கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.11.16

Page 1
到 $
[F 沥 研 實 禹
 

****→********************• • ••••••••••••••屬< < ••*> |� . ) }� �|- ?剧 | ()渝 ()■ �Š } � �o
●梁 %| 원 |-§- �第 Q
&
துணு ஜனு இது அ.அ.இ.அ அ அ அ அ அ

Page 2
Y MLeSeiMMMMeMMMMMMMeMYMe MMeLeiM MMLL LMM TiMMMLL LeeeLiYeYSYMMLMLSeLYYYYYY Y00S0SSMSL MLSMSMTYYz YY i
ଝ O
ம ஜோதி : i C i (ஒர் ஆத்மீக மாத வெளியீடு) i
命令鲁令令令令令令令令令命令命令令令令令令令命令令令令令令令令令今令吟今今令●一命令令令令拿→令令*********→
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே .
சுத்தானந்தர்
ஜோதி 17 13 குரோதி இரு கார்த்திகை மீ" 1உ (16-11-64 & சுடர் 1
பொருளடக்கம்
கண்ணகை அம்மன் தோத்திரம் கண்ணகி கதை 2. காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் 3 தேவி துதி 9 அக்கம் மாதேவி வரலாற்றுச் சுருக்கம் 3. நல்லூர் நாவலர் 15 ༣ இராஜயோகமும் ஹடயோகமும் 16 பிரிந்தவர் கூடிஞர் 9 - சாதகர்களின் கவனத்திற்கு 22
10 அமரருள் அமரர் 24 * 11. அத்தனின் அருள் 30
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75. வருட சந்தா ரூபா 3.00
தனிப் பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் ஊ திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர்  ைதிரு. நா. மூத்தையா "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி (சிலோன்) 4 )
 
 

கண்ணகை அம்மன் தோத்திரம்
கொப்பிட்ட குழையும் இளை ஒப்பிட்ட நயனமும்
கொஞ்சு பைங்கிளி வதனமும் குலவு மரகத கலப மயிலினிகர் சாயலும்
குங்குமத் திலக நுதலும் துப்பிட்ட இதழு மணி நகையு மதிவதனமும்
துணைகள் பரிபுரை சரணமும் தொழுதெனது மனதுருகி உனது பத தரிசனைகள்
சுகம் பெறுவ தெந்நாளோ மைப்பிட்ட முகிலரவு நந்தாவனந் திகழ
மலர்வனங் கழனி சூழ வளர் செந்நெல் மிகவிளைவு காரைநகர்
வந்த நந்தா விளக்கே அப்பிட்ட கங்கையணி சங்கரனுர் பங்கினில்
அமர்ந்த மங்கல கவுரியே அமுதரசமுறு துவச மதிவதன அழகில்நிறை
அமல கண்ணகை யம் மனே.
- பழைய பாடல் ஒன்று

Page 3
ஆத்மஜோதி
கண்ணகி கதை
அலம் வந்த மதிமுகத்தில் சில செங்கயல் நீர் உமிழ, பொடி ஆடிய கருமுகில்தன் புறம் புதைப்ப, அறம் பழித்து; கோவலன், தன்வினை உருத்து குறுமகளுற் கொலை யுண்ண; காவலன் தன் இடம் சென்ற கண்ணகி தன் கண்ணிர் கண்டு மண்ணரசர் பெருந் தோன்றல் உள்நீர் அற்று, உயிர் இழந்தமை மா மறையோன் வாய்க்கேட்டு; மாசாத்துவான் தான்துறப்பவும், மனைக்கிழத்தி உயிர் இழப்பவும் எனப் பெருந்துன்பம் எய்தி காவற் பெண்டும், அடித் தோழியும் கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி சேயிழையைக் காண்டும் என்று மதுரை மாநகர் புகுந்து முதிராமுலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த இடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும் வையை ஒருவழிக் கொண்டு; மாமலை மீமிசை ஏறி கோமள் தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர்ம் ன்.
சிலப்பதிகாரம்

ஆத்மஜோதி 3 காரைதீவு - கண்ணகை அம்மன் கோவில்
- ஆசிரியர் -
காரேறு மூதூர் என்னும் சிறப்புப் பெயரை உடையது, இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காரைதீவாகும். வடமாகாணத்திலும் காரைதீவு என்னும் பெயருடன் ஒரு தீவு உண்டு. அது யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் சேர்க்கப் பட்டு காரைநகர் என்னும் பெயருடன் தற்போது விளங்கு கின்றது. ஆகவே காரைதீவு என்பது கிழக்கு மாகாணத்திற் கே சொந்தமாகிவிட்டது. இந்த ஊர் மட்டக்களப்பிலிருந்து இருபத்தேழு மைல் தூரத்தில் உள்ளது. காரைதீவு என்ற தும் எமது கண்முன்னே முதலில் தோற்றம் அளிப்பவர் சுவாமி விபுலானந்த அடிகளாராகும். சுவாமிகள் தமிழுக் கும் சமயத்திற்கும் செய்த தொண்டுகள் அளப்பரியன. கதிர் காமம் தொடக்கம் கயிலைவரையிலே சுவாமிகளுடைய புகழ் பரவியிருந்தது. இத்தகைய சுவாமிகளை ஈன்றளித்தபெருமை காரைதீவுக்குரியதாகும்.
காரைதீவின் பழமைக்கும் பெருமைக்கும் முக்கிய கார
ணம் அங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கண்ண. .ז י *
கை அம்பாளாகும். அம்பாளின் வரலாறு அற்புதம் வாய்ந் தது. இலங்கையில் உள்ளவர்கள் காசியையும் சிதம்பரத்தை யும் தரிசனை செய்தால்தான் வாழ்வின் நோக்கம் பூர்த்தியா கும் என்று கருதுவது போன்று இந்தியாவில் உள்ளவர்களும் கதிர்காம தரிசனை கிடைத்தால்தான் தங்கள் வாழ்வு பயன் பெற்றதாகும் என்று கருதி வந்தனர்.
மதுரையிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு அம்மையார் ஒருவர் புறப்பட்டார். அம்மையார் தேவி உபாசகர். ஆத லால் தேவியின் திருஉருவம் ஒன்றைத் தம்முடன் கொண்டு வந்தார். அது தேவியின் திருமூர்த்தங்களில் ஒன்ருகிய கண் னகை அம்பாளுடையதாகும். தங்குமிடங்களில் அம்மையார் திருஉருவ வழிபாடு ஆற்றியே உண்பது வழக்கம். தேவியின் உதவியுடனேயே அம்மையார் யாத்திரை ஆரம்பித்தார்.
யாழ்ப்பாடி என்ற யாழ்ப்பாணனுடைய மரபிலே வந்த யாழ்ப்பாண அரசருள் ஒருவன் குணபூஷணசிங்கையாரியன். இவனுடைய காலத்திலேதான் யாழ்ப்பாணத்தில் கண்ணகி

Page 4
4 ஆத்மஜோதி
கோயில்கள் உண்டாயின என்று யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகின்றது. வன்னியர்களின் ஆட்சி உச்சநிலை பெற்றிருந்த காலத்திலே காரைதீவுக் கண்ணகையம்மன் கோவில் தோற் றியது என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகின்றது.
கதிர்காம யாத்திரைக்காக மதுரையிலிருந்து புறப்பட்ட அம்மையாரின் பெயர் தேவந்தி என்பதாகும். இவர் 500 வருடங்களுக்கு முன் சேரநாட்டிலிருந்து அரசாண்ட சேனப திராயன் என்பவருடைய மகளாராகும். அம்மையார் தமது மகள் சின்னநாச்சியாருடனும் பரிவாரங்களுடனும் யாத்தி ரை செய்தார். அம்மையார் வைத்துப் பூசித்த திருஉருவம் பொன்னலானதாகும். காரைதீவில் இப்போ கண்ணகை னகையம்மன் கோவில் இருக்கும் இடத்திற்குப் பக்கத் தில் ஒருவேப்பமரம்இருந்தது. அம்மரத்தின் கீழ் அம்மையார் தங்கினர். சேரநாட்டில் அரசகுடும்பத்தினர் குலதெய்வ மாக வணங்கிய கண்ணகி அம்பாளின் பொற் திருவுருவமே அவர் கொண்டு வந்த திருவுருவமாகும்.
கண்டியை அரசுசெய்த தமிழரசர்களுக்குக் கீழே பலவன் னிமைகள் சிற்றரசர்களாக இருந்து அரசாண்டனர். அந்த வன்னியர்களுள் ஒருவர்தான் பூபா லகோத்திரத்து வன்னி யன் என்று அழைக்கப்பட்டார். இவர் மடத்துப்பிட்டி என்ற இடத்தில் இருந்து அரசாண்டு வந்தார். இவரது குலதெய் வம் இன்றும் மடத்தடி மீனுட்சி அம்பாள் என்ற பெயருடன் விளங்குகின்றது. அக்காலத்து அரசர்கள் கிராமமக்களின் தேவைகளை அறிந்து நீக்குவதற்காக காலத்திற்குக் காலம் நகர் வலம் வருவது வழக்கம். பூபாலகோத்திரத்து வன்னி யரும் ஒரு முறை யானையில் வந்தார். வந்த யானை காரைதீ வுக்குச் சிறிது தூரத்திலே ஒருவாய்க்காலோரத்திலே படுத்து விட்டது. பாகர்கள் எவ்வளவு முயன்றும் யானை எழும்ப
வில்லை.
அரசன் தனியாகச் சிறிது தூரம் நடந்தான். பூஜைமணி ஒலி கேட்டது. அத்திசை நோக்கிச் சென்ருன், அம்மையார் ஒருவர் பூஜை செய்வதைக் கண்ணுன்ருன். தானும் அப் பூஜையிலே பங்கு கொண்டான். அம்பாளின் புதுமையை யும் வரலாற்றையும் அம்மையார் மூலம் அறிந்தான் அரசன். இத்தெய்வம் உண்மையானதாயின் இந்தயான எழும்ப வேண்டும் என அரசன் பிரார்த்தித்தான். அம்மையார் வேப் பிலையை எடுத்து தீர்த்தத்தில் தோய்த்துத் தெளித்த உடனே

ஆத்மஜோதி 5
யானை வழக்கம் போல் எழுந்து நின்றது. மகிழ்வு கொண்ட அரசன் தானும் ஒரு நாளைக்கு அம்பாளுக்கு விசேட பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி அம்மையாரிடம் விடை பெற்றுக் கொண்டு தனதிருப்பிடம் சேர்ந்தான்.
சில தினங்களுக்குள் விசேட பூஜைக்கு வேண்டிய பூஜா திரவியங்களுடன் அரசியையும் அழைத்துக் கொண்டு அம் மையார் இருந்த இடம் வந்து சேர்ந்தான். பூஜை ஆரம்ப மாகியது. பூஜை ஆரம்பமாகும் போதே அரசியிடம் அம்மை யார் விக்கிரகத்தை உற்றுப் பார்க்க வேண்டாம் என்று எச்ச ரிக்கை செய்தார். அரசி அதனைக் காதிற் போட்டுக் கொள் ளவில்லை. விக்கிரகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். கண் இமை கொட்டவில்லை. அரசியின் கண் ஒளி மங்கி பார்வை மறைந்துவிட்டது இதஞல் அரசனும் பரிவாரமும் ஆத்திரப்பட்டனர். அம்மையார் ஒரு மஞ்சள் சீலையை தீர்த்தத்தில் தோய்த்து அரசியின் கண்களைக் கட்டி சிறிது நேரம் படுக்கவிட்டார். சிறிது நேரத்தின் பின் சீலையை அவிழ்த்த போது அரசியின் கண்கள் ஒளிபெற்று இருந்தன. அரசன் மகிழ்வு கொண்டான். இந்த அம்மாளுக்கு நீ ஒரு நேர்த்திக் கடன் செய்ய வேண்டும் என்று அம்மையார் அரச ரிைடம் கேட்டார்,
உடனே அரசன் கண்ணுக் கெட்டியளவுள்ள வயல் நில
மெல்லாம் அம்மாளுக்குச் சொந்தமானதென்றும், அந்த
இடத்தில் கண்ணகை அம்மனுக்குக் கோயில் ஒன்று கட்டுவ தென்றும் நேர்த்திக் கடன் செய்தான். அரசன் தான் நேர்த் திக்கடன் செய்த பிரகாரம் கோயில் கட்டினன். அதுவே காரைதீவுக் கண்ணகை அம்மன் கோயிலாகும். இரு கண் களும் ஒளிபெற்றுத் திகழ்ந்தமைக்கு மானியமாக விடப்பட்ட நிலமாகையால் அவ்வெளி "கண்கண்வெளி’ என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. அவ்வெளிக்கு எல்லை வைத்து எழுதிக் கொடுக்குமாறு அரசன் கேட்கப்பட்டான். ஒரு நாள் பூஜை முடிந்ததும் ஒருவரில் தெய்வம் ஆவேசித்து அவரிடம் நாலு கற்கள் கொடுக்கப் பெற்றன. நான்கு திசைகளிலும் அக்கற்கள் நாட்டப் பெற்று அரசனல் ஒரு செப்பேடு எழுதப் பெற்றுக் கோயில் சாசனமாக அளிக்கப்பெற்றது.
கோயில் கட்டப் பெற்ற பின்பும் அம்மையாரே நித்திய பூஜை புரிந்து வந்தார். அம்மையாரின் பூத உடல் மறைய சின்னநாச்சியாரை பனங்காட்டிலுள்ள ஒருவர் அழைத்துச்

Page 5
6 ஆத்மஜோதி சென்று வளர்த்து வந்தார். அதல்ை கோயில் பூஜை தடை பெற்றது. கோயில் பூஜை நின்று போனபடியினல் ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாது போயிற்று. இவற்றுக்குக் காரணம் கோயில் பூஜை இன்றி இருப்பதே என ஊரவர்கள் உணர்ந்தனர். கோயில் திறந்து பூஜைகள் செய் வதற்கு முயன்றனர். பலமுறை முயன்றும் கோயில் திறக்க முடியவில்லை. பக்தர் ஒருவர் கோயிலில் பழிகிடந்தார். பனங்காட்டிலிருக்கும் சின்னநாச்சியார் வந்தால்தான் கோ யில் திறபடும் என அப்பக்தருக்குக் கனவில் கூறப்பெற்றது" பக்தர் உடனே ஊரவர்களுக்கு அறிவித்து எல்லாரும் சென்று சினை நாச்சியாரை அழைத்து வந்தனர். சின்ன நாச்சியாரை ஸ்னுனம் செய்வித்து அவர் கையில் திறப் பைக் கொடுத்தனர். சின்னநாச்சியார் தேவியைத் தியானித் துச் சாவியைக் கதவில் செலுத்தினர். உடனே கதவு திறந் தது. அன்றுமுதல் சின்னநாச்சியாரே தவருது பூஜை செய்து வந்தார். ஊரிலுள்ள பஞ்சமும் நீங்கியது. ஊரிலுள்ள மக் கள் சின்னநாச்சியாருக்கு எல்லாவித சலுகைகளும் செய்து வந்தனர்.
சின்னநாச்சியார் விவாகமாகும் பருவம் அடைந்ததும் தகுந்த இடத்தில் திருமணம் முடித்து வைக்க ஊரவர்களே முயன்றனர். அவர்களுடைய முயற்சியின் பயனுக கோரக் கிளப்பு என்ற இடத்தில், கெளத்தங்குடி வேளாண் மரபில் வந்த ஒருவருக்கு திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தனர். அவர்கள் மாணிக்கநாச்சி, கதிரா நாச்சி, வள்ளிநாச்சி என்று பெயர் பெற்றனர். மாணிக்க நாச்சியாருக்கு ஒரு மகன் உண்டு. அவர்தான் இராமநாதக் கப்புகன் என்று அழைக்கப்பட்டார். இதுவரையில் பெண் கள் மாத்திரமே பூஜைக்குரியவர்களாக இருந்தனர். இராம நாதக்கப்புகஞரின் பின்பே ஆண்களும் பூஜைசெய்யத் தொ டங்கினர். இராமநாதக்கப்புகஞரின் பின், பின் வருவோர் முறையே பூஜகர்களாக இருந்து வந்தனர். மாசாத்தக்கப்பு கன், சங்கரப்பிள்ளைக்கப்புகன், சின்னக்கப்புகன், இரட்டைக் கப்புகன், கந்தப்பர்க்கப்புகன், வன்னித்தம்பிக்கப்புகன்.
கந்தப்பர்க்கப்புகன் கர்லத்திலே பூஜைப்பங்கு மூன்று சகோதரியார்களின் பரம்பரைக்கும் கிடைக்கவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் மூன்று சகோதரி யார்களின் பரம்பரையிலிருந்து மூவர் கப்புகளுர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள், கந்தப்பர்க்கப்புகன், மா. நாகமணிக்கப்புகன், அருணகிரிக்கப்புகன் என்று அழைக்

ஆத் மஜோதி
கப்பட்டனர், கோயில் நிர்வாகத்தைச் சீர்ப்படுத்தும் நோக் கத்தோடு மூன்று கப்புகருைம் மூன்று வண்ணக்கரும் தெரிவு செய்யப் பெற்றனர். பிற்காலத்தில் மூன்று கணக்கப்பிள்ளே களும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த ஒன்பது பேர்களின் நிர்வாகத்திலேயே கோயில் நடைபெற்று வருகின்றது.
பழையகாலப் பத்ததிமுறையிலேயே இன்றும் பூஜை நடை பெற்று வருகின்றது. வாய் கட்டிப் பூஜை செய்யும் முறையே இன்றும் நடைபெற்று வருகிறது, கதிர்காமத்தி லும் செல்லச் சந்நிதியிலும் இம்முறையே இன்றும் நடைமு றையிலிருந்து வருகின்றது. கவச குண்டல மாமுனியின் யாகப்பத்ததிமுறைப்படியேதான் இன்றும் பூஜைநடைபெற்று வருகின்றது.
வைகாசிப் பூரணையை அடுத்துவரும் திங்கட்கிழமை விசேட உற்சவ தின்மாகும். 8 நாட்களுக்கு முன் கதவு திறக்கப் பெற்று 8 நாட்களாகப் பாடற் பூஜை சடங்கு நடை பெறும் 8ம் நாள் குளுத்தி, பொங்கல் என் பன நடைபெறும். இத்தினத்தில் பல ஊர்களிலிருந்தும் மக் கள் வந்து கூடுவர். சாதி சமய வேறுபாடின்றி சிங்களர் முஸ் லீம்கள் நேர்த்திக்கடன் கழிக்க வருவர். அத்தனை மக்களும் ஒரு தாய் வயிற்றுச் சகோதரர் போன்று இருந்து குலவிச் செல்லும் காட்சி கிண் கொள்ளாக் காட்சியாகும். மார்கழித் திருவெம்பாவை, சித்திரை விருடப்பிறப்பு, தைப்பொங்கல், திருக்கார்த்திகை ஆகிய தினங்கள் விசேட பூஜைக்குரிய நாட் களாகும.
அரசனல் கட்டப் பெற்ற கோயில் அழியும் நிலையில் இருந்தபடியினல் தற்போதுள்ள கோயில் புதிய முறையில் அமைக்கப்பட்டது. பழைய இடத்திலும் இன்றும் பொங்கல் பூஜை நடைபெற்று வருகின்றது. அந்த வேப்பமரம் 500 ஆண்டுகளாகத் தனிப்பட்டபெருமையுடன் விளங்குகின்றது. ஒருவரும் இலையைப் பறிப்பதில்லை. இலையை அரைத்தால் சந்தன நிறமாகவே காட்சி கொடுக்கும். கீழே விழுந்த இலை, மண், தீர்த்தம் மூன்றையும் சேர்த்து நோயாளர்களுக்குக் கொடுத்து எர்த்தனையோ மாருதநோய்கள் மாறியிருக்கின்றன.
தொற்று நோய்கள் ஏற்படுங் காலங்களில் அம்பாளுக்கு விசேடவிழா எடுப்பார்கள். உடனேயே நோய் நீங்கிவிடும். மழை இல்லாத காலத்தில் மழை பெய்யச் செய்வதற்காக

Page 6
8 ஆத்மஜோதி
கொம்பு விளையாட்டு, விசேட பூஜை என்பன நடைபெறும். வற்ருப்பளை அம்மன் கோயிலுக்கும் இந்த அம்மன் கோயி லுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சொல்லுவர். "
ஊர்சுற்றுக் காவியத்தில் பின்வரும் இடங்களில் கண்ண கையம்மன் கோயில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. காரை தீவு, தம்பிலுவில், வீரமுனை, பட்டிமேடு, கல்முனே, பாண், டிருப்பு, கல்லாறு, மகிழுர், எருவில், கழுவாஞ்சிக்குடி, கழு தாவளை, பழுகாமம், தேற்றத்தீவு, செட்டிபாளையம், புது வையூர், மகிழடித்தீவு, மண்முனை, வந்தாறுமூலை, நீலாவனை காமநகர், கண்டி, கதிர்காமம், மாகாமம், மல்லிகைத்தீவு, அங்களுக்கடவை, முதலைக்குடா, புதுக்குடியிருப்பு, கொக் கட்டிச்சோலை, சித்தாண்டி, போரதீவு.
இத்தகைய சிறப்புப் பொருந்திய காரைதீவுக் கண்ணகை அம்பாளின் திருக்கோபுரமே சோதி யின் முகப்பை அலங்கரிக் கிறது. அன்பர்கள் அனைவருக்கும் அம்பாளின் கடாட்சம் கிடைப்பதாக.
திருக்கேதீஸ்வரத்தில் - திருவாசகவிழா
ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் வழக்கம் போல இவ்வாண்டிலும் திருவெம்பாவை நாட்களாகிய 11-12-64 முதல் 20-12-64 வரை திருக்கேதீஸ்வரம் திரு வாசக மடத்தில் திருவாசகவிழா-சாதனை-தியானம்-புராண படனம்-பிரசங்கம்-கூட்டுவழிபாடு-திருவாசகவகுப்பு ஆகி யன நடத்த ஆவன செய்கிருர்கள். 16-12-64 வியாழக் கிழமை சிவபூசை மகாநாடு நடத்த இருக்கிருர்கள். பங்கு பற்ற வாய்ப்பு உள்ளவர்கள் காரியதரிசியுடன் தொடர்பு கொள்ளவும்.
காரியதரிசி திருக்கேதீஸ்வரபவன்
10/1, தெமட்டகொடயிளேஸ்
கொழும்பு-9.
 

ஆத்மஜோதி A.
தேவி துதி
(தேவிபக்தன்)
திருவளர் கமலச் செழுந்தவ சிருந்து அருளுடன் படைக்கும் ஆதி வேதாவும் ஆர்க்கு மாயிரம் படைவிழித் திருந்து காக்கு மாதவனும் கண்ணுயிரத் தோனும் தேவரும் முனிவரும் சித்தரியக்கரும் ஏவரும் போற்றி ஏற்றரிதாயின் பேத பேதமாய்ப் புறம்பாயுள்ளாய்! எறும்பு கடயான எண்பத்து நான்கு எல்லா உயிர்க்கும் அருள்புரிந் தியற்றி விந்தமாய் நாதமாய் விளங்கு நீர்க்களமாய் அந்தமாய் ஆதியாய் அருவாகி உருவாகி ஏகமாய் எங்கும் இருந்த பரனெடு பாகமே நிறைந்த பரமேஸ் பரியே! அலகிலாக் கருணை ஆனந்த வாழ்வே! உலகெலாம் பூத்த ஊழிக் காலத்தி! செகமெலா மீன்ற தற்பர வடிவே! அங்கையற் கண்ணிறை அருளுடன் பயின் கெங்கையன் சடைமுடி கிருபா கரியே! கருப்புவில் தரித்த காமக் கோட்டத்தீ! திருப்புவனமுந் தொழும் தெய்வ மாதாவே! அறுசமயமுந் தொழும் அகிலாண் டவளே! ஏறு முடிவில்லா திருந்த பூரணமே! திரிபுர மெரித்த சிங்க வாகனி அடிதொழும் பூவே மாயவ னிடத்தில் வந்தவதரித்து, ஆயிரத் தெட்டு அரசு நடத்திக் கொடுஞ்சூர் இரண்டுங் சுவேல் கொண்டு இருங்கோவை யீன்ற ஆதி சுந்தரியே! திரிகோண மாண்ட சிங்கா சனத்தி! அறுகோணமுந் தொழும் மர்த்த காரணி! அரவொடு குடுக்கையும் அம்புவிக் கொழுந்தும் விரைவொடு தரித்த விமல பூரணியே! மாலுக் கிளைய மரகதப் பொருளே! மூலத்தில் முளைத்த மூவா முதலியே!

Page 7
O
ஆத்மஜோதி வாமந் தரித்தோர் வாழ்த்தும் மாதாவே! தாவுதேர் வதனச் சவுந்தர சாம்பவி! உகம்முழு துணர்ந்த கமல காமாட்சி! மலையரசன் பெற்ற மதுரை மீனுட்சி! பாண்டிய னிடத்தில் பசுமாங் கனியாய் ஆண்டொரு பெண்பிளை யாகவந் துதித்து ஆங்கார மாறன் அரசளித்திடவே பன்னக மீன்ற பருமணிச் சிலம்பால் முன்னுள் மதுரையை முனிந்தெரித் தவளே பச்சை மேனியும் பஞ்ச வர்ணமும் உச்சித் திலகமும் ஒருமூன்று கண்ணும் பூரண வதனமும் பூங்கருங் குளையும் ஆரமும் முத்தும் அணியார வடமும் பட்டாடை யுடையும் பணியார வடமும் மட்டார் கமல மலர்ச் சேவடியும் பாடக நூபுரம் பாதசல் லாரமும் நீடிய சோதி நிரை கொள் வடிவும் அட்டத் திருவும் அடிதொழு திறைஞ்ச கட்டழ குடைய கருணை யானந்தியே! தொண்டர்க் கிரங்கிநுஞ் சூடிய செங்கை முண்டகா சனத்து மூவா முதலியே! எல்லாத் தொழிலுக்கும் இறைவியாய் நிற்கும் கண்ணுக் கடங்காக் காரணப் பொருளே! பொன்னும் மணியும் பூந்துகி லாடையும் அன்னமும் பாலும் அன்புடன் வைத்து உன்னை அன்புடன் தொழுவோர் வாழ்க! பொடிபடத் தெளித்திடும் புண்ணியப் பூவே! எப்பொரு ளாயினும் எவ்வா றியற்றினும் உன் சித்தத்தின் படியல்லால் செய்ய முடியுமோ தாயே! கந்தனை முனிந்ததும் கடலினில் மகரமாய் வந்திட வென்று வரமது விதித்திடவே அரசுசெய் பரத ஆதிபர னுக்கொரு திரைசெறி மடந்தை திருமகளாகி வளர்ந்திடும் நாளில் மாதவப் பெருமைகள் அங்கரி யோனுங் கணத்துடன் கண்டு மக்களு மியற்றி வலைத்தொழில் முடித்து மிக்க மகரம் வீறுடன் பிடித்து அனைவருங் காண அருஞ்சாபந் தீர்த்தது
உன் செயலல்லவோ?

ஆத் மஜோதி 11.
சேர்ப்பதஞ் செல்வி வியாக்கிரர் பாதம் தொழுதேற்றி நின்றே துதித்திட சனக சபையில் கணவனும் நீயுமாய் அனவரதமும் நின்று ஆடல் செய்தவளே அரசினி லிருத்தி அரிய தாரகமாய் பிரம மந்திரத்தை பெருமா ஞரைக்க உத்தரீயமும் உருத்தொரு கலையில் பத்தர்க்கு முத்தி பதங் கொடுத்தவளே ஐயுங் கிலியுஞ் செளவு மானவளே துய்யுஞ் சுருதி சுந்தர மந்திரமே ஐம்பத் தோரட்சர அரசியுற் பனமே முன்புக் கெல்லாம் முன்னின்றவளே காயமாகிய மரக்கல மதனை மாயமாம் வாழ்க்கை மறுகட லிடையே பாரமாங் கப்பல் பலசரக்கேற்றி கரியம் புகல கடவர நிறுத்தி பாங்கில் யாங்கார்ப்பாய் பரம நாட்டில் நீங்காத கொப்பு நெடும்பாய் தூக்கி வருபத்து நாலுவான தண்டைகளும் தருமுப்பத் தாறு தத்துவக் கலாசும் திருவினைப் பாகத் திளகிய சுக்கானும் உறைகருங் கடலில் ஒடித் திரும்பி விரையுமிாம் பருவரை நீயோர் பதத்தில் கரை காணமல் கலங்கின தப்போ அறிய அவனும் சமுகத்தானையே பார்த்து உன் கிருபையால் அவனைக் காத்துப் பிறவானந்தப் பெருங் கடலோடி
இறவா முத்தி இருகரை சேர்ந்து தருமங் கூர்ந்து தருமுத்தி தந்து கரையேறி வந்த கட்டழகி யென்னம்மா உந்தனுடலை யியற்ற ஆர்க்கு மியல்போ நீயொரு பித்தனை ஆள்வது பெரியபாரமோ? கங்கையைத் தரித்ததுங் கட்ஸில் நஞ்சுண்டதும் திங்களைச் செஞ்சடை ஏற்றிய பெருமையும் வையையங் கரையில் மண்சுமந் திட்டதுவும் ஐயன் மேனியில் பிரம்பாலடி பட்டதுவும் உன் பொருட்டல்லால் உலகினி லெவர்க்கும் உன் அன்பினி லியற்றிய ஆடலல்லோ எளியேன் எழுபிறப்பிற் செய்த பிழைகளெல்லாம் உன் சித்தத்திற் பொறுத்து

Page 8
2 ஆத்மஜோதி
சேவடிக் கமலம் கொடுத்தாண் டடிமை கொள்ளுமென் னம்மா! வாலை திரிபுரை வாழும் புவனே சுவரியே மூக்கரம் போலே மூவிரு காரணமாய் காட்டி யடியார் அகமதில் நினைக்கக் கருமங்கள் முடியக் கற்பித்தவளே பார்த்த முகமெல்லாம் பாவியாகிய என்தனுக்கு வேற்ருெரு முகமல்லால் விளங்கு மறிமுகம் உன்முகந்தாயே உன் உள்ள மிரங்காய் எங்கள் முகம்பார்த்து எங்களை இரட்சிக்கவேணும் மற்ருெரு துணையில்லை மாதாவே தாயே சிற்றடி யடியேன் சிந்தையில் நினைந்து மறவா திருக்க வரந் தந்தாண்டு இறவாதிருக்க ஏற்றருள் புரிவாய் என்தாயே!
ஓங்காரத்திலே மின்னற் கொடிபோல ஒளிருஞ் சோதி யாகி ஐம்பத்தொரு எழுத்து வடிவங்களையும் ஊடுருவி நின்று, சிருஷ்டி தோறும் இவ்வுலகங்களையும் உயிர்களை யும் தோற்றுவித்தருளும் தேவியே உன்னையும் தோற்று வித்த தாய் என்று உணர்ந்து அவளைப் போற்றுவாயாக.
எந்தச் சக்தி மூலாதாரத்திலே செயலற்றுக் கிடக்கிற ளோ, அவளை யூனி வித்யோபாசனையாலே எழுப்பி மேனுேக்கிச் செல்லும்படிசெய்து ஆறு ஆதாரங்களையும் அவற்றலே அமைந்த பிரதேசங்களையும் நன்கு வியாபித்து எங்கும் நிறைந்த தேஜோமயமாக்கிக் கொண்டால், இயற்கையிலே அதிசூட்சு மமாய் அமைந்த தேவியின் திருமேனி அகண்டாகாரமாய் சர்வ வியாபியாய் எப்பொழுதும் பேரின்பத்தைத் தருவதா கும். அத்தகைய தேவியைத் தியானம் செய்வீர்களாக,
- சங்கரர்

ஆத்மஜோதி 13 அக்கம்மாதேவி வரலாற்றுச் சுருக்கம்
(கு ஆ. கந்தசாமி ஐயா)
சுமார் எண்ணுாறு ஆண்டுகட்குமுன் கன்னடதேயத் தைச் சார்ந்த உடுதடை என்னும் நகரில் வீரசைவ சங்கமட் பெரியாராகிய நின்மலன் என்பவருக்கும் கற்பிற் சிறந்த சும தியம்மையாருக்கும் அவர்களது தவப் பயல்ை உமையின் சாத்துவீகக் கலையே பெண்மகலாகத் தோன்ற அக்குழந் தைக்கு மாதேவியெனப் பெயரிடப்பெற்று அறிவு, அருள், அடக்கம், வாய்மை முதலிய தூய குணங்களுடன் வளர்ந்து மங்கைப் பருவமுற்றன ஸ்.
அந்நகரை ஆளும் கெளசிக மன்னன் ஒர் நாள் பவனி வரும்பொழுது அந்நங்கையைக்கண்டு அவளது அழகில் மனம் பறிகொடுத்தவனுய் மோகத்திலாழ்ந்து எப்படியும் இவளைக் கூடி வாழ்வேனென்று தூதுவர்களால் தமது எண்ணத்தைத் தெரிவித்தும், தாமே மாதேவியில்லம் சென்றும் அவளது எண்ணம் யாதெனக் கேட்கலானன்.
இச்சம்பவத்தைக் கண்ணுற்ற மாதேவி தமக்குத் துறவ. றம் பெறும் நாள் வந்துற்றதென்றெண்ணி, நான் ஒரு சூள் நினைந்தனன். அதை நிறைவேற்றுவீராகில் திருமணம் செய்து கொள்ளத் தடையில்லை என்று இயம்ப, மன்னன் உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்காமல் உம்மைக்கூ டேனென்று பிரதிக்ஞைசெய்து, பணிப்பெண்களைக் கொண்டு மாதேவியைப் பல்லக்கில் அழைத்து வரும்படி செய்து முன்
னேயானையில் சென்றரண்மனை சேர்ந்தார்கள்.
மன்னன் மட்டிலா மகிழ்ச்சி பொங்க மாதேவியை நோக்கி நீகோரிய காரிய மின்னதெனத் தெரிவித்தால் அதை விரைவில் நிறைவேற்றிக் கொடுத்தபின் என்னுடைய எண் ணத்தை முடித்துக் கொள்ள ஏதுவாக இருக்குமென்று வேண் டினன்,
அவ்வார்த்தையைச் செவிவுற்ற தூய உள்ளம் படைத்த மாதேவி அரசே! வயதிலும், அழகிலும், தாங்கள் ஒத்திருக் கின்றீர். ஆயினும், இட்டலிங்கத்தைக் கரபிடத்திலிருத்தி வழிபாடாற்றிய பின்னர் மணம் புரிந்து கொள்ளும் என்ற 6) GT

Page 9
14. ஆத்மஜோதி
சைவ சமயத்திற்கெதிர் மறையான சமண சமயத்தைச்
சார்ந்தவனுகையால் இவ்வார்த்தையைக் கேட்டதும், செவி
யில் நாராசம் காய்ச்சி விட்டதுபோன்று திடுக்கிட்டு உன்னை யொத்த அழகிய மாதரைக் கூடியணைவதல்லாது பரதேசிக் கோலம்பூண்ட சிவலிங்கத்தை வழிபடுவது எங்கள் பரம்பரை யிலே கிடையாது என்று, சத்தியம் செய்து கொடுத்திருப் பதை நினைந்து மரம்போல் அசைவற்றிருந்துவிட்டான்.
தாம் வந்த காரியம் கூடிற்றென்றுணர்ந்த அக்கம்மா தேவி அந்தசஷ்ணமே ஆடையாபரணுதிகளைக் களைந்து தமது கூந்தலால் அங்கங்களை மறைத்து அவதூதமாக (நிர்வாண மாக) வெளியே புறப்பட்டு கல்யாணபுரி சென்று அங்கு வச வண்ணர் சபையில் அடியவர்கட்கருள் புரிந்து கொண்டிருக் கும் அல்லமப் பிரபுவின் அனுக்கிரஹம் பெற்று அவராணை யின்படி பூரீசைல பருவதத்தைச்சார்ந்து கதலிவனத்தின் கண் தவமியற்றி ஐக்ய தலத்தில் பரசிவத்துடன் கலந்தருளினள், என்றும் தமோகுண சக்தியாகிய மாயையும் ரஜோகுண சக் தியாகிய விமலையும் அடையப் பெருதசிவஸ்வரூபத்தில் ஈரறக் கலந்தருளியவள் சாத்வீக குணசக்தியாகிய அக்கம்மாதேவி தான், என்பதை பிரபுலிங்க லீலை எடுத்தியம்புகிறது. சாத் வீக குணத்தாலன்றி, சர்வ துக்க நிவர்த்தி பரமானந்த ப்ராப்தியாகிய கைவல்ய பதவிபெற முடியாது என்பதன் கருத்தை முக்கியத்துவமாகக் கொண்டு அக்கம்மாதேவி வர
லாறு இங்கு குறிப்பிடப் படுகின்றதைத் தமிழகம் அறிந்து
மெய்ப்பயன் பெறுவதாக.
தேவியைப் பாடுவோம் என்றல், அவள்தான் தன் நாயகனுேடு வெள்ளி மலையிலன்றே இருக்கிருள்? அவள் செவியிற் படுமாறு எப்படிப் பாடுவது? என்று தயக்கமுற வேண்டாம். அவள் சக்தி வடிவங்கள் பல வற்றையுந் தாங்கி எல்லா உலகங்களிலும் தன் மூர்த்தி ! களைப் பரப்பி வைத்திருக்கிருள். உண்மையில் ஒருத்தி யேயானுலும் இவ்வாறு பல வடிவங்கள் ஏற்றுத் திரு விஃாயாடல் புரிவது அனைவரையுந் தன்னுடைய பரந்த திருக்கண்ணுேக்கங்களுக்குள் அகப்படுத்திக் கொண்டு அவர்களை வணங்கச் செய்து அவர்கள் வணக்கங்களை ஒரு வியாஜமாகக் கொண்டு அவர்களுக்குரிய சகல மங்களங் களையும், கற்பகக் கொடி அளிப்பதுபோல அளித்துதவு
தற்கேயாகும். ۔۔۔۔۔۔۔۔۔۔ சங்கரர்.

ஆத்மஜோதி 15
நல்லூர் நாவலர் 1 . . .
- திமிலைக் கண்ணன் -
பதிபசு பாசமாய பண்பினை யறியாராகி விதிவழிப் பட்டுக் கூலிவேலேயே தஞ்சமென்று மதியினை யிழந்தார் போல மாண்புகொள் சைவ நீதி நிதியினை யிழந்தார்தம்மை நேர் வழி சேர்க்கவந்தார்.
மேன்மை கொள் சைவ நீதி விளக்கமே உருவமாகி நான்மறை செழிக்கநல்லூர் நாவலர் பெருமான ன்று; வான் மழை போல வந்து வாய்த் தி லராகில், சைவத்தேன்மொழி யுண்டோ தெய்வச் சிெந்தமிழியல் தானுண்டோ!
கொலையொடு களவும் பொய்யும் கொடுமையு 0ோங்கமக்கள் நிலை தடுமாறித் தம்தம் நெறியினை மறந்தாராகி; அலைவுறும் காலே, ஞான அருளொளி விளக்காய் வந்த மலையினைத் தமிழ் வளர்த்த மாமு னிதனைத் துதிப்போம்.
தன்னுயர் தவத்தினலே தத்துவ சீலத்தாலே; 。” பொன்னெனப் போற்று நூல்கள் புதுக்குநற் பணியினுலே வன்மை கொள் வாக்கிேைல வகுத்தநன் நெறிகளாலே நன்மைகள் நல்கும் 'நல்லூர் நாவலர்” அடிகள் போற்றி!
நெசவு செய்வோர் நூலின் சில பகுதிகளை ஊடாகவும் சில பகுதிகளைப் பாவாகவும் செலுத்தித் துணியாகச் செய் கிருர்கள். மணிகளை மாலையாகக் கோப்போர் மணிகளை எப்படிக் கோத்தால் நல்ல மாலையாகுமோ அப்படிக்கோப் பார்கள். இவர்களைப் போல் தேவியும் சரப்பொருள் அச ரப் பொருள் ஆகியவற்றையெல்லாம் வாழ்க்கை யென்னும் மணிமாலையாகவும் நல்லாடையாகவும் அமைக்கிருள். அவள் எப்படி அமைத்தால் என்ன? நம்முடைய ஆத்மாவிற்கும் அவளுக்கும் என்ன தொடர்பு என்று தெரிந்து கொண்டு, அந்த ஞானத்தாலே பரமானந்தத்தைப் பெறுவோம். அதற்கு முதற்படியாக அவளை நம்முடைய அன்னையென் றும், அவளுடைய கமலக்கண்கள் நம்மீது இரக்கம்கொண்டு நம்மைக் கடாட்சிப்பதற்கு விரைகின்றன என்றும், அறிந்து அவள் செவி சாய்த்துக் கடாட்சிக்குமாறு அவளைப் போற் றிப் பாடுவோமாக.
-3FFEI 86 TT.

Page 10
6 ஆத்மஜோதி
இராஜயோகமும் ஹடயோகமும் (யூனிலழறீ கண்ணையயோகி)
'யோகம்' என்ற சொல்லைக் கேட்டதும் அநேகர் பூமிக்கு மேல் உடலை உயர்த்துவதும், முட்களான படுக்கை மேல் படுப்பதும், கண்ணுடித் துண்டுகளை மென்று விழுங்கு வதும், முகத்தை திராவகத்தால் கழுவுவதும், நெருப்பின் மேல் நடப்பதும் போன்ற அற்புதங்களைச் செய்வதற்கான ஒர் பயிற்சி என நினைக்கின்றனர். இத்தவருன கருத்து பாரதீயர்களிடை மட்டுமன்றி, மேல்நாட்டு யோகஆராய்ச்சி யாளர்களிடையும் நிலவி வருகிறது. இத்தகையோர்கள் ஒருயோகி என்ருல் அவன் யானைபோன்ற வலுவும் அற்புதங் கள் செய்யும் திறமையும் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிருர்கள். 'யோகாசனங்கள்' என்று பெயர் தாங்கிய அநேக மன்றங்கள் உடல் நலத்துக்கான Gunt 57 சனம் முதலானவைகளை மட்டும் கற்பிப்பவையாயிருக்கின்
fᎠ6ᏈᎢ .
- 'யோகம்' என்ற சொல் 'யுஜ் சேர்' என்ற வினையடி யாகப் பிறந்தது. யோகம் என்பதன் பொருள் ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் ஒன்றச் செய்யும் கலக்கச் செய்யும் முறை என்பதாகும். தற்போது யோகத்தை இப்பொருளில் அறி வோர் மிகக் குறைவு. பழங்காலத்தில் யோகம் என்பது இதை மட்டும்தான் குறித்து வந்தன.
மத்திய காலத்தில் யோகத்தின் பெயரால் பல சாதனு முறைகள் கண்டு பிடிக்கப்பட்டன . ஆணுல் விடுதலைப் பேற் றுக்கு இவை யாதும் தேவையில்லை. பழங்கால யோகம் 'ராஜயோகம்' ஒன்றே. அநேக அரசர்கள் யோகம்பயின்று, யோகிகளாய் வாழ்ந்து வந்தமையால் ராஜ உருபு சேர்க்கப் பட்டது. உதாரணமாக, மிதிலையின் அரசன், சீதையின் தந்தை ஜனகன் பெரும் யோகியாகியிருந்தான். அவன் சபை யில் அடிக்கடி யோகியர்களின் ஆராய்ச்சிக் குழுக்கள் நடை பெற்று வந்தது.
தொன்று தொட்டு, பாரத ரிஷிகள் அனைவரும் இராஜ யோகப் பாதை ஒன்றையே பின்பற்றி வந்தார்கள். உலகின் மற்ற மதங்களிலும் விடுதலைப் பேற்றுக்காக இரகசியக் கூடங்
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 17
களில் போதிக்கப்பட்டு வந்த முறைகளனைத்தும் இராஜயோ
கமேயாகும்.
கலியுக ஆரம்பம் இராஜயோகத்தை மறைத்துவிட்டது. இதனிடத்தில் ஜடவாழ்க்கையைச் செம்மைப்படுத்தும், ஜட உடலை அழகும், வலிவும் படுத்தும் ஒர்யோக முறை தோன்றி யது. இதுவே ஹடயோகம் எனப்பட்டது. தற்போது வட மொழியிலும், மற்ற மொழிகளிலும் ஹடயோகம் பற்றிய நூல்களே நிறையக் கிடக்கின்றன. இராஜயோக சம்பந்த மான பலவிளக்க நூல்கள் பொதுமக்கள் வசம் கிடைக்காமல் மறைக்கப்பட்டுவிட்டன. ஒன்றிரண்டு மட்டும் பொதுவில் கிடைக்கச் செய்யப்பட்டன. அவைகளில் சிறந்தது பாதஞ் சல யோக குத்திரம்.
இராஜயோகிக்கும் ஹடயோகிக்கும் உள்ள வேற்றுமை களைக் கவனிப்போம். ஹடயோகி எப்போதும் தன் ஜட உடல் அழகாய், வலுவாய், நீண்ட ஆயுளுடன் இருக்க எண் ணுவான் இராஜயோகி தன் சூசுஷ்ம உடல்களை வளர்க்க முயற்சி செய்வான் இராஜயோகியின் ஜடவுடல் வலுவா யில்லாவிட்டாலும், கவர்ச்சிகரமாய்த் தெரியாவிட்டாலும் ஆரோக்கியம் குறையாமல் இருக்கும்; ஆனல் இந்த ஆரோக் கியத்தை அவன் ஹடயோேெபால் உடற்பயிற்சிகளால் பெருமல், மைேபயிற்சியாலேயே பெறுகிருன்.
மனித சமுதாயத்துக்கு தன் மனேசக்தியால் நன்மை செய்வான் இராஜயோகி ஹடயோகி தன் உடற்பயிற்சி களாலும் அற்புதச் செயல்களாலும் பொதுமக்களின் மரியா தைக்கும், பக்திக்கும், சேவைக்கும் பாத்திரமாக விளங்கு வான். இராஜயோகியை அவன் மாணவர்கள், சீடர்கள் தவிர மற்றயாரும் யோகி எனக்கண்டு கொள்ளமுடியாது. ஹடயோகியை, அவனின் அற்புதச் செயல்களின் விளம்பரங் களால் உலக மக்களனைவரும் அறிந்து கொள்வார்கள்; தாழ்ந்த ஜீவர்களே தெய்வப்பாதையில் உயர்த்துவது இராஜ 1 யோகியின் வேலே ஹடயோகியின் வேலை தன்னைப் புகழ்பவ ரை ஆசீர்வதித்து, வரமருளி, புகழாதவரை சபிப்பதாகும். பொதுமக்களுடன் கலந்தவாறு, அவர்களில் ஒருவனுக இருந்து கொண்டு, உலக காரியங்கள் அனைத்தையும் செய்த படியே, அதன்பற்றுதலிலிருந்து வேறுபட்டவனுய், தாமரை யிலைத் தண்ணிர்போல் வாழ்வான் இராஜயோகி. ஹட யோகி தன் வேடத்தாலும், நடையுடைகளாலும் தான்

Page 11
18 ஆத்மஜோதி
மற்றவர்களைவிட மேலானவன் என்பதைக் காட்டிக்கொண்டு மற்றவர்களின் மரியாதைக்குரியவனுக வாழ்வான்.
இராஜயோகியால் ஜடசக்தி தெய்வ சக்தியாய் மாற்றப் படுகிறது. ஹடயோகி தெய்வ சக்தியை ஜடசக்தியாக மாற்றுகிருன் . இராஜயோகி சூசஷ்ம உலகங்களில் சக்தி மிகுந்து காணப்படுவான். ஹடயோகி பூவுலகில் சக்திமா ணுக விளங்குவான். இதனலேயே ஹடயோகிகள் பூவுலகில் அற்புதங்களைச் செய்கிறர்கள்.
இராஜயோகி மனேசக்தியை வசப்படுத்தியபின் அதைத் தன் எந்தவொரு இகநன்மைக்காகவும் உபயோகப்படுத்தா மல், அதைத்தன் உயர் யாத்திரைக்குத் தடையாகக் கருது வான் ஹடயோகி வசப்பட்ட மனேசக்தியைக் கொண்டு உலக போகங்களை எளிதாக அனுபவிக்க முயற்சி செய்வான்.
புத்தர், யேசு, சங்கரர் போன்ற சிலயோகிகள் அற்புதங் களே உலகில் செய்தார்கள். ஆல்ை இவர்கள் சாதாரண யோகிகள் அல்லர். விடுதலையடைந்து மனித சமுதாயத்தை
மேம்படுத்தவென, ஜடஉலகில் தோன்றிய முக்தர்கள் பொது மக்களைத் தம் வழிப்படுத்த சில அற்புதங்களைச் செய்தார்க ளன்றி, இகநன்மைகளையும் மக்கள் மதிப்பையும் பெறச்செய் தார்களில்லை.
ஹடயோகிகளின் அற்புதங்களில் மயங்கி அறநெறியை மறந்து விடாதீர்கள்.
கையிலே ஜபமாலையை வைத்துக் கொண்டு பரப்பிரம் மம்ாகிய தன்கணவனையே எப்போது தியானித்துக் கொண்டு இன்புற்றிருக்கும் என்தாயாகிய சாரதாதேவி யானவள் தன்னுடைய பக்தர்களாகிய நாம் எல்லோரும் ஸ்தோத்திரம் செய்து பாடும் பாடல்களிலே ஈடுபட்டவளாய் செவிசாய்த்து தன் அழகிய கன்னங்களிலே தூய புகழைப் போல்விளங்கும் புன்முறுவலும் நெற்றியிலே திலகமும் அழகுறத் தோன்றுமாறு வீற்றிருப்பதைக் கண்டு நானு மவளைப் பாடிப் புகழ்வேன்.
- சங்கரர்.

ஆத்மஜோதி 9.
பிரிந்தவர் கூடினர் (எழுதியவர்: புலவர் . வி. விசாலாட்சி)
கண்தெரியாத பெற்ருேருக்குக் கண்ணுக இருந்தாள் பூரணி. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி ஆவன செய்து வந்தாள். அவள் இளமை அழகு பார்ப்போர் கண்ணே மாத் திரமல்ல உள்ளத்தையும் தொடந்தான் செய்தது. காலை யிற் கதிரவன் வருமுன் எழுந்து நீராடி வீட்டுவேலைகளைச் செய்வாள். பெற்ருேருக்கான பணி விடைகளைக் கண்ணே போற் போற்றிள்ை. தம்பி தேவனையும் குளிப்பாட்டி உணவு புகட்டி பாடசாலைக்கு அனுப்புவாள். அவள் இல்லம் மிகச் சிறியதுதான். எனினும் கண்டோர் உள்ளம் கவரும்படி மிக அழகாக வைத்திருந்தாள். ஒருமூலையில் அம்பாள் படம். அதற்குப்பக்கத்தில் தூபம் விளக்கு முதலியன இருந்தன. நித் திய கருமவிதியிற் தவருத பூரணி பெண்ணுலகிற்கு ஒர் வழி
காட்டி யென்ருல் மிகையாகாது.
காலமெல்லாம் கடவுள் சிந்தனையிற் காலம் கழிக்கும் பூரணி, அன்பே உருவானவள். அறமே கொள்கையுடைய வள். தன்னில்லத்திற்கு வருவாரை இன்முகம் காட்டி வர வழைப்பாள். அன்பென்னும் நீரில்ை அவர்களின் உள்ளத் தைக் கழுவுவாள். அதன் பின் தன்னல் முடிந்தளவு உணவ
ப்பாள். அவளின் தோற்றத்தைக் கண்டவர்கள் பதினெட்டு வயதென்றுதான் கூறமுடியும். அத்தகையான பூரணி சைவ முறைப்படி உலகில் வாழ்வது பெரிய துன்பமான செயலாக மற்றவர் கண்களுக்குக் காணப்பட்டது. அவளுக்கு எல்லாம் இறைவிதான். அதன்பின் கடமையிற் கண்ணுக இருந்து வநதாள.
புரட்டாதி மாதம் நவராத்திரி தொடங்கியது. பூரணி சென்ற வருடங்களிலும் பார்க்க மிகச் சிறப்பாக இவ்வாண்டு கொண்டாட வேண்டும் என நினைத்தாள். எனவே அவள் குடும்பத்திற்காய பொருட்களைத்தேடும்வேலையில் இருந்தாள். பூவில்லாமல் அவள் அம்பாளை வணங்கியதே கிடையாது. எனவே பூவைத்தேடி அதிக தூரம் சென்றுவிட்டாள். நேர மோமாலைஐந்துமணியாய்விட்டது. அவள் இருக்கும் குடிசை குடிகள் இல்லாத இடம். பூத்தேடி காட்டிற்குள் புகுந்தாளோ என்னவோ பொழுது நன்றக இருட்டி விட்டது. முல்லை

Page 12
20 ஆத்மஜோதி மலர்கள் புன்முறுவல் செய்தன. மல்லிகையின் நறுமணம் தென்றலுடன் சேர்ந்து பூரணியை அணைக்க வா வா வென்று அழைத்தன. ருேசா மலர்கள் பூரணியின் வரவைக் கண்டு மலர்ந்தன. பூந்தோட்டத்திற்குள் நுழைந்த பூரணி மலர் பறிக்கத் தொடங்கினுள். அவள் தன்னை உணரவில்லை. நேரத்தை உணரவில்லை. வாய்அம்பாளின் நாமத்தை வாழ்த் தியது. தனக்கு வரப்போகும் பேரிடரைப் பாவம் பூரணி நினைத்தாளில்லை. அவள் பூந்தோட்டத்திற்குள் நிற்கின்ற ளென்பதை அவளின் இசைமூலம், கொள்ளைக் கூட்டத்தின் தலைவனுன இரத்தினம் அறிந்தான். பலநாள் பூரணியின் பேல் கண்போட்ட இரத்தினம் இன்று அரிய சந்தர்ப்பம் வரு வதைக் கைவிடுவதாக மெதுவாகப் பூரணியிடம் சென்றன். பொழுது இருட்டி விட்டதல்லவா இன்னுமா பூப் பறிக்க வேண்டுமென்றன் . இக்குரலைக் கேட்ட பூரணி திடுக்குற்ருள். நடுங்கிள்ை. வெபர்வை மிகுந்தது. எல்லாம் அம்பாள் சித்தமே என்று தைரியத்தை வரவழைத்தாள். மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்கிள்ை. இரத்தினம் தொடர்ந்து கொண்டே சென் முன், பூரணிக்கு அவன் நோக் கம் நன்கு தெரியவே அவசரத்தாலும் தடுமாற்றத்தாலும் வழியை மாறவிட்டாள். ஒடத் தொடங்கினுள். இரத்தின மும் துரத்தத் தொடங்கினன். அவள் உள்ளம் அம்பாளையே னைந்து கொண்டது. உலகம் முழுவதையும் ஈன்ற தாயே! அடியார்களை யெல்லாம் அன்புடன் அணைப்பவளே! உன் னையே நம்பி இருக்கும் என்னை நீ கைவிட்டால் யார் எம்மைக் காப்பாற்ற முன்வருவர் எனக் கல்லும் கசிந்துருகக் கூறினுள். இதனைக் கேட்டாள் அன்னை, இரத்தினத்தை அடக்க நினைத் தாள். இரத்தினம் துரத்தி வரும்போது பெரியபாம்பு அவ னைக் கொத்தப் படம் எடுத்துக் கொண்டது. பாம்பைக் கடந்துபூரணியிடம்செல்லமுடியாதென்றுஅவன் நினைத்தான். தன்னுயிர்க்கே ஆபத்து வருமென்று உறுதி கொண்ட இரத்தி னம், உயிர்தப்பினுற் போதும் இப்படியான அடாத செய்கை யில் இறங்குவது தவறுஎன்பதையும் உணர்ந்துகொண்டான். அவன் உணர்வு அவனுக்கு நன்மையே தந்தது.
பூரணிவழிமாறி ஓடியதால் எங்கேபோகிருேம் என்றுதெரி யாதுஒடினுள். அடர்த்தியான காடு. அதனுல் அவள் பாழ்மண் டபத்தை அடைந்தாள். ஒடியகளைப்பும் பயமும் வளரவளர அவளுக்குக் கவலையும் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. கவலைக் கடலுள் தோய்ந்த பூரணி அம்பாளின் கீர்த்தனைகளைப் பாடினுள். அப்போது சிறுதூரத்தில் சிறுவிளக்கு எரிவதைக் கண்டாள். மெல்ல அடிமேல் அடிவைத்து அவ்விடத்தை
 
 

ஆத்மஜோதி 2.
அடைந்தாள். என்ன ஆச்சரியம் அது ஒரு அம்மன் கோயி லாகக் காணப்பட்டது. அக்கோயில் பாழடைந்த கோயில் என்ருலும் அங்கே சிதறுண்டு கிடந்த பொருட்களைப் பார்த் தால் அண்மையில் மக்கள் இருப்பார்கள் என்ற குறிக்கோள் கிட்டியது.
கோயிலுக்குட் சென்ருள் பூரணி. அம்மனை துணையென நினைந்து செய்வறியாது நன்கு அயர்ந்து விட்டாள். மறுநாள்
ஆள் அரவம் கேட்டு எழுந் தாள். மெல்ல அவர்கள் யாரென
நினைந்து தன்னை வெளிப்படுத்தாது நின்ருள். அவர்கள் வேடு வர் என்பதை அவர்களின் செய்கையால் அறிந்தாள். வேடு வர் எனினும், அவர்கள் தங்கள் பண்பாட்டுடனே காணப் பட்டனர். வயது முதிர்ந்த வேடுவிச்சி மெல்ல வந்து பூரணி வந்த காரணத்தை வினவினுள். பூரணி நடந்தவற்றைக் கூறினுள்.
மகளைக் காணுது பெற்ருேர் மிக வாடினர். அக்காவைக் காணுது தேவன் வெதும்பி வெதும்பி அழுதான். போவோர் வருவோர் பூரணியின் இன்முகத்தைக் கானது கூம்பினர், பூரணி பெற்ருேரை நினைத்தாள் அல்லள், தம்பியைக் கருதி ள்ை அல்லள். அவள் எண்ணம் செயல் யாவும் அம்பாளையே தியானித்துக் கொண்டிருந்தது. தன்னை மறந்த நிலையில் அக் கோயிலின் உருவமான அம்பாளே வணங்கினுள் ஒன்று கலக்க எண்ணிள்ை. அப்படியே அமர்ந்தாள். அன்று இருந்த பூரணிதான் இன்றும் எழும்பவில்லை. அவள் இருந்த இடமும்
புற்று மூடப்பட்டது. அவள் அம்பாளுடன் ஒன்று பட்டுவிட்
டாளென வேடுவகுலம் எண்ணி வருகிறது.
ܐ
மின்னலொளி பொருந்தியவளும் சிவதத்துவத்திற்கு அரு கில்நின்று ஒளியுடன் பிரகாசிப்பவளும் பேரொளிவாய்ந்த சிவத் தில் கலந்து நிற்பவளும், ஜீவான்மாக்களுக்குக் gf tou 5)?sIr அளிப்பதற்காகச் சிவனைச் சேவித்துவருபவளும், மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரண சுந்தியுடன் உள்ளத்தில் ஆராதிக்கப்ப டுபவளும் சுயம் பிரகாசம் உடையவளுமான அன்னையைத் தஞ்சமென அடைகின்றேன். சகல ஆன்மாக்களுக்கும் போக
போக்கியங்களை அளித்து முடிவில் பிறவிக்கடலைத் தாண்டுவிப் பவளே; நானும் அவ்வாறு தாண்டுவதற்காக உனக்கு வணக்
κ5) και - துர்கா சூக்தம்,

Page 13
22
ஆத்மஜோதி சாதகர்களின் கவனத்திற்கு (முகம்மது காசிம் - மதார் நாச்சியா)
மனதிலுள்ள ஆசைகளை நாசமாக்கி, கெட்ட எண்ணங்
களை ஜெயித்து எந்தவிதமான அசைவுகளும் இல்லாத நிலையே நிஷ்டை.
மனதில் நிகழும் எண்ணங்களை விளங்கி கடந்து இருப்ப தேஞானம்.
பேசத்திறமையில்லாமல் வாய்மூடியிருந்து எண்ணங்கள் எழுச்சிகள் ஒடிக்கொண்டிருப்பது மெளனமல்ல; எண்ணங் கள் ஒழிந்த இடத்தில் சொல்லால் வர்ணிக்கமுடியாத இன் பத்தில் இருப்பதே மெளனம்.
வெவ்வேறு உணர்ச்சிகளின் குமுறல்களுக்கு இடம் கொடாது, சுகம் நிறைந்த சூனியம் போன்ற சும்மா இருக் கும் நிலையில் நின்று கொள். அதுவே தியானம்.
மனித உள்ளம் விருப்பிலும் வெறுப்பிலும் வாழும் உணர்ச்சியின் பின்னல். யாரையும் விரும்பாது-வெறுக்காது சதாதியான நிலையிலேயே இன்பங்காணும் இதயமே ஆத்மீக சுதந்திரத்தை உணர்ந்த உத்தம நிலையாகும்.
மயக்கத்தையும், கலக்கத்தையும் உண்டாக்கிடும் மனதை மாண்டு விடும்படி செய்வதே சாதனை.
எண்ணங்களுக்கு தாக்குதல்களுக்கு அடிமையாகும் மணி தன் அமைதி காணமுடியாது.
எங்கும் பரவி ஏகமயமாகி யாவற்றையும் கடந்து தனி மையாக இருப்பதே துரியம்.
எல்லா நினைப்புகளையும் விட்டு நீங்கி இருப்பதிலேதான் நிலையான இன்பம் இருக்கிறது.
வாழ்வு அழகுநிறைந்தது இனிமையானது என்றெல்லாம் வீணுக நினைத்து-நினைத்து கனவு நிலையில் காலங் கழிக்கும் மக்களைத் தட்டிஎழுப்பி உண்மையை உணர்த்துவதே துக்கம். காலம் மனதிலே ஒடுகின்ற கற்பனைச் சித்திரம். காலம் என்று உண்மையில் இல்லை. மனம் எண்ணும்போது ஆசை கள் பதியும்போது ஏற்படுகிற தூண்டுதல்களையே காலம் என்று கணிக்கின்ருேம். எண்ணங்களற்ற இடத்தில் காலமும் இன்பதுன்ப உணர்வுகளும் இல்லை.

ஆத்மஜோதி 23
யோகம் செய்வதற்கு உடம்பில் சக்தியும் மனேவலிமை யும் அவசியம் இருக்க வேண்டும். ஐம்புல இச்சைகளுக்கு அடிமையாகி சக்தியிழந்தவன் தியான இன்பத்தை நுகர முடி lJIT5) •
சிந்தனை சிதருது தியான நிலையிலிருந்து கொண்டே செயலாற்றுவதே கர்மயோகம்.
மனிதவடிவங்கள் யாவும் அகண்ட சக்தியின் சிறு துளி கள் என்று அறிந்த பிறகும் சடப்பொருள்களுக்கு முக்கியத்து வம் கொடுத்து மயங்குவது மர்மம் கலந்த மாயையின் மட்ட ரக விளையாட்டு,
இன்ப மயக்கத்திலே இறுமாந்திருக்கும் மக்களைத் தட்டி எழுப்பி வாழ்வின் உண்மை நிலையை உணர்த்துவது துக்கமும் துயரமும் ஆகும். h
உடலில் கடுமையான வியாதியும் உள்ளத்தில் சகிக்கமுடி யாத துயரமும் சுமந்து நிற்கும் வேலையிலேதான் மனிதன் உலகத்தில் வாழ்வது எவ்வளவு பயங்கரமர்னது என்றஉணர்ச்சி யைப்பெறுகிருன் அந்நிலையிலேதான் உடல் தொந்தத்தையும் மனதின் விகாரத்தையும் கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
நினைவிலே நிகழும் அலைகளே அமைதிப் படுத்தி ஆழ்ந்த தியானத்திலே லயமாகுவதே தவத்தின் சிறப்பு.
உண்மையை மறைப்பது மனமெனும் திரை, அதை தியானத்தில்ை உடைத்தெறிந்து உணர்வெளியில் ஒடுங்கு வதே சாதனே.
பற்பல ஆசைகள் எங்கு ஊசலாடுகிறதோ அங்கு அதிர்ச் சியின் அனலும் கிளர்ச்சியின் புயலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அவைகளை ஜெயிப்பதே சாதனை.
இதயத்தில் ஆத்ம சக்தியிழந்து உடலில் தேஜோ சக்தி மறைந்து மட்டரக இச்சைகளில் மயங்குவது மதியீனத்தின் அறிவிப்பு.
நினைவற்று நிற்பதுவே நிலையான தியானம். மனமற்று
மளனத்தில் மகிழ்வதே வழுவாத ஆனந்தம். கனவைக்
கடப்பதுவே அகண்டத்தின் தரிசனம்,
- தொடரும்.

Page 14
ஆத்மஜோதி அமரருள் அமரர் !
(கி. வானமாமலே)
அழகியதோர் மாஞ்சோலை. மரங்களிலிருந்து மாம்ப ழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் காட்சியளிக் கின்றன. புள்ளினங்கள் மரங்களில் கூடி மகிழ்வொலி கிளப் புகின்றன. சூரியன் தன் வேலையை முடித்துக் கொண்டு ஒய்வெடுத்துச் செல்லலாமோ என்று எண்ணுகின்ற நேரம், சோலையின் நடுவே அழகியதோர் பளிங்கு மஞ்சம். அதில் அமர்ந்திருக்கிருர் அமரகவி. ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு கண்களைத் திறந்து பார்க்கிருர், அப்பொழுது காகங்கள் பறந்து சென்றன. ஆனல் அவர் வெறும் காகத் தைப் பார்க்கவில்லை. காக்கைச் சிறகினிலே நந்தகோபன் குமரனைப் பார்க்கிருர்! அதன் பின் பச்சை மரங்களைக் காண்கிருர், மரங்களில் அவர் பார்த்தது என்னை கண் ணனின் பச்சை நிறத்தையே கண்டு களித்தார்! பறவை களின் குரலோசை காதைத் துளைத்தன. ஆனல் அவரது செவிக்கு அவை நந்தகுமாரனின் கீதமெனக் கேட்டது! இங்வனம் எங்கும் கண்ணனைக் கண்டு களிக்கும் கருத்துக் கொண்ட கவியரசர் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினில் கையை வைத்தார்! நெருப்பு அவரைச் சுட வில்லை. அவர் பெற்ற அனுபவம்தான் என்ன? இறைவ னையே தொடுகின்ற உயர்நிலையை உணர்ந்தார். இவ்வரிய கருத்துக்களைச் சுதந்திரக்கவி தெரிவிப்பதைத் செவிமடுப் Gust b.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் பார்க்கும் மரத்திலெல்லாம் . நிந்தன் பச்சை நிறம் கேட்கும் ஒலியிலெல்லாம் நிந்தன் கீதம் -- a தீயினில் விரலை வைத்தால்
to e.e.
நின்னத் தீண்டும் இன்பம் .
சுதந்திரக் கவி சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரத் தில் வாழ்ந்த காலத்தில் அங்கேயுள்ள கல்மண்டபம் என் ணும் கட்டிடத்தில் வாழ்ந்து வந்தார் எனத் தெரிகிறது.
 
 

ஆத்மஜோதி 25
அந்தக் கல் மண்டபம் இத்தகைய மாபெரும் கவிஞனை அளித்தது என்ரூல் மிகையாகாது.
அதே எட்டயபுரம் கல் மண்டபத்திலிருந்து வெளி வந்த மற்றுமோர் மகான் அலெ உலகமும் புகழக் கூடிய அளவுக்கு வாழலானர் . அலா ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி யாகவும் யோகிகளுக்கெல்லாம் யோகியாகவும் தலைவர்க ளுக்கெல்லாம் தலைவராகவும் விளங்கி அன்பர்கள் அனைவ
ருக்கும் மாபெரும் வழிகாட்டியாக விளங்கி வந்தார். துற விகளுக்கெல்லாம் தலைசிறந்த துறவியாக விளங்கிய அவரது
தரிசனமே வாழ்க்கைத் துன்பங்களைப் போக்கும் அருமருந்
தாக அமைந்திருந்தது. அவரைக் காண உலகெங்கிலுமி
ருந்து எண்ணற்ற மக்கள் ஒடோடியும் வந்தனர்; அவரைத் தரிசித்து ஆறுதல் பெற்றனர். அவரது முகத்தில் தோன் றியஜோதி அனைவரது உள்ளத்திலும் ஞான ஜோதியை ஏற்ப டுத்தி மக்களது அறியாமையெனும் இருளை அகற்றி நின் றது. அவரது உயர் நூல்கள் அனைவரது உள்ளத்திலும் உயரிய எண்ணங்களை உண்டாக்கி உயர் ஞானத்தை அடை யும் ரகசியத்தை அடைய வழிகோலி நின்றன.
இவ்வரிய மகானைக் கண்டு தம் சந்தேகத்தைப் போக்க வந்தவர்களும் எண்ணற்றவர். இறைவன் இருக்கிருரா இல் லையா என்ற சந்தேகம் இன்னும் நீங்காத பல பேரறிஞர்க ளும் உள்ளனர். அம்முறையே அமைந்த அமெரிக்கநாட்டுப்பேர றிஞர் ஒருவர் இந்தப் பெரியாரிடத்தில் ஒரு கேள்விகேட் டார். 'தாங்கள் கடவுளைக் கண்டதுண்டா? பெரியார் அவர்கள் புன்முறுவல் பூத்தார். "அதோ காணும் மரங் கள், அருகே செல்லும் மிருகங்கள், அடுத்து நிற்கும் அன் பர்கள், அகன்று நிற்கும் குன்று, அரவத்துடன் ஒடும் ஆறு. அனைத்திலும் நான் இறைவனையே காண்கிறேன். அத்து டன் நில்லாது அதே இறைவனைத் தங்களிடமும் காண்கி
றேன்' என்ருர் பெரியார். இந்த விடையைக் கேட்ட
மேல்நாட்டு அறிஞர் திகைத்து நிற்கும் நேரத்தில் ஒர் அற் புதம் நிகழ்ந்தது! அவ்வறிஞர் மெய்மறந்த நிலையில் ஆனர்! சிறிது நேரம் தான் இருப்பது அவருக்குத் தெரி யவில்லை. தான் இறைநிலை எய்தினதாக எண்ணினர். அனைத்தையும் தன்னைப் போலப் பார்க்கும் தன்மையைப் பெற்று மிக்க மகிழ்வடைந்தார். சிறிது நேரம் கழிந்து உணர்வு வந்ததும் ஆனந்தக் கண்ணிர் வடித்து தான்

Page 15
26 ஆத்மஜோதி
கண்ட காட்சிகளை வர்ணித்தார். எங்கும் இறைவனைக் கண்டதாகக் கூறினுர்,
“எவனெருவன் என்னை எல்லாவற்றிலும் எல்லாவற் றில் என்னையும் காண்கிருனே அவனும் நானும் வேறல்லன்' என்ற கீதையின் கருத்துக்கொப்ப வாழ்ந்த இவ்வரிய பெரி யாரை அனைவரும் இறைவனது பேரவதாரமாகப் போற்றி
வந்தனர் என்ருல் ஆச்சரியமொன்றில்லே. இவ்வரிய பெரி
யார் முன் ஜாதி மத வேற்றுமைகள் இல்லாது ஒழிந்தன. தீண்டத் தகாதவர் தனிப் பெருமையுடன் அந்தணராக வாழ்ந்தனர். நிற வேற்றுமை நில்லாது மறைந்தது. கருப்
பரும் வெள்ளையரோடு தோளோடு தோள் சேர்ந்து வாழ்ந் தனர். பணத்திமிர் பயந்தோடி மறைந்தது. வறிஞர்க ளும் செல்வந்தருக்குச் சமமாக வறுமை நீங்கி வாழலாயி னர். இவரது முன்னிலையில் அனைவரும் ஒன்று போல வாழ்ந்தனர்!
வித்தையும் வினையமும் பூண்ட அந்தணர், பால் தரும் பசு, நிமிர்ந்து நிற்கும் யானை, நன்றியுள்ள நாய், புலால் புசிக்கும் நீசன் ஆகிய அத்தனை பேரையும் ஒன்றே போல் சம நோக்குடன் ஞானிகள் நோக்குகின்றனர் என்று கீதை பேசுவது போன்று இம் மகானும் வாழ்ந்து வழிகாட்டி வந்தார். அவர் முன் அந்தணர் அரிசன் என்ருே, வெள்
ளையர் நீக்ரோ என்றே, செல்வர் ஏழை என்ருே பாகு
பாடு கிடையாது. எல்லாரும் சமதர்ம வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்.
இந்தப் பெரியாருக்குச் சொந்தமாக ஒன்றுமே கிடை யாது. ஆனல் வரும் பொருளோ மிக அதிகம் வரும், செல்வமனைத்தும் அனைவருக்கும் உடனே கொடுக்கப்பட்டு விடும். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் என்ற பண்பை இப் பெரியார் போற்றி வந்தார். இன்று எங்கும் பேசப் பட்டு வரும் சோஷலிஸக் கொள்கை உண்மையான ரீதி யில் இவரிடம் மலர்ந்து காணப்பட்டது. இவர் முன் அனை வரும் பாகுபாடின்றிப் பேரானந்த நிலையில் வாழ்ந்தனர்.
தற்காலத்தில் நிலவும் மோசமான சூழ்நிலையில் சிக்
குண்டு நோய்வாய்ப்பட்டுத் தத்தளித்தவர் பலருக்குரிய
பேரெளடதம் இப் பெரியாரிடத்தில் கிடைத்தது. காமச்
t
s

27 மஜோதி ژق فييهھ
சுவை பொருந்திய சினிமா மற்றும் ஆபாசக் கருத்துக்கள் நிறைந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளினல் உள்ளம் கெட் டுக் கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு உடல் உறுதி குன்றி மனம் நொந்து நின்ற எண்ணற்ற இளைஞர் முதிய வர் இப் பெரியாரது தொடர்பினுல் வாழ்வில் மறுமலர்ச்சி பெற்றுப் புளகாங்கிதமடைந்தனர்.
நோய்களுக்கு மூலகாரணம் மனம். இந்த மனம் செம் மையாக இருந்தால் மனிதன் மகிழ்வுடன் வாழலாம். மனம் தீமையின் உறைவிடமாகி விட்டால் தீய சிந்தனை யின் விளைவாக ஏற்படும் தீய செயல்கள் மக்களைப் பிணிக ளின் உறைவிடமாக்கி எளிதிலே கொன்று விடுகின்றன அல் லது கொல்லாமல் கொல்லுகின்றன. இந்த மனத்தின் தன்மைகளைத் தெரிந்து அதை அடக்கி நிறுத்தினுல் அனை வரும் நோயற்று வாழலாம் என்பது ஆன்ருேர் கண்ட உண்மை. இந்த மகானது உயர் கருத்துக்கள் மனதைத் தூய்மைப் படுத்தி நம் மேன்மைக்குப் பயன்படுத்த நல் வழி கோலுகின்றன. மனதினுல் செலுத்தப்படுபவர் எண் னிறந்தவர் தற்பொழுது மனதைத் தங்கள் முன்னேற்றத் துக்குப் பயன்படுத்தும் முயற்சிகளைப் பார்க்கலாம்.
இந்தப் பெரியார் இருந்த இடத்தைத் தேடிச் செல் லாதார் கிடையாது எனலாம். நம் நாட்டு மந்திரிகள், கவர்னர்கள், நம் ஜஞ) நிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் முதற் கொண்டு இவரைத் தரிசித்து நல்லுரைகள் பெற்ற னர். அயல்நாட்டுப் பேரறிஞர்கள் அத்தனை பேரும் இவ ரது தொடர்பை நாடினர். இவர்களுள் மதவேற்றுமை மொழிவேற்றுமை கிடையாது.
இவ்வரிய பெரியார் நம் செந்தமிழ் நாட்டிலிருந்து தோன்றி அகில உலக மக்களும் போற்றும் உயர் நிலையில் வாழ்ந்து வந்தார் என்ருல் குறிப்பாகத் தமிழர்கள் அத் தனே பேரும் பெருமிதம் கொள்ள வேண்டும். இவர்தான் இமயஜோதி புரு) சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள். தென்தமிழ் நாட்டில் பத்தமடை என்னும் சிற்றுாரிலே தோன்றி, எட்டயபுரத்தில் வளர்ந்து, திருச்சியில் கல்லூ ரிப் படிப்பை முடித்து மலாயாவில் மக்கள்தொண்டாற்றி, இமயமலைச்சாரலில் பல வருடங்கள் கடுந்தவமியற்றி, ஜோ திஸ்வரூபமாக விளங்கிர்ை சுவாமிகள். ரிஷிகேசத்தில் இரு

Page 16
28 ஆத்மஜோதி
மருங்கும் அடர்ந்த காடுகள், விண்ணளாவிய மலைகளுக்கி டையே கம்பீரமாக ஒடும் கங்கா நதியின் கரையிலே சிவா னந்தாச்சிரமம் எனும் அழகியதோர் தவச்சாலையை அமைத்
தார் அவர். தொண்டு செய்வதையே கோட்பாடாகக் கொண்ட ஆசிரமத்தில் மக்களின் நோயைப் போக்க மா
பெரும் ஆசுபத்திரி நிறுவப்பட்டது. எண்ணற்ற மக்கள் நோயினின்றும் விடுபட இந்த ஆசுபத்திரி இலவச சிகிச்சை அளிக்க முற்பட்டது. பசித்தோர்க்கு இலவச போசனம் வழங்க அன்னபூர்ணு க்ஷேத்திரம் ஒன்று அமைக்கப்பட்டு வேளைக்கு நூற்றுக் கணக்கானவர்களின் பசிப்பிணியைப் போக்குகின்றது.
உடல் பிணியையும் பசிப்பிணியையும் போக்க முனைந்த ஆசிரமத்தில் உள்ளப் பிணியை அகற்றும் பணியில் ஆங் குள்ள அச்சகம் பாடுபடத் தொடங்கியது. சுவாமிகளின் நூற்றுக் கணக்கான சிறந்த நூல்களை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு அன்பர்களுக்கு இலவசமாக வழங்கி அறியாமைப் பிணியைப் போக்கும் பணியில் ஈடுபடலாயிற்று. இம்மு றையே முப்பெரும் பிணிகளைப் போக்குவதில் பூரீசுவாமிகள் முனைந்தார்கள்.
விரைவாகவே அவர் புகழ் திக்கெட்டும் பரந்தது. அவ ரது அருள்சக்தி ஆயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள வர்களாலும் உணரப்பட்டது. சுவாமிகளின்நூல்களைக்காணும் பாக்கியம் பெற்றவர் அவரை நேரிற் தரிசித்தாற்போன்ற தன்மையடைந்தனர். அறிவு துலங்கப் பெற்றனர்; அன் பர்களாகக் காட்சியளித்தனர். அவர்கள் ஆங்காங்கு சுவா மிகளின் கருத்துக்களைப் பரப்பித் தாம் பெற்ற இன்பத் தை ஏனையோரும் பெறப் பாடுபடலாயினர்.
இம் முறையே பூரீ சுவாமிகளைத் தலைவராகக்கொண்ட தெய்வ நெறிக்கழகத்தின் கிளைகள் உலகில் எல்லா நாடுக ளின் முக்கிய நகரங்களிலும் அமைக்கப் பெற்று செயலாற் றத் தொடங்கின. மக்கள் பெருமளவில் கழகத்தில் சேர்ந்து மனமாற்றமடைந்தனர்; ஒன்றுபட்ட உலகுக்குப் பாடுபட 6) ITIL')6OTri.
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப் பெரியார் 1950ம் ஆண்டிலே இந்தியாவெங்கும் குருவளிச் சுற்றுப் பிரயாணம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்

ஆத்மஜோதி 29
டின் பல பகுதிகளிலும் அவர்களைத் தரிசிக்கும் வாய்ப்பு லட்சக் கணக்கான மக்களுக்குக் கிடைத்தது.
அவர்கள் எழுப்பிய "ஓம்" காரத் தொனி இன்றும் அப் படியே மக்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தொண்டர் கீதங்கள் என்ற நல்லுரைகன் உள்ளத்தில் பசு மரத்தாணி போல் பதிந்து காணப்படுகின்றன.
அன்பின் உயர் தோற்றமாக அமைந்த சுவாமிகளது பெருமையை உணருவதற்கான நிகழ்ச்சி ஒன்று நேர்ந்தது. ரிஷிகேசத்தில் அமைந்துள்ள ஆசிரமத்தில் ஒருநாள் சத்சங் கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், நீக்ரோக்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பி யர்கள், இந்தியர்கள் முதலிய எல்லா நாட்டிலிருந்தும் அன் பர்கள் அங்கே குழுமியிருந்தனர். இவர்கள் ஜாதி மத மொழி நிற வேற்றுமையின்றி சுவாமிகளது சந்நிதியிலே இறை வழிபாட்டில் ஒன்றி நின்றனர். சுவாமி அவர்கள் அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த சங்கீர்த்தன நிகழ்ச்சியை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். திடீ ரென ஒர் ஒசை ! யாரோ ஒருவன் சுவாமிகளைத் தடியால் தாக்கின்ை! அவர் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தோடுகிறது. கூடியிருந்தோர் குற்றவாளி யைப் பிடித்து நையப் புடைக்கத் தொடங்கினர். சுவா மிஜி தனக்கேற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் எல்லோரையும் விலக்கிக் கொண்டு அடித்த நபரைக் காப்
பாற்ற முனேந்தார். எல்லோரையும் அகற்றி மூர்ச்சை
யற்ற நிலையில் கிடந்த அந்தக் காதகனைத் தன் தோளில் தூக்கிப் பக்கத்திலிருந்த ஆச்சிரமத்திற்குக் கொண்டுசென்று சிகிச்சையளித்தார். அவனுக்கு பிரக்ஞை வந்தது. தனக் குச் சிகிச்சையளித்து நிற்கும் மகாபுருஷரைக் கண்ணுற்
முன். தான் கொல்ல நினைத்த அதே மகான் அன்ருே தனக்குப் பணிவிடை செய்கிருர் என்பதை உணர்ந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணிர் பெருக்கெடுத்து ஓடியது. அவனுல் ஒன்றும் பேச முடியவில்லை. சுவாமிகள் அவன் நன்கு குணமாகும் வரையிலும் பல நாட்கள் அவனுக்குச் சிகிச்சை செய்தார். பின்னர் அவன் குணமடைந்ததும் பாதுகாப்போடு அவனை அவன் சொந்த ஊருக்கு அனுப் பியும் வைத்தார் என்ருடில் அவரது அன்பின் தகைமையை யாரே கூறவல்லார்! இது போன்ற எண்ணற்ற நிகழ்ச்சி கள் அவரது வாழ்நாளில் நிகழ்ந்தன.

Page 17
30 ஆத்மஜோதி குருதேவர் சுவாமி சிவானந்தர் திருவருளால் நலம் பெற்றவர் பலப்பலர் இன்று ஆனந்தமாக தெய்வீக நெறி யில் வாழ்ந்து பிறர்க்கும் வழிகாட்டி வருகின்றனர்.
இவ்வரிய பெரியார் சென்ற வருடம் ஒருநாள் பக்கத் திலிருந்த பக்தர்களிடம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டி ருந்தார். 'நான் வந்த காரியம் ஆகிவிட்டது! நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்' என்று அவர் கூறினர்! அன்பர்கள் இதையும் வேடிக்கை என்றே எண்ணினர்.
மற்ருெருநாள் அருகே நின்றவர்களிடம், "பிரம்ம லோகத்திலிருந்து விமானம் ஒன்று இதோ வந்து கொண் டிருக்கிறது என்னுடன் யாராவது வருகிறீர்களா' என வேடிக்கையாகக் கேட்டார்.
1963-ஜூலை 14-ம்வ. இரவு 11, 25 மணிக்கு அவரது சரீரத்திலிருந்து பெரும் ஜோதியொன்று வெளிக்கிளம்பிச் சன்று உயர் ஜோதியுடன் இரண்டறக் கலந்தது. சுவா மிகளின் சமாதிச் செய்தியைக் கேட்டவர் அனைவரும் தாயி னைப் பிரிந்த சேயைப் போன்று கலங்கி நின்றனர். ஆனல் மறுகணமே அவரது உயர் பெருமையை உணர்ந்த அன் பர்கள் அவர் எங்கும் ஜோதி , மயமாக இலங்குவதை உணர்ந்து அமைதி பெற்றனர்.
அவ்வரிய பெரியாரது மகா சமாதித் தினம் 1964 ஜூலை 14 ந்வ செவ்வாய்க்கிழமை உலகெங்கிலும் கொண் டாடப்பட்டது. அவரது உயர் ஜோதி நம்மனைவரையும் நல்வழியே செலுத்தி நலம் புரியப் பிரார்த்திப்போமாக.
சைவ இலக்கியக் கதா மஞ்சரி
ஆசிரியர் :- தேசிகமணி திரு. கா. அருணுசலம் அவர்கள். 67%80:— গঢ়urn 3.00 தபாற் செலவு 50 சதம்
இலக்கியங்கள், திருமுறை நூல்கள், புராணங்களில் வரும் 105 கதைகளைக் கொண்டது. இலக்கியம், சமயம் படிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இவற்றைப் படிப்பிக்கும் ஆசி ரியர்களுக்கும் சமய உட்பொருளை அறிய விரும்புவோருக்கும் மிக உபயோகமான நூலாகும்.
வேண்டுவோர்:-
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி.
என்ற விலாசத்திற்கு 3.50 பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலnம்.

ஆத்மஜோதி 3.
"அத்தனின் அருள்'
ஆசிரியர் :- "இளங்கண்ணன்” :-தலைமை ஆசிரியர். பூங்கா உயர்தர ஆரம்ப பள்ளி, உடுமலை.
உலகின் கண் உள்ள உயிர்கள் அனைத்தையும் அத்தனின் அருள் தன் செம்மலரடிகளிடம் சேர்க்கின்றிது . அருள் எனப் படுவது எவ்விதத் தன்னலப் பயனும் கருதாது வரையறை
இன்றி எல்லா உயிர்களிடத்திலும் எப்பொழுதும் செலுத்தப்
படும் அன்பாகும். சிவன் சிவன்கள் பால் காட்டும் சீவகாருண் யமே அருளாகும். எண்குணத்தான் இயல்பாகவே பாசங்க ளினின்றும் நீங்கியவய்ை இருத்தலினல் அருளும் தன்மை உடையவன். அவரடியவர்களும் அத்தன்மை உடையவர் களே. அவனருளே யிக்காலத்திலும் இயற்கையாகவே வானத் திலிருந்து பெய்யும் மழையில்ை உணரலாம். நல்லன தீயன வேண்டுவன வேண்டாதன நோக்காது வானம் மழையைப் பொழிகின்றது. இது போன்று இறைவனும் எவ்வுயிர்க்கும் அருள் சுரந்து துன்பங்களினின்று விடுதலை அளிக்கின்றன். உயர்திணை அஃறிணை, நரர்கள் சுரர்கள், மதியார் மதிப்பவர், கானர் கண்டவர், கற்றவர் கல்லார், வல்லார் மாட்டார், என்ற வேற்றுமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்று எல்லார்க்கும் பொதுவில் அருள் சுரந்ததற்குச் சான்று களாக கூன்ாேர்கள் வரைந்த வரலாறுகளும் புராணங்களும் நோக்குவோமாயின் அத்தன் எனப்படுகின்ற இறைவனகிய தலைவனின் அருளே அறியலாம்.
இறைவன் கருணை வடிவானவன். அவன் உயிர்களை அழிக்கின்ருன் அல்லது தண்டிக்கின்றன் என்றுகூறும்பொழுது
அது அவன் பண்பிற்கு இழுக்காகிறது என்பது சிலர் கருத்து.
இது நம் அனுபவத்தோடு ஆராய்வோமாயின் பொருந்தாத கூற்று. 娜
'நல்லாரைக் காப்பதற்கும், கெட்டவரைக்கரந்தொடுக் குவதற்கும் தர்மத்தைநிலைநாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கின்றேன்' என்று கண்ணன் கீதையிலே கூறியுள் ளான். உலகம் என்றும் நிலைத்து நிற்பதற்காக இறைவன் சில பொழுது அறக்கருணையும் மற்றும் சில நேரத்தில் மறக் கருணையும் பாலிக்கின்றன். திருநாவுக்கரசரின் வாழ்க்கை

Page 18
32 ஆத்மஜோதி இறைவனின் மறக்கருணைக்கு சான்ருகும். ஆணவ மனச்சூலை பிடித்த சமண சமயத்தவரை சார்ந்து இருந்ததால், திலகவதி யாரின் தீதில்லா அன்பிற்கிரங்கி அப்பருக்கு சூலை நோய் கொடுத்து அவர் நெஞ்சத்தை தனக்கே இடமாக்கினர் இறைவன். அன்று முதல் அச்சம் ஒழிந்து அமுதப் பாக்களைப் பொழிந்தார்.இறைவனின் அறக்கருணைக்குஅருணகிரிநாதரின் வாழ்வை சான்ருக கூறலாம். ஊழ் வலியால் நிலையா யாக் கையின் நீர்க்குமிழ்போன்ற இளமையின் இன்பத்தைஇச்சித்து பெரும் பொருள் அழித்து நெறிதவறியதால் பெருநோயும்
வறுமையும் அதனுல் வரும் சிறுமையும் கவலையும் ஆற்ருெண்
ணுமல் கோபுரத்தினின்று கார்த்திகேயனை சரணடைந்து வாழ்வை நீத்தற்பொருட்டு வீழ்ந்தவுடனேயே அவர் வினை யொழித்து ஆசைத்தின வகற்றி அறிவொளி அளித்து அருள் வாக்கீந்து சித்தனுக்கினர்.
மழை வேற்றுமையின்றி பொழிந்த போதிலும் அது ஈரப் பசையுடைய மேகங்கள் குளிர்கின்ற இடத்தில் தான் பெய்
கிறது. சில நேரத்தில் அதிகமாக பெய்வதால் அழிவு ஏற்படு
கின்றது. இதையொட்டி வானத்தின் சிறப்பை அதாவது மழையின்சிறப்பை இழித்துக்கூறுவாரும் உண்டோ? மழைக்கு அருளும் தன்மை இல்லையென்று சொல்ல முடியுமா? தாய் குழந்தைக்கு மருத்துவம் செய்யும் பொழுது அது ஒத்துழைக் காவிடில் அதனைச் சற்று அச்சுறுத்துகிருள். இதனுல் தாய் மையை, தாயின் கருணையைக் குறை கூற முடியுமா? மருத்து வன் ஒரு தீராத நோயாளியின் ஒரு உறுப்பை மற்ற உறுப்புக் களைக்காப்பதற்காகச் சிதைக்கின்றன், அல்லது மிகத்துன்பம் தரக்கூடிய மருத்துவ முறைகளே, உதாரணமாக அறுவை வைத்தியத்தை செய்கின்றன். இதல்ை மருத்துவன இரக்கமற்ற அரக்கன் என்று அந்நோயாளி கூறுவது கிடையாது, அதற்கு மாருக அவன்மீது அதிக அளவு அன்பு கொள்கிருன்.
'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம் மானே ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே'
இதே போன்று தான் இறைவன் உயிர்களை தண்டிப்பதோ
அழிப்பதோ அவனின் கருணையைக் குறைப்பதாக உயிர்கள்
*

கருதுவதற்கு இல்லை. நம் நன்மையின் பொருட்டே படைத் தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந் தொழிலில் ஒன்ருகிய அழித்தலையும் செய்கின்றன். இங்கு அழித்தல் என்பது அருளின் பால்பட்ட மறக்கருணையேஆகும். அழித்தல் என்பதற்கு இங்கு காணவேண்டிய பொருள் இருக் கும் நிலையை மாற்றுதல் என்பதுதான். அதாவது ஒரு நிலை யைக் குலைத்து மற்ருெரு நிலையை உருவாக்குதல் என்பதா கும். 'நைட்ரோஜன் சைக்கிள்' இதனை விளக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும். இனி இவ்வடிப் படையிலே சில வரலாறுகளைக் காணும்போது அத்தனின் அருளை அறியலாம்.
குலத்திலுைம் தொழிலிலுைம் கல்வியினலும் உயர்ந்த நிலையில் இல்லாத ஒரு வேடுவனுக்கு நல்வினை பற்றி மூடபக்தி கொண்ட மககைப் பிறந்தவர் கண்ணப்பர். அவரது இயற் கைப் பெயர் திண்ணணுர், உடல் திண்மையின் காரணமாக அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது. அவரது உள்ளமும் திண் மையானது தான். அறிந்தோ அறியாமலோ அவரதுநல்வினை யின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட பக்தியும் உடும்பின் பிடியினது உறுதியைப்போல விளங்கிற்று. யாரும் பெற முடி யாத பெரும் பேற்றை ஆறு நாட்களிலே அடைந்தார். இக் குறுகிய காலத்தில் அப்பேற்றை அடைந்தவரது வழிபாட்டு முறை மிகச் சிறந்ததாக இருக்குமென்று நாம் எண்ணக்கூடும். ஆல்ை உண்மையில் அது நம் மரபிற்குரிய வழிபாட்டினின் றும் மிகவும் மாறுபட்டது. அம் முறையை நாம் கைக் கொண்டோமாயின் நாம்இறைவனை நிந்தித்தவர்களாவோம். ஆனல் அவர் காட்டிய உறுதியும் உண்மையான பேரன்பும், தன்னையும் இறைவனேயும் வேறுபடுத்திக் காணுத களங்க மற்ற ஐக்கிய மனநிலையையும் நாம் காணும்போது அவ்வழி பாடு மேம்படுகிறது. அவர் வாயினுலே திருமஞ்சன நீரை உமிழ்ந்தார். காலிஞல் சிவகோசாரியார் இட்டுச் சென்ற மலர்களை அகற்றினர். கொல்லாமையை அறியாத கார ணத்தில்ை கொன்ற இறைச்சியைச் சுவைத்து இறைவனுக் குப் படைத்தார். இவ் வழிபாட்டு முறையில் அறிவின் நிலை தாழ்ந்தும் அன்பின் நிலை மிக முதிர்ச்சி அடைந்தும் இருப்பதைக் காணலாம். எனவே வழிபாட்டின் முறை இழிந்திருந்த போதிலும் அவர் அன்பின் முதிர்ச்சியினல் அத்தனின் அருளை அடைந்தார். அறிவு குறைந்த திண் ணணுர் அத்தன்பால் உள்ள அன்பின் மிகுதியால் கண்களை அப்பினர். அதனுல் கண்ணப்பரானுர் .
-தொடரும்

Page 19
'ATHMAJOTHI Registered at the
சந்தா நே அன்புடையீர்!
17ஆவது ஆண்டுச் சோதி இன்று நேயர்களின் உதவியினலேயே சோதி சோதிக் குழந்தை உங்கள் வீட்டைத் ( போகின்றீர்கள் உங்கள் சந்தாவை கள் கொடுக்கும் பரிசாகும். என்றெ
இந்தியாவிலுள்ள சந்தாநேயர்க R. வீரசம்பு, ச அரிசிப்பாளை
என்ற விலாசத்திற்கு அனுப்பி
互@@
ஆத்மஜோதி நிலையம்
ஆத்மஜோதி நி3
1. ஆத்மஜோதி மலர் (1963) 2. சைவ இலக்கியக் கதா மஞ்சரி 3. ஆத்மநாதம் 4. தீங்கனிச் சோலை 5. UT LIT grfur, G 6. திவ்ய ஜீவன சங்க வெள்ளி வி 7. கூட்டு வழிபாடு 8. நவராத்திரிப் பாடல் 9 மார்கழி மாதப் பாடல் 10. கதிர்காமப் பதிகம் 11. செல்லச்சந்நிதி பாடல் 12. கந்தரனுபூதி 13. அறிவுரைக் கதைகள் 14. நித்திய கருமவிதி 15. கதிரைமணிமாலை
தபாற்
அச்சிடுவோர்- ஆத்மஜோதி அச்சிடுவிப்போர் - ஆத்மஜோ வெளியிட்டதேதி: - 16-11-64.

2 G.P.O. as a Newspaper. M.L. 59/300
نےمجھے حصے محمحےحصیA-محےحصیYA
யர்களுக்கு
உங்கள் கையில் கிடைக்கின்றது. சந்தா பதினுறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. தேடிவரும்போது என்ன பரிசு அளிக்கம் உடனே அனுப்பி வைத்தல்தான் நீர் ன்றும் உங்கள் ஆதரவு கிடைப்பதா ள் தமது சந்தாவை வழக்கம்போல் ம்பு இன்டஸ்ரீஸ், யம், சேலம்-9,
வைப்பதோடு இவ்விடமும் அறியத் வீர்களாக,
5 Ts லப்பிட்டி (சிலோன்)
லய வெளியீடுகள்!
2.00 3.00 3.00 2.50 1.50 விழா மலர் 1, 25
30 30 20 轟。
25
15
25
25
செலவு தனி
ܡܓ
அச்சகத்தினர்
தி நிலையத்தினர்