கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1974.08.17

Page 1
------
锅粥
*
-,
皺
ప్తి
மரீஅழகர் பெரு
曼
鬆鬆
委蟹雯
攀攀霧
香
繫
黏勢蕊
“፳፻፩
*
క్తి
S.
 
 
 
 
 
 

*發 シ
----
.....
frun
iT GEg,
LD 6

Page 2
ஆத்மஜோதி
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே. "
- சுத்தானந்தர்
H
ஜோதி-26-ஆனந்தளு ஆனி-ஆடி-ஆவணி 1-ல்டி (7-6-74)-சுடர் 8-9-10
பொருளடக்கம்
திருமாலிருஞ்சோலை எம்பெருமானே மீக்கூறல் ܚ T 2 9 1 சமரசப் பிரார்த்தனை - 130 பூனி அழகர் பெருமாள் கோயில் - . 131 யூனி கணேச அட்டகத்துதி - 135 உயிர்க்கு ஊதியம் - 137 சுவாமி அபேதானந்தரின் அறிவுரை! - 140 சிந்திப்போமா? m | 4? நோவும் இனிக்க நின் நாமம் உரைத்திடுவேன்!" 46 1 -سسه; திருமுறையின் பெருமை .47 1 است இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள்! - 150 கீதையும் நானும் - I 57 ஸவ யோக்களின் சிறப்பு - 159 உறனிதன் எங்கோயோ போகிறன்? .6 1 مس I |
SLLMLL TTTTMLMLTMLL LTALA LTL LTeTSTS LTLLTTLSTS LTALS TMS ML TMLSTASL TMLL LS LTMLSSTMLSLTTLSLTTLS LMLS LLL LLTMT T T LLSLL T
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள்சந்தா 190ண00 வருடச்சந்தா 5ம00 தனிப்பிரதி சதம் 50 —()അല്ലേ-- *్య స్టోన్
கெளரவ ஆசிரியர்: திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர் திரு. நா. முத்தையா
<<ല്ലേ.--— த ஷு ஷூ சி, ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி. (போன்: 353)
ZSTT TM ee T Te TeMS TMMS TMT TeMS T TT T T TAeAeMT TM T TMA MAeAe MLLS TL SLML MT TLT Lkkek kkeMS MS eMeS
鬱
馨
演
 
 
 
 

திருமாலிருஞ்சோலை எ ம் பெ ரு மானை மீ க் கூற ல்
(பெரியாழ்வார்)
உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடை
யேன், இனிப்போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கைநின்
சாயையழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவழி காட்டிஉன்
பொன்னடி வாழ்க என்று இனக்குறவர் புதிய துண்ணும்
எழில் மாலிருஞ் சோலையெந்தாய்.
காதம்பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர்
நிழலில்லை நீருமில்லை உன்
பாதநிழலல்லால் மற்றேருயிர்ப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றம் குரு பாண்டவர்க்காய் அங்கோர்
பொய்ச் சுற்றம் பேசிச் சென்று
பேதஞ்செய்து "எங்கும் பிணம்படுத்தாய்
திருமாலிருஞ் சோலையெந்தாய்!
காலுமெழா கண்ண நீரும்நில்லா உடல்
சோர்ந்து நடுங்கி குரல் மேலுமெழா மயிர்க்கூச் சுமற என தோள்களும் வீழ் வொழியா மாலுக்ளா நிற்கும்(என் மனனே! உன்னை
வாழத் தலைப் பெய்திட்டேன் சேலுகளா நிற்கும் நீள்சுனை சூழ்திரு
மாலிருஞ் சோல்ை யெந்தாய்!
எத்தனை காலமும் எத்தனை யூழியும்
இன்றெடு நாளையென்றே இத்தனை காலமும் போய்க்கிறிப்பட்டேன்
இனி உன்னைப் போகலொட்டேன் மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
நூற்றுவரைக் கெடுத்தாய் சித்தம் நின்மாலதறிதியன்றே திரு
மாலிருஞ் சோலையெந்தாய்.

Page 3
130 ஆத்மஜோதி
சமரசப் பிரார்த்தனை
(சுவாமி சிவானந்தா)
உனைத் தொழுது வணங்குகின்றேம்; நீ எங்கும் உள்ளாய், எல்லாம் வல்லாய், எல்லாம் அறிவாய்; நீ சச்சிதானந்தப் பொருள் - மெய்ப்பொருளும், மெய்யறிவும் பேரின்பமும் நீயே; எல்லா உயிர்களிலும் உறைபவன் நீயே.
ஒம் தயாபரத் தெய்வமே!
உணரும் உள்ளமும், சமநோக்கும், தூய அன்பும் மெய்யறிவும் எமக்குத் தந்தருள்க; ஆணவம், துராசை, வெறுப்பு, பேராசை, காமம், வெகுளி இவை பற்றது எம்மைக் காத்தருள்க; ஆன்மீக உணர்ச்சிகளை, எமது உள்ளத்தில் நிரப்பி அருள்க.
ஒம் உலகாளும் ஜெகதீசா!
எல்லாப் பெயரிலும் உருவிலும், உனையே யாம் காண்போமாக; எல்லாப் பெயரிலும் உருவிலும், உனையே யாம் வழிபடுவோமாக; எப்பொழுதும் உனயே, யாம் சிந்தித்து வருவோமாக; என்றென்றும் உனிலேயே யாம் நிலைத்திருப்போமாக.
மகா மந்திரம்!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
-கலி சந்தாரணேபநிஷத்.
பொருள்: இம் ம்கா மந்திரத்தில் ஹரி. ராம் கிருஷ்ண என்னும் மூன்று
நாம்ங்கள் உள்ளன. இங்கு ஹரி நாம்ம் பாபத்தை நீக்கியும் , ராம நாமம் உள்ளத்தில் இன்பத்தைப் பெருக்கியும், கிருஷ்ண நாமம் இறை உணர்ச்சியைத் தந்தும் காக்க வல்லது.
பயன்: இம் மந்திரத்தை 16 தடவைக்குக் குறையாது கோஷ் டி கானம் தினசரி செய்துவர இஷ்டபூர்த்தியும் கிட்டுகிறது. மேலும், இம் மந்திரத்தில் கண்டுள்ள பதினறு நாமங்களை எப்போதும் ஜபித்து வருபவர் இறை உலகு, இறை அண்மை, இறை உருவு, இறை இயல்பு, என்னும் நான்குவித முத்தியையும் அடைவர். எல்லா பாபங்களினின்றும் நீங்கப்பெற்று எல்லாப் பற்றுதலினின்றும் விடுதலை அடைவர்.

ஆத்மஜோதி 131
ழரீ அழகர் பெருமாள் கோயில் (ஆசிரியர்)
அழகர் மலை என்பது மதுரைக்கு வடகிழக்கே 12 மைல் தூரத்தில் உள்ளது. இதனைத் திருமாலிருஞ்சோலை என்பர் இங்குத் திருமால் நின்ற கோலத்துடனுள்ள கோவில் இருக் கிறது. வாயிலருகே பதினெட்டாம் படிக் கறுப்பன் கோவில் இருக்கிறது. அருகில் ஒடும்சிற்றறு சிலம்பாறு அல்லது நூபுரகங்கை எனப்படும். இது திருமால் குன்றம் எனச் சிலப் பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. இங்கு ஒரு பிலமும், புண் ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகள் உண்டு என்றும் அந்நூலால் தெரிகிறது. திரு மாலிருஞ்சோலைக்கு பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆதி யோர் திருப்பாடல்கள் பாடியுள்ளார்கள். சுவாமி திருநாமம்: ழகர்மாலலங்காரர். தாயார்: சுந்தரவல்லிநாச்சியார். தீர்த் தம்: சிலம்ப்ாறு. விருட்சம்: சந்தனம். மலயத்துவசபாண்டி யனுக்கும் தருமதேவதைக்கும் சுவாமி காட்சியளித்திருப்ப தாகக் கூறுவர்.
கொங்கையா சேர்வை என்பவர் மதுரையைச் சேர்ந்த
சிவகெங்கையைச் சேர்ந்தவர். இவரும் இவர் குடும் பத்தி
னரும் அழகர்மலை அழகர் மீது நீங்காத பக்தி உள்ளவர்கள். இவர்களுடைய குலதெய்வமாக வழிபட்டவர்கள். கொங்கை யா சேர்வைக்கு பதினெட்டாம் படிக் கறுப்பன்மீது ஒரு அலாதிப் பிரியம்.
இன்றைக்கு மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்பு கொங்கையா சேர்வை சிவகெங்கையிலிருந்து புற ப்ப ட் டு வேலை தேடி இலங்கைக்கு வந்தார். அந்தக் காலத்தில் கடல் மார்க்கமாக கொண்டுவந்து மன்னுர்க் கரையில் இறக்கப் பட்ட தமிழர்கள் மாத்தளை வழியாகவே மலைநாட்டைச் சேர்ந்தார்கள். மாத்தளை மலைநாட்டிற்கு வாயில் போன்று அமைந்துள்ளது.
மாத்தளை நகரத்திற் கூடாக வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதி திருக்கோணமலை வீதி என்று அழைக்கப்படும். நகரத்தின் எல்லையில் நுழைவாயிலில் இவ்வீதியின் பக்கத்தே

Page 4
132 ஆத்மஜோதி
முத்துமாரியம்மன் கோயில் உண்டு. இது சரித்திரப்பிரசித் திபெற்ற ஒரு தலமாகும். ஆண்டுதோறும் மாசிமகத்திற்கு பதினைந்து தினங்களுக்கு முன் கொடியேறி மாசிமகத்திலன் றைக்கு ஐந்து தேர்கள் கொண்ட பெரிய தேர்த்திருவிழா நடைபெற்று வருகின்றது. ஈழத்திலே வானெலி அஞ்சலைப் பெற்ற இரு தேர்த்திருவிழாக்களுள் இதுவும் ஒன்ருகும்.
திருக்கோணமலை வீதியில் மாத்தளையிலிருந்து வடக்கே மூன்று மைல் தூரத்தில் வெள்ளைக்கல் என்ருெரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தில் காணப்படும் கற்கள் வெண்மை நிறமுடையனவாயிருப்பது பற்றி அப்பெயர் வந்தது என்று சிலர் சொல்லுகின்றர்கள். வேலை தேடிவந்த கொங்கையா சேர்வை மற்றவர்களைப் போல் அடிமை வேலை செய்ய விரும் பாதவராய் சுதந்திரமான தொழில் செய்து வாழ விரும்பி ஞர். வெள்ளைக்கல் கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் எடுத்து ஆகமத்தொழிலில் ஈடுபடலாஞர். நல்ல முயற்சியாளன். பெரிய குடும்பஸ்தன். இரு மனைவியரும் இருபது குழந்தைகளும் உடையவர். இது அவருக்குக் குடும்பபாரமாகவே, தெரிய வில்லை. காரணம் அவரது கடவுள் பக்தியே. ضمره
இத்தனை குடும்பபாரத்திற்கிடையிலும் தி ரு மா லி ரு ஞ் சோலை அழகரை அவரால் மறக்க முடியவில்லை. ஒருநாள் ஒரு கனவு கண்டார். திருமாலிருஞ்சோலை அழகர் கனவில் தோன்றி நான் உன்னுடன்தானே இருக்கின்றேன். நீ ஏன் கவலைப்பட வேண்டும் எனக் கேட்டார். அன்று தொடக்கம் கல்லொன்றை நாட்டி அதற்கு நாமம் சாத்தி பூசை வழிபாடு ஆதியன செய்து வந்தார். கொங்கையா சேர்வை மீது அடிக் கடி அருள் வெளிப்படுவதுண்டு. தம்மை மறந்த நிலையில் எதிரே நிற்கும் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார். இதனைக் கோடங்கி சொல்வது எனக் கிராம மக்கள் கூறினர். அதனுல் கொங்கையா சேர்வை கோடங்கிக்காரர் ஆஞர். அவர் சொன்ன சொற்கள் எல்லாம் பலித்தே வந்தன. எதுவும் பொய்யாகவில்லை. அதனுல் மக் கள் அவர்மீது மிகுந்த பயபக்தி உடையவராய் வாழ்ந்தார் கள்.
திருமாலிருஞ்சோலையில் அழகர் ராதா உருக்குமணி சமேதராக நின்ற திருக்கோலம் போல வெள்ளைக்கல்லிலும் ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்று விரும்பினுர், இந்த ஆசையோடு அழகர்மலை அழகரைத் தரிசிக்கச் சென்றர். வேண்டுவார் வேண்டுவதே ஈயும் பெருமான் அல்லவா? திரு

ஆத்மஜோதி 133
மாலிருஞ்சோலையிலேயே அழகர் ராதா உருக்குமணி சமேத Urä நின்ற திருக்கோலத்தில் மூர்த்தி கிடைத்தது. கருங்கல் லில் செதுக்கிய அழகிய திரு உருவம். அதன்ை ஈழத்திற்குக் கொண்டு வந்து தாம் கல்லை வைத்துக் கண்ணனுகப்பாவித்து வழிபட்ட இடத்தில் தமக்கியன்ற அளவில் ஒரு கோயில் கட்டி மூர்த்திகளைப் பிரதிட்டை செய்து பூரீ அழகர் பெருமாள் கோயில் என்ற பெயரோடு வழிபாடு செய்து வந்தார். *மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது” என்பதற்கேற்ப அக் காலத்தில் அத்திருக்கோயில் சிறந்து விளங்கியது.
சித்திரா பூரணைக்கு முதல் வரும் அமாவாசையில் கொடி யேறி சித்திராபூரணையிலன்றைக்கு விழாமுடிவுறும் வழக்கம் திருமாலிருஞ்சோலையில் இன்றும் உண்டு. அதனையொட்டி யே வெள்ளைக்கல் அழகர் கோயிலிலும் இன்றும் விழா நடை பெற்று வருகின்றது. பூரணையில் அன்றைக்கு ஆயிரக்கணக் காணுேருக்கு அன்னதானம் நடைபெறும்.
இத் திருக்கோயிலுக்கு வலது பக்கத்திலே கோடங்கியார் உபாசித்து வந்த சந்தனக் கறுப்புக்கும் சிறிய கோயில் உண்டு. விழா முடிந்து மூன்ரும் நாள் சந்தனக்கறுப்புக்கு விசேட பூசை நடாத்தப்பெறும். சந்தனக் கறுப்புக்கு நீண்ட நாட்களாக ஆடுவெட்டிப் பலிகொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதனை இப்போது நிறுத்தி உள்ளார்கள்.
கோயிலின் உள்ளே மூலமூர்த்தி மாத்திரம்தான் உண்டு. உற்சவ மூர்த்தி இல்லை. உற்சவ மூர்த்தி ஒன்று இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்போதுள்ள நிருவாகஸ்தர் முயன்றுகொண்டிருக்கிறர். எல்லா நலன்களை யும் அழகர் அளித்து வருகிறர் என்பது இவருடைய நம் பிக்கை. கோயிலினுள்ளே வலது பக்கத்தில் கணபதிக்கும் இடது பக்கத்தில் முருகனுக்கும் கோயில்கள் இருக்கின்றன. கோயிலுக்கு இடது பக்கத்திலே 25 யார் தூரத்தில் கோயில் வளவுக்குள் கோடங்கியாரின் சமாதியும் உண்டு.
தனக்கு இருபது பிள்ளைகள் இருந்தாலும் தனக்குப் பின் தனது பிள்ளைகள் கோயிலைப் பரிபாலிக்க மாட்டார்கள் என்ப தைக் கொங்கையாசேர்வை உணர்ந்திருந்தார். அதனுல் தனது நண்பர் முருகையா பேரிலேயே கோயில் நிர்வாகத்தை எழுதி வைத்திருந்தார். இது அவருடைய பிள்ளைகளுக்குத் தெரியாது. கோயில் நிர்வாகம் பற்றிக் கோடேற வேண்டி

Page 5
134 ஆத்மஜோதி
வந்தது. கோட்டின் தீர்ப்பும் எல்லாருக்கும் சாதகமாக அமைந்தது. இரு மனைவியர்களின் இரு மூத்த பிள்ளைகளுக் கும் முருகையாவுக்கும் பங்கு உண்டு என்றும் மூவரும் சேர்ந்த டிரஸ்டி சபை மூலம் கோயில் நடத்தப்பெற வேண் டும் என்றும் வருடம் ஒருவர் பொறுப்பாக இருந்து நடத்த வேண்டும் என்றும் கோட்டில் தீர்ப்புக் கூறப்பட்டது. இத் தீர்ப்பு 1933-ம் ஆண்டு மார்ச் மீ" 23-ம் திகதி வழங்கப்பட் டது. 1945-ம் ஆண்டில் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து திரு முருகையாவிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தனர்.
இப்போது கோயிலை நிருவகிப்பவர் முருகையாவின் மகன் ஆறுமுகையாவாகும். இவர் துடிதுடிப்பும்பக்தியுமுள்ள இளைஞர். கோயில் கட்டிடத்திலும் நடைமுறையிலும் பல திருத்தங்களைச் செய்து வருகின்றர். இக்கோயிலைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் எழுபத்தைந்து வரையில் இருக்கின்றன. கோயில் நன்றக இருந்தால்தான் தாங்கள் நன்றக இருக்க முடியும் என்பதைத் தற்போது உணர்ந்துள்ளார்கள். அத ஞல் தற்போது பயபக்தியுடன் பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றர்கள். கொங்கையாசேர்வையின்ஜ்ருபது பிள்ளைகளில் இருவர் மாத்திரமே இப்போது உயிரோடு இருக் கிருர்கள். அவர்களில் ஒருவர் பெண், மற்றவர் ஆண். அவரு டைய மகளாகிய திருமதி செல்லத்துரை கோயிலுக்குப் பக் கத்து வளவிலேயே வசித்து வருகிருர்,
அவரும் அவரது குடும்பத்தினரும் தற்போது தந்தை யாரின் பக்தியை உணர்ந்து வழிபாடு ஆற்றி வருகின்றர்கள். மதுரைக்குத் திருமாலிருஞ் சோலை பெருமை தருவதுபோல மாத்தளைக்கு வெள்ளைக்கல், பூணி அழகர் பெருமாள் கோயில் பெருமை தருங் காலம் தூரத்தில் இல்லை. மாத்தளைக்கும் இக் கோயிலுக்கும் மத்தியில் பரமகுரு சுவாமிகளின் மடமும் சமாதியும் உண்டு. அதுவும் பிரபல்யமாகும் காலம் கிட்டி வருகின்றது. ܝ ܗ
திருமாலிருஞ் சோலை அழகரையும், வெள்ளைக்கல் அழக ரையும் பார்க்கும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது. இரு வரும் ஒருவரேதான். திருமாலிருஞ் சோலைக்குச் சென்று அழகரைத் தரிசிக்க முடியவில்லையே என்று யாரும் கவலைப் படத் தேவையில்லை. வெள்ளைக்கல் அழகரைத் தரிசித்தாலே அவரைத் தரிசித்தது போலத்தான்.
澄

ஆத்மஜோதி
பூனி கணேச அட்டகத்து தி
கணேசாட்டகம்” என்னும் இத்துதியை அனுதினமும் பாராயணம் செய்வதனல் எல்லாப் பாபங்களும் நீங்கும். ஜாதகத்தில் கேதுதோஷம் இருந்தாலும் கேது தசை கேது புத்தி காலத்திலும் இத்துதியை ஒதி
வருவதனுல் பெருந்துன்பங்களிலிருந்து நீங்கி நலம்பெறலாம்.
(தமிழாக்கம்: ஆசிரியர். க. வை. ஆ. சர்மா)
பூரீ விநாயகத்தியானம்
முன்வந்த மதயானை முகத்துமதி வண்ணமிளிர் தன்தந்த மோதகம் தனியங்கு சம்பாசம் இன்புதரி கைகளொடு மரைமலரில் இனிதினுறை மன்விக்கி னேசுரனை மனங்கொண் டுளந்தரிப்பாம்.
W துதி ஒற்றை மருப்புடையோன் ஒங்குபெருங் காயத்தன் பற்றி உருக்கியொளிர் பசுந்தங்க மேனியொடு தொற்றிப் பரவுறுகண் தொங்குபெரு வயிறுடைய உற்றகண நாயகனை உளங்கொண்டு போற்றுவனே.
பரவுமுஞ் ஜிப்புல்லும் பயில்கரு மானின்தோலும் அரவுயஜ் ஞோபவிதம் அழகுற அமையத்தாங்கி இரவுகொள் திங்களைத்தான் எழின்முடி ஒளிர வைத்துப்
பரவுமக் கணநாயனேயே பற்றியுளம் போற்றுவேனே.
அன்னையம் பிகைதன் உள்ளம் ஆனந்த மாக்குவோனும் கன்னியர் எழுகணத்துக் கர்ப்பினில் வந்துள்ளோனும் மன்னுபக் தரைமகிழ்ந்து மதத்தினைக் கொண்டுள்ளோ னும் பண்ணுமக் கணநாயனையே பக்தியாப் போற்றுவேனே.
பன்மணி குயின்ற பூண்கள் பயிலுசிர் மேனி பூண்டு பன்னிற மலரின் மாலை பாங்குற அணிந்து சாரச் சொன்னவிவ் விசித்திர ரூபம் சூழ்வுறத் தாங்குந் தேவன் என்னுளக் கணநாயனையே எய்தயான் போற்று வேனே.

Page 6
136 ஆத்மஜோதி
தந்தியார் முகமே கொண்டு தனிப்பெரும் மேன்மை சாரச் சந்தமார் செவிக ளான சாமரச் சிறப்பு வாய்ந்து அங்குசம் பாசந் தாங்கி அருள்நிறை தேவ தேவாய் இங்குறை கணநாயனையே எண்ணியான் போற்று வேனே.
தாவியே ஒடிச்செல்லும் தனித்தமூ டிகமே யூர்ந்து மேவுதே வாசு ரர்கள் மிடைந்த போர்சாடி நின்று கோவுயர் வீரங்காட்டிக் குலகணத் தலைமை பூண்டோன் பாவியல் கணநாயனையே பரவியான் போற்றுவேனே.
இயக்கர்கின் னரரி னுேடு இசையுகந் தருவர் சேர நயப்புறு சித்தர் வித்யா தரருளம் கசிய என்றும் வியப்புறத் துதித்துப் போற்றும் விரிகணத் தலைம காத்மா வயப்புனை கணநாயனையே வாழ்த்தியே போற்று வேனே.
நினைப்பிலார் எவர்க்கும் என்றும் விக்கினம் நேருந் தெழ்வம் நினைப்பவர் எவர்க்கும் என்றும் விக்கினம் நீக்கி நின்று எனைத்துள சித்தி யெல்லாம் இயை கணத் தலைவராகிப் புனைவயக் கணநாயனையே புகழ்ந்து யான் போற்று வேனே.
துதிப்பயன்
இந்தநற் கணுட் டகத்தை எய்துபுண் ணியமா வெண்ணி வந்தநற் பக்தியோடு வரன்முறை படிப்போர் யாரும் பந்தமாத் தம்மைச்சூழும் பாபமெல் லாமே நீங்க அந்தமிவ் கைலாயத்தை அடைவது"திண்ண மாமே.
மனிதன் எக்கணமும் நினைவிற்கொள்ள வேண்டியவை இரண்டு விஷயங்கள். உடனே ம்றக்க வேண்டியவை இர ண்டு விஷயங்களாகும். நினைவிற்கொள்ள வேண்டியவை பரமாத்மா, மரணம் என்னும் இரண்டும்ாகும். உடனே ம்றக்க வேண்டியவை நீ பிறருக்குச்செய்த உபகாரம், பிறர் உனக்குச் செய்த அபகாரம் என்பவைகளாகும்.
-சத்தியசாயிபாபா
19 ܟܗ

ஆத்மஜோதி 1.37
உயிர்க்கு ஊதியம் (வெ. கிருஷ்ணம்மாள்)
அலுவலகத்தில் வேலை செய்வோர் மாத முழுவதும் வேலை செய்து மாத இறுதியில் ஊதியம் பெறுகின்றனர். ஆனல் கூலிஆட்களோ தங்கள் எஜமானரிடம், "கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார் - அம்மம்மா சேவகரால் படுந் தொல்லைக்கு எல்லையே இல்லை’ என்று பாரதியார் பாடி யுள்ளார். இன்றைய நடைமுறைக் காட்சியும் இதுதான். கூலியாட்கள் வகைகளிலும் கூலி நிர்மாணங்களிலும் பல திறமும் தரமும் உண்டு. மணிக்கூலி கேட்பாருமுண்டு. நாட் கூலிக்கு வேலை பார்ப்பாருமுண்டு. வாரக்கூலி மாதக்கூலி எனப் பெறுவாருமுண்டு. உண்மையில் உழைப்பவனுக்கு உற்ற கூலி கொடுக்க மனமில்லாத முதலாளியும் உண்டு. முதலாளியை ஏமாற்றிப் பிழைக்கும் சாமர்த்திய வேலைக் காரர்குளும் உண்டு.
நிரந்தரக் கூலி பெற்றுக்கொண்டோம் என்ற பழம் பெருச்சாளிகள் தட்டிக் கழித்து உழைக்காமலே ஊதியம் பெற்று வருகின்றனர். அவர்கள் மனம் எங்கே? அது சொல் லும் சாட்சியம் என்ன? நீதி ஏது? அறிவுக்கண் அவர்களை அச்சுறுத்தாதபோது யாரிடம் முறையிடலாம்? காலந்தான் இவர்களைத் திருத்தவேண்டுமேயல்லாது மந்திரிகளால் அவர் களை மாற்றியமைத்துவிட முடியாது.
உலகில் வேலைவாய்ப்புகள் பல. அவற்றில் உண்மையில் உழைப்பவர் சிலர். அதற்கு உற்ற ஊதியம் பெறுபவர் மிகச் சிலர். உலக நடைமுறையில் ஊதியத்தில் பல வேறுபாடு கள் காணப்பெறினும் உயிர்களுக்குச் சிறந்த ஊதியத்தை மாருமல் மாற்றமில்லாமல் கொடுத்து வருகின்றன் ஒப்பற்ற ஒரு பெருந் தலைவன். “என்று நீ அன்று நான்’ என்பது சைவசித்தாந்தம் தரும் தீர்ந்த முடிபு. கடவுளொருவன் அநா தியே. உயிர்களும் அப்படியே. இப்படி அனுதியாய் விளங் கும் உயிர்கள் - அதாவது கால எல்லைகளைக் கடந்து மும் மலப் பேய் பிடித்துந்திய உயிர்கள் அதனதன் கர்மங்களுக் கேற்ப விந்து வழித் தோன்றி நாதமொடு கலந்து, ஊறு சுரோணிதத்துடன் ஒன்றிக் கரு ப் பை யி ல் திங்கள் சில வளர்ச்சியுறத் தங்கி விதியந்த வழிவந்த வகை அனுபவிக்க

Page 7
138 ஆத்மஜோதி
நிலந்தனில் தோன்றுகின்றன. தோன்றிய உயிர்களுக்கு ஊதியம் எது? இதனை வள்ளுவம் வரையறுத்து திட்டமுடன் செப்புகிறது.
*ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதிய மில்லை உயிர்க்கு’
இப்பாடலிலுள்ள முதல் வார்த்தை ஈதல் என்பதில் பொருள் தருதல், கொடுத்தல் எனக் கொள்ளலாம். ஈ, தா, கொடு என்ற முச்சொற்களையும் மேலெழுந்த வாரியாய் நோக்கினுல் ஒரு பொருளதாகக் காண்கினும் சற்று தரமாற் றமுண்டு. தடுமாற்றமின்றி இதனை முன்னுேர் நூல்வழி ஆய் தல் அவசியம். ஈதலே அறம்.
தன்னினும் மெலியார்க்கு ஒன்றைக் கொடுப்பது ஈத லாகும். அக்கால வழக்கம் மன்னர்கள், குறுநில மன்னர்கள் செல்வநிலை மிகுந்த உயர்ந்த செல்வந்தர்கள் ஆகியோர் செல்வத்தை நிலையான புகழைப் பெற வாரி வாரி ಖ್ವಸ್ಥೆ வந்தனர். அதன் மரபில் ஈத்துவக்கும் இன்பத்தால் "பாரி புகழ் அடைந்தான். பாரியை (குறுநில மன்னர்) மாரியோடு (மழையோடு) ஈடு காட்டிப் புலவர் பாடிச் சென்றனர்.
எதனுல்? ஈந்ததால் தானே! தன்னையொத்தாருக்கு ஒன்று வழங்குவதைத் தருதல் எனச் சொன்னுர்கள். தன்னை விட மேலோர்க்கு ஒன்று அளிப்பதைக் கொடுத்தல் எனக் குறிப்பிட்டனர்.
உயிர்களுக்கு ஊதியமே-சம்பளமே - லாபமே - எல் லாமே முதலீட்டு உழைப்பான ஈத்துவக்கும் இன்பமும் அத ஞல் பெறுகின்ற இசையோடு வாழ்தலுமே. வ ள் ஞ வ ன் வகுத்த திட்டமான ஈதலே ஆண்டவன் மாறக் கருணையால் உயிர்களுக்குத் தருகின்ற ஊதியமாகும்.
அது அல்லது - இல்லை என்ற முச்சொற்கள் ஆய்வில் ஈதல் அன்றி வேறு வழிகளில் உயிர்களுக்கு ஊதியம் கிடை க்க வகையே கிடையாது. பகுதிநேர வேலை இதில் இல்லை. வேறெந்த உபரி வேலையும் செய்து கூலி பெற்றுவிட முடி யாது. மற்றும் அளந்திடும் ஈதலாகிய உழைப்பின் ஊதியத் திற்கு மாற்றமோ ஏமாற்றமோ - இல்லை. உயிர்கள் உயிர் களை வேண்டுமானல் ஏமாற்றலாம். ஏமாறுவதால் ஆண்ட

ஆத்மஜோதி 139
வணுகிய எஜமானரை ஏமாற்றவும் முடியாது. மாற்றவும் முடியாது. அவரும் ஏமாரார். ஏமாற்றவுமாட்டார். உண்மை அழிவற்றது. கருணையும் அப்படியே.
தக்கோர் குணம் - கொடையால் அவர் புகழ் என்றும் வாழும். ஆண்டு பல கடந்தாலும் அவர்களின் இசைபட்ட வாழ்வு மாண்டு மறைவதில்லை. நின்று புகழ் பரப்பும். புதுமை தோற்றுவிக்கும்.
நிதி மிகுந்த பொற்குவையாளர்களே! அருளாளர்களே!?
நாள் கடத்தாமல் இன்றே உயிர்க்கு ஊதியம் பெற் றுய்வீர்! அதற்கு உங்கள் வேலை ஈதலே. வாரி வாரிக் கொடுங்கள். நல்ல பல பணிகட்கு அதுவே உங்கள் உயிர்க்கு ஊதியம். ஆன்ம பரமாத்ம உண்மையும் இதுவே.
பல்லவி 像
)ேவத் தியானமே சிவன் முக்தி . நவ சக்திகளும் நாடி வரும் (சிவத்தியானமே)
அனுபல்லவி
பவக்கடலைக் கடக்கும் பரமார்த்த தவக்கலமாம் பக்தி பரவச (சிவத்தியானமே)
சரணம்
இதய வெளிதனிலே ஏகாந்தமாய் உதய ஞானபானுச் சுடரால் இதமாய் ஆணவ மாயைக் கன்மங்களை எரித்துப் பசுவாம் உயிர் பதியைப் பற்றும்.
(சிவத்தியானமே)
தான் வந்தபோதிருந்த உலகத்தைப் போகும்போது இன்னும் சற்று செழும்ைப்படுத்தியவன்; ம்ற்றவர் களிடத்திலே சிறந்ததைத்தான் கண்டவன்; தன்னி டத்திலேசிறந்ததை மற்றவர்களுக்கு அளித்தவன் -
இவனே வெற்றிபெற்ற மனிதன்.
-ஆங்கிலப் பழமொழி

Page 8
140 ஆத்மஜோதி திருவனந்தபுரம், சுவாமி அபேதானந்தரின் அறிவுரை!
இந்த மாய வாழ்க்கையிலும் அடியேனுக்கு ஒவ்வொரு மூச்சிலும் புத்துயிரை ஊட்டிக் கொண்டிருப்பது அனந்த கல்யாண குணநிதியான பகவானுடைய திருநாமமொன்றே யாகும். அது வார்த்தைகளினுல் சொல்லவொண்ணுதது.
நாமமும் நாமியும் அபின்னமானது-அபேதமானது என் பது நம் மூத்தோர்கள் சொல்லிய முதுவாக்கு. இது கற்பனை யில்லை. பெரியோர்கள் அனுபூதியிலே சுரந்த பொய்யா மொழி. இதை புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமொன்று மில்லை. "ஆகாசாத் வாயு; வாயோரக்னி’.என்ற கிரமத்தில் இந்தப் பூமியும் இப்புவியிலே காணப்படும் எல்லாப் பொருள் களும் ஆகாசத்தினுடைய தன்மாத்ரையான சப்தத்திலி ருந்து பிறந்தவைகள் என்பது நம் முன்னேர்கள் மிண்ட உண்மை. 'தஸ்யவாசக பிரணவ:? பகவானுடைய சப்த மூர்த்தி அல்லது ஒலியின் வடிவம்தான் பிரணவம் என்ருர் யோகாசார்யணுன பதஞ்சலி மஹரிஷி. நமது எண்ணங்க ளெல்லாம் “சப்தாத்மகம்” (ஒலியின் வடிவம்) என்றும் சப்த மில்லாமல், எண்ணங்கள் நம் மனதில் தோன்றுவதில்லை என் றும். ஆகவே எண்ணங்களுக்கெல்லாம் சப்தம் அல்லது நாமம் இன்றியமையாதது என்றும் நம் முன்னுேர்களான பெரியோர்கள் கண்டுகொண்டார்கள்.
எல்லா சப்தங்களும் இறையுணர்ச்சியை ஊட்டுவதில்லை என்பது நமக்கு தெரியும். சில சப்தங்கள் துன்பத்தையும், வேறு சில சப்தங்கள் இன்பத்தையும் அளிக்கின்றன. ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில், சத்வகுணம் மிகுந்த சில குறிப்பிட்ட சப்தங்கள்தான் நமக்கு இறையுணர்ச்சியை ஊட்டவல்லதாக அமைந்துள்ளது. அதுவே பகவன்நாமம், *சந்தாதிக: சப்தஸஹ’ என்று இரண்டு நாமங்கள் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இடம்பெறுகின்றன. சப்தத்திற்கு அப் பாற்பட்டவன் என்றும், சப்தத்தைப் பொறுத்துக்கொண்டு சப்தத்திற்குள் அடங்கியிருப்பவன் எ ன் றும் அதற்கு ப் பொருள்.

ஆத்மஜோதி 14f.
உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் மறைந் திருப்பதை நாம் தெரிந்து கொண்டிருக்கிருேம். அந்த இறை வன் எல்லாவற்றையும் கடந்த பொருளாகையால் அவனை ‘கடவுள்' என்று அழைக்கிருேம் கண்ணுடி, ஜலம் போன்ற நிர்மலமான பொருள்களில் பிரதிபிம்பிப்பதை நாம் காண் கிருேம். மற்றப் பொருள்களில் சூரியன் பிரதிபிம்பிப்பதில்லை. அத்தன்மை போல், இறைவன் நிர்மலமான உள்ளங்களில் மட்டும் பிரகாசித்து காட்சிதருகிறன். தூய உள்ளம் படைத்த முனிபுங்கவர்கள் மற்றும் பாகவதோத்தமர்கள் ஆகிய பெரி யோர்கள் அவனைக் கண்டுகளிக்கிருர்கள். மனிதன் இறை வனை வணங்கும் இயல்புடையவன் என்பதை அவர்கள் நமக்குக் காட்டினர்கள். நம்முடைய வளர்ச்சிக்கேற்ப - நம் முடைய ருசிக்கேற்ப இறைவனுக்கு எண்ணிறந்த நாமங் களையும், எண்ணிறந்த உருவங்களையும் அவர்கள் கொடுத் தார்கள். அப்படி அவன் எண்ணிறந்த குணமுடையவன் என்று நிரூபித்தார்கள். உருவங்கள் மிக அழகாக சிலைகளி லே வடித்தெடுத்தார்கள். திருக்கோயில்கள் எழுப்பி அந்த அழகு உருவங்களை முறையாக பிராணபிரதிஷ்டை செய்து வழிடுெம் முறைகளையும் கற்பித்தார்கள்.
மேலும் சர்க்கரையும் தித்திப்பும் போல, நெரு ப் பும் வெப்பமும் போல, நாமமும் நாமியும் ஒன்ருக இருப்பதினுல் நாமியின் நாமங்களை வாயார மனதார ஒதி, அந்த நாமத்திற் குள் அவனைக்கண்டு களிக்கலாமென்றும், அது சுலபமானதும், முறையானதுமான வழிபாடு என்றும் அவர்கள் போதனை செய்தார்கள். இந்த உலகிற்கெல்லாம் மூலகாரணமாக இருப் பது சப்தமென்றும், அதுவே பகவந்நாமமென்றும், உள்ளம் பூரித்து நாம் ஒதுகின்ற நாமமே நாமியாக காட்சி யளிக்கு மென்றும், அந்த பேரானந்தத்தை அடைவதுதான் வாழ்க் கையின் இலட்சியமென்றும் அவர்கள் பறை சாற்றினுர்கள்.
ஆகவே அன்புமிக்க பெரியோர்களே!
பகவந்நாமமும், நாமியும் அபின்னமானது என்பதை மறவாதீர்கள். மாய வாழ்வைப் போக்கி, தூய வா ழ்  ைவ பெறுவதற்கு இது ஒன்றே சாதனம் என்பதை க ரு த் தி ற் கொள்ளுங்கள். பகவந்நாமம் கேட்டதை எல்லாம் த ரு ம் சிந்தாமணி யாதலின் பூரண நம்பிக்கையுடன் இடைவிடாமல் பகவந்நாமங்களை ஒதி பேரின்பப் பேற்றைய  ைட யுங்கள். உலக வைபவங்களை பெறுவதற்கென்று புனிதமான நாமங்
- مصر
—

Page 9
42 ஆத்மஜோதி
சிந்திப்போமா?
(மு. சிவராசா)
நம் சமய வாழ்க்கையில் அடிக்கடி காணும், கேட்கும் விஷயங்கள் பல. அவற்றை மேலெழுந்தவாரியாகத் தொட் டுச் செல்வதே எங்கள் வழக்கமாகிவிட்டது. நின்று சிந்தித் துப் பார்ப்பவர் எம்மில் மிகமிகச் சிலரே. உதாரணத்துக்கு ஒன்று: O பூசை பிரார்த்தனை ஆகியன நடக்கும்போது தரிசித் தும் கலந்தும் இருக்கிருேம். அவை நிறைவேறியதும் முன் னின்று நடத்தியவர் “நமப் பார்வதி பதயே’ என்று சொல்லு வார். எல்லோரும் "ஹர ஹர மஹாதேவா” என்று சொல்லு வோம். அன்ருட வாழ்க்கையில் அடிக்கடி நாம் காணும் நிகழ்ச்சி. இதன் கருத்து சொல்வதன் நோக்கம் என்பனவற் றைச் சிறிது சிந்திப்போம்.
சிவனுடைய சக்தியாகிய உமாதேவியாருக்குரிய பேயர் கள் பலவற்றுள் பார்வதி (பர்வதராஜனுடைய மகள்) என் பதும் ஒன்று. பதிஎன்னும் வடமொழிச் சொல் தலைவன் கண வன் என்று பொருள்படும். இச்சொல் நான்காம் வேற்றுமை ஒருமை உருவெடுத்து வரும்போது பதயே என்றும், ஆரும் வேற்றுமை ஒருமை உருவெடுத்து வரும்போது பதே என்றும் வரும். அங்ங்ணம் வரும்போது முறையே "கணவனுக்கு” என் றும் ‘கணவனது” என்றும் பொருள் தந்து நிற்கும். எனவே
களை பயன் படுத்தாதீர்கள். “இறைவனைவிட மே லா ன து இறைவன் நாமம்’ என்ருர்கள் பெரியார்கள். அப் பெரியார் களின் பொன் மொழிகளை-அருள் மொழிகளை கருத் தி ற் கொண்டு, நாவார, மனதார நாமங்களையோதி வாழ்க்கைப் பயனையடையுங்கள்.
“காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி” நாம பஜனை செய் யும் அன்பர்கள்தான் அடியேன் வணங்கும் தெய்வ ங் க ள் என்று முடிவாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் சீரடிகளை வணங்கி சேவித்து நிற்கின்றேன். காலமெல்லாம் அவன் நா மங்களை யோத நன்மதியும், வலியும் தந்து அரு ஞ மாறு வேண்டுகின்றேன். மறுமுறையும் அவர்கள் பொன்னடிகளைப் போற்றி வணங்குகின்றேன்.

ஆத்மஜோதி 143
பார்வதி(யுடைய) கணவனுக்கு என்ற பொருளைத் தருவது பார்வதி பதயே என்ற சொற்ருெடர். அதுபோலவே பார்வதி (யுடைய) கணவனது என்ற பொருளைத் தருவது பார்வதி பதே என்ற சொற்ருெடர். நம: என்ருல் வணக்கம் என்பது கருத்து. வடமொழி இலக்கணப்படி இச்சொல் நான்காம் வேற்றுமை உருவெடுத்த பெயர்ச் சொல்லைத் தழுவியேவரும். *பார்வதியுடைய கணவனுக்கு வணக்கம்” என்ற பொருளைக் கொண்ட வசனம் “நம: பார்வதி பதயே” என்பது. நம: என்பதிலுள்ள விசர்க்கம் தமிழ் மொழி இலக்கணத்துக்கமைய வருமொரு முதலுக்கு இனமான ப் என மாறுகிறது. இதுவே நமப் பார்வதி பதயே என்று வழங்கப்படுகிறது.
இனி பதே என்று சொல்லும்போது ஆகும் கருத்தைச் சிந்திப்போம். பதே என்ருல் ‘கணவனது" என்பது பொருளா கும் என்பதை முன்னே கண்டோம். நம: என்ற வேற்றுமை ஏற்காத (ndeclirable) சொல் நான்காம்வேற்றுமை ஏற்றுள் பெயர்ச் சொல் ஒன்றைத் தழுவியே வரும் என்பதும் முன் னர்க் கண்டோம். எனவே “பார்வதி கணவனது வணக்கம்’ என்றருகருத்தில் நமப் பார்வதி பதே வரமுடியாது. அப்படி யெனில் நம: என்பதன் பொருள் வேறென்றதல் வேண்டு மல்லவா? நுழைந்து பார்ப்போம்
ந, ம: என்ற இரு சொற்களைக் கொண்ட சொற்ருெடர் இதுவெனக் கொள்ளலாம். ந என்ற சொல்லுக்கு “இல்லை” என்பது கருத்து. அஸ்மத் என்ற வடமொழிப் பெயர்ச் சொல் (Pronoun) ‘நான்’ என்ற பொருளையுடையது. இது ஒருமை யில் வேற்றுமை உருவெடுத்து வரும்போது முறையே அஹம் மாம், மஹ்யம், மத், மம, மயி (எட்டாம் வேற்றும்ை ஏலாத சொல் இது) என்றவாறு வரும். ஆரும் வேற்றுமையில் வரும் மம என்ற சொல்லின் பின்னைய மகரம் விசர்க்கமாக மாறு வதற்கு விதியுண்டு. இதனுல் எனது” என்ற பொருளைத் தருவது ம: என்பது தெளிவாகிறது. இப்போது இரண்டு சொற்களையும் ஒருங்கே நோக்கினுல் இல்லை, எனது” (என தில்லை) என்ற கருத்தில் வருவது நம: என்ருகிறதல்லவா? இனி நான்கு சொற்களையும் ஒரு சேரக் காணிற் கிடைக்கும் பொருள் “எனதில்லை, பார்வதி(யுடைய) கணவனது. இதை யே நமப் பார்வதி பதயே என்று சொல்லுகிருேம்.
இப்பொருளின் உட்கருத்தைச் சிந்திப்போம். நாம் இறை வ&ன வணங்கும்போது “எனது இல்லை, பார்வதி கணவனது"

Page 10
144 ஆத்மஜோதி
என்று சொல்லுவதேன்? பூசை, அர்ச்சனை, பிரார்த்தனை எல் லாம் நாம் செய்த பின் நமப் பார்வதி பதே என்று ‘எனதில்லை சிவனதே’ எனச் சொல்லுதல் பொருந்துமா என்ற பிரச் சினை எழலாம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதை இறைவனுக்காகவே செய்தல் வேண்டும். எமக்காகச் செய் தால் - அது நல்வினையோ தீவினையோ - அதன் பயனை நாம் அனுபவிக்க வேண்டும். அந்த வினையைப் புசிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க நேரும்.
எமது வழிபாடு பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் அடி சேர்வதற்காகத்தானே. அப்படியானுல் எந்தக் காரியத் தையும் எமக்காகச் செய்யக் கூடாது. எல்லாம் அவன் செயல். எல்லாம் அவன் உடைமை என்ற உணர்வுடனிருத்தல் வேண் டும். செய்யும் சிறு பிரார்த்தனையைத்தானும் "எனதில்லை” என்று விட்டுவிட முடியாதவர் வீடுபேற்றை அடையமுயல் தெப்படி? பெரிய பெரிய வேள்விகளையும், யாகங்களையும் சய்யும்போது கூட ஈற்றில் பூர்ணுகுதி செய்யும் போது *சிவார்ப்பணம் அஸ்து" என்று கூறி நிறைவு செய்கிருர்கள். இதுவரை செய்தனவெல்லாம் சிவனுக்கு உடைமை ஆகட்டும் என்பது கருத்து. பெரிய காரியங்களுக்கே முடிவு IQஅமைவதானுல் பிரார்த்தனையின் முடிவு அப்படி அ  ைம ய வேண்டுவதில் தவறென்ன?
நமப் பார்வதி பதே என்று சொல்வது நாக்கு. அதனைத் சொல்லச் செய்வது மனம், சொல்லும் போது குவிவது கரம். தாழ்வது சிரம். இவை எல்லாம் யாருடையன? எம்முடையன என நாம் நினைக்கிருேம். மண்ணும் நெருப்பும் எமீ உடல் தம் முடையன என்று கூறி சில காலத்தில் தமிமோடு சேர்த்துக் கொள்ளுகின்றன. அவற்றுக்கும் மேலானவன் இறைவன். இத ஞலேயே “கூறும் நாவே முதலாகக் கூறும் கரணமி எல்லாமீ நீ’ என்று மணிவாசகப் பெருமான் பேசினர். நமப் பார்வதி பதே என்று கூறும் நாக்கும் அவனது; கூறச் செய்யும் (மன மாகிய) கரணமும் அவனது. ஆதலால் (எனதில்லை) நம: என்று சொல்வதுதானே பொருத்தம் என்பீர்கள். இல்லை; சொல்லுவதோடு அமையாது அதன் உண்மையை உணரு தலும் சேர்ந்தாலே பொருத்தமாகும்.
நமப் பார்வதி பதே என்பதற்கு இது பொருளானல் நமப் பார்வதி பதயே என்பதன் கருத்து இன்னுமீ ஒருபடி மேலே செல்லுகிறது. நம: என்பதற்கு “எனதில்லை’ என்றும் பதயே

ஆத்மஜோதி 145
என்பதற்கு 'கணவனுக்கு’ என்றும் தானே பொருள்? இறை வன், ஆன்மா; இடையே ஒரு பொருள். ஆன்மா சொல்லு கிறது, "இது என்னுடைய பொருள் இல்லை’ என்று. முடிவு என்ன? அப்பொருள் இறைவனுடையது என்பதுதானே!"என தில்லை உனக்கே” என்னும்போது ‘உன்னுடைய பொருள். அது உனக்கே உரியது' என்று பொருளுக்கும் தனக்கும் எது வித தொடர்பும் வேண்டாமென விலகும் நிலை அது. நம: பதே என்பதில் "எனதில்லை கணவனது" என்று தெளியும் அர்த் தத்திலும் நம: பதயே என்பதிலுள்ள எனதில்லை, கணவனது ; அது அவனுக்கே ஆகட்டும் என்று தெளியும் அர்த்தம் ஒருபடி மேலே போகிறதல்லவா! இதனுல் நம: என்பதற்கு வணக்கம் என்ற பொருளைக் காட்டிலும் “எனதில்லை’ என்ற பொருள் சிறப்புடையதாய்க் காணுகிறது.
ஹர ஹர என்ருல் எடு எடு’ என்பது அர்த்தம். என்னிட முள்ள நல்வினை தீவினைகளை எடு. என்னையே இந்தப் பாசபீ படுகுழியிலிருந்து எடு. (எடுத்து உன் பாதத்தோடு சேர்த்துக் கொள்}லுன்பது வேண்டுகோள். முழுமுதற் கடவுளே! மஹா தேவா வீடு எடு என்று ஒவ்வொருவரும் ஹர ஹர மஹாதேவா சொல்லுகிருேம்.
இன்னும் ஒன்றையும் கவனிப்போம். பிரார்த்தனை முடி
வில் பிரார்த்தனை நடத்தியவர், பஞ்சபுராணம் ஒதியவர் நமப்
பார்வதி பதயே சொல்லுகிருர், (அவரும் உட்பட) எல்லோரும் ஹர ஹர மகாதேவா சொல்லுகிருேம், ஒதியவர் தனதில்லை, இறைவனுக்கே என்று சொல்ல எல்லோரும் மஹாதேவனே எடு எடு, என வேண்டுதல் செய்கிருேம்,
இவ்விரண்டு வசனங்களின் கருத்தையும் உ ண ர் ந் து சொல்லும்போது உண்மையான அமைதி கிட்டும்.
நான் ஒரு பிச்சைக்காரனக இருந்து அரசனைப்போல என்னிடமுள்ள கடைசி நாணயத்தைச் செலவழிப் பேனே அன்றி ஓரி அரசனக இருந்து கொண்டு பிச் சைக்காரன் மாதிரி என்பணத்தைச் செலவழிக்க விரும்பமாட்டேன்.
-இங்கர்சால்

Page 11
146 ஆத்மஜோதி
'நாவும் இனிக்க நின் நாமம்
உரைத்திடுவேன்!” (குறிஞ்சி-தென்னவன்")
ஏழைக் கிரங்கும் வல்லாளா!
இனிய தமிழின் சொல்லாளா! யாழைப் பழிக்கும் மொழியாளின்
ஆகந் தழுவும் இனியாளா! வாழைக் குருத்தாய் வளர்பக்தி
வலைக்குள் வீழும் அன்பாளா! தாழைத் திறந்து மனவீட்டில் -
தங்கி இன்பம் தருஞ்சீலா
பஞ்சில் நெருப்பாய் உள்ளத்தில்
பக்திக் கனல்தான் பற்றியெழ, நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்துருக
நிமலா, நின்னை நினைத்துதமிழ்
செஞ்சொன் மாலை தொடுத்தெழிலார்
செந்தா மரைத்தாள் வைத்தடியிேன்
தஞ்சம் புகுமென் வெந்துயரம்
சாமி நீக்கி யருளாயோ!
காணும் மலையும் அருவியெலாம்
கந்தா நின்பேர் ஒலித்திடுதே, மீனும் புரள்மா னிக்கநதி
மேவும் வெள்ளப் பேரொலிதான் ஊனும் உருக முருகாவென்
றெலிக்கும் போதில் நின்னடிமை நானும் இங்கு நின்நாமம்
நாவும் இனிக்க உரைத்திடுவேன்!
நினது அடியார் எஞ்ஞான்றும்
நெருப்பில் துடிக்கும் புழுவாக தினமும் கிடந்து உழலுவதோ
சேவற் கொடியா செழுமலர்த்தாள் மணந்தான் கமழும் வரைமார்பா
வானுேர் தலைவா, தினமேவும் வனந்தான் உறையும் குறப்பெண்ணுள் மணுளா அன்பர்க் கருளாளா!
 

ஆத்மஜோதி 147
திருமுறையின் பெருமை
(சு. மாணிக்கம்)
கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடந்த திருமுறைவிழாவில் பல அறிஞர்கள் திருமுறைகளின் பெருமையைப்பற்றிப் பேசியதை 12-6-74ம் திகதி வெளி வந்த வீரகேசரிப் பத்திரிகையில் வாசித்து மகிழ்ந்தேன். அவர்கள் பல அரிய விஷயங்களை மிகத் தெளிவாக விளக்கி யது பாராட்டற்குரியது. ஆணுல் சைவப் பொதுமக்கள் திரு முறைகளின் பெருமைகளை ஊன்றி உணரக்கூடிய நிலையை ஏற்படுத்த என்ன முறைகள், உபாயங்கள் கையாளப்பட வேண்டுமென்று இவ்விழாவில் ஆலோசியாதது பெரும்குறை யென்றே சொல்ல வேண்டும். சமயகுரவர் நால்வருக்குச் சிலையெடுப்பதாலோ, அல்லது அவர்களைப்பற்றிச் சிறப்பா கப் பேசுவதாலோ, விபூதி, உருத்திராக்கம் அணிந்து திரு முறைகளை இராகதாள பண்ணமைப்பின்றிப் பாடுவதா லோ திருமுறைகளின் பெருமையை நிலைபெறச் செய்யவிய லாது.
உண்மையில் திருமுறைகள் சிறப்படைய வேண்டுமா யின் பண்முறை தவருது அவைகளைப்பாடும் நிலைமை ஏற் பட வேண்டும். சமய பக்தியுடைய சமயப்பிரசாரகர்கள் பொதுவாக இவ்விஷயத்தில் அக்கறைகொண்டு பிரசாரம் செய்ய வேண்டும்.
சைவமக்கள் யாவரும் திருமுறைகளை நிச்சயமாகப் பயிலவேண்டுமென்பது சொல்லாத போதும், ஆத்மஜோதி ஆசிரியர் திரு. நா. முத்தையா அவர்கள் விழாவில் கூறியது போல் அவைகள் நாம ஜெபங்களாக ஒருவரால் கொள்ளப் படலாமேயன்றிச் சைவ சபைகளிற் கூடிய மக்கள் மத்தியில் பண்தாளம் முதலியனவின்றிப் பாடி அவைகளின் அருமை, பெருமை, மகிமைகளைக் குறைக்கக் கூடாது. மக்கள் முன் பாடுகின்றவர்கள் பண்வரிசை நன்கு கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது மிக அத்தியாவசியம். இவ்விஷயம் சமயப்பிரசாரகர்களால் மேடைகள் தோறும் தயக்கமின்றி வற்புறுத்தப்படவேண்டும்.

Page 12
148 ஆத்மஜோதி
தென்னிந்தியாவில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் இதற்கென நன்கு பயிற்றப்பட்ட ஒதுவார் மூர்த்திகளாற் பாடப்படுவது வழக்கமாகும். அங்கு ஆலய கர்த்தாக்கள் இது விஷயத்தில் மிகவும் அக்கறையுடையர், ஓதுவார் மூர்த்திகள் பக்தியுட னும், மெய்யன்புடனும் பண், இசை முதலியன தவறமற் பாடும் போது மக்களும் பக்தி சிரத்தையுடன் அதைக்கேட்டு இறையன்புடையவராவர். அப்படியான ஒழுங்குகளை நம் நாட்டிலுள்ள ஆலயங்களிலும் நிலைபெறச் செய்ய வேண்டும். இப்போது நமது நாட்டில் நடப்பதைக் கண்டு யார்தான் சஞ்சலமடையாது போவர்? பூசை முடிந்து குருக்கள் ஆசீர் வாதம் கூறியபின் தேவாரம் பாட ஒருவர் அழைக்கப்படு வர். பள்ளிக்கூடங்களில் சமயபாடச் சோதனைக்குப் படித்து நினைவிலுள்ள பலர் முன்வருவார்கள். (அவர்களுக்குள் சிறு சலசலப்பும் ஏற்பட்டுவிடும்) ஐயர் இராகம் சொல்லி தேவா ரம் பாடும்படி கூறுவார். பாட முன்வந்தவர் ஏதிே LTGB வார். தேவாரம் முடியும்வரையும் பக்கத்தில் நின்றவர்கள் எட்டத்தில் போய்விடுவார்கள். சில நிமிடங்களில் பல தேவா ரங்கள் பாடி முடிவடையும். இந்த விதமாக நமது நாட்டில் கேலிக்கிடமான பொருளாக மக்கள் மதிக்கும் நிலை ஏற்பட் டுக் கொண்டிருக்கிறது. இந்நிலை அகல வேண்டும். சமயப் பிரச்சாரம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் திருமுறைகளைப் பண்முறையாகப் பாட வேண்டுமென்பதை தயங்காமல் மேடையில் சொல்ல வேண்டும்.
மேலும் திருவிழாக்காலங்களில் திருவிழாத் துவங்கி முடி வடையும் காலம்வரை மேளவாத்தியங்கள் ஏற்பாடு செய் திருப்பார்கள். நோட்டீஸ் அடித்து திருவிழாச் செய்யும் அன்பர்கள் கோவிலில் அமர்த்தப்பட்ட மேளத்திற்கு நோட் டீஸில் முதலிடம் அளிப்பது வழக்கம். அதே போன்று பண் முறை பயின்ற ஓதுவார் ஒருவரையும் ஏற்பாடு செய்து நோட் டீஸில் இடம் அளித்து மதிப்பளிக்க வேண்டும். திருவிழாத் தினங்களிலாவது பண்முறையாகப் பாடும் நிலையை உரு வாக்க வேண்டும். திருமுறை பாட ஏற்பாடு செய்தவரை

ஆத்மஜோதி 149
குருவாக மதித்து நடக்க வேண்டும். விவேகானந்த சபை யும் மற்றும் கொழும்பு இந்துமாமன்றத்தினரும் சைவஸ்தா பனங்களும் இவ்விஷயத்தில் ஊக்கமீ கொள்ள வேண்டும். ஆலய கர்த்தாக்களுக்கும் இவ்விஷயத்தின் அவசியத்தின் விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.
திருவாசகம் திருப்புகழ் மற்றும் புராணங்கள் யாவும் பாடல்களாக இருந்த போதிலும் மூவர் அருளிய திருமுறைப் பாடல்களுக்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றல் அவர்கள் காலத்திலேயே பண்முறை அமைக்கப்பட்டுள்ளது. அதைக் கவனத்திற்கு எடுக்க வேண்டும். மேலும் மூவர் சிறப்பு என்ன வென்றல் இராகதாள அமைப்பும் பிசகாமல் பாடும்படியாக ஆண்டவனே பொற்றளம் கொடுத்துள்ளார். ஆகவே அடி யார்கள் பண்முறையின்றிப் பாடுவதைப் பாவகாரியமாக நினைவில் கொள்ள வேண்டும். சமயப்பிரசாரம் செய்பவர் களே முக்கியமாகக் கையாள வேண்டும். (தேவார திருவாசி" கங்களைச் சுருதிலயத்தோடு சேர்ந்து பாகவதர் பண்ணுகப் பாடினுல் அதுவே உண்மையான பக்தியாகும்.) இது ஒரு பெரியாரின் வாக்கு. பொதுவாக நமது நாட்டில் புராணப் படிப்புக்கள் படிக்கும் கிராமத்திலுள்ள நாலு அல்லது ஐந்து பேருடன் முடிவதற்குக் காரணம் பாடும் முறைதான். இசை பயின்ற ஒருவரையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர் சுருதிப்பெட்டியுடன் பல இராகங்களிலும் சிறப்பாக
பாடுவார். மக்கள் பலரும் விரும்பிக் கேட்பார்கள். பலமடங்கு
சிறப்படையும். கூட்ட முடிவில் திருமுறைப் பண்ணிசைமணி திரு. சிவபாலன் அவர்கள் பாடியுள்ளார். பண்முறைபயின் றவர் சிறப்பாகப்பாடி இருப்பார். அவரைப் போன்ற பண் முறைபயின்றவர்களாலேயே திருமுறைகள் பெருமையடை யுமேயன்றி வேறு எவ்வழியாலும் சிறப்படையச் செய்ய முடியாது.
ஆகவே திருமுறைகளின் உண்மை பெருமைகளை உணர்த்த வும் பக்தியை வளர்க்கவும் இசையால் இறைவனைப் பரவி இவ் வருள் பெற்றுய்யவும் வேண்டுமாயின் இசையை முறையாகப் பயின்றவர்களின் வாயிலாகப் பாடல்கள் பாடப்பட வேண் டும். இப்படியான நிலைமையையமைத்து பாடும் திறமை யுள்ளவர்களைக் கொண்டு பாடுவிப்பதிலேயே திருமுறையின் சிறப்பு மேன்மையடையும்.

Page 13
150 ஆத்மஜோதி
இறைச்சிஉண்பதால் ஏற்படும் தீமைகள்! (மாத்தளை-அருணேசர்)
மாமிசமாகிய இறைச்சி உணவு மனிதருக்கு இயற் கையான உணவல்ல. இயற்கையை மீறி மனிதர் இறைச் சியை உண்பதால்தான் எல்லாவித நோய்களுக்கும் ஆளா கிறர்கள். இந்த உண்மையை பல பெரியோர்களும் வைத் திய நிபுணர்களும் நன்கு விவரித்துக் கூறியுள்ளார்கள்.
உடலின் சுகம் உணவுகளின் குணுகுணம், உடல் உறுப் புகளின் அமைப்பு முறை, நீதி நெறி - மத வழிகளான ஆத்ம இலட்சணம் முதலான வெவ்வேறு நிலைகளைப் பொறுத்தே இவ்விதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
உடல் நலப் பாதிப்பு
இறைச்சி உணவு மனிதரின் உடல் நலத்தைப் பாதிக்
கிற விதத்தைப் பற்றி மேல்நாட்டுச் சிறந்த வைத்திய நிபு ணர்கள் தங்கள் ஆராய்ச்சி மூலம் நன்கு விளக்கிக் காட்டி
யுள்ளார்கள். மாமிச உணவே அசீரணம், குன்மம், கீல்வாயு.
ஈழை என்னும் சயரோகம், நரம்பின் ஒழுங்கீனம் முதலிய நோய்களுக்குக் காரணம் என அவர்கள் அபிப்பிராயப்படு கிருர்கள்.
கொல்வதற்கென கொழுக்க வளர்க்கப்படும் விலங்கி னங்கள் முறை தப்பி வளர்க்கப்படுவதாலும், முறை தப்பிய உணவுகள் ஊட்டப்படுவதாலும் ஏதேனும் ஒருவித நோய் உடையனவாயிருக்கின்றன. இதிலிருந்து பல நோய்களுக் குக் காரணமான வித்துக்கள் மனித சரீரத்திற்குள் புகுகின் றன. பிராணிகளின் இறைச்சி மூலமாய் மனித சரீரத்துள் கிருமிகள், பூச்சிகள் செல்லுகின்றன என்று அவ்வைத்தியர் கள் கூறுகின்றர்கள்.

ஆத்மஜோதி 151.
உண்ணும் உணவின் சத்துவத்தினுல் மிருகங்களுக்கு சதை உண்டாகிறது. அவ்வுணவு முழுதும் சீரணிப்பதற்கு முன் அம்மிருகத்தைக் கொல்வதால் உணவு முற்றும் சீர ணியாமல், கழிக்கப்பட்ட பொருள்களும் அசுத்தங்களும் அச் சதையில் தங்கி விடுகின்றன.
இக்கழிக்கப்பட்ட பொருள்களில் முக்கியமாய் கிரியேட் டின்’ (Creatin) போன்ற நச்சுப் பொருள் இருக்கிறது. இவ் வித நச்சுத்தன்மையானது அமீமாமிசத்தைச் சாப்பிடுபவர் களின் இரத்தத்திலும் கலந்து பல கொடிய நோய்களை உற் பத்தி செய்கின்றன.
அன்றியும், ஆடு மாடுகள் கொல்லப்படும்போது அவை சொல்லொணுத பீதியும் கோபமும் ஆத்திரமும் கொள்ளு கின்றனவாதலால், அவைகளின் இரத்தமும் மா மிச மு மீ கொதிபேறி நச்சுத் தன்மை அடைந்து விடுகின்றன. அவ் வித நச்சுத்தன்மையுடனேயே அவை இறந்துவிடுவதணுல், அந்நச்சுத்தன்மை அப்படியே அம்மாமிசத்தில் (சதையில்) தங்கி விடுகின்றது. பின்பு அதனை உண்பவருக்கும் அது உடலில் சேர்ந்து தீமையை உண்டுபண்ணுகின்றது.
தேவையற்ற அளவுக்குமேல் இரத்தத்தில் 'பிப்ரின்” (fibrin) என்ற தசையை மாமிச உணவு வளர்த்து வருகின்றது. இத ஞல் உடம்பில் வரம்பு மீறிச் சூடுண்டாகிறது. சூடேறுவ தால் தீவிர சுறுசுறுப்பும் அலைப்பும் உண்டாகின்றது. இதன் பயணுக நரம்புத் தளர்ச்சியினுல் பெரும்பான்மையோர் அவ திப்படுகிறர்கள். - -
அதனேடு, இறைச்சியை ஓயாமல் உண்டு வருவதால் இரத்தாசயத்தின் (Heart) தொழில் அதிகப்படுகிறது. இதனுல் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயிர் வலிமையெல்லாம் குன்றி விடுகின்றது. கடைசியாக உயிருக்கே முடிவு ஏற்படு கிறது. இதனை, ஆசிரியர் சிட்னிபோர்டு நன்கு விளக்கிக்
கூறியுள்ளார்.

Page 14
152 ஆத்மஜோதி
மாரடைப்பு (Heart Failure) என்னும் நோய் ஏற்படுவது ஏன் என்பதைப்பற்றியும், முதிய பருவத்தில் இது அடிக்கடி ஏற்படுவானேன் என்பதைப்பற்றியும் கலிபோர்னியா பல்க லைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளாக ஆரா ய்ச்சி செய்து முடிவு கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த மாரடைப்புக்குக் காரணம் 6 கோலோஸ்ட்ரால்” என்றும், இது மாமிசம் முட்டை வெண்ணெய் ஆகியவற் றில் இருக்கிறதென்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோலோஸ்ட்ராலில் பிசுபிசுப்பான ஒரு பொருள் உற்பத்தி யாகிறதென்றும், அதுதான் மாரடைப்பிற்குக் காரணம் என் றும் ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது. இந்த பிசுபிசுப் புப் பொருள் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகமாக இரத்தத்தில் உண்டாகிறது என்றும், அதனுல் மாரடைப் ல் இறப்பவர்கள் ஆண்களே என்றும் அவர்கள் கூறியுள்
ளார்கள்.
மிருகங்களின் கொழுப்பு அதிகமாக உடலில் சேர்வ தால், உண்பவர் அதிக காலம் வாழ முடியாது என்பதும் ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மிருகக் கொழுப்பினுல் ஏற்படும் வியாதிக்கு “ஆர்ட்டெரியா ஸெலி ராஸிஸ்’ என்று பெயர். இரத்தக் குழல் உட்புறங்களில் கால் சியம் என்ற சுண்ணச் சத்து படியத் தொடங்கி குழாய் வழி அடைபட்டு விடுவதே இந்நோயின் குணம்.
மிருகக் கொழுப்பில் “சொலஸ்ட்ரின்’ என்ற தீய சத்து உள்ளது. தாவரக் கொழுப்பில் இது கிடையாது. அதனுல் தான் வைத்திய நிபுணர்கள் தாவரக் கொழுப்பை உபயோ கிக்கும்படி சிபார்சு செய்கின்றனர். தாவரக் கொழுப்புகளில் உள்ள சில சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கக்கூடியன என்று அவ் வைத்திய நிபு ண ர் க ள் ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசாங்க வைத்தி யச் சுகாதாரப் பகுதி வெளியீடொன்றில் பின்வருமாறு கூறப் பட்டிருந்தது:-

ஆத்மஜோதி 153
'மாமிச உணவுக்கு மாருகச் சொல்லப்படும் பெ ரும் பான்மையான நியாயங்களில் ஆக உறுதியான நி யாய மென்னவென்றல், மாமிசம் சுகத்திற்குத் தகாததும், தேகக்
கட்டைப் பாழாக்கும் கெடுதியும் உடையதான காரணங்களை (அதாவது வியாதிகளை) வருவிக்கும் என்பதே. மா மி ச மீ
புசித்து நன்றய்ப் பழக்கப்பட்டவர்கள் இந்த நியாயத்தைக் கைக்கொள்ளுகிருர்களில்லை. முற்று முழுதாய் மரக்கறி வகை களால் ஒரு நியாயமான திருப்தியுள்ள உணவை உ ண் டு பண்ணலாம்.”
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக எம். ஏ. பட்டம் பெற்றவ ராகிய ஜான்வூட் என்பவர் கூறியுள்ளது:- "என்னுடைய அநுபவத்திலிருந்தும், பல ஆண்டுகளாக வைத்திய நிலையத் தில் கவனித்தவற்றிலிருந்தும் நான் சொல்லக்கூடியதென்ஓ வென்றல், மாமிச உணவு அவசியமற்ற உணவு; அது இயற் கைக்மாறனது செளக்கியத்துக்குப் பழுதானது.”
உடலமைப்புக்கு ஒவ்வாதவிதம்.
மனிதனுடைய பற்கள், இரைப்பை, உணவுக்குழல், இரத் தத்திலுள்ள பரம நுட்பமான இரத்தப் புழுக்கள் (Caspuscles) இவைகளின் அமைப்பையும், இரை சீரணிக்கும் தன்மையை யும் உற்றுணர்ந்து பார்த்த சர் எவரார்டு ஹோம் முதலிய பல உடற்கூற்று அறிஞர்கள், மனிதன் தன் இயற்கை அமைப் பால் தழை குழை உண்ணும் பிராணிகளை அதிகமாய் ஒத் திருக்கிருனேயல்லாது, மாமிசம் உண்பவைகளை ஒத்திருக்க வில்லை என்று நன்று எடுத்து விளக்கியிருக்கிருர்கள்.
இதற்கிணங்க, டாக்டர் ஜோசையா ஓல்டு பீல்டு என்ற பெரிய வைத்திய நிபுணர், “மனிதன் மாமிசம் பு சி க்கு ம் பிராணிகளைச் சேர்ந்தவனல்லன்; மரக்கறி வகைகளைச் சாப் பிடும் பிராணிகளைச் சேர்ந்தவனே என்னும் உண்மை மெய்ப் பிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
புரபஸர் ஜான்றே என்னும் அறிஞர், “உண்மையாகவே மனிதன் மாமிச பட்சணியாகப் படைக்கப்படவேயில்லை” என்கின்றர்.

Page 15
154 ஆத்மஜோதி
ஐரோப்பாவில் மிகப் பெயர் பெற்றிருந்த சாஸ்திர பண் டிதராகிய ஆசிரியர் பாரன் குவியர் என்பார் கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது. “மனித சரீரப் பகுதிகளையும் மிருக சரீரங் களின் பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மனித சரீ ரம் காய்கனிகளைச் சாப்பிடும் மிருகங்களின் சரீரப்பகுதிகளை எல்லாவிதத்திலும் ஒத்திருக்கின்றது; மாமிசத்தைத் தின்னும் மிருகங்களின் சரீரப் பகுதிகளை ஒரு விஷயத்திலும் ஒத்திருக் கவில்லை. மனிதனை அதிகம் ஒத்திருக்கின்ற மிருகம் வாலில் லாக் குரங்கு; அது காய் கனி தானியம் முதலியவற்றை மாத் திரம் சாப்பிடுகின்றது. மனிதனும் இந்தப் பொருள்களையே சாப்பிடவேண்டியவன்.”
லின்னியஸ் என்ற அறிஞரும் மேற்கூறப்பட்ட கருத்தை பே தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஹைடன் என்பவர் தாம் எழுதியுள்ள நூலில்,
கடவுள் மானிடர்களுக்கு சிறுகுடல் பெருங்குடல் கொடுத்த
நோக்கம், தாவர வர்க்கங்களால் ஏற்பட்ட உணவுகள் சீர ணிக்கவே என்றும், புலி, கரடி, சிங்கம் முதலான மிரு க இனங்களுக்கு சிறுகுடல் பெருங்குடல் கொடுத்த நோக்கம் இறைச்சி வகைகள் சீரணிக்கவே என்றும் கூறியுள்ளார்.
மகாத்மாகாந்தியடிகளும், பண்டித மதனமோகனமாளவி யாவும், இன்னும் பல இந்தியப் பெரியோர்களும் மேற்கண்ட கருத்தையே தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டாக்டர் கெல்லாக் என்பவர் கூறுவது: பிராணி களுக்கு பொதுவாகவோ, சிறப்பாகச் சில பிராணிகளுக்கு மட்டுமோ மாமிச உணவு மூலாதார உணவாயிருத்தல் முடி யாது. ஒரு பிராணி இன்னெரு பிராணியைத் தின்று வாழ்கிற தென்றல், அது மரக்கறி உணவை மாமிச உணவின் மூலம் தின்கிறதென்பதே உண்மையாகும்.”
ஆசிரியர் ரிச்சர்டு ஓவன் என்பவரும், டாக்டர் பெளச்சி, டாக்டர் ஹெயிக் முதலிய பிரபல வைத்திய நிபுணர்களும், மனிதரின் பல் அமைப்பு முதலியவற்றைக்கொண்டு அவன்

ஆத்மஜோதி 155
மரக்கறி உணவை உண்பதற்காகவே படைக்கப்பட்டவன் என்கின்றனர்.
புரபஸர் மக்காலம் என்பவர், ‘இறைச்சி உணவு இல்லா மலே இருக்க முடியுமா என்பதைப்பற்றி மனிதரைக்கொண் டும் மிருகங்களைக் கொண்டும் செய்த ஆராய்ச்சியிலிருந்தும், உணவு சத்துக்களைப் பற்றிய தற்கால சோதனை முடிவுகளி லிருந்தும் உணவில் இறைச்சி அவசியமே யில்லை எ ன த் தெரிந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
டாக்டர் ஏ. ஜி. செல்மன் என்னும் பெரிய வைத்தியரொ ருவரும், 'மாமிசம் சிறந்த உணவா என்று ஆராயும்போது அது மனிதனுடைய அத்தியாவசியமான உணவுகளில் ஒன் றென எண்ணுவது தப்பிதம்’ எனக் கூறியுள்ளார். U
மேற்கூறப்பட்ட பலவித காரணங்களைக்கொண்டு, மனி தர் இதியில் தாவர வர்க்க உணவுகளையே உண்டு வாழும்
படி படைக்கப்பட்டவர்கள் என்று நன்கு உணரலாம்.
ஆதி மனிதர் உழவுத் தொழில் அறியாதிருந்த காலத் தில் கானகத்தில் ஏராளமாய்க் கிடைத்த பழங்கள், காய் கள், கொட்டைகள், கிழங்குகள் போன்றவற்றை உண்டே வாழ்ந்து வந்தார்கள். இவை கிடைப்பது அரிதாகிய பின்
தமது இயற்கைக்கு ஏற்ப உணவுப் போராட்டத்துக்குள்
ளானபோது தமக்குக் கிடைத்த எவற்றையும் தின்ருர்கள்.
இதுசமயம் காட்டு விலங்குகளைப் பின்பற்றி தாங்களும் விலங்கு, பறவை போன்றவற்றின் இறைச்சியைத் தின்று கொண்டிருந்தார்கள். மனிதன் புலால் உண்ணத் தொடங்கி யது இப்படித்தான். புலால் உண்ணும் பழக்கம் இப்படி அவசியத்தால் உண்டாகி பரம்பரையாய் வந்துவிட்டது.
இதனைக்கொண்டு, மனிதருக்கு இறைச்சி இயற்கையாய் அமைந்த உணவு என்று சிலர் வாதம் புரிகிறர்கள். இது உண்மை அறியாதவர்களின் வாதம்,

Page 16
56 ஆத்மஜோதி
“குட்டிகளை ஊட்டி வளர்க்கும் தன்மை வாய்ந்த மிருக வர்க்கத்தின் உச்சியே மனிதனது நிலை” என்று லின்னியஸ் என்பவர் வகுத்திருக்கிருர், *மிருகங்களில் மேலான அந் தஸ்து உள்ளது மனிதன் என்னும் மிருகம்’ என்ற முறை யில் இதனை அவர் வகுத்துள்ளார்.
நீதி வழிக்கு ஒவ்வாதது
ஆதலின்,மிருகங்களைக்கொலைசெய்து அவற்றின் இறைச் சியைத் தின்பது படைப்புக் கடவுளின் கருத்துக்கும் காரி யத்திற்கும் ஒவ்வாது என்பதும் உணரத்தக்கது. அத்துடன், அது இயற்கைக்கு ஒவ்வாதது, அவசியமற்றது, தீமை விளை விக்கத்தக்கது என்பதும் உணரற்பாலது.
மனிதரிடம் வியாதியையும் குடி வெறியையும் தடுக்க வேண்டுமானுல் மனிதன் உண்ணும் உணவில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று சிறந்த வைத்திய மேதாவிகள் கூறுகின்றனர். மரக்கறி வகைகளான பழவர்க் கங்கள், பருப்புகள், தானிய வகைகள், கிழங்குகள், பால், வெண்ணெய், நெய், தயிர், மோர், பாலேடு முதலிவைகள் உடல் ஊட்டத்துக்கு ஏற்ற உணவுகளாகும்.
இவை நரம்புகளைப் பலப்படுத்தும்; சதைப் பாகங்க ளைச் செழுப்பித்து உடல் வளர்ச்சியைக் கொடுக்கும். தேக உறுதிக்கு இன்றியமையாத சத்து அதிகமாய் உள்ளவை இவை. மாமிச உணவுபோல இவை நரம்பு முதலியவற்றைப் பிரகோபிக்கச்செய்யா. தேகத்தில் வேகத்தை உண்டுபண்ணு. இவற்றை உண்பவர்கள் குடிவெறியர்களாகார். சாராய முத லியவற்றைத் தேடார்.
ஆகவே, இந்த இயல்பான காரணங்களைச் சிந்தித்துப் பார்த்து மனிதராகப் பிறந்தோர் தமது உணவில் மச்சம் மாமிசங்களை நீக்கி இயற்கையாகவுள்ள மரக்கறி உணவு வர்க்கங்களை உண்டு நோய்களிலிருந்தும், பாபங்களிலிருந் தும் விடுபட்டு நற்பயன் அடைந்திடுவார்களாக,

ஆத்மஜோதி 157
கீ  ைத யும் நானும்
செல்வி. சர்வா - கரவை 1
(சென்ற இதழ் தொடர்ச்சி) அத்தியாயம் 26
சிருஷ்டியில் முத்தொழிலும் அடங்கியிருக்கின்றன. ஓர் இடத்தில் சூரியோதயம் என்ருல் மற்றேர் இடத்தில் சூரிய அஸ்தமனம். ஓர் இடத்தில் உயிர்பிறக்கிறதென்றல் மற்றேர் இடத்தில் உயிர் சாகிறது. உடலை உண்டுபண்ணுதல் என் ருல் உணவை அழித்தல் என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்களாகப் பிறந்து கொண்டிருக்கிற உலகில் அவை யாவும் பழைய உயிர்களாக மடிந்து கொண்டு இருக்கின்றன. சிருஷ்டிக்கும் சம்காரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று சொல்லப்படுகிறது. ஆக படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற முச்செயலும் முக்கோணம் போன்று ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. மரணத்தை அறிந்து கொண்டால் மற்ற இரண்டும் எளிதில் விளங்கும்.
இயற்கையை கொலைக்களம் என்று ஒப்புக்கொள்பவர் பின்பு கீதா சாஸ்திரத்தைக் கற்றே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்பும் நீ கொலைக்களத்துள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீகொலை செய்யாதிருக்க முடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நில்லாதே. கோழைக்கு மண்ணுலகும் இல்லை. விண்ணுலகும் இல்லை. எவ்வுலகும் இல்லை. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு எனும் போராட் டத்தை வெற்றிகரமாக நடாத்து. ஆயினும் அதனிடத்துப் பற்று வைக்காதே. போர் நிலத்தில் நீ பாங்குடன் போர்
புரிந்தால் போர் நடந்த பெருநிலத்தைப் பண்புடன் பெற். றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக்களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத் கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்ருகவேண் (Buჩ.
வலிமை படைத்தவனே வாழ்வுக்குரியவன் என்பது ് கீதையின் கோட்பாடு. இம்மைக்கும் மறுமைக்கும் உறு
محسوس

Page 17
58 ஆத்மஜோதி
துணையாவது வலிவு. வலிவு உயிரை வளர்க்கிறது. மெலிவு உயிரை தேய்க்கிறது. வலிவு நல்லறத்தையும் நேர்மையை யும் நல்குகிறது. மெலிவு மனக்கோணலையும் ஒழுக்கமின் மையையும் உண்டுபண்ணுகிறது. ஆத்மபோதத்தைப் பெருக் குவது வலிவு. பிரபஞ்ச உணர்ச்சியை ஊட்டுவது மெலிவு. பந்தத்தை மிகைப்படுத்துவது மெலிவு. மோக்ஷத்தை வழங் குவது வலிவு.
கீதையை அவரவர் பரிபக்குவத்திற்கு ஏற்ற அளவு பயன்படுத்தலாம். நல்வாழ்வை இன்று புதிதாக துவக்குகிற மனிதனுக்கும் அது பயன்படும். சாதனத்தில் மேலான நிலைக்கு வந்திருப்பவனுக்கும் பயன்படும். கீதையில் அடங்கி யிராத இகபர தத்துவம் ஒன்றுமில்லை.
th விந்தைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள் புதிய புதிய பெளதிகஞானங்கள் வந்துகொண்டே யிருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத் துறைகளிலும் அதிகம் விரிந்து கொண்டே போகிறது. அதற்கிடையில் மற்ருெரு பேருண் மையை மனிதன் உணர்கிருன். புதிதாகப் பெறுகிற இயற் கையின் ஞானம் ஒன்று, மனிதன் இன்னும் பெறவேண்டிய பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஞாபகமூட்டு கிறது. “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என் பது எல்லோர்க்கும் உண்மை. பரந்த அறிவு வரவர மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண் டே இருக்கிறது. இதை உணர்ந்த சான்றேர் கேள்வி ஒன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுவதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூலதத்து வத்தை அறிந்த பின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை கிடைத்தது.
நன்ம்ை நேரினும் சரி. அல்லது கெடுதல் நேரினும் சரி, ಙ್ಗಲಣಿವೆ பயனை நீ அடைந்தேயாக வேண்டியநிலை
றபடும.
- புத்தர்
 

ஆத்மஜோதி 1.59
ஸபபியாக்களின் சிறப்பு
(Dr. K. M. P. upSubLogi si Sao Ph. D.)
அஞ்ஞானத்தின் அந்தகாரத்தில் உழன்று திரியும் மனித வர்க்கத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக, ஆத்மஜோதி வீசும் ஞான சூரியனுகத் திகழ்ந்திடும் உயர் ஞானிகளே ஸ Cபியாக்கள். அவர்களின் சிறப்பே அலாதியானது. ஏனெ னில் அவர்கள் கற்பனை கடந்த மோனத்தில் தாக்கற்ற பரிபூரண நித்திய நிர்மல நிலையில் பேரின்பமெய்திய அபூர்வ அத்வைத ஞானிகள். அவர்களது தவவாழ்வு "தாத்” எனும் அகண்ட உணர்வொளியில் ஒன்றுபட்ட உண்மை நிலையா
th.
கு அவர்கள் சதா தெய்வீக பரவச நிலையில் உயர்வு பெற்ற உத்தம ஞானிகள். ஆத்மீக அனுபூதியின் அந்தரங்க நுட் பங்களூை வெகு தெளிவாக விளக்குவதே அவர்கள் மனித சமுதயத்திற்குச் செய்யும் தொண்டாகும்.
பூவுலகில் புகுந்துள்ள நாம் பெறுகின்ற பயிற்சிகளில் அடைகின்ற அனுபவங்களில் மிகவும் முக்கியமானது மனப் பண்பாடாகும். மானிட வாழ்வின் மகத்தான நோக்கம் ஆத் மீக விடுதலை பெறுவதாகும். நாம் செய்யும் ஒவ்வொரு செய லும் நம்மை உயர்ந்த இலட்சியமாகிய தியான நிலையில் ஸ்திரமடைய துணைபுரிய வேண்டும்.
பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு வாழாது ஒருவன் தனது செயல்முறைகளை தூய ஒழுக்கத்தின் அடிப்படையில் மாற்றியமைத்துக்கொண்டு மனம், வாக்கு, காயம் மூன்றி ஆனயும் ஒன்றுபடுத்தி ஆத்ம சாதனைக்கே முக்கியத்துவம் கொடுத்து, உலகில் நிகழும் நிலையற்ற நிகழ்ச்சிகளைக்குறித்து சஞ்சலப்பிடாது கஷ்ட நஷ்டங்களையும், வெற்றி தோல்விக ளையும் பொருட்படுத்தாது மனதில் உதித்துக்கொண்டிருக் கின்ற எண்ணற்ற விருத்திகளை ஒதுக்கித் தள்ளுவதே பேரா னந்தம் பெற சிறந்த மார்க்கமென ஸ"பியாக்கள் உணர்த் துகிருர்கள்.

Page 18
*
160 ஆத்மஜோதி
இன்றைய விஞ்ஞான உலகம் எத்தனையோ ஆராய்ச்சி கள் செய்து ஏராளமான நூதனப் பொருட்களைக் கண்டுபிடித் திருக்கிறது. அவைகள் யாவும் மனிதனுக்கு மேலும் மேலும் பல புதிய செளகரியங்களேக் கொடுத்தாலும் அவன் குறை நிறைந்த மனிதனுகவே காட்சியளிக்கிருன். ஒருவனுக்கு எவ் வளவுதான் செல்வம் இருந்தாலும் அவன் மனதில் வியாகூலம் உண்டாகும்Mொழுது மன்த் தளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. உள்ளம் இந்த நோய்க்கு அகப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானல் ஆத்ம சக்தியை தினமும் மேலோங்கச் செய்ய வேண்டும். அதாவது எண்ணம், சொல், செயல் யாவையும் ஒன்றுபடுத்தி ஆத்ம நிஷ்டையின் மூலம் உடல் உணர்வையும் மனதின் விவகாரங்களையும் கடந்து பூரணத் திலே ஒன்றுபட்டு ஓய்வு காண வேண்டுமென ஸ"Uபியாக்கள் விளக்குகிருர்கள்.
ஒரு சாதகனுக்கு தோல்விக்குமேல் தோல்வி வந்துரலும் ஏமாற்றத்துக்குமேல் ஏமாற்றம் ஏற்பட்டாலும், நெருக். கடிக்குமேல் நெருக்கடி நேர்ந்தாலும் மனதை நடுநிலையில் வைத்து அமைதியாக அவைகளைச் சமாளிக்கப் பழக வேண் டும். மனிதனுடைய மனம் பரிசுத்தம் அடையும் அளவிற்கு அவனது வாழ்க்கைப் போரில் நிகழும் கணக்கற்ற பிரச்சினை களைத் தீர்ப்பதற்குரிய திறமை அதிகமாகிறது.
மனிதன் கீழ்நிலையிலிருந்து எண்ணிய எண்ணங்களே உலக ஆசைகளை அனுபவிக்க வேண்டுமென்ற அவாவைத் தூண்டுகின்றன. உள்ளத்தில் தோன்றுகின்ற ஆசைகளை எப்படியும் அனுபவித்துத் தீர்த்துவிட முடியாது. ஆசையை நிறைவேற்றி முடித்துவிடலாமென்று எண்ணி அதனைத் தொ டர்ந்து ஒடுவது அதாவது புலன்வழி பொருள்களிடத்து மன தைத் தீவிரமாகச் செலுத்துவது முடிவில் வாழ்வை பாழ் படுத்திடும் நிலைக்கே இட்டுச் செல்லும்.
ஒருவன் எவ்வளவுதான் நுட்பமான அறிவுத்திறமை உள் ளவனுக இருந்தாலும் ஆசைகளின் மயக்கத்தில் வசப்பட்டு வாழ்கின்றவரை துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்தே

ஆத்மஜோதி 161
'மனிதன் எங்கேயோ போகிறன்?"
w*
(தவத்திரு. பூரீ சாயிமாதா சிவ். பிருந்தாதேவி)
"மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்டளவில் பணியச்செய்வாய் படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே" உன்போல்
தக்கது இன்னது, தகாத து இன்னதென்று ஒக்க உணர்ந்து பார்க்கும் மனிதன்; அவன் நீந்தக் கற்ருன், நீள் தொலை வானில் பறக்கக்கற்ருன்; ஏனைய எல்லாவற்றையும் புரிந்து தெரிந்து கொண்ட மனிதன், வாழ்க்கை இன்னதென்றும், :°: நல்வாழ்வு என்றும், எப்படியோ வாழாமல், இந்தப்படியான பண்பில்தான் வாழ வேண்டு மென்றும் எண்ணுவதும், எண்ணியபடியே நடப்பதும் பண் பாகும்.
மனிதனல், மனித சக்தியால், இயக்க இயலாதது எது வுமே இல்லை. ஒரே நினைப்பால் ஆமை தனது முட்டைகளை ஆமைக் குஞ்சுகளாக மாற்றிவிடுகின்றது. ஒரே நினைப்பால் அதன் சக்தியின் எழுச்சியால் கண்களுக்கு வல்லமை * பெற்று, மீன் தனது முட்டைகளை யெல்லாம், மீன் குஞ்சுக ளாக மாற்றிவிடுகின்றது. முட்டைகளைக் கோழி தொட்டுக்
SqSqSLSALSLSLSLS SLSLSqSqSqS SSLS S LS -------- *AMNMMNMNWYNWYNWCWMWA MWANA
யாக வேண்டும். ஆகவே மனம் இந்தக் கீழான நிலையினின் றும் விடுபட்டு பந்தங்களற்ற பரவெளியில் சார்ந்து அதனை யே தாயகமாகவும், பீடமாகவும் அமைத்துக் கொண்டால் தான் உலகில் வாழும் பொழுது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அச்சமற்று, கலக்கமற்று அமைதியாக வாழ முடியும். இந்த உயரிய உன்னதமான ஆத்மீக அநுபூதி நிலையில் அசைவற்று நின்றல் நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகார
மும் முற்றிலும் நீக்கப்பெற்று ப ஞ பித் தெள ஹீத்
என்ற அகம் அகண்ட சக்தியுடன் ஒன்றிடும் நிறைவான மோனநிலைகைகூடுமெனஸ"பியா க்கள் அறிவுறுத்துகிருர்கள்.
".

Page 19
162 ஆத்மஜோதி
கொண்டே இருத்தலால் காலக்கெடுவில் முட்டைகள், கோழிக் குஞ்சுகளாக உருப்பெறுகின்றன. சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தத்தினையும் இவற்றிற்கு மேலாம், பகுத்தறியும் பான்மை யும், அடையப்பெற்ற மனிதன், மனம் படைத்த மனிதன், சிந்திக்கவும், வந்திக்கவும், வாழ்த்தவும், நிந்திக்கவும் தெரிந்த மனிதன், புந்திக்கிலேசமாகிய மனத் தொந்தரவையும், காயக் கிலேசமாகிய உடல் பிணியையும், மாற்றிக்கொள்ள வகை அறியாது உலகச்சுழலில்-சமுதாய நிர்ப்பந்தத்தில் அகப் பட்டுக்கொண்டு, தன்னையும் அறியாது, தன் தொல்லுயிரை யும் புரியாது, உயிரைத் தந்த உத்தமனையும் உணராது, ஏங் கித்தவிக்கிருன்! இது முறையோ? இது தகுமோ? இது நீத மோ?என்று எண்ணிப் பார்த்தார்கள்-மானிடத்தின் பேரிலே மாக் கருணை கொண்ட ஞானியர்கள். புத்தருக்கு எந்தக் கருணை பிறந்ததோ, ஏசுவினுடைய இதயத்திலே எந்த அன்பு குடிகொண்டிருந்ததோ, நபிகள் நாயகத்தினிடத்திலே எந்த ஒற்றுமை உலவியதோ அதனைப் போல பன்னூறு மடங்கு அன்பிலே - கருணையிலே - ஜீவகாருண்யச் சிந்தையிலே தோய்ந்து - ஆழ்ந்து - அனுபவித்து அனுபூதியாகப்பெற்று, அதன் அடிப்படையிலே மகா ஞானியாகிய தாயுமானப்பெரு ம்ான் சொல்லுகிறர்.
*ஆசைக்கோர் அளவில்லை’ பாபத்திற்கே காரணம் ஆசை தான் என்கிருர் புத்தர் “பற்றற்றுப் பலனை எதிர்பாராது கர்மாவைச் செய்” எனக் கீதை நமக்குப் பாதை காட்டுகிறது.
*ஆசையிற் கைகலந்து சுமா சுமா பவசாசகரத்தில் அழுந்தி எழா எழாதுளம் ஆறெழுத்தை நினைந்து குகா குகா-என
அருள்வராதோ? என அருணகிரிநாதரும், *ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனுேடாயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம் ஆசை விட்விட ஆனந்தமாமே?
எனத்திருமூலரும், *ஆசை யறய், பாசம் விடாய் ஆன சிவ பூசை பண்ணுய் நேசமுடன் ஐந்தெழுத்தை
நீ நினையாய்-சிசி
 
 

ஆத்மஜோதி 3.63
சினமே தவிராய் திருமுறைகள் ஒதாய்
மனமே உனக்கென்ன வாய்?"
என சிவபோகசார வெண்பாவும் சொல்லக் கேட்கிருேம்.
徽 ஆசைக்கு ஏது அளவு? ஏது எல்லை? முடிவுதான் எங்கே? இராமகிருஷ்ணபரமஹம்சரிடம் ஒரு பக்தன் சென்று, கடவு ளுக்கும் எனக்கும், எவ்வளவு தூரம் என்று கேட்டான். அதற்குப் பரமஹம்சர் சொன்னராம் - "ஒரு சங்கிலியின் கோர்வையில், இடையில் உள்ள பகுதிகள் அனைத்தையும் எடுத்துவிட்டால், அடியும் நுனியும் மட்டுமே மிஞ்சி இடை வெளி இல்லாது நெருங்கிவிடும். உனக்குள்ள ஆசாபாசங் கள், மோக தாகங்கள் இல்லாது ஒழிந்துவிட்டால், கடவு ளுக்கும் உனக்கும் இடையே தூரமேயில்லை? என்று பதில் சொன்னராம். இதனைத்தான் மணிவாசகப் பெருந்தகை,
*சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனயாண்ட த
அத்தன் எனக்கருளியவாறர் பெறுவார் அச்சோவே? எனய்ந்து பாடியருளினுர்,
சித்தமலம், அறவேண்டுமானுல், இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். சித்தமலம் என்ருலே சிலருக்குப் புரிவ தில்லை. அதற்கு மேலே இதயம் சுத்தமாக வேண்டுமென்ருல் அதைச் சுத்தம் செய்துகொள்ள யாரிடம் போவது? என்ன கேட்பது? யார் தருவது? எப்படிப் பெறுவது? என்பது புதிராகத்தானே இருக்கின்றது!
ஆணவம், மாயை, கன்மம் என்று சொல்லப்படும் மூன் றும்தான் மலங்கள். மனிதர்களாகிய ஒவ்வொருவரிடத்திலும் நோன்? என்ற ஆணவம் இருக்கின்றது. “செய்தது இதை யேதான் செய்துகொண்டிருப்பேன்’ என்று சொல்லக்கூடிய
அளவு, புரியாத மாயையொன்று திரையிட்டுக்கொண்டிருக் கிறது. யா - எது? மா - இல்லையோ அதுதான் மாயை ஆகின்றது. ஆக, இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி, மனிதன் ஏமாறுகிருனே, அதுதான் மாயை. ஏமாறிஞல் கூடப் பரவாயில்லை. இல்லாத ஒன்றின்மேல் பற்று வைத்து. அதை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பதாக எண்ணுகிருனே
அதுதான் அதனைவிட அவலநிலை.

Page 20
/06の3ひ
164 * ஆத்மஜோதி
*கன்மமீ”, அவரவர் வினைதனிலே அவரவர் வருவார். வினையைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. தன்வினை தன்னையே சுடும். இதெல்லாம் நமக்கு. ஆணுல் பரத்திற்கோ பற்றில்லை- பாசம் இல்லை. எனவே "வினையில் நீங்கி விளங் கிய முதல்வன்” என ஞானியர் கூறுமாப்போல, அவன் ஒரு வனைத் தவிர மற்றும் உள்ள அனைவருக்கும் “வினை" இருக் கின்றது. அது விட்டுப் போகாது.
'கடையேனிருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண்
சுகமே கினி வள்ளி நாயகி பாங்கென நாம் பகர்மின்
கலே நூலிடை முருகா, அழலோங்கிய ஓங்கலின் ஒண்
பெருமாளே”
எனத் திருப்புகழிலும் சொல்லப் பெறுவதால், வினை எல்லோ ரையும் பற்றி நிற்கக் கூடியது எனத் தெரியும்.
* முற்பிறவியில் செய்த நன்மை தீமை, தொடர்ந்து பற்றி எடுத்த பிறவியில் தொடுத்து வந்து, அடுத்து நின்று, கெடுப் பதோ விடுப்பதோ செய்கின்றது. இதுதான் கன்மம் (கர்மா). இந்த மூன்றையும் ஒழித்துவிட முடியாது; அழித்துவிட முடி யாது: அகற்றி விடவும் முடியாது. இல்லாததாகவும் ஆக்கி விட முடியாது. பின் விமோசனத்திற்கு வழிதான் என்ன? முடியாது என்று சொல்லிவிட்டால் கதை முடிந்து விடுமா? வினு எழுப்பினுல்,விடையும் இருந்து ஆக வேண்டுமே! சிந் தித்துப் பெரியவர்கள், இறைவனை வந்தித்த நிலையிலே வகை கண்டு நமக்கு வக்கணையாகச் சொல்லி வைத்திருக்கிறர்கள்.
மாயை அகன்று - அகன்று என்றுதான் சொல்லப்பட் டது. இருள் அகன்றது என்று சொன்னுல் இல்லவே இல்லை” ன்ன்பது பொருள் அல்ல. ஒதுங்கி உள்ளது என்பதுதான் பொருள். அகன்ற இருள் மறுபடியும் பற்றலாம். தொடர்ந்து மாயை பற்றி வரச் செய்யாது பக்குவப்படுத்திக்கொள்வது நம் முயற்சி - தெய்வத்தின் கருணை. ஆக, மாயை அகன்று, கன்மம் குறைந்து, ஆணவம் ஒடுக்கப்பெற்றல், இந்த மலங் களுக்குப் பக்குவ நிலை என்று சொல்லுகின்ற ஒரு தக்க பரிபாகம் (மலபரிபாகம்) வருகிறது. மலங்களுக்குப் பரிபா கம் வந்தவுடன், இன்பத்துள் இன்பமும், துன்பத்துள் துன் பமும் காணுத நிலை - கடந்த மனுேபாவம் ஏற்படுகிறது. இந்த உயர்ந்த கருத்தை வள்ளுவரும்,

-
" நம்வழிதான் மனம் நடக்க வேண்
"இன்பத்துள் இன்பம் விழையாதான்
- துன்பித்துள் துன்பம் உறுதல் இலன்” எனச் சொன்ஞர். இந்நிலையைத்தான் சைவசித்தாந்த சாத் திரம், "இருவினை ஒப்பு’ என்று சொல்லுகின்றது. மலபரி பரிகம் வந்த மனிதனுக்கு, ‘இருவினைஒப்பு (சமநிலை) எளி தில் வந்து விடும். இன்ப்துன்பித்தீை, வ்ெயிலை,மழையை, சினத்தைக் குணத்தை, புகழை, இகழை, செல்வத்தை, ஏழ் மையை, ஒன்ருகக் கருதும் உயர் மனப்பான்மையாகிய மேல பரிபாகம் ஏற்பட்டு, ‘இருவினை ஒப்பு வந்தபின், அருட்சக்தி பொத்தென்று அவன் பெயரில் பெய்யப் பெறுகிறதாம்.
இதனையே சித்தாந்த பரிபாஷையிலே, சத்திநிபாதம்" (அருட்சக்தி பொத்தென்று விழுதல்) எனச் சொல்லுவர் மேலோராகிய நூலோர்! இவ்வளவு உயரலாமே-மனிதன் நினைத்தால்! - மனிதன் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஆசைக்கு ஒரு வேலியை வைக்க வேண்டும். தமிழகத்திலே தஞ்சை மாவட்டத்தில், மூங்கில் காடுகள் அதிகம். அந்த மூங்கில் முள்களைக் கொண்டு, மிகப்பெரிய இடங்களுக்குக் thall- ருக்கமான வேலி வைத்து விடுவார்கள், அந்தச் சிறிய மூள்வேலிக்குள்ளே ஆடு போகாது, மாடு பேர்காது, பன்றி போகாது, கோழிக்குஞ்சு கூட நுழைய முடியாது. ஆணுல், எத்தனை வேலி போடப்பட்டிருந்தாலும், எத்தனை பூட் டு கள் போடப்பட்டிருந்தாலும் இரும்புக்கதவுகளுக்கு அப்பால்கூட இந்த மனித இதயம் சென்று திரும்பிவிடுகின் றது. புகைகூடப் புக முடியாத இடத்தில், மனித மனம் புகுந்து விளையாடித் திரும்புகின்றது."
மனத்தின் வழி நாம் நடப்பதா? நம் வழி மனம் நடப்பு டும் என்பினித ஏற்பார்கள், மனம் எதையும் நினைக்கும், !
மனிதன் அவ்வழி யெல்லாமி நடக்க முடியுமா? கார்மேல்
நாம் ஏறலாம். நம்மேல் கார் ஏறினுல் நம்கதி என்ன? கடல் மேல் கப்பல் போகலாம். கப்பலுக்குள் கடல் வந்தால் என்ன
ஆவது?
'தன்னேயறிந் தின்பமுற வெண்ணிலாவே ஒரு
நீ சொல்ல வேணும் வெண்ணிலாவே'
என்ருர் வள்ளலார் பெருமான். தன்னையறிய வேண்டுமானல், மனம் அடங்கக் கற்க வேண்டும். 'மனத்துக் கண் மாசிலன்" ஆதல் வேண்டும்.
- வளரும் -

Page 21
Registered at the G. P. o. as
*、臀
அ து
یaishaq ui,
2ஆரின்களின் நல் பக்தர்களின் நல் ஆத்மஜோதிக்கு 26வது
8-9-10-Gug. 3; Lisa அறியத்துரு
*
క్రైస్తి "
ܛܝܪܐ
* சந்தா நேயர்கள் ஒவ்வொ
உரிய காலத்தில் அனுப்பி புதிய் அன்பர்களைச் சேர்த்
பர வுவதற்கு உதவி செய்
ஆத்மஜோதி
நாவலப்பிட்டி
அச்சிடுவிப்போர்:- ஆத் அச்சிடுவோர்:- பூg வெளியிட்ட திகதி:- 17
 
 
 
 

纂 M. L., 39/300.
பர்களுக்கு
ఫిశ్రీశ్రీశ్రీశ*********శస్తె
ஒ/ ': -
வருளிஞலும், லாசியினுலும்,
舅 ஆண்டு ஆரம்பமாகி வெளிவந்துள்ளதை இன்றுேம்.
ருவரும் தீமது சந்தாை . ܛ வைப்பதோடு ஒவ் ? * து உதவினுல் ஆத்மீம்ே
தவர்களாவீர்கள்.
ຫຼືໃນເມ ib, (இலங்கை).
韋
ஜோதி நிலையத்தினர் e ஆத்மஜோதி அச்சகத்தினர்.