கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1966.05.14

Page 1
籃
சேக்கிழார்
(சோழநாட்டுத் திருந
திருவுரு
 
 
 
 
 
 
 
 
 

タミ
%
鬱出 ,
sae
紫密
WWWTA%,y)*
Vite ଖୁଁ
S.
戀 薇
列
AngA
BITU (60)T
தில்
s=s.! 鹰)
泛融山,
ż禹%}
澎(知的 잃
|×-『

Page 2
ஒர் ஆத்மீக
DPr y) வெளியீடு.
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் sri) sh) T ?) u 6) li) இறைவன் ஆலயமே.
-சுத்தானந்தர். ,
ஜோதி 18 பரா பல ஞ வைகாசி மீ" 1வ (14-5-66) | சுடர் 7
பொருளடக்கம்
சேக்கிழார் வருகைச் சிறப்பு 193 ஆசாரியார்கள் துதி 194 தெய்வச் சேக்கிழார் 195 பெரிய புராணப் பயன் 199 பெரிய புராணத்துள் இருவர் 203 அருணகிரிநாதர் 207 தேள் கடிக்கு மருந்து 211. சற்று பொறு 213 மங்கள ஜோதியை வாழ்த்துவோம் 214 இலங்கையில் சைவாதீனம் 215
கண்ணன் வருவானுே V, 217
பக்திநெறிக்கு உணர்வூட்டும் தேனமுதாம் திருப்புகழ் 213 முக்குணங்களும் முக்கரணங்களும் 221
) ஆத்மஜோதி சந்தா விபரம்
LAL0AeLALA AeLeLS AeALAL0eYLSL0JSL0LSLLLL0LSALeASLS0AL 0eAA LS0LAAe LL0eS eAJ0eA0eeASAS eAeSL0LSA0LAL0YAJAL0JS
ஆயுள் சந்தா:- 100.00 - வருடச் சந்தா:- 3.00 தனிப்பிரதி சதம்:- 30, கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் திரு. க. இராமச்சந்திரா திரு. நா. முத்தையா
"ஆத்மஜோதி நிலையம்’ நாவலப்பிட்டி. (சிலோன்) போன்:- 35 3 .
 
 
 
 
 

சேக்கிழார் வருகைச் சிறப்பு.
எள்ளுந் திறத்துப் பரசமய
ரேறு வருக; தேறுதலில் எங்கள் உணர்வின் கணுமதுரித்
திணிக்கு மிருங்கோற் றேன்வருக தெள்ளும் புலத்தர் பெறுகாம
தேனு வருக, வருகந்தர் சிந்தா மணியைப் பொருட்படுத்தாச்
செல்வச் சிந்தா மணி வருக;
உள்ளு மவருக் கெய்ப்பிடவைப்
பொத்துள் ளெழுமொள் ளொளிவருக; ஒழியாப் பத்திக் கடல்வருக;
உலவா தமைந்த சிவபோகங் கொள்ளுஞ் சைவப் பயிர்வளர்க்குங் கொண்டல் வருக வருகவே குன்றைப் பொருமா எளிகைக்குன்றைக்
கோமான் வருக வருகவே
நலத்தி னுயரும் பழையனூர்
நாளும் பொலியு மவையகத்து நலிவு புரிநீ லியைக்கண்டு
நடுங்கா நின்ற வணிகனுக்கு நிலத்தி லியனின் னுயிர்க்கிறுதி
நேரு மாயி னியாமெல்லா நெருப்பின் முழுகி யுயிர்துறப்போ
நீயோ ருதியென் றுரைத்தபடி
வலத்தி னுயரச் சொற்றவற
வண்ண மெழுநாக் குழிமுழுகி வடவா ரணியத் தாடொருவர்
மலர்த்தா ளடைந்த வெழுபதின்மர் குலத்தி னுதித்தா ரருண்மழைபெய் கொண்டல் வருக வருகவே குன்றைப் பெரருமா எரிகைக்குன்றைக்
கோமான் வருக வருகவே.
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

Page 3
194 ஆத்மஜோதி ஆசாரியர்கள் துதி.
திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டி னெறிவாடி வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவலுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய வொண்ணுமை யுணராதேன்.
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றிமண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங் கானத்தி னெழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.
நேச நிறைந்த வுள்ளத்தா னில நிறைந்த மணிகண்டத்
தீச னடியார் பெருமையினை யெல்லாவுலகுந் தொழவெடுத்துத் தேசமுய்யத்திருத்தொண்டத்தொகைமுன்பணித்ததிருவாளன் வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.
-சேக்கிழார் பெருமான். சேக்கிழார் துதிகள்.
தில்லைவாழந்தணரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாந்திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி ஒல்லையவர் புராணகதை யுலகறிய விரித்துரைத்த செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி.
-உமாபதி சிவாசாரியார்.
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கி ஞற்சொல்ல வல்ல பிரானெங்கள் பாக்கி யப்பய னுப்பதி குன்றைவாழ் சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம்.
--சிவஞானமுனிவர்.

ஆத்மஜோதி V 195 தெய்வச் சேக்கிழார்
( ஆசிரியர்)
விசவத் தமிழ் உலகம் இருமந்திரிமார்களை மறக்க முடி யாது. ஒருவர் திருவாசகத்தை எமக்குத் தந்த மணிவாசகப் பெருமானர். மற்றவர் திருத் தொண்டர் புராணத்தை அருளிய தெய்வச் சேக்கிழார். மணிவாசகப் பிரானுர் சிவத் தொண்டின் நெறிநின்று இறைவரை அநுபவித்து அநுபவித்து உணர்ந்ததோடு உணர்ந்த வழியை உலகமுய்ய அருளியவர். சேக்கிழார் பெருமானுர் சிவனடியார்களை அநுபவித்தல் மூலம் சிவபிரானை அநுபவித்துணர்ந்ததோடு தாம் பெற்ற இன் பத்தை மற்றையோர்க்கும் வாரிவழங்கியவர். அறுபத்து மூன்று நாயன்மார்களது திருவுள்ளங்களையும் சேக் கிழார் பெருமானுர் ஒருவராலேதான் அளக்க முடிந்தது. இதனைக் கொற்றவன் குடி உமாபதி சிவனுர் பின்வருமாறு குறிப்பிடு β) δυτ(αγff.
கருங்கடலைக் கைநீத்துக் கொளவெளிது முந்நீர்க்
கடற்கரையின் நொய் மணலை எண்ணியள விடலாம்
பெருங்கடன்மேல் வருந்திரையைஒன்றிரண்டென்றெண்ணிப்
பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட லாகும்
தருங்கடலின் மீனஅள விடலாகும் வானத்
தாரகையை அளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள்திருத் தொண்டர்புரா ணத்தையள விடநம்
சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே.
சேக்கிழார் பெருமான் அன்பர்களது அகம் எல்லாவற் றையும் அளந்தவர். ஆனபடியினலே அவரை அன்பர் அக மளந்த பெருமாள் என்றே குறிப்பிடுவர் ஆன்ருேரர். அன்பன் ஒருவனுக்குத்தான் அன்பனுடைய சுகத்தை அளவிடமுடியும்; உணரமுடியும். சிவ ன டியா ன் ஒருவனுக்குத்தான் சிவ தொண்டர்களின் உள்ளத்தை அறியமுடியும்.
சேக்கிழார் பெருமான் சிவ உணர்வோடு வாழ்ந்தவர். சிவமணம் வீசப்பெற்றவர். சிவ கதை தவிர மற்றவை எல் லாம் அவகதையாகக் கருதியவர். இலக்கியத்துக்குள்ளே

Page 4
196 ஆத்மஜோதி
வாழ்வின் இலட்சியமாம் சிவத்தைக் கண்டவர். சிவ உணர்வு தாராத இலக்கியங்களை அவமென வெறுத்து ஒதுக்கினர். 'பொய்மையாளரைப் பாடாதீர்! எந்தை புகலூர் பாடு மின் புலவீர்கள்’’ எனப்புலவர் கூட்டத்தை அ றை கூ வி அழைத்தவர். தெய்வமணக்கும் செய்யுளே உண்மை இலக் கியம் என்ற உறுதி பூண்டவர். திரிசிரபுர மகா வித்துவான் திரு. மீனட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சேக்கிழாரடிகளை வாயார வாழ்த்திய பிள்ளைத்தமிழில் பத்திச்சுவை நனC சொட் டப்பாடிய கவிவாணர் என்பது மட்டுமன்றிச் செய்யுளெல் லாம் தெய்வம் மணக்கும் எனவும் பாடியுள்ளார்கள்.
'சோறு மணக்கும் மடங்களெலாம் தூய்மை
மணக்கும் சிந்தையெலாம் சுவண மணக்கும் ஆடையெலாம் தொங்கல்
மணக்கும் தோள்களெலாம் சேறு மணக்கும் கழனியெலாம் செல்வ
மணக்கும் மாடமெலாம் தென்றல் மணக்கும் மேடையெலாம் தெய்வ
மணக்குஞ் செய்யுளெலாம்
நீறு மணக்கும் நெற்றியெலாம் நெய்யே
மணக்கும் கறிகளெலாம் நெருப்பு மணக்கும் குண்டமெலாம் நேய
மணக்கும் வீதியெலாம் சாறு மணக்கும்குன்றத்தூர்த்தலைவாதாலோ தாலேலோ
சகலா கமபண் டிதசெய்வச் சைவா
தாலோ தாலேலோ'
*சான்ருேருடைத்துத் தொண்டைநாடு' என்பது பழ மொழி. அச்சிறப்புவாய்ந்த தொண்டை நாட்டிலே, குன் றத்தூரிலே, வேளாண்மரபிலே, சேக்கிழார்குடி என்ருெரு குடிஉண்டு. அக்குடியில் அருண்மொழித்தேவர் தோன்றினர். அவருக்குப்பின் பாலருவாயர் பிறந்தனர். முன்னவரால் சேக்கிழார்மரபு விளங்கப்பெற்றது. அதனல் அவருக்குச் சேக்கிழார் என்னும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று.
அருண்மொழித்தேவரின் கல்விகேள்வித் திறமைஅநபாய சோழருக்குஎட்டியது. அநபாயர்தமக்குமுதன்மந்திரியாராக்கி உத்தமச்சோழப்பல்லவர்என்றபட்டத்தையும்ஈந்துகெளரவித் தார்சேக்கிழாரின்சிவபக்தியும் சிவனடியார்பக்தியுமேஇன்றும்

ஆத்மஜோதி 197
அவரை நினைவு கூரச்செய்துள்ளன. சேக்கிழார் பெருமான் சோழநாட்டிலுள்ள திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியி னிடத்துப் பேரன்பு செலுத்தி வந்தனர். அவ்வன்புக்கு அறி குறியாக அவர் தமநு குன்றத்தூரிலே ஒரு திருக்கோயில் கட் டினர். அத்திருக் கோயிலுக்குத் திருநாகேச்சுரம் என்னும் திருப்பெயர் சூட்டி ஆண்டவனை வழிபட்டு வந்தனர்.
சேக்கிழார் பெருமான் ஒருநாள் மன்னரைப் பார்த்து *நீர் சைவர்; சிவ கதையைக் கேளாது அவ கதையை ஏன் கேட்கிறீர்?" என்று வினவினர். அதற்கு மன்னர் ‘சிவ கதை எது? அதன் வரலாறுஎன்னை’’? என்று கேட்டார். சேக் கிழார் பெருமான் திருத் தொண்டர்கள் வரலாறுபற்றிக் கூறினர். மன்னர் அன்பின் வயப்பட்டு 'அடியவர் வரலாறு களைக் காவியமாகச் செய்தருளும்’ என்று சேக்கிழார் பெரு மானை வேண்டினர். அதற்கெனப் பொருளும் வழங்கினர்.
சேக்கிழார் பெருமான் இது இறைவர் கட்டளையே என் மனதுட்கொண்டு தில்லையை நண்ணினர். தில்லைக்கூத்தனைக் கண்டார்; தொழுதார். “பெருமானே! திருத்தொண்டர் அருட்பெருஞ் செயல்களைக் காவியமாகப் பாட வேண்டும். அதற்கு அடிகள் அடி எடுத்துக் கொடுத்தருளல் வேண்டும்' என்று முறையிட்டார். அவ்வேளையில் தில்லைக் கூத்தன் அரு ளால் 'உலகெலாம்’ என்ருெரு வானெலி எழுந்தது. அவ் *உலகெலாம்’ என்பதையே முதலாகக் கொண்டு சேக் கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தார்.
அநபாயச் சோழர், நூல் முற்றுப்பெற்றதைக் கேள்வி யுற்ருர், தில்லையை நோக்கினர். சேக்கிழாரும் மற்றவரும் மன்னரை எதிர்கொண்டனர். சேக்கிழாரின் தி ரு மே ணிப் பொலிவு, மன்னர் உள்ளத்தைக் கவர்ந்தது. மன்னர், சேக் கிழார் பெருமான் திருவடியில் விழுந்து வணங்கினர். பின் னர் எல்லோரும் ஒ ன் று சேர்ந்து திருச்சிற்றம்பலத்தை அடைந்தனர். அப்பொழுது ‘‘மன்னனே! நாம் உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுத்தோம். சேக்கிழான் அதனை முதலாகக்கொண்டு திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தான். திருத்தொண்டர் திறங்களை நீ கேட்பாயாக' என்று ஓர் ஒலி வானில் எழுந்தது. அதுகேட்ட மன்னர் திருத் தொண்டர் புராணத்தைக் கேட்டுப் பேறெய்துமாறு அன்பர் களுக்கு அழைப்புக்கள் விடுத்தார்.

Page 5
198 ஆத்மஜோதி
தில்லைக் கூத்தன் திருமுன்னர், திருத்தொண்டர் புரா ணப் பிரசங்கத்திற்குரிய ஏற்பாடுகளெல்லாம்குறைவறச்செய் யப்பட்டன. நானுபக்கங்களினின்றும் அடியவர்போந்து குழு மினர். மன்னர் சேக்கிழார் பெருமானை வேண்டச் சேக்கி ழார் பெருமான் திருப்புராணத்தை ஒதிப் பொருளுரைக்கத் தொடங்கினர். அத்தொண்டு சித்திரைத் திங்களில் திருவா திரைநாளில் தொடங்கப்பெற்றது. மறு ஆண்டு அதே திங் களில் அதே நாளில் முற்றுப்பெற்றது.
மன்னரும் மற்றவரும் ஆனந்தக் கடலில் தோய்ந்தனர். எல்லாரும் அன்புருவாயினர். மன்னர் பெ ரு மா ன் திருத் தொண்டர் புராணத்தை யானைமீதேற்றினர்; சேக்கிழார் பெருமானையும் அதன் மீது எழுந்தருளச் செய்தார்; தாமும் ஏறி வெண்சாமரம் வீசினர். யானை திருவீதி வலம் வந்தது எல்லாரும் உடன் சூழ்ந்து சென்றனர். யானை வலம் வந்து சிற்சபைமுன் நின்றது. அடியவர் யானை யை ச் சூழ்ந்து மிடைந்து நின்றனர். திருத்தொண்டர் புராணம் திருமுன் னே வைக்கப்பட்டது. மன்னர் பெ ரு மா ன், சேக்கிழார் பெருமானுக்குத் தொண்டர் சீர்பரவுவார் என்னும் திரு நாமம்குட்டி வணங்கினர். திருத்தொண்டர் புரா ண ம் பன்னிரண்டாந் திருமுறை என்று வழங்கலாயிற்று.
"வள்ளுவர் நூல் அன்பர் மொழி வாசகம் தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை- ஒள்ளியசிர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம்.”
என்பது உமாபதி சிவனரின் வாக்கு, அறுபத்துமூன்று நாயன் மார்களுடைய அகமளந்த தெய்வச் சேக்கிழாரை சேக்கிழார் நாயனர் என்று கூறுதலே தகும்.
 

ஆத்மஜோதி 199 பெரிய புராணப் பயன்
(சிவக்கவிமணி. C. K. சுப்பிரமணிய முதலியார்)
உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய பெரியோர் களது வாழ்க்கையை எடுத்துக்கூறுவது பெரியபுராணமாகும். மனித வாழ்க்கைக்கு இஃது ஒன்றே உரிய உயரிய இலக்கிய மாகும். இது குறிக்கோளுமாகும். இவ்வாறு உணர்ந்து ஒழுகினுலன்றிப்,
**பாலணுய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதைமார்தம் மேலணுய்க் கழிந்த நாளு
மெலிவொடு மூப்பு வந்து கோலணுய்க் கழிந்த நாளுங்
குறிக்கோ விலாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித்
திருக் கொண்டீச் சரத்து ளானே.”
என்று அப்டர் பெருமான் அருளியவாறு மனிதன் துக்கித்து இறக்கவேண்டியவனே யாவன் என்ற முடிபை இப்புராணம் உணர்த்தி உபகரிக்கின்றது.
மேலேகூறிய அறிவில் எல்லையாகிய ஞானமுடிபுகளைச்சை வப் பெரியார்கள் 12 உண்மைகளாக வகுத்துச் சைவ சித் தாந்த சாத்திரங்களிலே சிவஞான போதத்திற் கண்டவாறு, இலக்கியமாகக் கண்டு விளக்கிய பேரிலக்கியம் இப்பெரிய புராணம் என்றே சொல்லலாம். நின்மலமாய்ச் சீவன்முத்தி பெற்ற உயிர்களுக்கும் ஒவ்வோர் காரணம்பற்றி ஒவ்வோர் எண்ணங்கள் மனதே நிகழ அவ்வெண்ணங்களே வித்தாகிப் பிறவியைக் கொடுக்கும் என்பது சுந்தரமூர்த்திகள் கயிலையில் அநிந்திதை கமலினி என்ற இரு சேடிமார்களின் காட்சி காரணமாக, நாம் உய்யும் வகையைத் திருத்தொண்டத் தொகையின் மூலம் காட்டியருளுதல் பொருட்டாய், இந்நில வுலகிலே அவதரிக்க நேரிட்ட சம்பவத்தினலே நமக்கு நன்கு புலனுகின்றது. மனதில் நிகழும் ஒவ்வோர் எண்ணங்களே பிறவிக்குக் காரணமானல், மனிதன் உலகில் எவ்விதத் தீய எண்ணங்கள்கூட மனத்திலும் நிகழாவண்ணம் தன் னை ப் பாதுகாத்துக்கொண்டு சர்வசாக்கிரதையாக உலகில் வாழ

Page 6
200 ஆத்மஜோதி
வேண்டும் என்பது இதனல் உயிர்களுக்குத் தே ற் ற ப் படு கின்றது.
ஒவ்வோர் எண்ணத்திற்கும் ஒவ்வொரு பிறவியும் அந்தந் தப் பிறவிகளில் மேலும் நிகழும் ஒவ்வோர் எண்ணங்களையும் அனுபவிக்கத் தொடர்பாய் ஒவ்வொரு பிறவியும் வருமானல் மனிதன் எத்தனை முறை செத்துச் செத்துப் பிறந்து உழல வேண்டும் என்பதற்கு ஏதாவது கணக்கும் இருக்குமா? ஆகை யால் சுந்தரமூர்த்திகள் கயிலையிலிருந்து நீங்கி ஆணையின் வழி இவ்வுலகிற்கு வரும்போது சிவபிரானிடத்துக் கேட்டுக்கொண் டதுபோல ஒவ்வோர் உயிரும் இறைவனை நோக்கி ஏ! பெரு மானே! நான் ஏதோ சில வினைகளை அநுபவிக்க இந்த உல கிலே பிறவி எடுத்துள்ளேன்; அந்த வினைகளை மட்டும் அனுப வித்துக் கழித்துவிட்டு உன்னிடம் வரும்படி அருள் செய்ய வேண்டும். அவற்றை அனுபவிக்கும்போது மேலும் மேலும் நான் புதுப்புது வினைகளைத் தேடிக்கொள்ள முயல்வேனணுல் தேவரீர் வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்து கொண்டால் அந்தந்த உயிர் களும் தத்தம் முன்வினைகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு மேலும் வினைதேடிப் பிறவிகளுக்குக் காரணம் உண்டாக்கிக் கொள்ளாமல் பிறவியை ஒழித்துப் பிறவா நெறியடையும். இவ்வரிய உண்மைகள் யாவும் பெரிய புராணத்தால் தோற் றம்பெற அறிவிக்கப் பெறுகின்றன. செய்தவர் யாவராயி னும், கருமம் அனுபவித்தன்றிக் கழியாது. அவரவர் செய்த வினையை அவரவர், யாவரேயாயினும், அனுபவித்தே தீர வேண்டும் என்ற உண்மையைச் சுந்தரமூர்த்திகளது திரு வொற்றியூர் நிகழ்ச்சிகளிலே நாயனுர் தாம்செய்த சபதத்தை மீறித் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியுவுடனே கண் மறைந்தமையிலிருந்தும் தெளிவாக விளங்கவைப்பதும் இப் புராணமாம்.
அன்பர்களது அன்பு பற்றிய சிவபுண்ணியச் செயல்கள் யாவையே யாயினும் அவையே நற்செய்கை. அ வை யே இறைவன் அங்கீகரித்துப் பரிசு தரும் செய்கைகளாம். அப் படிக்கு அல்லாதார் செய்யும் எச்செய்கையும் தீயவையே யாகித் தீமைபயக்கும். புத்த சமணர்கள் கொள்வது போல வும், ஏனைப்பலரும் இந்நாளிற் பொதுவாய் நினைத்துக்கொண் டிருப்பது போலவும், தனியாக எக்காலத்தும் நல்லன தீயன என்ற செயல்கள் கிடையா. தள்ளி ஒதுக்கப்பட்ட கொலை யும் புலையும்கூட நற் செயல்களாகும். இந்த உண்மையைக்

201
கூர்ந்து நோக்கி அறிஞர் ஆராய்ந்தறிவர். இதனைச் சண்டே ரநாயனர் புராணம், கண்ணப்பநாயனர் புராணம், தண்டி படிகள் நாயனர் புராணம் முதலிய சரிதங்களில் வைத்து இப் ராணம் உதாரணமுகத்தால் விளங்கவைக்கிறது.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய திருப்பாசுரத் தின் பேருரையினலே சைவ சித்தாந்தத்தின் முடிந்த உண் மைகள் தாபனம் செய்யப்பெற்றன. இதற்கு மேற்பட்ட சித்தாந்தங்களை வேறெந்தச் சமயமும் இதுவரை செய்தது மில்லை, இனிச் செய்யப்போவதுமில்லை. ஆளுடைப்பிள்ளை யார் புத்தர்களை வாதில்வென்ற சம்பவத்தினுலும், சமணர் களைச் சுரம், அனல், புனல் வாதங்களில் வென்ற சம்பவத்தி னலும் சைவத்தாபன உண்மையும், புறமத கண்டனமும் பேசப்பெற்றன. இறைவனது பக்தியும் வழிபாடும் அடியவர் பக்தியும் வழிபாடும் ஆகிய இவையே மனிதர்கள் உய்தற்கு உரியசாதனங்களாய்க் கையாளப்பட வேண்டுவன என்பது ஆளுடையபிள்ளையார் புராணத்திலே திருமயிலையிலே எலும்பு பெண்ணுக்கிய வரலாற்றினல் இப்புராணம் நமக்கு அறிவுறுத் துகின்றது,
மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்மதி சூடும் அண்ணலார் அடியார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணினுலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மையா மெனி னுலகர்முன் வருகென வுரைப்பார்
-தி. ஞா. ச. புராணம்.
இவ்வுண்மை அச்சரிதத்தாலன்றி அங்கங்கே எல்லாச் சரிதங் களிலும் உள்ளுறையாக இப்புராணம் வற்புறுத்தி விளக்கும்.
சிந்தை செய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார் அந்தி வண்ணர்தம் மடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தைகீழுடைகோவணங்கருத்தறிந்துதவி வந்த செல்வத்தின் வளத்தினுல் வரும்பயன் கொள்வார்.
-அமர்நீதி நாயனுர் புராணம்.
ஏரின் மல்கு வளத்தினுல் வரு
மெல்லை யில்லதோர் செல்வமும்

Page 7
202 ஆத்மஜோதி
நீரின் மல்கிய வேணி யாரடி
யார்திறத்து நிறைந்த தோர்
சிரின் மல்கிய வன்பின் மேன்மை
திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை
பெற்ற நீடு பயன் கொள்வார்.
-இளையான்குடிமாற நாயனுர் புராணம்.
இன்னன பலவுங்காண்க.
பணத்தையும் பிறஉலக அனுபவப் பொருட்களையும் ஈட்டி ஈட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதே பொரு ளா க க் கொண்டு இந்திரியவயமயங்கி இறப்பதற்கே காரணமாய், அந்தரமே திரிந்துபோகும் உலகமாக்களை இரங்கி நோக்கிச் சேக்கிழார் பெருமானர் இவ்வாறு இப்புராணத்திலே பேர ரசர், சிற்றரசர், அந்தணர், வணிகர், உழவர், குடிமக்கள், செல்வர், ஏழைகள், ஆண், பெண் என்பனவாதி எ வ் வி த வேறுபாடுமின்றி எல்லாரிடத்தும் வைத்துக்காட்டி இடித்து இடித்து உண்மையை ஊட்டுகின்றர். சா தி யும் குலமும் உயர்வும் தாழ்வும் பிறப்பும் முதலிய உலக வேற்றுமைகள் யாவும் இதில் விதந்து காட்டப்பெறுகின்ற அன்பு நிலையில் முன்னே ஒடுங்கி ஒழிந்து போகின்றன. உலகத்திலே இப் போது காண்கின்றனவும், மக்களை எஞ்ஞான்றும் எவ்விடத் தும் பற்பல பேரால் பற்பல வேற்றுமைகட்கும் அவை காரண மாகப் பற்பல பூசல்களுக்கும் இடையருது பிறந்தது முதல் சாகின்றவரை ஆளாக்கிவிடுவனவுமான வேற்றுமைகள் எல். லாம் அன்புநிலை ஒன்று காரணமாகத்தான் ஒழியும். அஃது உண்டாகி வளர்ந்து பயன்தருவதற்கு இந்தப் புராணம் ஒன் றே ஏற்றசாதனமாக உதவுகின்றது.
** என்று மின்பம் பெருகு மியல்பினுல் ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட மன்று ளாரடி யாரவர் வான் புகழ்
ன்ாm கெங் லவி யலகெலாம்."
ற மதங்கு u
--சேக்கிழார்.

ஆத்மஜோதி 203
பெரிய புராணத்துள் இருவர் ((up 5g)
நீதிக்கு முதல்வராகத் தோன்றியவர் மநுநீதிச் சோழர்; பக்தியினுல் பரமனையே தூதுவராய்ப்பெற்றவர்நம் பிஆரூரர், நகரந்தோறும் வீதிதோறும் மாட்டிறைச்சி மலிவாகக் கிடைக் கும் இக்காலத்திலே கன்றை இழந்த பசுப்போல மகனையிழந்து தான் வருந்தவேண்டும் என்று நினைந்த மநுநீதிச் சோழரின் ஜீவகாருண்யத்தை விளங்கிக் கொள்ளுகின்ற உளப்பான்மை நம் மக்களிடத்து இல்லையே எ ன் ப தை நினைக்குந்தோறும் கண்ணிர்விட்டு அழத்தான் தோன்றுகிறது. மாட்டுத் தலை களையும் இறைச்சிக் கடைகளையும் எலும்புகளையும் தி ன ம் தினம் பார்த்துப் பார்த்து எமது மனமோ கல்லாகிவிட்டது. கத்தரிக்காயையும் வாழை க் கா யை யும் பார்ப்பதுபோல இறைச்சிக் கடைகளையும் பார்த்துப் பார்த்து மனமும் இரக் கத்தன்மையை இழந்துவிட்டது.
ஒரு கணப்பொழுது நேரம் மனம், பூக்கொய்ய வந்த பெண்களிடம் சென்றதற்காக ஒரு பிறப்பு எடுத்து அதனல் பல இன்னல்களுக்காளாகி சுந்தரர் படாதபாடெல்லாம் பட் டார் என்ருல் இன்றைய வாழ்விலே ஒருநாளைக்கு எத்தனை கோடிதரம் எமது மனதைப் பறிகொடுத்து விடுகின்ருேம். வாழ்க்கையிலே ஒருமுறை மனதுதவறியவருக்கு ஒரு பிறப்பு என்ருல் நாம் ஒருநாளைக்கு மனது தவறியதற்காக எத்தனை பிறப்போ? வாழ்நாள் முழுவதும் மனது தவறியதற்கு எத் தனை பிறப்போ? இதனை நினைக்கவே பயமாக இருக்கிறது. யார் இதைப்பற்றிச் சிந்திக்கிருர்கள்? 'சிந்தனை நின்றனக் காக்கி’ என்று மணிவாசகர் கூறினர். எமது சிந்தனையோ இன்று சினிமாவிலும் வேண்டாத இடங்களிலும் சென்று கொண்டிருக்கின்றது.
அருணகிரிப் பெருமான். *எழுகடல்மணலை அளவிடின் அதிகம் எனதிடர்பிறவி அவதாரம்”
என்று கூறினரே, அது எவ்வளவு பொருத்தமானது. ஒரு நினைவுக்கு ஒரு பிறப்பு என்ருல் இத்தனை நினைவுக்கும் எத் தனை பிறப்போ? g *அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல்வேண்டும்;
ஆருயிர்கட் கெல்லாம் அன்புசெயல் வேண்டும்.”

Page 8
204 ஆத்மஜோதி
இது அருட்பிரகாச வள்ளலாரின் வேண்டுதலாகும். இதற்கு இலக்கியமாக வாழ்ந்தவர்தான் மநுநீதி கண்ட சோழராகும். பசுக்கன்று தானகவே ஓடிவந்து தேர்ச்சில்லுக்குள் அகப்பட்டு உயிர்நீத்தது. இன்று தினந்தோறும் புகையிரதத்திற்கும் மோட்டார் போன்ற போக்குவரத்துச் சாதனங்களுக்கும் எத்தனை கன்றுகள் பலியாகின்றன. மனிதனே பலியாகிற போது மற்றைய பிராணிகளைப் பற்றிக் கேட்கவாவேண்டும்? பிழை கன்றினுடையதாக இருக்கவும் அரசகுமாரன் பிழை யைத் தன்மேலேற்றி மனம் வருந்துகின்றன்.
*அந்தோ பாவியாகிய என்னுல் பச்சிளங் கன்று உயிர் துறக்கவும், அதனல் ஏழைப் பசு வெந்துயர்ப்படவும், அற நெறி சிறிதும் வழுவாது நின்று உயிர்தமைக்காக்கும் எ ன் கோமானுக்கு உலகில் இப்பெரும் பழி வந்தெய்திட மகனெ னப் பிறந்தேனே இக்கொடுமைக்கு யான்யாதுசெய்வேன்?" என்று தன் தந்தையின் வாழ்க்கைக்கு தன்னல் வழுவந்துவிட் டதே என்று ஏங்குகின்றன் தனயன். ,א ". இறந்த கன்றுக்குப் பிராயச்சித்தம் செய்து குற்றத்ை நிவிர்த்தி செய்து கொள்ளலாம் என்று கூறினர் மந்திரிகளும் அந்தணர்களும். பிராயச்சித்தத்தினுல் பசுவின் நொந்த உள் ளம் மாறுமா என்று கேட்கின்றன் மன்னவன். பசுவைப் போல தன் உள்ளம் வருந்தவேண்டும் என்று நினைக்கின்றது மன்னனின் இளகிய உள்ளம். மகனைத் தேர்க்காலில் கிடத்தி தானே தேர்ஊருகின்றன் மன்னவன். அப்பொழுது
தண்ணளி வெண்குடை வேந்தன்
செயல் கண்டு தரியாது மண்ணவர் கண்மழை பொழிந்தார்!
வானவர் பூமழை பொழிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்றன்
வீதிவிடங்கப் பெருமான். ஆலாலசுந்தரருக்கு ஒரு நினைவு ஒரு பிறப்பைக் கொடுத் தது என்று பார்த்தோம். அவர்மேலும் பிறவிக்கடலுள் வீழ்ந்து அழுந்தாது பிறவிக்கடலினின்று அ வரை க் கரை யேற்ற நினைந்த பெருமான் திருமணத்தின்போது தானே வந்து தடுத்தாட் கொள்ளுகின்றன். கலியாண மிடுக்கிலே இருந்தசுந்தரருக்கு வந்தவரை யார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடுகின்றார். பெரு மான் கருணையாளன் அல்லவா? பித்தா என்று சொல்லியே
 

ஆத்மஜோதி 205
பாடு என்கின்ருர், சுந்தரரும் தம்மையும் உணர்ந்தார் தலைவனையும் உணர்ந்தார். அந்த நிலையில்
* பித்தா பிறை சூடி" என்று தொடங்கி ஆண்டவன் புகழ் பாடுகின்ருர், ஆன்ம கோடிகளாகிய அத்தனை குழந்தை களும் தன்னை வந்து அடைந்து விடவேண்டும் என்ற பித்தினை உடையவன் ஆண்டவன். ஆன்மாக்களின் விடுதலையைய்ே பித்தாக உடையவன். ஆதலால் அவ் இறைவனைப் பித்தன்
என்று சொல்வதில் என்ன குறை உளது?
*1.
'y
பித்தனுமாகப் பின்னும் பேயனுமாக நீயின் றெத்தனை தீங்கு சொன்னுல் யாது மற்றவற்றல் நானேன் அத்தனைக் கென்னே ஒன்றும் அறிந்திலையாகில் நின்று வித்தகம் பேசவேண்டாம் பணி செயவேண்டும் என்றன்.
இறைவனை ஏசினலும் பேசினலும் அவற்றை யெல்லாம் பொருட்படுத்தாது வலிந்து சென்று ஆட்கொள்ளுகின்றன் நீயும் உனது அப்பனும் அப்பனுடைய அப்பனும் பரம்பரை யாக அடிமைத் தொண்டு செய்தவர்கள். அடிமைக்கு என்ன 'திருமணம்? என் உத்தரவின்றி நீ திருமணம் செய் யலாமா? எனது விருப்பத்தைப் பெருமல் எங்ங்னம் நீ திரு ணம் செய்யலாம் என்று கிண்டலாகப் பேசுகிருர்,
'குழைமறை காதினுனைக் கோதிலாரூரர் நோக்கிப் பழைய மன்றடி போலும் இவன்’
என்று இறைவரை ஏசுகின்ருர்,
எம்பிரானருடன் தோழமை நெறியில் வாழ்ந்தவர் சுந்தரர் ஒருவரே. அதனல் அவரை எம்பிரான் தோழர் என 'வும் அழைப்பார். தோழமைத் தனத்தினுலன்ருே பரவையி படம் எம்பிரானைத் தூது அனுப்பவுந் துணிந்தார். ஆற்றிலே பொன்னைப் போட்டுக் குளத்திலே தேடி எடுத்துத் தருமாறு கூறினர். ஒருநாள் திருவஞ்சைக்களத்தில் சுந்தரர் தாம் இறை வனரோடு கொண்டிருந்த தொடர்புகளை யெல்லாம் t எண் Eப் பார்க்கின்றர். அன்று இறையவர் திரு முன்னர் போம் பொழுதே தம்மையறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்கின்றர். இன்று எனையா யாளும் ஈசன் என்ன அற்புதங்களைச் செய்ய எண்ணியுள் ளாரோ எனது உள்ளத்திலே பேரின்ப ஊற்றுச் சுரக்கின்

Page 9
206 3A", ஆத்மஜோதி றது. உலக மாயாசாலத்திலுழன்று கொண்டிருந்த இவ் வேழை அடியவனை மீட்க இன்று இறைவர் கருணை புரிவ ரோ! யாதும் உணர இயலவில்லையே! பக்தி செய்வார் தமக்கு எத்தகைய பணியும் செய்ய வரும் என் இன்ப மாமணியே, மாதர் தம்மயல் தீர்க்கும் பொருட்டு எத்துணை இழிந்த பணிகளையெல்லாம் ஆற்றுமாறு செய்தேன்! மாசு டைய என்னையும் பொருட்படுத்தி, மனைவாழ்க்கையில் புகுந்து அல்லற்படா வண்ணம் மணவினையிற் புகுந்து தடு த்தும், என்னுடன் வலியவழக்காடியும் என்னைத் தம் வன் ருெண்டனுகவும் ஆக்கி மகிழ்வித்தாரே! அவரது அற்புதங் களை உணரும் ஆற்றல் இயலாது "அடபித்தனே' என்ற பெரும் பிழைச் சொற்களையும் கூட புத்தமுதாய்க் கொண்டு என்னை பித்தனென்றேபாடு என்று சித்தங்கனியப் புகன் றனரே! அஞ்சைக் களத்து அண்ணலே!
வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழித்தேன்
விளங்குங் குழைக் காதுடை வேதியனே இறுத்தா யிலங்கைக் கிறையாயவனைத்
தலைபத்தொடு தோள் பல விற்று விழக் கறுத்தாய் கடனஞ் சமுதுண்டு கண்டங்
கடுகப் பிரமன் தலையைந் திலு மொன்று அறுத்தாய் கடலங் கறைமேன் மகோதை அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே.
எளிய வாழ்வு
எளிய வாழ்வு தான் மனிதன் வாழத்தகுத்த வாழ்வு என்பதை ஒப்புக் கொண்டால் ஒரு மனிதனுே அல்லது ஒரு தேசமோ அப்படி வாழ முயல்வதாய் இருந்தாலும் அந்த முயற்சி செய்யத்தகுந்தமுயற்சியே யாகும், பிச்சை கேட்கவுங் கூடாது. பிறரைச் சார்ந்து நிற்கும் புல்லுருவியாக இருக்க
கவும் கூடாது.
سعحیٹعبeرسمسدمخسمہ
>6969€
- காந்தி

17 : ܣܛܢ
ஆத்மஜோதி 207
அருணகிரிநாதர் செல்வி:- பேரம்பலம் சிவயோகம் (சிறப்புக்கலைப் பட்டதாரி இலங்கைப் பல்கலைக் கழகம்)
அருணகிரிநாதர் தம் வாழ்க்கை வரலாறு.
“கந்தரநுபூதிபெற்றுக் கந்தரநுபூதி சொன்ன எந்தை யருளுடி இருக்கு நாள் எந்நாளோ'
எனப் பல புலவராற் போற்றப் பட்ட அருணகிரி நாதர் திருவருளையம்பதியிற் தோன்றி யருளினர். இவர் இளமைப் பருவம் இன்பத்தைக்காட்டி இன்னலைக் கொடுத்து இளமை யிற் கல்வி கற்காது கணிகையர்பால் ஆசைகொண்டு அல்லற் பட்டுத்திரிந்தார். இதன் காரணமாகப் பொருட் செல்வம் யாதுந் தொலைந்து வறுமையில் வாடினர். அடிகளார் தமது செயல்களுக்கு வருந்தித் தற்கொலை செய்யவும் முயற் சித்தார். ஆனல் அடிகள் அவர்களை முருகன் ஆட்கொண் டதாகச் சொல்லுகிறது அவர் தம் வரலாறு "முருகன் தன் புகழை யெல்லாம் இனிது பாடிக்கொண்டிருப்பாயென்று? சொல்லி மறைந்தருளினுராம்
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொடு வித்துக் குருபரன் எனவோதும் முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்து மூவர்க்கத் தமரரும் அடிபேண .
எனத் திருப்புகழைச் சந்த நலங் கலந்து பாடிய ஸ்ளார்" பின்பு ஒவ்வொரு திருப்பதியாகச் சென்று திருட்பு நிழை பாடத் தொடங்கினர். அதனையடுத்து வீதி வழியில் *திருமகள் உலாவும் இருபுய முராரி திருமருகநாமப் பெருமாள் காண்’ என்ற திருப்புகழைப் பாடினர். அடிக ளுக்கும் வில்லிபுத்தூரருக்கும் இடையில் ஒருமுறை வாத S.

Page 10
208
ஆத்மஜோதி
நடைபெற்றது. அடிகள் கத்தரந்தாதி என்னும் யமகவந் தாதியைப் பாடினர், இதிலே 54பாடலைத்தகரவர்க்கப் பாட் டாகப் பாடினர். வில்லிபுத்தூரரினல் அதற்குப் பொருள் கூற இயலாமற் போய்விட்டது. பின்னர் அடிகளார் அதற் குச் சிறப்பாகப் பொருள் விரித்துக் கூறினர். ஆறுமுகன் ஊர்தியாகிய மயிலை நினைத்து 'மயில் விருத்தம்' என்னும் பாடலையும் பாடினர். கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்த ரந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் , திருப்புகழ் ஆகியவைகள் அருணகிரிநாதர்தம் படைப்புக ளாகும்.
அவர்தம் சமரசநோக்கு
அவர் முருகனைத் திருமால் மகனெனப் பல விடங்களிற் பாடியுள்ளார். வைணவர் தொழுதேற்றும் திருமால்தம் மகனென முருகனைக் கற்பனை செய்வதால் அவர் சைவ வைணவ சமரச நோக்குடையவர் என்று கூறினும் பொருந் தும் அது போலவே புராண இதிகாசங்களையும் அவைகளிற் கூறப்படும் கடவுளையுந் தத்துவங்களையுஞ் சமரசமாகக் கையாண்டு பாடியிருக்கின்ருர்,
அருணகிரி கண்ட முருகன்
அருணகிரிநாதர் முருகனை மும் மூர்த்திகளுந் தாணுகி, அவருக்கு மேலாகி எல்லா முமாகி நின்ற தத்துவமே என அழைக்கின்ருர் கந்தபுராணத்திற் காணப்படும் கந்த பெருமானுடைய திருவிளையாடல்களை அனுபவித்த முறை யில் வைத்துத் திருப்புகழில் முருகனை மிகுதியாகப் பாடி யிருக்கின்னர். சிவயோகத்தையும் அதை நாடும் ஜீவனுடைய தத்துவத்தையும் நன்ருக விளங்கியிருக்கின்ருர், 'ஐந்து பூத மூம் ஆறு சமயமும்' என்னுந் திருப்புகழில் ஆன்மாவா னது ஆணவம், க்ர்மம், மாயை என்னும் மும்மலத்தை ஒழித்துத் தெய்வத்தை அடைய வேண்டிய வழியைக் குறிப்பிட்டிருக்கின்றர். ஆசைகளும் ஆணவமும் அடங்கப் பெற்ருலன்றி முருகனை அணுகமுடியாதென்கிருர், ஆசையை அகற்றினலன்றி வினை தீராது. மூண்ட வினையே விதியாகும் விதியைத் தாண்டுவதே கதி. அந் நற்கதியைப் பெற வேண்டுமானல் முருகன் நாமமும் முருகன் பாற் பக்தியும் இன்றியமையாதது என்கின்றர்.
 
 

ஆத்மஜோதி 209 அவர்தம் பரந்த அறிவாற்றல்
அவர் வேதம், உபநிடதம், ஆகமம், புராணம் முதலிய வைகளிற் குறிப்பிட்டுள்ள அ ரிய நுண்ணிய கருத்துக் களைத் தெரிந்தெடுத்து இசைத் தமிழ்ப் பாடல்களாகப்பாடி யாவரும் அறிந்து ஒழுகக் கூடியவாறு எளிய அறநெறியைக் காட்டியுள்ளார். இத்தகைய உயர்வை எண்ணியே தாயு மானவர் 'ஐயா! அருணகிரி அப்பா, உனைப்போல் மெய் யாக ஒர் சொல் விளம்பினர் யார்? என்று அருணகிரியைப் பற்றி உணர்ச்சி ததும்பப் போற்றுகின்ருர். இவர் ஆயிரக் கணக்காய்ப் பாடல்கள் பாடியுள்ளாராதலின் இவர் வித்தா ரகவியாவர். ஒசையின்பம் ததும்பும் பலவகை மதுரகவிகளை இனிய சந்தப்பாக்களாகப் பாடினமையினல் இவர் மதுர கவியாவர். பாடல்களில் மெல்லோசையும் இடையெழுத் தோசையும் மிக்கு வரும் பாடல்கள் இவர் பாடியுள்ளா ராதலின் இவர் சித்திரகவியாவர். திருப்புகழ், கந்தரந்தாதி முதலிய ஆசுகவியாகப் பாடினமையினுல் இவர் ஆசுகவி யாவர், செந்தமிழ் மணம் வீசும் அலங்காரம் அநுபூதி அந்தாதி என்றும் இயற்றமிழ்ப் பாக்களைப் பாடி இயற் றமிழையும், கணக்கில்லாத நுண்ணியதான அமைப்புக் களையும் இசை நுணுக்கங்களையுங் கொண்டுள்ள இசைத் தமிழுக்கே இலக்கியமாய் நன்கு அமைந்த திருப்புகழ் திருவகுப்பு என்னும் வண்ணப்பாக்களைப் பாடியும் நாடக இயலின் இனிமை பெரிதும் விளங்க நாடகத்தமிழ்ப் புல மையும் விளங்கக் காட்டியுள்ளார். ஆதலின் இவரை *முத்தமிழரசு’’ எனக் கூறலாம். இவர் சந்தப்பாக்களைப் புதுவகையாக அமைத்துள்ளார். பொதுவாக இறைவன் புகழைக் குறிக்குந் 'திருப்புகழ்' என்னுஞ் சொல் பின்னர் அருணகிரிநாதரின் சந்தப்பாக்களுக்குச் சிறப்பாக அமைந்தது
அவர்தம் பாடல் களின் தனி இயல்புகள்
இவரிடம் காணப்பட்ட சிறப்பியல்புகள் இவர் தம் பாடல்களிற் தொனித்தன. ஆழ்ந்த பொருளமைப்பு பொரு ளுக்கேற்ற சந்த அமைப்பு தடைபடா நடை, இசைக்குந் தாளத்திற்கும் இலக்கியமாய் நிற்குஞ் சந்தக்கோவை முதலியன நோக்கற் பாலன. வடமொழியும் தென் மொழி யும் இனிமையாகக் கலந்த மணிப்பிரவாள நடை சிறப்பாக

Page 11
21() ஆத்மஜோதி
விளங்குகின்றது. அருணகிரிநாதர் திருப்புகழ் நடையழகும் கவியமைப்பும் வியக்கத்தக்கதாக அமைந்துள்ளது. குமர! குருபர முருக, சரவண, குக சண்முக... எனப் பொருளுக்கேற்பச் சந்தம் அமைத்துப் பாடுவார். இவர் பாடல்களிற் சிலேடை அழகும் நன்கு பிரகாசிக்கின்றது. 177ம் பாடல் 'குழல்' அடவி முகில் என்ற திருப் புகழின் நாலு அடிகளையுந் நோக்கலாம். இவரின் சொற் பிரயோகங்கள் சிற்சில விடங்களிற் தனித்து விளங்குகின் றன. உடல் எனக் கூறவேண்டிய வழி 'ஒற்றுறைப் பகழித்துணி’ எனவும் மன்மதனை எரித்தார் எனக் கூற வேண்டியவழி 'மதனுரைக் கரிக்கோலமிட்டார் எனவும் கூறுகிருர். இவரின் உவமானங்கள் தனிப்பட்டு விளங்கு கின்றன. பெண்களின் இடையை நூல், துடி கொடி எனச் சாதாரணமாகப் பிற புலவர் உவமானங் கூறுவர். ஆனல் இவரோ எனின் 'மதனதநு நிகர்’ என மன்மதனின் எம் கண்ணுக்கெட்டாத சரீரத்திற்கு உவமையாக்குகின்றர். இவர் நடையில் ஒரு ஒழுங்கைக் காணலாம்.
முனையழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய்ப்பல் உதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது. . . என மூப்புப் பருவத்தை வர்ணிக்கிருர், விரிஞ்சை பிள்ளைத் தமிழ் திருப்புகழின் பெருமையை விளக்கியுள்ளது.
G வாழ் வு G
அகத்திலுள்ளபடியே புறத்திலும் நிகழும் என்ற ஆன் றேர் வாக்கியம் ஒன்று உண்டு. நீங்கள் நல்லவர்களாய் இருந் தால் உலகம் முழுவதும் உங்களுக்கு நல்லதாகவே இருக்கும். அதற்கு மாறக நீங்கள் எவரையேனும் தீயவராக எண்ணி ணுல் அனேகமாகத் தீமையானது உங்களிடமே உளது என்று தீர்மானித்து விடலாம்.
நாம் பிறரைத் தீயவராக எண்ணவும் கூடாது. பிறர் நம் மைத் தீயவராக எண்ணுவதாகச் சந்தேகிக்கவும் கூடாது. பிறர் சரியாக நடக்க வில்லை என்பதற்காக யாரும் வருத்தப்பட வேண் டியதில்லை. இன்று நாம் சரியாக நடந்தால் நாளை மற்றவர்கள் சரியாக நட்ப்பார்கள் என்று எண்ணி நாம் சரியாக நடந்து கொண்டால் போதும்,
- காந்தி

ஆத்மஜோதி 21.
தேள் கடிக்கு மருந்து!
(கல்லிடை: மருத்துவப்பாரதி) ,
1. தேள்கடி மருந்து கேள் தம்பி - சிறு
சின்னி யென்னும் மூலிகை இலையை அரைத்து தேள்கடி வாயதில் தடவி - உள்ளே சிறு புன்னைக் காயளவு கொடுக்கவுந் தீரும் (தே)
2. சமமாகக் குப்பைமேனி தும்பை - இலை
தன்னை யெடுத்துச் சுண்ணும்பிட் டரைத்து குமுறிடும் கடிவாயில் தடவி - உள்ளே கொடுத்திடு துளசியை தேள்விஷம் நீங்கும் (தே)
3. குறுக்காய் வெங்காயத்தை வெட்டி - தேள்
கொட்டிய இடந்தன்னில் தேய்த்திடத் தீரும் வெறுக்காமல் வெங்காயம் பத்து - துண்டாய் வெட்டியே தேய்த்திடத் தேள் விஷம் நீங்கும்
4. உப்பு மஞ்சள் சுண்ணும்பு - மூன்றும் ஓர் அளவாக எடுத்து அரைத்து தப்பாமல் கடிவாயில் அப்பு - இதனல் தாங்காத கடுப்பெல்லாம் தணிந்துமே போகும்
5. பழம்புளி சுண்ணும்பு சமமெடுத்து - அதைப்
பாங்காய் பிசைந்திட சூடு உண்டாகும் மழமழெனச் சூடாகும் முன்னே - கடி வாயினில் வைத்து அழுத்திவிடத் தீரும் (தே)
6. நவச்சாரம் சுண்ணும்பும் குழைத்து - தேள் நறுக்கென்று கொட்டிய இடத்திலிட மாறும் நவமான உடைந்த இசைத்தட்டை - கல்லில் (தே) நன்னீரிட் ரைத்துமே பற்றிடத் தீரும்
7. சுண்ணும்பை கடிவாயில் தடவி - பின்னே
சுட்ட கத்தரிக்காயை கட்டவிடந் தீரும் மண்ணெண்ணெய்யை துணியொன்றில் நனைத்து - கடி வாயிலே போட்டு அவ் வெ (எ) ண்ணெய் விடத் தீரும் (தே)

Page 12
212 ஆத்மஜோதி
8. வெற்றிலை மூன்றை எடுத்து - அதில் மிளகு பதினைந்து விரவியே வைத்து பற்களால் நறுநறென மென்று - தின்ன படிந்துள்ள தேள்விடம் பறந்துமே போகும் (தே)
x இன் ப ம் : பிறர் துன்பத்தை மாற்றத் தாம் துன்பத்தை ஏற்றுக்
கொள்வதே பேரின்பமாகும். உண்மையான இன்பம் திருப்
தியாலும் கடவுளை நண்பராகக் கொள்வதாலுமே கிடைக்கும்
மூடா, செல்வத்தின்பால் விருப்பை விடு; ஒன்றுக்கொன் றுள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி; மனம் உணர்ச்சிவயப் படாதிருக்கப் பயில். உன் சொந்த முயற்சியால் ஈட்டும் , சிறு பொருளுடன் திருப்தி அடை.
தீமைக்கெல்லாம் ஆதி காரணம் என்றும் செல்வமே என் றறி. உண்மையில், அதில் இன்பத்தின் அடிச்சுவடு சிறிதள வும் காணமுடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தும் அச்சம் தோன்றும். எங்கும் இதே வழக்கமான நிலைதான்.
சங்கரர்.
 
 
 
 
 

ஆத்மஜோதி 213
சற்று பொறு!
-: நாவலன் :-
மனமே! எவ்விடம் செல்கின்றன? உன் எதிரியைத் தாக் கவா? அவன் செய்தவற்றை நீ மறந்து விட்டாயோ? ஒரு தீமைக்காக அவன் செய்த மலைபோலும் நன்றிகளை எண்ண மறந்தாயா? சே! உன் இலட்சிய மென்ன? எந்நன்றி கொன் முர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைச் செய் நன்றி கொன்றம கற்கு' என்று வள்ளுவன் உனக்கு உரைக்கவில்லையா? எதிரி யையும் நேசி என யேசு உனக்கு கூறியருள வில்லையா? 'ஒரு வன் உனக்கு அடிக்கும் போது தடிவிழுந்தால் அதை எடுத்து அவனிடம் கொடு' எனப் புத்தர் உனக்குப் புத்திகூற வில்லை யா? 'ஒரு கன்னத்தில் ஒருவன் அடித்தால் மறு கன்னத்தை யும் காட்டு’ எனக் காந்தியார் வாழ்ந்து காட்டவில்லையா? மனமே! சற்று பொறு! உனக்குப் புத்திகூறுவது உன் நீதிபதி மனச்சாட்சி மனச்சாட்சியாகிய என்னை நீ பலகாலம் தேடி ஞய்! அன்பின் பேரில் உன் கண்ணுக்கு இப்போது தான் காட்சி கொடுக்கிறேன். எனது ஆய்வு கூடத்தில் ஆராய்ந்து தான் உனக்கு நீதி வழங்கப்படுகிறது. அது பல காலமாக இருளால் சூழப்பட்டு இருந்தது. ஆனல், நீ அப்படியே விட வில்லை. இருதயத்தை ஒளிகொண்டு தேடினய்; எனது ஆய்வு கூடம் அகப்பட்டது; அதில் நான் பள்ளிகொண்டிருந்தேன்.
என்னை விழிக்கச்செய்தாய்! நண்பனுக்கினுய்! யான் உன்னை
ஆட்கொண்டு விட்டேன்; உன்னை அறவழியே ஏகச்செய் வேன். என்னை நம்பு! யான்தான் அறக்கடவுள்; அகிம்சா மூர்த்தி. என் பாதையே வாருங்கள்; இறைவனைக் காண்பீர் கள். ஆனல், என்னை அழித்துவிடாதீர்கள். இறைவன் என் னருகிலே! ஒடி வாருங்கள்! அன்பர்களே! ஆத்ம நேயர் களே! ஒடி வாருங்கள், * 。
ஆழ்க தீயது சூழ்க அரன் நாமம்!

Page 13
ஆத்மஜோதி
மங்கள ஜோதியை வாழ்த்துவோம்
- பாலபாரதி -
அன்பும் அருளும் பெருகவே - நெஞ்சில் ஆனந்த வெள்ளம் புரளவே - பே ரின்பத்து ஜோதியை வாழ்த்துவோம்! - தூய இதயத்திலே விளக் கேற்றுவோம்!
.జx C> ar ܡ<3ܐ:
துன்பப் படை யிருள் நீங்கவே, அன்புத் தூய நிலா வொளி ஓங்கவே, வன்பகையும் அன்பு கொள்ளவே - இன்ப மாசற்ற ஜோதியை வாழ்த்துவோம்!
aga ager <> 3ܐܗ<
நெஞ்சில் அமைதி போலியவே, - கெட்ட நீச நினைவு நலியவே, வஞ்ச மனத்திருள் மாயவே, - உள்ளம்
மங்கள ஜோதியில் தோயவே!
Ki> a> <> 
Kore *ళ> எங்கும் அருளொளி வீசவே, - இறை இன்பத்தில் வையம் மிளிரவே, மங்கள ஜோதியை வாழ்த்துவோம், - நெஞ்ச மா மலர் தூவி வழுத்துவோம். seese's ஆத்மஜோதி 215 இலங்கையில் சைவாதீனம் (ஆ. கந்தையா-கைதடி) சைவம் இன்றேல் தமிழ் இல்லை. தமிழ் இன்றேல் சைவம் இல்லை. என சைவமும் தமிழும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் சைவ மக்களுக்கு ஒரு ஆதீனம் இருக்குமாயின் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கும் என்பதுவெள்ளிடை மலை சைவ உலகம் போற்றும் உத்தமர்களால் வகுக் க ப் பட்ட மரபின்வழிநின்று ஆளுடைய பிள்ளையார், சுந்தரர் , அப்பர் ஆகியோரால் போற்றிப் பாடப்பட்ட திருவருட் பா மாலை தனையுடைய சமயமானது முப்புரம் எரித்த எம்பெரு மாணுகிய சிவபெருமானை முழு முதற் கடவுளாகக்கொண்டு காலத்துக்குக் காலம் இடர்கள் வந்துற்றபோதும் மக்களை நல் வழிப்படுத்தி ஒழுகுதற்காய முதற்படி யை எமக்கீய்ந்த இது தான் வழி இன்னமரபென்று கூறிப்போந்த மெய்கண்ட சாத்திரங்களையும் தேவார திரு வாசகங்களையும் இ ளை ஞ ர் களிடையே பரப்புவதற்கும் ஆதீனம் அமைத்தால் வழி பிறக்கும். வேதம் ஒதுதற் கண்ணும் சைவாசாரத்தின் கண்ணும் உபநயனப்பேறு உடையார்க்கன்றி அதிகார மின்மைபோலச் சைவாகமம் ஒதற்கண்ணும் சைவாசாரத்தின் கண்ணும் சிவ தீக்கைப் பேறுடையார்க்கன்றி ஏனையோருக்கு அதிகாரமில்லை என்று சைவ ஞானிகள் கூறியுள்ளார்கள். தீட்சை பெரு தவர்கள் சைவ சமயத்தவர் என்று கூறவே அருகதையற்றவ ராகின்றனர். சைவ சமயத்தின் உட் கருத்தை அறியாதார் பலர் பிறசமயத்தை தழுவுகின்றனர். ஆதீனம் இருக்குமா யின் காரணங்களை அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்ய வசதியாக இருக்கும். இந்தியாவில் சைவ ஆதீனங்கள் இருப்பது போ ன் று இலங்கையிலும் சைவாதீனம் அவசியம் நிறுவப்படவேண்டும் இத்தகைய ஆதீனம் எல்லா சைவ ஸ்தாபனங்களுடனும் கூட் டாகச் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டால்தான் சைவத்துக்கு புத்துயிர் அளிப்பதாக முடியும், அப்போதுதான் சைவ சமூ கத்தை ஏனைய சமயத்தவர்களும் மதித்துப் பார்ப்பார்கள். சைவ ஸ்தாபனங்கள் ஒரே குடைக்குள் பரந்த நோக்கங்களு டன் இருக்கவும் நடைமுறையில் கொணரவும் இ த ஞ ல் வழிபிறக்கும்.

Page 14
216 ஆத்மஜோதி
சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள் புகழ்ந்து பாடிய பாடல் பெற்ற புனித ஸ்தலமான திருக்கே தீச்சரத்திலே இவ்வாதீனம் அமைக்கவேண்டுமென கொழும்பு இந்து வாலிபர் சங்கத் தலைவர் வெளியிட்ட கருத்தை சைவ மக்கள் அனைவரும் வரவேற்பார்கள் என நம்புகிருேம். திருக் கேதீச்சரத்தில் இன்றைய நிலையில் இப்படியான ஆதீனம் இருந்து அருளாட்சி புரிவது மிகவும் பொருத்தமானதாகும். சைவ மக்களும், சைவ ஸ்தாபனங்களும் விழிப்புணர்ச்சியுடன் இதனைச்செய்து சைவத்தை முன்வருமாறு சைவத்தின்பேரால் சிரந்தாழ்த்தி வேண்டுகிறேன்.
சமர்ப்பனை
இரத்தினங்களால் அமைக்கப்பட்ட ஆசனம், ரம் மியமான குளிர்ந்த ஜலத்தில் நீராட்டு. பலவகை இர த் தினங்களால் அலங்கரிக்கப்பட்ட திவ்வியமான ஆடை, கஸ்தூரி கலந்த சந்தனம், வில்வ பத்திரங்களில் ஒழுங்காக அலங்சுரிக்கப்பட்ட மல்லிகை ச ம் ப க மலர்கள், தூபம், தீபம் - என் மனத்தில் கருக் கொண்ட இந்த சமர்ப்பணையை, ஒ தேவா, பசுபதி, தயாநிதி, நீ ஏற்றுக் கொள்வாயாக.
நெய், பாயாசம், பஞ்சான்னம், பசும்பால், வாழைப் பழத் துண்டுகள் கலந்த தயிர், பலவகைக் காய்கறிகள், இன் சுவை பானகம், பச்சை கற்பூரம் கலந்த தாம்பூலம்-அன்பினு லும் பக்தியினுலும் என்மனத்திற் கருக்கொண்ட இச் சமர்ப் பணையைப் பொற் பாத்திரங்கள் வைத்து உனக்குச் சமர்ப் பிக்கிறேன். ஏ. நாதா, இவ்வுணவை நீ ஏற்றுக் கொள் வா ሀ[ ] [Tò .
குடை, சாமரங்கள், விசிறி, கண்ணுடி, குழல், மிருதங் கம், கொம்பு, இவற்றுடன் கூடிய இன்னிசையும் நடனமும், சாஷ்டாங்க நமஸ்காரம், பலவகைத் தோத்திரங்கள் - என் மனத்தினுல் சமர்ப்பிக்கும் இவற்றையும் ஏ நாதா, நீ ஏற்றுக் கொள்வாயாக.
-சங்கரர்.
 

ஆத்மஜோதி 217
கண்ணன் வருவ ாணுே P
(திமிலைக்கண்ணன்)
சக்தி சிவஞ கினன் - கண்ணன்
தாரக மந்திரம் தாணுகினன்
சுத்த அறிவா கினன் - கண்ணன்
துன்பம் துடைக்கும் மருந்தாகினன்.
வித்தை பலகா ட்டினன் - கண்ணன்
வீம்பை யழிக்கும் அரியாகினுன்
புத்த குரு வாகினுன் - கண்ணன்
புகழின் வடி வாகினன்.
கருணைக் கட லாகினன் - கண்ணன் காதல் ரதியின் மதனுகினன்
தருணம் உணர்ந்து வந்து - கீதை
தந்து அறம் ஒதினன்.
இருளில் ஒளி யாகினன் - கண்ணன்
இன்பத் திரு வாகினுன் அருளால் துய ரூட்டினன் - கண்ணன்
அநீதி தனை யோட்டினன்.
வானின் நிற மாயினன் - கண்ணன்
வருமுன் உணர்ந் தோதினுன் தேனில் சுவை யாகினுன் - கண்ணன்
தெவிட்டாத இன்பமே தானகினன்.
ஊணில் உயி ராகினன் - கண்ணன்
உயிருள் உயி ராகினுன் காணக் கண் தேடுதடி - கண்ணன்
காதல் மறந் தானுேடி!
கண்ணை மறைத் தானேடி - கண்ணன்
கருணை மறந் தானேடி?
எண்ண முரைப் பதற்கு - கண்ணன்
இங்கு வருவா னேடி?

Page 15
21s ஆத்மஜோதி பக்திநெறிக்கு உணர்வூட்டும் தேனமுதாம் திருப்புகழ்
(க. இராமநாதன்)
அரிது, அரிது மானிடராதல் அரிது. அதனிலும் அரிது ஆதியைத் தொழுதல். இறைவனின் திருநாமத்தைத்தினமும் ஒதுவார் பிறவிப்பிணியைக் கடப்பர். இரும்பு மனத்தை ஈர்த்து இறைவனின் பாதாரவிந்தங்களைப் பாடி உள் ள ம் நெக்குருக, இறைவன் நம் உள்ளத்திலே குடிகொண்டு மனக் கவலை மாற்ற வகை செய்கிருன். மன அலைவு, போட்டி, பொருமை, கோபம் போன்ற கெட்ட குணங்கள் நம் உள்ளத் திலே தோன்றி சில சமயம் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் இக்குணங்கள் நம்மை விட்டு அகல இறைவன் அருள்புரிகின்றன்.
இறைவனைக் குறித்து துதிபாடும் பஞ்ச புராணங்களில் திருப்புகழும் ஒன்று. மனித வாழ்வின் இடுக்கண் தீர்க்கும் மருந்தாக மிளிர்கின்றது, திருப்புகழ். நம் கவலைகளை மறந்து தினமும், ஒய்வு நேரத்தில் ஒருதரமாதல், தி ரு ப் புக ழை மனங்கசிந்து பாட இறைவன் தானுக எம் மனக்கண்ணில் காட்சிதருகின்றன். அஞ்ஞானம் அகன்று, மெய்ஞ்ஞானம் உள்ளத்தில் பாய்கின்றது.
தாம்பெற்ற பேரின்பத்தை பன் மக்கள் பெற, பெரும் புகழாம் திருப்புகழை எமக்கு அளித்துள்ளார்.அருணகிரிநாதர் திருப்புகழின் ஒவ்வொரு அடியும் இன்பம் பயக்கின்றது. அதைப்பாடும் போது ஏற்படும் உணர்வினுல் உள்ளம் கசிந்து பேரின்பத்தை அடைய அருணகிரியாரின் வாழ்க்கை நமக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
மங்கையர் குழாம் புகுந்து, அதுவே சதமெனக் கிடந்த அருணகிரிநாதர் தன் செல்வமெலாம் இழந்தார். பின் தன்னை உணர்ந்தார், தன் நிலையை உணர்ந்தார்.
உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார். ஆணுல், முரு கன் முன்னின்று தடுத்து. முருகன் அருள்பெற்ற அ ~ ன
 

ஆத்மஜோதி 219
கிரிநாதர், பாடத் தொடங்கினர். பிரணவப் பொருளின் தத்துவத்தை விளக்கிய குருநாதனை நினைத்தார். சந் த ம் நிறைந்த திருப்புகழ் ஆருகப் பெருகியது, மணிநாதரின் நாவி
முத்தைத்தரு பத்தித்திரு நகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக் கொரு வித்துக் குருபர - என வோதும்
முக்கட் பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்து முவர்க்கத் தமரரும் - அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட் டத்திகிரியில் - இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சித் தருபொருள் பட்சத்தோடு ரட்சித்தருள்வதும் - ஒருநாளே
தித்தித்தெய வொத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக் கொட்க நடிக்கக் கழு கொடு - கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக - எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக் குகு குக்குக் குகு குகு , குத்திப் புதை புக்குப் பிடியென - முது கூகை
கொட்புற் றெழ நட்பற் றவுணரை வெட் டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே
மணிநாதரின் கவிதா சக்தி பதினயிரம் அடிகளை எ ம க் கு அளித்தது. ஆனல் எம் கைக்கு கிடைத்தவை மிகச் சிலவே முருகனின் முன் சுரக்குமின்னருளால், அருணகிரியாரின் உள்

Page 16
220 ஆத்மஜோதி
ளத்திலிருந்து இத்திருப்பாக்கள் பேராருய்ப் பாய்ந்தன. திரு வண்ணுமலையில், திருப்பரங்குன்றத்தில் பாடிய இத்திருப் புகழ் என்றும் அழியாப்புகழ் உடையவன.
அருணகிரிநாதரின் வாழ்க்கையை நாம் ஆராயுங்கால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நமக்கு ஒர் புத்துணர்ச்சி ஊட்டுகின் றன. இடையருது இறைவனின் திருவடிகளை நினை வில் இருத்த ஊக்கத்தை அளிக்கின்றது. நம் காதுகளில் ஒலித் துக்கொண்டிருக்கும் திருப்புகழை அளித்த பெருமை அருண கிரிநாதரைச் சார்ந்ததாகும்.
நான் உடல் அல்லேன்; புலன்களோ, மனமோ, அகந் தையோ, புத்தியோ அல்லேன்; மனைவி, மகன், நிலம், செல் வம் ஆகிய கருத்துக்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவன் நான். நான் சாட்சி பூதன்; நித்தியன், சீவான்மா, நான் சிவனேயாம்.
பழுதையொன்று அஞ்ஞானத்தின் காரணமாகப் பாம்பு போல் தோன்றுகிறது. அதைப் போலவே, ஆத் மா வி ன் அஞ்ஞானத்தினல் ஆத்மனின் ஜீவபாவம் ஏற்படுகிறது. நம் பிக்கையுள்ள ஒருவன் சொல்லும்போது மயக்கம் தெளிகிறது பழுதையையே காண்கிறேன். அதைப் போலவே. குருநாத னின் மொழிகள் மூலம் ஜீவன்மாவன்று, சிவனே நான் என்று
மெய்யுணர்வு பெறுகிறேன்.
- சங்கரர்.
 
 
 
 
 

ஆத்மஜோதி 221
முக்குணங்களும்
முக்கரணங்களும்
(மாத்தளை-அருணேசர்)
இவ்வுலகிலுள்ள மனிதர்கள் வெவ்வேறு விதமானகுணங் களை உடையவர்களா யிருக்கிருர்கள். அவைகளெல்லாம் மூன்று முக்கிய பிரிவுகளில் அடங்கும். (1) சாத்வீகம், (2) இராசதம், (3) தாமசம், என்பனவே அவை. இவை ஒவ்
வொன்றும் வெவ்வேறு தன்மைகளை உடையன. பின்வரும் விதத்தில் அவற்றின் தன்மைகள் பிரிந்துள்ளன.
1. சாத்வீகம் : இது வெண்மையை ஒத்தது. துக்கம் என்பதுசற்ருகிலும் இல்லாதது. ஞானம், அருள், தவம்,
பொறுமை, வாய்மை, மேன்மை, மோனம், ஐம் பொறி அடக்கல், நல்லொழுக்கம், சாந்தம் என்ற நற் குணங்க ள் நிறைந்திருக்கும். இதில் பிரதிபிம்பித்தோர் தத்துவஞான
நிஷ்டராவர். சத்வகுணம் நடக்கும்பொழுது இறந்தவர்கள் மேலான  ெத ய் வ யோனிகளிலே சேர்வார்கள். சாத்வீக உணவு அருந்திவந்தால் கடவுளிடத்தில் அன்பும், சுக் கி ல விருத்தியும், அறஞ் செய் விருப்பமும், சமரச (ஐக்கிய) புத்தி
யும் உண்டாம்.
2. இராசதம் : இது அழுக்கு நிறத்துக்கு அல்லது செம் மை நிறத்துக்குச் சமானமானது. இறப்பு பிறப்புக்குக் காரண மாயுள்ளது. இக்குணம் படைத்தவர் அகங்காரப் பிரியராகி அமிர்த குணத்தைப் பொருந்தியிருப்பவர். இதில் பிரதிபிம் பித்தோர் காமக்குரோதத் தன்மையுடையராய் கன்மநிஷ்ட ராவர். இராசதகுணம் தடக்கும் பொழுது செத்தவர்கள் மனித யோனிகளில் விழுவர். இவர்கள் மனஉஊக்கம், தானம், தருமம், கல்வி கேள்வி, அழகு, அலங்காரம், இசை, வீரம், தவம், ஞானம், ஆகிய இயல்புகளைக் கொண்டவர்கள். இரா சத உணவுகளை உண்டுவந்தால் காமம், குரோதம், மதம், மாச்சரியம் முதலிய தீக்குணங்கள் விருத்தியாகும்.
3. தாமசம் : இது இருள் அல்லது கறுத்த நிறத்துக்குச் சமானமானது, ஒரு பொருளைத் தகுந்தது தகாதது என்று

Page 17
222 ஆத்மஜோதி
பகுத்தறியாதபோதும், எக்காரியத்திலும் வெறுப்புடனே இருக்கும் போதும், நித்திரை வந்தபோதும் தமோ குண ம் அதிகரித்திருக்கும். பேருண்டி, பெருந்துயில், சோம்பல், நீதி வழுவுதல், ஒழுக்கப் பழுது, வஞ்சகம், மறதி, பொருமை, காபம், கொலை, காமம் இவையுற்றிருக்கும், தாமச ஆகா ரங்களைப் புசித்தவருக்கும் மேற்கண்ட கொடுங் குணங்கள் பெருகும். முக்குணங்களின் தன்மைகளைப்பற்றி அண்ணுமலை யார் சதகம் கூறுவதை அடியில் காண்க:
"ஞானமருட் டவமேன்மை வாய்மை பொறை மோனமொரு
நவைசெ யைம்பொறியடக்கல்
நற்கரும வியல்புநெறி சாந்தமுயர் கல்வியிவை
நல்ல சாத்வீக குணமாம்
ஈனமறு தானமன வூக்கந் தவந்தரும
மெழில் கல்வி கேள்வி ஞானம்
இசைவீர செளரிய மலங்கார மிவையே இராசத குணத்தி னியல்பாம்
தானுறு நெடுந்துயிலொழுக்க முத நீதிவழு
தாழ்வஞ்ச மாதி கோபம்
தாவுகொலை பேருண்டி சோம்புபொய் காமமிவை
தாமத குணத் தன்மையாம்'
* மேற்கூறப்பட்ட முக்குணங்களில் ஒவ்வொன்று மூன்றை யும் ஏற்றிருக்கும். ஆனல், எந்தக் குணம் அதிகம் சம்பந்தப் பட்டிருக்கிறதோ அக்குணத்தினியல்பு பெருக, மற்றக்குணங் களின் தன்மை குறைந்திருக்கும்.
முக்கரணங்களால் நிகழும் பாப புண்ணியங்கள்.
༼མ་སྣ་ ༢༠༠ ཁ་༡༩ཀ་ १४' * முக்குணங்களைப் போலவே மனிதருக்கு முக்கரணங்களா லும் பாப புண்ணிய குணங்கள் ஏற்படுகின்றன. அச்செயல் கள் மனம், வாக்கு, காயம் ஆசிய மூ ன் று பொறிகளினல் நடைபெறும். இந்த முக்கரணங்களாகிய பொறிகளில் மன தால் நால்வகையாகவும், வாக்கால் நால்வகையாகவும், உட லால் நால்வகையாகவும் ஆகப் பன்னிரண்டு வகைகளாக அவை மனிதரை வந்தடைகின்றன. அவற்றின் விபரம் பின் வருமாறு:-
 
 

ஆத்மஜோதி - 223
- பாபங்கள். -
மனத்தினுல் நிகழ்வன: (1) பிறர் பெண்டிரைச் சேர நினைத்தல், (2) அன்னியர் சொத்தைப் பிடுங்கிக்கொள்ள நினைத்தல், (3) அன்னியருக்குத் தீங்கு செய்ய நினைத்தல், (4) தன்னலாகாத காரியத்தைப் பிறர் செய்து முடித்ததைக் கண்டு பொழுமையடைதல். " ; , " : , ,
வாக்கினுல் நிகழ்வன : 1. பொய் சொல்லல், 2, கோள் சொல்லல், 3. புறங்கூறல், 4. வீனுக்கழுதல்.
தேகத்தினுல் நிகழ்வன : 1. பிறர் மனைவியைத் தழுவுதல், 2. விலக்கப்பட்ட உணவுகளைப் புசித்தல், 3. அன்னியர் களை இம்சை செய்தல், 4, தீங்கு செய்கிறவர்களைத் தடுக் காமல் அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளித்தல்.
புண்ணியங்கள்:
மனத்தினுல் ஏற்படுவன : 1. அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், 2. பொருமை யடையாதிருத்தல், 3. அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணுதிருத்தல், 4. தனது மனைவியைத் தவிர அன்னியமான பெண்களை தாய், சகோதரி முதவியவர்களாகச் சிந்தித்தல்.
வாக்கினுல் ஏற்படுவன : 1. பொய் சொல்லாமை, 2. கோள் சொல்லாமை, 3. இன் சொல் பேசதல், 4. தியா னம் செய்தல்.
தேகத்தினுல் ஏற்படுவன : அன்னியர்களுக்குத் தீங்கு உண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான செயல் களையெல்லாம் செய்தல், 2. கோயில் வலம் வருதல், 3. தவம் செய்தல், 4. தானம் செய்தல்.
நடக்குங் காலத்திலும், நீராடுங் காலத்திலும், ச ய ன காலத்திலும் தன்னையறியாமல் நேரிடும் பாபங்கள் அறியா மல் நடப்பவை. இதன்றி அவை மனத்திற்குப் புலப்பட்ாம லும் உண்டாகும். இவைகள் யாவும் நாள்தோறும் செய் யும் தியானம், பக்தி, வணக்கங்களினலும், விருந்துபசரித்த லாலும், தெய்வந் தொழுதலாலும் நீங்கும். இவை செய்

Page 18
224 ஆத்மஜோதி
யாதுவிடின், மனத்தால் செய்யும் பாபங்கட்கு நீச சரீரங்கள் உண்டாகும்; வாக்கால் செய்யும் பாபங்கட்கு மிருகம் முத லான சரீரங்கள் உண்டாகும்; தேகத்தால் செய்யும் பாபங் கட்கு மரம் முதலான சரீரங்கள் உண்டாகும்.
முக்கரண பக்தி,
கடவுளிடத்தில் பக்தி செலுத்தும்போது மனே வாக்கு காயங்களான மூன்று பொறிகளும் பரிசுத்தமாக வைத்துக்
கொள்ளவேண்டும், எங்ங்னமெனில், 1. மனத்தால் கடவு 4
ளின் பெயர்களையும், அவர் குணங்களையும், குறிகளையும், பரோபகாரங்களையும் சிந்தித்து வியத்தல். 2. வா க் கால் அங்ங்ணம் சிந்தித்து வியந்தவற்றைப் பேசுதல். 3, தேகத் தால் அக்கடவுளின் ஆலயத்தை வலம் வருதல், அரிய பணி களைப் புரிதல் முதலியனவாம்.
HAcLSLS MS Sq qq LLLLL S S SS qS MSL MLSMJSMS MS MS q qL LLSE AALSLSLS ALLL S AAAS S SAS AMS ASq ASS S qSS S JS ASJSASAYSA SSJJJSJJYSS SJJSS SS SS SS SSAAAA AAA AASSAAA S S S AAAAS SSSSS SSYSSS SS S SS S SS S S SS qS Sq S SLASLS MALSLJSALALS S LSL LLLLLLAALS ASAS q Sq q q q qq
HH q AM Mq S LMLLSLL L LSSSLL SJeLeL ASAMeMMMAAMeJJJLA LLJJ JJAJJS MM M MMMAeMASMJSLeMMMMJ MeMJJ SMMLLSMLJLJJMMLMeMLMMJeee AeLe eeSeMLMLMLAMM
சமர்ப்பணை
ஒ சம்பு, நீ என் ஆத்மா, இமவானின் புத்திரியும் சிவ னின் பாரியையும் ஆன கிரிஜா என் புத்தி உன் சேவகர்கள் என் இந்திரியங்கள். இவ்வுடல் உன் திருக்கோயில், எ ன் உறக்கம் சமாதி. நான் நடப்பது யாவும் உன்னைச் சுற்றி வரும் பிரதசுடிணம். பேசும் சொற்கள் யாவும் உன்பால் செய் யப்படும் தோத்திரங்கள். என் கருமங்கள் யாவும் உன் வழி பாடேயாம்.
என் கால் கைகள், உடல், செவி, கண்கள், சிந் த னை இவற்றின் வினை எதனலும் ஏற்படும் பாவங்கள், வினைகளா லோ, வினை செய்யாததாலோ ஏற்பட்ட பாவங்கள்-இவற் றையெல்லாம் நீ மன்னித்து விடுவாயாக. ஒ மகாதேவா, ஒ சம்பு, ஓ கருணைக் கடலே, நீ வெல்க, புகழடைக.
- சங்கரர்.
ܬܐ
 
 

ஆத்மஜோதி நிலைய வெ
少ベベベベベベベ×2○○ベ>
ஆத்மஜோதி மலர் (1963)
சைவ இலக்கியக் கதா மஞ்சரி
ஆத்மநாதம் தீங்கனிச் சோலை பாட்டாளி பாட்டு திவ்ய ஜீவனசங்க வெள்ளி விழா மலர் கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் மார்கழி மாதப் பாடல் கதிர்காமப் பதிகம் செல்லச் சந்நிதி பாடல் கந்தர்சஷ்டி கவசம் அறிவுரைக் கதைகள்
நித்திய கருமவிதி
கதிரைமணிமாலை நாவலர் நாடகம்
நாவலப்பிட்டி. (சிலோன்)
ளியீ
○○○○○○○○○○○○○○<><><><><
டுகள்
2-00
3- 00
3-00
2-50
I - 50
1 - 25
- 30
一5G
209 س
5 2 سم
- 15
- 15
-65 - 25
- 50
2 - 00
ஆத்மஜோதி நிலையம்

Page 19
Registered at the G. P. O.
சந்தா நே
அன்புடையீர்!
இறைவன் திருவரு 17 ஆண்டுகள் பூர்த் ஆரம்பமாகி ஏ ழ வந்துள்ளது. 重_1Q களுடைய ஆதரவின தோறும் சுடர் வி கொண்டிருக்கிறது. பர்கள் அனைவரும் பு அனுப்பி வைக்குமா ( கின்றுேம். சந்தா ܓܡܝܬ இலக்கங்களைக் குறி கொள்கின்ருேம்.
இந்தியாவிலுள்ள சந்தா
R. வீரசம்பு, ச
அரிசிப்பாளையம் என்ற விலாசத்திற்கு இவ்விடமும் அறி
ஆத்மஜோ IET6j6OLILS LT L அச்சிடுவிப்போர்அச்சிடுவோர் - மரீ ஆ வெளியிட்ட திகதி:-
 
 

as a Newspaper M. L. 59/300
யர்களுக்கு
ாால் ஆத்மஜோதிக்கு
தியாகி 18வது ஆண்டு 6/f) வது இதழும் வெ
1 7 ܘ லேயே ஜோதி மாதந்
பட்டுப் பிரகாசித்துக்
வழக்கம்போல அன் |த்தாண்டுச் சந்தாவை று அன்புடன் வேண்டு நேயர்கள் தமது சந்தா ப்ெபிடுமாறு கேட்டுக்
நேயர்கள் வழக்கம் போல் ம்பு இன்டஸ்ரீஸ், b, தே ல ம் - 9 .
அனுப்பி வைப்பதோடு யத்தருவீர்களாக,
தி நிலையம்,
- (சிலோன்) ஆத்மஜோதி நிலயத்தினர் ஆத்மஜோதி அச்சகத்தினர் 14-5-66。