கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1966.07.17

Page 1
|
|
毒
|
排
50 UULD
gԲր
6ւI (15
இச்சையுங் 560SED
 
 
 
 
 

|-
siis ; 틀 |
|-
இருமருங்கிரு

Page 2
RW ஒர் ஆத்மீக இW மாத வெளியீடு.
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே .
-சுத்தானந்தர்,
| பராபவ ஞரு ஆடி மீ" 1வ (17-7-66) சுடர் 9
பொருளடக்கம்
முருக உபாசனை 257 கதிரைக் குமரனிடம் முறையீடு 258 ஆறுமுகமான பொருள் 259 அறுநூறு மணித்துளிகள் 264 சிவவழிபாட்டின் தொன்மையும் அதன் வளர்ச்சியும் 267 பச்சை மயில் வாகன?னப் பார் 271 கந்தபுராணம் 273 அகஸ்தியர் அருளிய பக்திப் பாடல்கள் 276 யாமிதற் கிலமோர் கைமாறே 277 கதிர்காமம் 281 பிள்ளையார் சுழி 284 சமய வாழ்வு 287
ஆத்மஜோதி சந்தா விபரம்
<つい<><つ<ストでスヘ<つ<つ<ス、つや<つ<つくつ<><><つ<ス<つ<つ<ア
ஆயுள் சந்தா:- 100.00 - வருடச் சந்தா:- 3.00 தனிப்பிரதி சதம்:- 30, கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் திரு. க. இராமச்சந்திரா திரு. நா. முத்தையா
*ஆத்மஜோதி நிலையம்’ நாவலப்பிட்டி. (சிலோன்) போன் - 353,
 
 

".
முருக உபாசனை
(சுத்தானந்தர்)
அன்னே! எனத் தந்த அப்பா குமரா! குருவே, குகா! உன்னையே நினைத்தேங்கி அலறுகின்றேன்! கலாப மயில்மேல் வரும் அழகிய மாமணியே! வேற்கரனே! மலர்முகனே! உன் வீரக்கழலிற் பணிகின்றேன். புவிநடைச் சேற்றில் விழுந்து தியங்கும் என்னைக் கரையேற்றிய உனக்கே விழைவு கொண் டோலமிடுகின்றேன். துன்பக்கடலில் மூழ்கி, எடுத்து விடு வாரின்றி நெஞ்சங் கலங்குகின்றேன். என்னப்பா, கேளாது போல் இருக்கின்றனயே! நவைமனம் மாய்ந்து, நின் அன்பர் அவை அணுகி, ஆனந்தவாரியில் ஆடவேண்டினேன். நின் தொழும்பர் திருப்பதம் அல்லால் சிற்றடியேன் இம்மண் னிலே ஊடும், தனமும், உறவும், புகழும், மடவார்போக மும் வேண்டிலேன்! நின்கால் பிடித்தேன்! கருணைசெய்வாய்!
“ஊணே யுடையே பொருளேயென்
றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன்
வேருேர் துணைநின் னடியன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநற் சேணேர் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே'
~66iT6mF6üFT ff.
பெருந்துயரால் வாடியிளேத்தேன் எந்தாய்! அ ரு ட் கடலே! செல்வமே, கரும்பே, தேனே, செம்பாகே கண்ணே, கற்பகமே, என் குலதெய்வமே! வேற்கை அரசே, மறைப் பொருளே, சாந்தகுணக் குன்றே, பன்னிரு கண்ணு மனங் கலங்கும் இவ்வேழைச் சேயைக் கண் பாராயோ! நாளும் உன் னருள் வழிபார்த்து இளைக்கின்றேன்.

Page 3
258
ஆத்மஜோதி கதிரைக் குமரனிடம் முறையீடு
(பரமஹம்ஸதாசன்)
ஊணுய் உயிராய் உலகமெலாம்
ஒளிரும் கருணைப் பேரிறைவா! கோணுய்த் தமிழர் குலங்காக்கும் குமரா பரம குருதேவா! வானுேர் பணியும் படைத்தலைவா! வள்ளி படரும் மலைக்கிழவா! தேனுர் அமுதப் புனல்தவழும்
செல்வக் கதிரைத் திருமுருகா!
இறைஞ்சித் தொழுவார்க் கிரங்கி, மன
விருளைக் கடிந்துள் ளொளிபெருக்க
வருஞ்சித் திரவேல் விழிச்சுடரே!
வளர்செந் தினத்தேன் வள்ளி மகிழ் குறிஞ்சிக் கிழவா! அசுரகுணக்
குலத்தை யழித்துன் குரைகழலே இறைஞ்சிப் பெருவாழ் வுறவருளாய்,
எந்தாய், கதிரை இறையவனே!
அரும்பு விழிகள் புனல்சொரிய
அங்கம் புளசித் தன் பரெலாம் கரும்பே தெவிட்டாக் கனியே எம்
கண்ணே என்றுன் சந்நிதியில் துரும்பாய் உருக என மட்டும்
சோம்பிக் கிடக்கும் கருங்கல்லாய் இரும்பாய் வைத்தல் முறையாமோ இதுவோ கருணை? எம்மானே!
క్లిష్య ஐ
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 259
(~~><><><><>>>~~~~~~) ~~~~>><<<<<<<<(
() () ஆறுமுகமான பொருள் : ఉండాలలంలeeరాంక్ష ( ஆசிரியர்.) -ంల*
(UPருகப்பெருமானது சர்வவல்லமையையும் குறிப்பன ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுமாகும். ஒரு மனித னுக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்ருல் அவனேப்பார்க் கச் சகிக்காது. நூதன சாலையிலோ மிருகக் காட்சிச்சாலை யிலோ காட்சிப்பொருளாக நிறுத்தி விடுவார்கள். முருகப் பெருமானே ஆறுதிருமுகங்களோடு அழகினையும் கொண்டு விளங்குகின்றன். அதுதான் சிறப்புகளில் எல்லாம் சிறப்பு.
சிவபிரானுக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. உமாதேவி யாருடைய முகத்தையும் சேர்த்து ஆறு திருமுகங்களுடன் விளங்குகின்ருர் முருகப்பெருமான். நான்கு திசைகளுக்கும் நான்கு முகங்கள் மேல் கீழ் திசைகளையும் சேர்த்து ஆறு திசை களுக்கும் ஆறு திருமுகத்துடன் விளங்குகின்ருர், எல்லாத் திசைகளேயும் எம்பெருமான் பார்த்துக் கொண்டிருப்பதால் அடியார்கள் எங்கிருந்து அழைத்தாலும் அங்கே ஒடிச்சென்று அருள்புரிகின்ருர் முருகப்பெருமான்.
'அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்'
என்கின்ருர் நக்கீரர். மரணபயம் வரும்போது முருகப்பெரு மானை நினைத்தால் ஆறு திருமுகங்களையும் காட்டி ஆறுதல் அளிக்கின்ருர், உள்ளத்தில் ஒருமுறை நினைந்தால் இருபா தங்களையும் காட்டி அடைக்கலங்கொடுக்கின்றன். செய்கின்ற பிழை எல்லாம் செய்து பிடிபட்டவுடனே தந்தை மகனிடம் சாமியினுடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேளடா என்று கூறுதல் ஒரு வழக்கம். எஜமானிடம் வேலைக்காரன் மன்னிப் புக்கேட்பதற்காக அவருடைய காலில் விழுவதுபோல நாமும் எமது பிழையெல்லாம் மன்னிக்குமாறு இறைவனுடைய கா லில் விழுந்தால் அவன் அபயம் தராமலிருக்க முடியாது,
"ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்' என்கின்ருர்,

Page 4
260 ஆத்மஜோதி
கந்தர் அலங்காரத்திலே அருணகிரிப் பெருந்தகை
'பத்தித்திருமுகம் ஆறுடன் பன்னிருதோள் களுமாய் தித்தித் திருக்கும் அமுது கண்டேன்’
என்கின்ருர், ஆறு திருமுகங்களும் அருள்பொழிந்த வண் ணமே இருக்கின்றன, அவற்றை எவ்வளவுகாலம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டுவதில்லை. கற்பகோடிகாலம் பார்த்துக் கொண்டிருந்தாலும் புதுமையைக் காணலாமே தவிர தெவிட்டல் நிலை ஏற்ப டாது. ஆறு முகங்களையும் பார்க்கும்போதே அமிர்தத்தை உண்டது போன்ற ஒரு இன்ப நிலை உண்டாகின்றது. அமிர்தத்தை உண்டவன்தான் சாகா நிலை எய்தமுடியும். ஆறு முகங்களையும் தரிசித்தவனும் சாகா நிலையை எய்துகின்ருண்.
ஆறு முகத்தை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து அநுபவித்த அருணகிரிப் பெருந்தகை ஆறுமுகம் என்று தொடங்கியே ஒரு திருப்புகழ் செய்து ள் бTПfi .
'ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் -ğ24,Oy)I(Lpé5LD -g24,O)i * P Ö6LD என்ற பூதி'
ஆறுமுகத்தை ஆறுமுறைகூறி விபூதி அணியவேண்டும் என்று கூறுகின்றர். -
அருணகிரிப் பெருந்தகையை உயிர்மாளாமற் காத்தருளி யவர் அருணுசல முருகப்பெருமானவர். முருகப்பெருமானது ஆறு முகங்களையுங் கண்டு கண்டு அனுபவித்த அருணகிரியார் ஆறுமுகமான பொருள் நீயருளல்வேண்டும் என்று முருக னிடமே கேட்கின்ருர், ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு செயலைக்கூறினர். அதற்கு மேலும் முருகனது முகத்திற்கு விளக்கம் கூறமாட்டாது எம் பெருமானிடமே கேட்டுவைக் கின்ருர்,
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுகமான பொருள் நீயிருளல் வேண்டும்
ஆதியருளுசலம் அமர்ந்த பெருமாளே.
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 26
பக்தர்கள் எந்தத்திசையில் நின்று அழைத்தாலும் அவர் களுக்குக் கருணைபொழிவதற்கு எல்லாத் திசையிலும் முகங் கள் இருப்பது போலவே பக்தரிடம் உடனே செல்வதற்கு மயில்வாகனத்தை வைத்திருக்கின்ருர், மயில் ஓங்காரரூபம். தோகைவிரித்து ஆடும்போது நடுவே ஒளிவட்டம் ஒன்று பரவு வதைப் பார்க்கலாம். முருகன் மயில் மீதேறி அன்பர்களுக்கு அருள்புரிவது போல அன்பர்களும் ஓங்கார மந்திரமீதேறி முருகனிடத்துச்செல்வர்.
முருகனுக்குக் குருநாதன், குருபரன் என்றெல்லாம் பெய ருண்டு. இறைவருக்கே ஓங்காரப் பொருளை விரித்துரைத் தவர். தருக்குக்கொண்ட பிரமாவை முருகன் தலையிலே குட் டிச் சிறைவைத்து விட்டார். படைப்புத்தொழில் நி ன் று விட்டது. இறைவர் விடயத்தை அறிந்து முருகனிடம் கேட் டார். ஓங்காரத்திற்குப் பொருள் தெரியாதவன் வேதத் தைப் படைத்தானும் உலகுயிர்களைப் படைப்பானும், இது எவ்வாறு பொருந்தும்? நீயே அதற்குப் பொருள் கூறு என்ருர் பகவான். நீர் முறைப்படி உபதேசம்பெற வந்தால் உரைப் பேன்என்ருர் முருகன். எம்பெருமான் முருகனிடம் உபதேசம்
பெற்றமையினுல் முருகன் எல்லாருக்கும் குருநாதராகிவிட்
4. fTfj. 。
"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றும் *குருவடிவாய் வந்து என்னுள்ளங்குளிர குடிகொண்டவே' என்றும்
கூறுவதை உற்றுநோக்குக.
கலியுகவரதன் கந்தப்பெருமான் என்று சொல்வர். கலி யுகத்திலே மனிதனுக்கு யோகம் செய்யவோ தவம் செய் யவோ நேரமும் இல்லை. உடல், உளம் பெலமும் இல்லை. கலியுகத்திலே ஆண்டவனுடைய நாமபஜனை செய்தல் மூலமே ஆண்டவனை அடைந்து விடலாம் என்று மகான்கள் வழி காட்டியுள்ளார்கள். முருகப்பெருமான் வேறு, முருகநாமம் வேறு அல்ல. முருகநாமத்தை பஜனை செய்பவர்களும் ஜெ பம் செய்பவர்களும் முருகனையே தியானம் செய்பவர்களா வார்கள். முருகப்பெருமானுடைய புகழையும், நாமத்தை யும் கூறுகின்ற அடியார்களுடைய வினையைத் தீர்த்தருள்வ தற்கே ஒரு முகத்தை உரித்தாகக் கொண்டிருக்கின்ருர் முரு கப்பெருமான். s 纥),

Page 5
262 ஆத்மஜோதி
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
வேலை நினைத்த உடனேயே வினை எல்லாம் பறந்தோடி விடு கின்றன.
கிரெளஞ்சாசுரன் மலையுருவில் நின்று மக்களுக்குத் தீமை பல செய்தான். அவன் சூரனுக்குப் பக்கபலமாக இருந்து தேவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தவன். அசலமாக இருக்கும் மலை அன்று அது. இறகுகளைக்கொண்டு பறந்து கொண்டே இருந்தது.அது. பல இடங்களுக்குப் பற ந் து சென்று அங்கங்கே திடும் எனக்கீழே வந்து படிந்து அடியில் அகப்பட்டுக்கொண்ட மக்களை எல்லாம் நசுக்கி நாசம் செய் கின்ற கடுமையான செயலைக் கிரெளஞ்சாசுரன் செய்து வந் தான். அந்தச் சிலம்பை முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வடிவேல் பொடியாக்கி விட்டது.
சிலம்பு ஊடுருவப் பொருவடிவேலும் என்று அலங்காரத்தில் கூறுகின்ருர் அருணகிரியார்.
சூரபன்மா அகங்கார மயமானவன். அவனுக்கு உற வாகிய கிரெளஞ்சாசுரன் மமகார மயமானவன். மலைபோல நின்று எல்லா வளங்களும் தன்னுடையன என்று செருக்கு அடைவது மக்களுடைய இயல்பு. சூரனும் "நான்’ என்ற உணர்வோடு கிரெளஞ்சாசுரனைத் த ன க் குக் கவசமாகக் கொண்டிருந்தான். முதலில் மமகாரத்தைப்போக்கி பின்பு அகங்காரத்தைப் போக்குவான். முருகப்பெருமான் வேலை ஒச்சியபோது அந்த வேல் கிரெளஞ்சமலையை ஊடுருவி அதன் உள்ளே இருந்த சூரனையும் ஊடுருவிக் கொன்றது எ ன் றும் பழைய காலத்தில் வரலாறுகள் வழங்கிவந்தன. தக்கயாகப் பரணியில் அதனை ஒட்டக்கூத்தர் பாடுகின்றர்.
"ஒருதோகை மிசையேறி உழல்சூரும் மலை மார்பும் உடனுரடறப் பொருதோகை சுரராச புரமேற விடுகாளை
புகழ்பாடுவாம்’. அருணகிரிநாதப் பெருமானும் கந்தர் அநுபூதியில்
"கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடுவே லவனே' என்று கூறுகின்ருர்,

ஆத்மஜோதி 263
எம்பெருமான் முருகன் தேவயானை, வள்ளி ஆகிய இரண்டு தேவியரைத் திருமணம் செய்து கொண்டான். இவர் கள் இருவரும் இச்சாசக்தியும் கிரியாசக்தியுமாவர்.
*இச்சையுங் கிரியையும் இருமருங்கிருக்க”
என்று ஒருவர் பாடுகின்ருர், தேவயானை தேவர்களுடைய அன்புக்கு அடையாளமாக நிற்பவள். முருகப்பெருமான் சூர பன்மாவைக் கொன்று தேவரைக்காத்த பரோபகாரத்திற் காக தேவர்கள் முருகப்பெருமானுக்கு அளித்த அன்புச் செல் வம் தேவயானையாகும்.
ஆனல் வள்ளியம் பெருமாட்டியோ இழிந்த நிலையில் இருப்பவர்களுடைய அன்புக்கு அடையாளம். நில உலகத் தில் வாழ்கிற மக்களுக்கு, நாமும் இறைவனை அடைந்து உய்யலாம் என்ற நம்பிக்கையை ஊட்டும் இயல்பை உடைய வள். வள்ளிநாயகி காட்டில் குறவர்களின் மத்தியில் வாழ்ந்த போது அவளுக்கு விளக்கம் உண்டாகவில்லை. இயல்பாக அவ ளிடத்தில் உள்ளதெய்வத்தன்மை மறைந்துகிடந்தது. எம் பெருமானை அடைந்த பிறகே அந்தப் பெருமாட்டிக்கு விளக் கம் உண்டாயிற்று.
* விளங்கு வள்ளிகாந்தனை? என்று அருணகிரியார் கூறுகின்ருர், வள்ளி ஜீவாத்மா, வள்ளி குறவர் மத்தியில் வாழ்ந்ததுபோல ஜீவாத்மா ஐம்புல வேடர் மத்தியில் அல்லலுறுகின்றது. ஜீவாத்மாவைத் தன் னேடு சேர்த்துக்கொள்ள ஒரு திருமுகத்தைக் கொண்டருளி ன்ை முருகப்பெருமான். 烹、
இக்கருத்துக்களை எல்லாம் உள்ளடக்கி அருணகிரிநாதர் முருகப்பெருமானிடம் ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் எனக்கேட்கின்ருர், நாங்களும் அவ்வழி நின்று முருகப்பெருமானிடம் வேண்டுவோமாக.
*ஏறுமயி லேறிவிள யாடுமுக மொன்றே ஈசருடள் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணுசலம் அமர்ந்தபெரு மாளே."

Page 6
264. ஆத்மஜோதி அன்னையின் அணைப்பில் அறுநூறு மணித்துளிகள் - (ஆனந்தாஸ்ரமம்) (வித்துவான். வசந்தா வைத்தியநாதன்)
- சென்ற இதழ் தொடர்ச்சி -
-
உணவிற்குப் பிறகு சிறிது ஒய்வு. பின்பு பிரார்த் தனை மண்டபத்திற்குச் சென்ருேம். சிறிது நேரத்தில் மாதாஜி வந்தார்கள். அவர்களின் பொற்பாதங்களை வணங்கி, நாங்கள் கையுறையாகக் கொண்டு சென்ற பொருட்களைத் திருவடிகளில் சமர்ப்பித்தோம். பழங்களை எங்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்றையோருக்கும் விநி யோகித்தார்கள். அதனை நாங்கள் அருட்பிரசாதமாக ஏற்ருேம். பின்பு எங்களுள் ஒருவராக அமர்ந்து கொண்டு நாங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தவிதம், குடும்பநலன்கள், இலங் கையிலுள்ள அன்பர்களின் நலன்கள் முதலியவற்றை மிக்க அன்புடன் மலையாளத்தில் விசாரித்தார்கள். தேவையான இடங்களில் சுவாமி சச்சிதானந்தா ஆங்கில விளக்கம் தந் தார்கள்.
சுவாமி சச்சிதானந்தா பன்மொழிப் புலமை நிரம்பப் பெற்றவர்கள். அடக்கமும் அன்பும் ஒருருவானவர்கள். அவ ரைக் காணும் பொழுது நம்மை யறியாமலே நம் மனதுள் வணக்கமும் மகிழ்ச்சியும் நிறைகின்றன. அவர், அன்று மாலை ஒலிப்பதிவாக்கியுள்ள பப்பாஜியின் (சுவாமி இராம தாஸ்) பேச்சுக்களைப் போட்டுக் காட்டுவதாகக் கூறினர் கள். எங்களுடன் ஆஸ்ரமத்தைக் காண வந்தவர்களுள் ஆஸ்திரேலிய மாதும் ஒருவர். அவரும் மாதாஜியுடன் நன்கு உரையாடினர். ஒரே குடும்பத்தினர் தாயின் அர வணைப்பில் ஒன்ருகக் கூடி உரையாடுவதைப் போன்றிருந் ტნ ტl •

ஆத்மஜோதி 265
மதியம் 1.30 மணியளவில் அன்னையிடம் விடைகொண்டு அனைவரும் அவரவரிடம் சென்று ஒய்வு கொண்டோம். மாலை 4.00 மணிக்குக் காப்பி அருந்தி விட்டு ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்க்க சுவாமி மதுரானந்தாவின் துணையுடன் சென்ருேம். எங்களுடன் அந்த ஆஸ்திரேலிய மாதும், மணிப்பால் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணி யாற்றுப்வரும், அவரது குடும்பத்தினரும், மற்றும் சிலரும் இணைந்து கொண்டனர். நாங்கள் அனைவரும், ஆஸ்ரம அலுவலகம், இராம நாமங்கள் சேகரித்து வைக்கப்பட் டுள்ள இடங்கள், படிப்பகம், நூல்நிலையம், பசுமடம், பூங்கா, சுவாமி இராமதாஸ் தகனம் செய்யப்பட்ட புனித இடம், பிரார்த்தனை மண்டபத்திலுள்ள பப்பாஜி உபயோ கித்த அறை, அவர் உபயோகித்து வந்த பொருட்கள், அஸ்திப் பேழை முதலியவைகளை அழகான, தேவையான விளக்கங்களுடன் காட்டினர்கள். பின்பு கிறிது நேரம் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம். சுவாமி மதுரா னந்தா மிக இனிமையாக இராமநாமத்தைப் பாடினர்கள். எங்களையும் தொடர்ந்து பாடுமாறு பணித்தார்கள். நாங் களும் அவ்வாறே எங்களை மறந்து பாடினுேம்.
அந்தச் சில வினடிகள் வாழ்க்கையில் மறக்கவொண்ணு நிகழ்ச்சியாயிற்று. பின்பு சுவாமி சச்சிதானந்தா எங்களை அழைத்துச் சென்று பப்பாஜியின் சொற்பொழிவுகளில் ஒரு பகுதியை ஒலிப் பதிவுக் கருவியின் மூலம் இயங்கச் செய் தார். மகுடியின் நாதத்தில் கட்டுண்ட நாகமென, சுவா மியின் இனிய மோகனக் குரலில் ஒன்றினுேம். அவரது எளிய, இனிய உபதேசங்களே செவி வாயாக நெஞ்சு கள ஞகப் பருகினுேம். பின்பு, நூல் நிலையத்தினின்று சில புத் தகங்களைப் பெற்றுக் பெற்றுக் கொண்டோம். இரவு உண வையும் உட்கொண்டே செல்ல வேண்டும் என்று சுவாமி கள் இருவரும் பணித்ததால் உணவுச் சாலையில் உணவு கொண்டோம். அங்கு ஆஸ்ரம நூல்களின் வெளியீட்டு அதிபராகப் பணிபுரியும் திரு. பாலாஜி அவர்களைச் சந் தித்து, உரையாடி மகிழ்ந்தோம். பின்பு, அன்னையின் மல ரடிகளில் வீழ்ந்து வணங்கி, பிரியாவிடை கொண்டு அனை வரிடமும் விடைபெற்று இருப்படி நிலையத்தை நோக்கி விரைந்தோம்.
இவ்வாறு ஏறக்குறைய பத்துமணி நேரம் (அறுநூறு) மணித்துளிகள்) அன்னையின் அன்பில் திளைத்தோம். செல்
\

Page 7
266 ஆத்மஜோதி
விருந்தோம்பி, வரு விருந்து பார்த்திருக்கும் பாங்கு, வின டியையும் வீணுக்காது காலத்தை வரையறை செய்து நமக் குத் திட்டமிட்டுத் தரும் பண்பு, எளிமையுடன் பழகும் அழகு இவைகள் நினைக்க நினைக்க நெஞ்சினிக்கச் செய்யும்
நிகழ்ச்சிகளாம்.
ஓம் பூரீராம ஜயராம ஜய ஜய ராம.
ایرا
SMLSSSLLLSLLLSLLSLLLTLLLLLLLLSLLLMLLLLLLLLSLLLLLSLLLS qLLTLL LLL LLL LLTLLLLLLLLSLLLMLSSLMLLLLLLS LLLLL LL LLL LLTLLLMMLMS
மாஜினி மணி மொழிகள்
உபதேசம்:
மனிதனுக்கும் அவனுடைய தேவைக்கும் தகுந்தபடி அல்லது விருப்பத்திற்குத் தகுந்தபடி சுகம் கிடைக்கும் என்று உபதேசிக்கக் கூடாது; மற்றவர்கள் மீது எந்த அளவுக்கு அன்பு செலுத்துகிருனே அந்த அளவுக்கே அவனுக்குச் சுகம் கிட்டும் என்றே உபதேசிக்க வேண்டும்.
உரிமையும் கடமையும்:
உரிமைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள் தங்களுக்கு உரி மைகள் கிடைத்து விட்ட பிறகு முன்னுேக்கிச் செல்ல முடி யாதவர்களாகி விடுகிருர்கள். கடமைகளை வற்புறுத்திப் பேசுகிறவர்களுக்கோ அவர்களுடைய பூலோக வாழ்க்கை முடிகிற வரையில் வேலை இருந்து கொண்டிருக்கிறது.
உண்மையான மனிதன்:
நீ ஒரு உண்மையான மனிதனுக இருக்க விரும்புகி முயா? அப்படி எது அழகுடையதோ, மேலானதோ, புனி தத் தன்மையுடையதோ அதனை அறிந்து போற்றக்கூடிய மாதிரி உன் வாழ்க்கையைப் பண்படுத்திக் கொள். அதே மாதிரி மற்றவர்களையும் பண்படுத்து. இது பெரிய காரிய மல்ல என்று நீ நினைக்கலாம். நீ நினைப்பதைக் காட்டிலும் கடினமான சாதனை இதுதான்.

ஆத்மஜோதி 267 சிவவழிபாட்டின் தொன்மையும் அதன் வளர்ச்சியும் (செல்வி, பேரம்பலம் சிவயோகம்) இலங்கைப் பல்கலைக்கழகச் சிறப்புக் கலைப்பட்டதாரி.
சிவவழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்ததென்பதையும் அது உலகின் பல பாகங்களிலும் பரவியிருந்ததையும் சரித் திரவாயிலாக நாம் அறியலாம். பல்வேறு சமயங்களின் சரித் திரத்தை ஆராயும்பொழுது சைவசமயமே மிகவும் புராதன மானது என்பது புலப்படும்.
புதைபொருள் ஆராய்ச்சியின் உதவியைக்கொண்டும் வேறு சில சிலாசனங்களின் ஆதாரத்தோடும், சேர் ஜோன் மார்சல் போன்ற ஆராய்ச்சியாளர் ஆரியர் வருகைக்கு முன் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து வெளி நாகரிகமக்கள் வசித்ததாகத் தெரிகின்றதென்றும், அவர்களு டைய காலம் கி. மு. 1500 எனவும் முடிவு கொண்டுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த இந்து வெளிநாகரிக மக்கள் சமயம். இந்து சமயமெனவும் அவர்கள் தம் முக்கிய வழிபாடு சிவவழி பாடெனவும். இந்து நதிப்பள்ளத்தாக்குப் பிரதேசத்திற் கண் டெடுக்கப்பட்ட கல்லுருவங்கள், முத்திரையடையாளங்கள் போன்றவை மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. அக் காலத்திலெழுந்த கட்டிடங்களும், சமய அடிப்படையிலேயே எழுந்தன. சேர். ஜோன் மார்சல் என்னும் வரலாற்றறிஞர், 'இங்கு கண்டெடுக்கப்பட்ட உருவங்கள் கட்டாயமாகச் சம யச்சார்பானவையாக இருக்குமேயானல்-மேலும் முத்திரை களின் எழுத்தும், வாசிக்கப்படுமேயானல், உலகத்திலுள்ள சமயங்களில் இந்து சமயமே ஆதிசமயம்' எனக் கூறலா
மென்று குறிப்பிடுகின்ருர்,
இதைவிட ஆசிரியர் 'கோஷ், தீஷிதர், சில்டே' போன் ருேர் மோகன் ஜதாரோவிலுள்ள ஒரு முத்திரையிற் காணப் படுந் தெய்வம். சிவன்தான் என்பதை நிரூபித்துள்ளனர்.
இம் முத்திரையில் ஒரு பெண் தெய்வத்திற்கருகில்
ஆண் தெய்வமிருப்பதால் அது பழைய சிவனுக விருக்கலா மெனக் கருத இடமுண்டு. இக் காலத்தைய இந்து சமயத்

Page 8
268 ஆத்மஜோதி
திலும் சிவனும், சத்தியும் ஒன்று சேர்த்து வழிபடப்படுவது நோக்கத்தக்கது.
மேலும் இம் முத்திரையிலுள்ள உருவம் முக்கோண வடி வான ஒரு தலைப்பாகை உடையதாயும், சிங்காசன மொன் றிற் காலுக்குமேற் கால்போட்டுக் கொண்டிருப்பதாயும், யானை, புலி முதலிய மிருகங்கள் சுற்றியிருப்பதாயும் அதன் இருக்கைக்குக் கீழ் ஒரு மான் இருப்பதாயும், உள்ளது. மிரு கங்கள் சுற்றியிருக்கும் நிலையிற் பசுபதி ஆகவும், யோகநிலை யில் நிற்பதால் "மகாயோகி’ ஆக விளங்குபவராகவும், இருப் பதாற் பிற்காலத்தைய சிவனை இவ்வுருவம் ஒத்திருக்கின்றது. மேலும் மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய விடங்களில் வழிபட்ட இலிங்கங்கள், கடவுளுக்குரியதாகக் கருதப்படும் மூன்று கண்கள் முத்தலை வேல், பாம்பு, கோடரி முதலியன ஆரியர் வருமுன்னரே இந்திய நாட்டில் சிவமதம் நன்கு வே ரூன்றி இருந்ததென்பதை விளக்குகின்றன.
மேலும் சிவமதம் இந்தியாவிலிருந்து மொசப்பத்தே மியா, எகிப்து, கிறீஸ், ஐரோப்பா முதலிய விடங்களுக்குப் பரவிய தென்பதற்குப் பல சான்றுகளுள. முக்கேசி என்பார் தமது "இந்திய நாகரிகமும் அதன் பழமையும்’ எ ன் னு ம் நூலில் இது சம்பந்தமாகக் கூறியிருப்பது பின்வருமாறு:-
'இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்கத் தைத் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ் வணக்கம் இந்தியாவில் மாத்திரம் நிற்கவில்லை. இது உல கின் எல்லாப் பாகங்களிலும் பரவியிருந்ததென்பதை விளக்கு தற்கு வேண்டி சான்றுகள் கிடைத்துள்ளன. சீனு, ஜப்பான், இந்துக் கடற்றிவுகள், பசுபிக் கடற்றிவுகள் முதலிய விடங் களிற் சிவவழிபாடு முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஆபிரிக்க, அமெரிக்க மக்களிடையும், இது ஒரு கால் பரவியிருந்தது. அசீரிய, யூதேயசீரிய, சின்ன ஆசிய, பபிலோனிய மக்களிடை யும். இது காணப்பட்ட தென்பதைக் கிறிஸ்துமறை வாயி லாக அறிகின்ருேம்.
இதையடுத்து இருக்குவேத காலத்தை நோக்கலாம். சிவன் உருத்திரன் என்ற பெயரிலே கற்பனை செய்த உருவிலே வழிபடப்பட்டார். இருக்கு வேதத்திலுள்ள உருத்திரனுக் குரிய பாடல்களில் அவன் உறுப்புகள் வர்ணிக்கப்பட்டுள்ளன. பிரகாசமுள்ள சூரியனைப் போலவும், பொன்னைப் போலவும்
/
 

ஆத்மஜோதி 269
அவர் பிரகாசிப்பாராம். "ஒளிவளர் விளக்கே” சோதியே என்றெல்லாம் பிற்காலத்தில் மணிவாசகப் பெருமான் இறை வ%ன அழைத்திருப்பதும் நோக்கற்பாலது. வேண்டுவார் வேண்டியதை ஈந்தருளும் எம்பெருமான் இருக்கு வேதகாலத் டுலும் வரையாது வளங்குபவனுகக் கருதப்பட்டான். பிற் காலத்திற் பிறவித்துன்பத்தை நீக்கும் வைத்திய நாதனுக விளங்கிய சிவன் இக்காலத்தில் மானிடரின் சாதாரண நோய் களையும் நீக்குபவனுக விளங்கினன். உருத்திரன் மங்கள்கர மானவன் எனவும், இருக்கு வேதத்திற் குறிப்பிடப்பட்டிருக் கின்றது. இக் கருத்தை உணர்த்தும் ‘சிவன்’ என்னும் அடை மொழி இவனது நன்மை செய்யும் பண்பைச் சுட்டுகின்றது. பிற்காலத்தைய வடமொழி நூல்களிலும், ஏனைய சமயச் சார்பான நூல்களிலும் இவ்வடைமொழியே உருத்திரனின் சிறப்புப் பெயராகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இருக்கு வேதகால உருத்திரன் கோபம் மிகுந்தவிடத்து உயிர்களுக்குத் தீங்குவிளைவித்து அவைகளை அழிப்பவனுகவுந் திகழ்ந்தான்.
சிவன் என்பவன் ஒருவன். அவன் காலத்திற்கேற்ற கோலம்பூண்ட மக்களால் வெவ்வேறு காலங்களில், வெவ் வேறு தன்மையுடையவனுகக் கருதப்பட்டான் , அ த ர் வ வேதகால மக்கள் உருத்திரனைப் பயங்கரமான தெய்வமாகக் கருதினர். நோய்களைக் கொடுத்துப் பகைவர்களை அழிக்கின் முனும் உருத்திரன். அந்தகனைக் கொன்றவனுகவும் கூறப் படுகின்றன். இவவிடத்திற் சிவன் வீரப்பண்புள்ளவனுக உயர்த்தப்படுகின்றன். பிரமசாரி சூத்தத்திலுள்ள உருத் திரனின் சிறந்த செய்கைகளின் ஒழுங்கு முறைகளை நோக்கு மிடத்து அவன் பிற்காலத்திலுள்ள சிவனைஒத்திருப்பது நோக் கந்தக்கது.
யயுர்வேத காலத்திலும் உருத்திரன் சிறந்தவிடத்தை வகித் தான். இங்குதான் சுகத்தைச் செய்பவன்-எனவே- ‘சங்க ரன்' என அழைக்கப்படுகின்றன். திருவருட்பயன் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார்,
'நலமிலன் நண்ணுர்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பேர் சங்கரன்'
என இறைவனைச் சங்கரன் என்ற பெயரால் அழைக்கின்ருர்,
இக்கருத்து வேதகாலத்திலேயே வழக்கிலிருந்தது, சிற ப் புடைத்து, பக்தர்கள் தெய்வங்களைப் பற்பல பெயர்களாற்

Page 9
27() ஆத்மஜோதி
பரவிப் பேரானந்தமடைவர். சிவனையும் ஆயிரம் பெயர் களாலழைத்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கம், பெருவழக் காய் இப்பொழுதும் இருக்கின்றது.
பேராயிரமும் பரவித்திரிந் தெம்பெம்மான் என ஏத்த ஆராவமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.
(திருவாசகம்.ஆசைப்-7)
என அழுதடி அடைந்த அடிகளார் மணிவாசகர் இறைவனை இறைஞ்சுகின்ருர். இவ்வாறு பெயர்களை அடுக்கி வணங்கு தலின் ஆரம்ப நிலையை யயுர்வேதத்திலுள்ள சிவனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கள் மூலம் அறியலாம். வாஜஸநேயீ ஸம்ஹிதை சதருத்திரியத்திலும் தைத் திரிய ஸம்ஹிதையிலும் இப் பெயர்களைக்கண்டு களிக்கலாம்.
பிராமணங்களிலும் உபநிடதங்களிலும் உ ரு த் தி ர ன் சிறந்த தெய்வமாகக் கருதப்பட்டான். ஐதரேய பிராமண மும் கெளசிதாகி உபநிடதமும் இத் தெய்வத்தின் மகிமைக்கு உதவிபுரிகின்றன. உருத்திரன் இங்கு மகாதேவன் என்னும் பெயரைப் பெறுகின்றன். இப் பெயரொன்றே இவன் மற் றுந் தெய்வங்களிலும் பார்க்கக் கூடிய நிலையைப் பெற்றிருந் தானென்பதற்குச் சான்ருகும், சிவனுக்குப் பல்வேறு பெயர் கள் ஏற்பட்டதின் காரணத்தை சதபத பிராமணத்தில்ஒருபந் தியும் சாங்கியானத்தில் ஒரு பந்தியும் விளக்குகின்றது. ஸ்வேதா ஸ்வதார உபநிடதம் உருத்திரனை விஸ்வதோ முகனெனக் குறிப்பிடுகின்றது. இரு க் கு வேத உருத் திரனின் குளு திசயங்களில் அருளல், அழித் த ல் என் னும் இரு பண்புகளும் ஒருங்கே காணப்பட்டன. அத்தகைய உருத்தினன் ஸ்வேதாஸ்வதார உபநிடதத்திலேயே முதன் முதலாகப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையுஞ் செய்பவராகக் கூறப்பட்டுள்ளார். உபநிடத காலத்தில் உருத்திரனின் குணங்கள், உருவங்கள், தன்மை கள் அதிக வளர்ச்சியடைந்தமையினல், இதுதான் அவன் குணமென நிரூபிப்பது சிக்கலாக இருந்தது. இக் கடவுளைத் துதித்தாலே ஒருவர் வீடுபேற்றை அடையலாமென்ற கொள் கை நிலைநாட்டப்பட்டது. ஸ்வேதாஸ்வதார உபநிடதத் தில் எல்லா உயிர்களுக்குந் தலைவர் அவர். அவருக்கு நிகர் அவரே. மேலொருவர் இல்லை என உருத்திரன் கூறப்பட்
டுள்ளான்.
(தொடரும்)

ஆத்மஜோதி 27
பச்சை மயில் வாகனனைப் பார்!
(மரு. பரமகுரு)
பாடிப் பரவிப் பழகாத் தடிநாவே! ஈடில் பசுந்தமிழ்ப்பூ இன்றெடுத்து - வாடாத பாமாலை சூட்டு பரிந்தருளும் தண்கடப்பம் பூமாலை கொண்டான் புகழ்!
புகழப் புகழநம் வாயினிக்கும்; போர்வேல் திகழும்; சிறுமையெலாம் தீரும்! - அகங்கனிந்து தண்ணீரில் ஆடும் தனிக்கயல்போல் நீந்தியிரு கண்நிரில் ஆடினுல் காண்!
காண்பார்யார் கண்ணுள் மணியைக் கருத்தின்றி வான்பார்த் திருந்தால் வருவானுே? - தேன்சேர்த்த எண்ணம் உடையார் இதயங் கனிந்தன் பு பண்ணின் வருவான் பரிந்து!
பரிந்தன்றே அன்று பரங்குன்றன் செஞ்சுடர்க்கண் எரிந்தான்; விழிவேல் எறிந்தான் - திரிந்தலைந்தான் அண்ட கடாகம் அதிரத் திசைநடுங்கத் துண்டாடப் பட்டதுபேய்ச் சூர்!
சூரைப் பிளந்த சுடர்வேலன் அன்பரிடர் வேரைப் பிடுங்கி விரைந்தெறியும் - பாரில் இதுபோல் ஒருதெய்வம் எங்குண்டு? உண்டேல் அதுஇது தான் என் றறி!
அறிவால் அறிதற் கரியான்; உடலால் பொறியால் புணராப் புரியான்; -தெரியா மழலை உளமாய் மனத்தின் அழுக்குக் கழலத் தருவான் கழல்
கழலோசை கேட்ட கணமே அரக்கர் அழுமோசை கேட்டதாம் அம்மா! - குழலோசைக் கண்ணள் மருகன் கழலோசை யாமுறும்பே சின்னல் அடவிக் கெரி!

Page 10
272 ஆத்மஜோதி
எரிசுடர்க்கண் நெற்றி எழுந்தண்ட புவனம் கருகிவிடக் காயும் கனலன்: - உருகும் அடியவர்க்குத் தண்புனலன்; ஆரமுதன்! அன்புப் பொடிதுவும் பன்னிருகட் பூ!
பூவிழுங்கு மால்நாயிப் பூவெழுந்த நான்முகனின் நாவெழுந்த வாக்கு நலங்கேட்டு - நாவழுந்தக் குட்டிச் சிறையிட்டுத் தானே குவலயத்தின் சிட்டித் தொழில்புரிந்த சேய்!
சேயிருந்த மேனி,எழில் செங்கமலப் பூக்காடு
தாயிருந்த உள்ளத் தனிக்கருணை! - நாயிருந்த பிச்சைச் சிறுவனயும் பேணும் பெருந்தகையாம்
பச்சைமயில் வாகனனப் பாடு!
மகாத்மாவின் மணி மொழிகள்
பாவம் அறியாத இளமைக் காலம் ஒருவருக்கு விலை மதிக்க முடியாத ஒரு சொத்தாவதால், அதனை இன்பம் என்று பிழையாய் அழைக்கப்படும் ஒரு கூடிணப் பொழுதின் கிளர்ச்சிக்காக வீணிற் செலவளிக்கக் கூடாது.
தனக்கு வெளியே உள்ள கற் பனை ச் சத்துருக்களை எதிர்த்துக் கொண்டு தனக்குள் இருக்கும் கணக்கற்ற சத் துருக்களுக்கு எதிராகத் தனது சிறு விரலையும் நிமிர்த்தத் திராணியில்லாத அல்லது, அதிலும் கேவலமாக, அவர்க ளைத் தனது மித்திரராகப் பிழையாய் எண்ணும் எவரும் ஒர் யுத்த வீரராகார்.
இராமா என்பது கடவுள் என்பதற்கு இ ன் ஞெ ரு பெயரே. கடவுள், அல்லா அல்லது வேறெந்தப் பெயரா லும் அழைக்கலாம். ஆணுல் ஏனைய யாவையும் விட்டு விட்டு அவரையே நம்பும் கூடிணமே நீ பலமடைந்து நீ கதி யற்றவன் என்றெண்ணிய எண்ணமெல்லாம் பறந்துவிடும்.
/

ஆத்மஜோதி 273 ــــــــ۔
கந்த புராணம்
(முத்து)
*கந்த புராணம் எமது சொந்தப் புராணம்' எனத் தமிழ் மக்கள் எவராலும் கொண்டாடப் பெறுவது. கலியுக வரதன் கந்தப் பெருமான். கலியுகமோ கொடுமைகளுக் கெல்லாம் இருப்பிடமானது. இக் கலியின் கொடுமையைக் கந்த புராணம் படித்தும் கேட்டும் நீக்கிக்கொண்டனர் நமது முன்னேர்.
கந்த புராணம் என்னும் பெருங்காப்பியத்தை இயற்றிய வர் கச்சியப்ப சிவாச்சாரியர். அஃது உற்பத்தி, அசுர, மகேந்திர, யுத்த, தேவ, தட்ச காண்டங்கள் என்னும் ஆறு பகுதிகள் கொண்டது. 10346 விருத்தப்பாக்களை உடை யது. முருகவேளின் கருணைப் பெருக்கினைக் கதைவடிவமாக வெளியிட்டு அடியவர்களைப் பரவசமாக்குவது இந்தப் புரா ணம். கந்தவேள் என்றும் முருகவேள் என்றும் தமிழ் மக்க ளால் போற்றப்பெறும் பெ ரு மா னு க் கு ஒரு ஞானப் பெருங்கோயிலாக இப் புராணத்தை அமைத்திருக்கிருரர் காஞ்சிவாசியாகிய கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள்.
காஞ்சிகுமர கோட்டத்துக் குமரப் பெருமானது தி ரு வருள் பெற்றே ஆசிரியர் கந்த புராணம் பாடினுர், "திகட சக்கரம்" என முருகனே அடி எடுத்துக்கொடுக்க கச்சியப்பர் கந்த புராணத்தைப் பாடி முடித்தார் என்று சொல்லுவர். கச்சியப்பருடைய கந்த புராணம் வீறுபெற்ற நடையுடை யது; உவமைகள் செறிந்தது; அணிபலவும் அமைந்தது.
கந்த புராண அரங்கேற்றம் காஞ்சிகுமர கோட்டத்திலே நடைபெறுகின்றது. காப்புச் செய்யுளில் முதல் தொடரே சபையில் கலகலப்பை உண்டுபண்ணிவிட்டது. திகழ் தசக் கரம், திகடசக்கரம் என வருவதற்கு எங்குவிதி உள்ளது. எனச்சபையோர் வினவினர். முருகனே அடி எடுத்துக்கெர்டுக் கக் கச்சியப்பர் பாடினர். அவர் வேருென்றும் அறியார். இதைக்கேட்டதும் திகைத்தார். முருகனை மனதில் நினைந் தார். அப்போது முருகனே கந்த புராணத்தைக் கேட்க வந்த வர்களுள் ஒருவர் போலவந்து வீரசோழியத்தைக் காட்டி விதியிருக்கும் இடத்தைக் காட்டினர். கந்த புராணம் முரு
飘 \

Page 11
274 ஆத்மஜோதி
கன் திருவருள் முத்திரை பொறிக்கப்பெற்ற நூலா என்று சந்தேக முறுவோருக்கு முருகப் பெருமானே தனது திருவருள் முத்திரையை முதலில் பொறித் தருளினன்.
தமிழிலுள்ள ஒன்பது புராணங்களுள் இது சிறந்தது ஆனபடியினல் இதனை 'புராண நன்னயகம்" என்பர். இந்நூல் நல்ல வேலைப்பாட்டுடன் இழைக்கப்பெற்ற மாணிக்கம் போன்றது. இந்நூலாசிரியர் ஒரு பொருளைக் குறிக்கும் போது அதன் பெயராகிய பல சொற்களாலும் குறிப்பிடுவர். இவர் நடையிலே தொனிப் பொருள் சிறந்திருக்கும். சைவாக மங்களின் கருத்துக்களும் வேதோப நிடதங்களின் கருத்துக் களும் நன்கு விளக்கப்படுகின்றன. -
கந்த புராணத்தின் உட்பொருள், விதி வழிவிலகிய இந் திரன் முதலியோர் சூரன் முதலிய அசுரர்களின் வாயிலாக வினை வழிவரும் துன்பங்களால் துயருற்று, இறைவனை நினைவு கூர்ந்து, அன்பால் வழிபாடாற்றி, முருகப் பெருமான் துணை கொண்டு சூரணுதியோரைத் தொலைவு செய்து இன்புறுவது போல் உயிர்கள் விதிவழி தவறி, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வினைப்பயன்களால் துன்புற்றபோது இறைவனை நினைத்து, அன்பால் வழிபாடாற்றி திருவருள் துணைகொண்டு மும்மலங்களை நீக்க இறவாத இன்ப முத்தி யைப் பெறுதற்காம் என்பது.
தக்கனுடைய யாகத்திலே சிவ நிந்தனை நிகழ்ந்தது. சிவத்துரோகத்தைத் தேவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார் களாதலினல் தேவர்கள் மீன் சுமத்தல், அடிமை வேலைசெய் தல் போன்ற வினைகளை அநுபவிக்க நேர்ந்தது. படைச்செருக் காலும் தவச்செருக்காலும் விண்ணையும் மண்ணையும் அடி மைப்படுத்திக் கொண்டிருந்த சூரனைவென்று கந்தப் பெரு மான் அறத்தை நிலை நிறுத்திய கதைதான் கந்த புராணம். பக்தி, விசுவாசம், ஞானநெறியில் நடத்தல், உண்மை, இரக் கம், தற்புகழ்ச்சியின்மை, புலனடக்கம், அகத்தூய்மை, அச்ச மின்மை முதலிய பண்புகளைத் தே வ ச ம் பத் து என்றும் செருக்கு, சினம், கொடுமை, பொய்மை, ஒழுக்கமின்மை, இரக்கமின்மை, பொருமை, அறியாமை முதலியவற்றை அசுரசம்பத்து என்றும் கூறுவதுண்டு. தேவசம்பத்தும் அசுர சம்பத்தும் முரண்படுவன. ஒன்றுக்கொன்று பகைமையுடை யன. எமது உள்ளத்தில் கணந்தோறும் தேவாசுர யுத்தம் நடைபெற்று வருவதைச் சாதனையாளர்கள் அறிவார்கள்.
V

ஆத்மஜோதி 275
இறைவனது அருள் காலப்போக்கில் அசுரசம்பத்தை அழித் துத் தேவசம்பத்தை நிலைபெறச் செய்யும்.
இத்தகைய தத்துவத்தை-அதிசூட்சம இயற்கை விதியை வசீகரமான கதை-உபகதைகள் வாயிலாக உள்ளத்தின் ஆழத்தில் பதியச்செய்யும் ஆற்றல் கந்த புராணத்திற்கு
உண்டு.
LLeSe0YL0eL0L0eMse0YMS0AJS00MS0eYAL0Lea0eM0eMe00ea00eML0LeL0YY0eSs0LMALe0eMsMeLe0eL0eeMLSMML0LL0eSLL0eML0LML0eLe0ASe L0LeSeS
மகாத்மாவின் பொன்மொழிகள்
சங்கரர் தர்க்க சிரேஷ்டராய் இருந்தார். உலக இலக் கியம் முழுவதிலும் அவருடைய நியாயவாதத்திலும் சிறந் தது ஒன்றுமில்லை; ஆயினும் செபத்துக்கும் விசுவாசத்துக் குமே அவர் முதலிடம் கொடுத்தார்.
ہلامہ قريكي خلیہ
ஒரு வாலிபன் ஒருபோதும் மனதைச் சோர்ந்துபோக விடலாகாது. விசுவாசமும் நிச்சய தீர்மானமும் உள்ளவன் மனஞ்சோர நியாயமில்லை. விசுவாசம் என்பது இன்னுெரு வர் தரக்கூடிய பொருளன்று. அது தனக்குள் உதிக்கவேண் டும். கஷ்டங்கள்கூட விசுவாசமும் கூடவேண்டும்.
«خهه >డ طبیعیہ
பெண்ணின் உரிமைகளைக் குறித்துத் திடதீர்மானம் உடையேன். ஆடவனுக்கில்லாத ச ட் ட ரீ தி யா ன தடை ஏதும் அவளைக் கஷ்டப்படுத்தக்கூடாது. ஆண் பெண் மக்கள் இருபாலாரையும் எல்லாவிதத்திலும் ஒரே சமனகப் பார்ப் பேன்.

Page 12
276 ஆத்மஜோதி
அகஸ்தியர் அருளிய பக்திப்பாடல்கள்
ஓம் சரவணபவ
சரவணபவ சரவணபவ சரவணபவ முருக ஒம் ஷண்முக ஜெயஷண்முக ஜெய ஷண்முக ஜெய முருக ஒம்
முருகநாம கீர்த்தனமே முழங்கிடுவோம் வாரீர்
முழங்குவதால் மூவுலகும் வணங்குவதும் பாரீர்.
அருகில் வந்தால் அகன்றிடாமல் அளவில் இன்பம் உறலாம் ஆறுமுகன் அருள்புரிவான் அமரவாழ்வு பெறலாம்.
குன்றமெலாம் கோயிலெனக் கொண்டவனே முருகன்
கோடி அருட்கனியமுதம் உண்டவனே முருகன்
நன்று செயவீடுதோறும் நாடுதோறும் செல்வோம்
நாமகீத மகிமையினல் நமனை இங்கு வெல்வோம்.
அடியவரின் அடி வணங்கி அருட்கலையை கற்போம்
அருட்ஜோதி ஆலயத்துள் அவனுடனே நிற்போம்
படிகள் தோறும் பாடுவதால் பரமன் பதம் பதியும்
பச்சைமயில் வாகனமும் பரிவுடனே வதியும் (ஒம்)
ఆశాజలక్ష్మాగా
ஷண்முகநாயகன்
ஷண்முக நாயகன் தோன்றிடுவான்-சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினுல் கண்டு போற்றிடலாம்-கொடும்
காலத்தை காலனை மாற்றிடலாம்.
ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம ஸங்கீர்த்தன ஊற்றினிலே,

ஆத்மஜோதி 277
யாமிதற் கிலமோர் கைமாறே
(பண்டிதை. த. பூங்கொடி) s o , ž:
*புவனிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்கு கின்றேம் அவமேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வ ாறு'
என இப்பூவுலகின் பெருமை பேசப்படுகின்றது. இத்துணைப் பெருமை வாய்ந்த இப்பூவுலகின் கண்ணே மானிடராகப் பிறத்தல் ஒரு பெரும் பேருகும். 'அரிது அரிது மானிடரா தல் அரிது’ என்றனள் ஒளவை. வாதவூரரும் புல்லாகிப், பூடாய், என்றெடுத்து எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று விடுகின்றார். இத் த  ைக ய கீழ்ப்பிறவிகளி னின் றும் இத்துணை உயர் பிறவிதனை எமக்கு அளித்த இறைவ னுக்கு யாமியற்றும் கைமாறு முளதோ? கைமாறு கொடுத்த லென்ருல் ஒருவர் செய்த உதவிக்குப் பிரதியாகச் செய்யும் உதவியாகும். இது மாத்திரமன்று கைமாருகக் கொடுக்கும் பொருள் கொடுப்பவனுடைய உடைமையாக இருத்தல் வேண்டும். உலகிற்காணப்படும் பொருள்கள் யாவும் ஆண்ட வனுடைய உடைமைகளே. யாமெல்லாம் அவன் உடைமை களே. எமக்கென்று இவ்வுலகில் ஏதும் இல்லையே. இவ் வுடம்பு தானும் அவனல் அளிக்கப்பட்டதே. யாம் கைமாறு
செலுத்த எண்ணுவது என்னே?
இறைவனருட் பதிவிற்கு இலக்காகிய மணிவாசகர் உன் னைத் தந்தனை-என்னைக் கொண்டன. அதனுல் யானே அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் என்றவர் ‘யானிதற் கிலனேர் கைமாறே" என்கின்ருர், பேரின்ப மயமாகிய இறை வன் தன்னையே அடிகளுக்கு வளங்கினனல், அதற்குக் கைமா ருக வளங்கத் தக்கது யாது? அடிகளுக்கோ தனக்கென்று ஏது மில்லை. உடல், பொருள், ஆவி, மூன்றும் ஆண்டவன் உடை மைகளே. அப்பெருமான் பேருதவிக்கு ஈடாக ஏதும் செய்ய இயலா நிலைமைதனை உணர்ந்த அடிகள் யானிதற் கிலனேர் கைமாறே" என்றனர். இவ்வுண்மை அனுபவத்தை அறிந்த தாயுமான சுவாமிகளும்,
"சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்ற வுன்னைத் தந்த உனக் கென்ன நான் தந்தேன் பராபரமே”

Page 13
273 ஆத்மஜோதி
எனப் புலப்படுத்தினர். சிவனருட் செல்வர்களே இவ்வாறு கூறின் இறைவனுக்கு யா மிய ற்றும் கைமாறுமுளதோ? இதனை உணர்ந்த வள்ளுவனும் உதவிவரைத்தன்று உதவி, உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து என்றனன்.
இறைவன் எம்பால் ஒன்று வேண்டுபவனல்லன். அவன் வேண்டுதல் வேண்டாமை இலாதவன். இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காது நின்று பேரருளினைப் புரிபவன். அவன் சலமிலன், உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டுமென்பதே அவனது பேரருட் பெருக்காகும்.
செம்பிற் களிம்பென ஆன்மாக்களைப் பற்றி இருப்பது மலம். அம்மல முனைப்பினுல் அவை பல்பிறப்பிடைப் பிறந்து உழலுகின்றன. இங்ங்ணம் பிறவிக் குழியிலே விழுந்து உய் வகையோராது அழுந்தும் உயிர்களைத் தன்னடி நிழல் சேர்த் துப் பேரானந்தம் அளிப்பதே இறைவன் செயல். வினை க் கேற்ப உயிர்கள் பிறத்தல் இறத்தல்களைச் செய்கின்றன. இவ் வாற்ருன் உயிர்கள் பிறவிகளிற் றலைப்படுதலினலே வினை யொழிவுபெற்றுத் தூய்மை அடைகின்றன. இதனைச் சிவ ஞான போதம்,
"போக்கு வரவு புரிய ஆணையின் நீக்க மின்றி நிற்கு மன்றே"
எனக் கூறுகின்றது. இங்ங்னமே உயிர்களுடன், ஒன்ரு ய், வேரு ய், உடனுய், நீக்கமற நின்று அவைகளின் வினைமாசுகளை அறுத்து தன்னடி நிழல் சேர்க்கின்ருன். இதனுண்மைதனை
‘என்னை நினைந்தடிமை கொண் டென்னிடர் கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றன்"
எனும் அருள்மொழி புலப்படுத்தா நிற்கும்.
நாம்மறந்த போதும் அவன் எம்மை ஒருபோதும் மறப்ப தில்லை. இமைப்பொழுதும் நீங்காது நின்று பேரருள் பாலிக் கும் இறைவனை யாம் மறத்தல் கூடாது. அவ்வாருனல் தெய்வத்திருமறை கூறும் செய்ந்நன்றி மறந்த குற்றத்தால் யாம் பல் பிறப்பிடை உழலநேரிடும் அன்ருே. தன்னை வந்த டையும் அன்பர்களின் வினைமாசுகளை அறுத்த்லுடன் புது வினைகள் சாராவண்ணம் அவர்களைக் காக்கின்றன். இ த னு

ஆத்மஜோதி 279
லேயே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் "ஏழிசையாய் இசைப் பயனுய் இன்னமுதாய் என்னுடைய-தோழனுமாய் யான் செய்துருசுகளுக்கிடணுகி-எனப் பாடினர். தேவர் பொருட்டு நஞ்சுண்டு அமுதமீய்ந்த வள்ளலான எம்பெருமான் பேரருட் திறத்தைக் கண்டன்ருே பொய்யில் புலவன் புகழுரையும்,
**பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்'
என அமைந்தது போலும்.
'கள்ளத்தலைவர் துயர் கருதித் தங்கருணை வெள்ளத் தலைவர் மிக'
என்பது திருவருட் பயன்.
கள்ளத் தலைவர் துயருக்காகத் தங்கருணை வெள்ளத்து அலைகின்றனராம், சீவன்முத்தர் என்ருல் எம்பொருட்டுக் கடவுள் காட்டும் கருனைதான் என்னே. அக் காருண்ஞனுக்கு பாமியற்றும் கைமாறுதான் என்னே. நெஞ்சத்தால் இடை யருது நினைத்தலானும் மொழியால் அவன் புகழ் பாடுதலா னும், முக்கரணங்கள் தூய்மை யடைகின்றன. தூ ய்  ைம விளக்கம் மேற்பட மல இருள் நீங்கிச் சிவானுபவம் கை கூடும். இதுவே யாமியற்றும் பணியாகும், அப்பரடிகள்,
* வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’
என்கின்ருர்,
அரன் புகழ்பாடுதற்கே இவ்வாயானது கொடுக்கப்பட் டுள்ளது. அவனை நினைந்து நினைந்து உருகுதற்கே இவ்நெஞ்சு கொடுக்கப்பட்டுளது. அவனை வணங்குவதற்கே இத்தலை யானது கொடுக்கப்பட்டுள்ளது. இவையே யாம் செய்யும் கைமாரும். செயலளவில் செய்தல் அரிதாயினும் மனமார வாவது சிந்தித்தல் வேண்டும். இதனை உணர்ந்த பட்டினத் தடிகள்,

Page 14
28 () ஆத்மஜோதி
'போதும் பெறவிடிற் பச்சிலை யுண்டு புனலுண்டு ஏதும் பெறவிடில் நெஞ்சுண்டன்றே”
என விளக்கினர்.
இங்ங்ன மெல்லாம் உணரும்படியாக இருந்தும் தீநெறிச் செல்கின்றதே இந்தவுள்ளம் என்று இரங்கிய அப்பர் சுவாமி கள் நெஞ்சத்தை அழைக்கின்ருர், நெஞ்சமே நீ பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகாமல் நிலை பெற்ற இன் பத்தை விரும்புகின்ருயா? அப்படியானுல் நீ நித்தலு மெம்பி ரானுடைய கோயில்புக்குப் புலர்வதன் முன் அ லகி ட் டு மெழுக்குமிட்டுப் பூ மாலை புனைந்தேத்து, புகழ்ந்து பாடு, தலையாரக் கும்பிடு, கூத்தும் ஆடு என அறிவு நல்குகின்ருர்,
இவ்வுடம்பு இறைவன் ஆலயமே. ஆன்மாக்கள் யாவும் அவனுக்குத் தொண்டு செய்யுந் தொழும்பர்களே. ஆதலின் அவனுக்கு இடனய உள்ளத்தைப் பொறி வழிச் செலுத்திப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகாமல், இறை பணி நின்று, அயரா அன்பினலே அரன்களல் அடைவோ மாக, இதுவே இறைவனல் விரும்பத் தக்கநெறியுமாம்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
மகாத்மாவின் பொன்மொழிகள்
சமயத்தின் பெயரால் சண்டையிட்டுக் கடவுளின் பெய ரை அவதூறு செய்யாது என்றும் புதுப்பிக்கப்படும் வழி பாட்டு ஆலயத்தைக் காணும்போது, கிறிஸ்துவ, இஸ்லாமிய, அல்லது இந்துக்கோயில் எதுவும் மாய்மாலமும் ஆஷாடபூதித் தனமும் நிறைந்து மிக எளியலர்களை உட்பிரவேசிக்கவிடாது தடுத்தல் கடவுளைப் பரிகசிப்பதுபோல் காணப்படுகின்றது.
* -- +
கடவுள் சிருஷ்டித்த மிருகவர்க்கம் முமுவதிலும் மனிதன் மாத்திரமே தனது சிருஷ்டிகரை அறியும் பொருட்டுச் சிருஷ் டிக்கப்பட்டுள்ளான்.

ஆத்மஜோதி 281 க தி ர் க |ா ம ம்
(நா. முத்தையா)
ஈழத்திற்கு உலகப் புகழை உண்டாக்கிய திருத்தலம் கதிர்காமமாகும். சாதி சமய வேறுபாடின்றி எல்லாரும் முருகனது அருட்குழந்தைகளாக மாறி அரோகரா கூறும் போது யாருடைய மனந்தான் உருகாதிருக்கும்.
அரஹரோகரா சுவாமி அரஹரோகரா கதிர்காம வேலனுக்கு is 9 கந்தப்ப சுவாமிக்கு 2
என்றும் 臀
சரவணத் தெவியோ அரோகரா சண்முகத் 9. 雳? கதிர்காமத் py 9 கருணுகரத் 99 99
என்றும் முழங்கும் சத்தத்தைக் கேட்கும் போது இன, மத, மொழி வேறுபாடுகள் யாவும் எங்கோ ஒழித்தோடி மறைந்து விடுகின்றன.
பொய்யகல நாளும் புகழ் விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றேன்றி மண்டோன்றக் காலத்தே வாளோடு முற்றேன்றி மூத்த குடி.
இச் செய்யுள் புறப்பொருள் வெண்பா மாலையில் உள். ளது. கல் தோன்றி மண் தோன்ருக் காலம் ஒன்றிருந் தது. அது மிகப் பழமை வாய்ந்ததாகும். முருக வழிபா டும் இத்துணைப் பழமை வாய்ந்ததென்பது அறிஞர் கூற்ரு கும். மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் கண் "சேயோன் மேய மைவரை உலகம்" எனக் குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகக் கடவுள் குறிப்பிடப்படுகின்ருர், அழியா அழகு, குன்ரு இளமை, தெய்வத்தன்மை ஆகிய எல்லாம் சேர்ந்த ஒன்றுக்கு முருகு என்னும் சொல்இட்டு அத னைப் போற்றி வந்தனர்.

Page 15
282 ஆத்மஜோதி
முருக வழிபாட்டுக்குரிய திருத்தலங்களுள் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றும் ஒருங்கே சிறப்புடையது கதிர்காமமாகும். கதிர் என்ருல் ஒளி, காமம் என்ருல் அன்பு. தன்னிடத்து அன்பு கொண்டு வருபவர்களிடம் முருகன் சோதி வடிவாய்த் தோன்றி அருள் புரிகின்ருன் என்பது கருத்து. இவ்வுண்மையை திருவிழாக் காலங்க ளிலே எரிக்கப்படும் கற்பூரஜோதி மெய்ப்பிக்கின்றது. கற் பூரத்தை எரித்தால் மிச்சமாக ஒன்றும் இருப்பதில்லை. கதிர்காமத்தானிடம் நாடிச் செல்பவர்களுடைய வினையை யும் ஒன்றுமில்லாது அழித்து அவர்களைத் தம்மோடு சேர்த் துக் கொள்ளுகின்றன் முருகன். புத்தபகவான் யோகத் தமர்ந்ததாகக் கருதப்படும் பதினறு திருத்தலங்களுள் ஒன் முகக் கருதப்படுகிறது.
சிங்கள அரசருட் பெரும்பாலோர் கதிர்காமத் தெய் யோவையும் (கதிர்காமக்கடவுள்) பத்தினித் தெய்யோவை யும் (கண்ணகி) வணங்கி வந்தனரென்பது சரித்திர நூல்க ளால் நன்கு பெறப்படும். சிங்கள அரசரின் தலைநகரா யிருந்த கண்டியிலும் இத் தெய்வங்கட்குக் கோயில்கள் அமைந்திருத்தல் மேற்கூறிய கொள்கையினை வலியுறுத்தும்.
அல்கேதர் என்னும் முஸ்லீம் அடியார் கதிர்காமத்தலத் தை அடைந்து ஞானம் பெற்றுய்ந்தார். இவர் சிவனெளி பாதத்திலும் சிலகாலம் தங்கினர் என்று அறியக் கிடக்கின் ADğ5I.
முருகவேள் சூரபன்மனைச் சங்கரிக்கும் நோக்கோடு எழுந்தருளினர். கதிர்காமத்தருகிலுள்ள மாணிக்க கங்கை யினுேரத்திலே பாசறை வகுத்து இருந்தார். அவ்விடம் ஏமகூடம் என்று அழைக்கப்பட்டது. சூரசங்காரம் முடிந்த பின் வள்ளிநாச்சியாரைக் காதலித்து மணம் முடித்த இடம் கதிர்காமம் என்பது ஐதிகம். தேவயானையை மணமுடித்து தேவர்களுக்கு அன்பனென்றும் வள்ளியை மணமுடித்து மணி தர்களுக்கு அன்பனென்றும் முருகப் பெருமான் தமது திரு வருட் பெருக்கைக் காட்டியருளினர். முருகப் பெருமானை நாடிச் செல்பவர்கள் எல்லாரையும் ஒன்ருக நோக்குபவர், அருள் செய்பவர் என்பது இதனல் அறியக் கிடக்கின்றது.
தக்ஷண கைலாச புராணத்தில் கதிர்காமத்தைப் றிக் கூறப்படுகின்றது. பிள்ளையார்மலை, வீர வா கு ம

ஆத்மஜோதி 283
தெய்வயானையம்மைமலை, வள்ளியம்மைமலை ஆகிய மலைக ளுக்கு நடுவே சோமன், சூரியன், அக்கினி என்னும் முச்சு டர்களின் சோதி பெற்று உலகுக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவது கதிரமலையாகும். அம்மலைச் சிகர நடுவில் அநேக கோடிச் சூரியப் பிரகாசம் பொருந்தி விளங்கும் சிந் தாமணி ஆலயத்தில் நவரத்தின மயமான சிங்காதனத்தில் வள்ளிநாயகி தெய்வயானையம்மை சமேதராக அநேக கோடி சூரியப் பிரகாசத்தோடு கதிர்காமகிரீசர் எழுந்தருளியிருக்கி ருர் என்றும் இப் புராணம் கூறும்.
இன்னும் 'கதிர்காம நகரம் முக்கோண வடிவமான வீதியை உடையது. அந் நகரத்தின் நடுவிலே பவளத் தூண்கள் நிறுத்திப் பொன்னல் இயற்றி இரத்தினங்கள் இழைத்த திவ்வியமாகிய சோதிமண்டபம் ஒன்றிருக்கின் றது. அம் மண்டபத்தின் நடுவில் இந்திரநீல மணியினுற் செய்து பிரகாசமும் அழகும் பொருந்திய சிங்காசனத்தின் மேலே தெய்வயானை அம்மையார், வள்ளிஅம்மையார் என் னும் இரு சத்திகளோடு ஞானசத்தி வடிவாகிய வேற்படை யைத் தாங்கி கிருபா சமுத்திரமாகிய கதிர்காமநாதர் விளங்குகிருர். அச் சோதி மண்டபத்தின் எதிரிலே எல்லா இலக்கணமும் வாய்ந்த மண்டபம் இருக்கின்றது. அதன் அருகிலே மேன்மை பொருந்திய சமாதியோக மண்டபம் இருக்கின்றது. விநாயகருக்கும் பரமசிவனுக்குமுரிய வேறு வேறு மண்டபங்களும் அங்குள்ளன.
இந்த அமைப்பு முறையில் ஒரு காலத்தில் கதிர்காமம் விளங்கியிருந்தது என்று அறியக் கிடக்கின்றது. காலகதி யில் இன்றைய நிலையை அடைந்துள்ளது. அந்நியர்களு டைய வருகையால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். புனித நகராக அமைக்க முன்வந்திருக்கும் அரசாங்கத்தினர் தட் சிண கைலாச புராணம் கூறிய அமைப்பு முறையை மன துட் கொண்டு அமைத்தால் கதிர்காமத்தலம் மிக மிக மேன்மை பெற்று விளங்கும் என்பதற்கு ஐயம் எதுவுமில்லை.
தாயரவை முன்வருத்துஞ் சந்திரோ தயந்தனக்குன் வாயரவை விட்டுவிட மாட்டாயோ - தீயரவைச் சிறுமயிற் பெருமாள் தென்கதிர் காமப்பெருமாள் ஏறுமயிற் பெருமாளே.

Page 16
284. ஆத்மஜோதி பிள்ளையார் சுழி (மாத்தள-அருணேசர் எழுதியது)
நம் சைவ சமயத்தினர் ஏதாவது எழுதத் தொடங்கு முன்பு முதல் முதல் "வ" என்ற குறியாகிய பிள்ளையார் சுழி யை நாட்டிய பின்னரே எழுதத் தொடங்குவதும் பண்டை தொட்டு வழக்கமாயிருந்து வருகிறது. இச் சுழியை நாட்டு வதன் காரணம் யாதாயிருக்கக் கூடும்? இதனை தெரிந்து கொள்ளாமலே பலர் எழுதிவருகிருரர்கள். இவ்விதம் எழுது வதில் ஒரு முக்கியமான தத்துவம்-உட்பொருள் அடங்கி யுள்ளது. இதனைப் பெரியோர்கள் நன்கு விளக்கிக் காட்டி யுள்ளார்கள். அதனை எல்லோரும் அறிந்துகொள்ளுவது அவசியம் என்பதற்காக இங்கு எழுதுகிறேன்.
முதல் முதல் மாந்தர்களால் சிந்தனை செய்யப்படும் விஷ யங்களின் மூலமானது, இருதயத்திலிருக்கும் "அணுகதம்' என்ற ஆதார சக்தியின் வட்ட மலர் இதழ்களில் உலவுகின்ற பிராணவாயுக்கள் ஒன்றுக்கொன்று வட்டமிட்டு உராய்ந்து கொள்ளுவதினுல் உண்டாகும் ஒலியாகிய நாதத் தொனி யோடு, ஐம்புலன்களிலும் சென்று பழகிய மனமானது கலப் பதினுல் உண்டாகும் உணர்ச்சியால் நேர்வதாம்.
முற்கூறப்பட்ட ஆதார சக்தியானது தங்கிநிற்கும் இடத் திற்கு பிந்து" என்று பெயர். இச் சக்தியானது சில இதழ் கள் கொண்ட வட்டவடிவமான ஒரு மலரென்றே தத்துவ நூல்கள் கூறுவதால், இது தங்கும் மூலமான பிந்து என்ற பொருளும் வட்டவடிவமானதே. ஆகவே, இப்பிந்துவின் அடையாளம் O இதுவாகும். இவ்வடையாளமே சகலத்திற் கும் காரணமாயிற்று, “பிரதமம் பிந்துஸம், யுக்தம்-த்விதீயம் தண்டமுச்சதே’ என்ற பிரமாணப்படி, முதலிலே பிந்துவின் வடிவமும், இரண்டாவது தண்டம் என்ற (கோல்) வடிவமும் குறிக்கவேண்டியிருத்தலால், அவ்விரண்டும் -ெஇவ்வடிவம் பெற்று நிற்கின்றன. இதனை வரிவடிவமாய் எழுதும்போது இவ்வுருவம் அந்தரமாய் நிற்குமாதலால், அதற்கு பீடம் ஒன்று அவசியம் வேண்டும். ஆகவே, அதன் கீழ் ஒர் ஆசனம் தந்து எழுதுவதே முறை என முற்காலத்தவர் கைக்கொண்டு எழுதிவந்தனராகையால் முடிவில் "வட' என்ற இந்தக் குறி ஏற்பட்டு நிற்கிறது.

ஆத்மஜோதி 285
இது "பிள்ளையார் சுழி தான் என்பதற்குரிய மார்க்கம் என்ன என்று பார்க்கும்போது பின் கண்டவாறு புலப்படு கிறது:- அதாவது எவற்றிற்கும் ஆதாரமாய் விளங்கும் மாயையற்ற ஆதி மூர்த்தமாகிய நிர்மல விந்துருப சக்தியே துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனுர்த்தம் சிவபிரானுக்குப் பிள்ளையாய்த் தோன்றித் தம் பூர்வ வடிவைப் புலப்படுத்தின தாகையால், அவ்வாறு உதித்தவரைப் பிள்ளையார் என்றும், அவர் செயலாகிய செங்கோலும் அவர் வடிவாகிய பிந்துவும் ஆகிய இரண்டும் கூடியதைப் 'பிள்ளையார் சுழி என்றும் கூறும் வழக்கமாயிற்று என்பது விளங்கும்.
வேறுவிதமாகவும் இதன் த த் துவத்துக் கும் பொரு ளுண்டு. பிரணவத்தில் உள்ள நாதத்துக்கு வரிவடிவு கீறு; விந்துவுக்கு வரிவடிவு சுழி. இந்தக் கீறும் சுழியும் சேரும் போது யானையின் துதிக்கையை ஒத்த வடிவம் உண்டாகும். விநாயகக் கடவுளின் ரூபம் பிரணவமாதலால், அதன் பகுதிக | ளாகிய நாதமும், விந்துவும் விநாயக மூர்த்தியின் துதிக்கை யாகின்றன. அதனல், விநாயகக் கடவுளின் திருமுகம் யானை முகத்தைப் போன்று இருக்கின்றதெனக் கூறுவர். பிள்ளையார் சுழி எனப்படும் "வ" என்னும் எழுத்தும் நாதவிந்துக்களின் வடிவமாம். அவை பாம்பினுடைய உடலையும், தலையையும் ஒத்திருத்தலினற்போலும், அவற்றிற்குக் காரணமாகிய குண் டலி சக்திபாம்பென்று நிரூபிக்கப்படுகின்றது . சிவபெருமான் அணிந்திருக்கும் பாம்பு குண்டலி சக்தி என்று ஆகமம் கூறு கின்றது. பிள்ளையார் சக்தியின் பிரதாப வடிவ மாறுதல் களைப் "பார்க்கவ புராணம்' என்ற விநாயக புராணத்தில் பரக் கக் காணலாம்.
*சுக்லாம் பரதம்-சசிவர்ணம் சதுர்ப்புஜம்-பிரசன்ன வதனம் தியாயே-சர்வ விக்னுேபசாந்தையே’ என்று வாக் கால் தொழுது செய்வதும், எழுதத் தொடங்குமுன்னர் * பிள்ளையார் சுழி இட்டு எழுதுவதும் ஆகிய இவைகள் எடுத் துக்கொண்ட காரியங்கள் விக்கினமின்றி முடியும் பொருட் டேயாம் என்பது விளக்கமாம்.
பரமசிவன் திரிபுரதகனம் செய்த காலத்தே புனைந்த தேரின் உருளை அச்சு முறிந்துவிட்டதானது, சிவன் தன் காரி யத்தைத் தொடங்கு மு ன் பிள்ளையாரைத் தியானிக்காத தப்பிதமேயாம் என்பது உணரத்தக்கது; ஆகவே ஆஸ்திகர் களும் ஆஸ்திகர்களில் ஆங்கிலம் கற்றுவிபரீத ஞானம் பெற்று

Page 17
286 ஆத்மஜோதி
அரற்றுவோரும் இதன் உண்மையை மென்மேலும் உணர்ந்து எடுத்துக்கொண்ட காரியம் இனிது முடியுமாறு முதலிலே தங்கள் மனதிலும், வாக்கிலும், காயத்திலும் இத் தெய்வக் குறியைப் பதிவுசெய்து தொடங்குவதே எக்காலமும் சித்தி பயக்கும் வழியாகும் என்பதை அறிந்துகொள்க.
ஒம் தத் சத் ,
*
جبهه + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +.
மகாத்மாவின் பொன்மொழிகள்
ஆடவன் பெண்ணைத் தனது விளையாட்டுப் பொருளாகக் கருதிக்கொண்டான். அவள் அவனுடைய விளையாட்டுப் பொருளாயிருக்கப் பழகி, இறுதியில் அங்ங்ணம் இருப்பது இலகுவும் இன்பகரமுமாயிருக்கக் கண்டுகொண்டாள். ஏனெ னில் ஒருவர் விழும்போது இன்னுெருவரை இழுத்துச் செல் வது விழுகையை இலகுவாக்கும்.
+ +
சீவியத்தின் பிரதான இலட்சியம் சீவனுேபாயம், எண் ணம், செயல் யாவும் உண்மையாய் இருத்தலே, உடலையே முற்ருய் எண்ணுவதால், ஆன்மா அசட்டை செய்யப்படும்.
卡· * 卡
கடவுள் சிருஷ்டித்தவற்றுள் மிக உயர்வான பிராணி யைக் காமப் பொருளாக்கி மிருகங்களிலுமிழிவான நிலையை நாம் அடைவதிலும் பார்க்க, மானிட வர்க்கம் ஒழிந்து போ வதைக் கண்டால் எனக்கு உவப்பாகும்,
/
%。

ஆத்மஜோதி 287
GFLDU 6) ாழ்வு (ஆ. சச்சிதானந்தம்)
* எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவி அரியது. இப் பிறவி தப்பினல் எப்பிறவி வாய்க்குமோ, ஏது நேருமோ? வெனத் தாயுமான சுவாமிகள் கூறுகின்றர். இவ்வுலகிலே மானிடராகப் பிறப்பது அரிது. அதனிலும் கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறப்பது அரிது. என்கிருர் ஒளவைப் பிராட் டியார். இத்தகைய அரிய சரீரம் எமக்குக்கிடைத்தது; நாம் முன்னர் செய்த தவப்பேறேயாகும். இத்தகைய அரிய சரீரம் எமக்குக் கிடைத்ததன் நோக்கம் ஆண்டவனை வழி பட்டு முத்தியின்பம் பெறும் பொருட்டேயாகும். ஆணுல், நாமோ வெறும் உலக இன்பங்களைச் சதமென வெண்ணி | எமது காலத்தை வீணே கழிக்கின்ருேம்.
மயக்கம் நிறைந்த இவ்வுலகிலே, நாம் ஆன்ம ஈடேற்றம் பெற வேண்டுமானுல், நல்ல சமய வாழ்வு வாழவேண்டும். சமய வாழ்வு என்று கூறும் பொழுது இறைவழிபாடு, சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தல், தியானம், பிரார்த்தனை முதலியன அடங்கும்.
இன்றைய உலக நிலையை நாம் உற்று நோக்கின், எத் துணை அபாயம் மனிதனை எதிர்நோக்கியுள்ளது என்பதை அறியலாம். உலகின் பல பாகங்களிலும் ஒரே யுத்தம். மக் களிடத்திலே அமைதியில்லை, சாந்தியில்லை, சமாதானம் இல்லை. ஆக்க சக்திகளையெல்லாம் அழிவுக்காக உபயோகிக் கிருன் மனிதன். ஆத்மீகத்துறையிலே சற்றேனும் அவனுக்கு அக்கறையில்லை. இதனல், ஆலயங்கள் ஆதரிக்கப்படாது இருக்கின்றன. இக்காரணங்களினலே தான் இன்று எம்மி டையே அமைதியில்லை என்பதை நாம் உணரவேண்டும். ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் இறைவன் நாமத்தை உச்சரித் தால் நாம் அமைதியாக வாழ முடியும். இறைவனை வாழ்த்தி வணங்காதவர்களை இராமலிங்க சுவாமிகள் வர்ணிப்பதை நாம் சிந்திக்கவேண்டும்
(தொடரும்

Page 18
ஆத்ம ஜோ தி
(ஒர் ஆத்மீக மாத சஞ்சிகை)
* மனிதனை, மனிதனுக வாழவைப்பதற்கு வேண்டிய
மையை உணர்த்தும் ஆத்மார்த்த, தத்துவ, யோக, உபநிடதக் கட்டுரைகள்.
ஜீ தெய்வீகத் திருமணம் கமழும், பண்ணுேடு இசை குலவும் தெள்ளு தமிழ்த் தீம்பாலமுதப் பாடல்கள்.
* காலத்திற்குக் காலம் மனித குலத்தை ஈடேற்றத் தோன்றிய அவதார புருடர்கள், மகான்கள் ஆகி யோரின் திவ்விய சரிதங்கள், அவர் தம் வரலாற் றுப் பேருண்மைகள்.
* பெரியோர்கள் தம் வாழ்க்கையின் அனுபவங்கள்
மூலம் சொல்லிப் போந்த முது மொழிகள்.
இவையனைத்தையும் ஒருங்கே கொண்டு, கடந்த பதினெட்டாண்டுகளாக இடைவிடாது சமயப்பணி புரியும்
மாத சஞ்சிகை
இன்றே சந்தாதாரராகச் சேருங்கள்.
ஆயுள் சந்தா ரூபா 100.
ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி.
Gl_fT6ör: 353 :
உன்னத கருத்துக்களைக் கொண்ட, இறைவன் மகி |
தனிப் பிரதி சதம் 30. வருட சந்தா ரூபா 3.00

ஆத்மஜோதி நிலேய வெளியீடுகள்
ஆத்மஜோதி மலர் (1963) சைவ இலக்கியக் கதா மஞ்சரி ஆத்மநாதம் தீங்கனிச் சோலை பாட்டாளி பாட்டு திவ்ய ஜீவனசங்க வெள்ளி விழா மலர் கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் மார்கழி மாதப் பாடல் கதிர்காமப் பதிகம் செல்லச் சந்நிதி பாடல் கந்தர்சஷ்டி கவசம் அறிவுரைக் கதைகள் நித்திய கருமவிதி கதிரை மணிமாலை
நாவலர் நாடகம்
நாவலப்பிட்டி,
(சிலோன்)
○○○○・○○○○○○○○○
2-00
3- OO
3-00
2-50
1 - 50
1-25
- 30
- 50
- 20
- 25
- 15
- 15
-65
- 25
- 50
2 - OO
ஆத்மஜோதி நிலையம்

Page 19
Registered at the G.
சந்தா
அன்புடையீர்!
இறைவன் தி 17 ஆண்டுகள் ஆரம்பமாகி 6 வந்துள்ளது.
களுடைய ஆதி தோறும் சுட கொண்டிருக்கி பர்கள் அனைவ அனுப்பி வை: கின்ருேம். ச இலக்கங்களேக்
கொள்கின்ருே
இந்தியாவிலுள்ள
R. 6fJ.gFDL
חנ5ALILוiiןg என்ற விலாக இவ்விடரு
ஆத்மே
Est 66).
அச்சிடுவோர்:- வெளியிட்ட திக
 

P. O. as a Newspaper M. L. 59/300
一 。
நேயர்களுக்கு
ருவருளால் ஆத்மஜோதிக்கு
பூர்த்தியாகி 18வது ஆண்டு ஒன்பதாவது இதழும் வெளி பல சந் தா நே ப ர் ரவிஞலேயே ஜோதி மாதந் .fi 6ն՝լ` 6ւն பிரகாசித்துக் றது. வழக்கம்போல அன் ரும் புத்தாண்டுச் சந்தாவை க்குமாறு அன்புடன் வேண்டு ந்தா நேயர்கள் தமது சந்தா குறிப்பிடுமாறு கேட்டுக்
*LAD.,
சந்தா நேயர்கள் வழக்கம் போல் பு, சம்பு இன்டஸ்ரீஸ்,
ளையம், சே ல ம் - 9 .
ஈத்திற்கு அனுப்பி வைப்பதோடு மும் அறியத்தருவீர்களாக
属
ஜாதி நிலையம், !
பிட்டி, (சிலோன்) '
을,
த்
LD
C
தி
நி
ULI
த்
தி
၈ား
直
றி ஆத்மஜோதி அச்சகத்தினர் தி:- 17-7-66,