கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.08.17

Page 1
HDS SMS Se S SSS S
裴<>尖(岑e)< ختم "ماتزہ
பூர் J. Gumir Lf5 *美Q些 裴
読窟○ら読リー米で
 
 
 
 

ܨܙܛܝܵ<ܕܝܢ ܙܛܝܵ<ܨܝ>< 蔷 菁
னந்த சரஸ்வதி
裘以是 美(以 >G需G需

Page 2
ஆத்ம&ஜோதி :
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே .
. சுத் கானந்தர்
ஜோதி 15|சோ பகிருதுளுல் ஆவணி மீ" 1 வட (17-s-63) gir fir 1 0 பொருளடக்கம் சிவானந்தர் திருத்தாள் போற்றி 361 பகவான் சிவானந்தரின் ஞான விருந்து 362 சிவானந்தர் சிவம் ஆணுர் 363 இவ்வரிய மானிடப் பிறவியை வீணுக்க வேண்டாம் 367 சிவானந்த ஜோதி 371 பகவான் சற்குரு சுவாமி சிவானந்தர் உள்ளம் கவர் கள்வன் 373 . இமய ஜோதியே நீ மறைந்தனையோ! 378 சிவானந்தர் 382 , சாந்தி நிலவ அருள் ஜோதி சிவானந்தா 373 10. அமரர் சிவானந்தா 384 11. இமய ஜோதி பரஞ் ஜோதியாயது 386 12. மகாத்மா பூரீ சுவாமி சிவானந்தர் மகா சமாதி எய்தினுள் 390 13. எனது குரு 396 14. சுவாமி சிவானந்த மகரிஷிகள் 401 15. இமயஜோதி அணைந்ததோ 403 16. என்ன ஆட்கொண்ட எனது குருநாதர் 406 ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் = திரு. நா. முத்தையா * ஆத்மஜோதி நிலையம்’ நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண் 353
 

சிவானந்தர் திருத்தாள் போற்றி
ーや一●●G→ー
மோன மாங் கயிலாயத்தின்
முகட்டில் ஊற்றெடுத்து வேத கானத் தேh டிறங்குங் கங்கைக்
கரைதனில் தவத்தமர்ந்தே தீனரைக் காப்பதற்காய்த்
திவ்விய ஜிவியத்தைநாட்டி ஞானமுதளிக்குஞ் சுத்த
சிவானந்தர் திருத்தாள் போற்றி !
举
பூவலம் வந்தும் காணு புண்ணியம் செய்தும் காணு நாவினுல் துதித்தும் காணு நற்கிரியை இன்னும் காணு ஆவியை மறந்தும் காணு அஷ்ட சித்தியினும் காணு மூவரும் காணு றோ ன சிவானந்தர் திருத்தாள் போற்றி!
单
சிவனெல்லாம் பிரமமயம் தெய்வநெறி மார்க்கம் பாவனை தி யான மென்ப மண் பிணுேடு கூறி ஆவலோடு மக்கள் தமை அன்புநெறி யுய்க்கும் தேவசி வானந்தசரஸ் வதிகுருவே வாழ்க !
长
பொதுமக்கள் பொன் வாழ்வைக் கருத்தில் வைத்தார்
பூத லத் தோர் யோகமதைப் பயிலவைத்தார் மதுமொழியும் தெய்வநெறிக் கழகம் வைத்தார் மாத பல மதி வாழ்வை உன் ன வைத்தார் கதுவுற்ற காமத்தின் தாழ்வு வைத்தார்
அது விலக்கும் வகை பலவும் விளங்கவைத்தார் மதுவுற்ற திருவடியென் தலைமேல் வைத்தார்
மாண்பிலங்கும் சிவானந்தர் திருத்தாள் போற்றி!
థ 鶯

Page 3
36 , , ) (SenS ر».”
பகவான் சிவ ானந்தரின்
ஞானவிருந்து
__**ష్ట్రాజ*
கடவுள் பொறிகளுக்குப் புலன்படாதவர், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவர். எனினும் பொறி வா யி லை அடைத்துவிட்டுத் தி யா ன த் தி ல் நிலைத்திருப்பாயாகில் உன்னிற் கடவுள் சொரூபம் விளங்கும்.
உனது வாழ்வின் இலட்சியம் ஆண்டவனை அடைவதே. அப்பொழுதுதான் நீ பூரணத்துவத்தையும் விடுதலையையும் அடைந்தவனுவா ய், எனவே அவனே அடையப் பாடுபடு,
தெய்வீக சம்பத்துக்கள் யாவும் ஒருவனிடம் ஒருங்கே சேர்ந்து அமைந்திருத்தல் வேண்டும். அவன், தன்னை இறைவன் அருளுக்குப் பாத்திரமாகத் திருத்தி அமைத்துக் கொள்ளுதலும் வேண்டும். அப்பொழுதுதான் அவன் உள்ளத்தில் திவ்விய ஒளி பிரகாசிக்கும்.
ஆத்மீக சாதனைகள் அல்லது யோகப்பயிற்சிகள் அல்லது தியானம் ஆகிய இவற்றின் இலட்சியம் ஆண்டவனே அடைவதே. எனவே இந்த இலட்சியத்தை மறந்துவிடாதே.
ஆத்ம ஞானம் ஒன்றே வாழ்க்கையின் இன்னல்களையும் துக்கங்களையும் கேடுகளையும் பூண்டோடு ஒழிக்க வல்லது. எனவே, தூய்மை, வைராக்கியம், விவேகம், நான் யார்? என்ற விசாரணை ஆத்ம தியானம், மன அடக்கம், இந்திரிய நிக்கிரகம் முதலிய நெறிகளின் மூலம் இந்த ஒப்பற்ற மேலாம் ஆத்ம ஞானத்தைப் பெறு.
தங்க ஆபரணத்திற்குத் தங்கமில்லாது தனி இருக்கை கிடையாது. அதுபோன்று பிரம்மமின்றி உலகத்திற்கும் தனி இருக்கை கிடையாது.
 

ஆத்மஜோதி 363
十*今*今今今→今→今令今伞今今+++今今伞4伞4→4→今令今→+*今+4++今++4→今→+→*→++4+今令十 சிவானந்தர் சிவம் ஆனுர்!
- ஆசிரியர் -
●
夺一令令令今→令一令令令令争令伞伞→令令今→今伞伞→令→令一令+令令→伞一令令一令令一伞伞一令令令令一令令→令→令令令→令令令→令令十
"ஆணுகிப் பெண்ணுகி வடிவு தோன்றும்
ஆத்மானு பூதிக்கோர் அணியுந் தோன்றும் வாணுளை வீணுக்கும் வழக்கை நீக்கி
வந்தவினேதனை முடிக்க வழியுந் தோன்றும் காணுத காட்சியெல்லாம் கண்முன் தோன்றும்
கைலேயைப்போற் கம்பீரக் காட்சி தோன்றும் சேணுக உயர்ந்த பெருஞ்சிறப்புத் தோன்றும்
சிவானந்த ஜெகத் குருவைக் கண்டபோதே."
இஃது அன்பர் ஒருவரின் சொந்த அநுபவமாகும். இப்படியே உலகில் பல பாகங்களிலும் சுவாமிகளை அநுப வித்தவர்களைக் கோடிக் கணக்கில் கூறலாம். ஜேர்மன் அம்மையார் ஒருவர் சுவாமிகளைக் கனவில் 56o Tri. க ன வி ல் கண்டவர் எங்குள்ளார் எ ன் ப து அம்மையாருக்குத் தெரியவில்லை. கனவில் கண்ட தோற் றம் நான்கு ஆண்டுகளாக அவர் உள்ளத்தை விட்டகல வில்லை. நான்கு ஆண்டுகளின் பின்பு சுவாமிகளுடைய முகப்புப் படம் பதித்த நூல் ஒன்றை அன்பர் ஒருவரிடம் அம்மையார் பெற்ருர் . படத்தைக் கண்டார். தாம் கன வில் கண்ட சுவாமிகள் அவரேதான் என்று ஆனந்தக் கூத்தாடினர். சுவாமிகளுடைய விலாசத்தை அறிந்து உடனே கடிதம் எழுதினர். சுவாமிகளுடைய உத்தரவுப் பிரகாரம் சுவாமிகளைச் சென்று தரிசித்து உத்தம பக்தையா (ᎶᎼ)ᎱᎢ .
இப்படியாகச் சுவாமிகளைத் தரிசிக்காமலே கடித மூல மும் கனவு மூலமும் சுவாமிகளிடம் மந்திர உபதேசங்கள் பெற்றவரும் சந்நியாசம் பெற்றவரும் அநேகருளர். பூத
உடலில் உலாவிய சிவானந்த ஜோதி இன்று அகண்ட பெருஞ்ஜோதியுடன் கலந்தது. இமயமலை யடிவாரத்தில் ஆனந்தக் குடீரத்தை நோக்கிய உள்ளங்கள் தமது உள் ளங்களிலேயே இன்று அக் காட்சியை அனுபவிக்கின்றன.

Page 4
364 ஆத்மஜோதி
பதினரும் நூற்ருண்டில் வேதாந்த கேசரியாக விளங் யவர் அப்பைய தீட்சிதர் என்பவர். அவர் சிவானுபூ
திச் செல்வராயும் சித்தாந்த சரபமாயும் விளங்கியவர். அக்காலத்துச் சைவ வைஷ்ணவச் சண்டைகட்கு அற்புத சித்தியால் சமாதானங் காட்டியவர். வேதாந்த சித்தாந்த சமரசங் கண்ட வித்தகச் சித்தர் பரம்பரையில் வந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட சமஸ்கிருத நூல்களை எழுதியவர் இவர் எழுதிய சதுர் மாத சார சங்கிரகத்தின் அருங் கருத்துக்களைத் தாயுமானுர் பாடல்களிலும் அருட்பிரகாச வள்ளலாரின் மகாதேவ மாலையிலும் பரக்கக் காணலாம். இத்தகைய அப்பைய தீட்சிதரின் பதின் மூன்ருவது சந்ததி யில் வந்தவரே சுவாமி சிவானந்தராகும்.
சுவாமிகள் சாதி சமய ஆண் பெண் வேறுபாடு எது வுங் காணுத சுத்த சமரச நன்னிலையில் விளங்கினர்கள். எவரெவர் எந்தெந்த நிலையில் செல்கின்ருர்களோ அந்தந்த நிலையில் நின்றே சுவாமிகள் அவர்களை ஆத்மீக நிலையில் உயரச் செய்தார்கள். அன்புக்கும் சேவைக்கும் எங்ங்னம் உலகில் காணப்படும் வேறுபாடுகள் இல்லையோ அங்ங்னமே சுவாமிகள் விளங்கினர்கள். நாம் செய்த அன்பு சிறிதா யினும் நாம் செய்த சேவை இரா மரணை கட்டிய போது அணில் செய்த தொண்டளவின தாயினும் சுவாமிகள் அதனைக் கண்டு பிடித்து மலையளவாகப் புகழ்ந்து அன்பு மணி, அன்புக் கடல் என்றும் சேவா சாகரம் என்றும் தியாக மூர்த்தி என்றும் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்து விடுவார்கள். சுவாமிகள் பட்டங்கள் கொடுக்கத் தொடங் கினுல் பெற்றுக் கொள்பவர்கள் வாயடைத்துப் போவார் கள். சுவாமிகளின் அன்புக் கடலிலே மூச்சுத் திணறிப் போவார்கள். சுவாமிகளுடைய பட்டத்தைப் பெற்ற பின்பு அதற்குத் தக்கதாகத் தம்மை ஆக்கிக் கொள்வதே பெரும்பாலோர் வாழ்க்கையில் கண்ட அநுபவமாகும்.
உலகில் துன்பநிலை நேரும்போது சிலருக்கு ஒரு விரக்தி தோன்றுவதுண்டு. அந்நிலையில் சந்நியாசியாகப் போனுல் என்ன என்ருெரு எண்ணம் உண்டாகும். இந்த மனுேபா வத்துடன் சுவாமிகளிடம் ஆறுதல் பெறச் சிலர் செல்வ துண்டு. சுவாமிகள் அவர்கள் உள்ளங்களை ஊடுருவிப் பார்ப்பார்கள் சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டு மென்ற நினைவோடு போனவர் வாய் திறந்து கேட்கக் கூச்சப்படுவர். சுவாமிகள் இன்றிரவு உமக்குச் சந்நியாசம்
 
 
 
 

ஆத்மஜோதி 365
என்று கூறி ஒரு சீடரை அழைத்து இவருக்குச் சந்நியா சத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய் என்று கட்டளே யிட்டு விடுவார். அக்கட்டளையின் பின்தான் அவர் தமது மனத்தைச் சந்நியாசத்திற்கு ஆயத்தமாக்கிக் கொள்வார். சந்நியாசம் பெற்றபின்தான் தான் சந்நியாசியாக வாழ வேண்டுமென்று தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வார். இப்படியாகத் தம்மை வந்தடைந்தவர்களை ஆத்மீக நிலை யிலே உயர்த்தி விடுதல் சுவாமிகளுடைய பண்பாடாகும்.
சுவாமிகள் எங்கும் சிவத்தையே கண்டார்கள். தம் மை நாடி வருபவர்களை யெல்லாம் சிவமாகவே பாவித் தார்கள். வருகிறவர்கள் காலில் விழு முன்பு சுவாமிகளே இவர்கள் காலில் விழுந்து விடுவார்கள். தாம் குருவென்று அவர் தம்மை எப்பொழுதாவது காட்டிக் கொண்டதில்லை. படிப்புச் செருக்கு, பதவிச் செருக்கு, பணச் செருக்கு அவற்ருல் தலை நிமிர்ந்து செல்பவர்களைத் தமது பணிவி னுலும் அடக்கத்தினுலும் தலைகுனிந்து செல்லச் செய்வார் Յ5 6NT -
தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் பேரால் உலகெல் லாம் ஒரு குடும்பம் என்பதைச் சாதனையில் கொண்டுவந் தார்கள். தெய்வீக வாழ்வு வாழ விரும்புகிறவர்கள் யாவ ரும் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தில் அங்கத்தினராக இருக்கலாம். எந்தச் சமயத்திற்கும் எந்தச் சமூகத்திற்கும் தெய்வீக வாழ்வு பொதுவே. இன்று உலகம் முழுவதி லும் அறுநூற்றுக்கு மேற்பட்ட தெய்வீக வாழ்க்கைச் சங் கங்கள் உருவாகி உலகின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக் கும் சகோதரத்துவத்துக்கும் பாடுபட்டு வருகின்றன.
சுவாமிகளுடைய இன்னுெரு முக்கிய உபதேசம், கொடு, கொடு, கொடுத்துக் கொண்டேயிரு என்பது. சுவாமிகள் வருடத்தில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களை ஞானதானம் செய்திருக்கிருர்கள். சுவாமிகளுடைய ஆச்சி ரமத்திற்கு நன்கொடையாக அளித்த பொருட்கள் யாவும் ஞானதானமாகவோ அன்றேல் அன்னதானமாகவோ மாற் றப் பெற்றுவிடும். ஆற்ருேட்டம் போலவே செல்வம் வந்து போய்க் கொண்டிருந்தது. தினமும் செல்வம் புதிது புதி தாக வந்து கொண்டிக்ருகும். மாலையில் அவை தகுந்த நிலங்களுக்குப் பாய்ச்சப் பட்டு விடும்.

Page 5
366 ஆத்மஜோதி
சுவாமிகள் ஒரு அவதார புருஷர் என்பதை அவரு டன் ஒரு நிமிஷ நேரம் பழகியவர்களே ஒப்புக் கொண்டு விடுவார்கள். சுவாமிகளுடைய நூலில் ஒரு வரியை ஊன் றிக் கவனித்தாலே அவர் ஒரு அவதார புருஷர் என்பதை எடுத்துக்காட்டி விடும். கண்ணபிரானுடைய காலத்திலே அவர் ஓர் அவதார புருஷர் என்பதை ஐந்து ஆறு பேர் மாத்திரமே உணர்ந்திருந்தார்களாம். அது போலச் சுவா மிகள் அவதார புருஷர் என்பதைப் பலர் இனிமேல்தான் உணரப் போகிருர்கள். சுவாமிகளிடம் ஆன்ம தாகம் கொண்டு சென்றவர்கள் அத்தனை பேரும் அவரவர் நிலை யில் நின்று உயர்ந்துள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தே கமும் இல்லை. வேட்டைவாளி தான் எடுத்த புழுவைக் கொட்டிக் கொட்டித் தன்னைப்போல் ஆக்கியது போன்று சுவாமிகளும் தம்மை டிநா வந்தவர்கள் அத்தனைபேரையும் தம்மைப்போல் நிலைக்கு உயர்த்தி விட்டுள்ளார்கள். ஆச் சிரமத்திற்கு வேலை தேடிச்சென்றவர் கூட ஒர் உயர்ந்த சந்நியாசியாகி இருக்கிருர் என்ருல் சுவாமிகளின் அவதார மகிமைக்கு வேறு உதாரணம் தேவையில்லை.
காயனை அகாயனுக்கி கண்டனை அகண்டனுக்கி பேயனப் பிரம்மமாக்கி பிறப்பிறப்பிலாமையாக்கி தாயினும் இனியஞகித் தகைந்தெனை அனைத்து ஆண்ட தூயசற் குருவே உன்னத் தொழுந்தொறும் களிதுலங்குமே.
என்பது சுவாமிகளுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான தாகும். சுவாமிகளுடைய திரு உருவை நினைந்தாலே உள்ளத்தில் ஒரு களி பேருவகை. அதனை நினைந்தே பக்தர் கள் இனிமேல் ஆறுதல் கொள்ளவேண்டும்.
சுவாமிகள் 14-7-63 ஞாயிறு நடுநிசி மகா சமாதி அடைந்தார்கள். 16-7-63 செவ்வாய் பூதவுடல் சமாதி வைக்கப்பட்டது. எவ்வுடலின் மூலமாக அவரது அமரத் துவத்தை அறிந்தோமோ அதுவும் மறைந்து விட்டது . சீவனுக இருந்த குப்புசாமி சிவ ஆனந்தராகி இ ன் று
சிவமாகிவிட்டார். அவருடைய உபதேசங்கள் எமக்கும்
வழிகாட்டியாகி அமைவதாக. -
கடவுள் உனக்கு மிக வு ம் அருகிலுள்ளார்; உனது
மூச்சையும் விடச் சமீபத்திலுள்ளார்: கை கால்களையும் விடப் பக்கத்திலுள்ளார்; அவர் உன் இதயத்திலேயே வசிக்கின்றர். அவர்தான் உனது ஆத்மன்.
 

ஆத்மஜோதி 367
இவ்வரிய மானிடப் பிறவியை வீணுக்கவேண்டாம்
(குருபூர்ணிமைச் செய்தி) (சுவாமி சிவானந்தர்)
வேதங்களைத் தொகுத்தவரும், பிரம்ம சூத்திரங்களை எழுதியவரும், மகாபாரதத்தையும் பூரீமத் பாகவதம் உட் படப் பதினெட்டுப் புராணங்களையும் எழுதியவருமான பூரீ கிருஷ்ணத்வைபாயனர் எனப்படும் மாமுனியாகிய பூரீ வியாச பகவான் திருவடிகளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம். பிரம்ம வித்தியாகுருமார்களுக்கும் பண்டைக்காலந்தொட்டு இக்காலம் வரையுள்ள முனிவர்களுக்கும் வணக்கம்.
சிவபெருமானின் திரு வ வ தா ர மா கி ய ஜகத்குரு பூரீ சங்கராச்சாரியார் உபநிடதங்களென்னும் ஞா ன க் கடலில் மூழ்கி, அத்துவைத தத்துவம் என்னும் அரிய முத்தைக் கொணர்ந்தார். உண்மையில் நீங்கள் என்றும் பூரணமாய், சுதந்திரமாய், முழுமையாய், இன்பமயமா யுள்ள தெய்வீக உயிர்கள் என்னும் மகத்தான உண்மை யைத் தெளிவுறக் கூறும் தத்துவம் இது. 'ஸ்லோகார்த் தேன பரவசஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி: , ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்ய ஜீவோ ப்ரஹ்மைவ நா பரா.’’ என்னும் பிரசித்திபெற்ற சுலோகத்தில் இக் கருத்து அடங்கியுள்ளது. தெய்வீக அறிவு அனைத்தினது சாரத்தையும் இது கூறுகின் றது. உயர் அநுபூதியின் முடிவு இச் சுலோகத்தில் கூறப் படுகின்றது. உங்களுள்ளே இருக்கும் ஆத்மீக சத்தியப் பொருளிலேயே இ ன் ப ம் காணமுடியும். இப்பொருளை யறிந்து விடுதலை பெறுக.
இந்த முடிவான தத்துவம் கூறப்பட்டுள்ளது சரியே. ஆணுல் அதனை அடைவது எங்ங்னம்; உலக போகங்களைத் துய்ப்பதில் உங்கள் அனுபவங்கள் துரதிட்டவசமாக மனம், புலன்கள் என்னும் கருவிகளின் மூலமே பெறப்படுகின்றன. எனவே உங்கள் இன்ப அனுபவம் முழுவதும் அசத்தாகவும் அசித்தாகவும் துக்கமயமாகவும் காணப்படும்போது நீங்கள் சச்சிதானந்த ஆத்மாவைக் காண்பது எங்ங்னம்? உலகில் அனைத் தும் அழியுந்தன்மையுடையன. சித்துப்பொருளை

Page 6
368 ஆத்மஜோதி
எங்கும் காணமுடியவில்லை; சடப் பொருளையே எங்கும் காண்கிறீர்கள். 'ஸர்வம் துக்கம் விவேகின :' என்னும் கூற்றுப்படி இவ்வுலகில் எங்கும் துக்கத்தையே அனுபவிக்க முடிகிறது. எ ப் போது ம் துக்கத்தையே அனுபவித்துக் கொண்டிருந்தால் ஆனந்தம் காண்பது எங்ஙனம்? இதற்கு விடையாகப் பண்டைய இருடிகளும் முனிவர்களும் எமது இலட்சியத்தைப் படிப்படியாக அடைவதற்கான வழியைக் காட்டியுள்ளனர்.
விவேக சூடாமணியில் பின்வரும் சுலோகம் உள்ளது. 'துர்லபம் த்ரயமே வைதத் தேவானுக்ரஹ ஹேது கம்; மனுஷ்யத்வம் முமுகவு"த்வம் மஹா புருஷ சம்ஸ்ரய’ மூன்று பொருட்கள் அடைதற் கரியவை. இறைவனருளின் மூலமே உயிர்கள் அவற்றைப் பெறுகின்றன. மனிதப்பிறவி கிடைப்பது அற்பமான பேறு அன்று. அது உயிர்களுக்கு இறைவனளிக்கும் அரிய கொடை, மனிதப் பிறவியை அடைந்து வீடு பெற விருப்பங்கொள்வது அடுத்தபடி பெறுவதற்குக் கடினமான பேறு. எனவே, ஒருவர் இவை இரண்டையும் பெற்றிருந்தால் அவர் உண்மையில் இரு மடங்கு பாக்கியசாலியாவார். ஆ ன ல் , மனிதப்பிறவி யெடுத்தும் அனுபூதிபெறவிரும்பாவிடில், அடையவேண்டியது எதுவென அறிந்திருந்தும் அதைப் பெறுவதற்கான வழியை அறியாவிடில் நீங்கள் பூரண அனுக்கிரகம் பெற்றவர்களாக மாட்டீர்கள். ஆகவே அடையவேண்டியது எ து வெ ன அறிந்து அதற்கான வழியையும் உங்களுக்குக் காட்டவல்ல மகாபுருஷர் ஒருவரின் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைத்தால், உங்களை மும்மடங்கு பாக்கியவான்களாகக் கொள்ளலாம். இவ்வரிய பாக்கியத்தை எப்போதும் நினைவில் வைக்கவேண் டும். அப்போதுதான் சந்தர்ப்பத்தை வீணுக்காமல் கவன மாய் இருப்பீர்கள். ஒரு பொருளின் உண்மை மதிப்பை உணர்ந்தாற்ருன் நீங்கள் அதைப்பற்றி ஏற்ற கவனம் எடுப்பீர்களேயன்றி உணராதபோது கவனம் எடுப்பதில்லை.
நீங்கள் ஆத்மீக அனுபூதியடைவதற்குத் தடையாக இருப்பது உங்கள் மனம் ஒன்றே. இதை ஆணவம் என்ருே, அன்றி நீங்கள் விரும்பும் வேறு எப் பெயர் கொண்டோ அழைத்தாலும் சரியே. ஒருவர் குருவை நாடுவது, இத் தடையை நீக்கி மனித வாழ்க்கையின் முடிவான இலட் சியத்தை அடைவதற்கேயாம். குருவானவர் கட்டுப்படுத்தும் மனத்தடையை அழித்த வர். அதனை அழிப்பதற்கான
 

ஆத்மஜோதி 369
முறையை அறிந்தவர்; ஆத்மீக வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவர், ஒரு குருவையடைந்து, தமக்கு உபதேசம் செய்து வழிகாட்டுமாறு அவரிடம் கேட்பதாகவும், குரு அவரிடம் 'நல்லவனுயிரு, அறநெறி கடைப்பிடி; தன்னலமின்றிச் சேவை செய்; யாவரையும் நேசி; உன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்; மனதைத் தூய்மைப் படுத்து; ஏகாக்கிர சித்தத்துடன் தியானம் செய்' என்று கூறுவ தாகவும் வைத்துக் கொள்வோம். ஆனல், குருவின் உப தேசத்தை மனப்பூர்வமாகப் பின்பற்ருவிடில் அவர் அடையக் கூடிய பயன் யாது; எதுவுமில்லை. தாம் மு ன் பி ரு ந் த நிலையிலிருந்து அவர் ஒரு விதத்திலும் முன்னேறமாட்டார். யாதொரு அப்பியாசமும் செய்ய விருப்பமில்லை; ஆனல், பலன் கிடைக்கவேண்டும் என்ற விருப்பம் மட்டும் இருக் கிறது. என்ன துக்ககரமான நிலை!
வாழ்க்கையின் முடிவான இலட்சியத்தை அடைவதற் கான பாதையிலுள்ள ஒரு தங்குமிடமே இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. பிறந்தவையனைத்தும் சாவதைக் காண்கிருேம், ஆனல், சாவு எமது வாழ்க்கை யின் முடிவன்று; ஏனெனில், அதன்பின்னும் வாழ்க்கை தொடர்ந்து இராவிடில் இவ்வாழ்க்கையிலே புரியப்படும் செயல்களும் பெறப்படும் அனுபவங்களும் மதிப்பிழந்து வீணுகிப்போம். கடந்த காலத்தில் பிறப்பும் இறப்பும் இருந்தன. எதிர்காலத்திலும், ஆத்மானு பூதி அடையும் வரை, பிறப்பும் இறப்பும் இருந்துவரும். வாழ்க்கை என்பது ஒரு நீண்ட சங்கிலித்தொடர்; திரும்பத் திரும்ப வரும் பிறப்புகளும், வெவ்வேறுலக வாழ்க்கைகளும், இறப்புகளும் அதன் இணைப்பு வளையங்கள்.
ஆசைகளும் கன்மங்களும் பிறப்புக்குக் காரணமா கின்றன. பிறப்பே மேலும் ஆசைகளுக்கும் கன்மங்களுக் கும் காரணமாகின்றது. எனவே, மு டி வி ல் பிறப்பும் இறப்புமற்ற உயர் வாழ்க்கைக்குத் தகுதி பெறுவதற்கான பயிற்சியை அடையவே இப்பிறவி வாய்த்துள்ளது. செல்லும் பாதையும் செல்ல வேண்டிய இடமும் ஒன்ருகமாட்டா. எனவே, இவ்வுலக வாழ்க்கையே இலட்சியமோ முடிவோ ஆகாது. உலக வாழ்வே முடிவான இலட்சியமெனில் இங்கு எவரும் சாகமாட்டார்கள்; மாறுதல், துன்பம், துக்கம் எதுவும் இங்கு இருக்காது; குறையுணர்ச்சியோ, இப்போ துள்ள நிலைக்கு அப்பால் செல்லவேண்டு மென்ற ஆர்வமோ

Page 7
370 ஆத்மஜோதி
எழுச்சியோ எவருக்கும் ஏற்பட்டிராது. மாறுதலற்ற அழி வற்ற பொருள் ஒன்று உள்ளது என்பதையே சதாமாறு பட்டு வரும் இவ்வுலகம் நிரூபிக்கின்றது.
நீங்கள் தன்னந்தனியே இவ்வுலகுக்கு வந் தீர்கள் என்பதையும், துணையின்றித் தனியாகவே இவ்வுலகை விட்டுப் போய்விடுவீர்கள் என்பதையும் நினைவில் வையுங் கள். இப்பிறவியில் இங்கு நீங்கள் செய்தவைகளையன்றி வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. பெரிய பசுக்கூட்டத்திடையே தத் தம் தாய்ப் பசுவைத் தொடரும் கன்றுகளைப் போல உங்கள் செயல்கள் உங்களைத் தேடித் தேடித் தொடர்ந்துவரும்.
உங்கள் வாழ்க்கை குறுகியது; கடக்கவேண்டிய தடை களோ பல. எனவே இப்போதே அக்கறையுடன் முயற்சி செய்யுங்கள். உங்கள் பொன்னுன காலத்தை வீணுக்கா தீர்கள். ஒவ்வொரு வினுடியையும் மிக உன்னதமான இலட்சியத்துக்காகப் பயன் படுத்துங்கள், குரு வழிகாட்டிய படி ஏற்ற சாதனைகளைப் பயின்று உங்கள் பயணத்தை விரைவில் முடித்துக்கொள்ளுங்கள். இறைவன் உ ங் க ள் மகிமையாவார்; உங்கள் வெற்றி மகத்தானதாயிருக்கும். ஆத்மீகப் பாதையிலே சாந்தி உங்கள் உடன் நிலவுமாக. உங்கள் முயற்சிகளிலெல்லாம் திருவருள் துணை புரியுமாக. யாவர்க்கும் தலைவனுன இறைவன் உங்களனைவர்க்கும் அருள் புரிவாராக
距++令++令++<>++令++<>+<>++<>++令++令++<>++令++令++令++令+→群
பரம்பொருளின் தத்துவத்தை அறிவது கடினம். () அதனினும் கடினம் பரம் பொருளை அறிய ஆத்மீக () சாதனை செய்வது. எனினும் இதய சுத்தியும் தீவிர * * வைராக்கியமும் ஆத்மனே அறியத் தீவிர இச்சையும் 8 6 சாதனையில் ஊக்கமும் சக்தியும் இருக்கும் சாத்க 8 * னுக்கு ஒன்றுமே கடினமில்லை. அவன் எல்லா 1 * வற்றையும் திறம்பட முடித்து இலட்சியத்தையும் ?
எளிதில் அடைந்து விடுவான்.
- சுவாமி சிவானந்தர்,
掛++<>+*<>++<>++<>++<>++<>++<>++<>++<>++<>++<>++<++<>*<>*推
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 371.
சி வா ன ந் த ஜோ தி
(அ. சுப்ரமணியன் )
கருணையே உருவாகி வந்த சிவானந்த ஜோதி, கடந்த
முப்பது ஆண்டுகளாக ஆயிரமாயிரம் உள்ளங்களிலே ஆத் மீகச் சுடரை ஏற்றி வைத்து விட்டுக் கடந்த யூலை 14ஆம் தேதி நள்ளிரவில் கற்பனை கடந்த ஜோதியில் கலந்து விட் -gil.
உலகெங்கனுமுள்ள இலட்சக் கணக்கான மக்கள் தமக்கு மிக நெருங்கிய ஒருவரை இழந்தாற் போல மனங்குமுறுகின் றனர். சிவானந்தர் தங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பம்ஒரு மறுமலர்ச்சி-ஒரு விழிப்பு ஏற்படக்காரணமாய் இருந்த மையை இவர்களனைவரும் உணர்கின்றனர்.
'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்றிருந்த காலத் தில், மகான்கள் அரசரை நல்வழிப்படுத்துவதன் மூலம் குடி களையும் நல்வழிப்படுத்தி வந்தனர். இந்த ஜனநாயக யுகத்தி லே தோன்றிய சுவாமி சிவானந்தர், மனிதருள் ஒவ்வொரு வருக்கும் உள்ள தனித்தேவையை அறிந்து, அதற்கேற்ற படி எண்ணற்ற துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள், பத்திரி கைகள், கண்காட்சிகள், ஒலிப்பதிவுகள், திரைப்படங்கள், வானெலி, ரெலிவிஷன் முதலிய பல்வேறு சாதனங்களின் மூலம் இலட்சக் கணக்கான உள்ளங்களிலே ஆன்மீக உணர்ச் சியை உண்டாக்கியுள்ளார். கொடுப்பதையே விரதமாகக் கொண்ட சிவானந்த வள்ளல். போற்றி மறைத்து வைக்சப் பட்டிருந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்து, அவற்றை யாவருக்கும் வரையறையின்றி இலவசமாக வாரி வாரி வழங்கியுள்ளார்.
இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றபடி காரணகாரியத் தொடர்புடன் அமைந்த விஞ்ஞான முறை யில், யாவரும் எளிதில் விளங்கித் தாமே பயின்று அனுப வித்து உணரத்தக்க விதத்தில், ஆத்மீக உண்மைகளைச் சிவா னந்தர் எடுத்து விளக்கியுள்ளார். கதைகள், கவிதைகள், கட் டுரைகள், கடிதங்கள், சம்பாஷணைகள், நாடகங்கள், விகடத் துணுக்குகள், பாடல்கள் போன்ற பல்வேறு முறைகளாலும் தெய்வீகக் கருத்துக்களைக் குழந்தைகள், பெண்டிர், மாண வர், தொழிலாளிகள், பாலர், விருத்தர் முதலானுேர் ஒவ்

Page 8
372 ஆத்மஜோதி
வொருவருக்கும் ஏற்றபடி எடுத்துக் கூறியுள்ளார். 'நல்ல வனுயிரு. நன்மையே செய். சேவை புரி. தியானம் பயில். அனுபூதியடை' என்பவை போன்ற சின்னஞ்சிறு வசனங் களில் சகல சமயங்களின் சாரத்தையும் தொகுத்தளித்துள்
ளார் இம்மகான்.
அனுபூதி பெற்ற இந்தச் சீவன் முக்தரின் போதனைகள் அளவற்ற சக்திவாய்ந்தவைகளாய் இருப்பது இயல்பே. அத் துடன், தாமே அப்பியாசம் செய்து அனுபவித்து உணர்ந்த வைகளையே அவர் போதித்ததாலும், அடைய வேண்டியதை யெல்லாம் அடைந்து விட்ட சீவன் முத்தி நிலையில் தமக்கு அவசியமில்லாவிடினும் பிறருக்கு வழிகாட்டுவதற்காகச் சகல சாதனைகளையும் தவருது தாமே செய்து வந்தாலும், அவரது போதனைகள் யாவும் அனைவர் உள்ளத்திலும் ஆழ்ந்து பதிந் தன.
பிற மதாச்சாரியர்களின் போதனைகள் உலகில் பல்லாயி ரம் ஆண்டுகளில் ஏற்படுத்திய விளைவைச் சிவானந்தரது போதனைகள் கால் நூற்ருண்டுக்குள் ஏற்படுத்தி விட்டன. அவரது வாழ் நாளிலேயே உலகின் ஐந்துகண்டங்களிலுமுள்ள பல்வேறு இன, மத, சாகித்தியங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் அவரது போதனைகளைப் போற்றிப் பின் பற்றலாயினர். தம் வாழ் நாளில் அவர் ஆன்மீகத் துறையில் சாதித்துள்ளவை அனந்தம். உலகெங்கணும் கிளைகளைக் கொண்ட திவ்ய ஜீவன சங்கத்துடன் அகில உலக சாதுக்கள் சங்கம், அகில உலக சமய சம்மேளனம், யோக வேதாந்த ஆரணிய கலாசாலை முதலிய ஸ்தாபனங்களை நிறுவியதோடு, நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியும், பல்லாயிரக் கணக் கான மக்களுடன் நேரடியாகவும் கடித மூலமும் தொடர்பு கொண்டும், எண்ணற்ற ஆன்மீக சாதகர்களின் ஈடேற்றத் துக்கு வழிகாட்டி வந்துள்ளார்.
இத்தகைய க ரு னை வள்ளலின் காலத்தில் வாழக் கொடுத்து வைத்த நாம் பாக்கியசாலிகள். அவரோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டு அவரது உபதேசங்களைப் பெற்றவர்கள் இருமடங்கு பாக்கியசாலிகள். அவரது போத னைகளைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து தெய்வீக வாழ்க்கை வாழ முயல்பவர்கள் மும்மடங்கு பாக்கியசாலிகள், பிறப் பிறப்பற்ற நித்தியவஸ்துவாகிய சிவானந்த ஜோதி, இவர் களுக்கு என்றும் தோன்றத் துணையாக நின்று நல்வாழ் அளிப் பது திண்ணம்.
 

ஆத்மஜோதி 373 “பகவான் சற்குரு சுவாமி சிவானந்தர்' “gd 6T6ITüb 66 uf S56T 6U 6õT” க. பொன்னம்பலம் )
15-7-63 திங்கட்கிழமை அதிகாலை சுவாமி சிவானந்தர்பூதவுடல் நீத்துலிட்டார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். நம்ப முடியவில்லே, அகில உலகத்திலுமுள்ள சுவாமிகளின் ஆயிரக்கணக் கான சீடர்களும் பக்தர்களும், என்னைப் போல் அதிர்ச்சி அடைந்திருப் பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது சம்பவம் நடக்கஒருவாரகாலத்தின் முன் சுவாமிகளின் உடல்நிலமைநன்ருயில்லையெனப்பத்திரிகைவாயிலாக அறிந்தேன். பல அன்பர்களிடம் விசாரித்தும் விபரம் அறிய முடியவில்லை 21-6-63 திகதியிட்ட சுவாமிகளின் கடிதமொன்று சில தினங்களின் முன் கிடைத்தது. அதில், கொழும்பு அன்பர் பூரீ ஏ. சுப்பிரமணியம் இலங்கை யிலும், மற்றும் நாடுகளிலும் தெய்வீக வாழ்க்கையைப் பரப்பும் நோக் கத்துடன் ஒர் மாதச் சஞ்சிகையை வெளியிடவிருக்கிருர் என்றும், அன்ன ரின் நற்பணிக்கு என்னல் ஆன உதவி புரிந்து அவரின் தொண்டை வெற் றிபெறச் செய்யும்படியும், இலங்கையிலுள்ள சகல திவ்ய ஜீவன சங்கங் களும் ஒருங்கு சேர்ந்து அகில இலங்கைத் திவ்ய ஜீவன சங்கங்களின் மகா நாடொன்றை (A1 Ceylon Devine Life Conference) வரும் நவராத்திரி காலத்தில் நடத்த எத்தனம் செய்ய வேண்டுமென்றும் எழுதியிருந்தார் கள். இக்கடிதம் கண்டதும் மனச் சாந்தி ஏற்பட்டது. சுவாமிகள் இவ் வளவு விரைவில் நம்மைத் தவிக்கவிட்டு மகா சமாதி அடைவார் என நாம் ஒருபோதும் எண்ணியதில்லை.
சுவாமிகளின் பூர்வீக வரலாறு யாவையும் 1957ம் ஆண்டு மாசி மாதத்தில் தான் நான் அறியக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. எனது சகோதரன் தற்போது கோலாலம்பூரில் இருக்கும் பூரீ சிவானந்த சுப்பை யா ரிஷிகேசம் சென்று சுவாமிகளின் திவ்விய தரிசனம் பெற்று தனது ஜெனன பூமியாகிய எமது கிராமத்திற்கு வந்து தங்கியிருந்தபோது, சுவாமிகளைப்பற்றியும் அவரின் அரும்பெருந் தொண்டுகள் பற்றியும் தின மும் கூறி வந்தார்கள். சுவாமிகள் எழுதி வெளியிட்ட சில புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் செய்தார்கள். அவைகளை வாசிக்க வாசிக்க எனக்கு ஒர் பிரேமை ஏற்பட்டது. நான் இந்த உல கில் தான் இருக்கிறேனே வென ஐயுறவு ஏற்பட்டது. யாராவது ஏதும் கேட்கும் போது ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுவது போன்ற நிலமை சிலகாலம் எனக்கு இருந்தது. சில சமயங்களில் என் உள்ளத்திலிருந்து

Page 9
374 ஆத்மஜோதி
மசாடு போன்ற அழுக்கு திரை நீக்கம் செய்வது போல என் மனக்கண் தோற்றமளித்தது. சுவாமிகளின் போதனைகள் அனைத்தையும் அப்படி யே பின்பற்ற முடியாவிட்டாலும் என் சக்திக் கெட்டிய மட்டும் அன்ன ரின் போதனைகளைப் பின்பற்ற முயற்சித்தேன். அன்று தொடக்கம் சுவாமிகளையே எனது கண் கண்ட தெய்வமாகவும் சற்குருவாகவும் போற் றி வணங்கி வரலானேன். 1957ம் ஆண்டு மாசி மாதம் 3ந் திகதி முதல் முதலாக சுவாமிகளுக்கு ஒர் கடிதம் எழுதினேன். உடன் பதில் கிடைத் தது. அதன் மேல் தவருது மாசத்தில் ஒன்று அல்லது இரண்டு கடிதங் கள் வந்து கொண்டிருந்தன. சுவாமிகள் எழுதிய புத்தகங்கள் பல காலத் துக்குக்காலம் கிடைத்தன. என் சந்தேகங்களையும், என் சொந்த மனக் கவலைகளையும் ஒன்றும் மறைக்காதுகாலத்துக்குக்காலம்தக்க பதில் கிடைத் ததுமன்றி என் கவலைகளும் தீர்ந்தன. விரிவஞ்சி அவைகளை இங்கு குறிப் பிடாது விடுகிறேன். சுவாமிகள் எழுதிய கடிதங்களையெல்லாம் பொன் போல் பேணிக் காத்து வைத்திருக்கின்றேன்.
சுவாமிகளை ஒரு முறையாவது நேரில் தரிசிக்க வேண்டுமென்ற ஒர் பேர் அவா என் மனக்கண் புகுந்து விட்டது. இந்த அவாவை நிவிர்த் திசெய்து வைக்க வேண்டுமென்று தினமும் பிரார்த்திக்கலானேன். இமய மலைக்குப் போவது இலகுவான காரியமா? கொடுத்து வைக்க வேண்டு மெனப் பலர் கூறினர். சிறிய அளவில் தோன்றிய அவா இமயமலைபோல் வளர்ந்து வந்தது. குருதேவரின் பிறந்த தினத்தின் போது அங்குசென்று தரிசனம் பெறுவது கிடைத்தற் கரிய பேறு என, எனது சகோதரன் கூறி யிருந்தார்கள். அதுஎன் ஞாபகத்துக்கு வந்ததும், சுவாமிகளின் 73ஆவது பிறந்த தினத்திற்கு அவ்விடம் செல்வதெனக் உறுதி கொண்டேன். குரு தரிசனம் செய்யப் போகும் போது வெறுங்கை யோடு போவது சரியல்ல வென்றும், ஏதாவது ஒர் வெகுமதியுடன் செல்லல் வேண்டுமெனத் தோன்றியது. சுவாமிகள் பெரிதும் விரும்புவது "ஞான தானம்' என் பதை அறிவேன். ஆகவே சுவாமிகள் ஆங்கிலத்தில் எழுதிய (Feast of Wisdom) என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு சுவாமி இராமானந்தா வால் “ஞான விருந்து' என்ற தலையங்கத்துடன் எழுதப்பட்டு என் கை வசம் இருந்த்து. அதை அச்சிடுவித்து பிறந்த நாள் பரிசாக எடுத்துச் செல்ல வேண்டுமென விரும்பினேன். விருப்பமிருந்தும் பண நிலைமை சரி பில்லை. என்ன செய்வதென்றறியாது பகவானையே அல்லும் பகலும் வேண்டுதல் செய்தேன். "வேண்டுவார் வேண்டுவதை ஈ யும் பரமதயா ளன்' என் விருப்பம்நிறைவேற, பணத்துக்கு வழி காட்டி விட்டார்கள். "ஞான விருந்து' என்ற நூலில் நான் எழுதிய முகவுரையில் இதுபற்றி விபரமாக எழுதியுள்ளேன். புத்தக வேலை ஒருவாறு முடிந்தது. இனி யாத்திரைக்குத் தேவையான பணம் தேவை. அதற்கும் குருதேவர் வழி வகுத்தார்கள். கந்தோரிலும் கஷ்டமின்றி 45 நாள் லீவு கிடைத்தது. தற்சமயமுள்ள பிரயாணக் கட்டுப்பாடுகளுக்கும் நிவிர்த்தி செய்தாய்
 

ஆத்மஜோதி 375
விட்டது. இனிக் குருதேவரிடம் செல்வதென்ற சிந்தனையோடு இருக்கும்
போது எனது பாரியாரும் நம் கிராமத்திலுள்ள வேறு இரு சகோதரி
களும் தங்களையும் ரிஷிகேசம் கூட்டிச் செல்லுமாறு வேண்டிக் கொண்ட னர். நான் முன் ஒருபோதும் சென்றிராத இடம்.பல பாஷைகள் பேசும் தேசம். குளிர் அதிகமான காலம். செல்லுமிடங்களில் இவர்களை எங்கே தங்க வைப்பது என்ற பல சிக்கலான பிரச்சனைகள் தோன்றின. இவர் களின் வேண்டுகோளையும் மறுக்க முடியவில்லை. ஆகவே, எனது தர்ம சங் கடமான நிலைமை குறித்து குருதேவருக்கு விபரமாக எழுதினேன்? உடன் பதில் கிடைத்தது. ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். கவலையை விடு. உள் அன்போடு கடவுளை வேண்டுதல் செய். அவர் உடனிருந்து எல் லாம் இனிது நிறைவேற்றி வைப்பார். பயப்படாது அவர் க ளே யு ம் அழைத்துக்கொண்டு வாருங்கள் என எழுதியிருந்தார்கள்.அவர் கட்டளை யைச் சிரமேற்கொண்டு 1959ம் ஆண்டு ஆவணி மாதம் 21ந் திகதி இங் கிருந்து விமான மூலம் திருச்சி சென்ருேம், நாங்கள் அவ்விடம் சென் றது ஓர் சனிக்கிழமை, நாங்கள் எடுத்துச் சென்ற காசோலை உடன் மாற்ற முடியவில்லை. திங்கள் வரை அவ்விடம் தாமதிக்க வேண்டும். நாங்கள் போட்ட திட்டப்படி யாத்திரை செய்ய முடியாதிருந்தது. குரு தேவரை வேண்டுதல் செய்தோம். எமது நிலைமையை அறிந்த முன் தெரியாத ஒர் அன்பர் எமக்கு வேண்டிய பணம் தருவதாகவும் அதைத் திரும்பத்தரும்படியும் எங்கள் பொருட்களைப் பத்திரப் படுத்தி வைப்பத ற்கு இடவசதியும் செய்து தந்தனர். வேண்டிய பணத்தை அவரிடம் பெற்றுக்ெொண்டுஉடனேசே துவுக்குப்புறப்பட்டு, அங்கிருந்து இராமேஸ் வரம், காரைக்குடி, பழனி, மதுரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் கன்னியாகுமரி திருவாங்கூர் முதலாய இடங்களைத் தரிசித்துக் கெரண்டு மறுபடி திருச்சிவந்து சேர்ந்தோம், சுவாமிகள்எழுதிய வண்ணம்சென்ற விடமெல்லாம் பல அன்பர்கள் எமக்கு வேண்டிய எல்லா உதவிகளும் வசதிகளும் செய்து கொடுத்து, எம்முடன் துணைக்கு வந்து பல விடயங் களையும் காண்பித்து, ப ண ம் இல்லாத போதெல்லாம் தேவையான
பணத்தையும் தந்து உதவினர். இவை யாவையும் உன்னுந்தோறும் உள்ளம் உருகுகின்றது. குருதேவரே மாறுவேடத்தில் எம்முடனிருந்து இங்ஙனம் செயல் ஆற்றுகின்ருரோ வெனச் சில சமயங்களில் நாம் எண் ணியதுண்டு. எவரையும் முன்பு அறியாத அன்னிய தேசத்தில் இங்ங்ன மெல்லாம் நடந்தது, எமது நம்பிக்கையும், குருதேவரின் கருணை உள்ள முமே யென்பது எமது அசைக்க முடியாத துணிபு. மறுபடி திருச்சியி லிருந்து, சென்னை சென்று, அவ்விடமிருந்து, பம்பாய், அக்கிரு, டெல்கி, கரித்துவார் ஆகிய இடங்களுக்குச் சென்று 1959ம் ஆண்டு புரட்டாதி மாதம் 7ம் திகதி காலை 9 மணியளவில் ரிஷிகேசம் வந்தடைந்தோம். முன் கூறிய வாறு சென்னையிலிருந்து ரிஷிகேசம் வரையும் எமக்குப் பல

Page 10
376 ஆத்மஜோதி
அன்பர்களின் நட்பும் உதவியும் கிடைத்தன. ரிஷிகேசம் வந்ததும் எம் மைச் சுவாமிகளின் ஆச்சிரமத்திற்கு இட்டுச் செல்ல பஸ் உடன் குரு தேவரின் சீடர்கள் சிலர் காத்து நின்றனர். ஆச்சிரமத்திற்குச்சென்றதும் அவ்விடம் சுவாமி நிர்மலானந்தா அவர்களும் வேறு சிலரும் எம்மை வரவேற்று உடனே குருதேவர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று அவர் முன் னிலையில் நிறுத்தினர்.
குருபகவானைக் கண்டதும் ஆனந்த பரவசம் அடைந்தோம். குரு தெட்சணையாக நான் எடுத்துச் சென்ற "ஞான விருந்தை' அவர் பாத கமலங்களில் சமர்ப்பித்தேன். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு “ஞான விருந்தை' வினியோகம் ச்ெய்தார்கள். எனக்கும், என் கூட வந்தவர் களுக்கும் நல்லாசி கூறித் தமது திருக்கரங்களால் பலபுத்தகங்களும், பழம் முதலியனவும் கொடுத்து சுக சேமம் விசாரித்தார்கள். பகவான் நல்லாசி யால் எவ்வித கஷ்டமுமின்றி சுகமாக எமது யாத்திரை நடைபெற்ற தாக விடைபகர்ந்தோம். அடுத்த நாள் புரட்டாதி மீ" 8ந்திகதி சுவாமிக ளின் 73ஆவது பிறந்ததின வைபவங்கள். உண்மையில் கடவுள் தான்மானி டருபத்தில் இமயமலைச்சாரலில் வீற்றிருக்கிருர் என்ற எண்ணம் என் மனக்கண்முன்நிலவியது. கண் கொள்ளாக்காட்சி.குருவேரின் அன்பு,குறை யாது அள்ளிக்கொடுக்கும் திருக்கரங்கள் எவ்வித பாகுபாடுமின்றி யாவ ரையும் சமமாகப் பாவிக்கும் தத்துவம், அன்னரின் கருணை நிறைந்த பார்வை, இவையாவும் என்மனத்தைக் கவர்ந்து விட்டது. இவர்கடவுள் தான் என்பதில் ஐயமில்லை. குருதேவர் ஆச்சிரமத்தில் நாம் தங்கியிருந்த ஐந்து தினங்களிலும் நாம் கண்டவற்றை சிற்றறிவுள்ள என்னல் எழுதக் கூடியனவல்ல. ஒரு நாள் இரவு சத்சங்க வேளை, நான் ஒர் மூலையில் இருந் தேன். என்மனதில் சுவாமிகளைப்பற்றிய எண்ணம்தான். எ ன் பெ ய ர் கொல்லிச் சுவாமிகள் அழைத்தார்கள். எனக்கோ நடுக்கம் தொட்டுவிட் டது. பயந்து பயந்து அவர் அருகில் சென்றேன். அம்பொழுது பகவான் எனக்கு “குருபக்தரத்தின' என்ற ஓர் நற்சாட்சிப் பத்திரத்தை வழங்கி நல்லாசி கூறி, சாப்பிடுவதற்கு இனிப்புப் பண்டங்களும், பருகப்பானமும் கொடுத்தார்கள். பூர்வஜென்மத்தில் செய்து புண்ணியம்தான். இப்பிறப் பில் இந்த மகானத்தரிசிக்கும்பாக்கியம் கிடைத்ததென்பது எனது முடி வான தீர்மானம். அன்னரின் ஆச்சிரமத்தை விட்டு வெளிப்பட மனமில் ல7 திருந்தும், பகவானின் நல்ல சியுடன் மறுபடி டெல்லி அயோத்தியா அலகபாத் காசி, கல்கத்தா,சென்னை,சிதம்பரம்,சீர்காழி,வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய இடங்களையும் தரிசித்துவிட்டுஎமதுஜெனனபூமிக்கு1959ஆ ஐப்பசி மீ" 3ந் திகதி குருாதவர் அருளால் சுகமே திரும்பினுேம்.
என்சிற்றறிவுக்கெட்டியமட்டில்நம்பிக்கையும்,உள்அன்பும் ஒருவர் பால் இருப்பின் எக்காரியமும் எவ்விதகஷ்டமுமின்றிஇனிது நிறைவேறும்
 
 

ஆத்மஜோதி 377
என்பது எனது அசைக்கமுடியாத துணிவு. மனுேசக்திக்கப்பாற் பட்ட எதுவுமில்லை.
குருதேவரைப்பற்றி எழுதும் சக்தி சிறியேனுக்கில்லை. என் வாழ்க் கையில் நான் அன்னுரை எனது தெய்வகாகவும் குருவாகவும், போற்றி விணங்கத் தொடங்கிய காலந்தொட்டு இன்றளவும், நான் என் சொந்த அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மைகள் அனந்தம். அவற்றைவிரிவஞ்சி இங்கு குறிப்பிடாது விடுகிறேன்"
மானிட ஜென்மம் எடுத்த யாவருக்கும் மறதியும் உண்டு. சுவாமி களே மறதியைப் பற்றியும் ஒர்புத்தகம் எழுதியுள்ளார். இன்றுநடப்பவற் றையும், சிலதினங்களில் மறந்துவிடுகின்ருேம். ஆனல் என்னைப்பொறுத்த வரையில் குருதேவரின் ஞாபகம் ஏற்றும் என்றும் என்மனக்கண் தோற்ற மளிக்கிறது. எதைமறந்தாலும் எவ்வித இன்பதுன்பங்கள் நேர்ந்தபோதும் குருதேவரைப்பற்றிய சிந்தனை மாற்றமடைவதில்லை. சகவ, ஜீவராசிகளி டமும் வியாபித்திருக்கும் ஆத்மா ஒன்றேயென்பது சுவாமிகளின் அடிப் படைத்தத்துவம். அன்னர் எழுதும் கடிதங்கள் யாவற்றிலும் தமது ஒப் பத்துக்குமுன் (Thy Own See) தங்கள் சொந்த ஆத்மா எனக்குறிப்பிட்டு ள்ளார்: மேற்கூறப்பட்டவை காரணமாகவே அறிவிலியாகிய நான் குரு தேவரைப்பற்றி எழுதப்புகுந்த இக்கட்டுரைக்கு 'பகவான்சற்குருசுவாமி சிவானந்தர் உள்ளம் கவர்கள் வன்' என்ற தலையங்கத்தைக் கொடுக்க முற்பட்டேன்.
கலியுகத்திலே, சுவாமிகளைக் குருவாகப் போற்றி அவர் தரிசனம் பெற்ற யாவரும் பூர்வஜென்மத்தில் பெரும்புண்ணியம் செய்த ஆத்மாக் கள் என்பதை எவரும் மறுக்கார். சுவாமிகளின்ஆத்மா பூதவுடலில் கட் டுண்டு இருந்தகாலத்தில் அகில உலக மக்களினதும் ஆத்மீக முன்னேற் றத்துக்காக சாதிசமய வேறுபாடின்றி ஆற்றிய சேவைகள் எழுத்திலடங் கா. இனி பகவானின் ஆத்மீக சக்தி அகில உலகிலும் வியாபித்து, உலக மக்கள் இனிதுவாழ வேண்டுமென எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த, கரு னைக் கடலை வேண்டுதல் செய்வோமாக!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஒம் சாந்தி
长
கடவுள் உனக்கு மிகவும் அருகிலுள்ளார்; உனது மூச் சையும் விடச்சமீபத்திலுள்ளார்; கைகால்களையும் விடப் பக்கத் திலுள்ளார்; அவர் உன் இதயத்திலேயே வசிக்கின்றர் அவர் உனது ஆத்மன் - சிவானந்தர்

Page 11
378 ஆத்மஜேபதி
N" ஜோதியே நீ மறைந்தனையோ 除
个 - மட்டுநகர் ஏ. பாக்கியமூர்த்தி ஆசிரியர் - 尔
இவ்வுலகில் வாழ் உயிர்களெல்லாம் துன்ப நீக்கத்திற் கும் இன்ப ஆக்கத்திற்குமே அல்லும் பகலும் அனவரத மும் பாடுபடுகின்றன. இதனுலன் ருே நம் தமிழ்ப் பெரு மக்கள் எல்லாம் வல்ல இறைவனை இன்ப உருவினன் என் னும் பொருள்படக் கூடியதாக சிவன்’ என்னும் பெயரா லும் துன்பத்தை நீக்குவேன் என்னும் பொருள்படக் கூடி யதாக உருத்திரன்’ என்னும் பெயராலும் அழைத்தார் கள். மக்களின் இன்ப ஆக்கத்திற்கும் துன்ப நீக்கத்திற் கும் தன் வாழ்நாள் பூராகவும் பாடுபட்ட பெருந்தகை சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள். இதனல் தானே என்னவோ சுவாமிகளின் பெயர் சிவம் + ஆனந்தம் என முதல்வனின் பெயரோடு இயைந்து வந்தது போலும் அதோடு மட்டுமல்லாமல் சுவாமிகள் ஒர் அறிவுக் கடல் என்பதை "சரஸ்வதி' என்னும் சொல் கூருமல் கூறுகின் றது. எனவே சுவாமிகள் தம் வாழ்நாட்களில் ஓர் அரு மருந்தாகவும் அறிவுக் கடலாகவும் விளங்கியுள்ளார் என் முல் மிகையாகாது.
சுவாமிகள் மக்களின் சேவையே தன் வாழ்க்கையின் குறிக் கோளாகக் கொண்டார். உலகிலுள்ள எத்தனையோ வகையான சேவைகளில் மிகவும் உயர்ந்ததும் உன்னதமா னதும் பிரதியுபகாரம் கருதாததும் அன்பும் பண்பும் தயாள குணமுடையது மானது வைத்திய சேவை ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. இச் செல்வத்தை அடை யவே எல்லா உயிர்களும் விரும்புகின்றன. சேவையுணர்ச் சியும் அன்பும் அருளும் ஒருங்கே பெற்றிருந்த சுவாமிகள் தமது வாழ்க்கையில் வைத்தியத் தொழிலை மேற் கொண் டது புதுமையன்று. தவமும் தவமுடையார்க் கல்லது பிறர்க்கில்லை என்பது போல் எதிர்கால வாழ்க்கைக்கு வித் திட்டது தொழில். சேவை செய்தார். உலக வாழ்வை உதறித் தள்ளினர். இறைவன் உண்மையை அறிவால் அறிந்து உணர்வால் உணர்ந்தார். எல்லா உயிர்களிடத்தி

ஆத்மஜோதி 379
லும் இறைவனைக் கண்டார். ரிசிகேசம் சென்று ஆனந்தக் குடீரத்தை ஆரம்பித்தார்.
தமது தபோ வலிமையினுல் தீராத நோயெல்லாம் தீர்த்தார். தம் அன்பர்களுக்கு ஏற்படவிருந்த எத்தனை யோ ஆபத்துக்களையும் விபத்துக்களையும் அவ்வவர்கள் தியா னத்தில் தோன்றியும் தொலைவிலுணர்தல் மூலம் அவ்வப் போது அறிவுறுத்தி அவர்களைக் காப்பாற்றியதாகவும், அதை அனுபவித்த பல பெருமக்களின் வாயிலாக அறியக் கிடக்கின்றது. உதாரணமாக டெல்லியைச் சேர்ந்த பேரா சிரியர் C. P. சர்மா என்பர் தனது அனுபவத்தைப் பின் வருமாறு கூறுகின்றர்.
‘நான் குளிர் சுரத்தால் மிகவும் தாக்கப்பட்டு ஐந் தும் கெட்டு அறிவும் கெட்ட நிலையில் மரணப் படுக்கை யில் கிடந்தேன். என்ன நடந்ததென்பதே தெரியாது. பின்பு நடந்ததை என் தாயார் மூலம் அறிந்தேன். அன்று காலை ஓர் தபால் சேவகன் எங்கள் வீட்டிற்கு வந்து சுவாமி சிவானந்த சரஸ்வதியிடமிருந்து வந்திருந்த ஒர் பார்சலைக் கொடுத்தான். அதனுள் பிரசாதமும் விபூதி குங்குமப் பட்டைகளும் சில துளசி இலைகளும் இருந்தன. எனது தாயார் சுவாமிகளின் பிரசாதத்தை எனது வாய்க் குள் வைத்ததும் அறிவிழந்து மூடப்பட்டிருந்த கண்கள் திறக்கக் கண்டாளாம். அதன் பின் என்னைப் பீடித்தி ருந்த கொடிய சுரம் படிப்படியாக நீங்கத் தொடங்கியது.
இவ்வாறு எத்தனையோ செயற்கரிய அரும் பெரும் செயல்களைச் செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் சுவாமிகள். உலகின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்க ணக்கான கடிதங்கள் சுவாமிகள் செய்த அற்புதத்தை வியந்து ஆச்சிரமத்திற்குத் தினசரி வந்து குவிந்த வண்ண மாகவே இருக்குமாம். சுவாமிகள் இதைப் பற்றி எவ்வித பெருமையும் அடையாமல் எல்லாம் அவன் செயல் என்று திருப்தி யடைவாராம்.
எல்லாவற்றிலும் மிக ஆச்சரியப்படத் தக்க செயல் என்னவெனில் ஒரு சதமும் முதலில்லாமல் ஒரு மாபெரும் ஸ்தாபனத்தை ரிசிகேசத்தில் நடாத்துவதும் ஆச்சிரமத்தில் இந்தபருடியே உலகின் எட்டுத் திக்குகளிலும் அருள்பா

Page 12
380 ஆத்மஜோதி
லிக்கச் செய்வதுமே என்று சுவாமி வெங்கடே சானந்தா கூறுகிருர்,
அன்பர்களே நாம் எல்லாம் வல்ல இறைவனை தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னை 'வைத்தீஸ்வரன்' வைத்தியநாதன்' என்றெல்லாம் அழைக்கிருேமல்லவா?
அப்பெருமானின் திருவருட் பேறுபெற்ற அடிகளார் சுவா
மிஜி, அவர்களும் மக்களின் உடல் நோயை மட்டுமல்லா மல் உள நோய்களை மாற்றியும் பிறவி நோயைத் தீர்ப்ப
தற்கு வழிவகைகளைக் காட்டியும் பணி செய்தார்.
அன்னர் மகா சமாதி அடைந்ததையிட்டு அனுதாபப் படும் இக் காலத்தில் எதற்காக இப்படிப்பட்ட பெரியார் களின் குருபூசைகளையும் பிறந்த தினங்களையும் நூற்ருண்டு விழாக்களையும் கொண்டாட வேண்டும் என்னும் ஒர் வின எல்லாரிடத்தும் ஏற்படுவதுண்டு. மும்மலங்களையுடைய நம்போன்ற சகலர்கள் இறைவனை எளிதில் உணர்ந்து அனு பவிக்கக் கூடியவர்களல்ல. பழக்கப்பட்ட மிருகங்களைக் கொண்டு காட்டு மிருகங்களைப் பிடிப்பது போல இறை வன் தானே நேரில் வந்தோ அன்றேல் இறைவன் அருள் பெற்ற அடியார்கள் மூலமோ குருவடிவில் வந்து ஆண்ட ருள்வான் என்ப்து சைவ சித்தாந்த உண்மை. இதற்கு எடுத்துக் காட்டாக சுவாமி மாணிக்கவாசகருடையதும் மற்றும் பல சமயத் துறைகளினதும் வாழ்க்கை வரலாறுக களிலிருந்தும் அறியக் கிடக்கின்றது. இதையே திருவருட் பயனும் 'பார்வையென மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை யெனக் காணுர் புவி' என்றும் ** அகலத் தருமருளை யாக்கும் வினை நீக்குஞ்
சகலர்க்கு வந்தருளுந் தான்' என்றும்
கூறுவதைக் காணலாம்.
எனவே சுவாமி சிவானந்தர் போன்ற குரு தேவர்கள்
இறைவனுகவே கருதப்பட வேண்டியவர்கள். அவர்கள் இக் குரு வடிவெடுத்தது நம்மை வழிப்படுத்தி நெறிப்படுத்தி
இறைவனை அடைவதற் கேற்ற வழிவகைகளைக் காட்டுவ
தற்கே. இவ்வதிக உத்தம சீலர்கள் இவ்வுல்க வாழ்வில் பலரால் மதிக்கப்படுவதில்லை. கல்லால் எறிபட்டார் யேசு. பல தொல்லைக் குள்ளானர் நபி. நீற்றறையில் பூட்டப்
பட்டார் அப்பர். இது சரித்திரம் கூறும் உண்மை. ஆனல் சிலரே குருதேவரவர்களின் உள்ளத்திலுள்ள திருவருளை யுணர்ந்து இறைவனைப் போற்றி நடப்பவர்கள். அன்னர்
 

ஆத்மஜோதி 381
மூலமே குருதேவர்களின் புகழ் உலகெங்கும் பரப்பப்படுவது. குருதேவர்கள் உலகமுள்ள காலம் வரை போற்றிப் புகழ வேண்டியவர்கள். அவர்கள் மூலமே உலகம் வீட்டின் பத் தை அடைவதற்குரிய பல வழிவகைகளைக் கேட்டும் சாதனை மூலமும் நன்கு அறிகின்றது.
இதைச் சுவாமி சிவானந்தர் தமது குரு பூர்ணிமாச் செய்தியில் விவேக சூடாமணியில் வரும் ஒர் வாசகத்தால் பின்வருமாறு விளக்குகிருர் . 'மூன்று பெரும் பேறுகளை அடைவது மிகவும் கடினமானது. முதலாவதாக இறைவனின் பேரிரக்கமும் அருளுமில்லாவிட்டால் உயிர்கள் மனிதப் பிறவியை எடுத்திருக்கமுடியாது. இறைவனுல் உயிர்கட்கு கொடுக்கப்பட்ட மிகவும் புனிதமான பிறவியே மனிதப் பிறவியாகும். மனிதப் பிறவியை எடுத்தாலும் பந்தபாசங் களிலிருந்தும் பிற துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று விட்டால் இரண்டு பேறுகளைப் பெற்று விட்டோம் என்று பொருள். அதன் பின்னர் நல்ல ஞானுசாரியனையடைந்து அவன் பொருட்டு உண்மையைக் கண்டு அதனை அடைய வேண்டிய வழிவகைகளை அறிந்து அதற்கமைய இயைந் தொழுகுவது மூன்றுவது பெரும் பேருகும். எ ன  ேவ இறைவன் தந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உண்மைப் பொருளை அறிமின்கள். *
சுவாமி சிவானந்தர் போன்ற குருதேவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து வீட்டின்பத்தை அடைவது இயற்கையா யினும்; அன்னரின் பிரிவு எம்மை ஆற்ருெண்ணுத் துயரத் தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் பத்தைத் தருவது இறைவ ணுகவிருந்தாலும், அந்நெறிக்கு வழிப்படுத்துவதற்கு குரு தேவர்கள் தேவை. நன்னெறியில் வழிப்படுத்தி நம்மை உய்விக்கவந்த சுவாமி சிவானந்த சரஸ்வதியை எப்பிறப் பில் காண்போமே? இறைவா! இன்றைய உலக நிலையில் எங்கள் சிவானந்தரை ஏன் எடுத்தனையோ? இமய ஜோதியே நீ மறைந்தனையோ? அன்றேல் மீண்டும் எங்கள் மத்தியில் தோன்றுவாயோ? மாமுனிவர்களல்லவா மக்களுக்கு உண் மையான வாழ்வளிப்பவர்கள். அவர்கள் தந்த வாழ்வைக்
கொண்டல்லவா மறை முதல்வன் வீடளிப்பான்.
'கூழுடையார் கூழலரிப்பார் கோமக்கள் பொன்னளிப்பார் ஆழிமணிமுடி வேந்தரகனிலத்தை எமக்களிப்பார் கீழ் மக்கள் வசையளிப்பார் கேள்வியிலார் நகையளிப்பார் வாழ்வளிப்பார் மாமுனிவர் மறைமுதல்வன் வீடளிப்பான்
விபுலானந்த அடிகளார்.

Page 13
382 ஆத்மஜோதி
YAN స్ట్రోపోజిణ కొణిజ్యాణ్ణిణిజిస్ట్ *சிவானந்தர்: சைதன்யம்) :
திவ்விய ஜீவன சங்க ஸ்தாபகரும் தலைவருமாகிய பூரீலபூரீ சுவாமி சிவானந்தர் இயல்பான உளச் சமநிலை வாய்ந்த உலகாசிரியர், பிரம்ம சுரோக்திரியர், பிரம்ம நிஷ்டராய்த் திகழ்ந்தார்.
அவர் உலக சேமத்தின் பொருட்டு பிரவிருத்தி மார்க் கத்தில் நிவிருத்தி வாழ்வு, விசைத்திறம் பொருந்திய திவ் வியசக்தி வாழ்வு வாழ்ந்தார்கள். அவருள் ஞானத் என்றும் சுவாலித்துக் கொண்டிருந்தது. அவரது வாழ்வு உண்மையை உணர்ந்த பண்டைய தீர்க்க தரிசிகளின் அனு பவ சாத்தியமான மெய்ஞ் ஞானத்தில் அடிப்படை கொண் 1.தி
அவர் மனித குற்றங் குறைபாடுகளையும் ஆணவ அல் லது மாயா மயக்க இருளையும் போக்கடிக்கும் சூரியனுக வும், வேதங்களின் உயிர் வாழும் திருவுருவாகவும், பரித் தியாகம், அர்ப்பணம், அநுபூதியின் தோற்றமாகவுந் திகழ்ந் தாT,
அவர் என்றும் முக்கால முழுமையிலும் முடிவின்மை யிலும் வசித்தார். அவர் உணர்ச்சி மிகுந்த உத்தம புரு ஷராயும் மனித இன ஒருமையின் தோற்றமாயும் விளங் கினர். அவர் அப்பரின் கைத்திறனையும் புத்த பிரபுவின் இருதயக் கணிவையும் ஆதி சங்கரரின் அறிவாற்றலையும் பெற்றிருந்தார்.
அவரது வாழ்வும் போதனைகளும் பலரின் வாழ்வைத் திருத்தி யமைக்கின்றன. அவர் விசைத்திறம் வாழ்ந்த எழுது கோலால் தமது ஞான யாகத்தைச் சுவாலிக்கச் செய்தார். அவர் பண்டைய மெய்ஞ் ஞானத்தை உபநி ஷத ரிஷிகளால் அளிக்கப்பட்ட பொக்கிஷத்தை எளிய ஆங்கிலத்தில் எமக்குத் தந்திருக்கிருர்,
 
 
 
 
 

ஆத்மஜோதி 383
சுவாமி சிவானந்தா பிரசாரஞ் செய்த பொதுத் திவ் விய வாழ்வு மார்க்கத்தைப் பின்பற்ற விரும்பினுல் வாழ் வில் மனக் கிலிக்கும் மனக்கசப்புக்கும் பதிலாக மன அமை தியும் மனமகிழ்ச்சியும் உலகெங்கும் இருக்கும். அவர் தம் கடம்ையைச் செய்து முடித்து 14-7-63இல் மகா நிர்வா ணம் எய்தினர். இப்போது அவரது போதனைகளை மேற் கொண்டு வாழ்வது எம் கடமை. யாம் அவரது உண் மைக் குழந்தைகளாகவும், உண்மைப் பக்தர்களாகவும், உண்மைச் சீடர்களாகவும் விளங்குவோமாக, யாம் அவரை எம் இருதயத்திற் பிரதிஷ்டை செய்து அவருடன் ஒன்
ருகுவோமாக.
'சாந்தி நிலவ அருள் ஜோதி சிவானந்தா'
- நாதகலாமணி -
~శ-స్త్రీక్ష్యప్టోడా
பல்லவி
சாந்தி நிலவ அருள் ஜோதி சிவானந்தா சாயுச்ய சமாதியில் சற்குரு மகராஜ் நீ (சாந்தி)
அனுபல்லவி
மாந்தருள் மாணிக்கமே! மாமலே இமயத்தில் சேர்ந்திடும் ரிஷிகேசம் சோர்ந்திடப் பிரிந்தனையே (சாந்தி)
சரணம்
கங்கைக் கரைதனிலே தங்கு மானந்தக்குடீரில் பொங்கும் அருள் அன்பு தந்த இன்பமே சிவானந்தமே!
மங்கா மகா சமாதி மிளிரும் விண் ஜோதியே! எங்கும் திவ்யஜீவனமே மங்களமுட னுேங்கவே. (சாந்தி)

Page 14
அமரர் சிவானந்தா
இமயத்தின் தீபஜோதி அணைந்து விட்டது. தெய்வீக ஒளி மறைந்து விட்டது. காரிருள் எங்கணும் சூழ்ந்து விட்டது. உள்ளம் பதைக்கிறது. கண்ணிர்ஆருய்ப்பெருகிறது.
தன்னை நாடி வந்தவர்களை எல்லாம் இன் முகத்துடன் வரவேற்று அவர்களுடைய துயரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் மொழியும் அறவுரைகளும் இயம்பிய அந்தக்குமுதச் செவ்வாய் தெய்வீகப் புகழை முழக்கிய அந்த மலர்வாய் இனிமேல் திறக்கமாட்டாது.
ஏழைகளுக்கெல்லாம் செல்வத்தை வாரி வாரி வழங்கிய மணிக்கரங்கள். நோயுற்றவரை எல்லாம் அன்னை போன்று ஆதரவுடன் பேணி பாதுகாத்த கரங்கள், ஆயிர ஆயிர மாக இறைவன் புகழை எழுதிக் குவித்த கரமலர்கள், இனிமேல் அசையமாட்டா.
மனித சேவையே இறைவன் சேவையாக எண்ணிஎத் தனையோ மைல் தூரங்கள் பாத மலர்கள் நோக நடந்து துன்பப் படுவோர் துயரம் துடைத்த அந்தப் பாதங்கள் இனிமேல் நடக்கமாட்டா.
பாவியமனே! உனக்கேன் இந்தக் கொடிய நெஞ்சம்? உலகில் எத்தனையோ குருடும் நொண்டியும் குடுகுடு கிழங் களும் இருக்க எங்கள் இன்னுயிர்த் தெய்வத்தை எங்களிட மிருந்து பிரித்து விட்டனையே.
அந்த மகான் இன்னும் பல வருஷங்கள் பூவுலகில் வாழ்ந்து தெய்வீக ஒளியைப்பரப்புவார்; எங்கள் வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையாவது ரிஷிகேசம் சென்று அந்தப் புனிதனுடைய பாதகமலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் அடைவோம் என்று எண்ணி இருந்த எத்தனையோ அன் பர்களுடைய உள்ளத்தை ஏமாற்றத்தால் வெம்பச் செய்து விட்டனையோ இது என்ன நீதி!
 

ஆத்மஜோதி 385
மூட நெஞ்சமே? ஏன் வீனில் புலம்புகின்ருய்? அந்த மகான் அருகில் கூட நெருங்கத் தைரியம் உண்டா யமனுக்கு? 'காலனே சற்று என் கைக்கிட்டவா? பார்க்கலாம் உன் தைரியத்தை' என்று சவால் விட்ட வீரபக்த சிகாமணி கள் பரம்பரையில் தோன்றியவரல்லவா அவர்? காலன் ೨೩16ೇ। அணுகுவாணு?
வானுலகத்துத் தேவர்கள் பார்த்தார்கள். ஆகா, இந்தப் பூலோகத்து மனிதர்கள் எத்தகைய பாக்கியம் செய்தவர் கள். எங்கள் சிவானந்தச் செல்வத்தை முழுக்க முழுக்கத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டார்களே? அவருடைய அன்பென்னும் அமுத தாரையில் மூழ்கித் திளைக்கிருர்களே, நமக்கு இந்தப்பாக்கியம் இல்லையே என்று ஏங்கிய தேவர்கள் தேவேந்திரனிடம் சென்று முறையிட்டார்கள்.
தேவேந்திரன் சேவகர்களை அழைத்தான். உடனே புஷ்பக விமானத்தைக் கொண்டு சென்று நம் சிவானந்த மகரிஷியை தக்க மரியாதையுடன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள் என்று கட்டளை இட்டான்.
கைலாசத்தில் தேவி இறைவனிடம் 'பிரபு எத்தனை நாள் நம் குழந்தை சிவானந்தனைப் பிரிந்திருப்பது? எனக்கு ஒருநாள் போவது ஒரு யுகம் போலத் தோன்றுகிறது. நம் குழந்தையைச் சீக்கிரம் நம்மிடம் வரவழைக்கக் கூடாதா?’’ என்று துயரக் குரலில் முறையிட்டாள். 'தேவீ ஒரு வினுடி பொறுத்துக்கொள்' என்று கூறிய கைலாசபதி 'யாரங்கே? என்ருர், நந்திகேசுரர் அடக்க ஒடுக்கத்துடன் வந்து வணங்கி நின்றர். உடனே பூவுலகம் சென்று நம் குழந்தை சிவானந்தனை தங்கரதத்தில் ஏற்றி அழைத்து வாரும் என்ருர். இதோ போகிறேன் என்று கூறிய நந்தி பகவான் விரைந்து சென்ருர்,
வைகுண்டத்தில் லக்ஷமி தேவி தனிமையில் துடித்துக் கொண்டிருந்தாள். , பிரபோ? தங்களுக்கு என்னைப் பற்றிய கவலை சிறிதும் இல்லை. பூவுலகத்து மனிதர்களைப் பற்றித்
தான் சதா எண்ணம். தர்மம் குன்றி அதர்மம் அதிகரிக்கும்
போதெல்லாம் தர்மத்தை நிலைக்கச் செய்யவும் அதர்மத்தை அழிக்கவும் நான் அவதரிக்கிறேன்' என்று வா க்கு க் கொடுத்து விட்டு அடிக்கடி என்னைத் தவிக்க விட்டு அவர் களிடம் ஒடோடியும் சென்று விடுகிறீர்கள். இனிமேல் இத் துன்பத்தை என்னுல் சகிக்க முடியாது.

Page 15
386 ஆத்மஜோதி
லசுஷ்மி கருடாழ்வாரை அழைத்தாள். உடனே சென்று நம் இறைவனை அழைத்து வாரும் என்று கட்டளை இட்டாள். கருடாழ்வார் காற்றினும் கடு வேகமாக ரிஷிகேசத்தை நோக்கிப் பறந்து சென்ருர்,
ஆனந்த குடீரத்தின் வாசலில் அத்தனை தேவர்களும் காத்திருந்தார்கள். சிவானந்த மகானைத் தம், தம், பதிக்கு அழைத்துச் செல்ல சிவானந்தர் மந்தகாசமான முறுவலுடன் அவர்களைப் பார்த்தார் ‘நீங்கள் யாவரும் வெறும் கையுடன் திரும்ப வேண்டியதுதான். என்னுடைய அன்பர்கள் என் தங்களுடைய இதயத் தி லே தூய அன்புத் தளையினுல் பிணைத்து விட்டார்களே? அதிலிருந்து என்னுல் எப்படி விடுபடமுடியும் என்ருர்? தேவர்களும் நந்திபகவானும் கருடாழ்வாரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்கள்.
ஆம் சிவானந்தர் எம்மை விட்டு எங்கும் போகவில்லை. எங்கும் போகவும் மாட்டார். எங்களுடைய இதயங்களிலே எங்களுடைய வாக்கினிலே எங்களுடைய எண்ணத்திலே எங்களுடைய செயல்களிலே அவர் என்றும் சிவானத்த மயமாக நிறைந்திருப்பார்.
<><<><>>>><>><>><>><><><><>><>><>><><><>><>
ஆத்மஜோதி மலர்
ஆத்மஜோதியின் 15 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி விசேட மலர் ஒன்று தயாராகிறது.
நவராத்திரி தினத்தன்று வெளியாகிறது.
வேண்டுவோர் தமது சந்தாப் பணங்களோடு 2-50 மேலதிகமாக அனுப்பிவைக்க வேண்டுகின்ருேம்.
மலர் விலை 2-00 ரூபா. தபாற் செலவு 50 சதம்,
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி - சிலோன்.
 
 

ஆத்மஜோதி 387
இமய ஜோதி பரஞ் ஜோதியாயது
குருதாசன்
சிவானந்த சிவானந்த சிவானந்த பாகிமாம் சிவானந்த சிவானந்த சிவானந்த ரக்ஷமாம்
காலை 6.30 திங்கள் 15-7-63. டில்லி வானெலி ஏதோ அமளிகரமாகத் தோன்றியது. சிவானந்த சரஸ்வதி ' ' திவ்ய ஜீவன சங்கம் 'தொடர்பற்றவதந்தி தொனித்தது" இருதயம் கலங்கியது. ம ன ம் பதற்றமும் நடுக்கமுமுற்று 8-மணி ஆங்கில அஞ்சலில் என்ன விபரமோ என்னும் ஆவ லாய் மனதைத்தைரியமாகத் தயார்ப் படுத்திய வண்ணம் பிரார்த்தனையில் ஈடுபடலாயிற்று. அந்தோ பேரிடியானது. மணி 8 அடித்து ஒய்ந்ததும் சோகச்செய்தி. ' ரிசிகேஷ் சிவா னந்த சரஸ்வதி இரவு நெஞ்சடைப்பபால் மரணமானுர்,
எம் குருநாதர் ஏதோ ஒரு நாள் பூ த உ ட லை நீக்க வேண்டியதே என்னும் உண்மை நன்கு அறிந்தும் மனுஷ இயற்கை மேலீட்டினுல் தாயைப்பிரிந்தசேயன்போல் சோகம் மேல் பட்டது. சிறிதுநேரம் ஆவதெல்லாம் இறை ஆக்ஞை யன்றிப் பிறிதில்லை என உணர்ந்து, இனிக் குருதேவரின் மகா சமாதி ஞாபகார்த்தமாக ஏது செய்வோ மென ஆலோ
சனை கேட்கத் தற்காலிகமாக யாழ்நகரில் தங்கியுள்ள யோகி
ராஜ் சச்சிதானந்த மகாராஜைக் சந்தித்துப் பேசியவரை யில் தான் உடனே ரிஷிகேசம் போய் அங்கு வைபவங்களில் கலக்கத் தீர்மான மென்றும் இவ்விடம், பிரார்த்தனைகள், அகண்டநாம செபங்கள் மகா மந்திரம் அடிப்படையாயி ருக்கச் செய்தல் நன்றென்று சொல்லிப்பிரிந்தார்.
இவ்வைபவங்கள் 15/7 தொடக்கமாக மாலைகளில் தினம் ஒர் மணித்தியாலம் குறை வின்றிப் பிரார்த்தனை செபங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், வீடுகள், வசதிக் கேற்ப நடை பெறுகின்றன. அடியார்கள் திரளாகப் பங்குபற்று கின்றனர்.

Page 16
388 当 ஆத்மஜேர்தி
எம் குருநாதர் பூத உடல் நீக்கி நித்தியானந்தஜோதிப் பிழம்பில் கலக்கலாயினர். ஊனக் கண்ணுல் இனிப்பார்க்க இயலாது. ஆனல் பரிசுத்த மனமுடைய அடியார்களின் ஞானக் கண்களில் என்றும் போல் தோற்றமாகவே இருப் பார். வழமை போல அவரின் திருவருள் அடியார்கள் : அனைவருக்கும் மழைமாரி போல் குறைவின்றிப் பெருகிய வண்ணமே இருக்கும்.
ஊனக் கண்ணுல் கண்டு அவரருகிருந்து அவரின் திவ்ய அருள் நோக்குக்கும் அன்புக்கும் பாத்திரமானவர்க ளுடைய பாக்கியமே பெரும் பாக்கியம்.
நாளடைவில் பொருள் காலம் வசதிக் கேற்பத் தரிச னம் காணக் காத்திருந்தவர்களின் நினைவெல்லாம் பகல் கன வாயது.
குருநாதரின் வாழ்க்கை லட்சியம் உளது. இக் கலி காலத்தின் கஷ்டங்கள் பொலிந்த இல் வாழ்க்கையான பிறப்பிறப்புச் சாகரத்தைச் சுலபமாக நீந்திக் கரையேற வழிகண்டு தன் வாழ்க்கையில் அனுபூதியார்த்தமா யமைந் துள்ள திவ்ய ஜீவன சங்க வழிமுறைகளை 1936ம் ஆண் டில் ஸ்தாபனம் செய்துள்ளார். அதில் அங்கத்தவர்கள் பரிசுத்த வாழ்வும் இறை நம்பிக்கையும் அவரின் நாம செபமும் தன்னலமற்ற அன்புச் சேவையுமே. இம்முறை யான தெய்வீக வாழ்வில் மனிதன் தெய்வமாவது திண் ணம். அவதானிக்க வேண்டிய நற்பண்புகள், சுயநலமற்ற சேவைத் தொண்டு, உலக சிருஷ்டி யாவற்றிற்கும் அன்பு காட்டி நடத்தல், அவை சொரூபங்களில் கடவுளையே காணல். ஊதியத்தில் சீவியார்த்த தேவை போக மீதியை கஷ்டங்களிலுள்ளார்க்குக் கொடுத்துதவிப் பழகுதல், உள் ளடக்கமாய் நிரம்பியுள்ள தீய குணங்களை நீக்கிப் பழகிப் பரிசுத்த அன்புச் சுத்தணுதல், அனவரதமும் இறை நாம ஜெபமே வழிகாட்டியாகும்படி பாராயணத்தால் லயம்பெ றுதல், இவையனைத்தின் பலன் அனுபூதிமானுவதே.
தெய்வீக மனுஷனுக எம்மோடுடன் வாழ்ந்தவர் பூத உடல் நீக்கி தேஷ்யஷ் உடலில் பரஞ் ஜோதியாய் நிறைந் துள்ளார், அந்த மகா புருஷரின் அன்பும் அருள் ஜோதி யும் எமக்கும் உலகம் முழுமைக்குமுண்டு,
 
 

ஆத்மஜோதி - 389
அவர் அமைத்துக் காட்டிய திவ்ய ஜீவன வழிப்படி நன்கு நாம் நடந்து சுயநலம் விடுத்துப் பலன் கருதாச் சேவை பல செய்து ஈஸ்வரனுல் தரப்பட்ட பணிகளனைத் தையும் மனப்பூர்வமாகச் செய்து தெய்வத்தின் திருப்பாதங்
களில் சமர்ப்பணமாகச் செய்து அவன் அன்புக்கும் அரு
ளுக்கும் பாத்திரமாய தெய்வீக மனிதர்களாக எம்மை மாற்றி யமைத்து வாழ்ந்து நாமும் சமுதாயமும் பேரின் பமாய நித்தியானந்தப் பரஞ் ஜோதியாகும் எத்தனத்தில் ஊக்கமுள்ளோராகி எம் குருநாதரின் திவ்ய அருள் முன் னின்று வழிகாட்டி இரட்சித்தருளப் பிரார்த்திப்போமாக.
ஒம் தத் சத் ஒம் இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!!
பூனி முன்னேஸ்வர பூரீ வடிவாம்பிகா ஸ்மேத முன்னநாதசுவாமி மஹோத்ஸவ விஞ்ஞாபனம்
7-8.63 கொடியேற்றம் 29-8-63 சிவனடியார் திருவிழா 308-63 பிக்ஷாடனர் திருவிழா 31-8-63 நடேசர் திருவிழா 1-9-63 வேட்டைத் திருவிழா 2-9-63 தேர்த் திருவிழா 3-9-63 தீர்த்தத் திருவிழா
சி. பாலசுப்ரமண்யக் குருக்கள்
帝(戈Q是英Q是對Q些美Q些美Q些病
ঈঙ্গি

Page 17
390 ஆத்மஜோதி
மகாத்மா
பூனி சுவாமி சிவானந்தர்
மகா சமாதி எய்தினுள்.
பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள் 1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஞாயிற் றுக் கிழமை இரவு 11. 55க்கு இமயமலை அடிவாரத்திலே சிவானந்த நகரில் கங்கைக் கரையிலுள்ள தமது குடிலில் மகா சமாதி எய்திஞர்.
ஜூன் மாதம் 25ஆம் தேதியிலிருந்தே சுவாமிகளின் உடல்நிலை திருப்திகரமாயில்லை. அன்று மாலை அவரால் சரியாக நடக்க முடியவில்லை. அத்துடன் வேறு சில அறி குறிகளும் காணப்பட்டதால் உடனே டில்லியிலிருந்து வைத்திய நிபுண ரொருவர் அழைக்கப்பட்டார். அவர் மறுநாளே ஆசிரமம் வந்து சேர்ந்தார். விரிவான பரிசோ தனக்குப் பின் சிகிச்சைக்கும் பராமரிப்புக்குமான திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது. இதற்குள் லக்னெளவிலிருந்தும் டேராடூனிலிருந்தும் வைத்திய நிபுணர்கள் வந்து சேரவே சிகிச்சைத் திட்டம் பூரணமாக்கப்பட்டது. பராமரிப்பும் சிகிச்சையும் இரவு பகல் தொடர்ந்து ஒழுங்கு முறைப்படி நடைபெற்று வந்தன. ஆனல் ஜூலை மாதம் 14ஆம் தேதி சுவாமிகளின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்து விட் 1 έδI
திடீரென்று எதிர்பாராத வகையில் ஏற்பட்ட முடிவு, சுவாமிகளின் உடல்நிலை குணமடைவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்த சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு பேரிடி
யாயிருந்தது. ஜூன் மாதம் 25ஆம் திகதி தமது
உடல் நிலை முதலில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அபாய நிலைக்குப் பின் பூரீ சுவாமி சிவானந்தர் அபாயத்தை முற்ருகக் கடந்து நன்கு குணமடைந்து வரு வதாகத் தோன்றியது. எனவே அவர் மறைவு அனைவர்க்

ஆத்மஜோதி 391
* கும் பெருந்துயர் அளிப்பதாய் உள்ளது. அவரது உடல் யில் காணப்பட்ட முன்னேற்றம் திருப்திகரமாக இருந் ததால், சிகிச்சை யளித்து வந்த வைத்தியர்கள் அவர் நிச் சயம் குணமடைந்து விடுவாரென்று நம்பினுர்கள். அவ ரது வயதையும், நீரிழிவு நோய் காரணமாகக் கடந்த பல ஆண்டுகளாய் அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்த மையையும் கருதும்போது, அவர் குணமடைந்து வந்த வேகம் வியக்கத் தக்கதெனக் கொண்டார்கள். ஜூலை மாதத் தொடக்கத்தில், தமது குடிலின் தாழ்வாரத்தில் உருண்டோடும் கங்கைப் பிரவாகத்தைப் பார்த்த வண்ணம் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கு மளவுக்கு அவரது தேக நிலை அபிவிருத்தியடைந்தது.
மக்கள் தாராளமாக வந்து அவரைத் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். குருபூர்ணிமைத் தினத்தன்று (ஜூலை 6ஆம் திகதி) மட்டும் சனக் கூட்டம் மிக அதிக மாயிருந்ததால் அவருக்குச் சிரமமாயிருக்கும் என்று பொது மக்கள் அவரைத் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனல் மறுநாள் மறுபடியும் யாவரும் அவரைத் தரிசித்துச் செல்ல அனுமதிக்கப் பட்டனர். சுவாமிகள் மீண்டும் உரையா டத் தொடங்கினர். அன்பர்களைப் பற்றி விசாரிக்கவும் சிலரோடு சில வார்த்தைகள் பேசவும் அவரால் முடிந் தது. ஜூலை 10 ஆம் தேதி யூனியன் சுகாதார அமைச்சர் டாக்டர் சுசீலா நாயரும் அவரது குழுவினரும் சுவாமிகளைப் பார்க்க வந்த போது சுவாமிகள் அவர்களுடன் உரையாடி அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் சாந்தியும் நல்வாழ்வும் தெய்வீக அரு ளும் வாய்க்க வேண்டுமென வாழ்த்தினர். ஜூலை மாதம்
12ம் ஆம் தேதி அவர் நலமாயிருந்தார். அவரது தேகநிலை
பற்றி இடைவிடாது விசாரித்து வந்த எண்ணற்ற அன்பர் கள் மகிழ்ச்சியுற்றனர். பத்திரிகைகளுக்கு நம்பிக்கை யூட் டும் செய்திகள் அனுப்பப் பட்டன. ஆனல் ஜூலை மாதம் 13ம் ஆம் தேதி சிறிதளவு குளிரும் பலவீனமும் ஏற்பட் டது. அவர் பேச விரும்பவில்லை. கெட்டியான ஆகாரம் எதையும் உட்கொள்ள மறுத்து விட்டார். ஆணுல் உடல் வெப்ப நிலையும் இருதயம் சுவாசப்பை ஆகியவற்றின் நிலை
யும் தொடர்ந்து திருப்திகரமாக இருந்ததால் கலவரம டைய வேண்டியதில்லை எனக் கருதப்பட்டது. எனினும்
டேராடூனிலிருந்து உயர்தர வைத்திய நிபுணர் ஒருவர்
வரவழைக்கப் பட்டார். ஜூலை 14ஆம் தேதி நண்பகல்

Page 18
392 ஆத்மஜோதி
அவர் வைத்திய பரிசோதனை நடத்தினர். அப்போதைய நிலை விரைவில் மாறிவிடும் என்றும் ஒரிரண்டு தினங்களில் சரியாகி விடும் என்றும் நம்பப்பட்டது. ஆணுல் விதி வேறு விதமாக நிச்சயித்து இருந்தது. வைத்திய நிபுணர் திரும் பிச் சென்ற சுமார் ஒரு மணி நேரத்தில் உடல் வெப்ப நிலை திடீரென அதிகரித்தது. அசதி தோன்றியது. சுவா மிகள் ஒய்வாயிருக்க விரும்பினர். மாலைக்குள் நிலைமை மிகச் சிக்கலாகி விட்டது. சுவாசிப்பதில் கஷ்டமேற்பட் டது. உடல் வெப்ப நிலை 103 பாகை வரை உயர்ந்து விட்டது.
இச் சமயம் உள்ளத்தைத் தொடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒராண்டு காலமாக வெளிநாடுகளில் இருந்த வரும் சுவாமிகளின் பக்தி மிக்க சீடருமான ஒரு வைத்தி யர் ஆபிரிக்காவிலிருந்து விமானத்தில் வந்து தமது குரு நாதரைச் சந்திக்க நேரே ஆசிரமத்துக்கு விரைந்து வந்து சேர்ந்தார். குருதேவரின் மானிட வாழ்க்கையில் கடை சிச் சில மணி நேரங்களுக்கு வைத்திய சிகிச்சை யளிக்கும் துன்பகரமான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனல் மெக்சிகோ விலிருந்து வந்த சாதகர் ஒருவருக்கு இந்த வாய்ப்பும் இருக்கவில்லை. தமது குருநாதரை முதன்முதல் நேரில் சந்திக்க இந்தப் பிரயாணத்தை மேற்கொண்ட இவ்வன்பர் குருதேவர் மகா சமாதி எய்திய பல மணி நேரங்களுக்குப் பின்பே ஆசிரமத்துக்கு வந்து சேர வேண்டு மென விதிக்கப் பட்டிருந்தது.
இந்தக் கடைசிநாள் மாலையிலுங் கூட டேராடூன் வைத்தியர் வந்திருந்த சமயத்தில் சுவாமிகளின் வழக்க மான ஹாஸ்யமும் இயல்பான விருந்தோம்புந் தன்மையும் வெளியாயின. வைத்தியர் அவருடலைத் தட்டிப் பார்த்த போது, உங்கள் இராணுவப் பயிற்சி உங்களுக்கு முரட்டுத் தன்மையை அளித்துள்ளது. என் உடலை முரட்டுத் தன மாகக் கையாளுகிறீர்கள் என்று சுவாமிகள் அவரிடம் வேடிக்கையாகக் கூறினர். வைத்தியர் மன்னிப்புக் கோரு முகமாக அது தவிர்க்க முடியாத தென்று விளக்கியபோது * உங்கள் கடமையை நீங்கள் செய்யத்தானே வேண்டும்’ என்று சுவாமிகள் அவரைச் சமாதானப் படுத்தினர். அதே சமயம் வைத்தியருக்கு உணவு முதலியன கொடுத்து அவரை உபசரிக்குமாறு தம்மை உடனிருந்து கவனித்து வந்த சீடர்களிடம் கூறினர். என்றும் பிறர் நலங் கருதும் இப்
 

ஆத்மஜோதி மலர் 393
பேரன்பும் உள்ளத்தைத் தொடும் விருந்துபசாரமும் கடைசி வரை அவரை விட்டுப் போகவில்லை, நீராகாரத்தைக் கூட விழுங்கக் கஷ்டப்பட்ட போதிலும் சுவாமி சிவானந் தர் கடைசி நாள் மாலை கங்கை நீர் கொண்டு வரச் சொல்லி யாதொரு சிரமமுமின்றிப் பருகியது அருகிலிருந்த சீடர்களுக்கு ஆச்சரியத்தை யளித்தது. அவர் கங்கையி டம் பேரன்பு கொண்டிருந்தார். தமது கடைசி நாளன்று கங்கையின் புத்தம் புதிய பனிநீரை அருந்தித் தாகத்தைத் தீர்த்துத் திருப்தி யடைந்தார்.
பூரீ சுவாமி சிவானந்தரின் இறுதிச் சடங்குகள் பரம ஹம்ச சந்நியாசிகளுக்குரிய சம்பிரதாய முறைப்படி நடை பெற்றன. தியானத்துக்கான ஆசனத்தில் கைகளைக்கோத்து அமர்ந்த நிலையில் சுவாமிகளின் புனிதவுடல்பல்லக்கில்எடுத்துச் செல்லப்பட்டது. அவரது முகத்தில் ஆழ்ந்த அமைதியும் கம்பீரமும் கர்ணப்பட்டது. இதற்கு முந்தைய 36 மணி நேரமும் அண்மையிலும் சேய்மையிலுமிருந்து அன்பர்களும் சீடர்களும் கங்கைக் கரையிலிருந்த அவரது குடிலை நோக்கி இடைவிடாது வந்தவண்ண மிருந்தனர். சுவாமிகள் தமது வாழ்க்கையின் பெரும்பாகத்தைக் கழித்ததும் தமது அந் திய காலத்தில் சுகவீனமுற்ற நிலையில் படுத்திருந்ததுமான குகை போன்ற அவரது உள்ளறைக்கு அவர்கள் சென்ற னர். பக்த கோடிகள் சம்பிரதாய முறைப்படி அமர்ந்த திருக்கோலத்தில் வைக்கப் பட்டிருந்த சுவாமிகளின் திரு
வுடலைத் தரிசித்துத் தாம் உயிர்க்குயிராய் நேசித்த அம்
மகானுக்கு மரியாதை செலுத்திச் சென்றனர். அவரது திருவுருவத்தினின்று தமது கண்களை அகற்றுவது அவர்க ளுக்கு மிகக் கடினமா யிருந்தது. எண்ணிக்கையில் மேன் மேலும் அதிகரித்த வண்ணம் முன்னேறி வரும் பிற அன்
பர்களுக்கு இடமளிப்பதற்கு அங்கிருந்து அகன்று மேலே
செல்லுமாறு அவர்களை நயமாகக் கேட்டுக் கொள்ள வேண் டியதாயிற்று. சுவாமிகளின் குடிலில் ஏற்கெனவே கூடியி ருந்த சீடர்களும் அன்பர்களும் நிகழ்த்திய திவ்யநாம பஜ
னையும் சங்கீர்த்தனமும் அங்கு எதிரொலித்தன. கங்கைக் கரையிலே அபிஷேகத் திரவியங்களாலும் பரிசுத் தமான கங்கை நீராலும் அபிஷேகம் செய்யப்பட்ட பின் காவியுடை தரித்த சுவாமிகளின் புனிதவுடல் மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது, வேத மந்திரங்களோடு, சுவாமிகள் 1950ஆம் ஆண்டு தம்

Page 19
394 ஆத்மஜோதி
சுற்றுப் பிரயாணத்தில் இமயம் முதல் இலங்கை வரை பரப்பியதும் அவருக்கு மிகவும் விருப்பமானதுமான மகா மந்திரமும் ஒலிக்க ரிஷிகேசத்தில் வந்திருந்த ஆயிரக் கணக்கானேர் புடைசூழ ஊர்வலம் கங்கைக் கரையோர மாகச் சென்று மலைப்புறச் சாலையில் திரும்பி, ஆசிரமத் தின் ஆலயமாகிய விஸ்வநாத மந்திருக்குச் செல்லும் பாதை யில் ஏறிச் சென்றது. இறைவனது திவ்ய கானத்துடனும் ‘பூரீ சுவாமி சிவானந்த மகராஜ்கி ஜே என்ற கோஷத் துடனும் சிவானந்தரின் மனிதத் திருவுடல் குருமூர்த்தி ஆலயத்தின் அடித்தளத்தில் தயாரிக்கப்பட்டிருந்த நிலவறை யில் இறக்கப்பட்டது. பின்னர் சம்பிரதாய முறைப்படி நிலவறையானது போதுமான அளவு உப்பு, கற்பூரம், சந் தனம், சாம்பிராணி ஆகியவற்ருலும் பிற வாசனைப் பொ ருட்களாலும் நிரப்பப்பட்டு சமாதிக் கிரியைகள் முடிவ டைந்ததும் மூடப்பட்டது. அவ்விடத்தில் புனித கங்கை நீர் நிரம்பிய குடமும் விளக்கும் வைக்கப்பட்டன. இந்த இடம் பூரீ சுவாமி சிவானந்தரின் புனிதமான நினைவுச் சின்னமாகும். பாரத நாட்டின் கலாச்சார இலட்சியங்க ளுக்குப் புத்துயிரளிக்கத் தமது வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தவரும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உலகு எங்கும் ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டவ ருமான ஒர் மகான இது நினைவு படுத்தும். மனித சமு தாயத்தின் ஆன் மீ க விழிப்புணர்ச்சிக்கும், மக்களுக்குச் சேவைபுரியும் தெய்வீக வாழ்க்கைக்கும், நித்தியப்பொரு ளின் உளப்பூர்வமான உபாசனைக்கும், பூரணத்துவத்துக் கான தளரா முயற்சிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அவரது மாபெரும் வாழ்க்கைப்பணி தொடர்ந்து நடைபெறச்செய்ய இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள அன்னரது எண்ணற்ற சீடர்களுக்கு இதுஓர் இடையருததுரண்டுகோலாய் அமையும்
( iii )
பூரீ சுவாமி சிவானந்தர் மனித சமுதாயத்துக்கு விட்டுச் செல்லும் உண்மைச் சொத்து திவ்யஜீவன பொறுப்பாண் மைச் சங்கமாகும். அன்னர் தம் வாழ்நாளில் உருவாக்கி நிர்வகித்து வந்த முறையிலும் வகைகளிலும் அது தொ டர்ந்து பணி புரிந்து வரும். யோக வேதாந்த ஆரணிய அச்சகம் பூரீ சுவாமி சிவானந்தரின் விலை மதிப்பற்ற போ தனைகளையும் சமய நூல்களின் சாரத்தையும் பிற மகான் களின் உபதேசங்களையும் மேன்மேலும் நூல்களாக வெளி
 
 

ஆத்மஜோதி 395
யிட்டு வரும். இந்த ஸ்தாபனத்தின் பத்திரிகைகள் தொ டர்ந்து மக்களுக்கு வழிகாட்டி ஒளியூட்டி வரும். தரும வைத்தியசாலை இலவச வைத்திய சிகிச்சை யளித்து வரும். ஆயுள்வேத வைத்தியத் தொழிற்சாலை இமாலய மூலிகை களால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை விநியோகித்து வரும். மேலும் உலக நலனுக்காகவும் தனிப்பட்டோர் நலனுக் காகவும் தினசரி முக்காலமும் பூசைகள் நடைபெறும் விஸ்வநாதர் ஆலயமும், ஆசிரம சாதகர், விருந்தினர், யாத்திரிகர், பிணியாளர் அனைவருக்கும் இலவச உணவ ளிக்கும் அன்னபூரணு அன்ன க்ஷேத்திரமும் யோக வகுப் புகள் சத்சங்கம் ஆகியன நடத்திவரும் யோக வேதாந்த ஆரணிய கலாசாலையும் பிற பிரிவுகளும் தொடர்ந்து பணி யாற்றி வரும். இந்த இயக்கத்தின் ஸ்தாபகரான பூரீ சுவாமி சிவானந்தரின் சக்தியால் ஊக்குவிக்கப் பட்டுச் செய்யப்படும் மனித நலனுக்கான இச் சேவைகளின் பலன் களை உலகெங்கணும் மேன் மேலும் அதிக மக்கள் பெறு மாறு அவற்றை விஸ்தரிக்க இச் சங்கம் முயலும்.
MNMNMMN
பசுவில் இருக்கும் ஆத்மனும், துஷ்டனில் இருக்கும் ஆத்மனும் , ஞானியுள்ளிருக்கும் ஆத்மனும், ஏழைக் குடி யானவன் உள்ளிருக்கும் ஆத்மனும் , அரசன் உள்ளிருக் ஆத்மனும் ஒருவரே. அவனேதான் யாண்டும் யாவற்றி லும் அதிஷ்டானமாகவும் இருப்பவன்.
பரம்பொருளுடன் நீ ஒன்றித்து விட்டதாக முதலில் உன்னிற் கற்பனை செய்து கொள். இதுதான் பிரம்ம பா வனே. பின் இடையறது இந்தப் பாவனையில் நிலைத்திருப் பாயாகில் நீ அந்தப் பிரம்மமே ஆகி விடுவாய்.
விசுவாசம் யுக்தியைக் கடந்தது. விசுவாசமே ஆண்ட வனுடைய ஆலயவாயிலைத்திறக்கின்றது. விசுவாசமே பேரானந் தத்தையும் பரமசாந்தியையும் அளிக்கும் இறைவனுடைய பரமபதத்திற்கும் உன்னை இட்டுச் செல்லுகின்றது. எனவே மாறத, குன்றத, திடமான விசுவாசத்தை மேற்கொள்.
- சுவாமி சிவானந்தர்.
SqSASASLSASqLSASLSASAASASASASeSASqS

Page 20
396 ஆத்மஜோதி
6  ைது கு ரு
- யோகிராஜ் சச்சிதானந்த சுவாமிகள் -
ക്രൈ'k
சேவை செய், அன்பு காட்டு, கொடுத்துப் பழகு, தூய்மை பெறு, தியானம் பயில், அனுபூதி அடை, இந்தப் பொன் மொழிகள் ஆறும் சுவாமி சிவானந்த மகரிஷி அவர்களின் போதனையின் சாரமாகும். இவையே உலகில் மனித குலத்தின் ஆத்மீக விழிப்பை ஆக்குவதற்கு உண் டாக்கிய திவ்விய ஜீவன சங்கத்தின் சிறந்த கொள்கைகளாம்.
இயற்கையின் நியதி விரிவடைந்து செல்லுதல், மனிதன் உயர்ந்த தெய்வீகத் தன்மை அடைவதற்கே பிறந்தவன். அவன் தெய்வீகத்தன்மையில் விரிவடைந்து செல்லச் சமயம் உதவி செய்கிறது. தெய்வீகத் தன்மை பெறுவதற்கு முனிவர் களும் இரிஷிகளும் பல்வேறு சாதனை முறைகளைத் தமது அனுபவத்தில் கண்டு கூறியிருக்கிருர்கள். மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லக் காலத்துக்குக் காலம் இறைவன் அவகாரப் புருஷர்களை அனுப்புகிருர், அப்படி வந்த பெரியார்களில் உலகப்பிரசித்திபெற்ற மகரிஷிகளில் சுவாமி சிவானந்தர் ஒருவர்.
பிறப்பு:- தென்னிந்தியாவில் திருநெல்வேலி புண்ணிய பூமி. இப்பூமியின் வளத்தை தாமிர பரணி நதி பெருக்கி வருகிறது. 'இப்புனித இடத்தில் இறைவனும் அவருடைய அம்சமும் திரு அவதாரம் செய்வார்கள்' என்று பாகவதம் கூறுகிறது. அதன்படி புனிதம் நிறைந்த தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பத்தமடையிலே, 1887ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி சு வா மி ஜி அவதரித்தார். பக்தி நிறைந்த பரம் பரையில் வந்த அப்பையா தீக்ஷிதர், வேதாந்த விற்பன்னரும் அறிவிற் சிறந்த ஞானியுமாவர். அவரின் வம்சாவழியில் வந்தவரே அப்போதே குப்புசுவாமி என்னும் பேர்கொண்ட சுவாமி சி வா ன ந் தா அவர்கள். குப்புசுவாமி என்ற பெயர் திருநெல்வேலியில் மட்டு ம ல் ல , தென்னிந்தியாவிலும் மலேயாவிலும் புகழ் பெற்றிருந்தது.

ஆத்மஜோதி 397
கல்வி:- குப்புசுவாமியின் இளமைப்பருவத்திலேயே அவரின் வருங்காலப் பெருநிலை விளங்கியது. படிக்குங் காலத்தில் தமது விவேகத்தால் பாடசாலைக்குப் புகழ் எடுத்துக்கொடுத்தார். பக்தி நிறைந்த பண்பினல் வீட்டிலே பெற்ருேருக்குப் பெருமையைக் கொடுத்தார். எட்டய புரத்தில் கற்றபோது மகா கவி சுப்பிரமணிய பாரதியும் இவரும் சகமாணுக்கராக இருந்தனர் திருச்சிராப்பள்ளி எஸ். பி. ஜி. கல்லூரியில் எல்லா விடயங்களிலும் மிக உத்தம தேர் ச் சி யு டன் விளங்கினர். தஞ்சையிலுள்ள வைத்தியக்கல்லுரியில் படி க்கும் போதே எவ்வித கஷ்டத் தையும் பொருட்படுத்தாமல் மனித சமுதாயத்திற்குச் சேவை செய்யவேண்டுமென்ற தன் வாழ்க்கையின் இலட் சியத்தை வெளிக்காட்டி வந்தார். எப்பொழுதும் நேரத்தை அருமையாகக்கருதினர். தனது சொந்தச் சுகங்களே அதிகம் கவனிப்பது கூட நேரத்தை வீணுக்குவது என்று எண்ணினர். அந்த நேரம் துன்பப்படும் பலருக்கு பணி செய்யலாம் என்று சிந்தித்தார்.
டாக்டர் குப்புசுவாமி
திருச்சினுப்பள்ளியில் டாக்டராக முதல் முதல் கடமை யாற்றிய போது வைத்தியத் தொழிலில் செய்தது மாத்திர மல்ல, மனித குலம் சுகமாகச் சீவிக்க வழிகாட்டுவதற்கு அம்புருேசியா (Ambroasia) என்ற "சஞ்சிகை நடத்திப் போதனை செய்தார். இந்த நேரத்தில் தோட்டத் தொழி லாளர்களின் துயரம் அவரை மலேயாவிற்கு இழுத்துச் சென்றது. 1913ல் கடல் கடந்து முதன் முதல் சிங்கப் பூருக்கு ஒரு அந்நியராகச் சென்ருர், சில வருடங்களுக்குள் அந்நாட்டவரை மட்டுமல்ல அங்கு வசித்த சீன மக்கள், ஐரோப்பிய மக்கள், இந்திய மக்கள் அனைவரையும் அன்பினுற்
கவர்ந்து கொண்டார். எந்நாடு அவர் துறவைக்கான
இருந்ததோ அங்கேயே (மலேயாவில்) அவருக்கு எல்லா விதமான ஐஸ்வரியம், அன்பு, மதிப்பு அனைத்தும் வந்து கொண்டிருந்தன.
மனித சமுதாயத்திற்கு மேலும் மேலும் சேவை செய்ய இறைவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தார் என்று உணர்ந்தார். அவரிடத்தில் நோயாளிகள் சுகம் பெற்றனர். வீடற்றவர் கள் வீடு பெற்றனர். இதயமுடைந்தவர் ஆறுதலடைந் தார்கள். பசியுற்றவனுக்கு பசியாற்றப்பட்டது. உடையற்

Page 21
398 ஆத்மஜோதி
றவன் உடைபெற்றன். உண்மையைத் தேடியவனுக்கு உண்மை கிடைத்தது. இந்தவிதமான ஐஸ்வரியம் நிறைந்த உச்ச நிலையிலிருந்த திரு. குப்புசுவாமி, மிகத்துணிவுடன் பற்றின் மையாகிய செட்டைகளையும், பரந்த அன்பையும் துணையாகக் கொண்டு, சந்தோஷத்துடன் பறந்து தெரிந்து கொள்ள முடியாத சோதனைகளும், தொல்லைகளும், கஷ் டங்களும் அவமதிப்பும் உள்ள இடத்திற்குச் சென் ருர்.
துறவி சிவானந்தா:
பரதேசியாக இந்தியாவிலுள்ள புனிதஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தார். 1924ல் இருசிகேசம் அடைந்தார். அங்கு திவ்ய ஞான ஒளியை, எப்பொழுதும் கிடைத்தற்கரிய ஞானியாக விளங்கும் மகா ஜோதியை சந்நியாசம் காத்தி ருந்தது. சிருங்கேரி மடத்தைச்சேர்ந்த விஸ்வநாதந்த ஜி அவர்கள் குப்புசாமிக்கு சுவாமி சிவானந்தா என்ற திருநா மத்துடன் சந்நியாசம் கொடுத்தார். சுவாமிகள் மனிதனின் பிறப்பிறப்பின் காரணத்தை அறிவதற்காககத்திமுனையில் நடப் பது போற் 12 வருடம் கடும் சாதனை செய்தார்.
ஆனந்த குடீர்;
சந்நியாசம் பெற்ற அண்மைக் காலத்தில் கங்கையின் வலது கரையை அடைந்தார். அங்கே ஞா ன ஒளி வீசி இப்போது விளங்கும் ஆனந்தக் குடீரை அமைத்திருந்தார். ஆரம்பகாலத்தில் அவ்விடம் பாழடைந்து ஒரு மாட்டுக் கொட்டிலாக இருந்தது. அதுவே இன்று முன்னேற்றமான வளப்பம் மிக்க சிவானந்த நகராக விளங்குகிறது. சாதாரண குடிசையிலிருந்தே பிச்சை எடுத்து வாழ்ந்த நாட்களிலும் கூட, உள்ளத்தைத் தொடும் ஞான மொழிகள் பல வற்றை எழுதிப் பிரசுரங்கள் மூலம் இந்தியாவிலும் வெளியிடத்தும் பரப்பினர். ஆனந்தக் குடீரில் சுவாமிஜிக்கு ஞான வீரக் குழந்தைகள் நிறையப்பிறந்தனர். சுவாமிஜி தபசு செய்யும் காலத்திலும் தனது வைத்தியத் தொழிலை நாராயணனுக் குச் சேவை செய்வதாக எண்ணி எல்லாருக்கும் சேவை செய்தார்.
தி. ஜி. ச.
அவரிடம் தோன்றிய தெய்வீக ஒளி தான் மட்டும் அனு பவிப்பதற்கல்ல. எல்லோருமனுபவிக்கப் புது முறையில் இச்

ஆத்மஜோதி 399
சங்கம் ஆத்மீகத்துறையை ஆரம்பித்த திவ்ய ஒளியின் பிர காசமே திவ்ய ஜீவன சங்கத்தை உருவாக்கியது. தெய்வீக வாழ்க்கை முறைகளைப்பரப்புவதே சுவாமியின் கொள்கை, இதை அடிப்படையாகக் கொண்டே சங்கத்தை அமைத்தார். சாதி, குல நிற வேற்றுமையின்றி மனித சமுதாயத்தில் எல் லாரையும் இச்சங்கம் வரவேற்றது. தன்னையறிதலும், அன்பு செலுத்தல், என்பவற்றை ச ங் கத் தி ன் மூலம் பரப்புதலே சுவாமியின் இலட்சியமாகும். இக் கொள்கையை அவர் தன் னுடைய இடைவிடாத எழுத்துக்கள் மூலம் என்றும் அந்த ஸ்தாபனத்தில் நிலைத்திருக்கச் செய்தார். சுவாமிஜி எழுதிய நூல்கள் முன்னுாறுக்கு மேற்பட்டன. அவற்றின்மூலம் அவ ரின் செய்திகள் உலகமெங்கும் பெருகி வருகின்றன. ஒன் றன்பின் ஒன்ருகத் தோன்றிய விஸ்வநாத ஆலயம், பிரார்த் தனை மண்டபம், தர்மவைத்தியசாலை, யோகக் காட்சி சாலை, வாசிகசாலை, சாதகர்கள் வசிக்கும் குடீரங்கள், சாதகர் முறையாகப் பயிலும் யோக வேதாந்த ஆரண்ய பல்கலைக் கழகம் ஆகியவை திவ்ய ஜீவன சங்கத்தின் கொள் கைகளை அடைவதற்கு அமைந்த ஏணிப் படிகளாக விளங்கித் தலைவர்களினதும், கிழக்கு மேற்கு நாடுகளின் பிரசித்தி பெற்ற மக்களினதும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.
சம்பூர்ண யோகம்
ஒருவன் தன்னை அறிவதற்கு சம்பூர்ண யோகம் அவ சியமென்று குருதேவர் அழுத்திச் சொன்னர், ஒருவனுக்கு இருதயம், உடல், மூளை மூன்றும் சமமாகத் தெய்வீக வளர்ச்சிபெறவேண்டும்.ஹதயோகப்பயிற்சிமூலம் உடலுறுதி யும் கர்மயோகப் பயிற்சி மூலம் மனத்தூய்மையும், பக்தியோ கப் பயிற்சிமூலம் இருதய நெகிழ்ச்சியும், இராஜயோகப் பயிற்சி மூலம் சம நோக்கும் பெற்று இறுதியாக ஞானயோ கத்தின் மூலம் தன்னையறிதலும் பெறமுடியு மென்ருர், திரும்பத் திரும்ப சுவாமிஜி ஞாபகப் படுத்துவ தென்ன வென்றல்;- இயம நியமங்களே சம்பூர்ண யோகத்திற்கு அடிப்படை என்பதாம்.
ஞானத்தைப் பெறுவதற்கு உலகிலிருந்து ஓடவேண்டி யதில்லை. உலகிலேயே ஞானம் உண்டு. பிறருக்குப் பயன் தரத்தக்க வகையில் வாழ்ந்தாலே தன்னையறியும் ஞானத் தைப் பெறலாம். மேலே கூறியவைகளை ஆதாரமாகக் கொண்டு சுவாமிஜி சமய நூல்களின் சாரங்களை எங்களுக்

Page 22
400 ஆத்மஜோதி
குத் தந்துள்ளார், நாங்கள் உண்மைகளை இலகுவாக அறிந்து கொள்ளவும், இலட்சியத்தின் பயனைச் சீக்கிரமாக அடையவும் அவருடைய போதனைகளைச் சுருக்கமாக இலகு வான பாஷையில் திரட்டி இரு ப து பிரதான ஆத்மீக போதனைகளாகவும் சா த னு தத்துவங்களாகவும் தந்
துள்ளார்.
கங்கைக்கரையில் ஆனந்தக் குடீரில் இருபத்தைந்து வருடம் திவ்ய ஜீவன சங்கக் கொள்கைகளைப் பரப்பிய சுவாமிகள் 1950ல் இலங்கைக்குச் சுற்றுப் பிரயாணம் செய்தார். அந்நாட்டில் ஆண் பெண் இருபாலார்க்கும் ஒவ் வோர் இல்லத்தின் வாசலிலும் திவ்ய வாழ்க்கைச் செய்தி களைக் கொடுத்தார். முனிவர்களின் ஞான அறிவை அந் நாட்டில் பெருகச்செய்தார்.
சுவாமி சிவானந்தா அன்பின் சொரூபம், வெறுப்பும் கோபமும் என்னவென்று தெரியாதவர். அவரின் கொடுக் கும் திருக்கரங்கள் மேலும் கொடுத்துக் கொண்டேயிரு கொடுத்துக் கொண்டேயிரு என்று தூண்டிக் கொண்டே யிருக்கும். சாதகர்கட்கு ஒவ்வொரு வருடமும் பல பத்தா யிரம் ரூபா பெறுமதியான புத்தகங்களைக் கொடுத்தார். அவருடைய ஆச்சிரமம் உண்மையைத் தேடிச் செல்வோர் எல்லோருக்கும் தடையின்றித் திறக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சாதகர்களுக்கும் சாதுக்களுக்கும் துறவிகளுக்கும் அன்ன சத்திரத்தில் அன்ன மளிக்கப்படுகின்றது இவர் மனிதசமுதாயத்திற்குச்செய்த சே வையின் சிறப்பைஇன்றுயாரால்தான் எடுத்துரைக்க முடியும்.
சுவாமி சிவானந்த மகரிஷி சக்தி நிறைந்த சந்நியாசி யாகவும் தெய்வீக வாழ்க்கையின் தீர்க்கதரிசியாகவும் விளங் கினுர் . இந்த அன்பின் அவதார புருஷர் எப்பொழுதும் பேரானந்த நிலையில் இருக்கிருர்,
பூரீ சிவானந்த மகரிஷி 14-7-63 நள்ளிரவில் தமது பூத உடலைத் துறந்து விட்டார். இனிமேல்தான் நாம் அவரது வல்லமையையும் சக்தியையும் பரிபூரணமாக உண ரப்போகிருேம், அவர் உலகில் வாழ்ந்த அவ்வளவு காலமும் உணராத ஒர் பரத்துவத்தை இனிமேல் நாம் உணரப் போகிருேம், அவரது சக்தியும் அருளும் நமக்கு மேலும் மேலும் கிட்ட வேண்டு மென்று பிரார்த்திப் போமாக!

ஆத்மஜோதி 401 சுவாமி சிவானந்த மகரிஷிகள் a காட்டிய வழி a be a -
(சுவாமி. ஞானுனந்தா அவர்கள்)
பாரத பூமியில் தொன்று தொட்டு வாழையடி வாழை யாக உத்தம ஞானிகள் தோன்றி அன்பையும், உண்மை யையும் நிலை நாட்டி மக்களை நல்வழிப்படுத்தி, ஆன்ம ஈடேற்றத்திற்காக அரும்பணியாற்றி யருளினர்கள். இந் தப் பரம்பரையில் வந்தவர் எங்கள் குருதேவர் பூரீ சுவாமி சிவானந்த மகரிஷி, கடும் தவம் புரிந்து, பரிபூரண பக் குவ நிலையைப் பெற்ற பின்னரே, சுவாமிகள் அருட்பணி யாற்றத் தொடங்கினர்கள். சாதி மத பேதமின்றி ஆத்ம ஞானத்தைப் பரப்புவதற்காக சுவாமிஜி ரிஷிகேசத்தில் திவ்ய ஜீவன சங்கத்தை ஸ்தாபித்து, உலகெங்கும் அதன் கிளைச் சங்கங்களை நிறுவச் செய்தது மன்றித் தமது சொந்த அனுபவங்களைப் பயன்படுத்தி ஆத்ம சாதனை முறைகளை வகுத்தருளினர். எல்லா யோகங்களையும் ஒன்ருகத் திரட்டி கூட்டு யோகம் (Yoga of Synthesis) என்னும் அரிய நூலை ஆக்கியருளினர். இந்தக் கூட்டு யோக சாதனை மூலமாக எல்லோரும் இலகுவில் கடைத்தேற இந்நூல் வழிகாட்டி யாயிருக்கிறது. ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வை யகம்' என்பதே குருதேவரின் பேரவா! உலகின் நானு பாகங்களிலும் பல்லாயிரக் கணக்கான சாதகர்கள் குரு தேவர் காட்டிய தெய்வீகப் பாதையில் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். குருதேவரின் சீடர்களின் பக்குவ நிலைபெற்றவர்கள் பலர்.
அன்பும் கருணையும் ஒன்றுகூடி உருவெடுத்தாற் போன்ற
நமது சுவாமிஜி அன்பு மயமாகவும் கருணை நிறைந்தவரா கவுமே எப்பொழுதும் எந்த நிலையிலும் காட்சி கொடுத் தருளினர்கள். அன்பு, தயவு, இரக்கம் முதலிய உயர்
குணங்கள் அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தன. மனித வர்க்கம் உய்ய வேண்டு மென்ற எண்ணம் அவ ரின் உள்ளத்தில் குடி கொண்டு ஆச்சிரமத்தில் பல்வேறு பகுதிகளை உருவாக்கி ஒப்பற்ற சேவைகளைச் செய்யத் தூண் டிற்று. மேலும் மற்றவர்களின் இடத்தில் தன்னை வைத் துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது. இரக்கம்

Page 23
402 ஆத்மஜோதி
காட்ட வேண்டியவர்களுக்கு இரக்கம் காட்டி அவர்களுக் குற்ற துன்பத்தை நீக்கி அவர்களைத் தெய்வீகப் பாதை யில் செல்ல வைத்தார். அவரைத் தஞ்ச மென்றடைந்த வர்களின் வியாகுலங்களைத் தனது ஞான திருஷ்டியால் அறிந்து நிவாரணம் செய்வதில் மகா நிபுணராக விளங்கி ஞர்கள்.
பல தேசத்தவர், பல மதத்தவர், பல தன்மையாளர் குரு தேவரைத் தரிசித்து ஆறுதல் பெற்றுய்ந்தனர். உல கின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல மதத்தினர்களும் சிவா னந்த ஆச்சிரமத்திற்குத் தினமும் வருவதுண்டு. மதமாற் றம் செய்யாமல் அவரவர் மதக் கோட்பாட்டிற்கிணங்க அவர் களுக்குள்ள சந்தேகங்களை நீக்கி ஆத்மீகப் பாதையில் செல் லும்படி செய்தருளினர்கள் எங்கள் குருதேவர். எவ்வித குற்றம் செய்தவரையும் இகழாமல் கண்டியாமல் அவர்க ளைத் திருத்தும் முறைகளைக் கையாள வேண்டு மென்பதே குருதேவரின் கொள்கை. ஒரு முறை ஆச்சிரமத்தில் கட மையாற்றியஒருதொண்டர் பெருந்தொகைப்பணத்தைமோ சடி செய்து விட்ட்ாரென்ற ஒரு சம்பவம் அநேக ஆச்சிரம வாசிகளின் செவிக் கெட்டியது. சத்சங்கம் நிறைவேறிக் குருதேவர் கூட்டத்துடன் தமது குடிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பிரபல சீடர் இந்த விஷயத்தை ஆத்திரத் துடன் சுவாமிஜியிடம் கேட்டார். அப்பொழுது சுவா
'தீயன எண்ணுதே, கோவிந்தா கோவிந்தா
தீயன பேசாதே, கோவிந்தா கோவிந்தா தீயன பாராதே, கோவிந்தா கோவிந்தா தீயன கேளாதே, கோவிந்தா கோவிந்தா
என்னும் பாடலைப் பாடிச் சாந்த நிலை நிறுவச் செய் தார்கள்.
சிவானந்த ஆச்சிரமத்தில் தினமும் மாலையில் குருதே வர் முன்னிலையில் சத்சங்கம் நடப்பது வழக்கம். பஜனை, ஆடல், பாடல், சொற்பொழிவு முதலியன அதில் இடம் பெறும். ஒருமுறை "கிறீன் லெஸ்” என்னும் ஒரு ஐரோப் பிய பெரியார் சொற்பொழிவாற்றும் போது ஆட்சேப னைக்குரிய வார்த்தைகளைப் பிரயோகித்து விட்டார். அவ ரின் பின்னர், உரை நிகழ்த்த எழுந்த பேராசிரியர் சபா ரெத்தினம் அவர்கள் தனக்கு முன் பேசியவரின் வார்த்
 

ஆத்மஜோதி 403
தைகளுக்குக் கண்டனம் தெரிவித்தார். இச்சமயத்திலே குருதேவர் குறுக்கிட்டு 'ஓம்' என்னும் பிரணவத்தை மூன்று முறை உரத்த குரலில் ஒதினர்கள். உடனே கண்டனக் குரல் நின்று விட்டது.
ஒருநாள் வண. டாக்டர் ஸ்ரான்லி ஜோன்ஸ் என்ற உலகக் கீர்த்தி பெற்ற கிறிஸ்த பாதிரியார் குரு தேவரின் முன்னிலையில் சொற்பொழி வாற்றினர்கள். பாதிரியார் குருதேவரை நோக்கி 'சுவாமிஜி ஏதும் சொல்ல இருக்கி றதா? என்று கேட்டார். அப்பொழுது குருதேவர் 'எனது சுருக்கமான போதனை ‘தொண்டாற்று நேசி” தருமம் செய்’ தூய்மைப் படுத்து’ ‘தியானம் பயில் 'அனுபூதி படை' என்பதே யாகும்’ என்று சொல்லியருளினர்.
சென்ற சில வருடங்களாகக் குருதேவரின் உடல்நிலை குன்றிக் கொண்டிருந்த போதிலும் தேகச் சிந்தனையற்று சச்சிதானந்தப் பரப்பிரமமாக விளங்கிய குருதேவர் தனது தினசரிக் கடமைகளைச் செவ்வனவே பார்த்து வந்தனர். அவர் மகா சமாதியான போதிலும் பேரின்பப் பெருவாழ் வுக்கு அவர் காட்டிய வழி என்றென்றைக்கும் நின்று ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவி புரிந்து கொண்டிருக்குமென் பது உறுதி. அவர் எழுதிய அரிய நூல்கள் சதா காலத் திற்கும் ஆத்ம சாதகர்களின் அருட் பொக்கிஷமாகவே இருக்கும்.
குருதேவரின் அருள்வழி நிற்கும் நாம் அவரின் அருட் பணிகளைத் திரிகரண சுத்தியோடு செய்து ஈடேறுவதும், இந்த உயர் நிலையை மற்றவர்களுக்கும் அளித்து உணரச் செய்வதுமே எம் குரு தேவருக்கு நாம் செலுத்தும் உண் மையானகாணிக்கையாகும்.
நித்தியானந்த பரம சுக ஜோதி மயமாய் விளங்கும் குருதேவரின் புனிதத் திருமேனி எமது ஊனக் கண்களுக்கு தென்படாது மறைந்த போதிலும் அப் பேரருளாளரின் திரு வுருவைப் பல்லாயிரக் கணக்கான பேரன்பர்கள் தங்கள் அகக் கண்ணுல் கண்டின்புற்றிருப்பார்கள்.
சிவானந்த ஜோதி வாழ்க! சிவானந்த அருளொளி வாழ்க!
வாழ்க! வாழ்கவே! என்றும் வாழ்கவே!

Page 24
404 ஆத்மஜோதி
இமயஜோதி அணைந்ததோ? "பரமஹம்சதாசன்'
X-卒平
தமிழுலகு பரித பிக்க, தவ உலகு
விதிர் விதிர்க்க, சமர சத்தேன் கமழ் சமய உலகதிர, கனிந்தபெரும்
அன்புலகு கதறி நிற்க, அபழ் உலகின் இருளகல, அருளொளித்தேன்
பொழிந்தசிவா னந்த மென்னும் இமய மணிச் சோதி, அனந் திட்டதுவோ?
எவ்வுலகின் றிதனே யாற்றும்?
பொய்களவு, கட்காமம், புலே கொலை, வெங்
கயமையிருட் புன்மை நீங்கி, மெய்யுணர்வு, நல்லொழுக்க வீறுடனே அன்பு, பணி, தியானம் மேவி, வைய மெலாம் பேரின்ப மலர்ச்சிபெறத்
தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ஐயமற நாட்டிய சிவானந்தர்
தண்ணருளை அளக்கப் போமோ?
எத்துறையில் வல்லவர்கள் எவர்தம்மை
யடைந்திடினும், இதயம் பொங்க, புத்துணர்வும் புத்தெழிலும் புது மணமும் புகழ்ச்சிறப்பும் பொலியச் சூட்டி, அத்துறையும் அவர் வாழ்வும் அனுதினமும்
வளர, அரு ளாசி நல்கும் வித்தகப்பே ரருட்குரு சிவானந்தர்
மேதகைமை விளம்பப் போமே?
பழகுதமிழ்த் திருநெல்லைப் பத்தமடைச்
சீராளன்; பண்பும் அன்பும் வளர்குப்புச் சாமியென மலயாவில்
மருத்துவஞய்ப் பொருள் வளர்த்தோன்; அழியுமுல குறவகற்றி, அழியாப்பே ரருள்நாடி, அனைத்தும் நீத்துப் பொழிலிமய ரிஷிகேச சிவானந்தக்
குடில் புகுந்த புகழ்மெய்ஞ் ஞானி!

ஆத்மஜோதி 405
எந்நாடும் எம்மொழியும் எம் மதமும் சம்மதமென் றேற்றிப் போற்றத் தந்நாடாம் பாரதத்தின் வேதாந்த சாரமெலாம், தக்க வாறு எண்ணிறந்த நூல்வடிவில் ஆங்கிலத்தில்
வடித்தளித்த இருஷி கேசம் மண்ணுலகில் மறைவதுண்டோ? எந்நாளும் அருள் வடிவில் வாழ்வா னன்றே?
உடற் சிறைக்குட் கட்டுண்ட ஒருசில பத்
தாண்டினிலே, உலகம் உய்யத் திடப்படுமெய்ஞ் ஞானஒளித் தினகரனுய்த் திகழ்ந்தவர்தான், தேகம் விட்டுக் கடப்பரிய திசைகள் தொறும் கலந்துநிறைந்
திட்டபின்னர், கண்பா ராரோ? குடத்து விளக் குயர்ந்த மலைக் கொழுந்தானுல்
ஒளிவெள்ளம் கொஞ்ச மாமோ?
மண்ணுடலே விட்டமர விண்ணுடலம்
பெற்றவர், பன் மடங் குலாவி, எண்ணியவர் எண்ணியவா றெங்கெங்கும்
எப்பொழுதும் இனிது தோன்றித் திண்ணியநல் லன்புறுதி, தியான ஜப
யோகவழி காட்டிச் செல்வார்; புண்ணிய சிவானந்தத் தேனெங்கும்
பொங்குமினி, புலம்பேல் நெஞ்சே!
எழுபத்தா றண்டுலகில் பூதவுடல்
鷲 கொண்டுலவி, எ வர்க்கும் அன்பால்,
வழுவாமல் உடற்பிணியும் மனப்பிணியும்
பிறப்பிறப்பு, மயக்க நோயும்
ஒழித்திடு' வைத் தியநாதன்' எனத் திகழ்ந்த
ஜகத்குருவை உளத் திருத்தி,
விழுமிய தெய் விகவாழ்வு நெறிவளர்த்தன்
னவர் நாமம் விளங்க வாழ்வோம்!
大举举

Page 25
406 ஆத்மஜோதி
என்னே ஆட்கொண்ட எனது குருநாதர்
(ஆ. சின்னத்துரை)
திருக்கோணமலையில் ஆத்மீக தாகங் கொண்டவர்களை வரவேற்று உபசரித்துத் தாகந் தணிக்கும் பேறு பெற்றவர் சாது அப்பாத்துரை செட்டியார் அவர்கள் இன்றும் ஆத்ம சாந்திக்காக அவரைச் சென்று தரிசித்து வருபவர்கள் பலருண்டு. செல்கின்றவர்கள் உள்ளங் கண்டு உரையாடி செந்நெறி காட்டும் இயல்பு அவருக்கு இயல்பாய் அமைந் துள்ளது. ஆத்மீக அவாக் கொண்ட நாள் தொடக்கம் அருட்பிர காச வள்ளலாரை அருட் குருவாய் அடியேன் போற்றி வந்தேன். இப் பிறவியில் சற்குருநாதன் ஒருவரிடம் சரணடைய வேண்டுமென்ற அவா சதா வருத்திக் கொண்டிருந்தது. இதனைப் பலகால் செட்டி யார் அவர்களுக்கு உரைத்துள்ளேன்.
ஏகாதசி தினமமைந்த வெள்ளிக்கிழமை. செட்டியார் அவர்களி டம் சென்றேன். அடியேன் மன நோக்கத்தை அறிந்தவர் போன்று சற் குரு சிவானந்த மகரிஷி அவர்கள் எழுதிய 'ஆத்மீக பாடங்கள்’’ * Spiritual Lessons' என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, " சுவாமிகளின் புத்தகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? என் ரூர். 'இல்லை’ என்றேன். 'அப்படியானல் இதனைக் கொண்டுபோய்ப் பாரும், நல்ல புத்தகம், உமக்கேற்றது' என்ருர், புத்தகத்தைத் திறந்து முதற் பக்கத்தைப் பார்த்தேன். குருதேவர் சுவாமி சிவா னந்தர் நின்ற நிலையில் ஓர் விருட்சத்தில் ஊன்றின கையுடன் காட்சி அளிக்கும் படத்தினைக் கண்டேன். உள்ளத்தில் இப் பெருமானத் தரிசிக்க வேண்டுமென்ற அவா உடனே உண்டாகி விட்டது.
1950 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் குருதேவரின் இலங்கை விஜயத்தைப் பற்றியும் கொழும்பில் மாத்திரம் சுவாமிகள் அன்பர்க ளுக்குத் தரிசனம் கொடுத்துச் செல்வார்கள் என்றும் அறிந்தேன். பல நெருக்கடியான வேலைகள் இருந்தும் அவைகளை எல்லாம் பொ ருட்படுத்தாது கொழும்பு சென்றேன். நகர சபையில் சுவாமிகளுக்கு வைத்த வரவேற்பில் அவரைத் தரிசிக்க முடியவில்லை. அவ்வளவு சனத் திரள். சாயந்தரம் சுவாமிகளை வெள்ளவத்தை இராமகிருஷ்ண சங்க மடத்தில் உபசரிப்பதற்காக ஒழுங்குகள் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நிகழ்ச்சி நேரத்திற்கு மூன்று மணித்தியாலத்திற்கு முன் போய் முன்னணியில் உட்கார்ந்திருந்தேன். குருதேவரின் கூட்டுப் பிரார்த்தனைக் கோஷ்டி யார் முன்னரே வந்து நாம சங்கீர்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் குருதேவர் தரிச்னம் கொடுத்தார்கள். அடியேனுக்கு ஒரு ஜோதிப் பிழம்பே உருவெடுத்து வந்தது போல் தோன்றிற்று. அங்கு குழுமியிருந்த எல்லா அன்பர்க ளையும் திருக் கண்களால் அருள் நோக்கம் புரிந்தார்கள். ஆத்மீக தாகம் கொண்டவர்களுக்கு ஏற்ற முறையில் தமது அருள் மழையைப் பொழிந்தார்கள். அன்று குருதேவரின் திருவாக்கில் இருந்து வந்தன யாவும் அடியேன் குருமூலம் அறிய வேண்டுமென அல்லும் பகலும் அவாவுற்றிருந்த அனேக சந்தேகங்களுக்கு விடையளிப்பன போன்றி
 

ஆத்மஜோதி 407
ருந்தது. இலகுவான ஆங்கிலச் சொற்களில் தெய்வீகக் கருத்துக்களே எங்கள் உள்ளங்களில் புகுத்தினர்கள். அந்த நிமிடமே குருநாதர் என்னை ஆட்கொண்டு விட்டார் என்ற மன உறுதி ஏற்பட்டு விட்டது. பின்னர் விவேகானந்த வித்தியாலயத்திலும் குருநாதரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். அவ்விடத்தில் குருநாதரின் ஆத்மீகக் குறிப்பு கள் அச்சடிக்கப்பட்டு லட்சக் கணக்கில் அன்பர்களுக்கு விநியோகப் படுத்தப் பட்டன. ஒன்றினைப் பெற்று ஊன்றிப் படித்தேன். தெய் வீக வாழ்க்கைத் திறவுகோல் அதுதான் என உணர்ந்தேன். அடியே னது மன உணர்ச்சியை மற்றவர்களுக்குக் கூற வெட்கினேன், சொன் ஞல் மற்றவர்களின் நகைப்புக் கிடமாவேனென அஞ்சினேன்" அன்று தொடக்கம் சற்குருநாதன் அடியேன் அகத்தில் அமர்ந்திருக்கிருர் என்னும் உணர்ச்சி உண்டாகி விட்டது.
1953ம் ஆண்டு மாசி மாதத்தில் ஓர் நாள் சாது அப்பாத்துரைச் செட்டியார் அவர்களைத் தரிசிக்கச் சென்ற பொழுது குருநாதரின் சிஷ்யரொருவர் பத்திரகாளி கோவிற்கு அருகாமையில் ஒர் இல்லத் தில் தங்கியிருப்பதாகச் சொன்னர். அதுவுமன்றி அப் பெரியாரை அடியேன் கட்டாயம் போய்த் தரிசிக்க வேண்டுமெனவும் வற்புறுத் தினர். உடனே அடியேன் தேடியிருந்த அரும்பொருள் கிடைத்து விட்டது போன்ற உணர்ச்சிப் பெருக்குடன் அப் பெரியாரை அணு கினேன். சாட்சாத் சிவபிரான் போன்று நல்ல தேஜஸ் உடன் விளங் கின சுவாமி சச்சிதானந்தஜி கனநாட் பழகினவரைப் போன்று என்னை வரவேற்ருர், அன்பொழுகக் கதைத்தார். அடியேன் கண்களில் நீர் மல்க நா தழ தழக்க அவரிடம் முதல் முதல் என்ன கதைப்பது என்று தெரியாது கஷ்டப்பட்டேன். சுவாமிகளின் தோற்றம் அடியேனுக்கு சற்குருவை வழிகாட்ட அனுப்பின தேவதூதன் போன்று ம ன த் தி ல்  ெத ன் ப ட் ட து. அ ன் றே ஆ த் மீக த் துறையில் அவரின் ஆணைப்படி நடக்க வேண்டு மென்னும் ஆசையால் உந்தப் பட்டேன். அவர் இட்ட கட்டளைகளைச் சிரமேற் கொண்டு தொண்டு செய்யத் தொடங்கினேன். குருபூர்ணிமா விழா, குருநாதர் ஜெனன விழா முதலியன யோகிராஜ் அவர்கள் ஆணைப் படி நடக்கிறதற்கு முயற்சி செய்தேன். திரு அருட்பிரகாச வள்ள லார் சத்சங்கம் அடியேன் முயற்சியினல் “யோகிராஜ்' அவர்கள் தலை மையில் நடைபெற்று வந்தது. சத்சங்கத்தின் மூலமாகக் குருநாத ரின் அரும் பெருஞ் செயல்களையும் அற்புதகங்ளையும் அறியலானேன்.
1954ம் ஆண்டு சிவானந்த தபோவனம் செயல்படத் தொடங்கி னது. இலவச வைத்தியப் பணியை அங்கு ஆற்றும்படி யோகிராஜ் பணித்தார். கீழ்ப்படிந்து பயபக்தியுடன் அப் பணியை ஏற்று நடத் தினேன். பெரும் பிணியாளருக்குக் குருநாத்ணின் திருநாமத்தைச் சொல்லிக் கொடுக்கும் அற்ப மருந்துகளும் பாரதூரமான வருத்தங் களைச் சொஸ்தப் படுத்துவதை அனுபவ த்தில் கண்டேன். வைத்தியத் தொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகி வந்தது. இலங்கைக்கு விஜயஞ் செய்த சுவாமி இராமதாஸ் அவர் கள் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். இப் பணிகளுக்கி டையில் சற்குரு தேவரைத் தரிசித்து அவரிடம் மந்திரோபதேசம் பெற வேண்டும் என்னும் அவா வர வர அதிகரித்துக்கொண்டு வந்தது.

Page 26
4.08 ஆத்மஜோதி
1955 ம் ஆண்டு மாசி மாதத்தில் ‘யோ கிராஜ் அவர்கள் ரிஷிகே சம் சென்ருர்கள். அடியேன் அவர்கள் கட்டளைப்படி வைத்தியப்பணி ஊக்கத்தோடு நடத்தி வந்தேன். மாசி மாதம் 8ந் திகதி இரவு ஓர் கண் கொள்ளாக் காட்சி என் கனவில் தென்பட்டது. அடியேன் சிவா
நந்த நகரில் இருப்பது போலவும் சற்குருநாதர் அடியேன் சிரசில் தனது
திருக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது போலவும் ‘யோகிருஜ்’
அடியேனக் கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்வது போலவும் கனவில் *
தோன்றிற்று. அடியேன் உடம்பு மயிர்க்கூர்ச்செறிய கண்கள் ஆனந்தக் கண்ணிர் பொழிய எழுந்து படுக்கையிலிருந்து கொண்டே குருநாதனை நினேந்து நினைந்து விமமி விம்மி அழுதேன். கனவு கண்டு நான்கு நாட் களுக்குப் பின் 'யோகிருஜ்’ சுவாமி சச்சிதானந்த ஜியின் கடிதம் சிவாநந் தநகரிலிருந்து கிடைக்கப் பெற்றது. அதில் "அன்புள்ள சேவரத்ணு' என எழுதியிருந்தது. சற்குருநாதனுக்கு அடியேனது அற்பபணியை எடுத் துரைத்ததாகவும் குருநாதன் அடியேன ஆசீர்வதித்ததாகவும் குறிப்பிட் டிருந்தார் அற்பபுழுவுக்குச் சமமான அடியேனை குருநாதன் ஆசீர் வதித்தார்" என்பதை வாசிக்கும் பொழுது முற்பிறப்பில் என்ன தவம் செய்தேனே என்று எண்ணலானேன். "யோகிராஜ்' எப்போ திருக் கோணமலைக்கு வருவார் என்று ஆவலோடிருந்தேன். வந்ததும் அவரின் பாததாமரையில் விழுந்து வணங்கி சற்குருநாதரைப் பற்றி அறிய அவா வினேன். அப்போது குருநாதர் எனக்களித்த சேவா ரத்ன பட்டப்பத்தி ரத்தைக் காட்டினர். அடியேன் கனவு கண்ட நாளாகும் 8-2-53ல் குரு நாதர் கைச் சாத்திட்டிருப்பதைக்கண்டு பிரமித்துப்போனேன். எவ்வளவு தொலைவிலிருந்து அடியேனது கனவில் தனது தெய்வத் திருமேனியுடன் காட்சி கொடுத்தார் என்று எண்ணி மனம் குழைத்தேன்.
குருதேவரைத் தரிசிக்க வேண்டும். அவரின் திருவாயால் மந்திரோப தேசம் பெற வேண்டும் என்ற எண்ணம் வர வர வலுப்பெற்று வந்தது. "யோகிருஜ்’ அவர்களின் உதவியோடு ரிஷிகேசம் செல்வதற்கு அடியே னும் ஆப்த நண்பர் ஒருவரும் ஆயத்தப்படுத்தினுேம், அருட்பிரகாசவள் ளலார். சத்சங்கத்தில் எங்கள் யாத்திரையைக் குறிப்பாக வைத்து "மூர்த் திதலந்தீர்த்தம் முறையாய்த் தரிசித்தவர்க்கு, வார்த்தை சொல்லச் சற் குருவும் வாய்க்கும் பராபரமே என்னும் தாயுமானவர் வாக்கைப் பீடி கையாகக் கொண்டு 'யோகிருஜ் அவர்கள் ஒர் அருளுரை வழங்கினர் கன். அவரின் கருத்துக்கள் அடியேனது மனதில் பசுமரத்தாணி போல் நன்ருய்ப்பதிந்து விட்டன.
1954 ஆண்டு மார்கழித் திங்கள் 19ம் நாள் ரிஷிகேசம் குருநாதர்
தரிசன யாத்திரைக்குக் காலடி வைத்தோம். தென் இந்தியாவிலுள்ள
பல ஸ்தலங்களையெல்லாம் தரிசித்து, சென்னையிலிருந்து பம்பாய் மார்க் கமாய் இடையில் பண்டரிபுரநாதனத் தரிசித்து பம்பாய் சென்ருேம்.
அங்கு முன்னரே வந்து நின்ற யோகிருஜ் சுவாமி சச்சிதானந்தாஜியுடன்
மதுரா, பிருந்தாவனம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்து டில்லி சென்று அங்கிருந்து ஹரித்துவாரம் ஊடாக ரிஷிகேசம் சென்ருேம்.
ரிஷிகேசத்தில் குருநாதர் தரிசனத்திற்காக பூமாலை, பழங்கள், பருப் புகள் வேண்டிக்கொண்டு சிவாநந்த நகர் அணுகினுேம், அடியேன் மனம் என்னென்னவோ நினைத்தது. என் மனதை அறியுஞ் சக்தி குருநாதருக்
 

w
குண்டு. நானே ஆத்மீகத் துறையில் பக்குவப்படாத ஒருவன். காமமாதி கள் என்னிடம் குடிகொண்டிருக்கின்றன. பரிசுத்த மனதுடனல்லவா குரு நாதனைத் தரிசிக்க வேண்டும். எல்லாம் வல்ல குருநாதனுக்கு அடியேனது உள்ளக்கிடக்கை தெரியாதிருக்குமா? அடியேன் எவ்விதம் அவரின் முன் பாகப் போவது என்று கூச்சப்பட்டேன். உடனே சகல எண்ணங்களையும் செய்கைகளையும் தருபவர் அவர் தானே? அதனை நீக்கும் வழிவகைகளை யும் கூறுடவர் அவர்தானே? அவரின் அருள் நோக்கால் அன்ருே அடியே னது மனமாசு அறுதல் வேண்டும். குருதரிசனஞ் செய்ய என்னத்திற்குத் தயங்க வேண்டும் எனத் துணிவு கொண்டேன்.
"யோகிராஜ்' அவர்கள் குருதேவரின் மூலத் தானமாகிய ஆனந்த குடீரத்துக்கு அழைத்துச் சென் ருர் . அடியேன் என்னை மறந்து மயிர்க் கூச்செறிய கண்ணிர்மல்க சற்குருநாதர் முன்னிலையில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினேன். அடியேன் ஏஆோ ஒருபுது உலகத்தில் இருப்பதாக (உணர்ச்சி கொண்டேன். அன்புடை அன்னை ஒருத்தி அநேக நாள் விட்டுப் பிரிந்த அருமை மகனை எவ்விதம் கண் டவுடன் வரவேற்பாளோ? அவ்விதம் சற்குரு நாதர் பலநாள் பழகின வரைப் போன்று தமிழில் இனிமை ததும் பப் பேசினர். ஜோ கிராஜ் எங்களை அறிமுகப் படுத்தினர். அடியேனை அருட்குருநாதர் ஆட்கொண்டு விட்டார் என்ற உணர்ச்சி அக்கணமே உண்டாகி விட்டது. பின்னர் குருநாதரிடம் ஒன்றுங் கேட்க வேண்டிய தில்லையே எல்லாம் அவர் அறிவார் என்று நினைத்தேன். உடனே எங்களை வைத்து குருநாதர் மத்தியில் ஒர்நிழற் படம் எடுக்கப்பட்டது. நிழற்படம் எவ்வளவு மகிமையுள்ளது என்பதை என் ஞாபகத்திற் கொண்டுவந்தேன். முதன் முதல் அடியேன இந்நிலைக்கு ஆளாக்கியது சாது அப்பாத்துரைச் செட்டியார் தந்தகுருநாதரின்புத்தகத்திலுள்ள நிழற்படமல்லவா? அன்று சாயந்திரம் நடந்த சற்சங்கத்தில்குருநாதர் அடியேனேப்பேசச்சொன்னர். அடியேன்மேடையருகில் எதிரேசா ட்சாத்வள்ளலாரைப்போன்றிருந்தகுரு தேவர் முன் சபையில பேசிப்பழக்க மில்லாதவன் குருநாதர் ஆணையைமீற முடியாது.அருட்பா மகாதேவமாலையின் 'கருணை நிறைந்து அகம்புறமும் துளும்பி வழிந்த ’’ என்னும் பாவை சொன்னது தான் தாமதம் ஏதோ என் அநுபவங்களில் சிலவற்றைச் சொல்லி முடித்தேன். சத்சங்கம் முடிந் ததும் 'குருநாதன் நன்றப்ப் பத்தியுடன் பேசினீர்கள்' என்று கூறிஞர். யாத்திரை தொடங்கி இற்றை வரை வீட்டெண்ணமே மனதிற் புகாவண்ணம் அட்கொண்ட அருட்குருநாதனிடம் அவர்சன்னிதியில் ஒர் வேண்டு கல் கேட்க வேண்டுமென்ற நியதி போன்று திருக்கோணமலையி விருக்க ஒரு கடிதம் வந்தது. அதில் அடியேனது தெய்வீகக் காதலை நன்கறிந்த எனது வாழ்க்கைத் துணைவியார் அடியேனே சந்நியாசம் பெறுகிற எண்ணம் இப்போதைக்கு வேண்டாமென்று எழுதியிருந் தார். யோகிராஜ் அவர்களுக்கும் இதனைக் காட்டினேன். அன்று "மத்தியானம் சற்குருநாகனுக்குப் பாத பூஜை நடத்தினேம். குருநா தரும் அடியேனும் ஒன்றித்தது போன்ற ஒருமைப்பாட்டை அப்பாத பூஜை முடியுமட்டும் உணர்ந்திருந்தேன். கண்ணை விழித்துக் குருநா "கனின் அருள் வதனத்தைப் பார்த்தேன். அடியேனையே உற்று நோக் கிக் கொண்டிருந்தார். அடியேன் அகம் நெக்குருக ஆத்மீகப் பாதை யில் என்னைப் போன்ற இல்லறத்தான் செல்ல வேண்ம யிருந்தால் அவன் குடும்பமும் ஆத்மீகப் பாகையில் செல்வதற்கு வரந்தர வேண் டுமென்றும் என் குடும்பத் ைகத் தங்கள் பணிக்கே அர்ப்பணிக்கிறேன்; அவர்களையும் தேவரீர் ஆட்கொள்ள வேண்டுமென்று மெளனமாகப் பிாார்க் டு த்தேன். இந்க வேண்டுகோளை ஏற்றவர் போன்று சுவாமி கள் புன்முறுவல் பூத்தார். அடியேனுக்கு பூரீ பஞ்சாட்சா தீட்சை தந்து 4ெ மா?லயும் கந்கருளினர். - (தொடரும்)
s
P

Page 27
Registered at the G. P. O. ஆத்மஜோதி கி தெய்வீக வாழ்க்கைச் சங்க ம பூனி கதிரை மணி மாலை திங்கனிச்சோலே அறிவுரைக்கதைகள் நாஞர்? இளங்கோவின் கனவு ஆத்மநாதம் (引 கீதா யோகம் | titւ լThif լյուն) கந்தரநுபூதி (பொழிப்பு மார்கழிப் பாடல் கூட்டு வழி பாடு திவ்ய ஜீவ  ைசங்க கூட்டுப் பி
சந்தா நே அன்புடையீர்!
இன்று வரை 15ம் ஆ களுக்கு உடனுக்குடனேயே களுக்கெல்லாம் எமது நன்ற சந்தா அனுப்பாதோர் உடே
ருேம்.
ஆத்மஜோதி நிலை
(GO இந்தியாவிலுள்ள அன்பர் ਤਰੰLit it, ਮਓ।। சத்திற்கு அனுப்பி வைத்து, வேண்டுகின்ருேம்
உஷ்ண முழங்கா6 கட்டு, மலபந்தம், அஜிர்ணப் யின்மை, வயிற்று வலி, பித்த பம் நெஞ்சுக் கருப்பு முத ஜீரண சக்திக்கும் தேகாரே சூரணம்
தபால் செலவு உட்பட பு It is ܐܠܦ* சம்பு இன்டஸ்ரீஸ் - அரி இலங்கையில் ஆத்மஜோதி நிே இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலைய, திரு. நா. வியைக முர்த்தியால் அ4
 

.
LS a Newspaper M. L 59/300 s லய வெளியீடுகள் 6n) för ........ 1--25^ضےسےہ
(பரமஹம்சதாசன்) , -50 . 2-50 (சுவாமி சிவானந்தர்) . . . –65 ... -25 (செ. நடராசன்) 2-25 த்தானந்த பாரதியார்) - 3-03
3 2_56
- - - 蠶夏 ரையுடன்) ... - 25 - - - 20
- - - - 30 ரார்த் கனே - - 10
பர்களுக்கு
ண்டுக்குரிய சந்தா அனுப்பியவர் - சீது அனுப்பியுள்ளோம். அவர் றி உரித்தாகுக. இன்று வரை ன அனுப்பி வைக்க வேண்டுகின்
யம், நாவலப்பிட்டி
Bartsit) கள் வழக்கம் போல் R. வீரசம்பு, ாளையம், சேலம்-9 என்ற விலா அதை எமக்கும் தெரியப்படுத்த
(95 y 600TLD வாய்வு, இடுப்பு வாய்வு, மல கை கால் அசதி, பிடிப்பு, ப மயக்கம், பித்த சூலை, புளியேட் லிய வாய்வு ரோகங்களை நீக்கி சிக்கிற்கும் மிகச் சிறந்த
டன் ஒன்று 4 ரூபா 25 சதம் நியமில்ல) சிப் பாளயம் சேலம் -9 (S. 1.1
கிடைக்குமிடம் - |Ljub اج அது நாவலப்பிட்டி ܝܕܓܪ
தாருக்காக ஆத்மஜோதி அச்சகததல் சிட்டு வெளியிடப்பெற்றது. 17-8-63