கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1965.10.17

Page 1
<ے ہ<صے ہ<صےں<ے ج<ص؟ حصے حصے
 
 
 
 
 
 
 
 
 

<><><><つ*<><つ*<つごつ*<><><>-<プー
上
통
ബ
-
<>|

Page 2
ις
ജ്ഞ@@@@@&ത്രജ്ഞേയ്ക്കേ
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
枣
ത@ഭയ്ക്കേ കക്കകക്ര*'
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
ஜோதி 17 விசுவாவசு ஞ ஐப்பசி மீ" 1உ (17-10-65) சுடர் 12
பொருளடக்கம்
1. அருட்பிரகாசமாலை 353 2. தில்லையிலே மறைந்த இருவர் 355 t 3. அருட்சோதி வள்ளலார் 38 4. குரு 35) 5. ஆர்வக் குமுறல் 363 6. யோகமும் ஞானமும் சமாதிக்கே 36. 7. சிவானந்த அவதாரம் 367 8. ஓம் என்ற மந்திரத்தின் உட்பொருள் 370 9. இராமலிங்க சுவாமிகள் ஒரு சீர்திருத்தவாதி 373 10. சக்தி துதி! 375 N 11. வினை அறுக்கும் விநாயகன் 376
12. அருள்நெறி காட்டிய தாய் 380
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75,00 வருட சந்தா ரூபா 3.00
தனிப்பிரதி - சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர்  ைதிரு. நா. முத்தையா "ஆத்மஜோதி நிலையம்' நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண் :- 353
 
 
 
 
 

ܕ݁ܰܡ݂ܢ ܬܐ ருட் பிரகாச மாலை
-( மகரிஷி சுத்தானந்தர் )-
திருப் பொதுவில் ஞான நடம் புரிகின்ற தெய்வ சிகா மணியின் துே யை இருட்குலத் தைப் பெருக்குகின்ற மடமையிடர்
மாற்றவந்த இரவி தன்னக் சுருக்கணக் கில்லாதவனக் காலனணு
காதகனல் மேனி யானை அருட்சமயத் தந்தையினே அன்பருக்குத் தாயான யடைந்து வாழ்வாம் !
举
முருகென்னும் பொருள் விளங்கு முத்திளமை
யெழில்குலுங்கு முகத்தினுனைத் தருணமழை போலடியார் தாகத் தைத் தணிக்கின்ற தயை மிக்கானக் கருணைவிரி மனத்தானை , யெவ்வுயிருந்
தன்னுயிர் போற் கருதுவான குரு மணியென் றுலகமெலாங் கும் பிடத்தக் கோனே மணங் குறித்து வாழ்வாம் !

Page 3
354.
ஆத்மஜோதி எத்தனையோ தத்துவங்கள் ! அத் தனக்கும்.
இசைவாகி யவற்றின் மேலாய் ஒத்துலகில் எல்லாரும் ஒருகுலமாய்
அருட்பொது விற் செழிப் புற்றேங்கச் சுத்தசிவ சன்மார்க்க சங்கத்தை
முறை வகுத்த சேதி தன்னை ' சித்தெல்லாம் வல்லவனத் திருஞான
தேசிகனைச் சிந்தை செய்வம்! .
r
*。 t
. ܐ ஊனுருவி உயிருருவி யுள்ளுருவிப் , பாய்ந்தின்பு வூற்றெடுக்கும் ' தேனருவி யாகிவளர் தெய்வீகத்
திருவருட்பா செழித்த வூற்றை
மானவர்க்குப் புது வழியும் புதுயுகமும்
புது வாழ்வும் வழங்கினுனே ". .
வானரசைக் கொணர்ந் தானே துரியவள நnட்டரசை வழுத்தி நிற்பா ம் !
ܠܳܬ݂
பித்துலகள் பிதற்றுகின்ற மதவாதச் சூதுகளைப் பிறகிட் டோட்டிச் சுத்தான்ம வொருப்பாட்டின் உரிமை நெறி
முதன் முதலிற் றுலக்கினுனைச் செத்தாரை யெழுப்புகின்ற ஞான சஞ்
சீவியின, டி மர வாழ்வின் வித் தகனத் தமிழ் வேத மகரிஷியை
விளம்பியுளம் பொங்கு வோ மால் !
மருட்சமய வாதுகளும் மா மாலச்
சடங்குகளும் மண்ணைக் கெளவ இருட்சாதி வேற்றுமைகள் இடர் செய்யும்
பிரிவினைகள் இரிந்து தேய, பொருட்செறிந்ம மணிவாக்கும், பொதுநலஞ்செய்
புண்ணியமுத பூண்டெழுந்த அருட்சோதி ராமலிங்கப் பெருமானின் அடிமலர்கள் முடியில் வைப் பாம் !
 
 

ஆத்மஜோதி 355
தில்லேயிலே மறைந்த இருவர்
-( ஆசிரியர் )-
தில்லை என்பது சிதம்பரம். உள்ளத்திலேயும் தில்லை ஒன்றுண்டு. அது சித்தாகாசம் எனப்படும். சித்+அம் பரம் சிதம்ப்ரம்; சித்தத்தில் உள்ள ஆகாசம். மணிவா சகப் பெருந்தகை திருவாசகமும் திருக்கோவையாரும் பாடி தில்லையிலே இருந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் திருவா சகத்திற்குப் பொருள் கேட்டார்கள். மணிவாசகப்பெரு மான் திருவாசகத்திற்கு பொருள் காட்டுகிறேன் என்று எல்லாரையும் நட்ராஜப்பெருமான் சந்நிதிக்கு அழைத்துச் சென்ருர். இதுதான் திருவாசகத்தின் பொருளென்று நட ராஜப்பெருமானைச் சுட்டிக்காட்டினர். எல்லாரும் கர்ண நடராஜப்பெருமானைச் சுட்டிக் காட்டிக் கொண்டே உள்ளே சென்ருர், அவருடைய பூதவுடல் மறைந்தது. நடரா ஜப்பெருமானுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் கட வுண்மாமுனிவர்,
செய்காட்டுங் கமுகடவித் தில்லேயுளார் பொருள் கேட்கக் கைகாட்டித் தம் முருவம் காட்டாமன் மறைந்தாரைப் பைகாட்டும் பேரர வப் பணியுடையார் தமக்கன்பு மெய்காட்டிப் பாலுடனே மேவியநீ ராக்கினுர்,
பாலுடன் கலந்த நீர்போல் இரண்டறக் கலந்தாரென்று குறிப்பிடுகின்ருர். இதற்கு முதற்பாடலிலே,
“ஒன்றிய இத்தமிழ் மாலப் பொருளிவர் என்றுரை செய்து மன்றதனிற்கடிதேகி மறைந்தனரங் கவர்கான"
என்று குறிப்பிடுகின்ருர், யோகநிலை எய்திய மகான் கள் தமக்கு உடல் வேண்டாதபோது உடலை உகுத்து விடு கின்றனர். உடல் பஞ்ச பூதியங்களாலும் ஆனது. பஞ்ச பூதியங்களையும் பஞ்ச பூதியங்களோடு கலக்கச் செய்து விடு
@f .
இத்தகையதோர் நிகழ்ச்சி அருட் gf, L fi Got Girl GoTG) Tfi இராமலிங்க சுவாமிகளுக்கும் நிகழ்ந்தது. வள்ளற் பெரு மானுர் இவ்வுலகில் ஐம்பது வருடங்களும் ஐந்து மாதங்க

Page 4
356 ஆத்மஜோதி
ளும் பூதவுடல் கொண்டுலவிஞர். தமிழுலகில் அருட் சோதியாக விளங்கினர் என்றே கூறலாம். அடிக்கடி தாம் மறையப் போவதாகக் கூறிஞர்கள். இறுதிக் காலத்தில் அன்பர்களுக்கு அரிய நெறியும் ஆறுதலும் புகட்டிவந்தார். தாம் சிற்சபையில் புகுவதற்கு முன்பாக உலகத்தோருக்கு வேண்டுகோள் ஒன்று விடுத்தார். பொற்சபையில் சிற்ச பையில் புகுந் தருணம் இதுவே ஒ டி வாருங்கள் என்று
அழைத்தார். 'போனல் கிடையாது; பொழுதுபட்டிால் கிட்டாது' என்று உலகோர் கூறும் மொழிபோல, நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்று அழைத் தார். மக்கள் செவியில் ஏறவில்லை. நான் கடையை விரித் தேன்; எனது பொருளை வாங்குவாரில்லை; கடையை முடிச் செல்கின்றேன் என்று சென்றுவிட்டார். சிற்சபையில் புகுந் தருணம் இது என்றே அழைத்த பெருமானர் சிற்சபையிலே புகுவதற்குரிய வழியையும் காட்டி வைத்தார்.
“நினைந்து நினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணிரதணு லுடம் பு நனைந்துநனைந் தருள முதே நன்னிதியே! ஞான நடத்தரசே! என்னுரிமை நாயகனே யென்று வனந்துவனந் தேத்துதுநாம் வம்மினுலகிய லீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர் புனேந்துரையேன் பொய் புகலேன் சத்தியஞ்சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருண மிதுவே'
என்று உலகோரைப் பார்த்து அழைத்த பெ ரு மா னு ர் தாமே சிற்சபையில் புகுந்து காட்டினர். கடைசி மூன்று மாதம் மோன சமாதியில் இருந்தார். 1874 ஜனவரி முடி வில் பேசத்தொடங்கி அரிய உபதேசங்கள் செ ய் தார். பிறகு சித்தி வளாகத்தில் தமது சிறுகுடிலில் உள்முகப் பட்டு அன்பர்க்கு அருளும் அன்பும் ஆசியுமீந்து,
செத்தாரை யெல்லாந் திரும்ப எழுப்புதலிங் கெத்தால் முடியுமெனி லெம்மவரே - சித்தாம் அருட்பெருஞ் சோதி யதனுன் முடியும் தெருட்பெருஞ் சத்தியமி தே!
என்று அறிவித்தார். சித்தீசுரர் இன்னும் இரண்டரை நாழிகையில் புறப்படுவார் என்று அருளினுர், காலம் தமது உண்மையையறிய இன்னும் கனியவில்லை என்று அறிந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 357
பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன் இச்சையெலா மெய்த விசிைத்தருளிச் செய்தனேயே அச்சமெல்ாந்திர்ந்தே னருளமுத முண்கின்றேன் நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
s
என்று இறுதி
, , யாய் அருளி, ஆனந்தாதீதத்திலிருந்து படுக் கையில் சாய்ந்து கொண்டார். -
。 ' -
அவருடைய உத்தரவுப்படி சித்திவளாகத்து சிறு குடி லினுள்ள்ே அவர் இருந்துகொண்டே வெளிப்பூட்டுப்போட் டுப் பூட்டப் பெற்றது. அறையிற் காற்றுப் போவதற்கும் இடமில்லை. சித்திவளாகத்தைச் சுற்றி அன்பர்களும் அதி காரிகளும் சூழ்ந்திருந்தனர். பின்பு கதவைத் திறந்தார் கள். வள்ளலார் முன்பு கூறியபடியே வெறும் வெளியா கவே இருந்தது. அங்கே ஒரு நித்திய விளக்கு இன்று எரி கிறது. அதுவே அந்த அருட்சோதி வள்ளலை நினைப்பூட்டு கிறது. ஆனல் வள்ளலார் சக்தி உலகெங்கும் நிறைந்துள் ளது! இன்று சமரச சன்மார்க்க வேகம் எங்கும் பரவி உலகத்தையே ஈர்த்துள்ளது. இன்றைய உலகிற்கு வள்ள லாரின் சன்மார்க்கமே பொருத்தமானது.
அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை!
சன்மார்க்கம்
சன்மார்க்கத்தின் வேர் உள்ளத்தூய்மையேயாகும். நல்ல எண்ணம் இருந்தால் போதாது, நல்ல செயலும் வேண்டும். நோக்கம் செயல் இரண்டையும் வைத்தேதான் சன்மார்க்கத் தைத் தீர்மானிக்க முடியும். நோக்கத்தைப்பற்றிச் கந்தேகம் எழுமானல் எது செய்தாலும் தவருகவே தோன்றும் எது சன்மார்க்கத்துக்கும் அறிவுக்கும் முரண்பட்டதோ, அது எவ் வளவு பழமையானதாயிருப்பினும் சாஸ்திரம் என்ற பெயருக்கு உரியதாகாது.
- காந்தி,

Page 5
358 ஆத்மஜோதி
N
அருட்சோதி Qt 6ToTToTT (சுத்தானந்தர்)
தில்லையப்பனே, பொது நடத்தரசே, சிற்சப்ை'முதல் வ்னே, உனது அருட்பெருஞ் சோதியைப் பெற்று, உலகில் உயிராக்கத்தையும், சமரச சன்மார்க்கத்தையும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையையும் நிலைநாட்டவே அருட்பா அருவி யாக வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் உபதேசங்கள் என்து வாழ்வில் ஒளிர்க! வள்ளலார் அருளறிவாளர், முருகனைத் தியானித்து முற்றறிவு பெற்றவர். தில்லையப்பனருளால் அருட்சோதி சக்திபெற்றவர். கடவுட்காதலர். பிறவித்துறவி. கலாம் விளைக்கும் சாதிமத நெறியை ஒழித்து அருட்சோதி நெறியை உலகில் நாட்டவந்த புதுயுகதீர்க்கதரிசியே வள்ள (@)fTs T
சுற்றத்தார் அவருக்குத் திருமணஞ் செய்தனர். பள்ளி யறையில் கிளிபோல இளமனைவி முன்னிற்கிருள். வள்ளலார் என்ன செய்கிருரர்? திருவாசகத்தைப் படித்து, திருவடிபற்றி உருகித் தியானிக்கிருர், இறைவனுடன் உயிர்கலப் பெய்திய ஞானிக்கு உலகந்தரும் ஊன்புணர்ச்சி உவக்காது. அவர் சிந்தை முழுதும் தந்தையானதில்லைச்சித்த சிகாமணியிடமே பதிந்திருந்தது. ‘என்னை விடமாட்டாய். நான் உன்னை விட மாட்டேன்’ என்று இதய நடராஜனன சுத்தனைப் பற்றி உள்ளபடி, உள்ளபொருள், உள்ளவனுய் நிறைந்தார். அந்த நிறைவின் பெருக்கே அருட்பா. அதை அன்று பண்டிதர் இழித்தனர். திருவருளிச்சை நடக்கட்டும் என்றிருந்தார் வள்ளலார். இன்று திருவருட்பா உலக சமய நூல்களில் முன் னணி வகிக்கிறது. எவ்விதமான இடர்க்கட்டையும் இல்லா மல் ஒவ்வொருவரும் அவரவர் ஞானமன்றமான இதயத்தில் நடம்புரியும் இன்பச் சோதியை சுத்தான்மச் சோதியை அருட் பெருஞ் சோதியைக்கூடி உயிரிரக்கங் கொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வள்ளலார் போதித்தார். அதற்கே வடலூரில் சத்தியஞான சபை நிலை நாட்டினர்.
இச் சாதிசமய விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே எவ்வுல குஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும், என்று வள்ள லாருடன் யானும் முறையிடுகின்றேன். உலகில் சுத்தான்ம சமரசத்தை, அருட்சோதியுணர்வை, கருணைவாழ்வை விளக்க அருள் !
 
 

ஆத்மஜோதி
--> (பித்துக்குளி - முருகதாஸ்)
*
அன்பு, தெய்வம், அல்லா, கர்த்தா, சக்தி, ஆத்மா, இயற்கை மற்றும் எப்படிப் பெயரிட்டு வழிபட்டாலும் அப் படி எல்லாம் வந்து அவரவர் வேண்டியதை நிலை அறிந்து அருள் தரும் வடிவம், எது ஆணுலும் அவையனைத்தும் குரு வடிவங்களேயாம். உரு, அரு, உருஅரு இல்லை, உள்ளது, என்று சொல்லி வழிபடும் தன்மைகளெல்லாம் ஒர் உயிர் நிலையில் அஞ்ஞான மெனவே ஒதுக்கும் படியாகும்.
இவ்வதீதமான ஸ்வரூப லக்ஷண ஞானங்களையும் கடத்தி ஆத்ம ஜோதியில் நம்மை நாமுணர்ந்து உணர்ச்சி, உணரப் படுவது உணர்பவன் ஆதியவற்றையும் தாண்டச் செய்து எல்லாம் கடந்த சொல், அல், பகல், வெளி, உள், வரவு, போக்கு:ஆகிய எல்லாம்இறந்தசுத்ததத்துவமாகநம்மைஆக்கு. ஆழக்கருணை கொண்ட பூரணம் கொள்ளும் முதல் சகுண வடிவங்களே தெய்வம், என்று கொண்டாடப் படுகிறது. 'உருவெல்லாம் குரு, அற்றவை பெற்றநிலை பிரும்மம்' என்ற நிலையில் எல்லாம் குருவடிவமேயாம். இவ்வடிவம் உலகையும் மக்களையும் உய்விக்க வேண்டியே வந்தது. என்பதை
“அருவமும் உருவமாகி அனுதியாய் பலவாய் ஒன்ருய் பிரும்ம மாய் நின்ற ஜோதிப் பிழம்பு அது ஒர் மேனியாகிக் கருனே கூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய'
என்று கந்த புராணப்பாடல் சொல்கிறது.
அறிந்தோ அறியாமலோ எப்படியோ செய்து சேர்க்கப் பட்ட வினையால் வந்த தேகத்தை அஞ்ஞான இருளில் கொடிய குணங்களால் ஆன பாபக் குழியில் தள்ளி வீனுக்கு அழித்து இன்பத்திற்குப் பதில், கலப்பற்ற துன்பத்தையே அனுபவிக்கும் கொடுமையை நீக்க வல்லது என்ற கருத்துடன் கூடிய சொல்லே 'குரு' என்பது.
“திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்பும் தடம் புயம் ஆறிரண்டும் மருவடிவான வதனங்களாறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என் உள்ளங்குளிரக் குதிகொண்டவே'

Page 6
360 ஆத்மஜோதி
என்றுமுருகனைப்பாடப் புகுந்த அருணகிரி, குருவடிவுஎன்கிருரர்
இன்பம் அனைவற்கும் வேண்டின் எல்லாம் குருவடிவாகக் காணக்கற்க வேண்டும். படிப்புக்களாலோ, வாதத்தாலோ அனுபவத்தாலோ, ஆர்ப்பாட்ட பூஜாதி கர்மாக்களாலோ காணமுடியாத ஒப்பற்ற தன்மயத் தத்துவத்தை, குருநாதர் தன் அபார கருணையால் இமைக்கும் நேரத்தில் அடையும்படி செய்து விடுவார்.
"அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியன்'
என்ற வாக்கால் பாடி, அக்கியானத்தால் எதிரில் நிற்கும் சற்குருவையும் அவரால் சொல்லிக் காட்டப்படும் தத்துவத் தையும் உணராதுசிற்றறிவின்மூலம் ஏமாராது மெய்தியானம் பெற்று நம்மைத் தடுத்தாள பூரணனே தெய்வங்களான குருவடிவும், ஞானிகளான உலக தேகதாரியான குருவடிவங் களும், என்று அவன் அருள் பெற்றுக் காணவேண்டும். அவன் யார் யார் எதை மறுத்தாலும், வெறுத்தாலும், விரும்பின லும், எப்படிப் பேசினுலும், அவற்றுள் எல்லாம் அவர்கள் பேசுவதற்குத்தக்கவாறு நின்று ஆடல் செய்யும் தன்மையும் அருள் தரும் தன்மையும் அறியலாம். 'நான் நான்' என்று பேசவைத்து கடைசியில் தேகாபிமானதிகளைப் பிரித்து அவன் பேசிவந்த 'நாணி'லேயே தன்னை அவனுக்குக்காட்ட
வல்ல ஞான சக்திதரனன குருவும், மற்ற வடிவங்களான
உலக உயர்வு, தாழ்வுகளும் நீங்கி இன்புறலாம். (தொடரும்)
முருகன் தனி வேல் முனி நம் குருவென்று
அருள் கொண்டு) அறியார் அறியுந்தரமே
உருவன்(று) அருவன்(று) உளதன்(று) இலதன்(று)
இருளன்(று) ஒளியன்(று) என நின்றதுவே (குருபுங்கவன்) என்றபடி எங்கெங்கும் அவன் அருள்மொழி கேட்டு அதையுணர்ந்து,
சரணடைந்தார் செய்குற்றம் சிறிது எண்ணிப்பாரா குரு நாதா, சேவை வேண்டா தன்பு வேண்டும் நாதா காரண நிலை உலக நிலை கடத்தீ என்னை யுன்னுள் பூரண நிலை தனில்வைத்து ஆளும் புண்ய ரூபா
என்றுபாடி நெக்குருகி ஆடும்போது, குருநாதன் வருவான். வந்து, அபிமானத்தால் வளர்க்கப்பட்ட தேகத்தையும்; அறி

ஆத்மஜோதி w 36.
வையும் அன்பாகப்பட்ட குளிர்ந்த ஒளியிலே; ஆனந்தமாக துக்கக் கலப்பின்றி உருகி ஓடச்செய்து எவ்விதமுயற்சியாலும் கைகூடுவதற்கரிதாகவும்; நினைப்பதற்கும் அரிதான ஒர் ஒப் பற்ற உண்மையை அடையத் தருவான்.
எவ்வித எதிர் பார்ப்பு மின்றி எல்லையற்ற அமைதி நிலேயை தந்த தோடன்றி; அதற்கு விரோதமான அக்யான சக்திகள் தோன்றி இடையூறும் செய்யா வண்ணம்.
"இடத்தும் ஒருவலத்து இருபுறத்தும் அருகடுத்து
இரவு பகற் றுணயதாகி”
எல்லாத்திக்குக்கும்; எ ல் லா இடத்துக்கும் தலைவனுன; 'தனியா அதிமோக தயாநிலை"யான அமைதி நிலை நிற்க தானும் காவல் காத்து நிற்பான்; என்னே குருநாதன் கருணை! என்னே அவன் அருட் தன்மை! இனி அவன் அருட் திருவடி யான அன்பை நான் மறவேன்.
"அரசாகி வாழினும் வறுமை கூறினும், நினது
வார்கழ லொழிய மொழியேன்'
'குருநாதா நீ தந்த பேரருள் கனவிலும்
நனவி லும் மறவேன்' - (திருப்புகழ்)
அன்பினு லடியேன் ஆவியோ(டு) ஆக்கையும்
ஆனந்த மாய் கசிந்து ருக என்பர மல்லா இன்னருள் தந்தாய்
யான் இதற்(கு) இலன் ஒர் கைமாறே முன்பு மாய் பின்பும் முழுது மாய்ப் பரந்த
முத்தனே முடிவில்லா முதலே தென் பெருந் துறையாய் சிவபெருமானே
சீருடை சிவபுரத் தரசே'.
யானிதற்கு இலன் ஒர்கைமாறே. திருவடியை இனி விட மாட்டேன் என்று சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதிலேயே வாழ வேண்டும்.

Page 7
362 ஆத்மஜோதி
இப்படி அழியாத அருளை வரையாது தரும் கருணை உருவே குருவடிவு. ஆனந்த நிலையை அவரவர் நிலைக்குத்தக்க படி காட்டிக்கொடுக்கத்தோன்றிய குருமார்களேநம் கண்முன் இருந்த, இருக்கிற இனிவரப் போகிற மனித வடிவு தாங்கிய ஞானிகள்.
'நல்லா ரிணக்கம் நற்குரு வளிக்கும் நற்குரு வடிவம் நல் வடி வளிக்கும் நல்வடி வளிக்கும் நல் நிலை யதனை நல் நிலை யதனில் நாணின்றி வாழ் வாம்'.
ஆகவே குருவடிவே உருவழிபாடுகள் செய்யும் அனைவற்கும் சக்தி; பக்தி; சித்தி முத்தி கொடுக்க வல்லவர்; முதலும்; நடுவும் அந்தமுமாய் நின்ற குருவை வணங்கி அருள் பெறு வதே மனிதப் பிறப்பின் நோக்கம்.
பாபத்தால் சேர்க்கப்பட்ட பொருள்களையுண்டுவளர்ந்து ஏமாற்றுக்களுக்கு இரையாகி துக்கப்படும் நம்மை கரையேற் றத்தோன்றிய மேற்சொன்ன குருவடிவங்களில் ஒன்றுதான் ஆனந்தாஸ்ரமத்தில் ஆனந்தமாக அமைதி நிலையை புன் சிரிப்பாலும் அமுத மொழியாலும் பேசி அருள் தரும் ராம தாசர், ஏழைகளின் சேவை எவ்வளவு இன்பந்தரும் என்பதை எடுத்துக்காட்டும் ராம நகரவாசி. அவர் அனைவற்கும் தரும் தாரகநாம ரசமுண்டு. அழியாஅமைதிபெறுவோம் வாருங்கள் அவர் அருளால் நம்முள் பிரகாசிக்கும் ஆத்மஜோதியால் எங்கும் அமைதியைக்கண்டு இன்புறுவோம் வாருங்கள்!
ஒம் குருநாதா சரணம் சரணம்!
 

ஆத்மஜோதி 363
ஆர்வக் குமுறல்!
- பாலபாரதி -
o
எந்தை இறைவா, எளியேன் உனதடியை சிந்தை இருத்தி தினம் துதிப்ப தெந்நாளோ ? பெல்லா மனக்குரங்கின் புன்மை வெறியடங்கி அல்லும் பகலு முனதடி தொழுவ தெந்நாளோ ?
நாய்போல் உழன்று நலியும் சிறு மனத் தேன், தூய நின் பொற்பாதம் தொழுதழுவ தெந்நாளோ? வஞ்ச மன இருளின் மாசொழிந்து நின்னருட்டேன் நெஞ்சம் அருந்தி நிலைத்திருப்ப தெந்நாளோ ?
பாச விருள் கடிந்து, பற்றறுத்து, மெய்ஞ்ஞான வாசமலர்த் தேனே உளம் வாரியுண்ப தெந்நாளோ ?
3.
மாயா உலக மயக் கொழிந்து மெய்ஞ்ஞான தூய பெருவாழ்வில் உளம் தோயந்திருப்ப தெந்நாளோ?
e
புழுக்கு முடலின் பொய் மயக்க மாசறுத் துன் செழுக்கமலச் சேவடியைச் சிந்தைசெய்வ தெந்நாளோ ? கடைக்கண் சுழலில் உயர் கருத்தைக் கெடுத் தழிக்கும் மடக் கொடியர் மையல் விழா வாழ்வுபெறும் நாளேதோ? பொன் மயக்கும் பெண்மயக்கும் போதை தரும் கண் மயக்கும் மண் மயக்கும் நீங்கி உளம் மகிழ்வடைவ தெந்நாளோ?
முற்றும் துறந்த முனிவர் திருப்பாதம் பற்றி நிற்க நின்னருள்தான் பாலிப்ப தெந்நாளோ ?
அன்பர் உறவும் அடியார் பணிநலமும் இன்பம் எனக் கண்டு இருக்குநா ளெந்நாளோ ?
துன்பம் கடந்த துரிய பெரு மோனத்தில் இன்பத் தேன் உண்டு இருக்குநா ளெந்நாளோ ?
சுத்தசிவ ஞான சோதியருட் கடலில் சித்தம் கலந்து திளைத்திருப்ப தெந்நாளோ ?
பூரணத்தில் பூரணமாய் பூரணத்தேன் யானருந்தி பூரணத்தில் நெஞ்சம் பொருந்தி நிற்ப தெந்நாளோ ?

Page 8
364 ஆத்மஜோதி யோகமும் ஞானமும் சமாதிக்கே
- வருணு னந்தா -
மனதைப் பரம்பொருளோடு ஐக்கியப்படுத்தி நிறுத்து கின்ற நிலையே சமாதியெனப்படும். இஃது அஷ்டாங்கயோகத் தின் கடைசி அங்கமாக விளங்குகின்றது. யோகத்தால் ஞான மும் ஞானத்தால் முக்தியும் அடைவதே யோகநூலார் குறிக் கின்ற நெறிவழியாம். 'குறியைக் குறியாது குறித்தறியும் நெறியில்’ மனதை லயிக்கச்செய்வது யோகத்தாலா அன்றி ஞானத்தாலா என ஒரு வின எழலாம்.
1 அஷ்டாங்க யோகமெனப்படும் ஹடயோக சாதனங் களால் அபாயமே ஏற்படும் என்றும் பிராணுயாமத்தால் வாயுவைக் கும்பகம் செய்து மனதை அகமுகப் படுத்துவது பகீரதப்பிரயத்தனம் என்றும் சிலர் செப்புதற்கு முன்வர லாம். அன்னவர்கள் யோக விக்கினர்களாகக் கருதப்படும் மண், பெண், பொன் ஆய மற்றும் பலப்பல ஆசைகளை முற்றிலும் துறந்துவிடாதவர்களாயிருப்பினும் ஞானத் தையே மோட்சத்தை அடைதற்கு முக்கிய காரணமாகக் கருதுவா . -
பரகதியடைதற்பொருட்டு ஏற்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய லெளகீக சாதனங்களுள் ஞானமே முக்கிய சாதனமாகக் கருதப் படுகின்றது. இவை நான்கும் ஒன்றிற்கொன்று இன்றியமையாதன. அதாவது ஒன்றின்றேல் மற்றது இல்லை. இந்த நான்கு சாதனங்களையும் முறைப்படி எவரொருவர் கடைப்பிடித்துவருகிருரோ அவர் பரகதியடை தற்குப் பக்குவமுடையவராகின்ருர், மொத்தத்தில் இருதரப் பினரும்ஞானத்தையே சிறந்த சாதனமெனக்கருதுகின்றனர்.
மக்கள் கடைத்தேறும் பொருட்டு கண்ணபரமாத்மா அருளிய ஞான, கர்ம, பக்தி ஆகிய மோட்ச சாதனங்களை கீதையிற் காணலாம். கர்மயோகமும் பக்தியோகமும், ஞான யோகத்தின் அங்கங்களாகவே அமையப்பெற்று ஞானத்தினை அருளித்து முக்தி தருவனவாம். அதனுலேயே சரியை, கிரியை யோகம், ஞானம் எனச்சைவநுால் வகுத்துக் கூறிற்று. எனவே யோகமும் ஞானத்தின் அங்கமாகவே கொள்ளத்தகும். நிச்
 

ஆத்மஜோதி 365
சலமாகிய மெஞ்ஞானத்தினைப் பெறுகிறவரைக்கும் ஞானத் தின் அங்கமாகிய யோகம் அவசியம் தேவைப் படுகிறது. பரகதி அடைதற்கு யோகம் ஒன்றே ஆயதென யோகநூல் எவ்விடத்தும் செப்பவில்லை. பிராணுயாமத்தால் வாயுவைக் கும்பகம் செய்து சித்தத்தை நிலைக்கப்பண்ணி ஞானத்தால் முக்திபெறுவதுபற்றியே யோகநூல் விரித்துக்கூறுகின்றது. யோகத்தையும் விட்டுவிட வேண்டிய காரணம் பற்றியே யோகக்கழற்றியென ஒழிவிலொடுக்கம் கூறியது. யோகத்தால் ஞானம் பெறுகின்ற நிலையில் யோகம் விடப்படுகின்றது. சித்தம் நிலைத்து நிற்பதுவே ஞானம், ஞானத்தின்வாயிலாக முக்தியடைவது சாத்தியமாகின்றது.
அஷ்டாங்க யோகத்தின் இயம, நியமாதிகளில்; கர்ம யோகமும், பக்தியோகமும் அடங்கிவிடுகின்றன. ஆசை அகல் தற்பொருட்டே கர்மயோகம் சாதிக்கப்படுகிறது. சாதனைத் தூய்மையால் கர்மயோக சாதகன் சகலசித்திகளையும் நிச்சயம் அடைவான். 'கன்மத்தால் ஞானம் உண்டாம்' என்ற மொழி இவ்வுண்மையினை நன்கு உணர்த்துகின்றது.
கர்மயோகத்தில் காமிய, நிஷ்காமிய என இரு பிரிவுகள் உள. ஏதாகிலும் ஒர் தேவையை உத்தேசித்து செய்யப்படு கின்ற கர்மம் காமியகர்மம் எனப்படும். இந்தகர்மத்தில் உத் தேசிக்கப்பட்டதே கொடுக்கப்பட்டு முடிவடைகிறது. முதற் கண்ணே முற்றிலும் மனஓழிவினை உண்டாக்கி மோட்ச காரணமாகிய ஞானத்தை நல்குகின்ற கர்மமே நிஷ்காமிய கர்மம் எனப்படும்.
கண்ணபிரான் அர்ஜூனனநோக்கி ஏ அர்ஜ"னு! வைதிக கன்மங்களைச்செய்; அதன் பலனை எனக்கு அர்ப்பணம் செய்து விடு’ எனக்கூறினர். ஆங்கு "கர்மதியாகம்' உணர்த்தப் படுகின்றது. அதாவது கர்மத்தை விடுதல் கர்மத்தை விடுத லென்ருல் செய்தகர்மபலனைத் தான் விரும்பாவண்ணம் மன ஒழிவோடு ஈசுவரார்ப்பணம் செய்வதேயாகும்.
சரியை, கிரியைக்குள் இயமநியமங்களும், கன்ம பக்தி களும் அடங்குகின்றன. எனவே, இயமம், நியமம், சரியை, கிரியை கர்மம், பக்தி அனைத்தும் ஒன்றேயாம்.

Page 9
366 ஆத்மஜோதி
மேலும் ஸ்மிருதிநூல்கள் கர் மத்தினை கிருச்சிரம், சாந்தி ராயணம் முதலிய விரதங்களால் விளக்குகின்றன. மேற்படி விரதங்களால் மானுடசரீரம் உலர்த்தப்படுகின்ற நிலையே தபசு எனப்படுகிறது. தபிக்கப்பட்ட சரீரம் நிர்மலமாகின்றது நிர்மலமான சித்தத்தில் நிஷ்களங்கமான தெய்வதம் ஒளி வீசும். அப்பேரொளியினை சிரவன; மனன தியானங்களால் வழிபட்டுநிற்பதே பக்தியாகும். பக்தியை நன்கு விளக்கும் வேதாந்த சித்தாந்த நூல்களைக் கற்றும் ஸ்துதிப்பாடல்களைக் கேட்டும் வழிபடுவது சிரவணமாகும். கற்றுணர்ந்தவற்றை சிந்தித்துத் தெளிதல் மனனமாகும்.
தெளிவடைந்த பின்னர் தெளிவான மெய்ப் பொருளின் கண் இடையருது மனதைச் செலுத்தி அப்பொருளையே நினைத்துக் கொண்டிருப்பது தியானம் எனப்படும். சமாதி யென்னும் உயரிய நிலைக்குக் காரணமாயமைவது இத்தியா னமேயாகும். சகுணப் பிரம்மத்தினை சதா தியானிப்பதனல் மனமானது கரைந்து உருகி அதனேடு ஒன்றிக்கலந்து விடு கிறது. அப்படிக் கலந்த பின்னர் தியானிக்கப்பட்ட சகுணப் பிரம்மமே நிர்குணப்பிரம்மமாக வடிவெடுக்கின்றது. அது வேமெய்ஞ்ஞான மெனப்பெறும். முக்திநிலையும் அதுவேயாம். யோகத்தால் மனம் அடங்குகின்றநிலையே ஞானமாகி ஈற் றில் சமாதி என்னும் முக்தி நிலையெய்துகிறது.
மனம் அடங்க வேண்டுமானுல் பஞ்சேந்திரியங்களும் அடங்கவேண்டும். இவற்றுள் காட்சிவிரும்பும் கண்ணையும், சுவையை நாடும் நாவையும், அடக்கிவிடின் ஏனையவை அடங் குதல் சுலபமாகும். அனைத்தும் அடங்குங்கால் மனமானது உபாசிக்கப்படும் சகுணப்பரம்பொருளின்கண் லயித்து நிற்க கருவிகரணங்களெல்லாம் ஸ்தம்பித்துப் போய் விடுகின்றன. அவ்வேளை வாயுவானது ஒடுங்கி பிரமரந்திரமார்க்கத்தை அடைகின்றது. அதுவே சமாதி. அதுவே முக்தி, அதுவே மோட்சம். யோகமும் ஞானமும் சமாதிக்கே ஒம் தத் சத்.

ஆத்மஜோதி 367 சிவானந்த அவதாரம்
(பூனிமதி சிவான்ந்த சந்தானம்மையார், தெய்வநெறிக் கழகம்-மதுரை,)
'யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தான மதர்மஸ்ய ததாத் மானம் ஸ்ருஜாம் யஹம்' பரித் ராணுய ஸாதூனும் விசைாய சதுஷ்க்ருதாம் 1,1 ܙܠ ܐ தர்ம ஸமஸ்தாபனுர்த்தாய ஸம்பவாமி யுகே யுகே'
'பாரதா! அறம் அழிந்து மறம் மேலோங்கும் பொழு தெல்லாம்; நல்லாரைக் காப்பதற்கும்; கெட்டவரைக் கரந் தொடுக்குவதற்கும்; தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் நான் அவதரிக்கிறேன்' என்கிருர் பூரீ கிருஷ்ண பரமாத்மா.
தனி ஒருவன் முன்னேற வீடு முன்னேறுகிறது. வீடு முன் னேற சமூகமும் நாடும் மேல்நிலை அடைகின்றன. இங்ங்னம் சமூக நலனுக்குத்துணைபுரியும் செயல்களெல்லாம் தர்மங்களா கின்றன. தடைப்படுத்துவன அதர்மங்களாகின்றன.அதர்மம் மேலோங்கி சீர்குலைவு ஏற்படுத்தும் நெருக்கடிகளிலெல்லாம் இறைவன் அவதரித்து வரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ரஜோகுணமும், தமோகுணமும் அதிகரிப்பதால் ஏற்படும் அதர்மங்களைக் குறைத்து ஸத்வகுணத்தால் ஏற்படும் தர்மங் களை அதிகப்படுத்தும் செயலை செய்கிருர் அவதார புருஷர். அவதார புருஷர் இறைவனல் அனுப்பப்படும் மானுடதூதர். அவர்கள் திவ்விய குணங்களுடனும் தெய்வீக சக்திகளுடனும் மண்ணுலகில் அவதரிக்கின்றனர். அவர்களிடத்திருந்து அருள் வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்பத்திலாழ்த்துகிறது.
மாண்புறு இமாலயம் தூய வெண்சுடலைப்பொடி பூசி இடுகாட்டில் நர்த்தனம் ஆடும் சித் அம்பர நாதன், சிவனுகிய தியாகேசன் என கம்பீரமாய் நிற்கிறது. அதன் அடிவாரத்தில் புனித அன்னை பதிதபவானி கங்கையின் தீரத்தில்ரிஷிகேசம். இந்திரியங்களையும் மனதையும் அடக்கிய ரிஷி புங்கவர்கள் தவம் செய்யும் தபோபூமி அது. அங்கே சிவானந்த ஆசிரமம். சத்குரு சிவானந்த சுவாமி இமய ஜோதியாய்; விண்சுடராய் ஒளிவீசி உலகிற்கெல்லாம் தெய்வநெறிப் பாதையை விளக்கு கிருர்,

Page 10
36s ஆத்மஜோதி
1887ஆம் ஆண்டு செப்டம்பர் 8 இலே தாமிரவருணிக் கரையோரத்திலே, பத்தமடையிலே அவதரித்த குருநாதரின் 79ஆவது ஜயந்தி விழா; சிவானந்த நகரில் தவசிரேஷ்டர் களும்; அரசன் முதல் ஆண்டி வரை உள்ள உன்னத பக்தர் களும்; கொண்டாடி குருதேவரை அவர் அருளிற்காக வழி படுகின்றனர். அங்கே மாத்திரமல்ல; உலகெங்கும் உள்ள: குருதேவரின் சிஷ்யர்களும்; பக்தர்களும் புனிதரின் ஜயந்தி யைக் கொண்டாடுகின்றனர்.
ப்ரம்ம முஹாசர்த்தத்தில்வேதபாராயணமும்நாமசங்கீர்த் தனமும் முழங்கி நாவையும் செவியையும் உள்ளத்தையும் சுற்றுமுள்ள வெளியையும் புனிதப்படுத்துகின்றது. ரிஷிமுனி வர்கள் தியானத்தில் ஆத்மானந்தத்தைப் பருகியவர்களாய் தூய எண்ணங்களை எங்கும் வியாபிக்கச்செய்து அமைதியைப் பரப்புகின்றனர். இதுமாத்திரமோ! நாள்முழுவதும் பல்வேறு உபாசனைகளும் வழிபாடுகளும் நடக்கின்றன.
இவ்வாருக வெல்லாம் உத்தமராம் குருதேவர் ஜெயந்தி யைக் கொண்டாடும் நாம்; இவ்வாறு கொண்டாடுவதின்
நோக்கத்தைச் சிறிது சிந்திப்போம்.
அங்கிங்கெளுதபடி எங்கும் ஒளியாய் சிவானந்த முழு முதலாகிய அந்தப் பரம்பொருள் பவக்கடலில் வீழ்ந்து அக் ஞானத்தின் காரணமாய் அதனின்று மீளும்வகையறியாது தத்தளிக்கும் ஜீவர்களை கைகொடுத்து தூக்கிவிட மனித உடல் தாங்கி இப்பூவுலகில் குருவாய் அவதரிக்கின்றர்.
'நீரே விஷ்ணு, நீரே பிரம்மா, நீரே மஹேஸ்வரன். ஸக்தி ஸ்வரூபம் நீரே. நிர்குண ப்ரம்மம் நீரே என சிவன் குருகீதையை பார்வதி தேவிக்கு உபதேசிக்கும் பொழுது குருவைப்பற்றி விளக்குகிருர் நோக்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் இல்லாமல் நிறைந்த பரிபூரணம் அந்த ஆத்ம ஸ்வரூ பம். சித் அம்பரமாகிய அது தன்னை ஒரு உடலுக்குள் கட்டுப் பட்டது போன்று குருவாய் தோன்றுகின்றது. உண்மையில் என்றும் உள்ள சத்திய வஸ்துவாகிய குரு பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை. அந்த ஸ்த்தியமாம் ஆத்மனைச் சாக்ஷாத் கரிப்பதுவே-அதாவது அஹம் ப்ரம்மாஸ்மி எனஅறிவதுவே குருதேவர் ஜயந்தியைக் கொண்டாடியது ஆகும். அந்த மேலான நிலையை அடைய ஒவ்வொருவரும் அதற்கான நெறி யில் நடக்க வேண்டும். நெறியில் செல்லாது குறியை அடைய இயலாது. -

ஆத்மஜோதி 369
'கர்ணதாரம் குரும் ப்ராப்ய தத் வாக்யம் பல்வத் த்ருடம் அப்யாஸ் வா ஸசைக்தியா தரந்தி பவ ஸாகரம்' , !
*குருவின் வாக்கியமாகிய பலம் பொருந்திய படகில் உட்கார்ந்து, அப்யாஸ்மாகிய காற்றின் உதவியாலும், பூர்வ சம்ஸ்காரத்தின் வலிவாலும் மக்கள் ஸம்ஸார சமுத்திரத்தைக் கடக்கின்றனர்' என்பதாக சிவபெருமான் திருவாய் மலர்ந் தருளுகிருர் பார்வதி அன்னையிடம்.
தூய வெண்பனியால் மூடப்பட்டு வானளாவ உயர்ந்து; புனிதத்துவத்தின் சிகரமாய் விளங்கும் இமயமலை போன்ற சிறந்த, பரிசுத்தமான திடமான எண்ணங்களால் மனதை நிரப்ப வேண்டும். இனி ஜடம்-சேதனம், சரம்-அசரம், ஆகிய அனைத்திடத்தும் பாபிகளேயும் புண்ணிய வானக்கும் அன்புப் பெருக்காகிய ஜீவநதி கங்கையை பிரவஹிக்கச் செய்தல் வேண்டும். அந்த அன்புவெள்ளத்தின் ஒரத்தில் இந்திரியங்களை அதன் விஷயங்களிடமிருந்து பிரித்து தன் வசப்படுத்தி; ஜிதேந்திரியய்ை, ரிஷிகேசனய் வீற்றிருந்து, குருதேவரின் Gig 60TLDITSuu Enquire who an 1, know the Self and be free' 'நான் யாரெனும் ஆத்ம விசாரம் செய் தன்னை உணர்ந்து முக்தி பெறு' என்பதற்கிணங்க இடையருத ஆத்மானு சந் தானம் பண்ணி வருகையில் திருவருளாம் குருவருளால், தொண்டு,அன்பு, தானம் ஆகியவற்ருல் பரிசுத்தமாகப்பட்ட உள்ளமாகிய சிவானந்த சிரமத்தில் பேரறிவாய் சிவானந்தம் தன்னைத் தோற்றி அருளுகிறது. ஜீவபோதத்தை இழந்து விடுகிற பக்தன்,
* அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சின் மாவதாரும் அறிகிலஈர் அன்பே சிவ மாவதாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'
என்ற திருமூலரின் திருமந்திரத்திற் கொப்பதானே அதுவாய் சிவானந்தத்தில் திளைக்கிருன்.
பற்றதனை நீத்து பரமனப்பற்ற, அன்போடுருகிக், கசிந்து கண்ணிர் மல்கி, அவனை உள்ளத்தே காண பேரார்வமுடன் கூடிய ஈர நெஞ்சினனுய் அவன் இணையடி வாழ்ந்த, கருணை
வள்ளலான சிவானந்த குருவின் அருள் அனுக்கிரஹிப்பதாக என அவர் திருவடிகளை இறைஞ்சுவோம். சத்குருவை
தியானம் செய்து அவரைச் சரணடைவோம்!

Page 11
370 ஆத்மஜோதி
ஓம் என்ற மந்திரத்தின் உட்பொருள்
(மாத்தளை - அருணேசர்)
ஓம் என்ற மந்திரச்சொல் மிகவும் மகிமைபொருந்தியது; அது மகா புனிதமானது; என்றும் எக்காலமும் அழிவில்லாப் பொருளை உடையது. அதில் எல்லாவிதப்பொருள்களும்நிறைந் துள்ளன. இம்மந்திரமானது சர்வ நாமரூபகர்மாக்களினுல்சம் சாரமாகிய சகல பிரபஞ்சத்தையும் சேர்த்துக் காட்டுகிறது.
ஆகவே, ஒங்காரத்தில் வியக்தமான மூன்று எழுத்துக் களும் சர்வப் பிரபஞ்சத்திற்கு அதீதமாயும், எள்ளுக்குள் எண்ணெய் போலவும், தயிரில் நெய் போலவும், நெருப்பில் சூடு போலவும் இருந்து; வானத்தில் ஏகமாயும் சர்வ வியா பியாயும், ஒன்றிலும் ஒட்டாததாயும், அகண்டனயும், நிர்மலனயும், சர்வத்திற்கும் ஆதாரமாயும், அப்பிரமேயமா யும், சர்வ சுரூபியாயும்; சர்வ சாட்சியாயும்; நித்திய சுத்த நித்திய புக்த நித்திய முக்த சொரூபனுயும்; சிதாகாசனுயும் இருக்கும் ஆத்மா அல்லது பிரமத்தை உணர்த்துகின்றது. இந்த மகா மந்திரத்திற்குள் சகலமும் அடக்கமாயுள்ள விதம் எப்படியென்று ஜீவப் பிரம்மைக்கிய வேதாந்த ரகஸியத்தில் விளக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஒம் என்பது; ●十@十ü என்ற மூன்றெழுத்துக்களால் ஆனது. அம் மூன்றெழுத்துக்களுக்குள் அடங்கியுள்ள முப்
பொருள் தத்துவங்கள் பின்வரும் விதம் அமைந்துள்ளன:
1. அ-சூரியன்: உ-சந்திரன்; ம் அக்கினி, அதாவது எல்லாப் பிரகாசமுள்ள பொருள்களின் சொரூபம்,
2. அ-தூலம்; உ-சூக்குமம்; ம்-காரணம். அதாவது துரல,குக்கும, காரண சரீரம், மூன்றையும் குறிப்பிடுகின்றது.
3. அ-பெண் ; உ-ஆண்; பம்-அலி. அதாவது-லிங்க சமஷ்டி,
4. அ-ரிக்வேதம் உ-யஜுர்வேதம்; ம்-சாமவேதம், அதாவது-சர்வ வேதங்களின் சாரம்,

ஆத்மஜோதி 371.
5. அ-ஹரஸ்வம் உ-தீர்க்கம்; ம்- பலுதம், அதாவது மூன்றுவித ஸ்வரங்களின் கூட்டம்.
6. அ- பாதம்; உ-நாபி, ம்- சிரசு. அதாவது-சர்வ அவயவங்களோடு கூடிய தேகவிசித்திரத்தைப் போதிக்கிறது.
7. அ-புத்தி; உ-மனது; ம்-அகங்காரம். அதாவது சர்வேந்திரிய சமஷ்டி.
8. அ-ரஜோ குணம்: உ-சத்வ குணம்; ம்-தமோ குணம். அதாவது-சகல குனபேதங்களுக்கும் ஆதாரமாயுள்ள
DI TÖ) U/.
9. அ-சிவப்பு நிறம் உ-கபில நிறம், ம்-கறுப்பு நிறம். அதாவது-சர்வ வர்ணங்களின் பேதம்.
10. அ-பூரகம் உ-கும்பகம்; ம்-இரேசகம். அதா வது-பிராணுயாம யோகாப்பியாசம்.
11. அ-நாதம்; உ-பிந்து; ம்-களை. அதாவது-நாத பிந்துக்களின் சமஷ்டி.
12. அ-கிரியா சக்தி; உ-இச்சா சக்தி; ம் -ஞான சக்தி, அதாவது-மூன்றுவித சக்தி ரூபம்.
13, அ-சென்ற காலம் உ-நிகழ் காலம்; ம்-எதிர் காலம். அதாவது முக்காலங்களையும் காட்டுவது.
14. அ-ஜாக்கிரதாவஸ்தையில் சர்வ வெளிப் பிரபஞ் சப் பொருட்களையும் அநுபவிக்கிற ஸ்தூலாபிமானியான விசுவன் எனப்படும் ஜீவ பேதம் உ-சொப்பனவஸ்தையில் சர்வ பாஹ்ய வஸ்து வாசனுமயமான மானஸப் பிரபஞ்ச வஸ்துக்களை அநுபவிக்கும் லிங்காபிமானியான தைஜஸ் ஜீவன்; ம்-சுழுத்தியாவஸ்தையில் எவ்விதமான பிரபஞ் சானுபவ மின்றி பரமாத்மாவோடு ஐக்கியமாகும் காரணுபி
鞑
மானியான பிராஞ்ஞன் என்ற ஜீவன்.
15. அ-சத்தியார்த்தத்தில் சாட்சி சொ ரூ ப ஞ ன ஜீவாத்மா உ-அந்தராத்மா, ம்-கூடஸ்தன். அதாவது

Page 12
372 ஆத்மஜோதி
ஜாக்கிர ஸ்வப்பன கழுத்தி அவஸ்தைகளில் சிதாகாய ஜீவ
ஞன பிரதிபிம்ப ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறது.
16. அ-அதி தைவத்தில் (அண்டத்தில்) ஜாக்ரத பிர பஞ்சத்திற்கு அதிபதியாகிய ஸ்தூலாபிமானியான விராட் புருடன்; உ-லிங்க சரீராபிமானியான இரண்யகர்ப்பன்; ம்-காரண சரீராபிமானியான ஈசுவரன். அதாவது-சர்வ காரியப் பிரமத்தையும் காண்பிக்கிறது.
1 7. அ-பிரம்மா:உ-விஷ்ணும்--ருத்திரன். அதாவது மும்மூர்த்தி சொரூபம்.
18. அ-வசுக்கள்; உ-ருத்திரர்கள்; ம்-ஆதித்தியர் கள். அதாவது-சகல தேவர் கூட்டங்களும் ஓம் மயமாகவே இருக்கின்றன.
இத்தகைய பல தத்துவப் பொருள்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மகாமகிமை பொருந்திய ஒம் என்னும் மந் திராட்சரத்தை முக்கரண சுத்தியுடன் வேத நூற்களில் விதித் துள்ளபடி ஜபித்து வருபவர்களுக்குச் சகல போகபாக்கியமும் எளிதில் வந்தடையும் என்பது அநுபவ ஞானிகளின் திரு வாககு.
ஓம் தத் சத்.
பணத்தைவிட அறிவே உயர்ந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். அதுபோலவே அறிவை விட ஒழுக்கமே உயர்ந்தது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் ஒழுக் கத்தைப் புத்தகங்களிலிருந்து கற்றுக் கொடுக்க முடியாது. தங்களுடைய நடையிலிருந்தே தான் கற்றுக் கொடுக்க முடியும்,
காந்தி.

ஆத்மஜோதி 373 இராமலிங்க சுவாமிகள் ஒரு சீர்திருத்தவாதி -( சாமிசிதம் பரஞர் )-
இராமலிங்க அடிகளைத் தமிழர்கள் ஒரு அவதார புரு ஷராகவே நினைக்கின்றனர். ஒரு தீர்க்கதரிசியாகப் போற்று கின்றனர். அவருக்குப் பல இடங்களிலே கோவில்கள்; பல இடங்களிலே உருவச்சிலைகள்; பல இடங்களிலே பஜனை மடங்கள்; பல இடங்களிலே அவர் படத்திற்குக் கற்பூர தீபாராதனைகள் பூஜை நைவேத்தியங்கள். அவர் பெய ரால் பல சங்கங்கள். பல புத்தக சாலைகள், பல வியாபாரஸ் தலங்கள் இன்று விளங்குகின்றன.
ஆண்டாண்டுதோறும் வடலூருக்குச் செல்லும் அடி யார்களின் கூட்டம் வளர்ந்து வருகின்றது. அவருடைய அருட்பாவைப் பாராயணம் செய்வோர் பெருகி வருகின் றனர். எங்கும் அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! என்ற முழக்கம் கேட்கின்றது.
சாதிவெறிகொண்டவர்கள் பலர்; சமயவெறிகொண் டவர்கள் பலர் ஆசார வெறி பிடித்தவர்கள் பலர்; வகுப்பு வாதம் பேசும் அரசியல்வாதிகள் பலர்; பொதுமக்களி டம் ஏமாற்றிப் பொருள் பறிப்போர் பலர்; தமது கட மையை மறந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பலர் உழைப்பவர்களிடம் கருணைகாட்டாத வர்கள் பலர் - இன்று இராமலிங்க சுவாமிகளின் பக்தர்க ளாக விளங்குகின்றனர்.
இராமலிங்கர் தன்னையாரும் வணங்கவேண்டும் என்று விரும்பவே இல்லை. தன்னை இராமலிங்க சுவாமிகள் என்று அழைப்பதைக்கூட அவர் வெறுத்தார். அவரைத் தெய்வ மாகக் கொண்டாடுவதை அவர் வெறுத்தார். அவரைத் தெய்வம் என்று கூறி வணங்கிய-மக்களின் அறியாமைக்காக அவர் பரிதாபப்பட்டார்.

Page 13
I 374, 。” ஆத்மஜோதி
உலகம் எல்லாம் அவரைப் பெரியவர் என்று கொண் டாட வேண்டும் என்ற ஆசையும் அவருக்கில்லை. அவர் தன் னைச் சாதாரண மனிதராகக் கருதவேண்டும் என்பதே அவரு டைய ஆசை. அவருடைய வாசகமே இவற்றைக் காட்டு
கின்றன.
'இராமலிங்க சுவாமி என்று வழங்குவிப்பது என் சம்மதம் அன்று, என்ன? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலின், இனிஅங்ங்னம் வழங்காமை வேண்டும். தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் எனச் சுற்றுகிருர் கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததனலேயல்லவா நம்மைச் சுற்று கிருர்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்; இருக்கின்றேன்; இருப்பேன். உலகெலாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசையில்லை.'
இவைகள் அவராலேயே சொல்லப்பட்டவை. சாதா ரண மனிதர்களும் கூட இந்தக் காலத்தில் தம்மைப் பலர் போற்றுவதையும், புகழ்வதையும் விரும்புகின்றனர். இதற் காகவே தம்முடைய கைப்பணத்தைச் செலவு செய்வோர்கள் கூடச் சிலர் உண்டு. பொது வாழ்விலே ஈடுபட்ட பலரிடம் இக்குணம்தான் குடிகொண்டிருக்கிறது.
ஆணுல் இராமலிங்கர் தன்னைத் தெய்வமாகக் கொண் டாடுவதை வெறுத்ததற்கு ஒரு உண்மைக் காரணம் உண்டு. உலகத்தைச் சீர்திருத்தவேண்டும்; மக்களைச் சீர்திருத்த வேண்டும்; மக்கள் சமுதாய அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்ற எவனும் தற்புகழ்ச்சிக்கு ஆசைப்படமாட்டான்; தன்னை மற்றமக்கள் வணங்கவேண் டும், புகழவேண்டும் என்றுஎண்ணமாட்டான். மற்ற மக்க ளுடன் சமமாக ஒன்றுபட்டதோழமை கொண்டு வாழவேண் டும் என்றே நினைப்பான். மற்றமக்களும் தன்னைத் தங்களு டைய தலைவனுக எண்ணுமல் கூட்டாளியாக தோழனுக எண்ண வேண்டும் என்றே ஆசைப்படுவான். இதுவே உண் மையான சீர்திருத்தவாதியின் இயல்பு, புரட்சிக்காரனு டைய தன்மை.

ஆத்மஜோதி 375
சக்தி துதி!
(சங்கீதபூஷணம்- அ. கி. ஏரம்பமூர்த்தி)
இராகம் மோகனம். ஸ்ரிக பதஸா 28வது மேளகர்த் தாளம்: ஆதி ஸ்தபகரிலா தாவிற் பிறந்தது.
சித்தியெல்லாமருள் ஆதி சக்தி
சிவன் பாகத்திலமரும் தூய சக்தி
அநுபல்லவி
வித்தை யாவற்றிலும் வீர சக்தி
விளங்க எனக்கருள்வாய் விமலசக்தி (சக்தி)
சரனங்கள்
சத்திய ரூபியே சுத்த சக்தி
செகத்தினை யாண்டிடும் சீவசக்தி
உத்தமர் உளத்தினில் உறையும் சக்தி
உன்னடி நம்பினேன் உமையே சக்தி (சித்தி)
நித்தியப் பொருள் உலகில் நீயே சக்தி
நினைத்தவை முடித்திட உதவு சக்தி
எத்தனே பிறவிகள் தரினும் சக்தி
எந்தனைப் பிரியா திருப்பாய் சக்தி (சித்தி)
முன்பக்கத் தொடர்ச்சி.
மக்கள் ஒரு சீர்திருத்தக்காரனைத் தெய்வமாக அல்லது அவதார புருஷனுகக் கொண்டாடத் தொடங்கி விட்டார்க
ளானல் வந்தது ஆபத்து. அன்றே அவனுடைய கொள்கை
களுக்கு மக்கள் குழிதோண்டி விட்டவர்கள் ஆவார்கள்,

Page 14
376 ஆத்மஜோதி
வினை அறுக்கும் விநாயகன்
一圣砂婆G一一三》豪G一
விநாயகன் என்பது தனக்கு மேற்பட்ட தலைவன் இல்லை என்ற பொருளாகிறது. நாம் எத்தொழிலைத் தொடங்கும் போதும், வேறு இடத்திற்குப் பிரயாணம் செய்யும் போதும் விநாயகனைத் தொழுது தொடங்குவதனல் அது விக்கின மில்லாது நடைபெற்று விடுகிறது.
விநாயகனுக்கு ஐங்கரன் விக்கினேஸ்வரன் ஆனைமுகன் என்று எத்தனையோ நாமங்கள் உண்டு. உலகத்தில் உள்ள உயிர்கள் யாவற்றிலும், பெலமும், கெம்பீரமும், தோற்ற மும் உடையது யானை, அ த னை எத்தகையோராலும் எதிர்த்து வெற்றிகொள்ள இயலாத ஆற்றல் படைத்தது. பூவுலகில் வாழும் ஜீவன் இத்தகைய மகிமையடைந்திருக் கும் போது, யாவராலும் மேலான தெய்வமாகப் போற் றப்படும் ஆனைமுகனின் தன்மையைச் சொல்லவும் இயலு மா? பவச் சேற்றிலே மயங்கி மாழும் உயிர்களைத் தனது துதிக்கையினல் இழுத்து இன்பமான உயர் நிலையில் சேர்த் துவிடுகிறது. w
* மாற்றம் மனம் களிய நின்றனே' என்கிருர் மணி வாசகப் பெருந்தகை மனதைக்கடந்து நிற்பது உண்மைப் பொருள். மனதைக்கடந்து செல்பவனே கடவுளை அறிய முடியும். மக்கள் சுதந்தரமாக முயன்றும் பயனில்லை என் பதை உணர்ந்து, கடைசியில் 'எல்லாம் அவன் அருள்' அவனருளாலே அவன்தாள் வணங்கவேண்டுமென்று அநுபr வத்தால் அறிந்தபின்பே தமக்கு அருள்புரியவேண்டுமென்று, அறிவுக்கடவுளாகிய ஐங்கரனை வேண்டிக்கொள்ளுகிருர்கள்
விநாயகர் சிறு எலியை வாகனமாகக் கொண்டிருக்கி ருர், ஆனையைப் போன்ற உருவத்தை இந்தச் சிறிய எலி எப்படித்தாங்கிக்கொள்கிறது என்று நாம் யோசிக்கிருேம். சிறிய உயிர் பெரிய உயிர் என்று இறைவனுக்குப் பேதமி ல்லை என்பதும் அடியார்க்கு எளியவன் என்பதைப் புலப் படுத்தவே பகவான் எலியை வாகனமாகக் கொண்டிருக் கிருர் என்பது விளங்குகிறது.
 

ஆத்மஜோதி 377
மற்றய தெய்வங்களெல்லாவற்றையும் பெரிய பெரிய கோயில்களில் சென்று வணங்குகிருேம். ஆனல் விநாயகரோ தப்பித்தவறி மறந்துவிடக் கூடாது என்பதற்காக மூலை முடுக்கு சந்து பொந்து, நீதிஸ்தலம், ஆற்றங்கரை அரச மரத்தடி முதலிய இடங்களில் இருந்து, மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கிருர், கடவுள் எங்கும் நிறைந்திருக் கிருர் என்ருலும் அ வரை க் குறிப்பாகக் கோயில்களில் வணங்குவதே மக்களைப் பக்குவப்படுத்தக்கூடியமுறை. ஆண் டவனுக்குப் பலவித பூஜைப் பொருள்களை வைத்து வணங் குகிருேம். இறைவனுடைய பொருட்களே அத்தனையு மாய் இருக்க, நாம் சிலசமயங்களில், அற்பஆசையாலும், அறியாமையாலும், மிகமோசமானவற்றையும் வ ழ ங் கு (βόλι τι ό.
ஒரு பணக்காரருடைய தோட்டத்தில் பலர் வேலைசெய்து கொண்டிருக்கின்றனர். அந்த வேளையில் தோட்டத்தைப் பார்வையிட வந்த பணக்காரரிடம், காவல்காரன் ஒரு மாதுளங்கனியைக் கொண்டுவந்து வைத்து, இதைத் தங்களுக் காகப் பறித்துவைத்தேன் என்கிரு?ன். தோட்டமும், மரமும், பழமும் அவருடையது. தோட்டக்காரன் சிரத்தையாய் எடுத்துக் கொடுப்பதுபோல் பணக்காரரும் சிரத்தை காட்ட மாட்டாரா? ஆகவே பூஜைப் பொருள்களிலும் நாம் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்தக் கோயிலில் எந்தத் தெய்வம் இருந்த போதிலும், ஆங்கு விநாயகருக்குப் பூஜையும் வணக்கமும் செலுத்தியே மற்றைய தெய்வங்களுக்கு செலுத்தப்படும். முக்கியமாக விநாயகருக்கு ஆவணிமாதத்தில்வரும் சதுர்த்திதினத்தையும் மார்கழி மாதத்தில் வரும் சஷ்டி ஈருகவுள்ள இருபத்தொரு நாட் பெருங்கதையையும் விசேஷமாகக் கொண்டாடுவார் கள். விநாயகரைக் கேலியாகப் பார்த்து சிரித்த சந்திரன் பட்ட துன்பத்தை நாமும் அடைந்துவிடக் கூடாது என்பதற் காக சதுர்த்தி தினத்தைக் கொண்டாடுகிருேம் பழம்பெரும் பதியான தில்லைச் சிதம்பரத்திலும், புரட்டாசி, மார்கழி, முதலிய மாதங்களிலுள்ள சதுர்த்தி தினத்தை பெரும் விழா வாகக் கொண்டாடு கிருர்கள். நம்மை எல்லாம் தாங்குபவன் அவனுய் இருக்க, எந்த நிமிஷமும் வணங்கினுல் நமக்குக் கஷ்டமா வந்துவிடும்? இல்லை.

Page 15
378 ஆத்மஜோதி
விநாயகருக்குக் கணபதி என்றும் பெயர் உண்டு. வன்பர் கண்களைப் போக்கி, அன்பர்க்கு ஞானக்கண்ணை அளிக்கிறன். இதற்கு உதாரணமாக, வில்லிபுத்தூரர் ஒருநாள் பல்லக்கில் போகும்போது எதிரில் அண்ணுமலை தெரிவதாக சீடர்சொன் ஞர்கள். உடனே தானும் கண்ணமூடி, பல்லக்குக்கும் திரை போடச் சொன்னர். இதைக் கண்ட அருணகிரியார் கணபதி சந்நதியில் நின்று, பெருமானே! சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஏன் வேறுபாடு காண்கிருன் என்று வருந்தினர். அந்த உடன் வில்லிபுத்தூரரின் கண்கள் கெட்டுவிட்டன. தனது அறியா மையை நினைந்து வணங்கிய வில்லிபுத்தூரர் 'நீடாழி உல கத்து' என்ற பாடலைப் பாடினர். உடனே அவரது கண்கள் அதிக ஒளியுடன் திறக்கப்பட்டதாக சரித்திர மூலம் அறிகிருேம்.
வேருெரு சமயம் மார்கழி மாதத்தில் ஒருநாள் ஒரு கணிகை கணபதி சந்நதியில் நின்று என்கை உமக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க. கங்குல் பகல் எம்கண் மற்றென்றும் காணற்க என்ற திருவெம்பாவைப் பாடலை உருக்கமாகப் பாடிக்கொண்டு நிற்கும்போது கோயிலுக்கு வந்த அரசன் ஒருவன், அவள் குரலிலும் அழகிலும் மயங்கி, அவளைத் தனக்கு ஆளாக்க எண்ணம் கொண்டான்.
அந்த வேளையில் சந்நிதானத்துள் இருந்து, 'அடகுரங்கு முகமே' என்று ஒர்சத்தம் கேட்டது. அந்த உடன் அரசனின்
முகம் குரங்குமுகமானது. அதைக்கண்ட மன்னன் பதைத்துத்
தனது தவறை உணர்ந்து, பலவிதமாகக் கணபதியை வழி பட்டு, தேவி அம்சமாக கணிகையரை எண்ணிவந்ததன் பயனுக பழய நிலைமையை அடைந்ததாகவும் அறிகிருேம். ஆகவே சதுர்த்தி தினத்தை மட்டும் எண்ணுது, எந்நேரமும் விநாயகனை எண்ணி எம் வினைகளை அறுக்க வேண்டுவதே
ošsarg)u atb 5 g) LD.
பிறந்த குழந்தை பால் அருந்தவும், மீன்குஞ்சு நீந்து வதற்கும் நாமா உதவுகிருேம். இல்லை. ஆண்டவனே அவற்

ஆத்மஜோதி 379
றிற்கு இயற்கையாக அறிவைக் கொடுத்து இருக்கிருன், மக்க ளாகியநாம் வீண் ஜம்பப்பேச்சில் மயங்கி, அதைச்செய்வோம் இதைச் செய்வோம் என்று எண்ணுகிருேமே யல்லாது உண்மையில் ஆண்டவன் வல்லமையில்தான் யாவும் இயங்கு கிறது. மனிதனுக்கு எவ்வளவு அறிவு இருந்தாலும்,தூக்கணுங் குருவிக்கூடு, அரக்கு, கறையான்புற்று, தேன்கூடு போன்ற வற்றைச் செய்ய முடியுமா? அவை எவ்வளவு அற்புத
| || L. DIT GOT Goo Golf.
பிரயாணம் செய்யும் ஒவ்வொன்றும் முடிவில் ஒவ்வோர் இடத்தைச் சேருகின்றன. ஆறு கடலை நோக்கியும், தாமரை சூரியனை நோக்கியும், உயிர் சாவை நோக்கியும் போய்க் கொண்டுஇருக்கின்றன.ஆகவேவாழ்வும்ஒருநீண்டபிரயாணத் தைச் செய்து கொண்டு இருக்கிறது. எந்தத் தாழ்ந்த நிலையில் உள்ள உயிரும், நாளடைவில் பல உறுப்புகளைப் பெற்று முடிவில் மனிதனுகி அதனதன் பக்குவத்திற் கேற்ப, பல பிறவிகளைப் பெற்று பரமபதம் அடைகிறது. இதை நாம் sisGoT 55. LATG5j; கண்டும், கேட்டும், அநுபவித்தும் தெரிந்து கொள்கிருேம்.ஆகவே பிறவிகட்கெல்லாம் மேலானபிறப்பை எடுத்துள்ள நாம் ஒவ்வொரு நிமிஷமும் விநாயகனை வேண்டி
இன்ப அன்பு காண்போமாக.
விநாயகனே வெவ் வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனு மாந் தன்மையினுல் கண்ணில் பணிமின் கனிந்து.
(கபிலவேதநாயனர்)
盏警

Page 16
380 ஆத்மஜோதி
அருள்நெறி காட்டிய தாய் (சுயசரிதையின் சுருக்கம்)
(புலவர் சி. விசாலாட்சி)
பரமன் மேல் பக்தி கொண்ட பார்வதி பூமாலை புனைந்து சூட்டி வருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் பூங்காவிற் குட் பூப்பறிக்கச் சென்ருள். பெரிய நாகம்படம் எடுத்துஆடு வதைக் கண்டதும் மிகப் பயந்து பூவெடுக்கும் கூடையையும் அப்படியே வீசி விட்டு அம்மா அம்மா வென்று அலறிக் கொண்டு ஓடிவந்தாள் பார்வதி. பச்சிளங் குழந்தையின் அவலக்குரல் கேட்டதும், காரணத்தை உணர்ந்துகொண்டாள் எனவே பெட்டிக்குள் மறைத்துவணங்கிவரும்மூவரின் புகைப் படங்களை வெளியே வைத்து அவற்றைப் போற்றிப் புகழ்ந்து ஆனந்தக் கண்ணிர்வடிய பாமாலை பாடினுள்.
தாயாகிய உமையவளின் இசையையும் பக்திப்பாடலையும் கேட்ட பார்வதி பயத்தை மறந்தாள். தன்னை மறந்தாள். மெல்ல மெல்லக் குரல் வந்த அறையை நோக்கி நடந்தாள். மூவரின் புகைப்படங்களின் முன்னுல் பழம் பால் முதலியன
பரப்பி மலர்மாலை சூட்டிப் பாமாலை பாடும் தாயைப் பார்த் , தாள் அவளின் கண்களில் இருந்தும் ஆனந்தக் கண்ணிர் வடி வதைக் கண்டு தானும் தாயின் பக்க லில் தன்னை மறந்து
இருந்துவிட்டாள். உமையவள் மகள்பக்கலில் தன்னை மறந்த
நிலையில் இருப்பதைக் கண்டாள். எழுந்து பேசாது சமயல றைக்குச் சென்று அன்றைய காலைச் சமயலைத் தயார் செய் தாள்.
தாயும் சேயும் காலை உணவை முடித்துக் கொண்டனர் மெதுவாக மகளே பேசத் தொடங்கினுள். அம்மா புகைப் படத்திற் காணப்படும் மூவரும் யாவர். இத்தனை காலமும் அதனை எனக்குக் காட்டாது வைத்திருந்தீர்களே, அதன் கார ணம் என்ன? அருளொழுகும் முகத்துடன் அன்புக்கனல் வீச இருக்கும் அவர்களைக் காணும் போதெல்லாம் அவர்களுடன் நானும் இருக்க வேண்டும் போல் இருக்கிறது. இவர்கள் இப் போதும் உயிருடன் இருக்கிருர்களா அம்மா? தயவு செய்து கூறமாட்டாயா என்று கெஞ்சிக்கேட்டாள். மகளின் வேண் கோளுக்கிசைய தாய் பேசத் தொடங்கினள்.

ஆத்மஜோதி , - 38.
நான் சந்நியாசி யென்ற ஒரு காரணத்திற்காக மாத்திர மல்ல, இன்னும் பல காரணத்திற்காகப் பிறந்த நாடு, ஊர், பெற்ருேர் ஆகியவர்களின் பெயர்களையும் வரலாறும் கூற மாட்டேன். அது போன்று அல்லற் பட்டு ஆற்ருது அலைந்த எனக்கு செந்நெறி காட்டிய இந்த மூவரின் பெயரும் ஊரும் கூறமாட்டேன். எனினும் என் வரலாற்றை மாத்திரம் வேண்டிய இடங்களிற் சில புனைபெயரை வைத்துக் கூறுகின் றேன். இடையில் எக்காரணம் கொண்டும் கேள்வி எழுப்பக் கூடாது. இக்கதை கூறுவதன் காரணம் புகைந்து போகும் பெண்கள் சமுதாயத்தில் நீ செல்லும் வழியறிந்து செல்வதற் காகவே! மணியின் ஒளிபோல ஒலித்து நீ செந் நெறியிற் செல்ல வேண்டு மென்பதுதான் என் ஆவல்.
நான் வாழ்ந்த நாடு, காட்டரண் நீரரண் நிலவரண் மதிலரண் ஆகிய நான்கரணுற் சூழப்பட்டிருந்தது. பகைவர் படையுடன் வராமல் இருப்பதற்காகவே அந்நாளைய அரசர் அரண்மனையையும் நாட்டையும் இயற்கை யரணுல் அரண் செய்து வைத்திருந்தனர். கதிரவனும் வாயுவும் உலாவ முடி யாதசோலைகள் மிகுந்திருந்தன. அத்தகைய நாட்டில் எங்கள் கிராமம் மிகவும் செல்வமுடையதாய் இருந்தது. காலையிற் கதிரவன் ஒளிபரவமுன் பெரிய சிவன்கோவிலின் மணியின் ஒலிகேட்கும். மணியின்ஒலிகேட்டமங்கையர்எல்லாம் நீராடி ம்லர்ந்த முகத்துடன் மலர்களை அங்கையில் ஏந்திச் செல்வர். "ஆண்டவனும் அதிக விருப்புடன் மலர்களை அணிந்து கருணைக்
5 LÍTL. F Lib V(G)F ulij GITT GäT.
பெரிய சிவன்கோயிலின் கோபுரவாசலை நோக்கியபடி எமது இல்லம் இருந்தது. திருவிழாக் காலங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் அடியார்களை உபசரிப்பதே எம்குலத் தொழிலாகும். என்தாயான மீனுட்சி அதிகம் படிக்க வில்லை, என்ருலும் எழுத வாசிக்க ஒரளவு தெரிந்தமையால் பெரிய புராணம் நன்ருகப் படித்து அதிற் காணப்படும் அறுபத்து மூவரின் விருந்தோம்பல் போன்றே அடியார்களுக்கு விருந் தோம்பினுள். என் தந்தை பெரிய வேதாந்தி யென்றே கூற லாம். அவர் படியாத சமயநூல்கள் தமிழிலும் வடமொழியி லும் இல்லை. சைவசமய ஒழுங்கின்படி பெற்றேர்கள் ஒழுகி வந்த வாசனை என்னையும் பற்றத்தான் செய்தது. நான் சிறு பிள்ளையாக இருந்த காலங்களில் சிவன்கோவில் வாசலில் சிறு வீடு கட்டி சிற்றிலிளைத்து விளையாடுவேன். என்னுடன் சிறு

Page 17
382 ܘܝ ܓܝ ஆதி மஜோ தி
பெண்மணிகள் விளையாட வருவர். நாம் அனைவரும் யோக நிலையில் இருப்பதுபோல் சிறிது நேரம் இருப்போம். அந்நிலை யென்னை ஆட்கொள்ளவே சிவனன்றி வேறுதெய்வம் இல்லை யென்றே இருந்து விட்டேன்.
என் அன்னை அதிகாலையில் அதாவது காலை மூன்று மணியில் எழுந்து காலைக்கடன்களை முடிப்பாள். பின் என் தந்தையின் கடன்களை முடித்துக் கொள்வாள். என் தங்கை தம்பிமாரும் நானும் சேர்ந்து வீட்டை அழகுசெய்வோம். முன்றலில் அழகிய கோலம் இழைப்போம். பூ எடுப்போம். மாலை தொடுப்போம். பூசை அறையிற் சென்று கூடி இருந்து பிரார்த்தனை செய்வோம். காலை உணவை முடித்துக் கொண்டு நாங்கள் கல்லூரிக்குப் புறப்பட்டு விடுவோம். மாலை முழுதும் விளையாடுவோம். வீண் சண்டை வாக்குவாதம் எதுவும் செய்ய மாட்டோம். பெற்றேரின் சொல்லைத் தட்டியதே இல்லை. வீண்வாக்குவாதமும் வீண்சண்டையும் எங்களிடையே நடத்தியதேகிடையாது. பெற்றேர்க்குகீழ்ப்படிந்துஅவர்களைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றுவோம் கூடியிருந்து சமய நெறிப் பாடங்களை எம் தந்தையாரிடம் கேட்போம். சந்தே கம் வந்தால் உடனுக்குடனே எம் தந்தை தெளிவு செய்து விடுவார். படுக்கும்போதும் உண்ணும் போதும் பிரார்த்தனை செய்து கொள்வோம். சுருங்கக் கூறுமிடத்து பிரார்த்தனையும் தியானமும் உயிர் நாடியாகவே எங்கள் குடும்பத்திற் காணப் ll-l-gil.
சில காலம் சென்றதும் என் பெற்றேர் இவ்வுலக
நானும் சகோதரரும் எம்தாய்மாமன் அவர்களால் வளர்க்கப் பட்டோம். இங்கேதான் என்வாழ்க்கையின் சோதனை ஆரம்ப மாகின்றது.விவேகானந்தர் இந்தியாவிற் றலைசிறந்த மகானுக விளங்கிய காலம் இதுவாகும். சுவாமி விவேகானந்தர் அவர் கள் வெளிநாடெங்கும் சென்று இந்து சமயத்தைப் போதித்து வந்தபோது நானும் அவரின் வாழ்வைப் பின்பற்ற முயன்
றன். எப்போதும் பெண்கள் வாழ்விற் றடைகள் உண்டு. இவற்றை அறிந்தும் விவேகானந்தர் கொழும்பு வருகின்ருர் அவரின் சமயச் சொற்பொழிவைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தூண்ட இரவோடு இரவாக வீட்டைவிட்டுப் புறப் பட்டு விட்டேன்.
வாழ்க்கையை விட்டு சிவவுலக வாழ்க்கையை அடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 383
சுவாமி விவேகானந்தர் கொழும்பு மாநகரத்தை வந்த டைந்த அக்காலத்திற்ருனே நானும் கொழும்பை யடைந் தேன். விவேகானந்தாவின் சொற்பொழிவுகள் என் உள்ளத் தைத் தொட்டு விட்டன. எனவே இமைவெட்டாது சித்திரப் பாவை போன்று சொற்பொழிவைக் கேட்டேன். அலையும் என் மனதிற்கு நல்லதோர் விருந்தை அளித்தார் சுவாமி விவேகானந்தா. அவர் இலங்கையை விட்டுத் தாயகம் செல்ல ஆயத்தமானுர், இதையறிந்த நானும் அவர்செல்லும் கப்பலி லயே கிளம்பி விட்டேன். நான் சிறு பெண்ணுகையால் ஒர் பெரியார் தடுத்து விட்டார். எவ்வளவோ முயன்றும் செல்ல முடியவில்லை. எப்போகாலம் வரும் வருமென்று காத்திருந் தேன். வீட்டாரும் என்னைத்தேடி வந்து விட்டனர். ஏதோ மன்னித்துப் பெண்கள் பாடசாலையிற் படிக்கச் சேர்த்து விட்டனர். நான் சேர்ந்த கல்லூரி சைவமதம் கொண்டதாக இருந்த போதிலும் பிறமதத்திற் காணப்படும்கட்டுப்பாடுகள்
நான் தமிழ் பிரிவில் படித்தகாலத்தில் இலக்கிய பாடங் களை ஒர் இளம்பண்டிதரே யெடுத்தார். அவர் பேச்சில் அன்பு இருந்தது பார்வையில் அருள் இருந்தது இனிமைஇருந்தது. பேசும்போதெல்லாம் இனிமையுடனும் மென்மையுட்னும் நயமுடனும் பேசுவார். தேவாரம் திருவாசகம் என்ருல் உள்ளம் உருக ஊனுருக கண்ணிர் பெருகப் பாடுவார். இதனுல் என்னுள்ளம் அவரைக் கண்டபோதெல்லாம் உருகி ஒர்விதப் பயம் கொள்ளும். என் சிறந்த சைவ ஆசார ஒழுக் கத்தைக் கண்ட பண்டிதர் எனக்கு நல்லதோர் ஆசானுக மாறினர். ஞானநூல்களை அடிக்கடி கொண்டு வந்துதருவார்.
விவேகானந்தா நடத்தியபேச்சின் சுருக்கங்களை அவ்வப்போது வெளியிடப்படும் பத்திரிகைகளை அன்புடன்தருவார். இதனுல்
என் கல்லூரி வாழ்க்கை ஆனந்தமாகவே சென்றது.
நான் திருமண வயதை அடைந்து விட்டேன். இருபது வயதை எட்டிப் பிடித்ததும் வளர்ந்தோர் தக்கவரனைத் தேடி னர். அவர்களின் குறிப்பை அறிந்து அப் பண்டிதரின் உதவி கொண்டு ஓர் சில இந்தியக் கூலிப்பெண்களுடன் இந்தியாவை அடைந்தேன். இந்தியக் கூலிப் பெண்களை பாம்பன் பாலத் திலே விட்டுப் பிரிந்து இராமேஸ்வரம் சென்று விட்டேன். அங்கு சென்றதும் ஒர்விதப் பயம் எழுந்தாலும் துணிந்து வீதி
யெல்லாம் அலைந்தேன். எம்பெருமான நினைந்து உருகி

Page 18
384 ஆத்மஜோதி
உருகிப் பாடினேன். என்பாடலைக்கேட்டஹறிந்திஇளம் மங்கை
ஆஷாஅன்பாய்ப் பார்த்தார். உடனே தன் தாயிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூறினர். தாயாரும் மகளும் கருணையுடன் என்னிடம் வந்தனர். ஆங்கிலத்தில் கதைத்தனர். பின் என்னையும் தம்முடன் அழைத்துக் கொண்டு வட நாடு சென்றனர்.
மனிதனின் எண்ணத்தின்படி மனுேநிலைமையும் மாறுவது
இயல்புதானே. இது என்னையும் பிடிக்கச் செய்தாலும் ஆஷா
வின் அன்பால் இன்மொழியால் மறந்திருந்தேன். பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்ற பழமொழிக்கு நானும் இலக்காகித்தான் விட்டேன். நாளெல்லாம் ஹிந்தி பேசும் மக்களுடன் சேர்ந்து பழகியதால் ஹிந்தி எழுதவும் வாசிக்க வும் பேசவும் முடிந்தது.
இசையென்ருல் எனக்கு நல்ல விருப்பம். எனவே தேவா ரம் திருவாசகம் பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களை யெல் லாம் பக்தியுடன் பாடிவருவேன். வடநாட்டிலுள்ள சிவஸ் தலங்கள் தீர்த்தங்கள் எதுவும் தவறவிடாது பார்த்ததனுலும் பக்தர்களின் கூட்டுறவு ஏற்பட்டதாலும் எந்நேரமும் சிவ சிந்தனையுடன் இருப்பேன். நான் இருந்த வடஇந்திய வீடு கைதர்பாத்தில் இருந்தமையால் அடிக்கடி இராமகிருஷ்ண
மடத்திற்குச் செல்லும் வாய்ப்புக்கிடைத்துவந்தது. அலையும்
மனதை அடக்க வேண்டில், பற்றில்லாத பரமனிடம் பக்தி கொள்ள வேண்டும். பக்தி நிறைந்த பெரியார்களின் வரலாற் றைப் படிக்க வேண்டும். மனதை தீய வழியில் செல்லவிடாது
நல்ல வழியில் செலுத்துவதே நல்ல உபாயமாகையால் இராமகிருஷ்ண மடத்தை நோக்கி மிக விருப்பத்துடன் .
செல்வேன்.
பெரியோர் சிந்தனையும் அவர்தம் உறவும் கூட்டு வாழ்க் '
கையும் மக்களின் நல்வழி காட்டிகள் என்பதற்கேற்ப என் வாழ்க்கையின் சீரியவொழுக்கத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வர உதவிய ஹிந்திக் குடும்பம் என் உள்ளத்துடன் ஒன்றி விட்டதனுல் என்னவேண்டுமோ அதன்படி யெல்லாம்செய்து வந்தனர். அவர்கள் பூஞ்சோலையில் முருகனைக் காண்பது போன்ற பிரமைபிடித்து முருகா வென்று அலறும் போதெல் லாம் அவர்கள் உடனிருந்து அதனை விசாரித்து முருகன் பொருளை உணர்ந்து கொள்வார்கள். என்மனதில் எவ்வித சலனமும் இல்லாமை கண்ட தாயும் சேயும் என்னே ஒருநாள் விவேகானந்தர் இருந்த மடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 

அருளொழுகும் முகத்துடன் காணப்பட்ட சுவாமி விவே கானந்தரின் தெய்வீக ஒளி எங்கும் பரவ ஹிந்தியில் இசை பாடினர். ஹிந்திமொழி ஒரளவு தெரிந்தமையாலும் அதனில் அதிகம் பழக்கப் பட்டமையாலும் அவ்விசை என்உள்ளத்தை உருக்கியே விட்டது. பின் சிக்காக்கோவில் இருந்து சுவாமி விவேகானந்தாவைத் தொடர்ந்து வந்த அன்னையாரைச் சென்று பார்த்தோம். அவரின் அன்புமொழி அன்புப்பார்வை அன்பு வரவேற்பு எல்லாம் சேர்ந்து நம்மை புதுமையாக்கி விட்டது. அந்த அன்னையின் வாழ்க்கை முறைகள் யாவும் தனி மனிதனும் தனித்து வாழலாம் என்ற அரியதோர் உண்மையைக் கடைப் பிடித்தே இருந்து, குழந்தைகளின் வாழ்க்கை சமுதாய வளர்ச்சி அன்னையின் அன்புமடியிலே தவழ்கின்றது என்பதைத் தம் சாதனைகள் மூலம் காட்டினர்.
மனிதனுக்குத் தேவையான உணவு உடை முதலியனவும் அவன் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களும் குழந்தைகள் கவரும் முறையாக அன்னை, ஆசிரியர், பெரியோர் நடந்து கொள்ளும் முறைகளும்அந்த அன்னையிடம்காணப்பட்டன. இலங்கையில் இருந்து சிவநெறி வாழ்வைக் கடைப்பிடித்து இவ்விடம் வந்தி ருக்கும் என் வரலாற்றைக் கேட்ட அந்த அன்னை என்னை வாழ்த்தினர்கள். சில அரியமொழிகளைக் கூறியபின் உபசரித் தார்கள். செவிக்குணவும் பசிக்குணவும் அளித்த அப் பெரு 1. மாட்டியின் வாழ்க்கை முறைகளையும் அவர் தம் நாடு துறந்து பாரதம் வந்த வரலாறுகளையும் சுவாமி விவேகானந்தா நூல் களில் அறிந்து அந்த அம்மையார் போன்ற பெண்கள் இருந் தால் நம் தாய்நாடு வாழுமல்லவா?
கல்வி கேள்விகளில் அறிந்து கொள்ளும் அறிவிலும் பார்க்க, அவற்றுடன் அநுபவ ரீதியாய் அறியும் அறிவே சிறந்தது. இதனை அறிந்த ஆஷாவும் தாயும் இலங்கையையும் அவர் தம் வாழ்க்கையையும் அறிய விரும்பினர். உடனே என்னையும் அழைத்துக்கொண்டு இலங்கைக்கு வந்தனர்.நான் வாழ்ந்த இடம் பிறந்த இடம் யாழ்ப்பாண மாகையால் எப் படியோ என்னை அடையாளம் கொண்டு அறிந்த சுற்றத்தவர் கள் இத்தனை காலமும் எம்மை விட்டுப் பிரிந்த இவள் மாசு படாமலா இருப்பாள் என்ற சந்தேகத்துடன் கவனியாது விட்டு விட்டனர். இந்தியத் தாயும் சேயும் இலங்கை முழுவ தும் பார்த்து விட்டுத் திரும்பும் போது என்னையும் உடன் அழைத்தனர். ஆனல் நான் ஊர் வந்து விட்டேன் என்ற செய்தினட்டிய முன்னைய இளம்பண்டிதர் இப்போது இந்தியா செல்ல விடாது தடுத்து மட்டக்களப்பிற்குச் செல்லும்படி பணித்தார். (தொடரும்)

Page 19
"ATHMAJOTHI Registered at the
சந்தா நே
அன்புடையீர்! 17ஆவது ஆண்டு 12வது சோதி இன் நேயர்களின் உதவியிஞலேயே சோதி சோதிக் குழந்தை உங்கள் வீட்டைத் போகின்றீர்கள். உங்கள் சந்தாவை கள் கொடுக்கும் பரிசாகும். என்றெ இந்தியாவிலுள்ள சந்தாநேயர்க | R. sdua tip II, a அரிசிப்பாளே என்ற விலாசத்திற்கு அனுப்பி
ஆத்மஜோதி 5 auto
ஆத்மஜோதி நி3
ஆத்மஜோதி மலர் (19 சைவ இலக்கியக் கதா மஞ் ஆத்ம்நாதம் திங்கனிச் சோலே UT LIT grin in G திவ்ய ஜீவன சங்க வெள் கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் 9 மார்கழி மாதப் பாடல் 10 கதிர்காமப் பதிகம் 11. செல்லச்சந்நிதி பாடல் 12. கந்தர் சஷ்டி கவசம் 13. அறிவுரைக் கதைகள 14. நித்திய கருமவிதி 15. கதிரை மணிமாலே
தபாற்
அச்சிடுவோர்- ஆத் Lు (! அச்சிடுவிப்போர் - ஆத் வெளியிட்டதேதி: 7-0

2 G.P.O. as a Newspaper. M. L. 99/300
யர்களுக்கு
று உங்கள் கையில் கிடைக்கின்றது. சந்தா
பதிஞறு ஆண்டுகளைக் கடந்துள்ளது.
தேடிவரும்போது என்ன பரிசு அளிக்கப் உடனே அனுப்பி வைத்தல்தான் நீர் }ன்றும் உங்கள் ஆதரவு கிடைப் த கள் தமது 6. வழக்கம்போல்
F G HL "Այլն, ○チa)Lh-9。 வைப்பதோடு இவ்விடமும் அறியத் a、r厅、。
லய வெளியீடுகள்
53). 2.00 3.00 3 ༈། 2.50 . 1,50 ாளி விழா மலர் 2
- 30 50
25
15
25 50
செலவு தனி "
ாதி அச்சகத்தி 6 Gr fr ஜோதி நிலயத்தினர் I-65.