் முத்துக்களில் சிறந்தது ஆணிமுத்து.
- கிருபானந்த வாரியார்.

Page 12
34.0 ஆத்மஜோதி
கடோப நிஷதக் கருத்து
(சுவாமி சிவானந்த சரஸ்வதி)
- மே இதழ்த் தொடர்ச்சி -
யார் ஆத்ம ஞானம் பெறுகிறர்?
104. வேதங்களைப் படிப்பதனலோ அல்லது நுண் மதியாலோ அல்லது மிகுதியான கேட்டலினலோ இந்த ஆத்மனை அறிய முடியாது. யாரை ஆன்மா தேர்ந்தெடுக் கிறதோ அவன் இவ்வாத்மனை அடைய முடியும். அவ னுக்கு இவ் வாத்மன் தன் உண்மை இயல்பை வெளிப்ப டுத்துகிறது.
105. யார் ஆசைகளின்றியவனே யார் ஆத்மனை அறிய நாடுகிருனே அவனுல் மட்டும் இந்த ஆத்மன் அடையப் பட முடியும். ஆத்மன் தன் மெய் வடிவத்தை அல்லது உண்மை இயல்பை அவனுக்கு வெளிப்படுத்துகிறது.
106. யார் ஆன்மாவை அறிய விரும்புகிருனே) அவ னது ஆன்மா தன் சொந்த உண்மையை வெளிப்படுத்து
கிறது.
107. யார் ஆத்மனை நாடுகிருனே அவனது ஆத்மன் பெறத் தக்கது.
108. யாரைக் கடவுள் தெரிந்தெடுக்கிருரோ, அதா வது யார்மேல் கடவுள் தம் அருளைச் சொரிகிருரோ, யாரு டன் அவர் பிரியப்படுகிருரோ அவனுல் மட்டும் இவ்வாத் மன் அடையப்படுகிறது.
109. ஆனல் யார் தீய நடத்தைகளிலிருந்து விலக வில்லையோ, யாரது புலன்கள் அடங்கப் பெறவில்லையோ, யாரது மனம் ஒருமுகப்பட வில்லையோ, யாரது மனம் தூய்மையாக்கப்படவில்லையோ, அவன் ஒருகாலும் இவ்வாத் மனே வெறும்படிப்பாற் பெற முடியாது.
 

ஆத்மஜோதி 341
மனித பெளதிக வதிதம்
110. இரண்டும், பரமாத்மனும் (தலைசிறந்த ஆன்மா வும்) ஜீவாத்மனும் (தனியான்மாவும்) இருக்கின்றன. முந்தியது ஒளி, பிந்தியது நிழல்.
111 பரமாத்மனுக்குக் கர்மங்களுடனும் அவற்றின் பலன்களுடனும் யாதும் தொடர்பில்லை. அது எப்போதும் மெளன சாட்சியே.
112. சம்சாரத்தின் அக்கரை மோட்சம் அல்லது விடு தலையே.
113. உடல் ஒரு வண்டி, ஆத்மாவே வண்டியின் எஜமானன். நுண்ணறிவே சாரதி. மனமே கடிவஈளக் கயிறு. ஐம்பொறிகளே குதிரைகள். அவற்றின் விடயங் களே பாதைகள். புலன்களுடனும் மனதுடனும் ஒன்ருகிய ஆத்மனே நுகர்பவன்.
114. தூய ஆத்மன் செயலற்றது (நிஷ்கிரிய.) அது செய்வோன் அல்ல. (அகர்த்தா)
115. அவித்தை அல்லது அறியாமை மூலம் ஆத்மன் மனம், புலன்கள், உடலுடன் ஒன்றித்த போது ஆத்மன் செயலாளன் அல்லது அனுபவிப்பவஞய்த் தோன்றுகிறது.
116. மனம் புலன்கள், உடல் முதலியவற்றின் மூலம் செயலாற்றி நுகர்கிறது.
117. மனம், புலன்கள், பிராணன், உடல் முதலிய வற்றின் இயல்புகள் தூய ஆத்மனில் ஏற்றப்படுகின்றன. இது அன்னியோன்னிய அத்தியாசம் என்று சொல்லப்ப டுகிறது.
118. அத்தியாசமூலம் அசேதன மனம் நுண்மதியுடை யதாகத் தோன்றுகிறது. மேலும் அசுத்த, அசேதன உடம்பு தூய, சேதன ஆத்மனுகக் காணப்படுகிறது.
119. அவித்தையினல் ஆக்கிய அத்தியாசங் காரண மாகத் தூய ஆத்மன் ஜீவ தோற்றத்தை எடுத்துப் பிறப்

Page 13
342 ஆத்மஜோதி &'
பிறப்பாகிய சம்சாரத்தின் துன்பங்களைத் தோற்றரவாக (போலியாக)ப் பட்டறிகிறது.
120. ஜீவன் இயல்பில் சச்சிதானந்த சுவரூபமே.
121. ஆன்ம அறிவால் அவித்தை அழிக்கப்பட்ட பொழுது ஒருவன் பிரம்மன் அல்லது பிரமாத்மனுடன் அநந்நியமாகிருன். 麟
தன்னடக்கத்தின் முக்கியத்துவம்
122. யார் விவேகமின்றியவனே, யாரது மனம் எப்போதும் வசப்படுத்தப்படவில்லையோ - அவனது புலன் கள் துர்க்குணமுள்ள குதிரைகள் சாரதியால் வசப்படுத்த முடியாதது போல் அடக்கத்தகாதவை.
123. யாரேனும் ஒரு வ ன் மெய்ப்பொருளுக்கும் பொய்ப்பொருளுக்கு மிடையில் பகுத்தறியும் ஆ ற் ற ல் (நித்யா நித்ய வஸ்து விவேகம்) இயற் பண்பாகப் பெற்றிராதிருந்தால், செய்யவேண்டியது யாது செய்யத் தகாதது யாது என்று பகுத்தறிய முடியாதிருந்தால், அவனது மனம் நேர்மையாக வசப்படுத்தப்படாதிருந்தால் அவன் உடல் - வண்டியின் தகுதியற்ற சாரதியே.
124. ஆனல் யார் ஒர்ந்தறிவுடையவனே, யாரது மனம் எப்போதும் வசப்பட்டிருக்கிறதோ - அவனது புலன் கள் ஒரு சாரதியின் நற் குதிரைகள் போன்று கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றன.
125. தகுதிவாய்ந்த வண்டிச் சாரதி கடிவாளக் கயிற்றை திறமையுடன் கையாளுகையால் வண்டியின் குதிரைகளை அடக்கியாள்வது போன்று இவ்வுடல் - வண்டி யின் திறமைவாய்ந்த சாரதியும் செம்மையான ஒர்ந்தறிவு, விவேகம், இச்சா - சக்தி மூலம் புலன்களைச் சரியான கட்டுப் பாட்டுக்குள் வைக்கிருன்.
126. மனவடக்கத்தால் புலன்களைக் கட்டுப்படுத்த முடியும்.
127. புலனடக்கம் அடைவு அல்லது மோட்சம் அடைவதற்கு நேரின் முறைச் சாதனம்.
 
 
 

ஆத்மஜோதி 343
128. ஆணுல் யார் விவேக மின்றியவனே, யாரது மனம் கட்டுப்பாட்டுக்குளில்லையோ, யார் எப்போதும்
மாசு பொருந்தியவனே - அவன் அடைவை அடைவதில்லை.
ஆனல் பிறப் பிறப்புகளாகிய சம்சாரச் சுழலுள் நுழைகிருன்.
129. ஆனல் யார் ஒர்ந்தறிவுடையவனே, யார் தன் மனதை என்றுங் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ருனே), யார் புனிதமானவனுே - அவன் அடைவை அடைகிறன். அங்கிருந்து அவன் மறுபடியும் பிறப்பதில்லை.
130. ஆனல் யார் பகுத்துணரும் நுண்மதியைச் சாரதியாகவும் நன்கு வசப்படுத்திய மனதைக் கடிவாளக் கயிருகவும் பெற்றிருக்கிருனுே - அவன் தன் பயணத்தின் கடைசி எல்லையை, விஷ்ணு பதமாகிய பரமபதத்தை அடைகிருன் ,
131, ஒரு மனிதன் தன் வண்டியின் சாரதி சாதுரிய முடையவனுயிருக்கும் பொழுதும், அவன் கடிவாளக் கயிற்றின் மூலம் குடுரைகளை யடக்கி யாண்டு வண்டியைச் சாவதானத்துடன் செலுத்தும் பொழுதும் தன் சேரிடத்தை, தன் பயணத்தின் கடைசி எல்லே அடையயியலுமாறுபோல் இவனும் பகுத்தறியும் நுண்மதி அல்லது விவேகம் மனதை யும் புலன்களையும் அடக்கி நடத்தும்போது மட்டும் சம் சாரப் பாதையில் தன் முடிவை அடைய முடியும், அதாவது விஷ்ணுவின் பரம பதத்தை அல்லது சர்வ வியாபகமான மரணமின்றிய பிரம்மத்தின் இயல்பை அடையமுடியும்
பொருட் சிறப்பின் அகவரிசை
132. இங்கு பொருள் நுட்பத்தின் மேலேறுந்தரம் தரப்பட்டுள்ளது. புலன்களுக்கப்பால் விடயங்களின் நன் மாத்திரைகள் உள, நன் மாத்திரைகளுக்கப்பால் மனம் உண்டு. மனத்திற்கப்பால் நுண்ணறிவு உண்டு. நுண்ணறி விற் கப்பால் பேரண்ட அறிவு உண்டு.
133 பேரண்ட அறிவுக்கப்பால் அவ்யக்தம் (புலப் படாதது) உண்டு. அவ்யக்தத்திற்கப்பால் புருஷன் உண்டு. புருஷனுக்கப்பால் ஒன்றுமில்லை. அதுவே முடிபு; அதுவே உறுபல உயர் அடைவு,
e

Page 14
344 ஆத்மஜோதி
134. மேலாந்தரம் பொருட்களின் நுண் இயல்பிற் கிணங்க படிமுறையாக்கப் பட்டிருக்கிறது. ஒரு நுண் பொருள் ஒரு தூலப் பொருளுக்கு மேம்பட்டது. ஓர் அதி நுண் பொருள் ஒரு நுண் பொருளுக்கு மேம்பட்டது.
135. ஆத்மனே உறு பல நுண்வஸ்து (பொருள்). }
அது அனைத்திற்கும் மேம்பட்டது.
136. காரணம் காரியத்திலும் பார்க்க அதி நுட்ப மானதும் அதி வியாபகமானது மாயிருக்கிறது.
137. சடப் பொருளின் ஐந்து தன் மாத்திரைகளும் புலன்களிலும் சிறந்தவை. ஏனெனில் புலன்கள் சடப் பொருளின் தன்மாத்திரைகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன.
138. மனம் தன் மாத்திரைகளிலும் சிறந்த து , ஏனெனில் அது அதி நுண்ணியதாயும் நுண்ணிய தன் மாத்திரைகளால் அல்லது உறுபல நுட்ப நிலையிலுள்ள சூக்கும பூதங்களால் ஆக்கப்பட்டதாயுமிருக்கிறது.
139. ஐம்பெரும் பூதங்கள் தன் மாத்திரைகளில் அல்லது சூக்கும பூதங்களின் காரியங்களே.
140. மனமே காண்போன் (திருக்கு). விஷயங்கள் காணப்படுபவை (திருசியங்கள்).
141. மனம் புலன்களிலும் பார்க்க அதி அகத்தானது. ஆகையால் மனம் விடயங்களை விடச் சிறந்தது.
142. நுண்ணறிவு மனதிலும் மேம்பட்டது. ஏனெனில் அது மனதிலும் நுண்ணியதும் அதியாற்றல் வாய்ந்ததும் அதியகத்தானது மாயிருக்கிறது.
143. மனம் எண்ணக்கருவை நுண்ணறிவிற்கு அனுப்பு கிறது. நுண்ணறிவு நிர்ணயித்து, தீர்மானித்து ஒரு திட்ட மான முடிபுக்கு வருகிறது.
144. நுண்ணறிவே ஆத்மனின் பிரதம மந்திரி. அது உயர் நீதிமன்றத்தின் தலை நீதிபதியாகச் செயலாற்று கிற்து. அது ஆத்மனுக்கு மிக அருகில் இருக்கிறது.
 

ஆத்மஜோதி 345
145. மனம் ஒரு கருவி மாத்திரமே, அது அதனில் பிரதிபலித்த நுண்ணறிவு மூலம் தொழிற்படுகிறது.
146. ஹிரண் யகர்ப்பனே மகத்-ஆன்மன். அவனே பேரண்ட அறிவு. அவனே உலக உயிர். அவனே தனியான் மாக்கள் அனைத்தினதும்கூட்டுத்தொகை. அவனே அவ்யக்தம் புலப்படாததிலிருந்து முதற் பிறந்தவன்.
147. அவ்யக்தம் அல்லது மூலப்பிராகிருதியே உலகங் கள் அனைத்தினதும் விதை,
148. விதையில் மரம் கருவியல்பான நிலையிலிருப்பது போன்று உலகமும் அவ்யக்தத்தில் காரண நிலையிலிருக்கிறது.
149. முக்குணங்களும் அவ்யக்தத்தில் அமைதி நிலையில் இருக்கின்றன.
150, சடப் பொருளும் சக்தியும் ஒலியும் அவ்யக் தத்தில் வேறுபடாத அல்லது கருவியல் பான நிலையில் இருக்கின்றன .
151. பிரபை நிலையில் முழுவுலகும் தானுக அவ்யக் தத்தில் உள்ளடக்கப்படுகிறது.
。牌。 152. அவ்யக்தம் பரப்பிரம்மத்தில் குறுக்கு நெடுக் காக நுழைகிறது. அது காரண காரியங்கள் அனைத்தினதும் கருவியல்புகளின் கூட்டு நிலை.
153. புருஷனே காரணங்கள் அனைத்தினதும் காரணம். அது அனைத்தையும் நிரப்புகிறது. ஆகையால் அது புருஷன் எனப்படுகிறது.
I 54. ஆத்மனே முடிபு அல்லது வாழ்வின் தலை சிறந்த அடைவு அல்லது உயர்வு நலம். இங்கு நுண்மையினதும் மேன்மையினதும் முடிபு உண்டு.
155. யார் புருஷனை அடைகிருணுே அவன் மேலும் இச் சம்சாரத்திற் பிறப்பதில்லை. அவன் மோட்சம் அல்லது முடிவான விடுதலை அடைகிருன்.
156. இவ்வாத்மன் எல்லாப் பிராணிகளிலும் மறைந் திருக்கிறது, அது மேம்பட்டு விளங்குவதில்லை. ஆனல் அது

Page 15
346 ஆத்மஜோதி
கூரிய, சூக்கும நுண்ணறிவு மூலம் ரிஷிகளாற் கானப் படுகிறது.
157. அவித்தை அல்லது அறியாமையின் ஆற்றலால், மனிதன், இயல்பில் பிரம்மமாயிருந்த போதிலும், 'நான் பிரம்மமே" என்னும் உண்  ைம அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதைக் கிரகிக்க இயலாதிருக்கிருன்.
158. ஆனல் அவன் அறிவுறுத்தப்படாத போதிலும் தான் இன்னுரின் மகன் என்று எண்ணுகிருன்.
159 மூலப்பிரகிருதி, பிரதானம், அவ்யக்தம், அவ் யாக்ருதம், மாயை என்பன ஒரு பொருட் சொற்களே.
(தெர்டரும் I
விவேகானந்தர் நூற்றண்டு விழா (ே: மலர் (N:
(அநுராதபுரம் விவேகானந்த சபை வெளியீடு)
O அநுராதபுரத்து விவேகானந்த சபையின் வர லாற்றை அறிய விரும்புவோருக்குஇந்த நூற்ருண்
ہمی
ழா மலர் ஒர் வழி காட்டியாகும். பெரியார் களின் அரிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. நல்ல தாளில் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
விலே 50 சதம் மாத்திரமே. வேண்டுவோர்:- காரியதரிசி - விவேகானந்த சபை, அநுராதபுரம். என்ற விலாசத்துடன் தொடர்பு கொள்க.
SS?
දීර්‍ඝුණී
 
 
 
 

ஆத்மஜோதி 347 உண்மை இன்பம்
(குரு. ஆ. கந்தசாமி ஐயர் திருச்சி.)
அமைதியிலே இன்பம் உள்ளது. உள்ளத்தின் அல மல மலரில் இன் பத்தின் துளியும் தோன்றல் அரிது. உள்ளம் எதன் கண்ணும் ஊசலாடித் தத்தளித்துத் தடுமாறல் ஆ காது. அஃது எவ்வினையிலும் அமைதியுடன் நிலவ வேண் டும். அவ்வமைதி ஐம்பொறிகளை ஒறுப்பதாலும் வெறுப் பதாலுமே தலைவருவது ஆகும். அவ்வொறுப்பும் வெறுப் புமே துறவு எனப்படும்.
இல்லறத்தில் வாழ்ககையிலே துறவை நடை முறையில் கொணர இயலும். காடுகள் மலைகளையும் துருவித் திரிவது தான் துறவு என்பது வே ண் டா. இல்லறத்தார்க்குத் துறக்கு நெறிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. துறவுக்குரிய பயிற்சி தொடங்கப்பட்டு இல்லறத்திலேயே நிகழல் வேண் டும். இல்வாழ்விலேயே ஐம்பொறி இன்பங்களைச் சிறுகச் சிறுக நீககி வருவதே துறவுப் பயிற்சி ஆகும். பற்றற்ற வாழ்வை எவ்விடத்தும் எக்காலத்தும் எவ்வொழுக்கத்தும் மேற்கொள்ளப் பயில வேண்டும். 'இல்லறமல்லது நல் லற மன்று' என்பது அவ்வறம் துறவறத்துக்கு அடிப்படை யாயிருப்பதனலாகும் என்பதை நூற்சான்றுகள் தெரிவிக் (g5 LD.
மனத்தகத் தழுக்கறுத்த மெளன ஞான யோகிகள் முலைத்தடத் திருப்பினும் மனத்தகத் தழுக்குறர்
மனத்தகத் தழுக்கருத மெளன ஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கருர்,
என்னுந் திருமந்திரம் உண்மைத் துறவியைத் தூசற விளக்குகின்றது. துறவு நெறியிலேயே உண்மையின்பம் உலவுகின்றது. பற்றுடை வாழ்வு துன்பங்களைச் செறித்து வைக்கப்பட்ட பேடகம். அதைத் திறந்து விடுவதன்று. துறந்து விடுவதே நமது இன்றியமையாத கடப்பாடு என் பதை நாம் நன்கு அறிந்து ஒழுகல் வேண்டும்.
மனைவி மக்கள் உறவினராகிய உறுப்பினரைக்கொண்ட
இல்லற நாடகத்தில் அமைதிக்குக் காரணமாகிய உட்டுற

Page 16
348 ஆத்மஜோதி
ஆனந்தமாயி அம்மையிடம் அன்பர்கள் சம்பாஷணை
(முன் இதழ்த் தொடர்ச்சி)
தற்போது நீங்கள் நுகர்வது சிறிது காலமே இருக்கி றதாக உங்கள் மனதிற் பதியவில்லை. தடையின்றி அது உங்களை மகிழ்ச்சியாக்குவதாய்த் தோன்றுகிறது. ஆனல் எவ்வளவிற்குப் பற்றற்ற இயல்பு எழுப்பப் படுகிறதோ அவ்வளவிற்கு அவ்வகையான இன்பங்களில் விருப்பம் அடங் கும். ஏனெனின் அவை நிலையற்றன அல்லவா? அதாவது அழிவு அழியும். இப்போது நீங்கள் காலங் கடந்த தை முன்னுேக்கிச் செல்வதால் உலகியற் பொருட்களால் ஏற்பட்ட இன்பத்தின் போலித் தோற்றம் அழிகிறது. அதன் பயனுக 'உண்மையாக இவ்வுலகம் யாது?’ என் னும் வினு எழும். இவ்வுலகம் மகிழ்ச்சியானதாய் உங்க ளுக்குத் தோற்றும் வரையில் அவ் வகையான வினு முன்னி லேப்படாது. காலத்தைக் கடந்ததை நோக்கி நீங்கள் முன் னேறுவதன் பயனக காலத்துக்குரிய யாவும் அதன் உண் மை இயல்பில் உங்களுக்குத் தோன்ற ஆரம்பிக்கும்,
தியான நிலையிலிருந்து இறங்கியபின் நீங்கள் முன்பு போல் நடந்து கொள்ளத் தக்கதாயிருந்தால் நீங்கள் மாற் றம் அடையவில்லை. உலக வாழ்க்கையில் உதாசீனம் வெளி யாகுமாறு தூண்டும் உண்மையான தியானம் இருக்கும் போது நீங்கள் பரம் பொருளின் பொருட்டு ஆர்வமாகத்
முன்பக்கத் தொடர்ச்சி வில் மட்டுமே இன்பம் காண லாகும், பற்றறுதலாகிய உள்துற வில் மட்டுமே மக்கள் பிறப்பு உரிமையை எய்தல் இயலும்.
அப் பிறப்புரிமை யாவது மாயையின் கீழ் மயக்குண்டு வாழும் அடிமை வாழ்வு நீங்குங்கால் உண்மை இன்பம் இலங்கும். வீடு பேற்றுலகு ஒவ்வொருவருடைய ஆட்சிக் கும் உரியதாகும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
 

ஆத் மஜோதி 349
தவிப்பீர்கள்; அதன்பால் அவாக் கொண்டு நிலையற்றயாதும் இவ் அவாவைத் தணிக்க மாட்டாதென்று அல்லது மனநிறை வளிக்க மாட்டாதென்று உற்றறிவீர்கள்.
பிதாஜி, எவ்வாறு நான் இதை உங்களுக்குத் தெளி வாக்குவது? மக்கள் தங்கள் மகள்களும் மகன்களும் ஒரு காரில் ஏறிக்கொண்டு தங்கள் தகப்பனும் தாயும் கண்ணிர் விடுகிறர்களா என்று கவனிப்பதற்கு நிமிர்ந்து பாராது ஒட்டிக் கொண்டு சென்றதைச் சொல்வதற்கு இவ்வுடம் பிடம் வருகிருர்கள். அவர்கள் தங்கள் பெற்றேர்களின் துயரத்தால் சற்றும் அசையாதுள்ளார்கள். திட்டமாக இத னைப் போன்றதே பாதையில் ஒரு குறித்த தசையில் என் பதைக் காண்க. லெவாகிக சுகானுபவம் உங்களைச் சாத்தி யமாகத் தீண்ட மாட்டாது.
‘என் மிகச் சொந்தமானவர்கள் என்று நான் விசுவ சித்தவர்கள் உடற் சார்பாக மாத்திரம் என்னுடன் இன மானவர்கள் - அதால் எனக்கு என்ன?’ என்று நீங்கள் உணர்கிறீர்கள். யாரும் வேண்டுமென்று தம் கைகளை நெருப்பில் வைக்க மாட்டார்கள் அல்லது ஓர் அரவின் மேல் அடி வைக்க மாட்டார்கள். உள்ளவாரு க அதேவ கையில் நீங்கள் புலன் விடயங்களைப் பட்டும் படாமலும் பார்த்து விலகுகிறீர்கள். அப்போது எதிர்த் திசையில் உங்களைக் கொண்டு செல்லும் ஒழுங்கிற் பிரவேசிப்பீர்கள். பின்பற்றின்மையிலிருந்தும் பற்றறுத்தவராகியபோது அங்கு பற்றின்மை அல்லது பற்று என்பதைப் பற்றிய பிரச்சினை யில்லை - உள்ளது அதுவே. விடா முயற்சியால் ஒருவர் மெய்யறிவு பெறலாமென்று சிலர் சொல்கிருர்கள். ஆனல் முயற்சி மெய்யறிவை உண்டாகும்படி செய்யக் கூடுமென் பது சரியா? ஒளிர்வு கர்மத்தைச் சார்ந்திருக்கிறதா? திரை அகற்றப் பட்டது. இது நிறைவேற்றப் பட்டதும் இருக் கும் அது வெளிப்படுத்தப்பட்டு நிற்கிறது. முயற்சியின் பலன் என்றறியப்படுவது எந் நிலையை நோக்கி முயற்சி இயக்கப் பட்டதோ அதன் ஒளிர்வல்லாது ஒன்றுமில்லை. வெளிப்படுத்தப்பட்ட ஒளி (நிராவரண பிரகாச) அவர்
அவர்தானே, நித்தியப் பொருளே. - யாரேனும் ஒருவ
ருக்கு எது செம்மையான அணுகுதல் வழி என்பதைக் குரு புரிந்து கொள்கிறார்.
வினு:- ஒரொரு காலம் புலன் விடயங்கள் உண்மை

Page 17
350 ஆத்மஜோதி
யாக உளதாய் யாம் உணர்கிருேம். இதர வேளைகளில் அவை வெறும் கற்பனை யென்றுணர்கிருேம். ஏன் ஒரே யொரு பொருள் வேருண வேளைகளில் மிகவும் வேருனதா கத் தோன்றுகிறது? -
மாதாஜி;- ஏனெனின் நீங்கள் காலக் கட்டுப்பாட் டில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு பொருளும் ஆன்மாவாக மாத்திரம் காணப்படும் நிலையை நீங்கள் இன்னும் அடைய வில்லை, அடைந்து விட்டீர்களா? முழுப் பிரச்சினைக்கும் விளக்கம் இதில் இருக்கிறது. உங்கள் உணர்ச்சி பரமநாட் டப் பொருளுடன் தொடர்புடையதால் நீங்கள் உணரும் மாதிரி யுணர்வது நன்று. ஏனெனின், யாதும் எப்போ தாயினும் வீணுயழிவதில்லை. ஒரு விகலைக்காவது நீ எய் தப் பெற்றது, ஏதோ ஒரு காலத்தில் அல்லது வேறு வேளை யில் பயன்றரும். இவ்வாருக நீர், காற்று, வானம் முத லியவை யாதாயிருக்கின்றன. இதனுல் படைப்பு யா தா யிருக்கிறது. ஒவ்வொரு முதற் பொருளின் (தத்துவத்தின்) உண்மை யியல்பறிவு முதலியன ஒவ்வொன்ருகப் பூமொட்டு கள் உடைத்துத் திறப்பது போன்று உங்கள் அறிவில் திடீ ரென்று தோன்றும், கருவியல் பாகப் பூக்களும் பழங்க ளும் அடக்கிக் கொள்ளப் பட்டிருப்பதால் அவை உளதாம் தன்மைக்கு வருகின்றன. ஆகையால் எல்லா முதற் பொ
ருள்களுக்கும் விளக்கம் தரும் ஒன்றேயான பரம Guy Lu , ருளகளுககு „:"J5 (Ib ሦዶ! П0 (LfD
பொருளை (தத்துவத்தை] எய்தப் பெறுவதற்குக் கருத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் புலன் விடயங்களைப் பற்றி வினவினிர்கள், யாது நஞ்சு உட்கொண்டிருக்கிறது. அது ஒரு புலன்பொ ருள் (விஷயம்? அது தீங்கு நிரம்பியிருப்பதால் மனிதனை மரணத்துக்கு நகர்த்துகிறது. ஆனல் புலன் பொருள்களி லிருந்து சுவாதீனம் (நிர்விஷய) சாவா மை என்று பொ ருள்படுகிறது. அங்கு நஞ்சின் அம்சங் கூட இல்லை.
* சிலேடைப் பேச்சு - சமய வும் ஸ்வமயிவும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன. சமய - காலம், ஸ்வமயி - ஆன்மாவால் வியாபிக்கப் பட்ட
※
விஷய - புலன் பொருள், விஸ் - நஞ்சு, - ஹய் - இருக்கிறது.
 

»'#
ஆத்மஜோதி 35.
வினு:- எனினும் வைராக்கியத்தின் அகோரமான வேதனை சிறிதளவு விடப்பட்டிருக்கிறது.
மாதாஜி;- யாது அகோரமான புலன் உணர்ச்சியை உண்டாக்குகிறது, உண்மையாக ஒரு புண்ணே! அது காரணமாக வீக்கம் இருக்கிறது, ஆனல் அது யாரது புண்? ஒரு புண் இருந்தாலன்றி வாதை இருக்க மாட் டாது. அங்கு ஏமாற்றம் இருக்கிறது. மெய்ப் பொருள் வெளிப்படுத்தப் படாத வரைக்கும் புண் நிலைத்திருக்கும். வீக்கம் ஒரு குணமாக்கும் போக்காயின் அது நியதமாக நலஞ் செய்கிறது. மயக்கமடைந்துள்ள நோயாளி தன் படு நோவை உணர்கிறதில்லை. எவ்வாறு மனிதன் இன் பம், இழப்பு, இடர்களில் மூழ்கியிருக்கிருன் என்பதை நீங் கள் கவனிக்கலாம். விரும்பப்படுவது நிச்சயமாக இதுவே அன்று! என்றும் முடிவின்றிய ‘சந்தேகங்களுடன் கூடிய உலகின் வழி இதுவே. ஏன் ஒருவர் கடுந்துயர் உணர்கி றர் என்று நீங்கள் சொல்ல முடியுமா?
彎 வினு;- ஒருவர் இரு திசையில் அதாவது கடவுளை
நோக்கியும் புலன் இன்ப நுகர்ச்சியை நோக்கியும் இழுக்
கப்படுகிருர், இது கடுந் துயரை உண்டாக்குகிறது.
மாதாஜி :- பரித்தியாகம் செய்ய விருப்பம் வைத்தி ருக்கிறீர்கள். ஆனல் நீங்கள் விட முடியாது. அவ்வகை யானதே உங்கள் பிரச்சினை. அவ் விருப்பம் உங்கள் இரு தயத்தில் விழிப்பூட்டட்டும் - அதன் எழுச்சி நீங்கள் பரித் தியாகம் செய்யக் கூடிய சமயம் அணுகுவதைக் குறிப்பிடு கிறது.
ஓர் இச்சித்த பொருளை நீங்கள் பெறுகிறீர்கள். ஆனல் இன்னும் நீங்கள் திருப்தியீனப் படுகிறீர்கள். மேலும் நீங் கள் அதைப் பெறுவதற்குத் தவறினல் நீங்கள் வாழ்க்கை யில் அப்படியே வெறுப்புற்றிருக்கிறீர்கள் உங்கள் இச்சை நிறைவேற்றத்தில் நீங்கள் நுகரும் மனமயக்க விடுதலை நற்பயன் விளைவிக்கிறது. ஆனல் நீங்கள் பெற முடியாக பொருட்களைக் குறித்து நிறைவேற்றப்படாத பேராவலின்
* சம்சார - உலகம்; சம்சய - சந்தேகம்,

Page 18
352 ஆத்மஜோதி மனவேதனை சாவிற்குரியதை நோக்கி, கடுந் துயரத்தையே நோக்கி உங்களைச் செலுத்துகிறது.
வினு;- புலன் பசி ஒருகாலும் தணிக்க முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு அதிகம் ஒருவர் பெறுகிருரோ அவ் வளவுக் கவ்வளவு ஒருவர் விரும்புகிருர், லெளகிக ஆசை யின் நிறைவேற்றம் இன்னும் அதி மிகுதியான விருப்பத் தையே பிறப்பிக்கிறது. ',
மாதாஜி;- இவ்வுலகம் தானக பற்ருக் குறையின் ஒரு உரு. இதனுல் நிறைவேற்றம் இன்மையின் பயனு ைதுய ரம் கட்டாயமாக நீடித்திருக்க வேண்டும். இது காரண மாகவே மனித வாழ்வில் இருவிதமான நெறி முறைகள் உளவென்று சொல்லப்படுகிறது. ஒன்று உலக வாழ்க்கை யைப் பற்றி. அதில் பற்றக் குறைக்கு மேல் பற்ருக்குறை விளைகிறது. மற்றது ஒருவரின் உண்மை இருப்பைக் குறித்து, ஒருகாலும் நிறைவேற்றத்தில் முடிவுரு திருப்பது முன்ன தின் சிறப்பியல்பு - எதிர் மாருகப் பற்ருக் குறையுணர்வு முடிவின்றிப் புதிதாகத் தூண்டப்படுகிறது. என்ருலும் பின்னதிற் பிரவேசிப்பதால் மனிதன் தன் மெய்யியல்பில் நிலை கொண்டவனகி முயற்சிசெய்தலைமுடிவுக்குக் கொண்டு வருகிருன். அதுவே அதன் வெளியிடுகை. இவ்வாறு அவன் இந் நெறியிற் பிரவேசிப்பதன் மூலம் தன்னையே நிறைவு செய்ய முயல்வானகில் அது முடிவில் அவனைத் தன் சொந்த உண்மை இருப்பின் நிறை சம நிலைக்குக் கொண்டு வரும்.
வினு:- மேலும் தேடிக் கண்டு பிடியாததின் பெருந் துயர், கடவுள் சமூகமாகாமையின் கடுந்துயர்? புலன் இன் பங்களை நான் விரும்பவில்லை. ஆனல் அவை என்னிடம் வருகின்றன. அவற்றை அனுபவிக்கும்படி நான் கட்டா யம் பண்ணப்படுகிறேன்.
10ாதாஜி;- ஆ! ஆனல் கடவுளைத் தேடிக் கண்டு கொள்ளாததின் கடுந்துயர் அனுகூலமானது. நீங்கள் உண் டது உங்கள் வாயில் ஒரு சுவையை விடுகிறது. நீங்கள் விரும்புவதால் நீங்கள் அணிகலன்கள் அணிகிறீர்கள். ஆகை யால் நீங்கள் அவற்றின் பாரத்தைத் தாங்க வேண்டும். ஆயிலும் இப்பாரம் விழவேண்டுமென்று விதிக்கப்பட்டிருக் கிறது. ஏனெனின் அது நிலைத்திருக்க முடியாத ஒன்று. அது நிலைத்திருக்க முடியுமா? -
 
 

Ky
ஆத்மஜோதி 353
வினு:- மெய்யறிவுடைய ஒர்ஆள்அஞ்ஞானத்தில்இருக்
கக் கூடிய சம்பவங்கள் இருக்கின்றனவா?
மாதாஜி;- நீங்கள் ஒர் ஆளை மெய்யறி வுடையவ
ரென்று குறியீடு செய்கிறீர்கள். அதே சமயத்தில் அவர் அஞ்ஞானத்தால் ஆட்கொள்ளப் பட்டிருக்கலா மென்று
சொல்கிறீர்கள்? பிதாஜி, அவ்வகையான ஒரு நிலைமை அடி யோடு முடியாது. ஆயினும் எப்போதும் நிலை நிறுத்தப் படாத பேற்று நிலையொன்று உண்டு. அங்கு நீங்கள் சுட் டிச் சொல்வது பொருந்தலாம். ஆனல் முடிவான அணு பூதி நிலையில் ஒருபோதுமில்லை. ஏதாவது முறையில் நீங் கள் மெய்யறிவு பெற்ற ஒர் ஆளைக் குறிக் கொண்டாலும் அவர் தாமாகவே இருக்கிரு?ர். பரஞானம் என்றுசொல்லப்படு வதில் எங்ங்னம் அஞ்ஞானம் சாத்தியமாயிருக்கும்? ஓர் அனுபூதியைப் பெற்ற மனிதன் சம்மந்தமாக நீங்கள் அஞ் ஞானத்தைப் பற்றிப் பேசும் போது அது பரஞானத்தைத் தவருக அஞ்ஞானமாகக் கொள்வதின் எடுத்துக் காட்டு. ஆகையால் நீங்களும் ஏற்றம் இறக்கத்தைப் பற்றிக் கூறு கிறீர்கள். விடுதலையடைந்த ஒருவருக்கு உடம்பைப் பற்.
றிய பிரச்சினை இல்லை. அதுபோலவே அவருக்கு ஏறல்,
இறங்கல் ஒன்றும் இருக்க முடியாது. எனினும் உண்மை யாகவும் நேர்மையாகவும் ஏறல் இறங்கல் இருக்கும் பேற்று நிலை ஒன்று உண்டு. முற்றும் .
န္တီမ်ား&မ်ိဳးမ်ိဳးမ်ိဳးအိုးပွါနှီဝှိုမ်ိဳးမ်ိဳးမ်ိဳးမ်ိဳးမ်ိဳးနိူ LΟ Π SSSSSSR 64یخی
எல்லா உயிர்களிடத்தும் உம்மை எனக்குக் காட்டி எவ்வுயிர்க்கும் என் மனதினுலும் வாக்கினுலும் காயத்தினுலும் எவ்வித தீமையும் செய்யாமல், வாழும்படியாகவும், என்னிடத்தில் அன்பு செய்கி றவர்களிடத்திலும், அன்பு செய்யாதவர்களிடத்தி
லும் நான் அன்பு செலுத்தி வாழும்படியாகவும்,
o
ତତ୍ତ୍ଵ
எனக்கு இவ்வுலகில் உதவுகின்ற உடம்பு, அறிவு, செல்வம் முதலியவைகள் என்னுடையவைகள் அல்லவென்றும், என்னிடத்தில் அடைக்கலமாக ஒப்புவிக்கப் பட்டவைகள் என்றும் நான் நம்பி வாழும்படியாகவும் அருள் புரிவீராக.
- கிருபானந்த வாரியார்.

Page 19
354 ஆத்மஜோதி
குஹாலய பஞ்சரத்னம். [S. N, epi j5 SIG — பூரீ குஹாலயம், சேங்காலிபுரம்)
1. பகவான திடமாக நம்பு.
நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை, நம்பிக்கை இல்லை எனில் வாழ்வே இல்லை. வாழ விரும்புவோருக்கு நம்பிக்கை வேண்டும். அந் நம் பிக்கை அசையாத மாழுத, திட மனதாக இருத்தல் வேண்டும் நாபி எதனை நம்புவது? உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் அழிவன. இவ ராசிகளும் அழியும் தன்மையுடையனவே. அவற்றில் எல்லாம் நாம் ஆசையால் தூண்டப்பட்டு நம்பிக்கை வைத்தால் முடிவு அழிவுதான். அழியாததும், ஒன்றேயானதும், எங்கும் நிறைந்ததுமானதுமான இறை வனிடம்தான் நமக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட வேண்டும். பத்து இடங்களில் கிணறுகள் அரைகுறையாக தோண்டிவிட்டு தண்ணீர் இன் னும் வரவில்லையே என ஏங்கித் திரும்பினனும் ஒரு மூடன், ஒரே இடத் தில் ஆழமாக கிணறு தோண்டினுல் அன்ருே விரைவில் நீர் வரும்? உல கில் உள்ள பொருள்களில், பல இடங்களில் நாம் நம்பிக்கை வைத்து மோசம் போவதை விட்டு, இனி அழியாத பரம்பொருளாகிய இறைவ னிடம் திடமான உறுதியான நம்பிக்கை கொண்டு நல்வாழ்வு பெறுவோ
LDIT Ց5 -
2. ஹ்ருதயத்தை நன்கு சுத்தி செய்.
திடமான நம்பிக்கை ஏற்பட நாம் யாது செய்ய வேண்டும்? நம்
மனம் உலக இச்சைகளினலும் இன்ப துன்பங்களினலும் இருள் சூழ்ந்து
மாசு மிக நிறைந்து விளங்குகின்றது. இறைவனின் இருப்பிடமாகிய நம் மனத்திருக்கோயிலில், நிறைந்த ஆசாபாசங்களாகிய மாசுகளை நீக்கி, நம்பிக்கையாகிய விளக்கேற்றி, அஞ்ஞான இருள் அகற்றி, உளங்கனிந்த பிரார்த்தனை பக்தியோடு புரிதல் வேண்டும். இறைவன் வேறெங்கும் இல்லை. தூய சிந்தை பெற்ற உத்தமர்களின் ஹ்ருதய கமலத்திலேயே வீற்றிருக்கிருர். அவ்விறைவனை நாம் காண, உலக இச்சைகளினல் அடிக்கடி மிக விரைவில் தூசு படிந்திடும் நம் உள்ளத்தை நன்கு சுத்தி செய்தல் வேண்டும். தூய உள்ளத்திலே திடமான நம்பிக்கை பிறக்கும்; திடமான நம்பிக்கையில் இறைவனின் அருள் கொழிக்கும்.
3. ஸத்தியமே ஸ்தா ஜயிக்கும்.
“ஸத்யமே லதா ஜயிக்கும்' என்ற கருத்து மனத்திலே ஆழப்பதி யக் கொண்டோர் யாரும் நல்ல வழியினின்றும் என்றும் விலகமாட்டார்
 

ஆத்மஜோதி 355
கள். உண்மையைக் கூறுவது என்பது மனிதனுக்கு வெறுப்பாக உள்ளது உண்மையின் உண்மை வடிவத்தை மனிதன் அறியவில்லையே? உண்மை ஒரு தீப்பிழம்பு போன்றதாகும். அதனை மறைப்பதற்கு மனிதன் கூறும் பொய்கள் யாவும் அத்தீயை வளர்க்க இடும் எண்ணையும் விறகுமாகவே ஆகின்றன. ஒரு பொய்யை கூறிடும் நேரத்தில் பத்து உண்மைகளை தயங் காமல் கூறிவிடலாம். ஒரு உண்மையை மறைக்க நாம் நூறு பொய்கள் கூறினுலும் அவற்றையெல்லாம் விலக்கிக்கொண்டு அவ்வுண்மை சீறி எழுந்திடும். உண்மை கசப்பானது. பொய் இனிப்பானது. ஆனல் உண் மையின் பலன் நன்மை. பொய்யின் பலனே தீமை, உள்ளத்தே உள்ள தை உள்ளபடி உரைத்திடும் உத்தமர்தம் உள்ளத்தே உள்ளான் நம் இறைவன். அவனடி சேர ஸத்யமே ஸாதனமாக கைக்கொள்ள வேண்
டும்.
4. சாந்தம் எந்நிலையிலும் தேவை.
வாழ்வென்பது இன்ப துன்பங்கள் இரண்டும் கலந்தது. சுக துக்கங் களை மாறி மாறி அநுபவிக்கவே இவ்வுலகில் பிறந்துள்ளோம். இன்பத் தின் எல்லை துன்பம். துன்பத்தின் முடிவு இன்பம். இன்பம் வந்தால் இறைவனை மறந்துவிடுகிருேம். துன்பம் கிட்டினுல் இறைவன் இக்கதிக்கு நம்மை ஆளாக்கினர் என நிந்திக்கிருேம், இது இறைவனிடத்து நமக் குள்ள நம்பிக்கைக் குறைவையே குறிக்கும். நாம் செய்த தீவினையின் பய னே இத்துன்பங்கள். நல்வினையின் பலனே நாம் பெறும் இன்பங்கள் இன்பத்தில் மகிழ்கிருேம். துன்பத்தில் துயருறுகின்ருேம். இன்பமும் துன்பமும் நம் மனத்திலெழும் எண்ண அலைகளின் வேறுபாடுகளே ஆகும். இன்ப துன்பங்களை எவன் சமமாக நோக்குகின்றனே அவனே ஞானி. தெய்வீக வாழ்வில் ஈடுபடுவோருக்கு இன்ப துன்பங்கள் நேரிடு தல் இறைவன் இடும் சோதனைகளேயாகும். அப்பொழுதெல்லாம் நம் பக்தி குன்ருதிருக்க தளராத நம்பிக்கை இறைவனிடத்தில் எழவேண்டும். பொறுமையால் சகித்துக் கொள்ள வேண்டும். சாந்தத்தை, துன்பம் எதிர்க்கும் துணையாகக் கொள்ள வேண்டும். மனம், வாக்கு, செயல்களி னல் நாம் ஈடுபடும் எல்லாவற்றிலும், அவைகளின் விளைவான எப்படிப் பட்ட இன்ப துன்ப நிலைகளிலும், எப்பொருள்களிடத்தும், எச்சீவராசி களிடத்தும், அவைகளால் நாம் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும், அந் நிலைகளிலெல்லாம், பொறுமையை சகிப்புத்தன்மையை, சாந்தத்தை கைக்கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ எதுவானுலும் இறை வன் திருவருள் அதுவென்றிருத்தல் வேண்டும் இறைவனிடம் திடநம் பிக்கை பெற, ஹ்ருதய கமலத்தை நன்கு சுத்தி செய்ய, ஸத்யமே ஸ்தா ஜயிக்கும் என்பதை அநுபவத்தில் உ ன ர சா ந் த ம் எந்நிலையிலும் தேவை.

Page 20
356 ஆத்மஜோதி
5. குரு பாதத்தை ஆழ்ந்து பி டி.
தத்வங்களும் உபதேசங்களும் படிக்க இனிமையாயுள்ளன. ஆனல் நடைமுறையில் அவற்றை பயின்று வர இயலுமா என கேட்கலாம்: அவைகள் சாதாரண பொழுது போக்கும் சாதனங்களாக படித்துவிட்டு தூக்கி எறிந்துவிட எழுதப்படவில்லை. அநுபவிகளான பெரியோர்களால் வரையப்பட்ட அறவுரைகள் வாழ்க்கையில் அநுபவத்தில் உணரவே உள்ளன. நடைமுறையில் பயில இயலாத தத்வங்களும் பொன்னுரை களும் விணே. ஆனல் நடைமுறையில் பயில முயலாமலே வீண் என்று கூறுவது புத்திசாலித்தனமாகாது.
திடமான நம்பிக்கை இறைவனிடம் பெற வழி στοότσοτή தூய உள் ளம் பெறுவது எப்படி? - ஸத்யமே ஸ்தா ஜபிக்கும் என்பதை உணருவ தெவ்விதம்? - சாந்தத்தை எந்நிலையிலும் கைக்கொள்வதெப்படி?- என்ற கேள்விகள் மனத்திலெழலாம். இவற்றிற்கெல்லாம் ஒரே வழி உள் ளது. "எனக்கெனச்செயல் வேறிலை யாவுமிங்கொடுநின் -தனக் கெனத் தகு முடல்பொருளாவியுந் தந்தே ன் - மனத்த கத்துள வழுக்கெலா மாற்றியெம்பிராணி - நினைத்த தெப்படி யப்படி யருளுக நீதம்-' என்று பரப் ப்ரும்ம ஸ்வரூபமாகிய பூரீ சத்குரு பாதகமலத்தை ஆழ்ந்து பிடித்தல் வேண்டும்.
குருவும் இறைவனும் ஒன்றே.
குருவே பிரும்மா, குருவே விஷ்ணு, குருவே மஹேஸ்வரரான தேவர். குருவே பரம்பொருள். அப்பேர்ப்பட்ட பூரீ சற்குரு சரணுரவிந் தங்களில் உடல் பொருள் ஆவிகளை அர்ப்பணித்து நமஸ்கரித்தல் வேண் டும். ஸ்திரமான பக்தியை அருளுவாய் என குருபாதத்தை ஆழ்ந்து பிடித்தால் போதும், குழந்தைக்கு தேவையானவற்றை தாயினும் மேலான பூரீ சத்குரு கேட்கும் முன்பே அளிப்பார்.
ஆனந்த நிதியும், ஸகல ஐசுவரியங்களையும் அளிப்போனும், ஸ்மஸ்த துக்கங்களையும் போக்குவோனும் எல்லையற்ற காந்தியுள்ளவனும், தே ஜோ மயானந்தமும், களங்கமற்ற கீர்த்தி பெற்றேனும், சிற்றின்ப ஸாக ரத்தினின்றும் விடுவிப்போனும், பேரின்ட் ஸாகரத்திலாழ்த்துபவனும் ஆன ஆண்ட வன அடைய பூரீ சத்குரு, பாதாரவிந்தமே துணை.
(இவைகள் யான் கூறுவன அல்ல. எனது குருநாதரும் அத்யாத்ம அநுபவியுமான பல காலம் உலக கேமார்த்தம் பாடுபட்ட, தெய்வீக வாழ்வில் "ஈடுபட்ட நீ வேறெனது நான் வேறெனது' இறைவன் திரு வடிகளிலேயே ஒன்றுபட்டுவிட்ட, பூரீகுஹதாஸ் அவர்களின் அருள் :"ನಿ ‘பூரீ குஹாலய பஞ்சரத்னம்' என்பதன் விளக்கமே tt IITg5Ut.
 

ஆத்மஜோதி 357 எது வேண்டும்?
(தி. கி. லகக்ஷ்மி - மதுரை.)
எது வேண்டும்? இந்தத் தலைப்பைக் கண்டதும் நமக்கு நினைவு ஊட்டுவது யாதெனில், ஒரு பலசரக்குக் கடைப் பை யனுடைய குரலாகவோ அல்லது.ஒரு ஹோட்டல் சர்வருடை யகுரலாகவோ தான் தோன்றுகிறது. ஆம் அப்படியே வைத் துக் கொள்வோம். ஆனல் இச்சந்தர்ப்பத்தில் பலசரக்குக்
கடையை விட ஓர் ஹோட்டலாகவே உதாரணத்திற்கு எடுத்
துக் கொள்வோம்.
உலகம் ஒர் பெரிய ஹோட்டல். ந |ா  ெம ல் லோ ரு ம் ஹோட்டலுக்கு வந்து பசியாற்ற வந்துள்ளோம். அவரவர் மனதின் எண்ணத்தின்படி முயற்சி என்னும் காசைக் கொடுத் துச் செயலாகிய பண்டத்தைப்பெற்று அவரவர்க்குற்றபசியை யும் தீர்த்து மனுேதிருப்தியையும் அடைகின்றனர்.
ஓர் அறுபது வயது நிரம்பிய மனிதர் ஒருவர் தன் நண்ப னிடம்-சார் இப்பொழுதுதான் என் மனது திருப்தியாயிற்று. இனி நிம்மதியாக நான் என் காலத்தைக் கழிக்க எண்ணியுள் ளேன். என்னுடைய மூத்த பையன் பி. ஏ. பாஸ் செய்து ஒர் ஆபிசில் நல்ல உத்தியோகம் பார்த்து மாதம் 200 க்கு குறை யாமல் சம்பாதித்து வருகிருன், நிறைய சீர் வரிசையுடன் ஓர் பெரிய ஆபிசருடைய பெண்ணை மணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் ஆனந்தமாக இருக்கிருன்,
இரண்டாவது பையன், எல். ஸி. இ. பாஸ் செய்து, அவ னும் நல்ல உத்தியோகம் பார்க்கிரு:ன். பெரிய புகழ் பெற்ற வச்கீலின் அருமைப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிருன் , வக்கீலின் சொத்து பூராவும் அவருக்குப் பின் இவன் மனைவிக்குத்தான். அவனுடைய அதிர்ஷ்டத்திற்கு அளவேயில்லை. V
மூன்றுவது பெண், அவளைப் பிரபல டாக்டருக்கு நிறை யச் சீர் சிறப்புடன் திருமணம் செய்து கொடுத்திருக்கின் றேன். வீடு, நிலபுலன்கள், சொந்தத்தில் கார் முதலிய வற்றுடன் ஆனந்தமாக இருக்கிருள்.

Page 21
358 ஆத்மஜோதி
கடைசிப் பெண்ணையும் ஒர் பெரிய கம்பெனியின் சொந் தக்காரணுகிய மோகனுக்குப் போன வருடம் அதி விமரி சையாகத் திருமணம் செய்து கொடுத்து அவளும் ராஜாத் தியாய் ஆனந்த மாயிருக்கிருள். எ ன க் கு மாதாமா தம் 100, ரூபாய் பென்ஷன் வருகிறது.
ஒரு பயலையும் எதிர்பார்க்க்காமல் என் மனைவியுடன் நிம்மதியாய்க் காலம் கழித்து வருகிறேன். பையன்கள், பெண்கள் எல்லோரும் எங்களோடு வந்து இருங்கள் என்று ஆவலோடு அழைக்கிருர்கள். இப்படி இருக்கும் பொழுது சில சமயங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் சில நாட்கள் தங்கிவிட்டு வருவோம். ஏதோ இத்தனை நாளாகப் பாடு பட்டதற்கு இப்பொழுது நன்ற க ஆனந்தத்தை அனுபவிக் கிறேன். எனக்கு உலகத்தில் வேறே ஒன்றுமே தேவை யில்லை என்று மிகவும் மன நிறைவுடன் தான் வாழ்வு எடுத்ததின் பயனை முழுசாகப் பெற்று விட்டவர் போல் முழுத் திருப்தியுடன் கூறினர்,
என்னே ஆச்சரியம்! இவர் வாழ்வு எடுத்தது இதற் காகத்தானு? இவைகளினுல் இவருடைய மனதிற்கு இன் பம் ஏற்படுவது உண்மை என்ருலும் இவர் இறக்கும் பொழுது இவரோடு கூடச் செல்வது இவைதானு? இது பற்றி இவர் ஒரு தரமாவது சிந்தித்திருப்பாரா? ஏதோ உண்பது, உடுப்பது, உறங்குவது, தான் பெற்ற குழந்தை களும் தான் செய்ததையே திரும்பச் செய்வதைக் கண்டு அதில் ஆனந்தமடைவது, இதனுல் இவருடைய ஆத்மா வுக்குக் கிடைப்பது யாது? இவருடைய 60 வருட வாழ் வில் ஆத்மாவிற்காக ஒரு சிறிதளவாவதுபாடுபட்டதுண்டா? இது பற்றிச் சிறிதும் அறியாதவராக விளங்குகிறர். ஏதோ தான் படித்தவன் என்றும், தன் பையன்களும் மருமகன் களும் ஏதோ பெரிய படிப்புப் படித்தவர்களென்றும் பெரு மிதம் பேசுகிருர் . ஆனல் இவர்கள் படித்திருக்கும் கல்வி உண்மைக் கல்வியா? இல்லை!! உதர நிமித்தம் அதாவது வயிற்றுப்பிழைப்புக்காக படித்தப்படிப்பேஅன்றிமுன்னேர்கள் கூறியிருக்கும் கல்வியல்ல. நல்லவை யாவை? தீயவை யாவை? என்று ஆராய்ந்து அறியக் கூடிய பகுத்தறிவைக் கொடுக்கக் கூடிய கல்வியல்ல. நாம் பிறவி எதற்காக எடுத்துள்ளோமோ அவற்றைப் பெறுவதற்கான கல்வியல்ல. தேவர்கள் கூட அரிதில் பெற முடியாத மோகூஷித்தை,
மனிதர்களாகிய நாம் பெற முடியும். அத்தகைய பெறு
 

ஆத்மஜோதி 359
தற்கரிய பாக்கியத்தைப் பெறுவதற்காகிய ஞானக் கல் வியை 60 வயதாகியும் ஒரு சிறிதளவாவது பெற்றிருப் பாரா? மாயையின் விந்தையை நாம் முழுமையாகக் காண் கிருேம். நம்மிடத்தில் எத்தகைய அரிய பெரும் சக்தி இருக்கின்றது என்பதை மறைக்கின்றது இந்த மாயை.
மனிதனுனவன் நிலையான பரம்பொருளை அறிந்து அத ணுேடு இரண்டறக் கலக்கும் எண்ணத்துடன் தன் யாத்திரையைத் தொடங்கி, வழியிலுள்ள மயக்கு பொருள் களாகிய மனைவி, மக்கள், பணம் மற்றவைகளைக் கண்டு மயங்கித் தன் யாத்திரையை மறந்து இடைவழியிலேயே தங்கி விடுகிருன்.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானும் 10ாணுப் பிறப்பு (குறள்)
மெய்ப் பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவருக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில் லாத துன்பப் பிறவி உண்டாகும் என்று திருவள்ளுவர் தெரிவித்திருப்பது போல நிலையில்லாதவற்றை நிலையுள்ளது என்று ஏமாறுகிருன். பின் பல பிறவிகளைப் பெற்றுத் துன் பமடைகிருன் ,
ஜன்மதுக்கம் ஜராதுக்கம்
ஜா யாதுக்கம் புன: புன:
சம்சார சாகரம் துக்கம்
தஸ் மாத் ஜாக்ரதோ ஜாக்ரதே.
இனியாகிலும் பிறவித் துன்பமடையாமல், இனிப் பிறவா வரம் பெற்று இறைவனேடு இரண்டறக் கலக்கும் ஈடுபடும்படி நம்மை ஊக்குவிக்கின்ருர் அப்பெ fillu | Guri.
நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (குறள்)
நிலையில்லாதவைகளாகிய பெண், பொன், மண் மற் றும் சுற்றம் இவைகளை நிலையானவை என்று மயங்கி உண ரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையின் இழிந்த நிலையாகும் என்றெல்லாம் பெரியோர்கள் மிகவும்

Page 22
360 ஆத்மஜோதி
ஆன்றேர் அருள்மொழிகள்
( திரட்டியவர் மாததளை - அருணேசர் )
'எல்லா சீவ சாலங்களுக்கும் ஆத்மா உண்டென்றும் எல்லா ஆத்மாக்களும் பரம்பொருளின் அம்சங்களே யென் றும், அக்கினி ஒவ்வொரு பொருளினிடமும் சேரும்போதும் வெவ்வேறு வித உருவமாகத் தோன்றினும் அக்கினி என்ற பொருள் ஒன்றே ஆவது போல, ஆத்மாக்களும் வெவ்வேறு தேகங்களில் புகுந்திருப்பதால் வெவ்வேறு விதமாகத் தோன்றுகின்றதென்றும் நாம் அறிய வேண்டும். பல விளக் குகளிலிருந்து வெளிச்சம் கொடுப்பது ஒரே பொருளாகிய அக்கினியே ஆயினும் கண்ணுடியின் தரம், நிறம், அதில்
தெள்ளத் தெளிவாய்க் கூறியிருந்தும் ஏனே நம் மனதில் பதிவதில்லை.
மனிதப் பிறவி யெடுத்ததின் லட்சியம் என்ன வென் ருல் மாயையை வென்று ஞானம் பெற்று இறைவனேடு இரண்டறக் கலத்தலே. அதல்லாமல் மனிதனுனவன் தான் எந்த வேலைக்காக வாழ்க்கைப் பிரயாணத்தைத் துவக்கி ஞனே அதை மறந்து, இடைவழியில் மாயையின் வசப் பட்டு உலக அநித்திய பொருள்களிடத்தில் ஆசைப்பட்டு மயங்கித் தங்கி விடுகிருன். ஆகையால் தான் எண்ணிப் புறப்பட்ட வேலையில் வெற்றிபெற முடியவில்லை.
இத்தகைய மூடாத்மா க்களுக்கு ஞானத்தை அளித்து இவர்கள் பிறவி யெடுத்ததின் பயனைப் பெறுவதற்கு வழி செய்கிருர் நமது ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள். இத்தகைய மகான் இமய ஜோதியாக விளங்கி உலகத்திற்கெல்லாம் ஞான ஒளியை வீசி வருகின்றர்கள். மக்களுக்கு மிகவும் முக்கியமாக எது வேண்டும்’ என்ற உயர் கேள்விக்குப் பரமனேடு இரண்டறக் கலந்து பேரின் பம் எய்தல் வேண்டும் என்று கூறி எல்லார்க்கும் அருள் புரிந்து வருகின்ருர்கள். நம் எல்லோர்க்கும் நமது குரு நாதரின் ஆசி உரித்தாகுக.
சத் குருநாத மகராஜ் கீ ஜெய்!
 

اليوم
அடைந்திருக்கும் அழுக்கு இவைகளை அநுசரித்து வெளிச்
, சம் பல விகங்களாகத் தோன்றுகிறது. அதுபோல, வெவ்
வேறு விதமாக நாம் தோன்றினும் எல்லாத் தேகங்களுக் குள்ளும் இருக்கும் ஆத்மாக்களும் களங்கமற்ற பரம்பொரு ளின் அம்சங்களே யாகும்.
'கடவுளை அரூபியாக (உருவமற்றவராக) மனதில் தியானிப்பது கடினம். சாதாரண மனிதருக்கு இன்னும் கூடுதலான கடினம். ஆகவே வெறும் ஆகாயத்தைப் பார்த் துத் தியானிப்பதைவிட ஒரு உருவமாகப் பாவித்துத் தியா னிப்பது அவசியம். அதனலேயே நம் இந்து மதத்தில் கட வுளே விக்கிரகங்கள் ரூபமாக வைத்துத் தியானிக்கும்படி நியமித்தார்கள். மனகை அதனிடத்துப் பதிய வைப்ப தற்கு இது எளிதான வழி. நாம் கடவுளே எந்த ரூபமா கப் பாவித்து வணங்கினலும் அதே ரூப வாயிலாய்த் தெய் வமாக நின்று அவர் நமக்கு அருள் புரிகிறார்.
மனச்சாட்சிக்கு மிஞ்சிய நீதி வேறில்லை. அது ஒரு போதும் தவருண நியாயத்தைக் கூருது, அதன் சம்மதத் தை எல்லா விஷயத்திலும் அநுசரித்து நடப்பவர்கள் எத் தகைய குற்றமும் எந்தப் பாபமும் செய்ய மாட்டார்கள். மனச் சாட்சியே சர்வ சாட்சி. நமது உலகில் கடவுள் உளர் என்பதற்கு அதுவே அத்தாட்சி. நாம் செய்ய நினைக் கும் எந்தக் க்ாரியமும் குற்றம் அல்லது குற்றமல்ல என்று கூறுவதற்கு மனச் சாட்சி நமக்குள் இருப்பதுவே காரணம். அதன் சம்மதத்திற்கு விரோதமாய் நாம் செய்யும் குற்றங் களுக் கெல்லாம் பின்னல் தக்க தண்டனை அடைகிருேம்.
அறிவு விசாலமடையும் பொழுது உலகில் இன் லால் குன்றி இன்பம் மிகுந்து விடும். இன்பம் மிகுந்திட எல் லோரும் சகோதரராகச் சமத்துவம் அடைவர். அப்பொ
ழுது உலகில் ஆசை, பொருமை, லோபம், மூர்க்கம், போன்ற தீய குணங்கள் வேருடன் களைந்தெறியப்படும். உலகில் வறுமைப் பிணியும் அணுகாமல் அகன்று விடும்.
எல்லோரும் இன்னல் கானது நித்தியானந்தமாய் வாழ் Gnl | I || III), o il ,

Page 23
Registered at the G. P. O. aS
ஆத்மஜோதி நிை தெய்வீக வாழ்க்கைச் சங்க மல திருமுறைக்காட்சி கேதார் பத்திரை யாத்திரை பூனி கதிரை மணி மாலை
தீங்கணிச்சோலை அறிவுரைக்கதைகள் ( இளங்கோவின் கனவு ஆத்மநாதம் (சுத் கீதா யோகம்
T"LIT 6of UIT 1" (G கந்தரநுபூதி (பொழிப்புல மார்கழிப் பாடல் கூட்டு வழி பாடு
சந்தா நேய அன்புடையீர்! -
இன்று வரை 15ம் ஆண் களுக்கு உடனுக்குடனேயே ரசி களுக்கெல்லாம் எமது நன்றி சந்தா அனுப்பாதோர் உடனே ருேம்.
ஆத்மஜோதி நிலைய (சிலே இந்தியாவிலுள்ள அன்பர்க சம்பு இன்டஸ்ட்ரீஸ், அரிசிப்பா சத்திற்கு அனுப்பி வைத்து, அ வேண்டுகின்ருேம்.
உஷ்ண வாய்வு, முழங்கால் கட்டு, மலபந்தம், அஜிர்ணம், யின்மை, வயிற்று வலி, பித்த பம், நெஞ்சுக் கருப்பு முதலி ஜீரண சக்திக்கும் தேகாரோ
(35T 600TLD.
தபால் செலவு உட்பட டிவி (பத்திய சம்பு இன்டஸ்ரீஸ் - அரிசி
இலங்கையில் கி ஆத்மஜோதி நிலைய
SeAAALAAAAALLAAAAALLAeLeLSASL AAAALLLLLSAAAAAALLLLLSAAAALAAAAALLAAAAALLAAAAALLAAAAALLAAAAALLAAAAALLAAAAALAAAAALSLALLSAAAAAS இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத்த திரு. நா. விணுயமூர்த்தியால் அச்சிட்

a Newspaper. M. L. 59/300 سمتیھمحےN-محےحمحےN-محے^محمجھے^بحیر^سمبرجحیرہ مجھےح>
ALLLLLS S ASLLS ASLLS ASLLSLLASLLASLSLASeLeeSeSeLSLSeLSS LSASei லய வெளியீடுகள் కెల్ష్మ )前 ... 1-25 (நா. முத்தையா) . 1-50
sts or -75 . ܐ ܐ (பரமஹம்சதாசன்) es o la -50 9 9 。。。2一50 சுவாமி சிவானந்தர்) tes -65
(செ. நடராசன்) ,2—25, தானந்த பாரதியார்) 3-00 s 93. 2-50 -50 ரையுடன்) ... - 25 -20
--30 س
--**LANJANఅ/~*
பர்களுக்கு எடுக்குரிய சந்தா அனுப்பியவர் சீது அனுப்பியுள்ளோம். அவர் உரித் சா சக இன்று வரை ன அனுப்பி வைக்க வேண்டுகின்
பம், நாவலப்பிட்டி
ான்) ள் வழக்கம் போல் R. வீரசம்பு, ளையம், சேலம் -9, என்ற விலா |தை எமக்கும் தெரியப்படுத்த
குர600TLD) வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கை கால் அசதி, பிடிப்பு, பசி மயக்கம், பித் க சூலே, புளியேப் ய வாய்வு ரோகங்களை நீக்கி க்கியத்திற்கும் மிகச் சிறந்த
ன் ஒன்று 4 ரூபா 25 சதம்
டைக்குமிடம் - * பம், நாவலப்பிட்டி, AAAAS AAS ASASASASASASASASASAS L SAASASAAAASSLASLS LSLSASSSLSL AAASAALASSASALASASqSqSq AALSASLSASAASSiS தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் டு வெளியிடப்பெற்றது .15-763.