கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.05.14

Page 1
歌
******* .
認讀
·
認讀讀讀
■
讀讀讀讀讀讀讀
తాguTub புருே
ܐ ܝ -
 
 
 
 
 
 

|
!
顺
鶴*/
歴
原属
歴
}}\,so o
- ¿
氢LpT町呜
63. T
*

Page 2
+ ******************* ܚܙܼܝ
i
i க்ம ே
والو (فه
t ○
(ஒர் ஆத்மீக மாத வெளியிடு)
t
--令↔↔↔↔↔↔↔↔↔↔↔↔-↔↔↔-↔↔↔-↔↔↔-***
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் 6T 6) 6) 7 உடலும் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
ஜோதி 16 3 குரோதி வரு வைகாசி மீ" 1உ (14-5-64) 7
. .1
பொருளடக்கம்
1. புருஷோத்தமானந்த முனிவரின் இறுதி உபதேசம் 245 2. புருஷோத்தமானந்த முனிவருடைய உபதேச
- மணிகள் 246 . 3. ஈடில் லதற்குப் பாடில்லே 2.47 4. கடவுள் சந்தேகம் 25() 5. இமாலய முனிவர் மரீ சுவாமி புருஷோத்தமானந்தப் 253 6. ஆத்ம சிந்தன 258 7. திருவள்ளுவரை ஒவ்வொரு வீட்டிலுங் கொண்டாடுக 259 8. யார் மகிழ்ச்சியுள்ள வன் 260 9. சிவானந்த விலாசம் 263 10. அருள் நெறி காட்டும் கலித் தொகையின் கருத்துரை 266 11. துக்க யோகம் 272 * 12. ஆறுமுகத் தங்கம் 276
கவர் 3ஆம் பக்கம்
ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூபா 75,00 வருட சந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தையா 10 ܢܐ "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி (சிலோன்) \
தொலைபேசி எண் 353
 

*++*★++++++++++++++++++++++*****+++++++++++++长++++++
* புருஷோத்தமானந்தமுனிவரின்
இறுதி உபதேசம்
*++→++x++++++++→*++****→*→++++++++++++++++++→++亨***
ஒரே நாமம்:
ஒம் - ஒம் ஒம். ஓங்காரந்தான் பிரதான் சாதனமாம்.
O O
ஒரே கர்மம்:
சத்யம் - சத்யம் - சத்யமே அநுட்டிக்க வேண்டியது. அதுதான் நிலை யானது அதைத்தான் தேடுங்கள்.
ஒரே தியானம்:
"த்வமேவ மாதா சபிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ, த்வமேவ சர்வம் மம தேவ தேவ://”
நீயே என்தாய்; நீயே என்தந்தை; நீயே என்பந்து; நீயே என்தோழன்; நீயே என்வித்தை நீயே என்திரவியம்;
நீயே என்யாவும்; நீயே என்தேவதேவன்.
α கபடத்தை விட்டு, உண்மை குடிகொண்ட இதயத்தில் இறைவனைப் பாவனை செய்து அழையுங்கள் சிக்கிரம் இறைவன் வருவான், வந்து உங்களை தன்னுடை ஹ்ருதயத்தில் அமர்த்தி அருளுவான்.

Page 3
ஆத்மஜோதி
புருஷோத்தமானந்த முனிவருடைய ஆ{
உபதேச மணிகள்
யாம் என்ன அறிவோம்? யாமொன்றும் அறியோம்! ஆகவே, ஈச
னுக்கு இதயத்தை திறந்து, எளிய சாதாரண இயல்புடன் இருத்தல் வேண்டும். இதைத்தான் யாம் செய்ய முடியும்.
யாம் இன்னுர், இன்னபேருடையோம். என்று ஒவ்வொருவரும் தத்தம் உலகைக் கற்பித்துக்கொண்டார்கள். நீ உன்னுடைய கற்பித் துக் கொண்டாய்; யானும் என்னுடைய உலகைக்கற்பித்துக் கொண் டேன். இக்கற்பனைகளை அழித்து விட்டு இறைவனுடைய திருக்கரத் தின் மிசை யாம் உள்ளோம், என்று உணரவேண்டும். அப்போது தான், நாம் கற்பனை உலகில் உழலாது விடுதலை பெறலாகும்.
நீ கிழக்கே போகவேண்டுமானல், மேற்குத்திசையைத் திரும்பியும் பார்க்கக்கூடாது திடசித்தத்துடன்முன்னேறிச்செல்வீர்! செல்வீர்!!
ஒருவன் சர்பத்தை அல்லது கள்ளை அருந்தி, அப்பானத்தினுல் இன் பம் அனுபவிக்கின்றன் என்று கருதுவதுண்டு. ஆனல், உண்மையில் அகத்திலிருந்து உளறும் இன்பத்தையே அனுபவிக்கின்ருன், ஆகவே நீ இன்புறும் ஒவ்வொரு பொழுதும், அவ்வின்பத்தை-புறப்பொரு
அவதானித்துக்கொள்.
ஜபம் செய்யவும். அலையும் மனதை ஜபத்தினுல் கட்டுப்படுத்தி ஒடுக் கினலன்றி தியானம் கைகூடாது.
அப்பனிடம் அன்புகொள்ளுங்கள். அன்பொன்றே வேண்டற்பாலது. அன்பு, அன்பு, அன்புகொண்டவனே ஆசீர்வாதம் பெற்ருேனவான்.
புலன்கள் கள்வரைப் போன்றன. இவைகளைக் கட்டுப்படுத்திவிட் டேன் என்று நீ எண்ணக் கூடும், இவைகளின் பிடியினின்றும் நீங்கி விட்டாயென்றும் சொல்லக் கூடும். ஆனல், உன்னுடைய ஒரு அற்ப குறைபாடு, பெலயினம் புலன்களுக்கு இரையாய் உன்னை வீழ்த்தி விடும். உன்னைப் படுகுழியில் வீழ்த்தவே புலன்கள் எப்போதும் காத் திருக்கின்றன. ஆகவே, எப்பொழுதும், எப்பொழுதும் ஜாக்கிரதை யாய் இரு. விழிப்புடனிரு விழிப்புடன் இரு!!
பெரியவன் யார்? - ஒரு தேவையும் வேண்டாதவனே பெரியோன்.
 
 

ஆத்மஜோதி 247
十十十十十十十十 + + 十 十十 + + + + + + + + + + + + + + + + + + h + i + i + e * 十 十 + + 十 . . . . . . FFL961) லதற்குப் шП 1960 ート・H + 十十十 + + + + + + + + + + + + + (ஆசிரியர்) + + + + + + + + + + + + + 十 + 十十十 十 十十 十 十 十 十十 十 十 + + + + + + + + + + + + + + + *
இது ஒரு பழமொழி, ஈடு என்ருல் வலிமை. பாடு என்ருல் பெருமை. வலியில்லாததற்குப் பெருமையில்லை என்பது பொருள். "யானை இருந்தாலும் ஆயிரம் இறந்
தாலும் ஆயிரம்’ என்பார்கள். யானை உயிரோடிருந்தால்
உரியவனுக்கு மாதத்தில் ஆயிரக் கணக்கில் உழைத்துக் கொடுக்கிறது. இறந்தாலும் அதன் தந்தம் ஆயிரக்கணக் கான ரூபாய்களுக்கு விலையாகிறது. 'பனை பட்டாயிரம் கெட்டாயிரம்' என்ருெரு பழமொழி உண்டு.
மல் இருக்குமாம். பனை மரத்தை ஒரு வீட்டுக்கு மரமாக உபயோகிப்பார்கள். சில ஆண்டுகளில் வீடு இடிந்துவிடும். வீடு இடிந்தாலும் அம் மரங்களை எடுத்து இன்னேர் வீட் டுக்கு உபயோகிக்கலாம்.
இப்படியேதான் பெரியார்களுடைய வாழ்க்கையும். மரங்கள், மாடம் அழிந்த இடத்து வேறு ஒன்றற்குப் பயன்பட்டுத் தன் பெருமை குறையாதவாறு போலப் பெரி யோர் செல்வம் சிறுகிய இடத்தும் பெருந்தன்மையினின் றும் வழுவுதலிலர். இக் கருத்தைப் பழமொழி நானுாற் றின் ஆசிரியர் முன்றுறையரனுர் பின்வருமாறு கூறுகின்ருர்,
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு.
நல்ல குணம் என்ற பெருமைக்கும் கெட்ட குணம் என்ற சிறுமைக்கும் அவரவர்களுடைய செய்கைகளே மாற் றறியும் உரைகல்லாம். இது வள்ளுவர் கருத்து. யாரை யும் அவனுடைய செய்கைகளாலேயே குணமுள்ளவன குற்றமுள்ளவனு என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடி
யும். அதைக் கொண்டே அவனை நம்பலாமா கூடாதா
என்பதைத் தீர்மானிக்கலாம்.

Page 4
248 ஆத்மஜோதி
செல்வம் முதலிய எல்லாச் செளகரியங்களும் நிறைந் திருக்கும்போது ஒரு நல்லவனுயுள்ளான் என்ருல் அதில் பெருமை எதுவும் இல்லை. வறுமையுள் செம்மையாக வாழுவதுதான் பெருமை. அதற்கு மனே வலிமை வேண் டும். பலவித சோதனைகளுக்குள்ளே புடமிடப்படுகின்றன். அப்பருக்குப் பொன் கட்டிகளெல்லாம் கற்களாகத் தெரிந் தன வென்ருல் அது மிக உயர்ந்த சாதனை. இராமகிருஷ்ண
பரமகம்சதேவர் பணத்தைத் தீண்டினலே விஷம் தீண்டி
யது போன்ற உடல் எரிவு ஒன்றிருப்பதை உணர்ந்தார். இவைகள் எல்லாம் மிக மிக உயர்ந்த சாதனைகள்,
அவா நிலையிலிருக்கும் மனிதன் பற்று நிலைக்கு உயர்ந்து, பற்று நிலையிலிருக்கும் மனிதன் அன்பு நிலைக்கு
உயர்ந்து, அன்பு நிலையில் இருக்கும் மனிதன் அருள் நிலைக்கு
உயரும் போதுதான் தன் பெருமையினின்று வழுவாக மனே வலிமை ஏற்படுகின்றது. சாதனையின் முதிர்ச்சிக்குத் தக்கதா கவே சித்த உறுதி ஏற்படுகிறது. சித்தவைராக்கியம் அற்ற வன் குருவளியில் அகப்பட்ட கோரைப்புல்லுக்கு நிகரா வான். உள்ளம் கலங்காத அலையாத நிலையில் உள்ளவர் களே தீரர் என்று போற்றப்படுவார்கள்.
விசுவாமித்திர மகரிஷி பல பன்னிரண்டு வருடகாலத் தவத்தை சில பன்னிரண்டு விநாடிகளில் இழந்து விட்டதாக புராணம் கூறுகின்றது. மனிதனிடத்திலுள்ள எந்த ஒரு சிறு மையும் மலைபோன்ற அவன் பெருமையினைக் கீழே தள்ளி உதைத்து விடும். ஆகவேதான் சாதகன் ஒருவன் ஒவ்வொரு செக்கனும் தனது உள்ளத்தைப் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும். அமைதியான கடலில் எந்தச்செக்கனும் புயல் தோன்றலாம். அதேபோல சாதனையினல் அமைதி பெற்றது போன்றிருக்கும் உள்ளத்தில் எந்த ஒரு சிறிய தீயநினைவி லுைம் அமைதியின்மை தோன்றலாம். ஆதலால் உள்ளத் தின் மிக மிக ஆழம்வரை தியானத்திலே சென்று எந்த ஒரு சிறிய சமஸ்காரத்தையும் இல்லாமற் செய்யவேண்டும்.
சித்த வைராக்கியம் என்பது நாள் தோறும் அணு அணு வாக வளர்ந்து வரவேண்டியதொன்று, சதனையில் ஒழுங் கும் கட்டுபாடும் அமைதியும் காணப்படவேண்டும். ஒரு நாள் சாதனை தவறினலும் அதுவாழ்க்கையில் பெரிய நஷ்ட
த்தைக் கொண்டுவரலாம். இத்தகைய சாதகர்கள் தாம்
岚
 

ஆத்மஜோதி 249
மகாத்மாக்கள் ஆகின்ருர்கள். அவர்கள் இருக்கும் போதும் உலக மக்களுக்குச் சாந்தியைக் கொடுக்கிருர்கள் . மறைந்த போதும் சாந்தியையே அளிக்கின்றர்கள். மாடம் அழிந் தாலும் மரம் பயன் படுவதுபோல பூத உடல் அழிந்தாலும் அவர்கள் ஆத்மா தோன்ருத் துணையாகநின்று வழிகாட்டு
வள்ளுவர் தாம் இறந்தபின் தமது உடலை கட்டிஇழுத்துக் கொண்டுசென்று கழுகுகளுக்கு இரையாகப் போடுங்கள்
லுக்குப் புறம்பாக வாழ்ந்த ஜீவன் முத்தர்கள். உடலின் நிலைமையை மற்றவர்களுக்கு விளங்கச் செய்ய அவ்வாறு செய்தார்கள். வள்ளுவரின் இறந்த உடல்பட்ட ஜீவபிராணி க ள் எ ல் ல 7 ம் பொன்னிறமடைந்தன என்பது கதை :
ஆத்மா பிரிந்தபின்பும் ஆத்மா பிரிந்த உடல் மகத்தானது
χμ
என்பது ஜீவன்முத்தர்கள் மகரின்களைப் பொறுத்தவரையில் உண்மை .
பனையைப்போன்று, யானையைப்போன்று மகான்களு டைய உடல் ஆத்மாவோடிருக்கும் போதும் ஆத்மா பிரிந்த போதும் ஒரேதன்மையான விலையுடையது என்பது சாஸ் திரம் கண்ட உண்மையாகும்.
6) IT U 60 s)
உண்மையை விட்டு விலகாதவனே உண்மையான கடவுள் பக்த னென்று உணர்வாய்.
மகா பாரதம்,
உண்மையினும் உயர்ந்த பொருளில்லை, உண்மையே அனைத்திலும்
வால்மீகி,

Page 5
250 ஆத்மஜோதி
கடவுள் சந்தேகம்
(மாத்தளை - அருணேசர்)
இவ்வுலகத்தில் அநாதி காலம் தொட்டு "கடவுள்' ஒருவர் உண்டு என்றும், அவரே இவ்வுலகத்தையும் அதில் உள்ள எல்லாச் சிவராசி களையும் படைத்தார் என்றும் பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டு வந்திருக்கிறது. அதே காலத்திலிருந்தே கடவுள் என்று ஒரு பொருள் அல்லது உயிர் இல்லை என்பதாகவும் வாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. உலகம் உண்டான காலத்திலிருந்து மக்களின் அறிவு படிப்படியாக விருத் தியடைந்து, அதனல் அவர்கள் தங்களின் வாழ்க்கை நலன்களையும் விருத்தி செய்து வந்திருக்கிருர்கள். அவ்விதமான அவர்களின் அறிவு விருத்தி தற்காலத்தில் சற்றேறக் குறைய அதன் உன்னத நிலைமை யை அடைந்து விட்டதை யாவரும் காணலாம். அதற்கு அறிகுறி யாக இக் காலத்தில் மனித சக்தியாகிய அறிவானது செய்திருக்கும் எவ்வளவோ அற்புத விற்பன்னங்களைச் சான்முகக் கொள்ளலாம்.
ஒரு பொருளையோ அல்லது ஒரு காரியத்தையோ எடுத்துக் கொண்டால், 'அது என்ன? எப்படிப்பட்டது? எவ்விதம் இருக்கிறது? ஏன் அப்படி இருக்கிறது? எப்படி உண்டானது? எதற்காக உண்டா னது? எங்கே இருக்கிறது? என்ன செய்கிறது? யார் உண்டாக்கி னது? எப்பொழுது உண்டானது? எவ்விடத்தில் உண்டானது?' என் னும் பல கேள்விகள்ால் அதன் காரணங்களை ஆராய்ந்து துருவிப் (பார்த்து அதில் மறைந்துள்ள நுட்பமான ஒவ்வொரு காரணத்தையும் விளக்கிச் சந்தேகம், மறைவு என்பன கிஞ்சிற்றும் இன்றி உள்ளது உள்ள
படியே பிட்டுப் பிட்டு வைத்து அதன் நிலைமையை மாசு மறுவின்றித் தெளிவாய் எடுத்துக் காட்டி விடுகிருர்கள். அப்படிப்பட்ட அறிவாளி
களையும்கிண்டிக் கிளறி மூலகாரணங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி களும் வேறு இருக்கிருர்கள். இவ்வளவு அறிவாளிகள் மலிந்துவரும் இக்
காலத்தில் மக்கள், 'கடவுள் இருக்கிருர் என்று நம்புவதா? இல்லை என்று
ሙ› ፵ 9
நம்புவதா?' என்ற சந்தேகத்தில் அடிபட்டு இருபக்கமும் நெருப்புள்ள கொள்ளியின் நடுவில் அகப்பட்ட எறும்புபோலத் திண்டாடும்படி நேர்ந் விட்டது.
ஒரு குழுவினர்:- "கடவுள் இல்லை; இருந்தால் அவர் இருப்பதைக் கார ணகாரியங்களால் அறியப்பட வேண்டும் அல்லவா? அப்படி காரண
پلار
 

ஆத்மஜோதி - 251.
காரியங்களுக்கு அடங்காத-எட்டாத கடவுளை எப்படி ஒப்புக் கொள் வது. ஆதலால், கடவுள் என்பது இப்படியாகத்தான், ஏற்பட் டிருக்க வேண்டும். அதாவது-ஆதிகாலத்தில் மக்கள் பெருக்கம் ஏற்பட ஏற்பட நாளடைவில் அவர்கள் நன்மை தீமை தெரியாது எல்லோரும் கெட்ட வழியில் நடக்கத் துவங்கியிருக்க வேண்டும். அதனல் மக்களிடத் தில் சண்டை சச்சரவு உண்டாகி அமைதியில்லாமல் குழப்பமாய் இருந் திருக்க வேண்டும். அக்குழப்பநிலை குறைந்து எல்லோரும் அமைதியுட னும் ஒற்றுமையுடனும் சமாதானமாய் வாழவேண்டியதற்கு என்னவழி செய்யலாம் என்று சற்று நல்ல மனிதர்கள் கூடி யோசித்துக் கடவுள் ஒரு வர் இருக்கிருர் என்றும், அவரே நம்மை உண்டாக்கினவர் என்றும், நாம் கெட்ட நடத்தையுடையவர்களாய் இருந்தால் அவர் அதற்காக நம்மைத் தண்டிப்பார் என்றும் அதனுல் நாம் கெட்ட நடத்தையில் பிரவேசிக்கக் கூடாது என்றும், நல்வழிகளில் நடந்தால் அவர் பிரியப்படுவார் என்றும் இவ்விதமான காரணங்களைக் கூறி அறிவுக் குறைவாயிருந்த அக்கால மக்களைப் பயமுறுத்தி உலகத்தில் அமைதி ஏற்படுத்தி வந்திருக்க வேண்டும். அக்கொள்கையையே அவர்கள் தங்கள் சந்ததியாருக்கும் போதித்துவர அதுவே நெடுங்காலமாய் வழக்கத்திற்கு வந்து விட்டது.
இடைக்காலத்தில் சற்று அறிவு விருத்தியாகி வந்தபோது அந்த
மக்களில் ஒருவர் இருவர் கடவுளைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டி
βλ.
“கடவுள் எங்கே இருக்கிறர்? அவரை எப்படிக் காணுவது?' என்று கேட்டிருக்க வேண்டும். அவர்களுடைய மூதாதையர் தங்களின் முன் னேர் உரைத்த கொள்கையை மனதில் வைத்துக்கொண்டு அவர்களே நல் நடக்கையை விட்டுப் பிசகாமல் இருக்கச் செய்வதற்காக, “கடவுள் நம் கண்ணுக்குத் தெரியாதவர், அவர் ஆவிரூபமாய் இருக்கிருர், அவரி டம் நாம் பக்தியுடையவராய் இருந்தால் அவரைக் கண்டு கொள்ள லாம்' என்றும் கூறியிருக்க வேண்டும். எனவே, அவர்கள் கடவுளை அறிந்து கொள்ள நினைப்பது கூடாத காரியம் என்று அதற்குமேல் ஆரா யாது விட்டிருந்திருச்க வேண்டும். இப்பொழுது உள்ளவர்கள் முன் ஞேர்களைவிட அறிவு முதிர்ந்தவர்களாகி விட்டபடியால் மறுபடியும் கடவுளைப்பற்றித் தூண்டுதல்பண்ணி விட்டார்கள். ஆராய்ச் சிஅறிவு மிகுந்த இந்த நாளிலும் பழைய காரணங்களையே கூறினல் நம்புவார் களா? ஆகையால் கடவுள் இருப்பதை நம்பமுடியாது. நம்புவதென்றல் அக் கடவுளே, தாம் இருப்பதைப் பிரத்தியட்சப் படுத்தி உலக மக் களிடம் ஏற்படும் சந்தேகத்தை நீக்கித் தாம் இருப்பதை உறுதிப் படுத்திக் காட்ட வேண்டும். அல்லது, சந்திர சூரிய நட்சத்திரங்க ளின் நிலையை விஞ்ஞானிகள் உள்ளது உள்ளபடியே கருவி கரணங் களின் உதவியால் கண்டு பிடித்துப் பிரத்தியட்சமாய்க் காட்டுவது போல் ஆஸ்திகர் என்போர் காண்பிக்கட்டும். அல்லது பழைய

Page 6
252 ஆத்மஜோதி
கொள்கையை நாத்திகர் நம்பும்படி யுக்தி அனுபவங்களால் புத்திக்கு ஒப்பத்தகுந்த காரணங்களால் தெளிவுபடுத்திக் காட்டட்டும். வீணே எங்களை அறிவினர் என்றும் நாத்திகர் என்றும் தூற்றித் திரிய வேண் டாம்' என்று கேட்கிருர்கள்.
மற்ருெருகுழுவினர்:-"கடவுள் இருப்பது உண்மையே. கடவுள் இருப்பதைப்பற்றி அக் காலத்திலேயே ரிஷிகள் ஞான சக்தியாலும் யோகசக்தியாலும் அகக் கண்களால் கண்டு மக்களினத்துக்குத் தெரி வித்துள்ளார்கள். அவர்களின் வழிப்படியே நடந்து பிற்காலத்தோரும் கடவுளைக் கண்டு ஆனந்தித்தும் உள்ளனர். அக்காலத்திலேயே கடவுள் இல்லை என்ற வாதம் உண்டாகித் தான் இருந்தது. வாதிப்போர் ஒப் புக்கொள்ளும்படி கடவுள் இருக்கிருர் என்பது உறுதிப்படுத்தப் பட்டி ருக்கிறது. கடவுளை நேரில் வந்து உறுதிப் படுத்தும்படி சொல்லுகிருர் களே, அந்தக் கசடர்கள் கண்ணுக்குக் கடவுள் புலப்படுவாரா? வேண் டுமானல் அவர்கள் யோகம் ஞானம் ஆகிய வற்றை முறையாகப் பயின்று அதன் மூலம் கடவுளின் இருப்பைத் தெள்ளென அறிந்து கொள்ளட்டும்.” என்கிருர்கள்.
இப்படி ஆத்திக நாத்திக வாதம் பெருத்து மனிதகுலம் தடுமாற்
றமடைந்து இருக்க நேர்ந்து விட்டது. ஆகவே, "கடவுள் உண்டு' என்
பதைப் பற்றிப் பல அறிஞர்கள் வாயிலாய்ப் பிரசங்கங்கள் மூலமாக
வும், பத்திரிகைகள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்களாலும், கோயில் கள் மடங்கள் மூலமாகவும் பிரசாரம் -உபதேசங்கள் நடத்தி வர வேண்டும். இதற்கு இறைவன் அருளால் பொருட் செல்வம் பெற் றுள்ள பிரபுக்கள் தாராளமாகப் பொருள் உதவி செய்ய வேண்டும்.
அதனல் அவர்களுக்கு இம்மைப் பேறும் மறுமைப் பேறும் சித்திக்கும்.
இவ்வழியில் நம் 'ஆத்மஜோதி” செய்து வரும் தொண்டு போற்
றற்குரியது என்று கூறினல் அது மிகையாது.
SASESMSSSLASLESLSSLASeScASMSS
server \le Ner, தி $ன்ே இருதயத்தில் உண்மை அன்புடன் மற்றவர்களுக்கா .iற்றும் மனிதனின் ஆன்மாவில் மாத்திரம் கட காணப்பட முடியும். உலக ஞானம் அனைத்தும் அவ னுக்குத் திருவருளாய் வெளிப் படுத்தப்படும். காலாதியிலி ருந்து இதுவே உண்மை, மேலும் இதுவே சந்ததம் நடை பெறும் . இதுவே உண்மை. இதுவே அன்பு, இதுவே அமைதி, இதுவே உண்மை யருள் வலிமை.
(சொராஸ்தர்)
لال
 

ஆத்மஜோதி 253
+ <@><><><><><><><><><><><><><><><><><><><><><>*
{) இமாலய முனிவர் மரீ சுவாமி புருஷோத்தமானந்தர் : -சாது சண்முகவடிவேல் ఒ ܝܝܝܝܝܝܝܝܘ ܊
அற்ப மனிதராகிய யாம் இறைவனுடைய பரங்கருணைத் திறனை
என்னென்பது? தனி-பெரும்-கருணை, தனிப்பெருங் கருணை என்று பூரித்
துக் கருணைப்பெருஞ்சோதியுட் கரந்தார் திருவருட்பிரகாச வள்ளலார் பூரீ இராமலிங்கர். திருவாசகத்துக்குப் பொருள் “இதோ' என்று திருச் சிற்றம்பலப்பிரானைக் காட்டியதும்: ‘அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே' என்று வான்கருணைத் திறத்தை வியந்து மாணிக்கவாசகர் ஜோதி வடிவெய்திப் பரஞ்சோதியுட் கரந்தார். குலம் பொல்லாத, குணம் பொல்லர்த, குறியும் பொல்லாத, குற்றமே பெரி துடைய எம்போன்ற கொடியோர்க்கும் எத்தனை விதங்களிற் கருணை வைத் தாய் என்று திருநாவுக்கரசுபிரான் வியந்து, ஆர்த்து:
“இத்தனையும் எம்பரமோ? ஐய!
ஐயோ!! எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே'
என்று அருளிய தேவாரத்தின் உணர்வு ஊனுருவி, உயிருருவிப் பாய் கின்றது.
பெருநெருப்பின் வெப்பத்தை தாங்கலாம், ஆனல் பரங்கருணையின் தண்மையைத் தாங்க இயலாது. மகான்களே கருணைத் திறத்தை நினைத் ததும் நிலைகுலைந்து, ஆர்த்து ஆடுகின்றனர்; மூர்ச்சித்து விழுகின்றனர். அது மட்டுமா? உடலே இருந்த இடம் தெரியாது திருவருட் கருணையிற் கரைந்து ஜோதியாயும் மறைந்தனர் என்று சிந்திக்கும்போது:
“எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனுே? y sy
என்ற கற்பனை கடந்த வியப்பையல்லவோ உண்டாக்குகின்றது!
பரம கருணுநிதியாகிய இறைவன் இப்பூவுலகில் மக்களுக்கு படிப் படியாய்க் கருணைபாலித்து, வாழ்க்கைத் துயரினைத் துடைக்க வகுத்த வழிவகையில், மகான்கள் மூலம் பாவிக்கும் கருணைகே ஒப்பற்ற துணை பாய் விளங்குகிறது. மக்களுக்கு இறைவன் தோழருடைய கருணையினுல்
"ஆறுதல் அளிக்கின்றன்; துணைவியினுடைய கருணையினல் துயரினைத்
தாங்கும் சக்தியை அளிக்கின்ருன்; தாயினுடைய தூய அன்புக் கருணை யினுல் உயிருக்கும் உடலுக்கும் புத்துணர்வு கொடுக்கும் சாந்தியை அளிக்

Page 7
254 ஆத்மஜோதி
ன்ெ(/ன் ஆல்ை மகான்களின் மூலம்தான் துன்பம் அனைத்தையும் ஒருங்கே துடைத்து, யாண்டும் அழியாச் சச்சிதானந்தப் பேற்றைக் கொடுத்துத் தன் திருவடி நிழலின்கண் வைத்தருளுகின்ருன், மகாத் மாக்களின் தபோபலத்தின் சக்தி நிறைந்த சாந்த-சிந்தனை அலைகளாற் தான் இருகாற்கொடு விலங்காய மனிதர் விளைவிக்கும் துன்பங்களின் அக்கிரம வெப்பம் தணிந்து உலகம் அமைதி பெறுகிறது.
இப்பேருண்மையின்காரணத்தினல், மெய்ஞ்ஞானிகள்எவ்வித ஆடம் பரமுமின்றி அமைதியாகத் திருவருட்பணி புரிகின்றனர். இவ்வண்ணம் ஹிமாலய முனிவர் பூரீ சுவாமி புருஷோத்தமானந்த அடிகள் வேத கால முனிவர் போன்று இமயமலைச் சாரலில் இயற்கைச் சூழலில் குரு குலம் நடாத்தி,நல்லருளாளரைப்பயிற்றி அவர்களை அருட்பணிபுரியும்படி ஆசீர்வதித்து உலகுக்கு அளித்தார்கள். சுவாமிகளுடைய ஆச்சிரமம் ஹிமாலயத்தில், ரிஷிகேசத்திலிருந்து பதினைந்து மைல்களுக்கு அப்பால், வசிஷ்ட முனிவர் தவமியற்றிய இடமென்று கருதப்பட்ட வசிஷ்ட குகை யில், கங்காநதி தீரத்தில், குடிமனையற்ற, மிகவும் ரம்மியமும் அமைதி யும் குடிகொண்ட உள்ளத்தைக் கவரும் இயற்கை வனப்புமிக்க சூழலில் அமைந்திருந்தது. இம்மெய்ஞானியின் ஆச்சிரமத்துக்குப்பேர் கிடையாது. வசிஷ்ட குகை சுவாமிகள் ஆச்சிரமம் என்று மக்கள் அழைத்தனர். ரிஷி கேசத்துக்கு அண்மையிலிருந்தும் அங்கு விளங்கும் ஆச்சிரமங்களின் நவீன அமைப்பு, ஆடம்பரத்தின் வாசனைகூட எட்டாத அளவில் சுவாமி கள் அமைதியாகவாழ்ந்தனர். இரு பெரியகுகைகள் 50அடி நீளத்திலும், 20அடி நீளத்திலும் இருக்கின்றன. ஒரு சிறிய கட்டடம்மாத்திரம் ஐந்து அறைகள் உள்ளதாய் மூடுசாந்திட்ட கூரையுடன், அதன் மேல் பெரிய அறை ஒன்று சுவாமிகள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆத்மீக சாதனைக்கு, மிக்க துணையான இயற்கைவனப்பின் சூழல் கெட்டுவிடு மென்ற காரணத்தினுலும், உலகவிவகாரகுழல் தானே வந்துவிடுமென்ற காரணத்தினலும், கட்டிடங்கள் அமைக்க சுவாமி விரும்பவில்லை. வேத காலத்து முனிவர்கள் அருளிய ஞானப் பொக்கிஷம் இருக்கும் பொழுது நாம் எழுத வேண்டியது, ஒன்றுமில்லை யென்று, சுவாமிகள் ஒருநூலும் எழுதவில்லை. மலையாள அன்பர்கள் பேரன்பினுல் கட்டுப் பட்டு "ஆத்ம கதை' என்ற தன்னுடைய அருள்வாழ்வுச் சரிதத்தை மாத்திரம் எழுதி யுள்ளார். இதன் ஆங்கில ஆக்கம் பலகாலத்தின் பின்னர் வெளிவந்தது.
சில ஆச்சிரமங்களில் பட்டிமாடுகள்போன்று எண்ணிக்கைக்கும் ஆடம்பரத்துக்கும் அதிக சீஷர்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய தொல்லையால் இடருற்று, அவர்களின் சீர்கேட்டால் ஆச்சிரமமானது ஆ! சிரமம்! சிரமம்!! என்று வேதனைப்படுமளவுக்கு நெறிதவறிக் குரு வும் சீவுரும்கோடேறிவழக்குப்பேசும்கட்டத்திலிருக்கலாகாது என்றகார ணத்தால் சுவாமிகள் 5 வருடத்துக்கு ஐந்து சீஷர்களைப் பயிற்றியபின்
 
 

ஆத்மஜோதி 255
لی۔۔۔'S
விதிப்படி சந்நியாச தீட்சை அருளி, சுதந்திரமாய் உலகில் சென்று அருட்பணிபுரியுமாறு அவர்களை ஆசீர்வதித்தனுப்புவார். ஆச்சிரமவாழ்க் கையில் சீஷர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை; ஆணுல் அவர்கள் தாம்தாம் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துவர். з / ) ү
சுவாமிகளுடைய ஆரம்ப வாழ்க்கையில் பாகவதம் என்னும் வைஷ் ணவ பக்தர்களுடைய சரிதாமிர்தம் மிக்க துணைசெய்தது. பள்ளிப்படிப் பின் பின்னர் பூரீ இராமக்கிருஷ்ணருடைய போதனைகளால் கவரப் பெற்று அவருடைய நேர் சீடரான பூறி சுவாமி நிர்மலானந்தருடைய தொடர்பால் சாதனையும், சேவையும் தீவிரமாக நடைபெற்றன. அநேக மாக மலையாளத்தில் இராமக்கிருஷ்ண ஆச்சிரமங்கள் சங்கங்கள் ஸ்தா பிப்பதிலும், சாதகர்களைப் பயிற்றுவதிலும் சுவாமி நிர்மலானந்தருக்கு உறுதுணையாய் விளங்கினர். இக்காலத்தில், பூறி சுவாமி பிரமானந்தர் (பூரீ இராமக்கிருஷ்ணருடைய அருட்புத்திரர்) தென்னுட்டுக்கு விஜயம் செய்தபொழுது அவர்களிடம் மந்திரோபதேசப் பெரும் பேறும் பெற லாயினர். பூரீ பிரேமானந்தருடைய அருட் கம்பீரமும் சகஜ சமாதி யின் பொலிவும் பால்ய வயதில் இவருக்கு மனதில் நன்ருய்ப்பதிந்து விட் டது. இங்ங்னம் பன்னிராண்டு பூரீ இராமக்கிருஷ்ண பரமஹம்சதேவரு டைய திருப்பணியானபின், பேலூர் மடத்தில் தலைவராய் விளங்கிய பூரீ சிவானந்தரிடம் (மஹாபுருஷ்ஜி)1923ம் ஆண்டு சந்நியாச தீட்சையும் சுவாமி புருஷோத்மானந்தபுரி என்னும் நாமமும் பெற்ருர், உத்தம மகான்களிடம் உபதேசமும், சந்நியாசமும் பெற்ற பேரருட் பிரசாதியா கிய சுவாமிகள்,
பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கரிய பிரானடி பேணுர்
பெறுதற்கரிய பிராணிகளெல்லாம் பெறுதற்கரிய பேறிழந்தாரே. - என்று திருமூலர்
அருளியபடி இப்பிறவியிலே சிவானுபூதியடைய வேண்டுமென்று பேரார்வங்கொண்டு, மகான்களுடைய தரிசனத்திலும் சி ல கால ம் கழித்து, ஈற்றில் வசிஷ்ட குகையில் அமர்ந்து தவமியற்றி சித்தியெய்தி உலகுக்கும் அச்சிவானுபூதிச் செல்வத்தை அமைதியாய் வழங்கினர்.
சுவாமிகள் மலையாள தேசத்தில், திருவல்ல என்ற கிராமத்தில் பார்வதி அம்மையாருக்கும், பூரீநாராயணன் நாயருக்கும் 1870ம் ஆண்டு அவதரித்தனர். இவருடைய பிள்ளைத் திருநாமம் நீலகாந்தன். புத்திரப்பேறின்றி, தாய்தந்தையர் விரதம், பூஜை, அநுட்டானங்களை மேற்கொண்டு, தான தருமங்களை இயற்றி இறைவனை வேண்டி தவத்
α.

Page 8
256 ஆத் மஜோதி
வில் பூத்தமலராக, சுவாமிகள் இயல்பிலேய்ே அருள் நாட்டமுடைய வாய்த் திகழ்ந்தார்கள். கல்வித்திறமும் பெற்றிருந்தனர். மெட்ரிக் குலேஸன் வரையும் படித்து வருங்காலத்தில் வாதநோயுற்று ஐந்து வரு ங்களாயும் குணமடையாது, த ன் ன ல் பெற்ருேர் துன்புறுவதைக்
காணச் சகிக்காதவராய் ஓரிரவு ஒருவரும் அறியாது குருவாயூரப்பனை நோக்கி யாத்திரை சென்ருர், இலங்கையில் கதிர்காமம் எப்படியோ
அப்படியே குருவாயூர் தென்னிந்தியாவில் மகிமை நிறைந்தது. நீலகண் இறுக்கு குருவாரூரப்பன் தோன்ருத் துணையாய் நின்று, அற்புதமான முறையில் க்ஷேத்திரத்தில் கொணர்ந்து வாத நோயையும் பூரணசுகமாக் விர்ை! இதுதான், சுவாமிகளுடைய வாழ்வில், இறைவன் தடுத்தாட் கொண்ட கட்டமாகும். இவ்வருட்சம்பவத்தின் பின்னர் மேற்கூறியபடி மகான்களுடைய கடாட்சத்தால் திருவருட்பேற்றைப் பெற்றுப் புகல டைந்தோர்க்குப் பிறவிக்கடலினின்றும் கரையேறுவதற்குக் கருணை பாலித்து வந்தனர்.
சுவாமிகளுடைய கருணைக்கு "அரசர்களும் தனவந்தர்களும். சாமா னிய குடியானவர்களும் பாத்திரமாயினர். பூரீ இராமக்கிருஷ்ணருடைய தூய திருவருட் பரம்பரையின் வழித்தோன்றலாதலால், பட்டம் பதவி யை மதித்தாரல்லர்; யாண்டும் பெருநெறியில் நின்று அருள்பாலித்து எல்லோரையும்சமநோக்கில்வைத்தனர். சுவாமிகளுடைய வாழ்க்கையில் நடந்த திருவருள் மகிமைச் சம்பவங்களிற் சிலவற்றைக் கூறுவது இன்ப மாகும் திருக்கேதார-பத்திரி யாத்திரை மேற்கொண்ட காலத்தில் வயிற்று வலியால் அடிக்கடி துன்புற்ருர், ஒரு நாள் வலிப்புத் தாங்கொ னது, மலையினின்றும் வீழ்ந்து தற்கொலை புரிந்து கொள்ளுவோம் என்று தனிமையான இடத்தை நாடிச் சென்றனர். ஒரு மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தினின்றும் ஒர் அசரீரி எழுந்தது: “இங்கே ஒரு வங்காள வைத் தியர் இருக்கின்ருர், அவர் ஊசி மருந்துமூலம் பலரோகங்களைக் குணப் படுத்தியுள்ளார். பொருள் அவாஞ்சையில்லாத உத்தமர், அவர் பணத் தைத் தேடுபவர் அல்லர்’ ஒரு மனிதரையும் காணுத இடத்திலே இவ் வாக்கு எழுந்ததை எண்ணிப் பேராச்சரியத்துடன் மேலேறி வீதியைய டைந்து, அவ்விடத்தில் ஒரு வங்காள வைத்தியர் இருப்பதை அறிந்து வைத்தியரிடம் சென்று விபரத்தை அறிவித்தார்! வைத்தியரும் மிக்க அன்புடன் சிகிச்சை செய்ய நோய் குணமாகியது. இங்ங்ணம் சுவாமிகள் சென்ற இடமெல்லாம் இறைவனும் தொடர்ந்து காத்தருளிய சந்தர்ப் பங்களே எண்ணும் பொழுது:
'புறம் புறம் திரிந்த என் செல்வமே
சிவபெருமானே'
என்ற மணிவாசகம் பொருத்தமாய்த் திகழ்கின்றது.
 
 
 

ஆத்மஜோதி 257
1951ம் ஆண்டு சுவாமிகள் மலையாளத்துக்கு விஜயம் செய்த பொ ழுது, அவர்களுடைய நல்ல பக்தர் ஒரு இளைப்பாறிய நீதிபதி, பலரோ கங்களினற் பீடிக்கப்பட்டு படுக்கையிலே, அசைய முடியாது மிகவும் அவஸ்தையுற்றர். ஆனல் சுவாமிகளுடைய அருள்நோக்குப் பெற்றதும்
எழுந்திருந்து நடக்கவும் சக்தி பெற்ருர்!!
சுவாமிகள் நிறைந்த கருனேயுடையவர்கள். பொதுவாக அவர் உபதே சிக்கும் இதயமொழியானது: "கருஃன காட்டுங்கள், கருணை காட்டுங்கள், மற்றவர்களுக்கும் கருனே காட்டுங்கள்' என்பதாகும். இங்கனம் கருணை வள்ளல் பல சாதுக்களே உருவாக்கி உலகுக்கு ஈந்து, பல அன்பர்களுக்கு கருணை பாலித்து அமைதியாக வாழ்ந்து 1961ம் ஆண்டு மகாசிவராத் திரியன்று மஹாசமாதியாகினர்கள். இச்சுபதினத்தில் சிவபதம் பெற்ற சான்றும் அவர் பெருமையை மேலும் விளக்கி நிற்கின்றது.
镑
கடவுள் உறைவிடம்
熬签
}
இறையாய் நிலனுகி எண்டிசையுந் தானுய் மறையாய் மறைப் பொருளாய் வானுய் - பிறை
வாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான் உள்ளத்தி னுள்ளே யுளன் .
- பேயாழ்வார்.
சொல்லிலுஞ் சொல்லின்முடிவிலும் வேதச்சுருதி
স্টিক্স யிலும் ନିଷ୍ଟ x அல்லினு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து $ šS விட்டோர் x x இல் லினு மன்ப ரிடத்திலு மீச னிருக்கு மிடங் dSSS & கல்லிலுஞ் செம்பிலுமோ விருப்பானெங்கள் கண் * ணுதலே. g
e * O
". *** LI L-L9-607955TIT. à§

Page 9
ஆத்மஜோதி
ஆத்ம சிந்தனை 驚
ஆங்கிலம்:- புவாது உதுமான் தமிழாக்கம்:- K.M.P. முகம்மது காசிம்
எங்கு ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்று பட்டு விடுகிற
தோ அங்கு நான் என்ற அகந்தை சூனியமாகி விடுகிறது.
எங்கு பொறுமை பிரகாசிக்கிறதோ அங்கு ஞானம் ஆட்சி புரிகிறது.
எது எல்லாவற்றையும் உணர்கிறதோ அதையே நீ அறி.
அறியப்படும் பொருள் அறிவுக்கு அன்னியமல்ல.
இதயம் எதை சேகரிக்கிறதோ அதை புத்தி வினியோ கிக்கிறது.
உண்மையின் உயர்விலே சதாவாழ்வதே உயர்வான மதம்.
உண்மையின் தரிசனம் உன்னிடத்திலேயே உள்ளது.
தன்னையே தான் வெற்றி கொள்ள சிறந்த மார்க்கம் தன்னையே தான் ஆராய்வதே.
தன்னையே தான் ஒழுங்குபடுத்துவதே மாபெரும்சாதனை. யாவற்றையும் விளங்கியும் மெளனமாக இருப்பவனே உண்மையான அறிஞன்.
அறிவுடன் மெளனமாக இருப்பதிலேதான் மெய்ஞ்ஞா னத்தின் நுட்பத்தை உணர முடியும்.
நான் எனும் அகந்தையை அடியோடு அழிப்பதே உண் மையான அன்பின் செயல்.
இதயத்தில் அகந்தையற்று அமைதியாக இருப்பதே சம யம் காட்டும் சன்மார்க்கம்.
சமயத்தின் சம்பிரதாயங்கள் மைல் கற்களே அல்லாது நம்மை ஏற்றிச் செல்லும் வாகனமாகாது.
இம்மையென்றும் மறுமையென்றும் ஒன்றுமில்லை. உண் மையில் உள்ளது உணர் வெளியே.
 

ஆத்மஜோதி 259
திருவள்ளுவரை ஒவ்வொரு வீட்டிலுங் கொண்டாடுக
(தமிழ்மறைக்கழகத்தலைவர்திரு.K.P.இரத்தினம்விடுக்கும்வேண்டுகோள்)
சென்ற பன்னிரண்டு ஆண்டுகளாகத் தமிழ்மறைக் கழ கம் திருவள்ளுவர் திருநாளைத் தமிழ்மக்கள் வாழும் நாடுநக ரங்கள் யாவற்றிலும் கொண்டாடச் செய்துள்ளது. திருக் குறளின் அருமை பெருமைகளே நன்கு அறிந்த பெருமக்கள் யாவரும் சாதி சமய வேறுபாடுகளின்றியும், அரசியற் கட்சிப் பிளவுகளைப் பொருட்படுத்தாமலும் ஒன்றுபட்டு ஒரு நாளி லே திருவள்ளுவரைக் கொண்டாடி வருகின்றனர். திருவள்ளுவர் திருநாள் 26-5-64,
இந்த ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் 26-5-64 செவ்வாய்க்கிழமையாகும். இந் த ந |ா ளை ச் சிறப்பாகக் கொண்டாடுமாறு உலகமெங்கும் உள்ள தமிழ்ப் பெருமக் களைக் கேட்டுக்கொள்ளுகிருேம். திருவள்ளுவர் திருநாள்
தமிழினத்தின் பொதுத் திருநாளாக ஒவ்வொருவர் வீட்டி
லுங் கொண்டாடப்படல் வேண்டும். திருக்குறளும் திரு வள்ளுவர் படமும் ஒவ்வொரு தமிழர் வீட்டையும் அணி
செய்தல் வேண்டும்.
தமிழ் நாட்டரசினர் சென்னைச் சட்டமன்றத்தைத் திரு வள்ளுவர்படத்தால் அண்மையில் அணியுறுத்தினர். எல்லாப் பொது நிலையங்களும், தமிழ்மன்றங்களும் திருவள்ளுவர் படத்தைத் தங்களுடைய மண்டபங்களில் வைத்துப் போற் றல் வேண்டும்.
காளிதாசர், தாகூர், பாரதியார் முதலிய புலவர் பெரு மக்களின் திருநாள்களைக் கொண்டாடுதல் போலத் திருவள் ளுவரின் திருநாளையுங் கொண்டாடுமாறு தமிழ்நாட்டு அர சுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
முன்னைய ஆண்டுகளிற்போல இவ்வாண்டும் 26-5-64 இல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புமாறு எட்டு வானெலி நிலையங்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளோம். திருவள்ளுவர் 2000 ஆண்டு
திருவள்ளுவர் தொடராண்டை இப்பொழுது பலர் வழங் குகின்ருர்கள். எல்லாத் தமிழர்களும் வழங்கவேண்டுமென்று மீண்டும் கேட்டுக்கொள்கிருேம். சென்ற சில ஆண்டுகளாக நாம் நினைவுறுத்திவரும் திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு நிறைவு விழாவை 1969 இல் மிகச் சிறப்பாகக் கொண்டாடு தற்கு இப்பொழுது பற்பல திட்டங்களை வகுத்து முயலுமாறு மீண்டும் வலியுறுத்த விழைகிருேம்.

Page 10
260 ஆத்மஜோதி யார் மகிழ்ச்சியுள்ளவன்
淤篮懿9,5店m函un。懿
'குறுாசியசு' என்பவன் ஆசியாக் கண்டத்திலுள்ள
சாடிசு என்னும் தேசத்தில் அரசு புரியுங்கால், அவனுடைய ஆட்சியில் அந்நாடு மிகச் செழிப்புற்று விளங்கியது. அத ஞல் உலகில் உள்ள செல்வந்தர் எல்லோருள்ளும், அவன் செல்வத்திற் சிறந்து விளங்கினன். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையையும், அணி அலங்காரங்களையும் கண்ட எல் லோரும் உலகத்தில் மிக மகிழ்ச்சியுள்ளவன் அவனேயெனக் கொண்டாடினர்கள். குறுரசியசும் விரும்பிய யாவையும் தான் பெற்றுள்ளதாக எண்ணியதால், தானே உலகில் மிக மகிழ்ச்சியுடையவனெனக் கருதலானன். அவ்வேளையிலே அறிவிற் சிறந்த ஞானியென்ப் பலராலும் பராட்டப்படும் * சொலொ மன்' என்பவன் அயலூரிலிருந்து குறுரசியசைக் காணச் சென்றன். பெரும் புகழ் பூத்த சொலொமனுடைய வருகையைக் குறித்துக் குறுாசியசும் பெருமித மடைந்தான்.
தனது அரண்மனையையும், சித்திர வேலைப்பாடமைத்து
விலைமதிப்பற்று அங்கு விளங்கும் பல அரிய பொருட்களையும்,
சுற்றியுள்ள நந்தவனம், செய்குன்றுகள், நீரோடைகள் முதலியவற்றையும் சொலொமனுக்குக் காண்பித்து உலகில் தன்னிலும் பார்க்க மகிழ்ச்சியுள்ள எவனும் இருக்கிருணு வென வினவினன். செர்லொமன் சிறிது நேரம் யோசித்த பின், அதென்சு நகரில் 'தெல்லசு’’ என்னும் ஒர் ஏழை யுண்டெனப் பதிலளித்தான். அதைச் செவியுற்ற குறுாசியசு
பெரிதும் ஏமாற்றமடைந்து எக்காரணத்தினுல் தெல்லசு தன்னிலும் பார்க்க மகிழ்ச்சியுடையவனுகக் கருதப்படுகி
முன் என்பதை விளக்குமாறு வேண்டினன்.
நல்லாட்சி நடக்கும் ஒரு தேசத்தில் அவன் வாழ்ந்தான். அவனுடைய மனைவி மக்கள் அவன் சொல்லைத்தட்டி ஒரு போதும் நடந்ததில்லை, முடிவில் தனது நாட்டுக்காகப் போர் புரிந்து அவன் உயிர்நீத்தான் என்று சொலொமன் விளக்கிக் கூறினன்.
இதை வாசிக்கும்போது புறநானூற்றில் காணும் பிசி
ராந்தையருடைய பின் வரும் பாடல் என் மனக் கண் முன்

ஆத்மஜோதி 261 ܓ
தோன்றி, அறிவுடையோர் கொள்கை, எந்த நாட்டில் என்ன சூழ்நிலையில் அவர்கள் இருந்தாலும், ஒரே தன்மை யானது என்பதைப் புலப்படுத்தியது.
'யாண்டு பலவாக நரையிலவாகுதல் யாங்காகிய ரென வினவுதிராயின் மாண்டவென் மனே வியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனேயர் என் இளஞரும் வேந்தரும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றேர் பலர் யான் வாழும் ஊரே'
அப்படியாயின் தான் இரண்டாவதாகவா கிலும் வரவில்லை யாவென்று திரும்பவும் குறுரசியசு கேட்டான். திரும்பவும் ஏமாற்ற மடைய வேண்டியிருந்தது. கிரேக்க நாட்டில் இரு வாலிபர்கள் இருந்தார்கள். உடல் வலிமையிலும் மனத் தூய்மையிலும் அவர்கள் சிறந்து விளங்கியதோடு, தங்கள் தாயைத் தெய்வமெனப்போற்றிப்பாதுகாத்தார்கள். கோயி லிற்பிரார்த்தனைசெய்துகொண்டிருக்கும்போதுஎவ்விதநோயு மின்றி அவ்விருவரும் உயிர் துறந்தார்கள் என்று கூறினன். அதைக்கேட்டதும் குறுாசியசுபெரிதும் ஆத்திரமடைந்துஎக்கா ரணத்தால் அரசர்களிலும் பார்க்க அவ்வேழைகள் சிறந்த வர்களெனக் கேட்டான். சொலொமன் சிறிதேனும் பதட் டமடையாது, ‘அரசே! இதுவரை நீர் மிக மகிழ்ச்சியாய்க் காலங் கழித்தீர் என்பது உண்மை. ஆனல் உமது ஆயுள் முடிவதற்குள் என்ன சம்பவிக்கலாம் என்பதை நீர் எப்படி அறிவீர்? நாளையே ஏதும் கஷ்டம் ஏற்படக் கூடுமல்லவா? ஆகையால் ஒருவன் இறந்த பின்னரே அவனுடைய சீவியம் எப்படியான தென்பதைத் தீர்மானிக்க முடியும் எ ன விளக்கினர்.
சிறிது காலத்துக்குப்பின் 'சைரசு' என்னும் பாரசீக ம ன் ன ன் அவனது நாட்டையழித்துக் குறுாசியசையும் கைதியாக்கினன். குறுாசியசு தனக்கு நேர்ந்துள்ள அவமா னத்தையும் கஷ்டங்களையும் நினைத்து மனமுடைந்து, தப்பிக் கொள்வதற்கும் ஒருவகைப் பிரயத்தனமும் செய்யாது விதியைநொந்து கொண்டு வாளாவிருந்தான். அதேசமயம் பாரசீக மன்னனின் கட்டளைப்படி அவனை உயிரோடு எரிப் பதற்காக விறகடுக்கித்தீயும் மூட்டபட்டது. அப் போதும் குறுாசியசு மனஞ்சளைக்காது, திரும்பத் திரும்ப

Page 11
262 ஆத்மஜோதி
'சொலொமனே" சொலொமனே, நீ எவ்வளவு அறிவாளி, தீர்க்கதரிசனமுள்ளவன். நீ கூறியது முற்றிலும் உண்மை’ எனப்புலம்பிக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்லிப் புலம்புகிருன் என்பதை அறிய ஆவலாகிப் பாரசீக மன்னன் அவன் கூறுவதன் அர்த்தத்தை விளக்குமாறு பணித்தான். குறுாசியசு மெளனம் சாதிப்பதைப் பார்த்து, மன்னன் மேலும் மேலும் அவனைத் தூண்டினன், அவனது வற்புறுத் தலுக் கிணங்கி சொ லொமன் தனது நாட்டிற்கு விசயஞ் செய்ததையும், தனக்குப் புகட்டிய புத்திமதிகளையுங் கூறி, அவற்றைத் தான் புறக்கணித்ததின் மடமையை எண்ணி வருந்துவதாயும், அவ்விதம் எந்த மன்னனும் செய்யக் கூடா தென்றும் விளக்கினன். அவற்றைக் கேட்டதும் பாரசீக மன் னனுடைய நெஞ்சில் மின்னல் பாய்வதைப்போல் இரக்க உணர்ச்சி உண்டாகித் தானும் ஒரு மனிதனுயிருக்கும் போது குற்றம் செய்யாத இன்னெரு மனிதனைத்தான் எப்படிக் கொல்லலாம், நாளை தானுந்தன் இராச்சியத்தை இழந்து இவ்வகை இன்னல்களுக்கு ஆளாகக் கூடுமல்லவா எனச்சிந் தித்து குறுாசியசுக்கு உடனே விடுதலையளிக்குமாறு பணித் தான். பின் இவ்விதம் நற்புத்தி புகட்டியதற்காக அவனைப் பெரிதும் புகழ்ந்து, அவனுடைய ஆட்சியைத் திருப்பிக் கொடுத்து, அன்றுமுதல் அவனுடன் நட்புரிமைபூண்டு தரும வழியில் ஆட்சி புரிந்தான்.
குறிப்பு:- ஆங்கிலக் கதையொன்றைத் தழுவி எழுதப்
பட்டது.
கடவுள் உறைவிடம்
எங்கே கருணை யியற்கையி லுள்ளன அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவ ம்ே யாரே யென்னினு மிரங்குகின்றர்க்குச் சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே.
- இராமலிங்க சுவாமிகள்,
பொய்யா நா வதனுல் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் செய்யா னுங்கரிய நிறத்தானும் தெரிவரியான் ம்ை யார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலையதே சுந்தரர்,
 

ஆத்மஜோதி - 263
yyyysy yysysye yysy yy sysy yyyy Lsysysy yysyyyyyyyyysyOyyeye
8 3چ
3. சிவ Π 60Thσ5 6Ym6) IIJFD 麒 峪、 沿}3恪
(சமஸ்கிருத மொழியில் பேராசிரியர் ராமகிருஷ்ணபட் எழுதிய காவியம்)
தமிழாக்கம்: கோ. சுந்தரமூர்த்தி. எம். ஏ
முதற்சுருக்கம்: முன்னேர் சரிதையும், பிறப்பும்.
சத்துவம் அமலம் என்பார்
தன்மையில் சாந்தம் என்பார் நித்தியத் தலைவன் என்பார்
கருணைச் செல்வன் என்பார் சத்துரு வென்றேன் என்பார்
இரண்டிலா ஆசான் என்பார் இத்தனை உலகும் போற்றும்
பிரம்மத்தைப் பணிந்து நின்றேன்.
வல்ல புலவருக் கெல்லாம்
நல்ல தலைவன் ஆவான் எல்லாத் தேவராலும்
துதிசெய் ஈசன் ஆவான் அல்லல் அத்தனையும்
போக்கும் புனிதன் ஆவான் நல்ல வெற்றியெல்லாம்
எனக்களிப்பான் கணபதீசன்
தேவி சரஸ்வதி மகிழ்ந்திடுவாள் - தன் வீணைக் கணியிசை நாதத்திலே காவியத்தாலே நல் யாழிசையால் - இச் சகத்திற் கமுதை ஊட்டிடுவாள் மே விடும் ஆடை புனைந்திருப்பாள் - அவள்
உள்ளத்தை வெள்ளையாய்க் கொண்டிருப்பர்ள் கூவியழைக்கிறேன் நாமகளை - என்
நாவினில் நித்திய நடம் புரிய

Page 12
264 ஆத்மஜோதி
ஒலியிலே பிரம்மத்தைக் கண்டுணர்ந்தார்
வால்மீகி போன்ருேரைப் போற்றுகின்றேன் நலிவுறக் காவியம் பாடியவர்
கவிதைக்கு வழியமைத்தார் - ஆசி செய்க! இலிபியில் ஆக்குதற்கு முயலுகின்றேன்
சிவானந்த விலாசத்தைப் பக்தியினுல் கலிபோகும் பெரியாரின் சரிதையினைப்
பாடிநிற்கும் நாவிற்கு என நினைந்து.
புகழ்மிகு பாண்டிய நாட்டினில் புண்ணியம் மிகுதா
மிர பரணியாறு; அதன் கதைப்பகுதியில் இருக்கும் அசை யும் தண்ணிரென்ற பாலூட்டி வளர்த்துக் கொண்டிருக் கிறது அது. படிகம் போன்ற நீர். தாமரை மலர்களையே முகமாக உடைய தோற்றமும், துள்ளியெழும் மீன்களால் நீண்ட கடைக்கண்.
வேகமாக ஒடிக்கொண்டிருக்கும் அதனைப் பார்க்கும் பொழுது நாயகனை நாடியோடும் நாயகியைப்போன்ற பிரமை . அதன் இருகரைகளையும் ஒட்டி வளர்ந்திருந்த
கதிர்களையுடைய பசுமையான நெற் செடிகளைப் பார்க்கும்
பொழுது முத்துப்பதித்த இயற்கையன்னையின் கருங்குழலின் வு வரும். வெண்மையான அதன் நீர் கைலாச மலையே உருகிஓடுகிறது போன்ற பிரமையை உருவாக்கும். கரைக ல் உள்ள செந்நிறப் பூக்களை மரங்களிலுள்ள குரங்குகள் உலுக்கி அதன்மீது பரப்பும் பொழுது செந்நிறநீராகத் தோன்றும் அது “தாமிர பரணி யென்றபெயருக்கு எத் தனை பொருத்தமாக இருக்கின்றது
அந்த எழில்மிகு நதிக்கரையில்தான் உள்ளது பத்த மடை என்ற ஒரு கிராமம். எல்லாம் கற்ற அறிஞர்களையும், ஒழுக்கம் நிறைந்த பெண்களையும் கொண்டது அவ்வூர். பசுமையான மரங்களையும், அதன் மீது பாடித்திரியும் குயில் களையும் கண்ணுறும் போது யார் மனமும் லயித்துவிடும்.
அவ்வூர் விவசாயிகள் விடியற்காலையில் எழுந்து கலப் பைகளைக் கையிலேந்தி வயலுக்குப் போகும் பொழுது சூரி யனையும், கோழிகளையும் எழுப்பிவிட்டுவிட்டுத்தான் செல் வார்கள். அந்த ஊர் மக்கள் அதிகாலையில் எழுந்து சாத் திர விதிகளையெல்லாம் நிறைவேற்றுவது வழக்கம்.
s
 
 

ஆத்மஜோதி - 265
அவ்வூர்ச் சிறுவர்கள் அறிவு, அடக்கம், ஊக்கம், கல்வி யிலே ஆர்வம் எல்லாம் உடையவர்கள். அந்த ஊரில் நிலை யற்ற, பேதலிக்கும் தன்மை" எங்காவது இருக்கும் என்றல் அது-தாமரை இலையின் மீதுள்ள நீர்த்திலலைகளில்தான். அங்கு குத்தும் கொடிய குணம் எங்காவது உண்டென்ருல் அது-குசம் என்ற புல்லின் நுனிகளில்தான்.
ஆடையணி பூண்ட அந்தப் பெண்களைப் பார்க்கும் பொழுது இரதிதேவியின் நினைவுதான் வரும். பொறுப்பு ணர்ந்த அவ்வூர் வாசிகள் மன அமைதியுடன் இறைவன் புகழ் பாடுவது வழக்கம். வலுவான உடலும், அன்பான இதயமும் கொண்டவர்கள் அவர்கள்.
வானுயர்ந்து நிற்கும் வீடுகள் சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டு. குவிக்கப் பட்டிருந்த வைக்கோற்போரும், காற்றினல் பூவிலுள்ள மகரந்தப் பொடிகள் தூவப்பெற்ற வெள்ளை சுண்ணும்பு பூசப்பட்ட வீடுகளையும் டார்த்தால் எவர் மனத்தையும் அவை கவர்ந்துவிடும் ,
மனநிறைவுடன் தங்களுடைய தொழில்களைச் செய்து கொண்டிருப்பார்கள் அந்த ஊரில் வாழும் பெருமக்கள்,
(தொடரும்.)
வாய்மை
கடவுள் உண்மையானவற்றைக் காப்பார், பொய்யான வற்றை அழிப் பார் . உலகத்தைத் தாங்கி நிற்கும் அடிநிலை உண்மையே. உண்மை உரைப்பவனுடைய உயிராற்றல் பெரு கும். நாளுக்கு நாள் அவன் நல்லவனுவான்.
- ரிக்வேதம் ,
கடவுளே உண்மை. கடவுளை அறிவதே மனிதனுக்கு நன்மை தருவதாகும். உலகத்தில் வெற்றி பெறுவது உண் மையே, பொய்யன்று.
- உபநிடதம் ,

Page 13
266 ஆத்மஜோதி
அருள் நெறி காட்டும் கலித்தொகையின்
கருத்துரை s
(பண்டிதர். சீ. தம் பிராசா அவர்கள்)
சங்க இலக்கிய வரிசையில் இடம்பெற்ற எட்டுத் தொகை நூல்களில் கலித் தொகையும் ஒன்று. கலிப்பாக் களினல் இயன்ற பாடல்களின் தொகுதியானமையால் கலித்தொகையென வழங்கப்ப்ெற்றது. 'கற்றறிந்தார் ஏத்துங் கலி' என்ற அடை மொழியே இதன் சிறப்பை நன்கு விளக்கப் போதியதாகும். பண்டைத் தமிழர் வாழ்க்கை முறைகளையும் அவர் தம் நாகரீக நுண்ணுணர் வுகளையும் அதில் பரக்கக் காணலாம். அவற்றுக்கு அணி செய்வது போன்று, எக்காலத்தும் எவர்க்கும், பொருந் தக் கூடிய பொருள் பொதிந்த கருத்துரைகள் பல ஆங் காங்கு மணிகளென ஒளி வீசித் திகழ்கின்றன. அவைகளை எடுத்துச் சிந்தித்துப் பார்க்கும் போது அவைகளைப் பாடிய புலவர் பெருமக்களின் உள உயர்வுந் தூய்மையும் நன்கு விளங்குவதாகும். அவற்றுள் சிலவற்றை இங்கு கவனிப்
போம்.
இறைவன் படைப்பு, ஒரு உயிர் மற்ற உயிரை வதைத்து உண்ணும் நோக்கமில்லாதது என்ற அரிய உண்மை, இறை வனின் படைப்பின் நோக்கத்தையும், உலகின் உயிர்கள்
வாழும் முறையையும் தெளிவு படுத்தும் தன்மையதாய்
அமைந்துள்ளது. அதனைப், புள்ளின் மீது வைத்துப் புலப் படுத்திய புலமைத் திறமறிந்து வியக்கற்பாலது.
* கரைகவர் கொடுங்கழிக் கண்கவர் புள்ளினம்
திரையுறப் பொன்றிய புலவுமீ னல்லதை இரையுயிர் செகுத் துண்ணுத் துறைவனே யாம்பாடும்'
'கரையை இடித்துத் தனதாக்கிக் கொள்ளுகின்ற
கொடுமையான கழியில், கண்டவர் கண்களைக் கவரக் கூடிய அழகமைந்த பறவைக்கூட்டம், திரைமோதுவதினுலே

И}
ஆத்மஜோதி 267
இறந்துபட்ட புலால் மணம் வீசும் மீனை இரையாகத் தின் னுவதல்லது, தாம் வேறு ஒன்றையும் இறக்க வைத்து உண்ணுத அருள் உள்ள துறைவனை நாம் பாடுவோம்'
என்பது இப்பாடற் பகுதியின் கருத்து,
அற்ப அறிவுள்ள பறவைகளே ஒரு உயிரைக்கொன்று தின்னத அருள் உள்ளம் படைத்திருந்தன என்பதையறி யும்போது, அவற்றைப் படைத்த ஆண்டவனின் படைப்பு நியதியையும் இச் செயல் மூலம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகில் உயிர்களை ஆண்டவன் படைத்தது ஒன்றையொன்று பிடித்துண்பதற்கன்று; வலியவன் மெலி யவனை வதைப்பதற்கண்று. ஒன்றற்கொன்று உபகாரமாய் வாழ்வதற்காகவே. இதுவே படைப்பு நியதி. இதிலிருந்து எள்ளத்தனையும் புள்ளினம் பிசகவில்லை, ஆணுல், ஆறறிவு படைத்தவர் என்று கூறுவதிற் சலிக்காத மனித இனம், இந்தப் புள்ளினத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையிலில்லையா? மனித னுக்கு மனிதன் , தேசத்துக்குத் தேசம் ஒன்றையொன்று பிடித்துண்ணும் முயற்சியிலேயே வாழ்க்கை முழுவதையும் கழித்துக் கொண்டு வருவது கண்கூடு. மனித அறிவும் நாகரீகமும் அழிவுப் பாதையிலே அணுக்குண்டு வேகத்தில் முன்னேறுகின்றன. எனவே, இன்றைய மனித அறிவு, தன்னைப் படைத்தவனின் படைப்பு நியதியை யறியவும், அதற்கேற்க வாழ்க்கையை நடத்தவுங் கூடிய நிலையிலில்லை
என்பது இங்கு காட்டிய புள்ளினத்தின் செயலிலிருந்து நம்
கண்களுக்கு வெளிச்சமாகின்றது. இதனை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாய்க் கூறினர் கலித்தொகைக் கவிஞர். அவ்வாறு படைப்பவனும் அழிப் பவனும், ஒரே முழுமுதற் பரம் பொருளே என்பதும் * படைத்தான்கட் பெயர்ப்பான்' என்று வேருெரு இடத் தில் அவர் கூறுவதிலிருந்து அறியப்படும்.
அவ்வாறு, படைத்த தெய்வத்தை யறிந்து வழிபட்டு வாழும்போதும் அத்தகையோருக்குக் கஷ்டத்தின் மேற் கஷ்டம் வருத்தத்தின் மேல் வருத்தம் வருவதுண்டு. இத னைக் கண்டு சோர்ந்து விடுவது அறிவாகாது. 'வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்ல வல்லக் கொல்ல வல்ல; பொல்லாக் குணம் போக்கவே' என்பதை யுணர்ந் தால் உறுதி தளராதிருக்க வேண்டும். இந்த உண்மையை

Page 14
268 - ஆத்மஜோதி
வழிபடு தெய்வம் வருத்துவது அவர் நலங்கருதியே- என்ற கருத்தை
'வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கண் கழியுநோய் கைம் மிக அணங்காகியது போல’’
என்ற வரிகளில் வலியுறுத்திச் செல்வதும் அறிந்துணரவேண் டியது. 'தனக்கு வலிமையைத்தரும் என்று கருதித் தான் வழிபட்டு வந்த இறைவன், தன்னைச் சேர்ந்தவர்களுக்குநெஞ் சழியத்தக்க நோய் மிகும்படி வருத்தமாகிய தன்மைபோல’ என்பதுதான் கருத்து.
இதுவரை, கடவுள் சம்பந்தப்பட்ட கருத்துரைகளைக் கவனித்தோம். இனி, மனம் சம்பந்தப்பட்டவைகளைச் கவ னிப்போம். ஒரு நாட்டில் உள்ளோருடைய நல்லுணர்ச்சி களால் அந்நாட்டில் மழைபெய்து நலங்களுண்டாகும் என் பது தமிழ்ச்சான்ருேர் கருதி வந்த நம்பிக்கையாகும். இது அவர்களது மெய்யுணர்வுத் திறத்தை வெளிப்படுத்தவல்லது. * வானிங்கு வைப்பின். *’ என்ற பாலேக் கலி அடிக்கு நச்சி ஞர்க்கினிய் ருரைஇக்கருத்தைத் தெரிவிக்கின்றது. வானிங்கு வைப்பு-மழை நீங்குவதற்குக் காரணமான கொடுமைகளையு டைய ஊர் என்பது அவருரை. வைப்பு-பாலை நிலத்தூர். பாலை, நிலத்திலுள்ள மறவர்களுடைய கொடிய செயல்க ளால் அங்கு மழைபெய்யவில்லை என்பதையறிகிருேம். மறச் செயல்களால் மழை மறுக்கும் உண்மை, 'அன்று தொட்டுப் பாண்டியநாடு மழை வளங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடர' என்ற சிலப்பதிகாரத் தொடரா லும் அறியப்படுகின்றது. இதிலிருந்து ஒருநாடு மழைபெய்து வளங்கொழிப்பதற்கு அங்குள்ளாரது, நல்லுணர்ச்சிகள் உறு துணையாயிருக்கின்றது, என்ற நுண்ணிய கருத்தைப் பெறு கிருேம். 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல் லார்க்கும் பெய்யும் மழை' என்ற வாக்கும் இக்கருத்திலிருந் தே பிறந்ததா குமி. ஒரு நாட்டு மக்களது மனவளமே அந் நாட்டு வளத்துக்குக் காரணம் என்பதையறியவே, அந்நாட் டின் முதன் மகனுகிய அரசனது மனவளம் இதற்கு எவ்வளவு இன்றியமையாது வேண்டப்படும் என்பது தானகவே விளங் குவதாகும். வேந்தன் செம்மையால் மாரி சுரக்கும் என்ற உண்மையும் மருதக்கழியில் மழை சுரந்தளித் தோம்பு நல் லூழியாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையில்

ஆத்மஜோதி 269
வாய்ந்த' - 'மழையானது தன்னை வேண்டிய காலத்தே பெய்து, உலகைப்பாதுகாக்கும் நல்ல முறை மையை எலலார்க்கும் தப்பாது வருதலை உனது நடுவுநிலைமை யாலே உலகத்திற்குத் தரும்படியாகவாய்த்த'-என்று வரும் வரிகளினுல் விளக்கப் பட்டிக்கிறது.
வேந்தனுடைய செம்மை உணர்வினுற்றலால் இறைவ னுடைய அருளாற்றல் பெறப்படுகிறது. அகிலத்தையும் இயக்க வல்ல ஆண்டவனுடைய அருளாற்றல் மேகத்தை இயக்கி மேதினிக்கு மழையைப் பெய்விக்கின்றது. 'கோன் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்; கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்' என்ற மணிமேகலையடிகளும் இக்கருத்தை யே எடுத்துக் கூறுவதைக் காணலாம்.
மனவளம் மாரிவளத்துக்குக் காரணம் என்பதைக் கண் டோம். அதுபோலவே மனஒடுக்கம் ஆயுட் காலத்தைக் காட்டுகின்றது என்ற கருத்தும் குறிஞ்சிக் கலியுட் பெறப்படு கின்றது.
"வீழ்பெயற் கங்குலின் விளியோர்த்த வொடுக்கத்தால்
வாழுநாட் சிறந்தவள்’’
என்பது அப்பகுதி. தோழி, தலைவனிடம், தலைவியைப் பற் றிக்கூறும் போது, 'இடை விடாது பெய்கின்ற மழையையு டைய இராக்காலத்தில் உம்முடைய குறியால் அழைக்கின்ற அழைப்பைச் செவி கருவியாக ஒர்ந்ததனுல் உண்டான மன ஒடுக்கத்தால் ஆயுட்காலம் மிகுந்தவள்’ என்று குறிப்பிடு கிருன். இதிலிருந்து மன ஒடுக்கம் ஆயுட் காலத்தைக் கூட்டும் என்ற அரிய உண்மையை அறிந்து கொள்ளலாம்.
எதற்கும், அழகுமிகுவதற்கும், ஆக்கம் சிறப்பதற்கும், கிளர்ச்சி விளங்குவதற்கும் வைகறைப் பொழுது நல்லது என் பது குறிஞ்சிக்கலி முப்பத்தெட்டாம் பாடலின் தாழிசைகளி லிருந்து தெரிகிறது. ஒருநாளிற் செய்ய வேண்டிய வேலையை அன்று அதிகாலையில் எழுந்து, இன்ன இன்ன வேலைகளை இன் னின்னபடி செய்யவேண்டுமென்று தி ட் டப் படுத் தி க் கொண்டு செய்வது ஆக்கந்தரவல்லது என்ற உண்மை ‘வைகறைத் திறஞ்சேர்ந்தான் ஆக்கம் போல்’ என்று கூறு வதிலிருந்து விளங்கும். ஆகவே, வைகறையில் எ மு த ல்

Page 15
270 ஆத்மஜோதி
உள்ளக் கிளர்ச்சியைக் கொடுக்கிறதோடு அழகையும் உண் டாக்குகின்றதென்றும், செய்யுந்தொழிலில் ஆக்கம் பெறு தற்கு அக்காலத்தில் எழுந்து திட்டமிடல் ஏற்றதென்றும் அறிகிருேம். கதிரவன் கரங்கள் தட்டி எழுப்புந்தனேயுங் குறட்டை விட்டுத்தூங்குஞ் சோம்பேறிக் கூட்டங்களுக்கு இந்த உண்மைபுரிந்தால், அது, அவர்களுக்கு ஒரு விடிவுகா G3Q) LD 6 T (6ÖT G62) T" L. t).
ஈற்றில், பொருளின் இயல்பைக்குறித்தும், அ  ைத த் தேடவேண்டிய முறையைப்பற்றியுங் காணப்படும் இரு கருத்துக்களைக் காட்டும்.
'கிழவரின்ஞே ரென்னுது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர் புபெயர் புறையும் , '
(பா-கலி 21)
'பொருளானது இத்தன்மையோர் நமக்கு உரியவர் என்று கருதாமல் ஒருவரிடத்து நின்ற நல்வினையாலே மீண்டும் மீண்டுஞ் சென்று தங்கும்' என்பது கருத்து. இதன் மூலம் பொருளின் இயல்பான தன்மை விளங்கக்கிடக்கிறது, அறி வுடையவர் களாயிருந்தாலுஞ்சரி, அல்லது நல்ல குணமு டையவர்களாயிருந்தாலுஞ்சரி, அவற்றைக் கவனியாது, மீண்டும் மீண்டும் போய்ச் சேருகின்றது. ஒருவனுக்குப் பொருள் சேரவேண்டுமானல், அவன் அறிவில், அல்லது குணத்தில் தங்கவில்லை. அவன் முன்பு செய்தவினையையே பொறுத்திருக்கிறது. அதிகம் முயற்சி செய்பவர்களும் அற்ப லாபத்தையோ சிலவேளை, அதுவுமில்லாமலோ, போவதற்கு இதுவே காரணமாகும். சிலர் சிறுமுயற்சியிலேயே பெருந் தனவந்தராகி விடுகின்ருர்கள். இதற்கு, அவர் செ ய் த முயற்சியோ அறிவாற்றல்களோ காரணமல்ல, பழவினையே காரணமாகும். ஆகவே, பொருளுக்காக ஒருவன் எ ன் ன தீமையையுஞ் செய்ய எண்ணுவதும், மற்றவரைக் கெடுக்க முயல்வதும் அறியாமையேயாகும். அந்த வழிகளிலேனும் அவன் கருதிய பொருள் கைகூடப்போவதில்லை. அதற்கு மாருக, பொருள்தேடும் நாட்டத்தால் செய்ததீவினைகளின் பேருக, அடுத்தபிறவிகளிலும் அவன் தரித்திர நாராயண னக இருக்கவேண்டிவரும் என்பது விளங்கும். ஆகவே, இப்பிறவியில், பொருள் கிடையாவிட்டாலும், சோர்ந்துவி டாது தன்னலான நன்மைகளைச் செய்து கொண்டுவருதலே

ஆத்மஜோதி 271.
அடுத்தபிறவிகளில் பொருள் சித்திக்கச் செய்வதற்கு உரிய வழியாகும் என்பதும் கருத்திருத்தத் தக்கது.
நேர்மையான வழிகளில் பொருள் தேடாவிட்டால் அப் பொருள், அதைத் தேடியவனுக்கு இம்மையிலும், மறுமை யிலும் பகையாக இருக்கும் என்னும் அரியஉண்மையைப் பிறிதோரிடத்தில்.
"செம்மையினிகந் தொரீஇப் பொரு ள் செய்வார்க்கப் பொருள்
இம் மையும் மறுமையும் பகையாவ தறியாயோ'-பா.14
என்றவரிகளில் வற்புறுத்திச் செல்வதையும் நாம் ஞாபகத் தில் கொள்ளவேண்டும். பொருள் தானே வேண்டும். அதைத் தேடுவதற்குரிய வழிஎப்படி இருந்தாலும் பாதக மில்லை என்றுநினைத்து, தீயவழிகளில் தேடினுல், அத்தேட் டம் இம்மையிலும் மறுமையிலும் பகையாயிருந்து அத்துட னமையாது அடுத்தபிறவியிலும் தரித்திரநிலையை கூட்டுவிக் கிறது. எனவே பொருள், வாழ்க்கை இன்றியமையாததென் ருலும் நமது விருப்பத்தால் எய்தக் கூடியதல்ல வென்றும் பழவினைப்படியே சேரும் என்றும், அதைத் தேடுவதும் செம்மையான வழிகளில் அமையவேண்டுமென்றும் அறிய லானுேம்,
இத்தகைய அரிய கருத்துரைகள் பல கலித்தொகையில்
புதைந்துள்ளன. அவை ஆழமாகச் சிந்தித்துக் கற்போ ருக்கு அருவிருந்தாகும்.
معینیهای
^"میN-سمبر سمھم
nann/NMA
ஆம், வாழ்நாள் குறுகியது. ஆகையால் உன் கழியும் பணிகளைப் பற்றிக் கர்வங் கொள்ளாதே. ஆணுல் நாமத்தை திவ்விய நாமத்தைப் பாடு, பாடு, என்றும் பாடு இச்சரீரம் சாம்பலாகவும் துகளாகவும் நீ பின் விட்டுப்போவாய்! ஆணுல் உன் வீடு நோக்கிய யாத்திரையில் உன் பக்தியும் அன்புச் செயல்களும் உன்னைத் தொடர்ந்து ஞான ஒளி நாட்டில் உன்னை மகிழச் செய்யும், ஒ மனிதனே!
ாமீரா,

Page 16
தி
272 ஆத்மஜோ
+x<><><><><><><> <><><><><><><><><><><><><>
துக்க யோகம்?
(தி , கி. லக்ஷமி - மதுரை)
-<><><><><><><><><><><><><><><><><><><><><><><>*
உலகத்து மக்களை மூன்று பிரிவினராக எடுத்துக் கொள் வோம் உத்தமர், மத்திமர், அதமர் என்று. உத்தமராக இருப்பவர் அறத்தைக் கைக்கொண்டு நற்குண நற்செய்கை யினல் விளங்கப் பெற்றவராவர். இவர்கள் அறிந்து குற்றம் செய்யார். அறியாமல் குற்றமேதேனும் செய்து விட்டாலும் அதற்குரிய தண்டனையை தனக்குத் தானே அளித்துக் கொள் 6) JfT [TC};GIT - O
மத்திமராக இருப்பவர் மிகவும் நல்லவராக இருக்க எண்ணுவர். ஆனல் மனதை வசப்படுத்த இயலாதவராய் அதன் போக்குப்படிபோய் குற்றங்களை இழைக்கின்றனர். அதற்குரிய தண்டனையை பெரியவர்களால் அளிக்கப்பட்டு பின், திருந்தி நல்லவர்களாய் மாறுகின்றனர். (திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது) ஆனல் அதமரோவென்ருல் நல்லதையே எண்ணுர், தீய குணங்களையே கைக்கொண்ட வர்களாய், சுயநலமே பெரிதெனக் கொண்டு, நீதிக்குப் பயப் படாமல் எத்தகைய பெரும் குற்றத்தையும் செய்யத் துணி கின்றனர். ஐயோ! நாம் செய்வது பெரும் பாவமான செய லன்ருே, என்று சிறிதுகூட சிந்திப்பது இல்லை. ஆனல் இவர் கள் தண்டித்தாலும் திருந்தார். இவர்களுக்குத்தான் நெஞ்சு நஞ்சாகவன்ருே மாறியிருக்கிறது. இத்தகைய காரணத்தால் பெரியோரும்இவர்களைத் தண்டிக்காமல்விட்டுவிடுகின்றனர்.
ஏழைப் பால்காரி ஒருத்தி வறுமையின் காரணமாய் 1. படி பாலில் சிறிது தண்ணீர் கலந்துவிற்ற குற்றத்திற்காக "100' ரூ. அபராதம் விதிக்கின்றனர் அதிகாரிகள். ஆனல் அரிசி, பருப்பு மற்றும் சமான்களுடன், அதற்கு இணைந்த
விதத்தில் கற்களை தயார் செய்து கலந்து விற்று கொள்ளைலா பமடிக்கும் பெரும் முதலாளிகளை தண்டிக்க அதிகாரிகளும்
முற்படுவதில்லை காரணம் அதிகாரிகளின் லஞ்சம் வாங்க எண்ணும் அற்ப ஆசைகளே. இப்படி க்காசு கொடுத்து மேல்

ஆத்மஜோதி 273
அதிகாரிகளை வசப்படுத்தி தான் இதுவரை செய்த குற்றங் களுக்கு தண்டனை பெருது, கடிவாளமில்லாத குதிரைபோல் மேலும் மேலும் குற்றத்தையே செய்து வருகின்றனர். இது போல் பிறரை கொடுமைப்படுத்தி துன்புறுத்துவோர்களுக்கும் பூச்சிகள், மிருகங்கள் முதலியவற்றைப் பிடித்து வதைத்து துன்புறுத்துவோர்களுக்கும் இறைவனே தண்டனை அளிக்கின் முன். இதுபற்றி வி%னயும் வியாதியும் என்னும் தலைப்பில் "ஸ்வாமி சிவானந்த மகராஜ்' அவர்கள் தெரிவித்துள்ளார் கள். அவற்றை படித்து விபரமாக தெரிந்து கொள்ளுங்கள். (கிடைக்குமிடம், 8, வியாசபுரம் மதுரை.)
இதை அறியாத மக்கள் ஐயோ! என்ன அநியாயம்! நினைக்கக்கூட மனம் அஞ்சும் அநியாயமான செயலை செய்யும் அயோக்கியர்களோ செல்வங்களையும், சுகபோகங்களையும் பெற்று மிக்க ஆனந்தத்தில் மூழ்கி யிருக்கின்றனர்;- ஆனல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, தன்னைப்போல் பிறரையும் எண்ணி தன்னுல் இயன்ற அளவு பிறர்க்கு நன்மையே செய்து வரும் மக்களோவெனில், உண்பதற்கு சரியான உணவுமின்றி உடுக்க உடையுமின்றி பலவித துன்பங்களையும் அடைகின்ற னர். இந்த இறைவனும் நேர்மையில்லாதவனே, நல்லது செய்வோருக்கு நன்மையும், தீயது செய்வோருக்கு தீமையும் அல்லவோ அளிக்கவேண்டும். அதுவல்லாது தீயவை செய் வோர்க்கு சுகத்தையும் அளிக்கின்ருன் இறைவன் இது நியாய மாகுமா? இறைவனே நீதி தவறி நடக்கும் பொழுது யாது செய்வது.
சு ய நல உருக்கொண்ட மக்கள், தீய செயல்களையே செய்து வரும் தீயோர்கள் சகல சுகபோகங்களுடனும், மிக்க மகிழ்ச்சியுடனும் இருப்பதைக் கண்டு நாமும் அவர்களைப் போல் நடந்து வந்தோமானல் சுகித்து இருக்கலாம் என் னும் மூட எண்ணம் கொண்டு தீய செயலை செய்து வருகின்ற னர். உண்மையறியா மக்கள்.
பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டு தன் வாழ்நாளைக் கழித்த எத்தனையோ பெரியோர்களை எண்ணிப் பார்ப்போ மால்ை, அப்பப்பா அவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அள வே கிடையாது. அத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு நல்லதையே செய்து வந்தனர். துக்கத்தையும் பெரியோர்கள் ஒரு யோகமாகக் கொள்வர் (துக்கயோகம்)

Page 17
274 r. ஆத்மஜோதி
துன்பம் வருங்காலையில்தான் நாம் இறைவனே நினைக்கின் ருேம். அப்பொழுது இறைவனை சதாகாலமும் நினைந்து கொண்டே இருக்க வேண்டுமென்ருல் துன்பம் நம்முடன் கூடவே துணையிருக்கவேண்டும். ஆகையினுல் இறைவனை நினைந்து கொண்டே இருக்கும் நல்லோர்களுக்குதுன்பம்தான் இன்பம் பயக்கவல்லது. இந்த உண்மைப் பொருளே முற்றும் அறிந்த அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். உதாரணமாக ஒரு கதை கூறுவோம்.
கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுடன் சென்று கொண்டி ருந்தார். இருவரும் ஒரு பணக்காரன் வீட்டிற்குச் சென்ற னர். அந்த பணக்காரனே இவர்களை சிறிதுகூட மதிக்கவில்லை ரொம்பவும் அலட்சியமாக விருந்தான். கிருஷ்ணபரமாத்மா
புன்னகையுடன் உனக்கு இன்னும் பன்மடங்கு செல்வம் உண்
டாகுக என்று ஆசீர்வதித்துத் திரும்பினர்.
அருகிலிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணபரமாத்மாவிடம்
அடக்க முடியாத கோபமுண்டாயிற்று. பொறுத்துக் கொண்
டே கூடவே சென்மூன். அடுத்தாற்போல் ஒர் ஏழையின் வீட் டிற்குச் ச்ென்றனர். அவ்வேழை மிக்க மரியாதையுடனும் அன்புடனும் இவர்களே வரவேற்று உபசரித்தான். உடனே கிருஷ்ணபரமாத்மா, அவ்வேழையை நோக்கி உன்னிடம் இருக்கும் ஒரே பசுவும் இறக்கக் கடவது என்று சாபம ளித்தார்.
பின் அர்ஜ"னனையும் அழைத்துக் கொண்டு இருப்பிடத் திற்குத் திரும்பினர். அர்ஜ"னனுக்கோ முன்னேவிட தற் பொழுது அளவுக்கு மிஞ்சிய கோபம் உண்டாயிற்று. கிருஷ் ணபரமாத்மாவை திரும்பிப் பார்க்கவும் இல்லை, ஒரு வார்த் தை பேசவும் இல்லை. விறு விறு என்று சென்று கொண்டி ருந்தான்.
இதைக் கண்ட கண்ணபரமாத்மா புன் முறுவலுடன், அர்ஜ"ன! ஏன் உன் முகம் சிவந்திருக்கிறது. என்னுடன் பேசாமலேயே வேகமாக சென்று கொண்டிருக்கிறயே என்ன விஷயம் என்று மிகவும் நிதானமாகக் கேட்டார்.
அர்ஜ"ன்னுடைய ஆத்திரம் அதிகமாயிற்று. கோபத்து டன் கிருஷ்ணு! நீ மிகவும் அநியாயக்காரன், இது வரை
 

ஆத்மஜோதி 275
யிலும் உன்னை நல்லவன் என்று எண்ணி ஏமாந்தேன். இப் பொழுது தான் உண்மையை உணர்ந்தேன். உன்னைச்சிறி தும் மதிக்காத அந்தப் பணக்காரனுக்கு அதிக சம்பத்தை அளித்தாய்-உன்னை மிக்க மரியாதையுடன் உபசரித்த அந்த ஏழையிடம் இருந்த ஒரு பசுவையும் இறந்து போகும்படி சபித்தாய். இது உனக்கு நீதியாகுமா. என் கோபத்திற்கு காரணம் இதுவே.
அர்ஜ"ன! இதற்குத்தான இத்தனை கோபம் உனக்கு. நான் நல்லது செய்திருக்கும் பொழுது நீ கோபிப்பானேன் எனருர் கிருஷ்ணர் சாந்தமாக,
உனக்கே இது நீதியாக விருந்தால் மக்களும் அப்படித் தானே யிருப்பார்கள். தலைவன் எவ்வழி அவ்வழி மக்கள் “என்பது போல வல்வவோ இருக்கிறது. இதில் நல்லதை
என்ன கண்டாய் சொல், பார்க்கலாம் என்ருன் அர்ஜ"னன். *
விஷயத்தைக் கேட்டால் நீயும் சந்தோஷமடைவாய். ஏற்கனவேயே செல்வத்தினுல் கர்வத்துடன் விளங்கிய அந்த பணக்காரனுக்கு இன்னும் அதிகச் செல்வத்தை அளித்ததி ஞல் அவன் இன்னும் அதிக கர்வம் அடைந்து நரகடை வான். ஆணுல் ஏற்கனவே என்னிடம் மிகுந்த பக்திகொண்டு விளங்கிய ஏழையை அவனுடைய பற்றுதலுக்குக் காரண மாய் விளங்கும் அந்த ஒரு பசுவையும் இறக்கும்படி செய்து, விட்டால், அவன் பற்றற்ற நிலையை அடைந்தவனுய் என் மேல் முழுதும் அன்புவைத்து முக்தியடைவான். என்னு டைய நீதி சரியானதா? தவருணதா? நீயே சொல் என்ருர்,
' பற்றற்றன் பற்றினை பற்று க. அப்பற்றை
பற்று பற்று விடற்கு,
என்பதே இதன் பொருள்.
இதுகேட்ட அர்ஜுனன் தங்களுடைய நிலைமையையும் சிந்தித்துப் பார்த்துக் கொண்டான். ஆம் நாம் நாடிழந்து காட்டில் துன்பமடைந்ததும் நன்மைக்கே என்று எண்ணி மகிழ்ந்தான். துன்பமடைந்ததினுலல்லவோ கண்ணனேடு அருள்பார்வையைபரிபூரணமாகஅடையமுடிந்தது.ஆகையால்
"துன்பம் பேரின்பம் பயப்பதால்
துன்பம் பேரின்பமாத் போற்றப்படும்'

Page 18
276
X- qTqLSLALAMSMASAS TALALALLAAAAALLAAAALLAAAALL AAAALLLLLSAAAMASLAAA MTLAAAAALAAAAALLAAAALqLALALALSTeLeASLLALLSMSMMSMMS
ஆறுமுகத் தங்கம்!
(டாக்டர். ச. ஆறுமுகநாதன்)
() S
S.
S () S.
S
S
S
S
S () S () S
S () S
S
S
S
S
S () S () M () S
LkLeSeMeA AeAe eAMeSee MeAeLe eMMMeMMMM MMAMMeA eSe eA eM eMeM eAMAMS M Me MeeM sM M M
ஆறுமுக மானஆன்மத் தங்கமே தங்கம் ஆடிவிளே யாடிடவா தங்கமே தங்கம் வீறுபெறவே துலங்கும் தங்கமே தங்கம் வெற்றி வாகைசூடிடவா தங்கமே தங்கம்
ஞானவடி வேலவனே தங்கமே தங்கம் நற்கருணை செய்திடவா தங்கமே தங்கம் தீனர்க் கருள்குகனே தங்கமே தங்கபி) சித்தாந்த ஜோதியேவா தங்கமே தங்கம்
என்னுள்ளே நீயாகத் தங்கமே தங்கம் இலங்கிடும் கதிர்வேலா தங்கமே தங்கம் உன்னுள்ளே நானுகத் தங்கமே தங்கம் உறைந்திடவே அருள்புரிவாய் தங்கமே தங்கம்
பரங்குன்றப் புரவலனே தங்கமே தங்கம் பழம்நீ யானவனே தங்கமே தங்கம்
திருச்செந்தி லாதிபனே தங்கமே தங்கம் செந்தமிழ்க் கனியேவா தங்கமே தங்கம்
திருவாவினன் குடிவாழ் தங்கமே தங்கம் சிவசக்தி திருக்குமரா தங்கமே தங்கம் திருவே ரகத்தானே தங்கமே தங்கம் தெள்ளுதமிழ்த் தேவாவா தங்கமே தங்கம்
தணிகைத் தயா பரனே தங்கமே தங்கம் தவக்கோலம் கொண்டவனே தங்கமே தங்கம் மணிப் பழமுதிர்ச்சோலே தங்கமே தங்கம் மால்மருகா ஆறுமுகத் தங்கமே தங்கம்
ஆத்மஜோதி
举

SS ബ്-ബ്-ബ
S LLL L0L0L0L0L0L0L0L0L0LSL0L LLLLLYYL0L0L0L0L0L00SSS S0S S
魯魯魯魯魯魯魯魯魯魯魯學。魯魯魯魯魯魯魯魯勞學。魯彎-魯魯魯魯魯
(சி. பொன்னுத்தம்பி)
ஆருயிர்க்கரசே! இந்த
அடிமையேன் அன்புக்காக பேருயர் வறுமை தன்னப்
பெருமகிழ் வோடு பெற்ருய்!
துடித்துவந் ததனே ஏற்பாய் பாரில் இவ் வேழைக்காய் நீ
படும்பாடு கொஞ்ச மன்றே!
அரியணைதவிலே தாங்கும்
அரசே! இவ்வேழையேன்தன் சிறிய புன் குடிசைக் குள்ளே,
திடீரெனப் புகுந்தவேளே, புரியாது உணஇ ருத்தப்
"பொற்தவிவிலேயே' என்றேன் "நறுமல ருதுைளத்து
அரியணை எனக்குண்' டென்ருய்
ஏழையேன் தொழில்பு ரிந்து
எடுக்கும் ஊ தியத்தைக் கொண்டே கூழ் சமைத் திடநான் துவண்டும்;
கொடுக்கவே றிலேயே என்றேன்! தாழ்விலா உணது அன்புத்
தண்மலர் உளத்தைத் தந்தால் போதும் மற் றெதுவும் வேண்டாம்.'
எனப் புகன் றெனுள்பு குந்தாய்! *" வறுமையேன் வாழு மிந்த
மண்குடில் ஏதுமின்றி வெறுமையாய் உளதே பன்றி
வேறென்று மில்லே' யென்றேன் நறிய புன் ன கைபு ரிந்து,
"நானநில் உள்ளேன்' என்ருய் மறுகணம் குடிசை, உன்பொன்
மாளிகை ஆகிற்றைய!
(இக்கவிதை யோகி சுத்தானந்த பாரதியின் கட்டுரை
ஒன்றின் ஆக்கம்)
ــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
曾

Page 19
-、*
Registered at the G. P. O. as
சந்தா கேய
அன்புடையில்,
இன்றுடன் ஆத்மஜோதி வது சுடர் உங்கள் கரங்களில் ஆண்டின் சந்தாவை அன்பா அனுப்பி ஜோதியின் வளர்ச்சி
இந்தியாவிலுள்ள அன்பா வழக்கம் R. Gil Jasino L., li அரிசிப்பாளைய என்ற விலாசத்திற்கு அனுப்பி
ஆத்மஜோ நாவலப் *。
SMSASSASSASSASSASSASSAASSA
ஆத்மஜோ நீங்கள் எதிர்பார்த்திருந்த வந்து விட்டது. மலரினுள்ளே யார்களின் கருத்துக்கள் உங்களு றைம்பது பக்கங்களிலும் ஆ விளங்குகின்றன. முகப்பில் ' குருநாதன் மூவர்ணப் படத அவரை நினைப்பவர்க்கெல்லாம் விலே தபாற் செலவு
ஆத்மஜோதி
5 T na at ng
حصے
இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலேயத்த திரு நா வினுயகமூர்த்தியான் அச்சிட
 
 
 
 

а метзрарет. M. L.. 59/300 . ܂>
പ്രജ്ഞ
பர்களுக்கு
பதிருைவது ஆண்டின் ஏழா ஒளி வீசுகிறது. இப் புதிய ர்கள் மனமுவந்து உடனுக்
க்கு ஊக்கமளிப்பீர்களாக
ர்கள் தமது சந்தாக்களே
பு:இன்டஸ்ரீஸ்,
வைக்க வேண்டுகின்ருேம், ། 5) E%Ùալb, * v I ་ལག་ཆ་
. - 58 5 3
--محصے محصہے۔ --محمحصے خصیے۔حصحصحصحص> 15. LDS)ï
"ஆத்மஜோதி மலர்' േറ്റ நாற்பதுக்கு மேற்பட்ட பெரி ருக்கு விருந்தாகின்றன. நூற்
த்மீகக் கருத்துக்கள் சிறந்து இ என்ன எனக் கறிவித்த எங்கள் ந்துடன் காட்சி தருகின்றர்.
பரகதி உண்டு. |ட்பட 2-50 ஆகும்
-- صے حصے ss> حصے
* ) հ%մաւք, 量
G) (* 50 Tsö
- 3 5 3
ாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் ட்டு வெளியிடப்பெற்றது. 14-5=64