கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.09.17

Page 1
6
ப்பாத்து
,xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx-举杀杀
|-
霹伞伞伞伞伞伞伞**→令→**夺*****令*
沃*********** 率X-★*****
事长
★++*******命令令中《F-++***********參令令令令令令*...圣 ********************命令令令令金今→命令了令令本多令令*令令众人奋→********圣
A.
ܐܲܵܬ
-·
-_·--|- |----- _ ---sae- No.No.·|-
 
 
 
 
 
 
 
 

. .|- ) |-
| 火令令令》令***→令令令令令令令》令事奪*會令令》令會命令•令*****
-
太平圣举举
|-
晕、*举
----
单单杀举举举革
*太淑《No...*******参如幽—密令
-
-
· • • • ► ► ► ► ► ► ► ► ► ► ►零命令命令令命令令亨→命令令→令命令令令令命令令令零零零零→子李亨令**水
•令**令》令命令令會命令會→*令令》令》令》令令令→令令令》等令令令* |-
---- .- o
举举举益羊羊羊
※单学举举单单单单举予圣单单-举
*++++++++*举
---
++- * 2 +x
莓、多令令*→令伞令夺夺夺*领

Page 2
*伞伞伞今伞伞伞伞今*今争令今分令**今伞伞伞伞伞今→命+今+命****今今伞今争今今今今今今今今今命令令
O କୁଁ ம ஜோதி!
s2.5D \o
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
今伞鲁令令→令今今→今令令一伞今令伞→4令今→今争今→令伞令→令今令令命令令令今→+→*→++*********
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
= சுத்தானந்தர்
ஜோதி 16 3 குரோதி வூடு புரட்ட்ாதி மீ" 1உ (17-9-64) 48 சுடர் 11
பொருளடக்கம் 1 அப்பதுரை சுவாமி குருவே 389 2 அருட்பா 390 3 அப்பாத்துரைச் சுவாமிகள் 39 } 4 பாகவதம் 395 5 நாமமே கடவுள் 397 6 பிரபுத்துவம் 3.98 7 சிலமே சக்தி 399 8 இன்றே கொடு இன்னே கொடு 4{}让 9 பெண்ணிற் பெருந்தக்க யாவுள? 4{}3 10 நினைந்துருகும் அடியாரை நைய வைத்தாய் 406 11 சென்றடைவோம் சேவடியை (தொடர்ச்சி) 4 12 யூனி ராமகிருஷ்ணுஞ்சலி 4.
13 திருவடி திரைத் திருவிழா தமிழர்தம் முது விழா
(தொடர்ச்சி) 4量3
14 புத்தக விமர்சனம் 4 3
15 சந்ததந் தொழுவேன் சரஸ்வதியே (கவர்)
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75. வருட சந்தா ரூபா 3.00
தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தையா "ஆத்மஜோதி நிலேயம்' நாவலப்பிட்டி, சிலோன்) தொலைபேசி எண் 353
 
 
 

SMS MTATLTLSLLMLS LTLSLTALLMLM TMLMLSLLMALSL TTMTLLTLSS LLTLSMTMLMLMLMLSALSLTLSLALLALSLSLSLSLTLS LTSSLSLSSLSTSLTTLMMTSLSTS SLSST LTS qSMeASLTMLS LeeeLSS LLTLSS SSSSSSMSSSLSS TSLTSMSTSSMSTS STSM STSM SLLLeLTLSMTLSS STTS TeTLSSLLLSTASLLSSLSTSLSLSASLSLLTSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSS qMLM LTieLLSMLSMLTLSMLeeTSM eMMMMeMTMSSMMSMTLSMTSMTLM TLM LLTLS TTSL LLTLSS STLSSLSTSLSLSTSLS SqLMTLSqLTSSLSSSSSSLLSSSLSSS
A
அப்பதுரை சுவாமி குருவே
-: நாடோடிச் சந்நியாசியார் :-
一ぶ。2-ーや※eート一ぶ。2ー
திருவேறு செல்வமே ஜெயமேறு சோதியே
தெவிட்டாத பேரின்பழே
சிந்தைசெய் எந்தனே தந்தை போலாகியே
செப் புமொழி ஒன்று மறவேன் கருவேறு வினையெலாம் அகலும் நின்னுணவ
கபடவஞ்சனையை நீக்கி காணுவாய் பிறரிதுயரை நின்துயரெனக் கொண்டு
காசினியில் உயிர் இரக்கம் அரகரா என்னுமொழி மறவாமலிரு என்று
அருள் ஞானமீந்த நாதா ஐயனே அப்பகுரு மெய்யனே அடியனேன்
அடிமைமுன் எழுந்தருளுவாய் 蠶 அருளேறு ஆனந்த மழைபொழிய வருதெய்வ
அன்பெனக் கீயவந்த அற்புதக் கோலமே தற்பரா ந்ைதமே அப்பதுரை சுவாமி குருவே!
SLSTSeS MLeTeS S SSSTSLSSSMTAeMLTLSLSLSTSLSSLSTLSLTSLSS LLSMLMLSSSLTALSL eAeLSLTLSLTLSSSLTLLTLLLSLLSSLLSSLS SLLLLSTLSSSLSLSSLSTLSe SLSSTSS
qLASLSqLATSLSSSMLMLSSLS LATLS TMS MLSSSLLLSLLLSLLLMeMMLeMLSLTeTLLSLLLSLLMTSLSLALLLLSLMTMLSMLMLMMLSLLMLeLLMLMLMLMMLSSLMLeMLMLS LMTAALLLLSLLLSTLSLLLSLSLLTLMTS

Page 3
390 ஆத்மஜோதி
அ ரு ட் ப ா
- இராமலிங்க சுவாமிகள் -
உலகநிலை முழுதாகி பாங்காங் குள்ள
வுயிராகி யுயிர்க்குயிரா மொளிதாளுகிக் கலகநிலை யறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ணதாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி யிணையொன்று மில்லாதாகி அலகிலறி வானந்தமாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
உலகமெலாந் தனிநிறைந்த உண்மையாகி
யோகியர்தம் மனுபவத்தினுவப்பாயென்றுங் கலகமுற வுபசாந்த நிலையதாகிக்
களங்கமற்ற அருண்ஞானக் காட்சியாகி விலகலுரு நிபிடவா னந்தமாகி
மீதானத் தொளிர்கின்ற விளக்கமாகி இலகுபரா பரமாய்ச்சிற் பரமாயன்பர்
இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
களக்கமறப் பொதுநடநான் கண்டுகொண்ட தருணங்
கடைச்சிறியே னுளம்பூத்துக் காய்த்ததொருகாய்தான்
விளக்குமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந்திடுமோ
வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப்படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோ
குரங்கு கவராதெனது குறிப்பிலகப் படினும்
துளக்கமற உண்ணுவணுே தொண்டை விக்கிக்கொளுமோ
சோதி திருவுளமெதுவோ ஏது மறிந்திலனே.
Wy
(அப்பாத்துரைச் சுவாமிகளுக்கு மிக விருப்பமானபாடல்கள்)
AAAAASSSSSSSLSSSSSSLSSzSYSLzSSzSSSTSTS
 
 
 
 
 

ஆத்மஜோதி 391
SSSSS-2S
ÈGGBOSSCBGB)
S232S2
ReSaS SSIS-2S
S3SOSOSCSO
2S2S232S
SSS2S2S 溢溢溢淡濠
2S2S2S2S2
திருக்கோணமலைக் கோணேஸ்வரப் பெருமானைத் தரி சிக்கச் சென்றிருந்தேன். கன்னியா வெந்நீர்த் தீர்த்தம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது.
*மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே'
என்று பெரியார்கள் அடிக்கடி சொல்லக் கேட்கிருேம் அல் லவா? கோணேசப் பெருமானின் தரிசனையும் கன்னியா தீர்த்தமும் கிடைத்த எனக்கு நல்லதோர் வார்த்தைசொன்ன பெரியாரின் சந்திப்பும் கிடைத்தது. அவருடைய திருஉருவ மே இம்மாத ஆத்மஜோதியின் முகப்பை அலங்கரிக்கிறது.
திருக்கோணமலை நகரத்தினூடே மத்திய வீதி என்ற பெயருடன் ஒருவீதி செல்கின்றது. அவ்வீதியின் மத்தியான ஒரு இடத்திலே மிகமிகப்பழைமையானவீடுஒன்றுள்ளது. நடு வேமுற்றம், நாலு பக்கமும் நாற்சாரம் அமைந்த வீடு. தெருவோரம் இரண்டு பெரிய திண்ணைகள். இரவில் வீடு பூட்டப் பெற்றுவிட்டால், யாராவது யாத்திரிகர்கள், வழிப் போக்கர்கள் அவ்வழியால் வந்தால் படுத்துறங்கிச் செல்வதற் கென்றே கட்டப்பெற்ற திண்ணைகள். இத்தகைய பண்பாடு அமைந்த வீட்டிலேதான் அப்பெரியாருடைய சந்திப்பு ஏற் பட்டது. அவர்தான் அப்பாத்துரைச் செட்டியார் என்ற நாமத்தைப் பூண்ட அப்பாத்துரைச் சுவாமிகளாவர்.
அவரை முதன்முதல் சந்தித்தபோது அவரது தோற்றம் ஞானப்பழம் என்ருல் எப்படி இருக்கும் என்பதை நினைவூட்டி யது. அவர் ஒரு இல்லறஞானி. அநேகர் அவர் உடல் கொண் டுலாவியபோது வெளி உடலைக் கவனித்தார்களேயன்றி உள் ளத்தின் விரிவை அறிந்தார்களில்லை. இவரது குடும்பத்தவர் கள் பரம்பரையாக முத்து வியாபாரம் செய்தவர்கள். தந் தையார் அண்ணுமலைச் செட்டியாரின் மகன் பொன்னுச்சாமி செட்டியாராவர். அண்ணுமலைச் செட்டியார் மிகப்பிரசித்தி பெற்றவர், அவர் கட்டிய வீடே யான் முன்பு குறிப்

Page 4
392 ஆத்மஜோதி
பிட்டவீடாகும், இவ்வீட்டிலேதான் அப்பாத்துரைச் சுவாமி கள் எழுபத்துமூன்று ஆண்டுகளுக்குமுன் பிறந்தார்கள்.
யாழ்ப்பாணத்துக் கடையிற் சுவாமிகளைப்பற்றி யாவ. ரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், கடையிற் சுவாமிகளுடைய
ஞானபரம்பரை ஒன்று யாழ்ப்பாண மக்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிவந்துள்ளது. அப்பரம்பரையிலே வந்தவர்கள் சடைவரத சுவாமிகளாவர், சுவாமிகள் ஒருமுறை திருக்கோ ணமலை சென்று இரவிலே நாம் முன்பு குறிப்பிட்ட வீட்டின் வெளித் திண்ணையிலே நித்திரை செய்தார்கள். பொன்னுச் சாமிச் செட்டியார் அவர்கள் அதிகாலையிலே எழுந்து வெளி யிலே வந்தபோது வெளித் திண்ணையிலே சாது ஒருவர் படுத் திருக்கக் கண்டு ஏற்ற உபசரணைகள் செய்தார்கள். சுவாமி களிடம் வந்த காரணத்தை வினவியபோது, சுவாமிகள் தம்பி யைப் பார்த்துப்போக வந்ததாக அப்பாத்துரைச் செட்டி யார் அவர்களைக் குறிப்பிட்டார்கள்.
இளமை தொடங்கியே ஆத்மீகவாழ்வை மேற்கொண்ட
அப்பாத்துரைச் சுவாமிகளைக் குருநாதர் தானுகவந்து ஆட் கொண்டார். அதனல் அவரது ஆத்மீக வாழ்வு மேன்மே லும் மலர்ந்தது. சனநெருக்கடியை எப்போதும் விரும்பாத வர். தனிமையில் இன்பம் கண்ட மெளனி. மிகச்சில மெய் யன்பர்களுடன் மாத்திரம் அத்யாத்ம உறவு வைத் திருந்தார் குருபூசைத் தினங்களிலேயே கூட்டம் பெரிதாகிவிட்டால் அக் கூட்டத்தை விடுத்துத் தனிமையில் ஒதுங்கிக் கொள்வார். இனிமையாகவும் மிருதுவாகவும் பேசுவார்.
எவர் வீட்டுக்குப் போனலும் அவரைக் குருவாகவே மதித்து உபசரணை செய்வார். வந்தவரைப் பேசவிட்டுத் தான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார். தன்னை எவருக்கும் காட்டிக் கொள்ளமாட்டார். எவரெவர் எந்தெந்த நோக்கத்தோடு வருகிருர்களோ அந்தந்த நோக்கத்திற்குத் தகப் பேசி அனுப்பிவிடுவார். மிகப் பணிவுடையவர். வீட்டுக் குவந்தவர் எவரானலும் அவரைக் கும்பிடப் பின்னில்லார். வாழ்க்கையின் இலட்சியம் திருவருளைப்பொருந்தியதாயிருக்க வேண்டுமென்று யாவருக்கும் கூறுவார். இலெளகீகத்தின் தடிப்பு ஏறவிடக் கூடாது. போதும் என்ற மனத் திருப்தியு டன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும், அவரவர் நிலையில் அவரவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீங்கள்
4.
 
 

ஆத்மஜோதி 393
இறைவனிடம் சரண்புகுந்தால் அவன் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுவான். கோடி குற்றம் பொறுத்தவன்தான் குடித் தனக்காரன். என்பனபோன்ற பல உபதேசங்களைத் தம்மை நாடி வந்தோருக்கு அருளி உள்ளார்கள்.
இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பமானபோது யப் பானியர் திருக்கோணமலையில் குண்டு வீசினர்கள். அத்தரு ணத்தில் தமது குடும்பத்துடன் சென்று யாழ்ப்பாணத்தில் தங்கினர்கள், குருநாதராகிய சடைவரத சுவாமிகளால் கட்டப்பெற்ற உசன் சமாதி மடத்தில் சிலகாலம் தங்கியிருந் தார்கள். பின்னர் நல்லூருக்குக்கிட்ட உள்ள முத்திரைச் சந்தையடியிலும் சில காலம் தங்கியிருந்தார்கள். இக்காலத் திலேதான் யாழ்ப்பாணத்திலுள்ள சிலருடன் சுவாமிகளுக்கு அத்யாத்ம உறவு ஏற்பட்டது.
தனக்கு என்ருே குடும்டித்திற்கு என்ருே எதையும் சேமித்து வைத்தவரல்ல. இல்லை என்று வந்தவர்களுக்கு இர கசியமாகத் தாரளமாகத் கொடுத்துதவினர். அவரது குரு பரம்பரையின் மகத்துவம்போலும், பலரறிந்து கொள்ளாத ஒரு பெரியாராக விளங்கி மறைந்தார்கள். தமது குருநாத ராகிய சடை வரத சுவாமிகளைப்பற்றி இவர் கூறிய சம்பவம் ஒன்றை நினைவூட்டுகின்ருேம்.
*சென்னையை அடுத்து குருகுலம் நடாத்தி வந்த சிவப் பிரகாச சுவாமிகளுக்கும் சடைவரதசுவாமிகளுக்கும்அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கு முன்பே மிக நெருங்கிய ஆத்மீக உறவுடையவராய் இருந்தனர். இதனைத்தான் உணர்ச்சி ஒத்தலாகிய நட்பு என்று கூறுவர். சிவப்பிரகாச சுவாமிகள் ஒருநாள் தமது மாணவர்கட்கு உத்தம குருவின் இலட்சணத்தைப்பற்றி விளக்கஞ் செய்து கொண்டிருந்தார் கள். அப்போது ஒரு மாணவர் எழுந்து அப்படிப்பட்ட குரு ஒருவரை நாங்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.
நாளைக்காலையில் தனுஸ்கோடியிலிருந்துசென்னைக்குவரும் புகையிரதத்தில் எழும்பூர் நிலையத்தில் ஒரு பெரியார் வந்து இறங்குவார். அவரைப் பார்த்தால் நீர்கேட்ட வினவுக்கு விடை கிடைக்கும். ஆதலால் நீங்கள் எல்லோரும் சென்று அவரை அழைத்து வாருங்கள். மறுநாட்காலை மாணவர்கள் எல்லாரும் குறிப்பிட்ட புகையிரத நிலையத்திற்குச் சென்ற

Page 5
394 ஆத்மஜோதி
னர். அங்கு சென்றமாணவர்கள் எல்லோரும் 12வயதுக்கும் 17வயதுக்குமிடைப்பட்ட இளைஞர்களாவர். வரும் பெரி யார் எப்படி இருப்பார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கற்பனை செய்து கொண்டே இருந்தனர். குறிப் பிட்ட நேரத்தில் புகையிரதமும் வந்தது. மாணவர்கள் பெரியாரைத் தேடி பல பாகங்களாகப் பிரிந்து பெட்டி பெட் டியாகத் தேடினர்.
சடைவரத சுவாமிகளோ வெண்மையான உடை அணிந் திருந்ததோடு தமது சடையையும் தாடியையும் ஒருசிவப்புத் துண்டினல் சேர்த்துக் கட்டியிருந்தார். அவருடைய வேடத் தை எவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. கேள்வி கேட்ட பையன் மாத்திரம் இவரைப் பார்த்ததும் நாங்கள் தேடிவந்த பெரியார் இவராயிருக்கக் கூடுமோ என்று பக்கத் லுள்ள பையன்களிடம் கேட்டான். மற்றவர்கள் இவரா யிருக்க முடியாது என்று செர்ல்லி புகையிரத நிலையம் முழுவ துமே தேடி அலுத்து விட்டனர். கடைசியில் அப்பையன் கூறியவரையே விசாரித்துப் பார்க்கலாம் என்று அப்பையனை அனுப்பினர்கள். பையன் ஒடோடியும் வந்தான். பையன் வரும் போது சுவாமிகள் புகையிரத மேடையைக் கடந்து வெளியே வந்துவிட்டார்கள். பையன் ஓடிவந்து 'சுவாமி நீங்கள்தான தனுஷ்கோடியிலிருந்து வந்த பெரியார்' என்று கேட்டான். சுவாமிகள் இல்லை, இல்லை நான் ஒரு மலையா ளப் புகையிலை வியாபாரி என்று கூறினர்கள். "நான் சுவாமி என்று யார் சொன்னர்கள். , எங்கள் குருநாதர் சிவப்பிர காச சுவாமிகள் இந்தப் புகையிரதத்தில் தனுஷ்கோடியில் இருந்து ஒருபெரியார் வருவார் அவரை அழைத்துவாருங்கள் என்று கூறினர். அதன்படியேதான் வந்தோம். அவர்குறிப் பிட்ட பெரியார் தாங்களாகத்தான் இருக்க வேண்டும்.
நான் பெரியாருமல்ல; சுவாமியுமல்ல. உங்கள் குருநா தரை எனக்கும் பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. ஆத லால் நானும் உங்கள் குருநாதரைத் தரிசிக்க உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி மாணவருடன் புறப்பட்டு குரு குலத்தை அடைந்தார், !
சிவப்பிரகாச சுவாமிகள் இவரைக் கண்டதும் ஒடோடி யும் வந்து இவரது பாதத்திலே விழுந்து வணங்கினர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி ஆனந்தம் கொண்டனர். சடைவரத சுவாமிகள் தம்மை வேடத்தால் யார்க்கும் வெளி
 
 
 

ஆத்மஜோதி 395 பாகவதம்
(முத்து)
பாகவதத்திற்கென்றே தனித்ததொரு தருமம் உண்டு. அதாவது பாகவதத்தைப் படிப்பவர்கள் யாரோ? அவர்க ளுக்கு கண்ண பரமாத்மா ஒருவரையே காட்டி மற்றவை யெல்லாவற்றையும் மறைத்து விடுவது. ஆனபடியால் தான் பாகவத தருமம் என்று சிறப்பித்துப் பேசப்படுகி றது. பாகவதத்தைப் படித்தோர் கண்ணனிடம் பிரேமை கொண்டு அவனை நினையாது உலகில் வாழ்க்கை இன்பம் தர முடியாது என்ற உண்மையை அறிந்தனர்.
வேதம் ஒரு கற்பக விருட்சம். அதில் பழுத்த கனி தான் பாகவதம், வேத் வியிாசர் இதனைத் தமது புத்திர ராகிய சுக முனிவருக்கு உபதேசித்தார். சுக முனிவரோ பிறக்கும்போதே பிரமநிஷ்டராகப் பிறந்தார். அப்படிப் பட்டவரே பாகவதத்தைக் கேட்டுப் பரமானந்தம் அடைந் தார். பாகவத தருமத்தை உலகில் அநுபவத்தில் காண வேண்டுமென்று சுகர் புறப்பட்டார். ஒரு இடத்திலும் ஒரு பசு கறக்கிற நேரத்திற்கு மேல் தங்குவதில்லை என்ற
முன்பக்கத் தொடர்ச்சி யில் காட்டிக் கொள்ளாதே வாழ்ந்தார்கள். இது அப்பாத் துரைச் சுவாமிகளுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்துவதாகும் அப்பாத்துரைச் சுவாமிகளிடம் அவருடைய குருநாதருடைய வும் இவருடையவுமான பல உபதேசங்களங்கிய கையெழுத் துப் பிரதியொன்றை நாம் அண்மையில் பார்த்ததுண்டு. அதை நாம்விரும்பிக் கேட்டபோது தருவதாகக் கூறினர்கள். பின்பு எமது கைக்கு அது எட்டவில்லை. அதை வைத்திருப் போர் அதனை அச்சில் கொணர்ந்தால் அல்லது ஆத்மஜோதி மூலம் வெளிவரச் செய்தால் அவரது ஆத்மீகச் செல்வத்தை பாதுகாத்தவராவோம்.
சுவாமிகள் 13-7-64 அதாவது ஆனிப்பூர நட்சத்திரத் தில் சமாதி அடைந்தார்கள்.

Page 6
396 ஆத்மஜோதி
பிரதிக்கினையுடன் புறப்பட்டார். உலகம் முழுவதும் சுற் றிப் பார்த்து பூரீமந் நாராயணனுடைய தோற்றமே எங்கு மெனக் கண்டார்.
பரீட்சித்து மகராஜா ஆத்மீக தாகம் கொண்டு குரு ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சுகரின் தரி சனையால் பாகவத உபதேசம் பெற்ருர், பரீட்சித்து மக ராஜாவுக்கு சுக முனிவரின் உபதேசம் கிடைத்த போது நாரத முனிவர் போன்றவர்களும் கேட்டார்கள்.
கலியுகம் பிறக்கப் போகிறதென்பதை அறிந்து யாவ ரும் கவலை கொண்டனர். கவலையைத் தீர்ப்பதற்காகப் பிரமதேவரிடம் சென்றனர். இந்தக் கரும பூமியில் கலி புருஷன் எந்தப் பகுதியைப் பீடிப்பான் எனப் பிரமதேவ ரிடம் வினவினர். நைமிசாரணியம் என்ருெரு வனம் உண்டு, அதுவரை உள்ள பூமி , புண்ணிய பூமியாகும். அதற்கு அப்பாலுள்ள பூமி கலியால் பீடிக்கப்படும் என்று கூறினர். நைமிசாரணியத்திலுள்ள முனிவர்கள் பலகாலம் தவம் செய்தும் தவத்தின் பயன் கிடைக்கவில்லை என்று ஏங்கியிருந்தனர். சுக முனிவரிடம் பாகவத உபதேசத் தைப் பெற்ற சூதபுராணிகர் நைமிசாரணியம் வந்ததை அறிந்து ஆனந்த பரவுசராயினர். நைமிசாரணிய வாசி கள் சூதரிடம் பாகவத உபதேசத்தைப் பெற்றுத் தமது தபோ பலத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டனர்.
புராணிகரே நாங்கள் கலியுகத்தில் பிறந்திருக்கின் ருேம். கலியுகத்தில் பிறந்த எங்களுக்கோ ஆயுள் மிகக் குறைவு. குறைந்த ஆயுளில் எம்பெருமானை அடையச் சாதனை செய்யும் வல்லமை இல்லோம். ஆதலினுல் கலி யுகத்தை வென்று ஆண்டவனே அடையும் வழியை உபதே சிப்பீர்களாக என்று சூதரிடம் வேண்டினர். சூதர் பாக வத உபதேசத்தின் மூலம் கண்ணனையே அடையச் செய்து விட்டார்.
பாகவதத்தைக் கேட்கும்போது இடைவிடாது பூரீமந்
நாராயணனுடைய தியானமே நிலை பெறுகிறது. பாகவ தத்தைக் கேட்போர் சத்வ குணத்தால் நிரம்பப் பெறு கின்றனர்.
 

ஆத்மஜோதி 397
நாமமே கடவுள்
(சுவாமி ராமதாஸர்)
நாமமே கடவுள். ரூபம் தோன்றிமறையும். நீங்கள் நாமத்தை எப்போதும் உங்கள் நா வில் வைத்திருக்கலாம். ஒசை மிகவும் இனிமையானது. நீங்கள் ஒசையில் மனங்கு விகிறீர்கள். அது உங்களை உங்கள் இருதயத்தில் இருக்கும், நீங்களாக இருக்கும் பிரம்மத்தின் நாமரூபத்திற்கப்பாற் கொண்டு செல்லும்.
இது ஒரு சார்பற்ற சாதனை. இதற்குயாதேனும் புறப் பொருள் தேவையில்லை. அது எளிதானது. நீங்கள் ராம நாமத்தைச் செபிக்கும் போது கடவுள் உங்கள் நாவில் இருக்கிருர், O
அனைத்தும்- எல்லா ஜீவாத்மாக்கள், பிராணிகள், பொருட்கள் உட்பட முழுவுலகுமாகிய பரவஸ்துவே ராம். ஆயினும் அவர் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்.
மேலும் அவர் தசரதரின் மகனுகிய ராமரும் தேவகி யின் மகனுகிய கிருஷ்ணரும், புத்தரும் இன்னேர் பிறருமே.
ராமநாமம் தசரதராமர் பிறக்கு முன்பும் கூடஇருந்தது.
பிரம்மமேராம். அக்கருத்தில் ராமதாஸர் ராமநாமத் தைச் செபித்தார்.
எங்ங்ணம் மேல்மாடிக்குப் போவதற்கு உங்களுக்கு ஒர் ஏணி தேவைப்படுகிறதோ அங்ங்ணம் நாமரூபம் எங்களுக்கு ஏணிகள் அல்லது சின்னங்கள். நாங்கள் அரூபமானதைச் சிந்திக்கமுடியாது. அப்படி யாயின் எப்படி அதை அடைவது? நாம ரூப மூலம்.
ஒசை மனஅமைதியின்மையை நிறுத்துகிறது. ராமநாம செபம் ஒரு சாத்தியத்திற்கு ஒ ரு சாதனமே. யாதேனும் கிரியா முறை அல்லது சாதனையால் நீங்கள் மனதை அகற்றவேண்டும். ராமதாஸர் நாமம் செபித்தலை மிகவும் எளிதானதாகக் கண்டார்.

Page 7
398 ஆத்மஜோதி
நாமம் அஞ்ஞானத்திரையை மிகத்திறமையாக அகற் றுகிறது. மேலும் நீங்கள் தன்முனைப்பின் ஒழிதலில் ஆன் மாவுடன் ஒன்ருகிறீர்கள் அது உபாசனை எனப்படுகிறது.
ஏதோ ஒரு சாதனைமூலம் உங்கள் அருகில் கடவுள்
இருப்பை உணர்கிறீர்கள். ராமநாமமே உங்களிடத்தில் கடவுளின் இருப்பை உணர்வதற்கு மிகளளிதான சாதனம்.
மனதை நாமத்துடன் பொருந்தச் செய்வது உங்களை நாமத்துக்கப்பாற் கொண்டு செல்லும். பின்னர் கடவுள் இருப்பு உங்களைச்சுற்றி எங்கும் உங்களுள்ளும் உணரப் படும்; ஏனெனின் அவர் சர்வவியாபகமானவர்.
பிரபுத்துவம்
(சுவாமி இராஜேஸ்வரானந்தர்)
பிரபுத்துவம் சமூக ஒழுங்கில் ஒரு சிறந்த அணிகலம்.
அது ஒரு தயாளசிந்தையும் பிறர் நலப்பற்றுமுடைய மன தின் அறிகுறி. ஒர் உதாரகுணமுடைய மனம் பெற்றிருப் பது உண்மையாகப் பிரபுத்துவமே.
பிரபுத்துவம் தெரிந்தெடுத்தற்குரியதாயிருக்க வேண் டும்; மரபுரிமையானதாய் அன்று. திறமையும் தருதிறமே உயர்வின் காரணமும் பிரபுத்துவத்தின் நித்தியத் தனியுரி மையும்.
அறமே பிரபுத்துவத்தைச் செல்லக்கூடியதாகச் செய் யும் நாணயம். வெறும் பிறப்பு கணிக்கப்படுவதில்லை. பிர புத்துவ உரிமையை உண்டாக்குவது செல்வமோ மரபோ அன்று, கண்ணிய நடத்தையும் கவர்ச்சிகரமான பெரும் மனப்பான்மையும் மனிதரை மேன்மையானவராகச் செய்
கின்றன.
வீரம் சுதந்தரம், அல்லது அறம் பிரபுத்துவத்தின் விசேடதகுதியைக் காட்டுகிறது. கெளரவப்பட்டங்கள் ஒரு வரின் மதிப்பைக் கூட்டுவதில்லை. ஆனல் ஒருவர் தன்மரி

ஆத்மஜோதி 399
யாதைப் பட்டங்களைக் கெளரவிப்பவராய் நிரூபிக்க வேண்
டும்.
ஒருவர் தனக்குத்தானே பிரபுவாக இருக்கவேண்டும். ஒருவர் தன்திறமையாற்றலில் நிலைகொள்ளவேண்டும். அப் படியான ஒருவர் பிரபுத்துவம்வாய்ந்தவர், அபூர்வமான வர். அப்படிப்பட்ட ஒருவர் உயர்தரமாகத்திரும்பப் பிறப் பதிலும் பார்க்கச் சிறப்பாக நினைவுகூரப்படுவர்.
நீங்கள் உங்களைப்பற்றி இழிவாக அல்லது நிந்திப்பாக எண்ணிக்கொண்டிருந்தால் நீங்கள் ஒருகாலும் பிரபுத்துவம் வாய்ந்தவர்களாயிருக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களையே முதன்மையாக அல்லது கடையாக எண்ணப்பழகினல் நீங் கள் ஒருபோதும் பிரபுத்துவம் வாய்ந்தவர்களா யிருக்க L DIT L L Corigis GřT.
திருத்தொண்டர்களினதும் அறிவர்களினதும் தொடர்பே பிரபுத்துவத்தின் சிறந்தபள்ளி. அவர்கள் பிரபுத்துவம் வாய்ந்தவர்களும் நன்மையானவர்களும் மாத்திரம் அன்று; ஆனல் தெய்வத்தன்மை வாய்ந்தவர்களுமே:
சிலமே சக்தி
(சுவாமி சிவானந்தர்)
சிலமே சக்தி. சீலமின்மை செய்முறைச்சாவு, சீலம் கர்மத்தால் உண்டாக்கப்படுகிறது. சீலம் இச்சையை உண்
டாக்குகிறது. சீலமே புண்ணியசீலரின் அணிகலன், சீலமே
ஒரு மாதின் உண்மையான பாதுகாப்பும் ஆபரணமும்.
உங்கள் சீலம், உங்கள் எதிர்காலம் உங்கள் சிந்தனை களாயும் செயல்களாலும் அமைக்கப்படுகிறது. நீங்கள் பெருந்தகைமையாகச் சிந்தித்தால் நீங்கள் நற்சீலத்துடன் பிறப்பீர்கள். இது இயற்கையின் மாற்றமுடியாத்விதி. இந்நிமிடம் தொடக்கமே உங்கள் சிந்தனை முறையையும் மனநோக்கையும் மாற்றுங்கள். செம்மையாகச் சிந்தித்தலை விருத்தியாக்குங்கள். தூய சாத்துவிக ஆசைகளை வைத்திருங் கள். சிந்தனை மாற்றம் உங்கள் வாழ்வை மாற்றும்.

Page 8
400 ஆத்மஜோதி
நல்வினைகளாற்றுங்கள். விழுமிய, திவ்விய சிந்தனை களை மனதிற் கொண்டு உங்கள் சீலத்தை அமையுங்கள். ஒரேயொரு தூய, திவ்விய ஆசையை பிறப்பிறப்புச் சக் கரத்திலிருந்து விடுதலைக்கு ஆசையைப் பெற்றிருங்கள். வெறுப்பை நிர்மூலமாக்குங்கள். அன்பையும் கண்ணுேட் டத்தையும் வட்டகாரமாகப் பரப்புங்கள். தூய பிரேமை (திவ்விய அன்பு) மட்டுமே வெறுப்பையும் பகைமையையும் மேற்கொள்ளும். உண்மைத்தன்னலமற்ற அன்பே உலகில் சிறந்த ஈடேற்றும், ஒன்ருக இணைக்கும் ஆற்றல். எல்லாப் பொருட்களிலும் ஆத்மனின் இருப்பைக்காணுங்கள், உண ருங்கள்.
உங்கள் மனதிற் கருதப்பட்டிருக்கும் சிந்தனைகளின தும் உங்களால் அனுசரிக்கப்பட்ட இலட்சியங்களின் மனப் படங்களினதும் தன்மையில் உங்கள் சீலம் தங்கியிருக்கிறது. உங்கள் சிந்தனைகள் இழிவான இயல்புடையதாயிருந்தால் நீங்கள் ஒரு கெட்ட சீலம் பெறுவீர்கள். நீங்கள் சிறந்த சிந்தனைகளையும் உயர் இலட்சியங்களையும் திவ்வியபடங்களை யும் மனதிற் கொண்டால் நீங்கள் ஒர் உதார குணமுடைய சீலத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு கவர்ச்சிகரமான ஆட் பண்பு பெறுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சி, சக்தி, சாந்தி முதலி யவற்றின் மையமாயிருப்பீர்கள். விழுமிய, திவ்விய சிந்தனை களை வளர்க்கும் பயிற்சியை நீங்கள் விருத்தியாக்கினல்கெட்ட சிந்தனைகள் அனைத்தும் தாமாகவே படிப்படியாகநா சமாகும்.
எங்ங்ணம் இருள் சூரியனுக்குமுன் நிற்கமாட்டாதோ அங்ங்
னம் தீயசிந்தனைகள் விழுமிய சிந்தனைகளுக்குமுன் நிற்கமாட் l-sigil.
பள்ளிக்கூடங்களிற்கற்பிக்கும் ஒழுக்கப்படிப்பினைகளிலும் பார்க்க வீடுகளிற் சிறுவர் பெறும் பயிற்சியே சிறந்தது. பெற்றேர் தங்கள் சொந்தக் குழந்தைகளின் சீல விருத்தியை பரிபாலித்தால் செழிப்பான நிலத்தில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் போன்று ஒழுக்கப்பயிற்சிகள் இருக்கும். குழந்தை கள் இளமைப்பருவமும் முழுவளர்ச்சிப்பருவமும் அடையும் போது மிகச் சிறந்த ஆடவராகவும் அரிவையராகவும் ஆகு வார்கள்.
பிதாமாதாவே தங்கள் குழந்தைகளின் சீலத்திற்குப் பொறுப்பாளர். தங்கள் பிள்ளைகளுக்கு பிள்ளைப்பருவத்தில்

ஆத்மஜோதி 401
சமயப் பயிற்சி கொடுப்பது பெற்ருேரின் பெரும் பொறுப்பு வாய்ந்த கடமை. அவர்கள் தாமே திவ்விய வாழ்வு நடத்த வேண்டும். சமய சம்ஸ்காரங்கள் பிள்ளைப்பராயத்தில் பதிவு செய்யப்பட்டால் அவை மனதில் ஆழ்ந்து படிந்து மலர்ந்து அவர்கள் வயது வந்தவர்களாகும்போது பலன் கொடுக்கும்.
அறத்தைப் பார்க்கிலும் சிறந்த சமயம் இல்லை. அறம் அமைதியைக் கொணருகிறது. அறம் சீவியத்திலும் செல் வத்திலும் பார்க்கச் சிறந்தது. அறமே பேரின் பத்திற்குவாயில் வழி. ஆகையால் எப்போதும் அறநெறியில் வாழ்கிறவர்க ளாயிருங்கள். அறமே உங்கள் அடிப்படை ஆதாரமாயிருக் கட்டும்.
ஒருவர் அபாயங்களையும் கஷ்ட்ங்களையும் உறுதியுடன் அல்லது அச்சம் அல்லது மனமயக்க மின்றி எதிர்த்து நிற்கச் செய்யும் பண்பே மனத்திண்ேமம். வீரம், அஞ்சாமை துணிவு ஒரே பொருளுள்ள பதங்கள். அது மனதின் ஒரு நேர் இயல்பு. உலகியல், ஆன்மீக முன்னேற்றத்திற்கு இக்குணம் மிகவும் அத்தியாவசியமானது. ஒரு கோழை இப்பூதவுடலை உண்மை யாகவிட்டு நீங்குமுன் பல தடவை சாகிருன் நேர்மையும் நீதியும் மனத்திண்மத்துடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. போர்த்தறுவாயில் உடல் வீரம்காட்டிய ஆணுல் வாழ்க்கைக் கோட்பாட்டு விஷயங்களில்ஒழுக்கத்திண்மம்காட்டமுடியாத மக்கள் உள்ளனர். ஒழுக்கத்திண்மம் ஆன்மாவின் ஒரு நிலை. அது உள்ளிருக்கும் மூலமுதலிலிருந்து தோன்றுகிறது.
இன்றே கொடு, இன்னே கொடு.
(சிவானந்தர்)
கோ பூஜை, பசுவணக்கம் செய்து கொண்டிருக்கும் ராஜா விடம் பன்றியொன்று சென்று ‘நீஎப்போது என்னே வணங் குவாய்? ஓராஜாவே,, என்று சொல்லிற்று. ‘வெளியே செல், அன்றேல் நான் உன்னைக் கொல்வேன்’ என்று சொன் னர் ராஜா. 'ஓ அப்படியே, என் இறைச்சியை நீ விரும்பு கிருயென்று நான் அறிவேன். உனக்குப்பொரித்த இறைச்சி அளிப்பதற்கு நான் இறக்கிறேன், ஆயினும் நீ பசுவை வணங் குகிருய், என்னையன்று " என்று பன்றி புலம்பிற்று. 'நீ

Page 9
402 ஆத்மஜோதி
இறந்தபின் என்னைச் சேவிக்கிருய். ஆனல் இத்திவ்விய பசு
தான் வாழும் போதே அன்ருடம் எனக்கும் பால் தருகிறது.
அது தன்னலமற்ற தன்மையினதும் தருமத்தினதும் சின்னம் ஆகையால் நான் அதை வணங்குகிறேன்' என்று சொன்னர் ராஜா, நீவாழும்போதே தருமத்துக்குக்கொடு. உன் மரணத் திற்குப்பின் உன்சொத்து ஏதோஒரு தருமத்துக்குதவும் என்று மரணசாதனம் எழுதாதே. இது மறைவான தன்னலம். நீ வைத்திருப்பதைப் பங்கிட விரும்புகிருயில்லை. ஏதேனும் நீ கொடுக்க விரும்புவதை இன்றே கொடு, இன்னே கொடு.
ஆத்மனும் (தூய அறிவும்) அதன் பிரதிபிம்பமும் நுண்ண றிவும் முகத்திற்கும் அதன்பிரதிபிம்பத்திற்கும் உருக்காட்டிக் கும் முறையே ஒப்பிடப்படலாம். உருக்காட்டியில்முகத்தின் பிரதிபிம்பம் முகத்திற்கோ அல்லது உருக்காட்டிக்கோ உரிய தாகவில்லை. அது இரண்டில் ஒன்றின்தும் இயல்பன்று. ஏனெ னின் மற்றது அகற்றப்பட்டாலும் அது தொடர்ந்திருக்க வேண்டும். அது முகத்தின் இயல்பன்று. ஏனெனின் அது உருக்காட்டியைப் பின்பற்றுகிறது. மேலும் உருக்காட்டியி ராது முகம் அங்கு இருப்பினும் அது காணப்படுவதில்லை. அது உருக்காட்டியின் இயல்பன்று, ஏனெனின் முகம் இல்லாத போது உருக்காட்டி அங்கு இருப்பினும் அது காணப்படுவ தில்லை. அது இரண்டினும் இயல்பன்று. ஏனெனில் தகு தியற்றதாக இரண்டும் வைக்கப் பட்டிருக்கையில் அது காணப்படுவதில்லை. பிரதிபிம்பத்தின் போலித்தன்மை அவ்வகையானது. அவ்வாறயின் ஒரு வின எழுகிறது; கூடு மாறும் வாழ்க்கை நிர்விவகார ஆத்மனுக்கோ அல்லதுபோலி யான பிரதிபிம்பத்திற்கோ அல்லது உணர்ச்சியில்லாதபொரு ளாகிய தன் முனைப்பிற்கோ உரியதாக முடியாதாதலின் யார் அதனை அனுபவிப்போன்? கூடுமாறும் நிலை ஆத்ம-அநாத் ம விவேகம் இன்மையால் அமைந்த மயக்கமாயிருக்கட்டும் என் பதே பதில். அதுஒரு கயிற்றரவு (ஒரு கயிற்றை பாம்பென்று தவருக விளங்கிக் கொண்டது) போன்று எப்போதும் நிர்வி கார ஆத்மனின் ஒரு போலி இருப்பை வைத்திருக்கிறது.
- ஆதிசங்கரர்.
எங்கு வெறுப்புண்டோ அங்கு நான் அன்பை விதைப் பேணுக! எங்கு தீங்கு செய்கை உண்டோ அங்கு மன்னிப்பு

ஆத்மஜோதி '403
பெண்ணிற் பெருந்தக்க யாவுள?
(தி. கி. லகக்ஷமி மதுரை)
ஆம்! பெண்ணைவிட பெருமையுடையது வேறு ஒன்றும் இல்லை என்பதை பெருமையுடன் கூறும்பொழுது என் உள் ளம் நிறைவு பெறுகின்றது. "ஆவதும் பெண்ணுலே உல கம் அழிவதும் பெண்ணுலே' என்னும் பழமொழிக்கொப்ப உலகம் என்று ஒன்று இருப்பதே பெண்ணுலேதான். பெண் னில்லை என்ருல் உலகமும் இல்லை. ஆம் இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கும் சக்தி பெண்ணல்லவா? இதுமட்டுமா பூமாதேவியார் அவளும் பெண்ணே. மனிதன் மற்றும் உயிர்ப் பிராணிகள் எல்லாம் உயிர் வாழ்வதற்கு நீரை அளிக்கும் நதி பெண்ணல்லவா? உண்ணும் உணவையும் மற்றும் பொருள்களையும், லசஷ்மியாகவல்லவோ கொண்டா டுகிருேம். இது மட்டுமல்ல உடலுக்கு உயிரூட்டும் உணவு மட் டுமென்ன மனிதனுக்கு வேண்டிய அறிவையும் கொடுப்பது யார் ஸரஸ்வதி அல்லவா? இதை எல்லாம் பார்க்கின்ற பொழுது பெண் எத்தகைய உயர்வுடையவள் என்பதை தெரிந்து கொள்கிருே மல்லவா! இவர்கள் எல்லாம் பெண் தெய்வங்கள் ஆகையினல் இத்தகைய அரிய பெருமைகளை
முன்பக்கத் தொடர்ச்சி
விதைப்பேனுக. எங்கு அவநம்பிக்கையுண்டோஅங்குநான் நம் பிக்கை விதைப்பேனக. எங்கு மனச்சோர்வுண்டோ அங்கு நான் ஆர்வத்தை விதைப்பேகை. எங்குஅறியாமை உண்டோ அங்குநான் அறிவை விதைப்பேனக. எங்கு துயரம் உண்டோ அங்குநான் மகிழ்ச்சியை விதைப்பேனுக. ஒ தெய்வீக ஆசி ரியரே! ஆறுதலளிப்பது போன்று ஆறுதலளிக்கப்படுவதை நான் அவ்வளவு நாடாதிருக்க அருள்க. புரிந்துகொள்வது போல்புரியப்படுவதைநான் அவ்வளவு நாடாதிருக்க அருள்க. நேசிப்பதுபோல் நேசிக்கப்படுவதை நான் அவ்வளவு நாடா திருக்க அருள்க. ஏனெனின் கொடுப்பதினலேயே யாம்பெறு கிருேம், மன்னிப்பதினலேயே யாம்மன்னிக்கப் படுகிருேம். சாவதினுலேயே யாம் நித்திய வாழ்வைப் பெறுகிருேம்.
-St Francis of Assisi

Page 10
4 ()4 ஆத்மஜோதி
உடையவர்களாக உள்ளனர். ஆனல் மனிதகுலத்தில் உதித்த பெண்களாகிய நம்மால் என்ன பெருமை உண்டு என்று கேட்போமால்ை, கட்டாயம் பெருமை உண்டு என்று திட் டமாகக் கூறலாம். உதாரணமாக, நம்மைப்போன்று மனித குலத்திலே உதித்த சாவித்திரியை எடுத்துக் கொள்வோம் தனக்குக் கணவனுக வருபவர், நாடிழந்து, குருட்டுத் தாய் தந்தையருக்கு தொண்டு செய்து கொண்டு கானகத்தில் வசிப்பவராயினும் அற்பாயுள் உடையவராயிருப்பினும், அவரையே மனதால் வரித்துவிட்டதால் கணவராக ஏற்றுக் கொண்டு பலவித இன்னல்களை அடைந்ததுமல்லாமல் 'கற் பின் மகிமையினல்" தன் கணவனின் உயிரை பறித்துச் செல்லும் யமனை விடாமல் துரத்திச்சென்று தந்திரமாக அவனிடம் பிள்ளை வரம் பெற்று, தன்னுடைய தவறை உணர்ந்த யமன் சத்தியவானுடைய உயிரை திரும்ப அளிக்க வெற்றியுடன் திரும்பிய சாவித்திரி யார்? மானிட பெண் னல்லவா? ܬܠ لہ۔ ആം
நடக்கமுடியாத தன் கணவரை கூடையில் சுமந்துவர கூடை கழுமரத்தில் இருந்த ஆணிமாண்டவ்யர் மேல் பட் டதும் துடி துடித்த அவர், நாளை காலை சூரிய உதயமான தும் உன் கணவன் உயிர் துறப்பானுக, என்று சாபமிட சூரியன் உதித்தால்த்தானே என் கணவர் இறப்பார். சூரி யனே உதிக்காமல் போகக் கடவது என்று சொல்ல கற்பின் மகிமையினுல் சூரியனும் உதிக்கவில்லை. ஆஹா கற்பின் பெருமைதான் என்னே?
அத்திரிமகரிஷியின் பத்தினியாகிய அனுசூயா தேவி அரசகுமாரியாக இருந்தும் தன்னுடைய சுகபோகங்களை தியாகம் செய்து, பட்டாடை ஆபரணங்களையும் ஒதுக்கி, அத்திரிமகரிஷியை மணம்செய்துகொண்டு அவரோடு தவ வாழ்க்கையை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டாள். இவ ளுடைய கற்பின் பெருமையை சோதிக்க எண்ணி வந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் தன் கற்பின் பெரு மையினல் குழந்தையாக மாற்றினுள். (இந்தமூவரும் ஒன்று சேர்ந்த ஒருவரே மூன்று முகமுடைய தத்தாத்ரேயர் என்ப வர்) இப்படியாக கற்பின் பெருமையை கூறிக்கொண்டே போகலாம்.
திருவள்ளுவரின் மனைவியாகிய வாசுகி அம்மையார் கற் பிற் சிறந்தவராவர். கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருக் கும் பொழுது கணவன் அழைக்க கயிற்றை அப்படியே விட்டு விட்டு ஓடிவந்தாள். கணவனுக்கு வேண்டிய வேலைகளை

ஆத்மஜோதி 405 முடித்து விட்டு மீண்டும் கிணற்றுக்கு வர, விட்டுவந்த படியே கயிறு தொங்கிக் கொண்டிருந்தது, கற்பின் மகிமை யில்ை கயிறு கிணற்றில் விழவில்லை. ஒருதினம் ஒரு சன் யாஸியானவன் பிசைவுக்காக திருவள்ளுவர் இல்லத்திற்கு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் அவர்கள் தன் கணவருைக்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்கள் ஆகையினல் பிகூைடியிடுவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது சன்யா சிக்கு கோபம் உண்டாகிவிட்டது. கோபத்துடன் இத்தனை நேரம் காக்கவைத்துவிட்டாயே என்று முறைத் தார், உடனேயே அம்மையார் அவர்கள் ஸ்வாமி ஏன் கோபிக்கிறீர்கள் என் கணவருக்கு தொண்டுசெய்து கொண் டிருந்தேன் ஆதலால் சிறிது நேரமாகிவிட்டது கோபிக்கா தீர், கொக்கென்று என்னையும் நினைக்காதீர் என்று கூறவும் சன்யாசிக்கு ரொம்பவும் ஆச்சரியமாக போய்விட்டது. சிறிது நேரத்திற்கு முன்னல் காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி இந்த அம்மையாருக்கு எப்படித்தெரியும் என்று!! இந்த சன்னியாசி காட்டில் ஒர் மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கொக்கானது இவர்தலையில் எச்சம் இட்டு விட்டது. சன்யாசிக்கு கோபம் அளவுக்கு மிஞ்சி உண்டாகி விட்டது. கண்களில் அனல் பொறிபறக்க கொக்கை நிமிர்ந்து நோக்கினர். உடனேயே கொக்கு எரிந்து சாம்பலாகியது. இதையே வாசுகி அம்மையார் கேட்டார். இந்த விஷயம் வாசுகி அம்மையாருக்கு எப் படித் தெரிந்தது என்ருல்? 'கொழுநற் தொழுதெழுவாள்' என்னும் குறளுக்கொப்ப கணவனே கண்கண்டதெய்வம் என்று வழிபட்டு வந்தமையில்ை, கற்பின் பெருமையினல் எல்லா வல்லமையும் வாய்க்கப் பெறுகின்றன. இன்னும் எத்த%ன எத்தனையோ அதி அற்புதங்கள் கற்பின் சிறப்பினுல் விளகின்றன. இதையேதான் திருவள்ளுவநாயனார்.
'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண்டாகப் பெறின்' (குறள்)
என்று தெரிவிக்கிருர், ஆகவே பட்டம் வேண்டாம், பதவி வேண்டாம். இறைவனைக்கூட வணங்க வேண்டாம், தன் கணவனேயே தெய்வமாக எண்ணி அடிபணிந்து வந்தால் 'பெய்யென பெய்யும் மழை' என்பது போல நினைத்தவை நிகழச் செய்யலாம். ஆகையில்ை ஒரு பெண்ணிற்கு கற்பே ஆபரணம், கற்பே காவல், கற்பே உயிர், கற்பே எல்லாம், ஆகவே பெண்கள் எல்லோரும் கற்புக்கரசிகளாக விளங்க வேண்டுவது மிக மிக அவசியமாகும். கற்புத்தெய்வம் அருள் செய்வதாகுக.

Page 11
406 ஆத்மஜோதி
நினைந்துருகும் அடியாரை நையவைத்தாய்
| [s.
S. கந்தையா
'நினைந்துருகும் அடியாரை நையவைத்தாய்' என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரத்தில் வரும் ஒரு வாக் கியம். இவ்வாக்கியத்தை மேல் வாரியாகப் பார்ப்போர்க்கு மலைப்பு மாத்திரமல்ல ஒருவகைத் திகைப்பும் எழுவதுண்டு. என்ன! உருகி வழிபடும் அடியார்களையா ஈசன் மேலும் வருத் துகிருர் என்ற நினைவு உண்டாகும். உலக அனுபவத்திலும் பலபேர்கள் இவ்விதம் வருந்துவதையும் அத்தோடு நில்லாது கடவுளைத் திட்டுவதையும் காண்கிருேம். தீய வழியிற் செல் வோர் இலகுவிற் பொருள் தேடிச் சுகவாழ்வு அனுபவிப்பதை யும், நல்லோர் மிடைப்பட்டு அல்லற்படுவதையும் குறிப்பிட் டுக் காட்டுவதோடு, அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு கதையையும் சொல்வதுண்டு.
சந்நியாசி ஒருவரிடம் ஒருவன் போய், தான் அவருக்குச் சீஷனகத் தொண்டாற்ற விரும்புவதாயும், தன்னை அவ்வகை ஏற்றுக் கொள்ளுமாறும் அவரை வேண்டினன். பல கார ணங்களைக்கூறி அவர் முதலில் மறுத்தாலும் அவனது பிடிவா தத்தைக் கண்டு அவனை அனுமதித்தார். இருவரும் பற்பல இடங்களுக்குப் போய் வருங்காலை ஒரு தனவந்தன் வீட்டிற்கு ஒரு நாள் சென்ருர்கள். அச்செல்வந் தன் அவர்களை உபசரிக்க வேண்டிய முறையில் உபசரித்து, அன்றிரவு, அவர்கள் தனது மாளிகையில் வசதியாகத் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடு களையுஞ் செய்தான். அடுத்த நாட்காலை அவனிடம் விடை பெற்றுச் செல்லும் போது, சன்னியாசி அங்கிருந்த ஒரு தங் கக் கிண்ணத்தைக் களவாடிச் சென்ருர், அதைக் கண்ணுற்ற சீஷன் துணுக்குற்று, சிறிது தூரம் சென்றபின் சுவாமி! இவ் விதம் எங்களை உபசரித்த புண்ணியவாளனுடைய ஒரு பொரு ளைத் திருடிச் செல்வது முறையா? உண்டவீட்டிற்கு இரண் டகஞ் செய்வதல்லவாவிச்செயல் எனக் குறைப்பட்டான். அதைக்கேட்ட சுவாமி ‘'இப்படித்தான் கடவுளும் செய்கிருர் பேசாது வா' எனக் கூறினர்.
அடுத்த நாள் அவர்களிருவரும் இன்னெரு வீட்டில் தங்க நேர்ந்தது. அவ்வீட்டு எசமானே பெரும் பணம் படைத்த வன், ஆணுல் பரம உலோபி ' எச்சிற் கையால் காகமும்

ஆத்மஜோதி 407
துரத்தான்’ என்ற பழமொழிக்கு இலக்கியமாக வாழ்பவன். அவர்கள் இரவு தங்குவதற்கும் ஒரு இடம் அளிக்காது அங்கி ருந்த வைக்கோற்போரில் வேண்டுமானல் அவர்கள் படுத் துறங்கிப் போகலாமென்று கூறினன். சுவாமியும் சீஷனும் உணவும் இல்லாது இரவை வைக்கோற்போரில் கழித்து, விடி யற்காலை வீட்டு எசமானனிடம் விடைபெற்றுச் செல்லும் போது சுவாமி தான் கொண்டு வந்த தங்கக் கிண்ணத்தை அவனது வீட்டில் வைத்துச் சென்ருர், அதைக் கவனித்த சீஷன், ‘சுவாமி! இது என்ன அக்கிரமம் அப்புண்ணியவா னிடம் எடுத்துவந்து இம்மகாபாவிக்கல்லவா அதைக்கொடுத் துச் செல்கிறீர்கள்' எனத் தனது வெறுப்பையும் ஏமாற்றத் தையும் வெளிப்படுத்தினன். சுவாமி பின்னும் “இப்படிக் கடவுளும் செய்கிருர்' எனப் பணித்தார்.
இன்னெருநாள் அவர்கள் தங்கிய வீட்டின் சொந்தக்கார னுக்கு ஒரே ஒரு மகனிருந்தான். அவனுடைய மனைவி இறந்து போனுள் ஆள் அணிகளுடன் சிறப்பாக அவன் வாழ்ந்து வந்தான். சுவாமியும் சீல்டினும் போனதும் அவர்களை முறை யாக வரவேற்று, இரவு அவர்கள் அங்கு தங்குவதற்கான ஒழுங்குகளையும் செய்து முடித்த பின், சுவாமியிடம் வந்து, தான் ஒர் அவசர கருமத்தையிட்டு வெளியே செல்வதாயும் சாலே அவர்கள் புறப்படுமுன் வருவதாயும் கூறிச் சென்றன். காலே அவ்விதமே அவன் வந்து சேர்ந்ததும் சுவாமி உபசாரங் கூறி, தாங்கள் அடுத்த கிராமம் போகவேண்டியிருப்பதால் அவனது குமாரனேச் சிறிதுதுரரம் கூட்டிப்போக அனுமதிக்கும் படி கேட்டார். தலைவனைவன் வேறு ககுந்த ஒழுங்குசெய்ய முயற்+த்தாலும், சுவாமி. பையனே வரவேண்டு மென வற் புறுத்தியதால், அவ்விதம் கூட்டிச் செல்லுமாறு விடையளித் தான். சிறிது தூரம் சென்றபின் அங்குள்ள ஓர் ஆற்றில் அச்சிறுவன சுவாமி அமுக்கிக் கொன்ருர் . அதைக்க ண்ட சீஷன் பதைபதைத்து அவ்வகைக் கொடுமையை சுவாமிசெய் வது என்று பிரலாபித்தான் சுவாமியோ சிறிதும் பதற்றம டையாத திரும்பவும், 'கடவுளும் இப்படியே செய்கிருர், என்று விடை பகர்ந்தார்- அதைக் கேட்ட சீஷன் மேலும் மனங்குழம்புவதைக் கண்டு அவனுக்கு மனமிரங்கி 'சரி, இது வரை தெய்வம்செய்வதையே செய்தேன் உனக்காக இப்போது தெய்வம் செய்யாத ஒன்றைச் செய்கிறேன். தெய்வம் தனது செயல்களுக்கு எக்காரணமும் கூறுதல் கிடையாது. அதற்கு மாருக, நான்செய்தவற்றிற்குக் காரணம் கூறுகிறேன்’ எனச் சொல்லி நிகழ்ந்தவற்றை விளக்கினர்.

Page 12
4.08 ஆத்மஜோதி
முதல்நாள் நாம் தங்கிய வீட்டிற்குரியவன் ஒரு தருமசீல னே. அவனுடைய பகைவனுெருவன் பொருமை காரண மாய் அவனை அழிப்பதற்குப் பலவழிவகைகளைக் கையாண்டும் சித்தி பெற முடியவில்லை. அடுத்துக் கெடுக்கும் நோக்கத் தோடு, தக்க சமயம் வரும்போது அத்தருமவான் பாலையோ பழரசத்தையோ அதிற் சாப்பிட் டு மரணமடையக் கூடிய வகையில், நஞ்சுபூசப்பட்ட அக்கிண்ணத்தை வெகுமதியாகக் கொடுத்தான். அவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக வே அக்கிண்ணத்தை எடுத்துச் சென்றேன். அடுத்து நாம் சந்தித்த உலோபி வாழ்வதால் அவனுக்கோ அன்றி உலகுக் கோ ஒரு வகையான பயனுமில்லை. அவன் இறப்பதால் ஒரு வருக்கும் எவ்வகையான நட்டமும் ஏற்படாது. ஆகவே அக் கிண்ணத்தை அங்கு வைத்துச் செனறேன். மூன்ருவதாக எங்களை உபசரித்தவனும் ஒரு தருமவான்தான். ஆனல் தனக்கிருக்கும் ஒரே மகனுக்கு ஏராளமான செல்வத்தைத் தடி வைக்கவேண்டும் என்ற தப்பான கொள்கையால் பாவச் செயல்களிலும் ஈடுபடத் தூண்டப்படுகின் முன், அவ னுடைய ஆன்ம ஈடேற்றத்திற்குத் தடையாயிருப்பது அவ னது மகனே. அத் தடையை நீக்கவே அவன் மகனைக் கொல்ல வேண்டியிருந்தது.
இக்கதையிலோ நாயனருடைய தேவார வாக்கியத்திலோ அடங்கியுள்ள உட்பொருளை அவர்கள் சரிவரப்புரிந்துகொண் டதாகத் தெரியவில்லை. இதனைச் சிறிது ஆராய்வோம். நாவுக்கரசரும் தனது வாக்கியம் தப்பான அபிப்பிராயத்தை உண்டு பண்ணக் கூடுமென்று உணர்ந்தே, 'நினைந்துருகும் அடியாரை நையவைத்தாய்' என்பதைத் தொடர்ந்து "நில் லாமே தீவினையை நீங்கவைத்தாய்' என விரைவில் அடுத்து விளங்கக் கூறுகிருர் போல் தெரிகிறது. தீவினையாளரை ஒதுக்கி, அடியாரை நையவைப்பது அவர்களைப் பற்றியுள்ள தீவினையை உடனுக்குடன் களைவதற் பொருட்டேயாகும்.
பல பிள்ளைகள் உள்ள ஒரு வகுப்பில் சக்கட்டைப் பிள்ளை கள் பல பெரும் பிழைகள் இழைப்பினும் அவற்றைப் பொ ருட்படுத்தாது, கெட்டிக் காரப்பையன் ஒரு சிறுபிழை செய் தாலும் அவனை ஆசிரியர் உடனேயும் கடுமையாகவும் தண் டிப்பது உலக வழக்கம். அப்பர் சுந்தரருடைய சீவிய வரலா றுகளும் இவ்வுண்மையை நன்கு விளக்குவதாய் அமைந்துள் ᎧYᎢ ᎧᏡᎢ .

ஆத்மஜோதி 409
**நல்ல குருதான் நம்மை வருத்துவது
கொல்லவல்ல, கொல்லவல்ல, பொல்லா வினைபோக்க”
என்பதும் இக்கோட்பாட்டையே வலியுறுத்துகிறது. தின மும் பலபொய் சொல்பவர்கள் அவற்றிற்குரிய தண்டனை யைப்பின் அனுபவிப்பது திண்ணமாயினும், அப்போதைக்கு எவ்வித குறையுமின்றி வாழ்க்கை நடத்துவதாகக் காணப்ப டுகிருர்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சத்தியத்திலிருந்து ஒருமுறை வழுவியதற்காக இரு கண்களையும் உடனேயே இழக்க நேர்ந்தது. அப்பர் சுவாமிகளும் சமணத்திற்புகுந்து சிவசிந்தனை செய்ததற்காக சூலை நோயாற் பீடிக்கப்பட்டுப் பெரிதும் அல்லற்பட்டார்.
அடியார்கள் நைவதற்குவேறும் ஒரு காரணமுண்டு, கூடாவொழுக்கத்தில் உழல்பவர்கள் பழிபாவம் என்ற சிந்த னையே அற்றவர்களாய் ம்ானமிழந்து வாழ்வார்கள். சுத்த வெண்மையான ஒரு துணியில் ஒரு சிறு புள்ளி படினும் அது மிகத் துலாம்பரமாகத் தெரிவதுபோல், தூயவர்கள் ஒரு சிறு பிழையைச் செய்தாலும் அதனுல் ஏற்படும் மாசு பெரிதாகத் தோன்றி அவர்களை வதைக்கும். அதைக்களைவதற்கும் அவர் sqft உடனடியாகவே முயற்சிப்பார்கள். அத லுைம் அவர்கள் துன்பம் மிகுவதாகும். புள்ளி நீக்கப்பட்ட துணியைப்போல் அவர்கள் பின் துலங்குவார்கள்.
முன்கூறப்பட்ட கதையில், முதலில் நட்டமாக தோன் றும் ஒரு சம்பவம் முடிவில் நன்மை பயப்பதையும், நன்மை போற் தோன்றுமொன்று படுதீமை விளைவிப்பதையும் கல! னித்துக் கொள்ளலாம். புண்ணிய சீலனுடைய தங்கக்கிண் ணம் களவு போனது நட்டமாகத் தோன்றலாம். அவனும் அதையிட்டு மனம் வருந்தியிருக்கலாம் ஆனல் அதைக் களவு கொடுத்ததனலே அவன் உயிர் தப்பினுன் , என்பதை உய்த்துணர வேண்டும். உலோபிக்கு தங்கக்கிண்ணம் கிடை தது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்திருக்கும். அதுவே அவ னுக்கு யமனுக முடியும் என்பதை அவனே அவனைப்போன்ற வர்களோ உணரமாட்டார்கள். பிள்ளையின் மரணம் தந்தைக் குப் பெரிதும் துயர் விளைத்திருக்கும், ஆனல் அதுவே அவனு டைய ஆன்ம ஈடேற்றத்திற்குக் குறுக்கேயிருந்த தடையை நீக்குவதாயிற்று.

Page 13
40 ஆத்மஜோதி
சென்றடைவே ாம் சேவடியை!
(செல்வி. கோமதி சுப்பையா)
-சென்ற இதழ் தொடர்ச்சி
* மானிடரே', நம்முடைய பொருள், நம்முடைய மக் கள் என்று விரும்பி ஆசை வைத்து நீர் திக்குகளெல்லாம் போய்ப் பெருந்துன்பங்களை அனுபவிப்பதன் முன்னமே, தேவர் தலைவனும், யாவர்க்கும் மேலானவனும், ஒளி மிக்க சிவந்த சடையை உடைய நம்பெருமான்அமர்ந்துள்ள, எல்லா நலங்களும் கொண்ட சீர்காளியாகிய நல்ல நகரத்தை அடை யுங்கள் என்கிருர், தம்மைப் போலவே நம்மையும் செய்யச் சொல்கிருர் . யாரைக் கேட்டாலும் இதையே தான் செய்யச் சொல்கிருர்கள். அப்படியானுல் அதுதான் சிறந்தவழி போ லும், அப்படியானுல் நாம் இவ்வளவு நாளும் இன்பம் என்று கருதியது. சீ! வெறும் மாயை. சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண வஸ்துக்களினல் இவ்வுலகம் மயங்கிப் போகி றது. இதைத்தான் மாயை என்பது. இது உண்மையற்றது. ஆளுல்ை உலகம் இதுதான் சதமென நம்பி இதையே இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு மேலாகிய ஒருபொருள் உண்டு. அது தான் அந்தப் பழம்பொருள். இந்த மாயை யைத் தாண்டினல் அந்தப் பரம்பொருளே அடையலாம். ஆனல் எல்லோரும் இந்த மாய வலையிலே சிக்குண்டு மயங்கு கிருர்களேயன்றி அதற்கு மேலாம் பரம்பொருளாகிய என்னை அறிகிருர்களில்லை, என்று குறைபட்டுக் கொள்கிருர் கிருஷ்ண
பகவான் ,
'த்ரிபிர் குண மயைர் பாவை ரேபி: ஸர்வ மிதம் ஜகத் மோஹிதம் நா பி ஜானுதி மா மேப்ய பரம வ்ய யம்'
என்கிருர், என்ன கீழான மக்கள் நாம் . நம்மைப் படைத் துக் காத்த இறைவனுக்கே இரண்டகம் செய்து விட்டோம் . அவர் மனம் வருத்தமுறும் படி நடந்து கொண்டு விட்டோம். இனிமேல் செய்யவில்லை என்ருல் அவர் மன்னிப்பாரா? ஏன் மாட்டார்? தன்னை அடித்த தாயின் காலேயே கட்டிக்கொண்டு அழவில்லையா குழந்தை அடித்த தாய் உடனே அதைஎடுத்து அணைக்கவில்லையா? அப்படியே நாமும் செய்தால் நமக்கு அருள் வார். கட்டாயம் அருள்வார். வாருங்கள் சென்றடை வோம் சேவடியை!
 

ஆத்மஜோதி 41.
பூனி ராமகிருஷ்ணுஞ்சலி
-( திமிலைக்கண்ணன் )-
பேய்,பெரும் மாய்கை ச்ேசி!
பெருநர கத்தின் வாயில்; நோய் தரும் காமப் பிண்டம்
நொடிக்கொரு சிந்தை கொள்ளும் நாயினும் கடைய தோற்றம் நமனென இகழ்ச்சி கூறித் தாய்மையை, பெண் தெய்வத்தைச்
சக்தியைப் பழித்தோர் மூடர்.
மூடரில் மூடர் அம்மா!
முற்றையுந் துறந்த மூட்ர்; கூடிய காமப் பித்தாற்
குளறிய மொழியீ தன்முே! தேடினுங் காணுர் தாய்மைத்
தெய்வத்தை நிந்தை கூறி. ஒடியே உலகஞ் சுற்றி,
உள்ளொளி கண்டிட் டாரோ?
உள்ளொளி காணு மூடர்
*உண்மையை யறிந்தோ மென்று; கள்ளுரை கூறிப் பெண்ணிற்
களங்கத்தை விதைத்தா ரம்மா! வள்ளுவன் துறவறத் தின்
வாய்மையை யறியார் தம்மை உள்ளுற நினைக்குந் தோறும்
உளமெலாம் பதைக்கு தம்மா!
*அம்மை நீ! உலக மாதா,
அம்பிகை காளி, சக்தி
வெம்பகை காய்ந்த நெஞ்சின்
விளக்கமே ஞானத் தாயே!
இம்மையில் உட னிருந்து,
என்னுடை நோக்கங் காக்கும்,
தன்மமே! தாயே!” யென்று
சாரதா தனைப் பூஜித்தார்:-

Page 14
42 ஆத்மஜோதி
பூசையிற் சக்தி யானுள்,
புனிதனை மணந்த கோதை, ஆசையை அடக்கி உள்ளத
தன் பெலாஞ் சொரிந்தாள், இந்த மாசிலா வாழ்க்கை தன்னை,
மனத்தினில் நினைக்குந் தோறும் நீசரின் நெஞ்சங் கூட
நெக்கு நெக்குருகு மையா !
நெக்கு நெக்குருகி நின்ருய்
நினைவெலாம் அதுவே யாகிப் பக்குவ மடைந்தாய் உள்ளே
பரமனைக் கண்டா ப் நெஞ்சிற் துக்கமும் சிரிப்பும் தோன்றத்
துலங்கினப் பித்த ஞக. முக்குணமல மறுத்த முத்தனே!
பரமஹம்ஸ் முனிவனே! போற்றி! போற்றி!
A.
LrEGrE0LELLrEGL0GL00LLArK0LLLLL00GL0SLLSL0SLssJYLD0LL L00LLSL0LE0YL0YL0L00L0K0LL00LJ0Y00LESLLL
OS 畿瓣测赛瓣赛瓣燕燕燕燕燕燕
2 0Y0YL0Y0YL0Le0kkkkLk0kLkLMeqkLkOkLkLcekOkLkeMkkOMekOkeOOTOkOOkOkOOTOcOkOOkOkOkOkkekccOkLkcOcHMHkHS OHMkSHLHMHO
சைவ இலக்கியக் கதா மஞ்சரி
ஆசிரியர்: தேசிகமணி. கா. அருணுசலம் அவர்கள்
விலை:- ரூபா 3.00. தபாற் செலவு 50 சதம் இலக்கியங்கள், திருமுறை நூல்கள், புராணங்களில் வரும் 105 கதைகளைக் கொண்டது. இலக்கியம், சமயம் படிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இவற்றைப் படிப்பிக்கும் ஆசி ரியர்களுக்கும் சமய உட்பொருளை அறிய விரும்புவேஈருக்கும் மிக உபயோகமான நூலாகும்.
வேண்டுவோர்:- ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி
என்ற விலாசத்திற்கு 3.50 மணம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
SS2S2SK2S2S SSO3C
WFWANSYANSYA
 
 
 
 

ஆத்மஜோதி 413
திருவாதிரைத் திருவிழா தமிழர் தம் முது விழா
மட்டுநகர். ஏ. பாக்கியமூர்த்தி ஆசிரியர்
தொடர்ச்சி:-
நம் தமிழ் மக்கள் பண்டு தொட்டே இம்மை இன்பமும் அம்மை இன்பமும் கருதி இறைவனை நினைந்து பல நோன் கள் நோற்பது மரபு.
ஆதிரை முதல்வனை நினைந்து நோற்கப்படும் இந்தநோன் பிற்கு மார்கழி நீராடல், தை நீராடல், பாவையாடல், அம் பாவாடல் எனப் பல பெயர்கள் வழங்கி வந்துள்ளன. இவற் றுள் பல வழக்கிழந்து மார்கழி நீராடல் என்னும் பெயரே வழக்கில் இருக்கின்றது. இந்நோன்பைக் கன்னிப் பெண் களே நோற்பர். கன்னிப் பருவம் என்பது ஐந்து வயது தொடக்கம் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுமியர்களைக் குறிக்கும் என்பர் பெரியோர்.
பன்னிராண்டுப் பராயம் கழியாத கன்னியர்கள் அதிகா லையில் நீராடச் செல்லும் போது, அக்காலத்து நீராடச் செல் லும் இளைஞர்களும் அவர்களிடம் வந்து தழைகளையும் மலர்த் தொடைகளையும் அவர்களிடம் கொடுத்து தம்காதலை ஏதோ ஒரு வழியில் உணர்த்திச் செல்வர். இவற்றைப் பெற்ற இளம் கன்னியர் தமக்கு அவற்றைத் தந்தா ரையே கணவராக அடை தல் வேண்டும் என்பது மரபாதலின், அவரையே அடைதல் வேண்டு மென்று கற்பு நெறிநின்று தை நீராடலைச் செய்த னர் என்பதை,
'பெரும்புலர் விடியலின் விரும் பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவனென்ன இழையணி ஆயமொ டு தவி நாண் தடை இத் தை இத் திங்கள் தண்கயம் படியும்’
என்னும் நற்றிணைச் செய்யுளால் அறியக் கிடக்கின்றது.
மேலும் 'தழை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாம ரை' என்னும் முதலையுடைய குறிஞ்சிக் கலியில்,

Page 15
414 ஆத்மஜோதி
*மருளியான் மருளுற இவன் உற்றது எவன்? என்னும்
*அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங் கால்
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ?’’
என்னும் வரிகளால் 'என்னை நோக்கி என்னிடம் நீ அருளிலே யேல் தைநீராடிய தவப்பயனைப் பெறுவாயோ?’ எனத் தலை வன் தலைவியை நோக்கிக் கேட்கும் கேள்வியைக் கொண்டும் சங்க காலங்களில் எந்நோக்கத்தோடு இந்நேஎன்பு நோற்கப் பட்டதென்பது புலனுகும். மார்கழி மாதத்தில் தொடங்கி தைமாதத்தில் முடிவடைவதால் இந்நோன்பு தை நீராடல் எனப்பட்ட தென்பர்.
எனவே பண்டு தொட்டு நம் இந்திய நாட்டுக் கன்னிப் பெண்கள் நாடு தழைக்கவும், தம் காதல் நிலைக்கவும் வாழ்க் கையில் இன்புறவும் இந்நோன் பை நோற்று வந்தனர், என் பது புலணுகும்.
இவ்வாறு கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி நீராடச் செல்வதைக் கண்ணுற்ற திருவாதவூரடிகள் இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து எண்ணுரறு ஆண்டுகளுக்கு முன்னமே, நமது பிற்சந்ததியை ஆற்றுப் படுத்துவான் வேண்டி ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியாகிய அம் மையப்பரைப் பாடியும், துதித்தும், புகழ்ந்து பேசியும் திரு வெம்பாவை என்னும் செந்தமிழ்ப் பாமாலையைப் பாடி மகிழ் தார். திரும்பாவையில் உருகிய எம்பெருமான் 'பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்றல்லவா வேண்டியரு
ளினன்.
திருவெம்பாவை முதல் எட்டுப் பாடல்களும் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எருந்து ஒருவரை ஒருவர் துயில் எழுப்புவது போல் அமைந்துள்ளது. துயில் எழுந்து ஒருங்கு சர்ந்த கன்னியர்கள் மொய்யார் தடம் பொய்கை புக்கு, பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடி, ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் நற்றில்லைச்சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தனின் கழல்பாடி, எய்யாமற் காப்பாய் எமை என வேண்டி நின்றனர். இதை அடிகளார் -
“சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளாமா பாடிச்
 
 

ஆத்மஜோதி 4.
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்த மாமா பாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வஃாதன் பாதத் திறம்பா டி ஆடேலோர் எம் பாவாய்'
எனப் பாடியுள்ளார்.
மேலும் கன்னிப் பெண்கள் நம்முழுமுதற்பொருளாம்.அம்மை யப்பரையே பேசியும், புகழ்ந்தும் பாடியும் நீராடிவருவதால் தம்போன்ற அடியார் ஒருவரையே தம் மணளஞக ஏற்றுக் கொள்ள வேண்டு மென விண்ணப்பிக்கின்றனர். இதை
‘எங்கள் பெருமான் உனக் கொன்று ரைப் போங் கேள் எங்கொங்கை நின்னன் பரல்லார் தோள் சேரற்க'
எனவரும் வரிகளால் மிக அழக்ாக எடுத்தியம்பியிருப்பதை நாம் நோக்கலாம்.
வைணவ சமயத்துப் பெண்கள் கண்ணனைப் பாடித்துயில் எழுந்தும், எழுப்பியும் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன் னுளில் நீராடப் போவதை ஆண்டாள் செய்தருளிய திருப்பா வையில் நாம் காணலாம். இத் திருப்பாவையில் மகளிர் பா வை நோன்பு நோற்று பாவைக்குப் பலவகை கிரிகைகள் செய்து பாவையோடு நீராடிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கன்னியர்கள் சிறு பாவையைச்செய்து அவற்றிற்குத் தீப தூபங்கள் காட்டி, நெய்வேத்தியம் செய்து பூசித்து அப்பா வையோடு சேர்ந்து நீராடுவதால் பாவையாடல் என வழங் கப்பட்டது. இந்நோன் பின் முக்கிய நோக்கம் கண்ணன் கழல்பாடி உலக மாயைகளினின்று உய்ந்து அவனடி சேர்த லும், நாட்டில் மாதம் மும் மாரி பொழிந்து நாடு செழிக்கவும் செந்நெல் விளேயவும் பசுக்கள் குறைவின்றிப் பால் சொரிய வும் வேண்டு மெனவும் கண்ணனை வேண்டுதலாகவும் அமைந் துள்ளன. இதை,
' வையத்து வாழ்வீர்கள்! நாமும் நம்பா வைக்கு
செய்யும் கிரிகைகள் கேளிரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணுேம் பாலுண்ணுேம் நாட்காலே நீராடி

Page 16
416 ஆத்மஜோதி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றேதோம்
ஐயமும் பிச்சையும் ஆத்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்”
என்றும்,
"ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடில்ை தீங்கின்றி நா டெல்லம் திங்கள் மும் மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்டடுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பா வாய்'
என்றும் பாடியுள்ளமையால் இந் நோன்பின் சிறந்த பரந்த நோக்கம் புலனுகின்றது. -
இந்த் நோக்கத்தையே மாணிக்கவாசகப் பெருந்தகை யும், 'மேகமே கார்காலத்திற்கு முன்னே இக்கடலைக்குடித்து அதன் நீரைக் குறையச் செய்து, மேல்வானில் எழுந்து, எம் மையுடையாளாகிய உமையம்மை திருமேனிபோல நீலநிறத் தோடு விளங்கி, அவளது சிற்றிடைபோல மின்னல் விடுத்து விளங்கி, எங்கள் பெருமாட்டி திருப்பாதங்களிலுள்ள அழகிய பொன் சிலம்புபோல முழங்கி, அவளது திருப்புருவம் போல வானவில் வீசி, அம்மையைவிட்டு நீங்கப் பெருத எமது அப்ப ணுகிய சிவபெருமான் பிறரினும் முற்பட்டும் அவன் அடியார் களுக்கும், அவள் அடியார் ஆகிய நமக்கும் முந்திப் பொழி
கின்ற இனிய அருளைப்போல நீரினைப் பொழிவாயாக. என்
னும் கருத்துப்பட,
'முன்இக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந் தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடி மேற்
பொன்னஞ் சிலம் பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோ மான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்'
 

ls
ஆத்மஜோதி 417
எனப் பாடியருளியுள்ளார்.
இங்கு மழையை இறைவன் திருவருளுக்கு உவமையாகக் கூறியுள்ளமை உய்த்து உணரற் பாலது. இதனுலன்ருே தெய்வப் புலவர் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தின் பின் வான் சிறப்பை தன் அருமறையின் பாயிரத்துள் வைத்தார். ‘மாமழை போற்றுதும் மாமழைபோற்றதும்' என்றுபோற் றுகிறது சிலப்பதிகாரம். 'மழை தொழில் உதவ' என வியக்கிறது மதுரைக் காஞ்சி இதையே,
'வெம்பாதாக வினில வரைப் பென
அம்பா வாடலினுய் தொடிக் கன்னியர்'
எனப் பரிபாடல் பாடுகின்றது.
எனவே பரமனடியே பாடிப், பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடி, தங்கொங்கை அவன் அன்பர் தோள் சேர்ந்து நாடு செழிக்க, உழவு நடைபெற, மனையறம் காத்து, மக்களைப் பெற்று, விருந்தோம்பி, பொருளிட்டி, அன்பும் அறனும் செய்து, துறவறம் பூண்டு, சுந்தரேசரது இரு பாதப் போது களையும் சரணடைந்து இவ்வுலகவாழ்விலேயே பேரின்பத்தை அனுபவித்தனர் நம் பண்டைத் தமிழ் மக்கள்.
இத்துணை அரிய பெரிய தெய்வக் கொள்கை நம்மிடை இருந்தும் சிலர் அதை வெறுப்பது வியப்புக்குரிய விடயம்.
அன்பர்கள் நம் பண்டை வாழ்க்கையை ஆய்ந்துபார்த்து அவ்வழியைப் பின்பற்றிப் பேரானந்த மடைவார்களாகுக.
*வோற்றி அருளுகநின் ஆதியாம் பாத மலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றி யெல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல்லாவுயிர்க்கும் போகமாம்பூங்கழல்கள் போற்றி யெல்லாவுயிர்க்கும் ஈரும் இணையடிகள்
போற்றி மால் நான்முகனுங் காணுத புண்டரிகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்'
-முற்றும்

Page 17
48 ஆத்மஜோதி
புத்தக விமர்சனம்
வேதசாதனம்
கவியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றியது. வெளியிட்டோர்; யோக சமாஜம், அடையாறு சென்னை 20, விலை ரூபா , 1-50,
இஃது ஒர் அருமையான சிறிய நூல். காலத்தின் தேவை யைப் பூர்த்தி செய்யும் நூல். நமது மிகப் பழைய புராதன சனதன தருமத்தின் வேர் வேதங்களில் அடங்கியுள்ளது. அந்த வேதங்களின் சாரத்தை இந்த நூலில் காணலாம்.
வேதம் கடல்போல் விரிந்துள்ளது. அதின் பொருளே பல சமயங்களாக உலகெங்கும் பரந்துள்ளது. வடமொழியி லுள்ள வேத மந்திரங்களிலிருந்து மனித வாழ்வில் அடிக்கடி பயன்பட்ட அறிவுச் சுடர் மணிகளைத் தெரிந்தெடுத்து, வட மொழிப் பயிற்சியில்லோரும் படித்துப் பயன் பெறக் கூடிய முறையில், தமிழ் எழுத்துக்களில் அவற்றின் மூலச் சுலோகங் களையும், தமிழ் அகவல் மொழிபெயர்ப்பில் கருத்துக்களையும் மிகவும் தெளிவாக விளக்குகிருர் சுத்தானந்தர். அச்சிடப் பணம் உதவியவர் மலேசியாவில் கோலாலம்பூரில் வசிக்கும் சமயப் பிரசாரகராகும் அன்பர் 8. பொன் ஃ07யா அவர்கள்.
*வேதவிளக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழ் நூலின் முன்னுரை அழகாக அமைந்துள்ளது. அதில் இந்திரன், அக் கினி, வருணன், சூரியன் முதலாய வேத தேவதைகள் ஒரே பரம் பொருளின் பல தன்மைப் பெயர்கள் என்ற உண்மை தரப்பட்டுள்ளது.
சர்வோதய வாழ்வைப்பற்றிஇன்று பலர் பேசுகிருர்கள். பத் திரிகைகளில் கட்டுரைகள் வெளிவருகின்றன; ஆச்சாரியவினே பா, ஜயபிரகாஷ் நாராயணன் போன்றபெரியார்கள் அதற் கே தமது வாழ்வை அர்ப்பணஞ் செய்துள்ளார்கள்; ஆணுல் இந்த சர்வோதய மந்திரம் இந்தியாவில் பல்லாயிரம் வரு டங்கட்கு முன் பரநாதப் பண்ணுெலி எழுப்பியதைப் பலர் پوءِ அறியார்கள். இந்த நூலின் 33ம் பக்கத்தில் அதைப் பார்க் EEGR): it -
 
 
 

ஆத்மஜோதி 49
மித்ரஸ்ய மா சக்ஷாஷா ஸர்வாணி பூதானி ஸமீகஷந்தாம் மித்ரஸ்யாஹம் சகஷாஷா ஸர்வாணி பூதானி ஸமீகேஷ் மித்ரஸ்ய சகஷ்" ஷா ஸமீகஷாமஹே/
இதன் அரிய கருத்தை கவியோகியார் விளக்கும் இனியனளிய நடையையும் பாருங்கள் ;-
உயிரெலாம் எனே நட்புரிமையோடு காண்க உயிர்களை நான் நட்புரிமையோடு நோக்குக ஒருவருக் கொருவர் நட்புரிமை புரிகவே!
இதுபோன்ற மணிவாசகங்கள் 302 நாற்பத்தாறு அத்தியா யங்களாகப் பிரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. நூலைலாங்கி வாசித்து இன்புறுக!
6Élfbsr || JS மஹோற்சவ விளக்கம்
ஆக்கியோன்:- ஆசிரியர் பிரம்மறி. க. வை. ஆத்மநாதசர்மா வெளியிட்டோர்: இலங்கை பிராமண சமூக சேவா சங்கம் விலை ரூபா. 3-00
இஃது இலங்கை பிராமண சமூக சேவா சங்கத்தினுல் அச்சிட்டு வெளியிடப்பட்ட இரண்டாவது நூல். விநாயகப் பெருமானைப்பற்றி அமைந்திருப்பினும், நமது சைவ நிலையங் களில் நடைபெறும் ஏனைய மஹோற்சவங்களின் நுண்ணிய தத்து வங்களும் உட்கருத்துக்களும் இந்த நூலில் விளக்கம் பெற்றுள்ளன. இந் நூலாசிரியரை எமது வாசகர்கள் நன் கறிவார்கள். அவர் வடமொழி மூல நூல்களையும் பத்ததி
களையும் நன்கு ஆராய்ந்து எளிய நட்ையில் இதனை இயற்
யுள்ளார்.
ஆலயங்களில் செய்யப்படும் வைதிக சைவக்கிரியைகளின் கருத்துக்களை உணராமை காரணமாக, பலர் இன்று நாஸ் திகப் பிரசாரத்தில் ஈடுபடுகிருர்கள். அவர்களின் மன இரு ளைப் போக்க இதுபோன்ற ஞான நூல்கள் பல இன்று அத்தி யாவசியமாகத் தேவைப்படுகின்றன. இப் பெருந்தேவை யைப் பூர்த்தி செய்ய அரும்பணி ஆற்றும் திரு. ஆத்மநாத சர்மா அவர்கட்கு சைவ உலகு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

Page 18
420 ஆத்மஜோதி
சைவாகம வித்தியாசாலைகளில் பயிலும் மாணவர் ஒவ்வொரு வர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது. அது மாத்திர மன்றி, திருக்கோயில்களில் திருவிழாச்செய்வோர், திருவிழாப் பார்ப்போர் எல்லோரும் இதனைக் கற்பதால் அநேக உண்மை களை உணர்ந்து கடவுள் வழிபாட்டின் பலாபலனை எய்தலாம்.
பிராமணச் சமூக சேவா சங்கம் இந் நூலாசிரியருக்கு ஊக்கம் அளிப்பது கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைகின்ருேம். இதுபோன்ற நூல்களை அவர்மேலும் மேலும் இயற்றுவதற்கு இவ்வித ஆதரவு பெருந்துணையாகும். சைவ நன்மக்கள் தங் களாலியன்ற நன்கொடைகள் மூலம் இச்சிவத் தொண்டை ஓங்கிவளரச் செய்வார்களாக,
-க. இ.
qMLM TM LM LMLS LMLLMe MLSLTL LM TMLM LMLL T TMLMLM LMLMLSL LMS LL LL LMLMS MS eeeS TMLS LMLMLS LMSLMTMLMSLMLMLMLMSLMS
தேச பக்தி
(காந்தி)
நான் தேச பக்தியையும் மனித பக்தியையும் ஒன்ரு கவே மதிக்கின்றேன். மனிதனுகவும் மனிதப் பண்புடைய வணுகவும் உள்ளவனே தேசபக்தன் ஆவான்.
பிறநாட்டாரைக் கெடுத்து வாழும் தேசபக்தி தேச பக்தியன்று. தேசத்துக்கும் தனக்கும் ஒரே சமயத்தில்
சேவை செய்ய முடியாது. ஆதலினல் தேச சேவை செய்ய விரும்பினுல் தேச நிலைமைக்கு ஏற்றவாறே ஜீவியத்தை
நடத்திக் கொள்ள வேண்டும்.
தே சசேவைக்கும் மனிதசேவைக்கும் முரண்பாடு கிடை யாது. தேசசேவை மூலமே மனித சேவை செய்ய முடி யும், தேசபக்திக்கும் மதபக்திக்கும் முரண்பாடிருக்க நியா யமில்லை. இரண்டுக்கும் தேவையானவை நல்ல எண்ணமும் நல்ல நடையுமேயாகும்.
SqMSTS LTMLSSLMLL eeeL LeAeLeS LSLLLS LLLLLLTALSL TTLLTLS TT STMLS LLTLS LSLMMALLLS LTMMLL LMTLLTLLLLLLLLSLLLLLSLLLTLLLLLLLLSLLLMTL LLTLLeTLLLLLTLLLSLLSLLLSSTSS
پروژ{
 
 

)
சந்ததங் தொழுவேன் சேர் சரஸ்வதியே!
- சங்கீத பூஷணம் அ. இ. ஏரம்பமூர்த்தி -
வெண்டா டிரையினில் விருப்புட னமர்ந்து 6T6õis T6 TGITT 4, 26), 2.mr ஈந்திடுந் தாயே புராணஇடு கரமே புனிதமென் பாதமாம்
மாகத் திகழனி uழகுற நான்மறைக் கருத்தினத் தழுவிய மூவறு தரும நூல் வயிறுமாய் வழுவா துயிர்கள் வாழ்ந்திட முறையே அன்பர்க் கென்றுமே யகநெகிழ்ந் தூட்ட
இன்னிசை செய்யுளு மிரண்டு தனங்களாய் மாலேயுங் கிளியும் மதுசொரி கமலமுஞ்
சிலமிகு மேடுஞ் செகந்தொழ வேந்தும் நாற்கரங் கொண்டாய் நால்வே தமவை
நீற்றெளி யிளம்பிறை நுதலினில் விளங்கப் பிரமவித் தைமுகம் பிரியமாய் மலரவே #5U6ĩFTỉ 116) ghi [Ttỉi தந்திட முறுவல் நாசியில் முத்தணி நல்லொளி வீசிடப் பாசமாய்ப் புலவோர் டாடுங் கவிகளை " அணிநிறை காதுகள் ஆவலாய்க் கேட்கக் கணிதமோ டிலக்கணங் கருணைக் கண்களாய் அபயமென் றடைந்தோ ரிவை பெற ஈவாய் உபநிடதஞ் சிரமாய் உலகெலா த சிறக்க ஓங்கார யாழொலி யெங்குமே ரவப் பூங்கொடி யனையாய் பளிங்குரு வதணில் வெண்பட் டிலங்கிட வருகவே நா வினில் நண்ணினர்க் கெளியாய் நசையெடு சிறியேன் உன்னடி தொழுதே னுளநிறை மயிலே
அன்னவா கனியே அன்பே யமுே
முத்தமிழ்ப் புலமை மகிழ்ந்தென்க் வேய்
− ל" வித்தைக் கரசியே வாணிநா மகளே சிந்தா தேவியே சாரதா
ஈந்ததந் தொழுவேன் சேர்சரஸ் இ:ே

Page 19
“ATH MAJOTHI” Registered at the G.
சந்தா நேய அன்புடையீர்!
எதிர்வரும் கார்த்திகை மாதத்தில்
ஆரம்பமாகிறது. புதுவருடச் சந்தான மாறு அன்புடன் வேண்டுகின்ருேம்.
இந்தியாவிலுள்ள சந்தாநேயர்கள் R, வீரசம்பு, சம்
அரிசிப்பாளையம் என்ற விலாசத்திற்கு அனுப்பி GÖDo தருவீர்
ஆத்மஜோதி நிலையம்-ந
ஆத்மஜோதி நிலை
ஆத்மஜோதி மலர் (1963 சைவ இலக்கியக் கதா மஞ்சரி ஆத்மநாதம் தீங்கனிச் சோலை பாட்டாளிபாட்டு திவ்ய ஜீவன சங்க வெள்ளி விழா கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் மார்கழி மாதப் பாடல் கதிர்காமப் பதிகம் செல்லச்சந்நிதி பாடல் கந்தரனுபூதி அறிவுரைக் கதைகள் நித்திய கருமவிதி கதிரை மணிமாலை
தபாற் செ
அச்சிடுவோர் - ஆத்மஜோதி அச் அச்சிடுவிப்போர் - ஆத்மஜோதி வெளியிட்டதேதி: 17-9-64.

P.O. as a Newspaper. M.L., 59/300
جیسی چیمAحمحمخصیجیA=بحیجی محAیم
ர்களுக்கு
ஆத்மஜோதியின் 17ஆவது ஆண்டு வ 15-10-64க்குள் அனுப்பிவைக்கு
தமது சந்தாவை வழக்கம்போல் பு இன்டஸ்ரீஸ், b , G33 Gob-9.
ப்பதோடு இவ்விடமும் அறியத்
5 6TIT 35 .
வலப்பிட்டி, (ஒலோன்)
ப வெளியீடுகள்!
2.00
3.00
3.00
2., 50
1.50
T BĐ60ĩ 25 30
30
20 25 , 15 25
65
25
50
சகத்தினர் நிலயத்தினர்