கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.11.17

Page 1
十
十 十 十 + 十 十
()
+ + + + + + + + + + + – + + + + + + + + +
----
 
 
 
 
 
 
 
 

+ + + + + + + + +
|-
...
· |-
•
●
•
•
■
· |- -
■
■ |- |-
●
研 6 E= 있 |-원희 低) 篇
十十十十十十十十
சர

Page 2
十+→鲁→+++**++++++*+++++++++++++4++++++++++++++++++++++++++++
*、 O ( N. : R ஆத0 T i ;
C 蠶 $ ܠ ܐ ܬܐ . (ஒர் ஆத்மீக மாத வெளியீடு : : గోల్డ్ర ,
』。萼,* -- ****+++++++++++********** +→+++→+→伞→+一伞伞→今→今*** چهلهههههه"+
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் * எல்லா உடலும் இறைவன் ஆலயமே
- சுத்தானந்தர்
ஜோதி - 16 சோபகிருதுளு கார்த்திகைமி 1வ (17-11-63) சுடர் 1 பொருளடக்கம் 1. கீதாஞ்சலி 1. 2. ஆனந்த சடாட்சர குரு - கவிதை 2. 3. ஆனந்த சடாட்சர குரு 3. 4. ஆத்ம ஞானி பாயஜித் பிஸ்தாமி 8 5. விந்தை என்ன? 9 6. சிவானந்தச் சுடர் 10. 7. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் 11. 8. உன்னையே அறிந்து பந்தமற்றிருக்குக 14 9. இறைவனின் அற்புத இரகசியம் 17 10. பிரானப் பயிற்சி 11. பேரின்பமும் சிற்றின்பமும் "... 2 12. மகா புருஷ் சுவாமி சிவானந்தர் 2 13. அப்பரின் அருள் வரலாறு 33 14. இருள் கடியும் கதிர்வேலா! A ().
ஆத்மஜோதி சந்தா விபரம்
- qLALSLALLSALSMLSTLSMLTLSLSALSLSATLSLALLSSLLLLLSS LLLLLSLLSLLLTLSSSLS ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந்தா ரூபா 3.0 தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தைய
ܬ݂ܵܐ. "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி. கிலோன்/
தொலைபேசி எண் 353
 
 
 
 
 

ாகவி தாகூரின்
கி த ப ஞ் ச லி
43. இன்ப முத்திரை
முன்புனேயான் அறிந்திலதால், பண்பொடுனை
வரவேற்க முடிந்த தில்லை; பின்பொருநாள், கும்பலுடன் வந்தவன்நீ எனதுளத்தைப் பிடித்த துண்டு! அன்பரச! அன்று முதல் என்வாழ்வில்
மறைந்தநொடி யனைத்தி லும் நின் இன்பமணி முத்திரையை என்று மழி
யாவகைநீ இட்ட துண்டு!
M இன்றந்த நினைவுகளை எடுத்தெண்ணிப்
பார்க்கையில், அவ் வெழிற்க ணம்,ஒவ் வொன்றிலும்நின் கணையாழி முகர்கண்டு
துடிக்கின்றேன்; ஒப்பில் லாய்என் அன்றையப் புன் சிறு வாழ்வில் அனுபவித்த
இன்பதுன்ப அலைக ளுடே, ஒன்றி, அது கலந்து மண்ணிற் சிதறுண்டு
விட்டதனுல், உளம் நோ கின்றேன்!
முழலை யாய் மண்ணிற் சிற்றில்லம் சமைத்தின்பச் சிறுசோ றக்கிப் பெருகுவிளை யாட்டயர்ந்த வேளையும், நீ
என வெறுத்துப் பேச வில்லை; அரிய விளை யாட்டறையில் ஆர்வமுடன் என் செவிகள் அன்று கேட்ட, கருணைமலர்க் கழலொலியே உடுக்களில், இன்
றெதிரொலிக்கக் காணு கின்றேன்!
- "பரமஹம்ஸ் தாசன்

Page 3
ஆனந்த சடாட்சர் குரு
(முத்து)
முன்புனேக் கண்ட போது
முனிவரன் என்று யானும் நின்னிலை உணராப் பேதை
ஆயினேன் என்ன செய்வேன் கன்றினுக் கிரங்கும் சேதா
ஆயின கருணை வள்ளால் அன்றென ஆண்டாய் அல்லேயோ
ஆனந்த சடாட்சர குருவே.
0
தனக்குறு பசிபோல் யார்க்கும்
அப்பசி உண்டென உணர்ந்து
ம் னக்குறை இன்றி நாளும் மானிடப் பூசை செய்து
இனத்துறு இயல்பால் யார்க்கும்
இனியணுய் வாழ்ந்து காட்டி
அனைவர்க்கும் அன்புரு வாய்ை
ஆனந்த சடாட்சர குருவே.
a
"NS
சரவண முத்து என்னும்
சடர்ட்சர நாமம் பூண்டோய்
நரர்சுரர் களுக்கு எல்லாம்
நாயக ஞகி வந்தோய்
o *
அரகர என்று சொன்னுல்
3
ஆனந்த பாஷ்பம் பொழிந்து அரகர முருகே ஆணுய்
ஆனந்த சடாட்சர குருவே.
鬣
ಇಂದ್ಲಿ
 
 
 
 
 
 
 
 
 

+ + + + + + + + ++ + + + + + + + + + + + + + + + + + + + +
ஆனந்த சடாட்சர குரு
- ஆசிரியர் -
LSLS S S S SuSS SS S S S SSS S S S S S S S SS S SS SS SSS Y LSSSS SS L L S S S u J J Y k L S L S S S S SLS SLSL
எனக்குப் பள்ளிப் பருவத்தைக் கடந்துவிட்ட வயது. ஒருநாள் எங்கள் ஊரில் ஒரு பரபரப்பான செய்தியைக் கேள்விப்பட்டேன். "சரவணமுத்துச் சாமியாரைச் சமாதி வைத்த இடத்தில் நாட்டிய வாழை மறுபக்கமாகத் திரும்பி யிருக்கிறது. ' அவருடைய சமாதியின் பொழுது ஏற்பட்ட ஒரு அற்புதம் அவ்வூர் மக்கள் எல்லாரையும் அச் சமT திக்கு இழுத்து வைத்து விட்டது. சுவாமிகள் பூதவுடல் கொண்டுலாவும் போது சுவாமிகளைப் பயன் படுத்தத் தெரியாத மக்கள் எல்லiரும் அற்புதம் பார்க்க ஒடிச் சென்று சமாதியை அதன் மூலமாகத் தரிசனை பெற்றுத் திரும்பினர்கள். 。
நீர்வேலியைச் சேர்ந்த வல்லிபுரம் என்பவர் குப்பிழா னைச் சேர்ந்த சின்னச்சிப்பிள்ளையைத் திருமணம் செய்தார். சின்னுச்சிப்பிள்ளையின் தந்தையார் ஒரு விதானையார். மேற் குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு மகனுகப் பிறந்தவர்தான் சரவணமுத்துச் சுவாமியார் என்று அழைக்கப்படும் ஆனந்த சடாட்சர குரு அவர்கள். இவர் சிறுவயது தொடங்கியே சாதுக்களின் சகவாசத்தையும் கோயில் வழிபாட்டையும் யாத்திரை செய்தலையும் பெற்றிருந்தார். அடிக்கடி இந் திய யாத்திரை செய்து வந்தார்.
திருவொற்றியூரிலுள்ள இறைவனரால் ஆட்கொள்ளப் பட்ட்ார். ஒரு சிவராத்திரி தினத்தன்று திருவொற்றியூ ரில் இருக்கும்போது ஒரு சாது எதிர்ப்பட்டு நீர் ஏன் இருக்கிறீர்’ என்று கேட்டார். ‘நானும் ஒரு தேவையை நோக்கி இருக்கிறேன்’ என்ருர். "இரவு நாலாம் சாமப் பூஜை முடிந்ததும் நான் இவ்விடத்திற்கு வருவேன், என்னை எதிர் பார்த்து இரும் என்று சொல்லிவிட்டு அந்தச்சாது 4 போய் விட்டார். சரவணமுத்து கோயில் வாசலிலேயே இரவு முழுவதும் இறைவனையும் சாதுவையும் நினைந்தப

Page 4
4 ஆத்மஜோதி
டியே நித்திரை விழித்திருந்தார். கண்மூடித் தியானத்தில்
இருந்தால் அச் சாதுவே தியானத்தில் தோன்றுவார். அவர் இதற்கு முன்பு செய்த தியானங்கள் எல்லாம் சாது
ன் உருவமாகவே மாறிவிட்டன. தியானத்திலமர்ந்தார். உள்ளும் புறமும் சாதுவே தென்பட்டார். இப்படிப்பட்ட
போராட்ட நிலையிலேதான் அன்றிரவு முழுவதும் கழிந்
தது:
நாலாம் சாமப் பூஜை முடிந்ததும் சாதுதோன்றினர்.
இறைவனரது திருஉருவத்தைப் பார்க்கும் போதும் சாது
வின் திருஉருவே தெரிந்தது. காரணம் அவருக்கு விளங்க வில்லை. சாது காந்தமென அவரைக் கவர்ந்து இழுத்தார்.
பூஜைமுடிந்த அதே நேரத்தில் சாது சரவணமுத்துவுக்குத்
தீட்சை வைத்தார். தீட்சை வைத்து மந்திரோபதேசமும் செய்தார். தீட்சை பெற்றுக் கொண்டதும் சரவணமுத்து வுக்கு அளவிலா ஆனந்தம். பெறற்கரிய பேறு பெற்றதாக எண்ணிஞர். தமது குருநாதன் யார் என்று அறிய ஆவல் கொண்டார். உனக்கு விருப்பமான பெயரால் அழைப்பா
யாக என்று ஒலி மாத்திரம் கேட்டது. சாது அப்பொழுது
மறைந்து விட்டார். வாழ்நாளில் எப்பொழுதாவது அந் தச் சாதுவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவேயில்லை. கோயி
லுள்ளே சென்ருர், இறைவனுர் திருவருளை வியந்தார்.
" இரும்புதரு மனத்தேனே ஈர்த்து ஈர்த்து என்புருக்கி
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன்கழலிணைகள் ' என்றும்
* இணையார் திருவடியென்தலைமீது வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்'
என்றும் நெஞ்சார வாயாரப்பாடி மெய்மறந்து நின்ருர், அரும்பேறு பெற்று மாறில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்.
* மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே '
என்பது தாயுமானர் வாக்கு. யாத்திரையின் பலனல் வார்த்தை சொலச் சற்குரு வாய்த்தார். வந்த நோக்கம் நிறை வேறிவிட்டது. கடலுக்கடியிலுள்ள முத்துச்சிப்பி ஐப்பசிமாசத்து மழைத்துளியை விரும்பிக் கடலுக்குமேலே
வந்து வா யை த் தி ற ந் து கொண்டு படுத்திருக்குமாம்.
 
 
 
 
 

ஆத்மஜோதி 5
மழைத்துளி விழுந்ததும் வாயை மூடிக்கொண்டு கடலுக்கு அடியிலே சென்று விடுமாம். அதுபோல உபதேசம் கிடைத் ததும் உடனேயே ஈழநாடு வருவதற்கு எண்ணமிட்டார். அன்று காலேயே புறப்பட்டு விட்டார். ஆனல் கையிலே காசு இல்லை. அம்பிகையின் சந்நிதியில் படுத்திருந்து கொண்டு எண்ணமிட்டார். ஒரு பொய்யுறக்கம், அதற்குள்ளே சிறிய கனவு, காசைப்பற்றிக் கவலைப்படாதே. காசு தேவை யான போது கிடைக்கும். எழுந்து பார்த்தார். ஒரு ரூபாய் படுக்கையில் கிடந்தது. அந்த ஒரு ரூபாவையும் எடுத்து முடிந்து கொண்டு ஊர் புறப்பட்டுவிட்டார். முடிந்த பனம் முடிச்சிலேயே இருக்க ஈழநாடு வந்து சேர்ந்துவிட்டார். பாஸ்போட்டும், விசாவும், பெமிற்றும் பெற்று இந்தியா விலிருந்து இவங்கைக்கும் இலங்கையிலிருந்து இந்தியாவுக் கும் பிரயாணம் செய்யும் அன்பர்களுக்கு இச்செய்தி, அதிசய மாகத்தான் தோன்றும் ,
ஊர்வந்ததும் நமது வளவுக்குள் ஒரு கோ யி ல் கட்டி சிவகாமசுந்தரி என்ற அம்பாளைப் பிரதிஷ்டை செய்தார். அம்பாளுக்கு நித்திய பூஜை அவரே செய்து தினமும் அக்கினி , காரியமும் செய்து வந்தார். இதன்பின் சாதாரண சரவண முத்துவாக இருந்தவர் சிலரது உள்ளத்தில் சரவணமுத்துச் சாமியாராக மாறியிருந்தார். சிலர் சுவாமிகளைக் குருவாக வே பூஜித்தார்கள். சுவாமிகளுடைய பிரதான சீடர்களாகப் பின்வருவோர் விளங்கினர். இன்றும் சுவாமிகளுடைய சமாதியில் இருந்து பணியாற்றுபவரும் சுவாமி அம்மா என்று யாவராலும் வழங்கப்படுபவருமான மாணிக்க அம்மா அவர் கள். அடுத்தவர் மாணிக்க அம்மா அவர்களின் தம்பியாரா கிய பீதாழ்பூரம் அவர்கள். மயில்வாகனம் என்ற அன்பர். நீர்வேலி முருகுச் சாமியார். இவர்கள் சரவணமுத்துச் சுவாமி t களிடம் உபதேசம் பெற்று அவரது சீடர்களாயினர். முள் ளியவளையில் உள்ள ஐவர் சுவாமிகளிடம் உபதேசம் பெற்று ஆத்மீக நிலையில் மிக உயர்ந்தவர்களாக விளங்கியிருக்கின் றனர். శొ
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அடியார் கூட்டம் கதிர்காமத்திற்கு கரையோரப் பாதையால் நடை யாத்திரை செய்வதுண்டு. அடியார் கூட்டத்துடன் சுவாமி களும் சென்ருர்கள். முப்பனைக்காட்டில் சுவாமிகளைத் தனி யாக விட்டு யாத்திரைக் கோஷ்டி வெகு தூரம் சென்று விட்டது. சுவாமிகள் காட்டில் தனியாகவே இருக்க

Page 5
6 رابر( " " (; ஆத்மஜோதி
நேரிட்டது. சுவாமிகள் பிந்தி விட்டதை எவரும் அறி
யார். அன்றிரவு மரத்தின் கீழே படுத்திருக்கும் போது முருகப் பெருமான் சோ று கொண்டுவந்து கொடுத்து இளைப்பாற்றிச் சென்ருர், விடியச் சுவாமிகள் யாத்திரைக் கோஷ்டியினர் தங்கியிருந்த இடத்திற்குத் தனியாக நடந்து சென்ற போது பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள்.
வர்களுக்குக் கொடுத்து விடுவார். பணத்தைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. கையில் கி  ைட க் கு ம் பணம் உடனே அன்னதானமாக மாறி விடும். சுடலைக்குச்சென்று வாரக் கணக்கில் தனியாகத் தங்குவார். அங்கு யாரும் றியா வண்ணம் கடுந் தபசு செய்வார். முருகனைப் பற் றிய எண்ணம் வந்து விட்டால் ஆனந்தக் கூத்து ஆடு வார். நோயாளர் சென்று அவரது பாதத்தில் வீழ்ந்து தமது நோயை மாற்றுமாறு கேட்பர். உடனே விபூதியை எடுத்து மந்திரித்துவாயிலும் தலையிலும்போட்டுநெற்றியிலும் அணிந்து விடுவார்கள். அவ் விபூதியினல் குணமடைந்தோர் பலராவர்.
சுவாமிகள் சமாதியடைவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு மாணிக்க அம்மாவிடம் இந்த உடம்பு இன்னும் மூன்று தினங்களுக்குத்தான் இருக்கும் என்ருர்கள். சுவாமி கள் கூறியதை எவரும் நம்பவில்லை. சுவாமிதான் சுகமாக இருக்கிருரே, ஏதோ சுவாமி வேடிக்கையாகத்தான் சொல் கிருர் என்பது பலருடைய எண்ணம். மாணிக்க அம்மாவிடம் நான் சமாதியடைவதைப்பற்றி நீ ஒன்றுக்கும் பயப்ப டாதே’ உன்னைப்பற்றி எல்லாம் இறைவனிடம் நிறையக் கூறியுள்ளேன் என்ருர். இந்த இடத்தில் ஒரு சமாதி கெதி யில் வரப்போகிறது. அதன் அதிஷ்டசாலிகள் யாரோ என்று அடிக்கடி கூறுவதுண்டு.
மாணிக்க அம்மா ஒருமுறை ஐந்து ரூபாய் வைத்திருப் பதைச் சுவாமிகள் கண்டுவிட்டார்கள். உடனே அதைக் கொண்டுவரச் செய்து ஐந்து ரூபாய்க்கும் அரிசி காய்கறி allu fffiji (G) அன்னதானம் செய்வித்தார். அன்ன தானம் மு டி ந் த பின் இப் பணத்தை எதற்கு வைத்திருந்தாய் என்று கேட்டார்? கற்பூரம் ஊதுவத்தி :
வாங்குவதற்காக வைத்திருந்தேன் என்ற மறுமொழி கிடைத்
கையில் பணம் இருந்தால் அதைச் சோருக்கி அடிய
 
 
 

ஆத்மஜோதி 7
தது. இனிமேல் காசு கையில் கிடைத்தால் உடனே அடியார்
களுக்கு அன்னதானம் சேய்துவிட வேண்டும் பணத்தைச்
சேர்த்து வைக்கக் கூடாது என்று உபதேசம் செய்தார்கள்.
சுவாமிகள் சமாதி அடைவதற்குச் சிறிது நேரத்திற்கு முன் மாணிக்க அம்மாவை அழைத்து தம்முடன் எப்போதும் கொண்டு திரிந்த பிரம்பையும் விபூதிப்பையையும் அம்மா விடம் கொடுத்து இவை இரண்டும் எந்நாளும் உனக்குத் தேவை இவற்றைப் பேணி வைத்திரு என்று சென்னர்கள். இவையே சுவாமிகள் செய்த கடைசி உபதேசமாகும். 1938 ஆம் ஆண்டு பங்குனி மாம் முதலாந்தேதி சுவாமிகள் தாம் முன்னரே கூறியவாறு சமாதி அடைந்தார்கள். அவர்களது சமாதி பிறந்த ஊராகிய குப்பிழானிலேயே வைக்கப்பட்டது,
محمحےحصے حصے
ஆத்ம சுகத்தை அளிக்கும்
* அருள் மொழிகள் பிரபஞ்சம் அநித்தியம் என்பது நன்கு அறியுமளவு ஆசை குறைகிறது.
-gᏓᏛᏈ Ꭶ குறையுமளவு சுகம் அதிகரிக்கிறது. ஆசை பொன்னுலான கை விலங்கு
தேகாபிமானம் உள்ளவரை சுக துக்கம் உண்டு சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்ம சொரூபத்தை அடைய முயலுக. -
மனிதனுக்குப் பெரும் பகையாயிருப்பது ஆசை. தின மும் நற்கருமங்களையே செய்.
தான் ஆத்ம சொரூபம் என்பதை உணருமளவு பந்தத் திலிருந்து விடுபடுகிறன்.
கவலையற்று வாழ விரும்பினுல் பற்றுதலற்று வாழ், சத்தியத்தையே பேசிப் பழகு,
மரணம் என்பது உடல் மாற்றல், அது மற்றெரு வாழ்க்கைக்கு வாயிலாக அமைகிறது.

Page 6
ஆத்ம ஞானி பாயஜித் பிஸ்தாமி (அல்-ஹாஜ் வி. எம். ஷம்சுத்தீன்) ,
பெரியார் பாயஜித் ಇಂಕ್ಜೆ அவர்கள் பெரிய ஆத்ம ஞானி. இவரைப் பற்றி இளவரசர் தாரா க்கோ எழுதிய தபினத்துல்-அவுலியா wa என்ற நூலில் மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். ஹஸ்ரத் பிஸ்தாமி அவர்கள் தன் வாழ்நாளை ஆத்மீகத் துறையில், சிரியா நாட்டு காடு பாலைவனம் ஆகிய இட்ங்களில் கழித்தார். இவர் இறைவன் வணக் கத்துக்காக பள்ளிவாசலுக்குள் நுழையு முன்,வெகு நேரம் பள்ளி வாசல் முன்வாசலில் நின்று அழுவார்களாம்! ஏன் அழுகிறீர்கள் என எவ ரும் கேட்டால், நான் அசுத்தமானவன், பாவி, பரிசுத்தமான பள்ளிக் * குள் நுழைந்துவிட்டால் பரிசுத்தமான அப் பள்ளிவாசல் அசுத்தமாய் விடக்கூடாதே எனப்பயந்து அழுகிறேன் என்பாராம். இவர் தொழுது கொண்டிருக்கும் போது இவருடைய இருதயத்திலிருந்து ஒரு சப்தம் வரும். இச் சத்தத்தை இவர் கேட்டுக்கொண்டிருப்பாராம். இச் சத்தம் பக்கத்திலிருப்பவர்களுக்கும் கேட்கும். இதை முஸ்லீம் ஞானிகள் நாத மணி பூசை என்பார்களாம்.
இவர் ஒரு சமயம், பள்ளிவாசலில்" தொழுதுவிட்டு, வெளியே வந்த சமயம், இவர்களிடம் அப்பள்ளிவாசல் கத்தீப் 'ஆத்மஞானி அவர்களே! தாங்கள் ஜீவனே பாயத்துக்காக எத் தொழில் செய்கின்றீர்கள் என்று கேட்டாராம், இக்கேள்வியைக் கேட்டதும் ஞானி பிஸ்தா மி அவர்கள் திரும்பவும் பள்ளிவாசலில் நுழைந்து மீண்டும் தொழுதார்களாம். இதைக் கண்ணுற்ற சிலர், "ஸ"பி அவர்களே! தாங்கள் ஏன் மீண்டும் தொழுதீர்கள்?' எனக் கேட்டபோது 'மக்களுக்கு இறைவன் உண வளிக்கின் ருர் என்பதைக்கூட அறியாத பள்ளிவாசல் லெப்பையின் பின் நின்று நான் தொழுதது கூடாது:என்ருர்களாம்.
பாரசீக நாட்டு, சிறந்த ஆத்ம ஞானிகளான ஜதமியும் பரீதுத்தீன் "அத்தார் அவர்களும், இவருடைய ஆத்ம ஞானத்தைக்குறித்துப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். இவர் டிஸ்தாமி என்ற ஊரில் பிறந்ததால் இவருக்கு பிஸ்தாமி எனப் பெயர் வந்தது எனக் கூறுவர்.
முஸ்லிம்களுக்குள் இவரைப்போன்று எத்தனையோ சீரிய ஞானிகள் துறவிகள், தோன்றி முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதார்களுக்கும் ஞான ஒளி கொடுத்துள்ளார்கள். இஸ்லாம் துறவறத்தை அநுமதிக்கா மல் போஞலும் எவரும் துறவு பூணக்கூடாதெனத் தடைசெய்யவில்லை. அப்படித் தடை செய்யுமாயின், முஸ்லிம் உலகில் ஒரு துறவியும் இருத் தல் முடியாது. பால்யத் துறவியான குணங்குடிவள்ளல் துறவி மாத்திர மல்ல, தமிழிலும், அரபியிலும் தேர்ச்சி பெற்றவர், குர்ஆனையும் நாயக வாக்கியத்தையும் நன்கு கற்ற மாமேதை. இஸ்லாம் துறவறத்தை தன்ட செய்து இருக்குமாயின் குணங்குடி வள்ளல் துறவியாக இருக்கமுடியுமா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 

ష 罗 €
థ్రోణికి
விந்தை என்ன.?
- சி. பொன்னுத்தம்பி -
பாடும் பருவம் இதுவன்றே பரமா உந்தன் கழல் பற்றி, ஆடும் எளியேன் சிறுமனத்தை அலையா துள்ளே நிறுத்திவிடு! மூடும் கரிய திரை கிழித்து, முதல்வா, ஞான விளக்கேற்றி, பாடப்பணிப் பாய்!அதை உனது, பரமானந்தம் என உணர்வேன்!
காலைப் பொழுதில் புள்ளினங்கள் கானம் இசைத்து உனப்பாடும்! கோலக் குயில்கள் உன் புகழைக் கூவிக் கூவி மகிழ்ந்தாடும்! நீலக் கடலின் அலைத்திரளும் நெஞ்சம் கனிந்து உனைப்பாடும்! சீலக்கவிதை எனக்கு மட்டும் தெரியாதிருக்கும் விந்தையென்ன..?
எளியேன் வரண்ட உயிர்க் குழலில் 類 இறைவா, ஞான இசை ஏற்றி, மழைபோல் இனிய பாட்டமு தம் வாரி வாரிப் பெய்திடுக! جتنا வளமார் கவிதைப் பொன்மலர்கள் மலர்ந்தென் உளத்தில் மணம் வீசிப் பொலியவேண்டும்! அதுவே உன் புனித இன்பம் என உணர்வேன்!
ஜெய குருதேவ்!

Page 7
ஆத்மஜோதி
Canw/en/Newswerras/^N YN
○
சிவானந்தத் துயர் !
அருந்தவப்பா ரதமணித்தாய் கண்கலங்க
அருட்பெரியோர் புலம்பிச் சோர, 素。 விரிந்தோங்கு வான்நடுவே ஒளிர்கின்ற
வியன்கதிரோன் திடுதிப் பென்று மறைந்துவிடும் மாயம்போல், ஞானவொளி
மண்ணுலகிற் பரப்பி நின்ற பெருங்கதிராம் சிவானந்தப் பேரிமய
ஜோதிநமைப் பிரிந்த தையோ!
பாரதத்தாய் தவளமணிப் பண்ணிமுடியிற்
பதித்தஎழில் வைரம் போன்று, பாரகத்தே அருட்கதிர்கள் பாய்ச்சியிருள்
பறித்தவனே, பரமன் பாதம் சேரவென இன்னுயிரை மறைத் தெங்கோ
சென்றதனுல், உலகில் துன்பப் பேரிருளைச் செறித்தானே! கண்ணுெளியைப்
பிரிந்தோமே! தவிக்கின் ருேமே!
ஒப்பரிய ஞாலம் காத் துய்விக்கும்
மாரியும் சிற் சிலபோ தார்த்துச் செப்பரிய பெரும் புயலாற் சீறுதல்போல்,
சிவானந்தத் தேன் சொரிந்த ஒப்பில்லாக் கருணைவள்ளல், திடுமெனப்பே
ருடல்விடுத்தெம் உயிர் துடிக்க வைப்பானென் றெண்ணிலமே! இன்றெமது
துயர்துடைக்க வல்லார் யாரே? :
- LDC5. LID LD(35(5.

ஆத்மஜோதி 11.
அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
(T. L. வஸ்வாணி)
அவர் குன்றுகளை அணுகியதும் விருட்சங்களுக்குக்கீழே அமர்ந்தார். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அஸ்தமிக்கும் சூரியனின் மங்கலான அந்தி ஒளியில் யாம் அவரைக் கேட்டதாவது;- 'ஆ சி ரிய ரே! பிரார்த்திக்க எமக்குக் கற்பிக்குக.
அப்போது ஆசிரியர் சொன்னது;-
எவர்கள் அவருக்குப் பழமோ, மலரோ அல்லது இலை யோ கொண்டு வருவதில்லையோ அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்; ஏனெனின் எவர்கள் வெறுங் கைகளுடன் வருகிருர்களோ அவர்கள் நிரப்பப்படுவார்கள்!
எவர்கள் தங்கள் பாடல்களைக் குழந்தைகளுக்குப்பாடு கிருரர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெ னின் அவர்கள் வாழ்வின் அழகிலும் அதிசயத்திலும் வளர்
வார்கள்!
எவர்கள் தங்கள் ஆசையை அழிக்கிருர்களோ அவர் கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் அமை தியில் வசிப்பவர்கள்!
எவர்கள் திறந்த வெளி வீடுகளில் வசிக்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் தங்கள் தளைகளைத் தகர்த்துக் கொண்டார்கள்; ஆன்மா வின் காற்று அவர்கள் மேல் வீசி அவர்களின் பாடலையும் பேச்சையும் தொலைவிலுள்ள ஒதுக்கிடங்களுக்குக் கொண்டு செல்கின்றது!
எவர்கள் இருதயத்தில் ஒரு குரலொலியுடனும் கண்க ளில் ஒரு காட்சியுடனும் உலகில் வீடின்றி அலைந்து திரிகி ருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனில் அவர்கள் சுவதேசத்தைச் சேமத்துடன் அடைவார்கள்!

Page 8
இற2 s
/. s 2 ஆத்மஜோதி எவர்கள் அபாயமான கடலில் தேடிக் கொண்டு பய ணம் செய்கிருர்களோ அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் விரும்பியதை அடைவார்கள்.
A:
எவர்கள் மிகச்செங்குத்தான மலைமேல் அடிமேல் அடி
வைத்து நடக்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்
கள். ஏனெனின் அவர்கள் மெய்க் காட்சி மலையை அடை வார்கள்!
எவர்கள் இறைவனை நாடிப்பசியும்தாகமும் கொள்கிருர் களோ அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் அ வ ர து அடிமைகளினதும் அடியார்களினதும் விருந்துகளில் பங்குகொள்வார்கள்!
எவர்கள் அவரின்பொருட்டு உடைஉரியப்பட்டுநிர்வாண மாகிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்: ஏனெ னின் அவர்கள் ஞானவொளி உடைகளால் உடுத்தப்படுவார் தள்!
எவர்கள் பாடிக்கொண்டு தங்கள் வழியிற் செல்கிருர் களோ அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்; ஏனெனின் தேடுதற் பாடல் முக்கால முழுமையின் ஊதிய வருவாயில் என்றும் உளதாகிறது!
எவர்கள் ஏளனம்செய்வோனுக்கும் எடுத்ததற்கெல்லாம் குறை கூறுபவனுக்கும் செவிடான வர்களாயிருக்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்: ஏனெனின் அவர்கள் தங்கள் செவிகளைப் புல்லாங்குழலின் பாட்டுக்குத் திறந்துள் GYTITri gör ! ',
எவர்கள் உலகின் பகட்டுக்கும் வலிமைக்கும் குருடான வர்களா யிருக்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் கள்; ஏனெனின் அவர்கள் ஒருபுதுச்சுவர்க்கத்திலும் ஒரு புதுப் பூவுலகிலும் காட்சியைப் பெறுவார்கள்!
எவர்கள் அன்புப்பாதையில் நடக்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் சிங்கங்களை யும் செம்மறியாட்டுக் குட்டிகளையும் செம்மறியாடுகளையும் ஒநாய்களையும் அமைதியில் ஒருமித்து இருக்கக்காண்பார்கள்!

ஆத்மஜோதி Ν ..) 13
எவர்கள் அமைதியாயிருக்கக் கற்றுக் கொள்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்புட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் பரமான்மாவின் பாடலைக் கேட்பார்கள்!
எவர்கள் இருதய பூரிப்பால் கொடுக்கிழுர்களோ அவர் கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் அகண்ட அன்பைப் பெறுவார்கள்!
எவர்கள் இப்பூவுலகப் பொருட்களைத் தங்களுக்கே கொடுக்க மறுக்கிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்; ஏனெனின் அவர்கள் நித்திய வாழ்வில் தங்களையே நிறைவு செய்வார்கள்!
எவர்கள் வாழ்வில் விட்டுக்கொடுக்கிருர்களோ அவர் கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் ஆன் மாவை ஒர்ந்தறிதலில் வளர்வார்கள்!
எவர்கள் தாழ்ந்தவர்க்ளுடன் அழுகிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் தங்கள் உதடுகளில் புன்சிரிப்புடன் மறுமையில் விழிப்பார்கள்!
எவர்கள் மனநிலையில் அமைதிவாய்ந்தவர்களோ அவர் கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் நித்திய ஆன்மாவின் உருக்காட்டிகளாக இருப்பார்கள்!
எவர்கள் தர்மத்திற்காக - நித்தியசெம்மைக்காக- துன் பப்படுத்தப்படுகிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்; ஏனெனின் அவர்கள் கடவுளின் இராச்சியத்தை அகத்தே காண்பார்கள்! a.
எவர்கள் எதிர்த்து நில்லாது துன்பப்படுகிருர்களோ அவர் கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் இறகு கள் வளர்த்து பரம்பொருளிடம் பறந்து செல்வார்கள் !
எவர்கள் கண்ணுேட்டமுடையவர்களோ அவர்கள்ஆசீர் வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் மனித இனத் துடன் ஒன்ருயிருப்பார்கள்!
எவர்கள் இருதயங்கள் காமத்திலிருந்தும் பொன்னுசை யிலிருந்தும் தூய்மைப்படுத்தப் பட்டிருக்கின்றனவோ

Page 9
14 燃, ஆத்மஜோதி
உன்னையே அறிந்து பந்தமற்றிருக்குக!
(சுவாமி சிவானந்தர்)
"மக்கள் பின்பற்றி நடப்பதற்கு தங்களை விட யாரேனும் சான்ரூேரைப் பெற்றிரா விட்டால் அவர்கள் அபூர்வமாகவே சீரடைகிருர்கள்’ என்று ஒலிவர் கோல்ட் சிமித் (Oliver Goldsmith) சொன்னர். "எவன் காதுகளைப் பெற்றிருக்கிருனே அவன் கேட்பாணுக, எவன் கண்களைப் பெற்றிருக்கிருனே அவன் காண்பானுக’ என்று இயேசுக் கிறிஸ்து சொன்னர், كمېر
கடந்த யுகங்களாக உண்மை, வானுலக அழகும் அழிவின் மையும், வாழ்வின் நிலையான பெறுமதிகள், ஆன்மிக ஒளிர் வின் இரகசியங்கள் முதலியவற்றின் வழிகாட்டி மனிதஇனத் தின் ஆசிரியர்களும், சீவிப்பதற்கு மதிப்பான அனைத்தினதும் காப்பாளருமாகிய ஆற்றலும் புகழும் வாய்ந்த ஆன்மாக் களின் பரம்பரையாகக் கைமாறி வந்திருக்கின்றன.
பதினுயிரக்கணக்கான குறிப்புக்காட்டும் பொருட்களும் அனுபவமும் பதித்து வைக்கப்பட்ட, மிக விரிவாகப் பரந்தி ருக்கும் வாழ்வுப் பள்ளியில் ஒப்புயர் வற்ற மாபெரும் ஆசிரி யராம் இயற்கை தானே தொந்தரை செய்யும், பிரச்சினைகள் புரியாத மறை செய்திகள், முரண்பாடுகள் அனைத்தின் விளக் கத்திற்கும் வழி வகைகள் தருகிறது.
முன்பக்கத் தொடர்ச்சி அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்; ஏனெனின் அவர் கள் பந்த மற்றிருப்பார்கள்!
எவர்கள் இறைவன்பொருட்டுத் துன்பப்படுகிருர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாய் மாற்றப்படும்!
கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனின் அவர்கள் துயர நிகழ்ச்சியும் கண்ணிருமாகிய இவ்வுலகில் போர் எல்லேக்கப்
எவர்கள் அமைதிக்காக முயற்சிக்கிருர்களோ அவர்
பால் வசிப்பவர்கள்!
 
 
 

ஆத்மஜோதி 15
"எவன் கண்கள் வைத்திருக்கிருனே அவன் பார்ப்பா ஞக'. இச்செய்தி என்றும் உண்டு. கேட்போரும் உளர். ஆனல் எவர்கள் தங்கள் கண்களையும் காதுகளையும் வேண்டு
மென்று மூடிக் கொள்கிருர்களோ அவர்கள் தாங்களே விளை
வித்த அஞ்ஞானஇருளில் தூங்குவார்கள்; ஏனெனின் யாதும் விழிப்பூட்டல் விழிப்பதற்குப் பரி மாற்றமான விருப்பமுள்ள தன்மை இருந்தாலன்றி உண்மையாகப் பயன் விளையத்தக்க தாயிராது.
ஆகையால் நேர்மையும் தீவிர முயற்சியும், விசுவாசமும் விருப்பமும் ஒவ்வொரு சாதகனும் வைத்திருக்க வேண்டிய முதல் முக்கிய தேவைகள். பின்னர் உண்மையானதை உண் மையற்றதிலிருந்தும், விரும்பத் தக்கதை விரும்பத்தகாததி லிருந்தும் பிரித்தறிதற்குப் பகுத்தறிவுள்ள விவேக ஆற்றல் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு ஒளிவு மறைவற்ற சிரத்தையும் உறுதித் தன்மையுமுடன் தான் தேர்ந்தெடுத் ததைக் கைப்பற்றிக் கொள்வதற்கும், தளராத விடா முயற்சியுடன் தன் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்வதற்கும் ஒரு தீவிர தீர்மானம் பெற்றிருக்க வேண் டும்.
பரிமாற்றத்தின் உலகியற் கருத்தில் ஒப்புமை சார்ந்த ஒர்ந்தறிவில் ஆதாரங்கொண்ட குரு சீட உறவு நீடித்தி
(555 LD(TL-L–TgiI.
எவ்வளவு திறமாக ஒருவர் தன் ஆசிரியரைச் சேவிக்க முடியும்? அவரை மிக அதிகமாக மகிழ்விக்கும் மிகச் சிறந்த வழியில் தெளிவானதும் ஒர வஞ்சக மில்லாதது மானவிளக்கத்தால் தூண்டப்பெற்ற எதிர்ப்பில்லாத பணிவு மூலம். அவரது கோட்பாட்டின் ஒரு மிகத் தெளிவான சான்ருனவனுக இருப்பதே ஒருவர் ஆசிரியருக்கு உதவக் கூடிய மிகப் பயன்றரும் சேவை.
உண்மை நாடுவோர்களே! தயவு கூர்ந்து மறுபடியும் உங்களை மனித இனத்தின் ஆசிரியர்களின் சேவைக்கு, அவர் கள் வாழ்ந்த இலட்சியங்களுக்கு, அவர்களால் அளிக்கப் பட்ட போதனைகளுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அமை தியும் நல்லெண்ணமும், எல்லாப் பிராணிகளிடமும் தன் னலமற்ற அன்பு, துன்புறுவோருக்கும் துணையற்றேருக்கும் உற்சாகமான சேவை, உங்கள் இயல்பின் பண்பு நயமும்

Page 10
6 " ஆத்மஜோதி
பரிசுத்தமும் நேரானதும் விரும்பத்தக்கதுமான அனைத்தி னதும் அபிவிருத்தி, பண்படாததும் கரடு முரடானதும் இழிந்ததும் தூய்மையற்றதுமாகிய அனைத்தினதும் துடைத் தழித்தல் முதலியவற்றைப் பற்றிய அவர்களின் செய்தியை உற்றுக் கேளுங்கள்.
அடைவை மறவாதீர்கள். உண்மையே மெய்யானது,
பொய்மை, ஒரு கை விடுதல், சித்தியே மெய்யானது, ! தோல்வி ஒரு தூண்டும் விசை, அறமே மெய்யானது, மறம் அதன் விளக்கக் கூற்று; அன்பே மெய்யானது, வறுப்பு ஒரு தப்பு வழி காட்டப்பட்ட மன முடுக்கு; மகிழ்ச்சியே மெய்யானது, துக்கம் ஒரு தன் மயக்கம்; வாழ்வே மெய்யானது, மரணம் என்றும் சிறந்ததை நோக்கி வாழ்வு மாறும் தோற்றம். இவற்றை மறவாதீர்கள்.
தியானித்து அமைதியும் அக ஒளிர்வினதும் உதயத் திற்கு இட்டுச் செல்க. அகமுக ஆராய்ச்சி செய்து உலகி யல் ஆசையாகிய மாசை நீக்குக. சிந்தித்து மெய்மை யைப் பொய்மையிலிருந்து பிரிக்குக. பகட்டான தோற்ற மும் ஆரவாரமும், வஞ்சகமின்மையும் வஞ்சகமும், ஆர்வ மும் வெறுப்பும், புகழ்மொழியும் அவதூறுமாகிய இந்நில வுலகுக்குரிய அடுக்கணிக் காட்சிக்கிடையே வாழ்வின் பெருக் குக்கும் வற்றுக்கு மூடாக உள் இருதய தனிமையில் உன் சிறப்பான ஆன்மிக இயல் பின் மூலக் கோயிலில் அருளும் அமைதியும், அழகும் மகிழ்ச்சியும் காண்க. ஒரு சாட்சி யாயிருக்குக. உன்னையே அறிந்து பந்தமற்றிருக்குக.
ஆத்ம இரகசியம்
(பிருஹதாரண்ய உபநிடதம்)
நீ காட்சியைக் காண்பவனைக் காண முடியாது. நீ கேள்வியைக் கேட்பவனைக் கேட்க முடியாது. நீ நினைவை நினைப்பவனை நினைக்க முடியாது. நீ அறிவை அறிபவனை அறிய முடியாது. எது அனைத்தினுள்ளும் உறைகிறதோ அதுவே உன் ஆத்மா. அதனின்று வேருனதெல்லாம் உண் மையானதன்று. (111-4-2)
 
 
 
 

இறைவனின் அற்புத இரகசியம்
(சுவாமி சிவானந்தர்)
செருக்கும் வீம்புமுள்ள ஒரு செல்வந்தனைப் பார்க்க அர்ஜுனனும் கிருஷ்ணரும் போனர்கள்.
அவன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு உணவோ அல்லது ஏதேனும் அன்புக் கையுறை அளிப்பதற்கோ அக் கறை கொள்ளவில்லை.
அவன் அற முடிவாக உதாசீனமா யிருந்தான்.
'ஐந்து கோடி ரூபா அவன் பெறுவானுக’ என்று கிருஷ்ண பிரபு அவனை ஆசீர்வதித்தார்.
பின் அவர்கள் ஒர் ஏழ்மையான ஆணுல் பக்தியுள்ள வயோதிபனிடம் சென்ருர்கள்.
அவன் ஒரு பசு வைத்திருந்தான். அவன் அர்ஜ"னனையும் கிருஷ்ண பிரபுவையும் வணங்கி அவர்களுக்குப் பால் அனைத்தையும் அளித்தான்.
'அவனது பசு இறக்கக் கடவது' என்ருர் கிருஷ்ண பிரபு.
அர்ஜுனன் மிக வியப்படைந்து "ஒ பிரபுவே, நான் உம் இயல்பை விளங்க முடியவில்லை. உம்மை அவ
மதித்த செல்வந்தனை ஆசீர்வதித்து உம்மைச் சேவித்த எளிய மனிதனைச் சபித்தீர்கள்' என்ருன்.
கிருஷ்ண பிரபு பதிலளித்தார்.
செல்வந்தன் செல்வ மூலம் அதிக செருக்கும் வீம்புங் கொண்டு நேராக நரகத்திற்குப் போவான்.
எளிய மனிதன் தன் பசுவிலுள்ள பற்றை நீக்கி விரை வில் என் இருப்பிடத்திற்கு வருவான்.
அர்ஜுனன் சொன்னன். 'என் பிரபுவே உங்கள் t வழிவகைகள் பரம இரகசியமானவை. உங்கள் இயல்பை
நான் இப்போது அறிகிறேன்’’.

Page 11
18 ஆத்மஜோதி
பிரானப் பயிற்சி
(யோகி பூணீ எஸ். ஏ. பி. சிவ லிங்கம்) (டோக்கியோ, ஜப்பான்)
நமதுடல் எண் சாண் அளவுடையது. உடலினுள் Grand ணற்ற நுண்ணறிவிற் கண்டறியலா காப் பல அரும்பெரும் இயந்திரங்களைக் கொண்ட இச்சரீரம் பிராணசக்தியின்றி ஒர் நிமிட நேரமும் தங்கவியலாது. பிராண சக்தி நமதுடலுக்கு நீண்ட காலம் உயிருடனிருக்கவும், உடலாரோக்கியம், ஆனந் தம் அனைத்தையும் அநுபவித்து சகல வித ரோகங்களையும் நீக்கிப் புஷ்டியுடனும், வந்த வியாதியையும், வரப்போகும் வியாதியையும் நீக்க வல்லது பிராண சக்தி.
யார் பிராணுயாமம் தினசரி செய்து வருகின்றனரோ, அவர்கள் ஆத்மதியானமும் அறிவும், இன்சொல்லும் பிர காசித்து ஓங்கி நிற்பர், பிரான அடக்கப் பயிற்சிகளுள் எண் ணற்ற வகைகளுள. அவைகள் யாவும் ந ம து உடலுக்குத் தவிர்க்கவியலாத எண்ணற்ற நன்மையாகவும், ஆத்மீகத்திற் குத் திறவு கோலாகவும் இருந்து வருகின்றது. இப்பிராணு யாமப் பயிற்சியால் பிராணன் நமதுடலினுட் சென்று காந்த சக்தியைப்போன்று நரம்புகளை முறுக்கேற்றி, அதி வலுவை யும், தீய இரத்தத்தை சுத்த இரத்தமாக மாற்றுவதால், இதன் காரணமாய் உடல், மனம், மூளை வலுப்பெற்று அதிக ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையுமடைகின்ருேம்.
இப்பிராணயாமப் பயிற்சிகளை என் நேரத்தில், எச்சம யம் செய்வது? அதாவது காலையிலும், மாலையிலும் நம் கிரி யைகளனைத்தும் முடிந்த பின்பு, வயிறு காலியாக விருக்கும் சமயம் இப்பயிற்சிகளைச் செய்யவும். ஆரம்பத்தில் முதன் முதற் பிராணனைத் தொழுது பின்பு செய்யவும்.
நாம் நாடிகளையும், அதன் இருக்கையையுமாராய்வோம். உடலினுள் முக்கிய நாடிகள் பதினைந்து. ஆனல் மொத்த நாடிகள் 72,000 உள்ளன. அவைகள் யாவும் நமதுடலில் பற்பல பாகங்கட்கும் சென்று பீர்க்கர்ஸ் கூடு போன்று, பற் பல விதங்களில் நமக்கு உபயோகமாக இருக்கின்றது. இப் பதினைந்து நாடிகளும் எங்கெங்கு நமதுடலில் வியாபித்திருக்
ன்றன என்பதையாராய்வோம்.
 
 
 
 

ஆத்மஜோதி 19 - , • י
பதினைந்து நாடிகளின் பெயர்களாவன:-
சுழிமுனை, பிங்கலை, இடைகலை, சரஸ்வதி, பூடை, வருணை, அத்தி, கிங்குவை, அச்சுவினி, அலம்புடை, குகு, சுவோதரை, பயச்சுவினி, சங்கினி, காந்தாரை என்பன
சுழிமுனை நாடியானது உடலின் பின்பக்கம் முதுகின் நடு வின் வீணதண்டம் போன்ற முதுகெலும்புடன் கூடிய தலைப் பாகத்தின் நடுவிலிருந்து புருவ மத்தி வரையிலிருக்கும்.
சுழிமுனை நாடியின் இடது பக்கத்தில் இடைகலையும்,
வலது பக்கத்தில் பிங்கலை நாடியுமிருக்கும்.
அதன் பின்னும், முன்னும் சரஸ்வதி, குகு ஆகிய இரண்டு
நாடிகளுமிருக்கும்.
இடைகலையின் பின்னும், முன்னும் காந்தாரை என்னும்
நாடியும், அத்தி என்னும் நாடியும் கிங்குவை என்னும் நாடி
யைப் பொருந்தியிருக்கும்.
பிங்கலை நாடியின் பின்னும், முன்னும் பூடை என்னும்
நாடியும், அச்சுவினி எனும் நாடியும் பொருந்தியிருக்கும்.
இடைகலைக்குப் பின்னும், முன்னும் குகுவும், அத்தியும் விசுவோதனு என்னும் நாடியுமுள்ளது.
அச்சுவினி, குகு என்னும் நாடிகளின் மத்தியில் வருணை யும், பூடையும், சரஸ்வதியும் பொருந்தியிருக்கும்.
காந்தானு, சரஸ்வதி என்னும் நாடிகளின் மத்தியில் சங்கினி நாடியானது நிலைத்து நிற்கும்.
கந்தத்தானத்தின் மத்தியில் அலம்புடை நாடியானது நிலைத்து நிற்கும்.
சுழிமுனை நாடியின் முன்னே குகு என்னும் நாடியானது குய்யத்தானத்தின் அளவாய்ச் சென்று கொண்டிருக்கும்.
வருணை நாடிகீழ், மேலாக உடம்பு முழுவதும் பரவிச் சென்று கொண்டிருக்கும்.
பிங்கலை நாடியும், இடைகலை நாடியும் வலதிடமாய் ஆக்கிராணத்தின் அளவாகச் சென்று கொண்டிருக்கும்.

Page 12
20  ീ ஆத்மஜோதி
அச்சுவினி நாடியானது வலது கால் பெருவிரல் அள
வாக வியாபித்திருக்கும்.
பூடை, பிங்கலை நாடிகளின் பின்னுல் இடது கண்ணின் அளவாகச் சென்று கொண்டிருக்கும்.
அச்சுவினி வலது செவியின் அளவாகவும், சரஸ்வதி
பிரமம் நாடியின் பின்பக்கம் நா அளவாகவும், அத்தி, கிங்குவை எனும் நாடிகளின் இடது கால் அங்குஷ்டத்தின்
அளவாகவும் வியாபித்திருக்கும்.
சங்கினி இடது காதின் அளவாகவும், காந்தானு இடது கண் அளவாகவும். விசுவோதரை முகத்தின் நடுவிலும், அலம் புடை அபாலான் அளவாகவும் வியாபித்திருக்கும்.
பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன் நாகன், கூர்மன், இருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகிய இந்த பத்து வாயுக்களும் எல்லா நாடிகளினூடேயும்
சென்று இயங்கிக் கொண்டிருக்கும். -
ஒரளவு யாம் நாடியின் தன்மையையும், அதன் இருத்
தலையுமறிந்தோம்.
உடற்கூறு சாஸ்திரமும், யோக நூலும் பிராணனைப் பற்றியும்,நரம்புகளைப் பற்றியும் விரித்து உரைக்கின்றன.
நமது உடலில் பிராண சக்தி எவ்வாறு இயங்குவதென் பதை யாம் கண்டறிய வேண்டும். ஆரம்பத்தில் யாம் இரு மூக்கின் வழியாய் இயற்கையாய் சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் சுவாசித்துக் கொண்டிருக்கிருேம். இது மானி டரொவ்வொருவரின் இயற்கடமை. இவ்வாறிருக்க இச் சுவாசத்தையே நாம் மெதுவாகவும், சீராகவும் வேகமின்றி உள்ளிழுத்தும், வெளிவிட்டும் வருவோமேயாயின் இரைப்பை நிரம்பும் வண்ணம், பின் பூராவையும் வேகமின்றி வெளி விட்டுச் செய்வதால் உடற் பலம், ஆரோக்கியம், ஊக்கம், உற்சாகம் அனைத்தையும் கைமேற் கண்ட பலனைப்போன்று பெறுவோம் இவற்றை எவ்வாறு யாம் பெறுகின்ருேமெனின் யாம் சுவாசத்தை மெதுவாகவும், தீர்க்கமாகவும் சுவாசிக் குங்கால் இச் சுவாசமானது நமதுடலினுட் சென்று, அழுக் கையும், தீய இரத்தத்தையும் போக்கி நுரையீரலையும் நரம்
 
 

ஆத்ம ஜோதி s , 21.
பையும் தூய்மைப் படுத்தி ஆரோக்கியத்தையும், நற்பசியை யுமதிகரிக்கச் செய்கின்றது.
சுமார் பல தடவைகள் இயன்றவாறு அதிகம் சுவாசத் தை மெதுவாகவும், உள்ளிழுத்தும், வெளிவிட்டும் செய்வ தால் உயர்ந்த பலனையும், நரம்பு திடத்தையும் பெற்றுய் GBGJIT b.
சமதள விரிப்பின்மேல் வெகு இலகுவான முறையில் உடல் நிமிர்ந்து முகம், கழுத்து இப்பாகங்கள் யாவும் விறைப்புடன் நிமிர்ந்துட்காரவும். பின்பு இடது கையை முழங்காலின்மேல் விறைப்பாய் அமர்த்தியிருக்கவும்.
பின் வலது கையை சின் முத்திரையிற் பிடித்து வலது கைப் பெருவிரலால் வலது மூக்குத் துவாரத்தையடைத்து, இடது மூக்குத் துவாரத்தால் வெகு வேகமாய் இயன்றளவு சுவாசத்தை உள்ளிழுக்கவும். உள்ளிழுக்கப்பட்ட சுவாசத் தை உடன் வலது இரு விரல்கிளால் இடது மூக்குத்துவா ரத்தையடைத்து மூக்கின் வலது துவாரத்தின் வழியாய் வேகமாய் சுவாசத்தை வெளிவிடவும். பின்பு அதன் வழியே சுவாசத்தையுள்ளிழுத்து மூக்கின் அடுத்த துவாரத்தின் வழியாய் வெளிவிடவும். இவ்வாருக இயன்றளவு சுவாசத் தை வேகமாய் மாற்றி மாற்றிச் செய்யவும்,
இப்பயிற்சியால் மூக்கடைப்பு, தொண்டை சம்பந்த வியாதிகள், இதயவலி, மார்புவலி முதலிய அநேக விதமான வியாதிகள் நீங்கும். உடலும், உள்ளமும் வலுப்பெற்று இரத்த சுத்தியாகும்.
அடுத்த பயிற்சியும் முன்மாதிரியே சமதளத்தினுட் கார்ந்து இரண்டு கைகளையும் சின் முத்திரையில் இரண்டு முழங்கால்களின் மேல் வைத்து வெகு வேகமாயும், தீர்க்க மாயும் தேவைக்குத் தக்கவாறு சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் செய்யவும். உடல் ஆடாமல்நிமிர்ந்தமுறையிற் செய்யவும்.
சிறிய பயிற்சி பெரும் பலனைத் தரவல்லது, இப் பயிற்சி யும் வயிற்றுப்புசம், அஜீரணம், தலைவலி இதயவலி முதலிய வியாதியைப் போக்கி இரத்த சுத்தியைத் தருகின்றது.
அடுத்த பல பயிற்சிகளை அடுத்த இதழில் காண்க.

Page 13
22 ஆத்மஜோதி
பேரின்பமும் சிற்றின்பமும்
o
(மாத்தளை - அருணேசர்) 。 懿
உலகத்தில் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு விதங்களில் இன்பம் என்பது பேசப்படுகிறது. பெரும் பான்மையோர் சிற்றின்பத்தை நாடி அதில் தங்கள் வாழ் நாளைக் கழிக்கின்றனர், சிறு தொகையினரே பேரின் பத் தை நாடி உழைப்பவர். சிற்றின்பத்தை நாடுபவர் பேரின் பம் இன்னதெனக் காணுதவராவர். ஆணுல் பேரின்பத்தை நாடுபவரோ சிற்றின் பத்தின் தன்மையைக் கண்டவராவர்.
o
இவ்வாறு இருக்கையிலே, பேரின்பத்தை நாடுபவரைச் சிற்றின்பத்தை விரும்புபவர்கள் பழிக்கிருர்கள். இப்படிப் பழிப்பது தகாத செயலாகும். தான் கண்ட வேம்பின் கனியைச் சுவைக்கும் பெருமிதத்தில் மூழ்கிய ஒருவன், தான் சுவைத்தறியாத பலாப்பழத்தைச் சுவைக்கும் ஒருவ னைப் பழிப்பது போல்வதாம் இது. கூழ் முதலிய அற்ப உணவை உண்டு வருபவன் பாலன்னம் முதலிய உணவு கிடைத்தபோது அவ்வற்ப உணவை விரும்புவான? அல் லது அதனைப் பெரிதெனப் போற்றுவான? அல்லது பாலன் னம் முதலிய உணவு உண்பவரைப் பழிப்பான? - விரும்ப மாட்டான்; பெரிதெனப் போற்ற மாட்டான்; பழிக்கவும் மாட்டான் அல்லவா?
இது போலவே, உலக வாழ்வை மெய்யெனக் கருதிச் T சிற்றின்பம் அநுபவிப்பவன் பேரின்பம் கிடைத்த போது சிற்றின்பத்தை விரும்பமாட்டான்.
விரும்பிய பொருள் கிடைத்தபோது மனம் ஒருமுகப் படுவதால் உண்டாவது சிற்றின்பம். மனம் ஒருமுகப்பட்ட காலத்தில் நிஜவடிவ ஆனந்தம் விளங்கும். இந்த நிஜவ டிவ ஆனந்த நிலை ஒரு நொடிப்பொழுதே நிலைத்திருப்ப தாம். இப்படிச் சிறிது கால இன்ப நிலையை உடையதால் தான் சிற்றின்பம் எனக் கூறப்படுகிறது.
 
 
 
 

ஆத்மஜோதி ' 23
- பேரின்பம் அப்படியல்ல. சதா ஆனந்த நிலையுடன் விளங்குவது. அதாவது - சிறிது போழ்து மட்டும் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் மனத்தை நிறுத்தி நிஜவடிவ ஆனந் தத்தை நீடித்து அளிப்பது. இதனை,
'தினத்தனை யுள்ளதோர் பூவினிற் றேனுண்ணுதே
நினைத் தொறுங் காண்டொறும் பேசுந்தொறு மெப்போதும் அனைத் தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடையானுக்கே சென்று தாய் கோததும் பி'
என்ற மணிவாசகரின் திருவாக்கு நன்கு விளக்குவது காண்க .
* சிற்றின்பம் வெஃகி அறல்ைல செய்யாரே
மற்றின்பம் வேண்டுபவர்'
என்ருர் திருவள்ளுவரும். 5 பிறர்பால் வெளவிய பொ
ருளால் தாமெய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறனல்லாத செயல்களைச் செய்யார், அறத் தினுல் வரும் நிலையுடைய இன்பத்தை நாடுபவர்' என் பது இதன் பொருள். இதில், நாயனர் சிற்றின்பத்தை நிலையில்லாத இன்பம் என்கிருர் பேரின்பத்தை நிலையு டைய இன்பம் என்கிருர், மற்றும் அறனல்லாத செயல்க ளைச் செய்பவர் சிற்றின்பம் நாடியவர் என்றும், அறத்தின் வழியானதாய செயல்களைச் செய்பவர் பேரின்பத்தை நாடி யவர் என்றும் விளக்குகின்ருர், ஆதலினலேதான் ஞானம் கைவந்தவர் சிற்றின்பத்தை நாடி உழலுபவர் கூட்டத்தை விலகியவராய்த் தனிவழியில் நின்று தாயினும் இனிய தயா பரணுகிய இறைவனைப் போற்றுகின்றனர் போலும்.
ஆத்ம இரகசியம்
எவர் எல்லாப் பிராணிகளிடமும் இருக்கிருரோ, ஆயி னும் பிராணிகள் அனைத்தையும் விட வேருனவரோ, எவ ரை எல்லாப் பிராணிகளும் அறிகிறதில்லையோ, எல்லாப் பிராணிகளும் எவருடைய உடலாயிருக்கின்றனவோ, எவர் உள் நின்று எல்லாப் பிராணிகளையும் ஆள்கிருரோ, அவரே உன் ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர். (1 11-7-15

Page 14
24. ஆத்மஜோதி
பகவான் பூறி இராமக்கிருஷ்ணருடைய துறவறச் சீடர்
மகா புருஷ் சுவாமி சிவானந்தர்
27- '67 tot Tatta
வங்காளத்தில் பறசாற் (Barasat) என்னும் இடத்தில் இராம் கான கோஷால் (Ram Kanai Ghoshal) என்ற பெரியார் ஒருவர் இருந்தார் அவர் அந்தணர் குலத்திலுதித்தவர். உத்தமனுக்குரிய பல நற் குணங் கள் அவரிடத்திலிருந்தன. பேரறிஞர் என்று பலர் அவரைக் கூறுவார் கள். நீதி மன்றத்தில் அவர் ஒரு சிறந்த நியாயவாதியாக இருந்து வந் தார். ஏராளமாகச் சம்பாதித்த செல்வத்தை அவர் துறவிகட்கும் வறிய மாணவர்கட்கும் தாராளமாகச் செலவிட்டு வந்தார். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதேனும் அவருக்கில்லை. பிற்காலத்தில் அரசாங்க உத்தியோகத்தரான பொழுது தனது அறச் செயல்கள் சிலவற்றை மனச் சான்றிற்கு எதிராகக் குறைத்தார். ஈற்றில் இராம் கானே கெனச் பிகாரில் உப திவானகக் கடமையாற்றினர் (Deputy Dewara of Behar). பொருட் செல்வம்பெருகிய போதும் அருட் செல்வத்தைப் புறக்கணிக்க வில்லை. பல சாதனைகளைப் பயின்று சிவத்தை சக்தியென வழிபடு முறை யில் தேர்ந்து சிறந்த சக்த தாந்திரிக் சாஸ்திர அறிஞராக விளங்கினர்.
இராம் கானை கோசாலுக்கு வாம சந்தரி தேவி என்ற அம்மை யார் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். கற்பு, அடக்கம், அமைதி, நிறை காப்பு முதலிய பெண்மைகள் வாம சுந்தரி அம்மையாருக்கு அணி கலமாயிருந்தன. இறைவனிடம் இவர் மாருத பக்தி பூண்டு ஒழுகி வந் தார். புதல்வர் ஒருவரை ஈன்றெடுத்து அன்புடன் ஆதரித்து வரும் பொழுது, அப்புதல்வர் மரணமடைந்தார். ஆருத் துயரத்தில் கல்கத்தா விற்கு அருகாமையிலுள்ள தறக்கேஸ்வர் (Tarakeswar) என்னும் இடத் திலுள்ள புகழ்பெற்ற சிவ ஆலயத்திற்குச் சென்று விரதம் கொண்டு மாருத பக்தியுடன் வழிபட்டு வந்தார். சில காலம் சென்ற பின்பு இவ் வம்மையாருக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அக்குழந்தை எதிர் காலத் தில் உலகம் முழுதுக்குமே பரமாசாரியராக வரப் போகிறது என்பதை எவரும் அறிந்திலர். குழந்தை தறக் கேஸ்வர் சிவன் அருளால் பிறந் தது என நினைத்து, சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்ருகிய தறக் நாதர் என்ற பெயரை வைத்தனர் பெற்றேர்.
 
 

ஆத்மஜோதி 25
தவப் புதல்வனைப் பெற்ருேர் தம் கண் இமை போல் கண் காணித் தனர். உண்மை, பெருமை அஞ்சாமை ஆகிய குணங்கள் தறக்நாதரிடம் இளமையில் இருந்தன. விவேகம் இருந்த பொழுதும் ஏட்டுக் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. ஆத்ம சாதனையில் ஆசை காட்டினர். பல சமயங்களில் தியானத்திலேயே இருப்பார். விளையாட்டோ அல்லது களியாட்டமோ அவரைக் கவர்ந்தனவல்ல. அகத்துள்ளே ஏதோ தன் னேத் தூண்டுவது போல் தனிமையை நாடிப் பிரார்த்தனையிலும், தியா னத்திலுமிருப்பார். நண்பர்கள் இவர் குணத்தையறிந்து மதித்தனர். அவரைக் காண்போர் யாவரும் வியப்படைந்தனர். பரசாற் பாடசாலை தலையைாசிரியர் கூறியது பின்வருமாறு:-
" தற்க் நாதருடைய நற்குணங்களும், தூய்மையும் எங்கள் உள்
ளத்தைக் கவர்ந்தன. "
தறக் நாதர் வாலிபப் பருவமடைந்த போது கடவுளையறியும் ஆசை வளர்ச்சியடைந்தது. உயர்தரப் படிப்பிற்குக் கல்கத்தா வந்து சேர்ந்து பிரம்மோ சமாஜ் (Brahme Sama) என்ற சபையைச் சேர்ந்தார். ஆணுல் கடவுளைக் கண்ட குரு ஒருவர் வேண்டுமென்ற ஆசை தறக் நாதருடைய மனதை விடவில்லை.
தந்தையாரின் வருமானக் குறைவைக் கண்டு உத்தியோகம் தேடி டில்லிக்குச் சென்ருர், தறக் நாதர் அங்கே பிறசண்ண என்னும் நண்பருடன் சமயசாதனைகளைப்பற்றிச் சம்பாஷிக்கும்பொழுது சமாதி என்ன என்பதை அறிய ஆவல் கொண்டார். தகூரினேசுவர ஆலயத்தில் வசிக்கும் பரமஹம்ச தேவர் ஒருவரே சமாதி நிலை யை அடைந்துள்ளார் என்று நண்பர் கூறினர். தறக் நாதர் அவரைக் காணவேண்டு மென ஆசைப் பட்டார்.
சில நாட்களின் பின் தறக் நாதருக்குக்கல்கத்தாவிலுள்ள வர்த்தகக் கம்பெனியில் ஒர் உத்தியோகம் கிடைத்தது. கல்கத்தாவில் பூரீ இராமக் கிருஷ்ணருடைய இல்லறச் சீடர் இராமசந்திரதத்தரின் உறவினர் ஒரு வரை நட்புக் கொண்டார். இராமச்சந்திர தத்தரின் இல்லத்தில் பூரீ இராமக் கிருஷ்ணரைக் கண்டார். 'நான் முதல் முறை பூரீ இராம கிருஷ்ணர் சமாதியடைவதைக் கண்டேன். சுயநிலையடைந்ததும் பூரீ
இராமகிருஷ்ணர் சமாதியின் தன்மையைப் பற்றி விரிவாக விளக்கினர்.
இம் மகான் ஒருவர் தான் கடவுளை அடைந்துள்ளார் என்று என் உள்ளத் தில் உணர்ந்தேன்' என்று பிற்காலத்தில் தறக் நாதர் கூறுவார்.
தகூFணேசுவர ஆலயத்தைப் பற்றித் தறக் நாதர் அறிந்திலர். ஆயி னும் நண்பர் ஒருவருடன் ஒரு சனிக்கிழமை தகழினேசுவர ஆலயத்திற் குச் சென்ருர், சென்றதும் பகவான் பூரீ இராம கிருஷ்ணர் தங்கும்

Page 15
26. - ஆத்மஜோதி
இடத்தைத் தேடினர். ஈற்றில் பகவான் தன் ஆசனத்திலிருப்பதைக் கண்டார். பராசக்தித் தாய் குரு வடிவமாக இருப்பதை உணர்ந்தார்.
சிறிது நேரம் சென்றபின் பகவான் 'நீர் உருவமுள்ள கடவுளை நம் புகிறீரா? அல்லது அரூபமுள்ள கடவுளை நம்புகிறீரா? என வினவ "நான் அரூபமுள்ள கடவுளை நம்புகிறேன்' என விடையளித்தார் தறக் நாதர்." அன்னை பராசக்தி பல வடிவம் எடுப்பாள் என்பதை நீ மறுக்க முடியாது என்று சொல்லிப் பகவான் பூரீ இராமகிருஷ்ணர் எழுந்து தறக் நாதரைப் பின் தொடரச் சொல்லிக் காளி கோவிலுக்கு சென்றதும் அன்னைக்கு அஷ்டாங்க நமஸ்காரஞ் செய்தார். "நான் எதற் காகக் குறுகியனண்ணங்களை வைத்திருக்க வேண்டும். இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் எங்கும் உள்ளான் என்ருல் இந்தச் சிலையிலும் நிச் சயமாக உள்ளான்” என்ற எண்ணம் தறக் நாதருடைய மனத்தில் தோன்றியதும், உடனே அஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
பகவான் பூரீ இராம கிருஷ்ணர் தறக் நாதருடைய தெய்வீக சக்தி களையறிந்து'இன்று இரவு இங்கேதங்கும். இடைக்கிடை வருவதில் நிலை யான பயன் அடைய முடியாது, அடிக்க்டி இங்கே வரவேண்டும்,' என்று கூறினர். அன்றிரவைத் தனது நண்பருடன் கழிப்பதாகக் கூறியபடியால் பகவானிடம் மன்னிப்புப் பெற்றுக் கொண்டார். தான் கூறியது G3 LITT (65) அடுத்த முறையும் வந்தார்.
பகவான் பூரீ இராமகிருஷ்ணர் தனது வழக்கத்தில் ஒரு குடும்பத்தை யும் பற்றி விசாரிப்பதில்லை. ஆனல் தறக் நாதரின் குடும்பத்தினரைப் பற்றி மட்டும் விசாரித்தார். தறக் நாதருடைய தகப்பனர் இராம்கான கோஷால் தகSணேசுவர ஆலயத்தில் பகவான் பூரீ இராமக் கிருஷ்ண ரைப் பல முறை சந்தித்தார். ஒரு முறை பூரீஇராமக்கிருஷ்ணரின் உடல் முழுவதும் எரியத் தொடங்கியது. இராம் கானை கோஷால் அதற்கு அச் சரம் ஒன்றை அணியக் கொடுத்தார். அணிந்ததும் நோய் உடலை விட்டு விலகியது. தறக் நாதர் இராம் கானையின் மகனென அறிந்ததும் பக வான் பூரீ இராம கிருஷ்ணர் மிக மகிழ்ச்சியடைந்தார். இராம் கானே ஒருமுறை தகழிணேசுவரத்திற்குவந்தபொழுது பகவான்பூரீஇராமகிருஷ் ணர் தனது பாதங்களினுல் இராம் கானையின் தலையைத் தொட்டார். தொட்டவுடன் இராம் கானை பரவச நிலையடைந்தார்.
மூன்ரும் அல்லது நான்காம் முறை தறக் நாதர் பகவான் பூரீஇரா கிருஷ்ணரிடம் வந்ததும் தறக் நாதரைத் தனியிடம் அழைத்து அவரி நாவில் ஏதோ எழுதி மந்திர உபதேசம் செய்தார் பகவான். தறக்நாதர் மெய் மறந்து முதல் முறை சமாதி நிலையை அனுபவித்தார். நல்லவர் உறவினுல் நல்லெண்ணம் பிறக்கும். பகவானின் உறவினுல் தறக் நா ருடைய உள்ளத்திற் தெய்வீக அனுபவங்கள் பெருகின. அந்நாட்களில்
 

- 27
அவருடைய மனநிலை பின் வருமாறு: "நான் குருதேவரைக்காணும் போ தெல்லாம் அழுகை வரும். ஓர் இரவு காளி ஆலயத்திற்கு முன்னிலையில் நின்று நெடு நேரம் அழுதேன். என்னை அருகில் காணவில்லையென்று குரு நாதர் தேடி வந்தார். என்னைக் கண்டதும் 'கடவுளை நினைத்து அழுவோர் கடவுளின் உதவி பெறுவார். அவ்வாறு விடும் கண்ணிர் முற்பிறப்பின் பாவங்களே அழிக்கின்றன’ என்ருர் . ஒருநாள் நான் பஞ்ச வடியில் தியா னத்திலிருந்தேன். குருநாதர் அவ்விடத்தில் வந்து என்னைப் பார்த்த படியே அசைவற்று நின்ருர் நான் அவரைக் கண்டதும் தாரை தாரை யாகக் கண்ணிர் விட்டேன். ஏதோ என் உடல் முழுவதும் ஊர்வதை உணர்ந்து அசைந்தேன். நான் இந்நிலையடைந்ததைக் கண்ட குரு தேவர் மிகமகிழ்ச்சி கொண்டு,"இது தெய்வீக உணர்ச்சியால் வந்த பயன் என்று அழைத்துக் கொண்டு போய் ஏதோ உணவு கொடுத்தார்.'
நாட்கள் சில கழிய தறக் நாதர் வைத்த நம்பிக்கையும் அன்பும் பெருகின. குருதேவர் ஒருவரே சிறந்த வழிகாட்டி என்று எண்ணினர் தறக் நாதர். தான் இளமையில் நினைத்தவை எல்லாம் பகவானிட முண்டு என்பதையறிந்தார். இதனல், உலக ஆசைகள் மறைந்தன. புற முள்ளவற்றை அவதானியார். தன் உடை முதலியவற்றைக் கவனிக்க மாட்டார். அகத்தே தியானிப்பார். தன்னடக்கத்தைப் பெருக்குவதற் காகவும் தெய்வீக சாதனைக்கு இடையூருக உள்ளவற்றைப் போக்குவ தற்காகவும் கண்களை அரைவாசி மூடிக் கொண்டே நடப்பார். தாயொ ருத்தி தன் சேயிடம் வைத்திருக்கும் அன்பை விடச் பூரீ இராம கிருஷ்ண ரின் அன்பு பன்மடங்கு பெரியது.
பிற்காலத்தில் ஒரு பக்தனுக்கு எழுதும் பொழுது “இராமக் கிருஷ் னர் கடவுளா? அல்லது பெரியாரா? என்பதைப் பற்றி நான் இன்னும் சரியான முடிவிற்கு வரவில்லை. ஆனல் அவர் முற்றும் துறந்த ஞானி. அன்பின் அவதாரம்; காலஞ் செல்லச் செல்ல நான் அவரின் தெய்வீக வாழ்வையறிய, அவரைக் கடவுளுக்கு மேலானவரென்றே உணர்கின் றேன். அவர் பட்ச பாதமின்றி எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டித் துன்ப நிலையை நீக்கி, மனிதன் சாந்தி அடையத் துன்பத்தைக் காண வேண்டுமென விரும்புகிருர், உலக மக்களின் நன்மையைக் கருதுகின்ற அவர் போன்ற மகானை இவ்வுலகம் காணவில்லை.
தறக் நாதர் வறுமையின் காரணத்தாற்றனது சகோதரிக்காக மாற் றுக் கல்யாணம் செய்தார். ஆனல் தான் லெளகீக கருமங்களில் ஈடுபடு வதில்லையென உறுதிகொண்டார். இதையறிந்த பகவான் 'நீ ஏன் அச்ச மடைகின்ருய்? நான் உதவி புரிவேன். உனது மனைவி இருக்கும் வரை யும் அவருடைய தேவைகளைக் கவனிக்க வேண்டும். பொறுமையுடன் இரு; அன்னே (காளி) எல்லாவற்றையும் சரியாக்குவாள்'. குரு தேவரின்

Page 16
28 ஆத்மஜோதி
கட்டளைப் படியே ஒழுகினர் தறக் நாதர். தறச் நாதருடைய Llyfr ffuLu Tri விரைவில் இறைவனடி சேர்ந்தார். இல்லறத்தில் இருந்த பொழுதும் தற்க் நாதருடைய மனத்தில் சிற்றின்ப ஆசைகள் சிறிதேனுமில்லை.
மனைவி இருந்த போதும் தூய பிரமச்சரிய விரதத்தைக் கடைப் பிடித்தார். “உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்புக்கோர் வித்து' என்னும் பொய்யா மொழிக்கு அணிகலமானர் தறக் நாதர். இதையறிந்து சுவாமி விவேகானந்தர் தறக் நாதரை "மகா புருஷரென அழைத்தார், அன்று தொடக்கம் எல்லோரும் தறக் நாதரை "மகாபுருஷ் மகாராஜ்' என்றே அழைப் பார்கள். தவம் ஒழுக்கம் உடையவர்க்கே பொருந்தும். 'தவமும் தவமுடையார்க்கே ஆகும்' என்ருர் வள்ளுவர். வாழும் உலகம் இத் தன்மையானது; எது நிலையுள்ளது; எது நிலையற்றது என்பதை யறிந்த தறக்நாதர் துறவறமே வாழ்க்கைக்கு வேண்டிய பெருமை யைத் தரும் என்று நம்பினர். ஆகையால் துறத்தலை விட உயிருக்கு மேலானதில்லையென எண்ணித் தறக்நாதர் சந்நியாசியாக விரும்பித் தன்னுள்ளிருக்கும் எண்ணத்திைத் தந்தையாருக்குத் தெரிவித்தார். தந்தையார் ஆனந்தக் கண்ணிர் விட்டு மகனைத் தாங்கள் வழிபடும் குடும்பத் தெய்வத்தை வணங்கச் சொன்னர். தறக்நாதர் அட்டாங்க நமஸ்காரம் செய்ய, தந்தையார் மகனை ஆசீர்வதித்து, 'நீ கடவுளை அடைவாயாக! நானும் கடவுளை அடையச் சிரமப் பட்டேன். துறவ றத்தை நாடினேன். ஆனல் அது கைகூடவில்லை. நீ கடவுளை அடை வாயெனப் பிரார்த்திக்கிறேன்' என்று ஆசீர்வதித்தார். மகிழ்ச்சி யடைந்த தறக்நாதர் தகழிணேஸ்வர ஆலயத்திலிருந்த பூரீ இராம கிருஷ்ணரிடம் நிகழ்ந்தவற்றைக் கூறப் பகவான் மகிழ்ச்சியுடன் அனு மதித்தார். பகவானின் வேண்டுகோளுக் கினங்கிச் சில காலம் இரா மச் சந்திர தத்தரின் இல்லத்திற் தங்கினர், தறக்நாதர். ஆனல் தகFணேசுவரத்திற்கு அடிக்கடி வந்து தனது குருதேவரைச் சந்திப் பார். 1885 ஆம் ஆண்டில் பூரீ இராமக்கிருஷ்ணரைச் சிகிச்சையின் பொருட்டு முதல் கல்கத்தாவிற்கும் பின்பு காசிப்பூருக்கும் அழைத்து வந்து விட்டார்கள் சீடர்கள். அவருக்குப் பணிவிடை செய்வதற்கா கத் தறக்நாதரும் மற்றச் சீடர்களும் முன்வந்தனர்.
காசிப்பூரில் சில மாதங்கள் கழிந்தன. இவர்கள் வசித்த காசிப் பூர் சிறந்ததோர் தபோவனமாக மாறிவிட்டது. அரிய தத்துவங்க ளேப் பற்றிச் சிலர் ஆராய்ச்சி செய்தனர்; சிலர் ஆழ்ந்த தவத்திலி ருப்பார்; பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு பரவச மடைவர் சிலர்; இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு ஆனந்தக் கூத் தாடி அருள் விருந்தாடினர் வேறு சிலர். இப்படிப் பட்டவருள் தறக்
 

ஆத்மஜோதி 29
நாதரும் வேறு சில இளைஞர்களும் பிரபஞ்ச வாழ்க்கையின் பற்றை ஒழித்தவர்கள்.
காசிப்பூர் தோட்டத்திற் பெரிய மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஆராய்ச்சி நடந்தது. பகவான் புத்தரின் வர லாறு, தறக் நாதரையும், சுவாமி விவேகானந்தரையும், சுவாமி அபே தானந்தரையும் முற்றும் கவர்ந்தன.
ஒருநாள் மூவரும் யாருக்கும் சொல்லாது புத்த காயாவை நோக் கிப் புறப்பட்டனர். கர் (டாவில் வெள்ளரச மரத்தின் கீழ் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தனர். ஆழ்ந்த தெய்வீக உணர்ச்சியால் நரேந் திரநாதர் (சுவாமி விவேகானந்தர்) கண்ணிர் விட்டு அருகில் நிஷ் டையில் இருந்த தறக்நாதரைக் கட்டித் தழுவினர். பகவான் புத் தர் தறக்நாதருடைய உடலில் நுழையத் தனது அகக் கண்ணுல் கண் டாரென சுவாமி விவேகானந்தர் சொல்வகை, சுவாமி அபேதானந் தர் கேட்டார். சிலநாட்கள் காயாவில் தங்கியிருந்து வேண்டியவாறு நிஷ்டை புரிந்தபின் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
)
ஆவணிமாதம் 1886 ஆம்ஆண்டில் பூரீ இராமக்கிருஷ்ணர் மகாசமாதி யடைந்த பிறகு அவருடைய இளஞ் சீடர்கள் மண்ணுலக வாழ்வை வெறுத்தனர். மண்ணுலக வாழ்வு கனவுபோல் கடிதில் கடந்து போய்விடுமென்று அவ்விளைஞர்கள் உணர்ந்தனர். குருதேவரின் பெரு வாழ்வைப் பின்பற்றித் தாங்களும் அவ்வாறு புனிதமாயிருக்க வேண் டுமென்றெண்ணித் தீர்மானித்தார்கள். கல்கத்தாவிற்கு அருகாமை யில் வராஹநகர் என்னும் அமைதியான இடத்திற் குடியிருக்கப் பழங் கட்டிட மொன்று கிடைத்தது. இதுவே அவர்களின் தபோ வனமானது. தறக்நாதரும் இத் தபோவனத்திற் சேர்ந்தார். சகோ தர சீடர்களுடன் கடுந் தபசில் ஆழ்ந்தார். சிலகாலம் கழிந்தது. இவர்கள் எல்லோரும் முறைப்படி சந்நியாசிகளானர்கள். கறக்நா தர் சுவாமி சிவானந்தர் என்னும் பெயர் பெற்ருர் . ஆனல் இவரை எல்லோரும் மகா புருஷ் மகா ராஜ் என்றும் மகா புருஷ் சிவானந் தர் என்றும் அழைத்தனர்.
வராஹநகர் மடத்திலிருந்து தேச சஞ்சாரஞ் செய்ய வெளியில் புறப்பட்டார். அவர் சென்ற இடங்களுள் குறிப்பிடத்தக்கவை காசி, காயா, பிருந்தாவனம், அலகாபாத், கேதார் நாத், பத்திரிநாத், அல் மோரு ஆகியவைகள். அல்மோருவில் (E. T. Study) E. T ஸ்ரேர்டி என்ற ஆங்கில அறிஞரைச் சந்தித்தார். மகாபுருஷ் சிவானந்தரிடமே சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை இங்கி லாந்தில் தருமப் பிரச்சாரம் செய்ய வரவழைத்து ஏற்ற ஒழுங்குக ளையுஞ் செய்தார்.

Page 17
30 t ஆத்மஜோதி சுவாமி விவேகானந்தர் 1897ஆம் ஆண்டில் மேல்நாட்டிலிருந்து திரும்பியதும், மகா புருஷ் சிவானந்தர் " மதுரைக்குச் சென்று வர வேற்ருர், பின்பு சுவாமி விவேகானந்தரின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கையில் வேதாந்தப் பிரச்சாரம் செய்ய வந்தார். இலங்கையிற் பூரீமத் பகவத்கீதை, இராஜயோகம் ஆகிய வகுப்புக்கள் நடத்தினர். மகா புருஷரின் மேன்மைகளை முன்னிட்டுப் பல இந்துக்களும் மேல் நாட்டறிஞரும் அவரைச் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். திருமதி பிக்கற்றுக்கு (Mrs, Picket) ஹரிப்ரியா என்ற நாமத்தை வழங்கி னர். மகா புருஷரின் கட்டளைப்படி ஹரிப்பிரியா அவுஸ்திரேலியா விலும், நியூசிலாந்திலும் வேதாந்தப் பிரச்சாரம் செய்து புகழ் பெற் றனர். கொழும்பு விவேக னந்த சபையை அமைத்த பின் மகா புருஷ் சிவானந்தர் தலைமை மடாலயத்திற்குத் திரும்பினர். இமாலயத்திற் குச் சென்று மீண்டும் ஆழ்ந்ந நிஷ்டையில் அமர்ந்தார். இமயகி தில் ஒரு மடாலயம் அமைக்கும்படி சுவாமி விவேகானந்தர் வேண் டிக் கொண்டார். சுவாமி விவேகானந்தர் வாழ்நாளில் இதைய மைக்க முடியவில்லையாயினும் மகா புருஷர் 1915 ஆம் ஆண்டில் ஒரு மடாலயத்திற்கு அத்திவாரம் இட்டனர். இம் மடாலயம் சுவாமி துரியானந்தரின் உதவியால் பூர்த்தியாயிற்று.
1900ஆம் ஆண்டில் சுவாமி விகோனந்தருடன் இமாலயத்திலுள்ள மாயாவதி என்ற புனித இடத்திற்கு மகா புருஷர் சென்ருர், திரும்பி வரும் பொழுது சுவாமி விவேகானந்தர் மகாபுருஷரை 'பிலிவிற்’ என்னும் இடத்திற் தங்கி வேலூர் மடாலயத்திற்குப் பணம் "திரட் டச் சொன்னர், மகாபுருஷர் அவ்வாறே தங்கிப் பணந் திரட்டினர்.
சுவாமி விவேகானந்தர் மகா சமாதியடையு முன் விங்க நாட்டு மகாராஜா ரூ. 500 வேதாந்தப் பிரச்சாரத்திற்காகக் கொடுத்தார். சுவாமிகள் அப்பணத்தை மகா புருஷரிடம் கொடுத்துக் காசியில் ஒரு மடாலயம் அமைக்கும்படி சொன்னர். அவ்வாறே 1902ஆம் ஆண் டில் மகாபுருஷர் காசியில் ஒரு மடாலயம் அமைத்தார். இங்கே பல இடையூறுகள் நேர்ந்த போதும் மகாபுருஷர் மனந் தளர்ச்சியடைய வில்லை, மடத்திலுள்ளோர் உணவைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிடைத்த உணவைப் புசித்து விட்டுத் தியானத்திலேயே காலத்தைக் கழித்து வந்தார்கள். இவ்வளவு இன்னல்கள் இருந்த போதும் மகா புருஷர் வறிய மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார்.
இந்நாட்களில்தான் சுவாமி விவேகானந்தருடைய சிக்காகோ பிர சங்கங்களை இந்தி மொழியில் மொழி பெயர்த்தார். சிறிது காலத் திற்குப் பின் வேலூர் மடத்திற்குத் திரும்பினர். 1910ஆம் ஆண்டில்
மகாபுருஷர் காஷ்மீரிலுள்ள அமர்நாத் மலைக்குச் சுவாமி பிரேமானந்
தர், சுவாமி துரியானந்தர் ஆகியோருடன் சென்ருர், திரும்பி வந்
 
 

ஆத்மஜோதி 3.
ததும் மகா புருஷர் வேலூர் மடாலயத்தின் உப தலைவராகத் தெரி யப்பட்டார். சுவாமி பிரேம்ானந்தர் மகா சமாதியடைந்ததும் வே லூர் மடாலயத்தின் முகாமை மகா புருஷரின் பொறுப்பாயிற்று. 1922ஆம் ஆண்டில் சுவாமி பிரமானந்தர் மகாசமாதி யடைந்ததும் மகா புருஷ ர்பூரீ இராமக்கிருஷ்ண மடாலயத்திற்குத் தலைவரானார். மடாலயத்தின் தலைவராக முன் கீழ் வங்காளத்திற் பலருக்கு மந்திர உபதேசம் செய்தார். )
1924ஆம் ஆண்டுக்கும் 1927ஆம் இடையே ஆண்டுக்கும் இருமுறை தென்னிந்திய தேச சஞ்சாரம் செய்தார். இத் தேச சஞ்சாரம் செய் யும் பொழுது பம்பாய், நாகப்பூர், ஊட்டி ஆகிய இடங்களில் பூரீ இராமகிருஷ்ண மடங்களைத் திறந்து வைத்தார். பலர் மகாபுருஷரை அணுகி மந்திர தீட்சை அளிக்கும்படி வேண்டினர்கள். அவர்களின் விருப்பத்திற் கிணங்கித் திட்சை கொடுத்தார். நீலகிரிமலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்திலிருக்கின்றது. அவ்விடத்தின் இயற்கை யழகும் சுவாத்தியமும் நிஷ்டையில் இருப்பதற்கு உசித மாக இருந்தன. இங்கே ஒரு மடால்யம் அமைக்க விரும்பினர் மகா புருஷர். அங்கே நிலம் வாங்கும்படி சில பக்தர்களை வேண்டினர். பெரியோர் எதை நினைத்தாலும் அவை நடைபெறுகின்றன. மடா லயம் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் நிலத்தை ஒரு பக்தர் வழங்கி னர். அந்தப் பக்தருக்கு அவரது இஷ்டதேவதை கனவில் தோன்றி 'விரைவில் மடாலயம் அமைப்பதற்கு நிலம் தேடி உன்னிடம் ஒரு வர் வருவார். கட்டாயமாகக் கொடுக்க வேண்டும் என்று மூன்று நாட்களாக அவருக்குத் தெய்வம் ஞாபகமூட்டியது. அதனுலேயே அவர் நிலம் வழங்கி உதவினர். அந்த நிலத்தில் மடாலயம் அமைக் கப் பட்டது. அங்கே மகா புருஷர் அற்புத ஞான நிலையை அனுப வித்தார். 'நீலகிரி மலையை நான் பார்த்த வண்ணம் இருந்தேன். அவ்வாறு இருக்கும் பொழுது என் உடலிலிருந்து ஒரு பிரகாசமான ஒளி வெளியே செல்வதைக் கண்டேன். ஒளி பெருகி உலகம் முழு வதையும் மறைப்பதையும் கண்டேன். ஊட்டியில் தங்கும் பொழுது பலர் மகா புருஷரைக் காண வந்தனர். உயர்ந்தோர், தாழ்ந்தோர், செல்வர், வறியவர், இந்துக்கள், இஸ்லாமியர் எல்லோரும் திரண்டு வந்தனர். பம்பாய் மகானத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணுெ ருத்தி மகா புருஷரைக் கண்டு தன்னை அவர் கைகளால் ஆசீர்வதிக் கும்படி வேண்டினள். ஊட்டியை விட்டுப் பிரியும் போது அப்பெண் கண்ணிர் விட்டாள்.
1930 ஆம் ஆண்டு தொடக்கம் இம் மகா புருஷரின் உடல் நலம் குறையத் தொடங்கியது. ஆனல் அவரது தெய்வீக சாதனைகள் சற் றும் குறையவில்லே, அரசியலை வெறுத்தார். ஆனல் காந்தி, நேரு,

Page 18
32 - ஆத்மஜோதி
ν போன்றவர்களின் தியாகத்தை மெச்சினர். மனமென்னும் மலரிலே யுள்ள ஈசனையுணர்ந்து எவ்வேலையிலும் ஈடுபடலாமென்று எல்லோரை யும் வற்புறுத்துவார்.
மகா புருஷர் இராமகிருஷ்ண மடாலயத்திற்குத் தலைவராயிருக் கும் பொழுது மந்திர தீட்சை வேண்டுவோர் எல்லோருக்குங் கொ டுப்பார். மந்திர தீட்சை கொடுப்பதோடு நில்லாமல் சீடர்களின் ஆத்மீக வளர்ச்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுவார். இவரது காலத்தில் இராம கிருஷ்ண மடாலயங்கள் பல இந்தியாவில் மட்டு மின்றி, மேல் நாட்டிலும் பல இடங்களில் உருவாயின. இவ்வாறு தொண்டு புரிந்து 1934 ஆம் ஆண்டு மாசி மாதம் மகா சமாதிய டைந்தார், ஜீவ காருண்யத்தில் புத்தர் போன்றும், உயர் ஞானத் திற் சங்கரர் போன்றும், பக்தியில் நாரதர் போன்றும், அன்பில் ஏசு நாதர் போன்றும் அவதரித்தவராவர்.
'பகவத் பக்திகொண்ட பக்தர்களுக்காகவே பகவான் உலகத்திலவதாரம் செய்கின்ருர், அவதார புருஷரோடு வருபவர்கள் நித்திய முக்தர்களாவது, கடைசி ஜென்மம் எடுத்தவர்களாவது இருப்பார்கள். ' -
மறீ இராமகிருஷ்ண உபதேசம்.
ಶ್ದಿತ)-೧೬೧೬, ೫-೩-೧೫೫೬#ಣ್ಣ: 藝 வெளிவந்து விட்டது! Y
歌 ஆத்மஜோதி மலர்
t
விலை 2.50 - (தபால் செலவு தனி) 斐 இம் மலரின் மூவர்ண அட்டையை யோகர் 婆 7 சுவாமிகளின் திவ்ய உருவம் அலங்கரிக்கிறது. 唇
மலரினுள் ஆத்மீகக் கருவூலங்கள் ஞான . 斐 மணம் பரப்புகின்றன. 监 桑 கிடைக்குமிடம் - ஆத்மஜோதி நிலையம், 辰
நாவலப்பிட்டி, 狐
斐 歌需烹煮荔烈
蠶
 

ஆத்மஜோதி 33 : அப்பரின் அருள் வரலாறு :
இ(வித்துவாட்டி வசந்தா வைத்தியநாதன்)இ இ9இ9%- சென்ற இதழ்த் தொடர்ச்சி -இ9இ%இ9% விடம் உண்ணச் செய்தல்
பின்னர் அவர்கள் ஒன்று கூடி, "நம்மிடம் கற்ற மந் திரத்தினலேயே நீற்றறையிலிருந்து உய்ந்தான். இனிக் கொடிய விடத்தை அவனுக்கு ஊட்ட வேண்டும்' என்று துணிந்தனர். அரசனும் அதற்கு உட்பட்டான். உடனே அக் கொடியோர் விடம் கலந்த பாற்சோற்றை உண்ணும் படி செய்தனர். நாவுக்கரசரும் நஞ்சுண்ட நம்பனை நினைந்து ‘எம்பெருமானது அடியார்களுக்கு நஞ்சும் அமுதே ஆகும்’ எனக் கூறி உண்டார். நஞ்சு தீமை விளைக்கவில்லை.
* பொடியார்க்குந் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கண் முடிவாக்குந் துயர்நீங்க முன்னேவிடம் அமுதாணுல் படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ?’’
மதயானையை ஏவுதல்:-
கொடிய நஞ்சும் பயனற்றுப் போனதைக் கண்டு மத யானையை ஏவிக்கொல்ல முடிவு செய்தனர். அவ்வாறே அரசனது இசைவைப் பெற்று யானையை அவிழ்த்து விட் டனர். குன்றனைய களிறும் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டோடியது. பாகர்களைப் பரலோகத்திற்கு அனுப் பியது. கட்டிடங்களை இடித்துத் தகர்த்தது. ஊழித்தீ போன்று வெருண்டு ஓடியது. அதன் எதிரே திருநாவுக்க ரசர் நிறுத்தப்பட்டார். வெகுண்ட வேழம் தன்னை நோக்கி ஓடி வருவதை வாகீசர் உணர்ந்தார். சிறிதும் அஞ்சாது ‘சுண்ண வெண் சந்தனச் சாந்து' என எடுத்துப் பாடி அடிதோறும் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதியாதொன்றுமில்லை, அஞ்ச வருவது மில்லை எனக் கூறினர்.
அதுபோது மதங்கொண்ட யானையும் அவரடி பணிந் தது. தம்மை ஏவிவிட்ட சமணர்களையும் குத்துக்கோற்

Page 19
34 * * ஆத்மஜோதி
காரர்களையும் மிதித்தும் கிழித்தும் கெர்ன்றது. இடுக்கண் விளைக்க நினைத்தவர்களுக்கே இடுக்கண் விளைந்தது.
கல்லுடன் கட்டிக் கடலிற் பாய்ச்சுதல்
யானையிடமிருந்து தப்பிய சமணர்கள் ஒன்று கூடிக் காவலனின் தாள் பணிந்து, திருநாவுக்கரசர் மீளாதவாறு கல்லுடன் கடலில் தள்ள வேண்டும் என்று விண்ணப் பிக்க, வேந்தனும் உடன்பட்டான். திருநாவுக்கரசரும் கல்லுடன் பிணிக்கப்பட்டுக் கடலில் தள்ளப்பட்டார். அப் பொழுதும் மனங்கலங்காத அப் பெருமகனர் * சொற் றுணை வேதியன்' என அற்றம் காக்கும் அஞ்செ ழுத்தின் பெருமையினை உள்ள உறைப்புடன் பரவினர். உடன் கயிறு அறுந்தது. கல் தெப்பமாகி மிதந்தது. வா கீசரும் அதன்மீது வீற்றிருந்தருளினர்.
நல்வினை, தீவினை ஆகிய கயிறுகளால், ஆணவம் என் னும் கல்லுடன் பிணிக்கப்பட்டு
'அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்
பிறவாழி நீந்தல் அரிது’’
என்று வள்ளுவர் பெருமானுல் பேசப்படுகின்ற பிறவி யாகிய பாவக் கடலினின்று நம்மை உய்விப்பது அஞ்செ ழுத்து. அது ஒரு சிறிய கல்லைக் கரையேற்றுவது வியப் பன்று என்று சேக்கிழார் பெருமான் குறிக்கின்றர்.
'இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ'
தோன்றத் துணையாரின் தரிசனம்
திருநாவுக்கரசரும் ‘திருப்பாதிரிப்புலியூர்' என்ற தலத் திற்கு அண்மையில் கரையேறினர். (இவ்விடத்தைக் கரை யேற விட்ட குப்பம் என்று இன்று வழங்குகின்றனர்.) பின்பு ஆலயத்திற்குச் சென்ருர், திங்கட்க் கொழுந்தணி செஞ்சடைப் பிரானைப் பணிந்தார். 'ஈன்ருளுமாய் எனக்கு எந்தையுமாய்' என எடுத்து 'தோன்றத் துணையாய்

ஆத்மஜோதி 35
இருந்தனன் தன்னடியோங்கட்கே' என்று தோன்றத்துணை யாரைப் போற்றிப் பரவினர்.
பின்பு திருமாணிக்குழி, திருத்தினைநகர் என்னும் தலங் களையும் தரிசித்துக் கொண்டு திருவதிகை வந்தடைந்தார். அங்கு நகர மக்கள் அனைவரும் தமது இல்லங்களையும் வீதி களையும் நன்கு அலங்கரித்து வாக்கின் மன்னவரைக் கோ லாகலமாக வரவேற்றனர். அன்னரும் இடையருது பொ ழிகின்ற கண்ணீர் வெள்ளத்துடன் திருக்கோயிலினுள் புகுந்து வெறிவிரவு ‘கூவிளம்" என எடுத்து 'இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே' என ஏழைத் திருத்தாண்டகத் திருப்பதிகத்தால் அதிகைக் கிறைவனை அடிபணிந்து உழவாரப் பணி புரிந்து வந்தார்.
பல்லவன் சைவனுதல்
இதற்கிடையில் திருநாவுக்கரசர் நிகழ்த்திய அற்புதங் களால் காடவர் கோனின் மனம் சைவத்திற்குத் திரும்பி யது. வீட்டு நெறி உணராத சமணர்களின் மொழிகள் கள் யாவும் பொய் என உணர்ந்த குணபரன், பாடலி புரத்திலுள்ள சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து அக் கற்களைக் கொணர்ந்து திருவதிகையில் 'குணபரவீச் சரம்' என்ற திருக் கோயிலைக் கட்டுவித்து, சிவபெரு மான் திருவடிகளில் அழுந்திய பக்தி பூண்டு, மக்களையும் சிவமாம் செந்நெறியிலே ஒழுகச் செய்தான்.
சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப் பெறுதல்
வாகீசப் பெருந்தகையும் திருவெண்ணெய் நல்லூர்,
திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய தலங்களை
வணங்கி, திருத்துரங்கானை மாடமாம் திருப்பெண்ணுகடத் தை அடைந்தார்.
திருக்கோயிலினுள் சென்று துரங்கானைமாடச் சுடர்க் கொழுந்தைத் தரிசித்து 'புன்னெறியாம் அமண் சமயத் தொடக்குண்ட இவ்வுடலுடன், யான் உயிர் வாழ விரும் பேன். ஆகையால் யான் உயிர் தரிக்கும் பொருட்டு நின் இலச்சினை இட்டருள்' எனக் கசிந்துருகி

Page 20
36 ஆத்மஜோதி
பொன்னுர் திருவடிக்(கு) ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி
செய்யும் என்னுவி காப்பதற்(கு) இச்சையுண் டேல் இருங் கூற்று(அ - OG 6A) மின்னுரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண் (டல்
துன்னுர் கடந்தையுள் தூங்கானே மாடச் சுடர்க்கொழுந்தே
என்ற திருப்பதிகம் பாடினர்.
சிவபெருமானின் திருவருளாணேயின் வண் ணம் ஓர் சிவபூதம் யாரும் அறியாமல் சூலக் குறியையும் இடபக் குறியையும் தோள்களிலே பொறித்துச் சென்றது. அக மகிழ்ந்த வாக்கின் மன்னவரும் எம்பெருமானின் திரு வருளினை வியந்து திருத்தவ யாத்திரையினைத் தொடர்ந் தார்.
O
தில்லைத் தொல்லோன் தரிசனம்
பின்பு அடிகளாரும் திருவரத்துறை, திருமுதுகுன்றம் முதலிய திருத்தலங்களை வணங்கி, தில்லைநகர் வந்தடைந் தார். பின் வேத ஒலியும் கீத ஒலியும் முழங்குகின்ற எழு நிலை கோபுரங்களைக் கடந்து பொற்சபையினை அடைந்தார். அங்கு ஆனந்த நடனம் புரியும் அம்பலவாணரது எழில் நலத்தை ஆரப் பருகினர். குனித்த புருவத்தையும் கொவ் வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும் பவளம் போன்ற மேனியில் பால் வெண்ணிறும் அணிந்த பெம்மானது, -
ஒன்றியிருந்தும் நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற்கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய்
என்று உவந்தாய் என்று வினவுகின்ற திருக்குறிப்பினே வியந்தார். பிறகு 'கருநட்ட கண்டனை' என்னும் திருவிருத் தமும் பத்தணுய்ப் பாடமாட்டேன்’ என்ற திருநேரிசை யும் பாடிப் பணிந்தார். "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்ற திருக்குறுந்தொகையையும் பாடினர்.
 

ஆத்மஜோதி 37
த
அதன்பின் ருவேட்களம், திருக்கழிப்பாலை முதலிய தலங்களைத் தரிசித்து மீண்டும் தில்லைக்கு வந்து 'பனைக்கை மும்மத வேழ முரித்தவர்' என்று எடுத்து 'அம்பலக் கூத் தனத் தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனே' என்னும் திருக்குறுந்தொகையையும் அடியார்க்கு எளிவந்து உத வும் இறைவனது கருணைத் திறத்தை வியந்து 'அரியான அந்தணர் தம் சிந்தையானை' என்னும் பெரிய திருத்தாண் டகத்தாலும் இறைவனைப் போற்றினர். பின்பு பொன் னம்பலத்துள் நடமிடும் ஐயனைக் கண்டு 'செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும்' என்னும் திருநேரி சையும் பாடி மகிழ்ந்தார்.
அருட்கடலும் அன்புக்கடலும்
சிவபெருமானது திருவருளால் உமை முலைப்பாலுண்ட ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரைக் காண வாகீ சர் விரும்பினர். தில்லையினின்று திருநாரையூர் வழியாக சீர்காழியை வந்தடைந்தார். சூலை நோயின் மூல மாக இறையருள் பெற்ற திருநாவுக்கரசரின் வருகையை அறிந்து திருஞானசம்பந்தரே சென்று வரவேற்ருர், வாக்கின் மன் னவரும் புகலிக் கன்றும் ஒருவரை யொருவர் வணங்கித் திருக் கோயிலினுள் புகுந்தனர். இருபெரும் குரவர்களது சந்திப்பினைச் சேக்கிழார் பெருமான்
அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஒங்கும் பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் இரண்டெனவும் புவனம் உய்ய இருட்கடுவுண் டவர் அருளும் அகில மெல்லாம்
ஈன்றள்தன் திருவருளும் எனவும் கூடித் தெருட்கலைஞர னக்கன்றும் அரசுஞ் சென்று
சஞ்சடைவா னவர் கோயில் சேர்ந்தார் அன்றே
என அழகாகக் குறிப்பிடுகின்ருர்,
ஆலயத்துட் சென்ற இருவரும் வலம் வந்து இறை வன வணங்கினர்கள். திருஞானசம்பந்தர் அப்பர் பெரு மானை நோக்கி நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக’ என்ருர், அது கேட்ட அரசும் பார் கொண்டு மூடி என்ற திருப்பதிகத்தால் தோணியப்பரையும் பெரியநாயகி

Page 21
38 " ஆத்மஜோதி
அம்மையையும் துதித்து, சின்னுள் திருஞ்ானசம்பந்தருடன் உறைந்து பின்பு சிவ தல யாத்தின்ர செய்யும் விருப்பால் விடைபெற்றுப் புறப்பட்டார். ஞானசம்பந்தப் பெருமா னும் அவரைத் திருவோலக்கா வரை சென்று வழி அனுப் பினுர்,
திருவடி தீட்சை ?
அப்பர் பெருமான் திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீரூர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், திரு நனிபள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருக் கோடிக்கா முதலிய தலங்களைத் தரிசித்துத் திருவாவடு துறை வந்தடைந்தார். "ஆவடுதண் துறையாரை அடைத் துய்ந்தேன்’ என்ற கருத்துள்ள திருத்தாண்டகம், திருநே ரிசை, திருச்சந்த விருத்தம் ஆகிய செந்தமிழ்ப் பாமாலை கள் தொடுத்து ஆண்டவனுக்குச் சாத்தினர். அங்குநின்று திருஇடை மருதூர், திருநாகேசுவரம், திருப்பழையாறை முதலிய தலங்களைக் கடந்து திருச்சத்திமுன்றம் வந்தடைந் தார். அங்கு சிவக்கொழுந்தீசரையும் உமையம்மையை யும் வணங்கி 'கோவாய் முடுகி’ என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன், பூவார்ந்த உமது சேவடியினை என் தலைமேல் வைத்தருள்க’ என்ற கருத்தமைத்த திருப் பதிகம் பாடினர். இறைவனும் இவரைத் திருநல்லூர்க்கு வா என அருளினுர்,
இறைவனது ஆணையினைச் சிரமேற்ருங்கி அப்பரும் சென் முர். சிவபெருமானும் தமது திருவடிகளை அவரது சென் னியின் மிசைச் சூட்டினர்.
நன்மை பெருகு அருள் நெறியே வந்தணைந்து நல்லூரின் 10 ன்னுதிருத் தொண்டனுர் வணங்கிமகிழ்ந் தெழும் பொ ழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்ருேம் என்றவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினுன் சிவபெருமான்
ஆளுடை அரசும் 'நினைந்துருகும் அடியாரை" என்ற திருத்தாண்டகம் பாடி இறுதியில் "திருவடியென் தலை மேல் வைத்தார் நல்லூரெம் பெருமானுர் நல்லவாறே எனப் போற்றிப் பரவினர். பின்பு திருக்கருக்கோவூர்,திருவா

ஆத்மஜோதி 39
ரூர்ப் பசுபதீச்சரம், திருப்பாலைத்துறை முதலிய தலங்க ளைத் தரிசித்துப் பின் திருப்பழனம் பணிந்து திங்களுரை அடைந்தார்.
அப்பூதி அடிகளின் மகனைப் பாம்பு தீண்டல்
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பவர் திருநாவுக்கர சர்பால் பேரன்பு கொண்டு தாம் நடத்தும் தண்ணிர்ப் பந்தல், தமது இல்லம், மக்களனைவருக்கும் திருநாவுக்கரச ரது திருப்பெயரினையே சூட்டி யிருந்தார் திங்களுரைய டைந்த வாகீசரும் அப்பூதி அடிகளாரது மனையினையடைந் 3595 (Tifli .
அடிகளாரைக் கண்ட அப்பூதியார் மகிழ்ச்சிக் கடலில் முக்குளித்தார். தமது இல்லத்தில் திருவமுதுண்ண அழைத் தார். அப்பரும் இசைந்தார். திருவமுதும் தயாராகியது. அப்பூதி அடிகளாரும் தமது மூத்த மகனுகிய மூத்த திரு நரவுக்கரசை அழைத்துத்'திருவமுது படைக்க வாழையிலை அரிந்து வரும்படி ஏவினர். அவ்வாறே வாழை இளங்கு ருத்தை அரியும் பொழுது நாகம் தீண்டி மைந்தன் உயிர் துறந்தான். இதை அறிந்த பெற்றேர்கள், மைந் ந்தன் இறந்ததை அறிந்தால் அ டி க ள் அமுதுண்ண மறுப்பர் என அஞ்சி இறந்தவனை மறைத்து வைத்தனர்.
திருநாவுக்கரசரும் திருவருளின் திறத்தினுல் நிகழ்ந்த தை அறிந்து சவத்தைத் திருக்கோயிலின் முன் கொண ரச் செய்து 'ஒன்று கொலாம் என்ற பதிகம்பாட விடம் இறங்கியது. குழந்தையும் துயில் நீங்கி எழுவதைப்போல எழுந்தான். மைந்தன் உயிர் பெற்றெழுந்ததைக் குறித்து மகிழாமல் நாவுக்கரசர் அமுதுண்ணக் காலம் தாழ்ந்து விட்டதே என்று அன்பின் திருவுருவாம் அப்பூதியார் கலங் கினர். அவரது வருத்தத்தை மாற்ற எண்ணி, அப்பரும் திருவமுது கொண்டு சில நாட்கள் அவருடன் தங்கியிருந் தார். - தொடரும்
அவர் காணப்படாமற் காண்பவர், கேட்கப் படாமற் கேட்பவர், நினைக்கப்படாமல் நினைப்பவர், அறியப்படா மல் அறிபவர். அவர் அன்றி காண்பவர் இல்லை. அவர் அன்றி கேட்பவர் இல்லை. அவர் அன்றி நினைப்பவர் இல்லை. அவர் அன்றி அறிபவர் இல்லை. அவரே உன் ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர். (111-7-23) -உபநிடதம்.

Page 22
4
O
இ
ஆத் மஜோதி
(கணேஷ்)
ஒருசிறிது பொழுதுமுனை நினேயாதே உணதருளைப் பெறமனதில் விழையாதே பெருகிவளர் சிறுமைகளை மகிழ்வாகப் பெறமுயல்வன் புவியிலவை பெரிதாக; மருவுகுற மகள் மணந்த மலையோனே! மலே மகளின் புதல்வ இருள் கடிவோனே! மருளகல எனது மனத் தெழவேண்டும்; மனதிலிருள் விலகஒளி தரவேண்டும்.
எனதறிவின் சிறுமைதனை யுணராமல் எழில்பெருகு முனதியல்பை யறியாமல் வினைபெருகப் புவியில்நிகழி செயல்யாவும் வெறுமறிவில் தெரியுமென உளtதில் நினைவன்.உனே நினைப்பவர்கள் இருள்மீதில் நீந்துபவர் எனஎண்ணி இறுமாந்தேன். தினமுமுன தொளி மனதில் விழவேண்டும் திருநடன மிடுமுதல்வன் புதல்வோனே!
உலகதனில் உளபொருட்கள் தனிலெல்லாம் உளமழிய மயங்கிடுவேன் தினமெல்லாம்; அலேயுமென துளம்பொன்பெண் புவிமீதே அவை மனதில் தருமிடர்கள் சிலவோதா?
உலேயிலிடு மெழுகுஎன உருகாமல்
உனேயழுது தொழுதுபெற நினே யாமல் நிலைதவறி உலகில்விழுந் தழிவேனே! நினதடிகள் தமைநினைந்து எழுவேனுே?
மலைமகளின் மடிதவழு மிளையோனே! மழலைதவ ழ் குழவிநிலை பெறவேண்டும். அலைகள் நிறை குமுறுகடல் எனதுள்ளம்; ஆசையெனும் புயலினிடை உயிர்வள்ளம் நிலைதவறி நெறிபிசகி விழுமுன்னே நினதடிகள் தமையடைந்து விடவேதான் கலைதவழு மலேகளுறை கதிர்வேலா! கடிதி லுன தருளேயெனக் கருள்வாயே!
ருள் கடியும் கதிர்வேலா!
 
 

ஆத்மஜோதி நிலைய வெளியிடுகள்
தெய்வீக வாழ்க்கைச் சங்க் மலர் ... l-25 ழரீ கதிரை மணி மாலை (பரமஹம்சதாசன்) . - 50 தீங்கனிச்சோலை is 9 ... 2-50 அறிவுரைக்கதைகள் (சுவாமி சிவானந்தர்) . - 65 நாஞர்? 9 y ... - 25 இளங்கோவின் கனவு (செ. நடராசன்) ... 2ー25 ஆத்மநாதம் (சுத்தானந்த பாரதியார்) . 3-00 கீதா யோகம் ... 2-50 பாட்டாளி பாட்டு y sy ... l-50 கூட்டு வழி பாடு 9 to o - 30 கந்தரநுபூதி (பொழிப்புரையுடன்) ... - 25 மார்கழிப் பாடல் [.. - 20 நவராத்திரிப் பாடல் 9 om op -30 ஆத்மஜோதி மலர் ... 2-00
வாய்வு சூரணம்
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கட்டு, மலபந்தம், அஜிர்ணம், கை கால் அசதி, பிடிப்பு, பசி யின்மை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்த சூலை, புளியேப் பம், நெஞ்சுக் கடுப்பு முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த சூரணம்.
தபால் செலவு உட்பட டின் ஒன்று 4 ரூபா 25 சதம்
- (பத்தியமில்லே
சம்பு இன்டஸ்ட்ரீஸ் - அரிசிப் பாளயம் சேலம் -9 (S. 1.1
இலங்கையில் கிடைக்குமிடம்:- ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி
போன் - 353
மலாயாவில் கிடைக்குமிடம்:- -9 ரீ கணபதி & கம்பெனி,
66, பெல்பீல்டு ஸ்ட்டிரிட், ஈப்போ P, O. (மலாயா.1

Page 23
Registered at the G. P. O.
qAAAAAAAASLLLLSAAAASMM A SeS ASeMAMASeMM AeSM AMSeBMSAeLeSASASLSSASSASeSMAMAS SAMASeS MSAMeSeMAMSAAAA
சந்தா ாே
அன்புடையீர்,
இன்று உங்கள் கையில் வது சுடர் கிடைக்கின்றது. ஜோதியின் புத்தாண்டுச் ச மூலம் உங்கள் ஜோதிக்குத் 556TT55
இந்தியாவிலுள்ள அன்
வழக்க
R. வீரசம்பு, ச அரிசிப்பாளை என்ற விலாசத்திற்கு அனுட
ஆத்மஜோ நாவலப்பிட்டி
(31 jT6
AMMAMAeMALeMALM AeMMALM ASeLMAS AeSLMASALASAAeSASALASSLAAA ஆத்மஜிே
நீங்கள் எதிர்பார்த்திரும் வந்து விட்டது. மலரினுள்6ே யார்களின் கருத்துக்கள் உங்க றைம்பது பக்கங்களிலும் விளங்குகின்றன. முகப்பில் குருநாதன்' மூவர்ணப் பட அவரை நினைப்பவர்க்கெல்லா விலை தபாற் செல ஆத்மஜோ நாவலப்பிட்டி
G3 ITC
qSASeSASSASSASSASSASLSSASLSSASLSSASLSSASeS ASeMSA0SLLS AeSLLLSAAAASLS AAAAASLLLSAAA இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலைய திரு. நா வினுயகமூர்த்தியால் அச்

as a Newspaper. M. L. 59/300
SBSBLSSASLSSASSASAqqSASSASSMSSAAAAAAS AA AAAASMSAAASS AAAASLSASMSASMSSASSASSAMSeSSAMAeSMSAAAAS گے
$யர்களுக்கு
பதினுருவது ஆண்டு முதலா இத் தீபாவளித் திருநாளிலே ந்தாவை அனுப்பி வைப்பதன் தீபாவளிப் பரிசினை அளிப்பீர்
பர்கள் தமது சந்தாக்களை
Lb GUIT Gij
ம்பு இன்டஸ்ரீஸ், ாயம், சேலம்-9
ப்பி வைக்க வேண்டுகின்ருேம்,
ாதி நிலையம்,
திலோன் , 沅 一 353
SBSAeSeLSSSAASSASSASSASSASSASSASSASSASSASSASSATSATASATAASASASS
ஜாதி மலர்
த 'ஆத்மஜோதி மலர்' வெளி ா நாற்பதுக்கு மேற்பட்ட பெரி 5ளுக்கு விருந்தாகின்றன. நூற் ஆத்மீகக் கருத்துக்கள் சிறந்து > என்னே எனக்கறிவித்த எங்கள் டத்துடன் காட்சி தருகின்றர். ம் பரகதி உண்டு. வுட்பட 2-50 ஆகும்
தி நிலையம்,
--
T – 3 5 3 ව-~~~~~~~~~~~~~~ ந்தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் சிட்டு வெளியிடப்பெற்றது.17-11-63