கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1965.03.14

Page 1
彎
ള്ളതുൈള്ള
ട് ഘ<><><>>><>
《:*心
AVシ- _ -- 事》《。|(~~~~《”《
() } } () 下 *
 

s
----
ای
كاتو
و ...
۔۔۔۔۔۔۔۔
- سيد جحي حجيجيجيجي يحمي جنصيحصي يحصي خضر
********<> シ入い。
$') {
璽
ఫ్రా శక్టీ-ఫ్రూస్త్ర
,《。拿
ూూలాల్లో లా లాడా

Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
qTAiS TTTS TBTS STBS STS MeMe STS LTT TT TS T MMS TT TT MT TTT TMT TMT TMT MS qMMS SMS MMM MMS STS STS TTT eTTSTMTS
சுத்தானந்தர்
ஜோதி 17 & குரோதி இரு பங்குனி மீ" 1உ (14-3-65) சுேடர் 5 பொருளடக்கம் 1 என் குருபர புங்கவ சிங்கமே! 29 2 வாரிடை எம்மை ஆண்டnய்! 3) 3 மறைந்தும் மறையாதவர் 3. 4 டிரீயோகர் சுவாமி அர்ச்சனே மாலே 33 * ஆத்மீக வாழ்வின் மறுமலர்ச்சி 36 6 யோகர் சுவாமிகள் ஒரு சிறந்த ஜீவன் முக்தர் 量38 7 உலகின் கதிரொளி 39 8 பேரின்பமுறுவ தெந்நாள்? 瑾3 2 யோஜ சுவாமிகளுடன் கொழும்பில் இரு நாட்கள் 144 10 ஈழத்துத் தவப்பெரியார் யோக சுவாமிகள் 鞘48 11 மரணமே வருக! 1§ಳು 12 தனி முதல் 18 3. 160
உலக சமயங்கள் மூலம் உலக ஒற்றுமை
ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் அந்தா ரூபா 75, வருட சந்தா ரூபா 3.00
தனிப் பிரதி - அதம் 30 இெளரவ ஆசிரியர்  ைதிரு. இ. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் ஊ திரு. நா. முத்தையா
"ஆத்மஜோதி நிலையம்" நாவலப்பிட்டி (சிலோன்)
தொலைபேசி sts 3S3
 

என் குருபர புங்கவ சிங்கமே
(யோகர் சுவாமிகள்)
தன்னைத் தன்னுல் அறிந்திட வேண்டுமே
தானு யெங்குஞ் செறித்திட வேண்டுமே " பொன்னை மாதரைப் போக்கிட வேண்டுமே
புவியி னு சையை நீக்கிட வேண்டுமே கண்ணப் போலறங் காத்திட வேண்டுமே
கமல பாதந் தொழுதிட வேண்டுமே எண்ணம் யர்வு மிறந்திட வேண்டுமே
என்கு ருபர! புங்கவ சிங்கமே!
கசடு தீர்த்தறங் கற்றிட வேண்டுமே
கல்வி யாற்பயன் பெற்றிட வேண்டுமே அசடர் நட்பை அகற்றிட வேண்டுமே
அந்தி சந்தி அடிதொழ வேண்டுமே நிசசொ ரூபம றிந்திட வேண்டுமே
நீங்கா தென்று மிருந்திட வேண்டுமே அசலு னக்கிலை யென்ற குருபர!
ஆண்மை விஞ்சிடும் அற்புதச் சிங்கமே!
மூன்று மொன்றல் முடிந்திட வேண்டுமே
முனையின் வாசல் திறந்திட வேண்டுமே
ஊன்று பாதத் துறங்கிட வேண்டுமே
உள்ளே ஆனந்தம் பொங்கிட வேண்டுமே
தூண்டு சோதி விழுங்கிட வேண்டுமே
தூய நிற்குண அற்புத பொற்பதம் ஈண்டு தந்த இனிய குருபர!
என்னை யாண்டவ இங்கித சிங்கமே!

Page 3
30 ஆத்மஜோதி
பாரிடை எம்மை ஆண்டாய்
(முத்து)
பஞ்சுபோல் தலையின் தோற்றம்
பார்வையால் இழுக்கும் காந்தம் அஞ்சியே செல்வார் தம்மை
அணைத்தரு கிருத்தும் பாங்கு தஞ்சமென் றடைந்த வர்க்குத்
தண்ணருள் பொழியும் வள்ளால் நெஞ்சமே நினைந்து நின்னே
நினைப் பறப் போயிற் றைய!
குருவெனச் சொல்லிக் காலில்
கும்பிட்டு விழுவார் தமக்கு அருமறை கூறும் வாக்கை
அலாதியாய்க் கூறிப் பேசி குருஉரு அல்லன் யானும்
குறைந்தவன் நீயும் அல்லை; இருவரும் சமமே என்று
இன்னுரை பயந்தாய் போற்றி!
முழுவதும் உண்மை என்று
முனிமொழி தன்னுல் பேசி அழுவதும் உண்டேல் நீங்கள்
ஆண்டவன் அருளுக் கழுங்கள் ஒழுகுவ துங்கள் கடமை
ஒன்றையே உன்னும் என்று பழுதிலா அறங்கள் தந்து
பாரிடை எம்மை ஆண்டாய்!

Џ
ஆத்மஜோதி 131
十 + 十十 + + + + + + + + + + + + + + + + + + + 十 + + + + + + + 十 十十 十 + + + + + + + + + + + + + + + + + + + + + 十 十 十 * 十 O O -+= -+=+ه
+ -- மறைநது ம மறையாதவா سHه است + + + + + -ー + + + + + + + + + + + + + (ஆசிரியர்) + + + + + + + + + + + + +
十 -+ + 十- 十 + 十 十 + 十 十 + + + + + 十 十- 十 + + 十 十 -+ + + 十 + 十 + +
யோகர்சுவாமிகள் உடல் கொண்டு உலாவிய காலத்தில் சுவாமிகளைக் கேள்விப்பட்டவர்க்ள் ஒரு சிலரே. அத்தகைய ஒருசிலருள் மிகச் சிலரே சுவாமிகளுடைய தரிசனத்தை நாடி ஒடினர். அங்ங்னம் ஒடிய ஒருசிலருள் மிகமிகச் சிலரே சுவாமி களுடைய திருவடியை அண்டினர். அங்ங்ணம் அண்டியவருள் ஒருசிலரே சுவாமிகளை அறிந்தனர். அறிந்தவருள் ஒருசிலரே உணர்ந்தனர். உணர்ந்தவருள் ஒருசிலரே சுவாமிகள் காட் டிய வழியிலே வாழ்ந்துதாமும் வழிகாட்டிகளாக இருக்கின் றனர். இத்தகையவர்களைக் கைவிரல் விட்டு எண்ணி விடலாம்.
சுவாமிகளுடைய பூத உடல் மறைந்து ஒரு ஆண்டு ஆகின் றது. இந்த ஒராண்டுகாலத்துக்குள்ளே சுவாமிகளை அறிந்து உணர்ந்தவர் முன்னையிலும் அதிகம் என்றே கூறலாம். சுவா மிகள் பூத உடல் கொண்டு உலாவிய காலத்தில் சுவாமிகளு டைய தரிசனமே கிடைக்கப்பெழுத எத்தனையோபேர் சுவா மிகளிடம் கனவிலேதாம் உபதேசம் பெற்றதாகச் சொல்வ தைக் கேட்கும்போது சுவாமிகளுடைய ஆத்மசக்தி இப்போ தான் நன்குதொழிற் படுகின்றது என உணரக்கிடக்கின்றது.
சில மகான் களின் ஆத்மசக்தி அவர்களுடைய மகாசமா திக்குப் பின்புதான் பன்மடங்காகத் தொழிற்படுகின்றது. வடஇந்தியாவில் வச்ரேஸ்வரி என்ற இடத்திலிருந்த சுவாமி நித்தியானந்தர் இவ்விதம் சித்திகள் செய்திருக்கிருர், அவர துசீடனே யாராவது பராதீனமாய் நடத்தினுல் அவருக்குப் பின்னல் நிழல்போல் தமது உருவத்தைக் காட்டுகிருராம். சுவாமி முக்தானந்தரே அந்தச் சீடரும் ஆச்சிரமத்துத் தற் போதைய தலைவருமாவார், இதேபோன்றுதான் யோகர் சுவாமிகளும் பலருக்குக் கனவில் தோன்றி உபதேசங்கள் அருளுகின்ருர், சுவாமிகள் முன்னர் உடல் கொண்டுலாவிய போது இப்படிச் செய்ய வில்லை.

Page 4
132 ஆத்மஜோதி
யோகர் சுவாமிகளைப் பற்றிய அர்ச்சனை மாலை ஒன்று இக்கட்டுரையைத் தொடர்ந்து வருகிறது. அதற்கு அடிஎடுத் துக்கொடுத்து திருத்தமுஞ் செய்து பூரணப்படுத்தியவர் சுவாமிகள் என்ருல் சாமானிய மக்கள் நம்பமாட்டார்கள். அவர்களை நம்பச் செய்ய யாராலும் முடியாது. நம்பாதார் நம்பாதாரே. அந்த அநுபவம் அவரவருக்கு ஏற்படும் போது தான் அதனை உணரமுடியும். சாத்திர அறிவு வேறு சாதனை யில் கண்ட அநுபவம் வேறு
அர்ச்சனை மாலைபாடிய அன்பர் பாடிமுடித்துவிட்டு படுக்கைக்குச் சென்ருர், சுவாமிகள் கனவிலே தோன்றி எல்லாம் நல்லாக அமைத்துவிட்டாய். என் பொல்லாக்குண த்தை ஏன் விட்டுவிட்டாய்? என்று கேட்டார்களாம். அதன்
* ஆத்திரத் தோடேசித் திருத்துவாய் போற்றி' என்ற
அடியைச் சேர்த்துக் கொண்டார்.
பூதஉடல் மறைந்து விட்டால் மறைந்ததாகக் கொள் வதே எம்மனேர் மனுேநிலை. கண்டத்துள் இருந்த ஆத்மசக்தி இப்போ அகண்டமாகிவிட்டது. முன்புயோகர் சுவாமிகளைப் பார்க்க விரும்புவோர் விடியுமுன் கொழும்புத்துறை நோக்கி ஒடுவர். எட்டுமணிக்கு மேலாகிவிட்டால் சிலகாலம் மருதணு மடச்சந்தியிலும் பிற்காலத்தில் வண்ணைச் சிவன்கோவில டிக்கும் ஓடினர். இப்பொழுதோ சுவாமிகளை எங்கும் தரிசிக்கலாம்.
தரிசிக்கவேண்டும் என்ற அவா எழவேண்டும். ஆர்வம் கொழுந்துவிட்டு எரிந்தால் சுவாமிகளே ஓடிவருவார்கள். எமக்கு அப்படித் தரிசனை கிடைக்கவில்லையே என்று கருதினுல் எமக்கு அவரைத் தரிசிக்கும் ஆர்வம் இல்லை என்பதே தெளிவு.
"என்னை நீ வேருடியெண்ணி இடர்ப்பட வேண்டாமென்று தன்னைத்தந் தாண்டுகொண்ட சற்குரு தாள்கள் வாழ்க’
இதனை என்றும் சிந்திப்போம். அச்சிந்தனைமயமா வோம். இந்த ஒராண்டு காலத்திலே யாமெல்லாரும் பெற்ற அனுபவங்களே போதிய சான்ரு யுள்ளன.

ཀ་
ஆத்மஜோதி 133
பூரீ யோகர் சுவாமி அர்ச்சனை மாலை
சிவனுெளி பரவும் சீர்மிகு இலங்கையில் பவவினை தீர்க்கும் பரம வைத்தியர் பார்ப்பதற் கிலையெனும் பெருங்குறை தீர, மைசூர் விட்டு இவ்வூர் வந்த கடையிற் சாமியாங் கடவுட் பித்தனர் நடையிற் காட்டி நாட்டில் பரப்பிய பிரம்ம ஞானப் பெருநிதி யதனை, அருமைத் துறவி அற்புத சித்தன் நல்லூர்க்கந்தன் நற்கருணை பெற்றேன் செல்லப்பசாமி சேமித்து வைக்க, வள்ளல்போ லதனை வாரி வழங்க மாவையம் பதியில் மாண்புற வாழ்ந்த அம்பல வாணர் அருந்தவத் துதித்த ஒருதனி மகனம் உத்தம போற்றி! சின்னுச்சி யம்மையார் சீருடன் பெற்ற செல்வனே! எங்கள் சிவனே! போற்றி! சின்ன வயசில் அன்னையை இழந்து மாமியார் அன்பில் வளர்ந்தனை போற்றி! மகா யோகியென்று மன்னுல கேத்தும் அரவிந்தர் தோன்றிய ஆங்கிரச ஆண்டில் வைகாசித் திங்கள் புதன் வாரத்தில் இடப லக்கினமும் அவிட்ட நட்சத்திரமும் உடன் பொருந்திய உத்தம வேளையில் ܝ ܚ யோக நாதனுய் அவதரித்தனை போற்றி! பெற்ருேர் வைத்தஇப் பெருமைதரும் பெயர் பின்னுள் வாழ்வுடன் பிணைந்திட்ட பெற்றி என்றென் றைக்குமோர் அதிசயம் ஐயா! போக்கும் வரவும் புணர்வுமிலாப் பொருள் வாக்கும் மனமும் வடிவமுந் தாங்கி காக்குமெங் காவலனுய்க் காட்சி நல்கி
* தொண்ணுரற் ருேராண்டு மண்மீ துலாவி
கற்ருேர் தமக்கும் கல்லாத வர்க்கும் பற்றற் றவர்க்கும் பற்றுடை யோர்க்கும் துன்பந் துடைத்துத் துயரை விலக்கி இன்ப நிலையருள் இறையே போற்றி! இல்லற ஞானியாம் செல்லாச்சி யம்மையின் சொல்லரும் மகிமை துலக்கினை போற்றி

Page 5
34
ஆத்மஜோதி
செல்லப்ப சாமி சொல்லிய படியே நல்லூர்த் தேரடி வாழ்வை விடுத்து கொழும்புத் துறையே குடி யானுய் போற்றி! இருப்ப மரத்தடி விருப்புக் கொண்டு இருந்த படியமர்ந் திருந்தாய் போற்றி! கல்லா லின்கீழ் இருந்ததொல் காட்சியிங் கெல்லாருங் காண இசைந்தனை போற்றி! சிவதொண்ட னெனும் சீரிய இதழை பவவரு டத்து மார்கழித் திங்களில் எவரு முதிவப்ப நிறுவினை போற்றி! நற்சிந் தனையெனும் அற்புத நூலால் பெற்ற பிறவியின் பேறினை அடைய நற்கதி யெமக்கு நல்கினை போற்றி! நால்வர் பாடலின் நயங்க ளனைத்தையும் கருத் திழக்காது காலத்திற் கேற்பத் திருத்தி யமைத்த தேசிக போற்றி! சங்கரர் போற்றிய சன்மார்க் கத்தை இங்குளா ர் பலர் பிழையாய் விளங்கி வேதாந்த சித்தாந்த வேற்றுமை பேசி வீண்வா தஞ்செய் விற் பண ராயினர்; அன்னர் தமக்கு அத்வைத நெறியின் உண்மையை விளக்கி ஒற்றுமை நாட்டிய தாய்நா உதனில் தாயுமா னவர்போல் சேய்நா ட்டில் சேவை செய்தனை போற்றி! புத்தரும் திருமூல சித்தரும் போலவே
* 'தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையுந் தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானுந் தானே தனக்குத் தலைவனு மாமே'
எனும்பழம் பேருண்மை உணர்த்தினை போற்றி!
'உன்னை யறிந்திடில் உனக்கொரு குறையிலை பின்னே பிறரிடம் பெறுவதற் கொன்றிலை; உன்னுள் இருக்கும் ஒருதனிக் கடவுளே என்னுள் உள்ளான் எங்கும் உள்ளான் காலையும் மாலையும் கடவுளை வணங்கி இயற்கையோ டியைந்த இல்லற நெறியில்
 
 

ஆத்மஜோதி 13
நல்லறம் பேணி நல்லாய் வாழுங்கள்; சாமியா ர்ாகும் ஆசையை விடுமின் என்னையுஞ் சாமி ஆக்கா தீர்கள்."
இவைபோல் பற்பல இன்னுரை கூறி தவைதீர் வாழ்க்கை நவின்றன போற்றி! வேதங்கள் கூறும் மகாவாக்கியங்களும் “ஒரு பொல்லாப்பில்லை நாமொன்று மறியோம்" எனவரும் குருவின் திருவாக் கியங்களும் ஒரே கருத் துடையன வெனும்பே ருண்மையை,
* சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவியுள் ளளவும் அமுதத்தை பூட்டும்
*、93
அகம் பிரமாஸ்மி யெனமுடி சூட்டும்' என்
றருமையாய் விளக்கி யருளினை போற்றி! பெரும்பாலும் மக்கள் கடும் பைத்தியமென எள்ளி நகைசெய்த செல்லப்பர் தன்னை சிவமாய்க் கண்டு சிவமாய்ப் போற்றிச் சென்னியி லவர்பதம் சிரத்தையோ டேந்திக் குருபக்திக் கிணையில் குன்றே போற்றி! குலார்ணவ தந்திரம் கூறுங் குருபக்திக் குலகில் உதாரணம் ஆணுய் போற்றி!
“என்னை யறிவித் தெனக்கருள் செய்தவன் என்னிலும் வேறலன் அன்னே யென்னும் என்னிலும் வேறலன் எல்லாம் வல்லவன் மண்ணினில் வந்தவன் அன்னே யென்னும்'
என்று குருவின் தெய்வத் தன்மையும் குருவும் சீடனும் ஒன்றெனும் உண்மையும் நன்று விளக்கிய நம்பனே போற்றி!
'தன்னெப் பாரில்லாத் தலைவன் பெருமையை என்னுல் எழுதிக் காட்ட முடியுமோ?"
என்று சோல்வெரிப் பிரபுவின் மைந்தன்
சாந்தன் போற்றும் சற்குரு போற்றி! சோபகிருது பங்குனி மாதத்தில்

Page 6
136 ஆத்மஜோதி
சுக்கில பட்ச ஏகாதசித் திதி ஆயிலியத் துடன் அணைந்திடும் வேளையில் ஒயாச் சேவையால் இளைத்த உடலை நீத்து நிர்வாணம் அடைந்தனை போற்றி! வேதாந்த சித்தாந்த சமரசங் கண்ட வித்தகச் சித்தர் கணத்தைச் சேர்ந்த சுத்தனே அளப்பருஞ் சோதியே போற்றி! அன்னையும் அப்பனும் ஆணுய் போற்றி! தன்னிக ரில்லாத் தற்பரா போற்றி! அன்புட னனைத்து அருள்வாய் போற்றி! ஆத்திரத் தோடேசித் திருத்துவாய் போற்றி! இக பர சுகங்களை ஈவாய் போற்றி! கண்ணே போற்றி! கருத்தே போற்றி! விண்ணே போற்றி! மணியே போற்றி! விமலா போற்றி! விநாயகா போற்றி! யோகா போற்றி! தியாகா போற்றி! கோவே போற்றி! குருவே போற்றி! தேவே போற்றி! திருவே போற்றி! போற்றி! போற்றி! நின்பொன்னடி போற்றி! போற்றி! புங்கவ! நின் பொன்னருள் போற்றி!
-க. இராமச்சந்திரன்.
ஆத்மீக வாழ்வின் மறுமலர்ச்சி
(முஹம்மது காசீம் - மதார் நாச்சியா)
உனது முக்தியின் உயர்வு மாண்புற வேண்டுமானுல் இறை தியானத்திலேயே சதா ஈடுபடு. கண்முன் தெரி யும் பெளதீக உலகத்தின் மயக்கங்களுக்கு மதிப்புக் கொ டுக்காது அகண்டத்தின் பரவெளியிலே ஆனந்தம் பெறு. அதுவே அருள் நாட்டம் பெற, இறை நேசம் காண இனிமை நிறைந்த அமைதி வழி.
காலத்தினல் அழிந்து விடும் ரூபங்களின் கவர்ச்சிகளி னின்றும் முற்றிலும் விடுதலை பெற சிறந்த மார்க்கம் அரூ பத்திற்கும் அப்பாலுள்ள பூரண முழுப் பொருளுடன்
 

ஆத்மஜோதி * 137
ஒன்றுபடுவதேயாகும். தியாகத்தின் உச்ச நிலை ‘நான்" என்ற அகந்தையை அடியோடு அழித்து விட்டு ஆனந்த மயமான அத்வைத நிலையில் ஐக்கியமாவதேயாகும். தூங் காது தூங்கி சுகம் பெறும் நிலை சும்மாயிருக்கும் இடம். அது அறிவு கெட்ட நிலையுமல்ல, அஞ்ஞானத்தின் உறக்க முமல்ல. ஆனல் யோகக் கலையில் தெளிவு பெற்று உணர்வு மயமாக விளங்கிடும் உன்னத நிலை.
தியான சக்தியை நம்பு. ஆழ்ந்த தியானத்தின் வலி மையால் சேகரித்த புனித சக்தியின் துணையால் துவங்கப் படும் உனது ஆத்மீக வாழ்வை இந்த உலகில் எந்த சக் தியாலும் குலைத்து விட முடியாது. அருள் நிறைந்த ஆனந்தத்தின் ஜீவ நதி உனது ஆத்மீக வாழ்விலேதான் அடங்கி இருக்கிறது.
உனது வாழ்வின் உயிர்நாடி உன் கையில் தானிருக்கி றது. உனது நல்லொழுக்க தூய வாழ்வில் உறுதியாக நில். உனது வாழ்வு உண்மையில் புனிதமடையும். உனது ஆத்மீகச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. உனது வசீகர சக்தியை அழிப்பதற்கு யாரா லும் இயலாது. பண்பட்ட பரிசுத்த ஆத்மீக வாழ்வில்தான் இன்பமும் இதய சாந்தியும் இருக்கிறது. உனது வாழ்வு உயர்தர ஆத்மீக சக்தியில் பிணைந்திருக்கும் வரையில் உனது பரந்த-தெளிவான லட்சியத்தை யாராலும் களங் கப்படுத்த முடியாது.
உனது ஆத்மீக வாழ்வு முக்கியம். கீழ்த்தர உணர்ச்சி யால் கவ்வப்பட்டு சுய உணர்வற்ற கீழான மட்டரசு மக் கள் உனது ஆத்மீக வாழ்வின் மகிமையை அறியும் ஆற்ற லற்றவர்கள். சுழலும் விகார உணர்ச்சியினுல் கட்டுண்ட மக்களது எண்ணங்களை உன்னுல் ஒருநாளும் திருப்தி செய்ய முடியாது. ஆகவே பரிசுத்த இயக்கத்திற்குத்தடையாக இருக்கும் எல்லாவித சூழ்நிலைகளையும் கடந்து நிற்கப் பழகிக்
5T67.
உனது சுதந்திரம் நிறைந்த ஆத்மீக வாழ்வு கீழான இச்சைகளில் மயங்கிடும், மக்களைத் தட்டியெழுப்பிடும் அமைதியான ஆத்மீகப் புரட்சி.
யோக வாழ்வு புனிதம் நிறைந்த வற்ருத இன்ப ஊற்று. அருள் நிறைந்த அழகும், ஆனந்தம் கலந்த அமை தியும் எப்பொழுது உனது யோக வாழ்வில் வளர்ந்தோங் குகிறதோ அன்றுதான், அங்கேதான் ஆத்மீக வாழ்வின் மறுமலர்ச்சி எழில் பெறுகிறது.

Page 7
138 ஆத்மஜோதி யோகர் சுவாமிகள் ஒரு சிறந்த சீவன் முத்தர்
(தவத் திரு.
உலகிலுள்ள பெரியார்கள் உலக மக்கள் உய்யும் பொருட்டே அவதரிக்கின் ருர்கள். அவர்களின் தோற்றத் தால் உலகம் புனிதமடைகின்றது. உலக மக்கள் பரிசுத்த மடைகிருர்கள். அவ் வழிகாட்டிகளாகிய பெரியோர்கள் சீவன் முத்தர்களென்றும், திட ஞானிக ளென்றும் மகா ஞானிக ளென்றும் வித்துவா னென்றும் பண்டிதரென் றும் போற்றப்படுகின்றனர்.
இவர்கள் இந்நிலை அடைவதற்குச் சென்மாந்திரப் புண் னியங்ளே அடிப்படைக் காரணம். அதைவிட அவர்களது நிலை, நிலவயத்தினுல் அடைவதென்றும் வினைவயத்தினுல் அடைவதென்றும் இரண்டு சென்மங்கள் அவர்களுக்கு உள வாகின்றன. இந்தச் சென் மத்தில் யோகர் சுவாமி அவர் களுக்கு அமைந்த செல்வம் வினைவயத்தால் எய்தியதாகும். அது எப்படி யென்ருல் தன் பிறப்பிலேயே சிறிது காலம் உடற்குரிய கன்மங்களைச் செய்து வந்தார். சிறிது காலத் தில் திருவருளின் அற்புதத்தில்ை தன்னுடைய தொழில் கள் அனைத்தையும் விட்டு நீங்கக் கூடிய ஒரு நல்ல வினை யைத் தொடங்கிக் கொண்டார்.
ஈசுர பக்தி கொண்டார். தான் யார், கடவுள் யார், என்று ஆராயத் தொடங்கினர். தன்னை மறைக்கும் பந் தம் எது பந்தத்தி லிருந்து விடுபடும் வழி எது என்று ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்விலிருந்து இவற் றிற்கெல்லாம் ஆசைகளே மூல காரணம், என உணர்ந்து மனத்தை எப்படி வெல்லுவது என்றும் ஆராயத் தொடங் கினர். 罗
அவருக்கு ஈசுவரனே புது வடிவாகத் தோற்றினர். அந்தக் குருவினுடைய பாதத்திற்கே தன்னை அர்ப்பணித் தார். அக் குருவின் பூரண உபதேசத்தினலே உலகிலே உள்ள எல்லா விடயங்களிலும் விளங்கினர். தமது ஆத்ம நித்தியத்தைக் குரு கருணையினலே கண்டார். அதனல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 139
உலகிலே தாமரை இலைத் தண்ணர் போன்று பற்றற்று வாழ்ந்தார். இதனுலும் யோகர் சுவாமி அவர்கள் சீவன் முத்தராக விளங்கினர்.
தன் உடல் நீங்கும் வரை தன் குருநாதனுடைய சேவையை முக்கிய பணியாகக் கொண்டார். விழிப்பதும் நினைப்பதும் பேசுவதும் குரு பாத சக்தியே யாகும், அத ல்ை அவர் சீவன் முத்தராகவும் இலங்கையிலே திகழ்ந் 'b fTÍT -
எல்லா மதத்தினரும் தலை தாழ்த்திப் போற்றக்கூடிய சமரச சுபாவ நிலையைப் பெற்று வாழ்ந்தார். இதல்ை இலங்கையின் ஒளி விளக்கானர். இன்னும் அவரது புகழ் உலகெங்கும் ஒளி விளக்காக இருப்பதாக,
ஒம் தத் சத் சாந்தி,
உலகின் கதிரொளி
(விசாலாட்சி - மகாதேவா ஆச்சிரமம்)
உலகின் கதிரொளி யோகர் சுவாமிகளின் நற்சிந்தன. உலகின் சிகரம் அன்னுரின் புகழ் சான்றேரின் வாழ்க்கைக்கு சுவாமிகளின் வாழ்க்கை எடுத்துக்காட்டும் வழிகாட்டியுமாகும்
"வாய்மை நிலை பெறுவதினுல் யோகியானவன் தனக் கும் பிறர்க்கும் கரும மின்றியே கரும பலனைப் பெறுகின்றன்'
என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் அமைந்தவர் யோகர் சுவாமிகள். அவர்கள் ஒருவரிடமும் பகை கொள் வதில்லை. அனைவரிடத்தும் நட்புப் பூண்டு இரங்கும் சுபா வம் உடையவர். சுவாமிகளுக்கு யான், எனது என்ற அகங்காரம் வந்ததேயில்லை. தனக்கென வாழாது பிறருக் கென வாழ்ந்தார். இன்ப துன்பம் இரண்டையும் ஒருசம ணுகவே பாவித்தார். எப்பொழுதும் முழுமனதுடன் யோ கத்தில் இருப்பார். அதனுற் சித்த வலிமை பெற்ருர், மனத்தையும் புத்தியையும் தன் குருவிற்களித்தார். தன் குரு

Page 8
140 ஆத்மஜோதி
வின் அன்பு நிறைந்த பக்தரானர். உவகை வெகுளி அச் சம் ஆத்திரம் கொள்ளாது தனக்கும் பிறர்க்கும் இனியவ ராய்த் திகழ்ந்தார். அவரிடம் பரிசுத்தம் மிகுந்திருந்தது. சுறு சுறுப்புடன் காணப்பட்டார். நன்மையிலும் தீமையி லும் புகழினும் இகழினும் மனத்தைச் செல்ல விடாது எல்லாம் ஒன்றென்றே இருந்தார். தனக்கென ஒரு மனை யில்லாது அனைத்துலகையும் தன் மனையாகக் கொண்டார்.
சுவாமிகளின் பிரிவும் உலகிற்குக் கேடும்
இறைவன் முன் தோன்றும் இவ்வுலகு ஒர் கற்பனை. கயிற்றின் அரவு போன்றது. சிப்பியின் வெள்ளி போன் றது. கானலின் நீர்போன்றது. இதனை நிலை நாட்டவே இறைவனுல் முனிவர்கள் ஞானிகள் சித்தர்கள் யோகிகள் ஆகிய அவதார புருடர்கள் உலகிற்கு அனுப்பப்படுகின்ற னர். அத்தகையோரில் செயற்கரிய செயல் ஆற்றியவர்க ளுள் யோகர் சுவாமிகள் உச்ச நிலையை அடைந்தவர் கள். அன்னுரின் ஆற்றற்கரிய ஆற்றல்களை எம் மதமும் சம்மதமாய் ஏற்று அன்னுரை வழிபட்டனர்.
வேண்டுதலும் வேண்டாமையும் இலராகிய ஈழத்தின் சோதி மணியாகிய யோகரின் மறைவும் அன்னரின் உடல் எரியுண்டமையும் உலகத்திற்கும் சைவப் பெரும் மக்களுக் கும் பெருங் கேட்டையே தந்து வருகின்றது. அன்னர் பிரிந்த அதே வருடத்திற்குள் உலகமானது அல்லற்பட்டு ஆற்ருது வருந்துகின்றது. சுவாமிகளின் திருவுடலை ஓர் குகையின் கண் வைத்துத் தலையிற்றேங்காய் முடிவைத் துப் பூமாலை புனைந்தேத்தி வழிபட்டால் என்றும் மீளாப் பேரின்டத்தினை இவ்வுலகு அடையும் என்பதிற் சந்தேகமே இல்லை யென்று கூறலாம். மெய்ஞ்ஞானம் விளக்க வந்த சுவாமிகளின் உடலை எரிக்கக் கூடாது என்பதை வழி வழி வரும் ஞான நூல்களே
* பிறிவிலாத பிரமபி சனுட
லிறுதியாவனற் றீண்டிட லெங்கணு மறுகி விற்கிடை கோடியனதாய்ச் செறுவு செய்யுமத் தேசமென்ருேதினுள்"
என்றும்
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி - 14 ܪ).
'முன்னமே பாகமா மூரல் செய்யுநாட்
பின்னது வேவவேண் டிடுமோ பேசிடா யன்னதே யிவ்வுப லறிவா லட்டது பின்னினிச் சுடுவது பிழையே யாகுமால்'
என்றும் கூறுகின்றன.
சுவாமிகளால் யாம் பெற்ற பயன்
அஞ்ஞான இருளிற் சிக்குண்டோம். ஆணவத்தால் மறைப்புண்டோம். முக்குணத்தாற் பிடிக்கப்பட்டோம். பிறவிப் பெருங் கடலுள் ஆழ்ந்தோம். ஆசை யென்னும் கள்ளைக் குடித்தோம். பிறரின் செல்வம் புகழ் ஆதியன கண்டு பொருமை யென்னும் தேளாற் கொட்டப்பட் டோம். தற்பெருமை என்னும் பிசா சால் பிடிபட்டு அல் லற்படும் எம் மனதை அடக்கச் சிறந்ததோர் குருவாக, ஞான விளக்காகத் தெப்பமாக நம் வாழ்வில் வந்தார். நான் வேறு, ஆத்மா வேறு, உடலன்று நீ, ஒரு பொல் லாப்பும் இல்லை, எப்பவோ முடிந்த காரியம் என்ற உப தேசங்களை ஈந்தார். எம்மை ஈர்த்து ஈர்த்து இறைவனின் பொற்கழல் காட்டினர். அன்னர் எமது ஆத்ம ஈடேற் றத்திற்காகக் காட்டிய செந்நெறிகள் யாவும் எழுதச் சொற்கள் போதா. எழுதி விட்டால் அவற்றிற் பொருள் கள் அடங்கா. சொல்லுக்கும் பொருளுக்கும் ஒவியத் திற்கு மடங்காத சுவாமிகளைப் போற்றிய மெய்யன்பர்கள்
* பலன்கள் வேண்டிய பரிசெலாம் பலித்திடும் பரமதத்துவ ஞானி நலங்கொணு மமா மந்திரஞ் செபித்திட நயந்தவ னிராடுஞ் சலங்கொ டீர்த்தமா மவன்றிரு மேனியே சகல தெய்வமுஞ்
செவ்வாய்
மலர்ந்த வாசக மறுபிறப்பென வருமயற்பிணிமருந்தாகும்'
ஆகிய பாடலிற் கூறப்பட்ட பயன்களையே அடைந்தன ரெனக் கூறலாம்.
நற்சிந்தனை ஒர் கண்ணுடி, சச்சிதானந்தக் கடல், ஆய்வு நூல்
தனக்குவமை இல்லாத சுவாமிகள் தீநெறிச் சென்று தீமை செய்து ஆண்டவனை மறக்கும் மக்களுக்கும், நன்

Page 9
42 ஆத்மஜோதி
நெறி காண விழையும் மக்களுக்கும் வழிகாட்டியாக அரிய மருந்தாக நற்சிந்தனை என்னும் நூலை விட்டுச் சென்றனர். யாம் செய்த மாதவத்தால், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற பொன் மொழியைப் போற் றும் சுவாமிகள் இச் சிறு நூலை விட்டுச் சென்றனர். எக் காலமும் யாவராலும் காண முடியாத அப் பெருந்த கை யாளரை நற்சிந்தனை யென்னும் கண்ணுடிக்குள்ளே காண a) TO
செய்கைக் கண்ணுடி தன்னையும் பார்ப்பவரையும் மாத் திரமே காட்டும். நற்சிந்தனைக் கண்ணுடி அப்படி யன்று. தன்னைக் காட்டும். பார்ப்போரைக் காட்டும். யோகர் சுவாமியைக் காட்டும். பிறரைக் காட்டும், பரமனைக் காட்டும். அத்தகைய நூல் சச்சிதானந்தக் கடலென்ருல் மிகையாகாது. அதனுள் செல்லச் செல்ல உள்ளம் உரு கிப் பாகாகும். என்றும் தெவிட்டாத சுவையைத் தரு கின்றது. இந் நூலுள் இல்லாத பொருளே இல்லை என லாம். விரல்விட்டு எண்ண முடியாத நூல்கள் அத்தனை யையும் தன்னகத்தே அடக்கி ஒர் ஆய்வுக் களஞ்சியமாக விளங்குகின்றது.
‘என்னை எனக் கறிவித்தான் எங்கள் குருநாதன்'
என்று தொடங்கும் பாடலின் அடிகளில் இலக்கியச் சுவை, பக்திச் சுவை, வேதாந்தக் கருத்துக்கள் ஆதியன பொதிந்து காணப்படுகின்றன. எனவே நற்சிந்தனை, மனி தனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாய் தெய்வீக நூலாய் வாழ்க்கை நூலாய் மிளிர்கின்றது. துரண்டாமணிச் சுடரா கிய சுவாமிகள் மனமுவந்தளித்த இந் நூலொன்றிற்கே ஆய்வாளர்கள் நூல்கள் எழுத முயலுகின் ருர்கள். எனவே இன்னும் சிலகாலத்தில் இந்நூல் இலக்கணமாக இருக்க இதற்கு இலக்கியமாகப் பற்பல நூல்கள் ஆய்வாளரால் ஆராய்ந்து வெளிவரும் என்பது உண்மை. இந் நூலைத் தந்த சுவாமியவர்கள் அருளினல் உலகின் கதிராகிய இந்நூலைப் பயின்று பரமனடிகளைச் சிக்கெனப் பிடித்துப் பேரானந்த | ld Got Garudnroe.
ஓம் சாந்தி.
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேரின்பமுறுவ தெந்நாள்?
ᎤᏁᏁv,ᎹᏙrᏙᏗ zᏙᏁᏙ4 ᏤᎷᏉ4ᏤᎷᎷᎹᏙᎴᎷ ᏑᏙᏁᎴᏡᏪᎷ ᏛᏙᏛᎪ4ᏛᏙᏛvᏈᎳᏙ ᏛᏁᏗᏁᏗᏡᎷᏙᏁᏪv ᏪᎷᏁᎳᏗᎴᏁᏛᏁᎴMᏙᎲᏉᎷᎳᏙ ᏛᏙᏛMᏛᏙᏛMoᎵᏙᎯᎲᏑᎷᏛᎲᏛᏈᎯᏙᏑᏙᏪᏠ4ᏛᏙᏛᏠᏎᏑᏙᎴᏠᎯ
- L u T 6u) u II u IJ 9 -
என்னுயிர்க் குயிரே! ஞான
எழில் மணிச் சுடரே! மெளனப் பொன்னுெளிப் பிழம்பே இன்பப்
புத்தமுதுாற்றே! தூயர் எண்ணத்துள் இனிக்கும் , ஞ ை
இன்சுவைக் கணியே! உன்றன் வண்ணப் பொற்பதத்தை, நாயேன்
வழுத்திடப் பெறுவதெந் நாள்?
பக்தர் தம் இதயத் துள்ளே
படரொளி பரப்பி, இன்பம்
தித்திக்கச் சுவையளிக்கும்
தேனே! செங்கனியே இந்தப்
பித்தனேன் உன்றன்பாதம்
பேரின்ப நிழலைத் துய்த்து
சுத்த மெய்ஞ் ஞான வாழ்வைச்
சுவைத்திடும் நாளெந் நாளோ?
கற்றவர் இதயந் தோறும்
களிப்பினேயருளும், தூய பொற்சுவைக் குன்றே! வேதப்
பூரணப் பொருளே! ஞானம் அற்ற புன் சிறியேன், உன்றன்
அடிதொழும் அடியார், நேயம் பெற்றுய்வ தெந்நாள்? நாயேன்
பேரின்ப முறுவ தெந்நாள்?
எண்ணெழுத் தறியாப் பேயேன்,
இறைவ! நின்புகழைப்பாடும் , வண்ணம் ஒன்றறியேன்; தூய
வார்த்தை நன் கறியேன்! என்றன் புன் இசைக் கவியில் அன்புப்
புனிதத் தேன் பொழிந்து, இன்பம் பண்ணிசையாகப் பொங்கிப்
பாரெலாம் இசைப்ப தெந்நாள்?

Page 10
44 ஆத்மஜோதி
Gurg, சுவாமிகளுடன்
கொழும்பில் இரு நாட்கள்
(ச. அம்பிகைபாகன்)
யோக சுவாமிகள் தமது குருவின் மேற்பார்வையில் நல்லூர்த் தேர் முட்டியில் நாற்பது நாட்கள் கடுந்தவம் புரிந்தபின்னர் பரிவிராஜகவாழ்க்கையில் ஈடுபட்டு கால்நடை யில் கதிர்காமம் வரை சென்று திரும்பியதை அன்பர்கள் அறிந்திருக்கக் கூடும். இந்நிகழ்ச்சி 1913 ம் ஆண்டில் நிகழ்ந்ததென்பர். இதன் பின்னர் பதினைந்து ஆண்டுகள் சுவாமிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டைவிட்டு வெளியே செல்லவில்லை. அப்படிச் செல்வதற்கு தமக்கு உத்தரவில்லை 6 T%ğf L)/T
பின்னர் 1928 ம் ஆண்டுவரையில் இருந்தஈற்போல் இந்தியாவுக்கு யாத்திரை செய்தனர். இதைத்தொடர்ந்து இலங்கையின் பலபாகங்களுக்கும் சென்றுவரத் தொடங் கினர். அப்படிச் செல்லும் காலங்களில் அன்பர்கள் இல் லங்களில்தான் தங்குவர். அன்பர்களும் சுவாமிகளின் வச தியைக்கருதி தங்கள் தங்கள் இல்லங்களில் ஒவ்வோர் அறையை அவர்கள் தங்குவதற்கென ஒதுக்கிவைத்திருந்த
að fi.
1939 ம் ஆண்டில் யான் ஆசிரிய சங்க அலுவலாக கொழும்புக்குச் சென்றேன். அந்த அலுவல் முடிந்ததும் நான் தங்கியிருந்த இராமகிருஷ்ண மடத்திற்குத் திரும்பிய தும் யோகசுவாமிகள் இராஜசிங்க வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருக்கிருர் என்று கேள்விப்பட்டு அங்குசென்றேன். அங்கு அன்பர்கள் புடைசூழ சுவாமிகள் வீற்றிருப்பதைக் கண்டேன். சுவாமிகள் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக் காரர் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தபடியால் அடுத்த வீட்டிலிருந்த அம்மையார் சுவாமிகளுக்கும் அன்பர்களுக் கும் வேண்டிய உணவு வசதிகளை கவனித்து வந்தார். சுவாமிகளின் மதிப் போசனத்திற்காக அந்த அம்மையார் விசேடமாக உணவைத் தயாரித்திருந்தார். உணவருந்தும் நேரம் வந்ததும் சுவாமிகள் அந்த அம்மையாரைப்

ஆத் மஜோதி 45
பார்த்து 'பிள்ளை எனக்குக் காலைச்சாப்பாடு இன்னும்
செரிக்கவில்லை. ஆகையால் இந்த அன்பர்களுக்கு நீ தயா ரித்த உணவைக்கொடு’ என்ருர், அம்மையாருக்குப்
பெரும் ஏமாற்றம். ஆனல் சுவாமிகள் கூறியது அவர்க | ளுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்காது. “சித்தன் போக்கு சிவன் போக்கு' என்ப தற்கிணங்க அவர்கள் எந்நேரத்தில் எப்படி நடந்துகொள் வார்களென்றுகூறமுடியாது. ஒரு மனிதரிலோஒருவழக்கத்தி லோ அவர்கள் கட்டுப்பட்டது கிடையாது. இலங்கை அரசியல் வாழ்வில் அதிஉன்னதபதவிவகித்தவரும் சுவாமிகளின் அன்புக் கும் மதிப்புக்குமுரியவருளே பெரியார் கொண்டு சென்ற உணவையே பலமுறை திருப்பியனுப்பி விட்டார்.
கொழும்பில் அன்று எங்களுடன் உணவருந்திய ஒரு
பெரியாரின் ஞாபகம் இன்றும் என் மனத்தில் நிலைத்திருக் கிறது. அவர்தான் காலஞ் சென்ற 'அக்கவுன்ரன்' இராசநாயகம். அவர்களின் புனிதத் தன்மை என்னை மிக வும் வசீகரித்தது. ‘பூசும் நீறுபோல் உள்ளமும் புனித மானுேர்’ என்று நாயன்மாரைப் பற்றிச் சேக்கிழார் கூறி யது இவர்களுக்கு மிகவும் பொருத்தமாயிருந்தது. சுவா மிகளின் அன்பர் கூட்டத்தில் இராசநாயகம் அவர்களுக்கு இத்தனி மதிப்பிருந்தது.
இப் பெரியார் உணவருந்திய முறையும் என்னை மிக
வும் வசீகரித்தது. சைவ உணவு உண்பதிலும் ஒருமுறை, ஒரு ஒழுங்கிருக்கிறதென்பதை அன்றுதான் உணர்ந்தேன்.
மேல் நாட்டார்; ஒருவர் உணவருந்தும் முறையிலிருந்து
அவரது தார தம்மியத்தை அறிகின்றனர். அதுபோல வே சைவ உலகிலும் ஒருவரின் ஆகாரத்தின் தராதர
த்தை அவருண்ணும் முறையிலிருந்து அறிகின்றனர்.
இதனுல்தான் போலும் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களை குடும்பத்தாரோடு திருவாவடுதுறை மகாசன்
னிதானம் மடத்துக்கு அழைத்த போது ஒரு மாத
அவகாசம் கேட்டாராம். தமது குடும்பத்தாருக்கு மடத்
தில் எப்படி உணவருந்துவது, எப்படி நடந்து கொள்வ
தென்பதைப் பழக்குவதற்கே இந்த அவகாசத்தைக் கேட் டாரென்று கூறுவர்.
யோக சுவாமிகளின் பெருமையை முதன் முதல் பகி
ரங்கமாக வெளியிட்டவரும், கதாப்பிரசங்கம் செய்வதில்
தமக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லாது விளங்கியவருமான சங்கர சுப்பையர் அவர்களைப் பெரிதும் ஆதரித்தவர் இந்த
இராசநாயகம் அவர்களே. சங்கர சுப்பையர் திரு. இராச

Page 11
146 ஆத்மஜோதி
நாயகம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த காலத்தில்தான் அவர்களின் மகள் சிவபாக்கியத்துக்கு தேவாரப் பண்களை முறையாகச் சொல்லிக் கொடுத்தார். யோக சுவாமிகள் இச் சிவபாக்கியம் பாடுவதற்கென்றே சில கீர்த்தனங்களை இயற்றிக் கொடுத்தார். உசேனி இராகத்தில் பாடப்பட்ட பின்வரும் கீர்த்தனத்தில் சிவபாக்கியம் என்னும் பெயரையே வைத்துப் பாடியுள்ளார்.
தேடிநின் திருவடியே செல்லமென நாடிவந்தேன் திருவருள் தந்தாளும் தேவா - சற்குருநாதா
அனுபல்லவி
பாடி மகிழும் சிவபாக்கியம் பாரினில் தேட மூடிய மாய இருள் ஒட அருள் குருவே (தேடி)
சரணம்
அடியேனைக் கைவிடுதல் ஆகுமோ இது தகுமோ
அன்பிலா திருப்பது அடிகளுக் கழகாமோ அரசே நல்லூரில் லாசான் ஆரறிவா ரென்று சொன்ன
அருந்தவனே ஒப்பில்லா என் அப்பனே செல்லப்பனே (தேடி)
இந்த அம்மையார் இந்தக் கீர்த்தனத்தை சுவாமிகள் சன்னிதியில் ஒருமுறை பாடிய பொழுது அங்கிருந்த அன் பர்கள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகப் பெரு கியதாம் , திருமுறைகளையும் நற்சிந்தனையையும் திறம்படப் பாடக் கூடிய இவர்கள் (சிவபாக்கியம்) அகால மரணம டைந்தது பெரும் நஷ்டமாகும்.
இரவானதும், சுவாமிகளைக் காண வந்த அன்பர்கள் எல்லோரும் வீடு திரும்பினர். இதனுல் சுவாமிகளும் நானும்தான் அங்கு தங்கினுேம். ஒர் அறையில் எங்கள் இருவருக்கும் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. கட்டில் களோ "ஸ்பிரிங் கட்டில்கள்; அவற்றுக்கேற்ற மெத்தைக ளும் விரிப்புக்களும்; இவற்றுக்கு மேலாக இவ்விரண்டு தலேயனேகள். இவ்வொழுங்குகளைக் கண்ட சுவாமிகள்

ஆத்மஜோதி 147
'இன்றிரவு மல்லிகைப் பந்தலின் கீழ்ப் படுத்த கரையாம் பெண்ணின் நிலைதான் எனக்கு' என்ருர், என்று கூறி அந்தக் கரையாம் பெண்ணின் கதையைக் கூறினர். ஓரி ரவு ஒரு கரையாம் பெண் ஒரு மல்லிகைப் பந்தலின்கீழ் படுக்க நேர்ந்தது. அந்த மல்லிகை மலர்களின் வாசனை யைத் தாங்க முடியாத படி யால் அவளால் நித்திரை கொள்ள முடியவில்லை. அவள் மனம் மீன் வாசனையே நாடியது. அதனுல் மீன் கடகத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்தாள். கடக வாசனை மலர் வாசனையை அடக்க முடியவில்லை. பின்னர் அந்தக் கடகத்துக்கு நீரைத் தெளித் தாள். அதனுல் மீன் வாசனை பரக்க வீசியது. இதன் பின்னர்தான் அவளால் நித்திரை செய்ய முடிந்ததென்று கூறி அவள் கதையை முடித்தார்.
இக் கதையைக் கூறிய பின் நற்பழக்கங்களை இளம் வயதில் பழகிக் கொள்ள வேண்டும். சிறு வயதில் பழகிய பழக்கங்களை ஞானிகளாலும் மாற்றலரிதென்றும் கூறினர்.
பின்னர் பல அன்பர்களைப் பற்றிப் பேசினுேம். பல ருடைய குறைவு நிறைவுகளைப் பற்றியும் பேசினுேம். இப் படிப் பேசிய பின் 'இவையெல்லாம் லெளகீகம், உண்மை யில் ஒருவரைப் பற்றியும் குறை கூற நமக்குரிமையில்லை, ஒவ்வொரு மனிதனும் தனது தனது வினைப்பயனுக்கேற்ற படி வாழ்கிருன் நம் எல்லாரிடத்தும் சிவனையும், சிவ னிடத்து எல்லாரையும் காணப் பழக வேண்டும்' என்று கூறினர் இக் கருத்தையே நற்சிந்தனையில் பலவிடங்களில் கூறியிருக்கிருர் . அவற்றுள் இரண்டடி பின்வருமாறு.
எல்லாரையு மீசனிடத்திலே காட்டிடா எல்லாரிடத்திலும் ஈசனக் காட்டிடா
இதே கருத்தைத் தான் ஈசா வாசிய உபநிடதத்திலும் காண்கிருேம். 'எவன் இருப்புள்ள அனேத்தையும் ஆத்மா விடத்திலே பார்க்கிருனே), இருப்புள்ள அனைத்திடத்தும் ஆத்மாவைப் பார்க்கிருனே), அப்போது எதையும் வெறுப் பதில்லை'
மேற்கூறியவாறு சுவாமிகளுடன் இருநாட்களைக் கழிக் கக் கிடைத்த பேற்றைப் பெரும் பேருகக் கருதுகின்றேன். இச் சந்தர்ப்பத்தைக் கூட்டி வைத்த திருவருளை மனமார, வாயார வாழ்த்தி இக் கட்டுரையை முடிக்கின்றேன்.

Page 12
R ஆத்மஜோதி ஈழத்துத் தவப் பெரியார் யோக சுவாமிகள்
(திருமதி, இ. சரஸ்வதி அம்மா அவர்கள்)
சுவாமிகளை முதன் முதல் கேள்விப்பட்டது சுவாமிக வின் வாலிப காலத்தில் செல்லப்பாப் பெரியாரின் பின் தொடர்ந்து திரிந்த அறிஞர்களில் ஒருவர் வாயிலாகவே. இவர் சுவாமிகளை எனக்கு அறிமுகம் செய்த போது இலு ப்பையடி விசரனை நீங்கள் சென்று தரிசிக்கவில்லையா? என வினவினர். அப்பொழுது நான் அவர் எங்கிருக்கின்ருர்? எப்படியான தன்மையுள்ளவர் எனக் கேட்டேன். அப்பெ ரியார், அவர் சாதாரண மனிதன் போன்றிருப்பார் காவி கமண்டலம் விபூதிப்பை யோகதண்டு என்பனவொன்றும் இருக்காது. வெள்ளிபோன்ற குடுமித்தலை வெண்மையான நீண்டதா டி பொதுநிறவுடல் சுத்தமான வெண்மையான வேட்டி, மேல்துண்டு, வேகமான நடை இவையே அவரிடங் காணப்படும் அடையாளங்கள் எனக்கூறினர். அப்படியா ஞல் சுவாமிகளை ஏன் இலுப்பையடி விசரன் எனக்கூறினி . ர்கள் என வினவினேன். சுவாமிகளின் ஆச்சிரமத்தடியில் நிற்கும் இலுப்பை மரத்தடியிற்ருன் சுவாமிகள் அதிக நேரம் இருப்பது வழக்கம். இதனுல் அவருக்கு அப்பெயர் வழங்க லாயிற்றெனவும். சுவாமிகள் செல்லப்பா சுவாமிகளின் சிஷ்ய கூட்டத்தை விட்டு அடிக்கடி விலகி தனியிடந்தேடி ஒளித்து கண்மூடித் தியானத்திலாழ்ந்துவிடுவார் சிலருடன் அன்பாகப் பழகுவார், சிலரைக் கோவித்து வைவார். தானே தன்னில் பேசிக்கொண்டேயிருப்பார் இத்தன்மை களையெல்லாங்கண்டு அவர் மேல் வைத்த அன்பினுலும் மதிப்பினுலும் விசரன் என்ற பெயரால் அழைத்து வந்தோ மென்றும் கூறினர். நாங்கள் எத்தனையோபேர் யோக சுவாமிகளுடன் சேர்ந்துசெல்லப்பா பெரியாருடன் பலகாலமாகத்திரிந்தோம். எனினும் சுவாமியவர்களுக்குக்கி டைத்த அநுபவமும் ஆற்றலும் எங்கட்குக்கிட்டவில்லை யெனவும் அப் பெரியார் கூறிப் பெருமையடைந்தார்.
இவ்வாக்கியங்களைக் கேட்டதும் சுவாமிகளின் தரிசனம் பெறவேண்டுமென்ற பேராவலுடன் பலநாட்கள் கழிந்தன.
ஒருநாள் நினையாப் பிரகாரமாக யாழ்ப்பாணம் போக வேண்டிய முக்கிய கருமம் இருந்தது. நானும் இன்னுஞ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 49
சிலருமாக ஒரு வாடகைக் காரில் பிரயாணஞ் செய்தோம். நாவற்குளி புகையிரதஸ்தான ச் சந்தி வந்ததும் கா ருக்குள் ருந்த அம்மையார் ஒருவர் , யோகர் சுவாமிகள் வருகின் முர் வண்டியை நிறுத்துங்கள் என்று ஆர்வத்துடன் கூறி னுர், வண்டி நிறுத்தப்பட்டது எனக்கோ எதிர்பாராத தரிசன கிடைக்கிறதேயென மனத்தினுள்ளே பொங்கிவ ரும் மகிழ்ச்சி. என்னுடன் பிரயானஞ்செய்தவர்களோ சுவாமிகளே முன்னரே தெரிந்து பழகியவர் நாம் எல்லோ ரும் இறங்கி விழுந்து வணங்கினுேம், சுவாமிகள் சாவகச் சேரியில் இருக்கும் தனக்குத் தெரிந்த சில அன்பர்களின் சேமத்தை விசாரித்தார். என் பக்கம் திரும்பினர்; நான் வணங்கினேன். நீயார்? என்ன செய்கின்ருய்? என வினவி ஞர். நான் எனது பெயரைக்கூறி பிள்ளைகளுடன் இருப்ப தாகக்கூறினேன். சுவாமிகள் அப்பசரி நான் வாறன்’ எனக் கூறி நடக்கலானர்.
அவரோ கொழும்புத்துறைக்கும் அரியாலைக்கும் மாறி மாறிச் செல்வது வழக்கமாம். அரியாலையிருந்து யாழ்ப்பா ணப்பக்கமே நடந்து வந்தார். நாங்கள் வந்த வண்டியில் வரலாமே சுவாமி என பணிவுடன் வினவினேன். சுவாமி கள் நீங்கள் வந்த கருமத்தைச் சென்று பாருங்கள். என் னைத் தொந்தரவு செய்யாதீர்கள் என மறுத்துவிட்டு விரை ந்தார். எனக்கோ யாழ்ப்பாணம் சென்று இறங்கும் வரை மனத்துள் ஒரே போராட்டம் நிகழத் தொடங்கியது. சுவா மிகள் என்னிடம் வினவிய இருவினுக்களுக்கும் நான் கொடு த் தபதில் சரியா என்பதே. ஏனெனில் என்னை நீயார் என்ற போது என்னை யார் எனக்குத்தெரியவில்லையே யெனவும் என்ன செய்கின்ரு ய் என்ற போது என்ன, செய்வதென்று அறியாமல் தவிக்கின்றேன் எனவும் கூறியிருந்தால் சுவாமி கள் எனக்குஎன்னை யறியும் வழியையும் கூறிஎன்னசெய்யவேண் டுமெனவும் கூறியிருப்பாரே என ஒருசபலம் தட்டியது. ஆனல் இது நடந்தோ இன்றைக்கு இருபதாண்டுகளாகின்றன. ஆனல் பெரியார் முன்னிலையில் கூறியபடியே இன்றும் பிள் ளைகளுடன் தான் வசித்து வருகின்றேன். பெரியார்கள் முன் புத்திதத்துவத்தால் கதைக்க முடியாது. உள்ளத்து உள்ள படியேதான் வரும். கல்வியறிவாலோ அல்லது ஆசைப்பாட்டி னலோ எமக்குள் இருக்கும் பலன்களை அறியாமல் வாசக ஞானம் பேசவும் விரும்பினல் இந்த ஒரு போதும் இந்த ஞானசூரியன் முன்வரவே வராது என்பதைப் பின் உணர் ந்தேன்.

Page 13
| 5() ஆத்மஜோதி
பின் ஒரு முறை இஞ்ஞானசூரியனை சென்றுதரிசித்து அவரின் திருஷ்டியில் எனது துன்பமும் தவிப்பும் தீருமென எனக்குத் தோன்றவே வெள்ளிக்கிழமை சென்று தரிசிப்ப தற்காக வியாழக்கிழமை சாயந்தரமே சென்று சுண்டிக்கு ளியில் ஒர் அன்பர் வீட்டில் தங்கி அதிகாலையில் எழுந்து நடந்து போனேன். சுண்டிக்குளி பெண்கள் பாடசாலை யருகாமையில் வந்ததும் எனக்குள் பெரியாரைத் தரிசிக் கப்போகும்போது வெறுங்கையுடன் செல்கின்றேனே ஒரு பூவாவது பழமாவது கொண்டு செல்லவில்லையே வீட்டில் எவ்வளவு நவக்கீரி மாம்பழங்கள் கிடந்தன. ஒரு பழமா வது சுவாமிகட்கு அர்ப்பணிக்கும்பாக்கியம் கிடைக்கவில்லை யேயென எண்ணியவாறு கவலையுடன் நடந்தேன். அந்நா ளில் சுவாமிகள் நடக்கமுடியாத நிலையில் இருந்தார்கள்.
நான் சென்று ஆச்சிரம முற்றத்தில் நின்றேன். சுவா மிகளோ அருளொளியை அள்ளி வீசியபடியே அங்கிருந்த அன்பர்கள் நால்வருடன் விவசாயத்தொழில் அபிவிருத்தி யைப்பற்றி சம்பா ஷித்துக் கொண்டிருந்தார். முப்பத் தைந்து வயது மதிக்கத்தக்க அன்பரொருவர் பக்கலிலே கண்மூடித் தியானத்திலாழ்ந்திருந்தார், நானே எல்லாவற் றையும் அவரிடம் ஒப்புக்கொடுத்த நிலையில் நின்றேன். அவர் ஞானதிருஷ்டி என் பக்கமாகத் திரும்பியது. 'நீ என் ணுடைய சகோதரி தானே வந்து இரு' என்றுபணித்தார். நான் விழுந்து வணங்கினேன். அவர் காட்டிய இடத்தி லமர்ந்தேன். கருவிகள் ஒய்ந்துவிட்டன. எவ்வளவு நேரம் அப்படியமர்ந்திருந்தேனே எனக்குத்தெரியாது. கண் விழித் தேன். திரும்பவும் எங்கிருந்து வந்தாய் என்ற மதுர மொழிகேட்டது. "நான் சாவகச்சேரியில் இருக்கின்றனன்’ என்றேன். "அப்ப உனக்கு கனகசபை, யோக லிங்கம் யோகானந்தம் என்பவர்களைத் தெரியுமா வெனக் கேட் டார். தெரியுமென்றேன். இப்படிக் கூறிமுடிய சூடத்தை ஏற்றி ஒரு நவக்கீரியில் மாம்பழத்தையும் நந்தியாவர்த்த மலரொன்றையும் எடுத்து இதுவும் சாவகச்சேரியிலிருந்து கொண்டுவந்ததே எனக் கூறி என்னிடந்தந்தார். நான் மிகுந்த நிறைவுடன் மீண்டும் வணங்கிவிட்டுவந்து வீட்டி லிருந்த அத்தனை குழந்தைகட்கும் பிரசாதமாக வழங்கி னேன். அவரவர் மன எண்ணங்களையறிந்து அவரவர்க்கி சைய சம்பாஷித்து நாடிவந்ததைக் கொடுத்து அவர்களைத் திருப்பியனுப்பும் அம்மாபெரும் சக்தியையும் தவப்பெரு

ஆத்மஜோதி 15.
மையையும் மற்றவர்களுடன் கலந்து கூறிப் பெருமைய டைந்தேன். இது நடந்த காலத்தில் எத்தனையோ பக்தர் களின் பாவங்களைக்கழுவிப் போக்கிய அத்தூய பாதத்தில் அப்போதும் ஒருகாயம் இருந்து நோவுடன் இருந்தார் அப்பா தத்தை எனக்குத்தூக்கிக்காட்டினர். எனினும் அதைப்பற்றி துன்பமோ கஷ்டமோ பட்டதாக எங்கட்குக் காட்ட வில்லை. பெரியார்களின் தன்மையே அதுதானல்லவா? ஏதோ அனுபவிப்பது தேகந்தானே நமக்கென்ன என்று இருந்த நிலையில் ஆனந்தமாய் இருப்பார். அதே சுவாமி களைத்தான் நான் அன்றும் கண்டேன். அது மாத்திரமா? சுவாமி கள் வந்தவர்களிடம் எல்லாம் மரவள்ளித்தடியை நல்லாய் நடுங்கள், மரவள்ளிப் பிட்டு உடம்பிற்கு மிக நன்று என உணவு உற்பத்தியைப் பற்றி மிக அவதியாகவும் உறுதியா கவும் கூறிக்கொண்டிருந்தார். நான் இதைக் கேட்டு சுவா மிகட்கு இது என்ன? இப்படியோர் எண்ணம் இதில் ஏதோ விஷயம் பொதிந்திருக்கின்றதென எண்ணினேன். அடுத்த மாதமே அரிசிக் கொன்ருேல் அமுல் நடத்தப் பட் டது. சுவாமிகளின் அவதியையும் கரிசனேயையும் எண்ணி ஆனந்தக்கண்ணிர் உகுத்தேன்.
இன்னும் ஒரு முறை நானும் ஒரு அம்மையாரும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அந்த அம்மாவுக் கும் சுவாமிகளை முன்னரே தெரியும். சுவாமியவர்களின் கார் அந்தக் கடைக்கு முன்னிலையில் வந்து நின்றது. முந் திரிகைப் பழம் வேண்டும்படி சொன்னர், நாங்கள் இருவ ரும் சுவாமிகளை உடனே சென்று வணங்கினுேம். அங்கு நின்றவர் முந்திரிகைப்பழம் சரியான விலையென்றார். அது சரிவிலையென்ருலும் வேண்டத் தானே வேணும். நான் ஒர் நோயாளியைப் பார்க்கப் போகின்றேன் எனக்கூறி ஒரு ரூபா கரன்சி நோட்டுப்புத்தகம் ஒன்றை எடுத்து ஆறுநோட்டுக் களைக் கொடுத்துவிட்டு பழத்தைப் பெற்றுக்கொண்டு அம் மையாரைத்திரும்பிப்பார்த்து "கடவுளே நீயோ’ என்ருர் என்னைப்பார்த்து எங்கே "போகின்ரு?ய்' என்றும் கேட் டார். அந்த அம்மையார் அவ என்னுடன் வருகின்றர் சுவாமி என்ருர், உடனே இருவருங் கூடிக்கொண்டு போ ங்கள் என்றுங்கூறினர். அத்திருவாக்கின்படியே நாங்கள் இருவரும் இன்றுவரை இருபது வருடங்களாகவே மாறுப டா உள்ளத்தினராய் அன்புடன் பழகி நடத்து வருகின் ருேம். சுவாமிகள் சாதாரண மக்கள் போலவே நோயாளி

Page 14
52 ஆத்மஜோதி
களப் பார்வையிடச் சென்றதும் அவர்களுக்கேற்ற உணவு வகைகளைக் கொண்டுபோய்க் கவனிக்கும் கருணையையும் என்னவென்று சொல் வாம். இவற்றை யெல்லாம் சிந்திக் கும்போதெல்லாம் சீவன்முத்தரின் தன்மைகளைப் பெரியார் வாயிலாகவும் புத்தக மூலமாகவும் வாசித்தும் இருந்தேன். இப்போதத்ரூபமாய் அறிகின்றேன் என்ற மகிழ்ச்சியே ஏற் பட்டது. இன்னும் சுவாமிகளின் அரிய வாக்குகளும் ஆசி களும் அப்படியே நிறைவேறிவிட்டதைக் கூறக்கூறவாயும் உள்ளமும் இனிக்கிறதெனினும் இன்னும் g2(D நிகழ்ச்சியைக் கூறிவிடுகின்றேன். நான் முன் கூறிய அம் மையாரோ வரலாற்றில் இடம் பெறக்கூடிய கல்வி அறிவு ஒழுக்கம் அன்பு பக்திவைராக்கியம் என்பவற்ருல் உருவாக் கப்பட்ட தூய்மையான அம்மையார். அந்த அம்மையார் ஒரு முறை சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றபோது சுவாமி கள் நீ ஒளவையைப் போலிரு எ னத்திருவாய் மலர்ந்தன ராம் . அவ்வாக்கியம் எவ்வளவு தூரம் உண்மையென்று அம்மையாரின் வாழ்க்கை முறையும் அம்மையாரை அறிந் தவர்கட்கும் அவரின் வரலாற்றை அறிந்தவர்க்கும் தான்
நன்ருகத் தெரியும். எடுத்துக் கூறவேண்டியதில்லை. -
இதுவரை சுவாமிகளை இப்படியாக அவர் நயனதிட் சையையும் ஆசிகளையும் நான் பெற்றேனேயல்லாமல் அவ ருடன் உளம்விட்டுக் கலந்து அவர் திருவாயினின்றும் ஒரு வாக் கியம் கேட்கவில்லையேயென எனக்குள்ளூர சிறிது சலனமா கவேயிருந்தது. அக்குறையையும் அக்கருணைக்கடல் விட்டு வைக்கவில்லை. எங்கிருந்தாலும் எப்பணியிலீடுபட்டிருந்தா லும் தன் அன்பர்களின் தேவையை அறிந்து அவற்றைமு டித்து வைப்பதில் எங்கள் சுவாமிகளும் பின் நிற்கவில்லை. ஒருநாள் எங்கள் வீட்டு முற்றத்தில் நின்ற பொன்னெச்சி மரம் ஒன்று பூத்துக் குலுங்கிய வண்ணம் இருந்தது. அவ்வ ழகே ஒரு தனியழகு; அதனடிபிலே வெண்மையே உருவெடுத் ததுபோன்ற தூய ஆடை வெள்ளிக் கம்பிகள் போன்ற தாடியும் தலையும் இதனிடையே அருள் ஒளிததும்பும் கண்கள் புன்னகை பொருந்திய முகம் திருவுருவும் இத்தனையும் ஒருங்கே நிறைந்த ஞானக் கடல் நிற்பதைக் கண்டேன். என் கண்களோ என்ன தவம் செய்தன என்ற எண்ணத்துடன்
ஓடோடிச் சென்று பாதத்தில் வீழ்ந்தேன், எழுந்தேன், என்ன
வென்று கூறுவேன், என்னுள்ளம் வெம்பியது. கண்ணிர் மல் கியது, விபூதியை எடுத்தார், என் நெற்றியில் அணிந்தார்.
 
 
 

ஆத்மஜோதி 53
என் வாயிலும் இட்டார். அது மாத்திரமா? ஒர் மந்திரத்தை எனக்குச் சொன்னர், திரும்பவும் அவர் பாதத்தில் வீழ்ந் தேன்; வணங்கினேன்; அவரின்பாதம் ஒன்று நெருப்புச்சுட்ட புண் அரைவாசி ஆறி இருந்தது போலிருந்தது. அதைப் பார்த்ததும் மிகவும் துன்பப்பட்டேனெனினும் சுவாமிகள் அருளிய பெரும் பேற்றை எண்ணி எண்ணி இறும்பூதியெய் திக்கொண்டேன். ஆனல் திடீரென சுவாமியைக் காணவில்லை. இதனல் அவதிப்பட்டு ஒட எழுந்தேன். அப்போ நான் வீட்டு க்குள் இருப்பதை உணர்ந்தேன். கண்டது கனவென்றும் உணர்ந்தேன். அக்குருநாதர் குழந்தைகளின் தேவையை அறிந்து கொடுக்கும் அன்னையைப் போன்று புறம் புறத் திரிந்து அருள்புரிந்து ஆண்ட அந்த அருளை எண்ணி எண்ணிப் பெருமையடைகின்றேன். பின் ஒரு மாதத்தில் அவர் மாடு முட்டியதால் அதே பாதம் காயப்பட்டதையும் அறிந்தேனெ னினும் திரும்ப அவரைச் சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக் குக் கடைசிவரை கிடைக்கவில்லை. இதற்காகத்தான் குரு நாதர் இவ்வளவு அவசியமாக வந்து என்னை ஆண்டாரோ அறியேன்.
அவ்வள்ளல் சமாதியான அன்று இரவு (23.3.64இரவு) எனக்கு உடம்பு மிகச் சுகக்குறைவாக விருந்தது. நேரம் போகப்போக ஒவ்வொரு நிமிடமும் விழித்த நிலையில் கிடந்து படுக்கையில் உருண்டு கொண்டே கிடந்தேன். பின் என்று மில்லாத வகையில் என் உடம்பு நொந்து நொந்து ஒவ்வொரு பகுதியுங் கழன்று விடுவது போன்ற உணர்ச்சி இப்படித்தான் சாகிறது ஆக்கும் என்றும் யோசித்தேன். காலையில் எழுந்து கொள்ள முடியவில்லை. ரேடியோச் செய்தியில் படுத்த படுக் கையில் சுவாமிகள் உடலை நீத்தார் என்று அறிந்தேன். பூத வுடல்தான் மறைந்தது. அவர் பொன் மொழிகளும் அருளுரை களும் ஒவ்வொருவர் உள்ளத்துள் நின்றும் வழி நடத்திக் கொண்டேயிருக்கின்றன.
எங்கள் ஈழநாட்டிலிருந்த சீர்கேட்டைத் தீர்க்கத் தோன் றிய கலைக்களஞ்சியம் யோககுருமணி. ஒரு காலத்தில் தமிழ் படிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்கு மட்டுந்தான் இருந்தது.
ஆங்கில ஆட்சிக் காலத்தின் கல்வித் திட்டத்தின்படி ஆங்கிலம் பயில விரும்புவோர் மூன்ரும் வகுப்புத் தேறியதும் ஆங்கில வகுப்பில் சேர்ந்துவிட வேண்டும். அப்படியல்ல

Page 15
154 ஆத்மஜோதி
வென்று தமிழ் படித்துக்கொண்டு போனுல் தொழிற் கல்விக் குள்ளாக விரும்புகிறவர்கட்கு காலம் ஓடிவிடும். அதோடு அக்காலத்தில் அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளும் கத்தோ விக்கமிஷன் பாடசாலைகளுமே ஆங்கிலம்படிக்கக்கூடியநிலையில் முன்னேறி இருந்தன. இந் நிலை யி ல் இந்து ம த சம்பந்தமான 5F l f) UL J வ ள ர் சி க் கு ப் )6( ן_j חh "Lj நெருக்கடி. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டைப் படித்தும் சமய பாடம் ஒப்புவிக்க விப்பார்கள். எந்தச் சமயத்தில் குழந்தைகள் என்ருலும் புள்ளிகள் கூடத்தான். இதற்காக மறுசமயப் பாடத்தைப் படித்துப் புள்ளி பெற்றவர்களும் தமிழ் பேசினல்குற்றம்போடுவார்களென்று ஆங்கிலத்தைப் பேசிவிட்டு தலைகால் தெரியாது அரசாங்கத்தில் நுழைந்த எம் சகோதர அன்பர்களுக்குச் சுவாமிகளின் ஆங்கில அறிவு எந்த அளவுக்கு தலை அம்மலைப் போக்கித் தெளிவைக் கொடு த்து அவர்களை ஆளாக்கிய அருமருந்தல்லவா? சுவாமிகளின் குழந்தைகள் எவ்வளவுக்கெவ்வளவு தவஞ் செய்த புண்ணிய ஆன்மாக்கள் என்று பெருமைபாராட்டி பேர்ற்றக்கூடியதாக இந்த ஞானத் தந்தையைக் கிடைக்கப் பெற்ருர்கள் என்ருல் ஈழ நாட்டு மக்கள் செய்த தவமே யல்லாது வேறு யாது
#n-sOGN) TLD .
இந்தத் தவயோகி அவரவர் பிராரத்துவத்துக்கேற்ற கர்மாவைச் செய்ய அவர்களைத் தூண்டிவிடுவார். இவர் ஒரு வரைப் பார்த்த மாத்திரத்தில் தூல சூசுஷ்ம காரண தேக நிலையை அறிந்துவிடுவது வழக்கம். ஒருவர் இருவரல்ல எத் தனையோ சீவன்களுக்கு சமாதானங் கூறிவிடுவார்.
ஒருவரைப்பார்த்து ஒருமுறை சொன்னுராம் 'நீ விவா கம் செய்து கொண்டு தவஞ் செய்', இன்னும் ஒருவரைப் பார்த்து உனக்கென்ன கலியாணம் என்ருராம். இன்னுெருவர் தனது தொழிலை விட்டுப்போட்டுப் பரதேசியாய் சுவாமிகளி டம் போனுராம். சோம்பேறிப்பயலே எங்கே வந்தா யென்று கூழுத வார்த்தைகளைக் கூறித் துரத்தினராம். இதே நிகழ்ச்சி களை என்றும் அவர் முன்னிலையில் நாளாந்தம் நாம் காண லாம். புதிதாக ஒருவர் வந்தால் சுவாமிகளைச் சாதாரண நிலையில் மதிப்பிட்டுத்தான் திரும்புவர். ஆனல் அவரின் கண் டிப்புகளும் அவதியும் கதைகளும் மற்றவர்க்கு எவ்வளவு தூரம் சாட்டையடி கொடுத்து, அவர்களை ஈடேற்றியிருக்கும் என்ற ஒரு பேருண்மையை அநுபவ நீதியிற் கண்டவர். இந் நந்நாட்டில் நான்கு பகுதியிலும் மாத்திரமன்று வெளிநாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 155
களிலும் கூட உண்டு. இத்திரிகால உணர்ச்சியும் நிறைந்த இம் மகான் யாருடன் என்ருலும் அதைக் காட்டிக் கொண்ட தில்லை.சொல்லாமற் சொல்லியும் செய்யாமற் செய்து கருணை வழிநடத்திய எம் பெருமான் செயல்களை எம் அறிவால் அறியுந் தரமன்று. யாராயிருந்தாலும் சரி அன்போடு நம்பி வணங்கும் அன்பர்கள் எவ்வளவு கார் மாநிறைந்தவர்களா யிருந்தாலும் அவர்கட்கு ஆற்றக்கூடிய வழியில் ஒருவழியைச் சொல்லித் தான் அனுப்பிவிடுவார்.
இந்த ஈழம் தந்த பேரொளியிடம் இன்னும் ஒருகருணை, என்னவெனில் இறைவனுடைய திருநாமத்தை எந்தநேரமும் தனது திருநாவில் உச்சரிக்கும் முறை மிகவும் மர்ம மானது. யார் யாருக்கு இறைவனது திருநாமம் இடப் பெற்றிருக் கின்றதோ அந்த நாமங்களைச் சொல்லி ஏதும் ஒரு விசாரணை ஆரம்பிப்பார். கனகசபை, நடராசா, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, கந்தையா என்று நாமங்களை எந்தச் சந்தர்ப் பத்திலும் அன்பர்கள் மத்தியில் உச்சரித்து எங்களுக்கும் ஞாபகப்படுத்தியபடியே யிருப்பார். இப்படியான தன்மைகள் நிரம்பிய ஒருகருணை வள்ளலைப் பெறக்கிடைத்தது எங்கள் ஈழத்து பேரன்புத்தாகமுள்ள மக்கள் நற்பலனே.
சுவாமிகள் தம் அன்பர்கள் தம்மிடம் நினைத்துவர இருக் கிருர்கள் என்று அறிந்ததும் குழந்தையிடம் ஒடும் அன்னை போன்று ஒடோடி அவர் இல்லங்களுக்குத் தாமே சென்று தரிசனங்கொடுத்து அவர்கள் வேண்டியதற்கு வழிவகுத்து விடுவார். இக் கருத்தையே சிவதொண்டன் முகப்பில், திலத மெனத் திகழ்கின்ற வாக்கியம்.
'எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவாரீசன்’ திருவடிப் பேறடைந்த பூரண நிலவு என்றுந்தன் அன்பர் உள்ளத்து ஒளிபரப்பி உலகம் உய்யக் கருணை புரியப் பிரார்த்திக் கின்றேன்.
அக்குருநாதர் ஆற்றலையும் அருளையும் எழுத எழுத இன்னும் விரிந்துகொண்டே போகும். என்னுள்ளமும் இனித் துக்கொண்டே யிருக்கும். இதனுல் எனது கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.
ஒம் தத் சத் சாந்தி சாந்தி சாந்தி

Page 16
56 ஆத்மஜோதி மரணமே வருக!
(பரமஹம்சதாசன்)
ஒருகணமும் இனிவாழும் தகையில் லென்றிவ்
வுல கொதுக்கித் தள்ளிவிடும் உயிரை யெல்லாம் மறுகணமே விரிகரத்தால் அஞ்ச லென்றே
வாரியணைத் த ைமதிநிறை வாழ்வு நல்கும் அரு மரண தேவதையே! பேத மின்றி
அனைத்துயிர்க்கும் சமதர்மம் நீதி நல்கும் தருமத்தின் உறைவிடமே! தஞ்சம் உன்தாள்
த்மியேனை ஆதரிக்க வருக தாயே!
போதுமினிப் புவி வாழ்வு போதும் போதும்!
புல்லுடலைச் சுமந்ததினிப் போதும் போதும்! தீதெவர்க்கும் இழைக்காமல் ஒழுக்கம் நேர்மை
செம்மையுடன் வாழ்ந்திருந்தும் கொடிய வஞ்சப் பாதகர்க்கும் கிட்டாத கொடிய நோயால்
பட்டபெருந் துயரமினிப் போதும் போதும்! மாதுயரச் சேற்றினை விட் டென்னை மீட்டுன்
மடியின்மிசை துயிலூட்ட வருக அம்மா!
கண் கெட்டுப் பல்விழுந்து காதும் கெட்டுக் கட்டுடலம் வெற்றுடலக் கூடாய் வாடி பண்பட்ட நண்பர்களும் தொலைவில் வைகப்
பதங்கெட்ட சுற்றம் உண்டு பார்த்தொ துங்க கண்கெட்ட வெம் பிணியால் கணமும் நைந்து
கதியற்றுத் துடிக்குமெனக் கலங்க விட்டுப் பண்பற்ற கொடியவர் போல் நீயும் பார்த்துப்
பார்த் தொதுங்கல் முறையாமோ? வந்த 2ணப்பாய்!
O O O உருத்திர மூர்த்தீ! பொறுக்கமுடி யாதினிமேல் பொறுக்கமுடி யாது
பொல்லாத நோய்த் துயரம் பொறுக்கமுடி யாது உருக்கிய அக் கொடுமையினுல் பட்டதுயர் போதும்
உடற்கமையை இக்கணமே உவந்தெடுத்துக் கொள்வாய்!
 
 
 

ஆத்மஜோதி 157
பெருக்கிய கண் ணிர் அருவி போதாதா? உன்பால்
பேதை இன்னும் எத்தனைநாள் பிரார்த்தனைசெய் தழு
உருத்திரனுய்ச் சுடலையிலே சிவர்களே உய்க்க (வேன்?
ஒய்வின்றி நர்த்தமிடும் ஒப்பில் நடத் தரசே!
எத்தனேதான் தீவினைகள் செய்துவிட்ட போதும்
எந்தைநின தடியிணையை இறைஞ்சியழு பலர்க்கு அத்தனையும் பொடியாக்கி ஆட்கொள் வாய் என்பர்
அனுபவித்த மெய்யடியார் அவர் மரபில் யானுேர் பித்தேறும் கடைச்சிறியேன் அலனுே?இப் பேதை
பிதற்றலிஞல் உனக்கிரக்கம் பிறக்கவினும் அத்தாநற் சுடலையிலே சிவர்களே உய்க்க
அனவரதம் நர்த்தமிடும் அருள் நடன மூர்த் தீ!
"மேலக் கரம்பொன் முருகவேள் துதி!
உமைய வள் பாலா உணர்வினுக் கரியாய்
ஒப்பிலாச் சிவகுரு மணியே இமையவர்க் கரசே எந்தையே உன்தாள்
இறைஞ்சிநான் உய்ந்திட விழைந்தேன் அமிழ்தினும் இனிய தூயயாழ் மேலைக்
கரம் பொனில் அமர்ந்தருள் விளக்கும் தமிழர் தம் தெய்வ சக்திவேல் முருகா ,
தஞ்சம்நின் தாள் மலர் போற்றி!
(மரணப் படுக்கையில் 'கவிஞர் பரமஹம்ஸதாசர்’ அவர்களின் கடைசிப் பாடல்கள். * ஆகக் கடைசிப்பாடல்,
இன்பம்
எங்கும் ஈசனைக் காணுதல் இன்பமே ஏதிலார் பால் இரங்குதல் இன்பமே பொங்கு கோபத்தைப் போக்குதல் இன்பமே புவியின் ஆசையை நீக்குதல் இன்பமே தங்கும் யோகத் தமருதல் இன்பமே தானே தானுய்த் தழைத்திடல் இன்பமே இங்கெ னக்கின்பம் எளிதில் விளக்கிய என்குரு பர புங்கவ சிங்கமே! டயோகர் சுவாமிகள்

Page 17
158 ஆத்மஜோதி
த னி மு த ல்
(சுவாமி இராஜேஸ்வரானந்தர்)
தனிமுதல் அனுபூதி அதீத உன்னத நிலை. தனிமுதல், மனதையும் நுண்ணறிவையும் மேம்படுகிறது. அது முடி வுள்ளதும் தொடர்புள்ளதும் அன்று.
அகண்ட வஸ்து மனதுக் கெட்டாமை நிரீச்சுரவாதத் திற்குச் செலுத்தும் இழிவான கருத்தில் அறியொனமை வாதம் அன்று. தனிமுதல் உண்மையாக அனுபூதியடை யத் தக்கது. அவ் வகையான அனுபூதி மனித வாழ்வில் உயர்வு நலம். அது மிக நேரான, மிக உள்ளான மிகத் தெளிவான அருட்டெரிப்பு.
தனிமுதல் சிந்திக்க வொண்ணுதது (அதர்க்யம்), மன துக் கெட்டாதது (அப்ரமேயம்), மெய்யறிவு சொரூபம், (ஞானம்), அனைவரினதும் இருதயத்தில் அறியத்தக்கதும் ஆழ்ந்து நிலைகொண்டதும் (ஞானகம்யம் ஹ்ரிதி சர்வஸ்ய திஸ்திதம்) என்று உபநிஷதங்கள் பகர்கின்றன.
தனிமுதல் அறிய முடியாதது போற் ருேன்றுகிறது. ஏனெனில் வரையறையுள்ள நுண்ணறிவு தொடர்புடைய வற்றை மட்டும் எடுத்தாண்டு அப்பாலுள்ள அகண்ட தனி முதலுக்குக் கருத்துச் செலுத்தப்பட்டபோது தன் தகுதி
ன்மையைக் கண்டுணர்கிறது.
சமயசாரம் தனி முதலின் அதீத மகத்துவத்தை அங் கீகரிக்கிறது. ஆனல் நிரீச்சுர நோக்கைச் சமய உணர்ச்சி நிலையில் முக்கியமானதாய் அல்லது பொது அம்சமாய்த் தெரிவிக்கவில்லை அல்லது பறை சாற்றவில்லை.
எல்லா வரம்புகளையும் வரம்புக் குட்பட்டவற்றை யும் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு விபரத்தையும் மேம்படும் தெய்வத்தைப் பற்றி அப்படிப் பட்ட அடிப்படையான சமயவுணர்வுநிலை அறிய முடியா தது ஆக நிச்சயிக்கப்பட வேண்டுமென்றும் விஞ்ஞானம் அறி யத்தக்கது ஆகநிச்சயிக்கப்படவேண்டுமென்றும் அதுபொருள்

ஆத்மஜோதி 1.59
இவ்விதமாக சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கு மிடை யில் பொருத்தம் உண்டாகும்படி செய்தல் ஒரு வெளிப்ப டையான இசைவின்மை. இம் முறையாகத் தனிமுதலை நினைக்கவும் கூடாததாகச் செய்வது சமயத்தை மொத்தத் தில் அகற்றுவதே.
எவன், தான் அதை அறிவதாய் எண்ணுகிருனே உண் மையாக அதை அவன் அறிகிருனில்லை. எவன்தான் அதை அறி யவில்லையென்றுஎண்ணுகிருனே அவன் அதை அறிகிரு:ன். யார் அதை முற்ருக அறியப்படுவதாய் எண்ணுகிருர்களோ அது அவர்களுக்கு அகப்படா திருக்கிறது. யார் அதை அறிந்து கொள்ள முடியாததாய் அறிகிருர்களோ அவர்களது காட் சிக்குள் அது உளது' என்று உபநிஷதங்கள் உறுதி கூறு
சமயம் மெய்ப் பொருளே நோக்கி ஒர் உளப்பாங்கு; அது ஒவ்வொரு தனியாளின் இருதயத்திலும் வாழ்விலும் ஒரு குன்ருச் செல்வாக்கை நிறுத்துகிறது. ஓர் உயிருள்ள மரத்தின் ரசம் மிகு தொலைவிலிருக்கும் கிளைகளை ஊடுரு விச் செல்வது போன்று அது தன் செல்வாக்கை ஒருவரின் நடத்தையின் ஒவ்வொரு பகுதியிலும் வெளியிடுகிறது. தனி முதலையும் சமயத்தை (ஆன்ம-அனுபூதியை) யும் அகற்றுக. அப்போது மனிதன் நோக்கமின்றி வாழ்கிருன்,
குருபதத்தைக் கும்பிடுவோம்
காலே யெழுந்திருந்து கைகால் முகங்கழுவி கேடில மலரெடுத்துக் - கிளியே குருபதத்தைக் கும்பிடுவோம் Gam Lusign ud (sud (Tg Lost gru கூடாத கூட்டங் கூடாதே நரடாதே யென்றுந் தேடாதே நாமது வெடி நாமது வெடி,
--யோகர் சுவாமிகள்.

Page 18
R 60) ஆத்மஜோதி உலக சமயங்கள் மூலம் உலக ஒற்றுமை
( சுவாமி சிவானந்தர் )
உலகில் மிகச்சிறந்த மூலக்கூறும் பொதுவாக ஒன்ருக
இணைக்கும் சக்தியுமாக மெய்ச்சமயத்திற்கு ஐக்கியநாடுகள்
அதியூக்கமான கருத்துச் செலுத்துவதற்குத் தற்போது தருணமாயிருக்கிறது. சமயம் ஒவ்வொரு மனிதனிலும் அமை திக்கும் மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் வெல்லமுடியாத தூண் டுகை. அது கடவுள் அல்லது உண்மை உண்டென்றும் மிகவுயர் கருத்தை அனுபவபூர்வமாக அறிவதற்கு ஆர் வம். இச்சமயத் தூண்டுகை மனித இனம் அனைத்தையும் ஒன்றேயாயும் ஒற்றுமையுடையதாயும் செய்கிறது.
உலக சமயங்கள் அனைத்தும் ஒரே நிலையான திவ்விய
இலக்கைச் சுட்டிக்காட்டுகின்றன. எல்லாச் சமயங்களும் ஒரேமாதிரியான இலட்சியங்களை அதாவது உயிர், இரக் கம், மன்பதை சேவை, இழிவான சித்தவிவகாரங்களையும் மிருக இயல்பையும் வசமாக்கல், நிறைவு நாட்டம் அமைதி யினதும் ஒருமையினதும் தேட்டம் என்பவற்றை
t எம்முன் நிறுவுகின்றன. அவை சகிப்பு, மன்னிப்பு, தீங்கு செய்யாமை, கருணை, தர்மசிந்தை திவ்விய பேறுகள் ஆதி யன பொருந்திய வாழ்வை மனிதனுக்குப் புகட்டுகின்றன.
மூலாதாரமாக எல்லா ச்சமயங்களுக்கும் எல்லாச் சம யக் கோட்பாடுகளுக்கும் எலலாச் சமயக் கருத்துக்களுக்கு மிடையில் தனியொற்றுமை நிலைத்திருக்கிறது. ஒரே கருத் துடன் அவையனைத்தும் திவ்வியவஸ்துவின் அகண்டித இருப்பின் அனுபவ அறிவுக்குத் தூண்டுகின்றன. சேவி, நேசி, கொடு, புனிதமாக்கு, தியானி, அனுபூதியடை, என்று அவை ஒருமித்தபடி பறைசாற்றுகின்றன.
அபு - பென் ஆதாமைப் பற்றிய அழகிய வாழ்க்கைத் துணுக்கும், ராத்தி தேவரின் உணர்ச்சி எழுப்பும் சரிதை யும் கிறித்துவ மத நூலிற்காணப்படும் நல்வழிப் போக்கனின் வரலாறும்பிம்பிசாரராஜனின்யாகத்தில் கெளதம புத்தரை பற்றி விழுமிய வர்ணனையும் - எல்லாம்மெய்ச்சமய உணர்வு நிலையின் பொது இயல்பை மிக அழகாகவும் பயன் விளையத் தக்கதாகவும் வெளிப்படுத்த உதவுகின்றன.
 

சமய உணர்வு மனிதஇனம் அனைத்தையும் ஆன்மிக ஒருமையின் அன்புள்ள அணைப்பிற்றழுவுகிறது. அவ்வகை யான ஒன்ருக்குதல் மட்டுமே முக்கியமானதாயும் பயன் படத்தக்கதாயும் நிலைத்திருக்கிறதாயும் இருக்க இயலும், பொருளாதார அல்லது சமுக அல்லது அரசியல் அடிப்ப டையில் நிறுவிய ஏதேனுமோர் ஒற்றுமை அல்லது ஒருமை நிலைத்திருக்காது. விழிப்பூட்டிய சமய உணர்வு துணை கொண்டு யாம் ஒரு மனிதனே மற்குெரு மனிதனுடன் அடிப்படை நிலையில் இணைக்கிருேம் ஒவ்வொரு மனிதனி" லுள்ள பொதுச் சமய உணர்வு மூலம் சமயம் நோக்" கப் பட்டு ஒர்ந்தறியப்பட்டபோது கிறிஸ்தவர், முகம்மதி யர் இந்துக்கள் பெளத்தர், ஜைனர் பாரசீகர் தன்மை" யே ஏதேனுமொரு குறிப்பிட்ட சமயிகளாக உணராது முழு இசைவிணக்கத்துடன் நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் செலுத்தும் நெறியில் ஒருமித்து முன்னேறும் சகோதர ஆன் 10ாக்களாக உணர்வார்கள். ..
எல்லாச் சமயங்களும் ஒருடைசியுணர்வையும் சகோதரத் துவத்தையும் வளர்க்கும்படியும் ஒழுக்கப்பயிற்சி, தியாகம் சேவையென்பவற்ருல் தெய்வீகத்தன்மை புள்ளவர்களாகும் படியும் மனிதனுக்குப் போதிக்கின்றன. அழியுமியல் புள்ள இவ்வுலகப் பொருட்களின் மருட்சிக்கும் கட்டுக்கும் ஆமயங்கவேண்டாமென்றும் கடவுட் காட்சிப் பேருகிய வாழ்வின் உண்மையடைவை மறக்க வேண்டா மென்றும் அவை மனிதனுக்குப் புகட்டுகின்றன. ஆகையால் சம பமே சமூக ஆதாரபீடம் எல்லா நன்மையினதும் உவ கையினதும்; பிறப்பிடம் தனியாளினதும் தனியாள் மூலம் நாட்டினதும் நாட்டின்மூலம் முழுவுலகினதும் அறம், நிறைவு ஐசுவரியம் முதலியனவற்றின் மூலாதார்ம்.
ஈசாவாஸ்யம் இதம் சர்வம் இது அனைத்தும் பரத்
தால் வியாபிக்கப்பட்டுள்ளது. என்றும் மகிமை வாய்ந்த் உபநிடத உறுதி மொழியை நீங்கள் அனைவரும் மனதிற் கொள்க ஏகோ தேவாசர்வ பூதேஸ" குத சர்க்
கேவலோ திர்க்குணச்ச்- ஒரே பரம்பொருளே உயிர்ப்பிரா ணிகள் அனைத்திலும் மறைந்திருக்கிறது; அ துவே" என்னும் புனிதமான அத்துவித வஸ்துவாகிய நித்திய அகச் சாட்சியும் ஊக்கம் ஊட்டுவதும், உலக அரசாங்கங்கள் அணுவா புதுங்கள் உற்பத்தி செய்யும் கொடூரத் தொழிலை கைவிடுவார்களாக. (3. fo லும் உலகச் சமயங்களால் வசனிக்கப்பட்ட அன்பு விதியும் ஆன்மிக ஒருமைக் கருத்தும்நாடுகளுக்கும் மக்களினங்களுக்கு மிடையில் பரவி நிலவுவதாக,

Page 19
ܟܠ
ܓܒܪ
ہے۔ e /அன்புடையீர்!
אר
痪i MAJOTHP Registered at the G சந்தா நேய
17ஆவது ஆண்டு 5 வது சோதி இன்று 2 நேயர்களின் உதவியினுலேயே சோதி ட சோதிக் குழந்தை உங்கள் வீட்டைத் தே ாேகின்றீர்கள் உங்கள் சந்தாவை உ கள் கொடுக்கும் பரிசாகும். என்றென். இந்தியாவிலுள்ள சந்தாநேயர்கள்
R. To giou, go அரிசிப்டாளேபே என்ற விலாசத்திற்கு அனுப்பி லை
தருவீர்
ஆத்மஜோதி நிலேயம்-ந
ஆத்மஜோதி జీడి
ஆத்மஜோதி மலர் (1963) சைவ இலக்கியக் கதா மஞ்சரி
ஆத்மநாதம் திங்கனிக் டோலே
திவ்ய ஜீவன சங்க லென் ஸ்ரீ வியூ జ్నో வ்ழிபாடு நவராத்திரிப் us மார்கழி மாதப் பாடல் கதிர்காமப் பதிகம் 。Q、亨匣露 ( 12. கந்தரனுபூதி 13. அறிவுரைக் கதைகள் 14. நித்தில் கருமவிதி | స్, క్రైఫ్రgtpణి
ܬ .
தபாற் ெ
அச்சிடுவோர் - ஆத்மஜோ அச்சிடுவிப்போர் - ஆத்மே SO O eT Tt S S u u O SJS0YS0S 00S

P.O. as a Newspaper, M.L. 9300
ஆr— Aஇத்தி ܐܬ ബ
ர்களுக்கு உங்கள் கையில் கிடைக்கின்றது. சந்தா திறுை ஆண்டுகளைக் கடந்துள்ளது. டிவரும்போது என்ன பரிசு அளிக்கப் டனே அனுப்பி வைத்தல்தான் நீங் றும் உங்கள் ஆதரவு கிடைப்பதாக தமது சந்தாவை வழக்கம்போல்
ক * - g , ,52----yzibة قي عg_2), 20 வப்பதோடு இவ்விடமும் அறியத் 踢會了T@高。
ܘܐܸܢ
یہ ہے مییجیے تیمیہ “ ”علی چیمبرج بیبرس
ய வெளியீடுகள்
20 3.00 300 2.50 1.50 2 30 30 20 2. 15 23 65 28
6 .
ఆ****అలాe-6-7-- ாதி நிலத்தினர்