கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.09.17

Page 1
CNgg/CŠ/CNಿ? N%N%A9%
*。 %
స్క్రీగిపోతే
స్త్రశస్త్స్వక్తగ్గిస్తోక్తి
క్రిస్క్రీNస్త్రNg/*
~\' 5% E- حمی a
స్త్ర%N్య
గ్రాడ్లే
క్ష్
స్త్రీ/గ్గిస్తో/
නියුබ්ද
岑 గిల్క్రికి
ܫ .
: ප්‍ර/%. వ్లో
会 Ýದ್ದಿ\ಿ
2 s %N%N 5. 襄 N “ዃን
3 Moj orbi T ථූණි
2R2% %EN్య %వ్వ కెNYZA%%NQ%N్కడ్డీ
مختصہتی..................~
డొర్రీస్గఢిల్క్రి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్ట్ఫోన్స్తృత
శ్రీక్ష్g్యస్త్ర
N9%A%ధి\ \gNN
S
లైస్ల్లో %A3%దిN&3%ధిN3%డెN&3%ధ్యే3%డెN%A
గ్గిల్లg/%గ్గి
த* ༦
《གས་
%N
葛
స్క్రీస్ట్
۔۔۔۔۔۔
g esYS
خیبر
%్సక్తి%A ప్రిల్ష
ಥ್ರಿ/ಗ್ಲಿಟ್ರಿ/ಗಿ
NKP
ఘీ
గిల్క్రిస్త్ర
గిడ్త్ 3ಥ್ಲೀ
13ಣ್ಣಿತ್ತಿದ್ಲಿ
ದ್ವಿಘ್ನ; RAN3%
炎 - బ్రిడ్స్ 幻
o 3.
豪
§âಗ್ಗಿ://ಡಿ\EZNEo/ರ್ನಿÂ್ರ್ರಕ್ಷ್

Page 2
o پڑتان
鬣 __ 。
ஜோதி
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலபமே.
சுத்தானந்தர்
ஜோதி 15 சோ பகிருதுளுல புரட்டாதி மி1உ(17-9-63) சுடர் 10 பொருளடக்கம் 1. 3 a Tf ராமதாஸ் அஞ்சலி 4()9 2. ராம நாமத்தால் ராமனை அடைந்த ராமதாசர் 411 3. மனிதனிடம் இருப்பவை 414 4. ஜகத்குரு பூரீ சுவாமி ராமதாஸ் 415 5. உயிர் மாற்று விழா 420 6. இமய ஜோதி 424 7. அம்மை அப்பரின் மறைவு 432 8. மெய்வழி காட்டும் மகாத்மா 435 9. என்ன ஆட்கொண்ட எனது குருநாதர் 43s 10. பக்தித் தேன் 441 11. பேராவல் 444 12. வேதாகம நெறி 蔔 13. வினையொழிக்கும் வழி அட்டை 3ஆம்
ஆத்மஜோதி சந்தா விபரம் ക്രൈ ക്രൈ ஆயுள் சந்தா ரூபா 75,00 வருட சந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் மன திரு. நா. முத்தையா "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி, (சிலோன்)
தொலைபேசி எண் 353 -
 
 
 
 

சுவாமி ராமதாஸ் அஞ்சலி
"பரமஹம்ஸ் தாசன்'
-x
காரிருளிற் கலங்கவிட்டுச் சிவானந்தக்
கதிர் மறைந்த கங்குற் போதில் பேரருளாம் நிலவுமிழ்ந்த நினையெண்ணிச்
சற்றமைதி பெற்றி ருந்தோம்; சீராம தாசரெனும் செழுங்கருணை மதி நீயும் திடுதிப் பென்று, ஆறவெந் துயர்க்கடலில் ஆழ்த்தியெமை மறைந்தது, நிற் கழகு தாமோ!
半
பாரதத்தின் எல்லையிலே கொடுஞ்சீனப் பகையரக்கன் படை யெடுத்துப்
போர்தொடுத்து நிற்கையிலே, காலமெலாம்
காத்ததவப் புனித ஆத்ம
தீரரெலாம் விரைந்தொருவர் பின்ஒருவ
ராய் மறையும் செய்கை கண்ட
பேரன்பர் எவர், கலங்கார்? ஆத்மீக
உலகையினிப் பேணுவரீர் யார்?

Page 3
410
ஆத்மஜோதி
காந்தமெனக் கவர்ந்திழுத்துக் கருணைபொழி
கண்மலர்கள், கனிந் தலர்ந்த சாந்தி மணங் கமழ் புனிதத் தண்ணமைதிப்
புன்முறுவல், சார்ந்தார் ஐயம் மாய்ந்தொழியக் குரல்கொடுத்து மறைப் பொருளின் மாண்புணர்த்தும் மணிச்செஞ் சொற்கள் வாய்ந்ததவப் பேருருவம் மறைந்திடினும்,
நிறைந்தாற்றல் மறைவ துண்டோ? 3.
X
அன்பர்களும் வம்பர்களும் அல்லல்களும்
நல்லனவும், அன்றன் ருடச் சம்பவங்கள் அத்தனையும், சர்வமுமே
இராமனெனச் சார்ந்து சென்ற என்புருக்கும் நினது பெரு வாழ்வென்னும்
*அருள்நாடும் யாத்தி ரை'யே நின்பெருமைக் குரைகல்லாம்; அஃதொன்றே
புவியிலுனே நிலையாக் கும் மே! 4。
★
அருளன்னை கிருஷ்ணுபாய் அஞ்சலிக்க,
ஆனந்த ஆஸ்ர மத்தில், 蠶 திருவுருவங் கொண்டிறைவன் திருநர்மப் பெருமைகளைச் செகத்திற் கூட்டி, பருவுடலைக் கரந்துயர்ந்த பரவடிவம்
பெற்றகுரு பரனே! நின்றன் திருவடிகள் போற்றி! நின்றன் திருநாமம்
என்றென்றும் செழித்து வாழ்க! 5.
 
 
 
 
 
 

ஆத்ம ஜோதி 411.
ராம நாமத்தால் ராமனை அடைந்த ராமதாசர் ( ஆசி ரி ய ர்)
ராமதாசர் என்றதும் பலருடைய உருவெளித்தோற்றம் கண்முன்னே நிற்கின்றது. தெலுங்கு நாட்டில் விசேஷமாகப் பிரசித்தி பெற்ற பெரியாராகிய பத்ராசலம் ராமத சர் ஒருவர், வீரர் திலகமாம் சிவாஜியின் குருவாய்ப் பிரசித்தி பெற்ற மகாராஷ்டிரப் பெரியாராகிய சமர்த்த ராமதாசர் இன்னுெருவர். பூரீ துவாரகா ராமதாசர் பிறிதொருவர். இவர்கள் மூவரைத் தவிர எமது காலத்திலே ராமதாசர் என்னும் பெயரோடு காஞ்சங்காடு என்னுமிடத்தில் ஆனந் தாச்சிரமம் அமைத்து வாழ்ந்த பெரியார் ஒருவர் சமீபத்தில் இறைவன் திருவடி எய்தியமை யாவரும் அறிந்ததே.
தந்தையாரிடம் ‘பூரீராம ஜயராம ஜயஜய ராம' என்ற மந்திர உபதேசத்தைப் பெற்று அம் மந்திர சித்தியினலே அவரே ராம நாமமாக மாறி உலகில் பல அற்புதங்களோடு வாழ்ந்தார்கள்.
‘ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நினைத்
தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே'
என்று இலக்கணம் கூறியதுபோல் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் இறைவனைக் கண்டார்.
'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற் கேற்பத்தாம் அநுபவித்த ராம நாமத்தைத் தம்மை நாடி வந்தோரும் அநுபவிக்கச் செய்தார்.
“கீத்ங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண் டறிவாரை'
என்று மாணிக்கவாசகப் பெருமான் கூறியது போலக் கண்ட வர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். தேடுவதும் தேடிக் காண்பதும் வாழ்க்கையின் குறிக்கோளாக வாழ்ந்து காட்டியவர்.

Page 4
412 ஆத்ம ஜோதி
‘'தேடிக்கண்டு கொண்டேன்-திரு
மாலொடு நான் முகனும்
தேடித் தேடொணுத் தேவனை-என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்'.
என்கிருர் அப்பரடிகள். இப்படித் தேடிக்கண்டு கொண்டவர் கள் சுவாமிகள். தமது வாழ்க்கை முழுவதையும் பரம்பொரு ளாம் ராமனிடம் முழுவதாக ஒப்படைத்துவிட்டு அவனது கருவியாக வாழ்ந்தவர்கள். எது நிகழ்ந்தாலும் ராமனிச்சை யே என்று ஆனந்தமாக வாழ்ந்தவர்கள்.
பொலீசுகாரர் இருவர் புகையிரதத்திலே சென்ற இவரையும் இவருடன் சென்ற சாதுராமனையும் இருந்த இடத்தை விட்டு எழுப்பி அவ்விடங்களில் தாம் இருந்து கொண்டார்கள். இவர்கள் இருவரையும் நிலத்திலே இருக்கச் செய்து தமது தலைப்பாகைகளைக் கழற்றி அவர்கள் இருவரிட மும் வைத்திருக்குமாறு கூறித் தாம் நித்திரையாயினர். சாது ராமனுக்கோ பெரியகோபம். சுவாமிகளோ ஆனந்தமாக ராமனிச்சையை வியந்தார். ராமா! என்னே நின்கருணை. நினது நாமத்தை மறந்து தூங்கிய அடிமையை எழுப்பி நினது நாமத்தை ஜெபம் செய்ய வைத்தாயே என்று ராம னுக்கு நன்றி செலுத்தினர்.
இன்னெருமுறை நீண்டதூரம் புகையிரதப் பிரயாணம் செய்து வந்தபோது இருவரும் ஒரு புகையிரத ஸ்தானத்தில் வலோற்காரமாக இறக்கப்பட்டனர். புகையிரதமேடையிலே அங்கு மிங்கும் நடக்கவைத்தார் புகையிரத அதிகாரி. சாது ராமன் மனம் புழுங்கினன். இத்தருணத்திலேயும் சுவாமிகள் ராமன்கருணையை வியந்தார். வெகுதூரத்திலிருந்து பிரயா ணம் செய்து வந்தமையினல் கால்கள் விறைத்துப் போயிருந் தன. அவ்விறைப்பைப் போக்குவதற்காக இராமனே அதி காரியாக வந்ததாக இராமனுக்கு நன்றி செலுத்தினர்.
இப்படியாக எதுநிகழ்ந்தாலும் அத்தனையும் ராமனிச்சை என்று உணர்ந்து வாழ்ந்தவர்கள் சுவாமிகள். வடஇந்திய யாத்திரை செய்யும்போது வயது சென்ற அன்னையார் ஒரு வரிடம் சுவாமிகள் தண்ணீர் கேட்டார். அதற்கு அன்னையார் சுவாமி நான் தாழ்ந்த சாதியில் சேர்ந்தவள் எவ்வாறு தண் னிர் தருவது? தாயே! நீயே அகிலாண்டேஸ்வரி, நீதரும்
 

ஆத்ம ஜோதி 413
தண்ணிரை ஆனந்தமாய்ப் பருகுவேன். அந்த அன்னை அன் புடன் தண்ணிரைக் கொடுத்துத் தனது கவலையையும் தெரி வித்தாள்.
'தாயே! நம் யாவரையும் காக்கராமனிருக்கும்போது நாமேன் பயப்பட வேண்டும்? கவலையும், கதியில்லை என்னும் உணர்ச்சியும் வேண்டுவதேயில்லை. இராமன் என்றும் நம தருகே இருக்கின்ருன்' என்று உறுதி கூறினர்.
ஆனல் அவ்வன்னை'ஆயினும் உடலும்மனமும் தளர்ந்து போன ஏழையாமெனக்குப் பாபியாமெனக்கு ராமனிடம் நம்பிக்கையும் அன்புமில்லையே' என்று கூறி அழுதாள்.
'அன்பார்த்த தாயே!ராமணருளால் உனக்கு நம்பிக்கை உண்டாகும். கவலைப்பட வேண்டாம். எளியோர்க்குந் தாழ்ந் தோர்க்கும் என்றும் ராமனே துணையாவான்' என்று சுவாமி கள் அன்னையைத் தேற்றினர்.
"அப்படியானுல் எனக்கொருவழி சொல்லுங்கள்’ என்று கேட்டாள் அன்னை.
'பகலில் எப்போதும், இரவில் விழித்திருக்கும்போதும் ராமநாமமொன்றையே சொல்லிக் கொண்டிருந்தால் நாம் நிர்க்கதியானவர்கள் என்று தோன் ருது; துயரும் நம்மை அணுகாது. இவ்வற்புத நாமகானமோ, தியானமோ நிகழு மிடத்தே துன்பமில்லை, ஏக்கமில்லை, சாவுமில்லை'.
இந்த வயோதிக அன்னேக்குச் சுவாமிகள் செய்த இந்த உபதேசம் உலகத்திலுள்ள மக்கள் எல்லாருக்கும் பொருத்த மானதே. மனிதன் விழித்து எழுந்தால் ஒட்டமாக ஒடுகின் முன், பொழுது சாய்ந்ததும் வீடுவந்து உறங்குகின்றன். வயிற்றுக்கவலையே ஒயாக்கவலை. இக்கவலைக்கிடையே ஆண்ட வன நினைக்கும் கவலை அவனுக்கில்லை. உலகக் கவலை மாற வேண்டுமானுல் ஆண்டவனை நினைக்கும் கவலை மனதைப்பற்ற வேண்டும். அப்போதான் மனிதன் மனிதனுக வாழ முடியும்.
சுவாமிகளுடைய பின்வரும் உபதேசம் சுவாமிகளுடைய உள்ளப்பண்பை ள்டுத்துக்காட்டுவ தொன்ருகும்.
*ராமா! நீயே தந்தையும் தாயும், சோதரனும், நண்ப னும், ஆசானும் ஞானமும், புகழும் செல்வமும் அனைத்து மாவை. நீ ஒருவனே அடைக்கலமென்றுற்ற உனதடிமையை உன்னிடமே முழுதும் முழுகச் செய்'.

Page 5
414 ஆத்மஜோதி மனிதனிடம் இருப்பவை
(சுவாமி இராமதாசர்)
மனிதா!
இனிமை எங்கே -
கடுமை எங்கே
இன்ப மெங்கே - துன்ப மெங்கே -
ஜோதி யெங்கே - பேரிரு ளெங்கே -
பேரன் பெங்கே - பகைமை யெங்கே -
வெம்மை யெங்கே - தண்மை யெங்கே -
நன்மை யெங்கே - தீமை யெங்கே
உண்மை யெங்கே - G) Li Tü60), Lo Go\u İı G835 -
ஞான மெங்கே - மயக்க மெங்கே -
மூொர்க்க மெங்கே - நரக மெங்கே
தெய்வ மெங்கே -
அது வுன்னிடமே ; அதுவு முன்னிடமே.
அது வுன் னிடமே ; அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே ; அதுவு முன்னிடமே.
ਮg வுன்னிடமே அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே; அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே; அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே ; அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே; அதுவு முன்னிடமே.
அது வுன்னிடமே ; அதுவு முன்னிடமே.
 

ஆத்மஜோதி 4.15
ஜகத்குரு முறி சுவாமி ராமதாஸ்
(செ. விசாகப் பெருமான்)
உலக இயக்கம் நடக்க தர்மம் நிலைத்திருக்க வேண்டும். தர்மம் உல கத்தில் இல்லையெனில் விலங்குலகையே நாம் இன்று காணக் கூடியதாக விருக்கும். தர்மம் உலகத்தில் நிலைத்திருக்க வேண்டுமானல் அதன் காப் பாளராகிய அவதார புருஷர்களும், ரிஷிகளும், ஆத்ம ஞானிகளும் தொடர்ச்சியாக இருந்து வரவே வேண்டும். இம்மகான்கள் இல்லாத ஒன்றை எமக்கு எடுத்துக்கூறுவதில்லை. உள்ளதையே கால தேச சூழலுக் கேற்ப மக்கள் எளிதில் விளங்கக் கூடியதாக வாழ்வில் அமைத்து அனுப விக்கக்கூடியதாகத் தமது வாக்காலும் வாழ்வாலும் எமக்கு இனிய முறையில் புசட்டி வருகிருர்கள். பிறந்த வீட்டோடு மாத்திரம் வாழ்ந்து மடியும் நிலையில் நாம் இன்று இல்லை. அகில உலகத்தோடும் தொடர்பு கொண்டுள்ளோம். காலமும் இடமும் குறுகியுளது. ஆகவே மக்களெல் லோருடைய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மதித்து இசைந்து வாழ வேண்டிய அவசியம் மக்களெல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. மேலும், உலகம் முழுவதும் கடவுள் வியாபித்திருக்கிருர், உலகம் அவ ரின் படைப்பு, அவனின்றி ஒரணுவும் அசையாது, என்று இவ்வாருக இறைவனின் எங்கும் நிறைந்த, எல்லாமான, சர்வ வல்லமையுள்ள குணங்களை ஒருபுறங் கூறிக்கொண்டு மறுபுறம்' எமது' 'எமது' என்று மட்டுப்படுத்துகிருேம். இவ்வித சூழ்நிலைகளில் மக்களிடையே அமைதி யையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட உலகப் பெரியார்கள், சாதி, சமய, இன எல்லைக்களுக்கப்பாலான வாழ்க்கையில் கடவுள் ஒருவரையே தமது இலட்சியமாகக் கொண்டு தமது வாழ்வால் வாக்கால் உண்மை நெறியை ஊட்டி வருகிருர்கள். ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ சமூகத்திற்கோ உதவக்கூடிய வகையிலும் பெரியார்கள் தோன்றியுள்ளார்கள். உலகம் முழுவதற்கும் உதவக்கூடிய வகையிலும் தோன்றியுள்ளார்கள். இன்றும் இருக்கிருர்கள் என்றும் இருப்பார்கள்.
சுவாமி ராமதாஸரவர்களும் உலகக் குருமார்கள் வரிசையில் சேர்ந் தவர்களென்பதை உலக மக்களனைவரும் அவர்களைப் போற்றி வணங்கிய வகையாலும், சுவாமிகளின் போதனைகளாலும் நூல்களாலும் தெரிந்து கொள்ளலாம். 1954ம் ஆண்டு சுவாமிகள் பூப்பிரதட்சணம் செய்தார் கள். அப்போது பல சாதியினரையும் சமூகத்தினரையும் சமயத்தவரை யும் சந்தித்து அளவளாவ நேரிட்டது. சுவாமிகளின் தெரிசனத்தையும் ஞானுேபதேசத்தையும் நேரில் பெறும் பாக்கியம் பெற்றவர்கள் தமது வாழ்வு திருந்தப்பெற்று, கடவுள் ஒருவர் உண்டு, அவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைகின்ருர், உலகனைத்திலும் வியாபித்திருக்கின்ருர்,

Page 6
46 ஆத்மஜோதி
பக்தி சிரத்தையினுல் அவரை அனுபவிக்க முடியும், கடவுளில் வாழ்தலே அழிவற்ற இன்பத்திற்குஞ் சாந்திக்கும் வழி என உணர்ந்தார்கள். மத மனற்றத்தைச் சுவாமிகள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. எம்மதத்தைச் சார்ந்தவர்களாயினும் அம்மதக் கோட்பாடுகட்கிசைந்த முறையில் அவர்களே முன்னேறச் செய்வதையே சுவாமிகள் உகந்ததெனக் கொண் டார்கள். ஆத்ம ஞானம் பெற்றவர்கள் எம்மதத்தைச் சார்ந்தவராயி னும் அவர்களின் அனுபவங்கள் மத எல்லையைத் தாண்டி ஒருமைப்பாடு டையதாகவே இருக்கும்.சுவாமிகளின் அனுபவங்களும் கிறிஸ்தவ ஞானி களின் அனுபவங்களோடு ஒத்திருக்கின்றன என்று பல கிறிஸ்தவக் குரு மார்களே போற்றினர்.
உள்ளன்போடும் ஆர்வத்தோடும் இறைவனின் நாமத்தை ஒதுவ தே ஆத்மஞானம் பெறச் சிறந்த சாதனமென சுவாமிகள் வற்புறுத்து வார்கள். நாப ஜபத்தின் அவசியத்தையும் பெருமையையும் தேவாரங் களும் திருவாய் மொழிகளும் பெருமளவில் பகர்கின்றன. இந்து மதத் திற்கு இது ஒரு தனிச் சிறப்பு என்று கூறினும் மிகையாகாது. வெறும் நூலாராய்ச்சியினலோ அல்லது இன்னுெருவர் சொல்லக் கேட்டறிந்ததி ஞலோ இச்சாதனத்தைச் சுவாமிகள் கூறவில்லை. தமது சொந்த அனுப வத்தினலேதான் இதைச் சொல்லுகின்றர்கள். திருவருள், ஆத்மஞானி களைப் பெரும்பாலும் சாதாரண மக்களிடையிலிருந்து தான் உலகிற்கு எடுத்தளித்திருக்கிறதென்பதைச் சரித்திர மூலம் அறியலாம். உலக மக் கள் எல்லோரும் பெரியார்களின் வாழ்க்கையிலுள்ள அனுபவங்களைத் தத்தம் வாழ்வில் அமைத்துக் கொள்ள இந்த அனுபவங்கள் உதவுகின் றன. சுவாமிகளின் தந்தையார் அவர்களேசுவாமிகளுக்குக் குருவாக இருந்து 'ஒம் பூரீ ராம ஜயராம ஜய ஜயராம' என்னும் தாரக மந்தி ரத்தை உபதேசம் செய்தார்கள், சுவாமிகளும் இம்மந்திரத்தையே பெரும்பாலான அடியார்களுக்கு அருளினர்கள். சுவாமிகள் இம்மந்திரத் 5.fbgjë gojub 66Tj 5Lorraj gj “Om-Impersonal Truth, Sri-Divine Power, Ram-God is both Truth and Power, Jai Ram-Victory to God, Jai Jai Ram-Victory Victory to God-God who is at once impersonal Truth and Divine Power, Victory to Thee, Victory Victory to Thee”. 915 to 57 "அருவமான சத்தியமும் தெய்வீக சக்தியுமாக விளங்கும் கடவுளே உமக்கே வெற்றி - வெற்றிமேல் வெற்றி உமக்கே." அடியார்கள் எந் தெந்த மூர்த்தியில் கூடுதலான ஈடுபாடு உடையார்களென்பதை அறிந்து அந்தந்த மூர்த்திகளின் நாமத்தை அவரவருக்குச் சுவாமிகள் உபதேசம் செய்ததுமுண்டு. ஜேர்மனியில் அன்பர் ஒருவருக்கு “யேசு' (Jesus) என் னும் நாமத்தை அருளினர்கள். கொழும்பிலும் மட்டக்களப்பிலும் முறையே முருக நாமமும் கணேஷ நாமமும் அன்பர்களுக்கு அளிக்கப் பட்டது. கடவுளின் எந்த நாமத்தைத் தான் உபதேசம் செய்தாலும், பக்தியையும் நம்பிக்கையையும் அத்தோடு வற்புறுத்தச்சுவாமிகள் தவறு

ஆத்மஜேர்தி 47
வதில்லை. நாமஜபம் பலன் தர வேண்டுமாஞல், ஒரு கட்டளைக்காகவோ அல்லது கடமைக்காகவோ ஜபம் செய்வதாக இருக்கக் கூடாது. அது கடவுளின்மாட்டு ஆழ்ந்த பக்தியோடும் பணிவோடும் செய்யப்படல் வேண்டும். அப்போது தான் உள்ளத்தில் இன்பம் பொங்கி எழும் என் பார்கள் சுவாமிகள்.
பல நூல்களைச் சுவாமிகள் ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கின்றர்கள். பக்திச் சுவைச் சொட்டச்சொட்ட சுவாமிகளின் அனுபவங்களும் போத னேகளும் இவைகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. வாசிப்பவர்களுக்கு உற் *ாகம் ஊட்டும் வகையில் உயர்ந்த கருத்துகளைத் தமது அனுபவமுதிர்ச் சியினல் மிகவும் இனிய எளிய முறையில் விளக்கும் ஆற்றல் சுவாமி களுக்கே உரியதெனில் அது மிகையாகாது.
தன்னுள்ளும் உலகமனைத்திலும் கடவுளை யல்லாமல் வேறென்றை யுங் காணுத நிலையிலேயே எப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள். ஆகவே சுவாமிகளின் சந்நிதானத்தில் எந்த நேரமும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும். சுவாமிகளின் முகார விந்தத்தில் தவழும் ஆனந்தத்திற்கு ஒரு தனித் தன்மையும் சிறப்புமுண்டு. எவ்வித மனக் கவலையுடன் தான் சுவாமிகளின் முன்னிலையில் எவர் சென்ருலும் உடனே அக்கவலைகள் எல்லாம் நீங்கி தாம் ஒருபோதும் அனுபவத்திராத ஒருவித ஆனந்த பரவச நிலையை அடியார்கள் அடைகிருர்களென்பதை சுவாமிகளை நேரில் தெரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் அறிவார்கள்.
ஆனந்தாச்சிரமத்திற்குச் செல்வதென்றல் தமது சொந்தத் தாய் தந்தையர் வீட்டிற்குச் செல்வது போன்ற ஒருவித இன்ப உணர்ச்சியே அடியார்கள் உள்ளத்தில் எழும் - சுவாமிகளே அங்கு தெய்வத் தந்திை யாகவும், அந்த ஆச்சிரமத்தின் அதிஷ்டான தேவதையாக வீற்றிருக்கும் தூய அன்னை கிருஷ்ணபாய் அவர்களே எமது தெய்வீகத் தாயாகவும், உடனிருக்கும் அடியார்களெல்லோரும் சகோதரர்களாகவும் விளங்கு கிருர்கள். ஆனந்தாச்சிரம வட்டாரத்தில் கிடக்கும் கல்லும் முள்ளுங் கூட இன்பந்தருவன வாகவே இருக்கின்றன. ஒரு தெய்வீக சக்தி அங்கு நடமாடாதிருந்தால் இவையெல்லாம் ஒருங்கே வந்து அமையக் கூடிய ᎧᎧᎧ]ᏓL1Ꭷu)ᎶᏁ) .
எல்லோரும் எப்படித் தமது சொந்தத் தந்தையைக் கண்டார்களோ அதே போல எல்லோரிடத்திலும் சுவாமிகள் கடவுளை யே கண்டார்கள். அமெரிக்காவிலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் என்னுமிடத் தில் ஒர் அன்பர் "நீங்கள் கடவுளைக் கண்டீர்களா?’ என்று சுவாமிகளைக் கேட்டார்கள். "ஆம்' என்றதும் “அவர் எப்படி இருப்பார்' என்ற அடுத்தக் கேள்வியை கேட்டார். 'உங்களைப் போலவேதான், ராம
சுவாமிகளில்

Page 7
48 ஆத்மஜோதி
தாஸ் காணும் எல்லா உருவங்களும் இறைவனின் தோற்றமே' என்று உடனே சுவாமிகள் பதில் அளித்தார்கள். மக்களில் மாத்திரமல்ல உலக கனைத்திலுமுள்ள விலங்கினம், ஜடப்பொருள்கள் எல்லாவற்றிலுமே இறைவனைக் கண்டார்கள். எந்தச் சூழ்நிலையையும் நிகழ்ச்சியையும் இறைவனின் ஆணையென்றே கருதினர்கள். குகையில் தவஞ்செய்த காலத்தில் பாம்பொன்றில் இறைவனைக் கண்டு அதற்குக் கற்கண்டு கொடுத்தார்கள். சாதன காலத்தில் ஓரிரவு ரயிலில் பிரயாணஞ் செய் யும் போது போலீஸ்காரர் ஒருவர் தாம் நித்திரை செய்வதற்காகச்சுவா மிகளை இருந்த ஆசனத்திலிருந்து எழுப்பிவிட்டுத் தமது தொப்பியையும் வைத்திருக்கும்படி கொடுத்தார். இரவு முழுவதும் விழித்திருந்து இறை வன் நாமத்தை ஜபம் செய்ய வேண்டுமென்பது இறைவன் ஆணை என இந்நிகழ்ச்சிக்கு விளக்கம் செய்து கொண்டு தொப்பியையும் இறுகப் பிடித்த வண்ணம் நாம ஜபத்திலீடுபட்டார்கள் சுவாமிகள். இறைவன் ஆனந்த ஸ்வரூபி, இன்பத்தின் இருப்பிடம் ஆகவேதான் சுவாமிகளிடம் எப்போதும் இவ்விரண்டையும் அடியார்கள் பிரத்தியட்சமாகக் காணக் கூடியதாக இருந்தது.
சுவாமிகளின் வாழ்விலும் உபதேசங்களிலும் தெய்வீகமே ஊற் றெடுத்துப் பாய்ந்தன. இத்தெய்வீகம் உலகெங்கணும் பரவ வேண்டு மென்பதற்காக, உலகளாவிய அன்பையும்சேவையையுமே குறிக்கோளா கக் கொண்டு 1930ம் ஆண்டு தென் கண்டத்தில் கஞ்சங்காடு என்னும் பட்டினத்திற்கருகாமையிலுள்ள மலையடியில் 'ஆனந்தாச்சிரமம்' அன் பர்களால் அமைக்கப்பட்டது. பராசக்தியே திருவுருக்கொண்டதென்ன ா அன்னே கிருஷ்ணபாய் அவர்கள் ஆச்சிரமத்திற்கு அதிஷ்டான தேவதையாக அமைந்தார்கள். திருவருள் துணை செய்ய அன்பர்கள் ஆத ரவுதர ஆச்சிரமம் நன்கு வளர்ந்து உயிர்ப்பிணிக்கு மாத்திரமன்றி உடற் பிணிக்கும் வேண்டிய தொண்டுகள் பல புரிந்து வருகின்றது. இத்தொண் டுகளைக் கவனித்த பாரத அரசாங்கமே இதை ஒரு தர்ம ஸ்தாபனமாகக் கணித்துளது. "Vision” என்னும் ஆத்மீக மாதச் சஞ்சிகையொன்று இங்கிருந்து வெளிவருகிறது. சுவாமிகளினதும், தூய அன்னையாரினதும் பிறந்த தினங்களும் சுவாமிகளின் சந்நியாச தினமும் மிக விமரிசையாக இங்கு கொண்டாடப்படும். அத்தோடு உலகப்பெரியார்களின் தினங்க களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் மக்கள் இவ்வைப வங்களில் கலந்து கொள்வார்கள்.அடியார்களெல்லோரும் இதைத்தமது "ஆத்மீக இல்ல'மாகவே கருதுகிருர்கள்.
சோபகிருது ஆண்டு (இவ்வாண்டு) ஆடிமாதம் 9ம் திகதி (25-7-63) வியாழக்கிழமை இரவு 7 மணி 10 நிமிடமளவில் சுவாமிகள் தமது எண் பதாவது வயதில் மகா சமாதி அடைந்தார்கள். உலகனைத்துமுள்ள அடி
 

ஆத்மஜோதி 419
யார்கள் அனைவருக்கும் இது பெருந் திகிலேயுண்டாக்கியது. சுவாமிகளின் தோற்றம் ஹனும ஜயந்தியன்று நடந்ததும், மகாசமாதி கருட பஞ்சமி யில் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கவை. சுவாமிகளின் புனிதமான உடலை ஹோமத்திலிட்டு அஸ்தியை ஆச்சிரமத்திலேயே அடக்கம் செய்யப்பட் டிருக்கிறது. உடலோடு சுவாமிகளுடன் அடியார்கள் உறவாடமுடியா தெனினும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுவாமிகள் இடங்கொண்டுள் ளார்கள் என்பது உறுதி. சுவாமிகளின் தெய்வீக சக்தி தூய அன்னயார வர்களின் மூலம் எமக்குக் கிட்ட வேண்டுமென்று பிரார்த்திப்போமாக.
ஒம் பூரீராம ஜயராம ஜய ஜயராம.
SLqASA S qSS S qMA S qAS S qAq SYSS Y S qA S qA S qMS S qAq S qqqq S qqqqq SYSYS அன்னையாம் ராமா! நினதெளிய அடிமையை 9 அறிவில்லாக் குழந்தையை காத்தருள், காத்தருள், காத்தருள். எல்லையிலா அன்பே இக்குழந்தையின் , வரண்ட இதயத்தே நினதன் பின் சிறுதிவலையையா ) கிலும் புகட்டியருள்.
ராமா! ராமதாசனுக்கு உனது வெறியை அருள் அவனை முற்றிலும் வெறிமுற்றியவனுக்கு. இதனை , அன்றி வேறெதனையும் அவன் வேண்டான். அவன் உன்னைப் பற்றியே ஓயாது பேசுக. உலகம் அவனைப் அ பித்தனென்று ஏசுக. ஆமாம் ராமா! அவனுன் 9 பித்தனே.
جر
ராமதாசன் எம் மனிதனது அபிப் பிராயத்தையும் அ பொருட்படுத்தான். ராமா! அவன் உலகில் எதற்குங் 9 கட்டுபடாதவாறு நீயே பார்த்துக்கொள். நினதன்புத் தளை ஒன்றிலேயே அவன் பந்தப்படுக. ஆணுல் நின தன்பு சுதந்திர நிறை வாயிலங்குங்களிலே - தளையேது கட்டேது; அது வோர் தளையுற்ற சுதந்தரம் 1 மிக அ அற்புதமானது ராமா நினதன்பு வெறியின் இனிமை 9 என்னே! லஹரி என்னே! கவர்ச்சி என்னே!
சுவாமி இராமதாசர்.
SY S qLq S qqqqS qqqq qAS qSS S qqSq S qMq SY S qASAS qSLSA Lq S qAqA S qAqAY

Page 8
420 ஆத்மஜோதி
உயிர் மாற்று விழா
(சாந்தன்)
ஆன்மா மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கு முன் செய்த கர்மங்கள் மாத்திரம் முழுக் காரணமல்ல. ஆன் மாவின் ஈடேற்றமே கடவுளின் முக்கிய நோக்கமாகும். ஆன்மா தன்னைப் பூரணமாக உணர்ந்தால்தான் தன் இழி நிலையை அறிந்து பற்றவேண்டிய பற்றைப் பற்றும், தன்னை உணரக்கூடிய இயல்பு மனிதப் பிறவிக்கு மட்டுமே உள்ளது. இந்தச் சிறப்பியல்பை முன்வைத்தே அரிதரிது மானிடராய்ப் பிறப்பதரிது’ என்று பாடினர் போலும், பிறப்பெடுப்பதற்கு எந்த மும்மலங்களும் காரணமாக இருக்கின்றதோ அதே மும்மலங்கள், ஆன்மா தன்னைத் தானே உணர்ந்து கொள்ளக் கூடிய தன்மையையும் மறைக்கிறது. இதனுல் தான் செய்வது சரியா தவறு என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலை யிலிருக்கிறது.
ஆனல் நம்முடைய உண்மை நிலையை மற்ருெரு மனி தப் பிறவியால் அறிந்து கொள்ள முடியும். சுயமாக நம் மை உணர்ந்து திருந்த முடியாத நிலையில், நமது ஆன்ம ஈடேற்றத்திற்கு வேருெரு மனிதப் பிறவியின் உதவி அவ சியமாகிறது. இந்த அவசியத்தைக் கருதியே கடவுள் குடும்பமென்னும் சூழலை ஏற்படுத்தியுள்ளார். எல்லோரும் நம்மைப் பற்றி அறியக் கூடிய நிலையிலிருந்தாலும், நம் மில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே நமது நன்மை தீமை களை எடுத்துக் காட்டித் திருத்த முனைவர். நம்மில் அக் கறை இல்லாதவர் நம்முடைய செயல்களின் தன்மையை அறிந்தும் சிலர் ஊமையாக இருந்து விடுவர். அல்லதுநமக்குப் பிரயோசனப்படாத முறையில் பிறரிடம் சொல்லி அதைப் பொழுது போக்காகக்கொள்வர்.
நம்மில் அக்கறை உள்ளவர்களும் நமது வாழ்க்கை யில் ஒட்டி இருப்பவர்களும் பெற்ருேர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணை ஆகியோர்.
பெற்ருர் நம்முடைய நன்மை தீமைகளைக் கண்டு அதற்கேற்ப நமது முயற்சிக்கு உதவி செய்தாலும் அவர்
 

ஆத்மஜோதி - 421.
களுடைய கவனம் மற்றக்குழந்தைகளிடமும் பகிர்ந்து கொள் ளப் படுகின்றது. அதோடு பகுத்தறிந்து திருத்திக் கொள்ள முடியாத சிறுபிராயத்தில்தான், அனேகமாகப் பிள்ளைகள் பெற்றேரின் பராமரிப்பில் இருக்கின்றர்கள். இதஞல் பெற் ருேர்கள் மாற்று முறைகளைக் கையாண்டு செயற்கை முறை களால் முன்னேற்ற முடியுமே தவிர இயற்கையாகத் தன்னை உணர்ந்து உயர்வதற்கான வாய்ப்பு குழந்தைகளுக்கு ஏற் படுவதில்லை.
அடுத்து, உடன் பிறந்தவர்களுடன் நாம் பெற்றேரின் பராமரிப்பில் இரு க்கு ம் இளம் பிராயத்தில் தான் ஒன்ருக இருக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இக்காலத்தில் அவர் களும் நம்மைப் போன்றே தன்னை உணரும் சக்தி குறைவாக இருப்பதால் நமது முன்னேற்றத்திற்கு உதவி செய்தல் முடி யாத காரியமாகும். தன்னை உணர்ந்து திருந்தக் கூடிய வய தை அவர்கள் அடைந்தவுடன், தத்தம் வாழ்க்கைத் துணையு உன் தனித்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் மற்ற வர்களின் விசயத்தில் நுண்ணியமாகக் கவனஞ் செலுத்த இயலாத நிலையிலிருக்கின்றர்கள்.
நமது வாழ்க்கையில் இணைந்த நாளிலிருந்து நன்மை தீமை அத்தனையிலும் ஒன்றியிருக்கும் ஆன்மா, வாழ்க்கைத் துணை ஒன்றே. கணவன் தன்னில் அக்கறை கொள்வதை விட மனைவியைப் பற்றி அதிகங் கவனஞ் செலுத்துவதும், மனைவி, கணவன் தான் தானென்று நினைப்பதும் இயல்பான அம்சம். கணவன் மனைவியாக ஆவதற்கு முன்னரே காதல ராக இருந்து ஒருவரை ஒருவர் பார்த்திடாத நிலையிலுங் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் கற்பனை செய்து அவர்கள் மேல் அதிகப் பற்றுக்கொண்டு அந்த நினைவு மேல்ோங்கி நிற்கும் நிலையிலிருக்கின்றர்கள். உலகக் கண்களுக்கு திருமணத்தின் பிறகு ஒன்று சேர்ந்தவர்களாகத்தோன்றினுலும்அவரவர்கள் உள்ளுணர்வின் படி என்றே ஒன்று சேர்ந்து விடுகின்றர்கள். இதனுல்தான் திருமணங்கள் பிறப்பிற்கு முன் சுவர்க்கத்தில் நிச்சயப்படுத்தப் படுகின்றன என நம் முன்னேர்கள் கூறினர் போலும்.
திருமணத்திற்குப் பின் ஒருவர் மற்றவராகவோ மாறி விடுகின்றர்கள். அதாவது ஒரு உயிர் மற்ற உயிராக மாறி விடுமளவுக்கு ஒன்றி விடுகின்ருர்கள். இதனுல் திருமணத்தை *உயிர் மாற்று விழா' என்று கூப்பிட்டால் மிகப் பொருத் தமாகும், ...

Page 9
422 ஆத்மஜோதி
இப்படி ஒரு உயிர்மேல் மற்ருெரு உயிர் ஒன்றி நன்மை தீமைகளிற் பங்கு கொள்ளும் போது போராட்டம் எழுவது இயற்கை. வெவ்வேறு சூழ்நிலையில் பலகாலம் வாழ்ந்தவர் கள் ஒன்று சேரும் பொழுது, தனக்கும் தன் துணைக்கும் வேறு பாடுகள் பல இருப்பதை உணருகிருர்கள். இருவர்களிடத் திலும் புதைந்து கிடப்பவைகளை, வேறு யாரும் தெரிந்து கொள்ளாத நிலையில் இவ்விருவரும் தெரிந்து கொள்கின்ருர் கள். இதனுல் ஒருவர் மற்றவரது நன்மைகளில் பங்கு கொள் வது போலவே அவர்களுக்கு வரும் தீமைகளிலும் பங்கு கொண்டு அதிலிருந்து மீள வழி காட்டுவர்.
இல்வாழ்க்கையில் எழும் போராட்டங்கள் ஒரளவுக்குச் சுயநலங்காரணமாகவே எழுகின்றன. வாழ்க்கைத் து நல்ல நிலையிலிருந்தால் தான், தன் வாழ்வும் சிறப்புறும் , இன் றேல் துணையோடு தன்வாழ்வும் பாழ்பட்டு விடும் என்ற காரணத்தால் ஒருவர் நலனை மற்றவர் பேணும் பொழுது இயற்கையாகவே பிறர் நலம் பேணும் சிறப்பியல்பு இங்கு கூடுகின்றது.
மனைவாழ்வு தெய்வீகத் தொடர்புள்ளதுஎன்று கூறப்படு கின்றது.இத்தொடர்பின் சிறப்பைக்கொண்டேசிவன் சக்தியின் ரிக்க முடியாத தத்துவ நிலையைப் போற்றுகின்ருேம். ஒருவர் மனதிலுள்ள விருப்பு வெறுப்பு ஆசாபாசங்களை அப் படியே மற்றவர்களிடம் சொல்ல ஏதாவதொரு தடை இயற் கையாகவே அமைந்து விடுகின்றது. தந்தையிடஞ் சொல்ல முடியாதவைகளைத் தாயிடஞ் சொல்ல முடிவதும், தாயிடஞ் சொல்வதை உடன் பிறந்தோரிடஞ் சொல்ல முடியாமலும், தனது எண்ணச் சுதந்திரத்திற்குத் தடை ஏற்பட்டிருக்கும் பொழுது, மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டக் கூடிய நிலையில் கணவன் மனைவி மட்டுமே அமைகிருர்களென் பது தெள்ளத் தெளிவு.
ஆனல் இல்வாழ்வின் உண்மை புரியாதவர்கள் தாம் பத்தியச் சுதந்திரத்தை வெறுக்கிருர்கள். இந்நிலையில் அவர் கள் பெருந்தவறு செய்வதோடு தாம்பத்ய வாழ்வின் அடிப் படைத் தத்துவத்தையே நாசம் பண்ணுகிருர்கள். சுருக்க மாகக் கூறின் ஒருவர்மேல் மற்றவர் பூரண சுதந்திரத்தைப் பயன் படுத்த முடியாமல் முட்டுக்கட்டை இட்டுக் கொள்ப வர்கள், கணவன் மனைவியரே அல்ல. அவர்கள் வாழ் வும் இயற்கையானதல்ல, பொய்மை நிறைந்த போலி வாழ்க்கை,
 

ஆத்மஜோதி 423
ம ணி த ப் பிறவி எடுத்தவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் தன்னைத் தானே உணர்ந்து முன்னேற்றமடைய முடியாமையாலேயே தொடர்பு முறையில் ஆன்மாக்களை ஈடேற்ற இல்வாழ்க்கை சூழலை இறைவன் அருளியுள்ளார். ஒரு உயிர் மேல் மற்ற உயிருக்கு ஆழமான அக்கறை இருப்ப தால் ஒரு சமயத்தில் இரு ஆன்மாக்களின் ஈடேற்றம் செவ் வனே நடக்கின்றது.
ஒரு கல்லில் இரண்டு பழங்களை வீழ்த்தும் கடவுளின் திருவிளையாடலை என்ன வென்று சொல்வது.
ஆன்மீகத் தொடர்புக்கும் ஆன்மாக்கள் ஒன்றை ஒன்று பிரியாமலிருப்பதற்காக இனக்கவர்ச்சிக்குப் பின் உணர்ச்சி களைப் பின்னி அந்தப் பின்னலினின்று மீழமுடியாத நிலையை யும் ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வளவு உண்மைகளையும் உள்ளடக்கி வள்ளுவப்பெருமான்
'இயல்பினுன் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலே'
என்று ஒரு குறளில் கூறியுள்ளார்.
மோட்சத்தை அடைய வேண்டு மென்று எண்ணி, முய லாமல் இயல்பாகவே கடவுளின் பாதார விந்தங்களை அடை யும் சிறப்பியல்புள்ளது இல்வாழ்க்கை. இதனல் தான் கட வுளைக் காண முயல்வார் எல்லோரையும் விட இல்வாழ்க்கை யில் ஈடுபட்டுள்ளவர்கள் முதன்மையானவர்கள் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
என்னே வள்ளுவரின் நுணுக்கம்.
வழியுமிவ்வுலகின் அகில இன்பங்களும் அகன்றெழிக. ராமானந் தமாம் ஒளிமிகு சூரியன் உதயமாகி யாங்கணும் தனது அருளொளிக் கதிர்களை, அன்புக் கதிர்களை வீசி இருளை வீட்டிச் சுடர்கின்றன். நட்சத் திரங்கள் மறைந்தன. சந்திரனும் மங்கினுன். தோன்றி மறையும் துச்ச உலகின் அழியுமின்பம் அகன்றே ஒழிந்தது.
- சுவாமி ராமதாசர் ல

Page 10
424 ஆத்ம ஜோதி
இம ய ஜோ தி
(திரு. கி. வானமாமலை )
இன்றைய நாகரிக உலகில், விஞ்ஞானத்தின் விளைவாகத்
தோன்றியுள்ள வசதிகள் பலவற்றைப் பெற்றிருந்தும், மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் இன்பத்தைப் பெருதவர்களாக இருப்பதையே நாம் காண்கிருேம். மனிதனுடைய தேவைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அவனிடம் நிறைவென் பது நில்லாது நீங்கி விட்டது.
கண்முன்னுல் இருந்தாலும் ஒருபொருளைத் தேடிக் கண்டு கொள்ள முடியாத குருடனைப் போன்று, துன்பம் தீர்ந்து இன்பம் நிலவுதற்கான வழிமுறைகள் வெகு அருகில் இருந் தும் அறியமாட்டாதவர்களாகமக்கள் இருக்கின்றனர்.இதனுல் மேலும் மேலும் அவர்கள் துன்பத்தையே தேடிக்கொள் கின்றனர்.
கருணுமூர்த்தியான இறைவன் தமது அருமைக் குழந்தை களின் பரிதாபநிலையைக் கண்டு இணங்கி அவர்களுக்கு நல் வழிகாட்ட வேண்டி அவ்வப்பொழுது அவதாரமாகிருன்
என்பது மறைநூல்களின் முடிவு. அம்முறையே நம் பாரத
நாட்டில் தோன்றின பல அவதாரங்கள்.
மக்களின் மயக்கத்தைத் தீர்த்துக்கட்டி விழிப்பை ஏற்
படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட சமயத்தின் பெய ராலும் அழிமதிகள் தலைகாட்டத்தொடங்கிய காலங்களிலும்
இறைவனுடைய அவதாரங்கள் ஏற்பட்டு அறத்தின் உயர்
பெருமையை உணர்த்த முற்பட்டுள்ளன.
2500 வருடங்கள் முன்னுல் புத்தர் பிரான்தோன்றி
'அன்பின் வழியதுயிர்நிலை' என்ற கோட்பாட்டை இவ்வுல கத்தில் நிலைநாட்டினர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு வாழ்வதில் தான் மனிதனின் மேன்மை அடங்கி யுள்ளது என்பதைப் பறைசாற்றினர்; மாசற்ற" மனமே இறைநிலையை உணர்த்தும் என்பதையும் உணர்த்தினர்.
2000 வருடங்கள் முன்னல் தோன்றிய திருவள்ளுவர் 'அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை' என்பதை வலியுறுத்தி

ஆத்ம ஜோதி 425
ஞர். 'மனத்துக் கண் மா சிலன் ஆதலே அறம்' என்று அறத்
திற்குரிய அரிய விளக்கத்தையும் அவர் பகர்ந்தருளினர். 'அழுக்காறு, அவா, வெகுளி, இன்னுச்சொல் இந் நான்கும் இழுக்கா இயன்றதே அறம்' என்று மேலும் அதன் கருத்தை விளக்கியுள்ளார்.
பின்னர் தோன்றிய ஆதிசங்கரர் எங்கும் வியாபகமாக இருக்கும் இறைவனே நாம் என்ற அத்துவைதக்கொள்கையை
நாட்டினர். தனக்கு வேருகப் பிறர் உளர் என்ற எண் ணமே மனிதனின் துன்பத்திற்குக் காரணம் என்றும், அதன் காரணம் அறியாமை என்றும், அறியாமை அகன்றல் தன்னை அறிந்து இன்புறலாம் என்பதையும் கூறிப்போந்தார்.
இவ்வரிய கருத்துக்களைக் காலம் செல்லச் செல்ல மக்கள் மறந்து விடுதல் கூடாது என்பதற்காக பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், இராமலிங்க வள்ள லார் போன்ற அவதாரங்கள் அடுத்தடுத்துத்தோன்றலாயின.
இறைவனின் இவ்வரிய தோற்றங்கள் எல்லாம் காணக் கொடுத்துவைக்க வில்லையே என்று ஏங்கும் மக்களைத் தேற்று வதற்காக "இமய ஜோதி' பூரீ சுவாமி சிவானந்தரின் உரு வத்தில் அவதாரம் ஒன்றுதோன்றி உலகமக்களுக்கு உயர்வழி காட்ட முற்பட்டது.
தமிழ் நாட்டின் தென்பகுதியில் தோன்றித் தென்கிழக் காசியாவில் வைத்தியத் துறையில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சுவாமிகள் இமய மலைக்கேகிக் கடும்தவம் புரிந்து தன்னை யறிந்த தவப்பெரும் தலைவராக விளங்கினர். உலகமக்கள் அனவரும் உய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்ட சுவாமிகள் 1936ல் தெய்வநெறிக் கழகம் என்ற தோர் அரிய ஸ்தாபனத்தை ரிஷிகேசத்தில் தோற்றுவித்தார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய ரகசியங்களை உலக மக்களுக்குத் தெரிவிப்பதே கழகத்தின் நோக்கம். எம்முறை யில் வாழ்ந்தால் துன்பம் தவிர்ந்த இன்பவாழ்வு வாழலாம் என்பதை எடுத்துக் காட்டுவதே கழகத்தின் கொள்கை. சொல்லைவிடுத்து செயலில் ஈடுபட்டாலன்றி முயற்சியில் வெற்றி காணமுடியாது என்பதே கழகத்தின் கோட்பாடு. ாம்மதமானுலும் அவற்றின் அடிப்படைக்கருத்துக்கள்ஒன்றே என்பது கழகத்தின் கருத்து. ஜாதி, மத, இன, நிற, மொழி,

Page 11
426 ஆத்ம ஜோதி
நாட்டுவேற்றுமைகள் மனதின் கற்பனையே என்பதும் அழுக்க கன்ற மனநிலையில் இவ் வேற்றுமைகள் நில்லா என்பதும் கழகத்தின் முடிவு.
அன்பின் ஜோதியாக அமைந்த பூரீ சுவாமி சிவானந்தர் அவர்களின் தரிசனத்திற்கு அகிலஉலகமக்களும் ரிஷிகேசத்தை நோக்கி ஓடிவந்தனர். காந்தம் இரும்புத்தூள்களை ஈர்க்கும் தன்மைபோன்று அகில உலக மக்களையும் தம்பால் ஈர்க்கலா ஞர் சுவாமிகள். -
துன்பத்தில் கிடந்து உழலும் மக்களுக்கு உயரிய தேறுத லும் ஆறுதலும் சுவாமிகளிடத்திலே கிடைத்தது. தற்கொலே செய்துகொள்ளத் துணிந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். பிணியுற்றவர்கள் நோயிலிருந்து விடுதலைபெற்றனர். சதா கவலைப்பட்டுக் கிடந்தவர் கவலைகள் நீங்கிக் களிப்புடன் தோன்றினர். வறுமையால் வாடினுேர் செழிப்பைப்பெற்றுச் சந்தோஷமடைந்தனர். அபாயநிலைகளில் சிக்கினேர் அந்நிலை களிலிருந்து தப்பிப்பிழைத்தனர். அறியா மைஇருளில் அங்கும் இங்கும் தட்டழிந்தோர் அறிவெனும் ஜோதியைக்கண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.
மறைநூல்கள் அரிய பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. அவற்றையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ளுதல் அசாத் தியம். எனவே அவற்றிலடங்கியுள்ள கருத்தையெல்லாம் பிழிந்து கொடுத்தால்தான் இன்றைய மக்கள் உய்யவழி பிறக்கும். இவ்வரிய பணியை சுவாமி சிவானந்தர் அரிய முறையில் ஆக்கியுள்ளார்கள்.
"தொண்டாற்றுங்கள். தூய அன்பு கொள்ளுங்கள். தன்னிடமுள்ளதைப் பிறர்க்குக் கொடுங்கள். தியானம் செய் யுங்கள். தன்னை அறிந்து இன்பமுறுங்கள்,' எனும் பஞ்சசீலக் கொள்கையே மறைநூல்களின் சாரம் என்பதை அவர்கள் விளக்கி யருளினர்கள். அத்துடன்நில்லாது இவ்வரியகூற்றுக் களை நடைமுறையில் எங்ங்னம்மக்கள் கொண்டுவரவேண்டும் என்பதற்குரிய சாதாரண புருஷராகவும் அவர் விளங்கினர்.
'மக்கள்தொண்டே மாதவன்தொண்டு' என்ற கோட் பாட்டைக்கொண்ட சுவாமிகள் எந்தெந்தவழிகளில் எல்லாம் தொண்டு செய்யமுடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் தொண்டாற்ற முற்பட்டு மக்களின் உள்ளம் கவர்கள்வனனர்.
 

ஆத்ம ஜோதி 427
'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்ற
கோட்பாட்டின் பிரகாரம் தம் சரீரத்தின் சக்தியையெல்லாம்
பிறர்க்குரியதாக்கினர்; இறுதி மூச்சுவரையிலும் பிறர் நலனுக் காகவே பணிபுரிந்தார்.
'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல், நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம்தலை' என்ற உயர் கருத்துப்படி தம்மிடம் உள்ளதைப் பிறர்க்குக் கொடுத்துக்கொண்டே இருந்ததுடன் தம் உள்ளத்தையே பிறர்க்குக் கொடுத்து நின்ருர் 1: உலகத் தார் உள்ளத்துள் எல்லாம் உளன்' என்ற திருவாக்குப்படி அமைந்தார்!!
மேற்கூறிய மூன்று தன்மைகளைக்கொண்டு, அவற்றையே தியானித்து நின்ருல்தானகவே மனம் ஒருநிலைப்பட்டு தன்னை அறிந்து இன்பமுறும் தகைமை ஒருவனவந்துசாரும் என்பதை சுவாமிகள் தமது வாழ்க்கையின்மூலம் உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
தன்னை அறிந்தவனே தலைவனை எங்கும் கண்டுகளிக்க முடியும். சுவாமிகளிடம் ஒருதடவை அமெரிக்கப்பேராசிரியர் ஒருவர், “தாங்கள் இறைவனைக் கண்டதுண்டா?' என்று வினவினர். 'எங்கும் வியாபகமாக இருக்கும் இறைவனை எல்லாப் பொருள்களிலும் காண்பதுபோன்று தங்களிடமும் நான் காண்கிறேன்,' என்ருர் சுவாமி சிவானந்தர்."அறிவிற் சிறந்த அந்தணன், பசு, நாய், யானை, இழிகுலத்தோன் யாவரிலும் சமநோக்கைக்கொண்டு ஞானி விளங்குகிருன்', என்ற கீதையின் கருத்துக்கொப்ப சுவாமிகள் எல்லா ஜீவர் களிலும் இறைவனையே கண்டு களிக்கலானுர்,
தன்னே அறிந்த நிலையில் இறைப்பண்புகள் ஒருவரிடம் வந்து அமைகின்றன. சத்-சித்-ஆனந்த வடிவமாகிய இறைவ னின் தன்மைகள் ஆத்மானுபூதியடைந்தவர்களிடம் தாமா கவே வந்து தோன்றுகின்றன. இறைவனின் சர்வவியாபகத் தன்மையும், சர்வகுருத்துவமும் இவர்களிடம் தோன்றி நிற் ன்ெறன. இவர்கள் ஆனந்த வடிவினராகக் காட்சி யளிக் ன்ெறனர்.
பூரீ சுவாமி சிவானந்தரிடம் தொடர்பு கொண்ட அன் பர்கள் எண்ணற்றவர் அவரவர்கள் வாழ்வில் பற்பல அற்புத

Page 12
428 ஆத்ம ஜோதி
அனுபவங்களைப் பெற்றுள்ளனர். தங்கள் சொந்த அனுபவத் தின் காரணமாக நாத்திகர் முதல் ஆத்திகர் வரை அநேகர் சுவாமிகளின் நற்ருெடர்பில் வாழும் பேற்றைப்பெற்றனர்.
தூரத்திலுள்ள தன் முட்டையை எண்ணுவதால்
பாரிக்கும் ஆமைபோன்றும், கண்ணுல் நோக்கிக் குஞ்சுகளை
உருவாக்கும் மீன்போன்றும், அடைகாத்துக்குஞ்சு பொரிக் கும் பறவைபோன்றும், சத்குருவாகவிளங்கிய பூரீ சுவாமிகள் தம்மிடம் தொடர்பு கொண்டு விளங்கிய அன்பர்களுக்கு அரிய நற்போதனைகள் கூறி ஆனந்தவாழ்வுக்கு வழிகோலி வந்தார்கள். அமெரிக்காவிலுள்ள அன்பர்கள் கூட சுவாமி களின் அருகிலுள்ளோர் பெறும் இன்பத்தைப் பெற்றனர். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா முதலிய உலகின் எத்திசையிலுமுள்ள மக்கள் பெருமளவில் சுவாமிகளின் புனித தொடர்பில் வாழ முனைந்தனர். இதனுல் பூரீசுவாமி சிவானந் தரின் பெருமையை உணர்ந்த மக்கள் பூவுலகின் ஐந்து கண்டங்களின் எந்த மூலை முடுக்கிலும் அ தி க அளவில் தோன்றலாயினர்.
பூரீ சுவாமிகளின் எண்ணற்ற நூல்கள் அன்பர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தின. அறவியல் ஒழுக்க வியல், சமூகவியல், சுகாதாரவியல், தத்துவவியல், மற்றும் பல்வேறு பொருள்களைக் குறித்த எ ன் ண ற் ற நூல்கள் மக்களைக்கவர்ந்து நல்வழிப்படுத்தலாயின நூலின் ஒவ்வொரு வாக்கியமும் மக்களுடன் பேசுவதுபோன்று அமைந்தன. பூரீ சுவாமிகளே நேரில் பேசுவதுபோன்ற அனுபவத்தைப் பலர் அவர்களுடைய நூல்களைப் படிப்பதனுல் பெற்றனர்.இதனுல் பல்வேறு துறையிலும் நின்றபலரும் மனமாற்றமடைந்தனர்.
கோடீசுவரப் பிரபுக்கள் முதல் வறிஞர் வரை அனைவரும் குருதேவர் சுவாமி சிவானந்தரிடம் ஆறுதலையும் தேறுதலை யும் பெற்றனர். சிறுகுழந்தைகள் முதல் முதியோர் வரை தாயினும் சாலப்பரிந்து நிற்கும் சுவாமிகளிடம் அளவற்ற அன்பு பூண்டு விளங்கினர்.
தெய்வநெறிக் கழகத்தின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள ரிஷிகேசம் சிவானந்தாசிரமத்தில் அமைந் துள்ள இலவச மருத்துவச்சாலை நூறுமைல் வட்டாரத்தி லுள்ள மக்களுக்குப் மெரும் தொண்டுபுரிந்து வருகிறது;
 

ஆத்ம ஜோதி 429
திக்கற்றுக் கிடந்த மலைவாழ் மக்களுக்குப் பேருதவி செய்து வருகிறது. இங்குஅமைந்துள்ள பெரும் அச்சகம் சுவாமிகளின்
நூல்களையும் கட்டுரைகள் அமைந்த சஞ்சிகைகளையும் மற்றும் வெளியீடுகளையும் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இலவச உணவுவிடுதி,வேளைக்கு ஐந்நூறு பேருக்குக் குறையா மல் உணவளித்து வருகிறது. பூரீ சுவாமிகளைக் காண வரு கின்றவர்களுக்கு இலவசமாகப் பெருமதிப்புள்ள நூல்களை யும், மற்றும் ஏழைகளுக்குப் பொருளையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் சுவாமிகளின் வள்ளல்தன்மையை என்னென்று ரைப்பது! ஆசிரமத்தில் குருதேவருடன் வாழும் நாட்களில் ஒருவன் அனுபவிக்கும் சுகம் சொர்க்க சுகத்திற்கும் மேலான தென்ருல் மிகையாகாது.
'எல்லோரும் இன்புற்றிருப்பதல்லால் மற்றென்றும் அறியேன் பரா பரமே, ' என்ற கோட்பாட்டைக் கொண்டு விளங்கிய சுவாமிகளின் ஜயந்தி விழாக்கள் தெய்வநெறிக் கழகங்களால் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வருவதை அன்பர்கள் அறிவார்கள்.
சென்றவருடம் செப்டம்பர் 8ந்திகதிசுவாமிகளின் 76வது ஜயந்தி விழா உலகெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. பெரியார்கள் பலரும் சுவா மி களை த் தரிசிக்க வந்தனர்.
சமீபத்தில் நம் இந்திய ஜனதிபதி உயர்திரு இராதா கிருஷ்ணன் அவர்களும் சுவாமிகளைத் தரிசித்து வந்ததை
உலகறியும்.
ஜாதி, மத வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அமைந்துள்ள பூரீ சுவாமிகளிடம் கிறிஸ்தவர், முஸ்லீம்கள், பெளத்தர், வைணவர், இந்துக்கள் அத்தனைபேர்களும் ஒன்று போல் பக்திபூண்டு நின்றனர். காலம்சென்ற போப்பாண்ட வர் அவர்களும் சுவாமிகளிடம் நம்பிக்கைகொண்டு விளங்கி னுர் என்ருல், குருதேவரின் பெருமை தானகவே விளங்கும்.
இவ்வுலகில் செய்யவேண்டிய காரியங்கள் முடிந்தவுடன் அவதாரங்களும் மறைந்து விடுகின்றன. அத்தன்மையைப் ப்ோன்று பூரீ சுவாமிகள் செய்ய வேண்டிய அரும்பெரும் காரியங்கள் முடிந்து விட்டன என்பதை அறிந்து அவரது சரீரம் நலிவுறத் தொடங்கியது.

Page 13
430 ஆத்மஜோதி
1963 ஜூன் 25 திகதியன்று திடீரென்று அவர் சரீரத்தில் நோய் மிகுந் தது; மூளையிலுள்ள ரத்தக்குழாய்களில் ரத்தம்உறைந்ததனுல் நினைவுசக்தி குன்றிச் சரீரம் சோர்வுற்றது. இந்நிலையிலும் 'சரீரத்திற்கு அப்பாற்பட்டது ஆத்மன்' என்ற கோட்பாட்டைப் பறைசாற்றிய குருதேவர் தம் சரீரத்தில் பிணியே இல்லாததுபோன்று முகமலர்ச்சியுடன் காணப்பட்டார்; அன்பர்களு டன் முன்போன்று கானலானுர்,ஆணுல் சரீரத்தின்உள்ளே நலிவுநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.
ஜூலை 14ந் திகதி ஞாயிறன்று இரவு நிலைமை மிகவும் மோசமானது. குருதேவரின் நிலையத்திற்குமேல் ஒருபெரும் நட்சத்திரம் ஒழுகிவருவதை இரவு 8-30மணிக்குப் பலரும் கண்டனர். இதனுல் என்ன நேருமோ என்று ஏங்கி நின்றனர் அன்பர்கள்.சுமார் 11 மணிக்கு சுவாமிகளின் சரீரத்திலிருந்து ஒருபெரும் ஜோதி கிளம்பிச் செல்வதை அடுத்து நின்ற பக்தர் பார்த்தனர். "இமய ஜோதி'யாக விளங்கிய பூரீ சுவாமி சிவானந்தர் பரம்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார்.
பூரீ சுவாமிகள் மகாசமாதி அடைந்த செய்தியை அடுத்த நாள்காலையில் வானெலி மூலமும் பத்திரிகைமூலமும் அறிந்த மக்கள் இனி அவர் சரீரத்தைப் பார்க்கமுடியாதே என்று ஏங்கிப் புழுப்போல் துடித்தனர்; பெரியாரின் பொன்மொழி களை நேரில் கேட்க முடியாதே என்று பரிதவித்தனர். அவரது ஜோதி வடிவமான திருமுகத்தைக் காணமுடியாதே என்று கதறியழுதனர்; இனி அவரது பேருதவி பெற முடியாதே என்று கண்ணிர் வடித்தனர்.
சுவாமி அவர்களின் தேஜோமயமான சரீரம் 36 மணி நேரம் அன்பர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்தும் ம க் க ள் விமானம் மூலமும் சமாதி தரிசனத்திற்கும் ஓடிவந்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து தரிசனம்செய்து சென்றனர்.
16ந்திகதி சுவாமி அவர்களின் சரீரம் கங்கைக்கரையில் கொண்டு வரப்பட்டு அதற்கு அபிஷேகாதிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வரிய வைபவத்தில் பங்குகொள்ள மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர். ரிஷிகேசத்தில் இம் மாதிரி இதுவரை மக்கள் கூடினதேகிடையாது என்கிருரர்கள். பின்னர் அவரது சடலம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வேத பாடத்துடனும், மகா மந்திர ஜபத்துடனும் சிவானந்த மந் திருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சுவாமிகளின் சமாதிக் கென்று தயார் செய்யப்பட்ட இக்கோயிலில் கீழ்பாகத்தில்
 
 

ஆத்ம ஜோதி 431
அவரது சரீரம் அடக்கம் செய்யப்பட்டது. மக்கள் திரள்திர ளாக வந்து த ங் க ள் இறுதிவணக்கத்தைத் தெரிவித்துச் சென்றனர். அனைவரும் தாயைப் பிரிந்த குழந்தையைப் போன்று தேம்பித் தேம்பி நின்ற காட்சி கல்லையும் உருக்குவ தாக அமைந்திருந்தது.
ஐந்து வருடங்கள் சேர்த்த பணத்தைக்கொண்டு விமான டிக்கட் வாங்கி குருதேவர் தரிசனத்திற்கு வந்த அமெரிக்கர் ஒருவர் சுவாமிகள் சமாதியடைந்த செய்திகேட்டு ஸ்தம்பித்து நின்றதைக் கண்டவர் கலங்கி நின்றனர். எத்தனையோ அயல் நாட்டினர் குருதேவரின் தொடர்புக்காக வந்துள்ளனர்.
உலக மக்களை ஒன்றுசேர்க்கும் உயரிய பணியில் ஈடுபட்டி ருந்த குருதேவரது உயர் கருத்துக்களை மேலும் மேலும் மக் களிடை பரவச்செய்வதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்ஜலி யாகும் தன்னுடைய பெயரைச் சொல்லுகின்றவரிடம் தான் இருப்பதாகப் பகவான் தெரிவிப்பது போன்று, குருதேவரின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் இடத்தில் எல்லாம் அவர் இருக்கிறார்.
'கடையை விரித்தோம் கொள்வாரில்லை, கட்டிவிட் டோம்,' என்று சமரச சன்மார்க்கத் தத்தை வள்ளலார் அந்தக்காலத்தில் கூறியதாகத் தெரிவிக்கப் படுகிறது. ஆனல் வள்ளலாரின் மறுதோற்றமாகத் தோன்றிய 'இமயஜோதி' பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் சமரச சன்மார்க் கத்தை உலகின் எத்திசையிலும் எப்பகுதியிலும் பரவச் செய்து மக்களை விழிப்புறச் செய்து விட்டு ஜோதியில் கலந்து ஜோதியாகத் திகழ்ந்து வருகிருர்,
"இமய ஜோதி’யின் இணையற்ற தன்மை உலகம் உள்ள வும் உறைந்து நின்று ம்க்களை நல்வழிப் படுத்திப் பேரின்ப நிலைக்கழைத்துச் செல்ல இறைவன் அருள்புரிவானுக!
Y+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++*半
ராமா! தாசன தாசைகளைக் களை, அவற்றை நசுக்கி அவனைக் * காத்தருள். அவனை நடாத்தி அழிவில் நின் வீடருள். ராமன் * மோகமே! அன்பின் நிறைவே! கடுமையுஞ் சினமும் காமமும் * பிறவும் தாசனைவிட்டு முற்றிலுமொழிக. நினதருளால் அவன்
மனம் படிகமெனப் பரிசுத்தமாயொளிர்க, . -சுவாமி இராமதாசர் 平+++++++++++++++++→→→++++++4+++++++++++++++++*+++++++++++平

Page 14
432 ஆத்மஜோதி
"அம்மை அப்பரின் மறைவு’
தி. கி. லக்ஷமி - மதுரை.
தென் இந்தியாவில் திருச்சி என்னும் ஊரில் உள்ள கோவிலில், சிவபெருமான் தாயுமானவர் என்னும் திருநா மம் பெற்று விளங்கி வருகிருர். இப்பெயர் ஏற்பட்டதற்கு ஒர் அற்புத நிகழ்ச்சியே காரணம்.
ஒர் ஏழைச் செட்டிப்பெண் பிரசவ வேதனையில் துடித் துக் கொண்டிருக்கும் பொழுது அவள் அருகில் உதவிக்கு ஒரு வரும் இல்லை. அவளுடைய வயதான தாயார் வெளியில் எங் கோ சென்றிருந்தாள்.
ஆனல் இப்பெண்ணின் உருக்கமான வேண்டுகோளுக்கி ணங்கி நம் பெருமானுகிய சிவபெருமான் அவளுடைய தாயின் உருக்கொண்டு உடன் வந்து அவளுக்கு பிரசவம் பார்த்து, மருந்து கொடுத்து, குழந்தையையும் பார்த்துக் கொண்டு மிக்க அன்புடன் இவளுக்கு உதவி செய்து வர, வெளியில் சென்றிருந்த இவளுடைய தாய் உள்ளே வரவும், தாயுருக் கொண்ட இறைவன் மறைந்தார். தன் மகளுக்கு குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து அம்மா குழந்தாய் உனக்கு உதவியாக இருந்தது யாரம்மா? என்று கேட்க, அம்மா நீங்கள் தானே எனக்கு பிரசவம் பார்த்தது அதற்குள் மறந்து விட்டீர்களா? என்று பெண் அதிசயத்து டன் கேட்க, ஏதடி நான் இப்பொழுது தானே வெளியிலிருந்து உள்ளே வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி அதிசயிக்க இருவரும் இறைவனின் அதிசயச் செயலை எண்ணி, இறைவ னே இந்த ஏழையின் பிரார்த்தனைக்கு இரங்கி பிரசவம் பார்ப் பதற்கு தாயும் ஆனேயோ என்று வியந்து போற்றி துதித்த (6ŐTT ,
அதுமுதல் இப்பெருமானுக்கு 'தாயுமானவர்' என்னும் திருநாமம் உண்டாயிற்று.
'குற்றமென்பது எது செய்தாலும் கொலைகளே
செய்திருப்பினும் பெற்றதாய் விரோதமுண்டோ பிள்ளையென்று கொஞ்சுவார்'
இது தாயின் உண்மையான அன்பை எடுத்துக் காட்டுகின்
 

ஆத்மஜோதி 433
றது. தன் மகன் மிக மிக அயோக்கியனுக இருப்பினும் அன்புத்தாய் அதை உண்மை என்று ஒப்புக் கொள்ளாமல் நல்லவனென்றே எண்ணிக் கொள்வாள். தனக்குத் தன் மகன் எத்தகைய தீங்கினைச் செய்தாலும் அதைப் பொறு த்து அன்பினையே சொரிவாள். அதையே
'பெற்ற மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு'
என்று பழமொழி கூறுவதுண்டு. எத்தகைய பெரும் குற்றத்தையும் மன்னித்தருளும் அன்பே தாயன்பு.
ஆணுல் தந்தை அன்பு எப்படி? ஆம் தாய்க்குத்தான் அன்புண்டு, தந்தைக்கு அன்பு கிடையாதோ என்ருல் உண்டு. தந்தையின் அன்பு சிறிது கண்டிப்பு நிறைந்த தாக இருக்கும்.
குழந்தை தவறு செய்தால் தவறு செய்யாதே என்று தான் கூறினல் குழந்தை மனம் நோகுமே என்று எண்ணிக் குழந்தையை ஒன்றும் கூருமல், இறைவா என் குழந் தைக்கு நல்ல புத்தியைக் கொடு என்று அன்புத்தாய் இறைவனை வேண்டுவாள்.
ஆனல் தந்தையோ குழந்தை திருந்தி நல்லவனுக மாற வேண்டும் என்று எண்ணிக் கண்டித்து, அதட்டிப் புத்தி புகட்டுவார். தந்தையின் அன்போடு கண்டிப்பும் கலந்திருக்கும்.
ஆம். இத்தகைய அன்புத் தாயின் குணமும் அன்புத்
தந்தையின் குணமும் ஒருங்கே அமைந்து விளங்கினர்கள் நமது குருநாதர் சுவாமி சிவானந்த ஸரஸ்வதி மகராஜ் அவா கள.
குழந்தைகள் தங்களுடைய மனக் குறையை யாரிடத் திலும் உரைப்பதில்லை. அன்புத் தர்யிடமே வெளியிடு வார்கள். அதுபோல அமெரிக்கா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜர்மன், பிரிட்டன் மற்றும் இடங்களிலெல்லாம் இருக்கும் ஸ்வாமிஜியின் குழந்தைகள் அன்புத் தாயாகிய ஸ்வாமிஜியிடம் தத்தமது மனக்குறை யைத் தெரிவித்து ஆறுதலடைந்தனர்.

Page 15
434 ஆத்மஜோதி
'தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லை' என்று கூறுவது போல் அன்புத் தந்தையாகிய ஸ்வாமிஜியின் உப தேசத்தைப் பெற்று அதன்படி நடந்து நன்மக்களாயினர்.
எத்தகைய காரியங்களைச் செய்ய நேரிடினும் ஸ்வாமி ஜியிடம் யோசனை கேட்டே செய்து வந்தனர்.
அழுந்தொறும் அணைக்கும் அன்னை
அறிவிலாது ஆடி ஓடி விழுந்தொறும் எடுக்கும் அப்பன்,
விளையாடும்போது தோழன் தொழுந்தொறும் காக்கும் தெய்வம்
சாந்தமாய் எடுப்போர்க்கெல்லாம்
குழந்தை
இப்படி உலாவும் நம் குருநாதனை 1959 நவம்பர் மாதம் 17ந் திகதி அன்று ரிஷிகேசத்தில் சென்று நேரில் தெரிசிக்கும் பெரும் பாக்கியம் யான் பெற்றேன். அன்புத் தாயின் அரவணைப்பும் அன்புத் தந்தையின் அருள்மொழி களும் குருதேவரிடம் ஒருங்கே அமைந்திருக்க நேரில் கண்டு
களித்தேன்.
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு'
என்னும் குறளுக்கு ஒப்ப நடைமுறையிலே நடந்து காட்டி வந்த நம் ஸத்குருநாத மகராஜ் அவர்கள் 1963ம் இu ஜூலை மீ" 14ந்திகதி ஞாயிறன்று இரவு 11, 20க்கு
ஜோதியுடன் ஜோதியாய் இரண்ட்றக் கலந்தார் என்னும் செய்தியைத் தெரிவிக்கும் பொழுது தாயும் தந்தையு
மாய் விளங்கி வந்த நம் அம்மை அப்பரை இனி நாம் என்று
காண்பது என்னும் ஏக்கம் உண்டாகின்றது. நம் குருநா தருடைய பூத உடல் மறைந்தாலும் அவருடைய தெய் வீக அருள் நமக்கு என்றென்றும் நிலைத்து நிற்கும் என் பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. நம் குருநாதர் அவர்களின் பேரருள் நம் எல்லோரிடத்திலும் மலர்வதாகுக.
சற்குரு நாத மகராஜ் கீ ஜெய்
 

ஆத்மஜோதி 435 மெய் வழி காட்டும் மகாத்மா
(தி. கி. சுந்தரம் - மதுரை)
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் அவதார மெடுக்கிறேன் என்று கண்ணன் கீதையில் தெரிவிக்கிருர் . இவ்வுலகத்தில் தர்மத்தை நிலை நாட்ட அவசிய மேற்பட்ட பொழுதெல்லாம் ஆண்டவ னின் அவதாரமாக அநேக மகா புருஷர்கள் தோன்றியி ருக்கிருரர்கள். இதற்கு நம் நாட்டுச் சரித்திரமேயன்றி எல்லாத் தேசச் சரித்திரங்களும் சான்ருகும். ஆனல் இத் தகையவர்கள் முன்னுல் இருந்தார்கள் என்றும் தற்காலத்தில் யாரும் கிடையாதுஎன்றும் பலர் எண்ணுகிருர்கள். இது பெரிய தவறு. சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னுல் பூரீ ஆதி சங்கரர் தென்னிந்தியாவில் தோன்றிக் குறுகிய காலத்துக் குள்ளேயே சாதாரண மனிதர்களுக்கு முடியாத அரிய பெரிய சாதனைகளைச் செய்திருக்கிருர், அதற்கு முன்பாக இயேசு கிறிஸ்து, புத்தர் போன்ற அவதாரங்கள் தோன் றினர். சமீபத்தில் நூறு வருடங்களுக்கு முன்பாக இந்து மதத்திற்குப் புத்துயிரும் இந்துக்களுக்குப் புதிய ஊக்கமும் அளித்த பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸரும் அவரது சிஷ்யர் சுவாமி விவேகானந்தரும் இத்தகைய மகா புருஷர்களே. இன்னும் சமீப காலத்தில் நமது தென்னுட்டிலேயே (திருச் சுழி கிராமம்) தோன்றி சிறு பராயத்திலேயே தவம் புரிந்து ஆத்ம அனுபூதி யடைந்து சுமார் 60 ஆண்டுகள் திருவண்ணுமலையிலேயே இருந்து சில ஆண்டுகள் முன்னரே மறைந்த பகவான் பூரீ ரமண மகரிஷி அவர்களும் இது போன்ற முனிவர்களில் ஒருவரே. பிறவிப் பயனை அடை யத் தீவிர முயற்சி கொண்டு உண்மையான பக்தி சிரத் தையுடன் குருவைத் தேடுபவர் கண்களுக்கு இத்தகைய மஹான்கள் மலையிலக்காகத் தோன்றுவார்கள்.
அவதார புருடர்கள் பெருமளவில் உலக மக்களை நல் வழிப்படுத்த முனைகின்றனர். அவர்களைக் கண்டு தரிசிக்க பல்வேறு இடங்களிலிருந்தும் ஒடி வருகின்றனர். அவரது தரிசனத்தால் புத்துயிர் பெறுகின்றவர் பலர்! பிணி தீர்க் கின்றவர் பலர் மெய்யறிவு பெறுகின்றவர் பலர்1 மரண

Page 16
436 ஆத்மஜோதி
மிலாப் பெருவாழ்வு பெறுகின்றவர் பலர்! அவதார புரு டர்களின் பெருமையைத்தான் கூறவும் முடியுமோ?
இத்தகைய இலக்கணம் பொருந்தியவரும் சிறந்த
குணங்களையுடையவரும் சமரச நோக்கு உடைய வரும் , உலகை உய்வித்தவரும், ஜாதி, மத, நிற, இன வேற்று மையில்லாதவருமாக விளங்கி வந்தார் பூரீ சுவாமி சிவா னந்தர். இவர் கடவுளின் திரு அவதாரம் என்று கூறுவ தில் எள்ளளவும் சந்தேகமில்லை. மற்ற அவதார புருடர் களைக் காட்டிலும் நாட்டிற்கும் உலகப் பொதுமக்களுக்கும் அதிக வருட காலம் சேவை செய்திருக்கிருர் பூரீ சுவாமி சிவானந்தர்.
மக்கள் இன்பமுடன் வாழ ஜாதி, மத, நிற, இன, மொழி வேற்றுமையற்றதோர் சமுதாய அமைப்புத் தேவை. மக்களைப் பிளவு படுத்தும் வேற்றுமைச் சக்திகள் தொ லேந்து போக வேண்டும், ஒற்றுமையில்தான் நமது லட்சி யம் ஈடேற முடியும் 'ஒற்றுமை உண்டேல் நம் அனைவ ருக்கும் வாழ்வு' என்ற பாரதியார் கூற்றுப்படி ஒற்றுமை யே வாழ்வளிக்கும் உயரிய தத்துவம் அவ்வுயர் நிலையை பூரீ சுவாமி சிவானந்தர் அவர்கள் தெய்வ நெறிக் கழகத் தின் மூலம் அகில உலகத்திலும் ஏற்படுத்தி வந்தார்.
இன்று உலக மெங்கிலும் 700 கிளைகளுக்கு மேல் உள் ளன. தெய்வ நெறிக் கழகத்தின் தலைவராக விளங்கும் பூரீ சுவாமிகளின் பெருமையை உலக மக்கள் பெருமளவில் உணரத் தொடங்கியுள்ளனர். இன்று ஆத்மீகத் துறையில் சிறந்த தலைவராக விளங்கி வந்தவர் பூரீ சுவாமி சிவானந் தர்தான். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, ஐரோப்பா முதலிய ஐந்து கண்டங்களின் எப்பகு தியிலும் இந்தக் கழகம் செயலாற்றி வருகிறது. மெய் வழி காட்டும் இந்த மகாத்மாவினல் எத்தனையோ பேர் கள் நல்வழி எய்தியுள்ளனர். ஜாதி, மத, நிற இன , மொழி வேற்றுமையின்றி லட்சக் கணக்கானவர் இக் கழ கத்தில் சேர்ந்து பணியாற்று கின்றனர். தெய்வ நெறி இயக்கம் மிகவும் சிறந்த முறையிலே நடந்து கொண்டு இருக்கிறது.
பூரீ சுவாமி சிவானந்தரின் தூய தொடர்பில் நிற்கும் பாக்கியம் பெற்றவர்களுடைய அரிய அனுபவங்களே வியக்
 

ஆத்மஜோதி 437
கத் தகுந்தவைகளாக இருக்கின்றன. பூரீ சுவாமிகளின் தொடர்பினுல் துன்பம் தீர்ந்து இன்பமடைந்தவர் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சொல்லிக் கேட்க ஆனந்தமாக இருக்கும். இதோ ஒர் நிகழ்ச்சி.
ஒரு பெரிய பணக்காரர் சுவாமிகளின் சீடராயிருந் தார். அவர் ஒரு பெரிய கார் வைத்திருந்தார். ஒருநாள் அந்தக் காரை ஒட்டிக் கொண்டு ஏதோ ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. காட்டின் நடுமத்தியில் கார் பள்ளத்தில் இறங்கி நின்று விட்டது. எவ்வளவு முயற்சி எடுத்தும் கார் எடுக்க முடிய வில்லை. என்ன செய்வது என்று விளங்காது குருதேவர் சுவாமி சிவானந்தரை உண்மையாகவும் மனப் பூர்வமாக வும் இரண்டு நிமிடம் தியானம் செய்தார்.
உடனே கண்மூடிக் கண் திறப்பதற்குள் 6 அடி உய ரம், கம்பீரமான தோற்றம், முகப் பொலிவுடைய ஒரு வர் கண்முன் வந்து நின்ருர், உடனே அந்தத் தனவா னிடம் நான் உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டுக் கா ரைப் பள்ளத்திலிருந்து மேலே தூக்கிவிட்டுப் பாதி தூரம் வரையும் கூடவே வந்தார். பிறகு அந்த மனித ரைத் திரும்பிப் பார்த்தால் கண்ணுக்குத் தெரியவில்லை. தனவான் மிகவும் சந்தோஷமடைந்து குருதேவர் தான் வந்து நமக்கு உதவி செய்திருக்கிருர் என்று நினைத்து ஆனந்தம் கொண்டார். இந்த மாதிரி எத்தனையோ நிக ழ்ச்சிகள் நடந்துள்ளன.
இத்தகைய சக்தி வாய்ந்தவரும் மெய்வழி காட்டுபவ ருமாகிய பூரீ சுவாமி சிவானந்தரிடத்தில் பஞ்ச சீலங்கள் அமைந்திருந்தன. சுவாமிகளின் உபதேசமும் அதுதான். 95 Tollgil Serve, Love Give, Purify, Realize at air so gigli தான். இதைத் தன் வாழ்க்கையில் நடத்தியும் காட்டி னர். கொடு, கொடு, என்பதை நடைமுறையில் காட்டி னர். சுவாமிகளிடத்தில் சென்ருல் அன்பர்களுக்கு இலவசமா கவே புத்தகத்தையும் மருந்துகளையும் வாரிவாரிவழங்குவார். அத்தகைய சிறப்புக் குணம் படைத்தவர் நமது சுவாமிகள்.
இத்தகைய மகான் 1963 ஜூலை 14ந் தேதி இரவு 11.20 மணிக்குத் தமது பூத உடலை நீத்து, ஜோதியுடன்

Page 17
4.38 ஆத்மஜோதி
என்னை ஆட் கொண்ட எனது குருநாதர்
(ஆ. சின்னத்துரை)
- சென்ற இதழ்த் தொடர்ச்சி -
சிவானந்த நகர் தெய்வ லோகம் போல் காட்சியளித்தது. சற் குருநாதனே ஆனந்த குடீரத்திலும், காரியாலயத்திலும், சத்சங்க மண் டபத்திலும், விசுவநாத மந்திரிலும் அவரின் நிழல்போல் தொடர்ந்து எந்த நேரமும் அவர் பக்கலில் நிற்பது பெரிய புண்ணியப் பேறென நினைத்தேன். அன்பர்களுக்கு இல்லை யெனுமல் தனக்கு அர்ப்பணித்த தீன்பண்டங்களையும் பழவகைகளையும் வாரி வழங்குவதும், திவ்ய ஜீவன சங்க வெளியீட்டுப் புத்தகங்களையும், ஆயுர்வேத மருந்துகளை யும் தானமாகக் கொடுப்பதும், நின்றும் இருந்தும், கிடந்தும், நடந் தும் பக்தர்களுக்குத் திருவாய் மலர்ந்தருளும் ஒம் தத் ஸ்த் Serve> Love, Meditate, Purify, Realize, Enquire whom am I (up 565u gyi கில வார்த்தைகளையும் Do good, be good என்னும் அறிவுரைச் (og (Tfbá; 26T upth May God bless with long life, prosperity, health wealth and Eternal Biss என்ற வாழ்த்துக்களையும் நாளொன்றுக்கு அனேக தடவை திருவாய் மலர்ந்தருளுவதைக் கேட்குந் தோறும் அவ் வருளுரை முழுவதும் அடியேனுக்கும் சொன்னவை என்ற எண் ணம் உண்டாகி விட்டது. 'ஹரே ராமா' என்ற மஹா மந்திரம் இடைவிடாது என் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. சிறு வர்களுக்கு உபநயனங்கள், பெரியோர்களுக்கு மணவினைகள் எல்லாம் குருந்ாதன் முன்னிலையில் நடைபெற்றன. இவைகளைக் கண்டதும் தெய்வீக வாழ்க்கை காவியுடை தரித்துக் காட்டில் வசிப்பதைக் காட்
முன்பக்கத் தொடர்ச்சி
இரண்டறக் கலந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தி ருக்கலாம். அவரது பூதவுடல் மறைந்தாலும் அன்னரது ஆசியும் அருளும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனிமேல் நாம் அனைவரும் பூரீ சுவாமிகளின் புத்தகத்தை வாங்கிப் படித்து அதன் படி வாழ்க்கையிலே நடந்து காட்டினல் அதுவே நாம் அவ ருக்குச் செய்யும் முதற் கடமையாகும்.
வாழ்க தெய்வ நெறி இய்க்கம்!
வாழ்க தெய்வ நெறி இயக்கம்!!
 
 

A.
ஆத்மஜோதி 439
டிலும் இல்லற தர்மத்திலிருந்தே பற்றற்ற நோக்கோடு அன்பர் பணி செய்வதே மேன்மை தரும் என்பதைக் குருநாதன் காட்டாமல் காட் டுகிறர் என்பதை மனதில் கொண்டேன்.
அருட்குரு நாதரின் ஆசியைப் பெற்ற பின் அடியேனது காம மாதிகள் தேய்பிறை போல் தேய்ந்தும் சாந்தம் அமைதி முதலிய நற்குணங்கள் வளர்பிறை போல் வளர்ந்தும் வருவதைக் கண் கூடா கக் கண்டு வருகிறேன். உதாரணமாகக் குருநாதரிடம் விடைபெற் றுத் திரும்பி வரும்பொழுது பொண்டிச் சேரியில் வழுக்கி விழுந் ததன் பயனுக என் முழங்கைப் பூட்டு விலகி விட்டது. விக்கத்து டன் மிகுந்த வேதனை எடுத்தது. இந்நோயை முன்னரும் நான் அணு பவித்ததுண்டு. ஆனல் இம்முறை அவ் வேதனையைப் புன்முறுவலு டன் தாங்கி மிகுதிப் பிரயாணத்தைச் சந்தோஷத்துடன் கழிக்கும் சக்தியைக் குருநாதன் தந்துள்ளார். எவ்வளவு பாரதூரமான குற் றம் என் மாட்டு எவர் செய்தாலும் அவர்களை மன்னித்து விடும் சக் தியைக் கொடுத்துக் கொண்டே வருகிருர் . கஷ்டத்தைச் சகிக்கும் சக்தியும் வர வர விருத்தியாகிக் கொண்டே வருகிறது.
திருக்கோணமலையில் திரும்பி வந்து தெய்வீகப் பணியை இடை யருது செய்து கொண்டு வந்தேன். சற்குருநாதர் சதா அடியேன் வேண்டும் வரத்தை நிறைவேற்ற முனைந்து விட்டார் போன்று, அடி யேனது வாழ்க்கைத் துணைவியார் பிள்ளைகளுடன் குருநாதரைத் தரி சிக்க வேண்டும் என்ற ஆவலினுல் மிகவும் உந்தப்பட்டார். திவ்ய ஜீவன சங்க நிகழ்ச்சிகளிலும் அன்னதான வைபவங்களிலும் மிகவும் ஆர்வத்துடனும் நிறைந்த உள்ளத்துடனும் ஈடுபட்டு உழைத்து வந் தார். குருநாதன் அடியேனைக் குடும்பத்துடன் அழைக்கும் நாள் கிட்டினது. அடியேனைப் பார்க்கிலும் எனது மனைவி எப்போ குருநா தர் தரிசனம் கிடைக்குமென்ற ஆசையினுல் ஊண் மறந்தார். உறக் கம் மறந்தார். 1959 மார்கழியில் யாத்திரைப் பயணம் தொடங்கி விட்டது. தென்னிந்தியாவிலுள்ள ஸ்தலங்களையெல்லாம் தரிசித்து சென்னை சென்று நேரே ரிஷிகேசம் சென்ருேம். யோகிராஜ் சுவாமி சச்சிதானந்த ஜியும் குருபக்தியில் மேம்பட்ட மூன்று அம்மையார்களும் சுவாமி விமலானந்த மாதாஜியும் எங்களுடன் வந்தார்கள், குருநா தர் பாத பூஜைக்கு உகந்த புஷ்பம், பழம் முதலியவைகளை எடுத் துக் கொண்டு சிவாநந்த நகர் அடைந்தோம். சற்குருநாதர் நாரிப் பிடிப்பு நோயால் வருந்திக் கொண்டிருந்த படியால் ஆனந்தக் குடீ ரத்திலேயே பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்தார்கள். எங்கள் கோஷ்டியைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி பொங்க க்ஷேமம் விசா ரித்தார்கள். இலங்கையில் திவ்ய ஜீவன சங்கப் பணிகளைப் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். அடியேன் குருநாதரை முதன் முதல்

Page 18
440 ஆத்மஜேர்தி
தரிசித்த போது இருந்ததை விடப் பன்மடங்கு ஆர்வமும் அன்பும் என் மனதில் நிறைந்து இருப்பது போல் உணர்ந்தேன். அடியேன் பற்றில்லாது வேண்டிக் கொண்ட விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்த பெருந்தகையாளரை மனதார வாழ்த்தினேன். குருநாதர் சந்நிதியில் மனைவி மக்கள் சகலரையும் அர்ப்பணித்தேன். சற்குரு நாதன் அதனை ஏற்றுக் கொண்டது போன்று சிறிது தூரத்தில் உட் கார்ந்திருந்த எனது மனைவியை அருகில் கூப்பிட்டார். பலகாலமாக நரம்பு பலவீனத்தால் கண்ணைக் கூசிப் பார்க்கும் நிலையைக் கவனித் தார். பக்கலிலிருந்த ஆச்சிரம கண் வைத்தியர் சுவாமி இருதயா னந்த மாதாஜியிடம் மனைவியாரின் கண்னைப் _u if) G3g rT. தித் துத் தகுந்த சிகிச்சை யளிக்கும்படி பணித்தார். மாதாஜி சென்னையிலுள்ள பிரபல கண் வைத்தியருக்கு ஒர் அறிமுகக் கடித மும் கொடுத்துக் கண்ணுக்கும் சில மருந்துகள் கொடுத்தார்.
அடுத்த நாள் குருநாதரின் உடல்நிலை எவ்வளவோ வருத்தத்தி னல் பாதிக்கப் பட்டிருந்தும் மெய் வருத்தம் பாராது எங்களின் ஆசையை நிறைவேற்றுவான் வேண்டி பாத பூஜைக்கு ஆயத் தங்கள் செய்யச் சொன்ஞர். எங்கள் கோஷ்டியார் சகல ஆயத் தங்களும் செய்தோம். சற்குருநாதர் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர் வத்துடனும் காணப்பட்டார். பாத பூஜைகள் நடந்தேறின. எனது மனைவி மக்களுக்கு மந்திரோபதேசஞ் செய்தார்கள். எனது இரு மக்களையும் தெய்வ ஜீவனப் பணிக்கு அர்ப்பணிக்கும் நோக்கமாக மனைவியார் சற்குருநாதனிடம் ஒப்படைத்தார். சற்குருநாதன் இவர் கள் விலை மதிக்கக் கூடாத பொருள்கள் எனத் திருவாய் மலர்ந்த ருளி சுவாமி சச்சிதானந்த யோகிராஜ் இடம் ஒப்படைத்தார்கள். அடியேனது நீண்ட கால ஆவல் சற்குருநாதன் சந்நிதியில் நிறை வேற்றப்பட்டதை நினைந்து ஆனந்தத்தில் ஆழ்ந்தேன்.
ஓம் சாந்தி !
ராமதாசா! நீ பைத்திய முற்றன. முழுவெ : றியனுயினை. இன்ப வெறியே, அன்பு வெறியே : முற்றிலுமுன்னைப் பற்றிக் கொண்டது. வெறியின் : விஷயம் ராமனன்பே. ராம வெறி பிடித்த ராம தாசா ராமனன்பாம் அமுதையே பருகு. ЈП 10 னுெளி யாங்கணும் சுடரோங்குகின்றது.
 

ஆத்மஜோதி 441
பக்தித் தேன்
( சிவ. கிருஷ்ணம்மாள் )
தேன் இனிக்கும். தெவிட்டாமல் அருந்தும் இனிப்புடை யது தேன். பக்தித் தேன் எப்படி இருக்கும், அதனே எப்படி அருந்த வேண்டும்? என்பதையெல்லாம் பற்றிப் பல பாடல் கள் உள்ளன - பக்தியில் திழைத்த நால்வரும் - ஆழ்வாராதி களும் பக்தித் தேன் சொட்டச் சொட்ட பாடியுள்ளனர். அவற்றுள் மாணிக்க வாசகப் பெருமான் பாடிய பாடல் ஒன் றைச் சுவைப்போம். அதற்கு முன் சற்றே உலக நடையினை உய்த்துணருவோம்.
பாடல்கள் பெரும்பாலும் பழவினை பறந்தோட இருந் தேங்காது இன்பந் துளிர்விட, வீரஞ் செறிந்து விளங்கக் காதல் கீதம் இசைக்க, உண்மை உணர்வினை ஊட்ட, காலத் தின் போக்குக்காட்ட, நெறி நிற்க, தீது ஒழிய, நாட்டின் செழிப்பும் சிறப்புங்கூற, தனி மனிதனின் திறம்பட்ட தீரம்வீரம்-கொடை விளங்க இப்படி எல்லாம் பாடல்கள் பாடப் பட்டன. மனிதன் புறவாழ்விற்கும், அகவாழ்விற்குங்கூட இலக்கணங் கண்டு கணக்குடன் அமைத்துள்ளனர் பாடல்க ளாக. வேதாகம விளக்கங்களும் வாழ்வில் மனிதர் கடமை கள் கூறுகின்றன. கடமைகளில் ஒன்று - ஏன் தலையாயது தெய்வ வழிபாடே. வாழ் நாளில் உண்மைச் சுகம் அனுபவிக் கும் நேரம் பக்தி செய்யுங் காலமே. உலகில் தெவிட்டாத பொருள் தேன் தானே. சொட்டுத் தேன் சுவைப்பதையும் வாழ்வின்பத்தையும் பொருத்தி ஒப்புவமை விதிகளுடன் விளங்கும் கதையொன்று உண்டு.
கதை
காட்டுத் தலைப்பு. தனி மனிதன் நடக்கிருன். கடும் புலி காணுகிருன் அஞ்சி நடுங்கி ஒடுகிறன். அவன் ஒடும் திசை நோக்கிப் புலி பாய்ந்து விரட்டுகிறது. பின்னும் வேகமாக நினைவின்றி ஒடுகிறன். புலி பாய்ச்சலுக்குத் தப்பும் நோக்கு டன், வழியில் புதர் மண்டிய பாழுங் கிணறு. அதில் விழுந்து விட்டான். ஏதோ தவிப்பு அதிகரிப்போ - அன்றித் தெய்வச் சித்தமோ தலைகீழாய் நிலை தடுமாறி விழுங்கால், (விழுந்தசம யம்) கையில் வேர் ஒன்று தென்பட அதைப்பற்றிப் பிடித்துத்

Page 19
442 ஆத்மஜோதி
தொங்கிக் கொண்டு மேலே பார்க்கிருன், விரட்டி வந்த புலி கோரப் பற்கள் தெரிய வாயைப் பிளந்த ப டி யே கொடுங் கண்ணுெளி வீசி நிற்கிறது. கிணற்றுக்குள் குதிக்கக் குனிந்து நோக்குகிருன் கருநாகப் பாம்பு ஒன்று படம் எடுத்து
முழு வேகத்துடன் கொத்துவதற்குச் சீறி எழுகிறது மனித
வாடை முகர்ந்து.
கரையின் மேலே தின்ன வந்த புலி, கேணியின் கீழே உயிர் போக்கக் கொத்த வரும் பாம்பு இவ்விரண்டிற்கும் இடையில் வேர் பிடித்துத் தொங்கும் மனிதன். அடேயப்பா! பயங்கரமே, என்ன சொல்ல! அவன் தவிப்பு-போதாதற்குப் பற்றிப்பிடித்துள்ளவேரை அறுக்கஒருஎலியின்(மனைப்பு. அது சமயம் குரங்கொன்று கரையிலிருந்த மரத்திலேறி கிளையி லுள்ள தேனடையைக் கலைத்து ஆட்டி விட்டு ஓடி விடுகிறது. தேனீக்கள் வெளிப்பட்டு - பாழுங் கேணியிடையில் வேரைப் பற்றித் தொங்கும் அவனைக் கொட்டி இன்புறுகின்றன. இந்த லையைப் படிக்கையிலேயே - நினைக்கும் போதே மனித இத யம் வெடித்துப் பொடி யாகி விடும் போலிருக்கிறது. அத் துன்பங்களை அனுபவிக்கும் உயிர்படும்பாடு. அப்பப்பா விந் தையொன்று. இதோ - தொல்லைகளுக்கு மத்தியில் தொங் கும் உயிர்க்கின்பம் வேண்டியிருக்கிறது பாருங்கள். பிய்பட்ட தேனடையிலிருந்துசிறுதுளிதேன் சொட்டுகிறது. நினைப்பும் மறப்புமற்று உயிர்க்கு ஊசலாடும் போது - தேனீக்கள் கொட்டி வலிக்கின்ற உபத்திரவம் - பொங்கிப்பாயும் பசி யுள்ள புலிக்கும் புனைந்து படமெடுக்கும் பாம்பிற்கும் மத்தி யில் தான் பற்றித் தொங்கிக்கொண்டிருக்கும் வேரை எலி யொன்று சுரண்டி அறுக்கையில் சொட்டும் தேன் சுவைக்கத் தனி மகன் நாக்கை நீட்டுகிருன். எனில் மற்றும் சும்மா இருப்போர் தேன் சுவைக்க நினையாதிருப்பாரா?தேன் வேண் டார் யாரே உளர்? வாழ்வில் இன்பந் துய்ப்பது - தனி மணி தன் தன்னந் தனியாய் மேலே படம் பிடித்துக்காட்டிய கதை யொப்பவே துன்பங்களுக்கு ஊடே காணும் இன்பமாகும்.
இனி மாணிக்கவாசகப் பெருமானின்" உலகம் இதுவன்றி வேறில்லை’ என்றபாடலுக்குவருவோம். தேனைச்சாப்பிடுங்கள்தேவையறிந்து வேண்டிய மட்டும். எங்கே - எப்படி, வாழ்வி லே தவித்த தனிமகன் சாப்பிட்ட தினையளவு தேன? இல்லை. மனமாகிய சத்து - சித்துருவாய் - சீரகத்தை வேண்டினுல் தினைத்துணை தேன் மட்டுமின்றி போதிய தேன் பொங்கி
 
 

ஆத்மஜோதி 443
வரும் எப்போதும் உண்ண. இதையே நமது மணிவாசகப் பெருந்தகை;
மனமாகிய வண்டே நீ தினையளவு தேனுள்ள இப்புவி இன்பமாகிய பூவிலெல்லாஞ் சென்று பறந்து அதையுண்ண அலேந்து களைத்துத் தவிக்காதே! நீ உள்ளுந்தொறும், உள் ளுந்தொறும், காணும் போதும் பேசுங் காலையும் எப்போதும் உனக்குக் களிப்பூட்டும் மகிழ்ச்சி மயமாகிய உணர்வுள்ள சுவையான தேனைச்சொரியும் வாரி யொன்றுண்டு. அதில் திழைத்துத் தேனுண்டு களித்தின்புறு என்கிருர்,
'தினத் தனை யுள்ளதோர் பூவினிற் தேனுண்ணுதே நினைத் தொறுங் காண்டொறும் பேசுந் தொறு மெப்போதும் அனைத் தெலும்பு உள் நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடையானுக்கே சென்று தாய் கோத்தும் பீ.'
ஒரே நோக்காய் எண்ணிக் கண்டு பேசி மகிழ்ச்சி பெற, இனிப்புள்ள கொடைத் திறனுடைய ஆனந்தத் தேன் சொரி யும் அவனிடஞ் சென்று உன் எண்ணமெல்லாம் எடுத்துச் சொல்லிப் பாடுமனமே. (கோத்தும்பி-பெரிய வண்டே) சிறு போழ்து மட்டும் இன்பந்தரும் சிற்றின்பக் கேளிக்கையில் சிறி தும் நாட்டங் கொள்ளாதே. மனமே அறிந்த உன்னிடம் மட் டும் இதைச் சொல்கிறேன். உணர்வாய்-நினைவு கொள். நிச் சயம் இந்த மார்க்கத்தில் உனக்கு உண்மை புலப்படும். தெவிட்டாத ஆனந்தமய லயிப்பில் நீ ஒன்றலாம்.
நீ ஒன்றிய குறிப்போடு கூடி வயப்பட்டு விட்டால் அதன் சாரூபமாகவே விளங்குவாய். துலக்கமாய் - யான் சொல்ல வல்லேன் அல்லேன்.
பாடலைச்சுவைத்துப் பார்! அறிந்து - தெரிந்து-புரிந்துஉணர்ந்துகொள்.
மனமே! என்றும் ராமனில் ஒன்றி நிலை, மற்றவை யாவும் சற்றும் பய னிலை, ராமனே நாடி நீ செல்லுங்கால், உலகின் வார்த்தையால் நிலகலங்காதே, ராமன்உன்னவன்; ஒன்றையும் விரும்பேல். என்றும் ராமனுேடிசைந்து நீ இருப்பையேல் வாக்குஞ் செயலும் நினைப்பும் அவன தாம். ராமதாசா விழித்தெழு; சோம்பரை உதறு, நடை தளராதே; மேன் மேலுஞ் செல்; கற்பகக் கணியைத்தாவிப் பறித்துக் கரையிலா இன் பை வரையிலாது அநுபவி, கனியின் இனிமை என்னேயென்னே!
- சுவாமி இராமதாசர்.

Page 20
444 ஆத்மஜோதி
பேராவல் (சுவாமி இாரஜேஸ்வரானந்தர்)
பேராவல் மனதை மயக்க இருளால் மூடப்பட்ட ஒரு மிகப்பெரிய பாலை நிலமாக மாற்றுகிறது, அது அங்கே தடைப் படாதபடி நடனஞ் செய்யத் தொடங்குகிறது.
ஒர் உலர்ந்த துரும்பு காற்ருல் இங்கும் அங்கும் தள்ளப் படுவது போன்று பேராவல் மனதை ஒர் இடத்திலிருந்து இன் னேரிடத்திற்குச் செலுத்துகிறது.
பேராவல் மனதை மறக்குவியல்கள் உடன் கொண்டு அசுசியான மனக்கிலேச வலைக்குள் சிக்க வைக்கிறது. மேலும் துயரையும் கிலியையும் பின்பற்றி மூடத்தனமாகக் கூத்தாடு கிறது.
பேராவல் இழிவானது; சிக்க வைக்கும் சாதனம் நிரம்பி யது. அது கூர்மைப் பார்வை உள்ளவர்களின் கண்களைக் கட்டு கிறது. மகிழ்ச்சியானவர்களைத் துன்பப்படுத்துகிறது. அது ஒரு கரியன் பாம்பு போன்று மிகக் கேடான நஞ்சு நிரம்பியது. அது உலகில் முடிவில்லாத துயரின் பிறப்பிடம்.
பேராவல் பேய்த்தனத்தையும் பேரிடர்களையும் உண் டாக்குகிறது. அறிவொளியையும் மகிழ்ச்சியையும் தடுக்கிறது. அறியாமையை மிகுதிப்படுத்தி நுண்ணறிவை மந்தமாக் கிறது.
பேராவல் கிலியூட்டுகிற ஆசைகளுக்கு இணைக்கப்பட்ட ஒரு துயரம் நிரம்பிய பெண் பிசாசு. அது இம்மை வாழ்வில் பெரு விருப்பத்தால் மனிதரைக் கிளர்ச்சியடையச் செய்கி றது. அது ஒரு கொடிய தேனீ, மனிதனின் இருதய தாமரை யில் இருப்பது போன்றது.
ஆனல் பேராவல் மேற்குறித்தவாறு இருந்தாலும் அது முடிவில் திடசித்தமுள்ளவர்களுக்கும் அறிவாளிகளுக்கும் எதி ரே ஒன்றுமில்லாத, பொருளற்ற, வெறுமையான மித்யா ரூபமே. அறிவாளிகள் முட்டுக்கட்டையை மிதிகல்லாக
மாற்ற முடியும்.
 
 

ஆத்ம ஜோதி - 445
 ேவ த க ம  ெந றி
(மா. பீதாம்பரன்)
7. இந்து மதம் - ஸநாதந தர்மம்
இப்பொழுது உலகத்தில் நிலவும் மதங்களுக்கும், இனி வரப் போகும் மதங்களுக்கும் ஸநாதந மதம் தாய்போ லாம். ஒரு தாயானவள்தன்குழந்தைகளிடத்தில் எப்படிப்பட்ச பாத மின்றி இருக்கிருளோ அப்படி ஸ்நாதத தர்மமானது மேலோராயினருக்கும், கீழோராயினுருக்கும் சாஸ்வதமான சக்தியை யளிக்கும் தன்மையுடையது. இது சமரச மதம்.
ஹிந்து மதம் என்ருலும் ஸநாதந தர்மம் என்ருலும் ஒன்றுதான். உலகோற்பத்தி முதல் உண்டாயிருந்த பல மதங்களால் பற்பலகாலங்களில் அடைந்த எல்லா அனுபவங்க ளும் மத உணர்ச்சியும் நமது ஹிந்து மதத்தில் அடங்கி யிருக்கின்றன. எல்லா மதங்களையும் கண்ணியப் படுத்து வதால், நாம் உண்மை ஹிந்துக்களாவோம்"
பூனி இராமகிருஷ்ணு னந்த சுவாமிகள்.
வேதாந்த சித்தாந்த சமரச ஞானத்தை உலகினுக்க ருளிய தாயுமான சுவாமிகள் “ஆகார புவனம் - சிதம்பர ரகசியம்’ என்னும் பகுதியில், 8-12 செய்யுள்களில் - திருப் பாடல்களில், வைதிக சைவத்தின் சிறப்பைத் திருவாய் மலர்ந்துள்ளார். அவர் கண்ட இந்து சமயத்தினைப் பின் வரும் பாடல்கள் காட்டும்.
இயல் பென்றுந் திரியாம லியம மாதி
யண்குணமுங் காட்டியன்பா லின்பமாகிப் பயனருளப் பொருள்கள் பரி வார மாகிப்
பண்புறவுச் செளபான பகஷங் காட்டி மயலறு மந் திரஞ்சி கைஷ் சோதி டாதி
மற்றங்க நூல்வணங்க மெளன மோலி யயர் வறச்சென் னியில் வைத்து ராசாங்கத்தி
லமர்ந்தது வைதிகசைவ மழகிதன்றே
* ஜக ஜீவ பர விளக்க வினவிடை , திரு. பெ. மாணிக்கசாமி முதலியார் மொழிபெயர்ப்பு 1926.

Page 21
"446 - ஆத்ம ஜோதி
இ-ள்:- என்றும் - எக்காலத்தும், இயல்பு திரியா மல் - தன் இயற்கை கெடாமல், இயமம் ஆதி - இயமம்
முதலாகிய, எண் குணமும் காட்டி - எட்டுக் குணங்களை யும் காட்டி, அன்பால் - அன்பினுல், இன்பமாகி - ஆநந் தமாகி, பயன் அருள - பயன் அளிக்க, பொருள்கள் - பொருள்களும், பரிவாரம் - பரிகரங்களும், ஆகி - ஆகி, பண்பு உறவும் - குணத்தைப் பொருந்தவும், செளபாந பகூழ்ம் காட்டி - செள பாந பகூத்தைக் காட்டி, LDu J 6) அறு - மயக்க மறுகைக் கேதுவான, மந்திரம் - மந்திர மும், சிகூைடி - சிகூைடியும், சோதிடாதி - சோதிடம்
முதலாகிய, மற்று - வேரு:புள்ள, அங்க நூல் - உறுப்பு நூல்களும், வணங்க - தொழும்படி, மெளநமோலி - மெளந நிலையாகிய கிரீடத்தை, அயர்வு அற - சோர் வற, சென்னியில் வைத்து - சிரசில் வைத்து, ராஜாங் கத்தில் - ராஜரிகத்தில், அமர்ந்தது - வீற்றிருந்தது, வைதிக சைவம் - வேத சம்பந்தமாகிய சைவசமயம்,
அழகிது - இது அழகியது, அந்தோ - அன்றே. (எ-று)
மந்திரஞ் சிகூைடி சோதிடாதி என்றது - மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோ பிசிதம், நிருத்தம், சோ திடம் என்னும் வேதாந்தங்களே.
மெளன நிலையிலே நிற்றலே முத்தி என்பார். அந்நி லையை முத்தியிற் சேர்க்கும் சைவ சமயத்துக்குக் கிரீட மாக உருவகஞ் செய்தார்.
சைவ சமயமே பல சமயங்களிலும் சிறந்ததென் பார். "சைவம் அழகிது’ என்ருர்,
வைதிக சைவம் என்றது வேத விருத்தமான உலகா யதம் முதலிய புறச் சமயங்களை நீக்குதற்கு,
செள பாநம் - படிகள். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
(நாற்பாதங்கள் - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங் கிளர் கிரியை, சரியை என்ற விரிதரு பாதம் என்பது ஞானுமிர்தம்.)

ஆத்மஜோதி 447
அந்தோவி ரதிசயமிச் சமயம் பேர்லின்
றறிஞ ரெல்லா நடுவறிய வணிமா வாதி வந்த டித் திரிபவர்க்கும் பேசாமோ னம்
வைத் திருந்த மாதவர்க்கு மற்று மற்றும் இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
இதுவன்றித் தாயகம் வேறில் லை யில்லை சந்தான கற்பகம் போலருளைக் காட்டத்
தக்கநெறி யிந்நெறியே தான் சன்மார்க்கம்.
அந்தோ - அன்னே, ஈது அதிசயம் - இது ஆச்சரியகரம், (ஆதலால்) இச்சமயம் போல் இன்று - இந்தச் சமயம் போல் வேறென்றும் இல்லை, அறிஞர் எல்லாம் - ஞானிகள் எல் லாம், நடு அறிய - நடுவு நிலைமையிலிருந்து உணருமிடத்து, அணிமா ஆதி-அணிமா முதலியவைகள், வந்து - கைகூடி, ஆடித் திரிபவர்க்கும்-விளையாடித் திரிபவர்க்கும், பேசாமோ னம் வைத்திருந்த - பேசாத மெளன நிலையைத் தமக்குப் பற் றுக்கோடாக வைத்திருந்த, மாதவர்க்கும் - பெரிய தவத் தினையுடையார்க்கும், மற்றும் மற்றும் - மேலும் மேலும், இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும் - இந்திரன் முதல் இறையவர் பதசுகங்களையடைந்தவர்க்கும், இது அன்றிஇதை யல்லது, தாயம் - மாத்ருஸ்தாநம், வேறு இல்லை இல்லை - மற்றென்றும் இல்லை இல்லை, சந்தாந கற்பகம் போல் - சந்தாந கற்பக விருக்ஷங்கள் போல, அருளைக் காட் ட - திருவருளைக் காட்டுதற்குத், தக்கநெறி தகுதியாகிய மார்க்கம், இந்நெறியே - இந்த மார்க்கமே, சன்மார்க்கம்(இதுவே) சன்மார்க்கம் என்று சொல்லப்படும் எ-று. சந்தா நம் கற்பகம் என்பன - பஞ்சதருக்களின் வகை, பஞ்சதருக் களாவன - அரிசந்தம், கற்பகம், சந்தாநம், பாரிசாதம், மந்தாரம் என்பன.
சன்மார்க்க ஞான மதின் பொருளும் வீறும்
சமயசங்கே தப்பொருளுந் தானுென் ருகப் பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை
பகர்வரிய தில்லை மன்றுட் பார்த்த போதங்
தி. சம்பந்த முதலியார் பதிப்பு - 1891 விண்ணவர் - சாமான்ய தேவர்கள், இந்திரன் முதலோர்இந்திரன் முதலிய விசேஷ தேவர்கள்.

Page 22
448 ஆத்ம ஜோதி
கென்மார்க்க மிருக்குதெல்லாம் வெளியே யென்ன எச்சமயத் தவர்களும் வந் திறைஞ்சா நிற்பர்
கன்மார்க்க நெஞ்சமுள வெனக்குந் தானே
கண்டவுட னு னந்தங் காண்டலாகும் ,
சன்மார்க்க ஞானமதின் - சன்மார்க்கம் என்கின்ற, பொரு ளும் - சைவ சமய ஞானப் பொருளும், வீறு - தாம் தாமே மேலானவையென்று இறுமாந்திருக்கிற, SF i Duj LD -- BF | Du Ji நூல்களால், சங்கேதம் - நிர்ணயிக்கப்பட்ட, பொருளும் - அர்த்தமும், ஒன்று ஆக - ஒன்றுபட்டிருக்க, đềT DIT rfj; 35 நெறியினிலும் - பல சமய வழிகளிலும், கண்டது இல்லை - பார்த்ததில்லை, பகர்வு அரிய - சொல்லுதற்கரிய, தில்லை மன்றுள் - தில்லையம்பலத்தில், பார்த்த போது - கண்ட போது, அங்கு - அவ்விடத்தில், என் மார்க்கம் இருக்குதுஎன்ன வழி இருக்கின்றது, எல்லாம் வெளியே என்ன - யா வும் வெளியே யென்று, எச்சமயத்தவர்களும் - எந்தச் சம யத்தாரும், வந்திறைஞ்சாநிற்பர் - வந்து வணங்கா நிற்பர், கல்மார்க்க நெஞ்சம் உள்ள - கல்லினதியற்கையுள்ள மனத் தையுடைய, எனக்கும் அடியேனுக்கும், கண்டவுடன் - பார்த்தவுடன், ஆனந்தம் காண்டலாகும் - இன்பம் காண லாயிருக்கும்.
சங்கேதம் - குழு உக்குறி. தில்லைமன்று சிதாகாசமாகிய வெறு வெளியாதலால், "தில்லை மன்றுட் பார்த்த போதங் கென் மார்க்க மிருக்குதெல்லாம் வெளியே' என்றும், சமயா தீதப் பழம் பொருளைக் கை வந்திடவே மன்றுள் வெளி காட் டுவது சைவ சமயமேயாதலால், எவ்வகைச் சமயத்தாரும் வந்து வணங்கா நிற்பார் என்பார். 'எச்சமயத்தவர்களும் வந்திறைஞ்சா நிற்பர்’ என்றும், இதனைக் கண்டால் அறி ஞர்க்கு ஆனந்தமுண்டாதலேயன்றிக் கன்னெஞ்சர்க்கும்இன் பம் உதிக்கும் என்பார், 'கன்மார்க்க நெஞ்சமுள வெனக்குந் தானே கண்டவுடன் ஆனந்தங்காண்டலாகும்’ என்றும் கூறி இறT,
வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னுதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினு லாண்டு கொண்ட"
என்ருர் திருவாதவூரடிகளும்,
(பழைய உரை)
 
 

C) வினேயொழிக்கும் வழி குரு ஆ. கந்தசாமி ஐயர் திருச்சி. ஜீவனுக்கு ஜீவபோதம் உள்ள வரையில் கர்மம் உண்டு. கர்மத்துக்கு மூல காரணமாயிருப்பது அந்தக் கரணம் அல் லது மனது, மனதை முகாமையாகக் கொண்டு மனிதனி டத்து நிகழ்கிற கர்மமானது சூழ்நிலைக்கு ஒப்ப ஒரு வேளை யில் சுகத்தைத் தருவதாகவும் மற்ருெரு வேளையில் துக்கத் தைத் தருவதாகவும் இருக்கிறது. அது சுகத்தைத் தரும் பொழுது நல்வினை எனவும் துக்கத்தைத் தரும் பொழுது தீவினை எனவும் பகரப் படுகிறது. மனிதன் உணவு உண் கிருன் பொதுவாக அது நல்வினை எனப்படுகிறது. ஆனல் மனிதனுக்கு வயிற்றுவலி இருக்கிற பொழுது அவன் உணவு உண்டால் அந்த வயிற்றுவலி அதிகரிக்கும். ஆதலால் அத் தகைய நெருக்கடியில் அவன் உணவு உண்பது தீவினையா கும். இங்கனம் மனிதன் அறிந்தும் அறியாமலும் நிகழ்த்தி வருகிற வினைகள் சுகத்தையும் துக்கத்தையும் மாறி மாறி விளைவித்து வருகின்றன.
மனிதன் அனுபவித்து வருகிற இன்ப துன்பங்களுக்கு முடிவில்லை. ஆதலால் அப்படி அவன் அனுபவித்துவருவதை ஒரு கடலோடு ஒப்பிடலாம். கடலுக்கு வேலை என்பது மற்ருெரு பெயர். பரந்த அந்த வேலையிலே அலைகள் ஒயாது கிளம் பிக் கொண்டிருக்கின்றன. அலைகளில் அகப்பட்டுக் கொண் டிருக்கும் கட்டை ஒன்று மேலே கிளம்புவதும், கீழே ஆழ்த் தப்படுவதும் ஆகிய செயல்களில் அலையிலே அலைக்கழிக்கப் படுகிறது. காற்றடித்தால் அலை தாவுகிறது. அதேபோன்று மனிதனுடைய மனதில் மனே சங்கல்பம் என்னும் காற்ற டிப்பதால் இருவினேகள் என்னும் அலைகள் அவன் உள்ளத் தில் உதித்துக் கொண்டிருக்கின்றன. ஆணவமாகவும் அகங் காரமாகவும் இன்னும் வெவ்வேறுவிதங்களிலும் வடிவெடுத் திருக்கிற மனது ஒடுங்கு மிடத்து வினைகள் இல்லை. வினே யற்ற விடத்து இன்பதுன்ப ம்யமாயிருக்கிற விரிகடல் இல்லை.
மனதற்ற இடத்தில் வினையுமில்லை என்பதை அறிந்துகொள் ளுதற்கு நமக்கு சமாதிநிலைவாய்க்க வேண்டிய அவசியமில்லை. ஒருவாறு சமாதிநிலையோடு ஒத்திருக்கிற சுஷ சப்தி நிலையில் மனம் ஒடுங்கி யிருக்கிறது. அப்பொழுது வினைகள் என்னும் அலைகள் தோன்ரு திருக்கின்றன. அதனின்று உண்மை யொன்று வெளியாகிறது.
கெடுக்க வல்லது ங் கெட்டவர் தங்களை எடுக்க வல்லது மிம் மன மென்றதை
A. கடக்க வல்லவ னுவன் கடிதரோ என்னும் பிரபு லிங் லிலேயின் கருத்திற் கிணங்க மனுேநாசம் வாய்க்குமி டர் 'க் தொன்று தொட்டுள்ள வினைகள் யாவும் அகன்று போப் விடுகின்றன. (தொடரும்)

Page 23
Registered at the G. P. O. as
ஆத்மஜோதி நி3 தெய்வீக வாழ்க்கைச் சங்க மல பூணீர் கதிரை மணி மாலை திங்கனிச்சோலை அறிவுரைக்கதைகள் (e நாஞர்? இளங்கோவின் கனவு ஆத்மநாதம் (சுத் கீதா யோகம் 1 T is LT gaf UITG கந்தரநுபூதி (பொழிப்புை மார்கழிப் பாடல் கூட்டு வழி பாடு திவ்ய ஜீவ  ைசங்க கூட்டுப் பிரா
அன்புடையீர்! சா6தா GEt
இன்று வரை 15 ம் ஆண் களுக்கு உடனுக்குடனேயே ரசி களுக்கெல்லாம் எமது நன்றி சந்தா அனுப்பாதோர் உடனே 'ருேம்.
ஆத்மஜோதி நிலுை
இந்தியாவிலுள்ள அன்பர்கள் சம்பு இன்டஸ்ட்ரீஸ், அரிசிப்பா சத்திற்கு அனுப்பி வைத்து, அ வேண்டுகின்ருேம்.
வாய்வு உஷ்ண வாய்வு, முழங்கால் கட்டு, மலபந்தம், அஜிர்ணம், யின்மை, வயிற்று வலி, பித்த பம் நெஞ்சுக் கருப்பு முதலி ஜீரண சக்திக்கும் தேகாரோ
சூரணம். s
தபால் செலவு உட்பட டி3 (பத்திய சம்பு இன்டஸ்ரீஸ் - அரிசி இலங்கையில் கி
ஆத்மஜோதி நில இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத் து திரு. நா. வினயகமூர்த்தியால் அச்சி

a Newspaper. M. L. 59/300
லய வெளியீடுகள்
1-25
(பரமஹம்சதாசன்)  ܲ50 ہے۔ * ܘ 9 is ... 2-50 சுவாமி சிவானந்தர்) -65 , ... -25
(செ. நடராசன்) ... 2-25 தானந்த பாரதியார்) 3-00 99 2-50
9 ... 1-50 ரயுடன்) ... -25 -20
、『 ー30
ர்த்தனே - - - - 0
பர்களுக்கு டுக்குரிய சந்தா அனுப்பியவர் து அனுப்பியுள்ளோம். அவர் உரித்தாகுக. இன்று வரை T அனுப்பி வைக்க வேண்டுகின்
யம், நாவலப்பிட்டி. }т651) ள் வழக்கம் போல் R. வீரசம்பு, 2ளயம், சேலம் -9, என்ற விலா தை எமக்கும் தெரியப்படுத்த
சூரணம்
வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்
கை கால் அசதி, பிடிப்பு, பசி மயக்கம், பித்த சூலை, புளியேப்
ய வாய்வு ரோகங்களை நீக்கி
க்கியத்திற்கும் மிகச் சிறந்த
ன் ஒன்று 4 ரூபா 25 சதம் மில்லை) ப் பாளயம் சேலம் -9 (S. 1.1 டைக்குமிடம் :-
யம், நாவலப்பிட்டி,
ாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில்
வெளியிடப்பெற்றது. I 7-9-6 3.