கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.03.14

Page 1
து தெரியும் மறை வல்
濠 ബേ
 
 

。 cm。 尹于fāgnā。 ) 6OT திருக்கேதிச்சரத்தா
S. ഭ ജ ഭ ഭ ജ ഭ ഭ ഭ ജ ജ ഭ ജ ഭ ഭ ഭ്രൂട്ട

Page 2
+令令令令今令令令伞令今令+令令令+→今令+→命令+++**今** ++今→++++++令令今→令→+++++++→+++
ஆத்ம ஜோதி
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
*→++++*
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
ஜோதி 16 சோபகிருதுளு பங்குனிமி1உ 14-3-64 சுடர் 5
ஜீ.
பொருளடக்கம் 1 கேதீச்சரநாதன் 153 2 கடமை 154. 3 ஈழத்துச் சைவர்களின் கடன் 155 4 திருக்கேதீச்சரத்தில் சாதனையும் திருவாசக விழாவும் 157 5 ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் 162 6 தோத்திரங்கள் தியானத்திற்கு வழி காட்டுகின்றன. 164 7 மணிவாசகர் கண்ட மனித வளர்ச்சி 166 8 திருவாசகத் தேன் 68 9 திருவெம்பாவை - அதன் தத்துலம் 170 10 திருவாசகம் விழிப்புணர்ச்சியைத் தருவது. 172
11 பாவை பாடிய வாயால் இறைவன் விருப்புக்கு கோவை பாடிய
செம்மல் 174.
12 பெரியார்கள் காட்டும் வழி 779 13 சிவநெறி 182 14 மாணிக்கவாசகர் பள்ளியில் படியாத மாபெரும் விஞ்ஞானியாவார். 186 15 திருவாசகத் தேன் மருந்து! 192
ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந்தா ரூபா 3.00 தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தையா "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண் 353
ܵ
s
影
 

கேதீச்சரநாதன்
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினி லுயிர் வாழ்க்கை கண்டநாதனுர் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில் வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை நடமிடு . “ို႔ျ மாதோட்டம் தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தீச்சர மது ်း . . . தானே.
ஜனகாதி முனிவர்கள் நால்வரும் நான்கு வேதம் ஆறங்கம் பதினெண் புராணம் முதலான யாவும் கற்று முடிந்த பின், தாம் கற்ற கல்வியின் பயன் யாது? என்று ஆய்ந்தனர். விடிை புலப்படவில்லை. அவர்களுக்கு உணர்த் தத் தக்கவர்களுமில்லை. இறைவனுரிடம் நேராகச் சென் றனர். இறைவனர் வாய் திறந்து யாதுமே பேசவில்லை. கல்லால விருட்ச நீழலிலே தெற்கு நோக்கி இருந்தருளி ஞர். குருவாக அமைந்தவர் இளவயதினர். சீடர்கள் வயது முதிர்ந்தவர்கள். இருந்தபடி இருந்து காட்டினர் இறைவர். குரு வாய் திறவாமலே சீடர் உணர்ந்து  ெகா ன் ட ன ர். அது வே அ வர் க ள் க ற் ற
கல் வி யி ன் L J u J. GöT . த T ம் க ற் ற அறி வி ன ல்
பேரின்பம் அநுபவித்தனர். நால்வருக்கும் உபதேசியாமல் உபதேசித்த அறத்தையே, ஆன்மகோடிகள் அத்தனையும் பெற்று அநுபவிக்க வேண்டும் என்பதே இறைவனரது எண்ணமாகும். ஆன்மகோடிகள் அத்தனையும் அவ்வறத் தினை உணரவேண்டும் என்ற கருணையினலேயே இறைவர் திருக்கேதீச்சரத்தில் கோயில் கொண்டருளியிருக்கின்றர் என்பது திருஞான சம்பந்தப் பெருமானுருடைய கருத்தா கும். வண்டுகள் கீதங்களைப் பாடுகின்றன. பூஞ்சோலைக ளில் மயில்கள் கூத்தாடுகின்றன. மாதோட்டத்திலுள்ள அடியார்கள் நாடோறும்கோயில்சென்றுவழிபாடாற்றுகின்ற னர். அடியார்களுடைய தோத்திரத்திற்கும்வேண்டுதலுக்கும் மனமிரங்கிய பெருமானுர் அடியார்களுக்குத் திருவருள் சொரிந்த வண்ணமே இருக்கின்ருர், அத்தகைய திருக்கே தீச்சரப் பெருமானை நாமும் வாழ்த்தி வணங்கி உய்வோ LDTSS

Page 3
154.
- 6))) ஆத்மஜோதி பிறர் கடமையை நன்கு செய்வதினும் தன் கடமையை அரைகுறையாகச் செய்யினும் பாதகமில்லை. அதுவே நல் துெ.
- வேதம் ,
கடமையைச் செய்பவனே பூரணம் அடைகின்றன்.
- பகவ த் கீதை, கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்ருண்மை மேற் கொள்பவர்க்கு
- வள்ளுவர். வெற்றியை விட்டுக் கடமைை till I முதன்மையாகக் கொண்டால் அது சால்பு தருமன்ருே? செய்யவேண்டிய கடமை சேய்மையில் இல்லை. அணித்தே உளது.
JAWA கன்பூஷியசு,
செய்ய வேண்டிய கடமை அண்மையில் இருக்க மக் கள் சேய்மையிலேயே தேடுகின்றனர்.
- ஷின்டோ மதம்.
எல்லோரிடமும் நட்புக் கொள்க. அதுவே உன் இயல்பு. அவரை அறநெறியில் நிற்கச் செய்க. அதுவே உன் அறிவு. அவரை உன்னைப் போலவே கருதுக. அதுவே உன் மதம். அவரால் இன்பம் அடைவாய். அதுவே உன் ஆன்மா. مجبور
- ஜாரதுஷ்டிரர் வாக்கு.
கடவுளை அஞ்சி அவர் கட்டளைகளை நிறைவேற்றுவாய். இதில் மனிதனுடைய கடமை முழுவதும் அடங்கும். இம் மையில் கடமை செய்வோர் மறுமையில் கதி அடைவார்.
- எபிரேய மதம்.
மனிதன் உரிமையை இழக்கச் சம்மதிக்கலாம். கட 。
மையை நிறைவேற்ருதிருத்தலாகாது.
- காந்தி,
 
 
 
 
 

"ஆத்மஜோதி 155
ஈழத்துச் சைவர்களின் கடன் (ஆசிரியர்)
s ஈழத்துச் சைவர்களின் பெருமைக்குக் காரணம் ஈழத் திலுள்ள திருத்தலங்களாகும். அவற்றுள் மிக முக்கிய சிவாலயங்கள் இரண்டு. ஒன்று கோணேஸ்வரம். அடுத் தது கேதீச்சரமாகும் சம்பந்தப் பெருமானுரும் சுந்தர மூர்த்தி நாயனரும் தாம் பெற்ற அநுபூதி நிலையில் திருக், கேதீச்ச தப் பாடியிருக்கின்றனர். அப் பெருமை தேவா. ரத்தோடு மாத்திரம் நின்று விடாது சைவ மக்களின் செய லிலும் தோன்றுவதற்குத் தகுந்த சந்தர்ப்பம் ஒன்று வாய்த்
திருக்கேதீச்சரம் இந்தியாவில் உள்ள ஒரு தலம் என்று நினைத்திருந்த சைவர்களுடைய உள்ளத்தில், அது ஈழநாட் டில் உள்ளது என்ற பதிவு ஏற்படச் செய்த பெருமை திருக்கேதீச்சரப் புனருத்தாரண சபையினரின் தொண்டுக 6ifმმi) முக்கியமான தொன்ருகும். திருக்கேதீச்சரப் பணி நிறைவேறுவதற்கு இன்னும் இரண்டுலட்சம் ரூபாய் தேவையென்று சபையினர் கேட்டுள்ளனர். இருபது லட் சம் சைவப் பெருமக்கள் வாழும் ஈழத்தில் இரண்டு லட்சம் ரூபாய் சேர்வது பெரிய காரியமல்ல ஒரு சைவப் பெருமகன் பத்துச் சதம் கொடுத்தால் ஒரு மணித்தியாலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் சேர்ந்து விடுமே.
சைவப் பெருமக்களுடைய உள்ளத்திலே இத் திருப்ப னியின் முக்கியத்துவம் இன்னும் புகவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. இருபது லட்சம் சைவப் பெருமக்களில் இரண்டுலட்சம் சைவர்கள் ஆளுக்கு ஒரு ரூபா கொடுத்தால் நாளைக்குத் திருப்பணி நிறைவேறி விடுமே. ஒரு லட்சம் பேர் ஆளுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் இன்னும் இலகுவில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விட லாமே. ஆளுக்குப் பத்து ரூபா வீதம் இருபதினுயிரம் சைவப் பெருமக்கள் கொடுத்தால் இன்னும் மிக இலகு வாகி விடுமல்லவா? பத்து ரூபாவை இறைவன் திருப்பணிக் கென பக்தி உள்ளத்தோடுகொடுக்கும் இருபதினுயிரம்சைவப் , பெருமக்கள் இல்லையா? இருக்கவே இருக்கின்ருர்கள். அவர் களை ஒன்று சேர்த்தல்தான் தொண்டர்களின் முக்கிய கடமையாகும். இரண்டாயிரம் தொண்டர்கள் முன்வந்து

Page 4
156 ஆத்மஜோதி
ஆளுக்குப் பத்துப் பேரைச் சேர்க்கும் '〉 பணியில் ஈடுபட் டால் இப்பணி மிக இலகுவாகிவிடும்.
நல்ல உள்ளம் படைத்த எத்தனையோ ஆயிரக்கணக்
கான சைவப்பெருமக்கள் இருக்கவே இருக்கின்றர்கள். வலது
கை கொடுப்பது இடதுகையறியாமலே வாரி வழங்கும் வள்ளல்கள் இருக்கின்ருர்கள், யாராவது ஒருவர் வந்து கேட்கு முன் தாமாக உணர்ந்து கொடுக்கும் வழக்கம் மாத்திரம் தான் பழக்கத்தில் இல்லை. ஆகவேதான் இரண்டாயிரம் தொண்டர்கள் தேவை என்று எழுதினேன்.
திருக்கேதீச்சரம் போன்ற திருக்கோயில் திருப்பணியில் பங்குபெறும் வாய்ப்பு எல்லாருக்கும் எல்லாக்காலத்திலும் கிடைப்பதில்லை. திருக்கேதீச்சரத் திருப்பணியில் பங்குபெ றும் சூழ்நிலையிலுள்ள காலத்தில் வசிப்பதே எமது மனிதப்
பிறவியின் பெரும் பேருகும், அப்பேறுடைய காலத்திலே
நாம் வாழ்ந்தும் எம்மை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளா விட்டால் நாம் பிறந்தும் பிறவாதவர்கள் ஆகின்ருேம்.
இக்கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொரு சைவப் பெரு மகனும், ஒருநூறுரூபாயாவது இத்திருப்பணிக்கெனச் சேர்த் துக் கொடுக்கும் கைங்கரியத்திலீடுபடுவதோடு மற்றவர்களை யும் ஈடுபடச் செய்து இப்பெருஞ் சிவபுண்ணியத்தில் பங்கு பெறுதல் மூலம் தமது பிறப்பை பயனுள்ளதாக்கிக் கொள்
வார்களாக, திருக்கேதீச்சரத் திருப்பணிச்சபையினருடன்
தொடர்பு கொண்டு உடனே தமது பங்கினை அளிக்குமாறு வேண்டுகிருேம்.
எந்நாட்டவர்க்கும் இறைவனன எம்பெருமான் திருக் கேதீச்சரத்தில் விசேடமாக உறைதலால் எமது இறைவ ராகின்ருர், அவரது திருக்கோயில் திருப்பணியில் பங்கு கொள்ள வேண்டியது எ மது க ட ன ல் ல வ |ா ?
"தீமையை எதிர்க்காதே’ என்னும் கிறிஸ்தவ வேத வாக்கியத்திற்கு "தீமையைத் தீமையால் எதிர்க்காமல் நன் மையால் எதிர்க்க வேண்டும்' என்பதே பொருள்.
காந்தி வாக்கு

ஆத்மஜோதி 157
திருக்கேதீச்சரத்தில் சாதனையும் திருவாசக விழாவும்
-( மு. சிவராசா. )-
அன்று மார்கழி மாதம் ஆரும் நாள், அதிகாலை, திரு வெம்பாவை ஆரம்பமாகும் நன்னுள். பிரம்ம முகூர்த்தம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நேரம், திருக்கேதீச் சிரநாதர் ஆலயத்தின் மணி “ஓம் ஓம்’ எனும் ஓசையைப் பரப்பி அமைதியாயிருந்த சுற்ருடலை நாத அலைகளால் நிரப்பிக் கொண்டிருந்தது. புனித பா லா வி யி ல் நீராடி வரும் பக்தர்கள் சிலர், ஆலயத்தின் தென்மேற்கு மூலையி அலுள்ள திருவாசக மடத்தை அடைவதற்கும், ஆலயத்தின் ஆயத்த மணி ஓசை அடங்குவதற்கும், சரியாக இருந்தது. மணியின் ஒலி நின்றிருந்தாலும் மணிக்கூண்டுக் கோபுர உச்சியிலிருந்து மயில்கள் இரண்டு இடையிடையே தம் அக வலால் பகலவனை அழைத்துக்கொண்டிருந்தன. -
திருவாசக மடத்தில் நின்ற அடியார்கள் மடாலயத் துப் பூசை மேடையில் நால்வர் பெருமக்களுடன் கூடியி ருக்கும் நடராசப் பெருமான் சந்நிதியில் குத்துவிளக்கேற்றி கும்பம் வைத்து நவதானியங்கள் விதைத்து பூவும் நீரும் கொண்டு எம்பெருமானைப் பூசித்தனர். தொடர்ந்து அடி யார் ஒருவர் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை’ பாட உடனிருந்தோர் திரும்பச் சொல்லுகின் றனர். சங்கு, மணி சகிதம் அடியார் கூட்டம் திருமடத் திலிருந்து புறப்படுகிறது. திருவெம்பாவை பாராயணம் பண்ணிக்கொண்டே ஆலய வீதிகளையும் பாலாவிக்கரையை யும் சுற்றி வந்து கேதீச்சர நாதர் சந்நிதியை அடையும் போது, ஆலயத்தில் திருவனந்தற் பூசை தொடங்குகிறது. வந்த பக்தர்கள் திருவனந்தலையும், தொடர்ந்து நடைபெ றும் திருவெம்பாவை காலசந்திப் பூசைகளையும் தரிசித்தும் குருகுல மாணவர்களின் வேதபாராயணத்தைச் செவிவாய்ப் பருகியும் உளம் நெகிழ்ந்து நிற்கின்றனர். தம்மை மறந்து தியானத்தில் ஈடுபட்ட அவ்வடியார்கள் இறைவன் பிர சாதம் பெற்றுத் திரும்புகின்றனர்.
மீண்டும் திருவாசக மடத்தில் காலை ஒன்பது மணிக் குக் கூடும் அடியார்கள் திருவாதவூரடிகள் புராணபடனம்

Page 5
158 ஆத்மஜோதி
கேட்பதற்குப் பேரவாவுடையர், ஏட்டுக்குப் பத்திர புஷ் பங்கள் தூவி அருச்சித்துத் தூப தீபம் காட்டி வணங்கி பூசை மேடையிலிருந்து அதனை மண்டபத்திற்குக் கொண்டு வருகின்றனர். சித்தாந்தச் செம்மல் வைத்தியர் சி. கணப திப்பிள்ளை அவர்கள், கிழக்கு நோக்கிப் பத்மாசனத்தில் இருக்க அவர் வலப்பக்கத்திலே ஏட்டைக் கையிலேந்தியபடி சேர். க. வைத்தியநாதன் அவர்கள் வடிக்கு நோக்கி இருக்கிருர்கள். -
'திருச் சிற்றம்பலம். பவளமால் வரையில் நிலவெறிப் பது போல் . . . காப்பை எல்லோரும் பாராயணம் செய்த பின் திரு. வைத்தியநாதன் அவர்கள் புராணம் வாசிக்க, வைத்தியர் கணபதிப்பிள்ளை அவர்கள் பயன் சொல்ல, புராணபடனம் ஆரம்பிக்கிறது. புராணப்டனத் தைத் தொடர்ந்து எண்பது வ்யது நிறைந்த, சிவப்பழ மாய்ப் பொலியும் தாமோதரம் பிள்ளை சுவாமிகளின் இனிய கண்டத்திலிருந்து புறப்படும் திருவாசகத்தேன் அடியார்கள் செவிவழிப் பாய்ந்து நெஞ்சை நிறைக்கிறது. அதன் பின்னர் அறிஞர் சிலரின் நல்லுபதேசம்,
நண்பகலில் ஆலயத்தில் உச்சிக்காலப் பூசையைத் தரி சித்த அடியார்கள் திருவாசக மடத்தில் மகேசுர பூசையில் கலந்து கொள்ளுகின்றனர், பிற்பகலில் கூட்டுவழிபாடு ஆலய தரிசனம், திருவாசக பாராயணம் விரிவுரைகள் கருத்தரங் குகள் ஆகியவை அடியவர்களின் ஐம்புலன்களுக்கும் விருந் தாய் வந்து அவர்தம் பிறவிப் பிணிக்கு மருந்தாய் அமை கின்றன. இரவு உணவு கொண்டு துயிலச் சென்ற அடி யார்கள் மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடிப் பாவை பாடி முதனுள் போலவே சாதனையில் ஈடுபடுகின்றனர். இப் படிக் கழிந்த நாட்கள் ஆறு. -
ஏழாம் நாள், வெள்ளிக்கிழமை வழமைபோல் பாவை பாடி, திருவாசகம் ஒதி கேதீச்சரநாதர் தரிசனமும் பிரசாத மும் பெற்ற அன்பர்கள் காலை ஒன்பது மணிக்குத் திருவாசக மடத்தில் கூடுகிறர்கள். புராண பட்டனத்தைத் தொடர்ந்து திருக்கோணமலை தொண்டர் கந்தையா அவர்கள் தேனுெத்த தீங்குரலில் இறைவன் நாமத்தை இழைக்க, பாகொத்த உள் ளத்தோடு அதனைப் பயின்றனர் மெய்யடியார்கள். நாம பஜ னையால் உளமுருகி நின்ற பக்தர்களுக்குத் திருவாசக அமு , துரட்டிமெய்ம்மறக்கச்செய்தார் திரு க. ஆறுமுகம் அவர்கள். தொடர்ந்து தியானம். திருவாசக விழாவின் முதல்நாள்
 

ஆத்மஜோதி 59
காலை நிகழ்ச்சிகளுக்குச் சிந்தாந்தச் செம்மல் வைத்தியர்
சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினர்கள்.
தத்துவக்கருத்துக்கள் பலவற்றைக் கேட்போர் மனத்தில் பதியவைத்தார் தலைவர். பின்னர் விரிவுரை நிகழ்த்திய "ஆத்மஜோதி ஆசிரியர் திரு. நா. முத்தையா அவர்கள் திரு வாசகப்பெருமை பேச, வித்துவான் பொன் அ. கனகசபை அவர்கள் திருவெம்பாவையின் உட்பொருள்பல உரைத்தார் $ଜIT',
மாலை நிகழ்ச்சிகள் கொழும்பு விவேகானந்தசபை, கதிர் காமயாத்திரிகர் தொண்டர் சபை ஆகியவற்றின் தலைவர் திரு. இரா, சபாநாயகம் அவர்கள் தலைமையில் ஆரம்பமா யின. கூட்டு வழிபாட்டின் பின்னர் எட்டினுேடு இரண்டும் அறியாத என்னைப் பட்டி மண்டபம் ஏற்றினை என்பதற்கு விளக்கம் தந்து மக்கள் ஆன்மவளர்ச்சிக்குப் பாடுபடவேண் டிய அவசியத்தையும்எடுத்துரைத்தார்கள். விரிவுரை ஆற்றிய பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அமுத மழை யாய்ப் பொழிந்தார்கள். சாயரட்சைப் பூசைக்குப்பின் சைவப்புலவர் திரு. த. குமாரசாமிப்பிள்ளை அவர்களின் கதாப்பிரசங்கம், திரு. வே. சிவஞானம் அவர்களது வயிலி னும் திரு. நா.ஆறுமுகம்பிள்ளை அவர்களின் மிருதங்கமும் திரு.மணி அவர்களின் கெஞ்சிராவும் உதவியாக நடைபெ ற்றன. தொடர்ந்து சங்கீத பூஷணம் செல்வி ஜெயலட்சுமி சதாசிவம் அவர்கள் பக்கவாத்திய சகிதம் அளித்த இன் னிசை விருந்துடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவேறின.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் செல்வி தங்கம்மா அப்
பாக்குட்டி அவர்களின் விரிவுரையுடன் ஆரம்பமாயின. புராணபடனத்தின் பின்னர் திரு. த. குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் தலைமையில் சிவநேயச்செல்வர் திரு, சி. இ. சதா சிவம்பிள்ளை அவர்கள் ஆக்கிய 'திருக்கேதீச்சரநாதர் கிள்ளை விடுதூது’ என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது. அன்பர் பலர் நூற்சிறப்பைப் பன்னிப்பன்னிப்போற்ற, ஆக்கியோன் இறைவன் கருணைக்கும் அடியார்கள் ஆசிக்கும் பாத்திரன கும்பேற்றை எண்ணி உளம் உருகினர்கள். மாலை யில் திரு. கி. இலக்குமணன் எம். ஏ. அவர்களின் தலை மையில் திரு. ஆ. கந்தையா எம். ஏ, வித்துவான் ச. கந்த சாமி ஆகியோர் ஆற்றிய விரிவுரைகளும் திரு. வி. க. ஆறு முகம் அவர்களின் கதாப்பிரசங்கமும் அறிவுக்கு விருந்தாய் அமைந்தன.

Page 6
160
மறுநாள் ஞாயிற்றுக்கிழமைகாலையில் புராணபடனத் தின் பின்னர் மேன்மைதங்கிய போபந்தர் மகாராஜா அவர் கள் திருவாசகமடத்துக்கு வருகைதந்து சிறப்பித்தார்கள். காலை நிகழ்ச்சிகளுக்குத் தலைமைதாங்கிய மாவட்டநீதிபதி திரு. வே. க. கந்தசாமி அவர்கள் வரவேற்புரை கூறினர் கள். சிவானந்தகுருகுல மாணவரின் வேதபாராயணமும் திரு. வே. சிவஞானம் அவர்களின் திருவாசக பாராயண மும் மகாராஜாவையும் மற்றும் உள்ளோரையும் பக்தி வலையிற் படுத்தின. மகாராஜா அவர்கள் தமதுரையில் வாழ்வாகிய ஆற்றுக்குச் சமயமாகிய கர்ைகள் வேண்டு மென்றும், கரையற்ற ஆறுபோல் சமய ஒழுக்கமில்லாத வாழ்வு ஆக்கத்திற்குப் பதில் அழிவையே பெருக்கும் என் றும் குறிப்பிட்டார்கள். பின்னர் தலைமை உரையைத் தொடர்ந்து திருவாசக ஆய்வு நடைபெற்றது. திருவாச கத்தில் 'தத்துவம்' பற்றி திரு. கி. இலக்குமணன் அவர் களும் ‘காலம்' பற்றி, திரு. செ. தனபாலசிங்கன் (பீ.ஏ.) அவர்களும் "பக்தி' பற்றி திரு. ஆ. கந்தையா அவர்களும் பேச, ‘விஞ்ஞானம் பற்றி பேராசிரியர் ஆ. வி. மயில்வா கனம் அவர்கள் எழுதியனுப்பிய கட்டுரை வாசிக்கப்பட் டது. காலை நிகழ்ச்சிகள் யாவும் சிந்தனைச் செல்வங்களாக மிளிர்ந்தன.
மாலை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய சேர். க. வைத்தியநாதன் அவர்கள், 'இவ் வருடத் திருவெம்பாவை நாட்களில் கேதீச்சரத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக் கூட்டத்தினர் 'சாதனை' என்ற பெயரில் பக்தி யோக மும், கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தினர் ‘சிரமதா னம்' என்றபெயரில்கர்மயோகமும்செய்ய, இவைகளில்பங்கு கொள்ளும் பேறு கிடைத்தமைக்கு என்ன புண்ணியம் செய்தேனுே!’ என்று மகிழ்ந்தார்கள். விரிவுரை ஆற்றிய பண்டிதர் மு. ஆறுமுகன் அவர்களும் திரு. மு. சோமசுந் தரம் அவர்களும் அரிய பல கருத்துக்களைக் கூறினர்கள். ஆலயத்தில் சாயரட்சைப் பூசையைத் தரிசித்துத் திரும் பிய அடியவர்களுக்கு பூரீமதி நாராயணசாஸ்திரி அவர்க ளின் இசை மகிழ்வூட்ட திரு. கி. இலக்குமணன் அவர்கள் திருவாசகத் தெள்ளமுதை அள்ளிச் சொரிந்தார்கள். பின் னர் சங்கீத பூஷணம், கு. சந்திரபாலன் அவர்கள் பக்கவாத் திய சகிதம் நடாத்திய இன்னிசைக்கச்சேரி மக்களுக்கு மன நிறைவைநல்கியது. செயலாளரின் நன்றியுரையுடன் சாதனை யும் திருவாசக விழாவும் இனிது நிறைவேறின.
 

ஆத்மஜோதி 161 ܣܛܪܐ
ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் பண்ணிய தவத்தின்
புண்ணியமே போல மறுநாள் அதிகாலை அவர்களுக்குக்
கிடைத்தது ஆனந்த தாண்டவரின் ஆருத்திரா தெரிசனை.
அந்த அருட் பிரசாதத்தைப் பெறுதற்கு இதுபோல் எத் இதனை காலம் வேண்டுமானுலும் சாதனை செய்யலாமே என்ற உள்ளப் பூரிப்போடு பக்தர் குழாம் பக்திக் கடலில் முழு கியும், பாலாவியில் குளித்தும் 'என்றும் வேண்டும் இந்த இன்பம்" எனக் கேதீச்சரநாதன் பொன்னடி போற்றி மகிழ்ந் தனர்.
සූක්‍ෂාඤඤඤඤඤඤඤඤාභී
நீர்ப்
GBS
స్త్రీ2 (டாக்டர். ச. ஆறுமுகநாதன்) x நோயுற்றேர் சிறுநீரைக் காலைப் போதில் இ நுட்பமுடன் வெண்புட்டி தனிலே வாங்கி * காய்கின்ற காலைவெய்யில் தனிலே வைத்து
கவனமுடன் குலுக்கிஎள்ளின் எண்ணெய் விட்டு நோயதனைக் கண்டிடுவீர் எள்ளின் எண்ணெய் நுண் கம்பி போலிறங்கின் வாத ரோகம்
தூய எண்ணெய் சிறுநீரில் சிதறி காணில் నై$''' துலங்கு பித்தம் அதுவாகும், இன்னும் கேளிர் x
d
o
இ கபரோகம் கண்டோர்கள் நீரில் எண்ணெய் x காண்பதற்கு சல்லடைக்கண் போலே தோற்றும் $ தபத பெண் படராது ஊற்றும் எண்ணெய் * தளர்வாகப் படர்வதுவே சாத்திய மாகும். இ குபுகுபென படருவதும் நீருக் குள்ளே * கொட்டும் எண்ணெய் அழுந்தலோடு கலந்துநிற்றல் இ அபத்தமதாய் துளிதுளியாய் சிதறி காணல் o
స్త్ర
S
ஆகாது அசாத்தியமென்றே அறிந்து கொள்வீர்!
爵

Page 7
162 () ஆத்மஜோதி ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம்
பதினேழு ஆண்டுகளுக்கு முன் திருக்கேதீச்சரத்தில் முதன் முதலாக பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டிக் கேதீச்சர ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்ய வேண்டு மென்னும் எண்ணத்தை இலங்கைவாழ் சைவ மக்கள் மனத்தில் பதிய வைத்தது ஈழத்துச் சிவனடியார் திருக் கூட்டம். அப்போது அதன் தலைவராக இருத்த பூரீ க. கண்க ரத்தினம் ஐயா அவர்களும் இணைச் செயலாளர்களாக இருந்த பூரீ செல்லப்பாச் சுவாமி, பூரீ சரவணமுத்துசுவாமி ஆகியோரும் பெரு முயற்சி செய்தனர்.
நாளடைவில் ஆலயப் புனருத்தாரணத்துக்கென தனி யானதொரு சபை ஏற்பட்டதும், இத் தொண்டை அத னிடம் ஒப்படைத்துவிட்டு ஈழத்துச் சிவனடியார் திருக் கூட்டத்தினர் பிற பணிகளில் ஈடுபட்டனர். அருட்பாடல் களைத் திரட்டி அவ்வப்போது இலவச வெளியீடுகளாக்கி மக்கள் கைகளிலும் வாய்களிலும் அவற்றை மணக்கச் செய்தனர். திருக்கேதீச்சரத்தில் அமைந்திருக்கும் திருவா சக மடம் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் ஆக்கிய
முக்கிய பணிகளுள் ஒன்ருக விளங்கி வருகிறது.
இந்த மடத்தில் சாதுக்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் உணவு, உறையுள் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின் நிறன. விசேட காலங்களில் பிரார்த்தனை, சொற்பொழிவு கள், புராணபடனங்கள் ஆதியனவும் நடைபெறுகின்றன. திருவெம்பாவை நாட்களில் சாதனையும் திருவாசக விழா வும் நடைபெற்று வருகின்றன. இந்நாட்களில் சாதனை யில் பங்கு பற்றுவோர் யாவருக்கும் மடத்தில் உணவு வசதிகளும், தங்குவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப் படுகின்றன.
சுபகாரியங்களுக்கு விலக்கப்பட்ட மாதம் மார்கழி. ஆனல் இறை வழிபாட்டுக்கு மிக மிக இசைந்த மாதம் இதுவே. சைவ ஆலயங்கள் யாவற்றிலும் மார்கழி மாத முழுவதும் விசேட பூசை வழியாடுகள் நடைபெறுகின்றன. 'மாதங்களிலே நான் மார்கழியாக இருக்கிறேன்' என்கி முர் பகவான். இத்துணைப் பெருமை வாய்ந்த மார்கழி யில் வருவது திருவெம்பாவை. இந்நாட்கள் பத்திலும்
 

ஆத்மஜோதி 163
சிதம்பரத்தில் உற்சவம் நடைபெறுகிறது. சிதம்பரத்தில் மட்டு மென்ன! சிவனுறைபதிகள் எங்குமே உற்சவந்தான்!
ஈழத்திலே சின்னஞ்சிறு கோவில்களில் கூட இந் நாட்களில்
விசேட பூசை நடைபெறும்.
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலமாகிய திருக்கேதீச் சரத்தில் இந்நாட்களில் இறைவழிபாடு செய்வதால் மனத் தூய்மையும், பக்தியும் பெருகும் என்பது அநுபவசாலிகள் கண்ட உண்மை. சிவபக்தர்கள் யாவரும் இந்தப் பேரா னந்தத்தில் திளைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் ஈழத் துச் சிவனடியார் திருக்கூட்டம் சென்றவருடம் திருவெம் பாவை நாட்களில் ஆறு நாட்கள் சாதனையும் மூன்று நாட் கள் திருவாசகவிழாவும் நடைபெற ஒழுங்குகள் செய்தது. இந் நிகழ்ச்சிகள் அடியார்கள் மனதைப் பெரிதும் கவர்ந்ததா லும், மெய்யடியார்கள் பலர் இக் கைங்கரியத்தைத் தொ டர்ந்து செய்ய வேண்டுமெனப் பணித்தமையாலும் ஈழத் துச் சிவனடியார் திருக்கூட்டம் இவ்வருடத்திலும் ஆறு நாட்கள் சாதனையும் மூன்றுநாட்கள் திருவாசக விழாவும் நடைபெறுவதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்தது.
வளர்ந்துவரும் இத்தொண்டு பலரையும் தன் பாலிமுத் துள்ளது. இம்முறை கொழும்பு கதிர்காமயாத்ரீகர் தொண் டர்சபை, கொழும்பு இந்துவாலிபர் சங்கம்,குருநாகல் சைவ மகாசபை முதலிய பல்வேறு சைவசமய ஸ்தாபனங்களும் பெருமளவில் பங்கு கொண்டு, இந் நிகழ்ச்சிகள் மக்களுக் குப் பயன் விளைக்கும்படி செய்துள்ளன.
அமெரிக்க நாட்டுப் பொன்மொழிகள்
நீ முரண்பாடில்லாமலிருக்க முயல்வாயாக! ஆணுல் உண்மையாக இருக்க மட்டும் நீ உழைத்திடுவாய்.
பாவம் என்னும் கொடியவனுக்குப் பல ஆயுதங்கள் இருந்தாலும், அந்த ஆயுதங்களுக்கெல்லாம் பொருத்தமான ஒரு பிடி உண்டு. அதன் பெயர்தான் பொய்.
- ஹோம்ஸ்.

Page 8
164:
தோத்திரங்கள் தியானத்திற்கு வழிகாட்டுகின்றன - நா. முத்தையா. -
வானுலகிலே உள்ள தேவர்கள் பூவுலகிலேயுள்ள மக் களைப் பார்த்துப் பொருமைப் படுகிறர்களாம். "புவனி யில் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றம் அவமே'
பூமியில் பிறந்து காலத்தைத் தவமாகக் கழிக்காமல் இப்போது அவமாகக் கழிக்கிருேம் என்று தேவர்கள் வருந் துவதாய் மணிவாசகர் கூறுகிருர், பூமியில் பிறத்தல் அரிது. அதிலும் மானிடராய், இறைவனை உணர்ந்து, உள்ளம் நெகிழ்ந்து வாழக் கிடைப்பது மிக மிக அரிய பேறு. அங் ங்ணம் உளம் நெகிழ்ந்து இறைவனை நினைப்பதற்குத் திரு வாசகம் எமக்கு வழிகாட்டுகிறது. உடலால் வணங்குவ தால் உடலுக்கு நலன் ஏற்படலாம். பாடல்களைப் பாடுவ தால், வாசாலணுக ஏதுவுண்டு. ஆனல் இறைவன் அருள்
'அநுபவம் பெற வேண்டுமாயின் எமது உள்ளம் அவனிடத்து
ஈடுபட வேண்டும். இதற்கு வழிகாட்டுகின்றது திருவாசகம்.
திருவாசகத்திலே இரண்டு அடிகளைத் தெரிந்து, உணர்ந்து, படித்தால் அதற்குரிய அருள் அநுபவத்தை அது கொடுக் (5L).
'நமச் சிவாய வா அழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்
வாழ்க’
என்ற இரண்டு அடிகளையும் திருப்பித்திருப்பிச் சொல்லி உணர்ந்துவிட்டால், அப்பால் உள்ள அடிகளைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பமே இராது. ஏன்? 'இமைப்பொ ழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்னும் போது, இறைவன் தாள்கள் உள்ளத்தே பதிந்துள்ளன. திருவுருவில் கண்ட பாதங்களை அகஉருவில் கண்டுவிட்டால் பின் பேச்சுக்கு இடமேது? ஆண்டவன் திருவுருவைக் கோயி லிலே கண்ட நாம் உடனே கண்மூடி அவ்வுருவை மனத் தில் பதிய வைக்கிருேம். ஆனல் சிறிது நேரத்திற்கு மேல்
அவ்வுரு அகத்தில் நிற்பதில்லை. இறைவன் உருவை விளக்
 

ஆத் மஜோதி 。 165
கும் பாடல்களை நினைத்துக் கொண்டால் அப்போது அவ் வுருவம் மீண்டும் உள்ளத்தில் தோன்றுகிறது. எனவே அடிக்கடி கோவிலுக்கு வந்து, அவன் உருவைக் கண்டோ அல்லது "குனித்த புருவமும் என்பது போன்ற திருப்பாடல் களை நினைந்தோ இறைவன் திருவுருவை மனத்தில் பதிய 60) (ο) ΙθήθΕ (6) Π 1 Ο.
இங்ங்ணம் உள்ளத்திருத்திப் பழகி இறைவனைத் தியா னிக்கும் போது ஒளி பெறுவோமானுல் நாம் ஒரடி முன்னே றியவர்களாவோம். இவ்வொளி உருவத்தை உலகப் பொ ருட்களில் நாம் காணும்போது சாதனையின் அடுத்தபடிக்கு நாம் வந்து விடுகிருேம், சாதனையில் முக்கிய அம்சம் தியா னம். தியானத்தின் மூலம் நாம் நமது உள்ளத்தைப் பரி சோதிக்கும் வாய்ப்பைப் பெறுகிருேம். அதனுல் எமது உள்ளத்தை எமது அதிகாரத்துக்கு உட்படுத்தவும் முடியும்.
இறைவனை அடையத் தியானமும், தியானத்துக்கு அருட் பாடல்களும் ஆதாரமாயிருக்கின்றன. ஆண்டவன் புகழ் கூறும் பாடல்களைப் பாடும் போது உள்ளத்தில் ஒரு வித நெகிழ்ச்சி ஏற்படுகிறது. திருவாசகத்திற்கு கல்நெஞ்சை யும் கணிய வைக்கும் சக்தி உண்டு. 'கல்லைப் பிசைந்து க யாக்கி' என்று மணிவாசகர் கூறுகிருர், தமது உள்ளத் தைப் பார்த்து அது இரும்பினும் கடிது என்பதாக "இரும்பு தருமனத்தேனை' என்கிருர், உலக பாசங்கள் நம்மில் இருப் பதால் கனிந்த நெஞ்சம் கல்லாகிவிடுகிறது; இரும்பாகி விடுகிறது. இங்ங்ணம் வலிதான நெஞ்சை நெகிழ்விக்கும் வன்மை திருவாசகத்துக்குண்டு.
சகல கலைகளிலும் விற்பன்னராக இருந்தும் குரு உப
தேசம் பெற்ற பின்னரே மணிவாசகர் திருவாசக மணி களைப் பாடியுள்ளார். அவர் இறைவனிடம் ஒன்றை வேண்டி ஞர் அது என்ன வென்(?ல், 'பெருமானே, நான் எந்தக் கோயிலில் சென்று உன்னை வணங்கிஞலும் நீ எனக்குக் குரு மூர்த்தமாகவே காட்சி கொடுக்க வேண்டும்' என்பது. திருப் பெருந்துறையிலே முதன் முதல் இறைவன் அவருக்குக் குரு மூர்த்தமாக வந்து காட்சி கொடுத்து ஆட்கொண்டார். எப் போது கண்டாலும் அந்த உருவிலேயே இறைவனைக் காண வேண்டும் என்பது மணிவாசகரின் பேரவா. இதனலேயே திருப்பெருந்துறையைக் குறிப்பிட்டுப் பாடியுள்ள திருவாச கங்களில் தனிப்பட்ட ஒரு சக்தி மிளிர்வதைக் காணலாம்.

Page 9
66 ஆத்மஜோதி
மணிவாசகர் கண்ட மனித வளர்ச்சி
(மு. ஆறுமுகன்)
'நான் ஆர்’ என மாணிக்கவாசகர் கேட்கின்ருர்,
எல்லாரும்கேட்க வேண்டிய கேள்விதான். உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இவ் வினுவை எழுப்பினுல் உண்மையான வாழ்க்கையின் இலட்சியத்தை அடையலாம். மணிவா சகர் ‘நானுர்’ என்று வினவுகிருர், நாம் ‘நான் நான்’ என்று பேசுகிருேம். "அது ஆணவ மா? அதுதான் உடலா? அல்லது அதுவே இறைவனு? என்ற பல ஐயங்கள் ஏற் படுகின்றன. அதனையடுத்து அப் பெருமானர் ‘என் உள்ள மார்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்? என்று வினவி அதற்கு விடையாக இறைவனைத் தமது தலைவனுக வும் நான் யார் என்பதற்கு உறைவிடமாக நடத்திச் செல் பவனுகவும் இருந்து அவர் வாழ்ந்து காட்டினர்.
மணிவாசகனர் 'கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்' என்று கூறும்போது கல் என்று குறிப்பிடு வதற்குப் பலவேறு கருத்துக்களைச் சொல்லக் கேட்டோம். ஆனல் கல்லாவதும் ஒரு பிறவியே என்பதற்குத் தாயுமா னவர் சான்று கூறுகிருர்,
“கல்லாகப் படைத்தாலும் மெத்த நன்றே
கரணமுடன் நானுறவு கலக்க மாட்டேன்'
என்பது அவர் வாக்கு. புல்லு ஒரறிவு உயிர், மனி தன் ஆறறிவு உயிர். கல்லு ஒரறிவுக்கும் குறைந்தது. தொட்டால் உணரும் அறிவேனும் கல்லுக்கில்லை. படிப்ப டியாக வளர்ந்த உயிர் ஆறறிவுடைய மனிதனுகி, மனித னுள்ளும் மெய்ஞ்ஞானம் பெறும்போது ஏழாவதறிவும் உடைய உயிராகிருன் மெய்ஞ்ஞானம் பார்வைக்கும் சிந் தனக்கும் அப்பாற்பட்டது. ஏழாவது அறிவு பெற்றேர் தாம், இருந்த இடத்திலிருந்தே யோக முறையில் மூவிடத்
திலும் முக்காலத்திலும் உள்ளவற்றை அறிவர். அங்ங்ணம் உயர்ந்த யோகிகளுக்கெல்லாம் உயர்ந்த யோகியே மணி
வாசகப் பெருமான். உலக சராசரங்களின் தொகை நூற் ருெரு கோடியின் மேற்பட விரிந்ததென அவர் தம் ஞானக் கண்ணுல் கண்டு கூறுகிருர், எனவே அவர் ஒரறிவினும் குறைந்ததாகிய கல்லாகப் பிறத்தலைக் கூறுவதில் உள்ள கருத்தைச் சிந்திக்க வேண்டும்.

ஆத்மஜோதி 167
அந்தக் கரணங்களுடன் தொடர்புறுவதனலேயே எமது மனம் ஒட்டம் பெற்றுப் பாவ புண்ணியங்களைச் செய்கிறது. தீவினையும் நல்வினையுமே பிறவிக்குக் காரணமாகின்றன. கல்லாகப் பிறந்து கரணத்துடன் தொடர்பின்றி இருந் தால் தூக்க நிலையில் வினை செய்யாதிருப்பேன் என்று தாயுமானவர் கூறுகிருர், கல்லா மனிதர்’ என்று ஒரு சாரார் கூற, கல்லாய் என்பதை ஆகு பெயராகக்கொண்டு அதில் வாழும் உயிர்கள் என விஞ்ஞானிகள் கூற மெய்ஞ் ஞானியாகிய தாயுமானர் கல்லே' என உறுதியாக மலைப் புக்கிடமின்றிக் கூறுகின்றர்.
வேட்டுவவாளி பற்றிய கருத்தைப் பார்ப்போம். திரு வாதவூரடிகள் புராணமும், சித்தியாரும் புழுவொன்றை எடுத்துச் சென்று அதனை அடுத்தடுத்துத் தான் கொட்டு வதாலேயே தன் இனமாக்கும் வேட்டுவன் என்று சொல் லுகின்றன. வேருெரு சீாராரி அந்தப் புழுவை வேட்டு வப் பூச்சி உணவுக்காகக் கொண்டு செல்லுகிறது என்பர். பிறிதொரு சாரார் வேட்டுவன் தூக்கிவரும் புழுவைத் தன் கூட்டில் வைத்து அதனைக் கொட்டுவதால் அதற்கு
உறக்க நிலை ஏற்படுத்தி அந்தப் புழுவின் உடலில் துவா
ரம் செய்து அதனுள் தன் முட்டைகளை இட, அம் முட் டைகளிலிருந்து வெளிவந்த புழுக்கள் முற்குறிப்பிட்ட புழு
வையே உணவாகக் கொண்டு வளர்ந்து வேட்டுவனுகும்
என்கின்றனர். மூன்ருவது சொல்லப் படுவதே விஞ்ஞானி கள் தகுந்த ஆதாரங்களோடு கூறுவதாம். இதனல் புராண
காரர் கூறியது பொருந்தாதாயினும், இவ்வளவு அருமை
யான உதாரணங்களைக் கையாண்டமைக்காக அவர்களை நாம்
போற்ற வேண்டும்.
1947ஆம் ஆண்டு இங்கு திருஞானசம்பந்தர் மடம் திறக்கப்பட்ட போது 'அங்கம் ஒழியன்னர்' என்று கேது வைக்குறித்துச் சொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட சொற் ருெடர் இன்று 'அங்கம் மொழி அன்னர்’ என்று வேதாங் கங்களை மொழிகின்ற முனிவர்களும் தேவர்களும் என்ற
கருத்தில் கொள்ளப்படுகிறது. *
இப்படியான மாற்றங்கள்காலத்துக்குக்காலம்நிகழ்வதால் இவற்றை வெகு நுணுக்கமாக பொறுமையோடு அவற்றை அணுக வேண்டுமென்று மிகத் தாழ்மையுடன் ஒவ்வொரு வரையும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

Page 10
168 ஆத்மஜோதி திருவாசகத்தேன்
- பண்டிதை செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி -
'இறைவ. தூய உள்ளம் படைத்த- நீறிட்ட அன்ப
ரோடு, அவர் வரிசையில் என்னை ஏற்றினயே! என்னுடைய
தன்மையையும் அவர் தன்மையையும், ஆய்ந்து தான் செய் தனையா? பொல்லா நாயினேணுகிய என்னை அருள் பழுத்த
அடியவர்வரிசையில் ஏற்றியதை எண்ண எனக்கேவெட்கமாக இருக்கின்றது.நீயோஅதைஎண்ணிலை;ஆனல்நீயேவந்தென்னை ஆட்கொண்டது மெய். என்னேடு இருந்த மற்றும் பழுத்த
மனத்தடியர் எல்லாம் உன்னைச் சேர்ந்து விட்டனர். நானே
இவற்றைக் கண்டு வியந்து,
* மெய்தான் அரும்பி விதிர் விதித்துன் விரையார் கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும் பி வெதும்பி
6it so பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி யென் னுங் கைதான் நெகிழவிடேனுடையா யென்னைக் கண்டு கொள்ளே’
என்று இரங்கி உன் அருள் வேட்பில் திளைக்கின்றேன்' எனத் திருச் சதக முதற் பாடலால் மணிவாசகர் தன்னே இறைவனுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றர்.
உள்ளம் பொய்யாலும், மயக்கத்தாலும் திரைபோடப் பட்டிருக்கின்றது. இத்திரையை நீக்கின் உள்ளத்தில் ஒளி தென்படும். அதுவே இறை அருள் ஒளியாகும். இதனை வலி யுறுத்தவே 'பொய்தான் தவிர்ந்து' என்ருர், இறைவன் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன். அவனைச் சார எண்ணும் ஆன்மாவும் அத்தன்மை அடைய வேண்டும். "புரங்கடந்தானடி காண்பான்' என்னும் திருக்கோவை யார் அடியால் இதனை உணர்ந்து கொள்ளலாம். 'பொய் யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்' என்னும் திருக்குறளும் மேற்கூறிய அருள் உலகிற்கு வழி காட்டும் என்பதனையே பேசுகின்றது. -
இவ்வாறு அருள் ஒன்றையே நோக்காகக் கொண்டு புலம்பித் திரிந்த பித்தராகிய மணிவாசகர், தான் இருந்த
 
 

鬣
ன்ருர் பார்ப்போம்.
வேற்க நாணிமூலையிலே கள்வர்"ப்ோல் இருட்டறையில்
வந்தது. இனியும் நீ பிறபிறப்பென்னும் சமுத்திரத்திற் சுழிப்படத் தேவையில்லை, உன்னைக்கரைசேர்க்க வல்ல ஒடம் ஐந்தெழுத்து. அதனை நீ அறிவாயாக என, நான்நோய்வாய்ப் ப்ட்டிருந்தபோது, ஏவலின்றி உன் எழுச்சியில் என் அகம் வந்து கூலியின்றி என் நோய் தீர்த்த வினைக்கேடன்-மருத் துவன் அன்ருே நீ! இவ்விரகசியம் எம்மிருவர்க்கும் தெரிந்த ஒன்றன்ருே! அதுவும் உன் அருள் அறிவை ஐந்து புலன்க ளும் கொள்ளுமளவை என் கண்ணுகிய ஒரு புலன் கண்டு களிக்க ஆரத்தந்த ஐயாவில்லையோ!' எனப் பேரானந்தப் படுகின்ருர், 'வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று' தனியனேன் பெரும் பிறபிப் பவ்வத்து' 'நான் தனக்கன் பின்மை' என்ற திருவாசக அமுத வாக்குகளால் நாம் இவ்
வனுபோகத் தெளிவைக் கண்டு தெளியலாம்.
மணிவாசகர் உலக வழக்கோடு நின்றே திருவாசகத்
யதே உலகம் என்ற உண்மையை எடுத்துக் கூறத் தவற வில்லை. சூரிய ஒளியைக் கொண்டே சூரியனைக் காண்பது
அறிந்து கொள்ள வேண்டியதவசியம்.
மேலும் மிதமிஞ்சித் தேனை உண்டால் அது, மயக்கத் தைத் தரும். இங்கு திருவாசகத்தை உண்டால் சிவமயக்
கம் உண்டாகும். இதற்கு உதாரணமானவர் இராமலிங்க அடிகளாவர். உள்ளத்தை அதனேடு ஒட்டிக்கலந்து பாடும் போது சிவமயக்கம் ஏற்பட்டு, அப்போதையால் ஆன்ம
ஈடேற்றம் ஏற்படும் என்பது உண்மையாம்.
169
நிலையையும், தன்னை ஆட்கொண்ட இறைவனின் ரோபகாரத்தையும் இன்னேர் துறையில் எவ்வாறிசைக்
‘எம்பெருமானே! என்னை நாடி வந்தோரையும் வர
தனியே ஒளித்துஇருந்தேன். அங்கோ உன்ஒளி என்னைத்தேடி
தைப் பாடினர். பெண்களோடு எதுவித தொடர்பும் அற் றவர், எமக்காகத் தன் ஞானநோக்கால் பெண்ணின் வழி
போல், அருள் வடிவாகிய அம்மை மூலமே அப்பரைக் காண லாம் என்பதனை இக்காலக் குடும்பத் தலைவன் தலைவியர்

Page 11
170 ஆத்மஜோதி
திருவெம்பாவை-அதன்தத்துவம்
(பொன். அ. கனகசபை, )
ஆதியும் அந்தமும் இல்லாத அருபெரும் சோதியைப் பாடி, வீடுவீடாகச் சென்று தம் தோழியரையும் துயில்ெ ழுப்பிக் கொண்டு புனலாட்டுக்குப் போகிருர்கள் சிறுமியர். மொய்யார் தடம் பொய்கை புக்கு அவர்கள் முகேர் முகேர் எனக்கையால் புனலைக் குடைந்து குடைந்து நீராடி மகிழ் கிருர்கள். நீராடிய சிறுமியர் பின்னர் மழையைப் பாடு கிருர்கள். இறைவன் அன்பர்க்கு அருளுவதற்கு முன்னரே எம்பிராட்டி தமக்கு அருள் சுரப்பது போலப் பெய்யும்படி மழையைப் பிரார்த்திக்கின்றனர்.
மழை பொழிவதையும், வெயில் எரிப்பதையும், காற்று வீசுவதையும் நாமும்தான் அடிக்கடி காணுகின்ருேம். ஆனல் மணிவாசகர் இவற்றைக் காணும்போது இவற்றின் மூலம் இறைவன் திருவருளையே காணுகிருர், ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள சிறு குழந்தைகள் கூறுவதாக அமைத்து மழையை வழுத்துகிருர், மழையிருந்தால் மட் டுமே உலகம் வாழலாம் என்ற உண்மையை வலியுறுத்த வல்லவா வள்ளுவரும் கடவுள் வாழ்த்தை அடுத்து வான் சிறப்பை வைத்தார், இறைவியின் நிறத்தை நினைவுபடுத் துகிறது சூல்கொண்ட மேகம். அவள் இடை போல மின் னலும், அவள் சிலம்பின் ஒலிபோல முழக்கமும், செய்கிறது. அவள் புருவம் போல் வானவில் பொலிகிறது. இத்தனையும் காட்டி அவள் அருளே போல் பொழியும் மழையை வாழ்த் துகிரு?ர். பதிருைவது பாட்டில் இவற்றைக் கூறிப் பதினறு பேறும் தமக்கு வேண்டு மெனச் சிருர் கேட்பது உட்குறிப் புப் போலும்!
பத்தொன்பதாவது பாட்டிலே ஒரு விண்ணப்பம். அது நிறை வேறி விட்டால் சூரியன் கிழக்கில் எழுந்தாலென்ன மேற்கில் எழுந்தாலென்ன என்ற கவலையற்ற இறுமாந்தநிலை, அப்பர் பாடினரே 'நாமார்க்கும் குடியல்லோம்' என்று; அது போல அச் சிறுமியர் நெஞ்சில் ஒர் அஞ்சாமை நிலை;
இருபதாவது பாட்டில் இறைவனின் பஞ்சகிருத்தியங் கள் பரவப்படுகின்றன. 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி' எனத் தொடங்கிய மணிவாசகனர் முடி , யும் போதும், போற்றி அருளுக நின் 'ஆதியாம் பாத மலர்', 'அந்தமாம் செந்தளிர்கள்’ எனக் கூறுகிருர், 'ஆதியும்
 
 

த்மஜோதி 171 அந்தமும்' என்று இவர் தொடங்க மெய்கண்டதேவர் 'அந்தமும் ஆதியும் என் மனர் புலவர்' எனத் தொடங்கு கிருர், போற்றி யருளுக நின் ஆதியாம் பாதமலர் எனத் தொடங்கி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் ஆகியவற்றை முறையே விளக்குகிருர்,
பெண்ணுகப் பிறத்தலே பாவம் எ ன ச் சமணமும் பெளத்தமும் கூறிய போது, திருவெம்பாவை மூலம் பெண் களுக்கு முக்கிய இடம் கொடுத்து ஒரு புரட்சியே செய்து விட்டார் மணிவாசகர்.
எங்களுக்கு தைமுதல் ஆனிவரையுள்ள ஆறு மாதமும் தேவர்களுக்குப் பகற்போதும், ஆடி முதல் மார்கழி வரை யுள்ள ஆறுமாதமும் இரவும் ஆகும். மார்கழிமாதம் தேவர் களுக்கு விடியுமுன்னுள்ள இரண்டரை நாழிகையாம். அரு ளல் என்னும் கிருத்தியத்தைக் குறிக்கும் திருவனந்தற் பூசை நடைபெறுகிற காலம் இது. இன்னும் மார்கழி என் பது (மா-ஒடுக்கம்; கழி-நீங்குதல்) ஒடுக்கத்திலிருந்து நீங் குதல் எனப் பொருள்படும். மாயையிலே கேவல நிலையில் ஒடுங்கியிருந்த ஆன்மாவைப் பிரித்தெடுத்து அதற்குத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்து அதனை ஒளி உள்ள தாக்கும் பண்பைக் குறிப்பது மார்கழி மாதம் எனபர். இன்னும் ஆதிரை - (ஆ-பசு, திரை - அழுத்துதல்) ஆன் மாவை உலக அனுபோகத்தில் அழுத்தி மெய்யுணரச் செய்தல் என்பது பொருள். இம் மாதத்திலே பொழுது புலருமுன் முற்றத்தைக் கூட்டி மெழுகிக் கோலமிட்டு சாண உருண்டை வைத்துப் பூச்சாத்துவர் எ ம் அன்னை யர். இதில் வைக்கப்படும் சாண உருண்டை ஆன்மாவை உலக அநுபவத்தில் அழுத்தலேக் குறிக்கும். அதன் மேல் சூடப்படும் மஞ்சட்பூ, தனுகரண புவன போகங்களைத் தந்த பிரம தேவனை நினைப்பூட்டுகிறது.
ஆர்த்திரா தரிசனத்தின் பின் கறுத்தப் பசு ஒன்றைக் கொணர்ந்து அதன் முகம் சுவாமியைப் பார்க்காது பின் புறம் காட்டும்படி விடுகிருரர்கள். இதன் தத்துவம்,- கறுத் தப் பசு, ஆணவ இருள் பீடிக்கப்பட்ட ஆன் மா; அது ஆண்டவனைப் பார்க்க மறுத்து உ ல க பந்த பாசங்களை யே நாடி ஒட முயலுகிறது.
இன்னும் இவை போன்ற பலப்பல தத்துவார்த்தங் களைக் கொண்ட திருவெம்பாவையை நாம் கை நெகிழ 19 கூடாது. ஒ வ் வெ ரா ரு வ ரும் இதனைப் பா டி உமையின் அரு ள் பெற்று வாழ்வோமாக. நாம் ஒவ் வொருவரும் வாழ, வீடு வாழும்; வீடு வாழ நாடு வாழும்.

Page 12
172 ஆத்மஜோதி
திருவாசகம் விழிப்புணர்ச்சியைத் தருவது.
(மு.சோமசுந்தரம்)
உலகில் விஞ்ஞான அறிவு மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றையசூழ்நிலையிலே எங்கோ ஒருமூலையில் நாம்சு டி இறை
வனைப் பற்றியும் திருவாசகத்தைப் பற்றியும் பேசிக்கொண்டி
ருக்கிருேம் என்ருல் அது அறியாமையாலன்று. அந்தக்காலத் தில் விஞ்ஞானத்தால் நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகமென்று உணர்ந்து அதனை வளர்க்காமல் மெய்ஞ்
ஞானத்தை வளர்க்கத் தலைப்பட்டார்கள். விஞ்ஞான அறி
வியல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே சென்று செயலாற்ற முடி யும். ஆனல் மெய்யறிவு இதற்கப்பாலும் சென்று செயலாற் றும் அறிவியல் புறவாழ்க்கையிலே மாறுதல்களை உண்டாக்க லாம். மெய்யுணர்வோ உள்ளத்துக்கு இனிமை ஊட்டுவது மட்டுமன்றி பிறர்க்கும் மெய்யுணர்வை ஊட்டத்தகுந்த பாடல்களையும் தந்து நன்மை பயக்கத் தகுந்ததென நாம்
அறிகிருேம். 'அறிவியல் செயலாற்ற முடியாத நிலையில்
அங்கு சமயஉணர்வு தோன்றித் தன் கடமையைச் செய்ய
முற்படுகின்றது’ என மேனுட்டறிஞர் ஒருவர் கூறினர்.இந்த
உண்மை என்றும் மாருமல் இருந்து வருகிறது. சென்ற நூற் ருண்டில் விஞ்ஞானம் தந்த கருவிகள் இப்போது நமக்குப் பயன் படாதபோது, என்ருே பாடப்பட்ட திருவாசகம்
போன்றநூல்கள்ஒருவிழிப்பைத்தருகின்றனவென்ருல், அவற்
றின் சிறப்பு எத்தகையது என்பதை நாம் அறியலாம். உதா
ரணமாக, பாரிவாழ்ந்தான், அவன் பெரிய வள்ளல்; முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்தான், அவனுக்கு மகளிர் இருவர் இருந்தனர் என இன்றைக்கும் நாம் அறியக்கூடிய தாகப் பாடல்கள் உண்டு. இன்று பாரியின் தேர் கிடைத்தால் அதனை நூதன சாலையில் வைப்போம். ஆனல் அவன் மகளிர் பாடிய " கள் நாவில் தவழ்ந்து நெஞ்சில் இனிக்கிறது.
மணிவாசகர் கையிலிருந்த ஏடும் எழுத்தாணியும் இன்று கிடைத்தால் அவற்றுக்கும் இடம் நூதன சாலையாகத்தான்
இருக்கும்.ஆனல் அவர் பாடல்களைப் படிக்கும்போது உள்ளம்
உருகுகிறது. அன்று மணிவாசகர் பெண்கள் குடங்களை எடுத் துக் கொண்டு அதிகாலையிலே நீராடச் சென்று கொண்டே பாடியதாக அருளிச் செய்த திருவெம்பாவை இன்றும் தெரு
“அற்றைத் திங்கள்' என்ற பாடல் பல்லாயிரம் மக்
 
 
 
 
 

。 ஆத் மஜோதி 173
வீதிகளிலே மணக்கும்படி பக்தர்கள் பாடுகிருர்கள். புற வாழ்க்கையில் அந்தநாட்களுக்கும் இந்த நாட்களுக்கும் எத்த னையோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ள போதிலும் அக வாழ்க் கையில் மாறுதல்கள் ஏற்படவில்லை. மணிவாசகப் பெருந் தகை விஞ்ஞான அறிவு மிகுந்தவர் என்பது அவர் பாடல் களிலிருந்து நன்கு தெரிகிறது. அங்ங்ணம் விஞ்ஞானக் கருத் துக்களெல்லாம் துறை போகிய அவர் 'என் அகவாழ்வில் இன் பம் பெறக்கூடாது' என எண்ணி, மந்திரிப் பதவியைத் துச்ச மாக மதித்து ஆண்டவனுக்கு ஆட்பட்டார். அத்துடன் நாமெல்லாம் இறைவனை நினைத்தற்கும் பாடுதற்கும் ஏற்ற வகையில் திருவாசகத் தேனைத் தந்திருக்கிருர்,
திருவாசகம் தேனினும் இனியது. ஊனினை உருக்கி உள் ளொளி பெருக்க வல்லது. 'மனிதரை ஏன் புகழ்ந்து பாடு கிறீர்கள்? பாரியைப் போல் வீமனைப் போல் ஒருசிலர் இருக்க லாம். அவர்கள் பூரணமர்கக் கொடுக்கமாட்டார்கள். இறை வனைப் புகழ்ந்து பாடுங்கள், அவன் நீங்கள் வேண்டிய தெல் லாம் கொடுப்பான்' என்று சுந்தரர் சொல்லுகின்ருர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் 'ஈயென இரத்தல் இழிந்தன்று' எனப் புற நானுாறும் "ஆவுக்கு நீரென்றிரப் பினும் நாவுக்கு இரவின் இழிவந்ததில்' என்று குறளும் பேசுகின்றன. இந்தச் சூழ்நிலையிலே உள்ளவராய் மணிவாச கர் ஒரு பாடலைப் பாடுகின்ருர்,
'பரந்து பல்லாய் மலரிட்டு முட்டாத டியே இறைஞ்சி
இரந்த வெல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் a sit 6TD கரந்து நில்லாக் கள்வனே நின் வார் கழற்கு அன்பெனக்கு நிரந்தரமாய் அருளுகண்டாய் நின்னே ஏத்த முழுவதுமே'
இறைவனுடைய அருளிலே ஆட்பட்டு அவனுடைய சிந் தனையிலேயே ஈடுபட்டுப் பேசும் பேச்சல்லவா இது!
சுவர்க்கம் இருக்கிறதே அது கேட்காமலே கிடைக்கும். ஆணுல் கடவுளோ கேட்டால்தான் கிட்டுவார். - லவல்.
ஒரு மனிதனுடைய இலட்சியம் என்ன என்று அறிந்து கொண்டால் போதும். அதனைக் கொண்டே அவனை அறிந்து - ஹோம்ஸ்.

Page 13
74. ஆத்மஜோதி
I TE SON6 U LITT LQU U 6 Tuu TH 6ü) இறைவன் விருப்புக்கு கோவை பாடிய Q & b LD 6)
- ஆ. கந்தையா, எம். ஏ. -
திமிழகத்தில் தோன்றிய பக்தி நூல்களுள்ளே திருவா சகம் தலை சிறந்தது. பெருந்துறை புகுந்து பேரின்பம் மூழ் கிய புனிதராகிய மணிவாசகரின் மணி மொழிகளின் தொகு தியே திருவாசகம். திருவாசகம் மனங்கனிய மலங்கெடுக்கும் மாண்புடையது; இருளகற்றி எஞ்ஞான்றும் இன்பம் நல்கும் சிறப்புடையது; ஊனினை உருக்கி உள்ளொளிபெருக்கும் பான் மையது. நாளும் நற்றவர் வழிபடும் மேன்மையது; திரு வாசகத்தில் இடம் பெறும் அருட்பாடல்கள் ஒவ்வொன் றும் பக்தியுணர்வை உண்டாக்க வல்லன. அ ரு ள் ச க் தி வாய்ந்தவை. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் இயல்பு 65)63)6) .
பரவசமானுேர்
திருவாசகத்தில் பக்திப் பண்பால் பரவசமானேர் பலர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மணிவாசகத்தில் ஈடுபாடு கொண்டு கற்ருர், அதன் உயர்வையும் சிறப்பையும் பல வாறு புகழ்ந்தார். 'மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாச கத்தில் மாண்டவர்கள் கனஞ்சடையென்று உருவேறிக் கண்மூடிக் கதறுவரோ?' என்று வினுவி வியப்படைகின்ருர் . திருவாசகத்தின் பக்தியில் மனதை பறி கொடுத்த இன்னெ ருவர் பரஞ்சோதியார் ஆனந்த பரவச நிலையில் எற்புத் தொளை தொறும் நெக்கு நெக்கு உள்ளம் கசிந்து பக்தி மேலீட்டால் கண்ணிர் வெள்ளம் போல பெருகியோட மணி வாசகர் திருவாசகத்தைப் பாடினரென்பதை பரஞ்சோதி முனிவர், "அழுது அடியடைந்த அன்பன் எனப் புகழும் திருவாக்கால் அறியலாம். இராமலிங்க அடிகளாரும் திரு வாசகத்தைக் கலந்து பாடிப் பக்தி உணர்வால் பரவசமா னர். எனவே திருவாசகத்தின் சுவையை உள்ளவாறு அவ ரால் எடுத்துரைக்க முடிந்தது.

ஆத்மஜோதி 75
வான் கலந்த மாணிக்க வாச நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே o தேன் கலந்து பால் கலந்து செழுந்தீஞ் ೨್ನ ಆ95ಿಶ್ವ ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
ஒன்று சுவைத்துச் சுவைத்து இன்பங் கண்டார். திருவர சகத்தின் பக்தி உணர்வு தமிழ் உள்ளங்களை மாத்திரம் பரவசமடைய வைக்கவில்லை. வெளி நாட்டாரின் நெஞ வி4ம் கரைய வைத்தது. கிறிஸ்தவப் பாதிரியாகப் பணி புரிந்த போப்துரை மகளுர் தாம் எழுதிய திருவாசக மொழி பெயர்ப்பில் தாம் உருகி உருகி கண்ணீர் வடித்ததை குறிப் பிட்டுள்ளார். இவ்வாறு இறையுணர்வுள்ள அன்னியரின் நெஞ்சையும் கரையவைத்த பெ ரு  ைம திருவாசகத்திற் குண்டு.
பக்தி எப்படியானது?
மனிதனின் உள்ளத்திற்கும், மற்ற உயிர்களின் உள்ளத் திற்குமிடையே பெரிய தொரு வேறுபாடுண்டு. மனிதன் மற்றவர்களின் துன்பத்திற்காக இர ங்கு கி ன் ற உளளம உடையவன் மிருகங்கள் மற்ற மிருகங்களின் துன்பத்தைக் கண்டு கண்ணிர் விடுகின்றனவா? பறவைகள் மற்ற alu; if களுக்காக இரங்குகின்றனவா? இல்லையே! மனிதன் தான மற்ற உயிர்களுக்காக இரங்குகின்ருன் கண்ணிர் பெருக்கு கின்றன். இவற்றிற்கும் மேலாக இ  ைற வ னை நினைந்து கசிந்துருகும் உள்ளம் மனிதனுக்குத்தான் இயல்பாக இருக் கின்றது. இறைவன் புகழைப் பாடுகின்ற பொழுதும்; இறை வனது பெருமையைப் பேசுகின்ற பொழுதும்; இறைவனை அகக் கண்களால் காண்கின்ற நேரத்திலும் நமது 2-៣TT உருகுகின்றது. உடல் நெகிழ்கின்றது. ஆலயத்தில் இறைவனைக் காண்கின்றபொழுதும் நமதுகைகள் நம்மை அறியாமலே தலை மேல்குவிகின்றன; உள்ளமும் உடலும் உருக, மயிர்கூச்சல் எறி ன்றது. அப்போது கண்கள் பக்திக் கண்ணிரைப் பெருக்கி விடுகின்றன. மணிவாசகப் பெருமான் இவ்வாறு தான பெற்ற உணர்வினை மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்துன் விரையார் கழற்கென் கைதான் தலைவைத்துக்கண்ணிர்ததும்பி வெதும்பி யுள்ளம் பொய்தான் தவிர்த்து போற்றி சயசய போற்றி' என்று பாடியுள்ளார். மணிவாசகரது இத்திரு வாசகத்தைப் பாடும் பொழுதும், பாடக் கேட்கும் பொழு தும் நாமும் அவ்வுணர்வினைப் பெறுகின்ருேம் அல்லவா?

Page 14
76 ஆத்மஜோதி
அழுகையின் தத்துவம்
இறைவனை நினைந்து அழுது அழுது அவனடியை அடைந்
தவர் மணிவாசகர் ஆனந்த பரவச நிலையில் உள்ளம் கசிந்து கண்ணிர் பெருக மணிவாசகர் திருவாசகத்தைப் பாடி இறைவனடியை அடைந்தார். அதனுல் மணிவாசகரை "அழுது அடியடைந்த அன்பன்' என்று கூறுவர். அவ்வாறு கசிந்துருகிப் பாடிய பாடல்களானமையில் அவை கல்நெஞ் சையும் கரைக்கும் ஆற்றல் நிறைந்தனவாக காணப்படு கின்றன. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற் கும் உருகார்’ என்பது முது மொழி.
மனிதனுகப் பிறந்தவன் பல காரணங்களுக்காக அழு கின்றன். உண்பதற்கு உண வில் லையே என்று ஒருவன் ஏங்கி அழுகின்ருன். இன்னுெருவன் கொ டி ய நோயை தாங்க முடியாது " ஐ யோ' என்று அலறுகின்றன். தந் தையை இழந்த தனையனும் அழுகின்ருன் தனையனை இழந்த தாயும் அழுகின்ருள். இவை வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக நிகழ்பவை. ஆனல் இறைவனை நினைந்தும் சிலர் அழுகின்றர்களென்ருல் அ து பலருக்கு நகைப்பைக் கொடுக்கலாம். மணிவாசகப் பெருமான் இ  ைற வ னை நினைந்து கசிந்துருகிக் கண்ணிர் பெருக்கினர். அந்தப் பக் திக் கண்ணிரால் தனது ம ன த் து மாசைக் கழுவினர். இரண்டற தூய்மையான உள்ளத்தோடு இறைவன் திருவடி யை அடைந்தார், இதனை மணிவாசகப் பெருமானே ஓர்
இடத்தில் குறிப்பிடுகின்ருர்,
'இறைவா! யான் என்பதாகிய உயிர் என்னிடத்தில் இருப்பது பொய், அப்படி இருந்தாலும் அதற்கு நெஞ்சம் ஒன்று உளதென்பது பொய். அங்ங்ணம் நெஞ்சொன்று இருப்பதெனக் கொண்டாலும் அதன் மாட்டு அன்புள தென்பது பொய். அதன் கண் அன்பிருக்குமானல் தீவினை யேன் அழுது உன்னை அடைய முடியுமல்லவா? அங்ங்ணம் அழாதவனுகிய அடியேன் உன்னை வந்து கலக்குமாறு எனக்கு அருள் புரிவாய்' என்று மணிவாசகர் இறைவனை வேண் டுகின்ருர்,
** பானே டுபாய் என் நெஞ்சம் பொய் என் அன்பும் பொய்
ஆனல் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
 

臀 ஜாதி 177 தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருள்வாய் அடியேன்உனை வந்துறுமாறே ээ
என்று கசிந்துருகிப் பாடுகின்ருர், அவ்வாறு அழுது இறை வனது திருவடியை அடைந்த மணிவாசகரது திருவாசகத்
தைப் பாடிப்பாடி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நாமும் பக்திப் பரவசமாகலாமல்லவா? *,
வேதத்திலும் உயர்ந்தது
வேதம் இறைவனுல் அருளிச் செய்யப்பட்டது. திரு வாசகம் இறைவழி நின்ற அருளாளரான மணிவாசகரால் பாடப்பட்டது, இறைவனுல் அருளிச் செய்யப்பட்ட வேதத் திற்கும் மணிவாசகர் பாடிய திருவாசகத்திற்கும் பெரிய தொரு வேறுபாடு உண்டு. வேதத்தைப் படித்து உள்ளம் உருக இயலாது; ஆனல் திருவாசகத்தைப் பாடிப் பாடி, உடலும் உள்ளமும் உருகி நிற்கமுடியும். ஆம்; வேதத்தைப் படித்து உருகுவார் சிலர். ஆனல் திருவாசகத்தைப் பாடி உருகுவார் பலர். ஆகவே இறைவனுல் அருளிச் செய்யப் பட்ட வேதத்திலும், அந்த இறைவனையே நினைந்துருகி மணிவாசகரால் பாடப்பட்ட திருவாசகம் சிறந்ததல்லவா?
இதைவிடத் திருவாசகத்திற்கு இன்னெரு சிறப்பும் உண்டு. மணிவாசகப் பெருமான் எந் த நிலையில் நின்று திருவாசகத்தைக் கசிந்துருகிப் பாடினரோ, அந் த பக்தி நிலையில் நின்று திருவாசகத்தைப் பாடுவோர் உள்ளம் உருகி நிற்பர்; மனங் கசிந்துருகிப் பாடுவதைக் கேட்டு நிற்போரும் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி நிற்பர். எனவே பாடுவோ ரையும், பாடுவதைக் கேட்டிருப்போரையும் உருக வைப்பது திருவாசகம். இதனுலேயே திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று நம்முன்னுேர் உணர்ந்து உரைத்தனர்.
இறைவனே விரும்பினுன்
திருவாசகத்தின் பக்திப் பண்பு இறைவன் உள்ளத் தையே கொள்ளை கொண்டது. அதனுல் திருவாசகத்தைச் சிவபெருமான்'மணிவாசகம்’ என்றுபாராட்டினர். இறைவன் திருவாசகத்திலுள்ள தத்துவக் கருத்துக்களை விரும்பினனல் லன். விஞ்ஞான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்தானுமல்லன். இலக்கியச் சுவைக்கு இதயத்தைப்பறி கொடுத்தானுமல்லன்.
鷺

Page 15
178 ஆத்மஜோதி
மணிவாசகரின் பக்தியுள்ளந்தான் இறைவனின் திருவுள்ளத் தைக் கவர்ந்தது. இவ்வுண்மையை இறைவனது அருள் வாக்கே தெளிவுபடுத்தும்.
மணிவாசகருடைய திருவாசகப் பாடல்களுள்ளே இறை வனுக்குத் திருவெம்பாவையில் நிறைந்த ஈடுபாடுண்டு. ருவெம்பாவைப்பாடல்கள் சிவபெருமானிடத்துப்பேரன்பு கொண்ட மங்கையர்களின் பக்திப்பண்பைப் புலப்படுத்து வன. எனவே, அப்பாடல்கள் இறைவனது திருவுள்ளத் தைத் தொட்டதென்றல் அதில் வியப்பில்லையே! ஆகவே திருக்கோவை பாடும்படி ஏடும், எழுத்தாணியும் கொண்டு இறைவன் மணிவாசகரைப் பணித்த போது எதை வேண் டினன்? நீத்தல் விண்ணப்பம் பாடிய வாயால் கோவை பாடுக என்ருனு? அல்லது திருச்சதகம்பாடியவாயால் சிவ புராணம் பாடிய வாயால் கோவை பாடுக என்ருனு? 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று தான் பணித்தான். எனவே இறைவனும் மணிவாசகரது பக்தி யுள்ளத்தையே விழைந்தான் என்பதைக் காண்கின்ருேம்.
பிண நெஞ்சம்
இறைவனை நினைந்து என்புருகி ஆடியும் பாடியும் நில் லாத தன்னுடைய நெஞ்சத்தை மணிவாசகப் பெருந்தகை "பிணநெஞ்சே' என்று வைக்கின்ருர்,
* ஆடுகின்றிலை கூத்துடை யான் கழற்கு அன்பிலை என்புரு gՈլյ பாடுகின்றிலை பதைபதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத
LDa)fi சூடுகின்றிலை சூட்டுகின்றது மிலை துணையிலி பிணநெஞ்சே தேடுகின்றிலை தெருவு தோறு அலறிலை செய்வ தொன்று
அறியேனே?"
என்று மாணிக்கவாசகர் கதறிஅழுதலை மேற்படி பாடல் இனிது புலப்படுத்துகின்றது.
ஆகவே மணிவாசகப் பெருந்தகையின் பாடல்கள் உள் ளத்தை உருக்கவல்லன. பக்தியோடு பாடப்பட்டமையால் பாடுவோரையும், பாடக் கேட்போரையும் பக்திப் பரவச மாக்கும் பெற்றி வாய்ந்தன.
 

ஆத்மஜோதி 179 பெரியார்கள் காட்டும் வழி
- கி. இலக்குமணன். M.A. -
பெரிய மகான்களுடைய வாழ்க்கையை எடுத்துக்காட்டி அவற்றை நாம் பின்பற்ற முடியுமா என்ற கேள்வியைக் கேட்கும்போது பல இடைஞ்சல்கள் ஏற்படும். இராமனு டைய வாழ்க்கையை எடுத்துச் சொல்லி அதை நாம் பின் பற்ற வேண்டுமென்ருல், சிலர் இராமன் வாலியை ஒளிந்து நின்று கொன்ருன்; அதுபோல் நாம் ஒழுங்கீனமான செயல் களைச் செய்வதா என்று கேட்பார்கள். சிறுத் தொண்டர் அடியவருக்குத் தமது மகனையே கறி சமைத்துக் கொடுத் தவர். இயற்பகை நாயனுர் தமது மனைவியையே அடியவ ருக்குக் கொடுக்க முன்வந்தவர். பெரியவர்களுடைய வாழ்க் கையை எப்படிப் பின்பற்ற முடியும்? அவர்களுடைய உல்கம் வேறு; எங்களுடைய உலகம் வேறு. ஆகையினலே கூட்டத்திலே பேசுவதற்கும், அவர்களைப்பற்றிக் கட்டுரை எழுதுவதற்குமே அவர்கள் பயன்படுவார்கள் எனச் சிலர் கூறுவர். அந்த மட்டுந்தானு? ஏ தா வது ஒருவழியிலே நேரடியாக அவர்களைப் பின்பற்ற முடியுமா என்கிற ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. 'மணிவாசகப் பெருமான், மேற் கூறிய ஏனைய அடியார்கள் ஆகியோர் எமக்கு எந்தவகையில் பயன்படுவார்கள், அவர்கள் வாழ்வு தரும் பாடத்தை நாம் நம்முடைய ஆற்றலுக்கேற்ப எப் படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனச் சிந்திப்போம்.
மணிவாசகப் பெருமான் தம் வாழ்வில் முதலில் மந்திரி யாக இருந்து, அ  ைத உதறித்தள்ளி இறைவன் பணியில் ஈடுபட்டவர். நம்முன் உயர்ந்த பதவிகளில்இருப்பவர்கள்கூட அவற்றைத் துச்சமாக மதிப்பதற்கு அவர் நல்லமுறையில் நமக்கு ஒர் எடுத்துக்காட்டாக இருக்கிருர், 'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்பது அவர் திருவாக்கு. இவர் ‘நாமார்க்கும் குடியல்லோம் ய ர து ம் அஞ்சோம்" என்று சொல்வதும், அப்பர் சுவாமிகள் நா மார்க்கும் குடி யல்லோம் நமன அஞ்சோம்' என்று சொல்வதும் நாம் பின் பற்ற வேண்டிய இடங்கள். ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றலுக் கேற்பப் பதவிகளையோ உத்தியோகங்களையோ,

Page 16
180 ஆத்மஜோதி
பிறருக்கு அடிபணிந்து நடந்து சலுகைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை அகற்றுவதற்கு இது ஒரு வழியாகும்.
இனி, அவர் தம் திருவாசகங்கள் மூலம் நாம் செய்யத் தக்கது எது செய்யத்தகாதது எது என்பதை தெரிவிக்கும் இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம். "ஆமாறுன் திருவ டிக்கே அகங் குழையேன்' என்ற பாடலில் செய்ய வேண் டியவை எவையெனத் தெரிவிக்கிருர். இதில் கூறப்பட்ட செயல்கள் மிக உயர்ந்த சரியைத் தொண்டாகும். செய் யத்தகாதவைகளைக் கூறுமிடத்து 'வேனில்வேள் மலர்க்க ணைக்கும்' என்ற பாடலில் புல ன் களை அலைந்து போக விடாமல் தடுக்கவேண்டு மென்பதைச் சொல்லுகிருர், புலன்கள் ஒருவனை எப்படி ஆட்டியலைக்கின்றன என்பதை *அடற்கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்ன? "மத்துறு தண்தயிர்போல’ "எறும்பிடை நாங்கூழ் எனப் புலனுல் அரிப்புண்டு அலந்த' என்பனபோன்ற வாசகங் களில் விளக்குகின்ருர், அடுத்து,
அவர் தம்மை இழித்துச் சொல்லும் இடங்களைக் கவ னிப்போம். "பொல்லா நாய னன நீசனை "அவாவெள்ளக் கள்வனேன்? "யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்’ எனப் பலவிதமாக அவர் கூறுகிருர், மணி வாசகர் தம்மை இவ்வளவு தூரம் இழித்துச் சொல்லுதல் பொருந்துமா? அவர் கூற்றை அப்படியே எடுத்துக் கொள்ள லாமா என்பதுபற்றி அறிஞர்கள் இரண்டுவிதமான கருத் தைக் கொள்ளுகின்ருர்கள். அவருடைய சொந்த அநுபவவா யிலாக வெளிவந்த உண்மை என்று ஒருசாரார் கொள்ளு கின்றனர். அதனல் அவர் நம்மைப்போல் ஒருவராகி விடு கிருர், அவர்மேல் நமக்கு ஈடுபாடும் அதிகமாகிறது. நாம் முன்னேற நல்ல வழியாகும் என்பர் சிலர், மற்றவர்களு டைய கருத்து அந்த மகான் சொல்லும் இவற்றை உபசா ரமாகக் கொள்ள வேண்டுமென்பதும், ஏனைய ஆன்மாக் களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தம் மேல் ஏற்றிச் சொன் ஞர் என்பதுமாம்.
இனி உள தத்துவஞானியர் எப்போதும் உயர்ந்தபண்பு களையே நினைத்து உயர்ந்தவற்றையே சொல்லுவதால் அவற்றை அடையலாம் என்றும் தாழ்ந்தவற்றையேநினைத்து தாழ்ந்தவற்றையே சொல்லுவதால், அவற்றைத்தான்
 

*
ஆத்மஜோதி 1st
அடைய முடியும் என்றும் கருதுகிருர்கள். ஆனல் நாம் நம்முடைய குறைபாட்டைத் திறந்து சொன்னல் நம்மைத் திருத்தி உயர்ந்தவர்களாக வழிபிறக்கும் என்பது மட்டும் உண்மை. இவ்விதம் குறைகளைக் கூறியவர் அவற்றை நீக் குதற்கும் வழிசொல்லுவாராய் 'வெள்ளந்தாழ் விரிசடை யாய்' என்ற திருவாசகத்தில், தன்னுடைய தேகம் முழு வதும் கண் ணுக இருந்தால், அவற்றிலிருந்து வெள்ள் 'க் கண்ணிர் பெருகினுல் தூய்மைப்"ைலாம் என் &მტუგri“. துருப்பிடியாத இரும்பைக் காந்தம் இழுப்பது போல, மாசில்லாத உள்ளங்களை, (ஆன்மாக்களை) இறைவன் தன் பால் இழுக்கிருன். கண்ணீரினல் மாசு நீக்கலாம் என்பது அவர் கூறும் பேருண்மை.
ஆகப் பெரியவர்கள் எந்தத் துறையில் மேம்பட்ட ' விளங்கினர்களோ, அந்தத்துறையில் அவர்களைப் பின்பற்றி நாம் உயர்வடைய வேண்டும். இராமனை ஏக த்தினி விரதத்திலும், சிறுத்தொண்டர் கண்ப்பர் இவர் களுடைய லட்சியங்களிலும் என்ன உண்டு என்பதை உணர்ந்து பின்பற்றுவதே எமக்குய்வு தருவதாகும்.
அமெரிக்க நாட்டுப் பொன் மொழிகள்
ஒரு மனிதனுக்குத் தேவையான அறிவு இல் லாத மூடர்களின் செயல்களே தந்திரம்; ஏமாற்
றம்; அறவழி நிற்க மறுத்தல் முதலியன.
- பிராங்க்லின்.
சான்றேர் கெட்டாலும் அவரின் உயர்ந்த பண்புகள் அழியாது. - லாங்பெல்லோ ,
மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவு என்பர்; ஆனுல் அது மட்டுமல்ல அறிவினுள் கலந்த அனுதாயமே உயர்ந்தது. - தோரோ.

Page 17
82. ஆத்மஜோதி
சிவநெறி
(நீதிபதி. வே. க. கந்தசாமி)
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொரு ளாய இறைவனை, முதல்வனுகக் கொண்ட நெறியே, சிவ நெறியாகும். இதுவே சைவ நெறியுமாம். இந்நெறி வாழ் உயிர்கள் அப் பழம் பொருளின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்குடனே, அவனை வழிபாடாற்றுகின்றன. அப் பொருளுடன் சேர்ந்த சம யாசிரியர்களும், மற்றும் அறநூலாரும் எமக்கு இவற் றையே வலியுறுத்திக் காட்டுகின்றனர். எமது சைவத் திருமுறைகள், திருக்குறள் முதலாம் நூல்கள் மூலம் இவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
* முற்ற வெண் டிங்கள் முதல்வன் பாதமே
பற்ற நின்றரைப் பற்ற பாவமே'
'இடரினும் தளரினுமெனதுறு நோய்
தொடரினுமுன் கழல் தொழு தெழுவேன்'
என ஞானசம்பந்தரும்,
**கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன
கண்டேன்”*
'கருவுற்ற நாள் முதலாகவுன் பாதமே காண்பதற்கு"
எனத் திருநாவுக்கரசரும் * மற்றுப் பற்றெனக் கின்றிநின்றிருப் பாதமே மனம்
பாவித்தேன்'
* அழுக்கு மெய் கொடுன் றிருவடி யடைந்தேன்'
எனச் சுந்தரரும் 'நாதன் தாள் வாழ்க; இறைவனடி வாழ்க’
என மாணிக்கவாசகரும்

ஆத்மஜோதி 183
திருக்குறட் கடவுள் வாழ்த்ததிகாரத்தில்
*வாலறிவன் நற்ருள்; தனக்குவமை யில்லாதான் தாள்'
எனத் திருவள்ளுவரும், கூறும் வாக்குகளால் இறைவன் திருவடி மாட்சி பற் றியும், அதனை அடைவார் பெறும்பயன் எம்மாட்டு என் பதனையும் நாம் அறியக் கிடக்கின்றது. இத் திறத் தனிமை இயல்பும், பழமை மிக்கவனுமாகிய இறைவன் தன்மையை யும், பெருமையையும் சைவ நெறித் தத்துவங்களை உள் ளாகக் கொண்ட திருவாசகச் சிவபுராணத்திலே மணிவா சகர் தெளிவாக விளக்குகின்ருர்.
உங்கள் வழிபடு கடவுளாகிய சிவன் ஏன் பல உருவங்களில் தோற்றமளிக்கின்ருர் என்று வினவுவோர்க்கு, மணிவாசகர் போற்றித் திருவுகவலில் விடையாக
"வேறு வேறுருவம் வேறு வேறியற்கையும்
நூறு நூறயிர மியல்பின தாகி ஏறுடை யீசன் இப்புவனியை உய்யக் கூறுடைய மங்கையும் தானும் வந்தருளி'
என்று கூறுகின்ார் o
அர்த்தனரீசுவரராகக் காட்சியளிப்பான் உயிர்களை உப் விக்கும்பொருட்டுஜந்தொழில்புரிகின்ருன். இதனையே ஆக்கு வாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்கு வாய் என்னைப் புகுவிப்பாய்' என்ற வாக்கியங்கள் மூலம் உயிரானது பெறும் பேரின்பம் பற்றிப் பேசுகின்ருர் மணி 6) If diff.
நாம் முன்னரே கூறிய பழம் பொருளின் திருவடிகளை அடைவதற்கு உலக பந்த பாசங்களினின்றும் விடுபட வேண்டும். அது சும்மா இருந்தால் எமக்குக் கிட்டுமா? இல்லை. அதற்குத் திருவருட்டிறன் வேண்டும். அது கிட் டுவ தெங்ங்ணம்? மணிவாசகரே காட்டுகின்ருர், 'அவ னருளாலே அவன்தாள் வணங்கித் தான் அதனைப் பெற வேண்டுமாம். அவ்வருளை நாம் பெற எமது முதியோர் கூறிய நான்கு முறைகளில் எம்மைச் செலுத்தி இறை

Page 18
184 ஆத்மஜோதி
பெயரை உச்சரிப்போமேயாயின் அருள் தானே அருவி
யாக எம்மிடத்தூறும். இப்படியாக நாம் கொண்டது அரு ளாயின், பெற்றது வீடாகும்.
இறையருள்பெற்றேர் அவன்தோற்றத்தைத் தம்ஞானக் கண்களால் கண்டே தீருவர் என்பதை, அவனருள் பெற்று ஆனந்தக் களிப்பில் மூழ்கித் திரிந்த மணிவாசகர், வைத்த பொருளை எடுத்தது போல் எமக்குந் தாம் அருளிய கண்ட பத்திலே படம் போட்டுக் காட்டுகின்ருர், படத்தைப் பாருங்கள்! 'சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனை யாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்
டேனே', 'எனப் பெரிதும் ஆட்கொண்டென் பிறப்ப றுத்த வினையிலியை அனைத்துலகும் தொழுந் தில்லை அம்ப லத்தே கண்டேனே', 'வேதங்கள் தொழு தேத்தும்
விளங்கு தில்லை கண்டேன்' என இறைவனைத் தான் கண்ட பேருண்மையை பின் சார்ந்தோரும் அறியும் பொருட்டும், அதனைச் சாரும் பொருட்டும் கூறிப் போந்தார்.
இங்கு முன்னரே ஓர் உண்மையை உங்கட்கு உரைக்க
விழைகின்றேன். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம்மவர்
மய்ஞ்ஞான அளவில் கண்ட மிகப் பழமையான உண்மை, இன்றைய விஞ்ஞான அளவிற்கும் பொருத்த முடைத்தாக இருப்பதே அது.
ஒன்று நிகழ வேண்டின் இரு வேறுபட்ட பொருள் கள் வேண்டும் என விஞ்ஞானம் கூறுகின்றது. அவ்வள வின் வாயிலாகவே உலகமும் இயங்குகின்றதாம். இவ் வுண்மையையே மெய்யுணர்வு பெற்ற எமது மிகப் பழைய ஆன்ருேர் ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தத்துவ வடிவில், உலக முதலாகிய பழம் பொருளை உமை ஒரு பாகணுக - சிவமும் சக்தியுமாகக் கண்டு வைத்து வழிபா டாற்றி வரலாயினர் என்ருல் எம்மினத்தினது அறிவு வளர்ச் சியும் - சமயத்தின் தத்துவார்த்தமும் கூறும் தரத்ததோ! இதனலன்ருே எமது சமயம் கண்ட நடராச உருவம் உல கிற் பெரும் கீர்த்தி பெற்றதுடன் ஒவ்வொரு நாட் டின் பழம் பொருட் காட்சிச் சாலைகளிலும் இடம்பெற்று இலங்கக் கூடியதாக இருக்கின்றது. இங்கு இவ்வெழில் உருவம் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
**

ஆத்மஜோதி 185
‘உலகிலுள்ள கலைப்பொருட்களுள் நடராசத் திருவுரு வமே தலையாயது' என்பது உலகப் புகழ் பெற்ற பேரறி
ஞரும் கலைஞருமாகிய கலாநிதி ஆநந்தக் குமாரசுவாமி அவர்களின் கருத்து.
உலக உய்வின் பொருட்டே இறைவன் ஐந்தொழில் களைப் புரிகிறன். இவ்வைந் தொழிலைக் குறிப்பதே நட ராச வடிவம். அவற்றின் அசைவை - இயக்கத்தைக் குறிப்பதே திரு நடனமாகும். பேரின்பம் பெற்ற மணி வாசகப் பெருந்தகை ஐந்தொழில் இயக்கமாகிய நடராசத் தாண்டவத்தைத் ‘தில்லை மூதூராடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்றனணுகி' எனப் போற்றித் திருவகவலில் ஆரம்பித்து, இறைவனது திருவருட் திறத்தை - புகழ்ச்சி முறையை வியந்தோதியுள்ளார்.
நடராசப் பெருமானது கையிலுள்ள துடி படைத்த லையும், அமைத்த திருக்கரம் காத்தலையும், கையிலுள்ள அக்கினி அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளலையும் குறிப்பனவாம். அருள் பெற்ற ஆன்மா விடுதலை அடைவது உண்மை. இறைவ னது இறுதியான தொழிலும் விடுதலை தருதலேயாம். தூக்கிய திருவடியின் மகிமை ஈண்டு இதனுல் உணரற் І ІПТ6),95).
*தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு'
எனும் பெரியோர் பாடல் மூலம் நடராச வடிவின் உண்மையை உணர்ந்து கொள்ளலாம். உயிர்கள் நாடும் இறுதியின்பத்தைப் பற்றியே இதன் இறுதி அடிகள் கூறு கின்றன. இத் திருவடியின் நிழலையே அடியார்கள் எல் லோரும் தேடினர்; கண்டும் கொண்டனர். ஆடிய பாத மும், பாடிய வேதங்கள் தேடிய பாதமும் இதுவேயாம்.
**மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற் றேன்' எனக் கூறிய மணிவாசகர், அப் பொன்னடியின் ப்ோ கமே போகம் என்பதை உணர்த்தும் பொருட்டு ஆன்மாக்
களுக்கு இறுதித் திருவெம்பாவையில் நினைவூட்டுகின்றர்.
ν

Page 19
186 ஆத்மஜோதி
மாணிக்கவாசகர் பள்ளியில் படியாத
மாபெரும் விஞ்ஞானியாவார்.
(பேராசிரியர் ஆ. வி. மயில் வாகனம்)
பிரபஞ்சத்தைப்பற்றி ஐம்புலனறிவால் உண ர் ந் த தோற்றப்பாடுகளையும் அவற்றைப் பற்றிய செய்திகளையும் மக்களாகிய எமக்கு அளிக்கப்பட்ட பகுத்தறிவு எனப்படும் ஆருவது அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து வகைப்படுத்தித் தருக்கரீதிப்படி வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் தொகு தியே விஞ்ஞானம் ஆகும். மெய்ஞ்ஞானமுயற்சிகளில் இன்னு மோர் அறிவு ஆற்றுகின்றது. அந்த ஏழாவது அறிவானது மேலான அறிவுஎனப்படும். மேலான அறிவை எமது சொந்த முயற்சியால்பெற இயலாது என்பதே சைவ சித்தாத்திகளின் கொள்கை. அதன் பெறுகைக்கு இறையருள் இன்றியமையாது வேண்டுமாம். சம்பந்தக் குழந்தை சிறு வயதிலேயே இறைய ருளேயும் அத்துடன்சிவஞானத்தையும்பெற்றுள்ளார். சொல் லவொண்ணுத் துயருற்ற பின்னரே வாகீசர் பெருமான் சிவ வொளியைக் கண்டார். மாணிக்கவாசகரின் சிவயாத்திரை வேருய் அமைந்துள்ளது. மனிதவாழ்க்கையானது நிலையற்
முன்பக்கத் தொடர்ச்சி
'போற்றி யருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி யருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி யெல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி யெல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி யெல்லா உயிர்க்கும் ஈரும் இணையடிகள் போற்றி மால் நான் முகனும் காணுத புண்டரிகம் போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்'
எனக் கூறிப் போற்றி வீடுபேறடைந்த மாணிக்கவாசகர் அடி ஒற்றி நாமும் நின்று அவ்வடி அடைவோமாக.
இறைவனடி வாழ்க.
曾

ஆத்மஜோதி 187
றது என அவர் முதன் முதலாக உணர்த்தப்பட்டார். அடுத் ததாக அந்த மெய்க்குரவனின் அருளால் இறையுண்மையும் இறை மகிமையும் உணர்த்தப்பட்டன. இவ்வனுபவத்தைத் திருவாசகத்தில் தெளிவாகக் காண்கிருேம். அநுபேயமுறை யானது சைவசித்தாந்த அளவை முறைகளுள் ஒன்ருகும். அநுபவவழியால் தெளிந்த மாணிக்கவாசகரின் அறிவு அன் பாக மாறித் திருக்கோவையாரில் பரிபூரணம் அடைகின்றது.
அட்ட மாசித்தி உபதேசம்
மதுரை மாநகரை விட்டு இரண்டாவது முறை திருப் பெருந்துறை நோக்கி ஏகின மணிவாசகர் தனக்குச் சிவகதி உடனடியாக கிடைக்கப் போகிறது என்ற முழுநம்பிக்கை யுடன் சென்ருர், ஆனல் அவரை ஆட்கொண்ட மெய்க் குரவரின் திருநோக்கு வேறு 'உன் காலம் இன்னும் வர வில்லை. நீ முதன் முதல் திருவண்ணுமலை மார்க்கமாகச் சென்று திருவுத்தரகோசமங்கையில் சின்னுட்கள் தங்கி என்னை வழிபட்டு, வேறு பல தலங்களிலும் தரிசித்து, ஈற்றில் தில்லை.அடைந்து அங்கு என்னுடன் இரண்டறக் கலக்கக் கடவாய்' என்பதே சிவனின் ஆணை.
திருவுத்தரகோசமங்கைச் செலவைப் பற்றிக் கீர்த்தித் திருவகவலில் மணிவாசகர் கூறுகிருர்,
'உத்தரகோசமங்கையுள் இருந்து
வித்தக வேடங்காட்டிய இயல்பும்
SSSS SLSSS SS SSL S S S SL S SL L S L S S S qiq S S S S S S S L S S S SL S SL L S L S SSS SSSSS SLS S C S S SSS S S S S S S S SSS S SSS S SSSSL LLLL S
அட்டமா சித்தி அருளிய அதுவும்' என்னும் அடிகளால் அறுபத்து நான்கு முனிவர் அருந்
தவம் ஆற்றித் திருவுருக் கொண்டு எழுந்தருளிய சிவனி டம் மெய்யறிவு பெற்ற உத்தரகோச மங்கையில் அதே பேறு தனக்கும் கிடைத்ததென்றும் முன்னெரு நாள்
இயக்க மகளிர் அவர் தம் சாபகாலம் ஒழிந்து சிவனிடம் அட்டமா சித்தி உபதேசம் மீண்டும் பெற்ற அதே பட்ட மங்கலத்தில் தனக்கும் அட்டமா சித்திகள் வழங்கப்பட்டுள் ளன என்றும் உணர்த்தப் படுகின்றது. எதன் பொருட்டு
மாணிக்க வாசகர் அட்டமா சித்திகளைப் பெறுமாறு கட்
டளையிடப்பட்டார் என்பது அச் சித்திகளின் வரைவிலக்க ணத்திலிருந்து அறிய முடிகின்றது.

Page 20
18S ஆத்மஜோதி
பிராகாமிய சித்தி
அட்டமாசித்திகளைப் பற்றிய விரிவான விளக்கம் திரு மூலர் திருமந்திரத்திலும், பரஞ்சோதி முனிவரின் திருவிளை யாடற் புராணத்திலும் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. அட்டமாசித்திகளுள் ஒன்ருகிய பிராகாமிய சித்தி எமது கட்டுரைக்குப் பயன்படுகின்றது. அது பற்றிப் பரஞ்சோதி முனிவர் பின்வருமாறு கூறுகின்ருர்,
* விண்ணி லிரவிதன் னுடம் பின் வெயிலாலனைத்தும் விளக்
குதல் போல் மண்ணி லுளவாம் பொருள் பலவும் கால மூன்றும் வானத்தின் கண்ணி லுளவாம் பொருளுந்தன் காயத் தொளியாலி O ருந்தறிதல்
எண்ணி லிதுவு மறை யொருசார் பிராகா மிய மென் றியம்பும்ால்'.
அதாவது ஞாயிற்றின் ஒளியைக் கொண்டு நாம் யாவை யும் உணர்கிறதுபோல் பிராகாமியசித்தியென்பதைப் பெற்ற ஒருவர் அவர்தம் உடலொளியால் மூவுலகங்களிலும் முக் காலங்களிலும் உள்ள நிகழ்ச்சிகளை அறிய முடியுமாம்.
இப்பிராகாமிய சித்தியால் கிடைக்கப் பெற்ற அறிவா னது சிறப்பாக ஞானிகளிடத்து, எவ்வாறு பயன்படுகிறது? இக்கேள்விக்கு இந் நூற்றண்டின் விஞ்ஞானமேதாவி அல் பேட் எயின்ஸ்டைன் என்பவர் தக்க விடைஅளித்திருக்கிருர், எயின்ஸ்டைனின் கூற் று யாதெனில் உண்மையான விஞ் ஞானி மட்டுமே இறையுணர்வு பெறமுடியும் என்பதே
யாம். அதாவது விஞ்ஞானியானவன் பிரபஞ்சத்தை ஆராய்ந்து, பிரபஞ்சத்தில் கண்ட நுண் ஒழுங்கு முறைகள் விதிகள் என்பவற்றிலிருந்து அப்பிரபஞ்சத்தின் ஆக்கலுக்கும், !
காத்தலுக்கும் அழித்தலுக்கும் நுண்ணறிவுள்ள கருத்தா ஒருவர் வேண்டும் என்று முடிவுசெய்கிறன். அத்துடன் நில்லாது அம் முடிவிலிருந்து வியப்பும், வியப்பிலிருந்து இறையன்பும் தோற்றுகின்றன. திருவாசகத்தின் பல பாகங் களில் இவ்வழி வந்த உள்ளக் கிளர்ச்சியைக் காண்கி
ருேம்.
 

ஆத்மஜோதி 89
டார்வினும் மணிவாசகரும்
சென்ற நூற்ருண்டின் இடையில், ஆங்கிலேய விலங் கின விற்பன்னர் சர் சார்ள்ஸ்டார்வின் என்பவர் அவர் தம் 'உயிரினத்தின் சிறத்தல் கொள்கை' என்னும் நூலில் உயிரினங்களை ஒருயிர்க்கலனுள்ள உயிர் முதலாக மனிதன் ஈருக, எல்லா உயிர்வகைகளையும் வரிசைப்படுத்தி எவ்வாறு உயிரினங்கள் படிப்படியாகச் சிறந்து, ஈ ற் றி ல் உன்னத மனித நிலையை அடைந்துள்ளன என மெய்ப்பித்துக் காட்டி யுள்ளார். அதே கருத்தைத் திருவாசகத்தின் சிறப்புப்பா யிரமாக விளங்குகின்ற சிவபுராணத்தில், ஆனல் பரந்த நோக்குடன் காண்கிருேம்.
* புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி னிவராய்த் தேவராய்ச் செல்லா அநின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன் எம்பெருமான்'.
எனக் கதறுகிருர் மணிவாசகர்.
மணிவாசகப் பெருமான் மக்களிடத்தில் தன்னைவைத்து, இயங்கா வகைகளையும் இயங்கும் வகைகளையும் கூறி, அவ் வெல்லாப் பிறப்பும் தான் பிறந்திளைத்து விட்டார் எனத் தெரிவிக்கிருர், அவர் திருவாக்கு டார்வினின் கொள்கை யுடன் ஒத்திருக்கிறது, ஆயினும் ஐயம் எழுகின்றது.
மேற் கூறியுள்ள திருப்பாடலில் 'கல்’ ‘தேவர் ‘பேய்" *கணங்கள்’ ‘அசுரர் முதலிய சொற்கள் வருகின்றன. ஆனல் கல்லில் உயிரில்லையே, ஏனையவற்றை இம் மாநிலத் தில் நாம் காண்பதற்கில்லையே எனக் கேட்கலாம்.
“கல்லாய்” என்பது கல்லாதவரைக் குறிக்கிறது என் றும் தேவர் உலகம் அசுரர் உலகம் முதலியன உண்டு, மரணத்திற்குப் பின் எமது வினைகளுக்கேற்ப அவ்வுலகங்களை நாம் அடைகிருேம் என்றும் பலர் விளக்கம் காண்கின்றனர். அவ்வாறன்று, விஞ்ஞான ரீதிக்கு இணங்கும் பிறிதொரு விளக்கமும் உண்டு என்பதை ஈண்டு எடுத்துக் காட்ட நான் விரும்புகிறேன்.

Page 21
190 ஆத்மஜோதி
மேற் கூறியுள்ள சொற்கள் ஆகு பெயர்களெனக்
கொள்வோமாயின் விளக்கம் உடனே கிடைக்கின்றது. கல்
வசிக்கின்ற உயிரினத்தையே உணர்த்துகிறது, எனக்கூறின் பலர் வியப்புறக் கூடும். ஆனல் சென்ற ஆண்டின் ஈற் றில் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகள் இருவர், புவிமீது மோதியுள்ள ஆகாயக் கற்களை ஆராயுங்காலே அக் கற்க ளின் துளைகளுள் இதுகாறும் நாம் கண்டறியாத வைரசு போன்ற மிக எளிய உயிரினம் ஒன்றை அவதானித்துள்ள னர். இச் செய்தியானது மணிவாசகரின் கருத்தை மெய்ப் பிக்கிறது மட்டுமன்றி அது வேற்று உலகங்களிலும், அதா வது அந்த ஆகாயக் கற்கள் உற்பத்தியான உலகங்களி லும், உயிரினங்கள் உள எனக் காட்டுகின்றதன்ருே?
இனி தேவர், பேய், அசுரர் என்னுஞ் சொற்களைப் பண்பாகு பெயர்களாகக் கருதுவோமாயின் மனிதனனவன் அவன்றன் வினைப் பயனுல் பிறவிகள் எடுத்துத் தன்னைத் தேவராக உயர்த்திக் கொள்ளலாம் அல்லது பேயாகவும் அசுரராகவும் தாழ்த்திக் கொள்ளலாம் எனத் தெரிய வரு கிறது. தினமும் எமது சமுதாயத்தில் ஆயிரக் கணக்கான பேய்களையும் அசுரர்களையும் மனித வடிவில் நாம் காண் கிறதில்லையா?
மணிவாசகர் என்ற விஞ்ஞானி
ஆகவே திருப்பாடலில் முரண் யாதுமேயில்லை. மறு பிறப்பு உண்டென்றும் அம் மறு பிறப்பின் தரம் வினைப் பயனுல் நிர்ணயிக்கப் படுகிறது என்றும் விஞ்ஞானி ஏற் றுக் கொள்வானுயின் மாணிக்கவாசகரின் திருவாக்கானது நவீன விஞ்ஞானத்துடன் பெரிதும் ஒத்திருக்கும்.
ளில் விஞ்ஞானக் கருத்துக்கள் அடங்கியிருக்கின்றன. திரு வண்டப் பகுதியில் அணுவண்டங்களைப் பற்றிய டேருண் மைகளையும், போற்றித் திருவகவலில் கருவுற்பத்தியைப் பற்றிய விவரங்களையும் நாம் காண்கிருேம், அவை யாவும் முரணின்றி நவீன விஞ்ஞானத்துடன் ஒத்திருக்கின்றன.
எந்தக் கல்வி நிலையத்தில் மாணிக்கவாசகர் விஞ்ஞா னம் பயின்ருர்? எந்த நுணுக்குக் காட்டியைக் கொண்டு
 

ஆத் மஜோதி 191.
ஆகாயக்கற்களின் துளைகளை அவர் பரிசோதித்தார்? அணுவைப் பிளந்து அதனுள் உறைகின்ற கூறுகளையும் சத்தியையும் அவர் வெளிப்படுத்தினுரா? வான வெளிப் பிரயாணம் செய்து அண்டங்களைத் தரிசித்தாரா? கருவுற்ற பெண்களின் உத
ரத்தைக் கீறி அங்கு உண்டாகியிருக்கின்ற கருக்களைப் பரி
சோதித்தாரா? பிராகாமிய சித்தியே மாணிக்கவாசகரின் கண்டு பிடிப்புகளுக்குப் பயன்பட்டது.
மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும்
கடைசியாக, மெய்ஞ் ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் உள்ள தொடர்பைக் கவனிப்போம், அதன் பொருட்டு ஒப்புமை ஒன்றைப் பயன் படுத்திக் கொள்வோம். ஓர் அறையிலுள்ள விளக்கைப் பூச்சியொன்று வட்டமிடுகிறது. அறையின் சுவர் மீது பூச்சியின் நிழல் விழுகின்றது. சுவ ரைப் பற்றியிருக்கின்ற பல்லி ஒன்று அந் நிழலைப் பற்றிச் சில முடிவுகளுக்கு வருகின்றது. அந்தப் பல்லியே எமது ஞ்ஞானியாவான். பல்லியானது மாயை காரணமாகத் தடுமாறுகின்றது. ஆனல் அந்த மாயையின் பின்னணியில் உண்மை இருக்கிறது. அதே அறையில் இருக்கின்ற மனி தன் விளக்கையும், பூச்சியையும் நிழலையும் தொடர்பு எமது புலனறிவையும் பகுத்தறிவையும் இறைவன் அரு ளால் பெற்றிருக்கிருேம். ஆகவே அவை நன்முறையில் ஆற்றின் முழு உண்மையைப் பெற முடியாமற் போனுலும் உண்மையின் நிழலைக் காண முடிகின்றது. அவ்வளவில் விஞ்ஞானி மகிழ்ச்சி அடைகின்றன். உண்மையான விஞ் ஞானமானது மெய்ஞ்ஞானத்தின் கண் அடங்கவே வேண்
டும்.
曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾曾
கண்டவிடத்து முகமாத்திரம் மலரும்படி சிநேகிப்பது சிநேகம் அன்று; அன்பால் உள்ளமும் மலரும்படி சிநே கிப்பதே சிநேகம் ஆகும் ,
- நாவலர்,

Page 22
192 ஆத்மஜோதி
திருவாசகத் தேன் மருந்து - இ. பொன்னுத்தம்பி. -
Y.
அள்ளக்குறையா தமுதான ஊற்று! அடியவர் தம்
உள்ளத்தில் தித்தித் துவட்டா திணிக்கும் உயர் மருந்து வள்ளல் மணிவா சகனென்னும் ஞானி வடித்தளித்த தெள்ளமுதாம்திரு வாசக மென்னுந் தேன் மருந்தே!
பக்தி பெருகும்; பாவம்நீ ருகும் பருகுவோர் தம் சித்தம் தெளிந்தெழில் தெய்வீக ஜோதி திகழ்ந்திடும்; விண் முத்திக் கினிதான மோனங்கை கூட்டும் ஒர்மூலிகையாம், தித்திக்கும் இன்பத் திருவாசக மென்னுந் தேன் மருந்தே
-
உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்கால் உரை குளிர வெள்ளம் போல் கண்ணீர் விட்டுவிட்டுள்ளே விம்மி; மனக் கள்ளம் அறுத் தெமைக் கதி சேர வைக்கும், கனிமதுரத் தெள்ளமுதாம்திரு வாசகமென்னுந் தேன் மருந்தே!
}
வஞ்சமனத்தை, வளர்காமப் பீடத்தை, மா கொடிய
நெஞ்சைத் திருத்தி, நெக்கு நெக்காய் உள் நெகிழ்ந் துருக்கி
பஞ்சைச்சிறியா ரிதயத்தையும் நன்கு பதப் படுத்தி செஞ்சொற் கவிதை மழை பொங்க வைக்கும் தேன் மருந் தே!
X܂
கல்லாம் மரமாம் கனிவே சற் றில்லாதகா ரிரும்பாம் பொல்லா மனத்தைப் புடமிட்டுக் காய்ச்சிப் புலர்த்தி விட
வல்ல மருந்தாம், மணிவாசகன் தந்தமா மருந்தே! எல்லாரும் வாரீர் எழில்வா சகத்தேன ருந்துதற்கே!

ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்!
தெய்வீக வாழ்க்கைச் சங்க மலர் 1-25 பூனி கதிரை மணி மாலை (பரமஹம்சதாசன்) ... -50 தீங்கனிச்சோலை 9 is ... 2-50 அறிவுரைக்கதைகள் (சுவாமி சிவானந்தர்) ... -65 நானுர்? 9 y ... -25 இளங்கோவின் கனவு (செ. நடராசன்) ... 2-25 ஆத்மநாதம் (சுத்தானந்த பாரதியார்) . 3-00 பாட்டாளி பாட்டு ... 1-50 கீதா யோகம் sy ... 2 - 50 கூட்டு வழி பாடு ... -30 கந்தரனுபூதி (பொழிப்புரையுடன்) -25 மார்கழிப் பாடல் ... -20 நவராத்திரிப் பாடல் ... -30 நித்தியகரும விதி ... -25
சங்கா நேயர்களக்க! அன்புடையீர்! நத ந (65 (3)
இன்று வரை 16ம் ஆண்டுக்குரிய சந்தா அனுப்பியவர் களுக்கு உடனுக்குடனேயே ரசீது அனுப்பியுள்ளோம். அவர் களுக்கெல்லாம் எமது நன்றி உரித்தாகுக. இன்றுவரை சந்தா அனுப்பாதோர் உடனே அனுப்பி வைக்க வேண்டுகின் ருேம். ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி. (சிலோன்)
இந்தியாவிலுள்ள அன்பர்கள் வழக்கம் போல் R வீரசம்பு, சம்பு இன்டஸ்ட்ரீஸ், அரிசிப்பாளையம், சேலம்-9. என்ற விலா சத்திற்கு அனுப்பி வைத்து, அதை எமக்கும் தெரியப்படுத்த வேண்டுகின்ருேம்.
வாய்வு சூரணம் உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்கட்டு, மலபந்தம், அஜீரணம், கை கால் அசதி, பிடிப்பு, பசியின்மை, வயிற்று
வலி, பித்த மயக்கம், பித்த சூலை, புளியேப்பம், நெஞ்சுக் கடுப்பு முத
லிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்
கும் மிகச் சிறந்த சூரணம்.
தபாற் செலவு உட்பட டின் ஒன்று 4 ரூபா 25 சதம் (பத்தியமில்லை) சம்பு இன்டஸ்ட்ரீஸ் - அரிசிப்பாளையம் சேலம் -9, S.I.) இலங்கையில் கிடைக்குமிடம்:-
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி. மலாயாவில் கிடைக்குமிடம்:-
பூனி கணபதி & கம்பெனி, 66, பெல்பீல்டு ஸ்ட்டிரிட், ஈப்போ P.O. (மலாயா)

Page 23
Registered at the G. P. O. as
சந்தா நேய
அன்புடையீர்,
இன்றுடன் ஆத்மஜோதி வது சுடர் உங்கள் கரங்களில் ஆண்டின் சந்தாவை அன்ப அனுப்பி ஜோதியின் வளர்ச்சி
இந்தியாவிலுள்ள அன்பா வழக்கம்
R வீரசம்பு, கம்
of guslatu
என்ற விலாசத்திற்கு அனுப்பி
ஆத்மஜோ நாவலப்பிட்டி
GLIT 6ðt
AAMSAASAMAAMAMASMMAMA qAAAAAAAAqAMAAA AAA ஆத்மஜே
நீங்கள் எதிர்பார்த்திருந்த வந்து விட்டது. மலரினுள்ளே யார்களின் கருத்துக்கள் உங்களு றைம்பது பக்கங்களிலும் ஆ விளங்குகின்றன. முகப்பில் ' குருநாதன் மூவர்ணப் பட அவரை நினைப்பவர்க்கெல்லாம் விலே தபாற் செலவ ஆத்மஜோதி நாவலபி பிட்டி
போன் േ. இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத் து திரு. நா வினுயகமூர்த்தியால் அச்சி

a Newspaper. M. L. 59,300
"అలా ఆలా అలాe~~్యలో అలాఅలాఅలా అలా ఆలా అలా అలా అలా అలా
ாகளுககு
பதினுழுவது ஆண்டின் ஐந்தா ஒளி வீசுகிறது. இப் புதிய ர்கள் மனமுவந்து உடனுக க்கு ஊக்கமளிப்பீர்களாக
ர்கள் தமது சந்தாக்களே
○Limai)
பு:இன்டஸ்ரீஸ்,
iD , G8g 6m) D—9
வைக்க வேண்டுகின் ருேம். ് (Li),
Gà (36). - 353
qSASSA SqSAASAASSAA SSAAAAS SAAAAAS SqAASSqAMS
தி மலர்
'ஆத்மஜோதி மலர் வெளி நாற்பதுக்கு மேற்பட்ட பெரி ருக்கு விருந்தாகின்றன. நூற் த்மீகக் கருத்துக்கள் சிறந்து என்னே எனக் கறிவித்த எங்கள் த்துடன் காட்சி தருகின் ருர்,
பரகதி உண்டு. புட்பட 2-50 ஆகும் }) հ25Ù աւք,
--
- 353
ாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் ட்டு வெளியிடப்பெற்றது. 14-3-64