கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1965.11.16

Page 1
リ
 
 


Page 2
(ஒர் ஆத்மீக
மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே .
- சுத்தானந்தர் ஜோதி 18 விசுவாவசு வூடு கார்த்திகைமீ" 1உ (16-11-65) சுடர் 1
பொருளடக்கம்
சிவனுக்கு வணக்கம் பிரம்மதேவர் உபதேசம் 2 அமரநாத் 3. அமரநாத் யாத்திரை 5 நல்லை நகர் நாவலர் 9 வழிகாட்டும் தெய்வம் எங்கே? 15 வழிகாட்டும் சுடரே நீ வருக! 6 கந்தையா வைத்தியநாதன் 7 சைவத்திற் சிவம் 9 ) அருள் நெறி காட்டிய தாய் 2. ஜீவ காருண்யம் 25 நேயத்தே நின்ற நிமலன் 28 D6 OTD 31
ஆத்மஜோதி சந்தா விபரம்
qeA00LMLe0eL0eMS0eL0eML0LML0eL00YLLL00LSS00SS00SSA00LSL0eASL0LSLSAL0LSLML00SLLLeSLLLL00 SSAAAS
ஆயுள் சந்தா ரூபா 100 00 - வருட சந்தா ரூபா 3.00 தனிப் பிரதி சதம் 30, கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் திரு. க. இராமச்சந்திரா திரு. நா. முத்தையா
"ஆத்மஜோதி நிலையம்' , நாவலப்பிட்டி. (சிலோன்) தொலைபேசி எண்:-353
 
 

சி வ னு க்கு வ ண க் கம்
தென்னடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
- மணிவாசகர்.
சிந்திப்பார் மனத் தான்சிவன் செஞ்சுடர் அந்தி வானிறத் தானணி யார் மதி முந்திச் சூடிய முக்கண்ணி னுனடி வந்திப் பாரவர் வானுல காள்வரே.
- அப்பர்,
அப்பனை நந்தியை ஆரா அமுதினே ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினுல் அப்பரி சீசன் அருள்பெற லாமே.
-திருமூலர்,
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர் கொடு வந்துமை யேத்துது நாமடியோம். செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ ரு திரு நீலகண்டம்
- சம்பந்தர்.
மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும்
கொள்கையால் மிகைபல செய்தேன் செற்று மீதோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. ܟܠ
- சுந்தரர்.

Page 3
2 ஆத்ம
பிரம்மதேவர் நாரத மகரிஷிக்குச் செய்த உ ப தே ச ம்
(சங்கரர்)
மகாவிஷ்ணுவும் சிவனைப் பூஜித்து அதன் மகிமையால் தான் மூன்று உலகங்களையும் இரட்சிக்கும் சக்தியை அடைந் தார். லோக பிதாவான நானும் சிவப்பிரசாதத்தினல் தான் சதுர்தச லோகங்களையும் சிருஷ்டிக்கும் ஒரு சக்தி விசேடத்தை அடைந்தேன், என்னுடைய புத்திரர்களும் இன்னும் இருந்து வருகிற எல்லா வேறு பரம ரிஷிகளும் சிவபூஜையைத்தான் செய்து வருகிருர்கள்.
நாரதா! நீயோ என்ருல் விசேடமாகச் சிவபூஜை செய்து வருகின்ருய்! மேலும் வசிட்டர் முதலான சப்த ரிஷிகளும் சிவபூஜை செய்து வருகின்ருர்கள் வசிட்டரு டைய தர்மபத்தினியான அருந்ததியும் அகஸ்திய முனிவ ருடைய தர்மபத்தினியான லோபாமுத்ராதேவியும் கெளதம மகரிஷியினுடைய தர்மபத்தினியான அகல்யாதேவியும் சிவ பூஜை செய்து வருகிருர்கள். துர்வாச மகரிஷி, கெளசிகர், சக்தி, ததிசி மகரிஷி, கெளதமர், கணுதர், பரசுராமர், ஜீவர், வைசம்பாயனர், இந்த முனிவர்கள் எல்லாம் சிவ பூஜை செய்து கொண்டு அதைச் சித்தாந்தமாக உடைய வர்களாயிருக்கிறார்கள்.
மகாபக்தரான உபமன்யுவும், மஹாசைவரும் ஞானி யுமான யாஞ்யவல்க்ய மகரிஷியும், சுகப்பிரம்ம ரிஷியும், பரமபக்தர்களான செளனகாதி மகரிஷிகளும், இன்னும் அனேக முனிவர்களும் சதாசிவஸ்வரூபத்தில் லயித்து சிவ பூஜை செய்து வருகிருர்கள்.
இந்திராதிகளான லோகபாலர்களும், அஷ்டவசுக்களும், முப்பத்துமுக்கோடி தேவர்களும், சாக்யர்களும் , கந்தர் வர் களும், கின்னரர்களும், உபதேவர்களும் சிவபூஜை செய்து
வருகிருர்கள்.
个
NZ

ஜோதி - 3
அ ம ர நா த் -(ஆசிரியர்)-
அம்பர்நாத் என்பதன் சிதைவே அமரநாத் என்பதா கும். அதாவது வானத்தின் தலைவன் என்பது பொருள். காஷ்மீர் என்ருல் யாரும் அறிவர். சமுக்காளம், பட்டு என்பவை மூலம் அறிந்திருந்தோம். ஜவகர்லால்நேரு மூல மாகவும் காஷ்மீரை நின்ைவு கூர்ந்தோம். இந்திய பாகிஸ் தான் சண்டைமூலம் பாலர் முதல் பாட்டி ஈருக யாவ ரும் அறிந்துள்ளனர். ஆத்மீகத்தில் உயர்வடைந்த பெரு மக்கள் யாவரும் அமரநாத்தைத் தரிசிப்பதற்காகவே காஷ் மீர் சென்று வந்தனர். தமது உள்ளத்தைக் கவர்ந்த தலங் களுள் மிகச் சிறந்தது அமரநாத் என்று சுவாமி விவேகா னந்தர் கூறியுள்ளார். -
பம்பாய் இராச்சியத்தில் தானு மாவட்டம் என்பது ஒரு பிரதேசம். கல்யாணதாலுக்கா சிறந்த இடம். பம் பாயிலிருந்து முப்பத்தெட்டாவது மைல் தூரத்தில் உள் ளது அமரநாத். சிவன் கோயில் பண்டைச் சிறப்புடை யது. மேற்குப்பார்த்த வாயிலுடையது. இங்குள்ள சிற் பச்சிறப்புக்கு இணையாக பம்பாய் இராச்சியத்தில் எங்குமே காணமுடியாது.
அமரநாத் திருவுருவத்தை த ரி சிக் க ச் செல்பவர்கள் உடையின்றியே செல்வது வழக்கமாகும். சுவாமி விவேகா னந்தர் குகையினுள்ளே சென்றபோது தான் கோவன உடையோடுதான் சென்றதாகக் குறிப்பிடுகின்ருர், உடல் முழுவதும் விபூதி அணிந்திருந்தபடியினுல் குளிரோ, அன லோ தோற்றவில்லையென்றும் வெளியே வந்த பின்னர் உடல் குளிரினுல் விறைத்துப்போய் விட்டதென்றும் குறிப்பிடுகின் முர். அத்தகைய குளிரிலே வெண்மை நிறமுடைய புருக் கள் மாத்திரமே வாழ்கின்றனவாம். வேறு எ வ் வி த ப் பிராணிகளும் வாழ்வதில்லை. குகையை விட்டு வெளியே வரும்போது வெண்மை நிறப் புருக்களைத் தரிசித்தால் சிவ தரிசனம் கிடைத்ததற்குச் சரியென ஒரு ஐதீகம் உண்டு. அதனுல் அஷ்ட சித்திகள் உண்டாகுமாம்.
காஷ்மீர் இயற்கை அழகு மிகுந்த இடம். இயற்கை அன்னே தனது லாவண்யத்தை காஷ்மீரில் மிகப் பெரிதாக பதித்துள்ளாள். சுவாமி விவேகானந்தருடைய உள்ளத்தில்

Page 4
4 ஆத்ம
உள்ள பல சந்தேகங்கள் அந்த யாத்திரையின் பின்பே நீங் கியதாகக் குறிப்பிடுகின்ருர். பல இஷ்ட சித்திகளும்
தாமாக வந்து அடைந்தனவாம்.
சுவாமிகள் பூரீ நகருக்கு திரும்பி வரும் போது யாத்தி ரிகர்கள் வழக்கமாக வருகிற வழியாலேதான் வந் தார். அங்கு கூர்பவானி தேவியைத் தரிசித்தார். ஏழு நா ள் தேவியை இடைவிடாது வழிபாடு செய்தார். ஒரு நாள் தேவியை வழிபாடு செய்யும்போது சுவாமிகள் உள்ளத் திலே ஒர் எண்ணம் தோன்றியது. அன்னையினுடைய ஆல யத்தை அந்நியர் அழிவு செய்த பொழுது நான் இருந்தி ருந்தால் சும்மா விட்டிருப்பேனு? அதனைத் தடுப்பதற்கு அங்கிருந்தவர்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லையே என்று ஏங்கினர்.
அப்பொழுது அன்னையினுடைய வாக்காக சுவாமிகளு டைய செவியிலே இவ்வண்ணம் பட்டது. ‘என் விருப்பத் தின்படியே அந்நியர் இவ்வாலயத்தை அழித் தார் க ள். பாழாகிய கோயிலிலே வாழவேண்டுமென்பது எனது விருப் பம். அல்லாவிடின் தங்கத்திேைல ஏழடுக்கு மாளிகையாய் விளங்குகிற ஆலயம் ஒன்றினை அமைத்துக் கொள்ளுதல் எனக்கு இயலாததொன்ரு? உன்னுல் என்ன மு டி யு ம்? நான் உன்னைக் காப்பாற்றுகின்றேனு? நீ என்னைக் காப் பாற்றுகின்ருயா?’
அந்தத் தெய்வச் சொல் பட்ட நாள் முதல் மடால யங்கள் அமைக்கவேண்டும், திட்டமிட்டுக் கரு ம மா ற் ற வேண்டுமென்பதையே சுவாமிகள் தாம் விட்டுவிட்டதாகக் கூறுகின்றர்கள்.
இவ்வண்ணமே அமரநாத் சென்றவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவம் ஏற்படுவதைக் காண் கின்ருேம்.
கடவுள் மனிதனேச் சிருஷ்டித்தார் என்பதுதான் உண்மை. மணி
தன் கடவுனைச் சிருஷ்டித்தான் என்பதெல்லாம் வெறும் பிரம்மையா கும். ஆயினும் கடவுள் கர்த்தாவுமில்லே. காரணமும் இல்ல என்று வேண்டுமானுல் கூறிக் கொள்ளலாம். இந்த இரண்டில் எதைச் சொன்
ணு,லும் அவருக்கு ஏற்கும்.
காந்தி

ஜோதி 5
அமரநாத் யாத்திரை
பூனி ஒங்காரானந்த சரஸ்வதி :-
உலகில் நாம் காணும் எ ல் லாத் தோற்றங்களையும் விட மலைகளின் தோற்றம் பெரிதாக இருக்கிறது. அப்படி யான பெரிய மலைகளின் உச்சியில்தான் இறைவனின் காட் சியும் சிறப்புற்று விளங்குவதை நாம் கண்கூடாகப் பார்க் கிருேம். இலங்கையில் உள்ள மிக உயர்ந்த மலைகளுள் ஒன்ரு:ன சிவனுெளிபாத மலையின் உச்சியில்தான் சிவனது பாதங்கள் பூசிக்கப்பட்டு வருகின்றன. கதிர்காமத்திலுள்ள கதிரமலையின் உச்சியில்தான் முருகன் சிறப்பாகக் காட்சி அளிக்கின்ருர். அதேபோன்று தென் இந்தியாவிலும் பழனி திருக்கழுக் குன்றம், திருப்பரங் குன்றம், திருத்தன்னிகை, திருப்பதி போன்ற புகழ் பெற்ற சேத்திரங்கள் மலையின் உச்சியில்தான் அமைந்துள்ளன. மலைகளிலெலாம் உ ய ர மான இமய மலையைக் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் இறைவனது மகிமையையும், திருக்காட்சியையும் க ன் டு களிக்கும் பேறு பெறுகின்றனர். இந்தியாவின் வளத்துக் கும், இந்தியாவின் ஆத்மீகச் செல்வத்துக்கும் இமயமலை மூலஸ்தானமாக இருந்து வருகிறது. சிவ பெ ரு மா னி ன் சடாபாரத்தில் வீற்றிருப்பதாக நாம் வழி ப டு ம் புகழ் பெற்ற கங்காதேவியும் அந்த இமயமலையின் உச்சியிலிருந்து தான் ஊற்றெடுத்து ஞான கங்கையாக ஞானுமிர்தத்தை ஊட்டி உயர்ந்த ஞானிகளையும், ரிஷிகளையும், தோற்றுவிக் கின்ருள். இதனுல்தான் இந்தியா ஞானபூமி என்று உல குள்ள காலம் வரை புகழப்பட்டு வருகிறது. அவர் க ள் மூலமாகத்தான் இந்தியா உயர்ந்த ஆத்மீகச் செல்வத்தை வளர்த்து வருகின்றது. இமயமலைத் தோற்றமே உள்ளத் தில் ஆத்மீக உணர்வை ஊட்டுகிறது. இயற் கை யாக முளைத்து ஓங்கி நிற்கும் மரங்களும், அழ கி ய பூஞ்செடிக ளும், பனிக்கட்டிகளினல் மூடப்பட்டுள்ள மலைகளின் காட் சியும் நீண்ட சடைகளைக் கொண்ட மிருகங்களும், அழகிய தோற்றத்தை உடைய மனிதரும் இங்கு கண்களுக்கு விருந் தளிக்கின்றன. இப்படியான இயற்கைக் காட்சி  ைய க் காணுந்தோறும் க டவு னி ன் ம கி மை யை க் கண் ணுகிய பொறியினூடாகக் கண் டு களிப்பவராகின்ருேம். பனிக்கடவுள் நீராக உருகிப் பெருக்கெடுத்தோடும் நதிக ளின் ஒசையும் சுயேச்சையாகவும், களிப்போடும் வாழ்ந்து

Page 5
6 ஆத்ம
வரும் பறவைகளின் குரல்களும் செவிக்கு இறையுணர்வை ஊட்டுகின்றன. காற்றில் மிதந்து வரும் மலர்களின் வாச னையை மூக்கினல் முகரும்போது மனமானது தானுகவே உயர்ந்த நிலைக்கு செல்கிறது. மேனியில் படும் மெல்லிய குளிர்ந்த காற்று உள்ளத்தில் புத்துணர்ச்சியையும், புது வலிவையும் உண்டாக்குகிறது. இமயமலைச்சாரலில் கிடைக் கும் கனிகள் நாவிற்கு நல்ல சுவையாக இருப்பதோடு சத்வ குணத்தையும் ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்ல; அம் மலைகளில் முளைத்துள்ள செடிகள் உடலில் தோ ன் று ம் நோய்களையெல்லாம் மாற்றி விடுகின்றது. இங்ங்ணம் ஐம் பொறிகளினூடாக உள்ளத்துக்கு தெய்வ சம்பத்தும் உட லுக்கு ஆரோக்கியமும் திடகாத்திரமும் ஏற்படுகின்றது.
இப்படியான இமய ம லை யி ன் சாரலில்தான் அ தே கங்காநதியின் கரையில்தான் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களும் தவம் செய்தார்கள். அங்குதான் சிவானந்த ஆச்சிரமும் அமைத்தார்கள். தெய்வ நெறிக் கழகத்தை ஸ்தாபித்தார்கள். அங்கு சுவாமிகளது இரண்டாவது புண் னிய திதி ஆராதனையில் கலந்து கொள்வதற்காக ஒடோ டியும் சென்றேன். ஆராதனையில் கலந்து கொண்டிருக்கும் அமரநாதனின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் ஆக ஸ் ட் மாதம் 9-ம் திகதிக்கு முன்பு பஹல்காம் என்ற இடத் திற்கு சேர்ந்து விடவேண்டுமென்றும் 12-ம் தேதி அமர நாதன் தரிசனம் என்றும் இந்திய அரசாங்கத்தால் வெளி யிடப்பட்ட பத்திரிகைச் செய்தி காதுக் கெட்டியது. முன் போர் முறை இமாலயம் சென்றிருந்தபோது பத்திரிநாத் கேதார்நாத் என்ற இரு சேத்திரங்களும் யாத்திரை சென்ற போது ஏற்பட்ட அனுபவம் உடனே ஞாபகத்திற்கு வந் தது. ஆகவே, இம்முறை இச்சந்தர்ப்பத்தைப் ப ய ன் படுத்தி அமரநாத் யாத்திரை செல்லவேண்டுமென்ற எண் ணம் தோன்றியது. பூரீ சிதானந்த சுவாமிகளிடமும் அங் கிருந்த ஏனைய அடியார்களிடமும் விடைபெற்றுக்கொண்டு ஒருசில தினங்களுள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட் டேன். சுமார் ஒரு நாள் புகையிரத பிரயாணத்தின்பின்பு பத்தாங்கோட் என்ற ஊரைச் சென்றடைந்தேன். இதுதான் இந்தியாவின் வடக்கிலுள்ள கடைசிப் புகையிரத நிலையம். அங்கும் சில ஆலயங்களிருக்கின்றன. இந்தியா விலுள்ள நங்கல் என்ற ஒர் பெரிய அணைக்கட்டின் மூலம் நாடு விருத்தி செய்யப்படுவது, அங்கு ஒரு இடத் தி ல் மொடலாக அமைக்கப்பட்டு க ல் லூ ரி மாணவர்களதும்,

ஜோதி 7
எஞ்சினியர்களதும் அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்குமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அங்கு தங்கி அவைக ளேயும் பார்த்துவிட்டு மோட்டார் வண்டிமூலம் ய ம் மு என்ற இடத்தைச் சென்றடைந்தேன். அங்கிருந்து பூரீ நகர் சல்வதற்கான பாதை மழை காரணமாக மூடப்பட்டுள் ளது என்பதை அறிந்தேன். பாதை மீண்டும் தி ற க் க ப் படும்வரை அங்கேயே தங்கவேண்டிய அவசியமேற்பட்டது. அதுவும் இறைவனின் கருணை போலும். அங்கு பல பாகங் களிலும் மாபிள் கல்லினல் அமைக்கப்பட்ட பெரிய சிறந்த இந்து சமய ஆலயங்கள் இருக்கின்றன. அதிகமான ஆல யங்களில் சிவலிங்கம் வழிபாட்டுக்குரிய மூர்த்தியாக அமைந் துள்ளது. அங்கு ஆலயத்திற்கு செல்பவர்கள் கையில் ஒரு செம்பும் புஷ்பங்களும் கொண்டு செல்வார்கள். செம்பில் நீர் எடுத்து அங்கு ஆலயத்திலுள்ள சிவலிங்கத்தின்மேல் ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டு புஷ்பத்தினுல் தாங்களே அர்ச்சனை செய்வார்கள். இங்கு வாழ்பவர்கள் அ நே க ர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்நகரம் கஷ்மீரத்தி லுள்ள சிறந்த இரு நகரங்களுள் ஒன்ருகும். புராணிமந் திர் என்ற இராமர் ஆலயத்தில்தான் தங்கி நின்றேன். அந்த ஆலயத்தில் இருந்தவர்கள் எவருக்குமே தமிழோ, ஆங்கிலமோ பேசத் தெரியாது. எனக்கும் அதைவிட வேறு பாஷை பேசவும் தெரியாது. ஆகவே, அங்கு தங்கி நின்ற நாட்களில் அவர்களுடன் ஊமைப் பாஷையில்தான் பழகி னேன். ஆணுலும் அவர்கள் அங்கு தங்குவதற்கு இடமும் படுக்கையும், உணவும், பாலும் , பழமும் தந்து எ ன் மிகவும் கண்ணியமான முறையில் ஆதரித்தனர். நான்கு தினங்கள் தங்கிய பின்பு பூரீ நகர் செல்லும் பாதை மூடப் பட்டுள்ளதாக அறிந்தேன். அங்கிருந்தும் அதிகாலையில் மோட்டார் வண்டிமூலம் புறப்பட்டு சுமார் 200 மைல் பிரயாணம் செய்து அன்றிரவு பத்து மணியளவில் பூரீ நகர் போய்ச்சேர்ந்தேன். யம்முவிலிருந்து புறப்படும்போது ரிஷி கேசத்தைச்சேர்ந்த அச்சுதானந்த சுவாமிகளும் என்னுடன் சேர்ந்துகொண்டார்கள். அரசினரால் பிரயாணிகட்கென அமைக்கப்பட்டிருந்த விடுதியில் இருவரும் தங்கிவிட்டு மறு நாள் அங்குள்ள ஓர் ஆலயத்தில் தங்கினுேம். அங்கு ராம் மந்திர் என்ற வேருேர் ஆலயத்திற்குச் சென்றிருந்தபோது
சாதுக்களின் பெருங்கூட்டமொன்று அமரநாத் யாத்திரைக்
காகிய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தது. சு வா மி நிர்மலானந்தர் என்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு வயது முதிர்ந்த சுவாமி அவசரமவசரமாக இவ்வேற்பாடுகளில்

Page 6
8 ஆத்ம
ஈடுபட்டிருந்தார். அவர்கள் தங்க ள் யாத்திரைக்காகிய சாமான்களையும் யாத்திரிகர்களையும் ஏற்றிச் செல்வதற்காக இரு பஸ் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களுடனேயே நாங்களிருவரும் சேர்ந்து 62 மைல்களுக்கப்பாலுள்ள பஹல் காம் என்ற ஊரைச் சென்றடைந்தோம். அதுதான் யாத் திரிகர் தங்கள் யாத்திரைக்கு தேவையான சாமான்களை யெல்லாம் சேகரித்துக்கொண்டு புறப்படுமிடம்.
நாங்களும் எங்களுக்குத் தேவையான கூடாரம், கம் பளி, சப்பாத்து தடி முதலியவற்றை அங்கு சேகரித்தோம். யாத்திரைக்குத் தேவையான எல்லாச் சாமான்களும் அங்கு வாடகைக்குக் கிடைக்கும். தங்கள் சாமான்களைத் தாங்க ளே தூக்கமுடியாதவர்கள் அங்குதான் கூலியாட்களையோ குதிரைகளையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நடக்க முடியாதவர்கள் தங்களைச் சுமந்து செல்வதற்கு குதிரைகளே யும் அதற்கும் முடியாதவர்கள் தங்களைச் சுமந்து செல்வ தற்காகிய போனி போன்ற எல்லா வசதிகளையும் அங்கே யே செய்துகொள்ள வேண்டும். பஹல்காம் என்ற இடம் கடல் மட்டத்திலிருந்து 5,500 அடி உ ய ர மா ன மலை. கஷ்மீரத்திலேயே உள்ள இடங்களில் அது ஒரு சிறந்த காட் சிக்குரிய இடமாக அமைந்துள்ளது. சிறந்த இ ய ற்  ைக வளம் பொருந்தியது. அங்கு பைன் என்ற ஒரே இன மரந்தான் ஓங்கிப்பருத்து அழகாக வளர்ந்திருக்கும். இம் மரங்கள் நேராகவே இருநூறு முந்நூறு அடி உயரம்வரை வளரும். இலைகள் சவுக்கு மரத்தின் இலைகளைப் போன்றி ருக்கும். மரங்களோ பத்துப்பதினைந்து அடி சுற்றளவுடைய தாயிருக்கும். இம்மரங்களினுல்தான் அப்பகுதியிலுள்ளவர் கள் வீடுகள் கட்டி வாழ்கின்றனர். அந்த இடம் ஒரு சிறு பட்டணமாக அமைந்துள்ளது. கடைகள், ஹொட்டல்கள் தங்குவதற்காகிய இடங்களெல்லாம் அங்குண்டு. கோடை காலங்களில் சுவாத்தியத்துக்கென அ ங் கு வருபவர்களுக் காக எத்தனையோ விடுதிகளும் ஒரு பெ ரிய கி ள ப் பு ம் அமைந்துள்ளது. அங்கு நேரு பூங்காவொன்றிருக்கிறது. யாத்திரிகர்கள் கூட்டம்கூட்டமாக வந்துகொண்டிருந்தனர். வருடந்தோறும் பூரீ நகரிலிருந்து அமரநாத் செல்வதற்காக சடி கொண்டு வருவது வழக்கம்.
- தொடரும்.

ஜோதி 9 நல்லை நகர் நாவலர்
-) சபாபதிப்பிள்ளை • إع ) ..
'நல்ல நகர் ஆறுமுக நாவலர் வந்திலரேற்
சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே-எல்லவரும் ஏத்தும் புராணுகமங்க ளெங்கே பிரசங்கமெங்கே ஆத்தனறி வெங்கே யறை'.
என்று பாடிப் போற்றினர் நாவலரை புதுக்கோட்டை நீதியரசர் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர் கள். சேர். பி. இராமநாதனை முதல் முதல் இலங்கைச் சட்ட சபைக்கு அனுப்பிய பெருமை நாவலருக்கே உண்டு. சேர். பி. அவர்கள் சட்ட சபையில் நாவலரை 'வீறு கொண்ட இந்து சீர்திருத்தக்காரர்' என்று போற்றினர். கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் 'அக்காலம் ஒரு சர்வ மத சங்கம் கூடியிருந்தால் சைவத்திற்குப் பிரதி நிதியாக நாவலரையே நாம் அனுப்பியிருப்போம். விவே கானந்தர் போல் நாவீறு படைத்த அருட் பெரியார் நாவலர்' என்று மிக அழகாகக் குறிப்பிடுகிருர். அவர் யாத்த 'நாவலர் பெருமான்' என்ற பெரு நூலில் இன்று சைவமும் தமிழும் தழைத்தோங்க, திருமுறைகள் திகழ 'நாவலர் நாடகம்' யாத்திருக்கின்ருர், -
திருஞான சம்பந்தர் மூன்று வயதிலே தேவாரங்கள் பாடினர். சுப்பிரமணிய பாரதியார் ஏழுவயதிலே கவி பாடினுர், நாவலர் ஒன்பது வயதிலேதந்தையார்கந்தர்பாடிக் குறை வைத்த நாடகத்தைப் பூர்த்தி செய்து பாராட்டுப் பெற்ருர். எனவே நாவலர் நாடக ஆசிரியர் கூட, ஆகை யால் இன்று நாவலர் சரித்திரம் நாடக ரூபத்தில் வருவது மிக மிகப் பொருத்தம். வாழ்க நாவலர்! வாழ்க சுத்தா னந்தர்! வாழ்க தமிழ்! வாழ்க திருமுறை! வாழ்க
சைவம்!
இன்று தான் நாங்கள் நாவலரை ஐந்தாம் குரவர், ஆறுமுக நாயனர் என்றெல்லாம் போற்றி விழா எடுக்கி ருேம். அன்று நாவலரை 'வால் பேத்தையர்' 'பாணுத் தலையர்' என்றெல்லாம் தூற்றினர்கள். பிறந்த ஊரா கிய நல்லூரிலேயே நாவலர் அணியும் உருத்திராட்ச மாலை

Page 7
C. ஆத்ம
யைக் கேலி செய்யும் முறையில் பனங்காய்ப் பணிகாரத்தில் மாலை கோர்த்து அணிந்து கேலி செய்தார்கள். நல்லூர் கந்த சுவாமி கோவில் வீதியில் வைத்து வாழைப் பழத் தோலால், வடையால் எறிந்தார்கள். அக்காலத்தில் நல் லூர் கந்த சுவாமி கோவிலில் சிவாகமத்திற்கு விரோத மாக நடக்கும் பல காரியங்களை கண்டித்தார் நாவலர். ஆட்டுப்பலி, வாணவேடிக்கை, வனிதையர் நடனம் முத லியவற்றை வன்மையாகக் கண்டித்தார். இவைகள் எல் லாம் இப்பொழுது விடுபட்ட போதிலும், நாவலர் விரும் மூலமூர்த்தி இன்னும் சிலையால் அமைக்கப்பட
இக்கண்டனங்கள் காரணமாக கோயில் அதிகாரிகள் காடையர் சிலருக்கு மது உண்ணக் கொடுத்து கல்லாலும், பொல்லாலும் நாவலரை அடிக்க ஏவினர்கள். ஏவல்பேய் கள் நாவலர் வரும் வழி பார்த்திருந்தார்கள். நாவலர் நெற்றியில் விபூதி துலங்க, கழுத்தில் உருத்திராட்ச மாலை தொங்க, குமிழ் மிதி அடி டக், டக் என்று சப்தம் போட, கையில் பல ஏ ட் டு ச் சுவடிகளுடன் அச்சகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாவலர் சிவக் கோலத் தைக் கண்டதும் காடையர்கள் நினைத்து வந்ததையும் மறந்து கல்லையும் பொல்லையும் நாவலர் பாதங்களில் வைத்து வணங்கிச் சென்ருர்கள். என்னே! நைட்டிக பிரமச்சாரியத்தின் சக்தி!!
*பர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளின் பேரில் விவி லிய நூலே தமிழில் மொழி பெயர்த்த நாவலர் பைபிளே
நன்கு உணர்ந்திருந்தார். எனவே 'சாம்பலாண்டிகள்', 'அஞ்ஞானிகள்', கல்லையும் மண்ணையும் கட்டி அழும் கூட்டத்தினர்' என்று கண்டனங்கள் செய்து, தகாத
முறையில் மத மாற்றம் செய்தவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தார். 'சைவதூஷண பரிகாரம்' பாதிரிமாருக்கு இங்கும் இங்கிலாந்திலும் பெரும் பீதியை உண்டு பண் னிற்று. இந்நூல் பெயருக்கேற்ப சைவதுரஷனைக்குப் பரி காரமே யொழிய கிறிஸ்தவ கண்டனமல்ல. 1855ல் இங் கிலாந்தில் வெளியிட்ட வெஸ்லியன் மெதடிஸ்த ஆண்ட றிக்கையே இதற்கு போதிய சான்று. ,°

ஜோதி 11
அறிக்கையின் தமிழாக்கச் சுருக்கம்:-
'இவ்வாண்டின் மகத்தான சம்பவம் சைவதுரஷ்ண பரிகாரம் என்ற தமிழ் நூல். அது அசாதாரணமான இலக்கியம். சைவ மதம் சைவர்களுக்கு. கிறிஸ்த மதம் கிறிஸ்தவர்களுக்கு. இலிங்காராதனை, விரதம், தீர்த்தம், யாத்திரை போன்ற இருபத்திரண்டு விடையங்களுக்கு விவி லிய நூலில் இருந்தே ஒப்பினை ஆதாரங்கள் காட்டி விளக்குகின்றது. முதல்தரமான மூளைதான் இதை எழுதி யிருக்க வேண்டும். இந்நூல் நமக்கு பெரும் கெடுதல் செய்கின்றது’.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த 'இடைக்' துரையும் நாவலரும் உற்ற நண்பர் கள். ஒருநாள் இடைக் துரை குடும்பசமேதராய் குதிரை வண்டியில் அதிகாலையில் உலா வந்து கொண்டிருந்தார் கள். நாவலர் வீட்டு வாசலில் ஓர் பெரிய கல் இருந்தது. அக்கல்மேல் இருந்து நாவலர் பல் துலக்கிக் கொண்டிருந் தார். நாவலரைக் கண்டதும் இடைக் துரை வண்டியை நிறுத்தி 'குட் மொணிங் மிஸ்றர் ஆறுமுகம்! நீங்கள் உங்கள் சுவாமி மேல் உட்கார்ந்து பல் துலக்கலாமா?*
நாவலர் புன் சிரிப்புடன் எழுந்து வண்டி அருகே சென்ருர்,
'குட் மோனிங்' என்ருர் நாவலர். திரு. இடைக், திருமதி. இடைக் (மனைவி), செல்வி. இடைக் (மகள்),
மூவரையும் பார்த்த வண்ணம்.
நாவலர் தொடர்ந்து திரு. இடைக் அவர்களை நோக்கி 'மன்னிக்கவும்; நீங்கள் திருமதி. இடைக் அவர்களிடம் நடந்து கொள்வது போல் செ ல் வி . இடைக்கிடமும் நடந்து கொள்வீர்களா?
இடைக் துரை வெட்கி வண்டியை விரட்டிச் சென் (?/i,
நாவலர் ஆற்றிய தொண்டு அளப்பில. யாழ்ப்பா ணத்தில் ப ல பள்ளிக்கூடங்கள், ஒர் அச்சியந்திரசாலை,

Page 8
2 - ஆத்ம
சிதம்பரத்தில் ஒர் பள்ளிக்கூடம், சென்னையில் ஒர் அச்சி யந்திரசாலை ஆகியன அமைத்து சைவத் தொண்டு தமிழ்த் தொண்டு செய்தார். திருவாவடுதுறை ஆதீனப் பண்டார சந்நிதிகள் நாவலரை அழைத்து 'பசு பதி பாச விளக் கம்' என்னும் பொருள் பற்றி பிரசங்கம் செய்வித்தனர். நாவன்மையைப் போற்றி 'நாவலர்' என்ற பட்டத்தை ஆதீன முறைப்படி சூட்டினர்கள்.
நாவலர், தியாகராசச் செட்டியார், மீனுட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் ஒருமுறை காவேரியில் குளிக்கச் சென் முர்கள். குளிர்காலம், பிள்ளை அவர்கள் 'பனிக்காலம் கொடிது' என்ருர், நாவலர் 'பனிக்காலம் நன்று' என் ருர், செட்டியார் பிள்ளை அவர்கள் சொன்னதே சரி என் ருர், ஒரு சிலர் நாவலர் சொன்னதே சரி என்று விவா தித்தனர். நாவலர் தான் பிள்ளை அவர்கள் சொன்னதை யே வலியுறுத்திச் சொன்னதாகக் கூறினர். எல்லோரும் எப்படி என்று கேட்டார்கள். அதற்கு நாவலர் 'பனிக்குஆலம் - நன்று' ஆலம்-விஷம், அஃதாவது பனியைவிட விஷம் நல்லது என்று விளக்கிக் காட்டினர்.
நாவலர் கவி பாடும் திறமை உடையவர். ஆணுல் அவர் அதிகம் கவிகள் பாடவில்லை. எல்லோரும் பயன் அடையக் கூடிய முறைகள் வசன நடையே கையாண்டார். தமிழ் வசன நடையே கை யாண்டார். த மி ழ் வசன நடைக்கு நாவலரே மூலகர்த்தா. நாவலரே முதல் முதல் ஆங்கிலக் குறியீடுகளை த மி ழ் வசன நடையில் பாவித்து தமிழ் வசன நடைக்கு மெருகு கொடுத்தவர்.
'சீர் பூத்த கருவி நூலுணர்ச்சி தேங்கச்
சிவம் பூத்த நிகமாக மங்களோங்கப் பார் பூத்த புறச்சமய விருள் கணிங்கப்
பரம் பூத்த சைவ நிலை பாரோர் தாங்கப் பேர் பூத்த சிவானந்தத் தினிது துரங்கப்
பிறை பூத்த சடைமவுலிப் பிரசகுர்தந்த வார் பூத்த அறிவிச்சை தொழிலென்ருேது
மதம் பூத்த விநாயகன் முள் வணங்கி வாழ்வாம்!"
இது நாவலர் ஆசு கவியாகப் பாடிய ஒர் கவி. சொற் சுவையும், பொருட் சுவையும் மிளிர்கின்றது. ‘பரம் பூத்த

ஜோதி 3
சைவ நில பாரோர் தாங்க" - பரமபதியாகிய சிவபெருமா ல்ை சிவன் பெயரைக் கொண்டமைந்த சைவநிலை என்று கூறும் நாவலர் உண்மைப் பொருள் உணர்த்தும் வகையில்
பாப் பூத்த புறச்சமய விருள்கள்" என்று மிக அழகாகச் சொல்கின்ருர், புறச்சமயங்கள் நீங்க என்று பாடியிருந் தால் சமரச சன்மார்க்கம் பேசும் அன்பர்கள் குறுகிய நோக்கம் படைத்தவர் நாவலர் என்றிருப்பார்கள். ஆனல் நாவலர் சைவத்தில் புகுந்த புறச்சமய இருள்களையே நீங்க என்று பாடியிருக்கிருர்,
நாவலர் தற்புகழ்ச்சி விரும்பாத பெரும் மேதை. அக் காலத்தில் அபிமானிகள் சிலர் நாவலரைப் புகைப்படம் எடுக்கப் பார்த்தார்கள். நா வ ல ர் மறுத்துவிட்டார். எனவே நாவலரின் சாயலை ஒத்த நன்மானக்கர் காரைநகர் ஏரம்பு ஐயர். அவர்களைப் படம் பிடித்தார்கள். அதுவே இப்பொழுது நாவலர் படமாக வழங்கப்படுகின்றது.
வண்ணுர்பண்ணை நாவலர் வித்தியாசாலையில் 1879 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிரசங்கம் செய்த முடிவில் இதுவே எனது கடைசிப் பிரசங்கம் என்று கூறிமுடித்தார். அவ்வாறே சில தினங்களில் குஞ்சித பாத நிழலை அடைந் தார். நாவலர் இறைவனடி சேர சில தினங்களுக்கு முன் அபிமானிகள் நாவலர் உயிர் துறந்தால் அவர் பூத உடலை சமாதி செய்து, கோயில் கட்டுவதாகத் திட்டம் போட் டார்கள். நாவலர் இதை எப்படியோ அறிந்து கொண் டார்கள். உடனே அபிமானிகள் எல்லோரையும் அழைத்து தான் இறந்த பின் உடலை சைவாசாரப்படி தகனம் செய் யும்படி கட்டளை இட்டார். ஈமக்கிரியைகள் செய்வதற்குக் கூட உற்ற உறவினர், உடன் பிறந்த சோதரர்களை எல் லாம் விலக்கி சைவாசாரப்படி சிவபூசை செய்து சிறப்புடன் வாழ்ந்த சபாபதிச் செட்டியார் அவர்களையே நியமித்தார். பூதஉடல் அழிந்தது. புகழுடம்பு இன்றும் நிலவுகிறது.
நாவலரை ஈழத்தில் அநகாரிக தர்மபாலாவிற்கே ஒப் பிடலாம். இருவரும் நைட்டிக பிரமச்சாரியர்களாக இருந்து புறச்சமய இருள்நீக்கி தங்கள் தங்கள் சமயத்திற்கு அரும் பெரும் தொண்டாற்றினர்கள். நாவலர் திருக்கேதீச்சர புனருத்தாரண வேலைக்கு வித்திட்டார். தர்மபாலா புத்த கயா புனருத்தாரண வேலைக்கு வித்திட்டார். நா வ ல ர் காலம்: 1822-1879. தர்மபாலா காலம்: 1864-1933,

Page 9
14 - ஆத்ம
«ه
இருவரையும் ஒ ரே முறையில் போற்ற வேண்டும். அநகாரிக தர்மபாலாவிற்கு தபால் முத்திரை வெளியிட் டது போ ல் நாவலருக்கும் வெளியிடப்பட வேண்டும். தேசிய வீரர்கள் பெயர் வரிசையில் இருவர் பெயரும் வர வேண்டும். தகுந்த இடங்களில் இருவருக்கும் சிலைகள் நாட்ட வேண்டும். கலாச்சார இலாக்கா இருவர் வாழ்க் கைகளையும் திரைப்படமாக்கி உலகறியச் செய்ய வேண்
டும்.
ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்!
ᎧᏈ ᎧᏈᎧᎧᏡᎧᎧᏑᎧ ᎧᏑᎳᎩ ᎧᏡ ᎧᏡᎠᎧᏑᎧ ᎧᏈᎠᎧᏡᎩᎶᏡᎧᎼ0ᎧᎧ ᎧᏈX Ꭷ0Ᏼ ᎧᏈᎣ ᎧᎧᎧᏡ ᎧᏈᎠ ᎧᎧᎧᎧᏛ0 ᎶᏡ ᎶᏛᏈ9ᏊᏡᎧ ᎧᏈᎠ
1. ஆத்மஜோதி மலர் (1963) 2.0● 2. சைவ இலக்கியக் கதா மஞ்சளி 3.00 3. ஆத்மநாதம் 3.00 4. தீங்கனிச் சோலே 2.50 5. பாட்டாளிபாட்டு 3.59 6. திவ்ய ஜீவனசங்க வெள்ளி விழா மலர் 1.25 7. கூட்டு வழிபாடு 3. 8. நவராத்திரிப் பாடல் 50 9. மார்கழி மாதப் பாடல் 20 10. கதிர்காமப் பதிகம் 25 11. செல்லச்சந்நிதி பாடல் 15 12. கந்தர் சஷ்டி கவசம் 15 13. அறிவுரைக் கதைகள் 6 14. நித்திய கருமவிதி 25 15. கதிரைமணிமாலை 50 16. நாவலர் நாடகம் 2.0
தபாற் செலவு தணி
ஆத்மஜோதி நிலையம்
நாவலப்பிட்டி, (சிலோன்).

ஜோதி 15
வழிகாட்டும் தெய்வம் எங்கே ?
SS Manna an/NY
வழிகாட்டும் தெய்வம் எங்கே!-அம்மா நல் வழிகாட்டும் தெய்வம் எங்கே?
அனுபல்லவி
பழிபாவம் பகைதடுத்து பசிவேளைக் குணவளித்து, விழிகாக்கும் இமைபோல விருப்போடு உயிர்காத்து; - வழி.
சரணங்கள்
கண்ணில் ஒளியிழந்து கதைக்கும் குரலிழந்து பண்ணில் இசையிழந்து பார்வைக் கழகிழந்து தண்ணீர்ப் பசையிழந்து சருகாய் உலர்ந்ததென மண்ணில் நிலையிழந்த மடையன் எனக்கொரு நல்
கண்கள் இரண்டிருந்தும் கடவுளைக் காணுது புண்கள் இரண்டுடைய பொய்க்கண் நிலையினில்நான் எண்காண முடியாத எழுத்தொன்றும் தெரியாத மண்பொம்மை போலான மாயஇருள் அகற்றி
அன்பின் வடிவெடுத்து அறிவுத் தெளிவெடுத்து இன்பஅருள் சுரந்து இதயத்தொளி பிறந்து துன்பஇருள் அகற்றி தூய்மை நிலைக்கவென்று அன்பர் உளத்தில்நடம் ஆடிக் களித்துவந்து
*" தி மிலே க் க ண் ண ன் '

Page 10
6 ஆத்
வழிகாட்டும் சுடரே நீ வருக!
(uп єош т у 5)
வழிகாட்டும் சுடரே நீ மனம் வீசி வருக!
UD
同
沿
| ဒွိစ္ 沿·
|8နှီး வையத்தின் இருள் போக்க E. 陪,
ခြီး• }8:•
}8၈ 3.
歌
மகிழ்வோடு வருக! விழியற்ற குருடற்கும்
ஒளியேற்ற வருக! விண்ணின்பச் சுடராக
கண்ணின்று ஒளிர்க! ஈழத்தின் ஆத்மீகக்
குரலான சுடரே! இணையற்ற ஒளிவீசிப்
பொலிகின்ற நிலவே! நாளுக்கும் கோளுக்கும்
நலியாத குரலே!
|8န္တီး 腔 }8:၈ |용 |8:+ ஞானப் பொற் கதிரான
30 冷 |8:၈ 卧
ஆத்மீகச் சுடரே! இதயத்தின் இருள் போக்கும் QV
இறை ஞானக் கண்லே! ஈடற்ற தவம் மிக்க,
எழில் மிக்க புனலே! பதினெட்டு வருடத்தின்
வளம் மிக்க மலரே! பாருக்கு ஒளியூட்டும் சமரசச் சுடரே!
}8§၈ 3. |8န္တီမံ 沿 卧 குன்ருத ஆத்மீகக் ※ குரலே, நீ வருக! |8မ္ဘိန္ குறையாத அழகொடு |8န္တီး குலவி நீ வருக! 卧 பொன்ருத பணி நலம்
புரிய நீ வருக! ※ புனித நல் ஒளிவீசிப் }8မွီမံ
புவியெலாம் பொலிக!
画
回
画
ee ekekekeLeOke ekekekekeke ekek ekeO kekekke ekeke ekekeekeLekeOekekek eke ekekeO OeLeLee

ஜோதி 7
கெந்தையா வைத்தியநாதன்
'' சுத்தா னந்த பாரதி'
இப்பொழுது தான் நாடெல்லாம் சுற்றிப் பல கூட்டங்களிற் பேசி வந்தேன். ஈழநாட்டைத் திருப்பினேன், தி டு க் கி ட் டு ப் பதறினேன்! நேற்று என்னுடன் இருந்த கந்தையா வைத்தியநாதன் இன்று மறைந் தார். அரசியல அரசம் என்று உதறித்தள்ளி, அருளியலிற் களித்த அன்பரா காலம் சென் ருர், இல்லே காலத்தை வென்றர். S) sa Lossil கந்தையா வைத்தியநாதரை யார் மறக்க முடியும். கேதீஸ்வரம் உள்ள மட்டும் அவர் வாழ்வார்.
"தந்தையின் அன்புமிக்காய்
臧,° தாயெனக் கருணை செய்தாய்
நந்தமிழ்ச் சமுதாயத்து
நண்பனே! பண்பனேயோ!
விந்தையாய் உடலை நீத்து
விரைந்ததேன்! கரைந்ததேனுே?
கந்தையா வைத்தியநாதா
காலத்தை வென்று வாழ்வாய்!
'நாவலர் வந்த நாட்டில்
நன்னெறிச் சைவத்திற்குக் காவலனுக நின்ருய்
கண்ணிமை போலக் காத்தாய்! ஆவலாய் மீண்டும் உன்னை
அன்பினுல் அணைவதென்ருே? சீவனைத் திருத்தொண் டாக்கிச்
சிவம் பெறப் பொலிந்த செல்வா!'
எத்தனை அன்பு செய்தாய் எத்தனை ஆர்வமானுய் சுத்தசன் மார்க்கச் சைவம்
துலங்கிடக் கேதிசரத்தில் எத்தனை பணிநலங்கள்
இரவொடு பகலாய்க் காத்தாய் உத்தம வைத்தியநாதா
உனக்கொரு நமனும் உண்டோ?

Page 11
18 - ஆதி ம
நெஞ்சுடைந் தலறுகின்றேன்
நேயனே தூயனே நின் வஞ்சமில் லாத தொண்டை
வளர்த்திடத் தமிழர் நாளும் துஞ்சிடா துழைக்கவேண்டித்
துடிதுடித் தழைக்கின்றேனே பஞ்சபூ தத்தைத் தாண்டிப் பரகதி பெற்ற பண்பா!
சைவமும் தமிழும் வாழ்க!
சைவத்தைத் தாங்கி நின்ற "ஐவரும் வாழ்க! ஆரும்
அன்பனப் நீயும் வாழ்க! நைவுறு நிலைமை மாறி
ஞாலமும் அமைதி சேரத் தெய்வத்தை வணங்கிச் சீவன்
சிவமயமாக வாழி!
| اسمه
ஐவர் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கர், நாவலர்
LckcLccSkcLcALMLcLMcccLcMLMLcLSMLMLMLcMLMLMLMLLLAALLLLLAALLLMLLALMLLALLLALALLALcLSAcLcLSAALLSALAcSALeSSLLLLLAALAeLMLLALALLSLLLAL
பு ர ட் சி
ஜனசமூகங்கள் வளர்ச்சியாலும் புரட்சியாலும், முன் னேறியிருக்கின்றன. ஒவ்வொன்றைப் போலவே மற்றென் றும் அவசியமாகும். இறப்பானது புரட்சி, பிறப்பானது வளர்ச்சி. மனிதனுடைய முன்னேற்றத்துக்குப் பிறப்பைப் போலவே இறப்பும் இன்றியமையாததாகும். சரித்திரமா
னது அமைதியான முன்னேற்றத்தைவிட அ ற் பு த மா ன புரட்சியையே அதிகமாகக் கூறுகிறது.
காந்தி,
熬爵

ஜோதி 19 சைவத்திற் இவம்
(வருணு னந்தரி)
'எல்லாம் சிவமயம்' என்பர் சான்றேர். என்றும் உள்ளது எதுவோ அதுவே சிவம். ஒளிமயமானது சிவம்:
* வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் மேல்வெளிமேற் பெருவெளியாய்ப் பெருவெளிக்கேயர்
திகழ்வதும் அதுவே.
"அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பா லாய்க் கணு முற்றி நின்ற கரும்புள்ளே’
வியாபித்திருப்பதும் சிவமே,
சிவன் சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டுகின்ருன், சிவம் அருள்நிறைந்ததாகின்றது. அவனே சித்தத்தினுள்ளே சிவலிங்கமும் காட்டுகின்றன், சிவம் ஆனந்தமுள்ளதாகின் றது. வாக்காலும் மனத்தாலும் அளவிட்டறியப் பெருத சிவம்; சொல்லிறந்து மனமிறந்து அருளால் அறியத் தக்
கிது.
சிவத்தின் அனந்த கல்யாண குணங்களில் அநுக்கிரகத் தின் பொருட்டுச் சில முக்கியமான குணங்களாலமைந்த கரசரணுதி அவயவங்களை யுடையதாய்த் தியானித்து அதன் அருளாகிய திருவடியை விரும்பி அதன் அருளாலே அத னையே வணங்கி வழிபட்டு வருவோர் சிவனடியார்கள். ஒரு குறையுமில்லாதவர்கள்.
படிமுறையாக சிவத்தை அடைய நான்கு வழிகள் உள. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. சரி யையாவது சிவபெருமானைப் புறத்தே வழிபடுவது; கிரியை யாவது அகத்தும் புறத்துமாக வழிபடுவது; யோகமா வது அகத்தே வழிபடுவது; ஞா ன மா வ து அதன் வழி அடங்கி நிற்பது. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படும் நான்கும் மோட்ச காரணங்களாம். இவற்றுள் ஞா

Page 12
20 ஆத் ம
னமே முக்கிய காரணமாம். சரியையின்றி கிரியை இல்லை. கிரியையின்றி யோகம் இல்லை. யோகமின்றி ஞா ன மி லை. ஞானமின்றி மோட்சமில்லையாதலால் மோட்சத்துக்கு சரி யையாதி நான்கும் முறையே காரணங்களாகும்.
மேற்கூறிய வழிகளை அடைவதற்கு ஆன்மாக்கள் நல் வினைகளாலாய தருமத்தை இடையருது செய்யவேண்டும். ஆன்மாக்களைக் குறித்துச் செய்யப்படும் ஆதுலர்க்கன்னம் ஒதுவார்க்குணவு முதலிய முப்பத்திரண்டு தருமங்களும் பசுதருமம் எனப்படும். சிவத்தைக் குறித்துச் செய்யப்படும் தருமம் சிவதருமம் எனப்படும். இவ்விருவகையான தரு மங்களுள் சிவதருமமானது பொதுச் சிவ தருமம், சிறப்புச் சிவதருமம் என இருவகைப்படும். சிவதீக்கையின்றிச் சிவ பெருமானைக் குறித்துச் செய்யப்பெறும் சரியை, கிரியை, யோகம், ஞானம், ஆகியவை பொதுச்சிவதருமம் எனப் படும். சிவதீக்கையுடையோராற் செய்யப்பெறும் சரியை, கிரியை, முதலியவை சிறப்புச்சிவதருமங்களாகும். இவை கள் அசுத்தாவத்தையிற் செய்யப்பெறும் சிவபுண்ணியங்க ளாகும். மேலும் சுத்தாவத்தையிற் செய்யப்பெறும் புண் னியங்களும் உண்டு. அவைபத்தாகும். அவையாவன, தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூ பம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாம்.
ஆன்மாக்கள் எண்ணில்லாதவைகள். அனுதியே உண்டு அவைகளுக்கு இயல்பாகவே இச்சா, ஞான, கிரியா, சக்தி கள் உண்டு. ஆனல் அவைகள் அனுதியே ஆணவத்தால் தடைபெற்றிருக்கின்றன. ஆதலால் ஆன்மாக்கள் செயலற்று மூடமாய்க் கிடந்தன. ஆன்மாக்களைப்போல் அனுதியாயுள் ளவரும் யாதொன்ருலும் தடைப்படாத இச்சா ஞா ன க் கிரியா வல்லமைகளையுடையவருமாகிய சிவ பெ ரு மா ன் தமது பேரருளால் அவ்வான்மாக்களுடைய தடையை நீக்கி அவர்களுக்குத் தமது பேரானந்தத்தைக் கொடுக்கத் திருவு ளங்கொண்டு அநாதியாயுள்ள மாயையிலிருந்து தமது சக்தி களால் அந்த ஆன்மாக்களுக்குத் தநு கரண புவன போகங் களைக் கொடுத்தார். அவைகளைப்பெற்ற ஆன் மா க்க ள் அவைகளின் உதவியால் தமதறிவிச்சை செயல்கள் முறை முறையாக விளங்கப்பெற்று சிவத்தை அடையுங்காறும், உறுகின்ற சமயங்கள், பலவுள. அவர்கள் அவற்றைப்புறப்

ஜோதி 2
புறம், புறம், அகப்புறம், அகமென நான்காய்த் தொகுத்து உலோகாயதம் முதல் சிவாத்துவிதவாத சைவமீருக இரு பத்து நான்காய் வகுத்தார்கள்.
இங்ஙனம் வகுக்கப்பெற்ற இருபத்துநான்கு சமயங்க ளும் இவற்றி நின்று விரிந்த சமயங்களும் கொண் ட கொள்கைகளெல்லாம் சைவசமயத்தில் அடங்கியவையேயா கும். ஆதலால் அவையாவும் சிவத்திலடங்கியவை.
கடவுள் ஆன்மா, மலம், மாயை, கன்மம் என்னும் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு உள்ளங்கை நெல் விக்கனிபோல் எடுத்து விளக்கும் சைவசமயம் உண்மையும் சிறப்புமுடையது. சைவத்திற் சிவம் பெரும் பேருண்மை யும் உயர்வும் கொண்டதாகும்.
ஒம் தத் ஸத்
****令拿一争令→鲁令鲁*令***令争夺参→争夺*令***季夺→令令令令*令令一伞*令令-争令*令***令争伞伞伞伞令令令
அருள் நெறி காட்டிய தாய் (சுயசரிதையின் சுருக்கம்) (சென்ற மாதத் தொடர்ச்சி)
(புலவர். சி. விசாலாட்சி)
தமிழ்நாட்டில் தனியப் பெண்கள் வசிப்பதை யாரும் விரும்புவதில்லை. அதுபோன்று பெண்கள் தவம் செய்வ தை யாரும் விரும்பமாட்டார்கள். எனவே என் வாழ்க் கை முறை யாவும் அவ்விட மக்களுக்குச் சந்தேகத்தைக் கொடுத்து விட்டது. ஆனல் எனக்கு உறுதுணையாக இருந்த பாட்டியின் உதவியால் எனக்கு ஒருவித குறையும் ஏற்ப டாது இருந்தது. மட்டக்களப்பில் அடர்ந்த காடு. அக் காட்டிற்குள்யாரும்செல்லவேமுடியாது. அக்காட்டிற் கருகிற் தாம் எம்முடைய குடிசையும் அமைந்திருந்தது. எமக்கு வேண்டிய அன்ருட உணவுகளைப் பாட்டியம்மா எப்படியோ சேகரித்து வருவார். காட்டிற்குள் உள்ள கொன்றை மரத்தின் கீழ் நான் தினமும் தியானம் இருப்பேன். காலே யிற் சென்ருல் மாலையில் வருவதுமுண்டு. இரண்டு மூன்று

Page 13
22 كما يقرؤي
நாட் கழித்து வருவதுமுண்டு. எப்படி எக்காலத்தில் வந் தாலும் பாட்டியம்மா சந்தேகித்ததே இல்லை. நான் தெய்வ பக்தியிலீடுபட்டு பரமனைத் தியானம் பண்ணுவதைப் பூரண மாக நம்பினர். அதனுல் என் விடயத்தில் மட்டும் அவர் சிரத்தை யெடுத்ததே இல்லை. M
பெண் என்ற தாயினுற்ருன் உலகம் சிறந்த முறையில் நடக்கின்றது. தாயின் செங்கோலாட்சி இல்லையேல் இயற் கையின் மாறுபாட்டால் உலகம் அல்லற்பட்டு அழிந்து விடும். பெண்ணே மனித சமுதாயத்தின் தெய்வம். நல்ல பெண்களால் ஆத்மீக வாழ்வு காண முடியும். சிறந்த முனி வர்களையும் சித்தர்களையும் ஞானிகளையும் ஈன்று உருவாக் கித் தருபவள் பெண்ணே என்று உணர்ந்த மனித இனங் கள் பெண்களிற் குறை காணத் துடியாய்த் துடித்து வரு கின்றனர். பெண் துறவு பூண்டு விட்டால் பல குற்றங் குறைகள் கூறுவர். ஒ இப் பெண்ணுக்கு நோயாக இருக்க வேண்டும் என்று பல காரணங்கள் கூறுவது தமிழ் மக்கள் இயல்பு. இவைகளுக்கு நான் விதி விலக்கல்ல. யார் எதைக் கூறினுலும் அசையா உள்ளத்துடன் ஒன்றிய மனப்பான் மையுடன் வாழ்ந்து வந்தேன்.
இந்திய நாட்டில் அநேக ஆண்டுகள் இருந்த ஆச்சிர மப் பழக்க வழக்கங்களுடன் இசை பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் பாடுவதிலும் வல்லவளா யிருந்தேன். அத் துடன் சமையல் வேலையிலும் திறமையுடையவளாய்க் காணப்பட்டேன். நான் படித்த காலத்திற் குறிப்பிட்ட இளம் பண்டிதர் இப்போது மாற்றலாகி மட்டக்களப்பு ஸ்தவ பாடசாலையிற் கடமையாற்றி வந்தார். அவர் என் திறமைகளை அறிந்து தம் பாடசாலையில் ஈன்னையும் ஆசிரியை ஆக்கினர். இதல்ை காட்டைச் சார்ந்த இடத் தை விட்டு நகரத்திற்குள் நாம் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாடசாலையில் கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்புவேன். எம் வேலைத் திறன்களை அறிந்த பிள் ளேகள் என்னுடன் அதிக தொடர்பு கொண்டனர். நாள் தோறும் காலை மாலைகளில் இன்னிசை விருந்து எமதில்லத் தில் நடைபெறும். சில கைப்பணிகளும் நடைபெறும். எப்போதும் உண்மை நடமாடு மிடங்களில் எதிர்ப்புகளும் இருக்கத்தானே செய்யும். பொய்யுலகில் மெய்யின்பங்களை மெய்யென்று வாழும் மக்களிடையே பல சந்தேகங்கள்

ஜோதி 23
எழத்தான் செய்யும். இதன் u(95 பலர் உண்மையுடன் வாழும் உத்தமர்களுக்குக் கெடுமதி செய்வதிற் பின்தங்க ap Tu Ltri 5GT.
அன்று கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பினேன். அப் போது பாட்டியம்மா வீட்டில் இல்லை. வெள்ளிக்கிழமை யாகையால் மாமாங்கப் பிள்ளையார் கோவிலுக்குச் சென் றேன். வழியில் அரசமரத்தின் கீழ் ஓர் பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. கிட்டச் சென்றேன். இருபத் தைந்து மதிக்கக் கூடிய ஒரு இளம் பெண் உயிர் போகும் தறுவாயிற் கிடந்தாள். அவள் என்னைப் பக்கலிற் சைகை காட்டி அழைத்தாள். அம்மா இக் குழந்தையை என் தகப்பனரிடம் சேர்த்து விடுவாய். வழியிற் ப சி யி ன் கொடுமை தாங்காமல் அதோ தெரியும் பழத்தை உண் டேன். அதன் பயனுல் இறக்கும் தறுவாயில், தெய்வம் போல் வந்தாய் என்று கூறித் தன் தகப்பன் இருக்குமிடத் தையும் கூறினுள்.
அவள் கூறிய இடம் நாம் முன் இருந்த காட்டைக் கடந்து அப்பாற் செல்ல வேண்டியிருந்தது. கா டோ அடர்ந்த காடு. கொடிய மிருகங்கள் சஞ்சரிக்கும் இடம். அதனுரடாக ஒற்றையடிப் பாதை சென்றது. இறந்த பெண் சொன்ன குறிப்பின்படி ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றேன். பொழுது நன்முக இருட்டி விட்டது. செய்வ தறியாது திகைத்தேன். கொடிய மிருகங்களின் இறுமற் சத்தம் காதைத் துளைத்தன. பெரிய பெரிய யானைகள் கூட்டம் கூட்டமாய் பிளிறிய வண்ணம் மரங்களை முறித் தன. நான் இறந்தாலும் அப் பெண்குழந்தையை உரிய வரிடத்திற் பொறுப்பிக்கும் கடமையொன்றிருந்தமையால் தெய்வ சிந்தையுடன் சென்றேன். பாதை தெரியாமை யாற் பலநாள் திரிந்து அலைந்தேன். காட்டில் உள்ள பழங் களைத் தேர்ந்தெடுத்து சாறைக் குழந்தைக்குக் கொடுத்து சக்கையை நான் உண்டேன். காடு பூராவும் அலைந்து அலைந்து திரிந்து விட்டேன். இடத்தைக் கண்ட பாடில்லை. பல இன்னற்பட்டும் விட்டேன். இப்படியே மூன்றுமாதம் கடந்து விட்டது. நானும் பேய் வடிவமானேன். குழந் தையும் பேய் வடிவமானது. பார்ப்பார் உதறித் தள் ளும் முறையில் இருவரும் அமைந்து விட்டோம்.

Page 14
24 *** ஒருநாள் நடுநிசி ஆள் அரவம் கேட்டுத் திடுக்கிட்டெ ழுந்தேன். வந்த ஆளும் எம்மைவிடக் கேவலமாகவே காணப்பட்ட போதிலும் அருள் வடியும் வதனத்துடன் காணப்பட்டார். கழுத்தில் உருத்திராக்க மணி, கையில் கமண்டலம் மான்தோல் குடை முதலியவற்றுடன் காணப் பட்டார். அவர் என்னை நெருங்கிக் குழந்தாய் எழுவாய் இன்றுடன் உன் இடர் யாவும் களையப்பட்டன. இக்குழந் தையுடன் என்னுடன் வருவாயாக வென்று அழைத்துக் கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தார். நானும் அக்குழந் தையும் அவரைத் தொடர்ந்து நடந்தோம்.
கிராமத்தை அடுத்த சிறு கிராமத்தில் ஒர் ஒலைக் குடி சைக்குள் நாம் மூவரும் புகுந்தோம். அங்கு மூதாட்டி காவி யுடை அணிந்து புன்முறுவலுடன் வரவேற்று எனக்கும் அக்குழந்தைக்கும் குளிக்க நீர் மாற்றுடை உணவு வகை கள் தந்தாள். அவளின் உபசரிப்பால் நானும் குழந்தை யும் தேகநிலை பெற்றுவிட்டோம். எல்லாம் வல்ல அந்தக் குருநாதன் அருளால் எம்மை அழைத்து வந்த அக்கிழவரே குருவாக மாறி பல ஞானநூல்களை எனக்குப் போதித் தார். தாயார் வழிகாட்டியாய் உடன் இருந்து வந்தார். நானும் அக்குழந்தையும் காலகெதியில் பார்ப்பவர்க்குத் தாயும் சேயுமாக மாறினுேம். அந்த இருமூதாதையர் போன்றவர்களாகிய தெய்வங்களும் மறைந்து இன்றுடன் பதினைந்து வருடங்களாகின்றன. என்னிடம் அரிய நூல்க ளைக் கற்றும் சாதனைகளைப் பயின்றும் சிறந்த பெண்மணி யாய் பார்வதியென்ற பெயருடன் பாருக்குள் மாணிக்க மாய்த் திகழ்கின்ருர்,
எனவே என் அன்புக் குழந்தாய் உன் அறிவிற்கெட் டிய அளவில் இம்மூவர்களை யார் யார் என்று நீயே கற் பனை செய்து கொள்வாய். ஆக மனித வாழ்வின் சிறப் பாகப் பெண்கள் வாழ்விற் பல வேதனைகளும் சோதனை களும் ஏற்படத்தான் செய்யும். அவற்றையும் தம் 'இள மையிற் கல்வி சிலையில் எழுத்து என்ற பழமொழிக்கிணங்க உன்னைப் பொறுத்த மட்டில் நீ பெரிய பாக்கியசாலி. நான் பட்ட இன்னல்களில் அணுவளவேனும் உனக்கு வரா திருக்கவே பரந்த என் வரலாற்றைச் சுருக்கிக் கூறிவிட் €3éL 6öT.
 
 
 
 
 

ஜோதி 25
பல்லாண்டு காலங்கட்கு முன் பெண்களும் ஞானிக ளாய் யோகினிகளாய் வாழ்ந்தார்கள். அதற்குச் சான்று கள் இன்னும் உள்ளன. இடைக்காலத்திற் ருேன்றிய சில ஆடவர்களால் பெண்கள் சமுதாயம் நசுக்குண்டு அல்லற் பட்டுச் சீரழிந்து வருகின்றது. இனிப் பெண்ணுலகம் வாழ வேண்டின் பெண்களே சிங்கம் போன்று எழவேண்டும். அவர்களின் ஒத்துழைப்பு வேண்டும். பெண்கள் ஆச்சிரம வாழ்க்கை நடத்தியபின் அல்லது ஆச்சிரமத்திற் பயிற்றப் பட்ட பின்பு இல்லறம் புகுந்தால் அது நல்லறமாக மாறும். அதனைப் பின் கூறுகின்றேன் என்று தாய் கூறி முடித் 395 fᎢ 6YᏈ .
*令令令伞令令*令令*→令→令一令令令令伞等→令一令令一令令令令令令令**令一伞令令令夺令伞伞令令令令夺令一令令令令一争令→令→令一命令→
கைதடி இந்து வாலிபர் சங்கத்தின் 2-வது சைவ மகா நாடு நான்கு நாட்கள் கைதடி நஎவற்குழி மறவன் புலோ வில் நடைபெற்றது. நான்காம் நாள் சைவப் பெரியார் த. குமாரசாமிப் புலவர் தலைமையுரையில் பேசியதன் சுருக் கம் , (தொகுத்தவர் செயலாளர் ஆ. கந்தையா)
ஜீவகாருண்யம்
எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பரஈபரமே.
தாயுமானவர்.
உலகம் என்பது பலவாய உயிர்த் தொகுதிகளும் கூடி வாழ்வது என்பது காட்சியினல் நாம் அறியத் தக்கதாம். பல உயிர்கள், எனவே ஒரறிவு முதல் ஐந்து அறிவுவரை உள்ளனவற்றை இயற்கை அறிந்து வாழும் கடப்பாடு மக் கள் கூட்டத்தினருக்கு இன்றியமையாதது. ஆகவே மக்கள் தாமே ஆறறிவு உயிரே என தொல்காப்பியனுர் கூறியிருப் பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. பிறப்பு வகைகளால் மக் கட் பிறப்பு உயர்ந்தது என்ற கருத்தினுல் விசேடமான ஓர் அறிவு இறைவனுல் மக்களுக்கு அமைக்கப்பட்டிருக்கி றது. அந்த விசேட அறிவுதான் எவற்றையும் ஆராய்ந்து பார்க்கின்ற சிறப்புடையது. மக்கள் தம்மை ஒத்தவரோடு கூடி வாழவேண்டுமென்பவரே தவிர தனித்து வாழ்பவர்

Page 15
26 ஆத்ம
கள் அல்லர். மக்களினுடைய அறிவு பரந்த மனப்பான் மையுடன் செல்லுவதாலன்றி கூடி வாழும் காலத்திலும் மகிழ்ச்சி அடைதல் அரிது. எல்லாவுயிரும் தாம் உயர்ந்த நிலையில் இன்பமாக வாழ வேண்டும் என்றே கருதுகின் றன. வினை காரணமாக இறைவனலே கொடுக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட தோற்றங்கள் உடையனவாய் உயிர் கள் விளங்குகின்றன. இவற்றை நால்வகைத் தோற்றம் எழுவகைப் பிறப்பு எண்பத்துநான்கு லட்சம் யோனிபேதம் என சாத்திரங்கள் செப்புகின்றன. நாம் இன்பமாக எப் படி வாழ விரும்புகின்ருேமோ அதுபோல் மற்றைய பிராணி களும் இன்பமாக வாழ விரும்புகின்றன.
ஒன்ருக நல்லது கொல்லாமை; படை கொண்டார் நெஞ்சம் போல் நன்றுரக்காது ஒன்றன் உடல் சுவை உண் டார் மனம்; தன்னுரன் பெருக்கற்குத் தான் பிறிதின் ஊனுண்பான் எங்ங்னம் ஆளும் அருள்' இந்த வாக்குக ளைச் சிந்திப்பவர் எவராயினும் பிறவுயிருக்கு இன்னுசெய்ய எண்ணுவரோ. பசு என்பது ஆன்மாக்களுக்குள்ள பொதுப் பெயர். அதைச் சிறப்பாகப் படைத்திருப்பன நாம் வளர்க் கும் பசுக்கள். சைவர் எனப்படுகின்ற மக்களுக்கு சைவம் என்னும் அடையாளத்தைக் காட்டுவதற்குரிய விபூதியைப் பெறுவதற்கு மூலமாய் இருப்பது பசு, இறைவன் திருமுடி யில் அபிடேகம் செய்வதற்குப் பஞ்ச கவ்வியத்தைத் தரு வது பசு மக்களை உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய பொருள்களைத் தருவது பசு பசுவோம்பல் என்பது ஒரு தனிச் சிறப்பான தரும நெறியாகும். பசுக்களைப் பூசித் தல் வேண்டுமென சாத்திரங்களிற் சொல்லப்பட்ட சிறந்த நெறியாகும். சிவபூசை செய்பவர்கள் தாமும் அது முடிந் தவுடன் பசுக்களையும் பூசித்தல் வேண்டும் என்று கூறுகின் st) gif இத்தகை ப உயர்ந்த பசுக்களைக் கூட பொருள் ஒன்றே பெறுதல் காரணமாக அதன் ஊனே வாங்கி உண் டும் மக்களிற் சிலர் மகிழ்கின்ருர்களே என்பதைக் கேட் கும்தோறும் ஜீவகாருண்யம் எங்கே? சைவம் எங்கே? வாழ்க் தை எங்கே? மக்கட் பிறப்பின் அறிவுடமை எங்கே? என்று எண்ணி வருந்த வேண்டிய நிலையில் இருக்கின்ருேம். மக் கட் பிறப்பினராகிய நாம் எல்லாம் மற்றைய உயிர்களும் வாழ்வதற்கு இடர் செய்யாது துனே செய்வது கடமையாகும். மக்கள் ஒரு தீமையைச் செய்யுங்கால்

ஜே9தி - 27
தங்கள் மனமே சாட்சியாய் இருந்து தகாதனவற்றைச் செய்கின்ருேம் என்ற உள்ளுணர்ச்சியைக் கொடுக்கும். அந்த உணர்ச்சியை வஞ்சித்து வாழத் தொடங்குதல் மக்கள் பண்பினருக்கு ஏற்றதன்று.
வஞ்ச மனத்தான் படிற்றெழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
என்னும் வள்ளுவர் வாக்கால் அறியலாம். தகாதன வற்றைச் செய்து அதைப் பெருமையென்ருே இன்பமென் ருே கருதி வாழ்பவரை நோக்கி மணிவாசகப் பெருமான் அருளிக் கூறிய வாக்கை எண்ணிப்பார்த்தல் இன்றியமை யாதது. '' வாழ்கின்ருய் வாழாத நெஞ்சமே வல்வினைபட் டாழ்கின்ரு ய் ஆழாமல் காப்பான ஏத்தாதே சூழ்கின்ருய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்ருய் நீ அவலக்கடலாய வெள்ளத்தே' இதனைச் சிந்திக்குங்கால் மனம் நல்லனவற்றை நினைக்க வா க் கு நல்லனவற்றைச் சொல்லக் காயம் நல்லனவற்றைச் செய்யவேண்டும், என் னும் கருனேயினலே இறைவன் தந்தது, இம் ம க் கட் பிறப்பு என்பது தெளிவாகும். பகுத்துண்டு 'ப ல் லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எ ல் லா ந் தலை’ பல்லுயிர்களையும் ஒம்பவேண்டும் என்னும் க ட் டு ப் பாடு படைத்தநாம் அந்நெறியில் நின்றும் தவறி சிற்றுயிர்க ளுக்கு இடுக்கண் செய்தலோ கொலை செய்தலோ அவற் றின் ஊனை உண்டலோ இறைவனுடைய திருவுளத்துக்கு மாரு?ன செயல்களாகும்.
அம்மா என அலற ஆருயிரைக் கொன்றருந்தி, இம் மானிடர் எல்லாம் இன்புற்றிருக்கின்ருர், அம்மாவெனும் சத்தம் கேட்ட சிறந்தவராயினும் நிலையில்லாத உடலைத் தானே பெற்றிருக்கின்ருேம் என நினைந்து பிற உயிர்களை எம்முயிர்கள்போல எண்ணி இரங்கி இறைவன் க ரு ன யைப் பெறுவதற்கு முயல்வோமாக.

Page 16
28 ஆத் 12
நேயத்தே நின்ற நிமலன்
(பண்டிதை. த. பூங்கொடி)
மலம் அற்றவன் நிமலன்; ஆன்மாக்கள் யாவும் மலத் திற்ை பீடிக்கப்பட்டன. இறைவன் ஒருவனே இயல்பாக மலத்தினின்றும் நீங்கியவன்; அவன் நிர்க்குணன், நிரா மயன், எப்பொருளிலும் நீக்கமற விளங்குபவன்; எப்பொ ருளிலும் தங்குபவன். ஆயினும், அவனருளே கண்ணுகக் காணினல்லால் இப்படியன் இவ்வுருவன், இவ்வண்ணத் தன், இவன் இறைவன், என்றெடுத் தியம்பலாகாது. அப் படிப்பட்ட அந்த நிமலன் மாசிலா அடியவர்தம் நேயத்தே நிலைபெற்று நிற்பன். அங்ஙனம் இயல்பாகவே மாசற்றிருந் தவாறே தன்னை நினைப்பாருடைய மன மாசுகளையும் அறுத் துத் தன்னேடு சேர்த்துக் கொள்ளு மியல்பினன்.
இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கின் ரூன். அந்த நிலை பேதமுமன்று. அபேதமுமன்று. பேதா பேதமுமன்று. இங்கினம் ஒன்ருய், வேரு ய், உடனுய், நிற்கும் பரம்பொருளின் உணர்ந்தவர் உணர்ந்தவாறே எடுத்தியம்பினர்.
“விறகிற் பாலிற்படு நெய் போல் மறைய நின்றுளன் லாமணிச் சோதி வன்'
என்கிருர் அப்பர்.
'உணர்ந்தார்க்கு உணர்வரியோன்' என்றனர் மணி வாசகர். மனம், மொழி, மெய்களால் இயைந்து இறை வனைக் காண்டல் ஞான நிலையில் பக்குவம் முதிர்ந்தோர்க்கே ஒரொருகாற் கூடுமேயன்றி இடையருது நிகழ்தலின்று. ஆதலின் ஒருகாற் தன்னை உணர்ந்தார்க்கு கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குதலான் மீண்டும் உணர்வரியோன் என உணர்த்தப்பட்டது.
* பார் பத மண்ட துனைத்துமாய் முளைத் துப் பரந்த தோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவ தேலரிய நின் மலா' என்கிருர் இன்னேரிடத்து.

ஜோதி 29
பரம்பொருட் தன்மை மனம் மொழி மெய்களைக் கடந்ததொன்று. ஆதலின் கட்புலனுற் காணத் தக்கது அன்று. இறைவன் பாச ஞான, பசு ஞானங்களாற் காணப் படாதவனும், பதிஞானமாகிய சிவஞான மொன்ருலே காணத்தகும் பெற்றியுமுடையன். இதனைச் சிவஞானபோ 5 LD
* ஊனக் கண்பாச முனராப் பதியை ஞானக் கண்ணிற் சிந்தை நஈ டி'
என்கிறது. அதன் விளக்கமாகிய சிவஞான சித்தியும் 'பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி’ எனக் கூறுகின்றது. இம் முத்திற ஞானங்களுள் பதி ஞான மொன்றே இறைவனே அறிதற்குரிய மெய்ஞ்
ஞானம்.
பிரம விட்டுணுக்களாலும் அறிய முடியாத அந்தப் பரம்பொருள், அகங் குழைந்து அன்புருகும் அடியவர்தம் நேயத்தே நிலைபெறுவன். அகங் குழைந்து அன்புருகாநிலை யில் அவனை உணர முடியாது. 'அழுதாலுன்னைப் பெற லாமே' எனவும் ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி" எனவும் கூறப்படுகிறது. ஆண்டவனே நேயத்தே நினைந்து நினைந்து அழவேண்டும். ஆனந்தக் கண்ணிர் சிந்த வேண் டும். அப்பொழுது அந்தர்யாமியாய் மனதில் விளங்குகின்ற பேரொளியைக் காண வாய்ப்பு ஏற்படும்.
* நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்ஞர் சடைப் புண்ணியன்”
என்றனர் அப்பர். நேயமெனினும் அன்பெனினும் ஒக்கும். இடமும் இடத்து நிகழ் பொருளுமாய ஒற்றுமை கருதி நேயத்தே நின்ற நிமலன் எனப்பட்டது. அன்பு எங்கெங்கு நிலைபெறுகிறதோ அங்கெல்லாம் சிவம் பிரகா சிக்கின்றது. 'அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார்அன்பே சிவமாவதாருமறிந்தபின்-அன்பே சிவமாயமர்ந்தி ருப்பாரே" என அன்புதான் சிவம் என்கிறது திருமந்திரம். அன்பு நிலை பெற்றவிடத்து நிமலனுய அப் பரம்பொருள் விளங்கியும், அல்லாதவிடத்து விளங்காமலும் நிற்கின்றன்.

Page 17
30 نقشہ:۔ RAC)
அன்பு வலையிலே ஈர்ப்புண்ட வாதவூரர் தம் அனுப வம் பலவற்றைப் பலவாருக விவரக்இனர்.
'அன்பருள் ளம் கரந்து நில்லாக் கள்வனே நின்றன்
வார் கழற் கன் பெனக்கு
நிரந்தரமா யருளா வாய் நின்னே
யேத்த முழுவதுமே '
அன்பர் தம் நேயத்தே ஒன்றி நின்றும் அவர்தம் அறி வால் அறிதற்கு அரிய நிலையிலுள்ளா னென்பது தோன்ற கள்வனே என்ருர், அன்பு நிரந்தரமாய் வேண்டும் என் ருர், ஒரொருகாற் தோன்றி மறைதலின்றி இடையருது அன்பு நிகழ்வதாக வேண்டும் என்றனர். நின்னேயன்றி வேருென்றையும் வணங்காத்தன்மை தோன்ற நின்னை முழு வதும் ஏத்த வேண்டுமென்கிருர், மெய்யன்பர் தம் நேயத்தே இமைப் பொழுது தானும் இறைவன் பிரிந்திருப்பதில்லை. இதனை யுணர்ந்த மணிவாசகப் பெருமான் '-தினையின் பாகமும் பிரிவது திருக் குறிப்பன்று' என அவர்தம் தன் மையை உணர்த்தினர். செம்மலர் நோன்ருள்களைச் சேர வொட்டாது தடுக்கும் அம் மும்மல அழுக்கை ஞானநீராற் கழுவி அயரா அன்பு செய்யும்படி கருணை செய்து தன்னை நினையத் தருகின்றவனும் நேயத்தே நிலைபெற்று நிற்கும் நிமலனே யாவான்.
செம்பிற் கழிம்பெனப் பற்றியுள சகச மலத்தால் ஆன் மாக்கள் பல்பிறப்பிடைக் கிடந்து உழலும். அவ்வாற்ருன் அனுபவ ஞானமுண்டாக தம்மை உடையாளுகிைய பரம் பொருளை ஒருவாறு உணரும். உயிர் முன்னே செய்து கொண்ட புண்ணிய் விசேடத்தால் தனக்கு அந்தர்யாமி யாவது உள்ளே நின்ற முழுமுதற் கடவுள் குருவடிவங் கொண்டு சிவதீக்கை செய்து ஐம் பொறிகளாகிய வேடருட் பட்டு அயர்ந்தனை. நின் பெருந்தகைமையறியாது இடர்ப் பட்டாய். நின் பெருந்தகைமையாவது இவ்வியல்பின தென்று அறிவிக்க அறிந்தவுடன் அவ்வேடரை விட்டு நீங்கி அம்முழுமுதற் கடவுளின் திருவடிகளைச் சேரும். குறை யுணர்வாகிய பசு அறிவாலும், பாச அறிவாலும், உண ரப்படாத பதியை அவனது திருவடி ஞானத்தால் தன்ன றிவின் கண்ணே அறியும். இங்கனமாக அறிவிக்க அறியு மியல்புடைய ஆன்மாவிற்கு அறியும்படி இறைவன் அத

ஜோதி 3.
னுேடு ஒருங்கியைந்து அறிவித்து அறிந்து வருதலினல் மல மாயை தன்ைெடு வல்வினையுமின்ருயொழிய சிவம் வேறு தான் வேறு இன்றி அவனே தானேயாய் ஒற்றுமைப்பட்டு அயரா அன்பின் நிலைபெற்று நிற்கும். இதனைச் சிவஞான போதம்
காணும் கண்ணுக்குக் காட்டு முளம் போற் கான வுள்ள த தைக் கண்டு காட்டலி ன யராவன் பி ரைன் சுழல் செலுமே”
இவ்வாற்ருன் அன்பர் தம் நேயத்தே நிலைபெற்றுறை பும் நிமலன் ஆன்மாக்கள் இருவகை வினையிடத்தும் கிடந் துழலாமற் காத்து முத்தியாம் விடுதலை யளிப்பன். மெய் யன்புப் பேற்றிற்கு உறுதுணையாய் நிற்பது மனம் மாசிலா மனத்துடன் அன்பு செய்கின்றவரிடத்துச் சோதியாகவும், அல்லாதாரிடத்துத் துன்னிருளாகவும் வி ள ங் கு வான்.
புறத்தே செல்லுமியல்புடைய பஞ்சேந்திரியங்களையும்,
அந்தர் முகமாகத திருப்பி வழிபட்டு நேயத்தே நி ன் ற நிமலனைக் கண்டனர். மெய்யன்புடையார் சிந்  ைத யே கோயிலாகக் கொண்டருளி அன்பர்தம் நேயத்தே நிலை பெற்று நிற்கும் நிமலன், அருளைப் பெற்று ய் ய அவனரு ளாலே அவன் தாள் வணங்குவோமாக.
D 66 lo
மனம் எப்போதும் நாம ரூபத்திலே நாட்டமுடையது. அதனுடைய இச்சையெல்லாம் தான் இந்த ஊனக்கண்ணுல் இவ்வுலகில் காணக்கூடிய நாம ரூபமுடைய வஸ்துக்களிடத் தில்தான், இக்கண்ணுக்குப் புலப்படுகிறவை யாவும் நாம ரூபமுடையனவே. அதாவது கனக்கென ஒரு உருவமும், ஒருபெயருமுடைய பொருள்களே. எப்போதும் உள்ளவை மூன்று பொருள்களே. அவை எவையெனின்,
(1) உலகம், (2) ஆத்மா, (3) கடவுள். இவற்றை முறையே ஜகம், ஜீவன், பரம் என்றும், பாசம், பசு, பதி என்றும், சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் ஜீவன், பரம் இரண்டும், அனுதி நித்தியப் பொருள்கள். உலகம் அனுதி நித்தியப் பொருள். ஆகவே, பிரபஞ்சத்தில் சச்சி

Page 18
தானந்த சொரூபத்தையுடையதும், எங்கும் நிறைந்தது மாகிய ஒரு பொருளும், நாமரூபமாகிய உலகம் என்னும் பொருளும் இருக்கின்றன.
எங்கே நாம ரூபம் மட்டுமே தோன்றுகிறதன்றிவேருென் றும் புலப்படவில்லையேயெனின், ஒரு காலத்தில் ஒ ன் றே தோன்றும். மற்றது தோன்ருதிருப்பது அதன் குற்ற மல்ல. அதைப்பாராத குற்றம் ஆன்மாவுடையதே. சூரியன் பிர காசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நீ க ண் களை த் திறந்து பாராமல் மூடிக்கொண்டு பகலவன் புலப்படவில் லேயே என்ருல் அது யார் குற்றம்?
அதைப்போல், நமக்கு நாமரூபத்திலே நாட்டமிருக்கி றவரையில் சச்சிதானந்த சொரூபம் தோன்றது. இந்த நாட்டம் விட்டால் அதுதோன்றும். அது தோ ன் று ம் போது அது தவிர மற்றயாவும் பொய்யெனத் தோன்றும். அதாவது உலகம் பொய்த்தோற்றமென்பது அனுபவமாய் விளங்கும்.
மேற்கூறியவாறு மனதிற்கு நாமரூபத்திலேயே நாட்ட மாதலாலும், அது நாடுவதற்கு இச்சையே காரணமாத லாலும் மனமே பிறவிக்குக் காரணம் என்று கூறுவதும், இச்சையே பிறவிக்குக் காரணம் என்று கூறுவதும் ஒன்றே.
'அவாவென்ப தெல்லாவுயிர்க்கு எஞ்ஞான்றுந் தவா அப்பிறப் பீனும் வித்து' ܢ
என்று நாயனரும் ,
"நிராசையின்றேல் தெய்வமுண்டோ'
எனத்தாயுமானவ சுவாமிகளும் அருளியவற்ருல் உணர்க.
(தொடரும்)
一( )ー

நூல் நிலையம்
நாவலர் நாடகம்
விலை:- 2ளுபா தபாற் செலவு 50சதம்
வெளியீடு:- ஆத்மஜோதி கிலையம்,
நாவலப்பிட்டி.
நூலாசிரியர்:- மகரிஷி சுத்தானந்த பாரதி யார் அவர்கள்
நாவலர் பெருமான் என்ற பெயருடன் நாவலரு டைய சரித்திரத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தமிழுல குக்கு அளித்த சுவாமிகள் பாமர மக்களும் நாவலரை நாடகமூலம் அறிய வேண்டுமென்ற கருத்துடன் எழுதி யுள்ளார்கள். பாடசாலைமாணவர்களும் நாடக அபிமானி களும் நடித்து நாவலர் பெருமானுடைய தொண்டை உலகறியச் செய்ய இது ஒர் வாய்ப்பாகும்.
கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம் (பொழிப்புரை)
வெளியிட்டவர். தா. சிவகுருநாதன் -
வட்டுக்கோட்டை விலை:- சாதாரண பதிப்பு:- 3ரூபா விசேட பதிப்பு:- 5ரூபா
கந்தபுராணம் படிப்பவர்களுக்கு இதுஓர் வழிகாட்டி யாகும். முருகபக்தர்கள் முருகன் புகழை அறிந்து கொள் வதற்குஒருவழிநூலாகும். சித்தாந்தப்பொருள் நிறைந்த ப்புராணத்தைப் படிப்பதால் மக்கள் இவ்வுலகஇன்பம் தோடு மறுஉலகத்திலும் வீடுபேறு பெற்று வாழ்வர்.

Page 19
Registered at the G
இர ஆ இ ஆ அ ஆ ற ர , ற - அ
சந்தா
ബട് ി ஆண்டுகள் ஆரம்பமாகி களுடைய 一、 தோறும் சுட கொண்டிருக்  ീക്ക് ബ
| յոյւնն
ിജീ.
கொள்கின்றே
@、
RD
9JifIGAili III
என்ற Gara.
இவ்விட
9,500
| EITolgot.
அச்சிடுவிப்போர்:- வெளியிட்டதேதி:
 
 
 
 

P. Ο as a Newspaper M. L. 59/300
SSTS TTTT S S STSTT S STS SS S SS MTS TTT ST T TSqST S TS q STS TT STS qTSi
நேயர்களுக்கு
-
ருவருளால் ஆத்மஜோதிக்கு േഴ ' உள்ளது. பல சந்த நேயர்
ரவிஞலேயே ஜோதி | DITES
エ cm ○。 பிரகாசித்துக்
ച്ച ബ ീ சந்தாவை ്ബ് ട്രിട്-് ബ  ിന് മാ
சந்த நேயர்கள் வழக்கம் போல்
சம்பு இன்டஸ்ரீஸ்,
* το
ளேயம், ரே ல ம் - 9 , திற்கு அனுப்பி வைப்பதோடு
மும் அறியத்திருவிர்களாக
 ை
Sa ulo கிலோன்)
mm......ች ̆ " ..
நிலையத்தினர்
鹭、鳕
܂ 1965-11-16 -