கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பதினான்காம் நாள் சந்திரன்

Page 1


Page 2

பதினான்காம் நாள் சந்திரன்
நீ.பி.அருளானந்தம்
(நாவல்)

Page 3
நூற் குறிப்பு
பதினான்காம் நாள் சந்திரன் உரிமை : நீ.பி. அருளானந்தம்
முதற் பதிப்பு LDTÜabul 2012 உரூபா : 500/-
ISBN 978-955-1055-11-0
Pathinankam Naal Chanthiran
Subject: Novel
Author: N.P. Arulanantham
CopyRight: Author
First Edition: December - 2012
Published By: Thirumagal Pathippagam No. 7, Lilliyan Avenue, MOUunt laVinia. Tel: 0114967027, O112731887 O722 784954.
Printed:
A.J. Prints No.44, Station Road, Dehiwala. Te: O112734765 O112723205
ii
6606: நாவல்
ஆசிரியர்: நீ.பி. அருளானந்தம் கணணி தட்டச்சமைப்பு: எஸ்.பி. கிராபிக்ஸ் வெள்ளவத்தை. 07:55625889.
ஓவியம்:
கெளதமன் ரமணன் (மட்டக்களப்பு) தொ.பேசி: 0771603595
Lighlւնւկ:
திருமகள் பதிப்பகம்
இல.7 லில்லியன் அவனியூ,
மவுண்ட் லெவனியா.
தொ.பே: 0114967027, 01.12731887
O722784954
அச்சுப்பதிப்பு: ஏ.ஜே. பிரிண்ட் இல44,புகையிரத நிலைய வீதி,
தெஹிவளை. 0 1 12734765.
 

அணிந்துரை
பல்வேறு கோணங்களில் பல்வேறு நாவல்களை எழுதிப் பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்ற நீபி. அருளானந்தம் தனித்துவமான ஈழத்து இலக்கிய ஆளுமை கொண்டவர். அவரது புதிய நாவல் "பதினான்காம் நாள் சந்திரன்'.
இவருடைய நாவல்களில் கதைக்களமும், கதாபாத்திரங்களும் உயிர்த்துடிப்புடன் அமைவதைப் பார்க்கலாம். கதைக்களம் எப்படி உயிர்த்துடிப்புடன் அமையும்? அது தான் இவரின் திறமை, சம்பவம் நடக்கும் இடத்துக்கு வாசகர்களை அப்படியே கொண்டுபோய் விடுவாள்.
இத்திறமை இந்நூலின் முதல் அத்தியாயத்திலேயே வெளிப் படுகிறது. யுத்த காலத்தில் மக்கள் தங்கள் சொந்த இடம் பெயர்ந்து, வருகின்றனர். வற்றாப்பளை கண்ணகி அம்மன் பாதங்களை வணங்கிவிட்டு வன்னியிலுள்ள "கேப்பாப்புலம் வருகிறார்கள். நந்திக் கடல் இதில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. மீனவர்கள் அதையே தங்கள் சீவநோபாயத்துக்கு நம்பி இருக்கின்றார்கள். சிதறடிக்கப்பட்ட தங்கள் வாழ்க்கையை மீண்டும் புனரமைக்க முயல்கின்றார்கள். செல்லடிகளுக்கு மத்தியில் காலம் கழிக்கிறார்கள். அந்த வாழ்க்கை நம் மனதில் ஆழமாக பதிகிறது.
இப்படியே தான்ஒவ்வொரு அத்தியாயமும் வீடியோப்படம் போல நம் கண் முன்னே நகர்கிறது.
இது ஒரு கிராமத்துக் கதை. கிராமத்து மக்களின் வாழ்வியலை நன்கு பிரதிபலிக்கும் நல்ல படப்பிடிப்பு.
நந்திக்கடல் அருகே உள்ள கேப்பாப்புலம் கிராமத்தில் உள்ள உத்தமன் வீட்டுத் திட்டத்தில் 50 குடும்பங்கள் உள்ளன. இந்தக் குடும்பங்கள், ஒற்றுமையுடன் வாழ்கின்றன. இந்தக் கிராமத்தில் சண்முகம் என்பவர் ஒரு சமூக சேவகராக உலவுகிறார்.
விசர் நாயைவெட்டி, மக்களைக் காப்பது, மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததால், தீப்பிடித்த குழந்தைக்கு முதல் உதவிசெய்து கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது, போன்ற செயல்களிலே அவரது சமூக உணர்வு வெளிப்படுகிறது. அந்தக் கிராமத்தில் கூத்து ஒன்று அரங்கேற்றுவதற்கும் சண்முகத்தின் வீடே மத்திய நிலையமாகப் பயன்படுகிறது.
5Tத்தவராயன் கூத்துப் பழகி, அரங்கேற்றுவதே இந்த
நாவலின் கருப்பொருள்.
iii

Page 4
இந்தக் கூத்தைப் பழக்கி, வெள்ளுடுப்பு அரங்கேற்றம் இறுதி அரங்கேற்றம் வரையும் நடைபெறுகின்ற ஏற்பாடுகள் அனைத்தும் யதார்த்த பூர்வமாக வெளிப்படுகின்றன.
கூத்து அரங்கேற்றம் விடிய விடிய நடைபெறும், விடிந்து 8.00 வரையும் நீடிக்கும். நந்திக்கடல் அருகே உள்ள பிள்ளையார் கோயில் முன்றலில் இந் நாடகம் அரங்கேறுகிறது. திடீரென்று தூரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்க, கூத்துக் குழம்பி சனங்கள் எல்லாம் சிதறி ஓடி, களேபரமான நிலையிலும், கழுமரத்தில் பாடிக் கொண்டிருந்த காத்தவராயன் மெய்மறந்த நிலையில் பாடிக் கொண்டிருக்கிறான். இரு இளைஞர்கள் வந்து நிலைமையைச் சுமூகமாக்கி, கூத்துத் தொடர்ந்து நடக்கிறது. இதில் வலியுறுத்தப்படும் கருத்து முக்கியமானது. கிராமியக் கலையில் நடிகர்கள் ஆத்மார்த்தமாக ஈடுபடுதல், அவர்கள் நிஜமாகவே மெய்மறந்த நிலையை அடைந்துவிடுகின்றனர்.
இதுபற்றி இந் நாவல் பின்வருமாறு கூறப்படுகிறது. "இந்தக் காத்தவராயன் கூத்தில, ராஜன் எல்லாக் கதாபாத்திரங்களும் அது அது நடிச்ச நடிப்போட சரி. அப்படியே பிறகு அமர்த்திடும். ஆனால் நீர் நடிக்கப் போகிற இந்தக் கழுக்காத்தான் படிக்கிற உமக்கு கழு ஏற்றம் போகேக்க உம்மை அறியாமலேயே ஒரு அருள் அப்போதைக்கு வரும், அதால நீர் ஏறுற அந்தக் கழுமரம் கூட உண்மைக் கழுமரம் மாதிரித்தான். அறுத்துக் குத்திப் போடுற மாதிரி ஊசி, ஊசியா இருக்கும். அது குத்தினா, ஒரு கதைக்கு நான் சொல்லுறன் , அப்படியே அது உள்ள போய் , மறு பக்கத்தாலயம் துளைச்சுக் கொண்டும், வந்திடுமெண்டும் இருக்கும்."
இவ்வாறு அண்ணாவியார் முருகேசு, காத்தவராயன் பாத்திரம் ஏற்ற ராஜனுக்குக் கூறுகிறார்.
இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் நாவல் காட்சி அமைகிறது.
இந் நாவலில் வரும் பாத்திரங்களும் மறக்க முடியாதவை கதாநாயகன் சண்முகம் சமூக சேவகனாகச் சித்தரிக்கப்படுகிறான். அவனுடைய மனைவி ராசமணி, மகள் கீதா, நண்பர்கள் ஜெயா, பாலா யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து, கேப்பாப்புலம் கிராமத்துக்கு வரும் ராஜன், அவரது மனைவி கெளரி, இரு குழந்தைகள் மற்றும் இவர்களுடைய மாமியார் கனகம்மா, அனைவரும் உயிருள்ள பாத்திரங்களாகவே அமைந்துள்ளனர்.
இந்த நாவலை படிக்கும் போது சர்வ சாதாரணமான விஷயங்க ளையும் ஆசிரியர் விவரிக்கிறாரே என்ற ஒரு எண்ணம் தோன்றும். ஆனால்
iv
 

அப்படியான வர்ணனைதான் நாவலின் யதார்த்த நிலையை வெளிப் படுத்துகிறது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ளிெய நடை சிக்கலில்லாத வர்ணனை இவையே இந் நாவலாசிரியரது சிறப்பம்சமாகும். விளங்காத நடையில் எழுதித் தம் மேதாவிலாசத்தைக் காட்டும் எழுத்தாளர் மத்தியில் நீ.பி. அருளானந்தம், தெளிவான நடையில் எழுதி ஈழத்து இலக்கிய உலகில் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு எமது பாராட்டுக்கள்!
இரா. அன்புமணி
(முன்னாள் தலைமையக உதவி அரசாங்க அதிபர்) தொ.பே065-2245549

Page 5
மதிப்புரை
நாடறிந்த எழுத்தாளர் - நீ.பி.அருளானந்தம் அவர்களின், "பதினான்காம் நாள் சந்திரன்’ நாவல் துன்பப் பேராற்றில் முக்குளித்த மண்ணில் முகிழ்ந்த கதை. முள்ளிவாய்க்கால், நந்திக் கடல், கோப்பாபுலவு, உத்தமன் வீட்டுத்திட்டம் எனும் இயற்கையின் அரவணைப்பில் தவழும் பிரதேசங்களை ஒட்டித் தவழும் இக்கதையில் கிராமத்து மண் வாசனை சாரலென வீசுகின்றது. நந்திக் கடலில் இறால், நண்டு, மீன் பிடித்தும்,
தேனெடுத்தும், பயிர் செய்தும் வாழும் மக்களின் வாழ்வில் நடந்தேறும்
சம்பவங்களை, அவர்களுடே வேரூன்றிப் போன கலைத்துவ பாரம்பரிய ங்களையும், ஊசி நூலெடுத்துச் கோர்த்தாற் போல, நாவலின் கதையோட்டம் உடைப்பெடுக்கா வண்ணம் நகர்த்தியிருக்கும் பாங்கு நாவலாசிரியரின் அனுபவ முதிர்ச்சியை வெளிக்காட்டுகின்றது.
நாவலில் இடம்பெறுகின்ற சண்முகம், அவர் மணைவி ராசமணி,
அவர்களின் மகள் கீதா, பாலா, பத்மன், சூரி, ஜெயா, கனகம்மா, அவளது மகள் கெளரி, அவளது கணவன் ராஜன், அவர்களது பிள்ளைகள், அண்ணாவியார் முருகேசன், தேவன், நடேசன், மூர்த்தி என நீளும் பாத்திரப் படைப்புக்கள் அசல் கிராமத்தவர்களாகப் படைக்கப்பட்டிருப்பதும், மண்ணின் மகத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களைச் சார்ந்த சம்பவங்கள், நிகழ்வு கோப்புக்களாக நகர்த்தப்படும் அதே நேரம், நாவலாசிரியர் எடுத்துக் கொண்ட கதைப் புலத்தின் கனதி குறையாமல் எங்கும் பிசிறு ஏற்படாது நகர்த்தியிருப்பதை நுகர முடிகின்றது.
UIழ்ப்பாணத்திலிருந்தும், திருகோணமலையிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்தவர்களின் இருப்பிடக் களமாகவும், கதையின் நிகழ்விடம் காட்டப்பட்டிருப்பதும் கதாபாத்திரங்கள் பற்றிய சித்தரிப்பு, உரையாடல், கிராமிய வெளிப்பாடு, தொழில் முறைகள் பற்றிய குறிப்புக்கள் என எல்லா விடயங்களும் சலிப்புத் தட்டாமல் நீளுவதைக் காண
முடிகின்றது. களத்திற்கேற்ப சித்தரிப்பிலும், பொருத்தப்பாட்டினைக் காண்பதும் மனங்கொள்ளத் தக்கது.
“றிந்திக் கடல் பக்கமுள்ள வெளியில் இருந்து குளிர்
மையான காற்று வீசிக்கொண்டிருந்தது. கோப்பாப்புலம் கிராமத்து மக்கள் குடியிருப்புப் பகுதியையும் அந்தக் காற்று குளிர்மையான ஒரு சூழ்நிலைக்குள் தக்க வைத்துக் கொண்டிருந்தது".
vi
 
 

இது ஒன்றும் பயங்கரக் காடு இல்லை சாதாரணமான காடுதான் அது அந்தக் காட்டுக்குள்ளே ஒருவர் நுழைந்தால் அடர்த்தியாக முற்றுகை யிட்டிருக்கும் புதர்களை விலக்கி விலக்கி நடக்கலாம். இலைச் சுமையுள்ள தடித்த கொடிகள், பின்னிக் கவ்விய விழுதுகள் தொங்கும் பெரிய ஓங்கி வளர்ந்த மரங்களும்.” என இயல்பிமை மாறா சூழல் சித்தரிப்பும் "ராவைக்கு இந்தக் கோதுமை மாப் புட்டுக்கு மத்தியானம் நான் சமைச்ச சுண்டவைச்ச மீன் குழம்பும் பொரியலும் தின்ன நல்ல ருசியாகத்தான் எங்கள் எல்லோ ருக்கும் இருக்கும்.”, "நந்திக்கடல் மீன் ஒரு நல்லேய் ருசியாகத்தான் இருக்கும்.”, “அன்று மத்தியானம் அண்ணாவியாருக்கு நல்ல கறி சோறுதான். உடும்பு இறைச்சிக் கறி அவரின் வீட்டில் விஷேச மாமிசக் கறியாய் வைக்கப் பட்டிருந்தது. பட்டுப்போல மிளகாய்க் கூட்டு அரைத்துச் சேர்த்துக் கிழக்கன் மீன் குழம்பும் வைத்து அல்லிப் பூ சாயலிலே ராசமணி சோறு ஆக்கியிருந்தாள்” என அம்மக்களின் உணவின் உயிர்ப்பையும் புலப்படுத்தியிருப்பது நாக்கில் உமிழ்நீரை ஊற வைக்கின்றது.
தான் எடுத்துக்கொண்ட கதைப் பிரதேசத்து மக்களின் உயிரோடு ஒட்டி உறவாடும் கூத்துக் கலை மீதான தாகத்தை வெளிப்படுத்துவதே கதையின் பிரதான ஓட்டமாயிருப்பதும், மற்றய விடயங்கள் துணை நிகழ்வு களாயிருப்பதையும் காண முடிகின்றது. வன்னிப் பிரதேசத்து மக்கள் மத்தியில் காத்தவராயன் கூத்து பிரசித்தி பெற்றிருப்பது உலக றிந்தது. அக்கூத்திணை அடியொற்றி இந்நாவல் நகர்வதும் குறிப் பிடத்தக்கது. சண்முகம், அண்ணாவியார் உள்ளிட்டோர் கூத்திற்குப் பொருத்தமான கதா பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதும், அப்பாத்திரங்களின் மகத்து வத்தையும், அதனோடிணைந்த தெய்வநம்பிக்கையை வெளிப்படுத்து வதும், ஒத்திகை பார்ப்பதும், அதில் மூர்த்தி குடித்து விட்டுக் குளறுபடி பண்ண முற்படுவதும், பின் உணர்ந்து அண்ணாவியாரிடம் மன்னிப்புக் கேட்கிறான். "அப்படியே இதை விட்டு விலகிறதுக்கு நீங்கள் முன்னம் சொன்ன மாதிரி கோயிலிலயும் போய் நான் பரிகாரம்செய்து போடுறன்” என்று மூர்த்தி அழுவார் மாதிரி கூறுவதும் பின் சமரசம் ஆவதும் போன்ற சம்பவங்களுடன், இன்னொரு புறம் காத்தவராயன் கூத்து தேவன் என்ற அண்ணாவியாரால் ஊர்ப்பள்ளிக் கூடத்து காணிக்குள் நடத்திக் கொண்டிருப்பதும், போட்டியை ஏற்படுத்தி கதையில் திருப்பு முனையை கோடிடுகின்றது. இருந்தாலும் நாவலின் பிற்பகுதியில் போட்டி நிலையைக் காட்டுவது சற்று நெகிழ்வாகி விட்டது என்றே கூறலாம்.
vii

Page 6
5Tத்தவராயன் கூத்தின் கதை தம் வாழ்வில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சம், அதனோடிணைந்த பயம் கலந்த நம்பிக்கை, “கெளரி - மூலம் வெளிப்படுத்தப்படுவதும் அவளுக்கு பூங்கா “காத்தவராயன் ஆரியமாலைக்கு தாலி கட்டிய மாதிரிப் பிறகு பாத்தாப் பேந்து அவரும் ஒரு சின்னப்பெட்டையை கலியாணம் பிறகு செய்திட்டார்." எனக் கூறுவதும், கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், பாலாவும் சண்முகமும் அவளது கலக்கத்தைப் போக்கி விடுகின்றனர். இச்சம்பவம் இக்கூத்தினூடாக வன்னி மக்களிடையே காணப்படும் நம்பிக்கையைப் பறைசாற்றுகின்றது. மேலும் இந்நாவலில் கூத்துப் பழகப் போவதினால் உழைப்பில் தேக்கம் ஏற்படுவதும், பிள்ளைகளை ஈடுபடுத்துவதனால் அவர்களது படிப்புத் தடைப்படும் என்ற செய்தி வெளிப் படுவதும், தேவன் அண்ணாவியார், முருகேசன் அண்ணாவி யாருடன் போட்டித் தன்மையை மனவருத்தத்துடன் கூறி சமரசமாவதும், அவர் சாதி பற்றிப் பேசும் நடேசுக்கு ஏசுவதும், அத்தகையை வேறுபாடு அர்த்தமற்றது என்ப தற்குக் காட்டும் நியாயங்களும், வன்னிப் பிரதேசத்து மக்களின் கிராமியப் பேச்சு வழக்கு, நடையுடை பாவனை என்று அனைத்துமே இந்நாவலில் அப்பட்டமாக வெளிப் படுவது கதைக்கு உரமாகிறது.
5Tத்தவராயன் கூத்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நேரம் பாரிய வெடிச் சத்தம் கேட்பதும், சனங்கள் கலைந்தோட காத்தவராய னாகிய ராஜன் தன் பாத்திரத்தில் ஒன்றி இறுதிக் காட்சி வரை நடித்து முடிப்பதும், கெளரியும் பிள்ளைகளும் வாழ்வோ! சாவோ! இவ்விடம்தான் என நிற்பதும், பின் எல்லோரும் வந்து கூத்தைப் பார்த்துக் கலைவதுடன் நாவல் முடிவடைகின்றது. நாவலில் இறுதி நிகழ்வு வன்னி மக்கள் எதிர் கொண்ட அழிவின் அவலத்தையும், இடப்பெயர்வின் துன்பத் தையும் கோடிட்டுக் காட்டுவதுடன் காத்தவராயன் கூத்து வன்னி மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது என்ற செய்தியை முன்னி லைப்படுத்தி எம்மினத்தின் அறுபடாத வாழ்வியல் கோலத்தினையும், அதில் உயிர்ப்புடன் துலங்கும் இக்கூத்தின் உத்தம திறத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் இந்நாவல் 14ம் நாள் பெணர்ணமியைத் தொட்டுவிடும் தூரத்தில் ஒரு சமுதாயத்தின் அறுபடாத சத்தியமாக விளங்குகின்றது.
திருப்பழுகாமம் - 02 க.பிரபாகரன் பெரியபோரதிவு - P.O மட்டக்களப்பு.
65 G3 fl:- 07 72355.454
 
 

என்னுரை
ஒன்றாக ஒரே பெட்டியில் ஏறினோம் என்ற மாதிரியாய் கதை எழுதுவதிலும் அவ்விதம் நானும் பின்பற்ற விரும்புவதில்லை. இதை நான் எடுத்துக் கூறுவது ஏனென்றால், மிக அரிதான ஒரு பிரிவுக்குள் அங்கே நல்ல புதிய விஷயங்களையும் எடுத்து தெளிவாக சொல்லக்கூடியதாய் என் கவனம் தேடிச் செல்கிறது, அதனாலே தான் முக்கியமாக இங்கு இதை நான் குறிப்பிடுகிறேன்.
இந்த விஷயத்தை வைத்து நான் கதை எழுத வேண்டுமென்று என் நினைப்பு தினம் தினம் தேடிச் செல்லும் போது, ‘சரி தான்' என்று பிறகு அதை எழுத நான் மன உறுதிப்பட்டுவிடுவேன். இந்த முடிவை தெளிவாக்கிய பிறகு என் எழுத்துத் தொடரும்.
இந்த நாவலிலுள்ள கதைப்பிரதானம் நாட்டுக்கூத்து சம்பந்தப் பட்டதுதான். ஆனாலும் ஆழ்ந்து நோக்கினால், வாசிப்பவருக்கு வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களும், அதன் மூலம் பல அர்த்தங்களும், படிக்கும் போது அவர்கள் இதயங்களில் இடம்பெற்றுவிடும். காத்தவராயன் நாட்டுக்கூத்திலே அதீதமானதான ஒரு அவஸ்தை கழுமரம் காத்தான் ஏறும் கட்டம்தான் அந்த முக்கிய காட்சியோடு இந்த கதையும் முடிவை எட்டுகிறது. நாவல் ஒருவர் எழுதும்போது நாவலின் நடை, எடுத்துச் சொல்லும் ரீதியும் முக்கியமானதாகும். என்றாலும் ‘டால்ஸ் டாய் - மிகவும் தாழ்ந்த
ரகத்தில் இயற்கையாகவும் சிரமமின்றியும் மொழிநடையைப் பாவித்தார்.
ஆனால் அவரது சிந்தனை உணர்வுகள் வாசகர்களை உச்சகோடிக்குத் தூக்கிப்போனது. இந் நாவலை சாதாரண மொழி நடையிலேயே நானும் எழுதியிருக்கிறேன். இதற்கு வாசகர்களிடமிருந்து வரவேற்புக் கிடைக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையுண்டு, எம் ஈழநாட்டிலே எமக்கென்றேயுள்ள ஒரு தனித்துவமான கலை, நாட்டுக்கூத்துக் கலையாகும். எமக்கென்றே உள்ள இசைப்பாணியுடன் பாடுவது நடிப்பது போன்ற இன்னும் சகலவிதமான பாட்டுக்கலை வழி வேறுபாடுகள் வட கிழக்கு மாகாணங்களிலும் பாடி
நடிக்கும் கூத்துக்களில் காணப்படுகின்றன. எனவே எமக்குள்ள இந்தப்
பாரம்பரியமான கலைச் சொத்தை அதன் பெருமை உணர்ந்து நாம் இன்னும் மேம்படுத்தி மிளிரச் செய்ய வேண்டும். எம் கலை கலாசாரத்தைப் பாதுகாக்கும் கடமையாக உணர்ந்து இந் நாட்டுக் கூத்துக்களையும் நாம் பேணி வளர்க்கப் பாடுபட்டு உழைக்க வேண்டும். V
நான் எழுதிய "பதினான்காம் நாள் சந்திரன்” எனும் இந்
ix

Page 7
நாவல், எம் நாட்டு - நாட்டுக் கூத்துக் கலைக்கான கம்பீரத்தன்மைக்கு சிறிதளவேனும் சேர்ந்து ஊக்கம் கொடுத்து ஒத்தாசை அளிக்குமென்று இதன் மூலம் நானும் நம்பிக்கை பெறுகின்றேன்.
என் தந்தையார் நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா ஒரு நாட்டுக் கூத்து அண்ணாவியாராவார். அவரின் தகப்பன்வழி இரத்த உறவினர் புலவர் சந்தியாகுப்பிள்ளை தம்பிமுத்துப்பிள்ளையவர்கள்(அச்சுவேலி) பல நாட்டுக் கூத்துக்களை இயற்றியவர். "எஸ்தாக்கியர்’ எனும் நாட்டுக்கூத்து அவர் எழுதிய நாட்டுக்கூத்துக்களிலே முக்கிய இடம் பெறுகிறது. இந்நாட்டுக் கூத்தை அவரது மகனான கென்றி தம்பித்துரை தம்பிமுத்து சிங்கப்பூர் நகரத்திலும் கொண்டு சென்று மேடையேற்றம் செய்தவர். ஞான செளந்தரி நாட்டுக் கூத்திலும் இவர் ஞான செளந்தரியாக நடித்து அந்நேரம் அமோகமான பாராட்டுதல்களையும் பெற்றவர். கென்றி தம்பிமுத்து என் மனைவியின் தந்தையாவார். இந்தவித உறவுகளின் பிணைப்பின் மூலம் ஏற்பட்டிருந்த ஊக்கமே நாட்டுக் கூத்துடன் சம்பந்தப்பட்ட இந் நாவலை நான் எழுதுவதற்கு ஊக்கம் தந்தது என்று சொல்லலாம். இன்னும் இதைப்பற்றி தொடர்ந்து நான் சொல்லப் போனால், முன்னம் பதின்மூன்று வருடங்களாக நான் சமூக மேடை நாடகங்களையே தொடர்ந்து எழுதிவந்தேன். அப்படி நாடகங்களை எழுதியதோடல்லாது அவைகளில் நான் முக்கிய பாத்திரம் ஏற்றும் நடித்தேன். அந் நாடகங்களை நானே இயக்கமும் செய்தேன். இதன் காரணமாகத்தான், இந் நாடக ஒத்திகையில் வரும் சம்பவங்களை சுவாரஸ்யமாக சிருஷ்டிக்க என்னால் முடிந்தது.
1ெழுதுவது என்பதை ஜன்ம ஸித்தியாகவே நான் பெற்றுக் கொண்டுள்ளதாகத்தான் என் உள்மனம் எப்போதுமே சொல்கிறது. இதை நான் சொல்வது சரியாக இருக்கலாம். அப்படி இல்லை என்று நான் சொல்வதை சிலர் ஒத்துக் கொள்ளாத அளவிலும் சொல்லலாம். ஆனால் எனக்கு என் மன உள்ளில் உண்டாகியுள்ள நம்பிக்கை, மறுப்பு ரீதியில்லாத மெளனமான அமைதியையே என்றும் எனக்கு தந்த வண்ணமிருக்கிறது.
அதனாலும் எழுதுவதின் சுகம் மட்டும் வாழ்க்கையில் எனக்குப் போதும்! வேறு ஏதும் எனக்கு தேவையில்லை! என்கிற மாதிரியாகவும் எனக்கு இருக்கிறது. O
இந் நூலுக்குப் பழம்பெரும் நாடறிந்த எழுத்தாளர் திரு. இரா. அன்புமணி ஐயா அவர்கள் முன்னுரை எழுதி எனக்குத் தந்திருக்கிறார். திரு. இரா அன்புமணி ஐயா அவர்கள் எழுத்தாளர் மட்டுமன்றி சிறந்த
Χ

நாடக நடிகராகவும் புகழ் பூத்தவர். அவரின் நாடக ஆற்றலையும் அனுபவ செழுமையையும் அவர் இந் நூலுக்கு எழுதித்தந்த முன்னுரை வாயிலாக நான் அறிந்து திருப்தியுறுகிறேன். இதன் மூலம் நான் அவருக்கு என் இதய பூர்வமான நன்றிதனை தெரிவிக்கிறேன்.
அடுத்து நான் இங்கே நன்றி கூற இருப்பவர், திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இளவல் திரு.க.பிரபாகரன் ஆவார். திரு. க.பிரபாகரன் விமர்சனம் படைப்பதிலும் சரி, மேடைப் பேச்சிலும் சரி, தனித்தன்மை கொண்ட திறமைகள் உடையவள். சிறந்த இலக்கியவாதியும், பட்டதாரியும், பாடசாலை அதிபருமான இவள் எல்லோரிடமும் ஒரே நிலையில் பழகும் குணமுடைய பண்பாளர் ஆவார். இந் நாவலைப் படித்து மதிப்புரையில் தன் கருத்தைக் கூறியுள்ளார். இதன் பொருட்டு அன்னாருக்கும் என் நன்றியை கூறுகிறேன்.
இதையடுத்து நான் நினைப்பது அருமையான என் நண்பர்களையும்,
வாசகர்களையும் தான். எனவே அவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொண்டு என்னுரையை நிறைவாக்குகிறேன்.
வணக்கத்துடன் இல.7, லில்லியன் அவனியூ, நீ.பி. அருளானந்தம் மவுண்ட் லெவனியா, சிறீலங்கா.
தொ.பே. 0114967027, 0 1 1273 1887, O72278.4954.

Page 8
நாட்டுக் கூத்துக்கலையுடன் தன் வாழ்நாள் முழுக்கவும் உறவு கொண்டு " - . அத்துறையில் சாதனைகளும் திறம்பட நிகழ்த்திய நாட்டுக்கூத்துக் கலாநிதி ம. யோசேப்பு (புகுந்தான் யோசேப்பு) அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பிதம் செய்கிறேன்.
 

நிந்திக் கடல் பக்கமுள்ள வெளியில் இருந்து குளிர்மையான காற்று வீசிக்கொண்டிருந்தது. கேப்பாப்புலம் கிராமத்து மக்கள் குடியிருப்புப் பகுதியையும் அந்தக் காற்று, குளிர்மையான ஒரு சூழ்நிலைக்குள் தக்க வைத்துக்கொண்டிருந்தது. நேற்று இவ்விடமெங்கும் பெய்த நல்ல மழையுடன் இயல்பாக இயங்குவதான ஒரு நிலைமைதான் அது. ஆனாலும் அந்தக் கிராமத்தருகேயுள்ள நந்திக்கடல் பக்கமிருந்து வீசும் காற்றால், முன்னம் இங்கு பெய்த மழையால் ஏற்பட்ட குளிர்மை நிலை இன்னும் கொஞ்சம் பல படிகள் மேலே ஏறிய ஒரு நிலைமைக்கு, லாவகமாய் விரிந்து கொண்டே இருந்தது.
கேப்பாப் புலம் என்கிற இடம் வன்னிப்பக்கத்திலே உள்ள இடங்களில் மிகவும் ஒரு சிறியதொரு கிராமம்தான். குறிப்பாக அந்த இடத்தைச் சொல்லப்போனால், - அது தண்ணிரூற்று என்ற இடத்திற்கும் புதுக்குடியிருப்புக்கும் தொடர்பாயுள்ள வீதியின் நடுமையப்பகுதியிலே, இறக்கமான ஒரு இடத்தில் காணத் தெளிவாகிற இடமாகத்தான் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாக உள்ளது.
கேப்பாப் புலம் வீதி ஒரு பக்கம் முடியும் இடத்தில்தான் ‘வற்றாப்பளை - அம்மாளாச்சி கோயிலும் இருக்கிறது. ஒரு வழி பார்த்தால் இந்தக் கிராமமே யாவருக்கும் தெரியப் பிரபலமானது, - நிலையான புகழ் பெற்ற அந்தக் கோயிலால்தான்என்பதாகவும் உள்ள அந்த ஒரு உண்மையையும் இவ்விடத்தே கூறிவிடவும் முடியும்.
அங்கே உள்ள முக்கிய அந்தப் போக்குவரத்து வீதி, கிரவல் மண் உள்ளதான கடந்து செல்லும் பாதைதான். அங்கே கிராமம் முழுவதும் உள்ள சனங்களுக்கு 'நந்திக் கடலின் ஓசை தேய்ந்த அளவிலாய் எப்போதும் அவர்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
நிந்திக் கடலின் அருகேயுள்ள வீதியின் மறுபக்கத்தில் தொடர்
பாயுள்ள நெடிய காடும் இருக்கிறது. இது ஒன்றும் பயங்கரக் காடு இல்லை!
சாதாரணமான காடுதான் அது! அந்தக் காட்டுக்குள்ளே ஒருவர் நுழைந்தால், அடர்த்தியாக முற்றுகையிட்டிருக்கும் புதர்களை விலக்கி விலக்கி நடக்கலாம். ஆனாலும், அதனுள்ளே இலைச்சுமையுள்ள தடித்த கொடிகள், பின்னிக் கவ்விய விழுதுகள் தொங்கும் பெரிய ஓங்கி வளர்ந்த மரங்களும், நிறையவேநடந்து நடந்து பார்க்கையில் காணக்கூடியதாய் இருக்கின்றன. இடித்து நெருக்கிய; கதிரவனின் கிரணம் ஊடுருவி வரும் பெருமரங்களையும் அதனுள்ளே சில இடங்களில் காணலாம்தான். இடிந்து முறிந்ததாய்க்
6.9emy.) О 1. o

Page 9
கிடக்கும் கரடுமுரடான மரங்கள் - கீழே நிலத்தில் சில இடங்களில் பரவிப் பரவிக் கிடக்கும் முள்ளுமிலாறுகள், முறுகிக்காய்ந்த இலைச் சருகுகள், அதற்குள்ளே சில இடங்களில் சரசரத்து ஊர்ந்து செல்லும் பாம்புகள், ஆட்களின் அரவம் கண்டால் உயிருடன் தாங்கள் மீள்வது சிரமம் என்றாற்போல பயப்பட்டுக்கொண்டு அந்த இலைப் புதருக்குள்ளாலே ஒடிப்போகிற உடும்புகள், உக்குளான் முயல், ஏன் துள்ளிக்குதித்து ஒடும் மான் , மரை, பன்றி என்று இன்னும் பல மிருகங்கள் வெகுதூரம் அதற்குள்ளே அடர்ந்த காட்டின் நுழைவாயிலுக்குள்ளே போனால் குறைவில்லாமல் ஆரும் காணக்கிடைக்கும்தான். இப்படியான இயற்கைச் சூழல் பொருந்திய கேப்பாப் புலம் மக்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய தொழில் விவசாயம்தான். இவர்களுக்கு நெல் பயிரிடுவதற்கான வயல் காணிச் சொத்துக்கள் நிறைய இருக்கின்றன. அனேக வயல்கள் அப்படி பார்வைப்புலனை தாண்டிச் செல்லக்கூடிய விரிந்த வயல்கள். இதிலே மாரிகாலத்தில் ஒரு போகம் கண்டிப்பாக அவர்கள் தங்கள் வயல்களில் நெல் விதைப்பார்கள். மிகுதி ஒரு காலம் ஆற்றுத் தண்ணீர் பாயும் காலத்தில, அவர்கள் அதற்குப் பக்கத்திலே உள்ள தரைகளில் - கச்சான், வெண்டிக்காய், மரவள்ளி வகைகள் முதலியன பயிரிட்டு, கிடைக்கும் விளைச்சலைப் பெற்றுக் கொள்வார்கள்.
நிந்திக் கடல் பரப்புக்குள்ளே உள்ள நலமான சூழலில் தோற்ற முள்ள பெரிய பெரிய மீன்களும். இறால்களும் நிறையவே விளைகின்றன. மணலை. ஜப்பான், பாரை, கட்டா, கிழக்கன். செங்கண்ணி சப்பாத்தி, சருகுஇறால், சிங்கஇறால், நண்டு தொடங்கி ஒட்டா, ஒரா, சாவாளை, கெழுத்தி, பேத்தை மட்டுமாய் அதற்குள் உள்ள அவைகளின்பெருக்க ஆதிக்கத்தின் மூலம், கேப்பாப்புலம் மக்களின் வாழ்க்கைக்கு இடையேயான உறவை, பிணைப்பு உடையதாகவே அது உருவாக்கி விட்டிருக்கிறது.
அவர்களிலும் அனேகள் கடலூக்கம் கொண்டு இந்தக் கடலிலே தங்கள் உணவுத் தேவைகளுக்காக சில காலங்களில் எளிதாக இதிலே மீன் இறால்கள் நண்டுகள், போன்றவற்றை பிடித்துக் கொள்வார்கள். கரைக்கடலானசேற்றுப்பகுதியிலேயே இறங்கி ஒரு காலம் நண்டு, இறால் போன்றவற்றை இவர்கள் இலகுவாக பிடித்து தங்களுக்கு எடுத்துக் கொள்வார்கள். ஆழிக்கடல் என்று போகாமல் அந்த மடையுள்ள சேற்றுப்பக்க முள்ள தண்ணிரிலேயே இப்படியெல்லாம் அவைகள் அவர்களுக்கு பிடிக்கின்றதற்கு கைக்கு அகப்படும். அவர்களுக்கு அது குலத்தொழில் இல்லாவிட்டாலும், இறால், நண்டு பிடிக்கும் முறை ஒன்றை தெரிந்து கொண்டதாலே ஒரு இரும்புக் கம்பிக் குத்துாசியுடன்போய், அந்தக் கடல்கரையிலேயே ஒரு சிறிய யூரியா பை நிறைய கொள்ளுமளவிற்கு இறால், நண்டு அந்தக் காலங்களில் அவர்கள் பிடித்து விடுவார்கள்.
இப்படித்தான் கடல் விளைச்சல் ஆற்றலை சித்திரை, வைகாசி,ஆனி
920 புதினான்கஸ் தான் சந்திரன்

9. ஆவணி போன்ற மாதங்களில் - எப்போதும், நிறுவிக் கொண்டிருக்கும் அந்த நந்திக்கடல், அவர்களுக்கென்றதாய் உறுதி செய்யப்பட்டது போன்ற ஒரு ஆதாரம் தான்.
அவர்களது வாழ்க்கை விரிவுக்குள்ளே அங்குள்ள இப்படியான இயற்கையின் செல்வங்களெல்லாம் அவர்களுக்குச் சொந்தம்தான். சிலர் அங்கு காடுகளிலும்சென்று மிருகங்களை வேட்டையாடிக்கொன்று, கொண்டு வருவார்கள். அப்படியெல்லாமாக ஏதோ பிழைப்பென்றும் இருந்ததால் வாழ்க்கைக் கஷ்டமென்பது பெரிதாக அவர்களுக்கு இல்லை.
இன்னும் அவர்களுக்கு மாடு, ஆடுகள் என்று வளர்ப்பதாலே ஆழமான ஒரு வருமானமும் தினமும் தவறாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் அங்கு பாலுக்கும் தயிருக்கும் இதனால் குறைவே இல்லை. இக்காலம் ஒரு பக்கம் கொடிய யுத்தம் நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் என்னவோ இந்த வசதிகளாலேதான் கனத்துத் தாங்கள் கஷ்டப்படாமல் வாழ்க்கைச் சீவியத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் செல் - விழுந்து வெடிக்கின்ற பயங்கரச்சத்தம் அவர்கள் காதுகளில் - இரவில் நித்திரை கொள்கின்ற தருணங்களிலே கேட்டுக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் அங்குள்ள பனை மரக் கூந்தல் மேல் காற்று அடித்து உருவாக்கும் சுருதி ஒசையினைக் கேட்டுக்கொண்டு பயந்தவிப்பை விட்டு நிம்மதியாகவேனும் கொஞ்சம் நேரத்துக்கு அவர்கள் இரவில் நித்திரை கொண்டார்கள்.
Uபுத்தத்தினால் ஏற்பட்ட சொத்துக்களின் இடிபாடுகள், உயிர்க் கொலைப் பறிப்புகளுக்கிடையே சிதிலமானது போல சிக்கிக் தத்தளித்த ஒரு பகுதியிரான தமிழ் மக்கள், திருகோணமலைப்பக்கமிருந்தும் இடம் பெயர்ந்தார்கள், பதை பதைத்த பயத்தோடு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வந்த அவர்கள், குடும்பம் குடும்பமாக கேப்பாப் புலவுப்பக்கமுள்ள உத்தமன் வீட்டுத் திட்டம் என்ற இடத்திலும் வந்து குடியேறினார்கள்.
இடம் பெயர்ந்து திடுக்கீடுகளுடன் அவர்களெல்லாம் அங்கு வந்த நேரம் முதன் முதலில் வற்றாப்பளை அம்மாளாச்சி கோயிலுக்குச்சென்று, ஒளிவிடும் அவள் முகம் பார்த்து, அவள்தன் பொன் பாதம் தனை தொட்டு வணங்கியது போல பக்தியாக வணங்கிவிட்டு - இவ்விடமாய் வந்து அவர்கள் குடியேறியதன் பின்பு தான், அந்தக் கேப்பாப்புலம் பக்கம் உள்ள தெருவே 'ஓ' என்று மகிழ்ச்சிபொங்கிய அளவிற்கு பிரகாசமானதாகிவிட்டது.
அவர்கள் எல்லாமாக ஒரு ஐம்பது எண்ணிக்கைத்தொகையான குடும்பங்ளாக இருக்கும். இவர்களிலே, கொக்குளாய், தென்னமரவாடி,
boboynyಣ್ಯತಿ О З О

Page 10
கொக்குத் தொடுவாய், நிலாவெளி பக்கமிருந்து வந்தவர்களும் இருந்தார்கள். அடுத்து, குச்சவெளி, திரியாய் போன்ற இடங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்களாகவும், சிலகுடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். 1990ம் ஆண்டளவில் இடம் பெயர்ந்து இங்கு வந்து குடியேறிய இவர்களிலே அனேகம்பேருக்கு தோட்டம் விவசாயம்தான் செய் தொழில். தாங்கள் செய்த தோட்டங்களில், வயல்களில், பூக்களில் வரும் பால் வாசனையோடு ஒளிர்ந்துக் குலுங்கிய பயிர்களின் செடிகளின் பச்சை நுணிகளைப் பார்த்து அதை விரலால் வருடி மனம் மகிழ்ந்தவர்கள், இங்கே இடம் பெயர்ந்து வந்ததன் பின்பு தங்கள் தொழிலையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு "இனி என்ன செய்வோம்? ஏது செய்வோம்?” - என்ற துயர நினைவுகளுடனாகக் கஷ்டப்பட்டவர்கள். அங்கே உள்ள கேப்பாப்புலவுக் கார்களின் செழித்த நெல் வயல்களை, பருந்து நிழல் போகின்றது போன்ற அளவில்பார்த்து மனம் கொதிக்க தங்கள் நிலையை எண்ணி அவர்கள் பெருமூச்சு விட்டார்கள். இவர்களின் தொழிலில்லாத துன்பமான நிலைமையைக் கண்டு கேப்பாப்புலத்திலுள்ள மக்கள் இரக்கம் உகுந்து மனம் இரங்கினார்கள். "இவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள அகதியான ஒரு நிலைமை எங்களுக்கும் ஒரு காலம் அவர்களைப்போல் ஏற்படா தென்கிறது என்ன நிச்சயம்?” - என்று தங்கள் குடும்பத்துக்குள்ளும் சொந்தத்துக்குள்ளும் இது பற்றி கதைத்துவிட்டு 'இந்த ஊரில் தஞ்சமடைந்த உங்களை காப்பாற்றுவது நம் கடமை' - என்று அவர்களுக்கும் கூறி - மேலதிகமாக தாங்கள் விதைத்த வயல் காணிகள், ஆற்றங்கரைக் காணிகளை அவர்களுக்கு நியாயமாக பேசி குத்தகைக்குக் கொடுத்து அவர்களையும் தங்கள் ஊருக்குள்ளே வாழ்வதற்கு தொழில் வசதி செய்து கொடுத்தார்கள்.
நிலச் சுற்றுச் சூழலிலே இவர்களில் பலர் தங்கள் விவசாயம் தோட்டத்தொழிலைச் செய்து சீவியத்தைக் கொண்டுபோக, இடம் பெயர்ந்து வந்த வேறு ஒரு சிலர் தாங்கள் முன்னம் செய்து வந்த மீன் பிடித் தொழிலை இங்கே நந்திக் கடலிலும் செய்வதற்கு தொடங்கினார்கள். அகதிகளாக இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்திருந்தாலும், அவர்களது தொழில் முயற்சிகளெல்லாம் மிகச் சிறப்பாகவே இருந்தன.
அகதிகளாக இவர்களெல்லாம் வந்ததன் பிறகு கேப்பாப் புலவில் ஆள் நடமாட்டம் முன்னையதைவிடக் கூடிவிட்டது. உத்தமன் வீட்டுக் குடியிருப்புப் பகுதியில் புதிதாக ஒற்றையடிப்பாதைகளும் முளைத்தது போன்றதாகி வந்து விட்டன. அங்கே உள்ள நந்திக்கடல் அமைதியாக இருப்பது போலத்தான் இருந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருண்ட இரவு வேளைகளிலும் அங்குள்ளதான அந்த வனமும் அமைதியாக இருப்பது போலத்தான் இங்குள்ளவர்களுக்கு அச்சம் தருவதாக இல்லாமலாக இருந்தது. ஆனாலும் அம் மக்களுக்கு ஒரு பக்கம் எங்கெங்கோவிழுந்த செல்கள் சிதறி வெடிக்கும் பயங்கரச் சத்தம்தான் மனதில் ஒரு பயத்தை நெடுகவம் உண்டு பண்ணிக்கொண்டிருந்தன.
O40 புதினான்காம் தான் சந்திரன்

இரவு பத்துமணி இருக்கும்! கேப்பாப் புலம் இடத்திலுள்ள அந்த உத்தமன் வீட்டுத் திட்டத்தில் குடியிருந்தவர்கள் எல்லோருமே கலவரப்பட்டுக் கொண்டு கையில் பொல்லுத் தடிகளுடன் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தார்கள். அப்படி ஒடித்திரிந்தவர்களிலே ஒன்று இரண்டு பேர்களின் கையில் மாத்திரம் "டோச் லைட்'- இருந்தது. அவர்கள் ஒரு கையில் டோச்சையும் பிடித்துக் கொண்டு மறு கையில் ஒரு கம்புடன் அங்குள்ள காய்ந்த வேலிக்கம்புகளை உடைத்துவீசித் தட்டி எறிந்தாற்போலச் செய்து கொண்டு, ஒவ்வொரு வீட்டிடம் தாண்டிப்பாய்ச்சல் பறந்தலாய் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
"விசர் நாயப்பா விசர் நாயப்பா. ஆரும் காணுற இடத்தில உடன மண்டேல அதுக்குப் போட்டிடுங்கோ..?”
"ஒமோம் ஆரும் அந்தச் சனியனைத் தப்பிப்போகவா விட்டிடாத யுங்கோ. மண்டேலயாப் போட்டிடுங்கோ. தப்பிப்போக விட்டிடாதயுங்கோ.?” "யாரெவர்கள் இப்படி சத்தம் போடுகிறார்கள்?' - என்று சரியாக அந்தக் குடியிருப்புக்குள் இருந்தவர்கள் ஒருவருக்கும் அது மூளைக்குப் பிடிப்படவில்லை. அங்குள்ள எல்லோருக்கும் இரவு படுத்துக்கிடந்ததில் அரை நித்திரைத் சோம்பல்தானே? எல்லோருக்கும் காதில் விழுந்த அந்தக் குரல்கள் பிறகும் வரவரக் கூடிக்கொண்டே போய்க் கொண்டிருந்தன.
“ஒரு நாயில்ல! சரியா ரெண்டு விசர்நாய்.”
புதிதாக வேறு ஒரு பொய்ச் செய்தி மாதிரியும் பிறகு அக்குரல்களி னுாடாக வரத்தொடங்கிவிட்டது. வானத்தில் நிலவு ஒன்றும் இந்த நேரம் இல்லை. ஆனால்நட்சத்திர ஒளி நிலமெங்கும் கொஞ்சம் துலக்கமாகத் தெரிந்தது. எட்டு வகையான நட்சத்திரங்களில் அப்போது வானத்தில் காலித்திருந்தது. என்னபெயருடைய நட்சத்திரமோ தெரியவில்லை. மிகவும் அந்த வெள்ளி நட்சத்திரங்கள் கிழக்குப் பக்கமாக மிக அதிக வெளிச்சமாய்த் தெரிந்தன. கூட்டவெள்ளியோ இல்லை மலைவெள்ளியாகவோ அவைகள் இருக்கலாம் போல அவர்களுக்குத் தெரிந்தது.
(BLIT கையில் இல்லாமல் அவ்விடமெல்லாம் பொல்லுத், தடிகளுடன் ஒடுப்பட்டுத் திரிந்தவர்களுக்கு அந்த வெளிச்சம், இருட்டாக மூடியுள்ள இடங்களிலும் - பார்க்கக் கொஞ்சம் உதவியாக இருந்தது. ஆண்களெல்லாம் இப்படியாக தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளாலருந்து வெளிக்கிட்டு வெளியாலே அந்த விசர்நாய்களை கொல்லவென்று ஒடித்திரிய, வீட்டிற்குள் இருந்த பெண்களெல்லாம் அச்ச மூட்டம் பிடித்துப்போய் உடம்பு ஈரமாய் வியர்வையில் நனையும் அளவுக்கு நடுக்கத்தோடு இருந்தார்கள்.
6.9emy) O 5 O

Page 11
“பிள்ளையஸ் இங்கால வாங்கோ. இங்காலயா வாங்கோ. வெளிய ஒருவரும் நீங்கள் போகப்பிடாது போகப்பிடாது. விசர்நாயாம்! விசர்நாயாம்." - என்று சொல்லிக்கொண்டு, தன் குடிசையின் ஒலைத் தட்டி வாசல் கதவை இழுத்து மூடினாள் ஜெயாவின் மனைவிபவானி. அவளுக்கு நெற்றிப் பொட்டில் குபிரென்று வந்தது போல இந்த யோசனையும் வந்தது. அந்த யோசனையோடு முகமும் அவளுக்குச் சாம்பல்நிறமானது.
"அம்மாளாச்சி விசர் நாய் கடிச்சா ஊசிமருந்துகளும் இங்காலிப்பக்க ஆசுப்பத்திரியளில இல்ல! அதுக்கெண்டு பிறகு வவுனியாவுக்கும் ஒடுப்பட்டுப் போக வேணும். அதுக்குள்ளயும் அங்க போகேக்க சென்றியளிலஅவங்கள் ஆமிக்காரங்கள். ‘புலிகிலி எண்டும், கேட்டு சும்மா விசாரிப்பாங்களே..? ஐயோ முருகா, அம்மாளாச்சி.!”
அவள் தன் பாட்டுக்கு இருந்து இப்பிடி வாயில் வந்ததெல்லாம் சொல்லி உளற, அவளின் மூத்த மகன் திணேஷ் - அவனுக்கு எட்டு வயது இருக்கும்.
“என்னம்மா என்னம்மா சொல்லுறீங்கள்.?' - என்று தாயைப் பார்த்து ஒன்றும் விளக்கமறியாதவன் போலக் கேட்டான்.
"அட வெளியில மகன் விசர்நாயடா ஒடித்திரியிது. இங்க உன்ர அப்பாவுமெல்லே வீட்டால இருந்து வெளிக்கிட்டு வெளிய ஒடித்திரியிறார்!’
"அப்ப அப்பாவுக்கு நாய் கடிச்சுப்போடுமெல்லேயம்மா..?”
6
சும்மா வாய வைச்சுக்கொண்டிர்ரா. கடிக்கிறதும் பிடிக்கிறதும் எண்டுறான்.'
அவளுக்கு மகன் சொன்னதைக் கேட்டு உடனே ஒரு வித எரிச்சல் வந்து விட்டது.
"இங்க வா திணேஷ், கவிதா, ரெண்டுபேரும் இதில வந்து இந்தப் பாயில இருங்கோ.”
தாய் சொல்ல திணேஷ் - பேசாமல் அதிலே வந்து பாயில் இருந்து விட்டான். கவிதா சின்னப்பிள்ளைதானே. அவளுக்கு நித்திரைச் சோம்பல்! அவள் பாயில் வந்து முன்னம் இருந்து விட்டு, பிறகு அப்படியே அதிலே சரிந்து படுத்துக்கொண்டு விட்டாள். உடம்பு குளிர்ந்தது அவளுக்கு. பாய்க்குப்பக்கத்திலிருந்த அம்மாவின் சேலையை தன்பக்கம் இழுத்து பிறகு அந்தப் போர்வைக்குள் தன்னை அவள் மறைத்துக்கொண்டாள். அவளின் மூச்சின் ஒலி, சிறு பிசிறுடன் சீராகக்கேட்டது.
'மழைக்க போய்க்கீய் நீ நனையாத நனையாத எண்டா இவள் குழப்படிக்காரி கேக்கிறாளா..? சளி பெரிசா இழுக்குது. எல்லாம் எனக்கு
960 புதினான்காம் தான் சந்திரன்
 

வந்த பெரிய ஒரு ஆக்கினை. இங்கனேக்கயா இப்ப வந்து. இப்பிடிபெரிய தொல்ல எனக்கு” பவானிக்கும் மனம் பெரிய வதையாக, பாரமாக இருந்தது."சொந்த இடத்தில வசதியாக இருந்து வாழ்ந்துபோட்டு இங்கவந்து."
என்று இதை நினைத்துக்கொண்டு ஒலைத்தட்டிக் கதவடிக்குக்கிட்ட வாய்ப்போய் அந்தக் கதவிடுக்கு வழியாக அவள் வெளியே பார்த்தாள்.
- அங்கே மிகச் சரியான ஒரே இருட்டுத்தான். அந்த இருட்டை மொண்ட மொண்டதாக குடித்ததைப்போல பார்த்தும், மெல்லிய வெளிச்சத்தில் பெரிதாய் அவளுக்கு ஒன்றும் வெளியே உள்ளவைகள் தெரியவில்லை. அவள் அந்த இடத்தில் நின்று கொண்டிராமல் திரும்பவும் வந்து பிள்ளைகளோடு அந்தப் பாயில் பிறகு இருந்துவிட்டாள்.
வெளியே ஒரே குரலில் சற்றும் நில்லாமல், எவ்விடத்திலும் ஊர் நாய்கள்சேர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன. இந்த நேரம் சாம்பல்மேட்டில், உடல் சுருட்டிவால் செருகி தூங்குகிற நாய்களெல்லாம் அந்த விசர்நாயைத் துரத்திக்கொண்டு இப்போ அதன் பின்னாலே ஒடிப்போய்க்கொண்டிருந்தன. ஆனாலும் அந்த நாய்கள் அதற்குக்கிட்டேபோனதும் அதைப்போய்க் கடிக்காமல் பிறகு தூரவாய் தாம் நின்று கொண்டு சீறி உறுமிக் கொள்கிறதை மட்டும் செய்தன.
அந்த உத்தமன் வீட்டுத்திட்டம் குடியிருப்புப் பகுதியிலே சண்முகம் என்பவரும்தான் அங்கு குடியிருந்தவர். அவர் உடும்பு, உக்குளான், முயல் வேட்டைக்குப் பக்கத்துக் காடுகளிலே போய்வரவென தன்னிடத்தில் இரண்டு நாய்களை சோடியாக வளர்த்து வைத்திருந்தார். காட்டில் போய் 'தேன் சேகரித்து எடுத்துக்கொண்டு வந்து அதை விற்பதும் அவருக்கு ஒரு தொழில். பொன் பழுப்பான பொந்துத்தேன் வதைகளை ஆழத்தில் தொட்டும் எடுத்துக்கொண்டு வந்து வாங்குபவர் கண்பார்க்க வதைப்பிழிந்து அசல்தேன் விற்பவர் அவர். அப்படி இந்தத் தொழிலில் பொய்யில்லைக்களவில்லை அவரிடம். அவரிடம் தேன் வாங்கிப்போக புதுக்குடியிருப்புப் பக்கமிருந்தே, நிறைய ஆட்கள் ஒவ்வொரு நாளும் அவரின் வீட்டேயாய் வருவார்கள். பனிபெய்யும் காலம், மழைத்தூறல் போட்ட காலப் பொழுதுகளிலே சண்முகம் நாயைத் தன்னோடு கூட்டிக் கொண்டு காட்டிலே வேட்டைக்குப் போவார். காட்டுக்குள் சண்முகம் நடக்கும்போது காலில் மிதிபட்டு சுள்ளி உடைப்படும் ஓசை கூட கேட்காது. அந்த அளவுக்குப் பூனைநடை போல மெத்தான மெதுவான ஒரு நடை அவர் நடப்பார். எல்லாத் தேனிப் பூச்சிகளையும் உடலில் வரைந்தது மாதிரியாய் இருத்தி நிறுத்திக் கொண்டு, தேன் எடுக்கிறதிலும் சண்முகம் ஒரு வித்தைக்காரன்.
அதுபோல வேட்டையாலும் காட்டுக்குள் போய் திரும்பி வீட்டுக்கு
6ே9ருஷும் O 7 O

Page 12
- வரும்போது அவள் வெறுங்கையுடன் எப்போதும் வந்ததாயில்லை. வேட்டையில்
கிடைக்கிறதிலே ஒன்றை அவர் வீட்டுக்கும் அன்று கறிக்கென்றும் சமையலுக்குக் கொடுத்து விடுவார். மிச்சம் இருப்பதெல்லாம் விற்பனைக்குத் தான். கறிக்குத் தங்களுக்கு அவைகளை வாங்கிக் கொள்ளத்தான் சனங்கள் இதற்கென்று அங்கே எனக்குனக்கென்று வந்தடைந்த கணக்கிலேயாய் நின்று கொள்ளுமே.?
இவைகளெல்லாம் செய்தொழில் பற்றிய ஒரு விடயத்திலே பார்க்க சண்முகத்திற்கு பெரியதொரு கெட்டித்தனங்களாயிருக்க - மறுபக்கம் பாட்டும் கூத்துமான ஒரு பொழுதுபோக்கு அம்சத்திலும், மேள வாத்தியங்கள் உடுக்கு ஆர்மோனியம் வாசிக்கக்கூடிய ஒரு கெட்டித்தனமும், முற்றிலும் கைகூடியதாக அவரிடமிருந்தது. மனம் களிப்பெய்தும் ஒரு மூட்டத்திலே தபேலா ஆர்மோனியம் மிருதங்கம் வீட்டில் வைத்து வாசிப்பது சண்முகத்தக்கு ஒரு பொழுது போக்கு. சண்முகம் மிருதங்கம் வாசிக்கும் போது அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர் நெஞ்சத்திலே பிஞ்சும் பூவுமான ஒரு சந்தோஷம் முயங்கித் துளிர்க்கிறது போல இருக்கும். மனத்திலே பணித்துளி உருள்வது போன்ற உணர்வில் ஒரு குளிர்மையும் அவர்களிடத்தே தோன்றும். அப்படியாக அந்த வாத்தியம் வாசிக்கும் வித்தையில் ரகஸிய ஊற்றை தெரிந்து கொண்டு கெட்டித் தனமாக அதை வாசிப்பவர்தான் சண்முகம். இதிலே அவருக்கு நல்லகெட்டித்தனம் உள்ளதாலே, நாட்டுக்கூத்தோ, பாட்டுக்கச்சேரியோ - அது வன்னியில் அனேகமாக எங்கு நடந்தாலும், அதை நடத்துபவர்கள் எல்லோரும் இங்கே கேப்பாப் புலப் பக்கம்தான் சண்முகத்தைத் தேடிக்கொண்டு வருவார்கள். அவர்களெல்லாம் இப்படி வந்து சண்முகத்துடன் கதைக்கும் போது இந்த ஏற்பாட்டிலும் சண்முகத்துக்கு போதிய ஒரு வருமானம் உடனே தயாராகிவிடும்.
ல்ெலோரும் விசர் நாயை இந்த நேரம் வெளியே கலைத்துத் திரிய, சண்முகமும் தன் வீட்டுக்குள் இருக்கவில்லை. அவர்தன் மனைவி ராசமணியையும் மகள் கீதாவையும் “உள்ளேயாய் வீட்டுக்க நீங்க இருங்கோ வெளியால கிளியால வரவா வெளிக்கிட்டுவந்திட வேணாம்' - என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குள் இருந்த விறகு வெட்டுகிற கோடாலியை கையிலெடுத்துக்கொண்டு, குடிசைவாசல் கதவை சாத்தியகையோடாக வெளியே பிறகு இறங்கினார்.
அவருடைய இரண்டு வேட்டை நாய்களும் - அந்தவிட்டு முற்றத்தில் - அவர் வாசம்வரவேண்டுமென்று நினைத்து நட்டுவளர்த்திருந்த ஊசி ஊசி இதழ் உடைய அந்த பூமரத்தடியிலே உள்ளபக்கமாக சங்கிலிக் கட்டில் போடப்பட்டதாய் நின்றிருந்தன - அந்தச் சலசலப்பில் நாய்களும் திமிறி சங்கிலியறுக்கிற கோலத்திலே தான் நின்றிருந்தன. "ஐயோ என்ரய நாயஸ் என்று முற்றத்தில் அவைகளைக் காண அவருக்கு ஒரு நினைப்பு வந்ததும்.
980 புதினான்கஸ் தான் சந்திரன்

'அட்டொட்டொட்ட"என்றார். இதைதன் வாயால் சொன்ன அந்தக் கணத்தோடு ஒரு உடல் சூடு அவருக்கு உடம்பில் எழும்பி, வேர்த்திருந்த வியர்வையும் அவருக்கு கல்லாகின மாதிரியாய் இருந்தது.
“என்ரை அம்மாளாச்சி அந்த விசர் நாய் இதுகளச் சில நேரம் வந்து கடிச்சுப்போட்டா? -நினைத்ததும்,உச்சிவரை பரவும் அந்தப் பயத்தோடு நாய்கள் இரண்டையும் உடனே கட்டால் அவிழ்த்தார்.
“ராசமணி.”
இல்லை! - நினைத்தும், மனைவியை அவர் உடனே வெளியே வாவென்று கூப்பிடவில்லை. 'வெளியே அவள்கட்டாயமா வரக்கூடாது! எங்கே வந்து எதற்குள்ளேயாய் புகுந்து விடுமோ - அந்த விசர் நாய்! இருக்கட்டும் - நானே கதவை மெல்லத் திறந்து வீட்டு உள்ளுக்காலயா இந்த இரண்டு நாய்களையும் அவளிண்டகையில கொடுத்து விடுவம். அவள் சங்கிலியை பிடிச்சுக்கொண்டு உள்ளயா இந்த நாய்களையும் தன்னோடயா வைச்சுக்கொள்ளட்டுமே..?
"ஆண்டவனே இந்த நாய்களாலதான் எனக்கு வீட்டுச் சீவியமும் சில வேளuயில போகுது. ஏதோ வாய்க்கு ருசியாவும் இறச்சி கிறைச்சி நானும் மனுசி பிள்ளையும் இதுகளாலதானே எங்களுக்கு சில நேரம் தின்னவுமாகவும் கிடைக்குது..!” இவைகளை நினைத்துக் கொண்டு அந்த இரண்டு நாய்களையும் தனக்குக் கிட்டேயாய் சங்கிலியைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு, மெல்ல குடிசைக் கதவை அவர் உள்கயிற்றுக்கட்டை கைவிட்டுக் கழற்றிவிட்டுத் திறந்தார். ”ராசமணி இந்தா இந்தா இதுகளப் பிடி பிடி நாய் இரண்டையும் உள்ளயா உங்களோட இப்ப பிடிச்சு வைச்சுக் கொண்டிருங்கோ. இதுகளும் உள்ளயா நிக்கட்டும் தெரியும்தானே வெளியில இதுகள் நிண்டா, அந்த விசர் நாயஸ் பிறகு இதுகளக் கடிச்சுப்போட்டா..?” என்று கதவு திறந்த இடுக்கு இடைவெளிக்காலே தலையை உள்ளே நீட்டி வைத்துக்கொண்டு அவர் சொல்லவும்.
ராசமணியும் உடனே பாயால் இருந்து எழும்பி அவ்விடத்துக்கு வந்து “கறுப்பி சிவல .வா வா. வா உள்ள வா' - என்று சொல்லயபடி நாய்ச்சங்கிலி இரண்டையும் தன் கையில் பிடித்துக்கொண்டு நாய்களையும் பிறகு அவள் உள்ளே இழுத் தெடுத்துக் கொண்டாள்.
"இங்க நீங்க நீங்க வெளியில கவனமுங்கோ. கவனமுங்கோ.?”
"இதைச் சொல்லாத இப்ப எனக்கு நீ.! உங்க வீட்டுத் திட்டத்தில உள்ள ஆம்பிளயளெல்லாம் வெளியால அந்த விசர்நாய அடிச்சுக்கொல்லவா ஒடித்திரிய நான் மட்டும் - தனியவா மனுசி பிள்ளையயோட வீட்டக்கயா' ஒழிஞ்சு கிடக்கவோ? ஊரோடு ஒத்தோடு - எண்ட மாதிரி நானும்தானே இங்க உள்ள சனத்தோட சேந்து ஒடித்திரியவேணும். நீ மட்டும்
(6.9emy.) О 9 O

Page 13
கதவைச்சாத்து கதவைச்சாத்து கவனம்.' - என்று அவர் சொல்லவும். வேறு ஒரு கதை கேள்வியும் புருஷனோடு இல்லாமல் இவள் உடனே செத்தைக்கதவை உள்ளே இழுத்துச் சாத்திக்கொண்டாள்.
சண்முகம் ஆயுதம் என்றதாய்த் தன் கையில் வைத்திருந்த தீட்டிய பளபளக்கும் கோடாலியோடு செங்கல் சுற்றிப் பதித்து உள்ளேயாய் வளர்த்திருந்த அந்தப் பூமரச் செடிநின்ற இடத்தருகில் வந்தார். அந்தப் பூஞ்செடிமறைப்பில் மூச்செல்லாம்கூட அம்மனை நினைத்து ஜெபிக்க நின்றபடி நேர் ஒழுங்கை மட்டும் அவர் பார்த்தார். அவர் காதுகளில் ஒரு பக்க ஒழுங்கையில் தொடங்கி மறுபக்க ஒழுங்கையில் சுற்றி ஓடி வருகிற மனிதக் காலடி ஓசைகள் கூர்மையாகக் கேட்டன.
ஒழுங்கையில் நிழல் ஓட்டமாய் ஒரு சிறிய உரு எதிரிலிருந்து அவரின் பக்கம் ஓடி வருவதுபோல அவருக்குத் தூரத்தே அப்போது தெரிந்தது. அதற்குப்பின்னாலே பெருங்குரைத்தல்களுடன் அனேகம் நாய்கள் அவ்வேளை துரத்தியபடி வந்துகொண்டு இருந்தன. முன்னாலே வருகிறது பார்த்தால் நரியின் சாயல் தான்! இப்போ சாதாரண நாயைப்போல் இல்லாததாய் கூனிக்குறுகி அது குனிந்தபடி ஓடிவருவதாய் - இருட்டிலும் அவர் கண்பார்வைக்கு அப்படியாய்த் தெரிந்தது.
அதைக் கண்டவுடனே சண்முகத்தின் கைகள்கோடாலிப்பிடியில் நன்றாய் இறுக்கியது. மூச்சைப்பிடித்துக் கொண்டு கோடாலியை அவர் மேலே தூக்கினார். மண்டை மண்டை, என்று தான் ஓடி வருகிற அந்த நாயிலே கோடாலியால் அப்படி போட ஒரு குறி அவருக்கு மனதுள் இருந்தது. அதற்காக தூக்கிய கோடாலியுடன் நின்று உடல் பலத்தோடு ஒரு அசைவு அவர் அசைந்து கொண்டிருந்தார்.
(முன்னால் அங்கேயிருந்து ஓடி வந்துகொண்டிருந்த அந்தநாய் இப்போது அவருக்குக் கிட்டேயாய் வந்து விட்டது. அது இருள் பூசியது மாதிரியானதொரு கறுப்பு நிற நாய்தான். சரியான இடம்அந்தநாய் அதிலே வந்துசேர, அந்தச் செடிமறைப்பில் நின்ற அவர் உயிர்த்துடிப்புடன் - திறந்த படலை வாசலால் குபிரென்றதாய் முன்னால் பாய்ந்தார். கையாலிருந்து அவர் அப்போது உடனே வீசின கோடாலி வெட்டுஅந்த நாயின் தலையறுத்தது மாதிரி-நச் சென்ற அளவிலே அதன் கழுத்தருகில் விழுந்தது.
அவர் பாய்ந்த வேகத்தில் வீசி வெட்டுப்பட்ட கைக்கோடாலியும்
போய்ப் பிறகு தூரத்தில் விழுந்தது. சண்முகமும் இவ்வேளை, வேகத்தில் ஒழுங்கை வேலியருகில் போய் தக்கென குப்புற விழுந்தார்.
பின்னால் வந்த நாய்களின் குரைப்புக்கள் இப்போது கூடியதாய்
O 100 புதினான்காம் தான் சந்திரன்

இருந்தன. எல்லாம் விழுந்து கிடந்த நாயைச் சுற்றி வட்டம்போட்டு நின்றபடி குரைத்துக்கொண்டிருந்தன. சனமும் பிறகு கூட்டமாய் அதிலே வந்து சேர்ந்துவிட்டது. நாய் சிறு முனகலுடன் தலைதூக்காததாய்க்கிடந்து தன் உயிரை விட்டது.
நாயின் முழு உருவத்தையும் ஒரு உரிமையுடன் பாத்துக்கொண்டு, சண்முகம் விழுந்து கிடந்த அந்த இடத்தால் இருந்து எழுந்து நின்றார். அவரின் மனைவி வீட்டுக் குள்ளாஸிருந்து வெளியே ஓடி வந்து “உங்களுக்குக் காயம் கீயம் ஏதும் பட்டதோங்கோ?” என்று பதற்றத்துடன் அவர் கையைப் பிடித்தபடி கேட்டுக்கொண்டு நின்றாள்.
சனங்களெல்லாம் நிம்மதியில் பெரிய நிம்மதி, இப்போது இந்த இடத்தில் இந்த நாய் சாக்காட்டப்பட்டதுதான். - என்ற அளவில் தமக்குள் இதை நினைத்துக்கொண்டு அந்த நாயைப்பார்த்தபடி நின்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கதை பேச்சும் இதிலே சனங்களிடம் தொடங்கிவிட்டது.
"சண்முகம் அண்ணா இத அடிக்காட்டி இந்த விசர் நாய்,எங்கனையும் தப்பிப்பாஞ்சு வேற இதுக்க எங்கேயும் ஓடி விட்டிருக்கும்.”
- என்று ஜெயா சொன்னான்.
“உண்மைதான் ஜெயா சொன்னது. சண்முகம் அண்ணதான் உதத் தப்பிப் போக விடாம அடிச்சிருக்கிறார். இங்கபாரன் நாங்களும் தான் உத உந்த ஏழு உலக மெல்லாம் எக்கச்சக்கமாய் துரத்தினமாதிரி துரத்தித்தானே ஒடித் திரிஞ்சம்.? எங்க உது எங்களிண்ட கையில எம்பிட்டது? அழிச்சுக் கொண்டு சுழிச்சுக்கொண்டெல்லே ஓடிச்சு உது.! உங்கபாருங்க உதின்ரை வாயிலயா உதுக்குநுரை.? இது சரியான விசர்நாய் தான்! உது. கண்ணென்ன உதுக்கு உப்பிடி பாருங்களன் விஷ நீலம் இறக்கின மாதிரியெல்லே பாக்க இப்பிடியாய்க்கிடக்கு.?”
என்று ரகுவும்சொல்ல நாய்க்குப் பக்கத்திலே பக்கத்திலேயாய் வந்து மற்றச் சனங்களும் பயமில்லாமல் நின்றபடி நாயைப் பார்ப்பதற்குத் தொடங்கினார்கள்.
“முந்தி இந்த இடத்தில உப்புடித்தானப்பா. ஒரு சம்பவம் நடந்திச்சு! இந்த வீட்டுத்திட்டத்தில இருக்கிற நிலாவெளிஆள் நவசியின்ர பெடிக்கு ஒரு சின்னக் குட்டி நாய் விளையாட்டு விளையாட்டா பல்லாலயோ நகத்தாலயோ சும்மா கீறினதோ தேச்சதோ. தெரியேல்ல! அம்மாடி பேந்துக் கொஞ்ச நாள் போக விசர்வந்து அந்த நாய் சாக .பேந்தந்தப்பெடிக்கும் ஏற்பு வலி வந்து ஒரு மாதிரியா வருத்தமாப் போச்செண்டு வவுனியா ஆஸ்பத்திரிக்கு மெல்லே தகப்பன் அந்தப் பிள்ளையைக்கொண்டு போனது. பேந்தென்ன அப்படி வந்தாப்பிறகு, இந்த வியாதி வந்தாப்பிறகு அந்த வருத்தத்துக்கு எங்கயும் ஒரு மருந்திருக்கே..? அந்தப்பெடி பிறகு
6.9emy.) O 11 O

Page 14
இழுத்திழுத்துக் கத்திக்கத்தி ஐயோ ஆண்டவனே. கடவுளே அது கிடந்து
பட்ட பாடு. இந்தப்பெடின்ர தகப்பனுமெல்லே கட்டிலயாக் கட்டிக்கிடந்த தன்ர மகனப் பாத்துப்பாத்து, அந்தப்பெடி சாகுமட்டுமாய் அழுது கொண்டிருந்தது.”
என்று தான் சொல்லி வந்த கதையை அத்தோடு நிற்பாட்டினார். பேரின்பம் சொன்ன அந்தக் கதைக்குப் பிறகு, வேறு ஒரு கதையும்யாரும் சொல்ல இருக்க முடியாதுதான், என்பதைப் போல அப்போது அதிலே நின்றவர்களெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கண்கள் வழியாக தெரியும் பயத்தை காட்டிக்கொண்டு மெளனமாக நின்றார்கள்.
அந்நேரம் ஓங்காரமாக இரைச்சலிட்டுக்கொண்டு மேலேயாய்ப் போல
ஒரு செல்' - தொலைவில் எங்கேயோ போய் விழுந்ததாய் வெடித்துச் சத்தம் கேட்டது.
அந்தச்சத்தத்தை தங்கள் காதுகளில்அப்போது கேட்டாலும், அச்சம் நிரம்பிய நிலை தங்களுக்கு இப்போது அகன்று விட்டது போல அந்த விசர் நாய் இவ்வேளை செத்துவிட்டதைக் கொண்டு அதிலே நின்றவர்க ளெல்லாம் நிம்மதியடைந்தார்கள். அதனால் இனியேன் இதில நிண்டு கொண்டு துங்குவான் - என்று தங்களுக்குள் தாங்கள்நினைத்தபடி தங்கள் தங்கள் வீடுகளுக்குப்போய்ச்சேர அந்த இடத்திலிருந்து அவர்கள் சிறு புழுக்கள் நெளிந்த மாதிரி நெளிந்து கொண்டு நடையைக் கட்டத் தொடங்கிவிட்டார்கள்.
"எல்லாரும் இப்பிடி இப்பிடி தங்கட பாட்டுக்கு இதால நழுவிநழுவிப் போனா செத்த இந்த நாயக் குழிவெட்டிப் புதைக்கிறது பிறகு ஆர்?
என்று ஜெயா உடனே போகிற எல்லாரையும் ஒரு முறை பார்த்து
சத்தம் போட்டுச்சொன்னான்.
அவன் அப்படிச்சொல்லவும் சண்முகம் மட்டும் அந்த இடத்தைவிட்டு போகாமல் அதிலேயாய் நின்று கொண்டு "நான் குழிவெட்டி இத உங்கனேக்க ஒரு இடத்தில புதைச்சுவிடுறன்.! பாவங்கள் அதுகள் அங்கின இங்கின தொழிலுக்கெண்டு போய் பகல் முழுக்கக் கஷ்டப்படுறதுகள். இரவு இப்ப அதுகளுக்கு நித்திரைச்சோம்பலாயிருக்கும்.போகட்டும் அதுகள் ஜெயா நீ அதுகள கூப்பிடாத.?”
என்று சொன்னார். ஜெயா அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு "மென்மையான இரக்ககுணம்கொண்ட ஆள்தான் உவர் இந்த சண்முகம்.!” -என்று தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த நினைப்போடு அவன்:
"போறாக்கள் போனா போகட்டும்! நானும் உங்களோட நிண்டு
O 120 புதினான்காம் தான் சந்திரன்

உங்களுக்கு உதவியா ஏதும் செய்திட்டுப் போறனே” - என்று சொல்லிய படியே தன் வீட்டுக்கு மண்வெட்டி எடுத்து வர போவதற்காக வெளிக்கிட்டான்.
சிறிது நேரம் சென்ற பின்னால் அவனும் அவ்விடத்துக்கு மண் வெட்டியுடன் வந்துசேர, சண்முகமும் ஜெயாவும் அவ்விடத்தில் ஒருபக்கமாக நாயைப் புதைப்பதற்குக் குழி ஒன்றை அவசர அவசரமாக வெட்டத் தொடங்கினார்கள். மணற்பாங்கான கலவையான மண்ணென்பதால் சரசர வென்று மண்வெளியேறியது. அந்நேரம் வானத்தில் துயில் எழுந்து வந்தது மாதிரியாய் தேய் பிறைகாலிக்கத் தொடங்கியிருந்தது. நாயைக் குழிதோண்டிப் புதைத்ததற்குப் பிறகு ஜெயாவும் சண்முகமும் தங்கள் தங்கள் வீடுகளுக்குப்போய் படுத்துக்கொண்டு விட்டார்கள். விசர் நாய் அமர்க்களம் அடங்கி சாந்திபூத்த அமைதியானதற்குப்பிறகு, உத்தமன் வீட்டுத்திட்டத்தில் குடியிருந்தவர்களெல்லாம் தங்கள் தங்கள் குடிசைகளிலே இப்போது அமைதியாய் துயில் கொண்டவாறாய் இருந்தார்கள்.
4
இரவு கலவரப்பட்டு அலைந்து திரிந்து அலுத்துச் சலித்துப் படுத்ததில், விடியவும் நித்திரைப்பாயாலிருந்து எழுவதற்கு நேரம் சென்று விட்டது சண்முகத்திற்கு.
நித்திரையால் எழும்பி குடிசைக்கதவைத்திறந்து கொண்டு வெளியே அவர் வரவும், முதன்முதலில் அவரின் கண்பார்வை போய்ப் பதிந்தது முற்றத்தில் நின்ற அந்தப் பூமரத்தில்தான்.
முழுக்கவும் பூக்களால் நிறைந்து தேயத்தேய என்று இல்லாமல் வாசத்தை நெடுகவம் இறைத்துக்கொண்டிந்த அந்தப் பூஞ்செடிய்ைபார்த்து, அவர் முகம் சிரித்தஅளவுக்கு மனம் சந்தோஷப்பட்டுக்கொண்டார். இந்நேரம் காலை வெயிலும் கொஞ்சம் ஏறிய அளவில் எறித்தது.
"அடக் கோதாரியில போக இண்டைக்கெண்டு பொழுது உச்சிக்கு வாற அளவுக்கும் நான் சனியன் மனுசன் நல்லா படுத்தும் பாயில கிடந்து போட்டன் போலக்கிடக்கு! இனியெங்க இதுக்குப் பிறகு நான் காட்டுக்குத் தேன் எடுக்க வெளிக்கிடுறதும், வேட்டைக்குப் போறதும். ராசமணி ராசமணி! எழும்பம்மா எழும்பு! பிள்ளையும் கூட உன்னோடயா எழுப்பி விடு! அவள் பள்ளிக்கூடம்போறேல்லயே.?”
என்று, வாசல் கதவுப் பக்கம் ஒரு முறை திரும்பிப்பார்த்துச் சொல்லி விட்டு, பல்லுத்துலக்கவென வேப்பம்குச்சி முறித்தெடுக்க படலையைக்கடந்து வெளியே ஒழுங்கையால் நடந்தார் சண்முகம்.
6.00amayy) О 1З О

Page 15
அந்த ஒழுங்கை வழியே அவரின் வீட்டிடத்திலிருந்து மூன்று வீடுகள் தள்ளிப்போனதாய் உள்ள இடத்தில், ஒரு சின்ன அளவான வேப்பமரம் நின்றது. அந்த இடத்திலே போய் கைக்கெட்டும் இடத்திலுள்ள ஒரு கிளையில் எட்டிக்கை நீட்டி ஒரு சின்னக் குழைக்கம்பு அதிலே அவர் முறித்தார். அதில் அழகாக ஒரு குச்சு, கைக்கு அளவுக்கு பிறகு முறித்துக்கொண்டு; நுனியைச் சம்பிப்பல்லுத்துலக்க தொடங்கினார். இடித்து இடித்து பல்லைத் தீட்டிக்கொண்டு வீட்டேபோகுமட்டும் நடையும் அவருக்கு நல்ல சுறுக்கான நடைதான்.
பல்விளக்கத் தொடங்கியதிலிருந்து அவருக்கு நாக்கு முழுக்கக் கசப்புத்தான் காரமாய் வாய்கள் ஏறிக்கொண்டிருந்தது. அவர் வீட்டுப் படலையைத் தாண்டிய உடனே வேப்பங்குச்சை ஒழங்கையில் எறிந்தார். பூமரச்செடியருகில் தண்ணீர்க் குடம் இருந்தது. மேலே குடத்தின் வாயை மூடியதாய் ஒரு கோப்பை இருந்தது. அவர் அந்தக் கோப்பையை கையிலெ டுத்தார். குடத்தைச் சரித்து அதிலே நிறையத் தண்ணிர் வார்த்தார். அந்தத் தண்ணிலே வாய் கொப்பளித்து முகத்தையும் துடைத்தது மாதிரி கழுவினார். தண்ணிரில் வாய் கொப்பளித்தது இன்னும் அவருக்குப் போதவில்லை. அந்த வேப்பம்கசப்பு இன்னும் நாக்கில் ஒட்டின கணக்கிலேதான் இருந்து கொண்டிருந்தது.
போய் வீட்டுக்குள்ளே துவாய்த் துண்டையெடுத்து முகம் துடைப்போமென்று கதவடி வாசலில்அவள் கால் வைக்க - ராசமணி அவருக்கு முன்னால் தேநீர்க்கோப்பையோடு நின்றாள்.
"இருவாறன் துண்டால முகம் துடைச்சுப்போட்டு” அந்த வேலைமுடிய தேநீர்க்கோப்பையை அவர் கையில் வாங்கினார்.
கோப்பையில் வாய்வைத்து ஒரு மிடறு தேநீர் உறிஞ்சி தொண்டைக்கு உள்ளே போக “எங்க இவள் மகள்?’ மனைவியை அவர் கேட்டார்.
"எழும்பி பின்னால அடைப்புக்க போயிற்றாள்.'
"படுத்தபாயும் சுத்தி வைக்கேல்ல இது என்ன ஒரு கண்டறியாத பழக்கம்.?”
"நான் இப்ப சுத்தி வைக்கிறன்.”
அவருக்கு சொல்லிவிட்டு அவள், பனை ஓலைபாயின்மேல் கிடந்த படுக்கைத்துணியை எடுத்து பக்கத்துக்கயிற்றுக்கொடியில் போட்டுவிட்டுபாயை பிறகு சுற்றி எடுக்கத் தொடங்கினாள். தேநீர் உறிஞ்சிக்குடிக்க சண்முகத்துக்கு சுறுசுறுப்பு வந்தது. செத்தைத் தட்டியில் மாட்டியிருந்த பிள்ளையார் படத்தையும், மகா யோகமான ஒரு நிலையில்யோக முத்திரையோடு அமர்ந்துள்ள சிவனையும் தேநீர் குடித்துக்கொண்டு அவர் பார்த்தார்.
9149 புதினான்கஸ் தான் சந்திரன்

“பக்கத்தில உள்ள கோயிலுக்கும் ஒருக்கா நான் இண்டைக்குப் போய் வரவும்வேணும்.! இண்டைக்கு ஈச்சம் புலவடிப்பக்கம்போய், தண்ணீர் வாய்க்காலில போய் விழுந்து நல்லாமுழுக்கிக் குளிக்கவும் தான் வேணும்'
அவருக்கு இப்படியெல்லாம் யோசனை போக வீட்டுக்குள் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த அந்த சயிக்கிள் பக்கம்போய் காற்று டயரில் இருக்கிறதா? என்று கையால் அமுக்கிப்பார்த்தார். தன்பாரம் கொண்டு செல்லபோது மாயிருப்பது போல அவருக்கு அப்போது தோன்றியது.
ராசமணி இப்போது வீட்டுக்குள்ளே தும்புத்தடியால் தூசி மண் கூட்டிப்பெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தாள். சண்முகத்துக்கு மீண்டும் மகளின் யோசனை வந்தது.
GG
JTgLD600s?
இவள் கீதா இண்டைக்குப் பள்ளிக் கூடம்போறாள் தானே.
குடித்த தேத்தண்ணிர்க்கோப்பையை அருகே . வைத்துவிட்டு பொறுமையாக அவர் மனைவியைப்பார்த்துக்கேட்டார்.
"நேரம் போச்செண்டு சொல்லிக்கொண்டு அவள் எழம்பினவுடன சிணுங்கிக் கொண்டிருந்தாள்.”
தும்புக்கட்டையை மூலையில்சாத்தி வைத்துவிட்டு அவரை திரும்பிப் பார்த்தபடி அவள்சொன்னாள். இந்த அவளது பதிலில் அவருக்கு உடனே கோபம்ஏறிவிட்டது.
"நேரம் செண்டாக் கிண்டா அதுக்கு என்னவாம்? இங்க கேப்பாப் புலவில பிள்ளையஸ். பத்துமணிக்கும்தானே சிலதுகள் பள்ளிக்கூடம்
என்று அவர்சொன்னார்.
"அப்பிடியெல்லாம் இல்ல, வேளைக்கும் தான் எங்கயும் பள்ளிக் கூடம் துடங்கும்! இங்கயும் அப்பிடித்தான்..!” என்று பதில் அவருக்கு சொன்னாள் ராசமணி.
“உதென்னகதை உது? கிராமப்புறத்தில இப்படி நேரம்கீரம் பாத்துக் ’கொண்டே பள்ளிக்கூடம் எல்லாம் ஒழுங்கா நடக்குது.? தூரம் துலைவியா உள்ள பிள்ளயஸ் வசதி இல்லாததுகளெண்டு அதுகளும் நடந்தும் வருங்கள்தானே. அப்பிடிக் கஷ்டப்பட்டதுகளுக்கு இப்பிடிக் கடும் சட்டம் வாத்தியார்மார் வைக்கேலுமே..?
என்று அவர் ஒரு ஞாயம் அவளுக்குச் சொல்ல
"என்ன உப்புடி நீங்கள் சொல்லுறியள்.? படிக்கிற பள்ளிக்கூடத்துப்
6.9emayl) О 15 o

Page 16
பிள்ளையஸ் எல்லாத்துக்கும் எங்கயும் ஒரே ஒரு சட்டம் தான். பிந்திப்போனா தண்டனையெண்டு வெளியாலயும் வாத்தியார்மார் நிப்பாட்டிவைப்பினம். அது அந்தப் பிள்ளயஞக்கும் - மற்றப் பிள்ளயஸ் அதுகளப் பார்க்க ஒரு மாதிரி வெக்கம் தானே.”
என்று அவர் சொன்னதுக்கு உடனே பதில் சொன்னாள் ராசமணி
“சரி வெக்கம் அப்பிடி இருக்கட்டும். இவள் எங்கட பிள்ளய உடனே வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போகச் சொல்லு.?”
"அவளென்னங்கோ நான் அப்பிடி போவெண்டு சொல்லவா அதக்கேட்டு அழுகிறா.!”
“என்ன அழுகை கண்டறியாத ஒரு அழுகை! அவள நீ போகச்சொல்லு.?”
என்று சண்முகம் அவளின் மூக்குத்தியிலே தன்கண்பார்வை போக இதைச் சொன்னார்.
"அவளுக்கு நான் என்ன சொல்லுறது.? அவள் வாத்தியார் பேசுவார் எண்டு எனக்கு சொல்லுவாள். பிள்ளையஸ் தன்னப் பார்த்து சிரிக்க தனக்கு வெக்கம் இருக்கெண்டும் சொல்லுவாள்.”
“என்ன வெக்கம் துக்கமெண்டுறாய்? எட்டு வயதுப்பிள்ளைக்கு என்ன வெக்கம்! அவள நீ கட்டாயம் பள்ளிக்கூடம் போகச் சொல்லு.?”
“என்ன கோதாரியப்பா இது. அந்த விசர் நாய்க் குழப்பத்தாலதான் இப்பிடி எல்லாம் வந்தது. நித்திரையும் கொள்ளாமத் தானே இப்ப இந்தப் பிள்ளயும் கிடந்து போட்டு எழும்பினது நேரம் செண்டு .” என்று அவள் ராத்திரி நடந்த சம்பவத்தை சொல்லி சலித்துக்கொண்டாள். ஆனாலும் சண்முகம் தன் பிடியை விடவில்லை.
"அத ஒரு கதையெண்டு ஏன் இப்ப எடுக்கிறாய்..? அத விடு! அது முடிஞ்சு போச்சு..! இப்ப நீ நடக்க வேண்டியதப்பார்.! என்ணெண் டெண்டால் அவள அப்பிடி போகமாட்டனெண்டு சொன்னால் நீ தாய் அவள கூட்டிக்கொண்டு பள்ளிக் கூடம் போய் வாத்தியாரிட்ட இப்பிடித்தான் ரா ஒரு பிரச்சினை - அதாலதான் உங்க பள்ளிக்கூடம் வரபிள்ளை பிந்தினதெண்டு சொல்லி பிள்ளய பள்ளிக் கூடத்திலயா விட்டிட்டு வா. நாங்க அகதியா வந்தமோ ஒண்டுமில்லாம வந்தமோ, அது வேற விசயம். ஆனா எங்கட பிள்ள அதுவும் எங்கட ஒரேயோரு பொம்புளப்பிள்ள கட்டாயமா கட்டாயாம படிக்கத்தானே ராசமணி வேணும்.?” என்று பிள்ளைக்கு வேண்டிய ஒழுங்கமைவைப் பற்றி சண்முகம் இப்படியெல்லாம் ராசமணிக்குச் சொல்ல, ராசமணியும்யோசித்துவிட்டு அதற்குப்பிறகு ஒன்றும் பேசாதிருந்தாள்.
o 150 புதினான்காம் தான் சந்திரன்

"அப்ப நீ பிள்ளய உடன பள்ளிக் கூடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் விடுறியா..?”
என்று ராசமணியின்முகத்தைப்பார்த்துக் கொண்டு சண்முகமும் பிறகு (835 LTT.
"ஓம் சரி! போறன் போறன்! அவளக் கூட்டிக்கொண்டு போய்ப் பள்ளிக் கூடத்தில விர்றன்.”
என்று கதையின் கடைசி “ர் ர் ர்.” ரை தனக்கு உள்ளகோபத்தின் எரிச்சலில் அவள் பிறகு கொஞ்சம் அழுத்தித் தான் சொன்னாள்.
அவள் பதில்சொல்லி முடிந்த பிறகு, சண்முகம் மனைவியின் முகத்தைப் பிறகு பார்க்கவில்லை. "நெடுகலும் எதுக்கும் போய் என்ர மனுசியத்தான் செய்செய் எண்டு சொன்னா அவளுக்கும் உடன கோபமும் வரத்தானே செய்யும்.”
என்று தனக்குள் இப்படியாக அவர் யோசித்துக்கொண்டு, துவாய்த்துண்டை கொடியில் இருந்து எடுத்துத் தன்தோளிலே போட்டுக் கொண்டு சயிக்கிள் ஸ்டாண்டை விழுத்தி நிமிர்த்திக்கொண்டு அதை அவர் வெளியே உருட்டத் தொடங்கினார்.
பிறகு சயிக்கிளில் ஏறி ஒழுங்கை வழியே பெடல் உழக்கத் தொடங்க, காலுக்கும் ஒரு வித சுகமாகத்தான் அவருக்கு இருந்தது.
தண்ணீரூற்றுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இணைப்பாயுள்ள வீதி, ஏற்ற இறக்கம் கொண்டதான கிரவல்மண்பாதைதான். மக்கள் போக்கு வரத்துக்கென்று, இரண்டு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை அதாலே ஒரு பெரிய வான் - வாகனம் போகும் - வரும்!
இதைத்தவிர்ந்து இந்தக்காலம் சனங்களுக்கு அதாலே போக்குவரத் தெல்லாம் சயிக்கிள் ஓட்டம்தான். மணணெண்ணெய் மூலமான, எந்திர இயக்கக் கண்டுபிடிப்பாலே மோட்டார் சயிக்கிள் ஓட்டங்களுக்கும் அந்த வீதியிலே ஒரு குறைவில்லை.
சண்முகமும் அந்த வீதியாலே சயிக்கிள் ஓடிப்போய் ஈச்சம்புலவுப் பக்கமுள்ள அந்தப் பாலத்தடியாலே உள்ள சிறு பாதையாலே கீழே சயிக்கிளை இறக்கினார். இதுக்குமேலே அந்தப் பாதையில் சயிக்கிள் ஒட முடியாது - அங்கே எல்லாம் முள் முள்ளாயுள்ள இடங்களும் - என்று அதையெல்லாம் நன்கு முன்னமிருந்தே அவருக்குத் தெரிந்திருந்ததாலே சயிக்கிளை மேலும் ஓடிப்போகாமல் நிறுத்திவிட்டு, அந்த இடத்திலே இறங்கினார். சயிக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு ஆற்றோட்ட இடத்தடிக்குப் போக, மனம் அவருக்கு சுகமாக இருந்தது. தளதளவென்று
М8Эоъеллаур О 17. O

Page 17
அவசரம் ஆரவாரம் இல்லாது ஒடும் தண்ணிரை அதிலே அவர் பார்த்தார். இதழ்களை விரித்த மலர்கள் இளங்காற்றுக்கு ஆடுவது போல மெல்லியதான ஒரு தண்ணிர் ஓட்டம்! விரிந்த மார்பைப்போல தண்ணிரும் அகலத்தானதாய் ஒடிக் கொண்டிருந்தது. திரண்ட உருண்ட வயோதிப விருட்சங்களான மரங்களும் ஆற்றின் இருபக்கங்களிலும் நின்றதாலே நிழலானதுமான ஒரு குளிர்மை அவ்விடமாயிருந்தது. அந்த நீர்ப்பரப்பில் இலைகளும் விழுந்து கொண்டிருந்தன.
சண்முகம், சறம் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு உள் அங்கியுடன் அந்தத் தண்ணிருக்குள் இறங்கினார். மருதம் வேர்களை அலசி ஓடி வந்த தண்ணிர் "ஐஸ்" போன்று குளிர்மையாக அவருக்கு இருந்தது. மலர்கள் மலர்ந்து பரவும் ஒரு நந்தவனம் போல தண்ணிரின் மேலே பழுத்த இலைகள் பரவி வரவும் தன் கைகளால் அவைகளை விலக்கி விலக்கி அவர் நன்றாக பூரண திருப்திவருமட்டும் தலை முழுகினார்.
அந்தத் தண்ணிரில் கன நேரம் கிடந்து ஆசை தீரமுழுகினதன்பிறகு - வெளியே வந்து தலைதுவட்டி உடுப்புடுத்திக்கொண்டு திரும்பவும் அவர் சயிக்கிளில் வெளிக்கிட்டார்.
8Fino பாதையால் சயிக்கிள் ஓடி வரும் போது கான் வழியேயும் அவர்பார்வை காரல் - இலை என்ற ஒன்றைத்தான் தேடிக்கொண்டிருந்தது வீட்டிலே இன்றைக்கு அதைப்போட்டு ஒரு சொதிவைக்கவேண்டுமென்று நினைத்திருந்ததால்தான் அவர் அப்படித்தேடிக் கொண்டபடி வந்தார். ஒரு இடத்தில் பார்வைக்கு அது அவருக்குப்பிடிபட்டுப்போய் விட்டது. பச்சை நிறம்கொண்ட தடித்த இலைகளுடனாக நின்ற அந்தக் காரல் செடியை அதிலே கண்டதும் சயிக்கிளிலே இருந்து இறங்கி - அந்தச் செடிகளிலே உள்ள இலைகள் கொஞ்சத்தைப் பிடுங்கி, அதையெல்லாம் பிறகு துவாய்த்துண்டுக்குள் வைத்துச் சுற்றி பின் கரியலில் வைத்துக் கட்டிக்கொண்டு திரும்பயுவும் அவர் சயிக்கிள் ஒடத்தொடங்கினார்.
இனி அடுத்து நந்திக் கடல் அருகாய் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வரத்தான் அவரின் யோசனை.
அவர் சயிக்கிளை கோயில்பக்கம் போக, கடல் பக்கம் போகின்ற ஒழுங்கை வழியால் இறக்கினார். இந்தப்பக்கமாக அவர் சயிக்கிளில் போகும் போதுதான், அவரின் கண்கள் கூசிச் துடித்து மூடிக்கொள்ளும் அளவுக்கு பக்க வெயில் அவரின் முகத்திலடித்தது.
அங்காலே இனி இறங்கிட முடியாது என்ற இடத்திலே அவர் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டார். பிறகு நடந்து அவர் கொஞ்சதூரம் போக கோயிலின் காட்சி தெரிந்தது. அவ்வப்போது தெரியும் கள்ளிப் புதர்களை கடந்து நடந்து போக, கோயில் பக்கம் அவருக்கு நெருங்கியது.
0 180 புதினான்கஸ் தான் சந்திரன்

அங்கேபோய் கோயில் வாசலடியிலே நின்று பிள்ளையாரை மனத்துள் நினைத்து கண்களை மூடி கும்பிடும்போது - ஒரு பறவையின் ஒலியோ, அல்லது ஒரு பூச்சியின் ஒலியோ கூட காதுகளில் கேட்காததுபோலத்தான் அவருக்கு இருந்தது. அந்த அளவுக்கு தன் மனம் ஒடுங்கி பக்தியில் மென்மையான பிரகாச ஒளி வளையம் கண்டது போலத்தான் ஒழுங்காக அவர் சாமி கும்பிட்டார்.
கும்பிட்ட பிறகு திரும்பி அங்காலே பார்க்க அவருக்கு கடல் தெரிந்தது. அதன் அலைகளின் ஒலி பெரிய முனகல் போல அவரின் காதுகளில் விழுந்தது. கொஞ்சம் காற்றுச்சுகத்தையும் அதிலே நின்றபடி தான் அனுபவித்து விட்டு சயிக்கிளைப் போய்ப்பிறகு எடுத்துக்கொண்டு அவர் அதிலே பிறகு ஏறி ஓடி தன் வீட்டடிக்குத்திரும்பினார்.
இப்போது அவர் கண்களுக்குத் தெரிகிறது தன் வீட்டடிக்கு முன்னாலே நிற்கின்ற அந்தப் புளியமரம் மண்ணோடு மண்ணாக நெடுகலுமே அதிலே படுத்துக் கிடக்கும் ஒரு நாய், அதுவும் அவருக்குத் தெரிகிறது. 'கிசுகிசுப்பு ஏதுமில்லாமல் பெலத்துக் கதைத்துக்கொள்கிற உத்தமன் வீட்டுத்திட்டத்தில் உள்ள ஆண்களும் தான் அதிலே உள்ள அந்தப் புளியடிக்குக் கீழேயாய் நின்று கொண்டு சளாப்பல் கதை கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலே சயிக்கிள் கடை வைத்துக்கொண்டிருக்கிற பாலா - ஒரு மோட்டார் சயிக்கிள்ளியூப்பை, அது மலைப்பாம்பு மாதிரித் தெரிய அதை கையில் வைத்துக்கொண்டு அவன் பச்போட்டு ஒட்டுவதற்காக ஒட்டைப்பக்கம் அரத்தால் ராவிக்கொண்டிருக்கிறான். அதோ அங்கே தான் சண்முகமும் சென்று தான் ஓடிவந்த சயிக்கிளை அந்த மரத்தடிக்குக் கீழே நிற்பாட்டினார்.
புளியடிப் பக்கமாய் வந்து சயிக்கிளால் இருந்து கீழே இறங்கிய
சண்முகத்தை தாடையில் முளைத்துள்ள தன் தாடிமயிரைத் தடவிக் கொண்டு திரும்பிப் பார்த்தான் ஜெயா.
"சண்முகம் அண்ண. என்ன காலேல போய் வடிவா ஆத்தில விழுந்து குளிச்சு முழுகி கலாதியாசோக்கா வாறமாதிரிக்கிடக்கு.? எண்டாலும் அண்ண. ஒ இந்தச் சனிப்பிடிச்ச நாயாளாலதானே இங்கயுள்ள சனத்துக்கு ராவு உள்ள நிம்மதியான நித்திரையும் கெட்டது. அது சரி சண்முகமண்ண நீங்களும் ஏதோ உங்கட தொழில் கிழிலுக்கும் இண்டைக்கொண்டு பாத்தா
போகேல்லப் போலயாக் கிடக்கு.?”
ή89 ω-γιανήγο ο 19ο

Page 18
"ஒமோம் ஜெயா அப்பிடித்தான்! இண்டைக்கு நான் போகேல்ல. இண்டைக் கெண்டு வீட்டிலயுமா எல்லாருமே நல்லா நித்திரையாவும் கிடந்து போட்டம் நேரஞ் செண்டு தானே காலமயா பிறகு நாங்களெல்லாம் எழும்பிப் படுக்கைப் பாய் சுத்தினது.'
“ஓம் சண்முகம் அண்ண! கடவுளே அது தான் எனக்கும் உங்கள மாதிரி உடம்பு கொஞ்சம் பஞ்சி. என்ன ஓட்டம் உதுவழிய ஒடிச்சு அந்த விசர் நாய் எண்டது. நாங்களும் தானே அதுக்குப் பின்னால உந்த உத்தமன் வீட்டுத்திட்டம் முழுக்கலுமா சுத்திச் சுத்தி, பேய் மாதிரி பாஞ்சு பறந்ததாய் ஓடினம்! ஆனாலும் நாய் எங்க எங்கட கைக்குப் பிடிப்பட்டது? எண்டாலும் அது சவம் பிடிச்சது கடைசியில பிறகு உங்கட கையால தானே சாகவேணுமெண்டதா செத்தது. ஒரே ஒரு போடுகையில அந்த நாய நீங்க அந்த இடத்திலேயே சாகவா அடிச்சுத் துலைச்சிட்டியளே?”
"ஓ அது வசமா வந்து அப்பிடி அதில என்னட்ட அங்க மாட்டினதால தான் நானும் ஒரு போடு தலையில அதுக்குப் போட்டன். அல்லாட்டி நானும் எங்க அத அடிக்கிறது? ஓமோம் அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்க நீயும் ஜெயா இப்ப அங்க இண்டைக்கு ஆத்தடிப்பக்கம் உன்ர தோட்டம் பாக்கப் போகேல்லயோ..?”
"இல்லயண்ண நானும் தான் இண்டைக்கு எங்கயும் போகேல்ல! நேற்றும் முந்த நாளும் தானே பகலில கொஞ்சம் மழையும் இங்கால பெஞ்சது!”
"ஓ அது தான் அங்க இப்ப அந்த ஆத்திலயும் நல்ல தண்ணி ான்! நான் குளிக்கேக்கயும் அது எனக்குத்தெரிஞ்சுது.” 列
"ஓம் அண்ண! இது மழை இங்க பெஞ்சது எங்களுக்கு பெரிய கடவுள் புண்ணியம் தான். இங்க வன்னிப்பக்கம் கார்த்திகை மார்கழியில தானே பெரிய மழை. ஆனா, இந்த வருஷமெண்டு இங்கயும் காலம் தப்பி மழை இடைக்கிடைபெய்யுது. மழை பெஞ்சதால தான் நான் அங்க ஆத்தடிப்பக்கம் தோட்டப் பக்கம் இண்டைக்கு போகேல்லயண்ண. அங்க தோட்டத்தில காவல் குடிலில இவன் என்ர மச்சானும் தானேயண்ண அங்க் காவலுக்குப் படுத்துக் கிடக்கிறான்.”
"ஓ உனக்கெண்டு உன்ர மனுசியின்ர தம்பி அவன் மச்சான் ஒருவன் இருக்கிறதால நல்லதொரு உதவி! அது எண்டா பெரிசுதான்! அல்லாட்டி நீ எப்பிடி உள்ள இடமெல்லாம் அப்பிடி இப்பிடியாப் போறது வாறது உலாத்துறது? அது சரி ஜெயா அங்க ஆனையஞம் சிலவேளயில தோட்டப்பக்கத்துக்கும் வருதே?”
“அட வருகுதோ. எண்டுறியளோ? அப்பா முருகா கடவுளே’
0200 புதினான்கஸ் தான் சந்திரன்

கிளையா ரெவேயில நிறைய சில நேரம் அங்க ஆனையள் வந்து அண்ண ஆத்துக்க தண்ணிகுடிக்க வருதுகளண்ண! அதுகள் வாறது தோட்டத்துக்கு அங்காலதானே. ஆத்தடிக்கு மற்றப்பக்கமா வந்து அதுகள் தண்ணி குடிச்சுப் போட்டுப் பிறகு மரம்தடிய முறிச்சு விழுத்திக்கொண்டு போயிருதுகள் தான். ஆனாலும் ஆத்தால இறங்கி ரெண்டு கிழட்டு யானையள் அண்ண சில நேரம் இங்காலயும் தோட்டத்துப் பக்கமா வந்திடுதுகள்.! எங்கட பக்கமெண்டு இல்லாம அங்காலிப் பக்கம் தோட்டம் வழிய அதுகள் வந்திருக்குது..!”
"சோ அப்ப இந்த ஆனைப் பிரச்சனை எங்கயும் காட்டுக்குப் பக்கத்து இடங்களில பெரிய பிரச்சனைதான் என்னதம்பி! மனிசனும் பயிருகளும் அதுகளிடயிருந்துத் தப்பிப் பிழைக்க வேணுமே என்ன ஜெயா?”
என்று தன் மனதில் தவளைத்தெத்துதல்போட்டுக் கொண்டிருந்த காட்டு வேட்டையோசனைகளோடு இதை ஜெயாவுக்குச் சொல்லிவிட்டு, மோட்டச்சயிக்கிள் டயர் டியூப்புக்கு சொலிசன் இப்போது போட்டு ஒட்டிக் கொண்டிருந்கும் பாலாவை சண்முகம் பார்த்தார்.
"பாலா என்ன பேச்சு மூச்சு ஒண்டும் இல்லாம, சயிலன்சா நீ இருக்கிறாய்.”
என்று அவனைப்பார்த்து சண்முகம் கேட்டார். பாலா தன் வேலையில் கவனம் வைத்துக் கொண்டு “என்னண்ணன் உங்கட கதய நான் காதால கேட்டுக்கொண்டு தானிருக்கிறன!” - சொல்லிக் கொண்டு டியூப்பு ஒட்டையில் போட்ட ஒட்டுதல்காய பிஸ்டனுக்குள் நெருப்பு எரித்து கம்பியால் இன்னும் கொஞ்சம் சூடு காய இறுக்கி அதை அமர்த்திக் கொண்டு சண்முகத்தைப் பிறகு பார்த்தான்.
"வேல வேலயெண்டு இந்தக் கடைக்கிளயே நெடுக பகல் முழுக்க வாக்கிடந்து கிடந்து சீவியமே சலிச்சுப் போச்சண்ண. உங்களமாதிரி ஜெயா அண்ணமாதிரி எனக்கும் எங்கயும் போகேலுமோ வரேலுமோ. இந்த மண்ணண்ண ஒயில் நாத்தத்தையும் டயர் டியூப் நாத்தத்தையும் குடிச்சுக் குடிச்சு உள்ள இந்த ஒயில் உடுப்போடையும் கிடந்து கிடந்து இதுக்கிள்ளயே என்னரய பொழுது போய் என்ன ஒரு வாழ்க்க இது. எனக்கு.?”
என்று சண்முகத்துக்குச் சொல்லி அவன் மனம் சலித்துக் கொண்டான்.
"ஒருவனுக்கு தலையில எழுதப்பட்டவிதி தான்ராப்பா. அவனுக்கு கிடைக்கிறதாரமும் செய் தொழிலும் எண்டுறது. இங்கபார் என்ர சீவியத்த.! நான் திரியாயில பிறந்ததால அங்கின காடு வழிய திரிஞ்சு தேன் எடுக்கிறதும் நாயளக் கூட்டிக் கொண்டு காடு வழிய வேட்டைக்குப் போறதயும் தான் தொழிலா வைச்சுக் கொண்டிருந்தன்! அதுமாதிரி இங்கயும் வந்தும் பார்
6.9emy) O 21 O

Page 19
அதத்தானே நான் இப்பயுமா செய்து கொண்டிருக்கிறன். எண்டாலும் பார் எங்கட செய் தொழிலுகளால ஆருட்டயும் இரக்காம பிச்சை எண்டது எடுக்காம நாங்க நேர்மையா பாடுபட்டு உழைச்சுச் சீவியத்தையும் போக்காட்டுறம் தானே! அது பெரிசுதானே?”
என்று சண்முகம், இதை பாலாவிற்கு சொல்லிவிட்டு,
“என்ன ஜெயா நான் சொல்லுறது. அதுக்கு நீ என்னடா தம்பி சொல்லுறாய்?” - என்று அவனையும் பார்த்து பிறகு கேட்டார்.
"நீங்களும் ஒரு பெரிய அண்ணாவியார் மாதிரித்தானே? பேந்தென்ன நீங்கள் சொன்னதுக்கு நான் ஒரு மறுப்புக் கத சொல்லத் துணிச்சல் இருக்கு? எண்டாலும் சண்முகமண்ண இடம் பெயர்ந்து நாங்க அங்கயிருந்து இங்க வந்தாப்பிறகு எல்லாருக்கும் தொழிற்பாடு சரியானதொரு கஷ்டம்தானே.? உங்களயெண்டு சொல்லாம அது உங்களத் தவிர்த்தி விட்டா இங்க உத்தமன் வீட்டுத்திட்டத்தில உள்ளவியள் முந்திச் செய்த தொழிலயே இங்கவந்தும் இப்ப செய்யுதுகள்? சிலதுகள் உந்த நந்திக்கடல் வழிய கட்டுமரம் கட்டி தொழில் தெரிஞ்சதுகளோட போய் தாங்களும் இப்ப கடல் தொழிலும் பழகி செய்யுதுகள்தான்! சிலதுகள் அங்க வவுனியாப்பக்கம் உசிரக்கையில பிடிச்சுக்கொண்டமாதிரி சென்றியால போய், சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்தும் உங்கால அங்கால போய் அதைக் கொண்டுபோய் வித்துக்கித்து யாவாரமும் தாங்கள் செய்யிதுகள் தான்.! இங்க இப்படி வந்து என்னத்தக் கின்னத்துச் செய்தும் வந்த இப்பிடிச் சனங்களுக்கு சீவியம் எண்டுறது சரியான கஷ்டம்தானேயண்ண? இந்த நிவாரண அரிசி பருப்புச் சாமான் இதுகளுக்கு இங்கினேக்க கிடைக்காமப் போனா, பட்டினியும் சில சனம் கிடக்கவும் தானே வரும்.?' "
என்று தனக்குச் சரியானவை என்று தான் நினைத்ததை நிலைநாட்டுமாப்போல சண்முகத்தைப் பார்த்துச் சொன்னான் ஜெயா.
"ஒமடாப்பா தம்பி நீ சொல்லுறதும் சரி தான்! அப்பிடித்தான் பாக்க இப்ப கிடக்கு” என்று ஜெயா சொன்ன கதைக்கு ஒரே சொல்லில் பதில் சொன்னமாதிரி அவனுக்கு சொல்லி விட்டார். சண்முகம்.
ஜெயா இதற்குப்பிறகு “கொதி கொதிச்ச மாதிரி இருக்கண்ண
மழைக்குப் பிறகவா எறிக்கிற இந்த வெய்யில். உச்சிவெயில் நேரமோ கால் வைச்சு வெளிய கிளிய நடக்கவுமேலாது”
என்று சண்முகத்துக்கு இதைச் சொல்லி வேறு ஒரு கதைக்குள் இப்போது பிரவேசித்தான். “ஓமடாப்பா தம்பி! காலேலயே இப்பிடி சரியான அள்ளிக்கொட்டுற உறைச்ச வெய்யிலடிக்குது நிறுத்தி வைச்ச மாதிரி
922 0 புதினான்காம் தான் சந்திரன்

மரங்களும் ஆடாமக் கொள்ளாம நிக்குது! காத்தும் அடிக்கேல்ல எண்டுறதாலஅதால ஒரு புழுக்கமும் தான்.”
என்றார் அவர்
அவர் அப்படிச் சொல்ல, வலக்கை ஒரு விரல் நுனிநகத்தைப் பற்களால் கடித்துக் கொண்டு புளியடி நேர் ஒழுங்கையைப் பார்த்தான் ஜெயா "அங்க ஒழுங்கைக்க ஒருக்கா பாருங்களன் அண்ண ஆர்வாற தெண்டு.”
என்று சண்முகத்துக்கு அவன் சொல்லி விட்டு ஒரு சிரிப்புச் சிரித்தான்.
“வெள்ளையும் சொள்ளையுமா நல்ல வேட்டிசட்டையெல்லாம் உடுப்புடுத்திக்கொண்டருகினம்.!”
என்று சண்முகமும் ஒழுங்கையில் அவர்களைத் தூரவாய் வரத் தான் பார்த்து விட்டு ஜெயாவுக்கு சொன்னார்.
'ஆர் ஆக்கள் தெரியுமோ உவயள் அண்ண? உங்கட ஊர் ஆள் பத்மன். ஒருவர்!”
"ஒ ஓமோம்! அவன்! மற்றது.?”
“மற்றது கொக்குளாய் அவன் சிவாவும், தென்னமரவாடி சூரியுமண்ண.”
“ஓம் ஓம் நீ சொன்ன அவயள் தான் உப்படி உடுத்திப் படுத்திக்கொண்டருகினம்! இண்டைக்கு எண்டு எங்கடாப்பா இப்பயா வெளிக்கிட்டிருக்கிறாங்கள். உவங்கள்?
"இதிலயா வரட்டுக்குமே முதல்.! பிறகு நாங்கள் அவங்கள கேப்பம் பாத்து. எங்க போறிங்களப்பா நீங்களெண்டு.?”
என்று ஜெயா சொல்ல
"கோயிலுக்கு அவங்கள் போகவெளிக்கிட்டிருப்பாங்கள்.'
என்று தன் வேலைக்கருமத்தைப் பார்த்துச் செய்து கொண்டு அவர்களின் கதை இடையே சயிக்கிள் கடை பாலா இப்படி ஒரு கதையை சண்முகத்துக்கும் ஜெயாவுக்கும் சொன்னான்.
இவ்வேளை பத்மனும் சிவாவும் சூரியும் புளியமரத்துக்குகிட்டவாக வந்து விட்டார்கள். அவர்களைக் கிட்டவாக - தான் கண்டதும் ஜெயா உடனே, பல்லுத் தெரியாத மாதிரி ஒரு சிரிப்புச் சிரித்தான்.
O 23 O

Page 20
அதிலே வந்த மூன்று பேரில் சூரி - உடனே ஜெயாவைப் பார்த்து “என்ன ஜெயா ஒரு அமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாய்.” - என்று சொல்லி தானும் ஒரு தரம் சிரித்தான்"இல்ல. எங்கட இந்த உத்தமன் வீட்டுத்திட்டத்தில உள்ள சனம் ஆரும். உந்தப் புழுதியிலயும் மண்ணுலயு மான அப்பிடியான வீட்டுக்க கிடந்து கொண்டு உப்புடி பளிச்செண்டு உடுத்திப் படுத்திப் போறதெண்டா அது பெரியதொரு ஆச்சிரியமான விஷயம்தானே? உங்கின இருக்கிற எல்லாராலயும் உப்படி உடுப்புடுக்க ஏலுமோ..?”
என்று ஜெயா அவர்களை ஒரு கொம்பராக ஏற்றி விட்ட கணக்கில் சொல்ல, சந்தோஷ விம்மல் வெடிப்பான சிரிப்புச் சிரித்தார்கள் அந்த மூன்று பேரும். ராஜபார்ட்காரன் மிடுக்குடன், உடனே தான் நின்று கொண்டு சூரி ஜெயாவைப்பார்த்து.
‘ஆக நாங்க இணி டைக் கு வற்றாப் பளை அம் மணி கோயிலுக்குப்போறம்.”
என்று சொன்னான்.
"அப்ப உங்கட மனுசிபிள்ளையாக்கள் உங்களோடயா வரேல்லயோ? நீங்க தனியாப் போறியளோ..?”
என்று ஜெயா உடனே அவனைக்கேட்டான்.
“எங்க போனாலும் றெயில்பெட்டி பூட்டினமாதிரி வீட்டில உள்ளது களையும் இழுத்துக் கொண்டே திரியிறது.? நீ ஜெயா எப்பவும் ஆரோடயும் ஒரு கூத்தும் நடிப்புமான கதைதான் எப்பவும் கதைப்பாய் சிரிப்பாய். என்ன?”
என்று மற்றவர்களின் செவிகளில் விழாத அமுங்கிய குரலில் ஜெயாவுக்கு உடனே ஒரு பதில் சொன்னான் பத்மன்.
"கூத்துக்காரர் மிருதங்கக்காறரும் இதில உங்கட பக்கத்தில நிற்கிறார் கூத்துக்கித் தெண்டு என்ன அவரையும் வெச்சுக்கொண்டு நீங்க இப்பிடி ஒரு மாதிரியா கதைக்கிறீங்க.?”
என்று சயிக்கிள்கடை பாலாவும் உடனே சொல்லிக்கொண்டு இந்தக் கதைக்குள்ளே தானும் நுழைந்ததாய் உடனே வந்து விட்டான்.
அவன் அப்படிச் சொன்ன உடனே எல்லோருடைய கதை பேச்சும் இப்போது வேறொரு வழிக்கு உடனே திரும்பியதாய் விட்டது. "உந்தக் கூத்தெண்டு கதைக்கத்தான் எனக்கும்இப்ப ஒரு கதை கதைக்க வேண்டிய தாக்கிடக்கு. இங்க எங்கட சண்முகம் அண்ணரும்தானே அதோட சேந்த ஆள்இங்க வாளிப்பா எங்கட முன்னால நிக்கிறார்! வளந்த ஒரு வாழை மாதிரி என்ன ஒரு செழிப்பான திறமான மிருதங்க வாத்தியம்! அதோட மத்தளம் தப்ளா கலைஞர் அவள்! இப்பிடியெல்லாம் உவரைமாதிரி ஆள்
9240 புதினான்கஸ் தான் சந்திரன்
a

வசதியும் கூட எங்களுக்கு இருக்கிறதால நாங்களும் ஒரு நாட்டுக் கூத்த எங்கட இந்த உத்தமன் வீட்டுத்திட்டத்தில உள்ள ஆக்கள் எல்லாருமாச் சேத்துப் பழகி உங்கின கோயில்வழிய எங்கயும்போட்டா என்ன.?”
"ஐயோ அப்பிடியெண்டா எனக்கும் ராவேல நல்லா சந்தோஷமாவு
இடத்துக்குள்ள சேந்து இதை ஒற்றுமையா செய்யப் பாருங்களன்.”
என்று பாலாவும் நெஞ்சிலே முட்டி நின்ற ஒரு உஷாரோடு சொன்னான்.
"அது தானே! நாங்கள் இங்க எல்லாரும் சேந்து ஒரு நாட்டுக் கூத்துப் பழகிப் போட்டா என்னண்ண?”
என்று ஜெயாவும் தன் கால்களை ஆண்மட்டும் அகல வைத்து நின்று கொண்டு, சண்முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
"நல்லதொரு விஷயந்தானே இது. எல்லாரும் இப்பிடி எங்கட இடத்து ஆக்கள்.ஆர்வமா ஒற்றுமையா சேர்ந்து வந்தா நல்ல நாட்டுக் கூத்து ஒண்டச் சேர்ந்து பழகி மேடையேற்றலாம் தானே.”
என்று சண்முகம் ஒரு நிதானமாக கதை சொல்ல.
“என்ன நாட்டுக் கூத்தண்ண அப்பிடிப்போடுறதெண்டா எங்களுக்குப் பழகி நடிக்கத் தோதுப்படும்.'
என்று சூரி உடனே கேட்டான்.
"இந்த வள்ளி திருமணம் கோவலன் கண்ணகி - அல்லாட்டி இலங்கேஸ்வரன். அல்லாட்டி சங்கிலியன்.”
ஜெயா இதற்குள் இதை கதைத்தான்
"அதென்ன அதுகள் வேணாம்! இங்கத்தைய இடத்துக்கு தோதாய் சனம் ரசிப்பாய் பாக்க்த்சுவடியதான என்னவும் ஒரு கூத்து.”
என்று பத்மன் இதைக் கேட்க.
‘என்னப் பொறுத்த அளவு காத்தவராயன் கூத்து எண்டுறது திறமான நாட்டுக் கூத்துத்தானே.? அங்கயாழ்ப்பாணத்தில அளவெட்டிதுடங்கி வல்லிபுரம் வர இங்கால அரியால முதல் பளை ஈறா இந்தக் கூத்தத்தானே அவங்கள் எல்லா இடமும் போடுறாங்கள். அப்பிடி அந்தக் காத்தவராயன் நாட்டுக்கூத்து எண்டுறது ஒரு தெய்வாம்சம் பொருந்தின கூத்து. நான் முந்தி மாதனை அச்சுவேலி நெல்லியடி அல்வாய்ப் பக்கத்திலயெல்லாம் இந்த காத்தான் கூத்தை அவங்கள் ஆட பாத்திருக்கிறன். நானும் சில இடங்களுக்கு இதுக்குப்போய் மிருதங்கமும் வாசிச்சனான்தான். அப்பிடி இங்கனேக்க நடந்த
6.9emy.) O 25 O

Page 21
இந்த கூத்துக்கும் நான் உந்த புதுக்குடியிருப்பு பொக்கணப் படுதிக்கும் அம்பலவன், வற்றாப்பளை கள்ளப்பாடு, ஒதியாமடு, உடையார்க்ட்டு போயிருக்கிறன். இங்கயும் துணுக்காய் நெடுங்கேணி புதுக்குடியிருப்புப்பக்கம் முத்துமாரி அம்மன் கோயிலில காத்தவராயசுவாமி கோயிலும் இருக்குத்தானே. அதால நாங்களும் இந்தக் காத்தவராயன் கூத்தை இங்க எங்களுக்குள்ள பழகிப்போடுறது தான் எங்கள் எல்லாருக்கும் ஒரு நன்மை. ஏனெண்டா இடம் பெயர்ந்து நாங்க இங்க வந்த இடத்தில எங்களுக்கு ஒரு கொள்ளை நோய் அம்மை, வாந்திபேதி, கண்வருத்தம் ஒண்டும் இல்லாம காப்பாத்தப்பட வேண்டியதுக்கு முத்து மாரியம்மன் காளியம்மரை இந்தக் கூத்த நாங்கள் பழகி மேடையேற்றுறது எங்களுக்கொரு நிவாரணமானதுமான ஒரு தேவையும்தானே.”
என்று சண்முகம் இப்படியொரு பெரிய பிரசங்கம் மாதிரி நீண்ட ஒரு விளக்கமாய் இந்த காத்தவராயன் கூத்தைப்பற்றி அதிலே நின்ற எல்லாருக்கும் சொல்ல.
வழவழவழவென்று வடிகஞ்சியாய் ஒழுகிறவாயை மாதிரி தன் வாயைப்பிளந்தபடி வீணி ஒழுகவாக வைத்துக்கொண்டு சண்முகம் சொன்ன கதைகளைக் கேட்டுக் கொண்டுநின்ற ஜெயா "அம்மாளான சண்முகமண்ண சொல்லுற காத்தான் கூத்து அந்தமாதிரித்தான்! அப்பிடியே துள்ளல் நடையில ஒய்யார நடையில பாடுறதும் பாட்டு அந்த மாதிரித்தான்! சாரயக்கூதிடாப்பர் மாமா, எல்லாம் இந்தக் கூத்தில வரேக்க முஸ்பாத்தியும்தானே?.”
என்று சொல்லிவிட்டு அவன் பல்இளித்தான்.
"ஆ, அதெண்டில்ல! அந்தக் கூத்தில தன்ர தாயின்ர சொல்லத் தட்டப்பிடாது எண்டு தன்ர தாயின்ர உத்தர வோடதானே எதையும் செய்யிறான் காத்தான். அது விஷயம் இந்தக் கூத்தில பாக்கிற ஆக்களுக்கும் ஒரு படிப்பினைதானே. அதோட எல்லாக் கூத்திலுமிருந்து இந்தக் கூத்து படிக்கேக்க அதைக் கேக்கயும் பாக்கிற ஆக்களுக்கு. ஒரு சுதியான ரசிப்புத்தானே. அதனால நாங்க இந்தக் கூத்தயே எல்லாருமா பழகி நல்லா இங்க போடுவமண்ண.”
என்று ஒருவித சுறுசுறுப்போடு பத்மன் இதை ஆவலுடன் சண்முகத்துக்கு சொன்னான்.
"ஓ பத்மன் சொலிலுறமாதிரிதானன்ன. அதே கூத்து நாங்க பழகி இங்க ஒருக்கா போடுவம்.?”
என்று ஜெயாவும் பத்மன் சொன்னதற்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு பின் பொறுமையாக சொன்னான்.
சூரியும் "அதைத்தான் போடுவமண்ண நாங்கள்.” - என்றான்.
9250 புதினான்காம் தான் சஆதிரன்

எல்லேருக்கும் பிறகான கடைசியாய். சூரி சொன்னதற்குப் பிறகு "ஆனா இது காத்தான் கூத்தெண்டுறது மற்றக் கூத்துப் பழகிற மாதிரி ஒரு பகிடி விளையாட்டில்ல தம்பியள் தெய்வகுத்தமும் வரும். மாரியம்மன் இந்தக் கூத்துக்குள்ள வாறமாதிரி இருக்கிறதால இது ஒண்டும் ஒரு வியைாட்டில்ல. ஆதி சிவனில இருந்து எல்லாத்தெய்வமும் வாறதால பக்தியாள முயற்சிதான் இந்தக் கூத்துபழகிறதெண்டு நாங்களெல்லாம் அத நல்லா ஞாபகம் வைச்சுக் கொள்ள வேணும்.?”
என்று கடவுள் விஷயத்துடன் சேர்த்து சண்முகம் இதை சொன்னதுக்குப்பிறகு அதிலே நின்றவர்கள் எல்லோருக்கும் பலமான மனப்பியம் மேலாதிக்கம் கொள்ளத்தான் வைத்தது. அதையெல்லாம் நினைக்க நினைக்க சுவாசமும் அவர்களுக்கு இடறத்தான் செய்தது. இப்போது அவர்கள் மனதுக்குள் தெய்வங்கள் பலதும் அணிவகுத்தன. பாலா என்பவன் தன் மனதுக்குள் அணிவகுத்த தெய்வங்களிடமும் இவ்வேளை வேண்டுதல் பலதையும் வேண்டிக்கொண்டிருந்தான்.
இப்போது காத்தான் கூத்துப் பழகிப் போடுவதுதான் அதிலே நின்றவர்களுக்கெல்லாம் திருப்திதருவதுபோல மனம் வசப்பட்டு இருந்தது. அதுதான் சரியாக இருப்பதுபோல இவர்கள் எல்லாரும் நினைத்துக் கொண்டார்கள்.
இந்த மனப் பக்குவம் அவர்கள் எல்லோரிடமும் நன்றாக வளர்ந்த பின்பு, சூரி என்பவன் சண்முகத்தை ஒரு யோசனை தனக்குள் போய்க்கொண்டிருக்க திடுமென ஒரு கேள்வி கேட்டான்.
"எல்லாம்தான் சரியண்ண அதுகிடக்க கூத்து பழகிற தொண்டா ஆரும் ஒரு அண்ணாவியார் எங்களுக்குப் பழக்கித் தர வேணுமே” அவன் சொல்ல “அதுதானேயண்ண’ என்று தானும் சொன்னான் பத்மன். " அண்ணாவியார் ஒருவரை ஒழுங்குபடுத்திக்கொண்டாறது - அது முழுக்க என்ர மட்டுமானதனிப் பெறுப்பு. அதுக்கெல்லாம் ஏன்போய் இப்ப நீங்க கிடந்து கவலைப்படுறியள்.?”
என்று சண்முகம் இப்படி சொல்ல "அது தானே சண்முகம் அண்ண பொறுப்பெடுத்தா அதை எல்லாம் சரியா ஒழுங்கா செய்வார்தானே?’ என்று ஜெயாவும் புளியடிப்பக்கம் ஒரமாய்த்தான் நடந்துபோய் அந்த மரத்தின் முண்டுமுண்டான அடி வேரில் ஏறி நின்றவாறே இதைச் சொல்லி முடித்தான்.
"அப்ப நான் இந்த மூண்டு நாளைக்குள்ள அண்ணாவி ஒருவரை பிடிச்சுக்கொண்டு இங்க வாறனே.?”
என்று சண்முகமும் அண்ணாவி விசயத்தை அப்போது நிச்சயப் படுத்தினதாக தெரிவித்தார். சண்முகம் சொன்ன கதையைக்கேட்க இப்போது
8Эчылламу» о 27 O

Page 22
அவர்கள் எல்லோருக்கும் சந்தோஷமாக இருந்தது. அப்போது எறித்துக் கொண்டிருந்த அந்த உச்சிப்பகல் போன்ற மண்டையைப்பிளக்கிற வெயிலிலும், நெட்டுரமான ஒரு வெக்கையிலும், கூத்துப்போடவென்று தாங்களெல்லாம் சேர்ந்து கதைத்தது அவர்களுக்கு சூடெல்லாம் அறியாத அளவுக்கு நெஞ்சுக்குள்ளே மிக்க குளிர்மையாகவே இருந்தது.
ேெயாதிக விருட்சமான அந்தப் புளியடி மரத்துக்குக் கீழே நின்ற வர்களில் கோயிலுக்குப் போகவென்று வந்தவர்களான சூரியும் பத்மனும் சிவாவும் இதற்குப் பிறகு சண்முகத்திடனும் ஜெயாவிடனும் தாங்கள் போவதாக சொல்லிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளிக்கிட்டார்கள். சிவா என்பவன் கதைபேச்சில்லாத ஒரு மெளனம்தான். அவன் தனக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் சூரிக்கும் பத்மனுக்கும் பின்னால் தன் செம்பட்டை தலை மயிருக்குள் விரல்களைவிட்டு சொறிந்தபடி நடந்து கொண்டிருந்தான். -
புளியடிப்பக்கம் தள்ளி நின்ற வேறுமரங்களில் குருவிகளின் ஒசைகள் பின்தங்கிய கணக்கிற்குக் குறைந்துபோக, சில்வண்டுகளின் ஓசைதான். இறுக்கமாக எங்கும் அவ்விடங்கிளல் இப்போது ஒலித்துக்கொண்டிருந்தன.
புளியடிக்கு கீழே இப்போது சண்முகமும் இல்லை, ஜெயாவும் இல்லை, அவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு “இன்றைய நாளில் எங்களுக்கு ஏற்படும் ஆனந்தங்களுக்குள் பெரிய ஆனந்தம் இதுவே என்ற யோசனையை வைத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆனாலும் அதிலே இருந்த பாலா மாத்திரம் இப்போது வேறு ஒரு யோசனையும் தனக்குள்ளே இல்லாது கடைக்குள் இருந்துகொண்டு, ஒன்றன் பின் ஒன்றான தன்கடை வேலைகளை கவனத்துடனிருந்து செய்து கொண்டிருந்தான்.
6
அடுத்த நாள் விடிந்ததும் வேளைக்குக் கடையடிக்கு வந்து கடையைத்திறந்தான் பாலா. “சயிக்கிளுக்குக் காத்துப் போச்சுத்தம்பி.?” என்று சொல்லிக்கொண்டு அவனின் கடையடி வாசலடிக்கு ஒருவர் அப்போது சயிக்கிளை உருட்டிக் கொண்டு வந்தார். அவன்: "இதுக்கவா நீங்க விடுங்கோ உங்கட சயிக்கிளை.” - என்று தன் கையை காட்டிச் சொன்னான். அவன் சொல்ல, அவரும் கடை வாசலில் கொண்டு வந்து சயிக்கிளை நிற்பாட்டிவிட்டு ஸ்டாண்ட் போட்டார். அவன் பிறகு அவர் விட்ட அந்தச் சயிக்கிள் டியூப்புக்கு பச் ஒட்டுகிற வேலையைத் தொடங்கினான்.
இந்நேரத்தில் இருந்தாற்போல “ஓம் ஓம்ஹ ஓம்’ என்று ஒசை
9280 புதினான்காம் தான் சந்திரன்
 

யெழுப்பின கணக்கில் ஒரு காற்று அடித்தது. அந்தக் காற்றத்த வேளையிலே பாலா தன் கடைக்குத்தூரவாய் நின்ற அந்த வேம்பு மரத்தைப் பார்த்தான். அவன் கண்பார்த்த நேரத்தில் மரத்தின் அடர்த்தி நிறையவுள்ள தளிர் இலைகளெல்லாம் ஆடி மயில்களின் தோகைபோல அசைந்து கொண்டிருந்தன.
"அடேடே என்ன இருந்தாப் போல இப்பிடி ஒரு கோலத்தில காத்தடிக்குது..?”
இலைகளிலிருந்து தன் கண்பார்வையை விலக்க முடியாதது போல வைத்துக் கொண்டு பாலா இதை தனக்குத்தானே சொன்னான்.
அவன் சொல்லி முடிய - அவன் பார்த்த அந்த வேம்பின் இலை யடர்வுக்குள் மறைந்தது மாதிரி காற்றும் பிறகு பறந்தடிக்க ஓடியது போல வீசாமல் நின்றுவிட்டது. ஆனாலும் இன்னும் சாதுவான காற்று உராய்விலே மரத்து இலைகள் மூச்சையுறாது ஆடி அசைந்து கொண்டிருந்தன. வீதிக்கு மறுபக்கத்து வளவிலிருந்து சாணக மணம் தீயில் சுட்டதுபோல பாலாவிற்கு மூக்குக்குள் குறுகுறுக்க மணத்தது. நல்ல கரும்பாறையைப்போன்று தாண்டியடித்துவந்த இறுக்கமான மணம்ாய் அவனுக்கு அது மூச்சு முட்டமுட்ட இருந்தது. வேலையை விட்டு விட்டு எழுப்பி அவன் தூரவாய்ப்போய் வீச்சமாய் எச்சில் தும்பினான்.
வீதிப்பக்கமும் பிறகு அவன் முன்னாலேயாய்ப் பார்த்தான். பிருஷ்டத்தின் சதைகள் குலுங்கி அசைவது மாதிரி இரண்டுமுன்பக்க டயர் சில்லுகளும் பள்ளங்களில் விழுந்து எழும்பவாய் ஆடிக்கொண்டு ஒரு 'எல்ப் - வான் அவ்விடத்துக்கு நேரே வந்துகொண்டிருந்தது. அதை அவன் பார்த்துவிட்டு வந்து திரும்பவும் தன் வேலையைத் தொடங்கினான்.
வீதியால் வந்து கொண்டிருந்த வான், குறிப்பாக அந்தப் புளியடிக்கு வந்ததும் அந்த நிழலின் கீழேயாய் வந்து நின்றது. வானின் அமைப்பு முழுக்கவும் காட்டுப் பாதையால் வந்த கிரவல் மண்தூசி அப்பினதாய்க் கிடந்தது. வானின் முன் பக்க இருக்கையிலே இளம் வயதுடைய பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாய் இரு சின்னவயதுப்பிள்ளைகளும் இருந்தார்கள்.
வான் நின்றதும் பின் பக்கத்தில் சாமான்களுடன் இருந்து வந்தவர் அந்த இடத்தாலிருந்து கீழே இறங்கினார். அதாலே இருந்து இறங்கினவரை பாலாவும் பார்த்தான். “இவர் வந்து அவளிண்ட புருஷனாய்த்தானிருக்கும்!” -என்று அவனுக்கு உடனே விளங்கி விட்டது. "யார் இவயள்? இங்கவந்திருக்கினம் - வானுக்கயும் சாமான் சக்கட்டுக்களாயிருக்கு? துலையில இருந்து பிரயாணம் பண்ணி வாற ஆக்கள் மாதிரித்தான்
o 29 o

Page 23
களைச்சுக் கிளைச்சுப்போயும் பாக்க அப்பிடியா இவயளக்கிடக்கு! அப்பிடியாயிருந்தா பாக்கேக்கிள்ள இவயளும் ஏதோ அங்கால இருந்து இடம் பெயர்ந்து இங்க வந்த கணக்காத்தான் கிடக்கு. ஆனாலும் இங்க இவயள் வந்ததுக்கு ஆர் இருக்கினம் இங்க இவயளுக்கு சொந்தமெண்டு?”
பாலா அங்கேயும் பார்த்துக்கொண்டு, தன்வேலையையும் ஒழுங்காக பார்த்துச் செய்து கொண்டு இவைகளைத் தனக்குள் நினைத்தான். வானிலிருந்து இறங்கினவர் அந்த வாகனத்தின் முன் சீற்கதவைத் திறந்து மனைவி பிள்ளைகளைக் கீழே இறங்குவதற்கு தேவையான வேலையை செய்து கொண்டிருந்தார். மறுபக்கம் வான் சாரதியும் எஞ்சினை நிற்பாட்டிவிட்டு கிழே இறங்கி விட்டார்.
பாலா திருத்தி முடித்த சயிக்கிளை அவரிடம்கையளித்து விட்டு
அதற்குரிய காசை வாங்கிக் கொண்டான். சயிக்கிள் காரரும் போய்விட்டார்.
வானுக்குப் பின்னாலே நீளமான கிடுகு ஒலைகளின் கட்டுகள் 'தொப்தொப்'
பென்று கீழே நிலத்திலேயாய் விழுந்து கொண்டிருந்தன.
"சாமான் இருக்கிறார்கள் போல.!’ +
என்று நினைத்துக்கொண்டு பாலா அங்காலே நடப்பதை இப்போது பார்த்துக் கொண்டு கடையடியில் நின்றான். அதிலே அந்த வானிருந்து இறக்கப்பட்ட பொருட்கள் இரண்டு பெரிய யூரியாப் பைகளில் நிறையப்போட்டுக் கட்டப்பட்ட ஏதோ சாமான்களும் இரண்டு பெரிய சூட்கேசும், அந்த ஐந்தாறு கிடுகு ஒலைக்கட்டுகளும்தான்! இதை விட தனித்தனியே யுள்ள சாமான்களென றேடியோவும், பாய் தலயணை சுருட்டி உள்ள ஒரு கட்டும், அதோடயாய் இல்லை வேற அவ்வளவுதான் எல்லாம்.
சாமான் இறக்கிய வேலை முடிந்ததும் வான் கூலியை ஏதோ வான்காரிடம் பக்கத்தில் நின்று பேசி கணக்குப்பார்த்துவிட்டு அவர் காசைச் கொடுத்தார். அவர் அங்கே கிழே இறக்கிக்கிடந்த சாமான்களுக்குப் பக்க த்திலே போய், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் நின்றார்கள். பிரயாணம் பண்ணி வந்தகளைப்பிலே பிள்ளைகளும் அருவிவற்றிய நிலம் போல வாடிப்போன மாதிரியாய் அதிலே நின்றார்கள்.
LIலா கடைவாசலில் நின்று இவர்களைத்தான் பார்த்துக்
கொண்டிருந்தான். "ஏதாவது அவர்களுக்கு உதவி செய்வோமா? அப்பிடி ஏதும் இவர்களுக்குச் செய்வதென்றாலும் என்ன ஒரு உதவியைச் செய்ய லாம்?” - என்றும் அவனுக்குள்ளே ஒரு யோசனை போய்க் கொண்டிருந்தது.
என்றாலும், அவன் அப்படியான யோசனைக்குள்ளே சுழன்று கொண்டிருக்க - வானிலிருந்து இற்ங்கியவரும் அவன் கடையடிக்கு இப்போ வந்து விட்டார்.
0300 புதினான்கஸ் தான் சந்திரன்

நின்றவான் ஸ்ராட் பண்ணி வெளிக்கிட்டு வந்த வழியாக போகத் தொடங்கிவிட்டது.
“இவ கனகம்மா எண்டுறவவின்ர வீடு இங்க எங்கயுங்கோ இருக்கு.?”
- பாலாவிடம் கேட்டார் அவர்,
"ஓ கனகம்மா அவவோ திரியாய் ஊர்த்திருகோணமலை ஆக்கள்.”
"ஒமோம் அவயள்தான்! அவயளின்ட வீடு இங்க எதிலயுங்கோ இருக்கு.?”
"அது இங்க கிட்ட பக்கத்திலதான். நீங்க எங்கயிருந்துங்கோ வாறிங்க.?”
"நாங்க அங்க யாழ்ப்பாணம் பக்கத்து மணியம் தோட்டம்.”
"அப்ப என்ன இப்ப நீங்க இந்தச் சாமான்களோடயுமா வந்திட்டீங்க?"
"ஓ அங்க அப்பிடி இப்ப இருக்கேலாது. செல்லடியும் அதுவும் இதுவுமெண்டு கொஞ்சம் கரைச்சலும் தானே. இவவும் பிள்ளையளயும் வைச்சுக்கொண்டு அங்க தனிய அதுக்க இருக்கிறதும் கஷ்டமெண்டு அம்மாவோட போய் இருக்கப்போறமெண்டா - அதுதான் வெளிக்கிட்டு இங்கால வந்தம்.'
அடட கனகம் அக்காவின்ர மகளே உங்கட அவ.?”
“ஓம்.!”
"அதுதானே அவவும் தன்ர வீட்டு இடத்துக்க இன்னுமொரு வீடொண்டும்பெரிய மண்சுவர் எழுப்பி இப்பகட்டிப் போட்டிருக்கிறா. நீங்களும் ஆனா உந்தக்கிடுகோலைக் கட்டுக்களும் கணக்கவா இங்க கொண்டந்திருக் கிறியள். கிளாலியாலதானே நீங்களும் வந்தது.”
"ஓம் ஓம்.”
“கொஞ்சம் இருங்கோ, இந்தா இப்பவே நான் போய் அவவ இங்க கூட்டிக் கொண்டு வாறனே.”
ன்ெறு தான் சொன்ன கையோடு பாலா மளமளவென்று இருதிமிர்த்த மண்புற்றுக்களிருக்கும் அந்தப்பக்கத்தாலேபோக நடக்கத் தொடங்கி விட்டான்.
பாலாபோன கொஞ்ச நேரத்துக்குள்ளேயே மின்னலாக தோன்றினது
போல தாய் கனகம்மா உடனே அந்த இடத்துக்கு வந்து விட்டாள்.
“கெளரி! கெளரி.!” - என்று சொல்லியவாறு தன் மகளின்
6.9emy) O 31 O

Page 24
பெயரை கூப்பிட்டுக்கொண்டு அவள் அங்கே வருகையில் "அம்மா..!" என்று கெளரியும் தாயைக்கண்டதும் சந்தோஷப்பட்டுக்கொண்டு சொன்னாள். கனகம்மாவுக்கு பின்னாலே வந்த பாலா கடையடி வாசலிலே போய் நின்று கொண்டான். அந்தப் பிள்ளைகள் இரண்டும் அம்மம்மாவைக் கண்டவுடன் அவளின் கிட்டே போய் பசையாக ஒட்டிக்கொண்டதுபோல கனகம்மாவின் கால்களை கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.
தாயை கெளரியும், உள்ள மெலாம் நிரம்பிய தாய்ப்பாசத்தோடு ஒரு பெரு மூச்சை காற்றிலும் அனுப்பிவிட்டு கட்டிப்பிடித்து அவளை முத்த மிட்டாள். தாயும் மகளை கொஞ்சம் கண்கலக்கத்தோடு கொஞ்சினாள்.
"ஐயோ என்ர சின்னக் குஞ்சுகள், தலையெல்லாம் புழுதி.!” என்று குழந்தைகளின் தலைகளை கையால் தடவி தன்னோடே காலடியில் வைத்து அணைத்துக்கொண்டு கனகம்மா மருகமனையும் பார்த்தாள்.
“என்ர அம்மாளாச்சி நல்லா பிரயாணத்தில சீரழிஞ்சு கெட்டு ஆளையாள் நீங்கள் எல்லாம் சரியா களைச்சுப் போனியள் போலக் கிடக்கு.?”
என்று அவள் தன் மருமகனைப் பார்த்துக் கொண்டே மிகவும் மரியாதையான ஒரு பாங்கில் சொன்னாள். மாமியாரின் மரியாதை ஒட்டின அந்தக் கிளை பரப்பியதான வாக்கியத்தைக் கேட்டவுடனே மருமகனுக்கும் சோர்வெல்லாம் மாறி சுகமாயிருப்பது போல இருந்தது.
"அப்ப உந்தச் சாமான்களை அங்க வீட்டுக்கு எடுப்பம் என்ன கெளரி.?”
கனகம்மா அப்போது மகளைக்கேட்டாள்.
"ஆரும் இதையம்மா தூக்கிக்கொண்டுவந்து அங்க தரவா இருக்கினமே..? இவருமெல்லே வந்த அலைச்சலில களைச்சுப்போய் நிக்கிறாரம்மா..?”
“ஓம் ஓம் பிள்ள அது தான் நானும் ஆர் இருக்கினம் இதுக்கெண்டு இப்பவா யோசிக்கிறன். பொறுபாப்பம்.!”
என்று கனகம்மா உடனே அப்படி சொன்னது அங்கே கடையடியில் நின்ற பாலாவுக்கும் காதுகளில் அப்போது கேட்டு விட்டது.
"நான் கனகம்மாக்கா எல்லாத்தையும் தூக்கிக்கொண்டாந்து அங்க உங்கட வீட்ட தாறனே..! இங்கயும் ஆரும் உதுவழிய உள்ள வீடுகளில நிப்பினம்.1 உதவிக்கு நான் அவயளையும் கூப்பிட்டு பேந்து கீந்து ஏதோ நாங்கள் செய்வம் தானே. நீங்க உவயள கூட்டிக் கொண்டு போய் ஏதும் குடிக்கக் கிடிக்க தேத்தண்ணி கீத்தண்ணிய வைச்சுக் குடுங்களன்.”
பாலா சொன்ன கையோடு கிடுகுக் கட்டுள்ள இடத்துக்கருகில்
o 329 අග්‍රීෂ්ෆ්ෂෙඩ් ෂෝ, ජේණිෂ්

போய் விட்டான். “அட தம்பி நீ தனிய நிண்டு உதுகளத் தூக்க மாட்டாய் ராசா. ஆரையும் கூட்டிக் கொண்டந்தாத்தானே உது நடக்கும்.?
என்று கனகம்மா சொல்ல -
"ஆரும் என்னத்துக்கு? நான் கூட நாடவும் எல்லாம் பிடிச்சுத் தூக்குவன். தனியயும் உதுகள் சிலதத் தூக்கிக் கொண்டு போகலாம் தானே மாமி.?”
என்று கனகம்மாவின் மருமகன் தன் உடல் சோர்வை எரித்து விட்ட கணக்கில் சுறுசுறுப்பாய்ச் சொல்ல, பாலாவும் அவனைப் பார்த்து சிரித்தான்.
“உங்கட பெயர்.?” “ராஜன்.” 'ஆ ராஜன்.” “உங்களிண்ட பேர்.?” “எனக்கு பாலாவுங்கோ!. 'ஆ பாலா..! உங்கட கடையே. உது?” “ஒ சும்மா ஒரு சின்னச் சயிக்கிள் கட.1.” “வேல எப்படியும் உங்களுக்கு இங்க வருகுதுதானே.?”
99.
"ஒ சும்மா சயிக்கிள் வேல நெடுகவம் வரும். பச்ஒட்டுற வேலயெண்டு அது இதுக்க நெடுக இருக்கு. ரயர் ரியூப்பெண்டு இங்க சயிக்கிளும் சரியான விலயள்தானே. ஒண்டும் இங்க வவுனியாவில இருந்து இங்கால இப்ப கொண்டரேலாது தானே? அதாலதான் அப்பிடி இப்பிடியெண்டு வாற சாமான்களுக்கு இங்க ஊரிப்பட்ட செரியான விலை.”
“ஒ ஓ.1 அங்க யாழ்ப்பாணமும் அப்பிடித்தான்.”
"ஒ நீங்க சொன்ன மாதிரி அங்கயும் அப்பிடித்தானே இருக்கும்! இங்க வன்னியில இருந்து இதுக்கால வந்து தானே அங்க யாழ்ப்பாணப் பக்கமும் சாமான்களெல்லாம் போகவேனும்.?”
இருவரும் மாறிமாறி இந்தக் கதைகளிலே காலத்தைப்போக்க ராஜனின் பிள்ளைகள் இரண்டும் தாயோடு அருகில் போய் நின்று சிணுங்கிக் கொண்டு அவளுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டு: நின்றார்கள்.
“கனகம்மாக்கா நீங்க இவ தங்கச்சியையும் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வீட்ட போய்க்கொள்ளுங்கோ நாங்கள் ரெண்டு பேர் நிண்டு இந்த சாமான்கள அங்க தூக்கிக் கொண்டு வாறமே..?” பாலா இதை கனகம்மாவிற்கு சொல்ல.
“ஓம் தம்பி நான் இவவயும் பிள்ளைகளயும் கூட்டிக்கொண்டு என்ர
6.9ema.) O 33 O

Page 25
வீட்டபோறன். நீங்க அந்த புதுவீட்டில உந்தச் சாமான்களை வையுங்கோ ஒலையள அங்க வீட்டு வாசலிலபோட்டுவிடுங்கோ.”
என்று கனகம்மாவும் பாலாவுக்கு விபரம் சொல்லிவிட்டு 'அம்மா வா கெளரி பிள்ள நாங்கள் பிள்ளையளயும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போக நடப்பம்.?”
என்று பிறகு தன் மகளையும் பார்த்து அவள் சொன்னாள். அம்மா தனக்குச் சொன்னதோடு கெளரியும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அவளுடன் போக வெளிக்கிட்டுவிட்டாள். அவர்கள் எல்லோரும் அந்த இடத்தாலே போகவிட்டு பாலா ராஜனை பார்த்தான்.
"உங்கடமாமி உண்மையா ஒரு வலுகெட்டிக்காரப் பொம்புளதான்.! பாருங்களன் அவ புருஷனுமில்லாம தனிய இருந்து கொண்டு காலத்தால உந்த நந்திக் கடல் பக்கம் போய் அதில வாற மீனுகள் வாங்கி உங்க வாற வேற யாவாரிகளுக்கு வித்து தன்ர சீவியத்த மரியாதையாக் கொண்டு போகுறாதானே. அது எவ்வளவு பாருங்கோ திறம் என்னங்கோ.?”
என்று பாலா கனகம்மாவை கம்பீரத்தோற்றமுடைய பெண்மணி யாகவும், ஏழு உலகத்துக்கும் ஒரு ராணி மாதிரியாகவும் புகழ்ந்த மாதிரி யாய்ச்சொல்ல ராஜனும் தாமரை முகத்தானாக மகிழ்ச்சியாய் விட்டான்.
ராஜனுக்கு இடம் பெயர்ந்து மனைவி பிள்ளைகளுடன் இங்கே வன்னியிலுள்ள கேப்பாப் புலவுப்பக்கம் வரும்போது, தொழில் பற்றிய கவலை மனதில் இருந்து கொண்டிருந்தது. ராஜனுக்கு தெரிந்த ஒரேயொரு தொழில் மேசன் - வேலை ஒன்றுதான்! அதைத் தவிர்ந்த வேறு ஒரு தொழில் செய்ய முன்னம் அவனுக்கு விருப்பமும் இருந்ததில்லை! மேசன் தொழிலில் போதிய கூலியும் வாங்கி நன்றாகச் சீவித்ததால் அந்தத் தொழிலே தனக்குப் போதும் திருப்தி - என்றதாய்த்தான் அவன் வாழ்ந்து வந்தான்.
ஆனால், இடம் பெயர்ந்து காடும் மேடும், முள்ளும் கல்லுமுள்ள, இந்த இடத்துக்கு அவன் பிரயாணம்பண்ணி வந்து கொண்டிருக்கும் போது ஞாபகமாக இந்தத் தொழில் விஷயம் தான் அவன் மனதுக்குக் கவலை யாயிருந்தது.
ஆனால் இப்போ பாலா சொல்லக் கேட்டு மாமியின் தொழில் திறமையை அறிந்த பிறகு, அவன் மனதில் இப்போது 'மீன் கொடியொன்று பறப்பது போலத்தான் இருந்தது. அவன் இப்போது தொழில் முறையில் மாமியின் வழியைத் தானும் இனிப் பின் பற்றலாம் என்றுதான் நினைக்கத் தொடங்கினான். இதை நினைக்க முன்னம் அவனுக்கு சிறிது கறுத்திருந்த அந்த முகம் இப்போது நிம்மதிப்பட்டு திருத்தமாகி வெளிச்சமாகிவிட்டது.
இப்போது அவனுக்கு மனதில் படகு மிதந்து கொண்டு வருகிறமாதிரி
9349 புதினான்கஸ் தான் சஆதிரன்

யோசனை வரத்தொடங்கிவிட்டது. ஒடத்துறையில் அது ஒதுங்கி நிற்கிற மாதிரியும் பிறகு தொடர்ந்தது அவனுக்கு ஒரு காட்சி.
“என்ன அப்ப ராஜன் அண்ண, பிடியுங்களன் இந்த யூரியா பையின்ர மற்றப்பக்கம்.?’ என்று பாலாவின் குரல் அப்போது தான் ராஜனின் காதுகளில் வீழ்ந்தாய் இருந்தது.கீழ்க்கடலுக்குள்ளே போனதாயிருந்த அப்பிடியான யோசனையிலிருந்து ராஜன் அப்போதுதான் முறையாக விடுபட்டான்.
“ஓம் ஓம் பிடிக்கிறன்! பிடிக்கிறன் நான்.!” என்று பாலாவை பார்த்து சொல்லிக் கொண்டு அவன் யூரியாப் பையை பிடித்துத் தூக்கவாய் கீழே குனிந்தான்.
ஒற்றை வண்ணத்துப் பூச்சியொன்று ஓய்வு ஒழிவு இன்றி, கனகம்மாவின் குடிசை வீட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது. கெளரியின் பையன் அதைக் கையில் பிடித்துவிட ஆனந்தத்தோடு அதற்குப் பின்னாலே எதிர் நீச்சல் போட்ட அளவுக்கு ஓடித்திரிந்தான்.
"உதுக்க வீட்டுக்க நீ இப்பிடி ஓடாதயடா. உதுக்க உள்ளதுகளலில நீ எத உடைக்கப் போறாயோ? எதுக்கவாய்ப் போய் விழப்போறாயோ..? டேய் செல்வம் தம்பி நான் சொல்லுறது உனக்குக் கேக்கேலயாடா..?”
வாசலருகில் இருந்து கொண்டு வெங்காயம் உரிக்கிற வேலை யாயிருந்த கெளரி மகனைப் பார்த்தபடி சத்தமாகப் பேசினாள்.
“என்ன பெடிக்கு இடிவிழுந்த உப்புடிச் சத்தம்போடுறாய்பிள்ள..! அவன் சின்னப்பிள்ள பாவம் பாவம்! அவன் விளையாடுறான். விளையாடட்டும் பிள்ள!”
“என்னம்மா நீங்க? அவன் உப்பிடியோடி விழுந்து கிழுந்து அத இதப் பேந்து உடைச்சுப்போடுவானெல்லே.?”
“ஆக். என்னத்தப் பிள்ள அவன் இதுக்க உதுக்க உடைக்கிறது.”
"சும்மா இருங்கம்மா நீங்க! சட்டி பான உடைஞ்சாலும் பேந்து நீங்கஇதுக்கெண்டு மினக்கெட்டு இங்க புதுக்குடியிருப்புக்குத்தானே போக வேணும் என்னவும் வாங்க.”
"ஓம் அதவிடு! பெரிய சாமான்கள் தான் இங்க இதுக்க கிடக்கு ஆத்த உடைக்கிறதுக்கு.”
"அப்பிடி சொல்லாதயுங்கம்மா..! இவன் இவன் வரவர இப்ப ஆகப்பிரளியணை! இங்க பாருங்களன் இவள் அவன்ர தங்கச்சிய. பாவம்
O 3.5 O

Page 26
இது ஒரு குழப்படியில்ல எனக்கு! கரைச்சலும் உந்தப்பிள்ளயால எனக்கு இல்ல! இந்தா பாருங்களன் இதில எனக்குப் பக்கத்தில என்னவா அமைதியா சாதுவா இந்தப் பிள்ளை இருக்கெண்டொருக்கா பாருங்களன்.?”
மகள் சொல்ல
“என்னடி என்ர குட்டி ராசாத்திக்குஞ்சு..!”
என்று அவளைப் பார்த்து கனகம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள். வண்ணாத்திப் பூச்சி வாசலால் வெளியே இறகின் பிரகாசத்தோடு பறந்தது. "ஒ ஓ. ஆ.”-என்று சத்தம் போட்டுக் கொண்டு கெளரியின் பையன் செல்வம் வெளியே ஓடினான்.
“டேய் டேய் தம்பியாண்டான் டேய் அங்க வெளியால எங்கயும் நீ பிறகு ஓடாதயடா. பிள்ள”
என்று பெரிதாக வாசலைப்பார்த்துச் சத்தம் போட்டுக்கொண்டு தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள் கெளரி.
வாசலில் இரண்டு காகம் நிலத்தில் நின்றபடி கொத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. சிறகடிப்பும் "காக்காகா” - என்ற அதன் சத்தமும் போடுகிற சண்டையும் அதன் துள்ளலும் பார்க்க, கனகம்மாவுக்கு தீ மூட்டிய அளவுக்கு சரியான ஆத்திரமாய் வந்தது.
"ஆச்சூஊ. காய்.காய். சனியன்களே.” என்று கழுத்துப் புடைக்க சத்தம் போட்டுக் கொண்டு வெளியேபோய் அதை அவள் கலைத்துவிட்டு வந்தாள்.
"இந்தக்காகம் முத்தத்தில வீட்டுக்கு முன்னால நிண்டு சண்டையள் பிடிக்குது. என்ன தூ தரித்திரமோ சவம். இதுகள் சவங்கள் விரதச் சோத்துக்கு கூட்பிட்டா வராதுகள் இப்பிடி சண்டை பிடிக்கத்தான் உந்த முத்தம் வழிய வந்து விழுங்கள்.” வீட்டுக்குள்ளே வந்த பிறகு. தான்தான் இதை அவள் தனியவே சொல்வதை, கெளரியும் முகத்தைத்துக்கிப் பார்த்தாள். ஒன்றும் பிறகு அவள் பேசாமல் மெளனமாக இருந்தபடி வெங்காயம் உரிக்கின்ற வேலையைத் தொடர்ந்தாள்.
5னகம்மா வீட்டு மூலைக்குள் நடந்து போய் - அதிலே கிடந்த நாலு தேங்காயிலே ஒரு தேங்காயை கையிலெடுத்தாள். தேங்காய்க்கு பொச்சு முடி கழற்றிவிட்டு அடுப்படிக்குப் பக்கத்திலே போய் கீழே குனிந்து கத்தியை எடுத்தாள். 'டங்’ என்று தேங்காய்க்கு விழுந்த வெட்டோடு கத்திப்பக்கம் கழன்று போய் சுவர்ச் செத்தையடியில் விழுந்தது. கைப்பிடியும் கையால் அவளுக்கு நளுவி கால் பக்கத்துக்குப் பின்னால் விழுந்தது.
“அடியாத்தயடி என்ன இது.? எங்கயோ லொடலொடத்த கத்தி!
9360 புதினான்காம் தான் சந்திரன்

இத நல்லா சீலைத்துண்டு போட்டுச் சுத்தி இறுக்கி நான் முந்தி வைச்சனான்! ஆனா இப்ப வெட்ட வெட்ட பிறகு அதுக்குள்ளால பிடியுக்க வா ஈடாடிப்போச்சுப் போலக்கிடக்கு.” என்று தனக்கத்தானே இதை சொல்லிக் கொண்டு அங்காலேயும் இங்காலேயுமாய் விழுந்து கிடந்த கத்தியையும் பிடியையும் எடுத்து அவள் பல கையில் அதைத்தட்டி பிறகு இறுக்கத் தொடங்கினாள்.
பிடியை இறுக்கவென்று, அதைப் போட்டு அவள் கையால் பிடித்துக்கொண்டு பலகையில் குத்தி இடிக்க "டொக் டொக் டொக்.” என்றதாய்ச் சத்தம்.! அந்தச் சத்தத்தை தன் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்த கெளரிக்கு ஒரு யோசனையும் மூளையில் தட்டுப்பட்டது.
"அம்மா” - என்று தாயைப் பார்த்து அவள் மெதுவான சத்தத்திலே கூப்பிட்டாள். மகள் கூப்பிட “ என்ன பிள்ள..?” - என்று கனகம்மா பிடி இறுக்கி முடிந்த கத்தியை கையில் வைத்துக் கொண்டு அப்படியே அதில் இருந்த இருக்கையிலே கேட்டாள்.
"SubLDT!”
GG
என்னடி பிள்ள..?”
"subLD.T.'
GG
என்னடி பிள்ள? அம்மா அம்மா எண்டுறாய்..? என்னடிபிள்ள அப்பிடி உனக்கு சொல்லவேண்டியிருக்கு. நீ இப்ப எனக்கு அதைச் சொல்லன்ரியாத்த.?”
“இல்லயம்மா..!”
"ஆ. அப்ப பிறகென்ன சொல்லன் பிள்ள?”
“இல்லயம்மா அவரும் இண்டைக்கு காலேல சொன்னவர்.!” “என்ன என்ன என்னடி பிள்ள அப்பிடி மருமகன் சொன்னவர்.?”
கனகம்மாவுக்கு இப்போது கொஞ்சம் பதற்றம். எழுந்து கைக் கத்தியையும் சோரவாய் கையில் பிடித்தபடி நின்றாள்.
"அப்பிடி ஒண்டும் அவர் எனக்கு சொல்லேல்லயம்மா..! என்னம்மா நீங்கள் நான் கதையை சொல்ல முதல் நீங்கள் பதட்டப்படுறியள்?”
" அப்பிடி ஒண்டும் எனக்கு இல்லயடி பிள்ள நீ கதயச் சொல்லன் 66T...?'
'இதுதான் அம்மா அவர் எனக்குச் சொன்னவா! அம்மாவுக்கு - இதுக்க நாங்களும் ஒண்டடி மண்டடியா பிள்ளயளோடயும் கிடந்துகொண்டு
6.9emy.) O 37 O

Page 27
அதால அவவுக்கும் பெரியஇடஞ்சல் கரைச்சல். அந்தக்கட்டின வீட்டில நாங்கள் போய்த் தனிய இருந்து இனிச் சமைச்சுச் சாப்பிடுவம்! அதுதான் எங்களுக்கும் கரைச்சலில்ல. அம்மாவும் பாவம்! அவவுக்கும் நாங்கள் அந்த வீட்டில போய் இருந்தாக்கரைச்சலில்ல எண்டவர்.”
“எடியேய் பேச்சிப்பெட்டை இதைச் சொல்லவே நீ இப்பிடி இப்பிடி என்னயப் பாத்து முதல் அம்மா அம்மா எண்டு எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தனி.? அடியேய் எனக்கென்னடி பிள்ள! பிரச்சன எண்டுறன்.? நீங்கள் இதுக்க என்ர வீட்டில இருக்கிறதால எனக்கு அப்பிடி ஒரு இடைஞ்சலுமில்ல கரைச்சலுமில்ல.! என்ர பிள்ள குட்டியளோட எனக்குச் சேந்து ஒண்டாச் சீவிக்கிறது தானேயம்மாடி எனக்குச் சந்தோஷம்! பிள்ள ஒரே ஒரு பிள்ள உன்ன எனக்குப் பெத்துப்போட்டு பிறகு நானுமென்ன தனிய உம்மெண்டு இதுக்க இருக்கவே.? ஏதோசாமான் சக்கட்டுக்களை அதுக்கப் போட்டுட்டு போய் - அதுக்கவும் நீங்க படுத்தெழும்பிப் போட்டு இங்க வந்து நீங்க சாப்பிட்டுக் குடிச்சு இருப்பீங்களெண்டுதான் நான் பார்த்தன்! ஆனா நீ இப்பிடி இப்பிடியெண்டு இப்ப பிறகு எனக்குச் சொல்லுறாய்
66T..?
"இதில என்னம்மா வாறது.? உங்கட கண்பாக்கத்தானே நானும் அதில இந்தப் பிள்ளயளோடயுமிருந்து சீவிக்கப் போறன்! அவரும் உங்க உங்கள மாதிரி உந்தக் கடல் பக்கம் போய்த்தான் ஏதோ தொழில் பாக்கப் போறணெண்டுறார்.”
"அதுதான்கேக்க மறந்திட்டன். பிள்ள இவர் மருமகன் எங்கயடி ராசாத்தி காணேல்ல.? அந்த வீட்டிலயும் அவர் இல்ல? ஏதும் வெளியில கிழியிலயாப் போயிருக்கிறாரோ.?”
“ஓமம்மா அங்க, அந்த நந்திக்கடல் பக்கம்தான் போய் ஒருக்காப் பாக்கப்போறனெண்டு போனவர்.'
"அய்யோடி நான் காலேல அங்க மீன்வாங்கி விக்கப்போன நேரம் அவரும் என்னோட வந்திருக்கலாம் தானே.”
"என்னவோ அம்மா, அவருக்கும் ஒரு மாதிரி இப்பிடியெல்லாம் செய்ய கொஞ்சம் வெக்கம் தானேயம்மா. மேசன் வேல இவ்வளவு காலம் செய்து போட்டு இப்ப இந்த வேல செய்யிறதெண்டா. அவருக்கும் கொஞ்சம் மனவருத்தம்தான்.'
"அதுக்கென்னபிள்ள செய்யிறது.? நாங்களும் இதுகளக்கிதுகள முன்னப் பின்ன ஏதும் செய்ததே? அங்க நாங்க வயல் செய்துபோட்டும் இங்க இப்பிடி வந்து என்னதான் செய்யிறது எண்டு இப்ப இந்தத் தொழிலச் செய்து கொண்டிருக்கிறம். ஏதோ மற்றவரிட்டப் போய் இரக்காம. பிச்சயெடுக்காம, ஒரு தொழிலச் செய்து மனிசன் எண்டவன் சீவிக்கத்தானே வேணும் பிள்ள?”
9380 புதினான்கஸ் தான் சந்திரன்

“அதானம்மா நீங்கள் சொல்லுற மாதிரி அவரும் உதுகள நல்லா யோசிச்சுப்போட்டுத்தான் இப்ப இதில இறங்குறதுக்கு நிக்கிறார். நீங்க நாளைக்கு அவரக் காலேல அங்க கடற்கரைக்குப் போகேக்க கூட்டிக் கொண்டு போய் யாவாரம் என்ன எப்படியெண்டெல்லம் செய்யிறதெண்டு ஒருக்கா அவருக்குக் காட்டிக்குடுங்கம்மா."
"இதென்னடி பிள்ள! இதயெல்லாம் நான் உங்களுக்குச் செய்யாம பிறகு ஆர் உங்களுக்கு இதுகளையெல்லாம் செய்யிறது.? நானும் வருறதுகள இங்கின என்னட்டப் பொத்திப்பொத்தி வைச்சு என்ன பிறகு கோட்டையே கட்டப்போறன்.? அதயும் உங்களிட்டத்தானே தருவன்.?”
தாய் அப்படிச் சொல்ல, கெளரிக்கும் முகம் உடனே பூவின் திறப்பாக மலர்ந்தது. என்றாலும் தலைக்குள் குடுகுடுவென்று பேன் ஓடுவது போல திரும்பவும் அவளுக்கு வீடு மாறுகிற அந்த யோசனை ஊற்றெடுத்து வந்துவிட்டது.
"அம்மா இதயும் நாங்க இண்டைக்கு செய்யிறமம்மா. நாள வளக்காம இண்டைக்கே நாங்க அந்த வீட்டில போய் இரவும் அங்க எங்களுக்குச் சமைக்கிறமம்மா..?”
"அடியேய் நீ உன்ர அப்பா மாதிரி ஒரு வைரம் பாஞ்ச விறகு மாதிரித்தான். என்ன உது ஒரு பிடிச்சிராவித்தனம்? - இப்பிடி ஒரு குணம் அப்பிடியென்ன உனக்கு சரி சரி என்ன செய்யிறது. நீ எதுக்கும் அடம் பிடிக்கிற ஒரு பிள்ளதானே. என்னவோடி பிள்ள நீ இனி உன்ர விருப்பத்த விடவே மாட்டாய்! அது என்னவோ உன்ரகின்ர விருப்பம்படியாச்செய் இனி!”
'தாயும் பிள்ளயுமெண்டாலும் வாயும் வயிறும் வேறயாம். ஆ. சரி சரி” என்று கனகம்மா தானும் மகளுக்கு ஒத்ததாய், விருப்பமாய் இதைச் சொல்லிவிட, - கெளரிக்கு அதைக்கேட்டதும் மிகவும் சந்தோஷமாகவிருந்தது. மரத்தின் தாழ்ந்த வாகான கிளையில் உட்கார்ந்தவாறு தான் இப்போ ஊஞ்சலாடிக்கொண்டிருப்பது போல அவளுக்கும் ஒரு சுகம்!
(முற்றத்தில் வண்ணத்திப் பூச்சியை துரத்தித் துரத்தி அதற்குப் பின்னால் ஒடுப்பட்டுத்திரிந்த கெளரியின் மகன் இவ்வேளை சறுக்குப்பட்டு கிரவல் மண்ணில் விழுந்தான் - விழுந்த கையோடு அவன் ஒரே கத்தலான பெரிய அழுகை,
கெளரி உடனே இருந்த இருக்கையால் இருந்து எழும்பி வீட்டு வாசல் தட்டிக் கதவடியில் நின்று வெளியே பார்த்தாள். விழுந்து கிடந்து கத்திக் கொண்டிருந்த அவனை உடனே தூக்கிவிடப் போகவில்லை அவள்.
80cmyö o39o

Page 28
"அட சனியனே குழப்படிக்காறா. உன்னயடா ஒரு Liloo600IшшпLT உழவுக்குக் கட்டிவிட வேணுமடா. எழும்படா நீவிழுந்த இடத்தால இருந்து.'
- என்று சொல்லி அவள் சத்தம் போட்டாள். அவள் அப்படி பெரிதாய்ச் சத்தம்போட்டுப் பேச. கனகம்மா உடனே வீட்டிற்குள்இருந்து வெளியே ஒடி வந்து விழுந்து கிடந்த தன் பேரனைத் தூக்கினாள். அப்படியே அவனைத் தூக்கித் தன்இடுப்பில் வைத்துக் கொண்டு; அவனின் முழங்கால் மண்ைைணத் தட்டினாள்.
“தேய்ச்சதோ ராசா. காயமே எங்கட பிள்ளைக்கு.?”
"இள்ள இள்ள.”
என்றான் அவன்.
" நீ இந்தக் குஞ்ச நெடுகலும் திட்டித்திட்டித்தான் அவனுக்கு இப்பிடி வருகுது..?”
என்று மகளைப்பார்த்துக்கொண்டு அடங்கிய குரலில் இதை சொன்னாள் அவள். விழுந்த காரணத்தால் பையனுக்கு இப்போது தான் கூடியதாய் எரிச்சல் முழங்காலில் பிறந்தது. அவன் "உள் ஊவ்.கஊவ்”. என்று முனங்கிக் கொண்டு பாட்டியின் கழுத்தைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அவள் தோளிலே தன் தலையைச் சரித்துப் படுத்துக்கொண்டான். விடாத மழைத்தன்மையாக பிறகு அவன் கனநேரமாய் அழுது கொண்டேயிருந்தான்.
8
அன்று பின்னேரமே வீடு மாறி இருக்க வந்து விட்டதில், கெளரிக்கு அது பெரிய மனச்சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு நேரத்துக்கும் ராஜன் கெளரியுடன் அந்தப் புதுக் குடிசை வீட்டிலிருந்து எல்லா உதவி ஒத்தாசைகளையும் தன்மனைவிக்குச் செய்து கொடுத்து விட்டு வெளியாலே இப்போது தனக்குச் சினேகம் பிடித்துள்ள பாலாவோடு இருந்து கதைத்துக் கொள்ளப் போய் விட்டான் மேற்கு வானத்தில் பளபளக்கும் வண்ணமயமான நிறங்களைப் பூசியதாயப் பிறகு அஸ்தமித்துவிட்டான் சூரியன். கெளரி இருட்டி வர கைக்குத்து விளக்கை எடுத்து அதற்குத் திரியையும் வெளியே கொஞ்சம் உயர்த்தி இழுத்துவிட்டு பிறகு விளக்கை ஏற்றினாள். வேளைக்கே அந்தப் பொழுதில் கனத்த இருட்டுத்தான்! வெளியே பெரிய பெரிய மின் மினிப்பூச்சிகள் நகர்ந்து கொண்டிருப்பது மாதிரி அவளுக்கு வாசலால் பார்க்கத் தெரிந்தன.
அந்த இருட்டு வேளையிலே வெளியே வீதியிலே நடந்து போய்க் கொண்டிருந்த இருமனிதர்களிடமிருந்து கெட்ட தூஷண வார்த்தைகள்
9*99 ශුෂ්ෂ්ෂ්ෂග්හී ෆෙ, ජේත්‍රීෂ්

நிறைந்து வழிந்தன. அவளுக்கு அதைக் கேட்க மனதில் வெக்கையடிக்கத் தொடங்கியது. தன் பிள்ளைகளை அவள் உடனே பார்த்தாள் " சீ. இப்பிடி தூஷணம் கொட்டிக் கொண்டுபோதுகள்.!’
என்று தன் பாட்டுக்கு சொல்லிவிட்டு.
"தம்பி சின்னவன் இங்க இதில வா?’ என்று சொல்லி மகனைத் தன் அருகில் கூப்பிட்டு, அவனுக்குச் சூட்கேசுக்குள்ளால் இருந்து எடுத்த தோய்த்து மடித்து வைத்திருந்த கால்சட்டைசேட்டை போட்டுவிட்டாள். பிறகு மகளையும் "இங்க வாம்மாராசாத்தி?” என்று கூப்பிட்டு தன்னருகில் நிற்க அவளை வைத்துக் கொண்டு, அவளுக்கு வட்ட வட்டக் கறுப்புப் புள்ளிகள் போட்ட பட்டுக் கவுணைபழைய போட்டிருந்த சட்டையை கழற்றி விட்டுப் போட்டுவிட்டாள். புதுச்சட்டை போட்டதும் கெளரியின் பெட்டைக்கு ஆகப் பெரிய சந்தோஷம் தான். அவள் உடனே தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டு தன் காதுகள் வரை வாயை விரித்துக் கொள்கிற மாதிரியாய் ஒரு சிரிப்புச் சிரித்தாள்.
"அச்சா பிள்ளைக்கு இப்ப புதுச்சட்டை போட்டது சந்தோஷம் தானே.”
தன் இரண்டு கைகளாலும் மகளின் தோள்களை இறுக்கிப்பிடித்துக் கொண்டு உற்சாகமாக இதை மகளிடம் கேட்டாள் அவள்.
ராசாத்தி உடனே அம்மாவை பார்த்துக்கொண்டு அவளின் கை உலுக்கலிலே தானும் தலையை ஆட்டியபடி சிரித்தாள். தங்கைக்கு இப்படி அம்மா சொல்வதை பார்த்துக்கேட்டுக்கொண்டு தானும் தன் கால்சட்டையை குனிந்து பார்த்துக்கொண்டான் செல்வம். அவனுக்கும் தனக்குள்ளேயான ஒரு மனத்திருப்தி எனக்கும் போட்டிருக்கும் இந்தச் சட்டை - "நல்ல அச்சாதான்” என்று அவன் நினைத்துக் கொண்டு வலக்கையால் அவன் தன் வயிற்றுக்கு மேலே உடுப்பைத் தடவினான்.
"இந்தா இனி ரெண்டுபேரும் ஒரு கரைச்சல் குழப்பம் எனக்குத்தராம அந்த மூலையில இருந்து வடிவா விளையாடுங்கோ? நான் இனி ரவைக்கு எங்களுக்கெல்லாம் சாப்பாட்டுக்கு புட்டு அவிக்கப்போறன்.”
என்று அவள் சொல்ல
"அதிலயாம்மா..?”
என்று உடனே மகன்கேட்டான்
"ஓ அதில தான்! தங்கச்சிக்கும் கரைச்சல் குடுக்காம சண்டை பிடிக்காம நீ இருந்து அங்க சேந்து அவளோடயா விளையாட வேணும். விளங்குதே.?”
6.9emy.) O 41 O

Page 29
“ub...!”
"அப்ப அந்த அந்த மூலையில போய் ரெண்டு பேரும் இருந்து விளையாடுங்கோ.?”
- இருபிள்ளைகளும் அவள் சொன்னதோடு அவ்விடத்தே போகத் தொடங்க.
“தங்கச்சிக்கு என்னத்தத்தர வைச்சு விளையாட?” என்று அவள் மகளைப் பிறகு பார்த்துக்கேட்டாள்.
“எனக்கு விளையாட என்ரய அந்தப் பாப்பிள்ளை"
"உனக்குத் தம்பி.?”
“எனக்குப்பட்டம் அந்தப் பட்டம் என்ர பட்டம்.”
"அவனும்சொல்ல, கெளரி உடனே சூட்கேசின் மேலே வைத்திருந்த
அவர்களின் விளையாட்டுச் சாமான்களை எடுத்து அவர்களின் கையில் கொடுத்தாள்.
"அப்ப இனி விளையாடுங்கோ என்ன? அம்மா இனி என்ர வேலய இருந்து பாக்கிறன் என்ன..!”
- அவள் சொல்ல இரண்டு பேரும் ஒரே நேரத்தில்.
“ஓம். ஓம்.!” - என்று சொன்னார்கள். அவள் பிறகு பிள்ளைகள் இருந்து கொண்டிருந்த அந்த இடத்துக்குப்போய் கைவிளக்கை அவர்கள் இருந்த இடத்துக்குக் கொஞ்ச தூரம் தள்ளி வைத்துவிட்டு வந்து அடுப்படிப் பலகையில் குந்தி இருந்தாள். "அம்மாவுடன் கிட்டவாய் இருக்க வந்து விட்டேன்” - என்ற நினைப்புகள் அவளுக்கு சுகத்தின் சிந்தனைகளாய் இருந்தன. இந்த நினைப்புக்களிலே தலைமீது நிலவு உதித்தது போல, அவளுக்குக் குளிர்மையாகவும் இருந்தது.
‘விளக்குப் பிடிச்ச மண் எண்ணைக்கை!" என்ற நினைப்பும் இதற் குள்ளே திடீரென அவளுக்கு வந்து சேர- வெளியே முற்றத்தடிக்குப் போய் சோப்புப் போட்டும் கைகழுவிவிட்டும் வந்து அந்தப் பலகையிலே அவள் இருந்தாள்.
பெரியபாரத்தை இழுத்து வந்த வண்டில் மாடு மாதிரி, ஒரு பெரிய மூச்சு விட்டுவிட்டு, திருவலையில் தேங்காய் திருவுகிற வேலையை தொடங்கினாள் அவள். திருவலைப் பல்லுகள் நல்ல கூர் என்பதால், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வேதனை இல்லாமல் தேங்காய்ப்பூ பாத்திரத்தில்துருவி எடுத்துக் கொண்டாள் அவள்.
o 42 O අභ්‍රෂ්ෆ්ෂෙව් ෙෆ්, ජේත්‍රීෂ්

'சொறிஞ்சு கொண்டு கிடக்கிற மாதிரி இதிலே அடுப்படிக்குப் பக்கத்தில நெடுகவம் நான் கிடக்கப் பிடாது. கெதி கெதியா வேல முடிய வேணும்.!
இதை தனக்குத்தானே சொல்வதாகவும், அதைத் தானே கேட்ப தாகவும், இருந்து கொண்டு, அடுத்த வேலை என்ன என்று நினைக்கின்ற அளவுக்கு தேங்காய் துருவுகிற வேலை முடிந்து விட, பிறகு அவள் பிட்டு அவிக்க கோதுமை மா குழைக்கத்தொடங்கினாள். கொஞ்சம் சுடுதண்ணிர் பனுக்கிப்பனுக்கி உருண்டை உருண்டையாய்ப் பிடித்த பிறகு உலுர்த்தி உடைத்து சிதறப்பண்ணி சுளகில்கிடந்ததுகளை பேணிச் சுண்டால் அவள் கொத்தத் தொடங்கினாள். ஒரு படியாக இந்த வேலையெல்லாம் முடிந்து குழலில் போட்ட மாப்புட்டும் தேங்காய்த் திருவலும் அடுப்புப்பானைப் பிட்டுக்குழலின் ஆவியில் கிடந்து அவியத்தொடங்கிவிட்டது.
“ராவைக்கு இந்தக் கோதுமைமாப் புட்டுக்கு மத்தியானம் நான் சமைச்ச சுண்டவைச்ச மீன் குழம்பும் பெரியலும். தின்ன நல்ல ருசியாத்தான் எங்கள் எல்லாருக்கும் இருக்கும். அது என்னவோ மணியந்தோட்டத்தில இருக்கேக்கிள்ள நாங்கள் அங்க வாங்கிச் சாப்பிட்ட அந்தக் கடல் மீனைவிட இங்கத்தைய நந்திக்கடல் மீன் ஒரு நல்லேய் ருசியாத்தான் இருக்கு.”
- என்று சாப்பாட்டு நினைவுகளையும் நினைத்தபடி, நெஞ்சிலே அவற்றை வைத்துக்கொண்டு தொடர்ந்து அடுப்பு நெருப்பையே, பார்த்தபடி அவள் யோசனையில் இருந்தாள். சந்திரனிலே கறை இருப்பது போல அவளது நெஞ்சிலும் இடம் பெயர்ந்து வந்ததான அந்தக் துக்க நினைவுகளும் இருந்து கொண்டிருந்தன.
இந்த நினைவுகளிலே நெருப்பைப் பார்ப்பதிலிருந்து அவள் கண்பார்வை அகன்று விடவில்லை. எங்கே தன் நினைவு போகிறது என்று அவளுக்குக் இப்போது ஒன்றுமே விளங்கவில்லை. ஆனாலும் அவள் புருவங்கள் ஏறியும் இறங்கியும் வந்து கொண்டிருந்தது. அடுப்பு வெக்கை அவளுக்கு காலில் சூடாய் விழுந்து கொண்டிருந்தது. பிட்டு ஆவிவரும் மணம் தான் இப்போ மணக்க வேண்டும். தேங்காய்ப்பூவும் சேர்ந்து அவியும் போது அதுவும் சேர்ந்து ஒரு சாப்பாட்டு வாசமாய்த்தான் இருக்கும்! ஆனால், “முகர்ந்து அறியாத ஒரு கெட்ட எரிந்த மணமாய் என்னதான் அது.?”
IDனதில் கலக்கத்துடன் உடனே அவள் பிள்ளைகள் இருந்து கொண்டிருந்த இடத்தைத் திரும்பிப்பார்தாள். 'ஆ என்ன இது நெருப்பு ஏதோ அந்த இடத்தில் ஊற்றப் பெற்று வளர்ந்தது போல நெருப்பு எரியுதே ஐயோ என்ர பிள்ள தான்! ஐயோ ஐயோ. ”. என்று அவள் பெரிதாக குழறிக் கத்திக்கொண்டு ராசாத்தியின் அருகிலே போனாள். விளக்கு விழுந்து
6.9emony) O 4З О

Page 30
கிடந்த அந்தப் பக்கத்தில் தன் பிள்ளையின் சட்டையும் பெரிதாய் எரிவதைக் காண அவளுக்கு குழற முடியாமல் தொண்டையும் அடைத்து விட்டது. அவள் உடனே துடைப்பக்கம் பிள்ளைக்கு கவுண் எரிந்து கொண்டிருந்த இடத்திலே கையாலே அதை நூர்த்து அணைத்து விட அடித்து தட்டினாள். ஆனால் இப்போது பிள்ளையின் கீழ்ப்பாவாடைச் சட்டையில் நெருப்பு விளாசி எரிந்தது. பிள்ளையவளோ ஆனால் அழவேயில்லை. அவ்வளவுக்கு அவளுக்கு அதிர்ச்சி! அவள் எழுந்து வீட்டு வாசலுக்காலே இருந்து வெளியே ஒடத்தொடங்கினாள். "ராசாத்தி ஐயோ ஐயோ நில்லு.’ என்ற வாறு படக்கென்று கெளரியும் அவளுக்குப் பின்னாலே ஓடினாள். அவளுக்கு எப்படியோ ஒரு யோசனை இந்த நேரமாய் வந்தும் விட்டது. பிள்ளையை அப்படியே மெதுவாக தள்ளிவிழுத்தி மண்ணிலே அவளை உருட்டினாள். துடைப்பக்கம் உள்ள கீழ்சட்டையில் தான் நெருப்பு எரிய ஆரம்பித்தால் மண்ணில் பிள்ளை உருட்டப்பட்டபோது நெருப்பும் ஒருவாறு நூர்ந்து விட்டது. தன்கையாலும் அவள் அப்பொழுது நெருப்பை அணைத்துப் பொத்திப்பொத்தி வைத்ததால்கையிலும் அவளுக்கு நெருப்புச் சூடுபட்டு வெந்து விட்டது.
ராசாத்தி இப்பொழுதுதான் பெரிதாக அழத்தொடங்கினாள். "ஐயோ என்ர பிள்ள நெருப்பில எரிஞ்சுபோட்டுது அம்மாளாச்சி நான் என்னசெய்வேன் ஐயோ!” என்று கெளரியும் அப்போது குழறியதாய் அழவும்; கனகம்மாவும்தன் வீட்டுக்குள்ளால் இருந்து ஒன்றும் அறியாத அளவுக்குப் பெரிதாகக் கத்திக்குழறிக் கொண்டு மகள் நின்ற றோட்டுப்பக்கம் வந்தாள்.
"ஐயோ என்ன நடந்த்து என்ர பிள்ளைக்கு.?”
”ஐயோ அம்மா ஐயோ! என்ர பிள்ள நெருப்பில எரிஞ்சு (3UT'LT6TibLDT.'
"ஐயோ கடவுளே! என்ர கடவுளே! முருகா முருகா! என்னடி பிள்ள நடந்தது. அப்பிடி.?”
"அது ஐயோ என்ர அம்மா அந்தக் கை விளக்காக்கும் சரிஞ்சு பிள்ளையடியில விழுந்து நெருப்புப் பிடிச்சுட்டம்மா. என்ர பிள்ள பிள்ள அக்கக்கக்கக்.”
’ ஐயையோ இங்க என்னட்ட தாடியம்மா..! என்ர குஞ்சு இதுக்கு ஒண்டும் வாய் திறந்து அழவே தெரியாதே.? அப்பிடிப் பச்சைப் பாவம் என்ர குழந்தை ஐயோக்கக்க்கக்.”
என்று கத்திக் குழறிக்கொண்டு கனகம்மா மகளிடமிருந்து ராசாத்தியை கையில் தூக்கி வாங்கி தன் தோளில்போட்டுக் கொண்டாள்.
எரிப்பட்ட வேதனையின் விளைவான, அனுங்கல்கள் அழுகையாய் ராசாத்தி அழுது கொண்டு, அம்மாவின் தோளிலே தலையைத் தொங்கப் போட்டபடி படுத்துக் கொண்டாள்.
0449 புதினான்காம் தான் சந்திரன்

“ஐயையோ இப்ப என்ன செய்யிறது ஆசுப்பத்திரிக்குக் கொண்டு (8 JT6 (3LDIT...?"
கனகம்மா அழுகைக் குரலுடன் மகளைக் கேட்க,
"அங்க வீட்ட கொண்டு போவமம்மா உந்த சட்டையை முதலில பிள்ளைக்குக் கழட்ட வேணும்.'
என்று கெளரியும் தன் அம்மாவின் தோளிலே படுத்துக்கிடக்கும் தன்பிள்ளையின் தலையிலே கையை வைத்துக் கொண்டு பதட்டமும் துடிப்புமாக சொன்னாள்.
இந்தச் சம்பவமெல்லாம் அந்த இடத்திலே, இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தவைதான்! என்றாலும், இரவு நேரம் வெளியே வீதியில் இவர்களின் அழுகையையும் கூக்குரல்களையும்கேட்டு உத்தமன் வீட்டுத்திட்டத்தில் இவர்களின் வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர்களெல்லாம் "பக்கத்து அந்த வீட்டாருக்கு என்ன தீங்கு நடந்ததோ' - ஏதோ என்று ஒன்றும் அறியாததாய்க் கலவரப்பட்டுக்கொண்டு உடனே அதிலே அவர்களின் வீட்டுக்கு முன்னால் கூடியதாய் விட்டார்கள்.
அப்படி அதிலே வந்தவர்களெல்லம் " என்ன ஏது நடந்தது பிள்ளைக்கு?” - என்று கனகம்மாவிடமும் கெளரியிடமும் ஆளையாள் மாறி மாறிக் கேட்டார்கள். தாயும் மகளும் அழுதழுது கொண்டு அவர்கள் கேட்டவைகளுக்கு மாறி மாறி நடந்ததுகளை சொன்னார்கள்.
கனகம்மா அப்படியே தோளில் தூக்கி வைத்திருந்த பிள்ளையோடு கெளரியின் வீட்டுக்கு "கடவுளே என்ர முருகா. அம்மாளாச்சி.” - என்று உள்ள கடவுளர்களின் பெயர்களையெல்லாம் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டு உள்ளே வந்து சேர்ந்தாள். நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு கேள்விப்பட்டு உத்தமன் வீட்டுதிட்டத்தில் குடியிருக்கிற அனேகம் பேர் இப்போ கெளரியின் குடிசைவீட்டு சின்ன முற்றத்தடியிலே கூடினதாய் விட்டார்கள். அம்மாவின் பின்னாலே போன கெளரி வீட்டுக்குள்ளே போனதும் பாயை விரித்துப்போட்டாள். கனகம்மா அந்தப் பாயிலே தான் தோளிலே படுக்கவைத்துத் தூக்கிக்கொண்டு வந்த பிள்ளையை அப்படியே படுக்கவாய்க் கிடத்தினாள். படுக்கப்போட்ட பிள்ளைக்கு - சதைகள்தொடைப்பக்கம் எரிந்த விகாரமாய்த் தெரிந்தது. வயிற்றடியிலிருந்து நெஞ்சடி மட்டும் எரியாமல் தப்பித்ததாய் அங்கே பிள்ளையப் பார்த்த எல்லோருக்கும் இருந்தது.
கனகம்மா இவ்வேளை 'கோ' வென்று கதறி அழுதாள்.
“என்னம்மா செய்யிது உனக்கு? என்னம்மா செய்யிது?’ என்று பிறகு குழந்தையை அவள்கேட்க.
859селлауе о 45 о

Page 31
"எரியுத்து . எரியுத்து.”
- என்று சொல்லி ராசாத்தி அழுதாள்.
“பிள்ளைக்கு மேல் சட்டையை கழட்டுங்கோ கழட்டுங்கோ.?”
- என்று அதற்குள்ளே நின்ற ஒருத்தி சொன்னாள்.
"கத்திரிக்கோலால மேல முதலில வெட்டி உந்தச் சட்டையைக் கழட்டி எடுக்க வேணும்.”
- என்றாள் இன்னொரு பெண்
"அப்ப கத்தரிக்கோல்.”
"இந்தா கொண்டாரன்.”
- என்று சொல்லிக்கொண்டு அவள் வெளியாலே ஓடினாள்.
இந்த நேரம் தான் ராசாத்தியின் தகப்பன் - ராஜனும், சயிக்கிள் கடை வைத்திருக்கும் பாலாவும், அங்கே எங்கேயோ துரவாய் இருந்தவர்கள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அடித்துப் புரண்டு கொண்டு வந்த கணக்காய் ஓடி வந்தார்கள். வீட்டிலே வந்து சேர்ந்ததும் ராஜன் "என்ன நடந்தது? என்ன நடந்தது?" - என்று பாயில் படுக்க வைத்திருந்த பிள்ளையைப் பார்த்துக் கொண்ட கேட்டான். தகப்பனைக் கண்டு பிள்ளையும் அழத்தொடங்கினாள்.
"ஐயோ பிள்ள அந்த விளக்குத்தட்டுப்பட்டு சட்டையில நெருப்பு பிடிச்சு எரிஞ்சிட்டாள்.'
"ஐயையோ எப்பிடி எப்பிடி..?”
"இவன் செல்லம் தான் ஐயோ அந்த விளக்கத் தட்டி விட்டான்போல இருக்க வேணும்.”
"ஐயோ ஐயோ என்ர பிள்ள” - என்று அவனும் குழறிக் கொண்டு பாயில் அப்படியே இருந்து கொண்டு தலையிலே கையால் அடித்துக்
கொண்டான். கத்தரிக்கோல் எடுத்துக்கொண்டு வரப்போனவள் இந்நேரம் அங்கே வந்து விட்டாள்.
"சட்டையைக் கழற்டுவம். அப்பிடியே மேல உள்ள சட்டைத்துணிய வெட்டி விடுவம்.!” - - - என்று பல பெண்கள் சொல்லிக் கொண்டு தைரியமாக தாங்கள் அந்த வேலையை செய்யக் கூடியவர்களென்று மற்றைய வந்த மனிதர்களுக்கு காட்டிவாறு செயலில் FF(6UL தொடங்கினார்கள்.
“மை இருந்தால் நல்லம்! இந்த எரி புண்ணுக்கு போட! இந்த 9460 புதினான்காம் தான் சந்திரன்

எரிகாயத்துக்கு, அது நல்ல மருந்து..!” - என்றாள் அவர்களில் ஒருத்தி.
"அதுகும் நல்லம் - இந்தத் தேன் இருக்குத் - தேன் அதுகும் இன்னும் நல்லம்.!”
“என்ன தேனோ..?”
- என்று இன்னுமொருவள் அதைக் கேள்வியாய் அவளிடம்கேட்டு அந்தச் சொல்லை சொல்லி முடிக்கவில்லை, ஆனாலும் அவள் அங்கே சொன்ன சொல்லின் முடிவின் முன்பாக சண்முகம் அங்கே ஒரு கையில் தேன் உள்ள அந்த சுரைக்காய்க் குடுக்கையுடனும், இன்னொரு கையிலே நீண்ட அகலமான ஒரு வாழையிலையிடனும் நின்று கொண்டிருந்தார்.
"இந்தா இங்க சண்முகம் அண்ணையும் இந்தத் தருணத்துக்கு ஏதோ கடவுள்மாதிரி வந்திட்டார்.!”
- அங்கே அதற்குள் நாலுபேருடன் நின்று கொண்டிருந்த பாலாவும் அவரைக் கண்டுவிட்டு இப்படி சொன்னாலும், சண்முகம் ஒன்றும் இவ்வேளைவாய் திறக்கவில்லை.
"அப்ப வாழையிலயவில பிள்ளைய வளத்திப்படுக்க விட வேணுமோ அண்ண.?”
- சட்டையை பிள்ளைக்கு கழறறியவள் கேட்டாள்.
”ஓம் ஓம் இதிலயா வளத்துங்கோ. எரிகாயம் பட்ட பிள்ளைக்கு நீங்கள் எல்லாம் கூடியிருந்து இவ்வளவு நேரம் என்ன ஒண்டு தேவைக்கு செய்யிறியள்.? ஒருத்தரும் பிள்ளளையின்ர எரிப்பட்ட இடத்தில கை போட (36.606LTLb.'
"அதொண்டும் அப்பிடி நாங்கள் செய்யேலயண்ண.?”
“இந்தாங்க இலையில பக்குவமா இதில பிள்ளைக் கிடத்துங்கோ.?”
என்று சண்முகம் சொல்ல அதிலே இருந்து கொண்டிருந்த பெண்களும் அவர்சொன்னதை செய்தார்கள்.
கெளரி கைகள் இரண்டையும் இறுக்கிப்பொத்திக்கொண்டு நாடியிலே அப்படியே கையை வைத்து அழுத்திக் கொண்டு, நடப்பவற்றை அழுதழுது கொண்டவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். சண்முகம் அப்பிடியே குடுக்கையிலிருந்து தேன் முழுவதையும் பிள்ளையின உடம்பிலே வார்த்து 6.LLITsT.
"இனிப்பிள்ளய அங்க கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு உடனே அப்பிடியே கொண்டு போகவேனும் இப்பிடி வைச்சுக் கொண்டிருந்து ஒண்டும் பிறகு ஏலாது. கண்டிப்பா கொண்டு போயிரத்தான் வேணும்.”
ROleomy) O 47 O

Page 32
- சண்முகம் சொல்ல
“ஓம் அண்ண ஆஸ்பத்திரிக்குத்தான் நீங்கள் சொன்னமாதிரி பிள்ளய உடன கொண்டுபோகப் பாக்க வேணும்.”
என்று பாலாவும் அவர்சொன்னதுக்கு தானும் உடனே சொன்னான்.
"அப்ப பாலா பிள்ளய என்னத்தில ஆஸ்பத்திரிக்கு இங்கயிருந்து கொண்டு போற.?”
“றைக்டரிலதான் பெட்டிபூட்டினதில கொண்டு போக வேணும் சண்முகமண்ண.! வேற என்ன வாகனம் இந்த ராவில இங்க ஊருக்க எங்கயும் உடன பிடிக்க ஏலும்?”
"அப்ப றைக்டர் எண்டா..?”
"இங்க ஊர் ஆக்களிட்ட இருக்குது தானே சண்முகமண்ண கேட்டா அவயள் விடுவினம் தானே.?”
"அப்ப நீ பாலா போறியோ தம்பி றைக்டேர் பிடிச்சுக் கொண்டு வர.?”
" இந்தா நான் இப்ப போறதும் வாறதுமா வாறணண்ண.!”
- என்று சொல்லிய அந்தக் கையோடு
பாலாவும் வெளியே போய் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு உழவுஇயந்திரம் பேசிக்கூட்டிக்கொண்டு வர ஓடினான்.
- வந்திருந்த சனங்களின் கதையெல்லாம் இந்த நேரம் அங்கே.
"ஐயோ நேற்றுத்தான் இதுகள் பாவங்கள் அங்கயிருந்து இங்க உயிரைக் காப்பாத்திக் கொள்ள இந்த ஊருக்கு வந்து சேந்துதுகள், இதுகுள்ள வந்து ஆறி அமர்ந்ததாய் கொஞ்ச நாள் கூட இங்க இருக்கேல்ல! அதுக்குள்ள பாவங்கள் இதுகளுக்கு இப்படியெல்லாம் நடந்து போச்சுதே.?”
என்று கவலைப்பட்டதாய்க் கதைத்துக்கொண்டார்கள். அடுப்பு விறகுப்புகைச்சல் வீட்டுக்குள்ளே நின்றவர்களுக்கு கண்களை குத்தி எரிவுண்டாக்கியது. ஒருத்திபிட்டுப் பானையை அடுப்படியில் இருந்து இறக்கிக்கிழே வைத்தாள். - அங்கே அடுப்படியில் இருந்த சிம்மிணி விளக்கு கமறிக்கமறிப் பயந்து பயந்து எரிந்து கொண்டிருப்பதுமாதிரி இருந்தது. பிட்டுப்பானை இறக்கியவள் சிம்மணியை எடுத்து ஆட்டிப் பார்த்தாள். அடியில் கொஞ்சம் எண்ணெய் இருந்தது. அதை சாய்த்துப் பார்த்தாள். வெளிச்சம் பிரகாசமானது.
"திரி எட்டேல்லப்போல இருக்கு..!” - என்று அவள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
9489 புதினான்காம் தான் சந்திரன்

வெளியே விதியில் றைக்டர் வந்து நிற்கும் சத்தம் அப்போது கேட்டது.
" உந்த இலையோட பாயோட பிள்ளயத் தூக்கி றைக்டர் பெட்டியில படுக்க வைச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்.”
என்று றைக்டர் சத்தத்தைக் கேட்டதோடு சண்முகம் கனகம்மாவை பார்த்துச் சொன்னார்.
சண்முகம் அப்படி சொன்னவுடனே அதிலேயாய் நின்று கொண்டிருந்தவர்கள் பாயோடேயாய்ப் பிடித்து பிள்ளையை பக்குவமாய்த் தூக்கினார்கள். அந்த நேரம் ராஜனும் கெளரியும் அந்தப் பாயிலே தாங்களும் கைபிடித்துக்கொண்டார்கள்.
-குழந்தை எரிகாயத்தின் நோவில் கிடந்து அழுது கொண்டே யிருந்தாள்.
"அம்மா. என்ர அம்மாச்சி. குஞ்சு. ஐயோ என்ர பிள்ள.”
- என்று வாய் குழறிக்கொண்டு கனகம்மாவும் அவர்களுக்குப்பின்னால் போய்க் கொண்டிருந்தாள். பிள்ளையை பாயோடு தூக்கிப் போனவர்களிட மிருந்து, றைக்டர் பெட்டிக்குள்ளே பிள்ளையை எடுத்துக் கொள்ள பாலாவும் இன்னும் இரண்டு மூன்று ஆண்களும் பெட்டிக்குள் உடனே ஏறிக் கொண்டார்கள். ஏறி உள்ளே நின்ற அவர்கள் பக்குமாக பாயோடு பிள்ளையை அவர்களிடமிருந்து தூக்கி வாங்கி பிறகு பெட்டிக்குள் கிடத்தினார்கள். இப்போது தாய் தகப்பன் கனகம்மா எல்லோரும் றைக்டர் பெட்டிக்குள்ளே ஏறிக் கொண்டார்கள். அவர்களுக்குத் துணைக்குப் போகவென்று உத்தமன் வீட்டுத்திட்டத்தில் குடியிருந்தவர்கள் சிலரும் றைக்டர் பெட்டிக்குள் ஏறினார்கள் பாலா இவ்வேளை டைக்டர் எஞ்சின் பக்கத்தில் ஏறி சிறகில் குண்டியை வைத்துக்கொண்டு பொறுப்பாக இருந்து கொண்டான்.
"எங்கட சின்னப் பெடியன் செல்லத்த நீயொருக்கா கொஞ்சம் உன்னோடயாய் வைச்சிருந்து பாத்துக்கொள்ளம்மா. பெடியன் கவனம் பிள்ள கவனமம்மா..?” - என்று கணகம்மா சண்முகத்தின் மனைவி ராசமணிக்கு றைக்டர் வெளிக்கிட்டுப்போகத்தொடங்கும் போது பலத்த சத்தமாய் அவளைத் திருப்பிப் பார்த்தபடி சொன்னாள்.
"நாங்கள் பாப்பம்தானேயக்கா. நீங்க பயப்பிடாம போங்கோ. பயப் பிடாதயுங்கோ.?”
என்று ராசமணியும் உடனே கனகம்மாவுக்கும், மற்ற எல்லாருக்குமாய் அதிலே கேட்க சத்தமாகச் சொன்னாள்.
அந்த றைக்டர்! புகைக்குழலால் பல வெடிகள்போட்ட மாதிரியான
6.9emy) о 49 о

Page 33
"கட்புட்டக்டக்டக் சத்தத்தோடு புறப்பட்டது. றைக்கரின் முன்லைட்வெளிச்சம் எல்லாரின் கண்ணுக்கும் தெரியக் கூடியதாய்த், தொலைவாய்த் தொலைவாய் முன் வீதியாலே அது போய்க்கொண்டிருந்தது. அந்த இடத்தாலிருந்து றைக்டர் போன பிறகு அந்த உத்தமன் வீட்டுத் திட்டம் உள்ளபக்கமி, எங்கும் ஒன்று போல பிறகு ஒரே இருட்டாகியதாய் வந்து விட்டது.
9
அனல் பழுக்கும் வெய்யில் விலகி ஆகாயத்தில் செந் நிறக் கோடுகளும் பொன் நிறக்கோடுகளும் பிரகாசித்துக் கொண்டிருந்தன. நிழல் தருமாப்போல இருந்த அந்தப் பின்னேரப்பொழுது உத்தமன் வீட்டுத் திட்டத்தில் குடியிருந்தவர்களுக்கு நல்ல ஆறுதல் தரும் கரமாயிருந்தது. காற்றும்கொஞ்சம் வீசிக்கொண்டிருந்ததினாலே புல்லும் பூவும் தங்களுக்கு மணக்கிறதுபோல ஒரு சுகமாயும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் உள்ள அந்த இடத்தில் நின்ற நாற்பது இலையுதிர் காலம் கடந்து போன குலைகுலையாய்க் காய்க்கும் அந்தக் கிழட்டுப் புளிய மரம், சிவப்பு நரம்பு இதழ் கொண்ட மஞ்சள் மாதிரியான பூக்களை கொப்படர்ந்த இடத்திலிருந்து கீழே நிலத்தில் உதிர்த்துக் கொண்டிருந்தது.
இரவு ஏழு மணி இருக்கும் பாலாவின் சயிக்கிள் கடை நிறுத்தத்தில் தட்டிவான் ஒன்று வற்து நின்றது. பிறகு புழுதி புரண்டெழ அது நேர் வீதியால் புறப்பட்டுப் போய்விட்டது. சண்முகத்தின் வீட்டில் இவ்வேளை பெற்றோல் மாக்ஸ் வெளிச்சம் நல்ல பிரகாசமமாய் வீட்டு வாசலாலும், வெளியே நீட்டமாய் விழுந்து கிடந்தது. கிழிசலைத் தைக்கப் பாயும் ஊசிமாதிரியான ருசிப்பானமேள ஓசை காதில் விழுமளவிற்கு மிருதங்க அடியும் அங்கு நடந்து கொண்டிருந்தது.
சண்முகத்தின் வீட்டுக்குள் பாலா, ஜெயா, பத்மன்,சிவா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியாகப் பல பேர் அதற்குள்ளே இருந்தார்கள். -
அவர்கள் எல்லோரும், இங்கே சண்முகம் வீட்டுக்குள், பெற்றோல் மாக்ஸ் வெளிச்சம் தன்மேல் நன்றாக படும்படி நின்று கொண்டிருந்த அண்ணா வியாரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அண்ணாவியார் பொத்து பொத்து - என்று உடம்பில்லாமல், ஆள் அளவான உடம்பாகத்தான் இருந்தார். ஞானச் சடை முடி புனைந்த முனிவன் மாதிரியும், - இவர் பார்வைக்கு - ` அப்பிடியாய் ஆள் தோது என்றது போன்றும் அவர்களுக்கு அவரைப் பார்த்ததில் ஒரு வித நினைப்புப் போனது.
இவர்களுக்குள் ஜெயாதான் அவரின் நெற்றியிலுள்ள அந்தச் சந்தனப் பொட்டைப் பார்த்து இப்படியாகவும் நினைத்தான்.
9500 புதினான்கஸ் தான் சந்திரன்

"உவர் உந்த சந்தணப் பொட்டை வருடிவருடி இப்பிடி வட்ட மாக்கிறதுக்கு ஆள் கணக்க நிமிசங்கள் உதுக்கு மினக்கெட்டுத்தான் இருப்பாரோ” அண்ணாவியார் அப்படி நெற்றிப்பொட்டோடு மாத்திரம் காட்சி யளிக்கவில்லை. திருநீற்றுப்பட்டையெல்லாம் அடித்து, சந்தனமெல்லாம் உடம்பிலும் பூசி வெள்ளை வெளிரென்ற வேட்டியுடன், சால்வை இடுப்பிலும் கட்டித்தான் நிற்கிறார் நெஞ்சிலும் காதிலும் ரோமக்காடு பிறிம்பாய் அவரில் தெரிகிறது.
"இவ்வாறு வெளிச்சமே உருவான மாதிரி நின்ற அண்ணாவியாரை ஒரு முறை சண்முகம் பார்த்துவிட்டு முன்னால் இருந்தவர்களுக்கு சொன்னார்.
"இவர் தான் இனி எங்களுக்குக் கூத்துப்பழக்க வெண்டு இங்க வந்திருக்கிற எங்கட அண்ணாவியார். இங்கயா இந்த வன்னிக்கிள்ள முருகேசு அண்ணாவியாரெண்டா உள்ள எல்லாருக்கும் இவரை வடிவாத் தெரியும்! ஆனா அங்கயிருந்து வந்த எங்களுக்கு உங்களுக்கு மாதிரி ஆக்களுக்கு, இவர மிச்சம் கணக்கத் தெரியாதுதான்.'
- என்று சண்முகம் சொல்ல, அண்ணாவியார் தனக்கு முன்னால் அந்த வீட்டுக்குள் குந்தி இருந்தவர்களைப் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்புச் சிரித்தார். "அப்பநாங்க இனி இந்த எங்கட வீட்டுக்கு முன்னாலயா உள்ள முத்தத்தில எட்டிநடந்து போய் அங்க மணலில இருப்பமே..? அது எல்லாருக்கும் கதைக்க இருக்க லேசு. பெற்றோல் மாக்சையும் வாசலில வைப்பம்.!”
- என்று சண்முகம் பிறகு சொல்ல.
“அது தான் மிச்சம் நல்லமும்! அங்கால காத்தும் நல்லா விழும்.! தானே?”
என்று ஜெயாவும் உடனே சொன்னான். அந்தக் கதையோடு பாலா பெற்றோல் மாக்ஸை கையில் தூக்கினான். எல்லோரும் வெளியே முற்றத்தில்போய் இருக்க பாலா பெற்றோல் மாக்ஸை மெதுவாக பக்குவமாக வாசலில் வைத்தான்.
ിഖങിധേ முற்றத்தடியில் இப்போது நல்ல பிரகாசமான வெளிச்சமாயிருந்தது.
"அண்ணாவியார் நீங்க இப்ப உங்களின்டய கதய உதில இருக்கிற எல்லாருக்கும் ஒருக்கா விவரமா கேக்க சொல்லுங்கோவன்.”
- என்று சண்முகம் அண்ணாவியாருக்கு சொன்னார்.
“என்னத்தா நான் சொல்ல வெண்டு கேக்கிறியள் சண்முகம்.?”
6.9emayl) O 51 O

Page 34
"அதுதான் கூத்தைப் பழகுகிறதுக்கு அதற்கான ஒழுங்குகளையும் ஒருக்கா எல்லாருக்கும் சொல்லுங்கோ! மற்றது வந்து, உங்கட பிரச்சினைகளையும் அதோட சொல்லுங்கோவன்.?
"அத இண்டைக்கே இப்பயே எப்பிடி நான் சொல்லுறது தம்பி! இன்னும் ஒழுங்கா இங்க ஆக்களும் வந்தும் சேரேல்லயே இதுகளப்பத்தி கதைக்க.?”
"அதென்ன இங்க பக்கத்தில பக்கத்திலதானே அண்ணாவியார் இங்கனேக்கயா எல்லாரிண்ட வீடுகளும் இருக்கு அப்பிடி நீங்க உந்த கணபதி காப்பு, விநாயகர் காப்பு எண்டு அத நீங்கள் படிப்பியள் தானே இப்பிடி பொழுதுபடவா கொஞ்சம் நாளைக்கு என்ன..!”
G6
ஓ அப்பிடிப்பத்து நாளைக்கு நாங்க இந்தக் காப்பு மட்டும் படிக்கிறதுதான்! அந்த காப்பு படிக்கிற நாளைக்கு கேள்விப்பட்டே இங்க கூத்துப் பழக விசுவாசத்தோட இருக்கிற ஆக்கள் வந்து சேந்திடுவினம் தானே.”
"ஒ இங்க அப்பிடித்தான் ஆக்கள் பக்கம் பக்தில இருக்கிறதால வந்து இங்க கட்டாயம் சேந்திடுவினம். ரவுண் பக்கத்திலதான் அங்கனேக்க இங்கனேக்கயெண்டு நடிகர்மார் இருப்பினம். அவயளத் தேடித்தேடிப்போய் அங்கினயெண்டா சொல்லவேணும். ஆனா இங்க அப்பிடி இல்லத்தானே? இப்பிடி கிராமப்புறமான இடங்களிலகேள்விப்பட்டே ஆக்கள்மார் வந்திடுவினம் தானே கூத்துப்பழக.!"
“ஓம் தம்பி சண்முகம்! நீங்கள் சொல்லுறது சரியான ஒரு கததான். ஆனா உதுகள் எல்லாத்தையும் விட இப்ப ஒரு முக்கியமான கதையொண்டும் ஆருக்கும் இங்க விளங்கமா சொல்ல வேண்டியும் கிடக்கு. இப்ப நாங்கள் கூத்துப் பழகிறதுக்கு முன்னால பத்து நாள் தொடந்து காப்பு படிக்கிறதுக்கு இருக்கிறம் தானே. இப்பிடி நாங்கள் இந்த பத்து நாள்காப்பு படிக்கிறதில ஏதும் ஒரு பிழைகிழை எங்களிட்டயா இருந்தா ஊருக்குள்ள வருத்தம் துன்பமெண்டு இதுக்குள்ள அப்பிடியே உடன எங்களுக்குக் காட்டிப்போடும். அல்லாம சுத்தம் பத்தமா இதுகள நாங்க செய்தா கிராமத்தில இங்க வருத்தம் கிருத்தம் வராம இருக்கும். அப்ப உடன நாங்க நினைக்க வேண்டியதுதான் அம்மாளாச்சி எங்கடயதுகள ஏத்துக்கொண்டா இனி நாங்க கூத்துபழகி படிக்கலாமெண்டு.”
“ஓம் அண்ணாவியார் அது கட்டாயம் இங்க சொல்லத்தானே வேணும்.! எல்லாரும் இதை அறிஞ்சதெண்டும் இல்லத்தானே.”
“ஓம் தம்பி பின்ன . இது சொல்ல வேண்டிய கத முக்கியம்தானே.? காத்தான் கூத்து மற்றய கூத்துதுகள் பழகிறமாதிரி என்ன ஒரு விளையாட்டே? இந்தக் கூத்து பழக முதல் கோயிலுக்கு அண்ணாவியோட நடிகர்மாரெல்லாம் போய் அங்க கும்பம் வைச்சு, திருநீறு பூசாரியாரிட்ட வாங்கித்தானே பிறகு
9929 புதினான்காம் தான் சந்திரன்

எல்லாம் பழகுறதுவழமை! இதில சண்முகம் தம்பி பாரும் - DTf எண்டா என்ன எண்டு உங்களுக்கு தெரிஞ்ச ஒரு கருத்த இங்க ஒருக்கா சொல்லுங்கோ பாப்பம்.?”
"நீங்கள் அண்ணாவியார்தானே சொல்லுங்களன் அதயும் நீங்கள் முருகேசண்ண.?”
"ஒ சொல்லுவம். மாரி எண்டு சொல்லுறது மழைதான் சண்முகம் தம்பி! மழைக்குக் கடவுள்தான் இந்த மாரி எண்டுறதெய்வம் கண்டியளோ..? அப்ப நாங்கள் இதுகள பயபத்தியா செய்தா ஊருக்கயும் இங்கயா மழையும் பெய்யும் ! அதுக்காவும் தான் இப்பிடி கூத்துப் பழகிப்போடுறதும் நடக்கிறததுதானே சண்முகம்.!”
- அண்ணாவியார் இப்படி கூத்துப் பழகிறதிலே உள்ள நன்மைகளையும் நடிகர்மாருக்குள்ள சட்டம்திட்டம் கட்டுப்பாடுகளையும் விபரமாய்ச் செல்லிக்கொண்டுவர, அவைகளை ஒரு சுமைகளாகவும் தாங்கள் நினைத்துக்கொண்டு அவர் சொன்னவைகளையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள் முன்னால் இருந்தவர்கள்.
அவர்களிடம் அமுங்கிக் கிடந்த மொத்த மெளனத்தை புதிதாக அங்கே வந்திருந்த கணேசு உடைத்தான். -
"அது சரி அண்ணாவியார்! கூத்துப்பழகின ஒரு பாதியில பிறகு முறிச்சுக்கொண்டு தாங்கள் வராம நிண்டிடுறவியளிண்ட பிரச்சனையையும் கடமையா இப்ப சொல்லிவிடுங்களன்.
- என்று அவன் சொல்ல
“தம்பி சொன்னதும் சரி. நல்ல இடத்துக்கு கதையில வாறிர் இப்ப நீர்! நீர் முந்தித் தம்பி இந்த காத்தான் கூத்து பழகி பாடினணிரோ?”
- என்று அண்ணாவியார் உடனே அவனைக் கேட்டார்.
"ஓம் ஐயா செய்ததுதான்.”
"அது தானே இப்பிடி அனுபவத்தில நீர் இருந்ததால உடன இப்பிடி ஒரு கதையைக் கேட்டீர்..? சரியான ஒரு கேள்விதான் தம்பி நீர் இப்பக் கேட்டது.? கூத்து இப்பிடி எல்லோரும் சேந்து பழகிறதெண்டாத்தம்பி அது இந்தக் குருவியள்பாருங்கோ இருக்கு, அதுகள் இறகுகள் தும்புகள் கொண்டு மெய்வருந்த கூடு கட்டுற மாதிரித்தானே ஒரு கஷ்டமான வேல.! அப்பிடிப்பட்ட ஒண்டை ஒருத்தர் இருந்து குரங்குமாதிரி பிச்சு சிதைச்சு எறிஞ்சு போட்டுப் போனா மாதிரிபோனா என்ன மாதிரி இதப்பழகிற வேற ஆக்களுக்கும் அதோட சம்பந்தப்ட்ட ஆக்களுக்கும் இருக்கும் எண்டு நீங்களும் யோசிச்சுப் பாருங்களன்.?”
6.9eman.) O 53 O

Page 35
é % ஓம் அது ஒரு சரியான வேலயே. அத பிறகு மனம் தாங்கேலுமே மற்றவயஞக்கு.?”
- என்று அண்ணாவியார் சொன்ன கதை முடிவோடு சண்முகமும் இதை சொன்னார்.
"அது தான் தம்பி சண்முகம், அது நீங்கள்மட்டும் ஏன் நான் மட்டும் மனசுக்கு தாங்கிறதெண்டில்ல. இப்பிடி உடைச்சுப் பிடைச்சுக் கொண்டு போற ஆக்களில அம்மாளாச்சியின்ர கோவமும் அந்த மின்னலில சேத்துக் கொண்டு இறக்கின மாதிரி அப்பிடியே வந்து இறங்கீடும் கண்டியளோ..?
- என்று அவர் சொல்ல, அதை கேட்டுக்கொண்டிருந்த ஜெயாவுக்கு சாவோடு கைகுலுக்க வந்தது மாதிரியான ஒரு நினைவில் நெஞ்சில் மூச்சு முட்டிமுட்டிவந்தது. சண்முகம் இந்த நேரம் தானும் ஒன்றைச் சொன்னார்.
“ஆருக்கும் இதுக்குள்ள ஒரு 'கஷ்ட நஷ்டம் எப்படியும் சிலவேளைவாறதுதான்! அதால பழகுற ஆள் பிறகு என்ன தான் செய்யிறது.? அப்பிடி என்னவும் கரைச்சல் வந்தா இங்க ஒத்திகைக்கு வாராமலும் அவர் விட வேண்டியும் வரலாம் தானே? எண்டாலும் பழகிற ஆள் இடையில எண்டாலும் அதை நேரத்துக்கு வந்து இங்க எங்களிட்ட சொல்லிப் போட வேணும் என்ன?
" ஒ ஓ அப்பிடித்தான்! பின்னத்தம்பி சண்முகம் நீர் சொன்ன 2 -gbli5(35 நானும் இப்ப நல்லவிபரமா சொல்லுறன். இதையெல்லாம் கூத்துப் பழகிற ஆள். முன்னம் முன்னையா எல்லாம் யோசிச்சுத்தான் பிறகு இறங்கவேணும் என்னதம்பி இது ஒரு முக்கியமான ஒரு விஷயம் தானே? கூத்துப் பழகி இடையில நிக்கிறதெண்டாலும் தனிய இங்க வந்து என்னட்டயும் இங்க உள்ள எல்லாரிட்டயும் சொல்லி மாத்திரம் வேலயில்ல. இப்பிடி அவர் கூத்துப் பழகிற இடையில நிப்பாட்டுறதெண்டா அங்க அம்மாளாச்சி கோயில போய் ஒரு பரிகாரமும் செய்ய வேண்டியிருக்கு. காலேல அப்பிடி யானவர் தலையில தண்ணிய ஊத்தி முழுகிப்போட்டு வெள்ளை வேட்டியும் கட்டிக் கொண்டு அங்க போய் கோயில கற்பூரம் கொளுத்தி கும்பிட்டும் போட்டு வரவேணும். அப்பிடிச் செய்தாத்தான் அம்மாளாச்சி கோபம் வராம குத்தம் பொறுப்பா. இது புராண கால கூத்து கண்டியளோ? அதால தான் பயபத்தியாயிருக்க வேணுமெண்டும் சொல்லுறது. இப்பிடி அப்பிடி விளையாட்டா எண்ணி, வந்ததும் போனதுமாயெண்டு இந்த கூத்துப் பழகிற விஷயத்தில ஆரும் முசுப்பாத்திவிட்டுக் கொண்டு இருக்கேலாது கண்டியளோ..?”
- என்று இப்பிடி அண்ணாவியார் கூத்துப்பழகிறதில் உள்ள சிரமம் தரும் பிரச்சனைகளை எடுத்து விபரமாய் தனக்குமுன்னால் கேட்டுக்
9540 புதினான்கஸ் தான் சத்திரன்

கொண்டிருந்த அவர்களுக்கு பிட்டுப் பிட்டு வைத்த மாதிரி சொன்னாலும், அதைக்கேட்டதில் தங்களுக்குள்ள பயத்திலும் கூட அவர்கள் கூத்துப் பழகிறதிலேயே தங்களுக்கு விரும்பமுண்டானவர்களாகவே காணப்பட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் இப்போது நாட்டுக் கூத்து நடிக்கும் ஆசையானது பாரமற்ற பூமூடைகளுடன் தலையின் மேல் அமர்ந்ததாய் இருந்துகொண்டிருந்தது. கூத்துமேடையில் தாறுபாய்ச்சிக் கட்டிய அலங்காரத்துடனும் வர்ணக்கலவை பூசிய முகத்துடனும் அப்படியே அலங்கரிப்பாய் வந்து உடுத்திய மெல்லிய பட்டு ஆடைகளும் ஆட ஒவியத்திரைச் சீலைகளுக்கு முன்னே கூத்துப்பாட்டுக்கள் படிப்பது, அலங்கார நடை நடப்பது போன்ற நினைப்புகள் அவர்களுக்கு நினைவில் நீண்டு கொண்டிருந்தன.
காத்தான் கூத்தில் பாவிக்கப் படும் முக்கிய அந்த உடுக்கு ஓசை, அவர்களுக்கு காதில் விழுந்து கொண்டிருப்பது மாதிரி, நினைப்பில் நகர்ந்து கொண்டிருந்தது.
நினைவில் இவையெல்லாம் காட்சி தந்தமாதிரி அவர்கள் கூத்துக் கனவோடு இருக்க, அண்ணாவியார் அவர்களின் யோசனைக் கனவுகளை அவ்வேளை குழப்பினார்.
66
என்ன இப்பிடி நீங்கள் எல்லாம் ஒண்டும் பேசாதமாதிரி வாய மூடிக்கொண்டு சும்மா இருந்தா.'
என்று சொன்னவள் உடனே சண்முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.
“ஓம் ஓம் நீங்களும் உங்களிண்டய அபிப்பிராயத்தைய அண்ணா வியாருக்கு இதில சொல்லுங்களன் தம்பிமார். ஜெயா, பாலா, கணேசு, கோணேஸ் இன்னும் மற்றத்தம்பிகள் எல்லாம் நீங்க என்ன சொல்லப் போறியள் உங்கட யோசனையள .?” “உங்களுக்கு என்ன யோசனையோ கீசனையோ என்னத்த அண்ணாவியாரிட்ட இப்ப கேக்க வேணுமோ எல்லாம் அவரிட்ட கேளுங்களன்.'
என்று சண்முகம் அவர்களைப்பார்த்துச் சொல்ல, அங்கே இருந்த கோணேஸ் உடனே எழும்பி நின்றான். அவன் என்ன சொல்லப் போகிறான்? என்று அந்த நேரம் எல்லோரும் அவனைப் பார்த்தார்கள். அண்ணாவியார் எல்லோரையும் விட கோணேசின் முகத்தைத் தன்பார்வையை விரித்து மிக அக்கறையாகப் பார்த்தார். கோணேசும் அண்ணாவியாரின் முகத்தைப் பார்த்தான். சண்முகத்தையும் ஒரு தடவைபார்த்தான். அதையடுத்து அவன் சொன்னான்.
“தேவலோகக் கதையளோட துவங்கி வாற இந்தக் காத்தவராயன் கூத்தை நானும் கணக்க இடத்தில எங்கட திருகோணமல ஊருக்குள்ள நடிச்சிருக்கிறன் தான். அங்க எங்கட குச்சுவெளி, திரியாய், தென்னமரவாடி,
6.9emayl) O 55 O

Page 36
நிலாவெளி, சாம்பல்தீவு எண்டு அங்கயெல்லாம் நடந்தகூத்துக்களில நானும் கூட படிச்சு நடிச்சிருக்கிறன். ஏன் நான் இதை சொல்லுறனென்டா எனக்கு இந்த காத்தவராயன் கூத்து புதிசில்ல. ஆனா எனக்கு இவர் எங்கட அண்ணாவியார் தான் இப்பப் புதுசு. ஏனெண்டா இந்த இடத்துக்கிடம் அண்ணாவிமார் வேறவேறமாதிரித்தானே மெட்டுகளோட படிச்சு ஆக்களுக்கு பழக்கிக்குடுக்கிறவயள்.'
என்று காத்தவராயன் நாட்டுக் கூத்தை தானும் தெளிவாய் அறிந்தவன்தான் என்பது போல நுட்பமாய் கோணேஸ் ஒரு கதையை சொல்ல, அண்ணாவியாருக்கும் விளக்குத் திரியைத் தூண்டி வெளிச்சம் வந்ததுமாதிரி முகம் உடனே மலர்ந்தது. "இப்பிடி தம்பி மாதிரி அனுபவப்பட்ட ஆள்கள் இதுக்க எங்கட கூத்துப் பழகவெண்டுறது. எனக்கெண்டா இப்ப பெரிய சந்தோஷம்தான்! தம்பி நீர் இப்ப சொன்னமாதிரி நான் ஒரு கதை அதை விளக்கமா உங்களுக்கு நான் சொல்லுறன். இடுப்புப்பிள்ளையா இல்லாம நீங்க எல்லாம்இது விபரம்தெரிஞ்ச ஆக்களா இருக்கிறதால உங்களுக்க நான் இதையெல்லாம் சொல்லுறன் கண்டியளோ அது என்னெணடா. இந்த வடமோடி தென்மோடியெண்டு வேற உள்ள நாட்டுக் கூத்துகளில அந்தப் பாடல்களுக்குரிய தாளக்கட்டுகள் ஊரியப்பட்டதுகளாய் இருக்குத்தம்பி. ஆனா காத்தான் கூத்து எண்டுறதுகளில உள்ள பாடல்களுக்க அப்பிடி எண்டு ஒன்றுமில்ல! அதால இத என்னமாதிரி பாடவேணுமெண்டு கூத்துப்பழகிற அண்ணாவி மூலம் தான் இதையெல்லாம். அறிஞ்சு கொள்ள வேணும் கண்டியளோ..? இதில நான் ஒரு விதம் தினுசு பிடிச்சு பாடிக்காட்டுற மெட்டு, இன்னொரு அண்ணாவி பழக்கிற அந்த இடத்தில அது வேறமாதிரித்தான் இருக்கும். ஆனாலும் இந்த காத்தவராயன் கூத்தில தம்பி அது எந்த அண்ணாவி பழக்கினாலும் அந்த இசையெண்டுறது எல்லாரும் ரசிக்கக் கூடிய உயிர் உள்ளது எண்டமாதிரித்தான் இருக்கும். அப்பிடிவேற வேறயான இசை விகற்பங்கள் இந்த கூத்தில பயன்படுத்தக் கூடியதா இருக்கிறதால காத்தவராயன் நாட்டுக் கூத்து வேற எந்தக் கூத்துக்களையும் விட ஒரு நல்ல கலைப்பாணியான கூத்துத் தான்தம்பி.! பாருங்களன் நான் இப்ப இங்க வந்து பழக்கிவிடுற இந்தக் கூத்து அமோக வெற்றி கட்டாயமா எடுக்கும்.! நான் பழக்கி விடுற கதாபாத்திரத்துக்கு உரிய அந்த ஆள் காத்தானெண்டா காத்தான் மாதிரித்தான் அப்பிடியா சோக்காபாடி நடிப்பான். மற்ற ஆரியப்பூமாலை முத்துமாரியம்மனெண்டா அது ஆம்பிளை ஆம்பிளயெண்டாலும் பொம்புளமாதிரித்தான் பாக்கச் சோக்கா இருக்கும். சிவன் பார்வதி பூமா தேவியெண்டெல்லாம் அவயஞக்கும் நான்பழக்கி விடுறது பேந்து சொல்லத் தேவயில்ல. இதில வாற சேவகன் கூட நல்லாத்தான் செய்வான். பேந்தென்ன ஒரு கத எண்டுறன்.?”
என்று அண்ணாவி முருகேசர் கொஞ்சம் எச்சில் ததும்பும் வாயோடு ஆற்றைக் கடந்து நிற்கிற ஒரு சாதனைமாதிரி தன் கெட்டித் தனத்தையெல்லாம் நெஞ்சையும் நிமிர்த்திக் கொண்டு சொன்னார்.
9560 gegreyserberd erksgé
 

"இன்னும் ஏதாவது விசாரிப்பு விவாதிப்பு இருக்கோ ஆரும் என்னவும் இப்ப கேக்கப் போறியளோ..?”
- என்று சண்முகம் இவ்வேளை எரிகிற பெற்றோல் மாக்ஸையும் பார்த்துவிட்டு, முன்னால் இருப்பவர்களையும் பார்த்துக் கேட்டார்.
“இனியென்ன கதைக்கிறதண்ண.? எல்லாம் ஒம் எண்ட மாதிரித் தானே எங்களுக்கும் மனதுக்க சரியா திருப்தியா இருக்கு. எண்டாலும் இன்னும் வரப்போற ஆக்களுக்கும் இந்த விசயமெல்லாம் நீங்க அண்ணாவியாரைக் கொண்டு சொல்லத்தானேயண்ண வேணும் ? - என்று ஜெயா கேட்டதுக்கு.
”ஓம் தம்பி அதுகள நாளைக்கு நாளையிண்டைக்கெண்டு ஒவ்வொரு நாளும் காப்புப்படிக்கிறதுக்குப் பிறகு சொல்லுவமே..?”
என்று சண்முகம் உடனே பதில் சொன்னார். "அப்ப என்ன தம்பி சண்முகம் இனிச் செய்யிறது.?”
என்று அண்ணாவியார் அந்தக் கதைசொல்லி முடித்துவிட்டு சண்முகத்தைப் பார்த்துக் கேட்டார்.
"இனியென்ன எல்லாம் நாளைக்குப் பின்னேரமா கதை பேச்சை வைச்சுக் கொள்ளுவமே..? இப்போதைக்கு இதோட இத நாங்கள் இனி நிப்பாட்டுவமே அண்ணாவியார்.?”
என்றார் சண்முகம் - அப்படி சொல்லிட்டு “என்னமாதிரி தம்பிமார். இதுகள இனி நாளைக்கு எல்லாருமா சேந்து கதைப்பமென்ன..?” என்று மற்றவர்களையும் பார்த்து அவர்கேட்டார். ஜெயா புகை பிடிக்கும் எண்ணத்துடன் அவசர அவசரமாக எழுந்து "ஒமோம் அண்ண நாளைக்கு இனி பாப்பம்' என்று சொல்லிக்கொண்டு சாரத்தை விரித்து லீவாக்கிவிட்டு பிறகு இறுக்கி இடுப்பில் கட்டினான். "அப்ப நாளைக்கு எல்லாரும் இங்க இந்த நேரம் வாறம் அண்ண” - என்று கோணேசுமி, எழுந்து நின்ற மற்றவர்களும், சண்முகத்தைப் பார்த்து தலையை ஆட்டி தாங்களும் இப்போ விடைபெறுவதாக அவர்களுக்கு காட்டிக்கொண்டார்கள். எல்லோரும் இப்படி தன்னுடன் மரியாதையாக கதைப் பது பழகுவதை நினைத்து, அண்ணாவியாருக்கும் மனதுக்குள் சந்தோசப் பூப்பூத்துக் கொண்டது.
வந்தவரெல்லாம் வீட்டாலிருந்து வெளியே போன பிறகு, சண்முகம் அண்ணாவியாரைப் பார்த்து “வாங்கோ முருகேசண்ண இனிப் போய் இராச்சாப்பாட்டை வேளைக்கு சாப்பிட்டிடுவோம்?” - என்று சொன்னார். அவர் அப்படிக்கேட்க அண்ணாவி முருகேசரும் “ஓம் தம்பி ஓம் தம்பி!” - என்று தன்மையாக அவரைப்பார்த்துச் சொல்லி விட்டு, சண்முகத்துக்குப்பின்னால் ராஜ சந்நிதானத்துக்குப்போகிற மாதிரி ஒரு விதமான பயபக்தியோடு நடந்து
அவரின் வீட்டுக்குள்ளே போனார்.
8Эчылламө o57о

Page 37
10
உத்தமன் வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளில் சண்முகத்தின் ஒலை வேய்ந்த வீடுதான் பெரிய விசாலமான வீடு என்று, அங்கு உள்ள எல்லோருக்கும் இது தெரியும். இந்த வீட்டில் இரண்டு அறையும், அங்காலே வீட்டோடு உள்ள பத்தி இறக்கின ஒரு கொட்டிலும்இருந்தது. என்றாலும் சமையல் வேலைக்கெல்லாம் அவர்கள் படுக்கை அறையைத்தான் பாவித்தார்கள்.
சண்முகம் - அண்ணாவியாரை, தாழ்வாரம் இறக்கின அந்தக் கொட்டிலிலேதான் படுக்கஇருக்க வென்று தங்குவதற்கு விட்டார். அண்ணாவியார் நெட்டைக்காலியாய் இல்லாதிருந்ததால் அவர் உயரத்துக்கு நிற்க, உள்ளே நடக்க, தோதுப்பட்டதாய் இருந்தது அந்தக் கொட்டில்.
அண்ணாவியாருக்கு ஊறின ஒரு பழக்கம், அவர் தான் எங்கே வெளிக்கிட்டு வெளியே போவதாய் இருந்தாலும் ஜெயித்து ஜொலிக்கும் அந்தச் சந்தனப் பொட்டை மாத்திரம் கரிசனையாக தன் நெற்றிப் பொட்டில் வைத்துக் கொள்வார்.
சண்முகம் திரியாயிலிருந்து இடம் பெயர்ந்து கேப்பாப்புலம் ஊருக்கு வரும்போது கொண்டு வந்த பொருட்களில், அசல் “பெல்ஜியம் கல்கண்ணாடி ஒன்று இருந்தது. பொட்டுவைக்க அண்ணாவியார் “ஒரு கண்ணாடி எனக்குத் தாங்கோ?’ என்று சண்முகத்தைக் கேட்டதில், இந்தக் கண்ணாடியைத்தான் சண்முகம் தன் வீட்டுக்குள்ளால் இருந்து எடுத்து அவருக்குக்கொடுத்தார். புருசன் செய்த இந்த வேலை ராசமணிக்கும் பிள்ளைக்கும் பிடிப்பில்லைத்தான்! என்றாலும், இதற்காக புறுபுறுத்த மாதிரி ஏதோதோ சொல்லிவிட்டு அவர்கள் பிறகு பேசாமல் இருந்து விட்டார்கள்.
"கண்ணாடி பத்திரம்! பத்திரம்!” - என்று ராசமணி அந்த நேரம் கண்ணாடி எடுத்துக்கொண்டு போகிறவேளை புருஷனுக்குச் சொன்னதை சண்முகம் அங்கே அண்ணாவியாருக்கு கொண்டு போய்க் கண்ணாடியைக் கொடுக்கும் போதும் ஒரு சொல்லேனும் அதைப்பற்றி அவர் வாய்திறந்து சொல்லவில்லை.
5ண்ணாடி கையில் கிடைத்ததும் அண்ணாவியாருக்கு அது நல்ல
சந்தோஷமாக இருந்தது. தன் உயரத்துக்கு முகம் பார்க்ககூடிய அளவாய் அண்ணாவியார் உடனே அந்தக் கண்ணாடியை, ஒலைச் செத்தை கட்டியிலிருந்த வரிச்சுக்கம்பில் உடனே மொத்த துண்டு சணல் கயிற்றால் கட்டுப் போட்டுத் தூக்கிவிட்டார்.
9589 புதினான்காம் தான் சந்திரன்
 

அன்று மத்தியானம் அண்ணாவியாருக்கு. நல்ல கறி சோறுதான் சண்முகம் வீட்டில் சாப்பிடக்கிடைத்தது. சண்முகம் இன்று நாய்களையும் கொண்டு காலையில் காட்டுக்கு வேட்டைக்குப் போனதாலே உடும்பு' இறைச்சிக்கறி அவரின் வீட்டில். விசேஷ மாமிசக் கறியாய் வைக்கப் பட்டடிருந்தது. பட்டுப்போல் மிளகாய்க் கூட்டு அரைத்துக் சேர்த்துக்கிழக்கன்மீன் குழம்பும் வைத்து, அல்லிப்பூச்சாயலிலே ராசமணி சோறு ஆக்கியிருந்தாள். அண்ணாவியார் கறிப்பதார்த்த வகைகளின் கறி ருசிப்பட்டு வயிறாற சோறு மத்தியானம் தின்றதில் அன்று உடம்பெல்லாம் முற்றி முறுகினமாதிரி இருந்தார்.
உடும்பு இறைச்சி தின்றதில் அந்த உடும்பின் பலம் தனக்கு வந்தது மாதிரி அவருக்கு இருந்தது. சண்முகமும் அவரின் மனைவியும் தனக்கு உணவுபடைத்த பக்குவத்தையும் அவரால் மறக்க முடியவில்லை. சாப்பிட்டு பின்னர் கொஞ்சம் நேரம் செல்ல கொட்டிலில் போய் படுத்தார். ஆனாலும் பிற்பாடு பின்னேரமாகிவிட்டது அவருக்கு நித்திரையால் எழும்புவதற்கு.
“அடடட நேரம் போயிற்று' - என்று அதற்காகச் சொல்லிக்கொண்டு முகம் கை கால்களை அந்த ஊரவர் ஒருவர் வீட்டிலே போய் கிணற்றில் தண்ணிரள்ளி கழுவிக்கொண்டு சுத்தமாய் அவர் வந்தார். பொழுது படவும் அவர் ஆசாரமாய் வேட்டியும் எடுத்துகட்டிக் கொண்டு, நெற்றியில் பொட்டும் வைத்து, சந்தனமும் திருநீறும் மேல் வழியே பூசிக் கொண்டு, திவ்வியமான நிலையில் பிறகு அவர் தயாராக இருந்தார்.
பொழுது பட்டு நன்றாய் இருட்டும் சூழ்ந்த வேளை சண்முகம் வீட்டில்பெற்றோல் மாக்ஸ் கொளுத்தப்பட்டது. வலை முட்டையெல்லாம் கறுப்பில்லாத பளிச் சென்ற வெளிச்சமாய்ச் சத்தத்தையும் சேர்த்து ஊதிக் கொண்டிருந்தது அந்தப் பெற்றோல் மாக்ஸ். சண்முகம் வீட்டு முற்றத்தில் இந்நேரம் ஒன்று ரெண்டாய் வரத் தொடங்கிய சனம் கூடி அங்கு பிறகு கலாமுலாச் சத்தமாகிவிட்டது. கேப்பாப்புலம் கிராமம் முழுக்க, சண்முகம் வீட்டில் கூத்துப்பழகினம் என்ன செய்தி பரவிப்போய், உத்தமன் வீட்டுத் திட்டத்திலுள்ள நடுத்தர வயதும் - இளந்தாரிகளுமான ஆண்களெல்லாம் அவ்விடத்தில் இன்று கூடியிருந்தார்கள்.
நேரம் சென்றதால் சண்முகம் வீட்டு இருட்டு ஒழுங்கைக் குள்ளாலே அப்போ விறு விறு என்று வீச்சாய், ஆனால் தள்ளாட்டத் தோடும் நடந்து வந்தான் ஜெயா. பட்லையால் இருந்து உள்னே கால்வைக்கும் போதே, அங்கு வந்திருந்த சனங்களைப் பார்க்க அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. அவன் கையில் விளைந்துப் பழுத்த ஒரு சீப்பு வாழைப்பழம் இருந்தது. அதை அவன் கொண்டு போய் அங்கே நின்று கொண்டிருந்த அண்ணாவியாருக்கு ஆதரவுடன் கொடுத்தான்.
கிருெளிyre o 59 o

Page 38
அண்ணாவியாரும் ஜெயா கொடுத்ததை தன் கையில் வாங்கும் போது "என்னாணை இப்படியெல்லாம் செல்வாக்காய்ச் செல்வாக்காய் எனக்கு இப்பவா வந்து கொண்டிருக்கு” - என்று ஜெயாவுக்குச் சொல்லிவிட்டு - “இருங்கோ நீங்க தம்பி.?” - என்று ஒரு மரியாதை வைத்து சொல்லி அவ்விடத்தில் அவனை முன்னாலே உட்கார விட்டார்.
அவன் கீழே மணலில் குந்தி இருக்கும் போது தக்கென்று குண்டியை நிலத்தில் இடித்துப் போட்டுக் கொண்டுதான் இருந்தான். அவனுக்குப்பக்கத்தில் அதிலே இருந்து கொண்டிருந்தவர்கள், ஏதோ அவனில் உள்ளதை தாங்கள் நன்றாய் அறிந்து கொண்டகணக்கில் அவனைப்பார்த்தார்கள்.
கோணேஸ்சுக்கும் பத்மனுக்கும் ஜெயாவைப் பற்றி ஒரு விசயம் நன்றாகத் தெரியும். ஜெயாவுக்கு காலையிலேயே ஆகாரம் என்ற இறங்குவது பனங்கள்ளுத்தான்! அவன் அடிவயிறு மட்டும் முட்டிக் கலயம் (3LT6) உருண்டு மினுமினுப்பாய் வருமட்டும் கள்ளுக் குடிப்பான் என்கிறது, இவர்களுக்கு நன்றாகத் தெரிந்ததொன்றுதான். கோணேசும் பத்மனும் என்ன குடிக்காதவர்களா? அவர்களும் தான் கள்ளுக் குடிப்பார்கள். - ஆனால் ஜெயாவைப்போல, வெறி தலை குனியச் செய்யுமளவுக்கு, அவர்கள் எப்போதும் பெருங் கள்ளுக்குடி குடிப்பதில்லை.
ஜெயாவுக்குப்பக்கத்திலே அவ்விடத்தில் பத்மனும் இருந்ததால் தலையைக் குனிந்து கொண்டு அவனை ரகசியமாகக் கேட்டான்.
“என்ன ஜெயா ஈச்சம் புலவுப்பக்கமிருந்தோ நீ இப்ப வந்தாய்.” "சீ என்ன உது ஒரு கத சும்மாயிரு.”
"என்ன சும்மா இரு எண்டுறாய் கண் இப்படி ரெத்தாம்பழமா சிவந்தும் கிடக்கு.?”
"ஓ அது சும்மாதான் கொஞ்சம்.”
என்ன கொஞ்சமெண்டுறாய்! வெறி தலைக்கேறி நல்லா
தலையையும் தொங்கக் கீழே போட்டிட்டாய்.'
"ஏய் தலைய தொங்கப்போட்டுக் கொண்டுதான்ராப்பா நல்ல சவாரி மாடு ஒடும். அது மாதிரித்தான் இந்த ஜெயாவும் எல்லாம் கெடாமல் காப்பாற்றி இந்த ஜெயா எதிலயும் றெஸ்பக்ட்டாகத்தான் எப்பவும் இருப்பான். நீ சும்மா இரு.”
"ஓ றெஸ்பக்ட்தான் உன்ர ஒரு றெஸ்பக்ட்! நீ கூத்து பழகிற தெண்டா இப்பிடி இனி நீ கள்ளுக்குடிக்கவும் கூடாது கண்டியோ..? நீ வேறயும் உள்ள ஆக்கள இதுக்குள்ள குழப்பிவிடாத.?”
9500 புதினான்கஸ் தான் சந்திரன்

"ஒமடாப்பா சும்மா இரு.”
“சரியடாப்பா கதய விடு.”
- என்று சீற்றம் எழுப்பியவாறு தலையை எதிர்ப்புப் பாவனையில் அங்குமிங்கும் ஆட்டினான் ஜெயா! இதற்குப் பிறகு பத்மன் ஒன்றும் இனிவேண்டாம். கரைச்சல் வேண்டாம்! இவனுக்கு முக்கால் வெறி! அதோட ஒரு சரியான முரட்டுச்சவம் - என்று தனக்குள்ளே நினைத்து விட்டு பேசாமல் இருந்து விட்டான்.
கோணேசுக்கும் இவர்கள் இருவரின் கதைகள் காதில் விழந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் எதுக்கும் ஒன்றும் இதுவரை அவன் பேசாமல்தான் இருந்தான். ஆனால் கடைசி முடிவில் அவன் ஒரு வார்த்தை பத்மனுக்கு சொன்னான்.
"உனக்கு உனக்கு இது தேவயில்லாத கதயடாப்பா..! அவன் என்ன கொஞ்சம் வெறி! அவ்வவுதான்! அதுக்குப்போய் நீ?”
"நான் என்ன சொன்னது கோணேஸ்.?” “சும்மா இரு அங்க அண்ணாவியார் ஏதோ சொல்லப்போறார் போல கிடக்கு.?”
- இவன் இப்படி சொல்லி முடிக்கவில்லை அதற்குள்ளாகவே அண்ணாவியாரும் நேற்றுச் சொன்ன கதைபேச்சுக்களை இன்றைய பொழுதிலும் ஒப்பிக்கிறதைப்போல சொல்லத் தொடங்கிவிட்டார். நேற்றையை விட இன்றைக்கு அவரின் குரல் நல்ல சாரீரமாகவும் தெளிவாகவும் இருந்தது. தங்கு தடையில்லாமல் சொற்களும் அவருக்கு கோர்வையாக வந்து கொண்டிருந்தன.
முகத்தில் ஒளி மிகுந்தவராகவும் சந்தோஷமாகவும் கூட அவர் இருந்தார். இவ்வளவுக்கும் அங்கு கூத்துப்பழக வென்று சனம் கூடி இருப்பதுதான் அவருக்கு முகத்திலேற்பட்ட அந்தசெந்தாமரையானதோர் சந்தோஷத்துக்குக் காரணம்.
அண்ணாவியார் சொன்னவைகளிலே நேற்றுக் கேட்ட கதைகளின் ரீங்கரிப்பு இருந்த போதிலும், ஜெயா, கணேஸ், கோணேஸ் போன்றவர்கள் பொறுமையாக இப்போதும் அவைகளை தாங்கள் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தார்கள். ஒரு ஜீவ இயக்கத்துடன் இப்படியாய் கூத்துப்பழகிற கதைகள் போய்க்கொண்டிருக்க, அங்கே வந்து இருப்பவர்களின் செருமல் இருமல்களும் அதோடு கலந்து கொண்டதாக இருந்துகொண்டிருந்தன.
அண்ணாவியார் அதிலே நின்றபடி தன் கதையைத் தொடர்ந்து போய்க் கொண்டிருக்க, சண்முகத்தின் மனைவி ராசமணி அவ்விடத்துக்கு அப்போது வந்தாள்.மனைவியை கண்டதும் என்னவிஷயம்?-என்ற மாதிரி கேட்டுக் கொள்ள, இருந்து கொண்டிருந்த இடத்தாலிருந்து எழுந்து நின்றார்
96) JIT.
Pennಳ್ಯಕಿ o 61 о

Page 39
"அவர் அவர்தான் அந்த யாழ்ப்பாணத்தில இருந்து வந்த தம்பி இருக்கிறார் இவ எங்கட கனகம்மாவின்ர மருமோன்.”
அவள் ரகசியக் குரலில் அவருக்குக்கிட்டவாய் நின்று சொல்ல
"அவருக்கு என்ன.?”
- என்று இவரும், அதே அவளின் ரகசியக் குரலிலேயாய்க் கேட்டார். "இந்த வேலியடியில நிண்டு கொண்டு இதுக்கிள்ள நடக்கிறத
அந்தத்தம்பி பாத்துக் கொண்டிருக்கிறார் போலக்கிடக்கு.? - என்று அவள் உடனே அவருக்குச் சொன்னாள்.
"அடக் கோதாரி பாவம். இதயேன் நீ இங்க நேரத்துக்கு வந்து என்னட்டயாச் சொல்லேல்ல? எங்கவிடு நீ என்னயப்பாப்பம். அங்கேயாயப் போய் ஒருக்கா அவரோட் கொஞ்சம் நான் கதைப்பம்.”
- அவர் உடனே எவ்வளவு வேகமாய்ப்போகேலுமோ அவ்வளவு வேகமாக வேலியடிப்குப் போனார்.
" என்ன தம்பி வேலியடியில நிக்கிறீங்க.?”
- என்று மிக்க மெல்லிய தொனியில் ராசனை பார்த்து அதிலே அவர் கேட்டார்.
'இல்லயண்ண உங்க நடக்கிறதப் பாக்க மனசுக்கு ஒரு சந்தோஷமாயிருந்துது அது தான் சும்மா இதில நிண்டு கொண்டு பாக்கிறன்.”
"இதென்ன கத அப்பிடி உள்ள நீங்களும் வாருங்கோவன்.?
- அவர் சொல்ல ராஜன் சந்தோஷத்தோடு மெல்ல அவரைப் பார்த்துச் சிரித்தான்.
"வாங்க தம்பி அங்க நீங்க வாங்க.?”
என்று சண்முகமும் தோதுக்கு தானும் சந்தோஷத்தோடேசொல்லிட்டு - பிறகு உடனே ஒரு யோசனையோடு.
“பிள்ளைக்கு எப்படி இருக்குத்தம்பி.?” - என்று அக்கறையாகவும் கேட்டார். "பறவையில்ல இப்ப பிள்ளய இங்க நாங்கள் வீட்ட கொண்டந் திட்டம். கொண்டு போன உடன ஊசியெல்லாம் அங்க போட்டவயள் தானே? எரிகாயத்துக்குப் பூசுறதுக்கு களிம்பெல்லாம் தந்திருக்கினம். எண்டாலும் ஐயோ நீங்கள் அண்ண அந்த நேரம் எங்களுக்குச் செய்த ஒரு உதவிபெரிய உதவி பிள்ளைக்கு உடன நீங்க உங்கட்ட கிடந்த அந்த தேனையும் ஊத்தி விட்டதால அது பிள்ளைக்கு பட்டபுண்ணுக்கு
0620 திரான்கஸ் என் சந்திரன்
 

பெரிய ஆத்தியாயிட்டுது. ஆஸ்பத்திரிலயும் நல்லதெண்டு தானே அப்பிடி செய்தத சொன்னவயள்! அதுக்கு உங்களுக்கு நாங்கள் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறம் அண்ணா.”
என்று ராஜன் சொல்ல சண்முகத்துக்கு அது ஆர்த்மார்த்திக சுகமாயிருந்தது. இன்னும் தனக்குள்ளே உள்ள ஒரு சந்தோஷத்தோடு,
“என்ன இது நாங்கள் எல்லாம் இடம் பெயர்ந்து இங்க வந்து இதுக்க ஒண்டாயிருக்கிற ஆக்கள் தானே? அப்படியாயிருக்கிற நாங்கள் எங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையாயும் ஆளுக்காள் உதவி செய்யிற ஆக்களு மாயும்தானே இதுக்குள்ளயாய் இருந்து நாங்கள் சீவிக்குமட்டும் சீவிக்க வேணும்.? உதெல்லாம் பெரிய உதவி கிதவி எண்டு சொல்லிக் கொள்ளு றதுக்கு பெரிசா ஒண்டும் அப்பிடியில்லத்தானே? அதெல்லாம் கிடக்கட்டும் தம்பி, நீங்க இப்ப உதுல நிண்டு கொண்டு பாத்துக் கொண்டிராம அங்க உள்ளவா இப்ப வாங்கோ நீங்க வாங்கோ.?”
என்று ராஜனை அவர் விடாது தொடாந்து அழைத்தாய்க் கூப்பிட
'அதால அப்ப நான் சுத்தி நடந்து அங்க உங்கட வீட்டடிக்கு வாறனே.”
என்று அவனும் அவருக்கு சொல்லிவிட்டு, வேலியடியாலே இருந்து வெளிக்கிட்டு இங்கே சண்முகம் வீட்டுக்கு வருவதற்கென்று நடந்தான்.
சண்முகம் உடனே பிறகு தன் வீட்டடிக்கு வந்தார். தன்மனைவியை வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டு.
"பாய் ஒண்டு கொண்டு வந்து அந்த யாழ்ப்பாணத்து தம்பி வாறார். அதில முன்னால அவருக்கு இருக்கிறதுக்கு வடிவாய்போட்டொருக்கா விடு.”
என்று சொல்லிவிட, ராசமணி உடனே வீட்டுக்குள்ளே கெதியாகப் போய் ஒரு புதுப் பாயைக் கொண்டு வந்து எல்லோருக்கும் முன்னாலே பாலா இருந்த பக்கமாக விரித்து போட்டு விட்டாள். ராஜன் அதிலே வந்ததும் பாலாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது "இருங்கோ இருங்கோ பாயில’ - என்று அவனும் சொன்னான். ராஜன் உடனே அங்கு இருந்தவர்கள் எல்லோரையும் நின்றபடி பார்த்தான். பாலாவையும் பார்த்துவிட்டு திரும்ப அண்ணாவியாரையும் பார்த்து முதலில் ஒரு சிரிப்பு அவரைப் பார்த்து சிரித்துவிட்டு, 'இவளவு பேரும் கீழே நிலத்தில இருக்கினமண்ண எனக்குமட்டும் ஏன் நீங்க இந்தபாயை போடுறியளண்ண.? நானும் மற்றவயளப்போல கீழே வடிவா இருப்பன்தானே சோக்கா நிலமும் சரியா இதுக்க பூமணல்லாயிருக்கு அதுவெளவு இருக்க எனக்கு.
சுகமாயுமிருக்கும்.!
அவன் அப்பிடி அவருக்குச் சொல்ல,
6.9emony) O 63 O

Page 40
‘இதென்ன இதென்னது. நாங்களெல்லாம் இங்கினயா உள்ளவயள்வந்து பக்கத்து பக்கத்து ஒரே ஊரான ஆக்கள் தான். அங்க திருகோணமலைப்பக்க மிருந்து இடம் பெயர்ந்து இதுக்குள்ள வந்து நாங்கள் இப்ப இருக்கிறம். ஆனா நீங்க அப்பிடியே? நீங்க மட்டும் அங்க யாழ்ப்பாணத்தில இருந்து இங்க குடும்பத்தோட இடம் பெயந்து வந்திருக்கிறியள். முந்தியும் யாழ்பாணத்தில இருந்து இடம் பெயர்ந்த கன ஆக்கள் குடும்பமா இங்க இந்த இடத்துக்கு வந்தவயள் தான்.
ஆனா அவயளெல்லாம் பிறகு பிறகு தங்கட சொந்தக்காற ஆக்கள் இருக்கிற தண்ணிருற்று புதுக்குடியிருப்புப்பக்கமா அங்க உள்ள அவயின்ர சொந்தக்காரர் வந்து இங்க இவயளக் கூப்பிட பேந்து போயிட்டடினம். நீங்க வந்து எங்க ஊர்ப்பிள்ளையத்தானே கலியாணமும் முடிச்சது. அது என்னவோ வேற அதுக்கொண்டுமில்ல நான் சொல்லுறது ஆனாலும் நாங்கள் எல்லாம் உங்ளில் நல்ல மரியாதைதான்! இருங்கோ இருங்கோ. பாயில பரவாயில்ல பரவாயில்ல.”
என்று சண்முகமும் சொல்ல, பாலாவும் அவருடன்தானும் அந்தக் கதையில் சேர்ந்து கொண்டதைப் போல "இருங்கோ பாயில இருக்க உங்களுக்கும் நல்லம் தானே. கீழ இருக்கிறதெண்டா மண் மண் பேந்து உந்த உடுப்பும் ஊத்தயாயிரும். இருங்கோ இருங்கோ’ என்று ஒரு கதைக்கு பல கதையாய்ச் சொல்லி இழுத்துக் கொண்டே போனான். ܬܐܝܬ
இவர்களெல்லாம் இப்படி மரியாதை வைத்துச் சொல்ல ராஜனுக்கு அது மனதுக்குள் பெருமையாக இருந்தது. தன்னை இப்படி அவர்கள் தூக்கிப்பிடித்து உயரத்தில் வைத்ததாய்ப் பேசும் அளவுக்கு
‘என்னிடம் அப்படி என்னதான் தகுதி இருக்கிறது - என்ற ஒரு கேள்வியையும் அவன் தனக்குள்ளே கேட்டுக் கொண்டதாகவே ஒரு கணம் அப்படி இருந்தான். இதுக்குள்ளாக எல்லோரையும் பார்த்து நட்பு முறையிலும் ஒரு சந்தோஷச் சிரிப்பு அவன் சிரித்தான்.
பாலா இவ்வேளை பாயிலே தன்கையாலே தட்டி அதிலே ராஜனை இருந்து கொள்ளுமாறு தலையையும் ஆட்டினான். ராஜனும் அதோடு பாயிலே இருந்துவிட்டான்.
"இவர் யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்து இங்க வந்திருக்கிற தம்பி! இங்கதான் குடும்பமாவந்து எங்கட வீட்டுத்திட்டத்துக்குள்ளவா இருக்கினம். ஐயோ இவற்ர பிள்ளைக்கெல்லே விளக்குத் தட்டுப்பட்டு நெருப்பெரிஞ்சும் போட்டுது.”
9640 புதினான்காம் தான் சந்திரன்

என்று அண்ணாவியாருக்கு பிற்பாடு சண்முகம் சொல்ல, அண்ணாவியாரும் "ஐயோ பேந்து பிள்ளைக்கென்ன பெரிய எரிகாயமோ..?”
என்று அவரும் அதிர்ச்சிப்பட்ட நிலையில் கேட்டார்.
"இல்ல இல்ல அவ்வளவு பெரிசாயில்ல! கடவுளே எண்டு ஏதோ பிள்ள அப்பிடியில்லாம தெய்வச் செயலாத் தப்பீட்டுது..!”
சண்முகம் உடனே சொல்ல, அண்ணாவியாரும் "அதுதானே கடவுள்தான் அந்தப் பிள்ளய அப்பிடி காப்பாத்தினதாக்கும்” - என்று தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொல்லியவாறு ராஜனையும் அவர் அன்புடன் பார்வை பார்த்தார்.
‘இனி எங்கட விசயத்துக்கு திரும் பவும் வருவோமே அண்ணாவியார்.'
என்று சண்முகம் முன்பு நடந்து கொண்டிருந்த கூத்துக் கதையை திரும்பவும் தொடர முனைந்தார்.
"ஓ.ஓ, அதுகள இனி கதைக்கத் துடங்குவம்.!” - என்று அண்ணாவியாரும் சண்முகம் சொன்ன சொல்லுக்கு ஒத்துழைத்தார்.
" ஆக இப்ப நாங்கள் இவ்வளவு நேரம் முதலில கதைச்சது.இங்க எல்லாரும் சேந்து கூத்துப்பழகிறதுக்கு உரிய கட்டுப்பாடுகள் சட்டதிட்டங்கள். அப்பிடி எல்லாந்தானே என்ன அண்ணாவியார்.”
“ஓம் ஓம் சண்முகம்! இதையெல்லாம் வந்திருக்கிற கனபேருக்கும் திரும்பவும் ஒருக்கா சொல்லியாச்சுத்தானே. இப்பிடி இன்னும் வருற ஆக்களுக்கும் பேந்தும் நாங்கள் ஒருக்கா சொல்லலாம் தான்! நாங்கள் திரும்பத்திரும்ப இதுகளச் சொல்லுறதோட இங்க நாங்கள் சொல்லுறத கேட்டுக்கொண்டிருக்கிற ஆக்களும் வருறபுதுப்புது ஆக்களுக்கும் இதுகள சொல்லலாம் தானே.”
“ஓம் அண்ணாவியார் அதுகள் அப்பிடி ஒழுங்கா நடந்து கொண்டு போகும். அதைப்பற்றி இப்ப பிரச்சினையில்ல! ஆனா நான் இப்ப - இங்க உள்ள ஆக்களுக்கு சொல்லுறதுக்கு இருக்கிறது வேற ஒரு தேவையான கதை. அதுதான் முக்கியமாவும் இங்க இப்ப கதைக் கவும் வேண்டிக்கிடக்கு..!”
"அப்பிடி என்ன சண்முகம் சொல்லக்கிடக்கு.?”
“அது உங்கட பிரச்சினை அண்ணாவியார். கூத்துப் பழக்கவெண்டு உங்கள நான்தானே இங்க என்ர பொறுப்பிலயாக் கூட்டிக்கொண்டு வந்தது. அப்ப நான் தானே இதுகள பொறுப்பாகவும் எடுத்து இவயளிட்ட கதைச்சுக் கொள்ளவுமா வேணும்.?”
கிருெளிwம் O 65 O

Page 41
“என்ன என்னுடைய பிரச்சனை சண்முகம்.'
அண்ணாவியாருக்கும் சண்முகம் சொன்ன அந்தப்பிரச்சனை என்கிற கதை நன்றாக விளங்கினதாகத்தான் இருந்தது. ஆனாலும் தனக்கு விளங்க வில்லை என்றாதாய்த் தெரியும் நடிப்பொன்று அவர் நடித்தார். அதற்காக அவர் கொஞ்சம் தித்திக்கச் சிரிக்கவும் செய்தார்.
“என்ன அண்ணாவியார் நீங்க இப்பிடி ஒரு குழந்தைப்பிள்ளை மாதிரி கதை சொல்லுறியள்? அண்ணாவியெண்டு கூத்தப் பழக்கி விடுறத்துக்காக வாறவயள் மாதக் கணக்கா இதைத் தங்கியிருந்து மினக்கட்டுச் செய்து பாடுபட்டுப்போட்டு சும்மா வெறுங்கையோடயே வீட்ட போக இருப்பினம்? இதுக்கொரு சம்பளமும் அவருக்கு குடுக்க வேண்டியும் இருக்குத்தானே.”
- என்று சண்முகம் முன்னால் இருந்தவர்களையும் பார்த்து, பிறகு அண்ணாவியாரையும் பார்த்து இதைசொல்ல, அங்கே முன்னால் இருந்த சயிக்கிள் கடை பாலா உடனே,
"அது எண்டா சரிதான்! அண்ணாவியாருக்கு நாங்கள் குடுக்க வேண்டியதைக் கட்டாயம் குடுக்கறது வேணும்தானே. அதுக்கு இவர் எவ்வளவுகாசு கேக்கிறார் மெய்யே சண்முகமண்ணை.?”
“சரிபாலா! நீ கேக்கிறது சரி! பாலாவோட சேந்து நீங்க எல்லாரும் இதக் கேளுங்கோ? இப்ப அண்ணாவியார் இந்தக் கூத்துப்பழகிறதுக்கு எங்களோட எவ்வளவு காலம் இங்க இருக்கயா வேணும் எண்டு. நீங்கள் எல்லாரும் நினைக்கிறீங்க.'
அவர் அப்படியாய்க் கேட்க உடனே ஜெயா சொன்னான் "ஒரு ரெண்டுமாதம் அண்ணண்'
"சரி நீ சொல்லுறமாதிரி ரெண்டு மாதத்தில கூத்தப்பழகி ஒழுங்குப் பண்ணிப்போடலாம்தான். ஆனா எல்லாரும் கூத்து நடிச்சுப் பழக்கப்பட்ட ஆக்களே இங்க எல்லாருமா வரப் போகினம்? அப்பிடி இல்லாத புதுப்புதுப் பழக்கக்காரருக்கு இன்னும் ஒரு மாதமோ, அதுக்கு மேலேயோ பேந்தும் பிறகுமா நாள் இழுத்துக்கொண்டே போனா பிறகு என்ன செய்யிறது.?”
- என்று சண்முகம் அப்படி சொல்ல.
"அதுவும் சரிதான்! சண்முகம் அண்ணை நீங்கள் சொல்லுற மாதிரி இதில இழுத்தடிப்பாலயும் சில வேளை கொஞ்சம் நாளும் போகும்தான்! அதெல்லாம் போகட்டும்இப்ப நீங்கதானே அண்ணாவியாருக்கும் இந்த கூத்து நடத்துறத்துக்கும் பொறுப்பான ஆள்! நீங்க இப்ப சொல்லுங்கோவன் அண்ணா இவர் எங்கட அண்ணாவியார் எங்களிட்ட எவ்வளவாம் இப்ப கேக்கிறரெண்டு?
9660 புதினான்கஸ் தான் சந்திரன்

இப்படியாய் கோணேஸ் கேட்க, அண்ணாவியாரும் ஒரு கேள்விக் குறியை முகத்தில் வைத்துக்கொண்டு சண்முகத்தைப் பார்த்தார். அந்த வேளை சண்முகமும் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு
“இப்ப இதில என்னெண்டா, இன்னுமொரு கதை சொல்லவேண்டியும் கிடக்கு, இங்க கிராமத்தில சிலபேர் அண்ணாவி பழக்கேக்கிள்ள சொல்லிக் குடுக்கிற பாட்டையும் உடன பிடிச்சிர மாட்டாங்கள். அவருக்கு அது கஷ்டமும் தானே.? இனி கூத்துப்பழக்கிறதெண்டா அவர் வேற வேலயஞக்கும் போகேலாது! அதுவும் கஷ்டம் தானே? எண்டதால இதுக்கெல்லாமா அவருக்கு நாங்க ஒரு, நாப்பதாயிரம் ரூபா எண்டாலும் குடுக்கத்தானே வேணும்? - எண்டு நான் உங்களக் கேக்கேல்ல, இத அண்ணாவிதான்ராப்பா கேக்கிறார்.?”
என்று அவர் சொல்லிமுடிக்க முதல் "என்ன நாப்பதாயிரம்
ரூபாயோ..? - என்று ஒரு கேள்வியை பெரிய சத்தத்தோடு கேட்டான் பத்மன்.
"நாப்பதாயிரம் ஊரிப்பட்டகாசுத் தொகை கூடிப்போச்செல்லே. இது?” - என்று அதன் பிறகு கோணேசும் சொன்னான்.
'கூத்துப்பழக அண்ணாவியாருக்கு இந்த கஷடகாலத்தில நாப்பதாயிம் குடுக்கிறதெண்டா?” என்று ஒருயோசனையோடு சிரம் உயர்த்திக் கேட்டான் ஜெயா.
அண்ணாவியார் கைவிரல்களை கோர்த்து வயிற்றிலே, உள்ளங் கையை அழுத்தி வைத்துக் கொண்டு, கதைப்பவர்களின் முகங்களை யெல்லாம் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தார்.
அண்ணாவியாருக்கு யோசனையால் இப்போது இதயத்துடிப்பு கொஞ்சம் எகிறித் தான் இருந்தது. மார்பு அவருக்கு அதன் இயல்பான அளவை விட, இன்னும் பெரிதாக தோன்றுவது போல காணுமளவுக்கு நீண்டதோர் மூச்சும் அவர் உள்ளே இழுத்து வெளியிலும் விட்டார்.
இருண்ட ஒரத்தில் போய் ஒழிந்து கொண்டமாதிரி எல்லாரும் கதையை விட்டுவிட்டு சோர்வாயிருக்க, உற்சாகத்தை தூண்டிய மாதிரி ராஜன் இப்போது கதைத்தான்.
"இதுக்கிள்ள நான் இருந்து ஒண்டும் கதைக்கப்பிடாதெண்டுதான் இவளவு நேரம் நான் சும்மா யோசிச்சுக் கொண்டிருந்தன். எண்டாலும் எனக்கும் யோசனையில பட்டத இதுக்க உங்களுக்குச் சொல்ல ஒரு அனுமதி உண்டோ..?”
என்று அவன் அப்படி பொதுவாய் எல்லாரையும் பார்த்துக்கேட்க - சண்முகம் உடனே,
"இதென்ன உங்கட கதை தம்பி.உங்களையும் இந்த வீட்டுத்
8. O 67 O

Page 42
திட்டத்தில நாங்கள் எங்கள மாதிரி ஒரு ஆளாத்தானே நினைக்கிறோம்! அதுவும் உங்கள நாங்கள் ஒரு சகோதரமாவும் நினைக்கிறோம்.! உங்களுக்கு நாங்கள் மரியாதையும் நிறைய வைச்சிருக்கிறம்! நாங்கள் எல்லாம் இங்க திருகோணமலை ஆக்கள் தான்! ஆனா நீங்கள், ஒரு குடும்பம் மட்டும் அதுவும் நீங்கள் மட்டும் ஒரு யாழ்ப்பாணத்து ஆள். நீங்க இங்க எங்களோடயாய் இப்ப சேந்து இருக்கிறது எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? எங்களுக்கு ஆரும் ஒரு நல்ல ஆலோசனை இதுக்குள்ள சொன்னா அது எல்லாத்துக்கும் பிரயோசமாத்தானே இருக்கும்? நீங்கள் உங்கட யோசனையை சொல்லுங்கோ தம்பி அதால ஒரு குறையுமில்ல சொல்லுங்கோ சொல்லுங்கோ.?”
என்று சொல்லி ராஜனையும் உற்சாகப்படுத்தினார். அண்ணாவி யாருக்கும் ராஜன் என்ன சொல்லப்போகிறார் என்ற நினைப்பில் கண் ஜொலித்தது. அவர் ராஜனின் கண்களை கவ்விய மாதிரியாய்ப்பார்த்தார். ராஜன் உடனே சண்முகத்தின் முகத்தைப் பார்த்தான்.
“சண்முகமண்ண இப்ப எல்லாருக்கும் ஒரு கஷ்டமில்லாம அண்ணாவியாருக்கு நாங்கள் எல்லாம் சேர்ந்து இப்பிடியும் குடுக்கலாம் தானே? அது எப்படியெண்டா, இதுல கூத்துப் பழகிற ஆக்கள் எல்லாரும் ஆளுக்காள் ஐநூறு ரூபா குடுக்கட்டும் அதோட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆள் அவருக்கு அண்டைய மூன்று நேர சாப்பாட்டையும் குடுக்கட்டும்! இதால தனிப்பட்டதாக உங்களமாதிரி அவருக்கு சாப்பாட்டையும் குடுக்கத் தேவயில்ல! அதால ஒரு வருக்கும் தாக்கம் இல்லத் தானே? எண்டாலும் எனக்குத் தெரியாதது ஒண்டிருக்கண்ண! அது எண்ணெண்டா, எத்தனை நடிகர் மார் இதுக்க மொத்த எண்ணிக்கைக் கணக்கு வருமண்ண சண்முகமண்ண.?”
என்று அவன் சண்முகத்தைக் கேட்க, சண்முகம் உடனே அண்ணாவியாரின் முகத்தைப் பார்த்தார்.
“எத்தினை பாத்திரம் சரியா முழுக்க இந்தக் கூத்து நடிக்கிறதில வரும் அண்ணாவியார்.?” என்று அவரை சண்முகம்கேட்டார். அண்ணாவியார் உடனே ஒரு செருமல் செருமிவிட்டு, எதுவும் தனக்குள் கணக்குக் கூட்டிப் பார்க்காமல்,
“எல்லாமா கிட்டத்தட்டநாப்பது கதா பாத்திரம் சரியா வரும்.!” - என்று பட்டென்று சொன்னார்.
"அப்ப அண்ணா, அண்ணாவியார் சொன்ன இந்தக் கணக்குக்கு எல்லாருமா இருபதினாயிரம் ரூபா மொத்தமா வரும்தானே? இது அண்ணாவியாருக்கு ஏற்குமோ..? அதோட அவற்ற சாப்பாடும் இப்பிடி கிடைக்கும் தானே அவருக்கு அண்ண?”
0680 புதினான்களில் தான் சஆதிரன்

- என்று ராஜன் இப்படி சொல்ல, அண்ணாவியாருக்கு அவன் சொன்னது திருப்தியானதோர் புத்துயிர் கிடைத்தாற் போலிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் ராஜன் சொன்ன கொடுப்பனவுக் கணக்கு முறையும், அண்ணாவியாருக்குக் கொடுக்கும் சாப்பாட்டு முறையும், செய்யக் கடின மாயில்லாமல் தங்களுக்கு இலகுவாக இருப்பது போலத்தான் தோன்றியது.
“இந்த முறை வந்து எனக்கெண்டா கரைச்சலில்லாம ஆருக்கும் இதை செய்யலாம்போலத்தான் கிடக்கு. இது ஒரு நல்ல யோசனைதான்.” என்று ராஜன் சொன்னதைக்கேட்டவுடன் தன் அபிப்பிராயத்தை சொன்னான் பத்மன்.
“ஓ இவர் ராஜன் சொன்ன ஐடியாதான்சரி! நான் இதுக்கு ஒம்தான்! இந்த மாதிரி செய்யிறது தான் எங்களுக்கும் கரைச்சலில்லைப்போலக் கிடக்கு..!"
616 (3 UT6)T6 b, பத்மனும் அடுத்தடுத்ததாய்த் தாங்களும் சொன்னார்கள்.
"அப்ப ஜெயா நீ என்ன ஒண்டும் சொல்லாமக் கொள்ளாமச் சும்மா இருக்கிறாய்? உன்ர கருத்தையும் நீ ஒருக்கா சொல்லன் பாப்பம்.?”
என்று சண்முகமும் கண்களை அசைக்காமல் உறுத்து நோக்கியபடி இருக்கும் ஜெயாவை பார்த்தும்கேட்டார்.
“ஓ இந்த நிமிசத்தில இவர் எங்கட ராஜன் சொன்ன முறையாவும் செய்யலாம்போலத்தான் கிடக்கு.?”
என்று ஜெயாவும் சண்முகத்துக்கு சொன்னான்.
"எண்டாலும் நீங்கள் எல்லாம் அதுக்கு முதல் அண்ணாவியாருக்கு இது விருப்பமோ எண்டு கேளுங்களன்.?”
என்று கோணேசும் இவர்களினது கதைபேச்செல்லாம் முடிந்து போக இதை சண்முகத்தைப் பார்த்துக் கேட்டான். சண்முகம் உடனே அதைக் காதில் எடுத்துக்கொண்டு அண்ணாவியாரைப் பார்த்தார்.
“இப்ப தெரியும் தானே அண்ணாவியார் இவயள் எல்லாம் கதைச்சுக் கொண்டது. இப்பிடி உங்களுக்கு இந்தக் கணக்கில காசும் தந்து உங்கட சாப்பாட்டு விசயத்தையும் எல்லாருமா தாங்கள் கவனிக்கிறம் எண்டுகினம். இப்பிடி ஒரு வழிக்கு நீங்களும் வர உங்களுக்கு இது சம்மதமோ..?”
- என்று அவர்கேட்டார். அண்ணாவியாருக்கு இப்படியான ஒரு நல்ல முடிவு பணவிசயத்தில் தீர்மானமாகியதை நினைக்க மனதுக்குக் குளுமையாகிவிட்டது. அவர் "ஓம்!” - என்ற விருப்பத்தில் ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டு சிரித்தார்.
М8Эыллам) O 69 O.

Page 43
“என்ன சிரிக்கிறியள் அண்ணாவியார். உங்களுக்கு இப்பிடியெண்டா சரியோ?” என்று திரும்பவும் அண்ணாவியாரைப் பார்த்து சண்முகம் கேட்டார்.
அவர் உடனே இந்தத் தம்பியும் ஆள் நல்ல விசயகாரன் தான். நல்ல ஆலோசணையும் இவளவு பேருக்க சொன்னார். இது எனக்குவலு
திருப்தி.!”
என்று சண்முகம் கேட்டதுக்கு சொல்லி, பின்பும் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சந்தோஷமாக நின்றார்.
இதுக்குள்ளே கோணேஸ் என்பவன் சும்மா இருக்கவில்லை. அவன் தானும் இப்போது அந்தக் கூட்டத்துக்குள்ளே ஒரு புதுக்கதையையும் எடுத்துவிட்டான.
"அண்ணாவியாருக்கு அப்பிடியா சாப்பாடு குடுக்கிற என்ர ரேண் வரேக்க அண்டைய சாப்பாட்டோட சேத்து நான் ரெண்டு போத்தல் பனங்கள்ளும் மத்தியான சாப்பாட்டுக்கு முன்னம் குடுப்பன் என்று அவன் சொல்ல,
"ஏன் நாங்களும் குடுப்போம் அப்பிடி!”
"ஓம் ஓம் நாங்களும் குடுக்கலாம்!”
என்று இன்னும் பல பேர் அதற்குள் ஒரு மனப்பட்ட விருப்பத்தோடு, வாய்க்குள்ளாலருந்து வெளிச்செல்ல ஆளுக்காள் தாங்களும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணாவியாருக்கு இப்படியெல்லாம் அவர்கள் சொல்ல, இன்னும்
சந்தோஷம் அவருக்கு மூசி மூசி உச்சி நோக்கி ஏறினாப்போல ஆகிவிட்டது. "எல்லாம் அந்த அம்மாவின்ர செயல்" என்று எல்லோரையும் பார்த்து சிரித்தபடி அவர் கையெடுத்துக் கும்பிட்டார். அந்தக் கும்பிட்ட தன் கையை எடுக்காமலேயே அவர் சண்முகத்தைப்பார்த்து,
"அப்ப சண்முகம் தம்பி நாளைக்கு இன்னாருக்கு இன்னாருக்கு இன்னயின்ன பாத்திரம்தான் எண்டு நீங்கள் இதுக்க நேர்த்தியாய் ஆக்களைத் தெரிவு செய்து ஒரு லிஸ்ட் நீங்க எடுங்கோ?” என்று சொன்னார். சண்முகம் உடனே மூச்சை ஆனந்தமாக இழுத்துக்கொண்டு "நாளைக்கு நாளையி ண்டைக்கு கெண்டு அதை யோசிச்சுயோசிச்சுச் செய்வம்' என்று சொன்னார். "அப்ப எல்லாம் சரிதானே இனி! நாங்கள் இந்த கணபதி காப்பையும் விநாயகர் காப்பையும் இனி படிச்சு முடிச்சுப் போட்டு இண்டைய நடந்ததுகளையெல்லாம் சந்தோஷமா முடிப்பம். ஆனா இண்டைய மாதிரி இல்லாம நாளைக்கு காப்பு படிச்ச பிறகுதான் மற்றயக் கதை பேச்செல்லாம் வைச்சுக் கொள்ளுறது.”
9700 புதினான்கஸ் தான் சந்திரன்
 

என்று சக்தி பெற்ற விழியுடனான ஒரு மனுசன் போல, அண்ணாவியார் இப்போது சுறு சுறுப்பாகச் சொன்னார். அண்ணாவியார் இதை சொல்ல அங்கே இருந்தவர்களெல்லாம் கண்களாலும் கூட கேட்டு அதை ஏற்றுக் கொண்டதாய் இருந்து கொண்டார்கள்.
அண்ணாவியார் காளி வழிபாட்டிலே தான் அதிக சுகம்காணும் ஈடுபாடு கொண்டவர். அவர் கண்களை மூடி ஒரு நிமிடம் பசி ஆறிய அளவுக்கு காளியை வணங்கிவிட்டு நுட்பமான தன் இசைப்பாணியிலேயே கணபதி க்ாப்பையும், விநாயகள் காப்பையும் துணைதேடி படிக்க ஆரம்பித்தார். "காத்தான் கதை படிக்க எங்கள் காரணியே முன் வருவாய்” என்ற அடிகளை அவர் மனமுருகிப்படித்த போது அங்கு இருந்த எல்லோரும் கூட பக்தியான ஒர் கவ்விய உணர்ச்சியை அப்போது அடையப் பெற்றார்கள். அந்தக் காப்பு படித்து முடியுமட்டும் அண்ணாவியாருக்கு நாவில் குடியிருந்த நல்ல சத்தம் மங்காமலேயே இருந்தது. அந்தச் சத்தம் இறக்கமிலாது ஓங்கார நாதம் கலந்தும் அவர் படித்த பாட்டில் வெளிப்பட்டது. “சின்னமுத்து பொக்குளிப்பான் தாயே சிதறுமுத்து வராமலே, நோயும் வந்தணுகாமலே எங்களை நுட்பமாக காரேன் அம்மா” - என்ற அந்த பாடலின் வரிகளை தொடர்ந்து அவர் படிக்கும் போது, பயத்துடன் சேர்ந்து ஒரு வித பக்தி உணர்வோடுதான் அங்கே இருந்தவர்களெல்லாம் காணப்பட்டார்கள்.
அண்ணாவியார் காப்புப் படித்து முடிவு பெற்றதும், அங்கு கூடியிருந்த அந்தக் கூட்டத்தினர் யாவரும் கலைந்து சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் வெளியால் உள்ள வீதிக்குச் சென்று தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர நடந்தபோது, தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் சேர்ந்து பல கதைகளையும் கதைத்துக் கொண்டு வானத்தை இடையிடையே பார்ப்பதும் கீழே நிலத்தைப் பார்ப்பதுமாக நடந்து போனார்கள். வானமெங்கும் இன்னேரம, நேரம் போன காரணத்தால் சோதிவெள்ளியாக எங்கும் காணப்பட்டது. அவர்கள் கதைத்த பல கதைகளெல்லாம், அப்போது எதைப் பற்றியதாக இருந்ததென்றால் அது இப்போது நடந்து கொண்டிருக்கிறதான, மக்களின் வாழ்வை சவமாக்கிடும் இந்த யுத்த கால பிரச்சினை பற்றியதாகவே, முழுவதுமாக இருந்தது.
11
அடுத்தநாள் இரவு சண்முகம் வீட்டு முற்றத்தில் முக்கால் பாகம் நிலத்தில் கூத்துப் பழக வென்று வந்திருந்த சனக்கூட்டம் ஆறுதலாய்க் குந்தி இருந்தது. அண்ணாவியார் அதிலே உள்ளவர்களிலெல்லாம் தன்னை மட்டும் பெரியஸ்தானத்தில் உயர்த்தியதாய் நினைத்துக் கொண்டு முன்னாலே ஒரு இடத்தில் அங்காலேயும் இங்காலேயுமாக ராஜநடை போட்டுக்
கொண்டிருந்தார்.
6.9emy) O 71 O.

Page 44
சண்முகம் வீட்டுக்கு வெளியே வலிமையாக தடித்துக்கிடந்தது விண்முட்டும் இருட்டு. ஆனால் சண்முகம் வீட்டு முற்றத்தில் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சம் 'சுருசுரு” வென்று கடுமையாகத்தான் பரந்ததாய் எங்கும் பட்டுக் கொண்டிருந்தது. - சனங்கள் அங்கே நேற்றையதை விட இன்றைக்கு முழுமையாக வந்து சேர வந்து சேர, அதைக் கண்டு விட்டு அண்ணாவியாரின் முகத்தில் சந்தோஷ ரேகை மிகையாகப் படர ஆரம்பித்து விட்டது.
இந்நேரம் ராஜனும் வந்து இங்கேயாய்ச் சேர்ந்து விட்டான். அவனைக் கண்டதும். உடனே அங்கே இருக்கப்பாய் அவனுக்கு விரித்தும் போடப்பட்டது. அங்கே உள்ள ஒருவருக்கும் செய்யாத வலு விசேஷமாக தேத்தண்ணியும் அவனுக்குக் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.
கொண்டு வந்து அதிலே வைக்கப்பட்ட தேத்தண்ணிக் கோப்பைக்கு உடனே தான் தள்ளி இருந்து கொண்டு “அண்ண யண்ண இதென்ன ஒரு வேல எனக்கெண்டு மட்டும் தேத்தண்ணிய இதில கொண்டு வந்து வைக்கிறீங்க நீங்க குடிக்க' - என்று தன் அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட ஒரு வசனமாய் மூச்சையும் பக்கென்று வெளியே விட்டுக்கொண்டு ராஜன் - உடனே சண்முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
“சரி சரி அது ஒண்டும் பறவாயில்லை உங்க இதுக்குள்ள இருக்கிற எல்லாரும் எங்கட உள் ஊர் ஆக்கள்தானே!” - என்றார் அவர்.
"எண்டாலும் எண்டாலும் அண்ண தனி ஒராளுக்கு மாத்திரம் நீங்க இப்பிடிச் செய்யக்கூடாது. எனக் கென்னவோ ஒரு மாதிரி இருக்கண்ணை’ என்று சொல்லி வரப்பில் இருந்து கால் வழுக்கின கணக்கில் அவன் கிடந்ததாய்ப்பாடு பட்டுக் கொள்ள.
"அது ஒண்டும் பறவாயில்ல. உங்களுக்கு எண்டு கொண்டுவந்து வைச்ச தேத்தண்ணிய நீங்க எடுத்துக் குடியுங்கோ ராஜன் குடியுங்கோ’
என்று பக்கத்திலிருந்து பாலாவும், சண்முகம் அவனுக்கு சொன்ன கதைகளை மோப்பம் பிடித்தமாதிரி பிடித்து விட்டு, தானும் அதில் பங்கு பற்றினாப்போல இதை ராஜனுக்குச் சொன்னான்.
தனக்கு முன்னால் நடக்கிறதுகளையெல்லாம் நின்ற நிலையிலே பார்த்துக் கொண்டிருந்த அண்ணாவியார், கைக்கடிகாரத்தை இவ்வேளை ஒரு முறைபார்த்தார். "நேரம் செல்கிறது - என்ற நினைப்பிலே அவர் பிறகு ஊவடிார் அடைந்ததாய் விட்டார்.
"அப்ப அப்பிடி எல்லாத்தையும் எங்கடதுகளிண்ட கதையளை எல்லாருமே கொஞ்ச நேரத்துக்கு இப்ப நிப்பாட்டிப் போட்டு. காப்பு முழுக்க இப்ப படிச்சாப் பிறகு பேந்து மற்றதுகள இருந்து நாங்கள் கதைப்போமே..?
9729 புதினான்கஸ் தான் சந்திரன்

என்று இதற்குள்ளே அண்ணாவியார் எல்லோரையும் அந்த வெளிச்சத்திலே தானும் வெளிச்சமாய்ப் பார்த்துக் கொண்டு மொத்தம் பொதுவாய்ச் சொல்லிவிட, எல்லோரும் கதை பேச்சில்லாமல் உடனே மெளனமாகி விட்டார்கள்.
அண்ணாவியார் அக்கணமே தனக்குள்ள கடமை உணர்வோடு காப்பு படிக்கத் தொடங்கிவிட்டார். அவர் இன்றைய இந்த நேரம் காப்பு படிக்கும் போது, ஒவ்வொரு தெய்வங்களையும் வருந்தி அழைக்கிறது மாதிரியாய்க் குரலும் அவருக்குக் கெஞ்சிக் கொண்டதாய் இருந்தது. காப்பு முழுவதும் அவருக்கு பாடி முடிக்கவே நேற்றையைவிட இன்றைக்கும் அவருக்குக்கணக்க நேரம் போனது. காப்பு முழுக்கவாய்ப் படித்து முடித்த போது கொஞ்சம் உடம்பு வேர்த்த அளவிலும்தான் அவர் இருந்தார். கையிலே இருந்து கொண்டு பாடலுக்கு சுருதியாய் பேசிக் கொண்டிருந்த மணித்தாள ஒசையும் ஓய்ந்ததாய் நின்று விட்டது.
பூ - என்று தன் உடல் வெக்கைக்கு ஆறுதல் கொடுத்ததாய் காற்றை வாயினால் வெளியே ஊதினார் அவர். " அப்ப தம்பி சண்முகம் காப்பு இண்டைக்கு 6) IL96) IT பத்தியோட படிச்சு முடிச்சாச்சு. அது எல்லாருண்டையும் மனதுக்கு இப்ப நிறைவு. எனக்கும் நீங்க செய்யிறோம் எண்டு சொன்ன ஒப்பந்தமெல்லாம் இப்ப சரியாயிட்டுது! அதால இப்ப நீங்க நடிகள் தேர்வுக்கு இங்க வந்திருக்கிற ஆக்களப்பாத்து ஒரு லிஸ்ட் ஒண்டு எடுங்களன்.?”
என்று அண்ணாவியார் சொல்ல சண்முகம் உடனே அவரின் முகத்தைப் பார்த்தார். அவருக்கு யோசனை.
“என்ன என்னயப் பார்க்கிறீங்க உங்களுக்கு அப்பிடி என்ன யோசனை.?”
"இல்ல எங்கட இந்தக் கூத்துக்க எத்தனை பாத்திரமெண்டு நேற்று நீங்க சொன்னாலும், இண்டைக்கும் அதை ஒழுங்கா நாங்க இப்ப எல்லாருக்கும் சொல்லியும் ஆகவேணும்ே.?”
“என்ன இது ஒரு கதை நீங்க சொல்லுறீங்க தம்பி சண்முகம்! நேற்றும் இந்தக் கணக்கை சொன்னனான் தானே! எனக்குத் தெரிஞ்சது எல்லாம் உங்களுக்கும் ஒழுங்கா தெரிஞ்சது தானே? நீங்கள் இதுகள ஆக்களுக்கு சொல்லலாம் தானே.”
"அப்பிடி இல்லயுங்கோ அண்ணாவியார்! அண்ணாவியாரெண்டு உள்ளனியள் நீங்கள் இப்ப சொல்லுறதுதானே ஒரு சரியான முறை.?”
"ஓ அது சரி தான் தம்பி எண்டாலும், நேற்று நான் என்ர கதையில சொன்ன மாதிரி, இந்த நடிகள் தேர்வை வந்து நீங்கள்தானே செய்ய வேணும்? இதுக்குள்ள அதுக்கு அதுக்கு தோதாய் உள்ள ஆக்களெண்ட அவய
о 7зо

Page 45
ளுக்கு சரியானகதா பாத்திரங்களை குடுக்கிறதுக்கு உங்களுக்கு தானே அது எல்லாம் சரியா தெரியும். எனக்கு வந்து கூத்துக்குபடிச்ச ஆக்கள் ஆரும் இதுக்க இருந்தா அது எனக்கு உடன தெரியும் - அப்பிடியான ஆக்களுக்கு இந்த பாத்திரம் தான் பொருத்தம் எண்டு நான் துணிவா உடன அந்த ஆக்களை எடுத்துப் போட்டிருவன். ஆனா அப்பிடி எனக்கு இப்ப இது ஒண்டும் தெரியாதுதானே சண்முகம் தம்பி.?”
"ஓ அது சரி அண்ணாவியார்! நீங்கள் சொல்லுறதும் ஒரு வழிக்குச் சரி.! அப்பிடியெண்டா என்ன கதா பாத்திரத்த நீங்க இவயளில முதல் முதல் இப்ப தெரிஞ்சு எடுப்பமெண்டு சொல்ல இருக்கிறியளெண்ட அத ஒருக்கா சொல்லுங்கோவன்.”
"ஒ சொல்லுவம் சொல்லுவம் தம்பி. எதுக்கும் அந்தத் தாய்க் கொப்பிய நீங்கள் ஒருக்கா கையில எடுத்துக் கொள்ளுங்கோ தம்பி முதலில.?”
- என்று அண்ணாவியார் சண்முகத்தைப் பார்த்துச் சொல்ல- எந்தப் பூச்சியும் எந்த நோயும் அணுகாத மாதிரி பார்வைக்குத் தெரிந்ததான அந்தக் கொப்பியைப் பாயிலிருந்து தன் கைக்கு எடுத்துக்கொண்டார் சண்முகம்.
"முன் ஒற்றையை மட்டையை விரிச்சு முதல் நீங்க ஒருக்கா பாருங்கோ தம்பி அதில சண்முகம்.'
என்று அவள் சொல்ல, சண்முகம் முன் மட்டையை உடனே விரித்தார். ஒரு ஒற்றையையும் பிறகு அடுத்ததாய்ப் புரட்டிக்கொண்டார்.
GG
பாத்தீங்களே தம்பி! அதில எல்லாம் விபரம் எழுதி இருக்கிறன் தானே..? எங்கட நாங்கள் படிக்கிற இந்தக் காத்தான் கூத்தில மொத்தம் ஐஞ்சு காத்தவராயன் பாத்திரங்கள் இருக்கு கண்டியளோ. தம்பி அதுகளை நான் இப்ப சொல்லுறனே.”
என்று அண்ணாவியார் சொல்லிவிட்டு, கொஞ்சம் தன் நெஞ்சை நிமிர்த்தினார். அடுத்து கையையும் முன்னாலே இருந்தவர்கள் பக்கம் நீட்டினார். பிறகுபெருவிரலை மடித்துக் கொண்டு கணக்கு எண்ணத் தொடங்கினார்.
"ஒண்டுவரும் முதலில அது பாலகாத்தான்! அதுக்கு சின்ன பெடி ஒண்டை போடவேணும்! இதுக்கு சண்முகம் தம்பி, ஒரு வழி பண்ணிக் கொள்ளுங்கோ என்ன..?”
- என்று அவர் சொல்ல சண்முகம் தலையை ஆட்டினார். "அடுத்தது தம்பி அதுக்குள்ள வாற காத்தவராயன் பாத்திரத்தில பிறகு வாறது.”
9749 புதினான்கஸ் என் சந்திரன்

என்று இப்போ அவர் ஆள்காட்டி விரலை பெருவிரலுடன் சேர்த்ததாய் மடக்கிக் கொண்டார்.
“இது முற்காத்தான் என்ன சண்முகம் தம்பி சரிதானே.”
"ஓ அப்ப இரண்டு காத்தான் வந்திட்டுது” என்று சண்முகம் முருகேசரோடு சேர்ந்து தானும் அவரின் கணக்கெடுப்புக்குள்ளே புகுந்ததாய் நின்றார்.
“அடுத்தகாத்தான தம்பி நடுக்காத்தான். இதுக்கடுத்தது பேந்து வாறவர்கள்ளக் காத்தான். இந்தக் கள்ளக் காத்தானுக்கு பிறகு வாறவர் ஆரெண்டா, அவர் பிற்காத்தான். இப்ப தம்பி எல்லாம் சேந்து நாலுகாத்தான் வந்திட்டினம் தானே? இனி கடைசியா வாறது ஆரெண்டுபாருமன்.'
"அது தான் கழுக்காத்தான் தானே அண்ணாவியார் கடைசியா வாற காத்தான்.?”
“சரி சரி அப்ப ஐஞ்சு என்ன. அந்த பாலகாத்தான பேந்தும் நீங்கள் பாத்து ஒழுங்குபண்ணலாம் சண்முகம்.! இப்ப இதுக்க நீங்க அந்த நாலு காத்தான் கதாபாத்திரத்துக்குரிய ஆக்களத் தெரிவு செய்து. ஒரு துண்டில அத ஒழுங்கா குறிச்சுக் கொள்ளுங்கோ.?”
“ஓம் அண்ணாவியார்! கிட்டத்தட்ட நீங்கள் நீங்கள் தான் இந்தப் பாத்திரத்துக்கு நடியுங்கோ எண்டு தனிப்பட்டும் தனிப்பட்டும்தான் நான் அவயளோட கூடி கதைச்சும் சொல்லியிருக்கிறன். கிட்டத்தட்ட அவயள் எல்லாம் சரி. அவயளிண்ட பெயரை நான் இப்ப இதில எழுதுறன் அண்ணாவியார்.”
"எண்டாலும் சரி சண்முகம் தம்பி! நாலுபேருக்கு முன்னாலயம் இதுகள நீங்கள் ராசா சொல்லத்தானே வேணும் எண்டுறன்.?”
"அது எல்லாம் எல்லாருட்டயும் சொல்லி ஒம்பட்டதாய் நான் கதைச்சாச்சு அண்ணாவியார். எண்டாலும் நாளைக்கு நடக்கிற கூட்டத்தில இதுகள நான் எல்லாருக்கும் ஒருக்காப்பாத்து சொல்லிப் போடுறனே.?”
"ஒம் ஓம் தம்பி! உங்களுக்குள்ள இதெல்லாம் சமாதானமா நடந்து எல்லாருக்கும் சரியெண்டா பிறகு எனக்கும் சரிதான். நீங்கள் ஒற்றுமையா எல்லாரும் இருந்தா அது காணும் தானே! வேற ஒண்டும் தேவையுமில்ல.! பேந்தொரு பிரச்சனையும் இதுகளால வரப்போறது மில்ல என்னத் தம்பி.?”
"அதெல்லாம் திருப்தி! பிரச்சினையில்ல! நீங்க அடுத்த அடுத்த கதாபாத்திரங்கள இனி சொல்லுங்கோவன்.?”
“அடுத்தது தம்பி காத்தவராயன் தேவி ஆரியப் பூமாலை கதாபாத்திரம்! அதுக்கு நடிக்கிற பெடியன், சேடியர் மாதிரியா இல்லாம பெடியனாயிருந்தாலும் பொம்புளைக்கு உடுத்திவிட மொட்டு மாதிரி மொழு
59ശ്രമിഴ്ച 9759

Page 46
மொழுவெண்டு இருக்க வேணும். மேடையில ஆள் வந்தவுடன முதுகுக்கூனை நிமிரவிட்டு பெட்ட மாதிரி உள்ள அந்த ஆளை எல்லாரும் பாக்க வேணும்! பூமாலைமாதிரி சோக்கா ஆள் மெல்லீசாவும் இருக்க வேணும் பாக்க - என்ன தம்பி. குரலும் சும்மா கேக்கிற ஆக்களுக்கு வாரி அணைக்கிற மாதிரி குழைவா நல்ல மெல்லிய பெம்புளக் குரலாவும் இருக்க வேணும்தம்பி. நடை கிடையெல்லாம் அப்பிடி அப்பிடி குமரியள் இளசுகள் மாதிரி வளைச்சு வளைச்சு நளினமா.”
என்று சொல்லும் போதே அண்ணாவியார் தன்னையும் மறந்து மனத்தில் ஒரு ஆர்வம் கனியாகவர பெண்கள் கணக்காய் ஒரு நெளி தன் உடம்பை அப்போது நெளித்தும் காட்டினார். அண்ணாவியார் அப்படி செய்து காட்டவும் எல்லோருக்கும் அவரை அந்த வயதிலும் அப்படிப் பார்க்க ஒரு வித சிரிப்பும் வந்ததாய் விட்டது. உடனே ஒரு சிலர் அங்கே வெடிச்சிரிப்பும் சிரித்தும் விட்டார்கள். மற்றவர்களின் சிரிப்பை பார்த்ததிலே அண்ணாவி யாருக்கும் உடனே சந்தோஷமாகிவிட்டது.
"அப்ப இனி ஆரியமாலா கதாபாத்திரம் வந்து - என்ன மாதிரி சண்முகம் தோதான ஆள் இப்ப நீங்க இதுக்க எடுத்திட்டயளோ..? அது அப்ப இனி சரிதானோ..?’ என்று சண்முகத்தைக் கேட்டார்.
"அதுக்கு கவலையே இல்ல அண்ணாவியார் அதை என்னோட விட்டுடுங்கோ. நாளைக்கு அதுக்கு ஒரு பெடியன் நான் எங்கட இடத்துக்கயே இருந்து கொண்டந்து இங்க தாறன். அந்தப் பெடியன் ஆரியப்பூமாலைக்கு பொருத்தமெண்டா, அப்பிடி கோடிப் பொருத்தமாயிருக்கும். அவனை பெமப்ளைக்கு உடுத்திவிட்டா தங்கச்சிலைமாதிரி வடிவா ஜோதியா இருப்பான்."
"ஆ. அப்ப ஆள் பெடியன் அவன் இங்கின இதுக்க இல்லயோ சண்முகம்.?”
"இல்ல அண்ணாவியார். இதுக்க இப்ப இல்ல. ஆனா நான் அவர இங்க கட்டாயம் கூட்டியந்திடுவன். நேற்று அந்தப்பெடி தண்ணிருற்றுக்கு ஒரு அலுவலாய்போயிற்றுக் கண்டியளோ. ஆனா அந்தப் பெடி சுவர்றா கட்டாயம் நாளைக்கு வரும்.”
"அப்ப அந்தப்பாத்திரம் சரி. அத விடுவம்! இனி வாறது, தொட்டியந்துச் சின்னான் தம்பி.!”
" அது சரியாயிட்டுது அண்ணாவியார்! இந்த தொட்டியத்து சின்னான் பாத்திரம் முந்தி கோணேஸ் செய்ததும் தான். ஆளுக்கு அப்ப அதையே நடிக்கக் குடுப்பம். என்னங்கோ அண்ணாவியார்.'
“என்ன சண்முகத் தம்பி! திரும்பவும் நீங்க என்னட்ட இதுகள கேட்டுக் கொண்டு. நீங்க சரியெண்டா சரிதானே பேந்தென்ன.?”
“இல்ல இல்ல! சும்மா நானும் சொல்லத்தானே வேணும் அண்ணாவி
9760 புதினான்கஸ் தான் சந்திரன்

யார்.1 சரி நீங்க இப்ப அடுத்த கதாபாத்திரங்களைக் சொல்லுங்கோவன்.'
"அடுத்தது என்ன தம்பி சிக்கலான கதாபாத்திரங்களெண்டா இந்த நாரதர். நாரதருக்கு கொஞ்சம் சிவலையான ஆளாயிருந்தா சோக்கு..! அடுத்தது கிருஷ்ணர்! இதுவும் முகமும் உடம்பும் பொருத்தமாயிருக்க வேணும்.! அடுத்தது என்னென்ன எண்டால், சிவன் பார்வதி இந்த முத்து மாரியம்மன் இதுகளுக்கு வயது கணக்கெண்டில்ல! ஆரும் இதுகள செய்யலாம்! அதிகமா ஆருக்கும் இந்த வேசங்கள் பொருந்தும்! ஆனா என்னெண்டா. இதுகளியெல்லாம் அவயள் நல்லா பாட்டுகளை நல்லா பாடமாக்கி நினைவில தாங்கள் வைச்சுக் கொண்டு ஒண்டையும்மறவாம பிழையில்லாம ஒழுங்கா பாடி சரியா இதுகள செய்யவேணும்.! வேசம் பொருந்தினா மாத்திரம் காணும் எண்டு நினைக்கப்பிடாது! பாட்டும் ஒழுங்கா பாடி வசனமும் பேசி நடிக்கிறதும் தானே கூத்திலையே நாடகங்களிலயோ ஒரு முக்கியம் இதை எல்லாரும் இப்ப இதுக்க கவனமெடுத்து காதுலகேட்டுக் கொண்டாச் சரி.!”
“ஓம் அண்ணாவியார்! நீங்கள் சொன்னதைத்தான் இப்ப நானும் இவயள் எல்லாருக்கும் சொல்லுவன். கூத்துப்படிக்கிறதெண்டா பாடமாக்கி முழுதும் ஒழுங்கா செய்ய வேணும்! அல்லாட்டி பிழைவிடுற அந்த ஆளோட சேந்து படிக்கிற நடிக்கிற ஆக்களுக்கும் பிறகு கஷ்டம் தானே.”
"அப்ப நீங்களும் இப்ப இத சொல்லியிருக்கிறியள்! இதை எல்லாரும் கேட்டு ஒத்துக்கொண்டா சரி.!”
என்று அண்ணாவியாரும் சண்முகம் சொன்னதற்குப் பிறகு தானும் சொல்ல, அங்கு இருந்தவர்களிடமிருந்து சளசளவென்று பேச்சரவம் தொடங்கி விட்டது.
"கொஞ்சம் ஆளுக்காள் பேசாம, கொஞ்ச நேரத்துக்கு இருங்கோ..? இனியும் கொஞ்சம் முக்கியமான கதை சொல்லக் கிடக்கு அண்ணாவியார் அதையும் இப்ப எல்லாருக்கும் சொல்லுவார்.”
- என்று சண்முகம் எல்லாரையும் பார்த்து அப்போது சொன்னார். பிறகு அண்ணாவியாரை அவர் பார்த்து.
“முறைப்படி மிச்சமுள்ள கதாபாத்திரங்களையும் ஒருக்கா செழுமையும்முழுமையுமா வர இப்ப ஒருக்கா நீங்கள் சொல்லுங்களன் அண்ணாவியார்.?”
என்று சொல்ல
அடே. யப்பா.”
என்று ஏதோ தனக்கு மறந்து போனது போல ஒரு நினைப்பில்
16.9emy.) O 77 O

Page 47
இப்படி முருகேசர் உடனே சொல்லிவிட்டு, இந்த வயதிலும் செழிப்பாயுள்ள தன் நரைத்த மயிர்க்கற்றைைையயும் வலக்கையால் தடவிக்கொண்டு பிறகு தான் உடுத்தியிருந்த மங்கின ஜோதிச் சிகப்புச் சரிகை போட்ட மகா அம்சமான வேட்டியையும் சுருக்கு தடவி விட்டுக் கொண்டு சண்முகத்தைப் பார்த்தார்.
"அண்ணாவியார் இப்பயும் பாக்க மாப்புளமாதிரித்தான்ராப்பா இருக்கிறார்.'
என்று இப்போது அந்தக் கூட்டத்துக்குள்ளே - இருந்தவர் ஒருவர் குரலுடன் சிரிப்பும் கேட்டது. அந்தச் சிரிப்பொலியுடன் பல சிரிப்பொலிகள் அமசடக்காய்ச் சிரித்த மாதிரியும் இருந்தன. அண்ணாவியாருக்கு இந்தக்கதை காதில் விழவில்லை. அப்படி கேட்டாலும் அதில் ஒன்றும் அக்கறையில்லாத ஆள் மாதிரித்தான் அவர் இருந்தார்.
முருகேசரின் மனதுக்குள்ளே இப்போது கூத்துப் பற்றிய பிரச்சினை அடர்கிற மாதிரியான நிலையாய்த்தான் இருந்தது. மிச்சம் சொச்சம் உள்ள கதாபாத்திரங்களை மளமளவென்று அவர் சொன்னார்.
"இனி உள்ள காத்தவராயன் நாடக கதாபாத்திரங்களெண்டா வைசூர ராசன், கோப்பிலிங்கி சோமசுந்தரம், மல்லர், சம்மங்கி தேவடியாள், வரவரச் சுருட்டி, டாப்பர்மாமா, செட்டியார், வண்ணாரநெல்லிபூமாது, சாராயப்பூதி, செட்டிப்பெண், சப்த கண்ணியர்கள், சேடியர்கள், பறையன், கறுப்பி, மாடு மேய்க்கும் சிறுவர்கள் குடிமக்கள், சேவகன், முதல் நாள் இந்த வல்லத்து மாங்காளி எல்லாம் சொல்லேலபோல- இருக்கு அதுவும் இதுக்கிள்ளவரேக்க சரியா இப்ப காத்தவராயன் கூத்து கதாபாத்திரங்கள ஒழுங்கா இப்ப நான் சொல்லி முடிச்சிருக்கிறன் போலக் கிடக்கு என்ன சண்முகம் தம்பி.?”
என்று இவைகளை சொல்லிய தருணத்தோடே, ஆள்காட்டி விரலையும் தன் சொண்டிலே வைத்து அழுத்திக்கொண்டு முருகேசு அண்ணாவியார் சண்முகத்தைப்பார்த்தார்.
"சரி கொஞ்சம் பொறுங்கோ அண்ணாவியார்! நீங்க எல்லாம் பிறகு இப்ப சொன்ன கதாபாத்திரங்களை நானும் இப்ப மிச்சம் எழுதிப்போட்டு ஆக்களிண்ட பெயரையும் அதுக்கு அதுக்கு எண்டு கையோட எழுதிப் போடுறனே' என்று சண்முகம் இவ்வேளை அண்ணாவியாரை பார்த்துச் சொல்லிவிட்டு பிரயாசைப்பட்டு மிகுதி எல்லாவற்றையும்மளமளவென்று கடாதாசியில் எழுதினார். பிறகு ஒரு செறுமலோடு நீவா நீவா’ என்று அங்குள்ளவர்களின் பெயர்களை கூப்பிட்டு அவர்களும் அவ்விடம் வர, அவரவர்க்குரிய பாத்திரங்களையும் அவர்களுக்குக் கூறி அந்தக் கடதாசித்
9780 புதினான்கஸ் தான் சந்திரன்

துண்டிலே அவர் எழுதிக் கொண்டார். அதிலே வந்தவர்களெல்லாம் முகத்தை சுளுக்கிக்கொள்ளாமல் சண்முகம். தங்களுக்கென்று சொன்ன கதா பாத்திரங்களையெல்லாம் சந்தோஷத்துடனே தாங்களெல்லாம் ஏற்றுக் கொண்ட ஒம்பட்ட நிலையில் அமைதியாகப் போய் தாங்கள் இருந்த இருந்த இடங்களில் மீண்டும் போய் இருந்து கொண்டார்கள்.
அண்ணாவியாருக்கு இந்த நடவடிக்கையெல்லாவற்றையும் பார்க்க
தனிச் சிறப்பாய் இருக்கிற மாதிரியாகத்தான் தெரிந்தது. "போட்டி பொறாமை இல்லாமல் அமைச்சலா எல்லாத்தையும்இந்தச் சனம் செய்யுது” - என்றும் அவர்தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். இதையெல்லாம் கொடுங்களிப் போடு மெளனமாக அவர் கற்பனைத்திறமையோடு பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு இதனால் கண்களும் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.
அந்தப் பாயிலே குந்திக்கொண்டுஇருந்த ராஜனுக்கும் இவ்விடம் அப்போது நடக்கிறதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்ததில் அவனுக்கும் ஆச்சரியத்துடன் யோசனை போய்க்கொண்டிருந்தது.
"இப்படி ஒரு கூத்துப்பழகிறதுக்கு இவ்வளவு ஆக்கள் சேத்து வைச்சு கட்டி மேய்க்கிறதெண்டுறது. ஒரு பெரிய சாம் ராஜ்யத்தைக் கட்டியாளுகிறது போலத்தான் பெரியதொரு கஷ்டம் பிடிச்ச வேல.”
என்று இந்தக் கஷ்டநிலையைக் குறித்து இப்படியாயெல்லாம் அவன் நினைத்தான். அந்த யோசனையோடு அதிலே இருந்தபடி சண்முகத்தின் வீட்டு வளவு வேலியடியில் பூத்து நிற்கும் அரலிமரத்தில் அவன் பார்வை இருந்தது. பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் அங்கே பூத்திருக்கும் மல்லிகைச் செடியைப் பார்க்க அவன் மனதுக்கு இதமாக இருந்தது. அங்குலம் அங்குலமா அவனின் பார்வை அந்தப் பூச் செடியின் மீதே மேய்ந்து கொண்டதான அளவிலேயாய் இருந்தது.
இந்தச் சூழ் நிலையிலே அவனுக்கு இப்போது செய்கிற தொழில் நினைவுகளும் மூளையில் இறக்கை அடித்து வந்து கைத்தடி ஊன்றியது போல இறங்கியது. தனக்குப் பக்கத்திலே நடந்து கொண்டிருக்கிறதை யெல்லாம் மறந்து அவனுக்கு இப்போது, தான் செய்யும் தொழில் பற்றிய அந்த நினைவுதான் மனதுக்குள் அக்கறையாக இருந்தது.
இந்த நினைப்புகள் வானின் மேகங்கள் புரண்டுதிரண்டு கொண்டிருப்பதுபோல அவனிடத்தில் இப்போது இருந்து கொண்டிருந்தன.
மீனின் கண்களிலே உள்ள சாவின் வெறி போன்ற துன்பமும் அவனுக்கு மனதில் ஏற்பட்டது. "நான் முந்திச்செய்த தொழிலென்ன? இப்பவாய்ச் செய்யத்துவங்கியிருக்கிற இந்தத் தொழிலென்ன?” - என்ற கேள்வியிலேயாய் அவனதுமனம் இப்போது புகைந்துகொள்ளும் அளவுக்கு
இருந்தது.
6.9emy.) O 79 O

Page 48
சளக்சளக்கென மினுங்கி மினுக்கும் வெள்ளி வயிறான மீன்களை கையால் போட்டு அளைந்து கொண்டு, கைவிறைக்க ஐஸ் அடித்து மீனுக்கும் போட்டு, பெட்டி பெட்டியாய் எல்லாம் அடுக்கித் தூக்கி ஒரு இடத்தில வைத்து
“என்ன யாவாரம் தான் இது? மீன் விலுக்கிவிலுக்கி பிறகு சாகிறதை நான் பார்க்கிறதும் எனக்கு ஒரு பரிதாபம்தானே? - கறுமம் இது என்ன எனக்கெண்டு வந்த கறுமம்! - அதோட ஐஸ் விறைத்து நீசாவென சூம்பியும் போகுமே இந்தக்கைகளும்?”
LĎsör பாயும்போது நீர் நலுங்குவது போல இருந்த அந்தச் சிந்தனை திடீரென இப்போது உடைபட்டதாகவும் அவனுக்குப் போய்விட்டது.
அப்ப நாளைக்கு நாளைக்கு இதே நேரத்துக்கு? - என்று சண்முகம் பலருக்கும் அங்கு சொல்வது அவனுக்கு காதில் விழுந்தமாதிரி இருந்தது.
அதைக் கேட்டதோடு திரும்பவும் அவன் பார்வையில் மல்லிகைப் பூக்கள் தெளிவாக தெரிவதைப்போல இருந்தது. தூண்டில் கயிற்றை அறுத்துக்கொண்டு மீன் போய்விட்டது மாதிரி அந்த நினைவுகள் தொலைய: இருக்கிற சூழ்நிலையிலே அவன் பிறகு பொருந்தியதாய் விட்டான்.
“அதெல்லாம் சரி! இருந்தாபோல உங்களுக்கு என்ன கடும் யோசனை அப்பிடி இப்ப போனது?” - என்று சண்முகம் இப்போது ராஜனைக் (85LLITsi.
“ஒண்டுமில்ல ஒண்டுமில்ல அண்ணை’ என்று ராஜன், இரு தடவை ஒரே சொல்லைச்சொன்னான். "அப்ப நாளைக்கும் நீங்க இங்க வருவியள்தானே.”
- என்று பிறகும் சண்முகம் ராஜனைக் கேட்க “ஓ! கட்டாயம் கட்டாயம்!” - என்று அவனும் இங்கே எழும்பி, உடுத்த உடுப்பில் பட்டமண் தட்டிக்கொண்டு நின்ற மற்றவர்களையும் பாத்துக்கொண்டு அவருக்கு சொன்னான். சொன்ன கையோடு தான் இருந்த பாயையும் பிறகு எழும்பி அவன் கையாலே பிடித்துச் சுருட்டினான்.
"நீங்க விடுங்கோ நான் சுருட்டுறன்!” - என்று சொல்லியவாறு அவனிடமிருந்து அந்த வேலையை அப்போது தான் பிடுங்கிக்கொண்டார் . சண்முகம்.
சனமெல்லாம் அவ்வேளை ஒண்டடிமண்டடியாய்ச் சண்முகம் வளவுப் படலை வழியாலே வெளியே போய்க் கொண்டிருந்தது. சனம் கதைக்கிற
9809 புதினான்கஸ் என் சந்திரன்

சளசளப்புச்சத்தம்தான் சண்முகம் வீட்டு வளவுக்குள்ளும் தெருவழியெங்கும் அவ்வேளை கேட்டுக் கொண்டிருந்தது. பக்கத்திலுள்ள நந்திக்கடல் தூங்கி விட்டதா? என்று நினைக்கும் அளவுக்கு அவ்விடமெங்கும் கேக்கக்கூடியதாய் ஒரு இரைச்சல் சத்தமும் அப்போது இல்லை. இறுக்கின அந்த இருட்டுக்குள்ளே வான் பரப்பின் தொங்கலில் மேகமானது மழை பெய்வதற்கான முனைப்பில் பல குறிப்புகளை காட்டுகிறமாதிரி - மின்னல் அவ்வேளை "சளார் சளார்” என அடித்து மின்னிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களின் பின் மழை நீர்த்துளித் தூறல் குளிர்ந்திட நிலத்தில் விழத்தொடங்க வான்மீதிருந்து திக்குகள் கேட்டுத் திகைக்க இடிக்குரல்களும் எங்கும் ஓங்கி கேட்கத்
தொடங்கிவிட்டன.
12
கொஞ்சம் வெளிச்சம் விழுந்த காலைப் பொழுதிலே நித்திரை யால் எழும்பி விட்டார் அண்ணாவியார். தன் கொட்டில் வீட்டால் அவர் வெளியே வந்து பார்த்தார் - அங்கே சண்முகம் வீட்டு முற்றத்து எல்லைக்குள் முழுவதும், அடுக்கு இதழ்வட்டமும் தெளிவுமாய் விரிந்து பரிமளம் பரப்புகிறதைப் போல் நிற்கும் ஒன்றிரண்டு செவ்வந்திப் பூச்செடிகள். அவரின் கண்களில் முதன்முதலாய்க் காணப்பட்டது. அவர் பிறகு மேலே பார்த்தார். அலம்பிச்சுத்தம் பண்ணப்பட்டது போல ஆகாயம் அவருக்கு நீலத் திருமேனியாய்த் தெரிந்தது. ஆனந்தமான ஒரு வியப்புடன் பிறகு பார்வையை கீழே அவர் கொண்டுவந்தார்.
வெளுத்துச் சிவந்து புஷ்டியாக இருக்கம் அரளிச் செடியிலுள்ள அடக்கமான பூ மொட்டுக்கள் அவரது பார்வையில் இப்போது பட்டது. அதைப் பார்த்தவுடன் பனிநீர் பட்ட மலரின் அழகுமிக்க புன்சிரிப்புப் போன்று அவர் மனமும் பூக்களை ஆரோகணித்ததைப் போல குளிர்ந்ததாய் மலர்ந்தது.
அந்த மகிழ்ச்சியில் காலையில் இருக்கும் உடல் சோர்வுக்காகவும் சேர்த்து ஒரு நீண்ட மூச்சு அவள் உள்ளே இழுத்து வெளிவிட்டார். அத்தருணம் இதோடே ஒரு யோசனையும் அவருக்குப் போனது.
“என்ன வாழ்க்கையிது? இடம் பெயர்ந்து, தங்கட ஊர் உலகத்தை - வீடுகளை விட்டு, ஊர் அறியா இடம் வழியவும் இப்பிடி வந்து என்ன கஷ்டமான அமைதியில்லாத வாழ்க்கை இது! எங்கட சனத்துக்கு.? எப்படி எப்படியெல்லாம் நல்ல தங்கட இடத்தில இருந்து மகிழ்ச்சியா சீவிச்சதுக ளெல்லாம் இப்பிடி இப்பிடி வந்து இப்பவா இங்க கசங்கின மாதிரி விடப் படுதுகள். இப்பிடிப் புழுதிச்சுழி வீசிற இடங்கள், கொட்டில் வீடுகள் தான் அதுகளுக்குச் சீவிக்க இப்ப நிரந்தர வீடுகளுமாப் போய் விட்ட கணக்காயும் இருக்கு. இந்தச் சீவியத்திலயும் இந்தப் பூக்கண்டுகளையும் இளப்பாறினதாய் இருந்து வளர்த்து, வந்திருக்கிற இடங்களிலயும் அதுகள் இரக்காம
(6.9emy osio

Page 49
ஆருட்டயும் கை நீட்டி பிச்சையெடுக் காம கெளரவமா வாழத் தான்பாக்குதுகள். இது எங்கட சனத்துக்கு எவ்வளவு சிறப்பு.'
- என்று அவர் இளைப்பாறும் நிலைமையான இந்தக் சிந்தனையையும் சற்றே யோசித்துக் கொண்டிருக்கையில் - இருந்தாப்போல ஒரு கேள்விக் குறியும் அவரின் யோசனைக்குள்ளே புகுந்தது.
"நீயும் ஒரு காலம் இந்த சனத்தைப் போல உன்ர சகோதரங்களிண்ட குடும்பத்தோடயும் ஓட வேண்டியும் சிலவேளையில வந்தாலும் வரும்.?”
என்று அவருக்கு இது சிறு நகப்பதிவுகளாய்த் தென்பட்டவுடனே, இருந்த மகிழ்ச்சி அசைவுகள் எல்லாமே அவருக்கு சிறிது உடனே குறைந்ததாகவும் ஆகிவிட்டன. மனத்திலே அவருக்குப் பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் சோகச் சங்கிலியின் தோற்றம் இழுபடதொடங்குகிறது மாதிரி இருந்தது. என்றாலும் அதை அவருக்கு நீள விடாமல் தடுத்து வைப்பது போல சண்முகமும் நித்திரைப் பாயால் எழும்பி அவர் நின்ற இடத்துக்கு வந்து விட்டார்.
“முருகேசண்ண தேத்தண்ணியும் குசினியில சுடுதண்ணிவைச்சு ஊத்தியாச்சு. குடிக்கிறியளே நீங்க அதை இங்க நான் கொண்டரவே.?”
என்று அவர் கேட்டார். "இல்லத்தம்பி இன்னும் பல்லுத்தீட்டி முகம் கைகால் கழுவேல்லராசா நான்.”
"அப்ப இங்க குடத்துத் தணிணியிலயும் எடுத்து முகம் கழுவலாம் கொள்ளலாம் முருகேசண்ண.'
"ஐயோ என்ன கத உது. நான் அங்க கிணத்தடிக்கு இப்ப போய் வாறனே. அங்க இருந்து அந்தப் பிள்ளை கிணத்தால இருந்து கஷ்டப்பட்டு காவிக் கொண்டந்து வைச்ச தண்ணியில முகம் கழுவெண்டு நீங்க என்ன நாயம் இல்லாத கதை எனக்குச் சொல்லுறியள்.?”
- என்று விட்டு முருகேசும் சண்முகத்தைப் பார்த்துச் சிரித்தார்.
“என்னவோ எங்கயோ கழுவிக் கிழுவிக் கொண்டு கெதியா நீங்க வாங்கோ அண்ணாவியார் தேத்தண்ணியெல்லே கிடந்து பிறகு ஆறப்போகும்.”
என்று அவருக்குச் சொல்லிவிட்டு உபசரிப்பு ஒருவருக்கு செய்கிற போது வரும் ஒரு முகமலர்ச்சியுடனான அந்தச் சிரிப்பை அவர் சிரித்தார்.
அண்ணாவியாரும் பிறகு “இந்தா நான் கெதியா வந்திடுறன் தம்பி!” - என்று சண்முகத்துக்கு ஒரு சொல் சொல்லிவிட்டு, துவாய்த் துண்டை கொட்டிலுக்குள்ளே போய் எடுத்து தோளில்போட்டுக் கொண்டு வளவுப் படலையாலே சுறுசுறுப்போடு வெளிக்கிட்டு, முன்னம் தான் போய் வந்த பழக்கப்பட்ட அந்தக் கிணற்றுவளவுக்குப் போனார்.
9820 புதினான்காம் தான் சந்திரன்

கமுகு மரங்கள் சுற்றி நின்ற அந்த கிணற்றின்தண்ணி நல்ல குளிர்மைதான். அங்கே வேலியில் நின்ற ஒரு வேம்புமரத்தில் குச்சு உடைத்துக் கொள்ள அவருக்கு லோசாகப்போயிற்று. குச்சித்தடியால் மளமள வென்று அவர் பல்லுத்துலக்கி முகம் கழுவிக்கொண்டு அவர் உடனே சண்முகம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.
"நீங்க முகம் கழுவ வெளிக்கிட ஊத்தின தேத்தண்ணிய உடன நாங்கள் அடுப்பில வைச்சிட்டம் இப்பவும் கணக்காக, அடடா சூடாயிமிருக்கு குடியுங்கோ!” - என்று சண்முகம் அங்கே அண்ணாவியார் வந்து சேர்ந்ததும் தேத்தண்ணியைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அண்ணாவியார், அவர் கொடுத்த தேத்தண்ணிக் கோப்பையை கையில் வாங்கி சூடோடு சூடாய் அந்தக் குளிருக்கு இதமாயிருக்க தொண்டையில் அண்ணாந்து ஊற்றி குடித்துக் கொண்டிருக்கும் போது, பலபல வென கொஞ்சம் விடிந்து கொண்டிருப்பதாய் இருந்தது.
சண்முகத்தின் வீட்டுக்குள்ளே அவரின் பிள்ளை சத்தம் போட்டுக் கொண்டிருப்பதும் - தாய் பிள்ளையை அதட்டிப் பேசிக் கொண்டிருப்பதும் அவருக்குக் காதில் விழுந்து கொண்டிருந்தது. தேநீர் குடித்து மனநிறைவான ஒரு சந்தோஷத்தோடு வெறுங்கோப்பையுடன் போய் சண்முகத்தின் வீட்டு வாசலில் அவர் நின்றார்.
“பிள்ள.”
என்று மெதுவான சத்தத்தில் கூப்பிட, உடனே வாசலுக்கு வந்து மரியாதையோடு, சண்முகத்தின் மனைவி அவரிடமிருந்து அந்தக் கோப்பையை கையில் வாங்கிக் கொண்டாள்.
அண்ணாவியார் திரும்பவும் போய் தன் கொட்டில் வீட்டின் வாசலில் கையைக் கட்டிக் கொண்டு ஒரு கணம் நின்று கொண்டிருக்கும் போது அங்கே வேலிப்படலை வழியாய் உள்ளே யார் வருகிறார் என்று பார்த்தால் -"அது தம்பி இவன் கோணேஸ் தான்! - என்று உடனே அவருக்கு விளங்கி விட்டது. கோணேஸ் படலைக்குள்ளாலே காலடிவைத்து உள்ளே வரும் போதே முருகோசு அண்ணாவியார் அதிலே கொட்டிலடியில் நிற்பதை கண்டு விட்டுச் சிரித்தான். -
"சண்முகம் அண்ணா” - என்று ஒரு குரல் வைத்து கூப்பிட்டுக் கொண்டே அண்ணாவியார் நின்ற இடமாக அவன் வந்தான். கோணேஸ்சின் குரல் கேட்டு, சண்முகமும் வீட்டால் இருந்து வெளியே வந்து விட்டார்.
"ஆ தம்பி கோணேஸ் என்ன காலேல இங்கால என்ன அலுவல்தம்பி? வாரும் வாரும்.”
என்று அவர் சிரித்த முகத்தோடே சொன்னார். "ஒண்டுமில்லயண்ண. சும்மா இப்பிடி வந்தன்.” "அப்ப தேத்தண்ணி ஒண்டு குடியுமன்தம்பி.?”
SPennಳ್ಯಕಿ 0830

Page 50
"ஐச்ச வேணாமண்ணய் இப்ப இப்பத் தான் வீட்ட நான் தேத்தண்ணி குடிச்சனான் அண்ண.!”
என்று அவன் சண்முகத்துக்கு சொல்லிவிட்டு, பிறகு அண்ணாவியாரின் முகத்தைப் பார்த்தான். எதனுடைய குறையில்லாத மாதிரியும் தன்னை காட்டிக் கொண்டு ஒரு சராசரித்தனத்திலேயாய் அண்ணாவியாரும் அவனைப்பார்த்துச் சிரித்தார்.
"அப்ப அண்ண இண்டைக்கு இதை இங்க உங்கட வீட்டநான் வந்து சொல்லிப் போட்டு போவமெண்டு தான் இந்த விடிஞ்ச வேளைக்கே நான் இங்க வந்தனான்.”
என்று அவன் சொல்ல, அவன் சொல்லப் போவது தனக்கும் கொஞ்சம் விளங்கும் என்ற அளவில் சண்முகமும் தன் கீழ் சொண்டிலும் இரு விரலால் பிடித்து கொஞ்சம் நுள்ளிக்கொண்டு கோணேஸ்ஸைப் பார்த்தார்.
"அதுதான் அண்ணை நான் இங்க வந்தது. எண்ணெண்டா, அண்ணாவியார் இண்டைக்கு என்ர வீட்டயா சாப்பாட்டுக்கு வரட்டுமே..? அதுதான் காலமயே வந்து இங்க அவரிட்ட முறையாய்ச் சொல்லிப் போட்டுப்போவம் எண்டு வந்தன்.”
என்று அவன் சொல்ல - அதை தன்செவியை சாய்ந்து கேட்ட மாதிரி இருந்து அண்ணாவியாரும் சந்தோஷப்பட்டார். இந்த ஒழுங்குமுறை இன்றையிலிருந்து நன்றாக வர ஆரம்பிக்கிறது - என்று நினைத்து சண்முகமும் ஆனந்தப்பட்டார்.
கோணேஸ்சுக்கு “ஓம் தம்பி அப்ப இண்டைக்கு அவள் உங்கட வீட்ட வருவார்’ என்று சண்முகம் அவனுக்கு சொல்லி அனுப்பும்போது,
"காலமச் சாப்பாட்டுக்கும் இப்ப அண்ணாவியார் என்ர வீட்டுக்கு வர வேணும்’
- என்று அவன் திரும்பி போகும்போதும் ஒருமுறை வடிவாக மிக அடக்கமாக அதிலே நின்று மறுபடியும் சொல்லிவிட்டுப் போனான். சண்முகத்துக்கு இப்படி கோணேஸ் சொல்லிவிட்டுப் போன பிறகு மனதுக் குள்ளே ஒரு நிம்மதியும் முற்றிமுதிர்ந்த சந்தோஷமுமாயிருந்தது. அங்கே வீட்டு வாசலடியில் நின்று இதையெல்லாம் கவனித்துக் கேட்டுக் கொண்டிந்த சண்முகத்தின் மனைவி ராசமணிக்கும், இது எல்லாம் மனதுக்கு மெளனமான பருவமான ஆறுதலாகவும் இருந்தது.
வெய்யில் நிழலுடன் ஒரு திசையில் நன்றாய் விழுந்தநேரம், அதைப் பார்த்து விட்டு "இப்ப எட்டுமணி இருக்கும்! என்று நினைத்துக் கொண்டு அண்ணாவியார் வேட்டியை உடுத்துக் கொண்டு வெளியே வெளிக்கிட்டார்.
"நானும் உங்களோட வந்து அங்க அவற்றை வீட்டைக் காட்டிப்
9849 புதினான்கஸ் தான் சஆதிரன்

போட்டு வரவே.?’ என்று சண்முகம் கேட்க,
“வேணாம் தேவயில்லத் தம்பி நீங்க என்னோட வந்து கரைச்சல் பட வேணாம்.! நான் தனிய ஆருட்டயும் அதுவழிய வீட்ட விசாரிச்சுக் கேட்டுப் பார்த்துப் போறன்.”
என்று அண்ணாவியார் சண்முகத்துக்கு சொல்லிவிட்டு தான் மாத்திரம் வெளிக்கிட்டார்.
காலைவேளையது அவருக்கு நடக்கவென்றால் - இயங்கும் தன் பாதங்களுடன் சுகமான ஒரு சூழல்தான். என்றாலும் வீடு தெரியாத அளவிலே இளைப்பாறிய மந்தமாய்தான் அவர் நடந்தார். அவர் வீதியில் கால் வைத்து நடக்கத் தொடங்கும் போது ஒழுகிச் சிதறும் சில நெல்மணிகளோடே ஒரு மாட்டு வண்டிலும் மூட்டைகளோடு அதாலே போய்க்கொண்டிருந்தது.
அண்ணாவியாரைத்தான் இப்போது இங்குள்ள உத்தமன் வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கிற எல்லாருக்கும் நன்றாகத் தெரியுமே! அப்படியான இந்த நிலைபரத்திலே வீதியிலே அவரைக்கண்டதும் ஒருவன் "என்ன ஏது எங்க போறிங்க?” - என்று எல்லாம் விசாரித்துவிட்டு அவரை கோணேஸ்சின் வீட்டுப்படலையடியிலே கூட்டிக் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிப் போனான்.
அண்ணாவியார் கோணேஸ் வீட்டுக்குப் போய் அங்கே அவர்கள் அவருக்குக் கொடுத்த பிட்டுடனான அந்தக் காலைச்சாப்பாட்டையும் இருந்து வடிவாகச் சாப்பிட்டார். கொஞ்சநேரம் அங்கே இருந்து பிறகு கோணேஸ்சுடன் கதைத்தும் விட்டு - கோணேஸ்சின் மனைவி நேற்றிரவு அயர்ந்த நித்திரை இறங்குகையில் தான் கண்ட சொர்ப்பனத்தையும் மயிர்சிலிர்த்துச் சொல்ல, அதையும் கேட்டு அந்தக் கனவுத் தரிசனங்களுக்குத் தனக்கு தெரிந்த பலனையும் அவர்களுக்குச் சொல்லிவிட்டு, சண்முகம் வீட்டுக்குப் பிறகு திரும்பி வந்து சேர்ந்தார். இதே போல மதிய நேரமும் அவர் கோணெஸ்சின் வீட்டிற்குப்போனார். பக்குவமாக பொறித்த மீனுடன் உணவு உண்டார். உள்ளத்தில் அவருக்கு இன்றுபரமானந்தம்தான். அவருக்கென்றால் முன்னில்லாத வலிமையெல்லாம் உத்தமன் வீட்டுத்திட்டத்தில் தான் வந்து சேர்ந்த பிறகு பெற்றது மாதிரி இருந்தது.
கூத்து ஒத்திகை சிறப்பாக இனி வரும் நாட்களில் முன்னேறிப் போகும் என்று அண்ணாவியாருக்கு தெரியும் அளவுக்கு, இருட்டுப்படவே சனமெல்லாம் ஒழுங்காக அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். வழமையான காப்பு படிப்பு, முதல் அங்கு நடந்தது.காப்பு படிக்கும்நேரத்திலே ராஜனும் அங்கு வந்து சேர்ந்து விட்டான். பாய் அவனுக்குப் போட்டு வழமையான
மரியாதையும், தேநீர் உபசரிப்பும் நடந்தன.
5.Эь уламь о85 о

Page 51
"இண்டையில இருந்து ஆயிரக் கணக்கான மைல்களுக்கு பிரயாணம் பண்ணிப் போறமாதிரி ஒரு கடமையும் கஷ்டமும் எல்லாருக்கும் இருக்கு.?”
என்று சொல்லி முதலில் ஒரு புதிர்க் கதை போட்டார் அண்ணாவியார், அவர் சொன்னது உடனே ஒரு வருக்கும் அங்கு விளங்கவில்லை. ஆனாலும் கேள்வி இல்லா மெளனமாக எல்லோரும் இருந்தார்கள்.
"தம்பி நேற்றைக்கு நீங்க சொன்ன அந்தப் பெடியன் வந்திட்டாரோ.?” "ஆரியப்பூமாலை கதாபாத்திரம் நடிக்கவெண்டு கூப்பிட்டவர் தானே? அந்தா அந்த இதில பாருங்களன் அண்ணாவியார் அவ்விடதடியில இங்கேரும் தம்பி அன்பு.?’ .
- என்று சண்முகம் கூப்பிட்ட கையோடே அவன் ஆட்களுக்குள்ளாய் இருந்து எழுந்து நின்றான்.
அவனைப் பார்த்ததும் "ஒ ஓ நீர் அதிலயா இரும்தம்பி. இரும் தம்பி.!” - என்றார் அண்ணாவியார். அவருக்கு பெடியனைக் கண்டதும் “இவன் அதுக்கு வலு பொருத்தம் தான்"என்ற நினைப்பில்மனதிலே அவருக்கு, திருப்தி நிலை ஊன்றிப் போனதாய் விட்டது. அண்ணாவியார் இப்போது கண்கள் விளக்கேற்றிக் காட்டும் அளவிலுமாகவும் - நன்றாய் நிமிர்ந்த அளவிலும் நின்றார். என்றாலும் தோல் சுருங்கிய இடங்களில் அவருக்கு மடிந்திருந்தது. ஏதோ மின்வெட்டிச்சரிந்தது மாதிரி ஒரு யோசனை இதற்கிடையில் அவருக்கு வந்தது.
"இப்ப எல்லாரிண்ட கதாபாத்திரங்களும் அவயஞக்கு அவயஞக்கு எண்டதாய்ச் சரியாப் போச்சுத்தானே. இனி எண்ணென்டா, நான்சொல்லுறது.! எல்லாரும் தங்களுக்கு தங்களுக்கு எண்டு தந்து இருக்கிற கதா பாத்திரங்களை அவயள் அவயள் தாங்கள் கொப்பி ஒண்டு கொண்டு வந்து இங்க எல்லாத்தையும் வடிவா பிழையில்லாமல், பிசகில்லாமல் எழுதிப் போட வேணும். அதுக்கு என்ன செய்ய வேணுமெண்டா, எல்லாரும் நாளைக்குக் காலமைக்கு கட்டாயம் இங்க வந்திடவேணும்.! அப்பிடியா எல்லாரும் இங்க வருவியள் தானே.? வேலை உங்களுக்கு நாளைக்குப் பகல் இருக்குமெண்டா அதையும் அண்டைக்கு ஒரு நாளுக்கெண்டாலும் நிப்பாட்டத்தானே வேணும்.'
என்று அண்ணாவியார் இதை எல்லோருக்கும் கேட்கச் சொல்ல, அதைக்கேட்ட அங்குள்ளவர்க ளெல்லாம் முறிந்தது போல முகமுள்ள வர்களாக ஆகிவிட்டார்கள். இருந்தவர்களிற்கிடையே இருந்து சீக்கிரமாக ஒரு கதையும், அங்கேயிருந்த ஒரு ஆள் சொன்னது அப்போது சாதுவான சத்தத்தில் கேட்டது.
"அண்ணாவி என்ன இப்பிடி ஒண்டும் விளங்காத விசர்க் கதை
9860 புதினான்கஸ் தான் சந்திரன்

கதைக்கிறார்.'
என்று அவன் சொன்னாலும் வேறு ஒரு எதிர்ப்புக்குரலொன்றும் பெரிதாய் வெளியே வரவில்லை. சண்முகத்துக்கும் இப்போது இந்த விஷயத்தை நினைத்ததில் யோசனைதான்! ஆனாலும், அவர் பேசாமல் இருந்தார். என்றாலும், அங்கே இருந்த ஜெயாவுக்கு சற்றுஏறின கணக்கில் கள்ளுக்குடித்த கொஞ்சம் வெறியும் தானே? பின்னே அவன் என்ன செய்தா னென்றால், கோபம் வந்து விட்டது அவனுக்கு. அண்ணாவி சொன்ன நடவடிக்கை அவனுக்கு ஒத்துப்போகாததாலே அதிலே இருந்து கொண்டி ருக்க இவனுக்கு பிடிக்கவில்லை. அவன் உடனே முறித்துக் கொண்டது மாதிரி, இருந்த ஆட்களுக்குள்ளாலே உள்ள இடைவெளியால் நடந்து வெளியே போக வெளிக்கிட்டான்
“என்னடாப்பா ஜெயா நீ எங்க போறாய்? என்ன நடந்தது சொல்லு.?” என்று உடனே அவனைதான் இருந்த இருக்கையிலேயே இருந்து கொண்டு கேட்டார் சண்முகம்.
அவன் திரும்பி அவரைபார்த்து "ஒண்டுமில்லயண்ண நான் வெளிய போறன்!”-என்று சொல்லிவிட்டு இன்னும்கொஞ்சம் வீச்சமாக நடந்தான்.
"இங்க நீ நில்லு ஜெயா.?” சண்முகம் உடனே அவனுக்குச் சொல்ல அங்குள்ளவர்களும் அந்நேரம் அவனை நோக்கிப்பார்த்தார்கள். சண்முகம் உடனே நாலெட்டு போய் சிக்குண்ட பிடியிலே அவன் கையைப்போய் பிடித்துக்கொண்டார்.
“எங்கயடாப்பா எங்கயடாப்பா போறாய்?” “விடுங்க விடுங்க அண்ண நான் போறன்.” "ஏன்ராப்பா ஏன் போறனெண்டுறாய்?” "பிறகென்ன இங்க இருந்து நான்சொல்ல? எனக்கெண்டா இது விருப்பமில்ல.?”
"எதடாப்பா விருப்பமில்லை.” “இல்ல ஒண்டும்வேணாம்! நான்போறன்.” "என்னடாப்பா என்ன உனக்கு நடந்ததெண்டு அதை ஒண்டும சொல்லாம போறன் நான்போறனெண்டு கிடந்து கொண்டு சொல்லுறாய்.? என்னவிசயமெண்டு எனக்கெண்டாலும் அதை இப்ப சொல்லன்.?”
“சரி கையவிடுங்கோ நான் எங்கயும்போகேல்ல.?” “சரி விட்டுட்டன் இப்ப சொல்லு.?”
“ஓம் சொல்றனே..! இந்த அண்ணாவியார் இப்ப எங்களுக்கு
எல்லாருக்கும் சொன்ன கதை என்ன..? அவர் நாளைக்காலம்புறவா இங்க வந்து எல்லாரும் கொப்பியில எங்கட எங்கடதுகள எழுதச் சொல்லுறார்.
6.9emony) O 87 O

Page 52
எனக்கென்னெண்டு சொன்னா, ஒழுங்கா கையெழுத்தும் வைக்கத்தெரியாது! அப்பிடியான எனக்கு உதெல்லாம் பாத்து எப்பிடி எழுதத் தெரியும்.? அப்பிடியெண்டா நீங்க ஆரும் ஒரு ஆள் எனக்கு என்ர கதாபாத்திரத்தை எழுதித் தாங்கோ! அதை நான் வீட்ட கொண்டு போய்க்குடுத்தா மனுசி அதைப்படிப்பாள். நான் அவள் படிக்கிறதக் கேட்டு மனப்பாடம் பண்ணிப் போட்டு, பிறகு படிப்பன். அப்பிடிச் செய்து தராட்டி நான் போறன்! எனக்கு இனி இது சரிப்பட்டுவராது.”
அவன் வாயின் வெளிவந்த வார்த்தைகள் பலமான காற்றைப் போலத்தான் மூசியடித்தகணக்கில் இருந்தன.
வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறவன் மாதிரி வெளியே போகத்தான் அவன் நின்றான்.
ஆனால் சண்முகம் அப்படிப் போகிறவனை உடனே வெளியே போகவிடவில்லை. 'என்னடா குழப்பிக்கொண்டு போகப் பாக்கிறாய்? இங்க வா நில்லு நில்லு.!”
- என்று அவனைப் பிடித்திழுத்தபடி, தான் அவனோடு கிடந்து கொண்டு அவதிப்பட்டார். அவனின் இந்தக் கூத்தைப் பார்த்து, எல்லோரும் "சளபுள” வென்று கதைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
"சரிசரி வாடாப்பா! ஏதோ ஒரு வழி செய்வம்?” - என்று சண்முகமும், பெருக்ககெஞ்சின மாதிரிச் சொல்லிக் கொண்டு நின்றார்.
“என்ன தம்பி! இப்பிடியெல்லாம் செய்யாதயுங்கோ! வாருங்கோ என்ன தம்பி?’ என்று அண்ணாவியாரும் ஜெயாவை இலக்கண சுத்தமாக சொல்லிக் கூப்பிட்டார். இந் நேரம் இலைப் புதருக்குள்ளாலே வெளிக்கிட்டது மாதிரி ராஜன் எழும்பி நின்றான் "இந்தச் சங்கடங்கள் ஒண்டும் வேண்டாமண்ண சண்முகமண்ணை! இங்க என்னால செய்ய முடிஞ்சதை நான் சொல்லுறன்..! அவற்றை கதாபாத்திரத்தை நான் செம்மையாவடிவா எழுதித்தாறன்! அதுவும் இண்டைக்கு ராவைக்கே நீங்க தாய்க்கொப்பியை என்னட்ட தந்தீங்களெண்டா, காலமயே எல்லாத்தையும் பாத்து எழுதிப் போட்டுக் கொண்டந்து உங்கட கையில நான் தந்திடுறனே?”
என்று ராஜன் சொல்ல; குழம்பின ஆரவாரமெல்லாம் அடங்கின மாதிரி அங்கே வந்து விட்டது."சரிதானே உனக்கு இப்ப. ராஸன் உன்னரயதை எழுதித்தான் தாறன் எண்டு சொல்லிட்டார். இப்ப உனக்கு சரிதானே அப்ப இனி வாவன்? சண்முகம் ஜெயாவைக் கூப்பிட்டார் அவனும் பிறகு வெளியே போகவில்லை! தன் இடத்தில் வந்து பிறகு இருந்து விட்டான்.
ஆனால் அண்ணாவியாருக்கு என்னவெல்லாமோ இப்போது பெரிய
யோசனையாயிருந்தது. அவருக்கு இப்படி யோசனை போவதற்கு என்ன
O 889 අග්‍රීෂ්réෂෙව් ෙෆ්, ජේණිණී
 
 

மிகப் பெரிய ஒரு காரணம் என்றால் அவர் தன் சிவியசரித்திரத்திலே தாய்க் கொப்பியை இதுவரை யாரிடமும் நம்பிக் கொடுத்ததேயில்லை. இப்படியாருடமும் தன்னிடமுள்ள தாய்க் கொப்பியை கொடுத்தால் கூத்து முழுக்கவும் பூராக எழுதிக்கொண்டு, எழுதியவர் பிறகு தான் ஒரு அண்ணாவியாராகி விடுவாரென்று அவருக்கு ஒரு பயம் மனத்தில் இருந்து கொண்டிருந்தது. அதனாலே தூரத்தில் எங்கேயோ கண்பார்வையை ஓடவிட்டமாதிரியாய் அவர் யோசித்துக் கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் மூளைக்கு யோசனை கோரமாய் ஏறிப்போக எச்சிலாலும் உதடுகளை நாக் கால் நனைத்தார். என்றாலும் சண்முகத்துக்கு அப்போது அண்ணாவியாரின் ஊன்றின யோசனை இது தான் என்று டப்பென்று யோசனையில் பிடிபட்டுவிட்டது.
“இவர் ராஜன் எண்டவரிட்ட உங்கட தாய்க் கொப்பியை நம்பி நீங்கள் குடுக்கலாம் ஒண்டும் யோசிச்சு நீங்க பயப்படாதயுங்கோ.?”
என்று தனக்கும் அண்ணாவியாருக்கும் மாத்திரம் இந்தவிசயம் விளங்கிக் கொள்ளத்தக்கதான ஒரு கதையாய் இருக்க சண்முகம் சொன்னார். சண்முகம் இவ்வாறு சொல்ல அண்ணாவியாருக்கும் இப்போது
கொஞ்சம் மனதுக்கு நிம்மதி.
"யாழ்ப்பாணத்து பெடியன் தானே..! இருக்கிறதுக்கிள்ள குணத்தில திறம் பெடியனாவும் தெரியுது. அப்ப குடும்பம் கொப்பிய, பிரச்சனையில்லை.”
என்று நினைத்தும் மனத்திருப்திப்பட்டார். "அப்ப நீங்க தம்பிகொப்பியை நீங்கள் கொண்டுபோய் ரவைக்குள்ள வைச்சு எழுதிப்போட்டு காலேல சரியா இதக்கொண்டுவந்து என்னட்டவா தந்திடுங்கோ.?”
என்று அண்ணாவியார் தன் மனச் சஞ்சலத்தை அகற்றிவிட்டு ராஜனுக்கு அன்பாக இவ்வாறு சொன்னார். பிறகு கூத்து எழுதப்பட்ட தாய்க் கொப்பியை கையிலெடுத்து அவனின் கையில் கொடுத்தார். இனி அங்கே நேரத்தை நீட்டித்து இருந்து கொண்டிருக்கத் தேவையில்லை என்கிறமாதிரி எல்லோருக்கும்இருந்தது.
“சரி அப்ப நாளைக்குக் காலமைக்கு எல்லாரும்இங்க வரட்டும்
என்ன சண்முகம்தம்பி.?”
என்று சண்முகத்தைப் பார்த்து அண்ணாவி சொன்னார். அண்ணாவி யார் காலையில் எல்லோரையும் இப்படி வரச்சொன்னது சண்முகத்துக் கென்றால் அது மனதுக்கு இப்போது அவ்வளவு நல்ல தாகப்படவில்லை. இந்த விஷயம் ஒழுங்காக நாளைக்கு நடக்குமா? என்பது அவருக்கு ஐமிச்சமாகவும் இருந்தது. வேர்கள் கற்குவியலுக்குள் போய்ச் சிக்கின மாதிரித்தான் அவர் சிக்கலான யோசனையோடு இருந்தார்.
6:00amab O 89 O

Page 53
"கூட்டம் இனி முடிஞ்சிட்டு போவம் இனி!” என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்தால் இருந்து எழுந்தவர்களெல்லாம் நம்பிக்கை மனதில் குறைந்த நிலையில், மனம் வாடிப்போன அளவில்தான் இருந்தார்கள். நாளைக்குப் பகல்ப் பொழுது அங்கு வருவதென்பது அவர்களுக்கு முடியு மானதாகத் தெரியவில்லை. இந்தயோசனையில் முகம் அவர்களுக்கு பச்சை புல்லை அறுத்துப்போட்டு அது வாடிக்கிடக்கும் வடிவத்திலேயாய்த்தான் காணப்பட்டது.
“அந்த வீட்டு வளவிலிருந்து வெளியே அவர்களெல்லாம் வெளிக்கிட்டுப் போனபின்புதான் தங்கள் பிரச்சனைகளை தங்களுக்குள்ளால் கதைக்க அவர்கள் வெளிக்கிட்டார்கள். கோணேஸ் தன்னோடு சேர்ந்த வீதியில் நடந்து கொண்டிருந்த நாலு பேருக்கு இப்படி சொன்னான்.
"இவர் சண்முகம் அண்ணனுக்கெண்டாலும் எங்கட பிரச்சனை தெரியவேணும்.? பகலில இப்பிடி எல்லாரையும் வரச்சொன்னா வேலவெட்டி ஆருக்கும் இல் லயோ..? அண்ணாவி தன்ர அலுவல் நடப்பிக்க சொல்லுறாரெண்டா சண்முகம் அண்ணயும் அதுக்கு சரியெண்டே வாயைழுடிக் கொண்டு சும்மாயிருக்க வேணும்.?” கோணேஸ் மட்டுமல்ல வேறு அதிலே உள்ளவர்களெல்லாம் இப்படித்தான் அண்ணாவியாரும் சண்முகமும் தங்களைப் போட்டு கடினமாய்க் கஷடப்படுத்துவதாக கதைத்துக்கொண்டு போனார்கள். அவர்களது கதைபேச்சில் அவர்களுக்குள்ளே உள்ள நியாயம் அந்நேரத்தில் ஓங்கினதாய் வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது.
13
நேற்றெல்லாம் அளவாகப் புசித்து, இரவிலும் குழப்பமில்லாமல் நல்ல நித்திரையும் போனதால், அண்ணாவியார் அதற்குண்டான பலனான தேகபலத்தோடு வேளைக்கே காலையில் நித்திரையால் எழுந்து விட்டார். அவருக்கு இன்று “நல்ல அற்புதமான சுபதினமான ஒருநாள்!” என்று, நேற்றுப்போல நாள் காட்டியை பார்த்திலேயே இன்றைய இந்த நாளையைப் பற்றிய சிறப்புத் தெரிந்திருந்தது. அண்ணாவியார் சாஸ்திரம்சம்பிரதாயமான விஷயங்களிலும் நன்கு நம்பிக்கை வைத்திருப்பவரும்தான். வாரத்தில் கூத்துக் காப்பிய முதலிய பாட்டுக்கள் அரங்கேற்றுவது பற்றி - 'விதான மாலை' - என்னும் நூலிலிருந்து பூரணமான விபரம்அறிந்து அவர் வைத்திருப்பவர்தான். அந்த விதி முறைகளின் படி பார்த்தால், திங்கள், புதன், வியாழன், வெள்ளி நாள் தான் இந்தமாதிரி விஷயங்களுக்கு சிறந்த சித்தியான நாளென்பது அவருக்கு விளங்கும். இந்த நாளிலே, நேரம் நட்சத்திரமென்று அதுவும் அவர் பாத்துக் கொண்டுதானே இந்த காரியத்திலும் இறங்க வேண்டும். நட்சத்திர ராசியிலே பூசம், பரணி, இரேவதி. பூராடம் மிகச் சிறப்பு! - என்று தான் அவருக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. இன்றைய நாள் காலைபத்து
O 900 புதினான்கஸ் என் சந்திரன்

மணியிலிருந்து பூசம் தான் ஆட்சி! இந்த நல்ல சந்தர்ப்பம் ஆருக்கும் இலகுவில் கிடைக்குமா? என்று தனக்குள் நேற்று பகல் எண்ணிக் கொண்டுதான் எல்லோரையும் நேற்று இரவுபோல “நாளைக்காலமைக்கு எல்லாரும்கொப்பி எழுதிக் கொண்டு போகளல்லாரும் வாங்கோ? - என்று நம்பிக்கையுடன் அவர் எல்லாருக்குமே சொல்லியும் அனுப்பியிருந்தார்.
எனவே காலையில் எழும்பியவுடன் எல்லாக்கடன்களையும் ஒழுங்காகச் செய்து முடித்து சண்முகம் வீட்டில் தேநீரும் பிறகு குடித்துவிட்டு, ஆற்றுப் பக்கம் போய் தலைமுழுகிவிட்டு அவர் ஊர்திரும்பினார். வரும் வழியிலே பிள்ளையார் கோயிலுக்கும்போய் ஒருக்கால் கும்பிட்டு விட்டு வருவோம் என்ற மாதிரி உள்ளுக்குள் மனம் அவருக்கு ஏவியது. பிள்ளை யாருக்கு நிவேதிக்கும் பொருள்களில் விசேஷமானது தேங்காய்தானே? “சரிதேங்காயையும் ஒரு கட்டி சூடத்தையும் வாங்கி அதோட ஒரு நெருப்பெட்டியையும் கையோடு கடையில் வாங்கி வைத்துக்கொண்டு கோயி லுக்குப் போயிற்றும் வருவம்'- என்ற யோசனையோடு, அங்குள்ள சின்னப் பெட்டிக்கடைக்கு அவர் போனார். அங்கே தனக்குவேண்டியதை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தால், அங்கே கற்பூரம் கொளுத்தி கும்பிட்டு விட்டு, பிறகு தேங்காய் அடிக்க முதல் அவருக்குப் பெரிய யோசனையாகத்தான் இருந்தது.
அவரின் கையிலிருந்த தேங்காய், இளசும் அதிமுற்றலும் இல்லாத யெளவனம்என்கிற நடுத்திறமானதுதான்! என்றாலும் இனி இந்தத் தேங்காய் அடித்து உடையும்போது, ஒரே அடியில் இரண்டு பாகமாய் உடையவும் வேண்டுமே? “எனக்கு சுபத்தை தரக்கூடியதாக இந்தத் தேங்காயும் உடைய வேண்டும்!” - என்ற நம்பிக்கையோடு கல்லின்மேல் மூன்று சாண் அளவு உயரத்துக்கி அதை ஒரே அடியாக அடித்தார் அவர். அவர் நினைத்தது போலவே அந்தத்தேங்காயும் சிகையின் முகத்தின் பாகமாய் சரியாக ஒருபாதியும், மறுபாதியும் அதே போல அழகாயும் உடைந்தது. உடனே "முக்கால் பாகம் எல்லாம் விருத்தியாக எனக்கு விளையும்!” - என்று நினைத்துக் கடைசிக்கும்பிடு ஒன்றும் பிள்ளையாருக்குப் போட்டு விட்டு, இங்கே சண்முகம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் அவர்.
அண்ணாவியார் சண்முகம் வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுதில் அங்கே பத்மன் என்பவர் அவருக்காகக் காத்துக்கொண்டு இருந்ததாய் நின்றான்.
"நீங்கள் இண்டைக்கு வாங்கோ அண்ணாவியார் என்னோட வீட்ட?” - என்று பத்மன் அவருக்குச் சொல்லும்போது, “ஏன் அவர் அழைக்கின்றார்” - என்று அண்ணாவியாருக்கும்அது விளங்கும்தானே? பத்மன் கூப்பிட்டகை யோடு தானும் உடனே போக அவர் அப்போது வெளிக்கிட்டார். இந்நேரம் சண்முகத்தின் குரலும் தன்மனைவியோடு அவர் கதைப்பது அவரின் வீட்டுக்குள்ளால் இருந்து வெளியே இப்போ வெளிக்கிட்டுபோக நின்ற
O 91 O فMyصnnمرہ:69

Page 54
இவரின் காதுகளிலும் நன்றாய் விழுந்தது. "சண்முகம் அண்ணையும் தான் இண்டைக்கு எண்டு தொழில் ஒன்டுக்கும் வெளிய போகேல்லப் போலக்கிடக்கு. என்னங்கோ அண்ணாவியார்.'
என்று பத்மன் இவ்வேளை அவரைப்பார்த்துக்கேட்டான். “ஓம் ஓம் இண்டைக்குக் கொப்பியள் வழிய தங்கட தங்கதுகளை எழுதிக் கொண்டு போறத்துக்கு சனம் எல்லாம் வரும்தானே இங்க.!”
"ஓ! அதுக்கோவெண்டு தானோ அவரும் இண்டைக்கு வீட்டவா நிக்கிறார்.? எண்டாலும் இந்த நடுவெய்யிலுக்க இந்த முத்தத்தடியில நிண்டு ஆராலும் இதுகளச் செய்யேலுமோ..?”
"சேச்சே இது அதுக்குரிய நல்ல வசதியாக இடமில்லத்தம்பி. அந்தப் புளியடி நிழலும் இருக்கு அங்கபோயும் இதுகள நாங்கள் நடப்பிக்கலாம் தானே.” என்று அண்ணாவியார்சொல்ல இவர் அண்ணாவி சொல்லுகிறதுக்கு பதில் ஒன்றும் சொல்ல வேறேதுவும் என்னிடமில்லை - என்ற நிலைப்பாட்டில் பத்மனும் பிறகு பேசாமல் நடந்து கொண்டிருந்தான். அண்ணாவியாரும்அதன் பிறகு அவனோடே சேர்ந்து நடந்தபடி மெளனமாக சென்று கொண்டிருந்தார். *
அண்ணாவியார் பத்மனுடன் சேர்ந்து வெளியே போனாற் பிறகு சண்முகம் தன் வீட்டுக்குள் உள்ள பக்கீஸ்பெட்டியில் இருந்தபடியே தான்யோசித்துக்கொண்டிருந்தார். பிள்ளை “கீதா' தன் பாட்டுக்கு தனக்கு தேவையான ஒரு வீட்டுப்பாடம் வேலையை செய்து கொண்டிருந்தாள். ராசமணி நேற்றுப் போல கேப்பாப்புலம் அந்த ஊர்க்காரர் ஒருவரிடம் கேட்டு அவரின் வளவுக்கோடி வடலியிலே இங்கே உத்தமன் வீட்டுத்திட்டதிலுள்ள ஒரு பெடியனையும் கூட்டிக்கொண்டுபோய் அதில்ஏறவைத்து பனை ஓலை வெட்டிக்கொண்டு வந்திருந்தாள்.
அந்த பருவத்துப் பனை ஓலையை வைத்து அவள் இப்போது விரல் பிடியில் சின்ன ஓலைப் பெட்டி இழைத்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்கு முன்னாலே வெறும் நிலத்திலிருந்து கொண்டு பெட்டி இழைக்கிறதை சண்முகம் பார்த்துக்கொண்டிருந்தார். அவளின் விரல்கள் ஒலை இழைபோடுகிற வேகமாக அவருக்கும் இவ்வேளை தன்தொழில்யோசனை! நிலவில்லாத முழுக்குருட்டான அமாவாசை நாள் கழிந்து சில நாள் சென்றதில் தேன் வேட்டைக்கென்றும் இண்டைய நாள் ஒரு வாய்ப்பான நாள்தான். இண்டைய நாள்மாதிரி காட்டுக்குப்போனால் எடுக்கக்கூடிய தேன் அடையில எல்லாம் நிறைய நல்ல தேன் அமைஞ்சிருக்கும். இதில்லாமல் அமாவாசை மாதிரி வந்து கிட்டடியான அந்த நாளுக்களிலதான் தேன் பூச்சியள் அடையில உள்ள தேனைக் குடிச்சிருங்களே?”
9920 புதினான்கஸ் தான் சந்திரன்

“அதால இண்டைக்கெண்டு தொழிலுக்குப் போகாததால என்ர தொழிலும் பட்டுப்போச்சோ. அடட.” நினைக்கப்பெருமூச்ச அவருக்கு வந்தது. இந்த நினைப்பிலே தேன் அடைகள் தனக்கு இன்றைக்கு கிடைக்காமல் கிளைகளில் தங்கிவிடும் ஒரு வித யோசனையையே அவர்இன்னும் தனக்குள் தொடர்ந்து கொண்டிருந்தார். ராசமணி தன் வேலையோடு வேலையாக கணவனின் முகத்தையும் பார்த்துவிட்டாள். கை விரலால் ஒலை இழைபோடுகிற வேகம் இப்போது அவளுக்குக் குறைந்தது. ஆனாலும் தன் விரல்களை வேலையோடு பொருந்தியதாக வைத்துக்கொண்டு கணவருடன் அவள் கதைக்க வெளிக்கிட்டாள்.
"ஏன் என்ன நீங்க ஒரே யோசனையா இண்டைக்கு விடியக் காலேல இருந்து கொண்டே இருக்கிறீங்க?”
இல்ல ஒண்டுமில்ல.!”
“என்ன அப்பிடி ஒண்டுமில்ல எண்டு என்னட்ட நீங்க சும்மா சொல்லுறீங்க.?”
சொல்லிவிட்டு பழைய வீச்சத்துக்கு விரல்களை செயல்படுத்திக் கொண்டாள் ராசமணி. வேலையில்தான் இப்போது அவள் கவனம். தலை குனிந்தவாறுதான் அவள் இருந்தாள்.
“ஒண்டுமில்ல!” - என்று திரும்பச்சொன்னார் அவர்.
"அப்ப என்ன?”
- அவள் திரும்பி கேட்டாள்
"இல்ல இண்டைக்கு தொழிலுக்கெண்டு போகக் கூடியநல்ல ஒரு நாள்தான். எண்டாலும், இண்டைக்கு இந்தக் கூத்து விசயத்தால நான் கட்டாயம் இங்க வீட்ட நிக்கயா வேண்டிப்போச்சு..!” என்று சண்முகம் சொல்ல, அவள் ஒன்றும் அவருக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. மெளனமான மன அமுக்கத்தோடு அவள் தன்பாட்டுக்கு இருந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
"சீ நான் போகாம நிண்டதப்பற்றி எனக்கு யோசனைதான். ஆனா பெரிய கவலையில்ல.!’ ༥, ཚེ་
"அப்ப என்ன?” - கேட்டதோடு அவள் தன் முகத்தை நிமிர்த்தினாள் "இல்ல பிரச்சனை இதில இப்ப எண்ணெண்டா. அதை நான் ராத்திரிப் போல அண்ணாவியாருக்கும் உடனே சொல்லேல்ல. ஏனெண்டா அந்தக் கதையை நான் மாத்திரம் உடன சொல்லி எல்லாரையும் பேந்து குழப்பிப் போடப்பிடாதெண்டுதான் சும்மா வாய் மூடிக் கொண்டு இருந்தனான்.”
Rocannoyl) O 93 O

Page 55
"அப்பிடி என்ன அந்த நேரம் நீங்கசொல்லுறதுக்கெண்டு இருந்துது..? “ராசமணி! உனக்கும் இது தெரியும்தானே.? பகலில உள்ள நேரம் தொழிலுக்கெண்டு இங்க உள்ளவங்கள் போயிருவாங்கள். அவன் அவன் அண்டாடம் எங்கயும் போய் உழைச்சுத் தின்னுறவனும் இங்க இதுக்க இருக்கிறான்தானே? அவங்கள் எல்லாம் இங்க பகலில இதுக்கெண்டு மினக்கெட்டு வரப்போறாங்களே? இது எல்லாம் அண்ணாவியார் விளங்கிக் கொள்ளாம, எடுத்தஉடன தன்ர யோசனைக்கு ஒரு சட்டம் போட்டுச் சொன்னமாதிரி எல்லாருக்கும் சொல்லிப் போட்டு இருக்கிறார். ஆனா ஆரும் இங்க பகலுக்க வரப்போறாங்களெண்டு நீ நினைக்கிறியோ..?”
"ஆர் அப்பிடி இங்க உள்ளவயள் வரப்போகினம்.' அவள் சொன்ன கையோடு ஒரு சிரிப்பும் சிரித்தாள். "நீ சிரிக்கிறாய்..! எனக்கெல்லே யோசனை! எனக்கென்ர தொழிலும்போய். - தேவையில்லாமதானே நானும் நிக்கிறன். என்ன பிரச்சனை என்னெண்டால் நான் ஒரு இணைப்பாளர் மாதிரி இந்த விசயத்தில செயல் படுறதால. நாலுபேருக்கு முன் மாதிரியா நான் கட்டாயம் இங்க இருக்கத்தானே வேணும் ராசமணி? அதுக்காகத்தான் ஆரும் இங்க வராட்டியும் கூட நான் கட்டாயம் இங்க என்ர வீட்டில எங்கயும்போகாமக்கொள்ளாம நிக்க வேண்டியதாப்போச்சு.!”
"அதுக்கென்ன செய்யிறதுங்கோ. நாடகம் கூத்தெண்டு பொறுப் பெடுத்து செய்ய வெளிக்கிட்டா இப்பிடி கஷ்டமெல்லாம் வரத்தானே செய்யும்.? இதெல்லாம் உங்களைக் கலியாணம் முடிச்சதில துடங்கி எனக்கே இப்பப் பழகிப் போச்சு. ஆனா இப்ப, நீங்க தான் புதுசா அனுபவப்பட்ட ஆள்மாதிரி சலிச்சுக்கொள்ளுறமாதிரிக் கதைக்கிறியள்?”
“சேச்சே, எனக்கெண்டு அப்பிடிச் சலிப்புக் கிலிப்புவரேல்ல! நான் சும்மா ஒரு கதை அப்படி உனக்கு விட்டன்! உனக்கும் ஒரு ஆறு தலாயிருக்கட்டுமெண்டு தான் அப்பிடிக்கதைச்சன்! அதில ராசமணி விட்டில உள்ள பொம்புளயஞக்கு இப்பிடி தங்கட புருஷன்மார் தொழில் துறைவுகளை விட்டுப்போட்டு கூத்துக் கீத்தெண்டு ஆடிக்கொண்டு திரியிறது அதிகம் பிடிக்காது தானே, என்ன சொல்லு.?”
"அதெண்டாலுங்கோ சரிதான்! சின்னக் குஞ்சு குருமன்களையும் வீட்ட பெத்து வைச்சக்கொண்டு இப்படி வசதியில்லாத வீடுகளில நெடுகலும் கூத்துறாமா எண்டு வீட்டாம் பிளையஸ் திரிஞ்சா பெஞ்சாதிமார்களுக்கு முகம் தூக்கி புருஷன்மார்களை பாக்காத அளவுக்குக் கோபம்தானே வரும்.?”
"அப்ப உனக்கு ஏன் அந்தக் கோபம் வரேல்லயெண்டு அதைச் சொல்லன்?’ சண்முகம் சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டு கேட்டார்.
0940 புதினான்கஸ் கான் சந்திரன்

"அதைவ் விடுங்கோ என்ர கதைய்ய இப்ப என்னெண்டா, நானும் இப்பக் கூத்தாடுறவற்ற பெஞ்சாதியாப் போயிற்றன்." அவளும் சொல்லிவிட்டு சிரித்தாள்.
அண்ணாவியார் இந்த நேரம்வேலிப்படலையாலே உள்ளே வந்து தன் கொட்டில் வீட்டடிக்குப் போய்க் கொண்டிருந்தார். சண்முகம், காலடிச் சத்தம் கேட்டு வாசல்பக்கம் வந்து நின்று பார்த்தார். அண்ணாவியார் கொட்டிலடிக்கு நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவரின் முதுகுப் பக்கந்தான் இவரின் பார்வைக்குத் தெரிந்தது. எனவே அவரைக்கூப்பிட்டு கதை ஏதும் தொடுக்காது தன் பாட்டுக்கு திரும்பி அவர் வீட்டுக்குள்ளே போய் இருந்துவிட்டார்.
நேரம் இப்படியே போய் பத்து மணியாகியும் விட்டது. "எல்லாரும் இனி புரண்ட கணக்கிலே இங்கே வந்து சேருவாங்கள்” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, அண்ணாவியார் பல நடவடிக்கைகளையும் ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தார். ஆனால் நேரம் கடந்து கடந்து போனதுதான் ஒழிய ஒரு குருவிக் குஞ்சும்கூட அங்கு வந்ததாக இல்லை என்று சொல்லு மளவிற்கு ஒரு மனுசக் குஞ்சுகளையும் அங்கே வரக்காணக்கிடைக்க வில்லை. தாய்க் கொப்பியை தன்னோடு எடுத்துக்கொண்டு போன ராஜனும் தான் இங்கு வந்து சேர்ந்ததாய் இல்லை. நேரம் செல்லச் செல்ல அண்ணாவியாருக்கு முகம் களையிழந்து போய்விட்டது. அவருக்கு நெஞ்சு கொதித்து வியாகுலமுமாகிவிட்டது. இதனால் சண்முகத்தாரிடமும் இது விஷயத்தைப் பற்றி அடிக்கொருதரம் வந்து கதைத்துக் கதைத்துவிட்டு அவர் போனார்.
அவருக்கு காலையிலிருந்த அந்தப் புதுப் பலமெல்லாம் மெல்ல மெல்ல விலகியதாய்ப் போய்விட்டது. யாரையும் பார்த்து முகத்துக்கு முன்பாக சொல்லாத ஒரு கதையாக, "மூடரான சனங்கள்' - என்று இதிலே சம்மந்தப்பட்டவர்களையெல்லாம் மன எரிச்சல் பட்டு தன்பாட்டுக்கு அவர் சொல்லி ஏசிக்கொண்டிருந்தார்.
என்றாலும்மத்தியானத்து சாப்பாட்டுக்கு இவர் உதவிக்கு யாரினதும் ஒருவரின் கையை பிடித்துத்தானே ஆக வேண்டும். என்றாலும் சண்முகம் மதிய நேரம் போல வந்து அண்ணாவியாரைத் தன் வீட்டில் வந்து சாப்பிட அழைத்தார் அண்ணாவியார் அதை உடனே ஏற்றக்கொள்ளாது கொஞ்சம் தயங்கினார். வயிறும் காந்தின நேரம்தான். அவருக்கு நல்ல பசியாகவும்தான் இருந்தது. ஆனாலும் அதைப் பொறுத்துக் கொண்டு அவர் இருந்வேளை, ஒரு சின்னப் பெடியன் அங்கே அவரின் கொட்டில் வீட்டடிக்கு வந்தான்.
பத்மன் மாமா, தன்னை அங்கே அனுப்பினதாக அண்ணாவியாருக்கு அவன் சொல்லிவிட்டு “வாங்கோ ஜயா உங்கள சாப்பிட அங்க வீட்டவா
Remay.) O 95 O

Page 56
தயவு செய்து வரட்டாம்.'- என்றும் பிறகு அவன் சொல்ல, நடந்த எல்லாவற்றையும் மறந்து, ஒருதள்ளுத் தள்ளினமாதிரி எல்லாக் காரியத்தையும் விலக்கியதாய் அண்ணாவியார் வைத்துவிட்டு, தன் பசிக்கு அங்கே போய்ச் சாப்பிட்டுவிட்டு பிறகு திரும்பி வந்தார்.வருகிற வழியிலே "அங்கே பத்மன் வீட்டில் அவனையும் அங்கே காணவில்லையே? தனக்கு அவன் மனைவி தானே சாப்பாட்டையும் தந்து அனுப்பி வைத்தாள்?’ என்று அவருக்கு சிக்கலான யோசனையும் வந்தது. சாப்பிட்டு முடித்து வந்த களையோடு, கொட்டிலிலும் வந்திருந்து கொஞ்சம் நேரம் இருந்து ஆறிய பிறகு, பிரச்சனை அப்படி ஒன்றுமில்லாதிருப்பது போலத்தான் பிறகு அவருக்கு இருந்தது.
"நல்ல ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய ஒரு பண்பு கோபத்தையும் பொறாமையையும் விட்டு விலகி ஞானமான புத்தியோடு நடக்கிறதுதான்!” என்று பிறகு அவர் தனக்குள் எண்ணம் கொண்டவாறு அமைதியாக இருந்தார். இப்போது மனம் அவருக்கு வெள்ளைக் காகிதம் போல சுத்தமாக வந்துவிட்டது. அந்த அமைதியிலே இப்போது அவருக்கு சுவாச மூச்சும் அளவைப் பிரமாணித்தது மாதிரி சிதறாமல் புரளாமல் ஒழுங்காக நடைபெறத்தொடங்கியது.
எனவே பஞ்சியும் சுகமும் சேர்ந்ததான உடல் நிலையில், பாயை தன் கொட்டிக்குள்ளே விரித்துப் போட்டுவிட்டு அவர் பிறகு அதில்படுத்தார். அப்படி பாயிலே அவர்படுத்து தலையை தலகணையில் சாய்த்ததும்தான் அவருக்குத் தெரியும்; அதோடு அவரைப் பகல் நித்திரையானது நெருங்கி வந்து உடனே சூழந்து கொண்டதாயும் விட்டது. அந்தப்பகலில் நன்றாகவே அவர் பிறகு மெய்மறந்ததாய் உறங்கியும்போனார்.
14
Iெனம் வெண்கலம்போன்றும் பூமி இரும்புமானதுமாய் இருந்த வெயில் வெக்கை நேரம் மனுசருக்கு வேர்வையைக் கொட்டிக்கொண்டு கடந்தது. பின்னேரப் பொழுது பிறகு இமை மடிப்புக்குள் வந்ததாய் நின்றது. வானின் மேற்குப் பாதை, அதன் பின்பு சிவந்து அழிந்து புகைக்கோலத்தைப் பூரணமாக்கித் தனி இருட்டாகவும் ஆகத்தொடங்கியது.
சண்முகம் வீட்டு முற்றத்தடிப்பரப்பில் பெற்றோய் மாக்ஸின் வெளிச்சம் நிலையாகத் தங்கின மாதிரி எங்கும் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அண்ணாவியார் இவ்வேளை அங்கு காப்புப் படிக்க முன்னமே ராஜன் வந்து தான் எழுதவென்று எடுத்துப்போன அந்த தாய்க்கொப்பியைக் கொண்டு வந்து சண்முகத்தின் கையில் கொடுத்தான் “காலேல வரமுடியாமலா எனக்குப் போச்சண்ணா ஏனெண்டா வேலைக்குப் போகாம இண்டைய
9960 புதினான்கஸ் தான் சந்திரன்

பகலும் நான் இதை வீட்ட வைச்சு கொப்பியில பாத்து எழுதினனான்’
"ஐயோ என்ரக்கடவுளே! அப்பிடி ஏன் உங்களுக்கு இந்தக் கஷ்டம்.”
சண்முகம் பரிதாபப்பட்டது போல சொன்னார். "அப்பிடி நீங்கள் சொல்லுறதுக்கு எண்டு ஒண்டுமில்ல. என்ன இது ஒரு கஷ்டம் ஒரு நாள் உழைப்புக்கு நான் போகாட்டி அதால ஒண்டும் எனக்குக் குடி முழுகிப் போயிடாது. எண்டாலும் இடை இடையே நான் ஒரு கண் இங்காலயும் உங்கட வீட்டுப்பக்கம் வைச்சுப் பாத்துக்கொண்டுதான் நெடுக இருந்தனான். ஆனா ஆரும் இங்க வந்ததாத் தெரியாததில நானும் இத வைச்சு பேசாம எழுதிக்கொண்டிருந்தன்.”
"அது ஒண்டும் பறவாயில்ல. நீங்க வாங்கோ.?” - என்று அவர் சொல்லிவிட்டு "ராசமணி.?” - என்று மனைவியைக் கூப்பிட்டார். அவள், கணவர் கூப்பிட்ட கையோடு கையில் பாயையும் எடுத்துக் கொண்டு வந்து வழமையாகப் போடும் இடத்திலேயே பாயை விரித்துப் போட்டு விட்டாள். “இருங்கோ’
- சண்முகம் சொல்ல ராஜன் அவருக்குப் பக்கத்தில் நின்ற அண்ணாவியாரின் முகத்தையும் பார்த்தான். எல்லாவற்றிற்கும் இசைவாகத் தான் அவர் இப்போதும் ராஜனைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
கோழி கிளறிப் பார்ப்பது போல வேலிப் படலையிலே
அண்ணாவியாருக்கு அதிக கவனம் இப்போது இருந்து கொண்டிருந்தது. அவருக்கு மர்மம் நிறைந்ததான பல யோசனைகள் போய்க் கொண்டிருந்தது. சின்னத்தொண்டைச் செருமலும் இடைஇடையே அவருக்கு வந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவருக்கு ஏமாற்றம் என்பது வருவதற்கு முன்னமே, பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து பேர் முன்னம் அங்கு ஒன்றாய்ப் படலையால் உள்ளுக்குள் வந்தார்கள். அவர்களை அஞ்ஞான வாசம் இருந்து விட்டு வருகிறவர்களைப்போல இவள் ஒரு விதமான பார்வைபார்த்தார்.
அவர்கள் அங்கு வந்து சேர்ந்தற்குப் பிறகு தனித்தனியாகவும், கூட்டம் கூட்டமாகவும், மளமளவென்றும், அங்கு வந்து சேர வேண்டியவர்க ளெல்லாம் வந்து சேர்ந்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு அண்ணாவியாரும் காப்புப்படித்து முடித்தார். பிறகு கொஞ்சநேரமாய் வலு அமைதி! அதற்குப்பிறகு முள்ளின் முறுக்கு மாதிரிக் கேள்வி ஒன்றும் எழுந்தது. அண்ணாவியார்தான் கேள்வி கேட்டார். சொற்களில் கோபத்தைப் பூசாமல், புகையூட்டாமல்தான், தன்மையாக அவர் கேட்டார். ஆனால் கொஞ்சம் முறுக்கு உறுக்குசொற்களில் எப்படியோ அவர் பேசும் போதும் கலந்ததாய் இருந்தது. "பகல் ஏன் நீங்க ஆர்
16.9emnay) O 97 O

Page 57
ஒருத்தரும் இங்க சொன்னமாதிரியா வரேல்ல.? ஏன் என்ன காரணம்? இப்பிடி ஏனோதானோ எண்டமாதிரியெல்லாம் தங்கட தங்கட இஷடத்துக்கு ஆள் ஆள் எல்லாரும் கூட நடந்தாக் கூத்துப் பழகி ஒப்பேற்றவே முடியாது.! இப்பிடி எல்லாம் எல்லாருமா சேந்து பிழை விட்டா..?
அண்ணாவியார் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாருக்கும் நறுக்கு நெறுக்கென்ற சரியான கோபம்தான்! கொஞ்சம் வெறிமப்போடு இருந்த ஜெயாவுக்கும் தான் சரியான ஆத்திரம்.
"இடுப்பில இப்ப திருக்க வால் இருந்தா அதால சிவக்கப் பூசின மாதிரி அண்ணாவிக்கு ரெண்டு அடி போட்டு விடலாம்” - என்றும் அவன் கோபம் துளிர்க்க இருந்தான்.
"எண்டாலும் சண்முகம் அண்ணைக்கு நாங்க ஒரு மரியாதை கட்டாயம் குடுக்க வேணும் மரியாதை குடுக்க வேணும்.!” - என்று இதை அவன் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆனால் அங்கேயிருந்த துரை என்பவனுக்கு எப்படி இவ்வளவு சீற்றம் கோபம் ஏறினதென்று தெரியவில்லை. அவன் கத்தி தீட்டின கணக்கிலே எழுந்தான்.
"சண்முகமண்ண நாங்கள் வேல வில்லட்டிக்கு ஒண்டும் போகாத ஆக்களெண்டே அண்ணாவியார் நெச்சுக்கொண்டு நேற்று உந்தக் கதை சொன்னவர். கொப்பி நாங்கள் எழுதிறதெண்டா உடன எழுதக் கை வருமே? நாங்கள் எப்பயோ கொஞ்சம் அப்பப் பள்ளி கூடத்தில படிச்சது. எப்பயோ ஒரு காலத்தில இந்த எழுத்துகளை எழுதினது. அதெல்லாம் இப்ப எங்களுக்குச் சரிவருமே? எல்லாம் எங்களுக்கு இப்ப மறந்த கணக்கிலயு மெல்லே கிடக்கு? எதுக்கும் உடன எடுத்த உடன எங்களுக்கு அப்பிடி வருமோ அண்ண ஏதும் இப்பிடியெல்லாம் கொப்பியில எழுத.?”
என்று அவன் சொல்ல, அடுத்து சிவமும் அவனேடே எழுந்து நின்று கொண்டான்.
"அது தானே துரை சொல்லறதும் சரிதானே? இங்க எத்தினை பேர் அப்படியா இருக்கு? அவயள் எல்லாரும் ஒரு மாதிரியே சீவிக்கினம்.? எண்டாலும் பாத்தா, எல்லாரிண்ட நிலமையும் இங்க ஒரு மாதிரித்தான்! இடம் பெயர்ந்து வந்து இங்க உத்தமன் வீட்டுத்திட்டதில சீவிக்கிற எங்கட பாடுகள் எல்லாம்கவிழ்டம் தானே.?” என்று அவனும் அடுத்ததாய்ச் சொல்ல இந்தநேரத்துக்குள்ளே இன்னொருவன்! அவன் பெயர் மூர்த்தி கோரைப் புல் மாதிரி தலை மயிர் அவனுக்கு. அவன் தலைமயிரை கையால் வழித்து தடவிக்கொண்டு எழும்பி நின்றான். சேவகன் கதாபாத்திரம்தான் அவனுக்கு முன்பு கிடைத்து. அதனாலும் அவனுக்கு மனத்தில் ஆத்திரம். அவன் சொன்னான் "இவர் இந்த அண்ணாவிக்கு நாங்கள் எல்லாம் சுளையா எண்ணி ஐஞ்நூறு ஆளாளுக்கு குடுக்குறம் . அதோட ஒரு ஆள் ஒரு
9980 புதினான்கஸ் தான் சந்திரன்
 

ஆள் எண்டு சாப்பாடும் கிரமாமா குடுக்கிறம். கள்ளும் ஏதோ சொல்லிப் போட்டாங்க ளெண்டு அதுவும் குடுக்கிறம். அப்பிடி எல்லாம் குடுத்து நாங்கள் கொப்பியும் எழுததுறதெண்டா. அப்ப அண்ணாவியார் என்னத்துக்கு எங்களுக்கு? உப்புடியெல்லாம் பெரிய சட்டதிட்டங்கள் வைக்கிறதெண்டா உந்த அண்ணாவியார் எங்களுக்குத் தேவயில்ல.! வேற அண்ணாவிய அப்பிடியெண்டா நாங்கள் பிடிப்பம்.”
என்று மூர்த்தி புடைத்தெழுந்த நிலையோடு நின்று சொல்ல. சண்முகம் உடனே இதையெல்லாம் பார்த்துவிட்டு,
"நீ இருடாப்பா மூர்த்தி கதைக்கிறதெண்டு போட்டு உன்ர இவஷ்டத் துக்கு நீ கண்டதையும் கதைக்காத இரு! நீ இரு எல்லாரும் கொஞ்சம் அமைதியா தயவு செய்து ஒண்டும் பேசாம இருங்கோ. இப்ப நான் சொல்லுறதையும் தயவு செய்து நீங்க பொறுமையா கேளுங்கோ.?”
என்று கொஞ்சம் சத்தமாகவும், எல்லோரையும் பார்த்து சொன்னார். சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு தோதாய் ஜெயாவும் உடனே துணைபோனதாய் நின்றான். "எல்லாரும் பேசாம இருங்கோ. அவள் அண்ணை சொல்லட்டும் அதைக் கேப்பம் நாங்கள். யாருக்கு நாங்கள் இங்க மரியாதை குடுக்க வேண்டியது எண்டா, எங்கட அண்ணைக்குத்தானே? அதால எல்லாரும் இனி சும்மா இருங்கோ ஒண்டும் ஒருத்தரும் இனி ஒரு கதையும் இங்க கதைக்க வேணாம்.?”
அவன் அப்படிச் சொல்ல, பிறகு எல்லோரும் ஒன்றும் கதைக்காமல் பேசாமல் இருந்து விட்டார்கள். சத்தமோ அங்கு இப்போது இல்லை! பெற்றோல் மாக்ஸ் தான் 'ஸ்ஸ்ஸ் - என்ற சத்தத்தை அப்போது பரசிக்கொண்டிருந்தது.
அண்ணாவியாருக்கு திடீரென இரத்தம் உறைந்து வியாதி ரோகம் பற்றினாப்போல முகம் கறுத்துவிட்டது. "இப்படி இவன் ஒரு கதை சொல்லிப் போட்டானே? - என்ற நினைப்போடு தீடீர்த்தாக்கத்தில் அவர் இருந்தார். சண்முகம் இந்த நேரம் அண்ணாவியாரின் முகத்தையும் பார்த்தார். அவர் முகம் இப்போது வாடி இருப்பதைக் கண்டு இவருக்கும் மனத்தில் கவலை செறியத் தொடங்கிவிட்டது. இதற்கெல்லாம் இப்போது மாற்றுப்பாதை என்ன? என்ற அழுத்தமான ஒரு விசயத்தைப்பற்றி அவர்யோசித்துக்கொண்டு தன் மூளையைக் குடைந்தார்.
இவ்வாறெல்லாம் அவர் தனக்குள் குழம்பிக்கொண்:டிருக்கும். போது திடீரென தொலைவில் ஒரு பாதையை கண்டு பிடித்து விட்டது மாதிரி நினைவில், ஒரு புது வழியொன்று அவருக்கு விடிவெள்ளிமாதிரித் தெரிந்தது. “சரி” - என்று அந்த விவகாரத்தை உடனே தன்மனதுக்குள்ளே இப்போது அவர் வைத்துக் கொண்டு, அதற்கு முதல் அண்ணாவியாரின் விஷயத்தைப் பற்றித்தான் அவ்வேளை கதைக்க வெளிக்கிட்டார்.
6Эҹь-vәүүѣ о99 о

Page 58
"இங்க பாருங்க என்ர கதைய கொஞ்சம் எல்லாரும் தயவு செய்து ஒருக்காக் கேளுங்கோ. இங்க என்ர வீட்டுக்க இவர் அண்ணாவியாரை அப்பிடி இப்பிடியெல்லாம் அலைஞ்சு தேடித் திரிஞ்சு கஷ்டப்பட்டு தான் நான் கூட்டிக்கொண்டந்தனான். அண்ணாவியார் சொல்லுறதில சரி பிழை நீங்கள் சொல்லி அண்ணாவியாரை நீங்க திருத்த ஒருவருக்கும் அப்பிடி தகுதியில்ல. ஏனெண்டா அவர் எங்களுக்கு இப்ப கூத்து பழக்கவெண்டு இருக்கிற அண்ணாவியார்! அதால அவர் எங்கள் எல்லாருக்கும் ஒரு குருதான். இதால நாங்கள் அவருக்கு அண்ணாவியார் எண்டுற ஒரு மரியாதய எல்லாரும்தான் குடுக்க வேணும். அண்ணாவியார் அண்டைக்கு பகல் போல இங்க கொப்பி எழுத வாங்கோ எண்டு சொல்ல நானும்தான் அதக் கேட்டுக் கொண்டிருந்தன். அப்ப நானும் அவர் சொன்னதுக்கு ஒண்டும் சொல்லாம இருந்து இண்டைக்கும் தொழிலுக்குப் போகாம வீட்ட இருந்தன். ஏனெண்டா அண்ணாவியார் சொன்னதுக்கு நாங்கள் மரியாதை குடுக்க வேணும் எண்டதாலதான். எனக்கும் குடும்பம் இருக்கு பிள்ளை எனக்கும் இருக்கு! ஆனா நான் என்ன செய்தன்.? எல்லாத்தையும் விட்டுப்போட்டு இதுக் கெண்டு நிண்டனான்தானே.? சரி என்ர விசயம் போகட்டும்! நான் இதில பெறுப்பாக இருக்கிறன்! எண்டதால எல்லாத்தையும் ஒரு கடமையா கட்டுப்பாடா நடக்க வேணும். ஆனா இங்க எங்களுக்கு முன்னால உதில இருக்கிற ராஜன் தம்பிக்கு அப்பிடி கட்டாயம் இந்த கூத்து விசயத்தில ஏதும் செய்ய வேணுமெண்டதான ஒரு கடமை இருக்கு? அவர் நேற்று ஜெயா தனக்குக் கொப்பி பாத்து எழுத ஏலாது எண்டு சொல்ல தான் தாய்க் கொப்பியக் கொண்டு போய் அவற்றை கதாபாத்திரத்தை எழுதிக்கொண்டு வந்து இங்க என்னட்டத் தந்திருக்கிறார். அவருக்கு என்ன வலியே இப்பிடி எல்லாம் செய்ய வேணுமெண்டு? இதை ஏன் நான் சொல்லுறன் நான் எண்டா அந்தத் தம்பியே இதில சம்பந்தப்படாதவர் இப்பிடி எல்லாம் உதவி செய்யேக்க நீங்கள் எல்லாம் இதில சம்மந்தப்பட்டவயள் எப்பிடி எப்பிடியெல்லாம் செய்ய வேணுமெண்டு ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோ.?”
சண்முகம் இப்படிச் சொல்ல - வால் வீசும்பிப்பாய்ச்சலொடு கொம்பு நீட்டி வரும் காளைகள் மாதிரி இருந்த மூர்த்தியும், துரையும், கோபமூர்க்கம் தணிந்து தலையைத் தலையைத் தாங்கள் உடனே கீழே போட்டுக் கொண்டார்கள்.
மற்றவர்கள் எல்லோருக்குமே தங்கள் தவறை நினைத்ததில் துக்கம் அப்போது மனதில் உள் புதைந்த மாதிரியாகத் தான் இருந்தது.
இதற்குள்ளே தங்கள் அபிப்பிராயம் சொல்ல வேறு குரல்கள் அந்நேரமாய் வருவதற்கு முன்னே - மடிக்கப்பட்ட சண்டிக்கட்டை அவிழ்த்து கீழே விட்டு, சாரத்தை சரியாக்கிக்கொண்டு கணேஸ் எழும்பி நின்றான்.
O 100 O புதினான்கால் தான் சந்திரன்

"சண்முகம் அண்ண நீங்க சொல்லுறதக்கேட்டு எங்களுக்கும் கவலையாத்தான் இருக்கு. நாங்களும் வராம எல்லாரும் விட்டது அது ஒரு பிழைதான்! நானும் தான் இங்க உள்ள எல்லாரும்தான். செய்தது பிழை எண்டத எல்லாரும் நாங்க சரியா ஒத்தக்கொள்ளத்தான் வேணும்.! என்ன செய்யிறது இண்டைய இந்த நிலையில உள்ள கஷ்டத்தில மூர்த்தியும் துரையும் அப்பிடி இப்பிடியெண்டு சொல்லித்தான் போட்டாங்கள்.”
"எண்டாலும் தம்பி கணேஸ் நான் சொல்லுறது என்னெண்டா. அண்ணாவியாருக்கு நாங்கள் மரியாதை குடுக்கத்தானே வேணும் ராசா.?”
"ஓம் சண்முகமண்ண அது பிழைதான்.”
"பிழைதான் எண்டால் கணேஸ் அவயள் எங்கட அண்ணாவியாரிட்ட அப்பிடித் தாங்கள் சொன்னதுக்கு மன்னிப்பும் அவரிட்ட இப்ப கேக்த்தானே வேணும்.”
"ஒ கேக்கத்தான் வேணும் சண்முகமண்ண!”
"அதுதான் கணேஸ் நான் சொல்லுறது என்னெண்டா ஒரு குருவுக்கு மரியாதை குடுத்து அமைவா நடக்கத் தெரியாத ஆக்கள. இங்க கூத்து பழக வைச்சிருந்து ஒண்டும் செய்யேலாது என்ன.'
"ஓம் அது தானேயண்ண நானும் சொல்லுறன் அவயள் மன்னிப்பு க்ேக்கட்டும் அண்ண.?”
என்று கணேசும் சண்முகத்தோடு சேர்ந்து ஒத்ததாய் இதைச் சொல்ல, அண்ணாவியாருக்கு அப்போது அதைக்கேட்க தன்தலையில் பூச் சொரிந்தான சந்தோஷமும் ஆறுதலுமாகிவிட்டது. தன்னைக் கிட்டிச் சேர்ந்து தீவிரித்து வருகிறமாதிரியான எதிர்ப்பு மாறியதிலே அவர் இப்போது நிம்மதிப்பட்டு விட்டார். வண்டல்போல குழம்பிய மனம் இப்போது மாறியதிலே மப்பும் மந்தகாரமுமாயிருந்த முகமும் அவருக்கு வெளிச்சம் கண்டுவிட்டது.
நீதியை தேடுகிறது மாதிரி இப்போது அவர் கதைத்தார். "தம்பிமார் கோபம் வசமாகி நானோ நீங்களோ நடந்து இந்தக் கூத்தப்பழகி ஒப்பேத்துறதெண்றது ஏலாது. இப்ப சண்முகம் தம்பி மற்ற அந்தத் தம்பியெல்லாம் சொல்லிச்சினம், அப்பிடி இப்பிடியொண்டு மன்னிப்பு கேக்கச் சொல்லி. அதெல்லாம் எனக்குத் தேவயில்ல. கூத்துப் பழகுற தெண்டா இப்பிடித்தான் கஷ்ட நஷ்டம் எல்லாருக்கும் வரும். எண்டாலும் நானும் உங்கட சீவியத்தின்ர நிலைமையை விளங்காம பகலில வாங்கோ எண்டதும் பிழைதான்! எண்டாலும் நீங்களும் அத உடனே எனக்கு நேரே நேர உடன் அப்ப சொல்லி இருக்கலாம். அத நீங்க சொல்லாமவிட்டதில உங்களிலயும் பிழை இருக்குக் கண்டியளோ? சரி அதெல்லாம் பேசி முடிஞ்ச கதை! அதை இப்ப நாங்கள் திருப்பியும் கதைக்க வேணாம்! அத நாங்கள்
6.00amayy) О 101. O

Page 59
விட்டு விடுவம். இப்ப என்னெண்டா அதையெல்லாம் இப்ப பறக்கடிச்ச மாதிரிச் செய்து போட்டு, இந்தக் கூத்த உங்களுக்கு நான் பழக்கிறதுக் கெண்டு புதுசா ஒரு ஆலோசனை நான் சொல்லுறன். எல்லாம் இப்ப உய்த்து ஆராஞ்சுதான் மனத்தாழ்மையோட இப்ப நான்சொல்லுறத நீங்களும் அதேமாதிரி கேட்டு நடக்க வேணும். இது ஒருவருக்கும் பிரச்சனையில்லாத லேசான வழி. இந்த வழி என்னெண்டால், கொப்பி கிப்பி இனிப் பாத்து யாரும் இனி எழுதுறேல்ல! அதை எல்லாம் விட்டுடுவோம். அப்பிடி அதையெல்லாம் விட்டுப்போட்டு இனி என்ன செய்யிறதெண்டா, கூத்துப்பழகிற நேரம் சிவன்ர பாத்திரத்தை நான் படிப்பன். அப்பிடி நான் படிக்கேக்கிள்ள சிவனுக்குப் படிக்கிறவர் என்னோட சேந்து படிக்க வேணும்! அதே மாதிரி பார்வதிக்கு நான் படிக்கேக்கிள்ள பார்வதிக்குப் படிக்கிறவரும் என்னோட சேந்துப் படிக்க வேணும். அதே போலத்தான் சேடியர் பறையன் கறுப்பி செட்டியார் எல்லாரும் என்னோட சேந்து படிக்க வேணும்.! இது யோசனை எப்படி? எப்பிடி? சொல்லுங்கோ.?”
என்று அண்ணாவியார் இதை சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் பெருஞ்சிரிப்புச் சிரித்தார். அண்ணாவியாரின் இந்த புதிய வழிநடத்தல் ஆலோசனை கேட்ட அங்குள்ளவர்களெல்லாருக்கும் அப்போது மனமானது மகிழ்ந்து களிகூருவதாய் இருந்தது!
"அண்ணாவியார் இது உண்மைக்கு எல்லாருக்குமே லேசான வழி! இதுதான்சரியானமுறை. நீங்க சொன்னது தான் நல்ல நடைமுறை.” என்று அண்ணாவியார் சொல்லி வாய் மூடமுத்ல் தன் அபிப்பிராயத்தை சண்முகம் உடனே சொன்னார்.
“ஓம் அண்ண உந்த மாதிரி அண்ணாவியார் கூத்த பழக்கிற விதந்தான் எங்களுக்கும் சரியா ஒத்துப்போகுமண்ணை.!"என்று ஜெயாவும் அப்போது சந்தோஷமாய் மகிழ்ந்து சொன்னான்.
"சரி அப்ப இந்த நடைமுறையில நாங்கள் ஒத்திகையை - பிறகு வழி நடத்துவம் என்னதம்பி சண்முகனார்.”
என்று திடப்பட்ட மனதோடு அண்ணாவியார் சண்முகத்தைக் கேட்டார்.
“ஓம் அண்ணாவியார் உது தான் இங்க உள்ள எல்லாருக்கும் கூத்துப் பழக்கக் கூடிய ஒரு லேசான சோக்கான முறை.!”
என்று சண்முகமும் அண்ணாவியார் சொன்னதை ஒப்புக் கொண்ட மாதிரி சொன்னார். அங்கே இருந்த எல்லாருக்கும் அண்ணாவியார் சொன்ன ஒரு புது வழி முறை ஏகமாய் நன்மையாய்ப் பின்பற்றப்படக் கூடியதாய் இருப்பது போலத்தான் தெரிந்தது. ஒன்றும் ஒருவரும் பேசாமல் அமைதியாய்ப் பிறகு இருந்தார்கள். என்றாலும் அண்ணாவியார் கூத்துப்பழக்குகிற காரியத்திலே இன்னொரு திருப்பத்தையும் கொண்டு வந்தார். 91020 முதினான்கஸ் தான் சந்திரன்

"இதெல்லாம் சரி உங்களோட நான் இந்த வழியிலயா இனி நல்லா ஒத்துப்போகப்பாக்கிறன். ஆனா இன்னொரு விஷயத்தில நான் சொல்லுறதில, நீங்கள் கண்டிப்பா அதக்கேட்டு என்னோட ஒத்துபோக வேணும்.! என்ன தம்பி சண்முகம் அதை நான் இதோட சொல்லத்தானே வேணும்.?” “எனக்கே அண்ணாவியார் நீங்க என்னசொல்லப்போறிங்க எண்டு ஒண்டும் விளங்கேல்ல சொல்லுங்கோ.?”
- சண்முகம் சொல்லிவிட்டுச் சிரித்தார்
"அதுதானே நானே சொல்லவேண்டிய விசயத்தை சொல்லேல்ல! சரிநான் இப்ப அத சொல்லுறன் தம்பி சொல்லுறன் தம்பி.!”
அவரும் சிரித்தவிட்டு பிறகு சொல்ல தொடங்கினார்.
"என்னெண்டா இதில நீங்க எல்லாரும் சரியாக இப்ப கவனம் வைக்க வேணும். இந்த ஒத்திகை எண்டுறது சொல்லப்போனா நாளாந்தம் ஒரு பழக்கம்தான்! இந்தப் பழக்கத்தில கூத்துப்பழகிற ஆக்கள் ஒவ்வொரு நாளும் முன்னேறி படிபப்படியா நல்ல நிலபரத்தக்கு பிறகு வரவேணும். அப்பிடி பெரும் பயணமா இதில வந்தாப்பிறகு, அண்ணாவியாரின்ட துணை இல்லாமலும் தான் தனிய கெட்டித்தனமாப் படிக்க வேணும். இதில என்னொண்டும் சொல்லவேண்டி இருக்கு! அது என்னெண்டா! இப்ப காத்தானுக்கு ஒரு ஆள் படிச்சா, என்னொராளும் அதப்பார்த்துப்பாத்துத் தானும் அதைப் பாடமாக்கி வைச்சுக் கொள்ள வேணும். இப்பிடித்தான் ஒரு கதாபாத்திரம் இன்னொருவருக்கும் கேட்டுக் கேட்டுக் கட்டாயம் பாடமாய் இருக்க வேணும். ஒரு தேவைவந்தா மாறிச்சாறி அந்தப் பாத்திரத்தை தொண்டை புடைக்கவும் பாடி இன்னொரு ஆள் செய்ய றெடியாயிமிருக்க வேணும்.! இதுக்கு என்ன ஒரு வழி நான் இப்ப உங்களுக்குச் சொல்லுறதென்னெண்டா கூத்துப்பழகுற எல்லா நாளும், எல்லாரும், இங்க கூத்துப் பழக்கிற இடத்துக்குக் கட்டாயம் வந்தே ஆக வேணும். சிலர் அப்பயோசிக்கலாம் அட இந்தப்பாத்திரம், நடிக்கிறது படிக்கிறதத்தானே அண்ணாவியார் இண்டைக்கு - ரவைக்கும் பழக்குவார்! அதால நான் இண்டைக்கு அங்க, பழகிற இடத்துக்குப் போகத் தேவயில்ல! என்ர நடிப்பு இண்டைக்கு அங்க வராது தானே? அப்பிடி இப்பிடி எண்டெல்லாம் ஆரும் வராமகட் பண்ணப்பாக்கலாம்! ஆனா, அந்தப் பழக்கம் ஆரும் ஒருவரும் கடைசிவரையும் இங்க வைச்சுக்கொள்ளாம எல்லாருமே கட்டாயமா இங்க ஒவ்வொருநாளும் விடாம கொள்ளாம ஒத்திகைக்கு கட்டாயமா வந்தேயாக வேணும்.! அப்பிடி நீங்கள் எல்லாம் நான் சொல்லுறமாதிரிக்கேட்டு நடந்தா நல்ல திறமானதா இந்தக் காத்தவராயன் கூத்தை நாங்கள் வடிவா மேடையேற்றி, நடிச்சு - பாக்கிற சனங்களிண்டையும் பாராட்டை நல்லா பெறலாம்.! இதுதான் முக்கியம்|வேற ஒண்டையும் நான் முக்கியமா
SPennಳ್ಯಕಿ O 103 O

Page 60
சொல்லுறதுக்கில்ல! எண்டாலும் ஒண்ட இங்க நான் சொல்லாம விட்டிட்டன்!”
அண்ணாவியார் பெரிய மூச்சுவிடும் ஓசையோடு தன் நெஞ்சை அலைந்தார். பிறகு அவர் சொன்னார்.
"இப்ப நான் சொல்ல வேண்டியதும் அதி முக்கியமான ஒண்டுதான். இவ்வளவு நாளும் நாங்கள் காப்பு இப்ப படிச்சது ஊருக்குள்ளயும் சரி வேற ஆருக்கம் சரி அந்த அம்மாளாச்சியை கை எடுத்து கும்பிட வேணும். அப்பிடி சொல்லுற அளவுக்கு ஒண்டும் இங்க நடக்கேல்லத் தானே..? அம்மாளாச்சியின்ர ஆசியும் அப்ப இதின்படி பாத்தா எங்களுக்கு இருக்குத்தான். அது இவளத்துக்கும் எங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்குத் தானே.? இன்னுமென்ன எங்களுக்கு ஒரு மூண்டு நாள் தான் இங்க காப்பு படிக்க வேணுமெண்டு சரியா கணக்கு இருக்கு அதோட நாங்கள் பிறகு பாத்துப் போட்டு ஒத்திகையை இங்க இனி துவங்க வேண்டியதுதான்.! சரிதானே அப்ப சண்முகம் தம்பி!”
“சரி நீங்கள் சொல்லுறதெல்லாம் சரி' - என்று சொல்லிக் கொண்டு சண்முகம் உடனே இருந்த இடத்தால் இருந்து எழுந்து நின்று கொண்டார்.
“சரி அப்ப நாளைக்கு இண்டைய மாதிரி எல்லாரும் வாருங்கோ என்ன..? இன்னும் ஏதாவது கதைக்க வேண்டியதுகள் எதும் இருந்தா நாளைக்கும் சரி அதுக்கு பிறகு இருக்கிற ரெண்டு நாளும் சரி கதைச்சுக் கொள்ளுவம். என்ன?’ என்று அண்ணாவியார் எல்லோரையும் விடதான் அங்கு உயர்ந்திருக்கிறதாக நினைத்து தன் நெஞ்சையும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு உஷாராக முன்னால் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டு சொன்னார். கூட்டம் முடிவுற்றது என்று தெரிந்தவடன் சிறு குருவி சிறகதிரப்ப பறந்தது மாதிரி உடனே அந்த இடத்தால் இருந்து வெளியே போக உடனே எல்லாரும் வெளிக்கிட்டு விட்டார்கள். ராஜனும் மற்றவர்களைப் போல அந்த இடத்தால் இருந்து வெளியே போகவெளிக்கிட்டான். அவனுக்கும் இப்போது இந்தக் கூத்திலே தானும் பங்கேற்று நடிக்க வேண்டுமென்ற ஒரு ஆசை மனதில் பருவமாகும் நெல்விதைக்குள் பால் ஊறின கணக்காய் ஊறத்தொடங்கிவிட்டது. பச்சைத்தோகை விரித்த மாதிரி இந்த ஆசை அவன் மனதுக்குள் இப்போது படிந்துவிட, இது பற்றிய ஆனந்தாதியான ஒரு ஆனந்தத்தோடேயே அவன் இவ்வேளை தன் வீடு போய் சேர்ந்தான்.
15
குருத்து இலைச் சுருள் விரிந்து நாக்குப்போல் பிறகு நீண்டதுமாதிரி, கூத்துப் பழகவென்று இதற்குள் அந்த மூன்று நாட்களும் தொட்டில்
01040 புதினான்காம் தான் சந்திரன்

ஆட்டம்போலச் சுகமாகக் கடந்து விட்டன. விசிறி விரியாத பனை ஒலை இருக்கின்ற மாதிரியாய் ஊரை விட்டு இடம் பெயர்ந்து அகதி நிலையில் வந்தவர்களுக்கும் எத்தனை விதமான வாழ்க்கைப் பிரச்சினைகள். இவர்கள் இடம் பெயர்ந்து வந்து இருக்கின்ற இடங்களில் ஒவ்வொரு எட்டாய் நாட்களைக் கடத்தியவாறு இருந்தாலும் அவர்களின் மனம்தனிலே வேர் முண்டைப்போலிருந்து அதில் முளைத்துக் கொண்டிருப்பது போல வளரும் சோகம் எப்போதுமே அவர்களுக்கு விடுபட்டுப் போகாதவைகள் தானே?
விடியற்காலையில் நித்திரையாலிருந்து எழும்பினால் துன்பப் பிறப்பெடுத்து வந்ததுபோல நினைத்து சில நிமிடங்கள் இவர்களுக்கு மனம் துடிக்கத்தான் செய்யும். இதன் பிறகு இங்கே வந்து இருக்கும் இடத்தில் அவர்களுக்கு ஒன்றின்மேலாய் உள்ள தான பல வாழ்க்கைப் பிரச்சினைகள் தான் சொல்லப்போனால் எத்தனை?
இந்த விதமான பல பிரச்சனைகளெல்லாம் இடம் பெயர்ந்து வந்துள்ள மற்றைய பலருக்கும் இருக்கின்றதைப்போல் உத்தமன் வீட்டுத்திட்டத்தில் வந்து குடியமர்ந்தவர்களுக்கும் அங்கே இருக்கத்தான் செய்தது.
போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட நாசம் மனத்தை அவர்களுக்கு சூனியமாக்கிவிட்டிருந்ததும், இந்த கூத்துப் பழகுகிற எண்ணம் மனதில் உருக்கொண்ட நாள் முதலாய் - பல துன்பங்களையும் அவர்கள் கொஞ்சம் இதன் மூலம்மறக்க ஆரம்பித்து விட்டார்கள். துன்பங்களிலும் மிதந்து கொண்டடிருக்கும் படகைப் போன்ற ஒரு வித இன்பமாய் அங்குள்ள ஆண்கள் பலருக்குக் கூத்துப் பழகும் நினைவுகள் அவர்கள் மனத்தில் அசைவு கொள்ள ஆரம்பித்து விட்டன. தேனீக்கள் தேன் கூட்டைச் சுற்றிப் பறக்கிற மாதிரி அவர்கள் தங்களது எந்த ஒரு வேலையிலேயும் இந்த நினைவின் கூடவேயாய்த்தான் நெடுகிலும் இப்போது இருந்து கொண்டிருந்தார்கள்.
அன்று காலையிலே குயில் பறவை ஆழ்ந்து கூப்பிடும் இசையை காதுகளில் கேட்டதோடு இன்றைய இரவில் ஆரம்பிக்கும் ஒத்திகை ஞாபகங்கள் அவர்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டன. பகல்த் தோற்றம் விலகி இருட்டுப்பட்ட வேளை சண்முகம் வீட்டில், உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒசையாக மிருதங்க ஒலி இங்குள்ள திசாதிசையெங்கும் கேட்கத் தொடங்கிவிட்டது. சண்முகம் முற்றத்தடியில் உள்ள பாயில் இருந்துகொண்டு அந்த மிருதங்க வாத்தியத்தை வாசித்துக் கொண்டிருந்தார். மேளத்தின் வட்ட வழிநடுவே ஒட்டப்பட்டிருந்த நாதக் கலவை முனகல் நடுக்கத்துடன், ஓசை ஒலியெல்லாம் என்னிலிருந்தே என்பதைப்போல சண்முகத்தினது விரல்கள் பட, ஒசைக்கு மேல் மிதந்ததாய்ப் பேசிக் கொண்டிருந்தது.
சிதறிக்கிடக்கும் பெற்றோல் மாக்ஸின் ஒளி வெள்ளத்திலே அங்கே ஒரு சின்ன மேசைமேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் படம்
М8Эыллам) O 105 O

Page 61
ஆழ்ந்து காலத்தை எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கும் அவரின் பார்வையோ டேயாய் இருந்து கொண்டிருந்தது. இதழ் சிதையாத சிவப்புப் பூக்கள் படத்திலுள்ள பிள்ளையாரின் உந்திமட்டுமாய் நிறைய அடுக்கிக் குவிக்கப் பட்டடிருந்தன. வாசனை ஊதுபத்தியிலிருந்து எழுந்துவரும் புகை நாட்டியம், ஆடும் நறுமணத்தோடே நெளிந்தபடி கலைந்து நாலாபக்கமும் பரவிக் கொண்டிருந்தது.
அண்ணாவியார் பிரகாசிக்கும் அந்த ஒளி வெள்ளத்திலே பிள்ளையாரின் படத்துக்கு முன்னாலே பளபளத்த மாதிரியான தோற்றத்தோடு நின்று கொண்டிருந்தார். பழத்தோட்டத்துக்கும் நந்தவனத்துக்கும் போகிற ஒரு வித ஆர்வத்தோடு கூத்துப்பழகவென்று இருந்தவர்களும் சண்முகம் வீட்டு முற்றத்தடிக்கு ஆசை மனதோடு வந்த சேர்ந்ததாய் விட்டார்கள். அவர்கள் அங்கே குந்தி இருந்து கொண்டிருந்த இடங்களுக்கு முன்னாலே பார்த்தால், ராஜனும் தான் அங்கே பாயின் மேல் குந்தியபடி இருந்து கொண்டிருக்கின்றான்.
எல்லோரும் இப்போது வந்தாயிற்று என்பது நன்றாகத் தெரிந்து கொண்ட பின்பு, அண்ணாவியார் காப்புப் பாடினார். அந்தப் பாடுதல் முடி வடையும் தருணம் கண்ணகைத்தாயாரின் காப்பதமும் அவர் பாடி முடித்தார். இதன் பிறகு அம்மன்வரவு என்று அதற்கு சேருமதியான கதாபாத்திரங்களுக் கென்று நியமிக்கப்பட்ட ஆளை முன்னாலே வரக் கூப்பிட்டு அன்றைய ஒத்திகையை ஆரம்பித்து விட்டார் முருகேசு அண்ணாவியார்.
முன்பு அண்ணாவியாரோடு கதையில் கொளுவல்பட்ட மூர்த்திக்குத் தான் இப்போது முத்து மாரியம்மன் கதாபாத்திரம் நடிப்பதற்கு புதிதாக சண்முகத்தால் வழங்கப்பட்டடிருந்தது. என்னதான் மூர்த்தி ஆள் ஒரு மாதிரி சோடையாகவும் ஒற்றைநாடி உடம்போடேயாய்க் காணப்பட்டாலும் கண்பார்வை அவனுக்கு என்னவோ மோதிரக்கல் சோதிமாதிரி பளபளவென மின்னும், அது அவனின் முகத்தை கலகலவென்றதாய்த்தான் எப்போதும் அழகாக வைத்திருக்கும். அண்ணாவியார் மூர்த்தியை அதிலே வரக் கூப்பிட்டு முத்து மாரி அம்மன் வரவிலே பாடவேண்டிய பாடலை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
மாரியம்மன் வருகைப்பாடலில் "தூக்கியபடி வைத்தாடுவோம் மாரிதேவியம்மன்” என்று அவர்படிக்கும் போது நடிப்பையும் அவர் மூர்த்திக்கு செய்து காட்டுகிறார். மூர்த்தியும் அண்ணாவி படிப்பதையும் நடிப்பதையும் நன்றாக அவதானித்து, ஞாபகமாகத்தான் எல்லாம் கேட்டு எடுத்துப்பாடுகிறான். அவரைப்போலத்தான் சரியாக அவனும் நடித்தும் காட்டுகிறான்.
எல்லா வனமும் கடந்து இப்போது முத்துமாரி அம்மன் வந்து விட்டார், வேப்பிலை கைப்பிடித்ததே முத்துமாரி அம்மன் நானும் வீசி விளையாடிவாறேன் மாரிதேவியம்மன், என்று அண்ணாவியார் படிக்கும்போது
01050 புதினான்கஸ் தான் சந்திரன்

அவரின் ராகத்தைப் போல அச்சொட்டாய் மூர்த்தியும் கேட்டு சரியாக அப்போது பாடி விட்டான்.
"சோக். - என்ற உடனே சொன்னார் அண்ணாவியார். அவர் சொல்ல பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்குமே ஒரு சந்தோஷச் சிரிப்பு மூர்த்தியை மாதிரியே தாங்களும் தங்களுடைய கதா பாத்திரங்களை பிழையில்லாமலும் திறமையாகவும் செய்து அண்ணாவியாரி டமிருந்தும் பாராட்டுப் பெற வேண்டுமென்று இப்போது அவர்களுக்கு மனம் ஒரு வித அந்தர நிலையாகவும், விறுவிறு என்றதாவும் இருந்து கொண்டிருந்தது.
அண்ணாவியார் பிறகு பொது வசனம் பேசினார். அதாவது முத்து மாரியம்மன் தன்னுடைய மாளிகையில் இருக்கும்போது தமக்கையாகப்பட்ட பூமாதேவியம்மன் பூமி பாரம் தாங்க முடியாமல் தங்களிடம் வந்து முறையிடப்போகிறாவாம்.
மணிஎன்பவன்தான் பூமாதேவி கதாபாத்திரம் நடிப்பதற்கென்று நியமித்த ஆள்! அவனை அதிலே வரக்கூப்பிட்டுவிட்டு, தண்டைகலகலென்ன பூமாதேவி அம்மன் - அவதானோடி வாறாவாம் பூமாதேவியம்மன் - என்று தன் முகத்தோற்றம் மாற்றிவைத்துக்கொண்டு பூமாதேவியின் பாட்டை படித்துக் காட்டத் தொடங்கினார் முருகேசர், அவரின் அந்த ஒரே குரலைப்போல தன் குரலையும் சேர்த்து செதுக்கி வைத்த கணக்கிலேயாய் அசைத்து அசைத்து அழகாய் மணியும் அப்போது படித்தான்.
பானையில் அள்ளி நிரப்பின மாதிரி, தான் சொல்லிக்கொடுக்கச் சொல்லிக் கொடுக்க, எல்லாருமே அழகாய் ஒழுங்காய்க் கூத்துப் பாட்டுக் களைப் படிக்க அண்ணாவியாருக்கென்றால் அதன் மூலம் முழு உற்சாகமும் பிறந்து விட்டது. தான் சொல்லிக்கொடுக்கும் கதாபாத்திரத்திற்குரிய ரூபத்தையும் பழகிறவர்கள் சரியாக பிடித்துக் கொண்டு பாடிநடிக்கிறார்கள் என்பதிலும் அவருக்குப் பெரிய மனத்திருப்தியாய் வந்துவிட்டது. நல்ல கலைஞனுக்குரிய குணங்களும் சாயலும் தனித்திறமையும் அண்ணாவி முருகேசருக்கும் இருந்ததால் அவர் தான் இப்போது பழக்குகிறவர்களெல்லாம் தான் முன்பு நினைத்திருந்ததைவிட திறமையாக பாடவும் நடிக்கவுமாய்ச் செய்வதைப்பார்க்க தன் உடல் உறுப்பெங்கும் கனியும் ஒரு சாந்தமான சந்தோஷத்தை நிரம்பவுமாய் அவர்அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்.
அங்கே அண்ணாவி எடுத்தக் கொடுக்கிறது போல படிக்கும் கூத்துப் பாட்டிற்கும் அதையே பிறகு திருப்பிப்படிக்கும் கூத்துப்பழக்கக்காரருக்கும் சலிப்பில்லாமல் மத்தளமும் உடுக்கும் வாசிக்கிற வேலையாக சண்முகமும் அங்கே இருந்து கொண்டிருந்தார்.
அவர் மத்தளம் வாசிப்பதை விடவும் ஒரு மகோன்னதமான வாசிப்பு உள்ளதாக சுருங்கி ஒடுக்கம் கண்டுள்ள உடுக்கும் அவர்கையிலிருந்தவாறு ஆங்கார ஒலிநாதமாய் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் வாசிக்கும் உடுக்கு
М8Эыллам) O 107 O

Page 62
வாத்தியத்தின் சவுக்குப்போன்ற ஒலி, அங்குள்ளவர்களின் களைப்படைந்த உடல்களையெல்லாம் கட்டாரியைப்போல, இறுக்கின இரும்பு மாதிரியாக மாற்றி வைத்துக் கொண்டிருந்தது.
சண்முகம் வீட்டின் முற்றத்தில் இவ்வாறாய் கூத்து ஒத்திகை நடந்து கொண்டிருக்க, அந்த ஒழுங்கையால் அப்போது நடந்து போகின்றவர்க ளெல்லாம் இரண்டு நிமிடங்கள் அதிலே நின்று வேலியாலும் அங்கே என்ன நடக்கிறது என்று ஆவலுடன் எட்டிப் பார்த்து விட்டுப்போனார்கள்.
தொடரும் அந்தக் கூத்து ஒத்திகை, அங்கே பிறகு, இரவு நட்சத்திரங்களின் ஆரவாரமுள்ள நடுச்சாமம் வரை அமர்க்களமாக நடந்தபடி தான் இருந்தது. நடுச்சாமம் கடந்த நேரம் அண்ணாவியார் "இனி இண்டைய ஒத்தகையை நாங்கள் நிப்பாட்டுவம்' - என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டு அதோடேயாய்க் கூத்து ஒத்திகையையும் நிறுத்திவிட்டார்.
அவர் சொன்ன கையோடு, ஒத்திகை முடிந்ததால், சண்முகம் வீட்டிலிருந்து எல்லோரும் வெளியே வெளிக்கிட்டு ஒழுங்கையால் பிறகு நடக்கத்தொடங்கி விட்டார்கள். காக்கைக் குஞ்சு கூடக் கத்தாதநேரம், ஒரு குருவி கூடவானில் பறக்காததான நேரம் இருளுக்குள்ளே நடந்து கொண்டிருந்தல்களின் நிழல் கூட நிலத்தில் விழவில்லை அவ்வளவாய்ச் சொல்லுமளவிற்கு கம்மென்றதாய் கறுத்தச் சட்டி நிறத்திலே. அந்தப் பொத்தி அணைத்ததைப் போன்ற இருட்டு.
“சோறு வீட்டில் இப்போ பானைக்குள் கிடந்து சில்லிட்டி ருக்குமோ?” என்று வலுவாய்ச்சிந்தனை அதிலே நடந்து போய்க் கொண்டிருந்த சிலருக்கு! ராப்பசி மனுசருக்கு ஒரு வித அகோரப் பசிதான்! அந்த வயிற்றுக் காந்தல் வறட்டலுடன் அவர்கள் கெதிகெதி யாய் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திட விறுக்கு விறுக்கென்றதாய் அவரசத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள்.
16
5Tத்தவராயன் கூத்து ஒத்திகை ஆரம்பித்து பதினைந்து நாட்கள் வரை கடந்துவிட்டன. இந்தப் பதினைந்து நாட்களும் மாம்பழக்கூறுகளை வாயில் வைத்துச் சுவைத்ததில் வரும் இனிப்பு மாதிரி ஒத்திகைக்கு வந்து கிரமமாக கூத்துப் பழகுவதிலும் ஒரு சுவை உணர்வை அனுபவித்தார்கள் நடிகர்களாயுள்ள அந்தக் குழுவினர்.
கூத்துப்பழகிறவர்களிலே குரல் வசீகரமில்லாதவர்களும் இருந்தார்கள். பெண்வேடமேற்றவர்களிலே - "ஆண் சந்ததிதான் நான்!” - என்றவாறு இரும்புமாதிரியாய் நின்று கொண்டுதோதாய் நடிக்காதவனும் இருந்தான்.
01080 புதினான்காம் தான் சந்திரன்

இப்படியானவர்களை தொலைத்து தலைமுழுகவும் வழி இல்லாது அண்ணாவியாரும் கிடந்து திண்டாடினார். என்றாலும் சமாளித்துக்கொண்டு அப்படியானவர்களுக்கு பிறகும் சுமைகளை தலையில் கட்டி வைக்காது அவர்களுக்கு இலகுவான கதாபாத்திரங்களை மாற்றிக்கொடுத்து சிரமத்துடன் பாடுபட்டு அவர் ஒத்திகையை நடத்திக் கொண்டிருந்தார்.
தான் பழக்குகிற கூத்துப் பாடல்களிலே, அந்தப் பழைய உலகத்திலே கேட்கிற குரல்போல இல்லாது புது மெருகுகளும் சேர்த்து அவற்றை தன் ஒத்திகைகளிலே தரிசனம் பெற வைத்தார் முருகேசர். ஆனாலும் அவருக்கு, இன்றைக்கென்று நடந்ததான ஒரு சம்பவம், எந்திர சாலையின்மர அறுப்புப் போல அவரின் மனத்தைப்போட்டு அறுத்துத் துண்டாக்குகிற விதமாகச் செய்துவிட்டது. இலக்கணசுத்தமாக அவர் பேசும் பேச்சிலும் இந்தக் குழப்பத்தாலே ஒரு தாக்கம் வந்து அவரை இடித்து விழுத்தின மாதிரியும் செய்து விட்டது.
முள்ளை ஒடித்து தன் உடம்பிலே குத்தினமாதிரி அதனாலே ஒரு வலியொன்று அவருக்கு ஏற்பட்டது. இப்படியாயெல்லாம் இன்றைக்கு அவருக்கு அனுபவிக்கும் அளவுக்கு நடந்ததுதான் என்னவென்றால், அவருக்கு ஒழுங்கு படுத்தப்பட்ட நாள் கணக்கில், இன்றைக்கென்று மூர்த்தியின் வீட்டிலேதான் மூன்று நேரமும் அங்கே சாப்பாடு என்றதான ஒரு முறை சரியென்று அவரும் இன்று காலையிலே போய் மூர்த்தி வீட்டில் காலைப்போசனம் சாப்பிட்டுவிட்டு வந்தார். அதற்குப் பிறகு மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. அவருக்கும் வயிற்றிலிருந்து நல்ல பசி நெருப்புப்போலக் கனிய ஆரம்பித்து விட்டது. "நேரமாச்சு!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு பிறகு அவர் அங்கே போனார்.
ஆனால் அவர்அங்கு மூர்த்தியின் வீட்டுக்குப் போகு முன்னமே அதட்டி உருட்டிமிரட்டிப் பேசுகிறது மாதிரி அந்த வீட்டிலிருந்து வெளியே வீதி மட்டும்கேட்ட சண்டைத் தனமான வார்த்தைகள், சீறியெழுந்த சத்தமாய்க் கேட்க, அவர் வெளிவீதியிலேயே கால்தரித்து நின்று விடவேண்டிய நிலை யாய்ப்போய்விட்டது. என்றாலும் நிலைமை ஒரு மாதிரியாய் மாறிச் சத்த மில்லாத மாதிரி இருக்க, இவர் அங்கே மூர்த்தியின் குடிசை வளவுக்குள் போனார்.
அண்ணாவியாருக்கு பச்சைக் குழந்தையைப்போல குந்து வாதில்லாத குணமும் இருக்கிறது. அந்தக் காரணத்தினாலே அங்கே போனவர் நடந்தவைகளைப் பார்த்துவிட்டு "இது குடும்பச் சண்டை” என்று அறிந்து விட்டு உடனே திரும்பி வந்திருக்கலாம்.
அப்படி இல்லாமல் குழந்தைத் தனத்திலே அவர் அங்கே போய் வாசலில் அவ்விடத்தில் கத்திக் கொண்டும் அழுது கொண்டுமிருந்த மூர்த்தியின் மனைவி மாலதியைப் பார்த்தார். அவள்அந்த நிலையில் அதிலே
கிருெஷும் O 109 O

Page 63
இருக்கக் கண்டதும் இவருக்கு மிகவும் கவலையும் பரிதாபமுமாகப் போய்விட்டது. உடனே அவர், அடித்து வெருட்டி அவனால் அதிலே இருத்தி வைக்கப்பட்டிருந்ததைப் போல தெரிந்த அவளைப் பார்த்து.
“என்னம்மா பிள்ள உங்களுக்குள்ள நடந்தது.”
என்று ஒரு பரிதாபத்தோடே, இந்தளவையும் தான் அவளைப்பார்த்து அவர் கேட்டார். ஆனால் குருட்டுக்கோழி தவிட்டை விழுங்கின கணக்காய், இதற்குப் பிறகுதான் ஒரு பரிதாபமான நிலை அவருக்கு வந்தது. அண்ணாவியார் கலியாணம்முடிக்காத ஒரு பிரமாச்சாரியான ஆளும்தானே? இந்த விஷயம் வழியே உள்ள குடும்பச் சண்டைகளில் மற்றொருவர் போய் தலையிடக்கூடாதென்பது அவருக்கும்தான் தெரியவில்லை! அந்த அனுபவம் அவருக்கு இல்லாததாலே, மூர்தியின் மனைவியிடமிருந்தும் நல்ல ஏச்சு அவர் வாங்கினார்.
"இந்த அறுவான் எங்கெயோ போய் நல்லாக்குடிச்சு ஆடிப்போட்டு இங்க வந்து வீட்டில உள்ள சோத்துப்பானை கறிச்சட்டியெல்லாம் போட்டு உடைச்சுப்போட்டு அங்கபாருங்க வீட்டுக்க போய் விழுந்து மல்லாக்கவாப் படுத்திட்டான். இதெல்லாம் இவனால என்ன என்ன ஆக்கினயள் எனக்கு! இந்த லட்சணத்திலை கூத்து இவன் அங்க பழகப்போறானாம். இங்க வீட்டில அவன் போடுற குதியமும் கூத்தும் அட்டகாசமும் யாருக்கு வெளியில எல்லாம் தெரியும்.'
அவள் அப்படி புருஷ னை மாத்திரம் தனிய பேச்செடுத்துப் பேசினாளா, இல்லை தன்னையும் அவனோடு பிணைத்துத்தான் ஏச்சுக் குடுத்தாளா? - என்று அவள் சொன்னதை கேட்டதும் அண்ணாவிக்கும் அது 'சுள் - என்றதாய் முள்ளாய்க் குத்தியது.
உடனே "என்ர பாடும் இந்த நேரம் இங்க வந்து நல்லாத்தான் கிழிஞ்சு போச்சு!” - என்று நினைத்துத் தலையைக் குனிந்து கொண்டு, தான் தப்பினால் பிழைத்தால் காணும் என்ற அளவிலே, அவர் திரும்பியதும் நடந்ததுமாய் உடனே இங்கே சண்முகம் வீட்டடிக்கு வந்து விட்டார்.
இங்கே தன் வீட்டுக்கு அவர் வந்து சேர்ந்தால், பசியில் வயிற்றை அவருக்குக் காந்தத் தொடங்கிவிட்டது. அதைத்தாங்க முடியாமல் மடக்கு மடக்கென்று கிணற்றுத் தண்ணிரைத்தான் செம்போடு கையிலெடுத்து வயிறு முட்டவும் அவர் முழுசாய்க் குடித்தார்.
இந்தப் பசியோசனைக்குள்ளே அவருக்கு ஒரு பழைய யோசனை. "இந்தப் பசிக்கு எனக்கிண்டைக்குப் பழஞ்சோத்துக்கஞ்சி யெண்டாலும் குடிக்கக்கிடைச்சா. ஆ. அதுவெண்டாலும் இப்பத்தைக்கு வாய்க்கு அமிர்தம் தான்! அந்தப் பழஞ்சோத்துத் தண்ணிர்க்குளாய் வெங்காயமெல்லாம் வெட்டிப்போட்டு பச்சமிளகாய் உறைப்பும் அதுக்க கசக்கிக் கலக்கி உப்பும் சேத்துக் கரைச்சுக் குடிச்சா”
O 110 O අග්‍රීෂ්ෆ්ෂෙව් ෙෆ්, ජේෂ්ත්‍රීෂ්

அவருக்கு இப்படி நினைவு சோத்திலேயே போய்க் கொண்டிருந்தது. ‘என்னசெய்யிறது இனி? என்று நினைத்துப் பாயை விரித்துப்போட்டு அவர் படுத்துப் பார்த்தார். ஆனால் அவருக்கு பசிதான் பெரிதாய் வந்தது. அதனால் எழும்பி பாயில் குந்தியபடி இருந்து பார்த்தார். அப்போதும் கூட ஒரு பங்குக்கு இரண்டு பங்காய் வந்தது பசி. சண்முகத்தின் வீட்டில் போய் நடந்ததை சொல்லுவோம்' என்று கூட அவர் மன ஆத்திரத்தோடே யோசித்தார்.
ஆனாலும் அவருக்கு அப்படி தான் செய்வது மன விருப்பமில்லாத மாதிரியாய் கதவு அடைத்த மாதிரி வந்துவிட்டது. "மூக்கைச் சீறிய கணக்கிலே நான் சண்முகம் வீட்டில போய் மூர்த்தி எனக்குச் சாப்பாடு மத்தியானம் தரேல்ல எண்டு சொல்லுறதா..? சீ.சீ. என்னவெக்கம் அது..? அப்படி நான் அங்க போய்ச்சொன்னாலும் எனக்கு உடன சாப்பாடு போட்டுத்தர அங்க பானையில இந்த நேரத்தில என்ன தான் சாப்பாடு சோறு இருக்கும்.?
என்று சிறிய கணக்கில் இப்படியெல்லாம் முருகேசர் யோசித்துக் கொண்டிருந்தாலும், "இண்டைக்கு எனக்கு நாள் முழுக்க சாப்பாடு ஒண்டும் இல்லாமல் தான் கிடக்க வேண்டியதாய் வரப்போகுது.” - என்று திட்ட வட்டமாகவும் தனக்குள் அவர் முடிவெடுத்துக் கொண்டு தான், தன் பசியையும் என்ன செய்வது என்று பொறுத்துக் கொண்டிருந்தார்.
முருகேசு அண்ணாவியார் இந்த வன்னி மண்ணிலேதான் பிறந்தவரும் வளர்த்தவரும் - அப்படியானவருக்கு இங்குள்ளதும், எங்குள்ளது மான கிராமத்து சனங்களினுடைய வாழ்க்கைச் சீவியம் எப்படி என்கிறது தெரியாமலா இருக்கும்? வன்னிக்குள்ளே இருக்கிற சனங்களும் வக்கணையா எல்லாம் சமைச்சுப் போட்டுச் சாப்பிட்டுக்குடிச்சு இருக்கிற ஆட்கள்தான்! இங்கே அதிகமாக ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தால் குசினியிலே அவர்களிடம் மூன்று பேருக்கு அவிக்கிற சோற்றுப் பானை இருக்கும். ஆனாலும் ஆறு பேருக்கும் சேர்த்து அரிசி போடுகிற பானையும் அவர்கள் வைத்திருப்பார்கள். அது மட்டுமல்ல வென்று பெரிய அவியலுக்கான பத்துப்பேருக்குச் சாப்பிட கூடிய அரிசிபோட்டு உலைவைக்கக்கூடிய பானையும் அவர்கள் வைத்திருப்பவர்கள்தான்.
இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்க - இந்த இடங்களிலே அவர்களுக்கு காடுகளும் தென்னந்தோப்புகளும், பனந்தோப்புகளும் பக்கத்துப் பக்கத்திலே கிடக்க அடுப்பெரிக்கும் விறகுக்கென்று என்னதான் பஞ்சம் அவர்களுக்கு வந்து விடப்போகிறது? இந்த வசதியெல்லாம் அவர்களுக்கு இருக்கிறதாலே சுடச்சுட அப்போதைக்கப்போது அளவாகச் சமைத்து சாப்பிடுவது தான் அவர்களுக்கும் ஒரு நாட்டுப்பழக்கம். இருக்கிறவர்களுக்கு மட்டும் அரிசி பானையில் போட்டு, உலை வைத்து, இறக்குவதால் அந்தந்த வேளை சாப்பாடோடு அந்த நேரத்து சாப்பாட்டு அலுவல் அவர்களுக்கு முடிந்துவிடும். மற்ற வேளைக்கு புதிதாய் வேறொரு சமையல் அவர்கள் சரிக்கட்ட
8Эkьrvaүүд О 1.1.1. O

Page 64
ஆரம்பிப்பார்கள். இடையில் விருந்தினர் வீட்டுக்கு வந்தாலும் ஆள் கணக்குக் குத்தக்கபடி இந்த விதத்தில் தான் பானை கறிச்சட்டி மாற்றிக் கொள்வதும், சமைப்பதும், சோறு வடிச்சுக்கொட்டுதுமாய் நடத்திக் கொள்வார்கள்.
எனவே இதெல்லாமே அண்ணாவியாருக்கு தெரிந்ததால் அதையெல்லாமே இவர் தானும் தனக்குள் ஒரு முறை யோசித்துப் பார்த்து விட்டு, இங்கே வந்து இருக்கிற பிறத்தி இடத்துச் சனங்களும் பார்த்தா நாட்டுப்புற கிராமப்புறச் சனங்கள்தானே? என்ற நிச்சயத்தில் அதுகளும் இதுகள மாதிரித்தானே எங்கயும் தங்கட வீட்டுச் சீவியத்தை நடத்தும்! என்று எண்ணிக்கொண்டு ஒருவரோடேயும் இதைப்பற்றி அப்போதைக்கு ஒரு கதைபேச்சு ஒன்றும் தான் எடுக்காமல், பேசாமல் மெளனமாய் இருந்து விட்டார்.
என்றாலும் நேரம் போகப்போக, பசி தாங்க முடியாத அவருக்கு - வயிற்றைச் சுருட்டியதாய்த்தான் வேதனையும் வலியும் பெருகிக் கொண்டிருந்தது. முறுக்குச் சில்லில் மா தள்ளி விட்டு பிழிவது போல குடலும் அவருக்கு பிரளத் தொடங்கியது. இதனால் பற்களை நன்றாக அவர் இறுக்கிக் கடித்துக் கொண்டு, “ இவங்கள் கூத்துப்பழக ராவைக்கு வரட்டும் அப்பப் பாத்தும் பேசிக் கொள்ளுவம்.” என்றதான யோசனையுடன் நாய்க்குந்தலாய் அந்தப்பாயிலே அவர் கனநேரத்துக்கு உட்கார்ந்திருந்தார்.
17
ன்ெறைக்கும் போல இன்றைய இரவும் அண்ணாவியார் தன் ஒத்திகை வேலையை ஒழுங்காகத் தொடங்கிவிட்டார். என்றாலும் அவருக்கு வயிற்றில் பசி வலி வந்து கொண்டே இருந்தது. நேரம் அதிகம் சென்று விட்டதால் அவருக்கு வயிற்றில் பகீர் - உணர்வுடன் அமிலம்சுரப்பதுபோல இருந்தது.
அண்ணாவியார் முதன் முதல் அங்கே கூத்து துவக்கமான பிள்ளையார் காப்புப் படித்து ஒரு மாதிரி முடித்துவிட்டார். அடுத்து, கூத்து ஒத்திகை தொடங்கி முதல் கட்டம் - சிவன், பார்வதி, - என்று அந்தக் கதாபாத்திரங்களுக்கான பாட்டை அவர் தொடங்கிக் கொடுத்து பழகி றவர்களும் பிற்பாட்டுக்காரரும் அதைப் பின்பற்றி பிறகு படித்தும் முடிக்கும் போது - இன்னும் அடுத்த அடிபடிக்கவென்று அவர் குரலை உயர்த்த, அவருக்கு உள்ளதான "நம்பர் வண்' - குரலும் இப்போது சோர்ந்து போகிறது.
ஏதோ செத்த மாதிரி, மெட்டில்லாம, நடையில்லாம, ஏதோ வந்தீட்டீங்க கேளுங்கோ எண்ட மாதிரி படிக்கிறார். மிருதங்கக்காரர் சண்முகத்துக்கும் இதனால் ஒரு வித மனக்குழப்பம்! அண்ணாவியாருக்கு இப்படி ஏன் சுருதி மாறுது? என்றும் அவர் யோசித்து யோசித்தப் பார்த்து விட்டு மிருதங்க
O 112 O புதினான்காம் என் சந்திரன்

அடியையும் நிற்பாட்டி விட்டார். "அண்ணாவியாருக்கு இண்டைக்கு என்னவோ நடந்துதான் போச்சு”, என்று திட்டவட்டமாக இதனால் சண்முகத்துக்கு தெரிந்தவுடனே, மனதிலே அதை வைத்துக் கொண்டிராமல்,
"அவருக்குப் பக்கத்திலேயாய் எழும்பிப்போய் நின்று கொண்டு, “முருகேசையா இண்டைக்கு உங்களுக்கு என்ன நடந்தது.” - என்று ரகஸியமாக, சுவாசிப்பதோடேயாய் இக்கேள்வியையும் அவரிடம் கேட்டார்.
அவர் அப்படி கேட்கவும்'ஏன்?’ என்று தான் ஒரு கேள்வியை, அவரைப் பார்த்து வெறுப்புடன் கேட்டார் அண்ணாவியார். அந்த ஏன் என்ற கேள்வியோடு சண்முகத்துக்கு இன்னும் உறுதியாக தெரிந்து விட்டது. அண்ணாவியாருக்கு என்னவோ இன்று நடந்துதான் விட்டது என்று,
உடனே அவர் "இங்க வாங்கோ அண்ணாவியார் அங்கால என்னோட உங்களோடேயாய் கதையொண்டு இருக்கு கதைக்க.?’ என்று அவரிடம் ரகசியமாய்ச் சொல்ல அண்ணாவியாரும் அதைக் கேட்டுக்கொண்டு, அவர் அங்காலே நடந்து போக அவருக்குப்பின்னாலேயாய்த் தானும் போனார். சண்முகத்தார் அப்படியே அவரை தன் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய் அங்கே வைத்துக் கொண்டு,
“என்ன பிரச்சனை உங்களுக்கு? இண்டைக்கு என்ன நடந்தது.?” - என்று திரும்பவும் கேட்டார்.
அண்ணாவியார் உடனே தன் இடத்தில் நின்றவாறு அறைக் குள்ளே கழுத்தைத் திருப்பிப்பின் பக்கம் பார்த்தார். அந்த அறைக்குள் அவர்களுக்கு எட்டத் தூரமாய்த்தான் ராசமணி ஒரு பாயில் தன் பிள்ளையுடன் அப்போது இருந்து கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் தன் புருஷனும் அண்ணா வியாரும் ரகசியக் கதை கதைப்பது போன்ற தோற்றத்துடன் அப்படியாய் அதிலே நிற்கின்றதைப் பார்த்து விட்டு, மரியாதையாக இன்னும் தள்ளிப்போய் அறையின் மூலையிலே நின்று கொண்டாள். பிள்ளையும் தாயுடன் போய்நின்றாள். அவ்விடம் தள்ளிப்போய் இப்போது ராசமணி ஒரு மூலையில் நிற்பதை அண்ணாவியார் பார்த்துவிட்டு இங்காலேயாய்த் திருப்பினார்.
“என்னதான் நடந்ததையா சொல்லுங்களன்” - என்றார் திரும்பவும்
சண்முகத்தார். -
“உமக்குத் தெரியாதோ..? உண்மையா தம்பி ஒண்டும் உமக்கு தெரியாதோ..?”
"இல்ல என்ன நடந்தது அப்பிடி ஐயா? எனக்கெண்டால் உண்மையா ஒண்டும் தெரியாதே.?”
Robemony) o 113 o

Page 65
"அப்ப ஒண்டும் உமக்கு நடந்தது தெரியாது.”
"ஐயாவாண ஐயா உண்ணான எனக்குத் தெரியாது எண்டுறன். நான் தேன் எடுக்க காட்டு வழிக்குப் போயிருந்தனான்! அதால என்ன நடந்ததெண்டுறது எனக்கென்ன அப்பிடி சரியாத் தெரியும்.”
"சரி அப்ப நடந்தத கேளும் தம்பி நீர்..? நானெண்டா மத்தியானமும் இண்டைக்கு ஒண்டுமே சாப்பிடேல்ல. இப்பயும் தம்பி கேளும் பொழுதுபடவும் நான் ஒண்டுமில்ல.!”
"ஐயோ இவன் மூர்த்தியெல்லோ இன்டைக்கு உங்களுக்கு சாப்பாடுதர வேணும்?”
"ஓ அவர் இண்டைக்கு எனக்கு தரவேணும்தான். ஆனா நான் இண்டைக்கு மத்தியானமா அங்க போக, அங்க அவயஞக்க சண்டை கிண்டையெண்டு பிடிச்சு அதால நிலம அப்பிடி. அதால ஒண்டும் அங்க நான் சாப்பிடாமத்தான் திரும்பின்னான்.”
"என்ன இழவு இது! அப்பிடியெண்டாலும் நீங்க இங்க வந்து என்ரை வீட்டில மத்தியானம் சாப்பிட்டிருக்கலாம்தானே.? உங்கட வீடிது! தாய்பிள்ள மாதிரி நாங்களும் பழகிறம். நீங்க ஆதால சாப்பிட்டிருக்கலாம் தானே எங்கட வீட்டில..?”
“என்னதம்பி நீர் சொல்லுறீர்..? நீர் என்ன தம்பி சொன்னீர் இப்ப? என்னவும் என்னவும், உங்கடய வீட்ட நான் வந்து சாப்பிட்டிருக்கலாம் என்டே சொல்லுறீர்.”
என்று அவர் சண்முகத்தாருக்கு இதை சொல்லிக் கொள்ளும்போது, உள்ள தன் பசியிலும் இவருக்கு ஒரு சிரிப்பு உடனே வந்து விட்டது.
"கிக்கிக்கிக்.” - என்ற ரசனையாகத்தான் அண்ணாவியார் இந்த விதமாயச் சிரித்தார். அப்படி சிரித்து விட்டு பிறகு சொன்னார்.
"சண்முகம் தம்பி! நான் என்ன ஒண்டும் விளங்காத ஒரு குழந்தைப் பிள்ளையெண்டே நீர் நினைச்சீர்..? எனக்குத்தெரியாதே இந்தக் கிராமம் வழிய உள்ள ஊர் நடப்பும் அது மாதிரி உம்முடையும் உள்ள வீட்டு நடப்பும்.? அப்பிடி எங்காலயும் உள்ள வீடுகளில நடக்கிற மாதிரித்தானே உங்கட வீட்டிலயும் உங்களின்ர மனுசி அளவாய்க் கணக்காய் சமைச் சிருப்பா..! எண்டாலும் எங்கட இங்கத்தைய சனத்து ஆம்பிளையஸ் தம்பி ஒரு பீத்துப் பீத்துற மாதிரித்தான் இப்பிடி நீங்க சாப்பிட வாங்கோ? நீங்க சாப்பிட வீட்ட வாருங்கோ? எண்டு ஆரையும் அவற்ற வீட்டு நிலமை ஒண்டையும் யோசிக்காம உடனவா வீட்டயா எவரையும் பாத்து சாப்பிடக் கூப்பிடுறது.! ஆம்பிளயஸ்தம்பி நாலு பேரையும் நீங்க வாருங்கோ, வாருங்கோ எங்கட வீட்ட சாப்பாடிருக்கெண்டு ஒண்டையும் யோசிக்காம எல்லாம்
91149 புதினான்காம் தான் சந்திரன்

கூட்டிக்கொண்டு வந்திடுவான்கள்! ஆனா பிறகு ஆருக்கு இங்க கஷ்டம் தம்பி! வீட்டில உள்ள பெம்பிளதானே. பிறகு பட்டினி தம்பி! அப்பிடித்தானே அனேகமான வீட்டிலதம்பி! ஆனா புருஷன்மார்பாரும் நல்லா சாப்பிட்டுப்போட்டு பிறகு விழுந்து படுத்திருவாங்கள் அவங்களுக்கென்ன..?”
அவர் செத்தைத் தட்டியை விறைக்கப்பார்த்தபடிதான் கடைசி வசன மெல்லாம் சொன்னார். உண்மையெல்லாம் இப்படி அவரின் வாயாலிருந்து வெளியால் வந்த பிறகு சண்முகத்துக்கும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாததாய்ப் போய் விட்டது.
“சரி இனி வாரும் தம்பி நாங்க அங்கபோய் நடக்கிற ஒத்தியையை எண்டாலும் வடிவா செய்யப்பாப்பம். ஆக்களெல்லாம் அங்க எல்லாம் குந்திக்கொண்டிருந்து எங்களப் பாத்துக்கொண்டிருக்குங்கள்.”
"அப்ப இப்ப நீங்க முதலில சாப்பிடக் கீப்பிட ஏதாச்சும்?”
"அதொண்டும் இப்ப வேணாம்! அதைவிடும்! இப்ப அங்க முதலில என்னோட வாருமன் பிறகது எல்லாம் பாப்பம்.”
அண்ணாவியார் இதைச் சொல்லிவிட்டு சண்முகத்தின் கையையும் பிடித்து தான்நடக்கத் தொடங்கும் போது இழுத்தார். சண்முகமும் இந்த நேரம் திரும்பிதன் மனைவி நின்ற இடத்தைப் பார்த்தார்.
"வாரும் இப்ப தம்பி.?” என்று சொல்லி அண்ணாவியார் தன் கையில் நூறு பலம் ஏற்றியதாய் ஒரு இழுவை கைப்பிடியோடு இழத்தார். சண்முகத்தாரும் இதற்குப் பிறகு ஒரு கதையும் இல்லாமல் அவரோடே சேர்ந்து வீட்டு முற்றத்தடிக்குப் போனார்.
அங்கே மேள வாத்தியம் உள்ள பாயில் போய் சண்முகம் இருக்க, அவருக்குப் பக்கத்திலே இருந்த ராஜன், தலை குனிந்த யோசனையோடு மேளத்தை தன் பக்கம் இழுத்துவைத்துக்கொண்டு இப்போ நிரந்தரமான சூனியம் போல மாறிவிட்ட சண்முகத்தாரைப் பார்த்தான். அண்ணாவியாரையும் அதோடே நிமிர்ந்து பார்த்தான். வாட்களின் வீச்சுப்போல சுறு சுறுப்பாக செயல் படுகிறவர்க்கும் ஏன் இந்த வாடியதான ஒரு சோர்வு?
"அண்ண என்னங்கோ நடந்தது.? அண்ணாவியாரும் நீங்களும் அங்கால போனிங்க வந்தீங்க என்ன ஒண்டு அப்பிடி ஏதும் பிரச்சனை கிரச்சனையோ..?”
சண்முகம் உடனே நிமிர்ந்து ராஜனைப் பார்த்தார். "ஒண்டுமில்லத் தம்பி.!”
என்று அவர் சொல்ல அண்ணாவியாரும் அவர் சொன்ன நேரம்
8Эчылламө o 1150

Page 66
இங்கேயாய் இவர்கள் பக்கமாக கண்ணோட்டம்விட்டார். அவரின் அந்தப் பார்வையை சண்முகமும் அவரைத் திரும்பிப் பார்த்த அளவில் உடனே சந்தித்தார்.
இந்த நேரம் கொஞ்சம் அந்தப் பாய்க்குத் தள்ளியிருந்த பாலாவும் ராஜனுக்கப் பக்கத்திலே கையூன்றி தவழ்ந்து வந்த மாதிரி கிட்டவந்து இருந்து விட்டான்.
“என்னண்ணை ராஜனண்ணை என்னவாம் சண்முகமண்ணை. என்னவாம் நடந்தது.'
“எனக்கொண்டும் தெரியேல்லப் பாலா அதுதான் அவர நானும் இப்பவா என்ன நடந்ததெண்டு கேட்டன்.” -
"அதுதானேயண்ண. என்ன நடந்ததண்ண சண்முகமண்ண.?” பாலாவும் இவ்வேளை ராஜனுடன் சேர்ந்து சண்முகத்தைக் கேட்க "அப்ப பாலா நீயும் தம்பி ராஜனோட சேந்து என்னயக் கேக்கிறியேடா என்ன நடந்துதெண்டு?’ என்றார் சண்முகம்.
"அது தான் அண்ண நடந்தது தான் என்ன எண்டு எங்களுக்கும் தான் தெரிய ஒருக்கா சொல்லுங்களன் நீங்க.?”
என்று பாலா இப்போது கொஞ்சம் உரத்த சத்தமாகவும் சண்முகத்தைக் கேட்க, சண்முகம் உடனே “என்ன இது சத்தம்! மெதுவா கதையடாப்பா பாலா..? ஸ்ஸ்ஸ்.” என்றார்.
"அப்ப சொல்லுங்கோ.?” - என்று உடனே பாலா தன் குரலைத் தாழ்த்தினான்.
"அதென்னடாப்பா இவன் மூர்த்தி இண்டைக்கு செய்த வேல.? அவன் இண்டைக்குச் செய்த வேல சொல்லவும் வெக்கம்.! அவனடாப்பா இண்டைக்கு அண்ணாவியாருக்கு மத்தியானச் சாப்பாடொண்டும் குடுக்கெல்லயாம். இப்பிடி வயதுபோன ஆளுக்கு அப்படியே செய்யிறது எண்டுறன்?.”
"அப்படியே ஆண்டவனே இது எனக்கொண்டும் தெரியாதே.?” “எனக்கும் தெரியேல்லதான் நானும் காட்டுக்கு போயிருந்தனான்.? "அப்ப இப்ப என்னவும் ஒண்டு செய்ய வேணுமே..?” “என்ன செய்ய எண்டுறாய்.”
"சாப்பாடுதான் அண்ணாவியாருக்கு ஒண்டு இப்ப ஒழுங்குபடுத்திக் குடுக்கவேணுமே..?”
91150 புதினார்கஸ் என் சந்திரன்
 

"அது தான் என்ர வீட்டில உடன சமைக்கச் சொல்லுவம் எண்டு வெளிக்கிட, அவர் என்ர கையைப் புடிச்சு இங்க இழுத்துக்கொண்டு வந்திட்டார்.!’
"பாவம் ஆளுக்கு இப்ப நல்ல பசிபோலக்கிடக்கு சோர்ந்தும் போய் இருக்கு ஆள்?”
"சீ அதானே டாப்பா. கடை தெருவுள்ள இடங்களே இது? அதொண்டையும் உடன அங்க போய் வாங்கியந்து இவருக்கு குடுக்க.?”
சண்முகத்தாரும் பாலாவும் இப்படியெல்லாம் ஆளையாள் மாறி மாறி இந்த விசயத்தைக் கதைத்துக் கொண்டு போக - இதுவெல்லாம் அவர்களுக்குக் கொஞ்சம் பக்கத்திலேயாய் இருந்தவர்கள் செவிகளுக்கும் கேட்டிருக்க வேண்டும்.
அதனாலே அண்ணாவியார் “மத்தியானம் சாப்பிடக்கிப்பிடயாயில்ல' என்ற பட்டினிக் கதை அங்குள்ளவர்களது வாயிலெல்லாம் அவசரமாக கதைக்கும் ஒரு முக்கிய கதையாகிவிட்டது. அங்கிருந்த ஒரு சிலருக்கு மூர்த்தி மேலும் தனிப்பட்ட கோபங்கள் தாபங்கள் உண்டு. இந்தத் தருணத்தில் அவர்கள் இதையே பெரிதாய் எடுத்துக் கொண்டு வாய் ஊறிப்போன பூரிப்பாய் இது விஷயத்தைக் கதைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது பழிப்பு நெளிப்புக் கதைகளைக் கேட்டவர்களுக்கும், அது தேனும் சக்கரையும் போன்று தான் இருந்தது.
"அட அவனும் அதாலதான் இங்க இண்டைக்கு ஒத்திகைக்கு வரேல்லப்போல . வெக்கம் எண்டு வராம விட்டிட்டான் போல.”
அவர்களுக்குள்ளே இருந்து ஒருவனது கதை இப்படியும் சொல்ல பலருக்கும் கேட்டது. அண்ணாவியாருக்கும் இது துலக்கமாக அப்போது காதில் விழுந்தது.
அவர் உடனே "இதென்னடா தேவையில்லாம இந்த விஷயத்தை நான் பெரிசா கதைக்கப்போய் அது இப்பவா எல்லாத்துக்கும் பெரிய ஒரு விஷயமா மாறி வந்திட்டுது.” - என்ற கடுமையாக யோசிக்கும் நிலையி 6) T35 6'LTT.
அண்ணாவியாருக்கு கண்கள் பெரிய கண்கள் தான். அப்போது அவர் யோசனையோடு இருந்ததால் அவரது கண்களை பார்க்க முறைத்துக் கொண்டிருக்கும் "காளி மாதிரி பயமாகவும் பார்க்க இருந்தது.
ராஜனுக்கு இந்நேரம் மனம் பொறுக்க முடியவில்லை. பாயில் குந்திக்கொண்டிருந்தவன் எழும்பி நின்றான். அவன் எழும்பி நிற்க ‘என்ன தம்பி என்ன எழும்பி நிற்கிறியள்?’ என்று சண்முகம் கேட்டார்.
ή διοιωνωνήγό ο 117 o

Page 67
“ஒண்டுமில்லையண்ண." - என்று ராஜன் சொல்லிக் கொண்டு முதுகைப் பிறகு குனிந்து சண்முகத்தின் காதடியிலே சொன்னான்.
"அண்ண ஒண்டு சொல்லுறன். எனக்குப் பிரச்சனையில்ல! இங்க என்ர வீட்டிலயா சோறு கறி தேவையான அளவு ஒரு ஆளுக்குக்கிடக்கு..! எனக்கு பிரச்சனையில்ல நீங்க ஒமென்டா ஒரு பீங்கானில் போட்டு இங்க கொண்டாறனே.”
'அய்யய்யோ கரைச்சலெல்லே தம்பி இது உங்களுக்கு.?
"ஒண்டுமில்லயண்ண1 கிடக்கிறத கொண்டு வந்து தருறதில அப்பிடி என்ன இருக்கு.?”
"எண்டாலும் தம்பி.?”
"அப்பிடி ஒண்டுமில்லயண்ண அதவிடுங்கோ. ஆனாலும் அண்ணை சாப்பாடை உங்கட வீட்ட வைச்சு நீங்க அவருக்குக் குடுக்கிறது தானே நல்லம்.?” 『
"ஓ அப்பிடியும் செய்யலாம் தம்பி!”
“ஓமண்ண அப்பிடித்தான் கட்டாயம் செய்யவேணும். நான் அப்ப சாப்பாட்டக் கொண்டாறனே வீட்டபோய்? நான் போயிற்றுக் கெதியா வந்திடுவன் பாலா? அப்ப நான் போயிற்று கெதியா அங்கயிருந்து வாறன்.”
ன்ெறு சொன்ன கையோடு ராஜன் வெளியே போக வெளிக்கிட்டு
விட்டான். ராஜன் வெளியே போக வெளிக்கிட பாலாவுக்கு ஏதோ ஒரு யோசனை நினைப்பில் வாய் பிளந்தபடியானதாகவே இருந்தது. அவன் அந்த மாதிரியொரு நிலையுடன் ராஜன் போவதை, பின்பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான். ராஜன் படலை தாண்டி வெளியே வந்தான். வெளியில் பொத்தி அணைத்த இருட்டுத்தான்! என்றாலும், பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் வெளியிலும் இருட்டு அகன்று இருந்தது. வேலியடியில் ஒருவர் அங்கே கையையும் விரித்துப் போட்டபடி படுத்துக் கிடக்கிறது ராஜனுக்கு அவ்விடத்தால் போகும் போது பார்க்கவும் தெரிந்தது. யார்தான் அது? என்று நின்று கொஞ்சம் அவ்விடத்தை அவன் பார்த்தான். சந்தேகமில்லை! அதிலே படுத்துக்கிடப்பவர் மூர்த்திதான்! என்று ராஜனுக்கு உடனே தெரிந்து விட்டது. என்றாலும் ராஜன் அந்நேரம், மூர்தியுடன் ஒன்றுமே கதைக்கவில்லை. மூர்த்தி அதிலே படுத்தபடி தன்னையும் பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்று ராஜனும் கண்டு கொண்டுவிட்டான். என்றாலும்,
'பிரச்சனை ஏன் நமக்கு? என்று தனக்குள் நினைத்து விட்டு தன் வீட்டுக்கு
போக நடக்கத் தொடங்கிவிட்டான்.
அப்படி நடந்து ராஜன் முன்னாலே செல்லும்போது, மூர்த்தியின்
91180 புதினார்கஸ் என் சந்திரன் V

வெறிமுனகல் சத்தம் "ம்ம்ம்ம்." - என்று அவன் காதுகளில் கேட்டது. அந்தச் சத்தம் கேட்க, இன்னம் கொஞ்சம் விசை கூட்டி நடந்தான். வீட்டுக்கு அவன் பிறகு போய்ச்சேர்ந்ததும் படபடவென்று அண்ணாவி யாரின் சாப்பாட்டு விஷயத்தை கெளரிக்கு அவன் சொன்னான்.
“அடட, பாவம்! பாவம்! வயசுபோன பெரிய மனுசன்..!” - என்று அவளும் சொல்லுக்குச் சொல்லு பரிதாபப்பட்டதாய்ச் சொல்லி விட்டு, மளமளவென்ற பிடி ஒலையை எடுத்து வளைத்து அடுப்புக்குள் தள்ளி விட்டு, அடுப்பைப் பற்ற வைத்தாள். முதலில் மீன்கறியை அடுப்பில் வைத்து சூடு காட்டிவிட்டு, சோற்றையும் அடுப்பில் வைத்தாள். அப்படி எல்லாம் சுடச்சுடவாய் ஆகிவிட பிறகு பீங்கானில் சோற்றை அடிச்சோறு வழிக்காமல் நிறையவாய் அகப்பையால் பக்குவமாய் எடுத்துப் போட்டாள். மீன் குழம்பு நேரம் போனாலும் சூடு காட்டிய பின்பு சுவை மணமாகத்தான் தெரிந்தது.
சாப்பாடு பீங்கானில் போட்டு முடிய ராஜன் உடனே பீங்கானை கையில் தூக்கிவிட்டான்.
“பொறுங்கோ பொறுங்கோ' - என்று கெளரி சொல்லிவிட்டு, சாப்பாட்டுப் பீங்கான் ஓரத்தில் ஒரு கரித்துண்டை தண்ணிரில் கழுவிவிட்டு வைத்தாள்.
அவன் இப்போதும் போவதற்குக்கிடந்து அவதிப்பட “இன்னும் கொஞ்சம் பொறுங்கோ பொறுங்கோ?” - என்று அவள் தன் கணவருக்கு சொல்லிவிட்டு, கழுவி அவள் பலகையில் அங்கே கவிழ்த்து வைத்திருந்த வெறும் பீங்கான் ஒன்றை எடுத்து ராஜன் கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பீங்கானுக்குமேல் அதனால் மூடி விட்டாள்.
ராஜன் அதன் பிறகு வீட்டாலிருந்து வெளியேறி மளமளவென்று நடந்து வீதிக்கு வந்தான். பிறகு ஒழுங்கை வழியாகத் திரும்பி, சண்முகம் வீட்டுக்குப் போக நடந்தான். ஒழுங்கையில் நடக்கும் போது அவன் அங்கே தான் வரும்போது முன்பு அந்த வேலியடியில் படுத்துக்கிடந்த மூர்த்தியையும் மனதில் நினைத்தான். அவன் நினைத்ததுமே தான் நடக்கும் அந்த ஒழுங்கைப்பாதையும் நீண்டு கிடக்கிறது மாதிரியாய் அவனுக்கு இருந்தது. எப்படியோ பிறகு அந்த ஒழுங்கையால் வரும்போது மூர்த்தி கிடந்த அந்த வேலியடிக்குவர, அவன் அவ்விடத்தில் படுத்துக்கிடந்த பக்கம் நிற்க பார்க்கவென்று இல்லாமல், மளமளவென்று நடந்து கடந்து சண்முகத்தின் வீட்டுவளவுக்குள்ளே அவன் பிறகு வந்து விடடான்.
ஆனாலும் இவ்விடமாய் வந்து சேர்ந்து விட்ட ராஜனுக்கு தெரிய வில்லை, அவன் வந்தபோது அங்கே படுத்திருந்த மூர்த்தி சாப்பாட்டுப்
6.9emayl) O 119 O

Page 68
பீங்கானோடு அதாலே போன அவனை, இரத்தக் கனல் விசுகிறது மாதிரி விழித்துப்பார்த்ததையும் முறைத்ததையும்!
இங்கே வீட்டுப்படலையால் ராஜன் உள்ளே வரும்போதே அவனை எதிர் கொண்டழைக்கிற பாங்கிலே சண்முகம் அவனை நோக்கி எழும்பிப்போய் விட்டார், ராஜன் தன் கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பீங்கானை உடனே சண்முகத்தின் கையில் அங்குள்ள வரெல்லாம் இதைப் பார்க்காத பண்போடு; தான் மறைவாக கொடுக்கிறமாதிரிக் கொடுத்தான். என்றாலும் என்னதான் செய்வது பலனில்லையே அது? அவன் பீங்கானை சண்முகத்தின் கையிலே கொடுத்ததை அந்த நேரம் எல்லோரும்தான் பார்த்தார்கள்.
ராஜன் அதற்குப் பிறகு அங்கே வந்து முதல் தான் இருந்தபாயில் குந்தி இருக்குமட்டும் இப்பொழுதும் கூட அங்குள்ளவர்கள் அவனைத் தான் குறிப்பாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சிண்முகம் கையில் சோறு போட்ட சாப்பாட்டுப் பீங்கானை வாங்கிய
கையோடே அதைக் கொண்டு போய்த் தன் மனைவியிடம் கொடுத்தார். ராசமணி உடனே அதைக் கையில் வாங்கின உடனே, நிலத்தில் பலகை எல்லாம் போட்டு, அதிலே பீங்கானையும் வைத்துத் தண்ணிரும் குடிக்கவென்று செம்புடன் கொண்டு வந்து வைத்து, எல்லா ஒழுங்கும் செய்தாள்.
சண்முகம் இப்போது அண்ணாவியாரிடம் போய் “உங்களுக்குச் சாப்பாடு இப்ப சோறு கறியெல்லாம் அங்க என்ர வீட்ட ஒழுங்காயிட்டுது. வந்து சாப்பிடுங்கோ வாங்கோ அண்ணாவியார்?’ என்று அவரைக் கூப்பிட்டார்.
அண்ணாவியாருக்கும் "சாப்பாடு எப்படி, எவ்விடத்தால ஆர் கொண்டந்தது தனக்கு?” - என்று இப்போது சாடைமாடையாகத் தெரிந்து விட்டது. என்றாலும் இப்போதைக்கு ஒன்றும் விளக்கம் கிளக்கம், கேள்வி சண்முகத்தை அவர் கேட்காமல், பேசாமல் சண்முகம் வரச் சொன்ன சொல்லோடு அவருக்குப் பின்னாலே அவரின் வீட்டுக்குப்போக நடந்தார்.
சாப்பாட்டுக்கு முதல் கைகழுவவென்று வெளியே போகாமல் அரிக்கன் சட்டித்தண்ணிர் தான் அங்கே சண்முகத்தால் அண்ணாவியாருக்கு கொடுக்கப்பட்டது. அவர் உடனே அதிலே கையை கழுவி விட்டு தன்னுடைய சாப்பிடும் வேலையை ஒழுங்காக உட்கார்ந்து அவசரமாகத் தொடங்கிவிட்டார்.
இந்த நேரம் வெளியே முற்றத்தடியில் இருந்து கொண்டிருந்த வர்களிடமிருந்து ஓயாத கதை பேச்சுத்தான்! சத்தம் பெரிதாகவும் அது வெளியே வீதி மட்டுமாய் உள்ள இடங்களிலும் கேட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநேரம் அங்கே மெளனமாய் இருந்து கொண்டிருந்த ஜெயா இப்போது பெரிய சத்தமாய் அண்ணாவியாருக்கு நடந்த விஷயத்தின் நியாயத்தை
О 120 О භුණිණආණිගෙම් ෙෆ්, ජේෂ්ත්‍රීෂ්

எடுத்துக் தூக்கிக்கதைத்துக் கொண்டிருந்தான்.
சண்முகம் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளியுள்ள புளியமரத்திலுள்ள காகங்கள் சத்தமடங்கிப்போய் துயில் மூச்சோடேயாய் இருக்கின்றவைபோன்று இருந்தன. ஆனால் இவர்கள் கதைக்கின்ற சத்தம் அப்போது ஒலித் தொகையில் காகங்கள் கரைவதை மிஞ்சிவிடும் அளவுக்கு இருந்தன.
உள்ளடங்கிய இருட்டுக்குள் இருந்து வந்த நிழல் மாதிரி ராஜனுக்கு இப்போதுதான் ஒரு ஞாபகம் பாய்ந்து வந்தது. அவன் பாலாவைப் பார்த்து மூர்தியைதான் இங்கேயிருந்து போகும் போதும், பிறகு சாப்பாட்டு பீங்கானுடன் திரும்பி இங்கே வரும்போதும், வேலியின் பக்கத்தில் வெறியில் விழுந்து படுத்துக் கிடக்கிற விஷயத்தை விபரமாகச் சொன்னான்.
ராஜன் அப்படிச் சொல்ல, ஆள் உயரக் கண்ணாடியில் உடனே மூர்த்தியை அதில் பார்த்த மாதிரி பாலா, தன் மனதுக்குள் அவனைப்பற்றி எதையெல்லாமோ நினைத்தான். அந்த நினைப்பிலே அவன் ராஜனைப் பார்த்து
"ராஜன் பாரும்! இங்க வந்து மூர்த்தி இப்ப ஒரு குழப்படி கட்டாயம் எடுத்தே தீருவான்.”
என்று பேச்சில் மூச்சுவிட்டு அவன் ஒரு வார்த்தை சொன்னான்.
சோறு கறி ஒட்டிய வயிற்றுக்கு நன்றாகச் சாப்பிட்டு முடித்த வுடனே மடல் விரிந்த புதுப்பாளையைப் போலவாய், முகம் முழுக்கப் புத் தொளி பெற்று விட்டார் முருகேசு அண்ணாவியார். நேரத்தை இழுத்தடித்துப் போட்டு இப்போது சாப்பிட்டாலும் கூட, அவருக்கு உடல் முழுக்கப் புத்துணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. முள்ளாக வலித்த வயிறு இப்போது அவருக்கு முல்லைக்காடாகியது மாதிரி ஆகிவிட்டது. மேலில் புதுக்குருத்து வியர்வை அவருக்கு அரும்பியது. சாப்பிட்ட பஞ்சிச் சோர்வு அவருக்குக் கொஞ்சம் உடம்பில் இருந்து கொண்டிருந்தாலும் சுறு சுறுப்பாய் நடந்து அவர் வீட்டு முற்றத்தடிக்கு உடனே வந்து விட்டார். அந்த முற்றத்தடிக்கு தான் வந்த அந்த நேரமே அண்ணாவியார் தளபதியாகிவிட்டார். அங்கு வந்து இறங்கிய நேரமே அவர் வாயிலிருந்து சுந்தரமாக சுகமாக கூத்துப்பாட்டும் பிய்த்துக் கொண்டதாய் உடனே வெளி வந்துவிட்டது. சண்முகத்தார் அண்ணாவிக்குப் பின்னாலே அப்போது வந்தவர் உடனே பாயில் போய் குந்திக்கொண்டு அவரின் பாட்டுக்கு மேளம் வாசிக்கத்தொடங்கிவிட்டார். சபையில் இருந்தவர்கள் எல்லாரும், பாத்திக்கு நட்டு வைத்த புது நெல் நாற்றுமாதிரி சத்தம் எல்லாம் விட்டுவிட்டு விறைப்பாக நிமிர்ந்து இருந்தார்கள். அண்ணாவி
Pennಣ್ಯತಿ O 121 O

Page 69
யாரின் பாட்டுக்குரல் உயர்ந்ததாகக் கேட்கிறது போல ஆகிவிட, சண்முகத் தாரின் மேள வாசிப்பும், உடுக்கு வாசிப்பும், அவரது குரல் ஏற்றத்தக்கு ஒன்றும் சளைக்காத அளவிலே, நிகராய் இருப்பது போல நின்று கொண்டிருந்தது.
நாளாந்தம் வழமையாக நடந்து கொண்டிருந்தமாதிரி சிரிப்பும் பாட்டும் பரவசமுமாக இப்போது அங்கே கூத்து ஒத்திகை வேகமும், சத்தமுமாக நடந்து கொண்டிருந்தாலும், இடையிலே இனி அதை மாற்றிக்கொள்ள வேண்டியதாய் குழப்படியும் நாடி வந்து விட்டது.
அந்தக் குழப்படியை மூர்த்திதான் அங்கே வந்து உண்டாக்கினான். வெறியுடன் அங்கே வேலியடியில் படுத்துக்கிடந்தவன் எழும்பி, கோண அடி வைத்து நடந்து, ஒத்திகை நடக்கின்ற சண்முகம் வீட்டு முற்றத்தடிக்கு வந்து விட்டான். அங்கே வந்தவன் அண்ணாவியாரின் அருகில் போய் சண்டைக்கு வந்தது மாதிரி நின்றான்.
தன் கால்களை நிலத்தில் குத்தின மாதிரி இறுக்கி வைத்தக் கொண்டு, அண்ணாவியாரின் இடுப்பு வேட்டிக்குள் அவன் கையை வைத்து செருகிப்பிடித்துக்கொண்டான்.
"ஏய் அங்கயும் ஒண்டும் என்ர வீட்ட நீ சொல்லிக் கொண்டு விட்டு, பிறகு இங்கயும்வந்து எல்லாருக்கும் எங்களப் பரிசு கெடுத்தினதாய்ச் சொல்லிக்கொண்டு ஆ.?”
அவன் சடுதியாய்ச் சண்டைக் கிழுத்தமாதிரிச் சொல்ல, பாட்டும் இல்லை தாளமும் இல்லை என்ற அளவுக்கு எல்லாமே அங்கே நின்று போய்விட்டது.
“என்ன என்ன? என்ர வேட்டியால உன்னரயகைய எடு? - என்று சொல்லியவாறு தன் வேட்டியை இரு கைகளாலும் அவிழாமல் பிடித்துக்கொண்டார் அண்ணாவியார்.
"அடேய் உன்னரய கைய எடு அவற்றை வேட்டியால! அவரில இனி நீ தொட்டியெண்டா மரியாதை கெட்டுப்போயிடும் உனக்கு.?
என்று சண்முகம் உடனே எழும்பிக்கொண்டு அவன் கையைத் தன் உரம் ஏறிய கையாலே தட்டினார்.
"இல்ல இவன நான் குத்தி வெட்ட வேணும்?” - என்று மூர்த்தி கடிக்கத் துடிக்கிற மாதிரி நின்று சொல்ல
'தம்பி சண்முகம் என்ன பரிசு கேடு இது எனக்கு.?”
என்று அண்ணாவியாரும் சொல்ல, சண்முகத்தாரும் மூர்தியின்
 

கையைப்பிடித்து இழுக்க, ஆளையாள் கிடந்து கொண்டு இழுப்பறிப்பட்டு ஆட, இருந்த எல்லாரும் எழும்பி அதிலே அவர்களுக்குப் பக்கத்தே விழந்தது கணக்கிலே வந்து குவிந்து விட்டார்கள். அவர்கள் எல்லாரும் இடிபட்டதாய்க் குழம்பி அடிக்க,
"ஏய் ஏய் விடு விடு மூர்த்தி விட்டரா மூர்த்தி என்ன வேல என்ன சேட்டை.?”
என பல குரல்கள், அதட்டும் உறுக்குமானதைப் போன்ற சொற் பிரயோகத்தோடு கேட்டன.
'தள்ளிக்கொண்டு போய் இந்த வெறிகாறனைப் படலையால வெளியிலயாவிடுங்கடா..?”
பலரும் கோபக் குரல்களோடு இதை ஒரே நேரத்தில் சொல்ல, மூர்த்தி இப்போது நாலுபேர்களால் பிடித்துத் தள்ளப்பட்டான். அப்படியே இழுத்துத் தள்ளிக் கொண்டுவந்து படலையடியால் இருந்து வெளியே மூர்த்தியை அவர்கள் ஒழுங்கை விதியிலே தள்ளி விட்டார்கள்.
“போ மூர்த்தி! நீ போ உனக்கு வெறி! வெறி! இங்க இனி வராத இப்பிடியே உன்ர வீட்ட நேராய்ப் போய்ச் சேர்.”
என்று பிறகு அவர்கள் படலையருகில் நின்றபடி சொல்லி அவனை காடாத்தி விடுகிறமாதிரி செய்தார்கள்.
"அவன் எல்லாவற்றையும் மறந்து இனி வீட்டுக்குப் போய் விடுவான்!” என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒத்திகை நடக்கும் முற்றத்தடிக்கு பிறகு திரும்பி வந்து விட்டார்கள். ஆனாலும் மூர்த்தி ஒழுங்கை வழியால் நடந்தவன் அப்படியே வீட்டுக்குப்போகவில்லை. இப்போது அவன் கொஞ்சம் வெறியும் தணிந்த அளவில், யோசனையோடே தன் உச்சந்தலைப் பாரமெல்லாம் உள்ளங்காலில் போட்டு மிதிச்சுக் கொள்கிற மாதிரி நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு பிறகும் ஒரு யோசனை வர வீட்டுக்குப் போக நடந்து கொண்டிருந்தவன் அப்படி பிறகு போகாமல், மீண்டும் ஒழுங்கை சுற்றி நடந்ததாய் இங்கே சண்முகம் வீட்டுக்கு திரும்பியும் வர, ஒரு திட்டத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தான்.
இங்கே சண்முகம் வீட்டில் அப்போது அண்ணாவியார் ரோசமான ரோசத்தோடு எல்லோரின் முன் கோபத்தில் கிடந்து துள்ளிக்கொண்டு நின்றார்.
“இப்பிடி ஆச்சோ எனக்கு. இது என்ன அவன் செய்த ஒரு நல்ல ஒரு வேலயோ எனக்கு? என்ர மானம் போக கட்டின என்னர இடுப்பு வேட்டிய மரியாதை மறந்து தன்ர கையால பிடிச்ச இழுத்திட்டானே அவன்.? இது அவன் திட்டமிட்டுச் செய்த சகுனிச் சூது தானே? ஒரு குருவுக்கு
85.2c-yayo о 123 о

Page 70
அவன் கைய வைக்க வெளிக்கிட்டிட்டான்.? அதால இனி சண்முகம் தம்பி எனக்கு இனி இங்க இவயளுக்கு கூத்துப் பழக்கச் சரிப்பட்டு வரவே வராது..! எப்ப இங்க எனக்கு ஒருவன் தன்ரைகையால எனக்கு அடிக்கவெண்டு வெளிக்கிட்டு வந்தானோ. அந்த நேரமே தொண்டைமுள்ளு மாதிரி நான் உடன நினைச்சிட்டன், இங்க இனி நான் இருக்கக்கூடாதெண்டு.! எனக்கினி இங்க ஒரு அலுவலும் வேண்டாம் ஆள விடுங்க நான் என்ர இடத்துக்கு போறன்.”
என்று அரைமனசு குறை மனசாயில்லாமல், முழுமனசோடு மாதிரி இதை அண்ணாவியார் சொல்லிவிட, சண்முகத்தாருக்கு உடனே முகம் சுண்டியதாய்ப்போய்விட்டது. -
“என்ன அண்ணாவியார் ஒருவன் வந்து உங்களிட்ட் வெறியில இப்பிடி குழப்படி விட்டதுக்கு எங்கள எல்லாரைமெல்லே பிழைபிடிச்ச மாதிரி நீங்கள் சொல்லுறியள்.”
என்று சண்முகத்தார் சொல்ல "இனியும் இப்பிடி இதுக்குள்ளவா, சுளையா எண்டு நான் நினைக்க
இருக்கிறதுகள் முள்ளாவந்திட்டா அதுக்கு ஆர் பொறுப்பு? பிறகும் எனக்கொண்டு இப்படியெல்லாம் பிறகு நடக்காதெண்டு என்ன நிச்சயம்.?”
என்று பகீர் என்ற வீச்சமோடான அளவிலே அண்ணாவியார் சண்முகத்தைக் கேட்டார்.
"ஐயோ அண்ணாவியார் அவன் மூர்த்திக்கு வெறி! அண்ணாவியார் அவன் செய்தது என்னவோ பெரிய பிழைதான்! அதுக்கு அவனுக்குகாக நான் இப்ப உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறனே?”
"தம்பி சண்முகம்! எனக்கு உம்மில ஒரு கோவம்தாபம் இல்ல.! ர் என்னட்ட மன்னிப்புக் கேக்க வேணாம். எண்டாலும் என்னவிடும், நான் நீ 나 9) b நாளைக்கே என்ர வீட்ட போயிடுறன்.”
என்று அண்ணாவியார் சொல்ல, ராஜன் அப்போது அவர் சொல்வதை கேட்டு விட்டு தான் ஒன்றை சொன்னான்.
"ஐயா நான் ஏதும் உங்களுக்கு இவர் சண்முகம் அண்ணமாதிரி ஏதும் சொல்ல அவளவு பெரிய ஆள் இல்ல! என்டாலும் இங்க இவளவு நாளும் இதில வந்து இருந்ததில, எல்லாத்தையும் நானும் பாத்ததில, இப்ப ஒரு கதையொண்டு நான் உங்களிடத்த பணிவாச் சொல்லுறன். நான் அப்பிடி இப்ப சொல்ல இருக்கிறது என்னெண்டா, ஐயா.நீங்கள் ஒரு பெரிய அண்ணாவி! - மதிப்பான ஒரு மனுசர்! அப்பிடியான நீங்கள் எவ்வளவோ நல்ல மனசோட இவளவு நாளா இவயளுக்குக்காக சிரமப்பட்டு இந்தக் கூத்தை நடத்தி ஒப்பேற்ற பாடுபட்டிருக்கிறியள். எண்டாலும் நீங்கள் இப்ப
91249 புதினான்காம் என் சந்திரன்

இடையில இதையெல்லாம் முறிச்சுக்கொண்டு போக நிண்டா, எல்லோருக்கும் தானே அது பெரிய இழப்பாகும்! எதையும் மன்னிச்சு விடுகிறதுதானே ஐயா உலகத்தில பெரியதொண்டு! நீங்கயென்டா பெரிய ஒரு கலைஞரும்! அதால நான் இதுகள உங்களுக்கு சொல்ல வேணுமே ஐயா..? உங்களுக்கு இது எல்லாம் தெரியும் தானே.”
- என்று ராஜன் ஆறுதல் வார்த்தைகளும் சேர்த்து இப்படி அண்ணாவி யாருக்கு சொன்னான். இந்நேரம் அங்கே அதிலே இருந்தவர்களெல்லாம், இவர்களின் கதை பேச்சுக்கு இடையூறாய் தாங்கள் இராதபடிக்கு அதிலே இருந்து கொண்டு அண்ணாவியாரையும் அவருடன் கதைக்கும் சண்முகத்தாரையும், ராஜனையும் மாறி மாறி தாங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணாவியாருக்கு ஆள்மாறி ஆள் சொன்னபிறகு உள்ள இறுகிய கோபம் முக்கால் வாசிக்கு மேல் இளகி இப்போது குறுவடிவமாகத் தணிந்ததாய்த்தான் இருந்தது. அவர் யோசனையிலே இப்போது மீனின் கண்களைப்போல சில விநாடிகள் இமை மூடிக்காட்டாமல் இருந்தார். அவரின் திறந்த கண்பாதையிலே நிலைபெற்றுத் தெரிந்த வெளிச்சம், கோபமெல்லாம் மாறி இப்போது அவர் அமைதிதான்! என்பதாக மற்றவர்களுக்கும் தெரியும்படியாய் இருந்தது.
இந்த நேரம் அண்ணாவியாரும் எல்லாருடனும் தனக்கு ஒத்துப் போகிறதான ஒரு சமாதானப்பேச்சைத் தொடங்குவதற்காக வாயைத் திறக்கப் போனார். ஆனாலும் அவர் அதைச்சொல்ல அவசியமில்லாத கணக்கில், மூர்த்தி அங்கே அந்தப்படலையால் இருந்து உள்ளே அந்த முற்றத் தடிப்பக்கம், விறுவிறுவென்று வந்து அவருக்கு முன்னாலும் நின்று விட்டான். மூர்த்தியை அப்படி அங்கே சடுதியாய் வரக்கண்ட பிறகு, எல்லோரும் அங்கே அமைதியில் அடங்கிப்போனமாதிரி இருந்தார்கள். மூர்த்தி அங்கே அண்ணாவியாரின் பக்கத்தில் வந்த உடனே அவரின் காலில் விழுகிற மாதிரி குனிந்து அவரின் பாதத்தைத் தன் இரு கைகளாலும் தொட்டான்.
“என்ன என்ன தம்பி'
என்று சொல்லியவாறு அந்த நேரம் அண்ணாவியாரும் கொஞ்சம் பயத்தோடு பின்னால் அடிவைத்தவாறு விலகினார். அவருக்கு அப்போது அவன் எதற்கு குனிந்தான்? என்று விளங்கவில்லை. ஆனால் மூர்த்தி அவர் பாதத்தைத் தொட்டுவிட்டு நிமிர்ந்த உடனே தன் இரண்டு கைகளையும் கூப்பியபடி அவரைக் கும்பிட்டான்.
"அண்ணாவியார் ஐயா நான் செய்ததெல்லாமே வலு பிழை.! நான் இப்ப உங்கட காலில விழுந்தும் கும்புறன். ஏதோ நான் தெரியாம பிழையள செய்து போட்டன் ஐயா! அதால நீங்கள் என்னை இதுக்கவைச்சு மன்னிச்சுப் போட்டன் எண்டு சொல்லுங்கோ..? நீங்கள் மட்டுமில்ல, அந்த
6.9emony) O 125 O

Page 71
அம்மாள் ஆச்சியும் என்னய மன்னிக்க வேணும்.? அப்படித்தான் இங்க உள்ள எல்லாருமே என்னய மன்னிக்க வேணும்.? எனக்கினி இந்தக் கூத்துப் பழகிற விசயம் ஒத்து வராதையா. அதால நான் இனி இதில இருந்து இனி ஒதுங்கி நிற்கப்போறன். சண்முகம் அண்ணயும் என்னய மன்னிச்சிடுங்கோ. ஐயாவும் என்னய மன்னிச்சிடுங்கோ..! அப்பிடியே இதை விட்டு விலகிறதுக்கு நீங்கள் முன்னம் சொன்ன மாதிரி கோயிலிலயும் போய் அம்மனுக்கு நான் பரிகாரம் செய்து போடுறன்!” - என்று அவன் முன்னம் இருந்த நிலையாயில்லாமல், அழுவார் மாதிரி மாறிய முகத்தோடு இப்போது இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க, அண்ணாவியாருக்கு அதனால் மனமிரங்கி விட்டது.
சண்முகத்தாருக்கும் ஆச்சரியம்தான்! பகை பூசின முகமாய்ச் சற்று முன்பு இதிலே நின்று அண்ணாவியாரோடு சுடு சொல்லில் நின்று ஆடியவன், மந்திரப்பேழையில் அடைத்தது மாதிரி யாரால்இப்படி அடங்கினான்? என்றதாய் அவர்யோசித்தபடி நின்றார்.
அண்ணாவியாருக்கு இவ்வேளைதனில் மிகப் பழமையான உடல் சுறு சுறுப்பு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது மாதிரி இருந்தது.
“தம்பி தம்பி! அதெல்லாம் நடந்து முடிஞ்சதுகளை ஏன் நீர் வலுவிலாய் நினைப்பான். சரி பிழையள தெரிஞ்சு கொண்டு அதின்படி நல்லபடியா எதிலயும் நடக்கிறதுதான் வாழ்க்கையில ஒரு மனுசனுக்கு எப்பவும் தேவையானது கண்டீரோ.? அதை விட இன்னொண்டு எண்டாபிழை செய்ததை அறிஞ்சு மனவருத்தப்பட்டு அதில இருந்து திருந்தியும் ஒருவர் கட்டாயம் நடக்க வேணும். அதோட அந்தப் பிழைய மாதிரி திரும்பவும் திரும்பவும் கட்டாயம் அதுகள ஒருமனுசர் செய்யவே கூடாது. சரி சரி அதெல்லாம் சரி! நீர் பழகின மாதிரி வந்து ஒத்திகையை பழகுமன்.'
என்று சொல்லி நிம்மதி இழந்திருந்த அவனை மீண்டும் கூத்து ஒத்திகைக்குள் இழுக்கப் பார்த்தார் அண்ணாவியார்.
ஆனால் இலையும் தளையும் வாடின மாதிரி வளைந்து நின்ற அவனுக்கு மீண்டும் கூத்து ஒத்திகையிலே தான் சேர்வது என்னவோ, முறிந்த உறவில் இனிமேல் திரும்பவும் முடியாது என்பதாகத்தான் மனதுக்கு இருந்தது. அதனால் புதரில் போய் ஒண்டும் முயலின் நிலைமையில் தான் அவன் நின்றான்.
“என்னைய மன்னியுங்கோ! இங்க உள்ள எல்லாரும் மன்னிச் சிடுங்கோ! நான் இனி எண்டா இங்க கூத்து நடிக்க சீ சரிப்பட்டு வராது.! நான் வாறன்! அண்ணாவியார் நான் இனி போகப்போறன்!” - என்று அண்ணாவியாருக்கு அவன் சொல்லிவிட்டு, பிறகு சண்முகத்தாரையும் பார்த்தான். “நான் வாறன் அண்ணை’ என்று அவருக்கும் அடுத்தாய்ச் சொல்லிவிட்டு, விறுக்கு விறுக்கென்று நடந்து அந்த இடத்தைவிட்டு வெளியே
01260 புதினார்கஸ் தான் சந்திரன்
 

அவன் போய் விட்டான். அவன் போன பிறகு முள் இலை மாதிரி மனத்திலும் முள்ளுகள் போன்ற கஷ்ட நினைவுகள் தோன்றிவிட்டது அண்ணாவியாருக்கும் சண்முகத்தாருக்கும். ஒரு விதத்தில் மூர்த்தியின் விசயத்தால் ஏற்பட்ட மனக் கொதிப்பு அடங்கி, அண்ணாவியாருக்கு நிம்மதி ஏற்பட்டிருந்தாலும், மூர்த்தி போனதால் வந்த ஆள் குறைந்த நஷ்டம் அண்ணாவியாரோடு அங்குள்ள பலரையும்வறண்ட மன நிலைமைக்குள்ளே தான் தங்களை தள்ளிவிட்டது போல ஆக்கிவிட்டன. என்றாலும் அண்ணாவியார் "அப்ப கூத்து ஒத்திகையை இனி நாங்க தொடங்குவமோ சண்முகம் தம்பி.? - என்று அமைதி நிலைத்த முகத்தோடு இப்போ சண்முகத்தைக் கேட்டார்.
ஆனால் சண்முகத்துக்கோ அண்ணாவியாரைப் போல முற்றாக மனம் ஒன்றும் சரியான நிம்மதியாகிவிடவில்லை. கிணற்றின் உள்ளடுக்குப் பொந்தில் ஏதோ இப்போ மறைந்து போய்விட்டது மாதிரி மனதில் இப்போது ஒரு குறைவந்து விட்டது அவருக்கு. அவர் அண்ணாவியாரை விரக்திப் பார்வையோடு பார்த்தார்.
"ஐயா இண்டைக்கெண்டு கூத்து ஒத்திகையை கொஞ்சம் நாங்கள் நிற்பாட்டுவம். இண்டைக்கு இங்க நடந்த விஷயத்தையெல்லாம் யோசிக்க எனக்கு சரியான கவலையாயிருக்கு. செடிக்கு அடியிலயே செத்துப்போன இலையள் மாதிரி என்ன செய்யிறது இனி நாங்கள்.”
"அதுக்கென்னதம்பி செய்யிறது. இதுக்கெல்லாம் ஒண்டும் நாங்க செய்யேலாது தானே தம்பி!.”
“ஒண்டும் செய்யேலாது தான் அண்ணாவியார்! எண்டாலும் இண்டைக்கு ஒத்திகையை நிற்பாட்டுவம். இனி இவன் மூர்த்தி நடிச்ச பாத்திரத்துக்கும் வேற ஆள் நாங்கள் பாத்துப் போட வேணும்! அதுக்கு ஒரு ஆள போட நாங்கள் இதுக்க உள்ள ஒரு ஆளைப் பாத்து பிறகு யோசிப்பம்?”
"ஓ அது கட்டாயம் சரி! அதையும் செய்யத்தானே வேணும் தம்பி.?”
'ஆ அதால தான் நான் சொல்லுறன், இண்டைக்கிதை நிப்பாட்டுவம் ଗର0öt(6..!'
"ஓ! அது என்னவோ செய்யுங்கோ நீங்க! எனக்கும் பறவாயில்லை.”
"ஓ அண்ணாவியார் எங்கட மனமும் இப்ப சரியில்லத்தானே.?”
"அதுக்கென்ன இனி செய்யிறது தம்பி.” "ஒண்டும் செய்யேலாது தான்! எண்டாலும் பொழுது போக்குக்கு ஆரும் இங்க பாட்டு படிக்க கூடியவயள் இருந்து பாட்டுப்படிக்கட்டும். அப்பிடி பொழுது போகட்டுமே இண்டைக்கு.?”
“அதுவும் பறவாயில்ல உங்கட விருப்பப்படி ஏதும் நீங்கள் O 127 O

Page 72
செய்யுங்கோ.?”
என்று அண்ணாவியார் சொல்லிவிட்டு அந்த நடு இடத்திலே தான் இப்போது நின்றுகொண்டிராமல் கொஞ்சம் அங்காலே தள்ளிப்போய் மண்திண்ணையில் இருந்து விட்டார்.
"ஆரும் ஒரு ஆள் ஏதுமொரு பாட்டுப் படியுங்களனப்பா நான் மேளத்தை அதுக்கு அடிக்கிறன்.”
சண்முகம் சுற்றி வர அங்கு இருந்து கொண்டிருந்தவர்களை பார்த்துக் (85LLITsi.
"ஆர் அப்பிடி இதுக்க நல்லா பாட்டு படிக்கக் கூடிய ஆள் ஒருவர்.?
பாலாவும் சண்முகத்தோடே அவர் கேட்ட மாதிரியே அங்குள்ள வர்களைக் கேட்டான். இனி பாட்டு அங்கே படிக்கவென்று ஒவ்வொருவர் இருந்து இன்னொருவர்தம் பெயர்களை அதற்காகவென்று பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் ராஜனின் பெயரும் இதற்குள் பாலாவினால் சொல்லவும் வந்தது.
“எங்க நீங்களெண்டாலும் ஒரு பாட்டை சும்மா படியுங்கோவன்.?”
என்று திரும்பவும் பாலா சொல்லிக்கொண்டு ராஜனை அங்கே பிறகு சும்மா இருக்க விடவில்லை பாலாவைத் தொடர்ந்து பலரும் பிறகு ராஜனை பாட்டு படிக்கும்படி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவனை அரேபியக்கம்பளத்தில் இருத்தின மாதிரிச் செய்து, கழுத்தில் மாலைகள் பல தங்கினமாதிரியும் தங்கள் புகழான கதைகளினால் அவனை மதிப்பில் தூக்கிவைத்து விட்டார்கள்.
"வாய்ப்பூட்டுச் சட்டம் உங்களுக்கு நீங்கள் போடாம பாட்டை ஒண்டைப் படியுங்கோவன் தம்பி.?”
என்று அண்ணாவியாரும் அங்கே அதிலே இருந்தபடி பெரிய சத்தமாக அப்போ அவனையும் கேட்டுவிட்டார். "இனியென்ன எனக்குத் தப்பவே முடியாது.” - என்ற நிலையில் ராஜனும் இப்போது ஒரு பாட்டை படிக்கத் தொடங்கினான்
முதன் முதல் பாடும்போது ராஜனுக்கு நடுக்தத்தோடே தான் குரல் வெளியே வந்தது. ஆனால் போகப் போகக்காந்தம் மாதிரி எல்லோரையும் இழுத்தது அவன் குரல்வளம் ராஜன் பாடிய பாட்டுக்களெல்லாம் இன்றைய யுத்த சூழ்நிலையை பிரதிபலிப்பதாய் எழுதப்பட்டிருக்கும் ரோஷத்துடன் பொங்கும் புரட்சிப் பாடல்கள்! சாவைப் பிறப்பிப்பதைப் போல சொல்லும் எழுத்துவரிகள்! அந்த இரவின் நிசப்தத்தில் தங்கள் உள்ளுணர்வுகளெல்லாம்
O 128 O අග්‍රීෂ්ෆ්ෂෙව් ෙෆ් சந்திரன்

எழுச்சியடைய அவர்கள் ராஜன் படிக்கும் பாடல் களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த விதமான பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு முகத்தில் உருக் கொண்ட ஒரு வித துயரமும் கூர்மை தீட்டியதாய் இருந்து கொண்டிருந்தது.
புதிதாக இப்படியொரு திருப்பம் இவ்விடத்திலே ஏற்பட்டு, ராஜன் பாடும் பாடல்களையும் நித்திரை தொடங்கும் வேளையில் காதில் கேட்ட பக்கத்துவீட்டுக்காரர்களெல்லாம் நித்திரைக் கவசத்தை உடைத்துக் கொண்டு படுக்கைப் பாயால் எழும்பி இப்போது இங்கே வந்து விட்டார்கள்.
சிவத்து ஒத்திகைக்கு இல்லாத, ஒரு பெரிய வரவேற்பும் நடப்பும்
இப்படியான பாட்டுப் படிப்பதற்கு இப்போது அங்கே வந்த மாதிரி இருந்தது. ஆட்களும் அங்கு இப்படியாய் வரக்காண ராப்பாடி பறவையென கண்டுகொள்ளுமளவிற்கு ராஜனின் குரலும் உற்சாகத்தில் அதிர்ந்தது. இந்த நேரம் வீதியால் அப்போது நடந்து போய்க் கொண்டிருந்த சிலரும் மீறியமன ஆர்வத்தோடு இங்கே நடக்கும் பாட்டுக் கோஷ்டியைப்பார்க்கத் தேடிவந்து விட்டார்கள். உருகிக் கேட்கும் இந்தப் பாடலிலும் இசையிலும் அதை அனுபவிப்பவராய் இருந்து கொண்டிருக்கும் சிலருக்கு, இங்கே தங்கள் ஆவி கரைகிற மாதிரியும் இருந்தது. காற்றிலே புல்லின் அலைவை பார்க்கிறது மாதிரி ஒரு சுகம் மனதிலும் அவர்களுக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது.
நேரம் செல்லச் செல்ல ராஜனின் குரலும் உச்சம் பெற்றுக் கொண்டே போனது. ராஜனின் மனைவியும் பிள்ளைகளும் கூட இந்த நேரம் அதிலே வந்து, ஒரு பக்கம் மணல் மீது உட்கார்ந்து விட்டார்கள். ராஜனின் மனைவியைத் தொடர்ந்து இன்னும்பல பெண்கள் அங்கே வருகை தந்து கொண்டிருந்தார்கள். இப்போ சண்முகத்தின் வளவு முழுக்க ஒரே சனக் காடாக இருந்தது.
அங்கே ராஜன் பாட்டுப்படித்ததை அடுத்து வேறு பலரும் பிறகு அங்கே பாட்டு முழக்கம் செய்தார்கள். அவர்களும் சினிமாப் பாடல்களையென்று தாங்கள் ஒருவரும் பாடாமல் இப்போதுள்ள யுத்தத்தின் புரட்சிப்பாடல்களையே உணர்ச்சி பொங்கும் அளவுக்கு பெரிதாய்ப் பாடினார்கள். இந்தப் பாடல்களை அவர்கள் படிக்க, புயல் அடிக்கும் போது அலைச் சுழல் ஏற்பட்ட மாதிரி மனம் கொதிக்க கேட்டுக்கொண்டிருந்தார்கள் வந்தவர்கள் அனைவரும்! அங்கே பாடல்களை கேட்டுத் தியானித்த விளைவில் ஆட்பட்டதால் நடு நிசிதாண்டிப்போனது கூட யாருக்குமே பெரிதாய்த் தெரியவில்லை. வேறு பொழுது போக்கே இல்லாத அவர்களுக்கெல்லாம் இந்தப்பாட்டுக்கச்சேரியை கேட்பது விபரிக்க முடியாத ஆனந்தத்தைத்தான் உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.
o 129 oفyصوصو6D

Page 73
என்றாலும் மயில் குயிலாய் மாறியது மாதிரி, நேரம் செல்லச் செல்ல மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுக்கு மாறிவிட்டது. கண் மடல்களில் நித்திரைத்துக்கம் ஆற்றலுடன் வந்து ஜனனமாகிவிட இப்போது ஒவ்வொருவராக வெளிக்கிட்டு தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போக அவர்கள் தொடங்கிவிட்டார்கள். விடியல் சேவல் கோழி நேரத்தைக் காட்டுவதுபோல கூவிய உடனே, மேள அடியை நிறுத்திவிட்டார் சண்முகம். அவர் மேள அடியை நிறுத்தவும், இதமாக அப்போது வீசிய காற்றுக்கு பனை மரத்து ஒலைகள் சாதாரணத்தன்மையுடன் உரசும் சத்தம் இதமாய்க் கேட்கவாய்த்தெரிந்தது. பெற்றோல் மாக்ஸிலிருந்தும் பிறகு காற்று திறந்து விடப்பட்டது. இப்போது அங்கே வெளிச்சமும் விடைபெற்றதாய்ச் சென்று விட்டது.
"நேரமாச்சு போய்ப்படுப்பம் படுப்பம்” என்று அங்கே இப்போ எஞ்சியதாய் நின்றவர்கள் வாயிலிருந்து இதே சொற்கள் தான் வெளிவந்துகொண்டிருந்தன.
அவர்களெல்லாம் பிறகு தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போய் சேர, பிரியும் பாதைகள் வழியாக பிறகு அந்த விடியல் இருட்டில் நடந்து கொண்டிருந்தார்கள்.
கேப்பாப் புலம் ஊருக்குள்ளே மிக்க வசதியாக வாழ்ந்து வருபவர் தேவன் என்பவர்.
ஆளுக்கு பெரிய பெரிய நெல் வயல் காணிகள் ஊருக்குள்ளே நிறைய உண்டு. பசுமாடுகளுக்கும் எருமை மாடுகளுக்கும் கூட அந்தச் செல்வமானது அவருக்குக் குறைவில்லை. பட்டிபட்டியாக அங்கங்கே இவருக்கு அவையெல்லாம் கூட நிறைய உண்டு, இவர் வீட்டில் ஆள் தங்காத இருட்டு அறைகளிலெல்லாம் தானிய மூட்டைகள் தான் அடுக்கினதாய் நிரம்பிக் கிடக்கும். இவ்வளவெல்லாம் சொல்லுமளவிற்கு தேவன் என்பவள் மிக்க வசதியானவள் தான். ஆனாலும், இந்த வசதிகளுக்கான தன் உழைப்போடு, அந்த ஊரில் உள்ள ஆட்களை ஒன்று சேர்த்து நாட்டுக் கூத்துக்களை அவர்களுக்குப் பழக்கி மேடையேற்றுவதென்பதும் அவருக்கு ஒரு முக்கியமான வாழ்க்கை இலட்சியமாகவும் இருந்து கொண்டிருந்தது.
தேவனும் கூத்துப் பழக்கும் ஒரு அண்ணாவியார்தான்! என்றாலும், வசதியான வாழ்வு நிலையிலுள்ள அவர் இதைத் தொழிலாக எங்கும் செய்திடப்போவது கிடையாது. இப்படியாக தன் ஊரோடே மட்டுமாகத்தான் இந்தக் கூத்துப் பழக்குகின்ற வேலையை அவர் வைத்துக் கொண்டிருந்தார் O 1300 புதினான்காம் தான் சந்திரன்

அண்ணாவியார்தேவன் - அம்பாள் தெய்வத்தின்மேல் அதீதமான பக்தியுடையவர் சின்னவயதிலிருந்தே அம்பாளைக் கும்பிடுவதிலே அவருக்கு மிகவும் விரும்பம் அமைந்திருந்தது. கேப்பாப்புலம் ஊர்ப் பிள்ளைகள் கோயில் திருவிழாக்களுக்குப் போனால் தங்களுக்கு விருப்பமான பொம்மை விளையாட்டுப்பொருட்களை அங்கே உள்ள கோயில் கடைகளில் கண்டு தங்களுக்கு வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் தேவன் பிள்ளையோ, சிறுவயதாயிருக்கும்போது மற்றப்பிள்ளைகள் வாங்குவதைப் போல அந்தப்பொம்மைகளை தான் வாங்காமல், கடவுள் பொம்மைகளைப் பார்த்துத்தான் தனக்கு வேண்டியதாய் வாங்கிக் கொள்வான். இதை வாங்க அவன் அதற்காக கையில் சேமித்தபணம் அவன் தாய் தந்தையரோ உறவினர்களோ அவனுக்குக் கொடுத்ததாக இருக்காது. அப்படியில்லாமல் அந்தப் பணத்தை அவன் கஷ்டப்பட்டே அந்த வயதில் ஒரு உழைப்போடு தேடிக்கொள்வான்.
அந்த நேரம் தேவன் பிறந்த அந்த வீட்டுவளவுக்குள்ளே கனிதரும் பல விருட்சங்களோடு பசுந்தலை இலைகளோடு செழிப்பாக உள்ள வேம்புமரங்களும் பல நின்றன. அவற்றிலே நுரைப்பூக்கூட்டம் போல் பூப்பூத்து, பிறகு பிஞ்சுபிடிக்கும் போது தேவனுக்கென்றால் மனதில் பூத்துப்பூத்ததாய் விட்ட உள் குளிர்ச்சிதான் ஊறத்தொடங்கிவிடும். அந்தக் காய்கள் பழுத்துப் பிறகு நிலத்தில் கொட்டத் தொடங்க அந்த நிழல்களில் குனிந்து வேப்பமுத்துச் சேகரிக்கும் வேலையை அவன் தொடங்கி விடுவான். பிறகு அந்த வித்துக்களைக் கொண்டுபோய் விற்றுத்தான் அவன் சாமி பொம்மைகளை வாங்கவென தன்னிடத்தில் காசை அவன் அதற்காக வைத்துக் கொள்வான்.
சிறு பிள்ளைத் தனமான அந்த வயதில், அவன் செயல் முறை களானவை இப்படியாகத் தான் கழிந்தது. அதன்பிறகு தோற்றம்கொண்ட இந்த வயதில் வந்து நிற்க - தேவனுக்கு இப்போது இப்படி கூத்துக்களை மேடையேற்றுவது தான் பிரதானமான ஒரு பொழுது போக்காயிருந்து. இப்படியாக அவர் மேடையேற்றம் செய்யும் கூத்துக்களிலும், அவருக்கு மிகவும் பிடித்தமானதாயிருந்தது ‘காத்தவராயன் கூத்துத்தான்! இவர் வணங்கும் எல்லா தெய்வங்களும் இந்தக் கூத்திலே வந்து அவருக்கு பிரதட்சணமாவதைப்போல இருப்பதால், காத்தவராயன் கூத்திலேதான் அவருக்கு அதீத விருப்பமாயிருந்தது.
தேவனைப்போல் வன்னிப்பகுதியிலுள்ள அனேகமானவர்களுக்கு காத்தவராயன் கூத்துத்தான் விருப்பமானதொன்றாயிருந்ததால், தேவனும் வருடாவருடம் இந்த காத்தான் கூத்தைத்தான் அங்குள்ள ஆட்களுக்குப்
Pennಣ್ಯತಿ O 131 O

Page 74
பழக்குவித்து மேடையேற்றிக் கொண்டிருந்தார். இதை விட அம்மனினது அற்புதங்கள் தனக்குக் கிடைக்க வேண்டுமென்று ஒரு விண்ணப்பத்தில், தான் வைத்துக்கொண்ட நேர்த்தியின்படி ஒவ்வொரு வருடமும் தன் விண்ணப்பத்தைக் காப்பாற்ற கூத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டியதும் தேவன் அண்ணாவியாருக்கு ஒரு மிகப் பெரிய கடமையுமாயிருந்தது.
அந்த ஊருக்குள்ளே இதன் காரணமாகத் தான் இரண்டு இடங்களில் இப்போது காத்தவராயன் கூத்து ஒத்திகை நடந்து கொண்டிருந்தன. ஒருபக்கம் உத்தமன் வீட்டுத்திட்டம், என்றுள்ள அகதி மக்கள் குடியேறி இருந்த அந்தப் பகுதியிலும், இன்னொரு பக்கம் அந்த ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்ந்து அந்த ஊர்ப்பள்ளிக் கூடத்துக் காணிக்குள் நடத்திக்கொண்டிருக்கும் ஒத்திகையிலும், வெவ்வேறாய் இவைகள் தினம் அங்கே நடந்து கொண்டிருந்தன.
இப்படி ஒரு ஊருக்குள்ளே இரண்டு குழுக்களாயப் பிரிந்து இருந்து
கொண்டு, ஒரே கூத்தையே இரண்டு குழுக்களும் பழகி வருவதால்,
கேப்பாப்புலம் ஊர்க்காரர்களுக்கு உத்தமன் வீட்டுத்திட்டத்தில் குடியிருந்த வர்களிடமாக பொறாமையும் போட்டியும் மனதில் ஏற்பட்டு விட்டது.
இன்றைக்கல்ல இந்தச் சம்பவம் அங்கு நடந்தது. இது நடந்தது இன்றைய நாளுக்கு மூன்று நாள் முன்னதாகத்தான் இருக்கும். அன்றைய நாள் தேவன் அண்ணாவியார்பழக்கும் அந்த கூத்து ஒத்திகையின்போது, உத்தமன் வீட்டுத்திட்டத்தில் நடந்து கொண்டிருந்த கூத்து ஒத்திகை திடீரென நின்று போனதைப்பற்றிய கதை மிகமுக்கியமான விஷயமாக பேச்சிலே இவர்கள் எல்லோரிடமாகவும் பறத்தலாக அடிபட்டது. "ஆளையாள் அவங்கள் குத்துப்பட்டு சண்டைப்பிடிச்ச மாதிரிப் போய்ப்பிரிஞ்சு ரெண்டு மூன்று நாளா அங்க ஒத்தியையும், இப்ப ஒழுங்காக் கிழுங்கா நடக்காம குழம்பீட்டாம்”
இந்தக் கதையை அங்கே முதலில் தொடங்கியவர் நடேசன் என்பவர்தான்! அவரைப் பார்த்தாலி, நத்தைக் கண் போன்ற கண்ணும் ஆளும் மாதிரித்தான் பார்வைக்குத் தென்படுவார். வேகமாகத்தான் அவர் எதையும் ஜெயிச்சமாதிரிப் பேசுவார்! ஊருக்குள்ளே தேவன் அண்ணாவிக்கு அடுத்ததாயச் செல்வாக்கும் மரியாதையுமென்பது இவருக்குத்தான்! அவர் கதைத்து முடிய குள்ளன் சட்டநாதன் கீழ் உதட்டில் புன்னகை நெளிய இதைச் சொன்னான்.
“எங்களுக்கும் இங்க சில கதாபாத்திரங்களுக்கு இப்பவா ஆள் குறையுது அங்க அதுக்க இருந்து கொஞ்ச ஆக்கள எங்கட கூத்துக்க அதால நாங்க இழுத்துப்போடுவம். ஏனெண்டா, அவங்கள் கொஞ்சம் பேர் நல்லாத் திறமாக் கூத்துப் பாட்டுப் பாடுறாங்களப்பா.!”
சட்டநாதன் இதைத் சொல்ல, நடேசுவின் கதை அதற்குப் பிறகு நீண்டது. “சரி! அதுக்கெல்லாம் நானும் ஒருவழி வைப்பன் சட்டநாதன். C 1320 புதினான்காம் தான் சந்திரன்
 

எனக்குத் தெரியும் அவங்களில இருந்து கொஞ்சம் பேரை எப்படி இங்கால இதுக்க எங்களிட்ட இழுக்கிறதெண்டு. இதெல்லாம் ஒரு சிம்பிள்வேல எனக்கு. நான் கொழுக்கிபோட்டு மீன் பிடிக்க வெளிக்கிட்டா அந்தக் குளத்தில உள்ள மீனுகள் என்ர உமலுக்க பிறகு வந்து சேந்தமாதிரியாச் சேந்திடும். ம்..ம். அப்பிடித் திட்டதிருக்கு நல்ல திட்டமிருக்கு என்னட்ட.! அங்க கொஞ்சம் பேர் கண்டியோ ஒடச் சயிக்கிளும் இல்லாமப் பரிதவிச்சுத் திரியினம்! என்னட்டத்தான் இங்க சயிக்கிலுகள் அடைவு பிடிச்சுப் பிடிச்சு பிறகு எடுக்க ஏலாம மாண்டுபோய் அதெல்லாம் மாலுக்க அடுக்கி அடுக்கிக் கிடக்குதுகள்தானே? அதுகளில அவங்களுக்கு ஓடக் குடுத்து ஆக்கள இங்கால நாங்கள் இழுப்பம்! அவள் இருக்கிறாள் பத்துப் பிள்ளைக்காறி ஒருத்தி அங்க அதுக்க இருக்கிறாள். அவளிண்ட ரெண்டு சின்னப் பிள்ளயளையும் அவள் அங்க அவயளிட்ட கூத்துப்பழகவெண்டுவிடாம இனி எங்களிட்ட இங்க விடுறதா சொல்லியிருக்கிறாள். இப்பிடி இப்பிடி இனி எல்லாரும் கணக்க ஆக்கள் இங்க வருவினம். கண்டியோ! அப்பிடித்தானே செய்யவும் வேண்டிக் கிடக்கு..1 அங்க இருந்து இங்க அகதியா வந்ததுகளுக்கு என்ன ஒரு கூத்து வேண்டிக்கிடக்குது எண்டுறன் நான்.? ஊருக்குள்ள எங்கள மதியாததாயும் போட்டிக்கு மாதிரியெல்லே இதுகள் எங்களுக்கும் இடும்பு பண்ண நினைக்குதுகள்.? அதுகள் எல்லாம் நாலு சாதிகளும் நாலு தொழிலும் செய்து சீவிக்கிறதான சனம்! அதுகளுக்கு என்ன கூத்து எண்டுறன் நான்.?” என்று தான், அறிவாழமாக கதைக்கிறதாக நினைத்துக் கொண்டு இதையெல்லாம் சொன்னான் நடேசு.
ஆனால் நடேசு கடைசியில் சொன்னவார்த்தைகள் ஒவ்வொன்றும் தேவன் அண்ணாவிக்கென்றால் மனதுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர் உடனே. “என்ன நடேசு இப்பிடி நீ எங்கட தமிழ்ச் சனத்தையே கேவலமாய்க் கதைக்கிறாய்?” - என்றார்,
- அவர் அப்பிடி சொன்னதுக்கு நடேசு உடனே,
"ஏன் ஏன் அப்பிடி நான் என்னத்தைத் தான் சொன்னனான்? - என்று அவரைக் கேட்டான்.
"இல்ல, நீ கடைசியாய் சொன்ன கதைக்குத்தான் நான் இப்ப சொல்லவாறன்’
"அப்பிடி என்ன நான் சொன்னனான்.” நடேசு உடனே இப்பிடி தேவனைக் கேட்டான். -
"இந்தச் சண்டை துவங்கினாப்பிறகு, நீ இனிமேல் அந்தப் பழைய கதைகள் சாதிக்கதைகள் ஒண்டும் கதைக்காத. தொழில்ப் பற்றியும் கதைக்காத! இப்பிடித்தான் உத்தியோக காறரெல்லாம் விறகு சயிக்கிளில கட்டி இழுத்தும் இப்ப சீவிக்கினம். அது ஏன் எண்டுறதும் என்னத்துக்காக எண்டுறதும் உனக்கும் தெரியும்தானே? இந்த யுத்தத்துக்குள்ள சாமான்கள்
ήδρωνανηγό O 133 O

Page 75
விக்கிற விலையில எடுக்கிற சம்பளம் அதுகளுக்குப் போதுமே? சரி அதவிடு! இன்னொரு கதைக்கு இனி நாங்கள் வருவம்! நாங்களும் அந்தச் சனம்மாதிரி இடம் பெயர்ந்து எங்கயுமா ஒண்டும் எங்கட கைவழியயும் இல்லாமலாப் போனா நாலு சாதிகளோடயும் சேந்துதான் நாங்களும் சீவிக்க வேணும் கண்டியோ - சாதிபாத்து பேந்து ஆரும் தண்ணி வாங்கி குடிக்கிறது பாக்கஏலாது - சாப்பிட ஏலாது, படுக்க ஏலாது.அதெல்லாம் இருக்கிறதால உன்ரை அந்தக் கதைக்கிள மாத்திரம் நானும் ஒத்துப் போகேல்லாது. அது பிழைதான்! அத ஆரும் கதைக்கப்பிடாது. எண்டாலும் மற்றவளத்தில மற்ற விசயங்களில நான் உன்னோட சரியா ஒத்துப் போகவா வாறன்..! அவங்கள் அங்க கூத்தை குழப்பினா இங்கால அந்த ஆக்களில கெட்டிக்காரங்களை நாங்கள் இழுத்து எங்கட கூத்துக்குள்ள போடுவம். இந்த மாதிரி ஒண்டை செய்யிறதில நானும் உங்களோட ஒத்துப்போறன்.”
என்று தேவன் அண்ணாவி தன் இடுப்புப்பட்டிவாரை தன்கை விரலை உள்விட்டு பிடித்துக் கொண்டவாறு இதைச் சொல்ல, அவர் சொல்வதை நியாயம்தான் என்ற அளவிலே நடேசுவும் சட்டநாதனும் கேட்டுக்கொண்டு வேறு ஒன்றும் பேசாது மெளனத்துடன் இருந்து விட்டார்கள்.
“இனியென்ன எங்கட ஒத்திகையை நாங்கள் துவங்குவம்” - என்று தேவன் அண்ணாவியார் அவ்வேளையில் சொல்லிவிட்டு பிறகு ஒத்திகையை ஆரம்பித்துவிட்டார்.
இன்றைய ஒத்திகையில்அருமையான கட்டமாக கழுக்காத்தான் பாடுவதுதான் துவக்கமாக இருந்தது.
கழுக்காத்தானுக்கு நடிப்பவன் பரஞ்சோதி என்பவன்தான்! இவன் ஆள் குள்ளப்பனை மாதிரித்தான் வளர்த்தி. ஆனால் தொண்டை திறந்து அவன் நன்றாக பாடுவான். இதனால் கழுக்காத்தான் பாத்திரத்துக்கு ஆளும் இவன் பார்க்கத் தோது போலத்தான்.
அவன் 'நெருப்பாய் எரியுதம்மா பெற்றவளே தாயே" - என்ற கழுவேற்றம் காத்தானின்பாடலை தொடங்கிச் சென்று ஓராம்படி காலை வைக்க காத்தலிங்க சாமி எந்தன் உள்ளம் நடுங்குதம்மா ஆச்சியரே தாயே - என்ற வேதனைக் குரலை வெளியே வீழ்த்தத்தொடங்க, அங்குள்ள வர்கள் பார்வைகளின் உள்ளே உள்ள சிந்தனைகளில் முள்ளெல்லாம் ஈட்டி ஈட்டியாயிருக்கும் கழுமரம்தான் கற்பனைகளில் இப்போது வந்தவாறு இருந்து கொண்டிருந்தன.
இப்பொழுதெல்லாம் சண்முகம் வீட்டு முற்றம் இரவு பகலானமாதிரி காணப்படுவது போலத்தான் ஒரே விளக்கின் வெளிச்சம்! “இது தான், இது O 1340 புதினான்கஸ் தான் சந்திரன்

தான், இப்பத்தைக்கு எங்களுக்கு வலுதிறம்! அதால இப்பிடி இப்பிடியான பாட்டுக்களையே நீங்க கொஞ்ச நாளுக்குச் சேந்து நல்லாப் பாடுங்கோ இதையே நடத்துங்கோ?” - என்று உத்தமன் வீட்டுத் திட்டத்திலுள்ள கனக்கச் சனங்களும் நேயர் விருப்பம் போல இதைக் கேட்டுக் கொண்டு ஒவ்வொருநாள் இரவும் சண்முகம் வீட்டு முற்றத்தடிக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.
இப்படியே இந்தப் பாட்டுக் கச்சேரி விஷயம் அங்குள்ள எல்லாரிடமும் சூடு பிடித்ததாய்ப் போக சண்முகம் வீட்டுப் பக்கமே ஒரு பெரிய கோயில் திரு விழா மாதிரி மாறி விட்டது. பெடியன்கள் பெட்டைகள், கிழடுகள், கட்டைகள் குட்டிகுருமன்கள் என்று அங்குள்ள எல்லாருமே இப்போது தங்கள் தங்கள் வீட்டிலே என்று பொழுதுபட இல்லாமல் இங்கே சண்முகம் வீட்டுப் பக்கம்தான் இப்போது வரத் தொடங்கிவிட்டார்கள்.
பல்லில்லாத வயசு போன கிழவிகளும் வெற்றிலை பாக்கு இடிக்கும் உரலோடு அங்கு வந்து நெடு நேரம் குந்தி இருக்கத்தொடங்கிவிட்டார்கள். இரண்டாம் நாள் இந்த நிகழ்ச்சி தொடரவாய்விட்டு இப்போ நண்டு மீன் பிடிக்கிற அந்த சூழ் லாம்பு - என்று சொல்லப்படுகிற பெரிய வெளிச்சம் போடும் அந்த விளக்கும் அங்கே வந்ததாய்விட்டது. சூழ்லாம்பு என்று சொல்லப்படுகிற அந்த விளக்கானது. எந்தப் பெரிய கடல் காற்றுக்கும் அணைந்து போகாததான ஒன்று.
அங்கே நந்திக் கடலிலே மீன், றால் பிடிக்கின்ற தொழில் செய்கிற வர்கள் தான் இதையும் இங்கே கொண்டு வந்து பெற்றோல் மாக்ஸ்சோடு வெளிச்சம் போட்டு விட்டிருந்தார்கள். இந்த லாம்பு சணல் திரி போட்டு மண்எண்ணெய்யிலே எரிகின்றது. இந்த வெளிச்சம் கண்டு, 35L6) மீன்இறாலெல்லாமி, நண்டும் கூட, அவ்விடத்தடிக்கு உடனே அள்ளுப்பட்டு அம்பாரமாய் வந்து ஒன்றாய்க் குவியும். இது இப்போது சண்முகம் வீட்டு முற்றத்தடியிலே எரிந்து கொண்டு இருள்கோடுகளே அங்கு எவ்விடத்திலும் இல்லாமல் அகற்றிப்பளிங்கு வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது.
இப்படியாக தூக்கக் கலக்கமே இல்லாத ஆனந்தமான பொழுது போக்காகத்தான், அங்கு உள்ள எல்லோருக்கும் பாட்டுக்கச்சேரியைக் கேட்கவும் இருந்தது. சண்முகம் காட்டுக்கும் போய் வந்து, அந்த வேலை இழந்த வேளையெல்லாம் இரவுப் பாடலுக்காக மேளத்தை வைத்துக் கொண்டு விரல் முனைக்குப் பரீட்சை கொடுக்கிற அப்பியாசமும் செய்யத் தொடங்கி விட்டார். இந்த நிலைமை அங்கே நீட்சியாகிவிட கடலைப் பெட்டி யாவாரம், வெத்தின்ல பாக்குப் பீடி சுருட்டு யாவாரமென்று, அதுவும் அவ்விடம் வீதியோரம் தொடங்கிவிட்டது.
இந்த நாள் இடையே ராஜனின் கூடப்பிறந்த தம்பியும் அங்கே தன் அண்ணனையும் அண்ணி பிள்ளைகளையும் பார்த்துப் போகவென்று
:5ас-у-у» о 135 о

Page 76
யாழ்ப்பாணத்திலிருந்து இங்கேயாய் வந்திருந்தான். அன்றைய இரவு தன் தமையனுடன் சேர்ந்து அவனும் கூட சண்முகத்தின் வீட்டுக்கு வந்திருந்தான். நாலுபேர் பாடி முடிய அவனும் பிறகு தமையன் சொல்ல பாடினான். அவனுக்கும் நல்ல குரல் வளம் தான்! பதுக்கி வைத்தது மாதிரி உள்ள பழைய சினிமா பாடல்களெல்லாம் அவன்பாடினான். ஏழுமாடிக்கும் மேலும் கேட்கும் அவன் பாடுகிற பாட்டுச் சத்தம்! அவன் பாடல்களையும் அங்குள்ள எல்லோரும்தான் கேட்டு நன்கு ரசித்திருந்தார்கள்.
ஆனாலும் அதற்குள்ளே உள்ளவர்களில் அண்ணாவி முருகேசர் மட்டும் இதையெல்லாம் பெரிதாக தான் ரசிக்காது வெயிலில் உலர்த்திப் போட்ட கணக்காக மனம் வறள இருந்து கொண்டிருந்தார். கூத்து ஒத்திகை நின்று போனதால் அழுக்குப் பொதிக்குள் தன்னைப் போட்டு மூடிக் கட்டி விட்டது மாதிரியாகவும் அவர் அவதிப்பட்டார். இப்படியே இந்த நிலை நீடித்துப் போனால் கூத்துப் பழகிற எண்ணமே இவர்கள் மனதிலிருந்து மறக்கப்பட்டதாய்ப் போய் விடுமோ? என்றும் அவருக்கு நினைக்கப் பயமாகவும் இருந்தது.
“சரி சரி கூத்து நடிக்கிறதை விட்டு, விலகிப்படப் போன கதா பாத்திரங்களுக்கு இப்பபுதுப் புது ஆளுகளும் இங்க வந்து சேர்ந்த மாதிரியும் இப்ப வந்திட்டுத்தானே? இவர் ராஜனுக்கும் சோக்கான தொருகுரல் வளமா எனக்குப் பாக்கத் தெரியிது! அதோட அவற்ற தம்பியெண்டு இங்க வந்த வரும் திறமா இழுத்து சத்தமாகவும் சொல்சுத்தமாகவும் கேட்கப் பாடுறார்! அதால இண்டைக்குப் பாட்டு முடியிற தறுவாயில ராஜனையும் அவற்ற தம்பியையும் கதைச்சு இதுக்கிள்ள இழுத்தா நாளைக்குப் போல திரும்பவும் ஒத்திகை நல்லதா பிறகு துவங்கீடுமே" - என்று அவர் நினைத்துக் கொண்டு தன் பார்வையை ராஜனிடத்திலும், அவனின் தம்பி முகுந்தனிடத்திலும் மந்திரித்த மாதிரியாய் வைத்தபடி, வரும் காலம் வேளையை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதன் மூலம் நடுநிசி வேளை பாட்டுக் கோஷ்டி நிகழ்ச்சியை நிற்பாட்டுவதற்கு முன்னமே சண்முகம் இருக்கும் இடத்தடியில் அவர் வந்து நின்று கொண்டு, தன் உதடுகளில் மென்மையான சிரிப்பை வைத்தபடி அங்குள்ள எல்லோரையும் அவர் ஒருமுறைபார்த்தார். அவர் அதிலே நிற்பதைக் கண்டுவிட்ட சண்முகத்தாரும் மேளஅடியை நிற்பாட்டினார். பாட்டும் அதோடு டப்பென்று நின்று விட்டது. மொறக்காஸ் கிலுக்குகையும் அலைவுறாமல் உறங்கி விட்டது.
இந்த அமைதி கிட்டியதும் சண்முகத்துக்கு புருவம் நெளிந்தது. அண்ணாவியாரை அவர் இருந்தபடி நிமிர்ந்து பார்த்தார். அங்குள்ள எல்லோரின் பார்வையும் இப்போது அண்ணாவியாரின் மீதுதான்! பாட்டு நின்று போனதிலும் கொஞ்சம் பேருக்கு அங்கே மனக் கஷ்டமும் தான்!
01:360 பூதினான்காம் தான் சந்திரன்

சண்முகம் உடனே அவரை கேட்டார். "என்ன அண்ணாவியார் சொல்லுங்கோ என்ன விசயம்?”
"அப்பிடி என்ன விசயம் தம்பி நான் சொல்ல? இது எங்கட கூத்து பழகிற ஆக்கள் எல்லாருக்குமா தெரிஞ்சதுதானே..? என்னெண்டா இப்ப எங்களுக்கு நாலு அஞ்சு நாளா ஒத்தகை நடக்கேல்லத்தானே?”
"அது அண்ணாவியார் நாளைக்கோ நாளையிண்டைக்கோ ஒரு நாள்பார்த்து இனித்துவங்கத்தானே வேணும்.'
சண்முகம் இதை சொல்ல,
"அது தான் அந்த கதைக்குத்தான் நான் இப்ப வாறன்! அதைத்தான் நான் இப்ப இங்க சொல்லவும் வந்தனான்! இதுக்க ஒரு விசயம் தம்பி, இங்க புதுசா சொல்ல வேண்டியும் இருக்கு! இங்க இரண்டு மூண்டுநாள் இந்தப் பாட்டுக் கோஷடி பாடினதும்ஒரு நல்லதுக்குத்தான்..! எல்லா பிள்ளையஞம் இங்க நல்ல சோக்கா வடிவா பாடினதுதான். இவர் எங்கட தம்பி ராஜனின்ட குரலும் மணி நாதமாக கணிரெண்டு அந்தம் மாதிரி இருக்கு. அவற்ற தம்பியாரும் தமையனுக்கு தான் சளைக்காதமாதிரித்தான் பாடுறார். அதால, இதெல்லாம் நான் பாத்ததில, என்ர நெஞ்சில வளர்ந்த அந்தச் சந்தோஷத்தோட நான் சொல்லுறன். அதென்னென்டா, இவர் எங்கட தம்பி ராஜனும் இந்தகூத்தில வடிவா பேந்து பாடலாம் தானே தம்பி.? அது மிச்சம் திறந்தானே.? அதோட அவற்றை தம்பியும் இதுக்கவா அவரோட சேந்து வந்திட்டா எங்கட இந்தக் காத்தான் கூத்துப் பிறகு என்னமாதிரி சிறப்பா எழும்பி வரும் என்ன நான் சொல்லுறது சண்முகம் தம்பி? சரிதானே நான் இப்ப சொன்னது.?”
- என்று தன் முகமெல்லாம் மகிழ்ச்சிகள் பொங்கிய நிறமாய்மாற இதைச் சொன்னார் அண்ணாவியார். சண்முகமும் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்த்து இருந்தவர்தான். அவருக்கு அண்ணாவியார் இப்படிச் சொல்லிவிட, உள்ளூரமனதில் உற்சாகம் பிறந்து விட்டது. உடனே அவர் "நானும் இதைத்தான் அண்ணாவியார் இந்த மூண்டு நாலுநாளும் நினைச்சுக் கொண்டிருந்தனான். எனக் கெண்டா ராஜன் தம்பிக்கும் அவற்றை இந்த தம்பிக்கும் இப்பிடித் திறமைகள் இருக்குமெண்டு முன்னம் சொட்டும்கூட தெரியேல்ல! ஆனா இப்ப இவயள் ரெண்டுபேரைத்தான் இந்தக் கூத்துக்குள்ளயே நாங்கள் முதன்மையா எடுத்து போட வேணும் போலக் கிடக்கு! அப்பிடியாய்த்தான் பாருங்கோ அண்ணாவியார் இவயளுக்குக் குரலெண்டாலும் அப்பிடி ஒரு குரல்.”
"ஓ! அதாலதான் தம்பி நான் சொல்லுறன். இவர் தம்பி ராஜனை நீங்கள் கேளுங்களன். இப்ப எண்ணெண்டு அவற்றை ஒரு முடிவ.?”
அது தான் நானும் கேக்கிறன். நீங்களும் தான் ஒருக்கா அவரோடயாக் கதையுங்கோவன்.”
6.9emy.) O 137 O

Page 77
G6
ஓ நானும் பின்ன என்ன கதைப்பன்தான் சண்முகம் தம்பி ஆனாலும் ராஜன் தம்பிய நீங்கள் தானே கேக்கவேனும்? நீங்க தானே இதுக்க ஒரு இணைப்பாளர்மாதிரி இருந்து எல்லாத்தையும் நடத்துறிங்க.?”
அண்ணாவியார் இப்படியாய் சண்முகத்தாருக்கு சொல்லிவிட - மனதில் இழை இழையாய் பின்னிய விருப்பத்துடன் ராஜனைத் திரும்பிப் பார்த்தார் சண்முகம்.
"தம்பி ராஜன் நாங்கள் இப்ப எல்லாருக்குமுன்னாலயம் உங்கள் ரெண்டு பேரையும் பற்றி கதைச்சதுகளை நீங்க கேட்டீங்கள்தானே..? அப்ப என்ன மாதிரித்தம்பி இருக்கு உங்கட விருப்பம்? அதை சொல்லுங்களன் தம்பி.7 - என்று சண்முகம் இப்படி கேட்க, ராஜன் ஒன்றும் அவர் சொன்னதை கேட்டு பலருக்கு முன்னால் தான் ஒரு கலைஞன் என்ற மாதிரி கெளரவ வேடம் பூணவில்லை. அவன் தாழ்மையுடன் தான் இருந்தான்.
"அதுக்கு இப்பிடி ஏன் அண்ண நீங்க என்னையும் தம்பியையும் பெரிசா கதைச்சுக்கொண்டுவாறிங்க? என்ர தம்பியும் என்ர சொல்லக்கேட்டுக் கொண்டு கூத்து அரங்கேறமட்டுமாய் இங்க நிப்பான். இதில நீங்க என்னைப்பொறுத்த அளவில, என்னத்தத்தான் ஒரு விருப்பம் என்னயக்கேக்க வேண்டிக் கிடக்கு.? நீங்க தாற கதாபாத்திரத்தை நான் என்ர முழுவிருப்பத்தோட செய்யிறனே. என்ன மாதிரித்தான் அதேபோல என்ரை தம்பியும் எல்லாம் செய்யிறதுக்கு ஓம் தான்! அதால நீங்க சொல்லுங்கோ நாங்கள் இதுக்க என்ன என்ன செய்ய வேணுமெண்டு.?”
என்று ராஜன் இதை சொல்லிவிட சண்முகத்தாருக்கும் அண்ணாவியாருக்கும் அதைத் கேட்டு பூரண மனத்திருப்பியாகிவிட்டது.
"அப்ப அண்ணாவியார் இவர் ராஜனுக்கும் தம்பிக்கும் இந்தக் கூத்தில நாங்கள் என்ன கதாபாத்திரத்தை குடுப்பம்." - என்று சண்முகம் அண்ணாவியாரை உடனே கேட்டார்.
"இவர் ராஜனின்ட தம்பியார் வெயில்காஞ்ச கறுப்பாயில்லாம பாக்க நல்ல சிவலையாவும் ஆள்இருக்கிறார். குரலும்பாட அவருக்குத் திற மாயிருக்கு! இது ரெண்டும் திறமையாய் அவருக்கு உள்ளதால நாராதர் பாத்திரத்தை அவருக்குக் குடுப்பமமே..?”
என்று அண்ணாவியார் கேட்க.
"ஆ. அது வலுபொருத்தம்தான் அவருக்கு!” - என்று உடனே சொல்லி விட்டார் சண்முகம். ஆனால் முகுந்தனுக்கு இது விஷயத்தில் ஏனோ முகம்சரியில்லை.
“என்னதம்பி அப்ப இந்தப்பாத்திரம் உங்களுக்க பொருந்த
91380 புதினான்கஸ் தான் சந்திரன்

மாயிருக்கு..! இது நடிக்க உங்களுக்கு என்ன மாதிரி விருப்பமோ..?”
"ஐயோ அதால என்ர மீசையையுமெல்லோ எடுக்க வேண்டியதாய் வரம் அண்ண?”
சண்முகத்துக்கு உடனே சிரிப்பு வந்து விட்டது.
"எண்டாலும் தம்பி அது ஒரு பிரச்சனையுமில்ல. மீசையை கொஞ்சம் மேக்கப்காறனிட்டச் சொல்லி கட்பண்ணி குறைச்சுப் போட்டு எல்லாத்தையும் சேப்பண்ணி விடலாம் தானே.? நீங்க இதுக்கேன் பயப்படுறீங்க? மீசை எடுக்கத் தேவயில்லைத்தானே.?”
"எண்டாலும் இந்த நாரதர் பாத்திரம் வந்து.” "ஓ அப்ப இது உங்களுக்கு விருப்பமில்லயோ?” "அப்பிடி என்டில்ல.! வேற ஏதாவது ஒண்டப்பாத்து தந்தீங்க ளெண்டா..?”
"சரி அதுக்கென்ன..! இப்ப நடிக்கிறவர் அதை செய்யட்டும்.! உங்களுக்கு சிவன் பாத்திரம். அதெண்டா செய்ய உங்களுக்கு விருப்பமோ?”
“ஓம் அதெண்டா எனக்கும் விருப்பம்தான்!”
"அப்ப சரி! அதை நீங்க செய்யுங்கோ! என்ன அண்ணாவியார் இவருக்கு அப்ப சிவன்!”
"ஒ சிவன் பாத்திரத்தை குடுங்கோ அது இவருக்கு பொருந்தும்.”
அண்ணாவியாரும் சொல்லிவிட, முகுந்தனுக்கே அந்தக் கதாபாத்திரமான சிவன் கதாபாத்திரம் உரியதாய் அப்போது உறுதியாகி விட்டது.
அண்ணாவியார் உடனே,
"தம்பி நீர் கொஞ்சம் என்னடிக்கு இப்ப ஒருக்கா எழும்பி இதில கிட்டவா ஒருக்கா வாரும்.?”
என்று சொல்லி, முகுந்தனை தன்னிடத்தே வரக்கூப்பிட்டார். அவனும் எழுந்து அவருக்குக் கிட்டேயாய்ப்போனான்.
“ஒண்டுமில்ல! சும்மா ஒரு ஒத்திகை சிவனுக்கானதை உம்மோட சொல்லித்தந்து உம்மோட நானும் நடிச்சு இப்பவா ஒருக்கா பாப்பமே..?”
அண்ணாவியார் அப்படிச் சொல்ல, முகுந்தன் ஒரு சிரிப்புச் சிரித்தான். அவனின் சிரிப்பைப்போல் பார்வையாளர் பலருக்கும் அது கொஞ்சம் இருந்தது. அண்ணாவியார் இந்த நேரம் எடுத்தவுடனே "கஞ்சா திண்ட வெறியெல்லோ" - என்ற சிவனின் கட்டத்தை கொண்டுவந்து அந்த பாட்டையும் பாடி அதுக்கு
626-v-yoyo O 139 O.

Page 78
ஒரு முறைவிழுந்து எழுந்தும் காட்டினார்.
அவர் பாடி முடிய முகுந்தன் அவர் பாடியதை விட தொனி
தூக்கலாய்த் திறமாய்ப்பாடி - அவர் சிவனின் வெறியூட்டலுக்கு அப்பிடி
விழுந்து காட்டினதை விட, தான் அதை விட திறமாய் விழந்தும்காட்டினான்.
முகுந்தன் அப்படி விழுந்து காட்டின நடிப்பைப்பார்த்து அப்போது அங்கே உள்ள சனத்துக்கும் பெரு வியப்பாகப் போய்விட்டது. எல்லோருக்கும் இதனால் முகுந்தனை மிகவும் மனதுக்குப்பிடித்ததாய்ப் போய்விட்டது.
ராஜனின் தம்பி முகுந்தனை சிவன் பாத்திரத்திற்கு ஒழங்கு பண்ணிப் போட்டதன் பிறகு, அனலாய் எரியும் ஒருவித பார்வையை தன்னில் வைத்துக் கொண்டு ராஜனைப் பார்த்தார் அண்ணாவியார்.
பிறகு அங்கே அவ்விடத்தில் தனக்கு முன்னால் இருந்து கொண்டிருந்தவர்களையும் தன் பார்வையை ஒருமுறை சூழல விட்டவாறு பார்த்தார்.
"இப்ப நான் சொல்லுறத தம்பி சண்முகமும் நீங்களும் ஒத்துக் கொள்ளுவியளெண்டு தான் நினைக்கிறன். காத்தவராயன் கூத்தில கழுக்காத்தானுக்கு படிக்கிறவர் திறமா அதச் செய்ய வேணும்.! அப்பிடித் திறமா அந்தக் கதாபாத்திரத்தை செய்யிறதெண்டா அத நடிக்கிறவன் திறமா பாட வேணும்.! அப்பிடி இத படிக்கிறதுக்கு உண்ணான உண்மையா நான் ஒண்ட சொல்லுவன். அது என்னெண்டா இந்த கதாபாத்தரத்துக்கு இவர் இந்தத் தம்பி ராஜன் எல்லாரையும்விட திறம் சோடான ஆள் மாதிரி எனக்கு இப்ப தெரியுது. அவர் இதைச் செய்தா இந்தக் கூத்தும் நல்லா வரும்! எங்கள் எல்லாருக்கும் இந்தக் கூத்து நல்லா திறமா இருக்க வேணுமெண்டு தானே ஒரு ஆசை..? அது எங்கள் எல்லாருக்கும் நடிக்கிற ஆக்களுக்கு இருக்குத்தானே..? அப்ப இந்த கழுக்காத்தானுக்கு நாங்கள் ராஜனையே இனி மாத்திப்போடுவம் என்ன..! தம்பி சண்முகம் நீங்க என்ன சொல்லுறீங்க?' - என்று அண்ணாவியார் சண்முகத்தைப் பார்த்துக் கேட்கும்போது அவருக்கு உதடுகளும் உணர்ச்சியில் துடித்திருந்தது. "இதுக்கும் என்ன ஒரு கதை என்னட்டயா நீங்க கேக்கிறீங்க..? ராஜனுக்கு எண்டா மற்ற ஆக்களவிட மனப்பாடமும் கெதியா சரிவரும்.! எல்லா கெட்டித் தனமும் அவரிட்ட இருக்கு அவரே இதை படிக்கட்டும். அதால அவரை நீங்களே கேளுங்களன்.?”
சண்முகம் சொல்ல, அண்ணாவியாரும் உடனே, "அப்ப என்ன தம்பி உங்களிண்ட விருப்பம்?” - என்று கேட்டார். ராஜன் அவர் கேட்டதுக்கு ஒன்றும் மறுப்புச் சொல்லவில்லை, உடனே 'ஓம்' - என்றுஒப்புதல் கொடுத்து விட்டான். ராஜன் அப்படி “ஓம்’
O 1400 புதினான்கஸ் தான் சந்திரன்

-என்று சொன்னவுடனே, "அப்ப நாளைக்கே நாங்கள் திரும்பவும் எங்கட ஒத்திகையை தொடங்குவம்! எல்லாரும் வழமையைப்போல நாளைக்கு கூத்து ஒத்திகைக்கு வந்திட வேணும்?” - என்று அண்ணாவியார் பகிரங்கமாக எல்லோருக்கும் சொன்னார்.
இப்போ அதனால் கூத்தில் நடிப்பவர் எல்லோருக்கும் அண்ணாவியார் சொன்னதைக் கேட்டு மனச் சங்தோஷம்தான்! ஆனால் அங்கே இருந்து கொண்டிருந்த ராஜனின் மனைவிக்கு மாத்திரம், ராஜன் அந்தக் கூத்திலே கழுக்காத்தான் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதையிட்டு, மனம் எதிர்புணர்வில் அமைதியில்லாமல் இருந்தது. இலைகள் காற்றில் தத்தளிப்பது போன்ற அதிர்வுகள், அவள் மனதிலும் ஏற்பட்டுவிட்டன. துயரமான காற்றில் அள்ளுப் பட்டுதான நிலையில், மன மகிழ்ச்சியே போய்விட்டது மாதிரி அவள் அல்லல்பட்டுக்கொண்டிருந்தாள்.
21
ராஜன் இப்போது மூன்று நான்கு நாட்களுக்கும் மேலாக நாட்டுக் கூத்துப் பழக்கும் ஒத்திகைக்கு தானும் அதில் நடிக்கவென்று போய்வரத் தொடங்கிவிட்டான். தன் தமையனின் மாமியாரது வீட்டிலேதான் முகுந்தனும் தங்கியிருந்து கொண்டு ஒழுங்காக அங்கே தமையனுடன் சேர்ந்து ஒத்திகைக்குப் போய் வந்து கொண்டிருந்தான். காலையில் நடக்கும் மீன் யாவாரத்திலே ராஜனுக்கு தம்பியாரும் சேர்ந்து கொண்டு அங்கே வந்து உதவிகள் செய்ததால், கொஞ்சம் உறைந்தது போல சுறுசுறுப்பில்லாமலிருந்த யாவாரம் இப்போது அவனுக்குச் சூடு பிடித்ததாகவும் லாபம் கொடுக்கத் தொடங்கிவிட்டது.
இக் காலம் ராஜன் குடும்பத்தில் இது தான் முறை என்று இல்லாமல், பொருளாதார பணவிஷயம் நிறைவாய் இருந்தாலும், ராஜனின் மனைவி கெளரியினுடைய முகம்மட்டும் இந்தச் சில நாட்களாகவே ஒரு கேள்விக்குறியைப் போல் வடிவமைக்கப்பட்டதாக மாறிவிட்டிருந்தது. "இனி எப்போதும் என்முகம் திருந்தாது பழகிப் பழகிப் போன செல்லா நாணயம் போலத்தான் என் முகமும்' -என்பது மாதிரியாயும் அவள், இப்படியாகத் தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள். ராஜன் அவளுடன் சந்தோஷத்தை புகுத்துவது மாதிரி கதைத்தாலும், அவளோ பதில் ஏதும் சொல்லுகிற போதெல்லாம் ஒருவித சோர்வான கரகரத்த குரலில்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு மனதில் வந்து சேர்ந்து விட்ட அழுத்தமான கசப்பை, வெளியே பிடுங்கி எறிந்துவிட முடியாதிருந்தது. அவளும் தான் எவளவோ முயன்று பார்த்தாள் 'என் மனத்தை இப்படியில்லாமல் மாற்றுவோம்! மாறுவோம்
О 141. O فyyصnnمرعP.6

Page 79
என்று - ஆனாலும், எங்கே எப்படியாகத்தான் அவள் தன்னை மாற்றி, ஒரு நல்ல நிலைக்குத் தன்னைக் கொண்டுவருவதற்குப் பாடு பட்டாலும், அது நடவாத ஒரு காரியம் போலத்தான் இவளுக்கு இருந்து கொண்டிருந்தது.என் முகத்தின் வடிவம் இன்னும் மோசமான நிலை நிறுத்தத்தில் போய் நின்று விடப்போகிறதோ..?”
என்று, இதை நினைத்து நினைத்து, தண்ணிரில் அதை போக்காட்டி விட எத்தனை தடவைகள் தான் அந்த முகம் கழுவுகிற வேலையை அவள் தொடர்ந்து செய்வது? ’எப்படித்தான் கழுவிக்கழுவினாலும் போக்கப்படாதது போலத்தானே இந்த என் மூஞ்சி இருட்டிக்கொண்டே வருகிறது” என்று தன் நிலைவரத்தை அறிந்ததாய்த்தான் அதை அவளும் மனதில் வைத்தபடி இருந்தாள்.
இதற்கிடையே நேற்றுப் பொழுதுபட நடந்த ஒரு சம்பவமும் நிறைய அவளுக்குக் கோபம் ஏற்றியதாய் வைத்துவிட்டது. "தான் தனியே அந்தக் கூத்தாடவென்று பேய்த்திரிகிறார் சரி.அதுவும் எனக்கு பெரிய இடியும் கொடுமையும் தான். ஆனாலும் அது ஒரு பக்கம் இருக்கட்டுமென்று வைப்போம். அதுகிடக்கட்டுமே அதுவேறு? ஆனால் இவள், எங்களது மகளை ஏன் அங்கே இப்ப அவர் இழுத்துக்கொண்டு போகிறார் அந்தக் கூத்து ஒத்திகைக்கு? கூத்திலே நாக கன்னிகைக்கு ஆள் இல்லயாம். முதல் அதுக்கு நடிச்ச அந்தப் பத்துப்பிள்ளைக் காறியின்ர அந்தச் சின்னபெட்டையவள் ஒத்திகைக்குப் பழக வராம இப்ப இழுக்கீட்டாளாம். தேவன் அண்ணாவி பழக்கிற கூத்தில அவள் இப்ப நடிக்கிறாளாம். அதால இங்க இப்ப அதுக்கு ஒரு சின்னப்பெட்டைப் புள்ள இல்ல எண்டதால இவள் எங்கட மகளை இப்ப அங்க இவர் இழுத்துக் கொண்டுபோறார். இப்ப இந்த குடும்பம் முழுக்கலும் அங்கேயாய்த்தான் கூத்துஒத்திகைக்கெண்டு போகப் போகுதோ..? முன்னம் இவரும் அவற்றை தம்பியும் போச்சினம்! பிறகு மகள்! - இப்ப இன்னொரு கதை அடிபடுது! இவன் சின்ன மகனையும் இனி அங்கவா நடிக்க கொண்டு போகவேணுமெண்டு! பாலசோம சுந்தரத்துக்கும் ஆள் இல்லாதால இவன் மகனையும் அதிலயா நடிக்கவா போட வேணுமெண்டு இவர் இப்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுக்கு நான் ஒரு கேள்வி ஏன்? ஏன்? இப்பிடி யெல்லாம் செய்ய வேணும்? குழந்தையளின்ரை படிப்பு மெல்லே இதால பிறகு பாழாப்ப் போகப் போகுது? எண்டு சொன்னா சண்முகம் அண்ணை எங்களுக்குச்செய்த அந்த உதவிக்குப் பதிலா இது மாதிரி ஆயிரம் லட்சம் நாங்க செய்தாலும்அவர் செய்த உதவிக்கு ஈடாகாது எண்டு ஒரு பதில் அவர் சொல்லுறார். எனக்கும் என்ர மனதில உள்ளதுகளை வெளிப்படையா அவருக்கு சொல்லத்துணிவில்ல. என்ர விரல்களை இறுக்கிப் பொத்தி மடிச்சு வைச்சுக்கொண்டபடிதான் மனத்தையும் அப்பிடியா நான் வைச்சுக் கொண்டிருக்கிறன்! புருஷனோட இப்பிடி எதையும் சொல்லி சண்டைபிடிக்கவேணுமெண்டு சபதம் எடுத்துக்
01:420 புதினான்கஸ் தான் சந்திரன்

கொண்ட மாதிரியே நான் இருக்கிறன்.? சீச்சீ அப்பிடியான ஒரு பொம்புளயில்லயே நான்.”
ன்ெறு இவ்வாறு அவள் நினைத்துக் கொண்டிருந்தாலும் இந்தக் கேப்பாப்புலம் ஊர்க்காரி பூங்கா வீட்டுக்கு அவள் தண்ணி எடுத்து வரவென்று அங்குபோன போது, கிணற்றடியில் அவள் வைத்து தனக்கு சொன்ன கதையைக்கேட்டு தொண்ணுறு வீதம் கணக்கில், இன்னமும் அவள் குழப்பித் தான் போய்விட்டாள். அவளுக்கு அந்தக் கதையை காதில் கேட்டவடனே சிரசுக்குள் முள்குத்தும் வகையாகிவிட்டது. முதுகுப் பகுதிக்குள்ளால் சுள்ளென்ற ஒரு வலியோட்டமும் தொடங்கிவிட்டது. தண்ணிர்ப் பானை யைக்கூட இடுப்பில் வைத்து ஒழுங்காக வீட்டுக்குக் கொண்டுவர முடியாத வாறு நடையில் சுமைகூடிய தள்ளாட்டமும் தொடங்கிவிட்டது.
மன ஆழத்தில் ஏதோ வந்து புதைந்ததுமாதிரியாய் ஒரு இரைச்சல்! தூரம் பயணம்பட்டு வந்து சேர்ந்தது மாதிரித்தான் அவள் வீட்டுக்கு உடம்புகளைக்க தண்ணிக் குடத்துடன் வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு இப்படி கஷ்டப்பட்டு நடந்து வந்து சேர்ந்தாலும் அங்கே சூழவுள்ள அவ்விடமெல்லாம் இருந்து ஏதோ செத்துக் கிடக்கிறமாதிரியாயும் மூச்சுக்காற்றுக்குள் அவளுக்கு நாற்ற மணம் இருந்தது. "அப்படி நாற்றம் ஏதும் இங்கே இல்லயே?’ என்று அவள் மனம் ஒரு உண்மையைத்தான் ஓங்கி எழுப்புகிறது. ஆனாலும் சுவாசம் வேறொரு நிலையை தனக்குப் பிடித்துக்கொண்டு நாற்றம் அங்கெல்லாம் உள்ளதாக அவளுக்குக் காண்பிக்கிறதே?
இந்தநிலை எனக்குமட்டுமா? இல்லை வேறெவர்க்குமாய் அப்படியாய் உண்டா? என்று தான் - கண்டு கொள்ள - இது விஷயத்தை யாரிடம் கேட்பது? என்று அவள் யோசித்தாள்.
ஆனாலும், வீட்டின் உள்ளே அப்போது அவளின் புருஷனுமில்லை; வேறு அவளுக்குப் பக்கத்தில் யார் தான் ஒருவர் இருக்கிறார்கள்? அப்பிடி அவ்விடத்தில் ஒருவரும் இல்லைத்தான்! ஆனாலும், சின்ன மகன் "இந்தா இங்கே அவன் என் பக்கத்தில் இருக்கிறானே? அவனிடம் கேட்டும் பார்ப்போமே..? அதை எண்ணியவுடன் அவசரத்தோடு மகனிடம் அவள் கேட்டாள்.
"தம்பி தம்பி! ஏதோ இங்க பக்கத்தில செத்துக்கித்துக் கிடந்து நாறும் நாத்தம் உனக்கும் மணக்குதெல்ல்ே.”
மகன், தாய்சொல்வதை கேட்டுக்கொண்டு யோசித்தான்.
"உனக்கு அப்பிடி தம்பி ஏதும் மணக்கேல்லயே?’ திரும்பவும் மகனை அவள் கேட்டாள், அவன் உடனே தாய் சொல்வவும் மூச்சை உள் இழுத்தான்.அதன் பிறகு தன் தலையை ஆட்டிக் காண்பித்தான் "இல்லை.”
8Эчыллам,туф о 143 o

Page 80
- என்ற நோக்கத்தில் தான் அவன் அப்பிடி தலையை ஆட்டியது.
"அப்ப உனக்கு ஒண்டும் அப்படி மணக்கேல்ல.?”
“இல்ல.!’
"அப்ப ஒண்டும் அப்பிடி இல்லயா..?”
“ இல்லயம்மா..!’
என்று அவன் சொன்னதும், தனக்கு வித்தியாசமாக தெரியும் இந்த மணம் தனக்குகொரு தண்டனையா? என்ற நினைப்பு அவளை வந்து உடனே தாக்கியது மாதிரி இருந்தது. இந்தத் தாக்கத்தில் அவளுடைய றப்பர் வளையலான கரமும் சோர்ந்து தொய்ந்து வழங்காதமாதிரி பயம்
இருந்தது. மனம் குழம்பினால் இப்படியும் ஒருவித ரோகம் வருமா? இந்த யோசனையும் அவளுக்குப்போனது.
கெளரிக்கு எரியிற நெருப்பில் எண்ணொய் வார்த்து விட்டது
போல உள்ள அவளது மனளரிச்சலை இன்னும் எரிந்து விளாசச் செய்தது போலச் செய்தவள் பூங்காதான்!
கெளரிக்குப் பூங்கா சொன்ன கதைகளிலே, நிறைய சம்பவங்களைத் தான் ரூபம்' அணிவித்துச் சொன்னாள்.
"உன்ரை மனுசன் பிள்ள என்ன அப்பிடி வயசு முதிர்ந்த முகம் கொண்ட ஒரு ஆளே..? இளம் குடும்பமெல்லே பிள்ள நீங்கள்.? காத்தவராயன் கூத்தில பிள்ள எத்தினை காத்தான் வருகுது! அதில வாற காத்தான் எதையாச்சிலும் ஒண்டை இந்தத் தம்பி நடிக்கலாம் தானே.? ஆனா அப்பிடி உள்ளது ஒண்டை ஏத்து நடிக்கிறத விட்டிட்டு. இந்தக் கழுக்காத்தானில நடிச்சு ஏன் உந்தப்பிள்ள போய்கழு ஏற வேணும்.? கழுவேறுறகாத்தான் நடிக்கிறது கணக்கக் கரைச்சலான விஷயம் கண்டியோபிள்ள..? உயிரைக் கையில பிடிச்சமாதிரி படிப்படியா அந்த ஊசிமுள்ளுல கத்திப்புலம்பிப் பாட்டுப் படிச்சுக்கழுவேறுற நடிப்பு என்ன ஒருலேசுப்பட்டதே.? நடிக்கிற ஆள் பரிசுத்தமாயில்லயெண்டாலும் ஏறுறகழுமரமிருந்து கவுண்டு அதால விழுந்து சிலவேள காயமும்படும். அப்பிடி ஒரு கதைக்கு ஆள் துலைய வேண்டியும் சில வேளையில வந்திடும். அப்பிடிப் பொல்லாததும் பிழைகிழைவிட்டா வீட்டுக்கு சாபம் விழுந்தது மாதிரியான பாத்திரம்தான் இந்தக் கழுக்காத்தான் கதாபாத்திரம். இன்னொருபக்கம் பாத்தால் பிள்ள, காத்தவராயன் கதையில காத்தவராயன் - கந்தழகி, கறுப்பழகி, வண்ணா ரவல்லியெண்டு கணக்கவா பல தாரம் கலியாணம் முடிச்சவனெண்டுதான் சொல்லியிருக்கு. குனிவடிவு, குறத்திவடிவு, கிழச்செட்டியார் வடிவு, பாம்பாட்டிவடிவு எண்டு தன்னை வேசம்மாத்தி தில்லுமுல்லு ஆடித் தான் இந்தப் பொம்புளயளயெல்லாம் அவன் கலியாணம் முடிச்சவனாம்! வளையாபதி கதை மாதிரித்தான் காத்தவராயன் கதையும் ஒத்த கதை!
О 144 О geyererscrib scrd rigger

காத்தவராயன் கூத்தில முற்காத்தான் பிற்காத்தான் எண்டு பிள்ள பலரும் நடிக்கிறாங்கள். ஆனா கடைசியில ஆரியமாலைக்கு தாலிகட்டி கலியாணம் முடிக்கிறது இந்தக் கழுக்காத்தான் தானே..? அதுதான் பிள்ள இதுக்குள்ள உள்ள பெரிய பிரச்சினை. இப்பிடி கழுக்காத்தானா நடிச்சு கண்ணிமாடத்து ஆரிய மாலைக்குக் தாலிகட்டின நடிப்பு நடிச்சவயள் பேந்து தங்கட சீவியத்திலயும் ரெண்டாம் கலியாணம் முடிச்ச சம்பவங்கள் எல்லாரும் கண்காண கன இடத்தில எல்லாம் நடந்திருக்கு. ஏன் நான் என்ர இந்த கண் காண முகத்தில பெரிய சிரிப்போட எங்கட ஊர்வழிய தன்னை விட்டா வேற பொம்புள ஆரும் இங்க ஊருக்க இல்ல எண்டு திரிஞ்சவளிண்ட புருஷன் இப்பிடித்தான் காத்தவராயன் கூத்தில கழுக்காத்தானா நடிச்சார் புள்ள! ஆனா அங்க மேடையில அவர் ஆரியமாலைக்கு தாலிகட்டின மாதிரிப் பிறகு, பாத்தாப்பேந்து பிள்ள உண்மை இது நான் சொல்லுறது, அவரும் ஒரு சின்னப் பெட்டையளல்லோ கலியாணம் பிறகு செய்திட்டார்.
அதால பிறகு அவன் முதல் கலியாணம் முடிச்ச பொம்புளையும் கழுத்தில தூக்குமாட்டுக் கொண்டு பாவம் அவள் செத்தவள் கண்டியோ.”
என்று அவள் பூங்கா இப்படியெல்லம் மேலே மேலே கதைசொல்லச் சொல்ல "அவமானம்! அவமானம்!” - என்று தனக்குள் எதை எதையோ இன்னும் பலவற்றை நினைத்துக் கொண்டு திடீரென உடம்பெல்லாம் உறைந்துபோன ஒரு நிலையில்தான் பூங்காவையே கண்பார்வை விலக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கெளரி.
பூங்காவின் கதைபோகும் வழிகெளரிக்கும் சொல்லப்போனால் புதிதில்லைத்தான். இந்தக் காத்தவரான் கூத்து வழியிலே சில அண்ணாவிமார்களின் திருவிளையாடல்களும் இவளுக்குத் தெரிந்ததுதான்! இந்த விசயத்திலே சில அண்ணாவிமார்களும் பொம்புளக் குழப் படிக்காரர்களென்று அது விஷயமும் இவள் அறிந்துதான் வைத்திருந்தாள். இதனாலே "பொழுது போக்காக கூத்தைப்போய் பார்க்கத்தான் இதுவெல்லாம் நல்லது! அதை விட்டு விட்டு இப்படி இந்த விதமான கூத்தைப்பழகி நடிப்பதற்கென்று அதற்குள் உள்ளட்டுக் கொள்வதுதான் கூடாது!” - என்பதை, தன்மன அறையிலே வைத்துப் பூட்டி இந்தநினைப்பை அவள் நெடுகலுமே வைத்திருந்தாள். `x,
இன்று மதியம் சாப்பிட முன்னதாக அவளுக்கு இந்த விஷயத்தை தன்னால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை பூகம்பமாய் அது இன்றைக்கு வெடித்தே விட்டது.
"இந்த கழுக்காத்தானுக்கு நீங்க நடிக்கவே வேணாம்! வேணாம்!” என்று சொல்லித்தான் புருஷனுடன் அவள் இந்தக் கதையை
தொடங்கினான்.
6.9emy.) O 145 O

Page 81
“ஏன் வேணாம்? ஏன்? ஏன்.?”
அவனுக்கு அவள் அப்பிடி சொன்னதோடு கோபமும் வந்து விட்டது. 'ஏன் என்ற கடைசிக் கேள்வியிலே தன் கோபத்தை அவன் இன்னும் இறுக்கினாள்.
"இது குடும்பத்துக்கு ஆகாதாம்.!”
'ஆர் அப்பிடி உனக்குச் சொன்னது.?
"இல்ல நான் தான் இதை சொல்லுறன். கழுக்காத்தான் நடிக்கிறதல பெரிய விரதமும் பிடிக்கவேணும் .1 அல்லாட்டி குடும்பத்துக்குள்ளயும் கரைச்சல் துன்பங்கழும் வரமாம்.”
"இதை யார் சொன்னது.?”
“ஆரும் சொல்லேல்ல ஆனா இது உண்மையாம்.!’
"அப்பிடி நீ நினைச்சு சொல்லுறியோ..?” "நான் நினைக்கேல்ல! ஆனா இது ஒண்டும் எனக்கும் துண்டாய் விருப்பமில்லை.!’
"நீ விருப்பாதத அப்ப எல்லாத்தையும் நான் செய்யப்பிடாதோ..?”
“என்னங்கோ அப்பிடி சொல்லுறியள்? நான் சொன்னது.இந்தக் கழுக்காத்தான் வேணாம். வேற ஒண்ட நீங்க செய்யலாமே எண்டுதானே
சொல்லுறன்.?”
"இல்ல, எனக்கு இது நடிக்கிறதில. அப்பிடியா பாடுறதிலதான் முழு ஆசை.! என்ர இந்த ஆசைக்கு நான் இது செய்யிறனே கெளரி? அதால உனக்கு என்ன வரப்போகுது.”
"எண்டாலும் இது நீங்க இப்ப நடிக்கிற அந்தக் கழுக்காத்தான் கதா பாத்திரம் நடிச்சா எங்கட குடும்பத்துக்குக் கூடாதுங்கோ.?”
‘ என்ன கூடாது அது எல்லாம் நல்லம்தான். இதுக்குப் படிக்க நான் ஒத்துக்கொண்டு எத்தினை நாள் நான் அத இப்ப படிச்சுப்பழகியாச்சு..! அப்பிடி இடையில என்ரைய இப்பிடி முறிச்சாச் சண்முகம் அண்ணை என்னை என்ன நினைப்பார்.? முதல் அங்க வாற சனமும் என்னைய என்னமாதிரி நினைக்கும்.?”
ராஜனின் முகவடிவம் கோபத்தில் இப்போது காக்கைக் கூட்டின் அகலமாக விரிந்து மோசமாகிக் கொண்டு வந்தது.
கெளரியோ நாயின்ஊளை போல மேலுக்கேறிய உரத்தகுரலில் ஒரு அழுகையைத் தொடர்ந்தாள். பிடித்த ஒரு பிடிவாதமாய் நின்று கொண்டு "அது வேணாம்! எங்களுக்கு வேணவே வேணாம்!” - என்று கல்லைத்
91469ழுதினான்கஸ் தான் சந்திரன்

தூக்கி வீசிய கணக்கில் அந்தச்சொற்களை அவள் ராஜனுக்கு பார்த்துச் சொன்னாள். அவள் துப்பியது மாதிரி முரண்டு கொண்டுநின்று சொல்ல ராஜனுக்கு இன்னம் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் நிமிர் நெஞ்சாய் நின்றான். உடனே கத்தி மாதிரிதன் கையை இறுக்கி தூக்கி ஒரு அறை உடனே அவள் கன்னத்தில் அவன் அறைந்துவிட்டான்.
இப்படி ஒருக்காலுமே கை நீட்டி அடிக்காத புருஷன், இன்று கை நீட்டி அடித்தால் பொம்பிளைக்கு அப்போது என்னமாதிரி அதிர்வு இருக்கும்? அடிவாங்கியதும் காதுயாதும் அடைக்க கெளரி உடனே கிலித்துவிட்டாள். அந்த அடியுடன் தான் எதையே விழுங்கி விட்ட உணர்வு அவளுக்கு உடனே வந்தது. அவள் இப்போ நடந்த அடியோடு இன்னும் கூடவாய் அழத்தொடங்கிவிட்டாள். சுருட்டிவைச்சது மாதிரி பிறகு கீழேயும் அவள் இருந்து பிறகு அழ - அவளின் இரண்டு பிள்ளைகளும் அவளைப்பார்த்துத் தாங்களும் அவளுடன் சேர்ந்து அழத் தொடங்கிவிட்டார்கள்.
மனைவியும் பிள்ளைகளும் இப்படிக் கிடந்து அழ ராஜனுக்கு உடனே வாழ்க்கையே புளிச்சது மாதிரியாய் வந்துவிட்டது. மாமியும் தன்
வீட்டுவாசலிலே நின்று கொண்டு இங்கே பார்க்கிறா.” - என்றதையும் காண வீட்டிலேயும் அவனுக்கு பிறகு இருக்கப் பிடிக்கவில்லை. “இன்றைக்கு சோத்துக்கு கறிஇறச்சியாக்கும்!” - என்று வீட்டில் அது இருந்தாலும்,
வயிற்றுப்பசியும் தின்ன ஆசையும் அவனுக்கு இந்தக் குழப்பத்தாலே இல்லாமலே போய்விட்டது. வயிறு ஒருபக்கம் அவனுக்கு குமுறி பசிக்கிறது தான்! - என்றாலும் அந்தப் பசிக்கு ஒரு அடி போட்டதாய்ச் செய்துவிட்டு, பாலாவின் சயிக்கிள் கடையடிக்குப்போக அவன் வீட்டை விட்டு விறுவிறு வென்று வெளியே நடந்தான்.
LDனம் குழப்பிப்போய்ச் சோர்ந்து போன முகத்தை மரப்பொந்தில் ஒழித்து வைத்தது மாதிரியாய் யாருக்கும் உடனே செய்விட முடியுமா?
'மனைவிக்குச் சீவிய காலத்தில் கை நீட்டி அடிக்காத பழக்கம் இன்று எனக்கு எப்படி வந்து சேர்ந்தது - என்றதை நினைக்க நினைக்க, ராஜனுக்கு நடக்கும் நடையிலும் தளர்வாய் இருந்தது. தான் போட்ட அடியோடு தன் மனைவி பட்ட வாதையை அவன் நினைக்க புண்களின் மேல் உப்புத் தடவிய மாதிரியாய் அவனுக்கு ஒரு வித மன எரிச்சலும் பரவியது. மனத்தில் முள்முளைத்து அதுவே தன்னை குத்தியதுமாதிரி யாயும் ஒரு வலி! அந்த வேதனை வலியின் கறள்கட்டிய சுவடுகள் முகத்திலும் அதனால் தான் அவனுக்குச் சுவறியிருந்தது. அதை வெட்ட வெளியாய்த் தன்னில் தெரியும் சோகத்தோடேதான் அவன் புளியடிப்பக்கம்
:5аселеуо о 147о

Page 82
உள்ள பாலாவின் சயிக்கிள் கடைப்பக்கமாகப்போனான்.
அவனுக்கு யாரோடும் ஒன்றும் கதைக்கவே அப்போது மனமாயில்லை, அப்படி ஒரு இறுக்கம்! எதுவோ தன்னிலிருந்துகை விட்டுப்போன கணக்கில் - அவன் பாலாவின் கடைக்கு முன்னாலிருந்த அந்தக் கல்லின் மேல் போய் தளர்வோடு இருந்தான். அரம் ஒரு கையில் பிடித்தபடி மறுகையில் பிடித்திருந்த டியூப் பை அப்போது ராவிக்கொண்டிருந்தபாலா, ராஜன் அதிலே இருந்த பிறகுதான் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
“என்ன ராஜன் அண்ண? ஒழிஞ்சு கொண்டமாதிரி இதில எனக்கே வந்ததும் தெரியாம, உதில அப்பிடி இருந்ததும் எனக்கு தெரியாமலா இருந்திட்டீங்க..? நானும் பார்க்கேல்லத்தான் நீங்க வந்தத”
சொல்லிவிட்டு சிரித்தான் பாலா. 4ኡ "இல்ல வீட்டுப்பக்கம் உள்ளயா அங்க இருக்கவா செரியான வெக்கை.அதால மர நிழலிலகொஞ்சும் வந்து இருப்பமெண்டு’ ராஜன் சொல்லி இதை முடிக்க வில்லை, அப்போதைக்கு அங்கே சயிக்கிள் ஒன்று கடையடி அந்த வாசலடிக்காய் வந்தது. சயிக்கிள் கொண்டு வந்தவர்
”காற்றடித்துப் போகத்தான் வந்தேன்!” - என்பதாக தன் செய்கைகளில் காட்டிக்கொண்டார்.
"பம் இருக்கோ.!” கேட்டார்.
"அங்க இருக்கு..!”
சயிக்கிள்காரர் இதற்குப்பிறகு டயர்டியூப்புக்கு காற்றடிக்கும் போது, பாலாவுக்கும் ராஜனுக்கும் கதையும் நின்று விட்டது. காற்ற டித்தவர் சில்லறை தன் பைக்கட்டால் இருந்து எடுத்துக்கொடுத்தார். அதோடு தன் சைக்கிளை எடுத்து பெடல் உழக்கிப் போய் விட்டார்.
"ராஜன் அண்ண எங்க உங்கட தம்பிய இங்காலயாக் காணேல்ல.?”
புஜங்களை தன்கை இரண்டாலும் பிடித்து உளைவெடுத்துக் கொண்டு கேட்டான்பாலா.
"அவன் யாவாரம் முடிஞ்சு புதுக்குடியிருப்புக்கு ஒரு அலுவலிருக் கெண்டு போயிட்டான்.”
தன் தம்பி வேறு யாரோ போல கவனமில்லாத தன்மையாகவும் ராஜன் அப்போது சொன்ன பதில் இருந்தது. "என்ன அண்ண இப்பிடி உஷார் ஒண்டும் இல்லாமச் சோர்வாயும் கதை சொல்லுறீங்க.? உங்கட முகமும் கூட வாடின மாதிரியும் கிடக்கு! என்ன நடந்தது உங்களுக்கு?” பாலாவுக்கு தான் நினைத்துக் கேட்டது சரியாகவுள்ளது போல்தான் தெரிந்தது. தன் கேள்வியோடு ராஜனின் முகத்தை அவன் உற்றுப் பார்த்தான்.
91480 திரான்காம் தான் சந்திரன்

அவன் பார்வைக்கு தலை குனிந்து கொண்டபடி "ஒண்டும் இல்ல பாலா’ - என்றான் ராஜன். "இல்ல உங்கட முகம் நல்லா வாடியிருக்கு என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோவன் ராஜன்.? உங்களுக்கு அப்பிடி என்னவும் பிரச்சினையுெண்டா நாங்களும் ஏதோ உங்களுக்கு உதவி செய்யவெண்டு இருக்கிறம் தானே.”
"ஐயோ அதெனக்கு தெரியும் தானே எண்டாலும் சொல்ல வேண்டியதா அப்பிடி ஒண்டும் பெரிய பிரச்சனையில்ல பாலா..!"
"எண்டாலும் சொல்லக் கூடியதை, மற்ற வேண்டிய ஒருவருக்கு சொல்லுறதில எங்கட கவலையும் கொஞ்சம் ஆறும்தானே.”
"அது சரிதான்! சொல்லலாம்தான்.! என்ன பிரச்சனை அப்பிடி இருக்கு எனக்கு பாலா! அப்பிடிபெரிசா ஒண்டுமில்ல. இந்தக் கூத்துப் போய் பழகிறது வீட்டில என்ர மனுசிக்குப் பிடிக்கேல்ல பாலா. கழுக்காத்தான் நான் நடிச்சு பாடவேணாமெண்டு என்ர மனுசி சொல்லுறா! அவ கூத்து நடிக்கச் சொல்லுறாதான்! அவ வேணாமெண்டேல்ல. ஆனா அதில வேற பாத்திரத்தில என்னய அவநடிக்கட்டாம். எண்டுறா! நான் நடிக்கிற கழுக்காத் தான் வேணாம் வேணாம் எண்டு ஒரே அழகயும் கரைச் சலுமா யெண்டு இண்டைக்கு அதெல்லாம் வீட்டில கணக்கயா வந்திட்டு கதைப் போக்கில கையால அவளுக்கு ஒருஅறை கன்னத்தில நல்லா நான் அடிச்சும் தான்போட்டன்.”
“அட அப்பிடியே.?”
"ஓம் என்ன செய்யிறதெண்டு எனக்கும் யோசிக்க இப்ப விசர்
יין
விசராயுமிருக்கு..!
“அட அது அவ்வளவுதானோ, உங்கட ஒரு பிரச்சனை எண்டுறியள்.?”
"வேற என்ன பிரச்சனை எனக்கும் என்ர மனுசிக்குள்ளயும் பாலா..? இது ஒண்டாலதான் இண்டைக்கு எண்டுமில்லாத ஒரு கதை வெளிப் பாடாகவும் போயிற்று. சீக் அவளுக்குக் கதையில இடையில நான் கை நீட்டியதும் பெரிய ஒரு பிழைதானே.”
"அட ஆஹா. உப்புடியே உந்த உங்கட கத.? அது தானே நேற்றும் என்ர மனுசியும் இப்பிடியொருக்கத எனக்கும் சொன்னது."
“என்ன அப்பிடிச் சொன்னது பாலா..?”
ஆ சொல்லுறனே அந்த நான்! நேற்றுப் பின்னேரம் பொழுது
படப் போல என்ர மனுசியும் தான் அங்க பூங்கா வீட்டத் தண்ணியள்ள வெண்டு போனது. ஆனா அங்க அந்த இடத்தில தண்ணியள்ளி அவள் கிணத்தடியால வெளிய வர, உங்களின்ர பெஞ்சாதி தன்னை நேர சந்திச்சும்
6.9emy.) O 149 O -

Page 83
ஏதோ யோசனையில தலையைக் கவுண்டு கொண்டுஅப்பிடியே ஒண்டையும் கவனிக்காம போனவவாம். என்ர மனுசி எண்டா எப்பிடி அவள் ஆள் எண்டுறியள்?அவளுக்கெண்டால் எலிக்காது கண்டியளோ ராஜன்.? அவள் படலையடியால உள்ள போன நேரம், பூங்கா சொன்னகதையும் இவளிண்ட காதில கொஞ்சம் அப்ப விழுந்ததாம். ஏதோ கூத்துப்பிரச்சினைக் கதையெண்டு, கேப்பமெண்டு அவள் கொஞ்சம் அதில நிண்டிருக்கிறாள். அவயள் எண்டா இவளை காணேல்ல. தன்ர பாட்டுக்கு பூங்கா நிண்டு அதில உங்கட மனுசிக்கு கதையளந்திருக்கிறாள். கழுக்காத்தான் வந்து கூத்திலயா ஆரியமாலாவுக்கு கலியாணம் கட்டினா கண்டிப்பா ரெண்டாம் கலியாணம்தான். முடிப்பாங்கள் எண்டு.நல்லா அவள் பூங்கா கதை அப்ப அவிட்டு விட்டிருக்கிறாள். அதைக்கேட்டு உங்கட மனுசி கிலிச்சுப் போய்த்தான் பிறகு உங்களோட உந்தக் கதையாக்கும் உதுஎல்லாம் அங்கால உள்ள மற்றவர் செய்த வேலைதான். தேவன் அண்ணாவியார் நல்லவர் எண்டுதான்ஊருக்க கதை! இது மற்றவர் செய்த வேலதான். அது எண்டா கண்டிப்பா உண்மையா இருக்கும். ஏனெண்டா அவற்றை தங்கச்சியார் தான் இவ 'பூங்கா எண்டவ! அதால அண்ணர் இப்பிடி ஒரு குழப்பம் பிடிச்சு விடு எண்டு சொல்லியிருப்பார்! அவவம் அப்ப அதைக் கேட்டுக் கொண்டு இப்பிடிக் கதை இவவுக்கு விட்டிருப்பா. உவ பூங்காதான் ராஜன் அண்ண அந்த பத்துப்பிள்ளைக் காறியின்ர ரெண்டு பிள்ளயளயும் அங்க இழுத்துப் போட்டது. இதெல்லாம் பொறாமை எரிஞ்சகுணம் தான் என்ன.?”
"அட அப்பிடியே நீங்கள் சொல்லுறியள் பாலா? அப்ப உதுதான் நடந்த உண்மையாயிருக்கும் போல என்ன.?”
"பின்ன என்ன? யார் சொல்லி அப்பிடி உங்கட மனுசியக் குழப்புறது. எண்டுறன்! அவதான் உந்தக் கதைய விட்டுருக்கிறா..! அவதான் உந்தப் புகைச்சல் உண்டு பண்ணினதுக்கெல்லாம் காரணம். உது ஒன்டும் பிரச்சனை பெரிசில்ல. எண்டாலும் இதயெல்லாம் நானோ இல்லாட்டி நீங்கள் எண்டு அப்பிடி வேற யாருமோ அங்க உங்கட மனுசிக்குப்போய்ச் சமாதானம் சொல்லேலாது. பூங்கா இப்பிடிக்கதைச்சது கிதைச்சது எண்டுமேன் அங்க வேற ஆரும் இந்தக் கதையை உங்கட மனுசியிட்ட கொண்டு போவான்.? அப்பிடி கதைச்சும் இந்தக் கதைக்கிற கதையால ஊருக்கயும் எங்களுக்கயும் பேந்து கரைச்சல் வரும் தானே.? சொல்லப்போனா நாங்களும் போய்த் தண்ணியள்ளுற இடம் பூங்காவின்ர வீடு தான்! நாங்கள் அதையும் குழப்பப் பிடாது. அதால இதுக்கு ஒரு நல்ல வழியொண்டு நான் இப்ப கண்டு பிடிச்சிருக்கிறன். அதுதான் எங்ளுக்கு இப்ப செய்ய வேண்டிய மூளைசாலியான ஒரு வேலை கண்டீரோ ராஜன் அண்ண.?”
பாலா சொல்ல அவன் சொல்வதைப் பொறுமையோடும் பொறுப் போடும், கவனமாக கேட்டான் ராஜன்.
O 150 O புதினான்களில் என் சந்திரன்

“சரி பாலா நீங்கள் சொல்லுறது எதுக்கும் நான் ஓம் பட்டுவாறன்..! அதால உங்களிட்ட இருக்கிற அந்த ஐடியாவை ஒருக்கா எனக்குச் சொல்லுங்களன்.?”
“ராஜன் அண்ண! இங்க எங்கட உத்தமன் வீட்டுத்திட்டத்தில இரைச்சலும் குழப்பமும் சண்டையும் போடுற குடும்பங்கள்தான் கணக்க இருக்கு. ஆனா சண்முகம் அண்ணையின்ர குடும்பம் மெளனம் தழைச் சோங்கிய சந்தோசமான ஒரு குடும்பம்! மரியாதை அவருக்கு எங்கயும் தான் இருக்கு. அவருக்கு நாங்கள் இந்த விசயத்தைச் சொன்னா, அவர் தன்ரை மனுசியையும் கூட்டிக்கொண்டு உங்கட வீட்டபோய் உங்கட மனுசியோட தன்ர குடும்பத்தோடாக் கதைச்சு எல்லாம் ஆறி அடங்க ஒரு வழி செய்து போடுவார் தானே?”
LIலா சொன்ன யோசனை மனம் குழம்பிப்போய்இருந்த ராஜனுக்கு தெளிந்த நீராக உடனே தெரிந்தது. இந்தக் தண்ணிரையே அள்ளிக்
குடிப்போம் என்றதாய் உடனே தனக்குள் அவன் ஒரு முடிவெடுத்துக் கொண்டான்.
“இது நல்ல ஐடியாதான்! இது திறம்தான்.” என்று பூரிப்புடனும் அவன் உடனே சொன்னான். "அப்ப நாங்க கடையைப் பூட்டுவம்! இப்பவே சண்முகம் அண்ணய நான் மட்டும் போய் பாக்கிறன்.” - என்று சொல்லியபடி இருந்த இருக்கை யிலிருந்து எழுந்து நின்று கொண்டான் பாலா.
“இப்பவேயா நீர் போகவேணுமெண்டுறீர் பாலா..?” “ம் இப்பவேதான்.” "கடையை மூடிப்போட்டு இப்ப என்ன அவசரமெண்டுறன்?”
"அவசரம் தான் அந்தந்தவேலய அந்தந்த நேரம் உடன செய்து போட வேணும் தானே ராஜன்.?
மரத்திலிருந்து அப்போது கிழே நிலத்தில் முறிந்து விழுந்த சின்னப் புளிப்பிஞ்சு ராஜனின் காலடிக்குப்பக்கத்தே விழுந்தது. மண் அதிலே பிரள வில்லை என்று ராஜனுக்குத் தெரிந்தது. அதை எடுத்து அவன் வாயில் வைத்துக் கடித்தான். கடித்தமுதல் கடியிலே பிஞ்சுப் புளிச்சுவை வாய் முழுக்க அவனுக்கு உமிழ் நீரை கொண்டு வந்தது. மிச்சத்துண்டையும்அவன் உடனே வாயில் போட்டுச்சப்பினான். இப்போது அவனுக்கு நன்றாக பசித்தீவிரம் வயிற்றில் பரவியது. பாலா கடையைச் சாத்தி மூடுகிற வேலையை கெதிகெதியாய் அவ்வேளை செய்து கொண்டிருந்தான்.
Pennಣ್ಯತಿ O 151 O

Page 84
சேர்த்துச் சேர்த்துச் சேமித்ததுபோல ஒவ்வொருநாளும் சிரமமாகப் பாடுபட்டு உருப்படியாகக் கொண்டுவந்து கொண்டிருக்கும் கூத்து ஒத்திகை, பொறிஞ்சு போற இடம் ஏதும் வந்தால் அந்த நேரம் தோள் கொடுத்ததுபோல
அதை சரி செய்துவிட, பொறுப்பாக யார் ஒருவராவது செயல்பட வேண்டும் தானே?
பாலா கடையைப் பூட்டிவிட்டுப் போய் சண்முகத்துக்கு சொன்ன ராஜனின் பிரச்சனையை சண்முகம் ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்து கேட்டார். சண்முகம் அடுத்தவர்க்காகவே வாழ்ந்து வருகிறவர் மாதிரியான குணமும் செயல்பாடும்கொண்டவர் அவருக்கு ராஜனின் வீட்டுப்பிரச்சினையை அறிந்து உடனே மனவருத்தமாகிவிட்டது. குடும்பத்திலுள்ள பெண்களுக்கு மனம் குழம்பிப்போய் இல்லக் கடமைகள் பாதிக்கப்பட்டால் அந்தக் குடும்பமே பிறகு எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துத் தீர வேண்டியதாய்ப் போய் விடும்? என்று தன் வாழ்க்கையிலிருந்து அனுபவங்களால் அவர் இதை உணர்ந்தவரும்தானே?
ராஜனின் குடும்பத்தில் இந்தக் கூத்துப்பழகுகிற விஷயத்தால் தான் இப்போது குழப்பமே உருவாகி இருக்கிறது என்று தெரிந்தவுடனே, இதிலே சம்பந்தப்பட்ட நான் தான் அங்கே அவர்கள் வீட்டில் போய் இந்தக் குழப்பத்தை உடனே சரி செய்துவிட வேண்டும் - என்ற நோக்கில் தன் மனைவியையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அன்று பின்னேரமே ராஜனின் வீட்டுக்கு வெளிக்கிட்டுப் போனார் சண்முகம்.
உடுத்திப் படுத்திச் சிறப்பாகவாய் வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் சண்முகத்தையும் அவர் மனைவியையும் கெளரி கண்டு
விட்டு முதலில் ஆச்சரியப்பட்டுப்போனாள். அவளுக்கு அதிலிருந்து மீள
கொஞ்சம் நேரம் பிடித்தது. அவளுக்கு அவர்கள் இருவரையும் தன்வீட்டு வாசலிலே கண்டதும் மழை முழுவதும் ஓய்ந்த மாதிரியும், மழைக்குப் பிறகாய் வரும் நிசப்தம் போன்றும் மனம் ஒருவித அமைதிப்பட்டது. இந்த விதமான வீட்டுச்சூழலில் அறைக்குள் தனிமையை விழுங்கிக் கொண்டதாய் அங்கிருந்த ராஜனும் அவர்களைக் கண்டதும் சுறுசுறுப்பு அடைந்து விட்டான்.
குடிசை வீட்டின் உள்ளே இருந்து தட்டிகட்டிப் போட்ட அந்த வாசலடிக்கு வரவென்ன வெகு தூரமா இருக்கும்? கெளரி உடனே அவர்களுக்கு அருகேயாய் வந்து "வாங்கோ உள்ள வாங்கோ அண்ணய் உள்ள வாங்கோ அக்கா..? - என்று சொல்லி மரியாதையாக அழைத்தாள். அவர்கள் உள்ளே வந்ததும் மேலே இளக்கயிற்றுத் தூக்கலில் சுருட்டிப் போட்டிருந்த பாயை இழுத்தெடுத்து உள் நிலத்தில் அவள் விரித்துப் போட்டாள்.
9 1920 புதினான்கஸ் தான் சந்திரன்
 

"அக்கா அண்ண இருங்கோ.?”
கெளரி சொல்ல, அதையே ராஜனும் பிறகு சொன்னான். சண்முகம் ராஜனை பார்த்தார். அவருக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. சண்முகத்தின் மனைவியும்கெளரியை பார்த்துச் சிரித்தாள்.
“என்ன தங்கச்சி எப்படி உங்கட புது வீடு' - என்று கேட்டாள்.
"இங்க வந்தம்! இப்பிடி இப்ப இருக்கிறம்.1 என்னதான் செய்யிறது அக்கா, அங்கயும் எங்கட வீடு இப்ப எப்பிடி இருக்கோ தெரியேல்ல.?”
"அதுதான் எங்கட ஆக்கள் முழுக்கலுக்குமான ஒரு பிரச்சனைதானே தங்கச்சி.?”
“இப்படியே போனா மனுசர் நாங்க வாழவே ஏலாத நிலைக்குப் போயிடும்போல இருக்கு என்னக்கா..?”
"அப்பிடி இல்லத் தங்கச்சி! எங்களுக்கு வாழ்க்கையில நம்பிக்கை வேணும். மனத்துணிவா நாங்க இருக்க வேணும் அல்லாட்டி இந்த வாழ்க்கையை நாங்கள் சீரா கொண்டு போகேலாது பிள்ள.'
அனுபவப்பட்ட முதிர்ச்சியோடு சண்முகத்தின் மனைவி சொன்னாள். இந்தக் கதையின் தூண்டலினால் கெளரிக்கு ஏற்பட்ட விளைவு என்ன என்பதை சண்முகம்கெளரியின் முகத்தில் அப்போது தேடிப் பார்த்தார். ஆனால் பலன் இல்லை. கெளரியும் சண்முகம் மனைவி சொன்ன கதைக்கு பகிர்ந்து கொள்ளக் கூடியதாய் ஒன்றும் கதைக்க வில்லை. அவள் தண்ணிப் பானையைத் தூக்கி அடுப்பில் வைத்தாள்.
“என்ன இப்ப செய்யப்போறிர் பிள்ள?”
சண்முகத்தின் மனைவி கேட்டாள்
"இல்லையக்கா தேத்தண்ணிபோட.!”
"ஐயோ வேணாமம்மா..!"
"பறவாயில்ல அக்கா.!”
“வேணாமம்மா வேணாம். இப்பத்தான் ராசாத்தி வீட்டில நாங்கள் குடிச்சுப்போட்டு வந்தனாங்கள் பிள்ள!”
“பறவாயில்ல யக்கா!”
"இல்லேப்பிள்ள அது வேணாம் பிள்ள..! ஆனா நாங்கள் இப்ப உம்மட்டயும் இங்கயும் வந்தது ஒரு முக்கிய மான விசயத்தக் கதைச்சுத்
தெரிஞ்சு அதுக்கொரு பரிகாரம் உமக்கு செய்து போட்டுப் போகப்பிள்ள..!"
“எனக்கு விளங்கேல்ல நீங்க சொல்லுறத அக்கா..?”
SPennಣ್ಯತಿ' O 153 O

Page 85
"ஆனா எங்களுக்கு உங்கட பிரச்சனை என்னெண்டு எல்லாம் தெரியும் பிள்ள!”
"அப்படி ஒண்டும் இல்லயக்கா.!”
"என்ன இல்லையெண்டுறீர் நீர்? பிள்ள அந்தத் தம்பி ராஜனும் எங்கட இடத்தில வந்து திறமையா நல்லா அந்தக்கூத்தில படிச்சுப் பழகிவாறார். அது வேற ஆருக்கு பிடிப்பில்லயோ, வஞ்சகமோ, அப்பிடி இப்பிடி கதைச்சு இப்ப உம்மைக் குழப்பிவிடப் பாக்குதுகள். சேவல் சண்டைக்குக் கத்திக் கட்டுகளைக் கட்டி விட்ட மாதிரி இங்க உள்ள ஊராக்கள் சிலதுகளிண்ட வேல உதுகள்தான். அது என்ன நூதனக் கதைகளோ எங்களுக்கும் உதுகளையெல்லாம் தெரியாது. என்ரை இவர் கூட முந்தி முந் தி கனதரம் உந்தக் காத்தவராயன் கூத்தில கழுக்காத்தானுக்குப் பாடி நடிச்சிருக்கிறார். எத்தினை தடவை இவர் ஆரியமாலாவா நடிச்சதுகளுக்கு தாலி கட்டியிருப்பார். அதால இவர் பொம்புளக் குழறுபடிக்கெல்லாம் போனவரோ.? இல்லயே பிள்ள..? எனக் கெண்டா உமக்கந்தக் கதை சொன்ன ஆக்களைநினைக்க நினைக்க எரிச்சல் எரிச்சலாத்தான் வருகுது. உண்ணான சொல்லுறன் அதுகளுக்கு பெரிய பொறாமையடி தங்கச்சி உதுகள் எல்லாம். அதுதான் வாயத்திறந்து இப்பிடி அப்பிடியெல்லாம் கூசாமச் சொல்லுதுகள். எங்கயோ ஒண்டு ரெண்டு ஆக்கள் அப்பிடி எப்பயோ செய்ததுகளுக்கு இந்தக் கூத்துப்ழகி இப்ப நடிக்கிறவயளப்பாத்து ஏன் குறைகிறை சொல்லுவான் என்னபிள்ள”
- என்று தன் கண்களின்பார்வையிலும் அவளை தைரியப்படுத்தின மாதிரி பார்த்துக்கொண்டு சொல்லவேண்டிய கதைகளை தெளிவாக அவளுக்குச்சொன்னாள் சண்முகத்தின் மனைவி.
ஒரு பெண்ணுக்கு உள்ள பிரச்சினையை இன்னொரு பெண்தான் அறிந்து அணுகிக் கதைத்து சிக்கல் தீர்க்க வேண்டும் என்ற அறிவில், சண்முகம் தன்மணைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு இவளவு நேரம் மெளனமாக இருந்தார். இப்போது சந்தேகம் ஓரளவு தீர்ந்து ராஜனின் மனைவி முகத்தில் மகிழ்வு அரும்பத் தொடங்கியிருக்கிறது என்று சண்முகத்துக்கும் பார்க்க விளங்கியது.
"தங்கச்சி நானும் ஒண்டு இந்தக் கூத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கு இந்தக் காத்தவராயன் கூத்து எண்டுறது. வேற இந்த பாரதம், இராமாயணம் மாதிரி பொழுது போக்குக்கெண்டும் உள்ளதா அப்பிடியெண்டு இல்ல. ஆனா இந்த காத்தவராயன் கூத்து கண்டியளோ அப்பிடிவேற அந்தகூத்துகள மாதிரி இல்லாம தெய்வீகமான ஒரு சூழலிலதான் ஆடப்பட்டு வருகுது.
கண்ணகி அம்மன் கோயில்கள் வழிய தான் இந்தக் கூத்தை
91540 புதினான்காம் தான் சந்திரன்

அதிகம் மேடையேற்றி செய்யிறது. கண்டியளோ..? எங்கட அங்க திருகோணமலை சல்லிச்சி அம்மன் கோயிலில தங்கச்சி இந்த மாரியம்மன் சின்னான் கதாபாத்திரங்கள் நடிக்கிறவயள் சில நேரம் உருவேறியும் கிடந்து ஆடுவினம் கண்டீரோ.? அப்பிடி பயபத்தியோடதான் இந்தக் கூத்து ஆரும் நடிக்கிறது பிள்ள..! இப்படி புனிதமான ஒரு தன்மை இந்தக் கூத்தில இருக்கு. அப்பிடி இந்தக் கூத்து நடத்துறதில நடிக்கிறதில தெய்வத்தால எவ்வளவு நன்மை ஊருக்க கிடைக்குமெண்டு ஒருக்கா பாருமன்.? இந்தக் கூத்து நடத்துறத ஒழுங்கா நாங்க செய்தா, மழை கூட நல்லா செழிக்க பெய்யும் தங்கச்சி. அதோட ஊருக்க ஆக்களுக்கு வெப்ப நோய்களும் வராது தங்கச்சி! இதைவிட யாவாரம் கூட சிறக்கவெண்டு சிலபேர் நேத்தி வைச்சு இதை செய்யினம். ஏன் வெளிநாட்டுப் பயணம்கூட சரிவருறத்துக்கு நேத்தி வைச்சு இந்தக் கூத்து நடத்தினம்.! அப்பிடி இந்தக் கூத்தை பயபத்தியோட செய்யிறதும் அம்மனுக்கு ஒரு வழிபாட்டு முறைதான் தங்கச்சி. இதால ஒரு கெடுதியுமே உங்களுக்கு வராது. அதால நீர் குழம்பி மனவருத்தப்படாதயும். ராஜனும் உங்கட பிள்ளையஞம் இதுக்க வந்து சிறப்பா இந்தக் கூத்தை நடத்திறதுக்கு உதவுகிறதில அம்மன்ர அருள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் பிள்ள. அதால உங்கட குடும்பமும் செழிச்சுத் தழைக்கிறமாதிரி வரும்.! இது எல்லாம் நான் சொல்லுறது கடவுளின்ர அந்த வழியில உண்மைபிள்ளை. இதை நீங்க நம்புங்கோ தங்கச்சி.?”
சிண்முகம் இப்படி விபரமாக எல்லாம் சொல்ல கெளரிக்கு
மனச்சுமை யெல்லாம் இறங்கி இலேசாக வந்து விட்டது மாதிரியாய் இருந்தது. பாரமாக இருந்து தன்னைப் பாதித்த அவஸ்தை இக்கணமே என்னை விட்டு விலகியது என்றதாய் அவள் நினைத்தாள்.
"மனிசனைப்போட்டுக் குத்தி வேதனைபளிப்பது இந்த வீண் சந்தேகங்கள்தானே! அதனாலே வேதனைதான் கடைசியில மிஞ்சும்! யாரோ சொன்ன கதையைக்கேட்டு கிறுக்குப்பிடிச்ச மாதிரி நான் ஏன் அலைவான்! இந்தா இப்படி நல்ல பண்பான மணிசர் இப்ப என்ரை வீட்டை மினைக்கட்டுத் தேடி வந்து நல்ல ஒரு வழியளைச் சொல்லுதுகள். அப்படியான இந்த மனுசரிண்ட அறிவுரையை நான் கேட்பேனா, அல்லாட்டி அந்தக் கேடு வைக்கிற பெம்புளயின்ர கதையை நான் கேட்பேனா? எத எனக்கு நல்லது எண்டுறன்? யாரிண்ட உதவியும் நல்ல உறவும் எனக்கு என்ர குடும்பத்துக்கு தேவை எண்டுறன்? அண்டைக்கு அந்தளவு குடுக்கைக்குள்ள இருந்ததேனைக் கொண்டு வந்து இந்த அண்ண, என்ர பிள்ளைக்கு புண் ஆற ஊத்திவிட்டத ஆர் ஒருவர் உடன எதையுமே எதிர்பார்க்காம செய்வினம் எண்டுறன்?”
அவளுக்கு இவைகளையெல்லாம் மனத்தில் நினைத்து எடை போட்டுப்பார்க்க ராகுவாய் வந்து அடி இருட்டாய் விழுங்கிய துன்பங்கள் எல்லாம் விலகியதுபோல இருந்தது.
8.Эьowavь О155 о

Page 86
"அண்ணா நீங்களும் அக்காவும் இப்பிடியா வீடுதேடிவந்து அன்பா ஆதரவா எல்லா உண்மையளையும் எனக்குச் சொல்லேக்க இனியும் நான் ஏன் இவரின்ட போக்குக்கு இடையூறா இருக்கப்போறன்.? எங்கட குடும்பத்துக்கு அந்த அம்மனிண்ட கிருபை கடாட்சம்கிடைச்சா சிறப்பான வாழ்வும் எங்களுக்கு அமையும்தானே.? இனிமேல் நான் எண்டா இந்த விசயத்தில நீங்க சொன்ன பிறகு எதுக்கும் குறுக்கா நிண்டு அவருக்கு இடைஞ்சல் பண்ணமாட்டன். எனக்கு இப்ப மனம் நல்ல அமைதியா சந்தோஷமாயிருக்கு. இவயின்ர விருப்பங்களுக்கு நான் இனி எப்பயும் முட்டுக்கட்டையா இருக்கவே நான் மாட்டனண்ண’ கெளரி அப்படி சொல்ல ராஜனுக்கு கைகால்களில் பிடித்த சேறு கழுவப்பட்டுப் போன திருத்தமான ஒரு சுகத்துக்கு வந்தது போல இருந்தது. தெய்வத்தின் தன்மையால் தான் இந்தச் சிக்கலெல்லாம் இலகுவில் ராஜன் குடும்பத்துக்கு விடுபட்டது என்பதாக, சண்முகமும் அவர் மனைவியும், அப்போது தங்களுக்குள் நினைத்துக் கொண்டார்கள். -
அவர்களுக்கு ராஜனினதும் கெளரியினதும் குடும்ப உறவினைக்
கட்டி எழுப்பிவிட்டதான மனத்திருப்தி இப்போது இருந்தது. அந்த மனச்சந்தோஷத்துடனே அவர்களும் பிறகு கலகலப்பாக இருந்து அவர்களுடன் கதைத்துவிட்டு விடை பெற்றுக்கொண்டு தங்கள் வீட்டுக்குப் பிறகு போய்ச் சேர்ந்தார்கள்.
ஆழ்ந்த மன அமைதியும் சந்தோஷமும் மனிதன் என்பவனுக்குக் கிடைப்பது அவரவர்தேடும் நல்ல பொழுது போக்கு வழிகளிலேதான்! பிறருடன் நல்ல பல விஷயங்களைக் கதைத்து அவற்றைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் ஊக்கம், உத்தமன் வீட்டுத்திட்டத்தில் குடியிருந்த அனேகருக்கு இந்த காத்தவராயன் கூத்துப்பழகும் ஒத்திகை மூலம் லாபம் பெறுகிற மாதிரியாய்க் கிடைத்திருந்தது.
ஒவ்வொருநாள் இரவும் ஒத்திகையில் தம்கதாபாத்திரங்களின் பாடல்களை படித்துப்படித்துக் கொண்டு வர அனேகம் நடிகர்களுக்கு அதுவெல்லாம் மனப் பதிவு ஆகியது. கவனித்தல் சார்ந்த கெட்டித்தனத்தால் சிலர் இரண்டு மூன்று கதாபாத்திரங்கள் படிக்கும் பாடல்களையும் தாம் ஒருவரே படிக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் அதை தெளிவுடன் அங்கே மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டினார்கள். அடித்தொண்டையில் பாடியவர்களுக்கு 'குரல் திறந்து இப்போது பாடுவது பரவாயில்லை” என்று கேட்பவரெல்லாம் உணர்வு ரீதியான வார்த்தைகளால் பாராட்டத்
தொடங்கிவிட்டார்கள்.
o 1560 புதினான்கஸ் தான் சந்திரன்

இப்படியே சண்முகம் வீட்டில்கூத்துப் பழகவென்று உத்தமன் வீட்டுத்திட்டத்திலுள்ள அனேகள் அங்கே போய் வாறார்கள். விழுங்கி விட்டது போல் தோன்றியது மாதிரி கூத்துப்பழகத் தொடங்கி மூன்றரை மாதமும் இப்போது கடந்து விட்டன. இன்னும் மேடையேற்றத்திற்கு பதினைந்து நாள்தான் கிடக்கு என்கிறமாதிரியும் ஒரு கணக்கு.
இப்போது ஒத்திகையிலே புத்தகமே விரிச்சுப் பார்க்கின்ற தில்லை. தன்ர தன்ர பாத்திரம் வர தான்தான் இறங்கி ஒரு சில பேர் ஒத்திகையில வடிவா படிக்கிறாங்கள். ஒத்திகையை அதிலே இருந்து பார்க்கிறவர்களுக்கு சினிமாப் படம் பார்த்த மாதிரி ஒழுங்கா வடிவா இப்ப கூத்துப் போகுது.
இதற்குள்ளே இன்று பின்னேர வேளைபோல தேவன் அண்ணாவியார், மிக மிகச்சந்தோஷமான ஒரு முக வெளிப்பாடோடு சண்முகம் வீட்டடிற்கு சயிக்கிளிலே வந்து இறங்கினார். சண்முகம் வீட்டுப்படலையடியில் அவர் வந்து நின்ற வேளையே சண்முகமும் அவரை அங்கு கண்டுவிட்டு விறுக்கென்று படலை அடிக்கு நடந்து போய் அவரை “வாங்கோ வாங்கோ’ - என்று கூறி வரவேற்றார்.
“முருகேசு அண்ணாவியார் ஐயாவும் இப்பவா இங்க இருக்கிறாரோ.?”
"ஒமோம் அவரும் இருக்கிறார். நீங்க வாங்கோ. வாங்கோ. வீட்டுக்குள்ள வாங்கோ.?”
"இல்லயுங்கோ நான் இன்னொரு நேரம் வாறன்! அப்ப இருந்து கிருந்து உங்களோடய வடிவாக் கதைச்சுக் கிதைச்சுட்டுப் போகலாம்! இப்ப எனக்கு அங்க சரியான வேலயள் கிடக்கு! அது கிடக்கட்டும், போகவுங்கோ இவர் அண்ணாவி ஐயாவை எங்கயுங்கோ இங்கினேக்கயாக் காணேல்ல.?”
"அவருங்கோ இங்க உதுக்க பக்கத்துக் கொட்டிலிலதான். ஏதும்
அங்க உள்ள இருந்து புத்தகம் ஏதும்இப்ப படிப்பார்போலக் கிடக்கு. நான் போய் அவரை ஒருக்கா கூடப்பிட்டுக்கொண்டு வாறன். அப்ப நீங்க உள்ள இருங்களன் அங்க வாங்களன் உள்ள வீட்டுக்க.?”
"ஐயோ முத்தத்தில இப்பிடி நல்லா நிப்பமுங்கோ! காத்தும்இங்கின வருகிது.”
"அப்ப கதிரை ஒண்டை இதில கொண்டந்து உங்களுக்குப் போட்டுவிடவோ..?
“என்னங்கோ நீங்களுங்கோ. நான் இப்பிடி நிக்கிறன் பாருங்கோ.?”
"சாச்சா இருங்கோ இதில நான் கதிரையை உள்ள இருந்து எடுத்துக் கொண்டாறன் அதில இருங்கோ. ராசமணி இங்கே ராசமணி.”
6.9emy) O 157 о

Page 87
என்று சண்முகம் தன் மனைவியை கூப்பிட்டுக்கொண்டு தாமத மில்லாமல் உடனே வீட்டுக்குள்ளே போனானர். அவர் திரும்பி பிறகாய் வெளியே வரும்பொது அவர் கையில் தூக்கிப் பிடித்தபடி ஒரு கதிரையும் வந்தது.
"இருங்கோ இப்பிடி இருங்கோ.!”
அவர் கதிரையை அதிலே வைத்து, தேவன்அண்ணாவியாருக்கு இதை சொல்லிவிட்டு, முருகேசு அண்ணாவியார்இருக்கும் கொட்டிலடிக்கு நடந்து அதற்குள்ளே போனார்.
6
இந்தச் சின்னக் கொட்டில் வீடென்றாலும் இது எனக்கு சலிப்பூட்டக் கூடியது இல்ல' - என்ற ஒரு சந்தோஷமான நிலைபரத்தில் இருந்து கொண்டு அண்ணாவியார் அங்கே கயிற்றுக் கட்டிலில் இருந்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். கண்ணும் கருத்தும் ஒழுங்காக இவருக்கு புத்தகம் படிப்பதிலேயே இருந்து கொண்டிருந்தது. சண்முகம்கொட்டிலுக்குள்ளே வந்ததை அவர் கவனிக்கவில்லை.
ஆனாலும், சண்முகம் ‘அண்ணாவியார்’ - என்று அவரை அழைத்தமாத்திரத்திலேயே புத்தகம் படிப்பதிலிருந்து அவருடைய புலன் என்பது உடனே எடுபட்டது.
“என்னதம்பி சண்முகம்?” அவர் விரித்து கையில் வைத்துக்
கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு சண்முகத்தைப் பார்த்துக்கேட்டார்.
"அவர் எங்கட, இவர் அண்ணாவியார் இங்கயா எங்கட வீட்ட வந்திருக்கிறார்”
'ஆர் எண்டுறியள்."
"அவர் தான் இங்கத்தைய கேப்பாப்புலம் தேவன் அண்ணாவியார்.”
"இங்க வந்திருக்கிறாரோ.?” “ஓம் உங்க எங்கட வீட்டு முத்தத்தடியில கதிரையைப் போட்டுவிட்டன் அதில அவர் இருக்கிறார்.” -
சண்முகம் இதை சொல்லக்கேட்டதும் உடனே கட்டிலாலிருந்து சட்டென்று எழுந்துவிட்டார் முருகேசர்.
"ஏன் வந்திருக்கிறார்.”
"அது தெரியேல்ல எனக்கு. ஆனா உங்களையும் வந்தவுடனே கேட்டார்! அது தான் நானும் உடன உங்களிட்ட வந்தனான்.'
“சரி வாங்கோ வாங்கோ அவர் ஆளோட நாங்களும் வடிவா கண்டு என்ன ஏதெண்டு எல்லாம் கதைப்பம்."
91580 புதினான்காம் தான் சந்திரன்

அவர்கள் இருவரும் கொட்டிலுக்குள்ளால் இருந்து வெளியே உடனே வந்து விட்டார்கள்.
அவர்கள் இருவரும் தனக்கு முன்னால் வரக்கண்டதும், தேவன் அண்ணாவியார் உடனே இருந்த கதிரையாலிருந்து எழுந்து கொண்டார்.
“வணக்கம்.!’
என்று, கை கூப்பி உடனே வணக்கம் சொன்னார். “வணக்கம் வணக்கம்! நீங்க இருங்கோ ஐயா!” என்று அண்ணாவியார், சண்முகம் அப்போது வணக்கம் சொல்வதை விட, பெரிய சத்தமாகதான் சொல்லிக்கொண்டு கை கூப்பி அவருக்கு வணக்கம் சொன்னார்.
"அப்ப உங்களயளல்லாம் இந்த வீட்டில வந்து நான் காணுறது எனக்குப் பெரிய சந்தோஷமாயிருக்கு.” தேவன் அண்ணாவி சொல்ல.
“அதவிட எங்களுக்குத் தான் ஆகப் பெரியசந்தோஷம்.! ஊருக்குள்ளயும் நீங்கதான் ஒரு மதிப்பும் மரியாதையுமான பெரிய மனுசன்..! இந்த வீட்டுத் திட்டத்தில கஷ்டப்பட்டுள்ள சனங்களுக்கும் நீங்க அரிய பெரிய உதவி யெல்லாம் செய்திருக்கிறீங்க. இந்த முகாம் தலைவர் வந்து உங்களிட்ட எது கேட்டாலும், இல்லையெண்டாம எவ்வளவோ உதவியள் இந்த வீட்டுத் திட்டத்தில உள்ளவயஞக்கெண்டு நீங்க பாத்தும் பாராம குடுத்திருக்கிறீங்க. அதால இந்த ஊரில உள்ள ஆக்கள் எல்லாரிலும் பார்க்க உங்களிலதான் நாங்கள் ஆகப்பெரிய மதிப்பும் வைச்சிருக்கிறம்.”
சண்முகம் இப்படிச் சொல்லி அவரைட் புகழ இனிப்பை எப்படி எனக்கு வேகமாய்க்குடிக்கிறது என்ற அளவில் மகிழ்ச்சியில் கிடந்து திண்டாடினார் தேவன் அண்ணாவி. "எண்டாலும் நீங்க உள்வளவு சொல்லி என்னயப்புகழுறியள்! அப்பிடி என்ன நான் செய்தது.? ஏதோ என்னால இயண்டத என்னய மாதிரி மற்றயமனுசரையும் நான் நெச்சுக் கொண்டு செய்தன்! இதெல்லாம் என்ன பெரிய உதவி? அப்பிடி பெரிசா ஒண்டும் இல்ல."
என்று மினுமினுப்பான கண்ணுடன் சண்முகத்தையும் முருகேசரையும் பார்த்துக்கொண்டு அவள் சொல்ல, "இருங்கோ! நீங்க இருங்கோ. கதிரையில இப்பிடி இருந்து கதையுங்கோ.!” - என்று சொன்னார் சண்முகம்.
“இல்ல நீங்க எல்லாம் நிக்கிறிங்க?" “பறவாயில்ல நாங்கள் என்ன..! நீங்க இருங்கோ நீங்க இருங்கோ.?”
என்று திருப்பித்திருப்பி அதையே சொன்னார் முருகேசர். தேவன்
அண்ணாவியாரும் அதற்குப் பிறகு கதிரையில் இருந்து கொண்டார். நரைத்திருந்தாலும் அவருடைய புருவம் திண்மையானது. நெற்றியை சுருக்கினார். நிமிர்ந்து சண்முகத்தைப் பார்த்தார்.
O 159 O فyyyصnnمرہ:69

Page 88
"இந்த ஊருக்குள்ள உத்தமன் வீட்டுத்திட்டத்தில உள்ள நீங்களும் இருக்கிறீங்க. நாங்களும் இந்த ஊர்க்காரரும் இருக்கிறம். இப்பவெண்டா சொல்லப்போனா, நீங்களும் எங்கள மாதிரி கேப்பாப்புலம் இடத்து இந்த ஊர்க்காரர்தான். அதால எங்களுக்கு கோப்தாபம் ஒண்டும் இருக்கவே கூடாது. ஏதோ எங்களுக்க ஏதும் பிழை இருந்தா நீங்க எங்கள மன்னிக்க வேணும்.” - என்று மனத்தெளிவுடன் அவர் சொல்ல.
"ஐயையோ இது என்ன கத.?”
என்று சண்முகம் உடனே சொன்னார்.
"இல்லயுங்கோ அப்பிடி இருக்கிறதாலதான் நானும் இப்பிடி சொன்னன். கூத்துப்பழகிறது விளையாட்டுப்போட்டிகள் நடத்துறது எண்டா ஊருக்க இப்பிடித்தான் சில பிரச்சனை குறைபாடுகள் போட்டி பொறாமைகள் வரும்.! அதையெல்லாம் ஒண்டும் நாங்கள் மனசில வைச்சக்கொள்ளக் கூடாது தானே?”
அண்ணாவி தேவன் இதை சொல்ல,
“எடட இதெல்லாம் எங்கயும் உலகத்தில நடக்கிறது தானே..! கூத்து முடிஞ்சா எல்லாமே பிறகு எடுபட்டுப்போகும். இதெல்லாம் என்னங்கோ பெரிய பிரச்சனை.?”
முருகேசர் இதை சொல்லி சமாளித்தார்.
“ஓம் ஓம் அது சரி பிரச்சனை இல்லத்தான். அதாலதான் நானும் உங்களத் தேடி இங்க நல்ல ஒரு நட்புறவாடு வந்தது. நாங்களும் நீங்க கூத்துப் பழகிற மாதிரித்தான் ஒத்திகையில பழகி வாறம். முன் ஏர்போனவழியே பின் ஏர் போகும் எண்ட மாதிரி, ரெண்டு பகுதியும் இந்தக் காத்தான் கூத்தத்தான் பழகிது. அது இந்த ஊருக்கயும் சரிவேற வெளி இடத்து ஊருக்கிளயும் சரி, இப்ப தெரிய வந்திட்டுது. எங்களுக்கெண்டா கூத்து மேடையேற்றமும் கிட்டவா வந்திட்டுது. நாளைக்கு எங்கட கூத்து வெள்ளுடுப்பு. நீங்களும் எல்லாம் வந்து பிற்பாட்டுப்படிச்சு எங்களயெல்லாம் உற்சாகப் படுத்தி விட வேணும்.”
தேவன் அண்ணாவி பண்பாக பதுமையாக இதை சொல்ல, முருகேசு அண்ணாவியார் 'ஆ' - என்று திறந்து கிடக்கும் 'கேற்’ மாதிரி தன் வாயை பிளந்து வைத்துக்கொண்டு ஆவலோடு அவர் சொல்வதை கேட்டார். சண்முகத்துக்கு தேவன் அண்ணாவியார் இப்படி சொல்ல காற்றுள்ள புல் வெளியில் தான் நடப்பது போல சந்தோஷமாயிருந்தது. முருகேசு அண்ணாவிக்கும் முகம் சுகமாக பளிச்சிட்டு மகிழ்ச்சிச் சிரிப்பு வந்தது.
“ஐய்யய்ய இதென்ன கதையுங்கோ நாங்க எல்லாரும் கட்டாயம் முழுப்பேரும் அங்கவா உங்கட வெள்ளுடுப்புக்கு வருவமுங்கோவருவம்.”
என்று தான் முதலில் முந்திக்கொண்டு, உடனே தேவன் அண்ணாவிக்கு
முருகேசு சொன்னார்.
01600 புதினான்காம் தான் சந்திரன்

"ஓ அப்பிடி நாங்கள் எல்லாம் கட்டாயம் வருவம். நீங்கள் இப்பிடி எங்கட வீட்ட வந்து கேட்டதே பெரிய ஒரு பண்புதான். ஆ - அதுக்கு நாங்கள் உங்களுக்கு என்னென்னவெல்லாம் செய்ய வேணும் பாருங்கோ?” சண்முகம் இதை சொல்லதேவன் அண்ணாவி கதிரைச்சட்டத்தில் முழங் கையை ஊன்றியபடி கைவிரல்களால் தன்வாயை பொத்தி மூடிக்கெண்டு சிரித்தார். "நன்றி நன்றி” - என்று தன் கையை விலக்கிக் கொண்டு இதை பிறகு அவர்களுக்கு அவர் சொன்னார்.
தேவன் அண்ணாவியின் காதுக்கருகாக ஒரு சின்ன கறுப்பு வண்டு, ரகசியம் சொல்ல வந்தது மாதிரி சத்தம் போட்டபடி பறந்து வந்தது. அது கிட்டவர தலையைச் சரித்துக்கொண்டு கையால் அதை அவள் தட்டி விட்டார். இந்நேரம் சண்முகத்தின் மனைவி ராசமணி முற்றத்திலிருந்த மூவருக்கும் தேநீர் கொண்டுவந்து அதைபரிமாறினாள். நிமிர்ந்து ஒலைக் கூரையைப் பார்த்தப்படி தம்ளரிலுள்ள தேநீரை வாயில்ஊற்றி குடித்து முடித்தார் தேவன்.
இதன் பிறகு சந்தோஷமாக சண்முகத்திடமும் முருகேசரிடமும் சொல்லிக்கொண்டு தேவன் அண்ணாவியார் சண்முகம் வீட்டாலிருந்து வெளிக்கிட்டார்.
"கட்டாயம் நீங்கள் எல்லாரும் நாளைக்கு மறக்காமல் அங்க எங்கட இடத்துக்கு வந்திடுங்கோஎன்று தேவன் அண்ணாவியார் கடைசியாக சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள். சண்முகத்திற்கும் முருகேசருக்கும், கனநேரமாய் நினைவில் அவர்களுக்கு, அது முத்துக்கள் ஒளியுமிழ்கின்ற வார்த்தைகளாய்ப் பளிச்சிட்டவாறே இருந்தன.
25
கேப்பாப்புலம் பாலர் பாடசாலை முற்றவெளியிலே, அன்றைய பொழுது பட்ட நேரம், தேவன்அண்ணாவியார் குழுவின் கூத்தின் வெள்ளுடுப்பு நடத்துவதற்கான காட்சி நிறைந்திருந்தது. உழவு இயந்திர பெட்டிகள் பொருத்தப்பட்ட மேடைமைப்பிலே, பின் அமைப்பில் பிரமாதமாக சலவை செய்யப்பட்ட மாதிரி உள்ள வெள்ளைச் சீலைகள் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தன. மேடையிலே மூன்று பெற்றோல் மாக்ஸ் ஒளியைப் பொழிந்து கொண்டிருந்தன.
அப்பன் பாட்டன் முற்பாட்டன் என்கிறமாதிரி கேப்பாப்புல முள்ள வாரிசுகளெல்லாம் அதிலே முற்றத்திலே உள்ள படங்கின் மேலே வந்து இருந்தார்கள். 'கூத்து வெள்ளுடுப்பு முடியுமட்டும் பொறுமையாக நாங்கள் இருந்து பார்ப்போம்' - என்கிற மாதிரியான முகங்களோடுதான் அதிலே இருந்து கொண்டு கூத்துத்துவக்கத்துக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.
ಸ್ಕಿ$ovಳ್ಳಾರಿ O 161 O

Page 89
‘எங்களுக்கு உரிமையுண்டு' என்று உதவிகள் எல்லாம் செய்யிற கடமை உணர்விலே உத்தமன் வீட்டுத்திட்டத்திலே கூத்துப் பழகிறவர்க ளெல்லாம் இங்கே வந்து, தேவன் அண்ணாவியார் நடத்தும் கூத்து வெள்ளுடுப்புக்கு உதவி ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்கள்.
முருகேசு அண்ணாவியாருக்கு அங்கே ஒரு பக்கத்தில் கதிரை போட்டு தேவன் அண்ணாவியார் மரியாதையாக அவரை இருக்கவிட்டிருந்தார். வெள்ளுடுப்பு என்றால் கூத்து முழுக்க அன்றைக்கு படித்து முடிக்க வேண்டும். நடிகர்களும் வெள்ளுடுப்பு அணிந்துதான் அன்றைக்கு நடித்தாக வேண்டும்.
இந்த விதத்திலே கூத்து பிறகு ஆரம்பித்தது. தேவன் அண்ணாவியார் முதலில் முதிர்வும் அழுத்தமுமான குரலிலே காப்பு படித்தார். கூத்துபிறகு
தொடங்கி நடிகர்கள் எல்லாருமே சவுண்டும் சத்தமுமாகத்தான் தத்தமது
கதாபாத்திரங்களின் பாடல்களை படித்தார்கள். குரல் வளை செத்தது மாதிரி இல்லாமல் எல்லாருமே வீரனைப்போலத்தான் பாட்டில் குரல் ஓங்க ஒருவரும் பின்வாங்கல் இல்லாத மாதிரியாகப் படித்தார்கள்.
அங்கே கூத்து வெள்ளுடுப்புக்கு மேளம் உடுக்கு எல்லாம் சண்முகம் தான் வாசித்தார். ஆர்மோனியத்தை தேவன் வாசித்தார் முருகேசர் பிற்பாட்டும் படித்தார். சில கட்டங்களில் உடுக்கு பேச வேண்டிய இடத்தில் உடுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார் சண்முகம், உடுக்கை அவர் வாசிக்கும் போது "விண் விண்” - என்று அதிலே எழுந்த தோல் ஒசை அதிர்வு, அங்குள்ள பார்வையாளர்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்தது. தாளம் தவறாத அந்த உடுக்கையின் ஒசை கேட்டு மகிழ்வில் நிறைவுற்று அவர்க ளெல்லாம் உற்சாகத்துடன் நிமிர்ந்தபடி இருந்தார்கள்.
“எனக்கு வீடு காணி, சொத்து, பிள்ளைகள் நல்லா அமைஞ்சது மாதிரி, நான் பழக்கி நடத்துற இந்தக் கூத்தும், பிழைகிளையஸ் ஏதும் வராமல் சிறப்பா நடக்க வேணும்.” - என்று அக்கறையாக எல்லாம் பார்த்து நடத்திக் கொண்டிருந்தார் தேவன் அண்ணாவியார்.
வெள்ளுடுப்பு என்று பார்ப்பதற்கு இல்லாமல் அசல் மேடையேற்றம் மாதிரியே, கூத்து காட்சிக்குக் காட்சி நகர்ந்து கொண்டிருந்தது. முகாம் ஆட்களுக்கெல்லாம், ரொட்டிச் சாப்பாடென்றும். குடிப்பவர்களுக்கு ஒழிவு மறைவாக கள்ளுப்பரிமாற்றமென்றும் அவர்களுக்கெல்லாம் இராப்போல நல்ல கவனிப்பும் நடந்து கொண்டிருந்தது. கூத்து நடந்து முடிய காலை ஆறு மணியாகிவிட்டது. உத்தமன் வீட்டுத்திட்டத்திலுள்ளவர்கள் பிறகு கூத்து முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததிலிருந்து ஒரே படுக்கைதான். கூத்துப் போய்ப்பார்த்ததிலே அடுத்த நாள் அவர்களுக்கும் ஒத்திகை நடக்கவில்லை. மறுநாள் இரவிலே தேவன் அண்ணாவியார் குழுவினரின் கூத்து ஒறிஜினலாய்
9 1920 புதினான்காம் தான் சந்திரன்

மேடையேற்றமாகியது. இதற்கும் முருகேசர் அண்ணாவியாரின் குழு, அங்கே போனது. அங்கே போனவர்கள் சும்மா அங்கே கையைக் கட்டிக் கொண்டவாறு நிற்கவில்லை. அவர்கள் அங்கே வேளைக்கே போனதிலிருந்து எல்லா உதவிகளையும் அவர்களுக்குச் செய்தார்கள். அதுக்கு இதுக்கென்று கயிறு போட்டுக்கட்டுவது, மேசை போட உதவுவது, என்று தங்களாலான முடியுமான உதவிகளையெல்லாம் கேட்டும்கேட்காமலுமே அவர்களுக்கு இவர்கள் செய்து கொடுத்தார்கள். கேப்பாப்புலம் ஊரவர்களின் கூத்து அன்றிரவு சிறப்பாகத்தான் நடந்து பிறகு முடிந்தது.
இன்றைய ராவு முழுவதும் கூத்திலே எல்லோரும் நன்றாக நித்திரை முழித்ததுதானே? - இதனாலே உத்தமன் வீட்டுத் திட்டத்திலுள்ள நடிகர்களெல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்தால் - அவரவர்கள் பாட்டுக்கு பகல் முழுக்கலுமாக நல்ல கிடையான நித்திரை.
அதனால் அடுத்த நாள் இரவு போலத்தான் சண்முகம் வீட்டிலே ஒத்திகைக்காக அவர்களெல்லாம் அங்கு வந்து ஒன்று கூடினார்கள். காத்தவராயன் கூத்திலே 'மாமா'- என்ற கதாபாத்திரம் உண்டு. தேவடியாள்வீட்டிலே அவருக்கு உள்ளது மாமா வேலை. அங்கேயுள்ள சதிர்க் குட்டிகளி இருவரை இந்தத் தாசி மாமாவிடம் கேட்டு விசாரிக்கிறார்கள் காத்தவராயனுமி, தொட்டியத்துச் சின்னானும்,
இந்தக்கட்டத்தை தேவன் பாட்டி தங்கள் கூத்திலே சினிமாமெட்டிலே சில வசனங்களைப் பாட்டை மாற்றி விட்டிருந்தார்கள். நடந்து முடிந்த அவர்களது கூத்திலே பார்வையாளர்களின் கவனத்தையெல்லாம் இம்மாதிரி மாற்றம் செய்ததில் கவனத்தை ஈர்த்து வரவேற்பும் பெற்றிருந்தார்கள்.
இது விதம் அவர்கள் செய்தது மற்றவர்களின் மனதைக் கவர்ந்தது போல, முருகேசு அண்ணாவியாரின் மனதையும் கவர்ந்து இழுத்ததுதான். ஆனாலும் இது உண்மையென்றாலும், முருகேசர் அதை இங்கே வந்தும், இப்போது கூத்து ஒத்திகை தொடங்கியும் கூட யாருக்கும் அதைப் பற்றி ஒரு சொல்லும் கதைக்கவில்லை. அண்ணாவிக்கு அண்ணாவி இந்த விசயத்தில் போட்டி பொறாமை இருப்பது என்பது சகஜம் தானே? அதுவும் ஒரே நாட்டுக் கூத்தை இருவரும் ஓரிடத்தில் அடுத்தடுத்து செய்யப் போவதென்றால், போட்டியும் பொறாமையும் மனதில் பொங்கிக் கொண்டுதானே இருக்கும்.
முருகேசு அண்ணாவியார் இன்றைய கூத்து ஒத்திகை தொடங்க முதல், நடந்து முடிந்த தேவன் அண்ணாவியாரின் கூத்தைப்பற்றி குறைநிறை சொல்லவென்று அப்போது வெளிக்கிட்டார்.
“தேவன் அண்ணாவி இப்பிடி, இந்தக் கட்டத்தில, அந்த மெட்டில, படிச்சுக்குடுத்த நடை பெரிசா எழுப்பமில்ல. அந்த சின்னானைக் காத்தான்
6.9emy.) О 163 O

Page 90
ஆபத்தில நிண்டு கூப்பிடேக்க அவன் என்ன அப்பிடி செத்த சவம் மாதிரி யெல்லே நிண்டு கொண்டிருக்கிறான். அதே கட்டத்தை இங்க பாருங்க நான் இப்ப செய்து காட்டுறன்.”
என்று அவர் சொன்ன அந்தக் கணத்திலேயே, ஒப்பனைகளற்ற அவர் முகத்தில் அபூர்வ மினுமினுப்புத்தென்பட்டது. அவரது முரட்டுக்கரு விழியும் அழகை கொளுத்தியதுமாதிரி ஒளிர்ந்தது. முருகேசு அண்ணாவியார் வயசாளிதான்! ஆனாலும் கூத்து நடிப்பிலே சக்கரம்மாதிரி ஆள் குதித்துக் காட்டி சுற்றி சுற்றி விளையாடுவார். ஆளிலே எவரேஸ்ட்டாக பார்க்கும் ஒரு பார்வையும் ஒரு கம்பீரமும் நடிக்கும் வேளையிலே எப்போதுமே இருக்கும்.
இப்போ சின்னான் கதாபாத்திரத்தை தான் நடித்து, மற்றவ ரெல்லாம் அதை பார்ப்பதுக்குக் காட்டுவதற்காக, வாள் கையில் இல்லாமலே ஒரு கையை இடுப்பில் அவர் அப்போது வைத்துக் கொண்டார். மறு கையை நீட்டி வாள் சுமக்கும் கையாக அதை நீட்டிக்கொண்டு “ஆபத்து வந்ததென்ன அண்ணாவே சொல்லும், என்னை அவசரமாய் அழைத்ததென்ன அண்ணாவே சொல்லும்.”
என்று அவர் அப்படி அங்கே ஒத்திகையில் உள்ளவர்களுக்கு செய்து காட்ட, இதுதான் தக்க தருணமென்றதாய் நடிகர்மாரெல்லாம் அவரைக் கொப்பிலே ஏற்றி விடும் அளவுக்கு உடனே "ஊ ஊ' - என்றதாய் விசிலும் அடித்து தம் கைகளையும் தட்டி ஆர்ப்பரித்தார்கள்.
இதனால் முருகேசு அண்ணாவியாருக்கு அன்றைய கூத்துப் பழக்கத்திலே மனம் நல்ல குளிர்மையாகிவிட்டது. அந்தக் குளிர்மை உணர்விலே பிறகு அவர் ஒத்திகை நடக்கும்போது பெடியள் மறந்ததையும் பெரிசு பண்ணாமல் பாட்டெடுத்துக் கொடுத்தார்.
முன்னமெல்லாம் அவர் ஒத்திகை நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து கொண்டு கூத்து படிக்கிற சில நடிகர்மார்களுக்கு ஒரே கிழி "இவங்கள வைச்சுக் கொண்டு நான் எப்பிடிக் கூத்துப் பழக்கிறது. எனக்குள்ள பேரும் இவங்களால கெட்டு. என்ர மானம் மரியாதையும் காத்தில பறந்ததாப்போகப் போகுது. ஒவ்வொரு நாளும் இந்த கூத்துப் பழக்கிற ஒத்திகைக்கு வாற இவங்களுக்கு நான் திரும்பத்திரும்ப சொல்லிச் சொல்லியும் குடுக்க வேணுமோ..?” என்று அவர் தன் பல்லினிலும் மென்றபடி ஒரே பேச்சு.
ஆனால் இன்று கூத்து பழகிறவர்களெல்லாம் இத்தனை சுவையாக அவரை எதிர் பாராத உயரத்துக்குத் தூக்கி விட்டது போல அவரை புளுகடையச் செய்து விட்டதால், நீண்ட அந்த ஒத்திகை நேரமெல்லாம் ஒரு கடுகடுப்புக் கூட தன்னிடத்தில் இல்லாது நடிகர்களுடன் குளிர்மையான ஒரு சந்தோஷத்தோடேயே ஒத்திகை நேரம், நேரத்தை அவர் போக்கிக் கொண்டிருந்தார்.
01640 புதினான்கஸ் தான் சந்திரன்
 

ஒரு கலைஞனின் மனதுக்கு உற்சாகமும் சந்தோஷமும் தரவல்லது மற்றவர்கள் அவன் கலைத்திறமையைப் பார்த்து பாராட்டுவதும் புகழ்வதுமான செய்கைகளால்தானே? முருகேசு அண்ணாவியாரும் சிறந்த நாடகக் கலைஞர் தானே? அதனால் இந்த விஷயத்தில் அவரும் விதி விலக்கானவரா என்ன?
அதனால் தேன் குடித்து மயங்கிய வண்டு போல அவரும் தனக்குக் கிடைத்த பாராட்டுதலிலே கொஞ்சம் நேரம் அப்படியே கிறுங்கிப்போன நிலையிலேதான் இருந்து கொண்டிருந்தார். ஒத்திகை நிறைவு பெற்றுச் சாப்பிட்டு விட்டு இரவு நித்திரை கொள்ளும் போது கூட, தன் பொம்மைகளை துணைவைத்துக்கொண்டு தூங்கும் ஒரு சிறு பிள்ளைபோல அவரும் இன்று இரவு தனக்கு ஒத்திகை நேரத்தில் கிடைத்த பாராட்டுதல்களை நினைவிலே வைத்துக் கட்டித் தழுவிக்கொண்டு சுகமான தான ஒரு நித்திரை கொண்டார்.
26
5Tத்தவராயன் கூத்தை இங்கே கேப்பாபுலம் அகதிமுகாமில் உள்ளவர்களுக்குப் பழக்கி மேடையேற்றும் கடைசிக்கட்டத்துக்கு கொண்டு வந்து விட்டேன் என்று நினைத்ததில் முருகேசு அண்ணாவியாருக்கு இன்றைக்கென்றால் மனத்தினுள்ளே ஒரு தனித்ததான சுகம்! தான் பெற்ற குழந்தையின் பிஞ்சுக்கால் குருத்தில் கை நீட்டி ஒரு தாய் ஸ்பரிக்கும்போது மெல்லிய பூக்களை தொட்டாப்போல அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்குமே, அப்படியான ஒரு சந்தோஷம்தான் இன்று அண்ணாவியாருக்கும்.
நடிகர்களுக்கோவென்றால் தாம் பழகுகின்ற ஒத்திகை நாட்களுடன் இவ்வளவு காலம்போனதே தெரியாமல் தான் நாட்களை சந்தோஷமாகக் கடத்தியிருந்தார்கள். சண்முகம் வீட்டு முற்றத்தில் நாளைக்கு நடக்கப் போகும் வெள்ளுடுப்புக்கென்று கூட்டம் எல்லோருக்குமாக இரவு ஒழுங்குபண்ணப் பட்டிருந்தது.
கூத்துமேடையேற்றத்துக்கான வேறு ஆயத்தங்களை இங்கு கதைப் பதற்கு முன்னாலே அண்ணாவி முருகேசனார் அவற்றுக்கெல்லாம் தான் முந்திக்கொண்டு கூட்டம் தொடங்கியநேரம் தன் பிரச்சனையை அங்கு கதைக்க வெளிக்கிட்டார். அண்ணாவி முருகேசனார் முன்பு இதிலெல்லாம் நன்கு அனுபவப்பட்டவர் தான். கூத்து நடத்துகிற பொறுப்பானவர்களுக்கு பணச்சிக்கல் என்பது கையைக் கடித்தமாதிரித்தான் ஒரு தாக்கம் வரும். தனிப்பட்ட முறையில் தன்கையால் இருந்தும் பணத்தைப் போட்டுக் கொடுக்கிற நிலைமை அவர்களுக்குக் கட்டாயம் பிறகு உருவாகும்.
இதையெல்லாம் தன் கருத்தில் கொண்டுதான் அண்ணாவியார் இந்நேரம் தன் பணவிஷயத்தில் உஷாரடைந்ததாய் இருந்தார். 'கூத்து
கிருெளிwம் O 165 O

Page 91
நடந்து முடிஞ்சவுடன, சீன் அவுக்கிற கையோட அதைக் கொண்டந்தவன் தன்ரை கையில உடன தான் போட்ட மேக்கப்புக்கும் உடுப்புக்கும் அதுக்கு மிதுக்கு மெண்டு காசை வாங்கிப்போடுவான், பீக்கள், மைக் செட், லைட் என்ஜின் காரனும், தன்ர வேல முடிஞ்சு வயர்வலுப்பும் பெட்டி குழாயஸ்துக்கி வைச்சவுடன, பேசின காசைப்புடுங்கிப் போடுவான்! இப்பிடிக் கூத்துப் போட்ட மேடையால இருந்து கீழே இறங்க முன்னமே அவங்கள் தங்கட தங்கட பிரச்சனையை முடிச்சுக் காசைக் கையில வாங்கிவிடுவாங்கள். ஆனால் இந்தக் கூத்தைக் கஷ்டப்பட்டுப் பழக்குகிற அண்ணாவிமார்களுக்கு, எல்லாம் நடந்து முடிந்தவுடனே ஏதோ கையை விரிச்சு விடுகிற பழக்கம் அங்கு இங்கு என்றதாய்ச்சில இடங்களில உண்டுதான்! இந்த விசயத்தில அண்ணா வியாரும் சில இடங்களில அனுபவப்பட்டவர்தான்! ஐம்பது அறுபது கூத்துக்கள் போட்டவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? சண்முகத்துக்கும் கூத்து முடிந்த பிறகு இந்தப் பொறுப்பு தன் தலையிலே பொறியப்படாது என்ற நோக்கம் இருந்தது. இந்த விடயத்தை அண்ணாவியாருக்கு ஞாபகப் படுத்தி "நீங்கள் இந்தக் கதையை இண்டைக்குக் கதைக்கவா முந்தீட்டி ங்கோ' - என்று சொல்லிஐடியா கொடுத்தவரும் அவர்தான். அதனால் “தனக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது" - என்ற மாதிரித்தான் மெளனமாக இந்த நேரம் அங்கே இருந்தார் சண்முகம்.
அண்ணாவியார் தான் கூத்துப்பழகின நடிகர்மாருக்கு, இந்நேரம் கண்டன் றைட்டான ஒரு கதையை விட்டார்.
"இங்க எல்லாருக்கும் கட்டாயமா வெளிப்படையா இப்ப ஒண்ட நான் சொல்ல வேண்டியிருக்கு. இவளவு நாள் நான் இந்த காத்தவராயன் கூத்தை நல்லா உங்களுக்குப் பழக்கியெல்லாம் முடிஞ்சுது. கூத்து இப்ப உங்களுக்கெல்லாம்படிக்கிற நல்ல பழக்கத்திலயும் வந்திட்டுது. சரி நான் இப்ப என்ர கதைக்கு வாறனே? நாளைக்கு கூத்தின்ர வெள்ளுடுப்பு நடக்கப் போகுது! அதுமுடிஞ்சு அடுத்த நாளுக்கு அடுத்தநாள் ஒறிஜினல் கூத்து.! ஆனா அது முடிஞ்சா மேடையாலயெல்லாம் நீங்க இறங்கி ஆளாளுக்கு ஒடீடுவீங்கள். அதால எனக்கு நீங்க பேசின காசை இப்பவா நீங்க எனக்கு வையுங்கோ..? அதுதானே முறை.?”
என்று அண்ணாவியார் தனக்குள்ளதான இந்த நியாயத்தோடு இதை அவர்களுக்கு சொன்னார். ஆனால் அங்கே உள்ள நடிகர்மார்களுக்கு அவர் சொன்னதைக் கேட்டகவும் ஆத்திரம் சடசடத்து எழும்பிவிட்டது. அவர்களெல்லாம் அண்ணாவியாரின் சொல்வரிகளால் மனதில் கீறல்விழ குழம்பிவிட்டார்கள்.
"அப்ப நீங்க இந்தக் கதையை எங்களில ஒரு நம்பிக்கையுமே இல்லாத மாதிரிச் சொல்லுறீங்க என்ன..? நீங்க கதைச்ச உந்தக்கதைக்கு

எதிரா நாங்களும் ஒரு நியாயத்த இப்ப உங்களுக்குச் சொல்லலாம் தானே.? அதென்னெண்டா நாங்கள் உங்களுக்கு காசை இப்பவாத் தந்து நீங்கள் அத வாங்கிக் கொண்டு ராவோடயா ராராவா பிறகு எங்கயும் பாத்து ஒடீட்டா நாங்கள் பிறகு ஆரை வைச்சுக் கூத்துப்போடுறது.'
என்று ஜெயா அடித்தமாதிரி ஒரு கதை முறைத்துக்கொண்டு அண்ணாவியாருக்குச் சொன்னான். மடைகளின் வழியாக தண்ணிர் குபு குபு - வென்று பாய்ந்தது மாதிரி அங்கு பல பேரினதும் எதிர்ப்புக் குரல்கள் பிறகு ஒன்றாக அவர்கள் வாய்களிலிருந்தும் வெளிப்பாய்ந்தன.
"அதுதானே, அதுத்தானே! அப்பிடியும் எங்களுக்கு நடந்திட்டா?” என்று நாற்று நடவு நட்டது போல அவர்கள் ஆளுக்காள் சொல்லத் தொடங்கினார்கள்.
ஆனால் சயிக்கிள் கடை பாலாவுக்கு இப்படி அவர்கள் சொல்வ தெல்லாம் கேட்டு மனதுக்குப் பொறுக்க முடியவில்லை.
அதனாலே கீழே இருந்தவன் உடனே எழும்பி நின்று கொண்டான்.
“இங்க பாருங்க? இந்தக் கதையெல்லாம் நாங்க இந்த இறுதிக் கட்டத்தில வந்து கதைக்கிறது. ஞாயமில்ல. அண்ணாவியார் ஐயாவுக்கு நாங்க எல்லாரும் கூத்துப்பழகினதுக்கு அந்தக் காசைக் குடுக்கத்தானே வேணும்.? அதை நாங்க அவருக்கு அப்ப குடுத்தாலென்ன, இப்ப குடுத்தா லென்ன..? எப்பிடியும் நாங்க அதைக் குடுக்கத்தானே வேணும்.? ஆனாலும் இந்தக் காசு விஷயத்திலயும் வேற உள்ள மற்றப் பிரச்சனைகளையும் பார்த்து எங்களுக்கும் பாதிப்பு வராம அண்ணா வியாருக்கும் பாதிப்பு வராம இப்பிடி ஒரு வழி செய்யலாம்! அதென் னெண்டா..!"
சொல்லிவிட்டு பாலா தன் கீழ் உதட்டை வாய்க்குள் மடித்து வைத்துக் கொண்டு ஒருகணம் யோசித்தான். அப்போது அங்குள்ள எல்லோரும் அவன் முகத்தையே பார்த்தார்கள். “சரி உன்ர அந்த யோசனையையும் சொல்லன் பாலா கேப்பம?’ என்று சண்முகம் உடனே சொன்னார். "அதை இப்படியும் செய்யலாம் தானே அண்ண.? அது எப்பிடியெண்டா..? எங்கட இவர் ராஜன் அண்ணாவிட்ட எங்கட காசுகளை இப்பவே குடுத்தாலென்ன..? அவர் பிறகு அண்ணாவியாரிட்ட அதக் குடுக்கட்டுமே..? எங்களுக்கும் அண்ணாவியாருக்கும் இடையில ତ୍ର ଓ பொது ஆளா இவர் இருக்கட்டுமே..? இந்தா இப்பவே நான் அவரிட்ட குடுக்கிறன் என்ரை ஐநூறை.!”
உடனே சட்டை பொக்கற்றில் கைவிட்டு ஐநூறு ரூபாய் காசை எடுத்து அவன் ராஜனிடம் நீட்டினான்
"இதென்ன பாலா?”
“பிடியுங்கோ ராஜன்.?” பாலா சொல்ல
ήδρωανιανήγό ο 167 o

Page 92
“ஓம் தம்பி நீங்க வாங்குங்க காசை' என்று சண்முகமும் சொல்லிவிட்டார்.
சண்முகம் அப்பிடி சொல்ல ராஜன் உடனே பாலாவிடமிருந்து அந்தக் காசை தான் வாங்கிக் கொண்டான். அதைத்தான் வாங்கிய பிறகு, பிறகாலே அவன் திரும்பிப் பார்த்தான். அங்கே பின்பக்கம் அந்த இடத்தில் பெண்கள் ஒரு வரிசையில் தனியே இருந்தார்கள், நடிகர்களின் தங்கை, தமக்கை,மனைவி, என்று இருந்தவர்கள் குழாமிலே ராஜனின் மனைவி கெளரியும் இன்றைக்கென்று அதிலே வந்து இருந்தாள். ராஜன் உடனே தன் மனைவியை.
"இங்க வாரும் கெளரி ஒருக்கா..? என்று கூப்பிட்டான். அவள் உடனே அவனுக்குப்பக்கத்திலேவர,
"இங்க நீர் உடன வீட்ட போய் எனக்கும் தம்பிக்குமா ஆயிரம் ரூபா காசும். ஒரு கொப்பியும் உடன எடுத்துக்கொண்டு வாரும்.”
- என்று சொன்னான். கெளரி கணவன் இவ்வாறு சொல்ல "ஓம்" என்று அதைக் கேட்டுக் கொண்டு தன் வீட்டுக்கு உடனே போய் விட்டாள். அங்கே கூத்திலே சம்பந்தப்பட்ட நடிகர்களாயிருந்த எல்லாரும் ராஜனின்மனைவி காசு எடுத்துக் கொண்டுவர வீட்டவாய்ப் போக, தாங்களும் தங்கள் மனைவி பிள்ளைகளை காசு எடுத்து வரவென்று தங்கள் வீட்டுக்குப் போய் வரும்படியாக அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார்கள்.
அண்ணாவியாருக்கு இப்போது அங்கே நடந்து கொண்டிருந்த அலுவல்களைப்பார்க்க தென்னை மரத்தின் காம்புக் கவட்டில் பூத்தொகுதி தோன்றியது போன்ற செழிப்பானதோர் சந்தோஷம் முகத்தில் வெளிப்பட்டிருந்தது.
"இந்த மாதிரி செய்யிறது அண்ணாவியார் உங்களுக்கு இது விதம் விருப்பம் தானே.? திருப்திதானே உங்களுக்கு.?”
என்று சண்முகம் அண்ணாவியாரைப்பார்த்து இந்த இடை நேரத்தில் (885 LTT.
'வலு திருப்தி தம்பி.! உப்பிடி செய்யிறது எல்லாருக்கும் நல்லதுதானே தம்பி.!”
என்று அவர் சண்முகம் கேட்டதுக்கு பதிலிறுத்தார். அங்கே பணம் எல்லாரும் கொண்டு வந்ததன் பிறகு ராஜன் கொப்பியிலே பெயர் எழுதி பணவரவை எழுதினான். ஆனால் அவன் வாங்கின மொத்தக் காசை தன் கையிலே பிறகு வைத்துக் கொண்டிருக்கவில்லை.
"இந்த வாங்கின காசில பத்தாயிரத்தை அண்ணாவியாரிண்ட கையில இப்ப கொடுத்தா என்ன அண்ண.?”
91680 புதினான்காம் தான் சந்திரன்

என்று சண்முகத்தை அவன்கேட்டான்.
"ஓ குடுக்கலாம் தம்பி.! எண்டாலும் எல்லாரையும் ஒருக்கா, நாங்க கேட்டும் விடுவமே தம்பி.?”
சண்முகம் இதை ராஜனுக்குச் சொல்லி விட்டு முற்றத்தில் இருந்த எல்லோரையும் ஒரு முறை அங்கு மிங்குமாக பார்த்தார்.
"இந்தச் சேர்ந்த காசில பத்தாயிரம் ரூபாவை அண்ணாவியாரிட்ட குடுக்க உங்களுக்கும் இது சம்மதம்தானா சொல்லுங்கோ.?” - என்று (835'LITs.
அவர் கேட்கவும், பாதிப்பேர் என்று இல்லாமல் முழு ஆட்களுமே அவர் கேட்டதுக்கு சம்மதம் என்றதாய்ச் சொன்னார்கள்.
ராஜன் அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் பத்தாயிரம் ரூபாவை எண்ணி சண்முகத்தின் கையில் கொடுத்தான். சண்முகத்தார் அதை வாங்கி அண்ணாவியாரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தார்.
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். அண்ணாவியாருக்கும் காசை கையில் வாங்கிய உடனே மனத்தில் குந்தியிருந்த பெரிய கவலைக் கல்லானது இறுக்கம் தளர்ந்து பறந்த மாதிரியாகி விட்டது.
இப்போ மிச்சமிருந்த பத்தாயிரம் ரூபாவை கையில் வைத்துக் கொண்டு யோசித்தான் ராஜன்.
"பாலாவும் இன்னும் ஜெயா, பத்மன், சிவா, சூரி, மற்றவர் எல்லாரும் இருக்கிறவயள் இதை ஒருக்கா நான் சொல்லுறதக் கேளுங்கோ. அது என்னெண்டா. இனி மிச்சமுள்ள இந்தப் பத்தாயிரம் ரூபாவை நான் ஏன் பொறுப்பா கையில வைச்சிருப்பான். நான் ஏதோ இந்தக் கூத்து நடத்திற இடத்தில இடையில வந்து சேந்தன்! அது மாதிரி போறன். ஆனா இந்தக் கூத்து நடத்திற விசயத்தில ஒரு இணைப்பாளரா எங்களுக்க இருந்து செயல்படுறவர் எங்கட சண்முகம் அண்ணாதானே.? அதால மிச்சம் இந்த பத்தாயிரம் ரூபாவை நான் சண்முகம் அண்ணரிட்ட உங்கள் எல்லாரிண்ட கண்ணுக்கு முன்னாலயா நான் குடுக்கலாம்தானே?”
என்று அவன் தனக்கு அருகாமையிலுள்ள இன்னும் பலரையும் பார்த்துக்கொண்டு கேட்டான்.
"ஓ குடுக்கலாம் ராஜன் அண்ண.1 அவர் சண்முகமண்ணை மிச்சத்தை வைச்சிருந்து கூத்து முடிய அண்ணாவியாரிட்ட குடுக்கட்டுமே..?”
என்று உடனே தன் அபிப்பிராயத்தை குளுமையுடன் சொல்லி விட்டான் பாலா. பாலா அப்படி சொன்னதற்கு எல்லோருக்கும் அங்கே அது தமக்கும் சம்மதமானதொன்றாகவே முகவெளிப்பாட்டில் காண்பித்தனர்.
6.9emy.) O 169 O.

Page 93
“சண்முகமண்ண அதுதான் நல்லம் நீங்களே காசை வாங்கிக் கொள்ளுங்கோ.?”
என்று ஜெயாவும் சண்முகத்துக்கு தன்முகம் காட்டிச் சொல்லி விட்டான்.
சண்முகமும் இதற்குப் பிறகு ராஜனிடமிருந்து அந்தப் பணத்தையும் எழுதிய ஆட்களின் பெயர்த் துண்டையும் வாங்கிக் கொண்டார்.
“சரி கடைசியில எல்லாப் பொறுப்பையும் என்ர தலையில தான் சுமத்தி விட்டிட்டீங்க” என்று அவள் சொல்லிவிட்டு சிரித்தார். அந்தச் சிரிப்போடு சண்முகம் பிறகு சொன்னார்.
“இவ்வளவு மட்டுமில்ல இன்னும் சில முக்கியமான விசயம் இங்க நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாய் இருக்கு..! அது என்னெண்டா, கூத்துக்கான வெள்ளுடுப்பு நாளைக்கு நாங்கள் நடத்த வேணும். அது எங்கள் எல்லாருக்குமா தெரியும் தானே.? அதால நீங்க இப்பவே எல்லாருமா முடிவெடுத்துக் கொள்ளுங்கோ. நாளைக்கு நாங்க வெள்ளுடுப்பு நடத்திறதெண்டா அது நடக்கிற அந்த இடத்த ஒரு செடிபூண்டு இல்லாம
செருக்கிக் கிருக்கி நாங்க துப்பரவாக்கவேணும். சனம் வந்து இருந்து
அதைப்பாக்குங்கள் தானே.? அதால சனம் வந்து இருக்கிற இடம் நல்லா முள்முரடு இல்லாமத் துப்பரவா இருக்க வேணும்தானே..? அதால நாங்கள் எல்லாரும் சேந்து கூட நாடத்தான் அதயெல்லாம் செய்ய வேண்டிக்கிடக்கு..! அடுத்தது மேடை போட வேண்டிக்கிடக்கு! இதுக்கெல்லாம் இனி ஆர்காசு தாறது.? எண்டாலும் எங்களுக்கு இந்த விசயத்தில பிரச்சனையில்லை.! எங்களுக்கு இங்க திருகோணமலை அகதிகளுக்கான காப்பகம் மூங்கிலாறில இருக்கு அவயலிட்ட நாங்கள் இப்பிடி போய்ச் சொன்னமெண்டா அவங்கள் உடன றைக்டர் பெட்டி அது இது எண்டெல்லாம் தந்து உதவுவாங்கள். இது கதைக்க எங்கட உத்தமன் வீட்டுதிட்டத்தில இருந்து ரெண்டு மூண்டுபேர் காலேலயே அங்க போகட்டும்.! மிகுதி ஆக்களெல்லாம் துப்பரவு செய்யிற வேலைக்கு இங்க நிக்கட்டும். எதுக்கும் எல்லாருக்கும் தெரியும்தானே நாளைக்கு வெள்ளுடுப்பு எண்டா ஒருவரும் வேற வேலைக்குப் போகேலாது. அடுத்தநாள் எல்லாரும் றெஸ்ட் எடுக்க வேணும். இதே மாதிரித்தான் அடுத்த நாளும். எங்களுக்கு ஒறிஜினல் கூத்து மேடையேற்றம்.! அப்ப எல்லாருக்கும் இது விளங்குதோ சரியோ சரியோ..! இதால நீங்கள் எல்லாம் மூண்டுநாள் கட்டாயம் செய்யிற வேலவெட்டியளை நிப்பாட்டத்தான் வேணும். நாளைக்கெண்டா காலேலபத்து மணிக்குள்ள இங்க எல்லாரும் அந்த இடம் போய் துப்பரவாக்கிற வேலைக்கு வந்திட வேணும். சரியோ? gFf(8ULIT...?”
ன்ெறு சண்முகம் இதையெல்லாம் சொல்ல, அது சிலருக்கு பழுத்த நல்ல பனம் பழம், நிலத்தில் தக்கென்று விழுந்த தாக்கம் போல்நெஞ்சில் ஒரு இடி இடித்தது. O 1700 புதினான்களில் தான் சந்திரன்

"மூண்டு நாளுக்கு வேலைக்குப் போகாட்டி வீட்டுச் சமையலுக்கும் கொஞ்சம் கஷ்டம் தானே.? எண்டாலும் நல்ல "சதைக் கணிப்பனம் பழத்திலபோட்ட பினாட்டு வீட்டுக்குள்ள கிடக்கு சாப்பாடுகளுக்கு அதையும் வைச்சு ஒரு மாதிரிச் சமாளிப்பம்.”
என்று தமக்குள் நினைத்துக்கொண்டார்கள். அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டாலும், பொதுவாக அங்குள்ள எல்லோருக்கும் மூன்று நாள் வேலையில்லை என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தாங்கள் மேடையில்பாடி நடிப்பதை பலரும் வந்து அங்கு பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பு அந்தத் தாக்கத்தை யெல்லாம் அவர்களுக்குத் தவிடு பொடி ஆக்கியிருந்தது. மனம் அவர்களுக்கு இளம் பனங்கிழங்கிலுள்ள மெல்லிய நார் போன்றுதான், மகிழ்ச்சியில் உறுதியாக இருந்தது. அந்தப் பிஞ்சுக்கிழங்கின் சதைப் பொருளைச் சாப்பிட்டது போன்று தான், கூத்து ஆடும் நினைப்புகள் அவர்களுக்கு மிக இனிமையாக இருந்தன.
சண்முகம் இப்படியெல்லாம் சொன்னதற்கு ஒருகேள்வியோ, மறுப்போ, யாரிடமிருந்தும் எழவில்லை. இதை அண்ணாவியார் அங்கு கண்டு கொண்ட பிறகு ஒரு கதையைத் தான் கதைக்கவாய் வெளிக்கிட்டார்.
"நான் இங்க எல்லாருக்கும் தயவாய் அன்பாய் ஒண்டச் சொல்ல வேண்டியிருக்கு. முன்னம் சில நாளுக்கு முதல் இந்தக் காத்தவராயன் கூத்து இதே இடத்தில இந்த ஊருக்கவா நடந்து முடிஞ்சது. அந்தக் கூத்து வெள்ளுடுப்பு நடக்கேக்கிள்ள தேவன் அண்ணாவியார் வந்து எங்களை யெல்லாம் அங்க தங்கட கூத்து வெள்ளுடுப்பை பார்க்கவாருங்கோ எண்டு இங்க சண்முகத்தாரிண்ட வீடு தேடி வந்து சொல்லிப்போட்டுப் போனார். நாங்களும் அந்தப் பெரிய மனிசன் வந்து கெளரவமா கூப்பிட்டதுக்கு
கெளரவம் குடுத்து அங்கபோனம். அது மாதிரி நாங்கள் அவயஞக்கும்
போய் மரியாதை வைச்சு அவயள எங்களிண்ட வெள்ளுடுப்புக்கும் வாங்கோ எண்டு கூப்பிடத்தானே வேணும்.? என்ன சண்முகம் தம்பி.! அப்பிடி செய்யத் தானே நாங்கள் வேணும்.?”
என்று இந்த விசயத்தை எல்லாரினதும் கவனத்துக்குரியதாக சொல்லி விட்டார் முருகேசர். அவர் இதை சொல்லவும், தானும் ஊக்கம் கொண்டதாய் சண்முகமும் உடனே கதைத்தார்.
"கட்டாயம் அண்ணாவியார் உதைநாங்களும் செய்யத்தான் வேணும். நானும் நீங்கள் சொன்னதை கொஞ்சம் முன்னமும் நினைச்சனான் தான்! ஆனா வேற கதையள் இங்க வர அத மறந்திட்டன்..! அப்ப நீங்கள் சொன்னமாதிரி கொஞ்ச ஆக்கள எங்களோட கூட்டிப் போய் நாளைக் காலமைக்கு இத அவயளிட்ட சொல்லுவோமே..?”
'ஆர் ஆர் அப்ப தேவன் அவயளிட்ட போவம் எண்டுறியள்.'
8Эчылламу» о 171 o

Page 94
என்று உடனே அண்ணாவியார் சண்முகத்தைக் கேட்டார்.
'ஆர் போறது.? அப்பிடி நீங்கள் தான் எல்லாருக்கும் முதன்மையான ஆளா போக வேணும்.?”
"அது சரி நான் வாறதுதான்.! அப்ப மிச்ச ஆக்கள்.?” "ஒண்டுநான்.
יין
"ஒ நீங்கவராம..? அடுத்தது.'
"ஆ. அடுத்தது இவன் தம்பி பாலா. மற்றது ஜெயா. எங்கட ராஜன். அவரோட அவற்றை தம்பி ஏன் பத்மன், சிவா, சூரி ஆ. ஏன் எல்லாரும் நாளைக்கு இங்க வாற ஆக்கள் எல்லாரும் வரட்டுமே. அப்பிடியே அங்க எல்லாரும் நாளைக்கு அங்க எல்லாருமா போய்க் கதைக்கிறது அவயஞக்கும் ஒரு சந்தோஷமாய் இருக்கும்தானே..? அங்க நாங்கள் எல்லாரும் போய் இத அவயளோட கதைச்சுப்போட்டுப் பிறகு வந்து இங்க எங்கடவேலையைத் துவங்குவமே..?
"ஓ அப்பிடி செய்யலாம்.! அப்பிடிச் செய்யலாம்.”
என்று உயிர்ச்சத்துக்கள் உடலில் பெற்றமாதிரியான ஒரு உஷாரோடு சொன்னார் அண்ணாவியார். அவருக்கு இடுப்பு வேட்டிக் கட்டுக்குள் வற்றிச் சுருங்கினதாய்க்கிடந்த காசு, எல்லாவற்றிலும் உயரமான, எல்லாவற்றிலும் உயரமானதோர் உச்ச உஷாரைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவருக்குள்ள அந்த உஷார் இன்னும் மிகுதிப்பட சண்முகத்தார் இன்மொரு விசயத்தை அங்குள்ள எல்லோருக்கும் கேட்க சொன்னார்.
"இன்னுமொண்டு நான் சொல்ல வேணும்.இது காத்தவராயன் கூத்து நடக்கிற இடத்தில எந்த நாளுமே முந்தியுமுள்ள நாள் தொடங்கி இருக்கிற வழமையான ஒரு முறை. அது என்னெண்டா..? கூத்து நடந்து கொண்டிருக்கேக்ககிள்ள இந்த பன்றிக்கும் மானுக்கும் பிறக்கிற குழந்தைதானே காத்தவராயன் எண்டு சொல்லப்படுது. வேற கதைகளும் அப்பிடி இருக்குத்தான். எண்டாலும் இந்த காத்தவராயன் எண்டுறவர் புராணத்தின்படி அருளில பிறந்தவர்தானே..? அதால இந்த கட்டம் அங்க போற நேரம் அம்மனுக்குக்கட்டுற கூறைச்சாறியோட அம்மனுக்கு நடிக்கிறவர் உண்டியலோட அங்க இருக்கிற ஆக்களுக்கபோவா.அந்த நேரம் கட்டாயம் அங்க நேத்தி வைச்சவயள் எல்லாரும் உண்டியலுக்க காசுகளைப் போடுவினம். இந்தக் காசு முழுக்கலும் கூத்து முடிஞ்சாப்பிறகு நாங்கள் அண்ணாவியாரிட்டத்தான் குடுக்கவேணும்.! அப்ப எல்லாரும் நாங்கள் இந்த ஒழுங்கு முறையளை மனதில வைச்சுக்கொண்டு நாளைக்குத் துவங்கி கூத்து முடியுமட்டும் எல்லாத்தையும் இனி ஒழுங்காய்ச் செய்வம் என்ன..?”
O 1720 புதினான்கஸ் தான் சந்திரன்

○
என்று தன் நினைவில் வைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் சொல்லி முடித்தார் சண்முகம. இன்று ஒத்திகை வழமைபோல நடவாததால் கூட்டமும் நேரத்துக்கு முடிந்து விட்டது. எல்லோரும் பிறகு கலைந்து போகும்போது "இனித்தான் எங்களுக்கு பெரிய காரியங்களே செய்ய வேண்டியதாய்க் கிடக்கு!” - என்பதாய் தங்களுக்குள் தங்களுக்குள் இவற்றை நினைத்துக் கொண்டு போனார்கள்.
27
போர்க்கால வேளையிலே தமிழர்களினதும், தமிழ்ப் பேசும் மக்களினதும் வாழ்க்கை, இருட்டிக்கிடக்கும் குகைக்குள் வாழ்வது போன்று தான் நிம்மதியற்றிருந்தது. தாம் வைக்கும் அடுத்த அடியை எங்கே எடுத்து இனி வைப்பது என்று அறியாத மாதிரியாய்த்தான் சீவியம் அவர்களுக்குச் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் பதறிப்பதறியதான பதற்றம்தான் அவர்களுக்கு நெடுகிலும் இருந்து கொண்டிருந்தது. ஒரு இடத்தில் நிலைத்து நிற்கவோ, உட்காரவே, படுக்கவோ இல்லாத நிலை மாதிரித்தான் எல்லோருக்கும் அலைச்சலாகவும் இருந்தது.
குண்டுகள் செல்களுக்குப் பயந்து கத்திக் கூவியபடி பாய்ந்து ஒடுகிற சனங்களாகத்தான் ஒவ்வொருவருமே இங்கே தங்கள் வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனாலும் இவ்வித துன்பங்ளையெல்லாம் பட்டுக் கழித்தபடி காலத்தை ஒட்டும்போது, இந்த மனிர்களுக்கு சிரிக்கவே முடியாது என்று, யாரும் வேறொருவர், இந்த வாழ்க்கைதனில் சம்மந்தப்படாதவிடத்து அப்படி அவர் எண்ணலாம்.
ஆனாலும் அவர்கள் எண்ணுவதைப் போலல்லாது, இவர்கள் இந்தக் கொடுரமான ஒரு சூழ்நிலையிலும், அழுக்கு நீங்க குளிக்க வேண்டும் என்பது மாதிரி அதையெல்லாம் தங்களிடமிருந்து களைந்ததாய் ஆக்கிவிட்டு, சிரித்து வாழவும்தான் முனைந்தார்கள்.
கல்லறைகளில் அடக்கச் சடங்குகளும், சுடலைகளிலே பிரேங்களின் எரிப்புச்சம்பவங்களும், அகால மரணங்களின் பொருட்டு அங்கு எங்குமே நடந்து கொண்டிருந்தாலும், வழமையாக ஆண்டுதோறும் நடக்கும் கோயில் திருவிழாக்களெல்லாம் விமர்சையாக அங்கங்கே அவ்விடங்களில் நடக்கத்தான் செய்தன.
'கலியாணம், காட்சியென்று' - அவையெல்லாம் நடக்கவேண்டிய நேரத்திலும் அங்குநடந்தன. ஜெபம்தானம், உபவாசம் போன்றவற்றையும் அங்கே முன்புசெய்து வந்தவர்களெல்லாம் இப்போதும் கைவிடாது அதனைச் செய்தார்கள். இருள் முழுவதுமாக நாட்டுக் கூத்துக்களும் தான் அங்கங்கே மேடையேறி சில இடங்களில் அசத்திக் கொண்டிருந்தன.
6.9emy.) O 173 O

Page 95
யுத்தம் என்ற சிலுவையினடியில் மக்கள் இருந்தாலும் "வாழவேண்டிய வாழ்வுதனை சீராக வாழ வேண்டுமே? - இந்த நினைவெல்லாம் எந்தக் கஷ்டம் வந்த போதிலும் அவர்கள் எல்லோரிடமும் இருந்தது.
இந்த வாழ்க்கையை நெடுகவமே அனுபவித்துப் பட்டுக் கழித்ததாய் வாழப்பழகிய பின்பு, இதுதான் எங்கள் வாழ்க்கை என்றதிலே எல்லோருக்குமே இது பிறகு சர்வசாதாரணமாகினதாய்த்தான் ஆகிவிட்டது.
இடம் யெர்ந்து வந்து உத்தமன் வீட்டுத் திட்டத்திலே குடியிருந்த வர்களுக்கும் இதே நிலைதான். அவர்களுக்கும், நாள் செல்ல நாள் செல்ல, வாழ்வதற்கான மனத்துணிவு இப்போது வலுத்திருந்தது.
ஒரு சிறிய எளிய வறிய வாழ்க்கையென்றாலும் அதையும் சந்தோ ஷமாய் வாழவே அவர்களும் தங்களைப் பழக்கியதாய் வைத்து இருந்தார்கள்.
"மகிழ்ச்சியாக நாங்களும் பொழுது போக்குக்கு ஒன்றைச்செய்வோம், அது எங்களுக்கெல்லாம் நல்லதாயும் இருக்கும்” என்று எண்ணித்தான் அவர்கள் இந்த நாட்டுக்கூத்தையும் இவ்வளவு நாளும் ஒத்திகையில் பழகினார்கள்.
அந்தக் கூத்துத்தான் நாளை இரவு வெள்ளுடுப்பில் நடிக்கப்படவாய் இருக்கிறது என்ற நினைவில் அன்று இரவில் படுக்கைப் பாயிலும் அதை அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். கேப்பாபுலம் காடுகளில் இந்நேரமாய் சிறு நரிகள்உளளையிடுகின்றன.
கேப்பாப்புலம் வீதிக்கு பக்கமுள்ள மரங்களில் இரவுப் பறவைகள் தொணதொணக்கின்றன.
செல் துண்டுகள் இடித்த ஒரு மொட்டைப் பனையிலிருந்து ஆந்தை U6)LDT35 soupsugs).
இரவு கடந்து பொலபொலவென விடிகிறது. உத்தமன் வீட்டுத் திட்டத்தில் இருப்பவர்களெல்லாரும் நித்திரைப் பாயிலிருந்து எழுந்து விட்டார்கள். சூரியனின் மலர்ந்த முகம் ஒளி வீசத் தொடங்கிவிட்டது. கூத்திலே பங்குபற்றும் நடிகர்களெல்லாம் தத்தமது காலைக்கடன்களை முடித்து விட்டு புளியடி மரத்தின் கீழ் வந்து ஒன்று கூடிவிட்டார்கள்.
"இண்டைய வேலைக்கு ஓடித்தப்பிக்கிற மாதிரி இல்லாம எல்லாரும் இதில இப்பவா வந்திட்டினம் அண்ணாவியார்.” என்று சண்முகம் அங்கே தனக்குப்பக்கத்தில் நின்ற அண்ணாவியாரைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
"அப்பிடித்தானே. கட்டாயம் வரத்தானே எல்லாரும் வேணும்.? ஏனென்டா இது எல்லாம் ஒரு பொது விஷயம் சம்பந்தப்பட்ட வேலையள்
91749 புதினான்காம் தான் சந்திரன்

தானே தம்பி.? - என்று உடனே அவருக்கு பதில் சொல்லிவிட்டார் அண்ணா வியார். -
"அப்ப அண்ணாவியார் இவன் எங்கட ஜெயாவையும் பாலாவையும் நாங்கள் மூங்கிலாறுக்கு அனுப்புவம் என்ன..?”
“அது நீங்கள் செய்யிற நடப்பிக்கிற வேலையள் தானே தம்பி? இதில என்னட்டயா நீங்க கேட்டுக்கொண்டு.?”
"ஓ அது நான் இவங்கள் எங்கட பிள்ளயளோடவெல்லே இதைக் கதைக்கவாவேணும்.! அப்ப ஜெயா பாலா இதுக்கு அங்கவா நீங்கரெண்டு பேரும் போறியளோ..?”
"நீங்க சொன்னா என்ன மறுப்பண்ண.! இப்பவே நாங்கள் அதுக்கெண்டு வெளிக்கிடுறமே..?” என்று ஜெயா உடனே அவர் கேட்டதுக்கு சொல்லிக்கொண்டு வேகமாக தலையாட்டினான்.
"அப்ப பாலா நீ.?”
என்று அவன் நின்றிருந்த திசையைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். "நானும் சரிதான்! மோட்டச்சயிக்கிலும் என்னட்ட இருக்குத்தானே.! அப்ப நானும் ஜெயாவும் மூங்கிலாறுக்கு சேர்ந்து போறம்!” என்று உடனடியாக பதில் சொல்லிவிட்டான் பாலா.
"அப்ப தயக்கமா இங்க ஒரு வரும் முனகிறதா இல்ல. எல்லாரும் அப்ப உஷார் தான்.!” என்று கூத்திலே பேசுகிற பாஷைமாதிரி ஒரு கதை தனக்குத்தானே அவைகளையெல்லாம் கேட்டுவிட்டு சொல்லி சிரித்தார் அண்ணாவியார்.
"அப்ப நாங்கள் எல்லாருமா இப்ப அங்க போவமேஆண்ணாவியார்.” 'ஆ தேவனவருட்டயோ..?”
"ஓ அவரிட்டத்தான்.”
"முழுப்பேருமாத்தானே.”
"பின்ன எல்லாரும்தானே போகவேணுமெண்டு கதைச்சனாங்கள். என்ன ராஜன் நீங்க அவற்றை தம்பியார். பத்மன், சூரி, சிவா என்ன ஒண்டும் பேசாம ஆளையாள் பாத்தக்கொண்டு நிக்கிறீங்க.”
“ஓ நீங்க சொன்ன மாதிரி போறதுதானே அண்ண. போவம் போவம்.”
என்று பத்மன் ஆரம்பத்தில் இதை சொல்ல ஆரம்பிக்க பொதுவில் எல்லோரின் குரல்களும் பிறகு “போவம் போவம்” என்றதாய் வெளிவந்தன.
6.Эь уламь О175 о

Page 96
இவற்றைப் பேசிய அந்த நேரத்திற்குப் பிறகுபுளியடியின் கீழ் நின்ற அவர்கள் எல்லோரும் தேவன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் அப்படியே எல்லோரும் தேவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால், அங்கே வீட்டில் தேவன் அண்ணாவியார் மட்டுமல்ல, அவருடனாக மற்றும் நடேசு என்பவரும் சட்டநாதன் என்பவரும் கூடவாய் அங்கே இருந்து கொண்டிருந்தார்கள்.
இவர்களை தன் வீட்டுக்கு வரக்கண்டதும் உள்ளே அவர்களை தேவன் வரவளைத்து தேநீர் எல்லாம் அவர்களுக்கு அவர் கொடுத்து உபசரித்துக் கவனித்துக் கொண்டார். எல்லோரும் கதிரையில் இருந்தார்கள். தேவன் அண்ணாவியாருக்கு இப்படி இவர்களெல்லாம் தன் வீடு தேடி சந்திக்க வந்திருப்பது மனதுக்கு ஆகப் பெரிய சந்தோஷமாயிருந்தது.
தேவன் அண்ணாவியார் பளபள வென்று, வழுவழுவென்று தெரியும்படி மேலுக்கும் முகம் கை கால்களிலும் எண்ணைய் பூசியிருந்தார். அதைக்கண்டு கொண்டு விட்டு, முருகேசு அண்ணாவியார்,
"எண்ணெய் முழுக்காக்கும் இண்டைக்கு உங்களுக்கு? - என்று கதையைத் தொடங்கினார்.
“ஓம். சனிக்கிழமை நாளெண்டு ஒரு வழமை இல்லாம இப்பிடியும் தான்!”
என்றார் அவர், முருகேசர் நடேசரையும் சட்ட நாதரையும் பார்த்தார்.
"நீங்களும் ஒண்டாய் இங்க இருக்கிறதால எல்லாரோடையும் இது பற்றி கதைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாயிருக்கு”
என்று சொல்லிவிட்டு அவர் சிரித்தார்.
தாங்கள் நடப்பித்து முடித்த கூத்தெல்லாம் மேடையேறி ஆறி அமர்ந்து போனதால் இப்போ ஆறாத புண்போல கடுக்கிறதான மன எரிச்சல் ஒன்றுமே நடேசருக்கும் சட்ட நாதருக்கும் இல்லாமலிருந்தது. அதனால் அண்ணாவி முருசேகள் அப்படி சொல்லி விட்டுச் சிரிக்க அவர்களும் முன்னைய பிரச்சனைகளை மனதிலிருந்து முழுக்கக் களைந்த நிலையில் முகத்தை மலர வைத்தப்படி சிரித்தார்கள்.
கையிலிருந்த தம்ளரிலுள்ள தேநீரை ஒருமிடறு அண்ணாந்து வாயில் ஊற்றி விட்டு பிறகு முருகேசர் சண்முகத்தைக் கவனித்தார்.
"நீங்கள் தானே முதலில இவயளோடவா அதை சொல்லவேணும் தம்பி.?”
91769 புதினான்காம் தான் சந்திரன்

என்று தேநீர் குடித்த ஒரு வித சுகத்தோடு முருகேசர் சண்முகத்துக்குச் சொன்னார்.
"நீங்க சொன்னாலும் அது ஒண்டும் பறவாயில்ல அண்ணாவியார். அதால நீங்களே சொல்லலாம் தானே.”
"இல்ல நீங்க சொல்லுறதுதான் நல்லம் தம்பி! அவயளோட ஊருக்கயும் நீங்க எல்லாரும் இருக்கிறதால ஒரு நல்ல முறை இதுவேதான் அதால நீங்க சொல்லலாம்.?”
“于f.!”
என்று விட்டு சண்முகம், தேவன் அண்ணாவியாரைப் பார்த்தார். பிறகு நடேசரையும் சட்ட நாதரையும் பார்த்தார்.
"நாங்க எல்லாருமா வந்தது எதுக்கெண்டாங்கோ. நீங்களும் எங்கள மரியாதை வைச்சு வந்து உங்கட கூத்தின்ரை வெள்ளுடுப்பு நடக்கேக்க அதுக்கு வாங்கோ எண்டு கூப்பிட்டனிங்க.அது மாதிரி இண்டைக்கு ராவைக்கு எங்களிண்டையும் கூத்தின்ரை வெள்ளுடுப்பு நாங்கள் நடத்தப் போறம்! நாளையிண்டைக்கும் எங்கட ஒறிஜினல் கூத்து பிள்ளையார் கோயிலடியிலயா நடக்கப்போகுது. இதுக்கெல்லாம் நீங்களெல்லாம் கட்டாயம் வர வேணு முங்கோ..? அது தான் நாங்களும் உங்களிட்ட இதுகள சொல்லிப் போட்டுப் போவமெண்டு வந்தனாங்கள்.!" என்று சண்முகம் சொல்ல சுவாசிக்கும் மூச்சுக்காற்று மேலேயும் போகாத கீழேயும் போகாத ஒரு நிலையில் இருந்து கொண்டு தேவன் அண்ணாவியார் மகிழ்ச்சியோடு சண்முகம் சொன்னதைக் (885 LITT.
நடேசரும் அங்கு தனக்கு முன்னால் இருப்பவர்களையெல்லாம் மகிழ்ச்சிச் சிரிப்போடு அப்போது சுற்றிலும் பார்த்து தலையாட்டிக் கொண்டார். சட்டநாதனும் இவ்வேளைதன் மகிழ்ச்சியை முகத்தில் திறந்து காட்டினார்.
"நீங்கள் இவளவு பேரும் ஒண்டாய் இங்க வந்து சொல்லுறதால நாங்கள் ஊராக்களெல்லாம் கட்டாயம் இராவைக்கு உங்கட வெள்ளுடுப்புக்கு வருவமுங்கோ. நடேசர், சட்டநாதன் என்னவும் நான் சொல்லுறது.?”
"பின்ன பின்ன. போகத்தானெ நாங்கள் வேணுமண்ண.?”
"ஓ அது சரி அதெல்லாம் சரி. ஆனா இப்ப நான் உங்களக் கேக்கிறன்.? உங்களுக்கு கட்டாயம் இந்த ஊர் ஆக்கள் நாங்கள் எண்டுற அளவில ஏலுமான உதவி ஏதும் கட்டாயமா நாங்க செய்ய வேணுமே..? என்ன நடேசர் அப்பிடித்தானே.”
“ஓம் தேவனண்ணை அப்பிடி செய்யத்தானே வேணும்?" "ஓ அதாலதான் நடேசர் நான் இவயளுக்கு சொல்லுறன். இங்க
М8Эыелла уу9 O 177 O

Page 97
நீங்க பாருங்கோ உங்களுக்கு என்னவும் ஒரு உதவிகள் நாங்கள் செய்து தரவேணுமோ..? அது எதெண்டாலும் நீங்க எங்களக் கேளுங்கோ.?”
"அப்பிடி என்ன எங்களுக்கு. பெரிசா ஒண்டும் தேவைப்பட்டதாயில்ல எண்டுதான் நான் நினைக்கிறன்.” என்று சண்முகம் சொல்ல.
“என்ன அப்பிடி சொல்லீட்டியள். மேடைபோட என்ன செய்யப் போறியள்.? றைக்டர் பெட்டியள் தேவைதானே.”
"ஓ அதுவும் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைத்தானுங்கோ.!”
"அப்ப என்ன. அதுக்குத்தானே நான் இதையெல்லாம் கேட்டனான்.? இங்க றைட்டர் டெயிலர் பெட்டியள் என்னட்டயும் இரண்டுகிடக்கு இவயிட்டயும் ஒவ்வொண்டு இருக்கு. ஆக மொத்தம் நாலுபெட்டியள் றைக்டர் கொண்டந்து எல்லாம் பின்னேரம் அங்க நிற்கும் சரிதானே.”
"ஐயோ இதே பெருத்த உதவி எங்களுக்கு..!”
- என்று சண்முகம் முகமகிழ்ச்சியோடு சொல்ல, அவரோடு வந்த மற்றவர்களுக்கும் இது விஷயம் கேட்டதில் மனநிறைவான சந்தோஷமாயிருந்தது. இதற்குப் பிறகு தேவன் அண்ணாவியார் வீட்டிலிருந்து சண்முகமும், அவரோடு சேர்ந்து வந்த மற்றவர்களும், அங்கே அவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு வெளிக்கிட்டார்கள்.
இங்கே தங்கள் இடத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும்தான் மளமளவென்று இடத்தைத் துப்பரவு செய்கிற வேலையை அவர்கள் தொடங் கினார்கள். நெற்றிமுதல் இறங்கி வரும் வியர்த்த வேர்வையெல்லாம் வேலைக் கடுரத்தில் காலிலும் இறங்கி அவர்களுக்கு வடிந்தது.
அண்ணாவியார் இந்நேரம் பெட்டிக் கடைக்கு ஓடோடிப்போய், தன் கணக்கில் சீனி இரண்டு கிலோவும் தேயிலைத் தூளும் வாங்கினார். அதைக் கொண்டு வந்து பிறகு அவர் சண்முகத்தின் கையில் கொடுத்தார். சண்முகம் உடனே அதைத்தன் வீட்டுக்கு அனுப்பி மனைவியின் மூலமாக அங்கு தேநீர் வரவழைத்தார்.
எல்லோரும் தேநீர் குடித்து விட்டு அடுத்தபாட்டம் ஒய்வெடுக்காமல் வேலையைத் தொடங்கினார்கள். குறைகூறும் அளவுக்கு இல்லாமல் இடம் முழுக்க அங்கே பிறகு நல்ல துப்பரவாகியும் விட்டது. புல்லின் தடம் கூட அதிலே இல்லாத அளவில் தரை மிகவும் அழகாகத்தான் பார்க்க இருந்தது. இந்நேரம் தொலை தூரமென்றாலும் மூங்கிலாறுக்கு மோட்டச் சயிக்கிளில் பிரயாணம் பண்ணிப்போன பாலாவும் ஜெயாவும் திரும்பி இவ்விடம் வந்து சேர்ந்து விட்டார்கள்.
01780 புதினான்கஸ் தான் சந்திரன்

அவர்கள் இருவரும் மோட்டசயிக்கிளால் வந்து கீழே இறங்கும் போது, அங்குள்ள எல்லோரின் கவனம் முழுவதையும் அவர்கள் ஆக்கிரமித்ததாய் இருந்தார்கள். சண்முகம் அவர்களைக் கண்டதும் அவர்களுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்.
“போன விசயம் என்ன மாதிரி ஜெயா?” என்று அவனைப்பார்த்து அவர் கேட்டார். ‘அண்ண மூங்கிலாறுக்கு போன விசயம் எல்லாமே சரியா முடிஞ்சுது. அங்க காப்பகத்தில நாங்க இதைப்போய் கூத்துப் போடப் போறமெண்டு சொன்னா, அவங்களுக்கு அதைக் கேட்டிட்டுப் பெரிய சந்தோஷம். அவயள் சொல்லிச்சினமி, நீங்கள் ஏன் இதுகள எங்களுக்கு நேரத்துக்கு வந்து சொல்லேல்ல எண்டு.! அப்பிடி அவயள் சொல்லிப்போட்டு லைட் இஞ்சின், ஜெனரேட்டர், மற்றது பெற்றோல் மாக்சுகள், பல்புகள், றைக்டர்பெட்டி எண்டுஉடன இப்ப எல்லாம் பின்னனேரத்துக்குள்ள இங்க அனுப்பி வைக்கிறம் நீங்கள் போங்கோ எண்டு. சொன்னவயள்.! சொன்னமாதிரிக் கட்டாயம் இவ்வளவும் அவயள் இங்க அனுப்புவினம் அண்ணை’ என்று அவன் சொல்ல, இந்தக் கதையெல்லாம் இங்கே சண்முகத்துக்குப் பக்கத்தில வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த அண்ணாவியார்,
"அப்பச் சீன். சீன்.?”
- என்றார் "அதுதானே அதுதானே முக்கியம். ஓம் சீன். சீன்.” என்று சண்முகமும் அண்ணாவியார் நினைப்பூட்டியதற்குப் பிறகு (85 LITT.
"ஓ அதச் சொல்ல இப்பவும் மறந்திட்டன்.சீன்தானண்ணை அங்க பிரச்சனை. அதுகள் அவயட்ட இல்லயாம்.”
- என்று சடாரென அவன் சொன்னான். “பேச்சடா அப்ப சீன் இல்லாம சீன் இல்லாம.?” என்று சொன்னார் அண்ணாவியார். “என்னப்பா அப்பிடி ஒரு கூத்து நடத்துறது சீன் ஒண்டும் கட்டாம.?” என்று பயத்தில் உதடு உணர்ந்து போன அளவில் சண்முகமும் சொன்னார்.
"அண்ண கதை முழுக்க நான் சொல்ல முதல் ஏன் நீங்க எல்லாரும்
கிடந்து குழம்புநீங்க..?”

Page 98
என்று பாலா இப்பொழுது வாய்திறந்து ஒரு கதையை விட்டான்,
“என்ன பாலா நீ சொல்லுறாய்?”
“பின்ன கதையை நீங்க முழுக்க முதல் கேட்டாத் தானேயண்ண?”
"அப்ப இந்த சீன் பிரச்சனை என்னெண்டடாப்பா சொல்லன்.?
“சீன் தானேயண்ண அது வரும்!”
"வருமெண்டா என்னடாதம்பி உன்ர கதை?”
“அதானண்ண சீனுக்கு, நான் வேற இடத்த ஒழுங்குபண்ணிட்டன். அங்க சீன் இல்லாததால புதுக்குடியிருப்பில ஒரு இடத்தில நாங்க ஒடர் பண்ணிட்டம்.!’
GG
என்ன மாதிரித் தம்பி அது..? “என்ன மாதிரி, காசுதான் காசு நாங்கள் அவயளிட்ட இனிக்குடுக்க வேணும்.”
"அது எவ்வளவெண்டுறாய்..! எவ்வளவு காசு எண்டு நீ கதைச்சிருக்கிறாய்?”
“சீனுக்கு எண்ணாயிரமாமண்ண. கொஞ்சம் கூட குறைக்கேலாது அதில எண்டு சீன் மேக்கப் உடுப்புக்காற ஆள் சொல்லிப்போட்டுது.”
"ஒ சீனோட உடுப்பு மேக்கப்பும்தான் வாறது.! அப்பயடாப்பா தம்பி அது நிச்சயமா இங்க வருறதுக்கு அவயஞக்கு அட்வான்ஸ் காசு என்னவும் நீ குடத்தனியோ..? அல்லாட்டி அது எப்படி சுவர் எண்டு நாங்கள் நம்ப ஏலும்.?”
"அது சுவர்தானண்ண. சுவறா அது சீன் சாமான்மேக்கப் உடுப் பெல்லாம் இங்கவரும். நான் என்ர கையில காசு ஆயிரம் ரூபா வைச்சிருந்தனான் அண்ண. நல்ல தாப்போச்சு நான் அந்தக் காசை கையில அங்க கொண்டு போனதால. அத நான். அப்பிடியே அட்வான்சா அவயிட்ட உடன குடுத்திட்டன் அண்ண.”
"அப்பிடியே அப்ப உன்ர அந்த ஆயிரம், மிச்சம் ஏழாயிரம், எல்லாமா மொத்தம் அந்த எண்ணாயிரம் ரூவாய எங்களுக்கவா இருந்து இனி நாங்கள் புரட்டவா வேணும் என்னடாதம்பி.?”
“ஒ1 ஆளாளுக்கு நாங்கள், உள்ள நாப்பது பேரும் இருநூறு இருநூறு எண்டு காசு போட்டாமொத்தம் எண்ணாயிரம் வரும் தானேயண்ண.?”
என்று இதை சொல்ல, வேலை ஒழிந்த கையாய் அங்கே அவர்களை சூழ நின்று கொண்டு இந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் ஒருவித திகைப்பு வந்து விட்டது.
o 180 O අභ්‍රෂ්orභීෂෙව් ෙෆ්, ජේණිණි

அந்த திகைப்புடன் மரத்தடியின் கீழ் இருந்த மண்பானையடியில் போய் சிலர் யோசனையிலே தண்ணீரும், நெளிந்த பேணியால் அள்ளி வயிறு முட்டக்குடித்தார்கள்.
என்றாலும் பிறகும் போய் அவர்கள் கதை நடந்து கொண்டிருந்த இடத்தில் நின்றார்கள்.
"அப்ப சீனுக்கும் உடுப்பு மேக்கப்புக்கும் எல்லாருமா பாலா சொன்ன மாதிரி இருநூறு இருநூறு ரூவாய் போடத்தான் வேணும்.? - என்று சண்முகமும் அங்கு நின்ற எல்லோரையும் அதிலே பார்த்து பொதுவாக எல்லோருக்கும் சொன்னார்.
“கஷ்டத்தோட கஷ்டம் முதல் போட்ட ஐநூறோட இதுவும் இருநூறு. என்ன செய்யிறது குடுக்கத்தானே எல்லாரும் வேணும்.?
என்று ஜெயா சுற்றியுள்ள ஆட்கள் நடமாட்டத்துக்குள்ளே, இருந்தக் காசுக்கதையை பலத்த குரலில் எல்லோருக்கும் கேட்க சொன்னான்.
அப்படி ஜெயா சொல்ல, இந்தக் காசுவிசயத்திலே அங்குள்ள வர்களிடமிருந்து இப்போது விதம் விதமான கதைகள் வரும் என்று அண்ணாவி முருகேசனார் அப்படியாக யோசித்தார். ஆனால் அவர் நினைத்த மாதிரி இல்லாமல் மெளனமாக ஜெயா சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, "எல்லோரும் நாங்க எங்கட வீட்டுக்கு போய் வாறம்.” என்று சொல்லி விட்டு பிறகு அப்படியே அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போய்த் திரும்பி இவ்விடம் வருகையிலே தங்கள் தங்கள் காசு இருநூறு ரூபாயை சண்முகம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இப்படி சட்டுபுட்டென்று எல்லா விஷயமும் நன்றாக முடிந்ததாலே "ஆத்தில எல்லாருமா நாங்க இனிப்போய்க் குளிச்சிட்டு வீட்ட வேளைக்குஇனிபோவம். பொழுதுபட முதல் எல்லாரும் இங்க வந்திட வேணும்.”
என்று சண்முகம் இப்போது எல்லோரையும் ஒருமுறை பார்த்து இதை சொன்னார்.
ஒரு வேற்று உலகத்தில் தாங்க்ள் இன்று சஞ்சரிக்கப் போகிறதான சரியானதோர் சந்தோஷத்தோடு ஆற்றுக்குக் குளிக்கப்போக அவர்களெல்லாம் இவ்வேளை வெளிக்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.
28
51க்கும் தெய்வம் காத்தவராயன் கூத்தின் வெள்ளுடுப்பு நிகழ்வு இன்றிரவு எனும் அந்த செய்திகேப்பாபுலம் ஊர் முழுக்க அன்று காலைப்
89ருளிwம் 91819

Page 99
பொழுதிலேயே எல்லா இடமும் பரவியதாகிவிட்டது. சிவவடிவும் முருகவடிவம் கொண்ட கிராமிய தெய்வமாக போற்றப்படும் - ஹரிகரபுத்திரனாகவும் இன்னொரு கதை கூறலில் காட்டப்படும், இந்தக் ‘காத்தவராயன் - நாட்டுக் கூத்தை எத்தனை தடவைகள் தான் அது ஆடப்படும் போது இங்குள்ள இவர்களெல்லாம் அதை இருந்து பார்த்திருப்பார்கள்.
ஆனாலும், ஆள் மாற்றி மாற்றி, எத்தனை எத்தனை காத்தான்கள் மேடையில் தோன்றி நடித்தாலும், பார்க்கிறவர்களுக்கு இது என்ன அப்படி சலித்துப்போனதா என்ன? இந்தக் கூத்தை இருந்து விடிய விடிய இவர்கள் பார்த்தாலும், இன்றும் விடிந்தும் இது தொடர்ந்தும் நடந்திடாதோ? என்று ’ தானே இன்னும் முதுகில் கூணன் விழாமல் நிமிரிந்தபடி ஆசையுடன் பார்த்தவாறு அப்படியாய் இருப்பார்கள்.
இவ்வாறெல்லாம் இந்த நாட்டுக்கூத்து நெடு நாள் வாழ்வத்ற்குரிய காரணம், இந்தக் கூத்திலே இசைப் பாரம்பரியமும், இசை நுணுக்கமும் இருக்கிறது.புது எழுச்சி ஒன்றுமே தேவைப்படாத இந்தப் புராண கூத்தை பார்க்கிறவர்களெல்லாம் நல்ல கொம்புத்தேனை உண்ட ருசியை அறிந்தவர்கள் தான்!
அந்த அருந்திய தேன்போன்ற சுவை எப்படி அவர்கள் நாவை விட்டுவிலகும்?
அந்த சுவையை நாவு திரும்பத்திரும்பக் கேட்குமாப்போல் இருக்குமே இன்னும் தா தா வென்று, அந்த மாதிரியான ஒரு நிலையில் தான் கேப்பாப்புலம் வாசிகளான அனேக சனங்களும் இந்த வெள்ளுப்பு கூத்தைக் காண வேளைக்கே அவ்விடம் தனில் ஒன்று கூடியதாய் விட்டார்கள்.
மூங்கிலாறிலுள்ள காப்பகம் அனுப்பியிருந்த லைட் எஞ்சின் தொடங்கி, பீக்கள் செட் பெற்றோல் மாக்ஸ்சுகள் என, சகல சாமான்களும் இந்தப் பின்னேரத்திற்கு முன்னமே றைக்டர் பெட்டியின் இழுவையோடு அங்கே கொண்டு வரப்பட்டு விட்டன. இவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்கள் உத்தமன் வீட்டுத்திட்டத்து முகாம் தலைவரிடம் அவற்றைப் பாரம் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.
தேவன் அண்ணாவியார் தான் சொல்லியபடியே மேடை அமைப் பதற்கென்று றைக்டர் பெட்டிகள் இரண்டையும் அவ்விடம் அனுப்பி வைத்து விட்டார். இவ்விதமாக நடேசரும் சட்ட நாதரும் தங்கள் றைக்டர்பெட்டிகளை மிசினில் இழுத்து வந்து அவ்விடமாக விட்டு விட்டுப் போனார்கள். சூடடிப்புக்கு பாவிக்கும் படங்குகளெல்லாம் இவர்கள் முன்னம் கேட்காமலே தேவன் அண்ணாவியார் - தான் தனக்குள் நினைத்து விட்டு, அவற்றையெல்லாமே இவ்விடம் அனுப்பி வைத்திருந்தார். பொழுபட முன்னமே இளவட்டங்கள் எல்லாருமாகச் சேர்ந்து அவ்விடத்தில் மேடையமைக்கும் வேலையை செய்து முடித்துவிட்டார்கள்.
O 182 O භුණිණෙණිණෙහි 65aren சந்திரன்

தேவன் அண்ணாவியார் அனுப்பிய பெடியன்களும் உட்கார்ந்து அங்கே கதையளந்து கொண்டிருக்காமல் அவர்களுக்குக் கூட நாட நின்று உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
கூத்து நடக்கும் மேடை பின் சீலைக்கு வெள்ளை வேட்டிகள் பல பொருந்தக் கட்டிபார்க்க வெள்ளை லட்சணமாகத்தானிருந்தது.
பொழுதுபட்டு இருட்டு வரவும், நாலாபக்கமும் பெற்றோல் மாக்ஸ்சுகள் - நல்ல வெளிச்சம் போட்டு எரியத் தொடங்கிவிட்டன. தேவன் அண்ணாவியாரும் நடேசரும் சட்ட நாதனும் அந்நேரம் அங்கே வந்த சனத்தோடு சனமாக தாங்களும் அங்கே விரித்துக்கிடந்த படங்கில் ஆறுதலாக உட்கார்ந்து விட்டார்கள்.
இந்நேரம் ஓசையடங்காமல் கொஞ்சநேரம் மேளச் சத்தம் ஆர்மோனியச்சத்தம் நிகழ்ந்தது. அந்த மேள ஓசை மேலெழுந்து சுழன்று சீறிச் சரிந்ததாய் முடிவடைந்ததும், காப்புப் படித்தல் தொடங்கியது. வெள்ளைநிற உடுப்புகள் பிரகாசமாச் சுடர் விட நடிகர்களெல்லாம் மேடையில் தோன்றி நடிக்கவும் தொடங்கி விட்டார்கள்.
கூத்து தொடங்கும் வேளையைப் பார்த்துக் கொண்டு, இலைகளற்று வாடும் இருப்பாய் இருந்த பார்வையாளர்களுக்கு இப்போது உற்சாகம் ஏறிவிட்டது. நீரோட்டத்தில் போகும் மீன் மாதிரி கூத்துப் பாட்டுக்களும் அதன் பாட்டுக்கு பாடப்படுபவர்களால் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருக்க கேட்கின்றவர்களுக்கு அது ஒரு சுதியாய் இருந்தது.
ராப்பொழுதில் நிலவை விழுங்கியதாய் இடை இடையே முகில்களும் மூடுகின்றன. பெற்றோல்மாச்சுகள் வெளிச்சம் போடும் தம் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கூத்தப் பாட்டுகளின் ஒலிகள் கேட்ப வர்க்கெல்லாம் சுவையைகூட்டிக் கொண்டே போய்க் செர்ண்டிருக்கின்றன.
நடிகர்மார்களின் சொந்தங்களெல்லாம் தம்மவர் மேடையில் தோன்றும் வேளைகளில் விரித்திருக்கும் கண்களோடு அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியின் உணர்ச்சியில் கற்சிலைபோலாகி விடுகிறார்கள். நிறை கற்பிணியாக இருந்த ஒருத்திக்கு இந்த உணர்ச்சியிலே வயிற்றுப் பிள்ளையும் அசைந்து கொள்கிறது.
கூத்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவன் அண்ணாவியார் உச்சந் தலையில் கைவிரல்களை பதித்து சொறிந்தார்.
"சீ இப்பிடி இவங்கள் எடுத்த முதல் மூச்சு முடியிறதுக்குள்ள என்னமாதிரி ராகத்தோட பாடி முடிச்சிர்றாங்களப்பா. குரலும் அதுவும் இதுவும் படிக்கிறதும் இவங்கள் வலுகெட்டிக்காறங்களப்பா. காத்தவராயன் கூத்து இப்பிடி நல்லாதிறமாப் படிக்கிற இவங்கட சந்ததி உண்ணாண
செழிக்குமப்பா..!"
6.9emayl) о 18з о

Page 100
என்று தனக்குப்பக்கத்தில் இருந்த நடேசனை பார்த்துக்கொண்டு மனம் திறந்தது அளவில் இவைற்றையெல்லாம் அவர் சொன்னார்.
அவர் இப்படி சொல்ல, அதை நடேசுக்குப் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சட்ட நாதனின் முகம் சடாரென்று தீவிரம் கொண்டதாய் மாறியது.
“இங்க பாருங்க இப்ப உதில அங்கபடிக்கிற அந்தப் பெடி அந்த பூசாரியின்ரை ஒரு பெடிதானே.? இவன் பாருங்கோ சும்மா காகம், கழுதை, கிளி மாதிரி றோட்டில சயிக்கிளில போகேக்க ஆக்கள் விலத்த அப்பிடிச் சத்தம் போட்டுக் கொண்டு போவான். அப்பிடி ஆள் அவன் பாருங்கோ இப்ப உந்தக் கூத்துப் பாட்டு படிக்கிறமாதிரி.?”
என்று அவர் சொல்லி முடிக்க முதல்,
தேவன் அண்ணாவியார்,
6.
என்றார். “சத்தம் வேண்டாம்!” - என்பதே அவர் அப்பிடி "ஸ்.ஸ்.ஸ்." -
என்று சொன்னதான அர்த்தம்
"ஒண்டும் பேசாம வந்ததுக்குக் கூத்தைப் பாருங்கோ.” - என்றார் அவர், பிறகு,
அங்கே ஒரு பக்கத்தில் கடலைப்பெட்டிவைத்து, வறுத்த கச்சான் கடலை விற்கும் வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது. புகையிலை, வெற்றிலை, பாக்கு, பீடி, சுருட்டு வியாபாரமும் தீவிரமாய் கச்சான் யாவாரத்துடன் நடந்து கொண்டிருந்தது.
கச்சான் கடலை வியாபாரம் நடந்த இடத்திற்குப் பின்னாலே தேநீரும் விலைப்பட்டுக் கொண்டிருந்தது. சொல்லத் தெரியாத ஒரு ருசி தேநீரிலே இருக்கக் கண்டு, எல்லோரும் இடையிடையே அவ்விடம் சென்று தேநீர் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு பன்னிரண்டு பன்ரெண்டரை போல இருக்கும், பிற்பாட்டுக்காரன், மேடைக்குப் பின்னாலே கொஞ்சம் போகிறான்; பிறகு வருகிறான். ஆனால் இப்போது ஊமையாய் இருந்து காற்று ஊதத்தொடங்கிய மாதிரி எல்லோருக்கும் இன்னொரு தொண்டைக்கு மாற்றியதாக குரல் எழும்பிப் பாயுது. இப்போது நடிகர்கள் சிலரின் குரல் திறமையை, அங்கே இருந்து கேட்கிற யாருமே ஒப்புக்கொள்ள வேண்டும் துயரத்தை அழுத்துகிற, இனிமையை அழுத்துகிற, ஆண் பெண் குயில்களின் குரல்கள் இப்போது
9 1849 புதினான்கஸ் தான் சஆதிரன்

அவர்களுக்கு வந்துவிட்டன. மனிதத் தலைகள் பரவிய அந்த வெளி அவர்களின்குரலால் வருடப்பட்டு மலர்ச் செடிகள் மண்டியபூந்தோட்டம் போல அசையத்தொடங்கிவிட்டது. 'பத்துமணிபோல கட்டிப் போயிருந்த குரல் எப்படியாக இவ்வாறு திறந்தது?” - என்று அங்குள்ள எல்லோருக்கும் தான் இதன் காரணமாக ஒரு வித ஆச்சரியம்.
இப்படி குரல் கூவிக் கிளப்பக் கூடிய மருந்தை அங்கே கூத்து நடிக்கின்ற நடிகர்களுக்கு யார் கொடுத்தார்கள்? என்ன மருந்து அது? என்று வெளிச்சம் போட்ட இடத்தில் பார்வையாளராயிருந்த யாருக்குமே இது தெரியவில்லை. ஆனால் மேடைக்குப் பின்னாலே இருட்டுக்குள் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்துக்கு அங்கே மூர்த்திதான் காரணமான ஆள் என்பது நடிகர்கள் சிலருக்கு மாத்திரம் அது தெரிந்திருந்தது.
இடையிடையே ரகசியமாக ஆள் மாறி ஆள் மாறி, நடிகர்கள் சிலர் அந்த இடத்திற்குத்தான் இப்போதும் அதற்கென்று போய் வந்து கொண்டிருந்தார்கள். இதுவரை இங்கே இந்தளவிற்கும் இதற்கெல்லாம் காரணமான மூர்த்தியைப் பற்றி சொல்ல வேண்டிய சில புதிய கதைகளை தொடவே இல்லை. அதனாலே இனி அவனைப்பற்றிய அந்தக் கதைகளையும் இங்கே சிறிது சொல்லலாம்.
முர்த்தி சீவல் தொழில் செய்கிற தொழிலாளியல்ல. ஆனால் அவனுக்கு இளப்பமான சின்னப்பனையில்லாமல் பெரிய பனை மரத்திலும் ஏறத் தெரியும். அப்படிமரம் ஏற மாத்திரமில்லாது, அவனுக்குக் காய் வெட்டி கள்வடியப் பாளை சீவி விடவும் கூடத்தெரியும். அவன் கள் முட்டி கட்டின பனைகளிலே ஏறி களவாய் மேலே இருந்து நுரைத்துப் பொங்கும் உடன் கள்ளும் குடித்துவிட்டு, பிறகு பாளையும் சீவி கள் ஒழுகப் பண்ணிவிட்டு, மரத்தாலிருந்து நைசாகக் கீழே இறங்கிப் போய் விடுவான்.
இதனால் திரும்பவும் அந்த முட்டிக்குள் கள் வடியும். கள்ளுக் காரனுக்கு இது தெரியாது. வழமைபோல முட்டியிலும் அவனுக்குக் கள் இருக்கும். பாதிப்பில்லை. மூர்த்தி கூத்துப் பழகிற ஒத்திகையிலிருந்து முன்பு பிரச்சனையாகி, அந்த தொடர்பிலிருந்து வெட்டுப்பட்டது போல விலகிப் போனவன். இப்போது அகதி முகாம் காரரின் நடிகர்களை குவழிப்படுத்தி விடத்தான் அந்த வேலையை அவன் செய்தான்.
கூத்து வெள்ளுடுப்பு நடந்து கொண்டிருக்கிற காணியிலே ஏழெட்டு பனை இருக்கும் அந்தச் சீவல் போட்ட முட்டிகட்டிய எல்லாப்பனைக ளிலிருந்தும் கள்ளு முட்டிகளை இறக்கி, இருட்டு மறைவிலே அவைகளை வைத்துவிட்டு அதிலே தம்ளரும் வைத்துத்தான் மூர்த்தியின் மேற்பார்வை யிலே இந்தவேலை அங்கே நடக்கிறது.
М8Эыллам) О 185 o

Page 101
முன்னாலே அந்தக் கூத்து நடக்கிறது. பின்னாலே என்றால் இந்தக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.
"தண்ணிகிண்ணி குடிக்கிறதெண்டா ஆளாளுக்கு பின்னாலபோய் தனியத்தனியவாய் ஆரும் குடிச்சிட்டு வாங்கோ?”
என்று இந்த விஷயம் தெரியாத நடிகர் மார்களுக்கும் இதைப் பற்றி தெரிந்தவர்கள் கதையும் விடுகிறார்கள். பிற்பாட்டு படித்த அண்ணாவி முருகேசனாரும் மேடை அரைவாசிக்கு வந்து இப்போ பாட்டுப் படித்து விட்டுப் போகிறார். அவர் "தான் தான் இந்தக் கூத்துப் பழக்கின அண்ணாவி’ என்று அதன் மூலம் பார்வையாளருக்கு ஒரு விலாசம் எழுப்பி விட்டுப் போகிறார்.
நடிகர்மார் எல்லாரும் படிக்கிற பாட்டு நூறு சுதி கட்டையில பிடிச்ச மாதிரி அப்பிடியாய் சுதியாய்ப் போகுது. இவர்கள் எல்லாருமே இப்படி படித்தால் சண்முகத்தாரின் மேள அடியும் அதுக்கு இணையாக எப்படி இருக்கும்? அவருடைய மிருதங்க அடியும் திறமா பிரளுது உருளுது அந்த மாதிரியா தாளம் போடுறமாதிரி அடி நடக்குது. ஐஞ்சு விரலால் அடிச்ச அடி இப்ப ஆறு விரலால தாளம் போடுற மாதிரி இருக்குது.
நடுச்சாமம் கடந்து போய், ரெண்டு ரெண்டரை மூன்று மணித்தியா லமும் கடந்து இப்போ ராஜனின் கட்டம் தொடங்கியதாய் விட்டுது. ராஜனுக்கும் பாட்டு சும்மா கணி' - என்று வருகுது. ராஜனுக்கு இப்போது கிளிக் காத்தான் கட்டம், அவன் கிளியாய் மாறியதாய் காட்சி வருகிறது.
ஆரியமாலா குளித்துக்கொண்டு இருந்தவ கிளியைக் கண்டிட்டா, பாலும் இந்தா பெற்றி பெற்றி, பெற்றியரே இந்தப் பழமுமிந்தா கீழ் இறங்கு, என்று கீழே பழமும் வைத்து பாலும் வைத்து ஆரியமாலா கூப்பிடுகின்றா.
பாலோடி நான் புசியேன்
மாலை பெண்ணே
இந்த பழமோடி நான் புசியேன்
காத்தான் படிக்கிறான், என்ன மாதிரி குரல்1 என்ன மாதிரி கனிந்தொழுகும் திறந்த குரல்1 என்று ராஜன், இந்த பாட்டுக்களைப்படிக்க, பார்க்கின்ற சனங்களும் வாயிலே கையை வைத்தப்படி யோசிக்கினம், அவர்களுக்கெல்லாம் தெரியவில்லை இந்தச் சூத்திரமெல்லாம். மேடைக்குப் பின்னாலே இருட்டுக்குள் இருக்கின்ற பானைக்குள்ளே உள்ளதில அடங்கியிருக்கிறதென்று.
அந்த தைரிய மருந்து தான் இந்தக் தூக்கு இவர்களை தூக்குகிறது
 

என்று அவர்கள் யாருக்குமே தெரிய விட்டாலும், அங்கே இருந்து வெள்ளுடுப்பு கூத்து பார்த்துக் கொண்டிருக்கிற தியாகு என்பவனுக்கு மாத்திரம் எல்லாமே அவ்வேளையில் நன்றாக தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட அவ்வேளை காலை நான்குமணி நேரமாய் இருக்கும். கூத்து இப்படி நடந்துக்கொண்டிருக்க, கள்ளுக்காரன் பெண்டாட்டி தியாகுவின் மனைவி சொன்னாள். శిష్టి
"இங்க அப்பா விடிய நாலு மணியாச்சு நான் இருந்து கூத்து பாத்துக் கொண்டிருக்கிறன். நீங்க போய் உங்கட தொழிலப் பாருங்கோ..? நான் பிறகு வாறன்?” என்று,
பனை ஒவ்வொரு நாளும் பாளை சீவவேண்டுமே, கள்ளும் இறக்கி எடுக்க வேண்டுமே,? என்ற இந்த அக்கறையில்தான் அவள் உடனே இதை யோசித்துக் கொண்டு அப்படிச் சொன்னது. ஆனால் தியாகு தன்னுடைய மனைவி இப்படி தனக்கு சொல்ல,
"அடியேய் மோடி, நாலு மணிக்கும் இப்பிடி இவங்கள் சுதி வைச்சுப் பாடுறாங்களெண்டா உனக்கு அது விளங்கேல்லயா..? நான் செய்யிற வேலய இவளத்துக்கு மூர்த்தி எண்டவன் செய்திருப் பானெண்டு. போன முறை கண்டியோ தேவன் அண்ணாவியாற்றை வெள்ளுடுப்புக்கு எனக்கு இருபது போத்தல் கள்ளு இல்ல. அது அங்கவா தூர நடந்ததால ரெண்டு மூண்டு பனையோட அவன் விட்டிட்டான். ஆனா இப்ப வளவுக்கயே வெள்ளுடுப்பு நடக்குது. அதால உங்க உள்ள ஒரு பனையையும் அவன் இப்ப விட்டு வைச்சிருக்க மாட்டான்.!”
என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே தியாகு படங்கிலே சரிந்து படுத்து விட்டான். மூர்த்தியோடு இந்த தியாகு எப்பவுமே முழங்கும் சொற்பேச்சுப் பேசி முண்டுகிறதில்லை. இப்படி ஏதாவது அவனோடு முண்டினால் அவன் பிறகு “பார் இவருக்கு செய்ய வேணுமெண்டு” மரத்திலே ஏறி கள்ளுமுட்டியை உடைத்துப் போடுவான். இல்லா விட்டால் பாளை வெட்டிப் போடுவான் என்று பயம்!
மூர்த்தியிடம், இவன் தியாகு, வெறும் கள்ளு முட்டியும் கூட காசு கொடுத்து வாங்குகின்றவன். மூர்த்தி எங்கேயும் போய் களவாய் மரத்திலிருந்து கள் முட்டியையும் இறக்கிக் கொண்டுவருவான். பின்பு கள்ளைக் குடித்துவிட்டு வெறும் முட்டியை தியாகுவிற்கும் காசுக்கு அவன் விற்றும் விட்டுகிறவன். அப்படியாகத்தான் இவை எல்லாமே இந்த மூர்த்தி என்பவனது செயற்பாடுகள்.
அவன் கதை அப்படியாய் இருக்க, இங்கே தன் மனைவிக்குப் பக்கத்தில படங்கிலே சாய்ந்து படுத்துக் கொண்ட தியாகு, பிறகு அரைவாசி
நித்திரைக்குப் போய் விட்டான். அங்கே கூத்து மேடையிலே இப்போது காத்தானின் கழுமரம்பாட்டு தொடங்கி விட்டது.
6.9emy.) O 187 O

Page 102
வெள்ளுடுப்புக்கு மேடையிலே செட்டப் வந்து கழுமரம் அங்கே நடுகிறதில்லை. ஆனாலும் கழுமரத்துக்குப் பதிலாக அங்கே மேடையில் வெள்ளை வேட்டி கட்டிக்கிடக்கின்ற இடத்துக்குப் பக்கத்திலே ஒரு பெரிய வாங்கும் வைத்து அதற்கு மேல் ஒரு சின்ன வாங்கும் வைத்து; காத்தான் பத்துப் படிகள் மேலே ஏறி போவதற்கும் அதை வைத்தே சமாளித்து நடிக்க வேண்டும் என்பதாய் காத்தான் பாத்திரமேற்று நடிக்கும் ராஜனுக்கு இது விதம் சொல்லப்பட்டிருந்தது.
'ஓராம்படி ஏறவென்றால் பெற்றவளே தாயே" - என்ற அந்த உடம்பு நடுங்கும் அப்படியான பாட்டோடு சேர்த்து, பிற்பாடு படிக்கப்படும் நாலு படிகள் ஏறும்பாட்டையும், வைத்துள்ள அந்த வாங்கிலே ஏறிக் கொள்ளாமல். கீழே நின்றே படித்து முடித்துவிட வேண்டும் - என்று ராஜனுக்கு ஏலலே அண்ணாவியார் தான் இதை சொல்லியிருந்தார். அது போக ஆறம்படி ஏறுகிற பாட்டு படிக்கும் போது தான் பெரிய வாங்கில் காலை வைத்து ஏறி நின்றுகொள்ள வேண்டுமென்றும், மிகுதி ஒன்பது படிகள் ஏறுகிற பாட்டு படிக்கும் வரை அதிலேயே நின்று சமாளித்துவிட வேண்டுமென்றும், பிறகு பத்தாம் படி ஏறுகிற பாட்டு படிக்கும் போது தான் மேலே உள்ள சின்ன வாங்கில் ஏறி நிற்கலாம் என்றும் வடிவாக இதெல்லாமே சொல்லி ராஜனுக்கு உணர்த்தப்பட்டிருந்தது. ஆனால் ராஜனின் நிலைமை என்னவென்றால் அவன் மூன்று படிகள் ஏறும்பாட்டை, வாங்கில் இன்னும் காலை வைத்து ஏறாமல் நின்று படிக்கும் போதே, மனம் அனலாய் எரிகிற ஒருவித உணர்ச்சியிலே தன்னையும் அறியாமல் அவசரப்பட்டு பெரிய வாங்கில் ஏறி பிறகு நின்றுவிட்டான்.
‘என் இதயம் நோகுது, வலிக்குது, எரியது' - என்று கழு ஏறக் காத்தான் படிக்கும் பாட்டிலே தானும் உணர்ச்சிவசப்பட்டு சின்ன வாங்கிலும் கால் வைத்து ஏறி நின்றாகியதாய் பிறகு ஆகிவிட்டது அவனுக்கு.
இனி அடுத்த படி ஏறும் பாட்டிலே "எதில் ஏறி நின்று படிப்பது?”. என்ற அந்தரத்திலே வெள்ளை வேட்டிகள் கட்டியுள்ள இடத்திற்குப் பின்னாலே நட்டிருந்த கம்பிலே துணியுடன் அதை சேர்த்து கையால் பிடித்துக் கொண்டு ஏறி, ஒரு காலை அதில் பொறுக்கவைத்தபடி ஒரு பக்க கையையும் விரித்துக் கொண்டு பாட்டை பிறகு பாடத் தொடங்கிவிட்டான் ராஜன்.
ஆனாலும் ஏறி அவன் நின்ற இடத்தில் கால் அவனுக்கு சறுக்கு மரம் போல் வழுக்கத் தொடங்கிவிட்டது. கீழே அப்படி ராஜன் சறுக்கிக் கொண்டு வருவதை பார்த்துவிட்டு அண்ணாவியார் உடனே மேடை நடுவே ஓடிப்போய் தன் கையை நீட்டி கம்பை பிடித்துக்கொண்டு ராஜனின் கால் சறுக்கிக் கீழே வராமல் முண்டுக் கொடுத்தார்.
என்றாலும் கையில் அவருக்கு பெரிய பலம் இல்லாமல் சறுக்குவதும்
91889 புதினான்கஸ் தான் சஆதிரன்

பிடிப்பதுமாய் அவர் செயல்படுவதை பார்த்துவிட்டு, சண்முகமும் ஒடிப்போய் அதிலே அண்ணாவியாருக்கு உதவியாய் தானும் கையை வைத்துப் பிடித்தார்.
மரியாதை கெட்டுப் போய்விடும்' என்ற பயத்தோடு ராஜனும் இப்படியே மிச்ச சொச்சமுள்ள கழுமரப் பாடல்களையும் அந்தக் கம்பிலேயே கொஞ்சம் கொஞ்சமாக ஏறி படித்து முடியுமட்டும் சண்முகத்துக்கும் அண்ணாவியாருக்கும் தங்கள் கைப்பலத்தில் ராஜனின் காலிற்கு பொறுப்புக் கொடுத்து வழுக்கி வராமல் நிறுத்துவதுதான் வேலையாகிவிட்டது.
கழுக்காத்தானுக்கு படித்த ராஜனின் கூத்துப்பாட்டு கேக்கின்ற சனத்திற்கெல்லாம் அங்கே நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும் அனேகர் அங்கே இதையெல்லாம் பார்த்து இடிக்கின்ற இடியைப்போல வாய் திறந்து சிரிக்கவும் தான் செய்தார்கள். இந்த மாதிரி சிரிப்பில் குலைந்த தலைமயிர் குழப்பிப் பரப்பவும், சில பெண்கள் கையால் உடனே கொண்டையும் போட்டபடி சிரித்தார்கள்.
ஆனாலும் கூத்துப் பாடல் இசையை கேட்டு ரசித்ததிலே பார்வை யாளராயிருந்த எல்லோருக்கும் நல்ல சந்தோஷமும் மனத்திருப்தியும் தான்!
இருட்கண்டம் முடிந்து விடிந்து மருந்தான காலை வெயில் வந்துதான், கூத்தின் வெள்ளுடுப்பும் நடந்து முடிந்தது. அங்கே கூத்தை இவ்வளவு நேரமாய் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனேகம் பேர் இனிப்போய் வீட்டிலே தலையைச் சாய்க்க சமயமில்லை என்ற நிலையிலே, தங்கள் தங்கள் வேலைகளை உடனே நினைவில் நோக்கிக்கொண்டு அந்த இடத்தால் இருந்து பிறகு கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்.
கூத்து நடித்த நடிகர்மார்களும் விடி காலை வெயில் சூடாய் ஏற முதல் - தங்கள் திறமைகளை கூத்து நடிப்பதில் எண்பித்த மனத்திருப்தியுடன் மேடை கலைக்கும் வேலையை செய்வதற்கு தொடங்கினார்கள்.
அந்த நேரம் அண்ணாவியாரும் அவர்கள் கூட நின்றார்.
அவர் கண்டிப்பாக பிறகு அவர்களுக்கெல்லாம் கேட்க ஒரு கதை சொன்னார்.
"இந்த வெள்ளுடுப்பு நடந்த நேரம் நீங்கள் பண்ணின முசுப்பாத்தி சேட்டையெல்லாம். நாளைக்கிரவு நடக்கும் ஒரிஜினல் கூத்தில இருக்கவே இருக்கப்பிடாது. எல்லாரும் அண்டைக்கு சாமி மாதிரி இருந்து கொள்ளுங்கோ என்ன நான் சொல்லுறது.?’ என்று அவர் சொல்ல அவர் சொன்ன சொல்லு, அம்பு வீசினதாய் இல்லாமல் சிலம்பு வீசினகணக்கில் பொறி எழுப்பின மாதிரி சுட்டது எல்லோருக்கும்.
SPyayoyಣ್ಯತಿ O 189 O

Page 103
அண்ணாவியார் இப்படி சொல்ல, நடிகர்மார்களுக்கெல்லாம் இப்போதே தம்முடைய உடல் அழுக்கையும், மன அழுக்கையும், குளித்து முழுகித் துடைத்துவிட வேண்டும் போல் ஒரு யோசனை வந்தது.
எல்லோருமே பிறகு, தங்கள் யோசனைகளைக் கதைத்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள்.
"இனித் தாங்கள் குடிப்பதேயில்லை” - எனவும் சத்தியமிட்டுப் பிறகு அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். மனத்தில் படர்ந்திருக்கும் பாசி நீங்கித் தங்களை சரி செய்ததுமாதிரி பிறகு அவர்களுக்கு இருந்தது. அடிக்கல் நாட்டினமாதிரி மனதில் இந்த எண்ணத்தோடும் திட்டத்தோடும் அவர்க ளெல்லோரும் பிறகு ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.
நேற்றைக்கு முன்தினம் நடந்த காத்தவராயன் கூத்தினது வெள்ளுடுப்பு நிகழ்வின் பின், அதில் பங்குபற்றியிருந்த உத்தமன் வீட்டுத் திட்டத்தில் உள்ள நடிகர்களுக்கெல்லாம் மனத்தில் உற்சாகம் திடம் கொண்ட சக்தியை அளித்திருந்தது. வெள்ளுடுப்பு நிகழ்வை பார்த்த பலரும் அவர்களை மெச்சி, மிகவும் முதுகில் தட்டியமாதிரி புகழும் பாராட்டும் கூறியிருந்ததால், இன்றைய இரவிலும் நடிக்கப் போகும் ஒரிஜினல் கூத்திலும் தங்கள் திறமைகளை கனன்று மின்னும் அளவுக்குச் செய்ய வேண்டுமென அவர்க ளெல்லாம் ஆவலோடோயாய், இரவு கூத்து தொடங்கும் நேரம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
நந்திக் கடலுக்குப் பக்கத்தேயுள்ள அருள்மிகு 'பிள்ளையார் - கோவிலடி முன்றலிலேதான் கூத்து நடிப்பதற்கான விரிவான மேடை சீராய் அமைக்கப்பட்டிருந்தது.
"இண்டைய பொழுதை அவம் போக்காமல், பொன் போல மதிச்சு கேப்பாப்புலம் போய் காத்தவராயன் கூத்தைப் பாப்பம்!” என்று நினைத்துப் பல இடங்களிலிருந்தும் வாலிபங்கள், வயசுகள், என்ற அளவிலாய் சனம் வந்து அங்கே குவிந்து கொண்டதாய் இருந்தார்கள. கேப்பாப்புலம் இடத்துக்குப் பக்கத்திலே உள்ள ஊர்தான் வற்றாப்பளை என்பது. அங்காலேயுள்ள முள்ளியவளை, தண்ணிருற்று - என்ற இடத்திலுள்ள சனங்களும், அடுத்து மூங்கிலாறிலேயுள்ள முகாம் சனங்கள் மொத்தம் முழுவதுமாக இப்போது இந்தப் பிள்ளையார் கோயிலடி முன் வெளித்தரையில் தான் நெருங்கியடித்ததாயப் படங்கிலும் மண்தரையிலுமாய் இருந்து கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு மூலை இடத்தில், லைட் எஞ்சின் பெரிதாய் இயங்கும்
O 1900 புதினான்கஸ் என் சந்திரன்
 

மூச்சொலிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. மேடையில் பிணிந்துள்ள முன் திரைச்சீலை மடிப்புகளில் மின்சார ஒளிபட்டு, பார்வையாளர்களை வேறோர் உலகம் காண ஆவல்படுத்திக் கொண்டிருந்தது. கோயிலைச் சுற்றி வேண்டாம் இனி என்பதாய் எல்லா இடமும் மின்சார பல்புகளின் வெளிச்சம் தான்.
ஒலி பெருக்கியிலும், உதைத்தல் மிதித்தல் போன்ற கடூரமான சினிமாப் பாடல் இல்லாமல் பக்திப் பாடல் படித்துக் கொண்டிருந்தது.
இரவு ஏழரை மணிபோல இருக்கும் உத்தமன் வீட்டுத் திட்டத்தின் முகாம் தலைவர் தான் கூத்து ஆரம்பிக்கும் முன்பாக ஒரு சிறப்புரை நிகழ்த்தினார். செவ்வையாய் நறுக்கின மாதிரி நாலு வசனம் சொல்லி சனத்துக்கு அலுப்புக் கொடுக்காமல் தனது உரையை அவர் நிறுத்திக் கொண்டு மேடையிலிருந்து அவர் கீழே இறங்கிவிட்டார்.
அவரின் சொற்பொழிவுக்குப் பிறகு, தொக்கைப் பூக்கள் பொலியக் கட்டிய பெரியமாலை, அண்ணாவியார் முருகேசருக்கு கழுத்தில் போட்டு சிறந்த வாழ்த்துதல் சொல்லி பாராட்டும் நிகழ்வும் அந்த மேடையில் நடந்தது.
அது நடந்து முடிந்ததன் பிறகு முறை சிறந்த பாரம்பரிய இந்த கூத்தைப் பற்றி சொல்ல புதுக்குடியிருப்பிலிருந்து வருகை தந்திருந்த பண்டிதர் ஒருவரின் சொற்பொழிவு இடம் பெற்றது. இந்தப் பேச்சுக்களின் நிகழ்வெல்லாம் பார்க்கும் சனங்களின் பொறுமை என்பது மீறி மனம் அவர்களுக்கு பழுக்காமல் வலு கெதி கெதியாக முடிந்துவிட்டன.
இதற்குப் பிறகு மேடையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களது ஆசை நிறைவேறுமளவுக்கு கூத்தும் தொடங்கிவிட்டது.
திரைகளை மூடி நேர தேக்கம் ஏதும் வைக்காமல் மளமளவென்று அமைதியாக காட்சிகளும் படிப்படியாக வலிமை பெற்றதாய் போய்க் கொண்டிருந்தன. பார்வையாளர்களுக்கும் காத்தவராயன் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் கலந்துறவு மனதுக்கு மிகவும் ஆரோக்கிமாக இருந்தது. இதனால் உடலில் உயிர்ச்சத்து நிரம்புவது போலவும் அவர்களுக்கிருந்தது.
கூத்து நடந்து கொண்டிருந்த இடைப் பொழுதில், அம்மன் எனப்படும் அந்த 'அம்மனை’ உங்களுக்கெல்லாம் தெரியுமா? என்றவாறாய்ச் சொல்லுமளவிற்கு, அம்மனுக்குக் கட்டுகிற அந்தக் கூறைச்சேலையோடு அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரே கையில் ஒரு உண்டியலோடு சனம் இருந்த இடத்துக்குள்ளே இறங்கிவிட்டார். உண்டியலுடன் கீழே இறங்கிவந்த அந்த அம்மனைச் சனங்கள் கண்டுவிட்டு, பிச்சைச் சிறு தொகை என்று ஏதும் சில்லறைகள் போடாமல் நேர்த்தி வைச்ச விண்ணப்பத்திற்காய் பெரிய
தாள் தாள் காசுகளாய்ப் போட்டார்கள்.

Page 104
நடுச் சாமம் கடந்து கன நேரம் ஆகிவிட்டது. வருத்திச் சுருட்டி இந்த நேரத்தில் நித்திரை வந்து அலைத்தாலும், அதைத் தம்பிலிருந்து கலைத்து விட்டு, விரித்தது போலக் கண்களைத் திறந்து, கூத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சனங்கள். நேரம் இப்போது "விடியலுக்கு முன்னால் சரியாக மூன்று மணி இருக்கும்” இங்கே மேடைக்குப் பின்னாலே நடிகர்களுக்கு ஒப்பனை போடுகின்ற இடத்திலே அண்ணாவியார் முருகேசர் நின்று கொண்டு, தனக்கு முன்னாலே நிற்கிற ராஜனுக்கு “கீதா உபதேசம் மாதிரி” அறிவு திறக்கும் ஞானக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
அண்ணாவி முருகேசனார் ராஜனுக்குத் தன் பார்வையில் இவ்வேளையில் அவர் ‘குருஷேத்திரத்து கண்ணன்' - மாதிரியே தென்படுகிறார். ராஜனுக்கு அண்ணாவியார் சொல்லிக்கொண்டு வந்த கதை கேட்க மனத்தில் பனித்துளி உருள்வது போல குளிச்சியாயும் இருந்தது. மறு பக்கம் மனதில் அவனுக்கு, பக்தி மீறிய ஒரு வித பயத்தையும் அளித்தது. கடைசி விசயத்தை அண்ணாவியார் ராஜனுக்குச் சொல்லும் போது, இன்னும் இறுக்கினார்.
"இந்தக் காத்தவராயன் கூத்தில ராஜன், எல்லா கதாபாத்திரங்களும் அது அது நடிச்ச நடிப்போட சரி. அது அப்பிடியே பிறகு அமந்திடும்! ஆனா நீர் நடிக்கப்போகிற இந்தக் கழுக்காத்தான் படிக்கிற உமக்கு, கழு ஏற்றம் போகேக்க உம்மை அறியாமலேயே ஒரு "அருள் அப்போதைக்கு வரும். அதால நீர் மிகவும் பத்தியாவும் இருக்க வேணும். ஏனெண்டால் அங்க மேடையில நீர் ஏறுற அந்தக் கழுமரம் கூட, உண்மைக் கழுமரம் மாதிரித் தான்! அறுத்துக் குத்திப் போடுற மாதிரி, ஊசி ஊசியா இருக்கும்! அது குத்தினா ஒரு கதைக்கு நான் சொல்லுறன். அப்பிடியே அது உள்ள போய் மறு பக்கத்தாலயம் துளைச்சுக் கொண்டும் வந்திடுமெண்டு இருக்கும்.”
என்று அவர் கடும் வரிகள் பிடித்து இவ்வாறெல்லாம் சொல்ல, ராஜனுக்கு அதைக் கேட்க, கொஞ்சநேரம் மூச்சத் திணறல் சூழ்மை கொண்டிருந்தது. என்றாலும் நெஞ்சில் பற்றின ஒரு வித துறவு நிலையோடு, தன்னுடைய வேளைவர "கழுமரம் ஏறுகிற காட்சியிலே பாடலை ஆரம்பித்து அவன் நடிக்கத் தொடங்கிவிட்டான்.
தரிப்பு இல்லாத உரத்துக் கூவியழும் பாட்டுத்தான் “பெற்றவளே தாயே" - என்ற பாட்டு மனம் நொந்து படிக்கும் அந்தத் துயரப் பாட்டிலே, மூன்றாம்படி பாட்டு அப்போது படிக்கும்போது ராஜனுக்கு தேகமும் நொந்து ரோமமெல்லாமே சில்லிட்டு நின்றது. ஒரு வித உணர்ச்சி அவனுள் அப்போது எழுந்து பரவ, அப்படி வந்து சேர்ந்த சக்திக்குள்ளேயாய் அவன் பிறகு சிக்கிக் கொண்டான்.
நாலாம் படி ஏறுகிற பாட்டிலிருந்து அவனுக்கு பிறகு மேலே
9 1929 புதினான்கஸ் தான் சந்திரன்

படிக்கும்போது என்ன ஏது என்ற தெரியாத அளவுக்கு அவனுக்கு இருந்தது. பொறுமையாய் எல்லாப் பாட்டுக்களையம் அவன் படித்து முடித்து பத்தாம் படி ஏறும் பாட்டை அவன் படிக்கத் தொடங்கும்போது ஞானக்கனியை விழுங்கிய மாதிரி அவன் கண்களை மூடிக் கொண்டான். நெடுங்கடலிலிருந்து பாரிய வெடிச்சத்தம் அந்நேரம் பார்த்து கடுமையாக தொடர்ந்து கேட்கத் தொடங்கியது.
அந்தச் சத்தங்கள் பெரிதாய் கேட்கத் தொடங்கியதும் தான் சனக்கும்பல்கள் கூத்துப் பார்ப்பதையும் விட்டுவிட்டு "ஒகோ எங்கே எந்த வழியாலே ஓடுவது” - என்று குழம்பத் தொடங்கிவிட்டார்கள். வெளி இடங்களிலிருந்து இங்கே கூத்துப் பார்க்கவென்று வந்த சனங்களுக்கு இடம் இது அவர்களுக்கு புதிதானதால் எங்கே எந்த வழியினூடாக திடநம்பிக்கையாக ஓடுவது போவது என்று ஒன்றுமாய்த் தெரியவில்லை. அதனாலே அந்த இருட்டு மங்கலில் அச்சம் மீதூர ஓடி நந்திக் கடற்கரை சேற்றுப் பகுதிக்குள்ளும் போய் அவர்கள் விழுந்தெழும்பினார்கள்.
இந்தப் பாய்ச்சல் ஓட்டத்துக்குள்ளே கூத்து நடித்த நடிகர்மார்கள் எல்லாரும் தான் அங்கே உள்ள சனங்களோடும் சேர்ந்து ஒரே ஓட்டம். அண்ணாவி முருகேசரும் விலக்கில்லை, அவரும் ஓடுகிற சனத்தோடு ஒருபக்கம் பார்த்து ஓடிவிட்டார். சண்முகம் என்ன பிறிம்பான வேறோரு ஆளா? அவரையும் தான் மேடைப்பக்கம் காணவில்லை. அவரும் எங்கேயோ இவ்வேளையில் ஒடித்தான் போய்விட்டார்.
இப்படி எல்லாச் சனங்களுமே கடலில் கேட்ட வெடிச் சத்தங்கள் கேட்டு விலகிச் சென்று விட்டதான ஒரு பெரிய குழப்பநிலை. ஆனாலும் ஆளையே தூக்கித் தூக்கி எறிந்ததைப் போன்று கேட்ட அந்த சத்தத்திலும் ராஜன் ஒன்றும் மனங்கலங்காமலும் குழம்பாமலும் அந்தக் கழுமரத்தாலே கீழே இறங்காமலும் என்ன ஏது நடந்ததென்று ஒன்றும் அறியாத உணர்ச்சியில் கடைசிப் பாட்டை பாடிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு தன் உயிர் சொத்து சொந்தம் மனைவி பிள்ளை என்று ஒன்றுமே நினைவிலேயாய் இல்லை. "இந்த உலகத்தில் நான் இருக்கிறேனா இல்லையா?” - என்றதான ஒரு நினைப்புக்கூட இப்போதைக்கு அவனிடமாய் இல்லை.
மேடைக்கு முன்னாலே “சனங்கள் இருக்கிறார்களா இல்லையா?” - என்று அதுகூட அவனுக்கு தெரியவில்லை. இப்படியானவனுக்கு வெடிச் சத்தங்கள் எங்கே காதில் விழப்போகிறது. அவன் தன் கண்களையும் மூடிக் கொண்டு தொடர்ந்து கழுமரத்து பாட்டைத் தான் பாடிக் கொண்டிருந்தான்.
filemmayyð o 193 O

Page 105
இவ்வளவும் அங்கே நடந்தும் ராஜனின் மனைவி "கெளரி" - தன் புருஷன் . அந்த நிலையிலே தன்னையே மறந்ததாக கூத்துப் பாட்டும் ஆளுமாக இருக்க அந்த இடத்தை விட்டுதானும் பிள்ளைகளோடு மற்றவர்கள்போல ஒடிப்போனாளா என்றால் - அப்படி இல்லவே இல்லை. அவள் அந்த இடத்தை விட்டு எங்கும் போக அசும்பவே இல்லை. தன் புருஷனை அந்த நிலையில்விட்டு அவள் எப்படித்தான் எங்காவது ஓடுவாள்?
“என்ன ஏது நடந்தாலும் நாங்கள் குடும்பமாகவே சேர்ந்து ஒன்றாய் செத்துத் துலைவோம்” என்ற வைராக்கியத்தில் அவள் - புயல் காற்றிலும் நில அரிப்பிலும் சாய்ந்து விழாத பனை மாதிரி நிமிர்ந்த அளவிலேயே தன் பிள்ளைகளோடு அதிலே நின்று கொண்டிருந்தாள்.
இந்நேரம் துவக்கு சகிதமான ஆயுதங்கள் கையிலேந்தியபடி இரண்டு வாலிபர்கள் கூத்து மேடைப் பக்கமாக வந்தார்கள். அவர்களைத் தூர நின்ற இரண்டு மூன்று பேர் கண்டுவிட்டு இவ்விடமாய் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு ஓடிவந்தார்கள்.
“என்ன நடந்தது தம்பியள் என்ன அங்க நடந்தது."- என்று ஓடி வந்தவரில் ஒருவர் வந்த அந்தக் களைப்போடு மூச்சு மேலும் கீழும் இழுக்க அவர்களைக் கேட்டார்.
”ஏதும் இங்கால செல் அடிக்கப் போறாங்களா தம்பி? விமானம் வந்து குண்டு ஏதும் இதுக்கவா பிறகு போடுமா தம்பியள் சொல்லுங்கோ ராசா..?’ என்று முதல் கதைத்த அவருடன் சேர்ந்து வந்த அடுத்தவரும் இந்தக் கேள்வியை அந்தப் பெடியன்களிடம் கேட்டார்.
இவர்கள் இருவரும் இப்படி அவர்களைக் கேள்வி கேட்டதும், ஆயுததாரிகளாய் நின்ற அவர்களிருவரும் கையில் வைத்திருந்த வோக்கி டோக்கி மூலம் தாங்கள் தொடர்பு கொண்டு அவசர செய்தி வழங்கும்
கதைத்தார்கள்.
அங்கே இருந்து உடனே அவர்களுக்கு அதைப்பற்றிய செய்தி கிடைத்தது.
"பொக்கணை சாளை - அந்தப் பக்கத்திலதான் ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கு இங்கால ஒரு பிரச்சனையுமில்ல.” என்று கிடைத்த அந்தச் செய்தியை அவர்கள் அந்த இருவருக்கும் சொன்னார்கள். உடனே தனிக் கவனமாக நின்று அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு, ஒலிபெருக்கியை ஒழுங்கு பண்ணி திரும்பவும் இயக்குவதற்கு அந்த வேலையோடு இருந்த பெடியனையும் அவர்கள் அங்கெல்லாம் தேடிப்பிடித்து அந்த இடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.
9 1949 புதினான்காம் தான் சந்திரன்

அதற்குப் பிறகு,
"இங்க பக்கத்தில ஒரு பிரச்சனையுமே இல்ல. பிரச்சனை வேற எங்கேயோ நடக்குது. அதையெல்லாம் கதைக்க வேண்டிய இடத்தில கதைச்சுத்தான் எல்லோருக்கும் இப்பவா சொல்லுறம்.1 அதனாலே பயம் ஒண்டும் இல்லாம திரும்பவும் இந்த இடத்தில கூடி கூத்தை நிறைவாக எல்லோரும் இருந்து பார்த்துவிட்டு போகுமாறு உங்களையெல்லாம் பணிவோடு
அழைக்கின்றோம்.'
ஒருவர் மைக்கை கையில் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்ல, அவருக்குப் பக்கத்தில் நின்றவரும் அவர் கதைத்துக் கொண்டிருந்த மைக்கை தன் கையில் பிறகு வாங்கி, அவர் சொன்ன செய்தியையே நல்ல தமிழ்ச் சொற்கள் சேர்த்து அழகாக சொன்னார்.
"இன்னும் இந்தக் கூத்து நிறைவு பெறுவதற்கு சொற்ப நேரமே இருக்கிறது. அதனால் இது நிறைவு பெறுமட்டும். திரும்பவும் இங்கே வந்து இருந்து மிகுதியையும் கண்டு கழிக்குமாறு அன்பர்களை வேண்டுகின்றோம்.”
ஒலி பெருக்கியிலே இப்படியெல்லாம் சொல்லி ஒலிபரப்பப்பட்ட செய்தியை சனங்கள் கவனமாகக் கேட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சம் பேராய் கூத்து மேடைக்குப் பக்கத்திலே பிறகு வரத் தொடங்கிவிட்டார்கள்.
தண்ணிரில் விழுந்து தோய்ந்த சனங்களும் உடுப்புகளைப் பிழிந்து தண்ணிர் விடுத்துக் கொண்டதாய் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்.
'காத்தவராயன் கூத்துப் பார்க்கிறதை இடையில உடைச்சுக் கொண்டு போயிடப்படாது' - என்ற ஒரு கெட்டியான நம்பிக்கையோடு ஒருவருமே எங்கும் விலகிச் சென்று விடாமல் அவ்விடமாய் இப்போது வந்து சேர்ந்ததாய் விட்டார்கள்.
8ഥയ്ക്കേ கூத்தின் நடிப்பு அதன் பாட்டுக்கு தொடர்ந்ததாய் அங்கே போய்க்கொண்டுதான் இருக்கிறது. இருளை அறுத்து விடுதலை பண்ணியதுபோல, விடிந்து வெளிச்சமும் பரவி பிறகு வெயிலும் வந்து விட்டது.
இப்போது காலை எட்டு மணியாகவும் ஆகிவிட்டது. கூத்து முடியப் போகின்ற கடைசிக் கட்டம் காத்தான் தான் தப்பித்துக் கொள்வதற்காக மேளம் அடிக்கின்ற பறையனைமேலே கழுமரத்தில் இருந்தபடி அவனுக்கு ஆசை காட்டி,
"இங்க நீ வந்தியெண்டா உழைக்க நீ போகத் தேவையில்ல. மனுசியின்ர பிரச்சனையில்ல. கடன் தொல்லையள் ஒண்டும் இல்ல. பிள்ளை குட்டிகளாலயும் கரைச்சலுமில்ல. கள்ளும் இங்க நீ குடிக்கலாம்” என்று.
அப்படியாகச் சொல்ல,
6.9emy.) O 195 O

Page 106
"அட மேல வந்தா கள்ளும் நல்லா குடிக்கலாமோ..?” என்று அவன் கேட்கிறான். பிறகு,
"இப்பிடியாகத்தான் படிப்படியா நான் ஏறி இங்கயா மேல வந்தனான். நீயும் அப்படியாய்த்தான் மேலே ஏறிவா..?”
என்று காத்தவராயன் அவனுக்குச் சொல்லி அப்படி அழைக்க, ஒவ்வொரு படியாக அவனும் ஏறி ஒவ்வொரு சந்தேகத்தையும் காத்தவராயனிடம் கேட்டபடி மேலே போய் விடுகிறான். இது தான் தனக்கு தருணமென்ற காத்தவராயன் கீழே அப்போது இறங்கி விடுகிறான்.
அவன் இப்போது 'அம்மா என்னைக் காப்பாற்று' - என்று காத்தவராயன் பாடிய பாட்டை பாடத் தொடங்கிவிட்டான். அம்மன் இப்போது அவன் முன் தோன்றி கழுவில் அவன் ஏற வேண்டி இருந்ததற்கான விதியின் விளக்கத்தை சொல்கின்றா.
பறையனும் அம்மன் கிருபையிலே உயிர் பிழைத்து தப்பித்து கழுவாலிருந்து கீழே இறங்கி விடுகிறான்.
இதைத் தொடர்ந்து காத்தவராயன் ஆரியமாலா திருமணமும் நடந்தேறுகிறது.
கூத்து இனி முடியப் போகிற நேரம் காப்புப் படிக்கப் படுகிறது. நடிகர்களும் மேடையில் தங்களின் கதாபாத்திரத்துக்கான அந்த முகபூச் அடித்த ஒப்பனைகளோடும் ஆடை அலங்காரங்களுடனும் காட்சி யளிக்கிறார்கள்.
போர்ச் சூழல் காரணமாய் ஏற்பட்ட துன்பசாகரம் கல்லானதாய்க் கரையாமல் மனங்களி லிருந்தாலும், ஒரு நல்ல நாட்டுக் கூத்து ஒன்றை இதுவரையில் நாம் இருந்து பார்த்தோம் என்ற ஒரு திருப்தி அங்கே இருந்த பார்வையாளர்களாயிருந்த சனங்கள் எல்லோருக்குமே இப்போது மனங்களில் சுவறியிருந்தது.
○ プ காப்பு படித்து முடித்த நிறைவின் பின் தான் சனங்களும் வளைந்து நெளிந்தசைந்து கொட்டாவியும் விட்டு விட்டு, அந்த இடத்தாலிருந்து கலைந்து தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போவதற்கென புறப்பட்டார்கள். காலை நேரத்து அந்த வெய்யிலிலேயே சூரியனும் உஷ்ணத்தை அதிகம் திறந்து கொண்டிருந்தான். நந்திக் கடல் மேலே நீரலைகளின் மீது நீளக் கண்டு வந்ததாய் வீசிக் கொண்டிருந்த காற்றும் அங்கே நின்ற சனங்களுக்கு பிராணரஸத்தை கொடுத்து உடலையும் மனதையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.
O 1960 புதினான்காம் தான் சந்திரன்

ஆசிரியரின் நூல்கள் X
மாற்றங்கள் மறுப்பதற்கில்லை.
கபளிகரம்
ஆமைக்குணம்
கறுப்பு ஞாயிறு
அகதி
ஒரு பெண்ணென்று எழுது
வெளிச்சம்
ஓ! அவனால் முடியும்
நாவல்
0 வாழ்க்கையின் நிறங்கள் 0 துயரம் சுமப்பவர்கள்
0 பதினான்காம் நாள் சந்திரன்
கவிதை , 0 வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து 0 கடந்து போகுதல்
0 மெளனமான இரவில் விழும் பழம்
ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் 0 CHANGES CAN NOT BE DENIED (15 சிறுகதைகள் அடங்கலான நூல்)
0 அம்மாவுக்குத்தாலி (கணையாழி, தாமரை சஞ்சிகைகளில்
வெளியானசிறுகதைகள்) 0 அப்பிள் பழவாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும் (சிறுகதைகள்) 0 சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள் (சிறுகதைகள்)
O 197 O

Page 107


Page 108
Sixx,
| |
...
-
...
 
 
 
 
 
 
 


Page 109
உடைப்பெடுக்காவண்ணம் நகர்த்தியி முதிர்ச்சியை வெளிக்காட்டுகிறது.
டுெத்துக் கொண்ட கதைப் புல ஏற்படாது நகர்த்தியிருப்பதை உணரமுடி
666 பாவனை என்று அனைத்துமே இந்நாவ உரமாகின்றது.
வன்னிப் பிரதேசத்து மக்கள் பெற்றிருப்பது உலகறிந்தது. அக்கத்தி குறிப்பிடத்தக்கது.
காத்தவராயன் கூத்து வன்னிமக் செய்தியை முன்னிலைப் படுத்தி,
கோலத்தையும் அதில் உயிர்ப்புடன் து வெளிப்படுத்தியிருக்கும் @ಕ್ಷ್ s தூரத்தில் ஒரு சமுதாயத்தின் அறுபட
இது ஒரு கிராமத்துக்கதை : பிரதிபலிக்கும் நல்ல படப்பிடிப்பு இந் நா உயிர்த்துடிப்புடன் அமைவதைப் பு உயிர்த்துடிப்புடன் அமையும்? அதுத இடத்துக்கு வாசகர்களை அப்படியே கொ
எளிய நடை சிக்கலில்லாத சிறப்பம்சமாகும். விளங்காத நடையில் எழுத்தாளர் மத்தியில் நீ.பி.அருளானந்த் இலக்கிய உலகில் வெற்றி பெற்றுள்ளார்.
 

BALTIGO G. 365, 5.5GT Lib. கும்பங்கு நாவலாசிரியரின் அனுபவ
தின் கனதிகுறையாமல் எங்கும் விசிறு
கிராமியப் பேச்சுவழக்கு நடையுடை ல் அப்பட்டமாக வெளிப்படுவது கதைக்கு
த்தியில் காத்தவராயன் கூத்து பிரசித்தி னை அடியொற்றி இந் நாவல் நகர்வதும்
களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது என்ற எம்மினத்தின் அறுபடாத வாழ்வியல் ங்கும் இக்கூத்தின் உத்தம திறத்தையும்
நாள் பெளர்ணமியைத் தொட்டு விடும்
த சத்தியமாக விளங்குகின்றது.
Tõe
ராமத்து மக்களின் வாழ்வியலை நன்கு வலில் கதைக்களமும் கதாபாத்திரங்களும் க்கலாம் கதைக் களம் எப்படி ன் இவரின் திறமை சம்பவம் நடக்கும் ண்டுபோய் விடுவார்.
ாணனை இவையே இந்நாவலாசிரியரது எழுதித் தம் மேதாவிலாசத்தைக் காட்டும் தம், தெளிவான நடையில் எழுதி ஈழத்து