கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.12.15

Page 1
குமார
<>ప><>
சித்திர வேலாயுத
<><><><><><><><><><><><>
క్ష<@><><><><><><><><><>
<><><><><><><><><<><<><రిగా
 <@><><><><@> ఫ><@><><><>
* <><><><><><><><><><> ప><><><><><><><> <ම><> <><><><><>>|<><><ම><ම>
砷*
TLD
攤》。令》>令》令令。令令》戀 令令令》令令令》。令。令》令》公
나
?
சுவாமி கோவில்
S
<><><@><><><><> <><><><><><><@><><><><><><>
<>> <><><>

Page 2
***今命令伞令令令令令伞→今令*伞***今令今伞伞→*****+-******
த்ம ஜோதி
ஆத்மீக மாத வெளியீடு)
******令*令***→4伞++4+++4伞伞伞+伞++44444→4++++++++++******
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
。* எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
சுத்தாளிந்தர்
ஜோதி 17 13 குரோதி வூ மார்கழி மீ" 1உ [15-12-641 - at Ls 2
பொருளடக்கம் 1 குமாரபுரக் குமரவேள் பதிகம் 33 2 முத்தமிழ்க் காதல் 34 3 குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோயில் 35 4 விளக்கேற்றிவிடு! 38 5 அறிவுரைகள் 39 6 பரோபகாரம் 41 7 கற்பணுவாதம் 44 8 அல்லமாப் பிரபுவும் கொக்கித் தேவரும் 47 9 மனநோய் மாற்றும் மருந்து 5) 10 சாதகர்களின் கவனத்திற்கு 53 11 தற்கால உலகின் நோய்கள் 56 12 நல்வாழ்வு வாழும் வழி 58 13 அத்தனின் அருள் (தொடர்ச்சி) 63 ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூபா 75. வருட சந்தா ரூபா 3.00
தனிப் பிரதி - சதம் 30 கெளரவ ஆசிரியர் = திரு. க, இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் ண திரு. நா. மூத்தையா 濂 "ஆத்மஜோதி நிலேயம்' நாவலப்பிட்டி, சிலோன்) தொலைபேசி எண் 353
 
 
 
 
 
 

குமாரபுரக் குமரவேள் பதிகம் (அல்வாயூர் - மு. செல்லையா அவர்கள்)
அஞ்சுமுக நெஞ்சொடுநின் கஞ்சமலர் தஞ்சமென
அன்பர்வழி பட்டு நிற்ப ஆறுமுகம் தந்தருளி மாறுமுகம் போக்கவரும்
அப்பனே ஆல வாயில் வஞ்சிமா தேவிமுன் சென்றமணர் துயர்தீர்த்து
மலிசைவ ஒளிய ரப்பி மானினேர் விழியாட்கும் மன்னர்க்கு மமுதமாய்
வந்தருளும் ஞான குருவே செஞ்சொற் கவிக்கீர ணுற்றுப் படைகொண்டு
சேர்ந்த ஆயிரவர் சிறையைத் தீர்த்தருளு மூர்த்தியே கார்த்திகே யாவெனது
சிறுகுறை தவிர்த்த லரிதோ வஞ்சந் துலங்கும் மிலேச்சரா லிடியுண்டு
மங்கிய குமார புரத்தில் மகிழ்குமர வேளுனது சரணமலர் அரனென்று
வாழ்த்தி முடி தாழ்த் தி னேனே.
பத்தியிற் பூரித்த சித்தர் முகம் போன்று பல
பங்கயம் மலர ஆங்கே பாட்டாளிகள் மொய்த்து மது வுண்டுசெய் யோசையாற்
பாங்கரில் தூங்கு மேதி - நித்திரை விழித்தெழுந் தேகலாற் சேற்றினுெலி
நிறைவுகேட் டுத்து டித்து நீள்வரால் தத்தியே பாய்கின்ற சுனை மல்கி
நிறைதண்ணி ரூற்று நகரில் சித்தரும் முத்தரும் கூடியே பண்டுபல
செய்தவமி யற்று தளியாய்த் திகழருட் டேக்கமா யோங்கிய குமாரபுரத்
திருப்ப திக்கொரு தெய்வமே மத்தினிற் றயிர்போல் மனமுடைந் துன்னருளை
வறியனும் வேண்டி நின்றே மகிழ்குமர வேளுனது ಆ ೧೫ ಊ6ು! அரணென்று
வாழ்த்திமுடி தாழ்த்தி னேனே.
*s

Page 3
34 - ஆத்மஜோதி முத்தமிழ்க் காதல்
(பி. யூனி.)
முருகக் கடவுளை முத்தமிழ் வினுேதகைக் கண்ட பக்த கவிகள் சிலர்; இவர்களில் தலைசிறந்தவர் அருணகிரியார் முருகவேள் புலவருள் புலவகை மட்டுமா தமிழ் உள்ளங்
களில் தோற்றமளிக்கிருன்? தமிழருள் தமிழனுகவும் தோன் றுகிருன். தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன்’ என்று
போற்றுகிரு?ர்கள். தாய்மொழிக் காதல் இல்லாத தமிழர் களைத் தமிழுக்கு நல்லவர்கள் என்று சொல்ல முடியுமா? முருகனைத் தமிழில் விருப்பமுள்ளவன், தமிழ்ப்பிரியன் என்று
சொன்னல் போதாது; தமிழ்ப்பித்தன் என்றே சொல்ல வேண்டும்; அப்படியே சொல்லுகிரு?ர்கள் பக்தர்கள். அத ணுல்தான் அருணகிரியார் கந்தரலங்காரத்தில்
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்குவாழ வைப் போன்
என்று தம் இஷ்ட தெய்வத்தைப் போற்றுகிருர்,
சுவாமி, உன்னைத் திட்டுகிருனே! என்று புகார் செய்து கொண்டால், முருகனுக்கும் கோபம் வருவது இயல்புதான். ஆனல், "திட்டினன் தமிழில்’ என்று சொல்லி விட்டால் வந்த கோபம் எந்த மூலையிலோ போய்ப் பதுங்கிக்கொள் ளுமாம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் வை தான், சுவாமி என்று சொல்லிவிட்டாலோ பதுங்கிக்கிடந்த கோபமும் மாயமாய்ப் பறந்து போகுமாம். "வைதார் களா’ அவர்களையும் வாழ வைப்பேன்! என்று சொல்லுகி ருளும் முருகன்.
எங்கே வைதார்களோ அந்த இடத்திலேயே, எப்போது வைதார்களோ அப்போதே, அவர்களைத் தண்டிக்க வேண் டும் என்று கோபம் எழுவது இயல்பு. ஆனல் தமிழ்ப்பித் தணுகிய முருகன் தன்னை வைத இடத்திலேயே தமிழில் வைதவர்களையும் வாழ வைக்கிமூனம். அங்கு" என்ற சின் னஞ் சிறு சொல் இந்த அருணகிரி வாக்கிலே செலுத்தும் ஆதிக்கத்தைத்தான் என்னென்பது?
 

ஆத்மஜோதி 35
குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோயில்
(ஆசிரியர்)
குமாரபுரம் என்பது முல்லைத்தீவுத் துறைமுகத்திலி ருந்து மாங்குளம் சந்திக்குச் செல்லும் வீதியில் நாலாவது மைலில் உள்ளது. புரம் என்னுஞ் சொல் தலைநகரைக் குறிப்பதாகும். வல்லிபுரம், குமாரபுரம் என்பன ஒரு காலத்தில் சிறந்த தலைப்பட்டினங்களாக இருந்தன என்
பது சரித்திராசிரியர்களுடைய கூற்ருகும்.
மாந்தை மாநகரம் சிறந்த துறைமுகமாக இருந்த காலத்திலேயே, அதாவது விஜயன் என்பவன் இந்தியாவிலே பிறப்பதற்குப் பல நூற்ருண்டுகளுக்கு முன்னரேயே திருக் கேதீச்சரம் சிறந்த தலமாக விளங்கியது. திருக்கேதீஸ்வ ரத்தைப் போலவே குமாரபுரமும் அக் காலத்தில் பறங்கிய ரால் இடிக்கப்பட்டது. குமாரபுரத்தில் இடிந்து கிடக்கும் கட்டிடங்களையும் தூண்களையும் நோக்குமிடத்து இது பண் டைக் காலத்தில் வன்னிப் பிரதானிகளும் குடிகளும் வந்து வணங்கிய பெரிய சுப்பிரமணிய தலமாய் விளங்கியது என்
பது நன்கு புலகுைம். இப் புராதன புண்ணிய தலத்தில்
கோயில் கொண்டருளிய மூர்த்தியின் திருநாமம் “சித்திர வேலாயுத சுவாமி என்பதாகும்.
இத் திருக்கோயில் கதிர்காமம் போன்ற பெருமையு டையதென தெட்சண கயிலாய மான்மியம் கூறுகின்றது. கோயில் சிறப்பினலேயே இடத்திற்குக் குமாரபுரம் என் னும் பெயர் வந்தது. மூர்த்தி மிக மிக விசேடமானது. மூர்த்தி விசேடத்தினலேயே திருக்கோயில் சிறப்பான பெய ருடன் விளங்கியது. இந்த மூர்த்திக்கு நிகரான மூர்த்தி இலங்கையில் வேறு எங்கும் இல்லை என்பது பெரியோரு டைய அபிப்பிராயமாகும். இந்தியாவிலே கூட ஒன்று இரண்டு மாத்திரம்தான் உண்டு.
இத் தலத்தை அந்நிய மதத்தினர் இடித்தழிக்கப்போ கின்றனர் என்பதை முருகப் பெருமானருளால் மேற்படி தலத்திலுள்ள அந்தணர்களும் சைவ அன்பர்களும் அறிந்த

Page 4
36 ஆத்மஜோதி
னர். பெருமானுடைய திருஉருவின்சிற்பநுட்பம், தொன்மை, அருள்திறம் முதலியவற்றைச் சிந்தித்து இம் மூர்த்தியை அன்னிய மதத்தினர் கையில் அகப்பட விடக் கூடாதென ஒருங்கு யோசித்துத் துணிந்தனர். அவர்கள் ஆலோசனை யின்படி ஒரு கட்டுமரத்தில் மூர்த்தியை எழுந்தருளச்செய் தனர். இரவோடிரவாக இரகசியமாக, கந்தவனக்கடவை என இக் காலத்தில் வழங்கும் பொ லிகண்டிக் கடற்கரை யில் இறக்கினர். அக் கடற்கரைக்கு அணித்தாகவே அந் நிய அரசினர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் ஒரு சிறு கோயில் அமைத்து அக் கோயிலில் இரகசியமாக வைத்துப் பூசித்து வரலாயினர். பொலிகண்டி என வழங்கிய இந் நெய்தல் நிலக் கிராமம் சித்திர வேலாயுத சுவாமி கோயில் கொண்ட காலந் தொடக்கம் கந்தவனம் எனவும் கந்தவ னக் கடவை எனவும் வழங்கலாயிற்று.
குமாரபுரத்தில் பரிவார மூர்த்தியாக இருந்த பிள்ளை யார் இப்பொழுது முல்லைத்தீவுக்கு அணித்தாக உள்ள கரை யாம் முள்ளிவாய்க்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு குமார கணபதி என்னும் திருநாமத்துடன் வணங்கப்பட்டு வரு கின்றர்.
சித்திரவேலாயுதமூர்த்தியின் விசேடத்தினல் கந்தவன நாதர் கோயில் நித்திய நைமித்திகங்களோடு நூற்றுக் கணக்கான வருடங்களாகச் சிறப்போடு விளங்கியது. ஒரு நாள் பூசகரின் கவலையீனத்தினுல் மூர்த்தியின் திருக்கர மொன்றில் ஊறு ஒன்று ஏற்பட்டுவிட்டது. ஊறு ஏற்பட்ட மூர்த்தியை வைத்து வணங்குதல் சரியல்ல என்ற முடிவுக்கு வந்தனர் சிலர். அதனுல் கடலில் கொண்டு சென்று மூழ்க விடுவதாக யோசித்தனர். பலர் கடலில் மூழ்கவிட விரும் பா தாராய் இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருக் கோயிலின் உள் வீதியில் வடக்குப் புறமாக வன்னிமரத் தின் கீழ் ஒரு சிறு கோயில் அமைத்து ஊறு ஏற்பட்ட மூர்த்தியை அக் கோயிலில் தாபித்து நித்திய பூசை நடக் கச் செய்தனர்.
சித்திரவேலாயுத மூர்த்தியை ஒத்த சண்முகமூர்த்தி ஒன்றை மூலத்தானத்தில் பிரதிஷ்டை செய்து நித்திய நை மித்திகங்கள் குறைவற நடைபெற்று வருகின்றன. இன்றும் அன்பர்கள்சித்திரவேலாயுத சுவாமியை அச்சிறிய திருக்கோயி லில் அம்மைமார்களுடன் தரிசனம் செய்து வருகின்ருர்கள்.
 

ஆத்மஜோதி - 37
குமாரபுரத்திலுள்ள மூர்த்தி அகற்றப்பட்ட பின் கோபி லும் இடித்தழிக்கப்பட்டது. அங்குள்ள சைவ மக்கள் உளம் நொந்து வருந்தினர். அழிந்து கிடக்கும் திருக்கோயிலுக்கு அருகிலே பற்றை மறைவில் சிறு கோவில் அமைத்து சித் திர வேலாயுதப் பெருமான் ஞாபகார்த்தமாக ஒரு வேலைத் தாபித்து இரகசியமாகப் பூசித்து வந்தார்கள்.
குமாரபுரத்தில் 1817ஆம் ஆண்டில் 42 குடும்பங்க ளும் 1839ஆம் ஆண்டில் 48 குடும்பங்களும் 1881ஆம் ஆண்டில் 4 குடும்பங்களும் வசித்து வந்தனர். 1891ஆம் ஆண்டில் ஒருவருமே வசிக்கவில்லை என வன்னிக் கைநூல் கூறுகின்றது. ஆகவே சேவலும் மயிலும் சைவ அன்பர்க ளும் நடமாடிய குமாரபுரம் காட்டுக் காய்ச்சலும், கரடி வெம்புலிகளும், நச்சரவமும் வாழும் கானகமாக மந்தியு மறியா மரம் நிறை அடுக்கமாக மாறியது.
இப்பொழுது காட்டப்பட்டிருக்கும் கோயிலே ஜோதி யின் முகப்பை அலங்கரிக்கின்றது. இப்பொழுது கட்டப் பட்டிருக்கும் கோயிலிலே வாசற்படியில் வைத்துக் கட்டப் பட்டிருக்கும் கருங்கல் பழைய கோயிலிலிருந்து எடுக்கப் பெற்ற கல்லாகும். இது மகாமண்டப வாசற்படியாக வைக்கப்பட்டிருக்கின்றது. கதவு நிலையில் ஒரு சோடி பாம்பு உலகமாகிய உருண்டையை நாக்கை நீட்டிக் கொத்தும் பாவனையில் அழகிய சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வன்னிக் காடுகளில் சோழர் காலத்து லிங்கங் கள் பல மறைந்து கிடக்கின்றது என்பதற்கு ஐயமில்லை. மக்களுடைய தெய்வீக உணர்ச்சி கூடக்கூட மறைந்த லிங் கங்களும் தோற்றமாகி அருள் புரிந்து கொண்டேயிருக்கும்.
அவ்வாலயம் இருந்த இடத்தையும் அதைச் சூழ்ந்தி ருக்கும் நிலத்தையும் புத்தூர் சிவபூரீ நா. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் அரசினரிடம் விலைக்கு வாங்கிப் புதுப் பிக்க முயன்ருர்கள். இப்போது இவரது புதல்வர் சிவபூரீ பரமசாமிக் குருக்கள் அத்திருத் தொண்டைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றர்கள், பரமசாமிக் குருக்கள் அவர்கள் முல்லைத்தீவு உண்ணுப்புலவு என்னுமிடத்திலிருந்து அழகிய சிவலிங்கம் ஒன்றை எடுத்து வந்து தாபித்துப் பூஜை செய்து வருகின்றர்கள்.

Page 5
38 ஆத்மஜோதி
விளக்கேற்றி விடு!
(சி. பொன்னுத்தம்பி)
ஆற்றல் அனைத்தும் அளித்துவிடு-நெஞ்சில் ஆணவப் பேயை ஒழித்துவிடு! போற்றுங் குணங்கள் நிறைத்துவிடு-நெஞ்சில் புன்மைக் குணத்தை மறைத்துவிடு! சோற்றுப் பொதியினைப் போலுலகில்-எனக் சோம்பி மடிந்திட வையாது, உனக்
கேற்ற பணிகள் எவையேனும்-புரிந் தின்புறச் செய்க இறையருளே!
நெஞ்சைத் தெளிவு படுத்தி விடு!-சிறு நீச நினைவை முடித்துவிடு! வஞ்ச இருளினை ஒட்டிவிடு, - என்றன் வாழ்வில் நிறைவிளக் கேற்றிவிடு அருட் செஞ்சொற் கவிதை அளித்துவிடு-நெஞ்சில் தெய்வக் கனலை எழுப்பி விடு! இந்தப் பிஞ்சுக் குழந்தை களிப்புறவே - ஞானப் பேரின் பத் தேனைப் பொழிந்துவிடு!
நல்லவரோ டெனே ஒன்றவிடு-கொடும் நச்சுக் குணங்களைக் கொன்று விடு: பொல்லா அகந்தைகள் போக்கிவிடு-நெஞ்சில் பூரண ஞானத்தை ஊக்கிவிடு! அல்லல், துயரில் உழற்றதே-இந்த அவல உலகில் சுழற்றதே! கொல்வதெனில் என்னைக் கொன்றுவிடு-அன்றேல் குழந்தையேன் உன் அன் பில் கூடவிடு!
என்னைக் கவியாய இயக்கிவிடு,-உன தின்பப் புகழை இசைக்கவிடு! வண்ணக் கவிதை மலர் மாலை-உன்றன் மார் பினில் சூடி மகிழவிடு! சின்னத்தனத்தின் குறும்பினிலே-யான் செய்த பிழைகள் பொறுத்துவிடு! உன்னைத் தவிர உலகினிலே-எனக் குற்றதுணை பிறி தொன்றிலேயே!

ஆத்மஜோதி 39
அ றி வு  ைர க ள்
ஜீேலழறீ கண்ணையா யோகி ஆத்மயோக ஞான சபா சென்னை)
7.
ஸ்தூல, சூசஷ்மப் பிரபஞ்சப் பொருள்கள் தோன்றி, இயங்கி, மறைந்து கொண்டிருப்பதற்கு ஆதாரமாயிருக் கும் உணர்வுச் சக்தி கடவுள்.
கடவுள் அரூபி ஆல்ை எந்த உருவிலும் அவர் ஸ்தூல, சூசுஷ்ம உலகங்களில் வெளிப்படுவார் BICIђ01, 9/(I) (OJ (156)/, உருவ நிலைகளில் அவர் இருக்கிருர்,
கடவுள் ஒன்றே; அவரின் குண, கர்ம, சுபாவங்களைக் கொண்டு அவரை எண்ணற்ற வடிவிலும், பெயரிலும் வழிபடலாம்; தெய்வங்களில் வேற்றுமை காண்பது அறியாமை.
கடவுள் நிலைசக்தி, செயல்சக்தி என இருவகைகளில் இருக்கிருர் நிலைசக்தியில் அவரை ஆணகவும், செயல் சக்தியில் பெண்ணுகவும் கருதப்படுகிறது; உயிர்களைப் பரிணுமத்தில் இயக்கி, விளையாடிக் கொண்டிருக்கும் இயற்கை இறைவனின் செயல் சக்தியாகையால் தே வழிபாடு சிறந்ததாகும்.
உயிர்கள் தம் உண்மை நிலையில் இறைவனைப் போன்ற வைகள்; ஆயினும் மலங்களின் தொடர்பால் அவை சிற்றறிவுடையலையாக இருந்து வருகின்றன; இறையரு ளால் உண்மையை உணர்ந்துய்யும்.
சாதி, குலம், கோத்திரம், உறவு, உயர்வு, தாழ்வு, முதலியவைகள் பெளதிக உலகில், பெளதிக உடலுக்கும் மன நிலைக்கும் தான் பொருந்துமன்றி ஆன்மாவுக்குப் பொருந்தா, அனைத்திலும் ஆன்மாவைக் காண முயல்ப வன் இவைகளால் வேற்றுமை கருதமாட்டான்.
யோக சாதனைதான் இறைவனையடையும் நேர்பாதை; ஆனல் முற்பிறவிகளின் பயனுல் நேராக யோகத்தைப் பயில முடியாதவர்கள் உபாசனையின் மூலமாகத்தான் அதை மேற் கொள்ள முடியும்.

Page 6
40
10.
l
ஆத்மஜோதி
தியானம் கலவாத பக்தி, பூஜை, உபாசனைகள் பயன ளிக்கா உபாசனை, யோகம் முதலியவைகளை எக்குலத் தவரும் செய்து பயன்பெற முடியும்; ஆனல் தகுந்த வொரு குருமூலமாக அதற்கான அதிகார தீகூைடி பெற் றுச் செய்தால்தான் பலன் கிடைக்கும்.
உபாசகர், யோகி, சாதகர் முதலியவர்களே வேடங் களால் அறிய முடியாது; இறையருள் பெற உடல் வேடங்களோ, காட்டு வாசமோ தேவையில்லை; இல்ல றத்திலிருந்தே எந்த சித்தியையும் அடைய முடியும்; ரிஷிகளும், முனிவர்களும் இல்லறத்தில்தான் இருந்த
Gos7 fi ..
மண்ணுலகில் இருக்கும் போது பெருத எந்த சித்தியை யும் இறந்தபின் பெறமுடியாது; மண்ணுலகத்தில் இருக் கும் போதே முக்திவரை தெய்வ அருளைப் பெற்ருக வேண்டும்.
யோக சாதனைகளில் தோன்றும் சித்திகளை உலகில் உப
யோகித்துப் பேரும், புகழும், செல்வமும் தேட முயல்ப வன் பேரின்பம் பெறமாட்டான், மறைவில் பாபத்தை யே சேமிப்பான்; சித்திகளின் ஆற்றலை மேலும் தன் உயர்வுக்காகவே பயன் படுத்த வேண்டும்.
சாதுக்கள், பெரியோர்கள் போன்று தெய்வ அருள்
பெற்றவர்களின் உதவி கொண்டு தம் குறைகளைப் போக்கிக் கொள்ள முயல்வது சரியல்ல; ஒவ்வொருவ ரும் தாமே நேராக இறையருளேப் பெற்று, குறைக ளைப் போக்கிக் கொள்ள முயல வேண்டும். வழிகாட் டிகளாகத் தான் பெரியோர்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஊரிலான் குணங் குறியிலான் செயலினுன் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலா ன் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றன்.
- கந்தபுராணம்.

ஆத்மஜோதி , 41
பரோபகாரம் !
(பூனிமதி. சிவானந்த சந்தானம்மையார்-மதுரை)
'தினகரன்' ஒளி பொருந்திய செங்கதிர்களை வீசி உயிர் வகைகளை வாழச் செய்கிருன், நட்சத்திரங்களும் அங் நுனமே பிறருக்கு வழிகாட்டுகின்றன. நதியானது மலை மீதிருந்து பாய்ந்து வந்து கல்லென்றும், முள்ளென்றும் பாராமலும், வெப்பமென்ருே, குளிரென்(ேm கருதாமலும் இரவும் பகலும் இடையருது ஒடிக் கொண்டே வயல்கள், தோட்டங்கள், வனங்கள் முதலியவைகளுக்கும், சகல ஜீவ ராசிகளுக்கும் தண்ணீரை வழங்கி உயிர் கொடுக்கிறது. அது போன்று மரம், செடி, கொடிகள் பிறருக்கெனவே மலர்கள், காய்கள், பழங்கள் இவைகளைத் தாங்கிக்கொண் டிருக்கின்றன.
இவ்வாறே பிரகிருதி அன்னை தனது சிருஷ்டியின்
உயிர்கள் அனைத்திற்கும் சிறந்த காற்று, நன்னீர், தானி
யம், காய்கள், கனிகள் இன்னும் தேவையான எல்லாவற் றையும் அளிக்கின்றனள்.
ஜீவப் பிராணிகளாகிய நமது தன்மையோ எனில் தூய்மையான காற்றை உட்கொண்டு அதை அசுத்தமான தாக வெளி விடும்படியாகவும், சுத்தமான நீரைப் பருகி விட்டு பிறகு அதைக் கழிவு நீராகக் கழிக்கும்படியாகவும் இயற்கைத் தாய் அளிக்கும் செழுமையான காய்கறி, கனி,
தானியங்களை உணவாக ஏற்று அதை அசுத்தமாம் கழிவுப்
பொருளாய்க் கழிக்கும்படியாகவும் அமைந்துள்ளது. தான் சிருஷ்டித்த தனது குழந்தைகள் தன்னைப் பார்த்துப் பணி
புரியும் தொண்டில் தன்னைப் பின்பற்ற வேண்டுமென விரும்பும் பிரபஞ்சமாகிய 'தாய்’ சிறிதும் களைப்புருது, முணு முணுக்காது நாம் வெளிவிடும் அசுத்தமான காற்றை சுத்தம் செய்து நாம் சுவாசிப்பதற்கு உகந்த தூய காற் ருக்குகிருள். கழிவு நீரை வெப்பத்தால் நீராவி ஆக்கிப் பிறகு அதை வானில் கருமேகங்களாகச் செய்து பரிசுத்த
மான மழைநீராய் நமக்கு இயற்கைத் தாய் வழங்குகிருள்.

Page 7
42 * ஆத்மஜோதி
பூமித்தாய் ஜீவர்கள் வெளிப்படுத்தும் கழிவுகளை யெல் லாம் பொறுமையுடன் ஏற்று அவைகளையே தான்ய ம களாகவும் வண்ண மலர்களாகவும் புஷ்டிதரும் காய்கனி களாகவும் நமக்குத் தந்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாயிருக்கிருள். இயற்கை அன்னையின் கருனைதான் என்னே !! என்னே!! சொல்ல வும் முடியுமோ! அத்தகைய இயற்கைத் தாயின் திருவடி களுக்கு போற்றி! போற்றி!
பூதவுடல் தாங்கிய சான்றேர்களும் தமக்கென வாழாது பிறருக்கெனவே வாழ்கின்றனர். அல்லும் பகலும் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பரோபகாரத்திற்கே அர்ப்பணிக்கின்றனர். பிறருக்குத் தொண்டு புரிவது சேவை. சித்த சுத் தி உண்டுபண்ணுவதும் சேவை. அகங்காரத்தை அகற்றுவதும் சேவை. எவ்வுயிரையும் தன்னுயிராய்ப் பார்க் கும்படி செய்வது சேவையாகும். பரபோதத்தை வளர்ப் பது சேவையாகிறது. பணிவிடை செய்கிற இடத்து வள் ளல் ஆகிருன். அவனுடைய வாழ்வு அப்பொழுது பெரு வாழ்வாக மாறுகிறது. இதைத்தான் தாயுமானவர் தமது பாடலில் தெரிவிக்கிருர்,
அன்பர் பணி செய்ய எ?ன
ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்து
எய்தும் பரா பரமே. (தாயுமானவர்)
மக்களுக்குச் செய்கின்ற தொண்டு சிறந்தது. ஆத லால்தான் 'மக்கட் தொண்டே மாதவன் தொண்டு' என்று பெரியோர்கள் பறைசாற்றியுள்ளனர். அனைவரை யும் ஒன்றுபோல் கருத வேண்டும். 'இமயஜோதி பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களின் கூற்றுக்கிணங்க அனைவரிடத்திலும் ஆண்டவனையே பார்க்க வேண்டும். அந்த நிலைமை நம் ஒவ்வொருவருக்கும் வருமேயானல் இந் நாட்டில் போர்மூளாது. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை செய்ய மாட்டார்கள். இது நாட்டிற்கே நன்மை பயக் கும். பிறருக்குத் தொண்டு செய்தலையே தனது கடமை யாக்க வேண்டும். ஆதலால்தான் கீதையில் தெரிவித்துள் Tெது.
“கர்மண் யேவாதி காரஸ்தே மாபலேஷா கதாரண'

ஆத்மஜோதி 43
அதாவது பணி செய்வதே நினது கடமை, பலனில் பற்று வைக்காதே என்பதாக அர்ஜூனனிடம், பூரீகிருஷ்ண பரமாத்மா திருவாய் மலர்ந்தருள்கிருர்,
தேசத்திற்கு, சமூகத்திற்கு, வறியோர்களுக்கு, நோயுற் ருேர்களுக்கு, சிறிதளவு ஆற்றிய பணியும் வீண்போவது கிடையாது. அதனுல் சித்த சுத்தி ஏற்பட்டு உள்ளம் ஆத்ம ஞானத்திற்குத் தகுதியுடையதாக ஆகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் யக்ஞமாக செயல்புரி தல் வேண்டும். நன் முயற்சியுடன் சுயநலமற்ற முறை யில் தொண்டாற்ற வேண்டும். இதைத்தான் திருநாவுக் கரசர் தெரிவிக்கிருர்,
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென் கடம் பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனேயுந் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே.
(திருநாவுக்கரசர்)
இதையேதான் 'ஜகத் குரு' 'இமயஜோதி' 'சமய ஜோதி' 'அருள் வள்ளலார்' பூரீ சுவாமி சிவானந்த சரஸ் வதி அவர்கள் ஆறு பெயர்களில் தெரிவித்துள்ளார்கள். Serve, Love, Give, Purify, Meditate, Realize, Jr. air LiS),56ir தன் னலமற்ற நிஷ்காம்யமான தொண்டிற்குத்தான் முதலிடம் கொடுத்தருளினர்.
ஆகையால் மெய்யன் பர்களே! நாமும் குருவருளையும், திருவருளையும் துணையாகக் கொண்டு பரந்த மனத்துடனும், தூய்மையான இதயத்துடனும், உண்மையான தொண்டு மனப் பான்மையுடன் பரோபகாரம் செய்து எம்பெருமா னுக்குப் பணிபுரிந்து இம்மையிலேயே உய்வோமாக.
ஜெய் சிவானந்த்! ஜெய் சிவானந்த்!
ஒம் தத் சத்! ஒம் தத் சத்!! ஓம் தத் சத்!!! ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை யானும் நீயுமாய் இசைத்தும் என்றல் அஃதெளிதோ மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதும் தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை. - கந்தபுராணம்.

Page 8
44 ஆத்மஜோதி
கற்பனு வாதம்
(வ. சின்னத்தம்பி)
உலகம் தோன்றிய காலம் தொட்டு, இன்று வரை, உலகம் இருக்கும் வரை பகல், இரவு உண்டாவது போல இந்தக் கற்பனவாதம் என்ற ஆணவ இருள் மனித இனத் தில் சிலருக்கு ஒரு நோயாக இருக்கிறது. அமைதியாக வாழும் பல மனிதர்களை இந்தக் கற்பன வாதக் கூச்சலி டுபவர்கள் கெடுத்து விடுவதுண்டு. 'வாதமிடு பரசமயம் யாவுக்கும் மிகஅரிய மகிமைபெறு, பெரிய பொருளே'என்று தாயுமானுர் காட்டிய உண்மையில் இந்த விதமான வாதம் செய்பவர்கள்தான் கற்பன வாதிகள். நில்லாதனவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை என்ற வள்ளு வர் வாக்கை நிரூபிக்க மனித குலத்தின் கடையாய பிறவி யில் வந்து புல்லறிவை ஆணவத்துடன் பரப்புவோர்களே கற்பனுவாதிகள்.
வேதத்திற் கேள்வியில்லாதது. போதத்திற் காண வொண்ணுதது. வீசத்திற் தூரமில்லாதது. கதியாளர் வீதித்துத் தேடரிதானது' என்ற அருணகிரிநாதர் வாக் கில் வருகின்ற கதியாளரே இந்தக் கற்பன வாதிகள்.
இந்தக் கற்பன வாதிகள் நாஸ்தீகம் என்ற அறிவை ஆணவம் என்ற வெளிச்சத்தில் கற்றுக்கொண்டு மனித குலத்தில் புனிதமான மக்களைக் கூடத் தம் பக்கம் திருப்ப முனைவார்கள். இவர்கள் தெய்வீக சக்தி அனைத்தையும் நிராகரிப்பவர்கள். பழி பாவம் என்ற உண்மைகளை மறுப் பவர்கள். ஆத்மீக சிந்தையாளரை அலட்சியம் செய்பவர் கள். கோயில்வழிபாடுசெய்பவர்களைக்கோழைகள் என்றுகூறு பவர்கள். விரதமிருப்பவர்களை, புராண இதிகாசம் படிப்ப வர்களை, தோத்திரப் பாடல்கள் ஒதுபவர்களைக் குருட்டு நம்பிக்கை யுள்ளவர்கள் எனக் கூறுவார்கள். ஆலயங்களில் திருவிழாச் செய்பவர்களை, விழாவுக்குச் செல்பவர்களை வேலையற்ற வீணர் கூட்டம் என்று நகையாடுவார்கள்.
இந்தக் கற்பனவாதிகளின் வரட்டுக் கூச்சலுக்கு அற் புத சக்தி மிக்க மனித இனம் அடிபணியப் போவதில்லை. புண்ணியம்ஆம்பாவம்போம்என்றஒளவை மொழியை உணர் ந்தவர்கள், புன் னெறி யதனிற் செல்லும், போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்து வாழ்பவர்கள்,
 
 

ஆத்மஜோதி 45
'ஆக்கையாற் பயனென் அரன்கோயில் வலம்வந்து பூக்கை யா லட்டிப் போற்றி யென்னத இவ்வாக்கையால் பயன் என்'? எனக் கற்றதனலாய பயன் என் கொல்? வாலறி வன் நற்ருள் தொழா ரெனின் என்ற கருத்தறிந்து வாழ்ப வர்கள். இவர்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்பவர்கள். இவர்களை வானுறையும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதக் கூடியவர்களைப் பார்த்து ஏளனம் புரிய ஒரு பகுதியினர் வாழ் வார்களானுல்! அவர்கள் மயிலின் ஆட்டத்தைப் பரிகசிக் கும் வான் கோழிக் கூட்டத்தினராவார். கண்டதெல்லாம் பழுப்பு என்ற காமாலை நோய் பிடித்தவரை ஒப்ப வாழ்பவர் கள், பாலிற்கும் கள்ளிற்கும் பேதம் காணதவர், பட்டப் பகலை இரவெனக் கூறிடும் பாதக இனம். இவ்வித பரிதாப மனித குலத்தைக் கண்டு சில மகான்கள் தம் உள்ளம் வருந் திக் கூறும் பாடல்களை உணர்க முதலாவ காகவாக்குக்கு அரு ணகிரி என்ற சிறந்த தத்துவ ஞானி கூறிய சில பாடல்வரி களில் எத்தனைவிதமான பாதகர்களைக்காட்டுகின்ரூர்.
1. தோழமை செய்து உசலம் செய் குண்டர்கள் - உசலம்-தீங்கு.
2. ஒதிய நன்றி மறந்த குண்டர்கள் - குரு செய்த நன்றி மறத்தல்.
3. சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள்-காப்பது விர g5 ( D.
4. பெரியாரைத் தூஷண நிந்தை பகர்ந்த குண்டர் கள்-சிவ துரவுணம்,
5. ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்-தகைதல் தடுத் தல், ஈவது விலக்கேல்.
6. சூழுற வென்ப தொழிந்த குண்டர்கள் - சூழவேண் டிய நல்லோர் நட்பை ஒழித்தவர்கள்.
7. தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள்சதா காலமும் வாழ ஆசைப்படல்,
8. நீதியறங்கள் சிதைந்த குண்டர்கள் - நீதிக்கும் தர் த்திற்கும் மாருக வாழ்பவர்.
9. மான அகந்தை மிகுந்த குண்டர்கள் - நானெனும் ஆணவத்தால் அநீதி செய்தல்.
10. வலையாலே மாயையில் நின்று வருந்து குண்டர் கள்-ஆசை வலையால் காமுகஞதல்.
11. தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்-சொம் சொத்து, தேவ சொத்தை அபகரித்தல்,

Page 9
A
Α
46 ஆத்மஜோதி
12. வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரேவாதையைத் தருகின்ற யமதர்மன் சபையில் மேற்கூறிய பாபிகள் விசாரணை செய்து தண்டனை பெறுவர்.
(குறிப்பு) இத் திருப்புகழ் கோடைநகர் என்ற தலத் தில் பாடிய முன்னரைவாசிப் பாடலாகும். இன்னேரிடத் தில் 'ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ் வோர்கள், ஏக சித்த தியானமில்லாதவர், மோக முற்றிடு போகிர்த மூறினர்'-ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரகு ழல்வாரே' என்று முன்பாடலில் காட்டியது போல இதில் சில பாபிகளை ஈனர் என்ருர் . இந்தக் கற்பணு வாதிகளைக்குண் டர்கள் என்றும்ஈனர்களென்றும் அருணகிரிநாதர் கூறினர்.
அடுத்தபடியாக வாதவூரர் கனிவில் என்ற பொன் மொழிக்கு ஒப்ப, மணிவாசகர் கூறும் திருவாசகத்தில் இந் தப் பாபிகளை நினைந்து பரிதாபப்பட்டு வருந்துகின்றர்.
வாழ்கின்றல் வாழாத நெஞ்சமே! வல்வினைப்பட்டு
(ஒரு காலத்திலும் வாழமாட்டாய்) ஆழ்கின்றல், ஆழாமற் காப்போனே ஏத்தாதே
(துன்பவினை உனை ஏமாற்றும்) சூழ்கின்றம் கேடுனக்குச் சொல்கிறேன்! பலகாலும்
(கேடு நீங்க இறைவனை நினை) வீழ்கின்றய நீ அவலக் கடலாய வெள்ளத்தே
(அவலக் கடலில் ஆழாதே)
இத் திருவாசகத்தில் நமது மனதில் கருவாக வேண் டிய பல உண்மைகள் தெளிவாகின்றன.
கடைசியாகக் கல்லும் கனியும் அருட்பா மூலம் இரா மலிங்க அடிகள் கூறும் ஒரு பாடல் மூலம் வையத்து வாழ் வாங்கு வாழத் தெரியாத மனித இனத்தை எப்படிக் கூறு கின்றர்.
எந்தை நினைவாழ்த்தாத பேயர் வாழ் கூழுக்கும்,
ஏக்கற் றிருக்கும் வெறும்வாய்
எங்கள் பெருமானுனே வணங்காத மூடர்தலே,
இகழ் விற கெடுக்கும் தலை
கந்தமிகு நின்மேனி காணுத கயவர்கண்,
கலநீர் சொரிந்தழு கண்

ஆத்மஜோதி 47
அல்லமாப்பிரபுவும், கொக்கித்தேவரும்
(குரு. ஆ. கந்தசாமி ஐயா , திருச்சி.)
பிரபுதேவரின் வழிப்பயணத்திலே அவர் ஒர் அழகிய நந் தவனத்தைக் கண்டார், தேவ உலகிலுங் கிடைத்தற்கு அரிய பூக்கள் எல்லாம் இங்கு இருக்கின்றன என்றே சொல்ல லாம். அதுமட்டுமா அந்நந்தவனத்தினுட் சென்ருல் பகல் இரவு என்ற வித்தியாசமே தெரியாது. பல்லாயிரக் கணக் காகப் பூத்திருக்கும் மலர்களில் தேன் நிறைந்திருப்பதைப் பருகுவதற்காக வண்டுகள் இங்கும் அங்குமாகப் பரந்து ரீங் காரம் செய்து கொண்டிருப்பதானது வீணையின் நாதம் போன்று செவிகளின் மூலம் உள்ளத்தில் ஆனந்தத்தைத்தந்து கொண்டிருக்கும்
இவ்வகைச் சிறப்பினைப் பெற்ற நந்தவனத்தின் தலைவன் கொக்கித்தேவர் ஆவர். அரியயனுங்காணற்கரிய அல்லமாப் பிரபுதேவர் கொக்கித்தேவரின் வினையினைத்தடுத்துஞானுேப தேசம் செய்ய வேண்டி அவரருகில் சென்று அருள் நோக் கோடு சரணம் என்றனர். நந்தவனத்தின் தலைவகியை கொக்கித்தே வரும் பதில் வணக்கம் செய்து உமது, பெயர், தொழில் யாதெனத் தெரிந்து கொள்ள விரும்பும் எனக்கு
முன்பக்கத் தொடர்ச்சி
கடவுள் நின்புகழ்தன்னைக் கேளாத வீணர்செவி,
கைத்தி ழவு கேட்கும் செவி பந்தமற நினைஎண்ணுப் பாவிகள் தம் நெஞ்சம் ,
பகீரென நடுங்கு நெஞ்சம் பரம நின்திரு முன்னர் குவியாத வஞ்சர்கை,
பலியேற்க நீள் கொடுங்கை கந்தமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்,
தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்ய மணி சண்முகச் சைவமணி,
சண்முகத் தெய்வ மணியே.
உலகினில் ஆணவ இருட் கூட்டம் அகல!
அருள் நெறித் திருக் கூட்டம் வளர்க!

Page 10
48 ஆத்மஜோதி
விளக்கமாகக் கூறுவீராக! என்றதும், ஞான ஒளி விளக்கா கிய நம் அல்லமன், நான் பக்தர்கள் வீடுதோறும் சென்று பக்தியெனும் பிச்சையினை உண்டு ஒருதொழிலுமற்று சும்மா யிருப்பவன். என் பெயரோ அல்லமன் என்பர். உன் பெய ரோ? என்ருர். என் பெயர் கொக்கித்தேவன். ஆனல் நீர் குரு. லிங்கம், சங்கமர்களுக்காகத்தான் உடம்பை உழைக் காமல் வீண் காலம் போக்குவது உணவு மாத்திரம் அருந்தும் நடைப்பிண மென்பர். கிடைத்தற்கரிதாகிய மனித உடம் பைப் பெற்றும் செய்தற்கரிய தருமங்கள் செய்து துன்பம் மிகுந்த பிறவியினின்றும் உய்யும்வகை தெரியாதவன் உடம்பு எதற்குச் சமமென்ருல் பொன் பாத்திரத்தில் ஊற்றி வைக் கும் பாலை மண்வெடிப்பில் கொட்டினதை ஒக்கும் என்றுஅறி ஞர் கூறுவர். மேலும் நமது சரீரம் மின்னலைப் போன்று தோன்றி அழியுந் தன்மையுடையது. ஆகவே நல்வினைக் கீடாகிய புண்ணிய கருமங்களைச் செய்து அதனுல் அழியாத உடம்பைப் பெற்று இன் புற்றிருப்பதை விடுத்து உழைத்தால் உடம்பு இழைத்து விடுமென்று சும்மாயிருக்கின்ற உன்னை யொத்த சோம்பேறியாகிய மருளன் இவ்வுலகில் யாரும் இல் லையையா என்று இடித்துக்கூற, நம் ஐயனுகிய பிரபுதேவர் கைதட்டிச் சிரித்து புண்ணிய பலத்திற்குக் காரணமாகிய தர் மங்களென்னும் நல்வினைகள் பல செய்து பேரின் பப் பேற்றை அடையலாம் என்ருல் மும்மலங்களில் ஒன்ரு கியவருத்தத் தைக் கொடுக்கின்ற ஆணவ மலத்தினலும் பேரின் பப் பேற டைய முடியும் அல்லவா? என்ற கேள்வியைப் போட்டு மேலும் சொல்கின்றர். அவரவர் செய்கின்ற புண்ணியவ சத்தில்ை பேரின்பப் பேருகிய மோட்சத்தை அடையமுடியும் என்றன. மாமிசத்தாலாகிய உடலானது அழியாமுன் யாவ னுெருவன் பரமபதத்தை (விதேககைவல்யமென்னும் ஜீவன் முக்த நிலையை) அடைவனேயானுல் மாயையினின்றும் நீங்
கியவனுவான்.
மனத்தை ஐம்பொறிகளின் வாயிலாகச் செலுத்துவோ மாகில் அப்பொறிகளினல் நுகரக்கூடிய இன்பத்தை மட்டுமே பெறமுடியும், மனத்தை உள்முகமாகச் செலுத்தி அசைவற்ற தன்மையில் நிறுத்திப் பழகினல் சிவமே தோன்றும், அந் நிலை கிட்டும்போதுதான் பிறப்பு இறப்பற்ற முக்தியை அடை யமுடியும் என்று உபதேசித்தார். அவ்வரிய கருத்துக்களைக் கொக்கித்தேவர் கேட்டும் சந்தேகம் நீங்கப் பெறவில்லை என் பதை உணர்ந்த பிரபுதேவர்சிவயோகியின்மூலம் உபதேசிக்க
 

, , மஜோதி 49
எண்ணி, ஓர் இடத்தைக் காட்டி இவ்விடத்தை மண்வெட்டி யில்ை தோண்டும் என்ருர், இசையுடன் பாடும் வண்டுகள் நிறைந்த நந்தவனத்தையுடைய கொக்கித்தேவர்அவர் வார்த் தைக்கிணங்கி பூமியை வெட்டியவுடன் பொற்கலசம் ஒன்று தோன்றியது. மேலும் வெட்டிப் பார்க்க வறியவனுக்குக் கிடைத்த பொருள் போலப் பத்மாசனத்துடன் வடிவம் சிறி தும் அசைவின்றி இளைத்த சரீரத்துடன் அங்கையில் அமைந்த லிங்கத்தின்மேல் கண் திறந்துந் திறவாத திருஷ்டியைவைத்து தன்வசமற்றுசரணத்தலத்தில் அமர்ந்திருக்கும் அநிமிடயோகி 00) l1 ] Ꮺ5 Ꮺ5ᏛᏡᏡᎢ t -ᏛᏡᎢ [Ꭲ .
அல்ல மாப் பிரபு கொக்கித்தேவருக்கு அனுபவநிலையைக் கரதலாக மலம்போலச் சிவயோ கியைக் காரணமாக வைத்துக் காட்டி உபதேசிக்கின்ருர் . உன்டோன்று புறக்கருமங்களைச் செய்யாது எதைச் செய்தால் பிறவியற்ற நிலையாகிய சிவஐக் யம் பெறமுடியுமோ, அதைச் செய்து கொண்டிருக்கும் சிவ யோகியைப் பார் என்று தெரிவித்துக் கொண்டிருக்கும் பொ ழுதே அநிமிடயோகியின் கரதலத்திருந்த இட்டலிங்கமானது நமது பிரபுதேவரின் கைக்கு வந்தது. சிவயோகியின் சீவகலை யும் உடன் வந்து இட்டலிங்கத்தோடு அல்லமதேவரில் ஐக்ய மாகியது.
இவையனைத்தையும் கண்ணரக் கண்ட கொக்கித்தேவர் அடியற்ற மரம்போலப் பிரபுதேவரின் பாதங்களில் விழுந்து வணங்கி ஐயனே என்னையுந் தங்கள் சீடனுக ஏற்று தீட்சை செய்தருளல் வேண்டு மென்று வேண்ட ஐயன் திருக்கரங்க ளால் எடுத்தனைத்து தனது பாதத்தைக் கொக்கித்தேவரின் சிரசின் மேல்வைத்து ஞானுேபதே சம் செய்தருளினர். தீட் சைபெற்றதும் ஆனந்த பரவசத்தில் மூழ்கிஎன்னை ஆட்கொண் டதுபோல உலகிலுள்ள பக்குவிகளாகிய அடியார்களுக்கு உபதேசித்தருள வேண்டுமென்று பிரார்த்தித்த வண்ணம் சிவத்தியானத்திலமர்ந்து விட்டார். பிரபு தேவர் யாத்தி ரையைத் தொடங்கலானர்.
** அகமதை நோக்கிற் ஜெக மென லேது'
ஒகையாற் றிரைமுன் ளிைல் உழக்குமா வினையும் வாட்டும் ஏகவெவ் வரையின் எல்லே பிடித்திடும் இமையோர் போற்றத் தோகைமேல் உலவும் கந்தன் சுடர்க்கரத் திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை.
- செவ்வந்திப் புராணம்

Page 11
50 ஆத்மஜோதி
மனநோய் மாற்றும் மருந்து
- புலவர். சி. விசாலாட்சி -
'தனக்குவமை இல்லா தான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது'
என, மனநோயினுல் அலைப்புண்டு அழியும் மக்களையெல்லாம் அன்புடனழைத்து, எல்லாம் வல்ல இறைவனிடம் ஆற்றுப் படுத்துகின்ருர் தெய்வப் புலமை வாய்ந்த வள்ளுவப் பெரு மான் ,
எல்லா நோய்களிலும் கொடியது மனநோய் உடலில் ஏற்படும் நோய் உடலை மட்டுமே வருத்தும். உடல் நோய் மாறும் தன்மை கொண்டது. அதனை மாற்ற வழியுண்டு. மனநோயை மருந்து கொண்டு மாற்ற முடியாது. மாருத கொடிய நோயையும் கூட அதிக பொருளைச் செலவழித்து மாற்றி விடலாம். அத்தன்மையான பொருள் மனநோயின் முன் தூசாகி விடுகின்றது. எனவே பல்லாயிரக் கணக்கான பொருள் செலவழித்தும் காணமுடியாத மனஓய்வை பக்திப் பாடல்கள் தருமென்ருல் அது மிகையாகாது.
அலைந்து அல்லற்படும் மனதை, ஓய்வைத்தேடித் தவிக் கும் உள்ளத்தை, பக்திப் பாடல்கள் மெதுவாக அழைத்து அன்புடன் பரமனிடம் அனுப்புகின்றன. எத்தகைய ஆற்ற லையும் செய்யும் பக்திப் பாடல், ஐம்புலன்களாற்ருக்கப்பட்டு நசுக்குண்டு மிகக்களைத்துள்ள மக்களை யெல்லாம் அழைத்து, அவர்களின் உள்ளத்தை வளம்படுத்துகின்றது. ஒன்றுபடாத மனதை ஒருமைப் படுத்தி என்றும் மீளாத தெவிட்டாத சச்சிதானந்தத் தேனையும் அளிக்கும் வன்மைவாய்ந்த பக்திப் பாடலின் பெருமை, அதன் அருமை படித்தவர்க்கேயன்றி மற்றவர்க்கு உணர்த்துதல் அரிது. பக்திக் கடலுள் ஆழ்ந்த சமயகுரவரும், ஆழ்வார்களும், பக்கியினல் உள்ளத்தை உருக்கிக் கனிவாக்கும் பாடல்களை தமிழ் மக்களுக்கென்றே அளித்தனர்.
இளமையும் எழிலும் மிக்க இனிய தமிழானது ஏற்றத்து
டனும் தோற்றத்துடனும் வாழ்ந்து வந்த காலத்தில், கருமே கம்போன்ற சமணசமயம் தோன்றியது. பூரண சந்திரன

P), yh, i to(3çʼ! ாதி 51.
மறைக்கும் பாம்புபோன்று எம் சைவசமயத்தைக் கொடிய நாகம் போன்ற சமணம் மறைத்தது. சைவம் குன்றுவதைக் கண்ட தமிழ் அன்னைவிட்ட கண்ணிர் ஆருகப் பெருகத் தொ டங்கியது. இதனைக் கண்ட இறைவனின் பக்தர்கள், துன் பக் கடலுள் ஆழ்ந்தனர். இவற்றை நீக்க தமிழ்நாட்டில் இசைப் பாடல்களாகிய பக்திப் பாடல்கள் மலிந்தன. இப் பாடல்களால் ஊறப்பட்ட ஞானிகள் சித்தர்கள் பெரியோர் கள் தாம் செல்லும் உயர்ந்த வழிக்குப் பின்வருவோரையும் அழைக்க விரும்பி வழிகாட்டியாகப் பல பொன்மொழிகள், நீதிநூல்கள் முதலியன செய்து வைத்தனர். மலங்களால் மறைப்புண்டு வருந்தி வாடும் மக்கள் அவற்றைப் பின்பற்று தலே தலையாய கடமையாகும்.
'இந்திரிய வய மயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவ மாக்கி எனயாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லைகண்டேனே'
என மணிவாசகப் பெருமான் தான் கண்ட மருந்தை மிகத் தெளிவாக கண்டபத்திற் கூறியுள்ளார். கண்டபத்து முழு வதிலும் மனநோயையும் அதனை மாற்றும் மருந்தையும் அழகு படுத்தி அன்பர்க்கு அரிய விருந்தாக அளித்துள்ளார். என வே குற்றமும் குறையும் மலிந்த மனிதன் தன் குறைகளை இறைவனிடம் முறையிட்டு அழுவதிலும், இறைவ னின் நிறைவுகளைக் கூறுவதினுல் மனிதனின் மனம் வாக்குக் காயம் ஆகிய மூன்றும் பண்படுகின்றன. கடைப்பட்டவனை யும் கடையேற்றும் பக்திப் பாடல்களை படித்துவரும் மனிதன் மண்ணில் மாத்திரமன்று, மூவுலகிலும் தெய்வமாக்கப் படு கின் முன், பக்திப் பாடலினுல் அன்பும் அறனும் வானளாவ ஓங்கி வளருகின்றது. அதனல் ஆற்றுதற்கரிய மனநோய் வேருடன் சரிந்து விடுகின்றது.
*நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு’
'அம்பலப் பட்டே அருட் பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு'

Page 12
52 ஆத்மஜோதி
எனப் பக்திப் பாடலின் பெருமையைக் கூறிய வள்ளலார், அப்பக்திப் பாடலால் வரும் பயனே,
'இனித்துயர் படமாட்டேன் விட்டேனே என் குரு மேலாண யிட்டேனே'
* 'இனிப்பாடு படமாட்டேன் விட்டேனே என்னப்பன் மேலான யிட்டேனே'
என வைராக்கியம் உண்டாகும்படி கூறியுள்ளார். பக்திப் பாடல் பாடுவதுடன் செயலையும் பக்தி வசமாக்குவது மன நோய்க்குச் சாலச் சிறந்ததாகும். 'வாழ்த்த வாயும் நினக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை' என வருமடிகளே அதற்குச் சான்ருகும். பக்திவலையில் அகப்பட்டு இறை தொண்டு புரிந்த அப்பர், இறைவனுக்கே ஐம்புலனும் ஐம்பொறியும் தொண்டு செய்தல் வேண்டும். அதம்ை கிடைக்கும் இன்பமே இன்பம் எனக் கூறுமுகமாகத் திருவங்க மாலை பாடியுள்ளார்.
ஓம் சக்தி சக்தி சக்தியென்று சொல்லு-கெட்ட
சஞ்சலங்கள் யா வினையும் கொல்லு
சக்தி சக்தி சக்தியென்று சொல்லி-அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு
*சக்திதனை யேயிழந்து விட்டால்-இங்கு
சாவினையும் நோ வினையும் உண்ணு'
*சக்தி சில சோதனைகள் செய்தால்-அவள்
தண்ணரு ளென்றே மனது தேறு'
எனப் பாட்டுக் கொரு புலவனுகிய பாரதிநோயும், மருந்தும் கூறிமக்களுக்கு நல்லதோர் வழிகாட்டியாக அமைந்துள்ளான். இப்படியே செம்மொழியாகிய தமிழ்மொழியிற் காணப்படும் நூல்கள் முழுவதும் பக்திச் சுவை மிளிர்ந்து மலிந்து காணப்ப டுகின்றன. அவற்றைப் பின்பற்றுதலே மனிதப்பிறவி யெடுத்த எம் முழுக்கடமையாகும்.

ஆத்மஜோதி 53 சாதகர்களின் கவனத்திற்கு
முகம்மது காசிம்-மதர்நாச்சியா.
கற்பனையிலே வாழுகின்ற மனம் கவலையினல் கலங்கி டும் கதம்பம். சிந்தனையின் குழப்பத்திலே தடுமாறும் மனம் மயக்கத்திலே தத்தளிக்கும் மந்த நிலை
மானிட வாழ்க்கை ஒரு மர்மம், புரியாத புதிர், விளங்க முடியாத வினுேதம், ஆனல் இதயம் ஆத்மீக சக் தியில் தொடர்பு கொண்டதும் மனித ஜீவியத்தின் ரகசி யத்தை நன்கு விளங்க முடியும்.
சாதனையில் கவனம் செலுத்தி உனது மணுேசக்திகளை ஒன்றுபடுத்தி அசைவற்று இரு வாழ்வில் நிகழும் எல்லா வித மாறுதல்களிலும் மயங்காது தெளிவாக இரு, ܫ
ஆத்மாவிலிருந்தே மனம் தோன்றியது. பின் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினுல் இவ்வுலகம் இருப்பது போல் காட்சியளிக்கிறது. மனதை ஆத்மாவிடம் லயமாக்குவதே சாதனை.
உனது உள்ளத்தில் குழப்பங்கள் இருந்தால் தான் சூழ் நிலையினலும் பாதிக்கப்படுவாய். அகம் அமைதியாக இருந் தால் அவனி முழுவதும் சாந்தமாகத் தவழும்.
மனதை சதா நோக்குவதே அதை சம்பூர்ணமாக விளங்குவதற்குச் சிறந்த மார்க்கம். அதுவே எல்லாத் தவங்களிலும் கடினமானது. -
மனது நிமிஷந்தோறும் மாறிடும் சுபாவமுள்ளது. ஆகவே மனதை நம்பி வாழும் மனிதர்கள் முடிவில் ஏக் கத்தையும் ஏமாற்றத்தையுமே அனுபவிக்க நேரிடும்.
மனதின் தன்மைகளே முற்றிலும் விளங்காதவரை தியா னத்தில் வெற்றி காண முடியாது.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மனம் குழம்பாது-சாந்த மாக தெளிந்த அறிவோடு இருக்கப் பழகிக் கொள். அதுவே ta,Gaugiti).
இன்ப துன்ப உணர்ச்சிகளில் சிக்காது சித்தத்தை உணர் வெளியில் உயர்த்துவதே விவேகம்,
நிலையான இன்பம் உயர்வான தியானத்திலே உணரப் படும்மேலான அனுபவம், அதை வார்த்தைகளால் விவரிக்க
* ,

Page 13
54. ஆத்மஜோதி
முடியாது, ஆனல் நேரடியாக மனங் கடந்த மெளனநிலையில் சந்திக்க முடியும். அதை அடைவதே சாதனை.
சிந்தனையின் ஒட்டத்தைத் தடுத்தால்தான் சிந்தனையற் றதோர் தெய்வீக நிலைக்கு உயர முடியும்.
சாந்தியிலே ஒய்வுகாண, அமைதியிலே ஆனந்தம் காண,
திலே ஒடுங்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லாவித நிகழ்ச்சி களுக்கும் நாமே பொறுப்பாளியாகும். செயல்களை மதிப் பிடும் அளவில் நோக்கினுல் அவைகள் நன்மையாகவோ தீமையாகவோ இருக்கலாம். ஆனல் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் எல்லாவித அனுபவங்களும் 'நம்மை நாமே' நன்கு விளங்குவதற்கே ஏற்படுகின்றது என்பது புலணுகும்.
நினைவுடன் சம்பந்தப்படும் ஆத்மா நித்தியத்தைக் (5TG007 (UDL1-LJTgl.
கடுமையாகப் பாடுபட்டு இச்சைகளைக் கட்டுப்படுத்தி யவனே கொடுமை நிறைந்த ஆசைகளின் பிணியிலிருந்து நீங்க முடியும்.
இன்பத்தை எந்த மனம் நுகர்கின்றதோ அதுவேதான் துன்பத்தையும் சுவைக்கின்றது.
மாண்பு மிக்கதோர் மகத்தான வாழ்க்கை மனம் ஒடுங் கிய வேலையிலேதான் ஆரம்பமாகிறது. அதுவே உண்மை யான சாதனை.
முரட்டுத்தனமான உணர்ச்சியின் கொந்தளிப்பால் உரு வாக்கப்பட்ட மனிதனின் மனம், வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைக் கொண்டே பண்பாடும் பக்குவமும் அடை கிறது. ..."
நமது மனம் எப்பொழுதும் ஒரு ஆழமான ஆசை உணர்ச்சியில் உழன்று கொண்டே இருக்கிறது மனதை முற்றிலும் அறிந்ததும் சஞ்சல நினைவுகள் மறைந்து உண் மையான விடுதலையின் இன்பத்தை அறியலாம்.
ஆசைகள் யாவும் வெறும் பிரதிபலிப்பே. அறிவு அமை தியாக வளர்வதற்கு உணர்ச்சி கலந்த கீழான எழுச்சிகள் பெரும் தடைகளாகும்.
மனதும் உடலும் இயங்கும்போது பெளதீக உலகம் புலனுகிறது. கனவு காண்கின்ற நிலையிலே மனது சூட்சும உலகில் வாழ்கிறது,
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 55
மனது ஒடுங்கிய வேளையிலே காரண உலகில் ஒய்வு பெறுகிறது. ஆஞல் துரியம் எல்லா நிலைகளிலும் பாதிக் காது சாட்சி மயமாக இருக்கிறது. அதில் அறிவோடு உணர்வோடு ஒன்றுபடுவதே தியானத்தின் உச்சநிலை.
ஆத்மார்த்த அந்தரங்க ஞானமானது அறிவின் துணை யினல் அடையும் கலையல்ல. ஆனல் அருளின் தெளிவால் உணரும் அனுபவமாகும்.
அந்தரங்கத்தில் பொய்மைகளின் கட்டுக் கோப்புகளி லிருந்து விடுபட்டு, உலக ஆசைகளிள் கவர்ச்சிப் பிடிகளை உடைத்தெறிந்து சதா தியான நிலையிலேயே விடுதலைபெறு வதே உண்மையான சந்நியாசமாகும்.
தியானத்தின் அடிப்படையிலேதான் தெய்வீக சக்தியு டன் தொடர்பு கொள்ள முடியும். யதார்த்தத்தை விளங் குவதற்கு மனப் பரிசுத்தமும், ஆத்மீக ஒழுக்கமும் அவசி யம் தேவை. அந்தப் பண்பாடு இல்லாவிட்டால் அகண்ட வஸ்துவின் அகமிய ரகசியத்தை விளங்க முடியாது.
பற்றற்ற துறவு நிலையே ஆத்மீக மலர்ச்சிக்கும் தெய் வீக வாழ்வின் முன்னேற்றத்திற்கும் முதற்படி,
எவனுடைய இதயமானது இறைவனின் இடமாகிவிடு கிறதோ அவனே உண்மையான பக்தன். அவன் வாழ்வெ
னும் பூங்காவில் வனப்புடன் வழிநடந்து செல்லும் புனித
யாத்திரிகன்.
- தொடரும்
உலக பேணு நண்பர் கழகம்
உலகெங்கும் பரந்து நிற்கும் தமிழ் மக்களிடையே தொடர்பை உருவாக்கி, மொழிமூலம் ஐக்கியத்தையும், பண் பாட்டையும் நிலைநாட்டி வெளிநாட்டுத் தொடர்பைப் பலப் படுத்த நல்லதொரு வாய்ப்பு.
ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்ற 'உலக பேணு நண் பர் கழகம்’ தனது பணியை விரிவு படுத்து முகமாகத் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறது. மேலதிக விப ரங்களுக்குப் பத்துச்சத அஞ்சல் தலைப்புடன், விண்ணப்ப தாரர் முகவரி எழுதப்பட்ட அஞ்சலுறையைக் கீழ்க்காணும்
முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
*உலக பேணு நண்பர் கழகம்' * கலைச்செல்வம் நூலகம்”
43. நுவரெலியா வழி; Go)60au 5mfudo 62.png..."

Page 14
56
ஆத்மஜோதி
தற்கால உலகின் நோய்கள்
- சுவாமி சிவானந்தர் -
தற்கால சமூகத்தில் உண்மையான அன்பு இல்லை, பிறரை அடக்கியாளவும் உடமைகொள்ளவும் உலகில் போராட்டம் நடந்து வருகிறது.
அவாவாலும், பேராசையாலும், சுயநலத்தாலும் ஆதிக் கம் செலுத்தப்பட்ட இந்த நவீன உலகம் அன்பு நெறி யின் குரலைக் கேட்க மறுக்கிறது.
உலகத்திலுள்ள தீய சக்திகளெல்லாம் சுய நலம் என்ற உருவைப் பெற்றிருக்கின்றன. சுய நலம், சிற்றின்பம், பேராசை, 'தான் ' என்ற எண்ணம், ஆகியவையே
மனித குலத்தின் நோய்களுக்கு மூலகாரணம்.
உங்கள் வாழ்நாட்களைப் பகைமையிலும், சச்சரவிலும் செலவழிக்காதீர்கள். சாலத்தைவீணுக்காதீர்கள். வீண் செலவு செய்யாதீர்கள். உயிர்க்கொலை செய்யாதீர்கள் . எல்லாரிடத்திலும் நேசபாவத்துடன் தலைவணங்கி நடப்பீர்களாக,
அதிகாரம் உலகப் பிரச்சினைகளைத் தீர்த்து விடாது. ஆணுல் சேவா மனப்பான்மையும், தோழமை உணர்ச்சி யும், அன்பும், தியாகமும் நிறைந்த மனுேநிலையும் உல கப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்.
உலகத்தில் ஒற்றுமை, இணக்கம், சாந்தம் ஆகிய இவற்றை நிலைநிறுத்த வேண்டுமானல், மொழி, இனம் வழக்கம், மதம் பற்றிய விரோதம் ஒழிய வேண்டும்.
எதேச்சாதிகாரமும், சுதந்திரமும் வாழ்க்கையில் எத் துறையிலும் ஒருங்கே நிலைத்திருத்தல் இயலாது. அவை ஒன்றையொன்று வெறுக்கின்றன. ஏனென்ருல் அவற் றின் இயல்புகளே அத்தகையது.
 

ஆத்மஜோதி 57
8. ஒரு நாட்டினம் தோன்றுவதும் உருவாக்கப்படுவதும் கட்டுப்பாட்டினுல்தான். ஒரு நாட்டினம் அமைப்பதில் கட்டுப்பாடு முதன்மை இடம் பெறுகிறது.
மனிதன் அதிக சுறுசுறுப்பாய் இருக்கிருன். ஆயினும் உண்மையில் ஒன்றுமே செய்வதில்லை; அல்லது தாழ்ந்த நிலையில் தன் சவக் குழியைத் தோண்டிக் கொண்டே இருக்கிருன்.
கதிர்காமத்தில் தெய்வநெறிக்கழகம்
ஆத்மீகப்பணியாற்றும் நோக்கத்தோடு கதிர்காமத்தில் தெய்வநெறிக் கழகம் ஒன்று உருவாகியுள்ளது.
போஷகர்கள்:-
1. யோகிருஜ் சுவாமி சச்சிதானந்தஜி அவர்கள் 2. சச்சிதானந்த சிவானந்த மாதாஜி அவர்கள்
தலைவர்:- ஒம்கார சைதன்ய சுவாமிகள்
2 L 95%) al fissir:- I - F IT நம்பியாரூரன் அவர்கள்
த ֆ/ Ib to
2. டாக்டர் S. வல்லிபுரம் அவர்கள்
காரியதரிசிகள்:- 1. V. குலசேகரம் (I. E. ) அவர்கள்
2. சுவாமி ஜோதிர்மயானந்தஜி அவர்கள்
தணுதிகாரி:- N. குருசாமி (I. E) அவர்கள்
நிர்வாகசபை அங்கத்தவர்கள்:-
1. சாது சண்முகவடிவேல் அவர்கள், 2. சுவாமி புருஷோத்தமனனந்தஜி அவர்கள், 3. வேலாயுதசுவாமிகள், 4. வேல்சுவாமிகள், 5 , பலில்பாவா அவர்கள், 6. மகாதேவசுவாமி கள், 7. மு. சின்னத்துரை அவர்கள், 8. .ே கண பதிப்பிள்ளை அவர்கள், 9. N. சர்வானந்தன் அவர் கள், 10. A. K. மில்டன் டி. சல்வா அவர்கள்.
கணக்குங் பரிசோதகர் :- இ. சபாரத்தினம் S.H.S. அவர்கள்.

Page 15
58 ஆத்மஜோதி நல் வாழ்வு வாழும் வழி
(அகில பாரதீய தர்ம பீட ஸமுதாய சங்க வெளியீடு எண் 8)
உலகில் தோத்திரங்கள், சாஸ்திரங்கள், வேதாந்தம், சித்தாந்தம் இவைகள் எல்லாம் மக்கள் நன்முக வாழும் வழியைத் தான் சொல்லுகின்றன. வேதாந்தமும் சைவ சித்தாந்தமும் ஒரே உண்மையைத்தான் விளக்குகின்றன. பொருள் கொள்ளுகிறவர்கள் பலவிதமாகக் கொள்வது இயல்பு.
வேதாந்த சித்தாந்த சமரசத்தைத் தாயுமானவர் தெளிவாகக் கூறியிருக்கிரு?ர்.
எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவிதான்
யாதினும் அரிது அரிது காண் இப்பிறவி தப்பினுல் எப்பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ அறிகிலேன் கண்ணகனிலத்து நானுள்ள பொழுதே அருட்
ககன வட்டத்தினின்று காலூன்றி நின்று பொழியானந்த முகிலொடு
கலந்து மதியவசமுறவே பண்ணுவது நன்மை இந்நிலை பதியுமட்டுமே
பதியா திருந்த தேகப் பவுரி குலையாமலே கெளரிகுண்டலியாயி
பண்ணவிதனருளினுலே விண்ணிலவு மதியமுத மொழியாது பொழியவே
வேண்டுவேன் உனது அடிமைநான் வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலே பெற்ற
வித்தகச் சித்தர் கணமே
என்று தாயுமானவர் அருளியுள்ளார். திருஞானசம் பந்தப் பெருமான்,
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஒர் குறைவிலே கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

ஆத்மஜோதி 59
என்று பாடி அருளியிருக்கிருர், இம் மண்ணுலகில் நல் வாழ்வு வாழ வேண்டுமானுல் நல்ல வரம் பெற்றி ருக்க வேண்டும். நல்ல தாயார், தந்தையார் வாய்க்க வேண்டுமானுலும் நல்ல குழந்தைகள், நல்ல செல்வம் வாய்க்க வேண்டுமானுலும் ஒவ்வொன்றிற்கும் நாம் பிறப் பதற்கு முன்பே முன் பிறவிகளில் நல்வினைகளைச் செய்து வந்திருக்க வேண்டும். அதனுல் தான் "மேலைத் தவத்த ளவேயாகுமாம் தான் பெற்ற செல்வம்' என்று ஒளவைப் பிராட்டியார் கூறியிருக்கிருர், நாம் இப்பொழுது நல் வாழ்வு வாழ்கிருேம் என்ருல் அது முற்பிறவிகளில் செய்த நல்வினையின் பலன் என்று உணர வேண்டும். இனிமேல் நல்வாழ்வு வாழ வேண்டுமானுல் இப் பிறவியில் தீய காரி யங்கள் புரியாதிருக்க வேண்டும். நாம் செய்த செயலுக் குத் தக்கபடி தான் இறைவன் நமக்கு அருள் பாலிக்க முடி யும். நல்ல ஆசிரியர், மாணவன் எழுதிய விடைக்குத்தக்க படி தான் மதிப்பெண் கொடுக்க முடியும். மாணவன் நல்ல முறையில் விடை எழுதினுல் ஆசிரியர் சந்தோஷமாக நல்ல மதிப்பெண் தருவார் அல்லவா? அது போல இறைவனும் நாமெல்லாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல வாழ்வே வாழவேண்டும் என்று ஒரே கருணை உள் ளத்துடன்தான் இருக்கிருர் . நாம் செய்யும் காரியங்களுக் கேற்ப வாழ்வையும் வரையறை செய்து கொடுக்கிருர் . நாம் நன்முக வாழ வசதியில்லையானல் அது நாம் செய்த வினைகளால் விளைந்தனவே தவிர, இறைவனையோ அன்றி வேறு யாரையுமோ குறை கூறுவதற்கில்லை. நாம் விதைத்த விதைதானே விளைந்து பயன்தரும், எட்டிக்காயை விதைத்து விட்டு முதல்தரமான சேலம் மாம்பழத்தைப் பெற முடி யா தல்லவா? நல்ல விதை விதைத் தால் தானே நல்ல கனிகளைப் பெறலாம். நாம் செய்து வரும் ஒவ்வொரு காரியமும் பின் காலங்களில் நாம் அனுபவிக்கப் போகும் பலனுக்குரிய வித்தாகும். நல்ல காரியம் செய்தால் பிற மனிதரைக் கொண்டு நமக்கு ஆண்டவன் நன்மையே செய் வார். தீய வித்திட்டால் தீய பலனே கிடைக்கும். நாம் செய்யும் நல்ல காரியங்களுக்குப் பரிசும் தீய காரியங்களுக் குத் தண்டனையும் தருவதுதான் நியாயமுள்ள, பசுஷபாத மில்லாத இறைவனது தன்மையாகும் பரிசு தருவது நம் மை ஊக்குவித்தல் பொருட்டும், தண்டனை அளித்தல் நம் மைத் திருத்துதற் பொருட்டுமாகும். அதற்கு மாருக நல் லது செய்பவருக்குத் தண்டனையும், தீயது செய்பவருக்குப்

Page 16
60 ஆத்மஜோதி
பரிசும் கொடுத்தால் மக்கள் எவ்வாறு திருந்த முடியும்? எனவே இறைவனேடு நேரில் பேசும் தகுதியற்ற நமக்கு இறைவனே குருநாதர் மூலமாகப் பேசும் தெய்வமாக இருந்து, நமக்கு நல்ல காரியத்தையும், தீய காரியத்தை யும் மிகத் தெளிவாகக் கூறி, நாம் நல்ல காரியங்களை மேற் கொள்ளவும், தீய காரியங்களை விலக்கவும், அத னல் நாம் நல் வாழ்வு வாழவும் வழிகாட்டி வருகிறன். அவ்வளவு கருணையுடைய கடவுளை நமக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் குறை கூறுவது நியாயமாகுமா? நாம் பிறருக்குத் துன்பம் செய்தால் நாம் துன்பம் அனு பவிக்க வேண்டியதாகும் என்பதை வள்ளுவர்,
*நோயெல்லாம் நோய் செய்தார் மேலவனம் நோய் செய்யார்
நோயின்மை வேண்டுபவர்"
என்று அழகாகச் சொல்லியிருக்கிருர்,
இவற்றையுணராது நாம் சில சமயங்களில் பிறர் மனம் மிகவும்நோகும்படியான சொற்களை, அவை, அவர்களுடைய மனதில் நன்ருகப் படட்டும் சுடட்டும் வேதனையுறட்டும் என் றெல்லாம் கருதிப் பேசி விடுகிருேம், அது பெரிய தவரு கும். பிறர் மனம் நோவுமாறு யாராவது பேச முற்ப டும் பொழுது அல்லது ஒரு செயல் செய்யத் துணியும் பொழுது நான் துன்பம் அனுபவிப்பதற்காக இதைச் செய் கிறேன் என்று தனக்குள் கருதிக் கொள்ளல் வேண்டும். அப்போது பிறர்நோவ பேசவோ எதுவும் செய்யவோ மனம் இடம் தராது. இதனை வலியுறுத்தவே 'கெடுவல் யான் என்பதறிக, தன் நெஞ்சம் நடுவெரீஇ அல்ல செயின்' என்று வள்ளுவர் அருளியிருக்கிருர், ஆகையால் சென்ற காலத்தைப் பற்றி வருந்தாமல் இனிமேலாவது நல்ல காரி யமே செய்து நல் விதையே விதைத்து நல்வாழ்வாகிய நற் பலனையே பெற முயல வேண்டும். தனக்குத் துன்பம் நேர்த்த போது, நாம் பிறருக்கு முன் துன்பம் செய்த வினையின் பயனை அனுபவிக்கிருேம்; வினை கழிகிறது என்ற திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் பொறுத்துக்கொள்ள வேண்டும். யார் மூலமாக அத் துன்பம் வந்ததோ அவர் களுக்குத் திரும்பவும் நாம் தீங்கு செய்தல் கூடாது. இதைத் தான் வள்ளுவர் "உற்ற நோய் நோன்றல்' என்ற திருக் குறளால் குறிப்பிடுகிருர்,

ஆத்மஜோதி 61.
“உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு'
உயிர்க்கு உறுகண் செய்யாதே என்கிருர் வள்ளுவர். சிலர் மனிதர் மட்டுமே உயிருள்ளவர், மற்றைய பிராணி கள் எல்லாம் உயிரற்றவை என்று கருதுகின்றனர். மிரு கங்களும் நம்மைப்போல் உண்ணுவதையும், உறங்குவதை யும், ஒடுவதையும், கத்துவதையும், குட்டிகள் போடுவதை யும், ஆணும் பெண்ணுமாக வாழ்வதையும், மக்கள் தங் கள் கண்களால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிருர்கள். இருந்தும் அவற்றைக் கடவுள் மனிதருக்காகவே படைத் திருக்கிருர் என்று ஏதேதோ போலிக் காரணங்களைக் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிருர்கள். பிராணிகளுக்குச் செய்த துன்பமும் துன்பம் தான். அச் செயல் இறைவ னல் பதிவாக்கப் படாமலிருக்காது. அதற்குரிய தண்ட னையை அனுபவியாது தப்பித்துக் கொள்ளவும் முடியாது, நம்மை நாம் நல்வாழ்வு வாழ்வதற்குத் தகுதியாக்கிக் கொண்டால் இறைவன் நற்பயன் அளிக்கக் காத்துக்கொண் டிருக்கிருன், மனம், வாக்கு, காயங்களால், நாம் செய் யும் நல்ல காரியங்களே நம்மை அதற்குத் தகுதி உடைய வர்களாக ஆக்குகின்றன. எல்லாம் நாம் நடந்து கொள் ளும் முறையில்தான் இருக்கின்றன. இறைவன் மேல் யாதொரு குற்றமும் இல்லே.
நமது முன்ைேர்களெல்லாம் நாம் நற்காரியங்கள் செய் யும் முறையை அவர்கள் நடந்தும், சொல்லியும், எழுதி யும் வைத்து அறிவித் திருக்கின்றனர். முதலில் தூய உள் ளம் உடையவராக இருக்க வேண்டும். அதுவே பிறருக்கு எல்லா வகையிலும் ற்காரியங்கள் செய்ய உதவியாக இருக்கும். அவ்வாறு தூயஉள்ளம் உடையவராகஇருக்கஇறை வனுடைய நாமத்தை நாம் அடிக்கடி ஒதுதல் வேண்டும். அவர் புகழைக் கூறும் பிரார்த்தனைப் பாடல்களைத் தினமும் பாட வேண்டும். அப்படிப் பாடப்பாட நமது பொய்யான உள்ளம் மெய்யான உள்ளமாக மாறும். அதேைலயே மணிவாசகர் 'போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானுர்' என்று அருளியிருக்கின்ருர், நாம் எவ்வளவு பிழை செய் தாலும் இறைவனிடம் சென்று செய்த பிழையைப் பொறுக்க வேண்டும் என்று பல முறையும் சொல்லி வழி பட்டால் நாம் பிழை செய்யும் போது மனச்சாகழியே

Page 17
62 ஆத்மஜோதி
நமக்கு ஒருவித உணர்ச்சியை உண்டுபண்ணி, அப் பிழை யைச் செய்யாது விட்டு விடும்படி செய்யும்,
அதனுல்தான் நம் சமயக் குரவர்கள் மக்கள் எவ்வ ளவு தீவினைகள் செய்திருந்தாலும் சரி, முறைப்படி தீசைவு செய்விக்கப் பெற்று இறைவனது திருநாமத்தை ஒதிக் கொண்டிருந்தால் எல்லாத் தீமைகளும் நீங்கித் திருந்தி விடலாம் என்று அருளியிருக்கிருர்கள். இதனை வலியுறுத் தவே ஞானசம்பந்தர் அருளிய நமச்சிவா யப் பதிகத்தில் 'கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர்' என் றும் , ' மந்தரம் அன் பாவங்கள் மேவிய பந்த அனையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்கு மால்' என்றும் 'நரகம் ஏழ்புக நாடினராயினும் உரை, செய்வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பவரால்' என்றும், வரும் வாசகங்களே போதிய சான்று களாகின்றன. எவ்வளவு பெரிய பாவிகளானுலும் இறை வன் நாம ஜபத்தினுல் மனம் திருந்தி நல்ல காரியங்கள் புரியவும் அதனுல் நல்வாழ்வு வாழ விதை விதைக்கவும் முடியும். மேலும் மேலுலகங்களில் ஆட்சி செலுத்தும் பேறும் கூடப் பெறலாம் என்கிருர்கள். அதனுல்தான் ஞானசம்பந்தர் ‘வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்றும், சுந்தரர் 'அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே' என்றும் பாடியிருக்கின்றனர்.
ஆகையால் நாம் நமக்கு வரும் துன்பங்களைப் பொறுத் துக் கொள்வதோடு, இனி வரப் போகும் காலத்தில் நல் வாழ்வு வாழ வேண்டும் என்ற கருத்துடன் முடிந்த அளவு நல்ல காரியங்களையே செய்ய வேண்டும். நல்லனவற் றையே செய்து நம்மை நாமே தகுதியுடையவாராக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நல்வாழ்வு வாழ்வதற்குரிய வழியாகும். -
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாது வி டேன் வெய்ய சூரனப் போல் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மான்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசக்தி வாளென்றன் கையதுவே .
- ଐଂ ହ୍ଲୀଂ କ୍ଲବ୍‌ ମୁଁ 86, it {}, if, .

63 மஜோதி رائیو!ھی۔
அத்தனின் அருள்
(இளங்கண்ணன்-தல மை ஆசிரியர் பூங்கா உயர்தர ஆரம்ப பள்ளி, உடுமலை)
- சென்ற இகழ்த் தொடர் -
உலகியல் அறிவும் ஞானமும் அளிக்கும் கல்வி கற்காத கசடராகவும், பொருஃார் செலவழித்து திருப்பணி செய்யா வறியவராகவும் நாகரிகத்திலே தோய்ந்து விளங்கா விழுப் பம் உடைய வல்லவனுகவும் விளங்கி தன் அன்பு ஒன்றே குறைவின்றி இறைவனுக்கு அளித்த திண்ணணுர் தன் ஊனக் கண்ணே அத்தனுக்கு அப்பி ஞானக் கண் பெறும் அருள் வடிவானுர், ஆகம வழிநின்ற சிவகோசரியார் அதை உணர்ந்து களிப்பெய்தினர். கொல்லாமையும் புறத் தூய் மையும் அதாரமாகக் கொண்டு இறைவனை வணங்குகின்ற நமக்கு இதனல் சில ஐயப்பாடுகள் நேரக்கூடும். நாம் எப் படி வணங்கினுலும் இறைவன் நமக்கு அருள் செய்வார் என்ற குருட்டுத்தனமான முடிவு ஏற்படக்கூடும். இவ்வை யங்கள் எல்லாம் சிவகோசரியாருக்கு இருந்தது. ஆகவே இறைவன் அவர் கனவில் தோன்றி,
'அவனுடைய வடிவெலாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்,
அவனுடைய நிலை இவ்வாறறி நீ"
என்று கூறி மறைந்தார். இது பற்றியே சிவகோசரி யார் மறைந்திருந்து கண்ணப்பர் இறைவனுக்குக் கண் அப்
பும் காட்சியைக் கண்டார். இதனின்று அன்பும் ஆர்வ
e
மும் முக்கியமானது எனக் கொள்ள வேண்டுமே அல்லாது
வழிபாட்டு முறை தாழ்ந்ததாக இருந்தாலும் இறைவன் அருள் செய்வான் என்ற முடிவுக்கு வரலாகாது. நம்மாழ் வார் ஒவ்வொருவருடைய வாழ்க்கை நிலைக்கேற்ப உருவா கும் அறிவு நிலையையொட்டி அவர்கள் விரும்பிய வடிவி னன் ஆக அவர்களின் பூசையை ஏற்று நிறைவோடு இறை வன் அருள் புரிகின்ருன் என்ற கருத்தினை அறிவித்துள் ளார். ஆகவே அவரவர் வாழ்வு நிலைக்கேற்ப உருவாகும் அறிவு வளர்ச்சிக்கேற்ற வண்ணம் ஆண்டவனை நெறிப்படி நினைத்து வருங்கால் அவன் அருள்கின்றன்.

Page 18
64 ஆத்மஜோதி
"அவரவர் தமதம அறியறி வகைவகை
அவரவர்ரிறை யவரென வடிவடைவார்கள் அவரவர் இறையவர் குறைவில பிறையவர் அவரவர் விதிவழி யடைய நின்றனரே'
- நம்மாழ்வார் பாசுரம்.
முற்றும் துறந்த பட்டினத்தடிகள் கண்ணப்பரைச் சிறப்பித்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.
"வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்
மாது சொன்ன சூளால், இளமை துறக்க வல்லேன் அல்லேன் நாளாறில் கண்ணிடந்தப்ப வல்லேன் அல்லேன் நான் ஆளாவ தெப்படியோ காளத்தியப் பருக்கே’’
சிவனுக்குத் தன் மகனை அரிந்து இட்ட சிறுத் தொண் டரையும் திருநீல கண்டரையும் ஈண்டு சிறப்பித்துள்ளது எண்ணத் தக்கது.
கல்லாத கண்ணப்பருக்கு அருளியது போன்று கற்ற வர்களுக்கும் இறைவன் அருளினன். சிறந்த சைவ வேளாண் மரபிலே பிறந்த திலகவதியாரின் தம்பியாகப் பிறந்து இளமையில் பெற்ருேரை இழந்து ஆன்ம அறிவு அடைய ஏற்பட்ட அவாவினல் பிற சமயமாகிய சமணத்தில் புகுந்து தர்மசேனர் என்ற பட்டம் பெற்று இருக்கும் பொழுது சூலை நோய் பெற்று திருவீரட்டானேஸ்வரனின் 鸞 அடைந்து நோய் தீரப் பெற்று, நாவினிக்கப் பாடியதால்
நாவுக்கரசர் என்ற பட்டம் பெற்ற அப்பர் ஆகம வழி நின்றவர். உழவாரப்படைகொண்டு திருத்தலங்களில் காணப் படும் புற் பூண்டுகளை நீக்கி மெழுகி இறைவனுக்குப் பூச்
சூட்டிப் பாமாலை சாற்றினர். அகத்தே அகந்தை நீக்கி அன்பைத் தேக்கினர். தலை வணங்கிக் கையைக் கூப்பி ஞர், கால் கடுக்கத் திருத்தலங்களுக்குச் சென்ருர், அக மும் புறமும் தூய்மையே வடிவாகக் கொண்டதினுல் அவர் சிவனருள் பெற்ருர், இறைவன் அச்சம் அற்றவன், உண் மையில் அவன் அருளை அடைந்தவர்அஞ்சுவதற்குஒன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை. நமது இந்து சமய நூல்களில் 'அபி; அபி’ (அச்சமற்றவன்) என்ற அடைமொழி இறைவனுக் குக்கொடுக்கப்பட்டுள்ளது. இப்பண்பிற்குரியவஞகியவனின்

பாதுகாப்பாகிய அருளை அடைந்த அடியாராகிய அப்ப ருக்கு அச்சம் என்ப்தில்லாத காரணத்தினுல் கோனை மதி யாமல் துரும்பாகக் கருதினர். துறவிக்கு வேந்தன் துரும் பாகத் தோன்றியதினுல் ஏற்பட்ட களிப்பினே அநுபவித் தார். வேந்தனின் ஆட்கள் அவரை அழைத்தபோது இறை வனின் ஆளாகவே மாறிவிட்டதில்ை தனக்கேற்பட்ட களிப்
லே நெஞ்சில் அச்சமின்றி
"நாமார்க்கும் குடியல்லேம் நமனே யஞ்சோம்
நரகத்திலிடர்படோம் நடலயில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்ல தாமார்க்கும் குடியில்லாத் தன்மையான சங்கரனற் சங்க வெண்குழையோர் காதிற் கோமாற்கே நாமென்று மீளா ஆளாய் கொய்மலர்ச் சேவடியிணையே குறுகினுேமே"
எனப் பாடினுர்,
சமணர்க்ளின் கோளுரைகளைக் கேட்ட மன்னன் நீற்ற றையிலிட்டும், நஞ்சுண்ணச் செய்தும் களிற்றினுல் இடரச் செய்தும் இறவாமையினல் அப்பரை பாறையோடு பிணித் துக் கடலில் எறிந்து விடுமாறு கூறிய போதிலும் அவனை எதிர்த்துப் போராடப் போர்க் கருவிகளைத் தேடாமல், சினமோ அச்சமோ பழிக்குப்பழி வாங்கும் உணர்வோ இன்றி, நமனே உதைத்த திருவடியை நினைந்து நமச்சிவா பதிகத்தைப் பாடினர். அப்பாட்டிலே இறைவனின் N மாட்சியையும் அவன் அருளின் மாண்பையும் சொல்லோ
வியமாகக் காட்டுகிருர் அப்பர் சுவாமிகள், !
'சொற்றுணே வேதியன் சோதி வானவன்
பொற்றுணேத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்று5ேணப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் a நற்றுணையாவது நமச்சிவாயவே'
. . . .
*மாப்பிணைத் தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணைத் தழுவிய நமச்சிவாய பத்தும் ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே'
என்று பாடினர். (...)
- தொடரும .

Page 19
Athma.JOTHP Registered at th
சந்தா :ே அன்புடையீர்!
17ஆவது ஆண்டு 2வது சோதி இன் நேயர்களின் உதவியினுலேயே சோதி சோதிக் குழந்தை உங்கள் வீட்டைத் போகின்றீர்கள் உங்கள் சந்தாவை கள் கொடுக்கும் பரிசாகும். என்றெ
இந்தியாவிலுள்ள சந்தாநேயர் R வீரசம்பு : அரிசிப்பாளை
என்ற விலாசத்திற்கு அனுப்பி
ஆத்மஜோதி நிலேய it.
ஆத்மஜோதி நி:
ஆத்மஜோதி மலர் (1963) சைவ இலக்கியக் கதா மஞ்சரி ஆத்மநாதம் தீங்கனிச் சோலை பாட்டாளிபாட்டு திவ்ய ஜீவன சங்க வெள்ளி கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் மார்கழி மாதப் பாடல் 10. கதிர்காமப்பதிகம் 11. செல்லச்சந்நிதி பாடல் 12. கந்தரனுபூதி 13. அறிவுரைக் கதைகள் 14. நித்திய கருமவிதி 15. கதிரைமணிமாலை
臀 தபாற்
அச்சிடுவோர் - ஆத்மஜோதி அச்சிடுவிப்போர்:- ஆத்மஜே வெளியிட்டதேதி - 15-11-64
 

e G.P.O. as a Newspaper. M.L.59/300
யர்களுக்கு
று உங்கள் கையில் கிடைக்கின்றது. சந்த
பதினுறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. தேடிவரும்போது என்ன பரிசு அளிக் உட்னே அனுப்பி வைத்தில்தான் ன்றும் உங்கள் ஆதரவு கிடைப்பத
5ள் தமது சந்தாவை வழக்கம்போல்
சம்பு இன்டஸ் ரீஸ், ܀ ܐ ஈயம், சேலம்-9
வைப்பதோடு இவ்விடமும் அறியத் Gifri 5 GITT 5.
நாவலப்பிட்டி (ஒலேன்)
லய வெளியீடுகள்
2.00 13.00 ܘܬ: 5 ܠܐ ܐܬܐ ܠܠ. e të 3.00
2.50 51 ܘܐܓܢ | 1.
50
விழா மலர் 1.25 30
30
20
25
15 . |25 - ბი - 6 25。 50。
செலவு தனி
அச்சகத்தினர்
தி நிலையத்தினர்