கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.08.16

Page 1


Page 2
↔令令令令↔↔↔↔↔↔↔↔↔令↔↔令↔↔拿↔令↔↔令拿↔-↔↔↔會↔*
ஆத்ம ஜோதி
(ஒர் ஆத்மீக மாத வெளியிடு)
****************
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே
சுத்தானந்தர்
ஜோதி 16 2 குரோதி ஒரு ஆவணி மி 1 163-64 : சுடர் 10
பொருளடக்கம்
357 2 அன்பு -35.8 |
359 362. 5 பாகன்தம் 364 . , 9 புன்மை அகற்றயோ? 367 7 மட்டக்களப்பு புளியநகர் றி சித்தி விக்கினேஸ்வரர்
ஆலய தொன்ம்ையும் அதன் மகத்துவமும் 368 உவம்ை வழியினிலே உண்மை காண்போம். 37. அதிசய ஆலயம் 375 10 தோத்திரப்பா 379 1 திருமுருகவேள் திருவிளையாடல் 380 12 சென்றடைவோம் சேவடியை 385
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75,00 வருட சந்தா ரூபா 3.00 தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க இராமச்சந்திரா / பதிப்பாசிரியர் ஊ திரு. நா. முத்தையா | r \,
"ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி (சிலோன் தொலைபேசி எண் 353
 
 
 
 

பரீ பாலயோகி
Wy
(இராஜகோபால்)
அன்ன ஆகார மின்றி
அரும்பசி ஏது மின்றி இன்னலும் உபாதை நீங்கி
எழில்தவம் வளர்த்தும் சீமான் முன்னய தவத்தின் வேக
முதல்வனுய் நின்ற யோக புண்ணிய பாலயோகி
புதுமையர்ய் விளங்குகின்றர்.
அணுவளவும் பொய்யில்லா ஆன்மீகப் பெருஞ்செல்வர் அணுவளவும் சந்தேகம் காணுதிர் - குணநிறைவே தனதுறைவாய்க் கொள்ளும் ஜகத் ஈசன் ஆங்கே திருவுளமாய்த் திகழ்கின்றர் யோகி,
மெய்காணப் பலநாள் பெரும் பிரயாசை கொண்டேன் மெய்கண்ட செல்வனை மெய்யாகக் கண்டேன் பொய்காணு முலகோர்பால் பொதுவாக உரைக்கின்றேம் தெய்வசபை காணத் தேடியே வருவீர்.
f
மாற்றக் கண்கொண்டு மாறது பார்ப்பீரே தூற்றக் கண்சாரா சொல் உயர்வே சோதியாம்
ஏற்றக்கண் கொண்டு இடைநடுவின் மேலமர்ந்து
மாற்றது பார்உன் மதியை.

Page 3
358 ஆத்மஜோதி
அ ன் பு
(கன்பூஷியசு)
அறநெறியில் நிற்பது ஒழுக்கம். அன்பின் மூலமாகவே அதைப்பெற முடியும். அன்பே மனிதகுலத்தின் அடிநிலை இயல்பு.
வாழ்க்கையில் வழிகாட்டும் சொல் ஒன்று இலதா? அனுதாபம் அல்லவா அச்சொல்லை ஆம் உனக்கு நேரவிரும் பாததைப் பிறர்க்கு நேரவிரும்பாதே.
மனிதப் பண்பைக் காண்பது அன்பு ஒன்றிலேயே.
அன்பு உடையவர்க்குப் பிறர் குறைகள் புலணுகா. அன்பு இல்லாதவர்க்குப் பிறர்குணங்கள் புலனுகா, ஆம் தந்தைக்குத் தனயன் தவறு தெரியமாட்டாது.
அன்பு என்பது யாது? மனிதர்களை நேசிப்பதே. அறிவு என்பது யாது? மனிதர்களைத் தெரிவதே.
தண்ணிர் நெருப்பை அவித்து விடுவதுபோல் அன்பு துவேஷத்தை அவித்துவிடும். ஆணுல் இக்காலத்தில் அன்பு வழிநிற்போர் எரியும் மரத்தை அவிக்க இரண்டு கரண்டி நீரைத் தெளிப்பவராவர். நெருப்பு அவியாததைக் கண்டு நீரால் நெருப்பை அவிக்கமுடியாது என்று கூறுவர்.
அன்பு செய்ய விரும்பாதவன் அறிவு பெறுவது எப்படி? அன்பு செய்யக் கூடியபோது செய்யாதிருப்பதே அறிவின் மையாகும். அன்பும் அறிவும் இல்லாதவன் அடிமையே.
நீ அன்பு செய்தும் பிறர் அன்புசெய்யா விட்டால் உன் னுடைய அன்பை ஆராய்ந்துபார். நீ மரியாதை செய்தும் பிறர்மரியாதை செய்யாவிட்டால் உன்னுடைய மரியாதை யை ஆய்ந்துபார். A
 
 

d
ஆத்மஜோதி 359
றி ப ா ல யே கி
( g,9 fu ຕໍ່)
உலகம் மிகப் பெரியது. உண்மையோ மிக அகண் டாகாரமானது. அந்த உண்மையை நாடி உலகத்தைத் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மனித வாழ்க்கையின்
இலட்சியம் மனிதனுக்கு அப்பால் என்ன இருக்கிறது என் பதிலேதான் தங்கியுள்ளது. தன்னை உடல் என்று நினைப் பவன் உடலுக்கு அப்பால் என்ன உள்ளது என்றும், தன்னை உள்ளம் என்று நினைப்பவன் உள்ளத்திற்கு அப்பால் என்ன உள்ளது என்றும், தன்னை ஆத்மா என்று உணர்பவன் ஆத்மாவிற்கு அப்பால் என்ன உள்ளது என்றும் சிந்திக்க வேண்டும். அச் சிந்தனையின் சாதனையே தபஸ் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய தபசிகளில் ஒருவரே பூரீ பாலயோகி என்று கொண்டாடப் பெறுகின்ருர்,
இவர் 23-10-1930 இல் இந்தியாவில் தெலுங்குநாட் டில் மும்முடிவரம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கடிகிதல கங்கையா. தாயார் பெயர் வெங்கம்மா. இவர்களுக்கு பூரீபாலயோகி மூன்ருவது புதல் வராவர். இவர் தந்தை ஒரு ஏழை ஹரிஜன். இவருக்கு
ஹரிஜன சேரியில் உள்ள ஒரு சிறு கூரை வேய்ந்த குடிசை யைத் தவிர வேறு சொத்து இல்லை. பூரீ பாலயோகி தனது
மூன்ருவது வயதில் தன் தாயாரை இழந்தார். பிறகு அவர் தகப்பனரும் இரண்டு மூத்த சகோதரர்களும் இவரை அன்புடன் வளர்த்து வந்தனர். இவர் சுப்பரா யுடு சஷ்டி என்று வழங்கப்படும் புனித தினத்தில் பிறந் ததால், இவரைச் சுப்பராயுடு என்றும் சுப்பாராவ் என் றும் பெற்ருேர்கள் அழைத்தனர். பள்ளிக்கூடப் பக்கமே இவர் செல்வதில்லை. தகப்பனருடன் மாடு மேய்ப்பதிலேயே பால்ய வயதைக் கழித்தார். ஐந்தாண்டுகளாக மாடு மேய்ப்பதிலேயே காலங் கழித்தாலும் சந்தர்ப்பங்கிடைத்த போதெல்லாம் தனிமையை நாடி ஒடித் தியானத்திலீடு பட்டிருந்தார். தனிமையில் பஜனை செய்வதில் ஓர் ஆனந் தங் கண்டார். மிருகங்களிடத்திலும் பறவைகளிடத்திலும் மிக அன்பு காட்டினர்.

Page 4
360 ஆத்மஜோதி
பல சந்தர்ப்பங்களில் அவர் வயலில் சென்று உலகைக் கடந்த ஞானியாக மெளனமாக பல மணி நேரங்களுக்கு உட்கார்ந்திருப்பார். ஒருநாள் அவர் வயலுக்குப் போய் அதே நிலையில் மூன்று நாட்களுக்கு உட்கார்ந்து விட்டார். இவர் தகப்பனர் இதை அறியாமல் பல இடங்களிலும் தேடிக் கடைசியாக சணல் பயிரிடையே இவர் உட்கார்ந் திருந்ததைக் கண்டார். இவர் உடல் முழுதும் எறும்புக ளால் சூழப்பட்டிருந்தது.
இவர் விருப்பத்திற்கு மாருக இவருடைய தகப்பனர் இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனுர், அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவருக்குத் தாகமோ பசி யோ எடுப்பதில்லை என்று கூறினர்.
21-6-1946இல் அந்த ஊர்க் கிராம தேவதையின் விழா நடந்து கொண்டிருந்தபோது, இவருக்கு நாரத மக ரிஷியின் படம் கிடைத்தது. அவர் அப் படத்தை வைத் துப் பூஜை வழிபாடு ஆற்றியதில் ஒரு தெய்வீக உணர் வைப் பெற்ருர், வாரக் கணக்காகவும் உணவில்லாமல் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். இவரது இந்த நிலை தந் தையாருக்கு மனக் குழப்பத்தை உண்டாக்கியது. இவ ரைச் சரிப்படுத்தத் தந்தையார் மாந்திரீகர்களினதும் வைத் தியர்களினதும் உதவியை நாடினர். இவரோ அவை ஒன் றிலும் கருத்தைச் செலுத்தாதவராய் தமது ஆத்மசொரூ பத்தில் ஊன்றி நின்ருர், இத் தருணத்தில் பால யோகி யாரின் தரிசனத்தைப் பெற சாதி சமய பேதமின்றிப் பெருங் கூட்டம் கூடத் தொடங்கியது.
அவருக்கு வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் பாது காப்பு அளிப்பதற்காக ஒரு குடிசை கட்டப்பட்டது, ஒரு ஆண்டிற்குப் பிறகு பக்தர்களின் காணிக்கையைக்கொண்டு 2 அறைகளும் ஒரு மேடையும் கொண்ட ஒரு நிலையம் கட்டப்பட்டது. 6-2-1949 வரை அதாவது 2 வருடம் 8 மாத காலத்திற்கு புதிய நிலையத்தில் அன்ன ஆகாரமின் ? றிச் சுகாசன நிலையில் இருந்தார். இந்தச் சமயத்தில் கறுப்பு நிறமாக இருந்த இவருடைய தேகம் பிரகாசமான பொன் நிறமாக மாறியது. தரிசனத்திற்காக வரும் மக் களுடைய தொகை கூடக்கூட அது தபசுக்குத் ಕ್ಷೌರಾ-!* இருந்தது. அதனல் வெளியே பூட்டு ஒன்றைப் போட்டுப்
 

ஆத்மஜோதி 361.
பூட்டச் செய்தார். இதனல் அவருடைய தவத்திற்கு இருந்த தடை நீங்கியது. பக்தர்கள் பலருடைய வேண்டு கோளின்படி யோகியார் ஆண்டுக்கு ஒருமுறை பொதுமக் களுடைய தரிசனத்திற்குச் சம்மதித்தார். அதாவது மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் காலையிலிருந்து நடு இரவு வரை தரிசனம் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
சில பக்தர்கள் யோகியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற அவாவினுல் தூண்டப் பெற்று நிலையத்தின் முன்னுலிருந்து வேண்டுதல் செய்தபோது கதவுகள் தாமாகவே திறக்கப் பெற்று அவர்களுக்குத் தரிசனம் கிடைத்தது. கதவுகள் மீண்டும் தாமாகவே மூடிக் கொண்டன. நிலையம் பூட்டப் பட்டிருந்தாலும், திறந்திருந்தாலும் அதன் உட்புறமிருந்து ஊதுவத்திகள் கொளுத்தும் வாசனை, கற்பூர வாசனை, புதிய பூக்களின் வாசனை, சந்தன வாசனை இவைகள்
பார்க்கவரும் அடியார்களுக்குத் தெரிகிறது. ஆனல், உண்
மையில் அவைகள் அங்கு இருப்பதாகத் தெரி வில்லை. சில சமயங்களில் பிரகாசமான ஒரிே அந்த அறையில் காணப்
படுகிறது.
பூரீ பாலயோகியார் தவக் குடிலுக்கு சுமார் 2 மைல் தூரத்திலுள்ள பூரீ கொத்தலங்க பாபா அவர்கள் அடக்க மாகியுள்ள ஜீவசமாதியைப் பலரும் சென்று தரிசித்து வரு கின்றனர். அந்தப் பகுதியில் பாலயோகியார் இத்தகைய அதிசயப் பண்பிற்கு ஆளாகுமுன்பே மிகப் பிரசித்தமான மஹத்துவ சக்தியுடன் பரிபூரண நிர்வாண நிலையில் இருந்த அவரை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்துப் பல நன்மைகள் அடைந்ததாகத் தெரிகிறது. பாலயோகிகள் தவத்தில் அமர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1948 ஜனவரி 31இல் கொத்தலங்கபாபா சமாதியானுர்,
யோகியாரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற வாய்ப் பில்லாதவர்கள் அவரது படத்தைத் தரிசித்தல் மூலமும் அவரது வாழ்லைச் சிந்தித்தல் மூலமும் மறைமுகமான சத் சங்கத்தை அநுபவித்துக் கொள்ளுவோமாக.
கடவுளுடைய கணக்குப் புத்தகத்தில் நம்முடைய படிப் பையும் பேச்சையும் காணமுடியாது. நம்முடைய செயல் மட்டுந்தான் காணும். - காந்தி.

Page 5
362 ஆத்மஜோதி
யூனி பாலயோகியாரின் உபதேசம்
நாம் வாழும்வரை பொருள்களை நமது, உமது அவரு டையது என்று கூறிவருகிருேம். உடல் எப்போதும் நிலைத் துள்ளதல்ல. பணமும் நிலமும் நிலையானதல்ல; எல்லாவ கைக்கும் எவையும் நிலையானதல்ல; எல்லாம் கடவுளுக்குச் சொந்தம்.
மக்கள் புத்திசாலிகளாக இருப்பதைக் காண்கிருேம். கடவுள் தனக்காக எவ்வளவு உயர்ந்த அறிவுத்திறனைப் பெற் றுள்ளார் என்று நினைத்துப் பாருங்கள். சகோதரர்களும் தகப்பனரும் செயற்கையில் சேர்க்கப்பட்டவர்கள். நம்மு டைய உணமையான தசபபனா கடவுள.
ஒரு குறிப்பிட்ட மனிதன், ஒரு குறிப்பிட்ட நிலையை அடைகிருன் என்ருல், அது அவனுடைய ஜன்ம ஸ்ம்ஸ்ச்ரு தியினுல்தான். நம்முடைய ஆத்மாவில் உள்ள ஜீவாத்மா வைப்பற்றி நன்கு உணரவேண்டும். ஜீவாத்மா என்பது கடவுளின் சொரூபம். அதை நம்முடைய ஐம்புலன்களும் மாயத்திற்கு இழுக்க முயற்சிக்கின்றன. ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொண்டானே யால்ை அவனுக்குக்குரு தே வையில்லை. ஒருவனுடைய ஆத்மாவே அவனுடைய குரு. கடவுளுக்கும் பக்தர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. நீ உன்னுடைய ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினுல் உன்னுடைய ஆத்மா நீ எப்படி நடக்கவேண்டும் என்பதை விளக்கும். நீ குறைந்த அளவு உணவு மேற்கொள்ளவேண் டும். நீ ஐம்புலன்களை அடக்குவதில் வெற்றிகண்டுவிட்டால் உனக்கு பால் அல்லது தண்ணிர் கூடத்தேவையில்லை. பிறகு, அந்த ஐம்புலன்களும் ஆத்மாவுடன் சேர்ந்து தெய்வீக ஆத் மாவாக இணைந்து விடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அதுமாதிரி ஏற்படுவது, ஒருவன் தான் செய்த பாவத்திலி ருந்து ஈடேறுதல் என்பதாகும். அந்த மாதிரியாக ஏற்படுத்
துவதற்கு வழி நமக்குள்ளேயே இருக்கிறது.
நீங்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வணங்கிவந்தா லும், உங்களுக்கு மனத்திருப்தி இருக்காது. உங்கள் எண் ணம் மாறுபாடு அடைகிறது, உலகவிவகாரங்களில் மகிழ்ச்சி
1 : ܐܸܠܬܸ
 
 

ஆத்மஜோதி - 363
இருக்காது. மனிதனுக இந்தப்பிறப்பைக் கழித்து விடவேண் LITLD . எப்போதும் சிறந்த நல்ல எண்ணங்களையே மன தில்கொள்க. அனைவரும் சந்தோஷமாக இருக்கக் கடவுளை வணங்கு குழந்தைகளைத் துன்புறுத்தாதே. கடவுளை நம்பி, பக்தியுடன் யார் தொழுகிரு?ர்களோ அவர்களுடைய பாபங் கள் நீங்கும் பக்தியில்லாதவர்களின் பாபங்கள் இருமடங் காக அதிகரிக்கும். கடவுளைப் பூரணமாக சரணமடைப வர்களுக்குக் கடவுளின் கருணை என்றைக்கும் இருக்கும். எந்தெந்தப் பிறப்பில் பிறந்தாலும் ஒருவன் கடவுளையே நம்பி இருந்தால் அவன் விரும்பியதெல்லாம் கடவுளிடமி ருந்து பெறலாம். கடவுளைக் காணும்வரை தபஸ் இருக்க வேண்டும். ஒருவருடைய பாப புண்ணியத்திற்கு ஏற்ப அவர் தரிசனம் கொடுப்பார். -
ஒருவன் கடவுளை வணங்குவதற்காகக் காட்டிற்குப்போ கவேண்டியதில்லை. கடவுள் இங்கும் அங்கும் எங்கும் இருக் கிருர், ஒருவன் சமாதானமான சூழ்நிலை தேவையென்று எண்ணினுல் அவன் காட்டிற்குப் போகலாம்.
கடவுளைக் காணவேண்டும் என்று இந்தப் பிறப்பில் முயற்சி செய்தால் தான் அடுத்த பிறப்பிலாவது உயர்ந்த நிலையை அடையலாம். அப்படிச்செய்யா விட்டால் மறுபடி மனிதனுகப் பிறக்கமுடியாது.
சைவ இலக்கியக்கதா மஞ்சரி
ஆசிரியர்:- தேசிகமணி. கா. அருணுசலம் அவர்கள்.
விலை-ரூபா 3.00 தபாற் செலவு 50 சதம் இலக்கியங்கள், திருமுறைநூல்கள், புராணங்களில் வரும் 105 கதைகளைக் கொண்டது. இலக்கியம், சமயம் படிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இவற்றைப்படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கும் சமய உட்பொ ருளை அறிய விரும்புவோருக்கும் மிக உபயோகமான நூலா கும். வேண்டுவோர்
ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி. என்ற விலாசத்திற்கு 3- 50 பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

Page 6
364. ஆத்மஜோதி
LITT 356 i 5 LID
-
பகவானுடைய வரலாறு, பெருமை இவற்றைக் கூறும் நூல் பாகவதம் என்று பெயர் பெறும். பகவான் சம்பந்' தமுள்ளது பாகவதம். பகவான் என்பது திருமாலுக்குரிய ஒரு சிறப்புப் பெயர். இதனை, பகவான் சம்பந்த முள்ளது பாகவதம், பகவான் கூறியது பகவத்கீதை, பகவானுடைய அடியார் பாகவதர் என வழங்குவன வற்ருல் அறியலாம். இக்காலத்தில் பாகவதர் என்ற பெயர் வேறுபலருக்கு வழங் கப்படினும், அது திருமாலடியார்க்குரிய பெயராகும்.
வேதாகம புராணங்கள் என்று கூறப்படும் தொடரில் வேதாகமங்களோடு ஒப்பக் கூறப்படும் புராணங்கள் பதி னெட்டு உள்ளன. அவை சாத்துவிக புராணங்கள் ஆறு: இராசத புராணங்கள் ஆறு தாமதபுராணங்கள் ஆறு என மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாகவதம் சாத்து விக புராண வகையைச் சேர்ந்தது; பதினெண்ணுயிரம் சுலோ கங்களையுடையது.
உலகம் இறைவனது ஆக்ஞைப்படியே நடைபெற்று வரு கின்றது. இறைவனது படைப்பில் மனிதனுக்கு மாத்திரமே இது நல்லது, இதுகெட்டது என்று பகுத்தறியும் ஆற்றல் உள்ளது. இவ்வாற்றலைப் பெற்றிருந்தும் மக்களிற் பலர் மோட்ச இச்சை இல்லாதவர்களாக இருக்கின்றனர். இத் தகைய மனித சமூகம் உய்யும் பொருட்டே பகவான் இந் தப் பூமியில் பல மகரிஷிகளைத் தோற்று வித்தருளினர். அந்த ரிஷிகள் மூலமாக வேதங்களை வெளிப்படுத்தி ஞானுேபதே சம் செய்தருளினர். இவ்வேதங்களாலும் ஒருசிலரே பயன்' எய்தினர். ஏனையோர்கள் தர்ம அதர்மங்களை மிக இலகு வில் அறிந்துய்ய வேண்டி புராணங்களும் சங்கிதைகளும் அம்மகரிஷிகள் மூலமாகவே வெளிவந்தன.
s
பூவுலகில் தர்மம் குன்றி அதர்மம் தலை யெடுக்கும் காலங்களில் பகவானே மானிட உருவாய்த் தோன்றி துஷ் டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் செய்கின்ருர், இங்ங்ணம் பக வான் தன் இச்சாமாத்திரத்தால் இப்புவியில் வகித்த அவு தாரங்கள் எண்ணிலடங்காதன. அவைகளுள், மச்ச-கூர்ம வராக--நரசிம்ம-வா மன-பராசுராம-பூgராம-பலராம-யூரீகி
 
 
 

ஆத்மஜோதி 365
ருஷ்ண-புத்த-கல்கி அவதாரங்களை விசேஷமாகக் கூறுவார் கள். அவற்றுள் பூரீகிருஷ்ணுவதாரம் மிகச் சிறந்ததாகும்.
பாகவதம் முதலில் வியாச முனிவரால் அவருடைய புதல்வராகிய சுகமுனிவர்க்குக் கூறப்பட்டதென்றும், பின் சுகமுனிவரால் பரீட்சித்து மன்னனுக்குக் கூறப்பட்டதென் றும், பின்சூத முனிவரால் நைமிசவனத்து முனிவர்க்குக் கூறப்பட்டதென்றும் கூறுகின்றனர். பாகவதம் வியாசமு னிவரால் சுகமுனிவர்க்குக் கூறப்பட்டமையால், அதனைக் கிளிகோதிய பழம் என்று சிறப்பாகக் கூறுவர், (கிளிகோதிய பழம் மிக்கசுவையுடையதாக இருக்குமென்பது உலகவழக்கு)
வடமொழியில் இதிகாசபாகவதம், புராணபாகவதம், சம்ஹிதை, உபசம்ஹிதை, விஷ்ணுரகசியம், விஷ்ணுயாம ளம், கெளதசம்ஹிதை என ஏழு பாகவதங்கள் உள்ளன. இவற்றுள் இதிகாச பாகவதம் சுகமுனிவரால் பரீட்சித்து மன்னனுக்குக் கூறப்பட்டது. புராண பாகவதம் நாரதமு
னரிவரால் உருக்குமணிப் பிராட்டிக்குக் கூறப்பட்டது.
சூத மாமுனிவர் யாத்திரை செய்து கொண்டு ஒருநாள் நைமிசாரணியவனம் வந்து சேர்ந்தார். அங்கிருந்த சவுன காதி முனிவர்கள் சூதமா முனியைக் கொண்டாடிப் பின் வரும் ஆறுகேள்விகளைக் கேட்டார்கள். 1 புராணங்களுக்குள்ளே சிறந்த புராணம் எது? 2 மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கேட்டுப் பயனடையத்
தக்கது எது?
3 முத்தியை விரும்பியவர்களுக்கு மோட்ச சாதனமாய்
அமைந்தது எது?
4 பகவானுடைய எந்த அவதாரம் ஜீவர்களைக் காத்தற்கா
கவும் ஜீவர்களின் ஐசுவரியத்திற்காகவும் ஏற்பட்டது?
5 பூரீகிருஷ்ணபகவான் தேவகியிடத்தில் எதற்காக அவதா
ரம் செய்தார்? 6 பூரீகிருஷ்ணன் வேறு உலகத்தை அடைந்திருந்த காலத்
தில் தருமம் யாரைச் சரணுகப் பற்றியிருந்தது?
வேதவியாசர் மனுக்குலத்தின் மேல்கொண்ட அன்பு காரணமாக வேதங்களை நான்காக வகுத்தருளினர். இன்
னும் ஏதோ குறையிருப்பது போல் அவர் உள்ளத்தில் ஒரு
தோற்றம் எழுந்தது. இதனையே சிந்தித்துக் கொண்டிருந்த
"الإمام

Page 7
366 ஆத்மஜோதி
சமயம் நாரதமகாமுனிவர் எழுந்தருளினர். வியாசமுனி வரின் ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு காரணத்தை அறிய விரும்பினர். வியாசர் தமது மனத்தில் எழுந்த குறையை உரைத்தார். உடனே நாரதர் மனமகிழ்ச்சி உற்றவராய் அதற்கு வழிகூறினர். பூரீமந்நாராயண மூர்த்தி பாகவதத்
தை பிரமதேவருக்கு உபதேசித்தார். எனது தந்தையாகிய பிரமதேவர் எனக்கு உபதேசித்தார். அதனை உமக்கு நான் சொல்லுகிறேன் என்று பாகவதத்தை நாரதர் வியாசருக்குக் கூறினர். நாரதர் சென்றபின், தான் கேட்ட பாகவதத்
தைப் பலமுறை மனதில் கவனம் செய்தார். பின்பு பாக வதத்தை மக்கள் உய்யும் பொருட்டு அருளினர். யோ கதியா னத்தினலே உற்றுநோக்கி, பிரமசொரூபத்தையும், பிரமத் தினுடைய குணங்களையும், முக்தரான ஜீவர்களின் இலட் சணங்களையும் சாரமாக வைத்துப் பாகவதத்தை அருளி (னர். மோட்சத்தை விரும்பியவர்களுக்கு இந்தப் பாகவ தமே மிகமுக்கியமானதென்று இரண்டாவது சுலோகத்தால் வெளியிட்டார். ○
SS LSY LSLS LSSS LSLSS LLS LLS LSLS LSLSSLSS LSSALLLS SSLS LSSLS LTLSS STALS LSLSLS LTLSS MALLLS LALS LMALSLSSLSLSSLSSLSLSSqLSSSSSSLSSSqLSSSqTSqTS
கடவுள்
கடவுள் அரைநிமிஷமும் சோம்பியிருக்கச் சம்மதிக்காத எஜமானர். வெறும் வாணவேடிக்கையைக் கண்டு திருப்தி அடையாதவர். அவசரப்பட்டுத் தியாகம் செய்வதை அங்கீ கரிக்கமாட்டார்.
நாம் கடவுளை அறிய மாட்டோம். கடவுள் சிருஷ்டியையே
அறிவோம். அதனுல் சிருஷ்டிக்குச் செய்யும் சேவையே
சிருஷ்டிகர்த்தாவுக்குச் செய்யும் சேவையாகும்.
கடவுள் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்குச் சரியான கணக்கு வைத்திருக்கிறர். அவருக்கு இணையான கணக்குப்
(காந்தி)
SSMMSSSLSSSLSTSLSLSTLSSTLSS S TSLLS TMS TLS MMMSS SMLS LLTLSS SLTLS qSTSMLTLSS LLTLSS LLTLSSTLSSSLTLSSLALALS TASMLTLSS SLLLSTSLSLSLSqLLSLSLSSTSLASTSqLSTSLSTSSSTSSSTSqTS *
 
 

ஆத்மஜோதி
புன்மை அகற்றயோ?
-:"துளசிக் கண்ணன்':-
அப்பா! கலைகட் கரசே! பே ரன்பர்க் கெளியோய்! அருள்வடிவே ! எப்போ துன்பொன் னடியிணையை எளியேன் ஏத்தித் தொழப் பெறுவேன்?
கங்குல் அகற்றும் அருட்கதிரே! கவித்தேன் பொழியும் கனிமுகிலே! பொங்கும் அமுதப் பெருங்கடலே! புலேயேன் புன்மை அகற்றயோ?
அள்ளக்குறையாத் தெள்ளமுதே! அன்புப் பெருக்கே! அருள் ஊற்றே! பிள்ளேச் சிறியேன் கலக்கமறப் பேரின் பத் தேன் புகட்டாயோ?
கள்ளம், கபடு, பொய், சூது காமக்குரோத லோபமிவை எள்ளத்தனையும் கலவாப், பே
ரிதயம் தனைத் தந்தருளாயோ?
நெளிந்து தொடர்ந்து படர்ந்து வரும் நீசமனப்பேரிருள் கிழிய, பளிங் இச் சுடர்க்கண் பாய்ச்சா யோ? பரம கருணு பாஸ்கரனே!
காசில் பொருளில் கன்னியர்தம் கலவி மயக்கில் உழலாது, உன் வாசமலர்த்தேன் வாரியுணும் மாசில் தாசன் ஆகேணுே?
உள்ள முருக வெள்ளமென உணர்ச்சி பெருக உரை குளிர கள்ள மனத்தேன், உயிர்து டிக்கும் கவிதை இசைத்து மகிழே னே?
367

Page 8
368 ஆத் மஜோதி
மட்டக்களப்பு புளியநகர் யூனி சித்தி விக்கி னேஸ்வரர் ஆலய தொன்மையும் அதன் மகத்துவமும் புளியங்களின் மத்தியில் மாண்புற விளங்கும் புண்ணியக்ஷேத்திரம் சீரணுேத்தாரண
புண்ணிய கைங்கரியம்.
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளா கிய பரமசிவம் ஆருயிர்களை ஆட்கொள்வான் பொருட்டுத் திருமேனி கொண்ட் அருள் முகூர்த்தங்களில் விக்கினேஸ் வரர் முகூர்த்தம் மிக முக்கியத்துவம் பொருந்தியதென்பது சைவசமய சாஸ்திரம் கண்ட உண்மை.
இந்த விக்கினேஸ்வர முகூர்த்தம் உலகின் பலபாகங் களிலுமுள்ள மக்களால் வழிபாடு பண்ணப்பட்டு வந்தமை சரித்திர ஆராய்ச்சிக்கெட்டாத காலங்கடந்த வழிபாடென் பது அறிஞர் கண்ட பேருண்மையாகும். அன்றியும் இந்த விக்கினேஸ்வர முகூர்த்தமே மிக எளியமுறையில் எளிய மக் களும் நினைத்த இடத்தில் வழிபாடு செய்து வரம்பெற வாய்ப்பான தென்பதை நினைத்த இடங்களிலெல்லாம் அவர் அமர்ந்திருப்பதைக் கொண்டு நிரூபித்து அறியலாம்.
இத்தகைய மாண்பு பொருந்திய இந்தப் பெருமான் இலங்கையின் கிழக்குப் பாகமாகிய மட்டக்களப்புப் பட்டி னம் பொருந்தியிருக்கும் புளியந்தீவின் மத்தியில் பூரீசித்தி விக்கினேஸ்வரர் என்னும் மகத்துவந்தங்கிய திருநாமத் தோடு கே. வில் கொண்டு எழுந்தருளியிருந்து அற்புத அருட் பிரசாதம் அடியார்க்கு அளித்து வருகின்ருர் என்பதுஅனை வரும் அறிந்த உண்மை. -
புளியநகரின் வரலாறும் அப்பெருமான் அவ்விடம் எழுந்தருளியிருந்து அருள் பாலிப்பதுசரித்திர ஆராய்ச்சியால் ' அறிந்து கொள்ளற்கு அருமையான விடயம். புளியநகர் முற்காலத்தில் மனித சஞ்சாரமற்ற சோலைகள் செறிந்த அடர்ந்த இடமென்றும் அந்தஇடத்தில் பழங்குடி மக்க ளாகிய வேடுவர் தலைவனுகிய புவ்வியன் என்பான் ஒருவன்
 
 

ஆத்மஜோதி 369
இருந்து வழிபட்டு வந்தான் என்றும், அதனுல் புவ்வியன் என்பது புளியன் என மருவி புளியன்தீவு என வழங்கலா யிற்று என்னப்பெருங்குடி மூத்த பேரறிவாளர் கர்ணபரம் பரையாய்க் கூறிவருகின்றனர். மட்டக்களப்பு வாவி இந் நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளதால் இது தீவாயிற்று. இதை விட வேறுபிற காரணங்களும் கூறுவர் சிலர். அவற் றையெல்லாம் ஈண்டு உரைக்கின் இக்கட்டுரை ஓர் நூலாகி
விடும். இதுநிற்க,
மட்டக்களப்பின் அதிஉயர்ந்த இடமாகிய புளியந்தீவின் மத்தியில் முற்காலத்தில் அமைந்துள்ள கோவிலில் பெரு வெள்ளகாலத்தில் யானைகள் பந்தி பந்தியாய்ச் சூழ்ந்து தங்கி நிற்பதால் இப்பதிக்கு ஆனைப்பந்திப் பிள்ளையார் கோவில் என்னும் நாமம் வழங்கி வருகின்றது. காலம் செல் லச் செல்ல மக்கள் அறிவு விருத்தியடைந்து பழம் பெரும் பூர்வீக சமயமாகிய சைவ மக்கள் இவ்விடத்தில் 'காடு நாடாகும்; உயர்நாடு காடாகும்' என்னும் காலமாற்றங் கண்ட புலவர் கூற்றுக்கியிைய இப்புளியந்தீவிலும் ஆங் காங்கு குடியேறி வாழ்வாராயினர்.
'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று அறிந்த சைவன்-தமிழன் தனக்கொரு வழிபடு கட வுளைக் காண்பான் வேண்டி நின்றபொழுது இந்த பூரீசித்தி விக்கினேஸ்வரப் பெருமான் நிதரிசனமாயினர். அவரை ஆவ லோடும் அன்போடும் பக்திசிரத்தையாய் வழிபட்டு வரும் போது மரநிழலில் இருந்த மகாதேவனுக்கு காலம் செல்லச் செல்ல கோவிலும் ஆக்கப்பட்டு வளர்ச்சியுற்று வந்து ஆகம முறைப்படி இப்பொழுதிருக்கும் ஆலயம் உருவாக அமையப் பெறலாயிற்று. இன்றும் அதன் மூர்த்திகரம் எம்மால் அளவிட்டு உரைக்கும் தரத்ததன்று.
இவ்வாலயம் மிகப்பழமையும் தொன்மையும் வாய்ந்த கட்டடமாயிருப்பதால் இதனைச் சீரணுேத்தாரணம் செய்ய திருத்தி அழகிய முறையில் செப்பனிட வேண்டு மென்ற முடிவுக்கு இவ்வூர் சைவப்பெருமக்கள் யாவரும் ஒருமுகமான தீர்மானத்துக்கு வரலாயினர். எப்படியும் இந்த ஆண்டில் உள்ள சுபமுகூர்த்தத்தில் எம்பெருமானை வாலஸ்தாபனம் பண்ணிமூன்று அல்லது நான்கு மாதத்துக்குள் திருப்பணியும் முடிந்து முறைப்படி கும்பாபிசேகம் செய்ய வேண்டுமென் பது எம் பெருமான் திருவுள்ளம் போலும்.

Page 9
370 ஆத்மஜோதி காலத்தை ஆராயின் கவலையும் வரத்தான் செய்கிறது. பொருள்களின் விலையும் கூலிகளும் வரம்பின்றிக் கூடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இதுவும் செய்ய வேண்டி நேரலாயிற்று. காலம் தாழ்த்திச் செய்யவும் இப்பொழுது இருக்கும் நிலையுமோ இடங்கொடாது.
மேலும் இவ்வாலயத்தைச் சார்ந்துள்ள சைவ மக்களும் பெருநிதிபடைத்தவர்கள் அல்லர். எனவே இவ்வெளியீட் டைக்காணும் சைவப்பெருமக்கள் எத்திசையில் வாழ்ந்தா லும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து இச்சிவபுண் ணியத்தில் பங்குபற்றி சைவத்தை வளர்த்துப் பாதுகார்த்து நல்வாழ்வு பல்லாண்டு வாழ்ந்து புளியநகர் பூரீசித்திவிக்கி னேஸ்வரப் பெருமானின் வரப்பிரசாதம் பெற்று அவனடி சார்ந்து அயரா ஆனந்தமடையுமாறு வேண்டுகின்ருேம். புளியநகர் யூனிசித்தி விக்கினேஸ்வரர் இங்ங்னம்
ஆலய பரிபாலன சபை க தருமலிங்கம் மட்டக்களப்பு இணைக்காரியதரிசி
கடவுளே எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் 懿 அவரே வாழ்க்கையின் ஜீவநா டி. நான் கற்றதமிழ்ப் 隧 Lš356rī6i C NA - இ பாடங்களில் ஒரே ஒரு பழமொழிமட்டும் என்னுடைய * உள்ளத்தை விட்டு அகலா திருக்கின்றது. 'திக்கற்ற
je u L LD žá இ வருககு த \olதயவமே து 6 0 1 o 5 955 Lip * மொழி. சத்தியாக் கிரகத் தத்துவம் முழுவதும் 鑿 அந்த உண்மையையே அஸ்தி வாரமாக உடையது. 徽 கடவுள் ஒருவரையே நம்பி வாழ்பவன் எவ்வளவு
பயங்கரமான கொடுங்கோல் மன்னனுக்கும் அவனு 鬣 S.
攤
டைய உத்தியோகஸ்தர் களுக்கும் அஞ்ச மாட்டான். :) அதற்குக் காரணம் , எவருடைய கண்ணே ஒளித்து எது இ) 鬣 வும் நடப்பதில்லையோ அந்த ஏகசக்ராதிபதியின் பாது : இ காவலில் இருப்பதுதான், କିଂ SK கடவுள் என்றல் ஆள் அல்ல. அனைத்திலும் வியா 認 பித்து நிற்கும் சர்வ வல்லமை உள்ளதோர் ஆவியே 鱷 யாகும். அதைத்தம் இதயத்தில் ஏற்றுக்கொள்ளுகி ס
றவர்கள் அதி அற்புதமானதோர் ஆற்றல் உண்டாவ இ& தைக்காண்பார்கள். - காந்தி *ණි.
ಫಿಟ್ತಿಣ್ರ
у
(YS

A
ஆத்மஜோதி 37.
A
****↔↔↔-↔↔↔一↔↔一↔↔→令—令令令↔一↔令↔令一↔↔-↔令↔↔令↔一↔ ↔↔↔↔令↔↔↔-↔令一令令一↔令一↔↔-↔↔一↔↔令令一令↔-↔令一↔
உவமை வழியினிலே உண்மை காண்போம்
*+++++*→*→→→+→+++→++***→(J,á@ptogib山)+→*→*→*→今→**→*→**+**→
இசையில் வல்ல இலங்கை மன்னன் இராவணன் யாழி னைத் தனது கொடியில் ஏற்றிப் போற்றினன். இறை யையும் இனிய கீத நாதத்தினுல் வசப்படுத்தினன். ஈழத் தார் வாழ்வில் இசையும் யாழும் ஒன்றி நின்றன. மனம் நெகிழ்ந்து மகிழும் வண்ணம் யாழ் வாசித்துப் பண்பாடிய கண்கள் இரண்டும் அற்ற குருடன் ஒருவனுக்கு மரகதமணித் தீவின் மன்னன் ஒருவன் மணற் பிரதேசமொன்றினைப் பரி சாக ஈந்ததும், அம் மணற்றிடரில் மக்கள் குடியேறி அது யாழும் பண்ணும் காரணமாகக் கொண்டு வந்ததனுல் யாழ்ப்பாணம் என்றழைக்கப்பட்டதும், அதில் அந்தகக் கவி வீரராகவன் ஆண்டதும் மற்ருெரு சிறப்பு நிகழ்ச்சி யாகும். மேலும் அரசகேசரி பரராசசேகரன் என்பவன் இசைக் கலைகள் அனைத்திலுமே பாண்டித்தியம் பெற்றிருந் தான் என்பதையும், அவன் அவற்றின் நுணுக்கங்களைப் பற்றிய நூல்கள் சிலவற்றினை எழுதினுன் எனவும் அறிய முடிகிறது. இப்படியாக, வாழையடி வாழையாக, 'தமி ழோடிசை பாடல் மறந்தறியேன்” என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த எம் தமிழர் மரபிலே பத்தொன் பதாம் நூற்ரூண்டின் பிற்பகுதியில் (1892-கி.பி.) தோன் றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் “யாழ்நூல்' தொகுத் துத் தந்தார்கள். அதன் மூலம் பண்டைய தமிழிசைக்குப் புத்துயிரளித்த வித்தகர் ஆனர்கள்.
யாழ்நூல் தந்த சுவாமி விபுலானந்தர் அவர்கள் வேறு பல நூல்களையும் ஏராளமான தனிப் பாடல்களையும் இயற்றி யுள்ளார்கள். அவைகளில் அவர் ஏராளமான உவமை அ களே ஆங்காங்கு பொதித்துள்ளார்கள். அவை படிக்குந் தோறும் மனதில் நிதர்சனத் தன்மையைப் பதிக்கும் தன் மை வாய்ந்தவை. நன்மை தருபவை , வண்மையும் வாய் மையும் உள்ளவை. ஆழமானவை. குருதேவரின் உவமைக் கருத்து விளக்கத்தில் அவரது உவமைக் கவிதைகள் பொங் கிப் பிரவகிக்கின்றன.

Page 10
ஆத்மஜோதி
நவையுறு முலகிற் பட்டோர்
மாணுற்ற சபையி லிசன்
மகிமையை உரைத்தல் கேளார்
விணிற்றம் பொழுதைப் போக்க
விழைந்துவெற் றிடங்கள் செல்வார்
என்பது அவரது பாடல் ஒன்றின் பிற்பகுதி ஆகும். இதில் தாம் சொல்ல விரும்பியதை அவர் தெளிவாகச் சொல்கிருர், சிற்றின்பத்தையே விழையும் மாந்தர் பேரின் பத்தைத் தேடார் என்றதனைக் கூற வந்த அவர் 'இந்த உலக நடப்புகளிலேயே நாட்டம் கொண்டவர்கள் கடவு ளின் மகிமையைப் பற்றியும் இறைவனின் நாம பேதங்க ளின் மேன்மையைப் பற்றியும் பேசப்படுகின்ற சத்சங்க இடங்களிலே காணப்பட மாட்டார்கள்; ஆனல் அதற்குப் பதிலாக வீண் வெற்று நிலைகள் தன்னைப் பெரிதாக எடுத் துச் சொல்லி, தவப் பொழுதை அவப் பொழுதாக்கும்
இடங்களையே விரும்பி நாடிச் செல்வார்கள்' என்கின் ருர்,
அத்தகையவர்களை அவர் 'நவையுறு முலகிற் பட்டோர்’ என்னும் சொற்களால் வர்ணிக்கின்ருர்,
உலக ஆசாபாசங்களிலே கிடந்து உழலுகின்ற நவை யுறு முலகிற் பட்டோர்க்கு அவர் எடுத்தாண்டுள்ள உவ மைதான் அவரது சொல்ல வந்த கருத்துக்கு மிக வேகம் தருகிறது . அவர் தரும் உவமை
சாணத்தை யுருட்டும் வண்டு
தாமரை மலருட் புக்கால் நாணிப்பின் வாங்குமாப்போல்
என்பதுதான். சாணத்தை உருட்டிச் செல்லுகின்ற வண்டானது தாமரை மலருள் செல்லாது. (அது தன்னு டைய இயற்கையான சுபாவத்தினுலும் செய்கின்ற காரி யத்தினுலும் தாமரை மலருட் செல்லாது வெறுத்து ஒதுக் கும்.) இதுவே சுவாமி விபுலானந்தர் நவையுறு முலகிற் பட்டோர் மாட்டுச் சொன்ன உவமை அழகு ஆகும். இதே உண்மையை அவர் இன்னேரிடத்தில் ஒரு சிறு கதையையே அவர் உவமையாகக் கூறித் தெள்ளிதிற் புலப்பட வைக் கின்றர்.
அவள் ஒரு மீனவள். கூடையிலே மீன்களைச் சுமந்து
சென்று விற்பனை செய்பவள். ஒருநாள் அவள் மலர்கள்
 

ஆத்மஜோதி 373
விற்பனை செய்யும் ஒருவனுடைய வீட்டில் தங்கித் தூங்க நேரிட்டது. அப் பூ விற்பவனுடைய இல்லத்திலே நிறைய மலர்கள் குவிந்து கிடந்தன. அவளருகிலேயும் மலர்கள் கிடந்து நறுமணம் வீசின. ஆனல் அவைகளின் வாசனையை அவளால் நுகர்ந்து அனுபவிக்கவே முடியவில்லை. தூக்கமோ வரவில்லை. அப்படியும் இப்படியும் புரண்டு படுத்தாள். " ஒன்றும் பயனில்லை. என்ன செய்வதென்று யோசித்தாள். திடீரென எழுந்தாள். ஓடினள். தூரத்திலே ஒதுக்குப் புறத்தில் வைக்கப் பட்டிருந்த தன் மீன் கூடையை எடுத் துக் கொண்டு திரும்பவும் வந்தாள். படுக்கை யருகே மீன் கூடையைவைத்து அதன் மணத்தில்இனியதுயில்கொண்டாள்.
இந்தக் கதையைக் காட்டி ஆசைகள் வயப்பட்டோர் யல்பைப் படம் பிடித்துக் காட்டுகின்ருர், கவிதையானது உவமையணி சிறக்க, சுவை ததும்ப எழுகின்றது.
'பூவிலே பகர்வோ னில்லம்
புகுந்தவோர் வலேச்சி யாங்கு மேவிய நறும ணத்தால்
விழிதுயில் கொள்ளா ளாகித் தாவுமீன் கூடை யொன்றைத்
தன்னரு கமைத்துத் தூங்கும்; பூவுல கினிற்பட் டோர்கள்
புன்மையில் வகைய தாமே.”
இவ் வண்ணம் இன்னும் பல கவிதைகளினல் வெறும் போலிகளையே பின்பற்றி நடக்கும் மாந்தர் கூட்டத்தைச் சுட்டிக்காட்டி விட்டு, மேல் நோக்குடையோர், ஆத்ம விசாரமுடையோர், பூரணத்துவத்தை அடைய விரும்பு வோர் கடைப்பிடிக்க வேண்டிய வழி துறைகளையும் சுவாமி விபுலானந்தர் தராது விடுத்துச் செல்லவில்லை. நோயும் புகன்று நோய்க்கு மருந்தும் கொடுத்துள்ளார்.
சுவாமி விபுலானந்தர் இறைவனே எல்லா மனிதரிடத்
தும் கண்டவர். எப்படிப் பட்டவர்களிடத்தும் ஆண்ட வன் அருவமாக அமைந்துள்ளான் என்ற புனித மனுேபா வம் உள்ளவர். அப் பொருளையும் அவர் தக்க உவமையு
டனே த்ெதிக்கும் பாவண்ணம் செய்துள்ளார்.
廳
தலேயனே உறைகளின் நிறங்கள் பலப்பல விதமாகக் காட்சியளித்தாலும் தலையணைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் பஞ்ச ஒரே மாதிரியானதுதான். அதே போல இறைவன் எல்லா மனிதரிடத்தும் ஒரேமாதிரிஉறைகின்றன் என்பதனை,

Page 11
374 قي ஆத்மஜோதி
'தலேயனே யுறைக்கொப் பாகச்
சாற்றலா மனிதன் றன்னே; நிலவிய கருமை செம்மை
நிறத்தின வெனினு முள்ளே இலகுபஞ் சொன்றே; அன்பன்
எழிலிலா னழகன் றுர்த்தன் உலகினிற் பலரென் றலு
முள்ளுறை தெய்வ மொன்றே"
என்னும் பா மூலம் வெட்டொன்று துண்டு இரண்டு மாதிரி விளக்குகிருர், கீழான உலக நோக்கில் தம்மைப் பிணித்தோர்களை உவமைகள் மூலம் புகட்டிய அவர் - இறை வன் எல்லாரிடத்துமுள்ளான் என்று போதனை செய்த அவர் - மேல் நோக்கில் மனிதர் போவதற்கு முதற்படி யாக, உடனடியாகக் கெட்டவர்களினது - தீயோர்களினது கூட்டுறவையும் சகவாசத்தையும் விட்டு விடுவதே விவேக மானது என்று வற்புறுத்தியுள்ளார். அதுவும் உவமை மூலம்தான்.
கொடும் புலியிடம் கூட ஈசுவரன் உள்ளான். ஆனல் இறைவன் அதனில் இருக்கிருனே என்பதற்காக அதனருகே போவது அறவே தகாது. அது போலவே தீயவர் மனதி லும் எம்பெருமான் உறைகின்ரு:னெனினும் அவனை ஒதுக்கி நல்லவனுேடு நட்புறவாகி விட வேண்டு மென்பதைக் கூரு மல் கூறியுள்ளார்.
*வேங்கை தன்னகத் தெம்மிறை
யிருப்பது மெய்ம்மையே யெனினும்யாம் பாங்கு சென்றதன் முன்னிற்றல்
தகுதியோ? பாரெங்கு நிறையெம்மான் தீங்கி ழைத்திடு தீயவ t
ருளத்தினுஞ் செறிபவ னென்றலும் ஆங்கம் மாக்களைச் சேர்ந்தவர்
பாலுற வாடுத ಉಹ೩ ಹೆಗ್ಡೆ'
என்று சுவாமி விபுலானந்தர் அவர்கள் குருதேவர் வழி யிலே உவமை அறிவுரை பகன்றிருப்பதற்கு ஒப்ப நாமும் வாழ்வின் நோக்கத்தை மேன்மைப் படுத்தத் தீயவர்களைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவோமாக. அவர்களை
扈、
வெறுத்து ஒதுக்குவோமாக. உவமை வழியினிலே உண்மை *
GIT GðõTGLIITLIDIT 95.

ஆத்மஜோதி 375
స్థాూ ... Ke Cz><><>, <>, <> 199999999 அதிசய ஆலயம்
(சுவாமி நிர்மலானந்தா) <><><><><><><><><><><9<><><><<><><><><><><><><>
உலகில் நடை பெறுபவைகள் எதுவும் அதிசயமில்லை. யார் ஆண்டவனைப் பூரணமாக நம்பி அவனுக்காக வாழ்வை அர்ப்பணிக்கிருர்களோ அவர்களுக்கு உலகப் பொருள்கள் எவையும் அதிசயமில்லை.
இன்று எந்தப் பொதுப்பணிகள், ஆலயங்கள், மடங் கள், ஆச்சிரமங்கள் அனைத்திலும் பொருள்களால் தான் பூசல்கள் உண்டாகிறது. ஸ்தாபனங்களைப் பாதுகாக்க பொருளும் தேவைப்படுகிறது. அதை நிர்வகிக்க பொருளா ளர் என்றும், கணக்குப்பரிசோததர் என்றும் பலர் தேவைப் படுகின்றனர். பாங்குகளிலும் ஸ்தாபனங்களின் பேரில் நிறையப்பொருள்கள் சேமிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெறு 'வது உலகவழக்கம். ஆனல் அதற்கு புறம்பாக ஒரு ஆல
யம் நடைபெற்று வருவது அதிசயம் தானே!
பஞ்சாப் பிரதேசத்தில் சீக்கிய மகான் குருநானக் அவ தரித்தார். அவரின் கொள்கை ஆண்டவனை பூரணமாக விஸ்வாசிப்பதுதான். அன்னர் சிறுபையனுக இருக்கும் போது தந்தையார் தன் மளிகைக் கடையில் சாமான்கள் நிறுவை செய்து கொடுக்கும் வேலையில் அமர்த்தியிருந்தார். குருநானக் பிறந்த நாள் முதல் கொண்டு இறைவனை சதா நினைத்துக் கொண்டேயிருப்பவர். ஒருநாள் சாமான் வாங்க வந்த ஒருவருக்கு கோதுமைமாவு நிறுவை செய்து ஒன்று, இரண்டு என்று எண்ணிப்போடும் போது (ஹிந்தியில் 'ஏக் *தோ’) என்று பன்னிரண்டு முடிந்து பதின்மூன்ருவது போடும் போது (ஹிந்தியில் 'பாரஹ்' "தேரா என்றும்) தேரா என்று சொன்னுல் எல்லாம் உன்னுடையது என்பது பொருள். "தேரா' தேரா' என்றே நிறுவை செய்து போட்டுக்கொண்டே அவன் மயமாகிவிட்டார். அன்று முதல்
பெருமையும், கடவுள் விஸ்வாசமும் பஞ்சாப் மட்டுமல்லா மல் எங்கும் பரவியது. அவர் கொள்கைகளை பின் பற்றி வாழ்வை சன்மார்க்க நெறியில் நின்ற பலர் மகான்களா
தான் அவருக்கு ஆத்மஞானம் கிட்டியது. அவரின் புகழும்,

Page 12
376 ஆத்மஜோதி
ஞர்கள். அவர்களில் ஒரு மகானைப்பற்றிய ஒரு அதிசய ஆலயம் பற்றி அறிவோம்.
பஞ்சாப் தேசத்தில் லூதியான ப்ரோஜ்பூர் ரயில் மார்க்கத்தில் 45 கிலோகிராம் தூரத்தில் உள்ள நானக் சார் என்ற ரயில் நிலையம் உள்ள கிராமத்தில் சில ஆண்டு களுக்கு முன் குருநானக் மகானை குருவாகக்கொண்ட சந்த் ஆனந்தசிங் என்ற பக்தர் காட்டின் நடுவில் ஒரு குடிசை அமைத்து எளிய வாழ்வு நடத்திவந்தார். சர்வசதா அவர் உள்ளத்திலும், புறத்திலும் “ஹேப்ரபு தேரா' 'எல்லாம் உன்னுடையதே பகவான்’ என்ற நினைவிலேயிருப்பார். மக் கள் இவருடைய தெய்வ விஸ்வாசத்தைக் கண்டு பக்தி கொண்டார்கள். இவரும் தனக்காக வசதி செய்து கொள் ளவிரும்பாது வாழ்ந்தார். இப்படிப்பட்டவருக்கு ஒரு உத் தம சீடர் சந்த்ஈஸ்வர்சிங் என்ற பக்தர் வந்து சேர்ந்தார். அவரும் தம்குருநாதர்போன்று தேராவையே நம்பி கையில் ஒரு காசும் வைத்துக் கெர்ள்ளாது (காசைத் தொடாமலே) 50 லக்ஷ கணக்கான ரூபாய் மதிப்புள்ள சலவைக் கல் கோயில் (சீக்கிய குருத்துவார்) கட்டியுள்ளார். அந்த குருத்துவாரா ஆலயத்தில் தெய்வீகம் தாண்டவமாடுகி றது. அடியேனும் சமீப காலத்தில் சுவாமி சிதானந்த மகாராஜூடன் அந்த ஆலயத்தைத் தரிசிக்கும் பாக்யம் கிட்டியது.
இனி அங்குள்ள அதிசயம் பார்க்கலாம். உண்டி பெட் டியோ பணப் பாதுகாப்பு பெட்டியோ, கணக்குப் புத்த கக் குவியலோ, கணக்கு எழுதுபவர்களோ, பரிசோதகரோ எவரும் கிடையாது. ஆலயத்தில் எவரும் காசும் போடக் கூடாது. ஆலயம் பதின்மூன்று குருத்துவாரங் கொண் டது. எங்கும் சுத்தம் சுகந்தம்தான். சதா சுத்தம் செய்து கொண்டே யிருக்கிருர்கள். வெள்ளையுடையணிந்த சீக்கிய பக்தர்கள் நூற்றுக் கணக்கான பேர்கள் கருமமே கண் ஞய் உலாவி அன்பு காட்டுகிறர்கள். குருத்துவாரங்களில் இருபத்து நான்கு மணி நேரமும் குருக்ரந்த வேதம் பாரா யணம் நடந்து கொண்டு இருக்கிறது. தினமும் ஆயிரம் ஆயி ரம், யாத்ரீகர்கள் வந்து தரிசித்துப் போகிருர்கள். பஜார் கிடையாது. ஆலயத்தில் சமையல் கூடமும் கிடையாது. உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கும் அறை
களும் கிடையாது. இது அதிசயமில்லையா? இங் *
குள்ளவர்களுக்கு ஆகாரம் எங்கிருந்து வருகிறது என்ற

ஆத மஜோதி 377
கேள்வி பிறக்கலாம். 'அங்கும் "தேரா' வேதான். ஆல யத்தில் உள்ள அடியார்களுக்கும் தரிசிக்க வரும் பக்தர்கள் பலருக்கும் கிராமத்திலுள்ள இல்லங்களில் தினமும் நல்ல ஆகாரங்கள் தயாரித்து ஆலயத்திற்கு எடுத்து வந்து தரு கிருர்கள். உற்சவ காலத்தில் ஆயிரக் கணக்கான பேர்க ளுக்கும் உணவு இப்படியே கிட்டுகின்றது. அங்கு சுத்தம் செய்யும் தோட்டிகளுக்கும், அங்கு வாழும் அடியார்களுக் கும் ஆலயத்தில் பிரகாசிக்கும் மின்சாரத்திற்கும், கட்டிடம் பழுதுபார்ப்பதற்கும்பலதன வான்கள் நான் ,நீஎன்றுபோட்டி போட்டு நேர் முகமாக உதவி செய்கிருர்கள். மேலும் பெரிய கட்டிடங்கள் நடைபெற்று வருகின்றது. எந்தக் கட்டிடத்திலும் கட்டியவர்களின் பெயர்கள் கிடையாது. இந்தக் காலம் தர்மம் செய்பவர்கள் மின்சார விளக்குக ளில் தங்களுடைய தர்மத்தை விளம்பரம் செய்யும் காலம்.
இந்த ஆலயத்தில் "எல்லர்மே "தேரா?? தான். இந்த பதின் மூன்று குருத்துவாரங்கள் பெரிய ஆலயத்தை கட்டி முடிக்கவும் பதின்மூன்று ஆண்டுகள்தான் ஆயிற்ரும். "தேரா கேட், "தேரா பூங்கா , "தேரா குடீர், "தேரார் மஹால், "தேரா ஜோதி, "தேரா பாணி இப்படி இங் குள்ள எல்லா இடங்களுக்கும் "தேரா விலாசம் தான். இது அதிசயம் இல்லையா! இந்த ஆலய மூல கர்த்தா ஆனந்த சந்த் சிங் வாழ்ந்த குடிசையில் இன்று ஆலயத் தின் அடியில் குகை'யாக இருக்கிறது. அங்கு சென்று அதைக் காண விரும்புவோருக்கு நிபந்தனையுண்டு. ஆனல் பணம் கட்டி ரசீது பெற்ருே, அதிகாரியிடம் உத்தரவு பெற்ருே போகும் நிபந்தனை அல்ல. பின் ஏன் "கேட்டை” பாதுகாக்க சிப்பாய் போன்று ஆயுதம் தாங்கி நிற்க வேண்டும். நிபந்தனையாவது என்ன? 108 மாலை 'ராம நாமம் ஜபம் செய்து வந்தாயா? இல்லை 108 தடவை மந்திரம் ஜபித்தாயா? இல்லை 54 தடவை ஜபித்தாயா? இல்லை. உள்ளே சென்று வெளியில் வரும் வரையும் "ஏ! ப்ரபு தேரா என்ற ஸ்மரணையிலே இருப்பேன் என்று சங் கல்பம் செய்து கொள்ளுவது நிபந்தனை. இதன் நோக்கம் மகான்கள் தான் கண்ட இன்பத்தை அனைவரும் அடைய வேண்டும் என்ற கொள்கையே. அம் மகான் சர்வ ஸ்தா ஸ்மரணம் செய்து கொண்டிருந்த இடமும், அவருக்கு அனு பூதி கிட்டிய இடமாகும்.

Page 13
378 ஆத்மஜோதி
இந்தக் கலியுகத்தில் பகவானை "தேரா" "தேரா" என்ற வடிவில் கண்ட சந்த் மகான் ஆனந்த சிங் சில ஆண்டுக ளுக்கு முன் 90 வயதில் "தேரா'வுக்குள்ளே ஐக்யமாகி விட்டார். அன்னரை அனைவரும் அறியச் செய்த உயர் உத்தம சீடர் சந்த ஈஸ்வர் சிங்ஜியும் சென்ற ஆண்டுதான் எடுத்த உடலை எறிந்து விட்டு என்றும் அழியா புகழு டம்பு எய்தினர். "தேரா ஆலயம் "தேரா அடியார்க ளால் எக் குறையுமின்றி "தேரா' வுக்கு அர்ப்பணமாகி சரிவர நடந்து வருகின்றது.
நாமும் சர்வ ஸ்தா "தேரா நினைவில் இருக்க ஆசைப்
படுவோமாக! எல்லா மகான்களுமே "தேரா ஈஸ்வரனைத்
தான் நம்பி ஸ்தாபனங்களை உலக பிரசித்தமாக செய்துள் ளார்கள்.
ஸத்குரு தேவர் இமய ஜோதி சுவாமி சிவானந்த மக ராஜ் அவர்களும் அவனுக்கே சகலத்தையும் அர்ப்பணம் செய்து அவன் இச்சைப்படியே உலக உயர் ஸ்தானத்தைப் பெற்ருர், ஏ! பிரபு எல்லாம் உன்னுடையதே.
இவைகள் எல்லாம் அதிசயம் தானே!
LD62oTğ-g-( Tuʼ 9)
நான் பணிந்து நடக்கக் கூடிய கொடுங்கோலன் இவ் வுலகில் ஒருவனே. "மனச்சான்று' என்பது அவன் பெயர்.
மனச்சாட்சி சம்பந்தமான விடயங்களில் பெரும்பான்
மையோர் அபிப்பிராயப்படி நடத்தல் என்பதற்கு இடங் கிடையாது.
அஞ்சாமை
நம்மிடம் உள்ள குற்றங் குறைகளைத் தவிர வேறெ தையும் எவரையும் அஞ்சலாகாது.
- காந்தி
 
 

ஆத்மஜோதி 379 சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள்
உடல் உகுத்த முதல் ஆண்டு நிறைவு நாளன்று சமர்ப்பித்த
தோத்திரப்பா
(சுவாமி சுந்தரபாரதி)
விருத்தம்,
உலகெங்கு முள்ளநின் திவ்யஜி வனசங்க
உறுப்பின ராயி லங்கும்
உத்தம ம னம்பெற்ற பக்தர்கு ழாம் சதா
"ஒம்சிவா னந்த்' ேெவ ன்னும்
நல(ம்) நல்கு நின்நாம பாராய னு னந்த
நறையுண்டு கொண்டி ருக்க
நானெனதெ னுங்கொடிய அகங்கார ம மகார
ராக்கதர் கைப்பா வையாய்
விலங்கு புன் மனத்தனேன் விலாப்புடைக் கத்தின்று
விவகார வலையில் வீழ்ந்து
மேன்மேலு மோயாத பிறவிகட் கேதுவாம்
வித்தினை யூன்றி யூன்றிக்
கலங்குகின் றேனெனயுன் கருணையா லா ட்கொண்டு
கைதுக்கி விடவல் லையோ
கவினுரு மிமயமலை ரிஷிகேச முறைதருகண்
கண்டமெய்க் குருதே வனே
சர்வ வல்லமையுள்ள இறைவன் நம்மைப்போன்ற ஓர் ஆள் அல்லன், அவனை உலகத்தில் காணப்படும் தலைசிறந்த ஜீவசக்தி என்றே தரும மென்றே தான் சொல்ல வேண்டும். ஆதலால் அவன் நினைத்ததை நினைத்தபடி செய்யமாட்டான்.
மகாந்தி

Page 14
380 ஆத்மஜோதி
திருமுருகவேள் திருவிளையாடல்
(பண்டிதர். செ. பூபாலபிள்ளை அவர்கள்)
*உழுத்துப் போன புராணக் குப்பைகளை உதைத்துத் தள்ளு; இந்தப் பொய் கந்தப் புராணத்திலும் இல்லை! புராணங் கேட்பதால் மூட நம்பிக்கை நமது நாட்டில் வளருகிறது என்றெல்லாம் வேத ஆகமப் பொருளை விளக் கிக் காட்டுகின்ற, நமது முந்தையோர் தேட்டமாகிய புரா ணங்களையும், புராணிகரையும் இழிவாக மதித்து ஒதுக்கித் தள்ளுகின்றனர் இன்றைய விஞ்ஞான அறிவை மேலாக மதிக்கும் இளைஞர். இவர்கள் ஒரு பூரண உண்மை கலைக் கும் அறிவியலுக்கும் (விஞ்ஞானத்துக்கும்) பொருத்தமான தொன்ருதல் வேண்டும்; அல்லது கலையினுலும் அறிவியலா லும் வரையறுக்கப்பட்டதே ஒரு பூரண உண்மை என்பதை உணருகின்றரில்லை. நமது சமூகத்திலே கார்த்திகைப் பூப் பேர்லக் காண்பதற்கு அருமையாக ஒரு சில இளைஞர்க ளும் இவர்களுக்குமாருக இல்லாமல் இல்லை. அத்தகையோர் இந்து இஃாஞன் போன்ற பத்திரிகைகளை நடாத்தியும், உடல் உழைப்பாற் பொதுசன சேவை செய்தும் சமூகத்துக்கு உத வுகின்றனர். இயற்கை அறிவு, நூலறிவு, நுண்ணறிவிலும் பார்க்கத் திருவருளில் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வளர்கிறது. இயற்கை அறிவு நூலறிவு நுண் ணறிவுக் கெட்டாத உண்மைகளை நமது ஞானிகள் திருவ ருளாற் கண்டனர். அதனுல் யாவதும் அறியா அறிவின ராய்க் கற்ருேர்க்குத் தாம் வரம்பாய தலைமையராய் அவர் கள் பண்டைக் காலத்துப் பெருமக்களால் பெரிதும் மதிக் கப்பட்டனர்.
இன்றைய நமது துயர் தீர்க்க வல்லவர் தேவசேனுப தியாக நின்று அமராடி அசுரரைத் தொலைத்துத் தேவ ரைப் பாதுகாத்தருளிய கதிர்காம வடிவேலவரே ஆவர். ஆதலால் 'ஆர்வலரேத்த அமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து' வரங் கொடுக்கும் அறுமுகங்களுள், ஒரு முகமா கிய அருள் முகத்தை நோக்கித் தீர்க்கதரிசியாகிய கொழும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 381
புத்துறைச் சுவாமியார் திருவாக்குப்படி நாமெல்லாம் கந்த புராணம் பாடிப் பயன் கூறிப் பயன் அடைவோ மாக, நல் லூர்க்கந்தசுவாமி கோயிலில் நாள்தோறுங் கந்தபுராணம் பாடிப்பயன் சொல்லப்படுகிறது. வித்வச் சிரோன்மணி பொன்னம்பலம்பிள்ளே புராணம்பாட நாவலர் பெருமான் பயன் கூற ஆயிரக்கணக்கான முருகபக்தர்கள் கரிசனையாகப் பக்தியுடன் பயன்கேட்டுப் பயன்பெற்ற இந்தத்திருப்பதிப் புராணப்படிப்பை இன்றுபார்க்க எமது மனம் உடைகிறது. நமதுசைவகலாசாரத்துக்கு மாருக காற்சட்டைமேற்சட்டை களுடன் திருக்கோயிலுக்கு உட்புகுமாறு இளைஞரைத் திருத்தி அமைக்கிறது நமது இன்றையச் சுற்ருடல். இதனைக்கண் ணுற்ருல் நாவலர் பெருமான் விபுலானந்த அடிகளார் போன்ற சைவம் வளர்த்த பெரியோர்கள் தலையிலும் மார் பிலும் அடித்து ஒப்பாரிவைத்து அழுவர் என்பதற்கு ஐய மும் உளதேயோ?
சைவசமய வாழ்வினல், தவங்கிடப்பதனல், தேவசே னதிபதியாகிய திருமுருகன் அருளால், தமிழ்க்குலத்துக்கு உய்வுண்டாகும். நாமெலாம் முருகனுக்குத் திருவிழாநடை
பெறுகின்ற இந்தப்புண்ணிய காலத்திலே நமது உள்ளமா
கிய கோயிலிலே உறுதியாகிய கணுவை இடித்து நாட்டி, அன்புக்கயிற்றினலே அறுமுகக்குழந்தையை, யசோதையம் மாள் அவர் மாமனுகிய கண்ணபிரானை உரலிற்கட்டிவைத்
தவாறு இறுகக்கட்டி இடையருது அர்ச்சித்துவழிபடவேண்
டியவர்களாக இருக்கிருேம். அன்றியும் அறுமுகங்கொண்ட
அன்புருவாகிய முருகப் பெருமானிடம் நாமெலாம் ஒரே
குரல் எழுப்பி - -
"சுகந்தா நிதியந்தா தூய திடநெஞ் சகந்தா ஜெயசுகந்தா ஐயா-செகந்தாவி ஆடுமயி லேறிவிள யாடியசு ரோடுசமர் ஆடுகுக ஆறுமுக வா.'
எனக்காலையினும் மாலையினும் உடல் மயிர்க்குச்செறியக்,
கண்ணிர்வார, மனத்தை அவன்பாற் பறிகொடுத்து அஞ்சலி
செய்யவேண்டினல் தமிழால் வைதாரையும்வாழவைக்கும் தமி
ழர்தெய்வமாகிய திருமுருகன் நம்மைச்சும்மாவா விடப்
போகிருன்? "அருவமு முருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப், பிரமமாய்நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகக், கருணைகூர்முகங்க ளாறுங்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய’

Page 15
382 ஆத்மஜோதி என்ற புராணவாக்கை நம்முன்வந்து மெய்ப்பிப்பார் அல் லவா? குமரநாயகன் திருவருள் சித்திக்கப்பெற்ருேரை "நாளென் செயும் வினை தானென்செயுஎமை நாடிவந்தகோ ளென் செயுங்கொடுங்கூற்றென் செயுங் குமரேசரிருதாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமும் தோளுங் கடம்பும் எனக்கு-முன் னே வந்து தோன்றிடினே.” என்று கந்தரலங்காரப்பா கூறுவதுபோல யாரும், எதுவும் நம்மை ஒன்றுஞ்செய்ய முடியாது. ஆதலால் செந்தமிழ்ச் செல்வராகிய நாமெலாந் திருமுருகன் திரு விளையாடலை இனிமனக்கண்ணுற் கண்டு மகிழ்வுறுவோமாக.
“தட்டைஞெகிழங் கழல் சதங்கைகள் சிலம்ப
கட்டழகு மேய அரை ஞாண் மணி கறங்க
வட்டமணி குண்டலம தாணிநுதல் வீர பட்டிகை மினக்குமரன் ஆடல் பயில்கின்றன்'
முருகப் பெருமானது க்ைத்தாய்மாராகிய கார்த்திகைப் பெண்கள் அவருக்குத் திருக்கால்களில் தண்டைசிலம்பு சதங் கைகளைப்பூட்டினர்கள். அரையில் சதங்கையுடன் கூடிய அரைஞாணைப்பூட்டினர்கள். காதிற்குண்டலம் அணிந்தார் கள். நெற்றியில் பட்டங்கட்டினர்கள். கட்டிவிட்டுத்தமது ஆருயிரினுஞ் சிறந்த அழகுமுருகனை அவர்கள் விளையாட வருக என அழைக்கும் அழகுப் பாடலைப்பாருங்கள்.
தேடவ ரிய மணியரைஞாண்
சேர்க்க வருக விரற்காழி செறிக்க வருக திலதநுதற்
தீட்ட வருக மறுகில் விளை யாட வருக மடியிலெடுத்(து)
அணைக்க வருக புதுப் பணி நீர் ஆட்ட வருக நெறித்தமுலே
அமுதம பருக வருக முத தஞ சூட வருக உடற் புழுதி
துடைக்க வருக ஒரு மாற்றஞ் சொல்ல வருக தள்ளிநடை
தோன்ற வருக சோதிமணி மாட நெருங்குந் திருச்செந்தூர் வடிவேல் முருகா வருகவே வளருங் களபக் குரும்பை முலே வள்ளி கணவா வருகவே!
 
 
 

ஆத்மஜோதி 383
இவர்களுடைய வேண்டுகோளை முருகன் பொருட்படுத் தினன் அல்லன்; தனக்கு இனமாகவுள்ள இளையோருடன் கூடித்தெருநீளமும், பூக்களால் நிரம்பப்பெற்ற வாவிகளி லும், சோலைகளிலும், ஆறுகளிலும் உலாச்சென்றன். சிவ குமாரனுகும் இவன் மூவுலகங்களிலுஞ் சென்று விளையாடாத டமே கிடையாது. அத்தருணஞ் செவ்வேள் அறுமுகத் துடன் பிள்ளைக் கோலத்தோடுதிரிவார், தமையனுகிய யானை முகக்கடவுளுடன் கூடித்தம்பியாகச் செல்லுவார்.குமரநாயகன் உருவுடன் ஏறுபோலச் சிறிய நடையுடன் செல்வார். பிரா மணக் கோலத்துடன் செல்வார். முனிவர் திருவுருவுடன் செல்வார். யுத்தவீரர் கோலந்தாங்கித் திரிவார். சூரபன் மாவோடு யுத்தஞ் செய்ய வேண்டியவராகிய வடிவேலலர் பின்வரும் விளைவு கருதி முன்விளையாட்டாகக் காற்றுப்போல கடுகிச் செல்லுகின்ற குதிரையிற் சவாரி செய்வார். யானை யிற் செல்வார். தேரிற்செல்வார். சமுத்திரத்திற் செல்வார். ஆட்டுக்கடாவிற் சவாரி செய்வார். மணி அடித்து விளையாடு வார். குழல் வாத்தியம் வான்ெபார். கோட்டு வாத்தியம் வாசிப்பார். வாய்ப்பாட்டோடு வினேவாசிப்பார். இன்னும்
பல திறம்பட்டவாத்தியங்க%ள வாசித்துப் பயிலுவார். பாட்
டுப்பாடி அதற்கேற்ப ஆடுவார். இவர் புரியும் இந்தத் திரு விளையாடல்களைக் கண்டு உவப்புற்ருேர் ஒவ்வொரு திருநாமம் புனைந்து இவரை அழைத்தனர். கங்காநதி சிவபெருமானது நுதற்கண்தோறும் தோன்றிய ஆறு அக்கினிப் பொறிகளையும் சரவணப் பொய்கையிற் சேர்த்த காரணத்தால் காங்கேயன் இவனென அழைத்தனர் சிலர். சரவணப் பொய்கையின் பக் கத்தே குழந்தை வடிவேலகை வந்த காரணத்தினலே சிலர் இவனைச் சரவணபவ னென்று அழைத்தனர். கார்த்திகைப் பெண்கள் களிப்புடன் தமது முலைப்பாலூட்டி வளர்த்த, வளர்ப்புப் பிள்ளை ஆதலால் ஒருசிலர் இவனைக் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைத்தனர். சரவணப் பொய்கையில் விளையாடிய ஆறு திருக்குமாரரும் அம்மை உமாதேவியாரைக் கண்டு ஆனந்தங் கொண்டு ஒடிவந்து அவரை அடைந்தனர். உலக மாதா உளமகிழ்வால் அறுவரையும் ஒரு சேரக்கட்டி அனைத்துத் திருமடிமீது இருத்தி உச்சிமோந்து பேரானந்தப் பெருங்கடலுள் மூழ்கினர். அன்று தொடக்கம் ஆறு குழந் தைகளும் ஓர் உருவாயினர். உமாதேவி கட்டி அணைக்க ஒருரு வான காரணத்தால் முருகக் கடவுளைக் கந்தனெனச் சிலர் அழைத்தனர்.

Page 16
384 ஆத்மஜோதி இந்தக் குன்றுதொருடுங் குமரநாயகன் தென்னிலங்கை யிற் கதிர்காமத்தில் குடிகொண்டு வீற்றிருக்கிருன், நாமெ லாம் மாணிக்க கங்கையாடித் தோய்த்துலர்ந்த உடை உடுத்து, விபூதிதரித்து, உருத்திராக்கம் அணிந்து, புறத்தூய் மை செய்து, மனத்தகத்தே ஓம் குமராயநம என்ற சடாட்
சரத்தை உச்சரித்தபடி அகத்தூய்மை செய்து, முதலில்
மாணிக்கப்பிள்ளை யாருக்குக் காணிக்கை இட்டு கந்தா, முரு கா, கார்த்திகேயா, வந்தருள் புரிவாய் எனக் குழந்தைக் காவடியுடன் கூடிச் சப்பாணி கொட்டிப்பாடி ஆடுவோமாக. காவடிக்குள்ளே கலந்து விளையாடுங் கதிர்காமநாதனை எம் மைப் புன்னெறியிற் போகவிடாது நன்னெறியிற் செல்லவழி காட்டுமாறு இரந்து வேண்டுவோமாக, அழுக்காறு, அவா, வெகுளி இன்னச் சொல் இல்லாதவர்களாகிய எமது மனத் தகத்தே குடிபுகவருக, வருக எனக் குழந்தைக் குமாரனுக்கு கார்த்திகைப் பெண்களைப் போல எதிர்மறையாக வாரானே பாடி முருகனக மாறுவோமாக. .
'இறுகும் அரைஞாண் இனிப்பூட்டேன்
இலங்கு மகர குண்டலத்தை எடுத்துக் குழையின் மீதணியேன்
இனியுன் முகத்துக்கு ஏற்க ஒரு சிறுகுந் திலதந் தனைத்தீட்டேன்
திருக்கண் மலர்க்கு மையெழுதேன் செம்பொற் கமலச் சீறடிக்குச்
சிலம்பு திருத்தேன் நெறித்துவிம்மி
முறுகு முலைப்பால் இனிதுரட்டேன்
முகம் பார்த் திருந்து மொழிபகரேன் முருகா வருக சிவசமய
முதல்வா வருக திரை கொழித்து மறுகும் அலைவாய்க் கரைசேர்ந்த
மழலைச் சிறுவர் வருகவே வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே'
 

ت
ஈன்று புறந்தந்து விட்டாள் அன்னை 'குவா! குவா!' அழுகையொலி அறையை நிறைக்கிறது. ‘எங்கே? எங்கே??? என்று அழுகிறதாம் அந்தப் பச்ளெம் பிஞ்சு இவ்வளவு கால மும் இறைவனின் அன்பு அரவணைப்பிலே, இனியகாட்சியிலே அருளமுதத்திலே அழுந்திக்கிடந்த அந்த மதலை இப்பொழுது வெளியுலகைக் கண்டுதான் இவ்வாறு குழம்புகிறது. இவ் வளவு நாட்களும் அதனே அந்த இறைவன் காத்து வந்தான். அதல்ை அது துன்பத்தின் சாயலேயே காணுமல் வாழ்ந்தது. வெளியுலகை அடைந்ததும் அது ஏன் அழவேண்டும்? இது காறும் களிப்பூட்டிய இறைவன் எங்கோ மறைந்துவிட்டான். நமக்கு வெளிச்சமாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக் கும் அதே உலகம் அந்தக்குழந்தைக்கு இருள் நிறைந்ததாயும் துயரின் இருப்பிடமாயும் தோன்றுகின்றது போலும்! அது தான் அந்தக் குழந்தை அழுகிறது. முழுஞானிக்கும் அப்படி யே. இதைத்தான் இறைவனரும் கீதையிலே,
‘யா நிசா ஸர்வ பூதானும் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யe யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிசா பச்யதே முனே"
எல்லாப் பிராணிகளுக்கும் எது இரவோ அதில் மனமடங்கிய முனிவன் விழிப்புடையவனுயிருக்கிருன்; எதில் பிராணிகள் விழிப்புடையனவோ அது உண்மையைக் காணும் முனிவ னுக்கு இரவாகும் என்கிருர்,
குழந்தைக்கு இன்னும் இவ்வுலக ஞானம் பிறக்க வில்லை, பூர்வ ஜன்ம வாசனை அதனை விடவில்லை. இதுவரை களிப்புற்றிருந்தவாறே இன்னும் களிப்புற விரும்புகிறது. கண் களை சதாமூடிக்கொண்டு அவன் கழலடிகளையே சிந்திக்கிறது. இந்த முழுஞானியும் அதையே தான் செய்கிருன். ஆனல் அக் குழந்தைக்கும் இந்த ஞானிக்கும் வேற்றுமை இல்லையோவெ னில், இந்த உலகத்தின் விருப்பு வெறுப்புக்களையே என்ன வென்றே அறியாதது, அக்குழந்தை. இவ்வுலகங் காட்டும் இன்பதுன்பங்களெல்லாவற்றையும் கடந்தவர் அந்த ஞானி.

Page 17
386 ஆத்மஜோதி
அந்தக் குழந்தை வளர்கிறது. கொஞ்சிக் குலவி குறு நடை பயில்கிறது. மெல்ல மெல்ல அதன் உள்ளுணர்விலே, *நான்', 'என் அம்மா’ என்னும் உணர்ச்சிகள் உருவெடுக்கின் றன. அவ்வுணர்ச்சிகளுக்கு மேற்பூச்சுக் கொடுக்கிறது காலம். அவ்வுணர்ச்சிகளினுல் உந்தப்பட்டு நாம்இன்று நிற் கும் நிலையில் நிற்கிறது.
இவ்வுலகில் பிறந்து அதன்மீது நடக்கும் நிகழ்ச்சிகளை நோக்கும்நமக்குநம்மனதின் வளர்ச்சியின் போக்குப்படி எண் ணங்கள் உண்டாகின்றன. அவ்வெண்ணங்கள் உள்ளத்தைப் போட்டுக்குழப்பும்போதுசெய்வதின்னதென்றறியாதுதிகைக் கிருேம் நம்சிறிய மனதிற்குச் சரியெனத்தோன்றியதையே
பெரிதென மதித்து அதன்வழி ஒழுகுகிருேம், இறைவனே
இல்லை என்று நாஸ்திக வாதம் பேசுகிருன் ஒருவன், இறை வன் இருக்கிருன் நமக்குத்தான் அவனைப் புரியவில்லை என்கி முன் இன்னுமொருவன். ஏதோ புரிவது போலிருக்கிறது. ஆணுல்முற்றும் விளங்கவில்லை என்று அங்கலாய்க்கிருன் மற்று மொருவன். இறைவனு! அந்தப் பேரின்பத் தெள்ளமுதைத் தெளிந்துவிட்டேனே என்று துள்ளிக்குதிக்கிருன்நாலாமவன். ஒன்றுமே அறியாத அஞ்ஞானிக்கும் எல்லாம் அறிந்த அஞ் ஞானிக்கும் ஒரு கஷ்டமும் இல்லை. இடையிலுள்ளவர்களுக் குத் தான் கஷ்டம், மனத்தில் இந்த மாபெரும் இடரைச் சுமக்கிருர்கள் இந்த மானிடர்கள்.
இந்த பூமியிற் பிறந்த நாள் முதலாய் ஒரு நாளாவது நம் சிந்தையை அவன் தனக்காக்கி இருக்கிருேமா? அப்படி யிருக்க அவன் எப்படி அருளப் போகிருன்? இதென்ன! கடை யில் வாங்கும் பொருளா ? காசைக் கொடுத்தால் பெறுவோம் இல்லாவிட்டால் இல்லை என்பதற்கு. இதற்கு அத்தாட்சியாக இதோ இருக்கிருர் மணிவாசகனர். நடந்ததெல்லாவற்றை யும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். கேட்டு விட்டுத் தான் சொல்கிருர், ‘புலையனேனையும் பொருளென நினைந் துன் அருள் புரிந்தனை' என்று அன்ருடக் கஞ்சிக்கே உழைத் துச் சாப்பிட வேண்டிய புலேயனுக்கு, இழிதொழில் செய்ய வே நேரமில்லாமல் அவஸ்தைப்படும் போது இறைவனைப் பாட ஏது நேரம்? அப்படிப்பட்ட புலேயனுய்த் தன்னை நினைத் துக் கொண்டார், வாதவூரர். புலையனைப் போன்றிருந்த இவரையே மதித்து அருள் புரிந்தாராம் அந்த ஆண்டவன், அப்போது நமக்கேன் மாட்டேனென்று சொல்லப் போகிரு?ர்.
இரப்போர்க்கு இல்லை யென்னுத ஈகையாளன், கருணுநிதி,

YÄ,
ஆத்மஜோதி 3S7.
அருட்பெரும் வள்ளல் என்றெல்லாம் எத்தனையோபேர் அந்த இறைவனைப் புகழக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பேரரு ளாளன் நமக்கும் அருளாமலா போய்விடுவார். இதற்கு என்ன தான் செய்ய வேண்டும்? அது தானே தெரியவில்லை. வழிதெரிந்தால் உடண்ே செய்யமாட்டோமா?
மருண்டு கிடக்கும் நம் முன்னே இதோ ஒரு பெரியவர் வருகிருர் கட்டுக் கட்டாகத் திருநீறு, கழுத்தில் உருத்திராட் சம். அவரது எளிய தோற்றமும் முகப்பொலிவும் அவரை சைவம் கண்ட பெரியார் ஒருவர் எனக் காட்டுகிறது. அரு கிலே வந்துவிட்டார், சந்தேகமில்லை. சாட்சாத் அவரேதான். ஆம்! அது மருள் நீக்கியார் தான். நம் இன்னல் கண்டுஅதனை நீக்க வந்தார் போலும், இல்லை, இல்லை; இறைவனே அவரை அனுப்பினர் போலும் தன் குழந்தைகள் ஆத்ம சுத்தி அடைந்து உலகம் போற்றும் அமரராக வேண்டும் என்பதில் தான் அவருக்கு எத்தனை அக்கறை, 'ஈன்ற பொழுதிற் பெரி துவக்கும் தன் மகனேச் சான்ருேன் எனக் கேட்டதாய்' என்று அந்தத் தாயைப் புகழ்ந்தார் வள்ளுவப் பெருந்தகை. ஆளுல் இறைவனே, "தாயினும் நல்ல தலைவர் அல்லவா? என்னே! அவர் கருணை; அவர் கருணையைப் பற்றி இன்னுமா சந்தேகம் 'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலையேFந்த பிரானுயிற்றே'. நம் நாவுக்கரசர் என்ன கூறுகிருர் கேளுங் Ց56)T »
'மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும் வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே கனேயுளே மாகடல் சூழ் நாகைக் காரோணத் தானே நினையுமாவல்லீராகில் உய்யலாம் நெஞ்சினிரே'
எவ்வளவு பொருத்தமான பதில் நாம் கேட்ட கேள்
விக்கு சிறிதும் சுற்றி வளைக்காமல் நேரடியான பதிலைத் தந்து
விட்டார். அப்பரல்லவா? தன் குழந்தையின் கேள்வி விளங் காத தந்தையும் உண்டோ? குழந்தை முதலிலே "நான்' என்றது. பின்னர் ‘என் தாய்", "என் தந்தை' என்றது. அதன்பின் படிப்படியாக மனைவி, மக்கள், சுற்றம் என்று இந்த உலகிலே தனக்குள்ள பந்தத்தை இறுக்கிக் கொண்டே
போகிறது. கயிற்றிலே சிக்கு ஏற்பட்ட உடனே அல்லவா
அதனை அவிழ்க்க வேண்டும். அதைவிட்டு அது நன்ருக முறுக் கிக் கொண்ட பிறகா அதனை அவிழ்க்க முயல்வது? என்ன

Page 18
388 - ஆத்மஜோதி
மடமைத்தனம் 'நான்' என்று சொன்ன வயதிலிருந்தே அந்த மனத்தை நல்வழியிலே திருப்பி இருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் விட்ட குற்றம்! ஹ"ம்! இப்பொழுது யாரைச் சொல்லி என்ன பயன்! எப்படியும் இந்தத் தளைகளை விடுவிக்க முயலவேண்டும். வேறு வழியில்லை. விடுவதா? அதெப்படி முடியும்! பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாரிலே ஆளாக்கி விட்ட அன்னையையும் தந்தையையும் வேண்டாம் என்பதா? அப்படிச் சொன்ன நிமிடமே நான் "மனிதருள் பதர்' ஆகிவிடமாட்டேனு? பெற்ற அன்னைக்கு துரோகம் செய்ய எந்த மனம் தான் ஒக்கும், சரி அதாவது போகட்டும்.
அவர்கள் ஏற்கெனவே நரை கண்டவர்கள் தான், நான்மாட்
டேன் என்ருலும்ஒருநாள் விட்டுப்பிரிய வேண்டியது தானே!
அடுத்தது என் மனைவி. அவளை விட்டுப் பிரிவதா? நினைத் தாலே நெஞ்சு நடுங்குகிறது, இவ்வளவு அழகும் இளமை யும் பொருந்திய மனைவியைப் பிரிந்து வாடுவதை விட இறந் தேபோகலாமே! ஐயோ! முடியவுே முடியாது! இதென்ன! சோதனை மேல் சோதனையேர்? இன்றவன் என்னை இப்படிச் சோதிப்பான் என்று நான் கனவிலும் கருதவில்லையே. இப் படி என்று தெரிந்திருந்தால் இந்த வழிக்கே வந்திருக்க மாட் டேனே. அத்துடன் விட்டான அந்த ஆண்டவன். என் குழந்தைகளையுமல்லவா விட்டுப் பிரியச் சொல்கிறர். மனைவி யுடனுவது இத்தனை ஆண்டுகள் இன்பமாய் வாழ்ந்தாகிவிட் டது. என் குழந்தைகள்! முளைத்து இன்னும் மூன்றிலை விட வில்லையே அவர்கள். அவர்களை நன்ருக வளர்த்துப் பெரியவர் களாக்க வேண்டும். மூத்த பையனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டும். இரண்டாவது பெண்ணைப் பெரிய இடத் தில்கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். ஒரேபெண்ணல் லவா? கடைசிப் பையனை என்ஜினியருக்குப் படிக்க வைக்க வேண்டும். என்று நானும் என்மனைவியும்சேர்ந்துபோட்டதிட் டங்கள் என்னுவது? அவர்கள் கை நிறையச் சம்பாதிப்பதைப் பார்க்க நாம் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவு தான். இனி யாரை நொந்து என்ன பயன். ஆழமறியாமல் காலை
விட்டு விட்டோம். இந்த வினையே வேண்டாமென்று சும்மா
இருந்து விட்டால் .
முன் வைத்த காலைப் பின்னிழுப்பதா? அது என் அந் தஸ்த்திற்கே இழுக்காகுமே! தலைக்கு மேல் வெள்ளம்போன பிறகு சானென்ன முழமென்ன? சரி என்று ஒப்புக் கொண் டாயிற்று. இனி அவர் சொன்னபடி கேட்கவேண்டியது

தான் வேறு வழியே இ ல் லை த ர் ம சங்க ட ம் அவர் அப்படி என்னதான் சொல்லி விட்டார். 'மனைவி தாய், தந்தை, மக்கள், மற்றுள சுற்றமென்னும் வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே' இதென்ன! இவருக்கு மனைவி, மக்கள், தாய், தந்தை, சுற்றம் ஒருவருமே g)G5), ILLET தோ? அதைப் போய் வேதனை என்கிருரே. உலகம் என்ன வென்றே அறியாத ஜடம் ஒரு வேளை இவர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். தெரியா மலா சொல்வார். கேட்டுத் தான் பார்ப்போமே! இவர்களே வினையென்று விலக்கில்ை யாரை நம்பித்தான் இனி வாழ்வது? அதற்கும் பதில் தருகிருர் அந்த அறிஞர்.
'கனையுமா கடல் சூழ் நாகை மன்னுகாரோணத் தானே நினையுமாவல்லிராகில் உய்யலாம் நெஞ்சினீரே'. நாகை என்பது ஆதிசேடன் என்னும் பாம்பு இறைவனேப் பூசித்த இடம் நாகம் பூசித்தமையினுல் அதற்கு நாகப் பட் டினம் அல்லது நாகை என்னும் நன்மம்நிலைத்தது. இதே ஸ்தலத் திலே தான் புண்டரீக மகாமுனிவரை இறைவன் தமது திரு மேனியுள் ஏற்றருளியதும். காயம் என்பது உடல் என்றும் ஆரோகணம் என்பது ஏற்றுக் கொள்ளுதல் என்றும் பொருள் பட்டு காயாரோகணம் என்னும் பெயர் பெற்றது. இது இன்று நாகைக்காரோணம் என்று மருவியது. அன்று புண்ட ரிகருக்கு அருள் புரிந்தவர், கட்டாயம் நமக்கும் அருள் புரி வார். அந்த ஆண்டவனே "நினையுமா வல்லீராகில் என்கிருர், அந்த இறைவனை நாம் நினைக்க வேண்டும், இப்பொழுது தான் புரிகிறது! இதைத்தான் அருணகிரியும் அன்றுரைத் தார் போலும், "சரணகமலாலயத்தை அரை நிமிட நேரமட் டில் தவமுறை தியானம் செய்ய' என்று. எல்லாரையும் மிஞ்சுகிருர் நம் சம்பந்தர். பால் குடிக்கும் வயதிலேயே பரமனைக் கண்டவர் அல்லவா?
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் உம்பர் நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன் மேவு நன்னகர் நலங்கொள் காழி நேர்மினே
- தொடரும்.

Page 19
1 ܬܐ.
. .
s ܂ ܢܝܼܫܵܐ.
"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ട