கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.06.14

Page 1
*-↔↔↔↔↔↔↔↔拿↔↔↔
----| |-
|-
岑**** **↔↔↔↔↔↔↔↔↔-》↔↔↔↔↔-↔-
*** • ** ***************
 
 
 

**************↔↔↔↔↔拿↔*
++++++++++++++++++++++++++

Page 2
++外***4沙44今444444》*******}+}+++*}++}***++}+}* ****
t
*伞令伞令令*→令→令→今令*+→4伞*+++→+→+》*****++***+*******
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
-
- சுத்தானந்தர்
ஜோதி 16 3 குரோதி வரு ஆனி மீ" 8
பொருளடக்கம் 1 சிவ சிதானந்தர் 277 2 இதயப் பண்பாடு. 278** 3 துறவுக்கும் தூய்மைக்கும் ஓர் உதாரண புருஷர் 279 4 யூனி சுவாமி சிதானந்தா 284 5 மேன்மைதங்கிய ஆழிவற்ற ஆத்மா வே! 29 O. 6 வாழ்க சிதானந்த ஜி 29. 7 சுவாமி சிதானந்தர் கடிதம் 292 8 எதிர்பாராது வந்த சிதானந்தர் 293 9 சிவ சிதானந்தர் 297 10 தன்னலமற்ற சேவை யுணர்ச்சியை வளர்த்துங்கள் 299 11 சுவாமி சிதானந்தரின் மொழிகள் 303 12 திருக்குறள் மணித் தேர்வு 304 با 13 அன்னை லலிதாம்பிகை அருட் பேராயிரம் 306 14 நன்றியறிதல் 32 15 இமயஜோதி சிவானந்தர் 313 16 ஒடி வாராய்! அட்டை3ம் பக்கம் .(
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75.00 வருட சந்தா ரூபா 3.
தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் ா திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் உய திரு. நா. முத்தையா ν\ , "ஆத்மஜோதி நிலையம்' நாவலப் பிட்டி. Tអ៊arr] தொலேபேசி எண் 353
 
 
 
 

qeTLSS LLTLLS LLSLS LTLSS SLLLSSSLLLLSTSeSSSLSLSL LSSSLSqLSSSLLSSLLSLLLAA TLSLTLSLTLSLTLSLTLLTTLYMLTLSLTLY LLTLLLSLLSLLSTLSLLMLY LLTLSLTLSSMLSSSLTLS TL TLTLSMLTS qSSSLMSLSL LLLLS LMTLMLMLMMLTLMMLTLMMLMLSMLSSLTLMMSLSMMMAeLMLLSMLL LMMMLTLMMLSTMLSMLSSSLLLLSLSMMMLTLSLSALSLTLMLMLSSLLSMLSSLAL LLLLSSTLS LSS SSTLSSLSLSSLLLSSTLSSLSTSLSTSLSSLSLSSLSTSLSSSLSSLS SSSTSLSSSLTLSSSLSLSLSLSLLLLLSLLLSMSLLLSTLSSLSSSMLSMSTSLSSSLSSTSLSLSTSLSLSTLSSLSTSLSLLLLLSLLLLSTSSSSSLSSS ♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠ക (ക്ര
சிவ சி தா ன ந் த ர் -( மகரிஷி சுத்தானந்தர் )-
உலகெலாம் கருணேமே வி
ஒருகுலமாக வாழ நலமெலாம் புரிந்த வள்ளல்
ஞானத்தின் சிகரஜோதி இலகு சிவானந்தப் பேர்
இறைவனுர் இலகுநல்லூர் பொலிவுறு தெய்வசங்கம்
புகழ்சிறந் தோங்க மாதோ!
கங்கையின் யாழிசைக்கும் ,
கவின் பெறு சிவப்பேரூரில்
துங்க இமாசலம் போல்
துலங்கிய தூயவன் சேவை
மங்கிலா தொளிர ஞான
དོ།། மகன் சிதானந்தன் வந்தான்
இங்கிவன் சிவ மின் சாரம்
என்னவே பொலிகின்றனே.
ー
புன்னகை தவழும்
பொன்முகத் திருவோன்! பொலிமிகு நல்லறிவாளன் அன்னையின் அன்பும்
அருள்வளர் நெஞ்சும் அப்பரின் பணிநல வளமும் முன்னிய முனிவன்
சிவ சிதானந்தன் முப்பொருள் வைப்பெனும் செல்வன் என்னுளங் கலந்த
இளம் பெருந் துறவி இனுமினும் சிவம் பெற வாழ்க!
SLTLSMMTSLsTS STLSLTLLeLSMLMLMLSLLMTe MLseL SLSLS LSLMSLSSLTLLL SLeTSLSLSTL LLTLSSLSLSLS A. qSLTLLLLS SLLLTMMMLMMMTMMTMLMMLTMMMSLTSqSTALSMLTLMLTLSMLMLSMLMTeSLMLeMMMLTLMLMLTLSSSLTLMMMLLSMLSMLSMLMLSSLTS
qTTS STLSL TTS TTSS TTSMTMSM TLS TSM eMeM sMLSMTLSSMLMLSMTLS LesMLLTLSYLTLSLTSLSSSLSSTLSLsTLSSLLLSSTSLSTSSSLTS qLSSLSTSqLeSqLSSSqLTS TTLSLMMTSLLLTLS TLSLLL MMLLSMMMLTMTLS M TSLTLSL MLSMTLS LMLSLTLS TMLSMTMMsMLeMMLeLeMLe LLTLLsMeS MMLLTLMLSSLMSLLMLLTLLMLSSLLLSTMSLTSLLLTTS SLqLLSTS

Page 3
278 ஆத்மஜோதி
இதயப் பண்பாடு
(சுவாமி சிவானந்தர்)
பிறருக்கு நன்மை செய்வதே யாவற்றிலும் மேலான சம யம். ஒவ்வொரு வாரமும் சிலமணி நேரம், நான் என்னும் அகம்பாவமின்றிப் பலனை எதிர் பாராமல் தன்னலமற்ற சேவை ஏதேனும் செய்யுங்கள். உங்கள் இலெளகிகக்
கடமைகளையும் இதே மனப் பான்மையுடன் செய்துவாருங் கள். வேலையே வழிபாடாகும். அதை இறைவனுக்கு
அர்ப்பணியுங்கள்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்தில் இரண்டு சதவீதம் முதல் பத்துச் சதவீதம் வரை தருமம் செய்யுங்கள். உங்களிடமுள்ளவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள் ளுங்கள், உலகமனைத்தும் உக்கள் குடும்பமாகக் கருதுங்கள். சுயநலத்தை அகற்றுங்கள்.
பணிவுடனிருங்கள். எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். பகட்டு, செருக்கு, வெளிவேடம் ஆகிய
வற்றை அகற்றுங்கள்,
இறைவனிடத்தும் சமய நூல்களிலும் குருவிடத்தும் மாருத நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் பூரண சர னகதி அடையுங்கள். 'யாவும் தங்களிச்சைப்படி நடக்கும்; யான் எதுவும் விரும்பவில்லை' என்று பிரார்த்தியுங்கள். எது நிகழ்ந்தாலும் இறைவனது இச்சையெனக் கொண்டு சமத்துவ புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
6 T 6i) 6n) fT உயிர்களிலும் இறைவனைக் காணுங்கள். உங்களை நீங்கள் நேசிப்பது போல உயிர்கள் அனைத்தையும் நேசியுங்கள். எவரையும் வெறுக்காதீர்கள்.
எப்போதும் இறைவனை நினையுங்கள்; அல்லது குறைந்த பட்சம் துயில் நீங்கி எழும் போதும் வேலையிடையே ஒய் வெடுக்கும் போதும் துயில் கொள்ளச் செல்வதற்கு முன் புமாவது இறைவனை நினையுங்கள். உங்களிடம் எப்போதும் ஒரு ஜபமாலை வைத்திருங்கள்.
ر
A

ஆத்மஜோதி 279
து து
O 후 e
மை ஒா உதாரண புருஷா க் க் கு கு (ஆசிரியர்)
D D
* அழைக்கப்படுவோர் அநேகர்; ஆனல் இறுதியில் தெரிவு செய்யப்படுவோர் மிகச் சிலரேயாம்' என்பது விவிலிய நூலில் வரும் ஒர் மணிவாசகம். ரிஷிகேசம் சுவாமி சிவானந்தர் அவர்களின் சீடர் கூட்டத்தில், இப் போது அவரது பீடத்தில் வதியும் சுவாமி சிதானந்தர் அவர்களைப் பொறுத்த மட்டில் இது முற்றிலும் பொருத்
5 LDIT 607. GJ (FGOTLDT (Jj LD.
நேருவுக்குப் பின் யார்?' என்ற கேள்வி சென்ற சில ஆண்டுகளாக அரசியல் துறையில் பலர் மூளைக்கு வேலை கொடுத்து வந்தது. இறுதி வரையில் அதற்குப் பதில் வர
வில்லை. 'சிவானந்தருக்குப் பின் யார்?' என்ற கேள்வி
சென்ற சில வருஷங்களாக ஆன்மீகத் துறையில் ஈடு பட்ட கூட்டத்திலே அடிக்கடி கிளம்பியது. அதற்கு ஏகோ பித்த முறையில் வெளிவந்த பதில் 'சுவாமி சிதானந்தர்' என்பதாம். ஆன்மீக உலகில் நடக்கும் அற்புதம் இது. அரசியல் உலகிலுள்ள சூழ்ச்சிகள், பதவி மோகம் இங்கு இடம் பெறுவதில்லை.
சென்ற ஆண்டில் நடந்த எமது நீண்ட யாத்திரைத் தொடர்பில், நவ இந்தியாவின் மகாத்மாக்களின் உபதே
சங்களில் கவனம் செலுத்திவரும் அபிமானிகள் பலரை
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சந்திக்கும் அரியசந்
Vu,
தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் ரமணர், அரவிந்தர், காந்தி, ஆனந்தமாயி, இராமதாஸர், சிவானந் தர் முதலாய பெரியார்களைப் பற்றிய பேச்சே நடைபெறும். இங்கிலாந்தின் மேற்கில் வசிக்கும் ஒர் அன்பர் எம்மைத் தமது அன்பு இல்லத்தில் விருந்தாளியாக வைத்திருந்த போது ஒரு நாள், ‘சுவாமி சிவானந்தரின் உடல் நிலை
சரியில்லையாமே, அவரது நூற்றுக்கணக்கான துறவுச் சீடர்
களுள், அவருக்குப் பின் அவர் பதவியில் வதியக்கூடிய தகுதியுடையார் எவராவது உளரா?' என்ற கேள்வியை

Page 4
28) ஆத்மஜோதி
எம்மிடம் கேட்டார். 'ஏன்? சுவாமி சிதானந்தர் இருக் ருெ அவருக்கு இப்போ வயசு நாற்பத்தேழு தானே' என்ருேம். உடனே அந்த ஆங்கில பக்தர், 'என் உள்ளத்
தில் இருந்ததையே நீங்களும் சொல்லிவிட்டீர்கள். இனி எனக்கு தெய்வநெறிக் கழகத்தின் எதிர்காலம் பற்றிய சந் தேகம் இல்லை' என்ருர்,
கலிபோணியாவிலுள்ள ஹொலிவூட்டில் நடந்த ஓர் சத்சங்கக் கூட்டமுடிவில் ஒர் அம்மையார் இந்தியாவிலுள்ள ஆச்சிரமங்களைப் பற்றி எம்மிடம் ஒவ்வொன்ருய் விசாரித் தார். அப்பேச்சில் மேலே குறிப்பிட்ட கேள்வியும் வந்தது. ஆங்கிலேய அன்பருக்குக் கொடுத்த பதிலே திரும்பவுந் தோன்றியது. அதைக் கேட்டு அம்மையார் மிகவும் மகிழ்ச் சியுற்ருர், 'சிவானந்தரை யான் சந்திக்கவில்லை. இந்தி யாலிலிருந்து இங்கு வந்து போன வேறுசில யோகிகளையும் சுவாமி மாரையும் சந்தித்துள்ளேன். 1960ம் ஆண்டில் சுவாமி சிதானந்தரை லொஸ் அஞ்சலிஸில் சந்தித்தேன், அவ ரது பிரசங்கங்களையும் கேட்டு இன்புற்றேன். அவர் ஒர் தனிப் பிறவி, சாந்த சொரூபி; அடக்கமானவர்; மிகவும் எளிய வாழ்வினர். மற்றவர்களைப் போல புகழையோ, பத்திரி கைப் பிரசாரத்தையோ அணுவேனும் விரும்பாதவர்.' எனப்பல விதமாகப் பாராட்டிப் பேசினர். இரண்டே இரண்டு நாள் உறவில் இவ்வளவு தூரம் சிதானந்தரைச் சரியாக அளந்து கொண்ட இந்த அமெரிக்க அம்மையாரின் அறிவும் ஆன்மீகச் செறிவும் எமக்கு வியப்பை அளித்தன.
இப் பெரியாரை துறவுக்கும் தூய்மைக்கும் ஒர் உதா
ரண புருஷரென அழைக்க விரும்புகின்ருேம். திருக்குறளை
உரைகல்லாகக் கொண்டு, இவ்விரு குணங்களையும் சிறிது ஆராய்வோம். துறவறம் மேற்கொண்டோர் செய்ய வேண் டிய கடமைகள் உள. அவற்றுள் முக்கியமானது பற்றற்ற வாழ்க்கை வாழ்தல், 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்; அதனின் அதனின் இலன்' துறவு அதிகாரத்தின் முதலாவது குறள் இது. (35) துறவோர் நிறைந்த தூய்மை உடையவர்களாக இருத்தல் வேண்டும். 'தூய்மை என் பது அவா இன்மை. ' அவா அறுத்தல் இன்பவாழ்க்கைக்கு அடிப்படை. வேத உபநிடதங்கள் முதலாய நமது சமய சாஸ்திரங்கள், பகவான் புத்தர் போன்ற மகான்கள் போற் றிப்புகழ்ந்தது இதையேயாம்.
A
 

ஆத்மஜோதி 281
மேலும், முறையாகத் துறவறம் விளக்கப்படும் துற வற இயலுக்கு முன்னுரை வழங்கிய பரிமேலழகர்; 'துற வறமாவது மேற்கூறிய இல்லறத்தின் வழியதுஒழுகி, அறி வுடையராய்ப் பிறப்பினை அஞ்சி, வீடு பேற்றின் பொருட் டுத் துறந்தாருக்கு உரித்தாய அறம், அது தான் வினை மாசு தீர்ந்து அந்தக் கரணங்கள் தூய ஆதற்பொருட்டு அவரால் காக்கப்படும் விரதங்களும், அவற்ருன் அவை தூய வாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்.'
என்கிருர் .
இது பொதுவிதி. சிதானந்தரின் துறவு இதற்குப் புறம் பான சிறப்பு விதியின்பாற்பட்டது. போன ஜென்மத்தில் செய்த தவத்தின் பயனுய் அவருக்கு எட்டாவது வயசு நடக்கும் போதே துறவுணர்ச்சி தலைகாட்டி விட்டது. அவர் பிறந்தது ஒர் பெரிய செல்வக் குடும்பத்தில், தந்தை ஓர் கோடிஸ்வரன். மாடி மாளிகைகளும் தோட்டந் துரவு களும் ஏராளமா யிருந்தன. எனவே, மூத்த மகனுகிய பூரீதரருக்கு (சிதானந்தரின் பூர்வாச்சிரம நாமம்) உலக வாழ்வில் சகல போகபோக்கியங்களையும் உழைப்பின்றி அனு பவிக்கக் கூடிய வசதிகள் நன்கமைந்திருந்தன. ஆல்ை அவற்றில் அவரது நாட்டஞ் செல்லவில்லை. சின்னஞ் சிறு வயசில், அவரது பாட்டனரின் நண்பரான அனந்தய்யர் என்ற பெரியார் புராண இதிகாசங்களிலிருந்து எடுத்துக் கூறிய பக்தர் சரிதைகள் தெய்வக்காட்சி பெறுவதே வாழ் வின் நோக்கம் என்ற இலட்சியத்திற்கு வித்திட்டன. சென் னையில் சர்வகலாசாலைப் படிப்பு நடக்கும் போதே பட்டம் பெறும் ஆசையைத் தவிர்த்து, திருப்பதிக் கருகில் வாழ்ந்த ஒர் மகாத்மாவின் ஆச்சிரமத்தையடைந்து தவமேற் கொண் டனர். உற்ருர் கண்டு பிடித்துச் சென்னைக்குக் கொண்டு சேர்த்ததும், கல்வியை மேலும் கவனித்து பட்டம் பெற் றனர். ஏழுவருடகாலம் வீட்டில் இருந்து கொண்டே தவஞ் செய்தார். சமய சாஸ்திரங்களை ஐயந்திரிபறக் கற்றனர். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சிவானந்தர் ஆகிய மூவ ரின் உபதேசங்கள் அவரது உள்ளத்தைப் பண்படுத்தின. பிந்தியவருடன் கடிதப்போக்கும் வைத்திருந்தார்.
இருபத்தேழாவது வயசில் (1943ம் ஆண்டில்) சுவாமி சிவானந்தரின் முன் உத்தரவைக் கடிதமூலம் பெற்று, அவ ரது ரிஷிஹேசம் தவச்சாலையை யடைந்தார். அங்கே அவ ருக்கு முதலில் கிடைத்த பணி நோயாளரைக் கவனிக்கும்,

Page 5
282 ஆத்மஜோதி
மருந்து கொக்கும் சேவையாகும். இயல்பாகவே பூரீதரரி டம் அமைந்திருந்த அருளுடைமையை வெளிப்படுத்த இந் தப்பணி அரிய சந்தர்ப்பத்தை அளித்து விட்டது. இல்லற இயலில் அன்புடைமைக்கு முக்கிய இடம் கொடுத்த வள் ளுவர் பெருமான், துறவற இயலை அருளுடைமை என்னும் அதிகாரத்துடன் (25) ஆரம்பிக்கும் புது முறையை வாச கர்கட்கு இங்கு நினைவூட்ட விரும்புகின் ருேம்.
ஒருவருஷ ரிஷிஹேசவாச முடிவில் சுவாமி சிவானந்தர் அவர்களின் வரலாறு ஒளி ஊற்று (Light Fountion) என்ற பெயருடன் பூரீதரரால் வரையப்பட்டது. அதைப்படித்த
குருதேவர், 'சிவானந்தர் மறைந்து போவார், ஆனல் ஒளி
ஊற்று நீடுழிவாழும்' என்று பாராட்டினர். ஏனையோர் போல், பூணூரீதரர் தமக்கு சீக்கிரம் சன்னியாசம் அளிக்குமாறு குருதேவரிடம் கேட்கவில்லை. பொறுமையாக ஆறுவருஷம் காத்திருந்து, யோக சாதன சமய போதனை யெல்லாம் செய்து முடித்து, 1949ம் ஆண்டு ஆனிமாசம் குருபூரணை தினத்தன்று சந்நியாச உபதேசம் பெற்று சுவாமி சிதானந் தரானுர், இதற்கு ஒருவருஷத்திற்கு முன்னரேயே தெய் வநெறிக் கழகத்தின் போதுக் காரியதரிசி யென்னும் பொறுப்பான பதவியைப் பெற்றிருந்தார். சன்னியாசம் பெற்று பத்து ஆண்டு முடிவில் குருதேவர் கட்டளைப்படி ஐரோப்பா, அமெரிக்கா, கனடா முதலாய தேசங்களில் இரண்டரை ஆண்டு காலமாக அரிய சமயப் பிரசாரம் செய்தனர். சென்றவிடமெல்லாம் அவருக்குப் பூமாலையும் புகழ்மாலையும் சூடப் பெற்றன.
*
நாம் அறிந்த துறவிகளில், யோகிகளில் சந்நியாசிக
ளில் சுவாமி சிதானந்தர் போலப் புகழைப் புறக்கணிக்கும் பெரியார் ஒருவரைக் காண்பது அருமை. பிறநாட்டுக்குச் சென்ற பெரும்பாலோர் பத்திரிகைப் பு க மு க் கு அடிமையாய் விட்டதை அறிவோம் சுவாமி சிவானந் தரிடம் சன்னியாசம் பெற்று வெளிக் கிழம்பிய சிலர் தமது குருதேவர் உடல் கொண்டு உலாவிய காலத்திலேயே தங்கள் சொந்த பிறந்ததினத்தன்று விழாக் கொண்டாடு வதோடு பாதபூசை ஏற்பதையும் நன்கறிவோம். ஆணுல், சுவாமி சிதானந்தரோ, குருநாதரின் பீடத்தில் அமர்ந்த பின்னரும் கூட தம் சொந்த வழிபாட்டையோ பாதபூசை யையோ ஏற்காது, குருநாதர் சமாதிக்கே எல்லா வணக்க

ஆத்மஜோதி 283
மும் செலுத்தப்பட வேண்டுமென வற்புறுத்தி வருகின் ருர், துவாரகையிலுள்ள ஒர் மகானின் ஆச்சிரமதில் இந்த ஒழுங்கான முறையையே கண்டின்புற்ருேம். இதே விஷயங் குறித்து பூரீயோகர்சுவாமிகள் சிறிதுகாலத்திற்குமுன் ஒர் எச்சரிக்கை கொடுத்ததுமுண்டு.
திருக்குறளில் இல்லற இயலின் இறுதியில் ஈகைக்கு அடுத்த அதிகாரமாக புகழ் அமைத்திருப்பதும், துறவற இய
லில் அதைப்பற்றிய கருத்தொன்று மேயில்லாமல், கூடா
ஒழுக்கம், நிலையாமை, அவா அறுத்தல் வற்புறுத்தப் பட்டிருப்
பதும் சாதுக்களும் சன்னியாசிகளும் கருத்தூன்றிக் கவனிக்க
வேண்டியவை. இந்த இடத்தில், பூரீ ர ம ன மூர்த்தியின் திருவாய் மொழியொன்று நினைவுக்கு வருகின்றது. 'உல கெல்லாம் துரும்பாயினும், மறைகளெல்லாம் கைக்குள் அடக்குமாற்றல் வாய்த்தாலும், புகழ்ச்சியாகின்ற வேசியை யடைந்தவர்கள் (அதாவது புகழ்ச்சியை விரும்பினவர்கள்) தங்கள் அடிமைத்தனத்தை அகற்றல் அரிது, என்ருர் அவர், வானவர்களைக் குறித்து மணிவாசகப் பெருமான் "மனம்
நின்பால்தாழ்த்துவதும்தாமுயர்ந்துதம்மையெல்லாந் தொழ
வேண்டி' என்று பாடியிருப்பதும் இங்கு கவனிக்கற் பாலது.
பாரதநாட்டின் பாரமார்த்திக விண்ணில் இன்றுகவாமி சிதானந்தர் ஏற்றுள்ள பதவி அவர் விரும்பாமலே அவரது பூர்வஜென்ம தவப்பயணுகவும், தெய்வசங்கற்பத்தினலும், குருதேவர் ஆசியினலும் வந்தமைந்ததாகும். 1962ம் ஆண்டு சித்திரைமாசத் தொடக்கம் வடஇந்தியாவில் தங்காமல்
தென்னிந்தியாவில் யாத்திரை செய்து கொண்டும் சமயப்
பிரசாரஞ் செய்து கொண்டும் காலங்கழித்துவந்த அப் பெரியார் 1963ம் ஆண்டு ஆனி மாசத்தில், அதாவது சுவாமி சிவானந்தரின் மகா சமாதிக்குப் பத்து நாட்க ளுக்கு முன், ரிஷிகேசம் திடீரெனத் திரும்பியதானது தெய்வ கட்டளையால் நடைபெற்ற நிகழ்ச்சியென்பதை எவர்தான் மறுக்க முடியும்?
1916ம் ஆண்டு ஆனி மாசத்தில் அவதரித்த சிதா னந்தருக்கு இந்த மாசத்தில் நாற்பத்தெட்டாவது வயசு பூர்த்தியாகிறது. இத் தொடர்பில், ஆத்மஜோதியின் ஆணி மாச இதழ் சிதானந்தர் மலராகப் பிரசுரிக்கப்பட்டு அவர் பாதத்து அர்ப்பணிக்கப்படுகின்றது. ஆதி பராசக்தியின் அருளால் இத் தெய்வ புருஷர் நீடூழி வாழ வேண்டுமெ னப் பிரார்த்திப்போமாக!

Page 6
284 ஆத்மஜோதி
GSSSR
o
பூgநிவாசராவ் தென்னிந்தியாவில் ஒரு பெரிய ஜமீந் தார். பல கிராமங்களும் ஏராளமான விளைநிலமும் அரண் மனை போன்ற பங்களாக்களும் அவருக்குச் சொந்தமாயி ருந்தன. அவரது மனையாளான சரோஜினி நற்குணங்களே உருவான ஒர் இலட்சியத்தாய். அவர்களது தவப்பயனல் 1916 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி அவர்க ளுக்குப் புதல்வராகப் பிறந்தவரே பூரீ சுவாமி சிதானந்தர்.
பூரீதர்ராவ் என்பது சிதானந்தரின் பிள்ளைத்திருநாமம், வீட்டினர் அவரைச் செல்லமாகச் சித்தா” என்றழைப்பது வழக்கம். பிறவியிலேயே அவர் ஒரு சித்தராக விளங்கிய மையை அப்பெயர் குறித்தது. 'சுவாமி சிதானந்தர் தமது சென்ற பிறவியிலே ஒரு மாபெரும் யோகியாக இருந்தார்” என்று சோதிடத்தில் வல்லவரான ஒரு யோகி 1949 ஆம் ஆண்டில் கூறினர். சுவாமி சிதானந்தரை ஒரு முறையேனும் தரிசித்தவர்கள் அவர் சென்ற பிறவியில் மட்டுமன்றி பல பிறவிகளில் யோகியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கருதுவார்கள்.
பூரீதரின் டாட்டனுருக்கு அனந்தையா என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு சிறந்த பக்தர். அனந் தையா சிறுவன் பூரீதருக்கு இராமாயணத்திலிருந்தும் மகா பாரதத்தி லிருந்தும் கதைகள் சொல்லுவார். துருவன், மார்க்கண்டேயன் போன்ருேர் கதைகளைக் கேட்க பூரீதருக்கு மிகவும் ஆசை. ‘தவம் செய்யவேண்டும். ஒரு ரிஷியாக வேண்டும். இறைவனைக்காண வேண்டும்' என்ற இலட்சி யங்கள் பூரீதரின் இளம் உள்ளத்தில் வேரூன்றியிருந்தன.
பூரீதரின் தந்தை வழி உறவினரான கிருஷ்ணராவ் என்ப வரும் இளமையிலேயே பூரீதரின் உள்ளத்தில் ஆன்மீகக்
மறீ சுவாமி சிதானந்தர் (வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) 畿
 
 

ஆத்மஜோதி 285
கருத்துக்கள் பதியக் காரணமாயிருந்தார். 'இராமகிருஷ் ணரின் உபதேசமொழிகள்’ போன்ற நூல்களை அவர் சிறு வன் பூரீதருக்குப் படித்துக் காட்டுவார். இல்லறத்தில் இருந்து கொண்டே ஒரு துறவி போல் வாழ்ந்தவரான கிருஷ்ணராவ் பூரீதரிடம் நிவிருத்தி மார்க்கத்தில் நாட்ட முண்டாகச்செய்தார்.
பூரீதர் மங்களுரில் ஆரம்பக்கல்வியும் சென்னை முத்தை யாசெட்டி உயர்நிலைப்பள்ளியில் உயர்தரக்கல்வியும் கற்ருர், அவரது தூயஒழுக்கமும் சிறந்த பண்புகளும் அவரது சக மாணவர் மட்டுமன்றி ஆசிரியர்களும் அவர்பால் விசேஷ அன் பும் மதிப்பும் வைக்கக் காரணமாயிருந்தன. 1936 ஆம் ஆண்டு சென்னை லோயலாக் கல்லூரியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளில் பட்டதாரியாக வெளியேறினர்.
பூரீதரின் உடன் பிறத்தோள் நால்வர். அவர் வீட்டில் அனைவரும் தூய நன்னெறியில் வாழ்ந்து வந்தனர். தரு மமும் சேவையும் அக்குடும்பத்தில் ஒவ்வொருவரிடமும்
காணப்பட்ட நற்பண்புகளாகும். பூரீதரோ இந்நற்பண்பு
களே உருவெடுத்தவராய் விளங்கினர். உதவி நாடி அவர் வீட்டுக்குச் சென்றவர் எவரும் வெறுங்கையோடு திரும்பி யதில்லை. பிறர் துயர் கண்டு இரங்குவதும் துன்பமுற்ருே ருக்குச் சேவை புரிவதும் பூரீதரிடம் இயல்பாகவே அமைந் திருந்த குணங்கள். தொழுநோயாளருக்குத் தொண்டு புரி வது அவரது இலட்சியமாக விளங்கியது. அவர்களுக்கா கத் தமது வீட்டைச் சுற்றிலுமிருந்த பரந்த வெளியில் குடி
சைகள் அமைத்துத் தெய்வங்களை உபசரிப்பது போல்
அவர்களை உபசரித்துப் போஷித்து வருவார்.
பிற் காலத்தில் அவர் சிவானந்த ஆசிரமத்தில் சேர்ந்த
போது முற்கூறிய பண்புகள் பூரணமாக வெளிப்படச் சந்
தர்ப்பமேற்பட்டது.
மற்றவர்கள் நெருங்கவும் அஞ்சும் கொடிய நோயாற் பீடிக்கப் பட்டவர்களுக்கும் அவர் கனிந்த உள்ளத்துடன் சிகிச்சையளிப்பார். அப்போது அவரைப் பார்த்தால், தம் இஷ்டதேவதைக்குப் பூசை செய்பவரைப் போலக் காணப் படுவார். ஆசிரமவாசிகளுக்கு ஏதேனும் நோய் அல்லது துன்பம் என்ருல், வேறு எத்தகைய முக்கிய அலுவல்களி

Page 7
286 ஆத்மஜோதி
ருந்தாலும் அவற்றைத் தள்ளிவைத்து விட்டு, அவர்களது துன்பத்தைத் துடைக்க முன்வருவார். அவர் பிறருக்குச் சேவை செய்யும் விதத்திலிருந்து அவருக்குத் தாம் ஒரு தனிப் பட்ட மனிதர் என்ற உணர்வே இல்லா திருந்தமையும், எங்கும் நிறைந்த ஆன்மாவாகத் தம்மை உணர்ந்த அவ
ரோடு அவரது உடல் தனியே ஒட்டிக் கொண்டிருந்தமை
யும் புலனுயிற்று.
அவரது சேவையுணர்ச்சி மனிதர்களோடு மட்டும் நின்று
விடவில்லை. பறவைகளும் மிருகங்களும் மனிதர்களைப்போ
லவே அவரது கருணைக்குப் பாத்திரமாயின. அவற்றின் துன்பக் குரல் அவருக்குத் தெரிந்தது. கடும் நோயுற்ற நாயொன்றுக்கு அவர் சிகிச்சையளித்துக் குணப்படுத்திய தைக் குருதேவரே பாராட்டியுள்ளார். ‘சிதானந்தர் நாயி லும் இறைவனைக் காண்கிருர்’ என்று அவரது வெற்றியின் இரகசியத்தைக் குருதேவர் எடுத்துக் கூறினர்.
பெரிய லட்சாதிபதியின் குடும்பத்திலே பிறந்திருந்த
போதிலும் இளமையிலிருந்தே பூரீதருக்கு உலக இன்பங்க
ளிலும் கேளிக்கைகளிலும் நாட்டஞ் செல்லவில்லை. பிற ருக்குச் சேவை செய்வதற்கு அடுத்த படியாகத் தனித்திருந்து தியானம் செய்வதை அவர் பெரிதும் விரும்பினர். படிப்பதி லே கூடப் பள்ளிப்பாடநூல்களை விட ஆன்மிக நூல்களுக் கே அவர் முதலிடமளித்தார். அதிலும் பூரீஇராமகிருஷ்ணர் சுவாமிவிவேகானந்தர், சுவாமி சிவானந்தர் ஆகியோரின் நூல் களை மிகுந்த ஆர்வத்துடன் கற்ருர்,
பூரீதர் தம் உடமைகளை மட்டுமன்றித் தமது அறிவை
யும் பிறருடன் பங்கிட்டுக்கொள்வதில் மகிழ்ச்சி கண்டார்.
வீட்டிலும் அயலிலும் உள்ளவர்களுக்கு அவர் ஒரு குருவா கவே திகழலானர். அன்பு, தூய்மை, சேவை ஆகிய நற் பண்புகளின் உயர்வைப் பற்றி அவர் பிறருக்கு எடுத்துக் கூறுவார். ராமஜெபம் செய்யுமாறு அனைவரையும் தூண் டுவார். தமக்கு இருபது வயதிருக்கும் போதே அவர் வீட் டிலும் அயலிலும் இருந்த இளைஞர்களுக்குத் தாரகமந்தி ரத்தை உபதேசிக்கத் தொடங்கி விட்டார்.
பூரீஇராமகிருஷ்ணரையும் சுவாமி விவேகானந்தரையும் பூரீதர் பெரிதும் போற்றிப் பின்பற்றிவந்தார். சென்னையி
 
 
 
 

ஆத்மஜோதி 287
லுள்ள இராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று அங்கு நடை
பெறும் நிகழ்ச்சிகளில் கிரமமாகப் பங்கு பற்றுவார். தலை
நகருக்கு விசயம் செய்யும் சாதுக்களையும் மகான்களையும்
தரிசித்து அவர்களது சத்சங்கத்தைப் பெறுவதில் பூரீதர் * பேரார்வம் காட்டினர்.
1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூரீதர் தம்வீட்டை விட்டு எங்கோ போய்விட்டார். குடும்பம் முழுதும் துயரத் தில் ஆழ்ந்தது. செல்வத்திலே தளைத்த அக்குடும்பத்தில் ஒரு துறவிபோல் அவர் வாழ்வதை அக்குடும்பத்தினர் சகித் துக் கொள்ளப் பழகிவிட்டனர். ஆயினும் அவரை முற்ருக இழந்துவிட அவர்கள் இன்னும் தயாராகவில்லை. அவரைத் தேடிக்கண்டுபிடிக்கப் பலவிடங்களுக்கும் ஆட்கள் அனுப்பப் பட்டனர். முடிவில், திருப்பதிக்கருகில் ஒர் ஆசிரமத்தில் அவர் இருப்பது தெரியவந்தது. பூரீதர் வீட்டுக்கு அழைத் துச் செல்லப்பட்டார். இந்நிகழ்ச்சி, பிற்காலத்தில் பூரீதர் நிரந்தரமாகத் துறவற வாழ்க்கையை மேற்கொள்வதற்கு ஒரு முன்னேடியாக அமைந்தது. திரும்பி வந்த பின் அவர் வீட்டிற் கழித்த ஏழு ஆண்டுகளும் தன்னலமற்ற சேவை, ஆன்மீகநூல்களே ஆழ்ந்து கற்றல், கடுந்தவம், ஆழ்ந்ததியா னம் ஆகிய தீவிரசாதனைகளில் கழிந்தன.
நன்கு சிந்தித்த பின், துறவற வாழ்க்கையை மேற் கொள்வதென பூரீதர் தீர்மானித்தார். பூரீசுவாமி சிவா னந்தருக்கும் அவருக்குமிடையில் கடிதப் போக்கு வரத்து நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரமத்திற்சேர குரு தேவரின் அனுமதி பெற்று 1943 இல் சிவானந்த ஆசிரமத் திற் சேர்ந்து விட்டார்.
ஆசிரமத்திற் சேர்ந்ததும் அங்குள்ள இலவச வைத்தி யசாலையின் பொறுப்பை ஏற்ருர், அவர் எந்த வைத்தியக் கல்லூரியிலும் கற்றவரல்லர், வைத்தியப்பட்டம் எதுவும் பெற்றவரல்லர். ஆயினும் அவரது கைபட்டாலே நோய் பறந்துவிடும் என்று புகழ்பெற்ருர், தமது குருவைப்போ லவே தமது வசதிகளையும் கவனிக்காமல் நோயாளிகளின் பக்கத்தில் இரவு பகல் என்று பாராமல் விழித்திருந்து சேவைபுரிந்து வந்தார்.
ஆசிரமத்திற் சேர்ந்த சிறிது காலத்துக்குள் அவரது பரந்த ஞானத்தை அனைவரும் அறிந்து போற்றலாயினர்.

Page 8
288 ஆத்மஜோதி
அவர் நிகழ்த்திய பிரசங்கங்களும், பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளும் ஆசிரமத்துக்குவிஜயம் செய்பவர்களின் ஐயங் களப் போக்கி அவர்களுக்கு அளித்த போதனைகளும் பூரீதர் தெய்வீக அருள் பெற்றவர் என்பதை ஐயமற உணர்த்தின.
1948 ஆம் ஆண்டில் யோகவேதாந்த ஆரணியகலாசாலை
நிறுவப்பட்டபோது, சுவாமி சிவானந்தர் அவரை உபஅத் யட்சகராகவும் ராஜயோகப் பேராசிரியராயும் நியமித்தார்.
சிவானந்த ஆசிரமத்திற் சேர்ந்த முதலாண்டிலேயே பூரீதர் “ஒளியூற்று' (Light Fountan) என்ற நூலை எழுதி ஞர். அது சுவாமி சிவானந்தரின் வரலாற்றைக் கூறும் ஒப்புயர்வற்ற நூல். 1947 ஆம் ஆண்டில் அவர் தமது குருதேவரின் ஆலோசனையின் பேரில் யோகக்காட்சிசாலை ஒன்றைச் சிவானந்த ஆசிரமத்தில் அமைத்தார். படங்க ளின் மூலம் அதுயோக வேதாந்தக் கொள்கைகளையும் சாத னைகளையும் விளக்குகின்றது. பல ஆண்டுகளில் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களைச் சிலமணி நேரங்களில் மனத் தில் பதியவைக்கும் இத்தகைய யோகக்காட்சிச்சாலை உலகில் வேறு எங்குமில்லை யெனக் கூறப்படுகிறது. 1948 ஆம் ஆண்டில் பூரீதர் திவ்யஜீவன சங்கத்தின் பொதுக்காரிய தரிசியாக நியமிக்கப் பட்டு, உலகெங்கும் கிளைகளைக் கொண்ட அம் மாபெரும் ஸ்தாபனத்தைத் திறம்பட நிர் வகித்து வரலானர்.
1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி குரு பூர்ணிமைதினத்தன்று பூரீதர் சுவாமி சிவானந்தரிடம் சந் நியாசதீட்சை பெற்றுக் கொண்டார். சுவாமி சிதானந்தர் என்ற திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது. துறவறமே உருவெடுத் தவராயிருந்த சுவாமி சிதானந்தர் சந்நியாச தீகூைடி பெறுவதற்கு முன்பும் சிறுவயது முதல் ஒரு துற வியாகவே வாழ்ந்து வந்தாரென்பதைக் கண்டோம். துற வற உடையை அணியுமுன்னரே சிவானந்த ஆசிரமத்தில் அவரது பெருமையை யுணர்ந்த சாதுக்களும் சந்நியாசிக களும் அவரைப்பணிந்து அவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கி விட்டனர். ரிஷிகேசத்தி லிருக்கும் பிரசித்தி
பெற்ற மகான்களும் அவரை மதித்துப் போற்றலாயினர் s
அவரது தூய்மையும் தொண்டும் அறிவும் அடக்கமும் அனை வரையும் கவர்ந்தன.

ஆத்மஜோதி - 289
சுவாமி சிதானந்தர் இந்தியாவில் பலவிடங்களில் திவ் யஜீவனக் கிளைகள் நன்கு நடைபெறக் காரணமாயிருந் ததோடு 1950 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் மேற் கொண்ட அகில இந்திய இலங்கைச் சுற்றுப் பிரயாணம் வெற்றிகரமாக நடைபெறப் பெரிதும் உதவிஞர். 1959 ஆம் ஆண்டில் சுவாமி சிவானந்தரின் பிரதிநிதியாக அமெ ரிக்கா சென்று யோக மார்க்கத்தை அங்குபரப்பினர். ஐரோப் பாவிலும் சுற்றுப்பிரயாணம் செய்து 1962 ஆம் ஆண்டில் சிவானந்த ஆசிரமத்துக்குத் திரும்பினர். பின்னர் தென் னிந்தியாவில் ஸ்தலயாத்திரை செய்து விட்டு 1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுவாமி சிவானந்தர் மகா சமாதி அடைவதற்குச் சில நாட்களுக்கு முன் குருதேவரோடு வந்து சேர்த்து கொண்டார்.
1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுவாமி சிவா னந்தரின் இடத்தில் சுவாமி கிதானந்தர் திவ்யஜீவன சங் கத்தின் தலைவராகவும் யோகவேதாந்த ஆரணியகலாசாலை யின் அத் யட்சகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'சுவாமி சிதானந்தரை நானே என் குருவாக மதிக்கிறேன். அவரி டமிருந்து நான் பல பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரை மதித்துப் போற்றுகிறேன். அவர் அறிவு விசால மானது. அவரது அன்பு எல்லையற்றது' என்று சுவாமி சிவானந்தர் அவர்ளே ஒருமுறை கூறியுள்ளார்.
உனது பிறப்பு இறப்புக்குக் காரணம் உனது அஞ்ஞா  ைமே; இதுவே தான் உனது ஆதிவியா தி. இதை நீக்க வல்லவர் கடவுள் ஒருவரே.
கடவுள் உருவமும் அருவமும் இவ்விரண்டையும் கடந் தவரும் ஆவர். அவரே பிரபஞ்ச சொரூபமாக விளங்கும் விராட்புருஷரும் சாகாரசகுணமான ஈசுவரனும், நிராகார நிர்க்குண பரப்பிரம்மமும் ஆவர். அவர் ஒரு கர்மமும் செய்வதில்லை. எனினும் அவனன்றி ஒர் அணுவும் அசைவது
சத் -சித்-ஆனந்த பிரம்மமே தனது மாயா சக்தியினுல் அசத்-ஜடம்-துக்கமாகிய ஜகத்தாகத் தோன்றுகிறர். எனி னும் அவர் மாயையிஞற் பாதிக்கப்படாது தனித்தும் நிற் கின்றர்,

Page 9
29() ஆத்மஜோதி
மறீ சுவாமி சிதானந்தT, பத்ரிநாத்,
மேன்மை தங்கிய அழிவற்ற ஆத்மாவே!
ஓம் நமோ நாராயணுய.
தங்கள் அன்புக் கடிதமும் பத்ரியில் நடைபெற்ற பிறந்ததினக் கெண்டாட்டங்கள்பற்றிய அறிக்கையும் கிடைத் தன" தயவுசெய்து கோயில் (குளிர்காலத்துக்காக) மூடப் படும்வரை பத்ரியில் தங்கியிருந்து அப்புனித ஸ்தலத்தில் தங்கியதற்கான பூரணப் பலனையும் பெறுவீராக.
சில சமயங்களில் தனியேயிருந்து அமைதியை அனுபவி யுங்கள். பதஞ்சலிமகரிஷியின் ராஜயோகசமாதியில் புருஷன் பிரகிருதியுடன் சேராத தனது தூய தன்மையை அறிகிருன். ஆனல் பிரகிருதி அழிவதில்லை. புருஷனுடன் கூடவே அது
வும் இருந்து வருகிறது. வேதாந்த சமாதியில், விழித்துக்
கொண்டதும் கனவு முடிவடைவது போலப் பிரகிருதி.
தூய அறிவான பொருளைத் தியானிப்பதன் மூலம் அத்தூய அறிவோடு ஒன்றுக, அத்துரய அறிவே ஆகிவிடுக. இப்பூரண அனுபவத்தை அடைய பூரீ பத்ரிநாராயணன் தங்களுக்கு அருள்புரிவாராக,
தன் மறுப்பு, தன்னடக்கம், தன்னைத் தூய்மையாக்கல், தன்னறிவு இவைகளே ஒருவர் ஆத்மானுபூதியடைய உத வுபவை.
பிரார்த்தனை செய்து காத்திருங்கள். காத்திருந்து கவ னியுங்கள். கவனித்துப் பணிபுரியுங்கள். பணிபுரிந்து பிரார்த் தியுங்கள்.
இறைவன் தங்களுக்கு அருள்புரிவாராக!
தங்கள் சொந்த ஆத்மா
சிவானந்தா.
 

t
ஆத் மஜோதி 29.
வாழ்க சிதானந்தஜி
(யோகிருஜ் சச்சிதானந்த சுவாமிகள்)
ஞான ஒளியை ஞாலமெங்கும் தந்து திவ்ய ஜீவனம் மக்களி டையே திகழச் செய்தவர் மகா மண்டலேஸ்வரர் பூரீ ல பூரீ சுவாமி சிவானந்த மகராஜ்; சற்குருதேவரின் ஞானக்குழந்தை, உத்தம சீடர் பூரீமத் ஸ்வாமி சிதானந்த ஜி. அவர் இன்று திவ்ய ஜீவன சங்கத்தின் தலைவராகப் பணிபுரிகிருர்,
ஸ்வாமி சிதானந்த ஜி பொருட் செல்வமும், அருட் செல்வமும் ஒருங்கே நிறைந்த பெருங் குடும்பத்திற் பிறந்தவர். இயல்பிலேயே மிகவும் எளிமையும், பணிவும் உள்ளவர்; சகல ஜீவராசிகளையும் நாரா யணனுகவே கண்டு பணிபுரியும் பேரன்புள்ளவர். இளமையிலேயே துறவறத்தில் நாட்டங்கொண்ட ஸ்வாமிகள் இமயசோதியின், ஒரு கதிராக ஒளிதருகின்ருர் , O
ஸ்வாமிகள் இருஷிகேசத்தில் இரவு பகலென்று பாராது. தன்னையே மறந்து சேவை செய்கின்றர். அவரது அன்புப்பணியில் இன்பங்காண்போர் எத்தனைபேர்! குஷ்டரோகிகளும், சொறிபிடித்த நாய்களும் கூடச் சுகம் பெறுகின்றன என்பது மிகையாகாது! அன்பும் பணிவும், ஞானமும் நிறைந்த ஸ்வாமிகளுடன் ஆச்சிரமத் தில் மலசலகூடம் சுத்தம் செய்யும் தொழிலாளி முதல் அங்குவரும் பெரும் முதலாளிகள் வரை யாவருமே பிரிதியுள்ளவர்களாய் இருக் கின்ருர்கள். -
இறையின்பத்தில் திளைத்திருக்கும் சுவாமிஜி குருதேவரது கொள் கைக்கேற்ற போதனைகளுடன், சாதனைகளிலும் நிறைந்த இன்பங் காணுகின்ருர், பலவழிகளிலும் குருதேவரின் ஞான ஒளியை பிரகாசிக்கச்
செய்யும் உத்தம சீடராக விளங்குகின்ருர் . சற்குரு சிவானந்த மக ராஜ் ஸ்தூல உடலுடன் இல்லையே என்ற ஏக்கம் பக்தர்களுக்கு, இருக் கத்தான் இருக்கிறது. என்ருலும், அக்குறையை கூடியவரையில் நிவிர்த்தி செய்து திவ்யஜீவன சங்கப்பணிகள் நன்கு நடைபெற சகலவிதங்களிலும் பொருத்தமான தலைவர் ஸ்வாமி சிதானந்த ஜியே என்கிற திருப்தி எல்லோர் மனதிலும் உண்டு.
இம்மாதம் ஸ்வாமிகளின் 48வது ஜயந்தி தினம் கொண்டாடப் படவிருக்கிறது. ஸ்வாமிகள் தமது சேவையை மேன்மேலும் பெருக்கி, ஞானஒளிபரப்ப, நீண்ட ஆயுளும், ஞான ஆரோக்கியமும் தந்தருள, திரு வருளையும் குருவருளையும் முழுமனதோடும் வேண்டுகின்றேன்.
” வாழ்க! சிதானந்தஜி
வாழ்க! திவ்யஜீவனசங்கம்
வாழ்க! வையகம்,

Page 10
292 ஆத்மஜோதி
சிவானந்த ஆசிரமம், ரிஷிகேசம், இந்தியா,
23-3-1964.
பூணூர் நா. முத்தையா அவர்கள், ஆத்மஜோதி நிலையம்,
இலங்கை, - பிரிய ஆத்ம சுவரூபமே,
ஓம் நமோ நாராயணுய. நமஸ்காரம்.
இறைவனே என்றுமுள்ள சத்தியப் பொருள். உலகம் அழியும் நாமரூபங்களின் கூட்டம். அது நிலையற்றது; சதா மாறிக்கொண்டிருப்பது. உண்மையில்லாததை உண்மையா னதென்று நினைத்து, அறிவற்ற மனிதன் இன்பமும் நிறை வும் நாடி இந்த நிழல்களின் பின்னே ஓடுகிருன், அவன் அடைவது துன்பமும் துக்கமுமே, அழிவற்ற ஜோதியான ஆத்மாவை மனிதனுக்கு நினைவூட்டி, அவன் மனத்தை கீழ்த்தரமான நாட்டங்களிலிருந்து திருப்புவது தான் அவ னைத் துன்பங்களிலிருந்து மீட்டுத் தெய்வீக இன்பத்துக்கு இட்டுச்செல்லும் உன்னத வழியாகும். மனித சமுதாயத் துக்கு ஆற்றக்கூடிய மிகச்சிறந்த சேவை இதுவே. மணி தனது அழிந்து போகக்கூடிய அம்சங்களுக்கு உதவும் பிற சேவைகளனைத்தையும் விட இது உயர்ந்தது. இஃதின்றேல் மனிதன் தனது அஞ்ஞானத் தாலும் மயக்கத் தாலும் தொடர்ந்து துன்பங்களில் உழன்று கொண்டிருப்பான்.
தங்கள் சிறந்த பத்திரிகையான 'ஆத்மஜோதி' யின் மூலம் தாங்கள் மனிதகுலத்துக்கு இத்தனை சிறந்தசேவையைச் செய்து வருகிறீர்கள். தெய்வீக உண்மையின் ஒளியை அது தொடர்ந்து இந் நவீன உலகுக்கு அளித்து, எண்ணற்ற உயிர்களை அஞ்ஞான இருளினின்று காத்து வழிகாட்டி வரு மாக, தங்கள் சஞ்சிகையின் பக்கங்களிலிருந்து ஆத்மீக ஒளி எங்கும் பரவி எண்ணற்ற இதயங்களுக்கு ஒளியூட்டி வருமாக. தங்கள் முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் எனது நல்லாசிகள்.
இறைவன் தங்களுக்கு அருள்புரிவாராக.
உலகமெங்கும் உயர் நலம் பெருகுக.
சுவாமி சிதானந்தா
D.
தலைவர் திவ்ய ஜீவன சங்கம்
 
 

ஆத்மஜோதி 293
எதிர்பாராது வந்த சிதானந்தா
(ஸ்வாமி நிர்மலானந்தா)
சிதானந் சிதானந் சிதானந்த ஹாம் ஹர்ஹால் மே ஹர்மஸ்த் சச்சிதானந்த ஹ"ம்.
உலகிடை வாழ்ந்து அமரர்களாகிய மகான்கள் இந்தப் பூதவுடலை விடுத்து புகழுடம்பு அடையுமுன்பு தம்மிடமுள்ள தவசக்தியை தமது சீடரிடம் அளித்துத் தான் சென்றிருக் கிருர்கள். அன்று ஆந்திரா தேசத்தில் வேமனுவின் குரு நாதன் தனது அன்புக்குரிய சீடன் அபிராமனின் சேவை யால் மகிழ்வடைந்த தன்னுடைய ஆத்மீக சத்தியை அபிராமனிடம் கொடுக்க எண்ணி ஒருநாள் தனியாக அழைக்க அவ்வருளே தான் தான் அபிராமன் என்று கூறி வேமனு மறைந்திருந்து அருளைப் பெற்ருர், அவ்வருளேதான்
இன்று வேமனுவின் புகழுக்குக் காரணம்.
கர்நாடக தேசத்திலே வாழ்ந்த மகாசித்தாருடர் தன் அந்திய காலத்தில் தன்னிடம் விளங்கும் பூர்ணசக்தியை தன் அன்புக்குப் பாத்திரமான பிரதான சிஷ்யன் (குருநாத ஆ ரு டர்) குருநாதனிடம் விட்டுச்செல்ல எதிர்பார்த் திருந்தார். குருநாதனைக் கண்டதும் இன்று முதல் பேசா திரு என்று மொழிந்து தன் திருக்கண்ணுல் நோக்கினர். உடலிலிருந்து உயிர் பிரிந்தது. அதே குருநாதாருடர் சித்தா ருடைய பூர்ண தவசக்தியை பெற்றவராய் சமீப காலம் வரையும் ஜீவன் முக்தராய் ஜடபரதரைப் போன்று
வாழ்ந்து மறைந்தது எல்லோரும் அறியலாம்.
ஏன்! சமீப காலத்திலே பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரும் தான் அன்னையிடம் பெற்ற அருள்சக்தியை நரேந்திரனிடம் அளித்துப் போகவே துடித்திருந் தாரல் லவா ? நரன் வரவில்லையா? வரவில்லையா? என்று பன் முறை கேட்கவில்லையா? தான் அந்திய காலத்தில் நரனைக் கண்டதும் தன்னை பூர்ணத்தில் ஐக்கியமாக்கிக் கொண்டதை , நாம் அறிவோமல்லவா! அதேநரேந்திரன் விவேகானந்தராகி தன் குருநாதன் அளித்த அருள் சக்தியை பன்னிருவருடன் பதிர்ந்து கொண்டு குருநாதன் இராமகிருஷ்ணருடைய

Page 11
294 ஆத்மஜோதி
நாமத்தையும், அவரின் அருள் வாக்குகளையும் உலகிடை மலரச் செய்து வந்ததை நாம் அறிவோம்.
ப்படியாக அநேக காலம் தொட்டு பல
19 حسب 凸 (LJD
களும், ஞானிகளும் விட்டுச் சென்ற ஞான வாக்குகள்
தானே, இன்று வேதங்களாகவும், உபநிஷத்துக்களாகவும் விளங்குகின்றன. நாமும் அந்தப் பரம்பரையைச் சேர்ந்த வர்கள் தானே. நம் தென்னகத்தே 150 ஆண்டுகளுக்கு முன்பு அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருள் பெற்ற ஞானப் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள் பல அற்புத சித்திகளை காட்டி அஞ்ஞானத்தில் உழலும் மக்க ளுக்கு சமரச சன்மார்க்கத்தைப் புகுத்தினர். ஆணுல் அதை ஏற்றவர்கள் வெகு குறைவு. இப்பொல்லாத உலகத்தில் தனித்திருப்பதைக் காட்டிலும் பலருள் புகுந்து அருளாட்சி செய்யலாம் என்று எண்ணி அருட்பெருஞ் சோதியுள் மறையுமுன்பு நான் பல உருவில் வருவேன் என்று சொல்லி மறைந்தார் அல்லவா?
அதே வள்ளல் தான் கர்மயோகி கர்ந்திமகானுகவும்
ராஜ யோகி அரவிந்தராகவும், ஞானயோகி ரமண மஹரி வழியாகவும், பக்தியோகி ராம்தாஸாகவும் சமரச சன்மார்க்க நெறியை உலகமெங்கும் பரப்பிய சற்குரு சிவானந்தரா கவும் தோன்றினர். நம் குருநாதன் உலகின் பல பாகத்தில் உள்ளோர் அனைவருக்கும் ஆங்கில பாஷைமூலம் எளிய சாதனை செய்து ஆண்டவனை அடையும் மார்க்கத்தை காட் டியும், தன்னை தரிசித்தவர், நினைத்தவர், ஸ்மரித்தவர், பூசித்தவர் அனைவருக்கும் அவரவர் எண்ணிய எண்ணங் களை நிறைவேற்றி தந்ததும் (அன்று பிருந்தாவன கோபி யர்கள் கண்ணனுக்கு என்பேரில் தான் அதிகப் பிரியம் என்று ஒவ்வொருவரும் சொன்னதுபோல்) நம் குருநாத னும் உலகத்தார் அனைவருடைய இதயத்திலும் குடிகொண்டு எல்லோருக்கும் சொந்தமாகி அன்னையாகி, அப்பணுகி, தோழனுகி, குழந்தையாகி, குருவாகி அனைவரும் தொழும் தெய்வமுமாகி விளங்கிய இமயஜோதி மறையுமுன்பு தன் பூர்ண தெய்வீகப் பணியை ஒப்புக் கொள்ள தகுந்த கோஹினூர் வைரம் சிதானந்தர் வருவார் என்று பலரிடம் மொழிந்திருந்தார்கள். பல ஆண்டுகள் தனது குருநாதன்
இமயஜோதி சிவானந்தரின் தெய்வீக சேவையை செய்து A
சுவாமி சிதானந்த பூரீமகாராஜ குருநாதரின் பூர்ண அருள்
 

ஆத்மஜோதி 295
பெற்று வெளிநாடுகளும் சென்று குருநாதரின் புகழை உயரச் செய்துவிட்டு, ஏகாந்தியாகி பாரதம் பூராவும் தான் யாரென்று தெரிவித்துக் கொள்ளாது பரிவ்ராஜ கமாக யாத்திரை செய்தவர். குருநாதன் பூதவுடம்பிலி ருந்து பிரியும் 21 நாட்களுக்கு முன்பு திரும்பி வந்து குரு நாதரிடம் அனுமதி பெற்று திருக்கேதாரத்தில் இருந்து சாதனை செய்யலாம் என்று எண்ணி குருநாதரின் அனுமதி கேட்கத் தான் எதிர்பார்த்திருந்த சீடனிடம் அவசியம் கேதார் போகத்தான் வேண்டுமா என்று கேட்டு அனும தியும் கொடுத்தார்கள். அந்த சிவனின் சொரூபமான சிவானந்தர் சரீர பந்தத்திலிருந்து விடுபட எண்ணியவராய் தான் எதிர் பார்த்த சீடர் வந்த மறுநாளே சரீர நலிவுற்று படுக்கையானுர், அதே தினம் சிதானந்தரும் கேதாரம் பிரயாணமாக வேண்டியவர் ஏதோ காரணத்ால் பிரயா ணம் தடைபட்டு நின்று விட்டார், இதன் உட்கருத்து தான் என்ன? தனது ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள தனது பிரிய சீடனை மானசீகமாக அழைத்தது தானே!
இப் பூதலம் விட்டு புனித பொன்னுடலிலிருந்து பிரிந்து கொண்ட அந்த ஜூலை 14 ந் திகதி இரவு 11-20க்கு 3நிமி டங்களுக்கு முன்பு சிவானந்தரின் பொற்காதிலே பிரண வத்தை புகுத்த வேண்டும் என்று யாருக்குத் தோன்றியது? பிரணவத்தைக் கே ட் டு க் கொண்டே, உள்ளத்திடை எண்ணிய சீடனை திருக்கண்ணுலே நோக்கிக் கொண்டே, ஜோதி அருட்ஜோதியில் மறைந்தது. இன்று அதே சிவா னந்தா தான் சிதானந்தரில் புகுந்து உலக தெய்வீக சங்கத்தின் தலைவராக விளங்குகிருர் என்ருல் அது குரு
ாதரின் பூர்ண சக்தியை காட்டுகிறதல்லவா!
சுவாமி சிதானந்தஜி மசராஜ் உடல் பருமனில்லாதவர். ஆணுல் அவர் உள்ளமோ குருநாதரின் உள்ளத்தைப் போன் றது. தான் காணும் சகல வஸ்துக்களிலும் ஆண்டவன் இருந்து அருள் ஆட்சி செய்கிருன் என்ற இயல்பு கொண் டவர். தன்னைக் கண்டு வணங்கும் பாலர் முதல் வயோதி பர் வரைக்கும், ரோகி முதல் யோகியர்கள் வரைக்கும் தன்னை வணங்கும் போது தானும் அவர்களை வணங்குவார். அவர் ஹரி ஜனத்தினிடையே (தோட்டிகள்) பகவான்
ஹரியைக்கண்டு காந்தி ஜயந்தி தினத்தன்று ஹரி ஜனங்க
ளுக்கு பாதபூஜை செய்து, நமஸ்காரம் செய்து வழிபடுவார்.

Page 12
296 ஆத்மஜோதி
நவராத்திரி காலத்திலே, நவகன்னிகா பூஜை செய்யும் போதும் தாய்மார்கள் தன்னை வணங்கும் போதும் அவர் களுள் ஜெகத் ஜெனனி ஜெகன் மாதாவாகவே அவர்களைக் கண்டு வணங்கி நிற்பதை காண்பவர் அனைவருக்குமே பக்தி பெருகும், பரவசம் உண்டாகும்.
இம் ம க ர ன் நாய், பூனை, குரங்கு, மாடு, குதிரை இவைகளிடத்திலும் சமரசமாகப் பழகுவார். அவைகளின் துன்பத்தையும் நீக்கப்பாடுபடுவார். கொடிய விலங்குகளும் அன்புக்கு அடங்கி நடக்கும். இம் மகான் மூலம் இமய ஜோதி சத் குரு சிவானந்தரின் மஹிமையும், அவர் அரு ளிய ஆன்மீகஞான அனுபூதிச் செல்வங்களும் மறையாது உலகம் உள்ளளவும் அணையாச்ஜோதியாகப் பிரகாசம் பெறுமாக.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி, தனிப்பெங் கருணை ஆண்டவன் இம்மகானுக்கு நோயற்ற வாழ்வை அளித்து
உலக சேவைக்கு ஊக்குவிக்க பிரார்த்திப் போமாக!
இமயஜோதி பூரீ சிவானந்த குரு தேவனின் அருளும்,
ஆட்சியும், சுவாமி சிதானந்தரின் மூலமாக அனைவருக்கும்
கிட்டுமாக!
'லோகா ஸமஸ்தா ஸ்சுகினுே பவந்து' (சுவாமி சிதானந்தரின் நித்ய பிரார்த்தனை)
வாழ்க சிவானந்த நாமம். வளர்க தெய்வீக ஜீவன சங்கம். சிவானந்தரின் புகழ் உயர்த்தும் சிதானந்தர் வாழ்க! வாழ்க!!
கடவுள் பொறிகளுக்குப் புலன் படாதவர், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவர், எனினும் பொறிவாயிலை அடைத் து விட்டு தியானத்தில் நிலைத் திருப்படியாகில் உன்னிற் கடவுள் சொரூபம் விளங்கும். எல்லா மதங்களுக்கும் மூலாதாரம் கடவுளே. A.

ஆத்மஜோதி 297 சிவ சிதானந்தர்
(மகரிஷி சுத்தானந்த பாரதியார்)
சிவானந்த நகரில் சிலநாட்கள் தங்கித் தவம் புரிந்தேன் சிவானந்தர் ஆத்மவடிவில் அங்கே நிறைந்திருக்கிருர், அவர் செய்துவந்த மகத்தான தொண்டுகள் மிகச்சிறப்பாக நடக் கின்றன. ஏராளமான கட்டிடங்கள், புதுப் புது அறப் பணிகள் ஒவ்வொருநாளும் வளர்ந்து கொண்டே ச்ெல்கின் றன. எல்லாம் காலத்திற்கேற்ற கலைவனப்புடன் நடக்கின் றன. கங்காதேவி சிவகைங்கரியத்தின் சிறப்பைப் பாடிச் செல்லுகிருள். அச்சுக்கூடம் லேனே டைப்புடன் சிவஞான வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது. அன்னை சிவஇதயாம்பிகை அற்புதமான மருத்துவசேவை செய்துவருகிருர், இந்த அம் மாள் சாந்தானந்தர் போன்ற சில துறவிகளைப் பயிற்றி மருத்துவதருமம் செய்து வருவதைக்கண்டு நான் வியந்து போனேன். தினம் 250 பேர்கள் இந்த அம்மையாரால் நலம் பெறுகின்றனர். அன்னபூர்ணு க்ஷேத்திரத்தில் வேள்விக்க னல் வளர்கிறது; தினம் 400 பேர்களுக்கு அறுசுவை உணவு அன்புடன் தரப்படுகிறது. பல துறவிகள் இங்கே உணவு கொண்டு கவலையற்றுத் தவம் புரிகின்றனர். மாலை மூன்று மணிக்கு யோகவேதாந்த வகுப்புகள் நடக்கின்றன இரவு 7-30 மணியிலிருந்து 10 மணிவரையில் சாது சங்கம் நடக் கிறது. நாதப்பிரம்மம் அங்கே தாண்டவமாடுகிறது. நான் பத்து ஆண்டுகளுக்குமுன் பார்த்த சிவானந்த ஆச்சிரமம் இப்போது ஒரு நகரமாகப் பெருகிவிட்டது. எத்தனைவிடுகள்! எத்தனை நிலையங்கள்! எத்தனை துறவிகள்! எத்தனை பணி நலங்கள்! அடடா! ஓர் ஆத்மாவின் அத்யாத்மசக்தி இத் தன அற்புதங்களைச் செய்துள்ளது! சிவானந்தர் எத்த
னையோ அற்புதங்களைச் செய்தார். அவற்றுள் மிகச்சிறந்த
அற்புதம் சிதானந்தர்; 20 ஆண்டுகள் மெளனத் தவம் புரி ந்தபின், நான் சிதம்பரம் நடராஜா சந்நிதியில் சிவானந் தரைச் கண்டு 'ஓம் சிவம்' என்று வாய் திறந்தேன், சிவா னந்தர் எனக்கு மாலைசூட்டி நம: சிவாய ஒம் என்ருர், எனக்குப் பின்னுல் ஒர் இளந்துறவி "ஹரேராம்' என்று பாடினர். அத் துறவியின் புன்னகை முகமும், பொன்னி ளந்திருவும், அறிவும் பணிவும் அன்புமனமும் என் உள் ளத்தை அள்ளின. சிவானந்தருடன் நான் தருமபுரத்தில்

Page 13
298 ஆத்மஜோதி
பேசிக்கொண்டிருந்தபோது இவரே என் வலது கை-எனக் குப் பிறகும் இவரே தெய்வநெறிக்கழகத்தை நடத்து கிறவர்' என்ருர்,
இந்த இளந்துறவியே சுவாமி சிதானந்தர், என் உள் ளத்தைக் கவர்ந்த துறவிகளில் இவர் ஒருவர். இவர் நல்ல
செல்வக் குடும்பத்தில் பிறந்து, பீ. ஏ. மட்டும் படித்து
வாழ்வின் பயனைப்பெற வேண்டித் துறவுபூண்டு சிவானந் தரை அடைந்து அவருக்கே ஆளான வைராக்கியக் கொழுந்து. சிவானந்தர் உள்ளபோதும் இவரே காரியதரிசி யாயிருந்து தெய்வநெறிக் கழக த்  ைத வெற்றிபெறச் செய்தார். சிவானந்தர் உருவை உதறி அருவானதும், அன்பர் இவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்; அல் லும் பகலும் சிவமயமான ஜீவசேவை செய்து வருகிருர்,
டில்லி சப்ரூஹலில் நடந்த " திவ்யஜீவன மகாநாட் டிற்கு நான் தலைமை வகித்தேன். அப்போது இவர் வர வேற்புரை கூறினர். அதே இளம்பொலிவு, அதே மணிக்கு ரல், அதே ஆர்வமுடன் விளங்கினர் சிதானந்தர். நான் ரிஷி கேசத்தில் தங்கியபோது தாயினும் சாலப் பரிவுடன் இவர் எனக்கு ஆவன செய்தார். பழம் என்ருல் பாலும் தேனும் உடன் வரும். வாயசைக்கு முன்னே வண்மை பொழியும்.
நான்கு நாட்கள் அவர் முன்னிலையில் பல சொற்பொழி வுகள் ஆற்றினேன், பாட்டுரை நடத்தினேன். சிவானந்த (நடன் நீண்டகால உறவின் அனுபவங்கள், யோகவேதாந்த சாதனம், உலகும் யோகமும், துறவிகள் கடமை, ராஜ யோக சாதனம், வேதவிளக்கம் , இந்து தருமப்பிரசாரம், துறவிகள் கடமை முதலியவற்றைக் குறித்துப் பேசினேன் சிதானந்தர் போற்றுரை கூறினர். அவரை விட்டுச் செல் லவே மனமில்லை.
சிவானந்தர் சமாதியில் இரவு இரண்டுமணிக்குத் தியா னித்தேன். அப்போது சிவானந்த விடயம் எழுத எழுச்சி பிறந்தது. மறுநாள் பிரியாவிடை கொண்டேன். சிவசமாதியில் அன்பர் கூடினர். பூமாலை சூட்டியபிறகு பாமாலைசூட்டி விடைபெற்றேன்.
c

டைய முடியும்
ஆத்மஜோதி 299
தன்னலமற்ற சேவையுணர்ச்சியை வளர்த்துங்கள்.
(யூனி சிவானந்தர்)
சில புத்தகங்களைப் படித்துப் பாடமாக்கிக் கொண்டு பிரசங்கங்கள் செய்வது சுலபமானது. ஒர் அறைக்குள் இருந்து பத்து மணிநேரம் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருப் பதும், உலகத்தையே வெற்றி கொண்டு ஒரு சக்கரவர்த் தியாக முடி சூட்டிக்கொள்வது கூட எளிதானதே. தனியே ஒரு பெரும் ப'ையை எதிர்த்து நின்று போரிடுவதும் சுல பமானது தான்.
ஆனல் தன்னலமற்ற சேவை யுணர்ச்சியை வளர்ப்பது மிகமிகக் கடினமானது. பேரார்வமும் அசையா உறுதியும் உயர்ந்த பக்தியும் பூரணப்பற்றின்மையும் உடைய முதல் தரமான சாத கனே ஒரு நிஷ்கா ம்ய கருமயோகி ஆகமுடி யும். அவனே மாபெரும் வீரன்; சக்கரவர்த்திகளுக் கெல் லாம் சக்கரவர்த்தி.
சாதகன் ஒருவன் துறவை மேற் கொண்டு, சில ஆன் மீக நூல்களைப் படித்ததும் தன்னை ஒரு பெரிய யோகி என்று நினைத்துக் கொள்கிருன் சேவை செய்ய வேண்டிய சந் தர்ப்பம் ஏற்படும் போது அவன் படுதோல்வி யடைகிருன். 'இந்த வேலைகளை யெல்லாம் நான் எதற்காகச் செய்ய வேண்டும்? இவற்றைச் செய்ய வேண்டு மென்ருல் அதற்கு பம்பாய் போன்ற நகரங்களில் பட்டுச் சட்டையும் கிராப் புத்தலையுமாய் இருந்து சம்பாதித்துக் கொண்டிருக்கலாமே' என்று அவன் கருதுகிருன், 'இது தெய்வத்துக்குச் செய் யும் தொண்டு. இது ஆன்மீக வழிபாடு. சரியான பாவ னையுடன் இச் சேவையைச் செய்தால் நான் மோட்சம என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுவதில்லை.
தெய்வீக அருள் பெற்றவர்கள் எங்ங்னம் நடந்து கொள்கிருர்கள் என்று பாருங்கள். ஆசிரமத்துக்கு ஒரு வண்டி நிறையக் கரி வந்திருந்தது. அதை இறக்கிவைக்க ஒரு வரும் அருகிலில்லை. திவ்யஜீவன சங்கத்தின் பொதுக்காரி யதரிசியான சுவாமி சிதானந்தர் உடனே சிறிதும் தயங்

Page 14
300 ஆத்மஜோதி
காமல் கரி மூட்டைகளைச் சுமந்து கொண்டு போய் சமய லறையில் அடுக்கினர். தேவையான ஆட்களில்லாமையால் புத்தகங்களைக் கட்டி யனுப்புவதில் தாமத மேற்பட்ட போது, அவரே அவற்றைக் கட்டியனுப்பினர். வேலையனைத் தும் புனித வழிபாடு என்னும் தெய்வீக பாவனையுடன் அவர் அனைத்தையும் செய்கிருர், எனவே எத்தகைய சேவையையும் செய்ய அவர் எப்போதும் தயாராயிருக்கிருர், இதுவே ஒரு தெய்வீக ஆன்மாவின் அடையாளமாகும்.
சிதானந்தஜியைப் போலப் பிரகாசியுங்கள்
வேதாந்த நூல்களைப் பாட மாக்கிப் பயனில்லை. பொதுக் கூட்டங்களில் இப் பண்டிதர்களுக்கு மரியாதை யளித்துத் தகுந்த ஆசனமளிக்கா விட்டால் அவர்களுக்குக் கோபம் வந்துவிடும். இது சாதுக்களுக்கு அடையாளமன்று. 'நான் எல்லா உயிர்களிலுமுள்ள ஆன்மா' என்பவை போன்ற உயர்ந்த இலட்சியங்களை மனத்திற் பதியவையுங்
கள். நம் சிதானந்தஜியைப் போலப் பிரகாசியுங்கள்
இதுவே எனது மனமார்ந்த பிரார்த்தனை.
உப நிஷதங்கள் சிதானந்தரின் இதயத்திலுள்ளன
சுவாமி சிதானந்தரின் பிரசங்கங்களை நீங்கள் கவன
மாகக் கேட்டு வந்தால் அதில் உபநிஷதங்களிலுள்ள உண் மைகள் யாவும் விளக்கப் பட்டிருப்பதை அறிவீர்கள், இத் தனக்கும் அவர் உபநிஷதங்களைப் படித்ததில்லை. தமது இதயத்திலிருந்து அவர் உபநிஷதங்களை எடுத்துக் கூறுகிருர், கீதை, பிரமசூத்திரம் ஆகியவற்றின் உருவமாக அவர் திகழ்கிருர். சமீப காலத்தில் பக்தி, நிஷ்காம்ய கருமம் ஆகியவற்றைப் பற்றி அவர் பேசும்போது முடிவில் வேதாந் தத்தில் கொண்டு வந்து முடிப்பதைக் காண்கிறேன். இதி லிருந்து என்ன தெரிகிறது? இறைவனிடம் ஆழ்ந்த பக்தி வைத்துத் தீவிரசாதனை செய்து வருவீர்களாயின் வேதாந்த ஞானம் தானே உதயமாகும்.

ஆத்மஜோதி 301
சுவாமி சிதானந்தர்-ஒர் அனுபவயோகி
சுவாமி சிதானந்தர் ஒர் அனுபவயோகி. அவர் செய லுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். தாம் கூறுவதைச் செய லிலும் காட்டுபவர். ஏதோ ஒரு வேலையில் அவர் எப்போ தும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
அனைவரையும் காந்தம் போல் இழுக்கும் சக்தி சுவாமி சிதானந்தரிடம் உள்ளது. அவர் ஞானமும் தெய்வீக அரு ளும் நிரம்பியவர். அவரைச் சந்திப்பவர்களும் அவரது நூல்களைப் படிப்பவர்களும் அவரிடம் பெருமதிப்பு வைக் கின்றனர். சிவானந்த சாந்தி.
சுவாமி சிதானந்தரின் இதயம்
சுவாமி சிதானந்தர் தாம் ஒரு அரசகுமாரனிடம் அல்
லது கற்றறிந்த பண்டிதரிடம் செலுத்தும் அதே அன்பை
ஒரு நாயிடமும் ஒரு சண்டாளனிடமும் செலுத்துபவர். சாதாரண மக்கள் அருவருத்து ஒதுக்கும் ஒரு குட்டரோ கியிடம் அவர் பரிவு காட்டி அவருக்குத் தொண்டு புரிவார். ஒரு மிகச் சிறந்த தாதி ஒர் அரசனுக்கு எப்படி சிகிச்சை யளிப்பரோ அதே போலச் சிரத்தையுடனும் அன்புடனும் அவர் ஒரு குட்டரோகியின் புண்களைக் கழுவுவார். மிகச் சிக்கலான தத்துவக் கேள்விகளுக்கு அவர் தெளிவாகப் பதில் அளிப்பது எங்ங்ணம் இனிமையா யுள்ளதோ, அதே போல அவரது பணிவும் அடக்கமும் மிக இனிமையா னவை. பாட்னு 'ருேட்டரி' கிளப்பில் வெவ்வேறு துறை களைச் சேர்ந்த சிறந்த அறிவாளிகள் கேட்ட கேள்விகளுக் குச் சுவாமி சிதானந்தர் தமது குருதேவரின் ஆணைக்கி
ணங்க தெளிவான மறுமொழிகளைக் கூறினர். அவர் உட
னுக்குடனுக அளித்த பூரணமான மறுமொழிகள், நிகழ்ச் சிகளில் பங்கு பற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் நியா யவாதிகளையும் பிரமிக்கச் செய்தன. அவர் அனைவராலும் மதித்துப் போற்றப்படுவதில் அதிசயம் எதுவுமில்லை. அவ ருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை நான் ஒரு பெரும் பேருகக் கருதுகிறேன்.
-ழனி ஏ. கே. சின்ஹா? ஒய்வு பெற்ற
பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், பாட்ணு.

Page 15
302 ஆத்மஜோதி தெய்வீகத்தன்மையே உருவெத்த சிதானந்தர்
பின் வரும் ஐந்து குணங்களைக் கொண்டவரே உண்மை ஞானி என்று குருநானக் கூறுகிருர்,
(1) இறைவனருளால், சாதுக்களைச் சந்தித்து, ஒரு சத் குருவை யடைந்து, அவரிடம் பூரணசரகை தி யடைந்து, குரு மந்திரத்தைப் பெற்று, அவர் கட்டளைகளை நிறை வேற்றி, தீவிர பக்தியுடன் பிரார்த்தனை, பூஜை, சேவை, கீர்த்தனே ஆகியன செய்தல்.
(2) இறைவ னருளால் மனத்தி லிருந்து மோகம், கோபம், காமம், மதம், பொய் ஆகிய மாயா அழுக்குகளை யகற்றி, வைராக்கியம், தூய்மை, அமைதி, கருனே, திருப்தி, தெய்வ இச்சைப்படி நடத்தல், பணிவு, சத்தியம் ஆகிய வற்ருலான மாலையையணிந்திருத்தல்.
(3) இறைவனருளால் ஆன்ம விசாரம் செய்து உண்மை ஞானம் பெற்றிருத்தல்.
(4) இறைவனருளால் நாம ஜெபம், தியானம், சமாதி ஆகிய வற்றில் திளைத்து தெய்வீக இன்பத்தையும் பயமின் மையையும் அனுபவித்தல்.
(5) இறைவனருளால் எங்கும் இறைவனேயே காணல்.
இந்த ஐந்து தன்மைகளும் பூரீ சுவாமி சிதானந்தரிடம் அமைத்துள்ளன.
-டொக்டர். இடிர்சிங், எம். பி. பி. எஸ்.
கடவுள் மேலாம் பரம புருஷர். அவரே நீக்கமற எங் கும் நிறைந் திருப்பவர். அவரே யாவற்றிலும் யாண்டும் அதிஷ்டானமாகவும் இருப்பவர் அவரே உலகில் அனைத்தி னுள்ளும் வியாபித்தும் இருப்பவர். வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத அவரே வாக்கிலும் மனதிலும் ஊடுருவியும் நிற் பவர். அவரே யாவர்க்கும் இலட்சியப் பொருளாகவும்
இருப்பவர்.
ά
 

در//
ஆத்மஜோதி 303
சுவாமி சிதானந்தரின் பொன் மொழிகள்
1. இறைவனை அடையப் பாடுபடுவதே வாழ்க்கையில் உங்கள் தலையாய கடமை. இறைவன் மட்டுமே உண்மைப் பொருள். மற்று இவ்வுலகில் உள்ள அனைத்தும் நிழல்
போன்றவை.
2. உலக வாழ்க்கை துன்பமும் துயரமும் நிரம்பியது. இறைவன் இன்பமயமானவன். அவனை அடைவதையே நோக்கமாய்க் கொள்ளுங்கள். பிற ஆசைகளை விட்டொழி யுங்கள்.
3. மனத்தையும் புலன்களையும் கட்டுப் படுத்துங்கள், தூய்மை பெறுங்கள். குருவுக்குச் சேவை செய்யுங்கள்.
நீங்கள் இறைவனை அடைவீர்கள்.
4. சந்தர்ப்பங்களே நழுவவிடாதீர்கள். இறைவன் தமது அன்பாலும் கருணையாலும் அளிக்கும் ஒவ்வொரு சந்தர்ப் பத்தையும் பூரணமாகப் பயன் படுத்துங்கள். ஒரு முறை இழந்த சந்தர்ப்பம் மீண்டும் திரும்பிவராது. அடையக் கூடியவற்றுளெல்லாம் மேலானதான அழிவற்ற ஆனந்தத் தையும் சாந்தியையும் அடைவதற்குச் சந்தர்ப்பங்களுளெல் லாம் சிறந்த சந்தர்ப்பமாகிய இம் மனிதப்பிறவியை இறை வன் எமக்கு அளித்திருக்கும் போது இச் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது.
5. தூய இதயத்திலேயே இறைவன் எழுந்தருளுகின் றன். எமது இதயத்தைத் தூய்மைப்படுத்த நாம் இடை யருது முயலவேண்டும். முதலில் உங்கள் பார்வையைத் தூய்மைப் படுத்துங்கள். பின்னர் உங்கள் பேச்சையும், அதன் பின் உங்கள் செயல்களையும், அதற்குப் பிறகு உங் கள் நோக்கங்களையும் துரப்மைப் படுத்திக் கொள்ளுங்கள். உயர்ந்த எண்ணங்களையே எண்ணுங்கள்.

Page 16
304 ஆத்மஜோதி
தமிழ் மறைக் கழகம், 58, உருத்திரா வீதி,
கொழும்பு
திருக்குறள் மணித் தேர்வு - 1965-1970
தேர்வுநாளும் இடங்களும்:
இத்தேர்வு 1965 தொடக்கம் ஆண்டுதோறும் யூன் திங்களில்
மூன்ருவது சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பின்வரும்
இடங்களில் நடைபெறும். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, மதுரை, திருச்சினப்பள்ளி, சென்னை, கோலாலம்பூர், சிங்கப்பூர், இறங்கூன். தேர்வுக்குத் தோற்றுதற்குத் தகுதியுடையோர்:
அண்ணுமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் முதலியவற்றின் புலவர், வித்துவான் பட்டங்களில் ஒன்றையேனும் மதுரைத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாண் ஆரிய திராவிட பாஷா விருத் திச் சங்கம் முதலியவற்றின் பண்டிதர் பட்டத்தையேனும், பல்கலைக்
கழகங்களில் சிறப்பு பி. ஏ (தமிழ்), பி. ஒ. எல். முதலிய பட்டங்க
ளில் ஒன்றையேனும் பெற்றவர்களே இத்தேர்வுக்குத் தோற்றத் தகுதியுடையவராவர்.
இப்பட்டங்களைப் பெருதவர்களாயிருப்பினும் தமிழ்ப் புலமை மிக்கவர்கள் தமிழ்மறைக் கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெற்று இத்தேர்வுக்குத் தோற்றலாம்.
திருக்குறள் ஆராய்ச்சி நூல்களை எழுதிய தமிழ்ப் பேரறிஞர் களுக்குத் தேர்வின்றியும் தமிழ் மறைக் கழக ஆட்சிக்குழு இப்பட்டத்தை வழங்கும். தேர்வுப் பாடப் பகுதிகள்:
பகுதி 1.
(அ) திருக்குறள் முழுவதும் பரிமேலழகர் உரையுடனும்
மணக்குடவர் உரையுடனும் . (ஆ) இன்றுவரை எழுதப்பட்ட பிற உரைகளும் அவற்றின்
நிறை குறைகளும்.
(ஒரு வினத்தாள் - 3 மணி) பகுதி 2.
(அ) திருக்குறள் தோன்றிய காலமும் சூழலும், (ஆ) திருக்குறள் கூறும் 'அறம் பொருள் இன்பமும் வட மொழி - கிரேக்கம் - இலத்தின் ஆங்கிலம் எனும் மொழி
களிலுள்ள நூல்கள் கூறும் அறம் பொருள் இன்பமும்- M
ஒற்றுமை வேற்றுமைகள்.

ஆத்மஜோதி 305
(இ) திருக்குறளும் சமய முதநூல்களும் (கிறித்தவம் - பெள
த்தம் - இசிலாம் - இந்து சமயங்கள்) (ஈ) திருக்குறளைப் பற்றித் தமிழகத்திலே தோன்றிய ஆரா
ய்ச்சி நூல்கள். (உ) தமிழ் நூல்கள் - சிறப்பாகச் சங்க நூல்களிலும் காப்பி
யங்களிலும் திருக்குறளின் ஊக்கு. (ஊ) திருக்குறள் மொழி பெயர்ப்புக்கள்.
(ஒரு வினத்தாள் - 3 மணி பகுதி 3.
ஆய்வுரை -(முழுத்தாளில் நூறு பக்கங்களுக்குக் குறையா மல் எழுதப்படல் வேண்டும்) திருக்குறளோடு தொடர்புடையதொரு பொருளைத் தேர்வுக் குத் தோற்றும் யூன் திங்களுக்கு முந்திய நவம்பர்த் திங்கள் முதல் நாளுக்குமுன் தமிழ் மறைக் கழகத்துக்கு அறிவித்து அதன் ஒப்புதலைப் பெறல் வேண்டும். ஆய்வுரைக்கு ஒப்புதல் பெற அனுப்பும் விண்ணப்பத்தில் ஆய்வுரையின் பொருளைப் பற்றிய விட ரங்களும் ஆய்வுரைக்குப் பயன்படுத்தும் நூல்களும் குறிப்பிடப்படல் வேண்டும். ஆய்வுரையைத் தேர்வுக்கு அடுத்த மூன்று திங்களுக்குள்ளே தமிழ் மறைக் கழகத்துக்கு அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பங்கள்:
(அ) தேர்வுக்குக் தோற்ற விரும்புவோர் விண்ணப்பப்படி வத்தை நிரப்பித் தேர்வுப்பணம் பத்து ரூபாவுக்கு ஒர் காசுக் கட்டளையும் சேர்த்துத் தமிழ் மறைக் கழகத்துக்கு டிசெம் பர் கிங்கள் கடைசி நாளுக்குமுன் அனுப்பு கல் வேண்டும். (காசுக் கட்டளையைத் தலைவர் பெயருக்கு வெள்ளவத்தை அஞ்சல் அலுவலகத்திற் பணம் பெறத்தக்கதாக அனுப்புக. (ஆ) தேர்வின்றிப் பட்டம் பெறவிரும்புவோர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பித் தங்கள் நூல்களில் இவ்விரண்டு படிக ளுடன் தமிழ்மறைக் கழகத்துக்கு டிசெம்பர்த் திங்கள் சுடைசி நாளுக்குமுன் அனுப்புதல் வேண்டும்.
சான்றிதழ்: தேர்விலே தேறுவோருக்கும் தகுதிவாய்ந்த ஆராய்ச்சி நூலாசிரியர்களுக்கும் "திருக்குறள்மணி'ப் பட்டச் சான்றி தழ்கள் வழங்கப்படும். (விண்ணப்பப்பத்திரமும் தேர்வு விபரங்களும் பெற விரும்பு வோர் தமிழ்மறைக் கழகத்துக்கு 50 சத முத்திரை அனுப்
புதல் வேண்டும்.)
* நீ மே; யோ, வேதநாயகம், கா. பொ. இரத்தினம்;
செயலாளர். தலைவர்.

Page 17
306 ஆத்மஜோதி அன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரம்
தமிழில் ஆசிரியப் பாவாக அமைந்த மேற்குறித்த நூல், பிரம்ம பூரீ க. வை. ஆத்மநாதசர்மா அவர்களால், “லலிதா ஸஹஸ்ர நாமம்' என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பாக இயற்றப்பெற்றது.
அதின் அரங்கேற்றுவிழா வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வரவித்தியாசாலை யில், நிகழும் குரோதி வருஷம் சித்திரை மாசம் 21ந் தேதி (3-5-64) ஞாயிற்றுக் கிழமை மாலை, சைவப்பெரியார் திரு கந்தையாவைத்திய நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த அரங்கேற்று விழா வில், திரு. க. இராமச்சந்திரன் அவர்கள் வழங்கிய பாராட்டுரையைத் தழுவி வரையப்பட்டது இக்கட்டுரை.
இதனை குறித்த நூலின் விமர்சனமாகப் பிரசுரிக் கின்ருேம் , நூலின் விலை ரூ 2, 00. பிரதிகள் கிடைக்குமிடம்;
(1) நூலாசிரியர், 198/4 பெர்ன்னப்பா, ஒழுங்கை, வண்ணுர்பண்ணே (2) பூரீ சீ வைத்தியநாதசர்மா, அ தி பர், கிங்ஸ்லி கல்லூரி
கொழும்பு. 13. .
-ஆசிரியர் ஆத்மஜோதி"
இந்த மண்டபமானது இதற்கு முன்னும் இது போன்ற பல விழாக்களைக் காணும் பாக்கியம் பெற்றுள்ளது. இவ் வித்தியாசாலைத் தலைவர் திரு. அம்பிகைபாகன் அவர்களும் அவரது சகாக்களும் செய்துள்ள தவத்தின் பயணுகக் கிடைத்த புண்ணியமிது. எனினும் இன்றைய விழாவானது முற்றிலும் பாரமார்த்திகத் தொடர்புடையதாய் தனிச் சிறப்பு வாய்ந்தது. தம் இனத்தாரைப் பிடித்து வாட்டிய ஏழரை ஆண்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் விழா வெனக் கூறுதல் கூட மிகையாகாது.
இந்த அரங்கேற்று விழாவுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பையும் பெருமையையும் தேவியின் திருவருள் அவற்றிற்கு முற்றிலும் பொருத்தமான ஒருபெரியாருக்கே சேர்த்துள்ளது. அன்பிலும் அறிவிலும், ஆற்றலிலும் அனுப வத்திலும், பண்பிலும்பணிவிலும் சிறந்தசேர் கந்தையாவைத் தியநாதன் அவர்கள் சிவதொண்டிற்கே தமதுவாழ்வை அர்ப்
பணஞ்செய்துள்ளார். இந்தநூல் வெளியீட்டுச்செலவுக்கு நன்
கொடை அளித்தவர்களுள் அவர்முக்கிய இடம் பெறுகிருர், பணந்தேடுவது எந்தப்பதராலும் போக்கிரியாலுஞ் செய்யக்
 

ஆத்மஜோதி \, 307
கூடியவிஷயம் 'பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள'
என்கிருர் வள்ளுவர்பெருமான். ஆனல், தேடிய பணத்தை
நல்ல தான தர்மங்களிற் செலவிடுவதற்கு புண்
னியம் வேண்டும், நித்தியா நித்திய அறிவு வேண்டும், பக்தி வேண்டும், பயன் கருதாப் பணியில் ஆர்வம் வேண் டும். இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர் எங் கள் தலைவர் அவர்கள்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கும் வேதவித்துக்களான அந்தணர்களைப் பார்க்கும் போது, எங்கள் சணு தன தர்மம், கலியுகத்தில் இந்த இருபதாம் நூற்ருண்டு மத்தியில் கூட தனது புராதன மகிமையை இழந்து விடவில்லை யென்ற பெருமித உணர்ச்சி உள்ளத்தில் எழுகின்றது. தாங்கள் பெற்ற வித்தையின் மகிமையிலும் பக்தியின் சிறப்பிலும், வறுமையைப் பார்த்து ாேள்ளி” நகையாடிய மகாநுடவர் களின் சந்ததியில் வாழையடி வாழையாக வந்த உத்தமப் பிராமணர்கட்கு பிரம்ம பூணீ சீதாராம சாஸ்திரிகள் ஒர் ஒப் பற்ற எடுத்துக் காட்டாக விளங்குகிருர், தென்னிந்தி யாவைப் பிறப்பிடமாகப் பெற்ற அவர் எங்கள் மத்தியில் வாழ நேர்ந்தது நாம் செய்த புண்ணியத் திஞலேயாம். ஆணுல் அவரது பாண்டித்தியத்தையும், பக்தியையும், அனு பவத்தையும் நாங்கள் இன்னும் பூரணமாகப் பயன்படுத் திக்கொள்ளவில்லை யென்பது எனது அபிப்பிராயம்.
அரங்கேற்றப் பட்டநூலையும், அதன் ஆசிரியரையும் பாராட்டிப் பேசப் புகுமுன், தேவி வழிபாட்டின், புராத னம், மகிமை குறித்துச் சிறிது ஆராய்ச்சிக் குறிப்புகள் கூற விரும்புகிறேன். ஆதிபராசக்தியை இன்று பூரீலலிதாம்பிகை என்ற திரு நாமத்தால் வாழ்த்துகின்ருேம். இது புராண காலத்தில் சூடப்பட்ட பெயர். அதற்கு முன் இருக்கு
வேதத்தில் உஷா, அரண்யாணி யென்றும், யஜுர் வேதத்
தில் பூரீகாயத்ரி என்றும், சாம அதர்வ வேதங்களில் மகா /லட்சுமி, துர்க்கா வென்றும், உபநிடத காலத்தில் உமா,
ஹைமவதி யென்றும் போற்றி வழிபட்டுள்ளோம். புராண

Page 18
() ஆத்மஜோதி
காலத்தில் புலலிதா, காளியென்ற திருநாமங்கள் தோன் றின. பண்டிகர்கட்கே பயனளித்து வந்த வேத உபநிடத உண்மைகளே பாமரரும் அறிந்து கொள்ளச் செய்யத் தோன் றியவை புராண இதிகாசங்கள். எனவே, புராணங்களில் வரும் திரு நாமங்கள் நித்திய வழிபாட்டுக் கிரமத்தில் சேர்க்கப்பட்டு பல நூற்ருண்டுச் சாதனையின் பயனுக அளப்
பரும் மந்திர சக்தியைப் பெற்றுள்ளன. பூரீலலிதா ஸஹஸ்ர நாமம், பூரீலலிதா த்ரிசதீ இரண்டிற்கும் இன் றுள்ள தனிச் சிறப்பு இந்த முறையில் ஏற்பட்ட தாகும். அவற்றில் அடங்கியுள்ள மந்திர சக்தியை எவரும் மறுக்க (UDI), LITigil.
பாரத தேசத்தில் போலவே வேறு பல நாட்டு மக்க ளாலும் பண்டைக் காலத்தில் தேவி வழிபாடு சிறப்பாகக் கருதப்பட்டிருந்த ஒன்று. புதைபொருள் ஆராய்ச்சியினர் புதுப்புது உண்ம்ைகளைக் கண்டு பிடிக்கிருர்கள். Heroஹிருே என்ற ஆங்கிலச் சொல்லு வழக்கிலுண்டு. அது தோன்றிய விதம் விசித்திரமானது. பல்லாயிரம் வருஷங்
கட்கு முன் கிரேக்கர்கள் தேவியை ஹேரு-Hera-என்ற
ழைத்தனர். வீரத்தாய் என்பது கருத்து, அத் தெய்வத்தை வழிபட்ட கூட்டம் வீரர்களாயினர். இப்போது துருக்கி யென அழைக்கப்படும் தேசம் மிகப்பழைய நாடு. அதின் தென்கரை ஓரத்தில்-இடபமலைத் தொடரின் தென்மேற்கு எல்லையில்-எஃபீசஸ் என்ற துறைமுகத்தில், கன்னியா கும
ரிக்கு நிகரான ஒர் புண்ணிய சேஷத்திரம் இருந்தது. அதி
லிருந்தது ஒர் தேவி ஆலயம். அது கட்டிமுடிக்க இருநூறு வருஷங்கட்கு மேல் சென்றதாம். கிறிஸ்து சகாப்த ஆரம் பத்தில் அதன் கூரை தங்கத் தகட்டினலும், உள்தூண்க ளும் கதவுகளும் நிலைகளும் வெள்ளியாலும் அமைக்கப்பட் டிருந்ததாக அறியக் கிடக்கின்றது. அக்காலத்தில் ஐரோப் பாவுக்கும் இந்தியாவுக்கு மிடையே யுள்ள பிரயாணமார்க் கம் எஃபீசஸ்-அன்றியோக் வழியாக இருந்தது. எஃபீசஸ் தேவி ஆலயத்தில் அன்று வழக்கிலிருந்த ஒர் நிபந்தனை அற்புதமானது. வாசகர்கள் படித்து இன்புற வேண்டிய ஒன்று. அதாவது, அந்த ஆலயத்தின் வெளி வீதியிலிருந்து சுற்றிவர அறுநூறு அடி தூரத்தில் எல்லைக் கல்லுகள் நாட்
டப்பட்டிருந்தனவாம் அந்த எல்லைக்குள் சரண் புகுந்த எந்
தக் கொலைபாதகனைத்தானும் நாட்டின் அரசியல் சட்டத் தின் படி கைது செய்வதை அந்த நிபந்தனை தடுத்து இருந்
 

ஆத்மஜோதி 309
ததாம். இதற்குப் பொருந்தவே, அத்தேவியின் திருநாமமும் *கருணைத் தெய்வம்' என அமைந் திருந்தது. ஆனல் குவான்-யின் (Kwan-Yin) வழிபடப் பெற்ற தேவியும் இதே கருத்தை அடக்கியதாகும்.
மேலே விளக்கப் பட்டுள்ள அருங்கருத்துக்களை யெல் லாம் பூரீலலிதா ஸஹஸ்ரநாமம், பரீலலிதாத்ரிஸதி இரண்
டிலும் பரக்கக் காணலாம் உதாரணமாக;-
ஏகவீரா திஸம் லேவ்யாயை மஹாபாதக (நாசின்யை; தயாமூர்த்யை; |ஹத்யாதி பாய சமன்யை இந்த நாமங் களிலிருந்து நாம் அறியக் கிடப்பது என்னவெனில், தெய் வத்தைத் தாயாக வழிபடுவது மனிதசமுதாயம் முழுவதற் குமே பொதுவான முறையாக இருந்த போதிலும், அந்த வழிபாட்டை ஒரு சட்ட திட்டமான ஒழுங்கான முறையில், சாஸ்திரம் தோத்திரம் இரண்டோடும் பிணைத்து வைத்து, இன்றுவரைக்கும் காப்பாற்றிய பெருமை நமது இந்துசம யத்திற்கே சேர்ந்ததாகும்.
இனி, பூரீஆத்மநாதசர்மா அவர்களின் தொண்டைச் சிந்திக்கும் போது எனது உள்ளத்தில் எழும் நன்றி உணர்ச்சி முதலில் நாகபட்டணம் சுப்ரமண்ய சர்மா அவர்களதும் அவரின் புத் திரரான ராஜராம சர்மா அவர்களதும் சேவை யைப் பற்றியதேயாம். பிந்தியவரின் உப நிடதத்தமிழ் மொழி பெயர்ப்பு நூல் ஐந்தாவது ஜோர்ச் மன்னருக்கு 1912-ம் ஆண்டில் டில்லியில் நடந்த முடி சூட்டு விழாத் தொடர்பில் வெளிவந்ததாகும். வேதம், கீதை, உபநிட தம் முதலாய சமய சாஸ்திரங்களை தமிழில் மொழி பெயர்த்ததே அவ்விரு சர்மாக்கள் செய்த தொண்டு, எங் கள் அன்புச் சர்மா அவர்களோ வட மொழித் தோத்தி ரத்தை தமிழ்மொழியிலும் தோத்திரமாகவே இயற்றி உத வியுள்ளார். இவ் விததொண்டை முதன் முதலாக ஆரம் பித்தவர் காலஞ் சென்ற வித்தியாதரிசி மரீ யா. தி. சதா சிவ ஐயர் அவர்கள். 1921ம் ஆண்டில் இங்கே ஆரியதிராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தை நிறுவி அருந் தொண் டாற்றிய அத் தேவி பக்தர் இயற்றிய தேவி தோத்திர மஞ்சரி, தேவிமானச பூசை அந்தாதி என்ற நூல்களை உங் களிற் பலர் அறிந்திருக்கலாம். அப்பணியில் அவருக்கு உறு துணையாக இருந்தவர் *திரிபுர சுந்தரிபரிபுரச்சீரடி நாளும் பரவுமுயர் பத்திமையாரான' மகாலிங்கசிவம் அவர்கள்.

Page 19
310 ஆத்மஜோதி
பரீசதாசிவ ஐயர் அவர்களின் அடிச்சுவட்டைப் பின் பற்றியே, பரீ ஆத்மநாத சர்மா அவர்கள் காலதேவி வேண் டிநிற்கும் இந்த அரும்பெருந் தொண்டையாற்றுகிருர், இது வெறும் வித்துவத் தன்மையால் மட்டும் செய்யக் கூடியதல்ல. எடுத்துக் கொண்ட இருமொழிப் பயிற்சியோடு, நீண்டகால சாதனையும் முக்கியமாகத் தேவையாகும். பத்து வருஷங்கட்குமேல் தினந்தோறும் பூரீலலிதாஸஹஸ்ரநாமத் தைப் பாராயணம் செய்த சாதனையின் பயனுகவே தேவியின் அருள் பெற்று, 'அன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரத் தைப் பாடியுள்ளார். அதனைப் பக்தி சிரத்தையுடன் படித் துப் பயனடைவது நம்மெல்லோரதும் கடமையாகும்.
இந்த நூல் ஆலயங்களில் எவ்விதம் பாராயணம் செய் யப்படும் என்பது குறித்து தலைவர் அவர்கள் சில அருமை யான கருத்துக்களை வெளியிட்டார். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தபோது பத்து வருஷங்கட்குமுன் என் சொந்த அனுபவத்தில் வந்த நிகழ்ச்சிகள் சில நினைவுக்கு வந்தன. அவை மாத்திரமன்றி, இதுகாறும் இவ்வித தமிழ்மொழி பெயர்ப்பின்றி நாங்கள் கோயில்களில் செய்வித்த அர்ச்ச னைகள் பயனற்றவை தானே யென்ற சந்தேகத்தைக் கூடச் சில குதர்க்க வாதிகள் கிழப்பிவிடலாம். அதற்கும் சமா ' தானம் கூறி என் பேச்சை முடிக்கவிரும்புகிறேன் .
இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகட்குமுன் தேவிவழி பாட்டி ன் மகிமை, பூரீவித்யை, பூறீசக்கர பூஜை, பூரீலலிதா ஸஹஸ்ர நாமம், முதலிய விடயங்களைப் பற்றி யான் கட் டுரைகள் தொடர்ந்து எழுதியதுண்டு. அவற்றைப் படித்த குருக்கள் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, ‘நீங்கள் தெளி வான விளக்கங் கொடுத்துள்ளீர்கள். இதனல் நன்மையுண்டு. ஆணுல் பரமஇரகசியமான இவ்விஷயங்களை பக்குவமில்லாத வர்களும் அறியச்செய்தால் தீமையும் ஏற்படலாம்' என்ருர், ‘'இப்படி சமய சாஸ்திரங்களையும் தோத்திரங்களையும் மூடி மறைத்துவைத்ததால்தான் நமது சமயம் இன்றைய இழுக் குற்ற நிலைக்குவந்துள்ளது. தனித்தமிழ் இயக்கத்தினர் நமது ஆலயங்களில் வடமொழியில் ஆராதனை கூடவேசுடாது என்று கூக்குரல் போடும் நிலைக்குவந்துள்ளோம்' என்று அப்புரோகிதருக்கு அமைதியாகப் பதில் கொடுத்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் சாந்தோக்கிய உபநிடதத்தில் பகதால் பியர் என்னும் அந்தணரின் கருணை பற்றிய கதைநினைவுக்கு வருகிறது.

ஆத்மஜோதி 31.
ஒர் காலத்தில் மழையின்மையால் நாடு வரண்டுவிட் டது. குடிக்க நீரும், சாப்பிட உணவு மின்றி உயிர்வர்க்கங் கள் மடிந்தன. இதைக் கண்ணுற்ற வேதவித்தான பகதால் பியர் இரக்கங் கொண்டு, வருணன், இந்திரன் முதலிய தேவதைகளிடம் மழைவரம்வேண்டி வேதபாராயணம் செய் * այն, பொருட்டு காட்டில் தனியிடம் தேடிச்சென்ருர், அவர் போவதைக் கண்ட ஒரு நாய் அவர் பின் சென்ருல் தாகம் தீரத் தண்ணிர் கிடைக்குமென நம்பி அவரைத் தொடர்ந்தது, அதனைக்கண்டு வேறு நாய்களும் பின்சென் றன. ஒர் அமைதியான இடத்திலமர்ந்து அந்த அந்தணர் வேதபாராயணத்தை ஆரம்பிக்க அந்த நாய்கள் அவரைச் சுற்றியிருந்து "ஹிம், ஹிம்’ என்று மிருதுவாக உரைத்தன. அவர் செய்த வேதபாராயணத்திலிருந்து கிழம்பிய மந்திர சக்தி காரணமாக மழை பெய்தது; நாடு செழித்தது; உயிர் கள் வாழ்ந்தன. இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை அந்த அந்தணருக்கிருந்த கருணை உள்ளம் ஆலயங்களில் வடமொழி யில் அர்ச்சனைசெய்யும்புரோகிதர்கட்கும்இருத்தல்வேண்டும்; நமக்கு அந்த நாய்களுக் கிருந்த சிரத்தை வேண்டும். இரண் டும் சேர்ந்த இடத்து, சொல்லப்படும் மந்திரங்களிலுள்ள சக்தி பலனளிக்கவே செய்யும்.
suges".
YOGA, WAY OF LIFE ஒர் ஆன்மீக ஆங்கில மாதச் சஞ்சிகை (திவ்ய ஜீவன சங்க வெளியீடு) ஆண் டு ச் ச ந் தா ரூ ப ா 3/- 1964 ஜூன் இதழில் இடம் பெறும் அம்சங்கள். சுவாமி சிதானந்தரின் பிறந்த தினத்தையொட்டி விசேஷ கட்டுரை கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சிவானந்த ஆசிரம அனுபவங்கள் மாதர் குலத்தைப்பற்றி சுவாமி சிவானந்தரின் கருத்துக்கள் சில Eat a little என்று தொடங்கும் சிவானந்தரின் பிரபல பாடலுக்கு சுவாமி சிதானந்தரின் விளக்கம் யோகிருஜ் சுவாமி சச்சிதானந்தரின் ஆசனக் கட்டுரை (படத்துடன்) சுவாமி வெங்கடேசானந்தரின் கீதை விளக்கம் தகSணேஸ்வரத்தில் சுவாமி ராமதாசர் (இறைவனை நாடி சுவாமிகள் மேற்கொண்ட யாத்திரையின் ஒரு பகுதி) சுவாமி சிவானந்தர் பகவான் ரமண மகரிஷி, யோகி அரவிந்தர், தாயுமா னவ சுவாமிகள், மகாத்மா காந்தியடிகள், சுவாமி ராமதீர்த்தர் ஆகிய ஆன்ருேர்களின் அருள் வாக்குகள்.
.5 கெளரவ ஆசிரியர், 494 நாரன்பிட்டி வீதி, கொழும்பு جم/
என்ற விலாசத்திற்கு எழுதுக.

Page 20
312 ஆத்மஜோதி
* நன்றியறிதல் *
- சுவாமி இராஜேஸ்வரானந்தர் - இ
SSKP o
*NA%
நன்றியறிதல் அறங்களின் அன்னை நன்றியறிதலுள்ளதா யிருத்தல் உயர்குணம் வாய்ந்த இருதயங்களின் ஒரு நல்லுணர்ச்சி.
நன்றியறிதல் இருதயத்தின் ஒருவழிபாடு. அது சீவியத்தைத் துதித்து செழிப்பாக்குகிறது
ஒர் ஆதரவை ஒப்புக்கொள்வது ஒரு நன்றியறிதலுள்ள உணர் வை வெளியிடுதலே. அதைத் திருப்பிக் கொடுக்க இயலாதபோது ஒரு வண்மை மனதின் நீண்ட கடமை உண்மையில் நன்றியறிதலே
நன்றியறிதலும் வண்மையும் உடன் செல்லவேண்டும். பெரியோர்
தம் பெருங்குணத்தை தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கிருர்கள்.
சுறுசுறுப்பும் சுயேச்சையும் நன்றியறிதலில் விரும்பத்தக்கவை.
பூலோகத்தையும் சுவர்க்கத்தையும் ஒருமிக்க வைத்தாலும் ஒரு வண்மைச் சேவைக்கு கைம்மாறளிக்காது. ஆனல் நன்றியறிதல் சுல பமாகவும் மகிழ்ச்சியாகவும் கைம்மாறளிக்கிறது. நன்றியறிதல் ஆன் மாவின் என்றுஞ் சித்தமான களிப்பாயிருக்க வேண்டும்.
நற்செய்கையின் நன்றி யறிதலுள்ள நினைவு தன்சொந்த ம7யக் கூட்டுறவை வைத்திருக்கிறது. நன்றியறிதல் ஒரு மேன்மையும் மகிழ்ச்சி யுமான மனதை வெளிப் படுத்துகிறது.
நன்றியறிதல் அதற்காகவே உயர்வாகக் கருதப்படவேண்டும். தவிர்க்க முடியாதபடி அதன் உடன் செல்லும் நன்மைக்காக அன்று ஒரு சிறுவண்மைச் செயலின் மதிப்புக்கூட மிகஉயர்ந்த பெறுமானம் 2-60LL g5!.
நன்றியறிதல் பேச்சுத்திறனின் அணிகலம், தெய்வ அருளினதும் நலப்பாடினதும் செல்வம், நடைமுறை வாழ்வின் பரந்தநோக்கு.
நன்றியறிதல், தானே சுத்தமானதாயும் நேர்மையானதாயும்
இருப்பதால், கண்ணியவாழ்வை விசேஷமாக மேன்மைப் படுத்துகிறது,
 

ஆத்மஜோதி 33
இமய ஜோதி சிவானந்தர் (சிவானந்த சந்தானம்மையார்)
நாம் அனைவரும் தேடுகிருேம், தேடுகிருேம், தேடிக் கொண்டே யிருக்கிருேம், நிலையான சுகத்தை. ஆனல் வானில் தோன்றி மறையும் மின்னல் போன்றும் நீரில் தோன்றி மறையும் குமிழி போன்றும் அழிந்து பட்டுப்போ கும் நிலையில்லா உலகப் பொருள்களிடமிருந்து மனிதன் தேடும் இன்பம் கிடைப்பதில்லை. ஆசைத்தீ அனுபவிக்க அனுபவிக்க மென்மேலும் ப்ரசண்டமாகி தீராத அதிருப் தியை விளைவிக்கின்றது. தீராத கவலையும் துன்பமும் கொள்ளுகிருர்கள்.
இதே போன்று பிறவிப் பெரும் பிணியின் வெப்பம் தாழாது கதிகலங்கித் தத்தளிக்கின்றது ஒரு உயிர். உடன்
பிறந்தார் சுற்றத்தாரிடத்தோ, பணம் காசிடத்தோ தான்
தேடும் இன்பம் கிடையாது என்று உணர்ந்தது. "இறைவா, நீயே கதி’ என்று கதறி அழுதது. அது சமயம் தெய்வம், குரு, ஆத்மன்-இந்த மூன்றுமாய் விளங்கும் பூரீ தகூFணு மூர்த்தி, பூரீ சிவானந்த குருநாதராய் ஓடோடியும் வந்தார் ரகழிப்பதற்கு,
பண்டிதர்களும் , அரசர்களும், பக்தர்களும், ஞானிக ளும், யோகியர்களும் புடை சூழ வீற்றிருக்கும் இப்புனித ருக்கு எந்த விதமான தகுதியும் இல்லாத இந்தப்பாமர ஜீவனிடத்துத் தான் என்ன கருணை!
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானுேர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருக வென்றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே!
'அமிர்தத்தின் செல்வமே, நீ வருந்துதல் தகுமோ, முறையோ? நீ யார் என்பதை எண்ணிப் பார்த்தனையோ? நீ இந்த உடலல்ல. எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிப் புண்ணுகும் இந்தப் பொல்லா மனமும் அல்ல. நீ அழியாப் பொருளாம் ஆத்மன் அன்றே? உண்பதற் கில்லையா? உடுத்துவதற் கில்லையா? அன்பு செலுத்துவா

Page 21
3.14. ஆத்மஜோதி
ரில்லேயா?-எதற்கும் அஞ்சாதே, வருந்தாதே, நீ சிரி. அவனை ஆனந்தமாகப் பாடு. அவன் நாமத்தை ஜபி, குறைவற்ற பரிபூரண நிறை பொருளான உன்னிடத்தே ஒரு குறை வும் கிடையாது. ஆனந்த ஸ்வரூபமான உனக்குத் துன்பமோ துக்கமோ கிடையாதே. சிங்கத்தின் குட்டியான நீ ஆடு களுடன் சேர்ந்து கொண்டு ‘மே, மே, என்பது அழகோ? ஆத்ம விசாரத்தின் மூலம் உன்னையே உணர்ந்து இன்புற்
றிரு,' என்ருர் உயிருக்கு ஆருயிரும் பிராணனின் பிராண
னுமான கருணுமூர்த்தி பூரீ சிவானந்த குரு.
பவசாகரத்தைக் கடக்கச் செய்யும் தோணியும், இறப் பவர்களை உயிர்ப்பிக்கும் அருளமுதமாம், அருளாளரின் இவ் வசனங்கள் அந்த அபலையின் வாழ்வில் ஒரு புதியதும் புனி தமானதுமான திருப்பத்தை உண்டாக்கின. அன்று முதல் அன்புருவாம் பூரீ சிவானந்த குருதேவர், அழுந்தொறும் அணைக்கும் அன்னையாய், ஆடி ஒடி,விழுந்தோறும் எடுக்கும் அப்பனுய், தொழுந்தொறும் காக்கும் தெய்வமாய், ஆபத் பாந்தவனுய், அணுத ரக்ஷகனுய், தோன்ருத் துணை யாய் ரகSத்து வருவதுடன் குறைகளை யெல்லாம் நிவர்த்தித்தும், விருப்பங்களை யெல்லாம் நிறைவேற்றியும் வருகிருர்,
'ஸர்வதர் மான் பரித்யஜ்ய மா மேகம் சரணம் வ்ரஜ! அஹம் த்வா ம் ஸர்வபா பேப்யோ மோகூடி யிஷ்யாமி DMT gjigj : ! !
அனன்யாஸ் சிந்தயந்தோமாம் ஏஜஞ பர்யுபாஸதே தேஷாம் நித்யா பியுக்தானும் யோக சேஷமம் வஹாம் யஹம்!!
என்கிருர் பூரீ கிருஷ்ணபரமாத்மா கீதையில். என் குருதேவர் பூரீ சிவானந்தர் அந்தக் கிருஷ்ணபரமாத்மா விற்கு அன்னிய மாணவரோ! சந்ததமும் குருதேவரின் திரு நாமத்தைச் சிந்தனை செய்வோருக்கு அபயம் தந்து தடுத் தாட் கொள்ளுகின்ருர், இதை அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் நன்கு உணருகின்றனர், மனமார வாழ்த்தித் துதிக்கின்றனர்.
மேற்கூறிய அந்த அபலைக்குத் தன் குருநாதரை ரிஷி கேஷத்தில் சென்று தரிசிக்க வேண்டு மென்ற தீராத அவா இருந்தது, முடவன் கொம்புத்தேனுக் காசைப் பட்டாற்
A.

நான்-நீ
ஆத்மஜோதி 315
போல! ஊமையைப் பேசவைப்பதும், முடவனை மலையே றச் செய்வதும் ஆன அந்த கிருபையின் மஹிமையை யாரே எடுத்தோத இயலும்! நினைத்துப் பார்க்கத் தான் முடி யுமோ? எல்லா ஜீவர்களிடத்தும் ஆத்மஸ்வரூபியாய் ஒளி ரும் எம்பெருமானும், சாக்ஷாத் ப்ரம்மமேயான குருதேவர் அந்தப் பெண்ணைத் தக்க துணையுடனும் பாதுகாப்புடனும் இமயத்தில் தன் இருப்பிடம் அழைத்துச் சென்று விடுகிருர், *’ என்ற பாகுபாடு அற்ற அபேத ஆனந்தம் அங்கு பரவியுள்ளது. குருதேவரோ அவளிடத்து பெற்ற தாய் தந்தையினும் மிகுந்த அன்பைச் சொரிகிருர், தனது குடி லில் உடனமர்த்தி உண்கிருர். தன் உடல் நலம் குன்றி நலிந்திருந்த நிலையிலும் அவளுடைய மனத் திருப்திக்காக பாத பூஜை செய்வித்து பாத தீர்த்தத்தை பிரசாதமாக அருளுகிருர், ஏழு சமுத்திரங்கள் வரை சென்று தீர்த்த மாடினுலும் சத்குருவின் பாத தீர்த்தத்தின் ஒரு துளியின் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு ஈடாகுமோ , என்று குருகீதையில் சிவபெருமான் உமாதேவியாரிடம் இயம்புகின்ருர் . இப் படியாக அன்பும் அருளும் நிறைந்த கருணமூர்த்தியான பூரீ சிவானந்த குருதேவர் முன்னிலையில் தாயோடு குலாவி மகிழும் சேய்போல் அந்தப் பெண்ணும் தன்னை மறந்த ஆனந்தத்தை அனுபவிக்கின்ருள்.
இது மட்டுமா! பூரீ சிவானந்த குருநாதரின் அருள்சக்தி ஆற்றும் அற்புதங்கள் சொல்லிலடங்கா. வீட்டில் குழந் தைக்கு இதயநோய்- ருமேடிக் ஹார்ட்' ஒரு வருஷத்தில் வெல்லூர் சென்று இருதய ஆப்பரேஷன் பண்ணி ஆக வேண்டும் என்கிருஜர் டாக்டர். குருநாதர், இறைவனை நம்பி மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபி என்கிmர். ஒரு வருஷ மான பின் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து விட்டு டாக்டர் மகிழ்ச்சியுடன் கூறுகிருர். ஆச்சரியமாக இருக்கின்றதே! இரு தயம் அது இருக்க வேண்டிய "நார்மல், நிலையிலுள்ளதே!
னி ஆப்பரேஷன் தேவையில்லை என்கிருர்,
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்ருல் குருவை நம்பினோர் எத்தகைய இடையூறுகளுக்கு ஆளாயினும், அவர் கள் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை என்பது.
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம் ப்ரம்ம தஸ்மை பூணீ குரவே நம:

Page 22
316 ஆத்மஜோதி
குருவே ப்ரம்மா. குருவே விஷ்ணு, குருவே மஹாதேவ
னும் பரப்ரம்மமும் ஆவார், குருவினிடம் மந்திரோபதே சம் பெற்று ஜபித்தல் வேண்டும். குரு மந்திரத்தோடும் கூட தன் அருட்சக்தியையும் அன்ருே சிஷ்யனிடம் பாய்ச் சுகிருர்,
பகவான் பூரீ இராம கிருஷ்ணர், பூரீ சிவானந்தர் போன்ற மஹான்கள் சாக்ஷாத் எம் பெருமானின் அவ தாரமே அன்றி வேறல்ல. இதைத்தான் ஆங்கிலத்தில் 'Incornation of god” என்பர். பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணனந்தமாம் ஆத்ம தத்துவமே குடு .
இத்தகைய மஹான் தான் பலமாதங்களுக்கு முன்பு நம் மிடையே இருந்து ஸ்தூலத்தை உகுத்துச் சென்ற பூரீ சிவா
னந்த குரு. பகவான் சிவானந்தர் ச்ாதாரண மக்களும் படித்
துப் புரிந்து கொள்ளக் கூடிய எளிய முறையில் மேலாம் கருத் துக்களை எண்ணிலடங்கா புஸ்தகங்களாக வழங்கியிருக்கிருர், அவைகளை நாம் படித்து நடைமுறைக்குக் கொணடுவரமுய லுவோமாக வாழ்க்கையின் உண்மையான லக்ஷயத்தை நோக்கி முன்னேறுவோமாக.
LLLTTLTLYL0LLLLLLLLLY 0LL0LLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL0LLLLLYLLYzzLY000LL
சந்தா கேயர்களுக்கு! அன்புடையீர்,
இன்றுடன் ஆத்மஜோதி பதினருவது ஆண்டின் எட்டா வது சுடர் உங்கள் கரங்களில் ஒளி வீசுகிறது. இப் புதிய ஆண்டின் சந்தாவை அன்பர்கள் மனமுவந்து உடனுக அனுப்பி ஜோதியின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பீர்களாக,
இந்தியாவிலுள்ள அன்பர்கள் தமது சந்தாக்களே வழக்கம் போல் R. வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ், அரிசிப்பாளையம், சேலம்-9 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகின்ருேம். ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி - சிலோன்.
C3LT66 - 353
 
 
 

ஓடி வாராய்!
(வி. பொன்னுத்தம்பி)
வையகத்தைப் பலாப்பழம் போல் வாரியுண்ட രം
மை யிருட்பூ தம் நடுங்கி வழிவிட்டோ டத் துய்ய மணிக் கதிரிறைத்துள் ளன்பர் நெஞ்சில்
துடித் தெழும் புன் னகைப் பரிதீ! எனவருத்தம் வெய்ய மல விருள் கிழிய நின்க டைக்கண்
வீசாயோ? ஞானமணி விளக்கே! இன் பத் தெய்வ கலச் சுடர் பதியே! நின்பேரின்பத்
திருநாமம் ஒருபோதும் மறவேனேயே!
இருளகற்றும் ஒளிப்பிழம்பே அறிஞர் நெஞ்சுள்
னயற்ற பேரின்பச் சுவை யளிக்கும், அருள் கனிந்த நறுங்கனியே! அன்பே எந்தன்
அகமுருக நினைந்து நினைந் தன்புக்கண் ணிர் பெருகியுமுன் அடியிணை பெருது வாடும்
பித்த நிலை யேனணித்தாய்? பேயேன் இன்னும் உருகியது போதாதா? மனமி ரங்கி
ஒருகணத்துன் எளியேன் முன் ஒடிவாராய்!
எத்துணையோ இன்னல் எனச் சூழ்ந்தபோதும் எனவும் அஞ்சாநல் விரும்பு நெஞ்சை பத்து வயதாயிருக்கும் பொழுதே தந்தாய்!
பால் மறவாப்பருவம் தொட்டின்று காணும் கத்தி நிதம் கதற வைத்தாய்; எனினும் இன்பக் கரைசேரும் வழிகாட்டாய்! கருணைஈதோ? பெத்த நிலை நீங்கிநின தடித்தே னுண்ணும்
பேரின்ப வாழ்வையெனக் கருளொளுதோ?
*
LTYYSL0LLLLLLLLLLLLLLY LLLLLLLLmLmmLmmLmmLmmLLLuuLLSLLLL LSHHLLLLHuHLLkS0LL0L0LLL0S Suu 0OS SLLLLL kukLkLmLLLOLLO LBD

Page 23
గా ரிஷிகேசம் பூரீ சிவானந்தாச்சிர அவர்களும் இலங்கை திவ்ய ஜீ ருஜ் சச்சிதானந்த சுவாமிகளு உபதேசங்கள் எழுதப் பெற்ற து றர்கள். பூரீ சிதானந்தஜீ தலை
எடுக்கப் பெற்ற இப்பத்திரிகை ஆத்மஜோதிநிலயத் স্ট্রক্‌চ • தா விணுயகமூர்த்தியால் அச்சி
 
 

த் தலைவர் பூரீமத் சிதானந்தஜீ ன சங்கங்களின் தலைவர் யோகி பூரீ சிவானந்த சுவாமிகளின் ாணுக்குப் பக்கங்களிலே நிற்கின் பராகத் தெரிவு செய்யப்பட்டதும் முதல் படமாகும்.
ாருக்காக ஆத்மஜோதி அச்சகத்தில் 复
படு வெளியிடப்பெற்றது. 14-6-64