கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.12.16

Page 1
:× !影 £* いkm
·km 父 徽 Skmの km
2S
:
徽 kmみ km 遵 km :
><><><><><><><><><><><><><><><><><><><><><>灘
R
MAYA 溢 Š,š,5 % 23:33
德
リ
**
慧
リ
遂 };
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÈÈ
熊
王骞
あ
羲
s
مقالا
臀
芬
凌
氹
穹 酱 * at ASA 羲濠濠 Sa KE3%82NGESØGK622&27 ES 烹 SAKA
St.
III
溪

Page 2
今伞伞伞今伞今→今→今今***********++++***++++++++++-+
O O ஆத்மஜோதி
| ஒ
ர் ஆத்மீக மாத வெளியிடு)
4
RÈ
今一伞伞→→→→→今→+++命令→++*→今→令令今→→→令→伞→+++→今→→→+→+→+→+++++++今+→令→
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
ஜோதி - 16 சோபகிருதுவரு மார்கழிமீ" 1உ (16-12-63) சுடர் 2
பொருளடக்கம் 1. திருவாசகத் திருவாசகங்கள் 41. 2. மணிவாசகர் புகழ் மாலை 42 3. வெண்ணிறு அணிகிலாதவரைக் கண்டால் நாம்
அஞ்சு மாறு 43 4. ஓங்காரமாய் விளங்கும் நாதன் 48 5. தியானமே தெய்வீக மார்க்கம் 56 6. பிரம்மச்சர்யத்தின் பெருமை 59 7. தன்னடக்கம் 61 8. விழித்தெழுந்தேன்! 63 9. மணிவாசகர் காட்டும் அரன் திரு அருளும் அகப்
பொருட்பாடலும் 64 10. அன்பே சிவம் 68 11. கலியுக வாழ்க்கை 72 12. அப்பரின் அருள் வரலாறு (தொடர்ச்சி) 76
ஆத்மஜோதி சந்தா விபரம்
qSTLSS LSASLSSMSLLSMqSASLSSLSLSSLSLSSLMTLSSSLSSSLSqLS SSSLSSSSSSLSSSSSSLSSS ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் = திரு. நா. முத்தையா t "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி. (சிலோன்] ... . .4
தொலைபேசி எண் 353
 
 
 
 
 

డ్ట్ و باورزی
gh Louio
O திருச்சிற்றம்பலம்
6) I Tagged வாசகங்கள் o@¶ಆಳ್ತ ಶ್ಲ(gouTತ್ನ!
வாழ்கின்றம் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்
பாழ்கின்றய ஆழாமற் காப்பான யேத்தாதே
ழ்கின்ருய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்ருய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே.
ஆடுகின்றிலே கூத்துட்ை யான்கழற் கன்பிலே என்புருகிப் பாடுகின்றிலே பதைப்பதும் செய்கிலே பணிகிலே பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின் றதுமிலை துனேயிலி பிணநெஞ்சே தேடுகின்றிலே தெருவுதோறல றிலுேசெய்லு தொன்றறியேனே.
சிவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடி லிதுசிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.
தவமே புரிந்திலன் தண்மல ரிட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம் பவமே யருளுகண் டாய் அடி யேற்கெம் பரம்பரனே.
வருந்துவன்நின் மலர்ப்பாத மவை காண்பான் நாயடியேன் இருந்துநல மலர் புனேயேன் ஏத்தேன்நாத் தழும்பேறப் பொருந்தியபொற் சிலகுணித்தாய் அருளமுதம் புரியாயேல் வருந்துவனற் றமியேன்மற் றென்னேநான் ஆமாறே.
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூ கேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.
ဒွိုဝ့် ညှိနိူ

Page 3
s
42 ஆத்மஜோதி
மணிவாசகர் புகழ் மாலை
★ \ \x++K\x+\-X\>{-\★★★※--XX挙★→×
எழுதரு மறைக டேரு விறைவனை எல்லிற் கங்குற் பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணிருண் மூழ்கி அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம்.
எழுதிடும் வேலே பூமேல் இருப்பவன் இயற்றப் போக்கி
எழுதுதல் இல்லா நூல்சொற்று இனிதமர்தரு மாதேவை
எழுதெழு தெனப்பல் பாச்சொற்று இயைதரப் பெயரும் ஈற்றில்
எழுதிடச் செய்த கோமான் இணையடி முடிமேல் வைப்பாம். 2
யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா தகலரா வணையான் பூவா 1ணுதியர் நானுட் கொள்ளச் சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகமே சார்ந்
தகலரா தரியா வாதவூரர் தாள்சார்ந்து வாழ்வாம், 3
பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண் டாசிலெழி றடித்தயர வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிகவிளைவான் வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில்போற்றி. 4
அத்தணுர் பெருந்துறைபுக் கரியவினைக் கடல்கடந்து புத்தணுர் மதங்கடிந்து புனிதமா கியசீவன் முத்தனுர் மாணிக்க வாசகனுர் முத்திக்கு வித்தனுர் வாதவூர் வித்தகனுர் தாள்போற்றி.
தேனூறும் வாசகங்கள் அறுநூறும் திருக்கோவை நானூறும் அமுதூற மொழிந்தருளும் நாயகனை
வானூறும் கங்கைநிகர் மாணிக்க வாசகனை யானுாறு படாதவகை இருபோதும் இறைஞ்சுவனே. 6
长大 +<→ 大x- 大半
 
 
 

ஆத்மஜோதி 43 *வெண்ணிறு அணிகிலாதவரைக் கண்டால்
நாம் அஞ்சுமாறு -(ஆசிரியர்)-
அச்சம் என்பது மனித இயற்கைக் குணங்களில் ஒன்று. 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்பது வள்ளுவர் வாக்கு அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சியே ஆகவேண்டும். மரண பயம் மக்களிடையே பரவலாக உள்ளது. தான் யார் என் பதை அறியாமையினலும் மரணம் என்ருல் என்ன என்பதை
“ஒவ்வொரு செயலிலும் உனது கடைசி முடிவை நினைத் துக்கொள்’ என்பது இயேசுநாதருடைய வாக்கு. மரண பயத்தை நினைவூட்டி மனிதனை "நல்லவனுக்குவதற்கு வழி காட்டுகிருர்,
உடம்பே, தான் என்று உணர்பவன் மரணத்துக்கு அஞ்சுவான். ஆன்மாவே , த என் என்று உணர்பவன் மரணத் துக்கு அஞ்சமாட்டான். மரணம் என்பதுமலையினும் பெரிது, மயிரினும் சிறிது. பயந்தவனுக்கு மரணம் மலையினும் பெரி தாகிறது. பயமற்றவனுக்குத் துரும்பாகிறது. மரணத்தைப் பற்றிக் காந்தியின் சில கருத்துக்களைப் பார்ப்போம்.
* ஒட்டம் பிடித்துவிட்டால் யமனை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணுவது மடமை. அவனைக் கேடு செய்யும் தேவ தையாக எண்ணுவதைவிட்டு நன்மையருளும் கடவுளாகக் கருதுவதே நல்லது. அவன் எப்பொழுது வந்தாலும் சரி, அவனை வரவேற்கத் தயாராக இருக்கவேண்டும். இறுதியில் இறக்கத்தான் போகிருேம், ஆயினும் அந்தநேரம் வருமுன் ஏன் இறந்து சாகவேண்டும்?
உண்மையாகவே பற்றற்றவர்கள் மரணத்துக்குப் பின் என்ன நிலை என்று அறியக் கவலைப்படமாட்டார்கள், அத் தகைய ஆசை உண்டாவது கூடத்தவறே. ஆதலால் நியூமென் என்னும் கிறிஸ்தவ ஞானியினுடைய பெயர் பெற்ற கீதத் தில் காணப்படும் கீழ்க்கண்ட மொழிகளே உண்மையைக் கூறுவனவாகும்.

Page 4
44 ஆத்மஜோதி
“இறைவனே நான் இறுதியை அறிய விரும்பவில்லை, இப்பொழுது செய்ய வேண்டியதைக் காட்டினல் போதும்.'
இறக்கவேண்டிய நேரம், இடம், முறை முதலியன முன் கூட்டியே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ எனக்குத் தெரியாது, எனக்குத்தெரிந்ததெல்லாம் அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதே. என்றேனும் ஒருநாள் இறக்கவேண்டியதாக இருப்பதால் இப்பொழுது வந்துவிடு மோ என்று சஞ்சலப்படவேண்டாம். உடம்பைச் சாகாமல் இருக்கச் செய்யக்கூடிய மருந்தை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை. சாகாமலிருப்பதென்பது ஆன்மாவிற்கே உரியலட்சணமாகும். அது நிச்சயமாய் அழியாது. அதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முயல்வதே மனிதனுடைய dis L60). D,
மணிவாசகப்பெருமானர் அச்சப்பத்து என்று ஒருபதிக மே பாடியுள்ளார். உலகத்துமக்கள் அஞ்சுவன சிலவற்றைக் கூறி அவற்றுக்குத்தாம் அஞ்சுவதில்லை என்றும், உலகத்து மக்கள் அஞ்சாதிருக்கும் சிலவற்றைக்கூறி அவற்றுக்குத் தாம் அஞ்சுவதாகவும் கூறியுள்ளார். அரவு, பொய்யர் மெய், வேட்கை வினைக்கடல், வேல்கடைக்கண், கிளியனர் கிளவி, கிளியனர்முறுவல், பிணி, பிறப்பிறப்பு, எரி, வரைபுரள்வது, பழி, சாவு, களிறு, புலி, இடி, மன்னருறவு, கோனிலா வாளி, கூற்றுவன்சீற்றம் இவற்றுக்குத்தாம் அஞ்சுவதில்லை என்றும் அஞ்சுவன பின்வருவனவென்றும் குறிப்பிடுகின்ருர்,
மற்றுமோர் தெய்வம் உண்டென நினைந்து எம் மாற்கு அற் றிலாதவர்' "திருவுரு அன்றிமற்றேர்தேவர் எத்தேவர் என அருவராதவர்" 'பத்தி இனிது அருள் பருக மாட்டாதவர்' "பாதம் நண்ணித் துணி உலாம் கண்ணராகி தொழுதுளம்
நெக்கு இங்கு அணியிலாதார், !
"தொழும்பரோடு அழுந்தி நீறு அணிகிலாதார்’
‘தாள் ஏத்தி மலர் புனைந்து நையும் ஆள் அலாதவர்' "பாதம் ஏத்தி அக நெகாதவர்
கழல்கள் ஏத்திச் சிறந்தினிதிருக்க அறிவிலாதவர் திருமுண்டம் தீண்ட அஞ்சுவார்’
 
 
 
 

ஆத்மஜோதி 45
நினைந்து நைந்துருகிக் கண்சோரவாழ்த்தி நின்று ஏத்த O அறிவிலாதவர்"
வெண்ணிறு அணிகிலாதவரைக் கண்டால் அச்சம் என் கின்ருர் மணிவாசகப்பெருமானார். வெண்ணிறு அணிபவர் இந்துக்கள் மாத்திரமே. அவர்களுள்ளும் பாதிப்பேர்தானும் அணிகின்ருர்களோ இல்லையோ அறியேம் உலகத்தில் முன் னுாறு கோடி மக்கள் இருக்கின்ருர்களே. நீறணிப வர் பதி
னைந்து கோடி என்று வைத்துக்கொண்டாலும் மிகமிகப்
பெருந்தொகையினரைக் கண்டு அஞ்ச வேண்டியுளது என் றல்லவா பொருள்படுகிறது.
விபூதி என்பதற்கு மேலானநிலை அல்லது மேலான செல் வம் என்பது பொருள். அழுக்கற்றது; மலம் அற்றது; பரிசுத் தமானது; என்பதும் பொருள். முடிசார்ந்த மன்னரும் மற் றும் உளோரும் முடிவில் ஒருபிடி சாம்பராவர் என்று விளங்க வைப்பது விபூதி. தான் உடல் என்று நினைப்பவனே நீ உட லல்ல, உடல் ஒருபிடி சாம்பராகிறது; நீ ஒளிபெற்ற ஆத்மா என்று விளக்குவது. இக்கருத்துணர்ந்து விபூதி தரியாதவர் தம்மையறியாதவராவர். ஆகவே அவர்களைக்கண்டு அஞ்சு கிருர் மணிவாசகப்பெருமானர். நாமும் அவர் வழி நின்று அஞ்சவேண்டும்.
முத்திதருவதுநீறு, முத்தியை அடைவதற்குரிய தந்தி ரத்தைக் கூறுவது நீறு; முனிவரணிவது நீறு பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்தது நீறு, எமது பிறப்பின் இலட்சி ரயத்தை நிறைவேற்றி வைப்பதே நீறு. ஆகவே அத்தகைய நீற்றை அணிந்து தம்மைப் பரிசுத்தராக்கிக் கொள்ளாதவ ரை மணிவாசகப் பெருமான் அஞ்சினர். அவர் வழி நின்று நாமும் அஞ்சுவோமாக.
சிவாயநமவென நீறணிந்தேன் தருவாய் சிவகதி என நாவுக்கரசுப் பெருமான் மிடுக்கோடு கேட்கின்ருர், சிவாய நமவென நீறணிதல் தமது கடமையெனவும் சிவகதியை கொடுத்தல் பெருமானரின் கடமை எனவும் உணர்த்துகிருர், கடமையைச் செய்தவன் உரிமையைப் பெறுவதற்கு உரிய வன். ஆகவே வெண்ணிறனிதலாகிய கடமையைச் செய்ப வர் சிவகதிபெறுதலாகிய உரிமையை அடைகின்றர். ஆகவே தமது கடமையைச் செய்யாதுஉரிமையை விழைபவரை மணி வாசகப் பெருமான் காண்பதில் அச்சமுறுகின்ருர், அவர் வழி நின்று நாமும் அஞ்சுவோமாக,

Page 5
46 ஆத்ம ஜோதி
கண்ணின் பயன் காணுதல்; காதின் பயன் கேட்டல் போல நெற்றியின் பயன் நீறணிதலாகும். நீறில்லா நெற்றி பாழ்' என்பது பெரியோர் வாக்கு. நெய்யில்லா உண்டி எவ்வாறு சிறப்படைவதில்லையோ! ஆறில்லாத ஊர் எவ்வாறு அழகு பெறுவதில்லையோ அவ்வாறே நீறில்லா நெற்றியும் பாழாகும். எண் சானுடம்பிற் சிரசே முக்கியமானது. அச் சிரசிலும் நெற்றி முக்கியமானது. அழகிய நெற்றியை அழ குக்கு அழகு செய்வது வெண்ணிறு, வெண்ணிறு அணிந்து நற்றியைப்பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளாதவரைக்கண்டு
மணிவாசகப்பெருமான் அஞ்சுகின்ருர் அவர் வழி நின்று
நாமும் அஞ்சுவோமாக.
விபூதியைப் பார்த்த உடனே எமக்கெல்லாம் இறைவனு டைய ஞாபகமே வருகின்றது.இறைவனே வெண்ணிறனிந்த செம்மேனியனுக விளங்குகின்றன்; விபூதியைக் காணுந்தோ றும் பேசுந்தோறும் பூசுந்தோறும் இறைவன் நினைவே உண் டாகின்றது. விபூதி அணிந்து செல்பவன் தான் இறைவனை நினைப்பதோடு தம்மைப்பார்ப்பவரையும் இறைவனை நினைக் கச் செய்கின்றன். மனித வாழ்க்கையில் ஒவ்வொரு தோற் றம் ஒவ்வொரு நினைவை உண்டாக்குகின்றது. விபூதித்தோற் றம் இறைவன் நினைவை உண்டாக்குகின்றது. தனக்கும் பிறர்க் கும் தூய நினைவாம் இறைவன் நினைவை உண்டாக்கும் விபூதியை அணியாத வரைக் காண மணிவாசகப்பெருமான் அஞ்சுகின்றர். அவர் வழி நின்று நாமும் வெண்ணிறணிகிலா தவரைக் காண அஞ்சுவோமாக.
பிணியை நீக்குவது; பிறப்பை நீக்குவது; இறப்பை நீக்கு வது விபூது, யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு
என் கடவேன் என்று ஒரிடத்தில் கூறியவர் இங்கு பிறப்பி
னேடு இறப்பும் அஞ்சேன் என்று கூறினர். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சவேண்டியதில்லை. ஏனென்ருல்பிறப்பையும் இறப்பையும் விபூதியினலே இல்லாமல் செய்யலாம். விபூதி இருக்கும்வரை பிணிக்கும் அஞ்சேன்; பிறப்பு இறப்புக்கும் அஞ்சேன் என்பது பொருள். விபூதி அணிபவர் எல்லாம் சிவ னடியார்கள். சிவனடியார்கள் எல்லாம் சிவத்தொண்டு செய் பவர்கள். சிவனடியாரோடு கூடிவாழ்தல் வாழ்வில் தலை சிறந்த வாழ்வாகும். அத்தகைய சிறந்த வாழ்வையளிக்கும்
விபூதியை அணியாதவர்களைக்கண்டு மணிவாசகப்பெருமான் 4
அஞ்சுகின்றர். அவர் வழி நின்று நாமும் அஞ்சுவேஈமாக,
 
 
 
 

ஆத்ம ஜோதி " 47
இப்போ மணிவாசகப்பெருமானரின் திருவாசகத்தை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அனுபவியுங்கள்.
பிணிஎலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினுேடு இறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னுன்தன்
தொழும்பரோடு அழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்தும் காணுச்
சேவடி பரவி வெண்ணிறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
திருக்கேதீசுவரத்தில்
திருவாசகவிழா.
எதிர்வரும் மார்கழி மாதத்தில் திருவெம்பாவைத் தினங்கள் பத்திலும் திருக்கேதீஸ்வரத்திலுள்ள திருவாசக மடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் எடுக்க விருக்கும் திருவாசகச் சிறப்பு விழாவில் கூட்டுப்பிரார்த்தனை, திருவாசகம் ஒதுதல், தியானம், புராணபடனம், பக்திப் பாடல்கள், திருவாசகச் சிறப்புப் பற்றிய சொற்பொழிவு கள் ஆகியன நடைபெறும்.இவ்விழாவில் இந்திய அறிஞர்கள் சிலரும் பங்குகொள்ளுகின்றனர்.
விழா நடைபெறும் பத்துத் தினங்களிலும் திருக்கே தீஸ்வரத்தில் உறைவிட, உணவு வசதிகளும் ஏற்படுத்த இறையருள் பாலித்துள்ளது.
விசேடமகாநாடு 27-12-63 முதல் 29-12-63 வரை

Page 6
48 ஆத்மஜோதி ஓங்காரமாய் விளங்கும் நாதன்.
(மட்டுநகர்: ஏ. பாக்கியமூர்த்தி - ஆசிரியர்)
பண்டைத் தமிழ் நன் மக்கள் இறைவனை இயற்கை யிலும், திருவுருவத் திருமேனிகளிலும், ஒலியிலும் கண்டு வழிபாடாற்றி வந்தார்கள். இயற்கையில் அழகைக் கண் டார்கள். அவ்வழகு கைபுனைந்தியற்ருக் கவின் பெறு வனப் பாக இருந்தது. அதைப் புனைந்த பெரும் பேரழகனை முருகன் என்று பெயரிட்டு வணங்கினர்கள். மெய்யடியார் கள் மெய்ப்பொருட் காட்சியை விரும்பினர்கள் அன்னர் வேண்டியவாறு பற்பல வேடங்களில் காட்சி கொடுத்தான் எம்பெருமான். அவை இன்று திருக்கோயில்களில் இறை வன் தன் திருவுருவங்களாக வழிபாடாற்றப்பட்டு வருகின் றன. மக்கள் ஒவாது ஒலித்துக் கொண்டிருக்கும் ஒசையை உற்றுக்கேட்டார்கள். ஆராய்ந்தார்கள். ஆதிமுதல்வனை அறிந்தார்கள். இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட விடயம் இறைவன் ஓங்காரமாய் விளங்குவதும் அத்தத்து வத்தின் உட்பொருளுமேயாகும்.
'ஒசை ஒலியெலாம் ஆணுய் நீயே’ என்ருர் திருநா வுக்கரசர், ஒம் என்னும் ஒசை எழுத்தொலிகட் கெல்லாம் முதல்வதாயும், எல்லா எழுத்துக்களோடு விரவியும் அகத் திலும் புறத்திலும் ஒவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடற்கரைக்குச் சென்ருே அன்றேல் பெரும் காட்டகத்துச் சென்ருே அன்றேல் திறந்த வெளிக்குச் சென்ருே உற்றுக் கேட்போமானுல் எங்கும் ஒம் என்னும் ஒசை ஒலிப்பதைக் கேட்கலாம். ஏன்? ஓர் வெறும் செம்பையோ, குடத்தை யோ நம் காதோடு பொருத்திக் கேட்போ மானுல் அவ் வோசையைக் கேட்கலாம். இவையெல்லாம் நாம் புறத்தே கேட்கும் ஒசை. நம் இருகரங்களாலும் வெளியோசை உட் செல்லா வண்ணம் இரு காதுகளையும் இறுகப் பொத்தினுல் புறத்திலே ஒலிக்கும் அதே ஓங்கார ஒசை அகத்திலும் ஒலிப்பதைக் கேட்கலாம்.
அவ்வோசை எத்தன்மைத்தது, எங்கிருந்து வருவது என்னும் இன்னேரன்னவற்றை ஆராயப் புகுந்தனர் பலர். அவருட் சிலர் வெற்றி கண்டனர். அவ்வருள் ஞானிய ரின் கூற்றுக்களை இங்கு ஆராய்வாம்.
 
 
 

ஆத்மஜோதி 49
1. ஒம் தமிழ் மொழிக்கே உரியது.
ஒம் என்னும் சொல் ஒர் தனித் தமிழ்ச் சொல். ‘ஓ’ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு ஒசை, ஒலி, ஒதை என்னும் ஒசையைக் குறிக்கும் சொற்கள் தமிழி லேயே அதிகம் உண்டு. ஆனல் வடமொழியில் அவ்வா றில்லை என்று மொழிநூல் வல்லார் கூறுகின்றனர். இதைத் தமிழ்மறை பழமறை என்ருேதும். வடமறை பிர ணவம் எனக்குறிக்கும். ஒம் என்பதற்கு முண்டகம் முதலிய உபநிடதங்கள் கூறும் வரிவடிவம் தமிழிலேயே இருக்கின்ற தென்று இருமொழியிலும் பாண்டித்தியம் பெற்ற பேராசிரி யர் கா. சுப்பிரமணிய பிள்ளை தனது ஆராய்ச்சி நூல்க ளிற் கூறிப் போந்துள்ளார்.
இறைவன் திருநான் மறைகளின் முடிவிலும் ஓங்கார மாகவே விளங்குகிருன் என்று தமிழ்மறை உணர்த்துகிறது தாயுமான அடிகளார்
‘தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே - தெட்சணுமூர்த்தியே சின்மயானந்த குருவே' என மொழிகின்ருர், சிவன் மறைகளின் முடிவில் இருப்பதால், எம்பெரு மானுக்கு மறைக்கொழுந்து என்று ஒர் பெயருண்டு.
தமிழர் தம் முழுமுதற் பெரும் பொருளாகிய சிவ
பெருமான் தெற்கு நோக்கி வந்து ஆல நிழலின்கீழ் அறம்
முதல் நான் கினையும் அருந்தவத்தோருக்கு உபதேசித்தான் என்று திருமுறைகள் ஒதுகின்றன.
அறம் முதல் நான்கும் யாதென ஆராயப் புகின் பண்டை நூற்பயனும் அறம் பொருள் இன்பம் வீடு என் னும் நான்குமே யல்லது வேருெ?ன்றில்லை என்பது விளங்கா நிற்கும். இந் நாற் பொருளையே இறைவன் உபதேசித் தான் என்பதை
“சுழித்த கங்கை தோய்ந்த திங்கட்
.ொல்லரா நல்லிதழி

Page 7
50 ஆத்மஜோதி
சழித்த சென்னிச் சைவ வேடந்
தானினைத் தைம் புலனும் அழித்த சிந்தை யந்தணுளர்க்
கறம் பொருளின்பம் வீடு மொழித்த வாயான் முக்களுதி
மேயது முதுகுன்றே'
என வரும் திருஞான சம்பந்தப் பெருமானின் திரு வாக்கால் அன்பர்கள் அறிந்து கொள்வார்களாகுக.
சைவம் தமிழர் தம் தனி மதம். சைவ வேடம் பூண்ட எம்பெருமானும் தன் உபதேசத்தைத் தமிழிலேயே நிகழ்த் தியிருப்பான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தமி ழில் எம்பெருமான் தமிழர் தம் திருநான் மறைகளாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் உட் பொருளையல்லாமல் வட நூல்கள் கூறும் ஆரியரின் நால் வேதங்களை உபதேசித்திரான் என்பது அங்கையங்கனி,
எனவே ஒங்காரம் தமிழுக்கே உரிய தென்ருல் அதைத் தன் முடிந்த முடிபாகப் பெற்றிருக்கும் திருநான்மறைக ளும் தமிழுக்கே உரியதாகும். முருகன் தன் தந்தைக்குப் பழமறையின் உட்பொருளைத் தமிழிலேயே உபதேசித்தான் என்பதை
'கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத்
தெரியக் கொஞ்சித் தமிழாற் பகர்வோனே’’ எனவரும் திருப்புகழ் அடிகளால் நன்கு விளங்கும்.
மேலும் ஒசைகள் எல்லாம் காதினுற் கேட்கப் படுப வை. ‘ஓ’ என்னும் எழுத்தை நம் காதோடு ஒப்பிட்டுப் *T பாருங்கள். இரண்டும் ஒத்த வடிவினதாக அமைந்திருப்ப தை நாம் அவதானிக்கலாம். ‘ஓ’விற்கு வரிவடிவு கொடுத்த நம் மூதாதையரின் மதிநுட்பத்தை என்னவென்று புகழ் வது.
முடிவாக 'ஓம்' என்னும் பழமறை தமிழுக்கே உரிய தென்பதையும் அது சைவத் திருமுறைகள் பன்னிரண்டி லும் விரவி நிற்கின்ற தென்பதையும் தனித்தமிழ் மாமுனி வர் மறைமலையடிகள் தாம் இயற்றிய திருவாசக விரிவு , ரையில் பின்வருமாறு கூறுகிருர், W
 

ஆத்மஜோதி 51
‘எல்லாம் ஒதர்துணர்ந்த திருஞான சம்பந்தப் பெரு மான் அருளிச் செய்த முதன் மறையின் முதற் பதிகத் தின் முதலில் 'தோடு' என்பதன் கண் தகர வொற் றின் மேல் ‘ஓ’ என்னும் எழுத்தும், பன்னிரண்டாந் திரு முறையாகிய திருத்தொண்டர் புராணத்து இறுதியின்கண் 'உலகெலாம்' என்பதின் ஈற்றில் மகரவொற்றும் நின்று தமிழ்ப் பன்னிரண்டு திருமுறைகளும் ஓங்காரத்தின் பால தென்பதனை இனிதுணர்த்துகின்றன.
2. ஒங்காரத்தின் தத்துவம்.
'ஓம்' என்னும் சொற் பிறப்பதற்கு அ உ ம் என்னும் மூன்று எழுத்துக்களின் சேர்க்கை வேண்டப்படுகிறது. இதை அகர ஓங்காரம், உகர ஒங்காரம், மகர ஒங்காரம் என் பர். இம் மூன்று ஒங்காரங்களும் திருவருட் சக்தி உயிர்க ளின் மேல் அன்பு மேலீட்டினல், செய்யும், ஆக்கம் அளவு இறுதி என்னும் மூன்று திருவருட் செயல்களையும் குறிப்ப é95 TTGĢ5 LD.
'அ' என்னும் எழுத்து மற்றெல்லா எழுத்துக்களும் பிறப்பதற்குத் தாயகமாகவும் எல்லா எழுத்துக்களோடு சேர்ந்தும் நிற்கிறது. இவ்வெழுத்தை உச்சரிப்பதற்கு எவ் வித சிரமமும் வேண்டியதில்லை. வாயைத் திறந்த உட னேயே ‘அ’ பிறந்து விடுகிறது. இது எம்பெருமான் உயிர் கள் மேலுள்ள அன்பினுல் அவை உடல் பெற்று உலாவும் படியான படைத்தற் தொழிலைக் குறிக்கிறது.
'உ' என்னும் எழுத்தை உச்சரிப்பதற்கு நாம் உத டுகள் இரண்டையும் குவிக்கின்ருேம். குவிக்கப்பட்ட உத டுகளினிடையே ஒசை சிறுபொழுது தங்கி நிற்பதையும் அவதானிக்கலாம். இது படைக்கப்பட்ட உயிர்கள் உடம்பு, உறுப்பு, இடம், நுகர் பொருட்கள் முதலியவற்றை அனு பவித்து ஒரு குறிப்பிட்ட காலம் உயிர் வாழ வைக்கும் காத்தற் தொழிலைக் குறிப்பதாகும்.
‘ம்‘ என்னும் எழுத்து உச்சரிக்கப்படும் போது உத டுகள் மூடி விடுவதை நாம் அவதானிக்கலாம். சிறிதுகா லம் வாழ்ந்த உயிர்கள் குறிப்பிட்ட கால முடிவில் தாங் கள் பூத உடலை நீத்தலைக் குறிக்கும். இது இறைவனின் மறைத்தற் தொழிலை விளக்கும்.
*

Page 8
52 ஆத்மஜோதி
எனவே உயிர்களின் ஆக்கம் அளவு, இறுதி என்னும் முப்பருவங்களையும் இறைவன் படைத்தல் காத்தல், அழித் தல் என்னும் முத்தொழில்களாகச் செய்கிருன் என்பதை ஓங்காரம் சிறப்புற விளக்கும்.
நாதம் விந்து.
மேலும் ஓங்காரம் நாதம் விந்து வெனப் பிரிகின்றது.
விந்து என்பது சுத்த மாயா தத்து வத்துட்பட்ட ஒன்று.
இது ஒரு பரமானுத்திரள். இது கட்புலனுகவரும் போது ன்னலாகவும், செவிப்புலகை வரும் போது ஒலியாகவும்
வெளிவருகின்ற தென அறிஞர்கள் கூறுகின்ருர்கள். சிவ
சக்தி நேரே சென்று இயைந்து நிற்குமிடம் விந்து வென வும், வட்ட வடிவான இவ்விந்து சுழன்று இயக்கம் பெற் றவுடன் அதில் வரிவடிவில் ஒர் நாதம் பிறக்கிறதெனவும் மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வோசையே ஓங்கா ரம். விந்து நாத இயக்கத்தையே நாம் பிள்ளையார் சுழி என் கிருேம். (வ)
இதையே சிவலிங்க தத்துவமும் குறிக்கின்றது. சிவ லிங்கத்தின் வட்ட வடிவமான பாகம் விந்து தத்துவத் தையும் அதன் மேலுள்ள நீண்டு குவிந்த பாகம் நாத தத்துவத்தையும் குறிப்பதாகும். எல்லாம் தோன்றுவதற் கும் எல்லாம் ஒடுங்குவதற்கும் தாயகமான ஒன்று லிங்கம். இதையே அம்பலவாணரின் திருநடனம் குறிக்கின்றது. இவ் விந்து நாத தத்துவத்தை மிக நுண்ணிதாக ஆராயப் புகுந்தால் பெண்ணினுடைய கரு வட்டவடிவாய் இருப்ப துவும், ஆணினுடைய விந்திலுள்ள சுக்கில உயிர் நீள்வட்ட வடிவமான தலையையும் ஒர் நீண்ட வாலையும் கொண்ட தாக இருப்பதையும் நாம் அவதானிக்கலாம். இவ்விரண் டும் சேர்ந்தே ஒர் உயிரை உற்பத்தியாக்குகின்றன. மேலும் நமது உடல் பல கோடிக் கணக்கான உயிரணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவ்வுயிர் அணுக்கள் ஏதோ ஒருவகை வட்ட வடிவமாகவே அமைந்துள்ளன.
இவற்றையெல்லாம் நாம் அறிவுக் கண்முன் கொண்டு வந்து ஆராயப் புகுவோமானல் இவ்வுலகத் தோற்ற ஒடுக் கத்திற்கு இரு பெரும் தத்துவங்கள் காரணமாக இருப்ப
தை அறியலாம். அவையே சிவமும் சக்தியும் என்று திரு
மறைகள் ஒதா நிற்கின்றன. விஞ்ஞானிகள் இன்று கண்டு
狮
 
 

ஆத்மஜோதி 53
பிடித்துக் கொண்டு வரும் உண்மைகளை என்ருே சைவ சித்தாந்த மெய்ஞ்ஞான்ரிகள் கண்டு விளம்பியுள்ளார்கள். இதனல் சைவம் விஞ்ஞானிகளாலும் மெய்ஞ்ஞானிகளாலும் தருக்கிக்கப்பட்டு உண்மை எனக் கொண்டவைகளைத் தன் னகத்தே அடக்கியுள்ள தென்பது புலகுைம்.
அகத்தில் ஒலிக்கும் ஓங்காரம்
புறத்திலே கேட்கப்படும் இவ்வொலி அகத்திலும் கேட்
கிறது. அகத்திற் கேட்கும் ஒலி நெஞ்சப்பையின் உள்ளு
றுப்புக்களின் அசைவு. இவ்வசைவே அம்பலவாணனின்
திருக்கூத்து. இத் திருக் கூத்தினலேயே எம்பெருமான் ஐந் தொழில்களையும் செய்கிறன். இதனுலன்ருே
'உய்i என்னுள்ளத்துள் ஒங்காரமாய் நின்ற Go Duiuum ? *
o O
என்று சிவபுராணம் ஒதுகிறது.
எண்சாண் உடம்பிற்கும் சிரசல்லவா பிரதானமானது எதற்காக இறைவன் சிரசை இருப்பிடமாகக் கொள்ளாமல் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டான் என்பது ஆரா யத்தக்கது.
இறைவன் பிறிதொன்றின் ஏவுதல் இல்லாமல் தான கவே இயங்கிக்கொண்டு இருக்கிருன். ஒருநாளேனும் அவன் திருக்கூத்தில் இருந்து ஒய்வுபெறுவானேல் இவ்வண்டசரா சரங்களின் கதியென்னவாகுமோ என்பதை எண்ணவே பய
மாக இருக்கிறது.
நம் மண்டையிலுள்ள உறுப்புகள் நாம் விழித்திருக்கும்
போது இயங்கியும் உறங்கும் போது உறங்கியும் விடுகின் றன. நாம் விழித்திருக்கும்போது ப்யப்படத்தக்க பெரிய பாம்பு, நாம் அயர்ந்து தூங்கும்போது நம்மேல் ஊர்ந்து சென்ருலும் தமக்குத் தெரிவதில்லை. ஏனெனில் நம் உணர்வு
மண்டலமும் நம்மோடு சேர்ந்து உறங்கிவிடுகிறது.
ஆனல் நம் நெஞ்சப்பையிலுள்ள உள்ளுறுப்புகளோ
நாம் விழித்திருக்கும்போதும் உறங்கும் போதும்ஒயாதுஇயங் கிக் கொண்டே இருக்கின்றன. நெஞ்சப்பை உறுப்புகளில்
ை

Page 9
54. ஆத்மஜோதி
மிக முக்கியமானது இருதயம். அதன் உள்ளிருக்கும் வெளி யே சிதாகாசம் எனப்படும் சிற்றம்பலம். இதனுலன்ருே *நள்ளிருளில் நட்டம்பயின்ருடும் நாதன்' என்ருர் மணி மொழியார்.
மண்டையுறுப்புகள் இயங்கா விட்டாலும் ஒருவன் உயிர் வாழலாம். ஆனல் இருதயம் தான் துடிப்பதை நிறுத்தி விடுமானல் 'துரங்கும் போது வாங்கும் மூச்சு சுழிமாறிப் போனுலும் போச்சு’’ என்பது போலாகிவிடும். எனவே தான் இறைவன் இதயத்துள் இருக்கிருன் என்றனர் ஆன் ருேர், ' உள்ளக் கமலமடி உத்தமனர் வேண்டுவது ' என்ருர் சுவாமி விபுலானந்தர். ‘* மலர்மிசை ஏகினன் ' என்ருர் வள்ளுவர்.
உள்ளத்துள் உறையும் அம்பலவாணனை நாம் கண்டு பேரின்பமடைய வேண்டுமானுல் நம்மைப் பீடித்துள்ள அகங்காரம் என்னும் நோய் தீரவேண்டும். இதை அருணகிரி - - , וח חו_u
**ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்புமருர், தினைப் பொழுதளவும் ஓங்காரத் தொளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு தேங்
9 9
ao o o o» y என்ருர்,
இந்த ஒங்கார ஒளியே அகந்தைக் கிழங்கை அகழ்ந் தெடுக்கும் தொழும்பர் உள்ளக் கோயிற் கேற்றும் விளக்கு. ஆங்காரம் அற்ருரே அணியம்பலத்தானுடைய ஆடலை அறிவர். அறிந்தவர் முடியாப் பிறவிக் கடலிற் புகார், முழுதும் கெடுக்கும் மிடியாற் படியில் விதனப் படார் என்று திருமறைகள் ஒதுகின்றன.
இறைவன் உபதேசிப்பதும் ஓங்காரத்தையே,
மெய்ஞ்ஞானியருக்கு இறைவன் குருவடிவாக வந்து அருளுபதேசம் செய்வதும் ஓங்காரத்தின் உட்பொருளையே UI ITT (g5 Lf).
இவ்வாறு உபதேசிக்கப்பட்டும், ஆட் கொள்ளப்பட்ட வருமான மாணிக்கவாசகர் தன் திருவாசகத் திருமறை யுனுள் 'என்னையோர் வார்த்தையுட் படுத்திப் பற்றினய்'

ஆத்மஜோதி 55
என்று கூறுவதோடல்லாமல், அவ்வார்த்தை ஓங்காரமே என்பதற்கு.
* தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யுநெறி காட்டு வித்திட் டோங்காரத் துட்பொருளை ஐயன் எனக் கருளியவாறர் பெறுவார் அச்சோவே என்னும் அச்சோப் பதிகத்தில் மிகவும் அழுத்தம் திருத்த மாகக் கூறியுள்ளார். மேலும் ஒம் என்னும் சூக்கும பஞ் சாட்சரத்தின் தூல பஞ்சாட்சரமாகிய 'நமசிவாய' என் னும் பஞ்சாட்சரத்தோடு சிவபுராணத்தை ஆரம்பித்தார்.
எனவே சைவசமயிகளாகிய நாம் ஓங்காரத்தின் பொ ருளையுணர்ந்து போற்றிப் புகழ்ந்து பேரின்ப மெய்துவோ IL DIT G5 -
ஒமென்னும் ஓங்காரத், துள்ளே ஒருமொழி ஒமென்னும் ஓங்காரத்துள்ளே உருவரு ஒமென்னும் ஒங்காரத்துள்ளே பல பேதம் ஒமென்னும் ஒங்காரம் ஒண் முத்தி சித் தியே.
-திருமந்திரம்
ஜயந்தி விழா அழைப்பு o
யோகிராஜ் பூரிலழறி சச்சிதானந்த சுவாமிகளது
50 ஆவது பிறந்த தின விழா கண்டி திவ்ய ஜீவன சங்கச் சார்பில் தென்னக்கும்புற சச்சிதானந்த தபோவனத்தில் 22-12-63 ஞாயிற்றுக்கிழமை இனிது கொண்டாடப்படும் . அன்பர்கள் அனைவரும் வந்து விழாவைச் சிறப்பித்து சுவாமிகளின் ஆசியைப் பெற வேண்டுகின்ருேம்.
*
o
o
o
e
C
o
濠
காரியதரிசி o தபோவனம் - தென்னக்கும்புர 3ை
கண்டி.
-
೩.

Page 10
56 ஆத்மஜோதி
தியானமே தெய்வீக மார்க்கம்
ஆங்கிலம்: புவாது உதுமான் தமிழாக்கம்: K.M.P, முகம்மது காசிம்
எழுபது வருடத் தொழுகையைவிட ஒரு மணி நேர இறை தியானம் மேலானது - (நபிகள் நாயகம்)
தன்னை இழந்து யதார்த்த வஸ்துவில் ஐக்கியமாவதே வணக்கத்தின் உச்சநிலை அதுவே உண்மையான மிஃறஜ் - (நபிகள் நாயகம்)
அகண்ட வஸ்துவை அடைய சிறந்ததோர் மார்க்கம் தியானமே. இஸ்லாம் போதிக்கும் உயரிய நெறி என்னவெ னில் ஒரு முஸ்லிம் தன்னை சம்பூர்ணமாக அல்லாஹ்விடம் ஒப்புவித்து சரணடைவதேயாகும். மனிதர்களின் மனங்க லே மண்டிக்கிடக்கும் மைேறவான ஆசைகளை உடைத்தெ றிந்து, பரிசுத்தவாழ்வு வாழ்ந்து, நல்லொழுக்கத்துடன் ஒழுங் காகத் தியானித்து ஆண்டவனிடம் கலந்து விடுவதே நபிகள் திலக்ே நமக்குக் காட்டும் சன்மார்க்க இஸ்லாம். ஆகவே, அன்புமயமாகி, அறிவுப் பிரகாசத்துடன் தெய்வீக அருளில் தோய்ந்து சதாகாலமும் அல்லாஹ்வை தியானிப்பதே ஒரு முஸ்லீமின் முக்கிய கடமையாகும். இந்த உயர்வான ஆத்மீ கப் பண்பாடிழந்து, வெளிப்பகட்டாக ஐங்காலத் தொழுகை
யை மட்டும் அனுஷ்டிப்பது உண்மையான இறைபக்தி அல்ல.
ஆழ்ந்த தியானமே தெய்வீக ஞானத்தை அடைய நேரான வழி - அதுவன்றி வெளிப்பகட்டான பக்தியினல் ஆயிரவருடங்கள் வணக்கத்தில் ஈடுபட்டாலும் பக்தனுக்கும் பரமனுக்குமுள்ள தூரம் விரிவாகுமேயல்லாது ஒன்று சேராது. - (அல்முஹாஸிபி)
இஸ்லாமிய சன்மார்க்க ஏடுகளில் நாம் காண்பது முக்கிய மாக நபிகள் நாயகத்தின் மிஃருஜின் சிறப்பேயாகும். அந்த மிஃருஜ்ஜில்தான் படைப்பின் இரகசியங்களும் பற்பல சுவர்க் கலோகங்களும், அகத்தின் அந்தரங்கங்களும், வெளியாயின. அந்தத் தெய்வீக ஆத்மீக அனுபவத்தினுல் நபிகள் நாயகம் மனித வர்க்கத்திற்கே ஞான குருவாக, ஆத்மீக வழிகாட் டியாக திருத்தூதரானர்கள். அந்த உயரிய தியானத்தில்
 
 

ஆத்மஜோதி 57
ஷரியத்தின் சட்டத்திற்கும் அப்பாலாகி மகிமை மிக்கதோர் மஹ்ரிபாவின் (தெய்வ ஞானம்) அந்தரங்கம் திறக்கின்றது இன்ஸானின் இதயத்திலேயே அல்லாஹ்வின் இரகசியங்களை அறிவித்து அதில் இன்ஸான் பணுவாகி இறைவனிடமே ஒடுங்கி விடுவதே அண்ணல் நபி அவர்களின் அத்வைத மார்க் கம். அதுவே மஃரிபாவின் மாண்புமிக்க சிறப்பாகும். இஸ் லாமிய ஞானிகளும், மஹான்களும் இந்த மஃரிபாவில் பரி பூர்ணத்துவம் அடைவதே வணக்கத்தின் குறிக்கோள் என்று குறிப்பிட்டிருக்கின்றர்கள். ஏனெனில் என்றும் அழியாத, மாறுபடாத நிரந்தரமான நித் தி ய ஆனந்தமயமான அல்லாஹ்விடம் சேர்ந்து விடுவதே மானிட ஜீவியத்தின் இலட்சியமாகும்.
** இறைவனின் தெய்வீகக் காதல் என் இதயத்தில் இரகசியமாக இயங்குகிறது. அவனின் ஒளிவீசும் வந்தனம் என் கண்களில் கண்ணுடியாக மிளிர்கிறது.' - (ஹாபிஸ்)
மனிதனின் அகம் முற்றிலும் ஆண்டவனே நேருக்கி அந்தரங்க சுத்தியுடன் இறை தியானத்தில் ஒ ஈடுபடாத வரை வாயினுல் வசனிப்பதெல்லாம்ஆ வெறும் பொய்யாகும் அச்செயல் இறைவனுக்கு விரோதமானது - (இமாம் கஸ்ஸாலி)
s 3.
மனதினிலே ஆசைகள் யாவும் சுத்த சூனியமாகி சும்மாயிருக்கும் நிலைதனிலே எதிரொலிக்கும் தெய்வீகக்குரல் 'உண்மையின்
உறைவிடம் நானே' என்ற ஒலியாகும் - (மஹ்மூது
ஷாபிஸ்தாரி)
முஸ்லீம்கள் தொழுகைக்காக கஃபாலை
நோக்கி வணங்குகிறர்கள், ஆணுல்
மெய்ஞானிகளோ நேரடியாக அகண்ட வஸ்துவை தரிசிக்கிறர்கள் - (மெளலான ரூபி)
உலக இச்சைகளின் பிடியிலிருந்து விடுபட்டு சட சம்பந்தமான தொடர்புகளில் இருந்தும் நீங்கப்பெற்று பரிசுத்த-இதயத்துடன் ايه.
இறைதியானத்தில், மூழ்குவதே 2 53T 3:n Lou 1 53T @ಶig 57ಹ - (இப்னு ஸின)

Page 11
58 ஆத்மஜோதி
மேலே கூறிய இஸ்லாமியதத்துவக் கொள்கைப்படிபரந்த நோக்கோடு எதிலும் சாராது விருப்பு வெறுப்பின்றி அறி வின் துணைகொண்டு முஸ்லிம் அன்பர்கள் அமைதியுடன் ஆராய்ந்தால் அண்ணல் நபிகள் நாயகம் மெளன தியானத் தின் மகிமையையே தொழுகை என்ற பெயரில் வழங்கி னர்கள், வற்புறுத்தினர்கள் என்பது நன்கு புலனுகும். மே லும் தியானத்தின் உட்பொருளை உள்ளது உள்ளவாறு விளங் காத வரை நபிகள் நாயகத்திற்கு நிகழ்ந்த ஆத்மீக அனுப வமாம்மிஃருஜின் நுட்பத்தையும் இரகசியத்தையும் விளங்க
முடியாது. ஆகவே இஸ்லாமிய அன்பர்களே! சன்மார்க்கக் கண் கொண்டு நிதானமாகச் சிந்தித்தால் தொழுகையின் - இறை வணக்கத்தின் முக்கிய நோக்கம் தியான நிலையைப்
பெறுவதேயாகும் என்பது நன்கு விளங்கும்.
சிரமதானம்
திருவெம்பாவைப் பத்துத் தினங்களி
லும் கொழும்பு இந்து வாலிப சங்கத்தி,
னர் திருக்கேதீஸ்வரத்தில் சிரமதானம் செய்ய இருக்கின்றனர். தொண்டர்கள் யா வரும் அதில் பங்கு பெற்று பயனடையு மாறு அழைக்கின்றனர்.
 
 

ஆத்மஜோதி 59
பிரம்மச்சர்யத்தின் பெருமை
(தி. கி. சுந்தரம்)
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" (திருக்குறள்)
ஒழுக்கத்துடன் வாழ்வது தான் உயர்ந்த குடிப்பிறப் பின் தன்மையதாகும். ஒழுக்கத்தைவிட்டு சற்றேனும் தவறு
வானகில் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையதாகிவிடும். ஒழுக்கம் என்பது உயிரைக்காட்டிலும் மிக மேலாயது என்று செந்நாப்போதார் செப்புகிருர், வாழ்க்கையில் ஒரு மனித னுக்கு துணையாக விளங்குவது சிறந்த ஒழுக்கமாகும். ஆகை பினல் அவ்வரிய ஒழுக்கத்தை நாம் சிறந்த முறையில் போற் றிப் பாதுகாக்க வேண்டும். ട്ടി,
ஒழுக்கத்துடன் வாழ்வது என்பது பிரம்மச்சர்யத்தைப் பேணுதலேயாகும். பிரம்மச்சர்யத்தை மிகச் சிறந்த முறை யிலே பாதுகாக்க வேண்டும்.
பிரம்மச்சர்யத்தின் மூலமாக ஒருவன் பல வருடங்கள் வாழ முடியும் என்பது திண்ணம். நூறு வருடம் அல்லது அதற்கும் அதிகமாக ஒருவன் வாழமுடியும் என்பது கற்பனைக் கூற்றல்ல.
மனே தத்துவம், மற்றும் இயற்கை நியதிகளின் பிரகா ரம் மனிதனின் ஆயுள் பூரண வளர்ச்சிக்கு ஆகும் காலத் தைவிட ஐந்துமடங்காவது அதிகமாக இருக்க வேண்டும். இந்த நியதி நடப்பிலிருந்து வருகிறது. மிருகங்கள் இந்த உண்மையை நிருபிக்கின்றன. ஒட்டகை எட்டுவருடங்களில் பூரண வளர்ச்சியடைந்து 40 வருடங்கள் வரை வாழ்கிறது மனிதன் 20 முதல் 25 வயதுக்குள் ԱՄ6ծծ" வளர்ச்சியடை கிருன் அபாயங்கள் தவிர்க்கப்பட்டால் சாதாரணமாக ஒரு வனின் ஆயுள்காலம் நூறு வருடங்களுக்குக் குறைவது கூடாது' என்று கூறுகிருர், மேல்நாட்டு அறிஞர் மில்டன் செவான்.
பிரம்மச்சர்யத்தில் நின்ருல் நெடுநாள் வாழலாம். பிரம்மச்சர்யத்தில் உறைவதனல் வீரியலாபம் ஏற்படுகிறது என்று பதஞ்சலி தெரிவிக்கிருர், வேறெந்த பண்புகள் இல்லை

Page 12
60 ஆத்மஜோதி
என்ருலும் ஆசாரம் ஒன்றினலேயே நீங்கள் பூரண ஆயுளைப் பெறக்கூடும். ஆசாரம் என்பது ஒழுக்க வளர்ச்சியாகும்.
உங்களிடம் நல்லொழுக்கம் நின்று நிலவ வேண்டும். இல்லை என்ருல் பிரம்மச்சர்யத்துக்கு கேடுவரும். அதனுல் வீரிய சக்தி சிதைந்து அகால மரணம் சம்பவிக்கக்கூடும்.
ஒழுக்கக்கேடான வழிகளில் நிற்பவர்களும் அபார அறி வாற்றலுடன் நீண்டாயுளைப் பெற்று நின்ற உதாரணங்கள் சில இருக்கலாம். இதற்கு அவர்கள் ஊழ்வினைதான் காரணம் ஆனல் அவர்கள் நல்லொழுக்கத்தை நன்முறையே கடைப் பிடித் திருந்தார்களானல் அப்பொழுது இருந்ததைவிட பன் மடங்கு பிரபாவசாலிகளாகவும் புகழுடனும் விளங்கியிருந் திருப்பார்கள்.
பிரம்மச்சர்யத்தை முறையாக அனுஷ்டித்தால் தியானம் ஒழுங்குடன் செய்ய இயலும். தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். பிரம்மச்சர்யத்தின் பெருமையைப் பற்றி குருதேவர் சுவாமி சிவானந்தர் 'Pratice of Bramacharyh' என்ற நூலில் தெளிவாக எடுத்துரைக்கிருர்கள். அதை நாம் அவசியம் வாங்கிப் படித்து"பயன் பெறவேண்டும் என் பது என் விருப்பம்.
இளைஞர்கள் எல்லாம் ஒழுக்கத்தினின்று வழுவாது தங் களைத் தாங்களே கண்காணித்துக் கொள்ள வேண்டும். இக் கால இளைஞர் திலகங்கள் தான் வருங்கால வீரர்கள் . ஆகை யினுல் இளைஞர்கள் எந்த முறையிலும் ஒழுக்கத்தை கைவிட லாகாது என வலியுறுத்துகிறேன்.
சுவாமி சிவானந்தர் அவர்களின் எதுவாழ்வு? என்ற நூலில் பிரம்மச்சர்யத்தின் அவசியத்தைக் கூறுகிருர் . நாம் வாழ்க்கையில் சிற்றின்பங்களைக் கண்டு ஏமாறக் கூடாது. இவைகள் எல்லாம் மாயையின் தோற்றங்கள் ஆகையினல் எந்தச் சமயத்திலும் பிரம்மச்சர்யத்தை கைவிட்டு விடக் th. - Tigil.
சிறந்த பிரம்மச்சர்யத்தின் மூலமாகப்பெரியசாதனைகள்
செய்தவர்களைப்பற்றிக்கேட்டிருக்கிருேம். பகவான் ஆஞ்சநே யர் கடலைத் தாண்டினர் என்று சொன்னுல் அவரது பராக்ர மம் தான் காரணம். பராக்ரமத்துக்குக்காரணம் சிறந்தபிரம் மச்சர்யமும் இறைபக்தியுமாகும்.
நாம் அனைவரும் பிரம்மச்சர்யத்துடன் விளங்க பூரீ ஆஞ் சநேயரை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண் டும். சத்குருநாதர் சிவானந்தர் கூறிய முறைப்படி நின்ருல் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம் என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

ஆத்ம ஜோதி , 6.
KeX%%%%
ത്തnത്തn— SSSLSSSMMSSSqqq
VANW.A.P.A.V.V.V.O. O * 394& XXXXXXX& SCSSMSS -—ത്തi-m
%%%% த s: 4 - 383 - 4 - 08.4
-சுவாமி இராஜேஸ்வரா ந்ைதர்
தன்னேயே அறிந்து கொள்க. உன்னையே வேற்றி கொள்ள உன்னை இயலச் செய்வதற்கு உன்னில் இருக்கும் தெய்வ தத்துவத்திற்குக் கீழ்ப்படியத் தொடங்குக ஒரு வரின் சொந்தமன வெழுச்சிகளுக்கு ஆளாவது அதிக துக்கந் தரும் அடிமைத்தனம்.
ஒருவர் தானே உள்ளே ஆழ்வதும் தன் மனவெழுச்சிகள் ஆசைகள், அச்சங்கள் முதலியவற்றை ஆட்சி செய்வதும் உண்மையாக உத்தமமானது. தன்னையே மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வது மற்றவர்களை நிர்வாகம் செய்வதற்கு மிகச் சிறப்பாகத் தகுதியாக்குவதுதே.
வாழ் நாள் முழுவதும் நீ உன் சொந்த அமைப்பாகிய தொல்லைகளுடன் சச்சரவு செய்து கொண்டு சித்தியை இய லாததாகச் செய்யத் தேவையில்லை. எளிய பொறுதி, அமைதி, உள்ளச்சமநிலை, தன்னடக்கம் முதலியவற்ருல் சித்தி பெறுவதற்குக் கற்க,
தகுந்த ஆற்றலுடன் மனதையும் அதன் போக்குகளை யும், நாவையும் அதன் சொற்களையும், உடலையும் அதன் செயல்களையும் கையாளுக. உன் ஆன்மா ஒவ்வொரு எண் ணத்தையும் மன முடுக்கையும் இயல் பூக்கத்தையும் பரம் பொருளுக்குப் பணயமாக அளித்து அவற்றின் பின்னல் இருக் கும் தெய்வத்தன்மையை அனுபவபூர்வமாக அறியட்டும்.
தன்னுட்சியே பூவுலகில் அதிக உயர்தர ஆட்சி, அதுவே அதிஉண்மையான வெற்றி தன்னை ஆள்வது அதிபுகழ்ச்சிக்கு ரியது. அது மனிதவர்க்கத்தை அதி செழிப்பான சீவியத்தை யும் சீவனத்தையும் நோக்கிச் செலுத்துகிறது.
ஒவ்வொரு தீய எண்ணத்தையும் ஒவ்வொரு கசப்பான சொல்லையும் ஒவ்வொரு பொருளற்ற செயலையும் தடை செய்குக, அடக்குக, புறக்கணிக்குக. இங்ங்ணம் உன் மன வெழுச்சிளைத் தடுத்து உன்னை உன் சொந்தச் சக்தியில் வைத் திருப்பதற்கு அதி திறமை வாய்ந்த வணுயிருக்குக.

Page 13
62 ஆத்மஜோதி
மனிதன் தன்னையே ஆளும்படி கல்வி நிலையங்கள், வானெலிபரப்புகள், படக்காட்சி வினுேதங்கள், பத்திரிகை வெளியீடுகள் மேடைப்பேச்சுகள், இன்னும் பற் பல சாத னங்கள் முறைகள் மூலம் அவனுக்குக்கற்பித்து அதனல் தற்காலத்தில் மாத்திரம் அல்லாது எதிர்காலத் தலைமுறை களிலுங் கூட மனிதவர்க்கத்தைக் கடமைப்படுத்தும் அர சாங்கமே ஒரு நாட்டின் மிகச் சிறந்த அரசாங்கம்.
ஒரு சுத்தமனம், ஒரு சமபூமியில் அமைதியாயிருக்கும் ஒரு குளம் போன்றது. தாழ்மை தன்னடக்கத்தை மேம்படச் செய்கிறது. ஆனல் ஒரு மிகக்கொந்தளிப்பான மனம் சூழ்ந்து அதைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு மலைகளைத் தேவைப் படும் ஒரு தடாகம் போன்றது. அவ்வுருருனதால் அடியார் களினதும் அறிஞர்களினதும் தொடர்பும் அறிவுரையும் தற்செருக்கில் அமிழ்ந்திருக்கும் ஒரு சமூகத்தை இரட்சிப் பதற்குத் தேவைப்படுகின்றன.
()))
yyyyyGGGy yyyyyy yyyytLy Lyeyyryss yysyyy yyyyyyuyy yyuyyyyyGOyyOyyyyssGOL
àL-೧! 6T.
கடவுள் என்று கூறும் சக்தி நல்லதா, கெட்ட தா? மரணத்தினிடையே வாழ்வும் பொய்யினிடை யே மெய்யும் இருளினிடையே ஒளியும் காணப்படு வதால் அந்தச் சக்தியை நல்லதென்றே அறிகின் றேன். கடவுளேதான் உயிரும், உண்மையும், ஒளியும் ஆவார்.
அறிவை மட்டும் திருப்தி செய்பவர் கடவுளாக மாட்டார். கடவுள் கடவுளாக வேண்டுமானுல் இத
இருக்கவேண்டும். -காந்தி,
്
卧,。  ി শুভ
 
 

6
3
ஆத்மஜோதி
十****令4令*令→4伞4→今++**→4→++4+4+++令+4+4+4→4→4→今→今+4→令→***
விழித் தெழுந்தேன் !
- ( சி. பொன்னுத்தம்பி ) -
-- --
மாசில் இனிய குழல் ஊதி மலர்கள் தூவி எழுப்புகிறய ஒசை கேட்ட பின்னு மின்னும், உறங்குவேனுே.? விழித்தெழுந்தேன்!
அழகார் அமைதிதனில், இயற்கை, அஞ்சல் செய்து துதிக்கையில், யான் மழலைக் கவிதை இசைத் துன்னை, வழுத்து கின்றேன் பரம் பொருளே!
விண்ணில் சுடரும் தாரகை, உன் விரிந்த ஒளியில் ஆழ்ந்தன! “யான்' என்னும் அகந்தை தன, உன்னில் ஆழ்த்தி நெஞ்சம் கலந்திடச் செய்!
உதயப் பொழுதில் புள்ளிசையாய், உள்ளம் மகிழ்வில் பொங்கையில், என் இதயக் கிளியும், உனைக் கூவி இன்பப் பண்ணை இசைத்திடு தே!
உனது அழகுப் புன்னகையால், உயிர்த்த வாழ்வுப் பொன்மலரை, உனக்கே சூட்டி உன்அருளில், உள்ளம் கலக்கச் செய்து விடு!
--
*++***事令+**+→今→今→今→+鲁*→今→令→鲁今*→岭→今+4+今令*令令伞伞令+今4→++伞伞

Page 14
64. ஆத் மஜோதி
மணிவாசகர் காட்டும் அரன் திரு அருளும் >அகப்பொருட் பாடலும்(3
(பண்டிதர். பொ. கிருஷ்ணபிள்ளை)
ஆண்டவன் ஆன்ம கோடிகளுக்கு அருள் செய்யும் வழி களோ அனந்தம். 'ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும்
ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவில்லை' என்கிருர் அருள்
ஞானசம்பந்தர். மணிவாசகரோ தம் மனக்கல்லைக் கனியச்
செய்ய ஆண்டவன் செய்த விளையாடலை விண்டு விண்டு
ரைக்கின்றர். தம்மனம் கல்லாம்; பொல்லாக் கடின கற் பாறையாம்; பெருங் கருங்கல்லாம். அதனை இலகுவிலே கனியச் செய்ய முடியாமையினலே ஆண்டவன் முப்புரத் தசுரரோடு போர் தொடுக்கும் பாவனையில் மேருவை வில் லாக வளைத்தானும்; வளைத்துப் பயிற்சி பண்ணினுனம். பின்பு மனக்கல்லை வளைத்தானும்.
** தெவ் வரை மெய்யெரி காய்சிலே ஆண்டு என்ன ஆண்டு
கொண்ட செவ் வரை மேனியன் சிற்றம் பலவன் .'
என்பது மணிவாசகர் கூற்று. பகைவருடைய மெய்யை எரித்தற்குக் காரணமாகிய மேருவை வில்லாக வளைத்து அதன் பின் தன்னையும் மனங்கரைத்து ஆண்டு கொண்டா ம்ை முப்புரத்த சுரரையோ அவர் தம் புரத்தையோ புன் முறுவல் ஒன்றினுலேயே எரித்தானக மலையை வில்லாக வளைத்தது வேண்டாச்செயலாகும். மணிவாசகர் உளக்கடின கல்லே வளைக்க வேண்டியே மேருவை அவன் வளைத்தானும், இதனையே அடிகளார்
கல்லே மென்கணி ஆக்கும் விச்சை கொண்டு என்னை
நின் கழற்கு அன்பனுக்கினுய் கல்லை பிசைந்து கனியாக்கி" கல்நாருரித்த கனியே போற்றி எனத் திருவாசகத்திலும் எடுத்தியம்பு கின் ருர்,
மணிவாசகர் அருட் டிருவாக்கிற்கு உரை வரை வார் போலக் குமரகுருபர சுவாமிகள் மதுரைக்கலம்பகத்தில், ' வரும்புண்ட ரீக மிரண்டாலென் கல்லுமென் வன்னெஞ் சமா மிரும்புங்குழைத்த மதுரைப்பிரான் .' எனத்தலே வன் தேர்ப்பா கனேத் தலைமகளைக்கான விரைந்து தேரைச்
 

ஆத்மஜோதி 65
செலுத்துமாறு தூண்டும் அகத்துறைப் பாடல் அமைகின் றது. தம் இரு திருக்கரங்களாந் தாமரை மலர்களாற் பெரிதாய மேருவைவிளையாடும்வில்லாகவளைத்ததன்பின்தன் வேருேரு செந் (நிறப்பாத) தாமரையால் என் வலிய நெஞ்ச மாம் இரும்பைக் குழைத்தாள் (திருவடித் தீட்சையால் இறைவன் சீவனைச் சிவமாக்கும் முறை, ஈண்டு சுட்டப்படு கிறது) என நலமுற நவிலுகின்ருர் குமரகுருபரமுனிவர்.
இப்போது பிறிதொரு காட்சியை இறைவன் அருளாட் சியுடன் காட்டும் திருக்கோவைப் பாடலொன்றிற் பார்ப் போம். பசுமை செறிந்து பொலிவும் எழிலும் திகழ அமைந் திருப்பது அப்பொழில், அருக்கன் கதிர்கள் என்றும் அணு காமையால் அதன் புறமுமே இருளாகத் தோற்றுகிறது. உட்புறம் இருளடர்ந்திருப்பினும் பளிங்கு பதிக்கப் பெற்றி ருத்தலால் திங்கட் கடவுள் உறைவது போலத் தோற்று கிறது. சூரியன் பொழிலை, அணுகக் கூசுவதற்கும் சந்திரன் உட்புறத்தை விட்டகலா திருப்பது போலத் தோற்றுதற்கும் மணிவாசகர் கற்பனை நயங்கமழக் காரணம் காட்டுகின்ருர்.
அரனை மதியாது அகந்தை மிகுதியினலே தக்கன் செய்த வேள்விக்குச் சென்ற தேவர்கள் பட்டபாட்டை என்னென்றியம்புவது! ஒளிமிகுதியினலே நலமுறத்திகழும் சூரியன் பட்ட இன்னல் அரனிருக்குமிடத்தை அவன் அணுக ஒட்டாது தடுத்து விட்டது. ஒளித்தேவன் முகத்திலுள்ள பற்கள் இறைவனலே தகர்க்கப் பட்டமையினுலே அவன் முகம் ஒளிகுன்றிப் பரிதாபகரமான காட்சி தரலாயிற்று. அன்றுமுதல் அரனிருக்குமிடம் அவனுக்கு அச்சம் பயந்து கொண்டேயிருக்கின்றது. ‘வெம்புந்திய கதிரோ னுெளி விலகும் விரிசாரல் எனச் சம்பந்தப் பெருமானும் வெய்யோன் செய்ய சிவனுறை விடத்தை அணுகாது சாய்ந்து செல்லுமியல்பை திருவண்ணுமலையோடடுத்து எடுத்து இயம்புகின்ருர், மணிவாசகர் 'வானுழைவான் அரன் குன்றென்று வட்கிவெய்யோன் தான்நுழையா இரு ளாய்ப்புறம். ' என்று வெய்யோன் கூச்சத்தை நவிலு கின்ருர், (வட்கி-கூசி) சுடுபாலை நக்கப்புக்குவாய் வெந்த பூனே குளிர் பாலையுமே தீண்ட அஞ்சும். முன் தான் செய்த பிழையினலே பல்லிழந்த சூரியன் இனிமேலும் அறியாமை யினலே தானியற்றும் பிழைக்குக் கிடைக்குந் தண்டம் எத்தகையதோ எனக்கூசித் தனக்கு ஒளி ஈந்துதவும் சிவன் குன்றத்துப் பொழிலை நண்ண நாணுதல் இயல்பே.

Page 15
66 ஆத்மஜோதி
பூதங்களில் மிக நுண்ணியதுவானே. மண் போன்ற திண்ணிய பூதங்கள் தன்கண் ஒடுங்க அவற்றிற் கெல்லாம் இடங்கொடுத்து விரியும் இயல்பை நோக்கிப் புலவர்கள் ஆகாயத்தை 'அகல்வான்’ என்று அடை கொடுத்தியம்புவர். எதற்கும் அப்பாலான வானுலகிற்கும் அப்பாலாயஒளி சிவ ஒளிஎன்பதனைக்காட்ட ‘வானுழைவாள்' என்கின்ருர்புலவர். (உழை-இடம் வாள்-ஒளி).
எல்லாப் பூதங்களும் ஒடுங்க இடங் கொடுக்கும் வானும் ஒளியாகச்சிவம் இலங்குவதால் வானுழை வாள்' என்பது சிலேடைப்பொருள் தந்துநிற்கிறது. (வானுலகத்துள்ள ஒளி என்பதே அன்றி, உலக அழிவில்வானு மதன் கண் நுழைந்து அடங்கும் என இரு பொருள் தருதல் காண்க) அப்பு புறம் இப்படிப் பெரும் பேரொளியாய் எவருக்கும் எட்டாத படி சிவம் இலங்கினல் மனிதருக்குப் பயன்யாது? ஆகவே எட்டரிய இப்பொருள் மனிதர்தன்னை அணுகக்கூடிய எளிய அழகுப் பொருளாக நடனராசனுக அம்பலத்தில் ஆடுதலே நோக்கி இப்பாவில் ‘அம்பலத்து அரன்’ என்ற தொடர் களாலே குறிப்பிடும் மணிவாசகனர் திருவாசகத்திலும் இப் பொருளை "அருமையில்எளிய அழகே என்று வாயூறிக் கூறு கின்றர்.
* உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்.
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் ’’ என்று பெரியபுராணத் தோத்திரத்திலே சேக்கிழார் இத் தொடருக்குப் பொருள் விரித்தாற் போல இயம்புதல் நம்இத யத்தைத்தொடுகிறது. உருவற்றபரம் பொருள் உருவெடுத்து ஆன்மாக்கள் தம்மைக்கண்டு பாவம் போக்கும் தன்மையில்
அமைந்திருப்பதைத் திருவாசகம் திருக்கோவை இரண்டினும் "
பல இடங்களிலும் அடிகளார் காட்டுகிருர், "கண்ணுக்கினி யான்' கண்ணகத்தே நின்று களிதருதேன்' மண்ணகத்தே வந்துவாழச்செய்தான் 'அம்பலத்தாடி' மாணிக்கக்கூத்தன்' * என்கணிலே அமுதூறி.அங்கணன் 'அடியார் என்படை நின்றமிழ் தூறி என்ற மணிவாக்குக்கள் இதயத்திலன்றி நம் வாயிலும் நின்று நடமாட வேண்டியன அல்லவா?
‘வெயில் நுழை பறியாக்குயில் நுழைபொழில்’ என்று ஒரு புலவர் வெயில்தான் நுழையாவிடினும் இலையினுரமாக குயில் நுழையும் பொழில் ஒன்றினைக் காட்டியுள்ளார். மணி வாசகர் பொழிலோ வெயிலோ குயிலோ நுழையா அடர்த்தி
ܠܐܵܘܨ
 
 

ஆத்மஜோதி 67
யானபசும் பொற்பூம் பொழில், ஆயின் பொழிலில் உட்
புறம் 'நாப்பண்.பளிங்கால் மதியோன் கானுழை வாழ்வு பெற்றங்கு எழில்காட்டும்."
அகங்காரம் மிக்க வெய்ய சூரியன் புறப்பாகமும் எட்டிப் பார்க்காத பொழிலின் நடுவே சந்திரன் இடையரு துஒளிர்ந்து கொண்டிருப்பது போலத் தோற்றுகிறது. அடைக்கலம் புக்கோருக்கு அருள் செய்வது அரனியல்பு. விண்வெளியூடே வண்மதி ஊர்ந்து செல்லும்போது கார்முகில்கள் அதனை அமுக்கி ஒளியை இழக்கச் செய்யு மியல்பு நாமறிந்ததே. பாம்புமல்லவா அவனை விழுங்கிவிடுகிறது. நாகத்தின் நச் சுப் பிடியிற்சிக்கி நசுக்குண்டு அவனெய்தும் இன்னல் இயம் பற்பாலதோ? ஆகவே மதிக்கடவுள் தன் மதியால்வான் வெளிதரும் தீங்கினின்று நீங்கி அமைதியுற அரனை நினைந்து வாழ இப்பொழில் இடங் கொடுக்கிறது போல அச்சோலை நடுவே பளிங்கு அமைந்து கிடக்கிறது. கடும்பச்சை நிறங் கொண்ட இலைகளையும் கருமைவாய்ந்த சினைகளையும் உடைய புன்னைமரப் பூக்கள் வெள்ளொள்யால் விண்ணிலுள்ள தார கைகள் போலத் தோற்றப் பளிங்குமதி போலத் தோற்றச் சோலேயின் உட்புறம் மதிக்கடவுள் விண்ணை ஒழித்து மண் னிலே கானத்திலே வாழும் நினைப்பை எழுப்புகிறது. சோலை வளம் சாலச்சிறந்த அந்த அருமைப்பாடல் மணிவாசகர் திருவாக்கில் உதிக்கின்றது. ‘வானுழை வானம்பலத்தரன் குன்றென்று வட்கி வெய்யோன் தானுழையா இருளாய்ப் புறம் நாப்பண் வன் தாரகை போல் தேனுழை நாகமலர்ந்து திகழ் பளிங்கால் மதியோன் கானுழை வாழ்வு பெற்றங் கெழில் காட்டுமொர் கார்ப்
(பொழிலே (நாப்பண்-நடு; தாரகை-நட்சத்திரம், தேன் நுழை நாகம்வண்டுகள் மதுவுண்ண நுழையும் புன்னை.)
தலைமகனின் திடமாய காதலை நன்கறிந்த தோழி அவன் தலைமகளைத் தலைப்பட இப்பொழிலைப் பற்றிக் குறிப்பிடு கிருள். பகலிலும் இருள்மயமாயிருத்தலின் பகற்கண் தலை வனே நீ தலைவியை ஈண்டுச்சந்திப்பாயாக என்பது தோழி யின் வாக்கின் குறிப்பினுலறியக் கிடக்கின்றது.
உயரிய காதற் களவொழுக்கத்தைக் காட்டும் மணிவாச கரது திருக்கோவைச் செய்யுள் அரன் திருவருளையும் செந்
தமிழின் சிறப்போடு நமக்கு ஊட்டுகின்றதல்லவா?
வாழ்க மணிவாசகர் தாளிணைகள்!

Page 16
68 ஆத்மஜோதி
அன்பே சிவம்
- தி, கி. லக்ஷ்மி - மதுரை. u
தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன, ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் சண்டை; ஒரு தேசத்திற்கும் மற்ருெரு தேசத்திற்கும் லடாய்; இவ்விதமாக உலகமெங்கும் கோபவெறி அதிகமாகி யுத் தங்கள் நடந்து வருகின்றன, இதற்கெல்லாம் காரணம் யாது? என்று அறிய முற்படுவோமானல், விடை தெள்ளத் தெளிவாகத் தெரியவரும், வேற்றுமை மனப்பான்மையே இதற்கு முதற் காரணம். இந்த வேற்றுமை மனப்பான் மையை இல்லாதாக்குவதற்கு உதாரணமாக “திருமணத் தை’ எடுத்துக்கொள்வோம்.
முன்னும் பின்னும் அறியாத கல்கத்தாவிலிருக்கும் ஓர் இளைஞனுக்கும், திருநெல்வேலியிலிருக்கும் ஒர் பெண்ணிற் கும் விவாகம் நடைபெறுகின்றது. இதற்கு முன் ஒருவரை மற்றவர் அறியாதவராயினும், விவாகமாகியதும், இவர் களிருவரும் ஒருவர் மற்ருெருவர் மேல் அதிக அன்பு செலுத் துகின்றனர். பிள்ளை வீட்டு பந்துக்களும், பெண் வீட்டு பந்துக்களும் உறவினல் பிணைக்கப்பட்டு ஒரே குடும்பமாகின் றனர். யார் யாரோ? என்றிருந்தவரெல்லாம் உறவினரா யினர், உறவு என்னும் பிணைப்பால் அன்பும் வளருகிறது. நேற்று வரையிலும் இந்த அன்பு எங்கே மறைந்திருந்தது? நம்மவர் என்று எண்ணும்பொழுது அன்பு சுரக்கின்றது ஏன்? இதற்கு இன்னும் ஒர் உதாரணம்.
அயல் நாட்டில், அறிவிற் சிறந்த அழகிய இளைஞன் ஒருவன் காரில் அடிபட்டு மரணமடைந்தான். என்னும் செய்தியை கேட்டதும், ஹாசம் இதுமாதிரி எத்தனையோ பேப்பரில் நாம் படித்திருக்கிருேமே! இது அதிசயமா? என்று ஓர் அலட்சியம் ஏற்படுகிறது. நம்முடைய நாட்டில் ஒருவர் விபரீத மரணமடைந்தார் என்னும் பொழுது, ஐயோ பாவம்!! என்னும் இரக்கபாவனை ஏற்படுகிறது. நம்மாகா ணத்தில் ஏதேனும் இந்த மாதிரி செய்தியைக் கேட்டால், அடாடாடா இப்படி ஏற்படலாமோ? அநியாயம் என்ற இரக்க மனுேபாவம் உண்டாகின்றது.
 
 

ஆத்ம ஜோதி 69
நம்மூரில் ஒருவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை அறிந்தபொழுது நம் உள்ளம் துடிக்கின்றது. உடல் நடுங்கு கின்றது. ஒர் பெருமூச்சு நம்மிடமிருந்து வெளிவருகிறது. ஆணுல் நம் உறவினர் யாரேனும் இறந்து விட்டாலோ? ஐயோ
அப்பா.நான் என்ன செய்வேன்!! என்னல் பொறுக்க
முடியவில்லையே! இந்த அநியாயம் நடக்கலாமோ? கட
வுளே!! உனக்கு கண்ணில்லையா? ஏன் இந்தத் துயரத்தை எனக்குக் கொடுத்தாய்?! உனக்கு இரக்கம் இல்லையா? கொ டுமை!. கொடுமை!! கொடுமை!! என்று அழுது பிரலாபிக் கின்ருேம். வேரு கப் பாவிக்கும் பொழுது அன்பு குறை கின்றது. நம்மவர் என்று எண்ணும்பொழுது அன்பு அதிக மாகின்றது"
அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர், புன்கண்ணிர் பூசல்தரும். (குறள்)
அன்பின் இலக்கணத்தைத் திருவள்ளுவர் எத்தனை அழகாக விளக்கியிருக்கின்ருர். இதற்காகத்தான் 'விரோதியிடத் தும் அன்பு செய்' என்று பெரியோர்கள் கூறியிருக்கின்ற னர். ஒருவன் துர்க்குணமே வடிவமாய் விளங்கியிருப்பினும், அவனிடம் அதிக அன்பு கொண்டவர்களுக்கு, அவனுடைய துர்க்குணங்கள் ஒன்றும் தென்படுவதில்லை. இதையே
* மரத்தை மறைத்தது மர் மதயானை
மரத்தில் மறைந்தது மாமதயானை '
என்று தெரிவிக்கின்ருர் ஓர் பெரியவர்.
மரத்தினுல் செய்யப்பட்ட ஒர்பெரிய யானையைக கண்ட குழந்தையானது, அது மரயான என்பதை அறியாது நிஜ யானையாகவே எண்ணி அருகில் செல்ல பயப்படுகின்றது. ஆனல் ஒரு மர ஆசாரி (தச்சன்) அந்த யானையைப் பார்த்த உடனேயே, ஆஹா இந்த யானை நல்ல உயர்ந்த மரத்தினல் செய்யப்பட்டது. என்றும், உயர்ந்த கைதேர்ந்த தச்சனுல் இது தயாரிக்கப்பட்டது என்றும், எண்ணமிடுகிருன் . அவ னுக்கு யானை என்பது மறைந்து மறைந்து மரம் மட்டுமே கண்ணில் படுகின்றது. குழந்தைக்கு மரம் மறைந்து யானை கண்ணில் படுகின்றது. இதிலிருந்து நாம் அறிந்து கொள் ளும் உண்மை யாதெனில், எந்த நோக்குடன் ஒரு பொருளை

Page 17
70 ஆத்மஜோதி
நோக்குகின்ருேமோ அந்த விதமாக நமக்குத் தோன்று கின்றது. ஆகையால் நம் மனதை ந ல் லதா க ஆக்கிக் கொண்டோமானுல் உலகம் நமக்கு நல்லதாக ஆகிவிடும். நாம் அன்புடையவராக ஆகிவிட்டோமானுல், உலகம் நமக்கு அன்புமயமாக காகஷியளிக்கும். நம் மனதை செம் மை ஆக்க வேண்டுவதே முதற்கடமையாகும். ? ? மனமது செம்மையானல் மந்திரம் ஒதவேண்டாம். ’ என்பது போல மனம் நல்லதாகிவிட்டால் வேறு ஒன்றுமே தேவையில்லை. இப்பொல்லா மனதை வசப்படுத்துவதுதான் மிகவும் சிரமம்,
கந்துக மதக்கரியை
வசமாய் நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும்
கட்டலாம், ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்,
கட் செவி எடுத்தாட்டலாம், வெந்த ழலின் இரதம் வைத்(து)
ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம். வேறெருவர் காணுமல் உலகத்து லா வலம், விண்ண வரை ஏவல் கொள்ளலாம், சந்ததமும் இளமையோ(டு) இருக்கலாம் , 40ற்றெரு
சரீரத்தினும் புகுதலாம் , சலமேல் நடக்கலாம் ,
கனல் tே) ல் இருக்கலாம் , தன்னிகரில் சித்தி பெறலாம் ,
சிந்தையை அடக்கியே சும் மா இருக்கின்ற
திறமரிது, சத்தாகி என் சித்த மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே A தேசோ மயானந்தமே.
(தாயுமானுர் பாடல்) என்று தாயுமானர், மனதை வசமாக்குவது எத்தனை கஷ்டமானது என்று தெள்ளத் தெளிவாக எடுத்து விளக் கியுள்ளார். இத்தகைய செயர்க்கரிய செயலைச் செய்து இப்
ܐܬܐ
 
 

ஆத்மஜோதி 71.
பொல்லா மனதை அடக்கி, அன்புமயமாக ஆக்கினல் அன்பு சிவமாவதைக் காணலாம். இத்தகயை பேரன்பு மயமாக காசுழியளித்த நமது குருநாதருக்கு, அவரது குருநாதரவர் கள் பூர்வாசிரமப் பெயராகிய குப்புஸ்வாமி என்னும் திரு நாமத்தை விடுத்து சன்யாசம் அளித்து, அன்பின் இலக் கணமாகிய, "சிவானந்தர்' என்று தீக்ஷாநாமம் அளித்தார் அன்பே உருக்கொண்டவர் சிவமாகின்றனர். இத்தகை யோரிடத்திலே ஆனந்தத்திற்கு குறைவேது!! இதையே "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவ மாவதாரு மறிகிலார், அன்பே சிவமாவ தாருமறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே". என்பதுபோல சிவம்+ஆனந்தர்-சிவானந்தர் என்னும் காரணப் பெயர் கொண்டு, உலக மக்களிடம், எல்லோரிடத்திலும் ஒரே வித மான அ ன்  ைப அள்ளி வீசி வந்த நமது குருநாதர் தற் பொழுது பூத உடலில் நமக்குக் காகஷியளிக்காவிடினும், சூக்ஷ சமரூபத்தில் இருந்து கொண்டு நம் எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிருர்கள். இத்தகைய பேரன்புக்கு நாம் எல்லோரும் பாத்திரமாவோமாக.
+ + + + + + + 4 + +++++++++++++++++++++ -
O 35L6) 6T
விஞ்ஞானிகள் கூறுவதை நம்புவது போலவே ரிஷிகள் கூறுவதையும் நம்பவேண்டும். விஞ்ஞானிகள் கூறும் சோத னையைச் செய்து அவர்கள் கூற்றுச் சரி என்று காண்பது போலவே ரிஷிகள் கூறும் வழியை அனுசரித்து அவர்கள் கூறும் கடவுள் உண்மையைக் கண்டு கொள்ளலாம். ரிஷிகள் கூறுவ தை நம்பவும் மாட்டேன், ரிஷிகள் வகுக்கும் வழியில் செல்ல Gaud LCTIG க்குக் கடவுள் உண்மையை எந்தவிதத் திலும் காட்டமுடியாது .
கடவுளுக்குப் பயந்து நடக்க விரும்புகிறவர் பொது ஜனங் களுடைய புகழையும் இகழையும் லட்சியம் செய்யலாகாது.
--காந்தி.
十十十 十十十十 + + + + + + + + + + + + + + + + + 十十 - 十 十 十
,"

Page 18
ஆத்மஜோதி
)-( கலியுக வாழ்க்கை )-(
(மாத்தளை - அருணேசர் எழுதியது)
இந்நில உலகில் நாம் மானிடப் பிறப்பில் பிறந்தது அரிதினும் மிக்க அரிதாகும். ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்’ என்ப தற்கிணங்க, எண்ணத் தொலையாத பல பிறவிகளாய்ப் பிறந்து கடைசியில் இம்மானிடப் பிறவியை அடைந்துள் ளோம். ஆகையால், எண்ணரிய பிறவிதனில் மானிடப்பிறவி தன் யாதினும் அரிதரிதுகாண்' 'அரிதரிது மானிடர் ஆதல் அரிது’ என்றபடி இம் மனிதப் பிறவி மிக அரிதிற் கிடைக்கப் பெற்றதேயாம். இவ்விதம் அரிதாகப் பெற்ற இம்மானிடப் பிறவியை எதற்காக இறைவன் நமக்கு அளித் தார்? என்று யோசிக்கப் புகுந்தால் அவர் தம் கருணையினல் உயிர்கள் உய்யுமாறு அதாவது உயிர்களைத் தம் திருவடி நிழலாம் பேரின்பச் சுவையை அநுபவித்து நன்மையடைகு மாறு அவ்வுயிருக்குத்தநு, கரண, புவன, போகங்களை அளித்து மானிடப் பிற்ப்பாக இவ்வுலகத்திற்கு அனுப்பியிருக்கிருர், நாம் அதை அறிந்து அவரைத் தொழுது அவர் திருவருட் கருணைக்கு இலக்காக வேண்டும். இதற்காகவன்றி 'உண்டுண் டுறங்குவதே கண்ட பலனுக’ நன்ருய்ச் சாப்பிட்டு உறங்கி காலத்தை வீணில் போக்கி மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து உழலுவதற்கான பாவங்களைச் செய்து கொண்டிருப்பதற் &劣@l)@a)。
இனி இக்கருத்தைக்கொண்டு இக் கலிகால வாழ்க்கைக் கும் இதற்கு முந்திய காலத்து வாழ்க்கைக்கும் உள்ள வேற் றுமையை ஆராய்வோம். பண்டைக்காலத்தில் இருந்த மக்கள் தெய்வ பக்தி மிகுந்தவர்களாய், அதுபற்றி எக்காரியத்தை' யும் செய்ய வேண்டியபடியே முடித்துவிடும் தெய்வத் தன் மை பொருந்தியவர்களாய் வாழ்ந்துவந்தனர். அவர்களிடம் முதற்குணமாகிய தெய்வபக்தி பொருந்தியிருந்ததின ல் அவர் கள் அன்பு, ஞானம், பொறுமை, ஈகை, இரக்கம், இன் செரில், பெரியோரை வணங்கல் கொலை செய்யா மை கோள் சொல்லாமை, கள்ளுண்ணுமை, பிறர் மனைவியரை இச்சி யாமை, சூதாடாமை, கோபம் கொள்ளாமை முதலிய பலவேறு குணங்களும் பொருந்தியிருந்தனர். அவர்கள் காலத் தில் மழை பருவத்தோடு பெய்துவந்தது. அதனுல் பயிர்கள் " வாடாமல் செழித்தோங்கி உலகம் வளமை பெற்று வந்தது.
 
 

ஆத்மஜோதி 73
ஆனல் இக்கால்த்திலோ உலகத்தில் நாம் பிறந்தது, நன்ருய் உண்டு உடுத்து உலகபோகங்களை மனம் போனவாறு நீதி தப்பிய வழியில் அநுபவித்து வருவதே பேரின்பமென்று அவ்விதமே செய்து வருகின்ருர்கள். கடவுள் சிந்தனைக்குப் பதிலாக ஆசைகாட்டி மோசம் செய்யும் வேசியர்கள் சிந் தனையும், எவனை அடித்துப் பிடித்துப் பணம் சம்பாதிப்போ மோ என்ற சிந்தனையுமாக இருக்கிருர்கள். இக்காலத்தவர் மண் பெண் பொன் என்ற மூவாசைகளாகிய வலையில் சிக் கிக் கொண்டு மீள முடியாது வருந்திக் கிடக்கின்றனர்.
இம் மூவாசை என்ற வலையைக் கொண்டு ஒருவரும் இவர்களைப் பிடிக்க வரவில்லை. இவர்களே போய்ச் சிக் கிக் கொள்ளுகிருர்கள். மண் பெண் பொன் என்னும் மூன்று பொருள்களுக்காக உலகத்தில் அன்ருடம் மனிதர் களிடையே நடந்துவரும் கொலை களவு முதலிய கொடுஞ் செயல்கள் கொஞ்ச நஞ்சமா? எந்த நியாய சபைக்குச் சென்ருலும் அந்தக் கொலை வழிக்கு, இந்தக் களவு வழக்கு, அடிதடி போன்ற விசாரணைகளே செய்யப்படுகின்றன! இக் காலத்தில் இருக்கிற நியாய சபைகளைப் போல் அத்தனை முற்காலத்தில் இருக்கவில்லை. இக் கலிகாலத்தில் பெருகி வரும் அக்கிரமங்களுக்கு ஏற்றபடியே அவ் வழக்கு விசா ரணைச் சபைகளும் பெருகி விட்டன. அக் காலத்தவர் எவ்வளவோ வீரதீர திடகாத்திரம் உள்ளவர்களாய் இருந் தார்கள். இக் காலத்திலோ நூற்றுக்கு நாலைந்து பேர்க ளைக் கூடத் திடகாத்திர முள்ளவர்கள் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. இக்கால மக்கள் அச்சம் நிறைந்த கோழைகளாய் ‘புலிக்குப் பயந்தவர்கள் என்மேல் படுத் துக் கொள்ளுங்கள்' என்ற வீர தீர முடையவர்களாயும் அடிமைப்புத்திநிறைந்த குணமுடையவர்களாயும் உடல்முழு
தும் பிணி - நோய் பரவி யுள்ளவர்களாயும் இருக்கின்ற
படியினல் வைத்திய சாலைகள் ஏராளமாக உண்டாக நேரிட்டுவிட்டது. இவற்றிலும் பொய்யான பெரியவிளம்பரங் களைக்காட்டி மயக்கி ஒன்றுக்கும் உதவாத மருந்துகளைக்கொ டுக்கும் வைத்தியசாலைகள் பல மலிந்து கிடக்கின்றன.
இது போதாதென்று, 'ஆயிரம் வேரைக் கொன்ற வன் அரை வைத்தியன் என்ற பழமொழியை 'ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்' என்று மாற் றிக் கொண்டு *எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித் தவன் பாட்டைக் கெடுத்தான்' என்பது போல மருந்து

Page 19
74. * ஆத்மஜோதி
செய்யும் வகை தெரியாமல் ஏதேதோ. சரக்குகளைக் கணக் கின்றிச் சேர்த்து தாங்கள் மாற்றிக் கொண்ட பழமொ ழிக் கிணங்க ஆயிரம் பேரையும் அதற்கு மேற்பட்ட தொ கையினரையும் கொன்று வைத்தியம் செய்து வரும் வைத் தியர்கள் பலபேர் கிளம்பி விட்டனர்.
அக் காலத்தில் குடி முதலிய மயக்கப் பொருள்களை உபயோகிப்பவர்களைக் காண்பது அரிதினும் அரிதாய் இருந் தது. ஆனல் இக் காலத்திலோ கள், சாராயம், பிரண்டி, விஸ்கி முதலியவைகளைத் தண்ணிர் பட்ட பாடாக (ஆற்று நீரை அருந்துவது போல) க் குடித்து மயங்கி நிலைகெட்டுத் தடுமாறி அலையும் குடியர்களை எங்கே பார்த்தாலும் கண்டு கொள்ளலாம்.
இக் கலிகாலம் தாய் தந்தையரைத் தடி கொண்டு அடிக்கும் காலம். கைப் பொருள் பெற்று நியாய சபை யில் மெய்யான குற்றத்தை (எத்தனை உண்மைச் சாட்சி களைக் கொண்டு நிரூபித்தாலும்) பொய்யாகப் புரட்டிக் குற்றவாளியைச் சுத்தவாளியாகவும், சுத்தவாளியைக் குற் றவாளியாகவும் நிரூபித்து நீதி வழங்கும் நடுநிலைமை தப் பிய 'வக்கீல்கள் அல்லது பெருக்கோர்கள்' வாழும்கா லம். தனக்கு நிலம் வீடு மாடு முதலியவை இல்லாமல் அன்ருடச் சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஏழை மனிதன் பெற்றேர் தேடி வைத்திருந்த பொருளைப் படிப்பு (1) க்காகக் கொட்டிச் செலவு செய்து விட்டுச் சாப்பாட்டுக்கு முடையாக வயிறு ஒட்டிப் போயி ருக்கும் மனிதன் ஏதோ வயிற்றுப் பாட்டுக்காகவாவது ஆகட்டுமென்று ஒரு சிறிய சம்பளத்தில் வேலைக்கமர்ந்து, அதிலும் தன் பெண்டு பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவெளிக்கு டம்பமாகக் காலங் கழித்து வருவதைப் பார்க்கும், சிலர் - "ஆகா அவன் அந்த வேலையில் அமர்ந்து எவ்வளவு" சிறப்பாக இருக்கின்ருன்; அந்த முதலாளி அவன்மேல் எவ் வளவு பிரியமாய் இருக்கிருர், நாம் மாத்திரம் ஏன் இந்த நிலத்தை உழுது பாடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இனிமேல் நாமும் அவனைப் போல ஒரு உத்தியோகத்தில் அமர்ந்து கெளரவமாகக்காலம்கழிக்கவேண்டும்’ என்று தம் கலப்பையை விட்டெறிந்து விட்டு, அல்லது எவ்வளவு நிலம் இருந்தாலும் விற்று விட்டு அல்லது விற்காமலே அந் நிலங்களைப் பயிரிடாமல் கரம்பாய்ப் போட்டுவிட்டுத் தாமும் ,
o ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, தாம் தலைவராக "
 

ஆத்ம ஜோதி 75
இருந்த கெளரவம்போய், இன்னெருவருக்கு அடிமைப்பட்டு கேவலமான பிழைப்புப் பிழைத்துக்கொண்டு இருக்கிறர்கள்.
அந்தோ! ஏழைகள் வயிற்றுக்கில்லாமல் அடிமைவேலை செய்தாவது பிழைத்து வருகிருர்கள் என்ருல், பணம் நிலம் படைத்தவர்கள்கூட ‘பிச்சைக்காரன் சோற்றில் சனீசுவரன் புகுந்தாற்போல' அவ்வேழைகள் பிழைப்பதற்குரிய வேலை களில் தாங்களும் தலையிட்டுப் பங்குபோட்டுக் கொள்ளு கிருர்கள். அதனல் ஏழைகளுக்கு வேலை அகப்படாமல் தங் கள் பணத்தின் கெளரவத்தால் தங்களுக்குச் சமமானவர் களால் சிபார்சுபெற்று வேலைகளில் அமர்ந்து கொள்ளுகிருர் கள். இவ்விதமே இக்கலியுக வாழ்க்கை ஒரு போக்கிலே-ஒரு நிலையிலே - ஒரு தன்மையிலே நிற்காமல் பல விதமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.
ஆகவே, இது காறும், நாம் கூறியவற்றை அன்பர்கள் தம் மனத்திற்கொண்டு தங்கள் வாழ்க்கையை நேர்மையாக் கிக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகின்றேன்.
%A
YOGA WAY OF LIFE
/ ஆங்கிலத்தில் வெளிவரும் மாத வெளியீடா கும். பல மகான்களின் ஆத்மீகக் கருத்துக்களைக் கொண்டு வெளிவருகின்றது.
e
s
வருடச் சந்தா 3 ரூபா மாத்திரமே.
தேவையானுேர்:-
அ. சுப்பிரமணியம், 494, நாரகென் பிட்டி வீதி,
கொழும்பு 5 என்ற விலாசத்துடன் தொடர்பு கொள்க.
او
හුස්‍රාක්‍ෂාකිණී

Page 20
76 ஆத்மஜோதி அப்பரின் அருள் வரலாறு
- வித்துவாட்டி வசந்தா வைத்தியநாதன் -
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
மீண்டும் யாத் திரை:-
பின்பு திங்களூரிலிருந்து அப்பூதி அடிகளாருடன் புறப் பட்டுத் திருப்பழனம் வந்தடைந்தார். அங்குள்ள இறை வனை வணக்கிச் சொல் மாலை பயில்கின்ற' என்று துவங்கி அப்பூதி அடிகளைச் சிறப்பித்துப் பதிகம்பாடி அருளினர். பிறகு திருச்சோற்றுத்துறை, திருநல்லூர், திருப்பழையா றை, திருவலஞ்சுழி திருக்குடமூக்கு (கும்பகோணம்) திருச் சேறை, திருக்குடவாயில், திருகறையூர், திருவாஞ்சியம், திருப்பெருவேளூர், திருவிளமர் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு திருவாரூர் வந்தடைந்தார்.
ஆரூரில் வரவேற்பு:-
தொண்டர்கள் ஒருங்கு கூடி அப்பர் பெருமானை வர வேற்று அழைத்துக் கொண்டு ஆலயத்திற்குச் சென்ருர்கள். அடிகளாரும் ஆரூர்த் தொண்டர்களை வணங்கி ' புற்றிடங் கொண்டான் தன் தொண்டருக்குத் தொண்டராம் புண் ணியம்' அன்பற்ற கொடிய சமணர் தொடக்கறுத்துச் சைவநெறி புகுந்த அடியேனுக்கும் உண்டாமோ? என்று இசைத்தவாறே, தேவாசிரிய மண்டபத்தை வணங்கித்
"
திருக்கோயிலினுள் சென்ருர், புற்றிடங் கொண்ட புனித
ரைக் கண்ட தாண்டக வேந்தரின் மெய்நடுக்குற்றது. கண்
கள் பனித்து ஆனந்தக் கண்ணிரைச் சொரிந்தவண்ணம் **காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன்' என்ற திருப் பதிகத்தைப் பாடி அருளினர்.
பின்பு தேவாசிரிய மண்டபத்தை அடைந்து "மெய் யெலாம்வெண்ணிறு' எனத்தொடங்கி 'கொய்யுலாமலர்ச் சோலைக் குயில்கூவ, மயில் ஆடும் ஆரூரரைக்கையினல் தொ ழா தொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்' என்னும் திருப்பதிகம் பாடினர். நாள்தோறும் பெருமான

ஆத்மஜோதி 77
வணங்கினர். 'பாடிளம் பூதத்தினலும்' என்ற பதிகத் தால் பரமனைப் பரவினர். “ஆராய்ந்(து) அடித் தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத் தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான், ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணு டறியுமன்றே.'
என்று தம்மால் சிறப்பிக்கப்படுகின்ற நமிநந்தியடிகள் வணங்கிய "அறநெறி' என்னும் ஆலயத்திற்குச் சென்று தரிசித்தார். பிறகு திருவலிவலம், திருக்கீழ்வேலூர், திருக் கன்ருப்பூர், முதலிய தலங்களுக்குச் சென்று வணங்கினர். திருவாதிரைத் திருநாளன்று, தியாகேசர் வீதிஉலா வரும் கோலத்தைக் கண்குளிரக் கண்டு திகப்புகலூர் சென்ருர்,
ஆளுடைப் பிள்ளையை இரண்டாம் முறை சந்தித்தல்
அங்கே முருக நாயனர் திருமடத்தில் எழுந்தருளி யுள்ள திருஞானசம்பந்தப் பெருந்தகையைக் கண்டார். மகிழ்ச்சி மீதூரத் தாம் திருவாரூரில் கண்ட காட்சிகளை *முத்து விதான மணிப்பொற் கவரி' என்ற திருப்பதி கத்தின் மூலமாக உரைத்தார். இதைச் செவியுற்ற காழிப் பிள்ளையார், தாமும் திருவாரூர் செல்ல விரும்புவதாக உரைத்து ஆரூர் நோக்கிப் பயணமானர்.
அப்பர் பெருமானும் திருப்புகலூர் புண்ணியனை வணங் கிப் பிறகு திருச்செங்காட்டங்குடி, திருநள்ளாறு, திருச் சாத்தமங்கை திருமருகல் முதலிய தலங்களை வணங்கி, மீண் டும் திருப்புகலூர் வந்து தங்கினர்.
ஆளுடைப் பிள்ளையும் ஆரூரானைத் தரிசித்துத் திரும் பினர். இடைநாட்களிலே வாளால் மகவரிந்து அடி யார்க்கு அமுது படைத்த சிறுத்தொண்டரும் திருநீலநக்க நாயனரும் வந்து சேர்ந்தனர். அனைவரும் முருக நாயனுர் திருமடத்தில் தங்கி மகிழ்வுற்றிருந்தனர்.
பின்னர் முருக நாயனரும், மற்றைய அடியார்களும்
* விடைபெற்றுச் செல்ல, திருநாவுக்கரசரும் திருஞானசம் பந்தரும் திருவம்பர், திருக்கடவூர், திருக்கடவூர்மயானம்,

Page 21
78 ஆத்மஜோதி திருவாக்கூர்த் தான்தோன்றி மாட்ம் முதலிய திருப்பதி களை வணங்கி, திருவீழிமிழலையை அடைந்தனர்.
பசிப்பிணியும் படிக்காசு பெறுதலும்
இருவரும் விண்ணிழி விமானத் திருக்கோயிலை அடைந்து
பெம்மானை வணங்கினர். வாக்கின் மன்னவரும் நெக்கு
ருகி 'திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே சேர் கின்ருரே' என்ற ஈற்றடியினைக் கொண்ட திருத்தாண்ட
கத்தால் பரவினர்.
இவ் வண்ணம் இருவரும் சின்னுட்கள் திருவீழிமிழலை யில் வதிந்தனர். அப்பொழுது பருவமழை தவறியது. பஞ்சம் எங்குந் தலைவிரித்தாடியது. மக்கள் பசிப்பிணியால் துயருழந்தனர். அப்பொழுது சிவபெருமான் இருவரது கனவினிலும் தொன்றி 'உங்களை வழிபடும் அடியார்களது பசிப்பிணியைஒழிக்க நாம் உங்களுக்குப் படிக்காசுவழங்குகின் ருேம் ' என திருவாய் மலர்ந்து திருக்கோயிலின் கிழக்கு மேற்கு பீடங்களில் முறையாகத் திருஞானசம்பந்தரும் திரு நாவுக்கரசரும் பெறும்படியாகப் படிக்காசு வைத்தருளினர்,
இருவரும் இறைவன் திருவருளாணேயின் வண்ணம் படிக் காசினல் பக்தர்களின் பசிப்பிணியை ஒழித்தனர். திரு ஞானசம்பந்தர் உமாதேவியாரிடம் ஞானப்பாலை அருந்திய மையால் வாசி உள்ள காசும், வாகீசர் கைத்தொண்டு செய்தபடிமையால் வாசியில்லாக் காசும் பெற்ருர், மக்களும் வயிருர உணவு உண்டனர். நாளடைவில் மேகம் மழை பொழிய பஞ்சமும் தீர்ந்தது.
மறைக் கதவம் திறப்பித்தல்:-
பின்பு பெரியோர் இருவரும் திருவாஞ்சியம் முதலான தலங்களுக்குச் சென்று இறுதியில் திருமறைக் காட்டை (வேதாரண்ணியம்) அடைந்து திருக்கோயில்வலம் வந்தனர். அது போழ்து திருவாயில் அடைபட்டிருப்பதைக் கண்டு, அங்குள்ளோரைக் காரணம் வினவினர். அவர்கள் முன் ஞெருைகாலத்தில் திருமறைக் காட்டில் எழுந்தருளியுள்ள இறைவனை வேதங்களெல்லாம் அர்ச்சித்து வழிபட்டுத் திரு
வாயிலைத் திருக்காப்பிட்டுச் சென்றதாகவும், பின் இத்திருக் ""برمجہ
காப்பினை நீக்கும் வல்லமையுள்ள பெரியோர்கள் இல்லாத
 

ஆத்மஜோதி 79
தால்வாயில் அடைபட்டிருப்பதாகவும், பூசை செய்வதற்கு மற்ருெரு வாயிலையே பயன் படுத்துவதாகவும் கூறினர்.
இதைக் கேட்ட சம்பந்தப்பெருமான் அப்பரை நோக்கி "நாம் எப்படியும் நேர்வாயிலின் வழியே சென்று தான் ஆண்டவனை தரிசிக்க வேண்டும். ஆகையால் திருக்காப்பு நீங்குமாறு நீர் பதிகம் பாடி அருளுக' என்ருர், அவ்வாறே வாக்கின் மன்னவரும் ‘பண்ணினேர் மொழியாள்' என் னும் திருப்பதிகத்தை பாடினர். திருக்கதவின் திருக்காப்பு நீங்கத் தாமதமாவதைக் கண்டு ** இரக்க மொன்றிலீர்' என்று திருக்கடைக்காப்பிலே மற்ருெரு பதிகம் பாட, மணிக் கதவும், மறைக்காட்டு மணுளணின் திருவருளால் திறக்கப் பெற்றது.
உடன் இருவரும் பெம்மானை நிலத்தின் மிசை வீழ்ந்து வணங்கினர். மக்களின் மகிழ்ச்சியோ எல்லை கடந்தது. திருநாவுக்கரசரும், ஞானக்கன்றினை நோக்கி ‘இறைவன் திருவருளால் இக்கதவம், திறந்தும், அடைத்தும் என்றும் வழங்கும் நெறி நிற்க வேண்டும். ஆகையால் திருக்கதவம் அடைக்குமாறு நீர் பதிகம் பாடி அருளவேண்டும்’ என்று வேண்டினர். காழிப் பிள்ளையாரும் அதற்கு உடன்பட்டு * சதுரம் மறை தான்' என்ற திருப்பதிகம் பாடி அடைக் கச் செய்தார். அதன் பின் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத் துடன் அடியார்கள் புடைசூழத் திருமடத்தில் தங்கினர்.
திருவாய்மூருக்கு வரப்பணித்தல்:-
திருநாவுக்கரசர் அன்றுஇரவு, தாம்அரிதின் முயன்றுகதவு திறப்பித்தமையையும் பிள்ளையார் மிக எளிதாக அடைப்
பித்தமையையும் எண்ணி, எண்ணி சிவபெருமானது திரு
வுள்ளக் கிடக்கையை அறியாமையை நினைந்து அயர்வுற்று
அறிதுயில் கொள்வாரானர். அப்பொழுது அவரது கனவில் வெண்ணிறு துதைந்த திருமேனியராய் இறைவன் காட்சி நல்கி “நம்மைக் காணத் திருவாய் மூருக்கு வா’ எனப் பணித்தார். அவ்வாறே துயில் நீங்கப் பெற்ற வாகீசரும்,
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்(டு) அங்கே வந்தடை யாளம் அருளினுள் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனுர்
அங்கே வா' என்று போனுர் அ(து) என் கொலோ?

Page 22
80 ". * ஆத்மஜோதி
என்ற திருப்பதிகம் பாடிக்கொண்டே திருவாய்மூர் நோக்
கிப் புறப்பட்டார்.
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும் கனவில் தோன்றிய வடிவத்திலேயே வழிகாட்டிக் கொண்டு சென் ருர், 'நிறைந்த அமுதம் கையில் கிடைக்கப் பெற்றும் உண்ண முடியாதவனைப் போல இறைவனுக்கு மிக அருகில் சென்றும் எம்பெருமானைக் காண முடியவில்லை. வழிகாட் டிச் சென்ற இறைவனும் பொற் கோயில் ஒன்றைக் காட்டி அதனுள் மறைந்தார்.
திருஞானசம்பந்தர் அப்பர் திருவாய்மூருக்குச் சென் றதை அறிந்து அவரைக் காணப் புறப்பட்டுத் திருவாய் மூர் வந்தடைந்தார். திருநாவுக்கரசரும் எம்பெருமான் மறைந்ததை எண்ணி வருத்தமுற்று 'அடியார்களுள் சிறந்த ஞானசம்பந்தரே மறைக் கதவைத் திறக்க வேண்டும் என் பதை ஒராமல், நான் திறந்தது பெருங்குற்றமே. ஆகை யால் தேவரீர் ஏழையேனுக்குக் காட்சி தராமல் மறைந் திருக்கலாம். ஆனல் முதல் பதிகத்திலேயே திருக்கதவம் அடையுமாறு பதிகம் அருளிய ஞானசம்பந்தரே இங்கு வந் துற்ற போது தேவரீர் ஒளியலாமோ? எனக் கசிந்துருகினர்.
உடன் திருஞானசம்பந்தர் காணும் வண்ணம் சிவ பெருமான் காட்சி நல்கினர். அத்திருக் காட்சியினைக் கண்டு வணங்கிய சம்பந்தப்பெருமானும் அப்பருக்குக் காட் டினர். அவரும் கண்டு மகிழ்ந்து “பாட அடியார் பரவக் கண்டேன்' என்ற திருப்பதிகம் பாடி, பின்பு இருவரும் திருமறைக் காட்டுக்கு மீண்டனர்.
- தொடரும்.
A. 粤)نه

ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்
தெய்வீக வாழ்க்கைச் சங்க மலர் ... 1-2 5 ழனி கதிரை மணி மா?ல (பரமஹம்சதாசன்) . ー50 தீங்கனிச்சோலை 9 9 ... 2 - 50 அறிவுரைக்கதைகள் (சுவாமி சிவானந்தர்) ட65 நாஞர்? 9 y ... - 25 இளங்கோவின் கனவு (செ. நடராசன்) 2-25 ஆத்மநாதம் (சுத்தானந்த பாரதியார்) 3-00 கீதா யோகம் y 9 ... 2 - 50 டாட்டாளி பாட்டு 9 ... I - 50 கூட்டு வழி பாடு o o - 30 கந்தரநுபூதி (பொழிப்புரையுடன்) ss s ー25 மார்கழிப் பாடல் so o a - 20 நவராத் திரிப் பாடல் A do ao -30 ஆத்மஜோதி மலர் . . . . 2-0 0
வாய்வு சூரணம்
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கட்டு, மலபந்தம், அஜிர்ணம், கை கால் அசதி, பிடிப்பு, பசி யின்மை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்த சூலை, புளியேப் பம், நெஞ்சுக் கடுப்பு முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த சூரணம்.
தபால் செலவு உட்பட டின் ஒன்று 4 ரூபா 25 சதம்
(பத்தியமில்லே)
சம்பு இன்டஸ்ட்ரீஸ் - அரிசிப் பாளயம் சேலம் 9 (S. 1.1
இலங்கையில் கிடைக்குமிடம்:- ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி
GBL u T 65T - 3 5 3
மலாயாவில் கிடைக்குமிடம்:- ரீ கணபதி & கம்பெனி, பெல்'ஸ்டு ஸ்ட்டிரிட், ஈப்போ P, O. (மலாயா.1

Page 23
-
Registered at the G. P. O. as
SeAMMAMMAA AAAe AeSe eAe e eSAe eA Ae AeA Ae eeSqqq
சந்தா நே
. 16irL16mL_UTiܣ P
இன்று உங்கள் இரண்டாவது சுடர் கிடைக் ஜோதியின் புத்தாண்டுச் சந் மூலம் உங்கள் ஜோதிக்குத் த
இந்தியாவிலுள்ள அன்ப
வழக்கப்
R. Giff USFLIDL, FL
என்ற விலாசத்திற்கு அனுப்
ஆத்மஜோ J5T 6ni 6n)ili L9)LʻLq.
T
qAAAAAAAAS SAMA S SAMS SSAS SSAS SSASSASSASSAAS AASAASBMASASMSAMSMASASq ஆத்மஜே
நீங்கள் எதிர்பார்த்திருந்: வந்து விட்டது. மலரினுள்ளே யார்களின் கருத்துக்கள் உங்க றைம்பது பக்கங்களிலும் ஆ விளங்குகின்றன. முகப்பில் குருநாதன் மூவர்ணப் பட அவரை நினைப்பவர்க்கெல்லாப் விலே தபாற் செலவி
ஆத்மஜோதி
T)
AMMAAS இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத்த திரு நா வினுயகமூர்த்தியால் அச்சி
 
 

a Newspaper, M. L. 59/300
ہے۔
qBeS SAMSe SqAMSe SAMS SAM eSe SAMeSe MAMS SAMeSeSAeAS SAeSBBSA MAS SAMS SA MSMSqeSeTS ܢ ܓ
பர்களுக்கு
கையில் பதிருைவது ച്ചുള്ളറ്റ് கின்றது. இத் திருநாளிலே தாவை அனுப்பி வைப்பதன் குந்த பரிசினை அளிப்பீர்களாக,
- ர்கள் தமது சந்தாக்களை 鄞 b GLITG)
Dւ 9,5ծուհiմfaiմ,
பம் சேலம்-9 பி வைக்க வேண்டுகின்ருேம்.
தி கிலேயம்,
ーエリー
T E LID GUIT
த 'ஆத்மஜோதி மலர் வெளி நாற்பதுக்கு மேற்பட்ட பெரி ளூக்கு விருந்தாகின்றன. நூற் ஆத்மீகக் கருத்துக்கள் சிறந்து > என்ன எனக்கறிவித்த எங்கள் த்துடன் காட்சி தருகின்ருர் . ம் பரகதி உண்டு. LIL LI L 2-50 g (35 D 5) E%մաւք,
- ܂ g]10:860Is 65T - -35 -
தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் ட்டு வெளியிடப்பெற்றது.16-12-63
-