கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓ அவனால் முடியும்

Page 1


Page 2

ஓ! அவனால் முடியும்
நீ.பி.அருளானந்தம்

Page 3
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் நிலையம் பட்டியலாக்க வெளியீட்டுப் பிரிவு
அருளானந்தம், நீ.பி. ஓ! அவனால் முடியும் / நீ பி. அருளானந்தம் - கொழும்பு திருமகள் பதிப்பகம், 2011
L.75 (L5 21
ISBN 978-955 - 1055 - 10 - 3 i, 894,8,113 !റ്റൂഖി 23 i, சிறுகதைகள்
i. தலைப்பு
ஓஅவனால் முடியும்

நூற்குறிப்பு ஓ! அவனால் முடியும் உரிமை நீ.பி.அருளானந்தம்
முதற் பதிப்பு : புரட்டாதி 2011 உரூபா : 400/=
O! AVANAAL MUDEUM SUBJECT:
SHORT STORY
AUTHOR: N.PARULANANTHAM CopyRight:
Author
Type Setting Mr. Mrs. Sadis Kumar FIRST EDITION: October 2011 PUBLISHED BY: THIRUMAGAL PATHIPPAGAM NO.7, LILLIYANAVENUE, MT. LAVINIA. TELEPHONE NO: 4967027, 2731887 PRINTED:
A.J. Print 44, Station Road, Dehiwala 2734765, 2723205
ஓ! அவனால் முடியும்
6)6OB: சிறுகதைத்தொகுதி ஆசிரியர்: நீ.பி.அருளானந்தம் கணனி தட்டச்சமைப்பு: திரு.திருமதி. சதீஸ்குமார் 0777 605934 (எஸ்.பி.கிராபிக்ஸ்) ஓவியம்:(கணனி) திரு.அ.ஜெரிசன் (யாழ்ப்பாணம்) பதிப்பு:
திருமகள் பதிப்பகம் இல 7, லில்லியன் அவென்யூ மவுண்ட் லெவனியா, (கல்கிசை)
தொ.பே: 4967027, 2731887 அச்சுப்பதிப்பு: ஏ.ஜே.பிரின்ட், 44,புகையிரத நிலையம் வீதி ഠിക്രഖിഖങ്ങണ് h
2734765, 272.3205
நீ.பி.அருளானந்தம்

Page 4
முன்னுரை
இது ஈழப் போர்க்கால கதைகள் என்ற மகுடத்தை சூடிக்கொண்டிருக்காவிட்டாலும் கூட நீ பி. அருளானந்தத்தின் “ஓ அவனால் முடியும்” எனும் சிறுகதைத் தொகுதி, வடபுல தமிழ் மக்களின் வாழ்க்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்தவற்றையும், போருக்கு பின்னரான காலத்தையும் எம் கண்முன்னே நிறுத்தும் கதைகளாக மிளிர்கின்றன. விதி விலக்காக சில கதைகள் இருப்பினும் ஒட்டு மொத்தமாக பார்க்கையில் சம காலத்தை பிரதிபலிக்கும் விடயங்களைக் கொண்டிருக்கின்றன.
“ஓ அவனால் முடியும்” எனும் இச் சிறுகதைத் தொகுதியை வாசித்த போது என் மனதில் எழுந்த சிந்தனைகளை தொகுத்து என் ரசனையை இச்சிறிய முன்னுரை மூலம் பகிர்ந்துகொள்ள முயற்சிக் கின்றேன். ஒரு படைப்பை உருவாக்கிய படைப்பாளி இறந்து விடுகிறான். என்றும், வாசகன் பிறக்கிறான் என்றும் பின் நவீனத்துவவாதிகள் கூறுவர். ஏதாவது ஒரு படைப்பை ஒவ்வொரு வாசகனும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் நிலை இன்று உள்ளது. மீள் வாசிப்பு என்ற சொல்லாடல் இன்று பரவலாகியுள்ளது. வாசகனே படைப்பின் தரத்தை தீர்மானிக்கிறான்.
இன்று அதிகம் அதிகமாக எழுதிவரும் இலக்கிய கர்த்தாவான நீ.பி. அருளானந்தம் அரச சாஹித்திய விருதுகள் பெற்ற படைப்பாளி. பெரிதும் விரும்பிப் படிக்கப் படுபவர். கிட்டத்தட்ட ஒரு முழுநேரப் படைப்பாளி. அண்மைக் கால வரலாற்றைத் தவிர்த்து இங்கு எவரும் எழுதிட முடியாது என்பதற்கு ஒப்பாக, போர்க்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு, பாசாங்கற்ற ஆற்றொழுக்கான தங்குதடையற்ற நடையில் சொல்லப்பட்ட கதைகள் இவை.
நேற்றைய நிகழ்வு இன்றைய வரலாறு என்ற நியதிப்படி இறுதிக்கட்ட யுத்த நிகழ்வுகளை சில கதைகளில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். எனினும் இவை போர்க்கால கதைகள் என்று LDL(6LĎ வகைப்படுத்திட முடியாதுள்ளது. மானுடநேயம், வர்க்க முரண்பாடுகள், சாதியம், பெண்ணியம், காதல் என பல விடயங்களும் கதைகளின் மையக் கருத்துக்களாக உள்ளன.
4 நீ.பி.அருளானந்தம்

இரு இனங்களின் பிரச்சினையாக மட்டுமன்றி மனிதத்தைத் தேடும் பண்பு கதைகளில் விரவி நிற்பதை பல்வேறு நிலைபட்ட பல்வேறு குணாம்சங்களைக் கொண்ட மனிதர்கள், பாத்திரங்களாக உலா வருகின்ற போதிலும், எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் அடிநாதமாக ஒலிக்கிறமை சமூகத்தின் மீது கதாசிரியர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. உண்மை நோக்கும் இலட்சியப் போக்கும் கொண்ட படைப்புகளில் அரசியல் விவகாரங்களையும் மிகக் குறைந்த சொற்களில் ஆணித்தரமாக கூறும் துணிச்சலையும் காண முடிகிறது. போருக்குள் சிக்கி சின்னா பின்னப்பட்ட மக்களுக்கு, போர் முடிவுக்கு வந்தும் கூட விமோசனம் இல்லை என்பதையும், இன்னமும் தமிழர்களை அரசு இராணுவ மேலா திக்கத்தினுள்ளேயே வைத்திருக்கும் நிலையையும் மனதைத் தொடும்படி கூறுகிறார். இதன் மூலம் போரின் பல்வேறு பரிமாணங்களை நேரில் பார்த்து விட்டது போன்ற ஓர் உணர்வை வாசகரிடம் ஏற்படுத்துகிறார். இது கதாசிரியரின் திறனைச் சுட்டுகிறது.
கொடுநாக யுத்தத்தில் இழந்து போனவை உயிர்கள் உடமைகளும் மட்டுமல்ல, மானுடத்தையும் மனித நேயத்தையும் இந்த தேசம் இழந்து விட்டதை உணர வைக்கின்றார். சில கதைகள் தகவல் அறிக்கைகள் போன்று தோற்றமளித்தாலும், போரையும் அதன் வடுக்களையும் போர் தின்ற ஊரையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிற்கால வாழ்வு அவலத்தையும் ஒரு கலையுணர்வோடு கதாசிரியர் ஆவணப்படுத்தியுள்ளார். நிஜமான நிகழ்வுகளை புனைவுகளோடு தந்திருப்பதனால் வாசகனின் மனதில் பதிந்து விடுகிறது.
இயல்பாகவே கதாசிரியரின் எழுத்து வழக்கில் அவருக்கென்ற தனித்துவத்தைக் காணமுடிகிறது. வசன அமைப்புகளில் பாவிக்கப் படும் சொற்களின் ஒழுங்குமுறை அவருக்கேயுரிய வகையில் வார்க்கப்பட்டுள்ளமை சில வேளைகளில் இங்கு வாசகர்களுக்கு சிரமமாக இருக்கலாம். பேச்சு வழக்கு மொழிப் பிரயோகம் 60 கதைகளில் கச் சிதமாக வார்க்கப்பட்டுள்ளது. அவ்வாறே பிரதேசங்களைத் தரிசனமாக்கும் போதும் சூழலோடு வாசகரை ஒன்ற வைக்கின்றார்.
5 நீபி.அருளானந்தம்

Page 5
மனிதர்களை மட்டுமன்றி, விலங்குகளையும், மரங்கையும் கூட நேசிக்கின்றமையை சில கதைகளில் காண முடிகிறது. வாழ்வின் அனுபவங்களை சூழவோடு பிணைத்து, மனித மன உணர்வுகளை அதற்கான அக, புற காரணிகளை, இயற்கை தரும் மன அமைதியை, - என பலவற்றை பகிர்கின்றார்.
இந்தத் தொகுதியிலுள்ள பண்ணிரண்டு கதைகளில் 'கச” என்ற முதல் கதையின் தலைப்பே வித்தியாசமானது சிறிய கடை ஒன்றை நடாத்தும் இளைஞன் ஒருவனையும், கடை முன்னே நிற்கும் கருங்காலி மரத்தையும் தரிசனமாக்கி, அயலில் வாழும் ஒருத்தியினதும், இன்னொரு ஏமாற்றப்பட்டு கருத்தரித்த சிறுபராய யுவதியினதுமான கதைகளினுTடே பாலியல் வக்கிரங்களையும், பாதிக்கப்படும் பெண்களையும் பற்றி மனதைத் தொடும்படி கூறுகிறார். வியாபாரத்தில் இறுக்கமான அணுகு முறையினால் உயர்வது, பின்னர் வீழ்ச்சியடைவது என இராசுக்குட்டியின் தரிசனத்தின் ஊடாக இரு வேறு பாத்திரங்களின் பாலியல் பிறழ்வுகள், அதனால் பாதிப்புறும் பெண்களின் வாழ்வு, இதுவே கதியென இருக்கும் நிலை, ஆண்களின் கபடத்தனம், மனைவி இருக்கும் போதோ பிறன் மனை நாடுதல், என சிந்திக்க வைக்கிறார். சம்பவங்களை கருங் காலியுடன் இணைத்து கூறும் பாங்கு சுவையானது. ஆனாலும் வேலிக்கு வெளியால் நின்ற இந்தப்பெண்ணோ ஈரமான தன்மையற்ற கருங்காலி விதை போன்று கணவனைத் திட்டிக்கொண்டு நின்றாள். இப்படி பல இடங்களைத் தரிசிக்கலாம்.
“ஓ! அவனால் முடியும்” என்ற தலைப்புக் கதையில் ஒரு சீவல் தொழிலாளியின் வாழ்வைத் தரிசனமாக்குகிறார். பனையோடு இணைந்த மனிதரின் வாழ்வு, மதுவின் விளைவுகள், கள்ளுத் தொழில் சார்ந்த சூட்சுமங்கள், அந்தக் காலத்தவரின் திடகாத்திரமான உடல்வலு, முதுமையில் புறக்கணிக்கப்படும் நிலை, அப்போது கூட தளர்ந்து போகாத, ‘என்னால் முடியும்' - என்ற நம்பிக்கை என வித்தியாசமான ஒரு களத்தில் பலதையும் அறியத் தருகிறார். வர்க்க சுரண்டல் பற்றியும், சாதியம் பற்றியும் என கதை பலதையும் புரிய வைக்கின்றது ஒலையில் ஏடு ஏடாக இருக்கும் மடிப்புகள் மாதிரி உள்ள அந்த நினைவுகளை, தன் மனதில் பதியவைத்தபடி. போன்ற சொற்களில் அழகான சித் தரங்களை தரிசனமாக கும் வர் ன  ைம நீ.பி.அருளானந்தருக்கு உரியதாகும்.
ஓஅவனால் முடியும் 6

"திருவிளச் சீட்டு சிறுகதையில், குடியாலும் பொறுப்பற்ற தன்மையாலும் சீரழியும் ஒரு குடும்பத்தையும், தகப்பனைக் கண்டு மிரளுவதுடன் வெறுக்கும் குழந்தைகளையும் தரிசனமாக்கும் கதாசிரியர், பெண்களின் கையறு நிலையையும் தரிசனமாக்கியுள்ளார். இன்னொரு விதத்தில் பெண்ணியம் பற்றி அனுதாபத்துடன் அணுகும் கதையாக இருப்பினும், பெண் விடுதலை பற்றிய வழிகாட்டலின்றி இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. நந்தாருக்கு பலகாரம் சுடுகின்ற வர்ணனை களும், பிள்ளைகளின் பலகாரப் பிரியமும் சுவையாகக் கூறப் பட்டுள்ளது. அவசரம் அவசரமாக அவன் கொஞ்ச கொஞ்ச பல காரங்களை இரண்டு காற்சட்டைப் பைகளிலும் நிரப்பிக்கொண்டு பிறகு அதில நிற்காமல் ஒடீட்டான். பலகாரம் சுட்டா முதன் முதல்ல பிள்ளையஸ் அதில எடுத்துத் தின்னேக்க என்னமாதிரி பெற்ற தாய்க்கு சந்தோசம் தானே? என்கிறார். பெண்ணியம் பற்றி பேச வரும்போது 'எந்தக் காலத்தில் தான் ஒரு பொம்பிளைக்கெண்டு சுதந்திரம் இருக்கும்? கலியாணமான பின் புரிசன்ர கட்டில் உறவோட பிறகு கட்டுப்பாடும் வந்திடும். புருஷன் என்கிறவனுக்குத் தான் எத்தனை முகங்கள், பொம்பிளை சும்மா ஒரு கதை சொன்னாலும் நீ எதிர்ச்சவால் விடுறியோ எண்டு தொடங்கியிடுவினம்' - என நறுக்கென்று கூறுகிறார்.
'மறுகணம் ஒட்டம்’ என்கிற அடுத்த கதையில் போருக்குப் பிந்திய மீள் குடியேற்ற அவலங்களைக் கூறுகிறார். கொடுரமான கொலைகளைப் புரிந்த இராணுவத்தை தமிழர் நம்பத் தயாரில்லை பயம் இன்னமும் துளியும் நீங்கவில்லை என்பதை எடுத்துக் கூறுகிறார். காதல் என்பது இனம் மதம், பகைமை அனைத்தையும் கடந்தது என்பதை சிப்பாயின் காதல் மூலம் எடுத்துச் சொல்கிறார். எனினும் பட்டாளத்தின் காதலை நம்பிட பாதிக்கப்பட்டு துன்பத்துள் உழல் பவர்கள் தயாராக இல்லை என்பதை தெளிவாக்குகிறார். 'எனக்கொண்டா இந்த நேரம்பெரும் நெருப்புக்கிடையிலை என்னை தள்ளி வீழ்த்தின மாதிரி இருக்கு. ஓங்கி அறையுற மாதிரி நாலு வார்த்தைகள் பேச மனம் துடித்தும் அவரால் முடியவில்லை என்கிறார்.
"பதிவு மாறாமல் கதையும் ஆண்களின் பாலியல் வக்கிரங்
களையும் பாதிக்கப்படும் பெண்களையும் பற்றிய கதை. மனைவி இருக்கும் போதும் அவளது தங்கையையும் கட்டாயப்படுத்தி
7 நீ.பி.அருளானந்தம்

Page 6
பெற்றோரைப் பயமுறுத்தி மறுமணம் செய்வதை மாந்திரீகம் செய்வினை சூனியம் என்பவற்றோடு பிணைத்து எழுதியுள்ளார். "படபடத்து வெளவால் களைப்போல கவலைகள் பல வந்து அவன் மனதை அடைத்துக் கொண்டது போன்ற அழகான வசனங்கள், உவமானங்கள் நிறையவே வருகின்றன.
அடுத்த “சுனாமி நினைவுகள் கதையில் சுனாமியின் கொடுமை களையும் இழப்புகளையும் மட்டுமன்றி சுனாமிக்குப் பிந்திய நிலையையும் எழுதியுள்ளமை சற்று வித்தியாசமானதாகும். விவசாய நிலம் உப்பு சவர் மண்ணாக மாறி விவசாயத்தையும் வருவாயையும் பாதித்துள்ளமையை காட்டியுள்ளார். இவரது பல கதைகளிலும் உழைக்கும் வர்க்கத்தினரது பிரச்சினைகள் அணுகப்பட்டுள்ளமை சிறப்பம்சம்.
‘சாவின் வலை’ ஒரு காதல் கதை. மிகச் சாதாரண கதை என்பதோடு யதார்த்தமற்ற செயற்பாடுகளும் முடிவுமாக கதை கதையாயிருக்கிறது. காதலுக்காக தற்கொலை செய்வதன் முட்டாள் தனத்தை கூறியுள்ளதுடன் தற்கொலைக்காக நஞ்சு குடிப்பவர்கள் சிகிச்சையின் போது வைத்திய சாலையில் படும் அவஸ்தையை தெளிவாகக் கூறியுள்ளார். தற்கொலை மீது வெறுப்பை ஏற்படுத்தும் அனுபவ பூர்வமான எழுத்து.
“சுடலைக் காணி’ என்ற அடுத்த கதையில் உயர்ந்தவர் தாழ்வதும், தாழ்ந்தவர் உயர்வதையும் மனித மனதின் பொறாமையையும் கூறியள்ளார் இறுதியில் இறுதிப் போரின் இழப்புகளை கதையுள் புகுத்திள்ளமை கதாசிரியரின் சாதுரியமாகும்.
"நாணலை நிமிர்ந்த முடியவில்லை” என்ற கதையில், புத்தகம் போட்ட எழுத்தாளன் அதை விற்க முடியாமல் படும் அவலத்தைக் காட்டுகிறார். பாடசாலை மீள் நினைவுகளுடே, இன்றைய தலை முறையினர் மட்டுமன்றி, முன்னைய தலைமுறையினரும் கூட பாடசாலை நாட்களில் குழப்படி செய்ததைக் கூறுகிறார்.
"சூரியன் வந்து சேர்ந்தான் யுத்தத்தின் பின்னராவது இரு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படாதா? என்ற ஆதங்கத்தை
ஓஅவனால் முடியும் 8

ஏற்படுத்தும் கதை. மதுபானம் கதையில் முக்கிய திருப்பமாக வருகிறது. அதன் மூலம், பல விடயங்களைப் புட்டு வைக்கிறார்.
"சுமையோடு நிற்றல்’ என்ற அடுத்த கதையில் பாலியல் உணர்வு நியாயபூர்வமானது.மனித நாகரீகமே எம்மைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறது. என்பதைக் கூறுகிறார். ஒரு பூனை இந்தக் கதையில் வருகிறது. அதன் மூலம் சூசகமாக பலவற்றைக் கூறுகின்றார். இந்த நாட்டிலே யுத்தம் ஏற்பட்டதனால் இன்றுவரை வாழ்வுப் பாதையில் எத்தனையோ இடையூறுகள், தடைகள், இடைஞ்சல்கள், கவிஷ்டங்கள், பிரச்சினைகள் விவகாரங்கள்.மோதல்கள், என்றதாய் பல பாரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பற்றிக் கூறும்கதை.
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல" கதையில் பனிப்பாறையில் சிக்குண்ட மான் ஒன்றை தரிசனமாக்கி கதையை நகர்த்தியுள்ளார். புதிய களமாயினும் அவசரப் படைப்பாக உள்ளது. விலங்குகளுக்கு ஜீவகாருணயம் காட்டுபவர்கள் மனிதர்களை இறுதிக் கட்ட போரில் வகை தொகையின்றி கொன்றமை பற்றி சூசகமாக கூறும் கதை.
நீ.பி.அருளானந்தத்தின் முன்னய ஏழு தொகுதிகளின் கதைகளோடு ஒப்பிடுகையில் இத்தொகுதியில் உள்ள கதைகள் வேறுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. காத்திரமான கருத் தாடல்களை முன்வைத்துள்ளார். வெறும் வாய்ப்பாட்டுக் கதைபோலன்றி மீள் வாசிப்பதை தூண்டும் கதைகளாகவும் மனதில் கேள்விகளை எழுப்பும் கதைகளாகவும் இந்தச் சிறுகதைகளெல்லாம் அமைந்துள்ளன. சமூக மாற்றத்திற்கான உந்துதலை எதிர்பார்ப்பவர்களுக்கு இக் கதை களுடே பல விடயங்கள் உணர்த்தப்பட்டுள்ளன. நீ.பி.அருளானந்தம் நிறைய எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.
28.09.2011
Dr.3F.(JD(C5351T60TË556ÖT
கரணவாய் கிழக்கு
கரவெட்டி
9 நீ.பி.அருளானந்தம்

Page 7
என்னுரை
பிரியும் ஒருவித கிளை கிளையான கதைகள் போன்றவைதானே இந்தச் சிறுகதைகள் என்று சொல்லப்படுபவை. இந்த நூலிலுள்ள சிறு கதைகளை நான் எழுதுகிறதற்கு முன்னமே சில நாட்களாக நான், இமை மூடிய மாதிரியானதொரு இருட்டுகிற அந்த வேளைப் பொழுதுகளிலே ஒரு நீல அல்லியை பார்ப்பது போன்ற ஒரு மகிழ்ச்சியான கற்பனையோடு என் சிந்தனையைத் தொடங்கி, ஒரு அருவருப்பான தோற்றத்தை காணுகிற அளவிற்கும் அதை நான் என்னுள் தொடர்ந்தபடியே இருந்தேன்.
மனத்திலுள்ள இருட்டை முயற்சி செய்து அதை கறுப்புத் துணியாக மடித்து வைத்தது போல செய்து கொள்ளலாம். அதன் பின்பு ஒளி மனதில் தெரியும் தான்! மகிழ்ச்சி அதன் பின்பு ஒரு வாறாய் ஏற்படும்தான்! ஆனாலும் காயம் பட்டதில் வந்த மாறாத அந்த வடு, ஒளியிலும் பிறகு தெரியுமே? அதற்கு என்ன முறையில் ஒரு வைத்தியம் செய்வது, மாற்றுவது?
ஒரு மனிதனின் வாழ்வில் - நடந்த சில சம்பவங்கள் எப்படியோ ஒரு காலம் பிறகு மறக்கப்பட்டுவிடுகிறது என்கிறது, சொல்லப்போனால் ஒரு பொய்யான விஷயம் தான்! எதுவும் கடல் கோளில் அமிழ்ந்தது மாதிரி ஒரு காலம் கடந்த பின்பு சில வேளை அவனுக்கு இருக்கலாம். எனினும் கடலுக்கு அடியில் சிதைவுகள் உள்ளது போல, மன ஆழத்திலும் அதுவகை எப்போதும் அங்கே இருந்து கொண்டுதானே இருக்கும்?
என் வாழ்விலே நான் பார்த்ததும், காதால் கேள்விப்பட்டதுமான சம்பவங்கள் பல, பதியம் போட்டுவைத்தது மாதிரியாய் என் மனதிலும் இருக்கின்றன. அப்படியான சம்பவங்கள் சில முளை விடுகிறமாதிரியாக வரும்போது அவைகளையே நான் தெரிந்தெடுத்து இக் கதைகளாக பிறகு நான் ஆக்கிவிடுகிறேன். அந்த சம்பவங்களை உதறி கலைத்தமாதிரி செய்து நான் கற்பனை பண்ணும்போது "ஹோமர் - என்பவர் எனக்கு முன்வந்து எனக்கு வழிகாட்டுவது மாதிரி இருக்கும். அதற்குப் பிறகு அந்தக் கதையே மாறி வேறு ஒரு கதையுருவமாக அது வந்து விடும். சிறுகதையினை அதிரும் சில சொற்களை கோர்த்துச்
ஓஅவனால் முடியும் 10

சேர்த்துத்தான் எழுதி முடிக்க வேண்டும். அப்போது தானே அதுவும் ஒளிக் கதிர் வீசுகிறது மாதிரி படிக்கவும் வாசகர்களுக்கு இருக்கும். ஆதலால் இவைகளை ஆதார ஊற்றாகக் கொண்டு சிறு கதையினை எழுதி முடிப்பதென்பது எழுத்தாளன் ஒருவனுக்கு கஷ்டமானதொரு விஷயம் தானே?
ஏனோ தானோவென்று இல்லாமல், இப்படியாக வெல்லாம் எழுதி
முடிப்பதற்கு - ஒரு எழுத்தாளன் என்பவனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் இருக்கும்? எனக்கும், இப்படியான கஷ்டம் என்பது அவர்களைப் போன்று உண்டுதான்!
என்றாலும், இதைப்போன்றுள்ள வேறு எனது வாழ்க்கைக் கவஷ்டத்துக்குள்ளும் இதையே நான் இன்னும் தொடர விரும்புகிறேன். நான் எப்படி சிதைந்தாலும், நான் எழுதும் கதை - நூலாகவும் உருவாக வேண்டுமென்பதும் என் ஆசை. அதையும் தான் தொடர்ந்து நான் செய்து வருகிறேன். என் பரம்பரையிலிருந்து தொடராக ஊறி ஊறிப் போய் வந்ததை நானும் இருந்து செய்து வரத்தானே வேண்டும்? அதற்காக நான் அயராது உழைக்கவும் தான் வேண்டும். உண்மை என்பது பெரிய தொரு ஆயுதம்! அது எப்போதும் வென்றே தீரும் என்பது என் மனத்திலுள்ள ஆழ்ந்த நம்பிக்கை. அதனாலே எனக்கு எப்போதுமே மனநிறைவு உண்டு. மன ஆறுதல் உண்டு மகிழ்ச்சியும் எப்போதும் நிறையவே உண்டு.
என் பணி தொடர வாசகர்களும் எனக்கு ஊக்கம் தந்து உதவுகிறார்கள். இதுவும் எனக்கிருக்கும் மகிழ்ச்சி நிலையின் காரணமாகும். கடவுளின் படைப்பிலே மெலிவுக்கும் மெலிவான ஓர் புல் இதழிலும் கூட நல்லதோர்.அழகிருக்கிறது. அதையும் பார்த்து இரசிக்கத் தெரிந்தவன் தான் உண்மையிலேயே அன்புள்ளம் கொண்ட மனிதன். அவனிடம் இரக்க குணமும் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். அதனால் சீவியத்தில் நீதிமானாகவும் நடக்க அவன் பெரிதும் முயற்சிப்பான்.
‘டால்ஸ் டாயின் - கதைகளிலே இவ்வித குண நல இயல்புகள் உள்ளவர்களைத்தான் அவர் அதிகம் அதிலேயாய்ச் சித்திரித்திருக்கிறார். அவரது கதைகளின் உயிர்த் துடிப்பானது அன்பை முதன்மைப் படுத்தவதாகவே, எடுத்துக் கூறுவதாய் உள்ளது. ஒருவர்மேல் ஒருவர்
11 நீ.பி.அருளானந்தம்

Page 8
அன்பு செய்வதையும், ஒருவரை யொருவர் மன்னித்து அன்பாய்ச் சேர்ந்து வாழ்வதையும் தன் கதைகள் எல்லாவற்றிலும் எவ்வளவு அவர் சிறப்பாகக் கூறுகிறார். உண்மையில் சொல்லப் போனால், எல்லோரிலும் பார்க்க மகத்தான ஒரு ரிஷி, ஞானியானவர் அவரே என்பதாக, அவர் கதைகளைப் படித்ததன் பிறகு எனக்கும் அப்படியாககத் தோன்றுகிறது.
பிறரை மன்னிப்பது ஒன்றே உலகில் மிகவும் சிறந்தது, என்று நானும் கூடத்தான் இவைகளையெல்லாம் படித்ததன் பின்பு உறகியுடன் நினைக்கிறேன். சிலுவையிலிருந்து கடைசியாக தன் உயிரை விடு முன்னரும் கூட இயேசு நாதர் அதைத்தானே செய்தார். அந்த வேளையிலும் கூட அவர் மனம் திறந்து தன்னைச் சித்திரவதை செய்து கொலை செய்ய இருப்பவர்களையும் மன்னித்தார். கடவுளின் கோபம் அவர்கள் மேல் இறங்காதிருக்க “பிதாவே இவர்கள் அறியாமல் பிழைசெய்கிறார்கள். இவர்களை நீர் மன்னியும்' - என்று உருக்கமாகவும் அவர் கடவுளை அந்நேரம் இரந்து மன்றாடினார்.
உண்மையிலேயே மன்னிக்கிற இந்த சுபாவத்திலே இருந்துதான் ஒரு மனிதனின் மனமானது திருந்துகிறது. அதன் மூலம் தான் வேறு நல்ல குணங்களும் அவன் மனத்தில் பின்பு பதியமிடுகிறது. இவைகளெல்லா வற்றையும் கதைகளின் மூலமாயும் ஒருவர் படித்து அறியும்போது அதைப்படிப்பவர் மனதும் சுத்தப்படும் தானே?
மனித மனத்தின் ரகளிலியங்களை ஆழ்ந்து கண்டறிய - இந்தச் சிறுகதைகளும் ஒரு புறம், வாசிப்புப்பழக்கம் உள்ளவர்களுக்கு உதவு மென்றுதான் நானும் நினைக்கிறேன்.
நெல் வகையிலே வேறு வேறான எத்தனையோ வகை இருக்கிறதாம், பேரிச்சம் பழத்திலே ஆயிரம் வேறுபட்டதான வகைகளும் உண்டாம், திராட்சையிலும் அப்படி, இந்த விதத்திலே மனிதர்களான வர்களின் நிலை எப்படி? சில ரகஸியங்களை சிலபேரிடமிருந்து அறிந்து கொள்ளும் போது, அந்த நேரம் அதிர்கிறது என் மனம்
மனத்தில் அந்த நினைவு எனக்கு விடாமல் பிறகு இருந்து விரிகிறது. அதுவே பின்பு நான் எழுதும் கதைக்குள்ளாகவும் பிறகு வந்து விடுகிறது.
ஓஅவனால் முடியும் . 12

பேனாவை வெகுநேரம் காகிதத்தில் தொட்டுக்கொண்டதாய் இருந்து விட்டேன் போல எனக்கு இப்போது இங்கே சொல்லத் தோன்றுகிறது.
ஆதலால் நன்றி சொல்ல வேண்டிய ஒரு விஷயத்துக்கு கடைசியாக நான் இப்போ வந்து விடுகிறேன். ‘ஓ’ அவனால் முடியும்’ - என்ற இச் சிறுகதைத் தொகுதி நூலானது - நான் எழுதிவெளியிட்ட சிறுகதைத் தொகுதி நூல்களில் எட்டாவது நூலாக ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது சுற்றிப் படர்ந்த மல்லிகைப் பந்தலிலுள்ள பூக்கள் மாதிரித்தான், இந்தச் சிறு கதைகள் யாவும். இச் சிறுகதைத்தொகுதி நூலைப்படித்து தன் ரசிப்புக் கசிந்த சாறெடுத்து அதன் மூலம் ஒரு முன்னுரையினைத் தீட்டியதாய் எழுதி தந்திருக்கிறார் Dr. ச.முருகானந்தம் அவர்கள்.
இந்த என் சிறு கதைத்தொகுதியிலே உள்ள கதைகளில் பலவித உருவம், குணம் காட்டுகிற பாத்திரப் படைப்புகள் உண்டு. கவலை அளித்த முகங்கள், கண்களை உடையவர்களையெல்லாம் இந்தக் கதைகளிலே அவர் நன்றாகப் படித்தறிந்திருக்கிறார். அதன் மூலமாகத்தான் அவர் இந்த நல்ல முன்னுரையையும் இந் நூலுக்கு எழுதித்தந்திருக்கிறார்.
அவர் எழுதித்தந்த முன்னுரையைப் படித்து எனக்கும் சந்தோஷம் பெருகிறது. அவருக்கு அதற்காக நன்றியும் கூறிக் கொள்கிறேன் இதேநேரம் நன்றிக் கண் கொண்டு என் நண்பர்களையும், வாசகள்களையும் நான் பார்க்கிறேன். அவர்களுக்கும் என் நன்றிகளைக் கூறி வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.
அன்புடன் நீ.பி.அருளானந்தம் இல: 7, லில்லியன் அவென்யூ, மவுண்ட் லெவனியா, (கல்கிசை) சிறீ லங்கா தொ.பே - 4967027 273 1887
13 நீ.பி.அருளானந்தம்

Page 9
உள்ளே.
ஓ! அவனால் முடியும் திருவுளச் சீட்டு
மறுகணம் ஓட்டம்
பதிவு மாறாமல்
சுனாமி நினைவு (நிலைக்கும்)
சாவின் வலை
சுடலைக் காணி
நாணலை நிமிர்த்த முடியவில்லை
சூரியன் வந்து சேர்ந்தான்
சுமையோடு நிற்றல்
மின்னுகிற பொன்கள்
(பக் :)
I 7
3O
5.I
6g
83
98
IO6
I 25
I38
I47
I58
I68
ஓஅவனால் முடியும்
14


Page 10

ö3P
சேரிப்பக்கத்து மக்களும் கூலிவேலை செய்து வாழும் அந்தத் தொழிலாளர்களும் இருக்கின்ற இடத்திலே "இப்போ கஷ்டப்பட்டுப் போய் இருக்கிற நானும் விசித்திரமான அந்த ஜனங்களுடன் ஒருவனாய்ச் சேர்ந்து இருக்கலாமே?- என்றெண்ணித்தான் ராசுக்குட்டி என்பவன் அதிலே ஒரு கடையைப் போட்டான்.
சிறிய பெட்டிக்கடை மாதிரித் தான்! பலசரக்குக் கடை அது! அந்தக் காணிச் சொந்தக்காரருக்கு கடைக்கான வாடகைப்பணம் மாதா மாதம் அவன் கொடுக்க வேண்டும். காணியின் மூலையிலே அந்தக் கடையை அதன் உரிமையாளரே கட்டிவிட்டிருந்தார். இந்தக் கடையை வாடைக் கெடுத்து நடத்திக் கை விட்டவர்களை இருகை விரல்களளவுக்கு எண்ணிவிடலாம். நஷ்டப்பட்டுப் போக விரும்புவர்கள், இந்த கடையைத்தான் நடத்திப் பார்க்கவேண்டும் என்பது மாதிரியாய் - “நட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணாத கடை'- என்பதாய் அந்த ஊருக்குள்ளும் ஒரு கதை அடிபட்டுக் கொண்டிருந்தது. முன்பு அந்தக் கடையை நடத்திப் போனவர்களும் தங்கள் மண்டைக்குள் நட்டத்தை ஏற்றி - அதைப் பற்றிப் பலருக்கும் ஒரு புறம் சொல்லியவாறாய்த் திரிந்தார்கள்."இதென்ன அப்பிடி யாவாரத்தில ஒரு நட்டம் வாறகத. து.போ! அப்பிடி சொல்லுறவன் யாவாரம் ஒண்டுமே செய்யத் தெரியாதவன். தொழில் தெரிஞ்சவன் ஊசிவித்தும்
17 நீபி.அருளானந்தம்

Page 11
லாபம் சேர்ப்பான். அது தான் யாவாரத்தில இருக்கிற கெட்டிக்காரத்தனம்.
என்று தனக்கு அந்தக் கடையின் துர்ப்பாக்கியம் பற்றிச் சொன்னவர்களுக்கெல்லாம் தன் முகம் சிவக்க இப்படிப்பதில் ஒன்றைச் சொல்லிவிட்டுத்தான் - ராசுக்குட்டி, அந்தக் கடையாவாரம் தொடங்கக் கால் வைத்தான். அவனுடைய கடையில் அரிசி, பருப்பு, உப்பு,மிளகாய், புளி, கிழங்கு, பீடி என்று பலதும் பத்துமான பொருட்களெல்லாம் தேவையான அளவுக்குப் போடப்பட்டிருந்தது. கறார்விலை - கைமேல் ரொக்கம் - என்ற உத்தி இல்லாமல், தளர்வாக கடன் கொடுத்து, பின்பு காசு வாங்கியும் அவன் யாவாரம் பண்ணினான். சாதாரண நியாயவிலை கூறி அவ்விடத்தில் சாமான்களை அவன் விற்றதாலே சேரிப்பக்கத்துச் சனங்களெல்லாம் வேறு அங்குள்ள கடைகளுக்குப் போகாமல் அவனிடமே பொருட்களை வாங்கிப் போக வந்தார்கள். சாந்தம், அமைதி, நிஜம் ஆகியவை கொண்ட அவனது கண்களில் உள்ள பார்வை, சேரிப்பக்கத்து மக்களுக்குப் பரவசமளித்தது. அவனுடைய முகம் சுண்டாத தன்மை, புதுப்போக்கு, பக்குவம், ஆகிய தன்மைகள், அவர்களுக்கெல்லாம் மனதுக்குப் பிடித்திருந்தது. எனவே, புன்முறுவலுடன் அவர்கள் தங்கள் மலகூட சுத்திகரிப்பு வேலையையும் அவனிடம் கூறி-வரும் மாதக் கடைசிச் சம்பளத்தில் தாங்கள் வாங்கும் கடனைத் தருவதாக கொப்பிக் கணக்கும் அவனிடமாய் அவர்கள் வைத்துக் கொண்டார்கள்.
தங்களின் யாவாரமெல்லாம் போய் இப்போது அவையெல்லாம் சேர்ந்து ராசுக்குட்டியின் கடையில் போய் குடியேறிவிட்ட நிலையில் "அவன் நாசமாப் போகட்டும்' - என்று சொல்லித்திட்டிக் கொண்டு அங்கே அவன் கடைப்பக்கத்தில் கடைபோட்டிருந்தவர்களெல்லாம் ஒன்றும் தங்களால் சமாளிக்க முடியாமல் கடைகளைப் பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள். இதனால் ராசுக்குட்டியின் கடை வியாபாரத்தில் இன்னும் ஒளி படர்ந்தது.
அவன் பலருக்கும் கடன் கடன், என்று கடைப் பொருட்களைக்
கொடுத்தாலும், அவையெல்லாம் அவனுக்குப் புல்லின் மேல் அமர்ந்த வண்ணாத்திப்பூச்சியைப் போல, பெரிய பாரமாகத் தெரியவில்லை.
ஓஅவனால் முடியும் 18

இரண்டொரு கடன் கொடுத்தது திரும்பிவராத விடத்திலும், அவன் போதிய லாபத்தைப் பெற்றுக் கொண்டு அந்தக்கடையை நடத்திக் கொண்டிருந்தான்.
அந்தக் கடையில், காலையில் தான் யாவாரம் அமளிதுமனியாக நடக்கும். பத்து மணியளவில் யாவாரம் குறைந்து அமைதியாகிவிடும். அதன் பிறகு அவன் மன ஆரோக்கியம் கருதி சில புத்தகங்களையும் வாசிப்பான். யார் யார் பொருட்கள் வாங்க வருகிறார்களோ அவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்து காசை வாங்கி லாச்சியில் போட்டுவிட்டு கடைக்குமுன்னாலே கிடக்கின்ற கருங்கல்லிலே போய் குந்தி இருந்து கொண்டு அவன் புத்தகம் வாசிப்பான்.
முறுக்கேற்றப்பட்ட மனம் தளர இந்த வாசிப்புப்பழக்கம் அவனுக்குத் துணையாக இருக்கும். "மனத்தில் இன்பமான எண்ணங்கள் ஒடவும், உள்ளத்தைக் கிளறி உற்சாகப்படுத்துவதற்கும், இதற்கு ஏதும் ஈடாக வேறேதும் உண்டோ?’ என்ற நினைப்பில் அவன் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து தன்னிடம் வைத்திருந்தான்.
அவன் இருந்து படிக்கின்ற அந்தக் கல்லுக்குப் பக்கத்தில், விறைப்பைத் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டது மாதிரியாய் ஒரு கருங்காலி மரமும், கறுப்பு அழுத்த நிறம் பெற்றதாய் நின்றது. காற்றில் படபடக்காத இலைகளிலிருந்து, உப்புச்சப்பற்ற நிழலும், அவனுக்கு சந்நியாசிமாதிரி அனுபவித்தபடி அதில் இருந்து கொண்டி ருக்கச் சந்தோஷம் தான்!.
நிலத்திலெலஸ்லாம் வைரம் கலந்த கருங்காலி விதைகள் பளபளப்பில்லாத அளவில் அதிலே சிதறிக் கிடந்து அவனுக்குக் காட்சி கொடுக்கும்.
புத்தகத்திலிருந்து தன் பார்வையை விலக்கி நிலத்தைப் பார்க்கும் போது கண்ணுக்குத் தென்படும் அந்த இறுகிய விதைகளைப் பார்த்தபடி - தான் படித்துக் கொண்டிருக்கும் மாகாபாரதக் கதையினிலே வரும் பாத்திரப்படைப்புக்களை, கற்பனைக் கண்ணுடன் அவன் தன் சிந்தையிலேற்றுவான். அதையெல்லாம் சிந்திக்கும் போது தன் கண்களின் ஒளிபட்டு, அந்தக் கருங்காலி விதைகளே தீயின்
19 நீ.பி.அருளானந்தம்

Page 12
பயங்கர ஒளிவிடுவது போல அவனுக்கு ஒருவித பிரமையை ஏற்படுத்தும்.
மகாபாரதக் கதையிலுள்ள அந்தக் கதாபாத்திரங்களெல்லாம் தாங்கள் செய்கின்றவைகளை நியாயப்படுத்திச் சொல்லி - அவனையும் யோசித்துப்பார்க்கும் படியாகக் கூறி, நினைவில் அவனுக்குத் தொந்தரவு கொடுப்பதாக இருக்கும்.
இது நிலைமையில் அவனுக்கும், மகாபாரதத்தில் வரும் பீஷ்மரைப் போல - அம்புப் படுக்கையின் மேல் தன்னை கிடத்திவிட்டதைப் போன்ற ஒருவித வேதனைதான்!.
ஒழுக்கக்கேடுகளெல்லாம் அந்த நாளைய மகாபாரதக் கதையில் மட்டுமா நடந்தது? அந்தக் கதைச்சம்பவங்கள் இன்னும் இன்றைய மனிதவாழ்விலே மறக்க முடியாத ஒரு காரியமாக அவன் தன் கண்ணாலும் இப்போது பார்க்கின்றான்தானே?
LD5Tபாரதக் கதையிலான அந்த வாழ்க்கை இப்போது ஒருபோதும் இல்லை - இல்லை - எனக் கூற முடியுமா? அதற்கு உதாரணமாய் - அப்படியொரு வாழ்க்கைதனில் பங்கு பெற்றதாயுள்ள ஒரு பெண்ணானவள் அவன் கடைக்குப் பின்புறமுள்ள அந்தக் காணிக்குள் உள்ள குடிசையில் இப்போதும் தான் வசித்துக் கொண்டிருக்கிறாள். உலைக்களத்தீயில் கூர்த்த பார்வையை வைப்பது போல, அவளைக்காணும் போதெல்லாம் இவனும் இன்பச்சூட்டோடு அவளைப் பார்த்திருக்கிறான். அவளின் மஞ்சள் பூசிய பள பளப்பான சொக்கைகளையும், உள்வாங்கிய வயிற்றையும் இடையையும், அதற் குண்டான நளினமான மிருதுவான அவள் நடையையும், கேள்விக்குரிய கண்களையும் பார்த்துவிட்டு, அந்த நிச்சலனமான கருங்காலி மரத்தின் கீழ் போய் கல்லின் மேல் அரைநிழலில் இருந்து கொண்டு - சதுப்பு நிலத்தின் மூச்சுக் காற்றைப் போல மனதுக்குள் மூச்சு விட்டபடிஅவள் வாழ்க்கையிலுள்ள வெக்கையின் பக்கங்களை தன் நினைவில் அவன் புரட்டிப் புரட்டிப் பார்த்திருக்கிறான்.
ஓஅவனால் முடியும் 20

அழுத்தமான மனம் கொண்ட அவளுக்கு இரட்டைப் புருஷன்மார்கள் இப்போது இருக்கிறார்களென்பது அவனுக்கு விளங்கும். "இருவரையும் தனக்கு வைத்துக் கொண்டு எப்படி எப்படியாக அவள் சமாளிக்கிறாள்? இரண்டாவது புருஷனுடன் ஆழமாகப் பதிந்து விட்ட உறவின் தொடர்ச்சியாலும், அந்தக் குடும்பத்துக்குள் அவளுக்கு குழப்பமும் இல்லை. இவர்களுக்குள் எதாவது அப்படியொரு குழப்பம் வந்து அதைத் தான் பார்க்க வேண்டும் என்றதாய் இவனும் பல நாள் அதற்காகக் காத்துக்கிடந்தான். ஆனாலும் ஒரே வீட்டுக்குள், ஒன்றாகப் படுத்தெழும்பி, அவளுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த அந்த ஆண்கள் இருவரிடத்திலும் முறுகிக் கொள்கிறமாதிரி கோபதாபமோ, சண்டையோ எழவில்லை. அவர்களிருவரும் கருங்காலி மரத்தின் முரடான கிளைகள் போல, ஒன்றையுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் இறுகிய அமைதியுடன் சாதாரணமாகவே இருக்கிறார்கள்.
ஆனாலும் அங்குள்ள சனங்களுக்கு - தன் முதுகுகாட்டித் திரும்பிக் கொள்வதாய் இருந்து வாழும் அவள் ரகசியம், ஒரு நாள் நடந்த சம்பவத்தின் மூலம் பிறகு வெளிப்படையாக அனைவருக்கும் தெரியத்தான் வந்தது.
அவளின் இரண்டாவது புருஷனின், தாலிகட்டிய சொந்த மனைவி, அதிலே அவன் கடையடி வேலியருகில் நின்று அவளைக் கேட்டுவிட்ட கேள்விகளைக் கேட்டு பார்வையாளராய் நின்ற சனங்களுக்கு சகிக்க முடியாமல் போய்விட்டது.
அவள்கேட்ட கேள்விகளைக் காதில் கேட்டு - சிரிக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து - கோடையின் அந்த வெப்பத்திலும் அவர்களெல்லாம் குளிர்மையாகச் சிரித்தார்கள்.
ஆனாலும் வேலிக்கு வெளியால் நின்ற அந்தப் பெண்ணோ - ஈரமான தன்மையற்ற கருங்காலி விதைபோன்று, தன் கணவன் மேல் வெறுப்புகளை வைத்துக் கொண்டு, அவனைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தாள்.
அந்தக் குடிசையின் பக்கம் பார்த்து கடுகடுப்பான குரலில் 96).j6iT:
21 - நீ.பி.அருளானந்தம்

Page 13
"இவ்வளவு வயது போயும் உனக்கேன் புத்தி கெட்டுப்போச்சு. உன்கோத்திர மென்ன? குடும்பமென்ன.? உன்ர பிள்ளைகளின்ர நிலை என்ன..? எல்லாத்தையும் மறந்து போய் இந்த ஊத்தேக்க வந்து கிடக்கிறியே. உருப்படியான அறிவிருக்கா உனக்கு.? கடைசிக் காலத்தில உதவாக் கரைப் பிணமாவெல்லே நீ கிடந்து போகப் போறாய்.”
இப்படி அவள் சொல்ல - யாரும் கவனமாகக் கேட்கக் கூடியதாக அவனும் கோபத்துடன் வாய்திறந்தான்.
"என்னை நீ வேண்டாமெண்டால் - நான் உனக்குச் செய்து தந்த அந்த ரெண்டு சோடிக் காப்பும் உன்ர கையில பிறகு எதுக்கு? - அதைக் கழட்டி இப்ப வீசன் இங்கால எனக்கு”
அவன் அப்படிச்சொல்ல அந்த வெப்பத்தில் அவள் நெற்றி யிலிருந்து ஒரு சொட்டுவியர்வை நிலத்தில் விழுந்தது.
"உன்ரை ஊத்தைக் காப்பை உன்னோடயாய் இந்தா இனி நீ வைச்சுக் கொள்ளு - அவளுக்கே இனி இதைப் போட்டு நீ அவளோடயாப்படு’
சுட்டெரித்தது மாரிதியான ஒரு நிலையில் ஜூர வேகத்தில் - வாய்பிளந்தபடி காப்பை ஒரு கையால் அவள் உருவிக் கழற்றி வேலிக்கு மேலால் உள்ளே வீசினாள்.
அதைச் செய்துவிட்டு சுட்டெரித்த வெய்யிலுக்காலே அந்த வீதியைக் கடந்து நடந்து பிறகு அவள் அவ்விடமிருந்து மறைந்தே போய் விட்டாள்.
அவள் போனதன் பிற்பாடு பயிற்சி பெற்ற விலங்குகளைப் போன்ற அந்த மூன்று மனிதர்களையும் வேலி இடுக்கு வழியாக அவன் ஒருமுறை பார்த்தான்.
'அடக்கடவுளே. ஒன்றுமே நடவாதது போன்று மிகச் சாதாரணமாக வல்லவோ அவர்கள் இருக்கிறார்கள்? அவனுக்கு
ஓஅவனால் முடியும் 22

உலகமே பற்றி எரிவதற்குத் தயாராக இருப்பது போல அப்போதைக்கு நினைக்கத்தோன்றியது.
இதற்குப் பிறகு - கண்களை நிலத்தில் படியவிடுவதும் - மகாபாரதக் கதையைப் படிப்பதுமாக சில மாதங்கள் அவனுக்குக் கழிந்தது.
இதன் பின் அடுத்த சம்பவம் ஒன்று:
உடம்பில் முரட்டுத் துணிச் சட்டை போட்டிருந்த ஒரு பெண்ணை - அது அவளின் பேர்த்தியாக்கும். அவன் கடையடிப் பக்கம் அந்தக் கிழவி கூட்டிக் கொண்டு வந்தாள்.
அந்தப் பெண் நிறைமாத பிள்ளைத் தாச்சி' - என்று தெரியுமளவிற்கு வயிறு ஊதிக்கிடந்தது. புத்திசாலியான முகமாய் அவள் முகம் இவனுக்குப் பார்க்கத் தெரியவில்லை.
கடையடிக்குத் தன் பேர்த்திப் பெண்ணைக் கூட்டி வந்த அந்தக் கிழவியின் களைத்துப் போன முகத்தையும், இரக்கமான பார்வையையும் இவன் கண்டுவிட்டு
"என்னம்மா உங்களுக்கு வேணுமனை? என்று அக்கறையாக விசாரித்தான்.
இவனின் அன்பான பேச்சைக் கேட்டுவிட்டு, கிழவியும் தன்குரலை தாழ்வாக்கிக் கொண்டு - "ஒரு சோடா குடிக்க முதலில குடும் தம்பி. தாகம் நாவவறட்டுது. அதைக்குடிச்சிட்டு சொல்லுறனப்பு.’
- கிழவி இப்படிச் சொல்ல, சோடா உடைத்துக் கொடுத்தான் அவன். -
கிழவி காய்ந்து போன தொண்டையின் அடியாழம் வரை போகும் அளவுக்கு அண்ணாக்காய் நிமிர்ந்து சோடா குடித்தாள்.
99
"நீயம்மா..?
23 நீபி.அருளானந்தம்

Page 14
அரைவாசி மிச்சத்தை தனக்குப் பக்கத்தில் நின்ற பேர்த்திக்குக் கிழவி நீட்டியபடி கேட்டாள்.
"(36600TTLD.'
என்று கிழவிக்கு அவள் சொல்லிவிட்டு, கருங்காலி மரத்தைப் பார்த்துக் கொண்டு - "இந்தக் கிளைகள் இனி எந்தத் திசைக்குச் சென்றதாய் வளரும்?’ என்று சிந்தித்தபடியாய் நின்றாள்.
கிழவி கண்களை மூடாமல் திறந்தபடி ஒரு கணம் அப்படியே இவனைப்பிறகு பார்த்தாள்.
"தம்பி வீடு எங்கயாவது இங்க எங்கயும் வாடகைக்கு எங்களுக்கு இருக்க எடுக்கேலுமோ..?”
ஒரு பறவைக்குஞ்சைப் போல தன் நாடி துடிக்கக் கேட்டாள் அந்தக் கிழவி
"நீங்க எங்க உள்ளனியள்.? இப்பிடி இங்க வந்து உடன வீடு எங்களுக்கு வாடைக் கெண்டுகேட்டா..?”
"நாங்களும் மனுசர் தானேயப்பு. ஏதோ எங்களுக்கும் ஒரு தேவைக்குத்தான் அதிலயா இப்ப இருந்திட்டுப் போகக்கேக்கிறம் தம்பி.”
அவன் கேட்டதற்கு கிழவி சொன்ன பதில் - இன்னும் ஏதோ, ஒரு துன்பச் சுமையை அவள் சொல்லவிருப்பதாக அவனுக்குத் தெரியப்படுத்தியது.
"இங்க அப்பிடி இப்பிடியான ஆக்கள் தான், இதுக்கயா எல்லாம் இருக்கினம் ஆச்சி. இதுக்கயா நீங்க வீடெடுத்து இருக்கிறதெண்டா ஒத்துவருமா சரியா உங்களுக்கு.?”
"எப்படியான ஆக்களெண்டாலும் மனுசர்தானேயப்பு இங்கின
இருக்கினம்! நாங்களும் இந்தப்பிள்ளையின்ரை பேறு காலம் முடியப் போயிடுவம் எங்கட இடத்துக்கு.”
ஓஅவனால் முடியும் 24

"ஏன் அத நீங்க ஊரில இல்லாமலா தனியவா இங்க வந்து செய்யப்பாக்கிறியள்.' -
- தோண்டி எடுக்கிற மாதிரி கிழவியை ஒருகேள்வி இப்படிக் கேட்டான் அவன்.
"ஐயோ அதுதானே மகன் இவளுக்கு நடந்ததாய் வந்திட்டுது. அதுதானே இப்பிடி வந்து நிர்க்கதியாய் நாங்க நிற்கவேண்டிக்கிடக்கு.”
என்று அந்தக் கதையில் ஆரம்பித்து ஒரு இறுக்கமான சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது மாதிரியாய் ஒரு உண்மையை பிறகு கிழவி அவனுக்குச் சொன்னாள்.
"இவள் பாவி பாவி ஒண்டும் தெரியாத ஒரு அப்புறாணிப்பிள்ள! இவள இவளிண்ட சகோதரியின்ட புருஷன் கெடுத்து விட்டிட்டான் ராசா. அதால இவளும் வயித்தில வாங்கி எங்களுக்கும் அதைப்பற்றி சொல்லாமலாகாலம் கடத்திட்டாள். இது பிறகு எங்களுக்குத் தெரிஞ்சு நாள் செண்டதால அங்க இங்கயா நாங்க இருக்கிற ஊர்களுக்கு தெரியாத இடம் வழியாக் கூட்டிக் கொண்டு போய் இவள வைச்சிருந்து நாள் கடத்திப் போட்டு வாறம். இப்ப இவளுக்கு பேறுகால நாள் கிட்டிப் போச்சுத்தம்பி! ஆசுப்பத்திரி இருக்கிற இடமா இப்ப ரவுண் பக்கத்துக்கு இவள நான் கொண்டந்திருக்கிறன். விரலில புண்ணாப் போச்செண்டு கண்டா அதுக்காக கைய வெட்டி எறியேலுமே? எல்லாம் சொந்தத்துக்கயா உள்ளுக்க அப்பிடி இப்பிடி ஏதோ நடந்து போச்சு..! என்ன செய்யிறது! இது பிள்ளயும் எங்கயும் இனிப் போய் வாழ்க்கைப்பட்டுச் சீவிக்க வேணுமே தம்பி.? அது தான் பிள்ளையைப் பெத்து இங்க எங்கயும் ஆருட்டயும் பிள்ளையை வளக்கக் குடுத்துப் போட்டு, பிறகு ஊருக்கு இதக் கூட்டிக் கொண்டு போகலாமெண்டுதான் நினைச்சுக் கொண்டு நாங்களெல்லாம் இப்பிடியாச் செய்யிறம். என்ர கடவுளே, எனக்கு நீதான் என்ர மகன் மாதிரி - இவளிண்டயும் என்ரயும் பாவத்தைப் பாத்து உதவ வேணும் பிள்ள.'
கையை விரித்துக் கொண்டு கிழவி சொல்லும் போது கைவிரல்களெல்லாம் அவளுக்கு நடுங்குகிறது. ராசுக்குட்டிக்குக் கிழவியின் துயரக் கதை கேட்க - அணை உடைத்த வெள்ளம்
25 நீ.பி.அருளானந்தம்

Page 15
தன்னை அடித்துக் கொண்டு மரத்திலும் கல்லிலும் மோதிச் செல்வதானதோர் துன்பம். அவனுக்கு அந்தக் கிழவியிலும் அவள் பேர்த்தியிலும், மிகவும் இரக்கமாய் வந்துவிட்டது. நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் வேதனையை, மரம் மூச்சு விடுவது போல வெளியே தெரியாமல் மூச்சு விட்டபடி அகற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து அவன் பரிதாபப்பட்டான். உடனே அவன் வறண்டு போன மாதிரியாய் நின்ற அவர்கள் இருவரையும் தன் தாய் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் - வாழ்வின் சில சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய ஒரு பொய்யையும் தன் தாயிடமும் கூறி, அவர்களுக்கு அங்கே தங்கிக்கொள்ள ஒரு அறையையும் ஒழுங்குபண்ணிக் கொடுத்தான்.
இதற்குப் பிறகு மிக மிக கண்டிப்பாக தன்னையே தான் கடிந்து கொண்டு, இப்படியான உதவியொன்றும் இனிமேல் யாருக்கும் தான் செய்வதில்லை என்றுதான் தனக்குள் அவன் உறுதியாயிருந்தான்.
ஆனாலும், பாரதக் கதை மூலம் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு இதுபோன்று அவனிடம் நெருங்கிய சம்பவங்களிலிருந்து தன்னைத்தப்பித்துக் கொள்ளமுடிந்ததா?
தவறுகள் மலிந்த நரகமான அந்த இடத்திலிருந்து இறக்கை இருந்தும் அவனுக்குப் பறந்து போய்த்தப்பிக்க முடியாததைப் போலல்லவா ஆகியும் விட்டது.
அடுத்த கொடுக்கான் எங்கே இருந்து இனி வரப்போகிறதோ? - அவனை கொடுக்கால் கொட்டுவது போல வேதனை அளிப்பதற்கு. கடைசிநேரத்தில் கடை வியாபாரத்தில் அவனுக்கொரு நட்டம் ஏற்பட்டது.
மாரிகாலம் வந்துவிட்டதாலே அவன் கடை போட்டிருக்கிற அவ்விடத்திலுள்ள அனேகருக்கு தொழிலில்லாது பல கஷ்டங்களையும் பட்டுப் பட்டினி கிடக்க வேண்டியது காலமாய் வந்து விட்டது. இவனிடம் தான் அவர்கள் கடன் கொப்பியைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் கடனுக்கு தான் அனுஷ்டித்து வந்த முறைகளை மாற்றாது இவனும் அவர்களுக்குக் கேட்டதெல்லாம் இல்லையென்று
ஓஅவனால் முடியும் 26

சொல்லாது கடன் கொடுத்தான். அவர்களுக்குக் கடன் கொடுத்துக் கொடுத்து இவனும் கடனில் மூழ்கிக் கொண்டிருந்தான்.
இந்தக் கஷடங்களுக்குள்ளும் அந்த இடத்தில் நடக்கிற மகாபாதகங்களைக் குறித்தும் அவன் மனம் அதிகம் கவலைப்பட்டது.
அங்கு அவன் கடைக்கு வருகின்ற அந்தப் பெண்ணினது புருஷனின் மீது இவனுக்குக் கோபம் இருந்தாலும் - அவளிடத்திலாக தன் உறுதியான குரலில் உனக்குக் கடன் இல்லை என்று பட்டவர்த்தனமாக சொல்ல ஏனோ அவனுக்கு முடியாதிருக்கிறது.
'ஏமாற்றப்பட்டு இப்படியாயும் சில பெண்களின் வாழ்வு சீரழிந்தும் போகிறதே?-என்று நினைத்தாலும் அவளோடு அதைப்பற்றிக் கதைப்பதற்கு வாய்திறவாமல் தான் அவன் இருக்கிறான்.
இவள் தன் புருஷன் என்று இப்போது சொல் லிக் கொள்பவனுக்கு இதுதான் தொழில். அவன் எங்கும் ஒரு தொழிலும் பார்க்கப் போவதில்லை. இவன் எங்கேயாவது வெளிஊர்களுக்குப் போவான். அவ்விடங்களில் கவர் டப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பங்களைத் தேடிப் பார்த்து அவர்கள் வீட்டில் ஒருவாறாய்ச் சேர்ந்து கொண்டு சில நாட்கள் அவ்வீடுகளில் தங்குவான். அங்கு இருக்கிற காலங்களில் தன்கையிலுள்ள காசுகளையெல்லாம் அவர்களுக்காகச் செலவு செய்வான். பின்பு அவர்கள் வீட்டிலிருக்கும் பெண் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு இங்கே கூட்டிவருவான். அதற்குப் பிறகு - தான் அனுபவித்த சிறந்த இன்பம் அவளுடன் கழிந்த நாட்களுக்கப்பால் தன் மனைவிக்கு மதுவை நிறையப் பருக்கி விபசாரத்தில் அவன் அவளை ஈடுபடுத்தி பணம் சம்பாரிப்பான். இதற்குப் பிறகு “உன்வாழ்க்கையைப் போய் நீ நடத்து’. என்று அவளைத் தன் வீட்டால் இருந்து வெளியே கலைத்துவிட்டு, திரும்பவும் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து பலிகொடுக்கப்படும் 'கடா’ போல அவளை வைத்திருந்துவிட்டு, வழமைபோல தன் காரியம் நடத்துவான். அவன் இப்படியெல்லாம் குற்றச் செயல்கள் புரிந்தும் சட்டத்தின் கையில் மாட்டியதில்லை. அவன் அதிகப்படியான கிரிமினல் விவேகம் கொண்டிருந்த படியாலே எல்லா குற்றவழியிலுமிருந்தும் தன்னை தப்பித்த வாறாய் இருந்தான்.
27 நீ.பி.அருளானந்தம்

Page 16
அவனுடைய அவளும் இப்போ கடையடியில் நின்ற வண்ணம் அவனிடம் பாண்ட்- கடன் கேட்டவாறாய்த்தான் நிற்கிறாள். இப்போ பிள்ளைத் தாச் சியாகக் காணப் பட்ட அவள் , இளைத் தும் , வியாதிவசப்பட்ட வளாகவும், மிரண்ட கண்களுடனும் அவனுக்குக் காணப்பட்டாள். தேகநிலை சரியில்லாததாலே அவள் இருமிக் கொண்டிருந்தாள்.
"என்ன இருந்தாலும் நிறைமாத பிள்ளைத்தாச்சி, பாண் கடன் கேட்டுக்கொண்டு நிற்கும் இவள் ஜன்மத்திலேயே இன்று தான் முதன் முதலாக இப்படியான ஒரு நிலைக்குத் தான் வந்துவிட்டதாக அழுகின்ற மாதிரியாகவும் நிற்கிறாள்.” என்று அவன் இவளைக் கண்டதில் - மனதுக்கு அவனுக்குக் கவலையாகிவிட்டது. திடீரென அவனுக்கு இந்த நிலையில் உணர்ச்சிகளைக் கிளப்பி விட்டது. “உண்மையில் நிஜமாக இந்தப் பழியெல்லாம் அவனையே சாரும். கடவுளின் தண்டனை அவன் மேல் ஒரு நாள் வந்துவிழும்” என்று அவன் நினைத்தான்.
"என்னவோ போறது என்னட்டயிருந்து எல்லாமே போய்த் தொலையட்டும்’ என்று நினைத்துக் கொண்டு, அவளுக்கு இரண்டு றாத்தல் பாணைக் கொடுத்து (பிரெடு) அவளை அதிலே மேலும் நின்று கொண்டிராமல் பிறகு அவன் போக்காட்டிவிட்டான்.
அன்று இரவு முழுவதும் அவனுக்கு நித்திரையே வரவில்லை. எல்லா சம்பவங்களையும் படுக்கையிலே நினைத்துப் பார்க்க, அவையெல்லாம் அவனுக்கு வியாகுல முள்ளதாகவே இருந்தது.
விடிந்ததும் வழமை போல் எழுந்து வீட்டாலே இருந்து அவன் தன் கடையடிக்குப் போனான். அங்கே அவன் போய்ப் பார்த்தால் கடைக்கதவு திறக்க வேண்டிய அவசியமில்லாமல் பூட்டு உடைபட்டுக் கிடந்தது. கடைக்குள்ளே போய் அவன் பார்த்தான். கடைப் பொருட்கள் எல்லாம் அங்கே கொள்ளை போனதைக் கண்டு அவன் மனம் செத்துவிட்டது.
ஓஅவனால் முடியும் 28

உடனே மனக்கவலை தாங்க இயலாது வெளியே போய் கடைக்கு வெளியாலே உள்ள அந்தக் கல்லிலே இருந்தான். கள்ளர் சீனி மூட்டை காவிக் கொண்டு போன வழியில் சீனித் துகள்கள் கொட்டுப்பட்டுக் கிடப்பது அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஒவ்வொரு துகளை ஒவ்வொரு எறும்புகள் இழுத்துப் போகின்றதும் அவன் கண்ணில்பட்டது. அதிலே நிலத்தில் கிடந்த கருங்காலி விதைகளை எறும்புகளும் தேடாதவிடத்து, அவன் அந்த விதைகளையே இறுகிய தன் மனத்தோடு அவ்வேளை பார்த்துக் கொண்டிருந்தான்.
(செங்கதிர் - வைகாசி - 2011)
(தினகரன்வாரமஞ்சரி - 14 யூன் 2011)
29 நீ.பி.அருளானந்தம்

Page 17
ஓ! அவனால் முடியும்
தங்கள் வருத்தத்தைப் பிறருக்குச்சொல்லிச் சொல்லி வருகிற முதியவர்கள் போலவல்ல இவன் வெள்ளையன் என்பவன் - இப்போது சரியாகக் கணக்குப் பார்த்தால் அவனுக்கு எண்பத்தைந்து வயதாகிறது. ஆனாலும் இந்த வயதிலும் கூட ஒழுங்காக நடக்க ஒத்துழைக்கிற பலமான கால்கள் தான் அவனுக்கு வியாதி வருத்தம் ஒன்றும் பெரிதாக வராததால், “இத்தனை நாள் தனக்குச் சீவியம் கழிந்தது பெரிசில்லை’ என்பது மாதிரித்தான், அவனுக்கு உள்மனதுக்குள் ஒரு வித அலட்சியம். இனிமேல் தனக்கு உள்ள காலத்தையும் அப்படியாக கழிப்பது ஒன்றும் சிரமமில்லை என்பதாகவும் கூட அவனுக்குள்ளே இருந்து கொண்டிருக்கிறது ஒரு நினைப்பு.
வெள்ளையன் ஒரு கள்ளுச் சீவல் தொழிலாளி. பனைமரமேறிக் கள் இறக்கித்தான் இவளவு வயது வரை அவன் தன் குடும்ப சீவனோபாய காலத்தைத் தள்ளியவன். நல்ல பிரயாசையோடும் கெட்டித்தனத்தோடும் அவன் தன் தொழிலைச் செய்ததாலே - அவன் கள்ளுக் கொடுக்கும் வாடிக்கையாளர்களெல்லாம், இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்போல - காலை வெயில் ஏறி வரவும் ஒரு தவிப்போடு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஊருக்குள் எழுபது வயதுக் கிழவராக கம்பு ஊன்றிக்கொண்டு சோர்வாக திரிபவர்களையெல்லாம் உசார்ப்படுத்தி விடுவது வெள்ளையன் கள்ளுத்தான். இவர்கள் பேசும் வார்த்தைகளிலே
ஓஅவனால் முடியும் 30

மகிழ்ச்சியின் புதிய தொனி, வெள்ளையன் பனங்கள்ளைக் குடித்த பின்பே தான் முகிழும், கோபப்படும் குணமுள்ளவர்களெல்லாம் இவன் கள்ளை வாங்கிக் குடித்தப்பின்பு மனம் ஆறி ஆனந்தமடைந்து விடுவார்கள். சிலருக்கு இவன் கள்ளைக் குடித்தால் தாலாட்டின் சாயல் ஏற்படுவது போல் இருக்கும். சிலருக்கோ, அவர்களது சூழ்நிலைக்கேற்ப வெறியிலே ஒப்பாரியின் சோகமும் ஏற்படும். பனையேற்றுப் பருவ காலத்திலே, தினந்தோறும் இருவேளையும் வெள்ளையன் மரம் ஏறி இறங்குவான். பகலிலே காய்கிற வெயிலால் கரிய தண்டிலே மிகவும் சூடாகவே இருக்கும். பனை மரத் தண்டின் மீது உராய்ந்து ஏறுவதால் அந்த வெப்பம் அவனுக்கு உடலைத் தாக்கும். இதனால் அவனுக்கு நெஞ்சுப் பகுதியிலே சிறு சிறு கட்டிகள் உண்டாகி விடும். வெப்பத்தால் ஏற்படும் கட்டிகளைப் போக்கிவிட - தான் சீவுகிற மரத்தின், ஒரு மரத்துக் கள்ளை அவன் குடிப்பான். நுங்கைத் தின்றால் - “தண்ணிர் பருகினாலும் தீராத தாக விடாய் அடங்கும்!’ என்று சொல்லுவார்கள். ஆனால் வெள்ளையனுக்கோ, தன் உடலுக்குக் குளுமை தந்து தாகம் தீர்ப்பதாயிருப்பது இந்தப் பனங்கள்ளுத்தான்! என்பதாகவே ஒரு நினைப்பு.
LIளை வெளிவரும் முன்னாலுள்ள, வடலிப் பனை போன்ற இளம் பருவத்திலேயே வெள்ளையன் தன் சுய முயற்சியில் மரமேறக் கற்றுக்கொண்டுவிட்டான் அந்தப் பால்யப் பருவக்காலம் அவனுக்கு ஓர் அமிர்தம். தேரை பாய்ந்தது மாதிரி பனையிலே பாய்ந்து நங்’ - என்று மரத்தைக் கைகளால் பிடித்துக்கொண்டு ஆவேசமாகக் கோஷம்போட்டுக் கொண்டு - பனை மர உச்சிக்கு அவன் அந்த வயதிலேயே ஏறிப் போய் விடுவான். மர உச்சியில் இருக்கும் போது அப்போதைய தன் இனத்தின் அடிமைத் தனத்திலிருந்து தனக்கொரு சுதந்திரம் கிடைத்தது மாதிரியான ஒரு சுகம், அவனுக்கு ஏற்படும். அந்த உச்சியில் இருக்கும் போது அவனுக்கு விடிவு காலம் வந்தது மாதிரி இருக்கும். அந்த உச்சிப் பனையில் இருந்தவாறு, தன் ஊரின் எல்லை வரை, கழுகுக் கண்பார்வை கொண்டது போல கீழே எல்லா இடங்களையும் அவன் பார்ப்பான். பிற்பாடு அந்த ஊருக்குள் உள்ள பனந்தோப்புக்களில் உள்ள பனைகளில், எந்தப் பனை மிகவும் உயரமாய் இருக்கிறது? என்று காண, அவன் அதை தன்கண்களால் தேடுவான்.
31 நீ.பி.அருளானந்தம்

Page 18
அந்தக் காட்சிகளிலே அவன் கண்ணுக்குப் புலப்பட்டது உடையாருக்குச் சொந்தமான காணிக்குள் இருந்த பனை ஒன்று. அந்த உயரமான பனையிலே தான் ஒரு நாள் ஏறி - பனை மரத்தின் உச்சாணியிலே யாரும் அவிழ்க்க முடியாதபடி - அறுத்தெடுக்க முடியாதபடி, கொடி ஒன்றை பறக்கக் கட்டி விட்டு வரவேண்டுமென்பது அப்போதைய அவனது ஆசை.
யாருமே அறுத்தெடுக்க முடியாத அந்தத்தான்கட்டிய கொடி காற்றில் அப்படியே படபடத்தபடி மேலே மேலே பறந்து கொண்டிருக்க வேண்டும் என்று அவன் நினைப்பதற்குரியதாய் உள்ள ஆசை தான் என்னவோ? தன் மன வலிகள் தாங்காததால் - அதில் அவன் எழுதி வைத்திருக்கிறானே - சாதி ஒழிக’ - என்று, அந்த வார்த்தையை யாரிடமாவது சொல்லிவிட்டு உயிர் விட வேண்டும் என்று தோன்றிய அவன் மூதாதையர்கள் கூட, சாகின்ற வேளையிலும் கூட இதை யாருக்குமே சொல்லுவதற்குப் பயந்தவர்களாகவே அக்காலத்தில் உயிரை விட்டார்களாமே? நாங்கள் என்ன தப்பு செய்தோம்? யாருக்கு நாங்கள் என்ன கெடுதி செய்தோம்? இப்படி சீயெண் டவும் தூவெண்டவுமாக நாங்கள் மேல் சாதிக் காரர்களால் மிதிப்படுகிறோமே 6 60াঁ [m3] அவர் களெல லாம் தங்கள் மனதுக் குளிர் கேட்டுக்கொண்டார்களேயொழிய வேறு என்னதான் வெளியால் ஒரு பெரிய எதிர்ப்பை அவர்கள் அப்போது மேல்சாதிக் காரர்களுக்குக் காட்டினார்கள்.
வெள்ளையனுக்கு அந்தப் பனை மீதேறி இருந்து கொண்டிருக்கும் போது, தான் வாழும் அந்த ஊரில் சாதிபேசும் உருவங்கள் மனக் கண்ணில் வந்து வந்து தெரிந்து கொண்டே இருந்தது. அந்த நினைவிலே தடிகளால் பலங்கொண்ட மட்டும் அவர்களை ஓங்கி ஓங்கித்தான் அறைகிறது போல அவன் நினைத்தான். அந்தக் கோபத்தின் சூடு அவனுக்கு நெற்றிப் பொட்டில் வந்து இறங்கியது. அது மண்டை ஒட்டை நொறுக்கியது போல அவனுக்கு அப்போது இருந்தது. ஆனாலும் அந்த அவஸ்தையிலும் அவனில் ஒரு மாறுதலை உண்டு பண்ணியது, அவ்வேளையில் அடித்த காற்றுத்தான்! உடனே அவனுக்கு அதனால் ஒரு தெளிச்சி ஏற்பட்டு கோபம் ஆறி விட்டது.
ஓஅவனால் முடியும் 32

பனை மரத்து ஒலை, இரைச்சலுடன் அந்தக் காற்றடித்தலுக்கு சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. சங்கின் நாதத்தைப் போல ஒலைச்சத்தம் அவனுக்கு மிக நல்லதோர் சாரீரமாய்க் காதுகளுக்குக் கேட்கிறது. அவனது ஆனந்தம் மிகு ஆத்மார்த்திகமான பொழுது போக்கு இதுதானே? இந்த வித சுகத்தை அனுபவித்து விட்டு பிறகு அவன் மரத்தால் இருந்து கீழே இறங்கி விடுகிறான். ஆனாலும் அவன் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் கோபம் பொங்க வைக்கும் அந்த நினைவுகள் அவனைக் கொத்தி முழுங்கியபடியே இருந்து கொண்டிருக்கின்றன.
திட்டுத் திட்டாக உப்புப் பூத்த மாதிரி இருக்கும் இந்த நினைவுகளுடனே ஆளும் வளர்ந்து பிறகு வெள்ளையன் கள்ளுச் சீவுகிற தொழிலைத் தொடங்கினான். “டேய் இந்தா கள்ளு கோடிப்புறத்து அந்தப் போத்தல் வழியவா நீ ஊத்தி வடிவா வைச்சிட்டுப்போ. காசையும் பிறகா நீ வாங்கடா? - என்று குரலில் இப்படி அதட்டல் அதிகமாக வைத்துக் கேட்பவர்களுக்கு வெள்ளையன் தான் சீவிக்கொண்டு போகிற முட்டிக் கள்ளிலிருந்து ஏதும் கொடுக்கவே கொடுக்கமாட்டான். இப்போது அப்படித் தன்னைக் கேட்டவருக்கு அவன் நிதானமாக பதில்சொல்லவேண்டிய தேவை இருக்கும்.
“இப்புடி டேய் புடேய் எண்டு என்னை அதிகாரம் பண்ணுற எந்த ஆக்களுக்கும் சரி என்ரை சீவுற கள்ளு நான் விக்கிறேல்ல.”
இந்த வார்த்தைகளை அவன் சொல்லும் போது ஒன்றையும் நசுக்காமல் - அது நல்ல திருத்தமாக கேட்பவருக்கு இருக்கும். அவன் சொன்னதைக் கேட்டு இடிந்து கிடப்பவர் மாதிரி நிற்பவரை - தான் இனி ஆற இருந்து குடிக்கப் போகும் பனங்கள்ளின் ருசியோடான நினைப்புடன் வெள்ளையன் பார்த்துவிட்டுப் போய்விடுவான்.
தான் சீவின கள்ளை வீடுகளிலும் கொடுத்து. மிகுதியை கொட்டிலிலும்கொண்டுபோய் அளந்து கொடுத்ததன்பின்பு அவனுக்கு வேறு என்ன தான் இனி ஒரு வேலை?
33 நீ.பி.அருளானந்தம்

Page 19
தொழிலின் பின் நீண்ட நேரம் வருத்திக்கொண்டிருக்கும் உடம்பு உழைவுடன், மன உட்காயங்களையும் மாற்றிக்கொள்ள அந்தக் கள்ளுக்கொட்டிலில் இருந்தபடியே அவன் கள்ளுக் குடிப்பதைத் தொடங்குகிறான். அவனுக்கு கொடுக்கும் கள்ளுக்கான கணக்கை, கொட்டில் சொந்தக் காரனான மூர்த்தி - உடனுக்குடன் கொப்பியிலே கணக்கெழுதிக்கொள்கிறான்.கிழமைக்கொருக்கால் அவன் கொடுத்த கள்ளுக்கொள்முதல் கணக்கைச் சரிபார்த்து அவன் குடித்த கள்ளுக் கணக்கைக் கழித்து வரும் மிகுதிப் பணத்தை அவன் கையிலே கொடுத்து விடுவான் மூர்த்தி வெள்ளையன் சமூகத்தவரிடம் பொய் யில்லை. களவில்லை, தொழிலும் படு சுத்தம் என்கிற இது விஷயம், மூர்த்திக்கு அது நன்றாகவே தெரியும். என்றாலும் அவன் தன் கள்ளப்புத்தியை விடாது வெள்ளையன் தனக்குக் கொடுக்கும் கள்ளுக்குரிய கணக்கிலே கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு கொடுப்பனவை மாற்றி கள்ளம் வைத்து எழுதுவான்.
ஆனாலும் வெள்ளையன் இதையெல்லாம் எங்கே கண்டு பிடித்துக்கொள்ளப்போகிறான். அவனின் மனது வெள்ளை நிற பூப் போன்ற மனது. அதனாலே அவனிடம் சூது வஞ்சகமென்று சிறிதுமில்லை. அதனாலோ என்னவோ அவனிலே நல்ல கலைஞனுக் குரிய கலையம்சமும் நிறையவே சேர்ந்து இருந்தது. மனதுக்குள் இருப்பதாக சொல்லக்கூடிய ஒரு பாட்டு அவனிடம் இருந்தது. கள்ளுக் குடித்தால் அவன் அனுபவிக்கிற ஒரு சுகம், அந்தப் பாட்டையும்
பிறகு நன்றாகப் பாடி முடிக்கும் போது தான் அவனுக்கு
நிறைவடைவதாக இருக்கும்.
அவன் தானே படித்து தானே மயங்குகிற மாதிரியான அந்தப் பாட்டு, ஏதும் ஒரு சினிமாப்பாட்டல்ல. அவன் படிக்கிற அந்தப் பாட்டு, நாட்டுக் கூத்துப் பாட்டுத்தான்! காத்தான் கூத்தை அவன் படிக்கும்போது ‘காத்தவராயன் மாதிரியே அவன் பிறகு மாறிவிடுவான்.
அந்தக் கூத்துப்பாட்டை அவன் குரல் இழுத்துப்பாடும்போது, அதில் இழையோடுகிற பாவம், சோகமா, இல்லை சுகமா? இல்லை கொந்தளிப்பா? என்று சொல்ல முடியாத அளவுக்கு, வேறு வேறு திசைகளில் கேட்பவர்களின் நினைவுகளை அவன் குரல் ஒசை இழுத்துப்போகும்.
ஓஅவனால் முடியும் 34

“மெட்டின் ஏற்ற இறக்கங்களுடன் காத்தான் கூத்துப் பாட்டை, அடடா இவளவு சிறப்பாக இவன் பாடுகிறானே? இப் படி இசையோசையோடு கூத்துப்பாட்டொன்றை பாடக்கூடியதான ஒரு லட்சணம் நம் சாதிக்காற ஆக்களில்யாரும் ஒருவனிடம் கூட அது இல்லையே.' - என்று கள்ளுக்கொட்டிலில் அவனுக்கு எட்டாத் தொலைவாயிருந்து - பிளாவும் கையுமாக இருக்கும் கிழவர்கள் கூட தங்கள் புருவக் கட்டைச் சுருக்கிக் கொண்டு அவன் பாடும் கழுமரத்துப் பாடல் கொட்டில் பக்கம் தவழ்ந்து கொண்டிருக்க இவ்வாறெல்லாம் யோசித்தவாறாய் இருப்பார்கள்.
ஆனாலும், இத்தனைக்கும், அந்த இடத்தில் கூட ஒரு வார்த்தை அவர்கள் அவனை வாழ்த்திப் பேசுகிறதே இல்லை. அவன் குரல் இன்றும் ‘கருங்குயில் கூவும் சோக இசையினைப்போல அவர்கள் நினைவில் இருந்து கொண்டிருந்தாலும், கண்தெரியாத மாதிரியே அவனை எங்கு கண்டாலும் தங்கள் முகத்தை அவர்கள் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள்.
இந்த மாதிரியான மேல் சாதிக்குரிய வேடுவக் குணங்க ளெல்லாம் வெள்ளையனுக்கு அது மிக நன்றாகவே விளங்கும்.
அதனாலே அவ்வேளையிலே அவன் “இப்படியானவர்களின் மனங்களையெல்லாம் -பெரிய கலப்பை கொண்டு முங்க உழுது பண்படுத்துவதுபோல சீர் செய்ய வேண்டும்” - என்று தன் மனதுக்குள்ளே - பொங்கிப் பொருபொருக்கிற அளவுக்கு நினைத்துக் கொள்வான்.
இப்போ உலகம் இதற்கு முன் கண்டிராத ஒரு வேகமாய்த்தான் ஒவ்வொரு மனிதனின் சீவிய கால வயதை தன்னுடன் சேர்த்து இழுத்துப் போகிறது போலும்! அந்தப் படுவேகமான சுழற்சியில், ஒரு தாண்டு தாண்டிப்போனது மாதிரித்தானே வெள்ளையனுக்கும் வ்யசு இப்போ ஐம்பதைத் தாண்டிவிட்டது.
பிள்ளைகுட்டிக்காரனான அவன் - இந்தக் கள்ளுச்சீவுகிற
35 நீ.பி.அருளானந்தம்

Page 20
தொழிலை மாத்திரம் நம்பி சீவியத்தைப் போக்காட்டிக்கொள்ள முடியுமா? தனக்கு இப்போது நிறைய பேரப்பிள்ளைகளும் உண்டு என்று அதைத் திருப்பித் திருப்பி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்வதில் உள்ள மனச் சந்தோஷம, தன்பேரப்பிள்ளைகளுக்கும் அவர்கள் பிரியமாய்க் கேட்கிறதை தான் வாங்கிக் கொடுப்பதில் தானே அவனுக்குத் திருப்தியும் ஆறுதலடைவதுமாயுமிருக்கும்.
இதற்கெல்லாமாக அவன் கள்ளு மரம் ஏறிச் சீவ இயலாத காலம், நல்ல வருவாயைத் தேட வேறே வேலைகளையும் செய்து பார்க்க வேண்டியதாயும் தான் இருந்தது. நல்ல உடம்பும் பலசாலியுமான ஒருவனுக்குக் கூலி வேலை கிடைப்பதென்பது ஒரு கஷ்டமா?
அந்த ஊருக்குள்ளே கணபதிப்பிள்ளை - என்ற பெயருடைய பெரிய கமக்காரர் ஒரு நாள் ஆள்விட்டுக் கூப்பிட்டு வெள்ளையனை தன் பகுதி வீட்டுக்கு வரவழைத்தார். வெள்ளையனைக் கண்டதும் திரைபோட்டுக் கொண்டு தான் உள்ளே இருந்து கதைப்பது மாதிரியாக அவனுடன் கதைத்தார். "நீ என்ர வயலிலபோய் கொட்டிலில காவலுக்குக்கிடந்து - பிறகு அறுப்பு முடிஞ்சு களத்தில சூடடிச்சு, நெல்லைச் சாக்கில போட்டுக்கட்டி, பிறகு அதை என்ர வீட்ட கொண்டந்து என்னட்டச் சேர்க்குமட்டும், உனக்கொரு சதம் கூட அதுக்குள்ள சம்பளம் கிம்பளமெண்டு நான் ஏதும் தரமாட்டன் கண்டியோ - ஆனாலும் இந்த வேலையெல்லாம் நீ சரியாச்செய்து முடியவிட்டி, உன்ர கூலிக்காசு ரொக்கமா உன்ரை கையில நான் தருவன்! அது உனக்குப்பிடிப்போ? - அப்பிடி என்னட்ட இந்த என்ர நியாயத்தோட நீ ஒம்பட்டு இனி வேலை செய்யச் சரியோ? - உனக்கது இப்ப விருப்பமோ..?” -
இப்படி அந்தக் கதையை வரிசையாக, ஆனாலும் சொற்களை மாற்றி மாற்றிப் போட்டது மாதிரியாகக் கதைத்தார் கணபதிப் பிள்ளை. தன்னிடத்து உள்ள அந்த நியாயம் நீதிக் கதையை வெள்ளையனுக்கு கேட்க தேனாமிர்தமாக இருக்கக் கூடிய அளவிலும் அவர் இனிமையாகக் கூறினார். விளக்கைப் பார்த்துப் பறந்து வந்து அதிலே மோதிச் சிறகிழந்த ஈசலின் நிலைபோல, கணபதிப்பிள்ளைக்கு
ஓஅவனால் முடியும் 36

வேலை செய்யவென்று வந்து கூலிக்காக இல்லாமல் திருப்பிப்போன மணிசர்களது கதை வெள்ளையனுக்கோ வென்றால் அது விஷயம் தெரியவே தெரியாதுதான். அதனாலே அவர் சொல்லைக்கேட்டு அவனும் நம்பிக்கொண்டு முகத்தில் சந்தோஷம் பொங்க - ஒரு இன்ப முனகல் சத்தச் சிரிப்போடு - அவர் சொன்ன வேலையை, தான் செய்கிறேன் - என்று சொல்லி அவ்வேளை அவருக்கு ஒப்புதல் கொடுத்து விட்டான்.
இதன் பின்பு கணபதிப் பிள்ளையின் வயலுக்கு - அடை காக்கும் கோழி மாதிரியான நிலையிலே, அவன் அவரின் வயலிலுள்ள காவல் கொட்டிலில் கிடந்து கொண்டு, காவல் கடமையில் ஈடுபட்டான். அந்த நெல் வயலிலே கொத்துக் கொத்தாயுள்ள கன நெல் மணிக்கதிர்கள் காற்றிலே அசையும் போது, தானும் அவைகளுடன் அசைவாய்ச் சேர்ந்திருப்பதுபோல அவைகளைப் பார்த்துக் கொண்டு அவன் மனம் மகிழ்வான். நெல் மணிகள் முற்ற முற்ற, அந்த மூர் க் கமா ன வ ய ல வாசனைகள் அவன் மூக குத் துவாரங்களில்காற்றோடு கலந்து புகுந்து அவன் கனிவான மனத்தினை முத்தமிட்டன.
நெற்கதிர்களின் அசைவு - அவனை வாய்திறந்தும் கூத்துப் பாட்டினை உரக்கச் சத்தமாகப் பாட வைத்துவிடும்.
கள்ளுக் குடிப்பதற்கான தாகமடங்காத ஒரு உஷணம் சில நாள் அந்த காவல் கொட்டிலில் கிடந்த பிறகு அவனுக்கு வந்தது. அந்தத் தாகம் அவன் விடும் பெருமூச்சிலிருந்தும் அவனுக்குக் கேட்பது போலவும் - தன்னை வேண்டுவது போலவும், அவனுக்கு இருந்தது. வேறு ஆள் இல்லாத அந்தக் காவல் குடிலில் வாசம் செய்த இரவுகளெல்லாம் அவனுக்கு அதனாலே கொடுமைதான்! அவனுக்கு யாரோ ஒசையாய்த்தன்னை பின்னாலே வந்து கூப்பிட்ட மாதிரியாகவும் அதனாலே சில வேளைகளில் ஒரு பிரமையாகவும் இருக்கும். இப்படியே வயல்பக்கத்துக் காடுகள்பேசும் எதிரொலிகளைக் கேட்டுக்கொண்டு, தனியாகக் காட்டுப்பாதையில் தான் போனது போல நாட்களும் அவனுக்குக் காவல் கொட்டிலில் கிடக்கக் கடந்தது. அந்த இருள் வனத்துக்குப் பக்கத்தே, தனிமை வாசம் கொண்ட அவன் வாழ்வின் விடிவுநாளாய் -நெல் அறுவடைக் காலமும்பிறகு வந்தது.
37 நீ.பி.அருளானந்தம்

Page 21
நெல் வயல் அறுவடை நாளன்று கண்களின் ஆழத்துள் ஆசைகளை வைத்துக்கொண்டு தன் வயலை - வரப்பில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார் கணபதிப்பிள்ளை - சரசரவென்ற சத்தத்துடன் அரிவாள் வீசி நெற் கதிர்ப்பிடி அறுப்பவர்கள் வயலுக்குள்ளே நின்றபடி வேலை செய்கிறார்கள். உள்ள ஊரில் ஆள் அங்கே இல்லை யென்று. பிற ஊரிலுமிருந்து வந்தவர்களும் கணபதிப்பிள்ளையின் வயலில் அரிவு வெட்டுகிற வேலையை தாறு மாறாயில்லாமல் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளையனும் வயலுக்குள் இடம் மாறாதிருந்து கொண்டு அரிவு வெட்டில்மற்றவர்களுக்கு தான் சளைத்த தில்லையென்ற அளவில் முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறான். கொட்டிலிலிருந்து இவளவு நாளாய் - பலதையும் நினைத்துச் சலிக்கும் பெருமூச்சு இப்போது அவனிடமில்லை - பூக்கள் சிரிப்பது போல ஒரு வித மகிழ்ச்சி அவனது மனத்தில் ஏற்படுகிறது. - கூலி மொத்தமாய்த் தனக்கு இனிக் கிடைக்கப்போகிறது என்ற நினைப்பினில் மனத்தின் உள் சுழல்கிறது இப்போது அவனுக்கு சந்தோஷப் பூ.
கணபதிக்கு இம் முறையும், போன ஆண்டு போல செழித்துக்கொழித்து விளைந்ததாய் உள்ள நெல் விளைச்சல் தான்! அவரின் முழுக் கவனமும் சூடடிப்பின் பின்தனக்கு இம் முறை வயலால் எத்தனை மூடை தேறும்? என்றதான யோசனையாயிருந்தது. நெல் கதிர் அறுப்பைக் கவனித்துக் கவனித்துக்கொண்டே, அதைப்பிறகு விற்று அமோகமாய்க் கையில் தனக்குக் கிடைக்கப்போகும் காசுச் சுளைகளையும் அவர் நினைவில் கணக்குப்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஏறு வெயிலில் சூடு பிடித்த அரிவு வெட்டு வேலை, இறங்கு வெயில் காண்பதற்கு முன்னவே ஒரு படியாய் முடிவுக்கும் வந்துவிட்டது. களத்தடிக்குப் பக்கத்திலே கொண்டு சென்று வேலையாட்கள் போர் வைத்தும் விட்டார்கள். கணபதிப்பிள்ளை அரிவு வெட்டு வேலை செய்தவர்களுக்குப் பிறகு கூலிப்பணத்தைக் கொடுத்தனுப்பினார்.
அன்று இரவு பெற்றோல் மாக்ஸ் வெளிச்சம், வயலுக்கு நடுவே தனி வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தது. வேலைகாரக் கம்பு பிடித்து சூடடிப்பு வேலை செய்தவர்கள் - இனிப் பிரிவதில் லை
ஓஅவனால் முடியும் 38

என்றதாய்க்கிடந்த நெற்கதிர்களையெல்லாம் மாட்டால் சூடடித்து வைக்கோல்வேறாக்கிவிட்டார்கள். நெல்லெல்லாம் காற்றில் தூற்றி யெடுத்துச் சாக்கில் போட்டு வாய்க் கட்டுகளும் கட்டியாகிவிட்டது. அந்தக் களத்திலேயே வைத்து கணபதிப்பிள்ளை சூடடிப்பு வேலை செய்தவர்களுக்கெல்லாம் கூலிக் காசைக் கொடுத்து விட்டார்.
ஆனால் அங்கே வேலை செய்தவர்களில் கூலிப்பணம் ஒன்றும் கையில் இவளவு நேரமும் வாங்காதிருந்தவன் வெள்ளையன் ஒருவன் தான்! அவன் இவளவு வேலைகளும் செய்து - வாடுகின்றதான இருப்புக்குள்ளே "மூடையஞக்கு நீ காவலாய் வயலுக்க இருடா வெள்ளயா. நாளைக்கு மாட்டு வண்டிலக் கொண்டந்து நாவல் மரத்துக்குக் கீழவா விட்டிட்டு வயலுக்கால மூடைதூக்கிக்கொண்டு போய் அதில நீ தான் ஏத்தவேனும்! - பிறகு வீட்ட கொண்டு போய் அந்த மூடையஞரும் பறிக்கவேனும் வீட்டு மாலிலயும் பிறகு அட்டி போட்டு நீ தான் அடுக்க வேணும்! - அது அப்பிடி அப்பிடி கனக்க வேல தான் இனி இனி உனக்கிருக்கு - முன்னம் நான் சொல்லி வைச்சது மாதிரி நீ தானே இதுகள் எல்லாம் செய்யவேணும்.? உனக்கு நான் தரவேண்டிய சம்பளம் உன்னை விட்டு எங்கயும் ஒடிப்போற ஒரு விஷயமே..? அது எப்படியும் நான் தர உன்ர கைக்கு அது வரும் தானே.?’ என்று அவர் அப்படியெல்லாம் சொல்லிவிட "செய்தவேலைகளுக்குப் பிறகு பிறகும் இவர் இப்பிடியெல்லாம் ஒவ்வொன்றாய் வாசிப்பாரோ?” என்றதாய் வெள்ளையனுக்கு கணபதிப்பிள்ளையின் கதை பேச்சு ஒரு மாற்றமாய்த் தான் தென்பட்டது. ‘சாகும் பரியந்தம் ஏமாத்துற, களவு செய்யிற, இப்பிடி குணங்கள், இப்பிடியானவயளிட்ட இருந்து கொண்டும் சில நேரம் இருக்கும்!” - என்று மனதுக்குள்ளும் அவன் நினைத்தான். ஆனாலும் அவருக்கு அவன் எதிர்ப்புக் குரலில் ஒரு மறுமொழியும் அப்போது சொல்லவில்லை.
“இண்டைக்கு இரவில பார் ஒரு கூத்திருக்கு.’ என்று தன்மனதுக்குள் மாத்திரம் இதை சொல்லிக்கொண்டு அவன் மெளனமாக பிறகு இருந்து விட்டான். “வெள்ளையனுக்கு நெஞ்சுக்கு நீதியா எல்லாம்சொல்லிப்போட்டன். இனியென்ன ஏதோபாத்து அவனுக்கு பாவமெண்டு கொஞ்சத்தக் குடுத்தா அது காணும் தானே அவனுக்கு.? எனக்கு எண்டு தீர்ந்ததில இப்பிடி எல்லாருக்கும் பிச்சுப் பிச்சு நான்
39 நீ.பி.அருளானந்தம்

Page 22
குடுத்தா பிறகு எனக்கென்ன இதில பிறகு மிஞ்சப்போகுது.? நான் என்ன பிறகு இந்த வயல் மண்ணயே என்ர வீட்டுக்குக் கொண்டு போய் வயித்துப் பசிக்குத் தின்னுகிறது.'
என்று மனதுக்குள் புற்றாக முளைத்திருப்பது போன்ற இந்த நினைவுகளோடு, வயலிலிருந்து புறப்பட்டு தன் வீட்டை நோக்கிப்போய் விட்டார் கணபதி. அவர் போன பிறகு, வெற்று வயல் வெளியில் உள்ள களத்து மேட்டில் - அடுக்கிக் கிடந்த நெல் மூட்டைகளுக்கு மேலே இரவு படுத்துக் கிடந்தான் வெள்ளையன். இவனுக்கு நித்திரையு மில்லை, நிம்மதியுமில்லை கணபதிப்பிள்ளை ஒரு மாட்டுக் கொம்பை யாரோ ஒருவனிடம் கையில் கொடுத்து, தன் மார்பில் குத்துவதற்கு ஏவி விட்டது போலவும் அவன் நினைத்துக் கொண்டான். அறுநூறுக்கும் மேற்பட்ட கணபதிப்பிள்ளையின் வீட்டு நாய்கள் தன்னைத் துரத்தித் துரத்திக்கடிக்கவருவது போன்றும் அவன் கற்பனை பண்ணினான்.
மூடைகளின் மேல் மல்லாக்க நிமிர்ந்து படுத்துக் கிடந்தவாறே, வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களையும் கணக்கிடுவது போல அவன் தன்மனதுக்குள் எண்ணினான். அப்போ சரியாக இந்த யோசனையும் அவனுக்கு வந்தது.
“கணபதிப்பிள்ளையர்.சூ எண்ட மாதிரி.என்னைய ஒண்டும் கூலி தராம இதால கல்லால எறிஞ்ச மாதிரி, ஒடு எண்டுகலைக்க முதல் நான் அவருக்கு முந்திக்கொண்டு இப்பிடி ஒரு வேல செய்ய வேணும்.”
என்று கோபத்துடன், மறுபடியும் திரும்பி வந்த இந்த யோசனை யோடு, உடனே அவன் படுத்திருந்த மேல் மூட்டைகளிலிருந்து கீழே இறங்கினான். பிறகு இரண்டு மூட்டைகளை கிழே இழுத்துப் போட்டுவிட்டு - பிறகு அந்த இரண்டு மூட்டைகளையும் கைக்கமக் கட்டுக்குள்ளால் வைத்துக்கொண்டு, முக்கித் தூக்கி எடுத்தான். அவன் அப்படி முக்கித் தூக்கும்போது உடம்புத்தசை நார்கள் இறுகி கைப்பலம் இன்னும் அவனுக்குக் கூடியது. அந்த மூட்டைகளின் பாரத்தோடு இருட்டிலும் வயலுக்கால் நடப்பதற்கு கால்களும் இரும்பு உறுதியாய் அவனுக்கு உதவின.
ஓஅவனால் முடியும் 40

வயல் வரப்புகளுக்கிடையே செல்லும்பாதை வழியாக நேரே பார்த்துக்கொண்டு நடந்து, அப்படியே செந்தில் நாதனது நெல்வயலை நெருங்கினான் வெள்ளையன், இங்கும் இன்று வயலில் விசேஷம் இருக்கிறது- மாதிரி களத்தில் அப்போது சூடடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பெற்றோல் மாக்ஸ் வெளிச்சம் நெல் களத்தில் துலக்கமாகப் பரவியிருந்தது. செந்தில் நாதனும் ஆள் ஒரு மாதிரியானவர்தான் வெள்ளையன் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து அவருக்கு முன்னாலே நிலத்தில் போட்டுவிட்டு வேகமான கவலையுடன் தன் நிலைமையைச் சொல்ல, "ஓ நீ பாவம்! பரிதாபத்துக்குரிய பிறவி நீ. ஒ. பைத்தியக்காரன். நீ பயப்பிடாத நான் தாறன் உன்ர மூட்ட நெல்லுக்குக் காசு.!’ என்று அவனுக்கு தெம்பு தருகிற வகையில் தடுமாற்றமில்லாமல் அவர் உடனே 69FT6016TTT. -
“இன்னும் ரெண்டு மூட்டை, அல்லது ஒரு நாலு மூட்டை நெல் நான் போய் இன்னும் காவிக்கொண்டந்து உங்கட்டயாத்தரட்டே' அவன் வெள்ளையன் கணபதிப்பிள்ளையைக் கேட்டான். பிசாசின் உதடுகள் அசைவது போல, அவருக்கு கணபதியாருக்கு அப்போது வாய் அசைந்தது.
"ஓ கொண்டு வா, போ நீ பயப்பிடாமக் கொண்டா என்னட்டயா இங்க.'
அவர் சொல்ல - மறுபடியும் கணபதிப்பிள்ளையின் வயலை நோக்கி நடக்கத் தொடங்கினான் வெள்ளையன். தனக்குக் கஷ்டம் என்கிற கயிறு அறுபட்டது போல அப்போது அவனுக்கு இருந்தது. பிறகும் அவன் இரண்டு நெல் மூடைகளை அங்கிருந்து முன்னம்போல காவி வந்து செந்தில் நாதனின் களத்து மேட்டில் போட்டான். அதற்குப் பிறகும்போய்இரு மூடைகள் முக்கி முக்கித் தூக்கிக்கொண்டு வந்தான். அவனின் முகத்திலிருந்து கொட்டிய வியர்வையை பார்த்துக்கொண்டு செந்தில்நாதன் தன் மடியிலிருந்து காசை எடுத்து எண்ணி அவனுக்குக்கொடுத்தார். வெள்ளையன் அந்தப் பணத்தை கையில் வாங்கிக் கொண்டு அந்த இடத்தால் போன பிறகு, செந்தில் நாதனுக்கு
41 நீ.பி.அருளானந்தம்

Page 23
மனம் சந்தோஷமாயிருந்தது. பக்கத்து வயல்காரனைத்தான் பழி வாங்கிவிட்டேன் என்ற நிம்மதி நிரம்பியவராய் நீண்ட கொட்டாவிகளும் அவர் விட்டார்.
இந்த விஷயம் விடிந்ததும் அந்த ஊர் முழுக்கவும் பரவிவிட்டது. கணபதிப்பிள்ளைக்கும் இது விஷயம் தெரிந்து கோபம்ஏறி மயிர் குத்திட்டு நிமிர்ந்து நின்றது. அவரின் கோபக் கண கணப்பு, கண்ணின் மணிக்கப்பால் வெளியே தெரிந்தது. ஆனாலும் வெள்ளையனுடன் அவருக்கு . நீதி கதைக்கவும் ஒருவித பயம்! அப்பிடி தான் கதைத்தால், அவன் ஒரு பயங்கரமான உணர்ச்சியுடன் தன்னை அணுகுவான் என்றும் அவர் நினைத்தார். அதனால் அவனை அவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. "இந்த என்ர வயலுக்கால இருந்து நீ வெளியே போடா.” - என்று மாத்திரம் உறைப்பாகப் பேசி ஏசி, அவனைத் தன் வயலுக்கால் இருந்து உடனே வெளியே போக பிறகு அவர் கலைத்துவிட்டார்.
இந்த விசயம் எல்லாச் சனங்களுக்கும் தெரிந்த பிறகு வெள்ளையன் அந்த ஊருக்குள் உள்ள ஆண்களில் மிகவும் பல சாலியானவன் என்று கருதப்பட்டான். இரண்டு மூடைகளையும் அவன் தன் கைக் கமக்கட்டுக்குள் ஒன்றாய்த் தூக்கிக் கொண்டு நடந்த அந்தப் பலம் - புதிய விழிப்புள்ள செயலாக எல்லாருக்கும் தெரிவுபட்டது. அவனுக்கு அறுபத்தைந்து வயது வரவும் 'நீ இப்ப ரெண்டாம் கலியாணமும் முடிக்கலாம் வெள்ள உனக்கென்ன ஒரு குறை.?’ என்று அவனுக்குச் சொல்லி அவனை அவர்கள் ஊஷார்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்போது பலத்தை பாராட்டும் பழங்கதை - புராணக்கதை யெல்லாம் ஊரவர்களான அவர்களின் வாய்ப்பேச்சிலிருந்து விடுபட்டுப் போய்விட்டது. தைரியமாகக் காற்றை உறிஞ்சிக் கொண்டு அவன் செய்கிற பலம் மிக்க வேலைகளைத்தான் - ஒரு நல்ல உதாரணமாய் அவர்கள் எல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஓஅவனால் முடியும் 42

இதையெல்லாம் மற்றவர்கள் சொல்ல. அதை தன் காதுகளிலும் கேட்டுக் கொண்டு - "ஒரு விநாடி நீ அப்பிடியே சும்மா இரு. - என்று ஆரும் ஒரு கதைக்கு அவனைக் கேட்டாலும் சும்மா கொஞ்சம் சோம்பிப்போய் சுறு சுறுப்பில்லாதவன் மாதிரியாய் இருக்கமுடியும இவன் வெள்ளையனால்,
ஆண்டவன் காக்க! - இப்போது அவனுக்கு வயது எண்பத் தைந்தும் கடந்ததாயும் ஆகியும் விட்டது. பூட்டப்பிள்ளைகளையும் இந்த வயதில் அப்போது அவன்கண்டு விட்டான்.
வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு முற்றத்திலுள்ள மாமரம் - சுருள் சுருளாய்ச் சருகிலை விழுத்துவதைப் பார்த்துக் கொண்டு காலம் கழிக்க அவனுக்கு விருப்பமே இல்லை. மண் சுவர் வெடிப்பால் இருந்து வெளியே வெளிக்கிட்ட பூச்சியை ஒரு அரணை வந்து பிடித்து விழுங்கிவிட்டு ஒட, அதை அவன் தன் வீட்டுமண் திண்ணையில் இருந்தபடி பார்த்தான்.
அவனுக்குக் கை விரல்கள் அசைந்தன. உள்ளங்கையால் கால் துடையைத்தடவினான். 'நேரத்துக்கு அவனுக்கு வருகிற அந்தத் தாகம் வந்தது. கள்ளுக்குடிக்க இனி என்னவழி? - நினைத் தான். 'மரம் இலைகளற்று வாடும் இருப்புப்போலல்லவா - இப்போ நான் சிறகு வெளியான இந்தப் பரந்த வானத்துக்குக் கீழே அந்தக் காளி படைச்சபனை - ஆற்ற சொந்தக்காணி வழியயா இல்லாமலும் அங்கத்தைப் பக்கமா தோப்பாய் நிற்குதும் தானே? - அதுகள் என்னயக் கைவிடுமா?”
நினைக்க, மனதில் குளிரும் சுருதிகள் அவனுக்கு வந்து உற்சாகம் ஒருப்பட்டுவிட்டது மாதிரியாய் இருந்தது. உடனே எழுந்து விறுவென்று தரை வெளிப் பக்கத்தால் நடந்து எட்டத் தொலைவி லிருக்கும் பனந்தோப்புப் பக்கம் போய்ச் சேர்ந்தான். அந்தப் பனங்கூட லுள்ள பெரும் தரை ஆருக்குமே சொந்தமான உடமையன்று. அங்கே யுள்ள வளர்ந்த பனைகளில் நீண்ட கையை ஆட்டிக்கொண்டிருக்குமாப் போல செழித்த ஒலைகள், அவைகளிலே விசிறினாப்போல அவனுக்குத்
43 நீ.பி.அருளானந்தம்

Page 24
தெரிந்தன. அவற்றிலே ஆடு மாடுகள் கடித்து அரண்டு வளரும் பனங்கன்றுகளுக்கிடையே உள்ள கட்டைப் பனை மரங்களிலும் பாளைவீசி வெளிவந்திருக்கிறதை அவன் பார்த்தான்.
அந்தப் பாளை உள்ள பனை மரங்களிலே, தோற்றத்தில் ஒத்ததாய் நிற்கும் இரு பனை மரங்கள், அவன் கவனத்தை ஈர்த்தது " அந்த இரு பனையும் நெருக்கி நிற்கிறது ஒரு வசதிதான் எனக்கு அதிலே உள்ள மட்டைகள் ஒண்டுக்குள் ஒன்று நெருங்கிக் கிடக்கிறதாய் இருக்கிறது. வசதியாக ஒரு பனையில் ஏறிச் சீவி - அடுத்த பனைக்கும் மட்டையைப் பிடித்து கால்வைத்துக் கடந்து அதிலும் போய் நான் சீவி விட்டுக் கள்ளோடு கீழே இறங்கலாம் - இப்படி ஒரே நேரத்தில இருபனையும் சீவிக்கள் இறக்கினமாதிரியாய்த் தொழில் எனக்கு லேசாகிவிடும் - எதுக்கும் கடந்து மேலே அடுத்தபனைக்கு போக அந்த மட்டையிலே விரைப்பாகவும் கறுப்பாகவுமிருக்கிற கறுக்குகளைச் சீவி கைபிடிக்க ஒரு வகைப்பாடு செய்து கொள்ள வேணும்! ஆனால் உந்த மரங்கள் நல்ல திறம்! சாறுள்ள செறிந்த மரம்தான்! நல்லாக் கள்ளும்வடியும் - அதால எனக்கினி ஒரு கவலையுமேயில்லை.”
இதையெல்லாம் பனைகளைப் பார்த்து ஆறுதலாக தனக்கொரு ஆதரவாக, நினைத்துக் கொண்டு - ஒலையில் ஏடு ஏடாக இருக்கும் பலமடிப்புகள் மாதிரியுள்ள அந்த நினைவுகளை, தன் மனத்திலும் படிய வைத்தப்படி தன் வீட்டுக்குவந்து சேர்ந்தான் வெள்ளையன்.
அடுத்த நாள் தொடங்கித்தன் வீட்டுக்கும் தெரியாமல் வெளியி லும் யாருக்கும் தெரியாமல், அந்தப் பனைகளில் ஏறி அவன் பாளை உரித்தான். பிறகு கொம்பறுத்துவிட்டு கொம்புக்குத்தட்டி - பிறகு சந்துக்கும் தட்டி, அடுத்தாய் காம்புக்கும் தட்டி இறங்கினான். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏறி அறுக்கிறதிலே ஒழுக்கு சிலாவி வடிகிற தன்மை அவனுக்குத் தெரிந்தது. அப்படி பாளை அறுக்க அதில் ஒழுக்குக் கண்டு அதனால் அவன் பிறகு அந்தப் பாளையைக் கசக்கி காம்புக்கும் தட்டிவிட்டு இறங்கி, அடுத்த நாள் ஏறி பாளையை பிறகும் சீவினான். இப்படியே ஒரு சில நாள் காலையிலும் பின்னேரத்திலும் சீவல் போட்டு ஒழுக்கு நன்றாய் வரப் பார்த்து, ஒரு நாள் முட்டிகளை அந்த இரண்டு பனைகளிலும் அவன் கட்டி விட்டான்.
ஓஅவனால் முடியும் 44

அந்தப் பனையிலே உள்ளதுகள் நீள அளவிலான பாளைகள் என்பதால் நாலைஞ்சு மாதத்துக் காச்சிலும் கள்ளுக்கு எனக்கினி குடிக்கக் குறைவேயில்ல. - என்கிற மாதிரியான ஒரு நம்பிக்கையும் அவனுக்கு ஏற்பட்டது.
எல்லாம் சீவிப்பழகிப் போட்டா ஒரு சின்னவேலை! அந்த எண்ணமிருந்தது அவனுக்கு. ஒரு பனையில் ஏறி மற்றப் பனைக்கு மட்டையைப் பிடித்து தாவிப் போவதும் அவனுக்கு வேலையில் சிரமமாய்த் தெரியவில்லை. முட்டி கட்டின நாள் தொடங்கி வயிறு முட்ட அவன் நன்றாக பனங் கள்ளுக்குடித்தான். தனக்குத் தெரிந்தவர் அறிந்தவர்களுக்கும் லேசாகக் கதையை விட்டு - அவர்களுக்கும் அவன் பிறகு சீவியெடுத்த கள்ளை காசுக்கு விற்றான்.
ஒளிச்சேர்க்கை கொண்டது போல உடன் பனங்கள் குடித்துவர அவனுக்கு உடல் பளபளத்தது. விரியாத பனங்குருத்துப் போலவும் பசுமையாக அவன் வயசுக்குரியதாய் ஒரு ஜொலிப்பும் அவனிடம் காணப்பட்டது.
வெறியிலே நாளாந்தம் இப்படி அவன் தன் வீட்டுக்குவரவர - அவனின் பிள்ளைகளிடத்திலும் - தங்கள் தகப்பனார் இப்போ என்னதெல்லாம் செய்து ஆட்டம் போடுகிறார் - என்றதான கதை அவர்களிடத்திலே நீளத்தும்பைப் போன்றதாய் நீட்சி பெற்றது. “இந்த வயதில இந்தத் கிழடு பனைமரம் ஏறிச் சறுக்கிக் கீழ விழுந்தா?” இந்த வித கேள்வி நினைவுகள் பனஞ்சிராய் குத்தியது போன்று பிள்ளைகளின் மனத்தை குத்திப் புண்ணாக்கின. "நாங்கள் போய் சீவல் பாளையை ஏறி அறுத்து விட்டா எங்களைப்பிறகு சீவல் கத்தியால அறுக்க வரும் இந்தக் கிழடு - அதாலகோப்புறேசன் சங்கத்துக்கு இதை அறிவிச்சுப் போட்டு அவங்களை இதுக்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லுவோம்.” - என்று அவர்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து தங்களுக்குள் கதைத்து ஒரு மித்து ஒரு முடிவெடுத்தார்கள்.
அன்றும் காலையில் ஆரோக்கியத்துடன் நித்திரைவிட்டெழுந்து -தான் கள்ளுமுட்டிகட்டியிருந்த பனம்தோப்புப் பக்கம் போனான் வெள்ளையன்.
45 நீ.பி.அருளானந்தம்

Page 25
அங்கே போய் தான் வேலை செய்த பனையைப் பார்த்ததில் அவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. அந்த இருபனைகளின் பாளைகள் முட்டிகளெல்லாம் நிலத்தில் கிடக்கும் செத்த ஒலைகளிலும் மட்டைகள் பன்னாடைகள் மேலும் - அறுத்து வீசியதாய்ச் சேதாரமாய்ச் சிதறிப் பரவிக்கிடப்பதைப் பார்த்து உறுதியுள்ள அவன் உடல் கூட ஒரு முறை ஆட்டம் கண்டது. கரிச் சான் வண்டு குடைந்து
துன்பம் குடைந்தது போல அரித்தது.
இதற்கெல்லாம் காரணம் தன் பிள்ளைகள்தான்!’ என்று அந்த இடத்திலே நிற்கும் போதே அவனுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. தன் பிள்ளைகள்மீது அப்போது அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. பனைமரத்தில் ஒட்டியுள்ள கவைமட்டையை அரிவாளால் கீறி இழுத்து பிளந்துபோல அவனுக்கு துன்பத்தில் மனம் பிளந்தது மாதிரி இருந்தது.
அதனால் - இந்த அமாவாசை நாளில இருந்து என்ர அந்த பிள்ளையளிண்ட வீட்டால உடனயே வெளிய நான்வெளிக்கிட்டுப் போயிட வேணும்'- என்று தன் வலுவுள்ளதான நெஞ்சுக்குள் திடமாய் அவன் ஒரு முடிவெடுத்தான். “இண்டைய அமாவாசை நாளில ஒலை வெட்டியெடுத்தா பூஞ்சக்காளானை - ஒலையில பிடிச்சு உக்காம நீண்ட நாளைக்கு அது பாவிக்கிறதாக் கிடக்கும். இண்டைக்கே அதால நான் ஒலை வெட்டவேணும். பிறிம்மா இனி நான் அதுகளோட இல்லாமலாப் போய்ச் சீவிக்க அந்தக் காணிக் கிளயே எனக்கெண்டொரு கொட்டிலும் நான் உடன அங்க போட வேணும்.”
இந்த யோசன்ையோடு - கள் இறக்கியெடுக்கப் போன அவன், அந்தப் பனைகள் சிலவற்றில் ஏறி, முற்றிய பனையோலைகளை மட்டும் பார்த்து வெட்டினான். பனைகளின் மேல் இருக்கும்போது எனக்கு இனித் தனிச் சீவியம் தானே? - என்ற யோசனை அவனுக்கு வந்தது. "இப்பிடி நான் தனியப் போய் இருந்தால், சாமான் சக்கட்டுகள் போட்டு வைக்க பெட்டி நார்க்கடகமும் வேணும்' - இதையும் அவன் உடனே மனதில் கொண்டு, முறசலாக இல்லாத மிருதுவான குருத்தோலைகளையும் பார்த்து வெட்டினான். வெள்ளையன் தன்னை
ஓஅவனால் முடியும் 46

எவ்வாறு நல்லதான தீனைத்தின்று குடித்து உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ, அதே போலத்தான் நீண்ட காலம் உழைக்கும் பனைகளையும் அவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்றும் நினைக்கிறவன். அமாவாசை தினத்தில் இப்படி குருத்தோலைகளை வெட்டினாலும் அதனால் பனைமரங்களுக்கு ஆரோக்கியக் கெடுதியான எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை என்ற அந்த உண்மை அவன் செய்யும் தொழிலோடு சேர்ந்ததொன்றாக அவனுக்குத் தெரியும். அதனாலே தான் அவன் ஒன்றும் மனங் குழம்பாமல் அந்தக் குருத்தோலைகள் சிலவற்றை மரத்திலிருந்து வெட்டிக் கீழே வீழ்த்தினான்.
மரம் ஒன்றில் ஆறு ஒலை கணக்கில் வெட்டிய வேலை அவனுக்கு ஒருவாறு பிறகு முடிந்தது. அதன் பிற்பாடு அவன் அவற்றையெல்லாம் ஒலைகள் கொண்ட கட்டுகளாக நார்கிழித்து முடிச்சுப்போட்டு நீட்டி, அதாலே அவன் உறுதியாக சுற்றிக் கட்டினான்.
அதிகமான மேல் காற்று அப்போது வீசிக் கொண்டிருந்தது. அவன் தான் சீவிய பனை மரங்களுக்குக் கீழே சீவி வெட்டி விழுத்திச் சிதைத்துப் போட்டுக் கிடக்கிறதாயுள்ள பாளைத் துண்டுகளைத் திரும்பவும் ஒரு முறை பார்த்தான். உடனே அவனுக்கு மட்டைக் கறுக்குகள் தன் உடம்பைக் கீறியது போல ஒரு வித வலி, அது மனதிலே ஏற்பட்டது.
'ம். இந்தப்பனை மரக் கொண்டைகளில ஏறி இருந்து தொழில் செய்யிற வேல எனக்கு இண்டையோடச் சரி. இனி இந்தத் தொழிலே எனக்கு வேணாம்.” இதை நினைத்து விட்டு, சுற்றிக் கட்டிவைத்திருந்த ஒலையைத் தலைக்குமேல் தூக்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான் வெள்ளையன். அங்கு தான்காவிக்கொண்டு வந்த ஒலைகளை கோடிப்புறத்தில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு பிறகும் தோப்புப்பக்கமாய் வந்து கட்டிவைத்த ஒலைகளை தூக்கி எடுத்துக் கொண்டு நடந்து வீட்டுக்குப் போனான்.
அவன் ஒலைகளைக்கொண்டு வந்து கோடிப்புறத்திலே போடும் போது - காற்று வர வைத்த வீட்டின் மண்சுவர் ஓட்டை வழியாக -
47 நீபி.அருளானந்தம்

Page 26
அவன் பேரப்பிள்ளைகளும் பூட்டப்பிள்ளைளும் - "தாத்தா இனி என்ன அங்கே செய்ய அடுக்குப் பண்ணுகிறார்' - என்று அறியும் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒலையைக் கொண்டு வந்து அதிலே போட்டபிறகு நீண்ட பொறுமையான துயரம் வெள்ளையனைப் பிடித்துக் கொண்டது கசப்பான மாற்றுப் போக்கு நினைவுகள் அவனுக்கு வந்தது. சிவப்பாகப் பற்றிய தீ அவன் கண்களிலே பிரதி பலித்தது.
“இண்டையில துடங்கி இந்த வீட்டில நான் ராவேல படுக்கப் போறதில்ல! - அந்த வேதக்கோயில் விறாந்தையில தான் கொட்டில் போடுமட்டுமா இனி நான் போய்ப்படுக்கவேணும். - சாப்பாடும் இனிக் கடையிலயாச் சாப்பிட பாத்துக்கொள்ளுவம் - இதுக்கெல்லாம் வருவாய்க்கு வேற ஏதாவது வீடு வழியவா புல் பூண்டு செதுக்கிற தொழில் எண்டாலும் நான் பார்க்கத்தானே வேணும்? இனி அது மட்டும் கள்ளுக்கும் சாப்பாட்டுக்கும் நான் என்ன செய்யிறது? கையிலயும் இப்ப எனக்கு ஒரு காசும் சதமாச்சும் இல்லயே.' - என்று வலுவாய் அவன் யோசிக்க - சாப்பாட்டுப் பருவமுள்ள அவன் வளர்த்த கோழிச் சேவல், வெளிமுற்றத்தடியில் நின்று கொண்டு பெட்டைக் கோழிக்கு “கொக் கொக் கொக்” என்று சத்தம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. அவசியமான கடைசிச் சடங்குகளை அந்தக் கோழிக்கு நடத்த தான் தயாராக இருப்பது போல வெள்ளையன் உடனே நினைத்தான். “இந்தக் கோழிக்கு இண்டைக்கு என்னால இருண்ட சாவுதான்!” என்று பிறகும் அதைப் பார்த்து நினைத்துக்கொண்டு, தன்னில் ஒரு புனிதமான துறவுக்கொள்ளையை அந்தக் கோழி அறியும் அளவுக்குக் காட்டி, அதை ஏமாற்றி விட்டு, நெருங்கி கிட்டவாய்ப் பிறகு போய் ‘லபக்கென்று அதைப் பிடித்தான் வெள்ளையன்.
அந்தக் கோழி ஊரையே கூப்பிடுவது போல அவன் கைப்பிடியில் இருந்து மல்லுக்கட்டிக்கொண்டு பெரிதாக பிறகு கத்திக் கொண்டிருந்தது. சேவலுக்கு காலில் கயிறால் கட்டுப் போட்டு அவன் கள்ளுக் கொட்டிலடிக்கு அதைத் தூக்கிக் கொண்டு போனான். கள்ளுக் கொட்டிலடிக்கு வெள்ளையன் போய்ச் சேருமட்டும், தனக்குப்
ஓஅவனால் முடியும் 48

பொருத்தமான, கனமான சத்தம்போட்டுக் கொண்டிருந்தது அந்தக்கோழி. அங்கே அவன் போனதும் - அகப்பையால் ஆவி பறக்கக் கிளறிக் கொண்டிருக்கும் கோழிக்கறியை சட்டியில் பார்த்து நாவூறியது போல, வெள்ளையன் கையிலுள்ள உசிர்க்கோழியைப் பார்த்து ஆசை அதில் அதிகம் வைத்தார்கள் கள்ளுக்குடித்துக் கொண்டிருந்தவர்கள்.
கால்கட்டோடு தரையிலே கிடந்த படி வேகமாக படபடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டிருந்த அந்தச் சேவலுக்கு, ஏலத்திலே நல்ல விலை பிறகு போனது. சிகப்பு நிறச் சேவலை கூடுதலாய்க் காசு வைத்துக் கேட்டவருக்கு சேவலை விற்று வெள்ளையன் காசு வாங்கினான்.
அந்தக் காசிலே பிற்பாடு கள்ளுத் தண்ணி குடிக்கத் தொடங்கினான் வெள்ளையன் கொட்டிலிலே வெள்ளையனைத் தெரிந்த ஒருவர் “நீ சீவிற மரத்துக்கள் என்ன ஆச்சு?’ என்று கேட்டார்.
“அதெல்லாம் வெளவால்கள் பறந்து வந்து விழுந்துகள்ளை உறிஞ்சிட்டுப் போயிட்டுது.” என்று அவன் ஒரு பொய்யை ரகசியமாக அவருக்குச் சொன்னான்.
“நீ ஆள் எல்லாரிலும் பாக்க பெரிய விண்ணன்ரா. அந்த நெல்லுமூடையளை அப்பிடி தூக்கிற ஒரு ஆளெண்டா நீ ஒருவன் தான்ரா வெள்ளையா! அது உன்னாலதான்ராப்பா மட்டும் முடியும், வேற ஆராலயும் இந்த அந்த வயசுகளில அது ஏலவே ஏலாதடா.” என்று அந்த கதையை - தான் தனியத் தொடங்கி அதை கன தூரம் மட்டுமாய் முடிக்காமல் இழுத்துச் சொல்லிக்கொண்டே அவர் போய்க் கொண்டிருந்தார். அவர் சொல்லும் கதையை கள்ளுக் குடிக்கிற ருசியோடு அதிலே இருந்தவர்களெல்லாம் கேட்டு ரசித்தபடி இருந்தார்கள்.
அந்தக் கதை அப்படி போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், வெள்ளையன் தன் கையின் சோர்ந்ததசையாடலைப் பார்த்தான்.
49 நீ.பி.அருளானந்தம்

Page 27
“கல்போன்ற என்கை இப்படிக் கரைந்தது போல இப்போ வந்து விட்டதே' என்று அவனுக்கு இப்போது மனவருத்தமாக இருந்தது.
தனக்கு வயசு போய்விட்ட தோல்வியை இப்போதாவது நாலுபேருக்கு முன்னால் தான் ஒத்துக்கொள்ளத்தான் வேனும் என்கிற மாதிரி அவன் மனம் அப்போது அவனுக்கு பேசியது.
"இவர் இப்ப சொல்லுறதெல்லாம் இனி பொய்யப்பா. எனக்கிப்ப நல்லா வயசு போயிற்றப்பா . வயசு போய்ற்று.”
என்று அகப்பை தூக்க வந்துவிட்ட ஒரு பொருள் போல, தன் மனத்தாலிருந்து வெளிக்கிட்டதை வாய் திறந்து வெள்ளையன் அங்குள்ளவரெல்லாம் கேட்குமளவிற்குச் சொன்னான்.
அவன் அப்படியாகச் சொல்ல - கள்ளின் ஒருவித மணத்தை மூக்கில் இழுத்துக்கொண்டு, அங்கே கள்ளுக் குடித்துக் கொண்டிருந்த வர்களெல்லாம் அவனைப் பரிதாபத்தோடு ஒரு பார்வை பார்த்தார்கள். நேரம்செல்லச் செல்ல பழம் பாடல்கள் இசைக்கப்படும். ஆனந்தமான ஒரு இடமாய் அந்தக் கள்ளுக்கொட்டிலும் பிறகு மாறிக்கொண்டிருந்தது.
(2011)
ஓஅவனால் முடியும் - 50

திருவுளச் சீட்டு
நாளைக்கு இரவுதான் நத்தார்ப் பெருநாள். ஆனால் இண்டைக்குப் பின்னேரமிருந்தே தனிவெடி இடையிடையே கொளுத்தி முத்தத்தில போட்டு, குதூகலமாய் இருக்கத் தொடங்கிவிட்டுதுகள் என்ர பிள்ளையஸ் என்ர பிள்ளைகளின்ர மகிழ்ச்சிச் சிரிப்பு ஒண்டோடொண்டு கலந்ததாய் என்ர காதுகளில வந்து விழ எனக்கும் தான் பெரியதொரு சந்தோசம்.
நான் குசினியில இருந்து கொண்டு இனிப்புப் பலகாரங்கள் செய்து கொள்ளுகிற அந்த வேலையாயிருக்கிறன் எண்ணொய்த் தாச்சிக்குள்ள நான் முதன் முதல் போட்டு இறக்கின கார முறுக்கு இனிப்பு முறுக்கு, ஒரு ஒலைப் பெட்டிக்குள்ள இப்ப ஆறிய தாக்கிடக்கிது. அதுக்குப் பிறகு நான் எண்ணையில போட்டுப் பொரிச் செடுத்த பயத்தம் பலகாரம், அடுத்த ஒரு ஒலைப் பெட்டிக்குள்ள கொஞ்சம் சூடோடு கிடக்கிது. இப்ப நான் சிப்பிப்பலகாரம் எண்ணொய் யில போட்டெடுக்க துவங்கியிருக்கிறன். அடுப்புப்பக்கத்தில இருந்து எண்ணொய்க்குள்ள போட்டதுகள் இப்ப பொரிஞ்ச பக்குவமா? எண்டுற முழுத் தன்மை கண்டு பிடிக்க, அகப்பையை என்ர ஒரு கையில வைச்சுக் கொண்டு, தாச்சிக்குள்ள இடை இடைய நான் பாத்துக் கொண்டிருக்கிறன்.
51 நீ.பி.அருளானந்தம்

Page 28
அடுப்பு நெருப்பக்குப் பக்கத்தில இவளவு நேரமாய்ப் பக்கத்தில நான் குந்தியபடி இருந்தாலும் சூடு உணர்வு ஒண்டுமில்லை எனக்கு. இதெல்லாம் என்ன ஒரு வெக்கைச் சூடு? ஒரு வழிபார்த்தால், வெளிச்சங்கள் பிறந்தமாதிரி இடை இடையே விளாசி எரியும் நெருப்புக் கூட இந்த உலகில பெண்ணாய்ப் பிறந்த இந்த ஜன்மங்களுக்கு குளிர் மாதிரித்தானே அதுகள் கிடந்து படுகிற கவிஷ்டத்துக்குள்ள அப்பிடியாத் தெரியும்.
இந்த அழகுகளும், பீத்துறதுகளும் எத்தக் காலம் தான் ஒரு பெம்புளைக்கெண்டு சுதந்திரமாயிருக்கும்? எல்லாம் அந்தக் கலியாணத்துக்கு முன்னம்தானே அவளவயளுக்கு அப்படியெல்லாம் சந்தோஷங்கள் இருக்கும். ஆனா கலியாணம் ஆனா, புருஷன்ர கட்டில் உறவோட பிறகு கட்டுப்பாடு. இந்தப் புருஷன் எண்டுறவயஞக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள். சும்மா ஒண்டச்செய்தாலும்கதைச்சாலும் 'நீ எதிர்ச் சவால் என்னட்ட விடுறியோ?” எண்டு ஒரு பக்கத்தால அவங்கள் துவங்கிருவாங்கள். எப்பவும் “நான்! நான்’ எண்டு சொல்லித் தான் அவயின்ர எல்லாக் கதயும் அந்த குரல் மூச்சு எப்பவும் அவயிற்றக் கொஞ்சம் கூட எப்பவும் அடங்கவே அடங்காது. சிலவேளை எங்களுக்கு இவழ்டமில்ல எண்டாலும், ஏனாம்? எண்டு கேட்டுப்போட்டு, அவயள் தங்கட அந்த வேல. ‘இது எல்லாம், இப்பிடி நல்லதொரு குடும்ப வாழ்க்கையில முடியுமோ?’ எண்டு ஆரும் ஒரு கேள்வி என்னட்டக்கேக்கவே கேக்கப்பிடாது. கட்டாயமா ஒரு பொம்புளை இன்னொரு பொம்புளயப் பாத்து இப்படியெல்லாம்நடக்கிறது எண்டுறது உண்மையோ எண்டு கேக்கவே கேக்கப்பிடாது. ஏனெண்டா, எந்த ஒரு பெம்பிளையின்ர மணவாழ்க்கையிலயும் சரி இதுதான் படிப்படியாத் தெரியும் ஒரு யதார்த்தமெண்டு இந்த நான், இந்தலூசியா எண்டவள், ஒரு ஒழிவு மறைவு வைக்காம இப்பவெளிப்படையாச் சொல்லுறன்.
ஆனா எனக்கு, இதையெல்லாம் ஆரிட்டயும் சொல்லேக்க, நெஞ்சு குமுறவும் இல்ல. துக்கம் வந்து என்ர தொண்டைய கிண்டய அடைக்கவுமில்ல.
எனக்கெல்லாம் என்ர இளம் வயசில அந்தக் காதல் கீதலெண்டு அப்பிடி கண்ராவிகள் ஒண்டுமேவரேல்ல. ஆனா அப்பவா என்ர சினேகிதி
ஓஅவனால் முடியும் 52

எண்டவள் முந்தித் தன்ர காதல் அனுபவங்கள மகிழ்ச்சியானதொரு அலங்காரத்தோட எனக்குச் சொல்லுவாள். அதையெல்லாம் சோடனை பாவனைகளாய் அவள் எனக்குச் சொல்லச் சொல்ல. நானும் அதை ஏதோ பூவை மணக்கிறது போல சந்தோசத்தோட கேப்பன். இப்பிடியே அவளுக்கு நாளை நாளையென்று அந்தக் காதலும் வளர்ந்து வலுவான, எலும்பெல்லாம் மெழுகாகத் தளர்ந்தது மாதிரி பிறகு ஆள் வாடியும் போயிட்டாள். திடீரெண்டு ஒரு நாள் 'மன வேதனை பொறுக்குதில்லையடி’ எண்டு மனவருத்தத்தோட எனக்கு அவள் சொன்னாள். இதெல்லாம் ஊதிப் போன பின்னதான் எனக்குச் சொல்லுறாளோ உவள் எண்ட மாதிரி உடன நான் நினைச்சன். அவள் என்னென்னவோ கதையெல்லாம் சொன்னாள். எனக்கு கொஞ்சம் தான் அவள் சொல்லுறதில விளக்கமாக் கேட்டுது. பிறகு பிறகு காது என்னவோ எனக்கு வயசான மந்தம் மாதிரி இருந்துது தெளிவாக இல்ல! ஏனண்டா, என்ரகாதே எனக்கு சரியா ஒத்துழைக்கேல்ல. மனத்தில கூடின கவலைதான் எனக்கு அவள் கதையைக்கேக்க! "இதென்ன அக்கிரமம்? அவன் இப்பிடி உன்னைய ஏமாத்திப்போட்டான்.” - எண்டு இந்தக் கதையை நான் மூன்றுமுறை திருப்பித் திருப்பி அவளுக்குச்சொன்னன்.
கூந்தலின் சரிவோட முகத்தில பேயறைஞ்சமாதிரி இருக்கிற அவளைப் பாக்க எனக்கும் பெரிய கவலைதான்! அந்த ஒரு விஷயத்தில, தான் அடுத்தடுத்து அவனிட்ட வீழ்ந்த அந்தக் கதையை, அவள் அதிகமதிகமா எனக்குச் சொல்ல, எனக்கும் நெஞ்சுக் குழியில இடறி இடறி அது என்னவோ பெரிய துன்பமாத் தான் இருந்துது.
அவளிண்ட துன்பத்தை நான் நெச்சு நெச்சு அப்பத்தைக்கு நான் அவளாவே, மாறிப்போனன். உடன நான் பயத்தில அப்ப கண்ணை இறுக்கி மூடீட்டன், “என்ன என்ன இது ஒருகேடு,’ எண்டு ஆரோ என்னையும் இப்ப துயிலுரியிற மாதிரியெல்லாம் அவதியா எனக்குக் கிடக்குது. இதாலதான் - நான் இதை என்ர இதயத்தில அப்ப ஏத்திக்கொண்டதாலதான், எங்கயும் அப்பிடி நான்போய் விழுந்திடாம நான் ஆள்நல்ல கவனமா திரிஞ்சனான். அதால தான் காதல் கீதலெண்ட அந்த விஷயங்களுக்கெல்லாம் என்ர அந்த வயசில
53 நீ.பி.அருளானந்தம்

Page 29
நான் சொட்டும் கூட இடமளிக்கவே இல்ல. 'வேண்டாமது, எப்பவும் வேண்டாமது எனக்கு, எண்டுதான் நான் அப்ப மனக்கட்டுப்பாட்டோட நல்ல இறுக்கமாவும் இருந்தன்.
5லியானமெண்டா வீட்டில உள்ள எங்களப்பெத்ததுகள் வளக்கிறதுகள் பாத்து ஒரு இடத்தில செய்து தருவாங்கள் தானே? அதுக்குள்ள என்ன அவசரத்தில அவதிப் பட்டுக் கொண்டு ஒரு கண்டறியாத காதல் எங்களுக்கு வேண்டிக்கிடக்கு? சிலதுகளிண்ட வீட்டில சாப்பிட இல்லாததான பஞ்சம் பட்டினி இருக்கும். படுக்க வெண்டு அந்த வீட்டில கட்டிலும் கிடையாது - பாயும் கிடையாது. சிலதுகளிண்ட வீட்டிலயெண்டா, தரையில விரிச்சுப் படுக்க ஒரு துண்டும் கூட வீட்டில ஒழுங்காக்கிடையா.
ஆனா என்ர அப்பரும் அம்மாவும் சேத்து வைச்சிருந்த அந்தக் சொத்துகளால அவயள் பெத்த பிள்ளையஸ் எங்களுக்கு என்ன ஒரு கஷடமெண்டு சீவியத்தில இருந்துது. ஊருக்குள்ளயா நான் இந்த இம்மானுவேல் எண்டுற நான், மற்றவயள்மாதிரி ஒலை வீட்டில இருக்கப் பிடாதெண்ட ஒரு ரோசத்தில கல்வீடு கட்டி எழுப்பினவர், அவர் என்ர எங்கட அப்பர்! - நான் சின்னதாயிருக்கேக்க அது நடந்தது எனக்கு இப்பயும் கூட நல்ல ஞாபகம். வீடு கிடுகிடுக்க நட்டுவமோள மெல்லாம் பிடிச்சு அடிச்சு கலாதியாத்தானே இந்த வீடு குடிபூரலும் அப்ப நடந்தது. நான் ஒரு பெட்டை, மற்றதுகளெல்லாம் தங்களுக்குப் பெடியன் பிள்ளையளெண்டு எனக்கு அப்ப வீட்டிலயும் அவயள் எவ்வளவு எனக்குச் செல்லம். நிறைய பெருகட்டும், பெருகட்டுமெண்டு, எனக்குச் செய்து போட்ட நகைகளால கழுத்து கையளெல்லாம் எனக்கு நிறைய நிறைய பவுண் நகை. - வேற பெட்டையள் என்ர போட்டிருக்கிற நகையளப் பாத்தா உடன அப்பிடியே அதுகளிண்ட முகம் விழுந்து போயிடும். அப்பிடியே வாடிப்போயிடும். அப்பிடித்தானே தினுசு தினுசாய் அடுக்கியடிக்கி நான் நகையள் போட்டிருந்தது. இந்த நினைவை இப் பவும் நான் மனசில வைச் சுக கொண்டுதாணிருக்கிறன். உண்மையா நான் அப்ப அப்பிடியாய் இருந்தத, இப்பவும் நினைக்க, நினைக்க சரியான சந்தோஷமாத்தான் இருக்கு.
54 - நீ.பி.அருளானந்தம்

ஆனா இந்தக் கலியாணம் எண்ட ஒண்டப் பிறகு நான் கட்டிமுடிச்சாப்பிறகு, எனக்கு வந்த பாடுகள், ஒண்டா இரண்டா சொல்லிக் கொஞ்சம் நேரத்தில முடிக்க. அதுகளை ஆருக்கும் என்ர வாயால சொல்ல வேணும் எண்டு நினைக்கேக்கயே எனக்கு உச்சி மண்டேக்கிள "கிளுக்” - கெண்டு உடனே ஏதோ பிரியிறமாதிரி இருக்கு எதையும் கவலையா நான் எப்பவும் எண்டாலும் நினைச்சா, எனக்கு தலைமண்டேக்க இப்பிடித்தான் ஒரு சரியான நோவு வலி வரும். என்ர மனுசன் எப்பவும் இந்த என்ர தலிைல தான் எனக்கு குட்டுறவர். அடிக்கிறவர்! எப்பவும் "மோட்டுவேல செய்யிறாய், மோட்டு வேலை செய்யிறாய்?’- எண்டு சொல்லிச் சொல்லித் தான் அவர் எனக்கு இப்பிடியெல்லாம் குட்டுறவர் - அடிக்கிறவர். அப்பிடி அப்பிடி அவர் என்னைய அடிச்சடிச்சு, தலையில உள்ளுக்கு மறைஞ்சதாயிருக்கிற அந்த நோத்தான் பிறகு எப்பவும் எனக்கு இப்பிடி இப்படியா சிலநேரம் வெளிக்கிடுது. தலை மயிர் இழுக்கிற நேரம், அந்த நடுவகிடு எடுக்கிற இடத்தில சீப்பை வைக்கக்கிளயும், காயத்தில வைச்சது மாதிரி சுளிரெண்டு வலிக்கும் அந்த வலி!
கிட்டடியில எனக்கு என்னவோ கொள்ளை நோய் வந்து பிடிச்சமாதிரி, குடைக்கம்பியா நரம்பெல்லாம் இறுகுப்பட்டுக் கொண்ட மாதிரியா வலிப்பு - ஒண்டு வந்திட்டுது. ஏதோ எல்லாம் வந்து என்ர கழுத்தைப் பின்னி முறுக்கின மாதிரி அந்த நேரம் எனக்கு இருந்துது. அதால மூச்சுக் கீச்சு நான் வெளியால விடேலாம முட்டாய் முட்டிவந்து உடன நான் அப்பிடியே மயங்கினதாப் போனன்.
உடன "அச்சுவேலி' - எங்கட இடத்தில இருந்து, இவயள் எங்கட ஆக்களெல்லாம், என்னயக் காரில ஏத்தி அங்க தெல்லிப்பளை ஆஸ்பத்திரிக்கு உடன கொண்டு போனவயளாம்.
அங்க நான் கண்ண முழிச்சுப் பார்த்தா - இப்ப நான் ஆஸ்பத்திரியில இருக்கிறன் - கட்டிலில படுத்துக்கிடக்கிறனெண்டு தெரிஞ்சுது. - கடவுளே என்ன எனக்கு இப்ப நடந்ததென்னவெண்டு, உடன நான் நினைச்சன். என்ர பிள்ளயளில அவன் மூத்தவன், என்ர அந்தக்கட்டிலுக்குப் பக்கத்தில என்ர கண் பாக்கயா அதில முன்னாலயா நிக்கிறான். எனக்கு என்னென்னவோ எல்லாம் என்ர
55 நீ.பி.அருளானந்தம்

Page 30
கையில நெஞ்சில மூக்கில வாயிலயெண்டெல்லாம் சாமான்கள் பூட்டிக்கிடக்கு “எனக்கு என்ன கோளாறு? - ஏன் என்னய இப்புடி ஆஸ்பத்திரி வார்டில கொண்டு வந்து போட்டுக் கிடக்கு?’ எண்டு எனக்கு முன்னாலயா நிக்கிற என்ர தாய் தேப்பனையும் சொந்தக்கார ஆக்களையும் பாத்துநினைச்சுக் கொண்டு கவலயா நான் கிடந்தன். என்ர அம்மா என்னயபாத்து அழுகிறா அப்பாவுக்கும் கண்ணிலயாக் கண்ணிர் வருகுது. எனக்கும் என்ர அம்மா அப்பா அப்பிடி என்னயப் பாத்து கவலப்பட்டு அழ, இங்க எனக்கும் கவலையில கண்ணி னரண்டாலயும் புலுபுலு - வெண்டதாக் கண்ணி வடியது. என்னயும் அப்பா அம்மாவையும் அந்த நிலையில பாத்து ஏங்கி உருகித் தவித்துக் கொண்ட மாதிரியாய் என்ர சொந்தக்காரரும் தான் அதில நிக்கிதுகள். இந்த எட்டுப் பத்துப்பேரை நானும் கடடில்லயாக்கிடந்து பாத்துக் கொண்டு - உலகம் தெரியாத மாதிரியா, எது நிலைச்ச தெண்டு தெரியாத மாதிரியா, அப்பிடியே பிறகு எனக்கு ஒண்டும் தெரியாமலா வந்த அளவில நான் பிறகு மயக்கம் வந்து கிடந்து போட்டன்போலத்தான் கிடக்கு.
அதுக்குப் பிறகு எனக்கு மயக்கம் தெளிஞ்சு - இப்பிடித்தான் முந்திய மாதிரிமயக்கமும் பிறகு வந்து, மாறி மாறி இப்பிடியே இதுகள் ஒரொரு சமயம் எனக்கு வந்து, ரெண்டு மூண்டு நாளும் பிறகுசெண்டு போச்சு. இதுக்குள்ள எனக்கு 'ஸ்கான்' பண்ணினது, அது பண்ணினது, இது பண்ணினது, எண் ட அந்தச் சோதனைகளும் அந்த ஆஸ்பத்திரியில செய்ததெல்லாம் எனக்கும் தெரியும். என்னயப்பாத்த டாக்குத்தர் நல்ல குணமான டாக்குத்தர். நல்ல மனுசன் அவர். கனகரட்ணமாம் அவற்றபேர்! அவர் எனக்கு முக்காவாசி உடம்பு சுகம்வர - அண்டைக்கு வார்டுபாக்க வந்த நேரம் என்னட்டக் கேட்டார்.
“உங்கட உடம்பில அடிபட்ட உள்நோவில அப்பிடியே சுண்டிப் போச்சு. அந்த உள்காயம் இருந்துதான் உங்களுக்கு இந்த வலிப்பும் மயக்கமும் வந்திருக்கு. இந்த இறுகின சுண்டின உள்காயம்வர என்ன காரணம்.? அப்பிடி உங்கள ஆரும் அடிச்சுக்கிடிச்சு நோப் பணினன வயளோ..?”
என்று அவர் கேட்க,
ஓஅவனால் முடியும் 56

அவருக்கு எந்த முறையில நான் பதிலைச் சொல்லுறது எண்டு வலுவா அப்ப நான் உடன யோசிச்சன். ‘அடியே இந்தா இருக்கிறன் நான் பார்' - எண்டதாய்ச் சொல்லிக் கொண்டு என்ர அவரிண்ட முகம்தான் என்ர மனதுக்க தலைதுாக்கிப் பாத்தமாதிரி அப்ப எனக்குத் தெரிஞ்சுது. எண்டாலும் அப்ப என்ர மனதில இறுகின கடினம் கூட தண்ணியா உடன பிறகு கரைஞ்சு போச்சு. என்ரை புருஷன் தான் என்னையெல்லாம் இப்பிடி அடிச்சுப்போட்டார், உதைச்சப் போட்டாரெண்டு, எப்படி என்ர வாயால நான் அதை டொக்டருக்குச் சொல்லலாம்? என்ன இருந்தாலும் என்ர புருஷன் இல்லாட்டி எனக்கு ஆருமில்லத்தானே? என்ர பிறவியில அவர்தான் எனக்குச் சேருமதி யெண்டு எழுதிக் கிடக்குப்போல. அந்த விதிக்கு இனி நான் ஒண்டுமே இனிச் செய்யேலாது தானே? - எந்தப் பாரச் சிலுவையெண்டாலும் கஷ்டப்பட்டு இந்தச் சிவியத்துக்குள்ள நான் கிடந்து சுமந்து தானே கொண்டு போகவுமா வேனும்! அதால அந்தாளோட நான் வாழுகிற இந்தச் சீவியம், விலங்கெண்டாலும் அதைக் கழட்டி எறிய ஏலமே? அவரோடயாக் கிடந்து சீவிச்சு அனுபவிச்சு இப்ப நான் எத்தனையோ வருஷம் தாண்டியாச்சு - இனியென்ன அவர் எனக்கு அடிக்கிறதும் உதைக்கிறதுமான கத? - இதுகள இனிமேல ஆருக்கும் நான் சொல்லுறத விட இந்த ஆஸ்பத்திரியால என்னைய நல்லாச் சுகப்படுத்திக் கொண்டு கெதியா நான் வீட்டபோகப் பாக்கவேண்டியது தான் சரியான தென்ன? - எனக்கங்க வீட்ட என்ர பிள்ளையஞம் தனிய வெல்லே? - அதுகள் அங்ககிடந்து கொண்டு நானில்லாம தின்னக் குடிக்க என்ன செய்ததுகளோ? - அப்பிடி என்ன பாடெல்லாம் அதுகள் கிடந்து பட்டுதுகளோ? ஆரும் காச்சிக்குடுத்து அதைத்தின்ன அதுகளுக்குப் பத்தியமே? என்ரை கையால நான் அவிச்சுக் கொட்டிக்குடுக்க அப்பிடித்தின்னுறமாதிரி அதுகளுக்கு மனத்திருப்தி வருமே.” இது களையெல்லாம் அப்போத நான் கெதிகெதியா யோசிச்சுப்போட்டுத்தான் - டொக்டர் என்னக்கேட்ட கேள்விக்கு ஒரு உண்மையும் சொட்டுக் கூடச் சொல்லாமல் அந்தப் பாரத்தை அப்பிடியே மனசில இருந்து உதறினமாதிரி தள்ளிப்போட்டு - பெரிசா பிறகு நான் அவருக்கு ஒரு பொய்யச் சொன்னன்.
"டொக்டர் அது நான் கிணத்தடியில பாசிசறுக்கி முன்னால
57 நீ.பி.அருளானந்தம்

Page 31
குப்புற அடிச்சு விழுந்துதான் இப்பிடியெல்லாம் அடிபட்டது நோப்பட்டது. - வேற அப்பிடி இப்பிடி ஒண்டு மில்ல டொக்டர் - எண்டன் நான்’ அப்பிடி அவருக்கு சொல்ல.
"இப்படி பொய் ஏன் நீடிக்கவா பொம்புளயளிட்ட இன்னும் இருந்து கொண்டிருக்கு.'
எண்டு அவர் அப்ப தன்ர வாய்க்க சொன்ன மாதிரி சொல்லிப்போட்டு, என்னப்பாத்தார் - எனக்கு அப்ப உடன ஒரு சிரிப்பு வந்திட்டுது - நான் அப்ப சாதுவாச் சிரிச்சன்.
அவரும் உடன கொஞ்சம் சிரிச்சுப் போட்டு - "சரி சரி உங்களுக்கு நல்ல மருந்து நான் எழுதியிருக்கிறன்! இங்க அதத் தருவினம்! நீங்க அதக் குடியுங்கோ? உங்களுக்குப் பிறகு நல்ல சுகம் இனி வந்திடும் மூண்டு நாளைக்க நீங்க டிக்கட் வெட்டிக்கொண்டு பிறகு வீட்டவா போகலாம் - ஆனா ஆறு மாதம் மட்டும் நீங்க கிளினிக்குக்கு பேந்து நெடுக வந்து மருந்தெடுத்துக் கொண்டு அதுகளக் கட்டாயம் ஒழுங்காக் குடிக்க வேனும் சரி தானே.”
என்று அவர் சொன்னார். நான் அவர் சொன்னதுக்கெல்லாம் 'ஓம்' - எண்டு ஒத்துக் கொண்டது போல தலையை ஆட்டினன். அவர் பிறகு மற்றக் கட்டிலில படுத்துக் கிடக்கிற நோயாளியப் பார்க்க அதால அப்படியே போயிட்டார்.
அதுக்குப் பிறகு தான், அந்தக் கட்டிலில கிடக்கத்தான், எனக்குப் பழைய என்ர கல்யாண நாள் நினைவு வருகுது. ஆமை நடை மாதிரி, அதுகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நான் எனக்குள்ள நெக்கிறன்.
அப்ப எங்கட ஊருக்குள்ள பொம்புளப் பிள்ளையஸ், சின்ன வயசிலேயே கலியாணமும் முடிச்சிருக்கினம். சுகமில்லாம வந்தா துணியச் சுத்திக் கொள்ளத் தெரியாத அந்த வயசில இப்பிடியெல்லாம் அதுகளுக்கு என்ன ஒரு கறுமம். சரி அதவிடுவம் - அதெல்லாம் இப்ப என்னத்துக்கு? - என்ர கதைக்கு நான் இப்பவாறனே.
ஓஅவனால் முடியும் 58

னெக்குப் பதினாறு வயசிலேயே நல்ல உடம்பு வளத்தி - கத்தையா எனக்குத் தலைமயிரும்கூட நல்ல வடிவு. நான் பெரிய பிள்ளையாகி அந்த ரெண்டு மூண்டு வருஷத்துக்குள்ள, உடம்பெல்லாம் வடிவான புதிப்பிப்பு மாதிரி வெளிப்பாடு. எனக்கு மூத்ததாயிருந்தவய ளெல்லாம் சகோதரங்கள் அண்ணன்மார் தானே? அதால எனக்கும் அந்த என்ர பதினாறு வயசிலேயே, எங்கட சொந்தத்துக்குள்ளதான் பாத்து அந்தக் கலியாணத்தை எல்லாருமாச் சேர்ந்து எனக்குச் செய்து வைச்சுப் போட்டுதுகள்.
னெக்கு அந்த வயதில என்ன சரியா ஒண்டு வடிவாத் தெரியுமெண்டு. அப்பிடி பெரிசா ஒண்டும் தெரியாத வயசு தானே? அவருக்கு என்னயவிட பதிமூண்டு வயசு கூட கலியாணம் முடிச்சதில இருந்து எனக்கெண்டா மறுக்க இடமில்ல. அப்பிடி நிறையத் தடவைகள். வேப்பங்காய்க் கொத்துகளப் போல. அவருக்கு வேல இந்த றோட்டுப் போடுற இடத்தில ஒவசியர் வேல. இங்கயிருந்து மட்டக்களப்புக்குப் போயிரவேணும் அவற்றை அந்த வேலைக்கு. லீவு நாளில அவர் இங்க வீட்ட வரேக்கயெல்லாம் நல்ல வெறியோட தான் வருவார். வேக் சயிட்டிலதான் அந்தக் காடுவழிய கிடந்ததால தான் இப்பிடிக் குடிச்சுச் தான் பழகினதெண்டு அவர் என்னட்டச் சில வேளையில சொல்லுவார். அவர் இங்கயும் தான் வந்து கள்ளு சாராயம் எண்டெல்லாம் சேர்த்துக் குடிச்சுப் போட்டு நிலத்தில நீளமாய் விழுந்தும் கிடப்பார். சரி பிழை நான் எது செய்தாலும் எதுக்கும் என்னைய மொத்து மொத்தெண்டு போட்டு சாத்துவார். நான் எல்லாத்தையும் வாங்கிக் கட்டிக்கொள்ளுவன். சில வேளை அவற்றை அடி உதை தாங்காம நான் ஒண்டுக்கும் அதிலயே இருந்திருக்கிறன். இப்பிடித்தான் என்ர உயிரை அலக்கழிக்கிற விதமா தன்ர எல்லா அநியாயங்களையும் எனக்குச் செய்து போட்டு, அவர் வேலைக்கு அங்க போக வெளிக்கிட்டுப் போயிடுவார். அவர் போனாப் பிறகும் அவர் எனக்கு அடிச்ச அடிகளும் - எனக்குப் பட அவர் துப்பின எச்சில் துப்பல்களும் தான் அடுத்து இங்க அவர் திரும்பி வருமட்டும் எனக்கு நெடுகவம் ஒரு நினைவாயிருக்கும். அந்த நினைவுகளை பேந்தும் அவர் திரும்பி வந்து அப்படியா என்னட்ட புதுப்பிச்சுப் போட்டுப் போவார்.
59 நீ.பி.அருளானந்தம்

Page 32
இது தான் என்ர இண்டைய காலம் மட்டுமான நிறைவில்லாத புழுத்துப் போன ஒரு குடும்ப வாழ்க்கை. இந்த வாழ்க்கைக்கிள்ள என்ர பதினாறு வயசில இருந்து பிறகு என்ர முப்பது வயதுக்குள்ளயா ஏழு பிள்ளைகளும் நான் வருசா வருஷம் எண்டு அடுத்தடுத்தும் பெத்தும் கூடப் போட்டன்.
என்ர ரெண்டாவது பிள்ளய நான் பெத்து அந்த எட்டு நாளைக்கை - அடுத்த என்ர மூண்டாவதாப் பெத்த அந்தப் பெம்புளப் பிள்ளயும் எனக்கு அப்ப வயித்திலயா செனிச்சு தங்கினவள். நான் பிள்ளப்பெத்து அந்த என்ர அடிவயிறு தாழ்ந்துறங்கி புண்ணா எனக்கு வயிறெல்லாம் கொதிச்சுக் கொண்டிருக்கேக்க - அவரும் விறாந்த நிலத்தில வெறியிலபடுத்துக்கிடந்தவர் என்ர பிள்ளப்பெத்த அறைக்க பிறகு எழும்பி வந்து என்னோட குடும்பமா சேர்ந்து அண்டைக்கும் இருந்திட்டார்.
இப்பிடி இப்பிடித்தான் என்ர வாழ்கேக்கிள்ள, அப்பிடி அப்பிடியா லிண்டு சில சம்பவங்களும் நடந்து பொழுது சாஞ்சுது.
என்ரயும் அவற்றையுமான இந்தக் குடும்ப சீவியத்தில ஒவ்வொரு நடைமுறையிலயும் அவர் அழிச்சதை நான் இழைச்சது மாதிரிச் செய்து கொண்டுவர, அவர் திரும்பவும் நான் இழைச்சத அழிச்சது மாதிரி செய்து போடுவார். எண்டாலும் இந்தச் சீவியத்தில சுர்ரெண்டு சீறிக்கொண்டதாயில்லாம நான் நெடுக இந்தப் பொறுமை பொறுமை தான்! எப்பவும் பெரிசா எனக்கு இந்தக் கோபம் வாறேல்ல. அதால அவற்றை அடிபிடி சண்டை எண்டாலும் நான் அனேகமா அமைதிதான்.
Iெண்டாலும் என்ர விசயம் வேற, என்ர பிள்ளையஸ் அதுகளி ண்ட விசயம் வேற1 என்ர பிள்ளையளிண்ட பாட்ட, அதுகள் படுகிற கஷ்டங்கள அழுகைகளப்பார்க்க எனக்கொரு பெரிய கஷ்டம்தான். அதுகளென்ன வளர்ந்து பெரிசா ஆளான பிள்ளையளே? சின்னப் பயிர்கள், சின்னக் குஞ்சுகள் மாதிரியெல்லே அதுகள்! அப்பிடியான அந்தச் சின்னப் பயிர்களை மழைபெஞ்ச மாதிரி நாங்கள் வளத்தெடுக் கிறதோ - இல்லாட்டி அதுகள தண்ணீர் தேங்கி நிண்டமாதிரியா ைெவச்சு அழுகவைக்கிறதோ? எதைச் செய்யிறது தேவை அதுகளுக்கு? அதுகளில, எதைச் செய்யிறது அதுகளுக்கு நல்லது எண்டு நான் கேக்கிறன்?
ஓஅவனால் முடியும் 60

இந்த மனுசன் இப்பிடி நல்லது ஏதும் செய்யிற வேலையே செய்யுது அதுகளுக்கு? பிள்ளையளோட நல்லா இருந்து கதைச்சு விளையாடி அதுகளோட அன்பா இருந்தா நடந்தாத்தானே பிள்ளையஞக்கு தகப்பணில பாசம் நேசம் எண்டுறது வரும்? - அன்பு வரும்! இது ஏதும் அந்தாளிட்ட இருக்கே? அப்பிடி ஏதும் பிள்ளைப் பாசம் அன்பு ஏதும் இருக்கே அவரிட்ட?
உள்ள என்ர இந்தப் பிள்ளையஞக்க - என்ர மூத்தவன் எண்டுறவன் ஒரு பவுண் மாதிரி. அப்பிடி அவன்ர குணம் என்ர வேற பிள்ளையஞக்கும் அவன்ரகுணம் இல்ல. அவன் எங்கட அப்புவின்ர குணம் எங்கட பக்கம் பரம்பரைக்கு அவன் வந்திருக்கிறான். அவனை, அவன்ர பெத்த அப்பர் அவள் - என்ன வேலை ஒரு நாள் செய்தாரெண்டு தெரியுமே? அவனை ஏதோ பிழை செய்து போட்டானெண்டு - வெறியான அந்த நேரத்தில, கோவத்தில அவர் அவன இந்தக் காத்தில அசையுமே வாழை இலை - அதப்போல அவன அந்த இலையின்ர வீச்சிலயா கையில அவனப் பிடிச்சுத் தூக்கி வீசி வீட்டுக் குந்துச் சுவரிலயாப்பட அப்பிடி அடிச்சுப் போட்டார்.
அந்தப் பிள்ளை அப்ப கத்திக் குழறினான். நானும் சேந்து கத்திக் குழறித்தான் அவர் அவன பேந்து ஒண்டும் அப்பிடி செய்யாம அப்பவா விட்டவர். அவன் விரியாத வாழைக் குருத்து மாதிரி சின்னப் பச்சப் பிள்ள, அவனுக்கு அந்தாள் தன்ர பெத்த பிள்ள - சின்ன குஞ்சு - எண்டு ஒண்டும் நினைச்சு தான் பாக்காம இந்த வேல செய்திச்சு. அந்த நேரம் என்ர பிள்ள நோ வலியில கண்ணால வடிச்ச கண்ணிர், ஐந்தருவி கொட்டுற வேகத்தில நிலத்திலயாக் கொட்டிச்சு.
இப்பிடியா என்ர பிள்ளையஞக்கும் பிரச்சினை ஒண்டா ரெண்டா? இப்பிடி தகப்பன் பிள்ளையளில அன்பில்லாம எதுக்கும் ராட்சதன் மாதிரி நிண்டா பிள்ளையஞக்கு தகப்பனில அன்புவருமே? பிள்ளையஸ் அவருக்கு முன்னால தற்சமயம் சில வேளையாக் குசுக் கூட விட்டிடப்பிடாது. அதுக்குக் கூட அவர் பிள்ளையளை அடிப்பார். அப்பிடி தகப்பன்மார் உலகத்தில எங்கவும் காண இருக்குதுகளே?
61 நீ.பி.அருளானந்தம்

Page 33
இப்பிடியான எல்லா நினைவுகளும் எந்தநேரத்திலயும் - என்ன வேலை நான் செய்து கொண்டிருந்தாலும் திரும்பத்திரும்பத்தான் - சவம் காவிப் போகிறதப்பாக்கிற மாதிரி வந்து கொண்டிருக்கு என்னட்ட 1. எருக்கலக் காம்பிருக்கே காம்பு? - அந்தக் காம்ப உடைச்சா உடன வெளிக்கிடுமே பால்? - அந்தப் பால் மாதிரித்தான் உடன எனக்கு இந்த ஞாபகங்களும் நினைவுகளும் அப்போதைக்கப் போதையாயும் என்னட்ட பொங்கி வந்தமாதிரி வந்து கொண்டே இருக்கு.
நான் இந்தப் பலகாரம் செய்து முடிக்கிற வேலையையும் இப்ப அடுப்படிக்குப் பக்கத்திலயாய்க் குந்தி இருந்தபடி செய்து முழுக்க முடிச்சிட்டன். இனிப்பட்டும் இந்த நினைப்பு ஏன் என்னட்டவா விடாம இழுத்துக் கொண்டிருக்கு எண்டு ஒண்டும் எனக்கு விளங்கேல்ல. அடுப்பால எண்ணத்தாச்சி இறைக்கேக்க - எவ்வளவு கவனமா நான் அவதானமாயிருக்க வேணும் - அந்த நேரத்திலயும் இப்பிடி எங்கயும் மூளையைவிட்டு ஏதும் ஒண்டை நான் யோசிச்சுக்கொண்டிருந்தா? கொதிச்ச சுடு எண்ணையும் தற்சேலா தாச்சி இறக்கேக்க சரிஞ்சு கால் கை வழியயும் ஊத்துப்பட்டுப் போயிருமே?
அந்த நினைப்போட நான் துண்டைக் கையில வைச்சுப் பிடிச்சக் கொண்டு அவதானமா அடுப்பை விட்டுத் தாச்சியைக் கீழ இறக்க, சிவப்புக் கல்லுகள் மாதிரிக்கிடந்த அடுப்புத் தணலுக்கால இருந்து டப், பெண்டு ரெண்டு நெருப்புப் பொறியள் பறந்துது
இந்த நேரம் என்ர மூத்த மகன் குசினிக்க வந்து எனக்கு முன்னாலயா நிண்டு கொண்டு 'அம்மா’ எண்டபடி என்னப் பாத்தான். எனக்குத் தெரியும் என்ர பிள்ள ஏன் அம்மா எண்டு சொல்லிக் கொண்டு இதில இப்ப நிற்கிறானெண்டு,
நான் உடன அவனப் பாத்தன் -
'வேனுமானதுகள உதில எடுத்துக் கொண்டு போய் நீ திண்டு திண்டு விளையாடுமோனே. ராசா” எண்டு நான் சொன்னன்.
அப்பிடி நான் சொல்ல அவசர அவசரமா அவன் கொஞ்சம் கொஞ்சம் பலகாரங்களை ஒவ்வொரு பெட்டிக்கிளயுமிருந்து கையால
ஓஅவனால் முடியும் 62

அள்ளி ரெண்டு காட்சட்டைப் பொக்கட்டுக்கிள்ளயும் முட்டவா அடிச்சுக்கொண்டு பிறகு அதில நிக்காம ஓடீட்டான்.
வீட்டில பலகாரம்சுட்டா, முதன்முதலில பிள்ளையஸ் அதில எடுத்துத்தின்னேக்க, என்ன மாதிரி அது? பிள்ளையஸ் பெத்த தாய் மாருக்கு அது ஒரு பெரிய சந்தோஷம் தானே?
எனக்கும் என்ர மகன் பலகாரத்தை அள்ளிப் பொக்கற்றுக்க போட்டுக்கொண்டு - கையிலயும் அவன் ஒண்ட வைச்சுத்திண்டு கொண்டு ஒட, சரியானதொரு சந்தோசமாத்தான் அதைப் பாக்க எனக்கு இருந்துது.
மூத்தவன் இப்பிடி தனியத் தான் மாத்திரம் ஏதுவும் சாப்பாடு தனக்குக் கையில கிடைச்சாச் சாப்பிடவே மாட்டான். அப்பிடியில்லாமல் தன்ரை சகோதரங்கள் எல்லாத்துக்கும் கிடைக்கிறத பங்கிட்டுக் குடுத்துத்தான் அவன், பிறகு தானும் சாப்பிடுவான். கிடைச்சது எள்ளெண்டாலும் எட்டாப் பிரிச்சுக் குடுத்துச் சாப்பிடுற குணம் அவனுக்கு.
னெக்கு இந்தப் பிறவியே குடுக்கப்பட்டது என்ர இந்தப் பிள்ளை யளிண்ட நன்மைகள் வளர்ச்சிகளை சந்தோஷங்களப் பாக்கத்தானே? வேற என்ன எனக்கு இந்த உலகத்தில ஒரு சுகம் இருக்கு? என்ர பிள்ளையஸ் ஏழு பேருமே கெட்டிக்காரப் பிள்ளையஸ். எங்கட ஆளும் வம்சமான பரம்பரையில இதுகளும் வந்திருக்குதுகள். ஆறலும், தவமும், தெளிவும், அமைதியுமான எங்கட பரம்பரையில வந்ததுகளுக்கு எங்கட அந்த நல்ல இரக்க குணம் எண்டுறது இதுகளுக்கும் கொஞ்ச மெண்டாலும் வரத்தானே செய்யும். எண்ட இதையெல்லாம் நான் ஆருக்கும் பெரிசா மகிமையா சொல்லுறவள் தான். ஆனா நான் இந்த மடச்சி, ஒருநாள் செய்த மடவேலய ஆருக்கும் வெளிய வாயால சொல்லாம நான் மறைச்சுத்தானே வைச்சிருக்கிறன். கடவுளே அண்டைக்கு அந்த நொடி நேரத்துக்குள்ள சத்தியமா சொல்லுறன் என்ர உயிரே அப்பத்தைக்கு போயிருக்கும். அப்பிடித்தானே இந்த ஆக்கினையளயெல்லாம் நான் நினைச்சு மனம் தாங்காம அண்டைக்கு “பொலிடோல்'- குடிச்சுச் சாக வெளிக்கிட்டது.
63 நீ.பி.அருளானந்தம்

Page 34
ஆனா நஞ்சுப் போத்தலோட அண்டைக்கு ராவு நான் பிள்ளைய ளிண்ட அறைக்குப்போய் அங்க பாத்தனர். அங்க என்ர பச்ச மண்ணுகள அதில பாத்ததும் கவலயில நான் பெரிசா அழுது போட்டன். அதால பிறகு மனமும் பேந்து போராடி - சாகிறத விட்டுப்போட்டு - அந்த நஞ்சுப் போத்தலையும் கொண்டு போய் கோடிவளவுக் கல்லில போட்டு உடைச்சுப் போட்டு நான் வந்திட்டன். அண்டையில இருந்து இந்தச் சீவியத்தப் பழகிக்கொண்ட பக்குவமனம் எனக்கு வந்திட்டுது. எத்தனையோ நத்தார் பெருநாள் இப்பவா வந்து வந்து போயிற்று. எல்லாம் இந்த என்ரபிள்ளையஸ் இருக்கிறதால சந்தோஷமான நத்தாருகள் வருஷப் பிறப்புகள்தான் எனக்கும்.
நாளைக்கு நத்தார் நாள் எண்டதால இண்டைக்கு பொழுதுபட கொஞ்சம் மழையும் பெஞ்சுது. இரவு படுக்கை அறையில பாயப் போட்டுக் கொண்டுபிள்ளையஞம் அதில இருந்து கதைச்சு விளையாடிக் கொண்டிருந்துதுகள். எனக்கும் பலகாரம் சுட்ட அந்த இந்த வேலைக் களைப்பு எண்டாலும் நானும் பிள்ளையஞருக்குப் பக்கத்தில இருந்து அதுகளோட விளையாட்டுக் கதை கதைச்சுக்கொண்டிருந்தன்.
அப்ப இருந்தாப் போல என்ர மூத்த மகன் என்னப் பாத்துக் கேட்டான், அம்மா லீவில அப்பா நத்தாருக்கு இங்க எங்கட வீட்ட வருவாரோ இல்லையோ எண்டு. அவன் அப்பிடி என்னயக்கேக்க - எனக்கு மூளைக்க லொட்டெண்டு அடிச்சுரெண்டு நெருப்புப் பொறி பறந்த மாதிரி இருந்துது.
ஆனாலும் சமாளிச்சுக்கொண்டு,
“சில நேரம் லீவு கிடைச்சா வருவார் - அல்லாட்டி, அங்க
வேல முடியாட்டா வரமாட்டார் - அது அவர் கொண்றைக் ட் எடுத்தவேலதானே.”
எண்டு சொல்லி ஒரு இழுவை இழுத்தன்.
"அப்ப ஒருக்கா அவர் எங்கட அப்பா வருவாரோ வரமாட்டாரோ எண்டு துண்டுச் சீட்டு எழுதிப் போட்டு- எடுத்தொருக்கால் பாப்பமே
GOLDLDIT...?”
எண்டு தாழ்ந்து இறங்கி இரக்கமா கேக்கிறமாதிரி என்னட்ட
ஓஅவனால் முடியும் 64

அவன் பிள்ள கேட்டான். மற்றப்பிள்ளையஞம் திறந்த வாய் அறிகுறியாய்த்தான் இருக்கிற மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.
பிள்ளைகள் எல்லாம் என்ன மாதிரியான ஆவல் உலாவில இருக்கினம் எண்டு எனக்கும் அது நல்லாத்தெரியும். நான் சிரிப்போட சுவரில சாஞ்சு கொண்டன். மனசுக்குள்ள ஒரு மாதிரி சரியான கவலையும்தான் எனக்கு அப்பவா இருந்திச்சு.
'சரி எழுதிப் போடு” - எண்டு மகனுக்கு நான் சொல்லிப்போட்டு ஒரு பெருமூச்சு விட்டன்.
நான் சொன்னதும் மகன் அவன். ரெண்டு துண்டுச் சீட்டில "அப்பா நத்தாருக்கு வரமாட்டார்” - எண்டு விர்விர் ரெண்ட உயரத் துக்கு வளந்த எழுத்தில எழுதினான். மற்ற ஒரு சீட்டில "அப்பா வருவார்’ எண்டு சின்னச்சின்னக் குறுணி எழுத்திலயும் எழுதினான்.
பிறகு மூண்டு கடுதாசிகளையும் பதனமாய்ச்சுருட்டி பாயின்ரமேல போட்டான்.
இப்ப அந்த துண்டுச் சீட்டை யார் எடுக்கிறது எண்டுற மாதிரி இருந்துது.
"அம்மா நீங்க எடுங்களன்.”
y
“போடா.’ என்று அடிச்சமாதிரி அவனுக்குச்சொன்னன் நான்.
" அப்ப பெரியதங்கச்சி எடுக்கட்டுமெண்டான்' அவன்! அவள் பிஞ்சுக் கால்கள மடிச்சு இருந்து கொண்டு பிறகு குனிஞ்சு எல்லாத் துண்டுகளையும் ஒருக்கா பாத்துப் போட்டு, பிறகு கடைசியா ஒரு துண்டுச் சீட்டை எடுத்தாள். அவள் எடுத்த சீட்டை உடனே தான் பிடுங்கி எடுத்து, பெரியவன் விரிச்சுப் பார்த்தான்.
அவனுக்கு அப்ப நல்ல சந்தோஷமாயிருந்துது.
“வரமாட்டார் அப்பா.” - எண்டு அவன் சொல்லிக் கத்தினான்.
65 நீ.பி.அருளானந்தம்

Page 35
எல்லாப் பிள்ளையஞருக்கும் அப்ப சந்தோஷம்தான்! ஆனா எனக்கு ரசிக்க முடியேல்ல.
மூத்தவனுக்கு பிறகும் ஒரு சந்தேகம் , 'அம் மா ரெண்டாந்தரமும் ஒருக்கா போட்டுப்பாப்பமோ அம்மா.' - என்று ஒரு சந்தேகம் பிடிச்ச அளவில கேட்டான்.
எனக்கெண்டால் இதில ஆர்வமில்லத்தான் - இதுகளிண்ட குழந்தப்பிள்ள விளையாட்டெண்டு நான் நினைச்சுக்கொண்டு சும்மா என்ர பாட்டுக்கிருந்து கொண்டு நான் “ஓம்’ எண்டன்.
நான் சொல்லவும் பிறகும் என்ர மகன் எல்லாத்துண்டையும் சுருட்டிப்போட்டுக் கீழ போட்டான். மகள் தான் இந்த முறையும் ஒண்டுக்கு ரெண்டு தரம் வடிவாப் பாத்துப் பாத்துப் போட்டு பிறகு எடுத்தாள்.
துண்டைப்பிறகு வாங்கி மகன் விரிச்சான் வருவார் எண்டு அந்தத் துண்டில இருந்துது.
பிள்ளையஞக்கு முகம் உடன விழுந்து, உக்கிரமான இருட்டுவடிவம் மாதிரிப்போச்சு. கல்லாகிக் கிடக்கிற உணர்வோட பிள்ளையஸ் இருந்து கொண்டிருந்திச்சுதுகள்.
வெளியால றோட்டுப்பக்கம் சீறிச் சினந்து நாய்கள் சண்டை பிடிச்சுக் கொண்டுடிருந்துது.
அப்ப அந்த நேரம் கதவுதட்டிச் சத்தம் எனக்குக் கேட்டுது.
"ஆரோ கதவு தட்டிச் சத்தம் கேக்குது’ - எண்டு நான் சொல்லிப் போட்டு எழும்பிப் போனன். எனக்குப்பின்னாலயா என்ர பிள்ளயஞரும் எழும்பி நிறையவா வந்துதுகள்.
நான் கதவடியில (ತೀJತ್ನ! கதவைத்திறக்காம ஒரு நிமிஷம் நிண்டன். ஆரெண்டும் கேக்கவும் எனக்குப் பயம்! எண்டாலும் பிறகு கதவத்திறந்தன்
ஓஅவனால் முடியும் 66

திறந்த கதவால புழுக்க நெடியெல்லாம் அடிச்சுக்கொண்டு காத்து உள்ள புகுந்த மாதிரி இருந்துது எனக்கு.
அவரும் அங்க கதவடி வாசலில றவலிங்பாக்கோட நிக்கிறார். தகப்பனக் கண்டிட்டு பிள்ளயளெல்லாம் எனக்குப் பின்னாலயா அப்ப ஒதுங்குதுகள்.
“என்ன நாய்க்குட்டியள் - பண்டிக்குட்டியள் மாதிரி ஒண்டி மண்டடியா எல்லாம் இதிலயா வந்து நிக்கிறியள்? - ஒடுங்கோ ஒடுங்கோ ஒடிப்போய்ப் புத்தகம் எடுத்து வைச்சுப் படியோங்கோ’ என்று சொல்லி பிள்ளைகளை அவ்விடத்தால இருந்து அவர் கலைக்கிறார். உடன பிள்ளையஸ் ஆளுக்காள் இடிபட்டுக்கொண்டு உள் அறைக்கவா ஓடுதுகள். அவர் கொஞ்சம் வெறியிலதான் வந்திருந்தவர்.
இப்ப என்ர மனத் தெருவ, புழுதிக்காடாக்குகிறமாதிரி அவர் என்ன என்னவோ கதையளெல்லாம் எனக் குச் செல்லவா வெளிக்கிட்டிட்டார். எனக்கு அவர் செர்ன்ன கதையள்சிலதுகளக் கேக்க இரும்புக் குண்டு தலையில போட்டமாதிரி இருந்துது நடு அறைக்கபோன பிள்ளையஞம் கப்சிப்!
அதுகளிண் ட சத்தம் ஒண்டும் அங்காலயாயிருந்து வெளியவாவரேல்ல. நத்தார்ப் பெருநாளுக்கெண்டு இப்பவே நல்ல வெடிச்சத்தங்கள்வெளியால.
கோர்வைவெடிக் கட்டுகள்வெடிக்கிற சத்தம் “டடம்டடம் டும்டும்டும்’ மென்று கேக்கிது. இதுக்குள்ளே வாணங்களும் “சர்ர்.” எண்டு மேல ஆகாசமளவுக்குப் போய் “தடப், தடப்’- பெண்டு என்ர அவரிண்ட அடித்தொண்டைக் காலவாறசத்தம் மாதிரி மின்னல் வெடி வெடிக்குது.
(2011)
67 நீ.பி.அருளானந்தம்

Page 36
மறுகணம் ஒட்டம்
“சிற்றிலும் கடல் சூழ்ந்த - இயற்கை வளங்களும் செழிப்பாக உள்ள இந்த இலங்கைத் தீவில் - வீசும் காற்றும் மனோரம்மியமாக இருக்கிறது - மதியும் அழகாகத் தெரிகிறது. கடலைப் பார்த்துக் கொண்டே உல்லாசமாக மணல் மீது உட்கார்ந்திருக்கலாம். எல்லாம் சுதந்திரமாகக் கிடைப்பதில் அங்கே எங்களுக்கெல்லாம் பிரமாதமான சந்தோஷம்.!’
அப்படித்தானே இவற்றையெல்லாம் தங்களுக்குள் கற்பனை பண்ணிக்கொண்டு இந்த நாட்டுக்கு வந்தார்கள் பிற நாட்டு உல்லாசப் பிரயாணிகள்.
ஆனால் தள்ளிப்போட முடியாத, போரின் அந்தக் கெட்ட நாட்களோடு - சூரியனே தோன்றாததைப் போன்ற இந்த இடத்திலே - நாங்களெல்லாம் கிடந்து கொண்டு கையில் அரை ரொட்டித் துண்டு கூட தின்பதற்குக் கிடைக்காமல் கஷடப்பட்டதை அவர்களெல்லாம் கண்ணால் கண்டார்களா? இல்லை, இந்த உண்மைகளை அவர்கள் தங்கள் காதுகளில் கேட்டுத் தான் அறிந்தார்களா?
ஓஅவனால் முடியும் 68

போர்க் காலத்தில் இங்கே சமாதானம் பேசவென்று வந்தவர்கள், நல்ல கனமான விருந்து அமர்க்களமாகக் கொடுக்க திருப்தியாய்ச் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். ஆனால், எரிச்சலும் வலியும் வயிற்றில் இருந்த எங்களுக்கு என்ன அவர்கள் ஒரு நல்லதைச் செய்தார்கள்? சுடுதண்ணிர் கை காலில் பட்டாலே அது ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய நோவு? ஆனால் வாய்விட்டு அழுகிற எங்களுடைய அந்த நேரத்திலும், வரிசைவரிசையாக அவர்கள் கொண்டு வந்து எங்கள் வாழ்விடங்களில் குண்டுகளைக் கொட்டி - சபித்து அழித்தாய் எம்மைக் கொன்று குவித்தார்களே? - அந்த நேரங்களில் நாம் வாய் விட்டு அலறி அழுததை யார் கேட்டார்கள்? கடவுளைப் பார்த்தும் “எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று பிரார்த்தித்து நாங்கள் கெஞ்சி மன்றாடிக் கேட்டோம் - ஆனாலும் அந்தப் பிரார்த்தனை உயர்ந்து ஆகாயம் அளவுக்கு முட்டியும், அவையெல்லாம் கேட்கப்படாத ஒன்றாகவே கடவுள்களும் கூட அப்போது பராமுகமாய் இருந்தனரே? எங்களுக்கு எங்கள் அழுகுரலைக் கேட்கவே மிகவும் அப்போது பரிதாபமாக இருந்தது. குண்டுகளின் மூலமாய் வந்த அக்கினி தேவன் - ஆங்காரமாக எங்கள் வாழ்விடங்களைப் புசித்தான். அடர்த்தியான சட்சடவென்ற வேகமான தீயினால் எங்கள் இடத்துத் காட்டையும் புசித்தான். எங்கள் இடத்துப் பசுமையெல்லாம் எரிந்து நெருப்புக்கங்குகளைப் போல கனிந்து கொண்டே இருந்தது. செத்த பிணங்களின் ஒரு வித மணம் அதற்குள் இருந்து கொண்டே மணத்துக்கொண்டிருந்தது. சரமாரியாக கற்கள் வந்து விழுவதைப்போல எங்களைக் கொல்ல வந்த செல்கள் எங்கெங்கோவெல்லாம் வந்து விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. எங்களைக் கொல் ல வளைத் த செல் களுக்குப் பயந்து பங்கள்வழியாலிருந்து வெளியே நாங்கள் தலையைக் காட்டக் கூட அவ்வேளையில் முடியவில்லை.
ங்ெகும் காய்ந்தசருகுகளாய்ச் செத்துப்போன மனிதர்களை யெல்லாம் அப்போது ஒரு மூலை வழியிலே எரித்துபோட பரவலாகக் குவித்தார்கள். காயப்பட்டவர்களை பயங்கரமாகக் கத்தி அழுது கொண்டு, பற்களை நெருநெரு’ - வென்று கடித்தப்படி, சிரமப்பட்டுச் சொந்த உறவுகள் இழுத்துப் போகும் காட்சி கண்ணாலே பார்ப்பதற்கு
69 நீ.பி.அருளானந்தம்

Page 37
எங்களுக்கு எப்படி இருக்கும். அந்த மனவேதனைகளெல்லாம் எவ்வளவு கூடுதலாய்ச் சொல்ல அளவோ - அவ்வளவுக்கவ்வளவாய் இருந்தது. ஏ! கடவுள் தேவதைகளே..? காக்கும் கடவுள்களே? இந்தக் காரியத்துக்கு ஏன் நீங்களும் அந்தக் கொடும் பாவிகளுக்கு துணை செய்வதுபோல எங்கள் மீது பராமுகமாய் அந்நேரத்தில் இருந்து கொண்டிருந்தீர்கள்? ரோமம் முளைக்காத பறவைக் குஞ்சுகள் போன்ற எம் சிறுகுழந்தைகளும் எம் கண் முன்னேயே துடித்தும் துடிக்காத அளவிலுமாய் அந்நேரம் செத்து மாண்டார்களே? வாயைக் கோணலாக அகட்டிக்கொண்டு, கண்களைச் செருகிச் செருகிப் பிறகு மூடிய செத்த அந்த மனிதச்சாவுகள். இதையெல்லாம் கடவுள்களே, நீங்களும் ஒன்றாய்ப் பார்த்தீர்கள்தானே?
இந்தக் கொடுமையான சாவுகளுக்கு ஈடாய் உலகின் எந்தக் கொரூரங்களை, கொடுமைகளை, எதை அப்படி இதோடு ஒப்பிட்டதாய்ச் சொல்ல? எங்கள் இடங்களில் வீட்டு வளர்ப்புப் பசுவுக்குக் கன்று செத்துப் பிறந்தால்கூட அயல் வீட்டுச் சனத்துக்கெல்லாம் ஊர் வழிய சொல்லிச் சொல்லி கவலைப்பட்டுக் கொள்பவர்கள் நாங்கள். ஆனால் இப்படி நெருக்கமான சாவுகள் எங்கள் இடத்தில் நடந்து - அதில் கொடுமையாக மக்கள் எல்லாம் கொல்லப்பட்டதை - நாங்கள் இங்கே யாருக்குத்தான் சொல்லியழ? - அந்த அளவுக்கு இங்கே எல்லோருமே சாவுக்குள் சேர்ந்து கொண்டு அழுகிறவர்களாயிருக்க - நிம்மதித்த ஆன்மா முகமொன்றை இங்கே எங்கேயும் ஒருவரால் தேடிக் காணக்கிடைக்குமா? இப்படியே சீக்கிரம் சீக்கரமாய் எல்லாக் கெடுதிகளும் இங்கே நடந்து முடிந்து விட்டது. பட்டினி கிடந்து கிடந்து, கொஞ்ச நாள் எச்சிலும் வாயில் ஊறவேயில்லை தொண்டை க்குள் விழுங்க. நீளும் போர் இன்று முடிந்து விட்டதாம், சொல்கிறார்கள் மனிதர்களெல்லாம் செத்துப் போய் இந்த நாட்டில் இப்போது புனித மரங்கள் மண்ணைப் புனிதப்படுத்த நடப்படுகிறது. இவ்வாறெல்லாம் இருந்த நிலைமை எப்படியோ ஒரு விதமாக இப்போது மாற்றப்பட்டும் மக்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. ஆனால் எனக்கோ -கொடிய அந்த சத்தத்தோடு'டுப்’.பென்று ஊதி வெளி யேற்றும் செல்களின் சத்தந்தான் இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு பிரமையாய் நெடுகவம் அது எனக்கு இருந்து கொண்டிருக்கிறது. காதுகளை நான் கையால் மூடினாலும் - விதைப்பாய் விதைத்த
ஓஅவனால் முடியும் 70

அந்தச் சத்தம் மட்டும் இப்போதுமாக எனக்குக் கேட்கிறது போலத்தானே
எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது.
நாளடைவில் இந்த நிலைமைதான் எனக்கு நெடுகலுமே
நிலைத்து விடுமோ? என்றும் மனப்பயமாகவும் எனக்கு இருக்கிறது.
உச்சக்கட்டப்போரிலே, நான் கண்ணால் பார்த்துத் திடுக்கிட்டுப்
பயந்த சம்பவங்கள் எத்தனையோ. "தண்ணிர் தண்ணின்'
"ஐயோ பாவம்! இப்படி செல்லடிபட்டுச் சாகப்போகிற நேரத்திலும் ஒரு வாய்த் தண்ணிராவது தவிச்சுக் கேக்கிற இந்தச் சீவனுக்கு உடன குடுக்க முடியேல்லயே’ என்று எவ்வளவு சனம் கிடந்து பரிதவித் தார்கள்.அவஸ்தைப்பட்ட சில சீவன்களுக்கு சிலதுகள் அங்ககுடிக்கக் குடுத்த தண்ணிர், அதுகள் வாய் பதிச்சு உறிஞ்சிக் குடிச்ச தோடயும் சரி பாவம் பிறகு, அதுகளுக்கு உடனே சீவன்போயி ற்றுது. இப்புடியான கெடுதிகள் எந்த ஒரு குடும்பத்துக்கும் அங்கே தப்பிக் கிப்பியில்லை. எல்லாக் குடும்பத்துக்கும் தான் அங்கே உள்ள எல்லாக் கெடுதிகளும் வந்து சேர்ந்தது. ஒரு ரெண்டு வினாடிக்கிளயே பயங்கரமா அங்க எல்லாமே அப்பிடி நடந்து முடிஞ்சிட்டுது. அந்த ஒரு சில வினாடிக்கிள்ளே, ஒரேயொரு வினாடிக்குள்ளே, பாவியளே! பாவியளே! - என்ரை மனுசியுமெல்லே அதுக்குள்ளவாச் சிக்கி கொல்லப் பட்டாள். அவளக் கொலை செய்தியளேடா பாவியளா? - செல்பட்டுக் கிடந்து தாங்க முடியாத வலியில அவள் அவதிப்படேக்கிள்ள, உயிர்கிடந்து துடிக்கேக்கிள்ள, நான் என்ரை மனுசியப்பாத்து எவ்வளவா மனம்நோக துடிப்பாய்த் துடிச்சன். அப்பிடிப் பாத்து ஒரு பயங்கர ஒலமா நான் கிடந்து பிறகு கத்தினன். அவளிண்ட மரணத்தை விலக்க சீக்கிரம் நான் அவளுக்கு ஏதாவது வைத்தியம் செய்விக்க கொண்டுபோக வேணுமே? பதட்டத்தில நான் உடம்பு நடுங்கித்துடிக்க எவ்வளவு அப்ப நான் அவஸ்தைப்பட்டன். செல்லடிபட்டுக் கிடக்கிற என்ர மனுசிக்குப் பக்கத்தில தலை துண்டுபடக்கிடக்கிற உடலொண்டு பக்கதிலேயும் அதில கிடக்கு. அந்த உடம்பு, காலை அகட்டி, கை யளை அகலிச்சு, மல்லாந்து கிடக்கு. அதுக்குப் பக்கமெல்லாம் ஒரே ரத்தக்காடு. ஐயையோ ஒரு உடம்பு கணக்கில்லாத காயங்களோட புரண்டு கொண்டு, அதுக்குப் பக்கத்தில அசைஞ்சும் கொண்டிருக்கு.
71 நீபி.அருளானந்தம்

Page 38
அதுக்குத் தீனமான முனங்கல்!
என்ர கண்பாக்க இன்னும் பெரிய ஆகக் கொடுமை - ஏன்ர பெம்புளப் புள்ளயஸ் மூண்டும் கிடந்து அப்ப தாய்க்குப் பக்கத்திலயாக் கனமும் விகாரமுமான குரலோட கத்தித் துலைக்கிறதுதான். எட்டாத தூரத்திலும் கேக்கும் அதுகள் கிடந்து அப்படிக் கத்துற அந்த ஒலம். அம்மா அம்மாச்சியெண்டு, தாயோட சேர்ந்து அதுகளும் உடன் கட்டை ஏறுற மாதிரிக் கத்துதுகள் என்ர தெய்வமே தெய்வமே! என்ரை தலை சுத்தி எனக்கு அந்த நேரம் எழும்பி நிக்க ஏலாமக் கிடக்கு. சரியா என்னால ஒண்டையும் பாக்க முடியாத அளவுக்கு ஒரு இலைக்கொப்பு மறைச்ச மாதிரி கண்பார்வையும் மங்குது.
என்ரை மனுசி சாகப்போறமாதிரி அப்ப கிடந்து என்ர பிள்ளையளின்ர முகத்தைக் கூர்ந்துபாக்கிறாள். தன்ர முழுச் சக்தி யையும் பிரயோகிச்சு ரகசியக் குரலில பிள்ளையஞக்கு அவள் ஏதோ சொல்லுறாள். எனக்கெண்டா சகதியில என்ர உடம்பு புதைஞ்சது மாதிரி ஒரு நிலைமை. ஆண்டவனே என்ர மனுசியின்ர உயிரை வாரிக்குடிச்ச இந்தச் செல், என்னையும் ஏன் தனிய விட்டுது? அவளோட சேத்து என்னையும் அது சாகச் கொல் லவாயப் வெட்டித் துலைச்சிருக்கலாம் தானே? ஐயோ ஐயோ என்ர உயிர் போகமாட்டேனெ ங்குதே? என்ர உயிர் போகமாட்டெனெங்குதே? என்று இப்புடியெல்லாம் நானும் எனது பிள்ளைகளும் சொல்லிக் கத்திக் குழறி - புரண்டு புழுவாய்த் துடிச்சு அழுத அந்த நேரத்திலதான், எதிர்பாராத விதமாக அந்த இரண்டு சம்பவங்களும் நடந்தது
- ஒன்று.
பக்கத்தில காயம் பட்டுக் கிடந்து அவதிப்பட்டவன் - கழுத்தில இரும்புச் சங்கிலி மாதிரி ஒரு பெரிய பவுன் சங்கிலி போட்டுக்கிடந்தவன் இரத் தம் படி ஞ ச சிவப் புச் சட் டையோட அப் படியே கிடந்தவாறாய்ச்செத்திட்டான்.
--- இரண்டு
ஓஅவனால் முடியும் 72

கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடைச்சது மாதிரி கிடந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்த என்ர மனுசியும் - எங்கள் எல்லாரினதும் அழுகைக் குரலைக் கேட்டுக்கொண்டே தன்ரைய உயிரை விட்டிட்டாள். மனைவி சாகக்கண்டு அந்தப் பெருந் துன்பத்தில எனக்கு நெஞ்சு வெடிச்சுத் தொங்குறது போல இருந்துது. துன்பத்தை விலக்க உபயோகிக்கும் ஒரு நீளமான கனமான அழுகையை என்ர பிள்ளையஸ் மூண்டும் சேர்ந்து குழறியதாய் அழுகுதுகள். அதுகளச் சாந்தப்படுத்திவிட எனக்கு எப்பிடி முடியும்? நான் மடமடவெண்டு கையால தலையில அடிச்சுக்கொள்ளுறன். வயித்திலயும் அந்த எரிச்சலோட கையால குத்திக் கொள்ளுறன்.
இந்த நேரம் செல்கள் எங்கேயோ வெடிச்சு எங்கட இடத்திற்கும் இரைச்சலிட்டுக்கொண்டு அம்பு போல பாஞ்சு வருகிறமாதிரி எனக்குத்தெரியிது. என்னதான் செய்யிறது எண்டு தெரியாமல் ஒரு கணம் ஸ்தம்பித்து நிண்ட நான் - பிறகு என்ர பிள்ளையளை கையில பிடிச்சு அந்த இடத்தில நிற்காம வேற இடத்துக்குப்போக இழுத்துக் கொண்டு ஒடுறன். தாயை அதில பிணமாக் கிடக்க விட்டிட்டு பிள்ளைக ளால எப்படி என்னோட வர மனம் ஒப்பும்? என்ர பிள்ளையஸ் பிடுங்கி எடுத்தது மாதிரி அழுதுகொண்டு என்ர கைப்பிடியிலயிருந்து தங்கடகை யளை பறிச்சுஎடுத்துக்கொள்ளப் பாக்குதுகள். பிள்ளையஸ் அகோரமாய் அப்போதையில அழுகிதுகள். நானும் அழுறன்தான்! ஆனாலும், அந்த இடத்திலயிருந்து என்ரபிள்ளையளை இழுத்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கிப்போக நானும் அவயளோட அதுக்காகப் போராட வேண்டித்தான் இருக்கிது.
அந்த இடத்துக்கு தூரவாய் விழுந்த செல் - சிதறல்கள் அடிச்சு எதை எதையோ சிதைச்சுச் சின்னாபின்னமாக்கியிருக்குது. ஒரு தாய் தலை விரிகோலமா ரெண்டு கையளையும் அகலிச்சு முன்னாலயா நீட்டிக்கொண்டு "ஐயோ என்ர பிள்ள ஐயுோ என்ர பிள்ள.” - என்று குழறியபடி சொல்லிக்கொண்டு அந்த இடத்தில எங்களுக்கு முன்னாலயா ஒடுறாள். சனங்களும் குய்யோ முறையோ வெண்டு அந்த இடத்தில அதுக்குப் பிறகு நான்கு பக்கமும் சிதறி
73 நீ.பி.அருளானந்தம்

Page 39
ஒடுகிறதாகத்தான் இருக்கிதுகள்
எங்கட உயிரைப் பிடித்ச்சு தின்ன வருகிறதப்போல அந்த விடங்களில உறுமிக்கொண்டு வந்து விழுகிற செல்களுக்குப் பயந்து - உயிரைக் கையில பிடிச்சது போல இருந்தமாதிரி நாங்களும் தான் நாலு சனத்தோட சேர்ந்து கொண்டு ஒடுறம், நாங்கள் ஒடிப்போகிற இடங்களில உள்ள அந்த பரப்புப் பூராவையும் நெருப்பு ஆக்கிரமிச்சு உள்ளது போல எங்கட கண்களுக்குத் தெரியிது. நாங்கள் செல்பட்டு செத்துப் போவதைவிட, பற்றி எரியும் இந்த நெருப்பில விழுந்து உயிரை விடுறது மேல் என்டுற மாதிரியும் எங்கட மனங்களில அப்பிடி பலதையும் அப்ப நினைச்சுக் கொள்ளுறம்.
எனக்கும் என்ர பிள்ளைகளுக்கும் - ஏன் இங்குள்ள முழுச்சனத்துக்கும் எங்கே நாங்கள் ஒடி ஒடிப் போனாலும் உயிருக்குப் பாதுகாப்பு என்ற ஒரு இடமும் இன்னமும் கிடைக்கப் பெறவே இல்ல. பிரிக்கப் பட்ட என்ர மனைவியின்ர சாவானது நினைவில என்னைக்கொன்று கொண்டே இருக்கிது. கண்களால இருந்து வழியிற கண்ணிர் எனக்கும் பிள்ளைகளுக்கும் நிறுத்தமாய் நிற்கவேயில்ல. குளம் முட்டி வழியிறது போல அது வழிஞ்சு கொண்டுதான் இருக்கிது.
பிறந்ததில இருந்து ஒரு கஷ்டத்தையும் படாது சீவிச்ச என்ர பிள்ளையஸ் - தாயையும் இப்பச் சாகக் குடுத்து - வீடு வாசலும் இல்லாம இப்ப நடு றோட்டிலயா வந்திட்டதா நிக்குதுகள். இந்த இடத்தால இருந்து என்ர மூண்டு பெம்புளப் புள்ளயளயும் எப்பிடி கரையேற்றி ஒரு நல்ல இடத்துக்குக்கொண்டு போய்ச் சேக்கப் போறன் எண்ட நினைப்பில நானும் கிடந்து என்ர பிள்ளையளயும் இழுத்துக் கொண்டு இந்தமாதிரி இடமெல்லாம் தான் கிடந்து கொண்டு கனகாலமா அலையிறன்.
இப்பிடித்தான் கிடந்து அலையலையோ வெண்டு நானும் பிள்ளையஞரும் அலைஞ்சு - மாதங்கள் வருசங்களாவும் ஆகிப்போச்சு இனி என்ன ஒரு துன்பத்தை நானும் பிள்ளைகளும் பெரிசாப் பட்டுத் துலைக்கவேனும்? அப்பிடி எல்லாம் தானே எங்களுக்கு வந்து
ஓஅவனால் முடியும் 74

நடந்ததாய், அழிஞ்சும் துலைஞ்சதாயும் எல்லாமே போச்சு.
அட பாதகமே - தரையில இரத்தமும் மண்ணும் தோஞ்ச அந்த இடத்த விட்டு நாங்கள் உயிர்தப்பி வந்தும் எங்கள நிம்மதியா ஒரு இடத்த போய்ச்சீவிக்க விட்டாங்களா இவங்கள்? எங்கள இவங்கள் கொண்டுபோய் அந்தக் கெடுதியான 'முகாம் வழிய அடைச்சு வைச்சிருந்து, பிறகு எவ்வளவு பாடு படுத்தினாங்கள். அதுக்குள்ள நான் கிடக்கேக் கிளயும் மிரண்ட பிரமை பிடிச்ச மாதிரித்தான் என்ர பெம்புளப் பிள்ளை யளையும் அதுக்குள்ள வைச்சுக்கொண்டு நான் நாளுகளைக் கடத்திக் கொண்டிருந்தன். மிருகங்களுக்கு என்ன வெல்லாம் ஒரு சுதந்திரம்? ஆனா இங்க முகாமுக்குள்ள அடைஞ்சதாக் கிடக்கிற மனுசரான எங்களுக்கு எங்க இருக்கு அப்பிடி ஒரு சுதந்திரம்? - ஒரு புதுச் செய்தியை பறக்க விடுற மாதிரி - 'எங்கள மீளக் குடியமர்த்துறம்! மீளக்குடியமர்த்திறம்! எண்டு அவங்கள் சொல்லிக் கொண்டே இருந்தாங்கள். ஆனா சொன்னமாதிரி, கெதியா எங்க அவங்கள் எங்கள வெளியால போய்ச் சீவிக்கவெண்டு விட்டாங்கள்?
இந்த முகாம் காம்புக்குள்ள கிடந்து கருவாடு மாதிரி நாங்கள் காஞ்சது தான் மிச்சம்! - இந்தக் கொடுமையான சீவியம், எனக்கும் பிள்ளையஞக்கும் ஏழு ஜென்மத்துக்கும் போதும். - அப்படித்தான் ஒண்டச்சொல்ல வாய் வருகுது. - இதை விட வேற ஒரு சொல்லும் இதைப்பற்றி நாங்கள் சொல்லும் தரமாய் இல்ல! அப்பிடித்தான்சொல்ல இருக்கு!
முகாமுக்குள்ள கன காலம் கிடந்து காஞ்சு வறண்ட மாதிரி சீவிச்சதால எனக்கும் என்ர பிள்ளையஞக்கும் உடல் இயக்கமே குறைச்சு முடங்கிப்போச்சு. எண்டாலும் தண்டனை எல்லாம் பெற்று பிறகு விடுதலை ஆன மாதிரி என்னையும் பிள்ளைகளையும் அவங்கள் வெளியாலயாய்ப்போய்ச் சீவிக்கவெண்டு பிறகு விட்டாங்கள். எங்களுக்கும் விடிவு காலம் வந்திட்டே எண்டு அப்பவா பெரியதொரு சந்தோஷம்.
உடல் ஒழுங்குகளை பதிய வைக்கும் சாப்பாடுகளை இனி
75 நீ.பி.அருளானந்தம்

Page 40
எங்கயாவது ஒரு இடத்தில போய் இருந்து சாப்பிடலாம் எண்டும் எங்களுக்கு மனதுக்குள்ள ஒரு பெரிய நிம்மதி.
கிளிநொச்சியைத் தவிர்ந்த எங்கட அடுத்த வாழிடம் யாழ்ப்பாணம்தானே! பனை இடங்களும் கடல் நீர்ப்பரப்புச் சூழ்ந்த அந்த இடத்தில தானே எங்களது உறவின் வேர்களெல்லாம் இருந்தவயள். தொடர் உழைப்புக்கும் எனக்கு அங்க ஒரு வசதிதான் எண்டதால தான் என்ர பிள்ளைகளையும் நான் கூட்டிக்கொண்டு போய் அங்கேயாய்ப் பிறகு இருந்தன். அங்க நான் போன பிறகு சொந்தம் சார் சூழலிலுமிருந்து எனக்கு உதவியள் கிடைச்சுது அறியப் பட்ட ஆட்களக் கண்டு பேசுறதும் மனதுக்கு எனக்கு ஒரு நிம்மதியாயிருந்துது. இப்புடியே உறவினர் வீட்டிலயிருந்து நாங்கள் மாதங்களை கழிச்சாலும், சீக்கிரம் சீக்கிரம் எப்போவா நாங்கள் சீவிச்ச கிளிநொச்சிப் பக்கமா போய்ச்சேருவோம் எண்டே நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தம்.
அண்டைக்குகாலையில - 'வேல் வேல்' - என்று முழக்கமிட்டுக் கொண்டே நான் இருந்த வீட்டுக்கு முன்னாலவுள்ள வீதியால காவடி போய்க் கொண்டிருந்துது. அந்த “வேல் வேல்” என்கிற உச்சரிப்பின் சொல்லின் சக்தி எனக்கு, ஒன்று போல் இல்லாமல் ஆயிரம் மடங்கு உடலுக்குப் பலம் கொடுத்துது. கிளிநொச்சிப்பக்கம் வாசல் திறந்து விட்டுது எண்டு மீள் குடியேற்றத்திற்காக சில நாட்களுக்கு முன்னம் இருந்து தான் சனங்கள் அவ்விடம்நோக்கி போக ஆரம்பிச்சிருக்கினம்.
அவயளப் போல பிறகு நானும் என்ர பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு - மனதிலகொஞ்சம் பயத்தோடேயும் கொஞ்சம் சந்தோஷத் தோடேயுமா சீவிச்ச வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தன். எல்லாம் அங்க கணக்கற்ற மாற்றங்கள் தான்! அங்க என்ர பிள்ளைகளுக்கும் எனக்குமாய்க் காணக் கிடைச்சுது. அழிம்புகள் இப்புடித்தான் இருக்கும் எண்டு முன்னமும் நாங்கள் கண்டு தெரிஞ்சதால எங்களுக்கு அது ஒன்றும் காண வேதனையாய் இல்ல. வீட்டில போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையா சமையலறையில புது அடுப்புப்போட்டாள் என்ர மூத்த மகள். அதுக்கு மேல மெழுகுறதுக்கு சாணகம் இல்லையே எண்டு அவளுக்குக் கவலையா இருந்துது. எங்கட வீட்டில ஒரு
ஓஅவனால் முடியும் 76

அறை செல்லடிபட்டு சுவர் உடைஞ்சு சேதமாய்க்கிடந்துது. அந்த ஒட்டைக் குள்ளால “போ' - எண்ட ஒரு சத்தத்தோட காத்து விரட்டிக் கொண்டிருப்பது போல அடிச்சுக்கொண்டிருந்துது.
இன்னும் இப்பிடி எத்தனையோ குறைபாடுகள் - நாங்கள் எங்கட வீட்டை விட்டுப்போய் திரும்பவுமாய் வந்து சீவிக்கிற நேரம் இருந்துது. ஒருவாறாய் இதையெல்லாம் சகிச்சுக்கொண்டு நானும் என்ர பிள்ளைகளும் அந்த வீட்டில இருந்து கொண்டு சமைச்சுச் சாப்பிட்டபடி சில கிழமைகளை போக்காடியபடி இருந்தம்.
அந்த வளவு முழுக்க தொட்டாச் சிணுங்கி பூத்துக் குலுங்கின மாதியா தரையெல்லாம் படர்ந்து கிடந்துது. அண்டைய காலையில வெய்யிலேறியதாய்விட வெத்திலை வாய்க்க நான் போட்டுக் கொண்டு மண்வெட்டியெடுத்து அதுகள நான் செருக்கிக் கொண்டிருந்தன். அந்த நேரம் வேலிக்குப் பின்னால யாரோகன பேர் வந்து நிற்கிறது மாதிரி எனக்குத் தெரிஞ்சுது. நான் மண்வெட்டி வேலையை நிப்பாட்டிப் போட்டு கூர்ந்து அங்க பார்த்தன்.
22
"ராணுவம்தான்
கண்டதும் நெஞ்சில ஒரு இடி இடிச்சது போல எனக்கு இருந்துது. மனதுக்குள்ள ‘என்ன?- என்று, ஒரு கேள்வியை எண்ணிக்கொண்டே செய்த வேலையை விட்டுப்போட்டு அங்க நான் பார்த்தபடி நிண்டன்.
இந்த நேரம் நல்லாய்ப் பழக்கப்பட்ட ஒருஆள்போல வேலிக் கடப்பைக் கடந்து முற்றத்தடியால ஒரு ராணுவத்தார் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தார். எனக்கு அவரைக் காணவும் ஒண்டுக்கு வருறது மாதிரி மூத்திரம் முட்டிய ஒரு அவதியாய் வந்துது. உடன நான் மண் வெட்டிப் பிடியை சரிச்சுக் கீழே விழுத்திப்போட்டு அவசரமாகெதியா அவருக்கு முன்னால போக நடந்தன்.
அவர் மளமளவெண்டு நடந்து வீட்டு வாசலடிக்கு வர முன்னம் நான் அவருக்கு முன்னால கெதியா நடந்து போய் நிண்டுட்டன்.
77 بیت நீ.பி.அருளானந்தம்

Page 41
அவரின்ர தோளில தாங்கியுள்ள கண்ணப்பறிக்கும் ஒளிவீசும் நட்சத்திரச் சின்னங்கள், மார்பின் மெடலுகள், - அவரை உயர் பதவிக்காரன் எண்டு எனக்கு உடன காட்டிச்சு.
பரபரப்பான பயத்தோட நான் அவரைப் பாக்க அவர் என்னயப் பார்த்து நட்புரிமையோட ஒரு சிரிப்புச் சிரிச்சார்.
நானும் பிறகு பய எல்லையத்தாண்டி ஒரு அதிசயச் சிரிப்புச் சிரிச்சன். ஆனா நெற்றியில எனக்கு யோசனையின்ர சுருக்கம் விழுந்தி ருந்துது
அவர் பிறகு மூக்கையும் விரிச்சு - மூக்கிலும்ஒரு சிரிப்பு சிரிச்சமாதிரி காட்டினார்.
“உங்களை எனக்கு பிடிச்சிருக்கு’ எண்டு முதலில ஒரு கதையை அவர் துடங்கினார். அதத் தொடர்ந்து என்ர குடும்பத்தி லுள்ளவர் எல்லாரையும் தனக்குப் பிடிச்சிருக்கொண்டும் பிறகு அவர் (6)5}|T6ổT6ÖIIIÎ.
இதையெல்லாம் அவர் சொல்லிக் கொண்டு - அந்தக் கதையிலிருந்து இன்னும் மேல போகப்போக - நான் துவாரத்தின்ர வழியா அவரப் பாக்கிறது போல ஒருவித மான பார்வயில அவர பாத்துக்கொண்டிருந்தன். முகம் எனக்கு இறுக்கமான தார்போல இருந்துது.
இனிவருகிற ஒரு புயலுக்கு முன்னுள்ளது போலதான் இவரின்ரகதை இப்ப போகிதுபோல எண்டு நான் மனசுக்குள்ள உடன நினைச்சன்.
நெருப்புச் சுட்டது போல இருந்துது அவர் எனக்குப் பிறகு சொன்னது. என்ர மூத்த மகள் நல்ல குணசாலியாம்! நல்ல அழகியாம்! குடும்ப வாழ்வுக்குத் தனக்குத் தோதானவளாம்! - அதனால அதனால தனக்கு என்ர மகளை கலியாணம் செய்து தாருங்கோவெண்டுதான் இப்ப அவர் கேக்கவெண்டு வந்து இங்க நிக்கிறாராம்.
ஓஅவனால் முடியும் 78
 

மனமாலையின்ர வாசத்தோட - அவசரக் கல்யாணம் முடிக்கப்போகிற ஆயத்தம் மாதிரியாய்த்தான் அவர் நிற்கிறது மாதிரியா எனக்குத் தெரிஞ்சுது எனக்கு அவர் சொன்னதெல்லாம் கேட்ட பிறகு தலை சுத்தி விழப்போகிற நிலையாயிருந்துது.
'நீங்கள் யோசிக்க யோசிக்க வாணாம் . பொறவா நானு வார்றேன்.”
என்று எனக்கு அவர் சொல்லிப்போட்டு பிறகு, வளவை விட்டு வெளியால அவர் போயிட்டார். அவரோட வெளிய காவலுக்கு நிண்ட சிப்பாய்களும் அவரோட சேந்து பிறகு போய்விட்டினம்.
அவயள் போன பிறகு தலைவேற முண்டம் வேறாகப்போன ஒரு நிலையில நானும் வீட்டுக்குள்ள போனன். என்ர பிள்ளையஸ் மூண்டும் நான் முன்னம் அவரோட முற்றத்தில நிண்டு கதைச்சதை கண்டிருந்தவயள்தான்! ஆனால், நாங்கள் ரெண்டுபேருமா அந்த இடத்தில என்ன நிண்டுகொண்டு கதைச்சோம் எண்டது அவயஞக்குத் தெரியேல்ல. நான் இப்புடித்தான் கதை எண்டு நடந்தத அவயஞக்குச் சொன்னன். அவயள் மூண்டுபேரும் உடன மரண அலறலாய் அழுகையை தொடங்கிவிட்டுதுகள்.
னெக்கும் பிள்ளைகளுக்கும் இதுக்குப் பிறகு பயம் ஆகிட்டுது. அப்போதைய எங்கட மனநிலைய விவரிக்கிறது எண்டுறது கஷ்டம் தான்! அண்டைக்கு மத்தியானம் எங்களுக்குச் சமையலுமில்ல, ஒரு சாப்பாடுமில்ல, பட்டினியாய்த்தான் எல்லாரும் ! அண்டைக்கு பொழுதுபட்ட நேரம், குருவியளிண்ட உச்ச ஒலியும் - என்ர வீட்டு முற்றத்திலவுள்ள பெரிய பாலை மரத்திலயிருந்து கேட்டுக் கொண்டிருந்துது அமைதியா இந்த வரப்போற இண்டைய ராவு எங்களுக்கு இருக்குமோ என்னவோ? எண்டு நாங்கள், அப்பவா யோசிச்சுப் பயப்பட்டுக் கொண்டிருந்தம்.
இன்னும் இப்ப அப்படி ஒண்டும் நல்லா பொழுது இருட்டேல்ல. - வீட்டிலவுள்ள நாங்கள்கை விளக்குக் கொழுத்தேல்ல அந்த நேரம்!
79 நீபி.அருளானந்தம்

Page 42
- அப்பவா ஒண்டு இரண்டு சிப்பாய்களில்ல - பதினைஞ்சு சிப்பாய்கள் கணக்கில - என்ர வீட்டு முற்றத்தடியில வந்து நிண்டு கொண்டாங்கள். அவங்களக் கண்டவுடன எனக்கும் பிள்ளைகளுக்கும் கிடிக் கலங்கினது மாதிரியா இருந்துது. அந்த வினாடியிலிருந்து “முருகா முருகா’ எண்டு பிள்ளைகள், வாயால சொல்லத் தொடங்கிவிட்டுதுகள்.
எனக்கு அவயளக் கண்டதும் தொண்ட பயத்தில அடைக்கத் தொடங்கிவிட்டுது. மாடு செருமும் சத்தம் மாதிரி திறந்தகனைப்பு எடுத்து அடைப்பை நான் போக்காட்டிக்கொண்டு வாசலடிக்கு வந்தன். அவங்கள வீட்டு வாசலடிக்கு வரநேரவிடாமல் நான் முற்றத்தடிக்கு விறு விறுவெண்டு போய் விட்டன்.
“மொணவாத மொணவாத.” - எண்டு அவங்களிண்டைய பாஷையில - அந்த சொல்ல மாத்திரம் நான் அவங்களைப் பார்த்துக் கேட்கலாம், ஆனால் அந்த வார்த்தைக்கு மேல வேறு ஒரு வார்த்தையும் எனக்குச் சிங்களத்தில தெரியாதே? - நான் “என்ன? என்ன வேணும்?” - எண்டு அதை மட்டும் தமிழிலயாக் கேட்டன்.
“ஒண்னும் இல்ல ஐயா. நீங்க ஒண்னும் அப்புடிஇப்படியா பயப்புடவா வேணாம். நாங்க இப்ப எல்லாமா இங்க வந்தேது. நம்ம தொர இருக்காரு தொர. அவரு இனி கலியாணோம் முடிக்கப்போம் அந்த பொம்புல எப்புடி பாக்குறத்துக்கு வடிவு என்டுதான் சந்தோஷமா நாங்க இப்ப அதுவ ஒருக்கா பாத்திட்டு போகவா வந்தது.’ என்று உல்லாசமான ஒரு நிலையோடு அந்தச்சிப்பாய் சொல்லிவிட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பில அவன் கூட வந்து நிற்கிறவங்களும் சேந்து கொண்டதாய்த்தான் இருந்திச்சினம்.
னெக்கெண்டால் இந்த நேரம் பெரு நெருப்புக் கிடையில என்னைத்தள்ளி விழுத்தின மாதிரியாய் இருந்துது. இப்பிடி ஒரு நெருப்புதானம் செய்யவா இவங்கள் எல்லாம் என்ர வீட்டுப்பக்கம் இப்ப வந்திருக்கிறாங்கள்? எண்டு எனக்கு மனத்தில சரியான எரிச்சலாகவும் இருந்துது.
நான் எவ்வளவோ அவங்கள சமாளிச் சுச் சொல் லி அனுப்பிவிடுகிறதுக்கு பிறகு பாத்தன். ஆனா அவங்கள்- நோகாத
ஓஅவனால் முடியும் 80

கதையில - தங்கட அந்தப் பிடி' யை மாத்திரம் இறுக்கிக் கொண்டிருந் தாங்கள் அவங்கட கதைகளிண்ட ஒவ்வொரு அணுகலும், அசைவும் அதப்பற்றியதாவே தொடர்ந்து இருந்து கொண்டிருந்துது.
எனக்கு ஓங்கி அறையும் அடியாய் அவங்களுக்கு நாலு வார்த்தை சொல்லிவிட ஒரு துடிப்பு எண்டாலும் அந்த என்ர துடிப்பை அடக்கிக்கொண்டு - ஒரு யோசனையை உடன மனதில வசிக்க வைச்சபடி நான் மெளனமா நிண்டன்.
மனத்தில அடங்கின அந்தத்திட்டத்தோட நான் உடன என்ர வீட்டுக்குள்ள போனன். என்ர பெண் பிள்ளைகள் மூண்டையும் வெளிய கூட்டிக்கொண்டு வந்து அவங்கட கண்ணுக்கு முன்னால பிறகு காட்டினன்.
அவங்கள் பார்த்துச் சிரிச்சுப்போட்டு திருப்பியோட பிறகு போய்விட்டாங்கள்.
ன்ெர பிள்ளைகளுக்கோ குத்திப் பிசைந்து பக்குவப் படுத்துகிற மாதிரியாத்தான் அவயின்ர பார்வைகள் இருந்திருக்க வேணும். கண்களில நீர் பொங்க அதுகள் அழத்தொடங்கிட்டுதுகள். நானும் என்ர பிள்ளைகளின்ர நிலமையையும் வாழ்க்கைச் சீவியத்தையும் நினைச்சு அழுதன். அந்த அழுகையோட அழுகையாய் நானும் பிள்ளையஞமாய் எங்கட உடுப்புகளைமடிச்சு சூட்கேஸ் பெட்டியில தயாராய் வைச் சுக் கொண்டம். அண்டைக்கு ராவு முழுக்க நித திரையரில் லாமல் எப் போதுவா விடியும் எண் டு பாத்துக்கொண்டிருந்தோம். பிறகு? பிறகென்ன? விடிகாலைப் பொழுதிலேயே நானும் பிள்ளைகளும் சூட்கேசும் கையுமா வீட்டாலயிருந்து வெளிக்கிட்டு நடையாய் நடக்கத் துவங்கினம். பஸ்வருகிற அந்த இடத்தடிக்குப் போய்ச் சேர உடம்பெல்லாம் எங்களுக்கு வேர்த்து வடிஞ்சுது. s
சூட்கேஸை அங்க போய் றோட்டில நான் வைச்சுப் போட்டு கையை பின்னுக்குக் கட்டிக்கொண்டிருக்கும் அந்தநிலையிலேயே நான் பிறகு நிண்டன். பிள்ளைகளும் வீதியோரமா நிண்டுதுகள்.
81 - நீ.பி.அருளானந்தம்

Page 43
வவுனியாவிலயிருந்து யாழ்ப்பாணம் போகுற பளில் அப்ப அதில வந்து நிண்டுது. நானும் பிள்ளைகளும் மளமளவெண்டு சூட்கேஸ் பெட்டிக ளோட அதில பிறகு ஏறிக்கொண்டம், பஸ் பிறகு வெளிக்கிட்டு வேகமா ஒடத்தொடங்கீட்டு.
இப்ப ஒரு பிறந்து வளர்ந்த இடத்தை இழந்தது மாதிரியாய் எனக்கு இருந்துது என்ர ஒரு சொந்த வீட்டையும் இழந்தது போலேயும் எனக்கு அப்போத இருந்துது.
உலகமே எனக்கு வெறுத்தது மாதிரியும் வந்துது. பரந்தன் கடந்து, ஆனையிறவு வழியா இந்தவேள பஸ் போய்க் கொண்டிருந்துது. நான் அந்தக் கடல் தண்ணிரைப் பாத்தன். தூரே இருக்கிறது மாதிரி தெரிஞ்ச அந்தப்பெட்டைக் கடல் தண்ணிரில ஆழமில்ல. ஆனால் தள்ளி உள்ள கடல் தண்ணி ஆழம்தான். எனக்கு ஒரு யோசனையில ஆவல் சலசலத்தது! மடயோசனைதான் அது.
கடலுக்கடியில ஏதோ பாதாள உலகம் இருக்குமாமே! அங்க போனால் நானும் பிள்ளைகளும் பாதுகாப்பய் இருக்க ஒழிஞ்சு
எனக்கு வந்த இந்த யோசனையின்ர பிற்பாடு நானே என்ர
நிலையை நினைச்சு சரியா பிறகு மனம் வருந்திக்கொண்டன்.
(2011)
ஓஅவனால் முடியும் 82

பதிவுமாறாமல்
ராசையாவுக்கு மனதில் படிந்திருந்த குற்ற உணர்வுகளுடனான அந்தப் பாசி அசைந்தது. ஆனால் அது விலகி நிம்மதியென்ற குளிர்நீர் அவனுக்கு தென்படும் அளவுக்கு, இன்னும் தெரியவே இல்லை.
அவன் பனைகள் பலவும் கூட்டமாய் வளர்ந்திருந்த இடத்துப் பக்கம், உள்ள அந்த ஒழுங்கை வழியினூடாக இப்போ நடந்து கொண்டிருந்தான். பொழுது சாயும் நேரம்தான் - ஆனாலும் அவனுக்கு தன் வீட்டுக்குப் போய்ச் சேர மனமில்லை. “ஏன் போனான்? எங்கே போனான்? -என்றதாய் ஆருக்கும் கூடத் தெரியாமல், நான் இந்த என்ர குடும்பத்தை விட்டு - இந்த ஊரை விட்டு - எங்கேயும் போய்த்தொலைந்தால் என்ன?” - என்ற அந்த நினைப்பு - அவன் மனத்தின் அடியில் அசையும் அதிர்வுகளாய் இருந்து கொண்டிருந்தது.
சின்னச் சின்னப் பட்சிகள் - காட்டுக் கூட்டமாக பனைமர உயரங்களுக்கு மேலே பறந்து போய்க்கொண்டிருந்தன. தனிமை உணர்வோடு நடந்து கொண்டிருந்த அவன், இயல்பான ஒரு நிலையில் தன் உள்ளத்தின் யோசனைகளோடு தலையை நிமிர்த்தி கொஞ்சம் மேலே பார்த்தான். அவன் பார்த்த திசையிலே பனைகளுக்கிடையே
83 நீ.பி.அருளானந்தம்

Page 44
தெரிந்த வசீகர மாலை வெயிலின் வெளிச்சம் மஞ்சள் நிறமாய் அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஆன்மாவுக்கு அமைதிநிலை கொடுக்கக் கூடிய மெளனமான வெளிச்சந்தான் அது! - மாலையின் அந்த மஞ்சள் மெழுக்கான வண்ணமிகு ஒளி கண்டால் மனுசர் எண்டவர்க்கு மனக்கவலை பறக்கும்தான்!
ஆனால் மனக்கவலைகள் பல புகுந்து உள்ளம் வெது வெதுத்துப் போயிருந்த ராசையாவுக்கு, இந்த அழகிய காட்சிகளைக் கண்டும் மனத்தில் கவ்விய கவலைகள் விட்டுப்போகவில்லை. ஆனாலும் அவனுக்கு இப்போது, முன்னதிலும் மேலாக படபடத்த வெளவால்கள் போல் கவலைகள் பல வந்து அவன் மனத்தை அடைத்துக் கொண்டதாகவே இருந்தன.
ராசையாவிற்கு அம்மிக்கல்லிலே பரவிச் செல்லும் உளிதட்டும் ஒலி ஒட்டம், தன் காதுகளில் இப்போது கேட்கின்ற ஒரு பிரமையாக இருக் கிறது. தனி தகப் பனின் நினைவின் நிழல் கள் உறைநிலையிலிருந்து, காட்சிகளாக அவனுக்கு வெளிப்படுகின்றன. தானியம் பொடித்து தூளாக்கி மாவாக்கும் திரிகை - மற்றும் அம்மி குழவி - ஆட்டுக்கல் என்பன உருப்படுத்தி விற்கும் கல்லாசாரி வேலை செய்து பிழைப்பு நடத்தியவர் ராசையாவின் தந்தை.
தலை அவருக்கு முற்றாக வழுக்கை விழுந்து, கண்குழிவு விழுந்து, ரத்தம் வற்றி வயது போயும் - வறண்ட கல் பாறைகளை உடைத்துச் செய்யும் தன் வேலைத்தொழிலை, செக்குக்கல்போல் கிடந்து செய்து பாடுபட்டு சீவனுள்ள வரை உழைத்தவர் அவர்.
கல்லில் உளிச் சிதறல்களுடன் புள்ளிகள் போட்டு, கடைசியில் நிறைவடையப் பண்ணும் அந்த ஆசாரியார் வேலை செய்து உழைப்போடு உண்டதான அவரின் சீவியம், ராசையரவுக்கு - அவர் தகப்பன் என்ற மட்டிலே நல்லதொரு முன்மாதிரிதான்!
ஆனால் சுடு வெயிலில் கிடந்து கஷ்டப்பட்டு உழைத்ததான அவரின் நீண்டகால வாழ்க்கைச் சீவியத்தில், அவரின் எந்த வித
ஓஅவனால் முடியும் 84

நல்லதொரு வழிகாட்டலிலே தானும் அவரைப் பின்பற்றி நடக்கவேண்டுமென்பதில் ஒரு பிழையை மட்டும் இவன் விட்டு விட்டான். அவனின் தகப்பன் செய்த ஒரு பிழையை தானும் தன் வாழ்க்கைச் சீவியத்தில் செய்ததற்கு துணிந்தது இவன் இந்த விதமாகத்தான். ராசையாவுக்கு தன் தந்தையின் அந்தச் செயல் மூலம் கண்டுணர்ந்தது - இளமைக் காலத்திலேயே அவனுக்கு ஊது பத்தி நறுமணமாய் அது மனதுக்கு என்னவோ பிடித்திருந்தது.
'திடங்கொண்ட என்ர உடம்புக்கும் உழைப்புக்குமெண்டு எனக்கும் ரெண்டு கலியாணம் தான் தேவை” - என்றதாய் பலருக்கும் நியாயம் சொல்லி அன்றைய அவரின் காலத்தில் கலியாணம் இரண்டு தனக்குச் செய்து கொண்டவர் தான் ராசையாவின் தந்தை.
‘ஓ’ என்று எரிகிறமாதிரி - மூத்தவள். அவரிண்ட பெஞ்சாதி கிடந்து மனம் துடித்துக் கத்திக் குழறிக்கூட, அதைக் காதிலே போட்டுக் கொள்ளாது, மனைவியின் கூடப்பிறந்த சகோதரியை அவர் தனது ரெண்டாம் பெண்டாட்டியாக்கினார்.
தான் இரண்டு பெண்டாட்டிகளை வைத்திருப்பது, அவருக்கு தான் செய்த ஒரு பெரிய சாதனை மாதிரி, நெடுகவமே மனதுக்குள்ளே ஒரு சந்தோஷம். - அது அவர் முகத்திலும் கூடத் தெரியும். என்ன ஒரு தைரியம் உங்களுக்கு? - என்று, மற்ற ஆண்களும் சிரித்துக் கொண்டே இவருக்கு உஷார் ஏற்றவும் கதைப்பார்கள். அவருக்கும்,
தான் தான் - ஒரு வீரமுள்ள ஆண்மகன் என்றதான ஒரு வெளிவேஷம்
தொடர்ந்தது. இரண்டு கல்யாணங்களையும் செய்து கொண்டு அவருக்கு நீண்ட நாட்களும் வளர்ந்துவிட்டன. காலத்திரட்சியில் மூத்தவளுக்கு முதலில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இளையவளும் பிறகு ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.
மூத்தவள் பெற்றமகனுக்குப் பெயர் - 'வேலும் மயிலும் - இளையவளின் பிள்ளைக்குத்தான் ராசையா’- என்கிற பெயர். மூத்தவன் வேலும் மயிலும் வளர்ந்து வாலிபனாகியதும் - வவுனியாவிலிருந்து போய் மட்டக்களப்பிலே ஒருவரிடம் மந்திரமும் - நாட்டு வைத்தியமும் படித்துக் கொண்டு திரும்பி வந்தான். திருமணமும் பிறகு செய்து கொண்டான். விவசாயம் செய்யக் கூடிய நிலம்
85 நீ.பி.அருளானந்தம்

Page 45
அவனுக்குக் கொஞ்சம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது - அதிலே அவன் விவசாயத்தையும் செய்து கொண்டு - மற்றயவரை ஏமாற்றி பணம் பறிக்கக் கூடிய, சூனியம், மந்திரம் செய்கிற தொழிலையும் அவன் செய்து கொண்டு வந்தான். தலை முடியை அள்ளி முடிந்த 'மாடன் - மாதிரி கட்டிக் கொண்டு, மற்றவர் பார்க்க அவன் திரிந்ததாலே ஊருக்குள் உள்ளவர்க்கும் அவனைக் கண்டாலே ஒரு வித பயம். இன்னும் வைத்தியம் செய்ய மூலிகை தேடி காடு தேசம் என்று அவ் விடங்களில் அவன் அலைவதாலே, அவனைக்காணும் போதெல்லாம் ஊரவர்க்கும் அதனால் ரெட்டிப்புப் பயமாகவும் இருந்து கொண்டிருந்தது.
வேலும் மயிலையும் கண்டு அவர்கள் பயந்து பரபரப் படைவதற்கு, இன்னும் பல வேடங்கள் வேஷங்கள் அவனிடமிருந்தது - யாரைப்பார்த்தாலும் திடசித்தமான சூரியப் பார்வையிலேயே இவன் அவர்களைப் பார்ப்பான். அவன் அப்படிப் பார்க்கும் போது அவன் கை இரண்டின் முழுவதிலும் உள்ள - பட்ட வடுவும், வெட்டு அடையாளங்களும், தன்னிலிருந்து கொடுத்த ரத்தப்பலிக்கான காட்சியாக ஆருக்கும் அது பார்க்கத் தென்படும். அந்த உபாதையிலே விஷமேறித்திருதிய நரம்புகளாகத்தான் - எங்கும் நீல நரம்புகள் அவனுக்கு துர்த்தேவதைகளுக்கு பங்குபிரித்துக் கொடுப்பது போல மந்திரங்கள் சொல்லிக்கொண்டு, இருட்டுக்குள்ளேயாய் ஒழிந்து கிடப்பவர்கள் தானே இந்த சூனியக்காரர்கள் - மந்திரவாதிகள் 6T60TL6) is 356i.
வேலும் மயிலினுடைய கையினில் - அவன் எடுக்கும் சாம்பலில் தமக்குத் தீங்கு காத்திருக்கிறது என்பதால் தான் அந்த ஊரிலே யாரும் அவனோடு ஏதும் பகைப்பதாகவே இருப்பதில்லை. எதிலும் தாம் அவனுக்கு விட்டுக்கொடுக்கும் அடையாளத்தையே எப்போதும் அவனுக்கு அவர்கள் காட்டிவிடுவார்கள்.
மந்திரம் செய்யக் குந்தி இருந்ததில் நெடுகவம் சுவாசிக்கும் ஊது பத்தியின் சுருண்ட வாசனையினாலே வேலும் மயிலுவுக்கு வெது வெதுப்பான உஷ்ணம் உடம்பில் கூடிவிட்டது. அவன் நண்டு விரல்கள் மனைவியின் தங்கை மீதும் விழுந்தது. யானை காதை அசைத்த மாதிரி திட்டம் போட்டுக் கொண்டு அவன் பிறகு கொஞ்சநாள்
ஓஅவனால் முடியும் 86

இருந்தான்.
ஆனாலும் சீறிப்பிறக்கும் ஆசையை அவனுக்குப் பிறகு தன் மனதில் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நிறை நிலவு மாதிரி இருக்கும் மனைவியின் தங்கையின் முகம், நெடுகிலும் அவனைப் போட்டு மனத்தைக் குழப்பிக் கொண்டே இருந்தது. அவளின் நினைவால் வேலும் மயிலுவுக்கு, கண்கள் இமை மூடி நிம்மதியாகத் துயில் கொள்ளவும் முடியவில்லை.
அவனுக்கொரு நல்ல சந்தர்ப்பம் பிறகு வந்தது. மனைவியின் பிரசவம் வந்து, அவள் தாய்வீட்டுக்குப் போனாள். மெலிந்த ஆற்றில் நடக்கிறது மாதிரி, இது சந்தர்ப்பத்தில் கஷ்டம் ஒன்றும் இல்லாமல் இவன் அங்கே போனான். மனைவியின் ஊரிலும் இவனைப்பற்றி அதிகமாக எல்லோருக்கும் தெரியும். அங்கே சனங்களின் பேச்சுக்கள் தூரமாகக் கேட்கிறது.
“இந்தா அந்தச் சூனியஞ் செய்யிறவன் றோட்டால நடந்து போறான்' அவன் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நடக்கிறான். சிலர் வீதிவழியாக அவனுக்கு எதிர்கொண்டதாய் முன்னால் நடந்து வர, அவர்களையெல்லாம், இலையாக தான் உதிர்க்கிறமாதிரியாய், இவன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு போகிறான்.
அங்கே இவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால், மாமா, மாமி, ஆகிய அவ்விருவரும், கற்றாழை வறண்டநிலத்தாவர மடல் போல, இவனைக் காணவும் அப்படியே விறைத்து விட்டார்கள். பய அழுத் தத்தின் இறுக்கம் ஏற்பட்டு மருமகனுக்குப் பணிவிடைகளெல்லாம் அங்கு பிசகாமல் நடக்கிறது.
ஆனாலும் திருப்தியில்லாத வெப்பமான உடலாய் இருந்தான் வேலும் மயிலும். அங்கே அவன் பார்வையின் காந்த முள், இளையவளை நோக்கியே சென்று கொண்டிருந்தது.
அன்று காலை அப்பம் சுட்டது - அவனுக்குப் பிறகு அது அடுக்கியபடி ஒரு பிளேட்டில் தின்பதற்கு முன்னால் வந்தது. தொட்ட அப்பத்தோடு - அவர்களைக் குழப்பும் அந்தக் கதையை அவன்
87 நீ.பி.அருளானந்தம்

Page 46
தொடங்கினான்.
'ரெண்டாந்தாரமாய் எனக்கு உங்கள் மகள் சேர வேண்டும்” - என்று மாமனுக்கு தன் விரல் வைத்துக் குறியிட்டது போல, அவன் அவரைக் கேட்டான்.
மாமாவுக்கு இப்படி அவன் சொல்ல - உடம்பெல்லாம் வேர்த்து வேர்த்து நனையத் தொடங்கிவிட்டது. அவருக்கு உள் பெரு முதுகில் பெரிய வலி தொடங்கிவிட்டது.
'இது மருமோன் பாரும் நீர், நியாயமில்லையே.?’ என்று சுருளும் மூச்சோடு ஒரு வார்த்தை அவர் சொன்னார்.
ஆனால் அவர் வாயின் ஈரம் உலர்ந்து, அதனால் வேறு
வார்த்தை ஏதும் அதிலிருந்து புறப்படாதிருக்க - வேலும்மயிலும் பிறகு தான் சொன்ன ஒரு கதை பேச்சால் உடனே அதை அடைத்தான்.
"மாமா என்ர ஜென்ம ஜென்ம காலத்து ஒரு தொடர்பில தான் இப்பவும் நான் அவள எனக்கொண்டு இப்ப கேக்கிறன் அவள நீ எனக்குத் தராட்டி, கொக்காய் உன்ர மகளின்ர உடம்ப நான் மெலிவிக்க - செய்வினையால நெடுகவம் அவளுக்கு தீட்டு ரத்தம் போக வைப்பன் - இன்னும் தண்டனை அவளுக்கு பிறகும் இருக்கு - நான் முத்து, மிளகு மடையில வைச்சு ஜெபிச்சா, அடுப்படியில சமையல் வேலையா இருக்கிற அவள் - அதிலேயே சீலய சட்டயக் கழட்டிப் போட்டு - அம்மணத்தில பூத்த சுடர் மாதிரி றோட்டு வழிய எல்லாம் விசரி மாதிரி ஓடுவாள் - வேப்பெண்ணையாய்ப் பிறகு போய்விட்ட அவள எந்த மாப்பிள்ளை எறும்பு - பிறகு அவளிட்டத் தேடிவரப் போகுது..? அதனாலதான் மாமா இப்ப நீ வடிவாச் சிந்தி! - அப்பிடியா நீ சிந்திச்சுப் போட்டு, உன்ர மகளையும் என்ர வழிக்குப் பிறகு கொண்டு வரப்பார்.”
என்று சொல்லி வேலும் மயிலும் தன் கொடுரங்களை மாமனுக்கு அடையாளம் காட்டிவிட இரு பெண்களைப் பெற்ற அவர் “தனக்கும் பிள்ளைகளுக்கும் கேடுகாலமாய்ப் போய்விட்டது” - என்று சொல்லி அழுதார். அதன் பிறகு, மருமகன் சொன்னதை தன் மனதில் வைத்துக் கொண்டு, ஓரிரு நாட்களாய்ப், பம்பரம் மாதிரி எங்கெல்லாமோ பயித்தியம் பிடித்தது மாதிரி அவர் அலைச்சல்பட்டுத்திரிந்தார்.
ஓஅவனால் முடியும் 88

ங்ெகு தான் அலைந்தாலும் தனக்கு உயிர் பிழைக்கும் வரம் இனிமேல் கிடைக்காது போல அவருக்கிருந்தது. மருமகன் கேட்டது கைவாளாய்ச் சுழன்று சுழன்று தன்னை வெட்ட வருவது போல அவருக்குப் பயமாக இருந்தது. மருமகனின் சூனியம் தன்னையும், மகளையும் சேர்த்து ஒரு முழம் உடல் தசையை அறுத்து, பனை மரத்திலே அதை ரத்தத்துடன் அறைந்தது போல ஒரு கணம் - அதையே திரும்ப திரும்ப அவர் பல கணங்களாகவும் இருந்து நன்றாக சிந்தித்துப் பார்த்தார்.
பாறை போன்ற அந்தப் பாவியுடன் மல்லுக்கட்டியதாக நின்று - ஒன்றுமே தனக்கும் மகளுக்கும் செய்ய முடியாது என்பது மாதிரி அவருக்குப் பிறகு தெரிந்தது.
"உனக்கு விதியாலே எழுதப்பட்ட விஷம் தான் இது - என்ன நான் அதுக்குச் செய்யப்பிள்ள? - ரோசாப்பூ வைச்சு அழகு பார்க்க வேண்டிய உன்ர தலையில, நாக வெண் பூ வைக்க வேண்டியதாய் இப்பப் போச்சுப்பிள்ளை.'
என்று தன் மகளுக்கு அவர் சொல்லி, தன் தலையில் கையால் அறைந்து கொண்டு அழுதார். மகள், தகப்பன் இப்படிச் சொல்லக் கேட்டு, தன் கண்ணால் கண்ணிர் உதிர்க்க நின்றாள். அந்தக் குடும்பத்திலுள்ள எல்லோருமே, இதன் மூலம் சருகுகளாக, துன்பத்தில் அப்போது சுருண்டு விட்டார்கள்.
ஆனாலும் வேலும் மயிலும், அந்த வீட்டுக்குப் போனவன் அங்கேயே இருந்து கொண்டு - ஒவ்வொரு நாளும் இதைப் பற்றிய அந்த ஏடு திறந்து கொண்டே இருந்தான். ஊசி ஊசியாய் குத்துகிறமாதிரி, அவன் மாமனுக்குக் கதை விட்டான்.
படமெடுத்து நிற்கும் - அசையும் - ஆடும் இந்தப் பாம்பைக் கண்டு அவருக்கு பயப்படாமல் இருக்க முடியுமா?
அதனாலே காண்டாமிருகம் மாதிரி மதர்த்திருந்த அவனுக்கு அவரும்
89 நீ.பி.அருளானந்தம்

Page 47
'ஓம்' - என்று உடன்பட்டு - பிறகு தன் இளைய பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்கச் சம்மதித்து விட்டார்.
“என்னைப் பலி போட்டிட்டியளே பலி’ என்று சின்ன மகள் தகப்பனின் முடிவை அறிந்து குழறிக் கத்தினாள்.
“இனியும் என்ன என்ன என்ர ரெண்டு பிள்ளையஞருக்கும் நடக்கப்போகுதோ..?’ என்று சொல்லி பெற்ற தாயும் ஒப்பாரி சொல்லி அழுதாள்.
“என்னை நானே இந்த வீட்டிலயா கழுத்தை வெட்டிக் கொண்டு இப்பவே - இந்தப் பெத்த குஞ்சையும் தவிக்கவா விட்டுட்டு சாகப் போறன்' - என்று சொல்லி தன் கழுத்து வரைக்கும் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு - வீதியோரத்து தண்ணிர்க் குழாயடியிலே நின்று கொண்டு சத்தம் போட்டாள் வேலும் மயிலுவின் மனைவி. அவள் அதிலே நின்ற வரைக்கும் குழாயடியிலே வந்து தண்ணிர் எடுக்கவும் - யாரும் ஒரு பெண்ணும்கூட அவ்விடத்திற்கு வரவில்லை. குடம் ஒன்று அதிலே கிடந்து அதிலே தண்ணீர் நிரம்பி அவ்வேளை வழிந்து கொண்டே இருந்தது.
அந்தப் பதினாறாம் நம்பர் வீட்டிலே இப்படித்தான் பிசகுகள். ஆனாலும் தொண்டை வறண்டது மாதிரி எல்லோரும் பிறகு அவ்விடத்தில் மெளனமாகிவிட்டார்கள். ஆமணக் கெண்ணையென்றாலும் வீட்டில் அதைவைச்சு விளக்குத் திரி பற்றத்தானே வேணும்? அங்கே மருந்தீடு மயக்கம் வந்தது மாதிரி பிறகு எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியாகிவிட்டார்கள். பேசும் வசியமும் வேலும்மயிலுவிடம் இருந்ததாலே எல்லாப் பிரச்சனைகளையும் அவன் சரிக்கட்டிக் கொண்டான். நூல் பாவிச் சென்ற பூச்சி மாதிரி மனைவியின் தங்கையோடுதான் இப்போது அவன் முழு நாளும் பொழுதும். கொஞ்சநாள் போக ரெண்டு பொண்டாட்டிகளோடு தன் ஊருக்கும் பிறகு இவன் வந்து சேர்ந்தான்
வேலும் மயிலுவின் கதை இதுதான். அவன் மூச்சு விடும்
ஓஅவனால் முடியும் 90

நாக சர்ப்பமாக தனக்குத் தெரிந்த மந்திரத் தொழில் வைத்தியத் தொழிலையே செய்து கொண்டு மற்றவிவசாயத் தொழிலையெல்லாம் விட்டுவிட்டு சீவியத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். மொடு மொடுக்கவுள்ள பழையமந்திர மூல ஏடுகளெல்லாம் வேலும் மயிலும் என்ற மந்திர சூனியக்காரணிடம் இருப்பதாக, இப்போது அவனைப் பற்றிய கதை, பல இடங்களிலும் உள்ள சனங்களுக்கு புதினம் பரவிக்கொண்டே இருந்தது.
ரத்தத்தின் இருண்ட ஞாபகங்களிலிருந்து - உயிர்ப்படைந்து நடக்கத்தொடங்கிய குணம்போல வேலும் மயிலுவுக்கும் பிறகு ராசையாவுக்கும் இது குணம் பரம்பரையில் ஊட்டப்பட்டது போல வெளிப்படுகிறது.
அவனுக்கும் மனைவியின் தங்கையின் சுடிதார் உருவம் கனவில் அடிக்கடி வந்து நெளியத் தொடங்கிவிட்டது. தன் கனவின் பாதையிலெல்லாம் நெடுகவம் அவனுக்கு தன் மனைவியின் தங்கையின் உருவம் தோன்ற - கனவுடன் தன் நினைவில் அணிந்துகொண்ட அவள் நினைவுடன், இவன் தன் தமையனிடம் உதவி கோரி அங்கே போனான். அங்கே தன் தமையனைக் கண்டு - தன் மனைவியின் தங்கையுடன் தனக்கு அடிக்கடி வரும் அந்தக் கனவு உரையாடல்களைப்பற்றி அவன் விசனத்தோடு சொன்னான். எட்டிப் பார்க்கிறதான ஒரு மெல்லிய ஈர்ப்புடன் பிறகு தான் இருந்து கொண்டு, - “ அவளையும் நான் எனக்கு எடுத்துக்கொள்ள வேணு மண்ணா? -’ என்றும் அவன் பாசத்துடன் தன் அண்ணனைக் கேட்டான்.
தன் தம்பி அப்படிக்கேட்டதற்கு -
“உனக்குத்தேவையான கணிதானே அவள்! அவள நான் உனக்கெண்டு சொந்தமாக்கிக் கொள்ள எல்லாம் செய்து தர்றன்.” என்று, உடனே வேலும் மயிலும் தம்பிக்கு வாக் குறுதி கொடுத்துவிட்டான். வேலும்மயிலும் மறுகிழமை நாள் வெள்ளியன்று பத்து வருடங்களாக தான் கழுத்தில் நெடுகலும் கழற்றாமல் போட்டுக்கிடந்த உருத்திராட்சமாலைகளோடு, இன்னும் பல மணிமாலை களையும் ஜாடிக்குள் இருந்து எடுத்துத் தன் கழுத்தில் போட்டுக் 91. நீ.பி.அருளானந்தம்

Page 48
கொண்டு திருநீற்றுப் பூச்சுகளுடனாக தன் தம்பியுடன் சேர்ந்து தன் வீட்டால் வெளிக்கிட்டான். ராசையா தமையனைக் கூட்டிக்கொண்டு நேரே மாமன் வீட்டுக்குப் போனான். வேலும் மயிலும் தன் உடம்பில் பூசிய சந்தனங்களிலே ஒரு வித வினோத வாசனை இருந்தது. அந்த மணத்தை நுகர்ந்ததிலேயே ரத்தம் சுண்ட பயப்பட்டுவிட்டார் ராசையாவின் மாமனார். அவருக்கும் வேலும் மலிலுவுடமுள்ள தீங்குக ளெல்லாம் நன்றாகத் தெரியும் அதனாலே வேலும் மயிலுவை பார்த்துக் கொண்டு அவர் ஒரு கல் போல உடம்பு அசையாமல் நின்றார்.
"வட்டமான பொந்துக்குள் இருக்கும் இந்தப் பாம்பு மாதிரியானது ஏன் இங்கே என்ர வீட்டுக்கு இப்ப வந்திருக்கு' என்ற கணக்கில் அவருக்கு இப்போது பெரிய யோசனை தான் இந்தநேரம் - மாலைகளைக் கழுத்தில் சுமந்து கொண்டிருந்த வேலும் மயிலும் - மடிப்பை விரித்து வைக்கிற மாதிரி அந்தக் கதையை தன் வாயால் வெளிவிட்டான்.
ராசையாவின் மாமனுக்கு அதைக் கேட்கவும் -கறுக்கு மட்டையில் ஏறிக் கடந்து தான் - உயிர்விட்ட மாதிரி ஒரு நிலைமையாய் இருந்தது. தன் கண்தெறித்து முன்னால் விழுந்து நிலத்தில் சுழன்று கொண்டிருக்கிறதாகவும் அவர் பயங்கரமாக எண்ணினார்.
தன் செல்ல மகளை பாழும் குழிக்குள் தானே தள்ளிவிட வேண்டிய சூழ் நிலை தனக்கு வந்து சேர்ந்ததையிட்டு அவரும் மனம் மிகவும் வருந்தினார். வேலும் மயிலுவிடம் உள்ள குணம் எருக்கலை செடியின் வேர் போன்ற நஞ்சுடையது. அவன் தன் வாய்க் காற்றை வெளியே ஊதினாலே கரடு முரடான பச்சை இலைகூட சருகாகிக்கருகி விழுந்து விடும். அவன் வெள்ளை வேட்டியால் தன் அடிவயிற்றை மூடிக்கொண்டு மந்திரம் சொன்னால், வயிற்றுப் பிள்ளை கூட பிள்ளைத் தாச்சிக்குச் செத்து விடும். அவன் நெல் உமியை தனக்கு முன்னால் கொட்டிவைத்துக் கொண்டு அதற்கு மேலே வரகரி சியைத்துவி மஞ்சள் தண்ணிர் அதன் மேல்தெளிக்க - வீட்டிலே குடிகலைந்த வெறுமை வந்து - வறுமை வந்து - கடைசியில் அந்த வீட்டிலே எறும்புகளும் சுவர்ப்பூச்சிகளும் தான் நிரம்பி உதிரும்.
ஓஅவனால் முடியும் 92

வேலும் மயிலுலையும் பற்றி, இப்படியெல்லாம் அறிந்து தான் வைத்திருந்ததாலே - ராசையாவின் மாமனும் இனித் தனக்கும் மகளுக்கும் ஏதும் செய்து தப்பிக்க வழியில்லையென்ற முடிவில், ராசையாவின் விருப்பத்துக்கு கடைசியில் 'ஓம்' என்றதாய் ஒத்துக் கொண்டார்.
வேலும் மயிலும் தாம்பூலம் மென்ற நேரத்துக்குள்ளே இது எல்லாம் நடந்து முடிந்தது. அன்றைய பொழுதே ராசையாவிற்கு அவனது மனைவியின் தங்கையும் இரண்டாந் தாரம் மனைவியா கிவிட்டாள்.
அந்த வீட்டிலே கல் உறைந்த கணக்காய் உள்ள ஒரு நிலைமைக்கு - ராசையாவைத் தவிர்ந்த எல்லாரையும் ஒரு கேவலம் ஆக்கிவிட்டு, வேலும் மயிலும் பிறகு தம்பியிடம் விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தான்.
இந்த வித சீவியத்திலே தொடங்கி பல மாதங்கள் ராவும் பகலும் சூழன்றது ராசையாவுக்கு. மிக எளிய பூச்சிகளாக நினைத்து தன் இரு மனைவிகளையும் கொடுமை செய்து கொண்டு அவன் பிறகு தன் சீவியத்தை அவர்களுடன் நடத்தினான்.
அவனுக்கு தாறுமாறான எண்ணங்களும் வந்தது. "சோடாகம்பனியில்வேலை என்பதாலே சிறிய வருமானம் தான் அவன் பெற்றான். ஆதலால் இந்தக் கொஞ்ச வருமானத்துக்குள்ளே தற்போது தனக்கு ஏதும் பிள்ளைகுட்டிகளே வேண்டாம் என்பதே அவனின் எண்ணமாயிருந்தது. இதனால் கருக்கொண்டு உள்அசையும் அசுமாந்தம் ஏதாவது தன் மனைவிமார்களிடம் தெரிகிறதா? என்பதை தெரிந்து கொள்வதில் அவன் முழு அக்கறையுடனிருந்தான். குடும்பக்கட்டுப் பாட்டிற்கு பாவிக்கும் சாதனங்கள் - ஒரு துறவு கொண்ட நிலைமாதிரியானவை! என்று அதிலே அவனுக்குத் துளியும் விருப்பமில்லை. மரங்களைத் தழுவுகிறது போல அதில் ஒரு இன்பமுமில்லை!’ என்பதுதான் அவனின் எண்ணம்.
உடலுறவில் தான் சுதந்திரமாக அப்படி நடந்து கொள்வதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. - தன் மனைவியர் இருவரும்
93 நீ.பி.அருளானந்தம்

Page 49
தான் அதற்காக கையாளும் கொடுமையான செயல்கள் மூலம் துண் பப்படுவது பற்றியும் அவனுக் கொருவித கவலையுமே இருப்பதில்லை.
இந்தப் பிரச்சினையிலே ராசையா கையாளும் ஒரு கொடுரமான வழிமுறை இதுதான். கற்பம் வயிற்றில் தங்கிவிட்டது என்பதை அறிந்ததும் - அதைச் சுமந்த தன் மனைவியின் வயிற்றை முதன் முதலாக அவன் தெளிவுடன் பார்ப்பான். அப்படியானவள் அவனுக்குப் பக்கத்தில் நின்றபடி சாதாரணமாக அவனுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போதே - அவள் ஒன்றும் எதிர்பார்க்காத அளவாய் தன்காலை மடித்து பலங்கொண்டதாய்க் கருவுற்ற அவள் வயிற்றிலே அவன் உன்னி ஒரு உதை வீச்சாய் உதைப்பான்.
அந்த ஒரு உதையுடன், வயிற்றில் அடிவாங்கிய அவளுக்கு உடனே விடும் சுவாச மூச்சு சுருங்கிவிடும். அவள் அந்த அடிவாங்கியதோடு எக்கி முக்கி, குனிந்தபடி, திருகி முறுகி அந்த நோவு தாங்காது, மெல்லிய புலம்பலுடன் முனகுவாள். உயிர் நூல் அவ்வேளை அவள் வயிற்றுக்குள் கிடந்து உருளும்.
உடனே அந்தப் பூப்போன்றது குருதியோடு அவளுக்கு வெளியே அறுவடையாகி துளி இருப்புக் கூட வயிற்றிலில்லாது வந்து விடும். வயிற்றில் பெரிய நோப்பட்ட அவள் கலங்கிய ஒரு வித மயக்கத்திலே முகம் வெளுத்தப்படி சிலநாள் படுக்கையிலும் கிடப்பாள். வயிற்றில் நோப்பட்டு அதிர்வாய்த் திரண்டு வந்த ரெத்தப்போக்கு நிற்க அவளுக்குப் பல நாட்கள் பிறகு போகும். இந்த வழிதான் ராசைய்யா கண்டு கொண்ட குடும்பக்கட்டுப்பாடு. நம்பமுடியாத கருத்தடை மாத்திரைகளைவிட இந்த வழி ஒரு நல்ல முறையென அந்த முரடன் கண்டு கொண்டான்.
இப்படியாகத்தான் இல்லையில்லை என்னாமலாக எல்லாவித கொடுமைகளும் ராசையாவினால் அவனது மனைவியர்களுக்கு இருந்து
கொண்டிருந்தது. இவ்வாறு ஏழுதலை நீட்டியவாறாய் ஏழுவருடங்கள் கடந்தன. ராசையாவுக்கு அவன் வேலை செய்த இடத்தில் பதவி
ஓஅவனால் முடியும் 94.

உயர்வும் கிடைத்து. சம்பள உயர்வும் கிடைத்தது. அதனால் இனி இந்த கொடுமையெல்லாம் என்மனைவியருக்கு செய்வதில்லை என்ற ஒரு முடிவுடன் பச்சை நிறம் படர்ந்த ஒரு துண்டுத்துணியில் நேர்த்திக்கடன் வைத்து சுருட்டிச்சுற்றி பிறகு கட்டில் காலிலே அவன் அதைக் கொண்டு போய்க் கட்டினான்.
தனக்குக் குழந்தைகள் வேண்டுமென்ற அவனது வேண்டுதல், அதனாலே பலித்ததோ என்னவோ, அது ஏதும் சொல்ல ஒரு பெரிய விஷயமில்லை. ஆனாலும் என்னவோ- அவனின் இரு மனைவியருக்கும், பிறகு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர். அந்தப் பிள்ளைகள் இருவருக்கும் மென்மையான குருத்து விரல்கள். அழகான பிள்ளைகள் தான். அந்த இருபிள்ளைகளுமே தாயின் பதிவு மாறாதமாதிரி அசல் அவர்களைப் போலவே கண்ணும் மூக்கும் ஒத்ததாய் இருந்தார்கள்.
ராசையா அதற்குப் பிறகு தன் பிள்ளைகள் இருவரையும் நன்றாகத்தான் பராமரித்து வளர்த்தான். பெண் பிள்ளைகளென்றாலும் அவர்கள் இருவரையும் உயர்கல்வி பெறும் அளவுக்கு முன்னேற்றமாய் வைக்கப் படிப்பித்தான். பிள்ளைகளும் அக்கறையாக - சர்வகலா சாலையிலும் சென்று கல்வி கற்று முடித்துக்கொண்டார்கள். பிறகு அவர்கள் இருவருக்கும் ஆசிரியர் வேலையும் கிடைத்தது.
ஆனாலும் அவர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்க்கையானது ஒரு துயரமுள்ளதாகவே தெரிவுபட்டது, இந்த வாழ்க்கையை இனித் தங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியாதெனவும் அவர்கள் நினைத்தார்கள். படிப்பிலும் உத்தியோகத்திலும் தங்களுக்கு உண்டான இந்த முன்னேற்றத்திலும் - தங்கள் தகப்பன் செய்த அந்தக் காரியம் வந்து தங்களை முள் அடர்ந்த வனத்துக்குள் தள்ளித்தங்களை விடப்பட்டதாய் அவர்களுக்கு இருந்தது.
“எந்தப்பக்கம் நாங்கள் போனாலும் இந்த எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு கேடு - எந்த ஒருவர் வாயினிலும் வந்து எங்களைக் கூரிய முள் குத்தியது போல இதயத்தைகுத்திக் கிழித்துவிடச் செய்கிறதே?’ என்றும் அவர்கள் மிகு கவலைப்பட்டார்கள்.
95 நீ.பி.அருளானந்தம்

Page 50
“இந்த முள்கள் மீது நாங்கள் இரு சகோதரிகளும் எவ்வளவு காலம் நடக்க வேண்டியிருக்குமோ? - இந்தவடு எப்போதுதான் எம்மை விட்டு மறையுமோ?”
என்றும் அவர்களுக்கு மனக்குழப்பமாக இருந்தது. தங்களைப் பெண் பார்க்க வருபவர்களெல்லாம், உள்ள இந்தக் குடும்பக் கேட்டை அறிந்ததும், அந்தப் பேச் சிலிருந்து விலகிப்போய் விடுகிற நிலைமையைக்கண்டு அவர்களுக்கு பிறகு தங்கள் தகப்பனின் மேலேதான் கடூரமான கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது.
இதனால் தங்கள் தகப்பனை அவர்கள் மூஞ்சியில் அடித்தது மாதிரி எப்போதுமே கண்டபடியாய்ப் பேசத்தொடங்கிவிட்டார்கள். ராசையாவின் இரு மனைவியருக்கும், தங்கள் இரு பெண் பிள்ளைகளும் வளர்ந்து சம்பாரிக்கத் தொடங்கியதும் தான் பலம் இப்போ கூடியது மாதிரி வந்தது. அவர்களும் தங்கள் கணவரைக் கதைகளிலும் தங்கள் நடைமுறைகளிலும் தீப்பந்தங்கள் சுழற்றுவது போல பலவித செய்கைகளைச் செய்து தங்கள் கணவரை தூரவிலக்கிப்போடு மளவிற்குச் செய்து கொண்டிருந்தார்கள்.
தாயப் பிள்ளைகள் இப்போ தாங்கள் ஒரு பக்கமாய் ஒற்றுமையாய்ச் சேர்ந்து கொண்டார்கள் - ஆனால் வயது போன நிலைமையில் ராசையா தான் இப்போது தனியனாக குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிலைமையில் வந்து விட்டான்.
அவனுக்கு இப்போது வீட்டுத்திண்ணையிலேதான் படுக்கை - சாப்பாடு! இவனைக் கண்ணால் பார்க்கும் போதெல்லாம் - மனைவி யருக்கும் பிள்ளைகளுக்கும் ஒருமனவெறுப்பு. இவனுக்கு அதன் காரணமாக இந்த உலகத்தின் மீதே ஒரு வித வெறுப்பு வாழ்க்கையிலும் கூட வெறுப்பு, ஏனோ தானோ என்ற அளவிலேதான் அவனின் இப்போதைய வாழ்க்கைச் சீவியம்.
இந்த நிலையில் தமையனைக் கூட அவன் அங்கே சென்று
ஓஅவனால் முடியும் 96

எட்டிப்பார்ப்பது கூட இல்லை. அப்படியாக தன் சகோதரத்தையும்
இவன் வெறுத்துவிட்டான்.
நெடுகவமே இப்படித்தான் காடு மேடென்று பகலிலே அவனுக்கு
இப்போது எங்கேயாவது நடந்து திரிந்து அலைகிறவேலை தான்.
பின்னேரப் பொழுதுபட்ட நேரமாய் இப்போது அவன்
தேடிவருகிறதான ஒரு இடம், ஊருக்குள் ஒதுங்கிய ஒரு இருளுக்குள் இருக்கிற அந்தக் காளி கோயில் உள்ளதான இடம்தான்.
அங்கே அந்த கோயிலுக்கு முன்னாலே மஞ்சள் 'பூ'
அரலிமரம் ஒன்று பெரிதாய் வளர்ந்து நிற்கிறது. நிறையப்பூ அதிலே! அவன் அந்தக் கோயில் படியிலே போய் கொஞ்சம் நேரம் அதில் இருந்தால் - முன்னைய வாழ்வின் சம்பவங்கள் ஒருவித பறை முழக்கத்துடன் அவனுக்கு அப்போது ஞாபகத்தில் வரும். அது அவனுக்குக் கவலைதான்! என்றாலும் அந்த மஞ்சள் நிற பூக்கள் அவன் கண் பார்வையில் பட்டுக்கொண்டிருப்பதில் அந்தக் காட்சி எப்போதுமே அவன் புண்பட்ட மனதினை சற்றே காயம் ஆற்றிவிடத்தான் செய்வதாக இருக்கும்.
(2011)
97 நீ.பி.அருளானந்தம்

Page 51
சுனாமி நினைவு (நிலைக்கும்)
சினாமி வந்ததற்குப் பிறகு, கந்தப்புவின் தோட்டத்து நிலத்தின் தன்மை உப்பாகி விட்டது. அதை விற்போமென்று அவர் பார்த்தால், கடல் அலை அடித்துப் போன அந்த நிலத்தை எவரும் நல்ல விலைக்கு வாங்குவதாக இல்லை. அடிமாட்டு விலைக்குக் காணியை விற்க கந்தப்புவும் தயாராயில்லை.
கண்ணிரில் கிடந்து நனைந்து கொண்டிருக்கும் நிலைக்கு கந்தப்புவின் மனைவி செல்லம்மாளும் கூட இப்போது வந்துவிட்டாள். தொலைதூரத்தில் வாழ்க்கைப்பட்ட மகள் தாய் வீட்டுக்கு வந்து போகிற போது, தாய்க்கும் தகப்பனுக்குமென்று கொஞ்சம் காசு கொடுத்து விட்டுப் போவாள். தோட்டம் ஏதுமில்லாத நிலையிலே இப்படித்தான் அவர்களுக்கு வாழ்க்கை கஷ்ட சீவியமாகப் போனது. இருக்கிற துண்டு துண்டுப் பவுண் நகைகளை சிறிது சிறிதாக விற்று விற்றுச் சாப்பிட்டு அவர்களின் உடம்பு கிடந்தது.
முன்னமென்றால் காணிக்கிள்ளேயுள்ள தென்னைமரத்திலிருந்து தேங்காயாவது அவர்களுக்கு பிடுங்கி விற்க வரும். அந்தக் காசே போதும் வீட்டுக்கு அவருக்குக் காய்கறிகள் வாங்க. அந்த ஊர் முழுக்கவும் இந்த வருமானத்தைப் பற்றி அப்போதெல்லாம் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தச் சுனாமி வந்தான பிறகு ஆசுவாசித்துநின்ற தென்னைமரத்தையே முழுதாகப் பாதித்துக் கருக்கி விட்டது. இவரது காணித் தென்னைகள் மட்டுமல்ல அப்படிப்போனது. கடல் தண்ணி வந்து அடித்துப் பிறகு உள் இழுத்துக் கொண்டதான ஏகதேசமெல்லாம் அவரது தென்னைகள் பட்டுப்போன
ஓஅவனால் முடியும் 98
 

கனக் காயப் த் தான் தீப் பற்றி எரிந்தது போலாகி விட்டன. நெருப்பெரித்துவிட்டால் கூட எரிந்த பனை வடலி மீண்டும் தளிர்க்கும். ஆனால் சுனாமி வந்து கடல் பொங்கி அடித்த இடமெல்லாம் உள்ள பனைகள் கூட சில இழவு விழுந்தது போல கருகிச் செத்தும்விட்டன.
பூச்சி ராஜன்தான் முன்னம் வந்து தோட்டத்தை அழித்தான். வெள்ளாமை வயலைச் சாகப் பண்ணினான். ஆனால் இப்படிச் சூடான தாள்போல கடல் தண்ணி வந்து நிலத்தைக் கூடக் கருக்கி நாறச்செய்து நிர்மூலமாக்கி விட்டுப் போனதைத்தங்கள் தோட்டத்துக்கு தண்ணீர் விடும் அந்த நேரமெல்லாம் நினைத்து அந்த இடத்து விவசாயிகள் கண்ணி விட்டுக்கொண்டிருந்தார்கள். மூளை நரம்பு தெறிக்கிற அளவுக்கு இதையெல்லாம் தங்களுக்குள் அவர்கள் யோசிக்கவும்தான் செய்தார்கள்.
உடம்புத் தேய்வை ஒவ்வொரு நாளும் உணருகிற வயது போன காலம் தான் இப்போது கந்தப்புவுக்கு ஒய்வாக இருந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டிய ஒரு காலம்தான் அவருக்கு நிலத்துக்குத் தான் எல்லாத்திலும் பார்க்க பெரியமதிப்பு. அதுதான் சொத்துக்களில் அசையாத சொத்து என்று அவர் மற்றவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது; இப்படியாக வந்த கேடு கெட்டுப்போன ஒரு நிகழ்வாலே எல்லோருக்கும் பிறகு கண்காட்சிகளாகி அவர் சொன்னதெல்லாம் பொய் என்றதாய்ப் போய்விட்டன. இப்போது அவ்விடங்களில் கரையோரச் சேற்று நாற்றம் மூக்கை அரிக்கிறது. அந்தக் காற்றை எதிர்க்க முடியாத அளவுக்கு திண்டாடவும் தொடங்கி விட்டார் கந்தப்பு. அவர் மட்டுமா அப்படி? அவரது மனைவி கூடத்தான் இப்படி கஷ்டமெல்லாம் பட்டுக்கொண்டிருந்தாள். கண்ணி விட கடவுள் இவளுக்கு வரம் கொடுத்து விட்டது போல ஒவ்வொரு நாளும் தங்கள் இருவரின் நிலையையும் நினைத்து இவள் அழுது கொண்டேதான் இருப்பாள்.
சுனாமி கொடிய பேய்ப் பிடியாக அழிவு செய்ததற்குப் பிறகு அந்த இடத்துச் சனங்களுக்கெல்லாம் இன்னும் கூட தங்கள் கண்ணெதிரே கண்டு வரும் காட்சியாக அவைகளெல்லாம் மனத்துள் இருந்து வரத்தான் செய்கின்றது. அவர்களுக்கெல்லாம் சங்குக் கூட்டம் ஒலிஎழுப்பியதுபோல அந்தச் சாவுகளின் அழுகை ஒலிகள் காதுகளில் இப்போதும் கேட்டபடியேதான் இருக்கின்றன. பிணங்களைக் கண்டு
99 நீ.பி.அருளானந்தம்

Page 52
அவர்கள் பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தக் கடலடியே தங்களுக்குச் சரணம் என்று வாழ்ந்த மீனவர்கள் குடும்பத்திலே தங்கள் கணவரின் பிரேதங்களைப் பார்த்து முலை பொலிந்த மார்பகம் அழல் பற்றும் படி அறைந்து கொண்டு பெரிய முழக்கம் போட்டு அவர்களில் எத்தனையோபேர் அழுதாள்கள்.
மீன்பிடிக்கும் தொழிலாளர்களிலே திரும்புதலில்லாமல் போனவர்கள் எத்தனைபேர்? இப்பொழுது கூடச் சாகக் கொடுத்த அந்த உப்புக் கடலை நினைக்க, அந்தப் பெண்களுக்கு மனத்தைப் போட்டு உறுத்தத்தான் செய்கின்றது. கடலலை வந்து அடித்துக் கிழிக்கப்பட்ட மரங்களை கவனிக்கும் போது, நீல நஞ்சு பரவி கைகால்களை இழுப்பது மாதிரி பயப்படபடப்பாக இதிலே சிக்குண்டு அனுபவப்பட்டவர்களுக்கெல்லாம் இருக்கின்றன.
5ந்தப்புவின் வீட்டுக்காணியில் வாசலுக்குத் தூரமாய் இருந்தது கம்பீரமும் இனிமை அழகும் கொண்ட ஒரு வேப்பமரம். இளம் கன்றான அந்த வேப்பமரம் அதில் நின்று காற்றுக்கு இலைகளை விசிறிக் கொண்டிருந்தது. சிலிர்த்துப் போன மாதிரி நின்ற அந்த மரத்திலிருந்து தென்றலில் உதிரும் பூக்களை கந்தப்பு சிலவேளைகளில் மனோரஞ்சித வாசத்தோடு நின்றவாறு பார்த்துக் கொண்டேயிருப்பார். அந்த வேம்பின் இலைச் சுவை அவருக்குப் பிடித்தமானது. இரண்டு மூன்று இலைத்துளிர்களைக் கூட தன் தேக சுகத்துக்காக அதிலே பிடுங்கி அவர் விருந்தாகவும் மருந்தாகவும் நினைத்து சுலபமாகச் சாப்பிட்டு விடுவார்.
அதைச் சாப்பிட்டான பிறகு உடம்புக்கு இது மருந்தாகி விடும்" என்பது மாதியான ஒரு மனத்திருப்தி அவருக்கு வரும்.
அப்படியெல்லாமாக அதிலே நின்ற வேம்பு, பிணம் மாதிரி
இப்போது தூங்கிப் போனதாய் விட்டது அவருக்குப் பெரியதொரு கவலைதான்.
முழிப்பு இல்லாத தூக்கமான நிலைக்கு இதுவும் கூட இனிமேல் போய்விடுமோ..?
ஓஅவனால் முடியும் 100
 

இதையெல்லாம் நினைத்து, கரிச்சுக்கொண்டே கிடக்கிறது அவரது மனம்
“தனக்கு கஷ்டம் இப்போது’ - என்று எங்கேயாவது அவள் கூலி வேலைக்கென்று போனால் இளம் இரத்தங்களுக்கு முன்னால் நிகராக அவருக்கு நிற்க முடியுமா? மற்றவர்கள் வேலை செய்வதோடு இவரை ஒப்பிடும்போது அவரது வேலை மிகவும் குறைவாக இருந்தது.
திடகாத்திரம் இல்லாத தன் வேலையை பிறகு அவருக்கே செஞ்சுக்குள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்னைத் தானே அந்த வேலைகளிலிருந்து அவள் பிறகு வேலை நீக்கம் செய்த மாதிரி ஆக்கிக் கொண்டு விட்டார்.
"இப்படிக் கூலிவேலைக்கெல்லாம் போய்க் கிடந்து கஷ்டப்பட வேண்டிய ஒரு நிலைக்கு என்னைக் கொண்டு வந்த்தாய் விட்டு விட்டதே இந்தக் கடல் தானே? பொங்கி வந்து அடித்த கடல் தண்ணி என்னையும் அப்பிடியே உயிரோடு விடாம உள்இழுத்துக் கொண்டு கடலுக்க போயிருந்தா எனக்கும் அது நல்லதாய் இருந்திருக்குமே? இவ்வளவு கஷ்டம் வந்து எனக்கு இப்பிடி எல்லாம் கிடந்து கொண்டு இப்ப கஷ்டப்பட வேண்டியிருக்காதே?
இந்தக் கவலைகள் அவரின் மனத்தை நிறைத்துக் கொண்டு மூச்சுக் காற்றில் வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த மண்ணில் தீயேறி, பிறகு கரியை மினுங்கச் செய்து கொண்டிருக்குமாப் போல கிடக்கின்ற அன்றைய அந்த கொடிய வெக்கை மாதிரி, அவரின் மனதுக்குள் அனேகம் சிந்தனைகள் பெருகிவந்து உறைக்க ஆரம்பித்தன.
சுனாமி வந்ததற்குப் பிறகு அழிவு நிலைமையை கணக்கெடுத்து நிவாரணம் தருவதாக அரசாங்கத்தால் அப்போது அறிவிக்கப்பட்டது. இது விடயம் ஒழுங்காக அறிய செய்தித்தாள்களைத் தேடித் தேடிப் படிப்பது அங்கேயுள்ளவர்களுக்கெல்லாம் முக்கிய தொழிலாகிவிட்டது.
கடல் தண்ணி வந்து தொட்டுப் பார்க்காத இடத்துக்காணி வீடுகளில் உள்ளவர்களெல்லாம் தங்களுக்கு இருந்த அரசியல்
101 நீ.பி.அருளானந்தம்

Page 53
செல்வாக்கிலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் இழப்புக்குப் பதிந்து லட்சக்கணக்கில் பணம்பெற்றுக்கொண்டார்கள்.
பாதிப்படைந்தவர்கள் இதை அறியவும் அவர்களுக்கு உடம்பைப் போட்டு ஆத்திரத்தில் உலுக்குவதாக இருந்தது. அவர்களைத் துக்கம் கோலோச்சியது. தமக்குக் கொடுக்கிற நிவாரணப் பச்சரிசிச் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு பிழைப்பொன்றும் இல்லாமல் கிடக்கிற இவர்களெல்லாம், அவற்றை யோசித்துப் பார்க்கையில் உடம்புக்கு பெரிய அலுப்பாக இருந்தது. வகை வகையான சமையல் செய்து மட்டனோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல்காரர்களை நினைத்து நினைத்து விளைச்சலெல்லாம், வெள்ளாமையெல்லாம், நெருப்பில் எரிந்ததைப் பார்த்த கணக்காய் இவர்களெல்லாம் ஆத்திரப் LILLITT8667.
பரபரவென்று தன்னைப் போன்ற பாதிப்புற்றவர்கள் பலரிடம் கந்தப்புவும் அந்த லஞ்ச ஊழல்கள் பெறுபவர்கள் பற்றி ஆவேசமாக விவாதித்தார். அவரின் முகமும் இந்தக் கொடுமைகளைக் கேள்வியுற்று அழுக்கடைந்து கிடந்தது. அப்படிப்பட்ட சில விதானைமார்களின் தலைகளெல்லாம் அவருக்கு கொடியகாட்டு எருமைகளின் தலைகள் போல நினைவில் தென்பட்டன.
சூழல் மாசுபட்டதால் என்னென்று வெளியே சொல்லமுடியாத படிக்கு ஒரு வித காய்ச்சல் வருத்தம் அவருக்கும் மனைவிக்கும் வந்தது. "உயிரோட இருப்பனோ இல்லையோ?” என்று தெரியாத அளவுக்கு அவர் அந்த வருத்தத்தோடு கிடந்தார். அவருடைய மனைவிக்கு இந்த வருத்தம் வந்து பாயில் கிடக்கையில், "சவமாக இப்போது தன்னை புதைத்துவிட்டார்களோ" என்ற சந்தேகம் வருவது போலவும் இருந்தது.
காய்ச்சல் நேரம் கந்தப்பு சூம்பிப் போன கை விரல்களால் மரத்துப்போன நெஞ்சுப் பக்கம் சொறிந்து கொண்டே கண்களை விழித்து முகட்டுப் பக்கம் பார்ப்பார். எரிந்து கொண்டிருக்கும் அந்தக் குத்துவிளக்கின் ஒளியிலே ஒரு மன வலிமையோடு அவருக்கு தன் வீட்டு யோசனை, "பாரன் இப்பிடி கோப்பிசமே இல்லாத மாதிரி எல்லாம் இடிஞ்சு போச்சு என்ரை வீடு. இப்ப அதுக்காக நான் போட்ட கிடுகுக் கூரை கூட ஒழுங்கா இல்லாமல் பாக்க லட்சணம் கெட்டுப்
ஓஅவனால் முடியும் 102
 

போச்சு. எப்பிடியும் இந்த வீட்டுக் கதவுகளையும் முன்னம் இருந்தது போல நான் புதுசாச் செய்து போட்டு. விதையை விருட்சமாக்கிப் பாக்கிற அளவுக்குப் பழையதா இருந்த மாதிரி இதுகளையும் திருத்தி அப்பிடியாக் கொண்டந்திர வேணும்."
இதை அவர் நினைத்து முடித்த வேளையிலே, செத்த சிலந்தியின் உடல் சீர்கெட்டுப்போன அந்தச் சுவரிலே ஒட்டிக் கொண்டிருப்பதும் அவருக்குத் தெரிந்தது.
உடலைக் குளிர் வித்த அந்தக் காய்ச்சலுக்குள்ளே புழுக்களாகப் பிறகும் பழைய பேய் வழி நினைவுகள் அவருக்கு நகர்ந்து கொண்டிருந்தன.
அவைகளை நினைக்க காய்ச்சலிலும் அவருக்கு மூச்சுக் சீறி வெளிப்பட்டது.
கடல் தண்ணிரில் தத்தளித்துக் கொண்டு, சோர் வில் பேசாமடந்தையாகிவிட்ட கன்னியர் சிலரை காடையர் சிலர் காப்பாற்றி விட்டு, அபயம் கொடுப்பதாக நடித்து அவர்களை அந்நேரம் கற்பழித்துமிருக்கிறார்கள்.
அதை அவர் அறிந்த வேளை அணை உடைத்ததாய்க் கோபத்தில் பொங்கியெழுந்தார்.
இதுமட்டமா அங்கு நடந்தது?
சேறுபட்ட உடம்போடு செத்துக்கிடந்த பெண்களின் கழுத்துத் தாலி அறுக்க எத்தனை கள்வர்கள்-புருஷன் உறவு கொண்டாடி அவர்களை கட்டிப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தார்கள். நகைகளை கழற்றிக் கொண்டு கம்பி நீட்ட மட்டும் இப்படியாய் உறவு சொல்லி அவர்கள் பிணங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்கள்.
தடம்புரண்ட ரயில் பெட்டியில் திருடும் திருடர் கூட்டம், இந்தச் சுனாமியிலும் இப்படியான தொரு திருட்டுக் கைவரிசையை காட்டத்தானே செய்தது.
தத்தமதாம் பீதியின் பேயுரு மனதைப் போட்டு ஆட்ட, இடுகாடான அவ்விடமெல்லாம் அவ்வேளை அலைந்து திரிந்தவர்கள்,
103 நீ.பி.அருளானந்தம்

Page 54
இந்த அநியாயங்களையெல்லாம் எங்கு கண்ணால் கண்டார்கள்? மனித முகமோ இடமோ தெரியாத அளவுக்கு வீறிடும் அலறலோடு சித்தம் தடுமாறித் திரிந்தவர்களுக்கு இதைக் கவனித்துப் பார்க்குமளவிற்கு மனநிலை ஒரு நிலையுள்ளதாயிருந்ததா? விழி மூடிக்கிடந்த பிணங்களுக்கு ஒப்பானவர்கள் போலத்தான் விழி திறந்து கொண்டு உயிருடன் திரிந்த அவ்விடத்து மனிதர்களெல்லாம் அவ்வேளையில் இருந்தார்கள்.
கோயிலில் காலையில் கேட்கும் பண்ணோடு தொடங்கியது மாதிரித் தானே இந்தச் சுனாமியும் அன்று தொடங்கியது. கந்தப்புவும் கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு வீடு வந்து சேர்ந்த வேளைதான் பீதியூட்டும் படி அது புயல்போல் வெடித்தது. வயது போன இந்த வேளையிலும் கூட அவரின் கூர்ப்பார்வை அந்த நேரக்கொடுமைகளை சிந்தனையில் கொண்டுவந்து நெற்றி சூடேற யோசிக்க வைக்கின்றதற்குத்தான் செய்கின்றன. எல்லாமே முள்நிறுத்தங்களாய் இருந்து மூளைக்குள் அவருக்குக் குத்துகிறதாகத்தான் இருக்கின்றன.
இப்படியெல்லாம் கொடுமைகள் நடந்து ஆகிவிட்டதன் பிறகு கடல் என்றும் போல் தன் வழியில் நின்றுகொள்ளும் என்கிற நம்பிக்கை அவருக்கு இப்போது விடுபட்டதாகி விட்டது. அலையோசை திரும்பி ஊருக்குள் வரக்கேட்கும் ஒலியாக இப்போது அவரது காதுகளில் பேரிரைச்சல் கேக்கின்றதைப் போலவே ஆகிவிட்டன.
கந்தப்புவையும் மனைவியையும் அமர்த்திக் கிடத்தின காய்ச்சல் இப்போது கொஞ்சம் உடலைச் சீராக்கி காலையில் எழுப்பி விட்டது.
கந்தப்பு செருமிக் கொள்ளக் குரலெடுக்கு முன்னம் குயிலொன்று தூரத்திலிருந்து கூவியது. அந்த குயிலின் குரல் கேட்டவுடனே தனக்கும் மனைவிக்கும் இன்னும் சிறிது காலங்கள் வாழும் தகுதி இருப்பதாக அவர் எண்ணிக் கொண்டார். உலகில் இருக்கின்ற மொத்த மனிதத் தொகுதியோடு நாங்களும் சேர்ந்து சீவிப்பம் என்ற நம்பிக்கையும் அவரில் உதயமாகியது.
துன்பம் கொஞ்சம் அகன்று, இலைக்குள்ளே கத்தரிப் பூப்பூத்தது மாதிரி சிறியதொரு மகிழ்ச்சி நினைவில் கடலொரு இறுதிப் புள்ளியாகி தூரத்திலே போய் நிற்க,
ஓஅவனால் முடியும் 104
 

இனிக்கும் ஒரு உச்சம் அவருக்கு மனதுக்குள் சுரந்தது.
அவர் இனிக்கும் ஒரு கணிமையுடன், கனடாவிலிருக்கும் தன்மூத்த மகளை நினைத்தார், அவளை நினைக்கவும் தன் உடல் தெம்பாய்த்தேறியது மாதிரி அவருக்கு இருந்தது. தன் மகள் இந்தச்சுனாமி வந்ததை அறிந்து தனக்கு அனுப்பிய அந்த 100 டொலர் றங்குப் பெட்டியில் கிடக்கின்றது என்றதை அவர் யோசித்துப் பார்க்கவும் நாவின் சுவை மொட்டுக்கள் உயிர்த்ததைப் போல அவருக்கு வந்தது. உமிழ் நீரும் முகிழ்க்க நல்ல கறிசோறுகளையும் அவர் நினைத்தார்.
"மகனாக இருந்தால் இவ்வளவு இன்னும் அனுப்பிவை என்று கேட்டு வாங்கலாம். ஆனால் கலியாணம் முடித்துக் கொண்டுபோன மகளிடம் எப்படித்தான் காசு பணம் உதவியென்று கேட்பது? ஏதோ அவர்கள் அனுப்பியதை பெற்றுக் கொண்டு நன்றி சொல்வதோடு இனிமேலும் வேண்டாம் இங்கேயெல்லாம் - எங்களுக்குத் திருப்தி என்றதாயும் சொல்லிவிட வேண்டும். அதுதானே பெண்பிள்ளையை அனுப்பிய இடத்துக்கு நாங்களும் வைத்துக் கொள்கிற மரியாதை.?"
சேற்றின் எச்சங்கள் - வீசும் காற்றில் திரும்பவும் மணக்கின்றதைப் போல அவருக்கு இருந்தது.
அந்த மணத்தில் தன் வயிற்றடியிலும் குடல் திரள்கிறது மாதிரியாக அவர் அப்போது உணர்ந்தார்.
(2010)
105 நீ.பி.அருளானந்தம்

Page 55
சாவின் வலை
தர்சன் ஒரு இளந்தாரிப் பெடியன். படிப்பென்றாப் அவனுக்குப் பெரிதாய் இல்லை. அதனால் அந்தக் கடையிலே கணக்கெழுதல் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். விடிய கடைக்குப் போனால் இரவு ஒன்பது மணியாகும் அந்த வேலை அவனுக்கு முடிவுற நேரம் இப்படி உறுஞ்சிக் கொள்வதாலே, ஒரு பொழுது போக்கும் அவனுக்கு இல்லை. இந்த நியமங்கள் மாறாமல் நாட்களும் அவனுக்கு வேகமாய் ஒடியன. அவன் வயதுக்கு ஆசைப்பயிர்கள் மனத்தில் முளைக்கத்தான் செய்கிறது. ஆனால் தண்ணிர் நிறைய நெடுகவம் நின்று பயிர்கள் அழுகின்றதைப் போல அவன் நிலை மனத்தில் நினைத்த சுகம் ஒன்றும் அவனுக்குக் கிடைத்ததாயில்லை. முறுக்கான இந்த என் வயசில் இப்படியும் ஒரு வேலையில் அடைபட்டிருக்க வேண்டியுள்ளதே என்று நெடுகிலும் அவனுக்கு மனதுக்குள் ஆயிரமாய் வருகிறது கவலைக் களைகள்.
கணக்குப் பக்க ஒற்றைகளை புரட்டுவது - கூட்டுவது - பிறகு கழிப்பது என்று, வேலையும் அக்கப்போராய் இருந்தது அவனுக்கு. வேலைநேரம் அந்தப்பொழுதைச் சுமக்க அவனால் முடியவில்லை. எல்லாமே சிக்குப் பிடித்த மாதிரியாய் இருந்தது.
ஓஅவனால் முடியும் 106
 

அவன் வேலையாயுள்ள கடைக்குத் தினந்தோறும் அழகான பெண்களாய்த் தெரியும் எத்தனை எத்தனை அழகிய முகங்கள் உடையோர் வருகின்றனர். அவனுக்குச் சவால் விடுகிற மாதிரியும் எத்தனையோ பெண்கள் பார்க்கிறார்கள். ஆனாலும், தானும் மாட்டிக்கொள்ள மாட்டேன் என்றதாய் இவனும் சுருண்டதாகி விடுகிறான். இருந்த இருக்கையிலே சாய்ந்த குனிவோடு குப்பென்று இருந்து விடுகிறான்.
ஆனால் ஒன்று சந்தேகமில்லை அவனைப் பற்றிச் சொல்ல. இன்னொருமுகம் தனக்குப் பிடித்ததாய் கடைக்கு வராதா? - என்று அவன் தேடுகிற அளவுக்கும் இருக்கிறான்.
என்றாலும் அவனிடம் உள்ள அந்த எதிர் பார்ப்பு வீண்போகவில்லை. ஒரு நாள் வெளிச்சங்கள் பிறந்ததுபோல அவனுக்கு இருந்தது. கடையில் அவன் வேலையாய் இருந்த வேளை, தற்சமயம் வெளி வீதியிலும் பார்வையை விட்டான். அந்நேரம் வீதியிலே போய்க்கொண்டிருக்கும் அவளைக் கண்டதும் தன் உணர்ச்சிகளை யெல்லாம் அவனுக்கு சாவிபோட்டுத்திறந்தது மாதிரி இருந்தது. உடனே விரல்கள் அவனுக்கு பேனாவை பிசைந்தது. ‘என்ன நடை! என்ன ஒயில் என்ன அழகு! இந்தப் பிரதேசத்தில் இப்படியும் ஒரு அழகான பெண்ணா” - அவனுக்கு வியப்பாகிவிட்டது. உடனே அவள் மேல் அவனுக்கு விருப்பமாகியும் விட்டது.
இனி அவளைப்பற்றிய விபரம் பூராய் அவன் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமையன்று அவனுக்குக் கடைபூட்டு. அதனாலே அன்றைய நாள்மட்டும் அவனுக்கு லிவுதான். 'அந்தந்த நேரம் அவள் டியூசனுக்குத்தான் அதாலே போகிறாள்' என்று அவனும் கேள்விப்பட்டு வைத்திருந்ததாலே லிவான அன்று அவன் அவளை டியூசனுக்குப் போகிறபோது சயிக்கிளில் பின் தொடர்ந்தான். அவளைக் கடந்து போகும் போது, சிரித்துக் கொண்டு அவன் அவளைப்பார்த்தான். அப்படி அவன் பார்க்கும் போது, சீறும்காளியாக அவள் இல்லை. இவனும் அழகன்தானே. பழக்கமாக இவன் இல்லாவிட்டாலும் அவளும் என்னவோ பார்த்துச் சிரித்தாள். ஆரம்பத்தில் இந்தச் சிரிப்பு வரும்
107 நீ.பி.அருளானந்தம்

Page 56
கிழமைகளிலே போகப்போக இருவருக்கும் வலுவாகிக் கொண்டே வந்தது. ஏதேதோ பாவனைகளோடு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கதைபேச்சும் இருவரிடமும் தொடங்கிவிட்டது. மெழுகாய்த் தளர்கிறமாதிரி காதல் கதை பேச்சும் பிறகு ஆரம்பமாகியது.
நாளடைவில் இருவரினது காதலும் மிக மிக வேகமாகிவிட்டது.
கடையில் ஒரு மேசையில் தனியே உட்கார்ந்து வேலை செய்யும் அவனிடம் அவள் வந்து கதைத்துப் போகவும் தொடங்கிவிட்டாள். அவனுடன் அவள் கதைக்கும்போது விழிகள் அவளுக்கு கரும் திராட்ஷைகளாகப் பளபளக்கும் இதழ்களைப் புஷ்பித்து விரிப்பதுபோல கதைக்கும்போது அவள் மிக அழகாக வாய் அசைப்பாள்.
"தகி தகி" - என்பது மாதிரித்தான் அவ்வேளையில் இன்பத்திலே புரண்டபடி அவன் மனம் பகீர் - என்று தனிச் சிவப்புக் காட்டும் தணல் மாதிரித்தான் இன்பச் சூடும் அவனுக்கு உடல் வழியே பரவி விரவும்.
‘ஓ’ இப்படித்தான் இந்தக் காதல் விஷயம், அந்த அளவுக்கு இருவரிடமும் பிறகு முற்றி விட்டது. எங்கள் விஷயம் யாருக்குத் தெரிந்தால் என்ன? என்ற துணிச்சலில் 'ஐஸ்கிரீம்' - பாருக்கும் அவர்கள் ஒன்று கூடிப் போகத் தொடங்கினார்கள். காதல் இப்போது இருவருக்கும் சூடு பிடிக்கத்தொடங்கியது. ‘இனி இவனே தான் என் கதி” - என்று அவளும் நன்றாக நம்பிக்கொண்டாள். அவனும் - “எனக்கு நிதான்வேணும் - எனக்கு நீதான் வேணும் வேணும் வேணும்' - என்று எந்த நேரமும் அவளுக்குச் சொல்லத் தொடங்கினான்.
இன்னும் அவளை "தான் சந்திக்க, ஆறுதலாக இருந்து அவளுடன் கதைக்கப் பேச என்ன ஒரு வேறு வழி உண்டு தனக்கு” - என்று அவன் வலுவாக பிறகு யோசிக்கவும்தொடங்கினான். “இதற்கு எனக்கு ஒரு வழியொன்று நீதான் சொல்லித்தரவேண்டும்?” - என்று தன் நண்பனிடமும் போய் அவன் யோசனையையும் கேட்டான்.
“இதற்குச்செய்து கொள்ள - இப்படி ஒரு வழியுண்டு”
ஓஅவனால் முடியும் 108

என்று அவனுக்குச்செய்து கொள்ள ஒரு திட்டத்தை செந்தூரன் தீட்டினான்.
"உனக்கு இப்போது உன்காதலின் வேகத்தாலே உடல் முறுக்கேறத் தொடங்கியிருக்கிறது. எதையும் செய்யத் துணிவும் உனக்கு இப்போது வந்துள்ளது. காதல் வேகம் ஏற்பட்டவனிடம் இதெல்லாம் சகஜமாக உள்ளவைதான். காதல் போதையிலே உள்ளவர்களுக்கு இப்படித்திடீர் மூட்டங்கள் கவியும் தான்! நான் சொல்வதெல்லாம் இந்தக் காதல் என்ற விஷயத்திலே எங்கும் நடக்கின்ற உண்மை படைத்த உண்மைமேல் உள்ளதான சம்பவங்கள் தான்! காதலர்களிடம் இப்படித்தான் சந்திப்புகள் நடப்பது என்பது எப்போதும் எங்கேயும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.பயத்தின் உச்சம் உள்ளவனுக்கு காதல் ஒன்றும் சரிவராது. அவன் காதல் எப்பவுமே ஈடேறாகாது. எனவே நான் சொல்லும் ஐடியாவை நீகேள்! இப்படி அனுதினமும் அவள் யோசனையில் கிடந்து செத்துச் செத்து மாளாமல், நேரே அவளைச் சென்று சந்தித்து நீ தனிமையில் அவளோடு சந்தோஷத்தை அனுபவி! இது பனிக்காலம் தானே? - லேசான ஒரு குளிருமிருக்கு அவள் வீட்டுக்கு மணி எட்டுப் போல் இரவு தோட்டத்தால் புகுந்து களவாய்ப் போக உனக்குச் சரிப்படாது. மணி ஒன்பதும் சரியில்லை. இந்தநேரமும் வீட்டில் மற்றவர்கள் வாய் பிளப்போடு நித்திரை கொள்ளார்கள். ஆனால் பத்து மணி என்பதில் உனக்கு ஒரு தென்பிருக்கு வசதியிருக்கு அவளை நீ தனியாக வீட்டு அறைக்குள் சந்தித்து இஷடமான படியெல்லாம் பேசிக்கொள்ள இதுதான் ஒரு ஆரோக்கியமான திட்டம். இதற்கெல்லாம் உன் கூட இருந்து உதவிபுரிய நானும் உன் கூட வருகிறேன். உன் நண்பனாக உள்ள நான் இந்த ஒரு சின்ன உதவியும் செய்யப்படாதா?’ என்ற அவன் பேச்சு இவனுள்ளே உள்ள ஏதோதோ ரணங்கள் ஆற்றும் தைலம்போன்ற மருந்தாய் அவ்வேளையில் இருந்தது.
சிரியென்று ஓம் பட்டு அவனும் நண்பனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான். மூன்றாம் நாள் அன்று இரவு கிரிஜா வீட்டு மதிலுக்கு மேலால் ஏறி உள்ளே பாய்ந்து இருவரும் பூந்தோட்டத்துக்குள்ளே ஒழித்துக்கொண்டார்கள். செந்தூரன் தான் தோட்டத்துக்குள்ளே அவன்
109 - நீ.பி.அருளானந்தம்

Page 57
திரும்பி வரும் வரையும் காவல் இருப்பதாக சொல்லி அவனை கிரிஜா வீட்டுக்குள் நுழையுமாறு சொன்னான். முள்ளுக்குள் கிடக்கும் பனம் பழத்தை கைவிட்டு எடுக்கவோ, விடவோ? என்கிற மாதிரியாய் தர்சனுக்கு இப்போது இருந்தது. அவள் வீட்டின் அந்தப் படுக்கை அறைக்கு "போவோமோ விடுவோமோ? - என்று அவனுக்கு யோசனை! அதோடு பயம் வேறு. தன் நண்பனும் திரும்பிப் போக இனிமேல் சம்மதியான் என்பதும் இவனுக்குத்தெரியும். இதற்குள் ஆசைமனமும் அவனுக்குப் படபடவென்றதாய் அடித்துக்கொண்டிருந்தது. இந்த மூன்று நாளாக அவளுக்கும் எல்லாம் சொல்லிச்சொல்லி மனதில் அவளுக்கு பதிய வைத்திருந்ததாலே முறைப்படி அவளும், எல்லாம் கதவுகளைத் திறந்து வைத்திருப்பாள் என்பதும் இவனுக்கு நம்பிக்கை.
கிரிஜாவின் தகப்பனும் வெளிநாட்டில் தான் இப்போது இருக்கிறார். அடுத்தது கிரிஜாவோடு இந்த வீட்டில் இருப்பது தாயும் அவளின் சின்னத் தம்பியும் தானே. ஆனால் அவள் தாய் மாமனொருவர் இந்த வீட்டிலிருக்கிறார் துணைக்கு. வயசாளி அவர். அவரும் “நேரம் போனால் நல்ல நித்திரையாகிவிடுவாராம்' - கிரிஜாதானே அவனுக்கு இந்த நியூசெல்லாம்சொல்லி வைத்தது.
தர்சன், கிரிஜா தனக்கு சொன்னவைகளை நினைவில் வைத்துக் கொண்டு, மனப் பலம்பெற கை விரல்களை இறுக்கிப் பொத்தினான். நின்ற நிலையிலிருந்த அவன் பூஞ்செடிமறைப்பில் குந்திக்கொண்டிருந்த தன் நண்பனை திரும்பிப் பார்த்தான். செந்தூரன் உடனே "நீ போபோ’ என்றதாய் விரைவாக தன் கையை அசைத்துக் காட்டினான். தர்சன் உடனே 'தன் கால் செருப்பு' - என்று அதை உடனே நினைத்து, சற்றே ஒருகணம் தயங்கினான். உடனே போட்டிருந்த செருப்பை கழற்றியும் விட்டான். உயரமான செடிகளுக்குள்ளால் பிறகு பதுங்கிப் பதுங்கி அவன் முன்னால் நடந்தான். எப்படிப்பதுங்கிப் பதுங்கி அதுக்கு ஸ்ளாலே நடந்தாலும் தான் உயரமாகி விடுவதைப் போல அவனுக்கு பிரமையாக இருந்தது. இடுக்குகள், இருட்டுக்கள், என்று - இதுவரை அவன் போய்ப்பழகாத அந்த வீட்டுக்குள் இருப்பவைகளை சந்தித்து எப்படி அவள் அறைக்குள் போய்ச் சேருவதென்று அவனுக்கு ஒரே குழப்பமாகவும் இருந்தது.
ஓஅவனால் முடியும் 110

நெஞ்சு கலங்கி என்ன வருமோ என்று அவனுக்குப் பயமாகவும் இருந்தது.
என்றாலும் விரிவாகிக் கொண்டிருக்கும் இருட்டுக்குள்ளாலே, மனத் துணிச்சலுடன் சென்று கிரிஜாவின் வீட்டுப் படுக்கை அறைக்குள்ளும் அவன் நுழைந்து விட்டான். தனியே தான் அவளும் அந்தப் படுக்கையறையில் “உங்களை என் அறைக்குள்ளே வரக் கண்டதும் இருட்டுக்குள் எனக்கே வேர்க்கும் சுபாவமாய் வந்து விட்டுது’ - என்று அவள் தனக்குக் கிட்டவாய் வந்த அவனின் காதுகளில் ரகசியமாகச் சொன்னாள். “உங்களைக் கலியாணம் முடிக்கக் காத்திருக்கும் வரை நீங்களும் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள்’ என்று அவனுக்கு அவள் ஒரு இதவாய்க் கனிவாய் உணரவும் பிறகு சொன்னாள்.
இரவு நடுநிசி கடந்தும் இருவரும் ஓயாது களைப்பில்லாமல் கதைத்துக் கொண்டிருந்தார்கள் கிரிஜாவின் மனம் இருந்தாற்போல எச்சரிக்கைக்கு ஆளாகியது. பிரிவு கஷ்டமாயிருந்தாலும் - தர்சனைப் பார்த்து அவள் “இது நித்திரைகலையிற ஒரு மோசமான நேரம்! முழிச்சிடுங்கள் இப்ப ஆரும்! - அதால நீங்கள்போங்கோ போங்கோ பிளிஸ் பிளிஸ்.” - என்று சொல்லத்தொடங்கிவிட்டாள்.
அவனுக்கு உன்னிப் பார்க்கப் பார்க்கவும் இருட்டுக்குள் அவளின் முகம் தெரியவில்லை. இப்போ அவனுக்கிருக்கிற ஆசைக்கொதிப்பில், அவளை விட்டு அவனுக்குப் பிரியவும் கூட மனம் இல்லை. நரம்புக் கொடிகளின் முறுக்கோட்டத்தால் மனப் பலமும் அவனுக்குள் கூடி “கழுத்தில் எனக்கு ஆரும் சங்கிலி போட்டுக் கட்டி தூக்கி கொன்று விட்டாலும் பரவாயில்லை' - என்பது போல் காதல் போதையில் அவனுக்கு ஒரு முரட்டுச் சுபாவமும் வந்தது.
என்றாலும் அவன் அவளின் சொல்வழியைக் கேட்டுக்கொண்டு அவளின் படுக்கை அறையை விட்டு வெளியே மீண்டான். நெஞ்சை ஆணியால் கிழித்தது போல அவளைப் பிரியும் வேதனை அவனுக்கு அப்போது இருந்தது. இருட்டுக்குள் தாண்டித்தாண்டி கால்களை வைத்து
111 நீ.பி.அருளானந்தம்

Page 58
நடக்கும் போது அந்தரத்தில் மையிருளில் தொங்குவது போலவும் அவனுக்குக் கஷடமாக இப்போது இருந்தது.
”ரொம்ப ரொம்பக் கவனம்! - எதிலயாவது தட்டுப்பட்டால் - போச்சு நீயே மாட்டிக்கொள்வாய்' - என்று மனம் அவனுக்கு எச்சரித்துக் கொண்டே இருந்தது.
அவன் நடந்து போகிற இடத்திலே 'புக் புக்” - என்று. புகைந்த கணக்கிலேயாய்க்கேட்கிறமாதிரி விடும் மூச்சுக்களின் சப்தம்
இருள் அலைகளாயுள்ள அந்த இடத்தில் ஒன்றுமே கண்களுக்கு அவனுக்குத் தெரிய வில்லை நடக்கும் போது இருள் கிடங்கு மாதிரியான இடத்தில் காலைவைத்து, இடிந்து சரிந்தது போல, கீழே அவன் விழுந்து விட்டான்.
விழுந்ததில் தனக்குத்தானே உலைவைச்சாச்சு மாதிரி இருந்தது அவனுக்கு. அந்தச் சக்கைச் சதைமேலேயா அவன் போய் அவ்வேளை விழவேண்டும்? விதியா இது? பிறகு என்னவென்று தான் இதைச் சொல்வது? அதிலே படுத்துக்கிடந்தவர் பாம்பு சீறி எழுந்தது மாதிரி எழுந்து விட்டார். இருட்டுக்குள்ளே துளாவிப் பிடித்துவிட்டார் இவன் கையை, 'மாமாவா? மாமாவா?’ நினைவு ஓடியது உடனே அவனுக்கு. உடனே உதறி எறிஞ்ச மாதிரி அவன் தன்கையை பிடித்த அந்தப் பிடியிலிருந்து பறிக்க முயன்றான் - விழித்த முதல் உணர்விலே பிடித்தபிடியென்றாலும் தளராததான இரும்புப் பிடி அது! தெறித்துக் கொண்டு ஒட கையை நெளித்து விடுபட அவன் பாத்தான், முடியவில்லை.
கடைசியாக ஒரு செய்கை வீங்க அடிகொடுத்தமாதிரி, அந்த இருட்டுடம்புக்கு தன் காலால் ஒரு உதை அவன் உதைத்தான். அறைஞ் சிட்டதான அந்த உதையோடு அவனைப் பிடித்த அக்கை விடுபட்டது.
ஓஅவனால் முடியும் 112

பிறகு பிராணன்போகிற அளவுக்கு மூச்சுவாங்கவாங்க அந்தப் பூந்தோட்டத்துக்காலே புகுந்து அவன் நேரே ஒரே ஒட்டா ஒட்டம் இதிலே முதலில் மதிலேறி வெளியே தொப்பென்று பாய்ந்தவன் செந்தூரன் தான் ஓடிவந்த களைப்புடன் கை கால் பதறினாலும் - தர்சனும் மதிலுக்கு மேல் ஏறி அங்காலிப் பக்கமுள்ள சருகுக் கூளங்களுக்கு மேல் குதித்து விட்டான்.
ஒரு பூதம் திரண்டு உருவாகி தங்களைத் துரத்திவந்து, விழுங்க வருவதைப் போல, நண்பர்கள் இருவருக்கும் அப்போது இருந்தது. அதனால் குழி, குன்று, என்று ஒன்றும் பாராமல், விழுந்தடித்துக் கொண்டு ஒரு பக்கம் விழிபிதுங்க அவர்கள் ஓடினார்கள். இவர்கள் ஓடும் சத்தத்தைக்கேட்டு ஊர் நாய்கள் எல்லாம் ஒண்டடிமண்டடியாய்க் குரைக்கத் தொடங்கிவிட்டன. அந்த குரைப்புகளுக்கிடையேயும் ஒரு நாயின் ஊளை பெரிதாகக்கேட்டது. ஒடிப் பாய்ந்து அந்த இடத்திலிருந்து தப்பிவிட்ட தங்கள் விஷயம் ஒன்றும் ஆருக்கும் பிடிபடவில்லை என்று நண்பர்கள் இருவருக்கும் ஒரு நிம்மதி. ஆனால் கிரிஜா மாத்திரம் இரண்டு நாள் கழித்து, அவனை முழு வெளுப்பான முகத்தோடு கடையில் வந்து சந்தித்தாள்.
"தன்னை உடனே கனடாவுக்குப் போக அனுப்ப ஒழுங்குகளை திடுதிடுவென்று செய்கிறார்கள்’ என்று தன் நெற்றியில் வேர்வை அரும்ப, தன்னை ஒரு பரிதாபமாக அவன் காண ஆக்கிக் கொண்டு அவள் சொன்னாள்.
கடையில் வைத்து அவளை, சமாதானப்படுத்திக் கதைக்க சூழ்நிலை அவனுக்குச் சரிவரவில்லை. "நீர் இப்பபோம். போம். நான் ஒருவழிய உடன யோசிக்கிறேன்” - என்றான் தர்சன்.
"அப்படி இனிஇல்ல என்னைச் சந்திக்கிறதும் உங்கக்கு இனிக் கவஷ்டம். ரியூசனும் எனக்கு முற்றா நிப்பாட்டியாச்சு.’ என்று பெரும் மூச்சுடன் அவள் சொன்னாள். அவனுக்கு திக்கென்றிருந்தது.
ஊறும் வேதனையுடன் ஊமையாக குறைந்து ஒரு கணம்
113 நீ.பி.அருளானந்தம்

Page 59
அவன் இருந்தான். மெதுவாய் பிறகு “என்ன இதுக்கு செய்வம்'- என்று அவளை அவன் கேட்டான். 'என்னளண்டாலும் உடன ஒரு முடிவெடுங்கோ, நான் எதுக்கும் உடன்பட்டு வாறன்! இப்ப நான் இதால நிக்காமப் போறன்! ஆரும் கண்டால் உள்ள தெல்லாம் பேந்து குழம்பிடும்.”
சொன்னகையோடு அவள் கடைக்குள் இருந்து வெளியே போய்விட்டாள். ஆனாலும் தர்சனுக்கு அவள் அந்த இடத்தை விட்டுப் போயும் - அவள் இன்னும் அதிலே நின்று கொண்டிருப்பதைப் போலவே ஒரு பிரமையாய் இருந்தது.
“வெளிநாட்டுக்கு என்னை அனுப்பப் போகிறார்களாம்”
என்று அவள்சொன்ன அந்தக் கன்னத்து அறையை, தாங்கிக் கொள்வது அவனுக்குக் கஷடமாக இருந்தது. அதுவே அவனுக்குப் பெரியதொரு தாக்கமாகவும் இருக்க, வேலைக்கும் உடனே லீவு போட்டுவிட்டு, நண்பன் செந்தூரனை சந்திக்க அவன் அங்கே ஒடிப்போனான். அங்கே நண்பனைக் கண்டதும் தன் மூச்சும் பேச்சும் திணற, "இப்படி இப்படி - என்று தன் முழுவிசயத்தையும் அவன் சொன்னான்.
செந்தூரன் அவன் சொல்லச் சொல்ல, அவன் முகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இதுவரை சாவு உனக்கு வரேல்ல - இனித்தான் அது உனக்கு வரப்போகுது’ - என்று ஏதோதனக்குள் நினைத்துக்கொண்டு தர்சனுக்கு அவன் இதை சொன்னான்.
“என்னடா விசரன் மாதிரி நீ ஏதோ எனக்கு சொல்லுறாய்?”
“ஏதோ ஒண்டும் நான் சொல்லேல்ல. உனக்கிது விளங்கேல்ல எண்டு சொல்.’
“ஒரு சனியனும் எனக்கு விளங்கேல்ல . நீ விளங்கிறமாதிரி எனக்குச்சொல்லன்.'
ஓஅவனால் முடியும் 114

“அதுதான் இப்ப நான் உனக்குச் சொல்லப்போறன். நீ தற்கொலை செய்ய நஞ்சுமருந்தக் குடிச்சமாதிரி நடிக்கப்போறாய். அதுக்குக் காரணம் அவள் தான் எண்டு, ஒரு கடிதம் கூட நீ அதுக்கு எழுதிவைக்கப் போறாய்”
"அப்படி நடிச்சா என்ன நன்மை எனக்கு வரும்.”
“என்ன வருமோ..? அவள் வெளியில போக ஏலாத அளவுக்கு சிக்கலை நீ உண்டாக்கலாம்.!’ s
"அப்பிடிச் செய்திட்டு.?”
“அவள முதல் போக ஏலாம நீ நிறுத்த வேணுமே? அவள் இங்க இருந்தாத்தானே பிறகு வேற ஏதாவது பிளான் நாங்க வைக்கலாம்.?”
-"அதுக்கு இப்ப நான் என்ன செய்ய.”
அவன் மூக்குநுனி சுருங்க கேட்டான்.
“இது ஒண்டும் வனவாசம் போற அந்தக் கதைமாதிரி பெரிய கஷ்டமில்ல! ஒரு சிம்பிள் சிம்பிளான வேல. முதல் நீ நான் சொன்ன மாதிரி ஒரு கடிதம் எழுதி அதைப்பொக்கற்றுக்க வை1 பிறகு, மண்ணெண்ணயால வாயக், கொப்புளி - அதுக்குப்பிறகு ஒரு அரலிக் கொட்டையைக் கடிச்சு உன்ர வாய்க்க வைச்சுக் கொள், அது காணும் நான் உன்ன மருந்து குடிச்சுப்போட்டானெண்டு ஆசுப்பத்திரிக்கு சயிக்கிளில கொண்டோடிப்போய் விடுறன். அங்கயும் எங்கயும் நீ பிடி கொடுக்காம நஞ்சு குடிச்சமாதிரியே நெடுகவம் நடி. இது கெளரவமான பொய் நடிப்பு. எதுக்கும் உன்னோட எங்கயும் நானும் தானே கூடசேர்வா உன்னோடயா இருக்கப்போறன்’
செந்தூரன் இதையெல்லாம் சொல்ல, தர்சன் அவன் கண்களைப் பார்த்தான். பழகின கண்ணாயிருந்தாலும் இப்போது
115 நீபி.அருளானந்தம்

Page 60
அவனுக்கு நெற்றிக்கண்ணாய் அவன் கண்கள் தெரிந்தன. அதனால் அவன் சொன்னவைகளை தட்டிக்கழிக்காமல் இவன் ஒத்துக்கொண்டான். பிறகு முதல் அவன் சொன்ன மாதிரியே இவன் எல்லாம் செய்தான்.
" நீ உன் மூலம் தான் இப்ப மருந்து குடிச்சாய். என் மூலமா ஒண்டும் நீ குடிக்கேல்ல . அதை நீ ஞாபகம் வைச்சுக் கொள். சீச்சி சரியான மண்எண்ணெண்ணய் மணம் உன்னில இப்ப. ஏறு ஏறு நீ சயிக்கிளில பாரில இரு.”
என்றெல்லாம் சொல்லி அவனை சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு விரைவாக பெடல் உழக்கத் தொடங்கினான் செந்தூரன்.
அது கிராமப் புறந்து ஆஸ்பத்திரி. வைத்திய வசதிகள் ஒன்றும் அதிலே பெரிதாய் இல்லை. சயிக்கிள் ஓடி வந்த அவன் ஆஸ்பத்திரி முற்றத்திலே சயிக்கிளை நிறுத்தினான். "நீ இறங்கு.” -என்று சொல்லி தர்சனை அதிலே இறக்கிவிட்டு, சைக்கிளை அவன் அதிலே முற்றத்தடி மண்ணில் விழுத்தினான். “டொக்டர்டொக்டர்’ - என்று பெரிய சத்தம்போட்டு கூப்பிட்டுக்கொண்டே ஓடிப்போய் திறந்து கிடந்த ஆஸ்பத்திரி வாசல் கதவிலே கையால் சத்தமாக தட்டினான். உள்ளே இருந்து கங்காணியார் தான் உடனே அந்த இடத்துக்கு ஓடிவந்தார். "என்ன என்ன?” - என்று அவரும் பதட்டமாய்க் கேட்க, ஆஸ்பத்திரி படியிலே படுத்திருந்த தர்சனை அவன் உடனே கையால் காட்டி, “நஞ்சுமருந்து குடிச்சிட்டார் இவர்’ என்று பதறிக்கொண்டு சொன்னான்.
“என்ன நஞ்சு மருந்து குடிச்சவர்.”
“அடட நான்டொக்டரை போய் கூட்டிக்கொண்டு உடன வாறன்
"அப்ப டொக்டர் எங்க.'
'பக்கத்து அவற்ற குவாட்டஸ்சில இப்ப இருக்கிறார்’
ஓஅவனால் முடியும் 116

சொன்னகையோடு அவசரமாக கையை உதறிக் கொண்டு அவர் ஓட்டமும் நடையுமாக குவாட்டஸ்ஸை நோக்கிப்போனார். அவர்போய்ச்சில நிமிடங்களுக்குள் டொக்டரும் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டார். சாப்பிட்டுப்படுத்து அரை நித்திரைக் குழப்பமாகத் தெரிந்தது. - அவர் முகத்தையும் தலைமயிரையும் பார்க்க.
அவர் அதிலே வந்து சேர்ந்ததும் தான், "இவரை இப்ப உள்ள வாட்டுக்க அங்க உடனே கொண்டு போங்கோ' - என்று கங்காணிக்குச் சொல்லிவிட்டு உள்ளே அவர் பிறகு போய் விட்டார். கங்காணியும் செந்தூரனும் சேர்ந்து தர்சனை தாங்கும் பிடியிலே நடத்திக் கொண்டுபோய் வார்ட்டில் சேர்த்தார்கள். தர்சன் இப்போது தனக்கு அரை மயக்கம் உள்ள மாதிரித்தான் நடிப்பு. டாக்குத்தர் - "தண்ணிய நிறைய உவருக்குப் குடிக்கப் பருக்கெண்டு” கங்காணிக்குச் சொன்னார். தண்ணிரை பருக்கினால் அவனும் விழுங்கத்தானே வேணும். ஆனால் தண்ணிரை விழுங்கினதோடே, அவன் வாய்க்குள் வைத்திருந்த அரலிக்கொட்டையையும் சேர்த்து அப்போது விழுங்கிவிட்டான்.
டொக்டர் உடனே அம்புலன்ஸ்சை இங்க கொண்டாங்கோ என்று பெரியாஸ்பத்திரிக்குப் போன் பண்ணி அம்புலன்ஸ்சும் வந்து விட்டது.
தர்சனும் செந்தூரனும் இப்போது அந்த அம்புலன்ஸ்சிலே போகிறார்கள். அப்போ அவன் கண் முழித்து கேட்கிறான்.
"அட மச்சான் வாயில இருந்த அரலிக் கொட்டையையும் நான் இப்ப வயித்திக்க விழுங்கிப்போட்டனே நான் இப்ப சும்மா அநியாயமாச் சாகப்போறனே.”
"அது ஒரு அரலிக் கொட்டை தானே? நீ கவலைப்படாத இப்ப கொஞ்ச நேரத்துக்குள்ள நாங்க ஆஸ்பத்திரிக்கு போய்ச் சேந்திடுவம் தானே.”
இப்படி செந்தூரன் அவனுக்கு சொன்னாலும் - "நாங்கள் செய்யிறது ஒரு முரட்டு மோட்டு வேலையள் தானே” - என்று தன் மனதுக்குள்ளும் நினைத்து பயப்பட்டான். ஆனால் அவன் எதையும்
117 நீபி.அருளானந்தம்

Page 61
வெளிக்காட்டவில்லை.
-பெரியாஸ்பத்திரிக்கு போய்ச் சேர்ந்தால்,
-டொக்டர்கள் கேட்கிறார்கள் - "என்ன இவருக்கு நடந்த தென்று'
- செந்தூரன் சொன்னான்.
“அரலிக்கொட்டை சாப்பிட்டவர், வாய்க்க நான் அப்ப பாக்க. துண்டொண்டும் கிடந்ததது. லாம்பெண்ணையும் மணத்தது.”
பிறகு, டொக்டர் தர்சனையும் சொக்கில் - கைவிரலால் தட்டி கேட்டார் - மயக்கம் மாதிரியும் கிடைக்கிறானே அவன்.
அரை மயக்கம் வந்தவன் எப்படி உடனே வாயாலே ஒன்றை எடுத்தவுடன் சொல்லுவான்? சைகையால் காட்டுவோம் என்று தன் நடிப்பில்அவன் யோசித்தான். அந்த யோசனையோடு தன் கைகளை பக்கவாட்டில் நீட்டி ரெண்டு கை விரல்களையும் இரண்டு தரம் பொத்தி விரித்துக் காட்டிவிட்டான்.
"அப்ப இவர் திண்டது இருபது அரலிக்காய்கள்’ என்று அவனுக்கு முதல் சிகிச்சை அளிக்க வந்த டொக்டர் எண்ணிவிட்டார்.
உடனே தர்சனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்று விட்டார்கள் அங்கே ஐந்து வைத்தியர்கள் ஒன்று சேர்ந்ததாய் இவனைச் சூழவும் நிற்கிறார்கள்.
சிகிச்சை ஆரம்பமாகி அவனுக்கு மூக்குக்குள்ளாலே நீட்டுக்குழாய் ஒன்றைச் செலுத்துகிறார்கள். முதலில் விட்ட இடம் பிழைத்து மூக்குள்ளாலே இரத்தமும் வருகிறது. அவன் நோவு தாங்காமல் “ஐயோ ஐயோ’ என்ற கத்துகிறான்.
டொக்டேர்ஸ் - "ஒரு மூக்கில பைப்குழாய் போனது இவருக்கு இப்ப பிழைச்சிட்டுது’ என்று சொல்லிக்கொண்டு அடுத்த மூக்குத் துவாரத்துக்குள்ளாலே குழாயை பிறகு உள்ளே விடுகிறார்கள் அவன்
ஓஅவனால் முடியும் 118

"ஐயோ ஐயோ’ - என்று எரிச்சல் எரிச்சலாய் வர, இதற்கும் கிடந்து கத்துகிறான்.
செந்தூரனுக்கு இவன் இப்படியெல்லாம் கத்தவும் பயம் “என்னை இவன் மாட்டிவிட்டுப்போடுவானோ? உண்மையை வெளிய சொல்லிப்போடுவானோ..?” -
- அவன் பக்கத்தில் நின்றபடி "தர்சன்’ என்று தன் ஞாபகத்தைக் கொடுத்து அவனை உசார்ப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.
தர்சனுக்கு மூக்குக்குள்ளாலே போன ரப்பர்க் குழாய் உள்ளே வேர் விட்டு தன் உயிரை வாங்குவது மாதிரி இருக்கிறது. பட்டையை போட்ட டொக்டோர்ஸ் உள்ளே அவனுக்குக் கிண்டக் கிண்ட முன்னம் அவன் ஆவி பறக்கப்பறக்கத் தின்றதுகளெல்லாம் கெட்டவாசத்தோடு சத்தியாய் வாயால் வருகிறது. மூக்காலே கிண்டக்கிண்ட சத்திவரும்! சத்தி நாற்றம் ஆளைத் துரத்துகிறது. இவ்வளவுக்கும் காந்தலான அந்த வலியோடு, அவனுக்கு சத்தியாய் வெளியே வந்தது அவன் முதல் விழுங்கின அரைப்பாதி அரலிக்கொட்டைதான்.
அப்படிதேடிய கடைசியில் பிசுபிசுத்த இரத்தம் தான் இப்போது வெளியே வருகிறது. அவனை இப் படிப் போட்டு குழப்பி வாட்டிவதைப்பதையெல்லாம் இப்போது பார்த்தபடி முகம் முழுக்க மகத்தான வன்ம வெறி விரிந்து கிடக்க நிற்கிறான் செந்தூரன். நெஞ்சுக்குள் பாம்பின் வாய் திறந்தது போல நஞ்சுக்கொட்டாவியும் அவன் விடுகிறான்.
"நான் விரும்பியவளை நீ காதலித்து அடையவோ? அது நடக்கவே நான் விடமாட்டன். எனக்கும் இல்லாமல் உனக்கும் இல்லாமல், அவள் நிம்மதியா கனடா போய்ச் சேரட்டும்' - என்று குரூரமாக அவன் நினைத்துக்கொண்டான்.
அவன் படும் பாதரவைப் பார்த்து பிறகு அவனுக்கு இரக்கமும் வருகிறது.
“மண்ணெண்ணை குடிச்சப் பிறகு தான் இவர் அரலிக்கொட்டை சாப்பிட்டிருக்கிறார். ஒரு கொட்டைதான் அவர் திண்டிருப்பார் போலக்
119 நீ.பி.அருளானந்தம்

Page 62
יין
கிடக்கு அப்பிடித்தானாக்கும்.
அவன் சொல்ல - டொக்டேர்ஸ்சும் சொன்னார்கள் “வயித்துக்க இருக்கிற அரலிக்கொட்டை சாப்பிட்ட சாமான்களெல்லாம் வெளிய வந்திட்டுது. அப்ப ஒரு அரலிக்காய்தான் சாப்பிட்டிருக்கிறார். நீர்சொன்னதும் சரி.”
அதுக்கு பிறகு பெரிய டொக்டர்சொன்னார்.
'ஆளுக்கு இனி கொஞ்ச நேரத்தால நினைவு வரும் அவரை நீர்தான் பிறகு கொண்டு போய்க் குளிப்பாட்டும்?”
டொக்டர் சொல்ல - அதை மறுக்க அவனுக்கு இடமில்லை. தர்சனுக்கு நினைவு திரும்பியதும் அவனை குளியலறையில் கொண்டு போய் விட்டு நன்றாக அவனை செந்தூரன் குளிப்பாட்டினான்.
குளியலறைக்குள்ளே நின்ற வேளையில் தர்சன்செந்தூரனுக்கு சொன்னான்.
“அவள் இல்லாட்டி வேற ஆரும் ஒருத்தி எனக்குக் கிடைப்பாளவயளடா. ஆனா என்னை நீ அவளுக்காக அநியாயமாய்க் கொல்லப் பாத்தியேடா..?’ என்று அவன் தன் மனதிலுள்ளதை வெளிச்சமாய்ச் சொல்ல - நன்றாய்க் குனிந்து நிமிர்ந்து அவனுக்கு சோப் போட்டுக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த செந்தூரன், “இப்படி நீ சொல்லுற இந்தப் பக்குவம் தான் எனக்குத் தேவை. இது தான்! எனக்கும் உன்னட்டை இருந்ததாய் இனி வரப்போற நான் எதிர்பாக்கிற எதிர்பார்ப்பும். இப்ப நீ நல்லா திருந்தீட்டியாடா மச்சான்! மச்சான்' - என்று தன்னில் தான் லயித்து மனத்துக்குள் நிம்மதிப்பட்டவாறே அவன் சொல்லிக் கொண்டான்.
என்றாலும் தன் வெளிவாயால் அவன் "அடேய் லூசா சத்தம் கித்தம் நீ போடாத வெளியால டொக்டெர்ஸ்சும் நிற்கினம்.1 பிறகு
நாங்கள் மாட்டுப்பட்டிடுவோம். நீ பேசாம இரு.” என்று அவன்
சொல்ல, அதைத்தான் கேட்டபடி - தன் உயிர்நூலும் இனி
ஓஅவனால் முடியும் 120

வளரவேண்டுமென்று கடவுளையும் மனத்தில் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டான் தர்சன்.
குளிப்பு முடிந்து திரும்ப வார்டுக்குப்போனதும் தாதி ஒருத்தி ஊசி மருந்து கொண்டு வந்து அவனுக்கு ஏற்றிவிட்டாள். அந்த மருந்தின் விளைவு எவ்வாறு இருக்குமென்றால், அது உடலின் வழமையான எல்லா நிலைமையையும் குழப்பிப் பிறகு தான் ஒரு வழமை நிலைக்கு ஆளைக்கொண்டுவரும். இவனுக்கு அந்த ஊசி மருந்தை ஏற்றிய பிறகு அதனால் அவனுக்குப் பயித்தியம் பிடித்த மாதிரியாய்ப் போயிற்று. களைச்சுப் போனவனை இனிக் கொஞ்சம் படுக்கப்போட வேணுமெண்டதாய்ப் போட்ட அந்த ஊசி மருந்து வேலை செய்யத் தொடங்கியவுடனே மயக்கத்தில் அவன்,
“நான் இனி வரமாட்டன் இனி வரமாட்டான்'
என்று வாய் புலம்பவும் கத்தவும் ஆரம்பித்து விட்டான். அவனின் மயக்கத்திலே வெளிப்பட்ட அலம்பல் கதைகள் உச்சத்தைத் தொட்டதாய் மும்முரமாகிக் கொண்டுவர, டொக்டேர்ஸ் அவனைப் பார்த்துவிட்டு “இவருக்கு இப்ப உரத்திட்டுது காலைக் கட்டி விட வேணும்' என்று கங்காணிமார்களுக்குச் சொல்லி - அவர்கள் மூலமாய் கயிற்றால் கால் கட்டும் போட்டுவிட்டார்கள்.
“செந்தூரனையும் வீட்டுக்கு நீங்கள் போய் நாளைக் காலையில் வந்து இவரைப் பார்க்கலாம்” என்று வைத்தியர்கள் அவனுக்குச் சொல்லி அனுப்பியாகியும் விட்டது.
சிறிது நேரம் செல்ல - கொஞ்சம் சுய நினைவு வந்து விட்டது தர்சனுக்கு கால் கட்டின் இறுக்கம் பிறகு அவன் உணரத்தொடங்கி, அப்படியே கட்டிலாலே பிரண்டு உருண்டு அவன் கீழே விழுந்தான். குழந்தை தவண்டு விளையாட கஷ்டப்படுவதைப் போல் காலை இழுத்துப்பார்த்தான். கொஞ்சம் உடம்பும் ஒழுங்காக வேலை செய்ய, அசைய, கால்கட்டையும் கையால் அவிழ்த்து விட்டு, வார்ட்டுக்கு வெளியே அவன் பிறகு ஒட வெளிக்கிட்டு விட்டான்.
121 நீ.பி.அருளானந்தம்

Page 63
ஆஸ்பத்திரி வெளி கேற் அப்போது பூட்டிக்கிடந்தது. அதைப்பார்த்துவிட்டு அவன் உள்மதிலால் ஏறி வெளியே பாய்ந்தான். உடம்பில் பூட்டிக் கிடந்த வைத்திய சாதன கருவிகளையெல்லாம் பிய்த்து எறிந்து விட்டு இல்லாத தைரியமெல்லாம் வந்து கரை வழியாக ஓடும் போது, பலமுள்ள உடல் இறுக்கம் கரைந்ததைப்போல பெரிய வலி அவனுக்குத் தெரிந்தது. முள்ளுக்குத்தின மாதிரி வந்த அந்த வலிகளை அவனுக்கு ஜூரணிக்க முடியவில்லை. அதனால் இரு கண்களிலும் கண்ணி கலங்கியபடி அவன் ஓடிக் கொண்ருந்தான். அப்படி ஒடிக் கொண்ருந்தாலும் இவனுக்கு மர்மமான ஒரு மயக்கம் தான். கடற்கரையில் நின்ற மனிதர்களெல்லாம் அவனுக்கு தரையைக் குத்திக் கிடக்கும் கட்டைகளாகத் தான் அவன் கண்களுக்குத் தெரிந்தார்கள். இப்படி ஏன் அபசகுனம் மாதிரி இந்த இடம் மயானம் மாதிரியாய்த் தெரிகிறது? என்று மனம் அவனுக்குப் பயமாக இருந்தது. "முறுக்கி இப்போது விறைக்கிறதே என் கால்கள்? ஒடித்தப்ப முடியாமல் கால்களும் விறகுக் கனமாய் இருக்கிறதே? என்றும் அவதிப்பட்டான். “என்றாலும் இவ்வளவு சீரழிஞ்ச பிறகு இந்த ஊரை விட்டு நான் எங்கேயாவது ஓட வேண்டும்! என்நெஞ்சுக் கூட்டில் கருங்கல்லை வைத்தமாதிரி இப்போது எனக்கு இருந்தாலும் பரவாயில்லை நான் எங்கேயாவது ஓடிப்போய் தப்பிவிடத்தான் வேண்டும்.
சிதையில் போட்டு நிமிர்த்திப் படுக்க வைத்தது மாதிரி அல்லவா அந்த ஆஸ்பத்திரியில் என்னை முன்னம் படுக்க வைத்திருந்தார்கள்? நெடுக நெடுக அந்தப் பாம்பு என் மூக்குக்குள்ளால் புகுந்து நாயறை பேயறையாக அடித்து என்னைச் சாக்காட்டவும் அப்போ பார்த்ததுவே? அதுவே மிச்ச என் உயிர்ப் பலத்தை எடுக்க இப்போதும் என்னைப் பின்னாலே துரத்தியதாய் வருகிறதோ? அப்படி வருவதால்தான் அனலைக் கக்கும் வெப்பம் அதுகொடுக்கிறதோ? என்னையே ஊசிகளாக வந்து குத்தி எரிக்கிற மாதிரியும் அதனால் தான் இருக்கிறதோ? தாகம் தாகம் தண்ணீர் தண்ணிர் என்று புலம்பலான புலம்பலுடன் - தன் தலையை கீழே தொங்கப்போட்டுக் கொண்டு அவன் தன் தளர்ந்த கால்களை இழுத்து இழுத்து முன்னால் ஊன்றிக்கொண்டபடி ஓடினான். இப்போதும் ஓடிக்கொண்டேதான்
ஓஅவனால் முடியும் 122

இருந்தான். உயிரின் நிர்வாணமான இப்போதைய அவனின் கோலத்திலே ஆசையான நினைவுகளெல்லாம் அவனிடமிருந்து அகன்று விட்டது. பெற்ற, தன்தாய் தான், இப்போது அவனின் நினைவில் தெய்வமாய் வந்து கொண்டிருந்தாள். தன் அம்மாவை நினைக்க அந்தப் பாசத்தில் அவனின் உடல் இறுக்கம் இன்னும் குறைவுற்றுக் களைப்பாய் அவனைப் பாடு படுத்தியது. அலையடிக்கும் கடற்கரைப் பக்கமாய் ஒடிக்கொண்டிருந்தவன் காலைத் தழுவிக்கொண்டிருந்த தண்ணிரைத்தாண்டி உடல் சரிந்து சரிந்து போய் முழுப் பயங்கரத்துட னுள்ள கடல் தண்ணிருக்குள் விழுந்து விட்டான். அப்படி விழுந்த அந்த விழுகைக்குப்பின்னே, சுவாசத்தை ஒரு தம் பிடித்து, தன் உயிரைக் காக்க கைகாலைக்கூட அப்போது அவனால் அசைக்க முடியவில்லை. “கண்களை நான் இப்போ மூடிக்கொண்டு உடலின் கதவுகளை என் உயிர் போவதற்காய் இப்போ திறக்கிறேன்.” என்ற நினைப்பில் இப்போ அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. “எங்கெங்கோ தப்பி தப்பி வந்து என்னை இப்போ பொங்கி நுரைக்கும் இந்தக் கடலா உயிர் விழுங்கவாய்க் காத்திருக்கிறது?’ என்று அவன் மனம் அப்போது குமுறிக் குழறி அழுது கொண்டிருந்தது.
அவன் விரும்பாமல் விழுங்கிய உப்புத்தண்ணிராலே நோப்பட்ட அவன் வயிறெல்லாம் உள்ளுக்குள்ளால் எரித்தது. மகத்தான மூர்க்கமாய் இப்போது அவனுக்கு மூச்சு முட்டி அதனால் சுமை ஏறியது. அவனுக்கு கடலுக்குள் தாண்டு கிடப்பதாய் இப்போது நினைவு இல்லை! ஆனால் - தன் பிறந்த அந்த வீடடின் காணிக்கு உள்ளே உள்ள அந்த உப்புத் தண்ணிர்க் கிணற்றில் தவறி உள்ளே விழுந்து போய்க் கிடப்பதாகத்தான் அவனது இப்போதைய நினைவு இருந்தது.
அந்த நினைவு. இப்போது அவனுக்குத் திரும்ப வருகிறதற்கு முன் நடந்ததான அந்தச் சம்பவத்துக்குரிய ஒரு உண்மை ஒன்று உண்டு. சிறு வயதில் அவன் தன் வீட்டுக்கிணற்றில் விழுந்து அவ்வேளையில் காப்பாற்றப்பட்டவன் தான்.
அப்போது அவனின் பெற்றதாயானவள்துடித்த துடிப்பு! அழுத
123 நீ.பி.அருளானந்தம்

Page 64
அழுகை அவள் கூப்பாடு போட்டு அழுது எழுப்பிய அந்த ஒலம்! " தன் தாய் கத்திய அந்தப்பெரிய கத்துதலைக் கேட்டுத்தானே அயலிலுள்ள நாலு ஆண்கள் ஓடிவந்து அவனைக்கிணற்றுத் தண்ணி லிருந்து தூக்கி வெளியே எடுத்துக் காப்பாற்றிவிட்டார்கள்.
அது எப்போதும் அவன் நினைவிலுள்ள, என்றும் உண்மையான தொரு உண்மைதானே? எப்போதும்தாய் தானே எந்த ஆபத்திலிருந்தும் தன்பெற்ற பிள்ளையை காப்பாற்ற முனைவாள்?
அதனால் இந்த நெருக்கமான வேளையிலே அவன் தன் அம்மாவை நினைத்துத்தான் வாய்திறந்து கத்தமுயன்றான். ஆனால் அப்படி ஒன்றும் செய்வதற்கு முடியாது வாய்க்குள்ளால் விழுங்கப்படும் கடல் தண்ணி அவன் வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது. அவன் ஆத்துமா ஒன்று தான் அவன் தாயை மட்டும் நினைத்து இந்நேரம் அழுது கொண்டிருந்தது.
நேரம்செல்லச் செல்ல அவன் உடல் உப்பானஒரு கல்லாக வருகிறதுபோல இறுகிக் கொண்டு வந்தது. கண்ணை முடியும் முன்னம் தெரிந்து கொண்டிருந்த அந்த நீல நிறமும் இப்போ அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. மிச்ச சொச்சமாக அவனிடமிருந்து உடலின் உயிர்த் துடிப்பு எல்லாமே நொறுங்கிப் பொடியாகி அவனை விட்டு விலகுகிற மாதிரி இருந்தது. உயிர் விலகுகிறது என்பது இப்படித்தான் என்று அவன் தன் அனுபவத்தை யார் ஒருவருக்கு இந்த உலகத்திலே சொல்ல இனிமேல் முடியும்.
உடலின் அந்த ஊக்குவிக்கிற கலன்களின் செத்த உயிரில்லாத அவன் பிணம், கடலிலே இப்போது மிதந்து கொண்டிருந்தது. அந்தக் கடலும் கூட அவன் உடல் தனக்கு தேவை யில்லை என்பது போல, அலைகளால் அவன் உடலை கரையொதுங்க இப்போது தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது.
(2011)
ஓஅவனால் முடியும் 124

சுடலைக் காணி
தன் வீட்டு வளவுக்கு முன்னாலுள்ள மாடுகள் அடைக்கிற தொழுவத்திலே துரை ஐயா நின்று சாணி சகதியள்ளி வெளியே கொண்டுபோய்க் குமியலில் போட்டுக் கொண்டிருந்தார். புதுச் சாணிக்கழிவை கரம்பிடித்து அள்ளும்போது கொச்சைவாடை குப்பென்று நாசியைத் தாக்கினாலும் அது பெரிதாக அவருக்கு, அருவருப்புத் தவிப்புக்கொடுக்கவில்லை.
ஆனால் அவரது வீட்டுக்கு அயலிலே சீவிக்கிற ஏழைக்குடும்பமான அந்தப்பொன்னம்பலத்தாரது குடும்பம், அமைதியான கட்டுக்கோப்புடன் வாழுகிற மாதிரிச் சீவித்து, இப்போது பெரும் காணியொனி றையும் காசு கொடுத்து தங்களுக் கென்று வாங்கிவிட்டார்களே, என்று நினைக்கையில், மனத்தில் அவருக்கு “கதகத. கபகபா' - வென்று எரிச்சல்ஆவி எழும்பிக்கொண்டிருந்தது.
கனகாலம் மட்டும் பழைய கஞ்சி குடிச்சு நாட்களைக் கடத்தின மாதிரியாய் தான் பொன்னம்பலத்தாரது வீட்டுச் சிவியம். வயிறு முட்டச்சோறு திண்டபாடில்லாத மாதிரியாத்தான் வறுமையும் அவர்களுக்கு. பொன்னம்பலத்தார் ஒரு சின்னத் துவாய்த் துண்டு
125 நீ.பி.அருளானந்தம்

Page 65
தோளில் போட்டுக் கொண்டு மேல் சட்டையில்லாமல்தான் திரிவார். அவருக்கு அரை மேசன் வேலைதான் தெரியும் கூப்பிட்டால் அப்போது அவர் எங்கேயும் யாரோடும் சேர்ந்து கூலி வேலைக்கும்கூட போவார். அப்படியான நிலையிலயிருந்த அந்த மனுசனுக்கு இன்று எவ்வளவு பெரிய முன்னேற்றம்?
புத்தகம், சிலேட்டுப் பையைத் தூக்கிக்கொண்டு, பள்ளிக் கூடம் போய்க்கொண்டு திரிஞ்ச அவற்றை மூத்த மகன் வளந்து ஆளானதுக்குப் பிறகுதானே இவ்வளவு சொத்துக்களும் அவருக்கு இப்பவாச் சேந்தது. அந்தப்பொடியன் தன்ர தகப்பனை மாதிரித்தான் - அதே அச்சு! அவரமாதிரியே தான் இவனுக்கு அந்தக் கண்ணும் நெற்றியும் சுபாவம் கூடத்தகப்பனை மாதிரித்தான்! அவன் முதலில்
மரக்கறியளை வாங்கி பெட்டியில் போட்டுக்கட்டி, சைக்கிள் மிதிச்சு
ஊர்வழிய கொண்டு போய்வித்து யாவாரம் பண்ணினான். பிறகு ஒழுங்கான மேசன் வேலையும் இவன் பழகினான். இப்பிடி நாலு தொழிலும் செய்ததால அவனுக்கு வந்த அனுபவத்தோட, எல்லா விபரமும் தெரிஞ்ச ஒரு மனுசனா பிறகு அவன் வந்திட்டான்.
இப்பிடியா வாற காலத்தில, அவன் ஒரு கெட்டித்தனமும் செய்து போட்டான். இந்தப் பொழுது போக ஊர் சுத்துற வேற தறுதலப் பெடியங்கள் மாதிரி புத்தியில்லாதவனாயில்லாம. பாவம் - இவன் தன்ர வியர்வையோட பாடு பட்டு, உழைச்ச அந்தக் காசைக் கொண்டு சவூதிக்கு ஒரு மாதிரி ஏஜன்டிட்ட காசைக்கட்டிப் போய்ச் சேந்து, களைப்பையும் சலிப்பையும் விட்டுப்போட்டு வேலை செய்து காசு நிறைய உழைச்சான்.
அப்பிடி அவன் உழைச்சு உழைச்சு, இங்க தன்ர தாய் தகப்பனுக் கெண்டு வீட்டுக்குக் காசுகளை அனுப்பத் தொடங்க, பூச் சொரிஞ்ச ஆனந்தந்தான் பொன்னம்பலத்தாருக்கு மகன் அனுப்புற காசில ஒரு சேமும் சிலவழிக்காமல் பொன்னம்பலத்தாரிண்ட மனிசி கனகமும் அதை ஒழுங்காச் சேத்து தன்னிடத்த வைச்சுக்கொண்டாள்.
ஓஅவனால் முடியும் 126

பொன்னம்பலத்தாருக்கும், குடி வெறியெண்ட ஒரு கெட்ட பழக்கமுமில்ல. சோம்பலில்லாமல் அவரும் ஒவ்வொரு நாளும் வழமை யாகத்தான் செய்யும் வேலைக்குப் போய் உழைச்சார். இதுகளாலதான் அவயஞக்கு வாழ்க்கை முன்னேற்றமாய் பிறகு மிதந்தது.
இண்டைக்கு அந்தக் காணியையும் அதுகள் தங்களுக்கு எண்டு சொந்தமாவும் வாங்கிப்போட்டுதுகள். இவளவுகாலம் கண்ணின்ர ஆழத்துக்குள்ள ஒரு வேதனையை வைச்சுக்கொண்டதாய்த் திரிஞ்ச பொன்னம்பலம் - வாடாம வாசமா வாழுற மாதிரி, ஒரு வித, முகச் சந்தோஷத்தோடதான் எங்கயும் யாரிண்டையும் கண் காணவா இப்ப திரியிறார்.
ஆனா, நான் நான்! இந்தத் துரை ஐயா துரை 图um எண்டு எல்லாரை விடவும் இந்த ஊருக்குள்ள நான் தான்பெரிசு எண்டதாக் கதைச்சுக்கொள்வனே, அப்படியான நான் என்ன உயரத்துக்கு வாழ்க்கையிலயா இப்ப வந்திட்டன்? பொன்னம்பலம் மகன் அந்தச் சுடு வெயிலடிக்கிற பால வனப்பக்கம் போய், வெட்டுப்பட்ட கொடியா அந்த வெயிலில கிடந்து துடிச்சு வேலைசெய்து, சோர்வில்லாமல் உழைச்சு காசு வீட்டுக்கு அனுப்பி இப்ப காணியும் வாங்கீட்டான்.
ஆனா என்ர மகன இவளவு லட்சம் காசு சிலவழிச்சு நான் கனடாவுக் கெண்டு அனுப்பி வைச்சு அவன் என்ன இப்ப எனக்கு, இந்த வீட்டுக்கு, பண்ணிக் கிழிக்கிறான்? என்ர ஒட்டுக் கூரை வீடே இப்ப ஒழுகுது. அது திருத்தவே இப்ப எனக்குக் காசு கையிலயா இல்ல. கனடா போக அவனுக்கு வாங்கிக் குடுத்த காசுக்கு நொந்து புழுங்கிக்கொண்டு மாசம் மாசம் இங்க நான் நெடுக வட்டி வட்டியெண்டு படுவட்டிக்காசுகளக் கட்டித்துலைக்கிறன். எல்லாம் எனக்குக் கடன் சுமையாய் வந்து இறுகி, வாழுற உயிரே எனக்குக் கெதியாய்ப் போயிடும் போலக் கிடக்கு.
இப்பிடியெல்லாம் நானும் இந்தக் குடும்பமும் படுகிற பாடுகளை என்ர பெடியன் எங்க எண்ணிப் பாக்கிறான்? கனடா போன பிறகு
127 நீ.பி.அருளானந்தம்

Page 66
அவன் இந்த எங்கட வீட்டுயோசனை கடன் தனி யோசனை, ஒண்டும் தனக்கு இல்லாம, சுத்தித்திரிஞ்சு சிறகு முளைச்சு அந்த வேகத்திலயும் பறந்து கொண்டு அங்க திரியிறான். இங்க கடன் காரர் எல்லாம் என்ர வீட்ட வந்து, முகம் முறிச்சு என்னோட பேசிறதையெல்லாம் நான்ரெலிபோணில அவனுக்கு நெடுகச்சொன்னாலும், ஒழுங்கான வேலையொண்டும் தனக்குக்கிடைக்கேல்ல யெண்டு தானே அவன் அதுக்கொருகதை எனக்குக் கதைக்கிறான்?
நானும் விஷயஞானம் உள்ளவன் தானே? ஆள் ஆரையோ நானும் அங்க அவ்விடத்து ஆக்கள ரெலிபோனில பேசத்தேடிப்பிடிச்சு அவற்றை அங்கத்தைய முழு விஷயமும் இப்பவா அறிஞ்சிட்டன். வலுத்த குளிர், கூதல் நடுக்கு தெண்டு, அவர் என்ர மகன் அங்க ஒழுங்காவேலைக்குப் போறேல்லயாம்! அவர் நெடுக தண்ணியும் ஆளுமாத் தானாம் இருக்கிறாராம்! சுருண்டு நெடுகலும் நாள் முழுக்க தன்ர றுTமுக்குள்ள அவர் படுத்துக்கிடப்பாராம். இதுகளைக் கேள்விப்படவே எனக்கு மனம் நெருப்பாத் தகிக்குது. நெஞ்சுக்குள்ள அதால முறுக்கிப் பிழியிற மாதிரி எனக்கு வலியாயிருக்கு. உடம்பெல்லாம் இதுகள நெக்கேக்க ஒரு வெக்கை மூக்குக்குள்ள கூட காந்தலெடுக்குது.
இது மாதிரியான எல்லா விஷயங்களையும் மன அழுத்தத்தோடு அவ்விடத்தில் நின்றபடி ராசதுரை யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் பொன்னம்பலம் அந்நேரம் அந்த ஒழுங்கை வழியாக வந்து கொண்டிருந்தார். பொன்னம்பலத்தின் தோற்றம் - ராசதுரையின் கண்களுக்கு - அவர் இப்போது பத்து வயது குறைந்த இளமைத்தோற்றமாய்த் தெரிந்தது. தலை வாழை இலைபோல குளிர்ந்த தளதளத்த முகத்தோடு அடர்த்தியான வேலிச் செடிகளுக்கு நடுவேயாய் அவர் நடந்து கொண்டு வருகிறபோது அவள் கட்டியுள்ள புது நூல்வேட்டி ஒரு பள பளப்பும் பளிச் சுமாத் தெரியது, அதைப் பார்க்க ராசதுரைக்கு அடுப்புப் புகை கண்ணிலடித்தது போல எரிந்தது. தன்நிலையை அவரோடு ஒப்பிட்டு நினைத்ததில் ஓர் ஆழ்ந்த வேதனை மனதில் சூழ்ந்து கொண்டு அவரை நெரித்தது. என்றாலும் தன்னுடைய
ஓஅவனால் முடியும் 128
 

நினைவோட்டங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதுபோல நிறுத்திவிட்டு -பொன்னம்பலம் இப்போது எங்கே போய் விட்டு தன்ர அவற்றை வீட்டுக்குப் போக வந்து கொண்டிருக்கிறார்? என்று தன் சிந்தனையைச் சுழலவிட்டார்.
ஊருக்குள் செல்லப்பாக் கிழவன் என்கிறவர்நேற்றுப்பின்னேரம் போல் செத்தப்போன அந்தச்செய்தி இங்கே எல்லாருக்கும் தான் தெரியும் செல்லப்பாக் கிழவன் ஒரு அருமையான மனுசன்! - மனுசரை மனுசரா மதிக்கிற மனுசரான ஒரு ஆள்! எண்டு. ஊருக்குள்ளயும் இவளவு காலமாய் அவருக்கு நல்ல மதிப்பு! அந்த ஆளிண்ட செத்த வீட்டுப் பக்கமாய்த்தான் இவர் இப்ப போயிட்டு வாறாரோ? ஓம் ஓம்! இவர் அங்கதான் போயிருப்பார்! நாளைக் குப் பிரேதம் எடுக்கிறதெண்டாலும் இவர் நாலுதரம் போய் வந்து, செத்த வீட்டில தன்ர முகத்தைக் காட்டிறவர்தான்! தானும் ஊருக்குள்ள ஒரு அருமையான மனிசனெண்டு இப்புடியெல்லாம் செய்து காட்டித்தானே மதிப்பு அவர் எடுக்கவேனும்? ஊருக்க ஆருக்கும் நல்லது கெட்டது வந்திட்டா உவர் இப்ப அங்கயெல்லாம் ஈயாப் பறந்து போகவா வெளிக்கிட்டிட்டார். வரட்டும் வரட்டும் உவர் இதால - இண்டையோட உவர் உப்புடியொண்டும் உவருக்கு இல்லாததாய்ப் போற அளவுக்கு உவற்றை மனசைப் புண்ணாக்கி, நான் ஆளை ஒரு குழப்புக் குழப்பி விடுறனே பாரன்! இண்டைக்கு இவர் தம்பிப் பிள்ளய நான் மூக்கறுத்த ஒரு பிசைவு பிசைஞ்சு மூலையில தள்ளாட்டி - என்ர பேர் ராசதுரை (96060. LITI ILID LITI ILIli)!
என்று தன் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு - அவுக் அவுக்கென்று நடந்து தொழுவத்தை விட்டு வெளியேறி நடு வீதிக்கு வந்தார் ராசதுரை. அந்த இடத்தில் வந்ததும் மூத்திரத்திலும் சாணியிலும் நனைந்து கிடந்த தன் கால் பாதத்தை, மண்புழுதியிலே அவர் தேய்த்துக்கொண்டார்.
"வாவா - நான் ஒரு கழுகு மாதிரித்தான்! - என்ர காலடிக்கு இப்பயா என்னட்ட நீ வாவா. ஊம்.” என்று சுய விமர்சனமாக அவர் முனகினார்.
129 நீ.பி.அருளானந்தம்

Page 67
மிருவான தணிந்த கனிவோடு நடந்து வந்த பொன்னம்பலம் ராசதுரை நின்று கொண்டிருந்த இடத்துக்குக்கிட்டவாக இப்போ வந்து விட்டார். மூஞ்சியை முன்னூறு கோணலாக வைத்துக் கொண்டு, எதை எதையே யோசித்துக்கொண்டிருந்த ராசதுரை, எப்படி தன்னுடைய முகத்தை குளிர்மையாக உடனே மாற்றி எடுத்தாரோ தெரியவில்லை. பொன்னம்பலம் தனக்குக்கிட்டவாய் வந்ததும் அவரைப் பார்த்து, அழகாய் லட்சணமாய்க் கவர்ச்சியாய் இவர் சிரித்தார்.
"செத்த வீட்டாலயோ இப்ப நீங்க இருந்து வாறியள்'
- குலைக் கொதிப்பில்லாத குளிர்மையான குரல்!
“ஒகோம் ஓம்!’
சிரிப்போடேயான, ஓம்!”
“எப்பவாம் பிரேதம் அங்கயிருந்து எடுக்கிறது.'
"அது அது நாளைக்காம் நடக்கும் எண்டுகினம்’
'மனிசன் கிழவன்! ஒரு நல்ல புண்ணியவான். அவற்றை புண்ணியத்தால - அவரைக் தாட்டதோட எரிச்சதோட, புண்ணிய மழையெண்டும் இந்த ஊருக்குள்ள உடன கட்டாயம் பெய்யும்
பாருங்கோ.’
“அச்சச்சோ அந்தாள் ஓ அப்பிடியான ஒரு தங்கமான ஆள்தான்.”
இதை சொல் கையில் மகிழ்ச்சியான தன் குரலோடு பொன்னம்பலத்தார் புது முகமும் காட்டினார்
“இந்த சவம் காவிக் கொண்டு இங்கயிருந்து அந்த சுடலைக்குப்போய்ச் சேருற பாத்தா தூரம்தானே என்னவும், பெரிய தூரம்.'
ஓஅவனால் முடியும் 130

“ஓமோ அது பெரிய சரியான கஷ்டம் தான்.”
“மயானம் எண்டா, அந்த இடமான சுடலை, ஒரு அமைதியான ஒரு இடம்தானே என்னவும்.' “அட பின்ன என்ன.'
"அது பாரும் நீர் பொன்னம்பலம். அதில ஒரு பெரிய ஞானமான ஒரு விஷயமுமிருக்கு .செத்தவன்ர நினைவே இல்லாமலிருக்க சைவ ஆக்கள் நாங்கள் எல்லாத்தையும் எரிச்சு சுத்தமாக்கீடுறம் தானே.”
《 , * 99 LD... LD5B5L D..
“வேதக்காறரெண்டா தாட்ட இடத்தில கல்லு நடுவினம் கட்டிடம் பிறகு கட்டுவினம்! எழுதிக்கிழுதி வைப்பினம்! ஆனா நாங்கள் அப்பிடியில்ல.”
“ஓம் ஓம் நாங்க அப்பிடியில்ல.”
"இவயள் முஸ்லிம் ஆக்கள் செத்த பிரேதத்தை தாக்குறத்துக்கு முதல் என்ன செய்வினமெண்டா பாரும் பொன்னம்பலம் - அவயள் சவக்காலேக்க வெட்டின ஆறடி கிடங்குக்க பிரேதத்தை வைக்க முதல் அந்த உடம்பு பூராவும் புதுத்துணியால சுத்துவினம் - கிடங்குக்க அந்தப் பிரேதத்தை வைக்க முதலிலாயா அதுக்க பாய் ஒண்டு விரிச்சுத்தான் வைப்பினம்! அந்தக்கிடங்கில நாலடி உயரத்துக்கு மேல பிறகு பலகை போடுவினம். அதுக்கு மேலதான் பிறகு மண்போட்டு மூடுவினம். அங்க அவயள் சவம் கொண்டு போய்த் தாட்டுப்போட்டு உறவு, பழக்கம், சொந்தக்காரரெண்டு உள்ளவயளெல்லாம் அதிலேயே ரொட்டியும் கூடியிருந்து சாப்பிட்டுப் போட்டு, பிறகு வீட்டவா வருவினம். அதுகள் நீங்கள் போய் எப்பயும் ஒருக்கா பாத்திருக்கிறீங்களே..? அப்பிடி பாக்காட்டிலும் இப்பிடியெல்லாம் பழக்க வழக்கம் ஒண்டு இருக்கிறத எப்பவெண்டாலும் நீங்க கேள்விப்பட்டிருக்கிறியளோ?”
"ஐயையோ அது எல்லாம் எனக்கு இவ்வளவு காலமா தெரியாதுங்கோ . உதுகளெல்லாம் இப்பதான் நீங்க எனக்குச்சொல்ல
131 நீ.பி.அருளானந்தம்

Page 68
புதுசாத்தெரிய வருகுது.”
"அப்படித்தான் பொன்னம்பலத்தார். இப்பிடி விஷயங்கள் இதைப் பத்திச் சொல்ல நிறைய இருக்கு அதில பாரும் பொன்னம்பலத்தார், இந்தச் சுடலைச் சவுக்காலையள் எண்ட இடமெல்லாம் எங்க எங்க இருக்கெண்டு நீர் கண்டீரெண்டால் - இந்தச் சுடலை சில இடங்களில கடல் பக்கம் அண்டியதா அதில இருக்கும் - வேற இடங்களில தூரம் தொலைவில காட்டை அண்டிய இடத்திலயும் இருக்கும் - இல்லாட்டி இல்லாட்டிப்போனா, இது ஒரு பெரிய வெளியை அண்டியதாயும் இருக்கும் பாரும். அப்பிடித்தானே?”
“ஒ, ஓ அப்பிடித்தான் அப்புடித்தான்.”
"ஓ அப்பிடித்தான்! உமக்கும் இது தெரியும் தானே.? எண்டாலும் அதுக்குள்ள ஒரு பிரச்சினையுமிருக்கு . அது என்னெண்டு தெரியுமே..?”
"நான் சொல்லுறனே அத .எங்கட இடம் மாதிரி கிராமம் வழிய சுடலைக்கு பக்கத்திலயா ஆரும் வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகுட்டியள வைச்சக் கொண்டு அதிலயாச் சீவிக்கிறாங்களே.'
“ஒ.ஓ!’
“என்ன ஒ ஓ வெண்டிறீர்..? அப்பிடி ஆரும் சீவிப்பினமே..? ஒரு கதைக்கு சொன்னா பிரேதம் எரிக்கிறவன் கூட இருக்கமாட்டான் என்ன? அப்பிடித் தானே? இங்க எங்கட ஆக்களின்ர சீவியமும் நடப்பும். அப்படித்தானே என்னவும்?”
“இப்ப பெரிசா அப்பிடி ஒண்டும் பாக்கிறதில்லயெண்டாலும். ஓம் நீங்க அப்படி சொல்லுறது உண்மைதான்! சரிதான் அதுகள்.”
"அதுதானே! அப்புடியெல்லாம் நான் சொல்லுறது உங்களுக்கு
ஓஅவனால் முடியும் 132

சரியெண்டு இப்பவா தெரியுது. நான் சொல்லி தெரியிறதொண்டென்ன. நீங்க ஒரு குழந்தைப்பிள்ளையே ஒண்டும் தெரியாததெண்டு சொல்ல.? அதெல்லாம் ஒண்டும் இல்லக் கண்டியளோ இப்ப? - ஆனா இதுக்குப்பிறகு உங்களுக்குச் சொல்ல என்னட்ட ஒரு பெரிய கதை இருக்கு கண்டீரோ? அதை உங்களுக்கு சொல்ல எனக்கொரு பெரிய கடமையும் கட்டாயமும் இருக்குத்தானே?”
ராசதுரை பொன்னம்பலத்தாரை உற்று உற்றுப்பார்த்துக்கொண்டு பூக் கட்டுகிறது மாதிரி இந்தக் கதைகளை அவருக்குச் சொல் லிக் கொண்டிருந்தார். பொன்னம் பலமும் , ராசதுரை சொல்வதையெல்லாம் அக்கறையோடு கேட்டுக்கொண்டிருந்தார். ராசதுரைக்கு இப்போது பொன்னம்பலத்தாரை குப்பை கூட்டி ஒதுக்குவதைப்போன்ற ஒரு கடைசிச் சந்தர்ப்பம், சொல்லிவந்த தன் கதைக்குள் இவ்வேளை கிடைத்து விட்டது போல வந்தது.
“உங்களுக்கு நீங்கள் வாங்கின காணிவித்த அந்த அப்புத்துரை எண்டுறவர் செய்த கெட்ட வேலை - அது என்னெண்டு சரியாத் தெரியுமோ?”
கணி களில் ஒரு குரூரத் தை வைத் துக் கொண் டு பொன்னம்பலத்தை இப்பொழுது கேட்டார் ராசதுரை. ராசதுரை கேட்ட கேள்வியோடு, பதறிப்போனார் பொன்னம்பலத்தார்.
“என்ன. அவர் என்ன எனக்கு செய்தவரெண்டுறியள்.'
- என்று திகிலுடன் அவரைப் பார்த்துக்கேட்டார்.
ராசதுரை தெருப்புழுதியில் முதலில் தன் எச்சிலைக் காறித்துப்பினார்.
"அதை இனிநான் என்ன எண்டு உங்களுக்குச் சொல்ல? நீங்க சரியா அப்புத்துரையிட்டவா ஏமாந்து போனியள். அந்தளவுக்கு உங்கட பிள்ள குட்டியள் சீவிக்கேலாத இடமா உள்ள அந்தக் காணிய நீங்க போய் இவ்வளவு காசு குடுத்து இப் பயா அவரிட்டயாயிருந்து வாங்கீட்டியள்.”
133 sa நீ.பி.அருளானந்தம்

Page 69
என்று ராசதுரை சொல்ல கண் முழி பிதுங்கி விட்டது பொன்னம்பலத்தாருக்கு.
"ஏன் ஏன் ஏன்? என்ன அப்பிடி காணி நாங்க வாங்கினதில ஒரு வில்லங்கம் இருக்கு.?”
ஆவேசத்தில் பரபரக்கக் கேட்டார் அவர்.
"வில்லங்கம் அதில இருக்கிற படியாலதானே அவர் அந்தக் காணியை உங்களுக்கு வித்தவர். - அது என்ன காணி தெரியுமோ? -சவம் எரிச்ச ஒரு பழைய சுடலைக் காணி அது - போச்சு அதில நீங்கதான் இப்ப போய் நல்லாமாட்டீட்டியள்.!” - என்று ராசதுரை சொல்ல, பொன்னம்பலத்தாருக்கு கதிரறுப்பு அறுத்ததைப்போல தன் கழுத்தையறுத்த மாதிரியாய் இருந்தது. முகமும் அவருக்கு வெட்டுப்பட்ட பூங்கொடியைப் போல உடனே வாடிவிட்டது. பொன்னம்பலத்தார் கடைசியாகச் சொன்ன கதைகளை நினைக்க நினைக்க, அவருக்கு உலகமே இருட்டிக்கொண்டு வருவது மாதிரி இருந்தது. பொன்னம்பலத்தார் தன் நாவால் இப்படியெல்லாம் கூசாமல் வாய்க்கு வந்த படி சொல்கிறாரே என்றும் அவருக்கு எரிச்சலும் எழுந்தது.
பொன்னம்பலத்தார் தனக்கு ராசதுரை சொன்ன அந்தக் கதைகளுக்கு பதிலாய், தான் என்ன ஒரு கதையை அவருக்குச் சொல்லிப் பதிலடி குடுக்கலாம், என்று உடனே யோசித்தார். அப்பிடித் தான் ஒரு பதில் கொடுத்தால் அவருக்கு அது ஆயிரம் சாட்டைகள் சுளிட்ட அடியாயிருக்க வேணும்!
"உவற்றை எண்ணத்தையும் எரிச்சலையும் இப்பதானே எனக்குப் புரியுது. என்ர பெடியன் இப்பிடியல்லாம் ரவ்வும் பகலுமாய்க் கஷ்டப்பட்டுக்காசனுப்பி அதிலயா நான் இப்ப முதன் முதலா ஒரு காணியப் போய் வாங்க - அது ஒரு சுடலைக்காணி! அது இது எண்டு, என்னவெல்லாம் சொல்லி உந்தாள் ஊருக்குள்ளயும் ஒரு கதை யொண்டு பரப்பிவிட இப்பவாப் பாக்குது. நாளைக்கு நான்
ஓஅவனால் முடியும் 134
 

அதில ஒரு வீட்டக் கட்டிப் போய் இருந்து சீவிச்சாலும் அந்தக் காணியை சுடலைக் காணி வீடெண்டெல்லே ஊருக்குள்ள எல்லாரும் சொல்லிச் சொல்லி நான் வாழுற அந்த வீட்டுக்குப் பிறகு ஒரு விலாசமும் வைச்சுப் போடுங்கள்? அதாலதான் உவர் இப்ப எனக்குச் சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டு நான் சும்மா போயிடப்பிடாது. உவருக்கு இப்ப நான் கிள்ளிக் கிள்ளி திணறடிக்கிற சில கதைகள் உறைப்பாச் சொல்லி விட்டுப் போனாத்தான் ஆள் பிறகு வளத்துக்கவாத் திரும்புவார். அந்தக் கதையள நான் வாயால வெளிய இவருக்கு கேக்க விட்டாத்தான்.தம்பியாண்டான் அதைக் கேட்டு ஒண்டும் அதுக்குச்சொல்ல ஏலாமல் மெல்ல மெல்ல அடங்குவார். என்று பொன்னம்பலத்தார் தனக்குள் நினைத்துக்கொண்டு ராசதுரையை நங்கூரமிடுகிறது போன்ற ஒரு பார்வை பார்த்தார்.
"நீங்கள் சுடலைக்காணி அது இது எண்டு சொல்ல எனக்கு ஏதோ தலைச் சுத்தலாயிருக்கு. அப்பிடி ஏதும் நீங்க அதில கண்டதா எப்பவும் உண்டோ..?”
"இல்ல அது என்ர அப்பர்சொன்ன கத தான் பாரும் முந்தி ஏதோ ஒரு பிரேதம் வைச்சு எரிச்சதாம்.'
“ஏதோ எரிச்சதாம் எண்டு, அவர் உங்கட அப்பாவும் சொல்லுறாரெண்டா, அதுவும் சொல்லப் போனா ஒரு பொய்யா, கட்டுக்கதையா இருக்கலாம் தானே.”
"அப்பிடியும் சொல்லேலாது நடந்த அந்தச் சம்பவம் உண்மையாவும் இருந்திருக்கலாம் தானே.”
"சரி உண்மையாவும் இருந்திட்டுப் போகட்டும் இப்பயெல்லாம் நடந்திருக்கிற சம்பவங்களப் பாத்தா - இதோ பெரிசு, அதோ பெரிசு? எண்ட மாதிரிக்கிடக்கு - இதெல்லாத்தையும் இண்டைக்கு இப்ப ஆர் எவர் கணக்கெடுக்கிறான்.”
“எனக்குங்கட உந்தக் கதை ஒண்டும் சரியா விளங்கேல்ல.”
135 நீபி.அருளானந்தம்

Page 70
"அதுதானே நான் உங்களுக்கு ராசதுரையர் அதுகளயெல்லாம் இப்ப விளக்கமா சொல்லிக் காட்டப்போறன். அப்ப தானே உங்களுக்கு இதுக்க உள்ள சரி பிழை விளங்கும் பாருங்கோ இந்தக் கதuயில நீங்க சுடலைக்காணி எண்டு நான் வாங்கின அந்தக் காணிய ஒரு கேடு மாதிரி சொல்லிக் கதைக்கிறியளே. ஆனா இப்ப வன்னிப்பக்கம் நடக்கிற இப்பத்தைய சங்கதிகளப் பற்றி ஒரு கதையெண்டாலும் உங்கட வாயால நீங்க கதைக்கிறியளே.'
"அது என்ன கத? வன்னிப் பக்கத்துக் கத? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமெண்டுறீர்.”
“என்ன சம்மந்தமோ..? சம்மந்தமில்லாம அந்தக் கதையை என்ர காணிக்கதைக்குத் தோதாய் நான் சொல்லத்துவங்குவனே.? இங்க பாரும் நீர் ராசதுரை. வன்னிக்குள்ள இந்த கடைசிப் பெருத்த சண்டை துவங்கி, சனங்களெல்லாம் ஒரு பக்கம் பின்நோக்கிப் பின்னோக்கிப்போய் பிறகு ஒரு பக்கத்திலயாப் போய்த் தானே குமிஞ்சதாய் இருந்ததுகள். அதுக்குள்ளயா பிறகு லெட்சக் கணக்கான சனங்களும் சாக்காட்டப்பட்டதுகள் தானே. கடைசிச் சண்டை நடந்த அந்த இடம், புதுக்குடியிருப்புப் பக்கம் தானே..? அதுக்கதானே கனக்கச் சனம் இருந்து செத்தது. இதுக்குப்பிறகு பிரேதங்கள் தாக்காமலும் எரிக்காமலும் கிடந்து மாதக்கணக்காய் அதில நாறினது. செத்த உடம்புகளை எலும்பா கடைசியில வத்திப் போன பிறகும் எரிச்சது நடந்ததும் அந்த இடம். அந்த இடம்வளியதானே இப்பசனம் போய் மீள் குடியேற்றமாய் இருக்கப் போகுதுகள். இனிப் பிறக்கிறதும். இப்ப இருக்கிறதுமான சின்னப்பிள்ளையஸ் கூட, அந்த மண்ணில இருந்துதானே இனி விளையாடவும் போகுதுகள்..? எண் டு இப்பிடியெல்லாம் இருக்கிற எங்கட தமிழரிண்ட சீவியத்துக்கு நீர் என்ன எண்டு இதுக்கொரு மறுப்புக்கதை சொல்லப் போறி.? அப்பிடி உம்முடைய உந்தக் கருத்தை ஆருக்கும் சொல்லுறத்துக்கு உம்மால எப்பிடித்தான் முடியும்.'
உம்மட கணக்குக்கு என்ரயும் ஒருகத - கணக்குக்கு கணக்கு இப்ப சரிதானே? - என்ற அளவில் பொன்னம்பலத்தார் அதைத் தன்
ஓஅவனால் முடியும் 136

மனதில் நினைத்துக்கொண்டு ராசதுரையை ஒருபார்வை பார்த்தார்.
கேக்கிற துள்ளல் இல்லாத மாதிரியான ஒரு சோர்ந்த நிலையில் ராச துரையும் இப்போது இருந்தார். ஆழம் ஆழமாய் ஓடுகிற தன்நினைவுகளின் ஆணிவேர் ஆறுந்ததைப் போல் அவர் இப்போது காணப்பட்டார்.
உடல் குளிர்ச்சின் மிருதுவோடு பொன்னம்பலத்தாருக்கு இப்போது உசார் வந்து விட்டது.
“இந்தப் பக்கம் வரேக்க றோட்டுவழிய ஒரே சாணகமும் மூத்திரச்சகதியும் தான். இதால நடக்கேக்க, ஒண்டும் காலில போட்டிருக்கிற இந்தச் செருப்பால ஏதும் அசிங்கங்கள் பின்னால உடுப்பு வழிய அடிச்சுப்படாம இருக்க வேண்டி மடிச்சு இதில வரேக்க, கட்டுற இந்த வேட்டிய மேலதுாக்கி கட்டிக்கொள்ள வேணும்.”
என்று சொல்லிக்கொண்டு அவர்தன் வேட்டியை கால் முழங்காலுக்கு மேல் மடித்து கட்டினார், பின்னர் ராசதுரையைப் பார்த்து.
"அப்ப நான் வாறன் காணும்.”
என்று மலர்ச்சியுடன் அவருக்குச் சொல்லிவிட்டு, அவர் நடையைக் கட்டத் தொடங்கினார். பொன்னுத்துரை நடந்து போய்க்கொண்டிருப்பதை அந்த இடத்தில் நின்றபடி பார்த்துக் கொண்டேயிருந்தார் ராசதுரை.
“இவருக்குள்ள அந்த நிம்மதி மாதிரியே நானும் சீவிக்கக் கிடைச்சா எப்படி..?”
என்று அவர் இப்போது தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.
(2011)
137 நீ.பி.அருளானந்தம்

Page 71
நாணலை நிமிர்த்த முடியவில்லை
கொஞ்சம் போல உள்ள மனக் குழப்பத்தோடே நான் அந்தக் கதிரையில் இருந்து கொண்டிருந்தேன். யோசனையோடு கைவிரல்களால் என் வலப்பக்கத்துக் காதை வருடுவதும், இழுத்து இழுத்துப் பார்ப்பதுமாக இருந்து கொண்டிருந்தேன். காதுச் செவியின் உட்புறத்தே ஒரு மயிர் வளர்ந்து நீண்டிருப்பது கைவிரல்களிலும் அங்கே எனக்கு அகப்பட்டது. உடனே பிடுங்கி விடலாமென்று விரலால் அதைப் பிடித்து இழுத்தேன். மயிர் க் காலுக்குள்ளே உடனே அது எனக்கு நோக் காட்டியது. அந்தப் பக்கம் அதனால் விடுத்துவிட்டு, பெருவிரலையும் ஆட்காட்டிவிரலையும் மூக்கின் வெளித்துவாரத்தடியில் கொண்டுபோய் இருமுறை துடைத்தேன். அதிலும் ஒரு நீட்டு மயிர் மூக்குக்குள் ளாலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்ததில் விரல்களுக்கு அது எனக்குப் பிடிபட்டது. அதையும் வலுக்க ஒரு முறை இழுத்துப் பார்த்தேன். பிடுங்கியெடுக்க முடியவில்லை. அதுவும் காது மயிர்போல நொந்தது. இதற்குப் பிறகு அவசரம் காட்டும் அசைவோடு நான் இருந்து கொண்டிருந்தேன்.
தெய்வம் எப்போது கண் திறக்குமோ என்ற மாதிரியான எதிர்ப்பார்ப்போடு எனக்கு முன்னால் இருந்த மேசைக்கு மறுபக்கத்தில் கதிரையில் இருந்துகொண்டிருந்த அந்தப் பாடசாலை அதிபரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்தப் பள்ளிக் கூட நூலகத்திற்கு பணத்துக்கு விற்பனை செய்யக் கொண்டுவந்திருந்த நான் எழுதிய நூல் பிரதிகள் சில
ஓஅவனால் முடியும் 138
 

அந்த மேசையின் மேலே சிறிய உயரத்திற்கு ஒழுங்காக அடுக்கி வைத்த கணக்கில் இருந்தது. நான் அந்த அலுவலக அறைக்குள் வரமுன்பாக மரியாதை கருதி வெளி வாசலில்தான் நின்றிருந்தேன். கையில் நான் கொண்டுவந்திருந்த புத்தகக்கட்டு இருந்தது.
"அதிபர் என்னைக் கண்டு விட்டு உள்ளே வாருங்கள்" என்று சொல்லித்தன் தலையையும் ஆட்டினார்.
அவர் அழைக்கவும் உள்ளே நான் போனேன்.
"வணக்கம்" என்றேன்.
அவரும் "வணக்கம்" சொன்னார்.
"நான் ஒரு எழுத்தாளன்! நான் எழுதிய புத்தகங்களை
பாடசாலை நூலகத்துக்கு விற்பனை செய்யவென கொண்டு வந்திருக்கின்றேன்" என்று சொன்னேன்.
அவர் உடனே தன் கையை, புத்தகத்தை வாங்கி கொள்ள என் பக்கம் பார்த்து நீட்டினார்.
நான் கொடுத்தேன்.
அவர் அதை வாங்கி ஒவ்வொரு புத்தகமாகப் பார்த்தார்.
"நிறைய எழுதியிருக்கிறீர்கள்.
. . . . יין
“அதிகமாக என்ன விஷயத்தைப் பற்றி இந்தக் கதைகளில் நீங்கள் எழுதினீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார்.
“யுத்த காலம் தானே அதைப் பற்றித் தான்!” என்று கதையை நான் தொடங்கிவிட்டு - மகாபாரதக்கதையில் சஞ்சையன் பார்த்துச் சொன்ன குருசேத்திர யுத்த கள வர்ணனை போல - சில சம்பவ்ங்களை நான் அவருக்குச்சொன்னேன். அதையெல்லாம் வெவ்வேறு விதமான வாசிப்பினுடாக நான் பெற்றுக்கொண்ட கதை நுணுக்கங்களை பாவித்து
139 நீ.பி.அருளானந்தம்

Page 72
இந்தச் சிறு கதைகளை நான் எழுதியிருப்பதாவும் அவருக்கு நான் விளக்கினேன்.
அவர் கதைப் பரப்புகள் கொண்ட புராணம் கேட்பது மாதிரி நான் சொன்னவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.
நான் அந்தக் கதைகளையெல்லாம் அவருக்குச் சொல்லச் சொல்ல, அவர் என்னை - இலியட், ஒடிசி, ஹோமர், தாந்தே - போன்றவர்களாக என்னையும் நினைத்து வியப்புடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
என் கதையை அப்படியே கேட்டபடி, ஏழடி உயர தியான நிலைக்கு தான் போன மாதிரி நுரை ஈரல் வீங்க அவர் சுவாசிக்கத் தொடங்கினார். -
நான் கதையை எல்லாம் சொல்லிவிட்டு சாப்பாடுமில்லாமல் தூக்கமுமில்லாமல் இருக்கிறவன் போன்ற ஒரு பசித்தவத்தில் மெலிந்த ஒரு கணக்கிலே அவரைப் பார்த்தேன்.
"நூல்களில் சில பிரதிகளை கொள்முதல் செய்து எனக்கு நீங்கள் உதவவேண்டும்." - என்று கேட்டேன்.
அவர் உடனே புன் முறுவலுடன் மிதந்து கொண்டு, "அதுக்கென்ன, மாணவர்க்குத் தேவையான புத்தகத்தைப் பார்த்து வாங்குகிறோம்" - என்றார்.
அவர் அப்படிச் சொன்னதற்கு
"என்ன இவர் இப்படிச் சொல்கிறார்? - என்றதாய் நினைத்து என் முகத்தில் சுளிப்பு ஏற்பட்டது.
நான் எழுதிய நூல்கள் அனைத்தும் நாவல், சிறுகதை, கவிதை நூல்கள்தான். இவற்றுள்ளே மாணவர்தம் கல்விக்கு உதவும் படியான ஏதும் நூல்கள் அப்படியாய் ஒன்றும் இல்லையே' - என்றதாய் ஒரு 'திக்திக் - அடிகள் என் நெஞ்சுக்குள் விழுந்தன.
"நூல்களை வாங்காமல் இவர்கள் விட்டு விடுவார்களோ? -
என்ற ஒரு ஏக்கம், என் மனத்துக்குள்ளே குவிந்து நெஞ்சை இறுக்கியது.
ஓஅவனால் முடியும் 140
 

"எனது புத்தகத்தை எப்படியும் வாங்குங்கோ வாங்குங்கோ' - என்று அவரின் நெற்றியைப் பார்த்தபடி வார்த்தைகளை நான் மனதுக்குள் ஜெபித்துக் கொண்டிருந்தேன்.
நான் மெளனத்துக்குள் விழுந்த அளவில் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த நேரம் போல் அங்கு கல்வி கற்பிக்கிற ஆசிரியர் ஒருவர் அதிபரின் அலுவலக வாசலிலே வந்துநின்றார். அவரை அதிபர் கண்டுவிட்டு.
அவங்களுக்கு நல்லபேச்சுக் குடுத்தாச்சோ - என்று கேட்டார்.
'ஓம் .’ என்று தன் கையிலுள்ள பிரம்பை பணிவாக கீழே பிடித்தபடி அசைத்துக் கொண்டு அவர் சொன்னார்.
“அவங்களைக் கூட்டி கொண்டு இங்கேயா வந்திருக்கிறீங்களோ'
“வெளியே நிக்கிறாங்கள். "
"அப்ப உள்ள வரச் சொல்லுங்கோ’
G. G. 99
ஓம் .” என்று விட்டு அவர் அங்காலே திரும்பினார்,
'அவங்கள் மொத்தம் நாலு பேர் என்ன’
நாடியை கையால் துடைத்துக் கொண்டு அதிபர் கேட்டார்.
“ஓம். சேர்!’ என்று விட்டு வெளியே சென்று பெடியன்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தார் அவர்.
மாணவர்கள் நால்வரும் வரிசையாக உள்ளே வந்து நின்றார்கள். ஆசிரியர் அவர்கள் நிற்கும் இடத்தை விட்டு சற்று தூரமாய்த் தள்ளிப் போய் நின்றார். நான் மாணவர்களைப் பார்த்தேன். வெள்ளைக் கால்சட்டை சேட்டுடன், கழுத்துப் பட்டி சகிதமாய் - உறுதியாகத்தான் பார்க்க அவர்கள் எனக்குத் தெரிந்தார்கள் - உண்மையில் உருக்கு முஷ்டிகளுடைய அந்த ஆசிரியரிடம் பிரம்படி வாங்கியது போல தாறுமாறான பேச் செல்லாம் வாங்கியது அவர்களிடமாகத்
141 நீ.பி.அருளானந்தம்

Page 73
தெரியவில்லை. ஆனால் உறங்கின துக்கமொன்று அவர்களின் முகங்களில் தெரிந்தது.
அதிபர் உச்சி முதல் உள்ளங்கால் வரை மாணவர்களைப் பார்த்தார்.
முன்னால் நிரையில் நின்ற மாணவனை தைத்துப் போடுகிற மாதிரியாய்ப் பிறகு ஒரு பார்வை பார்த்தார்.
'உன்ரை லோஞ்சென்னடா இப்பிடி! நீ எப்படியாய் அதப் போட்டிருக்கிறாய்! மேல தூக்கி விர்றா லோஞ்சை.” கோபம் கொப்பளித்த படி அவர் சொல்ல, அவர் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கொண்டு - கால்சட்டையைக் கையால், இடுப்புக்கு மேல் இழுத்துவிட்டான் அவன்.
அதிலே இருந்து கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன முறையிலே என்னையும் கட்டாயப்படுத்தியது போல ஒரு உணர்வாயிருந்தது.
பள்ளிக் கூடத்துக்கு வரமுதல், நான் பிரயாணம் செய்துவந்த ஆட்டோவை ஒரு வெளியிடத்திலே நிறுத்தும்படி சொல்லிவிட்டு, அந்த இடத்தில் கான் வழியாய் இறங்கி நான் நின்றபடி, ஒன்றுக்கிருந்து விட்டு வந்திருந்தேன்.
"அவசரத்தில் கால்சட்டைச் சிப்பை மேலே இழுத்து மூடிவிடாமல் நான் வந்திருப்பேனோ..?" என்றதாய் எனக்கு ஒரு ஐயம்.
என்கை உடனே மேசைக்குக் கீழே போய் கால்சட்டை சிப்ரரை சரிபார்த்துக் கொண்டது. இப்படி பாடசாலைக்கு நாங்கள் வந்தால், பழையபடி ஒரு மாணவன் போலவும், நல்ல பழக்கவழக்கமாகவும் நாங்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து, ஒரு பயமாகவும் எனக்குள் அப்போது இருந்தது.
என்னுடைய நெற்றியிலே ஒரு 'ஈ'-பறந்து வந்து இருந்து கொண்டு நடனமாடத் தொடங்கியிருந்தது. நான் அந்த ஈயைக் கலைத்துவிட்டு விரல்களைத் தலை முடிக்குள் விட்டு எதையோ தேடிக் கொண்டிருப்பதுபோல் சொறிந்தேன்.
142
நீ.பி.அருளானந்தம்

"பள்ளிக் கூடம் முடிஞ்சு ஏன்ரா நீங்கள் எல்லாம் ரியூசன் கிளாசுக்குப் படிக்கப் போறேல்ல."
அதிபரின் வாயிலிருந்து இந்தக் கேள்வி வந்தது. அந்த மாணவர்கள் நெற்றிக்குள் உள்ள பயத்துடிப்போடு அதிபரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"என்னடா நான் கேக்கிறன், ஒண்டும் பதில் அதுக்குச் சொல்லாம நிக்கிறியள். நீங்களெல்லாம் பள்ளிக் கூடம் விட்டு ரியூசன் கிளாசுக்குப் போகாம எங்கயெல்லாம் போறியள் என்னென்னவெல் லாம் வெளியிடங்களில போய்ச் செய்யிறியள் எண்டு நானும் அறிஞ்சு வைச்சுக் கொண்டுதான் இருக்கிறன். எனக்கு நீங்க செய்யிற பிரளியள் எல்லாம் நல்லாத் தெரியுமடா..?"
அதிபரின் இத்தகைய கேள்விகளின் எச்சில் - மாணவர்களின் முகத்தில் வீசியடிக்கிற மாதிரியாய் இருந்தது. அந்த மாணவர்கள் நால்வரும் ஒரே படகில் பயணிக்கிறவர்கள் போல ஒற்றுமையாய் அவர் முகத்தைப் பார்த்தபடி மெளனமாய் இருந்தார்கள்.
நான் வந்த இந்த இடத்தில் இப்படிப் பிரச்சனை அதிகமாக இருக்கிறதே? - என்று அப்போது எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
"எனக்கு ஒரு பிரச்சனை என்றால், மாணவர்களுக்கு இப்போது இரண்டு பிரச்சனை! அதிபருக்கு மூன்று பிரச்சனையாயிருக்குமோ? நேரம் என்னைக் கிண்டித் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தது. "வெளியே நிற்கும் ஆட்டோவுக்கும் மீற்றர் ஏறிக்கொண்டிருக்குமே..? இங்கே சிலவேளை புத்தகத்தை நான் விற்றாலும் அந்தக் காசு ஆட்டோ கணக்குக்குத்தான் பிறகு குடுத்ததாகப் போகுமோ..?
எனக்குள் எழுந்து கொண்டிருந்த இந்தக் கேள்விகளை வைத்து நான் மூளையை உடைத்துக் கொண்டிருந்தேன்.
அதிபர் மாணவர்கள் மேல் இன்னமும் தன் கல்லெறியும் பார்வையோடுதான் இருந்தார்.
"இந்த முறை இதுதான் கடைசியா உங்களுக்கு வோணிங்.
143 - நீ.பி.அருளானந்தம்

Page 74
இனிமேல் பட்டு ரியூசன் கிளாசுக்குப் போகாமலா இருந்தியளோ - பிறகு உங்களுக்கு நடக்கிறதே வேற. போவீங்களோடா இனிமேப்பட்டு ரியூசனுக்கு நீங்க?" அதிபர் கண்டிப்பும் கடுமையாயும் இப்படிக் கேட்க உயிர்ப்புடன் சுவாசத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டதான ஒரு நிலையில் அந்த மாணவர்கள் "ஓம் சேர் போவம்." - என்று ஒருமைப் படக் கூறினார்கள்.
"போங்கடா கிளாசுக்கு."என்று ஒரு உறுதியான தூணாக
நிற்பதைப் போலக் கதிரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு, கல்லெறியிற மாதிரி அவர்களைக் கலைத்தார் அதிபர்.
மாணவர்கள் சாட்டை சுற்றுகிற சர்வாதிகாரியாய் அதிபரை தங்களுக்குள் நினைத்து, அது தங்களது பார்வையில் வெளிப்படாத வண்ணமாயும் அவரைப் பார்த்துத் தலையைக்குனிந்து கொண்டு, அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் அந்த அறையால் வெளிக்கிட ஆசிரியரும் அவர்களைப் பின்தொடர்ந்து வெளியேறினார்.
"நிலவிக் கொண்டிருந்த தடைகளையெல்லாம் இப்போ தாண்டியாகி விட்டது. இனிமேல் புத்தகத்தைப் பற்றி அதிபரோடு கதைத்துக் கொள்ளலாம்." என்று ஒருவித அவசரத்தன்மையோடு நான் இருந்தேன்.
ஆனால் அதிபரோ மாணவர்கள் தம் கோளாறை ஆராய்வதான கதையை எனக்குச் சொல்லத் தொடங்கினார்.
"இப்படித்தான் சேர்!" - என்று என்னைப் பார்த்த படி அவரது வாயிலிருந்து முதல் சொல் தோன்றியது. அவர் "சேர்!" என்று என்னைச் சொல்லவும் - எனக்குள்ளே அதையிட்டு பெருமையில் மரியாதைச் சுவர் எழும்பிக் கொண்டிருந்தது.
"சேர்! இவங்கள் ரியூசன் கிளாசுக்குப் போகாமல் அந்த நேரம் வெளியால போய் என்ன எல்லாம் செய்யிறாங்களெண்டு உங்களுக்குத் தெரியுமோ..? இவங்கள் சேர் ரியூசன் கட்போட்டுட்டுப் போய் பியர் அடிக்கிறாங்கள் சேர். சிகரெட் பத்திறாங்கள் சேர். பாத்தீங்களா இந்த வயசில இந்தப் பெடியள் செய்யிற வேலயள. நாங்களெல்லாம்
144 நீ.பி.அருளானந்தம்

மாணவனாயிருக்கேக்க படிக்கிறதுகள விட்டுட்டு இந்த வேலயளே அப்ப செய்து கொண்டு திரிஞ்சனாங்கள்.'
அதிபர் அப்படிச் சொல்லச் சொல்ல, நான் உதடுகளில் புன்சிரிப்புக் காட்டியபடி அவருக்கு நடித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளத்திற்குள் குளுமையை அடக்கி விடக் கூடிய சூட்டு வெக்கை அப்போது எழும்பிக் கொண்டிருந்தது.
செருக்காயிருந்த மரியாதைச் சுவர் இப்போது உடைந்து விழுகிறது போல எனக்கிருந்தது. அன்றைய காலம் மாணவனாயிருந்த காலத்தில் நான் பியர் குடித்தது - சிகரெட் பத்தியது தியேட்டரில் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலப் படம் - லைட் அணைய விட்டு ரிக்கற் எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒழித்துக் கொண்டு போய் உள்ளே இருந்து பார்த்தது.
எல்லாம் எனக்கு அப்போது ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தன. ஆனாலும் இப்போதுள்ள என் வயதின் அனுபவத்தில் அவை என் முகத்தில் வெளிப்படும் நிலையில்லாமல் அதிபரை பார்த்து நானும் அவரோடு சேர்ந்ததான ஒரு பக்குவத்தில் பிற்பாடும் சிரித்துக் கொண்டிருந்தேன்.
எல்லாவற்றையும் தார் பூசி அழித்த ஒரு நிலையில் வேறுபட்ட ஒரு பார்வையுடன் நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதிபர் மதிப்பும் மரியாதையுமாக பிறகும் என்னிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு, தங்கள் பள்ளிக் கூடத்து நூலக பொறுப்பாளரை அவ் விடத்துக்கு அழைத்து அவரிடமும் ஆலோசனையைக் கேட்டதன் பிறகு என்னிடமுள்ள நூல்களில் இரு பிரதிகளை மட்டும் வாங்கினார். வாங்கிய நூல்களுக்குரிய பணத்துக்கு காசோலை அவ்விடத்தே பின்பு எழுதப்பட்டது.
தன் கையெழுத்திட்ட அந்தக் காசோலையை அவர் என்னிடத்தில் நீட்டினார். "ஏதோ இவ்விடத்தில் கொடிகட்டிப் பறக்கப் போகிறது என் புத்தக வியாபாரம்." என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மனதுக்குக் கொஞ்சம் கவலைதான்!
145 நீ.பி.அருளானந்தம்

Page 75
என்றாலும், இதையாவது வாங்கினார்களே' என்ற அரை வாசித்திருப்தியில் உள்ளம் அமைதிப்பட அதிபருக்கு நன்றி சொல்லிவிட்டு, மிச்ச சொச்சமான என் புத்தகங்களை கையில் தூக்கியபடி காவிக் கொண்டு பள்ளிக்கூட கேற்றைத் திறந்து கொண்டு நான் வெளி வீதிப் பக்கம் வந்தேன். வீதிப் பக்கமாக நான் காலை வைத்தபோது துளிர்த்து ஆடும் கொழுந்து போல - என் மாணவப்பருவத்து நினைவுகளெல்லாம் எனக்கு நினைவில் வந்து கொண்டிருந்தன.
'அந்தக் காலம் படிக்கைக்க நான் பண்ணின கூத்து. இந்தப் பெடியளை விட இன்னும் பெரிய மோசமே.
அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்க, எனக்குச் சிரிப்பு வந்தது. உடனே எனக்குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டேன்.
என் பக்கமாக அப்போது ஆட்டோ வந்து நின்றது.
"ஒன்டரை மணித்தியாலம் டிலேயாய்ப் போச்சு . ஏன் இவ்வளவு நேரம்.?" என்று கேள்வி எழுப்பினார் ஆட்டோக்காரர்.
"மினக்கெடுத்திப் போட்டார் பிறின்சிப்பல். " என்றேன் நான்.
"இப்பிடி டிலே டிலே எண்டா. பேந்து எவ்வளவோ டிலே காசும் சேர்த்து நீங்க பிறகு தர வேண்டியதாகப் போகப்போவுது."
அவர் சொல்ல எனக்கு இருந்த மகிழ்ச்சியும் சிரிப்பும் போன இடம் எங்கே என்று தெரியாத அளவுக்குப் போய் விட்டது. ஆட்டோவுக்குள் ஏறி நான் ஒரு குகை மிருகம் போல இருந்து கொண்டேன். "புத்தகம் விக்கிற காசெல்லாம் ஆட்டோ ஒட்டத்துக்குக் குடுக்கத்தான் கணக்காயிருக்கும் போல" என்று ஆட்டோ ஒடுகிற வேகத்துக்குச் சமமாக நானும் காசுக்கணக்கை அப்போது பார்த்துக் கொண்டேன்.
(2010)
ஓஅவனால் முடியும் 146

சூரியண் வந்த சேர்ந்தான்
பளிச்சென்ற பேருந்துக்கள் அவ்விடத்தில் நின்றிருந்தன. பஸ்ஸின் முன்னாலுள்ள அந்த முகத்தில், கண்ணாடிக்குள்ளால் தென்பட்ட எழுத்துக்கள் பூச்சி பூச்சியாய் மூளைக்குள் அவருக்கு ஊர்ந்து கொண்டிருந்தன. தாய் மொழியிலே அவருக்கு எழுத்துக்களைப் பார்த்து வாசிக்கலாம்! ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் அவருக்கு அதை எழுத்துக் கூட்டிப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம். ஆனால் அவருக்கு ஒன்றும் தெரியாத அந்த எழுத்தை எப்படித்தான் படிப்பது?
கிறீச்சிடலுடன் ஒரு பேருந்து அவரைக் கடந்து போனது. கோணல் மாணலான ஒரு இடத்துக்கு இப்போது வந்து சேர்ந்தது போல அவர் நினைத்துக் கொண்டார். அவ்விடத்தில் கலவையாய்ப் பல குரல்கள் அவருக்குக் காதில் விழுந்து கொண்டிருந்தன.
"கொழும்பென்றால் இப்படித்தான்!” - என்று நினைத்துக் கொண்டு அவர் ஒரு பக்கம் நகர்ந்து போய் நின்றார். ஒரு விதமான எரிச்சல் அவருக்கு வந்தது. அந்த நடை பாதையிலும் நெருங்கிய ஒரு வித அணைப்புடன் சேர்ந்து கொண்டபடி காதல் ஜோடிகள் முன்னேறிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
147
நீ.பி.அருளானந்தம்

Page 76
சரிகை போட்ட செருப்பு - குட்டைப் பாவாடை - கிறிம் பூசி மினுக்கிய முகம் - மயிர் பிடுங்கிய வழுவழுப்பு உடல் கொண்ட ஸ்திரிகளைப் பார்க்க முகத்திலிருந்த இறுக்கம் அவருக்குத் தளர்ந்து விட்டது. சூடான ருசி மாதிரி அவரின் பார்வையில் பட்ட நடமாட்டமெல்லாம் இருந்தன. வீதியில் கூடாரம் மூடிய இராணுவ வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. இருந்த உயரத்தை விட கொஞ்சம் உயரமாகி - தான் நிற்பது போல நின்று கொண்டு, அவர் அதாலே போன அந்த வாகனங்களைப் பார்த்தார்.
வீட்டிலிருந்து புறப்பட்டு கொழும்புக் கோட்டைப்புகையிரத நிலையத்தடிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது எழுத்துப் பிழைகள் நிறையவே உள்ள தமிழ் எழுத்துக்களை அங்கே காணும் இடங்களில் படித்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை இருந்தது. அந்தப் பிழையான தமிழ் எழுத்துக்களை அங்கங்கே வாசித்த போது, அவருக்குத் தலையில் இடித்ததைப் போல இருந்தது. விசுக்கென்று போய் விடும் பஸ்ஸிற்குள்ளே அவர் இருந்தாலும் இதெல்லாமே அவருக்குக் கசக்கத் தான் செய்தது.
"கொழும்பில் எங்களப் போன்றவர்கள் வந்து குடியேறியிருந்தால்
இப்படிக் கசப்புகளும் இருந்தேதான் தீரும். என்று அப்போது அவர் நினைத்துக் கொண்டார்.
பஸ்போகும் போது, நடுச் சந்தியில் ஜலமூலையாக ஓரிடம் தென்பட்டது. அதிலே தண்ணி சுழற்சியாய்ப் பூக்கள் தெறித்த கணக்கில் நாற்புறமும் விசிறிக் கொண்டிருந்தன.
"சரி முக பாவத்தோடு உள்ள எங்கட இனசன பந்தங்களோட சேர்ந்து இருந்து சீவிக்க ஏலாம எங்கோ வேற ஒரு அன்னிய இடங்களில இப்பிடியா இடம் பெயர்ந்து வந்து நாங்கள் சீவிக்க வேண்டியதாப் GLT在GJ. தொண்டைக்குள்ள இருந்து வெளியால இவங்கட பாஷையில ஒண் டு ரெண்டு சொல்லுகளாச் சும் சொல் லிக் கொள்ளுறத்துக்கு வராம - இந்த இடத்தில இந்தப் பாஷையும் ஒழுங்காப் பேசத் தெரியாம இருக்கே.? ரெண்டும் கலந்ததா திக்கித்திக்கிப் பேசக்குள்ளயும் சனம் கேட்டும் சிரிக்கிதுகளே. 1?
ஓஅவனால் முடியும் 148

தண்ணி விசிறல் இடம் சட்டென பார்வையிலிருந்து அவருக்கு மறைந்து போய்விட்டது. விரைவுதான் அந்த பஸ்! இப்போது மார்பை அரைவாசி காட்டின ஒற்றைத் துணியில் ஒரு பெண் நின்றிருந்தாள். பாலியல் கேள்வி கேட்கிற முகம் மாதிரி அந்த முகம் விளம்பர கட்டவுட் தான். அதைத் தாண்டிப்போக ஆங்கிலப் படத்துச் சுவரொட்டிகள் காணப்பட்டன. எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொண்டு கடைசியாக இறங்கிய சனக் கூட்டத்தோடு அதிலே இறங்கிக் கொண்டவர்தான் அவர்.
அதற்குப் பிறகு வீட்டுக்குத் தேவையான சாமான்களைப் பார்த்து வாங்கிக் கொண்டு திரும்பவும் அந்த இடத்துக்கு மறுபக்கம் தட்டுத் தடுமாறிக் கொண்டபடி வந்து சேர்ந்தவர் பஸ்ஸின் இலக்க ஞாபகத்தைத் தொலைத்ததான நிலைக்குத் தன்னை ஆக்கிக் கொண்டு 6LTT.
அந்த இடத்தில் அவள் நின்று கொண்டிருந்த போது, அவருக்கு அருகிலேயும் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதிலே ஒருவன் தன் கையிலிருந்த சிகரெட்டின் புகை இழுப்புக்குப் பின் அதை அருகில் நின்ற மற்றவருக்குக் கொடுத்தான். இவருக்கு அந்தப் புகை மணம் பிடிபட்டுக் கொண்டது. "சிகரெட் புகையல்ல இது வேறு ஏதோ" என்று அவருக்கு மனத்துக்குள்ளே உறுத்தியது. உடனே அவர் நாலைந்து பேர் கொண்ட ஒரு கும்பலுக்குப் பக்கத்திலே போய் நின்று கொண்டார்.
கண்களை மறைத்த முடிக்கற்றையைத் தள்ளி விட்டுக் கொண்டு முன்னம் அதிலே பார்த்தவனை ஓரக்கண்ணால் இவர் பார்த்தபோது, அதை அவன் கண்டு விட்டு ஏதோ தனக்குள்ளே நினைத்துக் கொண்டதில் இவரைப் பார்த்து, விரட்டுகிற பாணியில் தன் இடது கையை ஆட்டினான்.
"அடச் சனியனே ஏன் எனக்கு இந்த விடுப்புப் பார்க்கிற வேல." நினைத்ததோடு தலையைக் கவிழ்த்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் அவ்விடத்துக்குத் தூரமாய் அவர் போய் நிற்கவேண்டியதான நிலையாகி விட்டது. ஏதோ ஞாபத்தைக் தொலைத்ததைப்போல அவருக்கு இருந்தது. 149 நீ.பி.அருளானந்தம்

Page 77
பகீரென்று இருந்தது. “காசுப் பர்ஸ் ஒழுங்காக கால்சட்டைப் பொக்கற்றில் இருக்கிறதோ இல்லையோ?” - என்று நினைத்து பின்புறம் கைவிட்டுத் தடவிப் பார்த்தார். இப்போது நிம்மதியாக இருந்தது. தாடி வைத்த ஒருவர் அதிலே நின்றார். முஸ்லிம் ஆள்தான் - இவரிடம் கேட்டால் தெரியும் தமிழில், பஸ் இலக்கமும் - போகிற விபரமும் கேட்டார். ஒரு புன்னகையோடு அவர் சொன்னது ஒன்றும் முதலில் இவருக்குப் புரியவில்லை. திரும்பவும் அவரைக் கேட்டு விபரம் புதுப்பித்துக் கொண்டபோது, அவரிடம் உள்ள படபடப்பு அடங்குவதாக இருந்தது. ஆனாலும் முதலில் அவர் கண்ட - அந்தப் புகைப் பிடிப்பவர்களை நினைத்ததில் பாதுகாப்பு உணர்வு அவர் உடம்பை நிறைத்தது.
"செத்துப்போன கெட்ட ஆவியள் மாதிரி உந்தத் தரித்திரங்கள் என்னையே கண் எடுக்காமல் பாத்துக் கொண்டு நிற்கிறாங்களே?" - வெறுப்பானதும் பயமானதுமான இந்த எண்ணம் மனதிலே அவருக்கு இருந்தாலும். "இனிக் கிளம்பலாம் இதால" - என்ற யோசனையிலே முன்னால் வந்து நின்ற பஸ்ஸினருகிலே சென்று மிதி பலகையில் கால் வைத்து உள்ளே ஏறிப் போய் சீற்றில் இருந்து விட்டார். கொஞ்ச நேரத்தில் அதிக சனத்தைக் கொண்டதான அந்த பஸ் வெளிக்கிட்டது. அந்தச் சனநெரிசலுக்குள் - தண்ணீர்ப் போத்தல் விற்பவனின் நடமாட்டம் இருந்தது. அவனைப் பார்த்ததும் - "கொழும்பில் இனி எப்படித்தான் குடும்பத்தோட நான் சீவியம் பண்ணுறது?" - என்ற பயம் அவருக்கு மனதில் வந்தது.
திரும்பி பஸ்ஸிலே வீட்டுக்கு அவர் வந்து கொண்டிருக்கும் போதும் - பார்க்கும் எல்லாமே அவருக்குக் கவனத்துக்கு உரியதாகவே தான் இருந்தன.
"எவ்வளவோ இடறல்பட்டுப் போய் இடம் பெயர்ந்து வாயில சாம்பல் பூத்த மாதிரி இங்க வந்து சேந்தாலும் - வெளியூர் எண்டுறது இன்னொரு பக்கம் இனிக்கத்தானே செய்யிது - ரூபா ஆரும் ஒருவர் கொடுத்தா ஒற்றை ஒற்றை நோட்டா எடுத்துச் சோக்கா சில வழிச்சுக் கொண்டிருக்க நல்ல இடம் தான். ஆனா என்னய மாதிரி அப்படி உதவியள் ஏதுமில்லாத ஆக்களுக்கு இப்படியான அன்னிய இடம்
150 நீ.பி.அருளானந்தம்
 

சீவிக்கிறதுக்கு எப்படித்தோதுப்படும்.? - இறங்க வேண்டிய தன்னுடைய இடம் ஏதோ ஞாபகமாகத்தான் அவருக்கு இருந்தது. காலடியில் போட்டு சீற்றுக்கு அடியில் ஓரமாக தள்ளி வைத்திருந்த தன் சாமான் பையை கையில் எடுத்துக்கொண்டு, பெல் அடித்து பஸ்ஸிற்குள்ளால் இருந்து அவர் இறங்கிக் கொண்டார். எதுவும் தன்னை விட்டு இப்போ தவறிப் போகவில்லை என்று அவருக்கு பிறகு நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியோடு அவர் வீட்டுக்கும் போய்ச் சேர்ந்தார்.
"என்ன ஊரோ? இப்பிடி மழை கொட்டுக்கொட்டெண்டு கொட்டுது அங்க யெண்டா மண்ணும் புழுதியும் - இங்கயெண்டா மழை கொழும்பில உள்ளகட்டடச் சுவரத் தானே இந்த மழை பெஞ்சு கழுவுது அங்கயெண்டா தோட்டமெண்டாலும் இந்தப்பெய்யிற மழைக்குச் செழிக்குமே..?" மத்தியானம் சாப்பிட்டு விட்டு. பெய்த மழையை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் பொழுதும் அவருக்குப் பட்டுவிட்டது.
இந்த நேரத்தில் தான் பக்கத்து அறைக்காற அந்த ஆம்பிள்ளையஸ் அவரிடம் பேச வந்து சேர்ந்தார்கள். இவளவு தூரம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தவரல்லவா இவர் அதிலே வந்தவர்களுக்கெல்லாம் அவரைக்கான இந்த நினைப்புத்தான்! அதிலே ஒருவருக்கு தமிழ் - நன்றாகப் பேச வரும். "இண்டைக்குவா எங்களிக்கு எல்லாமா நிவாடு வேலங்கில்லே! சும்மாதான் எஞ்சோயா தெரியாதா. கொஞ்சம் றிலக்ஸ் எடுக்கிறாம். வாங்களேன் நீங்கலும், 'றிங்ஸ் அடிக்கலாம். சிங்களம் தெமில் எல்லாம் நாங்க ஒன்டு தானே." - ஜாதி இரத்தத்தைத் துடைத்தெறிந்து விட்ட கணக்கில் இவருடன் நட்போடு கதைத்தார் அவர். அப்படியான அவரது அழைப்புக் குரல் நிறைய ஆறுதலாக இவருக்குப்பட்டது.
அவர்களின் வாயிலிருந்து நல்ல புதுச் சாராயத்தின் தூக்கலான மணம் கெட்டியாக வெளிவந்து இவரது மூக்கில் எட்டியது.
இவருக்கு காய்ந்த சருகுகளில் தீ வைத்து விட்டது போல மனதில் ஒரு ஆசை என்றாலும் "பறவாயில்ல நீங்க எடுங்கோ. நான் இன்னொரு நாள் உங்களிட்ட வாறன்."
151 நீ.பி.அருளானந்தம்

Page 78
இப்பிடியாக தான் சொல்ல அவர்கள் சென்றுவிடுவார்களோ என்றும் அவருக்கு யோசனை
"பறவாயில்ல சும்மா வாங்கய்யா."
ஒருவர் சொல்ல மற்றைய மூன்று பேரும் வெறி மகிழ்வில் சிரித்தார்கள்.
"வாங்கயேன் ஐயா. வாங்கயேன் . சும்மா வாங்கய்யா."
அவரை கூப்பிடுவதில் எல்லோருமே இணையாக இருந்தார்கள்.
அந்த ஹாலில் நடக்கும் இவர்களது உரையாடல்களை யெல்லாம் இந்நேரம் அவரது மனைவி குசினிக்குள் இருந்தபடி மிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். "அவர்கள் கூப்பிடுவதை தன் கணவராலும் நிராகரிக்க முடியாது. எப்பிடியும் இந்த வந்திருக்கும் இடத்திலே, அவர் அவர்கள் கூப்பிடுவதற்கு மரியாதை கொடுத்துப் போகத்தான் வேண்டும்" - என்றும் அவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
"வாங்க வாங்க! ஒரு பிரண்சிப்பா வந்து எங்க கூட சேயா பண்ணுங்க..' - என்று பிறகும் அவரை மிக நேர்த்தியாக அவர்கள் அழைத்தார்கள்.
இவருக்கும் உடலை தணிவுபடுத்தும் வெப்பமூட்ட ஒருவித சூடான பானம் வேண்டியதாய் இருந்தது.
எனினும், அதிக பட்சம் மதுக் குடியில் விருப்பில்லாதவராக தன்னை அவர்களுக்குக் காட்டிக்கொண்டு, நட்பு ஒன்று தான் அவர்களோடு தனக்கு முக்கியம்! - என்பது மாதிரி காட்டியபடி அவர்களோடு அவர் வெளிக்கிட்டார்.
வீட்டுக்கான் - பக்கமிருந்து அவர் முன்பு அனுபவித்திராத ஒரு காற்று சிலுப்பிக் கொண்டிருந்தது. தான் ஏதோவொரு சுரங்கப்பாதை வழியாக நடப்பது போல அவர், அவர்களுக்குப் பின்னாலேயாய் நடந்து கொண்டிருந்தார்.
ஓஅவனால் முடியும் 152

அங்கே உள் இடத்தில் அவர்களது வீட்டுக்குள்ளும் பலர் பேசிக் கொண்டிருந்தார் கள் விசேஷம் ஏதோ நிகழ்ந்து கொண்டிக்கிறதாக்கும் என்றதாய் இவர் நினைத்தார். வீட்டுக்குப் பின்னாலுள்ள சீமெந்து போடப்பட்டிருந்த ஒரு தரைக்கு அவர்கள் இவரைக் கூட்டிப் போனார்கள். அங்கே நீண்ட மேசைக்குப் பக்கத்தில் கதிரைகளும் இருந்தன. சுருண்டு உறங்குகிறவர்கள் மாதிரி இருப்பவர்களை உசுப்பி எழுப்பிவிடக் கூடிய சாராயம் உள்ள போத்தல்களும் அங்கேயுள்ள மேசை மேலே இருந்தன.
எல்லோரும் கதிரையில் அமர்ந்து விட்ட பிறகு அவர்களது இனத்தின் மொழியில் அவர்களில் ஒருவர்.
"நாங்க எல்லாருமா குடிப்பம்" - என்று சொன்னார்.
வேற்று மண்ணில், வேற்று மொழியில், வேற்று கதை பேச்சுக்களில், தான் இப்போது உலாவிக் கொண்டிருப்பது மாதிரியாக அவருக்கிருந்தது. வானத்தை குறுக்காகப் பிரித்துப் பரவிய மின்னல் கொடிபோல முதல் கிளாஸ் ஊற்றி - அவர்களுடன் சேர்ஸ் சொல்லி குடிக்கும் போது இவரும் அனுபவித்தார்.
அவர்களுக்கு இன்னும் மேலே மேலே வெறிமிதந்து வர,
தங்களுக்கு சமூகத்தின் விழிப்பு இப்போது ஏற்பட்டது மாதிரி கதையைத்
தொடங்கினார்கள்.
"நீங்களும் நாங்களுமா எல்லாமா ஒண்டுதானே? நாங்கலும் நீங்கலுமா எல்லாம் இங்க சிறீலங்கா தானே.” அவருக்கு வெறியாயிருந்தாலும் இதைச் சொல்லும் போது கண்களில் தேனின் பளபளப்போடு சொன்னார்.
அவர் அப்படிச் சொல்லவும் மற்றைய குரல்களெல்லாம் அதை ஆமோதித்த அளவில் ஒலிக்கத் தொடங்கின. அவர்களெல்லாம் அப்படிச் சொல்ல - இவருக்கு மொழியிழந்து தான் திசையற்று அலையத் தொடங்குவது போல உடனே இருந்தது. அவர் இன்னொரு கிளாஸ் சாராயம் வார்த்து உடம்பும் மனமும் சுறுசுறுப்பாக இயங்குவதற்குக் குடித்தார். மூடித் திறந்த போத்தலிலிருந்து மற்றவர்களும் சாராயம்
153 நீ.பி.அருளானந்தம்

Page 79
வார்த்துக் குடித்தார்கள். எல்லோருக்கும் முக நிறம் மாறிக் கொண்டிருந்தது. இவருக்கு ஆவேசமும் கோபமுமான அலைப்பரவல். அந்த அலைகளை முழுச் சக்தியோடு வெளியேற்ற இவர் துடித்தார். திரும்பவும் அவர் மனத்தைக் குலைத்து விடக் கூடிய ”சிறீலங்கா நாங்களெல்லாம்!” என்ற கதை வந்து அவரை எரித்தது. அவரைத் துணிவு கொள்ள விடாது அந்தச் சொல் மனதுக்குள்ளேயாய் அவரைத் துழாவியது. உடலை முறுக்கிக் குத்தியது போல இருந்தது.
"எங்கட வம்சா வழி பாருங்க தேசாந்திரம் இல்லாத பரதேசியளில்ல. எங்களப் பற்றியும் நீங்கள் சிங்களவர்களாயிருக்கிற சகோதரர்கள், இத விளக்கமாகத் தெரிஞ்சு கொள்ளத்தான் வேணும். நாங்கள் ஏன் உங்களப் போல சிறீலங்கா எண்டு சொல்லாம அந்தச் சொல்லையே சொல்லுறத்துக்கு மனதால வெறுக்கிறம் தெரியுமா..?”
அவர் இப்படியாக வெட்டவெளிச்சமாகக் கதைக்க மற்றவர்களது பார்வையெல்லாம் வெட்ட வெளிச்சமாகியது.
அவர் பிறகு சொன்னார்:
"அதுக்கெல்லாம் காரணமிருக்கு . தமிழன் எண்டு இங்க நீங்க எங்களப் பற்றி ஒரு பேச்செடுத்தாலே இந்த நாட்டில எங்களுக்கு உரிமையே இல்லை எண்ட மாதிரி நீங்க கதைக்கிறீங்க. எங்களயெல்லாம் இந்த நாட்டில சக வாழ்க்கைப் பங்காளிகளில்ல எண்ட மாதிரி எல்லாத்திலயும் எங்கள ஒதுக்கி வைக்கிறீங்க. இந்த நாட்டில நாங்க பிறந்து வளர்ந்தும் எங்களுக்கெண்டு ஒரு சுதந்திரமில்ல. அங்க வரப்பிடாதெண்டு தடை. இங்க போகப்பிடாது, இருக்கப் பிடாது எண்ட தடை. எங்கட வாழ்க் கையிண்ட அமுதத்தையெல்லாம் கைகளில இருந்து ஒழுக விட்ட கணக்காக நாங்க இப்ப சீவிச்சுக் கொண்டு இந்நாட்டில இருக்கிறம். இதாலதான் சிறீலங்கா நாங்க எண்டு சொல்லுறது எங்கட மனதில இருக்கத் தேவயில் லயெண்டு அதை நாங்க வெளியால தள்ளுறம் . எங்களுக்குப் பக்கத்தில இருக்கிற தேசம் இந்தியா. அங்கயும் எத்தனையோ கோடிக்கணக்குக்கு மேல இப்ப தமிழர் இருக்கிறாங்க. அங்கயும் அவங்களுக்க பல பிரச்சனையிருக்கெண்டாலும் இங்கின எங்கள மாதிரி அவங்க உதாசீனப்படாம இருக்கிற அளவில
ஓஅவனால் முடியும் 154

நாங்களெல்லாம் இந்தியன் எண்டு அவங்கள் தங்கள சொல்லுறாங்க. அங்கால பிரிட்டிஸ்காரன் நான் பிரிட்டிஸ் பிரசை எண்டுறான். ! அமெரிக்கன் தான் அமெரிக்கன் எண்டுறான். இப்படியா ஒவ்வொரு நாட்டுக்காறனும் தன்ர தேசத்தை சொல்லி மார்தட்டிக் கொண்டிருகிறான். ஆனால், இங்க இருக்கிற தமிழர் நாங்க ஏன் இப்படியாய்யெல்லாம் பங்கு பெறாத அளவில் கசப்பா இருக்கிறம்?
அதுக்கெல்லாம் காரணம் நீங்கள் தான். நீங்க எங்கள உங்களுக்குச் சரிசமமா அணைச்ச மாதிரி எல்லா முறையளியும் இருந்து வந்திருந்தா இந்த நாடு இண்டைக்கு எவ்வளவோ தூரம் முன்னேறியிருக்கும். வேறமாதிரி பிரச்சனைகளும் வந்திருக்காது. நூற்றைம்பது இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குள்ள குடியேறிய அவுஸ்ரேலியா, சிங்கப்பூரே வியக்கத்தக்க அளவில உலகத்தில முன்னேறியிருக்கு.
ஆனா இரண்டாயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு மேல ஒழுங்கான சரித்திரத்தையும் நாகரீகமான மனித வாழ்க்கையையும் வைச்சுக் கொண்டிருக்கிற இந்த நாடு என்ன ஒரு காரணத்தால இன்னும் கூட ஒழுங்கா முன்னேறாமலிருக்கு.?”
நிற்காமல் பேசிக் கொண்டு வந்த அவர் இந்தக் கடைசிக் கேள்வியோடு தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.
பாஷை தெரிந்தவருக்கு பாறையின் கனமாய் மனத்தின் மீது ஏதோ ஏறிக்கொண்டிருப்பதாய்ப்பட்டது. .
அவர் சொன்னதை ஒழுங்காக விளங்கிக் கொள்ள சிரமமாய் இருந்தவர்களுக்கெல்லாம், பிறகு அவர்தன் பாஷையிலே எல்லா வற்றையும் விபரமாகச் சொன்னார். அவர் இப்படி சொல்லும்போது அதிகாரம் கொண்டவர்களாக இந்த நாட்டில் தாங்கள் இருக்கிறோம் என்ற எண்ணமாய் இருந்த அவர்கள் அப்படியே சுருங்கியது போல ஒரு மாதிரியாய் விட்டார்கள். அந்த வெறியிலும் சோகைபட்டது போல எல்லோரும் குட்டையாகி விட்டார்கள்.
155 நீ.பி.அருளானந்தம்

Page 80
அதுக்குப் பிறகு இப்பொழுது தான் தங்களுக்கு தேடும் பொருள் அகப்பட்டது மாதிரி ஒரு வித உணர்வில் அலைமோதிக் கொண்டதாய் அவர்கள் எழும்பினார்கள்.
அவர்களிலே தமிழ்ப் பேசத் தெரிந்தவர்.
"இங்க பாருங்க பாருங்க நீங்க சொன்ன தெல்லாம் எங்களக்கெல்லாமா நெஞ்சில நெருப்பவைச்ச மாதிரி இருக்கு நீங்க சொன்னதுகளில எவ்விளோ உண்மை சரியா இருக்கு. நாங்களும் தான் இதுங்கள யோசிச்சதில்ல. நம்ம ஆக்கலுமா நீங்க சொன்ன அதுங்களயெல்லாம் யோசிக்கிறங்களா. நேத மச்சான்."என்று அவர் தன் ஆக்களையும் பார்த்து மொழியை மாற்றிக் கொண்டு பிறகு தன் கருத்தையும் அவர்களுக்கு உடனே அவர் சொன்னார்.
அவர்களெல்லாம் இவர் சொன்னதை கேட்டுவிட்டு, தங்கள் எல்லோரையும் விட மேலானவராக வந்திருக்கின்ற இவரைப் பார்த்தார்கள். புரிந்ததும் புரியாததுமாய் தங்கள் மனதுக்குள் அவர்கள் பிரிந்து கொண்ட அளவிலே கிடந்தார்கள்.
அவர்களில் ஒருவர் கன்றுக்குட்டி முகத்தை கையில் தேய்த்த கணக்காக தேய்த்த படி யோசித்துக் கொண்டிருந்தார்.
"இதுங்கெல்லாமே இந்த நாட்டுல மாறி மாறியா வாற பொலிட்டிக்ஸ்சில உள்ள ஆக்களுங்க தான் காரணம். பாருங்க இவங்க தானே இந்த சனத்தையெல்லாமே கெடுத்து நாட்டையும் குட்டிச் சுவர் ஆக்கியிருக்கானுங்க. அரசியல் காரணுங்க யாருங்க முகத்தையும் பாருங்க இப்பிடி இப்பிடியா வீங்கிபோயிருக்கிற மாதிரி வெடிக்கிற மாதிரியா இருக்கு. நல்ல புஷ்டியா அவுங்களெல்லாம் இருக்கிறாங்க. தங்கலுக்கான அவனுங்க பாத்திரமா தங்களுவள பாத்தி சொகுசுவா பாருங்க நல்லா இருந்துகிட்டு சீவிக்கிறாங்க. ஆனா இந்த நாடு.' கன்னங்கள் இறுகிய நிலையிலே தமிழ்த் தெரிந்த அவர் இவைகளை இவரிடம் சொன்னார். அதையே பிறகு சிங்களத்திலும் அவர் தன்னவர்களுக்கு விளங்கச் சொன்னார். அவர்களும் மன உள் வலியோடு புருவங்களை நெரித்துக் கொண்டு
ஓஅவனால் முடியும் 156

அவதானத்துடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதிர்வுகளிலே உதிருகிற மாதிரி தாங்களும் இருந்து கொண்டு. தனித்தனியாய் அவர்களும் தங்கள் அபிப்பிராயத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தான் கூறிய கருத்துக்களுக்குச் சார்பாக மாலைகள் தன் கழுத்தில் விழுந்து கொண்டிருக்கிற மாதிரியாய் இவருக்கு அப்போது இருந்தது.
என்றாலும் இந்த நாலுபேருக்கு நான் இதை சொன்னால் மட்டும் போதுமா. குறைந்தது இவர்களைப் போல் நாற்பது லட்சம் பேருக்காவது இந்த விஷயங்கள் ஒழுங்காக இந்த நாட்டிலே தெரிய வரவேண்டுமே? என்றதான ஆதங்கம் அவருக்கு உள்ளத்தில் அப்போது எழுந்தது.
(2010)
157 நீ.பி.அருளானந்தம்

Page 81
சுமையோடு நிற்றல்
அந்தப் பூனையின் அழுகைக்குரலை காதுகளில் கேட்கக் கேட்க தலைக்குள் எனக்கு வெது வெதுப்பாக இருக்கிறது. பூனை கத்துகிற தன் அளவை உயர்த்த இன்னமும் அந்த வெது வெதுப்பு வேகம் பிடிப்பதாய் எனக்கு இருக்கிறது. பொழுது நன்றாய் இருட்டுப்பட்டு நேரமும் போய்விட்டது தான். ஆனாலும் அந்தப் பூனை தன் அழுகைக் கத்துதலை விட்டு ஆறுதலடைவதாகவே இல்லை. பின்பக்கக் குசினி அறையின் மேல்புறமுள்ள ஒட்டுப்பக்கங்களில் தான் அது இருந்து கொண்டு அலைச் சல்பட்டு திரிவதாக எனக்கு விளங்கியது. கதவைத்திறந்து அந்தப் பக்கம் வெளியே போய் நின்று இப்போது பார்ப்பதென்றாலும் அந்த இடத்தில் நுளம்பு சரியாகக் குத்தும் என்றாலும் நுளம்பு குத்தினாலும் குத்தட்டுமென்று நினைத்துக் கொண்டு கதவைத்திறந்து கொண்டு வெளியே போய்ப்பார்த்தேன்.
குசினிக்குப் பின்னாலே ஒரு 'சப்போட்டா - மரம் நிற்கிறது. அந்தப் பக்கம் மின்சார விளக்கும் உள்ளதாய் இல்லை. இந்நேரம் வவ்வால்களும் அந்த இருள் மரத்துக்குக் கீழே வலமும் இடமுமாகப் பறந்து கடந்து கொண்டிருந்தன. அந்த இருட்டுக்குள்ளே பூனை போடுகின்ற சத்தம் என் மனதுக்குள்ளே ஊர்ந்தேறி சோக உணர்வுகளோடு தங்குவதாகிவிட்டது.
"பூஸ்.பூஸ்." என்று நானும் அதிலே நின்றபடி அதற்கு ஆறுதல் அளிக் கும் விதத்தில் குரலைத் தாழ்த் தியதாக வைத்துக் கூப்பிட்டுப்பார்த்தேன்.
ஓஅவனால் முடியும் - 158

ஆனால், அந்தப்பூனை என் குரலைக் கேட்ட பின்பு, இன்னும் தன் வாதனையையும் வலியையும் எனக்கு உணர்த்த பலத்தச் சத்தமாக கத்தத் தொடங்கிவிட்டது.
பூனைபடும் கவலையே என்னை மென்று தின்கிறதான ஒரு நிலை, அந்த அளவுக்கு மனமும் உடலுமாகச் சேர்ந்து பலவீனம் தான் எனக்கு இப்போது
"சிரிப்பும், பாட்டும், பரவசமுமாக வாழ்க்கை நெடுகலுமே அப்படி இருந்து கொண்டிருக்குமா? முள் பற்றையிலேயே ஒரு காலம் நடக்கிறதுக்குத் தெம்பிருக்கும். சேற்றுக்குள் முள் கிடந்தாலும், நத்தை ஒட்டுத்துண்டு கிடந்து காலைக் கிழித்தாலும், அந்த இடத்தால் நடந்து போவதற்கு அப்போது பயமில்லை. யாருடைய துணையும் அப்போதைக் காய் தேவையில் லை. ஆனால் , நெடுகலுமே அப்படியாகத்தானா வாழ்க்கை? இடம்பெயர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய்க் குடியேறியதன் பின்பு - எங்களைப் போன்ற தமிழர்களுக்கு வீட்டு மிருகங்களை வளர்க்க மனதில் கொஞ்சமும் விருப்பமே இல்லை. ஊரிலென்றால் எம்போன்றவர்களுக்கு வீடுகளிலே நாய், பூனை, வளர்ப்பும் தேவையாய் இருந்தது. அதனால் அவைகளை வளர்த்தோம். ஆனால் அங்கிருந்து குடிபெயர்த்து வேறுவேறு இடங்களில் குடியேறிய தன் பின்பு இடவசதியற்ற அந்த இடங்களிலே அதற்கான ஆசையே எங்களைப் பிறகு விட்டுப் போய்விட்டது. பிறந்த இடங்களிலும் சீவிக்க முடியாததாய்ப் போய் - உள்ள சொந்தங்களும் தனித்தனித் தீவாய்ப் பிரிந்து போனதன் பிறகு இங்கே தமிழ்ச்சமூகத்தினர் வாழ்வு நிலையே முற்றாக வேறு விதமாகவும் மாறியதாய்த்தானே ஆகிவிட்டது."
இந்தக்குசினிப் பக்கம் ஒட்டுக் கூரைக்குமேலே இருந்து கட்டைக்குரல் அழுகையாகக் கத்துகிற இந்தப் பூனைக்கு என்னதான் அப்படி ஒரு கெடுதல் வந்தது? ஏன் அது அங்கிருந்து கத்தியபடி என் பிராணனை வாங்குகின்றது என்கிறமாதிரி இருந்து கொண்டிருக்கிறது எனக்கு.
அழுகைச் சத்தத்துடன் இப்போது கூரைக்கு மேலே அலைந்து கொண்டிருக்கும் அந்தப் பூனை என் வீட்டு வளர்ப்புப் பூனையல்ல. கொழும்பிலென்றால் வீட்டில் நாயை வளர்ப்பார்கள். பூனையை மட்டும்
1.59 நீ.பி.அருளானந்தம்

Page 82
வீடு வழியே வரக் கண்டால் தடியால் விளாசிக் கலைப்பார்கள். பூனைகள் அலற்றிக் கொண்டு பிறகு ஓடி றோட்டு வழியிலே அதற்குப் பிற்பாடு திரியும்.
ஆனால் இப்படி நான் சொன்னாலும் - நான் தினமும் மார்க்கட் பக்கம் போய் வரும் போது அங்கு கண்ட காட்சியொன்று நினைப்பெழ. சிலர் ஒன்றுக்குப்பத்தாய்ப் பூனையையும் வைத்து வளர்ப்பதற்கு இருக்கிறார்களென்பது சாட்சியாகவும் தான் இருக்கிறது.
நான் அந்த மார்க்கட் பக்கம், நடைபாதையில் பார்க்கின்ற கிழவர், பத்துப் பூனையையும் தன்னோடையாய் வைத்துக் கொண்டு - மற்றவர்களிடம் இருந்து கேட்டு உணவு வாங்கி பூனைகளுக்கும் கொடுத்துத் தானும் சமபோசனம் செய்கிறவராயிருக்கிறார்.
அவள் இருக்கின்ற இடத்துக்குப் பக்கத்திலே ஒரு பெண் தனியே தேநீர்க் கடை வைத்து நடத்துகிறார். அவளுக்கு, அந்தக் கடை தான் இருக்கவும் படுப்பதற்கான விடுமான சீவியம் போலும் இராப் பொழுதானதும் கடையைப் பூட்டிவிட்டுத் தன் இரு சின்னக் குழந்தைகளோடு அவளும் அந்த நடை பாதையில் இருந்து கொண்டு, கிழவரையும் அவரது பூனைகளையும் வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பாள்.
பூனைகள் மத்தியில் மிகவும் கனிவானவராய் இருக்கும் அவரை - அதாலே போகிறவள் வருகிறவர்களுக்கெல்லாம் அவள் தன் கையால் காட்டி
"இதையெல்லாம் அந்த அப்புவின்ர புள்ளேங்கள்."
என்று அவர்களுக்குச் சொல்லி சொல்லி தானே கிடந்து பெரிதாக அவள் சிரித்தும் கொள்வாள். அப்படியாக நானும் ஒரு நாள் அதாலே போகும் போது, எனக்கும் அப்படியாக அவள் சொல்லிவிட்டு தன் சிரிப்புச் சிரித்தவள்தான்.
அந்நேரமாய் நானும் அங்கே சத்தமெழுப்பாமல் அந்தக் கிழவருக்குப் பக்கத்தேயிருக்கும் குண்டு குண்டு மாதிரித் தெரிந்த அந்தப் பூனைப் பட்டாளத்தைக் கண்ணால் பார்த்தேன். அந்தப் பூனைகளையும் கிழவரையும் பார்க்கும் போது, அதிக சுவாரஸ்யத்தைக்
ஓஅவனால் முடியும் 160

கண்டு கொள்ளுமளவிற்கு எனக்கும் அங்கே காட்சி தென்பட்டது. வீட்டுப்பூனைகள் இங்கே உள்ள இடங்களில் எங்கே பார்த்தாலும் அவை என்னவோ மெலிந்த மாதிரியான ஒரு தோற்றமுள்ள பூனைகள் தான். ஆனால், இந்தக் கிழவர் வளர்க்கிற பூனைகளோ - எவர் கண்கள் பார்த்தாலும், பார்த்த அந்த வினாடியிலேயே மனதை வியப் படையச் செய்துவிடும் நிலயிலுள்ளவை உருண்டு திரண்ட உடலமைப்பு ரீதியான அந்தப் பூனைகளுக்கு அந்தக் கிழவன் - தான் சாப்பிடாமல் கிடந்தால் கூட கிடைக்கிறதுகளையெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பான் போலும். அப்படித்தான் இதையெல்லாம் அவனிடத்திலேயாய் இருந்து நான் பார்க்க - எனக்கும் நினைக்கும் படியாய் இருந்தன.
யார் யாரோ நரைத்த தலைக் கிழவர்களும் அந்தக் கிழவரருகே வருகிறார்கள். தங்கள் கையிலே உள்ள உணவுப் பொட்டலங்களை அவரிடமாய்க் கொடுத்து விட்டும் போகிறார்கள்.
நான் அந்த மின்சார வெளிச்சம் தாண்டிப்போய், இருட்டு விழுந்த பக்கத்தாலே என் வீட்டை நோக்கி அவ்வேளை நடந்து போகிறேன்.
"உண்மையில் இவன் ஒரு பிணமாய்க் கிடக்கின்ற அந்த நேரம் - இவனை அந்தப் பூனைகள் தான் எல்லாமாகச் சேர்ந்து தின்று முடிக்குமோ..?
கிழவருக்கு இனிமேல் அப்படியாக ஒரு நாள் வரப்போவதை, நான் தனியாக இப்போது கண்டுபிடித்த மாதிரியான ஒரு யோசனையோடு; நான் அப்போது என்வீடு போய்ச் சேர்ந்தேன்.
அதற்குப் பிறகும் நான் அதாலே போய் வருகிற போது, அந்தக் கிழவன் இருக்கும் திசையைப் பார்த்துப் பார்த்துத்தான் - பூனைகளின் மேலேயும் எனக்கும் ஒருவிதமான இரக்கம் பிறக்க ஆரம்பித்தது.
h
ஆனாலும் என் இரக்கம் இப்படி இருந்தாலும் - என்மனைவியோ "இந்தப் பூனைகளுக்கெல்லாம் சமையலறை வெளிவாசல்படியில் நிற்கக் கூட இங்கே இடந்தரக் கூடாது" என்று சொல்லி கறுவிக் கொண்டிருந்தாள்.
161 நீ.பி.அருளானந்தம்

Page 83
"இந்த ஒரு பூனையாவது குசினிக்கு வெளியாலயாவது நிண் டிட்டுப் போகட்டுமே. நாங்க சாப் பிட்டுக் கொட்டுற மிச்சத்தையெண்டாலும் அது நிண்டு திண்டுட்டுப் போகட்டுமே”
என்று ஒரு நாள் நான் அவளுக்குச் சொன்னேன்.
"சீ இதை இங்க வீடு வழியச் சேத்தால், மற்றப் பூனைகளும் அதப்பாத்து வந்து இதுக்க வாபிறகு நிற்கும். கள்ளப்பூனைகளும்
"அப்பிடி வேற பூனையள் வந்தா அடிச்சுக் கலைப்பமே? இதமட்டும். இடம்குடுத்து இதுக்குள்யாய் நிற்க விடுவமே..?"குரலை இழுத்தபடி நான் சொன்னேன்.
"உங்களுக்கு ஒண்டும் ஒரு இழவும் கூடத் தெரியாது! இது பெட்டைப்பூனை. இதத்தேடி கடுவன் பூனையளெல்லாம் வீட்டு வளவுக்கயா வந்து நிற்கும். பிறகு ஒண்டோடயா ஒன்டு கிடந்து கொண்டு இங்க சண்டை பிடிக்கும். மேலயும் ஓடுவழிய கிடந்து புரளுங்கள் ஓட்டையும் கூட உடைச்சுப் போடுங்கள்!"
"ஆனாலும் அப்படியா நீ சொல்லுகிற மாதிரி பெரிசா ஒண்டுமில்ல."
என்று அவளின் ஏணிப்படிக்குரிய, ஏறிப்போய்க் கொண்டிருக்கிற பேச்சிற்கு - என் இதமான பதிலை நான் சொன்னேன்.
"என்னங்கோ நீங்க சொல்லுறது.? பூனையளிண்ட சத்தங்கள் காதுகளில கேக்க முடியுமா.அதுகள் என்னத்துக்கோ அழுகிற மாதிரி உயிர் விடுகிறமாதிரிக் கத்தும். இதுகளின்ர சத்தத்தைக் கேட்டுக் கொண்டு ராவில மனுசர் இங்க வீடுகளுக்குள்ள படுக்கேலுமே. பாத்தீங்கதானே நீங்களும் பக்கத்து வீடுகளில இதுக்குத்தான் இந்தப் பூனையளக் கண்டா தும்புத்தடியால எறியிதுகள்."
"அதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனா இந்தப் பூனை கண்டியோ ஒரு அறிவான சீவன். நான் இருவது நாளா இங்க வீட்ட இல்லாம வெளியாலயா இந்தியாவில அப்ப இருந்து போட்டு இங்க
ஓஅவனால் முடியும் 162

வர, என்னக் காணவும் என்ர காலடியில வந்து விழுந்து விழுந்து படுத்துப் புரண்டு என்ன மாதிரியா ஒரு நன்றி விசுவாசத்த இது காட்டிச்சு. ஒரு நாள் நானும் இதின்ர வாலை நடக்கேக்கிள்ள காலால நசிச்சுப் போட்டன். அது உடன தன்ர வலியில சீறி பல்லாலயும் சாதுவா என்ர கால் விரலிலயா வாய் வைச்சுப்போட்டுது. நானும் துள்ளிப் பதைச்சு அங்கால போய்க் கதிரையில இருந்தன். அதுக்கடிச்சது பெரிசா எனக்கு ஒண்டுமில்லாம இருந்தும் நோப்பட்டது மாதிரி நான் அதைப்பாத்து. நீ கடிச்சுப் போட்டாயென்ன என்ர கால? எண்டு சொல்லி ஆ. ஊ. எண்டு சும்மா நடிச்சன். அப்ப உந்தப் பூனை அங்க அதில இருந்து என்ன வடிவாப்பாத்திட்டு பிறகு என்ன அது செய்துது. உடன என்ர காலடிக்குப் பக்கத்தில வந்து அப்பிடியா வாயால அது நக்கியும் விட்டது தானே. நான் பாத்ததுக்குள்ள இப்பிடியொரு அறிவான ஒரு மிருகமா எந்த ஒரு மிருகத்துக்குள்ளவும் இது மாதிரியா நான் எங்கயும் காணேல்ல. அதால தானே இது இங்கினேக்கயா எங்கயும் ஒரு இடத்திலயா நிக்கட்டுமெண்டு நான் சொல்லுறன்."
"ஐயோ என்ன உங்கட பாரதம் இது. பெட்டைப் பூனை யெண்டா வீட்டுக்க எப்படியும் உள்ளட்டுக் குட்டியுமெல்லே போடும். பேந்து உந்த உலகமெல்லாம் அங்கயும் இங்கயுமாக குட்டியளையும் அது காவித்திரியும். எல்லாத்தையும் விட டொக்டர் எனக்குச் சொல்லியிருக்கிறாள். பூனை கீனை நாய்கள் ஒண்டுமே நீங்கள் வீட்டிலயா வைச்சு வளக்காதயுங்கோ, உங்களுக்கு வீசிங் இருக்கிறதால அதுகளிண்ட மயிர் அதுகள் உங்களுக்கு மூக்குக்குள்ளயா சில நேரம் போயிட்டா அது பேந்து ஆகாது - கவனமாய் அதால இருங்கோ எண்டு. அப்பிடி இதுகளெல்லாம் உங்களுக்கு இப்பயாநான் சொல்ல வேண்டியும் கிடக்கு."
"அப்பிடியெண்டெல்லாம் இதை நீ எனக்குச் சொல்லுறாய். இப்பிடியெண்டாலும் என்ர கதையையும் நான் உனக்கு சொன்னன். எண்டாலும் நீ நான் சொல்லுறதொண்ட சரியா ஒருமுறை யோசி. இந்தப் பூனை வீட்டுக்கு வெளியாலதானேயப்பா நிக்கப் போவுது. அது அப்பிடியா நிண்டுட்டுப் போவட்டுமே..?" என்று நான் சொல்லிவிட அந்தச் சொற்களின் அசைவுகள் அவள் மனத்தில்
163 நீ.பி.அருளானந்தம்

Page 84
படியப்படிய கொஞ்சம் மனம் இரங்கி என் விருப்பத்திற்கு அவள் தோதாய் வந்தாள்.
"சரி. நான் என்ன சொன்னாலும் இந்த வீட்டில என்னதான் நடக்கப்போவுது. நீங்க என்ன நினைச்சாலும் அதைச் செய்யிறதுக்கு பிடிச்சிராவியாய்த்தான் எப்பவும் நிப்பியள். சரி நிக்கட்டும் அந்தப் பூனை ஆனா குசினிக்க வெளிய தான்.
என்று அந்தக் கடைசிச் சொல் அவள் வாயிலிருந்து, வெளியே ஒரு சட்டதிட்டத்துடன் சேர்ந்து விழுந்தது. இதற்குப் பிறகு நானும் என்மனைவியும் அந்தப் பூனையைப் பற்றி எதுவும் பேசவில்லை. இனி அதைப் பற்றிப் பேச உண்மையில் எங்களுக்கு ஏதுமில்லாததைப் போலத் தோன்றியது.
நாட்கள் சில கடந்ததாய் ஆகின. முதன் முதலில் நடை எண்ணி எண்ணி எடுத்து வைப்பது போல பயத்துடன் நடந்து வந்து அந்த குசினி வாசலடிக்கு வந்து இருந்து கொள்ளத் தொடங்கிய பூனை, பிறகு பயம் தெளிந்து அவ்விடமெல்லாம் தன் இஸ்டத்துக்குப் பழகத் தொடங்கிவிட்டது. நடு அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் என் மனைவியின் நேரத்திலும் வந்து எனக்குச் சாப்பாடு போடு என்றதாய் அது கத்தவும் தொடங்கிவிட்டது. இதெல்லாம் மனதுக்குக் கோபமாக இருந்தாலும், எதனாலோ என் மனைவியும் என்னைப்போல அந்தப்பூனையுடன் தன்னை மெளனத்துடன் ஒத்திசை வாக்கிக் கொண்டாள். பூனை சேருகிற ஓசைகளின் குழப்பங்களையும் அவள் பிறகு பொறுத்தும் கொண்டாள். அது குட்டி போட்டதன் பிறகு வரும் சிறு சிறு தொல்லைகளையும் அவள் சகித்துக் கொண்டாள். கறுப்புக்குளிருந்து வெள்ளைநிறம் கலந்த தன் குட்டிகளையெல்லாம் அந்தப்பூனை பிறகு வீட்டுக்குள்ளேயும் காவித்திரியத் தொடங்கியது. இந்த வேலை அது செய்வதைப்பார்த்து எனக்கும் மனக் கொதிப்பாக இருந்தாலும், அவளுக்கு ஒன்றும் கோபமே வராமல் இருந்துவிட்டது.
இப்படியே குட்டிபோடுதல் அதற்கு அதிகரித்துக் கொண்டு, அடுத்தடுத்து எத்தனையை அது உற்பத்தியாகியது என்று எனக்குக் கணக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் எங்கெங்கோ கொண்டுபோய் விட்ட இடத்திலெல்லாம் அந்தப்பூனையின் குட்டிகளும்
ஓஅவனால் முடியும் - 164

பெரிதாக இப்போது வளர்ந்திருக்கும் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
சில மாதங்கள் கடந்து ஒருநாள் இந்தப் பூனையின் சந்ததிபற்றிய ஒரு விஷயத்தை மனைவி எனக்குச் சொன்னாள்.
"அந்தா பாருங்கோவன் அங்கினேக்கிளயாய்! எங்கட வீட்டுப் பெட்டைப் பூனைக்குப் பக்கத்தில நிக்கிறது இதின்ர பிள்ள தான். அந்தக் கடுவன் பூனை தாயை மாதிரித்தான் மெதுவாக் கத்துது. தாயை மாதிரித்தான் அதுவும் ஒரு சாது."
என்று அவள் சொல்ல - முகத்திலும் காலிலும் பளிச்செனப் பற்றிய கறுப்பு நிறத்துடன் இருக்கும் அந்தக் கடுவன் பூனையை நான் பார்த்தேன். ஒரு நிமிஷம் ஆழ்ந்து பிறகும் அதை நோக்கினேன். எனக்கும் அது அதன் குட்டிதான் என்று உடனே நினைக்கத்தோன்றியது.
ஆனாலும் அதன் பிறகு அந்தப் பூனைகள் இரண்டும் அவ்விடமாய் வரும்போது, "இது அதின்ர பெத்த பிள்ளை பிள்ளை' - என்று அந்த உறவைச் சொல்லிச் சொல்லி அவைகளிடம் ஒழுங்கத்தையும் பக்குவத்தையும் நம்பிக்கையாக எதிர்பார்ப்பது போல அவள் கதைகளை எனக்குச் சொல்வது என்னிடத்தில் எரிச்சலையே மனத்துக்குள் உண்டாக்கியது.
அப்போது நான் கண்களை இறுக்க மூடிக் கொண்டு யோசித்தேன். கல்லைப் போல் ஒரு விஷயம் என் மனதுக்குள் அவ்வேளையாய் இறங்கியது. பூனை போன்ற மிருகங்களுக்கு ஏது தாய் பிள்ளையென்ற அந்த உறவு? "உஸ் உஸ்" - சென்ற மூச்சான எரிப்புடன் ஒரு நாள் இவைகள் ஒன்றாக சேர்ந்துவிடும். இதெல்லாம் விளங்காமல் இவள் ஏதேதோ கதைக்கிறாள். ஆரம்பகாலத்தில் வேடுவனாயிருந்த மனிதரிடத்திலே இந்த மிருகத்தின் குணங்களும் நடத்தைகளும் இருந்திருக்கிறது. தாய் பிள்ளை உறவு ஒழுக்கம் இல்லாமலிருந்தது ஒரு காலம்! அதை இவளும் தெரிந்து கொள்ள "வோல்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தை என் அறைப்பக்கத்து அலுமாரிக்கிள்ளாலேயிருந்து இவளிடம் “வாசி நீ ஒரு முறை" - என்று எடுத்துக் கொடுப்போமா..? முன்னொரு காலம்
1.65 நீ.பி.அருளானந்தம்

Page 85
இருந்த மனித உறவுமுறைகளை சீர்தூக்கிப் பார்க்க - பகுத்தறிவூட்டும் சரித்திர நூல் அது ஆனாலும் என்னதான் விளக்க முயன்றாலும் - சிலருக்கு அதைப் புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை. ஒவ்வொருவரினதும் அந்த நம்பிக்கைகளை நாங்கள் குலைக்கக்கூடாது” என்ற நினைப்பில் நான் அவளுக்கு இதைப்பற்றி ஒன்றுமே வாய்திறந்து பேசாமல் பிறகு சும்மா இருந்துவிட்டேன்.
இதற்குப் பிறகு அந்தப்பூனை குட்டி போட்டது. தன் குட்டிகளுக்கு அது பால் கொடுத்தது. பிறகு குட்டிகள் சிறிது வளர அவற்றை வாயிலே காவிக் கொண்டு ஒவ்வொரு இடமாக அது திரிந்தது.
இந்த வேளையில்தான் ஒரு வன்மையான கொடுர நிகழ்வு, அந்தப் பெட்டைப் பூனை முன்னம் போட்ட கடுவன் குட்டிப் பூனையாலே அதற்கு ஏற்பட்டது.
அந்தக் கடுவன் பூனை பெட்டைப் பூனைபோட்ட குட்டிகள் அனைத்தையும் - அதனதன் தலைகளை குதறிய வாறாக் கடித்துப் பிய்த்துக் கொன்றேவிட்டது.
"ஐயோ இது போட்ட அதின்ர குட்டிகளையே இதின்ர அந்தப் பெரிய குட்டிக் கடுவன் பூனை பிடிச்சுப் பிடிச்சுக் கடிச்சுச் சாக்காட்டிப் போட்டும் போயிற்றுது. அந்தச் சவப் பூனைய இனிமேலயா இந்த வீட்டுவளவுக்கயும் வரவிடப்பிடாது."
என்று பற்கள் கடகடக்க கோபத்துடன் என் மனைவி எனக்குச் சொன்னாள். நான் உடனே "ஏன் அதின்ர பிள்ளைப் பூனை தாய் போட்ட அந்தக் குட்டியளக் கடிச்சது."
என்று ஒன்றும் எனக்கு அதைப்பற்றித் தெரியாத மாதிரியாக வைத்துக் கொண்டு, அவளைப் பார்த்து இதைக்கேட்டேன்.
"அது இப்ப அந்தப் பூனையோட சேருறத்துக்குக் தான் அதின்ர குட்டியளைக் கொண்டது."
என்று அந்த விஷயத்தை நீட்டம் வைத்துச் சொல்லாமல் பாதி அளவு கதையை அவள் சொன்னாள்.
ஓஅவனால் முடியும் 166

முதலில் தெரியாதது போல பாவனை காட்டி, பிறகு தெரிந்தது போலவும் அவ்விடயத்தைப்பற்றிச் சுட்டிக்காட்டிப் பேசவல்லவர்கள் பெண்கள் என்ற தாய் என்மனைவியைப் பார்த்தபடி நான் இவற்றை என்மனதில் நினைத்துக் கொண்டேன்.
அந்தப் பூனை இன்னும் மேல் ஒட்டுக் கூரையிலிருந்து கீழே இறங்கிவந்தபாடாய் இல்லை. இருட்டுப்பட்டுப் போய் இவ்வளவு நேரமாகிவிட்ட பிறகும் தன் துன்பச்சுமையை சுமந்து கொண்டு மேலே திரிந்தவாறு அவதிப்பட்டுக் கொண்டு அது கிடந்து தவிக்கிறது. நானும் சுமைதாங்கியாக அது படும் துன்பத்தை தூக்கிப் பிடித்த அளவில் தான் அதிலே நின்றபடி இருக்கிறேன். இந்த அவஸ்தை துன்பமெல்லாம் குசினி வாசல்படிக்குள்ளாலே உள்ளட்டு வந்து என் படுக்கை அறையிலும் பிறகு என்னோடு சேர்ந்து கொண்டு விடுமோ? என்ற பிரச்சினையையும் நான் சிந்திக்கிறேன்.
இந்த நாட்டிலே யுத்தம் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டதன் பிறகு இன்றளவும் என்வாழ்வுப் பாதையில் எத்தனையே இடையூறுகள், தடைகள், இடைஞ்சல்கள், கஷ்டங்கள், பிரச்சனைகள், விவகாரங்கள், மோதல்கள் என்றதாய்ப் பலபாரங்கள் என்னைப் போட்டு விடாமல் பாதித்தபடியே தான் இருக்கின்றன.
ன்ெமனச் சுமையை இறக்கி வைப்பதற்கு ஏலாததொரு நிலைமையாய் எனக்கிருக்க, சுமைதாங்கிக் கல்லாக இவைகளையுமேன் நான் மேலும் மேலும் தாங்கிக் கொண்டதாயிருந்து காலம் கழிக்கவேணும்? அதிர்ச்சிகளை இனிமேல் இந்தக் காதுகளில் நான் இனிமேல் கேட்கவேண்டாம். பூனையை இந்த வீட்டு வளவுக்காலிருந்து நாளைக் காலையிலேயே வெளியே போக துரத்திவிட வேண்டும்.
அந்த இருட்டுப் பாய் விரிப்புக்குள்ளே - என் இதயத்துக் குள்ளால் இருந்து எழுந்தது இந்த விதமான மனனரிச்சல்,
(2010)
167 நீ.பி.அருளானந்தம்

Page 86
மின்னுகிற பொன்கள்
குலேந்திரன் பேயடித்த மாதிரியோர் உயிரற்ற பார்வையுடன் தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் போர்ச் செய்திகளை கேட்கக் கேட்க அவருக்கு மேலே வாழ்க்கையை வாழ விரும்பாத அளவுக்கு வெறுப்பாக இருந்தது.
- இராணுவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
எங்கே?
- அந்தக் காட்சி காட்டப்படுகிறது.
- அடுத்தது செல் வீச்சு
அதைப் பார்த்ததும் - "கடவுளே நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய முடியும்? என்ர அருமை மக்களே என்ர அருமை மக்களே..?
என்று அவர் மனம் சொல்ல - அதைத் தடுக்க நினைப்பது போல இருந்து கொண்டு, டி.வியைப் பார்த்துக்கொண்டு அவர் அழுதார்.
168
ஓஅவனால் முடியும்

இதை இருந்து இனி பார்க்காமல் எழுந்து எங்காவது இப்போது போய் விட்டால் தேவலை போல அப்போது அவருக்கு இருந்தது - என்றாலும் இதையெல்லாம் இருந்துபார்க்காமல் தான் எங்கும் போகப்படாது என்பதை தன்மனம் சொல்ல, அதை அறிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக அவர் இருந்தார்.
ஆனாலும் கதிரையில் அவருக்கு இருந்து கொள்ள முடியவில்லை.
எழுந்து நின்று பார்த்தார்.
எழுந்து நிற்பதால் எதுவும் திருந்தாது!
ऊगी, பிறகும் அவர் அந்தக் கதிரையில் இருந்தார். அவரின் வாய் எதை எதையோ சொல்லி பிதற்றி வைது கொண்டிருந்தது. அவருக்கு தானே இப்போது செத்துவிட்டது மாதிரித்தான்.
செய்தி முடிந்து விட்டது. அவருக்கு குளிர்ந்த ஜலமாய் முகத்திலும் நெஞ்சிலும் நிறைய வேர்த்திருந்தது. உள் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. நாக்குக் காய்ந்து புரள மறுக்கும் தாகம்! தண்ணீர் விடாய்!
அவர் எழுந்து நடந்துபோய் அறைக்குள் உள்ள தண்ணிர்க் கூசாவில் தண்ணி கிளாசில் வார்த்துக் குடித்தார். அது குடித்ததும் - வயிறு குளிர்ந்தது. ஆனால் உடல் சுறுசுறுப்பு ஏற்படவில்லை.
திருப்திக்கு கோப்பி குடித்தால் நல்லது போல அவர் மனதுக்குப்பட்டது. பிறகு குசினிக்குள் போய் கறுப்புக் கோப்பி ஒரு கப் தயாரித்து அதைக் குடித்தார்.
கோப்பி குடித்ததன் பின் அமைதியில் ஆழ்ந்து மூச்சு விட்டார்.
“சரி உனக்கு களைப்பாக இருக்கிறது போய் இனி நித்திரைகொள்ளு.” -
169 நீ.பி.அருளானந்தம்

Page 87
என்றவாறாய் அவரின் மனம் சொன்னது. ஆனால் தன் மனம் சொன்னதுக்கு அவர் உடன்படவில்லை. அவர் திரும்பவும்
தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிற இடத்தடிக்குப் போக நடந்தார். -
"எங்கே போகிறாய்? - என்று திரும்பவும் அவர் மனதுக்குள் இருந்து அவருக்குக் கேட்டது.
“இந்த IJ IT ତଥ୍ୟ முழுவதும் டி. வி. யடியிலேயே குந்திக்கொண்டிருந்தபடி - இன்னும் ஏதாவது பார்த்து நீ அதனால் கற்றுக் கொள்ளப் போகிறாயா?”
பிறகும் இப்படி ஒரு கேள்வி.
“இந்த நேரம் நீ பிரார்த்தனை செய்தால் நல்லது - அதனால் இப்போதைய குழப்பம் ஒன்றும் உன்னை ஒன்றும் செய்யாது. பிரார்த்தனை செய்தால் உன்னைக் கடவுள் கவனித்துக் காப்பாற்றுவார். அதனால், நான் சொன்னால், நீ என்னுடையதைக் கேட்டு அதன்படி G守山?”·
இது ஒரு ஆலோசனையா? - அல்லது அவருக்கு ஆணையிடுகிறமாதிரியான தொனியுடன் உள்ள ஒரு கட்டளையா? என்ன விதத்தில் கொடுக்கப்படும் அழுத்தம் இது?
தன் மனதுக்கு திரும்பிப் பதில் சொல்லும் பொறுமையில்லை அவருக்கு. -மரப்பலகைச் சட்டங்களைக் தாண்டி ஒடும் ஒட்டப் பந்தயக்காரன் போல - தன் மனம் சொல்வதற்கு இசைவாய்த் தான் நடக்காமல் எகிறித்தாண்டினமாதிரி அந்தக் கட்டுப்பாட்டை அவர் கடந்து விட்டார்.
திரும்பவும் டி.வி. பார்க்கலாம் என்ற முடிவுடன் அதனருகே போய் கதிரையில் அவர் இருந்தார். செய்தி சொன்னவர், வானிலைக் குறிப்புகளை அப்போது வாசித்துக் கொண்டிருந்தார். சொல்லமுடியாத செய்திகளை முடக்கி வைத்துக் கொண்டு, அந்தச் செய்தி அறிக்கை முடிந்து விட்டது.
ஓஅவனால் முடியும் 170

என்ன அது' என்ன அது? என்று ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து - அவர் றிமோட்டை- மேலே நோக்கி நீட்டிப் பிடித்து சணல் மாற்றத் தொடங்கிவிட்டார்.
ஆழ்ந்து மூச்சு விட்டு ஒவ்வொரு காட்சியும், புதிதாய் மாறி மாறி டி.வியில் வருகிறது.
ஓட்டங்கள் போய்த் தாவி விட்டது - டிஸ் கவரிக்கு விசித்திரங்களைச் சொல்லும்செய்தி பார்க்கலாமென்ற நினைப்பில், அதிலே அவர் நிறுத்தி நிலையாய் வைத்துக் கொண்டார்.
அமேசன் நதி - அதிலே காண்பிக்கப்படுகிறது. அவர் எளிமையாக சென்று சேர முடியாத ஒரு இடம் பார்க்க முடியாத ஒரு இடம் சிறப்பான உலகின் பெருநதி களிலொன்று. மர்மங்கள் உச்சமான பெரும் காடுகளையண்டிய இடம் கொடிச்சுருள் விழுந்த பெருமரக் காடுகளைப் பார்க்க அவருக்கு ஆர்வம் உச்சம்பெறுகிறது.
ஆனால் அந்த ஆற்றின் தண்ணிர்ப்பகுதி ஒருபக்கம் கலவையான ஒரு பனித்தட்டுப் பகுதியாகவே தென்படுகிறது. உறைந்த தோர் ஐஸ் நிலை.
ஒரு மான் அந்த உறை நிலை ஐஸ் படர்ந்த பக்கமாக குறுக்காலே நடந்து மறுபக்கம் கரைசேரவென வெளிக்கிட்டு உள்ளே வந்திருக்க வேண்டும்.
நடுவிலே குளுமையான ஐஸ் கட்டி மென் படர்த்திதான்! அதிலே மான் நடந்து போய் கால்வைக்கவும் பணிக்கட்டித் தட்டம் உடைந்தெழுகிறது. உடைந்த பகுதிக்கால் உள்ளே உள்ளது தண்ணி இயல்பான இயங்குதலில் அது உடனே காலை எடுத்து தன்னை காப்பாற்றவென்று பனிக்கட்டி மீது பொறுப்பாக வைத்துக் கொள்கிறது. அது பின்பு திரும்பி மறு திசையில் கால் வைத்தால் அங்கும் உடைவு. எங்கும் கால் தொடவிரியும் பணித் தட்டையியே தன்னைக் காப்பாற்றி
171 நீ.பி.அருளானந்தம்

Page 88
மீண்டும் மீண்டும் தண்ணிருக்குள் போய்விடாமல் பனிக் கட்டிகளிலே போய்ப் போய்த் தன்னை தப்பித்துக் கொள்ளும் முயற்சியிலே அது போராடிக் கொண்டிருக்கிறது.
இக்கரைக்கும் வந்து சேர முடியவில்லை - அக்கரைக்கும் செல்வதற்கு அதனாலே முடியவில்லை - நடுவிலே அந்த மான் கிடந்து கொண்டு இப்போது உடைவு ஏற்படும் இடத்தின் தண்ணிருக்குள் போய் விடாது தன்னைக் காத்துக் கொள்ள மிகவும் போராடுகிறது.
வனக் காவல் செயல்பாட்டிலே - மிருகங்கள் பறவைகளுக்கான பாதுகாப்பும் அடங்குகிறது தானே? இவ் விஷயம் வனப் பாதுகாப்பாளர்களுக்கும் தெரியவந்து - மீட்புக்கான செயல்பாடுகளும் ஆரம்பிக்கப் படுகின்றன.
அந்த மானை, நடுப்பகுதிப் பணிக்கட்டியிலே இருந்து விலக்கி பாதுகாப்பாக கரைப்பகுதிக்கு கொண்டு சென்று சேர்க்க அவர்கள் கையாழும் அந்த மூளை நுட்பம் - அபாரமான தோர் வியக்கத்தக்கதுதான்.
உடையக்கூடிய அந்தப் பனிக்கட்டிப் படர்த்திமேலே சென்று மானின் கிட்டவாக நெருங்கியாருமே அதைக் காப்பாற்ற முடியாது. எது விதத் தி லேனும் அவி விடம் போய் ச் சேரும் போது உடையும்பனிக்கட்டிகளுடன் சேர்ந்து மானும் தண்ணிருக்குள் பிறகு மூழ்கிவிடும் - சிலவேளை அதனால்அது இறந்தும் போய் விடலாம்.
இதன் காரணமாக அறிவில் முதிர்ச்சி அடைந்தவர்களெல்லாம் எதுவிதத்திலாவது ஒரு பயணம் அங்கே போய் அந்த மானை உயிராபத்திலிருந்து மீட்கலாமா? என்று ஒரு வழியைப்பெற்றுக்கொள்ள தங்கள் மூளையைப் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
ஆனால் அதிலேயே கிடந்து அமிழ்ந்து விடுவது போல தத்தளித்தபடி இருக்கும் அந்த மானினது அவலம் போக்க
ஓஅவனால் முடியும் 172

உடனடியாக ஒரு வழியும் தானும் அவர்களுக்குப் புலப்படவில்லை.
ஆனாலும் மீண்டும் மீண்டும் சோர்வடைந்து போகாது நிர்ப்பந்தப்படுத்திக் கொள்வது போல தங்கள் மூளையைப் போட்டு கசக்கிப்பிழிந்தாய் அவர்கள் சிந்திக்கிறார்கள்.
இப்படி சிந்திப்பதன் காரணமாக இறுதியிலே அந்தவர்களிடம் உள்ள ஒருவரின் மூளையிலே இப்படியான ஒரு செயல் திட்டம் ஊறி நிறைந்தது போல வந்து விடுகிறது - ஒரு காலம் இந்தக் காற்றின் விசையிலே அடித்துத் தண்ணிர் மேலே துக்கப்பட்டு பெருங்கடலும் கூடப் பிரிந்து அதன் மூலம் இஸ்ரவேல் ஜனங்கள் நடந்துபோக வழி பிறந்ததாம். - பைபிள் அதை சொல்கிறது.
இது ஒர் சின்னமிருகம்! இதையும் அந்தக் காற்று காப்பாற்றி கரை சேர்ந்து விடும் என்கிறார் அவர்.
இப்போ காற்றின் மூலம் விசையாக அடித்து அதை பனிக் கட்டியில்சறுக்கிப்போய்க் கரை சேர்க்க, ஒரு பெரும் காற்றாடி மூலம் தான் முடியும். இதற்கு உலங்கு வானூர்திதான் ஒத்தது. அந்த இடத்தை அம்சமாக அணுகி - சரிந்தபடி மேலே நின்றபடியே அது மான் தத்தளிக்கும் பக்கம் காற்றைப்போக்க, வீசப்பட்டு அது பனிக்கட்டி மீது விழுந்து வழுக்கிச்சென்றபடி பிறகு மறுபக்கம் கரையொதுங்கி விடும்.
இந்த ஒரு திட்டத்தை அவர்கள் எல்லாருமே சரியென ஒத்துக்கொண்டு கச்சிதமாக அதை பிறகு செயல் படுத்துகிறார்கள். செயலில் பலவீனம் ஒன்றும் ஏற்படாது, தங்கள் வேலையை அவர்கள் செய்ய அங்கே சிறைப்பட்ட மாதிரி தத்தளித்த அந்த மான் அற்புதமாக அந்த இடத்திலிருந்து மீட்கப் படுகிறது. h
அந்த எல்லையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டபிறகு அந்தமான் - கற்குவியலைப்போன்ற பனிக்கட்டித்தரையிலே
73 நீ.பி.அருளானந்தம்

Page 89
ஸ்னோகொட்டுகிறது. அதங்குள்ளால் அது நடந்து போகிறது.
இதையெல்லாம் டி.வி.யில் பார்த்து முடிந்ததும், பிறகு புலேந்திரனுக்கு துக்க முகமாகப் போய் விட்டது. அவர் தன் உதடுகளை உடனே இறுக்கிக் கொண்டதாய் வைத்துக்கொண்டார்.
போரின் பிடி இறுகி வரும் இந்தக் கடைசி நேரத்திலே - அவர் பலநூறு மரணங்களை தொலைக்காட்சியிலே அடிக்கடி கண்டவர் தான்! மனித உயிர் மீது மரணம் கவிகிற காட்சிகளைப் பார்த்து அவர் துடிதுடித்துப் பதறியிருக்கிறார்.
உயிர்களை உறிஞ்சி வளரும் வடிவமானது இந்தப் போர் எனும் பேய்தானே?
ஒரு மானைக் காப்பாற்றிட துடிக்கும் துடிப்பு இந்த மனிர்களெல்லாம் இறப்பதை காப்பாற்றிட அப்படியானவர்களுக்கு வரவில்லையே? உலகங்களை ஒளிமயமாக்கிடும் மேன்மையேறிய தான அந்த அன்பு இரக்கம் என்பதை இந்த மனிதனானவன் முதன் முதலிலே, அதை யாரிடத்தில் காட்ட வேண்டும்.
இதை நினைக்க அவருக்கு குரலும் சீறியது.
எல்லாமே - “பொய் பொய்! பொய்.” - என்று வாய் விட்டு அவர் சொன்னார்.
டி.வி. யின் ஒளி இயக்கத்தை மின்சாரத்தின் துண்டிப்புடன் அவர் பிறகு நிறுத்தவில்லை. மறதியுடனே சென்று கட்டிலில் ஏறிப்
பிறகு அவர் அங்கே படுத்துக் கொண்டு விட்டார்.
(2011)
ஓஅவனால் முடியும் 174

ஆசிரியரின் நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
9 மாற்றங்களை மறுப்பதற்கில்லை 6 கபஸ்ரீகரம்
6 ஆமைக் குணம் 9 கறுப்பு ஞாயிறு
6 அகதி 9 ஒரு பெண்ணென்று எழுது 6 வெளிச்சம் 9 ஓ! அவனால் முடியும்
நாவல்
6 வாழ்க்கையின் நிறங்கள் 6 துயரம் சுமப்பவர்கள்
கவிதை
6 வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து 6 கடந்து போகுதல்
175 நீ.பி.அருளானந்தம்

Page 90


Page 91
யீடு: திருமகள் பதிப்பகம்
வெளி
 
 
 
 
 

|III 55-1 snR 133 out St
suANAG BooK *
WAWA リe。
NA
$ r
r
an
W
0 Ava