கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.10.18

Page 1
تختصر
,不应性 A @%鄭函內 示兴(5虑示兴 小兴觀小兴 (N渋y"
 
 
 
 

편제거제제정최的經學院
{환院性的性*******義的
个% = @e@

Page 2
o ) (; ாதி } 鄭 ஆத ஆத்மீ ་་་་་་་་་་་་་་་་ ರಾ?
SU
ருவ
எல்லா உலகிற்கும் இறைவன் ஒரு எல்லா உடலும் இறைவன் ஆலயமே
懿
ŞNA
- சுத் தானந்தர்
ஜோதி 15 |சோபகிருது வடு) ஐப்பசி மீ” a cis-10-63) 岳Lf 12 பொருளடக்கம்
1. இலங்கை மணி A49 2. அடியார்க்கு அஞ்சலி 40 3. ஆத்மஜோதி கெளரவ ஆசிரியர் 454 4. க. இராமச்சந்திரா 458 5. ஞானியர் பாதம் பற்றிப் பிடித்தல் 461 6. செந்தமிழ்க் கலைவாணியே! 466 7. வாழ்க இராமச்சந்திரா! 467 8 கலைச்சோதித்தாயே - கானசரஸ்வதியே! 469 9. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! 470 10. வாழ்க்கையில் ஒருமைப்பாடு 475
ஆத்மஜோதி சந்தா விபரம்
MSMT MTSLMSTLSS SL MTS S LMTTS LLTLLLLS S LLTLSSMSSTSSMSSSMSSSMSSSMSSSS
ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட பந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் ஊ திரு. நா. முத்தையா * ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி (பிலோன்) தொலைபேசி எண் 353
 
 
 
 

லங்கை மணி
மகரிஷி சுத்தானந்த பாரதியார்)
* Ak *
மூதிளஞ் செல்வன்
முயற்சித் திருவளர்
சாதகன் என்றும்
சத்திய வீரன் சொல்லுஞ் செயலும்
தூய இல்லறமும் வெல்லுந் திறனும்
மல்கிய நல்லோன் எம்மத உண்மையும்
சம்மத மாக
நம் மதம் பரப்ப
நாவலர் போன்று தொண்டுசெய் புலவன்
தோழமைக் கினியான் பண்டும் புதுமையும்
பழுதறத் தேர்ந்தோன் இலங்கை மணியெனும்
இரர் மச் சந்திரன் கலங்கரை விளக்கெனத்
துலங்குக மாதோ!
※
KZ 3 S2
S2 3.

Page 3
450 ஆத்மஜோதி அ டி யார் க்கு அஞ்சலி !
- க. இராமச்சந்திரன். -
ரமண மஹரிஷிகள், MLLLLLLLLMLcLLLLLS பண்டொரு நாட் பார்த்தனுக்குப் பாசுபதம்
பரிந்தளித்த பரமன் ருனே அண்டர்சிறை மீட்பதற்கா யறுமுகனு
யவதரித்த தன்மை போல மண்டலத்தோ ருய்வதற்காய் மனிதவுடல்
தனில்ரமண நாமந் தாங்கித் தொண்டர் துயர் தீர்ப்பதுவே தொழிலானன்
தொழுதவன் சீர் பாடவாரீர்.
மகாத்மா காந்தி ᎹᏙᏛᏙ7ᏛᏙᎯᏛᎿᎭᎵᏙᏁᎲᏖᏪᏙᎵᏙᏛvᏡᏖᎴᎷᎯᏉᏙᏁᎲᏡᏙᏪᏙᎴᏈᏪᏙᎴᏃᏙᎴᏙᎴᏉᏙᏁᎲᎹᎷᏛᏙᏗ சாந்திக்கோர் தனியுருவா யுதித்தோன் கண்டாய்
சகமுழுதுஞ் சுகமுறவே வாழ்ந்தோன் கண்டாய் வேந்தரெல்லாம் வணங்கிநின்ற விறலோன் கண்டாய்
வேற்றுமைகள் அணுவுமிலா விமலன் கண்டாய் மாந்தருளக் கோயிலிலே வதிவோன் கண்டாய்
மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதித்தோன் கண்டாய் காந்தியெனுந் திருநாமத் தன்னைத் தாங்கிக் காசினிக்கா யுயிர்நீத்த கர்த்தன்ருனே.
அன்னை கஸ்தூரிபாய்
- MVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMAMV - வள்ளுவர்க்கு வாசுகி வந்தமைந்தாற் போல
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்ட பள்ளத்தைப் பார்த்தோடும் வெள்ளமென்னப்
பல்லுயிர்மேலிரங்கு பெரும் பரிவு கொண்ட வள்ளலாங் காந்தி மஹான் மனையாளாகி
வறுமையுற்ற பாரதத்தின் தாயுமா யெம் உள்ளத்தில் நீங்காது உறைந்து நிற்கும்
உத்தமியாங் கஸ்தூரி கழல்கள் போற்றி.
༦|
 
 
 

ஆத்மஜோதி 45.
பகவான் அரவிந்தர்
LLcLLkLLAcLLkcLcLMLLAcLccLcLLcLMSMLcLeLcLcLMLMcLcLL
சலிப்பென்ப தணுவுமின்றிச் சுயேச்சைப் போரில் சாத்வீக நெறியளித்த சதுரன் கண்டாய் அலிப்பூரிற் சிறைக்கோட்ட மமர்ந்த காலை
அமரநிலை தனையடைந்த அண்ணல் கண்டாய் கலியுகத்திற் சத்யயுகங்காண வேண்டிக்
கடுந்த வங்கள் புரிந்த கர்மயோகி கண்டாய் புலிப்பாணி பதஞ்சலிபோல் தமிழ்நா டுற்றே
புதுவை யொளிர் அரவிந்தப் புனிதன்றனே.
சுவாமி பூரீ இராமதாசர்
LSLLcLcLcLLcLLcLcLMLLLLLL LLLLLLLLS
மூன்னெருநாள் மன்னவனஞ் சிவாஜி கோரும்
முழுவரமு முவந்தளித்த முத்தன் கண்டாய் பன்னெடுங்கால் கன்னடஞ்செய் பாக்கியத்தால் பத்தணுய் வந்துதித்த வித்தல் கண்டாய் அன்னையாங் கிருஷ்ணபா யார் வந்தீர
ஆனந்தாச்ரம மது அமைத்தான் கண்டாய் தன்னையடை அன்பர்க்குத் தாயாய் ராம
தாசனெனத் தனையழைக்குந் தந்தை தானே.
அன்னை கிருஷ்ணுபாய்
LLLMLLcLAcLALLSLLLALLScLcLSLcLALee eLALScLAcScLALScLLLLAL
மாயையெனுத் திரையையறுத் துண்மைகாண
மனங்கொண்டு அங்குமிங்கும் ஒடிவாடி
ஓயாத கவலையினே டுன்னை நாடி
உன்னடிகள் சார்ந்ததுமே உறுதி கூறி
"தாயே" என்றடியார் குழாந் தாழும் வேளை
தானுவந் தெனை யாண்ட கிருஷ்ணபாயே
வாயார நின்புகழே வழுத்துகின்ற
வரமெனக்கு உவந்தளித்தால் போதும் அம்மா.

Page 4
452
சுவாமி பூரீ சிவானந்தர்
LLALkALcLkLkLLLSeALkLkeLLcLSALScLcLcLALLSA LMcLcLSLSALcLMAcLAeLS
மோன மாங் கைலாயத்தின்
முகட்டி லூற்றெடுத்து வேத கானத் தோடிறங்குங் கங்கைக்
கரைதனில் தவத்தமர்ந்தே தீைைரக் காப்பதற்காய்த்
திவ்ய ஜீவியத்தை நாட்டி ஞானமுதளிக்குஞ் சுத்த \
சிவானந்தர் திருத்தாள் போற்றி,
பகவான் யூனி ராமகிருஷ்ணர்
LLccccLcLLeMkMLSeSAcLccLLScLcLcLSALcLcLceSkMLkLccLkLLLS
காயாவிலினிதமர்ந்தே கா சினியைக் காக்குங்
கதாதரரின் கருணையினுற் கருச்சேர்ந்தானைச் சேயாய் அத் திருப்பெயரே சூடினனைச்
பூரீராம கிருஷ்ணரெனத் தேவர் போற்ற ஒயாது காளியன் பில் உருகினுனை
உலகுக்கு உய்யுநெறி காட்டினனைத் தாய்போலத் தரணியை ஆள் தயாளன் றன்னைத்
தட்சணேஸ் வரத்திலென்றுங் காணலாமே.
மரீ சாரதாமணி தேவியார்
LLcLMLLcLLcLcLMLLMLScLccLLLcLScLcSMcLccLMLLcLcLMcLcLcT
பாரதத்தின் வேதாந்தப் பதியில் வந்து
பாரெல்லாம் ஒளிவீசும் பரம ஹம்சர் தாரமதாய் வைத்துகந்த தையலாளைத்
தாரணிக்கோர் தனியணங்காய்த் தோன்றினுளை நாரதர்போல் பக்திநெறி நல்கினுளை
நரேந்திரனுக் கருள்சுரந்த நங்கைதன்னைச் சாரதையாந் திருநாமம் படைத்து ளாளைச்
சரண் புகுவார் சாந்திநிலை யடைவர்தாமே.
 
 
 

ஆத்மஜோதி 453
கங்கையெனுந் தெய்வ நதி கடலையணை
காட்சிதரும் வங்க நாட்டில் பங்கூராச் சில்லாவில் பண்டிதரும்
பாமரரும் பணிந்து போற்றுஞ் சிங்கவா கினியமர்ந்த ஜெயராம் பேர்ச்
சிற்றுாரைச் சிறக்கச் செய்தே எங்களையாட் கொண்டருளுஞ் சாரதைதாள்
எப்போதும் ஏத்திவாழ்வோம். 2
சுவாமி யூனி விவேகானந்தர்
SLLccLAkSLcLcLLcLcAcLcLLLcLcLLLLLS LLLLLLLALekScLcLAkLALLSALLALALASeLAL
தத்தர்செய்த தனித்தவத்தா லவதரித்துத்
தன்மயத்திற் சின்மயமாந் தன்மைபெற்றே பித்தனென்ற பேர் படைத்த ராமகிருஷ்ணப்
பெருமானின் திருவருளுக் குரியானுகி அத்துவித நெறிவிளக்குங் குரவனயெம்
ஆன்ருே?ர்கள் தேடிவைத்த ஞானப்பேற்றை எத்திசையும் எடுத்தளித்த விவேகானந்த
ஏந்தல் பதம் ஏத்தி நாம் வாழுவோமே.
யோகி மறி சுத்தானந்தர்
LcLMcLLcLSLLcScLLcScLLLcLkLcLLLMcLcLLkkkeLcMkkScLcMcLMcLL
எத்தாலுந் தமிழ்ச்சாதி இனியுறங்கா
"தென்ற பெரும் உறுதி கொண்டே
முத்தான தமிழ் மொழியின் முப்பெருமை
மூவுலகும் முழங்கும் வண்ணம் பத்தாவதாண்டு தொட்டுப் பயன் கருதாப்
பணியொன்றே தவமாய்க் கொண்ட
சுத்தானந்தப் பெரியார் சுகுணமல
ரிணையடிகள் சிரமேற் கொள்வாம்.

Page 5
454. ஆத்மஜோதி ஆத்மஜோதி கெளரவ ஆசிரியர்
(முத்து)
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் Għasar ழும்பிலிருந்து சத்சங்கக் கோஷ்டி ஒன்று நாவலப்பிட்டிக்கு
வந்தது. அவர்கள் வந்த நோக்கம் குயீன்ஸ்பரியிலுள்ள நவநாதசித்தரின் சமாதியைத் தரிசிப்பதற்காகும். புகையி ரதப் பகுதியிலுள்ள நண்பர் ஒருவர் இக் கோஷ்டியை வரவேற்பதற்காகப் புகையிரத ஸ்தானத்திற்கு அழைத்தி ருந்தார். மகிழ்வோடு சென்றிருந்தேன். ஒரு நெட்டை யான மனிதரிடம் இவர்தான் இன்னுர் என எனது நண் பர் அறிமுகம் செய்து வைத்தார். உழப்பனையில் வரும் போதே அவரைக் கண்டேன் என்று பதில் இறுத்தார் அம் மனிதர். அவ் வார்த்தைகளை எனது காதினுலேயே நம்ப முடியவில்லை.
அந்த வார்த்தைகளில் ஒரு மந்திரசக்தி இருப்பதை
உணர்ந்தேன். எண்ணிப் பார்த்தால் நாங்கள் பேசிய வார்த்தைகள் பதினைந்துக்குள் தானிருக்கும். ஆனல் அறிந்து கொண்ட விஷயங்களோ பதினைந்து ஆண்டுகளின் அநுப வத்தையே விஞ்சி விட்டன . பல நாட்கள் பழகியவரைப் போன்ற ஒரு உணர்ச்சி உள்ளத்தில் ஏற்பட்டதை உணர முடிந்தது.
சத்சங்கக் கோஷ்டி நாவலப்பிட்டி வந்து திரும்பிப்
பல மாதங்களாகி விட்டன. கம்பளையில் ரமண ஜெயந்தி நடைபெறப் போவதாக ஒரு அழைப்பு வந்தது. அதற்
குச் சென்றேன். அங்கும் அந்த நெட்டையான மனிதர்
வந்திருப்பதைக் கண்டேன். புன்முறுவலோடு ஒரு கும்பிடு போட்டார்கள். பதிலுக்கு யானும் கும்பிட்டேன் வாய் திறந்து ஒரு வார்த்தை தானும் பேசவில்லை, பேசாமல் பேசியதோ அனந்தம். அன்று அவர் ரமண மகரிஷிகளைப் பற்றிப் பேசிய பேச்சு உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. ரமண மகரிஷிகளைத் தரிசிக்க வேண்டும் என்ற அவாவை அவரது பேச்சுத் தூண்டி விட்டது.
இந்த மனிதர் யார் என்று அறிவதற்கு ஆவல்படுவீர் கள் அல்லவா? அவர்தான் ஆத்மஜோதியின் கெளரவ
 

ஆத்மஜோதி 45.5
ஆசிரியரும் ‘ஹிலிஜஸ் டைஜெஸ்ற் என்னும் ஆங்கிலச் சஞ் சிகையின் ஆசிரியரும் ஆத்மஜோதியின் முகப்பை அலங்க ரிப்பவருமாகிய உயர் திரு. க. இராமச்சந்திரா அவர்களாகும்.
இன்னும் சில மாதங்களுக்குப் பின் ஒரு தபால் அட்டை
வந்தது. கொழும்பில் தமது இல்லத்தில் பகவான் அர
விந்தரின் ஜெயந்தி தினம் கொண்டாடப் படுவதாகவும்
சமுகம் தருமாறும் கேட்டிருந்தார். மாலையில் நடைபெற
வேண்டிய கூட்டத்திற்குக் காலையே போய்ச் சேர்ந்து விட் டேன். நான் போகும்போதே வீட்டில் எல்லோரும் சோ டினையில் ஈடுபட்டிருந்தனர். மலைநாட்டிலிருந்து ஒரு பூக் கூடை கொண்டு சென்றிருந்தேன். அன்று முழு நாளும் அத் தெய்வீக இல்லத்தில் தங்கியிருக்கும் வாய்ப்புக்கிடைத் தது. எனது சொந்த வீட்டில்தான் தங்கியிருக்கின்றேன் என்ற உணர்வுதான் உள்ளத்தில் இருந்தது. வீட்டிலுள் ளோர் அனைவரும் எனதுடன் பிறந்த சகோதரர்கள் போ லத் தென்பட்டனர். திரு. இராமச்சந்திரா அவர்களு டன் அன்று முழுநாளும் உரையாடும் வாய்ப்புக் கிடைத் தது. அவர்களுடைய ஆத்மீக அனுபவங்கள் பலவற்றை நேரில் அறியும் வாய்ப்புக் கிடைத்தது. நாவலரைப் பற் றிய பேச்சு எழுந்தபோது அவர் நடத்தி வந்த பத்திரி கையையே இன்று தமிழ்மக்கள் நடத்த முடியாதிருக்கிறர்
கள் என்று கூறினேன். நாங்கள் ஒரு மாத வெளியீடு
நடத்தலாமே என்ருர்கள். அதற்கு நானும் கட்டாயம் நடத்த வேண்டும் என்றேன். மாத வெளியீடு வருடம் 3 ரூபா சந்தாவில் வெளியிடலாம் என்ருர்கள். நல்லது என் றேன். என்ன பெயருடன் நடத்தப் போகிறீர்கள் என்
றேன்.
"ஆத்மஜோதி என்ற பெயர் கணிரென்று ஒலித்தது. கவும் நல்லது என்றேன். எப்போ தொடங்குவீர்கள் என்றேன். ஏன் நீங்களே அப் பொறுப்பை எடுத்துச் செய் யலாமே. நான் கெளரவ ஆசிரியராக இருந்து வேண்டிய உதவிகள் எல்லாம் அளிக்கிறேன் என்று கூறினர்கள்.
எனக்கோ எவ்வித அநுபவமும் இல்லை. என்ன செய் வதென்றே தோன்றவில்லை. மெளனம் சாதித்தேன். முடி யும் என்றும் சொல்லமுடியவில்லை. முடியாதுஎன்றும் சொல்ல முடியவில்லை. எனதுபதிலை எதிர் பாராமலே திட்டங்கள் எல்

Page 6
456 ஆத்மஜோதி லாம் வகுத்து விட்டார்கள். நாவலப்பிட்டி சென்றுவிட் டால் நானும் மறந்து விடுவேன். அவரும் மறந்து விடு வார் என்றுதான் எண்ணியிருந்தேன்.
எண்ணி ஒரு வாரத்தில் ஒரு கடிதம் வந்தது. திருக்
கார்த்திகைத் தினத்தில் அன்று ஆத்மஜோதி வெளியாக
வேண்டுமென்று அக் கடி த த் தி ல் எழுதப்பட்டிருந்தது. வேண்டிய ஆயத்தங்களை உடனே செய்க என்று அதில்
கண்டிருந்தது. எனக்கோ என்ன ஆயத்தம் செய்வதென்
பதே புலப்படவில்லை. கடிதம் கிடைத்தது. திருவருள் எல்லாவற்றையும் நடத்தி வைக்குமாக என்று எழுதிவிட்டு அதனையே மறந்து விட்டேன். ஐப்பசி மாசத்தின் நடுக்கூற் றில் ஒரு பார்சல் வந்தது. அதை உடைத்துப் பார்த்தேன். ஆத்மஜோதிப் பத்திரிகையை அச்சிடுவதற்குரிய விஷயங்கள் அத்தனையும் ஒரு வரிகூடத்தவருமல் எழுதப்பட்டிருந்தது. அதன் பின்பும் சும்மா இருக்க முடியாதென்பதை உணர்ந் தேன். அச்சகத்தாரிடம் சென்று விஷயத்தை ஒப்படைத் தேன். அவர்கள் மகிழ்வுடன் ஏற்று அதிகமான பிழைகளு டன் அச்சேற்றித் தந்தார்கள். -
திருக்கார்த்திகைத் தினத்தன்று சோதி வெளிவந்து விட்டது. மகிழ்வுடன் பத்திரிகையை அனுப்பி வைத்தேன். பாராட்டுக் கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். எதிர் பார்த்தபடியே கடிதம் வந்தது . ஆவலுடன் உடைத்தேன். வாசித்தேன். எனது ஆசைகள் அத்தனையும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டன. ஒரு வுல்ஸ்காப் பேப்பரின் இரு பக்கங்களி லும் குற்றமே நிறைக்கப்பட்டிருந்தது. ஒரு நல்ல வார்த்தை கிடைக்காதா? என்று தேடினேன். ஏமாந்தேன். கெட்டித் தனமாகக் கடிதத்திற்கு பதில் எழுதியதாக எண்ணம்.
முதல் அநுபவத்தில் தாங்கள் எழுதிய குறைபாடுகளிலும்
பார்க்க மிக அதிகமாக எதிர்பார்த்தேன், தாங்கள் குறிப் பிட்டவை மிக அர்ப்பமாகவும் அடுத்தசுடரில் நீக்கக் கூடிய வையாகவும் இருக்கின்றன என்று கூறினேன். எமது முழுப் பிரயத்தனத்தையும் அதிலே செலுத்தி அடுத்த சுடரை நல்ல முறையில் அமைத்து நல்ல பாராட்டையும் பெற் றேன். இன்றுடன் ஆத்மஜோதிக்குப் பதினைந்து ஆண்டு கள் நிறைவேறுகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆத்மஜோதி ஏதாவது சாதித்தது என்ருல் அது திரு. க. இராமச்சந்திரா அவர்க
 
 

ஆத்மஜோதி 457
ளின் அயரா முயற்சி என்றே கூறவேண்டும். அதில் ஏதா வது குறைபாடுகள் இருக்கும் என்ருல் அவை எனது சோம்
பல்தனத்தால்தான் ஏற்பட்டவை என்றே கூறவேண்டும்.
கால்சட்டை போட்ட இளைஞர்கள் இராமச்சந்திரா செய்கிருரே என்று விபூதி பூசினர்கள். கூட்டுவழிபாட் டில் கலந்து கொண்டார்கள்; பகவான் ரமண மகரிஷி யைத் தரிசிக்கத் திருஅண்ணுமலை ஒடிச் சென்ருர்கள்; யோ கர் சுவாமிகளைத் தரிசிக்க யாழ்ப்பாணத்திற்குப் பறந்து சென்றர்கள். இந்தியாவிலிருந்து வந்த மகான்களைத் தரி சித்து அவர்கள் பாதங்களை விழுந்து வணங்கப் பழகிக் கொண்டார்கள். தொண்டர் பெருமையை உணர்ந்தார் கள். திரு. இராமச்சந்திரா அவர்கள் செய்கிருர்கள்; நா மும் செய்வோம் என்று தொடங்கிய இளைஞர் கூட்டம் இன்று ஆத்மீக சாதனையில் முன்னேற்றம் அடைந்துள்ள னர் என்பதைக் காணும்போது திரு. இராமச்சந்திரா அவர் கள் தமது பிறப்பின் பயனைப் பெற்று விட்டார்களென்றே கூறவேண்டும்.
திரு. இராமச்சந்திரா அவர்கள் ஒரு முற்கோபக்காரர் என்பதே பலருடைய அபிப்பிராயம். இன்று வரையிலே அவருடைய கோபம் பலரைத் திருத்தியுள்ளது என்ருல் அக் கோபம் அவருக்குப் பலமுறையும் வரவேண்டுமென்றே சொல்லத் தோன்றுகின்றது. கற்றவர்கள் என்று சொல் லிக் கொள்பவர்கள், தமது ஒழுக்க நெறியினின்று தவறும் போது அதனை அவரால் சகிக்க முடிவதில்லை. சிவனடி யார்களைக் குறை கூறுபவர்களையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எவ்வளவு கெதியில் கோபித்தா
ரோ அவ்வளவு கெதியில் சமாதானமாகியும் விடுவார்.
இலங்கை முழுவதிலும் கூட்டு வழிபாட்டையும் அடி
யார் பக்தியையும் பரப்பிய திரு. இராமச்சந்திரா அவர்
கள், அமெரிக்க நாட்டில் இன்று ஆத்மீகத்தைப் பரப்புத லில் சுவாமி விவேகானந்தருக்கு அடுத்தபடியான புகழை ஈட்டியுள்ளார்கள். அவரது தொண்டும் அவரும் நீடு வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்ருேம். -

Page 7
458 ஆத்மஜோதி
"" க. இராமச்சந்திரா ,
(குல. சபாநாதன் அவர்கள்)
முற்பவத்திற் செய்த நல்வினையின் பயனுகவே ஒருவ ருக்கு இம்மையில் ஆத்மீக வாழ்க்கை கைகூடும். ஞானி கள் மெய்யடியார் ஆகியோரைக் காண்பதும், அவர் சொற் கேட்பதும், அவர் குணங்கள் உரைப்பதும், அவரோடு
இணங்கியிருப்பதும் ஆத்மீக வாழ்க்கையில் ஈடுபட்டோர் செயலாகும். இத்தகைய வாழ்க்கையில் ஈடுபட்ட பெரி யார் திரு. க. இராமச்சந்திரா அவர்கள் என்பதனை எடுத் துக் காட்டுவதற்கு அவர்களுடைய சீரிய வாழ்க்கை முறை போதிய சான்ருகும்.
பாரதநாட்டிலும் ஈழநாட்டிலும் உள்ள புனித தலங் களுக்கு யாத்திரை செய்தார்கள். மேலும் இவ்விரு தேசத் திலுமுள்ள ஞானிகளைத் தரிசிப்பதும் வணங்குவதும் அவர் கள் தம் போதனைகளைப் பரப்புவதுமே தமது தொண்டா கக் கடைப்பிடித்து வாழ்ந்து வருபவர் திரு. இராமச்சந் திரா அவர்கள். இந்த ஞானிகளை அறிமுகஞ் செ ய் து வைக்கு முகமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய கட் டுரைகளும் நூல்களும் அளப்பில. இவர்கள் மீது இயற்
றிய பக்திப் பாடல்களும் பல. திருவண்ணுமலை பூரீரமண மகரிஷி, காந்தியடிகள், சுவாமி சிவானந்தர், காஞ்சங்
காடு சுவாமி இராமதாசர், தூய அன்னை கிருஷ்ணுபாய்
ஆதியாம் ஞானிகளுடன் தொடர்பு பூண்டு அவர்களின் ஆசியைப் பெற்ருர், ஈழநாட்டிலுள்ள ஞானிகளின் ஆசி
யையும் பெறத் தவறவில்லை.
அடியேனைப் போன்ற பலர் பூரீரமண மகரிஷிகளைத் தரிசித்து வணங்கும் பாக்கியம் பெறுவதற்குத் தூண்டு
கோலாகவும்வழிகாட்டியாகவும் விளங்கியவர் திரு. க. இரா மச்சந்திரா அவர்களே. இவ்வாறே ஏனைய ஞானிகளையும் இலங்கை மக்கள் தரிசிக்க உறுதுணையா யிருந்து வருகின் ருர்கள்,
திரு. இராமச்சந்திரா அவர்களுடைய இல்லத்திலுள்ள பூசை அறை ஒரு சிறு கோயில் போலவே காட்சியளிக்கும். அவருடைய வீட்டின் சுவர்களில் ஞானிகளுடைய படங்க
 

ஆத்மஜோதி - 459
ளையே காண முடியும். அவர்களுடைய இல்லத்தில் வாரந்
தோறும் அன்பர்கள் கூடிப் பஜனை கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வருவது வழக்கம். குருபூசைகள் பல சிறப்பாக நடைபெறும். மெய்யடியார் பலரைப்பற்றி இக்கால இளை ஞர்கள் அறிந்து கொள்வதற்கு திரு. இராமச்சந்திரா அவர் களின் புனித இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பெரி தும் உதவி புரிந்து வருகின்றன.
குருபூசை, பஜனை முதலியன பக்திச் சூழலிலே நடை பெறுவதற்கு திரு. இராமச்சந்திரா அவர்களின் மனைவி யும் மக்களும் ஆற்றும் தொண்டே முக்கிய காரணம் எனக் கூறலாம். பக்தி பரவச மூட்டும் முறையில் பாடல்களை ஒதுவதற்குப் பிள்ளைகளைப் பயிற்றியுள்ளார்கள். இவ்வித சம யத் தொண்டில் திரு இர மச்சந்திரா அவர்கள் ஈடுபட் டுழைக்குங்கால் முகமலர்ச்சியுடன் திருமதி இராமச்சந்திரா அவர்கள் பக்க பலமாக நின்று பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது.
திரு. இராமச்சந்திரா அவர்கள் அரசாங்கத்தில் புகை யிரதப்பகுதியில் உயர் பதவி வகுத்த காலத்தில் உத்தியோக நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் சமயத் தொண்டில் ஈடு பட்டிருந்தார்கள். ஆணுல் இப்பொழுது முழு நேரத்தையும் சமயத் தொண்டாற்றுவதற்கே பயன் படுத்தி வருகின் ருர்கள், திரு. இராமச்சந்திரா அவர்கள் ஆரம்பித்த * ஆத்மஜோதி ' எனும் மாத சஞ்சிகை ஆத்மீக வாழ்க் கைக்கு ஒரு ஜோதியாக ஒளிவிட்டுப்பிரகாசிப்பதையாவரும் நன்கறிவர். நல்லொழுக்கத்துக் உறைவிடமாகிய நண்பர் திரு. நா. முத்தையா அவர்கள் இந்த விளக்கிற்குப் பக்க " இருாது நெய் ஊற்றிப் பேணி வருகின்றர்.
ஆத்மீக வாழ்க்கை என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் உரியதன்று, மேனட்டிலும் பலருளர். தமிழ் நாட்டுச்சமயக் கொள்கைகளை மேனுட்டினரும் அறிந்து கொள்வதற்கு ஆங் கில மொழியே சிறந்த வாயிலாகும். எனவே திரு. இரா மச்சந்திரா அவர்கள் Religious Digest என்ற ஆங்கிலச் சஞ் சிகையை ஆரம்பித்தார்கள். இந்தச் சஞ்சிகை பல தேசங் களுக்குச் செல்கின்றது. பலருடைய வரவேற்பைப் பெற் றுள்ளது. ஒரு சஞ்சிகையை நடத்துவதற்கு ஏற்படும் இன்னல்கள் பல. அவற்றை யெல்லாம் திரு. இராமச்சந் திரா அவர்கள் இரவு பகலாக வேலை செய்து தீர்த்து வைத்து

Page 8
460 - ஆத்மஜோதி
பல பேரறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளார். பல ருடன் கடிதத் தொடர்பும் கொண்டுள்ளார். பல சமயங் களிலும் காணப்படும் உண்மைகளைத் திரட்டி அளிக்கின்றது இந்தச் சஞ்சிகை. எனவே பல நாட்டினரதும் பல சம யத்தவர்களினதும் பாராட்டலைப் பெற்றுத் திகழ்கின்றது. சமயச் சொற்பொழிவுகளுக்காகப் பிறநாடுகளுக்குச் செல் லும் சந்தர்ப்பமும் இதனுல் இப் பத்திராதிபருக்கு ஏற்பட் டது. குறுகிய மனப்பான்மையின்றிப் பரந்த நோக்குடன் இவர்கள் எழுதிவரும் கட்டுரைகளுக்கும் ஆற்றிவரும் சொற் பொழிவுகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதில் வியப்பொன்றில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இனக்கலவ ரம் ஏற்பட்ட பொழுது கொழும்பு முதலிய இடங்களில் இருந்த தமிழ் மக்கள் வட இலங்கைக்குச் சென்றனர். ஆனல் வத்தரமுல்லையில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த திரு. இராமச்சந்திரா அவர்கள் வருவது வரட்டும் என்ற துணிவுடன் இருந்தார்கள். ஆனல் அவருக்கு எவ்விததீங்கும் ஏற்படவில்லை. இப் பெரியாருடைய மனவுறுதியை இச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
தன் இனம் என்ற எல்லையைத் தாண்டி எல்லாரும் ஓர் குலம் என்ற மனப்பான்மை மலர வேண்டுமென்பதில் பேரார்வங் கொண்டவர் திரு. இராமச்சந்திரா அவர்கள் இதனையே நயினுதீவு நாகபூஷணியம்மனிடம் கேட்கின்றர்.
எனக்கென்றேர் தனிவரம் யான் கேட்கவில்லை
என் இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை உனக்கெல்லா உயிர்களுமே சொந்த மென்ற
உண்மையை யான் ஒருபோதும் மறந்ததில்லை சினங்கொண்டு தீங்கிழைக்குந் தீயோர் தாமும்
சீலமுற வேண்டு மென்றே வேண்டுகின்றேன் தனக்கொருவ ரொப்பில்லாத் தாயே! இந்தத் தாரணியில் சாந்தியையே தருவாய் நீயே"
அகிலாண்ட கோடியீன்ற அன்னையிடம் எதனைத் தரு மாறு கேட்கின்ருர்? சாந்தி தாரணியில் நிலவ வேண்டும் எனக் கேட்கின்ருர், எல்லா உயிர்களும் அன்னை பராசக் தியின் சொந்தப் பிள்ளைகள் என்ற இந்த உண்மையை மற வாது வாழ்ந்து வருபவர்தான் திரு. இராமச்சந்திரா அவர் கள். இப் பெரியார் நீடூழி காலம் வாழ்ந்து இறைபணி யாற்றிவர ஆசி புரியுமாறு அன்னையைப்பிரார்த்திக்கின்றேன்.
 
 
 

ஆத்மஜோதி 46. ஞானியர் பாதம் பற்றிப் பிடித்தல்
(ஞானியர்தாசன்)
ஒவ்வொரு மனிதரும் இறைவனிடம் ஏதாவது ஒன்றை வேண்டுதல் செய்கிருர்கள். உலக சம்பத்துக்களில் வேட்கை கொண்டவர்கள் பொன், மண், புத்திரர்கள், உத்தியோ கம் முதலியவற்றை மனதில் கொண்டு வேண்டுதல் செய்கி ருர்கள். நோய், துன்பம் முதலாயவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்காகச் செய்வர் வேறுசிலர். பொன்னையும் புகழை யும் வேண்டாது, பெரும்பிணியாகிய பிறவிக்கடலைத் தாண் டுவதற்கு உறுதுணையானவற்றையும், இம்மைக்கும் மறுமைக் கும் நலன்தரக் கூடியவற்றையும் வேண்டி பிறப்பறுக்கும் பிஞ் ஞகனை வழிபடுவர் மிகச் சிலரே.
சந்ததமு நினதருளைச் சார்ந்துவாழ்ந் திடுகின்ற
சற்சணர்த முறவுவேண்டும்
“சரவண பவாகுகா சண்முகா வென்றுநிதம்
சாற்றடியர் நேயம்வேண்டும்
சிந்தனையி லுந்தனது சித்துரு தியானிக்குஞ்
சிவயோகர் ஆசிவேண்டும்
இவர்களின் சேவையே சிவபூசை யாய்க் கொண்ட
சீலர்களின் சேர்க்கைவேண்டும்
பந்தம தகன்றிட்ட பரமஞா னியர்பதம் பற்றிப் பிடித்தல்வேண்டும்
பாரெங்கு மவர்மொழி பரவிடும் பணியில்யான்
பங்கெடுத் துய்யவேன்டும்
总 *கந்தா விசாகனே! கருஞகரா! வென்று
கதறுநெறி தருதல்வேண்டும் கதிர்காம கேஷத்திரந் தனிலமர்ந் தன்பர்க்குக் கருணைமழை பொழிதெய்வமே!
என்று வேண்டுகின் ருர் பெரியார் திரு. க. இராமச்சந்திரன். இவரின் உள்ளத்தி லிருந்து ஊற்றெடுத்த இப்பாடல் அன்னரின் வாழ்க்கை லட்

Page 9
462
ஆத்ம ஜோதி
縣
சியத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருந்தவும் அமையவும் வாழ்ந்து, அடியவரின் நேயத்தை நாடி, சிவயோகர் ஆசி யைத் தேடிப்பெற்று, பரமஞானியர் பதம் பற்றிப் பிடித்து , பல மகான்களது அருமை பெருமைகளையும் போத
களையும் பரப்பினுர்கள். வாக்காலும் வாழ்க்கையா லும் பரப்பியது போதாது எனக் கருதி, தன் உடல் பொருள்
ஆவி மூன்றையும் இப்பணிக்கே அர்ப்பணித்து, ஆத்மஞானத் 。
தை மேலும் பரப்பும் நோக்குடன் ஆத்மஜோதி என்னும்
மாத சஞ்சிகை வெளியிடுவித்தார்கள்.
மக்கள் குலம் முழுவதும் தன் சகோதரர்கள் என்ற மனப் பான்மை படைத்தவராதலின், இவர் பணி மேலும் விரி வடைவதாயிற்று. நயினை நாகபூஷணி அம்பாள் மேல் பாடப் பட்ட பஞ்சகத்தில் ஒன்று இவரின் உள்ளத்தின் விரிவைக் காட்டுகின்றது.
எனக்கென்றேர் தனிவரம் யான் கேட்கவில்லை,
ஒரன் இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை, உனக்கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற
உண்மையையான் ஒரு போதும் மறந்ததில்லை; சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர்தாமும்
சிலமுற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் தனக்கொருவரொப் பில்லாத்தாயே! இந்தத்
தாரணியில் சாந்தியையே தருவாய் நீயே!
ஏனைய இனத்தவரதும் மதத்தவரதும் நலனையும் கருதி, எல்லா மதத்து உண்மைகளையும் உலகுக்கு எடுத்துக் காட்டும் நோக்குடன் சமய மஞ்சரி (Religious Digest) என்னும் சஞ்சி கையை சென்ற எட்டு வருஷங்களாக வெளியிட்டு வருகிருர்
கள். பல நாடுகளிலும் இச்சஞ்சிகை பரவியுள்ளது. எம்மதத்
தினரும் விரும்பிப் படிக்கக்கூடிய ஒரு சஞ்சிகையாக இது மலர்ந்தமையால், வெளி நாட்டில் உள்ள பல அறிஞர்கள் பெரியார்களது தொடர்பும் ஏற்பட்டதுடன், ஆசிரியரின் பிரபல்யமும் பரவியது.
சமயங்களின் சரித்திரத்திற்கென நடாத்தப்படும் சர்வ
(3,33 LD57 BTL.46ór (International Congress for History of
Religions) ஒன்பதாவது மகாநாடு முதன் முறையாக ஐரோப் பாவுக்கு வெளியில் நடைபெற்றது ஜப்பானில் ஆகும். 1958ம்
 
 

ஆத்மஜோதி 63
ஆண்டு நடைபெற்ற இம்மகா நாட்டில் பல நாட்டுப் பேரா சிரியர்களும் பங்குபற்றினர். நமது சமய மஞ்சரியின் ஆசிரிய ரும் 'தமிழர்களின் சமயங்கள் - பண்டையதும் தற்போதை Lig, th’’ (Religions of the Tamils - Past and Present) 6T667 g) tib
விஷயம் பற்றி ஆற்றிய ஒரு விரிவுரை மூலமாகச் சைவத்துக் கும் தமிழுக்கும் பெரும்பணி செய்தனர். இவ்விரிவுரையால் கவரப்பட்டமகாநாட்டின்செயற்குழுவினர் 1960ல்மேற்கு ஜே ர்மனியில் நடந்த அடுத்த மகாநாட்டுக்கும் வருமாறு வலிந்து அழைத்தனர். இம்முறை கையாளப்பட்ட விஷயம் 'தாயுமா னவர்' மாபேர்க் சர்வ கலாசாலையில் ஆங்கிலத்தில் ஆற் றப்பட்ட இவ்விரிவுரை வேறு மொழியிலும் மொழி பெயர்க் கப்பட்டு வெளி வந்துள்ளதாக அறிகிருேம்.
சென்ற மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக அரசி u6) golply upgrr 5T Gol (World Contitutional Convention) பல விஞ்ஞானிகள், சமாதானப் பிரியர்கள் கூட்டினர். இம்மகா நாட்டுக்கும் அழைப்பு வந்தது போவதற்குப்பணம் தேவை. பணமிருந்தாலும் செலாவணிக் கட்டுப்பாடு முத லாய தளைகள் களைவது பெரும் சிரமமல்லவா? சர்வத்தை யும் தனக்காகச் செய்பவனின் தேவைகளைத்தானே பூர்த்தி செய்வான் இறைவன்' என்று கீதை போதிக்கும் உண்மை பொய்க்குமா? எல்லாம் வல்லவனல்லவா எம்பெருமான். 'சமய மஞ்சரி'யைப் படித்து வந்த பெரும் உள்ளம் படைத் த வெள்ளைக்கார அம்மையார் ஒருவரின் உள்ளத்தில் இறை வன் புகுந்து செயல் படுத்தினர். இவ்வம்மையார் தமது மரண சாசனத்தில் இவரின் ஆத்மீகப் பணிக்கெனப் பணம் ஒதுக்கிய இரகசியம், அம்மையாரின் மரணத்தின் பின்னர் கோட்டார் அறிவிக்க அறிந்தனர். திருவருள் எவ்வாறெல் லாம் செயல் படுகின்றது என்பது எம் சிற்றறிவுக்கு அப்பாற் பட்டதே. அவன் கையில் எம்மை முழுதும் ஒப்புவித்தால் தான் வாழ்வில் இப்படியான அற்புதங்கள் சாத்தியமாகும்.
ஆதி சங்கராச்சாரிய சுவாமிகள் அன்னபூர்ணுஷ்ட கத்தில்
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர:/ பான்தவா; சிவபக்தாஸ்ச் ஸ்வதேசோ புவனத்ரயம்//
顧 *பார்வதி தேவியே தாய், தேவனுகிய மஹேஸ்வரனே தந்தை, சிவ பக்தர்களே சுற்றத்தவர்கள். மூன்று உலகங்களுமே தன் தேசம்'

Page 10
464. ஆத்மஜோதி பாடியருளிய உண்மை, இவ் அஷ்டகத்தைப் பாராய ணம் செய்யும் பக்தனின் வாழ்விலும் மிளிரத் தொடங்கியது. ஆத்மீகத் துறையில் சென்று கொண்டிருக்கும் சகலரும் உற வினரே என்ற பரந்த அன்பின் சக்தி இந்த அம்மையாரையும் ஈர்த்து விட்டது. மகா நாட்டின் அழைப்பை ஏற்று வழியில் பல இடங்களுக்கும் சென்று சமய உண்மைகளைப் பரப்பி விட்டு, சென்ற மாதம் மகாநாட்டில் முழக்கிய பேருரையின் தமிழாக்கம் பிறிதோர் பக்கத்தில் காணலாம். பேருரையைக் கேட்ட அன்பர்களும், அறிஞர்களும் மிகவும் பாராட்டிஞர் கள். புகழும் பிரசித்தியும் பெற்ற ஒரு விஜயமாக இது அமைந் தபோதும், இதனை ஒரு பணியாகவே கருதுகிருர், எ ன் னே இவரின் பணிவு. இப்பணியின் மூலமாக இந்து சமயத்துக்கும் இலங்கைக்கும் பெரும் புகழைத் தேடித் தந்த இப்பெரியா ருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.
ரமணர், அரவிந்தர், சிவானந்தர், இராமதாசர் போன்ற மகான்களைப்பற்றியும் அவர்களின் போதனைகளையும்இலங்கை மக்கள் பலர் அறியக் கூடியதாக இருந்ததும், பின்னைய இரு மகான்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியதற்கும் கருவியாக இருந்தமையும் ஈண்டுக் குறிப்பிடற்குரியது. 1950ம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்து சிவானந்த வெள்ளத்தை அள்ளி வீசிய சுவாமி சிவானந்தர் அவர்களால் 'திவ்ய ஜீவன சங்க நட்சத்திரம்' என்னும் கெளரவப் பட்டம் வழங்கப்பட்டது. 1954ம் ஆண்டில் உலகச் சுற்றுப் பயணம் செய்து முடிவில் இலங்கை சேர்ந்து, பல பாகங்களிலும் அன்பும் அருளும் பரப் பிய சுவாமி இராமதாஸர் அவர்கள் உலகப் பிரயாணம் பற்றி எழுதிய 'அகிலமே ஆண்டவன்’ என்னும் நூலில் இலங்கை நிகழ்ச்சிகளை விபரிக்க ஆரம்பிக்கும் பொழுது குறிப் பிட்டுள்ளதை இங்கே கூறுதல் மிகையாகாது.
'இலங்கையில் உள்ள பக்தர்களில் தலையாயவராகிய பூரீ இராமச்சந்திரனை எமக்கு நெடுங்காலமாகத் தெரியும். ஆங் குள்ள பக்தர்கள் எல்லோரதும் நன்மதிப்புக்குப் பாத்திர மானவர். அடக்கமாகப் பணியாற்றுபவர். பின்னணியில் மறைவாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கு உற்சாகம் ஊட்டி, ஒழுங்காகவும் நிறைவாகவும் திறமையாகவும் ப யாற்றச் செய்விப்பவர். இலங்கையில் இவர் வகுத்த திட்டப் படியே நாம் ஒழுகினுேம். இவர் வீட்டில் ஒருநாள் பஜனை நடந்தது. ஒரு வீட்டில் இறைவன் நாமம் தினமும் பாடப் பட்டு, ஆங்குள்ள எல்லோரும் ஒன்று பட்டு மகான்களைச்
*
 
 

ஆத்மஜோதி 465
சேவிப்பதில் ஈடுபடுபவராயின் அவ்வீடு வைகுந்தத்துக்கு ஒப்
பானது (சிவலோகம் எனினும் பொருந்தும்) என்று பக்தர் கள் கூறுவது மிகையாகாது’.
சுவாமிகள் கூறியது போன்ற இத்தகைய வீடு அமை
வதற்கு பெருந்துணையாக இருந்தவர் இப்பெரியாரின் தர்ம
பத்தினி. இவர்கள் வீட்டில் தினமும் நடைபெறும் வழிபாடு, வெள்ளிக்கிழமை வழிபாடு, இடையிடையே நடைபெறும்
குரு பூசைகள், ஜெயந்தி வைபவங்கள் முதலாயவற்றுக்குப் போகிறவர்களையாயினும் சரி, சாதாரணமாகச் செல்லும் விருந்தினரையும் சரி இன்முகம் காட்டி உபசரிக்கும் முறை
யை வள்ளுவரின் வாக்கை வைத்துப் பார்ப்போமானல் ‘இவர் தம்மனேயில் உண்ணுதல் கோடி பெறும்’ என்று
தான் கூற வேண்டும். உண்ணுங்கள் என்று எல்லோரிடமும்
தாயன் பைச் சொரிவார்கள்.
உத்தியோகத் துறையில் முன்னேறி புகையிரதப் பகுதி ல் உச்சப்பதவியை எட்டிப் பிடிக்கக் கூடிய திறமையும் வன்மையும் ஆற்றலும் உடையவராயிருந்தும், அதில்மோகம் கொள்ளாது கடமையே கருந்தனமாகக் கருதி, சக உத்தி யோகத்தரின் மலேரியாச் சேவைக் காலம் பற்றி மேலதிகாரி களின் கொள்கைகளைக் கண்டித்தனர். இதனல் அந்நாளிலி ருந்த வெள்ளைக்கார மேலதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாகி உத்தியோகத்தைக் கூட இழக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடியதாக இருந்தது. தொழிற் சங்கங்கள் என்ற பெயரே கேள்விப் படாத அந்நாளில், உரிமைகளுக்காகப் போராடிய
தீரத்தை இந்நாளைய தொழிற் சங்கத்தினர் கண்டு பிரமிக்க
வேண்டும்,
பொய், அநீதி, கபடம் முதலாயவற்றின் மேல் இவர் கொள்ளும் சீற்றம் நெருப்புப் போன்றது. ஆனல் நெஞ்சு மிக வும் இரக்கம் உள்ளது. தாய் போன்ற சுபாவமும் பரிவும் உள்ளவர். சத்திய நெறி நிற்கும் இவருக்கு சத்திய சீலராகிய அண்ணல் மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் அம்மையார், இராஜாஜி ஆகியோரைத் தம்மனையில் வரவேற்றுத் தங்க வைத்து உபசரிக்கும் பெரும் பாக்கியம் 1928ஆம் ஆண் டில் நாவலப்பிட்டியில் கிட்டியது. பகவான் ரமணரைக் குருவாகக் கொண்டு அதன் பின்னர் பல மகான்களையும் தரிசித்து காமர்புகூர், ஜெயராம்பட்டி முதலாய பல புனித ஸ்தலங்களையும் தரிசித்து, எம் மதத்துக்கும் சம்மத் மான

Page 11
466 ஆத்மஜோதி
வாழ்க்கை வாழ்ந்ததோடு அமையாமல் மகான்கள் பலரின் மேலும் பாடல்களும் அர்ச்சனை மாலைகளும் இயற்றினர் கள். ஈழத்துச் சிவனடியாரின் திருக்கூட்டத்தினரின் விருப் புக் கிணங்க, கேதீஸ்வர நாதர் திருப்பதிகமும் பாடி, கதிர் காமம் நயினதிவு முதலாய இடங்களில் கோயில் கொண் டிருக்கும் மூர்த்திகள் மேலும் பாடல்கள் இயற்றினர்கள்.
சந்தன மரமதைச் சார்ந்த மற்றைய மரங்களும் மணம்
பெறுவது போல, இவரைச் சார்ந்து தம் வாழ்க்கையை
நலமாக்கியவர் பலர். பாட்டாளி தொடக்கம் பாராளு மன்ற உறுப்பினர் வரை இவரைச் சார்ந்து நல்லனுபவங் கள் பெற்றும், சந்தேகங்களை நீக்கியும், பல நூல்களைக்கற் அறும் தெளிந்தும், பலன் பெற்றனர். மகான்களுடன் உறவு ஏற்பட்டு, பக்தி நெறி நின்று முத்தியை நாடும் விருப் பைப் பெற்றவர்களும் உண்டு. இவ்வாருக பல்வேறு வகை களில் மனிதரை நல்லவராக்கிய பெரியாரை நாம்வாயார வாழ்த்தாதுவிடின் செ ய் ந ன் றி மறந்தவர்களாவோம். நன்றி நவிலும் வகையில் மேற் கூறிய வற்றை எல்லாம் அவருக்கு வழிகாட்டிய மகான்கள் பாதங்களுக்கு சமர்ப் பிக்கின்ற ஞானியர் பதம் பிடித்து உய்வோமாக!
வாழ்க! மகாத்மாக்கள்! வாழ்க! சீரடியார் எல்லாம்.
செந்தமிழ்க் கலைவாணியே! கட்டுவன் - நாதகலாமணி)
இராகம்:- சரஸ்வதி தாளம்:- ஆதி பல்லவி செந்தமிழ்க் கலைவாணியே! - சரஸ்வதியே! அந்தமில் கலைஞானம் அகிலமனைத்தும் நிலவ அருள்தாயே! (செந் அனுபல்லவி சுந்தரி செளந்தரி சுகுண கலாநிதியே! சந்ததால் அருள் தேவியே! சகலகலா வல்லியே! (செந்தமிழ்)
சரனம் - வெண்டாமரை தன்னிலே வெள்ளைக்கலை தரித்தே கண்டோர் சுவைக்கும் கரும்பே கானசரஸ்வதியே! தொண்டர்தம் நாவினிலே தண்டமிழ் கொழிப்பாயே வண்டமிழ் சொல் கலாமணியே! வாய்மை உரை வாழ்த்தியே
நம்பு மடியர்க்கு நற்கலையருள் நயந்தே நாவினி லுறைந்திடு நலந்திகழ் வாணியே! நான்முகன் தேவியே! நானில மனைத்தும் ஞானமழை பொழியுங் கானமுத மளித்தே. (செந்தமிழ்!
 
 

ஆத்மஜோதி 4.67 வாழ்க இராமச்சந்திரா!
ஈழமணித் தமிழகத்தின் எழிலார்ந்த தவமணியாய் இனிது பூத்த சிலமணி, திருநெறிச்செஞ் செல்வமணி,
இராமச்சந் திரப்பேர் பூண்ட கோலமணி, சமரசப் பொற் குன்றெளிர்நம் சைவ மணிக் கொள்கை யாவும் மேலை மணி நாடனத்தும் முழக்கிவரல்
கேட்டுளம்தான் விம்மு தம்மா!
பொன்னுடாம் தந்நாடு, புனித மிகும்
தமிழ்நாடு, புகழ்த் தென் னுடு, விண்ணிமய வடநாடு, மேலும் வளர்
ஆசிய,ஐ ரோப்ய நாடாம் பன்னுடும், அருள்நாடும் யாத்திரைகள்
சென்றிறைவன் பதத்தை நாடும் எண்ணிறந்த தவஞான யோகியர்தம்
அருளாசி இனிது பெற்றேன்!
தான் பெற்ற பேரின்பம் தாயகமும்
பெறுகவெனத் தருணந் தோறும்,
வ1ன்பெற்ற ஞானியரை வரவழைத்துத்
தரிசனத்தேன் வழங்கிப் பின்னர்,
'ஊன்பெற்ற பயன் இறைவன் பதந்துய்த்தல்'
எனும் சமய உண்மை தன்னை,
தேன்சொட்டும் வாசகத்தில் வேற்றுநா
டனைத்தினிலும் தெளிய வைத்தோன்!
ஐயமறக் கற்றுணர்ந்தோன், அருட்புலமை
படைத் துயர்ந்தோன், அன்பர்க் கன்பு
பெய்வதிலே முகில்போன்றன், பெருமையிலான்,
எளிமை, பணி வினிமை மிக்கான்;
பொய்வஞ்சச் சிறுமைகண்டு பொங்குவதில் தழல் போன்றன், புனித நெஞ்சன்;
தெய்வீகக் கனலுமிழும் சிங்கம்போற்
பார்வையினன், ஆத்ம தீரன்!

Page 12
468
தனித்தனியே மதப்பெரியோர் தத்தமது கொள்கைகளைச் சாற்று தற்கே, தனித்தனியே சஞ்சிகைகள், நூலகங்கள் சமைத்திடும் இத் தமிழ கத்தில், அனைத்துலக மதக்கொள்கை, அருட்பெரியார்
அனைவரின் வாக் கமுதம் ஏந்தி, இனித் தசம ரசம் வளர்க்கும் எழில் ஆத்ம
ஜோதிதனை ஈந்த வள்ளல்:
குமுறியெழும் நாத்தீகக் கொடும் பேயும்
வல்லரசுக் குண்டும் மாய்ந்து, தமிழுலகம் மட்டுமன்றி, சகவுலகம்
அத்தனையும் தழைக்க வென்றே சமயங்கள் அனைத்தினுக்கும் தாய் போன்ற
வேதாந்த சாரங் கொண்ட சமயமஞ் சரியொன்றை ஆங்கிலத்தில்
தனித்திருந்து சமைக்கும் அண்ணல்
அஞ்ஞான இருள்நெஞ்சில் அலைமோதக்
காவிபுறத் தணியும் வஞ்சப் பொய்ஞானத் துறவேற்கத் துணியாமல்
இல்லறத்தில் புகுந்து, தூய மெஞ்ஞான பக்தியொடு கர்மத்தால்
தவஞானம் மேவி, இந்நாள் விஞ்ஞான நாடனைத்தும் அருள்ஞானம்
முழக்கிவரும் வீரச் செம்மல்!
செய்கருமம் சிறிதெனினும் திருத்தமுறச் செய்திறலோன், சிந்தை ஒன்றி, மெய் வருத்தம் பாராது, கண்துஞ்சா
தருட்பணியில் மேவி நிற்போன்; பொய்யொழுக்க நெறிகாணச் சகியாது, நேர்மைநெறி புகல்நா வேந்தன்! துய்யதவ முனிவாழ்வை இல்லறத்தில் பெற்றின்பம் துலக்கும் ஞானி!
 
 

ஆத்மஜோதி 469
திருவண்ணு மலையமர்ந்த ஜெயரமண
குருதாசன், தினமும் பொங்கிப் பெருகுமருட் கதிர்காமப் பெம்மானின்
கழல்நேசன், பெரிய ஞான பரமஹம்சர் அனைவரையும் பணிந்தேத்தும்
சுகுணேசன், பரிவு காட்டி அருகணைத்துள் ளன்பர்தமை ஆதரிக்கும்
சகவாசன் அருட்பேர் வாழ்க!
இந்து மதப் பெருமையெல்லாம் எடுத்தடுக்கிச்
சர்வசம ரசமா நாட்டில் வந்தவெற்றி வீரவிவே கானந்த
வள்ளலைப் போல், வாரி வாரி அந்தமிலாத் தமிழகத்தின் அருட்செல்வம் அத்தனையும் அமெரிக் காவின் - சிந்தையெலாம் பெருகுவித்த திரு. ராமச்
சந்த்ரர் புகழ் செழித்து வாழ்க!
'பரமஹம்ஸதாசன்'
\****ملN**
“கலைச் சோதித்தாயே - கான சரஸ்வதியே’ (கட்டுவன் நாதகலாமணி) இராகம் :- கம்சத்வனி தாளம்: ஆதி
கலைச்சோதித் தாயே! - கான சரஸ்வதியே!
கலைமதியே நிலைபெறுநிதியே! காணவல்லி கமலவாணியே! (கலை)
அனுபல்லவி பாவலர் நாவலர் பாடிப் பணிந்திட
நாவினிலே நர்த்தனஞ் செய் நாதவீணுபாணியே!
சரனம்
அருள் மாரி பொழிதரநல் எழில் மலர் வாணியே! அடியார் வினையகற்றும் அருங்கலைச் செல்வியே! அலகில் தமிழிசையே அமுதவாரிதி சொரிய அளிப்பாய் கலாமணியே! அருள் ஆசி ஆனந்தமே!
நாமகளே!தமிழ் பாமலர்த்தாயே! நவராத்திரி ஒளிர் நம்கலைத் தெய்வமே! (கலை)

Page 13
470 ஆத்மஜோதி தொண்டர் தம் பெருமை
சொல்லவும் பெரிதே!
(திரு. சரவணமுத்துச் சுவாமியார்)
cLALSLcLLLcLeAcLcLLLcLcLLSLcLcLLScLAcScecLLcLALLSLccLScLcLLLcLcScLcLSLcLcLcLAcLLLkLLLAALLLLLLLS
'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். *
'அரியது கேட்கின் வரிவடி வேலோய்:
அரிதரிது மானுட ராத லரிது! " மானுட ராயினுங் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்த லரிது! பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமுங் கல்வியு நயத்தலரிது! ஞானமுங் கல்வியு நயந்த காலையும் தானமுந் தவ முந் தாஞ்செய லரிது! தானமுந் தவமுந் தாஞ்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே!’ w
பெரிய புராணத்தில் அடியார்கள் பெருமையை எடுத் தியம்பிய சேக்கிழார் - "அடியார்கள் பெருமையைப் பேசு வது கடலைக்கையால் நீந்தினன் காரியங்காண்' என்று குறிப் பிடும் போது அறிவிலும் ஆற்றலிலும் அருகதையற்ற சிறி யேனுக்கு இம் முயற்சி முயற் கொம்பாகும். எனினும் அன் பன் ஒருவனின் தூண்டுதலினலும், முயற்சி திருவினையாக்கும் என்ற முனைப்பினலும் ஈழத்தில் தலை சிறந்து விளங்கும் பெரி யார் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை நானறிந்த வரை ஈண்டு குறிப்பிடுகின்றேன். நல்லாரைக் காண்பதுவும், நல் லார் சொற்கேட்பதுவும், நல்லார் குணங்கள் உரைப்பதுவும் அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றல்லவா?
வட மாகாணத்தில் சப்த தீவுகள் உள. அவைகளில் ஒன்று சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினுதீவு. இங்குதான் சர்வலோக நாயகியாம் அம்பிகை நாகபூஷணி எனும் நாமத் துடன் அருளை வாரி வழங்குகின்ருள். அவளுடைய தனிப் பெருங் கருணையினுல் விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள்
 

ஆத்மஜோதி 471.
ஆங்கு தோன்றுகின்றன. அவ்விதம் தோன்றிய மாணிக்கங் களில் ஒன்று மறைந்தும் நிறைந்து நிற்கின்ற ந யி னு தீவுச் சுவாமி எனும் முத்துச்சாமி அவர்கள் மற்றவர் இன்று எமது தியானத்துக்குரியவராகிய இராமச்சந்திரன் அவர்கள்.
இராமச்சந்திரன் அவர்கள் தமது இளமைப் பருவத்தி லேயே நாவன்மையும் பாக்கள் யாக்கும் திறனும் பெற்று மிளிர்ந்தார். அந்நாட்களில் கெளரவ சபாபதிப்பிள்ளை எனும் பெரியாரின் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் சர்க்கரைப் பந்த ரில் தேன் மாரி பொழிந்தது போன்று இராமச்சந்திரன் அவர்கள் ஆற்றிய சொல்மாரியைச் செவிமடுத்த அனைவரும் மெய்மறந்திருந்த அற்புதத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்ருமை நன்று' என்ற குறளிற்கு இலக்காக அன்னர் புகழுடனே தோன்றினுர்,
பின்னர் புகையிரதப் பகுதியில் கடமையாற்றி வருங் காலத்தில் அப்பகுதியில் தலைமைப் பீடத்தையும் ஏற்கும் வாய்ப்புகள் இருந்தும் அதில் நாட்டம் கொள்ளாது தனது சீரிய வாழ்க்கைக்கும் தியானத்திற்கும் உகந்த மட்டான ஊதியம் பெற்று அதற்கமைய வாழ்க்கை நடாத்த விரும்பி போதுமென்ற மனமே பெரும் பொக்கிசம் என்பதற்கியைய ரூபா 500-00க்கு மேல் வருமானம் வேண்டாமென்ற நிலை யில் ஆசையற்று இருந்தாரெனின் அவரது தூய வாழ்க்கை யை எண்ணவும் முடியுமா? மேலைத் தேசத்தவரின் பாணி யில் உடை அணியாத, தமிழன் என்ருெரு இ ைமுண்டு தனி யே அதற்கொரு குணமுண்டு என்பதற்கமைய தூய வெண் ணிற வேட்டியும், அங்க வஸ்திரமும் சால்வையும் அணிந்து, ஆங்கில ஆட்சியில் கடமையாற்றினுரெனின் அன்னுரின் தன் மானந்தான் என்னே! வீரதீரந்தான் என்னே!
திருவள்ளுவன்வகுத்தவாழ்க்கைக்குஅமையஇல்வாழ்வில் ஈடுபட்டுப் பின்னர் பற்றற்ற துறவியாக வாழ்க்கை நடாத்து கின்ருர், ரமண ரிஷி அவர்களின் சீடனுகி திருவண்ணமலை யிலேயே வாழ்வதற்கு ஏற்பாடு செய்தவர் பின்னர் எமது மத்தியில் இருந்து எம்மை வழி நடத்த இசைந்தது எமது பெறற்கரிய பேறென்றே கொள்ள வேண்டும். ரமண சரணு னந்தன் என்ற புனைபெயரில் அரிய பல நூல்களை வெளியிட் > டுள்ளார். அவைகளில் "மரணத்தின் மாண்பு' என்ற நூலும்
ஒனறு.

Page 14
472 ஆத்மஜோதி ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் வெளியிட்ட 'திருக்கேதீஸ்வரப் பதிகம்' ஐயா அவர்களாலேயே யாக்கப் பட்டது. இப்பதிகத்தில் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் பண்டைய மாண்பையும் இன்றைய நிலைமை யையும் உள்ளங்கை நெல்லிக் கணியெனத் தெளிவுபடுத்தி யுள்ளார். இவர் ஆக்கிய திருக்கேதீஸ்வரப் பதிகமே திருக் கேதீஸ்வரத் திருப்பணிக்கு வித்திட்டதென்று சொன்னல் மிகையாகாது. 'சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்' என்றவாறு இவர் பேச்சள வில் மாத்திரம் நிற்கவில்லை. சொல்லியவற்றைச் செயலிலும் செய்து காட்டினர். பேசிப் பயனில்லை எனக்கண்டு சா த னை மூலம் பக்தி பண்ண வேண்டுமென முதன் முதலாக 1949ம் ஆண்டில் திருக்கேதீஸ்வரத்தில் ஒரு வாரத்தை அன்பர்களு டன் பக்தி நெறி நின்று சாதனை வாரமாக நடாத்தி வெற்றி ஈட்டிய பெருமை இவரையே சாரும்.
இலங்கையில் பக்தி மார்க்கத்தை வளர்க்கும் நோக்கு டன் சத்சங்கம் என்ற பெயருடன் ஒருசங்கத்தை நிறுவிப் பல அன்பர்களையும் திரட்டினர். ஒய்வு நேரங்களில் தவப் பொழு தை அவப்பொழுதாக்காமல் ஆன்மஈடேற்றத்தின் பொருட்டு சத் சங்கத்தில் கூட்டுப் பிரார்த்தனை, செபம் , தியானம் முத லிய நற்பணிகளை ஒழுங்கு செய்து பல அன்பர்களை நல்வழிப் படுத்தினர். அவரது சத் சங்கத்தில் ஈடுபட்டுத் தேறியவரே இன்று முற்றும் துறந்த துறவியாகக் கதிர்காமத்தில் ஆச்சிர மம் எடுத்துத் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சாது சண்முக வடிவு அவர்கள்.
இவர் தன்னுடைய நல்லுபதேசங்களுடன் நிற்காது இந் தியாவிலிருந்து தவயோகி சுத்தானந்த பாரதியார், சுவாமி சிவானந்த மகரிஷி, சுவாமி இராமதாசர் போன்ற மகான் களை இலங்கைக்குத் தருவித்து அவர்கள் மூலம் மக்கட்கு அன்பு மார்க்கத்தையும் பக்தி நெறியையும் போதித்துப் பல இடங்கட்கும் சென்று சமயப் பிரசாரமும் செய்வித்தார்.
சொல்லளவிலும் செயலளவிலும் நின்று விடாமல் எழுத் து மூலமும் சமயம் வளர்வதற்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்து கொண்டிருக்கின்ருர், நாவலப்பிட்டி அன்பர் திரு. நா. முத்தையா அவர்களால் நடத்தப்படும் 'ஆத்மஜோதி' என்ற சஞ்சிகைக்குக் கெளரவ ஆசிரியராக அமைந்து அரிய பல கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ருர், சமய
ܠܐ
 

ஆத்மஜோதி 473
தத்துவங்களை மேல் நாட்டவர்கள் உட்பட எல்லோருக்கும் புகட்டும் சீரிய நோக்குடன் தாமே 'Religious Digest’ என்ற ஆங்கில சஞ்சிகையையும் பிரசுரித்து வருகின்ருர்,
சமயப் பற்றுடன் நாட்டுப் பற்றும் அவருக்கு உண்டு. பல அசெளகரியங்கள் நிறைந்த தீவுப் பகுதியைமுன்னேற்றப் பல முயற்சிகளும் புரிந்தார். தீவுப் பகுதிகளுக்கு ருேட்டு வசதி, போக்குவரத்து வசதி, குடி தண்ணிர் வசதி, ஆஸ்பத் திரி வசதி, முதலியன ஏற்படுத்த வேண்டுமென்று 1937ம் ஆண்டு புங்குடுதீவு மகா சபையில் ஆற்றிய சொற்பெருக்கு இதற்கு ஒர் எடுத்துக் காட்டாக இருக்கிறது. தற்பொழுது அவ்வொழுங்குகள் ஒரளவு பூர்த்தி அடைந்துள்ளன.
சோதிடத்திலும் தீர்க்க தரிசனத்திலும் இவர் கைதேர்ந் தவர். இந்திய விடுதலையை முன் கூட்டியே சுப்பிரமணிய பாரதியார் கூறியது போன்று இவரும் இலங்கையில் தமிழர் கட்கு ஏற்படவிருக்கும் அபாயத்தையும், தமிழ் மொழிக்கு ஏற்படவிருக்கும் சிக்கல்களையும் முன் கூட்டியே தீர்க்கதரிசன | மாகக் கூறியுள்ளார்.
இறைவனைத் தூய உள்ளத்துடன் வழிபட்டு அவனே எதற்கும் தஞ்சம் என வாழ்பவர்கட்கு எவ்வித இடையூறும் வருவதில்லை. இத்திறனுலேயே சமணர்கள் இழைத்த சொல் லொணஇன்னல்களையும் எதிர்த்து அப்பர்சுவாமிகள் வெற்றி கண்டார். இதுபோன்றே 1958ம் ஆண்டில் இலங்கையில்தலை விரித்தாடிய இனவெறியின் போது தலங்கமையில் இராமச் சந்திரன் அவர்கள் வசித்து வந்த இல்லத்திற்கும் பேராபத்து நிகழவிருந்தது. அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வரு வதும் இல்லை என்ற வாகீசரின் வாக்குக்கு இணங்க ஐயா ஆண்டவனே கதியென்று வழி பாட்டில் ஈடுபட்டிருந்தார். ஆண்டவனின் கருணையினுல் அவருக்கு எவ்வித தீமையும் ஏற் படவில்லை. நிகழவிருந்த பேராபத்தில் இருந்து மீண்டது இறைவனின் அற்புதம் என்றே கூற வேண்டும். அவர் இன்ன மும் தொடர்ந்து தலங்கமையில் வசித்து வருவதும் விந்தை Lu Gör GB(0?!
சைவ சமயத்தின் தத்துவத்தையும் அதன் மகிமையை யும் மேல் நாட்டில் எடுத்தியம்பி அவர்களின் பாராட்டைப் பெற்ருர் சுவாமி விவேகானந்தர். அதேபோல் இராமச்சந்தி P ரன் அவர்களும் சைவ மதத்தின் சீர் சிறப்புக்களையும் அடி

Page 15
474 ஆத்மஜோதி
யார்கள் பெருமையையும், மேல் நாட்டவர்கட்குப் புகட்டு வதற்காகத் தற்பொழுது மேல்நாடு முழுவதும் சுற்றுப்பிர யாணம் செய்து கொண்டிருக்கிருர், சத்தினுல் மெளனமா யிருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தவரைத் தேவியே முன் னின்று ஊக்குவித்து மேல்நாட்டுக்குச்சென்றுசமயப்பிரசாரம் செய்யும்படி பணித்திருக்கின்ருள் எனின் அன்னரின் முயற்சி பலனளிக்கும் என்பதில் ஐயம் சற்றேனுமில்லையன்றே!
இவரது பரந்த மனப்பான்மையும், விரிந்த நோக்கமும் அடியார் பக்தியும், தன்னலமற்ற வாழ்க்கையும் இவர் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்பதைச் சுட்டிக் காட்டு
கின்றன.
'பணி பிழைக்கின் புளியம் வளரால் மோதுவிப்பார் முனிவர்' என்ற நாவுக்கரசரின் கூற்றுக்கிணங்க இவரும் குறை குற்றங்களை எடுத்துக் காட்டிக் கண்டனம் செய்வதில் சற்றும் சளைத்தவரல்ல. 'என் கடன் பணி செய்து கிடப்ப பதே' என்றவாறு பல பொதுச் சங்கங்களிலும் சமயச் சார்புள்ள சபைகளிலும் அல்லும் பகலும் அயராது உழைத் தார். பின்னர் ஆங்காங்கு பதவி மோகமும் தன் முனைப்பும் இருப்பது அறிந்து அவைகளைக் கண்டித்துத் தன்னை விடுவித் துக்கொண்டு சாதனையில் திளைத்தார்.
இராமச்சந்திரன் அவர்கள் திருகேதீச்சரப் பதிகத்தில் பாடிய வண்ணம் மண்ணுேடு மண்ணுகிய மாந்தோட்டத் தில் மறைந்திருந்த தேன் பொந்தைக் கண்ணுரக் கண்டு களிகூருங்காலம் கைகூடுவதற்கு ஆங்கு ஐயா அவர்களின் தலைமையில் ஒரு சமயபிடம் அமைவதற்கும் அதன் வழியாக நாம் அனைவரும் நற்பயன் அடைவதற்கும் திருவருள் கூட்ட வேண்டுமாய் இறைஞ்சுவோமாக. - ஒரு சிறிது ஐயா அவர்களைத் தியானிக்க வாய்ப்புத் தந்த
அன்பருக்கு வணக்கம்.
96.J. 35 TLD lid
பரத்தையைக் கூடினீர், எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண் டம் என்ருள் திருநீலகண்ட நாயனுர் மனைவி. உடனே பவகாமத்தை நீத்துச் சிவகாமரானுர் நாயனுர், மனத்தைச் சிவனிடம் ஊன்றிச் சிற் றின்ப விழைவின்றி இல்லறத்தில் வாழ்ந்தார். காமம் விலகச் சிவநா மஞ் சொல். பாசம் விலகப் பசுபதி யன்பு செய், சுத்தானந்தர் ;
 

ஆத்மஜோதி 475
வாழ்க்கையில் ஒருமைப்பாடு
திரு. க. இராமச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் செய்த பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பு.
சேய்மையிலுள்ள இலங்கையிலிருந்து வரும் தாழ்மையுள்ள சக யாத்திரிகர் ஒருவரது வனக்கங்களும் வாழ்த்துக்களும் உங்களனைவ ருக்கும் உரித்தாகுக.
இவ்வுலக சம்மேளனத்தில் பங்குபற்றுமாறு என்னை அழைத்த மைக்கும் இன்று உங்கள் முன் பேசச் சந்தர்ப்பமளித்தமைக்கும் இச் சம்மேளனத்தைக் கூட்டியவர்களுக்கு நன்றி செலுத்துவது எனது முதற் கடமையாகும். இந்த அழைப்பைப் பற்றிச் சிறிது அவநம் பிக்கையும் இச் சம்மேளனத்தில் பங்குபற்றுவதில் அதிக கஷ்டமும் எனக்கு இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். என் கல் லூரி நாட்களிலிருந்தே நான் ஓர் உலகப் பிரஜை என்ற கொள்கை யுடையேனுய் இருந்தபோதிலும், நான் பொதுமக்களின் கவனத்தை யோ, பத்திரிகைப் பிரசாரத்தையோ ஒருபோதும் நாடியதில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாய் நான் ஆசிரியராயிருந்து வரும் சர்வதேச ஆத்மீகப் பத்திரிகையாகிய "Religious Digest" மூலம் பரந்த அன்பு, அமைதி ஆகிய கொள்கைகளைப் பரப்பும் எனது பணி சிறிதும் படா டோபமற்ற முறையில் நடைபெற்று வந்துள்ளது. நீண்ட காலமாக நான்  ெகா ன் டு ஸ் ள இ ல ட் சி யங் களை யும் க ரு த் து களையும் துலக்கமாகவும் தெளிவாகவும் யாவரும் அறியுமாறு வெளி யிடுவதற்கு இதைப் போன்ற பொன்ஞன சந்தர்ப்பம் என் வாழ்நா ளில் எனக்குக் கிடைக்காது என்ற உண்மையை உணர்ந் தமையே இவ்வழைப்பை நன்றியுடன் ஏற்றுக் கொள்ளும் துணிவை எனக்களித்தது.
நான் பேச எடுத்துக் கொண்ட விஷயம் வாழ்க்கையில் ஒரு மைப்பாடு' என்பது. ஒன்ருகிய தெய்வீகத் தன்மையினை யாவரிலும் விழிப்படையச் செய்து யாவரும் அதனை வெளியிடச் செய்வதன் மூலம் மனித ஒற்றுமையை அறிவது' தற்போதுள்ள சமயங்களில் மிகப் பழமைவாய்ந்ததான இந்து சமயத்தின் உன்னதகுறிக்கோளாய்த் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இயேசு, பிதாகொரஸ், மகா வீரர், புத்தர், கன்வ்யூசியஸ் ஆகியோருக்குப் பல நூற்ருண்டுகளுக்கு

Page 16
476 ஆத்மஜோதி
முன்பே, அனைத்திலும் உள்ள ஆன்மாவையும் ஆன்மாவிலுள்ள அனைத் தையும் பற்றி உபநிஷதங்களில் முனிவர்கள் பாடியுள்ளனர். மனித ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை, வாழ்வின் ஒருமைப்பாடு ஆகிய இலட் சியங்கள் வேதாந்த உணர்வால் தெய்வீகத்தன்மை பெறுகின்றன
யஜுர் வேதம் (XXXVL - 17) உபதேசிக்கும் சாந்தி சுலோகம் (சமாதானப் பிரார்த்தனை) வருமாறு:-
"வானுலகில் சாந்தி நிலவுமாக, விண்ணிலும் மண்ணிலும் சாந்தி நிலவுமாக, நீரிலே சாந்தி நிலவுமாக, செடிகளிலும் மரங்களி லும் சாந்தி நிலவுமாக, தேவர்களிடம் சாந்தி நிலவுமாக, பிரம்மத் திடமும் அனைத்திடமும் சாந்தி நிலவுமாக. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி."
இந்தப் பிரார்த்தனையிலிருந்து, எமது முன்னேர்கள் கண்ட வாழ்க்கை ஒற்றுமை மனிதர்களைப் பற்றியதாய் மாத்திரமன்றி எல்லா உயிர்களையும் பற்றியதாய் இருப்பது தெளிவாகிறது. கடந்த கால் நூற்றண்டுக் காலத்தில் விஞ்ஞானிகள் நிரூபிக்கப்பட்டுள்ளவற் முல் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள ஒற்றுமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெளதீக ரீதியில் பூமித்தாய் எங்கள் அனைவர்க்கும் பொது. இரசாயன ரீதியில் உயிர்ப்பொருள் மாற்றம் எமக்குப் பொது வானது. உயிரியல் முறையில் எமது உயிர் ஒன்றே. சமுதாய முறை யில் நாம் ஒரே மனித சமுதாயத்தின் உறுப்பினர்கள். ஆன்மீக அடிப்படையில் ஒரே கடவுள், அல்லது ஒரே உண்மைப் பொருள் அல் லது யாவருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு சொல்லை உபயோகிப் பதானல், ஒரே விஸ்வப் பேரறிவு எமக்குப் பொதுவாயுள்ளது.
பரிணும முறையில் மனிதன் உச்சியில் இருப்பது உண்மையே. எனினும் அவன் முந்தைய நிலைகளுடன் இன்னும் இணைக்கப்பட்டுள் ளான். 9ஆம் நூற்ருண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மாணிக்கவாச கர் என்னும் சைவ சமயாசாரியார் கல்லிலிருந்து மனிதன்வரை ஏற் பட்ட பரிணும முறையை அழகிய பாடலில் குறிப்பிட்டுள்ளார். "மனிதனுவதற்காகப் புழு எல்லா உருவங்களையும் எடுத்து, படிப்படி யாக உயர்கின்றது' என்று எமர்ஸன் என்னும் ஞானி எழுதினர். தென்னிசன்சன் என்னும் கவி அதேபரிணுமக் கொள்கையைப் பின் வருமறு குறிப்பிட்டார்.
"இறைவன் மிருகத்தின் வீட்டை மனித ஆத்மாவுக்களிக்க
மனிதன் நான் தங்களுக்குக் கடமைப்பட்டவன்’ என்றன். இறைவன் சொன்னுர்:- இதை இயன்றவரை தூய்மையாக்கு, இதைவிடச் சிறந்ததை யான் உனக்களிப்பேள்' .'
 
 

ஆத்மஜோதி 477
இந்த ஞானிகளும் பக்தர்களும் குறிப்பிடும் ஒருமைப்பாடு புனி தமான நம்பிக்கையோ சமயக் கொள்கையோ அன்று. இது வாழ்க் கையின் ஒவ்வொருபடியிலும் காணப்படும் ஒரு விஞ்ஞான உண்மை யாகும். இன்னும் தெளிவாகக் கூறுவதானுல் நாம் இயற்கையனைத் துடனும் ஒன்றுபட்டுள்ளோம். இந்த உண்மையைப் பொதுவாக நாம் உணர்வதில்லை. “ருேயல் சொசைட்டி' யின் முந்நூரும் ஆண்டு விழாக் கொண்டாட்டத்துக்குத் தலைமை வகித்த சர் சிறில் ஹின்ஷெல் வுட் தமது அறிவூட்டும் உரையைப் பின்வரும், சொற்களுடன் முடித்துக் கொண்டார்.
“நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டுள்ளோம். இதிலிருந்து தப்ப முடியாது. ஆணுல் நாம் தயாராகும் வரை இது நிறைவேறுவது தள் ளிப் போடப்பட்டுள்ளது. ஏனெனில் அகிலத்தின் நோக்கம் புதியதோர் இறைவனைச் சிருட்டிப்பதே. அங்ங்னம் உருவாகும் இறைவன் நாமே."
கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி ரஸ்யப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க ஜனதிபதி பின்வருமாறு குறிப்பிட்டுள் ளார். "மாறுபட்ட இலட்சியங்களைக் கொண்ட முறைகளுக்கிடையே சமாதானம் நிலவ வேண்டுமாயின், அறியாமையாலும் விளக்கமின் மையாலும் வளரும் பயம், சந்தேகம் ஆகியன மீண்டும் மீண்டும் எழுவதைக்குறைக்கவோ தவிர்க்கவோ வழிவகைகள் காணவேண்டும்',
இது தற்கால நிலமை பற்றிய முற்றும் சரியான மதிப்பீடா கும். ஆனல் இந் நோக்கம் நிறைவேறச் செய்யப்படும் முயற்சிகள் ஏமாற்ற மளிப்பனவாயுள்ளன. எனவேதான் இன்று நாம் இங்கு கூடி யுள்ளோம். இக் காலத்தில் மேம்பட்டிருந்து ஆட்சி புரியும் உணர்ச்சி அச்சமே என்பதில் ஐயமில்லை. முற்காலத்தில் நாம் சாக அஞ்சினுேம் ஆனல் தற்காலத்தில் நாம் வாழ அஞ்சுகிருேம். உலக சமாதானம் கிலி என்னும் மெல்லிய நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பய மென்னும் பேயின் நகங்கள் எம்மை எல்லாப் பக்கங்களிலும் அச்சு றுத்துகின்றன. சுருங்கக் கூறின் அச்சம் தெமொக்லீசின் வாள்போல மனித சமுதாயத்தின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் எதிரிகள் நோக்கம் தீயதென நாம் கருதக்கூடும். இதற்குக் காரணம், நாம் எங்களுள்ளேயுள்ள தீய எண்ணங்கள் கருத்துக்கள் ஆகியவற்றுடன் இன்னும் ஒர் உடன்படிக்கைக்கு வராததேயாம் அத்துடன் நில்லாமல், சில தந்திரசாலிகள் இந்தப் பய உணர்ச்சியைப் பயன் படுத்தி விரைவில் பணம் சேர்ப்பதற்கு வழிவகைகள் கண்டு பிடித்துள்ளனர்.
நான் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன் "சிலோன் டெய்லி நியூஸ்' பத்திரிகையில் திரு. சேப்மன் பின் சர் எழுதிய கட்டுரை

Page 17
478 ¬ܓ ஆத்மஜோதி
யொன்றைப் படித்தேன். ரஷ்யர்கள் அணுவாயுதப் போர் தொடுத் தால் என்ன நடக்கும் என்று கூறும் இக்கட்டுரை, இந்நாட்டின் அழ கிய இடமொன்றில், அதாவது கொரடோஸ்பிரிங்ஸில், வடஅமெரிக்க ஆகாயப் பாதுகாப்புப் படை பற்றிக் குறிப்பிடுகின்றது. கட்டுரை இப்போது என் சட்டைப்பையிலுள்ளது. அதனைப் படித்து முடித்த போது 1948ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற எமிலிகிரீன்பால்ச்என்னும்பெண்மணியின் தீர்க்கதர்சனம் வாய்ந்த உரை
கள் என்நினைவுக்கு வந்தன. 1948ஆம் ஆண்டு ஒஸ்லோவில் அப்பரிசைப்
பெற்ற போது அவர் கூறினர்:
அச்சத்தின் அடிப்படையில் சமாதானம் ஏற்படுவதை எதிர்த்து நான் பேசினேன். யாரோ எம்மீது அணுகுண்டுகளைப் போட்டுவிடுவார்கள் என்று நாம் பயப்படவேண்டியதில்லை. ஆணுல், சாதாரணமான நியாய உணர்வுள்ள மனிதன் எமது பிரதிநிதியாக இருந்து கொண்டு, எங்கள் பெயரில் அத்தகைய ஆயுதங்களை உபயோகிக்கும் ஒர் உலக நிலமையை நாம் அனுமதித்து விடுவோமோ என்று தான் அஞ்ச வேண்டியிருக்கிறது.
இந்த அபாயகரமான நிலைக்குத்தான் உலகம் சிறிதுசிறிதாகசென்று கொண்டிருக்கிறது. எதிர்கால நாகரிகத்தின் கரு, மனிதசமுதாயம் முழுது மேயன்றித்தனி மனிதனே, தேசமோ, அன்று என்பதை புத்தி யுள்ள எவரும் இன்று மறுக்கமாட்டார். சமயப் பிரச்சினை தீர்ந்தா லன்றி தற்போதைய உலகப் போராட்டங்கள் தீரமாட்டா என்று அறிவுள்ளமக்களனைவரும் உறுதியுடன் நம்புகின்றனர். எனவே உலக ரீதியில் எண்ணும் அனைவரும் உலகில் சமய ஒற்றுமையின் தேவையை உணர்வது முதற்கடமையாகும். இந்த இலட்கியத்தை நோக்கி எல் லாநாடுகளிலும் திட்டமான முன்னேற்றம் காணப்படுகிறது. காலம் சென்ற 23ஆம் போப்ஜான் அவர்களின் உன்னத முயற்சிகள் நீங்கள் நன்கறிந்தவை. தமது இருபெரும் சுற்றிக்கைகளில் மனித குடும்பம் இறைவன்ன் புத்திரர்கள் மனிதசகோதரத்துவம் என்பனபற்றிக் கூறி
யுள்ளார்.
இந்த இலட்சியங்களைப் பல்வேறு சர்வகலாசாலைகளைச் சேர்ந்த பட்டதாரிகள், பட்டம் பெறப்பயில்வோர் ஆகியோர் இதயங்களிலே பதியச்செய்வதற்காக பெல்ஜியத்தைச் சேர்ந்த வண. பிதா டொமி னிக் பிரி அவர்கள் மேற்கொண்ட முறைகள் உண்மையிலேயே சிறப் பானவை. நோபல் பரிசு பெற்ற இவ்வறிஞர் பெல்ஜியத்தில் "ஹெய்' என்னுமிடத்தில் தாம் ஸ்தாபித்துள்ள மகாத்மா காந்தி சமாதானக் கலாசாலையில் அவர்களுக்காக 1960ஆம் ஆண்டுமுதல் ' கோடை வகுப்புகள் ' நடத்தி வருகிருர். 1960ஆம் ஆண்டில் முதன் முதல் நடைபெற்ற வகுப்புகளுக்கும் 1963ஆம் ஆண்டு கடைசியாக நடந்த
 
 

ஆத்மஜோதி 479
வகுப்புகளுக்கும் நான் சென்று வந்தேன். பிதா பிரி அவர்கள் தத்தம் நாடுகளின் எதிர்காலத்தலைவர்களான உலக இளைஞர்களுடன் நடத்தும் உரையாடல்களின் மூலம் 'ஒரே உலகம்' என்னும் இலட்சியத்தின் சிற்பிகளுள் ஒருவராகத் திகழ்கிருர் என்று கூறுவதில் மகிழ்ச்சியடை கிறேன்.
முற்காலத்திய உலக மன்னர்களுள் கி. மு. 3ஆம் நூற்ருண்டில் இந்தியாவில் ஆட்சி புரிந்த பெளத்த மாமன்னர்களான அசோகர் மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் உலக சமாதானத்துக்கும் உழைத் தவர் என்ற முறையில் சிறப்பிடம் வகிக்கிருர், நாடுகளுக்கிடையே பகையும் நெருக்கடியும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்னும் தமது கொள்கையை விளக்கித் தமது இரண்டாம் கலிங்கக் கட்டளை யில் அவர் பின்வருமாறு பிரகடனப் படுத்தியுள்ளார்.
M
“மக்களனைவரும் என் குழந்தைகள், என் குழந்தைகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் நலத்தையும் மகிழ்ச்சியையும் எப்படித் தேடுகிறேனே அப்படியே மக்களனைவருக்கும் தேடுகிறேன். எனது சாம்ராச்சியத்தின் எல்லையிலுள்ள ஜயிக்கப்படாத மக்கள் தங்களைப் பற்றி நான் கொண்டுள்ள மனுேபாவம் என்னவாயிருக்கலாம் என்று யோசிக்கக் கூடும். அவர்கள் என்னிடம் பயமின்றி நம்பிக்கை வைக்க வேண்டும். மன்னிக்கக் கூடிய அவர்களது குற்றங்களை நான் மன் னித்து விடுவேன் என்று மக்கள் உணர வேண்டும். எனது உதார ணத்தின் மூலம் தர்மத்தைக் கடைப்பிடிக்க அவர்கள் தூண்டப்பட வேண்டும். இவ்வுலகிலும் மறு உலகிலும் அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும். இதுவே எனது விருப்பம்.'
அருள்மிக்க இம்மன்னன் தோன்றிய பின் பெளத்த மதம் ஆசி யாவுக்கப்பாலும் விரிவுற்றது. கிரேக்க ரோம சாம்ராச்சியங்களின் காலத்தில் அதன் கொள்கைகள் மேல்நாடுகளில் பரவியது.
புனித குர்ரானில் பின்வரும் அழகிய கருத்து உள்ளது.
“மக்களுள் எந்தச் சமூகத்துக்கும் தீர்க்கதரிசிகளும் வழிகாட்டி களும் இல்லாமற் போவதில்லை. ஒவ்வொரு இனத்துக்கும் அதனதன் மொழியிலே போதிப்பதற்குக் குருமார்கள் அனுப்பப்படுகின்றனர்.'
உலகின் எல்லாப் பகுதிகளிலும் அத்தகைய தீர்க்கதரிசிகளும் வழிகாட்டிகளும் ஏராளமாயினுேர் இருந்துள்ளனர். தற்கால அரசி யற் கருத்துப்படி மனித சமுதாயத்தின் ஒருமைப்பாட்டை உணர்ந் திருந்த சான்றேர்களுள் ஒருவர் வங்காளத்தைச் சேர்ந்த ராஜாராம்

Page 18
480 ஆத்மஜோதி
மோகன்ராய் ஆவர். சர்வதேச சங்கம் ஒன்றை அமைப்பதுபற்றிமுதன் முதல் சிந்தித்தவர் இவரே. அது, பின்னர் அமைக்கப்பட்ட சங்கத்தை விட அடிப்படையில் அதிக உண்மையும் உறுதியும் வாய்ந்ததாகும். அவர் 1881ஆம் ஆண்டு பிரஞ்சுவெளி விவகார அமைச்சருக்கு எழுதிய கடிதம் இப்போது சரித்திரப் பிரசித்தி பெற்ற பத்திரமாய் விளங்குகின்றது உலக அரசியலமைப்பு சாசனத்தை வகுப்போருக்கு அது மிகப்பயனு டையதாயிருக்கும்.
நூற்றுமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மனித சமுதாயத்தின் வியவ காரங்களை நிர்வகிக்கும் ஒர் உலக அரசாங்கம் வெறும் கற்பனையாய்த் தோன்றியிருக்கும். ஆனல் இன்றைய நிலைமை வேறு. விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளும், சிறப்பாக போக்கு வரத்து, செய்தியனுப்புதல் ஆகியவற் றில் பொறிநுட்ப சாதனங்களும் வெகுவாக அதிகரித்துள்ளமையால் உலகரீதியில் அரசியல் நிர்வாகங்களைப் புதிய முறையில் அமைப்பதற்குச் சாதகமான உள்ளப்பாங்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. "இப்போது மாபெருந்த டையாயிருப்பது புறப்பொருள்களில் இல்லை. இதற்கான பொறிநுட்ப சாதனங்கள் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன. மனிதனின் உள்ளத்திலே தான் இப்போது தடைஉள்ளது. காலாதி காலமாய்வந்த பயங்களாலும் பகைகளாலும் நாம் பீடிக்கப்பட்டிருப்பதில் தான் அத் தடை உள்ளது' என்பது எடின்பரோ சர்வகலாசாலையில் உளத்துறை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி G. M. காஸ்ரேஸ் அவர்களின் சுற்று.
எச்.ஜி. வெல்ஸ், தமக்கு உலகப்புகழீட்டித்தந்த சரித்திரச்சுருக்கம்" என்னும் நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். "ஆரோக்கியம், கல்வி பொதுவான சமசந்தர்ப்பம் என்பற்றை அளிக்கப்போதுமான சமூக நீதியுடன் கூடிய மனித சமுதாயத்தின் கூட்டாட்சியானது. மனிதர் களின் சக்தியைப் பெருமளவில் வெளிப்படுத்தியும் அதிகரிக்கச் செய்தும் மனித சரித்திரத்திலேயே ஒரு புதியசகாப்தத்தைத் தோற்றுவிக்கும்."
முதல் உலகயுத்தத்தின் முடிவில் ஒரளவு சுதந்திரம் பெற்ற நாடுக களின் கூட்டாட்சித் தலைவரான வுட்ருே வில்சன் உலகக் கூட்டாட்சி ஒன்று அமைப்பது பற்றிய எண்ணங்களைக் கொண்டிருந்தார். அமெரிக் காக்கண்டத்தில் வெற்றிகண்டது ஐரோப்பாக்கண்டத்திலும் வெற்றிய டையும் எ ன உளப்பூர்வமாக நம்பினர். வெர்ஜீனியா, வென்சில் வெனியா, மெஸ்ச்சூட்ஸ் ஆகியவை 143 ஆண்டுகளுக்கு முன்பே கற்ற பாடங்களை ஐரோப்பிய மக்கள் 1919 இல் கற்றுக் கொள்ள வேண்டும். என அவர் விரும்பினுர், சர்வதேச சங்க ஒப்பந்தத்தை உலகுக்கு அளிப் பதன் மூலம் த மது வாழ்க்கை, பயன் பெற்றதாக அவர் உண்மையில் நம்பினர். ஆணுல் துரதிருஷ்ட வசமாக அவரது திட்டங்கள் தோல்வி
 
 

ஆத்மஜோதி 48.
யுற்று, அவரது பேரவா ஏமாற்றத்தில் முடிந்தது. அவர் ஐரோப்பாவை விட்டகன்றதும், அதன் அரசியல்வாதிகள் தங்கள் பழையசூழ்ச்சித்திறனை மீண்டும் கையாண்டு இரகசிய ஒப்பந்தங்களிலும் கள்ளத்தனமான உறவு களிலும் இறங்கினர். 18ஆம் நூற்ருண்டுக் கொள்கைகளைக் கடைப்பிடி த்து 20ஆம் நூற்ருண்டில் முன்னேறுவது சற்றும் முடியாத காரியம் என் I 1605 அவர்கள் அப்போது உணரவில்லை; அவர்களுக்குப்பின் அவர்களுடைய பதவிக்குவந்தவர்கள் இரண்டாம் உலகயுத்தத்தின் அழி வுக்குப் பின்னும் அதனை உணரவில்லை.
1945ஆம் ஆண்டு காசியிலும் கராச்சியிலும் தாம் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளில் இந்தியப் பேரறிஞர் டொக்டர் எஸ். ராதாகிருஷ் ணன், இரண்டாம் உலகயுத்தத்தின் கடைசிக் கட்டங்களையும் பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கைகளையும் பற்றற்றமுறையில் ஆராய்ந்து, அப் போது பதவியிலிருந்த அரசியல் வாதிகளுக்குப் பின்வரும் எச்சரிக்கை யும் புத்திமதியும் விடுத்தார்.
“சமாதானக் கூட்டங்களில் அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளாகச் செல்பவர்கள் தமது நாடுகளுக்காக மட்டுமன்றி உலகசமுதாயம் முழு துக்குமாகப் பேச வேண்டும். அரசியலைப்பற்றி நீதிவழுவா நெறி முறை யில் கருதும் அரசியல்ஞானிகள் எமக்குத் தேவையேயன்றி, மாற்ற முடி
யாத பழைய சூழ்ச்சித்திறன்களால் இப்போருக்கு எங்களை இட்டுச்செல்
லும் அரசியல் வாதிகள் எமக்குத்தேவையில்லை. போர் என்னும் பயங்
கரத் தீமையிலிருந்து எம்மைக் காக்கவும் உலகம் பாழாவதைத் தவிர்க்க
வும் உறுதியான ஒரே சாதனம் யாதெனில் "எம்மிடம் தீமை இருக்கும் போது எம்மால் தீமையைத் திருத்த முடியாது’ என்பதை உணர்வதா கும். அகத்தே எம்மைத் திருத்தியமைத்துக் கொண்டாலன்றி மற்ற வர்களைச் சீர்திருத்த முடியாது. மாபெரும் செயல்கள் மனிதச் சிறப் பியல்புகளாலே சாதிக்கப்படுகின்றனவே யன்றி சட்டபூர்வமான
FF6556TTG) (6) 6)
*மனிதசமுதாயமே பிரதானமானது. தேசங்கள் நிர்வாக வசதிக் காக ஏற்பட்ட பிரிவுகள், அவற்றின் இரண்டாந்தரமான தன்மையை மறந்துவிடலாகாது. "ஒரே உலகம்’ என்னும் மூலப் பொருள் உள்ளது. அது ஒழுங்கான உளத்தத்துவ ஒருமைப்பாடாக அமைய வேண்டும். விஞ்ஞானமும் அரசியலும் வர்த்தகமும் போக்குவரத்தும் வெவ்வேறு வகைப்பட்ட மக்கள் ஒன்று சேரும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளன. இனி, எந்தநாடும் தனித்தியங்க முடியாது. தன்னை ஒருஉலகாகக்காணும் இவ்வுலகுக்கு நாம் ஒரு உலக ஆத்மாவை அளிப்போமாக, யந்திர
ரீதியில் அமைந்துள்ள ஒற்றுமைக்கு நாம் ஒரு ஆத்மீக ஒற்றுமையை அளிப்போமாக,

Page 19
482 - ஆத்மஜோதி
மேலும் மனிதவர்க்கத்தின் அக்காலச் சரித்திரத்தைப் பற்றிக் கூற வந்த ஒர் புகழ்பெற்ற சரித்திராசிரியர் பின்வருமாறு முடித்துள்ளார்
*சரித்திரக் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கத்தக்கதாயும் நிலக்கரி, எண்ணெய், நீர் சக்தி, பெருங்கடன் என்பவற்றின் ஆதிக்கத் திலுள்ள உலகில் தனித்தியங்க முடியாதனவாயுமுள்ள விசித்திரமான புதிய தேசங்களையும் சிறுவரின் தேசப்படத்தில் அழகாக விளங்குவ தாயும் தற்கால நாகரிகத்தின் அவசரத் தேவைகளுடள் சற்றும் தொடர்பற்றதாயும் உள்ள செயற்கை எல்லைகளாற் பிரிக்கப்பட்ட கண்டத்தையும் மஞ்சள், பச்சை, சிவப்பு உடைகளனிந்து தங்கள் புராணகால மூதாதைகளைப் போல் வேடந்தரித்து, தற்கால சமுதா யத்தில் சில்லறைக் கடையில் வியாபாரிஞ் செய்யும் சிறுமியளவுகூடப் பயன்படாத பெருந்தொகையான போர் வீரர்களையும் கொண்டதாய் வெறுப்பு நியாயமின்மை ஆகியவற்றின் வெறியாட்டத்தின் விளைவாய் எஞ்சியுள்ள உலகைப் பாருங்கள்'
“இது, இலட்சக்கணக்கான நேர்மை வாய்ந்த ஐரோப்பிய தேச பக்தர்களின் உள்ளங்களில் நன்றியுணர்ச்சியும் பெருமையும் உண்டாக் கும் நிலைமையை மிருகத்தனமாகக் கண்டிப்பதாகத்தோன்றலாம்.
'அதுபற்றி நான் வருந்துகிறேன். ஆனல், ஐரோப்பிய அரசியல் வாதிகள் நவீனப் பிரச்சினைகளை, நவீன மனப்பான்மையுள்ளவர்களிடம் விடச் சம்மதிக்கும்வரை யாதொரு நிரந்தரமான முன்னேற்றமும் சாத்தியமில்லை.
தற்காலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அத்தகைய நவீன மனப்பான்மையைக் கொண்டவர்கள் உலகில் இல்லாமற் போகவில்லை என்பதை, உலகின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் வந்துள்ள பெரும் சிந் தனையாளர்களையும் சமாதானத்தைநிலை நாட்டுவதில் அக்கறை கொண் டவர்களையும் கொண்ட இம்மேதக்கபேரவை நன்கு விளக்குகின்றது: இவ்வுலகின் சமாதானத்துக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த பலரை நான் என் முன் காண்கிறேன். இக் கூட்டத்தின் ஆதரவாளர் களுள் ஒருவரான பெட்ரண் ரஸ்ஸல் பிரபுவின் தீர்க்க தரிசனம் வாய்ந்த வார்த்தைகளை இங்கு நினைவுகூற விரும்புகின்றேன். இவை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் உள்ளங்களை உரப்படுத்தி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை எமக்கு அளித்து வந்துள்ளன என்று அவர் பெரு மிதத்துடன் கூறினர்.
“இதனையன்றி, நாம் வாழும் உலகிற்கு வேறு நோக்கங்கள் உண்டு. ஆணுல் அது தனது பேராசைகளாலாயே எரிந்து அழிந்து விடும். அதன் 1
 
 
 

f
ஆத்ம ஜோதி 483
சாம்பலிலிருந்து புதிய நம்பிக்கையும், கண்களிலே உதயகால ஒளியும் கொண்ட புதிய இளம் உலகம் ஒன்று தோன்றும்".
'பிணைப்புகளுளெல்லாம் அதிக சக்திவாய்ந்ததான பொது அழிவு' என்னும் பிணைப்பால் தனது உடன் வாழ்வோருடன் ஒன்றுபட்டு சுதந்திர மனிதன், தினசரிச் செயல்களனைத்திலும் அன்பென்னும் ஒளியைப் பரப்பும் ஓர் புதிய காட்சியைத் தன்னுள்ளே எப்போதும் காண்கிருன்,
எங்கள் மதிப்புக்குரிய தலைவரின் இச் சொற்களில் ஸ்காத்லந்தின்
மாபெருங் கவிஞரும், 18 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தவருமான ருெபட் பன்ஸின் குரல் எதிரொலிப்பதை. அக்கவி பாடினர்.
*அப்போது பொற்காலம் மீண்டும் வரும்,
யாம் ஒவ்வொருவரும் சகோதரர் ஆவோம், அனைவரும் இசைவுடன் வாழ்வோம், சேர்ந்து உலகைப் பகிர்ந்து கொள்வோம். நற்குணங்களிற்பயின்று அறிவு கொழுத்தப்பட்ட இளைஞர் சகஜீவன்களனைத்தையும் நேசிப்பர். எதிர்வரும் ஆண்டுகள் ஒருண்மையைக் காட்டும். மனிதன் இயல்பில் நல்லவன் என்பதே அவ்வுண்மை.
ஒழுக்கவியல், பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் அக்கறை யுள்ளவரான உலகெங்கணுமுள்ள மாணவர், இக் கூட்டத்தை நடத் துபவருள் ஒருவரான மற்ருெரு பெரியாரின் கருத்துக்களை விரும்பியேற் றுள்ளனர். உணவு விவசாய ஸ்தாபனத்தின் முற்கால அ தி பர் போய்ட் ஒர் பிரபுவைக் குறிப்பிடுகிறேன். உலகிலிருந்து பசியையும் கொடிய வறுமையையும் அகற்ற சர்வதேச அபிவிருத்தி நிதி ஒன்றை அமைப்பதற்காக எல்லா நாடுகளிலும் தங்கள் இராணுவச் செலவை 10 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். என்று அவர் விடுத்த வேண்டுகோள் கல் மனதையும் கரைக்கக்கூடியது. உலக சமாதானத் துக்காக வாழ்க்கைத் தொடர்புடைய சிக்கலற்ற தமது திட்டத்தை ஆதரித்து அவர் காட்டியுள்ள புள்ளிவிபரங்கள் உண்மையிலேயே அறிவு
கொளுத்துவனவாய் உள்ளன.
இந்த எச்சரிக்கையாளர்களை யன்றி பல அருள்பெற்ற வழிகாட்டி களைச் சமீபகாலத்தில் உங்கள் மாபெரும் நாடு அளித்துள்ளது. நம்மி டையே வாழும் அத்தகைய சான்றேர் ஒருவரின் வாழ்க்கையையும் பணியையும் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். தெளிந்த அறிவும் தூய இதயமும் படைத்த பூரீமதி வைடா ரீட்ஸ்டோன் என்னும் இப்
2. பெண்மணியை கலிபோர்னியா ஹொலிவுட்டில் கடந்தவாரம் சந்தித்

Page 20
484 ஆத்ம ஜோதி
தேன். 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் கையொப்பமிடு வதற்கு வெகு காலத்துக்கு முன்பே ஐயமின்றிப் புதுயுகச் சிற்பிகளுள் ஒருவராய் விளங்கும் இம்மாதுசிரோன்மணி உள்ளத்தை உயர்த்தும் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார்கள். அப்போது உலகின் மூன்றில் இரண்டுபகுதி இன்னும் போரில் ஈடுபட் டிருந்தது, கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பு 'நாடுகள் ஐக்கியப்பட முடியுமா?’ என்பது. அக்கட்டுரையின் முடிவில் ஆசிரியர் "நாடுகளின் மாசு நீக்குதல் பற்றியும் உலக சமாதான மகாநாடுகள் பற்றியும்
குறிப்பிட்டுள்ளார். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரது தீர்க்க s
தரிசனம் புலனுகிறது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சமாதான விவாதங்களில் கலந்து கொள்பவர்களில் எத்தனை பேர் அவரது நூல் களின் பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பார்களோ தெரியாது! "சமாதா னம் "மனிதவர்க்க ஒற்றுமை’ ஆகியவை பற்றி அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வரியும் மேற்கோளாக எடுத்துக்காட்டத்தகுந்தது. ஆனல் அங்குமிங்குமாக எடுத்த சில முக்கிய பகுதிகளை எடுத்துகாட்டமட்டுமே எனக்கு நேரமுண்டு.
*ஆயுத பலத்தாலும் போர் வெற்றிகளாலும் சமய, இன, நிறத் துவேஷங்களோ அரசியல் வேற்றுமைகளோ மறைந்துவிட மாட்டா. மக்கள் நடுங்குகின்றனர்; அவர் இதயங்களில் பயமெழுந்துள்ளது. பயமும் பிறரது நேர்மைபற்றிய ஐயப்பாடும் எல்லாத் தேசத்தாரிடமும் காணப்படுகின்றன. ஆக்கிரமிப்பு, சுயநலம், பேராசை ஆகியவற்றின் கனவுகள் இவர்களுக்குத் தெவிட்டி விட்டன. எனினும் தங்கள் சுமை களை இறக்கிவைக்க அவர்கள் தயங்குகின்றனர்.அபலார் தம் கொள்ளைப் பொருட்களைக் கைப்பற்றி விடுவரோ என அஞ்சுகின்றனர்.'
தற்சமயத்தில் மிக உன்னத இலட்சியம் மனிதன் இறைவனிடம் தனது ஒருமையையும், அதனுல் மக்கள் அனைவருடனும் தனது ஒருமை யையும் உணர்வதேயாகும். வெறும் சமய எழுச்சி மட்டும் போதாது. அனைத்தையும் தழுவிய தூண்டுகற் சக்தியொன்று தேவைப்படுகின்றது. உண்மையில் இது மக்களனைவருக்கும் நன்மை பயக்கும் சர்வதேச நெறி யில் மக்களுள்ளத்தில் ஏற்படும் ஒர் விருப்பமாகும்.
*அணு? இச்சொல் இப்போது மக்கள் எண்ணங்களை எங்ங்னம் இயக்குவிக்கின்றது? நன்மையின் ஒளி, நிறைவால் ஏற்படும் சக்தி, பயம், தேவை, நோய் இவற்றினின்று மனித உள்ளங்களை உயர்த்தும் வலிமை ஆதிய எத்தகைய மாபெரும் சிறப்பை அது உலகில் பரப்ப முடியும்.
'அழகும் ஒளியும் சக்தியும் வாய்ந்த அணு-மனித குலத்தை
 
 

ஆத்ம ஜோதி 485
இரட்சிக்க வந்தது! ஆனல் மக்களனைவரது நலத்துக்கும் அதனைப் பயன் படுத்தினுல் மட்டுமே அதன் உயிர்ப்பிக்கும் தன்மையை மனிதன் உணரமுடியும். .
"ஆத்மீக நல்விளக்கம் இதயத்தில் தோன்றுகிறது. சர்வதேச
நலத்தையும் சகல மக்களின் நன்மையையும் அது கோருகிறது. தங்கள்
சொற்களில் இம் முறையைப் பின் பற்றுவோர் உலகில் ஒர் ஒளிப்பின் னலை ஏற்படுத்தி நன்மையின் சக்தியைப் பெருக்குவர் ஆவர்.'
“மக்கள் தம் அயலாரை உரிய முறையில் நடத்தும்போது உலகம் அவர்களுக்கு உரியதாகும். அதன் நிலங்களில் கண்ணிரையும் இரத்தத் தையும் பாய்ச்சாமல், வாழ்வென்னும் விதைவிதைத்து மகிழ்ச்சியுடன் விளைவை அறுவடை செய்வர். அனைவருக்கும் உணவிருக்கும்; அனைவ ரும் உண்கின்றனர் என்ற மகிழ்ச்சியுடன் மனிதன் உண்பான்."
ஐக்கிய நாடுகள் சாசனம் 'உலக மக்களாகிய நாம்' என்னும் சொற்களுடன் தொடங்குகின்றது. இது உண்மையாயின் உண்மையி லேயே சமாதானத்தை விரும்பும் பூரீமதி ஸ்ரோன் போன்றரின் நூல்கள் கடந்த 17 ஆண்டுகளாக உலகெங்கணுமுள்ள மக்களிடம் பரவியிருக்கும். ஆனல் நடைமுறையில் நாம் காண்பது யாதெனில் போய்ட் ஒர் பிரபுவின் கூற்றுப்படி 'உலகத்துக்குப் பதில், உலகின்க வெளிநாட்டு விவகார அலுவலகங்கள் தாம் சபையைச் சுயநலமான தேசீயப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகின்றன.'
இச் சந்தர்ப்பத்தில், ஐ. நா. ஸ்தாபனத்தின் ஆதரவில், உல, சுகாதார ஸ்தாபனம், உணவு விவசாய ஸ்தாபனம், சர்வதேச தொழில் ஸ்தாபனம், யுனெஸ்கோ ஆகியன மக்களுக்காற்றும் அரிய சேவையை யும், அத்தாபனத்தின் பிரதம காரியதரிசியாயிருந்த டொக்டர் டேக் ஹெமஷில்ட் அத்தாபனத்துக்கு ஒரு ஆன்மீகப் பின்னணியை அளிப்ப தற்காக எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகளையும் இங்கு குறிப்பிடா விடில் யான் சத்தியத்திடமும் தர்மத்திடமும் கொண்டுள்ள விசுவா சத்தை இழந்தவனுவேன். 'ஐக்கிய நாடுகள் ஸ்தாபன தியான அறை யைத் திறந்து வைத்தபோது டொக்டர் ஹெமஷில்ட் பின்வருமாறு கூறினர்:
‘சமாதான சேவையில் அலுவல்களுக்கும் விவாதங்களுக்கும் அர்ப் பணிககப்பட்ட இவ்வுலகத்தில் புறக் கருத்தில் மெளனத்துக்கும் அகக் கருத்தில் அமைதிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அறையொன்று இருத்தல் வேண்டும்.
இச் சிறு அறையில் எல்லையற்ற சிந்தனைக்கும் பிரார்த்தனைக்கும் .இடமளிப்பது நோக்கமாகும் چلی

Page 21
4S6 ( ஆத்மஜோதி
பல்வேறு சமயக் கொள்கையுடையோர் இங்கு கூடுவர். எனவே
எங்கள் தியானத்தின்போது உபயோகிக்கும் சின்னங்கள் எதையும் இங்கு உபயோகிக்க முடியாது.
எனினும் எங்கள் அனைவருடனும் ஒரே மொழியில் உரையாடும்
சிலஎளிமையானபொருட்கள் உண்டு. அத்தகையபொருட்களைதேடினுேம், ܙ பாறையின் பரப்பில் ஒளிக்கற்றை விழும் அமைப்பு அத்தகையது என
நம்புகிருேம்.
பாத்திரத்தின் பொருள் வெற்றிடத்தில் உள்ளதேயன்றி ஒட்டில்
இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. இவ்வறையின் விஷயமும் அத் தகையதே. இந்த வெற்றிடத்தை தங்கள் அமைதியின் கேந்திரத்தால் நிரப்புதல் இங்கு வருவோருக்குரியது.'
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த அேமைதி அறை'யில் தியா னம் செய்தேன். ஐ. நா. ஸ்தாபனக் கட்டிடத்துக்கு நாடோறும் விஜயம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களில் பெரும்பாலானேர் இந்த அமைதி அறையின் நோக்கத்தைப் பாராட்டுவதாகத் தோன்றவில்லை. எனினும், அதன் ஸ்தாபகரின் உயரவா சிறிது சிறிதாக நிறைவேறி வருகிறது என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
',
அமைதியான உள்ளங்களாலேதான் அமைதியான உலகத்தை நிர் மாணிக்க முடியும். ஆதிக்கமும் அமைதியும் நேர் எதிரானவை என் பதையும் தன்னுள்ளே அமைதி காணுதவன் புறத்தே ஒருபோதும் அதை நிலைநாட்ட முடியாது என்பதையும் உலகிலுள்ள ஆதிக்க அர சியல்வாதிகள் எத்தனை விரைவில் உணருகிருர்களோ அத்தனைக்கு உலகம் நலனடையும். அன்பு நிறைந்த இதயமுடையவர் மாத்திரமே இன்றைய சிக்கல்ான பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வுகாண முடியும். மகாத்மா காந்தியடிகள் அத்தகையோரில் ஒருவராய் விளங்கினர். அவரது சீடரான ஆச்சார்ய வினுேபா அவரது சமாதானப் பணியை இப்போது நடத்தி வருகிருர், இந்த அணுயுகத்தில் அஹிம்சைக் கொள்கையுடைய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அவதரித்
தது தற்செயலாக ஏற்பட்ட பொருத்தமோ நிகழ்ச்சியோ அன்று
என்பதை இங்கு நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.
இது அகிலத்தையாளும் ஏதோ சில ஆன்மீக விதிகளுக்கிணங்க மனித வர்க்கத்தின் சரித்திரத்தில் ஏற்பட்ட ஒரு திட்டமான திருப்ப மாகும். உயர்ந்த உலக சேவையாளரும் உலக மக்களின் வழிகாட்டி யுமான இம் மகான் பின்வருமாறு கூறியுள்ளார். "அமைதியும் உறு தியுங் கொண்டவர்களும் இறைவனிடம் அன்பு பூண்டவருமான மக் களின் அணி நடைக்குமுன் உலகின் எந்த சக்தியும் நிற்க முடியாது.
*్క
ܨܲܝܐ
 

ஆத்மஜோதி 487
உலகிலுள்ள போர்க்கருவிகள் அனைத்தையும் விட அஹிம்சை அதிக வலிமையுள்ளது. மனிதத் திறமையாற் கண்டு பிடிக்கப்பட்ட சக்தி மிக்க அழிவாயுதத்தை விட அது அதிக சக்தியுடையது.'
உங்கள் நாட்டிலுள்ள மற்ருெரு பெண்மணி சமாதானத்துக்கா கத் தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். மாதர் சமாதான இயக் கத்தின் தலைவரான பூரீமதி டேக்மர் வில்சன் வாஷிங்ரன் என்னும் இப் பெண்மணி பின் வரும் நகைச்சுவை மிக்க அறிவுக் கருத்துரையைக் கூறியவர். "சரித்திரத்தில் முதன் முறையாக போருக்கான ஆயத் தமே மக்களைக் கொல்வதோடு பெருந் தொகையான ம க் க ள து ஆரோக்கியத்தையும் பரம்பரையையும் அழித்து வருகிறது’. இந்த மகாநாட்டின் பிரதிநிதிகள் பட்டியலில் அவரது பெயரைக் கான மகிழ்ச்சியடைகிறேன்.
மனித சமுதாயத்தின் பாதிப்பங்கு பெண்மணிகளே. எங்கள் குழந்தைகளுக்கு உயிர் கொடுப்பது அவர்களே. உயிர்நூல் வல்லு னர்களின் கொள்கைப்படி ஆதியிலிருந்து பெண்களே முன்னேற்றத் தின் முன்னுேடிகளாக விளங்கி வந்துள்ளனர். கீழ் வர்க்கத்திலிருந்து மேல் வர்க்கத்துக்கு உயரும் பரிணமப் பாதையில் வழிகாட்டி முன் சென்றது பெண்ணேயாகும். உடற்றுறை வளர்ச்சியில் பெண் வழி காட்டியாயிருந்தது போலவே ஒழுக்கத்துறை வளர்ச்சியிலும் வழி காட்டியாயிருக்கக் கூடும்" எனவே அவர்களது தலைமையில் தற்கா லத்திலுள்ள உலகாயதத்துக்கும் பலாத்காரத்துக்கும் பதிலாக இரக் கமும் அன்பும் நிலவுமென எதிர்பார்ப்போமாக.
'அன்பின் தத்துவம் - தேவியின் மீட்சி' என்ற தலைப்பில் சமீ பத்தில் வெளியான ஒர் அரிய நூலின் கட்டுரைப் பொருள் இது. அதன் ஆசிரியரான பூரீமதி எஸ்மி வின்ரைஸன் இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளர். எனவே போரை ஒழித்து சமாதானத்தையும் வாழ்க்கையையும் நிலைநாட்ட, உலகெங் கிலுமிருந்து நற்குணமும் வீரமும் வாய்ந்த பெண்மணிகள் முன்வரு வது முறையானதும் பொருத்தமானதும் ஆகும்.
இன்னும் ஒரேயொரு அம்சத்தைப்பற்றி இங்கு குறிப்பிட விரும்பு கிறேன். 'உலக அரசியலமைப்பு சாசனம்' என்னும் ஒரு முக்கிய மான பிரச்சினையில் இன்று அக்கறையுடன் கவனம் செலுத்துகிருேம். எங்கள் முழு வலிமையையும் ஒழுக்க வலிமையையும் ஆன்மீக வலி மையையும் உபயோகிக்க வேண்டிய மாபெரும் பணி இது. இவை யாவற்றிற்கும் மேல், எங்கள் பணியில் எங்கள் அறிவுக் கப்பாற்பட்ட 岚 சக்தி யொன்று எங்களுக்கு வழிகாட்டி உதவி வ ரு கிற து எ ன் ற உணர்வு அவசியமானது. எங்கள் முயற்சிகளில் நாங்கள் தனித்து

Page 22
488 ஆத்மஜோதி
விடப்படவில்லை. இறைவன் உயிர்த் தத்துவமாக உள்ளார். இவ்வு
யிர்த் தத்துவத்தின் உணர்வின்றி நாம் எதிர்பார்க்கும் ஒருமைப்பாடு ஏற்படாது. அமெரிக்காவின் மாபெரும் புதல்வர், கடற்படைத்தலைவர்
றிச்சட்ஈவ்விம்பேட் அவர்களுக்கு அவரது தென்துருவப் பிரயாணத்தின் 。 போது ஏற்பட்ட விசித்திர அனுபவம் இங்கு என் நினைவுக்கு வருகி
றது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர் உறைபனி வெளியில் 70 நாட்கள்
தனியே கழிக்க நேர்ந்தது. பேசுவதற்கு யாரும் கிடையாது. திடீ ரென்று தாம் மாய்ந்து கொண்டு வருவதா ன உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. ஒரு துண்டுக் கடுதாசியை எடுத்து அவர் தமது மனத்
தில் தோன்றியவைகளைப் பின்வருமாறு எழுதி வைத்தார்.
“அகிலம் அழியவில்லை. எனவே அங்கு ஒர் அறிவுச் சக்தி உள்
ளது. அது எங்கும் நிறைந்துள்ளது. அச் சக்தியின் பிரதான நோக்
கம் எங்கும் இசைவை ஏற்படுத்துவதாகும்.'
எனவே சமாதானத்துக்காக (இசைவுக்காக) உழைப்பதும் அதனை அடைவதும் அவ்வறிவுச் சக்தியுடன் தொடர்பு கொள்வதால் ஏற்ப டுகின்றன. அத் தொடர்பை ஏற்படுத்துவது விரும்பத்தக்கது.
மனித இனம் உலகில் தனியே இல்லை. நான் மனிதர்களிடமி
ருந்து பிரிக்கப்பட்டாலும் நான் தனியே இல்லை. காலாதி காலமாக மனிதன் அந்த அறிவுச் சக்தியைப் பற்றி அறிந்திருக்கிருன். எல்லா சமயங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரே அம்சம் அதில் நம்பிக்கை வைப்பதே. அது பல பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது. பலர் இதனைக் கடவுள் என்பர்.
சுயநலத்தை விட்டு, "எனது” என்பதற்குப் பதில் 'உமது' என்ற அடிப்படையில் எண்ணும்போது தான் அத் தெய்வீகக் காட்சியைக் காணவும், உண்மையில் வாழ்க்கையின் ஒருமைப்பாட்டை உணரவும் முடியும்.
முடிவில், நாம் அதிசயங்களைச் சாதிக்கும்படி மக்களைக் கேட்க வில்லை. போர் என்பது மனித உள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.
அதே உள்ளம் அதற்குப் பதிலாக நீதியையும் சமாதானத்தையும்
எளிதிற் கண்டுபிடிக்க முடியும். எனவே தனது எதிர்காலத்தையும்.
தனது சந்ததியாரின் நலத்தையும் பாதிக்கும் தீர்மானங்களைச் செய்
*
யுமாறு ஒவ்வொரு மனிதனையும் கேட்கிருேம். தற்போதைய உலக நிலையிலும் தற்காலச் சூழ்நிலையிலும் செய்ய வேண்டியது அவர்கள் சக்திக்கும் திறமைக்கும் உட்பட்டது. சிந்திக்கும் சக்தியும் எம்மைச் சார்ந்தவர்களைச் சிந்திக்கச் செய்யும் சக்தியும் எமக்கு அளிக்கப்பட் டுள்ளது. இக் கொடையை நாம் பயன்படுத்துவோமாக, காலங் கடந்து போகுமுன் இதனைச் செய்வோமாக,
உங்களுக்கு எனது நன்றி.
 
 

ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள் தெய்வீக வாழ்க்கைச் சங்க மலர் ... 1-2 5 ழறி கதிரை மணி மாலை (பரமஹம்சதாசன்) . - 50 திங்கனிச்சோ லே 9 is ... 2 - 50 அறிவுரைக்கதைகள் (சுவாமி சிவானந்தர்) . - 65 | நானுர்? 3 9 - - - -25 இளங்கோவின் கனவு (செ. நடராசன்) 2-25 ஆத்மநாதம் (சுத்தானந்த பாரதி யார்) 3-00 தோ யோகம் Q is 2-50 பாட்டாளி பாட்டு y yo 1-50 (நட்டு வழி பாடு - - - -30
கந்தரநுபூதி (பொழிப்புரையுடன்) ... - 25 மார் கழிப் பாடல் a - 20 நவராத்திரிப் பாடல் ... - 30
சந்தா நேயர்களுக்கு அன்புடையீர்!
இன்று வரை 15ம் ஆண்டுக்குரிய சந்தா அனுப்பியவர் களுக்கு உடனுக்குடனேயே ரசீது அனுப்பியுள்ளோம். அவர் களுக்கெல்லாம் எமது நன்றி உரித்தாகுக. இன்று வரை சந்தா அனுப்பாதோர் உடனே அனுப்பி வைக்க வேண்டுகின் ருேம்.
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி, (சிலோன்) இந்தியாவிலுள்ள அன்பர்கள் வழக்கம் போல் R. வீரசம்பு, \ சம்பு இன்டஸ்ட்ரீஸ், அரிசிப்பாளையம், சேலம் -9, என்ற விலா சத்திற்கு அனுப்பி வைத்து, அதை எமக்கும் தெரியப்படுத்த
வண்டுகின்ருேம்.
வாய்வு சூரணம் உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கட்டு, மல்பந்தம், அஜிர்ணம், கை கால் அசதி, பிடிப்பு, பசி யின்மை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்த சூலை, புளியேப் பப் நெஞ்சுக் கடுப்பு முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த சூரணம்.
தபால் செலவு உட்பட டின் ஒன்று 4 ரூபா 25 சதம்
(பத்தியமில்லே) சம்பு இன்டஸ்ட்ரீஸ் - அரிசிப் பாளயம் சேலம் -9 (S. 1.1
இலங்கையில் கிடைக்குமிடம் :- ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி ر"7
r. மலாயாவில் கிடைக்குமிடம் :-
66, ஸ்ட்டிரிட், ஈப்போ P, C, (மலாயா )
றி கணபதி & கம்பெனி, /

Page 23
|.) | Registered at the G. P. O. a
qASASeSeSSAAAAASSAAASS AAAASeSSASSMAASSLA AeSeS ASMAMSeSMAASSMAMSeSeS ASSAMSeSLAMSeS
சந்தா நே
அன்புடையீர்,
இன்றுடன் உங்கள் ஜே நிறைவேறுகின்றன. அடுத்த உதயமாகின்றது. உங்கள் ஆத்மஜோதி உலகில் தமிழ்டே ஒளியைப் பரப்பி வருகின்றது தருகின்ருேம், எதிர்காலத்திலு துழைப்பினலும் சோதி சிறந் உண்டு சந்தாவிற்கு நினைவூட தங்கள் தங்கள் சந்தாவை உட பணிவன்புடன் வேண்டுகின்ே
இந்தியாவிலுள்ள அன்ட
வழக்க
R. வீரசம்பு, ச1 அரிசிப்பாளே! என்ற விலாசத்திற்கு அனுப் ஆத்மஜோ ܨܠܥ
நாவலப்பிட்டி
ஆத்மஜே
நீங்கள் எதிர்பார்த்திருந் வந்து விட்டது. மலரினுள்ளே யார்களின் கருத்துக்கள் உங்க றைம்பது பக்கங்களிலும் அ விளங்குகின்றன. முகப்பில் குருநாதன்' மூவர்ணப் பட அவரை நின்ைப்பவர்க்கெல்லா விலை தபாற் செல ஆத்மஜோ நாவலப்பிட்டி
இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத் திரு. நா. விணுயகமூர்த்தியால் அச்சி

S.) S a ਨe M. L. 59/300
ASASSSLS SASM AAASLMASqSASSASAS AAAASqSASqS AMSqqSASeqSASqSAeSeSASeSqSASSASqSAAAAS
யர்களுக்கு! శీఖ
ாதிக்கு பதினைந்து ஆண்டுகள் மாதம் பதினுழுவது ஆண்டு கருணையாலும், பேரன்பாலும் 1சும் நாடுகளில் எல்லாம் ஆத்ம என்று மிகமகிழ்வுடன் அறியத் லும் உங்கள் கருணையாலும் ஒத் து விளங்குமென்ற நம்பிக்க்ை ட்டல் கடிதத்தை எதுர்பாராது டன் அனுப்பி வைக்குமாறு மிகப் ଏ0? Un.
ர்கள் தமது சந்தாக்களை ހ' (6t חt_j$) מi
ம்பு இன்டஸ்ரீஸ், up D, G g sh) -9 பி வைக்க வேண்டுகின்ருேம்.
தி நிலையம்,
.ހ
ی
ASASSMSAeSSAeSeSMA AeSeSSMAAeSASeq S ASAeSeeMAASMASeSASeSASASqS ASLMAMSASASiMAASqSAAAAS
ாதி மலர்
த 'ஆத்மஜோதி மலர்" வெளி நாற்பதுக்கு மேற்பட்ட பெரி ளுக்கு விருந்தாகின்றன. நாற்: ஆத்மீகக கருத்துக்கள் சிறந்து
என்னே எனக்கறிவித்த எங்கள் 7 த்துடன் காட்சி தருகின் ருர் . --
-عS...
- ཟཚོ་
ALALALAALAA AAAAALAAAAALLAAAAALLAAAASLeSLASALAMAMeS SA
ம் பரகதி உண்டு. شی۔1ء வுட்பட 2-50 ஆகும் - தி நிலையம், /リ
தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் ட்டு வெளியிடப்பெற்றது.1 8-10-63