கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1967.01.14

Page 1


Page 2
@臀
§
re$ம்
(NX
ஒர் ஆத்மீக மாத வெளியீடு. எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே. - சுத்தானந்தர்
ஜோதி 19 பராமவளு தை மீ" 1 வட (14-1-67) சுடர் 3
26,655)
கபீர் அருள் வாக்கு es 65 மகாத்மாக்களும் ஞானிகளும் 66 பக்த ராஜ் ° ஜலராம் மகராஜ்ஜி 57 குழந்தைகூருக்கு 75 திருஞானசம்பந்தப் பெருமான் 77 இறைவனைத் தியானிப்பவர்களுக்கு 79 கச்சியப்பூர் கண்ட காட்சி S3 86 !ள்முதாத கவிதையே குமரா 7ܛ §:* தத்துவம் * 88 ன் யாம் கடவுளிடம் சரண் புகுவதில்லை 92
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா 100.09
வருடச் சந்தா 3.00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் திரு. நா. முத்தையா ܗܝ
ஆத்மஜோதி நிலையம் , நாவலப்பிட்டி, போன் 353
 
 
 

கபீர் அருள் வாக்கு سا --- نسیجیسsof %4G-چھبیس-----۔
ஞான விளக்கேற்றி உன் வீட்டில் ஒளிபொருத்து. உண்மைப் பெயரை எண்ணி சகஜ சமாதியில் அமர். கனவில் முனகும் போது மறந்தும் பெயர் சொல்பவனுடைய காலுக்கு என்தோல் செருப்பு.
மாயையில் களிக்கும் அவ்வாறு பெயரில் களிகொள்ளும் மனம் விண்மீன் மண்டலம் தாண்டி அமரபுரி அடையும். பெயர் நெருப்புப் போன்றது. உடலெங்கணும் நிரம்பி இருக்கிறது. சித்தமாகிற சக்கி முக்கிக்கல்லை உராயவில்லை. புகையாகிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஈசன் திருநாமம் இல்லாமல் ஐம்பத்தாறு கோடி களியாட் டமும் வீண். இந்திராசனத்தில் அமர்ந்தென்ன, வைகுண் டத்தில் வசித்தென்ன? கொள்ள முடிந்தால் கொள்ளை கொள். ஆண்டவன் திருப்பெயர் தரும் நலம் கொள்ளை போ கிறது. பின்னுல் உயிர் போகும்போது எண்ணி வருந்துவாய்.
சூனியத்தைச் சேர்ந்தவன் சாவான்; அஜபாநிலை எய்தியவ னும் இறப்பான். அநாஹத நாதம் அடைந்தவனும் அழிவான். ஆணுல் ஆண்டவன் திருப்பெயரின் அன்பன் மடியமாட்டான்.
(சூனியம், அநாஹதம்: புத்தர்கள் விடுதலை நிலையை சூனியமாகக் கொண்டவர்கள். நாதச் சித்தர்கள் அவ்வெற்
றிடத்தை ஈசன் நிலையெனக் கொண்டனர். அதையே கபீர்
ஆயிர இதழ்த்தாமரைச் சக்கரத்தின் வெற்றிடமாகக் கொண் டார். ஈசநிலை எய்தும் முயற்சியில் அச்சக்கரத்தைக் குண்ட லினி அடைந்த பிறகு அநாஹதநாதம் என்ற ஒலி கேட்கும். அதையும் மீறிய பிறகு சோதி தோன்ற அதில் உயிர் மறைய வேண்டும். கபீர் அந்த நிலையை அடைந்தவன்தான் அமர ணுவான் என்கின்ஞர்.)

Page 3
'نه
66 ஆத்மஜோதி மகாத்மாக்களும் ஞானிகளும்
(சுவாமி இராமதாசர்)
மனிதனின் பழைய சரிதத்தினுள்ளே தன்னுற் கூடு மான அளவு எண்ணங்களைச் செலுத்தி ஆராய்ந்தால், அச்சரிதத்தூடே மனித இயற்கைக்கு மாறுபட்டகுணம், தன்மை, பாவனையுடைய ஆத்ம கணத்தைக் க வ னி க் கத் தவறமாட்டோம். இவர்களே உலகின் மகாத்மாக்களும், ஞானிகளும், அவதாரங்களும், தீர்க்க தரிசிகளும் ஆவர்.
உலகவாழ்வில் இந்நிகரற்ற ஆன்மாக்களின் நோக்கம் மிகவரிய மதிப்பும் முதன்மையு முடைத்தெனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மனிதவர்க்கம் சாதாரணமாக வாழ்
வில் தன்னைப்பற்றிய நோக்கம் மாத்திரமே உடையவர்க
ளாய் இருக்கிறர்கள். ஆணுல் இப்புகழ் பெற்ற ஆத்மாக் களோ, தங்கள் எண்ணம் வாக்குச் செயல்களில் நன்கு பிரதிபலிக்கும், எங்கும் நிறைந்த உணர்வைப் பெற்றுள்ள வர்கள்.
அவர்கள் உலகின்மீது புதுமையான வசீகர சக்தியைப் பரப்புகிருர்கள். ஏனெனில் வாழ்க்கையிற் குறுகிய நோக் கத்தோடு வாழும் மக்கள், இம்மகாத்மாக்களின் கம்பீர மான தோற்றத்தால் மயக்கப்பட்டுக் கவரப்படுகிருர்கள்.
மற்றவர்களிலிருந்து இந்த ஆத்மீக வீரர்களை எடுத்துக் காட்டும் விஷேஷ பண்புகள் எவை? எல்லாப்பிராணி களிலும் உயிர்களிலும் கொண்டுள்ள சம நோ க் கி  ைல் ஏற்படும் சுயநல வெறுப்பே அவர்கள் வாழ்வின் அடிப் படையாகும். அவர்கள் அழிவில்லாததும். பேரின்பமானது மான நிலையை எப்போதும் உணர்ந்து கொண்டே இருப்ப தனுல் அவர்கள் சாதாரண மனிதர்களை அச்சத்திற்குள் ளாக்கும் மரணபயத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றி குக்கிருர்கள்.

ஆத்மஜோதி
பக்த ராஜ் யூனி ஜலராம் மகராஜ்ஜி
- ஆசிரியர் -
இளமை வாழ்க்கை
வீரபுரம் என்பது வடஇந்தியாவிலுள்ள ஒரு ஊர். பல யாத்திரை ஸ்தலங்களுக்கு மத்தியில் விளங்கியமையால் பல சாதுக்களினுடைய தரிசனம் அக்கிராம மக்களுக்குக்கிடைத்து வந்தது. பிரதான தக்கர் என்பவர் அவ்வூரின் முக்கியஸ்தர்க ளில் ஒருவர். லோகண குலத்தைச் சேர்ந்தவர். அவருடைய மனைவியார் பெயர் இராஜ்பாய். இருவரும் அடியார் பக்தி யிலும் கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினர். சாதுக்க ளுக்கும் ஞானிகளுக்கும் சேவை செய்வதே தமது பிறப்பின் பயன் எனக் கருதியவர்கள். அடியார்களுடைய கூட்டுறவு தங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டுமெனப் பெரிதும் விரும்பியவர்கள்.
இத்தகைய குடும்பத்தினருக்கு ஆறு குழந்தைகள். அவர் களில் மூவர்'ஆண்கள். மூவர் பெண்கள். போகராம், ஜல ராம், தேவஜி மூவரும் ஆண்மக்கள். ஒருமுறை அயோத்தி யிலிருந்து ரகுவீரதாஸ் என்ற ஞானி தக்கர் வீட்டுக்கு வந் தார். தக்கர் வீட்டில் இல்லை. இராஜ்பாய் அடியவரை அவர்மனம் மகிழ உபசரித்தார். அவரது உபசரணையில் மனம் மகிழ்ந்த அடியவர், உனது தொண்டினே விளக்க உல கம் புகழும் ஒரு ஞானி உனக்கு வரப்போகின்ருன் என்று ஆசிகூறிவிட்டுச் சேன்றுவிட்டார். அவரது ஆசியின் படியே பிறந்தவர்தான் ஜலராம். 1800-ம் ஆண்டு கார்த்தி கை மாதம் 7-ம் திகதி திங்கட்கிழமை பிறந்தார்.
இவர் இளமையிலேமிகுந்த விவேகியாக விளங்கினர்.
பூர்வஜென்மத்தில் இவர் ஓர் யோகபுரு ஷனய் வாழ்ந்தவர்
என்பது இவரது இளமை வாழ்க்கையிலேயே தெளிவாகத் தெரிந்தது. ஒருநாள் ஒருசாது ஹிர்நார் என்ற ஊரிலிருந்து வீரபுரத்திற்கு வந்து இராஜ்பாயிடம் "அம்மையே உனது இரண்டாம் மகனின் தரிசனம் கிடைக்கப் பெறுமா?' என்று கேட்டார். இராஜ்பாய் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் விளையாடிக் கொண்டிருந்த ஜலராமை அழைத்து கண்களில் ஆனந்த பாஷ்பம் சொரியக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

Page 4
ఈ8 ஆத்மஜோதி
ஜலராம் அன்னையின் அன்புப்பிடியினின்றும் விலகி சாதுவின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். சாது தூக்கி அனைத்து 'குழந்தையே, என்னே உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்டார். குழந்தை சிரித்துக் கொண்டே மறுமுறையும் வீழ்ந்து வணங்கிஞன். சாது திடீரென மறைந்து விட்டார். இராஜ்பாய் ஆச்சரியக்கடலில் மூழ்கினூர். இந்தச்சம்பவத் திற்குபின்பு ஜலராமுக்குப் பூர்வஜென்ம நினைவு உண்டாயது. அன்று தொடக்கம் இவரது குணநலன்களில் ஒரு விசித்திர மாறுபாடு ஏற்பட்டிருப்பதை இராஜ்பாய் உணர்ந்தாள். அன்று தொடக்கம் ஜலராம் ராமநாம ஜபத்தை மேற்கொண் L TIT.
மற்றைய குழந்தைகளைப் போலவே ஜலராம் தமது ஆரம் பக்கல்வியைத் தமது கிராமத்திலேயே பெற்ருர், பதினுன் காவது வயதில் உபநயனம் நடைபெற்றது. கல்வி முடிந்த தும் விவாகத்திற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆட் காற் என்ற ஊரிலுள்ள தக்கர் சோமையாவின் மகள் வீரா பாய்க்கு திருமண நிச்சயம் செய்தார்கள். இதைக் கேள்வி யுற்ற ஜலராம் தந்தையிடம் சென்று என்னை உலகபந்தத்தில் அமிழ்த்தாதீர்கள் என்று பன்முறை வேண்டினர். இவரது எண்ணத்தை அறிந்த இவரது சித்தப்பா "இல்லற மல்லது நல்லற மன்று' என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன்விளக்கி கடவுளே அடைவதற்கும் இலகுவான மார்க்கம் இல்லறமே என்பதைத் தெளிவாக்கினுர், ஜலராம் அதற்குமேல் ஒன் றும் பேசாது எல்லாம் ராமனிச்சை என்று இருந்து விட்டார். பதினருவது வயதில் விவாகம் நடந்தது. தமது ஊருக்கு வரும் சாதுக்களை விவாகம் ஆவதற்கு முன்பு எப்படி உபசரித் தாரோ அப்படியே விவாகம் ஆனபின்பும் மனைவியுடன் சேர்ந்து சாதுக்களை நன்கு உபசரித்தார். சாதுக்களுக்கு உணவு, துணி என்பன கொடுத்து அனுப்புவார். என்னஅவ சியவேலையில் ஈடுபட்டிருந்தாலும் சாதுக்களைக் கண்டுவிட் டால் உடனே அவர்களை உபசரிப்பதற்காகச் சென்றுவிடு 65), TIT .
ஜலராமின் பெருவெட்டான செலவு பிரதான தக்கருக்கு
மனவருத்தத்தை உண்டாக்கியது. குடும்ப நிலையை மக ணுக்கு விளக்கிச் செலவைக் குறைக்குமாறு தந்தை மகனுக் குப் புத்திமதி கூறினர். தந்தையின் அறிவுரையைக் கேட்ட தனயன், "தந்தையே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு
உண்மையே. ஆணுல், யாராவது எதையாவது வந்துகேட்
t
 

ஆத்மஜோதி é, 9
டால் எனக்கு இல்லை என்று சொல்லத்தெரிய வில்லையே! நான் என்ன செய்வது; என்ருர். இதைக்கேட்ட தந்தை கோபம் அடைந்து 'ஜலா! நான் சொல்வதைக்கேட்டு நீ நடக்கா விட்டால் நீ தனியாகவே குடித்தனம் நடத்தி விரும்பியபடி தருமம் செய்' என்ருர். இகவும் ராமனிச் சை என்றுணர்ந்த ஜலராம் அன்றிலிருந்தே தனியாகக் குடித்தனம் நடத்தத் தொடங்கினர். இதனையறிந்த ஜலராமின் சித்தப்பா தனது கடையில் ஜலராமுக்கு ஒரு முக்கிய வேலைகொடுத்து அவரை உழைப்பில் ஈடு படுத் தினர். அவரின் பெயர் வல்லிபாய். அவருக்குக் குழந்தை கள் இல்லை. வேலையில் கண்டிப்பான பேர் வழியாயிருந் தாலும், ஜலராமிடம் தனது உயிரையே வைத்திருந்தார்.
தெய்வீக் அனுபவம்
ஹிர்நார் மலை என்பது ஒரு பெரிய யாத்திரைஸ்த லம். வீரபுரத்திலிருந்து இருபத்திநான்குமைல் தூரத்தி லுள்ளது. ஹிர்நாருக்குச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான சாதுக்களும் ஞானிகளும் வருவர். மலைக்குச் செல்பவர்கள் வீரபுரத்தில் வந்துதான் வேண்டிய கம்பளி உடைகளும் உணவுப் பொருட்களும் தயாரித்துச் செல்வர். யார்யாருக்கு என்னென்னவேண்டுமோ அவற்றை யெல்லாம் ஜ ல ரா ம் கொடுத்து உதவி செய்வார்.
ஒரு நாள் அதிகாலை மணி ஆறு இருக்கும். பத்துப்பதி ணைந்து பேர் கொண்ட சாதுக்களின் கூட்டம் ஒன்று வீர புரம் கடைவீதிக்கு வந்தது. அப்போதான் வியாபாரிகள் கடைதிறந்து கொண்டிருக்கிருர்கள். சாதாரணமாக யாத் திரை செல்லும் சாதுக்களுக்கு எந்தது வியாபாரியானுலும் உதவி செய்வது வழக்கம். அன்று கடைதிறக்கும் நேரமான படியினல் அங்கு வந்த சாதுக்களின் கூட்டத்திற்கு எவ்வித உதவியும் செய்வாரில்லை. சிலர் வெறுப்பாகவே பேசிக் கொண்டார்கள். அவர்களுள் ஒரு வியாபாரி ஜலராமின் கடையைச் சுட்டிக்காட்டி, அதோ அவர்தான் வள்ளல், அவரிடம் சென்ருல் வாரி வழங்குவார் என்று அச்சா துக்களை ஜலராமின் கடைக்கு வழிப்படுத்தி விட்டார்.

Page 5
70 ஆத்மஜோதி
ஜலராம் தினந்தோறும் ஒரிருசாதுக்களுக்காவது உணவு கொடுத்தே சாப்பிடுவது என்ற நோன்பைக் கொண்டிருந் தார். பலரை உபசரிக்கும் பெர்ருட் பேறு அற்றவராயி னும் அதிகாலையில் வந்த இச்சாதுக்கூட்டத்தைக்கண்டு மகிழ்வு கொண்டார். அத்தனைபேரையும் முறையாக மகிழ் வுடன் உபசரித்தார். அவர்களில் ஒரு சாது "நாங்கள் கோகுல மதுரையிலிருந்து வருகின்ருேம்; விறிர் நாருக்கு செல்லும் வழியில் இங்கு வந்தோம்; தங்கள் தரிசனம் கிடைத்தமையால் நாமும் உயர்ந்தோம்; எங்களுக்கு கையுடன் எடுத்துச் செல்வதற்கு கொஞ்சம் இனிப்பான உணவுப் பொருள் வேண்டும்; எங்கள் குருதேவரின் ஆசி தங்களுக்கு நிறையக் கிடைக்கும்’ என்று சொல்லி முடித் தாr.
குருமகராஜ் கடையில் சிறிது நேரம் இருக்கட்டும், மற்றையவர்கள் எல்லாரும் ஆற்றங்கரைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து, ஸ்நானம் செய்து திரும்புவீர்களாக என்று அனுப்பிவைத்தார். ஜலராம் தேவையான பொருட் கள் அத்தனையையும் முறையாகத் தேடிக் குருமகராஜிடம் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்.
ஜலராமின் இச் செயல்களை யெல்லாம் பக்கத்துக்கடை யிலுள்ள பனியா வர்த்தகன் கவனித்துக்கொண்டிருந்தான். ஜலராம் இப்படி ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் சித்தப்பணுகிய வல்லிபாய் கடையைக் கெதியில் மூடிவிட வேண்டியதுதான் என்று எண்ணமிட்டான். ஜலராம் அப்பெரியவருக்கு என்னென்ன வெல்லாம் கொடுக்கிருர் என்று மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாவித உணவுப் பொருட்களும் ஒரு சட்டி நெய்யும் ஒருகச்சுத்துணியும் கொடுத்ததைக் கண்டான். ஜலராம் வ்வளவு பொருட்களையும் சுமந்துகொண்டு சாதுக்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்ருர்,
பக்கத்திலுள்ள பனியாவியாபாரி இத்தருணத்தை ஜலராமுக்கு எதிராகப் பயன் படுத்த உத்தேசித்தான். நேராகவல்லிபாயிடம் சென்ருன். நிகழ்ந்தவை எல்லாவற் றையும் வல்லிபாயிடம் கூறினன். இதைக்கேட்ட வல் லிபாய் மிகுந்த கோபத்துடன் பலவர்த்தகர்கள் பின் தொடர ஒடோடியும் வந்தார். சாதுக்களுக்குப்பின்னே ஜலராம் சாமான் சுமந்து கொண்டு செல்வதைக்கண்டார்.

ஆத்மஜோதி 7.
ஆத்திரம் மேலிட ஜலராமை நிற்குமாறு உரத்துக் கூவி ஞன். சித்தப்பனின் ஒசையைக் கேட்டதும் இறைவனை நினைத்தவண்ணம் அப்படியே நின்று விட்டான். கோபா வேசத்தோடு வந்த சித்தப்பன் அந்தச் சட்டியில் என்ன என்று கேட்டார்? ஜலராம் சாந்தமாகச் சாதுக்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்கின்றேன் என்ருர் எல்லோரும் ஓடிவந்து சட்டியைப்பார்த்தார்கள். நெய்ச்சட்டி நீர்ச் சட்டியாக மாறிவிட்டது.
பணியாபொய் சொல்லுகிருன் என்று சொல்லிக் கொண்டு எல்லாரும் திரும்பினர்கள். 'பத்துயார் துணி அளந்து கொடுத்ததைக் கண்ணுல் கண்டேன். அதுவும் பொய்யா' என்று பனியா கேட்டான். கடைக்குச் சென்று துணியை அளந்து பார்த்தனர். ஒரு யார் துணி கூட குறையவில்லை.
இச்சம்பவம் ஜலராமின் ஞானக்கண்ணைத் திறந்தது. கடவுள் எங்கும் இருக்கின்ருர் என்ற உண்மை புலப் பட்டது. கடை வேலைகளைச் செய்வதில் முன்னைய ஆர்வம் குன்றியது. உலக வாழ்வில் விருப்பின்றிக் காணப்பட்டார். ஒருநாள் சித்தப்பா, “ஏன் நீ சில நாட்களாக ஒரு மாதி ரியாக இருக்கின்ருய்?" என்று கேட்டார். "எனக்கு இந்தப் பந்த வாழ்வு பிடிக்கவில்லை. யாத்திரை செல்ல விரும் புகின்றேன்" என்ருர், இந்த இளம் வயதில் யாத்திரை செய்ய வேண்டாம். யாத்திரை செய்வதற்குக்காலம் இருக் கிறது. நாங்களே இன்னும் யாத்திரையைப் பற்றிச் சிந்திக்கவில்லை, இரண்டு மூன்று ஆண்டுகள் கழியட்டும் என்ருர், ஐலராமின் மனம் சமாதானம் அடையவில்லை. நான் இரண்டு மூன்று ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்பதற்கு யார் உத்தரவாதம் கொடுக்கமுடியும் என்று கேட்டார். சித்தப்பாவும் தந்தையும் வேறுசமா தானம் கூற முடியாதவராய் யாத்திரை செல்லச் சம்ம தித்தனர். ஐலராம் அன்றே புறப்பட்டு விட்டார். மதுரை, அயோத்தி, காசி, காயா, ஜகந்நாத், இராமேஸ்வரம் போன்ற புண்ணியஸ் தலங்களுக்கு யாத்திரை சென்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பினுர், ஜலரா முக்கு இப்போ வயது பதினெட்டு.

Page 6
72. ஆத்மஜோதி
*மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே”
என்பது ஜலராமின் வாழ்வில் முற்றும் பலித்து விட்டது. யாத்திரையின் பின் தமக்கு ஒரு குருநாதர் அவசியம் என்பதை உணர்ந்தார். குருவைப் பற்றிய தாகம் அதிக ரித்தது. பட்டேர் பூரிலிருந்த போஜலராம் எ ன் ற
ஞானியிடம் சென்று ஞான உபதேசமும் மந்திரோப
தேசமும் பெற்று அவரது சிஷ்யரானர். சில நா ட் க ள் குருவினிடமிருந்து சாதனை பயின்றபின் அவரைவிட்டுப் பிரியும்போது குரு சில வார்த்தைகள் பேசினர். "ஜலா! எல்லாத்தானங்களிலும் உயர்ந்தது அன்னதானமே. எல்லா நோய்களிலும் கொடியநோய் பசிநோயே. இப்பசி நோயைப் போக்க எல்லா இடங்களிலும் நீ அன்ன சத்திரம் திறக்க வேண்டும். இல்லற வாழ்க்கையிலிருந்தே சாதுக்களை ஆதரிக்கவேண்டும். கடவுள் உனக்கு எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிவைப்பார்."
அன்ன சத்திரம்
குருவின் ஆசியைப் பெற்ற ஜலராம் நேராக வீரபுரம் சென்று 1820இல் அன்னசத்திரம் ஒன்றை ஆரம்பித்தார். தினந்தோறும் அன்னதானம் குறைவின்றி நடைபெற்று வந்தது. தந்தையின் உதவியோ, சித்தப்பாவின் உதவி யோ, கிடைக்கவில்லை. கணவனும் மனைவியும் மாத்திரமே தனித்துநின்றனர். அவர்கள் கையில் பொருள் இல்லை. அன்னசத்திரத்தைக் குறைவின்றி நடத்தவேண்டும் என் பதே அவர்கள் கவலை. கணவனும் மனைவியும் நாள் தோறும் சென்று வயலில் வேலை செய்து வந்தனர். அத ஞல் அவர்களுக்குக் கூலியாக 560 புசல் நெல் கிடைத்தது. அதுவே அன்ன சத்திரம் நடத்துவதற்கு மூலதனமாக
அமைந்தது.
கத்தியவார்ப்பிரதேசத்தில் அக்காலத்தில் புகையிரதப் போக்குவரவு வசதியில்லை. ஜூனகாத்திற்கும் சோமநாத புரத்திற்கும் செல்லும் யாத்திரீகர்களுக்கு வீரபுரம் மைய மாக விளங்கியது. இந்தச் சூழ்நிலையில் அங்கு அன்ன சத்திரம் ஆண்டவனின் அருட்கொடையாகவே அமைந்தது.

ஆத்மஜோதி 73
அன்னசத்திரம் ஆரம்பித்த அன்று முதன் முதல் அன்னம் கேட்டுவந்தவர் ஒருசாதுவாகும். அவர் அன்னம் உண்டு. ஆசிசுநி பாலமுகுந்தனுடைய சிலை ஒன்றைக் கொடுத்து, இவரைப் பக்தி சிரத்தையோடு வணங்கிவா, இவர் எல்லா ஐசுவரியங்களையும் அருளுவார் என்று கூறினர். இந்த வீட்டிலேயே பக்த அநுமானுடைய சிலை ஒன்று ம றை ந் துள்ளது. மூன்று நாட்களுக்கிடையில் அநுமாருடைய தரி சனம் கிடைக்கும் என்று சொல்லிப் போய் விட்டார். அவர் கூறிச் சென்றவாறே அநுமாருடைய விக் கி ர க ம் வெளித்தோன்றித் தரிசனம் கிடைத்தது, பால மு கு ந் த னுடைய விக்கிரகம், அநுமாருடைய விக்கிரகம் இரண்டை யும் ஒரு இடத்திலேயே எழுந்தருளச் செய்து முறையாக வழிபாடு ஆற்றிக் கொண்டுவந்தார்.
வீரபுரத்திற்கு ஏராளமான சாதுக்களும் ஞானிகளும் வந்து கொண்டிருந்தபடியினல், ஒரு வருடத்திற்கு என்று சேர்த்துவைத்த நெல் ஒருமாத காலத்திற்குள்ளே முடிந்து விட்டது. முழுநேரத்தையும் வழிபாட்டிலேயே கழித்து வந்தா ரானபடியினல் வெளியே சென்று வேலையும் செய்ய முடிய வில்லை. அன்னசத்திரத்தில் நெல் இல்லாவிட்டாலும் வரு கிறவர்களுக்கு உணவு குறைவின்றிக் கிடைத்து வந்தது.
அன்ன சத்திரம் ஏற்பட்டபின் அவ்வூரில் உள் ள வ ர் களுக்கு நோய் துன்பம் ஏற்பட்டால் அவர்கள் அன்னசத் திரத்தில் உள்ள சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக் கமாயிருந்தது. நோய் நீங்கினல் இத்தனை புசல் நெல் என்று தான் நேர்த்திக்கடன் செய்வது அவர்கள் வழக்கம். அத ஞல் அவர்களுடைய நோயும் நீங்கியது. அன்னசத்திரத் திற்கும் குறைவின்றி நெல் கிடைத்து வந்தது.
1825ஆம் ஆண்டில் தக்கர் சாகிப்முழுஜீ எ ன் னு ம் சிற்றரசர் இரண்டு ஏக்கர் நிலமும் சில அரசவரிகளும் அன் னசத்திரத்திற்கு மானியமாக விட்டார். கோந்தல் பூரிலுள்ள மகராஜ் சாகிப்பு ஜலராமின் பஜனைக்குச் சென்று வருவது வழக்கம். இவர் ஜலராமினுடைய பெயரில் மகராஜ் சாரத்தி என்ற கிராமத்தில் அன்ன சத்திரம் ஒன்றை ஆர ம் பி த் து வைத்தார். இதன் பின் ஜானகத், கோந்தல், தரங்கத்ரா என்ற இடங்களிலுள்ள சிற்றரசர்கள் ஜலராமின் சித் தி களையும் தெய்வீக அனுபவங்களையும் கண்டு ஏராளமான நிலங்களையும் கிராமங்களையும் மானியமாகக் கொ டு க்க

Page 7
y4 ஆத்மஜோதி
முன் வந்தார்கள். ஜலராமோ அவை ஒன்றையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
ஊர்கள் தோறும் ஜலராமினுடைய சித்தி பரவத் தொடங்கியது. நேராக வந்து பார்த்தவர்கள் அ தி ச யி த் தார்கள். கிராமந்தோறும் இவரை அழைத்து பஜனை ஆரம் பித்தார்கள். இவரது பஜனையில் அன்னதானமும் முக்கிய
இடம் பெறும். அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் ஐம்பது
நூறுபேர்களுக்கென்று தம்மாலியன்ற வரை அன்னதானத் திற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். பஜனைக்கு ஆயிரக் கணக்கில் ஆட்கள் வந்து சேர்ந்து விடுவார்கள், அ ன் ன தானத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் எவ்வாறு அன்னதா னம் நடத்துவது என்று விழிப்பார்கள். ஜலராம் நேராகச் சாப்பாடு படைக்கப்பட்டிருக்கும் இடம் சென்று சில நிமிட நேரம் வழிபாடு நடத்தி விட்டுப் பரிமாறும்படி கூறுவார். எத்தனை ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் குறை வின்றி இருந்தது.
வீரபுரத்தில் ஹாஜி என்ருெரு தையல் காரர் இருந்தார். இவருக்கு நீண்ட காலமாகத் தாங்கமுடியாத வயிற் று வலி இருந்தது. பல விதமருந்துசாப்பிட்டும் குணமாகவில்லை. டாக்டர்களும் நோய் அறியாது கைவிட்டனர். ஒரு நாள் ஜலராமின் பேரில், இந்த நோய் சுகமானுல் எழுபது புசல் நெல் கொடுப்பதாக நேர்த்திக்கடன் செய்தார். நேர்த் தி க் கடன் வீண்போக வில்லை. வலிகுணமாகியது. எழுபது புசல் நெல்லுடன் அன்னசத்திரத்திற்குச் சென்று ஜலராமின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். சுவாமி எனக்கு நீங்களே தாயும் தந்தையும் தெய்வமும் என்று கண்களில் நீர் வரக்கூறினர். ஜலராம் அவரை அணைத்து "அப்பா நா ன் ஒன்றும் அறியேன் . எல்லாம் இராமனிச்சை அவன் இச்சைப் படிதானே நடைபெறும் இங்ங்ணம் இவரது சித் தி க ள்
நாடெங்கும் பரவின.

ஆத்மஜோதி 75
அன்புக் குழந்தைகளே.
அன்பு வணக்கம்
நீங்கள் எல்லீரும் விடுமுறை முடிந்து புதிய புதிய வகுப் புகளிற் சேர்ந்து புதிய புதிய புத்தகங்களையும் புதிய புதிய பாடங்களையும் ஆவலாய்ப் படித்துக் கொண்டிருப்பீர்கள். புதுமையில் எல்லாருக்குமே ஒரு மோகம். கடவுள் புதிய வரா? பழையவரா? என்ருெரு கேள்வி 'முன்னைப்பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருள் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன்' என்று மணிவாசகப் பெரு மான் கூறுகின்ருர், பழமையான வற்றுக்குள் எ ல் லா ம் பழமையானவன். புதுமையான வற்றுக்குள் எல்லாம் புதுமை யானவன் என்பது பொருள். நீங்கள் புதிய வகுப்பிலே புதிய கணக்குப் படிக்கும் போது அதற்கு அத்திவாரமாய் உள் ளது முதலாம் வகுப்பிலே படித்த ஒன்று, இரண்டு, மூன்று இலக்கங்கள் தான். இது முதலாம் வகுப்பிலே படித்த பாடம், இந்த இலக்கங்கள் பழமையானவை. இவை எனக்கு வேண்டாம் என்று தள்ளிவிட்டால், புதிய கணக்குகளே எவ்வாறு செய்வீர்கள்?
நீங்கள் எந்தக்கணக்கை எடுத்தாலும் ஒன்று இல்லா மல் இருக்காது. ஒன்றிலிருந்தே கணக்கு ஆரம்பமாகிறது. ஒன்று எல்லாக்கணக்குகளிலும் கலந்திருக்கிறது. கடவுளுக் கும் ஒன்று, ஒருவன், அது, அவன் என்றெல்லாம் பெயர்க ளுண்டு. ஒன்று எல்லா எண்களுக்கும் அத் தி வார மா யும் தொடக்கமாயும் எல்லா எண்களுக்குள்ளும் கலந்தும் இருப்பது போல இறைவனும் முதலாயும், ஆதாரமாயும், மிகமிகப் பழமையானவயுணும், எல்லா இடங்க ளி லும் கலந்தும் இருக்கின்றன். ஒன்று இல்லாமல் எப்படிக்கணக்கு அமையாதோ ஒன்ருகிய கடவுள் இல்லாமலும் உலகம் அமையாது என்ற உண்மையை நன்கு அறிந்துள்ளீர்கள். ஆகவே இனிமேல் நீங்கள் கணக்குப் பாடத்திற்குச் செல் லும் போது கடவுள் நினைவே முதலில் தோன்றும்.

Page 8
76 ஆத்மஜோதி
மற்றைய பாடங்களில் கடவுள் நினைவு தோன்ருதா? என்ருெரு மாணவர் கேட்கின்ருர், "அ" இல்லாமல் நீங்கள் எந்தப்பாடத்தைப் படிக்க முடியும். எழுத்துகளுக்கெல்லாம் முதலாயிருப்பது 'அ' எல்லா எழுத்துகளுக்குள்ளேயும் கலந்திருப்பதும் ‘அ’, வாயைத்திறக்கும் போ தே 'அ' உச்சரிக்கப்படுகிறது. வாயைத்திறவாமல் எந்த எழுத்தை உச்சரிப்பீர்கள். ஆகவே நீங்கள் அறிந்த எல்லா எழுத்து களுக்குள்ளும், எல்லாச் சொற்களுக்குள்ளும், எல்லா மொழி களுக்குள்ளும் 'அ' கலந்திருப்பதை அறிவீர்கள். நீங்கள் படிக்கும் எந்தப் பாடமானலும் அந்தப் பாடத்திலே கடவுள் நினைவு உண்டாகிறது.
இந்த நினைவுண்டானல் தான், கல்வி கற்பதன் பயன் நிறைவேறும். திருவள்ளுவரும் கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல் என்று கூறியுள்ளார். இனிமேல் 'அ' வைப் பார்க்கும் போதும்ஒன்றைப் பார்க்கும் போதும் கடவுள் நினை வும் சேர்ந்தே உதிக்கும் என நினைக்கின்றேன். மூன்று வயதிலே தேவாரம் பாடிய திருஞான சம்பந்தக் குழந்தையைப் பற்றி ஒரு குழந்தை அழகாக எழுதியுள்ளார். அதனை இன்னேரிடத்தில் படித்து ஆனந்தம் அடைவீர்களாக,
விடுமுறை காலத்தில், திருக்கேதீஸ்வரம், கோணேஸ் வரம், சிதம்பரம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்த சந்தோஷத்தையும் மார்கழி மாதப் பஜனையில் தாம் ஈடுபட்ட அனுபவங்களையும் எழுதியுள்ளார்கள். அவர்க ளுக்கெல்லாம் நன்றி.
உங்கள் அன்புள்ள
ஆத்மீகத் தந்தை

ஆத்மஜோதி 77
திருஞானசம்பந்தப் பெருமான்
செல்வி கைலேஸ்வரி - பொன்னம்பலம்
*令命令令-命*令命一●伞-令令一令令* 今一令**令→
சீர்காழி அருள் நெறிச் செல்வர்கள் வாழ்ந்த திருப் பதியாகும். சைவசமயத்தை வளர்க்கும் பேறு பெற்ற பெருமை அதற்கு உண்டு. அம்மையப்பர் ஞா ன ப் பா ல் சுரந்த மண்ணிலும் சிவமணங் கமழும், இத்தகைய பழம் பதியிலே, அந்தணர் மரபிலே கெளனிய கோத்திரத்திலே சிவபாத விருதயர் என்ற தவப் பெரியாருக்கு, அவர் உத்தம பத்தினியார் பகவதியார் வயிற்றில் ஆளுடைய பிள்ளையார் அவதரித்தார்.
ஆளுடைய பிள்ளையார் மூன்று வயதினராயிருக்கும் போது தந்தையாரோடு தோணி புரத்து ஈசனை வழிப்பட போனர். தந்தையார் ஸ்நானம் செய்வதற்காகத் தடாகத் தில் இறங்கினர். கரையில் குழந்தை நின்றது. குழந்தை கோவில் கோபுரத்தைப் பார்த்தது. அந்தக் கோபுரம் குழந்தையின் மனத்தைக் கவர்ந்தது. திரும்பித் தந்தையின் ஞாபகம் வர தடாகத்தைப்பார்த்து தந்தையின் உருவத்தைக் காணுமல், அம்மே, அப்பா என்று அழுதது. அவ்வழுகை உண்மையான அம்மை, அப்பரை உருக்கியது. திருப்பொற் கிண்ணத்தில் திருமுலைப்பாலை உலக மாதா வாகிய உமை யம்மையார் ஊட்டினர். அழுகை தீர்ந்து வாயில் பால் வடிய குழந்தை நின்றது. ஸ்நானம் முடிந்து வந்த தந் தையார், அதனைக் கண்டார். யார் உனக்குப் பால் தந்தார் என்று அதட்டினர். குழந்தை கோபுரத்தைச் சுட்டிக் காட்டி, *தோடுடைய செவியன் என்று தொடங்கும் அ ழ கி ய தேவாரத்தால் விடை கூறியது.
அன்றிருந்து தேவாரங்களைப் பாடிக்கொண்டே தலங்கள் தோறும் தந்தையரோடு ஆளுடையபிள்ளையார் போ ய் வந்தார். சிவஞானம் பெற்ற செல்வக்குழந்தை வேதப் பிராமணர்க் கெல்லாம் வேதாகம விதிகளை போதித்து சைவசமய உண்மைகளை உணர்த்தினர். திருநீலகண்டப் பெரும் பாணர் அக்காலத்தில் யாழ் வாசிப்பதில் வ ல் ல வராயிருந்தார். அவர் சம்பந்தப் பெருமானின் அற்புதச்

Page 9
雳8 ஆத்மஜோதி
செயல்களை அறிந்து அவர் தேவாரங்களுக்கு யாழ் வாசிப் பதில் மிகுந்த திருப்தியுடன் இருந்தார். பெ ரு மா னி ன் அற்புதத் தேவாரங்கள் யாழில் இசைக்கு அடங் கா ம ல் இருப்பதை உலக மறிய வேண்டும் என்ற ஆசையால் "மாதர் மடப்பிடியும்’ என்ற தேவாரத்தைப்பாடியதும் யாழின் நரம்பு தெறித்தது. அவர் ஒரு சமயம் விடம் தீண்டிய வணிகனை உயிர்ப்பித்தார். திரு வீழி மிழலையிலே 'வாசி தீரவே காசு நல்குவீர்' என்ற தேவாரப் பதிகத்தைப் பாடிப் படிக்காசு பெற்ருர்,
சம்பந்தப் பெருமான் தாய் தந்தையர் விருப்பப்படி திருமணஞ் செய்யச்சம்மதித்தார். ஆனல் திருமணத்தின் போது "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்ற தேவா ரத்தைப் பாடிக் கொண்டு அடியார் கூட்டங்களோடு இறை வன் காட்டிய சுத்த சோதியுட் கலந்தார்.
EANAGAEGA
அம்புலிமாமா உலகத்திலுள்ள குழந்தைகள் எல் or மாமா தான். அதைப்போல் கடவுள் ခွါး။ 蠶 தந்தைதான். அவருடைய செல்வங் 關蠶 ஒவ்வொருவரும் பங்கு கேட்கலாம். ஆனல் அவைE 圖* பெறுவதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தகுதி இதியை அடையவேண்டும். பலஹரீன மாணவர்களும்,கு அறிவில்லாதவர்களும், தன்னுடைய சொத்தைப் பெறே @ಳ್ತ":* என்று கடவுள் எண்ணமாட்டார்.E அேருள், பிரேமை இவைகளே அவருடைய சொத் து.ே
நீங்கள் விவேகமும் வைராக்கியமும் உடைய இவர்களாகயிருந்தால் உரிமையுடன் அவருடைய சொத்து
பங்கு கேட்கலாம். 罵。
型
體 -ழறி சத்திய சாயிபாபாஜி 關

ஆத்மஜோதி 79 இறைவனைத் தியானிப்பவர் களுக்குத் துன்பம் இல்லை -முத்துR திருஞான சம்பந்தர் திருக்காளத்திக்குச் செல்லும் போது, கண்ணப்பரின் திருப்பாதச் சுவடுகள் ப தி ந் த காட்டிலே நடக்கும் பேறுபேற்ருேம், என்று மகிழ்ச்சியினுல் உந்தப்பட்டவராய்ச் சென்ருர். இதற்குத் தென்கயிலாயம் என்ருெரு பெயரும் உண்டு. வடதிசைப் பதிகள் தமிழ் வழக்கற்றவைகளாதலால் இங்கிருந்த வாறே வடகயிலை, திருக்கேதாரம், திருக்கோகரணம், திருப்பருப்பதம். இந்திர நீலப்பருப்பதம் முதலிய வற்றை நினைந்து பா டி ஞ ர். இராமேசுவரத்திலிருந்து திருக்கேதீச் சரத்தையும் கோணேஸ்
வரத்தையும் எவ்வாறு பாடினரோ அவ்வாறே இத்தலங் களையும் ஞானக்கண்ணுற் கண்டு பாடினுர்,
பின்னர் ஒற்றியூர் வணங்க உள்ளங் கொண்டு காளத் தியைக் கைகூப்பி வணங்கிப்பாடிப் பிரிந்தார். திருவேற் காடு சென்றிறைஞ்சி திருவலிதாயம் சென்ழுர், திருவலி தாயம் இப்போபாடி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பாரத்வாச மகரிஷி, வியாழன், அநுமான் ஆகியோர் வழி பட்டு முத்தி அடைந்ததாகத் தலபுராணங் கூறுகின்றது. சுவாமி பெயர் வலிதாய நாதர். அம்மை பேயர் தாயம்மை. இங்குள்ள கிணற்று நீர் மிகச் சுவையுள்ளது.
வலிதாயநாதரைத் தரிசிக்கச் சம்பந்தப் பெருமான் அடியார் கூட்டத்தோடு சென்ருர், கோயிலிலேயும் மிகப் பெரிய அடியார் கூட்டத்தைக்கண்டார். எம்பெருமானைச் சேவிக்கத்தினந்தோறும் வரும் அடியார் கூட்டமும் சம்பந் தப் பெருமானைத் தரிசிக்க வந்த புத்தடியார் கூட்டமும் சம்பந்தப் பெருமானேடு உடன் வந்த பழம் பெரும் அடி யார் கூட்டமும் ஒன்று சேர்ந்தபோது அங்குள்ளவர்கள் அடைந்த இன்பத்திற்கு ஒர் எல்லையில்லை. சம்பந்தப் பெரு மானே அடியார் கூட்டத்தைக்கண்டு ஆனந்தம் மிக க் கொண்டார். அவரது ஆனந்தம் பதிகமாக உரு எடுத்தது.

Page 10
80 ஆத்மஜோதி
பத்த ரோடுபல ரும்பொலியம்மல ரங்கைப்புனல் தூவி ஒத்த சொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி மத்தம் வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம் சித்தம் வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர் நோயே.
பக்தர் என்பது தினமும் வந்து பூசிக்கும் அடியார்களையும் சம் பந்தப் பெருமானத் தரிசிப்பதற்காக வந்த புத்தடியார்களை யும் குறித்து நின்றது. பலர் என்பது சம்பந்தப்பெருமான் எங்கெங்கெல்லாம் செல்கின்றரோ அங்கங்கெல்லாம் அவ ரைப் பிரியாது உடனுறையும் சிவனடியார்களைக் குறித்து நின்றது. இந்த அடியார்கள் பலராயினும் அவர்கள் எல்லா ருடைய குறிக்கோளும் ஒன்றே. ஆண்டவனைப் பராவுதலும் அவனடிசேர்தலுமே தமதுவாழ்வின் குறிக்கோளாகக் கொண் டவர்கள். எல்லாரும் வணங்கும் முறையும் ஒன்ருகவே காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும்போது வெறுங்கை யுடன் செல்லலாகாது என்று சொல்வார்கள். தமது அன் பைக் காட்டவும் மனத்தின் பரிசுத்தத்தன்மையைத் தெ யவைக்கவும் பூக்களைக் கையில் ஏந்திச்சென்று இறைவனு டைய பாதமலரிலிட்டு வணங்குதல் வழக்கம். பக்தன் மல ரிட்டு வணங்கும்போது இதய தாமரையையும் இறைவனுக்கு அர்ப்பணஞ் செய்து விடுகின்றன்.
பூவிலே அர்க்கிய ஜலத்தை மந்திரத்தோடு சொரிந்து இறைவனது திருப்பாத மலருக்காக்குகின்ருர்கள். உள்ளங் கையிலே மலரைவைத்து அதனை உற்று நோக்கி மந்திரஜெபம் செய்துஅம்மலரை இறைவனது திருப்பாதத்திற்காளாக்குதல் சாதனைகளில் ஒன்று. மந்திரஜெபத்தோடு சேர்ந்த இதயதா மரையை இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ருன் பக்தன், இறை வனும் நாமமும் ஒன்றே. மந்திர ஜெபம் செய்யும்போதே இதயதாமரையில் இறைவனை எழுந்தருளச் செய்து விடுகின் முன். அன்பாகிய நீரினுல் ஆட்டுகின்றன். இதனையேதான் திருமூலப் பெருந்தகை
'புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு'
என்ருர்,
இத்தனை அடியார்களும் ஒரே குரலில் வேதமந்திரங்க ளைச் சொல்லி ஏத்துகின்றர்கள். பூசை செய்யும் அந்தணர்

s
ஆத்மஜோதி ܗܝ 感盘
கள் ஒரே குரலில் பக்தியோடு மந்திரங்களை உச்சரித்து வழி பாடு செய்யும் போது உலகத் தவர்களும் அவ்வோசையில்
ஒன்றி இறைவனது திருப்பாதத்திற்கு ஆளாகின்றர்கள். சம் பந்தப்பெருமான் தமிழ் வேதத்தைப் பாட உடனிருந்த அடி
யார்களும் அவரோடு ஒத்தாசையில் பாடி மனமுருகி நின்ருர் கள். கேட்டுக் கொண்டு நின்றவர்களும் உள்ளத்தைப் பறி கொடுத்து நின்ருர்கள். இதுவே கூட்டு வழிபாட்டின் தத் துவமுமாகும். வேத மந்திரங்களை உச்சரிக்கிறவர்களுடைய உள்ளத்திலே பக்தி பிறந்தால் அதனைக்கேட்டு வழிபடுகிறவர் களுடைய உள்ளத்திலேயும் பக்தி அரும்பும். சம்பந்தப்பெரு மான் பக்தியோடு பதிகங்களைப்பாடினர். கேட்டு நின்ருரும் பக்தியோடு பாடிப் பயன் பெற்ருர், கேட்டு நின்றரும் பக்தி உள்ளம் படைத்தவரானர். கூட்டுவழிபாடு நடத்துபவரும் சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லிதான் அனுப வித்துப் பாடும்போது அவரைப் பின்பற்றிப் பாடுபவரும் அனுபவத்தைப் பெறுகிருர்கள்; அனுபவித்துப்பாடுகிருரர்கள். கேட்டு நிற்பவரும் சொல்ல முடியாதொரு ஆனந்தத்ை
அடைகின்ருர்கள். இதனைச் சம்பந்தப் பெருமான்,
'ஒத்த சொல்லி யுலகத்தவர்தாந் தொழுதேத்த'
என்ற பகுதியால் குறிக்கின்ருர்,
இப்படி அடியார்களால் வணங்கப்படும் பெருமான் தலையிலே ஊமத்தம் பூவை அணிந்திருக்கின்றன். ஊமத் தம் பூவை விரும்பி அணிந்திருக்கும் பெருமான் பக்தர்களு டைய அர்க்கியத்தோடு கூடிய மலர்களை ம ன மு வ ந் து பெற்றுக்கொள்வான் என்பது கருத்து. இத்தகைய பெருமான் வலிதாயம் என்ற திருத்தலத்தை நீங்கா து உறைகின்ருனும், அடியவர்கள் எல்லாரும் இடைவிடாது வலிதாய நாதரை நினைவதால் அவரும் அங்கு இடை விடாதுறைகின்ருர் என்பது கருத்து.
மனம் தெளிந்த நிலையில் சித்தம் என்று பேயர் பெறு கிறது, அங்குதான் இறைவனைக் குடியிருத்த வே ண் டு ம். 'சித்த மிசை குடிகொண்ட அறிவான பர தெய்வமே' என்

Page 11
82 ஆத்மஜோதி
பார் தாயுமானுர். சித்தத்திலே இறைவனைத் தவிர வேறு எதை வைத்தாலும் அவற்ருல் துன்பமேதான். இறைவனது திருப்பாதத்தைத் தமது சித்தத்திலே வைத்த அடியவர் களுக்கு எவ்வித துன்பமும் இல்லை என்பது கருத்து.
இப்பதிகத்திலுள்ள மற்றைய பாடல்களிலே வலிதா யத்தை அடையும் அடியார்களுக்கு வினை இல்லை என்றும், வலிதாயம் உலகப்பிணியைத் தீர்ப்பது; அதனை நினைத்தால் நும்பிணியும் தீரும்; இன்பமும் கை கூடும் என்றும், அடியார் களாகிய உங்களுக்கு வலிதாயத்தைப்பற்றி வாழ்வதே சரண் என்றும், மனபரிபாக விசேடம் கைவரப் பெரு த மந்தியும் கடுவனும் கூட வணங்கும் பொழுது, மனபரிபாக மடைந்த மக்கள் வழிபடாராயின் அவர்களது வினைதீர வழி இல்லை என்றும், வலிதாயத் தொழுதேத்து வதணுல் ஞா ன ம் உண்டாகின்றதென்றும், ஆன்மாக்கள் என்றும் அடையத் தகும் கதியாகிய வீட்டின்பத்தை, வலிதாயநாதனின் கழலை ஏத்துவதால் அடைந்து விடலாம் என்றும், வினைக்கீடாகிய உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துன் பம் மடியும் என்றும், வலிதாயத்தை வணங்குவோரையே பெரியர் என உலகம் போற்றும் என்றும், யா தோர் வித்தியாசமும் இன்றி அடியார் எல்லார்க்கும் அருள் செய்யும் வலிதாயத்தைப் பேசுபவர்க்கு தாம் அடியார்கள் எனப் பெரியோர்கள் பேணிக்கொள்வார் என்றும் கூறியுள் ளார் சம்பந்தப் பெருமான்.
வலிதாயச் செம்பொருளை நாமும் வணங்கி உய்வோ
LOfTC:5 •
"வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றர்
வலிதாயம் வந்தெய்தி வணங்கிப் போற்றி"
என்ற சேக்கிழார் பெருமானின் கூற்றை ஆழ்ந்து சிந்திப் Gurt Dira.

隨
ஆத்மஜோதி 83 Gj: guu' ñi 35 GöðIT JAG IT’G - 1
ஏழாலை சிற்றம்பலம் முருகவேள்
***************%。
முகவுரை
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயக னகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப் பதம் போற்றுவாம்
கந்தபுராணம்: காப்பு 1.
புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி
திருவாசகம்: போற்றித் திருவகல் 221-225
மந்திரங்களையும் அர்த்தவாத வாக்கியங்களையும், மூல மாகக் கொண்டுள்ளமையின், புராண இதிகாசங்கள் தெய் வங்களுக்கும் கட்புலனுகும் வடிவோடமைந்த பொரு ட் டன்மை உண்டு என்பதனைச் சாதிக்க வல்லனவாயுள்ளன. பிரத்தியஷக் காட்சியின் பயணுகவும் இவை (புராண, இதிகா சங்கள்) எழுந்திருக்கலாம். எமக்குப் பிரத்தியஷமாகப் புலப்படாதனவெல்லாம், பழமைசான்ற பெரியோர்களுக்கு பிரத்தியஷமாகப் புலப்பட்டிருக்கலாமல்லவா?
பழமைசான்ற முனிபுங்கவர்கள், தங்கள் தார்மீக வாழ்வின் பயனுக, தெய்வங்களுடன் பிரத்தியவுமாகக் கலந்துரையாடினர்கள் என்பது பொருந்துவதாகும்.
பிரமசூத்திரம், சாங்கர பாஷ்யம் 1,3,33 [வின்டனிட்ஸ் இந்திய இலக்கிய வரலாறு மேற்கோள் கட்டு, 1, பாகம் 2, பக்கம் 4631

Page 12
84 ஆத்மஜோதி
தமிழர்களாகிய எங்களுக்கும், இவ்வீழமணித்திரு நாடு, ஒரு “தம்மதீப மே. இவ்வாறு சொல்லிக்கொள்ளும் பெருமையினை எங்களுக்குத் தந்தது கந்தபுராணம். இலங் கைத் தமிழர், கந்தபுராணத்தில் வாழ்ந்தது போல், வேறு ஒரு மக்கட் கூட்டமும் வேறு ஒரு நூலிலும் வாழவில்லை எனலாம். இவ்வுண்மையைத்தான், கந்தபுராணம் - யாழ்ப் பாணக் கலாச்சார மூலம் என்ற தொடரில் எம்மிடையே வாழ்ந்துவரும் ஒரே ஒரு தமிழறிஞர் நல்லதொரு முறை யில் வெளிப்படுத்தினர். 1
மிகவும் அண்மைக் காலம் வரைக்கும் எம் நாட்டுக் கோயில்களில் கந்தபுராண படனம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக நிகழ்ந்து வந்தது. புராண படனம் என்ருல், வெறும் புராண மாகஇருக்கவில்லை. சுவாமி திருக்கல்யாணம், சிங்கன் வதை, சூரசங்காரம், தெய்வயானை அம்மன் திருக்கல்யாணம் கடைசிப்படிப்பு எல்லாம் புராணபடன அங்க விழாக்களாக 'ஆதியில், அங்கே’’ நிகழ்ந்தது போன்று வருடா வருடம் நிகழ்ந்து வந்தன.
பயனுக, எம்முன்னேர்கள் தெய்வ உறவு அருத ஒரு செம்மைசான்ற வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். கால, இட வர்த்தமானங்கட்கு, அப்பாற்பட்ட (புறம்பான அன்று) ஒரு தெய்வீக வாழ்வில் தோய்ந்து தோய்ந்து இவ்வுலகில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களிலும், கந்தபுராணத்தில் போல, தெய்வவாழ்வும் மனிதவாழ்வும் சந்தித்து, இசைவு பெற்று கலந்திருந்தன; விண்ணுலகும் மண்ணுலகும் சந்தித்தி ருந்தன. குடும்பத்தில், இனசனக் கூட்டத்தில், கிராமத்தில், நாட்டில் மன இசைவு இருந்தது.
இவ்வாறு எழுதுகிற பொழுது, எம்முன்னவர்களின் வாழ்வினை நான் ஒரு சிறிதளவு இலட்சியப் படுத்தியே, எழுதியுள்ளேன். இத்தகைய ஒரு வாழ்வின் சாயலை நான் என் இளமையிற் கண்டேன்.
அரசியல் துறையில், பொருளாதாரத் துறையில், சமு தாய கலாச்சாரத் துறையில் எவ்வளவு கீழ் தி லே மை!
1. கணபதிப்பிள்ளை, சி. கந்தபுராண கலாச்சார யாழ்ப்பாணம், 1939

ஆத்மஜோதி 85
ஒரு சமுதாயம் அடையமுடியுமோ, அவ்வளவு கீழ்நிலையினை அடைந்துள்ளது, இலங்கையிலுள்ள எங்கள் தமிழ்ச் சமு தாயம். ஆங்கில மொழிக்கு தமிழ்மொழியினைப் பறிகொடுத்த நாம், இப்பொழுது, அத்தமிழ்மொழியினை வேறு ஒரு மொழிக்காக பறிகொடுக்கும் நிலையில் உள்ளோம். இது இப்படி இல்லை என்று யாரும் கூறினுல் அது பொய். நாம் நம்பிக்கை வைத்த அரசியல் தெய்வங்கள் யாவும் பொய்த்துவிட்டன. பொருளாதார ரீதியில் எமது எதிர் காலம் எவ்வாறு அமையும் என்று எங்களில் ஒருவருக்குமே தெரியாது. உத்தியோக நோக்கமாக படிப்பிலே எமக்கு இருந்த சிறு நம்பிக்கையும் படிப்படியாகக் குறை ந் து கொண்டே வருகிறது, எங்கள் சமயப் பற்று ஒரு உதைக் கும் தாங்காது.
இது எங்கள் விதியாயின், எமக்குள்ள ஒரே ஒரு கதி, எமது வாழ்முதலாகிய பெருங்கருணைப் பேராற்றில் போய் தோய்ந்து புதுவாழ்வு பெற்று மீள்வதுதான். இதற்கு எமக்கு வாய்த்த ஒப்பற்ற கருவி, கந்தபுராணமாகும். இந்த ஒரு உறுதியான நம்பிக்கையில்தான் இக்கட்டுரைத் தொடர் வரையப்பெறுகிறது.
என்னைப் பற்றி ஒரு வார்த்தை. பிறந்து மொழிபயில முன், கந்தபுராணம் எனக்குப் புலணுகியது. என் அன்னை பராசக்தி, எனக்குத் தந்த பெரிய பேறு அது. இக்கட்டுரைத் தொடரினல் யாதேனும் பயன் கிட்டுமானல், அது அவள் திருவடி மலர்களுக்கே உரியது ஆகும்.
தொடரும்.
கடவுள் மஹா சக்தியாக இருக்கிருர், ஜீவன் மாயா சக்தியாக இருக்கிறது. அவர் உண்மையானவராக இருக் கிருர். ஆனல் ஜீவனின் தோற்றம் நிழல்போல் மாயத் தோற்றமாக இருக்கிறது. போலிஸ்காரர், கள்வர்களின் கூட்டத்தில் சேர்ந்து அவர்களைப் பற்றித் தெரிந்து வழக்குத் தொடுப்பதற்காக, தானும் திருடனைப் போல் வேடமணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தன்னு டைய மஹா சக்தியுடன் கடவுள் உங்களிடம் வர இயலாது. அவர் தன்னுடைய சக்தியை யெல்லாம் அடக்கிக் குறிப்பி பட்ட சக்தியுடன் தான் வரவேண்டியிருக்கிறது. அதன் மூலம் அவர் பக்தியின் நோக்கமாக சேவையை அர்ப்பணிக்க அெ
ரால் முடிகிறது.
- பூரீ சத்தியசாயி பாபாஜி.
ܛܪܢܐ

Page 13
ஆத்மஜோதி எழுதாத கவிதையே குமரா!
(டாக்டர் ச.ஆறுமுகநாதன்)
ఒ6్కళిత్రశ్ఫో
எழுதாத கவிதையே குமரா - உந்தன் இளநகை ஒவ்வொன்றும் இன்பத் தேனுகும்
பொழுதெல்லாம் உன்னேடு கூடி - ஆடிப் போக்கின்ற பொழுதெல்லாம் பொன்பொழு தாகும்
(στ(ρ)
கையிலே வேலேந்தி நிற்பாய் - உந்தன் காலருகே நீலமயில் வந்து நிற்கும் மெய்யிலே வெண்ணி றணிந்து - எழில் மிளிரும் முத்தாரத்தை சூடியே நிற்கும் (எழு)
உயிருள்ளே உயிராய் இருப்பாய் - எங்கள் உருவத்தின் உள்ளேயும் நீயோங்கி நிற்பாய் மயில் மீது ஒயிலாக ஏறி - இந்த மாநிலம் தனச்சுற்றி "பழம்நீ யாய் வருவாய் (எழு)
கனிகேட்டு கையேந்தி நின்ருய் - அந்தக் கனி அண்ணன் கைமாறக் கண்டெல்லாம் வெறுத்தாய் தனியாக நிற்க நினைத்தாய் - அதைத் தாய் தந்தை கண்டுன்னை 'தவப்பழம் நீ" என்ருர் (எழு)
கவியரசி ஒளவையைக் கண்டு - "நாவல் கனிவேண்டுமா? வென மரமேறி நின்று புவியெங்கும் உள்ள நீ அன்று - பொல்லாப் பிள்ளைபோல் 'தமிழ்த் தேர்வு நடத்தினுய் நன்று
(எழு)

ஆத்மஜோதி 87
6. "சுட்டகனியா சுடாக்கனியா - வேண்டும்
சொல்பாட்டி' என்கரீ சுடாக்கனி கேட்டாள்! பட்டுப் பட்டெனக்கனி வீழ்க - நாவல் பழமரம் தன்னைநீ உலுக்கியே நின்ருய் (σταρ)
7. கொட்டிய பழங்களைக் கண்டு - ஒளவை
குனிந்ததை எடுத்துமே மண் ஊதித் தின்ருள் சுட்டதோ பழமெனநீ கேட்டாய் - ஒளவை சுருக்கிட்டு மேல் நோக்க சுயரூபம் எய்தாய் (எழு)
8. பழநிவேல் முருகாவென ஒளவை - ஞான
பண்டிதன் எனப்போற்றி பணிந்துமே பாடி எழில்தமிழ்த் தெய்வமாம் உன்னை - கண்டு ஏற்றிப் பாமாலைகள் சூடியே நின்ருள் (எழு)
[]<పాయాలాల్కొలా లాలాడరాలా లాలా లాలాలాజలాలాలా లాలా లాలా లాలాలా<><><><ూత>[] () நீங்கள், பாதையில் நடந்து செல்லும் பொழுது S * உங்களுடைய நிழலானது, சேறு அல்லது சகதி, பள்ளம்
அல்லது மேடு, முட்கள் அல்லது மணல், ஈரம் அல்லது வரண்ட நிலம் ஆகியவைகளின் மேலெல்லாம் விழுகின் 《鷲 இதனுல் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை அல்லவா? S
அல்லது அந்த நிழல் தான் அழுக்கடைகிறதா? எங்கெல்)
* லாம் விழுகிறது. எதன்மீதெல்லாம் படுகிறது என்பதைப் பற்றி அந்த நிழில் கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. நிழலும் அதனுடைய அனுபவங்களும் நித்தியமோ அல் S லது சத்தியமோ அல்ல என்பது நமக்குத்தெரிகிறது
அதைப்போல நீங்களும் பரமாத்மாவின் நிழல் அல்ல, Sபரமாத்மாவாகவே இருக்கிறீர்கள் என்பதை நன்ருகத் 8 தெரிந்து கொள்ளவேண்டும். இதுதான் உங்களுடைய ) తామడి), வேதனை, வலி இவைகளுக்கெல்லாம் மருந்தாகும். () ளு ருந்த
() - ஜீ சத்திய சாயிபாபாஜி

Page 14
88 ஆத்மஜோதி
O O 99 *இராதா தத்துவம்
-ழனிமதி சிவானந்த சந்தானம்மையார்(தெய்வநெறிக் கழகம், மதுரை.)
L0eSALA0LAAL0eSeSL0LAA0eeL0eJL0LeL0eAL0LA0eASAL0LASL0eL0JSeALA0LSLLL0S
பூதவுடலம் தாங்கியுள்ள நமக்கு ராதையின் தத்துவம் தான் என்ன என்பது எப்பொழுதும் புதிராகவே இருந்து விடும். ஒன்றை முழுதுமாய் அறிந்து கொள்ள வேண்டின் அதுமயமாகி விடவேண்டும் என்பதுவே நியதி. நாம் பஞ் சபூதங்களாலான உடலைத் தாங்கிக் கொண்டு வினையின் பயணுய் மேலும் மேலும் பிறவிகளைப் பெருக்கிக் கொண் டிருக்க, ராதையோவெனில் உடல், உள்ளம், இந்திரியங் கள் எல்லாம் சின்மயமாயொளிரும் திவ்ய உடலோடு கூடி யவளாயிருக்கின்ருள். ஒருவரைக்கு உட்பட்ட நமது புத் தியானது அந்தச் சின்மயத்தின் ஆழம் காண இயலவில்லை என்ருல் இதில் வியப்பு ஒன்றுமில்லை. நமது இயல்பான சக் திகள் ஒருபோதும் அந்தச் சைதன்யத்தை எட்டிப் பிடிக்க இயலாது.
வேதங்களிலும், புராணங்களிலும், முக்கியமாய் தேவி பாகவதத்திலும், வைஷ்ணவ ப்ரம்மவைவதத்திலும், பூஞரீ வல் லப-பூரீ நிம்பார்க சம்பிரதாயங்களிலும், பூரீ ராதா வல்லபீகெளடீய தரிசன சாஸ்திரங்களிலும், ராதா சப்தசதீ, மற் றும் ஹிந்தி, வங்காளி, சம்ஸ்கிருத பாஷைகளிலுள்ள கிரந் தங்களிலும், இந்த ராதா-தத்துவம் வெகுவாக விளக்கப்பட் டுள்ளது. இது இவ்வாறிருக்க, புராணங்களிலெல்லாம் தலை சிறந்ததான பூரீமத் பாகவதத்தில் ராதையின் பெயர் எங்கு மே வரவில்லை. "கோபி என்ற சொல் மட்டும் தரப்பட்டுள் ளது. இதற்கான காரணம் தேதவியாசர் தன் அபார மூளை யினுல் எல்லாப் புராணங்களையும், மகாபாரதம் போன்ற சாஸ்திரங்களையும் எழுதி முடித்த பின்னர் அவருக்கு உள்ளத் தில் ஆனந்தம் மேலிடவில்லை. எனவே அந்த ஆனந்தத்தைப் பறுவதற்காக பூரீமத் பாகவதம் எழுதும்படியாயிற்று. இப்பொழுது அவர் "ராதை’ என்ற பெயரளவிலேயே தன்னை மறந்துவிடும் நிலையிலிருந்தார். பாகவதம் விக்ன மின்றி நிறைவேற வேண்டுமே-ராதை இல்லாமலேயே காரி யத்தை முடிக்க பூரீவியாசர் கடும் முயற்சி செய்தார். தனக்கு

ஆத்மஜோதி 89
மிகவும் பிரியமான வஸ்துவை மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்பது நியதி.
மூன்று சக்திகளுடன் கூடிய ஸ்த்-சித்-ஆனந்த பகவா னுடைய ஆனந்த நிலைரசம், அனுபவிப்பதற்கெனவே உள் ளது. ஆனல் அதைத் தனியாக அனுபவிப்பது எப்படி? எனவே தன்னையே தன் அளப்பிலா ஆனந்தத்தைப் பருகச் செய்விப்பதற்காக ரசரூபமேயான பரப்ரம்மம், பூgரீ கிருஷ் ணன் தன்னிடத்திருந்துராதையின் உருவைத் தோற்றுவித்துக் கொள்ளுகிருர், லீலா வினுேதத்தின் பொருட்டு இரண்டு உருவானுர். உண்மையில் பகவான் ஒருவரே. “பரப்ரம் மம் உருவாகவும் அருவாகவும் இரண்டுமாய் நிதமும் உள் ளது. அருவம் அல்லது பாவனமயமாய் இது பகவானு டைய ஸ்வரூபத்தில் அடங்கியுள்ளது. உருவாக தினமும், தனியாக விளையாடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் சக் தியும் சக்தியுடையோனும் ஒன்றே. இதுவே பகவானுடைய ஆனந்த ரூபம். இதனின்று பிரிந்து, பரமானந்த ரசத் தோடு கூடிய இவருடைய ஸ்வரூபத்தினின்று தோன்றிய ஆனந்த சக்தியே இவருடைய உபாசனதேவியாகிய ராதை ஆனது. நித்ய பூர்ண ஆனந்த ஸ்வரூபத்தையும் ஆனந்த ரசத்தைப் பருகச் செய்பவள் ராதிகா எனப்படுகிருள். இந்த ஆனந்த சக்தியின் சாரமே அன்பு. அன்பின் பயனை பாவம் என்கின்றனர். அதுபூர்த்தி அடைந்து மஹாபாவம் ஆகி ராதை எனப்பட்டது' என்பதாகவணக்கத்திற்குரிய பூரீ ஹனுமான் பிரசாத் போத்தார் பகருகின் ருர்,
பொதுவாக, உலகில் அனுகூலத்தில் தன் சொந்த சுகம் காணப்படுகிறது. ஒருவரிடத்திருந்து சுகம் கிடைக்கும்வரை பிரியம் இருக்கிறது. ஆனல் சுகமேற்படக் கூடிய நிலை இல் லாதபோது அல்லது துக்கம் ஏற்படலாம் என்ற சந்தேகம் ஏற்படும்போது பிரியம் சிதைந்து விடுகிறது. ஆணுல் தூய அன்பிலோ வென்முல் சொந்த நலன் சம்பந்தமான வாச னைகள் சிறிதும் இருப்பது கிடையாது. ஆனல் இயற்கை யாகவே பூரண சமர்ப்பணம் ஏற்படுகிறது. இந்த அன்பு எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் இந்த அன்பில் பெற்றுக் கொள்ளுதல் என்பது பெயரள ற்குக் கூடக் கிடையாது. --
இந்தத் தூய அன்பு கொடுத்துக் கொண்டேயிருத்தல் ஒன்றையே அறிகிறது. அதிலும் வேடிக்கை என்ன வென்

Page 15
9) ஆத்மஜோதி
ருல் இந்தக் கொடுப்பதில்தான் பூரண ஆனந்தத்தைக் காண் கிறது. இந்த பரிசுத்தமான ப்ரேமாமிர்தத்தில் இருக்கும் பெறுதற்கரிய இனிமையைப்பருக ரஸங்களுக்கெல்லாம் மன் னரான சாக்ஷாத் எம்பெருமானே நிதமும் விருப்பமுள்ளவ ராய் இருக்கிருர். இத்தகைய ப்ரேம மார்க்கத்திற்கு வழி காட்டி யாய் விளங்கக்கூடிய சிறப்பு ராதாராணி ஒருத்திக் குத் தான் உண்டு. எனவேதான் பகவான் இந்தத் தூய அன்பிற்காக எப்பொழுதும் விருப்பம் கொண்டிருக்கிறர். அதை அனுபவிக்கிருர், அனுபவிக்கச் செய்கிருர், இதுதான் அனுதி காலம் தொட்டு வந்துள்ளதும் இனி என்றும் இருக் கக்கூடிய சாரமாகும்.
பூரீ ராதை இந்த அன்பின் உயிர் ஒவியம் ஆவள். அவ ளுடைய புனிதமான அன்பில் அவள் பொருட்டு ஏதுமே மிகுந்திருப்பதில்லை. அவள் இருப்பதும் தனக்காக அல்ல. அவள் தான் பூரீ கிருஷ்ணனுடையவள் என்பதை மாத்தி ரம் அறிகிருள். அவளுடைய தேகம், ப்ராணன், மனம், புத்தி ஆகிய அகம்பாவம், ஆத்மா எல்லாமே கிருஷ்ணனு டையவை. 'தத்சுகே சுகத்வம்' அதாவது அந்த சுகத் தில் தான் சுகம் என்பது தான் அவள் வாழ்வில் சாதனம் லசுஷ்யம் எல்லாம் ஆகும். பக்திக்கு ஆதி குருவா கிய பூரீ நாரதரும் பட்ட மகிஷி ருக்மணிதேவியும் தமது பாத தூசியை கிருஷ்ண பகவானுடைய வலி நீங்கும் பொ ருட்டுக் கொடுத்தால் நரகம் கிடைக்கும் என்ற பயத்தால் அந்த பாதத்தூளிதராமல், அன்புப் பரீட்சையில் தோற்று விட்டனர். ஆனல் ராதாராணியோவெனில் தான் நரகத் தையும் ஆன ந் த மாய் வரவேற்பவளாய் பகவானுடைய நோய் தீரும்பொருட்டு தன் சரணத்தூசியைத் தந்தாள். இத்தகைய அன்பிற்கு எப்பொழுதும் பகவான் கடமைப் பட்டவராகிவிடுகிருரர். ஏனெனில் இத்தகைய கடன் எப்படி தீர்க்கப்பட இயலும். கொடுப்பதையே பெறுவதாகக் கரு துபவர்களுடைய கடன் மென்மேலும் வளரவே செய்யும்.
தனது அன்பன் பிறரிடத்து அன்பு செலுத்தும் டோது கா த லி யி னி டத்து பொருமை துவேசத்திற்குப் பதிலாக

ஆத்மஜோதி ) 9
மகிழ்ச்சியே நிறைந்துள்ள போதுதான் தூய அன்பாக அதைக் கருதலாம். இந்த உரைகல்லில் ராதையின் காதல் தான் முழுவதுமாகத் தேறுகிறது. ஏனெனில் அவளுடைய தூய அன்பில் இயற்கையாகவே ப ர ந் த மனப்பான்மை உள்ளது. அதி லும் அ வ ள து அ ன் பு முடிவில்லாதது. அதற்கு எல்லையோ முடிவோ கிடையாது. அந்த அன்பை வழங்குவதில் அவள் பரமானந்தமடைகிருள். தன் தோழி யரோடும் தன்னைப் போன்றே அன்பனின் சுகத்தை அனுப விக்க உதவி செய்கிருள். ராதா ராணியின் தியாகமய மான இந்த மாபெரும் கா த ல் தெய்வீகமானது. நான் என்ற அபிமானமின்மை, எளிமை, முழுவதும் தியாகம்இவையே அந்த அன்பின் முக்கியத்தன்மைகளாகும்.
பக்தியின் பெருமையை உயரிய முறையில் கொண்டுள்ள ராசக் கிரீடையின் சீரிய தத்துவத்தை தெரிந்து பராபக்தர்களாக விளங்க விரும்பும் அன்பர்கள்
குருதேவரின் சிறந்த தமிழ் நூலாகிய 'இராதையின் காதல்’
என்ற நூலை வாங்கிப் படித்து பயனெய்துவீர்களாக !
ஜெய் சத்குரு மகராஜ் கீ ஜெய்! ஒம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
உபநிஷதங்களில் ஆத்ம விசாரம் நன்முகக் கூறப்பட் டிருக்கிறது. எப்படி ஒரு ந தி யின் வெள்ளத்தை அதன் கரைகள் கட்டுப்படுத்தி அந்த நீரைக் கடலுக்குக் கொண்டு செல்கிறதோ, அதைப்போல உபநிஷதங்களும் உங்களுடைய புத் திகளையும், மனத்தையும், அறிவையும் சரியான வழியில் கட்டுப்படுத்தி கடலை அடைந்து, பரமாத் மாவினிடம், தன்னை ஆழத்திக்கொள்ள உதவுகின்றன. உப நிஷதங்களில் சொல்லியபடி நடப்பதற்காக அவைகளைப் படியுங்கள். அந்தப் புத்திமதிகளைச் செயலில் கொண்டு
வாருங்கள்.
- ஜீ சத்தியசாயி பாபாஜி.

Page 16
9. ) /C) (, ○ 2での ஆத்மஜோதி
ஏன் யாம் கடவுளிடம் சரண் புகுவதில்லை
(g ). P. வஸ்வாணி)
மிகப் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் அவர் Э язі, செய்யும் பிரார்த்தனையின் பிரகாரம் அவர் களு க் குத் தேவையான பொருட்கள் - ஆரோக்கியம், நீண்ட ஆயுள், பதவி, செழப்பு, மக்கள், மருமக்கள், வீடு, கணவர் - அனைத்தையும் அளிப்பதால் தம் இருப்பை நிலைநிறுத்தும் ஒருவகைக் களஞ்சியகாரரே கடவுள். அவர்கள் தேவைப் படுவதைக் கொடுக்கும் வரை கடவுள் நல்லவர், அன்புடை யவர், அறிவுள்ளவர், அவரைப்போல் வேறுயாரும் இல்லை. ஆணுல் அவர் பிரியப்படுத்த மறுக்கும் கணநேரம் அவர் நேர்மையற்ற, அன்பில்லாத, கொடியவராகிருர், அவரது இருப்பே மறுக்கப்படுகிறது. எங்களிற் பெரும்பான்மையோ ரின் கடவுள் ஒரு 'சேவகன்’ எம் கட்டளையைச் செய்வ தற்கு ஆயத்தமான, எம்வேணவாக்களையும் மனம்போன போக்கு களையும் அவை பிறந்த கணநேரமே நிறை வேற்ற ஆவலுள்ள கடவுள்.
தெளிவாகச் சொல்லின் யாம் கடவுளது இச்சை நிறை வேறுவதை விரும்புவதில்லை. யாம் விரும்புவது எம் இச்சை நிறைவேற வேண்டும் என்பதே. என் இச்சையைச் செய்வ தில் நான் எவ்வளவு அதிகம் சித்தி பெறுகிறேனே அவ்வ ளவு அதிகம் அமைதியற்றவனுக, மகிழ்ச்சியற்றவனுக, துயரம் நிரம்பியவனுக நான் வளர்கிறேன். ஏ னெ னரி ல் கடவுளது இச்சை மட்டுமே இசைவிணக்கத்தையும் ஒழுங் கையும் சீர்படுத்தும். கடவுளது இச்சைக்கு நான் கீழ்ப்படி யக் கற்கும்வரை நான் சந்திரலோகத்தை அடைந்து நட் சத்திரங்களை கீழடக்கினலும் நான் அமைதியற்ற தன்மை யிலிருந்து அமைதியற்ற தன்மைக்கே தொடர்ந்து அலைந்து திரிவேன்.
எமக்குத் தேவைப்படுவது இது, அது அல்லது வேறு யாது பொருளும் அன்று. எமக்கு அவசியமாய்த் தேவைப் படுவது ஒரு தெய்வீக ஒழுங்கே.
-era- தொடரும்

வாங்கிப் படியுங்கள் !
-0-
1. கீர்த்தணுஞ்ஜலி వy {
2. சிவானந்த விஜயம் శక్తి = {
3. யோக சித்தி (மூலமும் உரையுல்) και 3 - 5 ύ
4. கீதா யோகம் 2.53
5. ஆதி சங்கர பகவான் 2 - δεν
8. காலத்தேர் 2 -》
7. நடனுஞ்ஜலி نتی تھی۔ }{
8. அருட்செல்வம் 2 sity {
9. முன்னேற்ற முழக்கம் 1=每醇 10. உலகப் பாட்டு is Ա: 11. கவியரங்கம் 1 = 5 íj 12. வேத சாதனம் 5t 13. ஊமையன் சண்டை 歌 =5む 14. ஹரிஜன் . Of 15. மாணிக்க ஜோதி Ε = ί ί3 16. ஜோதி ராமலிங்கம் 2. Of 17. அப்பர் அற்புதம் A - 5 O 18. சிங்கநாதம் ... O 19. சாது ஜவானி 臀-卤莎 20. நெஞ்சமாலை 鶯-蕊母 21. இந்திய சரித்திரக் கும் மி &50 چه ل 22, குழந்தையின்பம் এীি, 《}。岳{} 23. பூரீ ரமணுணுபவ கீதம் .50 24. சமய விளக்கம் 3) في عمقه 25. சுத்தானந்த பாரதியார் வரலாறு έ) - 5 Ο 26. ஏழை படும் பாடு 6.50 27. Experience of a Pilgrim Soul 6.50 28. Voice of Thayumanar 2-{}0 29. The Yogi And His Words E-25 30. Hindu Dharma } -00 3. The Soul Sings 2-50 32. Lights on Better Life s -25 33. Sadasiva Brahman O-50 34. Saint Ramalingam } -00 35. Sri Krishna and His gospel (in press) 2-5) 36. This is our Religion 2-5)
யோக சமாஜம், பூரீராம்நகர், அடையாறு, சென்னோ?0
என்ற விலாசத்திற்கு எழுதுக.

Page 17
εί στις ετοι ιατί
ബ്  ീഖി, ஆண்டுகள் Li த்தியாகி மூன்றுவது இதழும் ெ நேயர்களுடைய ஆதர தோறும் சுடர் விட்டுப் இறது. G. η του
தாண்டுச் சந்தாவை அ
| კაპი ჰეიყვნენ. ემეზე მეფე 17ე. சந்தா இலக்கங்களைக்
கொள்கின்ருேம்
, ,
- 巽 義
ച്ചിട്ടി 11:ി!
என்ற விலகத்தி இவ்விடமும்
。○、○ 11 ܝܬܐ 3
. . . - -
* 颚、
、“
. . . - ബി ടി-, 9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

19 வது ஆண்டு ஆரம்பமாகி
് ബച്ച || ( +| +1 ' _్క -- விேைலே @了霸 LT豆盧 விர த் துக் கொண்டிருக்
Fର *、’” அனைவரும் புத்
டி வைக்குமாறு அன்பு
சந்தா நேயர்கள் தமது
蚤国、
Sri
Os3. i shyti
鼬、圭茎。
9,ിട്ടു ധൂ a litir Béisilig istir.