கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.07.15

Page 1
|-
密慈
∞
:
·
 


Page 2
********+++4++444+**********
t
- மாத வெளியீடு
+*******、4++++******+
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
சுத்தானந்தர்
ஜோதி 16 3 குரோதி வரு ஆடி மீ" 1வ (15-7-64 8 சுடர் 9
பொருளடக்கம் 1 ஜீ காளிகாமடு கற்பகவிநாயகர் பேரில் பாடிய
வசந்தன் காவியம் 317 2 ஆனந்தத் தேன் 319 . 3 ஆணினம் மேய்த்து ஆண்டவனுகிய அந்தணச்
4 யூரீ காளிகாமடு கற்பக விநாயகர் 36)U 6l J6l)rs (1) 325 5 சரணடைந்தேன்! 334 6 அப்பர் அறிவாலும் உணர்வாலும் இறைவனேக்
காணும் விதம் 335 7 ஜீ காளிகாமடு கற்பக விநாயகர் உள்ளுசல் 344 8 ஆண்டவனிடம் வேண்டுவது யாது? 347 9 கதை கேட்ட கள்வன் கண்ணனைக் கண்டான் 35 . .
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75,00 வருட சந்தா ரூபா 3.00
தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் வா திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் ஊ திரு. நா. ஒழத்தையா "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி, சிலோன்) தொலைபேசி எண் 353
 
 
 

േ~-X
பூரீ காளிகாமடு கற்பக விஞயகர் பேரில் பாடிய வசந்தன் காவியம்
தனதனதத்தத் தன்தன தத்தத் தனதன தத்தத் தன தான தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதான
1. அண்டர்கள் புகழத் தொண்டர்கள் மகிழ அழகுடன் வாறவர் ஆர்மானே-நல்ல கண்டவர் புகழும்"காளிகா மடுவுறை கணபதி யாமடி காரிகையே தனதன
தி
-
S S S S
S S
Ο S S S S S S S S S S
2. தனதன தன்னத் தவில் முரசதிர
தயவுடன் வாறவர் ஆர்மnனே-நல்ல கனதன மென்ற கரிமுகமுடைய கணபதி யாமடி காரிகையே தனதன
3. எலிதனில் ஏறி இசையவர் போற்ற
வழிதனில் வாறவர் ஆர்மானே-நல்ல கதிரையில் முருகற் கருளது கொடுக்கும்
கணபதி யாமடி காரிகையே -தனதன
மோதக மதனைச் சோதனை பண்ணி பாதையில் வாறவர் ஆர்மானே-நல்ல பால்தயிர் வெண்ணெய் தேடி எடுப்போன் மருமகனுமடி பைங்கிளியே -தனதன
S
5
வயிறு சரிய வடகிரி நெளிய வழிதனில் வாறவர் ஆர்மானே-நல்ல கனதன மென்ற கரிமுக முடைய கணபதி யாமடி காரிகையே தனதன
ASAeSeLLALALLSAAALLSLLLAAASLSLMSAASASSLLL AAAASLMLSASeLALAeLASAeASALMSASMMAASLMASASeLALSqMASLMAASAALLLAAAASLMASLLLAeeLASLLASLLASAASSLLAASLLLLAAAASkeMAASAASAASqS
4.
ASASeSeSAMASAeASeLLMAASAASAASeSASASMASASASLSASAASMMSASAeSeMMASLLMAqSq AMAeSLSASLSSASSLLAeLeLSMASASLSASSLLASASASLLLLSLLAMASALASSSAAAAASSLLAASeASkeAMS

Page 3
3.18 ஆத்மஜோதி
6. மாலை பதக்கம் பளபள வென்ன
வழிதனில் வாறவர் ஆர்மானே-நல்ல கண்டவர் புகழும் காளிகா மடுவுறை கணபதி யாமடி காரிகையே தனதன
7. மடமடநடன மங்கையர் மகிழ
மகிழ்வுடன் வாறவர் ஆர்மானே-நல்ல கதடதட விதடக்குட வயிறுடைய கணபதி யாமடி காரிகையே தனதன
8. பரிபுர மசையப் பலர் தொனியார்ப்ப
பவனியில் வாறவர் ஆர்மானே-நல்ல கதிரையில் முருகற் கருளது கொடுக்கும் கணபதி யாமடி காரிகையே தனதன
9. மணிமுடி மின்ன மாலைகள் துன்ன
மகிழ்வுடன் வாறவர் ஆர்மானே-நல்ல காசினி மீதில் பாவ மத கற்றும் கற்பகமாமடி காரிகையே தனதன
10. தேவர்கள் மகிழ முனிவர்கள் புகழ
சிறப்புடன் வாறவர் ஆர்மானே-நல்ல படிய தளக்கும் பரமனுர் பெற்ற பாலகனுமடி பைங்கிளியே தனதன.
LLcLLLLLLcLELLccLLLccLLcLLcLLLLLcLcLLALcLLLLALALLSLLLALAL LLLMLLLELELELALMLMeMLALALLALcLLLLLAALLLLLALArSLLLLLLL
半
ᏑᏙᏁᎲ
 

ஆத்மஜோதி 319
ஆனந்தத் தேன்
(ஆசிரியர்)
தேன் என்று சொல்லும்போதே, நாவில் நீர் சுரந்து வருகிறது. காரணம் அடிக்கடி தேனை உண்டு அனுபவித்துள் ளோம். அந்த அனுபவம் தேன் என்று சொல்லும்போதே நாவினில் தித்திப்பை ஏற்படுத்தி நீரையும் சுரக்கச் செய்கின் றது. இதுபோல ஆண்டவனை நினைக்கும்போது ஆண்டவ னைப்பற்றிய உணர்வு எழுகின்றதா என்பது கேள்வி? ஆண் டவனை உலகில் எல்லாரும் நினைப்பதுபோல் நினைக்கின்ருேம். மனத்தோடுபடாமலே அவன் நாமத்தை உச்சரிக்கின்ருேம். உணர்வதில்லை; நெகிழ்வதில்லை. கிளிப்பிள்ளைப் பாடமாகவே நிகழ்ந்து வருகின்றது.
தலைவி ஒருத்தி, முன்னம் அவனுடைய நாமங் கேட் டாள்; மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்ன அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆணுள். இதுதான் இறைவனை அனுபவிக்கும் அனுப வம். இது அருளணுபவம் ஆகும். மகான்கள் எல்லாரும் இந்த அருளணுபவத்தைத்தான் அனுபவித்தார்கள். தாம் பெற்ற இன்பம் வையகமும் பெற வழிகாட்டினர்கள்.
ஆன ந் த ம் என்பது அனுபவித்து உணரவேண்டிய தொன்று. அது வாய்விட்டுப் பேசொனதது. நினைந்து நினைந்து; உணர்ந்து உணர்ந்து; நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து அனுபவிக்க வேண்டியதொன்று; நினைக்குந்தோறும், காணுந்தோறும், பேசுந்தோறும் எப் போதும்தேன் இனிப்பது. இது தூலத்தில் கண்ட அனுபவம். ஆனந்தமும் இத்தகையதே. இது சூக்குமத்தில் அனுபவிக் கும் இன்பநிலையாகும். ஆகவே மண்வாசகப் பெருமானுர் இரண்டையும் ஒன்றுசேர்த்து,
நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும்புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
A) என்று திருவாய் மலர்ந்தார். இந்த ஆனந்தத்தேனைச்சொ ரிபவன்தான் ஆண்டவன். வண்டுபூக்கள்தோறும் ஆராய்ந்து ஆராய்ந்து தேனை எடுக்கின்றது. இரவாகப் பகலாகத் தேன்

Page 4
320 ஆத்மஜோதி
சேர்ப்பதிலேயே தன்னுடைய காலம்முழுவதையும் கழிக்கின் றது. அவ்வளவு தேனையும் சேர்த்துத்தான் குடித்து அனுப விக்க வேண்டுமென்று அது விரும்புவதில்லை. பரோபகாரத் திற்காகவே தேனைச் சேர்த்து வைக்கின்றது. நாலறிவுயிரா கிய தேனி செய்யும் பரோபகாரம் கூட மனிதனிடத்துக் காணப்படுவதில்லை.
இதேபோல ஆண்டவனும் பக்தர்களின் இதயதாமரை யிலே பக்தித்தேனை சென்று சென்று சேர்த்துக் கொள்ளுகின் முன். அங்ங்னம் சேர்த்த ஆனந்தத் தேனை தானேவலியக் கொண்டு சென்று பக்தர்களுக்கு ஊட்டுகின்றன், எந்தநேர மும் ஊட்டிக் கொண்டே இருக்கின்றன். நாம் தான் அதனை உண்பதற்கு வாயைத் திறக்கின்ருேமில்லை, அதனை உண்ப தற்கு எம்மை ஆயத்தப்படுத்திக்கொள்கின்ருேமில்லை. நாவுக் கரசுப் பெருமான் உலகத்து மக்களை விழித்து 'மனிதர்காள் இங்கே வம்’ என்று அழைக்கின்முர். அழைத்து ‘கணிதந் தால் கனி உண்ணவும் வல்லிரே" என்று கேட்கின்றர். பழம் தந்தால் சாப்பிடுவீர்களா? அப்பழத்தைச் சாப்பிடும் வல்லமை உடம்பில் இருக்கிறதா? என்பதுதான் கேள்வி.
நோயாளனுக்குச் சில பழங்களோ அல்லது உணவுகளோ கொடுக்கக்கூடாது. அவற்றை ஏற்றுக்கொள்ளும் உடல்நிலை அவனிடம் இல்லை. பித்தக்காய்ச்சல் உள்ளவனுக்குத் தேனைக் கொடுத்தால் கசக்கும் என்று சொல்லுவான் அதுதேனு டைய பிழை அல்ல. அவனுடைய நாவின் பிழையாகும். அதேபோல “புனிதன் பொற்கழல் ஈசன் எனும்' கனியை உண்பவர்களுக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலை அமைய வேண்டும். நாம் எல்லாரும் ஆணவ நோயால் பீடிக்கப்பட் டுள்ளோம். அந்நோய் நீங்கினுல்தான் "புனிதன் பொற் கழல் ஈசன் எனும் கனியை அனுபவிக்கலாம்.
இறைவன் ஆனந்தத் தேனைச் சொரிந்து கொண்டே இருக்கின்ருன். அதனை ஏற்று அனுபவிக்க வேண்டியது எமது கடமையாகும். அதற்கு எம்மைத்தயார்ப்படுத்தி வைத்துக் கொள்ளவேண்டியதும் எமது முயற்சியாகும்.
இந்த ஆனந்தத்தேனைச்சொரிந்துகொண்டிருக்கும் இறை வனத் தேடிநாம் எங்கே போவது? அவனைக் கண்டு பிடிப்பது எப்படி? என்றெல்லாம் அன்பர்கள் உள்ளத்தில் கேள்வி எழ
(V
 

ஆத்மஜோதி 321
லாம். அவன் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவன். நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன். ஆகவே அவ னைத்தேடி எங்கும் திரிய வேண்டியதில்லை, எம்மோடுகூடவே உடனுறைகின்றன். நாம் வாய்விட்டு அழைக்க வேண்டிய தே எமது வேலை. அவன் ஏன் என்று கேட்பதற்கு எங்களுக் குப் பக்கத்திலேயே எப்போதும் நின்று கொண்டிருக்கின்றன் *புறம் புறம் திரிந்த செல்வமே' என மணிவாசகர் உருகு θσότ(τηrf.
"எத்திக்குந் தாணுகி யென்னிதயத் தேயூறித் தித்திக்கு மானந்தத் தேனே பராபரமே” என்பது தாயுமானவர் வாக்காகும். எல்லாத்திக்குகளிலும் இருக்கின்ற இறைவனேதான் எனது மனத்தினிடையே சதா இனிமையுடன் விளங்குகின்றன். ஆனந்தத்தேனை அள்ளிச் சொரிகின்றன். வாரி வழங்குகின்றன்.
இதயம் கமல மலர்; இறைவன் இதயத்துள்ளும் இருக் கின்றன். ஆகவே அவன் இடைவிடாது தித்திக்கும் ஆனந் தத்தேன் ஆகின்ருன் ,
徽
அந்தர் யோகம்
இடம்:- கொழும்பு விவேகானந்த சபைக்குப் பக்கத்தில் இருக்கும் பூரீ மோடி மண்டபம்,
காலம்;- 24 , 7 , 64 வெள்ளிமாலை தொடக்கம்
26 7 , 64 ஞாயிறு மாலை வரை.
பெரியவர்கள் முற்பணமாக 10 ரூபா அனுப்பி 8 யும் மாணவர்கள் முற்பணமாக 5, ரூபா அனுப்பி யும் தம்மைப் பதிவு செய்து கொள்ளுதல் வேண் இ டும். பின்வரும் விலாசத்துடன் தொடர்பு கொள்க.
காரியதரிசி, திவ்யஜீவனசங்கம், தம்பையா சத்திரம்,
30. அந்தோனி மாவத்தை, கொழும்பு 13
О

Page 5
ஆத்மஜோதி ஆணினம் மேய்த்து ஆண்டவணுகிய அந்தணச் சிறுவன்
(பண்டிதர், செ. பூபாலபிள்ளை அவர்கள்)
உலகத்தில் உள்ள உயிரினம் அனைத்தினுஞ் சாலச் சிறந் தவை ஆணினம். மாயோன் மேவிய காடுறை உலகத்து வாழ் வன அவை. சிவபெருமானது திருமுழுக்குக்கு வேண்டிய தூய பால் தயிர் நெய் கோமயம் கோசலமாகிய ஐந்தினையும் உதவுவன ஆணினம். அவற்றின் கோமயத்தை முறைப்படி சுட்டுத் திருநீற்றை நாம் பெறுகின்ருேம். திருநீற்றையுந் திருவைந் தெழுத்தையும் விட நமக்கு உறுதுணை புரிவன எவை உள? உலக உயிரனைத்தையும் உண்டி கொடுத்து ஓம் பும் உழவர் பெருமக்களுக்குத் தந்தை போலவுந் தாய் போல வும் மகவு போலவும் உதவுவன ஆணினம் அன்ருே? மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்ற நல்லதொரு பொரு ளைக் கண்டவர் நமது முந்தையோர், மா ட் டு ர ம் வயல் விளைவை உயர்த்துகிறது.
தந்தை அன்றே வயலில் உழைக்குந் தக்க எருது சிந்தை மகிழ்ந்தே பnலே ஊட்டுஞ் சிறந்த தாயாம் மந்தை வளர்ந்து மருவிப் பால வழங்கும் மசுவே சொந்த மகவு துயரந் தீர்க்கும் புனித கன்றே.
தூய பசுவின் திருவுடலிலே தீர்த்தங்களெல்லாம் அமைந் துள்ளன. பரிசுத்தம் பொருந்திய தேவர்களும் முனிவர்களுங் கூடப் பசுவின் திருவுடலில் அமர்ந்துள்ளனர். தருமவடிவா கிய வெள்ளை எ ரு து சிவபெருமானுடைய வாகனமாக அமைந்திருக்கிறது. பாலூட்டும் பசுவினையும் பாலைமுட்டிக் குடித்துத் துள்ளிக் குதித்து வாளி பாய்ந்து ஓடி விளையாடுங் கன்றினையும் பார்த்து மகிழாதார் இவ்வுலகிலுண்டோ?
அம்மா வென்றே கன்றதன அழைத்துக் கொஞ்சிப் பசுபாலே விம்மிச் சுரந்து சலம்விட்டு விரும்பி நக்கி யேயூட்டும் செம்மை யாக முலைமுட்டிச் சிறப்பால் வாலை அசைத்தாட்டி அம்மென் வாயால் நுரைபறக்க அழகு கன்று பால்குடிக்கும்,
பசுவைப் பாதுகாக்காது அலைந்துதிரிய விடுவதும், அடித் துத் துன்புறுத்துவதும், பெரிய பாவங்களாகும். ஆவுரித்து
 
 
 
 

ஆத்மஜோதி 323
அதன் இறைச்சியை உண்டு மகிழ்ந்து உழல்வோர் அற்பப் புலையராவர். இவர்கள் தொகை ஈழத்தில் வரவர அதிகரிக்
இருக்கிறது. சிலப்பதிகார மதுரைக் காண்டத்து, கண்ணகி கோவலனுக்கு வழித்துணையாகச் சென்ற கவுந்தி அடிகள்
கிறது என்பதைக் கேட்பதே எமக்குப் பெரும் அருவருப்பாக
ஆகாத்தோம்பும் இடையர் வாழ்க்கையில் ஒரு கொடுமைப்
பாடும் இல்லை என விதந்தெடுத் தோதுகின்ருர்,
“ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்குங்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை" என்பது அது.
முற்காலத்திலே சோற்றுக்குக் குறைவில்லாத சோழ (3)|(6) நாட்டிலே மண்ணியாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள அழகு சேய்ஞலூரிலே அந்தணுளர் பலர் வாழ் வாங்கு வாழ்ந்து இன்புற்றனர். இவர் ஒதல் ஒதுவித்
தல்"ஈதல் ஈவித்தல் வேட்ட்ல்வேட்பித்தல் ஆகிய அறுதொ
ழில்களையும் வேத ஆகம விதிப்படி புரிந்தனர், இவற்ருல் சேய்ஞலூர் செழுமையுடையதாயிற்று.
* பண்ணின் பயணு நல்லிசையும் பாலின் பயணு மின்சுவையும் கண்ணின் பயனும் பெருகொளியுங் கருத்தின் பயணு மெழுத்தஞ்சும்
விண்ணின் பயனும் பொழிமழையும் வேதப்பயனும் சைவமும் போல்
மண்ணின் பயனும் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்
廖 தோ'
என்று இந்த ஊரைப் போற்றிப் புகழுகிருர் திருத்தொண் டர் புராணம் பாடியருளிய சேக்கிழார் சுவாமிகள்.
இந்தத் திருச்சேய்ஞலூரிலே கா சி ப கோத்திரத்திலே எச்ச தத்தனுக்கும் பவித்திரையாருக்கும் ஏகபுத்திரராக விசாரசருமர் திரு அவதாரஞ் செய்தார். இவர் தமது சிறு பராயத்திலே கல்வித்துறையில் மேம்பட்டு விளங்கினர். இந் தப் பருவத்திலே கல்விப்பயன் கடவுளை அடைதல் என்ற பூரண உண்மை இவர் ம ன த் து உதயமாயிற்று. நான்
உடைமை; உடைய்வர் நடராசப் பெருமான்; என்ற ஞான உணர்வுடன் இவர் சிவபக்தியிற் சிறந்து விளங்கினர். விசார சருமருடைய ஊரிலுள்ள அந்தணுளருடைய பசுக்களை எல்
லாம் ஒரு இடையன் கூலிக்கு மேய்த்து வந்தான். ஒருதினம் இளங் கன்றுப் பசு ஒன்று இவனை எதிர்த்து முட்டவந்தது. இவன் ஒரு கோலை எடுத்து இதனை நையப்புலிடத்தான். இத னைக் கண்ணுற்ற விசாரசருமர் மனமடிவுற்றர். ஆவின்

Page 6
324 ஆத்மஜோதி
பெருமைகளை இடையனுக்கு எடுத்தோதினர். ‘இனி நீ இந்த நிரைகளை மேய்க்க வேண்டாம். நானே இந்த நிரை களை மேய்ப்பேன்’ என்ருர், இடையனும் இவருரை கேட்டு அஞ்சி நிரைகளை இவரிடம் ஒப்படைத்துத் தனது வீட்டுக்குச் சென்ருன், சேய்ஞலூரில் வாழ்ந்த பசுச் சொந்தக்காரரா கும் அந்தணுளருடைய உடன் பாட்டின்படி தெய்வ மறைச் சிறுவராகும் விசாரசருமரே அன்றுமுதல் அந்த ஆணினத் தை மேய்த்து வந்தார்.
இவர் பசுக்களுக்குப் பசும்புல், தெளிந்த நீர்களைக் காட்டு வார். வெய்யில் வேளைகளில் மரநிழலில் உறங்க வீடுவார். பால் கறக்கும்வேளை தவருது அவற்றை உடையவர் விடுகளுக் குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார். இந்த அழகுச் சிறுவர் கோலுங், கயிறுங் கொண்டு குடுமிகுலைந்து அலைய பூணுரலும் மான்தோலும் மார்பிற் புரள கோவண உடை பிரகாசிக்க ஆநிரையை இடந்தோறும் இடந்தோறும் ஒட்டிச் சென்று மேய்க்கும் அழகினைப் பாருங்கள்:-
'கோலுங் கயிறுங் கொண்டுகுழைக் குடுமி அலையக் குலவுமான் தோலு நூலுஞ் சிறுமார்பில் துவள அரைக்கோ வனஞ்சுடரப் பாலும் பயனும் பெருகவரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினுல் சாலும் புல்லின் அவைவேண்டுந் தனையும் மிசையுந் தலைச்சென்று."
இதனுல் நந்தை, பத்திரை, சுரபி சுசீலை சுமனை என்னுங் கபிலநிறமும் கருநிறமும் வெண்ணிறமும் புகைநிறமும் செந் நிறமும் உடைய பசுக்குலம் அனைத்தும் அழகாக விளங்கின. முலைவிம்மித் தூய பால் சுரந்தன. இவற்றைக் கண்டு மறை யவரெல்லாம் மனமிக மகிழ்ந்தனர்.
பசுவினமோ தமது கன்றைப் பிரிந்த போதும் தம்மீது
அன்பு பூண்டு ஆதரிக்கும் விசாரசருமப் பிராமணக் கன்றை கண்டு அதன் அருகு சார்ந்து மனம் உருகிக் கனைத்துப் பால் சுரந்து முலைபிடித்துக் கறவாதிருக்கும் போதும் பால் சொரி ந்தன. இந்த அற்புதத்தைக் கண்ணுற்ற சிவபக்தராகிய விசாரசருமருக்கு இந்தப் பாலைக் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிச் சிவபூசை புரியலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனுல் இவர் பிள்ளைப்பருவத்துக் கேற்ற திருவிளையாட்டாக மண்ணி ஆற்றிடைக்குறையில் நின்ற ஒரு திருவாத்தி மரநீழ
34lo uá53, LD LITñá, es
(, .
 
 

ஆத்மஜோதி 325
qLTS TeT LALS AeTALSLAL LseTe LL eMe LMLS LAeAALSLLL LSLTLSMLeAeeLSL LMLSMLATALeSMeAeMeTS MeALSLALSLeeAe LLeTeLLLLL LLLLLLLLSLLLTLSLLASLLAMLSLTeSeSLeLqLTSeqLTSLTLLqLLS
பூனி காளிகாமடு கற்பக விணுயகர் -?!,6)ul 6ìl U6ỦITU)l
qeTSSeSSTLS LSTSMqeTLS eTSSqSTSSSTSMqeTLSS qeMMMS qSMSMqSMSSSMSSSSSSS SSqqqSTLSS SLSS SSSSSSMLSSS SSALSLTASLSLLS S LTSSSLTSqLSLTSqTSqLSLTTTSSLLSSLSS
வடக்கின் கண்ணே தேவாரம் பெற்ற திருக்கேதீச்ச ரச் செழும்பதியும், தெற்கின் கண்ணே திருப்புகழ் பெற்ற கதிர்காமத் திருப்பதியும், கிழக்கின் கண்ணே தேவாரம் பெற்ற தென் கயிலைத் திருகோணமலை வளம்பதியும், மேற்கின் கண்ணே மேன்மை சால் முனிச்சுர வியன் பெரும் பதியும் அமைந்து நாற்புறமும் அருட்காவல் பூண்டு நிற் பதால் நமது ஈழவளநாடு புனிதமுற்றுப் பொலிகின்றது. நாற்புறமும் சூழ்ந்துள்ள , கடலரணிலும் பன்மடங்கு வலி மையுள்ள திருவருட் கடலரண் சூழ்ந்துள்ளமையால் ஊழி பெயரினும் நிலை பெயராத உறுதி பெற்று விளங்கும் ஈழ நன்னடு பொன்னுட்டிலும் உயர்வுடையதாகும்.
இந் நன் னுட்டின் கிழக்குத் திசையிலே அகத்தியர் தாபனமாகிய திருக்கரசை, சிவ பக்தனுகிய இராவணன் கண்ட சப்த தீர்த்தமென்னும் கன்னியாய், வெருகலம்பதி, சிற்ருண்டி, மாமாங்கம், கொக்கட்டிச்சோலை, தில்லைமண் டூர், திருக்கோயில் முதலிய பல தலங்கள் நிலவுஞ் சிறப் பினுல் ஈழநாட்டினும் கிழக்கிலங்கை மகிமை பெற்று விளங்குகின்றது. தமிழும், சைவமும் கமழ்கின்ற கிழக் கிலங்கையின் விழுமிய பண்பாடு பழமையும், பெருமையும் வாய்ந்ததாகும்.
உரோம, கிரேக்க நாகரிகங்களிலும் பழமை பெற்ற சைவத்தமிழ் நாகரிகம் சிந்து வெளியிலே சீர்மையுற்றுத் திகழ்ந்தமை உலகறிந்த செய்தியாகும். புனைந்துரையன்று. கரப்பா, மொகஞ்சோதாரோ நகரங்களிற் கண்ட புதை பொருள் ஆராய்ச்சியின் வாயிலாகத் தமிழும், சைவமும் உலகம் போற்றும் உன்னத நிலைக்குள்ளானமை விஞ்ஞான
ரீதியிலும் தமிழர் பெற்ற ஒரு தனிப் பெரும் வெற்றியா கும். தமிழர்களும், சைவர்களும் மிகப் பழைய நாகரிகம் பெற்ற ஒரு சாதியினரின் வழித் தோன்றல்கள் என்று சொல்லும்போது அவர்களுக்கு ஒரு பெருமிதம் உண்டா

Page 7
326 ஆத்மஜோதி
கின்றது. உலக மக்களின் முன்னிலையிலே தலை நிமிர்ந்து நிற்கும் சக்தியும் அவர்களுக்கு வந்து விடுகின்றது. ஈழ நாட்டுத் தமிழர்கள், சைவர்கள் ஆகிய நமக்கும் இந்தப் பெருமிதமும், சக்தியும் புத்துயிரளித்து நிற்கின்றன.
நமது பழம் பெருமையையும், புத்துணர்ச்சியையும் துணையாகக் கொண்டு முயற்சித்து நமது முன்னுேரளித்த அரும் பெரும் செல்வங்களை நாம் அனுபவித்தல் வேண் டும். அவர்களின் சிறந்த நடையினை நாம் அனுசரித்தல் வேண்டும். நமது சமய தாபனங்களைப் பற்றிய உணர்ச் சியும், ஆராய்ச்சியும் நம் உள்ளத்தில் உதித்தல் வேண்டும். திருவருள் வழிநடத்த நமது முன்னேரின் சக்தியை ஆதார மாகக் கொண்டு நாம் முயன்ருல் நமது நாட்டிலுள்ள புராதன தலங்களைப் புனிதமாக வைத்திருக்கவும், பாது காக்கவும், புனருத்தாரணம் செய்யவும், நன்ருக நிருவகிக் கவும் வேண்டிய ஆற்றல் நமக்குக் கை கூடும்.
பின் தங்கியுள்ள நாம் நமது அண்மையிலுள்ள திரு வருள் ஊற்றுகளைப் பாதுகாவா மலும், அனுபவியாமலும் விட்டு விட்டுப் பேருக்கும் புகழுக்குமாகப் பெரிய திருவ ருட் பிரவாகங்களை நோக்கித் தொலை தூரத்துக்கு அலை யும் மனப்பான்மையைத் தற்காலிகமாக விட்டு விடுதல் வேண்டும். அங்கே பூசை திருவிழாக்களுக்காகப் பெரும் பணம் செலவிடுதலும் நமக்கு வேண்டா. முதல் நமது நாட்டிற் பழுதடைந்து கிடக்கும் ஆலயங்களின் மீது நமது பார்வை விழட்டும். அவற்றைத் திருத்தி யமைக்கத் தொண்டு செய்வோம். பின்பு வெளியுலகப் பணியிற் பங்கு கொள்வோம். கிழக்கிலங்கையில் நமது நோக்கம் செல்வ தாக இற்றைக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகளின் முன்பு நிகழ்ந்ததோர் தெய்வீகக் காட்சி நமது நினைவுக்கு வரு கின்றது. அதுவும் நமது கிழக்கிலங்கையிலே, நமக்கு அண் மையிலே நிகழ்ந்த திருவருட் காட்சியாகும்.
வானுேங்கிய மரங்களும், மரங்களிற் படர்ந்து மன்றல் கமழும் கொடிகளும், தளிர்த்துப் பூத்துச் செழித்துக் குலுங்கும் செடிகளும் செறிந்து இனிய பொதும்பர்கள்
நிறைந்த மாபெருஞ் சோலையொன்று, கொம்பன் சோலை
யென்பது அதன் பெயர். அதுதான் ஏறுமாவூர், செங்க லடி, கொம்பன்துறை, சிகண்டிகுடி, சந்திவெளி, காளிகா
 

ஆத்மஜோதி 327
மடு முதலிய பிரதேசங்களேச் சார்ந்து நீண்டு பரந்து கிடந் தமையால் வன விலங்குகளுக்கும், பறவைக் கூட்டங்களுக் களுக்கும், கவர்ச்சி யளிக்கும் இனிய ଈj('T3Fଙi); தலமாக அமைந்திருந்தது. இக் காட்டிலே சர்வா திகாரி போல உலாவித் திரிகின்றது ஒரு கொம்பன் யானை, நடைமலை போன்றும், மத மலை போன்றும் திரிகின்ற அந் தக் கொம்பன் மேற்குறித்த இடங்கள் தோறும் அலைந்து மக்களை அவலமும் கவலையும் அடையச் செய்து செருக்கித் திரிகின்றது.
மதவெறி கொண்டு அலைந்து திரிந்த இந்தக் கொம் பன் யானை ஒருநாள் திருவருட் குறிப்பினலே சிகண்டி குடியை நோக்கி வேகமாக வருகின்றது. அங்கே சிகண்டி முனிவர் என்னும் சித்தர் தவயோகத்திலிருக்கிருர் யானை அவரை நெருங்கி மேலும் வேகமாக வருகின்றது. இந்த யானையின் பிறப்பைத் திருக்குறிப்பால் அறிந்த சிகண்டி முனிவர் ஒரு வெற்றிலையை எடுத்து அதன் முன்னே எறி கின்ருர், வெற்றிலை வேல்போல் வடிவெடுத்து யானையின் மத்தகத்தை இரு கூருகப்பிளக்கின்றது. யானையின் இரு கூறு களும் மறைய அவற்றினிடையே ஒரு மனிதவடிவம் தோன்றி முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்க முனிவர் ஆசீர் வதித்து நீ முற்பிறப்பில் ஒரு கந்தருவனுயிருந்தாய். உனது பெயர் ஐராவசு. ஒரு சாபத்தினுல் யானையாகப் பிறந்து இக் காட்டில் அலைந்து திரிந்தாய். இன்று என்னைக் கண்டதும் உனது சாபம் நீங்கிப் பழைய வடிவம் பெற்ருய். இனிமேல் நீ நலமே வாழ்க! என்று கூறி முனிவர் அவனுக்கு விடை கொடுக்கின்ருர், அவன் மீட்டும் வணங்கியெழுந்து தனது நகரத்துக்குச் செல்கின்றன்.
அக்கொம்பன் யானை திரிந்த கொ ம் பன் சோலேயே கூமாச்சோலையென்றும், கொம்பன் நீர் விளையாடிய கொம் பன் துறையே கொம்மாதுறையென்றும், கொம்பன் ஏறுமாரு கத்திரிந்த ஏறுமாவூரே ஏழுவூர் என்றும் திரிந்து வழங்குகின் றனஎன்றுபெரியோர்கூறுகின்றர்கள். அன்றியும்கிகண்டிமுனி வர்வாழ்ந்த இடமாகியசிகண்டிகுடியேகாலகதியில் சிற்ருண்டி குடியாயிற்று என்றும் கூறுகின்ருர்கள். இன்று சிற்றண்டி குடி சித்திர வேலாயுத சுவாமி கோயிலில் நடக்கின்ற மயிற் கட்டுத் திருவிழா சிகண்டி முனிவரின் ஞாபகமாக நடக்கிற தென்றும் கூறுகின்ருர்கள். மயிலுக்குச் சிகண்டியென்னும்

Page 8
328 ஆத்மஜோதி
ஒருபெயரும் இருப்பதால் இந்த ஐதிகம் ஆராய்ச்சியாளர்க்கு விருந்தாயமைக.
இந்த அற்புதச் செயல் நிகழ்ந்த சூழலிலே காளிகாமடுத் திருப்பதியென ஒரு பிள்ளையார் கோயில் அமைந்திருக்கின் றது. ஐராவசு எனும் கந்தருவன் யானையாக வாழ்ந்த பிர தேசத்தில் பிரணவ வடிவாகிய யானைமுகக் கடவுளுக்கு மக்கள் ஆலயமெடுத்து இந்த யானையால் இடையூறு நேரிடா வண்ணம் வணங்கி வந்திருக்கலாம் என்று நம்புதற்கு இட முண்டு. அன்றியும் சிற்ருண்டி குடியில் இளைய பிள்ளையார் சித் தி ர வேலாயுத சுவாமி கோயில் கொண்டருளியது போல, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த காளிகாமடுப் பகு தியிலே மூ த் த பிள்ளையார் கற்பக வினுயகரும் கோயில் கொண்டருளியதும் பொருத்தமாக அமைந்திருக்கிறது, எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.
கொக்கட்டிச் சோலை தான்தோன்றீசுவரர் கோயிலுக் குத் தாந்தாமலைத் திருப்பதியிருப்பது போன்று, சிற்ருண்டிச் கித்திர வேலாயுத சுவாமி ஆலயத்துக்குக் காளிகாமடுத் திருப்பதியிருப்பது மிகவும் பொருத்தமாகக் காணப்படுகின் றது. எந்த நோக்குடன் பார்த்தாலும் காளிகாமடு கற்பக வினயகர் ஆலயம் திருவருள் சுரக்கும் தெய்வீக தலமென் பதிலே எள்ளளவும் ஐயமேயில்லை.
இத்தகைய அற்புதம் வாய்ந்த காளிகாமடுத் திருப்பதி யானது செங்கலடிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வதுளை வீதியிலே 92; 924மைல் தூரத்தில் அமைந் துள்ளது. செங்கலடிச் சந்தியால் மேற்கு நோக்கிச் சிறிது தூரம்சென்றதும் வீதியின் மருங்கில் நமது இடப்புறத்தே நிற் கும் வேம்பிலும், அரசிலும் மாறிமாறிப் பாய்ந்து துள்ளிக் குதிக்கின்ற வா ன ர க் கூட்டங்களை அங்கே காணலாம். தெய்வீகப் பிரசாத முண்ணும் பேறுபெற்ற இந்த வானரக் கூட்டங்கள் உறவுகலந்து விளையாடு மிடத்திலே அழகான சிறியதோர் ஆலயம் முதற் காட்சி தருகின்றது. இது ஒரு வைரவர் கோயில். காளிகாமடுக் கற்பக வினயகர் கோயி லின் திருவாயிலைக் காவல் புரியும் அதிகாரம் பெற்ற வயிர வர் இங்கே நிற்கின்றர். இவரிடம் விடை பெற்றலொழியக் காளிகாமடுத் திருப்பதியை அடைதல் கூடாது.
கி. பி. 1902ம் ஆண்டளவிலே தான் இவ்வயிரவர் ஆலயம் முதல் முதல் கட்டப்பட்டது. அப்போது ஏருவூரி
 

ஆத்மஜோதி - 329
லிருந்த பிரபல வணிகர் திரு. சு. ம. இளையதம்பி என்பவர் கட்டி உபகரித்த ஆலயக் கட்டிடம். கி. பி. 1957ம் ஆண்டு மார்கழி மாதம் 25ந்திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தாற் சேதமடையலாயிற்று. பின்னர் 1958ம் ஆண்டு தை மாதம் 24ந் திகதி மீண்டும் அத்திவாரமிடப் பெற்றுப் பொதுமக் களின் உதவியுடன் பூரீகாளிகாமடு ஆலயபரிபாலன சபைத் ததிைகாரி திரு. சி. வ. வி. செல்லையா அவர்களின் முயற்சி யால் இப்போதுள்ள வைரவர் கோயிற் கட்டி டம் பூர்த்தி யாகி 1958ம் ஆண்டு ஆடி மாதம் 28ந் திகதி கும்பாபி டேகமும் சிறப்புற நிறைவேறப் ப்ெற்றது. இத் திருப் பணிச் செலவிலே பெருந் தொகைப் பணம் திரு. சி. வ. வி. செல்லையா அவர்களின் காணிக்கையேயாகும்.
இந்தக் காவல் வைரவர் கோயிலிலிருந்து தெற்கு நோக்கி ஒரு செம்மண் வீதி செல்கிறது. இவ் வீதி ஏறக் குறைய 330 யார் நீளமிருக்கும். இவ் வீதி முடியுமிடத் திலே ஒரு மண்மேடு அமைந்துள்ளது. இம் மண் மேட் டில் நின்று தெற்கு முகமாக நோக்கினல், மிக மிக அண்மை யிலே காளிகாமடு பூரீகற்பக வினயகர் ஆலயம் கண்ணுக்கு இனிதாகக் காட்சியளிக்கும்.
மூன்று புறமுஞ் சூழ்ந்து கிடந்து இயற்கை அரணுகக் காட்சி தருகின்ற இனிய நீரோடை, அதனிடையே அமைந்து கிடக்கும் நீண்டு பரந்த நிலப்பரப்பு; அந்நிலப்பரப்பின்மீது குளிர்ந்த தளைகளையுடைய ஆலுமரசும், மாவும் மருதும், வேம்பும் வில்வமும் விண்ணுேங்கியுயர்ந்துமெல்லிலைப் பந்தல் விரித்தாற் போன்ற குளிர் நிழற் கூடல், இக் கூடலின் நடு விலே கோயில். இத்தனையும் ஒருங்கே பொருந்திய காளிகா மடுத் திருப்பதியானது ஈழ நாட்டின் திருவரங்கம் போன்று னிதாக இலங்குங்காட்சி காண்போர்க்குப்பக்தியும், பரவச மும் ஊட்டுகின்றது. அற்புதம் வாய்ந்தது.
இத்திருப்பதியைச் சூழ்ந்துள்ள நீரோ டை ஆழமற்றது. மூக்கன்வெளி நீரோடை யென்பது அதன் பெயர். மேட்டு நிலத்திலிருந்து நீரோடையிலிறங்கிக் கரையேறியதும் இயல் பாகவே கழுவப்பட்ட கால்களுடன் நாம் ஆசாரசீலர்களாக ஆலயவிதியிற் பிரவேசிக்கும் பேறு நமக்குக் கிடைக்கின்றது. கால்கள் விரைந்து செல்லக் கற்பக வினயகர் திரு முன்னிலை யடைந்து மெய்ம்மறந்து நிற்கும் பக்தர்குழாத்துடன் நாமும்

Page 9
330 ஆத்மஜோதி
ஒன்ருகி விடுகின்ருேம். ஆலயமோ சிறிது. அருளோ பெரிது, பிரணவ சொரூபியாகிய பிள்ளையாருக்கு ஆலயமமைக்க யாரால் முடியும் .
கிழக்கிலங்கையிலே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையே யமைந்து விசேடம் பெற்ற பல தலங்களுக்குள்ள்ே காளிகாமடுத் திருப்பதியும் ஒன்ருகும். அடர்ந்த வனமாகக் கிடந்த இந்தக் காளிகாமடுப் பிரதேசத்தினுாடாகச் செல்லும் தாவளவீதி' என்கின்ற ஒற்றடிப்பாதை வழியாக அக்கா லத்திற் பிரயாணிகள் வதுளைக்குப் போக்கு வரவு செய்வது வழக்கமாகும் கி. பி. 1800ம் ஆண்டு தொடக்கம் இவ் வழக்கம் இருந்து வந்தது. இக்காலத்திலே இதற்கு அயற் கிராமங்களிலுள்ள மக்கள் காடு வெட்டிப் பூமிதிருத்திக் கமஞ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது இப்போது ஆலய மிருக்கும் மேட்டுப்பூமியில் வன்னித்தம்பிரானையும், காளிமா தேவியையும் வழிபட்டு வந்தார்கள். பிரயாணிகளும் இவ் வழிபாட்டிற் கலந்து கொள்வதுண்டு. ஆயினும், அப்போது குறிப்பிடத் தக்க கோயில் எதுவும் கட்டியதாகத் தெரிய
கி. பி. 1870ம் ஆண்டளவிலேதான் ஒற்றடிப்பாதை பகிரங்க பாதையாகத் திருத்தியமைக்கும் வேலை தொடங் கியது. பாதையமைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பயணி யர்கள்’ என்போர்க்குத் தலைவராயிருந்த செங்கலடி ஆறுமு கம் முருகப்பர் அவிள்தார் முதலி என்பவரே காளிகாமடு ஆலயத்தை முதல் முதலாகக் கட்டுவித்தவர். செங்கலடி யைச் சேர்ந்த மானிடலர் என்பவரும், நம்பியார்குமாரவேலு என்பவரும் தொடக்கத்தில் பூசகர்களாயிருந்தார்கள். இப் போது செங்கலடியிலே பழுத்த மருந்து மாமரம் போல் திகழ் கின்ற சித்த வைத்தியர் கிருஷ்ணபிள்ளைச்சாமியார் அவர்கள் ஆறுமுகம் முருகப்பர் அவிள்தார்முதலி என்பவரது புதல்வ ரேயென்பது இங்கே குறிப்பிடத் தக்கதாம்.
காளிகாமடு என்னும் இத்திருப்பதிக்கும், காளிதேவிக்கு
முள்ள தொடர்புபற்றி இப்போது ஒன்றுஞ் சொல்வதற்கு ஆதாரம் யாதும் காணப்படவில்லை. காளிகம் என்கின்ற மணித்தக்காளி இப்பகுதியின் பக்கத்தே காணப்படுவது கொண்டு காளிகாமடு என்னும் பெயர் இந்த மருந்துப் பூண் டினுல் வந்திருக்கலாம் எனச்சிலர் அபிப்பிராயப் படுகின்ருர்
 
 
 
 
 

கள். ஆராய்ச்சியாளரிடம் இதனை விட்டு விடுதல் நல்ல தாகும்.
1878ம் ஆண்டு தொடக்கம் அர்ச்சகராயிருந்த குமார
வேலு என்பவர் 1892ம் ஆண்டிலே காலமாகி விட்டார். அதன்பின் குமாரவேலு மகன் சின்னப்பு என் பார் அர்ச்சக ரானுர், சின்னப்புவின் காலத்திற்குப் பின் மானிடலரின் மைத்துனர் மூத்ததம்பி என்பார் பூசகராஞர். இந்நிலையி லே, முன்பு 1902ம் ஆண்டில் வைரவர் கோயிலைக் கட்டுவித்த ஏருவூர் திரு. சு. ம. இளையதம்பி என்பவர் காளிகாமடு ஆல் யத்தின் பூசை திருவிழா நிகழ்ச்சிகளைப் பிரபலப் படுத்த முயற்சிக்கலானுர், அயற் கிராமங்களிலுள்ள மக்களின் ஒத் துழைப்போடு வேல் திருவிழா கைப்பூசத் திருவிழா, ஆகிய உற்சவங்களை ஏற்படுத்தி இனிது நடத்தி வந்தார். இவர் காலத்தின்பின் இவரின் மூத்த மகன் இரத்தினம் என்பார் இக் கோயிற் திருப்பணிகளைச் செல்வனே நடத்தலாயினர்.
இதன்பின், 1935ம் ஆண்டளவில் ஆலய நிருவாகத்தில் புதியதோர் அபிவிருத்தியுண்டாயிற்று. அப்போது ஏருவூ ரிற் பிரபலம் பெற்றிருந்த கொஸ்தாப்பர் சு. ம. சிதம்பரப் பிள்ளை அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேசிலார் சரவண முத்து என்பவரைக் கொண்டு ஆலயத்தின் முன் மண்டபங் கள் இரண்டையும் மடைப்பள்ளியையும் கட்டுவித்துத் திருப் பணியை நன்கு நிறைவேற்றி வைத்தார். மட்டுநகர் பிரமுக ரு ம் , அ ப் போது நீர் ப் ப ா ச ன அதி கா ரி யாக க் கடமையாற்றியவரும் சிவதொண்டருமாகிய திரு. பெ. ஏரம்ப மூர்த்தி என் பாரும் இத்திருப்பணியில் பன்குடா வெளி திரு. வ. வி. சீனித்தம்பி, செங்கலடி திரு. வ. வி. கதிர்கா மத் தம்பி ஆகியோரும், இப்பகுதி விவசாயிகளும் காட்டிய ஒத் தாசை இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அன்றியும் இத் திருப்பணிக்கு வேண்டிய மரங்களைத்தந்துதவிய செங்கலடி திருமதி. வல்லிபுரம் தங்கம்மையாரது தாராளத் தன்மை இப்பகுதித் தனவந்தர்களுக்செல்லாம் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுதற்கு உரியது.
1939ம் ஆண்டு கும்பாபிஷேகமும் சிறப்பாக நடை பெற்றுப் பொதுமக்களாற் பரிபாலிக்கப் பட்டுவந்த இவ்வா லயத்தின் பூசகராக கொக்கட்டிச் சோலைப் பகுதியைச் சேர்ந்த திரு. கந்தையா என்பவர் அப்போது சேவை செய்து வந்தார்.

Page 10
3.
3.
2.
ஆத்மஜோதி
கற்பக வினுயகரின் திருவருள் போல இவ்வாலயமும் ஒரு பொதுச் சொத்தேயாம். 1945ம் ஆண்டு தொடக்கம் 1949ம். ஆண்டு முடியு மட்டும் இவ்வாலய நிருவாகம் பன்குடா வெளி கொடுவாமடு, கொம்மாதுறை, வந்தாறுமூலை, செங்கலடி ஏருவூர் 4ம் 5ம் குறிச்சி, தளவாய், குடியிருப்பு, மயிலம்பா வெளி, புளியந்தீவு ஆகிய ஊர்ச் சைவப் பொதுமக்களாற் தெரிவு செய்யப்பட்ட ஒரு பரிபாலன சபையினுற் செவ்வனே நடைபெற்று வந்தது. 1950ம் ஆண்டிலிருந்து உன்னிச்சை, கரடியனுறு, வேப்பவெட்டுவான், ஆகிய கிராமங்களும் நிரு வாகத்திற் பங்கு கொண்டன. 1960ம் ஆண்டு தை மாதம் 31ந்திகதி வரையும் இந்த நடைமுறை பழைய வழக்கத்தைத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
1960ம் ஆண்டு தை மாதம் 31ந்தேதியன்று மேற்குறித்த ஊர்ப் பொது மக்கள் கூடிய ஒரு மகா சபை ஆலய யிற் கூடிச் செய்த தீர்மானத்துக் கமைய 6-6-60ல் ஆலய நிருவாகம் பற்றி ஒரு உறுதி சாதனம் நிறைவேற்றப்பட் டது. பிரசித்த நொத்தாரிசு திரு. சா. கந்தப்பா அவர் களால் 34 19ம் இலக்கத்தில் அத்தாட்சிப் படுத்தப்பட்ட சாதனத்தின் பிரதிகள் தருமக் கமிஷனர் காரியாலயம் (Public Trust), LD GI55i i' Outgilibirai) [52,ou I h, (Public Library) ஆகிய தாபனங்களிலும் பாதுகாப்பில் வைக்கப் பட்டுள்ளன.
இத் திருப்பதியில் ஆண்டுதோறும் திருவிழா நடத் தும் ஒழுங்கினைப் பரிபாலன சபையார் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றர்கள். கதிர்காமத் தீர்த்தத்துக்கு நாலு நாள் முந்தி இங்குள்ள வைரவர் கோயிலிற் கொடியேற் றம் நடக்கும். அன்று இதனைத் தொடர்ந்து கற்பகவினு யகப் பெருமானுக்கு அபிடேக நைவேத்திய ஆராதனை நிகழும். பின்னர் மூன்ரும் நாள் வந்தாறுமூலை விஷ்ணு வாலயத்தில் முன்னேற்பாட்டுடன் வைத்து எழுந்தருளப் பண்ணிய சக்திவேல் ஏழுவூர் வரையுள்ள எல்லா ஆலயங் களையும் தரிசித்து மக்கள் பக்தி பரவசமாகப் பணிந்து நிற்க ஊர்வலமாகக் காளிகா மடுப்பதியை வந்தடையும். வந்து எழுந்தருளியதும் வினயகப் பெருமானுக்கு அபிஷேக பூசையும் திருவிழாவும் நடைபெறும்.
அடுத்த நாள் கதிர்காம தீர்த்த உற்சவத்துடன், தீர்த்த உற்சவம் நடந்தேறும். தீர்த்தம் முடிந்ததும் திரு
 
 
 
 

ஆத்மஜோதி 333
வூஞ்சலும், அன்னதானமும் சிறப்பாக நடைபெறும். இந்த
உற்சவ முறை 1946ம் ஆண்டு தொடக்கம் நடைமுறை யிலிருந்து வருகின்றது, ஆண்டு தோறும் இத் திருவிழா வைபவத்திற் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சைவ மக்களின் கூட்டுறவும் நம்பிக்கையும் வளரத் திருவ ருள் பொலியச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்ருர் 56T.
மட்டக்களப்பு - வதுளை வீதியாகச் செல்லும் பிரயா னிகள் சாதி சமய வேறுபாடின்றி இவ்வாலய வீதியிலே தரித்து நின்று கற்பூரம் கொளுத்தித் தேங்காயுடைத்துக் கும்பிட்டு வணங்கிச் செல்லும் காட்சியினை எப்போதும் காணலாம். இவ்வாலயத்துக்குப் பொருள் வருவாய் சிறிது; அருள் வருவாய் பெரிது. எதிர்காலத்தில் அருள் போற் பொருளும் பொலிந்து கற்பக வினயகர் திருக்கோயில் நீடூழி வாழ்க வெனக் கற்பக வினயகர் பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.
'நங் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம் பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையுந் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே".
() () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () ()
Gäu (1961D
யோகம் என்பது இதுவே, புலன்களே அடக்கி ஆள்வதே அது. - உபநிடதம்
உடம்பு
உனக்கு உடம்பு தந்திருப்பது உன்னுடைய நன்மைக்காக மட் டும் அன்று.
- எபிரேயமதம்
() () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () () ()

Page 11
334 ஆத்மஜோதி
() () () () () () (, ) ( () () , () , () () () , () () () () () () () () () , ()
சரணடைந்தேன்!
(சி. பொன்னுத்தம்பி)
ܥ݂ܰ
ஆடலெலாம் ஆடிஉல கரங்கினிலே சலித்தேன்
ஆனுலும் எனதுள்ளம் அமைதி கொள்ளவில்லை!
பீடுயர்நின் பொற்கழலின் பேரமுதம் உண்ணப்
பெருகிவரும் பேரன் பில் உருகு தெனதுள்ளம்!
மண்ணுசை, பெண்ணுசை, பொன்னுசை என்னும்
மரமோகப் பெருங்கடலில் மூழ்கியலுத் தலுத்தே
என்னுசைத் தின வின்னும் தெளியாது கதறும், எளியேனைக் கரையேற்ற ஒருவழியு மிலேயோ?
பட்டதுயர் இனிப்போதும்; பா விமனம் சலித்தேன் பாடுதற்கும் முடியாத பாழமைதி யுற்றேன்;
வெட்டவெளி தனில் பட்ட மரமாகித் தவித்தேன்; வேறு கதி உனையன்றி எனக்கேதும் இல்லே!
Y4
நிலையான பொருளொன்றும் யான் காணவில்லை;
நினையன்றி எனக்கிங்கு நிலையேதும் இல்லை;
வலைபட்ட மீன்போல துயர் பட்டலுத் தே
மாளாது நின்னடியே சரனென்றடைந்தேன்!
−m.in. ബ
 

ஆத்மஜோதி 335
அப்பர் அறிவாலும் உணர்வாலும் இறைவனேக் காணும் விதம்
(ஏ. பாக்கியமூர்த்தி - மட்டுநகர்)
அறிவியல் ஆகாயத்தை நோக்கிச் சென்று கொண்டி ருக்கும் இக்காலத்தில் ஆண்டவன் இருக்கிருரோ இல்லையோ என்று கேலி செய்யும் கூட்டமே அதிகம். ஆத்மீகம் பேசு பவர்களை அரைப் பயித்தியகாரர்கள் என்று கூட்டம் கூடிக் கூக்குரல் போடும் கும்பலே அதிகம். ஏன்? மூளை வளர்ந் ததே தவிர மக்களின் இதயம் வளரவில்லை. மனப்பான்மை குறுகிவிட்டது. இதயமில்லா அறிவால் உலகம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுருங்கச் சொன்னுல் மக்களின் அறிவியல்
கூடி உணர்வியல் குறைந்து விட்ட தெனலாம்.
சுவாமி விவேகானந்தர் தமது அறிவியலால் இவ்வுல கியலை ஆராய்ந்து ஏதோ ஒரு மாபெரும் சக்தி நம்மை ஆட்டிப் படைப்பதை அறிந்தார். அவ்வாறு அறிந்தவர் அதைக் கண்டறிய இராமகிருஷ்ணரை விரைந்தார். தம் உணர்வியலால் இறைவனை எத்தனையோ வடிவில் கண்டு இன்புற்ற இராமகிருஷ்ணர், தம் உணர்வியலால் இறைவ
னைக் காட்டினர். அறிவும் உணர்வும் சேரவே இறைவன்
தன் திருவுருவத்தினைக் காட்டினன். எனவே இறைவன் அறிவால் அறியப்பட்டு உணர்வால் அனுபவிக்கப் படும் ஒர் பேரின்பம் என்பது பெறப்படும்.
நம் சைவசமய குரவர்களிலே ஒருவராகிய திருநாவுக் கரசு நாயனர் இறைவனை அறிவியலாலும் உணர்வியலா லும் ஆராயும் அற்புதம் தான் என்னே அவர் பல சமய உண்மைகளையும் ஆராய்ந்தவர். சைவராகப் பிறந்து சமண ராகமாறி மீண்டும் தான் பிறந்த சமயமே நல்வழி BitT LTL டும் சமயமெனத் துணிந்து, அதன் வழி நின்று வீடு பேறு பெற்ற பெருந்தகை. அன்னர் எவ்வகையில் இறைவனைக் காண்கிருர் என்பதைச் சிறிது ஆராய்வாம்.
கடவுள் உருவமற்றவர், நிறமற்றவர், குணமற்றவர், அவரை நாம் காணமுடியாது; என்பது எல்லோரும் ஒப்ப ஏற்றுக் கொண்ட முடிவு. எனினும் நம் சமயம் வடிவற்ற
#్న
s

Page 12
336 ஆத்மஜோதி
இறைவனுக்குப் பல பல வடிவங்களைக் கொடுத்திருக்கிறது. அவை மனித வடிவத்திலேயே இருக்கின்றன. “ஓர் எரு மைமாடு கடவுளைப் பற்றிச் சிந்திக்குமாகில் நிச்சயமாக தன்னினத்திலுள்ள ஒர் பெரிய மாட்டைப் போல் இருப் பார் எனவே எண்ணும்' என்று சுவாமி விவேகானந்தர் ஓர் இடத்தில் கூறுகிருர். எனவே மக்களினம் கடவுளைப் பற்றிச் சிந்திக்கும் போது நம்மைப்போன்ற அமைப்பிலும் நம்மிலும் மேலான குணநலங்களையும் உடையவராக எண் ணுவதில் வியப்பொன்றும் இல்லையே.
சைவம் இறைவனை மாதொரு பாகனகவே காண்கி றது. இதற்குப் பல அகச் சான்றுகளும் புறச்சான்றுகளும் உள்ளன. சமயகுரவர்களுள் மூத்தவராகிய மாணிக்கவா சகப் பெருமான்,
*கண்ணுல் யானும் கண்டேன் காண்க' எனவும் *புவனியில் சேவடி தீண்டின்ன் காண்க' எனவும் *குவளேக் கண்ணி கூறன் காண்க.’’ எனவும்
எவ்வளவு ஆணித்தரமாக மொழிகின்றர்.
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகஞர் தாம் வருவரே' '
எனத் துணிகின்றது மெய்கண்ட சாஸ்திரம். இந்த உண் மையை நம் முன்னேர் உணர்வையும் அறிவையும் ஒன்று படுத்திக் கண்டறிந்தனர்.
அறிவியல் துறையில் நின்று அப்பர் பெருமான் இறை வனை ஆராயும் தன்மையைப் பாருங்கள்.
"மைபடிந்த கண்ணுளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் ஒப்புடையன் அல்லன் ஒருவனல்லன்
ஒர் ஊரன் அல்லன் ஒர் உவமன் இல்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணுகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணுதே." என்று அறிவியல் பேசுகின்றர்.

ஆத்மஜோதி 337
கடவுளை உணர்வினல் அறிந்தவர்கள் மைபடிந்த கண்ணு ளோடு நீண்ட சடாபாரத்தை உடையவனப் கச்சிமயானத் தில் காட்சி கொடுக்கிருன் என்று கூறுகிருர்களேயல்லாமல், அவன் தனக்கு ஒப்பாக ஒருவனை உடையவனல்லன்; அவன் ஏகன்; அநேகன்; ஒர் ஊரில் இருப்பவனல்லன்; எங்கும் உள் ளான்; அவன் உவமிக்க முடியாதவன். எனினும் அவன் *வேயுறு தோளி பங்களுக" இருக்கின்றன்; ‘சுரிகுழற் பணே முலை மடந்தை பாதியாக' இருக்கின்றன்; ' வடிவுடை மழு வேந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரி குழல் உமையோடும்’ இருக்கின்ருன், என்றெல்லாம் அவன் அடியார்கள் பாடுகின்றர்கள். அவ்வடியார்கள் 'அவனரு ளாலே அவன் தாள் வணங்கி', 'அவனருளே கண்ணுகக் கண்டு', 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்' என்றெல்லாம் தாங்கள் கண்ட கோலத் தை ஆயிரம் ஆயிரம் பாக்களால் பாடி மகிழ்ந்தனர்.
"சொற்பதத்தார் சொற்ப்தமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை’ என நாவுக்கரசர் கூறும் அறிவியல் தத்துவம் அடியார்களின் சொன் மாலையையும் கடந்து நின்றவன் இறைவன் என்பதை புலப்படுத்தா நிற்கின்றது.
இறைவன் தானே யாதுமாகி நிற்கின்றன். விறகிலே தீ மறைந்து நிற்கிறது. இரண்டு மரக்கட்டைகளை ஒன்றே டொன்று உராயும்போது தீப்பொறிபறக்கின்றது. 1 Πτού)(βου நெய் மறைந்து கிடக்கின்றது. பாலைக் கடையும்போது நெய் தோன்றுகின்றது. மாணிக்கக் கல்லைச் சாணையில் போட்டுக் கடையும் போதுதான் அதில் இருந்து ஒளி பிறக் கின்றது. இவற்றைப் போன்றே இறைவன் நம் அகத்திலும் புறத்திலும் மறைந்து கிடக்கின்றன் . நாம் ஒர் பாத்திரமா னல் நம்முள் இறைவனின் அருள் என்னும் பால் நிறைந்து கிடக்கின்றது. அந்தப் பாலைக் கடைய உறவுஎன்னும் கோலே மத்தாகக் கொள்ள வேண்டும். அதாவது நமக்கும் இறைவ னுக்கும்இடையில் ஓர்உறவு முறையை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். அவன் ஆண்டான் நாம் அடிமை என்னும் உற வோ, அவன் தாய்தந்தையர் நாம் மக்கள் என்னும் உறவோ இறைவன் மேல் காதல் கொண்டு கணவன் மனைவி என்னும் உறவோ அல்லது தோழமை உறவோ, ஏதாவது ஒர் வகை யில் நமக்கும் இறைவனுக்கும் இடையில் தொடர்பு அவசியம்

Page 13
333 - ஆத்மஜோதி
வேண்டப்படுவதொன்று. இந்த உறவுகோலை உணர்வு என் னும் கயிற்ருல் கடைய வேண்டும். அவ்வாறு உணர்வுக் கயிற்ருற் கடையும்போது பாலில் நெய் தோன்றுவது போல் இறைவன் தோன்றுவான். இந்த அரும்பெரும் உண்மையை eg}LILIT,
' விறகில் தீயினன் பாலிற்படு நெய் போல் மறைய நின்றுளன் மா மணிச் சோதியான் உறவு கோல் நட்டுணர்வு கயிற்றிஞல் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே'
என்று கூறுவதோடல்லாமல் 'எங்கும் ஈசன் என்னு தவர்க்கில்லையே' என்பதை வலியுறுத்துவான் வேண்டி,
* மெய்த்தவன் காண் மெய்த்தவத்தில் நிற்பார்க்கெல்லாம் விருப்பிலா இரும்பு மன வினேயர்க் கென்றும் பொய்த்தவன் காண்.'
என இடித்துரைக்கின் ருர்,
இனி அப்பர் பெருமான் உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினுல் முறுகவாங்கிக் கடைந்ததால் கண்ட காட்சி தான் என்னே? இதோ அவரே கூறுகின்ருர் கேண்மின்.
'குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்
வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றல் மனித் தப் பிறவியும் வேண்டுவ
தேயிந்த மானிலத்தே' ஆம். இக்காட்சியைக் காண்பதற்கு நிச்சயமாக மனித் தப் பிறவியால்தான் முடியும். வேறு எந்தப் பிறவியிலும் முடி
யாது. 'இப்பிறவி தப்பினுல் எப்பிறவி வாய்க்குமோ?? பிறவியின் பேற்றை அடைய விரைமின்கள்.
அவன் முக்கனியின் சாருே அல்லது பாற்கடலைக் கடைந் தெடுத்த அமுதமோ எனவும், பிரமன் மால் அடிமுடி தேடி
ܕ ܐܐ ܐܐ ܐܐ

ஆத்மஜோதி 339
அறியாத பேரயிரம்பரவி வானுேர் ஏத்தும் பெம்மான் பெருந் துறையான் திருவாதவூரடிகளுக்கு நேரிலே வந்து காட்சி கொடுத்த விந்தையை
"அது பழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அ மரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டிங் கெழுந்தருளும்
எனவரும் திருப்பள்ளியெழுச்சிச் செய்யுளில் 'இதுஅவன் திரு வுரு இவன் அவன் எனவே' தாம் இறைவனை அடையாளம் கண்டு கொண்டநுட்பத்தை விளக்குவதையும் காண்மின்கள்.
அறிவியலிலே உருவமற்ற இறைவன் உணர்வியலிலே உருப்பெற்று அன்பர்களுக்குக் காட்சிகொடுக்கிருன் என்னும் உண்மையை சைவசமயம் வலியுறுத்துவதுபோல் வேறு எந் தச் சமயமும் வலியுறுத்தவில்லை என்பது தெளிவு. 鷺
* பிறவாயாக்கைப் பெரியோன்' ஆகிய சிவன் பிறந்த தாகப் பல கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. அவை தமிழர் தம் சமயத்திற்கு ஒவ்வாதவை. சிவனுக்கும் உமைக்
கும் பிறப்புகள் பல கற்பிக்கும் கதைகள் ஆரியரால் தமிழ்
மக்களிடையே புகுத்தப்பட்டு இன்று வேரூன்றிவிட்டன. இதைக் கண்ணுற்ற நம் சமய குரவர்கள் பாமர மக்கள் சம யத்தில் நம்பிக்கை இழக்காவண்ணம் அக்கதைகளை தமது தேவார திருவாசகங்களில் சேர்த்துப் பாடினரேயன்றி அவர் கள் அக்கதைகளை நம்பினரல்லர். .
எனினும் அம் முழுமுதற் பெரும் பொருளாகிய சிவபெ ருமான் பலப்பல திருமேனிகளைத் தாங்கி அன்பர் மாட்டு பல திருவிளையாடல்களைச் செய்துள்ளான். அத்திருமேனிகளைத் தோற்றுவிப்பவரும் அவரே. அவை பல அரும் செயல்களுக் காகத் தோன்றி பின் ஒடுங்கிக் கொள்கின்றன. இவ்வாறு இறைவன் தான் வேண்டியவாறு உருக்கொண்டு பின் அவற் றை ஒடுக்கிக் கொள்ளுதல் சைவசித்தாந்தத்திற்கு ஒப்பு முடிந்த முடிவு. சிவனும் உமையும் இவ்வுலகிலே ஒர்ஆனுக் கும் பெண்ணுக்கும் மகனுகவோ அல்லது மகளாகவோ பிறந்
தார்கள் என்று கூறும் பொய்க்கதைகள் நம் சமயத்திற்குப்
பொருந்தாது. உதாரணமாக,

Page 14
340 ஆத்மஜோதி
* கேட்டாரும் அறியாதான் கேடொன்றில்லான்
கிளை யிலான் கேளாதே எல்லாம் கேட்டான்' என்று மணிவா சகரும்
'பிறப்பிலி இறப்பிலி’ என்று நாவுக்கரசரும்
'தரியவளாய்த தந்தையாகிச் ச எ த ல் பிறத்தல் இன்றி’’ என்று சுந்தரரும்
'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்று அனுபூதிச்
செல்வரும் கூறுவதை உய்த்துணர்மின்கள்.
இன்று நம்சைவநன்மக்கள் பிறந்து இறக்கும் பெரியோர் களையும் காப்பியங்களின் கதாநாயகிகளையும், சிற்றுயிர்களை யும், சிறுதேவதைகளையும் கடவுளென வணங்கி கோயில் களில் வைத்துப் பூசித்து சிவலிங்கத் திருமேனிக்குச் செய்யும் தீபாராதனைகளையும் பூசை, மற்றுமுண்டான வழிபாடுகளை யும் செய்துவருகின்றனர். இப்படிச் செய்வது சைவத்திற்கு பெரும் இழுக்கான ஒன்று.
"தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம் மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலும் ஆம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்
யாதும் ஐயுற வில்லையே'
என்னும் சுந்தரர் தேவாரத்தில் சைவசமயத்தின் உண்மை நிலை தொனிப்பதை சற்று ஆராய்ந்து பாருங்கள்.
இதுவரை கூறியவற்ருல் நாவுக்கரசர் நம்மினத்தவரை ஆற்றுப்படுத்தும் விதத்தைச் சிறிது ஆராய்ந்தோம். சீனி இனிக்கும் என்பதை அறிவால் அறியலாம். இனிமை எப் படிப்பட்டது என்பதைச் சுவைத்தலால் உண்டாகும் உணர் வினுல்தான் கூறமுடியும். எனவே இறைவனை அறிய அறி வும் உணர்வும் ஒருமித்துத் தொழிற்பட வேண்டும். இதன் அவசியத்தை சைவத்தில் தோன்றி சமணத்திற்கு மாறி
 
 
 

ஆத்மஜோதி 341
ஆணினம் மேய்த்து.
324ம் பக்கத் தொடர்ச்சி
லில் மண்ணினல் ஒரு சிவலிங்கத்தை அமைத்தார். மண்ணி னலே அதற்கு ஆலயமும் கோபுரமும் மதிலும் வகுத்தார். ஆத்திப்பூவுந் தளிரும் பிற பூக்களுங் கொய்து மாலை பல கட் டினர். பசுக்களின் முலைகளை இவர் தீண்ட அவை கனைத்துப் பால் சொரிந்தன. அதனைப் புதிய மண்குடம் நிரம்ப எடுத்து வந்து அந்தச் சிவலிங்கத்தை அருச்சித்துங் பாற்திரு முழுக் காட்டினர், மற்றைய பூசனைப் பொருள்களை மனே பாவனை யால் இருப்பதாகப் பாவித்துப் பூசனை புரிந்தார். இங்ங்னம் பல நாட்கள் தொடர்ந்து பத்தியுடன் பூசனை நிகழ்ந்தது.
“மீள மீள இவ்வண்ணம் வெண்பால் சொரிமஞ் சன
udstil. ஆள வுடையார் தம்முடைய அன்பர் அன்பின் பாலுள் ளதாய் மூள அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ கோள மதனில் உள்நிறைந்த குறித்த பூசை கொள்
*$'
கின்றர்
இதனைக் கண்ணுற்ற ஒருவன் பசுவுடைய அந்தணுள ருக்குப் பிள்ளையார் திருவிளையாடலை எடுத்துக் கூறினன், இதனைக் கேட்ட ஆவுடையார் அனைவரும் ஒன்று கூடி எச் சதத்தனை அழைத்தனர். அவனது முன்னிலையிற் சீறிச் சினந் தனர். அவனுடைய மகன் தமக்குச் செய்யுந் தீங்கினை எடுத்துக் கூறிப் பிள்ளையைப்பார் பிள்ளையை, பிராமணப் பிள்ளை எங்கள் ஆவுதிக்குச் சுரக்கும் பாலையெல்லாங் கறந்து அவமாக மண்ணிநதி மணலிற் சொரிகின்ருன் பிள்ளை. இது அறமாமோ? என்றுஉரப்பிக்கூறினர். ஐயோ!பாவம் இதனைக்
முன்பக்கத் தொடர்ச்சி மீண்டும் சைவத்திலேயே முத்தியடைந்த நம் முதுபெரும் தலைவர் திருநாவுக்கரசுநாயனர் தாம் அரு விரிப் போந்த் தேவாரத் திருப்பதிகங்களில் மிகவும் தெளிவாகக் கூறியுள் ளார். அதைப் பாடி தமிழ்கூறும் நல்லுலக்ப் பயனடைவ தாகட்டும்.
'தென்னுடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

Page 15
342 ஆத்மஜோதி
கேட்ட எச்சதத்தன் அச்சத்தால் நடுங்கினன். “பெரியோர் களே! சிறுவன் மறச் செயலை இதுவரையும் நான் அறிந்தி லேன். இதற்கு முன்பு நிகழ்ந்த பிழையைப் பொறுத்தரு ளுங்கள். இனிமேல் இந்தப் பிழை நிகழாதவாறு பார்த்துக் கொள்கிறேன்; எனக் கூறித் தலைவணங்கி அஞ் சலி செய்து நின்றன். இதனைக் கேட்ட அந்தணுளர் தாங் கொண்ட சீற்றந்தணிந்து "சரி, ஆகட்டும், பார்ப்போம்; என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றனர். அன்று இரவு கழிந்த பின்பு எச்சதத்தன் தனது மகனுக்கு எதுவும் அறி வியாது காலையில் ஆணினம் மேய்க்கும் இடத்துக்கு மறைந்து சென்றன். சென்ற அவன் ஒரு குராமரத்து மறைவாகஏறி இருந்து மகன் செயலைக் கரிசனையாகப் பார்த்தான். விசார சருமன் மண்ணிநதி ஆடி அனுட்டானம் முடித்தான். மலர் கொய்தான். பால் கறந்து திருமுழுக்காட்டப் புகுந்தான். இதனைக்கண்ட எச்சதத்தன் கண்கள் கோபத்தாற் சிவந் தன. விரைந்து குராவை விட்டு இறங்கினன். ஒரு தடியைக் கரத்தேந்தியபடி மகன் அண்டை வந்து அவனுக்கு முதுகில் கைசலிக்க அடித்தான். அவனை வைதான். சிவ பூசையில் மனத்தைப் பறிகொடுத்த விசாரசருமருக்கு இவை ஒன்றும் உறைக்கவில்லை. இதனைக்கண்ட எச்சதத்தனுக்கு வன் சின முண்டாயிற்று. அதனுற் திருமஞ்சனத்துக்கு வைத்திருந்த பாற்குடத்தைக் காலாற் தட்டிச் சரித்துச் சிந்தினுன். இத னைக் கண்ணுற்ற விசார சருமருக்குக் கோபங் கோபமாக வந்தது. அவர் தம்மை மறந்து வீராவேசத்தால் பக்கத்தே கிடந்த ஒரு கோலை எடுத்தார். திருவருளால் அந்தக் கோல் மழுவாயுதமாகமாறிற்று. அதனுற்தந்தைஎச்சதத் தனதுகால் கள் அறஎறிந்தார். அலறி எச்சதத்தன் வீழ்ந்தான். சிவபக்தி நிரம்பிய சிறுவனரோ பழையபடிதொடர்ந்து தமது சிவார்ச் சனையை நடத்தினர். என்னே! இவரின் சிவபத்தி இருந்த வாறு? இதனைக் கண்ணுற்ற சிவபிரான் உமாதேவியாரோடு வெள்ளை எருதேறி அந்தணச் சிறுவர் முன்பு வந்து தோற் றினர். இதுகண்டு பத் தி மிகு ந் த பாலகர் மெய்மயிர் சிலிர்த்து ஆனந்தக்கண்ணிர் சொரிந்து அவரது திருப்பாதங் களில் வீழ்ந்து இறைஞ்சினர். இறையவன் அந்தத் திருக் குமாரரைத்தூக்கி நிறுத்தித் தமது திருச்சடாபாரத்து அணிந் துள்ள திருக்கொன்றை மாலையை எடுத்துச் சூட்டினர். அகமகிழ்வுடன் அணைத்தார். உச்சிமோந்து உவப்புற்ருர், பிள்ளையே! இனிநாம் உண்ட கலமும், உடுத்த உடுப்பும் சூடியமாலையும், மலர்களும் எல்லாம் உமக்கே உரியன .

ஆத்மஜோதி 343
சண்டீசன் என்னும் பதத்தை உமது தலையாய பத்தியைக் கண்டு உவப்புடன்தந்தோம். உமக்கு இனி நாமே தந்தையும் ஆவோம்’ எ ன் று திருவாய் மலர்ந்தருளினர். இதனைக் கேட்டுமண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் ஆனந்தமிகு தியாற் பேராரவாரஞ் செய்தனர். எச்சதத்தனுஞ் சிவ லோகத்தை அடைந்து பேரானந்தப் பெருவாழ்வு பெற் றன். ‘அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிபனுக்கி அனைத்துநாம் உண்டகலமும், உடுப்பனவும் சூடுவனவும் உமக்காகச், சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங்கு அவர் பொற்தடமுடிக்குத், துண்ட மதிசேர்சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினர்."
இந்தச் சுண்டீசரே திருக்கோயில் தரிசனஞ் செய்வோ ருக்கும் சிவபூசை புரிவோருக்கும் சிவனருளைக் கொடுக்கும் அதிகாரம் உடையவராவர். இந்தச் சண்டேசுரரை வழிபடா இடத்து ஆலய தரிசனத்தாலும், சிவபூசையாலும் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. ஆதலால் திருக்கோயில் பூசை தரிசன இறுதியில், சிவபூசை முடிவில், சண்டேசுரர் திரு முன்னிலைக்கு நாமெலாஞ் சென்று, ஆலய வழிபாட்டுப் பல னைப், பூசைப்பேற்றை அருளுமாறு மும்முறை கைகொட்டி வேண்டி இகபரத்து இன்புறுவோமாக.
சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலம் கொண்டிடுவர் ம்ற்றையர் கொள்ளார்.'
-
ܒ
듣
இன்பம்
கொடுத்தேனே என்னைக் கொடுத்தவுடன் இன்பம் மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே-அடுத்தேனே பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்ம வல்லல் இற்றேனே ஏழை அடியேன். -
- தாயுமானவர்.
அறநெறி அடைந்து விட்டாய், பகைமையை ஒழித்து விட்டாய், இன்பத்தைக் கண்டு விட்டாய்.
- வேதம்:

Page 16
344 ஆத்மஜோதி யூனி காளிகாமடு கற்பக விஞயகர் ஊஞ்சல்
(மட்டக்களப்பு புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
* அவர்கள் இயற்றியது)
கொச்சகக் கலிப்பா
1 உத்தமமாம் பக்தி விசுவாசம் காலாகச்
சித்தமெனும் விட்டம் சேர்த்தியணு தினமும் புத்திகயிருயுன் மெய்யடியார் நன்கமைக்கும் சுத்தமன மாம்பலகை மீது மகிழ்ந் தேறிச் சித்தி புத்தி தந்தருளுந் தேவே உலகுக்கோர் கர்த்தனே சீர்காளி காமடுவிற் கற்பகமே - வித்தகஞ்சேர் வல்லபையோ டாடுக பொன்னூஞ்சல் விக்கினங்கள் தீர்த்தருளி யாடுக பொன்னூஞ்சல்.
(1. பக்தியும் விசுவாசமும் இரு கால்கள் 2. சித்தம்
விட்டம் 3. புத்தி - கயிறு 4. மனம் - பலகை. இது நித்
திய வூஞ்சல்,
2 தந்தையார் கோயில் தருமகர்த்தா வானமுதல்
மைந்தனே மூஷிகத்தை வாகனமாக் கொண்டெமது சிந்தைசேர் தீயபுத்தி யெல்லாம் சிதைந் தொழிய வந்தாயெம் வாழ்வில் வருமிடர்கள் தீர்ப்போனே எந்தையே சாதிமத மெல்லாங் கடந்து வரும் தந்தாய் திருக் காளி காமடுவிற் சார்கதியே கொந்தார் குளிர் நிழற்கீழாடுக பொன்னூஞ்சல் குறைநீக்கி யாண்டெம்மை யாடுக பொன்னுாஞ்சல்.
3 மூவுலகுந் தோன்றுதற்கு முன்னுகு (1)மோரெழுத்தே பூவுலக வின்பப் பொருளருளும் (2)பொன்னெழுத்தே தேவுலகுக் கப்பாற் சிறப்பருளும் (3)ஐந்தெழுத்தே சிவசிவ ஐக்கியமாச் சேர்ந்தோர் சொல் (4)மூவெழுத்தே பாவலர்தம் நாவிலின்பப் பாட்டருளும் பண்ணவனே காவுலவு மலர் காளி காமடுவிற் கண்ணுதலே பூவலருந் தாரசைய ஆடுக பொன்னூஞ்சல் பொலிகருணைத் தேன் சொரித்தே ஆடுக பொன்னூஞ்சல்,
1 ஓம் 2 நமசிவாய 3 சிவாயநம 4 சிவயவசி
 
 
 

ஆத்மஜோதி 345
4 இனத்துடனே மந்திகளும் ஏறியிருந் தின்பமுடன்
தினப்பூசை கண்டுதிருப் பிரசாதமுண்டுலவும் வனப்பமையும் ஆல்வேம்பு மாவரசு மகிழ் மருதம் மனக்கினிய நிழல் செய்ய மந்தமாருதம் வீசப் புனற்கினிய நீரோடை புறஞ்சூழச் செந்தமிழின் இனிப்பொலிசேர் எழிற்காளி காமடுவில் எம்பெருமான் தினைப்பொழுதும் நீங்கா மே யாடுக பொன்னூஞ்சல் செல்வமெலாம் எமக்கருளி யாடுக பொன்னூஞ்சல்
5 உருப்பொலிந்த தம்பிகரம் ஒருகுலம் தான் கொடுத்தே தெருக்கரையில் நின்றெவர்க்கும் செய்கருணையென நிறுத்
தித் தருக்ககன்ற மனத்துடனே தாழ்ந்து நிற்பார்க்கவர் வேண் டும் பொருப்பேறும் கலைப்பேறும் புண்ணியஞ்செய் பெரும்
பேறும் அருட்பேறும் உவந்தளிக்கும் அறிவுருவே வளர்செந்நெல் திருப்பொலிசூழ் வயற்காளி காமடுவில் எழுந்தருளும் மருப்பேந்து மலர்க் கரத்தாய் ஆடுக பொன்னூஞ்சல் மன்னவர் செங்கோல் புரந்தே ஆடுக பொன்னுTஞ்சல்
6 தேடுகல்வி ஞானம் திடசித்தம் தேகசுகம்
பீடுபெறு நல்லோர் பெருநட்பும் செல்வாக்கும் நாடியுனதடிக்கே பக்திசெயும் நன்மனமும் கூடியுன்னுேடொன்ருகும் கூட்டுறவும் ஈந்தருளி வாடியலையாத மனநிறைவும் தந்தருளி நீடூழி வாழ்காளி காமடுவில் நித்தியனே நாடு வளம்பெறவே யாடுக பொன்னூஞ்சல் நன் மாதவர்க்கருளி யாடுக பொன்னூஞ்சல்.
7 அன்பும் பணிவும் அடக்க முடனருளி
மன்புவியில் தன்னுயிர்போல் மன்னுயிரும் யாம்பேணும் இன்ப நிலையும் எமக்கருளி எம்பெருமான் உன்புகழெம் பாட்டில் உரைக்கும் திறனருளி என்புங் கனியத் திருக்காட்சி யீந்தருளும் தென்பொலி செந்தமிழ்க்காளி காமடுவில் திருமூர்த்தி பொன்பொலி செம்மேனியனே ஆடுக பொன்னூஞ்சல் புலவோர்க் கருள்புரிந்தே யாடுக பொன்னூஞ்சல்,

Page 17
346 ஆத்மஜோதி
8 சக்தி பலவருளி வீரமொடு கருணை
வைத்தெம் மனத்திற் சுதந்திர நல்வாழ்வருளி நித்தம் புரந்தின்ப துன்ப நிலைகளிலே சித்தசமாதானம் சேர்த்துச் சிவகுமரா அத்தனையும் நின்னடிக்கே அர்ப்பணம் செய் புத்தி தந்து புத்தொளிசேர் நற்காளி காமடுவிற் புண்ணியனே சித்தாந்த மெய்ப்பொருளே யாடுக பொன்னூஞ்சல் செய்பிழைகள் தீர்த் தெம்மை யாடுக பொன்னூஞ்சல்,
9 சங்கத் தமிழும் சகல மொழிக்கலையும்
தங்குந் திருமுகத்து ஞானத்தனி வடிவே எங்கும் நிறைந்தொளிரும் வேதாந்தப் பேரொளியே எங்கள் வினை தீர்க்கும் மருந்தே மதந்தோறும் பொங்குங் கருணை பொழியுந் திருமுகமா தங்கமே தண்காளி காமடுவில் தற்பரனே மங்கள மெங்கும் பொலிய ஆடுக பொன்னூஞ்சல் வைய மெலாம் வாழ்வுபெற ஆடுக பொன்னூஞ்சல்.
Oski & Far to
கற்பக வினயகர்க்குச் செய மங்களம் - பூரீ காளிகா நாயகர்க்குச் சுபமங்களம் வற்ரு அருள் மழைக்குச் செயமங்களம் - சக்தி வல்லபை சமேதருக்குச் சுபமங்களம் சிற்குண சொரூபருக்குச் செயமங்களம் - நாளும் சித்திபுத்தி சேர்ப்பவர்க்குச் சுபமங்களம் வித்தை வடிவானவர்க்குச் செயமங்களம் - வரும் விக்கினங்கள் தீர்ப்பவர்க்குச் சுபமங்களம் சொற்பதம் கடந்தவர்க்குச் செயமங்களம் - பரஞ் சோதி வடிவானவர்க்குச் சுபமங்களம் அற்புத பரம்பொருட்குச் செயமங்களம் - நித்தி யானந்த ரூபருக்குச் சுபமங்களம் குற்றம் பொறுப்பவர்க்குச் செயமங்களம் - எங்கள் குலதெய்வ மாணவர்க்குச் சுபமங்களம் உற்சவ கணேசருக்குச் செயமங்களம் - பூரீ ஓங்கார ரூபருக்குச் சுபமங்களம்,
 

ஆத்மஜோதி 347
- பண்டிதர். சி. தம் பிராசா - مجھ آج
چرچ
ஆண்டவனிடம் வேண்டுவது யாது?
வேண்டுவார் வேண்டுவனவற்றை ஈபவன் ஆண்டவன். மனிதனே தான் நினைத்தவற்றை யெல்லாம் அவனிடம் வேண்டுகின்றன். ஒருவனது வேண்டுதல் அவனது தேவை களைப் பொறுத்துப் பல்கிப் பெருகிவிடுகின்றது. கல்வி நன்கு கைவரவேண்டும். அது பெற்ருல், உயர் மதிப்புள்ள உத்தி யோகம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்ந்த சம்பளம் பெற்ருல் மட்டும் போதாது. கைலஞ்சமும் வேறு வேண்டிக் கிடக்கிறது. ) ()
நிலமில்லாதவனுக்கு நிலம் வேண்டும். அது பெற்ருல், அழகானதொரு வீடுவேண்டும். வீடு மட்டுமிருந்துபோதுமா? வீட்டில் சுகித்திருக்க மனைவி வேண்டும். அடுத்து குழந்தை கள் வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாகப் பணம் வேண் டும். தனிமனிதனது வேண்டுதல் இவ்வாறே நீண்டு கொண்டு போகுமானல், மனித இனத்தைப் பொறுத்த அளவில் வேண் டுதல் பட்டியலின் எண்ணிக்கையைச் சொல்லவும் முடியுமா? மனிதர்களின் ஆசைகளை வரையறுத்துச் சொல்ல முடிந்தால் அவர்களின் தேவைகளையும்வேண்டுதல்களையும்வரையறுத்துச் சொல்ல முடியும். சமுத்திரத்தைப் போலப் பரந்தது மணி தனின் ஆசை. சமுத்திரத்திலடிக்கும் அலைகளைப் போல அள விறந்தது அவனது வேண்டுதல்கள்.
வேண்டுதல் நிறைவேறினல் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி யின் பயனப் இன்னும் அடுத்த அடுத்த வேண்டுதல்களுக்குத் தூண்டிவிடுகிறது. வேண்டுவது கிடைக்காவிட்டால் துன்பம். ஏமாற்றம். இது தொடர்ந்து வந்தால் சலிப்புத்தட்டிவிடு கிறது. வாழ்க்கை வரண்டு கசந்தே போய்விடுகிறது. வேண் டுவது கைகூடினலும், கைகூடாவிட்டாலும் நாமடைவ தென்ன? நிம்மதியற்ற வாழ்வு தானே! நித்திய சுகத்தை மனச்சமாதானத்தை நமது வேண்டுதல்கள் நமக்குப் பெற் றுத் தருகின்றனவா? சந்தோஷமும் சஞ்சலமும் மாறிமாறி

Page 18
348 ஆத்மஜோதி
அலையடித்து மனமாகிய கடலில் ஒரே கொந்தளிப்பையே காண்கிருேம்.
ஆகையினல் நாம் வேண்டுவனவற்றுக்கு ஒரு முடிவில் லையா? அவைகளைவரையறுத்துக்கொள்ளவேண்டாமா? நாம் வேண்டிப் பெறுபவைநம்மைமேலும்மேலும் ஆட்டி அலைக்கா மற் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அவைகள் ஆசையை வளர்ப்பதற்குப் பதில் ஆத்மீக சிந்தனையை வளர்த்து சாந்தி யும் சமாதானமும் பெற்றுத்தர வேண்டாமா? நமது வேண் டுதலினல் நாம் நித்திய இன்பத்தைச் சுவீகரித்துக் கொள்ள வேண்டாமா? இவை நாம் சிந்திக்க வேண்டியவை.
ஆம்! நமது சிந்தனைக்கு அருட் செல்வர்கள் செய்யும் உதவி என்ன? அவர்களுடைய அனுபவத்திலிருந்து நா ம் காண்பதென்ன? வள்ளுவப் பெருந்தகை சொல்கிருர்:-
*வேண்டுதல் வேண்டாமை இலான டி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல' என்று.
ஆண்டவன் விருப்பு வெறுப்பு இல்லாதவர். நாமோ விருப்பு வெறுப்பை நிறைய உடையவர்கள். நம்மை இறைவனிலி ருந்து பிரிப்பதும்-அதிதூரமாக்குவதும் இந்த விருப்பு வெறுப் புகளே-பற்றுக்களே. 'பாம்பறியும் பாம்பினது கால்' என் பார்களே, அதுபோலவும், 'கற்ருரைக் கற்ருரே காமுறு வர்' என்பது போலவும் விருப்பு வெறுப்பற்ற ஒருவரை, விருப்பு வெறுப்பற்ற ஒருவரால்தான் அடைய முடியும். அப் படிப்பட்டவர்களுக்கே இடும்பை-சஞ்சலம்-ஒருபோதும் ஏற் LU L-P7ģil.
மனித சமூகத்தின் நாளாந்த வேண்டுதல்கள் ஆண்டவ னைப் பற்றி நிற்பதற்குப்பதில், உலகத்தையே பற்றி நிற்கின் றன. இதனுல் பற்றுக்கள் தடித்து வளர்ந்து கொண்டே போகின்றன. குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிய நிலைமை இது. இந்த நிலமைக்குக் காரணம் மனிதசமூகத்தின் வேண் டுதலே.
சிவநேசச் செல்வர்களாகிய மெய்யடியார்களிடம் இதற்கு மாறுபட்ட ஒரு நிலையையே நாம் காண்கிருேம். அவர்களும் நம்மைப்போல் ஆண்டவனிடம்வேண்டுதல் விண்
 

ணப்பங்களைச்சமர்ப்பிக்கின்றர்கள்தான் ஆனல், எதைவேண்
டுகின்றர்கள்? இந்த இடத்திற் தான் பெரும் வித்தியாசமுண்டு. நாம் பொன்னைப் பொருளை வேண்டுகின்ருேம். ஆட்சி அதி காரங்களை விரும்புகின்(ேrம். பட்டம் பதவிகளைக் கேட்கின் ருேம். ஆனல், அடியார்களோ இவை ஒன்றையுமே எதிர் பார்க்கவில்லை. துச்சமாகக்கூட இவைகளை மதித்தார்கள். உள்ளத்திலே இயல்பாக எழுகின்ற அன்பின் பெருக்கினல்
ஆண்டவனைக் கும்பிட்டார்கள். 'கூடும் அன்பினிற் கும்பிட் டார்கள்' அவ்வளவேதான். இதற்குப் பிரதிபலனக வேறு எதையும் அவர்கள் வேண்டிஞர்களில்லை. வீடுபேற்றைக் கூடக் கேட்டார்களில்லை 'வீடும் வேண்டாவிறலின் விளங்கி
னர்' இவர்கள் அன்பின் தூய்மைதான் என்னே!
சிவனிடத்தன்பைவிடச் சிவனடியார்க்குப் பெருந்தனம்
வேறெதுவுமில்ல. அவர்கள் பெரிய இடத்தைப்பற்றிநின்
றர்கள் பற்றற்ருன் பற்றினைப்பற்றி நின்ருர்கள். ஆதலின், கேடும் ஆக்கமும் கிஞ்சித்தும் இல்லாதவர்களாயினர். மண் ஒட்டையும் பொன்னேட்டையும் ஒன்ருகவே மதிக்கும் உள உரன் அவர்களிடங் காணப்பட்டது. அப்பர் சுவாமிகள் உளவாரத் தொண்டு செய்த ஒருசந்தர்ப்பத்தில், அங்கே காணப்பட்ட மண்கட்டி, பொன்கட்டிகளையெல்லாம் புல் லோடு புல்லாய் ஒன்ருகச் சேர்த்துக் கொண்டுபோய் வீசி எறிந்தார் என்பது நாமறிந்தது. இதுவே 'ஒடும் செம் பொனும் ஒக்கவேநோக்குகின்ற* பேராண்மை.
*கேடும் ஆக்கமும் கெட்டதிருவினுர் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும் பிடலே யன்றி வீடும் வேண்டாவிறலின் விளங்கிஞர்'
என்று சேக்கிழார் பெருமான் திருக்கூட்டச் சிறப்புப் பாடியி
ருப்பதிலிருந்து அடியார்களுடைய உளப்பண்பும், அவர்கள் || III
வேண்டுதலும் எத்தகையது என்பது புலனகும்.
அன்பை விட நாம் மற்றெதையும் வேண்டுவோமாயின் I அது நமது ஆத்ம ஈடேற்றத்துக்கு பயன்படாததாகவே
அமையும். ஆண்டவன் முற்றறிவினனுதலின் நமக்கு வேண்டு வன யாவை என்று அவனறிவான். அவனிடத் தன்புமட்டும்
நமக்கிருக்குமானல் அவ்வக் காலங்களில் நமக்கு வேண்டி

Page 19
350 ஆத்மஜோதி
யவற்றை அவன் அருள் செய்வான். அன்பரோடு அகலாது என்றும் உடன் உறைகின்ருன்.
**ஆனுவறிவாய் அகலான் அடியவர்க்கு வானுடர் காணுத மன்'
A.
என்பது திருவருட்பயன். வானுடர் எனப்பட்ட தேவர் கள் ஆண்டவனை அறியாத காரணம் அவனடிக்கன்பு பூணு மையே என்றும், அடியவர்களுக்கு எளிதில் காட்சி கொடுப் பதும் அவர்களோடு அகலாதுறைவதும் அன்பையே வேண்டி அன்பு செய்து வாழ்தல் ஒன்றேகாரணம் என்றும் இதிலி ருந்து அறிய முடிகிறது.
இன்னும், சங்கப்புலவர் பரம்பரையிலே வந்த தங்கப்புல வரான கடுவன் இளவெயினனர், முருகப்பெருமானிடம் வேண்டுதல் செய்யுஞ் சந்தர்ப்பத்தில் எவற்றை இரந்து கேட்கிருரர்? பரிபாடல் கூறுகிறது கேளுங்கள்:
* யாமிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதாரோயே’
என்பது அவரது வேண்டுதல், 'கடம்ப மலர் மாலையை அணிந்த முருகப் பெருமானே, நின்னை யாம் இரந்து வேண்டு வன அனுபவிக்கும் பொருளும், அதற்குக் காரணமான
பான்னும் அவ்விரண்டாலும் நுகரப்படும் போகமுமல்ல. எமக்கு வீடு பயக்கும் நின்அருளும், அதனைப்பெற நின்னிடத் தேசெய்யும் அன்பும், அவ்விரண்டாலும் வரும் அறமுமாகிய இம்மூன்றையுமே வேண்டுகின்ருேம்' அருள் புரிவாயாக என்று வேண்டினர்.
இத்தகைய அனுபூதிச் செல்வர்களது வேண்டுதலும் அதன்பேருக அவர்கள் பெற்றிருந்த புனிதவாழ்வும் நம் சிந் தனையைத் தூண்டுமானல், நாம்ஆண்டவனிடம் வேண்டுவது யாது? அரனடிக்கன்பு செய்வதைத் தவிர மற்றெவையும் நாம் வேண்டத்தக்கவையல்ல. அவை நம் ஆசைக்கும் அறி யாமைக்கும் அளவுகோலாக முடியுமேயன்றி "ஆத்மஜோதி” நம்முட் பிரகாசிக்க வழிவகுக்கா என்பது சத்தியம். இந்த
 

ஆத்மஜோதி 351
கதை கேட்ட கள்வன் கண்ணனைக் கண்டான்
- ஸ்வாமி நிர்மலானந்தா -
பகவான் கண்ணனும் ஒரு கள்வன் தானே! அன்று பிருந் தாவன கோபியர்களின் உள்ளும், புறமும் களவாடியவன் தானே! அவன் தனது லீலா விநோதத்தைக் கேட்பவர்களின் உள்ளத்தைக்கவரத்தானே செய்கிருன். அன்றுகம்ஸனின் இத யத்திலும், அக்ரூரர் இதயத்திலும் அமர்ந்த அந்தக்கண்ணன்
தானே. இன்றும் அவன் கதை எங்கு நடக்கிறதோ அங்கு
காட்சி தந்து அன்பர்களே ஆட்கொள்கிருன். அவன் கதை யைக் கேட்ட கள்வனுக்கு காட்சி தந்தருளியதை விளக்கு வதே இக் கட்டுரை.
வட நாட்டிலே மகா பக்தன் மாதவதாஸ் என்ற ஓர் ஹரிகதா பிரசங்கி வாழ்ந்து வந்தார். அன்னர் ஹரிகதை செய்யும்போது கேட்பவர்களுக்கு கதைபோல் தோன்றச் செய்யாது. கண்முன் நடக்கும் காட்சி போல பக்தி பர வசத்துடன் விளக்குவார். பூரீமத் பாகவதம் சொல்லுவ தென்றல் மகாப்ரபுசுகப்பிரம்மமாகிவிடுவார். இவருரையைக் கேட்பவர்கள் அடுத்து என்ன நிகழ்கிறது என்றறியாது
முன்பக்கத் தொடர்ச்சி
உண்மையையே பொய்யடிமை தீர்ந்த மெய்யடியார்கள்
சரித்திரத்திலிருந்து நாமறிகிருேம்.
நம் ஆத்மா ஒன்று மட்டுமே மெய். அதைத் தாங்கி நிற்கும் மெய் எனப்பட்ட உடல் பொய் என்பது அனைவர்க் கும் வெட்டை வைளிச்சம். எனவே, நாம் மெய்யைப்பற்றி நிற்காது பொய்யைப்பற்றி நிற்கலாமா? மெய்யான ஆத்மா வுக்காக வேண்டாது, பொய்யான உடலுக்காக வேண்ட லாமா? மெய்யும் பொய்யாகிப் போகின்ற போதத்திலே மலர்ந்த முகத்துடன் மரணத்தை வரவழைக்கவேண்டாமா? இவற்றுக்கெல்லாம் ஒரேவழி, ஆண்டவன் திருவடிக்கன்பு செய்து அவன் திருவருள் ஒன்றைமட்டுமே வேண்டி நிற்பதா (g5 LD .

Page 20
352 ஆத மஜோதி
தம்மை மறந்துவிடுவார்கள். கதை முடிந்து வீட்டுக்குத்திரும் பும்போது புண்ணிய சரித்திரத்தை கேட்ட செவியில் உலக விஷயங்களைப் பற்றிய வாக்கியங்கள் புகுந்து விடாத வாறு காதை பொத்திக் கொண்டும், அவன் ரூபத்தை மான வீகமாகக் கண்ட கண்ணுல் புறபொருளைக் காணக்கூடாது என்று கண்களை மூடிச்செல்வோரும் உண்டு.
ஒரு நாள் தான் வாழும் நகரத்தின் ஆலயத்தில் பக்த மாதவதாஸ் பாகவத கதாப்பிரசங்கம் நடத்தி வருகிருர், அதே ஊரில் சதா திருடுவதையே ஜீவனமாகக் கொண்ட ஒரு வன் இருந்தான். அவனை அந்த நகரத்தில் உள்ளோர் எல் லோரும் அறிவார்கள். அத்திருடன் ஒருநாள் வேறு எங்கும் திருட்டு கிடைக்காத காரணத்தால் பாகவதம் நடக்கும் கூட் டத்தில் யாரிடம் திருடலாம் என்று கவனம் செலுத்தியவாறு மூலையில் நின்று கொண்டிருந்தான். அவன் கவனத்தை மாதவதாஸ் அணிந்து கொண்டிருந்த காதணியிலும், அவர் முன்பாக கிடக்கும் பண்டங்களிலும் செலுத்தினன். கதை எப்போது முடியப்போகிறது என்று எதிர் பார்த்துக் கொண் டிருந்தான். அன்றைய தினத்துக் கதையில் பகவான் கண்ண னும், பலராமனும் பசுக்களை மேய்க்கப் போகும் புனித தின மாகும்.
அன்று கண்ணனின் அன்னை யசோதா தன் செல்வக்குமா ரர்களுக்கு வைர, வைடூரிய பொன்நகைகளையும், பட்டாடை களையும் அணிவித்து அனுப்பும் கட்டத்தை மாதவதாஸ் வர்ணிக்கிருர், கண்ணன் பலராமருடைய நீலமேக ஸ்யாமள கோமள ரூபத்தையும் வர்ணிக்கிருர். அதே சமயம் மூலையில் நின்று கொண்டு கதை கேட்கும் கள்வனின் கண்முன் அந்த மனமோஹன் ரூபங்களும் அவர்களை அலங்கரித்துள்ள நகை களும் பிரகாசிக்கின்றன. ஆனல் அது கதையாக அவனுக்குத் தோன்றவில்லை. அவன் மனம் தினந்தோறும் அற்பபொருள்க ளைத்திருடிபயப்படுகிருேமே, அது எதற்கு? இந்தவயிற்றுக்குத் தானே! இந்த இரு பாலர்களின் அணிகளையும் திருடிக் கொண்டு வந்துவிட்டால் நாம் நம் வாழ் நாள் பூராவும் ஏன் நம் பரம்பரையே ஏழெழு தலை முறைக்கும் கோடீஸ்வரர்க ளாக வாழலாமே என்று மனக்கோட்டை கட்டிநின்ருன்.
அன்றைய கதை முடித்து பக்த மாதவதாஸ் எழுகிருர், ஜனங்கள் தாங்கள், தாங்கள் கொண்டுவந்த சிறு சிறு வெகு மதிகளை பாதத்தில் சமர்ப்பிக்கிறர்கள். கள்வன் தன் கவனத்
 
 
 
 
 
 
 
 
 
 
 

A,
ஆத்மஜோதி 353
தை மறந்து கண்ணனின் மோஹன ரூபத்தில் மோஹித்து நிற்கிருன். மாதவதாஸ் பொருள்களை எடுத்துக் கொண்டு வீடுநோக்கி நடக்கிருர், அவர் பின்னலேயே அத்திருடனும் போகிருன் மாதவதாஸை கள்வன் திருத்தி இது பரியந்தம் தாங்கள் கூறிய பிரசங்கக்கதை உண்மைதான அவர்களை எங்கு, எப்படிக் கண்டு பிடிப்பது? இதன் பூரா விவரத்தை யும் எனக்கு அறிவிக்க வேண்டும் என் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு பெரிய திருட்டு செய்ய வேண்டும். மாதவதா லிக்கு இந்த திருடனை முன்பே பெரியும். இந்த தர்ம சங்கட மான சமயத்தில் பகவான் கதை பொய் என்பதா? மெய் யென்பதா? என்ற சஞ்சலம் அவருக்கு. இவனே திருடன் மெய் என்று சொல்லி தப்பி விட்டால் அவன் இடத்தை காண்பி என்பானே. பொய் என்று சொன்னுல் கண்ணனை இகழ்ந்ததாகும். மேலும்கையிலுள்ள பொருளுக்கும், உயிருக் கும் ஆபத்து வரலாம் என்று மனம் திடுக்கிட்டு தடுமாறி நிற் கிருரர். இது நடந்தது பொய் அல்ல என்று தப்பிக்கிருர், ஆனல் திருடன் விடுபவஞ்? நர்ன் இப்போதே அவர்களிடம் போகப் போகிறேன். அதற்கு பிருந்தாவனத்திற்குப் போ கும்வழியும் அந்தக் குழந்தைகள் பசுக்களை ஒட்டிக் கொண்டு வரும் நேரமும், அவர்களுக்கு எந்தப் பொருளைக் கொடுத்து மயக்கலாம் என்பதையும் தயவுசெய்து சொல்லிவிட்டு நீங்
கள் பயமின்றி போகலாம் என்றன். மாதவதாஸ்"க்கு
மேலும் அதிக துயரம் உண்டாகிறது. திருடனே உண்மை என்று நம்புகிருன். இவன் பிருந்தாவனம் போக எத்தனம் செய்து விட்டான் என்ருல் நமக்கு ஆபத்துதானே என்று ஐயப்படுகிருர், திருடனிடம் மாதவதாஸ் பிருந்தாவனத் திற்கு பாதை யமுனை நதிக்கரை யோரமாக செல்கிறதென் றும் அந்த தெய்வீக பாலகர்கள் பசுக்கூட்டத்தை ஒட்டிக் கொண்டு யமுனை துறையில் கதம்பமரத்தடியில் முரளிகானம் செய்வார்கள் என்றும் அவர்களுக்கு வெண்ணை, கற்கண்டு என்ருல் வெகுபிரியம் என்று சொல்லி இதைக் கொடுத்தே தான் கோபியர்கள் அவனைக் கவர்ந்தார்கள் என்று கூறி விட்டு தப்பிச் செல்லுகிருர்,
பக்த மாதவதாஸ் தப்பிச் சென்ருலும், மனம் சமா தானமாகவில்லை. இதை திருடன் உண்மை என்று நம்பி இப் பொழுதே பிருந்தாவனம் செல்ல எத்தனம் செய்து அங்கு செல்வான். இவன் கைக் கொண்டு செல்லும் வெண்ணையை யும், கற்கண்டையும் அங்குள்ள பண்டாக்கள் பிடிங்கிக் கொண்டு விரட்டி அடிப்பார்கள். ஏன் ஐயா! பொய் சொன்

Page 21
354 ஆத்மஜோதி
னிர்கள் என்று நம்மை துன்புறுத்தி உயிரைப் போக்கி விடுவானல்லவா என்று எண்ணி துக்கப்பட்டு வீடு செல்கிருர், அன்று தூக்கமும் வரவில்லை. நாமும், நாளைக் காலையி லேயே இந்த ஊரைவிட்டு வேறுஊர் சென்று விடலாம் என்று அமைதிகொள்கிருர், அந்த மாயக் கோபாலனை யோகிகளும்,
ஞானிகளும், பக்தர்களும் நவவித பக்திமூலம் அடையப்பாடு ,
பட்டும் அறிந்தவர் ஒரு சிலரே! ஆனல் ஒருவித பக்தி சாதனை யும் செய்யாத திருடனின் மனக்கண் முன்னல் பக்தப்பிரியன் காட்சிதந்து கொண்டே இருக்கிருன். அன்று ஏழை சபரிக் கும் காட்சி தந்தவனல்லவோ அவன்!
ஆதிமூலமே என்றழைத்த யானைக்கும் காட்சி தரவில் லேயா? ஏன் . பாலகன் நாமதேவன் தந்த உணவை புசிக்க வில்லையா! ஆனல் இந்த பக்தர்கள் பாவம் வேறு. ஆனல் இத் திருடனின் பாவமோ திருட்டுக்காக வேண்டியே அந்த ரூபத்தை நினைக்கிருன், நம்பினேருக்கு நடராஜன் தானே! இவன் (இத்திருடன்) நம்பியதால் அவன் முன்னே நிற்காது எங்கு போவான். மாதவதாஸ்ைவிட்டு பிரிந்ததும் கள்வன் வீடு சென்ருன். தன் பெற்றேரிடத்தில் நான் இன்று பெரிய திருட்டுக்கு துப்பு தெரிந்து வந்திருக்கிறேன். அதற்கு இப் போதே பிருந்தாவனம் போகவேண்டும் என்று சொல்லி விட்டு வீட்டிலிருந்த வெண்ணையையும், கற்கண்டையும் தன் துணியில் கட்டிக் கொண்டான். பெற்றேர்கள் இது கதையில் நடந்தது நிஜமென்று எண்ணி விட்டாய் என்றனர். உடனே திருடன் என்னைப் பெற்றவர்களுக்கு என் புத்திதானே இருக்கும். மாதவதாஸ் பொய்யா சொல்லுவார் என்று வீட்டை விட்டு நகருகிருன். அவன் கண் முன்பாக பிருந் தாவனக் காட்சிகளும், பசுக் கூட்டங்களும் தென்படுகிறது. ஊரின் எல்லை தாண்டியதும் காடு, மேடு என்று பாராது நடந்து செல்கிருன். ஒரு பெரிய படுகுழியில் விழுந்து விடு கிரு:ன். ஆனல் அவன் விழுந்ததும் தான் யமுனைத்துறை யில்தான் அமர்ந்து இருப்பதாக எண்ணுகிருன். அவன் முன்பாக ஒரு குழியில் ஜலமும் இருக்கிறது. பெரிய மரம் ஒன்றும் இருக்கிறது. அது அவனுக்குக் கதம்ப மரமாகத் தோன்றுகிறது. இரவைத் துரங்கிக் கழிக்கலாம் என்று படுத்துக் கொள்ளுகிருன் சிறிது நேரத்தில் கண் விழிக் கிருன். ஆனல் அவனுக்குப் பொழுது புலர்ந்ததாகத்தெரி கிறது. இயற்கைக் காட்சிகளும், பட்சியினங்களின் கூவுத லும், பசுக் கூட்டங்களின் வருகையும் புழுதி எழுவதும்,
 

ஆத்மஜோதி 355
இரு பாலகர்கள் மாதவதாஸ் வர்ணித்த அலங்காரத்து டன் வருவதும் தெரிகிறது. அப் பாலகர்கள் இவன் அமர்ந்துள்ள இடத்தில் வந்து முரளிகானம் செய்கிருர் கள். பசுவினங்கள் கானத்திலே மூழ்கி நிற்கின்றன. கள் வனே மனதால் கண்ட காட்சிகள் கண்முன்னுல் நிற்பதை உணர்ந்து மாதவதாளை) வாழ்த்துகிருன்.
இனி நாம் வந்த வேலையைக் கவனிக்கலாம் என்று திருடன் இப் பாலகர்களை நீங்கள் முரளி கானத்தை நிறுத் துங்கள். நான் யார் என்று தெரியுமா? திருடன், உங் கள் இடமுள்ள அணிகளை எல்லாம் கழற்றிக் கீழே வையுங் கள். இல்லாவிட்டால் உங்களையே தூக்கிச் சென்று விடு வேன் என்கிருன் பக்தவத்சலர் கண்ணனே பயந்தவர் போல் நடித்து, பலராமனின் கையைப் பிடித்துக்கொண்டு எங்கள் அன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த அணிகளை அணி வித்துஅலங்கரித்துஅனுப்பியுள்ளார். நீஇதைக்கழற்றித்தரும் படி கேட்கிருயே. எங்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்தால் உனக்கு வேண்டிய மட்டும் எங்கள் அன்னையிடம் கேட்டு வாங்கித் தருகிருேம் என்ருர். இவர்களின் இன்மொழிகள் ஏதோஒரு ஆனந்தபரவசத்தை உண்டாக்குகிறது. மாதவதாஸ் இவர்களுக்கு வெண்ணையும், கற்கண்டும் பிரியம் என்று சொன்னது நினைவு வந்து தான் கொண்டு வந்த வெண் ணையையும், கற்கண்டையும் அவர்களுக்கு அளித்தான். கண்ணனே ஒடி வந்து எடுத்து வாயில் போட்டுக் கொள் கிருர், இவைகள் எனக்குப் பிரியம் என்று உனக்கு எப்ப டித் தெரியும் என்கிருர், பக்த மாதவதாஸ் தான் சொன் னர் என்கிருன் திருடன்.
மன மோஹனக் கண்ணன் திருடனிடத்தில் என் நகை களை எல்லாம் நீயே கழற்றிக் கொள் என மொழிகிருர், ஆனல் திருடனின் மனமோ மாறுகிறது. யோகியர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கண்ணன் ஏன் திருட னிடமும் அமர்ந்து விட மாட்டான். உங்களைக் கண்டு கொண்டாலே போதும் போல் தெரிகிறது. இவ்வளவு காலம் எவ்வளவோ திருடி விட்டேன். இன்ருே உங்கள் தரி சனத்தால் நான் கோடீஸ்வரனுக இருப்பது போல் தெரி கிறது. நான் தினமும் இதே நேரம் வந்து கண்டு போகி றேன். எனக்கு அந்த ஆனந்தமே போதும். ஆசையுடன் உங்களுக்கு அணிவித்த அணியைத் திருடிச் சென்ருல் உங் களது அன்னை சங்கடப்படுவாள் என்று சொல்லுகிருன்.

Page 22
356 ஆத்மஜோதி
திருடன் இனி அதிக நேரம் இருந்தால் ஜன நடமாட் டம் அதிகமாகி தன்னைப் பிடித்துக் கொண்டு விடுவார் கள் என்று எண்ணித் திரும்புகிருன், குழியை விட்டு மேலே வந்து நேராக மாதவதாஸரிடம் வருகிறன். இவைகள் எல்லாம் நடுநிசியில் நடந்த காட்சிகள். மாதவதாஸுக்கோ நித்திரையில்லாது திருடன் திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது என்ற விசாரம். திருடன் வந்து கதவைத் தட் டுகிருன் பன்முறை கதவைத் தட் டியபோது மாதவதாஸ் பயந்து மாடி ஏறி ஒளிந்து கொள்கிரு?ர். கதவு திறக்கா
ததால் உடைத்துத் தள்ளிக் கள் வணுல் கதவு திறக்கப்படு
கிறது இரவு பகல் என்றறியாத திருடனுக்கு இரவு, பகல் பொழுதாகத் தெரிகிறது. வீட்டிற்குள் மாதவதா ஸைக் காணுது மாடிக்குச் செல்லுகிருன், பயத்துடன் மறைந்திருந்த மாதவதாஸ் திருடனின் முகத்தில் தெய்வீ கப் பிரகாசம் வீசுவதை உணர்கிறார். இவன் கண்ணனைக் கண்டு வந்தான். நாம் அவன் புகழைச் சொல்லித்தானே ஜீவிதம் செய்தோம். இந்தத் திருடனைப் போன்று நமக்கு
சிரத்தை, பக்தி, விசுவாஸ்ம் இல்லையே என்று மன .
தில் எண்ணி திருடனின் காலில் விழுந்து நமஸ்கரிக்கின் முர். திருடனும் மாதவதாஸ் திருவடிகளில் விழுந்து நமஸ் கரித்து அவர் மூலம் முந்திய தினம் பிருந்தாவனத்தில் இரு மோஹன பாலகர்களின் தரிசனம் கண்டதும் அது மூலம் தனக்கு ஒரு பெரிய ஐஸ்வரியம் கிட்டியிருப்பது பற்றியும் சொன்னன். உயிருக்குப் பயந்து மறைந்திருந்த மாதவ தாஸ் அந்தர்மியான கண்ணன் புகழ்பாடி, ஆடி, பக் திப் பரவசமாகி நர்த்தனம் செய்கிருர், தானும் திருடன் கண்டகண்ணனை மனமாகிய பிருந்தாவனத்திலே காண்கி (07IT.
நாமும் பூரணமாக அவன்பால் மனதை நாட்டி சிரத்தை
யுடன் அவன் கதைகளைக் கேட்கவும், துதிக்கவும் செய்வோ மானுல், பிருந்தாவனமும், யமுனைத் துறையும், கதம்ப மரத்தடியும், கண்ணன் விளையாடிய மண்மேடும், அவன் திருவிதழிலிருந்து பொழியும் முரளி நாதத்தையும் கேட்க லாம், ராஸ் லீலையையும் காணலாம்.
'ஜெய் கிருஷ்ண பகவான்'
இப் பத்திரிகை ஆத்மஜோதி நிலையத்தாரால் ஆத்
மஜோதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது. 15-7-19
1964.
 
 

ALASALMMMMAqAMAASAA AAAAAALAAAAAAA AMAAA AAAA AAAAAAA
6 US ତ! குரு U600 HELD
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு மலக்கட்டு மலபந்தம், அஜீரணம், கை கால் அசதி, பிடிப்பு, பசியின்மை, வயிற்று லி, பித்த மயக்கம், பித்த குலே, புளியேப்பம், நெஞ்சுக் கடுப்பு முத லிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற் கும் மிகச் சிறந்த சூரணம்.
தபாற் செலவு உட்பட டின் ஒன்று 4 ரூபா 25 சதம்
− (பத்தியமில்ல) சம்பு இன்டஸ்ட்ரீஸ் - அரிசிப்பாளையம் சேலம் -9, S.I.) இலங்கையில் கிடைக்குமிடம்:-
ஆத்மஜோதி நிலயம் - நாவலப்பிட்டி. மலாயாவில் கிடைக்குமிடம்:
ழறி கணபதி & கம்பெனி, 66, பெல்பீல்டு ஸ்ட்டிரிட், ஈப்போ P.O. மலாயா,
LASLMeSL MeAeSeSMMMeSeASeSeMAeSeMAeeMASMMMASeMAASMMMASMMASMqSESMMAESMMSAMMMAeSEMS MAASMqASeSMSASSMAMSMSAAMMAMMAMMASMAAMAMA MMAMMMAeA S LMSSSMAMA S MAMAAS
ஆத்மஜோதி மலர்
நீங்கள் எதிர்பார்த்திருந்த 'ஆத்மஜோதி மலர்' வெளி வந்து விட்டது. மலரினுள்ளே நாற்பதுக்கு மேற்பட்ட பெரி யார்களின் கருத்துக்கள் உங்களுக்கு விருந்தாகின்றன. நூற் றைம்பது பக்கங்களிலும் ஆத்மீகக் கருத்துக்கள் சிறந்து ளங்குகின்றன. முகப்பில் ' என்னே எனக்கறிவித்த எங்கள் ருநாதன்' மூவர்ணப் படத்துடன் காட்சி தருகின்றர். வரை நினைப்பவர்க்கெல்லாம் பரகதி உண்டு. *
விலே தபாற் செலவுட்பட -ே50 ஆகும்
ஆத்மஜோதி நிலையம், WCNU நாவலசி பிட்டி - βή έβη η φή * 3 اتمیس بین tript) اہالی)
AeMeAeSeESeSAeAeBMSMe SMS AASeMeSAAeSMAeeMeMSASeMMeS AeSeMSekeMeSMAMMSASAeMMMeAeMAeAeMMAeeMMMATSMMMAeAeSMAeSMMeSMMeAeMSMAeSASASASAAeAe S S SSeeSS SSSSAASSASSMAeSeMAMAMMeMAeS MAeAeSeSMAeSMeS

Page 23
|&පණ්ණංed Nat the G - P. G.
நாவலர் உதித்த யாழ்ப்பள் லஞய்த் தோற்றினுர் - உயர்திரு கள் சாந்தமே உருவாயெடுத் சார்ந்த பக்தர் குழாம் சமரச ராஜ் இமய ஜோதி ஸ்வாமி சில ஞான சந்நியாசம் பெற்ருர், ! யார்களுள் தீர்க்கதரிசியாக விள மேற்கோள் காட்டிப் பேசும் வ6 பும் அற நெறியுந் தாங்கி நின் ஈர்த்ததோ அங்கங்கே பக்திப் பர தனையிற் திளைப்பார்கள். பூதவு தும் அவர்தம் புண்ணிம ஆத்மா தகைய பக்த சிகாமணி அவர் கோர் பாரிய நஷ்டமாகும். உய கவும், அமைதியாகவும் வாழ்ந் பேரையும், பெருமையையும் அறி புகழை விரும்பவோ = அன்றித் : படாத பண்பு வாய்ந்தவர், பெற்றவர்கள், அந்த அன்புத் தி யாது. உயர்திரு ஸ்வாமி அவர் அன்புத் தியானத்துடன் சாந்தி
ஓம் சாந்தி
 
 

as a Newspaper. M. L. 59/500
ਘ
ஸ்வாமி
சுப்பிரமணியானந்தா
(த. வி. சுப்பிரமணியம்)
ண நல்லூரிலே, திவ்ய ஜீவன காவ த ஸ்வாமி சுப்பிரமணியானந்தா அவர் தார். சன்மார்க்க நெறி நின்ருர், நிலை ஓங்கச் செய்தார். சற்குரு மக ானந்தா அவர்களின் நற் சீடனுய் திவ்ய ஜீவனந் தந்த ஈழத்துப் பெரி ங்கினுள்கள். ஆராய்ச்சிப் பேருரைகள் லுந ரல்லராயினும், அன்பும், பண் ரர்கள். எங்கெங்கே திவ்ய ஜீவனம் வசம் பொங்க-கண்ணிர் மல்க-பிரார்த் டல் விடை கொடாது மறுத்த நேரத் பணிவிடைமேல் பவனி வரும். இத் களின் பிரிவு ஆத்மீக அன்பர்களுக் பர்திரு ஸ்வாமி அவர்கள் அடக்கமா தவர். எனவே எல்லோரும் அவர் ந்திருக்க மாட்டார்கள். அவர், பே நம்மை விளம்பரப் படுத்தவோ முற் அன்னுரின் அன்பையும், ஆசியையும் *、 ருமுகத்தை என்றும் மறக்கவே முடி கள் உயர் சமாதி எய்தியது குறித்து
*
சாந்தி சாந்தி