கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1969.02-03.14

Page 1


Page 2
ஒர் ஆத்மீக மாத வெளியீடு
சால்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே. - சுத்தானந்தர் ஜோதி 21 கீலக ளு மாசி, பங்குனி மீ (13-2,14.3-69) சுடர் 4, 5
பொருளடக்கம்
அஹிம்சை 97 சத்தியம் 98 அஹிம்சா வீரர் 99 கச்சியப்பர் கண்ட காட்சி - 14 102 சங்கமம் I 05 முருகனைப் பாட மும்மலம் அறுமே II 3 விதியை வகுப்பவன் மனிதனே 15 பங்குனி உத்தர மகிமை 23 ஞான மார்க்கத்தைப் பரப்புவோம் 126 பூரீ முன்னேஸ்வர வரலாறு 29 நிலையான சாந்தி - I 32 பன்றித் தலேச்சி 185
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா 100-00 வருட சந்தா 3-00 தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர் திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் திரு. நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம்,
நாவலப்பிட்டி, போன்: 353
 
 

அ ஹி ம்  ைச
(மகாத்மா)
அஹிம்சை என்பது தீமை செய்யாமை மட்டும் அன்று, தீமை செய்பவனுக்கு நன்மை செய்தலும் ஆகும். ஆளுல் தீமை செய்பவன் தீமை செய்து கொண்டிருப்பதற்காக, அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்ருவது, அல்லது அவன் தீமை செய்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமென்ருவது பொருள் கொள்ளக் கூடாது. தீமை செய்பவன் ஒருவனுக்குக் கோபம் வந்தாலும் சரி, துன்பம் நேர்ந்தாலும் சரி அதைப் பொருட்படுத்தாது அவனை விட்டு விலகி நின்று அதனுல் அவனை எதிர்ப்பதே அவனுக்குச் செய்யும் அன்பாகும். உதாரணமாக:- என் மகன் துன்மார்க்கணுய் விட்டால் அவனை ஆதரித்து வந்த தை நான் உடனே நிறுத்திவிட வேண்டும். அப்படிச் செய்வதால் அவனுக்கு மரணமே நேரிடினும் அதைப் பொருட்படுத்தாது அவனுக்கு உதவி மறுப்பதே எனக்கு அவனிடமுள்ள அன்பினல் ஏற்படும் கடமையாகும். தான் செய்வது தவறென்று அவன் பச்சாத்தாபப்பட்டு வந்தால் அவனை அன்புடன் வரவேற்று அனைத்துக் கொள்ள வேண் டியதும் அவ்வன்பினுல் ஏற்படும் கடமையாகும்.
இன்னு செய்தார்க்கும் இனிய செய்தலே மேய்யழகா கும். உன்னையே ஒறுத்துக் கொள். உள்ளேயே சோதனை செய். எங்கு கண்டாலும் கொடுங் கோன்மையை எதிர்த்து நில், சுதந்திரத்தைப் பிடுங்க நினைப்பாரை எதிர்த்து நில், ஆஞல் கொடுங் கோலனுக்குக் கொடுமை செய்து எதிர்க் காதே. துவேஷம் ஒழித்தவனுக்கு ஆயுதமே தேவையில்லை.

Page 3
98. ஆத்மஜோதி
சத் தி யம்
(கபீர்தாசர்)
உண்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போன்ற பாவம் இல்லை. யாருடைய இதயத்தில் சத்தி யம் இருக்கிறதோ அந்த இதயத்தில் குரு தானே இருக்கி
முர், -
ஆண்டவனிடத்தில் உண்மையாயிரு. ஆண்டவன் உண் மையை விரும்புகிருன். வேண்டுமானுல் மயிரை நீளமாக வளர். வேண்டுமானுல் தலையை மழுங்கச் சிரைத்துக் கொள் அதனுல் எல்லாம் அவர் உள நிறைவோ குறைவோ அடை வதில்லை.
சத்தியத்தைச் சாபம் பாதிக்காது. பொய் நிந்தை ஒன்றும் செய்யாது. சத்தியத்தைக் காலம் விழுங்க முடி யாது. உண்மைக்கு உண்மை கிடைக்கும், அதுதான் குரு அல்லது ஈசுவரன். உண்மையில்தான் அது மறையும் உண்மைக்கு நற்கதி உண்டு.
சத்தியம் இல்லாமல் தியானம் இல்லை. பயம் இல்லா மல் அன்பு இல்லை பாரசக்கல்லில் மறைவு இருந்தால் தங்கம் எப்படி ஏற்படும்? யார் உண்மை பேசுகிருனே அவன் காலடியில் என் உடல் மனம் எல்லாம் அர்ப்பணம் ,
உண்மையை ஒருவனும் நம்புகிறதில்லை. பொய்யை உலகம் நம்புகிறது. மோரைத் தெருத்தெருவாய் அலைந்து விற்கிருர்கள். கள் உட்கார்ந்த இடத்தில் விற்றுப் போகி றது. உண்மை சொன்னுல் அடிக்கிருர்கள். பொய் சொன் ஞல் உலகம் நம்புகிறது.
リ*

"
ஆத்மஜோதி 99
அ ஹி ம் சா வீரர்
(ஆசிரியர் )
ஹிம்சை செய்பவன் உண்மையான வீரனல்ல; அஹிம் சையை அனுட்டிப்பவனே உண்மையான வீரனுவன். பிற ருக்கு ஹிம்சை செய்ய சக்தியிருந்தும் அதனை வெளிக்காட் டாது பொறுத்துக்கொள்வதற்குத்தான் உண்மையான வீரம் வேண்டும். மகாத்மா வின் வாழ்க்கை முழுவதுமே அஹிம் சை வேர் விட்டுப் பரந்திருப்பதைக் காணலாம்.
எல்லா மனிதரையும் சரிநிகராகப் பாவித்த பெருமை நமது காலத்தில் காந்தி ஒருவருக்குத்தான் உண்டு. பண்டை நாட்களில் சாக்ரட்டீசைப் பற்றிச் சொல்லப்பட்டதைப் போல் மகாத்மா காந்தி அறிஞராகவும் உலகிலே தலைசிறந்த வராகவும் காணப்பட்டார். கெளதம புத்தருக்குப் பின் அஹிம்சையை உலகறியச் செய்தவர் அவர் என்ருல் அது மிகைப்படுத்திச் சொல்வதொன்றன்று.
கடவுளின் மறு பெயர் சத்தியம் என்பது காந்தியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்றைய உலகில் வாழ்க்கை வேறு, சத்தியம் வேறு, கடவுள் வேறு என்றும் மக்கள் நினைக்கின்றர்கள். இதனுல்தான் உலகில் இந்தச் சீர்கேட்டின் நடுவே நாம் வாழவேண்டி இருக்கிறது. கூடுதலான பொய் சொல்லும் அளவிற்கு ஒரு வ ன் அரசியல்வாதியாகின் முன் என்ற எண்ணத்தை அரசியல் வாதிகள் பொதுமக்களிடையே பரப்பி உள்ளார்கள்.
உண்மையைத் தேடிச் செல்லும் வழியில் தான் தனக்கு அஹிம்சா தர்மம் கிடைத்தது என்பது காந்தியாரின் வாக்கு கிடைத் தற்கரிய அத்தருமத்தை மக்களிடையே பரப்புவ தையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார், அதற்கா கவே உயிர் வாழ்ந்தார். அத்தருமம் மாறுபட்டால் உயிரே போய்விடும் அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தார்.

Page 4
ஆத்மஜோதி 100
சத்தியாக்கிரகமும் அதன் கிளைகளாகிய ஒத்துழையா மையும் சாத்வீக மறுப்பும் பண்டைக்கால முதல் வழங்கி வரும் தியாகத்தர்மத்தின் புதிய பெயர்களாகும். ஹிம்சை நிறைந்த இந்த உலகத்தின் அஹிம்சையைக் கண்ட முனி வர்கள் நியூட்டனை விடப் பெரிய விஞ்ஞானிகள். வெளிங் ரன விடப் பெரிய போர் வீரர்கள். ஆயுதம் உபயோகிக் கத் தெரிந்திருந்தும் அதன் உபயோகம் பயனற்றது என்று கண்டு துன்பத்தில் ஆழ்ந்து வருந்தும் உலகத்திற்கு விமோ சனம் ஹிம்சை மூலமன்றி அஹிம்சை மூலமே கிடைக்கும் என்று உபதேசித்தார்கள்.
தேசத் தொண்டர்களும் தேசத் தலைவர்களும் தாம் விடும் பிழைகளினுல் ஏற்படும் பழி களை ப் பிறருடைய தலையில் சுமத்தி விடுவதைப் பார்க்கின்ருேம். காந்தியோ பழியைத் தன் மீது போட்டுக் கொள்ளாது எந்தப் பாவச் செயலை யும் ஒதுக்கி விடவோ தள்ளி விடவோ முடியாத நிலையில் இருந்தார். பிறர் சேய்த பிழைகள் எல்லாவற்றையும் தன் தலையிலே ஏ ற் று க் கொண்டார். பிழை செய்தவர்கள் உணர்ந்து திருந்தும் வரை உண்ணுவிரதம் இருந்து தன்னையே தண்டித்துக்கொண்டார். பிறர் அ நு ப விக் க வேண்டிய தண்டனையை தாமே ஏற்று அநுபவித்தார்.
ஒரு சமயம் மிக நோய்வாய்ப்பட்டுச் சாகும் தறுவா யில் இருந்து ஒரு கன்றுக் குட்டியை மயக்க மருந்து கொடுத்துக் கொல்ல டாக்டரை அனுமதித்த போது அகில இந்தியாவுமே இது குறித்துப் பரபரப்படைந்தது. கன்றுக் குட்டி அநுபவித்த துன்பம் அத்தனையும் காந்தி அநுபவித் தபடியினலே தான் அவரால் அந்த முடிவுக்கு வரமுடிந்தது மனுவேந்தனின் மகன் கொன்ற கன்றுக்குட்டியின் தாய் துயரத்தை மனுவேந்தன் அநுபவித்தான். அத்துன்பத்தை உலகிற்குக் காட்ட விரும் பி னு ன். தானே தேர்க்காலில் மகனைக் கிடத்தி கொ ன் று பசுவின் துயரை அநுப வித்தான்.

ஆத்மஜோதி 101
காந்தியடிகளிடம், பிற உயிர்கள் படுந்துவரைத் தன் னுயிர் படும் துயர்போல் பார்க்கும் தன்மை இருந்தபடி யினலே தான் காந்தியடிகள் தூங்கி முடியாது துயருற்ற போது, பல்லாயிரவர் உறக்கம் இழந்தனர். அவர் உண்ணு நோன்பிருந்தபோது, பல இலட்சம் பேர் பட்டினி கிடந் தனர். அவர் திருவாய் ம ல ர் ந் த ரு எளிய ஆழ்ந்த அருள் மொழிகள் நாள்தொறும் வானெலி மூலம் பல தடவை கள் நாடெங்கும் பரவின. சென்ற இடமெல்லாம் அளிக்கப் பட்ட ஆடம்பர வரவேற்புகளுக்கிடையிலும், விளம்பரங்க ளுக்கிடையேயும் முற்றும் துறந்த ஒரு முனிவராக அவர் வாழ்ந்தார்,
மக்களுக்குத் தொண்டு செய்வதே ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகும் என்ற பூரண ந ம் பி க்  ைக யு ம் உறுதியுமே, இவ்வுலகின் மாயைகளிலிருந்து ஒதுங்கி வாழ அவருக்கு வழிகாட்டியதாகும். "மகாத்மாக்களின் மனத்து யரின் ஆழம் மகாத்மாக்களுக்கு மட்டுமே தெரியும். என்று ஒரு தடவை அவர் சலிப்புடன் கூறினர். சாமான்ய மக் கள் தம்மைப் பற்றியே கவலைப்படுவார்கள். தர்மாத்மாக் களோ தம்மை மறந்து மற்றவர்களைப் பற்றியே தினமும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள்.
மகாத்மாவின் வாழ்வு அடிப்படையில் ஒழுக்கத்தின் பால் பட்டதேயன்றி தத்துவத்தின் பால் பட்டதல்ல. அவர் ஒரு தத்துவ சாஸ்திரியும் அல்ல. அறவழியிலே நிற்கும்
அறவழியின் பால் பட்டு வாழவும் அவர் விரும்பினர்.
ஆட்டுப் பால் சாப்பிடுவது அவருடைய உடல் நலத்திற்கு இன்றியமையாததாக ஆனபிறகும், அந்த ஏற்பாட்டை அவருடைய அந்தராத்மா கடைசி வரை ஏற்கவில்லை.

Page 5
()2 ஆத்மஜோதி
கச்சியப்பர் கண்ட காட்சி - 14
صحتھی کھینچے cی
ஏழாலை - சிற்றம்பலம் - முருகவேன் (காட்சி 1. அங்கம் 6.)
இவ்வாறு சிவநிந்தனையிலும் சேர்ந்தாரைக் கொல்லும் சினத்திலும் தாழ்ந்து நி ன் ற வ னு கி ய தக்கனை நோக்கி, தேவர்கள் பரமேஸ்வரன் பால் உள்ள பக்தி மேலீட்டால் அன்று, தமக்கு மெய்ச்சார்பு எது என்று அறிந்தமையால் அன்று, த மது பிரச்சினை எப்படியாகிலும் தீர்ந்துவிட வேண்டுமென்ற அவாவினுல் மா த் தி ர ம் பின் வருமாறு கூறிஞர்கள் :
"சினந்து பயனென்? கைலே சென்று மகளையும் மருமகனையும் பார்த்து வா"
தக்கனும் உடன்பட்டான். உடன்பட்டுச் சென்று கைலையில் பரமேஸ்வரனது திருக்கோயிலின் புறவாயிலைக் கடந்து உள்ளே புக முயன்ற போது, அவ்வாயிலைக் காத்து நின்ற பூதர்கள் "எங்கே போகிருய், இப்படி நில்' என்று தடுத்தார்கள்.
தக்கனுக்கு இன்னும் ஒரு முறை நான்காம் முறை யாகக் கோபம் வந்த து. ஏதேதோ சொல்லி விட்டுத் திரும்பிவிட்டான். தி ரு ம் பித் தன்னிருப்பிடம் சேர்ந்து பிரமன், மால் உள்ளிட்ட அனைவரையும் கூவித் தன்னைச் சூழ நிற்கவிட்டுச் சுட்டு விரல் காட்டி ஒன்று சொன்னன்: "உமையொரு பாகனுரை இ ன் று மு த ல் நீர் வணங்கக் கூடாது, மதிக்கக்கூடாது; எனது இக் கட்டளையினை மீறினல் உமது பதவிகளே, உரிமைகளைப் பறித்து விடுவேன்' பாவம் தம்பதவிகள் தக்கன் தந்தவை என்று கருதிய தேவர்கள், மறுமொழியாக "கோபித்து சொல்லுகிருய் போலும், நின்

ஆத்மஜோதி (3
ஏவல் தப்பியது உண்டோ? நீ பணித்ததனைச்செய்வோம்கோபிக்க வேண்டாம்' என கூறித் தம் இருப்பிடம் சேர்ந்தார்கள்.
தேவர்கள் பல காலம் தக்கன் கட்டளையினை மீற அஞ்சி, கும்பிடாமல், வேள்வி இயற்ருமல் இருந்தார்கள். பிரமனுக்கு மாத்திரம் இருப்புக் கொள்ளவில்லை. வேள்வி ஒன்று இயற்றத் தொடங்கினுன். தக்கனையும் அழைத் தான், மற்றும் வானவரையும் அழைத்தான். இவ்வாறு
இவர்களை அழைத்த பிரமன், பரமேஸ்வரனையும் அழைக்க,
தானே கைலை ஏகிஞன். ப ர மே ஸ் வ ர னு ம் தனக்குப் பதிலாக நந்தியம் பெருமானை அனுப்புவதாகக் கூறி விடுத்தார்.
வேள்வி தொடங்கியது. விண்ண வரும் முனிவர்களும் வந்தார்கள். தக்கனும் வந்தான். பிரமா அவரவர் தகுதிக் கேற்ப ஆசனங்கள் நல்கி இருக்கச் செய்தான், நந்தியெம் பெருமானும் கைலாய நா த னி ன் கட்டளைக்கிணங்க வந்தனன். வந்தது, தக்கனுக்குக் கோபம். பின்வருமாறு பேசத் தொடங்கினன்: 'சுடுகாட்டிலே பூதங்கள் சூழ, உடற் குறையினைச் சூலத்தில் ஏந்தி நெருப்பின் நடுவிலே ஆடும் சிவனுக்கு நீ அவிப்பாகம், மு ன் னை பே ா ல, வழங்கக் கூடாது. அதனைப் பெறத் தகுதியில்லாத பித்தன் அவன். இன்று தொடக்கம் அவனைப் பரமெனக் கூறும் வேதவாக்கியங்களை நீ விலக்கு"
பரம ஈஸ்வரனிடத்து கற்பொழுக்கம் பூண்டு ஒழுகுப வரும், தண்ட நாயகரும், பரம அடியாரும் ஆகிய நந்தி யந் தேவர் "ஐயோ, இதனைக் கேட்கவா, ஈசனே இங்கு என்னை அனுப்பி வைத்தாய்' என்று ஒரு கணநேரம் இரங்கினூர். இரங்கியதன் மேல் அ ன் ட சராசரங்கள் எல்லாம் பயப்படும்படியான ஒரு சினம் கொண்டு, தக்க னேயும் அங்கு நின்ற வர்களையும் விளித்து ஒரு ஆனே

Page 6
104 ஆத்மஜோதி
சொன்னூர், ?? தக்கனே கேள்! நின் திருவெலாம் தீர்க! உனக்கு இப்பொழுது உள்ள புல்லிய தலை அற, இன்னுெரு புல்லிய தலை உறுக! தேவர்களே! வெறும் பதவிக்குப் பயந்து, வெறும் அதிகாரத்திற்குப் பயந்து, நீங்கள் சிவ நிந்தனையினைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்; சிவநிந்தனை செய்யும் ஒருவனின் சொற்படி நடக்க ஒருப்பட்டீர்கள். நீங்கள் உடனடியாக மாண்டு, பிறந்து, யுகம் யுகமாக குரனெனும் அவுணனின் ஆணையின் கீழ்ப்பட்டு உழலக்
5L6 is 6t'.
பரம அடியார் ஒருவரது நிறை மொழி பிரவர்த்திக்கத் தொடங்கியது.
(தொடரும்)
என்னிடத்தில் மூடநம்பிக்கை எது வும் கிடையாது என்று நம்புகிறேன். உண்மை புராதனமானது என்பதால் மட்டும் உண்மையாகி விடாது. அதேபோல புராதன காலத்தைச் சேர்ந்தது என்பதற்காக அதைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டுமென்ற அவசியமும் இல்லை,
X- ★ வேதங்கள் மட்டுந்தான் தெய்வத்தன்மை உடையவை (மற்றவை அப்படியல்ல) என்பதை நான் நம்பவில்லை. பைபிள், குரான், ஜெண்டு அவெஸ்தா ஆ கி ய  ைவ யு ம் வேதங்களைப் போலவே தெய்வத் தன்மை உடையது என் பது என் கருத்து.
இந்து வேதங்களிடத்தில் நான் கொண்டுள்ள நம்பிக்கை அவற்றின் ஒவ்வொரு சுலோகமுமே தெய்வத்தன்மை வாய்ந்தது என்று ஏற்றுக்கொள்ளும்படி என்னை வற்புறுத் தவில்லை. வியாக்கியானம் எவ்வளவு அறிவாற்ற லோடுவிள ங்கினுலும், அது காரண காரியத்துக்கோ, நேர்மைக்கோ மாறுபட்டிருக்குமானுல் அதை என்னல் ஒப்புக்கொள்ள
(LP49-ULİff51.
- மகாத்மா காந்தி

ஆத்மஜோதி 1{}莺
பிரயாணக் கட்டுரை. 15
மு. சிவ ரா சா,
பல்லாயிர வருடம் பழமை வாய்ந்தது கீழைத்தேசப் பண்பாடு. சில நூற்ருண்டு காலத்துக்குள்ளேயே வெகு வேகமாக முன்னேறி வருவது மேலே நாட்டு நாகரீகம், இவை இரண்டும் சங்கமிக்கும் இடம் ஒன்று உண்டென்ருல் அது பம்பாய் நகரமே. மேலே நாட்டுப் பொருள் எதுவா னலும் வந்திறங்குவதற்கு வசதியாய் இந்தியாவின் மேற்குக் கரையோரமாய் அமைந்துள்ள இதன் துறைமுகம் உலகப் பிரசித்தி பெற்றது. இந் தி யா வின் நு  ைழ வா யி ல் (Gareway of India) என்பதாக ஒன்றும் இங்கு நிர்மாணிக் கப்பட்டுள்ளமையும் இவ்வெண்ணத்தை ஆமோதிக்கிறது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜ்யார்ஜ் மன்னரும் மேரி இராணியாரும் இந் தி ய சக்கரவர்த்திகளாக முடிசூட வந்திறங்கி இந்த நுழைவாயில் வழியே தா ன் நகருள் புகுந்தனர்.
மேலை நாட்டு நாகரிகத்தைத் தழுவி அமைந்துள்ள பம்பாய் நகரம் இதுவரை நாங்கள் கண்ட நகரங்களையெல் லாம் அற்பம் என்றெண்ணும்படி எம்மை வியப்பில் ஆழ்த் தியது. கட்டடங்கள் ஒவ்வொன்றும் ஐந்து முதல் இருபது மாடிகள் வரை உயர்ந்தும், அதற்கு தகுந்தபடி விசால மாயும் காணப்பட்டன. வீதிகள் பல மைதானங்களோ என்று ஐயுறும்படிக்கு விரிந்து கிடந்தன. "மரைன் டிரைவ்" என்ற கடற்கரை வீதி பிறை போல் வளைந்து இரண்டு மூன்று மைல் நீண்டு கிடக்கிறது, 'செளபாத்தி' கடற்கரை மைதானத்திலிருந்து தெற்கு நோ க் கி ச் செ ல் லு ம் "நேதாஜி சுபாஷ்' வீதி சிறிது கிழக்கே உள் வளைந்து செல்ல, ஒருபுறம் கடலும் மறுபுறம் வரிசையான மாடிக்

Page 7
106 ஆத்மஜோதி
கட்டடங்களும் கண்ணை கவருகின்றன. இந்த வீதியே "மரைன் டிரைவ்". இந்த வீதியின் முழு அமைப்பையும் செளபாத்திக்கு மேற்கே உள்ள "கமலா நேரு பூங்கா' வில் நின்று பார்த்து ரசிக்கலாம். அப்பொது வரிசை யாய்த் தெரியும் ஏழடுக்கு வீடுகள் யாவும் தொலைவிலே தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்று ஒரே சீராய் தோன்றும். இந்தப் பூங்காவின் ச மீ ப ம |ா ய் இருப்பது "தொங்குத் தோட்டம்' உண்மையிலேயே அது ஆகாயத் தில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை சேர் பெரோஷா மேதா gkrijgsr69) al (Sir Pherozshah mehta Gardens) syGég) உயரமான குன்றில் படிகள் படிகளாகச் செய்து செடிகொடி களை வளர்த்து வா னி லி ரு ந் து தொங்கும் தோட்டம் போன்ற பிரமை உண்டாகும் வண்ணம் செய்திருக்கிருர் கள். இங்கு சில செடிகளை கத்தரித்து யானை, மான், ஒட்டகம், மயில் போன்றவற்றின் உருவங்களை அமைத்தி ருப்பது அழகாயிருக்கிறது.
செளபாத்தியிலிருந்து மரைன் டிரைவ் வழியே அரை மை ல் தொலைவில் "தரப்போரேவளா மீன் பண்ணை' (Taraporeva!a ApuAari u m) (9)(U5ğ;65)/Dğ5I. 2 5 60)Lu5Fmr l 9?JT (36).u சப் பணம் கொடுத்து உட்சென்ருல், க ட லி ன் கீழுள்ள ஏதோ ஒரு புதிய உலகத்திற்கு வந்து விட்டாற்போலிருக் கும். வேறு வேறு உருவம், வெவ்வேறு நிறம், சிறிய யதும் பெரியதுமான நீர் வாழ் ஜந்துக்களின் பல இனங்கள் வருவோரைப் பார்த்து ' எங்களைக் கண்டே திகைக்கிறீர் களே, எங்கள் இனத்தவர் இன்னும் பன்னுாருயிர யோனி பேதத்தவர் கடலின் கீழிருக்கிருர்கள்' எனச் சொல்லுவன போல் தெரியும்.
பம்பாய் நூதனசாலையின் பெயர் 'வேல்ஸ் இளவரசர் நூதனசாலை' (Price of Museum) புராதனச் சின்னங்கள், சரித்திரப் புகழ் பெற்ற பொருட்கள், சிற்ப, சித்திரக் கைவேலைத் திறனைக் கா ட் டு ம் பொருட்கள் ஆகியன

ஆத்மஜோதி 7
நிறைந்திருக்கின்றன. "விக்டோரியாப் பூங்கா' எ ன் ற
நூற்றில் ஒரு பங்கு தானும் இல்லை. இது ஏமாற்றத்தையே தந்தது.
பம்பாய்த் துறைமுகத்தின் பெருமை சொல் லித் தெரிய வேண்டியதில்லை. அலெக்சாந்திரா, விக்டோரியா, பிரின்ஸ் ஆகிய மூன்று கப்பல்கட்டும் தளங்கள் முக்கியமானவை. கரையை அடுத்துச் சிறு குடாநாடுகளில் மண்ணெய் சுத் திகரிப்பு ஆலைகளை நிறுவி, கப்பல்களிலிருந்து மண்ணெய்யை நேரே அங்கு எடுத்தும், சுத் திகரித்த எரிபொருள் வகைகளை
தரைமார்க்கமாய் அங்கிருந்து ந க ரு க் கு ஸ் அனுப்பியும்
தொழில் நடக்கிறது.
சாலைகள் நீண்டவை, அகலமானவை. ஒரிடத்தில் நின்று சாலையை ஒரு நிமிடம் அவதானித்தேன். என்னைக் கடந்து அங்கும் இங்குமாய் ஓடிச்சென்ற வாகனங்கள் இருநூற்று க்கு மேலிருக்கும். அதே காலத்தில் நடை பாதையில் என்னைக் கடந்து சென்ற மக்கள் தொகை இரண்டாயிரம் என நம்பலாம். தெருக்களைப் பாதசாரிகள் கடப்பதற்கு ஆங்காங்கு 'கடவை' (Pederian Crossings) வைத்தார்கள். சில நிமிடத்துக்கொரு முறை வாகனங்களின் போக்கை நிறுத்தி பாதசாரிகள் தெருவைக் கடக்க வழி செய்கிறர்கள் பொலிசார். அப்பொழுது பார்க்க வேண்டும் ஜனத்திரளை ! பெருவெள்ள்ம் சிறு மத கா ல் குபு குபுவென பாய்வது போல் மக்கள் கூட்டம் டொங்கி வழியும். இத்தனை லட்சம் மக்களுக்கும் இந்த நகரில் என்ன வேலையோ! என்ன அவசர மே7 என்று எண்ணத் தோன்றும்.
தெருவிற் செல்லும் வாகனங்கள் தொகைதான் இவ்
வளவெல் ருல் தண்டவாளத்தின் மேலோடும் 'றயில் '
வண்டிகளின் எண்ணிக்கையுமல்லவா திகைக்க வைக்கிறது.

Page 8
1898 ஆத்மஜோ
45
ஒரே சமயத்தில் ஆறு வண்டிகள் LJф5 Lie Lješ45 மாகப் போவதைக் கண்டேன். மின்சார றயில்களில் கடுகதி வண்டிகள் போக ஒரு பா8தை, வர ஒரு பாதை. அவற் றின் மெதுவண்டிகள் (Slow Trains) Gusts, alpit இரு L IIT 60) 5 கள். டீசல், நீராவி றயில்கள் போக, வரப் பல பாதைகள் எல்லாப் பாதைகளாலும் அடிக்கடி வண்டிகள் ஒடுகின்றன சில நிமிடம் பார்த்தவுடன் எ ப் படி த் தா ன் இவ்வளவு வண்டிகளும் விபத்துக்குள்ளாகாமல் போய் வருகின்றன என வியந்தேன். புகைவண்டி நிலையங்களில் விக் டோரியா எல்லை நிலையம் (Victoria Terminus) மிகப் பெரியது. உள்ளே யும் சரி வெளியேயும் சரி அது மிக மிகப் பெரிய நிலையமே கீழைநாட்டு புகையிரத நிலையங்களுள் மிகப் பெரியவற் றுள் ஒன்ரு யும், உலகின் அழகிய புகையிரத நிலையங்களுள் ஒன்ரு யும் இருப்பது பெருமைக்குரியது. V. T. க்கு முன்னே கம்பீரமாகத் தோற்றமளிப்பது 225 அடி உயரமுள்ள, பம்பாய் நகராண்மைக் கழக நிலையம்.
பம்பாயின் எந்தப் பகுதியுமே மிகவும் சந்தடி நிறைந் ததாகக் தெரிந்தது. சந்தைகள், கடைகள், கடைத்தெருக் களைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. குருே போட் சந்தை (Crawford Market) முக்கியமானது. 1871 ஆம் வருடத்தில் கட்டப்பட்ட இச்சந்தை மிக விசாலமானது. ஒருவருக்கு வேண்டியன யாவற்றையும் இங்கு வாங்கிக் கொள்ளலாம். இத்தனை சந்தடி நிறைந்த ந க ரி ல் அமைதியின் நிழலைக் கூடக் காண முடியுமா என்று நினைத்த எமக்கு உண்மை யான அமைதியைத் த ந் த இட ம் 'மணிபவன்' ஆம். மஹாத்மா காந்தி 1917 முதல் 1934 வரை பம்பாய்க்கு வரும் பொழுதெல்லாம் தங்கியிருந்த நிலையம் இது ஒரு முறை அவர் தங்கியிருக்கும் போது கைதாகினர். இந்தப் புண்ணிய மாளிகையின் புனிதத் தன்மை மிக கவனமாகப் பேணப்படுகிறது. 'மணிபவனி'ல் காந்தி மஹான் எழுதிய நூல்கள், அவரைப் பற்றிப் பிறர் எழுதிய புத்தகங்கள், அடிகள் கைப்பட எழுதிய கடிதங்கள், குறிப்புகள் முதலியன வும் பாது கா த் து வைக்கப்பெற்றுள்ளன. காந்திஜியின்
奪ス。

ஆத்மஜோதி 109
வாழ்க்கை முற்றிலும் வ ரி சை யாக மாட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் விளக்கப்படுகின்றது. எல்லாவற்றுக் கும் மேலாக இங்கு பணி புரிவோர் காட்டும் அன்பும் மரியாதையுமே காந்தியடிகளின் இ த ய த் தை க் காட்டப் போதுமானது.
அன்பர் பிரார்த்தனை மண்டபத்துக்கு எங்களே அழைத்து
சென்ருர், பீடம் ஒன்றில் காந்தி (படம்) புன்முறுவலுடன் காட்சி தந்தார். சப்த நாடியும் ஒடுங்கக் கண்ணே மூடி மெய்ம்மறந்து உட்கார்ந்திருந்தேன். மஹாத்மா கடவுளைப் பற்றி அரியதொரு பிரசங்கத்தைச் செய்தார். கண்ணேத் திறந்தால் எங்கே என் பிரமை நீங்கி விடுமோ என்று பயந்து மூடிக் கொண்டேயிருந்தேன். பேசிய விஷயம் முன்பு எங்கோ கேட்டிருந்தாற் போலத் தோன்றியது. பேச்சு முடிந்ததும் கண்ணைத் திறந்தேன். அன்பர் கூறி ஞர். "இதுவரை நாம் கேட்டது காந்தியடிகள் 1931ஆம் ஆண்டு முதலாவது வட்டமேசை மகாநாடு லண்டனில் நடைபெற்றபோது பேசியதன் ஒலிப்பதிவு, இனி எம் எஸ் அவர்களின் பிரார்த்தனைக் கீதமும் கேட்கலாம்." அடிக இரின் சொந்தக் குரலில் கேட்பது பிரமை என்று நினைத்த பிரமை போய்விட்டது. படத்தின் பின்னூல் ஒலிபெருக்கி வைத்து அடிகளின் சொந்தக் குரலைக் கேட்கச் செய்தபோது சூழ்நிலை நெஞ்சை உருக்கிக் கண்ணைக் கசிவித்தது. "வைஷ் ணவ ஜனதோ பாடல் காதில் ஒலித்தது. வெள்ளிக்கிழ மை தோறும் இங்கே பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறு கிறது.
பம்பாய் நகரின் 'மாதுங்கா பகுதி கொழும்பில் வெள்ள வத்தைக்குச் சமம். மாதுங்காவில் தென்னுட்டவர் நெரு ங்கி வாழுகிமூர்கள். கடற்கரையோரமாக நெடுந்தூர நடை பயிலலாம். மாதுங்காவிலிருந்து தாதர் வரை கரை யோரம் நடந்து தாதரில் சிவாஜி பூங்காவை அடைந்தோம். தெருவின் மறுபுறத்தில் கேரள சமாஜ அரங்கு அன்று (1.1, 67) மாலை பூரீ கிருஷ்ணமேனனுக்கு வரவேற்பு அ

Page 9
O ஆத்மஜோதி
க்கு முகமாக ஒரு கூட்டம் நடைபெற்றது. வீர சிவாஜி யின் சிலைக்குப் பக்கமாக மேடை அமைத்திருந்தனர். அர சியல் முக்கியத்துவம் வாய்ந்த அக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் லட்சம் பேரிருக்கும்.
பம்பாய் நகருக்கு நீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கம் "விஹார் ஏரி. நகரிலிருந்து சுமார் 25 மைல் தொலைவி லுள்ளது. பொழுது போக்குவதற்கு வசதியாக பக்கத்தி லேயே விஹார் பூங்கா அமைத்திருக்கிரு?ர்கள். அங்கு சிற் றுண்டிச் சாலையும் விடுதியும் கூட உண்டு. நகரிலிருந்து ஒதுக்குப் புறமாயுள்ள இந்த இடத்துக்கு வார இறுதி நாட் களில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பம்பாயின் சந் தடியிலிருந்து விலகி அமைதியை அனுபவிப்பர்.
அடாடா! பம்பாயைக் கண்ட பிரமிப்பில் கண்டனவ ற்றை மனத்தில் பட்ட வண்ணம் தொடர்பில்லாமல் கூறி விட்டேன். எனினும் கண்டவற்றை முறைப்படி சொல்லக் கடமைப் பட்டவனுதலின் அவற்றை ஒழுங்குபடுத்துகிறேன்.
நண்பர் துரைராசாவும் நானும் வி. ரி. புகையிரத நிலை யத்தில் இறங்கி அருகே இருந்த விடுதி ஒன்றில் இடம் பிடித்தோம். தினமும் பிற்பகல் 2, 30 மணிக்கு மஹ ராஷ்டிர அரசாங்கம் உல்லாசப் பிரயாணிகள் பொருட்டு நகர் சுற்றுலா பஸ் ஒன்று புறப்பட ஒழுங்கு செய்திருக்கி pg), (3)iagaja) sh Foreshore Road, Opposit Yogakshema, L. I. C. Building, Bombay - 32, BR. Grairs) (p56), fluidi) 2.6ir 675).) அன்றைய பஸ்ஸில் இருவருக்கும் இடம் கிடைத்தது. இந் திய நுழைவாயில், நூதனசாலை, மிருகக் காட்சிச்சாலை, செளபாத்திக் கடற்கரை கண்டு, மரைன் டிரைவ் வழியாக மீன் பண்ணைக்கு வந்தோம். முக்கியமான வீதிகளூடே பிர யாணம் செய்து கமலாநேரு பூங்காவும் தொங்கு தோட்ட மும் பார்த்துத் திரும்பினுேம் .
நள்ளிரவு 12 மணிக்கு பம்பாய் நகரில் வெடிகளும் கப்பல், றயில் முதலியனவற்றின் சங்கொலிகளும் சேர்ந்து

ஆத்மஜோதி
கோலாகலமாக 1967 ஆம் ஆண்டை வரவேற்றன. மறு நாட்காலை 7 மணிக்கு இந்திய நுழைவாயிலின் சமீபத்தி லிருந்து புறப்பட்ட மோட்டார்ப் படகு ஒன்றில் எலிபெ ண்டா தீவு நோக்கிப் பயணமானுேம், (போ கவர டிக்கட் ரூபா 3.20). 1967ஆம் வருடத்தை அகில உலக உல்லா சப் பிரயாண வருடமாகக் கொண்டாட வேண்டுமெனப் பல தேசங்கள் தீர்மானித்திருந்தன. வருட ஆரம்பத் தையே அவ்வழியில் கழிக்கக் கிடைத்த எமது அதிட்டத் தை நினைந்து மகிழ்ந்து கொண்டே அலைகடலில் - இல்லை அமைதியான கடலில் - பயணம் செய்தோம், சில நிமிடங் கள் கழிய கடல் நீரிலிருந்து பொற்றகடு ஒன்று செக்கர் வானில் சிறிது சிறிதாக ஏறியது. அப்போது கடல் நீர் தன் கருமை நிறம் மாறி பொன்னிறத்தைப் பிரதிபலித் துக் கொண்டிருந்தது. கடலின் ஒருபுறம் இப்படியும் மறு புறத்தில் பம்பாயின் பெரிய பெரிய கட்டடங்கள் எல்லாம் பனிப் புகாரில் மறைந்து கொண்டிருப்பதையும் கண்டேன். உதய சூரியன் செய்த ஜால வித்தைகளைக் கவிதைகளில் அடக்கும் புலவனுய் மாறிவிட மாட்டோமா என்று தோன் றிற்று. ஆனல் உடனேயே அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு நழுவியோடுகின்ற அவ்வரிய காட்சியை இயன்ற மட்டும் கண் கொட்டாமல் பார்த்து மனத் திரையில் பதிய வைக்க முயன்றேன்.
வெயில் ஏறியது. 8. 15 மணிக்கு எலிபண்டா தீவை யடைந்தோம். கரையிலிருந்து கால் மைல் தூரத்தில் பிர சித்தி பெற்ற குகை. பிரவேசச் சீட்டு வாங்கி உள் நுழைந் தோம். குகைகளில் முக்கியமானது ஒன்றுதான். அதனுள் ஒன்பது காட்சிகள். படியேறியதும் முதலாவது வலது பக் கத்தில் உள்ளது நடராசர் சிற்பம். சுமார் 12 அடி உய ரம் 8 அடி அகலம். காலம் நடராசரின் காலைச் சிதைத்து விட்டது உள்ளே 26 கால் மண்டபம், அதன் நாப்பண் நாற் புறமும் வாயில் கொண்ட கர்ப்பக் கிருஹத்தில் சிவலிங்கம். கருப்பக் கிருஹத்தின் வாயில்களில் 15 அடி உயரத் துவார பாலகர்கள். அடுத்த காட்சிகள் அந்தகாசுர வதம்,

Page 10
12 ஆத்மஜோதி
பார்வதி கல்யாணம், அர்த்த நாரீசர், சிவனும் உமையும், சது ரங்கம் ஆடல், இராவணன் கைலையைப் பெயர்த்தல், சிவன் தபசு ஆகியன. ஒவ்வொரு காட்சியும் மணிக் கணக்காகப் பார்த்து ரசிக்கத் தக்கன. இவையெல்லாவற்றுக்கும் சிக ரம் வைத்தாற் போன்றுள்ள காட்சி திரிமூர்த்தியினுடை யது. சிவனின் தோற்றங்களுள் அபூர்வமானது; அற்புத மானது. 20 அடி உயரத்தில் மார்புக்கு மேல் முடிவரை காட்டப்படுகிறது. சிரம் ஒவ்வொன்றும் ஆறு அடி. மூர்த்
தியின் முன்னுேக்கிய முகம் படைத்தல் தொழில் செய்யும் பிரமா. வலதுபுறம் உள்ள முகம் காக்கும் விஷ்ணு. இடதுபுறம் அழிக்கும் உருத்திரன். மூவரும் ஆகி நின்ற மூர்த்தியின் தோற்றத்தில் மனம் ஒன்ற வெகு நேரம் மெய்ம் மறந்து நின்ருேம். இங்கு எமது புகைப்படக் கருவிக்கு நிறைய வேலையிருந்தது.
இக் குகைக்கு வெளியே வடக்குப் புறத்தில் இரண்டு மூன்று குகைகளுக்குப் போனுேம், சிவலிங்கங்கள் துவார பாலகர்கள் தவிர, குறிப்பிடக் கூடிய வேறென்றும் தென் படவில்லை. திரிமூர்த்தியைக் காண்பதற்கென்றே இன்னும் எத்தனை தரம் வேண்டுமானுலும் இங்கு வரலாம் என்ற முடிவுக்கு என் மனம் வந்தது. 10-45 மணிக்குப் படகேறி 12 மணிக்கு அப்போலே பந்தர் இறங்கு துறையை அடைந் தோம். வரும்போது இந்திய அணு ஆராய்ச்சி நிலையம் உள்ள தீவைத் தூரத்தே கண்டோம். பம்பாய் நகரைய டைந்து, துறைமுகம் பார்த்து, மாதுங்கா தாதர் போ னுேம். மறுநாள் விஹார் ஏரியையும் பூங்காவையும் பார் த்த பின், காந்திஜீயின் நினைவுச் சின்னமான 'மணிபவன்' போனுேம், இது இருக்கும் இடம்: 19, Labarnam Road (near Gowalia Park) Bombay 7. Lair 60Trf (s.3 mp until Fi தைக்குச் சென்ருேம். மாலையில் 7.15 மணிக்கு கல்கத்தா புறப்படும் வண்டியில் ஏற்கனவே ஒழுங்கு செய்துகொண்ட படுக்கைகளில் ஏறி மூன்ரும் தேதி மாலை 6, 15 மணிக்கு துர்க் புகையிரத நிலையத்தில் இறங்கி பிலாயில் எமது விடு தியை அடைந்தோம்.
ܘܼܲܟ݂ .
ܒܢܬܐ

ஆத்மஜோதி 3.
2
முருகனைப் பாட மும்மலம் அறுமே
(செல்வி. P. விமலா - மதுரை)
பல்லவி
முருகாஎன்றே முத்தமிழில் நான் முத்து முத்தாய் தினம்பாடிடுவேன் (முருகா)
அனுபல்லவி
முருகா என்றே பாடிடும் வேளையில் மாமயில் நின்றே ஆடிடும் முன்னுல் மாமயில் ஆடிட பூங்குயில் பாடிடும் மாவினைதீர்ந்திடும் முருகன்தன் அருளால் (முருகா
சரணம்
குருபரா என்ருல் குருவாய் நிற்பான் கந்தா என்ருல் கருணையைப் பொழிவான்
முருகா என்றே ஒரு முறை மொழிந்தால் மும்மலம் அறுப்பான் கடைவிழியாலே (முருகா)
கொஞ்சும் குமரனை கொண்டாடுவோம் - தமிழ் (கொஞ்)
அனுபல்லவி கோலமயில் வாகனன குஞ்சரி மஞளன
கோயில் கொண்ட குகனை குமரனை (தமிழ் கொஞ்)
g: Go To
செந்தில் பதியில் காசிபர் மைந்தன் தீரன் சூரனை வேல் கொண்டொழித்தே பரங் குன்றம் தன்னில் குஞ்சரியை மணந்த சரவண பவகுகா கந்தா என்று (தமிழ் கொஞ்)

Page 11
4
4.
ஆயிரம் பாடிட ஆசை கொண்டேன் ஆறுமுக வேலன் அழகன் முருகனை (ஆயிரம்)
அனுபல்லவி
கிரிபுரம் எரித்த திருக் கண்ணில் உதித்த தீப்பொறி ஆறும் திருவுரு ஆருய் சரவண பொய்கையில் கமலத்தில் உதித்த திருமகள் மருகன் குற வள்ளி நாயகனை (ஆயிரம்)
சரனம்
குமர குருபரனுக்கு குரல் கொடுத்தருளி குன்றுதோறும் நின்று விந்தை பல புரிந்து
அண்ணுமலையில் அருணகிரிக்கருளி அகங்குளிர வைத்த சிங்காரவேலனை (ஆயிரம்)
கத்தனைக் காணத்துடித்தேன் கதிர்காமத்திலே எந்தனை எண்ண மறந்தேன் அந்த நேரத்திலே (கந்தனை)
அனுபல்லவி
பாடிப் பணிந்தேன் அவன் பாதத்திலே தேடிப் பறந்தேன் தென் இலங்கையிலே ஒடி ஒளிந்தான் அவன் கதிரமலையினிலே காணுமல் தவித்தேன் கங்கை கரையினிலே (கந்தனை)
சஏனங்கள்
மாணிக்க கங்கை தடுத்தான் எல்லையிலே - - மனங்குளிர சரணடைந்தேன் அன்னை மடியினிலே மாசெல்லாம் துடைத்த ஷண்முகப்ரியாள் கந்தன் சன்னதிதனை காட்டி நின்றுள் (கந்தனை)
விந்தைகண்டேன் மாயத் திரையினிலே மெய்சிலிர்த்தேன் அவன் கருணையிலே சரணடைந்தேன் கந்தன் சன்னதி முன் மரணபயம் ஒழிந்தேன் பாரினிலே, (கந்தனை)
 

ஆத்மஜோதி 1 5
விதியை வகுப்பவன் மனிதனே! (சுவாமி விவேகானந்தர்) SzAS S LSS S LzSSS S LSAAS S LSSzSS SSSSLLzSSzASSSLLzSSS S LzS LLLLSSeeS
தென்னிந்தியாவிலே ஆற்றல் மிக்க குலம் ஒன்று இருந் தது. அக் குலத்தவர்கள் அப்போதைக்கப்போது வாழ்ந்த சிறந்த மனிதர்களின் ஜாதகங்களை எல்லாம் கணித்து, அவற்றைத் திரட்டி வைப்பது என்ற விதியை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன்படி அவர்களுடைய வாழ்நாளில் என்ன என்ன நிகழ்ச்சிகள் முக்கியமாக நிகழும் என்று சோதிடர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளோடு, அதன் பிறகு வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இப்படியே ஒர் ஆயிரம் ஆண்டு காலம் செய்து வந்தார்கள். அதன் பிறகு சில ஒற்றுமைகளைக் கண்டார்கள். அவ்வொற்றுமைகளைக் கொண்டு, பொது விதிகளை வகுத்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்துவந்த குலம் அழிந்து போயிற்று. என்ருலும் சோதிடர்களது குலமானது வாழ்ந்து வந்தது. அந்தப் புத்தகமும் அவர் களிடத்தே இருந்தது. சோதிடம் இவ்வாறே தோன்றி இருக் கலாம். சோதிடத்தின் அம்சங்களிலுங் கூட அளவு கடந்த கருத்துச் செலுத்துதல் இந்துக்களை மிகவும் கெடுத்து வரு கின்ற மூடப் பழக்கங்களுள் ஒன்ருகும்.
கிரேக்கரே முதன்முதல் சோதிடத்தை இந்தியாவிற்கு அளித்தனர்; இந்துக்களிடமிருந்து வான சாத்திரத்தை எடுத்துச் சென்றனர். இது என் கருத்து. இந்தியாவிலே பழைய பலிபீடங்கள் எனக் குறிப்பிட்ட க்ஷேத்திர கணி தப்படம் போன்று கட்டப்பட்டு இருப்பதைக் காணலாம். மேலும் அங்கு, வானத்திலே விண் மீன்கள் குறிப்பிடப் பட்ட இடத்தில் இருக்கும்போது, சில காரியங்களைச் செய்

Page 12
16 - ஆத்மஜோதி
தாக வேண்டும். ஆகவே, கிரேக்கர் இந்துக்களுக்குச் சோ திடத்தைத் தந்தனர் என்றும், இந்துக்கள் அவர்களுக்கு வான சாத்திரத்தைத் தந்தார்கள் என்றும் நான் கருதுகி றேன்.
இன்னின்னவை நிகழப் போகின்றன வியப்பு றும் படி முன்கூட்டியே சொன்ன சில சோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன். விண்மீன்களைக் கொண்டு மட்டும், அல்லது அவை போன்றவற்றைக் கொண்டு மட்டும் அவர் கள் அந் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொன்னுர்கள் என்று நான் நம்பவில்லை. வந்தவர்களது மனத்தில் உள்ளதை அவர்களது முகக் குறிப்பைக் கொண்டு அறிந்து கூறியன வாகும் அவற்றிற் பல. சில சமயங்களில் அவர்கள் கூற்று பொய்யாகின்றது. இலண்டன் மா நகரிலே இளைஞன் ஒரு வன் என்னிடம் வந்து "அடுத்த ஆண்டு நான் எவ்வாறு இருப்பேன்" என்று கேட்பது வழக்கம் , 'ஏன் அவ்வாறு கேட்கிருய் என்று நான் அவனை விணுவினேன்?". "நான் என் பணத்தை எல்லாம் இழந்து மிக மிக ஏழையாய் ஆகி விட்டேன்" என்று அவன் மொழிந்தான். பலருக்குப் பணம் ஒன்றே கடவுள். இல்லாதவர் எல்லாவற்றையும் இழந்து, சக்தியற்றிருப்பதாக உணரும் போது, பணம் சம்பாதிப்பதற்கு எல்லா விதமான விபரீத முறைகளையும் கையாளுகின்மூர்கள்; சோதிடமும் பிறவும் நாடுகின்ருர்கள்.
"விதி என்போர் கோழையர்; மூடர்" என்னும் சமஸ்கிருதப் பழமொழி ஒன்று இருக்கிறது. ஆற்றல் மிக் கோன் எழுந்து நின்று, "எனக்குரிய விதியை நான் வகுப் பேன்’ என்று மொழிவான். முதுமையை அடைந்து கொண் டிருப்பவர்களே விதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார் கள். இளம் பருவத்தே உள்ள மக்கள் பொதுவாகச் சோ திடத்தை நாடுவதில்லை. கிரகங்களின் ஆற்றல்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக நாம் இருக்கலாம். என்ருலும், நாம் அதைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருத்தல் ஆகாது. "விண் மீன்களைக் கொண்டு கணக்கிட்டும், இவை போன்ற வேறு தந்திரங்களைக் கையாண்டும் வயிறு வளர்ப்பவர்களை

ஆத்மஜோதி 17
நாம் புறக்கணிக்க வேண்டும் என்று புத்தர் கூறினர். இந்துவாகப் பிறந்தவர்களுள் புத்தர் மிகவும் பெரியவர். ஆகையால் உண்மை உணர்ந்தே அவர் அவ்வாறு சாற்றி யுள்ளார். நட்சத்திரங்கள் வரட்டுமே; அவற்ருல் என்ன தீங்கு ஏற்படும்? ஒரு விண்மீன் என் வாழ்க்கைக்கு இடை யூறு விளைக்குமென்ருல், அத்தகைய வாழ்க்கையானது ஒரு சிறு காசுக்கும் உதவாது. சோதிடமும், மர்மமான இப் பொருள்கள் எல்லாமும் பொதுவாகப் பலவீனம் அடைந் துள்ள ஒரு மனத்தின் அறிகுறிகளாகும். ஆகவே இத்த கைய எண்ணங்கள் உங்கள் மனத்தை உறுத்துகிற நிலை ஏற்படுகிற போது, உடனே மருத்துவர்களை அணுக வேண் டும்: நல்லுணவும் நல்ல ஓய்வும் கொள்ள வேண்டும்.
ஒரு தோற்றத்திற்கு உரிய விளக்கத்தை அந்தத் தோற் றத்தின் இயல்பிலிருந்தே நீங்கள் பெறக்கூடும் என்ருல், அந்த இயல்பிற்கு வெளியே அந்த விளக்கத்தைக் காண முயல்வது அறிவின்மையாகும். உலகமானது தன்னைத் தானே விளக்கி நிற்குமானுல், அந்த விளக்கத்தை அதற்கு வெளியே காண முயல்வது அறியாமையாகும். மனித வாழ்க்கையிலே தோன்றும் தோற்றங்கள் பலவற்றை நீங் கள் கண்டிருக்கிறீர்கன். அவற்றிலே மனிதனது ஆற்ற லைக் கொண்டு விளக்க முடியாத தோற்றங்கள் எவற்றை யேனும் நீங்கள் எப்பொழுதாவது கண்டது உண்டா? ஆகவே, நட்சத்திரங்களையோ, இந்த உலகத்திலுள்ள வேறு எதனையோ நாடுவதால் என்ன பயன்? என்னுடைய இக் கால நிலமைக்கு என்னுடைய ஊரே போதிய விளக்கமா கும். ஏசு நாதருக்கும் இதுவே பொருந்தும், அவர் தந் தையார் ஒரு தச்சரே என்பதை நாம் அறிவோம். ےaWh1 ரது ஆற்றலுக்குரிய விளக்கத்தை அறிவதற்கு நாம் வேறு எவரிடமும் செல்ல வேண்டுவது இல்லை. அவரது முற் பிறப்பு முழுதும் இந்த ஏசுநாதர் தோன்றுவதற்கான ஆயத் தமே. விலங்கு உடல்களையே புத்தர் மீண்டும் மீண்டும் பெற்று வந்தார். தாம் இறுதியிலே எவ்வாறு புத்தரா ஞர் என்பதை அவர் சொல்லியிருக்கிருர், ஆகவே, விளக்

Page 13
8 ஆத்மஜோத
கம் பெறுவதற்காக நட்சத்திரங்களை நாடுவ தால் என்ன பயன்? அவை ஏதோ ஒரு சிறு ஆதிக்கத் அதைச் செலுத்தி வந்தாலும் வரலாம். அந்த நட்சத்திரங் களைப் புறக்கணிக்க வேண்டுவது நமது கடமை தவிர அவை சொல்வதைக் கேட்டுக் கோழைகளாவது நமது கடமையா காது. தான் போதிப்பதிலே முக்கியமானவற்றில் முதலா வதாக வற்புறுத்துவது இதுவே: அதாவது ஆன்ம பலவீ னத்தையோ, மன பலவீனத்தையோ, அல்லது உடலின் பலவீனத்தையோ உண்டு பண்ணுகிற எதையும் உங்கள் கால் விரல்களாலும் தொடுதல் ஆகாது என்பதே.
மனிதனது அகத்தே இருக்கும் இயற்கையான ஆற்ற லின் தோற்றமே சமயமாகும். அளவிலா ஆற்றல் விசை யொன்று இந்தச் சிறு உடலுக்குள்ளே சுருள் சுருளாகச் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சுருளானது விரி ந்து கொண்டேயிருக்கிறது. அது விரிந்து கொண்டு போ கப் போக, உடல்கள் ஒன்றின் பின் ஒன்ரு கத் தோன்றி வருவதும் போதவில்லை. ஆகவே அந்த விசையானது இந்த உடல்களை எறிந்து விட்டு, மிக உயர்ந்த உடல்களை எடுத் துக் கொள்கிறது. இதுவே மனிதனது வரலாறு; சமயத் தின் வரலாறு, நாகரிகத்தின் வரலாறு; முன்னேற்றத்தின் வரலாறு. கட்டுண்டு கிடக்கும் இராட்சத வலிமை படை த்த புரோமிதியஸ் என்பான் இராட்சத வலிமை படைத் தவன். இவன் திதான் பாபெதஸ் என்பானுக்கு மைந் தன். எபிமிதியவு என்பானுக்கு உடன் பிறந்தவன். அவன் களி மண்ணுல் மனிதனைச் செய்து, உயிர் கொடுக்கச் சுவ ர்க்கத்திலிருந்து தீயைத் திருடிக் கொண்டு வந்தான், ஜீயஸ் என்னும் கடவுளர் தலைவன் அவனைத் தண்டிக்க ஒரு பா ராங் கல்லிற் பிணித்து அவனைக் கொத்தித் தின்னுமாறு ஒரு கழுகை ஏவிஞன். கழுகு கொத்திய பகுதி இரவில் மீண்டும் வளர்ந்தது. ஹெர்குலிஸ் என்பான் வந்து கழு கைக் கொன்று விடுவிக்கும் வரை புரோமிதியஸ் பெரிதும் வருந்தினன். இவன் தன் கட்டுக்களைத் தானே அழித்துக் கொண்டு வருகின்ருன், ஆற்றலானது எப்பொழுதும் வெளிப்

* மஜோதி 19
பட்டுக்கொண்டே யிருக்கும். சோதிடம் போன்ற கருத்துக் களை எல்லாம், ஒரு கடுகளவு உண்மையிருந்தாலும் புறக்க னித்தே தீரவேண்டும்.
ஒரு சோதிடனைப் பற்றிய பழைய கதை ஒன்றுண்டு. அவன் ஓர் அரசனிடம் சென்று, "நீங்கள் ஆறு மாதங்க ளில் இறந்து விடப் போகிறீர்கள்’ என்று கூறிஞன். அர சன் அஞ்சினன். அவ்வச்சம் என் செய்தது? சாகும் நிலை க்கு அவனை உந்தியது. அவனுடைய மந்திரி நுட்ப புத்தி படைத்தவன். "இந்தச் சோதிடர்கள் மூடர்கள்" என்று அரசனிடம் கூறிஞன், மந்திரி கூறியதை அரசன் நம்ப வில்லை. மீண்டும் சோதிடனை அரண்மனைக்கு வரவழைத் தல்லாது வேறு வழியால் சோதிடர்களை மூடர்கள் என அரசனுக்குக் காட்ட முடியாது என்பதை மந்திரி உணர்ந் தான். சோதிடன் வந்ததும், அவன் கணித்த கணக்குக ளைச் சரிதான என்று மந்திரி கேட்டான். அவற்றில் ஒரு தவறும் இருக்கவே இயலாது என்று கூறி, மந்திரியைத் திருப்தி செய்து செய்வதற்காக, தான் கணித்த கணக்கு களையெல்லாம் மீண்டும் ஒருமுறை பார்த்து, அவை முழுவ தும் சரியே என்று சோதிடன் கூறினன். அரசனது முகம் நீல நிறம் போலாயிற்று நீ எப்பொழுது இறப்பாய்’ என மந்திரி சோதிடனைக் கேட்டான். 'பன்னிரண்டு வருடத் திலே" என்று விடை கூறினன் சோதிடன். மந்திரி தன் கத்தியை வேகமாக உருவி, சோதிடனது தலையை வெட்டி வீழ்த்தினன். 'இவனைப் பொய்யன் என்று இப்பொழுது காண்கிறீர்களா? இவன் இந்த விடிையே இறந்து போனுன் என்று அரசனிடம் சொன்னுன் ,
உங்கள் நாடு உயிர் வாழவேண்டும் என்று விரும்பி ஞல், இவற்றை எல்லாம் நீங்கள் அணுகுவதே கூடாது. பொருள்கள் உண்மையிலே நல்ல பொருள்களா என்பதைச் சோதித்து அறிவதற்கு உரிய ஒரே சோதனை அவை நம் மைப் பலமடையச் செய்கின்றனவா என்று கண்டறிவதே யாகும். நல்லது வாழ்வளிக்கும்; தீயது சாவைத் தரும்.

Page 14
20 ஆத்மஜோதி
சோதிடம் முதலிய இந்த மூட நம்பிக்கைக் கருத்துக்கள் காளான்கள் போல் உங்கள் நாட்டில் தோன்றியுள்ளன.
s
தர்க்க முறையில் ஆராய்ந்து பார்க்கும் திறமையில் லாப் பெண்டிர் அவற்றை நம்பும் ஆர்வத்தோடு இருக்கின் நனர். பெண்டிர் தமது விடுதலைக்காக முயன்று கொண் டிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் இன்னும் அறிவிலே தேறியவர்களாகாமலேஇருக்கின்ருர்கள். தலைப்பிலேகாணும் செய்யுள் வரிகளை ஒருத்தி மனப்பாடம் செய்து விட்டு, பிரேளனிங் என் பார் புதிய கவிகள் எல்லாம் தனக்குத் தெரியும் என்று கூறுகிருள், மற்றும் ஒருத்தி ஒரு தொட ர்பைச் சேர்ந்த மூன்று சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டு இந்த உலகில் உள்ள எல்லாம் தனக்குத் தெரியும் என்று எண்ணுகின்ருள். பெண்களுக்கு இயல்பாகவே அமைந்தி ருக்கும் மூட நம்பிக்கையை அவர்களால் விலக்க இயலவி ல்லை என்பதே ஒர் இடராய் இருக்கிறது. அவர்களிடம் திரம்பப் பணம் இருக்கிறது; ஆனல், அவர்களது கல்வி அறிவோ சிறிது. அவர்கள் இப்பொழுது இருக்கும் நிலையை விட்டு மேலான நிலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிருர் கள். அவர்கள் ஒரு திடமான நிலையை அடையும் போது அவர்கள் சரியாகி விடுவார்கள். இப்பொழுது அவர்களை வஞ்சகர்கள் ஏமாற்றி வருகின்ருரர்கள். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வருந்த வேண்டாம். எவருக்கும் நான் தீமை யை எண்ணவில்லை. ஆனல் நான் உண்மையைச் சொல் லியே தீர வேண்டும். சோதிடம் போன்ற இந்தப் பொருள் களுக்கு ஆளாவதற்கு எவ்வளவு எளியராய் இருக்கின்றீர் கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? இப் பெண்கள் எவ்வளவு கபடமில்லாமல் இருக்கின்ருர்கள். எல்லாரிடத் தும் மறைந்து ஒளிரும் கபடத் தன்மையானது எவ்வாறு எப்பொழுதும் அழியாது இருக்கின்றது. இதை நீங்கள் காணவில்லையா? தெய்வத்திடம் எவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் என்பதை யறிந்து கொள்வ தற்கே அவ்வாறு சொல்கிறேன்.

s་
ஆத்மஜோதி 2.
என் வாழ்நாள் நீள நீா, ஒவ்வொரு மனிதனும் தெய் வத்தன்மை பொருந்தியவன் என்ற கருத்து என் உள்ளத் திலே உறுதி பெறுகிறது. ஒருவனுே அல்லது ஒருத்தியோ எவ்வளவு அற்பத்தனத்தோடு இருப்பினும், அவனிடத்தி லோ அவளிடத்திலோ உள்ள தெய்வத்தன்மை அழிவதே யில்லை. அந்தத் தன்மையை அடைவது எப்படி என்பதை மாத்திரம் அறியாது இருக்கின்றனர். அவர்கள் உண்மை யைக் காணவும் அறியவும் காத்து நிற்கின்றனர். அவர்களை எல்லாவிதமான மூடச் செயல்களாலும் ஏமாற்றத் தீயோர் முயன்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் மற்றவனைப் பணத் துக்காக வஞ்சித்தால், அவன் ஒரு மூடன், போக்கிரி எனச் சொல்கிறீர்கள். மற்றவர்களை ஆன்மத்துறையிலே ஏமாற்று வது எவ்வளவு பெரிய கொடுஞ்செயலாகும்; பாவச் செயலா கும். இது மிகவும் கெட்டது. உண்மை என்பது உங்க ளைக் கட்டாயம் பலமுடையவர்களாகச் செய்ய வேண்டும். இதுவே உண்மையைக் கண்டு அறிவதற்குரிய சோதனை. மூடக் கொள்கைகளுக்கு ஆளாகாதவாறு உங்களை உயர்த் துவதே தத்துவ ஞானிகளுடைய கடமை. இந்த உலகம், இந்த உடல், இந்த மனம் என்பவைகூட மூடக்கருத்துக்களே. கட்டுத் திட்டம் என்பன சிறிதும் இல்லாத எத்தகைய ஆன்மாக்கள் நீங்கள். மின்னுகிற விண் மீன்களா நீங்கள் ஏமாற்றப்பட வேண்டுமா? இது வெட்கப்படுவதற்குரிய ஒரு நிலையாகும். நீங்கள் தெய்வங்கள். மின்னுகிற நட் சத்திரங்களின் வாழ்வே உங்களால் ஏற்பட்ட வாழ்வாகும்.
நான் ஒரு சமயம் இமய மலையிலே பிரயாணம் செய் தேன். பாதை நீண்டே நின்றது. ஏழைத் துறவிகளாகிய எங்களைத் தூக்கிச் செல்ல எவரே வருவர். ஆகவே நாங் கள் வழி முழுவதும் நடந்து தீர வேண்டியிருந்தது. எங் களிலே கிழவர் ஒருவர் இருந்தார். அந்தப் பாதையானது நூற்றுக்கணக்கானமைல் தூரம் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந் தது. அந்தக் கிழத் துறவியார் தம் முன்னே இருக்கும் பாதையின் நிலமை கண்டு, "ஐயோ, இதை எப்படிக் கட ந்து செல்வது? என்னுல் இனிமேல் சிறிதும் நடக்க இய

Page 15
. . .
εί να
122 ஆத்மஜோதி
லாது; என் இதயம் வெடித்து விடும்" என்ருர், "கீழே குனித்து பாரும்" என்று நான் அவரிடம் சொன்னேன். அவரும் அவ்வாறு பார்த்தார். 'உமது கீழ் இருக்கிற இந் தப் பாதையே நீர் இதுவரையில் நடந்து வந்ததாகும். இந்தப் பாதையேதான் நீர் உமது எதிரில் பார்ப்பதும், எதிரில் இருக்கிற பாதையும் விரைவில் உமது கீழதாகி விடும்" என்று நான் மொழிந்தேன். உயர்ந்த பொருள் கள் எல்லாம் உங்கள் காலடியில் இருக்கின்றன. நீங்கள் விரும்பினுல் விண்மீன்களை விழுங்கி விடலாம். இதுவே உங்கள் உண்மை நிலை. வலிமையுடனிருங்கள்; மூடக் கருத் துக்களை உதறித் தள்ளுக; விடுதலை பெறுக.
责 ★ ★ 女 女 女 女 ★ 女
சூரியாஸ்தமனத்தையும், நிலாவின் அழகையும் கண்டு வியக்கும்போது, சிருஷ்டி கர்த்தாவை நான் கும்பிடுகிறேன். அப்போது என் ஆத்மா விசாலமடைகிறது. இந்தச் சிருஷ் டிகளில் அவரையும் அவருடைய கருணையையும் காண நான் முயலுகிறேன். அவரைப் பற்றிச் சிந்திக்க உதவவில்லை என்றல், சூரியாஸ்தமனங்களும், சூரியோதயங்களும் எனக் குத் தடங்கல்களாகவே இருக்கும். ஆத்மாவின் போக்குக் குத் தடைசெய்யும் எதுவும் ஒரு மாயை, ஒரு வலை. அது, விமோசன மார்க்கத்தில் நமக்கு அடிக்கடி தடங்கல் பண்ணு கின்ற சரீரத்தைப் போன்றது.
கடவுளின் பலமும், கடவுளின் அருளுமின்றி அஹிம் 6)ாவாதியால் எதையும் செய்ய முடியாது. கடவுளின் பல மும் அருளுமின்றி, கோபமோ, பயமோ, பழிக்குப் பழி வாங்கும் உணர்ச்சியோ கொள்ளாமல் சாகின்ற தைரியமும்
அவனுக்கு ஏற்படாது.
- மகாத்மா காந்தி.
责 ★ ★ ★ 责。★ 禽 贪 ★

*ஆத்மஜோதி 123
பங்கு னி உத் தர ம கி  ைம
(நா. முத்தையா)
மலையக மக்கள் தீபாவளி, பொங்கல் ஆகிய திருநாட் களுக்கு அடுத்தபடியாகக் கொண்டாடும் திருநாள் பங்குனி உத்தர விழாவும் ஆடிப்பூசையுமாகும். ஆடிப்பூசை தென் னிந்தியாவில் காவேரி பெருகும் தினமாகிய "ஆடி பதினெ ட்டு" என்பதிலிருந்து உண்டானது. அங்கிருந்தே மலையக மக்கள் ஆடிப்பூசையையும் கொண்டு வந்தனர். பங்குனி உத்தர விழா மலையகமெங்கும் பரவலாகக் கொண்டாடப் படுகின்றது. மலையகத்தில் எல்லாத் தோட்டங்களிலும் மாரியம்மன் கோயில் இருப்பதனுலேயே பங்குனி உத்தர விழாவும் முக்கிய இடம் பெறலாயிற்று.
இமயமலையில் கேதார், பத்திரி ஆகிய இரு தலங்களுக் கும் யாத்திரை செய்வும் போது திரியுக நாராயண் என்ற தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மூன்று யுகங் களாக நாராயணன் அங்கு கோயில் கொண்டிருக்கிருர் என்பது ஐதீகம். அங்கு ஒரு யாக குண்டம் எப்பொழு தும் அணைந்து போகாது இடைவிடாமல் கொழுந்து விட் டெரிந்து கொண்டிருக்கிறது. பார்வதி பரமேஸ்வரனுடைய திருமணத்தின்போது வளர்க்கப்பட்ட யாகத் தீ இன்று வரை அவிந்து போகாது பாதுகாக்கப்பட்டு வருகிறது என் பது அவர்களுடைய ஐதீகமாகும்.
பார்வதி பரமேஸ்வரனுடைய திருமணம் நடைபெற்ற தினம் இப் பங்குனி உத்திரத் திருநாளாகும். மாதங்களில் பன்னிரண்டாவது பங்குனி, அச்சுவினி தொடங்கி நட் சத்திரங்களில் பன்னிரண்டாவது உத்தரமாகும். பன்னி ரண்டாவது மாதத்தில் பன்னிரண்டாவது நட்சத்திரம் பூர ணையில் ஒன்று சேரும் திருநாளே பங்குனித் திருநாளாகும்.

Page 16
124 ஆத்மஜோதி"
7
பின்பனிக் காலம் முடிந்து இளவேனிற் காலம் ஆரம்ப மாவது இத் திருநாளிலாகும். தமிழ் மக்கள் தமது வாழ்க் கையின் உயர்வை யெல்லாம் தெய்வத்தின் மேல் ஏற்றிக் கொண்டாடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாகும். எங்கும் நிறைந்த ஈசனுக்குத் திருமணம் செய்வதன் மூலம் தமது காதல் வாழ்க்கையையே உலகறியச் செய்தனர்.
பால் ஒளி வீசும் நிறைமதி நாள். தென்றல் தவழும் திருநாள். இன்பம் கொழிக்கும் இனிய நாள். வரும் இன் பத்தை வையத்துக்கு அறிவிக்கும் பொன்னுள். இதுவே பங்குனி உத்தரத் திருநாள். திருமயிலையும் காஞ்சியும் இவ் விழாவால் மேலும் சிறப்படைகின்றன. இன்றைக் குப் பதின்மூன்று நூற்ருண்டுகட்கு முன்னரேயே திருஞான சம்பந்தப் பெருமானுடைய காலத்தில் பங்குனி உத்தரத் திருவிழா திருமயிலையில் உச்சம் பெற்றிருந்த செய்தி அவ ரது சரித்திரத்தில் காணப்படுகின்றது. பூம்பாவையை உயிர் பெற்றெழச் செய்யுமாறு பாடிய தேவாரத் திருப்பதிகத்தில்
"பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்தர நாள் ஒலிவிழாக் காணுதே போதியோ பூம்பாவாய்"
என்று குறிப்பிடுகின்ருர், பலி என்ற சொல்லுக்குப் பயன் விளைத்தல், செழித்தல், மிகுத்தல், கொடுத்தல் என்ற பொருள்கள் உள்ளன. சோறு, திருநீறு என்ற பொ ருள்களும் உள்ளன. பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் காக்க வருவதே விழா. எனவே மக்கள் செல்வச் செழிப் புற்று பெற்ற பயனை மற்றவர்களுக்கும் கொடுக்கும் விழா பலிவிழா எனப்பட்டது. ஒலி என்ற சொல்லுக்கும் தழைத்தல், ஆரவாரித்தல் என்ற பொருள் கள் உள்ளன. மக்கள் உள்ளம் தழைத்து இன்பத்தில் இய ங்கி "வையகமுந் துயர்தீர்க' என்று ஆரவாரித்துக் கொண் டாடும் விழா இப் பங்குனிப் பெருவிழா.
இப் பங்குனி உத்தர விழா வடநாட்டிலும் சிறப்பா கக் கொண்டாடுகிருர்கள். இதனை ஹோலிப் பண்டிகை

ஆத்மஜோதி 盟2$
என அழைப்பர். சிவபிரானது தவத்தைக் கலைத்த மன்ம தன் நெற்றிக் கண்ணினுல் எரிக்கப்பட்டான். சாம்பரான மன்மதன் ரதியின் வேண்டுகோளின்படி உருவு பெற்றது இப் பங்குனி உத்தர தினத்திலேதான். மன்மதன் உயிர்த் தெழுந்த விழாவே வடநாட்டில் ஹோலிப் பண்டிகையா கக் கொண்டாடப்படுகிறது.
இவ் விழாவில் அவர்கள் நெருப்பினை வளர்ப்பர். உண வுக்குப் பயன்படும் ஒவ்வொரு பொருளிலும் சிறு சிறு பகு தியை அந் நெருப்பிலிட்டு மற்றவற்றைப் பகிர்ந்து உண் பர். ஆடலும் பாடலும் அன்று நடைபெறும். தூபமிட்டு சாம்பலை நோய் தீர்க்கும் மருந்தாக உபயோகிப்பர். நெருப் பைப் பரப்பி அதன் வழிபாட்டை ஒம்புவர். அதனுல் தமது நோய் நீங்கப் பெறும் என்று நம்புகின்றனர். வைஷ்ண வர்கள் கண்ணன் பூதகியைக் கொன்று மகிழ்வித்த நாள் இது என்று கொண்டாடுவர். இப் பங்குனி விழாவாகிய ஹோலிவிழா வடநாட்டிலும் நன்கு கொண்டாடப் பெறு கின்றதென்பதை யாவரும் அறிந்து கொள்ளலாம்.
அன்றைய தினத்திலே வடநாட்டில் குங்குமத்தைப் பாத்திரங்களில் கரைத்து வைத்திருந்து போவோர் வரு வோர் எல்லோருக்கும் ஊற்றி மகிழும் காட்சி கண்கொள் ளாக் காட்சியாகும். எவ்வித வேற்றுமையுமின்றி எல்லோ ரும் எல்லோருக்கும் குங்குமச் சேற்றைப் பூசி மகிழ்வர். ஜவகர்லால் நேரு அவர்களே ஒருமுறை குழந்தைகளின் மத்தியிலே இப் பண்டிகைத் தினத்தன்று அகப்பட்டு செந் நிறத்தோடு வீடு சென்று சேர்ந்தாராம்.
இமயமலையரசனுடைய மகளாகிய உமாதேவியாரைப் பரமசிவஞர் திருமணம் செய்த செய்தியைக் கந்தபுராணம் பின்வருமாறு கூறுகின்றது.
"ஆதியின் உலகமெல்லாம் அளித்திடும் அன்னை தன்னைக் காதலின் வதுவை செய்யக் கருதின; கணித நூலோர் ஒது பங்குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாகும் ஈது நன்மூகூர்த்தம் எந்தாய் இமயமேல் வருதி என்றன்"
கச்சியப்பர் பங்குனி உத்தரத்தின் சிறப்பைப் பற்றிக் கூறும் பகுதி யாவரும் படித்து மகிழத் தக்கது.

Page 17
26 ஆத்மஜோதி"
太 女 ★ ★ ★ ★ ★ ★ ★ ★ 女 女 ★ ஞா ன மார் க் கத்  ைத ப் ப ர ப் பு வே T ம்,
( சி வ ப ர ல ன் )
责。女。★,★ 责 ★ ★ ★ ★ ★ ★ ★ ★
உலகத்தைச் சூழ்ந்திருந்த நீளிரவு அகலுகின்றது. ஒளி வெள்ளம் புகுகின்றது அது அகிலத்தையே ஆட்கொள் ளும் சக்தி வாய்ந்தது. உயிரூக்கு உடலுக்கு விடுதலை நல் குவது. "ஆம்" விடுதலை நிறைந்த உரிமை வாழ்வை உல கான்மாக்கள் எதிர் நோக்கும் நன்னிலை ஏற்பட்டுவிட்டது. உலக போகத்திலே சூழ்ந்திருந்த மேனுட்டாரும் இந்து சம யத்தின் பழம் பெரும் பெருமை மிகு தகைமைகளை அறி ந்து விட்டனர். அழியப் போகும் புவன போகத்திலே மூழ்கி மடிவதைவிட அழியாத ஞான மார்க்கத்திலே ஈடு படுவதால் ஏற்படும் மேன்மையை அறிந்து கொண்டனர். உடல் பலத்தையே பெரிதென மதித்தோர் உள பலத்தின் மகிமையை யுணர்ந்துள்ளனர். இந்த நல்ல சந்தர்ப்பத் திலே உலக போகத்தில் வெறுப்புற்ற மக்களுக்கு நாம் ஞான மார்க்கத்தைக் காட்ட வேண்டும். பள்ளத்தை நோக்கிச் செல்லும் நீரைப் போல ஞான மார்க்கம் பர வும் நன்னிலை ஏற்பட்டுள்ளது. இவ்வமிர்தத்தை உலகம் முழுதும் பரப்ப தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அருந்த வப் புதல்வர்களுக்கு நாம் ஊக்கத்தை நல்க வேண்டும்.
எமக்கு எமது மூதாதையர் தேடி வைத்த அரும்பெ ரும் செல்வம்! அழியாச் செல்வம்! அடைந்தவரை உய் விக்கும் சிறப்பு மிகு செல்வம்! அதுதான் அருள் செல்வம். நாமிவ்வருள் செல்வத்தை யடைந்தால் பிறரும் பெற வழி வகுக்கலாம். இதற்கு எமக்கு முதலில் நம்பிக்கை தேவை? இது தம்மிடத்தில் குறைவு. "நாம் மரணமற்ற, சுதந்திர

في
ஆத்மஜோதி 2.
முள்ள, தூய்மையே யியல்பாகக் கொண்ட ஆத்மா அல்
லோமா? நாம் எவ்வாறு பாவம் செய்ய முடியும்? முடி
யவே முடியாது. இத்தகைய நம்பிக்கை எம்மிடையே
வளர வேண்டுமென விவேகானந்தர் கூறுகிருர், நம்பிக்
கையே வாழ்க்கையின் உயிர்நாடி. ஆகவே இத்தகைய நம்
பிக்கை எம்மிடமிருந்தால் நாம் ஏன் முன்னேற முடியாது? இன்றைய உலகில் ஆத்ம ஞானத்தைப் பெற்றுப்ய பார தம் தான் முதுபெரும் மருத்தாகத் திகழ்ந்தாலும் இங்கும் பொருமை போன்றவை இடம் பெற்றுளது. அதை நாம் ஒழிக்க வேண்டும். அடுத்தவன் வாழ்வைக் கண்டு பொரு மை படையாமல் அவனேப் போல் நாமும் வாழ முடியும் என்று நம்பிக்கை பெறுவோம். இப்படிப்பட்ட நம்பிக்கை யிருந்தால் பொருமைக்கே இடமில்லாது போய்விடும். இத் துடன் இன்று எம்மிடையே சாதிப் பாகுபாடும் புகுந்துள் ளது. இதை யொழித்து நாம் யாவரிடமும் பாகுபாடின்றி அன்பு செலுத்தப் பழக வேண்டும். இத்தகைய பழக்கமி ருந்தால் அநேகமாக ஏனேய பூசல்களெல்லாம் ஒழிந்து விடும்.
காந்தி போன்ருேர் தோன்றி அன்புடைமையின் வலி மையை அகிலத்துக்குக் காட்டினர்கள். எமது மூதாதை சபர் அருளிச் செய்த அரும் பெரும் கொள்கைகளைப் புறக் கணித்து விட்டு புல்லறிவுடையோராய் வாழ்வது நலeா? ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என ஏட்டுச் சுவடியில் எழுதி விட்டால் போதுமா? அதனைப் பின்பற்ற வேண்டு மல்லவா? ஏடுகளில் எழுதி வைத்துக் கறையானுக் கிரை யாக்கவா அரும் பெரும் கருத்துக்களை எமக்களித்துச் சென் ருர்கள்? உலகமே ஆத்மீக வாழ்க்கையைப் பின்பற்ற அவர் களே வலிய வருகையில் இந்துக்கள் எனக் கூறிக் கொள் ளும் நாம் இந்து மதத்தைப் பற்றியோரளவேனும் அறி யாது ஆத்மீக வாழக்கையைப் பின்பற்ருது தாழ்ந்த நிலை யிலேயே இருப்போமாஞல் நம்மை நாம் என்னென்று கூறிக் கொள்வது?

Page 18
2S ஆத்மஜோதி
ஆகவே இன்றே உறுதி பூணுவோம். ஆத்மீக வாழ்க் கையை மேற்கொண்டு அகிலமெங்கும் அதனைப் பரப்பு வோம். உலக மக்களுக்கு விடுதலை தேடித் தருவதே எமது நோக்கம். ஆத்மீக முறையாலே எமது முன்ஞேர் அடை ந்த முன்னேற்றத்தைக் காட்டிலும் மேம்பட்ட நிலையை யாங்கள் அடைவோம் நம்பிக்கை வீண் போவதில்லை. எமது நோக்கம் நிறைவேற இறைவனை இறைஞ்சுகிருேம்.
★ ★ ★ 责 ★ ★ ★ ★ ★
மகாத்மாவின் மணிவாக்குகள்
பசு, எனக்குக் கருணுரசம் நிறைந்த ஒரு கவிதையா கவே இருக்கிறது. பசுவைப் பேணிப் பாதுகாப்பது, மணி தனுக்கும் மிருகத்துக்கும் இடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதாகும் பசுவின் மூலமாக மற்ற எல்லா உயி ர்ப் பிராணிகளுடனும் ஒன்று கலந்து, தானும் அவற்றில் ஒன்று என்பதை அறிந்து கொள்ளுகிருன்.
குழந்தைகளின் வாயிலிருந்து அறிவு ஞானம் பிறக்கிறது என்று ஏசு சொன்னுர் . இதைவிடப் பெரிய, பெருமை வாய்ந்த, உண்மையை அவர் சொன்னது கிடையாது. அவர் சொன்னதை நான் நம்புகிறேன். பணிவோடும் குது வாதில்லாமலும் குழந்தைகளை அணுகிஞேமானல், அவர்க ளிடமிருந்து அறிவு ஞானத்தை நாம் கற்றுக் கொள்ளு வோம் என்பதை என் அனுபவத்திலேயே பார்த்திருக்கி றேன்.
★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★

29 ress2 ورمر T
புத்தக விமர்சனம்
யூனி முன்னேஸ்வர வரலாறு ஆசிரியர்: பா. சிவராமகிருஷ்ண சர்மா B.Sc , (Cey) 彎 வெளியிடுபவர்:
கிடைக்குமிடம் 144, முன்னேஸ்வரம், சிலாபம் விலை: மூன்று ரூபா விமர்சகர் பத்மநாதன்.
இலங்கையிலுள்ள மிகப் பழமை வாய்ந்த கோயில்க ளுள் ஒன்ருன முன்னேஸ்வரத்தைப் பற்றிப் பல்வேறு நிலை களில் இருந்து ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள சரித்திர ஆரா ய்ச்சி நூலாகக் காட்சியளிக்கின்றது. "பூரீ முன்னேஸ்வர வரலாறு என்னும் வரலாற்று நூல்.
இலங்கையில் உள்ள ஒரு கோயிலை மையமாக வைத்து நல்ல தமிழில், எளிமையான நடையில், ஆராய்ச்சிக் கண் கொண்டு எழுதப்பட்டுள்ள முதல் நூல் இதுவென முடிவு கட்டலாம். இப்படியான நூல்கள், உருவாவதற்கு இந் நூல் ஒரு முன்னேடியாகவும், உதாரணமாகவும் அமைந் துள்ளது.
பத்து அத்தியாயங்களும், பதினேழு அனுபந்தங்களும், இருபது விளக்கப் படங்களும் கொண்ட இவ் வரலாற்று நூல் கண்ணுக்கும், கருத்துக்கும் கவர்ச்சியான முறையில், திறமான கடதாசியில், தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது, நூலின் பெருமையை உயர்த்துவதாக உள்ளது.
இக் கோயில், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களுடன் தொடர்புடையது என்பதைச் சில சான் றுகளுடன், இந் நூல் காட்டுகின்றது.

Page 19
30 ஆத்மஜோதி
சரித்திரப் பின்னணி என்ற அத்தியாயத்தில் ஆரும் பராக்கிரமபாகு, ஒன்பதாவது பராக்கிரமபாகு, கீர்த்தி பூரீ ராஜ சிங்கன், குளக்கோட்டன், மலையாள நாட்டரசன் போன்ற மன்னர்கள் இக் கோயிலுக்குச் செய்த பணிகளை யும், போர்த்துக்கேயரின் அட்டகாசத்தினுல் இக் கோயில் 1578ம் ஆண்டு தரைமட்டமான நிகழ்ச்சியினையும் போதிய ஆதாரங்களுடன் காட்டுகின்றது. இந் நூல்.
உற்சவத்தைப் பற்றிய விளக்கங்கள் சைவ சமயத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான நவராத்திரி, சிவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், திருவெம் பாவை போன்றவற்றேடு தொடர்புள்ள புராணக் கதை கள், அவை கூறும் தத்துவக் கருத்துக்கள் ஆகியவற்றை எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட் டுள்ளது இந் நூலாசிரியரின் எழுத்து வன்மையைக் காட்டு கின்றது.
"கோயிலும் சமூகமும்’ என்ற அத்தியாயம் இந்நூலின் உன்னதமான பகுதி எனலாம். கோயில் மண்டபங்கள், மடங்கள், திருக்குளங்கள் எல்லாம் இவ்வூர் சமுதாய வாழ்க் கையிலுள்ள சமதர்மப் போக்கிற்கு நிலைக்களஞக விளங்கு வதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
"கோயிலும் இசையும்" என்ற பகுதியில் 'பண்டைய மக்கள் தோற்றுவித்த வாத்திய இசைக் கருவிகள் மறைந்து அழிந்து போகாமல் நெடுநாட்களாக வைத்துக் காப்பாற் றிய பெட்டகம் கோயிலெனலாம். அப்படியிருந்தும் எவ் வளவோ இன்னிசைக் கருவிகள் ஆதரிப்பாரின்றி உருத் தெரியாமல் அழித்தொழிந்து விட்டன" என்று ஆசிரியர் காட்டும் பொழுது, நாம் உண்மையிலேயே கோயில்கள் சாதித்தவைகளைப் பற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டியவர் களாகிருேம்.
இந் நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நுட்பமான வரலாற்றுக் கருத்துக்களுக்கும் போதிய ஆதாரங்கள் அடிக்

ஆத்மஜோதி 3t و بر
ܐܸܢ
குறிப்புக்களில் கொடுக்கப்பட்டிருப்பது இந் நூலின் தரத் தை உயர்த்துவதாக உள்ளது.
சில சரித்திர, ஆராய்ச்சி நூல்களில் இருந்து சில பகு திகளை அப்படியே ஆங்கில மொழியில் வெளியிட்டும், ஆரு வது பராக்கிரமபாகு மன்னன் மானியமாக அளித்த நன் கொடையைப் பற்றிய கல்வெட்டுச் சாசனம், ஒன்பதாம் பராக்கிரமபாகுவின் செப்பேட்டுச் செய்தி போன்றவற் றைத் தமிழிலும் அனுபந்தத்தில் சேர்த்திருப்பது ஒரு சிறப் பான அம்சம்.
சங்குகளில் ஊற வைக்கப் படும் மூலிகைகளின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் தாவரவியற் பெயரும் கொடுக்க்ப் பட்டுள்ளதும், இக் கோயிலின் பழமையை உணர்த்தும் வகையில் தொல்பொருட் காட்சிச் சாலையில் இருந்து ஆதா ரங்களை அட்டவணைப் படுத்திக் காட்டும் பாணியும் ஆசிரி ! பரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துகின்றது.
"ஈழவள நாட்டில் எல்லாத் திருத்தலங்களுக்கும் முன் னரே தோன்றி விளங்கி வருதல் பற்றிச் சிறப்புப் பெயர் பெற்ற முன்னையம்பதி." என்று இந் நூலின் ஆசியுரை யில் கூறப்பட்டுள்ளதற்கிணங்க இப் பழம் பெருமைகள் மண்டிக் கிடக்கும் திருத்தலத்தினைப் பற்றி ஒவ்வொரு சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களும் அறிந்திருத்தல் அவசி Lè .
இந் நூல் ஒரு சமய நாலாக மட்டுமன்றி, சரித்திர ஆராய்ச்சி நூலாகவும் உள்ளது குறிப்பிடத் தக்கது.
அஹிம்ஸா போதத்தைக் கொண்டுள்ள இந்து மதம் எனக்கு உலகத்திலேயே மிகச் சிறந்த மதமாகத் தோன்று கிறது - என் மனைவி என க் கு உலகத்திலேயே அழகான பெண் ணு க த் தோன்றுவது போல, என்னைப் போல் ஒவ்வொருவரும் அவரவர்கள் மதத்தைப் பற்றிக் கருதலாம். - மகாத்மா காந்தி,

Page 20
4 ஆத்மஜோதி
நிலையான சாந்தி
(K. M. P. முகம்மது காசீம்)
13
கற்பனை கடந்த மோனத்திலே கவலையற்று, கலங்க மற்று, அச்சமற்று, அமைதி பெற்று அன்பின் பண்பினிலே, பரிசுத்த ஆனந்தத்திலே, உன்னதமான தியான நிலையிலே விடுதலை பெறுவதே ஆத்மீக வாழ்வு.
சகலவித ஆசைகளையும் மனதிலிருந்து மாய்த்து விட்டு இறை தியானத்திலே மகிழ்வு காண்பதே ஆத்மீக வாழ்வு.
யாவற்றையும் துறந்து விட்டுத் தூய்மையான பேரி ன்ப வாழ்வில் ஒய்வு காண்பதே ஆத்மீக வாழ்வு.
உடலில் இருந்து கொண்டு, உலகில் வாழ்ந்து கொண்டு உணர் வெளியில் ஒன்றி விடுவதே ஆத்மீக வாழ்வு.
மனிதன் உலகமெனும் மாயக் கடலில் ஓடி ஆடி ஒய் வற்று இன்பத்தை நுகர துடிக்கின்றன். ஆனல் சகலவித ஆசைகளும் முடிவில் துன்பத்தையும் துயரத்தையுமே கொடுக்கின்றன. உடலுக்கு அப்பால், மனதைக் கடந்து மகா வெளியில் ஒன்றி விடுவதே நிலையான சாந்தியாகும்.
உள்ளத்திலே பொங்கியெழும் பொய்யான கற்பனை களை, முற்றிலும் அறிந்து அறிவு பெறுவதே நிலையான சாந்தியாகும்.
மயக்கத்தால் அறியாமையினல் மனதினிலே மறைந் துள்ள இழிவான இரகசிய இச்சைகளைச் சம்பூர்ணமாக ஒழித்து விடுவதே நிலையான சாந்தியாகும். ܚ
வெட்ட வெளிச்சென்று உச்சநிலைபெற்றுப் பேரின்ப
மோனத்திலே விடுதலை எய்தி எந்தவித ஏக்கமுமற்று வாழ் வதே நிலையான சாந்தியாகும்,

ஆத்மஜோதி 33
எல்லா விதத் தொடர்புகளிலும் தொந்தரவுகள் உண் டென்று உணர்ந்த பின், உணர் வெளியில் ஒய்வு காண்ட தைத் தவிர வேறு எவ்வழியிலும், உயர்வைப் பெற முடி யாது என்று சம்பூர்ணமாக விளங்குவதே நிலையான சாந் தியாகும்.
நிலையாக, நித்தியமாக உள்ளது பரம்பொருள். மற் றது யாவும் மனதின் கற்பனை. சட சம்பந்தமான தொ டர்புகளினுல் சதா குழம்பிக் கொண்டிருக்கும் மனதைப் பரிபூரண தியானத்தினுல் கரைத்து விட்டு அகண்ட வெளி தனிலே ஆனந்தம் காண்பதே நிலையான சாந்தியாகும்.
யாவும் பிரச்சினை மயமாகப் பின்னிக் கிடக்கும் இவ் வுலகில், இதயம் கடந்து இறைவனிடம் ஒன்றுபடுவதே உண்மையான நிலையான சாந்தியாகும்.
என்றும் அழியாத மாரு த ஆத்மாவை உணர்வதற்கே மனிதன் உலகிற்கு வந்துள்ளான். நித்திய இன்பத்தில் நிலைத்திட நிமிடந்தோறும் தியானத்தினுல் "தன்னறிவு பெற வேண்டும். அதுவே நிலையான சாந்தியாகும்.
தடையின்றி வளர்ந்திடும் தெய்வீக இன்பத்தை இத் தரணியிலே கண்டிட வேண்டும். இதுவே ஆத்மீக அறிவு.
எல்லா நிலைகளிலும் அசைவற்று யாவற்றையும் விளங் கிக் கொண்டு தியானத்திலே தெளிவு காண்பதே அறிவு,
ஆதியும் அந்தமுமற்ற நிலை, எல்லை கடந்த உணர் வெளியே. அங்கு பிறவிப் பிணியுமில்லை. மரணத்தின் துக்கமுமில்லை. அந்த உன்னத உயர்வான நிலையில் ஒய்வு காண்பதே முக்தி,
உனது தியான நிலையில் விடுதலை கண்டு ஆனந்தம் காண இயலாது என்ருல் பின் இவ்வுலகில் எங்கும் யாரும் சாந்தியெனும் சம்பூர்ண நிலையைக் கொடுக்க முடியாது.

Page 21
- محسی9ح� "
உலக இச்சைகளில் இன்பங் காண நினைப்பது மதியீ னத்தின் மட்டரகநிலை மட்டுமல்ல, அறிவை ஆத்மீக உண ரீலை அடிமைச் சிறையில் அடைப்பதுமாகும்.
சாந்தியற்ற மனம் சஞ்சலம் நிறைந்த இடம், தெளி வற்ற மனம் குழப்பம் நிறைந்த இடம், மயங்கிய மனம் மட்டரக எண்ணங்கள் மண்டிக் கிடக்கும் இடம்,
அதிகமான ஆசைகளும் அதனுல் உண்டாகும் மனக் குழப்பங்களுமே துக்கத்திற்குக் காரணம். மனது இச்சை களின் பிடியிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று மகா வெளியில் மெளனமுறுவதே நிலையான சாந்தியாகும்.
மிக உயர்வான தியான அனுபவம் கிட்டிய பின்னும் கீழான எழுச்சிகளை ஏற்படுத்திடும் தீய சூழ்நிலையில் மகிழ்வு காண்பது மனே மயக்கத்தின் எடுத்துக் காட்டு மட்டுமல்ல ஏமாற்றத்தின் எதிரொலியுமாகும்.
தெளிந்த அறிவு, எதிலும் சார்ந்து நிற்காத சமநி.ை பற்றற்று பரமனை நோக்கும் பண்பு இவைகள் யாரிடம் இருக்கிறதோ அவர்களே மோன தவத்தில் இன்பங் காண்
எங்கும் நிறைந்து ஏக மியமாகியுள்ள இறைவனிடம் ஒன்றுபட்டு ஒடுங்குவதே நிலையான சாந்தியாகும்!
மதத்தைப் பற்றிய என் கருத்தைச் சொல்லுகிறேன்: அது, நான் எல்லா மதங்களைக் காட்டிலும் அதிகமாக மதிக்கும் இந்துமதம் கூட அல்ல, அந்த மதம் ஹிந்து மத த்துக்கும் அப்பாற்பட்டது. அது ஒருவனுடைய இயல் பையே மாற்றக் கூடியது; ஒருவனைப் பிரிக்க முடியாதவாறு உண்மையுடன் பிணைப்பது; எப்போதும் ஒருவனேப் பரிசுத்
தமாக்கிக் கொண்டிருப்பது.
* மகாத்மா காந்தி,

ா **ر
பன்றித் தலை ச் சி
நீ பணித்த செய்கையினைச் செய்வேன் - நாளும் நின்னுரையே என்னுரையாய் உய்வேன்; நீ நடத்தும் பாதையிலே நடப்பேன் - என்றும்
நின்னருளால் எத்துயருங் கடப்பேன் நானெனவொன் றில்லையெனக் கொண்டேன் எங்கும்
நானலநீ நானலநீ கண்டேன்; ஆன இன்ப மாக்கடலே தாயே - ஞான
அன்புருவே என்முன்வரு வாயே.
翼器墨
- சுவாமி இராமகிருஷ்ணர் பிரார்த்தனை
ஈழவள நாட்டின்கண் உள்ள பழம் பெரும் பதிகளுள் புதுமை மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சியம்மன் தலமும் ஒன்ரு கும். ஈழநாட்டிலுள்ள கதிர்காமம், நல்லூர், நயிஞர்தீவு, வல்லி புரக்கோயில், சந்நிதி போன்ற அருள் பாலிக்கும் அற்பு தக் கோயில்களில் இதுவும் ஒன்று. அகில இலங்கை மக் களும் அன்புடன் வழிபடும் ஒரு பழம் பெரும் புதுமை மிக்க தலமாகும். இங்கே சைவர், பெளத்தர், கிறிஸ்த வர், மகமதியர் வந்து வழிபாடு செய்வதைக் கண்ணுற் காணலாம். அன்னை யார்க்கும் சொந்தந்தானே. எல்லா ரும் அவள் மக்கள் தாமே. அனைவருக்கும் அருள் பாலிக் கும் இந்த அம்மனைப் பன்றித்தலைச்சியம்மன் என அழைப் பர். இன்றும் ஒரு குடிலில் இருந்து கொண்டு அருள்பா லிக்கும் இந்தப் பன்றித் தலைச்சியம்மனை அறியாதார் யாழ்ப்பாணத்திலில்லை.
பன்றித்தலைச்சி யென்னும் பெயர் ஏற்பட்டதைப் பற் றிப் பல கதைகள் வழங்கி வருகின்றன. பன்றித்தலைதரு தெய்வம் என்றும் பன்றித்தலேயையுடைய தெய்வம் எண் றும் கொள்ள இடமுண்டு. பன்றித்தலை தரு தெய்வமென் பதைப் பழங் கதைகள் நிரூபிக்கின்றன. பண்டைக் காலத் தில் ஒரு பறைக் குலப் பக்தன் இக் கோயிலுக்குக் கிழக்கே

Page 22
嵩 ή ο β' ( ) και Ο
18 ஆத்மஜோதி
உள்ள வடலிக் கூடலில் ஒரு மாட்டைக் கொன்று இறைச் சியை எடுத்துக் கொண்டு தலையையும் தோலையும் அங்கே புதைத்தான் என்றும் அந்த மாட்டின் சொந்தக்காரன் அதை அறிந்து ஆளைக் கையும் மெய்யுமாகப் பிடித்தான் என்றும் உடனே பறைக் குலப் பக்தன் "ஆச்சி அபயம்!" என்று அலற மாட்டுத்தலே பன்றித் தலையாக மாறியதென் றுங் கூறுவர். இக் கதையை சிறிது விளக்கிச் சிலர் பின் வருமாறும் கூறுவர். பண்டித்தலம் (பண்டு + இத்தலம்) காடடர்ந்த பகுதியாக இருந்த தென்றும் அதை யடுத்துப் பன்றிகள் இருந்தனவென்றும் மாடுகள் இப் பிரதேசத்தில் வந்து மேய்வது உண்டென்றும் இத் தலம் சோலைக்காடாக இருந்ததென்றும் சொல்வர். அக் காலத்தில் எந்தவிதமான உருவமும் இருக்கவில்லை என்றும் ஒரு பீடம் மாத்திரமிருந் ததென்றும் அதற்கு அங்கி அணிந்து விசேட காலங்களில் வழிபட்டு வந்தார்கள் என்றும் சொல்லக் கேட்டுமிருக்கி ருேம். அக் காலத்தில் ஒரு பறைக்குலப் பக்தன் இக்கோ யிலே முறைப்படி வணங்கி வந்தானும்,
ஒருநாள் அவன் பன்றி வேட்டையாடு போது அவன் விட்ட அம்பு ஒரு மாட்டின்மேல் பாய்ந்து மாட்டினைக் கொன்று விட்டது. மாட்டுக்காரன் ஒரு பெரிய நடப்புக் காரன். அவன் தன்னை மாட்டி விடுவான் என்று பயந்த பக்தன் கண்ணிர் சொரிந்தான். மாட்டுக்காரனுே பெரிய நடப்புக்காரன் ஆயிற்றே. என்ன செய்வான் ஏழைப் பக் தன்! "ஆச்சி! இன்ருேடு இக் கொலைத் தொழிலை விட்டு விடுகிறேன். என்னை நீ காத்தருள்" என்று சரண் அடைந் தான். மாட்டுக்காரன் ஆட்களுடன் வந்து விட்டான். பக்தன் நடுங்கிஞன். ஆட்கொள்ளும் காலம் வந்துவிட்ட படியால் அன்னை மாட்டுத் தலையைப் பன்றித்தலையாக்கி விட்டாள். பக்தன் பன்றித்தலைச்சி ஆச்சி என்ருன், அன்று தொடங்கிப் பன்றித் தலைச்சி என்று வழங்கி வருகிறது என்பர். அன்னே பன்றித் தலையைத் தந்த படியால் இப் பெயரைப் பெற்றனள் என்பர்.
= தொடரும்,
墜

. ܬܐ . = * ܬܐ a * லேய வெளியீடுகள் ஆத்மஜோதி ធំវែo_ டுகள்
அரிய ஆத்மீக நூல்கள்
1 திருப்புகழ் பூஜா மலர் 。50 2 சமரச ஞானக் கோவை - க. இராமச்சந்திரா 5.0 O 3 ஆத்மநாதம் - மகரிஷி சுத்தானந்தர் 3. Ο θ -4 திங்கனிச் ரோஜ . பரமஹம்சதாசன் 2, 5 0 5 @与a இலக்கிய கதா மஞ்சரி . அருணுசல தேசிகர் 3.00 6 பாட்டாளி է ու6 - Լ0 5thoք சுத்தானந்தர் E. 50 7 இளங்கோவின் கனவு - நடராஜன் 2.25 8 ஆத்மஜோதி மலர் 1. OO 9 நவராத்திரிப் பாடல் - 。5{} I 0. கந்தரனுபூதி 5 11 கூட்டு வழிபாடு *, ... 3 12 கந்த சஷ்டி 

Page 23
Registered at the G.P.O. as a
一ー一ー
சந்தா நேய
அன்புடையீர்!
இறைவன் திருவருளால் ஆ டுகள் பூர்த்தியாகி 21வது 4-5 இதழ்கள் வெளிவந்து களுடைய ஆதரவினலேயே சுடர் விட்டுப் பிரகாசித் துக் கம்போல் அன்பர்கள் அனே தாவை அனுபவி வைக்கும கின்ருேம். சந்தா நேயர்கள்
குறிப்பிடுமாறு GBL
ஆத்மஜோதி
நாவலப்பிட்டி,
அச்சிடுவிப்போர்: ஆத் அச்சிடுவோஇ ஜீ ஆ வெளியிட்ட திகதி:
 

பூத்மஜோதிக்கு 2 0 ஆண்
து ஆண்டு ஆரம்பமாகி ள்ளது. பல சந்தா நேயர்
ஜோதி மாதந்தோறும்
கொண்டிருக்கிறது. வழக்
வரும் இவ்வாண்டுச் சந்
ஈறு அன்புடன் வேண்டு
ள் தமது சந்தா இலக்கங்
டுக் கொள்கின்ருேம்.
நிலையம்,
(இலங்கை)
மஜோதி நிலயத்தினர் த்மஜோதி அச்சகத்தினர் 14—3一69。