கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.01.14

Page 1
+ + + + + + +
| + + + + + + → + + + + + + + + + + +
|-
十一
--
十 十 十
+ + + + + + + + + + + +
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- + + + -
- + + + + -- + + + + + - + + + + + + + + + + + +
- -- --
+ + + + + + + + + + + + + + + + +
|-
十十十十十
+ + + + + + + + + + + +
年才十
| }
கானந்தர்
ন্তি ამ 6}|]]
+ + + ++++++十+
+ + + + - + + + + + + + + + + + + + + +

Page 2
今命令→令一争争令 ********、*、****
ஆத்மஜோதி
十
t
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
:
十 今令令→*→令→今→+→令→***→●→令令令→今→令→令→令令今→+→令令+→*→+→+令************
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
ஜோதி 16 சோபகிருதுவடு தை மீ" 1வ (14-1-64) சுடர் 3
பொருளடக்கம் 1 விவேகானந்த பஞ்சகம் 8. 2 விவேகானந்த உபநிஷதம் 82 3 நவபாரதத்தின் புதுயுகநபி 83. 4. வேகனந்த அர்ச்சனை மாலே 86 5 வங்கம் தந்த தங்கம் 89 6 தல விசேடம் 93 7 திருவாதிரைத் திருவிழா தமிழர் தம் முது விழா 97 8 அருளும் பொருளும் 9 நரேந்திர ஞாயிறு !
10 வசவண்ணர் உபதேசத்தைத் தழுவியது 11 ஆறுமுகா வருக! 12 பஞ்சபூதமும் சப்த தாதுக்களும் 13 இஸ்லாம் காட்டும் அத்வைத நிலை 14 மாயை - அகற்று
15 திவ்விய செய்தி 16 இறை உணர்வு பொங்குக!
ஆத்மஜோதி சந்தா விபரம்
qSTS LSSLS SASLSS LSSTLS LSTLS LSASLSS SLLLTLSSTSqSTSS STTS SS
ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந் தா ரூபா 3.00 தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தையா 鹉
* ஆத்மஜோதி நிலையம்' நாவலப் பிட் டி. (சிலோன்) தொலைபேசி எண் 353
 
 

بے سمجھےیA-محےN-محA-محN^محAN
விவேகானந்த பஞ்சகம்
Nya anala
- சுவாமி விபுலானந்தர் -
...
|,,ზეტი განს: ,
வாழியநின் திருநாமம்! வாழியவிந் நாடு:
வைகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த ஆழியிறை யுலகிருந்தோ அரனுலக மிருந்தோ
அருமு னிவ ருலகிருந்தோ அவனிமிசை யடைந்தாய்! 1,
அடைந்ததுவும் அருட்டிறத்தின் சிறப்பை யுரைப்பதற்கோ?
ஆண்மை யிதுவெனக் காட்டிக் கீழ் டிையகற்
றுதற்கோ? முடிந்த முடி பாகியவே தீாந்தத்தின் பொருளை
மொழிந்த வித்தை தனையகற்றி முத்திநிலை தரற்கே? *** 2.
நிலையிழிந்த பாரதத்தின் குறையனைத்தும் நீக்கி , 7 1 17 நிலைநிறுத்தும் பொருட்டோவிந் நிலவுலகின் மாந்தர் கலைமொழிந்த பொருளனைத்துங் கடந்துநின்ற உண்மைக் கந்தழியைச் சார்வதற்கோ வந்தன சீர்க்குருவே! 3.
சிர் மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்
தேயத்துட் பாரதமே சிறந்ததென விசைப்ப
ஈரிருபன் ஆண்டுறைந்தாய் எமது தவக்குறையோ
இளவயதில் எடைய விடுத்தாய் அளவிலருட்கடலே! 5.
அருட் செல்வம் செல்வமென அருந்தமிழ் வள்ளுவனுர்
அறைந்தமொழிப் பொருளுண்ர்ந்தோய் அருந்துற
வோர்க் கரசே பொருட்செல்வம் மனசுற்றம் புகழ் துறந்த நினக்குப்
புவியனைத்தும் சுற்றமே ; புகழனைத்தும் நினதே. 5.
வாழிய நின் திருநாமம்! வாழிய இந் நாடு!

Page 3
82 ஆத் ഥരജേ?
LALLLL LLLLAAAASJALA LALALLLL LLLLLLLALS LS LLLLL LLLLLLLLS LLLLLSSLeALS eeLSLALALS eLeLeLS eeLeLS eLeAeLeLeeLLeLeeLeLeeLALLSAeALS LS cLLLLLS LL LLLLLS LL LLLLLLLLS LL LLL LLLS LLL LLLL LL LL SLSS LSAAAA SLA LSL SLA qS SSLASLSL S S L S SLL LSLSALL LLSSS YYJJS0J00S00 S000 S00Lh Seh 0LSe SJ0eLeL S0J LeLeeLSeLLe LeLeeL SeLeLSJS0L000h0S000 0000 0J0J0J0J0J00JE JE0 00E00 S000SS eTS eeeLee eLe eeeeeLee eeeee LeeeLeL eeLeqSSAe qeAe eee eLeeeLe eeeee eee eee eeLeL AeAe eee eee LSL eAe eAeAe eAeA AeA ALALA ALALSL LLLLLL LAL LALSL SLASLLA SAASAq SqqqSq qSqq SqAq S
************ 豪****************
*************
பூரணம் ஒருபொழுதும் தனது நிறை #ီ၏ ၅၆၅ႏွစ္သစ္ကူး”။
குறைவதில்லை ஜடஉலக இருளிலும் அது வியாபகமாய் இரு கிறது. ஆனல் அவ்விருளோ அதைப் பாதிப்பதில்லை. இறை வன் அருள் எல்லார்க்கும் உரியது. ஆனல் மக்களின் குறை பாட்டால் அது பாதிக்கப்படுவதில்லை. நம் கண்ணிலுள்ள தோஷம் சூரியனைத் திரிவு படுத்திக் காட்டலாம். ஆனல் சூரியன் அத்தோஷத்தால் பாதிக்கப்படுவதில்லை.
கொடையாளி என்று கடவுள் ஒருவரையே கூறலாம். உலகத்தவரனைவரும் வியாபாரிகள் போன்றவர்கள். கட வுள் போன்று நீ வள்ளலாகிவிடு. அதை அனைவரும் போற் றுவர். *
இறைவன் தெள்ளியெடுத்த பேரன்பு சொரூபம். அவ் வன் பை ஊடுருவி அறியவோ விளக்கவோ யாருக்கும் முடி யாது. அப்பேரன்பை உணரலாம். ஆனல் விளக்க முடி ULUTTUI .
நீ அகண்டம் என்பதை அறிந்துகொள்; அதை அறிந் தால் பயம் போய் விடுகிறது. ஸோஹம் (நானே அது, அதுவே நான்) என்று சதா உணர்ந்து கொண்டிரு.
கடவுளைப்பற்றி நினைந்து சிலர் கண்ணிர் சிந்துகின்றனர்: சிலர் சிரிக்கின்றனர்; சிலர் பாடுகின்றனர்; சிலர் ஆடுகின் றனர்; சிலர் வியப்புக்குரிய விஷயங்களை வெளியிடுகின்றனர்; இத்தனை விதச் செயல்கள் எல்லாம் இறைவனைப்பற்றிய உணர்வையே வெளிப்படுத்துகின்றன.
பத்தி உருவெடுத்து வரும் பொழுது மனம், மொழி, மெய் ஆகிய மு க் கரணங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இறைவனைப் பற்றிய மறதி வந்துவிட்டால் அதைத் தொ டர்ந்து பெருந்துயரம் பக்தனுக்கு உண்டாகின்றது.
 
 
 

ஆத்மஜோதி 83
நவபாரதத்தின் புதுயுக நபி
(ஆசிரியர்)
சென்ற ஒராண்டு காலமாக நவபாரதத்தின் புதுயுக நபியான சுவாமி விவேகானந்தரின் நூற்றண்டு விழா உல கின் நாலா பக்கங்களிலும் மிக விமரிசையாகக் கொண் பாடப்பட்டு வந்துள்ளது. உலகின் சமய வரலாற்றில் இதுபோன்ற பிறிதோர் விழா பல்வேறு மதங்களைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும் மக்களால் இதற்கு முன் கொண்டாடப்படவே யில்லை யெனலாம். மனி சமுதாயம் முழுவதற்குமே, சாதி, மத, மொழி, நிற வேற்றுமை எதுவுமின்றி, ஆன்மீகத் துறையில் அரும்பணி யாற்றத் தோன்றிய ஒர் மகானுக்கு இப் பெருமையும் மதிப்பும் சாலவும் பொருத்த முடைத்து.
குறித்த நூற்றண்டு விழாவின் இறுதி வைபவங்கள் இம்மாசம் பத்தாந்தேதி தொடக்கம் இருபத்தாரும் தேதி வரையில் (10/1 - 26/1/64) சென்னையில் நடைபெறுகின் றன. சர்வ மத மகாநாடு, மாதர் மகாநாடு, மாணவர் மகாநாடு, சங்கீத மகாநாடு, யோகாசனக் காட்சிகள் முத லியன முக்கிய இடம் பெறுகின்றன. ஜனதிபதி டக்றர் ராதா கிருஷ்ணன் அவர்கள் சர்வ மத மகாநாட்டை ஆரம் பித்து வைப்பார். இந்தியப் பிரதமர் நேரு விவேகானந் தரின் சிலையைத் திறந்து வைப்பார். இராமகிருஷ்ண சங் கத் தலைவரான பூரீமத் சுவாமி மாதவானந்தர் அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். சென்னையில் மாத்திரமன்றி கன்னியா குமரியிலும் ஒர் சிலை நிறுவப்
படுகின்றது.
விவேகானந்தர் வரலாறு பலரும் அறிந்த ஒன்று. அதின் விபரங்கள் பலமுறை இப்பக்கங்களில் வெளிவந்துள்ளன. அவ ரது உபதேசங்கள் அடங்கிய புது நூல்கள் பல இந்த விழாத் தொடர்பில் வெளிவந்தும் உள்ளன. ஆகையால் அவற்றைப் பற்றி அதிகம் வரைய வேண்டிய தேவை யில்லை. இக் கட்டுரைக்கு அடுத்ததாகத் தரப்பட்டுள்ள அர்ச்சனை மாலையில் அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் காணலாம். மாணவ மாணவிகள் எளிதில் மனனம் பண் محمد ணிப் பாராயணஞ் செய்யும் முறையில் அமைந்துள்ள இப்

Page 4
84 ஆத்மஜோதி
பாடல் அவர்கட்கு நற்பயனளிக்கும். பக்தியுடன் படிக் கும் முதியோரின் உள்ளத்தில் மோட்சதாகம் உதிக்கச் செய்யும்.
இளம் வயசில், நரேந்திரன் என்னும் பெயருடன்
வாழ்ந்த காலத்தில், இப் பெரியார் அனுபவித்த கஷ்டங் கள் கணக்கில; சோதனைகள் எதிர்ப்புகள் கொஞ்சமல்ல; அல்லல்களும் கடன் தொல்லைகளும் அளப்பில. இவற்றை யெல்லாந் தாண்டி அவர் வாழ்வில் பூரணவெற்றி கண்டதா னது சென்ற நூற்ருண்டில் இந்தியாவில்நடந்த அற்புதநிகழ்ச் சிகளுள் ஒன்ருகும். சின்னஞ் சிறு வயசிலிருந்தே அவர் வாய்மையின் மீது வைத்த நேயமும், தூய்மையின் கண் வைத்த ஆர்வமும், ஆருயிர்களிடத்துக் கொண்ட பேரிரக்
கமும், அவர்கள் பணியில் அவர் காட்டிய ஆண்
மை செறியும் வினைத் திட்பமும் போற்றற்குரியவை. அந்த அரும் பெருங் குணங்களே அவரை ஓர் மெய்க்குரவரிடம் புகலடைவதற்கு வழிகாட்டின.
இப் பெருங் குணங்களை நன்குனர்ந்து நரேந்திரனே,
முதலில் வியந்தவர் அவரது சுற்றத்தாருள் ஒருவரான இராமச்சந்திரதத்தர். அவரே அந்த இளைஞனைப் பார்த்து “ஞானப் பேறு வேண்டி இங்கும் அங்கும் ஏன் அலைகி ருய்? அதன் கண் உனக்கு உண்மையான விழைவு உண்டெ
ببره.
னின், தக்கணேஸ்வரம் செல்வாயாக’ என்று புத்திமதி
கூறி பூரீ இராமகிருஷ்ணரைச் சந்திக்கச் செய்தவர்.
முதல் சந்திப்பின் விபரங்களைப் பரமஹம்ஸ் தேவரின்
திருவாக்கில் பார்ப்போம்:-
“நரேந்திரன் யான் வசித்த அறைக்குள் நுழைந்
தான். அப்போது அவன் தனது உடலைப் பற்றியோ உடையைப் பற்றியோ சிந்தனையற்றவய்ை, புற உல கத்தை அணுவேனும் பொருட் படுத்தாதவனுய்த் தோன்றினன்’’.
*அவனது கண்கள் அகமுகப் பட்டிருந்த நிலை
யைக் காட்டின. ஏதோ ஒரு தனி விஷயத்தில் மாத் ,
திரம் அவனது உள்ளம் தலைப்பட்டு நிற்பதை அவை விளக்கின. நாஸ்திகம் பரவி நிற்கும் நகரான கல்கத்
 

ஆத்மஜோதி 85
தாவிலிருந்து இத்துணை ஞான விழைவு கொண்ட இளை ஞன் ஒருவன் வந்தது கண்டு வியப்படைந்தேன். தரை யில் விரிக்கப்பட்டிருந்த பாய்மீது இருக்குமாறு கேட் டேன். அவனுடன் கூடி வந்திருந்த இளைஞர்கள் சிற் றின்பச் சார்புடையவர்களாகத் தோன்றினர்'
*எனது வேண்டுகோட் கிணங்கி, நரேந்திரன் தான் அறிந்திருந்த வங்க மொழிப் பக்திப் பாடல் ஒன்றைப் பாடினன். அது பகவானுேடு ஒன்றித்து நிற்க விழையும் பக்தனது உள்ளத்தில் பக்தி வெள் ளம் பெருக்கெடுத் தோடும் பெற்றி வாய்ந்தது. அப் பாட்டின் கருத்தும் அதற்கு நரேந்திரன் ஊட்டிய உருக்கமும் சேர்ந்து என்னைப் பரவசப்படுத்திப் பேரின்ப நிலைக்கு உய்த்தன".
விவேகானந்தரின் பெருமையின் இணையற்ற தன்மை யையும், அவர் ஒர் பிஞ்சிற் பழுத்த பேரறிஞர் என்பதை யும் உலகம் அறிந்து கொள்வதற்கு அவரது குருதேவரின் இந்த முதல் அத்தாட்சிப் பத்திரம் ஒன்றே போதிய சான் ருகும். உண்மையில் அவர், அவரது குருநாதரைப் போலவே, பிறக்கும்போதே பூரணத்தெய்வத்தன்மையோடு தோன்றியவர். தனக்கென வாழாது மன்னுயிரை உய்விக் கும் ஒரு தனி நோக்குடனேயே அவதாரஞ் செய்தவர்.
இவ்வித அவதார புருஷர்கள் உலக முழுவதற்கும் ஒளி
பரப்பும் சூரியனுக்கு நிகராவர். அவர்கள் பரப்பும் ஞானக் கதிரே உலகில் அன்பையும், அறிவையும், அமைதியையும் நிலைநாட்டும் சக்தி வாய்ந்தது. இராமகிருஷ்ணர் - விவே கானந்தர் வருகையால், அவர்களது அருள் வாக்கால், பல நூற்ருண்டுகளாக உறங்கிக் கிடந்த பாரத தேவி விழித் தெழுந்தாள். அவளுக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாடிய பெருமை இப் பெரு மகான்களையே சார்ந்ததாகும். அன் பர்களே! அவர்களைப் போற்றுமின்! வாழ்த்துமின் ! அத் தோடு நின்று விடாது, உண்மையுணர்ந்து, உறுதிகொண்டு கருதிய கருமம் கைவரு மட்டும் தளராது உழைமின் !
ஓம் தத் ஸ்த்.

Page 5
86 ஆத்மஜோதி لوبډله விவேகானந்தர்
-4=3இG--
கங்கை நதிபாய் வங்கநன் னுட்டின் கவின் நகரான கல்கத் தாவில் புத்தரின் வாழ்வின் புனிதத் தன்மையை நித்தமும் நமக்கு நினைவூட்டத் தக்க தர்க்க சரணரின் தனிப்பெருந் துறவால்
மிக்கப் புகழடை தத்தர் தம் குலத்தில் விஸ்வ நாதரின் விசேட புண்ணியமும் காசியில் எழுந்தருள் வீரேஸ் வராரிடம் அத்தை முறையுள்ள உத்தமி மூலம் அன்னை கோரிய அரிய வரமும் பொருந்திதுே கொணர்ந்த பூங்கவ! போற்றி! ருதிரோற் காரி மார்கழித் திங்களில் சாத்வீக வேளையில் சந்திர ஹோரையில் ஆத்மீக வாழ்விற்கோர் அணியென விளங்க அவதரித் திட்ட அண்ணலே போற்றி! சித்த ருலகந் தனைவிட் டிவர்ந்து நரேந்திர னென்னும் நாமத்தைத் தாங்கி நானிலந் தீண்ட நயந்தனை போற்றி! வளரும் பயிரை முளையில் தெரியுமென இளமையிற் கற்பவை எளிதிற் கற்றே - மும்மொழிப் புலவஞய் விளங்கினை போற்றி? விஞ்ஞானத் தோடு மெய்ஞ்ஞானம் கூட்டும் தத்துவம் யோகம் தர்க்கம் சங்கீதம் பக்தி சாதனைகள் பற்பல பயின்றே மெத்தவுஞ் சித்தி மேவினை போற்றி! வாழ்வின் வழியை விளக்கும் வயதாம் ஈரெட் டாண்டில் ஈசப் பித்து இதயத்தை வாட்ட இரவு பகலாய் இறை தரி சனம்பெற் றிறையைக் காட்டும் குருவைத் தேடி அலைந்தனை போற்றி! பிரம்ம சமாஜத்தின் பேச்சில் மயங்கி விக்ரஹ வழிபாடு வெறுத்தனை போற்றி தாய் மாமனுன ராம்தாதர் வாக்கால் ', به தக்ஷணேஸ் வரத்தமர் தயாளன் பெருமை
ضلع۔
 
 
 
 

ஆத்மஜோதி 87
தன்னைக் கேட்டு மகிழ்ந்தனை போற்றி! முன்னுரழ் கூட்டும் நன்னுள் வரவே அன்ன ருடன் அம் மகானிடஞ் சென்று சென்னியி லவர்தாள் சூடினை போற்றி! பரம ஹம்ஸரின் பரிச தீகூைடியால் பகரொணு அனுபவம் பெற்றனை போற்றி! தூய அன்னை சாரதா மணியின் சேயாய் ஒழுகி,அத் தேவியின் மகிமை நேயர்கள் தமக்கெடுத் தோதினை போற்றி! பூரீராம கிருஷ்ணர் சமாதி யுற்றபின் அன்ஞர் அளித்த அளப்பரும் ஞானத்தை அன்னை மூலம் அருந்தினை போற்றி! கன்னி முனையில் கடுந்தவம் புரிகையில் நீகொண்ட விரதமும் நீணிலங் காக்குமத் தாயிடம் நீஅன்று கோரிய வரங்களும் உன்னுவார் உளத்தை உருக்கும் ஐய! பின்னர்ப் பாரதத்தில் நிகழ்பவை யனைத்தும் தேவியின் அருளால் தெரிந்தனை போற்றி! விவேகா னந்தனும் வீறுடைப் பெயருடன் அன்னையின் ஆசியோ டமெரிக்கா சென்று அவனிக் கருள் நெறி விளக்கினை போற்றி! சிக்காக் கோவில் செல்வர்கள் கூட்டிய பல்மதச் சங்க மேடைமீ தமர்ந்தே வேதாந்த விளக்கமாம் வீர கர்ஜனையால் பாரத நாட்டின் பாரமார்த் திகத்தைப் பாருல கறியச் செய்தனை போற்றி! அப்பெருந் தொண்டு அவனியில் நிலைபெற ஒப்பிலாச் சங்கம் நிறுவினை போற்றி! பத்தாண் டெல்லைக்குள் பலர் பல நூற்ருண் டெடுக்கும் பணியை முடித்தனை போற்றி, ஒயாச் சேவையால் இளைத்த உடலை நீயாய் விரும்பி நினைத்த வண்ணமே சுக்கிர வாரத்தில் சுபவேளை பார்த்து சஹஸ்ரார ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியந் தன்னை விளக்கும் சம்ஹிதை ஒதி காளி தேவிக்கு ஸ்க்ளு ஹோமத்துடன் விசேட பூஜை விரும்பியே செய்த பின் நீர்க்க சமாதியால் துறந்தனை போற்றி!

Page 6
SS ஆத்ம ஜோதி
/*
“சப்த ரிஷிகளில் ஒருவ ரிவரென" , உத்தம குருவால் உரைத்திடப் பெற்ற சித்தனே யெங்கள் செல்வமே போற்றி! அவதார மூர்த்தியாம் பூரீராம கிருஷ்ணரே சிவமெனத் தொழுத செம்மலே போற்றி! புவனேஸ் வரிமகிழ் புதல்வா போற்றி! சாரதை வளர்த்த சதுரா போற்றி! வங்கம் ஈன்ற சிங்கமே போற்றி! நவ பாரதத்தின் நபியே போற்றி! அவனிக்கு ஞானம் அருளினய் போற்றி! நாதாந்த யோகியே நம்பனே போற்றி! வேதாந் தத்தின் விளக்கே போற்றி! சித்தாந் தத்தின் சிறப்பே போற்றி! அத்து விதத்தின் அணியே போற்றி! நிஷ்கா மியத்தின் நிறைவே போற்றி! அறிவுக் குறைவிடம் ஆணுய் போற்றி! ஆற்றலின் ஊற்ருய் அமைந்தாய் போற்றி! அன்பர் பணிக்கோர் அரனே போற்றி! அப்பனே! ஒப்பிலா மணியே போற்றி! சற்சனர் சங்கத் தலைவா போற்றி; சச்சிதா னந்த சற்குரு போற்றி! மாசிலா விவேகா னந்தனே போற்றி! முத்தனே போற்றி! முனிவனே போற்றி! போற்றி! போற்றி! நின் பூங்கழல் போற்றி!
- க. இராமச்சந்திரன்,
றி வி வே கா ன ந் த ர் அ ரு ள் வ T க் கு
கற்பென்பது இந்து மாதரின் பரம்பரைச் செல்வமாகும். ஆதலால் அதை அவர்கள் நன்றக அறிவார்கள். முதலில் இந்த இலட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் சிறந்த மனுேவலிமை பெறுவார்கள். அவர்கள் இல்லறம்புகினும், பிரம்மசரி யத்தையே கைக்கொள்ளினும், எந்தநிலையிலிருப்பினும், தங்கள் ஒழுக் கத்தை விட்டுத் தவறு ம்போது உயிரை விடத்தக்க அஞ்சாத்தன்மை யையும், திடத்தையும் அவர்களுக்கு இந்த இலட்சியம் அளிக்கும்.
ܓܡܧܗ
محےحمحےجسمبر کسی
 
 
 

ஆத்மஜோதி 89
(பண்டிதர். பொ. கிருஷ்ணபிள்ளை)
பள்ளிப் படிப்பற்ற அனுபவ மேதை.
நூருண்டுகளுக்கு முன்னர் வங்கத்திலே ஒரு தங்கம் உதித்தது. தங்கம் ஒன்றன்று இரண்டென்றலே பொருத் தம், சிவமும் சக்தியும் போல ஒன்றுவிட்டொன்று பிரித் துணர முடியா நிலையிலே பரமஹம்சர் இராம கிருஷ்ணர் என்ற ஒரு பொன் அன்னமும், விவேகானந்தர் என்ற அமு தத் திரளும் தோற்றுதற் கேற்ற வாய்ப்பு வங்கத்திற்கே கிடைத்தது. மேலை நாட்டு நடை உடை மோகமும், ஆங்கில நாட்டுக் கல்வி மோகமும் மக்களை எங்கும் பிடித் தாட்டி முன்னையோர் முறைகளை யெல்லாம் எள்ளிப் பய னற்றன எனத் தள்ளி நகையாடு மளவிற்கு அக்கால நிலை அடிகோலிற்று. ஆங்கிலக் கல்வி மோகம் மக்களைப் பிடித் தாட்டிய காலத்திலே ஆங்கிலப் படிப்பே யன்றி பள்ளிப் படிப்புமே சிறிதுமற்ற மகான் தோற்றினர். பெரும்பெ ரும் பட்டதாரிகளும், சிந்தனைத் திறனுளரும் இந்தப் படிப் பேயற்ற மேதையின் காலடியிலிருந்து கற்ற பயனுற்ற விடயங்களோ அளப்பில நூல்கள் கற்ற சர்வ கலாசா லைப் பெரும் பேராசிரியர்கள் தங்கள் சந்தேகம் தெளிவுற நாடி வந்தடைய இருந்தவர் படிப்பே யற்றவர் என்னும் போது அது ஒரு பெரு வியப்பாகத் தோன்றுகின்றதல் (a) 6.1 TP
தன்னையும் தலைவனையும் அறிந்த ஞானி.
அனுபவ ஞானத்திற்கு மேற் சிறந்த ஞானம் பிறி தொன்றுமே இல்லை. கடவுட்கல்வி யொழிந்த ஏனைய எல் லாம் பயனற்றன. "நானுர்? என்னுள்ளமார்? ஞானங்க ளார்? என்னை யாரறிவார்?’ என மணிவாசகனுர் அன்று , கேட்டதுபோலவே இந்த மகானும் கேட்டு தம்முள்ளே ஆழ்ந்து ஆழ்ந்து சென்று தன்னையும், தலைவனையும் நன்கு அறிந்து கொண்டார். அவர் அளப்பிலா அன்பு செலுத்

Page 7
90 ஆத்மஜோதி
திப் பூசித்தவளோ உலக அன்னை காளி. தாயொடு கூடி தந்தையை அறியும் முறையிலே சித்தியுற்ருர் பரமஹம்சர்.
பரமஹம்சரை உணர்ந்த பிரதம சீடர்.
ר ק
அகில உலகப் புகழ் படைத்த சுவாமி விவேகானந் தரை சில பெரியோர் மேலை நாட்டிலே தங்கள் குருநா
தரைப் பற்றி தாங்கள் இதுவரை யாதொன்றும் கூறவில் லையே?’ என்ற போது அந்த அதி உத்தம சீட இரத்தி னம்:- அழியாப் புகழ் படைத்த ஆத்மஞானி - 'கேவலம் மிக அற்பமான கருவியாகிய என்னைக் கொண்டு என் குரு நாதனை உலகம் அளவிட்டு விடுமோ எனப் பயந்தே அந்த மகாத்மாவுடைய பெயரை நாம் எடுத்தியம்பவில்லை'. என்று நடுநடுங்கிக் கூறினர். இத்துணைப் புகழ் வாய்ந்த சுவாமிகள் தம்மைக் கொண்டு தம் குருநாதரை உலகம் மட் டிட்டால் அஃது எத்துணைப் பிழையாகுமென நினைத்தா ராம். பரமஹம்சரை நன்கு உணர்ந்தவர் விவேகானந்தர்
ஒருவரே.
பெரும் குரவரிடம் அரும் பக்தி,
தாம் பிறந்த வங்க நாட்டிலே மேலைத் தேயத்திலே வேதாந்தக்கொடியை நாட்டி மேலை கீழைத்தேய சீடஇரத்தி னங்கள் புடைசூழச் சுவாமிகள் வந்தபொழுது அவருக்குக் கிடைத்த உளம் கனிந்த வரவேற்புக்கு ஈடும் எடுப்பும் கூற முடியாதிருந்தது. இந்தப் பெரிய இராச உபசாரத்தின் போது சுவாமிகள் சற்றேனும் உள்ளக் கிளர்ச்சி அடையாது கூறியதாவது, 'இந்தக் கல்கத்தாவீதி வழியே வீணனகி விளையாடித் திரிந்த பயனற்ற இவனுக்கா இத்தகைய உபே சாரம்? இராம கிருஷ்ணதேவர் கல்கத்தா வீதிப்புழுதியை அள்ளி உள்ளங் கையில் வைத்து ஊதில்ை அதிலிருந்து ஆயி ரம் விவேகானந்தர்கள் உதிக்கமாட்டார்களா?' அடக்கம் மிக இங்ங்னம் கூறித் தம் குருநாதனுடைய பெருமையை மக்களுக்குத் தெளிவுறுத்தி த ம் பெருமைகளை எல்லாம் அந்த மகானுடைய திருவடிகளுக்கே சமர்ப்பித்து விட்டுப் பழைய நண்பர்களை எல்லாம் கட்டி அணைத்து களிபேரு வகை உற்ருர், சுவாமிகள்என்றுமே வெளிஉபசாரங்களினலே தலைக்கிறுக் கெய்தியது கிடையாது. தம் உளநிலையைப் புலப் படுத்தி மேலை நாட்டிலிருந்து மனங் கலந்த ஒருவருக்குத்
 
 
 
 

ஆத்மஜோதி 9.
தாம் எழுதிய கடிதத்திலே குறிப்பிட்டதாவது:- "எனக் குக் கிடைத்த உபசாரத்தில் ஒரு சிறு பகுதியே ஒருவரை பைத்தியக்காரணுக்கப் போதுமானது. சிவனுடைய பிள்ளை யாகிய நானே இத்தகைய உபசாரங்கள் எனக்குச் செய்யப்
பட்டனவாக கொள்ளவில்லை. இவையெல்லாம் எந்தப்பெரி யாரிடம் சேரவேண்டுமோ அவருக்கேஉரியன. என் குறைகள்
மாத்திரமே எனக்குச் சொந்தமானவை' இடர் வரினும்
இன்பம் வரினும் இரண்டையும் ஒன்ருகவே கருதும் சுவா
மிகளுடைய சமபுத்திபாவம், நமக்குத் தெற்றென விளங் குகின்றது. மன்னவர்கள் தம் காலடியிலே வீழ்ந்து வணங் கியபோதும் தாம் இவர்ந்து வந்த இரதத்தைக் குதிரை களை அவிழ்த்து விட்டு மன்னரும் மற்றையோரும் உளம் கனிந்து இழுத்தபோதும் சுவாமிகள் சிவனையும் தம் குரு நாதனையும் பற்றிச் சிந்திப்பதிலேயே ஈடுபட்டிருந்தார்.
கருணையும் களையும் சொட்டும் திருமுக மண்டலயோகி.
சுவாமிகளுடைய கம்பீரமான திருத்தோற்றத்தைக் கண்ட மேதாவிகளும் ஆண் பெண்மக்களும் அவராற் கவ ரப்பட்டனர். அவருடைய ஞானப் பொறிதட்டும் கண்க ளோடு கூடிய திருமுகமண்டலம் மேதாவிகள் நிறைந்த சிக் காக்கோ சர்வமத மகாசபையினுக்கே ஒப்பற்ற ஒளியை அள்ளி வீசிற்று. அந்தக் கண்கள் ஞான ஒளியை வீசிய படியே மக்கள் உளத்தில் எல்லாம் அப்படியே ஊடுருவிப் பாய்ந்தன. காந்த சக்தி பாய்வது போன்ற ஒரு உணர்ச்சி காண்போர் எல்லாருளத்திடையும் பரவக் காரணமாய் நின்ற அவர் கண்களின் பிரகாசத்தை இன்றும் நாம் சுவாமி களுடைய திரு உருவப்படங்களிலே - விசேடமாக சிக்காக் கோ மதசபையிலே வீ ர க ர் ச் சனை செய்யும் பாவனையில் அமைந்துள்ள திரு உருவப்படத்திலே காணலாம். அவரு டைய எந்தத்திருவுருவப் படத்திலும் இத்தகைய சக்தி அமைந்திருப்பது நாம் காணக் கூடியதே.
உண்மையையே இயம்பிய உத்தம சந்நியாசி.
கப்பறை கொண்டு பிச்சை ஏற்று ஒர் இடத்திலும் தங்கி நிற்காது திருப்பாதங்கள் நோவக்கால் நடையாத்திரையில் ஈடுபட்ட காலத்தும் அவரிடம் இருந்த கம்பீரத்தன்மை அவரைப் பார்த்தோரை எல்லாம் அவருக்குப் பணிவுடன் கூடிய மரியாதை செய்யும் தன்மையை ஏற்படுத்தத் தவற

Page 8
92 ஆத்மஜோதி
வில்லை. அவர் திருமுக மண்டலத்திலே சாந்தமும் கம்பீரமும் ஒருங்கே தவழ்ந்தன. துன்பங்களிடையே அவர் அசையாக் குன்றென நிமிர்ந்து நின்ருர், உண்மையை ஒழிப்பு மறைப் பின்றி எவருக்கும் அஞ்சாது இடித்துரைக்கும் அவர்தம் இயல்பு கண்டு மகாமேதை ஈன்ஸ்ரீன் அவரைப்பார்த்து இவ்வளவு துணிகரமாக அவர்பேசினல் அவர் பல எதிரிகளை
உண்டாக்கி விடுவாரே என்ருராம். சுவாமிகளோ உலகிய
லுக்குப் பயந்து பூசி மெழுகி எதனையும் பேச அறியாதவர் 'அஞ்சுவதுமில்லை அஞ்சவருவதுமில்லை’ ‘யாமார்க்கும் குடி யல்லோம், யாதும் அஞ்சோம் மேவினுேம் அவன் அடி யார் அடியாரோடும் மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோ மே' என அப்பரெம்பெருமானும் மாணிக்கவாசக சுவாமி களும் கூறியருளியவாறு சிவபிரான்மீது கொண்ட திடநம் பிக்கையோடு உண்மையில் உறுதி பூண்டு வாழ்ந்தார். அவ ரை நெருங்கிய இடர்கள் பொடியாயின.
சுருங்கிய வாழ்நாளில்" விரிந்த தொண்டு.
முப்பத்தொன்பது ஆண்டுகளே மண்மிசை வாழ்ந்த சுவாமிகள் இந்திய தேசத்திற்கும் பொதுவாக உலகிற்கும் ஆற்றியதொண்டுகள் ஆயிரம் வருடம் வாழ்ந்தும் அருமை பெருமை மிக்க ஒருவர் செய்ய முடியாதனவாகும். சுவாமி களுடைய சொன்மாரிகள், குறிப்புக்கள், சம்பாஷணைகள், பாடல்கள் யாவும் அவர்தம் பெருமையை உலகிற்கு எடுத் துக் காட்டுவன. அவருடைய கடிதங்களோ மேலே காட்டிய வற்றிற்கு எவ் விதத்திலும் குறையாதனவாக அவர்தம் குழந்தை உள்ளத்தையும், தெய்வீகப் பண்பினையும், அசை யா மன உறுதியையும், தீர்க்கதரிசனத்தையும், அவர்தம் தெய்வீகக் கவித்துவத்தையும் புலப்படுத்தும் தேடரிய பொக் கிஷமாவன.
காந்தியடிகள் இந்தியநாட்டின் இதயமாயின் வீர விவே கானந்தர் இந்திய நாட்டின் மூளையும் கரமுமாவார். அந்தநாளிலே பாதயாத்திரை செய்து வேதாந்தக்கொடியை நாட்டிப் பராசக்திக்கு இந்தியநாட்டின் பலபாகங்களி லும் பீடமும் அமைத்த அந்தச்சங்கராச்சாரியரே மீண் டும் நம்மதத்தை நல்லவகையில் உறுதியாகநாட்டிச்செல்ல அவதாரம் செய்தாற்போலத் தோற்றிய இப்புனிதனைப் பற்றிப் பாரதியார் போற்றும் அடிகளைப்பாடி இவ்வவதார புருடரின் நாமம் வழுத்தி நாமும் புனித மெய்துவோமாக.

ஆத்மஜோதி 93
தல விசேடம்
(பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை)
அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரப்பிரமம் முன்னிலை யில்லாதது; சுட்டுணர்வுக் கெட்டாதது. அங்ங்னமாதல் பரப்பிரமத்தின் சுவரூபநிலை.
ஆன்மாக்களும் அவ்வாறே முன்னிலைப் படாதவை. சுட்டுணர்வுக் கெட்டாதவை. அங்ங்ணமாதல் அவற்றின் சுவரூபநிலை. ஆயினும், அவை உடலைச் சார்ந்து, அச் சார்பு வாயிலாக முன்னிலைப்பட்டுச் சுட்டப்படுபவை. சுட் டப்படுநிலை அவற்றின் தடத்தநிலை. தடத்தமாவது ஒரு பொருள் மற்றென்றைச் சார்ந்து தோன்றுவது. இத்தடத் தம் சச்சிதானந்த பரப்பிரமத்துக்கு முண்டு.
ஆன்மா தடத்த நிலையாற் பாதிக்கப்படும். பரப்பிரமம் அந்நிலையாற் பாதிக்கப்படுவதில்லை. இங்ங்ணம் தடத்த நிலையிற் பேதம் உண்மை சிந்திக்கற்பாலது.
பரப்பிரமம் திருக்கைலாசத்திலே பூரீ கண்ட சரீரசரீரி யாய்த் தேவர்கள், முனிவர்கள், கனர்கள் உள்ளிட்ட ஆன்மாக்களுக்கு நிக்கிரக அநுக்கிரகங்களைப் புரிந்து தரிச னம் அளித்துக் கொண்டிருக்கும். பூரீ கண்ட சரீர சரீரி யாதல் பிரமத்தின் ஒருவகைத் தடத்தநிலை. அஃதாவது பூரீ கண்டருடைய சரீரத்தைத் தமக்குச் சரீரமாகக்கொண் டிருப்பது என்றவாறு,
முன்பக்கத் தொடர்ச்சி
வானந் தம் புகழ் மேவி விளங்கிய
மாசி லாத குரவனச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னுனெத் தேசுறு மவ்விவே
கானந்தப்பெருஞ் சோதி, !

Page 9
94. ஆத்மஜோதி
பூரீ கண்டராவார் உருத்திரருள் தலைவர். அவர் பிர
ளயாகலருள் முதன்மையானவர் என்று சிவாகமங்கள்
செப்பும், பூரீ கண்டருத்திரரை அதிட்டித்து நின்றே திருக்கைலாசத்தில் நிக்கிரக அநுக்கிரகங்கள் நட்க்கின்றன.
திருக்கைலாசம் பதினன்கு உலகத்தை அடக்கிய அண்
டத்தின் முகட்டில் சத்தியவைகுந்த உலகங்களுக்கு மேலே
உள்ளது. இந்தப்பூமியில் இமயத்தை அடுத்துள்ள கைலா சம் அண்டமுகட்டில் உள்ள கைலாசத்தின் ஞாபககைலச சம். இங்கேயுள்ள கைலாசம் அண்டமுகட்டுக் கைலாசத் துக் காட்சிகளைக் காணுதற்கு வாய்ப்பான விசேடம் படைத்தது. காலவிசேடம் போலவே இடமாகிய தல விசேடமும் ஆத்மவிருத்திக்கு வாய்ப்பானவை. அங்கே பூரீ கண்டர் வாயிலாக நடப்பது போலவே இங்கேயும் சிவத்துவம் எய்திய பக்குவ ஆன்மாவாயிலாக நிக்கிரக அநுக்கிரகம் நடக்கும். y))
இங்கே (ஞாபக) கைலாசம் போல விசேடம் படைத்த தலம் மிகமிக அருமை. ஒரு சமயம் திருவையாறு திரு நாவுக்கரசு நாயனருக்குக் கைலாசமாயமைந்தது. ஆயி னும், அதனைத் தென் கைலாசமென்று வழங்கியதில்லை.
திருக்கோணுசலம் மாத்திரம் இந்தப் பூமியிலுள்ள கைலாசத்தோடொப்பத் தக்ஷண கைலாசம் என்று வழங் கப்படுகின்றது. இந்த வழக்காற்றின் மிகுதிப்பாட்டினுல் உத்தர கைலாசம் என்று இப்பூமியில் உள்ள கைலாசம் வழங்கப்படுகின்றது.
இதனல், திருக்கோணுசலமாகிய தகூஷிண கைலாசம் அண்ட முகட்டில் உள்ள கைலாசக் காட்சிகளைக் காணு தற்கு வாய்ப்பான தல விசேடம் படைத்தது என்பது இனிது பெறப்படும். ஆகவே, இங்கேயும் நிக்கிரக அநுக் கிரகங்கள் சிவத்துவம் எய்திய பக்குவான்மா மூலம் நடை பெறும்.
அண்டமுகட்டுக் கைலாசத்தில் பூரீ கண்டர் இருப்பது போலவே இங்கேயுள்ள கைலாசம் முதலிய புண்ணிய க்ஷேத்திரங்கள் தோறும் பக்குவான்மாக்கள் பரப்பிரம உபாசனையில் முழுகித்திளைத்துக் கொண்டிருக்கும்.
 
 

ہیمبر
ஆத்மஜோதி 95
அவ்வான்மாக்கள் வாயிலாகவே திருவருள் பிரவாகிக் கும். அவர்களைக்கண்டு களித்துப் பரமானந்தம் உறுவ தற்கே நாயன்மார்கள் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கும் நாயன்மார்களுக்கும் சம்பாஷணை நடப்பது முண்டு. தல விசேடத்தோடு கால விசேடமும் சேருமாயின் ஆங்காங்கே நிகழும் காட்சிகள் புணர்ந்தாற் புணருந்தொ றும் புதியனவாம். அப்படியானதொரு காட்சியைக் கண்டு களித்தற்குச் சுந்தரர் தமது கண்ணையிழந்தும் புறப்பட் டது புராணப்பிரசித்தம்.
தலங்கள் தோறும் எவர்கள் வாயிலாகத் திருவருள் சுரக்கின்றதோ அவர்களே அவ்வத்தல மூர்த்திகள். அம் மூர்த்திகளைத் தலையாய கற்புடை மனைவியரோடொப்பிட்டு ஒரு முறை மகான் ஒருவர் ஒரு கதை சொன்னர். அக் கதையின் சாரம் பின் வருமாறு:
கற்புடை மனைவி தெய்வந் தொழாஅள் கொழுநற் ருெழுது எழுபவள். 'கெர்க்கென்று நினைத்தாயோ கொங் கணவா’ என்று கேட்குந்தகுதி வாய்ந்தவள். 'முளிதயிர் பிசைந்த. *’ என்ற குறுந்தொகைப் பாட்டு அவள் கணவனுக்கு அமுது செய்து ஊட்டிமகிழும் ஒரு சந்தர்ப் பத்தை எடுத்துக்காட்டுவது. * முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள். ' என்ற திருப்பாடல், அவள் ஒழுகலாறு சென்று முற்றும் முதிர்ச்சியைக் காட்டுவதேயாம்.
இப்படிப்பட்ட உத்தம மனைவியிடம் பணியாள் ஒரு வன் தான் பணிசெய்வான் என்று வந்து சேர்ந்தால், அம் மனைவி அப்பணியாளிடம் தான் கணவனுக்குச் செய்யும், பணிகளனைத்தையும் செய்யும் உரிமையை அப்படியே ஒப்பு வித்து விடமாட்டாள். தன் கணவன் பெருமையையும் தன் கணவன்பால் நடக்கும் வகையையும் எவ்வளவுக்கெவ் வளவு அப்பணியாள் உணர்ந்து தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளுகின் முனே அவ்வளவுக்கவ்வளவு அவன் தகுதிக் கேற்றவாறு இயைந்த பணிகளிலேயே அவனை நிறுத்து வாள். அவன் தன் தகுதி நோக்காது தகுதிக்கேலாத அணுக்கத் தொண்டில் வலிந்து பிரவேசிப்பானுயின் அவள் வெறுப்புக்கும் சாபத்துக்கும் ஆளாவன்.
இவ்வாறே விசேட தலங்களை அணுகுவோர் ஆங்கு எழுந் * தருளியிருக்கும் மூர்த்தியை மேற்குறிப்பிட்ட உத்தம மனை வியில் வைத்துச் சிந்திக்கவேண்டும். பரம்பொருளின்

Page 10
96 ஆத்மஜோதி பெருமை என்ன? அதன் கருண்ைக்கு வாயிலாய் அதனை உபாசித்துக்கொண்டு அங்கே எழுந்தருளியிருக்கும் மூர்த்தி யின் கருத்தென்ன? தன் தகுதிப்பாடு எப்படிப்பட்டது? என்றின்னுேரன்னவற்றைச் சஈத்திரவாயிலாகவும் பெரி யோர் வாயிலாகவும் விசாரிக்க வேண்டும். -
இங்ங்னமன்றித் தம்தகுதிக் கேலாதவகையில் அணுகு பவர்கள் அத்தல மூர்த்தியின் வெறுப்புக்கும் சாபத்துக்கும் ஆளாவர்.
மின்சாரம் பரவுகின்ற மின்சார நிலையத்துட் பிரவே சிப்பவர்கள் எத்துணைச் சாவதானமாயிருக்க வேண்டுமோ அத்துணைச்சாவதானத்தினும் ஆயிரம் மடங்கு சாவதானம் தெய்வசக்தி பரவும் ஸ்தலங்களை அணுகுவோரிடம் இருக்க வேண்டும்.
சிலபுனித ஸ்தலங்களில் நாயன்மார்கள் கால் வைக்கக் கூசிய கதையும், காரைக்கால் தெய்வம் தலையால் நடந்த கதையும் சிந்தனைக்குரியவை,
அருச்சகர் தொடக்கம் புறவீதி சுத்தஞ்செய்பவர்கள் பரி யந்தம் தத்தம் அகப்புறச்சுத்தங்களை-தத்தம் தகுதிப்பாடு களை உணர்ந்து தம்மை உயர் நெறிப்படுத்திக்கொள்ளக்
கடவர்கள்.
தலவிசேட மகாத்மியம் இங்ங்ணம் ஒருவாறு சிந்திக்கற் பாலதாம்.
கடவுள்.
மனிதன் கடவுளை அறியாவிட்டாலும் நம்பிக்கை ; உடையவனுயிருக்கின்றன். அதற்குக் காரண்ம் அவ ? னுக்குத் தன்னிடத்திலே நம்பிக்கைஇருப்பதுதான்.
- காந்தி, له,}
 

ஆத்மஜோதி 97
திருவாதிரைத் திருவிழா தமிழர் தம் முது விழா
- மட்டுநகர்: ஏ. பாக்கியமூர்த்தி ஆசிரியர். -
○************ ●●●●********************
ர
மக்களினத்தில் இறையுணர்வு எப்போது தோன்றிய தென்பதை ஆராயப் புகுந்த பேரறிஞர்கள், மக்களில் விலங்குணர்வு தேய்ந்து மனித உணர்வு தலைப்பட்டு வளரத் தொடங்கிய காலம் முதல் இறையுணர்வு தோன்றியதெனக் கூறுகின்றனர். இன்று உலகில் வாழும் மக்கள் இனத்தினுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழி GOTLò. தமிழருக் கென்று ஒரு தனிப்பட்ட நாகரீகம், தெய்வக் கொள்கை, வாழ்க்கை முறை, பண்பாடு போன்றவைகள் இருக்கின் றன. அவற்றுள் பல காலத்தால் வழக்கிழந்து இருப்பினும் திருவா திரைத் திருவிழா அன்று முதல் இன்று வரை நம் இனத்தால் கொண்டாடப் பட்டு வருகின்றது.
எங்கள் முழுமுதற் பொருளாகிய அம்மையப்பரை 'ஆதிரை முதல்வன்' எனப் பரிபாடல் என்னும் சங்கத் தொகை நூல் குறிக் கின்றது. திருவாதிரை என்ருல் என்ன? அது குறிக்கும் உண்மைப் பொருள்தான் என்னே? என ஆராயப் புகுங்கால்; இத் திருவாதிரை விண்மீன் காணப்படும் வீடு மிதுன வீடாக இருக்கின்றது. ஆண் பெண் யாழ் விளையாடும் காட்சி அங்குண்டு. இது இவ்வுலகில் வாழ் உயிரினங்கள் எல்லாம் ஆணும் பெண்ணுமாகவே கூடி வாழ்கின்றன என்பதையும் அத்ற்கு வழிகாட்டியாக எம்பெருமானும் மாதொரு பாகனுக இருப்பதையும் குறிக்கும். இக் கூற்றினை விளக்குவான்
வண்டியன்ருே மாணிக்கவாசகப் பெருந்தகையும்,
'தென்பால் உகந்தாடுந் தில்லைச் சிற்றம் பலவன்
பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் கானேடீ பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ'
என்று தன் திருவாசகத் திருமறையின் கண்ணே கூறிப் போந் துள்ளார்.
ஆணும் பெண்ணும் சேரா விட்டால் உலகில் படைப்பு நிகழா: படைக்கப்பட்டவை எல்லாம் ஆணுகவோ அன்றேல் பெண்ணுகவோ இருந்து விட்டால் சில காலங்களின் பின் உலகில் உயிர் வாழ்க்கை அற்று

Page 11
98 ஆத்மஜோதி
விடும். எனவே தான் இவ்வுண்மையை உலகிற்கு உணர்த்து வான் வேண்டி தில்லைச் சிற்றம் பலவன் பெண்பால் உகந்தான். எனவே மிதுன வீட்டில் இருக்கும் திருவாதிரை விண்மீன் படைப்பின் தொடக் கத்தைக் குறிக்கிற தென்பது புலணுகும்.
பேரூழிக் கால முடிவில் மாயையில் உலகம் ஒடுங்க, மாயை இறை சக்தியில் ஒடுங்க, இறைசக்தி இறைவனின் ஆற்றலில் ஒடுங்கும் என்பது
சைவசித்தாந்த உண்மை. இதே போல் படைப்பின் தொடக்கத்தில்
சிவனில் இருந்து சக்தியும், சக்தியில் இருந்து நவ சக்திகளும் தோன்றி உலகப் படைப்பைச் செய்கின்றன.
இதை திருவாசகத் திருவண்டப் பகுதியில் மணிவாசகனர்
"வேதியன் தொகை யொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றெடு புணரிய மாப் பேரூழியும் நீக்கமும் நிலையும்'
எனக் கூறியுள்ளார்.
எனவே திருவாதிரைத் திருநாள் பேரூழிக் காலத்தின் பின் பேரு லகப் படைப்பின் தொடக்கமே யென்று சைவசித்தாந்த வல்லுனர் கள் மொழிகின்ருர்கள். இத்திருவாதிரைக்குத் தலைவனன சிவபிரான் “ஆதிரை முதல்வன்' என அழைக்கப்படுகிருன். இருபத்தேழு விண்மீன்களுள் "திரு' என்னும் அடைமொழி யோடு வழங்கி வருபவை திருவாதிரையும் திருவோணமுமாகும். முன்னையது அப்பனுக்கும், பின்னையது அம்மைக்கும் உரியதாகும். சிவசக்தியின் ஆண் வடிவ மான திருமாலுக்கு உகந்தது திருவோணம்.
இத்துணைப் பெருமை வாய்ந்த இத்திருவா திரைத் திருவிழாவை நம் முன்னேர் எவ்வாறு கொண்டாடினர்கள் என்பதை பரிபாடலில்
வரும் 'விரிகதிர் மதிய மொடு வியல் விசும்பு புணர்ப்ப? எனத் தொ
டங்கும் 11ம் பாடலில் வையையைப் பாட வந்த ஆசிரியர் நல்லந்துவ
ஞர்
* கனைக்கு மதிர்குரல் கார்வான நீங்கப் பனிப்படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நனிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை யாதிரை விரிநூலந்தணர் விழவு தொடங்கப் புரிநூலந்தணர் பொலங்கல மேற்ப வெம்பாதாக வியனில வரைப் பென அம்பாவாடலினுய் தொடிக் கன்னியர்
 

ஆத் மஜோதி 99
முனித்துறை முத்ல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப் பருமணலருவியின் ஊதையூர் தர உரை சிறை வேயர் நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பில் தையல் மகளிர் ஈர அணிபுலர்தர
வையை நினக்கு டைவாய்த் தன்று.
எனவரும் வரிகளால் இத்திருநாளைச் சிறப்புறக் கூறிப் போந் துள்ளார். இதனுல் நாம் அறியக் கிடப்பது என்னேயெனின் கூறுதும்
நம் தமிழ் நாட்டில் கார்த்திகை மார்கழி மாதங்கள் மாரிகாலத் துப் பிற்பகுதியாகும். மாரிகாலத்து முகில் அடர்ந்த வானமும், முகிற் கூட்டத்தின் இடிமுழக்க ஒசையும் ஆகாயத்து நீங்கவே பனி மிகுதி யாகும். அவ்வாறு பனி மிகுதியாகி குளிரால் நடுங்குதலையுடைய முன் பனிக்காலத்து மார்கழி மாதத்தில் திருவாதிரை விண்மீனில் திரு நான் மறைகளை ஒதியுணர்ந்த செந்தண்மை பூண்டொழுகும் அந்த ணர்கள், அவ்வாதிரைக்குத் தெய்வமும்”அம்மையப்பருமாகிய சிவபெரு மானுக்குரிய விழாவைச் செய்யத் தொடங்கினர்கள். கன்னிப்பரு வத்துப் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த பொன்னபரணங்களை யெல்லாம் பூநூல்தரித்த அந்த னருக்குத் தானமாகக் கொடுத்தார் கள். உலகம் பின்னுங் காய்தலின்றி மழையாற் குளிர்கவென்று அம் பாவாடலைச் செய்து விரதம் நோற்கும் கன்னியற்கு முதிய பெண்டீர் நோன்பு நோற்கும் முறைமையைக் காட்ட, அவர்கள் பனியையுடைய விடியற் காலத்தே தாயுடன் நின்று நீராடினர். அங்ங்ணம் நீராடிய பின்னர் குளிர்வாடை வீசுவதால் அது தாங்கமாட்டாமல் வையை யாற்றங் கரையினிலே வேதியர் வேட்ட வேள்வித் தீயின் அருகிற் சென்று தம் ஈர ஆடைகளை உலர்த்தினர். அதனுல் அவ்வக்கினியிடம் கொடுக்கும் ஆவியானது நினக்கு வாய்த்ததாக இருந்தது வையையே என்பது மேற்கூறிய வரிகளின் பொருளாகும்.
மேற்காட்டிய பாடற் பகுதியில் வரும் முதன் நான்கு வரிகளாலும் இவ்விழா மார்கழி மாதத்தில் அதிகாலையில் நடை பெற்ற தென்பது பெறப்படும்.
மக்களுக்கு ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள். மக்களின் ஒரு நாள் அறுபது நாழிகையாகையால் தேவர்களின் ஒரு நாளும் (ஒராண்டு) அறுபது நாழிகையாகும். இவ்வறுபது நாழிகைகளும் ஆறு சிறு பொ : பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பொழுதிலும் தேவர்கள் கூத் தப் பெருமானுக்கு வழிபாடாற்றுவார்கள். மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, ஆகிய அறுவகைச் சிறு பொழுதுகளிலும்

Page 12
100 ஆத்மஜோதி
வைகறைப் பொழுதே தெளிந்த சிந்தையுடன் வழிபாடாற்றுவதற்கு உகந்த தொன்ருகும்.
தேவர்களுக்கு வைகறையாக விளங்குவது மார்கழிமாதம். மார்
கழிமாதத்தில் தேவர்கள் வைகறைப் பொழுதில் கூத்தப் பெருமா னுக்குச் சிறப்பாக வழிபாடாற்றுவார்கள். இன்றும் இம்மாதத்தில் சைவத்திருக் கோவில்களில் அதிகாலையில் விசேட பூசைகளும் வழி: பாடுகளும் நடைபெறுகின்றன. 。
பண்டுதொட்டே தமிழ் மக்கள் நிறைமதியுடன் கூடிய விண்மீன் களைப் புனிததினங்களாகக் கொண்டாடி வந்திருக்கிருர்கள் என்பதை "மாயிருந் திங்கள் மறுநிறையாதிரை' என்பதால் அறியக் கிடக் கிறது. சைவ நன்மக்கள் இன்றும் தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், கார்த்திகைக் கார்த் திகை, மார்கழித்திருவாதிரை போன்ற தினங்களில் விசேட வழிபா டாற்றி வருகின்றனர்.
மேலும் இப்பரிபாடல் வரிகளால் இளமகளிர் நோன்பு நோற்ற ஓர் வரலாறும் கூறப்பட்டிருக்கிறது . - தொடரும்.
LeeLeLeeLeLeeLLTeLLeLeLTeLMLLeeLLTeTeLLTLLLLLLLLeeSLTeLeLeLLeLLTeLTLLMeSMTeLLTLTeLeLeLLeeeLLTLLTeLTeLeLeLeeLL
பூனி விவேகானந்தர் அருள்வாக்கு
மாதர்க்குரிய மதிப்பை அளிப்பதன் மூலமே எல்லாத் தேசத் தாரும் சிறப்பெய்தி இருக்கிறர்கள். எந்த நாடு பெண்களைச் சரியாக மதிக்கவில்லையோ, அந்த நாடு எப்போதும் சிறப்பெய்தியதில்லை; இனி மேலும் சிறப்படையாது. உண்மையான சக்தி உபாசகன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? பெண்களைப் பராசக்தியின் திருவடிவங்களெனக் கொண்டு அவர்களை வழிபடுகிறவனே உண்மைச் சக்தி உபாசகனுவான். -
༨
LqLLeMeLeLeTLeLeeLLLLLLeeeLLLLLLeLeLeeLMLeLTLTLeLeLeLeLeLeLeLeLeeLeLeeLeLeeLeLLLLLLLS
 
 
 
 

ஆத்மஜோதி 01
- rD Go) Lu IT D
அருளும (oபாருளு
-சிவ. கிருஷ்ணம்மாள்
அருள் அருளைத்தான் வேண்டும்;
s பொருள் பொருளைத் தான் வேண்டும்;
அருள் பொருளைத்தான் வேண்டாது;
鷺 பொருள் மற்றதைத் தான் வேண்டாது. 覆
அருளை ஒன்றத் தன்னடக்கம்; பொருளைப் பற்றத் தனி வியாபகம்; அருளை அடையவே பரம்; பொருளை அடையவே திறம். அருளுக்கு ஒன்றும் அழிவில்லை; பொருளுக்கு ஒன்றும் நிலையில்லை; அருளுக்கு யாவரும் ஆட்படுபவர்; பொருளுக்கு இணங்கியவர் ஆசைப்படுவர். 3. அருளில் உணர்வது உண்மை; பொருளில் ஆக்குவது மேன்மை; அருளில் அல்லல் நீக்கம்; பொருளில் தேவைப் பெருக்கம்.
அருளால் எத்தையும் காணலாம்; பொருளால் போன வழி பார்க்கலாம்; அருளால் தன்னைத்தான் ஆளலாம்; பொருளால் பிறரை அடக்கலாம். 5 அருளது பெருக யோகம்; பொருளது வளரப் போகம்; அருளது நல்கும் ஞானம்; பொருளது செய்யும் தானம். 6 அருளுடையர் பிறப் பிறப் பறுப்பர்; பொருளுடையர் பகைத் திறனழீப்பர்; அருளுடையர் அறமே சேர்ப்பர்; பொருளுடையர் பொருளே திரட்டுவர்.
அருளே! அருளைப் பிணைத்துவை; பொருளே! பொருளைப் போதகஞ்செய்; அருளே! ஆத்மஜோதி தரிசனம்;
8 பொருளே அருள்சார் தருணமிதாம். 8

Page 13
102 ஆத்மஜோதி
s
நரேந்திர ஞாயிறு.
ாம் சி. பொன்னுத்தம்பி, ண
ج۔ یہ؟"محeAسمبرخصیت
வானம் வெளுத்த தம்மா! - பாரதத்தாய் வாழ்வும் மலர்ந்த தம்மா! எழில் ஞான மணிப் பிழம்பாய் - நரேந்திர ஞாயிறு பூத்த தம்மா!
பொங்கும் துயரினி லே - பாரதத்தாய் புரண்டு தவிக்கையிலே - ஒரு சிங்கக் குரல் ஒலித் தே - மணிச் சேயொன் றுதித்த தம்மா! "
ஞானம் மலர்ந்திட வே - உலகில், நல்லறம் ஓங்கிட வே, - ஒரு மோனக் கதிர்ப் பரிதி - பாரத்த்தில் முளைத்து விட்டதம் மா!
வீரக்கனல் வடிவம் - புது வேதச் சுடர் வடிவம் - ஒரு பாரதப் பொற்கதிராய் - உலகெல்லாம் படர்ந்து பொலிந்த தம்மா!
அச்சம் மடிந்த தம்மா! - புதிதோர் ஆண்மை மலர்ந்த தம்மா - கொடும் நச்சிருள் பேரரக்கன் - தொலைந்திட ஞாயி றெழுந்த தம்மா!
பாரத ஜோதி யொளி! - வேதப் பண்ணிசை நாதவொலி - அந்தப் பேரருள் தேனருந்தி - மனமே!
பேரின்ப மெய் திடுவாய்!
 
 

* ஆத்மஜோதி 103
சிந்திப்பதற்குக் கருத்துகள் (பெளத்த இலக்கியத்தில் ஆதாரங் கொண்டவை)
- சுவாமி சிவானந்தர் -
1. வாழ்வின் அக்கரைக்கு நீ செல்லும்போது முன் புற முள்ளதையும் பின்புற முள்ளதையும் நடுவிலுள்ளதை யும் கைவிடுக. உன் மனம் நிறை சுவாதீனமாயிருந்தால் நீ பிறப்பிற்குள்ளும் வயோதிபத்திற்குள்ளும் நுழையமர்ட்
Tui.
2. தளைகள் அனைத்தையும் தகர்த்தவனை, இன்பத்திற் குத் தாகங் கொள்ளாதவனை, தற்சார்புடையவனும் கட் டற்றவனுமாகியவனை ஒரு பிராம்மணன் என்று யான் அழைக்கிறேன்.
3. யாரையும் சொல் அல்லது செய்கையாலோ புண் படுத்தாதே. விதிக்குக் கீழ் கட்டுப்பட்டு வாழ்க, புசிப்ப தில் மிதமாயிருக்குக. தனிமையில் வசிக்குக - தியானம் பயிலுக. இதுவே புத்தன் அல்லது விழித்தவனின் போதனை.
4. ஆடையின்மையோ, சடைமயிரோ, உபவாசமோ, தரையிற் படுத்தலோ, புழுதி பூசுதலோ, அசைவற்றிருத் தலோ, வாஞ்சைகளையும் ஆசைகளையும் அழியாத ஒரு மனிதனைப் புனிதப்படுத்த முடியாது.
5. தீவிர முயற்சியே சாவாமைக்குப் பாதை. சிந் தையற்ற தன்மையே மரணத்திற்குச் செல்லும் பாதை, முயற்சியுள்ளவர்கள் சாவதில்லை. சிந்தையற்றவர்கள் ஏற் கெனவே மரித்தவர்கள் போன்றனர்.
6. விதியின் (தர்மத்தின்) கொடை கொடைகள்
அனைத்தையும் மேம்படுகிறது. விதியின் இனிமை உலகை
அனைத்தையும் மேம்படுகிறது. அவாவின் அழிவு, துயர் துன்பங்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது.
7. ஏதேனு மொன்று செய்ய வேண்டியிருந்தால் ஒரு í மனிதன் அதைச் செய்வானுக. அவன் அதைத் தீவிரமா கக் காரியப்படுத்துவானக பராமுகமான யாத்திரிகனே

Page 14
O4. ஆத்மஜோதி
தன் மன வெழுச்சிகளின் தூசுகளை அதி விசாலமாகப் பரப்புகிருன்.
8. யார் பூமாதேவியைப் போன்று பொறுதியுடன்
தன் கடமையைச் செய்கிருணுே அவன் சேறின்றிய தடா கம் போன்றவன்; அவனுக்குப் புதுப்பிறப்புகள் யாதும் இருப்பில் இல்லை.
9. ஒரு மனிதனின் மயிர் நரைத்திருப்பதனுல் அவன் மூத்தோன்’ அல்லன். கேவலம் முதுமை அறிவற்ற முது மையே. யாரிடம் உண்மை, அறம், அன்பு அகிம்சை, தன்னடக்கம், சாந்தம் குடி யிருக்கின்றனவோ, யார் மாசற்றவணுயும், விவேகமுள்ளவனுயும் இருக்கிருனே அவனே "மூத்தோன்' என்றழைக்கப் படுகிருன்.
10. தீங்கற்ற தூய, நிரபராத ஆளுக்கு ஒரு மனி தன் கெடுதி செய்தால் காற்றுக்கெதிரே எறியப்பட்ட புழுதிபோல் அக் கெடுதி அவனிடம் மீண்டேகிறது.
11. “அது எனக்கருகேவரமாட்டாது" என்று சொல்லிக் கொண்டு ஒரு மனிதன் கெடுதியைப்பற்றி எளிதாக எண் ணவேண்டாம். தண்ணிர்த் துளிகள் விழுவதணுற்கூட ஒரு தண்ணிர்க்குடம் நிரப்பப் படுகிறது. அறிவிலி கெடுதியைச் சிறிது சிறிதாகச் சம்பாதித்தாலும் அவன் கெடுதி நிரம் பியவனுகிரு:ன்.
12. சந்தனம், மல்லிகை, அல்லி முதலியவற்றின் மணத்திலும் பார்க்க அறத்தின் நறுமணம் மிக மிகச்சிறந் தது. சந்தனத்திலும், மல்லிகையிலுமிருந்து வரும் மணம் அற்பமானதே. அறமே இயற் பண்பாகப் பெற்றேரின் பரிமளம் மிகச்சிறந்த சுவர்க்கத்திற்கு எழுகிறது.
13. வெற்றி வெறுப்பை வளர்க்கிறது; ஏனெனின் வெல்லப்பட்டவன் மகிழ்ச்சியற்றவணுயிருக்கிருன் வெற்றி தோல்வி இரண்டையும் கைவிட்டுள்ளவனும் மன நிறை வுடையவனும் மகிழ்ச்சியானவனுயிருக்கிருன்,
14. வெறுப்பதினல் வெறுப்பு ஒரு காலும் ஒழியாது;
அன்பால் வெறுப்பு ஒழிகிறது.
 

* ஆத்மஜோதி 105
வசவண்ணர் உபதேசத்தைத் தழுவியது
(ஆ. கந்தசாமி ஐயா)
மத நூல்களை வாசிப்பதனலும் ஒழுங்காகப் பேசுவதி
னலுமே மேதாவிகளாகிவிட முடியாது. உண்மை பக்தி மேலீட்டால் கடவுளை யுணர்ந்து அவரால் படைக்கப் பட்ட ஜீவன்களுக்கும் தொண்டாற்றுவதே சிறந்த மேதா
விகளின் இலட்சணமாகும்.
காட்டில் வாழும் கொடிய மிருகங்களும் கூட்டமாகக் கூடி வாழ்கின்றன. ஆனல் ஆறறிவு பெற்ற மக்கள் ஒற் றுமையாக வாழ்வதில்லை. பகுத்தறிவு பெற்ற இத்தகைய மக்களின் இருப்பிடத்தைக் காட்டிலும் விலங்கினங்கள் வாழும் காடுகள் சிறந்த இடமாகும்.
இரும்பு பழுக்கக் காய்ச்சிய போது தண்ணீரை உட் கொள்ளுகிறது. செடிகள் வேர்களின் வழியாகத் தண்ணி ரைக் கிரஹிக்கின்றன. அது போலவே கடவுளும் ஏழைக ளின் மூலமாக உணவை ஏற்றுக் கொள்கிருர்,
முன் பக்கத் தொடர்ச்சி
15. புனிதத்தன்மை அல்லது தெய்விகத்தன்மையில் முதற்படியின் பலன் பூமியை அரசாள்வதிலும் சிறந்தது; சுவர்க்கத்தில் வசிப்பதிலும் சிறந்தது; உலகங்கள் அனைத் தையும் ஆதிக்கம் கொள்வதிலும் சிறந்தது.
16. யார் விழித்துள்ளார்களோ யார் தியானம் பயில் V,, கிருர்களோ, யார்விவேக முள்ளவர்களோ, யார் தனிமை யிலும் தன் மறுப்பிலும் மகிழ்ச்சி கொள்கிருர்களோ, தேவர்களுங் கூட அவர்களிற் பொருமை கொள்கிருர்கள்.
17. உடலின் மாசு சோம்பல்; காவலாளின் மாசு கவனமின்மை; ஒரு மாதின் மாசு கற்பின்மை; கொடை யாளியின் மாசு கஞ்சத்தனம்; ஆனல் இவையனைத்திலும் மோசமான மாசு ஒன்றுண்டு அதுவே அறக்கெட்ட மாசாகிய அஞ்ஞானம், ஒ, மனிதனே! இம்மாசை வீசியெ றிந்து மாசற்றவனுகுக.

Page 15
106 ܝ ܢ ஆத்மஜோதி
கடவுளே உண்மையாக வணங்காதவர்களும் துன்பத் தில் ஆழ்ந்திருக்கும் ஜீவன்களைப் பற்றிச் சிந்திக்காதவர்க ளும் எருக்குவியல்களில் பிறந்து இறக்கும் புழுக் கூட்டங் களைக் காட்டிலும் மேம்பட்டவர்களாக மாட்டார்கள்.
கைகால்கள் தளருமுன்பே கண் பார்வை மங்கு முன்பே மூப்பு மேலிடா முன்பே கடவுள் படைப்புகளுக் குத் தன்னலான தொண்டாற்ற முந்திக் கொள்ள வேண் டும்.
மனிதனே! இகத்தில் உடல் வலிவு பெற்றிருக்கும் போதே பரத்தில் தக்க பலன்களைப் பெற அவசியமான வைகளைச் செய்து கொள்.
உண்மையான பூசை கடவுளைத் துதிப்பதிலும் போற் றுவதிலும் உள்ளது என்று நம்புவதைவிட அவருடைய படைப்புகளுக்கு உதவி செய்வதிலும் தொண்டாற்றுவதி லுமே இருக்கிறது.
கடவுளிடம் நேராகச் சம்பாஷிப்ப தென்பது கதை யன்று. பெரியோர்களிடமும் உண்மை பக்தர்களிடமும் சம்பாஷிப்பதெல்லாம் கடவுள் சம்பாஷணையேயாகும்.
கடவுளையும் அவருடைய படைப்பையும் உண்ம்ையாக உணர்ந்து உபசரியாது எவ்வளவு சாத்திரங்களை அறிந்தா லும், புராணங்களை வாசித்தாலும், வேத பாராயணஞ் செய்தாலும் அவைகள் முற்றிலும் பயனற்றதாகும்.
உண்மை உரைப்பதும் அதன்படி நடப்பதுமே தான் கடவுளை அடையும் நேரான வழியாகும்.
ஒருவன் எச்சாதியைச் சேர்ந்த வயிைனும் என்ன? உயிர்களை வதைப்பவனும், கொலை செய்பவனும், சண் டாளனுகிருன் கொன்றவைகளைத் தின் பவன் உயர் பிறப் பாளன் அல்ல. ஆனல் கடவுள் படைப்பில் உண்டான ஜீவவர்க்கங்களின் சேஷமத்திற்கு உதவி செய்பவனும் உழைப்பவனுமே உயர்ஜாதியாகிருன்.
மன்னன் மகுடாபிஷேகத்திற்குப் பின் அவனுடைய குடிகள் அவனுடைய சாதியைப் பற்றிக் கருதுவதில்லை.
 

ஆத்மஜோதி 107
7
அதுபோலவே சிவதீட்சை பெற்றபின் சிவபக்தர்கள் சாதி யைப் பற்றி நினைக்கலாகாது. கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்பதை உறுதியாய் நம்பு.
எச்சாதியில் ஜனிப்பினும் என்ன? வண்டு புழுவைத் தொட்டதும் அப்புழு வண்டாக மாறி விடுகிறது. அது போலவே சிவதீட்சை பெற்று அதன் நெறி நிற்பவர்களை சிவபதவிக்கு ஈர்த்துச் செல்கிறது.
மோட்ச லோகம் நரக லோகம் என எங்குமில்லை. சன்மார்க்க வீர சைவன் வழிபடுவதே சிவலோகமாகும். அவனது இல்லமே சிவாலயமாகும். அவனுடைய தூய மனதே யாத்திரைக்குரிய க்ஷேத்திரமாகும். -
வானுலகடைய அகத்திலும் புறத்திலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அந் நிலைமையடையத் திருடலாகாது. பிராணிகளைக் கொலை புரியலாகாது. தற்புகழ்ச்சி கூடாது. ஒருவரையும் இம்சிக்கலாகாது.
தூய்மையான வாழ்வடைவதே மோட்சலோகமாகும். அதற்கு மாருன வாழ்வே நரக லோகத்தில் ஆழ்ந்ததா கும். நல்ல காரியத்திற்கும் தீய காரியத்திற்கும் நாமாயி ருக்கிருேம். ஆகையால் நரகமும் மோட்சமும் நம்மிடமே யுள்ளது.
ஈகைக்கு அடிப்படையானது அன்பு சகல சீவன்களி டத்தும் அன்பு காட்ட வேண்டு மென்பதைத்தான் எல் லாத் தருமங்களும் வற்புறுத்துகின்றன.
தெய்வலோக மென்பதும் எமலோகம் என்பதும் வேறெங்குமில்ல. உண்மையுள்ள இடம் சிவலோகமாகும். கூர்மை யிழந்த வாளும் விஷமிழந்த பாம்பும் எவ்வாறு பயனற்றதாகிறதோ அவ்வாறே வாக்குத் தவறிய மனித னும் பயனற்றவனுகிருன். -
நிலையற்ற நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையையும் சந் தைக் கூட்டத்தை யொத்த சுற்றத்தையும் பொம்மலா ட் டம் போன்ற உடலையும் நம்பி அதில் முழுக் கவனத்தை யும் செலுத்தும் மக்களைப் பற்றி என்ன கூறுவது?
தீய குணமுடைய தனவந்தர்களுடன் கூடி சுகபோகத் தை அனுபவிப்பதைக் காட்டிலும் நற்குணம் பெற்ற ஏழை

Page 16
108 - ஆத்மஜோதி .yܘ
களுடன் கூடி கந்த மூலங்களை உண்டு களிப்பதே உத்தம மானது.
மனிதன் மரண வாயிலிருப்பினும் உண்மையிலும், சன்மார்க்கத்திலும் கவனமற்றிருக்கிருன், தூக்குமரத்தி , லேற்றியபின் மது மாமிசத்திற்கிச்சை கொண்ட திருடனுக் கும், பாம்பின் வாய்ப்பட்டபின் சிறுபூச்சியைப் பிடிக்க
முயலும் தவளைக்கும் வித்தியாசமில்லை.
பாதகர்களுடைய வலையில் அகப்படாது தப்பிக்கொள் ளக் கடவுள் வழி நிற்பது நன்று. ஒருவன் உன்னுடன் கோபிக்கும் போது, நீயும் அவனிடம் கோவிப்பதில் பய னில்லை. வீட்டிற்குள் விருக்கும் நெருப்பு வீட்டைத்தான் எரிக்கும். கோபம் மனத்தன்மையைக் காட்டுகிறது.
கைம்மாறு கருதி உபூசாரம் செய்யாதே. நீ செய்த நன்மைகளை மற்றவர்களிடம் கூருதே. அப்பொழுதுதான் கடவுள் அருளை அடையலாம்.
கொலையையும் புலாலுணவையும் கொ டி தெ ன வெறுத்து, தற்புகழ்ச்சியையும் விபசாரத்தையும் கண்டால் வெகுண்டு விலகுவாயாக.
தான் வாழ்வது தனக்காகவன்று. இறைவனுக்குத் தொண்டு புரிவதற்கும் வறியவர்களுக்கு உதவி புரிவதற்கு மேயாம் என்னும் உண்மையினை மறந்துபோதல் கூடாது.
உன் மனதை உன்வசப்படுத்தி அதை எப்போதும் இறைவன் திருவடியில் பதியச் செய்வாயாக! y
ܢܠ
கடவுளுடைய நாமங்கள் எண்ணிறந்தவை. அவற்றுள் உண்மை l என்பது சிரோன்மணியாகும். கடவுள் சித்தத்தை எல்லோரும் அறிந்து விட முடியாது. அறிந்து கொள்ளும் சக்தியைத் தகுந்த பயிற்சி மூலமே பெற முடியும். கடவுள் வழிகாட்டும் பொழுது அச்சம் கொள்ளக் கார ணம் ஏது?
ബ காந்தி,
- R - يمكنت

ஆத்மஜோதி 09
● 24, MOI (P36 TT வருக!
- දීර්‍ණී29 -- ~+శక్తి ممحمهجية
(விசுவை வேள்)
s
O
为
es
oooo
Seyଶ୍ରେ:
அன்னே அருள் வடிவினிலே
ప్ర్యో அமைந்த முகம் ஒன்று, 94. அஞ்சே லென ஆறுதலை
அளிக்கும் முகம் ஒன்று, SSKP முன்னை கெய்த வினைகளின
முடிக்கும் முகம் ஒன்று, முத்தமிழை வித்தகர்க்கு
2% அருளும் முகம் ஒன்று,
o சொன்ன சொல்லை நிறைவாக்கும்
ஜோதி முகம் ஒன்று, .9%
9% சுத் தானந்தத் தேனை
சொரியும் முகம் ஒன்று கன்னலுடன் கனிச் சாறும்
கற் கண்டும். நன்றே கலந்தன போல் பேரின்பக்
கவி அமுதம் தருக என்னுயிரே ஆறு முகா
எழுந் தருளி வருக!
苓
s
d
2
Q
s எழில் உள்ளே எழிலான 懿 இள முருகா வருக!
ଶ୍ରେ: s ★a事 ※ *イ 35 懿 9<ޗަރީހު
姿

Page 17
அப்படியாக நான்காம் நாள்
ஆத்மஜோதி
பஞ்ச பூதமும் சப்த தாதுக்களும்
(LAT 55 Rf , GF. ஆறுமுகநாதன்)
மண், புனல், அன்ல், கால், விண்ணிவற்றல்
வாய்த்த ஐம்பூதத் தாலுடலம் திண்ணமாய் விளங்கி இரசம், இரத்தம்
திகழ்சதை, என்பு, நிணம், மூளை வண்ணமாம் சுக்கிலம் எனும் ஏழு
வகையாம் தாதுக்கள் தனக்கொண்டு క్ష్ என்னரும் @guງໃດ. செய்துடலம் (1)
இடருரு வண்ணம் காத்திடுமே!
உண்ணும் உணவில் அமைந்துள்ள
உயிராம் சத்துப் பீொருள்ெல்லாம் கண்ணும் கருத்தாய் ஐம்பூதம்
கவர்ந்து முதல்நாள் இரசதாதை திண்ணமாய் நனத்தும் இரண்டாம்நாள்
தீர்க்கமாய் உண்ட அன்ன இரசம் -96FITIONLDU Frto இரசதா (து) அடைந்தாங்கே
அமைந்துள இரசம் இரத்ததாதேறும், (2)
ů ( ) | T5 66 (no Tள்
L.q மூனற நி
இலங்கும் தசையாம் தாதுவிலும்
அரிய நிணமாம் தாதுவிலும் செப்பிடும் ஐந்தில் என்பினிலும்
சீராம் ஆறில் மூளையிலும் ஒப்பிடும் ஏழில் சுக்கிலத்தும்
உறைந்து எட்டில் வலிமைதரும் (3)
★举
 
 
 

t
ஆத்மஜோதி 111
இஸ்லாம் காட்டும் அத்வைத நிலை
ஆங்கிலம்:- புவாது உதுமான் தமிழாக்கம் கே. எம். பி முகம்மது காசிம்
9D (6) diff5 ஆசைகளினல் உந்தப்பட்டு, கீழான இச்சைக ளின் பிடிகளினல் அந்தகாரத்தில் சிக்கியுள்ள மனிதர்க ளைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துவதே தொழுகையின் நோக்கமாகும். ஆனல் தொழுகையின் ஆத்மீகக் கருத்துக் களையும் அதன் தத்துவார்த்த இரகசியங்களையும் உள்ளது உள்ளபடி விளங்காத வரையில் மரணத்தைப் பற்றியும், வாழ்க்கையின் இலட்சியங்களையும், ஆத்மார்த்த வளர்ச்சிக ளின் நுட்பங்களையும் விளங்க முடியாது.
- சாந்தி நல்கிடும் இஸ்லாமிய மார்க்கப்படி அல்லாஹ் வை அடைய ஷரிஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் தென நான்கு வகையான படித்தரங்களைப் பயன் படுத்த வேண் டும். அவைகளில் முதலாவது ஷரிஅத். இது தொழுகை யின் ஆரம்ப நிலையை உணர்த்துவதோடு, மனிதன் சமு தாயத்தில் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழ வழி வகுக்கின்றது. இது ஆத்மீக முன்னேற்றத்தின் முதற் படியே யன்றி சம்பூர்ண விடுதலை வழங்கிடும் தெய்வீக நிலையின் உச்சநிலையல்ல.இஸ்லாமியசமயத்தைச்சார்ந்த சகோ தரமுஸ்லிம்கள் படிப்படியாக ஷரிஅத்தைச் சரியாகக்கடைப் பிடித்து மஃரிபாவின் நிலைக்கு உயர வேண்டும்.
நபிகள் நாயகம் அரேபியாவில் அவதரித்த காலத்தில் அஞ்ஞானத்தின் இருள் சூழ்ந்திருந்தது. மக்கள் கல்வியறி
வில் நன்கு தேர்ச்சியற்றவர்களாய் இருந்தார்கள். ஒழுக்
கமின்றி மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு எளிதில் வசப் படும் இயல்புடையோராகக் காணப்பட்டார்கள். அந்நிலை யில் மக்களின் பண்பாட்டிற்கும் பழக்கத்திற்கும் தகுந்தாற் போல் இலகுவான சட்ட திட்டங்கள் அடங்கிய ஷரீஅத் தைப் புகுத்த வேண்டிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்
பட்டது. ஆனல் நபிகள் நாயகத்தின் பிரதான அடிப்படை
நோக்கம் ஆரம்பத்தில் ஷரி அத்தைப் போதித்துப் பின் உயர் வான தரீகத், ஹகீகத், மஃரிபத்தைப் பின்பற்றுவதேயா கும். ஷரிஅத்தை மட்டும் பற்றிப் பிடித்துக் கொண்டு

Page 18
2 ஆத்மஜோதி
மற்றைய உயர்வான படித்தரங்களை அனுஷ்டிக்கும் முஸ் லிம்களை குற்றம் காண்பது இஸ்லாமிய பண்பாட்டிற்கும் ஆத்மீகக்கோட்பாட்டிற்கும் முற்றிலும் முரண்பட்ட செய லாகும் ,
இருபதாம் நூற்ருண்டில் வாழ்கின்ற இன்றைய முஸ் லிம்களாகிய நாம் விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டு, அறிவுத் துறையிலே ஆக்கம் பெற்று, சமூகவாழ்க்கை யில்மேம்பாடுஎய்தி, ஆத்மீகக்கலாச்சார பண்புகளில் உயர்வு
பெற்று வாழ்ந்து வருகிருேம், இந்நிலையிலும் பரந்த கண் கொண்டு இஸ்லாமிய தத்துவஞானங்களை விளங்காது குறு
கிய நோக்கத்துடன் ஷரிஅத்தில் கூறியிருப்பதே இஸ்லாத் தின் சகலமும் அடங்கியிருக்கின்றது என்று கருதுவது சரி
பல்ல"
தேங்காய்ப் பருப்பில் பலனும் உபயோகமும் இருக்கிறது. ஆகவே தேங்காயின் தோட்டைமட்டும் பற்றிப் பிடிப்பதில் அர்த்தமில்லை. அதுபோல் ஆண் டவனையடைய இதயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் அகத்திலே அறிவின் துணைகொண்டு வளர்ச்சியடைய வேண்டும். வெளிப் பகட்டான உடல் உழைப்பால் மட்டும் இறைவனை விளங்க முடியாது. (சாஅதி)
மனித வர்க்கத்திற்கே ஆத்மீகத் தலைவராகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் செயல்களைத் தினசரி வாழ்க்கையில் அனுஷ்டிப்பதே தரீக்கத்தாகும். சமுதாயத்தில் வாழும் பொழுது எவ்விதம் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டினர்களோ அவைகளைப் பின்பற்றுவதன் மூலம் பிறருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ முடியும். வாழ் வில் முன்னேற்றமும் காணமுடியும் .
மனிதனின் மனம் நிர்மல சுபாவமாகி ஆண்டவனை தியானிப்பதிலேயே ஆனந்தம் காண்பதே ஹகீகத்தாகும். அகந்தையில்ை உண்டாகும், ஆசைகளும் அழிந்து ஆண் டவனின் படைப்புகளில் அமைதி கலந்திடும் அழகை, தரி சிக்கும் வாய்ப்பை வழங்கிடும் நிலையே இது. ஆனல் மஃ ரிபா இறைநேசர்களை தெய்வீக நிலைக்கே உயர்த்தி அந்த ஆத்மீகப் பரவச நிலையிலேயே ஐக்கியமாகி விடுதலை வழங் குவதாகும். மஃரிபாவின் மார்க்கமே மனித வர்க்கத்திற்கு ஆத்மீக விடுதலையை வழங்கிடும் மிகஉயர்வான ஞான நிலை,

ஆத்மஜோதி 113 ܓܒ
அதன் இரகசியத்தையும், மகத்துவத்தையும் அறியாத புரிந்து கொள்ளாத சாதாரண மக்கள் சட்டதிட்டத்தை மட்டும் அடக்கியுள்ள ஷரிஅத்தைப்பின்பற்றி உயர்வான மஃரிபாவின் மகிமையை உணரும் விஷயத்தில் மந்தமாக ஷரிஅத்தின் தொழுகை மிகளளிதான " வணக்கம். இதை மட்டும் பின்பற்றுவதில்ை தெய்வீகத்தின் உச்சநிலையைப் பெறமுடியாது. காமம், குரோதம், லோபம், அகந்தை, பொருமை, பொய், புறங் கூறல், வஞ்சகம் சூழ்ச்சி முதலிய தீய ஷெய்த்தா னின் குணங்களை மனதி லிருந்தும் அடியோடு பிடுங்கி எறிந்து சாந்தி, பொறுமை கருணை, அன்பு, சகிப்புத்தன்மை, அடக்கம், பணிவு முத லிய நற்குணங்களை வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் ஆத்மீகவாழ்வில் வளர்ச்சியைக் காணலாம்.
"இவ்வுலகில் இறைவனின் தரிசனம் கிடைக்கப் பெருதவன் மஃரிபாவின் மகத்தான இன்பத்தை நுகராதவன் மறுவுலகில் அவை களை அடையவும் முடியாது அனுபவிக்கவும் முடியாது'
- (இமாம் கஸ்ஸாலி)
* ஞானவிளக்கத்தின் வெளிச்சமின்றி மெள டிகமான கண் மூடித்தனமான இறை பக்தி அல்லது வணக்கமே பலனற்ற முயற்சி. அது முடிவில் வெறும் மணலில் உழுவதுபோல் முடியும்.'
(ஷேக் அன்ஸாரி.)
"அகண்ட சத்தியமாகிய ஆண்டவனின் தரிசனத்தை இவ்வைய கத்தில் பெற்றவன், அந்த அழகிய தெய்வீகக்காட்சியில் ஆனந்தம் கண்டவன் மறுமையிலும் மிகத்தெளிவாகக் காண்பான். இங்கு ஞானக் குருடாக இருப்பவர்கள் மறுவுலகிலும் குருடாகவே இருப்பார்கள்.'
(குர்ஆன்) தெளகிதை அடைய தொழுகையின் நான்கு வகையான
நிலைகள்,
அல்லாஹ்வையடைய சிரத்தை கொண்டுள்ள இஸ்லா மிய மக்களாகிய நாம் தொழுகையின் அந்தரங்கத்தையும் அதன் நான்கு வகையான ஆத்மீக நிலைகளையும் நன்கு விளங்குவது மிக அவசியம். அப்பொழுதுதான் மிஃருஜின் மகத்தா ன சிறப்பையும், நுட்பத்தையும் விளங்கமுடியும். தன்னையறியும் கலையில் சாதகர்கள் அறியவேண்டிய நான்கு மகாம்களைக் கீழே தருகிருேம்,

Page 19
محییے
14 ஆத்மஜோதி
1. ஸலாத்துஸ்ஸராய்யா அல்லது ஷரிஅத்தென்பது திக்றுல் ஜல்லியைச் சேர்ந்த தாகும். அதாவது கலிமா சொல்லுவது அதன் அர்த்தங்களை அப்படியே ஒப்புக்கொள் வது ஐங் காலத் தொ மு  ைக  ைய அனுஷ்டிப்பது, நோன்புபிடிப்பது. ஸகாத் செய்வது. ஹஜ்ஜ"செல்வது. 熱
இந்த நிலையை மகாம் நாஸுத்தென்று சொல்லப்படும் 7
2. ஸலாத்துத் தரீக்கியா அல்லது தரீக்கத்தென்பது திக்றுல் கபியை பின்பற்றுவதாகும். அதாவது புலன்களுக்கு மயக்கமூட்டும் ஒன்பது வாயில்களையும் அடைத்துவிட்டு உள்ளுணர்வோடு கலந்து இதயகமலத்தில் தெய்வீக ஜோதியை தரிசிப்பது. இதை மகாம்மலகூத் என்று சொல்லப்படும்,
3. ஸலாத்துல் ஹகீகியா அல்லது ஹகீகத்தென்பது திக்றுல் கல்பியை கடைப்பிடிப்பதாகும் இங்கு இதயத்தின் பூட்டுகள் திறக்கப்பெற்று தெளிந்த தெய்வீக அறிவுப் பிர காசம் ஒளிவீசுகிறது. இதை ஞானிகள் நபிகள்நாயகத்தின் ஆத்மீகப்பீடம் என்றும் வர்ணிக்கிருர்கள் இதை மகாம் ஜபரூத்தென்று அழைக்கப்படும்.
4. ஸலாத்துல் மஃரிபா அல்லது மஃரிபத்தென்பது திக்றுல் ரூஹியை சார்ந்ததாகும். இங்கு மெளனதியானத் தில் மூழ்கி தன்னை பனுவாக்கி அல்லாஹ்வின் ஐக்கியத்தில் ஒன்றுபட்டு தரிசிக்கும் தொழுகை, இதயத்தில் ஒட்டியிருக் கும் இச்சைகளை ஒளித்துவிடும் நோன் பு; தன்னைச் சம்பூரண மாக சதாகாலமும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடும் ஸகாத்து; அகத்திலே ஆண்டவனின் அழகை தரிசிக்கும் ஹஜ்ஜாகும்!
மேற்கூறிய ஆத்மீகப் படித்தரங்களில் மிக முக்கிய மாகக் கவனிக்கவேண்டியது மூன்றம நிலையிலுள்ள ஹகீகத் நிலையில் யோக தியான சாதனைகளில் முன்னேறி, பின் மஃரிபாவில் துவைத நிலை முற்றிலும் நீங்கப்பெற்று அகண்ட நிலையாகிய அத்வைத ஞானத்தில் பூரணத்துவம் ஆத்மீக விடுதலை பெறும் மிக உயர்வான ஆத்மீக உணர்வாகும்" இதை இஸ்லாமிய ஸ"பியாக்கள் பணுபித் தெளஹlது என்று வர்ணிக்கிருர்கள். 粤

ஆத்மஜோதி 115
மாயை-அகற்று
(சிவ. கிருஷ்ணம்மாள்)
பாரதியார் மாயையை அகற்ற- எதிர்த்துப் போராடி அதன் பயனுய் பாடலும் பாடியுள்ளார். அவர் பாடற் பளிங்கு மாளிகையில் மாயையை எதிர்த்து வசைமாரி பொழிந்துள்ள கட்டமும் இடம் பெற்றிருக்கிறது.
மாயைக்கு ஆட்படாது இவ்வுலகில் தோற்றமில்லை என்பது வெள்ளிடைமலை, தேவர்களையும் மூவர்களையும் ஆட்டுவித்தமாயை அல்லமப் பிரபுவிடம் மட்டும் தன் அட்டகாசம் தலைகாட்ட முடியாமல் அடங்கி ஒதுங்கி நீங்கி விடுகிறது. யாவரும் அல்லமஞய்விட்டால், அவருடைய பெருமை பேசுவதுயார்? பதினெட்டுச் சித்தர் முதல் இன் றையப்பாலர்வரை இந்த மாயை தரம் வாரியாய்த் தலை விரித்தாட்டி வந்திருக்கிறது.
மாயா உலகில் மாயையைப் பழித்துரைத்தால் சிலா வணியாகாது என்று பயப்படவில்லை பாரதியார் . ஆயி னும் மாயையைப்பழித்து உண்மையினை விளக்கிப் பாடி யுள்ளார்.
மாயைபற்றிய தன்மையாவது உண்மைநிலை உணர
வொட்டாது மயங்கவைப்பது, நின்ற நெறிநிற்க முடியாது தடுமாறச் செய்வது, நல்ல கருத்தையழித்துத்தரை மட்ட மாக்கி அதன் உருக்கொள்ள வைப்பது; எண்ண மெல்
லாம் அதன் வழியே இயங்க வைப்பது; திண்ணியநெஞ் சையும் திகைக்க- திணறப்பிழிவது, கண்ணியமனத்தையும் கலக்கிச்சேருக்குவது; பண்ணிய புண்ணிய மனைத்தையும், பவக்கடலில் ஆழ்த்துவது இவைகளே இதன்தொழிலாய் ஆட்டிக் கூத்தாட்டி சுழன்று சுழன்று குதூகலித்து வந்தி ருக்கிறது.
* இந்த மாயை ஓயாது ஒழியாது உலகியலில் இயங்கிச் செய்கின்ற வேலைகளைக்கூட உத்தமர்கள் மட்டும் ஒருபொழு தும் அறிந்ததில்லை. காரணம் அவர்கள் உள்ளம் மட்டும்
عمير

Page 20
116 ஆத்மஜோதி
உட்கலந்த ஆத்மஜோதியில் ஐக்கியப்பட்டு விடுவதாலே, இருளாம் மாயையின் இச்சை கிஞ்சித்தும் இவர்களிடம் பலிப்பதில்லை. நச்சுக்காற்றெதுவும் நலமுடையோர்களிடம் பயந்து- தூரத்தே ஒதுங்கிவிடும் என்பது தத்துவவிளக்க நியதியாகும்.
உதாரணமாக புத்தபிரானிடம் இதயவொளி வீச அங்கே
மாயையின் சாயைகூடப் படமுடியாது பேரழிற்று.
நோற்பாரின் நோன்பையும் அழிக்கவல்லது மாயையிர்னல் தன்னை என்ன செய்யுமோ எவன் அஞ்சாது திடங் கொண்டு தன்னை மாயைநெருங்கமுடியாதநிலையினை விளக்கி 'உண்மை
அறிந்தவரை, தெளிந்த நெஞ்சமுடைய தீரரை இருமை யறுத்தோரை ஒருமை கண்டோரை தன்னிச்சையால் மயங்கவைக்கும் வாய்ப்பு உனக்கில்லை. மாயையே தூர ஒடு' என்கிருர் . இவ்வுலி கிலிருந்து கொண்டே மாயையை நோக்கிப் பழித்துச் சொல்லி இடித்துக் கூறி, புகைத்துப் போருக்கு அழைக்கிருர் -ம்காகவி பாரதியார்.
பாரதியாரின் தெளிந்த நெஞ்சமும், உண்மையைப் பலகோணங்களிலிருந்து உற்றறியுந்திறனும், தான் உணர்ந் ததை உலகம் அறிய ஒப்ப எளிய முறையில் எடுத்துரைக் கும் ஆற்றலும் அப்படியே புலனுகிறது. மகமாயை களைந் டத்தகுந்த தன்மை உளமதில் ஊற்றெடுக்காமலா மேலாம் தண்ணுெளி வீசக் காண்கிருேம். அகமாடை மடைந்தையர் என்று அயரும் செகமாயையுள் அகப் படாத சிறப்பே பாரதியாரின் பாட்டில் உண்மை மிளிர் வதற்கு ஏற்ற சாதனம். எதையும் எடைபோட்டுப்பார்த்து எடைக்குச்சரியான கணக்குப்படி உள்ளவாறு உரைப்பது சாகாவரம் பெற்ற வாகான கவிஞர் கடப்பாடு என்பதை இங்கே காணலாம். 'மாயையே உன்னிடம் பல் கோடிப் படைகளுண்டு. நீ அவற்றையெல்லாம் கொண்டு வந்தா லும் விண்டுவிடுவேன். அடுக்கிய உன் பல்கோடிப்படையும் அழிந்து போகும். சித்தத்தெளிவுடையார்- திரிபுரமெரி செய்த அச்சிவனைச் சிந்தையில் உறையவிட்டவன் நான். என்பால் வந்தாயானல் உன் பல்படையும் அழிவதோடு உன்னழிவும் உறுதி என்னைக் கெடுக்க நினைத்துவிட்டாய் ஆ- ஆ, அது உன்னுல் முடியவே முடியாது. உன் எண்
ணம் உனக்கே பலிதம். சாகத்தயங்காத எனக்கு உன்
ஆர்ப்பாட்ட ஆழ்கடல் என் சித்தக்கணக்காலளவுகூட
’’م‘‘

ஆத்மஜோதி 17
இல்லை. தேகம் ப்ொய், அழியக்கூடியது. அழியட்டுமே.
அழிவற்றது ஒன்றுண்டு. அதுவே உண்மை. உண்மையில் இரண்டறக்கலந்து ஒன்றிவிட்ட என்னை அணுக உன்னல் இயலுமா 'சொல்” என்கிரு?ர்.
'காட்டிலே தன்னிகரில்லாச் சிங்கம் வாழ்கிறது. இராஜமுடி அதற்கே உரியது. முடி சூட்டி அரசாள ஆட் 960) u ஏற்றுநடத்த சிங்கராஜனுக்கு நாயா உத்தாரம் தர வேண்டும்? இதயக் காட்டில் சீரிய சிந்தனைச் சிங்கம் (பூரீ தேவியைத் தன்மேலே அமரவைத்து) ஆரோகணித்து வருகிற காட்சியைக்கண்டும் நீ அஞ்சாது அதனிடம்நெருங் கப்பார்க்கிருய், என் தூய இச்சையால் உன்னை எற்றி எறிந்துவிடுவேன். உன்னைப்பாது காத்துக் கொள்ளவேண்
- டினல் தூர விலகு.'
என்னை நெருங்கினல் யுத்தந்தான் நிச்சயம். அதில் நீ பொடிபடுவதும் திண்ணம்; மாயையே நீயே நிறைந்து கிடக்கும் உலகில்தான் எனக்கு வாழஇடமில்லை நான் யார்க்கும் குடியல்லவே. ஆர்ப்பாட்டத்திற்கு அடிமைப் பட்டவன்நானல்ல. உண்மைக்கு ஆட்பட்டவீரனே என்ப தை உணர்ந்து கொள். என்னிதயம் பற்றிவிட்டதாக எண்ணி இறுமாந்து போகாதே. என்னை அணுகநினைத் தாலே நீ அழிந்துபோவாய் கிட்டவராதே. எட்டப்போ' என்று சொல்லக் கூடிய ஆற்றல் மிகு கவிதை உயிர்கள் போல், உண்மையைப்போல், என்றென்றும்பெருமையாய்ப் பேசக் கூடிய அளவில் உள்ளதே * என்று நீ அன்று
நான்' என இறையும் உயிரும் பிரிவற்ற - தோன்றிய
நாளறியா வகையில் அனுதியாய் விளங்குதல் போல் மாயை யும் அநாதியே. மாயையை வென்று வீரமுழக்கம் செய்த உயிரே ஆண்டவனை - உண்மையை அணுகுகிறது. இது
சைவசித்தாந்தம் தருகிற சமரச பாவனையான கருத்து.
இக்கருத்தை உருத்தாய் வடித்தெடுத்து உரிய அமைப்பி ல மாயைக்குரிய வல்லமையையும் ஆண்டவன், அடியார்க் குள்ள பெருமையையும் விளக்கப்பட்டிருக்கிறது. பாரதி யார் மாயை என்னும் பாட்டிலே உள்ளதை ஏட்டிலே படிப்பதோடு அமையாது, இயன்றவரை LDPT60)LJULg5G) மனச்சோர்வில்லாது திடங்கொண்டு போராடினுல் (சுருக் கமாகச் சொன்னல் உண்மை வயப் பட்டுவிட்டால் மாயா மலம் அற்றுவிடும்.) உயிர்க்கு வெற்றியுண்டு. ஜோதியிற் கலந்து சீரடியார் கூட்டம் சிறப்புற வாழும்.

Page 21
18 ஆத்மஜோதி
திவ்விய செய்தி
யார் சமயக் கோட்பாடுகளையும் விசுவாசங்களையும் பற்றி விரும்பத் தகாததும் வெறுப்பானதுமான வாக்கு வாதம் ஏதாவதிலும் இறங்குவதில்லையோ, யார் தனது தினசரி வாழ்வைக் கீதையின் போதனைகளின் பிரகாரம் ஒழுங்கு படுத்துகிருனே, யார் தெய்வ நாமத்தை பாதும் பகட்டு அல்லது பாசாங்கின்றி செபிக்கிருணுே, யார் நாமத் தைப் பாபம் செய்தவனுக்கு, அல்லது லெளகிக சுகாநுப வப் பொருட்கள் பெறுவதற்கு, அல்லது பாவம் போக்கு வதற்கு ஒரு செயற் காரணமாகப் பயன் படுத்துவதில்லை யோ, அம் மனிதன் தன்னையே காமம், குரோதம், பொய் மை, வஞ்சகம் முதலியவையும் அவை போன்றவையுமா கிய தீய நாட்டங்களிலிருந்து கெதியில் விடுவித்து, உண் மை, அகிம்சை போன்ற சாத்துவிக அறங்கள் இயற்பண்
பாகப் பெற்றவஞகிருன் , -
- ஹனுமான் பிரசாத் பட்டர் .
நான் என்னைத் தினமும் மூன்று முக்கிய செய்திகளில் நன்கா ராய்கிறேன்.
1. மற்றவர்கட்குத் திட்ட ம் செய்வதில் மனச்சான் றுக்குக் கட்டுப்பட்டிருக்க நான் தவறிவிட்டேனு?
2. நண்பர்களுடன் நடந்து கொள்வதில் நேர்மையா யிருக்க நான் தவறி விட்டேனு?
3. போதிப்பதில் நான் போதித்ததை அப்பியசிக்க நான் தவறி விட்டேனு?
- கொன் பூசியஸ் ,
ஒவ்வொரு சமயத்தின் மகான்களையும் நேசிக்குக! உன் தற்பெருமையை நீக்குக! பணிவு, பரிவு, சேவையே சம யத்தின் சாரம். அழகிய உடைகள் அன்று யோகியின் உடையும் நீறும் அன்று, ஊதுகுழலை ஊதுவதன்று, மழித்த தலையன்று, நீண்ட பிரார்த்தனையன்று, பாராயணங்களும் தபசுகளும் அன்று, துறவு வழி அன்று, ஆனல் உலக மருட்
டுதல்களுக்கிடையில் உண்மை, அன்பு வாழ்வே ஆன்மிக
^ ç
வாழ்வின் இரகசியம்.
- குரு நானக்,

ر
s
ஆத்மஜோதி
--
eelyGlluuLLmlLuLLLLLuLLLLuLLLLLLeu uBuLuryLlLLYYLe
இறை உணர்வு பொங்குக! - கனிமொழி -
பொங்குக! பாற் பொங்கல்!
புத்தமுதப் பொங்கல்! மங்களம் சேர் பொங்கல்
வாழ் வனத்தும் பொங்க! - பொங்குக
கன்ன லொடு, தேனும், கணிமதுரச் சாறும், தண்ணழுதப் பிாலும், தங்கமணி அரிசி யும்,
இன்னவற்றைக் கூட்டி,
இனிய சுவை ஏற்றி, வண்ணமுறப் பொங்கி வையமெலாம் வாழ்க! - பொங்குக!
அன்பு, அமைதி பொங்க, அறிவு, அருள் பொங்க, வன் கொடுமை, மாய்ந்து மா கொலைகள், ஒய்ந்து, துன்ப மெலாம் மங்கி, தூய உணர் வோங்கி, இன்ப மெலாம் பொங்க! இறையுணர்வு பொங்க! - பொங்குக
இராகம்: பூபாளம். தாளம்: ரூபகம். பல்லவி. சூரியனே வருவாயே சோதி ஞானம் தருவாயே (சூ) மாரி பொழிய வளங்கள் பெருக ஏரினுழவர் இன்பம் பருக (சூ)
சாதி சமய பேதம் நீங்க சகல ஞான தருமம் தாங்க நீதி சைவ நெறிகளோங்க நிமலன் பாத நிழலில் தூங்க, (சூர்
(அளவையூர் - சஞ்சீவி)
uS BeOekekekekeke kOekOkekeOekekOkekOkeOekekOeOkk keOeOkeOkeekekeOkeOkOe ekekekeO ke ekeOeOe
19

Page 22
20
ஆத்மஜோதி +
(கலை, இலக்கிய மாத இதழ்)
புத்தாண்டில் புதுப் பொலிவுடன் வெளியா கும் பொங்கல் மலரில் அறிஞர்களின் அரிய கட் டுரைகள், சிறந்த சிறுகதைகள், இனிய கவிதை
கள் முதலியவை இடம் பெறுகின்றன .
ܛ ܛ .
தென் பாரதம் கலைகளைப் பிறப்பித்து வளர்த்த முறை @డిల్లా யற்ற சிறப்பு மிக்கது. பாரதத்தின் இப் பகுதியில் வானளா விய கோபுரங்களை யும் இறைவன் பெருமையினைப் பல நிலைக ளிற்சித்தரிக்கும் சிற்பவடிவங்களை பூம்கொண்டு சிறந்து விளங் கும் திருக்கோவில்கள் காணப்படுவன. இக் கோவில்களே நிலைக்களஞகக் கொண்டு, சிற்பம், ஒவியம், இசை, நட னம், கட்டடக் கலை முதலிய கலைகள் பிறந்தன. இவை விரிந்து வளர்ந்து பாரதப் பண்பாட்டின் சிறந்த உறுப்புக்க ளாக விளங்குகின்றன. இவற்றின் வனப்பை விளக்கும்
கலைகளின் உறைவிடங்கள்
என்ற கட்டுரைத் தொடர் பொங்கல் மலரில் ஆரம்ப மாகின்றது. 'வடமொழி இலக்கிய வரலாறு', சைவத் திருக் கோயிற் கிரியை நெறி' ஆகியவற்றின் ஆசிரியரும் ஆராய்ச்சி அறிஞருமான கலாநிதி. கா. கைலாஸநாதக் குருக்கள் M. A., Ph.d. அவர்கள் இக் கட்டுரைத் தொடரை எழுதுகின்ருர்கள்.
மலரின் விலை 50 சதம் சாதாரண இதழ்: 30 சதம் ஆண்டுச் சந்தார் 4 ரூபா, கலைச்செல்வி பாலன் வெளியீடு - செட்டிகுளம்.
இ2ள: கலைச்செல்வி, கந்தரோடை, சுன்னுகம்.
AhMA AAAAAMAAAAMAAALALAMAMLMALAMA AMALA 画
媛 - 扈 回〜 محےلاعصبرے چ ASqMLSSLMSSSLSSLASLLASLLALSLALLSLLLLSLLLSMMSMSMLMeMeLMMLAMLMLMLSLLMLMMMLLMMLMAMSqSq لا ضد صب صب صب صفحص صل
*
Ο S.
S.
S S S S. S. Ο S. S S S S S
།། ༈
S S. S
S.
S.
S R S ( S. ( ( ( ( K ( ( ( ( ( (, , ( 回
 
 

za Y)
κ ܡܝܬܐ | a
-
ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்
தெய்வீக வாழ்க்கைச் சங்க மலர் ... 1-25 ழனி கதிரைமணி மாலை (பரமஹம்ஸதாசன்) . - 50 தீங்கணிச்சோலை 9 ... 2-50 அறிவுரைக்கதைகள் (சுவாமி சிவானந்தர்) . - 65 நாஞர்? ... - 25 இளங்கோவின் கனவு (செ. நடராசன்) ... 2-25 ஆத்மநாதம் (சுத்தானந்த பாரதியார்) . 3-00 கீதா யோகம் y sy ... 2-50 1ாட்டாளி பாட்டு ... 1 - 50 கூட்டு வழி பாடு -30 -س கந்தரநுபூதி (பொழிப்புரையுடன்) ... - 25 மார்கழிப் பாடல் - - - ー20 நவராத்திரிப் பாடல் ... - 30 ஆத்மஜோதி மலர் ... 2-00
வாய்வு சூரணம்
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கட்டு, மலபந்தம், அஜிர்ணம், கை கால் அசதி, பிடிப்பு, பசி யின்மை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்த சூலை, புளியேப் பம், நெஞ்சுக் கடுப்பு முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த சூரணம்.
- தபால் செலவு உட்பட டின் ஒன்று 4 ரூபா 25 சதம்.
(பத்தியமில்லே)
சம்பு இன்டஸ்ட்ரீஸ் - அரிசிப் பாளயம் சேலம் -9 (S.I.
இலங்கையில் கிடைக்குமிடம்:- ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி
போன் - 353
மலாயாவில் கிடைக்குமிடம்:- மணி கணபதி & கம்பெனி, 66, பெல்பீல்டு ஸ்ட்டிரிட், ஈப்போ P, O. (மலாயா.(

Page 23
。
Regså 3.
چ=عي జోకెgజోశ్మి خحصوفی حصے متعے حصحیح
-- இன்று உங்கள் 8ம வது சுடர் கிடைக்கி
எதயின் புத்தாண்டுச் சந்
உங்கள் ஜோதிக்குத் த
வழக்க
o
R. வரசம்பு, ச1
என்ற விலாசத்திற்கு அனுப்
ஆத்மஜோ நாவலப்பிட்டி
போன்
—(~ലേ-ബ്ലു
jLDG ಇಲ್ಲಿತ್ತಿUDog
நீங்கள் எதிர்பார்த்திருந் வந்து விட்டது. மலரினுள்ளே யார்களின் கருத்துக்கள் உங்க றைம்பது பக்கங்களிலும் ஆ விளங்குகின்றன. முகப்பில் ' குருநாதன்' மூவர்ணப் பட அவரை நினைப்பவர்க்கெல்லா
விலே தபாற் செல6
ஆத்மஜோதி நாவலம் பிட்டி
($unt ଜର୍ଜୀ
സ്പേ
இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத்,
திரு. நா வினுயகமூர்த்தியால் அச்சி
 
 

s a Newspaper. M. L. 59,300
யர்களுக்கு
கையில் பதிருைவது ஆண்டு ക്സ്. ഉദ്ദ്';്.ീക്കേ தாவை அனுப்பி வைப்பதன் குந்த பரிசினை அளிப்பீர்களாக
பர்கள் தமது சந்தாக்களை
ம்பு இன்டஸ்ரீஸ், 1, 3 g 5) D-9 பி வைக்க வேண்டுகின் ருேம்.
ຂຶuນມີ, - ਉਸੈਨੂੰ ਰੰ. r - 3 5 3 ***
AhMeSBeMSAMAeSMAeSMSASMSASMSASASASASASASASASASASASMqAMSMAMAS
ாதி மலர்
த 'ஆத்மஜோதி மலர் வெளி நாற்பதுக்கு மேற்பட்ட பெரி ளுக்கு விருந்தாகின்றன. நூற் ஆத்மீகக் கருத்துக்கள் சிறந்து என்னே எனக்கறிவித்த எங்கள் த்துடன் காட்சி தருகின்றர். ம் பரகதி உண்டு. வுட்பட 2-50 ஆகும் தி நிலையம்,
г. - 353
AAS SAAASSAA SSAAAASMAASAASSASSASSASSASSASSASqSqASSASSASSASSASSASS தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் ட்டு வெளியிடப்பெற்றது. 14-1.64
-最