கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1965.01.14

Page 1


Page 2
, " ". PM" LJU.".
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
சுத்தானந்தர்
ஜோதி 17 இ குரோதி இரு தை மீ" 1உ (14-1-65) சுே டர் 3
பொருளடக்கம் 1 புத்த பெருமான் துதி 65 2 புத்த தேவரின் அருளமுதம் 66 3 அனகாரிக தர்மபாலா அவர்களின் நூற்றண்டு விழா 67 75 5 புண்ணியம் சம்பாதிப்பதற்கு அரியதோர் சந்தர்ப்பம் 77 6 பாலர் கீதம் 8. 7 சிந்தனையும் சீலமும் 82 8 சைவத்தின் மாண்பும் இன்றைய நிலையும் 85 9 அன்பும் ஆசையும் 87 10 ஆதாரம் S9 11 சாதகர்களின் கவனத்திற்கு 90
12 அப்பாத்துரைச் சுவாமிகளின் திவ்ய சரிதமும்
உபதேசங்களும் 93
13 குழந்தை பிணியும் நிவர்த்தியும் 3ம் கவர் ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூபா 75, வருட சந்தா ரூபா 3.00
தனிப்பிரதி - சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா " பதிப்பாசிரியர் - திரு. நா. முத்தையா
'ஆத்மஜோதி நிலையம்" நாவலப்பிட்டி, (சிலோன்)
" தெr%hபேசி எண் 353
፪፥፳ : : ****+*++++++++w****+令*********令伞令令令令令→令→令号+。
இஆத்மஜோதி :
; ஆஆதம ஜோத :


Page 3
66 ஆத்மஜோதி
புத்த தேவரின் அருளமுதம்
Mk Y.
தளர்ந்த மரத்தைப் புயல்காற்று வேரறமண்மீது சாய்ப் பதுபோல, இந்திரிய சுகமே வாழ்க்கையின் நோக்கமாகக்
கொண்டவனையும், ஐம்புலனை அடக்கி ஆளாமல் மிதமிஞ்சிய
உணவும் சோம்பலும் விரும்பி ஆற்றல் அனைத்தையும் வீண் செய்தவனையும், மாரன் எளிதில் அடிமை கொள்ளுவான். கற்பாறையைப் புயல்காற்று அசைக்க முடியாது. அதுபோல இந்திரிய சுகமே வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளாதவ னையும், ஐம்புலனுக்கு அரணிட்டு மித உணவும் திடசித்தமும் மேற்கொண்டு ஆற்றல் அனைத்தையும் வீணுக்காமல் பாது காத்தவனையும் மாரன் வெல்ல முடியாது.
பாவம் செய்பவன் இகபரம் இரண்டிலும் சோகம் அடை வான், தான் செய்த தீவினையைச் சிந்தித்து அவன் துக்கப் பட்டு நைவான்.
ஒருவன் வேதநூல்களில் ஒரு சிறிதே கற்றிருக்கலாம். எனினும் அந்நூல்கள் கூறும் நெறியை ஐயமற உணர்ந்து அதைப் பின்பற்றுவானுயின் சினத்தையும் பகைமையையும் அறிவின்மையையும் அறவே ஒழித்துத் தர்மம் இன்னதென ச்
சரிவர உணர்வானுயின் மண்ணிலும் வானுலகத்திலும் உள்ள
எப்பொருள் மீதும் பற்றுவையாமல் கள்ளமற்ற உள்ளம் கொள்வானுயின், அவன் பிக்ஷ Dக்களின் திருக்கூட்டத்தில் இடம் பெறுவான்.
மாயை என்ற உறக்கத்திலிருந்து விழித்திருத்தலே சாவற்ற அமரநிலைக்கு வழியாகும். அஜாக்கிரதை மரணத் துக்கு மார்க்கம். விழிப்பெய்தினர் மடிவதில்லை. அஜாக்கிர தை கொண்டோர் உயிர் வாழ்ந்தும் இறந்தவரே யாவர்.
தன்னிலும் வலிகுறைந்த குதிரையை மீறித் திடம் மிகுந்த அசுவம் முன்னேறுவதுபோல, விழிப்பும் ஜாக்கிரதை யும் பூண்ட மெய்ஞ்ஞானி, உன் மத்தரையும் உறங்குவாரை யும் கடந்து முன் செல்கின்ருன், -

ஆத்மஜோதி 67 அனகாரிக தர்மபாலா அவர்களின் நூற்றண்டு விழா
(ஆசிரியர்)
1963ம் ஆண்டு முழுவதும் சுவாமி விவேகானந்தரின் நூற்றண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டதை வாசகர்கள் நன்கறிவர். அதைப்போலவே, அவரின் உற்ற நண்பரான அனகாரிக தர்மபாலரின் நூற்ருண்டு விழா 1964ம் ஆண்டு புரட்டாசி முதல் அடுத்த ஆவணி முடியும் வரையில் கொண்டாடப்படுகின்றது. சென்ற நூற்றண்டில் விவேகானந்தர் இந்து மதத்திற்குச் செய்துள்ள உன்னத சேவைக்குச் சரிநிகரானது தர்மபாலா பெளத்த மதத்திற்குப் புரிந்துள்ள அரும்பணி. 1893ம் ஆண்டில் சிக்காக்கோ நக ரில் நடைபெற்ற சர்வமதமகாசபையில், குறித்த இருபழைய மதங்களின் மகிமையை மேல் நாட்டினர்க்கு எடுத்துவிளக்கி, பாரதநாட்டின்பரமார்த்திகத்தை உலகறியச்செய்தபெருமை இவ்விரு வீரபுருஷர்களைச் சேர்ந்ததாகும். இத்தொண்டில் இருவரும் இறுதிவரையில் போட்டி, பொருமை எதுவுமின்றி அத்யாத்ம உறவுபூண்டு ஒத்துழைத்தவிதம் என்றும் பாராட் டற்குரிய விஷயம்.
அனகாரிக தர்மபாலரின் சீவிய சரித்திரத்தைச் சுருக்க மாகக் கூறி அவர் தமது சாதிக்கும் மொழிக்கும் சமயத்திற் கும் செய்துள்ள அற்புதச் சேவையை ஆராய்வதே இக்கட்டு ரையின் நோக்கமாகும். 'அனகாரிகா' என்ருல் குடியிருக்க மனையில்லாதவர் என்பது கருத்து. 'தர்மபாலா’ என்ற தும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அறவணி அடிகளின் வரலாறேயாம். ஏனெனில், தர்மபாலா’ என்னும் வட மொழிப் பெயரைச் சுத்தமான தமிழில் கூறப்புகின் , "அற வணி அடிகள்’’ எனவே அமையும். காவிரிப்பூம் பட்டினத் தில் புகழ் பெற்ற பெளத்தபள்ளியின் தலைவராயிருந்து மாத விக்கும், மணிமேகலைக்கும், கோவலன் கொலையுண்டபின், பெளத்த தர்ம உபதேசம் செய்தவர் அறவணி அடிகள், அவர் நிர்வாணமடைந்தது காஞ்சிமா நகரத்தில். அங்கே, அவர் வாழ்ந்த இடம் அறப்பணஞ்சேரி’ எனஇன்றும் அழைக் கப்படுகிறது. இவர் காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு. இவரைவிட, கி. பி. ஐந்தாம், ஆரும் நூற்ருண்டுகளில், இரு

Page 4
68 ஆத்மஜோதி
தமிழ்நாட்டுப் பெரியார்கள் 'தர்மபாலர்' என்ற பெயரு டன் புகழுடன் வாழ்ந்துள்ளார்கள். ஒருவர் தர்மபால ஆசா ரியர். மகாயன பெளத்தர்களின் குரவரான இவர்காஞ்சியில்
பிறந்தவர்; அக்காலத்தில் உலகப் புகழ்பெற்ற நாளந்தைப் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்துபெரு மைபடைத்தவர். மற்றையவர் ஆசாரிய தர்மபாலர். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர்; காஞ்சியிலிருந்த படராதித்த விகாரையின் தலைவராக இருந்தவர், பாளி மொழியிலிருந்த பல நூல்களுக்கு இவர் உரை தந்துள்ளார். இவருக்கும் அநுராதபுரத்திலிருந்த மஹா விகாரைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருதப்படுகிறது.
இவ்விதம் சென்ற பதினெட்டு நூற்ருண்டுகளில் மும் முறை மகிமையைப்பெற்ற "தர்மபாலா’ என்னும் பெயருக்கு சென்ற நூற்ருண்டிலும் இந்த நூற்ருண்டிலும் புதுச் சிறப் பைத் தேடிக் கொடுத்த பெருமை முதலியார் டொன்கருெ லிஸ்ஹேவ விதாரணையையும், மல்லிகாதேவியையும் சார்ந்த தாகும். அவர்களின் தவப்பயனக 1864ம் ஆண்டில் தோன் றிய டேவிற்ஹேவ விதாரணையே, தமது பெயரைத் தாமா கவே, "அனகாரிக தர்மபாலா’ என்றுமாற்றிக் கொண்டார். தாயாரான மல்லிகாதேவியார் கொழும்பில் வியாபாரத் துறையில் செல்வாக்குடன் வாழ்ந்த தர்ம குணவர்த்தணுவின் புத்திரியார். இலங்கையில் முதன் முதலாக நிறுவப்பெற்று, இப்போது சர்வகலாசாலையாக விளங்கும் வித்யோதய பிறி வெணுவுக்கு (பெளத்த சந்நியாசக் கல்லூரிக்கு) காணியும் கட்டிடமும் வழங்கியவர் அச்செல்வந்தர். எனவே, அந்த வள்ளலின் உத்தம புத்திரியாக வந்த மல்லிகா தேவியார், தமது முதல் குழந்தை ஆணுகப் பிறக்கின், அக்குழந்தை அக் காலத்தில் மிகவும் மங்கியிருந்த பெளத்த தர்மத்திற்கு மறு மலர்ச்சி தரும் பணியில் உழைக்கும் சந்நியாசியாக வேண்டு மெனக் கர்ப்பவதியாயிருக்கும் போதே தவங்கிடந்ததில் வியப்பில்லை; அவர் ஆர்வம் பூர்த்தியான திலும் வியப்பில்லை. நாம் எதனைப் பக்திவிசுவாசத்துடன் பரிசுத்தமான உள்ளத் தில் சிந்திக்கின்ருேமோ, அதுவே ஆகின்ருேம். சிந்தனையின் சக்தி அற்புதமானது.
'அன்னையின் திருவடிகளில் உள்ளது சுவர்க்கம்' என்
ருர் முகமதுநபி. அந்த மணிவாக்கின் உண்மையை மல்லிகா தேவியினதும் அவரது புத்திரனினதும் வாழ்க்கையில் நன்கு
 

ஆத்மஜோதி 69
காணலாம். தாயாரே தனயனுக்கு முதல் குருவுமானர்.
சிறுவய்ை இருக்கும் போதே, பின்னளில் வாழ்வில் விளங்கிய பெருங்குணங்கள் டேவிற்றில் தலைகாட்டின. பள்ளிக்கூட மாணவனுயிருக்கும், அவன் காட்டிய புத்தி நுட்பமும், ஞாபக சக்தியும், வாக்கு வன்மையும், மன உறுதியும், எதற் கும் அஞ்சாநெஞ்சுரமும் அவனது சகபாடிகளை மாத்திரமின்றி உபாத்தியாயர்களையும் பிரமிக்கச் செய்தன. ஒரு உதாரணம் மாத்திரம் இங்கு எடுத்துக் கொள்வோம். பதினேழுவயசுப் பையனுய் கொழும்புக் கிறிஸ்தவக் கல்லூரியொன்றில் மாண வணுய் இருந்த காலத்து, வைகாசி விசாகம் வந்தது. பையர் னுக்கு அப்புனித தினத்தை தன் அருமை அன்னையின் அருகில் அமர்ந்து புத்தர் தியானத்தில் கழிக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. தலைமை ஆசிரியரிடம் அதிகாலையில் சென்று தனக்கு ஒரு நாள் லீவு கேட்டான். ‘லிவு என்னத்திற்காக'? எனவினவிய ஆசிரியருக்கு, 'புத்தர் பிரானின் பிறப்பாலும் அவரது ஞான உதயத்தினுலும், பரிநிர்வாணத்திலுைம்,
மும்முறை சிறப்புற்ற புனித நாள் இது. பெளத்தர்களுக்கு மிகவும் விசேடித்த இப்புண்ணிய தினத்தை புத்தர்வழிபாட் டில் கழிக்க விரும்புகிறேன்’ என்ருன் பையன். அக் காலத் தில் பெளத்தத்தையும் சைவத்தையும் தூற்றுந் தொழிலைத் தமது சமயப் பணியாகக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த அந்த ஆசிரியருக்கு பையனின் துடுக்கான பதில், விபரீதமா கத் தோன்றியதுமன்றி, ஆத்திரத்தையும் கொடுத்தது: கேட்டஉத்தரவு கடுமையான மொழிகளில் மறுக்கப்பட்டது. ஆனல் பையன் உடனே வீடு திரும்பி விட்டான். அடுத்த நாள் பள்ளிக்கூடஞ் சென்றதும், பிரம்படித் தண்டனை கிடைத்தது. இதனுல் அவனது மன உறுதி பன்மடங்காக்கப் பட்டது. அதன்மேல், வைகாசி விசாக தினத்தன்று பள் ளிக்கூடஞ் செல்வதில்லையென்று தீர்மான ஞ் செய்துகொண் 1 — 6ბT (60)!”თ.
அக்காலத்தில் கொட்டாஞ்சேனை பெளத்த பள்ளித்தலை வராயிருந்த மொஹோத்திவத்த குணுனந்ததேரர் தர்மபா லாவின் இரண்டாவது குரு ஆவர். வடஇலங்கையில் நாவ லர் பெருமான் செய்து கொண்டிருந்த சைவப்பணி போல், அதே காலத்தில் தென் இலங்கையில் பெளத்த மதப் பணியில் ஈடுபட்டிருந்தவர்குணனந்தர். அவரைப் போலவே இவரும் விவிலிய நூலில் விற்பன்னர். பாதிரிமாரின் மதத்தூஷணைக்கு அந்த நாட்களில் வாய்ப்பூட்டுப் போட்ட பெருமை இவர்கள்

Page 5
7) ஆத்மஜோதி
இருவரையே சார்ந்ததாகும். 1873ம் ஆண்டில் பாணந்துறை யில் நடந்த பெளத்த-கிறிஸ்தவ சமயவாதத்தில் குணனந்தர் வெற்றி பெற்ற புதினம் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பரவியது. அதன் விளைவாக கேர்ணல் ஒல்கொற்றும் பிள வற்ச்கி அம்மையாரும் 1880ம் ஆண்டில் இலங்கைவந்து பெளத்த மதத்தைத் தழுவியதை நேரில் கண்ட தர்மபாலா வின் உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்த மதப்பற்ருனது கொழுந்து விட்டெரிந்த தோடு, அடுத்தவர்களையுந் தாக்கக் கூடிய அளவில் அனல்வீசத் தொடங்கியது. குறிப்பிட்ட இரு ஐரோப்பியர்களின் நெருங்கிய உறவால் இந்தியாவுக்கு யாத்திரை செய்யும் வாய்ப்பும் திருவருள் காட்ட, பூர்வ புண்ணியங்கூட்ட, வலிய வந்தமைந்தது.
1890ம் ஆண்டில் சென்னை அடையாரில் நடந்த பிரம்ம ஞான சபை உலக மகாநாட்டில் கலந்துவிட்டு தர்மபாலா வடஇந்தியாவில் யாத்திரை செய்தார். அந்த யாத்திரையில் அவர் தரிசித்த புண்ணிய சேஷத்திரங்களில் புத்த காயா முக் கிய இடம் பெறுகின்றது. அங்கே புனித போதி மரத்தருகா மையில் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. அந்த இடத்தை அதின் பழைய புனித நிலைக்குக்கொண்டுவருவதென விரதம் எடுத்துக் கொண்டனர். அந்தத் தீர்மானத்தைச்செய லுக்குக் கொணரவென்று 1891ம் ஆண்டில் "மகாபோதி சங் கம்’ என்ற பெயருடன் ஓர் சபை நிறுவப்பட்டது. அந்தச் சங்கத்தின் நடவடிக்கைகளை உலகறியச் செய்யும் பொருட்டு அதே பெயருடன் அடுத்த ஆண்டில் ஒர் ஆங்கில மாதாந்த சஞ்சிகையும் அவரால் பிரசுரிக்கப்பட்டது. இலங்கையில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இரு வாரப் பத்திரிகைகளை நிறுவினர்.
சிக்காக்கோ சர்வ மத மகாசபையின் நிர்வாகக் குழுத் தலைவரான டக்றர் ஜே.ஆர்.வெருேஸ்(). R. BWRROWS)அவர் கள் மகாபோதிசஞ்சிகையின் பழைய பிரதிகள் சிலதைதற்செய லாகப் பார்த்தனர். அதின் ஆசிரியரான தர்மபாலாவின் கட்டுரைகள் அவர் கவனத்தை ஈர்த்தது. உடனே, இவர் சர்வ மத சகாசபையில் ஹினுயன பெளத்த மதத்தின் பிரதி நிதியாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பை அனுப்பி வைத்தார். மகா சபையில் அவர் செய்த சொற்பொழிவு அவருக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்த தெனலாம். அவரது பிரியாவிடைப் பேச்சிலிருந்த கீழ்க்கண்ட வசனம்

ஆத்மஜோதி 71.
புத்தர் பிரானின் உபதேசங்கள் முழுவதையும் வடித்தெடுத் துக் கொடுத்த தேன்மொழியாக அமைந்துள்ளது:-
"Learn to think without prejudice, love all beings for love's sake, express your convictions fearlessly, lead a life of purity, and the sunlight of truth will illuminate you.
“If theology and dogma stand in your way in the earch of truth, put them aside. Be earnlest and work out your salvation with diligence aad the fruits of holiness will be yours '
பின்னர் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பெளத்த மதப் பிரசாரம் செய்துவிட்டுப் பசிபிக் சமுத்திர மார்க்கமாக தாய்நாடு திரும்பினர். அவர் பிரயாணஞ் செய்த நீராவிக் கப்பல் ஹொனலுவில் தங்கியபோது அங் குள்ள பிரம்மஞான கிளைச்சபையின் அங்கத்தவர்கள் சிலர் அவரைக் கப்பலில் தரிசித்து நல்வரவு கூறினர். இச்சிறு கூட்டத்துடன் சென்ற திருமதி மேரி ஃபொஸ்றர் என்னும் செல்வப் பெண்மணிதான் பின்னுளில் தர்மபாலாவின் உலக பெளத்த மதசேவைக்கு வேண்டிய பொருளுதவி செய் கவர், அன்னர் வழங்கிய பத்து லட்சம் ரூபாய் நன்கொடையின் ஒரு பகுதி சர்நாத்தில் மூலகண்ட குடி விஹாரையை அமைப் பதற்கும் புத்தகாயாவில் பெளத்த யாத்திரீகர்கட்கு விடுதிச் சாலை எழுப்புவதற்கும் செலவிடப்பட்டது. பெருந்தொகை யான பணம் இலங்கையில் பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலை கள், ஆலயங்கள் அமைப்பதற்குச் செலவிடப்பட்டது. அந்த நன்கொடைப் பணம், மூல நிதியாக வந்தமைந்த புண்ணி யத்தினுல் அவர் தமது சமயத் தொண்டை தொடர்ந்து, இங்கிலாந்து, ஜேர்மனி முதலாய ஐரோப்பிய நாடுகளிலும் பரப்பக் கூடிய அரும் வாய்ப்புக் கிடைத்த தெனலாம்.
தர்மபாலாவின் அரும்பெருங் குணங்களில் தலையாயது உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசாத் தன்மையா கும். எதனை நினைத்தாரோ அதனையே தெளிவாகச் சொன் னர்; எதனைச் சொன்னரோ அதனையே சட்டதிட்டமாகச் செய்தார் இன்றைய நெருக்கடியான நிலையில் அந்த மஹா புருஷர் திரும்பி வந்தாரோ வெனபண்புற்றமக்களின் உள்ளந் துடிக்கின்றது. நேருக்கு நேரேசொல்வதை அவர்கேட்போர் ஒன்றும் மறக்க முடியாத விதத்தில் உள்ளத்தில் தாக்கும்படி சொல்லிவிடுவார். பறங்கிகளைப் போல் பெளத்தர்கள்

Page 6
72 ஆத்மஜோதி
மரண வீடுகளிலும் கல்யாண வைபவங்களிலும் மதுபானம் வழங்குவதை அவர் அறவே வெறுத்தார். அவர்கள் மாட் டிறைச்சி உண்பதை அவரால் கண்டு சகிக்க முடியவில்லை. ஐரோப்பியர் போல் உடையணிவதில், டொன், மாட்டின், ஹென்றி, எட்வேட், மேரி, அலிஸ், கதெறின், லூசியா, போன்ற கிறிஸ்தவப் பெயர்களைத் தங்கள் பிள்ளைகட்குச் சூட்டிக் கொள்வதில், தம் இனத்தார் கொண்டிருந்த அடி மைப் பழக்கத்தை நினைக்கவே அவர் உள்ளம் வெதும்பும். அவரது சொற்பொழிவுகளிலெல்லாம் இவற்றையெல்லாம் சிறிதும் தயவு தாட்சண்யமின்றிக் கண்டிக்கும் கடுஞ் சொற்களைக் காணலாம். உதாரணமாக இற்றைக்கு நாற்பது ஆண்டுகட்கு முன் கொழும்பில் ஒர் பகிரங்கக் கூட் டத்தில் நடந்த நிகழ்ச்சியை இங்கு எடுத்துக்கூற விரும்புகி ருேம். பின்னுளில் இலங்கை அரசியல் துறையில் பிரமுகர்க ளான பலரை அந்நாளில் அவர் "நீ உனக்கு (உ.ம்ப, உம் பலா) என்று அழைப்பது வழக்கம். மேலே குறித்த கூட்டத் தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, சபையின் முன்வரி சையில் டக்றர். டபிள்யு. ஆதர் சில்வா (பின்னுள் மந்திரி யார்) இருப்பதைக் கண்டுவிட்டார். சபையோரை நோக் அவரைச் சுட்டிக்காட்டி, 'இவர் யாரென்பது உங்களுக்குத் தெரியுமா? இவர்தான் ஆதர் சில்வா பெரும் பணக்காரர்; பல தோட்டங்களின் சொந்தக்காரர்; கொழும்பில் அவர் வசிப்பது ஒர் அரண்மனையில்; பெளத்தமத சேவையில் விருப் புள்ளவரென்றுங் கேள்வி. ஆனல், அவர் பார்க்கும் உத்தி யோகம் என்ன தெரியுமா? இறைச்சிக்காகக் கொலை செய் யப்படும் மாடுகளைப் பரிசோதித்து அவை நோயற்றவை யெனப் பத்திரம் எழுதிக் கொடுப்பது (Gon Veda) என்றார். சபையோர் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். குறிப்பிட்ட பெரியார் உடனே சபையை விட்டு வெளிச் சென் ருர்; பின் னர் அந்த உத்தியோகத்தைத் துறந்து மதுவிலக்குப் பிரசா ரத்திலும் கல்வித் தொண்டிலும் சமயப் பணியிலும் ஈடுபட் டுப் புகழடைந்தார்.
அதே கூட்டத்தில் நடந்த இன்னுமொரு ருசிகரமான சம்பவம் எமது நினைவிற்கு வருகின்றது. சபையில் முன்வரி சையில், உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையும் ஐரோப்பிய மோஸ்தரில் தர்மபாலாவின் தங்கை புருஷன் அமர்ந்திருந் தார். சபையினருக்கு அவரைச் சுட்டிக்காட்டி, "இந்தக் கலு சுத்தாவை அந்த அறைக்குள் இழுத்துச் சென்று அவரது உடைகளைக் கழற்றுவீர்களானுல், அவற்றின் மொத்தம் ஒரு

ஆத் மஜோதி 73
டசன் உருப்படிகள் இருக்கும்' என்ருர், இந்தச் சம்பவம் நடந்து ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகட்கு முன் கொழும்புக் கூட்டமொன்றில் சுவாமி விவேகானந்தர் அதே விஷயம் பற்றிக் கூறிய அறிவுரை இங்கு ஞாபகத்திற்கு வரு கிறது. 1897ம் ஆண்டு ஜனவரி மாசம் 18ந் தேதி திங்கட் கிழமை மாலை கொழும்பு நகர மண்டபத்தில் சுவாமிகள் ஒர் வேதாந்த உபந்நியாசம் செய்தனர். சபையில் ஆடவர்கள் பெரும்பாலார் ஐரோப்பியர்கள் போல் காட்சியளித்தனர். அதைக்கண்டதும் அப்பெரியார் ;-
'ஆடையிலுமா நாம் அவர்களைப் போன்று நடக்க வேண்டும். அவர்கள் நம்மைப்போல் உடுப்பதில்லையே! உடுப்பானதுதேசசீதோஷ்ணஸ்திதியைப் பொறுத்ததேயன்றி நாகரிகத்தைச் சார்ந்ததல்ல? அடிமையாக முயலாதீர்கள்; எதுவரினும் உங்கள் தேசா சாரத்தைக்கைவிடவேண்டாம்' என்று முதலில் அறிவுரை கூறிய பின்னரே பிரசங்கத்தை ஆரம்பித்தார். தர்மபாலாவின் பேச்சுக்களில் இக் கருத்துக் கள் திரும்பத் திரும்ப வருவதுண்டு.
பெளத்த பிக்குகளின் சோம்பேறி வாழ்க்கையும் அவரது தீவிரமான கண்டனத்திற்கு இலக்காயது. அக் காரணத்தால் அவர்களது எதிர்ப்புக்கும் தூஷணைக்கும் ஆளாயினர். அர சியல் விஷயங்களில் அவர் பெரும்பாலும் அக்கால இந்திய தீவிர தேச பக்தர்களான திலகர், அரவிந்தர், சந்திரபால் முதலியோர்களின் கருத்துக்களைப் பின் பற்றினர். ஆகையால், இலங்கை அரசாங்கம்அவர்மீதுராஜத்துரோகியென்றகுற்றத் தைச் சுமத்த வழிவகை தேடியது. பொலிசார் மிகவும் கண்காணிப்பாயிருந்தனர். 1915ம் வருஷக் கலகத்தில் அவரைக் கட்டாயமாகப் பிடித்துச் சிறைவைத்திருப்பார்கள் அதிர்ஷ்ட வசமாக அவர் அந்தக் காலத்தில் இந்தியாவில் வசித்தனர். இந்திய அரசாங்கமே தம்மைக் காட்டிக் கொடுக்குமெனச் சந்தேகித்து அவர் புதுச்சேரியில் புகலிடம் அடைந்ததாக அக்காலத்தில் ஒர் வதந்தி உலாவியது.
அயரா உழைப்பினுலும், நீடித்த பிறநாட்டுப் பிரயாணங் களாலும் அவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எடுத்த உடல் விழுமுன் முறையான சந்நியாசம் பெற்றுக் காயாசம் அணிய வேண்டுமென்று ஆசைப்பட்டார். அறு பத்தாருவது வயசில் அந்த ஆசை நிறைவேறியது. அதன்

Page 7
74 ஆத்மஜோதி
மேல் இரண்டாவது சந்நியாச தீகூைடியும் (உபசம்பத்து) எடுக்க ஆசைப்பட்டார். அந்தப் புனித சடங்கு 1933ம் ஆண்டு தை மாச ஆரம்பத்தில் சிறப்பாக சர்நாத்தில் நடை பெற்றது. அந்த வைபவத்தின் முப்பத்திரண்டாவது நிறை வுவிழாவாக இம்மலரும் எதிர்பார்த்திரா முறையில்பொருந்தி விட்டது. அவருக்கு எஞ்சியிருந்த ஒரே ஒரு ஆசை தமது இறுதி நாட்களை சர்நாத்தில் கழித்து அங்கே தாம் எழுப்பிய மூலகண்ட குடிவிஹாரையைத் தரிசித்த வண்ணம் கண்மூட வேண்டுமென்பதாம் அந்தக் கடைசி விருப்பம் 1933ம் ஆண்டு ஏப்ரில் மாசம் 29ந் தேதி நிறைவேறியது. பிக்கு தேவமித்த தர்மபாலா என்ற பெயருடன் அவர் பூதவுடல்
மறைந்தது. ஆனல், பெளத்த உலகம் இன்னும் அவரைப் பழைய அனகாரிக தர்மபாலாவெனவே அழைக்கின்றது.
சென்ற சில வருஷங்களாக இந்தியாவில் தோன்றியுள்ள பெளத்தமத மறுமலர்ச்சிக்கு அப்பெரியாரது ஆத்ம சக்தியே முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. மீண் டும் பிறப்புண்டேல் அது இந்தியாவின் புண்ணிய மண்ணில் நடக்க வேண்டும். பெளத்த மதப்பிரசாரமே அப்பிறப்பின் ஒரு நோக்கமாக இருக்க வேண்டுமென்று அவர் அடிக்கடி
சொல்வதுண்டு. இலங்கையில் இறப்பதையோ, மறுபடியும்
இங்கே வந்து பிறவி எடுப்பதையோ அவர் விரும்பவில்லை. இந்த உண்மையைப் பல முறை பகிரங்கமாகச்சொல்ல அவர் கூச்சப்படவுமில்லை. .ܐ
1957ம் ஆண்டில் இலங்கை வானெலி நிலையம் 'பெளத் தப் பெரியார்கள்’ என்ற தலைப்பில் தமிழ்மொழிப் பேச்சுக் களை ஒழுங்குசெய்து அதனை ஆரம்பித்து வைக்குமீாறு எமக்கு அன்புக் கட்டளை தந்தது, இலங்கையில் சரித்திர காலத்தில் தோன்றிய பெளத்தமதப் பெரியார்கள் வரிசையில் முதலா வது இடம் அனகாரிக தர்மபாலா அவர்கட்கே உரியதெனக் கூறி, அவரது வீர, தீர, வைராக்கியஞ் செறிந்த வரலாற்றை எடுத்து விளக்கினுேம்.இக்கட்டுரைபெரிதும் அப்பேச்சில்வந்த குறிப்புகளையும் கருத்துக்களையும் அடக்கியுள்ளது. இன்றைய சந்ததியாரும்இனிவரும்சந்ததியினரும் அறிந்துகொள்ள, இப் பெரியார் வரலாறு அச்சேறிப் புத்தக ரூபமாய்வந்து தமிழில் நிரந்தரமான இடம்பெற வேண்டுமென்பது திருவருட்சித்தம் போலும், இன்றைய தமிழர் பலர் பெளத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்த காலத்தில் அது தமிழ் மொழிக்குச் செய்த அரிய இலக்கியத் தொண்டை மறந்து விட்டனர்.

ஆத்மஜோதி - 75
அதே போல், தமிழ் நாட்டுப் பெரியார்கள் பலர், பெளத்த மதத்திற்குச் செய்துள்ள சீரிய சேவையை சிங்கள மக்கள் முற்றிலும் மறந்து விட்டார்கள்; அதனை அறியவே மாட் டார்கள் என்று கூடச் சொல்லலாம். அதிர்ஷ்டவசமாக, பிக்கு ஹிஸ்சலே தர்மரத்தின அவர்கள் எழுதிவரும் நூல் கள் மூலம் தமிழ்மொழியிடம் சிங்கள மொழியும், தமிழ் நாட்டுத் தவசிரேஷ்டர்கள் மூலம் பெளத்த மதமும் பெற்ற ஆதரவு படிப்படியாக தெரியவருகின்றது. இவ்வித ஒற்று மைப்பணி மேலும் மேலும் வளர்ந்தோங்க இக்கட்டுரை உதவிபுரிகுக! கதிர்காமத் தெய்வத்தின் கடாட்சம் இரு மதத்தையுஞ் சார்ந்த அறிஞர் பலரை இத்தொண்டில் ஈடு படுத்தி ஊக்குக!
காதொளிருங் குண்டலமுங் கைக்குவளை
யாபதியுங் கருணை மார் பின் மீதொளிர் சிந் தாமணியு மெல்லிடையில் மேகலையுஞ் சிலம்பார் இன்பப் போ தொளிர்பூந் தாமரையும் பொன்முடிசூ
ளா மணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க!
(சுத்தானந்தர்)
SqqSLLSLLLLLSSLLLLSLSSLSSLSS LSASLS SLSASLSS LSSSLSTSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSLSSSSSSLSSLSSLSSLSSLSSSSSSAALLSSLSSLSLSAALLSSLSSLSLSSLSSLSSLLSSLLSSASSLLLLLSSLSSLSSLSSLSLSSLSLLLLSSSqLLSS S
பொங்கிப் பொலிக!
- சி. பொன்னுத்தம்பி -
பொங்குக பொங்கல்! எங்கும்
பொலிகநல் லின்பம்; வாழ்வில் தங்குக செல்வம்; வெய்ய
தரித்திரம், வறுமை, துன்பம் மங்குக! அறத்தின் ஆட்சி
மலருக! வைய மெல்லாம் சிங்கம் நேர் தமிழர் வாழ்வு
சிறப்புறப் பொலிந்து வாழ்க!

Page 8
76
ஆத் மஜோதி
இன்னறுங் கனியும், தேனும்
இனியகற் கண்டும், பாலும் கன்னலும், அமுதும், முற்றக்
காய்ச்சிய பாகும், செந்நெல் பொன்னிறக் கதிர் விளைந்த
புதுமணி அரிசிற் சேர்த்து நன்னயமான பொங்கல்,
நாடெலாம் பொலிக, நன்றே!
X- X
பாட்டாளி வாழ்வு பொங்க!
பணத்தாளி-வேலை செய்ய மாட்டாத உலுத்தர் வாழ்வு,
மங்குக! வறுமை கொண்ட ஏட்டாளி வாழ்வு பொங்க!
எழுத்தாளி நெஞ்சம் பொங்க! கூட்டாளியான, பொங்கற்
கொடையாளி, வருக நீயே!
X- X
மனத்தினில் மகிழ்ச்சி பொங்க!
வாழ்வெலாம் இன்பம் பொங்க! குணத்தினில் இனிமை பொங்க!
கொள்கையில் உறுதி பொங்க! இனித்திடும் தேனும் பாலும்
எழில்மனை தோறும் பொங்க் அனைத்துயிர்க் கிறைவா! நீயே
அருள் புரிந்திடுதல் வேண்டும்!
x+ வையகம் அனைத்தும் வாழ ,
வளர்தமிழ் கலைகள் ஒங்க, செய்தொழில் அனைத்தும், வெற்றி
திகழ்ந்திட மக்கள் வாழ்வில் பொய்யகந் தகைஒ |ழிந்து,
புனிதநன் நெறிகள் ஓங்கி, தெய்விக ஜோதி, நெஞ்சில்
திகழுக, கருணை வேந்தே!

*
ஆத்மஜோதி 77
புண்ணியம் சம்பாதிப்பதற்கு அரியதோர் ச ந் த ர் ப் ப ம்
- சுவாமி சச்சிதானந்தா -
பல்லாயிரக் கணக்கான சகோதர சகோதரிகள் இயற் கை அன்னையின் கொந்தளிப்பின் காரணமாக பலவகையி லும் துன்புற்றிருக்கும் இந்தநேரத்திலே, அரசாங்கமும், பற்பல ஸ்தாபனங்களும் தனிமனிதர்களும் தங்கள் தங்க ளால் இயன்ற நிவாரண சேவைகளைச் செய்து வருகிருர் கள். இச்சமயத்தில் ஏன் இவ்வாறு இயற்கையன்னை பொங்கியெழுந்தாள் என்பதையும் சற்று சிந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. இத்தகைய சிந்தனையால் நமதுவாழ் வில் நல்லதொரு முன்னேற்றம் வரக்கூடுமென்பது என் கருத்து. எங்கோ வங்காளவிரி குடாக்கடலில் அமுக்கம் ஏற்பட்டது; அதனல் புயல் கிளம்பியது என்று சுலபமா
கக்கூறிவிடலாம். ஆனல் ஏன் அப்படி ஏற்பட்டது? எவ்வெப்பொழுது மக்கள்தெய்வ நீதியைப்புறக்கணிக்கிருர் க
ளோ அவ்வப்பொழுதெல்லாம் அரசதண்டனையும், அதில்தப்பி யவர்களுக்கு தெய்வ தண்டனையும், கிடைத்தே வருகிறது. நம்மக்களைப் பொறுத்தவரை பல முறை இச்செயல் நிகழ்ந்து விட்டது. இருந்தும் வாழ்விலே தக்கதொரு திருப்பம் வந்ததாகத்தெரியவில்லை.
பண்டைய நூல்களில் நாம் காண்பதென்ன? ஒரு நாடு இயற்கையின்கோபத்துக்குஉட்பட்டுவெள்ளத்தாலோபுயலா லோ, பஞ்சத்தாலோ, பட்டினியாலோ துன்புறும்பொழுதெல் லாம்.அரசன் மந்திரிகளை அழைத்து 'நம்நாட்டில் ஆலயவழிபா டுகளில்ஏதாவதுகுறையேற்பட்டதா? சாதுக்கள், அடியார்க ளுக்குஏதும் தொல்லை விளைந்ததா குடிபடைகளை கொடுமை படுத்தினுேமா? ஏன் இந்த தெய்வகோபம்நிகழ்ந்தது'? என்று ஆராய்ந்து ஆவன செய்வார்களாம். இன்று நடப்பது தனி அரசன் ஆட்சி அல்ல, மக்கள் ஆட்சியே. எனவே, மக் கள் தத்தமது சிந்தனைகளையும், பேச்சுக்களையும், செயல்களை யும் தக்க முறையில் ஆராய வேண்டும். ஏன் இந்தப் புயல்? யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? ஏன் இந்தத் தண்டனை என்று தம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும்.

Page 9
78 ஆத்மஜோதி
பத்திரிகைச் செய்திகளின்படி வடபகுதியில் எதிர்பார்க் கப்பட்ட 300,000 புசல் நெல்லில் 50,000 புசல் கிடைப் பதே சந்தேகமாம். இன்னும் இப்படிப்பட்ட எத்தனையோ ஏமாற்றங்கள்- இத்தகைய நஷ்டங்கள் நாட்டின் ஒரு பகு திக்கோ அல்லது ஒருசமுகத்திற்கோ மாத்திரம் அல்ல. எங்கு, எது விளைந்தாலும், எல்லோரும் பங்கிடுகின்ருேம். எனவே எங்கு என்ன நஷ்டமானுலும் எல்லோருக்கும் பங்குதானே!
இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் இக் கொடுமைக்கு ஆளாகாது கடவுள் அருளினல் தப்பியிருக்கும் மக்கள் தங்கள் மனதை பூரணமாக விரித்து தங்களிடமுள்ள அனைத்தையும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனல் பல சந்தர்ப்பங்களில் இதற்கு முழுமாருன செயல்களையும் காண்கின்ருேம். சில ஆண்டுகளுக்கு முன்னுல் இந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியொன்றிற்கு, எம்மால் சேகரிக்க இயன்ற பல பொருட்களோடு சென்ற பொழுது நான் கண்ட காட்சிகளும் கேள்விப்பட்ட செய்தி களும் மிக மிக வேதனையை அளித்தன. மக்கள் உருவில் இருக்கும் சிலர் உண்மையில் மக்கள் தானு, அல்லது மக்களை விட மோசமான ஒன்று மக்களுருவில் நடமாடுகிறதா என்று கூட சந்தேகமெழுந்தது. அகதிகளுக்கென்று விமானமூலம் போடப்பட்ட உணவுப் பொட்டலங்கள் பல கடைகளில் விலைக்கு விற்கப்பட்டன. அந்தக் கடைக்காரன் அதை விற் றுப் பணத்தைச் சம்பாதித்தான? அல்லது பாவ மூட்டை யைக் கட்டினணு? என்பதில் யாருக்கும் சந்தேகமிராது. மூட்டைமூட்டையாகவீட்டில் அரிசியைவைத்திருந்தவர்களும் ஏழைச்சிருர்களையும் கிழப்பாட்டிமாரையும் இடித்துத் தள்ளி கியூவில்நின்றுஇலவசமாகவழங்கப்பட்டஅரிசியைப் பெற்ருர் கள். எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்தானே? என்ற மனப்பான்மை படைத்த மக்கள் இப்படித்தானே செய்வார் கள். வெள்ளம் வந்ததற்காக துக்கப்பட்டுப் பிரார்த்திக்கும் நேரத்தில், இன்னெரு பெரும் வெள்ளம்வந்து இந்தத் துஷ்ட மிருகங்களை அடித்துச் செல்ல வேண்டும் என்றுபிரார்த்தித் தால்என்று கூடத் தோன்றியது.
இறையருளால் இத்தகைய கொடிய அழிவுக்குத் தப்பித் துக் கொண்ட உங்களைத்தான் வேண்டுகின்றேன். இயற்கை அன்னேயின் பெருமூச்சு இன்று சென்ற பாதையிலேயிருந்து ஒரு சில பாகைகள் இப்புறமோ அப்புறமோ திரும்பியிருந் தால் நமக்கும் இந்தக்கதிதானே?

ஆத்மஜோதி 79
எனவே, திருவருளால் தொல்லை வராது காப்பாற்றப் பட்டு வசதிகள் உடையவர்களாக இருக்கும் நாம் ஆசீர்வதிக் கப்பட்டவர்கள். இரண்டாவது ஒருவிசேட ஆசீர்வாதமாக இல்லாது துயரப்படும் மக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நிலை யையும் பெற்றுள்ளோம். எனவே இந்தப் பொன்னன தரு எணத்தை நல்ல முறையில் பயன் படுத்தி அல்லலுறும் சகோ தர சகோதரிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுங்கள்.
பொன் என்ரு லென்ன, பொருள் என்ருல் என்ன, பண் டம் என்ருல் என்ன நிறைய நிறைய அள்ளிக் கொடுங்கள். எல்லாவற்றையும் தெய்வீக நாட்டில் வேண்டும் பொழுது மாற்றிக் கொள்ளக் கூடிய சேமிப்புப் பத்திரங்களாக ஆக்கிக்
காள்ளுங்கள்.
நாடு முழுவதும் அரசாங்கமும் பற்பல சங்கங்களும் விடுத்திருக்கும் வேண்டு கோளுக்குச் செவிசாய்த்து இயன்ற
வற்றை எல்லாம் வழங்குவீர்களாக. நாம் நன்கு உண்டு
உடுத்து பாதுகாப்பான வீட்டிலிருக்கும் இந்த நிமிஷத்தில் எத்தனையோ சகோதரர்கள் வீடின்றித் தெருவில் நின்று, உடையின்றிக் குளிரில் நடுங்கி, உணவின்றி உயிர்தேய்கின்ற னர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இலங்கையில் உள்ள பல திவ்யஜீவனசங்கங்களும் இப்பணி "
யில் ஈடுபட்டுள்ளனர். அத்தொண்டர்களுக்கும் சுமக்க முடி யாதவாறு அள்ளிக் கொடுங்கள். எவ்வளவு சிறிய தொகை யானுலும் சரி, பண்டமானுலும் சரி, உணவுப் பண்டங்கள், உடைகள் , மருந்துகள், பாத்திரங்கள், பள்ளிப் புத்தகங்கள், மற்றும் றப்பர், பென்சில், விளையாட்டுப் பொருட்களுங்கூட அம்மக்களுக்குப் பெரிதும் பயன்படும். நீங்கள் கொடுப்பதை எல்லாம் தொண்டர்கள் கரங்குவித்து வாங்கிக் கொள்வார் 956T.
கண்டி திவ்ய ஜீவன சங்கத் தலைவர் என்ற முறையிலும் மற்றத் திவ்ய ஜீவன சங்கப் போஷகர் என்ற முறையிலும் எங்களால் சேகரிக்கப்படும் ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு பொருளும் தக்க முறையில் தேவையை அனுசரித்துப் பார பட்சமின்றி வழங்கப்படும் என்று உறுதிகூற விரும்புகிறேன்.

Page 10
80 ஆத்மஜோதி
இதே சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் இழந்து அவதி யுறும் அன்புச் சகோதர சகோதரிகட்கு ஒரு வார்த்தை. 'நடந்தது நடந்து விட்டது. சென்றதை நினைத்துச் சிந்தை யைச் சோரவிடாமல் வந்த வினையைத் தைரியமாகச் சகித் துக் கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். இறைவன் கருணநிதி. பண்பட்ட இளகிய மனமுடைய பல்லாயிரம் சகோதர சகோதரிகள் வாயிலாக வெகு விரைவில் இறைவன் உங்களுடைய இந்த அவல நிலையை மாற்றிவிடுவான். உயி ரிழந்த உங்கள் உற்ருர் உறவினர் எல்லோருடைய ஆன்ம சாந்திக்காகவும் உங்களுடைய துயரங்கள் விரைவில் விலகி மீண்டும் சமாதான நிலைவரவும் தினசரிநாங்கள் பிரார்த்தனை செய்து வருகின்ருேம்.'
இதை வாசிக்கும் நேயர்கள் அத்தனை பேரும் கருணை கூர்ந்து இப்பிரார்த்தனையில் பங்கெடுத்துக் கொள்வீர்க GITT g5!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
+ + + + + + + + + + + + + + + + + → + + + + + + + + + 十十 + +
வேலைக்காரர் (காந்தி)
பிறருடைய ஒத்துழைப்பை விரும்புவதோடு பிறருடன் ஒத்துழைக்கவும் விரும்புகிறவர்கள் வேலைக்காரரை நம்பி வாழலாகாது.
Χ Χ X அடிமைத்தனத்தை விரும்பா மல் ஒத்துழைப்பையே விரும்பினுல் நமக்கும் நன்மையை தேடிக்கொள்வோம். எவ ருடைய ஒத்துழைப்பை நாடுகிறேமோ அவருடைய நன்மை யையும் தேடிவிடுவோம். இந்தத் தத்துவத்தை அநுசரித்து நடந்தால் குடும்பம் வேறு உலகம் வேறக இருக்காது. வேலைக் காரர்கள், வேலைக்காரரென்ற நிலைமையைவிட்டு வீட்டுக்கார ரென்ற நிலைமையை அடைந்து விடுவார்கள்.
Χ Χ Χ ஆயிரக்கணக்கான மக்களின் ஒத்துழைப்பைப் பெறக் கூடிய ஆற்றலிருந்த போதிலும் தனித்து நிற்கக் கூடிய சக் தியைப் பெறுவதே சாலவும் நன்று.

ஆத்மஜோதி 8. பாலர் கீதம்
(சங்கீதபூஷணம் சி. கணபதிப்பிள்ளை)
முருகன் என் குரு
முருகன் எந்த என் குருவாகும் முழுதும் உணர்ந்த திருவாகும் முருகன் எந்தன் கருவாகும் முன்னின் றனக்கும் உருவாகும் (முரு)
கந்தன் என் தெய்வம்
கந்தன் எந்தன் குலதெய்வம் கருணை புரியும் நலதெய்வம் கந்தன் எந்தன் அருள் தெய்வம் காட்சி யளிக்கும் தனித் தெய்வம் (முரு)
வேலன் என் துணை
வேலன் எந்தன் துனே வருவான் வேண்டும் வேண்டும் வரந் தருவான் வேலன் எந்தன் பகை களவான்
வேண்டும் போ தென் எதிர் வருவான் (முரு)
பால முருகனுக் கினையேது - :*
காலன் அவனைக் கண்டவுடன் கையைக் கூப் பிக் கும் பிடுவான் பாலன் எனக்குப் பய மேது
பால முருகனுக் கினை யேது (முரு)
யாரையும் கனவில்கூட வேலைக்காரணுகப் பாவிக்கவும் கூடாது; அடிமையாக வைத்திருக்க முயலவும் கூடாது. எஜமானன் என்பதையே மறந்துவிட்டு வேலைக்காரரைத் தன்னுடைய நிலைமைக்குக் கொண்டுவர முயலவேண்டும்.
-காந்தி,

Page 11
2 ஆத்மஜோதி சிந்தனையும் சிலமும்
(சுவாமி சிவானந்தர்)
மனிதன் சூழ்நிலைகளால் படைக்கப் பெற்ற பிராணி அல்லன். அவனது சிந்தனைகளே அவனது சூழ்நிலைகளே நிருமிப்பவை. சீலமுடைய மனிதன் சூழ்நிலைகளிலிருந்து சீவியத்தை, நிருமானஞ் செய்கிருன். அவன் உறுதியாக விடாது முயன்று உழைக்கிருன் அவன் திரும்பிப்பார்ப்ப தில்லை. அவன் ஆண்மையாக முன்னேறுகிருன் ,
அவன் இடையூறுகளுக்கு அஞ்சுவதில்லை. அவன் ஒரு
போதும் படபடத்துச் சினங் கொள்வதில்லை. அவன் ஒரு காலும் மனச்சோர்வடைந்து ஏக்கங் கொள்வதில்லை. அவன் உரம், ஊக்கம், உள்ளாற்றல், உயிர்ச்சக்தி நிரம்பியவனு
யிருக்கிருன் அவன் என்றும் உற்சாகமும் ஆர்வமும் உடை யவனுயிருக்கிருன் ,
சிந்தனைகளே சீலத்தை நிருமாணஞ் செய்யும் செங் கற்கள். சீலம் பிறக்கவில்லை. அது அமைக்கப்படுவது, வாழ்வில் திட்டமான சீலம் அமைக்க மனவுறுதி தேவைப் படுகிறது. இது விடா முயற்சியுடன் அநுசரிக்கப்பட வேண்டும். -
உனது சீலத்தை நிருமாணஞ் செய்குக. நீ உனது வாழ்வை விரும்பியவாறு அமைக்கலாம், சீலமே சக்தி. அதுவே செல்வாக்கு. அது நண்பர்களை உளதாக்குகிறது. அது ஆதரவையும் உதவியையும் பெறுகிறது. அது நண் பர்களையும் பொக்கிஷத்தையும் உண்டுபண்ணுகிறது. அது ஐசுவரியம், கெளரவம், சித்தி, மகிழ்ச்சி முதலியவற்றிற்கு ஒரு நிச்சயமானதும் இலகுவானதுமான வழிமுறையைத் திறக்கிறது.
சீலமே வெற்றி தோல்வியையும், சித்தி தவறையும், வாழ்வுப் பிரச்சினைகள் அனைத்தையும் நிச்சயிக்கும் மூலக் கூறு, நற்சீலமுடைய மனிதன் இம்மையிலும் மறுமையி லும் இன்புறுகிரு?ன்.

ஆத்மஜோதி S3
உனது சமூகத் தொடர்பில் வழக்கமாகச் செய்யப் பட்ட சிறு அன்புச் செயல்கள், சிறு உபசாரம், சிறுகைம் மாறு, சிறு பிறர்நலப்பற்று முதலியன உனது சீலத்திற்கு, பெரும் மேடைப் பிரசங்கங்கள், சம்பாஷணைகள், சொற் பொழிவுகள், திறமைகளைப் பகட்டாகக் காட்டல் முதலிய வைகளிலும் பார்க்க அதி மேன்மையான வசீகரத்தைத் தருகின்றன.
உறுதியான சிலம் தீட்சணமான் சிறந்த சிந்தித்தலால் அமைக்கப்படுகிறது. நற்சிலம் சொந்த முயற்சியின் பயனே. அது ஒருவரின் சொந்தப் பிரயத்தனத்தின் விளைவே.
உலகை நிர்வாகஞ் செய்வது செல்வம் அல்லது அதி காரம் அன்று. ஒழுக்க நலத்துடன் கூடிய ஒழுக்கச்சீலமே உண்மையாக முழுவுலகையும் ஆட்சி செய்கிறது.
சீலமின்றி இவ்வுலகில் யாதும்-செல்வம், பெயர், புகழ், வெற்றி-மதிப்பற்றது. சீலம் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னல் நிலைநின்று அவற்றிற்கு ஆதரவளிக்க வேண்டும். மேலும், சீலம் உன் சிந்தனைகளால் நிருமாணஞ் செய்யப் படுகிறது.
சிவயோக சமாஜத்தின் பணிவான
வேண்டுகோள்!
வண்மையில் ஏற்பட்ட கோரப் புயலினுல் திருக்கோணமலையிலுள்ள சிவயோக சமாஜக் கட்டிடமும், ஆண்டாங்குளத்தில் புதிதாய் அமைத்த ஆப்பிரமக் கட்டிடமும் உபயோகிக்க முடியாதபடி மிகவும் பாதிக்கப்பட் டுள்ளன. இவற்றைத் திருத்தியமைப்பதற்கு ஆத்மீக அன்பர்கள் இயன்ற உதவி புரிய வேண்டுகிருேம்.
பணம் அனுப்ப வேண்டிய விலாசம்:
கெளரவ காரியதரிசி, சிவயோக சமாஜம்,
திருக்கோணமலை .

Page 12
84 ஆத்மஜேர்தி
சைவ சமய தீகைஷ் சகோதர சகோதரிகளே!
சைவப்பெருமக்களே!
நிகழும் குரோதி வருஷம் தை மீ" 25ந் திகதி (7-2-63) ஞாயிற் றுக்கிழமை, சுக்ல சஷ்டியும், ரேவதி நக்ஷத்திரமும், அமிர்த யோகமும், கூடிய காலே 8.45 நிமிஷம் முதல் 10-25 நிமிஷம் வரையுள்ள மீன லக்கின சுபமுகூர்த்தத்தில், பூரீ வடிவாம்பிகா சமேத முன்னநாத சுவாமி கேஷத்திரத்தில், “சைவ மெய்யன்பர்கள்’’ திருவருளே முன் னிட்டு சைவசமய தீகைஷ் பெற நிச்சயித்துள்ளோம். இவ்வரும் பெரும் வைபவம், முன்னே ஸ்வர தேவஸ்தான ஆதீன பரிபாலன கர்த்தா, பிரம்மபுரீ சி. பாலசுப்ரமண்யக் குருக்கள் தலைமையில் நடைபெறும். சைவப் பிரியர்கள் யாவரும் பங்கு கொள்ள வேண்டுகிருேம்,
அன்று முன்னநாத சுவாமி கேஷத்திரத்தில் மாசிமக உற்சவா ரம்ப தினமாகும். (7-2-65) ஆதலால் அன்றைய தினம் அனைவருக்கும் 'நன்மையே பிறப்பிக்கும் நன்ள்ை' எனக்கருதுகிறுேம். முக்கிய கவனிப்பு: (அ) பதினுெரு (11) வயதுக்கு மேற்பட்ட, ஆண், பெண் இருபாலா - ரும் பங்குபற்றலாம்.
(ஆ) 5-2-65 வெள்ளிக்கிழமை பூராவும் (சைவம்) மரக்கறி உணவு
சாப்பிட வேண்டும். (இ) 6-2-65 சனிக்கிழமை ஒரு நேர உணவு உபவாசத்துடன் (விர
தம்) மாலையில் சமூகம் தரவேண்டும். (ஈ) வைபவ முடிவில் பூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் எழுதிய, சைவ சமய நித்திய கர்மானுஷ்டான விதி அடங்கிய புத்தகம், அன் பளிப்பாகக் கொடுக்கப்படும். (உ) (11 ஒவ்வொரு நபருக்குமுரிய கட்டணம் ரூபா 5 -
(2) எத்தனை பேரும் பங்கு பற்றலாம். (31, 31-1-65க்கு முன் நேர்முகமாகவேனும், தபால் மூலமாக வேனும், பணத்தைக் கொடுத்துப் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். (4) பணம் கொடுத்துப் பதிவு செய்யவேண்டிய இடம்;-
Ꮺ ᎶᏡ1 1 Ꭿ5 தலைவர்;
திரு. சி. பூவடப்பன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, முன்னேஸ்வரம், 9) Golf Lu Lib.

ஆத்மஜோதி 85
சைவத்தின் மாண்பும் இன்றைய நிலையும்
(திரு. மு. சிவசிதம்பரம்)
(அகில இலங்கை இந்து வாலிபர் சங்கங்களின் சமா சத் தலைவர்) கைதடி கிழக்கு இந்து வாலிபர் சங்க அகில இலங்கை சைவ மகாநாட்டு 2ம் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தபோது பேசிய சொற்பொழிவுரையின் சுருக்
- ஆ. கந்தையா, செயலாளர்.
ஆட்சிப்பீடத்தின் சமயத் தாக்குதல்கள் முதலான பல் வேறு தாக்குதல்களுக்கும் பல நூற்ருண்டு காலமாக ஈடு கொடுத்தும் தன் வளம் குன்ருது தலை நிமிர்ந்து நிற்கும் தனிப் பெருமையும் ஆற்றலும் மிக்கது சைவசமயம். இதற் கெல்லாம் காரணம் அது ஆதியான சமயம் என்பதுடன் ஆன்மீக, அறிவியல் துறைகளின் தத்துவங்கள் நம் மதத் தில் நிறைந்திருப்பதுமே என்று கூறுவது மிகையாகாது.
இந்த இருபதாம் நூற்ருண்டிலே புதிதாகக் கூறிய் ஞ்ஞானக் கருத்துக்கள் நமது சமய குரவர்களால் பல நூற்ருண்டுகளின் முன்பே கூறப்பட்டவை என்பதைக் கூறும் போது எந்தச் சைவ மகனும் பெருமைப்படாமல் இருக்க முடியாது, 1952ம் ஆண்டளவில் அணுவில் சிறியது இல்லை எனக் கூறிய விஞ்ஞானிகள் இன்று இருக்கிறதாக ஒப்புக் கொள்கின்றனர், நமது நாயனர் அணுவுக்குள் அணுவா கிய இறைவன் (ஈசன்) எனக் கூறிய கூற்று சைவத்தின் பெருமையை விஞ்ஞானத்தின் அப்பால் உயர்த்தி விட்டது. இன்று கல்லுக்கும் உயிர் உண்டு என்று அது வளருகிறது என விஞ்ஞானம் கூறுகின்றது. மாணிக்கவாசக சுவாமி கள் புல்லாய், புழுவாய் . கல்லாய், மனிதராய் எனக் கூறும் கூற்று இதை அன்றே மெய்ப்பித்து விட்டது.
நம் சமய உண்மைகள் அறிவுக்குப் புறம்பானவை அல்ல. அறிவின் விஞ்ஞானத்தின் முதிர்ச்சியேயாகும். நமது சமயம் பற்றி நாம் பெருமை பேசுவதால் பயன் இல்லை. கோவிலுக்குப் போவது சைவமாகிவிடாது. நாம் உண் மைச் சைவராக நாளாந்த வாழ்வில் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படி நாம் வாழத் தவறியதாலேயே நம்
ിജു,

Page 13
86 ஆத்மஜோதி
இளைஞர்கள் 5th F L DYL Y நெறியை விட்டு
தூரச் செல்லுகின்றனர். பிறமதத்தை நாடுவதுடன் மேல்
நாட்டுத் தத் துவங்கள் பேசி அந்தப் பழக்க வழக்கங்களில்
திளைக்கின்றனர்.
கோவில்கள் அறிவை வளர்க்கும் நிலையமாகவும் இருக்க வேண்டும். பக்தியை மட்டுமன்றி அறிவையும் வளர்த்தால் தான் மனிதனுக்கு தூய சிந்தனைகள் ஏற்படும். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு நூல்நிலையம் நிறுவப்படல் வேண் டும். எமது சமயத்தின் பரந்த உண்மைகளில் முன்னேற் றத்துக்கு உரியனவற்றை நாம் உணர வேண்டும்.
சாதி வித்தியாசம் சைவத்தில் இருந்தது இல்லை. அது சைவத்திற்கு உகந்ததுமல்ல. இடையே புகுத்தப்பட்ட ஒன் முகும். மதத்தாலும் சிறுபான்மையினராய் இன்னமும் கருதிக் கொண்டிருந்தால் இன்று நமக்கு மட்டுமல்ல நமது மதத்திற்கும் ஏற்பட்டு வரும் பலமுனைக் தாக்குதல்களைச் சமாளிப்பது கஷ்டமாகவிருக்கும். இந்த அவல நிலை நிச்ச யம் விரைவில் தீர்ந்துபோக வேண்டும், சைவ மக்கள் மத் தியில் ஒற்றுமை உருவாக வேண்டும். சைவத்தைக் கூறு போடுவதில் நாம் இருப்பின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தா (g5 LD.
அரசர்களால் வளர்க்கப்பட்ட மதமும் மொழியும் இன்று பொதுமக்களால் வளர்க்கப்பட வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் சக்தி மகத்தானது. நாம் நினைத் தால் முடியாதது இல்லை இறைவன் அருளுடன் இது போன்ற மகாநாடுகளே நடாத்தி சைவத்தையும் தமிழை யும் மக்கள் மத்தியில் பதிய வைப்போமாக.
உழைப்பாளி
ܡܸܛܠ
உழைப்பவன் உழைப்பிற்கேற்ற கூலி பெற வேண்டியவனுவான். இந்த விதி அனுதிகாலம் தொட்டு வழங்கி வருவதாகும். இந்தக் காரி யத்தைச் செய்யாத அரசாங்கம் அரசாங்கமே ஆகாது. அராஜகமே ஆகும்.
காந்தி ܬܐ ܘ ܝ

ஆத்மஜோதி 87
அன்பும் ஆசையும்
(சிவானந்தம் முருகேசு)
இறைநெறியிற் சென்று அருள் பெற்றுய்ய வேண்டிய வர்களின் முதல் கடமை எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதேயாகும். அன்பே சிவம். அன்பில்லாத இடம் அரவம் வாழும் இடமல்லவோ, அன்பு எங்குளதோ அங்கு அனைத்துமுண்டு. அன்னேயின் அன்பே அகிலத்தையும் ஆளு கிறது.
உண்மையான அன்பு எத்தகையதாய் இருக்கவேண்டு மென்பது பலருக்கு விளங்குவதில்லை. கிளியை கூட்டில் அடைத்து பாலும் பழமும் ஊட்டி வளர்ப்பது உண்மை யாகவே கிளியினிடத்தில் உள்ள அன்பல்ல, ஆசையே. தங்கமாலையை அணிந்த ஒரு சிறு பையனை திருடன் தூக்கி முத்தமிட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பது சிறுபைய னிடமுள்ள அன்பாலல்ல, தங்கமாலையின்மேல் உள்ள ஆசை
யால், ஒரு புருவின் உயிருக்காக தன் உடலையே அரிந்து .
கொடுத்தார் சிபிச் சக்கரவர்த்தி இதுவல்லவோ உண்மை யான அன்பு. 'அன்புடையார் என்பும் உடையர் பிறர்க்கு' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வேத வாக்கில் எவ்வ ளவு உண்மை நிறைந்திருக்கிறது என்பதை உணர வேண்
டும்.
ஜீவராசிகளிடத்தில் அன்புகாட்டி வாழ்வதே மனிதப் பண்பு. எல்லா உயிர்களும் தன்னுயிர்போல் நினைத்து வாழ்பவர்களிடத்தில் திரிலோகாதிபதியான இறைவனின் அருள்மாரி பொழிந்த வண்ணமே இருக்கும். எல்லா உல கிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆல யமே என்ற பேருண்மையை உணர்ந்து வாழ்பவர்கள் கட் டாயம் ஆண்டவனின் அன்பும் அருளொளியும் கிட்டி ஆத்ம ஞானத்தையடைவார்கள் என்பது திண்ணம்.
இன்று மக்கள் ஆண்டவனிடத்திலோ, மனிதர்களிடத் திலோ அல்லது ஜீவராசிகளிடத்திலோ உண்மையான பரி பூரண அன்பைச் செலுத்துவதாகத் தெரியவில்லை. மக்கள் காட்டும் அன்பு ஆசை கலந்த அன்பாகத்தான் இருக்கின்

Page 14
88 ஆத் மஜோதி
றது. உண்மை அன்பால் பேரின்பம் பெற்று உயர்நிலைய டையலாம். ஆசை கலந்த பொய் அன்பால் துன்பம் கலந்த இன்பத்தையே அனுபவிக்க வேண்டி வரும்.
உதாரணமாக ஒரு ஆட்டுக்குட்டி, தேடுவாரற்றுத் தெருவில் அலைந்து கொண்டிருந்தால் என்ன நடக்கும். அதைக் கண்டவர்கள் அத்தனை பேரும் அது எனக்கு சொந் தம், உனக்கு சொந்தம் என்று சொந்தம் பாராட்டுவார் கள்; எதற்காக? உணவூட்டி வளர்க்க வேண்டுமென்ற அன் பாலா? இல்லை, அதைக் கொன்று சாப்பிடலாம், அல்லது அதைக் கொண்டு லாபம் பெறலாம் என்ற ஆசையால்.
கவனிப்பாரற்றுத்தெருவிலலையும் ஆட்டுக்குட்டிபோன்ற பிராணிகளிடத்தில் அன்பு காட்டும் கருணை வள்ளல்கள் பெற்றுேரை இழந்து வாழ வழியின்றி திக்கற்ற அணுதை களாய் தெருவில் நின்று தவிக்கும் குழந்தைகளிடம் அன்பு காட்டி அவர்களுக்கு ஆதரவு கொடுக்க மறுப்பதேனே தெரியவில்லை. ஆனுல் இப்படிப்பட்டவர்கள் இடைவிடாது இறைவழிபாடு செய்ய மறப்பதில்லை. தீர்த்த யாத்திரை கள் செல்லத் தவறுவதில்லை. உண்மையை உணர்ந்தவர்க ளுக்கு இது புதுமையாக இருக்க முடியாது. இறைவனி டம் இவர்கள் காட்டும் அன்பு தன் பாவ வினைகளையும் கர்ம வினைகளையும் அகற்றி, அவர் பேரருள் பெற்று, அவ ருடன் இரண்டறக் கலந்து நிகரற்ற இன்பத்தை அனுப விக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அல்ல. பின் எதற்கு என்று கேளுங்கள்! நல்ல மனைவி வேண்டும், நல்ல மகன் பிறக்க வேண்டும், கறுப்புச் சந்தையில் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் , செய்யும் பாதகச் செயல்கள் மறைக் கப்பட்டு மக்கள் மத்தியில் புகழ் ஓங்க வேண்டுமென்ற நிலையற்ற இம் மண்ணுலக இன்பத்தை அனுபவிக்க வேண்டு மென்ற ஆசையால் .
ஆண்டவனிடம் காட்டும் அன்புக்கும், ஆட்டுக்குட்டி யினிட்டத்தில் காட்டும் அன்புக்கும் என்ன வித்தியாசம் கண் டார்கள்? ஜீவராசிகளிடத்தில் காட்டும் அன்பே ஆண்ட வனிடத்தில் காட்டும் அன்பு, அன்பால் ஆகாதது ஒன்றுமில்லை. ஆசையால் ஆவது ஒன்றுமில்லை. இன்று உலகில் மக்கள் சஞ்சலப்படுவது எதல்ை? ஆசையால். உலக மக்கள் மத் தியில் ஆசை நீங்கி உண்மை அன்பு பெருகில்ை சஞ்சலம் நீங்கி சாந்தி நிலவுவதைக் கண்டு பரவசப்படுவார்கள்.

ஆத்மஜோதி 89
அன்புள்ளவர்களின் உள்ளத்தில் ஆண்டவன் வாசம் செய்கிருர், தன்னைப்போல் பிறரை நேசிப்பவனிடத்தில் பகவான் அருகில் இருந்து துணைபுரிவார். அன்பை ஆயுத மாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு ஆபத்துக்காலங்களில் அணைத்துக் காக்க ஆண்டவன் ஆயத்தமாக இருக்கிருர், உலக உத்தமர் காந்தி, பூமண்டலேஸ்வரர், சுவாமி சிவானந் தர் போன்ற இறைஞானம் பெற்ற மகான்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதல்ை உண்மை அன்பின் இரகசியத்தை புரிந்து கொள்ளலாம். அன்பே கடவுள், கடவுளே அன்பு.
3, 5 T J D
* சாந்தன்'
நீயில் லாமல் நானில்லை-உன்
நினைவில் லாமல் மனமில்லை
தாயில் லாமல் பிள்ளையுண்டோ-அவள்
தயவில் லாமல் வாழ்வுண்டோ?
வித்தில் லாமல் மரமில்லை-அது
வேரில் லாமல் நிலப்பில்லே
சத்தில் லாமல் உடலுண்டோ-அதன்
சார்பில் லாமல் உயிருண்டோ?
நேற்றில் லாமல் இன்றில்லை-அதன்
நினைவில் லாமல் வாழ்வில்லே!
காற்றில் லாமல் அடைவுண்டோ-அதன்
கலப்பில் லாமல் நிலையுண்டோ?
நீரில் லாமல் நிலமில்லை-அந்த
நிலமில் லாமல் நீரில்லை
ஊரில் லாமல் உணர்வுண்டோ-அதன்
உயர்வில் லாமல் உயர்வுண்டோ?
நன்றப் இதைநாம் ஆராய்ந்தால்-இங்கு நமக்குப் புரியும் ஒரு உண்மை ஒன்றில் லாமல் உலகில்லை-அந்த
ஒன்றும் அவனே வேறில்லை!

Page 15
90) ஆத்மஜோதி சாதகர்களின் கவனத்திற்கு
- முகம்மது காசிம்-மதார் நாச்சியா. --
மெளனப் பூமலர்வது நினைவற்ற நிர்மலப் பூமியிலே, அன்பெனும் வாடாமலர் வளர்வது மனமில்லாத மாபெரும் தியானப் பூங்காவிலே,
ஒய்ந்திடும் மனதினிலே வளர்கின்ற அறிவினுல்தான் வாழ்க்கையின் ஒரத்திலே பின்னப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
எங்கு மனம் ஒடுங்கி மகிழ்ச்சி உண்டாகிறதோ அதுவே ஆனந்தம்.
மனதின் அடித்தளத்திலே வாழுகின்ற மனிதன் ஆசை
கண்டதும் கேட்டதும்" யாவும் கனவு போல்தான் அவ ரவர்களுடைய மனதில் படுகிறது. ஆகவே முடிந்த விஷ யங்களை முற்முக மறக்காது பின் நினைவில் ஆக்கத்தால் ஞாபக சக்திக்கு உயிர் கொடுத்து சுவைப்பது அறிவீன மேயாகும்.
வாழ்வு முழுவதும் எண்ண எழுச்சிகளுக்கு ஏமாறியும், உண்மையை விளங்கி, தியான நிலையில் ஒய்வு காணுது ஐம்புல இச்சைகளுக்கே முக்கியத்வம் கொடுப்பது அறிவீ GoTW5 A)
வாழ்க்கையிலே ஏற்படுகிற வெற்றி தோல்விகளை சம மாக ஏற்றுக் கொள்ளும் இதயம் ஒரு சாதகனுக்கு அமைய வேண்டியது மிக அவசியம்.
ஆழ்ந்த அமைதியிலே லயமாகி ஏகாக்கிர நிலையில் நிரந்தரமாக நிற்பதே தியானம்.
மாண்புடன் வாழ்ந்திட மனப்பண்பாடு அவசியம் வாழ்க்கையில் பலதரப்பட்ட இன்ப துன்ப உணர்ச்சிகளி (ணுல் கலங்கிய மனமே எண்ணங்களற்றதோர் இடத்தை நாடுகிறது.
வாழ்க்கையில் சலிப்புத் தட்டிடும் காலமே மனமற்ற மெளனத்தை ரசிக்க முடியும்.

ஆத்மஜோதி 91
மனிதன் இந்த உலகத்தில் சொற்ப காலம் தான் வாழப் போகிறன். ஆனல் அழகாக அமைதியாக வாழாது கணக்கற்ற ஆசைகளினல் கட்டுண்டு பரிசுத்தமான தியான இன்பத்தை நுகராது கவலையில்ை துயரத்தினுல் தடுமாறி தத்தளிக்கிருன், இதுவே மாயை.
மெளனத்தின் உச்சியிலே உண்மையின் உயரிய தியான நிலையை உணர முடியும்,
எண்ணங்களற்ற இடம் பொய்மை நிறைந்த சூனிய மல்ல, கற்பனை கடந்த காந்த நிலையம்.
ஆத்ம பலத்தினுல் அனுபவிக்கப்படும் இன்பமே விடுத லைக்கு வழி.
அன்பின் பெயரால் அனலென வெந்திடும் ஆசைக்கு அடிமையாவது அந்தரங்க மனதின் ஆழத்தை அறியாத அறிவீனமே.
மனம் அறிவின் இயல்பை காட்டிடும் கண்ணுடியாகத் திகழ வேண்டும்.
ஆசாபாசமான நினைவுகளின் சூழ்ச்சிகளில் சிக்கிய மனி தன் பலமற்றவனுகத் துயரக்கடலில் சுழல வேண்டிய நிலை ஏற்படும்.
அன்பு அறிவு வளர்ச்சியை ஆத்மீக சக்தியை வளர்க்க வேண்டும். -
தியான சக்தியில்ை புதிய கண்கொண்டு வாழ்வில் நிக ழும் நிகழ்ச்சிகளை விருப்புவெறுப்பில்லாது நோக்கும் திறமை வந்தெய்துகிறது.
மல்லிகைப் பூ, மலர்ந்த ரோஜா, சிரித்திடும் தாமரை யாவும் மகிழ்ச்சி வழங்கிடும் மங்களத்தின் அறிவிப்பு. தியா னப் பூங்காவில் நுழைந்து இனிமை தரும் வெண்ணிலாவை இதயத்தில் காண்பவனே இயற்கையின் அழகை ரசிக்க முடி யும்.
சஞ்சலம் நிறைந்த மனமும், சக்தியிழந்த உடலும் உயர் வான ஆத்மீக சக்தியில் ஆக்கம் பெறமுடியாது.
ஆசையை பூர்த்தி செய்வது எளிது. ஆணுல் அது தரும் அதிருப்தியிலிருந்தும், அடிமை விலங்கிலிருந்தும் அகல்வ தோ மகாகடினம். ஆகவே தெளிந்த அறிவே தெவிட்டாத ஆனந்தம் என்று உணர்.

Page 16
92 ஆத்மஜோதி
எண்ணங்களின் துணையினுல் ஏகாந்தத்திற்கு செல்ல முடியாது. எண்ணங்களை ஏற்காத நிலையே உயர்வானத் யானம். அங்குதான் மெளனத்தின் மகிமையை உணர முடியும்.
மடமையின் கொடுமையை மயக்கமற விளங்கி, கீழ்த்தர உணர்ச்சிகளை மட்டம்தட்டி மனதை அறிவு நிலையில் நிறுத்து வதே வீரம்.
காண்பது யாவும் காலத்தினுல் அழிந்து விடும். எது யாவற்றையும் காண்கிறதோ அது அதையே காண்பது ஞானம்-தன்னறிவு.
துக்கமும் துயரமும் சுழலுகின்ற மனதிற்கே. மனங் கடந்த நிலையிலே காண்பது யாவும் ஆனந்தமே.
சிந்தனையில் ஒடுகின்ற எண்ண அலைகளே எண்ணற்ற சிக்கல்களுக்கு காரணம்
மனதுடன் போராடி சலித்துப் போகாது சோர்வடை யாது, மனதைக் கடந்து மெளனத்தியானத்தில் ஒய்வுபெறு: அதுவே ஆத்மீக விடுதலை.
மனதின் சலனமே கனவிலே காணும் காட்சி. எண்ணங் களற்ற தூய்மையான துரியத்தில்-உணர்வெளியில் உணர் வதே உண்மை நிலையாகும்.
ஆசையின் அடிப்படையிலே இயங்கிடும் இவ்வையகம் ஆத்மீக சாதகர்களுக்கு உவந்த இடமல்ல-இருப்பினும் மாயை கலந்த, மயக்கம் நிறைந்த இல்லற-குடும்ப சூழலின் மத்தியிலேதான் சாதகன் ஆத்மீக வளர்ச்சி பெற்று, நிலை யானப் ஆத்மீக விடுதலையை பெற வேண்டியிருக்கிறது. பல தரப்பட்ட பிரச்சினைகள், தேவையற்ற கடமைகள், சிரமம் கொடுக்கும் தொடர்புகள் யாவும் சாதகனின் பரிசுத்த ஆத்ம சக்தியை'சோதிக்கின்றன. இவைகளை உள்ளது உள்ளவாறு உணர்ந்து எதிலும் சார்பற்று மெளன தியானத்திலேயே ஆக் கம் பெற்று சதா சாட்சி மயமாகி ஞான பீடத்தின் நித்திய உணர்வெளியில் ஒய்வு பெறுவதே சாதகனின் புனிதக் குறிக்
(முடிவுற்றது)
 

ஆத்மஜோதி 93
அப்பாத்துரைச் சுவாமிகளின் திவ்யசரிதமும் உபதேசங்களும்
(திருமதி. ஞானம் பிகை பின்னேயா)
“என்றும் இருப்பதிவில் என்றும் இருப்பதுவே என்றும் இருக்கும் வகை'
நித்திய வஸ்து எது என்று அனுபூதியில் அறிந்து அதில் கால தேசங்கடந்து நிலைத்து விளங்கும் பல பெரியார்களின் திருமேனிகள் பல இவ்வாண்டில் திடீர் திடீரென மறைந்து விட்டன. அதேபோன்று எனது தந்தையாரின் திருமேனியும் மறைந்து விட்டது. அப்பா எங்களை விட்டு ஒரு போதும் மறையவில்லை.
அவரின் பூரண சரித்திரமும் உ பதேசங்களும் விரித்து எழுதினுல் விரிந்து கொண்டே போகும். இக்கட்டுரையில் அவருடைய உடலில் புற்று நோய் உண்டான காலந் தொ
டங்கி சமாதியாகப் போகும் காலம் வரை விசவுே அருள்
விளக்கத்தை நான் கண்டேன். அன்று தொடங்கி அவரை ஒரு ஞான சித்தகை கருதி சமாதியை பூசித்து வருகிறேன். அதன் விபரத்தை இதில் சுருக்கமாக எழுதுகிறேன்.
அவர் கன்னத்தில் உட்பக்கத்தில் ஒரு சிறு காய் உண்டா னது கண்டு அன்பர் Dr Jermiah அவர்கள் பதறி மகரகமா வுக்கு போகும்படி வேண்டினர். தந்தையார் வீட்டைவிட்டு வெளியே போவதென்ருல் எனக்கு மனம் எள்ளளவும் இயற் கையிலேயே பிடிக்காத விஷயம். நான் கவலைப்பட்டதற்கு அவர் ஒன்றும் பேசாமல் போய் விட்டார். அப்பா போய் விட்டாரே, வீடு அவரில்லாமல் அருள் ஒளிகுறைந்து விளங்கு கிறதே என்று சிந்தித்து நித்திரை செய்தேன். கதிரைமலை அப்பனை சுமக்கும் பெரும்பேறு பெற்ற இரண்டு யானைகள் மங்கல மணிஓசை ஒலிக்க வீடு முழுவதும் கெம்பீர நடை போட்டு உலாவி வரக்கண்டுவிழித்துகதிரைமலையான்தந்தை யாக எங்கள் குடும்பத்தை பாதுகாப்பான் என நினைத்தேன்.
நான்காவது முறையாக ஆஸ்பத்திரியில் பெரிய ஒப்பிற ஷன் ஒன்று செய்வதற்கு மாசிச் சிவன் ராத்திரியன்றுபோயி

Page 17
94 ஆத்மஜோதி
ருந்தார்கள். ஒப்பிறஷன் செய்யும் தினம் மாசிச் சிவன் ராத்திரியாக வந்தது அவர் செய்த புண்ணியம், எங்கள்
வீட்டில் நான்கு சாமமும் சிவலிங்கத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் அப்பாவின் சுகத்திற்காக குடும்பத்தோடு சகலரும் பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தோம். அம்மாதனியேவிட்டில் இருப்பதனுல் எங்களை ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாமென்றும் அங்கு நடப்பனயாவும்கடையிற்சுவா மியை நினைத்தால் சகலதையும் அறியலாம் என்றும் கட்டளை யிட்டுப் போயிருந்தார். ஆஸ்பத்திரியில் இவர் நிலைஎவ்வாறு இருக்குமோ என்று பதைக்கும் நெஞ்சுடன் இரவில் நித்திரை யில்லாமல்யோ சிப்பேன். தந்தையாரின் ஆக்ஞைநினைவிற்குவந் தவுடன்கடையிற்சுவாமிகளைதியானிப்பேன். ஆஸ்டத்திரியில் அப்பா இருக்கும் அதே விதம் சினிமாப் படக்காட்சி மாதிரி என் கண் முன்னுக்குத் தோன்றும். காலையில் எழும்பி எனது நாயகனுக்கும் தாயாருக்கும் சொல்லுவேன் . தொண்டை நோவால் சளி உண்டாகி அன்னம் இறங்க பத் துப் பன்னிரண்டு நாளாக அவதிப்பட்டார் என அறிந்தோம். என் தந்தையாருக்கு இப்படியும் உண்டாகலாமா? என் மனம் மிக வருந்தி கடையிற் சுவாமிகளை வாய் விட்டு ஒல மிட்டு அலறி அழுது இவ் வருத்தத்திலிருந்து காப்பாற்ற முடியாதா என்று பிரார்த்தித்தேன். அடுத்த நாள் கடிதத்
தில் அவர் சாப்பாடு உட்கொள்ளுவதாக கடிதம் வந்தது.
தாயார் தந்தையாரைவிட்டு பிரிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் தலைச்சுற்று உடல் நடுக்கம் இப்படியான வருத்தங்கள் உண் டாவது இயல்பு. தாயாருடைய சொற்பனத்தில் தோன்றி அந்தந்த வேளைகளில் தைரியமும் சொல்லிக் கொள்ளுவார்.
ஒரு சிறு பணத் தொகைக்கு முப்பது ஏக்கர் நிலத்தை ஊர் உபகாரார்த்தமாக விற்று அநேகருக்கு நிஷ்கா மியமாக பண உதவியும் செய்தார். ஏதொன்றிலும் பற்றில்லாதவ ராக பிற்காலத்தில் விளங்கினது மிகவும் அதிசயிக்கத்தக்க தாக இருக்கிறது. காவியுடுத்தி காடுசென்று விரக்தியை காட்டிக் கொள்ளவில்லை. இயல்பான செயல்முறையாலேயே மூவாசைகளை முற்ருக விட்டிருந்தார். அதை நினைக்குந் தோறும் மனதில் பெரிதும் பக்தி ஊறுகிறது.
அப்பாவின் பிற்காலத்து இயல்புகளை கவனித்தபொழுது இவர் தேகம் விட்டால் யாவரையும் புதைக்கும் சுடலையில் புதைக்காமல் விசேஷமாக இவரை வைத்து ஆயுள் பரியந் தம் பூசிக்க வேண்டும். இதற்கு கோணலிங்கப்பெருமானும்

ஆத்மஜோதி 95
கடையிற் சுவாமிகளும் அணுக்கிரகம் புரிதல் வேண்டும் என்று நான்கு மாத காலம் பிரார்த்தனை செய்து வந்தேன்.
திடீரென ஒருநாள் என் நாயகன் இருக்கும் அறைக் குள் வந்தார். அவர் கட்டிலில் படுத்தார். களகளவென்று சிரித்தார். அவர் சாப்பிடும் கோதுமை ரொட்டியும் வெண்ணெயும் என்னிடம் வாங்கிச் சாப்பிட்டார். நானும் எனது புருஷனும் வசிக்கும் இடம் எங்கும் நன்ருக வீற்றி ருந்து அன்புடன் உரையாடினர். பின்பு போய் தனது ஏகாந்த அறைக்குள் நுழைந்தார். ஏதோ விக்கலும் வயிற்று வலியும் உண்டாயிற்று, டாக்டர்கள் மருந்து கொடுத்தார் கள். தன்னைத்தூக்கியிருத்தும்படி பக்கத்தில் நிற்கும் அனைவரை யும் வேண்டினர். அவரின் உள்ளப் பண்பை வைத்தியர் கள் அறிந்தார்களில்லை. வீடு விசாலமானபடியால் ஒரு பகுதியில் தாய் தந்தையர், ஒரு பகுதியில் நாங்களுமாக வசித்தோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு அவரைக் கொண்டு வந்ததும் எனக்கு அப்பா என்று தேக பாசத் தால் உண்டாகக் கூடிய சோக அழுகை மாறி அவரின் தேகத்தை பூசிக்கத் தக்கதாகச் செய்து விட வேண்டும்; இதற்கு கோணலிங்கம் அனுக்கிரகம் புரிதல் வேண்டும் என்ற பிரார்த்தனையோடு சிவநாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்தேன். கடைசிமுறையாகநானும் எனக்கு உதவிக் கு நின்ற இரு பெண்மணிகளுமாக அப்பாவைத் தூக்கினுேம் என்னேப் பார்த்துச் சிரித்தார். காலைச் சூரியன் போன்று தெளிந்த முகத்துடனும் தெளிந்த பார்வையுடனும் அள
விட முடியாத ஆனந்தமும் திருப்தியும் நிறைவும் ததும்பி
வழியும் முக தேஜசுடன் விளங்கினர். அச் சமயம் பல அன்பர் கூட்டம் அவரைச் சூழ்ந்து நின்றது. பலருக்கும் பலவிதமான காட்சிகள் தோன்றின. சிலர் அவர் நெற்றி யில் சிவப்பு நிற ஜோதி தோன்றியதாகவும் சிலர் அவர் கலேயைச் சுற்றிவெண்மையானஒளிவீசியதாகவும்சிலர் அவர் கண்கள் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகவும் சொல்லுகி (yர்கள் நேரம் என்ன இப்போது என்று சமாதியாகும் ாேம் பக்கத்தில் இருப்பவர்களைக்கேட்டுக் கொள்ளுவார்கள். ஆனி 13ந் தேதி திங்கட்கிழமை இரவு 10-15 நிமிஷம் பூர நட்சத்திரத்தில் மகா சமாதி நிலை எய்தினர்கள். அன்பர் குணசேகரமும் சுற்றத்தவர்களும் சுடலைக்கு கொண்டு போக சகல ஏற்பாடுகளும் பரபரப்புடன் செய்து கொண்டிருந்தார் கள் மருமகன் தகனக் கிரியை செய்தால் நன்ருக இருக்கும் அதற்கு அவர் சம்மதமா? என்ற கேள்வி கூட்டத்தில் உண்

Page 18
96. ஆத்மஜோதி
டானது. நான் யாவற்றையும் தடுத்து எங்கள் வீட்டில் ஒரு பக்கத்தில் சமாதி வைக்கும்படி விரும்பி நின்றேன். அதற்கு கோணலிங்கமும் கடைநாதனும் அரசாங்கத்தினருடைய மனதை திருத்தி யாவற்றையும் அனுகூலமாக்கி நிறைவேற்றி யுள்ளது. இன்றும் அப்பா எங்களுக்கு தெய்வமாகவே விளங் குகிறர். சமாதியை விரைவில் கட்டி முடிப்பதற்குகடையிற்
சுவாமிகள் உதவி புரிதல் வேண்டும். தந்தையாரின் உபதே சங்கள் ;-
நீ எதை விரும்பிலுைம் உன்னையே விரும்புகிறல். நீ எதை வெறுத்தாலும் உன்னேயே நீவெறுத்துக் கொள்ளுகிறவ்.
நீகாணும் காட்சிப் பொருள%னத்தும் உன்னைத் தவிர வேறில்லே என்று உனர்.
பிறந்து வளர்ந்து இறப்பது எது என்று ஆராய்ந்தால், பிறந்ததுமில்லை வளர்ந்ததுமில்லை இறந்ததுமில்லை
'இன்னு செய்தார்க்கும் இனிய வே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால் பு’ --குறள்.
'அழிவந்த செய்யினும் அன்பறர் அன்பின் வழிவந்த கேண்மை us வர்' --குறள்,
"ஒ தா தார்க்கில்லே உணர் வொடு ஒழுக்கம்'
'யார் ஒருவர் சிரவணுதி சாதனத்தில் இடைவிடாது சிரத்தை எடுக்கிறரோ அவருக்கு உண்மையாக பிரஹ்மக் ஞானம் உண்டாகும்'
'அசத்தை பாவன செய்வதை தவிர்க்க முதலில் சத்தை பாவனே செய்து பழகு. முடிவில் உன்னை அறியாமலே பாவ னுதீத நிலையை அடைவாய்'.
'தங்கத்தையே பல ஆபரணங்களாகக் காண்பது போல சச்சிதானந்த சொரூபமான உன்னேயே நாம ரூப ஜகத்தாக காண்கிறu'

'உன்னேயே நீ நாணுவித ஜகத்தாகக் கண்டு மயங்குறய.
உன்னேயே நீ ஏகமாய் கண்டு சுகமும் திருப்தியும் அடைகிறாய். மயங்குகிறவனும் சுகமடைபவனும் யார் என்று விசாரித்தால் காண்பானேயின்றி காட்சியில்லை’
'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பன் அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்' " ( -குறள். , , , , , , , , , ... . . " از این 'பெயக் கண்டு நஞ்சுண்டமை வர் நயத்தக்கல் நாகரிகம் வேண்டுபவர்' குறள்.
. リ 'இன்னு செய்தா ரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' --குறள் ,
சுவாமிகளுடைய திருவார்த்தைகளாக அடிக்கடி வெளி வரும் உபதேசங்களிற் சிலவற்றைக் கூறினுேம்.
; : ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; குழந்தை பிணியும் நிவர்த்தியும் (டாக்டர் ச. ஆறுமுகநாதன்)
கிரந்தி: (I 5)
கிரந்தி ரோகம் நம்நாட்டு
கிளிமொழி பேசுங் குழந்தைகளில் இருபது சதமாம் பேர்களினே ... " எட்டிப் பிடித்துப் பிறக்கையிலே வருந்தும் நிலயை உண்டாக்கும்
வகைக்கு காரணம் தாய் தந்தை இருபேர் தமக்கும் மேகமென '
இயம்பும் ரோகம் இருப்பதுவே!
(16) ', ' ' ' ) மேகநோய் உள்ள பெண்மணிகள்
மென்மைக் கருவுற்ற நிலை கண்டு e வேகமாய் மருத்துவர் இடஞ்சென்று
s வேண்டிய ஆலோசனை கேட்டு
யூகமாய் நடத்தலும் கருவளர்க்கும்
எண்ணெய் குடித்தலும் நலமென்று
சோகமாம் நிலைமை குழந்தைகளே " . . . .''.
சூழ திருக்கச் செய்தி டனும் -தொடரும்

Page 19
"ATHMAJOTHI Registered at ASTLALALALLSALALALALALALALAL ALALALALAAAAALLAAAAALLALALALALALALALALALAL சந்தா ே
அன்புடையீர்!
7ஆவது ஆண்டு 3வது சோதி இன் நேயர்களின் உதவியினலேயே சோ சோதிக் குழந்தை உங்கள் வீட்டைத் போகின்றீர்கள். உங்கள் சந்தாை கள் கொடுக்கும் பரிசாகும். என்ெ இந்தியாவிலுள்ள சந்தாநேயர் R. வீரசம்பு,
அரிசிப்பா?
என்ற விலாசத்திற்கு அனுப்பி g5C
ஆத்மஜோதி நிலையம்
ஆத்மஜோதி நி
ஆத்மஜோதி மலர் (1963) சைவஇலக்கியக் கதா மஞ்சரி ஆத்மநாதம் தீங்கனிச் சோலை பாட்டாளியாட்டு திவ்ய ஜீவன சங்க வெள்ளி கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் மார்கழி மாதப் பாடல் 10. கதிர்காமப் பதிகம் 11. செல்லச்சந்நிதி பாடல் 12. கந்தரனுபூதி 13. அறிவுரைக் கதைகள் 14. நித்திய கருமவிதி 15. கதிரைமணிமாலை
தபாற்
STTSTeSeMeSMMASMeMeASMLSSLALSLAMASLSSASLSSASLSSASLSSASSASSASSASSASSASSASSASSASSASSLASLSASAASASASALSLASLLAS
அச்சிடுவோர்:- ஆத்மஜோதி அச்சிடுவிப்போர்:- ஆத்மஜே வெளியிட்டதேதி:- 14.1-65,

the G.P.O. as a Newspaper. M.L., 59/300
நயர்களுக்கு!
ாறு உங்கள்கையில் கிடைக்கின்றது. சந்தா,
தி பதினுறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ; தேடிவரும்போது என்ன பரிசு அளிக்கப்
கள் தமது சந்தாவை வழக்கம்போல்
சம்பு இன்டஸ்ரீஸ், ளயம், சேலம்-9,
வைப்பதோடு இவ்விடமும் அறியத் குவீர்களாக
-நாவலப்பிட்டி, (ேேலான்)
லைய வெளியீடுகள்!
2.00
3.00 3.00
2.50
50
விழா மலர் 25 30
30
20
25
செலவு தணி
அச்சகத்தினர் ாதி நிலையத்தினர்