கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1969.04.13

Page 1
D
26)
多。
---- |-
 


Page 2
ஒர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே. - சுத்தானந்தர்
ஜோதி 21 சௌமிய இரு சித்திரை மீ" 1ம்உ [ 13-4-6 Ꮽ] சுடர் 6
பொருளடக்கம்
சத் சங்கமும் கடவுள் தரிசனமும் 37 ஞானி 38 மறைமுக சத் சங்கம் I 39 செள மிய வருஷம் 1 4 3 பன்றித் தலைச்சி 46 திருப்பொற்கண்ண விளக்கம் I 52 கொய்மலர்ச் சேவடியிணையே குறுகிஞேமே 156 காப்பது விரதம் 60
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா 100-00
வருட சந்தா 3-00
தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர் திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் திரு. நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி போன்: ತಿಶತಿ
 
 
 
 
 

சத் சங்கமும் கடவுள் தரிசனமும்
(சுவாமி சிவானந்தர்)
முதலில் வருவது சான்றேர்களோடு தொடர்பு கொள் ளுதலும், அவர்களுக்குச் சேவை செய்தலுமாகும். அது போன்ற சத்சங்கத்தாலும், சாது சேவையாலும் தனது சொந்த ஆத்மாவின் தன்மையும், பரமாத்மாவின் தன்மை யும் விளங்கவல்ல ஞானம் உதயம் ஆகின்றது. அதன்பி றகு இவ்வுலக மறுவுலக சம்பந்தப்பட்ட அனைத்திடத்தும்
ஒரு வெறுப்பு அல்லது வைராக்கியம் ஏற்பட்டு இறைவனை
அடைய வேண்டும் என்கின்ற வேட்கை ஏற்படுகிறது. இதற்குப் பக்தி என்று பெயர். பக்தி பலமடையும் பொ ழுது மனிதன் இறைவனுடைய அன்பிற்குப் பாத்திரன கின்றன். அந்த அன்பின் காரணமாக இறைவனுல் அந் தப் பக்தன் தேர்ந்தெடுக்கப் படுகின்றன். அதன் பிறகு இறைவனுடைய நேரடியான தரிசனம் கிடைக்கின்றது.
விவேகானந்தர், இராமக்கிருஷ்ணருடைய சத்சங்கத் திற்குச் சென்று வந்தார். ஞானதேவருக்கு நிவ்ருத்திநாதரு டைய சங்கம் கிடைத்தது. கோரத்நாதர் மத்ஸ்யேந்திர நாத குடைய சத்சங்கத்தில் இருந்து வந்தார். ஆண்டவனு டைய பிரசன்னத்தை ஒவ்வொரு பொருளிலும் உணர்வ தும், ஒவ்வொரு முகத்திலும், ஒவ்வொரு பொருளிலும் இறைவனேக் காண்பதும், இவ்வாறு பயின்று வருவதே ஒரு உன்னதமான, மகத்தான சத்சங்கமாகும். சத்சங்கம் நடத்து கின்ற மகாத்மாக்களுக்கும், அவர்களை மணப் பூர்வமாக நாடிச் செல்லும் பக்தர்களுக்கும் போற்றி! போற்றி!
பக்தர்களோடு தொடர்பு கொண்டு அளவளாவி வருவ தால் பக்தி அடிக்கடி தூண்டி விடப்படுகிறது. ஒரு தீப மானது மற்ருெரு தீபத்தால் தூண்டப்படுகிறதோ அதே போல் ஒரு உள்ளம் மற்மூெரு உள்ளத்திலிருந்து தீப்பிடித் துக் கொள்ளுகிறது.

Page 3
138 ஆத்மஜோதி
A Ό5 (6). (மகாத்மா காந்தி)
உண்மையானது தலை சிறந்த குணமாக இருப்பதால் சில சமயங்களில் என்னுடைய செயல்கள் உயர்ந்த இராஜ தந்திரம் போல் தோன்றும். ஆணுல் என்னிடம் உண்மை யும் அஹிம்சையும் தவிர வேறு எவ்வித ராஜ தந்திரமுங் கிடையாது.
தவறு செய்யும் மனிதனைக் காணும் பொழுதெல்லாம் நானும் தவறு செய்துள்ளேன் என்று எனக்குள் கூறிக்கொள் கிறேன். காகிாதுரனைக் காணும் பொழுதெல்லாம் நானும் ஒரு காலத்தில் அவ்விதமே நடந்தேன் என்று கூறிக்கொள் கின்றேன். இவ்விதமாக நான் உலகிலுள்ள ஒவ்வொருவ ருடனும் உறவு கொள்கின்றேன். எவ்வளவு தாழ்ந்தவனு யினும் ஒருவன் துக்கம் அனுபவிப்பானனுல் என்னுல் சந் தோஷமாக இருக்க முடியாதென்று உணருகின்றேன்.
ஒருவனுடைய குணத்தைக் குறைத்துக் கூறினுல் கட வுள் என்னைத் தண்டிப்பார். ஆணுல் கூட்டிக் கூறினுல் என்ன ஆசீர்வதிப்பார் என்பது நிச்சயம். உண்மையாக எழும் தூய ஆசைகள் ஒருநாளும் நிறைவேருமல் பேr வ தில்லை. நான் இந்த உண்மையை என்னுடைய அனுபவத் தில் கண்டுள்ளேன். ஏழைகளுக்குச் சேவை செய்வது என் னுடைய இதய பூர்வமான ஆசை. அது என்னை ஏழைக ளின் மத்தியில் வாழவும் அவர்களுடன் ஐக்கியப்படவும் செய்திருக்கின்றது.
நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனே அந்த மனித ஜாதியில் பல பல குறைபாடுகள் உண்டு என்பதை அறி வேன் அதனுல் எந்த மனிதனிடமும் நான் வருத்தப்படுவதி ல்லை. ஆதலால் நான் இடைவிடாது செய்யும் தவறுகளுக் காக என்னைத் துன்புறுத்தப் பிரியப்படாதது போலவே நான் பிறர் தவறு செய்தால் அந்தத் தவறை நீக்க முயல் စွီးဖွား။ அன்றி அதைச் செய்தவர்களைத் துன்புறுத்தமாட் A-6s. -
ہو....................

ஆத்மஜோதி 139
ம  ைற மு க ச த் ச ங் க ம்
(ஆசிரியர்)
சங்கம் என்பதற்குப் புலவர் கூட்டம் என்பது பொருள். அக் காலத்தில் அறிஞர்கள், புலவர்கள் ஒன்று சேர்த்து தமக்கும் மற்றையோருக்கும் நன்மை தருவதான விஷயங் களை ஆராய்ந்தார்கள். இக் காலத்தில் யாராவது ஒருவர் ஒருவர் ஏதாவது ஒரு சங்கத்தில் இல்லாதவர்களே கிடை யாது. சங்கங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன . ஆணுல் மனிதனுடைய மனம்தான் உயரவில்லை.
சத்சங்கம் என்ருல் மகான்கள், ஞானிகள், முனிவர் கள், சான்ருேர்கள், யோகிகள் சந்நியாசிகளுடன் தொட ர்பு கொண்டிருத்தல் என்பது பொருள். சத் சங்கத்தைப் பற்றிப் புத்த சமயம் மிக விரிவாகப் பேசுகிறது. மூவகை சரணங்களில் சங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பாகவதம், இராமாயணம் மற்றும் இந்துக்களின் ஏனைய புனித சாஸ்திரங்களில் எல்லாம் சத்சங்கத்தைப் பற்றி விளக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கணப் பொழுது சத் சங்கம் கிடைத்தாலும் அதன் மகிமை அளவிடற்கரியதா கும். திருவண்ணுமலையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இருந்து சத்சங்கத்தினுல் உலக மக்கள் அனைவருக்கும் சாந்தி அளித்து வந்த ரமண மகரிஷிகள் சத் சங்கத்தின் மகிமை பற்றி இரு பாடல் பாடி உள்ளார்கள்.
தரபந்தண் சந்திரனுற் றணிய நற் கற்பகத்தாற் தாபந்தான் கங்கையாற் பாறுமே - தாபமூதல் இம்மூன்று மேகும் இணையில்லா சாதுக்கள் அம்மா தரிசனத்தாற் றன்.

Page 4
140 ஆத்மஜோதி
தாபம் தணிவதற்குச் சந்திரனுடைய வரவை எதிர் பார்க்கின்ருேம். வறுமை அழிவதற்குக் கற்பக தருவை நாடிச் செல்கிருேம். பாபம் போக்குவதற்கு கங்கையைத் தேடிச் செல்கின் ருேம், தாபம், பாபம், வறுமை ஆகிய மூன்றும் ஒரு மகானுடைய தரிசனத்தினுல் நீங்கி விடுகின் றது என்பது அவ் வெண்பாவின் பொருளாகும்.
ஆத்மீக ஞானிகளின் முன்னிலையில் ஆத்மீக அலை வீசு கின்றது. அந்த ஆத்மீக அலையினுள் தான் இருப்பதை உணருகின்றவன் மேலே மேலே சாதனையில் உயருகின்றன். எத்தனையோ தீய குணங்கள் அழிந்து ஒழிந்து விடுகின்றன. மனத்தோடுள்ள போராட்டமே இல்லாது போய்விடுகின் றது. எந்நாளும் இன்பமே யன்றித் துன்பம் இல்லை. ஒரு தீக்குச்சி எவ்வாறு பெரும் பஞ்சுப் பொதிகளை ஒரு சில விநாடிகளிற் பொசுக்கி விடுகிறதோ, அதே போலச் சத் சங்கம் ஆசை மிகும் எண்ணங்களையும் குறுகிய காலத்தில் பொசுக்கி விடுகிறது. ஆகவேதான் பகவான் சங்கராச்சாசி யார் தமது நூல்களில் சத்சங்கத்திற்கு முதன்மை கொடுத் துள்ளார்.
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடுகளிலேயே ஒரு குறிப்பிட்ட நேரம் சத்சங்கம் நடத்தலாம். இரவு உணவு உண்டதும் வீட்டிலுள்ள எல்லாரும் ஒன்று சேர்ந்து சத் விஷயங்களைச் சம்பாஷிப்பதில் ஈடுபடலாம். அல்லது மகான் களுடைய சரிதங்களை ஒருவர் வாசிக்க மற்றையவர் கேட் டுக் கொண்டிருக்கலாம். இதனுல் ஆன்மீக வழியில் ஒரு ருசி ஏற்படும் ஆண்கள் அடிக்கடி வெளியே செல்பவர்கள் ஆகையால் வீட்டில் இருக்கும் பெண்கள் இதனை நல்ல முறை யில் நடத்தலாம். டெண்கள் கூடுவதனுல் ஏற்படும் வீண் விவகாரங்களைத் தடுப்பதற்கு ஏதுவாகும்.
ஒய்வு நாட்களில் மகான்களை நாடியோ அன்றி புண் னிய ஸ்தலங்களை நாடியோ செல்வதணுல் ஒவ்வொருவரும் சத்சங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். மகாத்மாக்க ளின் சத்சங்கம் மீண்டும் வாய்ப்பது அரிது. மிக்கள் எப் பொழுது, எ வ் வா று சத்சங்கத்தில் கொண் டு சேர்க் கப்படுகிருர்கள் என்று வரையறுத்துக் கூறு வது இயலாத காரியம். ஆணுல் ஒருமுறை அவ்வாறு சத்

ஆத்மஜோதி 4.
சங்கம் கிடைத்து விட்டால், அது செயலாற்றுவதில் தவ றுவதே கிடையாது. சத்சங்கமானது இறைவனுடைய கரு ணையிஞலேயே கிடைக்கிறது. ஏனெனில் அவருக்கும் அவ ருடைய பக்தர்களுக்கும் வேறுபாடே கிடையாது.
மகான்களுடைய தரிசனமோ அன்றிப் புண்ணிய தலங் களை நாடிச் செல்லும் வாய்ப்போ கிடைக்காதவர்கள் மனம் வருந்தத் தேவையில்லை. மகான்களுடைய நூல்களை வாசிப் பதன் மூலம் சத்சங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதுவே மறைமுக சத்சங்கம் எனப்படும். தேவார திரு வாசகங்களை ஒதும் போது சமய குரவர் நால்வருடைய சத்சங்கத்திலே வாழுகின்ருேம். பெரிய புராணத்தைப் படிக்கும் போது அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய சத்சங்கத்தைப் பெறுகின்ருேம். திவ்யப் பிரபந்தத்தைப் படிக்கும்போது ஆழ்வார்களுடைய சத்சங்கம் கிடைக்கிறது.
இப்பொழுது வாழ்க்கை மிகச் சிக்கலாகிக் கொண்டு வருகின்றது. கோயில்களில் நடைபெற வேண்டிய சத்சங் கங்களுக்குப் பதிலாக, மக்கள் தியேட்டர்களுக்கும் கிளப்பு களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு ஒட்டமாக ஒடுகின் முழர்கள். அங்கு தடைபெறும் அசத் சங்கங்களில் ஈடுபட் டுத் தம்மை அசக்தர்கள் ஆக்கிக் கொள்ளுகின்ருர்கள். மனிதனுக்குச் சமய சாஸ்திரங்களையோ தத்துவ நூல்களை யோ படிக்க நேரமில்லை. நாவல்களும் பத்திரிகைச் செய் திகளும் அந்த அருமையான நேரத்தை விழுங்கிவிட்டன.
நல்ல நூல்களைப் படுக்கைக்குச் செல்லுமுன் ஒருவன் வாசித்து விட்டுப் படுக்கைக்குச் செல்வதால் மனது சாந்தி அடைகின்றது; தீய கனவுகளினின்று தம்மைப் பாதுகாத் துக் கொள்ளுகின்றன். இரவு முழுவதும் சாத்வீக எண் னங்களினுல் நிரம்பி இருக்கும். சப்தமும், போராட்ட மும், சந்தடியும், குழப்பமும் நிறைந்த உலகில் இந்த இடை விடாத சத்சங்கமானது எங்களே இறைவன் பால் அழைத் துச் செல்லும். இப்படிச் செய்வதனல் மகான்களைத் தேடிக் கொண்டோ புண்ணியத் தலங்களை நாடிக் கொண்டோ

Page 5
42 ஆத்மஜோதி
எவரும் ஒடிச் செல்ல வேண்டியதில்லை. பொருளும் மிச்ச மாகும். காலமும் மிச்சமாகும்.
பொருள் வருவாய் அற்றவர்களுக்கும், நேரம் இல்லா தவர்களுக்கும், நாள் முழுவதும் தேக உழைப்பினுல் கஷ் டம் உறுபவர்களுக்கும் இந்த மறைமுக சத்சங்கம் கிடைத் தற்கரிய ஒரு வரப்பிரசாதமாகும்.
AYS YL S qk 0S SSSS S Ak LS S YS S Ak qqS S S S qqSS S k0qS qkA LS S SL S S LS S SL S S S kk SS
மகாத்மாவின் மணிவாக்கு
நான் இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்: அதா வது, நம்மையும், நம் பெண்மணிகளையும், நம் பிரார்த்தனை ஸ்தலங்களையும், நம்மைக் கஷ்டத்திற்கு ஆளாக்கிக் கொள் ளுவதன் மூலம், அதாவது அஹிம்ஸா மார்க்கத்தின் மூலம் காப்பாற்றிக் கொள்ளுவது எப்படியென்று தெரியாவிட் டால், போராடியாவது காப்பாற்றியாக வேண்டும். அப் பொழுதுதான் நாம் மனிதர்களாவோம்.
ஒரு குடும்பத்தில், தப்புப் பண்ணும் குழந்தையைத் தகப்பன் அடிக்கும் போது, குழந்தை பழிக்குப் பழிவாங்க வேண்டுமென்று நினைப்பதில்லை. மகன் தகப்பனுக்குக் கீழ்ப் படியவே செய்கிருன். ஏன்? அடிபட்டதஞல் அன்று; அடி யின் பின்னணியில் உள்ள அன்பின் காரணமாகத்தான். சமூகம் எப்படி ஆளப்பட வேண்டுமென்பதற்கு இதுவே உதாரணமாக இருக்க வேண்டுமென்பது என் அபிப்பிரா யம். குடும்பத்துக்கு எது உண்மையோ அதுவே சமூகத் திற்கும் உண்மையாக இருக்க வேண்டும். சமூகம் என்பது பெரிய குடும்பமே ஒழிய வேறில்லை.
kL S S S Y S kk LS YqS qke qqS S kk S SS kkk L S kk S S KqS S qYS S S kkk S S S YSY

ஆத்மஜோதி - 143
-++*++++********令令今争今**命令令争***令令*令事事令令夺令令争曾令翰**令命令今令令令
e O சளமய வருவடிம
(நா. முத்தையா)
●●●●●令令令令令争令令令令令令令令令令令令令令令今*令令令令令令+→+令令********令令事→命令令令争→+令夺夺
இன்று சௌமிய வருடப் பிறப்பாகும். இது அறுபது வருடங்களுள் நாற்பத்து மூன்ருவது வருடப் பிறப்பாகும். பூரீ மகா விஷ்ணு மூர்த்திக்கு "செளமிய நாரா யணன்" என்ருெரு பெயருண்டு. செளமியம் என்ற சொல் லுக்கு அழகு, சாந்தம் என்று பொருள். வருஷத்தின் பெயருக்கும் பொருளுக்கும் ஏற்ப மக்கள் சுபீட்சம் பெற்றுச் சாந்தியுடன் வாழப் பிரார்த்திக்கின்ருேம்.
செளமியர் என்ருெரு முனிவர் இருந்ததாக அறிகின் ருேம். புதன்கிழமையை செளமிய வாரம் என அழைப் பர். ஆண்டு தோறும் வருடம் பிறக்கின்றது. வருடப் பிறப்பு என்ருல் எல்லார் உள்ளத்திலும் ஒரு மகிழ்ச்சி. அன்று அதிகாலையில் எழுந்து சூரியனுக்குப் பொங்கவிட்டு சூரியனை வரவேற்கின்ருேம்.
பருவங்களிற் சிறந்தது இளவேனிற் பருவமாகும். இள வேனிற் பிறப்பில் அன்றைக்கு தமிழரின் வருடப் பிறப்பும் அமைந்துள்ளமை போற்றக் கூடிய தொன்ருகும், இயற் கையோ டியைந்து தமிழர் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்ருகும். தமி ழர் கொண்டாடிய விழாக்கள் வேடிக்கைக்காக மட்டும் அமைந்தன அல்ல. வீடும் நாடும் ஒரு சேரப் பயன்பெ றும் வகையில் அமைந்தனவாகும்.
இந்துக்களின் வருடப் பிறப்பும் பெளத்தர்களின் வரு டப் பிறப்பும் ஒரே நாளி லமைந்தமை இந் நாட்டின் இரு

Page 6
44 ஆத்மஜோதி
பெரும் சமூகங்கள் தொன்று தொட்டு இந் நாட்டில் ஒற் றுமையோடு வாழ்ந்து வந்ததற்கு ஒர் அறிகுறியாகும்.
கார்காலந் தொடங்கி வயலில் உழைத்த உழவன் பின் பனிக் காலம் முடியுமுன் அவ் வயற் பயனையெல்லாம் கைக் கொள்வான். அடுத்த மழை தொடங்குமுன் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுகின்ருன். தமிழருட் பெரும் பாலோர் உழவரே. இலங்கை ஒரு கமத் தொழில் நாடு. உழவர் விளை பயனைக் கொண்டு தாமும் மகிழ்வர்; சுற்றத்தாரை யும் மகிழ்விப்பர். பெற்றது கொண்டு சுற்றத்தைப் பேணும் பெருந்தன்மை உழவருடையதாகும். தமிழர் கொண்டா டும் முக்கிய விழாக்கள் எல்லாம் இப் பருவத்திலேதான் ஆரம்பிக்கின்றன. இப் பருவத்தில் வரும் சித்திரா பூரணை யும் வைகாசி விசாக பூரணையும் இந்துக்களுக்கும் பெளத் தர்களுக்கும் மிக மிக விசேடித்த தினங்களாகும்.
இம் மாதத்தில் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் வீசி மாநிலத்தை மகிழ்விக்கின்றன. தேமாவும் தீம்பலாவும் அரும் பழங்களைப் பாருக்கு நல்கி மக்கள் நாவி னுக்கு நல்ல சுவையினைக் கொடுப்பதும் இக் காலத்திலே தான். மாரவேள் விழாக் காலம் என இலக்கியங்கள் போற்றுகின்றன. மலையகப் பகுதிகளில் இக் காலங்களில் காமன் கூத்து ஆடுவர்.
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
கலந்த இனிய ஒரு மாதமே சித்திரை மாதமாகும். இந்திர விழா இச் சித்திரையில்தான் நடைபெற்றதாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வருணிக்கின்றன. எங்கோ கிடந்த கந்தரமூர்த்தி நாயனுரை இந்தச் சித்திரை விழாத் தானே திருவாரூருக்கு ஒட வைத்தது.
"தென்றல் மணங் கமழும் திருவாரூர் புக்கு
என்றன் மனம் குளிர என்று கொல் எய்துவதே"

ஆத்மஜோதி 145
என்று சுந்தரர் இத் தென்றல் தவழும் சித்திரைநாளை எண்ணியே பாடுகின்ருர் எனக் காண்கின்ருேம்.
இத்தகைய சித்திரைத் திருநாளை ஆண்டு தோறும் கொண்டாடுகின்ருேம். ஆண்டு தோறும் எமது வாழ்வும் உயர்ந்தால்தான் புது வருடப் பிறப்பினுல் பயன் உண்டு.
* * ★ ★ ★ ★ ★ ★ ★
மகாத்மாவின் மணிவாக்கு
சிறு குழந்தையைவிட நான் சிறந்தவனன்று. மேதஈ வித் தனத்துடனும், புத்தகங்களைப் பற்றியும் நாம் பேச முயற்சி செய்யலாம். ஆனல், நாசகரமானதோர் ஆபத்து நேரும்போது நாம் சிறு குழந்தைகளைப் போலவே நடந்து கொள்ளுகிருேம். நம்முடைய மேதை நமக்கு யாதொரு திருப்தியையும் அளிப்பதில்லை.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உடையவன் நான். அதற்கு ஏதேனும் சான்று இருக்கிறது என்பதற்காக அல்ல; நல்லதுதான் நடக்கும் என்ற தளராத நம்பிக்கையிஞல் தான் நான் அவ்வாறு உறுதியாக நினைக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் உத்வேகம் பிறக்க முடியும்
உலகத்திலுள்ள விஷ ஜந்துக்களையெல்லாம் ஒழிக்க வேண்டு மென்று நான் விரும்பினுல், முதலில் விஷம் போ ன்ற என் எண்ணங்களை ஒழித்து விடுவேன். என் நிதான மற்ற அறியாமையினுலும், ஆசையிஞலும் என் உடம்பின் ஜீவிதத்தை நீட்டிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஷ ஜந்துக்கள் என்று கூறப்படுகின்றவற்றை நான் கொல்ல முயலுவேனேயானுல் மேற்கூறியபடி என் விஷ எண்ணங் களை என்னுல் ஒழிக்க முடியாது.

Page 7
146 ஆத்மஜோதி
ஜ் பன்றித் தலை ச் சி
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
பன்றித்தலைச்சி என்பதைப் பன்றித் தலையை உடைய தெய்வம் என்றும் கூறுதற்குரிய சான்றுகளும் உள. ஆன முகன் என்பது ஆனைமுகத்தையுடைய பிள்ளையாரைக் குறிப் பது போல பன்றித்தலைச்சி என்பது பன்றித் தலையையு டைய தெய்வத்தைக் குறிக்கும். பழைய நூல்களில் வராஹி என்று குறிப்பது பன்றித்தலையை உடைய தெய்வம் என் பதை சேர். ஜோன். உட்ராப்ஃப் என்னும் ஆங்கிலேயர் தனது 'தந்திரராசதந்திர" என்னும் நூலின் XXIம் அத் தியாயத்தில் கூறி இருக்கிருர்,
முதலில் இந்த வெள்ளையர் யார் என்பதைப் பற்றிய றிய வேண்டுமல்லவா? சென்ற நூற்ருண்டில் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் போது அந்த நீதிமன்றத்தில் சில வக்கீல்கள் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் வருவதைக் கண்ட நீதிபதி அதை எதற்காக அணிகிறீர்கள் எனக் கேட்டார். "கோரியதைத் தரும் மகா துர்க்கையின் பிரசாதம் இதுவென்று பதில் சொன்னர்கள். அவர் அதன் உண்மையை அறிய விரும்பித் துர்க்கையைத் தானும் வழிபட்டு வந்தார். உடனே அவர் கோரியதெல் லாம் இடைத்தது. அன்று முதல் அவர் இந்து சாஸ்திரங் களை அவற்றின் மூல மொழியில் படிக்க விரும்பி வடமொ ழியைக் கற்ருர், பல நூல்களை ஆராய்ந்து பின்பு துர்க் கையைப் பற்றிய தந்திர சாஸ்திரங்களில் அதிக ஈடுபாடு கொண்டார். அவர் தந்திர சாஸ்திரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தார். அதில் தந்திர ராசதந் திர மென்பதும் ஒரு நூல். அதிற்ருன் அவர் பன்றித்த லைச்சி வழிபாட்டைப் பற்றிக் கூறியிருக்கிருர், அது பின் வருமாறு ஆகும்.

Aso(gr. ) 147
(She has the head of a boar (Kolasya) and her body which from her throat downward is that of a woman is of the colour of molten gold, Her hair is of a burning tawny colour. She has three eyes and eight arms. She is seated on a lion. Her five names are Varahi, PanCamri, Visvanisaya, Bhadrakaumudi and Wartali, she should be meditated upon along with her parivaras.
ஆகவே பன்றித் தலையையுடைய ஒரு அம்மன் பழைய வடமொழி நூல்களில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதை வராஹி என்றும் பல புலவர்கள் எடுத்தாண்டுள்ள னர். அபிராமி அந்தாதியில் தேவியின் நாமங்களைக் கூறும் போது அபிராமிப்பட்டர்,
நாயகி நான் மூகி நாரா யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கிஎன் முயகி வாதி யுடையாள் சரண மரணமக்கே.
என்றும் இராஜேஸ்வரி அட்டகத்தில் தேவியின் நாமங் களைக் கூறிக் கொண்டு போகும்போது
அம்பா சூலதனு குசாங்குசதரீ அர்த்தேந்து பிரம்பதாரி வராஹி மதுகைட பப்பிரசமநீ வாணி ரம சேவிதா மல்லாத் யாசூரமூக தைத்யதமதீ மாகேஸ்வரி அம்பிகா சித்ரூபி பரதேவதா பகவதி யூரீ ராஜராஜேஸ்வரி
என்றும் வருவதைக் காணலாம். ஆகவே பன்றித் தலைச்சி என்பது ஒரு பழம் பெரும் தெய்வம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆகவே பன்றித் தலையைத் தந்த தெங்வமெனினும் பன் றித் தலையையுடைய தெய்வமெனினும் இரண்டுக்கும் பொரு ந்தப் பன்றித்தலைச்சி அம்மன் ஒரு சிறு குடிலில் இருந்து கொ ண்டு பெரிய அற்புதங்களைச் செய்து வருவதை நாம் கண்ணு ரக் காண்கிருேம். மாட்டுத் தலையைப் பன்றித் தலையாக்கிய அற்புதம் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் நடத்திருக்கவேண்டு மென்று கூறுகின்றனர் சிலர். மாட்டைக் கொன்று தின்னும்

Page 8
A48 - ஆத்மஜோதி
சாதி ஒரு மாட்டைக் கொன்றதற்காக ஒருவனைக் குற்ற வாளி யென்று கருத மாட்டார்கள். ஆகவே இது அவர் கள் காலத்திற்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். மாட் டுக் கொலை பெரும் பாதகமாகக் கருதப்பட்ட சைவமன் னர் ஆட்சிக் காலத்திலேயே நடந்திருக்க வேண்டுமென்று எந்தக் குழந்தையும் ஒப்புக் கொள்ளும். சுவாமி ஞானப் பிரகாசர் ஒரு மாட்டை இறைச்சிக்காகக் கொடுக்கப் பய ந்தே சிதம்பரம் ஓடினர். ஆகவே அவர் காலத்திற்கும் முற்பட்டதாக இருக்க வேண்டும். அக் காலத்தில் மாட் டைக் கொல்வது ஒரு மகா பாதகமான செயலாகவிருந் தது. இது ஒரு தப்ப முடியாத குற்றமான படியாற்ருன் பறைக் குலப் பக்தன் பயந்து அழுதிருக்க வேண்டும். அத ஞற்ருன் அன்னை இரங்கி மாட்டுத் தலையைப் பன்றித் தலை யாக்கித் தன் பெயரைப் பன்றித் தலைச்சி எனக் காட்டி யிருக்க வேண்டும். இன்றும் இக் கோயில் இருக்கும் நிலங் களும் அதை அடுத்துள்ள காணிகளும் பன்றித் தலைச்சி வளவு என்றே அழைக்கப்படுகின்றன. இந்தப் பன்றித் தலைச்சியம்மன் கோயிலைச் சின்னப்பா பூசாரியின் மூதாதை கள் பரிபாலித்து வந்தனர். அதற்கு வேண்டிய பணிவிடை களைச் சுத்த போசனம் அருந்தும் கல்வயல் மக்கள் செய்து வந்தனர். திங்கள் தோறும் சிறப்பாகப் பூசைகள் நடந்து வந்தன. பன்றித்தலைச்சி யம்மன் கோயிலுக்கு வந்து பட் டினியோடு போகிறவர் எவருமில்லை. நீர்ச்சோறும் புற்கை யும் மோதகமும் எல்லாருக்கும் கிடைக்கும். இக் கோயி லுக்கு ஏராளமான நெற்காணி ஆளும் வளவுக்காணிகளும் உண்டு. இந்த வரும்படியை எல்லாம் சின்னப்பாப் பூசாரியா ரும் அவர் மூதாதையரும் அவித்துக் கொடுத்தும் கோயிற் பூ சையை ஒழுங்காகச் செய்தும் மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். இன்று அவருடைய மக்கள் இருவரும் அவரது சகோதரன் மகன் ஒருவரும் ஆக மூன்று பேர் ஆண்டுக்கொரு முறை கோயில் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இக் கோயி லில் பங்குனித் திங்கள், சித்திரை வருடப் பிறப்பு, வை காசி விசாகம், ஆவணிச் சதுர்த்தி, புரட்டாதி நவராத் திரி, கார்த்திகைச் சோமவாரம், மார்கழித் திருவெம்பாவை

t
ஆத்மஜோதி 149
(கொடியேற்றம் அப்போதுதான்) என்பன விசேடமாக நடத்தப்படுகின்றன. பங்குனித் திங்களிற்ருன் பக்த கோடி கள் வைகறை தொடங்கி வந்த வண்ணமாக இருப்பார் கள். வருபவர்கள் எல்லாம் பொங்கலுக்கு வேண்டிய அடுக் குகளுடன் வந்து பொங்கிப் படைத்துப் பின் சாப்பிட்டு அன்னையின் அருள் பெற்றுச் செல்வர். அம்மாளாச்சி தீர்த்தமாக நின்றும் அன்ன ஆகாரமாக நின்றும் அனைத்துயி ரையும் காக்கும் சக்தி புலணுகும். ஒரு வாளி தீர்த்தமாவது தன் தலையில் வாராத பக்தர் இல்லை எனலாம்.
அன்னையின் பொங்கலையும் அதற்கேற்ற அயல் தோட் டங்களிலுள்ள கத்தரிக்காய்க் கறியையும் விரும்பியுண்ணுத மனிதரில்லை. அன்று முழுநாளும் பூசையும் அபிஷேகமும் கலகலப்பாகக் கோயிலடியில் விளங்கும். பத்து மைலுக்கப் பால் நின்று பார்த்தாலும் பக்தர் செய்யும் (பொங்கல்) யாகப்புகை முகில்களுடன் கலப்பதைக் கண்ணுஇன் காண லாம். தேவர்கள் தெய்வலோகத்தில் இருந்து இறங்கி அன்னையை வழிபட வந்து விட்டதாகவே அன்றைய காட்சி யிருக்கும். தாயிடம் வரும் பிள்ளை என்ன ஆவலுடன் ஒடி வருமோ அதுபோல் அகிலாண்ட ஈஸ்வரியிடம் எல்லாத் திக்கிலுமிருந்து குழந்தைகள் ஆடியும் பாடியும் பிரதட்ச ணம் செய்தும் வந்து சேரும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். சிவயோக குருவும் அவர்களின் குருநாத ராகிய செல்லப்பாச் சுவாமிகளும் இப் பூவுலகினில் நட மாடிய காலத்தில் வருடந்தோறும் பங்குனி மாதம் முத லாந் திங்களில் இத் தேவியின் தலத்துக்கு யாத்திரை செய்து பொங்கி வழிபாடாற்றி வந்தனர். சீவன் முத்தர் களாகிய இவர்களே ஆலய வழிபாடாற்றிய தலமன்ருே இது! இதன் மகிமைதானென்னே!
1958ம் ஆண்டு சிங்களவர் தமிழருடன் கலகம் செய்த போது எங்கள் குருநாதன் இங்கே சிறந்ததொரு அபிடே கம் செய்யும்படி கட்டளையிட்டார். அது அவ்வண்ணம் நடந்தது. கலகமும் ஒழிந்தது. பங்குனித் திங்கள் தே றும் சிலம்பு கூறல் என்னும் பாடல் பறைக் குலப் பக்தர்

Page 9
50 ஆத்மஜோதி
களால் படிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலப்பதிகாரக் கதை கூறப்பட்ட போதும் கண்ணகியின் பிறப்பு விளக்க மாகக் கூறப்பட்டுள்ளது. மதுரை மீனுட்சியின் கண்ணிலி ருந்து பறந்த பொறிதான் கண்ணகியானதென்பது அவ் வேடுகளின் சாரமாகும். தேவியைக் கண்ணகி என்று வைத்துப் பல பக்தர்கள் பாடியுமிருக்கிருர்கள். பண்டித மணி கணபதிப்பிள்ளையவர்கள் பாடல் ஒன்றும் உண்டு.
இன்று இத் தலத்தில் சிவகாமியாயும், பன்றித் தலைச்சியாயும், கண்ணகியாயும் அம்மன் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிருள். எவர் எவர் எவ்வி தம் எண்ணி வழிபடுகின்றனரோ அவர் அவருக்கு அவ்வி தம் அருள் செய்து கொண்டிருக்கும் ஆதி சக்தியானவள் எங்கள் அன்ன. கொடிய தொற்று நோய்களும் கலகங்க ளும் அன்னே பெயரைச் சொல்லவே அகன்று விடும். கண் ணுேய்காரர் கொடுக்கும் கண் மடல்கள் அனந்தம். அன்னை ஏழைகளின் தெய்வம். எந்த ஏழையையும் கைவிடாள். இங்கே நீர்ச்சோறு கொடுக்கும் வேளைகள் பல. பொங்கு கிறவர்கள் புற்கையை அங்கேயே பெரும்பாலும் கொடுத் துச் செல்வர். இக் கோயிலடியில் குழப்பம் செய்தவர் எவரும் மறுமுறை கோயிலடிக்கு வருவதில்லை. தீராத நோய் களை எத்தனையோ பேருக்குத் தீர்த்து வருகிருள் எங்கள் அன்னை, தீர்வேலி மக்கள் பங்குனி மாதத்தில் வசந்தன் கவிபாடி வசந்தன் அடிப்பதுமுண்டு.
கார்த்திகைச் சோமவார விரதமும் பங்குனித் திங்கள் விரதமும் பிடியாத குழந்தைகள் கூட மட்டுவில் சரசாலைப் பகுதியில் காண முடியாது. பெரும்பாலும் இப் பகுதி மக்கள் கோயிலுக்குச் சென்று பொங்கி வந்தே விரதம் முடிப்பர். அம்மன் கோயிலுக்குப் போவதில் குழந்தைக ளுக்கு ஒரு தனி ஆர்வம். தாங்கள் வேண்டியதை எல் லாம் அங்கே பெறலாம் என்பது அவர்களது எண்ணம். அதில் ஒரு பேருண்மையும் உண்டுதான். அழுதால் உன் னைப் பெறலாமே என்ருர் மணிவாசகரும். இக் கோயிலி
 

ஆத்மஜோதி 5.
லும் தங்கள் துக்கங்களைச் சொல்லி யார் யார் அழுகிருர் களோ அவர்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைப்பதா கக் காண்கிறுேம். அன்னையைச் சரணடைந்து வழிபடும் அன்பருக்கு இன்னல் வர முடியாது. உமையு முமையொரு பாகனு மேகவுருவில் வந்திங் கெமையுந் தமக்கன்பு செய்யவைத் தாரினி யெண்ணுதற்குச் சமயங் களுமில்லை யீன்றெடுப் பாளொரு தாயுமில்லை யமையு மமையுறு தோளியர் மேல்வைத்த வாசையுமே".
ஆத்தாளை யெங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளே மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக் காத்தாளை யங்குச பாசhங் குசமுங் கரும்பு மங்கை சேர்த்தாளை முக்கண்ணி யைத் தொழு வார்க்கொரு தீங்கிலேயே நன்றி சிவதொண்டன்
9 ID T î, ul göı
பற் பொடி
பற்களுக்கு வெண்மை தந்து
பல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல பல் வலி, பல் அரணை,
பல்லில் இரத்தம் வடிதல்
போன்ற வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
பின் ஒன்று 1 ரூபா தபாற் செலவு 50 சதம் கிடைக்குமிடம்:- ஆத்மஜோதி நிலையம்,
காவலப்பிட்டி.

Page 10
52 ஆத்மஜோதி
திருப்பொற்சுண்ண விளக்கம்
(குரு. ஆ. கந்தசுவாமி ஐயா)
நாதன் வ்ருவதை யறிந்த மங்கை அவனை வரவேற்கத் தயாராகிருள். வீடு சுத்தம் செய்கிருள். அவருக்கு வேண் டியதை யெல்லாம் நினைத்து நினைத்துப் பார்க்கிருள். தயார் செய்கிருள். நீராட்டத்திற்கு பொற் சுண்ணம் வேண்டுமே! தோழிமாரெல்லாம் பொற்சுண்ணமிடிக்க முன் வந்துள்ளார்கள். மஞ்சளைப் போட்டு இடிக்கலாமா? வேறு என்ன வாசனைத் திரவியங்களைச் சேர்க்க வேண்டும். நாத னுக்கு உகந்த திருமஞ்சனப் பொருள் எவை? உண்மையே வடிவானவன் ஐயன். அவன் விரும்பிப் பூசுவதும் உண்மை: அவனுக்கு அர்ப்பணமாக நம் வாழ்க்கையில் செலுத்தவேண் டியதும் உண்மை. ஆகையால் மெய் என்னும் மஞ்சளையே நிறை அட்டி இட்டுக் கொடுக்க வேண்டும். அதற்குத் தகு ந்த உரல் எது? வையக மெல்லாம் உரல். உலக்கைக்கு எங்கு போவது? மகாமேரு என்ற உலக்கையை நாட்ட லாமே! செம்பொன் போன்ற அவ்வுலக்கையை வலக்கை யால் பிடிக்க அப்பிடிப் பிடித்து இடிக்கும் போது பெருந் துறையான் பெயரைப் பாடுவோம். ஒருதரம் பாடினல் போதாது. பலமுறை பாடிப்பாடி இடிப்போம். அவன் பாதங்களை நினைப்போம். அன்போடு இடித்த சுண்ணத்தை அவன் நீராட ஏற்பான்.
வையகமெல்லாம் உரலதாக மாமேரூ வென்னும் உலக்கை நாட்டி
மெய்யெணு மஞ்சள் நிறைய அட்டிமேதகு
தென்னன் பெருந்துறையான்

ஆத்மஜோதி 153
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொ
னுலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே ஆடப் பொற்சுண்ண மிடித்து நாமே.
உலகம் முழுவதும் உரலாகக் கொண்டு மாமேரு என் னும் மலையை அதன்கண் நட்டு, உண்மையெனும் மஞ்சளை அதனில் நிறையப் போட்டு, பெருமை பொருந்திய அழ கும் நன்மையும் வாய்ந்த திருப்பெருந் துறையானது செம் மையான திருவடியைப் பலகால் பாடி செம்பொன்ஞலமை ந்த உலக்கையை வலக்கையால் பிடித்து ஐயணுகிய அழகிய தில்லையில் வாழும் சிவபெருமானுக்கு முழுகத் திருப்பொற் சுண்ணம் இடிப்போமாக. (என்று சிவபெருமான் கழலையே பாடி அவனுக்கே சுண்ணம் இடித்தார்கள்) பெருமானுக்கே உகந்த திருமஞ்சனப் பொருள் மெய். உண்மையே. இறை வன் அவன் பூசுவதும் உண்மை. அவனுக்கு அர்ப்பணமாக நம் வாழ்க்கையில் செலுத்த வேண்டியதும் உண்மை. மஞ் சளுடன் வாசனைப் பொருள்களும் சேர்த்து இடித்துச் சுண் ணமாக்குவார்கள். அதேபோல் உண்மை முதலிய பல நற் குணங்களையும் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண் டும். அட்டி என்பதில் அடு பகுதி நிறைத்தல் என்ற பொ ருளில் அது வந்துள்ளது. வாணன் - வசிப்பவன் வாள் என் பதில் பிறந்தது வாணன். ஆட என்பது இங்கு ஆட்ட என்னும் பொருளில் வந்தது. இடித்தும் என்பதில் தும் விகுதி பன்மை எதிர்காலத்தைக் காட்டுகிறது.
சிறு தொழில்கள் செய்து ஏதோ செய்து விட்டதாக 8னத் திருப்தியடைந்து அத் தொழில்களில் அறிவைச் சிதைக்காது ஒருமுகப்பட்டு பெரிய அளவில் பெரும்பணி ஆற்றி ஆண்டவனுக்கே வேள்வி ஆக்க வேண்டும்.
முன்காலத்தில் இறைவனுக்குத் திருப் பொற்சுண்ணம் இடிப்பதோடு மகளிர் தங்கள் உடலிற் பூசிக் கொள்ளப் பொடி இடித்துக் கொண்டார்கள். அது மேனிக்கு அழகும்

Page 11
54 ஆத்மஜோதி
வாசனையும் நலமுந் தந்தது. இவ்வழக்கத்தைச் சீவக சிந் தாமணி நூல்களில் காணலாம்.
வையகமே ஞான உரலென்றும் மேருவே இன்ப உலக் கை என்றும் திருமஞ்சளே சத்திய போதமென்றும் கூறுவர். கருணையின் பெருமை கண்டு அம்மானை ஆடினுேர்கள் கரு ணேயில் மூழ்குதற்குச் சுண்ணமிடித்தல் காரணமாகச் சிவா னந்த வநுபூதியில் மூழ்குதலான அனுபவமாகையால் அந் நீராடற்குச் சுண்ணங் கருவியாமே. அச் சுண்ணத்தை இடி த்தலும் உரலும் உலக்கையும் சுண்ணமிடிக்கிறவர்களும் அவ்விடமும் அதனுற் பெறும் பேறும் ஆணத்த விளைவு என் பது திருவாசக வியாக்கியானம். சுண்ணம் என்பது பொடி, மஞ்சள் முதலிய நறுமணப் பொருட்களைச் சேர்த்து இடித் தது. சிவபெருமானுடைய திருமுழுக்குக்காகப் பெண்கள் கூடிப் பொடி இடிக்கும்போது அண்ணல் புகழைப் பாடி இடிப்பர். அப்பொழுது பாடும் பாட்டு திருப்பொற்சுண் ணம், சுண்ணமிடிப்பவர் தம் சுவை மிகுந்த பாவினில் மனம் படியும். மகளிர் பாடுவதாக இப் பதிகத்தை அடி கள் அருளினர். மாயையின் வடிவங்களாகிய தனு, கரண, புவன, போகங்களை நவ சக்திகள் பொடி செய்ய ஆன் மாக்களின் மலப் பிணிப்பு நீங்குவதாகப் புராணங்கள் கூறும். இப் பதிகம் பேசும் பொருள் ஆனந்த மனேலயம் என்பர். ஆனந்தம் - பேரின்பம். இலயம் - அழிதல் அல் லது இரண்டறக் கலத்தல். இது வட மொழிப் புணர்ச்சி. உயிரின் மனமானது தன் முனைப்புக் கெட்டு இறைவன் பேரின்பத்தில் அழுந்திக் கலத்தல் ஆனந்தித்தல் - மனம் அழிதல். அப்பொழுது தன் முனைப்பு அறவே கேடுவதால் அந்நிலையைத் தானின்று நிற்கும் நிலையென்பர்.
சக்திகளால் தனுகரண புவன போகங்கள் தமை,
அத்தனுக்குச் சுண்ண
மவையா யிடிக்கக் கூவுதலே ஒத்த திருச்சுண்ணம்

ஆத்மஜோதி 155
ஒவ்வொரு திருப்பதிகத்திற்கும் அகத்திய மாமுனிவர் அநுபவச் சூத்திரம் அருளியதாகச் சொல்வர். இப் பதிகச் சூத்திரம்
"மோனம் தமாக மொழி திருச் சுண்ணம், ஆனந்த மனேலய மாமென மதிப்பர். சிவபெருமானுக்குச் செய் யும் பணியால் நம் மனம் அவனிடம் உறைகிறது. பாடப் பாட மனம் பதிகிறது. தொண்டும், பக்தியும் ஒன்று கூடு கிறது. இவ்வாறு இன்பத்தால் இறைவனுேடு ஒருமைப்படு தல் பதிகம் நுதலிய பொருள்.
சோதனைக் காலங்களிலெல்லாம் "கடவுள் என்னைக் காப்பாற்றியிருக்கிருர்" "கடவுள் என்னைக் காப்பாற்றினர்" என்ற வாக்கியம், என்னைப் பொறுத்த மட்டிலும் இன்று ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கிறது. ஆனல், அந்த வாக்கியத்தின் முழுப் பொருளையும் நான் இன்னும் கண் டறியவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பரிபூரண மாக அறிய இதைவிடப் பழுத்த அனுபவம் தேவை.
ராணுவ முறையில் நிறுவப்பட்ட ஒரு அரசாங்கத்தை - நேரடியாகவோ, மறைமுகமாகவோ - ஆதரிக்கும் ஒரு வன் அல்லது ஒருத்தி பாவத்தில் பங்கு கொள்ளுவது உண் மை. கிழவனுஞலும் சரி, வாலிபணுஞலும் சரி வரி கொடுப் பதின் மூலம் அந்த அரசாங்க நிர்வாகத்துக்கு உதவி புரி கிற ஒவ்வொருவனுமே பாவத்தில் பங்கெடுத்துக் கொள்ளு கிருன்.
ஒழுங்கு, தியாக புத்தி, பணிவு, திடசித்தம் ஆகிய வையின்றி உண்மையான முன்னேற்றத்தை அடைய முடி யாது. இந்தக் குணங்களை அளிப்பதில் உண்ணுவிரதத்துக் கும் பிரார்த்தனைக்கும் உள்ளது போன்ற சக்தி வேறு
எதற்கும் கிடையாது.
- மகாத்மா காந்தி"

Page 12
156 ஆத்மஜோதி
4→今+4→4+*********→今命令***今令令今***今**********→令令令→今争今→令令今令今一伞伞伞伞令
கொய்மலர்ச் சேவடியிணையே கு று கி னுே மே
(செல்வி. த. பூங்கொடி)
●令争→令拿令*夺→令令令令令令令令令一令今令令一*命令争今今一伞令令今一令命令令令令令令令令→今今争令*令令令令令今→令令4-拳今今
கொய் மலர் என்பது கொய்யப்பெற்ற மலர்களை, சேவடி என்பது செம்மையான இரு திருப்பாதங்களை. குறுகுதல் என்பது மறைதலே, நாம் என்ற எழுவாய்க்குச் சேவடியும், குறுகுதலும் முறையே செயப்படு பொருளும், பயனிலையுமாய் அமைந்துள்ளன, எனவே இதன் பொருள் கொய்யப் பெற்ற மலர்கள் நிரம்பிய சிவந்த இரு திருப்பா தங்களையுமே பற்றுக்கோடாக அடைந்தோம் என்பதாம். திருவடியை மெஞ்ஞானம் என்றும், இறைவனது அருட் சத்தியென்றும் சிவாகBங்கள் கூறும். ஆதலின் இதன் தெளி ந்த பொருள் ஆன்மாவானது இறைவன் திருவடி நீழலாகிய பேரின் பத்தில் மறைந்து வாழ்தல் என்ருகும். இங்கு மறை தலையே குறுகுதல் என்று நாவுக்கரசர் கூறினுர். இதே பொருளில் நக்கீரதேவரும் " சேவடிபடரும்" என்று கூறிய வாற்ரும், நாவுக்கரசர், தாமே பிறி தோரிடத்தும் "தலைப்ப ட்டாள் நங்கை தலைவன் தாளே, என்று கூறுமாற்ருனும் இதன் பொருள் நன்கு புலப்படும்.
குறுகுதல் என்ற இந்த ஒரு சொல்லே ஆன்மாவின் முழு வரலாற்றையும் விளக்கப் போதுமானது. குறுகுதல் எனவே குறுகாமையுமுடைத்து. அதுதான் இவ்வான்மா திருவருட் சத்தியை முன்னிட்டுத் தான் பின்புக்கு அவ்வருளிலே மறை த்து நின்ற விடத்து குறுகுதற் பண்பும், அல்லாத விடத்து அதாவது மலமுனைப்பினுல் தன்னிச்சையாய்த் திரிந்து"நான் எனது என்னும் அகங்கார மமகாரமேற்கொள்ள அத்திரு வருளின் முன்னே சென்ற விடத்துக் குறுகாமையுமா கிய பண் பாம். ஆதலின் ஆன்மாவிற்குக் குறுக்கமும் நீட்டமும்இல்லை

ஆத்மஜோதி 57
யென்பதும், அது படிகம் போற் சார்ந்ததன் வண்ணமாயே நிற்கும் என்பதும் பெறப்படுகின்றது. படிகமானது தன்னைச் சார்ந்த பொருட்களின் தன்மையை எடுத்துக்காட்டுவது போல ஆன்மாவும் திருவருள், மலம் என்ற இருதிறப் பட் டவிடத்தும் அவையே தானுங் நின்று தொழிற்படும் அதா வது ஆன்மாதிருவருளேச் சார்ந்த விடத்து யாவற்றையும் சிவமயமாயே கண்டு இன் புற்றிருத்தலும் மலத்தைச் சார் ந்துழி உலகியலில் கிடந்துழலலுமாகும்.
இதனை உமாபதி சிவ ஒர் திருவருட்பயனில் தெளிவா க்குகின்ருர்,
,இன்புறுவார் துன்பா பிருளினெழுஞ் சுடரின் பின் புகுவார் முன் புகுவார் பின்,
இருளினெழுஞ் சுடரின் பின்புகுவர் இன்புறுவார் என வும் இருளி நெழுஞ் ஈடரின் முன்புகுவார்பின் துன்பார் எனவும் இருநெறிக்கட் பட்ட ஆன்மாவின் தன்மையை எளிதாக விளக்கினர். இங்கே திருவருட்சத்தியை இருளி னெழுஞ் சுடர் என்ருர், ஆணவமலத்தை நீக்குவதற்காக மே லாக விளங்குகின்ற தன்மையை நோக்கி.
இவ்வான் மாதான் பலத்தைக் குறுகுதலொழித்து திரு வருளைக் குறுகிய விடத்து, உலக வாஞ்சைகளால் இடையே தோன்றும் வினைமாசுகளை அத்திருவருளே முன்னின்று எரித்தலான் எஞ்ஞான்றும் துன்பமில்லாத பேரின் பத்திற் திழைத்திருக்கும் என்பதனே
" நாமார்க்குங் குடியல்லோம் நமனே அஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லே , , என்று
கூறும் நாவுக்கரசர் தம் அருள் வாக்கு எமக்கு அறி வுறுத்துகின்றது இறைவனேயன்றி யாமெவரையும் பணித லின்று ஆதலால் எமக்கு நரகப்பேருே?, என்னவென்று அறி யமாட்டோம், எந்நாளும் இன்பமியந்தான் துன்பத்திற்கே

Page 13
158 ஆத்மஜோதி
இடமில்லை. என்கிருர், மேலும் ஆண்டவன் திருவடியன்றித்
தமக்குப் புகலிடம் பிறிதின்று என்னு முறுதியுடைமை பாலும், துன்பவிடுதலையடைந்து உய்தி பெற்றேனும் என்னு
முள்ளக் கிளர்ச்சியாலும், இனி இடர்ப்பாடு இல்லை பிழை த்துக் கொண்டோம் என்பாராய் 'சேவடியிணையே, குறுகி னுேம்" எனத் தமது சாமர்த்தியத்தை எமக்கெல்லாம் எடுத் துரைக்கின்ருர், இவ்வாற்ருன் நாம் அறியக் கிடப்பது என்
னவென்ருல் இறைவன் திருவடி அடைதல் ஒன்றே எமக்
குப் புகலிடமாகும் என்பதாம்.
மாயாகாரியமாகிய உலகப் பொருட்காட்சி ஒழிந்து பேரின்ப வடிவமான சிவக் காட்சியில் தலைப்படுவார்க்கே
திருவடிப் பேறு உண்டாம். இவ்வாற்ருன் திருவடிப்பேறு கை கூடிய விடத்து உள்ளம் உருகலும், அருளாரமுதைப் பருகலும், உலகியலை மறந்து தன்வயமிழந்து எல்லாம் சிவ மயமாயே கண்டு அக் காட்சியில் மீட்சியின்நி ஆனந்தக் கூத்தாடலும் ஒரொருகால் ஆன்மாவிற்குண்டாம்.
உலகியலிற் கிடந்துழலும் ஆன்மா திருவருளைச் சார் ந்து விடல் எளிய காரியமன்று. அங்கனம் சார்ந்த விடத்து அவ்வின்பம் இடையீடுபடுதல் உண்டாம். இதனை மணிவா சகர் தம் வரலாறு மிகுதியாக எமக்கு எடுத்துக் கூறுகின் றது. இதஞலேயே அவரை அழுது அடியடைந்த அன்பன்" என்று அழைப்பதுண்டு. ஒரொருகால் சிவக்காட்சி இடை யீடுபட்ட விடத்து பிரிந்திருக்க ஆற்ரூதவராய் அலமருவார். ஒருகால் "உடையாய் அடியேனுன்னடைக்கலமே' என்பார், ஒருகால் "அருணாதொழிந்தால் அடியேனை அஞ்சேலென்பா ராரிங்கு" என்பார், "அகம் நெகப் புகுந்து அமுதூறும் புது மலர்க்கழலிணையடி பிரிந்தும் அந்தோ செற்றிலேனே' என் பார், ஒருகால் வினையேன் நின் அருளாரமுதத்தை யுண்டு வி தி யி ன்  ைம ய ர ல் வி க் இ னே என்? 6T 6ër u rr ri, ஒருகால் "தேனன்ன த ன் னிர் பருகத் தந்து உய் யக் கொள்வாய் என்பார், ஒருகால் மாயையிலகப்பட்டுத் தவிக்கும் என்னை தனிமை தீர்த்து "வருக வென்று நின் பால் வாங்கிட வேண்டும்" என்பார், அப்பால் 'தருக நின் பாதம்" என்பார். இன்னும் பல ஆற்ருமை மீதூர பல்

ஆத்மஜோதி 59
வாருக வேண்டியு மமையாராய்த் தன்னை மாயையினின் றும் விடுவித்து ஒருகாற் பேரின்பம் நல்கிய அத் திருவருளை வியந்து புகழ்வார்.
ஒய்விலாதன உவ மணிலிறந்தன ஒண் மலர்த் தாள் தந்து நாயில் ஆகிய குலத்தினுங்
கடைப்படும் என்ன நன்னெறிகாட்டித் தாயில் ஆகிய இன்னருள்
புரிந்த என் தலைவனே நனிகாணேன் தியில் வீழ்கிலேன் திண் வரை
யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே என்கின்ருர்,
இவை டாவும் திருவருளேச் சார்ந்து வாழும் ஆன்மாவின் நிலைதனை நன்கு விளக்குகின்றது. சேவ டியின் இயல்பு கூறுவார். "ஒய்விலாதனதாள்" "ஒண்மலர்த் தாள்’ என்றனர். ஒண் என்றது ஞான ஒளியை. இத்த கைய திருவடிப் பேற்றிற்கு ஒரு சிறிது தகுதியும் தன்னி டம் இல்லென்பார். "நாயிலாகிய குலத்தினும் கடைப்ப டும் நாயேன்" என்ருர், திருவடிப்பேறு இடையருது வேண் டும் என்பார். "என் தலைவனே நனி காணேன் திண்வரை உருள்கிலேன்' தீயில் வீழ்கிலேன் செழுங்கடல் புகுவேனே" என இரங்குகின்றர். இவற்ருல் நாம் அறியக் கிடப்பது யாதோவெனில் உயிரின் துரப்மைக்குத் திருவடிக் காட்சி இடையருது நிகழ வேண்டும் என்பதாம்.
எனவே எம்மால் அடைய முடியாத பொருளொன்று இவ்வுலகிற் கிடையாது. உள்ளத்தனே யதே உயர்வு என் கிறது திருமறை. யாவும் எமது உள்ளத்தைப் பொறுத் ததே. புண்ணியம் மேல் நோக்கும் பாவம் கீழ் நோக்கும் என்பது அருள் வாக்கு, ஆன்மா அருளைச் சார்ந்து மேல் நோக்குமிடத்து மலமுனைப்பினுலழிந் தொழிதலும் துணிபு. ஆதலின் இந்த உண்மைதனை உணர்ந்த நாம் உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளிக் கொய்மலர்ச் சேவடியினையே குறு குதலும், கீழ் நோக்குமிடத்து மில்முனேப்பினலழிந் தொழி தலும் துணிபு. ஆதலின் இந்த உண்மைதனை உணர்ந்த நாம் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளிக் கொய்மலர்ச் சேவடி யிணையே பற்றுக் கோடாக அடைந்து எந்நாளும் துன்பம் கலவாத இன்பத்துன் கலப்போமாக.

Page 14
160 ஆத்மஜோதி
SLSLSSSzSSeASSESSSSLzeSS SSeSSzSSASSAeS SzSSEESSSSASASSSLSSSSSSzSSSSeSSeSAzze
(வ. சின்னத்தம்பி)
リ森が赤* リ
காப்பது விரதம் என்னும் ஒளவையின் மூதுரை வாக் கை மக்கள் நோக்குவது மிகவும் அவசியமானது. காப்பது என்ரூல் எதனை? எந்த வகையில்? என்று கேள்வி வர இட முண்டு. உயிரைப் பேணுவதைக் காட்டிலும் ஒழுக்கத்தைப் பேணு என்பதை விளக்க “ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என வள்ளுவர் மொழிந் தார். உயிரை உடம்பினுள் வைத்துப் பாதுகாக்க மனிதர் களுக்கு மட்டுமல்ல; விலங்கினம், பறவையினங்கள் ஆகிய உயிரினங்கள் அனைத்திற்குமே தெரியக்கூடிய ஒர் இயற்கை நியதியாம். ஐயறிவு கடந்து ஆறறிவு பெற்ற மனித இனம், இந்த ஆரும் அறிவாகிய புண்ணிய பாவ நெறிகளே உண ர்த்தும் அறிவை அறிந்து நடக்க முயலாவிடின், முடியா விடின், நாம் மனிதப் பிறவியை எடுத்து என்ன பயன் என மனிதகுலம் நன்கு சிந்திக்க வேண்டும்.
காப்பது விரதம் என்ற சொல்லுக்கு பல தத்துவங் கள் உண்டு. அதில் முதலாவதாக மனிதனுகப் பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு தொழில் உண்டு. அந்தத் தொ ழிலைத் தாம் செய்யும்போது அந்தத் தொழில் வளமான தாக, மற்றவர்களுக்குக் கேடு தரா வகையில் பாதுகாப்ப தும் விரதமாகும். உதாரணமாக ஒரு நாட்டு அரசன் அல் லது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும். தமது ஆளு கையின் கீழ் உள்ள மக்களுக்கு எவ்வளவு சுக வாழ்வு அளிக்க முடியுமோ! எவ்வளவு வறுமை, கொடுமை தீச் செயல்களினின்றும் பாதுகாக்க முடியுமோ! எவ்வளவிற்கு
 

ஆத்மஜோதி 16t
ஒருவரை ஒருவர் சுரண்டிப் பிழைக்காது திருட்டு வஞ்ச னைச் செயல்களை நாட்டில் இல்லாது ஒழித்து நாட்டு மக் கள் அத்தனை பேர்களையும் நல்ல வழியில் வாழும் சூழ்நி லையை அமைத்து அரசியல் புரிவதே அரசனது அரசாங்கங்க ளின் கடமையாகும். இதே போன்றுதான் அரசியல் ஊழியர் களாயிருப்பினும் மற்றும் கைத்தொழில் கமத்தொழில் புரிப வர்களும் தமது கடமையைத் தமது தொழில் ஒழுங்கு முறை யில், மற்றவர்களுக்குக் கேடுதரா வகையில், சுயநலமில்லாத கைலஞ்சம், வஞ்சம் கலவாத முறையில் தொழில் புரிய வேண்டும்.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய் வத்துள் வைக்கப் பெறும் என வள்ளுவர் மொழியும்போது நாம் அந்த நேர்மையுடைய ஒழுக்க நெறிகளுக்கு அமைய லட்சிய நெறிகளைக் காத்து, தெய்வீகத் தன்மையுடன் வாழ ஏன் முயற்சிக்கக் கூடாது? இறைவன் மேலான மனிதப் பிற வியை எம்க்குத் தந்தது எதற்காக? மனிதனுக வாழ்வத ந்கே. இதனைச் சில அருள் நெறி கைவரப் பெற்றவர்கள் கூறும் வாக்குகளால் கண்டு தெளிவோமாக.
இறைவன் எல்லா உலகிலும், எல்லா உயிர்களிலும் சர்வ வியாபகராக விளங்குகின்ருர் என்பதை விளக்க
ஈருய் முத லொன்றtய், இரு பெண் ஆண் குணம் மூன்றம் மாற மறை நான்காய், வருபூதம் அவைஐந் தாய் ஆறர் சுவை ஏழோசை யோடு எட்டுத் திசை தானும் வேறய் உடலானுன் திருவீழி மிழலையே.
- சம்பந்தர் தேவாரம்,
ஆதியும் அந்தமு மில்லாத ஏக சக்தி யுள்ளவனுகவும், பெண்மை, ஆண்மை இருவகை உயிர்களிலும், சத்வம், ராசசம், தாமசம் என்ற மூன்று குணங்களிலும், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களிலும், கனல், புனல், காற்று, பூமி, ஆகாயம் என்ற ஐவகைப்

Page 15
162 ஆத்மஜோதி
பூதங்களிலும் இனிப்பு, தித்திப்பு, புளிப்பு, கைப்பு, உவர்ப்பு உறைப்பு ஆகிய ஆறு சுவைகளிலும், ஸ, ரி, க, ம, ப, த, நி, ஆய ஏழுவகை ஒசைகளிலும், எட்டுத் திசைகளிலும், கலந்து நிறைந்துள்ள தேவரீர்; சர்வ வியாபகமாகக் கலந்துள்ளது தவிர்ந்து, தனித்துவமாக, வேருகவும், இறை வடிவாக ଗy th விளங்குகின்ற திருவீழிமிழலையில் எழுந்தருளும் சோதியே! என்று காட்டுகின் ருர், சொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல்லும் நாவுக்கரசரோ என்ன சொல்கின்ருர் .
"ஈ ன் ருளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் என் மனத்துள்ளிருக்க ஏன்றன் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே"
பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத்தைக் குறிப்பது புலி யூராகிய சிதம்பரம். ஆகாயம் என்பது பரவெளி. பரவெ ளியில் நடனமிடுபதி நடராசமூர்த்தி, அச் சிவ தாண்ட வமே உலக உயிர்களின் இயக்கம். அந்த இயக்கமே அனை வருக்கும் தோன்றத் துணை, அத் தோன்றத் துணைவன் திருவடிகளை வணங்கும் வாய்ப்புப் பெற்ற அடியார்களுக் குத் தாயாகவும் தந்தையராகவும் உடன் பிறப்பாகவும் விளங்கி, சுவர்க்க, மத்திய, பாதாளமாகிய, தேவர், மனி தர், அசுரர் ஆகிய மூவர்களும் வாழ்கின்ற உலகங்களையும் படைத்தளித்தவன் என் மனத்துள் அகலாதிருக்கின்றன். எனத் திருநாவுக்கரசர் பாடல் மூலம் சர்வ வியாபகர் என் பதும் அத்தகைய அடியார்களுக்கு இறைவன் தோன் ருத் துணை ஊழியஞகின்ருன், நயம்பட உரை கூறும் நயத்துக் குச் சுந்தரனுர் என்ன சொல்கின்ருர்,
"தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்
சார்பினும் தொண்டர் தருகிலாப்
பொய்மையாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்

ஆத்மஜோதி 63
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே.
சிவதொண்டு செய்து தொண்டர்களாக வாழாத பொய் மையாளர்களைப் புகழ்ந்து புலவர்களே பாடல் இசையாதீர் கள் (நரஸ்துதி பாடாதீர்) எந்தையாகி பூம்புகலூர் மே விய புண்ணியனைப் பாடுங்கள். அப்படிப் பாடுமிடத்து உணவு, உடை ஆகிய செல்வங்களைத் தந்து எமது இடர் களைக் களைந்து காப்பதல்லாமல் (எமது ஆன்மா இந்த உடம்புச் சட்டையைக் கழற்றிய பின்பும்) சிவலோக பத வியை இறைவன் தருவான். இதில் சிறிதளவும் சந்தேக மில்லை எனச் சுந்தரர் தம்பிரான் தோழர் சொல்கின்றர்.
இனிதாக வருகின்ற வாக்கெல்லாம் திருவாசகமாகப் பாடிய வாதவூரர் கணிவாகத் தரும் பதிகம்:
கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் கானேடி தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடி காண் சாழேலோ
இத் திருச் சாழல் பதிகம் மூலம் உலக இறுமாப்புப் படைத்தவர்களுக்குச் சாடுதல் போடுகின்ருர். (உலகத்தில் பற்பல மதங்கள் தோன்ற முன் உலகம் என்றுளதோ! அன்றே சைவ மதமும் இருந்துளது. மறுமதத்தவர் வழிபடும் தெய்வம் இன்ன காலத்தில் இன்ன தாய் தந் தையர்க்குப் பிறந்தனர் எனச் சரிதம் கூறுகிறது.) ஆல யங்களில் மட்டுமல்ல. சுடுகாட்டையும் தனது பிரதான இடமாகக் கொண்டமையால் சுடலை ஆடிச் சங்கார மூர்த் தியாக இருக்கின்ருர், ஆன்மாக்கள் அணிகின்ற இந்தப் புண்ணிய பாவமெனும் உடம்புச் "சட்டையை கழற்றுமிட மல்லவா சுடலையாகிய மயான பூமி, அறநெறி வாழ்ந் தோரும் அறங்களைச் சிதைத்தோரும் வருகின்றபண்ணியபூமி மயானமேயாம். மணிவாசகர் சிவபிரானின் பிரதான இரு ப்பிடம் கோயில் சுடுகாடு என்ருல்தான் போலி வேடங்களை

Page 16
164 ஆத்மஜோதி
விரும்பாதவராகும். சுடலையில் நடமிடுவதில் இறைவனு க்கு ஒரு தனி ஆனந்தம். அதன் அர்த்தம் நாம் பசுவின் சாணத்தைத் திருநீருக்கி அணிவது சைவ மதத்தின் பிர தான சின்னத்தை உணர்த்தும் செயல். ஆன்ம கோடிகள் உண்மை நெறிகளை உணர்ந்து தன்னை அறியும் வரை அவர் களுக்கு ஏற்ற மறு பிறவியைக் கொடுக்கும் முத்தொழிலையும் தனது கடமையாகப் பணிபுரியும் சிவபிரான் மண்டை ஒடு களையும் சவச் சாம்பலையும் அணியும் சுடலை நாதன் ஆஞர்.
பிரமாவுக்குப் படைத்தல் தொழிலும், விஷ்ணுவுக்குக் காத்தல் தொழிலும் கொடுத்த இறைவன் அழித்தல், மறை த்தல், அருளல் என மூவகைத் தொழிலையும், சங்கரன், மகேஸ்வரன், சதாசிவன் என மூவகைநாமத்தாங்கி முறையே சீவன்கள் செய்யும் பாவ புண்ணிய தெறிகளின் வழியை ஆராய்ந்து அவர்களுக்கேற்ற மறுபிறப்பு அளிக்கவே சங்கர ணுகின்றன்.
அறநெறி யாவையும், உண்மைகள் யாவையும், ஒழுக் கமான செயல்கள் யாவையும் பாதுகாப்பது விரதமாகும். இந்த ஒழுக்க நெறியில் வழுவும் மக்களுக்கு திருமூலர்
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் கண்காணி யில்லா விடமில்லைக் காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நிறைந்தோனக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே
எனத் திருமந்திரம் மூலம் கூறுகின்ருர்,
(தொடரும்) திருத்தம்
159ம் பக்கம் 8ம் வரி
இன்று இத் தலத்தில் பன்றித்தலைச்சி ஆதிமூலத்தில் கண்ணகி உருவிலும், தெற்கு நோக்கிய கர்ப்பக்கிருகத்தில் சிவகாமி வடிவிலும், எழுந்தருளி மூர்த்தியாக இராஜேஸ் வரிவடிவிலும் திகழ்ந்திருத்து அருள்பாலித்துக் கொண்டி ருக்கின்ருள்.
.........................................
 

هور
காந்தி நூற்றண்டு விழா விசேட மலர் ---------24()G་ཡ-9-ས་───
அன்புடையீர்!
1969 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆத்மஜோதிக்கு 22 ஆவது ஆண்டு ஆரம்பமாகிறது. இவ்வாண்டு மகாத் மாவின் நூற்ருண்டாகவும் இலங்கையின் கல்வி நூற்ருண் டாகவும் அமைந்துள்ளபடியினுல் இவ்வாண்டில் ஆத்மஜோதி விசேட மலர் ஒன்று வெளியிட வேண்டுமெனப் பல அன் பர்கள் வேண்டிக் கொண்டார்கள். அவர்களது வேண்டு கோளின்படி இவ்வாண்டு கார்த்திகை மாசத்தில் நூற்றுக் கணக்கான ஆத்மீகக் கட்டுரைகளைத் தாங்கி விசேடமலர் வெளிவர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
10,000 மலர்கள் அச்சேற்றித் தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெல்லாம் (இந்தியா, மலாயா, சிங்கப்பூர், தென் ஞபிரிக்கா, பர்மா, பிஜித் தீவு, இங்கிலாந்து உட்பட) அனுப் புவதற்கு உத்தேசித்துள்ளோம். ஆத்மீகப் பணிக்குச் செய் யும் தொண்டாகும் இது என்று கருதி விளம்பரங்கள் கொடுத்து உதவ வேண்டுகின் ருேம்.
மலர் அளவு: டிமை சைஸ் 4 | | && !$15ଜit: 4 0 0 மலர் விலை 5 ரூபா
விளம்பர விகிதம்
கவர் 4ம் பக்கம் 250 et5Lurr
| KEF, NJIli : 2 Lb LJ3554) 200 eשt_jח
1,(0)} : 3 Lb Ljigžð 150 ரூபா
உள்ளே ஒரு பக்கம் 100 ரூபா
உள்ளே பக்கம் 50 ரூபா
go ah (Bor i Luj II, Lћ 25 ரூபF
ஆத்மஜோதி நிலையம், இங்ங்ணம்
நாவலப்பிட் டி. ஆத்மஜோதி நிலையத்தினர்
ஆத்மஜோதி 22ஆவது ஆண்டு
f

Page 17
Registered at the G.P.O. as a
சந்தா நேய
அன்புடையீர்!
இறைவன் திருவருளால் : டுகள் பூர்த்தியாகி 21வது 6-வது இதழ் வெளிவந்து களுடைய ஆதரவினலேயே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கம்போல் அன்பர்கள் அனை அனுப்பி வைக்கும கின்ருேம். சந்தா நேயர்க θ, ήτη ή குறிப்பிடுமாறு கேட்
ஆத்மஜோதி
நாவலப்பிட்டி,
அச்சிடுவிப்போர்: ஆத் அச்சிடுவோர்: ஜீ ஆ
வெளியிட்ட திகதி:

Newspaper M. L. 59,300
S S S SMSSSASA A A A A A A S S SS
பர்களுக்கு
ஆத்மஜோதிக்கு 20 ஆண் து ஆண்டு ஆரம்பமாகி ள்ளது. பல சந்தா நேயர் ஜோதி மாதந்தோறும் கொண்டிருக்கிறது. வழக் வரும் இவ்வாண்டுச் சந் ாறு அன்புடன் வேண்டு ள் தமது சந்தா இலக்கங் டுக் கொள்கின்ருேம்.
நிலையம்,
(இலங்கை)
மஜோதி நிலையத்தினர்
த்மஜோதி அக்குகத்தினர் 13一墨二59。