கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.04.13

Page 1
s
இ? 羡※※
2S2$2
|Still:2S$2
※豪漫疑
2323
Se: p
23 2S
零 難灘
藥鯊籌鯊灘 SSS2S3rs: *4 经泾溢
s2S2s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|-
|-
|-|-
凝斑 |- -s√≠√æ√æ√≠√∞as 議送灣-km·澎靈靈汲靈 -韶终|-シ尽) -タkm&ジシ |-ae灘灘灘灘 ---- ~~ ~~~~|- - - ךo;,&ż,踏移器 -|--|--|-|-
S. 23.2
w
ex 52
影 : タ 尚懿 o: 影
■ ×S×
-
இஅஆஅஆகு

Page 2
ES SS SSLSLS LSLS LSLLLSLSLSLSLSLSL LSSLSLSSEL Lz LL SSLSLSLSSS SLSS SLSLSSS0YSSLYSSYSYYYSYYSSYSYYYYYYYzYYYYYSJ
ஆத்மஜோதி
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
-**********令伞伞伞伞伞伞*钟今今今令令一令今沙今→今令****************今*
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்ல உடலும் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர் ஜோதி 16 குரோதி ஞரு சித்திரை மீ" 1உ (13-4-64 சுடர் 6 பொருளடக்கம்
l சற்குருதாள்கள் வாழ்க! 193 2 சிவதொண்டு O 194 3 ஈழநாட்டின் ஆன்மிகத் துறையில் ஈடுசெய்ய முடியாத
நஷ்டம் 195 4 நாமென்ன கொடுமை செய்தோம்? 199 5 என்ன எனக்கு அறிவித்த எங்கள் குருநாதன் 201 6 யோகர் பிரான் பொற்பதம் போற்றி 207 7 யோக குருநாதன் 208 8 பெரியார் அந்தணர் பேணுதி உள்ளத்தால் 221 9 ஈழம் தந்த மாணிக்க மணி 24 10 நற்சிந்தனை 219 11 \றி யோக சுவாமி தோத்திரம் 223 12 ஆத்ம ஞான வீரர் 225 13 யோகநாதன் திருப்பதிகம் 226 14 தவமுனி - யோக - சித்தர் ம்ணி 228 15 கருணைத் திருவுருவின் கடைசி யாத்திரை 23 16 கொழும்புத்துறைக் குருநாதன் 235 17 எங்கள் யோக சுவாமிகள் 237 18 யாம் பெற்ற செல்வம் 244
19 கழற்கமலம் கருத்துள் வைப் பாம்! கவர் 3ம் பக்கம்
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந்தா ரூபா 3.00 தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா
- பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தையா "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண் 353
 

്
சற்குரு தாள்கள் வாழ்க!
(யோகர் சுவாமிகள்)
அத்துவா மார்க்கமாறும் அகற்றியே யடியனேனைத்
தத்துவா தீதணுக்குஞ் சற்குரு தாள்கள் வாழ்க. ஆக்கைநீ யல்ல நீயோ ஆன்மாவென் றெனக்குச்சொல்லித் தீக்கைவைத் தாண்டுகொண்ட தேசிகன் றிருத்தாள்வாழ்க. 2 இருந்துபா ரென்றெனக்கோர் இனியநல் வாக்குத் தந்த அருந்தவன் என்னும் வல்ல் ஆசர்ன்றன் தாள்கள் வாழ்க, 3 ஈய்ாத புல்லர் தங்கள் இல்லத்திற் கேகாவண்ணம் தாயாரைப் போல் வந்த்ாண்ட சற்குரு தாள்கள் வாழ்க. 4 உன்மத்தன் போலேவந்தென் னுடல்பொரு ளா விழுன்றும் தன்னத்தம் வாங்கிக்கொண்ட சற்குரு தாள்கள் வாழ்க. 5 ஊனுமாய் உயிருமாகி உள்ளுமாய்ப் புறம்புமாகி நானுமாய் நீயுமாகி நடஞ்செயுந் திருத்தாள் வாழ்க. 6
எண்ணிய வண்ணம் வாழ எனக்குநல் லருளைத் தந்த கண்ணிய முடைய செல்வன் கழலடி யென்றும் வாழ்க. 7
ஏடவிழ் கோதை மாதர் எழில்கண்டு மயங்கா வண்ணம்
தாடலே தன்னில் வைத்த சற்குரு தாள்கள் வாழ்க. 8
ஐயமேன் காணுமென்றே அடியனேன் தன்னை நோக்கி உய்யநல் லருளைத் தந்த உத்தமன் பாதம் வாழ்க. 9 ஒருமொழி யதனுலென்னே ஒவியம் போலவாக்கி வருபயம் நீக்கியாண்ட வள்ளல்தம் திருத்தாள் வாழ்க. 10

Page 3
) ஆத்மஜோதி சி வ  ெத | ண டு
(யோகர் சுவாமிகள்)
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத் திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியா தரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர். அனேத் தும் சிவன் செயல், அவனன்றி அணுவும் அசையாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாயமாக்கிக் கொள் வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லே. வேண்டுதல் வேண்டாமையில்லை. மண்ணுதி ஆசையில்லே. மனமான பேய் இல்லை. காலதேசவர்த்தமானம் நமக்கில்லே. நாம் அனைத்துக்கும் சாட்சியாக விளங்குகின்ருேம்.
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார் நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை இது கிரியை இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம்; இது மருந்து. இந்தத் தியானத்தில் நிலத்தலே நிஷ்டை இந்த நிஷ்டையுடையோர்க்குச் சிலமில்லை; தவ மில்லை; விரதமில்லை; ஆச்சிரமச் செயலில்லே.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந்
தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம்.
முழுதும் உண்மை.
 
 
 

ஆத்மஜோதி - 195
ஈழநாட்டின் ஆன்மீகத் துறையில் ஈடுசெய்ய முடியாத நஷ்டம்
(ஆ சி ரி ய ர்)
சோபகிருது வருஷமானது மகான்களின் மகா சமாதிக்குரிய
* ஆண்டாக மாறி, இந்துக்களாகிய நமக்கு அடுத்தடுத்துச் சோகத்தைத்
தரும் வருஷமாக அமைந்துவிட்டது. ஆனிமாசத்தில் ரிஷிஹேசம் தெய்வநெறிக் கழகஸ்தாபகரான சுவாமி சிவானந்தர் மறைந்தார். ஆடிமாசத்தில் மங்களுரையடுத்த ஆனந்தாச்சிரமத் தலைவரான சுவாமி இராமதாஸர் உடலை உதறினர். மார்கழி மாசத்தில் ஆந்திர தேசத் திலுள்ள சாந்தி ஆச்சிரமப் பெரியார் சுவாமி ஓங்காரர் இருதய நோய் காரணமாக ஆபத்தான நிலைக்குள்ளானர். அவர் இன்னும் வைத்திய சாலையில் படுக்கையிலுள்ளார். தை மாசத்தில் சென்னை உபநிடத விஹாரை ஸ்தாபகரும், வம்பாயிலிருந்து ஆங்கில்த்தில் பிர சுரிக்கப்படும் "தெய்வீக அழைப்பு’ (The Cal Divine) என்னும் திங்கள் இதழின் ஆசிரியருமான சுவாமி இராஜேஸ்வரானந்தர் திருவண்ணு மலையில் திடீரென மகாசமாதி யடைந்தனர்.
வருஷம் முடியப் போகிறதே அதற்கு முன் எந்த மகான அழைத்துச் செல்லலாமெனக் காத்திருந்ததுபோல், விதியானது எங்கள் இலங்கைப் பெரியார், கொழும்புத்துறைத் தவசிரேஷ்டரான பூரீமத் யோகர் சுவாமிகளை 24 - 3 = 64 அதிகாலையில் அழைத்துச் சென்று விட்டது. அந்தத் துக்க செய்தியைக் கேட்டு பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளம் இன்று துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இலங்கையின் நாலாபக்கங்களிலிருந்து பக்தகோடிகள் அப்பெரியாரின் பூத உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்த யாழ்ப்பாணத்திற்கு விரைந்து சென்றுள்ள னர். ஒரு பெரிய சோதி சுடர் விட்டு அணைந்து விட்டதென்று புலம்பி அழுதுகொண்டே அவர்கள் செல்கின்ருர்கள்.
அந்த அருட்பெருஞ் சோதியின் ஒளிவெள்ளம் எத்தனையோ
நெஞ்சங்களில் உயிரோட்டமாய் இருப்பதை நாம் மறக்கக்கூடாது.
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியப் பொருள், அரை நூற்றண்டு காலமாக, காக்குமெங் காவலனுய் ஆட்சி புரிந்துவிட்டு, காண்பரிய பேரொளியாய் மாறியுள்ளது இப்போது சுவாமிகள் எடுத்துள்ள ஒளிஉடலையும் அதன் நிழலையும் காண முடியா நிலையில் நமது இந்திரியங்கள் இறந்துள்ளன. அவரின் மகா சமாதியில் அடங்கி யுள்ள உண்மையான தத்துவம் இதுவேயாம். இதுகாறும் நமக்கு
உய்வழி காட்டி வந்த அவரது அருட்சக்தி தொடர்ந்து துணைபுரியும் என்பதில் அணுவேனும் சந்தேகமில்லை.

Page 4
1) ஆத்மஜோதி
புண்ணிய பூமியான பரத கண்டத்தின் பாரமார்த்திகத்தைப் பாதுகாக்கவும், செழிக்கச் செய்யவும், தொன்று தொட்டு இன்று விக்கும், வாழையடி வாழையாக சித்தர்களும், யோக்ர்களும், சீவன் (தர்களும் தோன்றியுள்ளனர். பாரத மாதாவின் பாத நிழலில் படுத்துறங்கும் புண்ணியத்தினுற் போலும், ஈழ நாட்டிலும் சீவன் முக் கர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். இப்போதுள்ள அக்குரு பரம்பரை யில் தலைவராய் விளங்கியவர் கடையிற் சுவாமிகள். அவரின் சீடரான நல்லூர் செல்லப்ப சுவாமியவர்களே எங்கள் யோகர் சுவாமிகளின் (T)(T) our routi.
* பித்தருடன் ஊமரெனத் திரிவார் - சிறு
பிள்ளேயெனப் பெண்டு களோடுறைவார் சித்திகளிருந்தும் வெளிக்காட்டார் - உடற் சிந்தையுடன் எவ்வினையுமாற்றர் அத்தனையு முள்ளறிந்து தெளிவார் - எனில்
யாரிடமுந் தந்திறமை யுரையார் எத்திசையு மெப்படியு மிருப்பார் - முத்தர்
எங்கிருந்துந் தம் முளேதாங்களிப்பார்'
இப்பாடல் செல்லப்பா சுவாமிகட்கு முற்றிலும் பொருத்தமான ஒன்முகும். அவருக்கு யாழ்ப்பாண மக்கள் சூட்டிய பெயர் விசர் (o) of Goa'ul unr என்பதாகும். அவரது உன்னதமான, உண்மையான, சொரூபத்தைத் தரிசித்து உள்ளனுபவம் பெற்ற பெருமை யோகர் "வாமிகள் ஒருவரையே சார்ந்ததாகும். அவர் மூலமே, அவரது குரு நாதன் திருவாய் மலர்ந்த,
"முழுதும் உண்மை', ஒருபொல்லாப்பு மில்லை' , 'எப்பவோ முடிந்த காரியம்', ‘நாம் அறியோம்' என்னும் நான்கு மகா வாக் கேட்டின்புறும் அரும் பாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம்.
யோகர் சுவாமிகளின் குருபக்தியானது ஈடும் இண்ையுமற்றது. அதன் விளக்கத்தை அவரது நற்சிந்தனேப் பாடல்களில் பரக்கக்
"வரலாம். எடுத்துக்காட்டாக ஒரு பாடலை மாத்திரம் கீழே
தருகின்ம்ே:-
"பொறிவழியே போய்ப் புகுந்துதிரி வேனே
நெறிவழியே நிறுத்தி நீய்ேநான் என்றுரைத்த
பித்தனென்று பிறர் பேசும் பெருமானே செறி பொழில் சூழ் நல்லநகர்த் தேரடியிற் கண்டேனே'
சுவாமிகள் தமது குருநாதரை முதலில் தரிசித்தது நல்லூர்த் தேரடியிலாகும். பின்னர் அவரது உபதேச மொழிகளைத் தினந்தோறும்
இ
 

ஆத்மஜோதி 197
பெற்றது, அந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தின் வீதிகளிலாகும். சீடனைக் குருதிருத்தியாளாக்கியமுறை மிகவும் கடினமும் விசித்திரமானதுமாகும். தீபேத்தின் புகழ் பெற்ற யோகியான மிலறப்பாவை அவரின் குருவான மார்ப்பாவும், சாக்கோரி உபாசனி பாவாவை அவரின் குரு சைபாவா வும் பரீட்சித்துத் திருத்தியாட் கொண்டவழியை ஒத்தது அது. குருவின் குணங்களும் நடைமுறையும் சீடனில் அமைவது சாதாரண அனுபவம் இந்த உடன் பாட்டை எங்கள் பெரியார்கள் இருவரின் வாழ்க்கையில் காணலாம். ஆணுல் ஒரு வித்தியாசம் உண்டு. செல்லப்பா சுவாமிகள் தமது சுயரூபத்தைத் தமது ஒரு தனிச்சீடனுன யோகர் சுவாமிகள் ஒரு வருக்குமே காட்டியருளினினர். சீடனே, நம்மீது கொண்ட அளப்பருங் கருணையினுலும், தாம்பெற்ற இன்பம் யாமும் பெறல் வேண்டுமென்ற ஆர்வத்தினுலும், பல மெய்யடியார்கட்குத் தமது சுய சொருபத்தை விளங்கக் காட்டி, அவரவர்களின் பக்குவத்திற்குப் பொருத்தமான உபதேசங்களை அருளியுள்ளார். பாடல்கள் மூலம் எல்லோர்க்கும் அரிய ஞானக் கருத்துக்களே விளக்கியுள்ளார்.
முற்றுந் துறந்த முழுஞானியாகிய இப் பெருமானுக்கு ஒரு இடத்திலோ, ஒரு பொருளிலோ, ஒரு மனிதனிடத்தோ பாசமோ பற்ருே கிடையாது. எந்த ஒரு முறையையும் வழக்கத்திற்கு வைத்துக் கொள்ள அவர் உடன்பட்டதில்லை. பெரிய புராண படனம் செய்யுமாறு கட்டளையிடுவார். பின்னர் இராமாயண படனஞ் செய்யுமாறு மாற்றிக் கொள்வார். சென்ற ஆண்டில் கந்தபுராண படனம் அவர் கட்டளைப்படி ஆரம்பிக்கப் பட்டது, இந்த முறையில் அவர் எதிலும் சுத்த சுதந்திர ராகவே வாழ்ந்தன்ர். சித்திகள் பல செய்துள்ளார், அவையெல்லாம் அவரால் விரும்பப்பட்டு நிகழ்ந்தவையல்ல. திரிகாலமும் அறிந்தவரான படியால், பக்தி விசுவாசமுடைய மக்களின் விஷயத்தில் பல விதத்தில் எச்சரிக்கை கொடுப்பது அவரது வழக்கம். அதனைப் பேணிவாழ்ந்தோர் பலர். சித்தர் வாக்கில் வந்த அவரது அற்புத மொழிகளே விளங்காது பின்னர் அல்லற்பட்டோர் சிலர். இவ்வித நிகழ்ச்சிகளால் வந்த புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும் அவர் பொருட்படுத்தியதே கிடை
UfTg5).
அவர் வரலாற்றில் பெரிய அதிசயம் ஒன்றுண்டு. அவரது வயசு பெரும்பாலோர்க்குத் தெரியாது, முப்பத்துமூன்று ஆண்டுகட்கு முன் ஒரு இந்தியச் சோதிடரும் யானும் அவரது சாதகங்கணிக்க விரும் பினுேம், சுவாமிகளோ தாம் பிறந்த ஆண்டே தமக்குத் தெரியாது எனக் கூறிவிட்டார். பின்னர் ஒருதரம்தனிமையில், "எனக்கும்ஸ்பீக்கர் துரைசுவாமிக்கும் ஏறக்குறைய ஒருவயசாய் இருக்கலாம். நான் தான் முந்தியவன்' என்ருர், சேர் துரைசுவாமி அவர்கள் பிறந்த ஆண்டு 1874. எனவே சுவாமிகள் 1873ம் அல்லது 1872ம் ஆண்டில் அவதரித்

Page 5
198 ஆத்மஜோதி
திருத்தல் வேண்டும். சென்ற வெள்ளிக்கிழமை (20-3-64) அதிகாலையில் சுவாமிகளின் தரிசனமும் ஆசியும் பெறும் பாக்கியம் எனக்கு எதிர்பா ராத முறையில் கிடைத்தது. அதைப் பெற்றபின் யான் நேரே நல்லூர் செட்டித் தெருவில் வசிக்கும் திரு. C. K. சுவாமிநாதன் அவர்களைப் பார்க்கப் போனேன். அப்போது சுவாமிகளின் உடல் நலங்குன்றியிருப் பது குறித்துப் பேசினுேம். அப்பேச்சின் நடுவில் சுவாமிகளை அப்பெரி யார் எப்போது முதலில் சந்தித்தவர்? என்ற கேள்வியைப் போட்டேன். அவர் சொன்ன பதில் பின்வருமாறு: “எனக்கு இப்போ வயசு எண்பத் தாறு. யான் மாணவனுய் இருக்கும்போதே அவரை அறிந்துள்ளேன். என்னிலும் பார்க்க அவர் ஐந்து, ஆறு வருஷங்களால் மூத்தவராய் இருக்கலாம்'. எனவே, சுவாமிகள் எம் பொருட்டு தொண்ணுறு வருஷங்கட்கு மேலாக உடல்தாங்கி உலாவியுள்ளாரெனத் திண்ண மாகக் கூறலாம். அவரது பூத உடல் மறைந்த போதிலும், அவரது புனித ஆத்மசக்தி நமக்குப் பல்லாண்டு வழிகாட்டு மென்ற நம்பிக்கை யுடன் வாழ்வோமாக!
" ஆக்கை நீயல்லை நீயோ ஆன்மாவென்
றெனக்குச் சொல்லித் தீக்கை வைத்தாண்டு கொண்ட தேசிதுன்
- திருத்தாள் வாழ்க!
(இலங்கை வானெலியில் 25-3-64 இரவு 9.15 மணிக்குச் செய்த பிரசங் கத்தைத் தழுவி வரையப்பட்டது இக் கட்டுரை.)
SMLSSLLSSLS LTLSMeMLSLseLSLTMSMTeS MeMSMTLSLTLSMTLSLTSLSMLTLSLTLSLTLSSSLSLSLMSSMSMSTSMSMS ക്കയ്പ്,
()
யோகர் சுவாமி உயர்நிலையை யாரறிவார் மோகம் உடையோம் மொழிவதெங் நுன் - தேகம் எடுத்த பயன் எய்தினுர் யாவரே தேகம் விடுத்தார் நடந்தார் விரைந்து.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
S S S S S S S S S S S S S S SqSqT SS SqqSLS MTSASASSSLSSSSTSLSSSMTALM MLeeMTALLSLLLLSLLSL LLLLLLLLSLLLLLLLAL LMLMLTLLeeTeS SLLLLL LLLLLMLMAASLSLLTSLS
 

ஆத்மஜோதி
நாமென்ன கொடுமை செய்தோம்?
பொன்னுடல் மட்டும். இந்தப்
199
(சி. பொன்னுத்தம்பி)
எண்ணவும் வலிமை யில்லேன்; எழுதவும் வார்த்தையில்லை:
அண்ணலே! உந்தன் ஆவி,
அருட் பிழம்பான பின்பு
பூமியில் கிடக்கக் கண்ட, கண்ணெலாம் கண்ணே யல்ல
கடும்பாவம் புரிந்த புண்ணே!
புத்தியில் லாத மக்கள்;
புன்மையின் இழிகு ணத்தோர்; சத்தியம், அன்பு, தூய்மை,
தர்மங்கள் கொன்ற தீயோர்; பத்திநன் நெறி மறந்த
பாதகக் கொடியோர், தம்மின் மத்தியில், வாழ நாணி,
வானுலகெய்தி னுயோ?
வளந்தரு ஈழ மாதா
*மாதவச் செல்வனும், என் குழந்தையை இழந்தேன்’ என்று
கொதித் துயிர் துடித்து வாட, நலந்திகழ் உலகு யாவும்,
ஞாயிறு மறைந்தா னென்றே புலம்பிவெங் கண்ணிர் சோர
புனிதன்நீ, போன தெங்கோ?
திங்களின் அமுத ஜோதி
திகழ்ந்திடும் ஒளி முகத்தில் பொங்கிடும் இனிய, ஞானப்
பொன்மலர் முறுவல் எங்கே? தங்கத்தை உருக்கி வார்த்த
தளிர் மணியுடலை விட்டு எங்குநீ மறைந்தாய் ஐயா?
உனக்குமோர் கூற்றன் உண்டோ?

Page 6
200 ஆத்மஜோதி
பக்தியின் பெருக்கால், ஈசன்
சாதமே துணையாய்ப் பற்றி சத்திய ஜோதி தன்னில்,
சகஜமாய் கலந்த, ஜீவன் முத்தனே! கருணை பொங்கும்
முதல்வன்நீ, உடலை விட்டு செத்திட வில்லை; ஆமாம்
சாவினை உணர்த்திச் சென்ருய்
காரிருள் அகற்ற வந்த
கதிரவன் மறைந்து விட்டான் ! பேரொளி அணைந்து, ஞானப்
பேரிகை ஒய்ந்த தம்மா! பாரெலாம் வெய்ய, கங்குல்
படரிருள் மூடிற் றந்தோ! யாரிதை ஈடு கெய்வார்?)
நாமென்ன கொடுமை செய்தோம்?
**→今→令→*今→令→令夺令→*今伞伞→*令*→**今**令**********++ 4+ **** ** * * و{=، «همسو هھ
() இவோகம் பாவனை
தெய்வத்தை நம்பு. முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றி லும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும்போதும், நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலும், தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக, நானில்லை, கட வுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பி டுதலே வாழ்வின் இலக்காக வைத்துக் கொள், எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிருன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பா யாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
- Gulu IT JAG 376 I IT LÊ, Essir .
**令令争今→令令令令令令今令*一钟 هههه 一分伞令鲁→伞→4→夺→+→今→今→令→今今今令令→伞→令→今→今→十
 
 

ஆத்மஜோதி - 201 என்னை எனக்கு அறிவித்த எங்கள் குருநாதன் y (நா. முத்தையா)
ஆகாய வெளியிலே சந்திரனைக் கண்டுகளிக்கும் குழந்தை
கள் தமக்கு நேராகத்தான் சந்திரன் இருக்கிருன் என்றும்
தம்மோடு கூடவே வருகின்றன் என்றும் கூறுவர். இதே போன்று மேலே குறித்த தொடரையும் ஒவ்வொருவரும் தமக்கு மிகப் பொருத்தமானதென்று எண்ணிக்கொள் வதுண்டு. மேலே குறிப்பிட்ட தலையங்கத்தைப் பாடலாக அமைத்தவர்கள் யோக சுவாமிகள். அவருடைய குருநாதன் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்த செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகள் யோக சுவாமி ஒருவருக்கே குரு நாதனுகவும் மற்றையோர்? எல்லோருக்கும் விசர்ச் செல்லப் பணுகவும் காட்சியளித்தார்.
யோக சுவாமிகளோ எம்மேற் கொண்ட கருணையினுலே தம்மைப் பலருக்குக் குருநாதனுகவும் ஒரு சிலருக்குப் பைத் தியமாகவும் காட்டிக் கொண்டார். பைத்தியம் என்று முதலில் கண்டவர்கள் பிற்காலத்தில் தம்மை ஒரு பைத்திய மாகக் கண்டனர். இதுவே யோக சுவாமிகளுடைய தனிப் !
பெருஞ் சிறப்புக்களில் ஒன்று.
தம்மை நோக்கிவந்த அன்பர்களுடைய உள்ளங்களைக் கண்ணுடிபோல் பார்க்கும் சித்தியைப் பெற்றிருந்தார்கள் சுவாமிகள். அதனைத் தாம் செய்வதாகவே சுவாமிகள் கருத வில்லை. அன்பர்ஒருவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். அங்கு அன்பர் கூட்டம் ஒன்று திரண்டு இருந்தது. அவர் வந்த உடனே சுவாமிகள், பெரிய கடைக்கு வந்த விஷயத்தை உடனே சென்றுமுடித்துக்கொள். கடமை முக்கியம்’ என்ருர் கள். வந்த அன்பர் ஒரு நிமிடமும் தாமதிக்கவில்லை. உடனே திரும்பிவிட்டார். வேறு கருமத்தோடு சுவாமிகளேயும் ஒரு முறை பார்த்துச் செல்வோம் என்று வருவோரை சுவாமிகள் ஒருகணமேனும்தரிக்கவிடுவதில்லை அவர்கள் மனதிலுள்ளதை அப்படியே கூறி அவர்களைப் போகச் செய்து விடுவார்கள். / சுவாமிகளை முழு மனதோடு நினைத்து அவரையே நம்பி வந்த அடியார்களுக்கு ஆறுதலளித்த சரித்திரம் ஆயிரக்கணக்கில் கூறலாம். சுவாமிகளை முழுமனதோடு பூசித்த அடியார்களைத்

Page 7
202 ஆத்மஜோதி
தேடிச் சென்று அவர்கள் இன்னல்களைப் போக்கிய சந்தர்ப் பங்கள் பல ஆயிரக்கணக்கில் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் சுவாமிகள் எமது மனேநிலையைச் சிந்திக்கச் செய்து அதன் மூலம் எமக்கும் ஒரு தெளிவைத் தந்துள்ளார்கள். அத் தெளி
விலேதான் எமக்கு எம்மை அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்
திது.
ஒருநாள் மாலை ஐந்துமணி. சுவாமிகளுடன் தனித்திருக் கும் வாய்ப்பு: அரிய உயர்ந்த கருத்துக்கள்; சுவாமிகள் அந்த நேரத்திலே கூறிய கருத்துக்களை ஒலிப்பதிவு செய்திருந்தால் இன்று அதைக்கேட்டுக் கோடிக்கணக்கான மக்கள் திருந் யிருப்பார்கள் என்பது அடியேனுடைய அபிப்பிராயம். பத்து நிமிடங்கள் வரை பேசியிருப்பார்கள். ஒரு நிமிட நேரம் அமைதி, மீண்டும் ஒலிஎழுந்தது. "ஒய் வாருன்கள் காணும்! சிவபுராணம் படியுங்காணும்!’ என்ன என்று எனக்கே புரிய வில்லை. நமச்சிவாய என்று ஆரம்பித்தேன், சுவாமிகளும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். சிவபுராணத்தின் நடுப் பகுதி படித்துக் கொண்டிருக்கும்போது மிகப்பெரிய மோட் டார் ஒன்று வந்து ருேட்டில் நின்றது. அதிலிருந்து தாய் தந்தை பிள்ளைகளாக எட்டுப்பேர் வரை வந்தார்கள், மிகப் பெரிய பணக்காரர்கள். சிறிதுநேரம் நின் ருர்கள். பின்பு தாமாகவே எல்லாரும் இருந்தார்கள்.
"பல்லோரும் ஏத்தப்பணிந்து' என்று கூறி முடித்தேன். எனக்கு ஒரு சிறு ஏச்சு. சிவபுராணம் படித்துக் களைத்து ட்டீரா? நமச்சிவாய வாழ்க என்று சுவாமிகள் மறுபடியும் உரத்த தொனியில் ஆரம்பித்தார்கள். யானும் சுவாமிகளைப் பின் தொடர்ந்தேன். இடையில் சுவாமிகள் நிஷ்டையில் அமர்ந்து விட்டார்கள். நானே சுவாமிகளுடைய அடுத்த கட்டளை வரும் வரை ஐந்து ஆறு முறை திருப்பித்திருப்பிப் பாராயணம் செய்தேன். வந்தவர்களால் பொறுமையோடு இருக்க முடியவில்லை. எழுந்து போய் விட்டார்கள். அவர்கள்
போன பின் சுவாமிகள் சிவபுராணத்தில் இவனேடு ஈடு
பட்டார்கள். பல்லோரும் ஏத்தப் பணிந்து என்று கூறியதும், 'என்ன தொடங்கினல்விடமாட்டாய்போலிருக்கிறது. ஒடிப் போங்காணும் பிட்டு அவித்து வைத்திருக்கிருர்கள்' என்ருர் கள், எழுந்து வெளியே வந்தேன். நல்ல இருட்டு. எப்படிப் போவது? சுவாமிகளிடமே திரும்பிச் சென்று படுத்து விடியப் போவோமா என்ருெருகணம் நினைத்தேன். பின்னல் வந்த ஒரு மோட்டார் நின்றது. மோட்டாரில் ஏறுங்கள் என்ருேரு
 

ஆத்மஜோதி 203
பழகியகுரல் கேட்டது. ஏறினேன். சுவாமிகளுடைய கருணை எவ்வாறு வேலை செய்தது என்பதை நினைக்க இன்றும் புள காங்கிதம் ஏற்படுகின்றது. குறிப்பிட்ட நண்பர் என்னை எதுவும் கேளாமலே தம்முடைய வீட்டில் கொண்டு சென்று சேர்த்தார். இறங்குங்கள் சாப்பிட்டுவிட்டுச் செல்வோம் என்ருர், சாப்பாட்டு மேசைக்குச் சென்றேன். வீட்டு அம்மை யார் ஒடியல் பிட்டு, குரக்கன் பிட்டு என்று வகை வகையான பிட்டுகள் பரிமாறினர்கள். பிட்டைக் கண்டதுமே எனக்கு கண்ணிர் கலங்கிவிட்டது. நான் எங்கிருந்து வருகின்றேன் என்றே அம்மையாரிடம் யாதும் கூறவில்லை.
மாலை நான்குமணி இருக்கும். தான் சாய்மனை நாற்காலி யில் படுத்திருந்ததாகவும், சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டதாகவும், யோகர் சுவாமிகள் வந்து கனவிலே எனக்கும் சேர்த்துப் பிட்டு அவியுங்கள் என்று கூறியதாகவும் கூறினர் கள். அன்று நடந்த விஷயங்கள் அத்தனையும் கூறினேன். சுவாமிகள் என்னிடம் கூறிய கடைசி வார்த்தையையும் கூறி னேன், "பிட்டு அவித்து வைத்திருக்கிருர்கள் போய்ச் சாப்
பிடுங்காணும் இதனைக் கேட்டதும் அம்மையார் நாத்தழுத
κ.
ழுக்க கண்ணிர் மல்க நின்றர்கள்.
இளமை தொடங்கியே முருகனை உபாசனை செய்து வந்த எனக்கு இடையிலே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. சிவம் தானே முழுமுதற் கடவுள். முருகன் மகன் தானே, எனது உபாசனை குறைவுடையது. சிவ உபாசனை தொடங்குவோம் என்ருெரு எண்ணம். நான் செல்லும்போதுஅங்கு ஐந்தாறு அன்பர்கள் இருந்தார்கள். இச் சந்தேகத்தைச் சுவாமிகளிடம் தெளி வதற்காகவே சென்றேன்.
சுவாமிகளை வீழ்ந்து வணங்கினேன். அப்படி இரும் என்று சுவாமிகள்குறிப்பிட்டஇடத்தில் உட்கார்ந்தேன். அங்குள்ள 7 வர்களுக்குச் சுவாமிகள் இவனை அறிமுகம் செய்தல் மூலம்
விஷயத்தை ஆரம்பித்தார்கள். இவர் ஒரு உபாத்தியார்.
உபாத்தியார் என்ருல் குரு. குழந்தைகளின் கண்ணைத் திறப் பவர். பரமசிவன் வாய்பேசாத குரு. தெட்சணுமூர்த்தி. தெற்குப் பார்த்த முகத்தோடு இருக்கின்ருர், முருகனே
குழந்தை. முருகன் தந்தைக்கு உபதேசித்து குருபரன் என்ற
பெயரைப் பெறுகின்றன். நல்லூர்க் கந்தன் சாமானிய
மானவன? எத்தனை பேரை ஈடேற்றி வைத்துள்ளான்.
பட்டணத்துச் சிவன்கோயில் வேறு; நல்லூர்க் கந்தசுவாமி

Page 8
204 ஆத்மஜோதி
கோயில் வேறு என்று சிலர் நினைக்கிருர்கள். எல்லாம் ஒன்று தான் காணும்.
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி
ஆங்கே மாதொருபாகனுர் தாம் வருவர். என்று கூறி முடித்தார்கள். அவர்களைப் பார்த்துச் செய்த இந்த உபதேசம் அத்தனையும் எனக்கேன்றே யான் எடுத்துக் கொண்டேன்.
ஒரு நாள் ஒரு அன்பருடைய வீட்டில் சுவாமிகளுக்கு முன்னுலிருந்த மேசையில் எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டி ருந்தது. சுவாமிகள் நிஷ்டையில் இருந்தவர்கள் திடீரென விழித்து, மேசையில் உருண்டு கொண்டிருந்த எலுமிச்சம் பழத்தைக் கீழே விழாத படி விரைவாக எழுந்து தடுத்து, நல்லவேளை தப்பிவிட்டது என்ருர்கள். இதன் கருத்து அங்கி ருந்தோர் ஒருவருக்கும் விளங்கவில்லை. சுவாமிகளுடைய பக்தர் ஒருவர் மோட்டார் ஒட்டிக்கொண்டு செல்லும்போது ஆபத்து ஒன்று ஏற்பட இருந்ததாகவும் மின்னல் வெட்டுப் போன்று சுவாமிகள் தோன்றி மறைந்த தாகவும் விபத்தி நின்று காப்பாற்றப் பட்டதாகவும் அவர் கூறிய விடயத்தை யும் நேரத்தையும் சேர்த்துப் பார்த்தபோது தான் சுவாமி களுடைய கருணை புலப்பட்டது.
“புறம்புறந்திரிந்த செல்வமே' என்று மணிவாசகர் பாடிய பாடல் நூற்றுக்குநூறு சுவாமிகளுக்கே பொருந்தும். சுவாமி களுடைய பாதத்தில் யாராவது தொட்டுக் கும்பிடச் சென் முல் தூரவிலகிக் கொள்வார்கள். அதற்குரிய காரணத்தையும் சுவாமிகள் ஒருமுறை சொல்லியுள்ளார்கள். 'எனது பாதத்தை யார் தொட்டுக் கும்பிட்டாலும் அவருடைய னைவு அடிக்கடி வந்து விடுகிறது. அதல்ை எவரையும் தொட்டுக் கும்பிட விடுவதில்லை' என்று கூறினர்கள். தம்மை
வந்தடைந்தவர்களின் வினைகளே எல்லாம் அவர்களே வாங்கி
அநுபவிப்பது மகான்களின் கருணையாகும்.
பகவான் பூரீ இராமகிருஷ்ணருக்கும் பகவான் ரமண மகரிஷிகளுக்கும் கடைசி காலத்திலே புற்றுநோய் வந்தமை, தம்மையடைந்த சீடர்களின் வினைப்பயனை அவர்கள் ஏற்று அநுபவித்தமையே. அதுபோன்று யோக சுவாமிகளும் கடைசிக் காலத்திலே மாட்டினுல் முட்டப்பட்டு அநுபவித்த வினை அவரையடைந்த அடியார்களுடைய வினையேயாகும்.

ஆத்மஜோதி 205
சுவாமிகளோ ஜீவன்முக்தர். அவர் உடலுக்குப் புறம்
பாகவே வாழ்ந்தவர்கள். தம்முடைய தொரு திருவிளையாடல் மூலம் உடலின் நிலையாமையையும் வினைப்பயனையும் எமக்கு விளங்கச் செய்துள்ளார்கள்.
y காம மாதிகள் வந்தாலும் கணத்திற்போம் மனத்திற் பற்றர் தாமரையிலேத் தண்ணிப் போல் சகத் தொடுங்கூடி வாழ்வார்
பாமரரெனக் காண்பிப் பார் பண்டிதத் திறமை g5 ( s.
ஊமருமாவாருள் ளத் துவ கையாம் ஜீவன் முக்தர்.
என்ற கைவல் யப் பாடலுக்கு இலக்கியமாக வாழ்ந்தவர்கள் யோக சுவாமிகள்.
சுவாமிகள் ஒருமுறை சிதம்பரம் சென்றிருந்தார்கள். ஆயிரங்கால் மண்டபத்திலேயிருந்து தியானம் செய்தார்கள். தூண் ஒன்ருேடு கொண்டு சென்ற குடையைச் சார்த்தியிருந் தார்கள். அதையே பக்கத்தில் நின்ற ஒருவன் பார்த்துக் கொண்டு நின்றன். சுவாமிகளுடைய மனமும் தியானத்தில் நிலைக்கவில்லை. குடையின் மேலே சென்றது. உடனே சுவாமி கள் எழுந்து குடையை எடுத்துக் கொண்டு சென்று கோபுர வெளிவாசலிலே வைத்து எவராயினும் எடுத்துச் செல்க என்று கூறித் தியானத்திலே அமர்ந்தார்கள். தியானம் உடனே கை கூடியது. வெகு நேரத்தின் பின்பு வெளியே சென்ருர்கள். குடை அந்த இடத்திலேயே இருப்பதைக் கண் டார்கள். ஆசையற்றவனுக்கு உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் அவன் காலடியில், ஆசையுள்ளவனுக்கோ உலகத்தி லுள்ள பொருட்கள் எல்லாம் வெகு தூரத்தில்.
சுவாமிகள் உள்ளம் பளிங்கு போன்றதால் யாவருடைய உள்ளமும் அவர் உள்ளத்தில் தெரியக்கூடியதாயிருந்தது. இதல்ை உள்ளத்தழுக்குடையார் சுவாமிகள் சந்நிதியில் செல்ல அஞ்சுவர். மற்றையோர் உள்ளத்தை அறியும் சக்தி பெற்றிருந்தமையால் சிலர் சுவாமிகளிடம் சாத்திரம் கேட்கும் மனப்பான்மையுடன் செல்வர். அவர்கள் சென்ற உடனே சுவாமிகள் இங்கு யாரும் சாத்திரம் சொல்வதில்லை. சாத்திரம் சொல்லுகிற இடத்தில் சென்று கேளுங்கள் எனச் சாட்டை அடி கொடுத்தது போலச் சொல்லி அனுப்பிவிடு வார்கள். உபதேசம் விரும்பிச் செல்பவர்களுக்கு ஏச்சு மூலமோ பேச்சு மூலமோ அறத்தின் வழியிலோ மறத்தின் வழியிலோ உபதேசம் கிடைத்துவிடும். சுவாமிகள் தம்மை

Page 9
206 ஆத்மஜோதி
மற்றையோருக்குக் காட்டிக் கொள்ளாமலே வாழ்ந்ததோடு மற்றையோர்கள் புரிந்து கொள்ள முடியாதவகையில் கரு ணையாளராகவும் விளங்கினர்கள்.
சிலர் ஏதோ சிறு சாதனைகளில் ஈடுபட்டிருப்பர். அத ஞல் உள்ளத்தில் சிறுகிளுகிளுப்பு ஏற்பட்டிருக்கும். ஏதோ தாமும் சாதனை உச்சியில் ஏறிவிட்டதாக எண்ணி சுவாமி களிடம் செல்வர். சுவாமிகளுக்கும் தமக்கும் சமத்துவம் கருதி வணங்குவதற்கும் கூசி நிற்பர். "உனக்கும் எனக்கும் என்னப்பா வித்தியாசம். உன்னுள் இருப்பதுதான் என் னுள்ளும் இருப்பதும். நீ ஏன் வணங்க வேண்டும் என்பர். யார் யாரை வணங்குவது? இவ்வுபதேசத்தைக் கேட்டுத் தலைவீங்கிச் செல்வபர்களும் உண்டு.
ஒருநாள் ஒரு அன்பருக்கு உபதேசம் கிடைத்தது. உனக் கும் எனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நீ இங்கு வரவே தேவையில்லை. இருந்தபடியே இருக்கலாம், எதையும் உண் ணலாம் குடிக்கலாம் கூத்தாடலாம் என்ருர்கள். கருத்து விளங்காத அந்த அன்பர் பிற்காலத்தில் பெரியகுடிகாரன கவே மாறிவிட்டார். யாராவது அவரிடம் கேட்டால் யோ கர் சுவாமிகள் சொன்னவர் என்று தாம் குடிப்பதற்குச் சுவாமிகளைச் சாட்சியாக வைப்பார்.
இப்படியாகச் சுவாமிகளுடைய தொடர்பு ஏற்பட்டு நல்லார் ஆனர் எல்லாம் அவரது கருணையினல் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்களே, சுவாமிகளுடைய கருணை முன் னின்று எம்மை வழி நடத்துமாறு பிரார்த்திப் போமாக, அவரவர் நிலையில் சுவாமிகளுடன் தொடர்பு கொண்டார் அத்தனை பேருக்கும் அவரவர் நிலையை அறிவித்தமையினல் சுவாமிகளுடைய பக்தர் கூட்டம் எல்லாரும் ' என் எனக்கு அறிவித்த எங்கள் குருநாதன்’ என்று கொண் டாடுவோமாக.
நான் யார்? நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம்; நாம் அவருடைய தாய் நமக்கு மவருக்கு மொரு குறைவு மில்லை; நம்மை அவர் பிரிய முடியாது; முழுதும் உண்மை. - யோக சுவாமிகள்.
t

ஆத்மஜோதி
யோகர் பிரான் பொற்பதம் போற்றி போற்றி!
(பண்டிதர். செ. பூபாலபிள்ளை அவர்கள்)
அல்லும் பகலும் அவராகி ஆறியிருந் தருள்மொழி கூறி
எல்லn உயிரும் இன்பமுற இடர் நீக்கி இலங்கை வாழ்ந்த பொல்லாப் பிள்ளை யோகர் பிரான் பொற்பதம் போற்றி போற்றி,
நல்லூர்க் கந்தன் தேரடியில் நாடிநற் குருவைக் கண்டே
சித்தங் களிக்கச் சிவதொண்டர்ச் சேர்த்துச் சிவதொண்டாற்றி அத்தன் புரையச் சிவதொண்டர்க் கறிவுச் சுடரைக் கொழுவி நித்தம் மகிழ்வே ஈழத்து நிலக்கப் புத்தி கூறிய சித்தர் பரவும் யோகர்பிரான் செம்பொற் பாதம் போற்றி.
பாட்டினைப் பாடி நற்சிந்தனை பரப்பியே மக்கள் வாட்டம் ஒட்டிய குரவன் சிவதொண்டன் உருப்பட உதவும் மேலோன் பாட்டனுர் பரம பதமெனும் பக்குவம் அடைந்தா ரேனும் நாட்டமே அனேயர் யே கர்பிரான் நற்பதம் போற்றி போற்றி,
கற்றவர் சூழ்ந்து போற்றிடவே கருணையே உருவாய் மேவி
மற்றவர் மதிக்க ஈழமாதா வனப்பெலாம் புகழ்ந்து பாடிப் பொற்புற வரத்தை ஈந்துவந்த புனிதனுர் சிவமயமதானுர் நற்றவர் கூடிய யோகர் பிரான் நற்பதம் போற்றி போற்றி.
நல்லையை அடைக நீயென்றே நல்வரம் ஈந்த ஐய சொல்லுதற் கரிய செல்லப்ப தோன்றலைக் குருவாய்ப் பெற்றேய் அல்லலை எமக்கே ஈந்தரன்பதம் புகுந்தே ஆறுகின்றம் நல்லையான் ஆகும் யோகர் பிரான் நற்பதம் போற்றி போற்றி.
ஊரெலாஞ் சுற்றி வந்தே உவப்புடன் சிவபத மடைந்து பேரெலாஞ் சொல்லி ஏத்தப் பிரிவற உளத்துட் புக்குப்
பாரெலாம் புகழ்ந்து போற்றும் பரம்பொருள் ஆகும் மேலோன்
சீரெலாம் மருவும் யோகர் பிரான் திருப்பதம் போற்றி போற்றி!
207

Page 10
208 ஆத்ம் ஜோதி யோக குருநாதன்
(பண்டிதர். பொ. கிருஷ்ண பிள்ளை)
யோக குருநாதன் எங்கள் நாட்டிலே ஏக குருநாத ணுகக் காட்சி தந்தார். தொண்ணுாறு ஆண்டுகளுக்குமேல் அப் புனிதர் புவிடமிசை வாழ்ந்தார். அவர் அவதரிக்கப் புண்ணியஞ் செய்தது யாழ்ப்பாணமே என நினைக்கும் போது எங்கள் உள்ளத்திலே உவகை ஊற்றெடுக்கின்றது. வெட்ட வெளியிலே குளிர்தரு சோலையாக இலங்கிய இப் பெருமானரைச் சாதி மத பேதமெதுவுமின்றி உயிர் வெப் பம் நீங்க மக்கள் அணுகினர். அவர் தண்ணிழலில் ஒதுங் கினர். இப் புனிதராலே நம் யாழ்ப்பாணம் புனிதம் பெற்றது. தூய்மையை வாரி வாரி வீசிய இப் பெருமா ஞரால் பூமியே சிவலோகம் போன்றிருந்தது.
சாதாரண மனிதருள் ஒருவர் போலக் காட்சி அளித் தார் இம் மகான் , தம் தாடியைப் போலவே வெண்மை உடையிலே கம்பீரமாகத் தோற்றம் தந்தார் இந்த நற்ற வர் மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்ற வள்ளு வர் திருவாக்குக்கு இலக்கியமாகிய ஒரு பெரியார் யோகீஸ் வரர். வெளித் துறவடையாளம் எதுவும் இன்றி உள்ளத் தாலே துறவியாக உலகிடை வாழ்ந்தார். பற்றற்ற நிலை யிலே ஆயின் பிறர் இன்ப துன்பங்களுக் கிரங்கும் பிரா ணுகவே இவர் வாழ்ந்தார். இரவு நேரத்திலே எல்லோ ரும் தூக்கத்திலிருக்கும் போது சாந்த மூர்த்தியாக இவர் காட்சி தருங் காலத்திலே தங்கள் மனத் துன்பங்களை யெடுத்துரைப்பாருக்காக இரங்கி இப் பெருமானுர் கூறியரு ளிய வாசகங்கள் நொந்த உள்ளங்களுக்கு அமிர்த சஞ்சீவி யாக அமைந்து பெரும் பயனியும். இவ்வகையிலே இப் பெரியாரை வந்தடைந்து அவர் ஏற்றுக் கொள்ளப் பாக் கியம் செய்தவர்களே இவர் தம் பெருமையை ஒருவாறு அறிய வசதி பெற்ருர் எனலாம்.
பற்பல மனச் சார்புடையாரும் சுவாமிகள் முன்னிலே யிலே குழுமியிருப்பர். அக் கூட்டத்திற் சிலவேளை இப் பெரியார் சிலரைக் கடிந்தொதுக்கும் பாவனையிலே தோற்று வராயினும் உலகச் சார்புடையாருக்கு இடங் கொடுத்தல்

ஆத்மஜோதி 209
ஏனையோர் தூய்மைக்குப் பங்கம் விளைக்கும் என்ற கார ணம் பற்றியதாயஃதிருக்கலாம். குழந்தை உள்ளத்தோடு எல்லோரிடமும் சிவத்தைத் தரிசித்துக் குதூகலமெய்தியிருக் கும் நிலையிலே குருநாதனைக் காணக் கொடுத்து வைத்த வர் கொடுத்து வைத்தவரே.
இல்லறவாழ்விலே துயருற்றவர், துறவுவாழ்வை அணுகுப வர், மனநோயுடையார், அரசாங்க அலுவல்களால் அயர்ச்சி உறுவோராதியபற்பலரும் யோகீஸ்வரரை நாடிவந்துபெரும் ஆறுதல் பெற்றுத் திரும்புவர். அவர் முன்னிலையில் ஏழை யும், அதிகாரம் படைத்தோரும் சமமாகவே கருதப்படு வர். உயர்தர நீதி மன்றத்திலே நீதி அரசராகக் கடமை யாற்றிய அக்பர் நீதிபதி அவர்கள் ஒருமுறை நீதி அரசுக் கடமையாற்ற வந்தபோது ஒரு கல்வியாளர் கூட்டத்திலே பேச நேர்ந்தது. பணத்திற்காக எதுவும் செய்பவர்களைப் பற்றிய பேச்சு வந்த போது நீதி அரசர் கண்களில் நீர் மல்க உளமுருகி "பற்றே அற்ற யோக முனிவர் இருக்கை யில் யாழ்ப்பாணத்திற்கு ஏதுங் குறைவுளதோ?’ எனக் கேட்ட கேள்வி இப்போதும் என் காதில் ஒலித்துக்கொண் டேயிருக்கிறது. இம் மகானுலே இப்படிக் கவரப்பட்ட பாக்கியசாலிகள் பிறரறியாமல் எத்தனை பேருளரோ?
சிவத் தொண்டில் மக்களை ஈடுபடுத்த வந்த ஒரு திரு வவதாரம் போல நம் சுவாமிகள் விளங்குகின்ரு ரென்ருல் அது மிகையன்று. பணக்காரர், உத்தியோகத்தின் உயர் படியிலுள்ளோர், நடப்பாளராகிய பல மக்களையும் யோகீஸ் வரர் நல்ல பயிற்சி கொடுத்துச் சரியைத் தொண்டில் ஈடு படச் செய்த தொன்றே அவர் பெருமைக்குச் சான்று பக ரும். அவர் ஆச்சிரமம் சரியைப் பயிற்சிக் கூடம் என்ருல் அது மிகவும் பொருத்தமானதாகும். அப் பெருமான் திரு வருளாலே சிவத் தொண்டில் ஈடுபட்டோர் தொகை மிக அதிகம். நாவலரையா அன்று கந்த புராணம் நமக்கு உயிர் நாடி என்று பல கோவில்களிலும் புராண படனத் திற்கு வழி கோலினர். யோகீஸ்வரர் இன்றைய நாகரி கச் சூழ் நிலையிலே புராணபடனத் தளர்வு ஏற்பட்ட போது அதற்குப் புத்துயிரிந்தார்.
விசேட சிவராத்திரி தினமன்றி மாத சிலராத்திரி தினங்களும் யோகீஸ்வரராலும் அவர் அடியார்களாலும்

Page 11
210 ஆத்மஜோதி
புனித முறையிலே நன்முகக் கொண்டாடப்பட்டு வந்தன. அவர் ஆச்சிரமம் தோத்திரமியம்புவார் தொழுகையர் அழு கையர் பிணைமலர்க் கையினராகிய பல அடியார்களின் செயல்களாலே சிவலோகமாக மாறிற்று.
இத்துணைத் திருத்தொண்டு செய்து கிடைத்தவற்றை எல்லாம் பகிர்ந்தளித்த பெருவள்ளல் இப்பெருங் குருநா 5 IT.
அவர் பொன்னடிக் கமலங்கள் நமக்கு என்றும் ஆசி அருளுக!
eMLeLeeLeMLeLeeLeLeAMALALASASLqLASqLALALA AAA AALLALALALALALAqA LMLMLMLMMMLAqLL 鹭、苓究烹酸
நி T 66T. UT P
நீ உடம்பன்று, மன மன்று, புத்தியன்று, சித்த மன்று நீ ஆத்மா, ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களு டைய அநுபவசித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத் தில் நன்றப்ப் பதியக்கடவது. ஆனல் நீகவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் முன்னிலை என்று சாதனை செய், கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரி யங்களில் துயருறதே. துன்பமும் இன்பமும் உலக நடவ பிக்கைகள். நீ சித்துப் பொருள். உன்னை ஒன்றும் தாக்க
மாட்டாது. எழுந்திரு, விழித்துக் கொள். சிவத்தியான
மென்னுந் திறவு கோலால் மோட்ச வீட்டின் கதவைத் திறந்துபார். எல்லாம் வெளியாகும்.
- யோக சுவாமிகள்.
YL0LL0L00L00L0L000L0L0L00L00L 00L 0L 0L 0L0L00LLLL LYSYL0L0L0L0LL ee
 

ஆத்மஜோதி 211
“பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்”
(மட்டுநகர்: ஏ. பாக்கியமூர்த்தி ஆசிரியர்)
ஒர் ஆல மரத்தைப் பாருங்கள். அம் மரம் எத்து ணைப் பெரியதாக வானளாவ வளர்ந்திருக்கிறது. வருடா வருடம் ஆயிரக் கணக்கில் அழகிய பழங்களைப் பழுக்கின் றது. ஒவ்வொரு பழத்தினுள்ளும் நூற்றுக் கணக்கான விதைகள் உள்ளன. ஒரு ஆல மரத்திலுள்ள அத்தனை பழங்களின் விதைகளும் முளைத்துப் பெரிய மரமாகி விடு கின்றனவா? இல்லை. பல விதைகள் முளைத்தாலும் அவற் றுள் ஒரு சிலவே பெரிதாக வளர்ந்து பல்லாண்டு காலம் நிலை நின்று வாழ்ந்து முடியுடை வேந்தரும் முப்படைகளும் தங்கக் கூடிய பெரு நிழலைக் கொடுக்கின்றன.
இவ்வாறே இறைவன் பல கோடிக்கணக்கான உயிர்க ளுக்கு அவைகளின் தன்மைக்கேற்ப உலகம் உடல் நுகரும் கருவிகள் நுகர் பொருட்கள் ஆகிய எல்லாம் கொடுத்தும் பிறவியின் உண்மையான பயனை உணர்ந்து மக்களாக வாழ் பவர்கள் சிலரே. அச் சிலரும் வையகமும் வானகமும் வணங்க வாழ்பவர்கள் ஒருவர் இருவரே. இப் பெரியார் கள் காலத்திற்குக் காலம் தோன்றுவார்கள்; மறைவார்கள். இவர்களை உயிரினம் என்றுமே மறப்பதில்லை. நாம் எல் லோரும் பிறக்கிருேம் இறக்கிருேம். நம்மை யார் நினைவு படுத்திப் பேசுகிருர்கள் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நம்மோடு நெருங்கிய உறவினர்கள் சிலர் தாம் வாழும்வரை நினைவில் வைப்பர். அவர்களின் பின் கூடியது இரண்டு தலைமுறைகள் நம்மை நினைவில் வைத் திருக்கும்.
மக்களுள் மாணிக்கங்களாக வாழ்ந்த புத்தர், இயேசு,
நபி, வள்ளுவர், சைவ சமய குரவர்கள், நாயன்மார்கள்,
ஆழ்வார்கள், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவே கானந்தர் போன்ருேர் பல ஆயிரக்கணக்கான, நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் முன் வாழ்ந்தவர்கள். அவர்களை அன்று முதல் இன்று வரை, இன்றிலிருந்து மனித சமுதாயம் கூண்டோடு அழிந்து போகும்வரை ஆறறிவு உயிர்களில் இருந்து ஒரறிவு உயிர்கள் வரை அவர்களை மறவாமல் இருக்கின்றன. ஏன்?

Page 12
212 ஆத்மஜோதி
அவர்கள் மக்களுக்காகவாழ்ந்தவர்கள்.மக்கள் தொண்டே மகேஸ்வரர் பூசையாகக் கொண்டவர்கள். மக்களின் அறி யாமையைத் துடைத்து, ஆதி முதல்வனை அடையும் வழி வகைகளைக் காட்டியவர்கள். ஒரு சிறிய ஆலம் வித்தி னுள் எவ்வாறு பிரமாண்டமான ஒர் ஆலமரம் அடங்கிக் கிடக்கின்றதோ அவ்வாறே ஆண்டவனிலிருந்து அவதரித்த ஆருயிர்கள் அனைத்திலும் அவன் அமைந்து கிடக்கிருன் , என்னும் உண்மையைக் கண்டறிந்தவர்கள். இறைவன் எவ்வாறு எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுகி ருணுே அவ்வாறே அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்து பவர்கள், 'இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’’ என் னும் கொள்கையை உடையவர்கள்,
அன்பு அவர்கள் மாட்டு அருளாக மலர்ந்துள்ளது. உரியார் மாட்டுச் செலுத்தப்படும் அன்பு, உற்ருர் உறவி னர்கள் மேல் மட்டுமல்லாமல் உலகத்திலுள்ள எல்லா உயிர் கள் மாட்டும் செலுத்தப் படும் போது அது அருளெனப் படுகின்றது. அருளற்ருர் அற்ருர், அருட் செல்வம் செல் வத்துட் செல்வம். அருளுள்ள பெரியோர்களே அந்தணு ளர் என்றுஇறைவனேடுஒப்பிடப் படுகின்றனர். சிவனை 'அற வாழி அந்தணன்' என்று வள்ளுவரும், இமையவில் வாங் கிய ஈர்ஞ்சடை அந்தணன்' என்று குறிஞ்சிக் கலியும் வியக்கின்றது. மற்றெவவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொ ழுகும் அந்தணர்களே மனிதர்களுள்ளும் தேவர்களுள்ளும்
பரிவர்கள்,
இராமனுக்கு அரசியலறம் கூறவந்த வசிட்டர், மன் னன் மனித குலத்திற்குப் பெரியவன், எனவே அவனைவிடப் பெரியவர்கள் இல்லை என்று இறுமாந்திருப்பான் என எண்ணி தசரதகுமாரனுக்கு முதன் முதலாக அந்தணுள ரின் பெருமையை அறிவுறுத்துகின்ருர், எவ்வாறெனின்
‘கரியமாலினுங் கண்ணுதலானினும் உரியதாமரை மேலுறை வானிலும் விரியும் பூதமோரைந்தினும் மெய்யினும் பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்'
எனருா.
இராமா, மனிதப் பதவிகளுள் மிக உயர்ந்தது மன்னர் பதவி, அதை நீ நாளை அடையப் போகிருய். ஆனல்

ܕܠ ܐ
ஆத்மஜோதி 23
மனிதர்களிலும் தேவர்களிலும் பெரியவர்கள் அந்தணர் கள். திருமால், உருத்திரன், அயன் என்னும் மும் மூர்த்தி களின் ஆற்றல்களையும் விட, ஐம் பெரும் பூதங்களின் ஆற் றல்களையும் விட, சத்தியத்தின் வல்லமையையும் விட பெரியோராகிய அந்தணுளர்களின் ஆற்றல் அளப்பரியது. அவர்களின் கோபத்தால் மாண்டோர் பலர். அவர்களின் இரக்கத்தால் பல பெறுபேறுகளைப் பெற்றேர் பலர். அவர் கள் உரன் என்னும் தோட்டியால் ஒரைந்தும் காத்தவர் கள் . ஒளி, சுவை, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றின் வகை தெரிந்தவர்கள். உலகப் பற்றை விட்டுக் கடவுட் பற்றைப் பற்றியவர்கள். விதியும் அவர் ஏவல் கேட்கும். இப்படிப்பட்ட உத்தம சீலர்களை நீ உள்ளத்தால் பேண வேண்டும் என வலியுறுத்துகிருர் .
அரிய பிறவியாகிய மானிடப் பிறப்பைப் பெற்றுவிட் டால் போதாது. அதிலும் அரிது பெரியாரைப் பேணித் தமராக் கொளல். இப் பெரியார்களே வையத்துள் வாழ்
வாங்கு வாழ்ந்தவர்கள். எனவேதான் அவர்கள் வானுறை
யும் தெய்வத்துள் வைக்கப்படுகின்றனர். கற்றதனுல் ஆய பயனை அடைந்தவர்கள். மலர் மிசை ஏகினன் மாட்சிமை தங்கிய திருவடிகளைச் சேர்ந்தவர்கள். எனவேதான் அவர்கள் பூதவுடல் நீத்தும் பல்லாயிரம் ஆண்டுகள் இந் நில மிசை நீடு வாழ்கிறர்கள். அப் பெரியோர்களே ‘கற்ருேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை யாவதும் அறியா இயல்பி னர். இவர்களின் இயல்பை அறியார், பேயர், பித்தர், உன்மத்தர் என்று வசை கூறுவர். இவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் அறிந்தவர்க்கு அறிவுரையாகவும், அறியாதவருக்கு அருவருப்புரையாகவும் அமையும் ,
நம் இலங்கைத் திருநாட்டிலும் பல அந்தணுளர்கள்
தோன்றி மறைந்திருக்கிருர்கள். காரதீவில் பிறந்து கைலா
யம் வரை சைவமும் தமிழும் வளர்த்தார் உயர்திரு விபு லானந்த அடிகளார். இப்போது நம்மை விட்டு யோகர் சுவாமிகள் மறைந்து விட்டார். அன்னர் பூதவுடலில் இந் நில மிசை உலவும் போது பலர் பொருளாக மதிக்கவில்லை. சிலர் அவரைப் பெறற்கரிய பொக்கில்டிமாகப் போற்றினர்.
- யோகர் சுவாமிகள் உள்ளத்தால் பேணும் அன்பர்களிடத்தில்

Page 13
24 ஆத்மஜோதி
ஈழம் தந்த மாணிக்க மணி
(தாமரை வல்லி திருமதி. பொன். கிருஷ்ணபிள்ளை அவர்கள்)
'நான் ஒரு டெக்கினிக்கல்ப் போயின்ற் சொல்லுகி றேன். என்னை ஒருவன் கட்டிப்போட்டு வந்து உட்கார்ந் திருக்கிருன், நீயும் நானும் சரி என்கிருன் . அவனே நான் நானே அவன்' என்று சொன்னர் ஒர் அருளாளர். ஆம். அவரே தான் யோகர் சுவாமிகள் என்று சொல்லப்படும் ஞானி.
ஈழத்தாய் ஈன்ற மணிகள் பல. அம் மணிகள் எல் லாம் மண்ணுட் காணும் மணிகளைப் பார்க்கிலும், எத்த னையோ மடங்கு உயர்ந்த சிறப்புக்குரியன. இம் மணிக ளுக்கெல்லாம் தலைசிறந்த மாணிக்க மணியாய் விளங்கிய வர் யோகர் சுவாமிகளே,
கருவிலே திருவுடைய இப் பெரியார் மெய்ப்பொரு ளோடு அளவளாவும், உயர்ந்த ஞான நிலை எய்திய ஒரு மகா யோகி. அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கும்,
முன்பக்கத் தொடர்ச்சி
உறைந்துள்ளார். அவர்களே அப் பெரியாரின் வழி நின்று அவர் அறவுரைகளை மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண் டும்.
கடந்த சில மாதங்களாக மக்களுக்கு ஆத்மீக ஒளி பரப்பிக் கொண்டிருந்த அருட்சுடர்கள் ஒன்றன் பின் ஒன் ருக மறைகின்றன. சுவாமி சிவானந்த சரஸ்வதியைத் தொடர்ந்து சுவாமி ராமதாஸ், இலங்கையில் எங்கள் யோகர். பேரிருள் உலகில் சூழப் போகின்றதோ? இல்லை. ‘எங்கு தர்மம் மறைந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அங்கே தர்மத்தைக் காப்பாற்ற நான் தோன்றுவேன்' என்ற எம்பெருமான் இருக்கும்போது நமக்கினிப் பயம் ஏது? ܚ
**செயற்கரிய செய்வார் பெரியர்'
 
 

ஆத்மஜோதி - - 215
அவரை அறியவோ, ஆழங்காணவோ, இயலாத மர்மஞா னியாய் விளங்கினர். அவரது சக்தி மாபெரும் அளவிற்கு செயலாற்றி வந்தது. அவரது கம்பீரத் தோற்றமும் ஆழ்ந்த பிரகாசமான விழிகளுமே அவர் பெருமை இன்னதென்று விளக்கவல்லதாய் இருந்தது. தெய்வபக்தியும், தவமும், ஒருவரிடம் குடிகொண்டு இருந்தால்தான் மக்களின் உள் ளத்தை உருவாக்கும் சொற்கள் வெளிவரும்.
மணிவாசகப் பெருமானுர்க்கு, குருந்த மர நிழலில் அருள்ஞானம் கிடைத்ததுபோல், யோகர் சுவாமிகளுக்கு நல்லூர்க் கந்தன் தேரடியில் அருளுபதேசம் கிடைத்ததை நாம் அறிய இருக்கிறது. "தேர்' என்பதன் அர்த்தம் எல்லாவற்றிலும் தேர்ச்சி அடைந்து விட்டோம் என்பதா கும். ஆகவே கடையிற் சுவாமிகளின் சிஷ்யரான செல் லப்பாச் சுவாமிகள் முருகன் தேரடியில் யோகர் சுவாமி களுக்கு அளித்த வரப்பிர்சாதத்தினல், சுவாமிகள் எல்லா
வற்றிலும் தேர்ச்சி அடைந்த பரிபூரண சிவஞானியாகக்
காட்சியளித்தார், செல்லப்பாச் சுவாமிகளுக்கு ஒர் உற்
சவ மூர்த்தியாக யோகர் சுவாமிகள் விளங்கினர்.
கடையிற் சுவாமிகள் சிவமாகவும், செல்லப்பாச் சுவா
மிகள் சக்தியாகவும், இருவருக்கும் நடுவே தோன்றும் முரு கணுகவும் யாழ்ப்பாணத்தவர்களுக்குக் காட்சியளித்ததைப் பலர் அறியாமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.
இங்ங்ணம் ஜோதி சொரூபமாய் விளங்கிய ஒப்புயர்
வற்ற மாமுனிவரைப் பற்றி எழுதுவதற்கு இச் சிறியே
னல் இயலுமா? என்ருலும், அந்தத் திவ்விய ஞானியின்
சக்தி என்னுட் புகுந்து, எழுது, எழுது என்று ஒலிப்பது போன்ற பிரமையில் இதை எழுதுகிறேன்.
1953ம் ஆண்டு சுவாமிகளைத் தரிசிக்க என் கணவர்
சென்றபோதுதான். சுவாமிகளின் அமுத வாயால் வந்த
சில சொற்களைத் தொடக்கத்தில் எழுதியுள்ளேன். அத் தோடு சுவாமிகள் அரிய பல கருத்துக்களையும் கூறி, உயர்வு தாழ்வு இன்றி எல்லா உயிர்களுக்கும் பணி செய் வதே மக்கள் கடமை என்றும் போதித்து, எல்லோருட னும் புறப்பட்டு வாசல்வரை வந்தார். வாசலில் நின்ற G3LDTL' GB (Tri வண்டியைத் தொட்டு இது

Page 14
216 ஆத்மஜோதி
யாருடையது என்ருர்? சுவாமிகளுடையதே எங்கு வேண் டுமானுலும் புறப்படலாம் என்றவுடன், அப் பற்றற்ற மகான் இந்த வண்டியை ஒருபோதும் விற்கக் கூடாது. *சிவதொண்டன் நிலையம்' உருவாகிறது. வாருங்கள் என்னையும் அதில் இறக்கிவிட்டு, நீங்களும் உங்கள் கட மையைச் செய்யலாம் என்ருர், அவ்வாறே செய்து ஆசி பெற்றுச் சென்ருேம்.
சுவாமிகளின் அருள்வாக்குப் போன்று, மலைநாட்டில் எத்தனையோ ஆயிரம் மைல்களை ஒடி இன்னும் எவ்வித இடையூறுமின்றி மோட்டார் வாகனம் இருக்கின்றது. சீவ னற்ற, வாகனத்திலும், சிவத்தைக் கண்ட, அன்பு வள் ளல், அனைவருக்கும் போதித்தது என்ன? அன்பை அத்தி வாரமாகக் கொண்டால் எல்லா ஜீவனிடத்தும் சிவத் தைக் காணலாம் என்பதேயாகும்.
* அன்பே கடவுளாம் அன்பேயருஞ் சமய மாம் அன்பே அறிவிற் கனி'
என்ற வாக்கியத்திற் கிணங்க சுவாமிகளைப் போன்றுஎங் கும் ஒரே பொருளாகிய சிவத்தைக் காண ஒளவை வாக் கையும் நினைவு கூரலாம்.
ஈசன் எனக் கருதி எல்லா உயிர்களையும்
நேசத்தால் நினைவு கொள்.
தெளிவான நீரைக் கலக்கி, சேற்றை மேலே கிளப்பி அதிலே திளைத்து மகிழ்கிறது எருமை. ஆன்மாவும் தனக்கு இன்பம் தர வல்லது ஐம்புலச் சேற்றில் புரள்வதுதான் என்ற எண்ணத்தில், இறைவனை மறந்து விடுகிறது. அந்த வேளைகளில் குருநாதன் துணை கிடைத்தால், தாயுமான சுவாமிகள் அருளியது போன்று ' என்று நீ அன்று நான் உன் அடிமை", என்ற எண்ணத்தை உண்டாக்கி விடு வார். ஆன்ம ஈடேற்றத்திற்கு அதுவே முதற்படியாக அமைந்து விடும்.
சுவாமிகளது வாழ்க்கையை உற்றுப் பார்த்தால் அவர் களது பூரண துறவு நிலைதான் புலப்படும்.

ஆத்மஜோதி 217
எவ்வளவுக் கெவ்வளவு அன்பும், ஆதரவும், காட்டுவார் களோ, அவ்வளவுக் கவ்வளவு கடுமையாகவும் இருந்தார். எந்தக் காலங்களில் எதைச் செய்வார், யாரிடம் எதை வாங்குவார், யாரை அன்பாய் நோக்குவார், யாரை ஏசித் துரத்துவார், யார் வீட்டுக்குப் போவார், என்ற அலுவல்களி லெல்லாம் கட்டுப் பாடு கிடையாது. எதை எந்த நேரம் விரும்புவாரோ அதைச் செய்வார். ஆனல் ஒன்று. அன்பில் லாதோ அல்லது வேறு சிந்தனைகளுடனே அவரிடம் சென் முல், சென்றவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். சில சமயம் போடா வெளியில் என்று விரட்டிவிடுவார்.
ஒரு சமயம் சுவாமிகள் தெருவில் போய்க் கொண்டு இருக்கும் போது S.S.C. பரீட்சை எழுதிய இருவர் பின்னல் வந்து 'சுவாமி, நாங்கள் சோதனையில் சித்தி அடைவோ மா? என்று கேட்க பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து அவர் கள் மேல் வீசி ஒடுங்கள் என்று துரத்தினராம். அதே சமயம் அவர்களுக்கு முன்னுல் ஒன்றுமே பேசாது வந்த இருவரைப் பார்த்து இதோ வருகிருர்கள், தினைவிதைத்தவர்கள் அறுக் கப் போகிருர்கள் என்ருராம். அப்படியே பின்னைய இருவ ரும் சோதனையில் சித்தியடைந்து, தற்போது ஒருவர் தபால் ஆபீசராக கடமை ஆற்றுவதாக அறிந்துள்ளோம்.
இன்னெருசமயம்சுவாமிகள் நவநாதசித்தருடையசமாதி யைத் தரிசிக்க வந்திருந்தபோது, அயல் தோட்டத்துஅன்பர் ஒருவருக்கு மிகவும் நெருக்கடியான பல இன்னல்கள் விளைந்து உத்தியோகமே ஆட்டம் கண்டிருந்தது. அந்த வேளையில் சுவாமி வந்திருப்பதையறிந்த அன்பர், அவர்களிடம்ஒட சுவா மிகள் மூன்று வாழைப்பழங்களை அவர் கையில் கொடுத்து ஒன்றுக்கும் பயப்படாதே, மும்மூர்த்திகள் துணை புரிவார்கள் என்ருராம். அப்படியே அன்பர் தோட்டத்திற்குத் திரும்பி வரவும், அங்கு பழைய அமைதி குடி கொண்டு இருந்ததாக அந்த அன்பரே எங்களிடம் சொன்னர். இதே போன்ற பல அரிய சித்துக்களைச் சுவாமிகள் செய்து மக்களை ஈடேற்றியுள் ளார் என்பதைப் பலர் மூலம் அறிகிருேம்.
வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு சுவாமிகளிடம் செல்பவர்களுக்கு தண்ணிழல் பரப்பும் ஆல மரம் போன்று ஆறுதல் அளித்திருக்கிருர்கள்.
சுவாமிகளிடம் அடிபட்டு, ஏச்சுப்பட்டு சென்றவர்களும், அவரிடமே சென்று நன்மை பெற்றிருக்கிறர்கள்.

Page 15
218 ஆத்மஜோதி
சாதி சமய வேறுபாடின்றி, எல்லா மக்களிடத்தும், சம நோக்குடன் பழகினர். அதனுல் யாருக்கும் சுவாமிகளிடம் பேதம் கிடையாது.
இமயம் போன்று ஒளி வீசிய அந்தப் பரிபூரணசான்றேன மாணிக்கமணியை இழந்து விட்ட ஈழத்தாயும், யாழ்ப்பாண மக்களும் கண்ணிர் சிந்துகிருர்கள்.
சுவாமிகள் ஆத்மீகத்தை மக்களுக்கு வளர்க்கவேண்டி பயன் கருதாது அதற்கான சிவதொண்டன் நிலையத்தை உரு வாக்கித் தந்திருக்கிருர்கள் என்ருல் இதை விடச் சிறந்த சிவ புண்ணியம் வேறென்ன இருக்கிறது?
அருளாளர் இறந்து விடுவதில்லை. சிறிது காலம் உட லோடு உலாவுவார்கள். பின் அவர்கள் அருளிய அமுதவாக்கு மூலம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வாழுவார்கள்.
தண்ணீர் வற்றிய வயலில் நெற்பயிர் வாடுவது போல் மகானை இழந்து தவிக்கும் மக்களுக்கு, சுவாமிகளின் சிதை யில் பற்றிய தீ, ஜோதியாகச் சிவதொண்டன் மூலம் ஒளி வீசிக் கொண்டிருக்குமென நம்புகிறேன்.
சுவாமிகள் பூத உடல் தாங்கியிருக்கும்போதே நவராத் திரி தினத்தில், 'ஆத்மஜோதி ஆண்டுமலரில்' அவர்களின் திவ்விய சொரூபத்தை அட்டைப் படமாய் வெளியிட்டார் கள். அம்மலரின் முதல் பிரதியை அடியேன் பெற்றுக் கொள்ளும்போதே ஞான முனிவரின் ஆசி பெற்றுக் கொண்ட தாக மனமகிழ்ந்தேன். ஆகவே இக்கட்டுரையும் குருநாதனுக் கே அ ர் ப் ப ண ம் ,
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணுமே சென்றே புகுங்கதியில்லை நுஞ்சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மினே.
- திருமூலர். 辰斋 溴苯
 

ஆத்மஜோதி 219
- ச. அம்பிகைபாகன். -
யாழ்ப்பாண்த்து ஞான பரம்பரை.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் மத்தியில் கடையிற்சாமி அவர் கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததின் பயனக ஒரு ஞான பரம்பரை தோன்றியது. கடையிற்சாமி அவர்களின் பூர்வீகத்தைப்பற்றி ஒன்றும் நிச்சயமாகக் கூற முடியவில்லை. தெலுங்கு நாட்டிலிருந்துதான் அவர் கள் வந்திருக்கவேண்டுமென்று கருதப்படுகிறது. யாழ்ப்பாணப் பெரிய கடைப் பகுதியில் பெரிதும் சஞ்சாரம் செய்தபடியால் கடையிற் சாமி என்னும் பெயர் அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடையிற்சாமியின் சீ ட பரம்பரையைச் சேர்ந்தவர்களே கந்தர் மடம் வேதாந்த மடத்தையும், உசன் மடத்தையும், ஏழாலை மடத் தையும் ஸ்தாபித்தார்கள். கடையிற்சாமியின் ஒரு சீடரான நல்லூர் செல்லப்பா சுவாமிகள் ஒரு ‘மாலும் செய்யாமல், பெரும்பாலான மக்களுக்கு தமது சுயரூபத்தைக் காட்டாமல், வாழ்ந்து பெருவாழ்வு எய்தினூர். அவர்கள் மடங்களைத் ஸ்தாபிக்காவிட்டாலும் யாழ்ப்பாணத் துக்கு ஒர் அரிய பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்கள். அந்தப் பொக்கிஷம்தான் யோக சுவாமிகள்.
யாழ்ப்பாணத்தில் தோன்றிய பெரும்பாலான பெரியோர்களின் உபதேசங்களோ நூல்களோ நமக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைக் காவிட்டாலும், அவர்கள் தாம் பெற்ற ஞானச் செல்வத்தைப் பக்கு வம் வாய்ந்த சீடர்களுக்குக் கொடுத்து ஞான பரம்பரையை வளர்த்து வந்தனர்.
யோக சுவாமிகளின் குருவான செல்லப்பாச் சுவாமிகளின் உப Gaglidits நான்கு மகா வாக்கியங்களே நமக்குக் கிடைத்துள்ளன. அவையும் யோக சுவாமிகள் மூலமே நமக்குக் கிடைத்துள்ளன. அம் மகாவாக்கியங்கள், "முழுதும் உண்மை’ ‘எப்பொழுதோ முடிந்த காரியம்' 'ஒரு பொல்லாப்புமில்லை' 'நாமறியோம்' என்பனவாகும். இம் மகா வாக்கியங்களின் பொருளை சமய சாதனைகளில் முதிர்ந்த வர்களேயன்றி சாதாரண மக்கள் விளங்கமுடியாது.
யாழ்ப்பாண மக்கள் செய்த தவப்பயனல் யோக சுவாமிகள் தமது அனுபவத்தையும் உபதேசங்களையும் நற்சிந்தனை என்னும் நூல்

Page 16
220 ஆத்மஜோதி
மூலம் நமக்குக் கொடுத்துள்ளார்கள். இந் நூலில் காணப்படும் பெரும் பாலான பாடல்கள் சிவ தொண்டனில் காலத்துக்குக் காலம் வெளி வந்தவை. சில இப்பொழுதுதான் இந்நூல் மூலம் வெளிவந்துள்ளன நற்சிந்தனைப் பாடல்கள் திருமூலர் திருமந்திரத்தையும் சித்தர் பாடல் களையும், தாயுமானவர் பாடல்க்ளையும் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. *தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் திரு. வி. செல்வநாய கம் இப்பாடல்களைப்பற்றி பின்வருமாறு கூறுகின்றர்: "அவற்றுள் (இக்காலத்துக் கவிதைகளில்) யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்படும் சிவ தொண்டனில் வெளி வந்து கொண்டிருக்கும் நற்சிந்தனைப் பாட்டுக்கள் மக்களுக்கு நல்வழி காட்டும் பண்புடையனவாகவும் உண்மையான அநுபவ ஞானத்தைப் புலப்படுத்துவனவாயும் தொன்று தொட்டுத் தமிழிலக்கிய வரலாற்றிற் சிறப்பிடம் பெற்று வரும் சித்தர்பT-ல் வகையினைச் சார்ந்தனவாயும் விளங்குகின்றன. அவற்றின் கண் உண் மை உண்டு, ஒளி உண்டு, கவிதைப் பண்புண்டு. அவை காலத்துக்கு * மொழி நடையிலும், இசையிலும் அமைந்துள்ளன' (பக்கம்
15)
குரு தரிசனம்
இப்பாடற் தொகுதியின் பெரும்பாலானவை செல்லப்பாச் சுவா மிகளைப்பற்றியவையாகும். சிவபெருமானே குருவடிவிற்ருேன்றி தமக்கு அருள் செய்தாரென்பதை பலவிடங்களில் காட்டியுள்ளார். சிவனே குரு, குருவே சிவன் என்பது சைவத்தின் பிரதான கொள்கையாகும்.
பின்வரும் பாடல்களில் சுவாமிகள் தமது குருவை படம்பிடித்துக் காட்டுகிருர்,
சிரித்து நல்லூர்த் தெரிவிற் றிரிபவர் வெறித்த பார்லையர் வேடம் விரும்பிலர் கறுத்த மேனியர் கந்தைத் துணியினர் எரித்த னர்பவ மினியெனக் கில்லையே
பாதிச் சாமத்தின் பின்பள்ளி கொள்பவர் வீதியிற் செல்லும் வீணர்கள் தங்களைப் பேதிக்கும்படி வேண்டியே பேசுவார் சோதித் தேயெனைச் சும்மா விருத்தினுர்
எந்த வேளையு மென்னவோ மெத்தெனச் சிந்தை தன்னிலே செப்பிக் கொண்டேயவர்
வந்த பேருக்கு வாழ்வே யளிப்பவர்
எந்தன்சிந்தையைக் கோயிலாக் கொண்டவர்
முதற்பாட்டிற் குருவின் தோற்றத்தையும் இரண்டாம் பாட்டில் வீணர்களை ஏசுவதின் நோக்கத்தையும், மூன்ரும் பாட்டில் அவர் தமக்
 

ஆத்மஜோதி - 22.
குள்ஏதோபேசிக்கொண்டு திரிவதையும் வர்ணித்துள்ளார்கள். வெறித்த பார்வையுடையவராயிருந்தபடி யாலும் மக்களை வாயில்வந்தபடி பேசி யதினுலும் தமக்குள் எப்பொழுதும் ஏதோ பேசிக்கொண்டு திரிந்த படியாலுந்தான் அவர்களை விசரன் என மக்கள் கருதினர் போலும்.
குருவை முதற் சந்தித்த பொழுது நடந்தவற்றைப் பின்வரும் பாடல்களில் கூறுகின்றர்.
கருத்தில் நினைந்துருகிக் கை கூப்புந்தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் ஆரடா நீயென்றன் அவன் தன்னையறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப் போலாதரிக்கு மாறுமுகன் - சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்றன் சிரித்து வண்டு பண் செய்யும் வளம் பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக் - கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடா பற்றென்றன் சிரித்து
மேற் கொடுக்கப்பட்ட மூன்று வெண்பாக்களிலும் நல்லுரரின் சிறப்பையும், தேரடியிற் குருவைச் சந்தித்ததையும், சந்தித்தபொழுது குரு கூறியவற்றையும் கனிவுடன் சுவாமிகள் கூறுகின்ருர்,
நல்லூரின் மகிமை
குருவுக்கு அடுத்தபடியாக சுவாமிகள் நல்லூர் முருகனையே அதிக மாகப் பாடியுள்ளார். இதனல் நல்லூர் பாடல் பெற்ற தலமாகி விட்டது. நல்லூர்க்கந்தன் வீதியிலேயே செல்லப்பா சுவாமிகள் வாழ்ந்து வந்தபடியாலும் அவர்களை நல்லூர்த்தேரடியிற் சந்தித்த படியாலும், நல்லூர்த் தேர்முட்டியிலேயே அன்னர் சாதனைகள் செய்தபடியாலும் யோக சுவாமிகளுக்கும் நல்லூர்க்கந்த சுவாமி கோ யிலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அக்கோயிலுக்கு இப்பொழு துள்ள மூர்த்திகரம் இப் பெரியார்களின் தொடர்பால் ஏற்பட்ட தென்று கூறுவது மிகையாகாது. நல்லூர்க் கந்தன் மீது சுவாமிகள் இயற்றிய பாக்களில் பிலஹரி ராகத்திலுள்ள கீர்த்தனத்தை இங்கு கவனிப்போம். இராகம்- பிலஹரி, தாளம்- ரூபகம். பல்லவி எந்நாளும் நல்லூரை வலம் வந்து வுணங்கினுல் இடர்கள் எல்லாம் போமே.

Page 17
222 ஆத்மஜோதி
அனுபல்லவி
அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்த இடம் அதுவாதலாலே அதிசயம் மெத்த உண்டு. (எந்நாளும்)
சரணம்
வேதாந்த சித்தாந்தம் கற்றலென்ன வேடிக்கைக்கதைள் பேசினுலென்ன வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற்போமே (எந்நாளும்)
சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம் நித்தியா நித்தியம் தெரியும் நிபுணர் பத்திசெய் உத்தமர் பரவும் நல்லூரில் நிச்சயம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே (எந்நாளும்)
"அனுபல்லவியில் "ஆசான் அருந்தவம் செய்த இடமாதலால் அதிசயம் மெத்த உண்டு' என்பதில் தொனிக்கும் பாவம் படித்தின் புறத்தக்கது. வேதாந்தம் சித்தாந்தம் படிப்பதனுல் முத்திகிட்டாது. பக்தி செய்வதினலேயே அந்நிலை கிட்டும் என்னும் பேருண்மையை முதற் சரணத்தில் விளக்கியுள்ளார்.
பெரும் உண்மைகளை சிறு பிள்ளைகள் தாமும் படித்தின்புறக் கூடிய பாஷையில் சுவாமிகள் பாடியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக "எல்லாம் சிவம்’ என்னும் பேருண்மையை விளக்கும் பின்வரும் பாடலைப் படித்துப் பார்க்கலாம்.
அப்பனும் அம்மையும் சிவமே, அரிய சகோதரரும் சிவமே ஒப்பில் மனைவியும் சிவமே, ஒதரும் மைந்தரும் சிவமே செப்பில் அரசரும் சிவமே, தேவாதி தேவரும் சிவமே இப்புவி யெல்லாம் சிவமே, என்னை ஆண்டதும் சிவமே
இப்பொழுது நற்சிந்தனை இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. முற் பதிப்பில் சேர்க்கப்படாத அனேக பாடல்கள் இப்பதிப்பில் சேர்க்
கப்பட்டுள்ளன. இவ்வருட் பிரசாதத்தை நமக்குக் கிடைக்கும்படி
செய்த சிவதொண்டன் நிலையத்தாருக்கு சைவ உலகம் மிகவும் கட மைப்பட்டுள்ளது.

ஆத்மஜோதி ݂ ݂ 223 யூனி யோக சுவாமி தோத்திரம்
(அளவையூர் சஞ்சீவி)
வெண்பா
மோட்சதினம்:
ஒரவரும் சோமகிரு தொண்மீனம் பத்திந்து வாரமே காதசியாம் வாழ்மதியில் - சீரகலா ஆயிலிய மேமெய் யருள்யோக ஸ்வாமிசிவ நாயகமாம் ஜோதிகொண்ட நாள்.
தோத்திரம் அன்புருவ மாகிநல மளித்த நாதா அடியாரைக் காத்துக்கை அணைக்கும் நாதா என்புருகு மன்பரிடத் திருக்கும்நாதா ஈடில்லாச் சிவஞாண மேந்தும் நாதா முன்புதவம் பூண்டகலை முழக்கும் நாதா முத்தியெனும் வாரிதிநீர் முகந்த நாதா இன்பவளம் மலிகொழும்புத் துறையமர்ந்த எந்தாய்! பூரீ யோககுரு நாதா போற்றி! 1.
பிரணவத்தி னுட்பொருளைப் பேசும் செல்வா பேதலித்தோர்க் கறிவுரைக்கும் பெருமைச் செல்வா சரவணநல் லூர்ப்பாடல் தந்த செல்வா, சச்சிதா னந்தநிலை தாங்கும் செல்வா, அகரமந் திரஅமுதம் அருந்தும் செல்வா, அருண்மலர வந்துதித்த அழகுச் செல்வா, பெருமைமிக வளர் கொழும்புத் துறை யமர்ந்த பெருமானே பூரீயோக செல்வா போற்றி 2
கல்வியுளார் கருத்தினிக்கும் கரும்பே போற்றி கற்பகசிந் தனை யூறும் கனியே போற்றி செல்வனது கழ லேத்தும் செல்வா போற்றி செல்லப்பச் சுவாமிதந்த தேனே போற்றி தொல்பிணிக்கு மருந்தாகும் துணைவா போற்றி சோதிவடி வாய்மலர்ந்த சுடரே போற்றி நல்விளக்காய் ஒளிர்கொழும்புத் துறையமர்ந்த நம்யோக குருமணியே போற்றி போற்றி, 3.

Page 18
224 ஆத்மஜோதி
(வேறு)
சீர்தவழ குழந்தை கண்முன் சிறந்தவோர் குழந்தையாகி சிவநெறித் தொண்டர்முன்பு தேர்குரு வடிவனுகி வார்குழல் மாதர் போற்றும் மாண்புயர் தெய்வமாகி வரம்பிலாச் சமயத்தோர்க்கும் வழிபுகல் வள்ளலாகி சோர்துய ருடையோர்பேணும் தூயகற்பகக்கா வாகி சொல் மனம் காயம் பூத்த சுத்தசன் மார்க்கணுகி தீர்வரும் புலனை வென்ற திறமிகு சிங்கமாகி தேகத்துள் யோகலிங்கம் திரட்டிய தேவா போற்றி
சன்மார்க்கம்
குரங்கு போல் மனம் கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படியடக்குவதென்று தெரியவில்லை யே. நன்று சொன்னுய். இதற்கு நல்ல மருந்துன்னிடமுண்டு. நீ அதை மறந்து போனுய், சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும் ,
அது என்ன வென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு. இதுவும் போதாது. பத்திய பாகத்திலேதான் முற்றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிடமுண்டு.
அது என்ன @ອນ ຫຼ மிதமான ஊண், மிதமான நித்திரை, மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன் மலாபத்தின் பொருட்டிதைச் செய்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச்சாப் பிடு. அதுவுமுன்னிடமுண்டு. மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானுணுல் சிவத் தியானத்தைத் தினந்தோறும் செய்துவரக் கடவன்.
- யோக சுவாமிகள்.
 

ஆத்மஜோதி 225
ஆத்ம ஞான வீரர்
- சுவாமி கெங்காதரானந்தா -
மகான்கள் பலருடைய பூத உடலைத் தன்னகத்தாக்கிய சோபகிருது வருஷம் ஈழத்து ரிஷி சிரேஷ்டனுகிய யோகர் சுவாமிகளின் பூதஉடலையும் உட்கொண்டுவிட்டது. புராண இதிகாசங்களில் ரிஷிகளின் லட்சணங்களையும் அவர்கள் வாழ்ந்து காட்டிய அத்யாத்மிக தத்துவங்களைப் பற்றியும் விளக்கியிருக்கின்றது. உலோகாயதத்தில் ஊறி உறைந்திருக் கும் இக்காலத்தில் அத்தகைய மகா புருஷர் ஒருவரை ஈன் றெடுத்த நாடும் நாட்டு மக்களும் சிவபுண்ணியம் செய்தவர் களேயாகும், துறவையும் துறந்திருத்த முற்றறிஞனும் சுவாமிகள் அனைத்திற்கும் சாட்சிமாத்திரமாயிருந்து மெய் யடி யார்களின் அறம் பொருள் இன்பம் வீட்டுப் பேற்றிற் காக ஆற்றிய பணியும் அருளிய அருளும் சொல்லில் அடங் கக் கூடியதன்று. அத்வைதானுபவத்தின் வடிவமாகிய சுவா மிகள் சாதாரண மக்களுடையபக்குவத்திற்காக துவைதபாவ னையையே அதிகமாக உபதேசித்து வந்ததிலிருந்தே சுவா மிகளின் கருணையுள்ளம் எத்தன்மை வாய்ந்ததென்றே கிர கிக்கலாம். போக்கும் வரவும் நமக்கில்லை யென்று சுவானு பூதியில் உணர்ந்த இந்த சிவசித்தனின் ஆசியைப் பெற்ற அடியார்களெல்லாம், பூர்வ புண்ணியமுடையவர்களென்றே சொல்லலாம். தற்பொழுது கடும் சோதனைக்குட்பட்டிருக் கும் நம் மக்களுக்கு சுவாமிகளின் தேகவியோகம் பெரும் நஷ்டமென்ருலும் அவர்களின் ஆத்மச்சுடர் உறுதுணையாய் நின்று என்றும் வழிகாட்டும் என்பதில் சந்தேகமேயில்லை. 'உனக்கொரு குறையுமில்லை' யென்று உபதேசிக்கும் ஜீவன் முத்தனின் அருள் சக்தி திக்கற்றுத் தவிக்கும் ஆத்மாக்ளுக்கு வீரத்தையும் பலத்தையும் அருளுவதாக, சுவாமி அவர்க ளின் ஆத்மாவிற்குச் சதா அஞ்சலி செய்தவண்ணம் அவரின் உபதேச மொழிகளையும் அனைவரும் பின்பற்றுவீர்களாக, நீண்டதோர் ரிஷிபரம்பரையைப் பெற்றெடுத்த யாழ்ப்பா ணம், அவ்வரிசையில் இன்னும் பல மகான்களை ஈன்றெ டுத்து மனித சமுதாயத்திற்கு ஆத்ம ஞானத்தைக் காட் டியருள பரம் பொருளைப் பிரார்த்திப்போமாக,

Page 19
ஆத்மஜோதி
யோக நாதன் திருப்பதிகம்
226
- பூணிமத் வடிவேற் சுவாமிகள்.
1. அவத்தொழில் நீக்கியருள் வழிகாட்டுவ னன்பர்தங்கள் பவப்பிணி நீக்கிப் பரத்தினைப் பார்த்திடப் பாங்கு செய் 6)IIT 6öT தவத்தினர் தங்களைத் தன்னகத்தே தழுவிக் குழைவான்
சிவவடிவாம் யோக சாமியைச் சிந்தைசெய் யென்
LD60T GLD.
2. சிந்திக்கரியவன் செயற்கரியவன் சேர்ந்த வன்பர்
வந்திக்குமானுட வாழ்வினைத் தாங்கி யிவ்வையகத்தே சந்தித்தவன்பர் தமைச் சரணுய் தினங் காத்திடுவான் புந்திப்பிரான் யோக நாதனைப் போற்றிடு என்மனமே.
3. இலங்கைக் கிறையை யிமையோரறியா விருநிதியை
மலங்களைந் தாண்ட மணியை மதிப்பவர் மாமருந்தை புலன்களைந்தாரவர் புத்தமுதாகிய புண்ணிய
வலம் வரும் யோகன வாழ்த்திடுவாய் தின மென்
மனமே,
4. செய்யாரிலங்கை வளநகர் மேவிய சீர்க்குரவன்
மையாருங் கண்டன் மலங்கெட மாமருந்தாகிவந்து மெய்யாரு மன்பரை மேனிலை யேத்தியிம் மேதினியை நைய்யவகை செய்யுயர் யோகநாதனை நாடு நெஞ்சே,
5. கைசிரமேல் வைத்துக் கண்கள் கலுழ மனங்கசிய
மெய்யார வீழ்ந்து மெலிந்து வியன் குருவே யெனவே ஐயாவுனையடைந் தேனல்லனே யருளாள வென மெய்யாக வாண்ட திறம் எளியே னென்ன செப்புவதே.
6. கண்டாருளத்தினிற் காலூன்றிப் பெய்யுங் கருணைமுகில்
அண்டார்க்கும் நல்லருளியு மருளுடை யந்தணனர் தொண்டாகித் தன்னடி தோத்திரம் செய்யத் தொடங் கினர்க்கு
கண்டான் சிவதொண்ட னென்னுங் கலையோக தத்து வனே.

ஆத்மஜோதி 227
7. தத்துவந் தந்தான் தரணியில் யார்க்கும் தலைவணங்கான்
முத்தியளித்த முதல்வன் திருவடி முப்பொழுதும் எத்திக்கு மேத்தி எழில்பெற யோகனென்று எண்ணு னர்க்குத் தித்திக்கும் செங்கரும்பாம் யோகநாதன் திருவடியே. 8. திருவடிவைத்தான் திருமுறை யாவையு மோதவைத்தான் திருமகள்தன்னையும்செல்வர்க்குதவிச்செலுத்திவைத்தான் பெருமகள் வைகும் பெருமை யிலங்கைக்குப் பெற்றுத் தந்தான் குருபரன் யோகனேக் கும்பிட்டுக் கத்துக்களாடு மினே. 9. ஆடுமின் நாடுமி னனந்தமாக வவனருளைக்
கூடுமின் கூடியவன் புகழே யென்றுங் கூவிடுமின் ஒடுமின் ஒடியவனடியார் தம்மையுற்றிடுமின் நாடுமின் நல்யோக நாதன் திருவடி நாள்தொறுமே. 10. வெள்ளைக் குடுமி வெளுத்தநற்ருடியும் வேண்டுமன்பர் கொள்ளைப் பிறவிக் கொடுவினை நீக்கியகூர் விழியும் வள்ளற் கரமும் வரந்தருதாளும் நல்வான்பொலிவும் தெள்ளுந்திருமுறை வாயுடையான் யோகதத்துவனே.
இG ஒர் அரிய சந்தர்ப்பம்! G பூரீ காஞ்சி காமகோடி பீடம் பூரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அவர்கள் ஆசி உரையுடன் ஆதி சங் க ர ர் அ ரு வி ய
: “சிவானந்த லஹரீ” :
ஸம்ஸ்கிருதத்தின் தமிழாக்கம் செய்யுள் உரையுடன் கூடியது
நம் பாரத பூமியின் கண் விளங்கா நிற்கும் மாபெரும் சிவ ஸ்தலங்க ளில் மிகப் பெருமை வாய்ந்த பூரீ சைலம் என்னும் ம்லேயின் கண் உறையும் பூரீ பரமேஸ்வரனே பூரீமத் சங்கர பகவத் பாதாள் வழிபாடுற்ற காலத்து அன் ஞரது புனிதநாவிலிருந்து துதிப் பாடல்கள் வெள்ளமெனப் பெருக்கெடுத் தன. அத்தகைய அமுத வெள்ளத்தை தமிழ்மக்கள் படித்து பெரும்பேறு அடைந்து இன்புற, இனியநடையில் தமிழாக்கித்தந்துள்ளார் இந்நூலாசிரியர்,
விலை, ரூபா 2.00 வெளியீடு:
956) (T நிலையம் 38. காந்திபார்க்வடபுறம், கும்பகோணம்

Page 20
228 ஆத்மஜோதி தவமுனி - யோக - சித்தர் மணி
+ யூனிமத் யூரீரங்கானந்த சுவாமிகள் +
இலங்கையின் ஆத்மீய கலங்கரை விளக்காய் மிளிர்ந் தவர் தவமுனி பூரீலபூரீ யோகர் சுவாமிகள். அவரது திவ்ய சரித வரலாறு யாவரும் அறிவர். மேலும் இம்மலரில் பல் வேறு கட்டுரைகளின் மூலமாயும் நாம் அறியக்கிடக்கிருேம். உற்று நோக்கின் அப்பெருந்தகையாரின் திருவாழ்வும் திரு வாக்கும் பல்லோரை ஆத்மீய, தெய்வீகத் துறையில் ஊக் குவித்ததுடன் தன்னம்பிக்கையைத் தந்து, சித்த சுத்திக்கும் அரிய சாதனைக்கும் நல்வழி காட்டியுள்ளது. ஆத்ம ஞானி கள், பரம பக்தர்கள், சீரிய சித்தர்கள், யோகிகள் யாவரும் எவ்வகையானும் முடிவில் ஒரே குறிக்கோளையே அடைகின் ருர்கள். பூரீ யோகர் சுவாமிகளை யொத்த தண்ணளிச் செல் வர்கள் வேதாந்த சித்தாந்தங்கட்கெல்லாம் அப்பாற்பட்ட வர்கள். அவர்களது வாழ்விற்கும் வாக்கிற்கும் வேதாந்த சித்தாந்தங்க ளெல்லாம் விளக்கங்கள் கூறுகின்றன.
பூரீ யோகர் சுவாமிகளின் திருவாக்கின் அமுதசாரத்தை நற்சிந்தனையில் காணலாம். அத்வைத சித்தாந்தமே அவரது
அனுபவமும் முடிவான தத்துவோபதேசமாக மிளிர்கின்றது.
'நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா' என்பதே சூத்திரமாக அமைய இதர பொன்மொ ழிகள் யாவும் சாதன பாவமாகவும் வியாக்யானமாகவும் அமைந்துள்ளதை நாம் உணரலாம். 'நீ ஆத்மா, ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களுடைய அனுபவசித் தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதி யக் கடவது," என்னும் திருவாக்கியத்தின் பொருள் விவ ரிக்காமல் விளங்கவல்லது.
ஆத்ம சாக்ஷாத்காரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அதற்கான சாதனவகைகளை வகுத்துத் தருவதும், மந்தபுத் தியுடைய ஜீவாத்மாக்களுக்கு உரிய உபதேசங்களை வகுத் துரைப்பதுவுமே நற்சிந்தனை எனும் பொக்கிஷம் , அது சுவாமிகள் அருளிய திருவாக்கு.
* ஆன்மாவே நாமென்னும் அறிவை மறந்ததிளுல்
வீண் பாவ மாச்சுதடி - குதம்பாய் வீண் பாவ மாச்சுதடி'

ஆத்மஜோதி 229
* உண்மை முழுதுமென்ற ஒரு மொழியால் இவ்வுலகில்
என்னை மறந்தேனடி - குதம்பாய் இரவு பகலற்றதடி'
* ஊரும் பேருமில்லா ஒரு பொருளைக் கண்டவர்கள்
ஆருக்கு மஞ்சுவரோ - குதம்பாய் ஆருக்கு ம்ஞ்சுவரோ?' - என்று இந்தச் சித்தர் பறைசாற்றுகின்ருர், (நற்சிந்தனை - பக்கம் 25 - 26)
ஞான விளக்கு ஒரே பான்மையது. அதை நாடியவர்க்கே அது வழி காட்டும், ஒளியூட்டும். மஹான்களின் மறைவிற் குப் பின்னரே மாந்தர்கள் விழித்துத் தேடுவதும் பாடுவதும், உலகில் நாம் காணும் ஓர் விந்தை! அவர்கள் பூதவு டலில் பொலிவுற்று, இருகைகளாலும் ஞானப் பொக்கிஷத் தை வாரி வழங்கும்போது முன் செல்லப்பயப்படுபவர்களே நாம்! பின்னரே, நாம் அவர்களின் பெருமையைக் குறித்து அந்தாதி பாடிப் பாடிப் பிதற்றுகின்ருேம்! ஆயினும் பூரீ யோகர் சுவாமிகளின் வாழ்வும் வாக்கும் அரும்பெரும் நிதி யாகும். அவர் தமது குருநாதரிடம் கொண்டுள்ள பக்தியும் அன்னருக்கு அவர் சாற்றும் அருட்பூமாலைகள் அவரது பாமாலையில் நிறைந்து கிடப்பது ஈடு இணையற்றது. அத்த கைய உயர்ந்த குரு பக்தி யொன்றே எவர்க்கும் உள்ளொ யையும் உயர்வையும் நல்குவது.
** அத்துவா மார்க்கமாறும் அகற்றியே யடியேனைத்
தத்துவா தீதனுக்குஞ் சற்குரு தாள்கள் வாழ்க’
(பக்கம்-40)
என்று போற்றுகின்ருர், குரு பக்தியால் தானடைந்த பெரும் பேற்றை நமக்கு அறிவுறுத்துகின்ருர், உறுதியான பக்தியே சித்திக்கு அடிகோலுமன்றே!
இலங்கைக்கு வந்து இந்த ஒராண்டுக்குள் இரண்டுமூன்று தரம் பூரீயோகர் சுவாமிகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத் தது என் பெரும்பாக்கியம், வந்த ஒரு மாதத்திற்குள் இலங்கை பூரீ ராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் பிரேமாத்மா னந்த சுவாமிகளுடன் சென்று வணங்கி தரிசித்தேன். முதன் முதலில் நான் கண்டது ஒர் பித்தரையே! 'No OSS No gain' என்பதே அன்றைய பல்லவி! பின்னர் வாய்த்த சந் தர்ப்பங்களில் இரண்டு தரம் கண்டு பேசி மகிழ்ந்த காலத்

Page 21
230 ஆத்மஜோதி
திலும் இந்த சித்தர் ஒர் பித்தரைப் போலவே பிதற்றிக் கொண்டிருந்தார்! பித்தனின் அருள் பெற்ருர் பித்தரேயன் ருே அவரது பிதற்றலில் கண்ட வாக்கின் வண்ணம் மாண்
டூக்ய உபநிஷத்தில் எதிரொலிப்பதைக் காணலாம்.
* ஏகாத்ம ப்ரத்யய ஸாரம் ப்ரபஞ்சோப சமம் சாந்தம் சிவம் அத்வைதம் . ஸ ஆத்மா
ஸ விஜ்ஞேய:’ என்பதாம். இத்தகைய மேற்கோள்கள் இதர உபநிஷதங்களிலும் வேதாந்த சாஸ்திரங்களிலும் பரந்து கிடக்கின்றன.
1897ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதியன்று பூரீமத் விவே கானந்தசுவாமிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சொற் பொழிவாற்றிய போது அதைக் கேட்கும் பாக்கியம் பூரீ யோகர் சுவாமிகட்குக் கிடைத்தது. அப்பொழுது அவர் மிக இளம் பிராயத்தவர். சுவாமிகளின் உரையில் " The subject is Very large and the Time is Short GTGöf spa). Tji Su Liggit (3 so அவரது ஞாபகத்தில் இருப்பதாகச் சொல்வது வழக்கம்! பூரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், பூரீ விவேகானந்த சுவாமிகள் இவர்கள் பால் பூரீ யோகர் சுவாமிகட்கு மிக்க ஈடுபாடு உண்டு. ராமகிருஷ்ண சங்கத்தைச் சார்ந்த சாதுக்களிடத் தும் தனிப்பட்ட ஈடுபாடும் அன்பும் உடையவர் என்று சொல்லவும் வேண்டுமோ !
பூரீயோகர் சுவாமிகள், நெருங்கிய பக்தர்கட்கு ஞானி யாயும், பக்தராயும், சித்தராயும் காட்சியளித்தார்; மற் றையோருக்கு அவர் ஒர் பித்தராகவே முடிந்தார்! இன்று அவர் பூரணத்தில் பூரணமாக மிளிர்கின்றர். அன்னரின் அருள் வாழ்வும் திரு வாக்கும் பல்லோர்க்கும் திருவருள் கூட்டி பெருவாழ்வு நல்க வேண்டுவோமாக!)
* பிறவார்கள் இறவார்கள் பிறிதொன்ற லயரார்கள்
கரவார்கள் உழலார்கள் கண்டதிலே மனம் வையார் அறநெறியில் வழுவார்கள் அன்பர் பணி மறவர்கள் பிறவொன்று மறியார்கள் பிரியாத சிந்தையரே'
ஹரி ஒம் தத் ஸத்
%N N% ,一、X
 

ஆத்மஜோதி 231 ܟܕ
கருணைத் திருவுருவின் கடைசி யாத்திரை
X தொண்டன் x
கருணையே உருவாகி காசினியில் தோன்றி குருபரனுக எம்முடன் வாழ்ந்து நெறியில்லா நெறியில் செல்லவிடாது மக்களை நல்லநெறி ஒழுகச் செய்து அன்பர்கள் பலருக்கு நவையறு காட்சிகள் நல்கி எம்மையும் அடியனுக்கிய காருண் யவள்ளலாவார், கொழும்புத்துறைவதிந்தமுணிபுங்கவர் தன் னேயடையும்மக்களுக்குசாதிசமயவேறு பாடின்றி, அரசாங்க மந்திரியாயின் என்ன ஆண்டியாயின் என்ன எவரையும் சரி சமானமாகக் கருதி அன்னையிலும் கூடிய தயவுடன் அவரவ ரும் வேண்டியதை வேண்டியவாறு ஈந்தருளும் கற்பகதரு வாய் வாழ்ந்துவந்தார்கள். எவ்வித மனக்கலலையுடன் மக் கள் போகின்ருர்களோ அவர்கள் மனக்கவலைகளையெல்லாம் தீர்த்து கோடையிலே இளைப்பாற நிழல் தரும் குளிர்தரு வாக சுவாமிகள் இருந்தார்கள். காந்தம் இரும்பைக்கவ ரும் தன்மைபோல மக்கள் கவரப்பட்டார்கள்.
அவரவர் சுவாமிகளிடம்பெற்ற பேற்றை அவரவர்களே அறிவார்கள். சுவாமிகள் அன்பரை ஆட்கொள்ளும் முறை விளம்பிடற்கரியது. ஒவ்வொருவரை ஒவ்வொரு வழியில் அருள்சுரந்து ஆட்கொள்ளுவார்கள். ஆனல் எல்லோ ருடைய உள்ளக்கிடக்கையும் ஒன்றே, அப்பர் சுவாமிகள் பாடியதுபோல எல்லோரதும் உள்ளங்களும்,
அத்தாவுன் அடியேனே அன்பா லார்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எத்தனையும் அரியை நீ எளியை யானுய் Mʻ
எனையாண்டு கொண்டிரங்கி ஏன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாயன்றே இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்தவாறே
என்று அப்பனின் கருணையைநினைந்து உருகும். கறந்தபாலும்
கன்னலுமாய் சிறந்த அடியார் சிந்தனையில் தேன்போன்று தித்திக்கும் சுவாமிகளின் லீலைகள். இவ்வாருக அவர்கள் உள்

Page 22
232 ஆத்மஜோதி
ளங்களை கொள்ளை கொண்ட சுவாமிகள் எம்பொருட்டு 92 ஆண்டுகள் உடல்கொண்டு உலாவியுள்ளார்கள்.
பங்குனிமாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் அன்னை பராசக்திக்கு பூசைசெய்வதற்கும் வழிபடுவதற்கும் பொருந் தியநாட்களாகக் கருதப்படுகின்றது. இரண்டாவது திங்கட் கிழமை ஒன்றிலேதான் அருளாளனும் செல்லப்பா சுவாமி கள் அவனியிலுள்ளோர் உய்வதற்காக கொழும்புத்துறைப் பெரியவரை ஆட்கொண்டு உபதேசித்தருளியதாக அறிகி ருேம்,
இந் நந்நாளை திருவடிப் பூ  ைச த் தி ன மாகக்கொண்டு குருவுக்குப்பூசை செய்யப்பட்டுவருவதுண்டு சென்ற பங்குனி மாதம் பத்தாந்திகதியன்று (23, 3 . 64) இரண்டாம் திங்களாகும். இத்தினத்தன்றுதான் எம்பிரான் தனது திருவுடலை உதறித்தள்ளியுள்ளார்கள். இத்திருவு டல் உலகில்தோன்றியதும் ஒரு புதன்கிழமையாகும். கரு ணையே உருவமாகிய இவ்வுடல் கற்பனை கடந்தசோதியுள் கலந்ததும் புதன் கிழமையாக அமைந்துள்ளது. இத்தினங் களின் ஒருமைப்பாட்டின் மர்மத்தையோ மகிமையையோ எம்சிற்றறிவு கொண்டு அறியமுடியாது. ஏதோ ஒரு விசே டம்பொருந்தியுள்ளது என்பதனை அன்பர்களுக்கு நினைவூட் டுதற்காக ஈண்டு குறிப்பிட்டோம்.
சுவாமிகளின் ஆக்ஞைப்படி அடியார்கள் சிலகாலமாக பாதயாத்திரைகள் ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பிட்டஊரில் உள்ள ஒரு கோயிலில் விசேட வழிபாடுகள் செய்துவிட்டு அடியார்கள் தேவாரபாராயணம், நாமபஜனை முதலாயின செய்து கொண்டு சிவதொண்டன் நிலையத்தை நோக்கிநடை யாத்திரைசெய்வார்கள். இது பெரிய ஓர் சாதனையாக தமக்கு இருந்தது என பங்குபற்றிய அன்பர்கள் கூறுகிருர்கள்.
இந்தப் பாத யாத்திரைகள் எல்லாம் முடிந்த பின்னர் ஒரு சமயத்தில் சுவாமிகள் "கடைசியாக இன்னுமொரு யாத்திரை இருக்கு’ எ ன் று குறிப்பிட்டுள்ளார்களாம், 25.3, 64 புதன்கிழமை காலையில் ஆரம்பித்த யாத்திரை யைத்தான் சுவாமிகள் குறிப்பிட்டார்கள் போலும்.

ஆத்மஜோதி 233
அதிகாலையில் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் முடிந்த பின்னர் பக்தர்கள் தம் ஆசைதிரப் பார்த்துப் பணிவதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டி ருந்த திருவுடல் காலை எட்டு மணிக்கு, கடைசி யாத்திரையை ஆரம்பிப்பதற்கு பூம் பல்லக்கில் எழுந்தருளியது. கொழும் பிலிருந்து வந்து கொண்டிருந்த புகையிரதம் அன்று யாழ்ப் பாணத்துக்கு பிந்தி வந்து கொண்டிருந்தது. சுவாமிகளின் உடலைக் கடைசி முறையாகத் தரிசிப்பதற்காக எண்ணிவந்த பல அன்பர்கள் வண்டி தாமதித்ததால் அங்கலாய்த்தார் களாம். வேறு ஒர் வண்டி தடம் புரண்டது காரணமாக, கொழும்பிலிருந்து வந்த வண்டி அநுராதபுரத்திலும் கொ ழும்புக்குச் செல்லும் வண்டிகள் இரண்டு மதவாச்சியிலும் தடைப்பட்டு நின்றனவாம். யாழ்ப்பாணம் வரவேண்டிய வண்டி முதலில் அனுப்பப்பட்டதாலேயே தாங்கள் எட்டு மணிக்காவது கொழும்புத்துறைக்கு வந்து சேரக் கூடியதாக இருந்தது என்றும் அன்றேல் சுவாமியின் திருவுடலைத் தரிசித் திருக்கவே முடியாது என்றும் தாங்கள் வந்த வண்டியைத் தம் முயற்சி எதுவுமில்லாமல், முதலில் அனுப்பச் செய்த தும், திருவுடல் எழுந்தருளும் சமயம் தம்மை ஆங்குவரச் செய்ததும் சுவாமிகளின் கருணையே என்றும் ஒரு அன்பர் கூறிக் கண்ணிர் விட்டார். வண்டியில் வரும் அன்பர்களின் வருகைக்காகவே சுவாமிகள் காத்திருந்ததுபோல, அன்பர் கள்வரவும் பல்லக்கு ஆச்சிரம வாசலைவிட்டு நகர்ந்தது.
உற்சவ காலத்தில் கோயிலில் சுவாமி வீதிவலம் வரும் காட்சிபோலவே புலப்பட்டது. இருமருங்கும் கற்பூரச்சட் டி களும் ஊதுபத்தி சாம்பிராணி முதலியனவும் ஏந்திச் சென்ருர்கள். இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு புறம், சென்னியில் அஞ்சலி செய்தனர் இன்னுெருபுறம். மக்களிற் சிலர் தொழுதனர், சிலர் அழுதனர். மணிவாச கப் பெருமான் துவள்கையர்” ஒருபால் என்றதை நினைவூட் டியது அம்மையார் ஒருவரின் நிலை, கோயிலில் அடி அழிப் பதற்காகக்கட்டுவதுபோலச் சேலையை வாரிக்கட்டிக் கொண்டு ஒரு குழந்தையையும் தோளில் போட்டுக் கொண்டு சனக் கூட்டத்தை விலத்திக் கொண்டு மயானத்தைச் சேர்வதற்கா கத் துவண்டு ஒடினுர் அம்மையார் வீதிகள் எல்லாம் அலங் கரிக்கப்பட்டிருந்தன, வீட்டு வாசல்களில் எல்லாம் தீபங் கள் ஏற்றி புஷ்பாஞ்சலி செய்தார்கள். ஒரு அம்மையார், மித்தப்படாத குழந்தை-பிறந்து மூன்று மாதம் தானிருக் கலாம்-ஒன்றை இரண்டு கரங்களிலும் ஏந்தி சுவாமியின்

Page 23
234 ஆத்மஜோதி
திருவுடலைப் பார்த்து நீட்டி 'அப்பனே,அருள் புரிவாய்' என்று வேண்டிய காட்சி எம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. அப்பனைத் தரிசிக்க அக்குழந்தைக்கும் பாக்கியம் பின்னர் கிடையாதே என்று ஏங்கினர் போலும் குழந்தையை ஏந்திய பாட்டியார்.
காக்கும் எம்காவலனுக, கண்கண்ட தெய்வமாக இருந்து காண்பரிய பேரொளியாகப் போகும் சுவாமிகளின் தரிசனத் துக்காக மக்கள் திரள் திரளாகச் சுடலையை நோக்கிச் சென் றனர். சுடலை என்ருல் பேய் பிசாசு உலாவும் இடம் என்று பயந்து ஒதுங்கும் வழக்கம் எம் ஊரில் உண்டு. குழந்தைகள் பண்கள் சுடலையை எட்டியும் பார்க்கமாட்டார்கள், இவ் வாருன வைதீகமும் ஐதிகமும் உள்ள ஊரில் பெண்களும் குழந்தைகளும் திரண்டிருந்த காட்சி, சுடலையில் சிவபெரு மான் உறைகின்ருர் என்ற உண்மையை எடுத்துக்காட்டி யது. மணிவாசகர் 'கோயில் சுடுகாடு' என்று பாடியி ருப்பது நினைவுக்கு வந்தது. "
ஊர்வலம் மயானத்தை அடைந்ததும், மக்கள் எல்லோ ரும் கோயிலில் இருப்பது போன்று நிலத்தில் இருந்து வழி படத் தொடங்கினர். சங்கு சேமக்கலம் முதலாயின ஒலித் தன. மக்கள் எல்லோரும் கண்களில் நீர் பனிப்பத் தத்த மக்கு விருப்பமான பாடல்களை ஒதினர். திடீரென நிசப் தம் நிலவியது. மக்களின் உள்ளங்களில் எழுந்த எண்ணங் களைப் பிரதிபலிப்பது போல உயர்திரு குமார சுவாமிப் புலவர் அவர்கள் அரிய பாடல்கள் பாடினுர்கள்.
* தந்ததுன் தன்னை கொண்டது
என்தன்னை சங்கரா ஆர் கொலோ சதுரர்’ என்று புலவர் ஐயா அவர்கள் பாடியது, அடியார்கள் சுவா மியிடம் முன் பெற்ற ஆனந்தத்தையும், சுவாமிகளின் அருள் எம்சிந்தையையே கோயிலாகக் கொண்டிருக்கிறது என்பதை யும் உறுதிப்படுத்திக் காட்டுவது போல இருந்தது. அப்பன் எம் உடலில் இடம் கொண்டு விட்டான். ஆங்கு தோற்றிய ஜோதி எங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நின்று சுடர் விட்டுப் பிரகாசித்து எம்மையும் முத்தி நெறிக்கு இட்டுச் செல்வதாக,
'முத்தி நெறி அறியாத மூக்கரொடு முயல் வேனப்
பத்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கருளிய வாறர் பெறுவார் அச்சோ வே . வாழ்க குருபாதம்! வாழ்க அடியார்கள்!

ஆத்மஜோதி 235
கொழும்புத் துறைக் குருநாதன் - வித்துவான். மு. கந்தையா. - 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற மெட்டு.
பல்லவி
கொழும்புத் துறைக்குரு நாதன் - கோடி கோடி முனிவரர் கொஞ்டும் பாதன்
சரணம்
ஒதா தெவையு முணர்ந்தான் - கலே
ஒதி யுணர்ந்தவர் யாரையும் வென்றன் ஒதி வருமறி வெச்சில் - உன்றன்
உள்ளறி வேசுத்தம் யோக்கியம்’ என்பான். கொழும்புத்.
வாதுரை தர்க்கம் விரும்பான் - தர்க்க வாதிகள் வந்தி டில் வாய்ப்பூட் டிடுவான் "வாதில் வரும் பல னென்னுே - வெறும்
வாசால முஞ்சொற் சிலம்பமு' மென்பான். கொழும்புத்.
சரியே சரியா யிருப்பான் - சரி தானுந் தராசு முனையென் றெளிர்வான் சரியில் தவறிடு மன்பர் - உண்ட
தாய்ப்பாலுங் கக்கவே தாக்கி யுரைப்பான். கொழும்புத்.
நாமே பிரமமென் பாரும் - எல்லாம் நானெனும் பாவ அகந்தை கொண்டாரும் தாமே தலைத்திமிர் சாயத் - தட்டுஞ்
சம்மட்டி யாம் வன் சந்நிதி தானே. கொழும்புத்.
சிறுமையும் பெருமையும் பாரான் - தீய வறுமையுஞ் செல்வ வளங்களும் நோக்கான் * சிறுமை வறுமை யுடற்கே - யன்றிச்
சித்தா முயிருக் கவை யெங்கே யென்பான். கொழும்புத்.
தன்னுலே தன்னை யுணர்ந்தான் - ஐயன் தானெது வேனுந்தன் சொல்லா லுணர்த்தான் * உன்னுலே யுன்னேக்கா ணென்பான் - 'அதற்
குற்றகருவி யுனக்குள்ளே யென்பான். கொழும்புத்.

Page 24
236 ஆத்மஜோதி
வெவ்வுலைப் பொன்விழிச் சோதிச் - ஈத்த வெள்ளுடை வெண்சடை வெண்ணரைத்தாடி கெம்பீரத் தோற்றத் தெம் மையன் - கேண்மை
கிட்டிடு மேல்நமை எட்டிடு வார் யார்? கொழும்புத்.
நாமறி யோமென் றுரைப்பான் - இந்த ஞாலமறி யாத தெல்லா மறிவார் தாமறி யாதது முண்டோ - என்ன
சங்கட மிங்கிதன் தாற்பர்ய மென்னே! கொழும்புத்.
வாசியிலேறியெம் மண்ணல் - தானே காசிக்குப் போன கவிதை படிப்பான் யோசித்துக் காணவு மாமோ - ஐயன்
யோகப் பெ ருமையு ணர்ந்திடப் போமோ. கொழும்புத்.
அணைதற் கெளியவன் போல் வான் - கிட்டி அணைய அணைய அகன்றய ல் நிற்பான் அணையலா மென்று மதித்த - அந்த
அறிவுக் கடிக்கும் அடியிது வோகொல்? கொழும்புத்.
பற்றற் கெளியவன் போல்வா ன் - சென்று பற்றினு 'லெங்கேநீ பற்றிப்பா ரென்பான் பற்றலா மென்று நிழலே ப் - பற்றிற்
பற்றப்ப டாது போம் பாங்கிது வாமே. கொழும்புத்.
குன்றென நின்று நிமிர்வான் - சின்னக் குழந்தையே யென்னக் குழைந்து மிருப்பான் அன்றுளன் இன்றிலன் ஆகான் - அவன்
என்றென்று மெம்மு னிருப்பவ னன்றே. கொழும்புத்.
சித்தனெங் கள் குரு நாதன் - அவன் தில்லையில் தீயெழ நல்லேயி லணேப்பான் பத்தரென் றுள்ளவர் யாரும் - பரிந்
தங்கே நினைந்திட இங்கேகை தருவான். கொழும்புத்.
கடலேக்கை யுள்ளடக் காது - காணுங் கார் மலி வானத்தை ஏணியெட் டாது நடலையில் எங்குரு நாதன் - ஞான
நற்புகழ் நம் சிறு நரிவடங் காதே. கொழும்புத்.

ஆத்மஜோதி - - 237
எங்கள் யோக சுவாமிகள்
«Сахажzж அருட்திரு. வடிவேல் சுவாமிகள் چترامی حکم خمی حمہ
கதியொன்றுங்காணுது கலங்கி நிற்கும் உலகுக்கு கலங்கரை வெளிச் சம்போல் காலத்துக்குக் காலம் மெய்யறிவுச் சுடர் கொளுத்தும் மெய்ஞ்ஞானிகள் உலகில் அவதரித்துவருகிருர்கள். இப்பெருமக்கள் மெய் ஞானிகளாக இருப்பினும் தம்மை வெளிக்காட்டாது மனிதரோடு மனிதராய் வாழ்வார்கள், ஆயினும் அவர்தம் பேரியல்புகள் - தெய்வப் பெற்றிகள் தாமாக வெளிப்பட்டு விடுகின்றன. இவற்றை மெய்யறிவு நாட்டமுள்ளவர்களாலன்றி மற்றவர்களால் உணர்வது அரிதாகவே யிருக்கும்.
பல்லாயிரம் மக்கள் செய்த தவப்பயனல் ஒர் மெய்ஞ்ஞானி உலகில் தோன்றுகிருன் என்பது சமய்சாத்திரக்கூற்று இதேபோல் யாழ்ப்பான மக்களின் தவப்பேற்ருல் நம் மத்தியில் உத்தம ஞானச்செல்வர் யோகர்சுவாமிகள் ஒர் உடல் தாங்கி வாழ்ந்து இன்று எல்லா உடல் களையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்கள்.
சாத்திரங்களில் காணப்படும் மெய்ஞ்ஞானிகள் இலக்கணங்களுக்கு இலக்கியமாகவே நமது சுவாமிகள் வாழ்ந்தார்கள்.
ஞாலமதில் ஞானநிட்டை யுடையோருக்கு
நன்மையொடு தீமையிலே நாடுவதொன்றில்லை சீலமிலே தவமில்லை விரதமொடாச் சிரமச்
செயலில்லை தியானமிலே சித்தமல மில்லை கோலமிலே புலனில்லை கரணமில்லை
குணமில்லை குறியில்லே குலமுமில்லே பாலருட னுன்மத்தர் பிசாசர்குண மருவிப்
பாடலினுே டாடலிவை பயின்றிடினும் பயில்வர்
என்று சிவஞானசித்தியாரிலும்
சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன் னின்றது புசிப்பார் வெய்யி னிலவாய் விண் விழுது வீழ்ந்தும் பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா வொன்றும் பாரார் நன்றுதீ தென்னுர் சாட்சி நடுவான சீவன் முத்தர்
என்று கைவல்லிய நவநீதத்திலும் துன் பத்தில் துடியாத இன்பத் தில் நாட்டமில்லாத, பற்று, அச்சம், சினமற்ற உறுதியான உள்ளத் தை யுடையவன் முனி எனப்படுகிருன்,

Page 25
238 ஆத்மஜோதி
"ஆமை தன் அவயவங்களை அடக்கிக் கொள்வதுபோல் பொருள்க விடத்திருந்து பொறிகளை முழுதும் உள்ளிழுக்கவல்லவனுக்கு நிறை ஞானம் நிலை பெறுகிறது'
என்று பகவத்கீதையிலும் கூறியவாறு சுவாமிகளிடத்திலும் காணக் கூடியதாகவேயிருந்தது. ஆனல் இவர்தம் பெருமை அறியாது சுவாமிகளிடம் சோதிடம் கேட்கவும், குறிகேட்கவும் செல்வபவர்களு மிருந்தனர். ஆயினும் அவரை அண்டியவர்களின் குறிப்பறிந்து அவர்களின் குறைதீர்க்க அந்த ஞானவள்ளல் அருள் நோக்கம் செய்தருளாதுவிடவில்லை.
எமது சிறுபிள்ளைப்பருவம் முதல் சுவாமிகளுடன் தொடர்பு கொண்டிருந்த சம்பவங்கள் சிலவற்றைச் சிந்திப்பதன் முலம் அவரின் பெருமைகளைச் சிறிது குறிப்பிடுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
ஒருநாள் கோண்டாவில் உப்புமடம் விநாயகர் ஆலயத்தின் முன் ஒர் திருக்கல் வண்டியில் சுவாமிகள் வந்தார்கள். சிறுபிள்ளைப்பருவமாதலால் நான் அவர் வண்டியில் பிடித்தவண்ணம் வண்டியோடு சேர்ந்து ஒடினேன். வண்டியைச் செலுத்திய அன்பர் தம்பியையும் 'வண்டியில் ஏத்துவோமா' என்ருர், அதற்குச் சுவாமிகள் 'இல்லை, அவன் ஒடியே வரட்டும்' என்ருர் . வண்டியும் மருதனுமடச் சந்திக்குச் சென்று நின்றது. வண்டியை விட்டிறங்கி என்னை அரவ ணைத்து “இவனுக்கு ஞானம் சொல்லிக் கொடுப்போம்' என்று கூறி *செல்வ நெடுமாடம்' என்ற சம்பந்தர் தேவாரத்தைப் பாடச் சொன்னர்கள். நான் அத்தேவாரத்தைப் பாடியதும், முன்னலிருந்த இராமநாதன் கல்லூரியின் உயர்ந்த கோபுரங்களைக்காட்டி “இதுதான் நீ காண விரும்பும் சிதம்பரம்' என்ருர்கள். சிதம்பர தரிசனம் பெற லிேண்டு மென்றிருந்த எனது நினைவு சுவாமிகளுக்கு எப்படித் தெரிய வந்தது என்று திகைத்து நின்றேன். அப்போது அவர் 'இடேய் நான் உன்னுள்ளே இருக்கின்றேன்' என்ருர், என்னை அறியாமல் அழுது விட்டேன். பின்பு என்னையும் அழைத்துக்கொண்டு அண்மையில் இருந்த மயில்வாகனம் உபாத்தியாயரின் அறைக்குச் சென்ருர்கள். அங்கு ஒர் சார் மனைக் கதிரையில் தாமிருந்து கொண்டு எனது இரு கரங்களையும் பற்றித் தமது அண்டையிலிருத்திச் சிற்றுண்டி நேநீர் அருந்திய பின் ஒர் காகிதத்தில் 'மூலா நிலமதில் - முந்து தமிழ் மாலை' என்ற இருதிருப்புகழ்களை எழுதித்தந்து பாடச் சொன்னர் கள். எமக்கியன்ற இராகத்தில் பாடினேன். சுவாமிகள் எழுந்து ஆனந்த நர்த்தனம் செய்தார்கள்; அத்துடன் 'இனிமேல் நீ சாத்திரங்கள் நன்கு படிக்க வேண்டும். அதற்கேற்ற ஆசானும் கிடைப்பார் போ' என்றருளினர்கள். இதுவே எமது வாழ்வில் முதன்முதலாக யோகர் சுவாமிகளைத் தரிசித்த முதல் சந்தர்ப்பம்,

ஆத்மஜோதி 239
சுவாமிகள் ஓர் சம்மியம யோகியாகவும் இருந்திருக்கிரு?ர்கள். இதனலேயே முன் பின் நிகழ்ச்சிகளை உணரவும் ஒருவர் உள் ளத்தில் உள்ளதை அறியவும் வல்லவராயிருந்தார்கள். மேலும் சுவா மிகள் ஒர் பரமானந்தப் பெருங்கடல் இதை ஒவ்வொருவரும் தமது புத்திக்கு எட்டிய அளவு மாத்திரம் அறிந்தார்களன்றி அவரின் முழு நிலையையும் கண்டறிந்தவர் அரிது. அவர் பேசும் மொழிகள் அத்தனை யும் வேதவாக்காகவே திகழும். உடலோடு வாழ்ந்த போதிலும் வியா பகமாகவே வாழ்ந்தார்கள் என்பதை அவர் வாழ்க்கையில் பல நிகழ்ச் சிகள் எமக்குப் புலப்படுத்தின.
எனது ஞான தேசிகனிடத்து சாத்திரங்கள் பயிலும் நாட்களில், சில சந்தேகங்கள் என்னுள்ளத்தில் எழும். சுவாமிகள் மருதனுமடம் செல்லும் மார்க்கத்தில் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் தாமா கவே என் மனதில் உள்ள சந்தேகங்களுக்குப் பதில் கூறியருளுவார் கள். ஒருநாள் தெய்வநியதி சக்தியைப் பற்றி சிந்தித்து வந்தேன். வழியில் சந்தித்த சுவாமிகள் 'பனையில் தேங்காயும் தென்னையில் பனங்காயும் காய்ப்பதில்லை. இதுதான் அந்த நியதிசக்தி. இதுபோல் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார். நீ என்ருெரு பொருளேய நான் என்ருெரு பொருளோ இல்லை. எல்லாம் சிவவடிவம்' என்று கூறி ஒரே சிரிப்பாகச் சிரித்துவிட்டுச் சென்ருர். இவ்வுலகம் நாத வடி வானது என்பதற்கு வாழ்க்கையில் நிகழும் ஒவ்வோர் நிகழ்ச்சியிலிருந் தும் அடிக்கடி விளக்கம் தருவார்கள். அவர் நடமாடும் ஒர் ஞானசாலை என்றே கூறலாம். நடைபாதையில் செல்லும்போது அவர்கூறும் பேச் சுக்களும், ஏச்சுக்களும் கேட்பவர்களைப் புனிதப்படுத்தி உயர்வாழ் வளிக்க வல்லனவாய் இருந்தன.
“நிறை மொழி மாந்தர் பெருமை அவர்தம் மறை மொழி காட்டி விடும்’ என்றகுறளுக்கு இலக்காக அவர் பெருமையை அவர் வாய்மொழிகள் உணர்த்தி நின்றன. சுவாமிகளிடத்து ஒரு பிரத்தியேக மான இயல்பு இருந்தது. அது என்னவெனில் தம்மைச்சந்திக்க வருபவர் களைச்சில சமயங்களில் கடின வார்த்தைகளால் ஏசிக்கலைத்து விடுதல்,
இதனல் பலர் அவரண்டை செல்ல அஞ்சுவார்கள். உண்மையான
அன்பர்கள் அவர்தம் ஏச்சுக்களை ஆசீர்வாதமாகக் கொண்டு அவரின் கருணைக்கு இலக்காவார்கள். அல்லாதார் கிட்டவும் போகமாட்டார் கள். சாதாரண மக்களின் தொல்லைகளால் தமது சாதனைக்கும், சகச சமாதி குலையாமலிருப்பதற்காகவுமே இவ்வியல்பைத் தம் பால் வைத் துக் கொண்டார்கள்.
இவர் சுடலைகளில் சென்று சாதனைபுரிவதும், தினசரி பல மைல் தூரம் கால்நடையாகச் செல்வதும் வழக்கம், ஏழைகளிடத்திருந்து உப்பில்லா கூழையும் விரும்பி உண்பார் , செல்வர் வீட்டு அறுசுவை

Page 26
குயனுேசு ஒ?ன்
டாடியையும் அருந்துவார். எதிலும் விருப்பு வெறுப்புக் கொள்ளாது சம உணர்வுடனேயே வாழ்ந்தார்கள். வேண்டாமை என்னும் விழுச் செல்வராயிருந்தமையால் யாவும் அவரைத் தேடிவருவது இயல்பாக இருந்தது. எனினும் எதற்கும் தாம் அடிமைப் படா திருப்பார். செல் வர் ஏழைகள் எல்லாரிடத்திலும் இறைவனைக் காணும் , பெற்றி மிக்கவராயிருந்தார்.
சுவாமிகளிடத்தில் சாதி, மத, இன வித்தியாசங்கள் இன்றி எல்லா மதத்தவர்களும் வந்து ஞான விசாரணை செய்து செல்வார் கள். ஆங்கிலேயரும் முஸ்லீம்களும் வந்து தரிசித்துத் தமது சந்தே கங்களேத் தீர்த்துச் செல்வார்கள். அண்மையில் சோல்பரிப் பிரபு வின் மகன் இப் பெருந்தகையை அண்டி ஞான தீட்சை பெற்று "ராம் போதம்' என்ற பெயருடன் சாதனையில் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும். ፴፫ል
சுவாமிகள் பாதையில் செல்லும்பேரது மோட்டார் சாரதிகள் இவரை மோட்டாரில் ஏற்றிச் செல்லக் காத்து நிற்பார்கள். இவர் யாருடைய காரில் ஏறுகிருரோ அன்று அவருக்கு அதிக உழைப்புக் கிடைத்து விடும். இதனுல் சுவாமிகளை ஏற்றிச் செல்வதற்குக் கார்ச் சாரதிகள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு நிற்பார்கள். ஆயினும் சுவாமிகள் சில சமயங்களில் எவருடைய மோட்டாரிலும் ஏருது நடந்தே சென்று விடுவார்கள். கொழும்புத் துறையிலிருந்து மருதனுமடச்சந்திவரை இந்த யாத்திரைதினமும் நிகழும் . அதிகமாகக் காலைக்கடன் முடிப்பது மருதனுமடச் சந்தியில் உள்ள ஓர் தனி இடத்திலேயே. இச்சந்தியில் தினமும் வருமன்பர்களுக்குப் புத்திமதி சொல்லியருளுவார். கமத் தொழிலாளரைக் கடவுளென்று கும்பிடச் சொல்லிச் சிரிப்பார். மக்களை வாழ்வாங்கு வாழவைக்கும் "பணியே இவர் தம் வாழ்வாக அமைந்திருந்தது.
சுவாமிகளின் கொழும்புத்துறை ஆசிரமம் புனித சங்கற்பம் " நிறைந்ததாகவே இருக்கும். அங்கு அசுத்த மனதுடன் நூதனம் பார்க்கச் செல்பவர்களை அதட்டி ஏசிக் கலைத்து விடுவார். நன்மனத் தோடு செல்பவர்களுக்கு அரவணைப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும். ஆசிரமத்தில் தங்கும் வேளைகளில் ஆழ்ந்த சமாதி நிலையில் ஆழ்ந்தி ருப்பதைக் காணலாம். 'உள்ளேன் பிற தெய்வம்' என்று மணிவா சகப் பெருமான் கூறியருளியதையொப்ப சுவாமிகளும் தமது குருபா தம் மறவாதிருப்பார்கள். அன்றியும் அவர் ஒர் கருணை வள்ளலாக
வும் திகழ்ந்தார்கள்.
மழையின்றி மக்கள் பெருங் கஷ்டத்துக்குள்ளான காலத்தில் ஒரு நாள் ஒன்றரைப் புசல் பச்சை அரிசி கொண்டுவந்து செல்லர் அப்பு
 
 
 

ஆத்மஜோதி 241.
என்பவரிடம் கொடுத்து 'இதைப் பொங்கி சம்பலும் ஆக்கிவை' என்று சொல்லிச் சென்று விட்டார். பல அன்பர்கள் கூடி அவ்வரிசி யைப் பொங்கி சம்பலும் ஆக்கி முடிய சுவாமிகள் ஒரு குடம் தயிருடன் வந்து சேர்ந்தார்கள். தயிரையும் சேர்த்துக் குழைத்து இறைவனுக்கு நிவேதனம்செய்துவிட்டு எல்லாருக்கும் பங்கீடுசெய்துகொடுத்து தானும் ஒரு கவளம் உண்டு விட்டு 'கட்டுடைத்துப் பாயும்’ என்று சொல்லிச் சென்று விட்டார்கள். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு பெரு மழை பெய்து மானிலங் குளிர்ந்து, மக்கள் மனம் குளிர்ந்து, பயிரினம் துளிர்த்து நாடு செழிப்புற்றது. இதைக் கண்ணுற்ற நமது உள்ளத்தில் பின்வரும் கீதையின் சுலோகத்தின் உண்மை தெளிவாயிற்று.
அன்னுத் பவந்தி பூதானி பர்ஜன் யாதன்ன ஸம்பவ: யக் ஞாத் பவதி கர்ஜன்யோ யக்ஞ: கர்மஸ முத்பவ://
(உணவினின்று உயிர்களுண்டாகின்றன. மழையினின்று உணவு உருப்
படுகிறது. யக்ஞத்திலிருந்து மழை வருகிறது. யக்ஞத்துக்குப் பிறப் பிடம் கர்மம்)
இப் பேரருளாளரின் வியாபக அறிவினை அறியக் கூடிய சம்பவங் கள் அளப்பில.
சுவாமிகள் செல்லுமிடமெல்லாம் மக்களைச் சமயவழிபாட்டில் ஈடு படுத்தி, புராணபடனம், தேவாரபாராயாணம் செய்வித்து வருவார் கள். திருமுறைகள் வேதவாக்கென்பதையும், சக்திநிறைந்தவைகள் என் பதையும் உணர்ந்த சுவாமிகள் அனுபவத்திலும் காட்டியருளியுள்ளார்.
சங்கான நாகலிங்கம் சுவாமிகள் கொடிய வறுமைக்குள்ளாகி மனம் தளர்ந்து யோகர் சுவாமிகளிடத்து ஒர் தினம் வந்து சேர்ந்தார்கள் 6 இவர் வருகைக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் தம்முடனிருந்த பிராமணரை நோக்கி ‘இன்று ஒர் தனவந்தர் வருகிருர், நல்ல சமையல் செய்து வையும்' என்று சொல்லியிருந்தார். நாகலிங்கச் சுவாமிகளை ஒர் ஆசனத்திலிருத்தி "பொற்கிழிப்பதிகம்' பாடப் பணித்தார்: அவர் மனமுருகிக் கண்ணீர் மல்க அப்பதிகத்தைப் பக்தியுடன் பாடி ஞர். நமது சுவாமிகளும் அதில் ஆழ்ந்திருந்தார்கள். இச் சமயத்தில் பல வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கப்பூர் சென்று உத்தியோகம் வகித்த ஒருவர் தமக்கு உத்தியோகம் கிடைத்த நாட் தொட்டு தமது சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருந்து முழுவதையும் தங்கப் பவுணுக மாற்றி யோக சுவாமிகளுக்குச் சமர்ப் பிக்கும் விரதம் பூண்டவராய் தம் மனைவியுடன் அங்கு வருகிருர், நாகலிங்க சுவாமிகள் பொற்கிழிப் பதிகம் பாடி முடிய சிங்கப்பூரிலி ருந்து வரும் தனவந்தரும் தாம் பட்டுப் பையில் சேர்த்து வைத்த

Page 27
242 ஆத்மஜோதி
பவுண்களுடன் அங்கு வந்து யோகர் சுவாமிகளின் திருப்பாதத்தில் வைத்து வணங்கினர்கள். 'பாடினவன் பாடினல் பகவான் எதை யும் அளிப்பான்' என்று திருவாய் மலர்ந்தவராய் அங்குள்ள பிராம ணருக்கு ஒரு பவுனும், நாகலிங்கசுவாமியை ஏற்றிவந்த கார்ச்சார திக்கு ஒரு பவுணும் மீதியை நாகலிங்க சுவாமிகளுக்கும் கொடுத்துத் தனவந்தரையும் ஆசீர்வதித்து உணவருந்தச் செய்து அனுப்பி வைத் தார்கள்.
அருச்சுனனுக்குப் பகவான் விசுவரூப தரிசனம் கொடுத்து மெய்ப் பொருள் விளக்கம் செய்தபின் அர்ச்சுனன் தன் மெய்ஞ்ஞான அனுப வங்களைக் கூறியது போன்றும், சிவபெருமானின் திருவருட் காட்சி கிடைத்தபின் நால்வர் பெருமக்கள் தங்கள் திருவுள்ளப் பாங்கைத் தேவார திருவாசகங்களாய்ப் பாடி யருளியது போன்றும் நமது சுவா மிகளும் தமது குருபரன் திருவருளால் பெற்ற பேரனுபவங்களையெல் லாம் நற்சிந்தனைப் பாடல்களாகப் பாடியருளியிருக்கின்றர். இப்பா டல்களிலிருந்தும் சுவாமிகள் சகசநிட்டிை பொருந்திய சிவானுபூதிச் செல்வர் என்பது அறிய வல்லார்களால் அறிய முடியும்.
மெய்யடியார்களின் ஈடேற்றத்துக்கென சுவாமிகளால் ஆரம்பிக்கப் பட்ட “சிவதொண்டன் நிலையம்’ சிறந்த சாதன நிலையமாக விளங்கு கிறது. இந் நிலையத்தின் மூலம் சுவாமிகளின் ஞானச் செல்வங்களைப் பேணிப் பலரும் பயன் பெற்றுய்யத்தக்க வழிகளை அவரின் அருள் நோக்கம் பெற்ற மெய்யன்பர்களால் தொடர்ந்து செய்யப்படும் என நம்புகிருேம்.
இப்பெரும் ஞான முனிவரால் ஈழம் பெருமை பெற்று விட்டது. அவர் தூல உடல் நீத்த போதும் சூக்குமமாக எங்களெல்லோருடன் வாழுகிருர், அவர்கள் ஆங்காங்கு ஆரம்பித்த நற்பணிகளைக் குறை வின்றித் தொடர்ந்து செய்வதும் அவர் போதித்த வழி நின்று நமக் கும் பிறர்க்கும் பயன்பட வாழ்வதும் சிவானுபூதியே வாழ்வின் லட் சியமாகக் கருதி தூய நெறி கடைப்பிடித்து சிரத்தை குன்ருதிருப்ப துமே எங்கள் யோக சுவாமிகளுக்குச் செய்யும் பூசையும் பிரார்த் தனையுமாகும்.
ஓம் தத் சத் சாந்தி
போற்றியோம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றியோம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை போற்றியோம் நமச்சிவாய புறமெனப் போக்கல் கண்டாய் போற்றியோம் நம்ச்சிவாய ச ய ச ய போற்றி போற்றி.
 

ஆத்மஜோதி 243
யாம் பெற்ற செல்வம்
- சுப்பிரமணியம் -
பூரீ யோகர் சுவாமிகளைப் பற்றி எண்ணும் போது என் னைச் சுவாமிகளிடம் ஆற்றுப்படுத்திய 'ஆத்மஜோதி'யின் நினைவும் உடன் தோன்றுகிறது. தொடர்ந்து, எப்போதோ படித்த கதை யொன்றும் நினைவுக்கு வருகிறது. சென்ற நூற்ருண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பென்
சில்வேனியா மாகாணத்தில்வாழ்ந்துவந்த விவசாயி ஒருவருக்
குத் தாம் பெரிய பணக்காரர் ஆகவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. அவருக்குச் சொந்தமாயிருந்த நிலப்பரப்பு கமத்தொழிலுக்கு ஏற்றதாயிருக்கவில்லை. நிலத்தின் வழி யே ஒரு சிற்றறு ஒடிக் கொண்டிருந்ததாயினும் அதில் ஒடும் நீர் எதற்கும் உதவாததாய்க் காணப்பட்டது. ஆடு மாடுகள் அந்நீரைக் குடிப்பதில்லை. பயிர்களுக்கும் அதைப் பயன் படுத்த முடியவில்லை. கமக்காரரின் உறவினர் ஒருவர் கன டாவில் பெருஞ் செல்வராய் இருந்தார். அவருடன் தொ டர்பு கொண்டு, தமது நிலன்புலன்களை விற்றுக் காசாக்கிக் கொண்டு, பெரும் பொருளிட்டும் நோக்கத்துடன் அக்கமக் காரரும் கனடாவுக்குச் சென்று விட்டார்.
அவரிடம் நிலத்தை வாங்கியவர் முதலில் அந்நிலத்தில் ஒடிக்கொண்டிருந்த அருவியின் நீரை ஆராய்ந்தார். மேற் பரப்பிலேதான் ஒருவகை அழுக்குத்திரவம் ஒடுகிறதென் றும், அதனடியில் ஒடுவது நல்ல நீர் என்றும் அவர் கண் டறிந்தார். நீண்ட பலகையொன்றை அருவியின் குறுக்கே கீழ்ப்பாகம் சிறிதளவு நீரில் அமிழ்ந்திருக்குமாறு வைத்து, அதனல் தடுக்கப்பட்ட உபயோகமற்ற திரவம் வாய்க்கால் மூலம் வெளியே ஒடிச் செல்ல வழி செய்தார். இப்போது பலகையின் மறுபக்கத்தில் வந்து கொண்டிருந்த நீர், கால் நடைகளுக்கும் பாசனத்துக்கும் பயன்பட்டது. தரிசாகக் கிடந்த நிலத்தில் பயிர் பச்சைகள் செழித்து வளரத்தொ டங்கின. சில ஆண்டுகளில் அவ்விவசாயி அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, வேறு இடத்தில் பெரிய பண்ணையொன்றை வாங்கிக் கொண்டு, செளகரியமாக வாழ்ந்து வந்தார்.

Page 28
244 ஆத்மஜோதி
கதையின் முக்கியமான கட்டம் இனித்தான் வருகி /DJյ/ : ஆற்றின் மேற்பரப்பிற் காணப்பட்டதும் பல ஆண் டுகளாகப் பயன்படுத்தப் படாமல் ஒடிக் கொண்டிருந்தது மான திரவம், பல கோடி டொலர் பெறுமான நிலக்கரி யெண்ணெய் என்று பிற்காலத்திற் கண்டறியப்பட்டது. நாளடைவில் அப்பகுதியில் ஒரு பெரிய நகரம் தோன்றி யது. அங்குள்ள எண்ணெய்க் கிணறுகள் வற்ருத செல் வத்தை இன்றும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. தமது நிலத்திலேயே, தமது கண்ணெதிரிலேயே பெருஞ் செல்வத்தை அறிந்து கொள்ளாமல், பணம் சேர்ப்பதற் காக எங்கெங்கோ ஒடியலைந்தார் முதலாம் விவசாயி. ஆற் றில் பெருஞ் செல்வத்தைத் தரும் பகுதியைத் தடுத்து, வீணே ஓடவிட்டு, மற்றைப் பகுதியிலிருந்து ஏதோ அற் பப் பலனைப் பெற்றுக் கொண்டார் இரண்டாம் விவசாயி.
இக் கதைக்கும் பூரீ யோகர் சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பு கூருமலே விளங்கும். இச் சந்தர்ப்பத்தில் எமக்கு யாமே கேட்டுக் கொள்ளக் கூடிய கேள்விகள் இரண்டு உண்டு. எமது காலத்தில், எமது நாட்டில் எம் மோடு வாழ்ந்த இச் சீவன் முத்தரின் பெருமையையும், யாம் கண்டும் கேட்டும் தொட்டும் பேசியும் வணங்கியும் வழிபட்டும் தொடர்பு கொள்ளக் கூடிய தூலத் திருவுரு வுடன் இந்த ஞானச் சுடர் எம்மிடையே நடமாடியதால் எமக்குக் கிடைத்திருந்த பெறற்கரிய பேற்றின் அருமை யையும் எந்த அளவுக்கு யாம் அறிந்திருந்தோம்? அறிந் திருந்தாலும், அழிவற்ற ஆன்மீகச் செல்வத்தை யாம் எந்த அளவுக்கு ஏற்றுப் பயனடைந்துள்ளோம்? 'மேலைத் தவத்தளவே யாகுமாம் தாம் பெற்ற செல்வம்' என்பது இவ் விஷயத்தில் முற்றிலும் பொருந்தும். காசியிலிருந்து எழுதிய கடிதம் தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடியயூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசகம் ஒன்றுண்டு. அவ் விடத்தில் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக் கிருர்கள்; நூதனமான காரணமொன்றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த, இருக்கிற, இருக்கும் யாழ்ப்பாணத்தாரெல் லாருக்குமாகக் கருமாதிகளெல்லாஞ் செய்துமுடிந்துவிட்டன இனிமேலுங்களுக்கியைந்தபடி அன்பாக உலகில் நடந்துஆண் டவன் அடிக்கீழ் அமர்ந்து வாழ்க. - G3 un g5 g6nu nr 6) 366îT.
(

LLe0e0LeLeL0Le0eL0LeL0eL0eS0eeee0eeeeS00eL0eS0L0eL0Le0eL0eL0eL0eL0YL0YL0eYL0eL0LL0LL0LL0LL0SLSLSL0SL0LLLLL0SLS
கழற்கமலம் கருத்துள் வைப்பாம்!
- மரு. பரமகுரு -
+ y +
ஈழமணி நாட்டில் அருள் வளர்த்த செல்வன்
ஈடிணையில் யோகர்ஸ் வாமி, ஆழமணிப் புனல் போலும் தெள்ளறிவின் அருளாளன், அன்பர்க் கென்றும் சீலநெறி காட்டி, வினை தீர்த்தருளும்
குருவாகத் திகழ்ந்த மேலோன், தூலவுடல் உகுத்தந்தோ மறைந்துவிட்டான்! துயர்க்கடலில் ஆழீந்தார் ‘நல்லோர்!
*சிவதொண்டன்' இதழ்மலர்த்தித் தென்றலெனச்
சமயமணம் பரப்பும் தேர்ந்த தவத்தொண்டன்! புகழாசை சற்றேனும்
இல்லாத சால்பால், தொண்டு எவர் செய்தார் எனக்காட்டிக் கொள்ளாத
ஏற்றத்தான்! இறைப ணிக்கே தவம் செய்த தகையாளன்! இவன்பண்பு
தம்பட்டர் தமக்கு நஞ்சாம்!
cur
நிலைகலக்கும் அலைகடலில் நிற்குமலை
நீர்மையெனப் பொய்மை ஓங்கி அலைக்கழிக்கும் மண்ணகத்தே அக மொடுக்கி
ஆன்றமைந்த சாந்த வாழ்வு நிலை பெறுத்த திறல் யோகர் சுவாமிகள் நம்
நெஞ்சகத்தே யமர்ந்து, வாழும் கலை விளக்கி அருள, அவர் கழற் கமலம்
இரண்டினையும் கருத்துள் வைப்பாம்
+ Y +
复

Page 29
Registered at the G. P. O. a.
AqASALSAMATASAMAMAMMAMMMLMqMSqASALASSASASAMeSTSTATASMSMSMeSeSeASMeSeBMSMSBB
சந்தா கே
அன்புடையீல்,
இன்றுடன் ஆத்மஜோதி வது சுடர் உங்கள் கரங்களி ஆண்டின் சந்தாவை அன்ட்
அனுப்பி ஜோதியின் வளர்ச்சி
இந்தியாவிலுள்ள அன்ட்
வழக்க
R. வீரசம்பு, ச
என்ற விலாசத்திற்கு அனுப்
ஆத்மஜோ நாவலப்பிட்டி
GBL u nr 6
ஆத்மஜே
நீங்கள் எதிர்பார்த்திருந் வந்து விட்டது. மலரினுள்ளே யார்களின் கருத்துக்கள் உங்க றைம்பது பக்கங்களிலும் விளங்குகின்றன. முகப்பில் குருநாதன்' மூவர்ணப் பட அவரை நினைப்பவர்க்கெல்லா விலே தபாற் செல
ஆத்மஜோ 5 Tau Guðå i fît. Lą.
G3 unt 6
இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலையத் திரு. நா விஞயகமூர்த்தியால் அச்

s a Newspaper. M. L. 59/300
qASMSMAMSMSASMSASeSASMSASLSAeSMSASMAeSBB
யர்களுக்கு!
பதினருவது ஆண்டின் ஆரு ல் ஒளி வீசுகிறது. இப் புதிய பர்கள் மனமுவந்து உடனுக நிக்கு ஊக்கமளிப்பீர்களாக,
பர்கள் தமது சந்தாக்களே LD GLimó
ம்பு இன்டஸ்ரீஸ், uJib, GBg 6v) ib—9
பி வைக்க வேண்டுகின்ருேம்.
தி கிலேயம்,
- GGBs) Test . ü 一 353
ாதி மலர்
த 'ஆத்மஜோதி மலர் வெளி நாற்பதுக்கு மேற்பட்ட பெரி ளுக்கு விருந்தாகின்றன. நூற் ஆத்மீகக் கருத்துக்கள் சிறந்து என்ன எனக்கறிவித்த எங்கள் பத்துடன் காட்சி தருகின்ருர், ம் பரகதி உண்டு.
SUL 2-50 g (5to தி நிலையம்,
- gà, G86) GT .
清 ー 353
AqATSMSATSASMSSASSASSASSAESMSATSASAeSeSASLSASeSqSAeSeMSASSASSASSAeSqSASASqB தாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் ட்டு வெளியிடப்பெற்றது. 13 4-64
గ