கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2005.04

Page 1


Page 2
Authorised Dealer: Elephant Brand Soft Drinks
፵ኩፉቋtቇs¢¢zX
No : 60, 1st Cross Street, Vavuniya. 024 - 2222047 024 - 2222630
 

ஒடிதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
ஆசிரியர் குழு
அகளங்கண் கந்தையா முறிகணேசன் ஆலோசனை:
முல்லைமணி ந.இரவீந்திரன் உதவி
சி.சிவாஜினி அபேனாட் ககோகுலதாஸ்
அச்சு:
மல்ரிவிஷண் அச்சுக்கலையகம் 2ம் குருக்குத்தெரு வவுனியா, Gigsm,Gu: 024 : 2223669 வடிவமைப்பு: திருமதி.என்.ரஜனி இலச்சினை: பசிவஅண்பு முண்அட்டை ஆஇராசையா
தொடர்புகட்கு:
(1) o%4s “Gurgens”,
அலைகரை வீதி,
இறம்பைக்குளம், வவுனியா,
தொபே : 024 2221310 (2) 90திருநாவற் குளம்
(silesileafluar, 024 2221676
Glasafnufic:
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
இ அறிவியலும் ஆக்க இலக்கியமும்
-முல்லைமணி. இல் காயம் இல்லாத ஆகாயம்
-தமிழ்மணிஅகளங்கன்இ ஆழிப்பேரலையின் ஆறாத வடுக்கள்
-செஅன்புராசா.
இ அஞ்சலிக் கட்டுரை -1
இ திருப்தி அடையாத மனிதன்
-சிசிவாஜினி இ பற்களின் முக்கியத்துவம்
-ஞாபூரீகாந்தன். இ கவிதைகள் இ உன்கையில்தான். (சிறுகதை) -பமுரளிதரன். இ எங்கள் கட்ல்.
ஆநகர் பொன்தில்லைநாதன்இS மகிழ்ச்சியின் அவசியம்
-வேனாதமிழ்வாணன்.
இல் கவிதைகள் தொடர்ச்சி.
இல் அஞ்சலிக்கட்டுரை -2
இ வட்டத்தின் விருதுபெறும் இருவர்
இ நேர்காணல்
இ அமரர் சொக்கனின்
பாலையும் சோலையும்.
-கந்தையாபூரீகணேசன்.
இலி பதிவுகள் -1
இS பதிவுகள் -2
நண்பர்களுக்குமட்டும்
O3
O7
15
21.
23
26
29
4l
48
53
54
58
64
71.
73
75

Page 3
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
"மாருதம்’ இதழ் 6 உடன் மீண்டும் வாசகர்களுடன் சங்கமிப்பதில் மகிழ் வடைகின்றோம்.
இது எமது எட்டாண்டு நிறைவுக் கட்டம் . அந்த நினைவுகளைச் சுமப்பதுடன் புதிய கலை இலக்கிய எல்லைகளைத் தொடுவதும் எம் எண்ணம்
ஐப்பசி 2004இல் வெளிவந் திருக்க வேண்டியது. களத்தில் பணிபுரியும் இலக்கிய உள்ளங்கள் தம்படிப்பில் கவனம் செலுத்தியமையால் ஆறுமாதம் கழித்து சித்திரை இதழாக மலர்கிறது. எனினும் மாருதம் தொடர்ந்தும் வீசும்.
சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையால் கடற்கோளால் பாதிப் படைந்த 6TLĎ LD6) Í நினைவுகளைச் சுமந்தபடி எமது அட்டையும், சில கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவருகின்றன. அரசியலில் நிச்சயமின் மை தொடர்கிறது. ஆயினும் நாம் நிமிர்ந்து நிற்கும் வழிவகைகளைத் தொடர்வோம்.
ஆசிரியர்கள்.

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அறிவியலும் ஆக்க இலக்கியமும்
-இலக்கியச் செல்வர் முல்லை மணி
மனித இனம் தோன்றிய காலந் தொடக்கம் தம் தொழில் முறையையும் உற்பத்தி முறையையும் தொடர்பாடலையும் மேம்படுத்துவதற்கு உதவிபுரியும் பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்து வருகின்றது. மனிதன் கண்டுபிடித்துப் பயன்படுத்திவரும் மிக உயர்ந்த கருவி மொழியாகும். நெம்பு கோலும் சில்லுந்தான் மனிதனின் முதல் கண்டுபிடிப்பாகும். நீராவி இயந்திரம், பெற்றோல், டீசல் என்பவற்றால் இயங்கும் பொறிகள் எனப் படிப்படியாகப் பலவிதமான கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்று விண்வெளிப்பயணம் சந்திரமண்டல செய்வாய்மண்டல ஆய்வுகள் வரை விஞ்ஞானம் முன்னேறியுள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.இதன் தாக்கமாக கைத்தொழிற் புரட்சி ஏற்பட்டது. மனித வலுவினையும் விலங்கு வலுவினையும் கொண்டு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதன் இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் தொடங்கினான். உற்பத்திப் பெருக்கம் தோற்றுவித்த பல்வேறு சவால்கள் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுத்தன.
கைத்தொழிற் புரட்சியால் நிலமானிய சமுதாய அமைப்பு முதலாளித்துவ சமூக அமைப்பாகவும் மாற்றமடைந்தது. சமூக மாற்றம் இலக்கிய வடிவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காப்பியமும் பிரபந்தமும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிற்கான இலக்கிய வடிவங்கள் புனைகதையும், நவீன கவிதையும் முதலாளித்துவ பொதுவுடமை சமூக அமைப்புக்கான இலக்கிய வடிவங்கள்?
சமூக அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளரும் காலகட்டத்தில் வாழும் ஆக்க இலக்கிய கர்த்தாவின் உணர்வினைத் தாக்குவது சமூகமாற்றத்தால் ஏற்படும் மனித இன்னல். இதுவே நவீன இலக்கிய வடிவங்களுக்கு வித்தாக அமைகிறது.
உருவத்தில் மாத்திரமன்றி உள்ளடக்கத்திலும் பாரியமாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.
-3-

Page 4
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
1)
2)
3)
4)
5)
நிலப்பிரபுத்துவ அம்சங்கள் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருந்த நிலைமாறி நடைமுறைவாழ்க்கை அம்சங்கள் இடம்பெறத் தொடங்கின.
காவியத் தில் போல இலட்சிய நோக் குடைய கதாநாயக நாயகிகளுக்குப்பதிலாக மனித குறைபாடுகளுடைய சாதாரணபாத்திரங்கள் கதை மாந்தர்களாக இடம் பெறத் தொடங்கின.
புனைகதையில் செய்யுளுக்குப் பதிலாக உரைநடை இடம் பெற்றது. கவிதைகூட புதுக்கவிதை என்னும் பெயரில் உரைநடையில் எழுதப்படுகின்றது. நவீன கவிதைகள் யாப்பமைதியிலுள்ள இறுக்கம் தளர்த்தப்பட்டுப் பேச்சோசைப் பண்புடையனவாக மாற்றம் பெற்றன.
இலக்கியத்தில் அதீத மிகைப்படுத்தல். இயற்கை இகந்தகற்பனை தவிர்க்கப்பட்டு நம்பகத்தன்மை வாய்ந்த கதையம்சங்கள் இடம் பெற்றன.
விஞ்ஞானத்தை உள்ளடக்கமாகக் கொண்ட புனைகதைகளும் கவிதைகளும் தோன்றத் தொடங்கின. மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எச்.ஜி.வெல்ஸ் Firstmenin the moon (சந்திரனில் முதல்மனிதர்கள்) என்னும் விஞ்ஞானக் கற்பனை நாவலை எழுதினார். புவியீர்ப்பை எதிர்த்து இயங்கும் லோகக் கலவையாலான விண்வெளிக் கப்பலில் சந்திரமண்டலப் பிரயாணம் நடைபெறுவதாக அவர் கற்பனை பண்ணுகின்றார்.
குருதிச் சுற்றோட்ட அறிவைப் பயன்படுத்தி விஞ்ஞானக் கற்பனை நாவல்
ஒன்றும் வெளிவந்துள்ளது. மனிதன் தன்னுருவை குருதிக் குழாய்களில் பிரயாணம் செய்யும் அளவுக்கு சிறிதாக்குகின்றான். குறிப்பிட்ட நேரத்தில் அந்த உருவம் திரும்பவும் பழைய நிலைக்கு வந்துவிடும். அதற்கிடையில் உடம்பு முழுவதிலுமுள்ள குருதிக் குழாயில் பிரயாணம் செய்து முடிக்க வேண்டும். பிரயாணத்தில் பல இடையூறுகள் திருப்பங்கள், நாவல் விறுவிறுப்பான முறையில் நகள்கிறது. நாளாந்த வாழ்க்கையில் விஞ்ஞானம் பற்றி கவிஞர் இ.சிவானந்தன் ‘கண்டறியாதது என்னும் கவிதை நூல் ஒன்று வெளியிட்டுள்ளார். மஹாகவி உருத்திர மூர்த்தி விஞ்ஞானரீதியில் பிள்ளைகளைச் சிந்திக்கவைக்கும் பாடல்கள் சிலவற்றை எழுதியுள்ளார்.
கல்லு நீருள் அமிழ்வானேன் கப்பல் மட்டும் மிதப்பானேன் பனங்காய் நிலத்தில் விழுவானேன் பாறை அசையா திருப்பானேன்
எரிமலை உண்டாவது எப்படி? என்னும் தலைப்பில் கவிஞர் ஏ.இக்பால்
சிறுவர் அறிவியல் பாடலொன்றை எழுதியுள்ளார்.
-4-

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மொழிவளர்ச்சி காவியங்களால், உரைநடையால், கவிதைகளால் ஏற்பட்டுவிடும் என்று எம்மில் சிலர் கருதுகின்றோம். இலக்கியம் என்பது கதையும் பாட்டும் படவசனமும் தானே. இவைகளை எழுதிவிட்டால் இலக்கியம் வளர்த்துவிடும் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் இலக்கியத்துக்கு வேண்டாதவை இப்படிப் பலர் நினைக்கின்றனர். மொழி வளர்ச்சிக்கு இலக்கியம் முக்கியம், அறிவுத் துறைகள் புறக்கணிக்கப்படலாம் எனச் சிலர் கருதுகின்றனர். இப்படி நினைப்பது முற்றிலும்
தவறு.
இலக்கிய வளர்ச்சி அறிவுத்துறைகளைப் புறக்கணித்த வளர்ச்சியாக இருக்க முடியாது. முன்னேறாத மொழியில் இலக்கியம் முற்போக்கானதாக இருக்காது. மொழியின் முன்னேற்றம் அதனைப் பேசும் மக்களின், பொருளியல் விஞ்ஞான, வர்த்தக, தொழில் நுட்பத்துறைகள் யாவும் முன்னேறி இருத்தல் வேண்டும். பல்துறை முன்னேற்றத்தின் உயிர்ப்புள்ள கருவியாக மொழிபயன்பட வேண்டும். முன்னேறிய மொழியில் மட்டுமே சிறந்த இலக்கியம் தோன்றமுடியும்.
இலக்கியத்திலும், அறிவியலிலும் மொழியின் பயன்பாடு வேறுபடுகின்றது. இலக்கியத்தமிழ் உணர்ச்சிக்கலப்புடையது. அறிவியல் தமிழ் உணர்ச்சிக் கலப்பற்றது. விஞ்ஞானத்தில் இடம் பெறும் சொற்கள் அச் சொற்களின் நேரடிக் கருத்தை மட்டும் தெரிவிக்கும் இலக்கியச் சொற்கள்,கருத்துக்கு அப்பால் இலக்கிய கள்தத்தாவின் அல்லது இலக்கிய பாத்திரத்தின் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. ஒரே சொல் அறிவியலிலும் இலக்கியத்திலும் பயன்படுத்தப்படலாம். ஆனால் அச்சொல் வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கம் வேறுபடும். விஞ்ஞானத்தில் சொற்கள் குறியீட்டுப் பயன்பாடுடையவை. சொல்லுக்கும் அது சுட்டும் பொருளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. மாடு என்ற சொல்லுக்கும் மாடு என்னும் விலங்கிற்கு அது சுட்டும் வாயுவுக்கும் எந்தவித தொடர்புமில்லை. மனித சமுதாயம் அந்தத் தொடர்பை உண்டாக்கி வழக்கத்தினால் நிலை நிறுத்தியிருக்கிறது.
இலக்கியத்தில் சொற்கள் பாதிப்புப் பயன்பாடுடையவை. ஒரு சொல்வெறுமனே கருத்தைமட்டும் தெரிவிக்காது கேட்போரிடம் சில உணர்ச்சிகளை விளைவித்தால் அது பாதிப்புப் பயன்பாடாகும். -
மரம் என்னும் சொல் மரத்தைமட்டும் குறித்தால் அது குறியீட்டுப்பயன்பாடாகும். மரம் மனிதனைக் குறித்தால் அதுபாதிப்புப் பயன்பாடாகும்.
‘சபைநடுவே நீட்டோலைவாசியா நின்றான், குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம் என்னும் பாடற் பகுதியில் இடம் பெறும் மரம் மனிதனைக் குறிக்கிறது. எழுத வாசிக்கத் தெரியாதவன் பிறரின் முகக் குறிப்பிலிருந்து அது உணர்த்தும் செய்தியை ஊகிக்க முடியாதவன் மரத்துக்கு சமானமானவன்.
நாம் அன்றாட வாழ்க்கையில் விஞ்ஞான தொழில் நுட்பத்தின் பயனை
-5-

Page 5
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை அனுபவிக்கிறோம். மின்சக்தியின் உதவி கொண்டு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், சத்தத்தையும் உற்பத்தி செய்து பயன் பெறுகிறோம். வீட்டிலே மின்குமிழ் வெளிச்சம் தருகிறது. மின்னழுத்தி, வானொலி, தொலைக் காட்சி என்பவற்றை பயன்படுத்துகின்றோம். தொலைபேசி மூலம் தொடர் பாடல் செய்கிறோம் பேருந்திலும் தொடர்வண்டியிலும் விமானத்திலும் பிரயாணம் செய்கிறோம் ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகின்றோம். கணனி இணையத்தளம் என்பவற்றைப் பயன்படுத்துகின்றோம். விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் எம் வாழ்க்கையை ஊடுருவியிருக்கிறது. எனினும் நாம் பயன்படுத்தும் கருவிகளின் பெயர்களை நாம் பேசும்போது பயன்படுத்துவதில்லை. கடையில் போய் மின்குமிழ் கேட்பதில்லை பல்ப் தரும்படி கேட்கிறோம். தொடர்வண்டி நிலையம் என்றால் தெரியாது றெயில்வே ஸ்ரேசன் என்று சொல்ல வேண்டும். இப்படி இருக்கையில் எப்படி எமது மொழி முன்னேறும். எப்படி எம் மொழி அறிவாயுதமாகப் பயன்படும்.
இலக்கியம் சமுதாயத்தின் விளைபொருளாகும். ஒரு சமுதாயம் விஞ்ஞான தொழில் நுட்பத்தின் பயனை அனுபவிக்கிறது என்றால் அதன் தாக்கம் இலக்கியத்திலும் ஏற்படும். ஏற்பட வேண்டும்.
(வட்டத்தின் 96வது கருத்தாடல் நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்)
வட்டத்தின் வெளியீடுகள்
அந்த முழு திMத்தM
အီရှီးဒွတ္တန္တီ စီမ္ဘားဒ္ဓီး
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
காயம் இல்லாத ஆகாயம்
-தமிழ்மணி அகளங்கன்
பழந்தமிழ் இலக்கியங்களிலே சொல்லப்பட்டுள்ள சில செய்திகளைப் பார்க்கும் போது அவை ஆச்சரிய மூட்டுவனவாக இருக்கின்றன.
பெரும் புலவர்கள் சொல்லும் அத்தகைய செய்திகளை வெறும் கற்பனைகள் தானே என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை.
சில கற்பனைகள், சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு மட்டுமன்றி சிலவற்றைச் சிந்திக்கவும் வியக்கவும் வைத்து விடுகின்றன.
சில செய்திகள் விஞ்ஞான முடிவுகளோடு ஒத்துப்போபவையாகவும், விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக இருகக் கூடியவையாகவும் கூட இருக்கின்றன.
தேரும் அம்பும்
கச்சியப்ப சிவாச்சாரியாரால் பாடப்பட்ட கந்தபுராணம், தமிழிலக்கிய வானில் பேரொளிவீசும் பெரு நட்சத்திரங்களில் ஒன்று என்று கொள்ளலாம்.
சைவசமய இலக்கியம்தானே என சமய இலக்கியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இதனை அடக்கிவிடுவது அறிவுக்குப் பொருத்தமானதல்ல.
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட (10,345 பாடல்கள்) பாடல்களைக் கொண்ட ஒரு பெரு நூலை, மாக்கதையை பேரிலக்கியத்தைப் படிக்காமல் விட்டு விட்டு, தமிழறிஞன் நான் என்று யாராவது மார்தட்டினால் அவர் மார்புக்கும் அவர் கைக்குமே சேதம். அதனால் யாருக்கும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
எந்தச் சமய இலக்கியமாக இருந்தாலும் தமிழ் இலக்கியம் என்ற வகையில் படித்துச் சுவைப்பது தவறாகாது.
-7-

Page 6
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தமிழிலக்கியத்தில் சமயச் சார்பில்லாத எந்தப் பேரிலக்கியத்தையும்,
காப்பியத்தையும், பிரபந்தத்தையும் காணவே முடியாது. என்று உறுதியாகக் கூறுமளவிற்கு சமயச் சார்பான நூல்களே கோலோச்சுகின்றன.
புராண நன்னாயகம் என்று போற்றப்படுகின்ற கந்தபுராணத்தில் முருகப் பெருமானுக்கும் சூரபன்மனுக்கும் யுத்தம் நடைபெறுகின்றது.
முருகப்பெருமான் ஏறி இருக்கின்ற தேரை வாயுபகவான் செலுத்துகின்றார். முருகப் பெருமான் அம்புகளை மிகவேகமாகச் செலுத்துகிறார். வாயுபகவான் தேரை மிகவேகமாகச் செலுத்துகிறார்.
முருகப்பெருமானின் கைதான் விரைவாக இயக்குகின்றதோ, அல்லது வாயுபகவான் தான் விரைவாகத் தேர் செலுத்துகின்றாரோ, எவரது வேகம் மிகுந்த வேகமோ எனப் பக்கத்திலுள்ள தேவர்கள் சந்தேகித்துக் கதைத்துக் கொள்கிறார்களாம்.
"செவ்வேள் கைவிசையோ நெடுங்கால் விசைதானே எவ்விசையோ விசை என்றனர் வானோர்” என்கிறார் கச்சியப்பர். (கால் - வாயுபகவான்)
இப்படித் தேவர்கள் வியந்து போய்ச் சந்தேகப்பட்டுக் கதைப்பதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.
வாயுபகவானால் செலுத்தப்படுகின்ற தேரில் இருந்து கொண்டு முருகப் பெருமான் அசுரர்கள் மேல் அம்புகளைச் செலுத்துகின்றார். அவ்வம்புகள் மிகுந்த வேகத்துடன் செல்லுகின்றன.
அதேபோல முருகப் பெருமான் இருக்கின்ற தேரை வாயுபகவான் மிகவேகமாகச் செலுத்துகின்றார். தேர்மிக விரைவாக ஓடுகிறது.
என்ன ஆச்சரியம் என்றால், முருகப் பெருமானால் மிகுந்த வேகமாகச் செலுத்தப்படுகின்ற அம்புகளை, முருகப் பெருமான் இருக்கின்ற தேர் முந்திக் கொண்டு சென்று விடுகின்றதாம். அவ்வளவு வேகமாக வாயுபகவான் தேர் செலுத்துகிறாராம்.
ஒன்னலர் மீதில் உயிர்க்கு உயிரானோன் மின்னன வீசிய வெஞ்சர மாரி பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால் அன்னவன் தேர்விரைவு ஆர்கணிக் கின்றார்.
(கந்.யுத்.சூர.வதை-120) முருகப் பெருமானால் செலுத்தப்பட்ட கொடிய அம்புமழை பின்னுற அவற்றை முந்திக் கொண்டு செல்கின்றதாம் தேர்.
-8-

efeles, sißbs. 66W5u Đôuébéu ളിങ്ങ്
இதுதான் இப்பாடலின் சுருக்கமான பொருள். இது சாத்தியமா?. அதீதமான கற்பனையா? தொடர்பு வேகம் பற்றிய விஞ்ஞானக் கோட்பாட்டாளர்கள் இதனை
ஆராய்ந்து பார்க்கட்டும், என விட்டு விட்டு இன்னொரு காட்சிக்குச் செல்வோம்.
அம்பும் - இரத்தமும்
கம்பராமாயணம் பற்றி புதிதாக எதுவும் சொல்லிப் பெருமைப்படுத்த வேண்டிய தேவை கம்பராமாயணத்திற்கில்லை.
கம்பன் கற்பனையின் சிகரத்தைத் தொட்டவன். கம்பராமாயணம் உலகமகா காவியங்களுக்குள் தலையாயவற்றில் ஒன்று என்பது பலரும் முடிவு கட்டிய விடயம்.
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் திருவடிசூட்டுப்படலத்தில் ஒரு பாடலின் கருத்து - செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது.
இராமன் இலக்குவனோடும் சீதையோடும் கானகம் சென்று சித்திரகூடம் என்னும் இடத்தில் இருக்கிறான்.
பரதன் தாயருடனும் சேனைகளுடனும் இராமனைச் சந்தித்து அரசை ஏற்குமாறு இராமனை வற்புறுத்துவதற்காக வருகிறான்.
பரதன் வரும் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட இலக்குவன் யுத்த சன்னத்தனாய் கோபாவேசம் கொள்கிறான்.
இராமனிடம் தனது வீரத்தையும் வலிமையையும் கூறி, பரதனையும் அவனோடு வரும்சேனையையும் கொல்வேன் எனக்குமுறுகிறான்.
தனது வல்லமையைப் பற்றி இலக்குவன் கூறும்போது தனது அம்பின் வேகம் பற்றி ஒரு செய்தியைச் சொல்கிறான்.
தான் செலுத்துகின்ற அம்புகள் எதிரிகளது ஆயுதங்களையும், கைகளையும் கவசம் பொருந்திய மார்பையும் உயிரோடு ஊடுருவிச் செல்வனவாம்.
கருவியும் கைகளும் கவச மார்பமும் உருவின உயிரினோடு உதிரந் தோய்வில திரிவன சுடர்கணை திசைக்கை யானைகள் வெருவரச் செய்வன காண்டி வீரநீ.
(கம்-அயோ-திருவடிசூ-பட-32) இப்பாடலில் என்னை வியக்கவும், நயக்கவும், ஆச்சரியப்படவும் வைத்த செய்தி என்னவென்றால், இலக்குவன் சொல்கிறான்.
-9.

Page 7
erepet, 5őb6l, 55D6u 86udáu stibéEDa.
எதிரிகளது கைகளையும், கவசம் அணியப் பெற்ற மார்புகளையும், தனது அம்பு ஊடுருவிச் செல்லுமாம்.
பிரகாசம் மிக்க தனது அம்பு மார்பை, கையை ஊடுருவிச் செல்லும் போது இரத்தம் படாமல் வெளியேறிவிடுமாம். அவ்வளவு வேகமாகப் பட்டுருவிச் செல்லுமாம்.
இது சாத்தியமா இல்லையா என்பது ஆய்வுக்குரியது. பிரகாசம் மிக்க தனது அம்பு விடும்போதிருந்த பிரகாசம் குறையாமல் உடலை ஊடுருவி இரத்தம் படாமல் வெளியேறிவிடும் என்று இலக்குவன் குறிப்பிடுவது ஆராய்ச்சிக்குரியது. இருப்பினும் நயமானது.
வானமும் சங்கப்புலவரும்
வானம் பற்றிய ஆய்வுகளைப் பல ஆண்டுகளாகப் பலரும் மேற்கொண்டு வருகின்றனர். வானம் என்றால் என்ன, என்ற கூற்றுக்கு இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கிய பதில் கூறியிருக்கிறது என்றால் ஆச்சரியமில்லையா.
சங்ககால இலக்கியமாகப் போற்றப்படும் புறநானூறு நூலில் இருபதாம் பாடலில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற மன்னனை குறுங்கோழியூர் கிழார் பாடுகிறார்.
அவனது பெருமை அளவிடற்கரியது எனக் கூறி, அளவிடற்கரியனவாகச் சொல்லப்படுபவைகளையெல்லாம் அளவிட்டு விடலாம். ஆனால் நின் பெருமை அளவிடற்கரியது எனக் கூறி சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.
பெரிய கடலின் ஆழமும், அகன்ற உலகத்தின் பரப்பும், காற்று இயங்கும் திசையும், ஆகாயமும் என்று சொல்லப்படுபவற்றை அளந்தறிந்தாலும் அறியலாம். ஆனால் நீயோ அளவிடற்கரிய பெருமை மிக்கவன் என்கிறார் புலவர்.
இரு முந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
(புறம் - 20)
இப்பாடலில் வானத்தை காயம் என்ற சொல்லால் புலவர் குறிப்பிடுகின்றார்.
நாம் ஆகாயம் என்பதையே இவர் காயம் என்கிறார்.
-10
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஆகாயத்திற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னைப் பிரமிக்க வைக்கி வறிது நிலை இய காயமும் என்று அவர் குறிப்பிடுவதன் பொருள்தான் என்ன.
து.
“வடிவின்றி நிலை பெற்ற ஆகாயமும்" என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர்.
“ஆகாயம் என்பது ஒன்றுமே இல்லாதது உருவம் இல்லாதது. ஆனால் இருப்பது போல் தெரிவது” என்பது இதன் பொருள்
காயம் என்றால் உடம்பு, உருவம் என்று கொள்ளலாம். காயம் இல்லாதது ஆகாயம் என்னலாமோ. காயத்தின் முன் ஆ சேர எதிர்ப் பொருள் வருகிறதா. அதற்கு இலக்கண விதியில்லையே.
காயம் என்பதன் எதிர்ச்சொல் அகாயம் என்றிருந்து பின்னால் ஆகாயமாகியிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
எப்படி இருப்பினும் ஆகாயம் என்பது ஒன்றுமே இல்லாதது. ஆனால் இருப்பது போல நிலைபெற்றிருப்பது என்ற கருத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புலவர்களிடம் இருந்திருக்கிறது என்பதை நினைக்க ஆச்சரியமாக இல்லையா?
வானமும் கந்தபுராணமும்
கந்த புராணத்தில் தட்ச காண்டத்தில், வானம் பற்றிய ஒரு செய்தியை கச்சியப்ப சிவாச்சரரியார் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
தக்கனுக்கு அவனது தந்தையாகிய பிரமதேவர் சிவபெருமானே முழுமுதற் பரம்பொருள் என உபதேசிக்கின்ற உபதேசப் படலத்தில் வருகிறது இந்தச் செய்தி.
பரசிவன் உணர்ச்சி இன்றிப்
பல்லுயிர்த் தொகையும் என்றும் விரவிய துயர்க்கு ஈறெப்தி
வீடுபேறு அடைதும் என்றல் உருவம் இல் விசும்பின் தோலை
உரித்து உடுப்பதற்கு ஒப்பென்றே பெருமறை இயம்பிற்று என்னில்
பின்னுமோர் சான்றும் உண்டோ.
(கந்தட்-உபதேச-25) “சிவபெருமான் பற்றிய உணர்ச்சி இல்லாமல் பல உயிர்த் தொகையும், என்றும் பரந்த துன்பத்துக்கு முடிவு பெற்று வீடுபேறு அடையும் என்று கூறுவது, எதற்கு ஒப்பாகும் என்றால், உருவமில்லாத ஆகாயத்தின் (விசும்பு - ஆகாயம்) -11

Page 8
seps sota, san6u 86usasu silefans தோலை உரித்து உடுப்பதற்கு ஒப்பாகும் என்றே பெரிய வேதமே சொல்லியுள்ளது என்றால் பின்னும் ஓர் சான்றும் வேண்டுமோ” என்பது இதன் பொருள்.
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாக, கச்சியப்பர் இக்கருத்தைச் சொன்னாலும் வேதத்தில் இக் கருத்து உண்டா என அறிய முடியவில்லை.
வானம் உருவமில்லாதது. அதன் தோலை உரித்து உடுப்பது முடியாத காரியம். அதே போன்றது தான் சிவபெருமான் பற்றிய உணர்ச்சி இல்லாமல் துன்பங்களுக்கு முடிவுபெற்று வீடுபேறெப்துதல் என்று கச்சியப்பர் சொல்லுவதில் வானம் பற்றிய செய்தி என்னை வியக்க வைக்கிறது.
வானம் என்பது உருவம் இல்லாதது என்ற சிலரின் கொள்கையையே சங்கப் புலவரும் “வறிது நிலைஇய காயமும்” என்றார்
வானமும் வைரமுத்துவும்
கவியரசு வைரமுத்து தற்காலப் புலவர் வரிசையில் எண்ணத் தகுந்த இடத்தைப் பிடித்திருப்பவர்.
அவரது திரைப்பாடலொன்றின் சில வரிகளை இங்கே பார்ப்போம்.
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதையில்லை உன்னைத் தொட ஏணியில்லை.
கண்டு வந்து சொல்வதற்குக் காற்றுக்கும் ஞானமில்லை நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை.
வானம் நீல நிறமாகத் தெரிகிறது. நீலநிறத்தைப் பிரித்து எடுத்துவிட்டால் ஒன்றுமே தெரியாது என்பது வைரமுத்துவின் கருத்து.
ஒன்றுமில்லாத ஆகாயம். உருவம் இல்லாத ஆகாயம் என்று முன்னோர் சொன்னாலும் நீலநிறம், ஏதோ இருப்பது போன்ற ஒரு பிரமையை உண்டு பண்ணுகிறதல்லவா.
அந்த நீலத்தைப் பிரித்து எடுத்து விட்டால் ஒன்றுமே தெரியாது என்பது வைரமுத்துவின் கருத்து.
-12

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வானம் ஏன் நீலமாக இருக்கிறது. அது ஒளி முறிவினால் ஏற்படும் விளைவு. ஒளியில் ஏழுநிறங்கள் உள்ளன. இந்நிறங்களை வானவில்லில் காணலாம்.
இவ்வேழு நிறங்களும் மாறுபட்ட அலை நீளங்களையும், சக்திகளையும், ஊடுருவும் தன்மைகளையும், முறிவுக் குணகங்களையும் கொண்டன.
வளியில் உள்ள துணிக்கைகளில் அதிக அளவு முறிவடைந்து செல்லும் ஆற்றல் நீல நிறத்திற்கே உண்டு. இதனால் நீல நிறம் முறிவடைந்து அதிக தூரம் செல்லுகின்றது. எனவே வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது என்பது வானம் நீலநிறமாக இருப்பதற்கான விஞ்ஞான விளக்கம். (நன்றி.திரு.A.S.பரந்தாமன். ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலம்)
வைரமுத்து தற்கால விஞ்ஞான, கணனி யுகத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்வது ஆச்சரியமில்லை. ஆனால் சங்கப்புலவரும், கச்சியப்பரும் கூறியது ஆச்சரியந்தானே.
உலகமும் வள்ளுவரும்
வானியல் சம்பந்தமான அறிவும் பண்டைத் தமிழருக்கு நிறையவே இருந்திருக்கிறது.
பூமியை உருண்டை என்று மாணிக்க வாசகள் பாடுகிறார். "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்" என பூமியைக் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகள். இது திருவண்டப் பகுதியின் முதலடியாக வருகின்றது.
உண்டை என்பது மட்டுமல்ல பூமி சுழலுகின்றது என்பதைக் கூட பண்டைத் தமிழர் தெரிந்து வைத்திருந்தனர்.
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருவள்ளுவர் பூமி சூழல்வதாகத் தமது திருக்குறளிலே உறுதியாகக் கூறுகிறார்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை.
(குறள் 1031)
உழந்தும் என்பது உழன்றும் என்பதன் போலி, எவ்வளவு துன்பப்பட்டாலும் உழவே தலையாய தொழில் என்பது இதன் பொருள். இக் கருத்தை வலியுறுத்தும்
வள்ளுவர், உலகம் சுழல்கின்றது. ஏரின்பின்னால் சுழல்கின்றது என்கிறார்.
-13

Page 9
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உலகம் சுழன்றாலும் அது ஏருக்குப் பின்னால்தான் சுழல்கிறது. அதனால் எவ்வளவு துன்பப்பட்டாலும் உழவே தலையாய தொழில் என்று பொருள் கொள்வது எப்படித் தவறாக முடியும்.
இங்கு உலகம் சுழல்கின்றது என்று நேரடிப் பொருள் கொள்வது பிழையாகாது. உலகம் என்பதை ஆகுபெயராகக் கொள்ளத் தேவையில்லை.
இதனை ஆய்வுக்கு உட்படுத்த இது சமயமில்லை. விரிவஞ்சி விட்டுவிடுவோம்.
உலகு என்ற பெயரே உலவுவதால் தான் வந்தது என்று சில அறிஞர்கருதுகின்றனர். (உலவுதல் - அசைதல்)
தமிழர்கள் பூமிபற்றியும் ஆகாயம் பற்றியும் பல தகவல்களை அறிந்தே இருந்திருக்கின்றனர் எனப் பல ஆதாரங்களைப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து 85. T'L6OTib.
அண்மையில் வெளிவந்த நூல்கள் we (d. 000
தனிநாடா
முதிருநாவுக்காக
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஆழிப் பேரலையின் ஆறாத வடுக்கள்
-செஅன்புராசா அமதி
சுனாமி - நிலஅதிர்வுப் பேரலைகள் 2004 மார்கழி 26ஆம் திகதி நம் நாட்டின் கரையோரக் கிராமங்கள் பலவற்றினை மிக மோசமாக தாக்கியழித்தன. இவ்வனர்த்தத்தினால் சிதைந்து போயுள்ள பிரதேசங்களில் குறிப்பாக வடபகுதியின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களின் கரையோரக் கிராமங்களான கள்ளப்பாடு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, ஆழியவளை, மருதங்கேணி, செம்பியன்பற்று, கட்டைக்காடு, தாழையடி, மணற்காடு, பருத்திதுறை போன்ற இடங்களுக்கு சென்று இக்கிராமங்களில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்த்ததோடு இவ்விடங்களிலிருந்து இடம் பெயர்ந்து நிர்க்கதியான மக்களில் பலரை சந்தித்தேன். இவ்வாழிப் பேரலையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் இடங்களைப் பார்க்கும் போது உயிர் தப்பியவர்கள் எவ்வாறு தப்பிப் பிழைத்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. அழிக்கப்பட்ட கட்டிடங்களையும், வீடுகளையும், ஆலயங்களையும், பாடசாலைகளையும், மரங்களையும் வாகனங்களையும், பார்க்கும்போது இவற்றிற்குள் அகப்பட்டவர்களின் நிலையை எண்ணிப் பார்க்க மனம் பதைபதைக்கிறது. இக் கிராமங்களில் பல முழுமையாகவே நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதுதான் இன்ன ஊர் இருந்த இடமென்று அடையாளம் காட்டுதவற்காக வெறும் நிலப்பகுதி எஞ்சியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
கடந்த இரண்டு வார காலமாக முள்ளியவளை பிரதேசத்தின் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்து கண்ணிரோடு இந்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பலருடன் உடனிருக்கவும், அவர்களில் கண்ணி கதைகளுக்கு செவிமடுக்கவும் சென்றிருந்தேன். இவ்வாறான சந்திப்புக்களின் போது உயிர் பிழைத்தவர்கள் பகிர்ந்து கொண்ட சோகக் கதைகளையும் என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பலர் தமது குடும்ப உறவுகளை பேரலை அடித்துக் கொண்டு செல்லும் போது கண்ட காட்சிகளையும், இவ்வனர்த்தத்தின் பின்னர் அனுபவிக்கின்ற அவலங்களையும் நினைக்கும் போதெல்லாம் அவர்கள் படுகின்ற வேதனைகள் எம் உள்ளங்களையே ஒருகணம் உறைய வைக்கின்றன.
-15

Page 10
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பல கிராமங்களில் 1,2, 3 என சுனாமி அலைகள் அடுத்தடுத்து
வந்திருக்கின்றன. இவ்வலையின் வேகம் அணிந்திருந்த ஆடைகளைக் கூட பறித்துக் கொண்டும் கிழித்துக் கொண்டும் செல்லும் அளவிற்கு அசுர வேகத்தில் அடித்திருக்கிறது. உயிர் பிழைத்தவர்களில் பலர் ஆடையில்லாமல் ஓடி வந்ததும், குற்றுயிராய்க் கிடந்தவர்களிலும், இறந்தவர்களின் அனேக உடலங்களில் ஆடைகளின்றி இருந்ததும் இவ் உண்மையை உறுதிப்படுத்துகின்றது.
ஒரு பெரியவர், “முதலாவது அலையில் தப்பியவர்களில் பலரை நான் கண்டேன். அவர்களில் பலர் பெண்பிள்ளைகள். இவர்கள் ஒடித் தப்பியிருக்கலாம். ஆனால் இவர்களில் பல இளம் பெண்கள் முதல் அலையில் தம் ஆடைகளைப் பறிகொடுத்ததால் அவர்கள் வெட்கத்தில் உடைந்த வீடுகளின் சுவர்களுக்குப் பின்னாலும் மரங்களுக்குப் பின்னாலும் மறைந்து நின்றுகொண்டிருந்தார்கள். ஓடி வாருங்கள் திருப்ப அலைவரும் எனச் சொன்னேன். ஆனால் அவர்கள் என்ன செய்வது எங்கு ஓடுவது என அங்கலாய்த்துக் கொண்டிருந்த அக்கணமே ஐயோ அம்மா திருப்ப அலைவருது என்று அவர்கள் கூக்குரலிடும் போதே அடுத்த அலை வந்து இப்படி மறைந்து நின்ற பலரையும் வாரி அடித்துக் கொண்டு போவதை நான் கண்ணால் கண்டேன்' என்று கண்ணிரோடு குறிப்பிட்டார்.
இதே விடயத்தை இன்னுமொருவர் “என்னுடைய மனைவி ஒரு உடுப்பும் இல்லாமலே ஓடிவந்தாள். என்னுடைய சறத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு நான் சும்மா நின்றேன்' என அழுதார்.
இதே நிலைமையினை மற்றொருதொழிலாளி குறிப்பிடும் போது “பாயை சுத்திக்கொண்டுதானtய்யா நானும் மகளும் றோட்டுக்கு வந்தோம்” என்றார் கண்ணிர் LD6035.
“கடல் எம்மை பிறந்த மேனியராய்த்தான் விட்டுச் சென்றது." என்றார் வேறொரு பெண்மணி.
‘மானத்தைக் காக்க ஒரு துண்டு ஆடை கூட இல்லாமல்ப் போனதே. ஒரு துண்டுத் துணி கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டோமே" என்று பலர் மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டதை காணக் கூடியதாக இருக்கிறது.
ஒரு தாய் தன் இரு குழந்தைகளோடு நீரில் தத்தளித்துக் கொண்டு மரக்கட்டை ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்ற வேளையில், “அம்மா ஒரு பிள்ளையை விட்டுவிட்டு ஒரு பிள்ளையாவது காப்பாற்று..!" என்று சொல்லும் போது அவள் எக்குழந்தையை விடுவது எக்குழந்தையை காப்பாற்றுவது என அங்கலாய்த்த வேளையிலேயே அடுத்த அலை வந்து தாயோடு இரண்டு பிள்ளைகளையும் அடித்துச் சென்ற காட்சியை எப்படிக் கூறுவது எனக் கலங்கி நின்றார் இவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர்.
-16

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தந்தை ஒருவர் தனது இரண்டு சிறு பிள்ளைகளை தன் உடலோடு சேர்த்துப் பிடித்தபடி நீருக்கு மேல வந்தபோது ஒரு பனை மரத்தின் ஒலையைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார். இரண்டு குழந்தைகளையும் நெஞ்சோடு இறுக அணைத்தபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு என்ன செய்வது என அந்தரிக்கிறார். இந் நேரத்தில் ஒரு குழந்தையின் தலை அவரது வலது கையில் சரிவதை உணர்ந்து, பார்த்தபோது அக்குழந்தை ஏற்கனவே இறந்திருப்பதைக் கண்டு மற்றைய குழந்தையையாவது காப்பாற்றுவோம் என எண்ணி இறந்த குழந்தையை விட்டுவிட அதனை நீரடித்துச் செல்கிறது. வலதுகையால் பனையோலையை நன்றாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு மற்றைய குழந்தையைப் பார்த்தபோது அக்குழந்தையில் தலை பனங்கருக்கினால்
அறுபட்டிருப்பதை கண்டு அக் குழந்தையையும் விட்டுவிட்டு பனையிலே தொங்கி
கொண்டு புலம்பியிருக்கிறார். “இவ்வளவு தூரம் நான் என் பிள்ளைகளைக் காப்பாற்றியும் ஒரு பிள்ளை கூட தப்பவில்லையே." எனத் துடிக்கிறார் அத்தந்தை
ஒரு பெரியவர் சொல்லிச் சொல்லி அழுதார். "சொத்துக்கள். போனால் போகட்டும். உடமைகள். அதுவும் போகட்டும். பறவாயில்லை. உயிர்கள். அதையும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்ர சந்ததியே அழிந்துவிட்டதே. அதுமட்டும் இல்லாமல் இவர்களெல்லாம் என்ர கண் முன்னால கடல் பறித்துக்கொண்டு போனதுதான் என்னால தாங்க முடியாமல் இருக்கு. அப்படியாவது போகட்டும்! பொடிகளாவது கிடைச்சதா? அதுகளும் இல்ல. அதுகளின் முகங்களப் பார்க்க
ஒரு படம் கூட இல்ல." என வாய்விட்டுக் கதறி அழுதார்.
இறந்தவர்களின் ஆபரணங்கள் கழற்றி சேர்க்கப்பட்ட இடத்திற்கு அவைகளைப் பார்க்க வேண்டுமென்று ஒருவர் வந்தார். தன் மனைவியின் நகைகளை அடையாளம் கண்ட அவர் "ஐயா இந்த நகையை எடுக்க நான் வரயில்ல. என் மனைவி முதலில் இறந்துவிட்டாளா என்பதையும் இரண்டாவது அவள் அடக்கம் செய்யப்பட்டு விட்டாள என்பதையும் அறிவதற்காகவே நகைகளைப் பார்க்க வந்தேன்' என்று காயங்களுடன் உயிர்தப்பிய இந்நபர் கண்ணிரோடு அழுதழுது குறிப்பிட்டார். இப்படிப் பல கண்ணிக் கதைகள் இருக்கின்றன.
இவைகள் இவ்வாறிருக்க, இவ்வனர்த்தமானது குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வாழ்விலும் வளர்ச்சியிலும் ஆளுமையிலும் மிகப் பாரிய எதிர்மறையான தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தபோகிறது என்பதை மிகத் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கிறது.
எட்டு வயது நிரம்பிய மதுவடிாவும், இரண்டரை வயதுடைய விஷாவும்
சுனாமியால் இப்போது தாய் தந்தையை இழந்த குழந்தைகள். இவர்கள் தமது
சித்தியின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இவர்களைப் பல தடவைகள் என்னுடைய
சந்திப்பின்போது காண்பது வழக்கம். ஒரு நாள் மதுவடிா தனிமையில் தன் இரு
கைகளாலும் நாடியைத் தாங்கியவாறு ஒரு மூலையில் தனிமையில யோசித்துக்
கொண்டிருந்தாள். “என்னம்மா மதுஷா யோசிக்கிறீங்க? என்று மூன்று, நான்கு
-17

Page 11
665, கல்வி Bouébau ളിയ്ക്കേ தடவைகள் கேட்டபொழுதும் கூட “ஒன்றுமில்ல”, “சும்மா இருக்கிறன்” என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டாள்.
"இல்ல, நீங்க யாரையே பற்றி யோசிக்கிறீங்க? அப்படித்தானே!” என்றதும் மதுவடிா ஓடி வந்து என்னைக் கட்டி அணைத்தாள். பின் மடியில் ஏறிக்கொண்டாள். ஓடி வந்து மடியில் ஏறிக் கொண்டவிதம் அவள் தன் தாய் தந்தையினுடைய மிகவும் அன்பான அரவணைப்பை இப்போது மிக மோசமாக இழந்து நிற்கிறாள் என்பதை அப்பட்டமாக உணர்த்தியது. மீண்டும் “யாரைப் பற்றி நினைச்சுக்கொண்டு இருந்தனிங்க?" எனக் கேட்டேன். மதுவடிா சொல்கிறாள். “அம்மா, அப்பாவைத்தான்” அவள் சொன்ன விதத்தில் என் கண்கள் குளமாயின. "அப்பா செத்திற்றார். அம்மாட பொடி எடுக்கல்ல." என்று கூறிவிட்டு என்னுடைய முகத்தை உற்றுப் பார்த்து, "அம்மாட பொடியை எடுத்துத் தருவீர்களா?" என்று கேட்ட போது என் கண்ணிரை கட்டுப்படுத்த முடியவில்லை. என் இயலாமையை உணர்ந்தவளாக மதுவடிா தொடர்ந்து சொல்கிறாள். "எல்லாரோடையும சேர்த்து அம்மாவையும் தாட்டிருப்பாங்க. என்று கூறி பெருமூச்சுவிட்டாள். இத்தனைக்கும் விதுஷா அடிக்கடி கூறிக்கொள்வாள், "அப்பா கடல் கொண்டு. அம்மா செத்து." தாய், தந்தையின் இழப்பை இப்போதுதான் அணுவணுவாக அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இப்பிஞ்சு மழலைகள்.
நவரத்தினம் அபிராமி என்பவர்களுடைய மகள்தான் மாலதி. நான்கு வயது நிரம்பியவள். பாலர் பாடசாலை செல்கிறாள். 2.3 தடவைகள் இவர்களைச் சந்தித்ததால் மாலதி பழக்கமாகிவிட்டாள். ஒரு தடவை, “மாலதிக் குட்டி நேசறிக்குப் போவோமா? எனக் கேட்டேன். “நான் வரமாட்டேன். கடல் வரும்” என்றாள். “இனிக் கடல் அப்படி வராது" என்றேன். மாலதி அதனை ஏற்றுக் கொண்டாலும், “கடல் வராட்டியும் லட்சி இல்ல, சசி இல்ல, மதுஷா இல்ல, சுதன் இல்ல, இவங்க இல்லாம நான் எப்பிடி போய்ப் படிக்கிறது" என்கிறாள். இவர்கள் எல்லாரும் மாலதியோடு படிக்கிற குழந்தைகள். இவர்கள் கடலலையினால் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்பதை தாய் மூலமாக அறிந்து கொண்ட மாலதி இப்போது கடல் என்றதும் பயந்து நடுங்குகின்றாள் என்பதை பின்வரும் சம்பவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
மாலதியின் தாயாரோடு கதைத்துக் கொண்டிருந்தவேளை மாலதி தன் சகோதரியோடு சேர்ந்து எதையோ கேட்டு அழுதார்கள். அப்போது தாய் “எல்லாரையும் கடலுக்குத் தான் கூட்டிப் போகப் போறேன்.” என்றுதும் “நாங்க இனி குழப்படி செய்யமாட்டோம். எங்கள கடலுக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டாம்” என கூறிவிட்டு அமைதியாகப் பாயிலே படுத்துவிட்டாள். விளையாட்டு என்றால் நான்கே வயதான மாலதிக்கு கடற்கரைதான் மைதானம். இப்போது கடல் என்றதும் பயந்து நடுங்குகிறாள். (மாலதியின் தாயாரை இப்படி ஒருபோதும் கூறவேண்டாம் என்றும் அதற்கான காரணத்தையும் பின்னர் விளக்கமாக எடுத்துக் கூறினேன்)
-18
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
நாகேஸ்வரன் சத்தியவதனி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று மேனகன், மற்றையது ஜனனன், தந்தை மேனகனைத் தூக்கி கொண்டு ஓடி வர, தாய் ஜனனனைக் கொண்டு வந்திருக்கிறாள். முதலலை ஜனனனையும் தாயையும் பிரித்துவிட்டது. ஒருவாறு தந்தை மனைவியையும் மேனகனையும் காப்பாற்றுகிறார். இப்போது மேனகன், தாயிடம் செல்லப் பின்னிற்கிறான். “எனக்குத் தம்பி வேணும்" என்று கூறும் 5வயது நிரம்பிய மேனகன், "அம்மாட்ட போகமாட்டன். அம்மா தம்பியை துலைச்சது போல என்னையும் துலைச்சிடுவா." எனக் கூறி தந்தையோடு தான் இந்நாட்களைக் கழிக்கின்றான்.
கட்டைக்காட்டைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் எட்டு வயது நிரம்பிய றேகா தனது அன்புக்குரிய தாயை இழந்து தவிக்கிறாள். தனது வீட்டின் எஞ்சிய ஒரு சில சொத்துக்களில் அல்பமும் மிஞ்சியிருக்கிறது. தனது தாயின் போட்டோக்கள் ஒவ்வொன்றையும் தெரிந்தெடுத்து அவற்றின் ஒவ்வொன்றின் பின்னாலும் “என்ன விட்டுட்டு என்ர அம்மா போட்டா" என எழுதி வைத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தாயின் இழப்பை தாங்க முடியாமல், எப்போதெல்லாம் தாயை நினைக்கிறாளோ அப்போதெல்லாம் றேகா கண்ணிராலேயே தன் கதை சொல்கிறாள்.
உயர்தரம் படிக்கும் மேரி பிறில்டா, தன் தாய், தந்தை,தம்பி ஆகியோரை இழந்து தனித்திருக்கிறாள். இன்னும் பெற்றேரரின் இழப்பை ஏற்க முடியாமல் இருக்கும் அவள், “என்னைத் தேடிவருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன், வாழ்வேன்" என்கிறாள்.
இம்மாதம் ஒன்பதாம் திகதி தம் உறவுகளை இழந்து சோகத்தில் உறைந்திருந்த 27 மாணவ, மாணவியரை சந்தித்தோம். அதில் பலர் தாய்மாரை இழந்தவர்கள், இன்னும் சிலர் தந்தை, சகோதரர்களை இழந்தவர்கள்; மற்றும் சிலர் குடும்பத்திலுள்ள அத்தனை உறவுகளையும் இழந்து தனி நபர்களாக எஞ்சியிருப்பவர்கள். இவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருந்தால் இவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன. எனவே இவர்களுடன் உடனிருக்கவும், இவர்களின் துன்பங்களை செவிமடுக்கவும், இவர்களுக்கு கல்வி புகட்டுகின்ற அருட்தந்தை ஜோசப் றொபின்சன், இவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்திருந்தார். ஒரு சில பகிர்தல்கள் குழுவாக நடைபெற்ற பின அருட்தந்தை ஜோசப் றொபின்சன், "யார், யார் உங்களுடைய குடும்பத்தில் இறந்துபோன உறவுகளை அடக்கம் செய்தீர்கள்?" எனக் கேட்டபொழுது ஓரிரு கைகள் உயர்ந்தன. இன்னும் சில தலைகள் "ஆம்" என்று சொல்லுவது போல அசைந்தன. அப்போது அருட்தந்தை அவர்கள் “நீங்கள் உங்களுடைய இறந்துபோன தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்களை அடக்கம் செய்யாவிட்டாலும் அவர்களை நாங்கள் மரியாதையோடு அடக்கம் செய்தோம். இதற்கு நாங்களே சாட்சிகள். எனவே நீங்களும் அவர்களை அடக்கம்..” எனக் கண்ணிரோடு கூறி முடிப்பதற்கு முன்பே அவர்கள் எல்லோரும் ஓவென்று அழுத காட்சியை நினைக்கும் போதெல்லாம் என் கண்கள் கண்ணிரை வருவித்து உள்ளத்தையே உறைய வைக்கின்றது.
-19

Page 12
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை இந்நிலையில் இவர்களோடு கூட இருப்பதும், இவர்களின் கண்ணிர்க் கதைகளைக் கவனமாகக் கேட்பதும் ஆறுதலைக் கொடுப்பதும் நாம் இவர்களுக்குச் செய்யக்கூடிய பெரும் பணியாகும். குறிப்பாக சொந்த உறவுகளை இழந்து தவிக்கும் சிறு பிள்ளைகள் மட்டில் அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருப்பது நம் கடனாகும்.
இவ்வனர்த்தத்தில் உயிர் பிழைத்தவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பிக்க பொருளுதவியும் தனிநபர் ஆனவர்களில் குறிப்பாக சிறுவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டி அவர்கள் வாழ, வளர உதவும் மிகப் பெரும் பணி எம் முன் பரந்து விரிந்து கிடக்கிறது. இதற்கு பொது அமைப்புக்கள், அரச, அரசசார்ப்பற்ற நிறுவனங்களின் கைகளில் தான் என்று விட்டு விடாமல் எம் ஒவ்வொருவருடைய தலையாகிய பெரும் கடமை என்பதை உணர்ந்து ஈடுபட முன்வருவோம்.
0 0 W () We 2004 இல் வட்டத்தின் பாராட்டுப் பெற்ற சூடாமணியும் கண்ணையாவும்
భ భx భ
-20
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அஞ்சலிக் கட்டுரை 1
இலக்கியத்தில் மரபுக்கும் நவீனத்துக்கும் பாலம் அமைத்த சொக்கன்
கடந்த அறுபது ஆண்டுகளாக இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் ஆழமாகத் தடம் பதித்த 'சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்களின் மறைவு தமிழ்கூறுநல்லுலகிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
1930இல் பிறந்த சொக்கன் தனது பதினாலாவது வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்துவிட்டார். இவரது சிறுகதை 1944இல் விரகேசரியில் பிரசுரமானது. 1949 இல் இவரது “மலர்ப்பலி' என்னும் நாவல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது.
நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, கலை இலக்கிய ஆய்வு, சமயம், பாடநூல்கள் என இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது ‘சிலம்புபிறந்தது', 'சிங்ககிரிக்காவலன்' என்னும் நாடகங்கள் கலைக்கழகப் பரிசு பெற்றன. "கடல் சிறுகதைத் தொகுதியும் "ஈழத்தில் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' என்னும் ஆய்வு நூலும் தேசிய சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றன. வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆளுநர் விருதளித்துக் கெளரவித்துள்ளது.
“கல்விக்கான பொருளாதார வசதியோ சூழலோ இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையிலெ எதிர்நீச்சலடித்து வளர்ந்த நான் ஓர் எழுத்தாளனாக மிளிர்வதற்கு நல்லூர் முருகனின் திருவருளும் என் அன்னையின் தியாகங்களுமே அடிப்படைக் காரணங்கள்” என்கிறார் சொக்கன்.
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய சொக்கன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றுப் பின்னர் எம்.ஏ.பட்டதாரியாக உயர்ந்துள்ளார்.
பாடசாலை அதிபராகவும், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் பல
ஆண்டுகள் கல்விச் சேவையாற்றினார். கடல் கடந்த நாடுகளில் வாழும்
-21

Page 13
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை தமிழ்ப்பிள்ளைகளுக்கு அஞ்சல்வழிக் கல்விப் போதனை செய்து தன் கல்விப்பணியை விஸ்தரித்துள்ளார்.
இவரது “இலக்கணத் தெளிவு என்னும் நூல் இவரின் இலக்கணப் புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, யாப்பிலக்கணம் தெரிந்த மரபுக் கவிஞர் இவர்.
இவரது சமயச் சொற்பொழிவுகளும் இலக்கியச் சொற் பொழிகளும் கேட்டார்ப் பிணிக்கும் தன்மையன இவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.
நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த சொக்கன் ஈழமுரசுப் பத்திரிகையின் ஆரம்ப காலப் பத்திராபதிபராகவும் பணியாற்றினார்.
"சொக்கன் பகலில் நிலத்தைப்பார்த்துப் புனைகதைகளைச் சிருட்டித்தார். இரவில் வானத்தைப் பார்த்துச் சமய நூல்களை எழுதினார்" எனப் பேராசிரியர் நந்தி குறிப்பிடுகின்றார்.
"சொக்கனின் எழுத்துக்களில் நான்கு சிறப்பம்சங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
1. முதலாவது அவருடைய நடையைப் பற்றியது. இலக்கண வழுக்களின்றி எளிமை தெளிவு, ஒட்டம் ஆகிய அம்சங்கள் பொருந்த அழகுற எழுதும் ஆற்றலுடையவர் சொக்கன்.
2. உவமைகளைக் கையாளும் பொழுதும், கருத்துக்களை வெளியிடும் பொழுதும் எவ்விடத்திலும் எக்காரணம் பற்றியும் தரங்குறையாது உயர்ந்த படியிலேயே நின்று கொள்ளும் அவருடைய பண்பு.
3. கதை, கட்டுரை, கவிதை, நாவல் எதை எழுதினாலும் அதன் மூலம் அவர்
வெளியிடும் உயர்ந்த இலட்சியங்களும் குறிக்கோளும்.
4. எத்துறையை எடுத்தாலும் அத்துறையை அணிசெய்யும் அவரது கைத்திறன் எல்லாத்துறைகளிலும் அவருடைய படைப்புக்கள் உயர்ந்த தரமானவை என நிச்சயமாகக் கூறலாம்"
என வித்தியாதிபதி கி.லக்ஸ்மண ஐயர் குறிப்பிடுகிறார் “செங்கை ஆழியான் அவர்கள் 'சொக்கலிங்க நாவலர்' என இவரைச் சுட்டியிருப்பது மிகவும் பொருத்தமானது.
மரபு ரீதியாகத் தமிழ்கற்ற பண்டிதவர்க்கத்தினரின் கட்டுப் பெட்டித் தனத்திலிருந்து மாறுபட்டு நவீன இலக்கியத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சொக்கன் மரபுக்கும் நவீனத்துக்கும் பாலமாகத் திகழ்ந்தார். அன்னாரின் மறைவையொட்டி "மாருதம் அஞ்சலி செய்கிறது.
-22
 

враћ, вith afambu Bouéаш вijomě
திருய்தி அடையாத மனிதன்
-சிசிவாஜினி
மனிதன் தினமும், எந்த விடயத்தையும் நாளைக்காகத் தள்ளிப் போடுகிறான். இன்றையதினம் நாளையை நம்பியே கடத்தப்படுகின்றது. நாளை மீண்டும் இதுவே நடக்கின்றது. இன்றைய தினத்தை அனுபவிப்பது எத்தனை வசதியானது என்பது உண்மையே எனினும் வாழ்க்கையின் புதிர் விடுபடுவதில்லை. நாளை, நாளை என்று நம்பி தள்ளி போடப்பட்டவை எல்லாம் நிறைந்த நாளாக ஒருநாள் நிச்சயமாக வரப்போவதில்லை. முடிவில் மரணம் தான் வருகிறது.
“நாளைக்கும் நிலவுவரும், நாமிருக்க மாட்டோம்" என்ற முடிவாகவே ஆகிவிடுகின்றது.
மனிதவாழ்க்கையில் தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனதுபோக எதுமீதி என்றே எண்ணத்தோன்றுகின்றது. மனிதனது எல்லாத் தேவைகளும் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கையிலேயே நாட்கள் கடத்தப்படுகின்றன. எல்லாத் தேவைகளும், விருப்பங்களும் பூர்த்தியாக்கப்பட்டு நிறைந்த சுகம், இன்பம் கண்டவனாக திருப்தி அடைந்தவனாக ஒருமனிதனையேனும் அடையாளம் காட்ட எம்மால் முடியாது. ஏனெனில் மனிதமனமும் எதிலும் திருப்திகாண்பதில்லை. கிடைக்காத ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டு இருப்பார்கள், அது கிடைத்தால் எல்லாம் கிடைத்ததாக ஏங்குவார்கள். அது கிடைத்துவிட்டால் இன்னொன்று இவ்வாறே ஏக்கத்திலேயே அவனது பாதி வாழ்வு போய்விடுகின்றது.
இந்தத் தோற்றத்தினின்று விடுபட ஒரே ஒரு வழிதான். நமது கடந்த காலங்களில் எவ்வளவு விருப்பங்கள், தேவைகளை எதிர்பார்த்து வைத்திருப்போம். அவற்றை மீண்டும் சிநதனை செய்து பார்க்க வேண்டும். அவற்றில் பெரும்பாலானவை கிடைத்தன. நமக்கு விரும்பிய மனைவி கிடைத்தாள் விரும்பிய கணவன் கிடைத்தான், விரும்பிய வேலை, விரும்பிய பதவி, விரும்பிய வீடு, விரும்பிய அளவு செல்வம் என்று விரும்பிய விஷயம் எதுவுமே கிடைக்காத மனிதனைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏதாவது ஒன்றிரண்டு அவசியம் கிடைத்திருக்கும். அதுவே போதுமானது அனுபவத்திற்கு. ஆனால் கிடைத்ததனால் என்ன பிரமாதமாகக் கிடைத்து விட்டது? என்கிறது மனித மனம் உண்மையில் பலனை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பவன்

Page 14
கடவுளையே அடைந்தாலும் கூட எதையும் அடைந்தவனாக மாட்டான்.
பலனின் விருப்பம் காலியே செய்கிறது. நிறைப்பதில்லை. அதனால் எந்த சமூகத்தில் பலன்கள் அதிகமாகக் கிடைக்கின்றனவோ, விருப்பங்கள் திருப்பதியடைகின்றனவோ, அவ்வளவு அதிகமாக வெறுமை பிறந்து விடுகின்றது. ஏழைகள், பணக்காரர் வெறுமை அடைவது போல வெறுமையடைவதில்லை. ஏழைகள் ஒரு பொழுதும் இவ்வளவு அனுபவிப்பதும் இல்லை. என் வாழ்வு அர்த்தமற்றது, வீணானது என்ற அனுபவம் அடைவதில்லை. தினமும் வேலை மிகுந்து இருக்கிறது. நாளை எதையோ அடைய மிகுதியிருக்கின்றது. ஆனால் பணக்காரர் வாழ்வு அப்படி இல்லை. விரும்பிய அனைத்தும் கிட்டிவிட்டன; எங்கும் எந்த வித முன்னேற்றமும் காணதேவையில்லாத அளவிற்கு பூரணமடைந்துவிட உயிர் வாழ்வதற்கு எந்தக் காரணமும் இருக்காது.
இவ்வாறு எல்லாம் பூரணமடைந்த நிலையிலும் மனிதம் திருப்தியடைவதில்லை. ஒன்றிரெண்டு கிடைக்காவிட்டாலும் திருப்தியடைவதில்லை. கிடைக்காத ஒன்றிற்காக அதுவும் வாழ்க்கைக்கு அவசியமில்லாத சிலவற்றிற்காக அங்கலாய்க்கின்றான்.
இன்றைய நாள், இந்த நிமிடம் மிக்க பெறுமதியானது. நாளை நாம் இருப்போம் என்பது நம்பிக்கை அவ்வளவுதான். நாளை இல்லாமலும் போகலாம். இன்றைய நாளில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் தொல்லைகளுக்கும் காரணம் மக்கள் மனிதப் பெறுமதியை உணராமைதான். பகுத்தறிவு கொண்ட மனிதனாகப் பிறந்தவன், நாளின் பெறுமதியை பிறப்பின் பெறுமதியை நிச்சயமாக உணர்ந்தேயாக வேண்டும்.
மனிதப் பெறுமதியை உணரவேண்டுமாயின் ஒழுக்கப்பண்புகளும், மனித விழுமியங்களும் கடைப்பிடிக்கப்படவேண்டியது கட்டாயமானது. இவற்றைப் பின்பற்ற மறுப்பவர், மறப்பவர் யாவரும் மனிதபெறுமதியோடு வாழ மறுப்பவர்கள் ஆகி விடுகின்றனர்.
மனிதர்களிடம் மனித பெறுமதியை உணர்த்தக் கூடிய ஆற்றல்கள் பல உள்ளன. ஒவ்வொரு மனிதனும் பெறுமதியானவன் தான். நாட்டின் பொருளாதாரத்தில் மனிதன் வளமாகக் கருதப்படுகின்றான். தம்முள்ளே இருக்கும் ஆற்றல்களை முழுமையை அறிந்து கொள்ளாமலேயே காலத்தை கழித்து வருகின்ற மனிதர்கள் பலர் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தமது பெறுமதியையும் ஆற்றலையும் உணரும் போதுதான் அவனது உயர்ந்த பெறுமானம் தெரியவருகின்றது.
மனிதன் பெறுமதியாவதற்கு காரணம் மனித விழுமியங்களைப் பேணி மனித தன்மையுடன் வாழுவதே இன்று மனிதன் உயர்ந்த பெறுமானத்தை இழந்து வருகின்றான். மனிதவிழுமியங்களான அன்பு அகிம்சை, உண்மை, சாந்தி, நல்லொழுக்கம், இரக்கம் என்பன புறக்கணிக்கப்படுகின்றன. மனிதன் மனிதவாழ்வின்
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை ஒழுங்குகள் தவறுவதனால் அவனால் அமைதியாய் திருப்தியாய், நிம்மதியாய் இருக்க முடிவதில்லை. அவனது அடக்க முடியாத கட்டுப்பாடற்ற ஆசைகள், ஆதிக்க எண்ணங்கள், குரூரளண்ணங்கள், எல்லாமே அதிகரிக்கின்றது.
எனவே மனிதவாழ்வில் எல்லா இலட்சியங்களிலும் உயர்ந்த இலட்சியமாக இருக்கக் கூடியது, ஒழுக்கமான திருப்தியான மனிதனாக வாழுவதே. எத்தனைபெரிய செல்வம், பதவி, புகழ், கல்வி ஆடம்பரம் இருந்தும் ஒழுங்கு தவறும் போது மனிதனின் நிம்மதியே போய்விடுகின்றது.
எல்லோரும் வாழவேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். எமக்கு கிடைத்தவற்றை கொண்டு திருப்தியாக, உயர்ந்த இலட்சியம் கொண்டவராக மனித
பண்புகள் கொண்டவர்களாக, மனித பெறுமதியை உணர்ந்தவர்களாக வாழவேண்டும்.
“நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்”
0 0 W (d. 000 ஈழத்தில் வெளியாகும் சஞ்சிகைகள்
జ* ఓ*్యజీ క్షిణధః జీణkప్రో. ఇది: EA, LANŠKesemž இெடுSCF)

Page 15
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை மருத்துவக் கட்டுரை
பற்களின் முக்கியத்துவமும்- வாய்ச்சுகாதாரமும்
-ஞானசோதி பூரிகந்தன் - (பாடசாலைப் பற்சிகிச்சையாளர்வமுமவி)
உலகில் மனித இனத்திற்கு மட்டும் தான் சிரிக்கத் தெரியும். “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்" என்பார்கள். இச்சிரிப்பானது இன,மத, மொழி வேறுபாடுகளைக் கடந்த மனிதவர்க்கத்தின் நேசிப்புக்குரிய தேசிய மொழி புன்னகை மட்டுமே. உண்மையில் சிரிப்பு என்பது “வாழ்வின் காயங்களுக்கு தற்காலிகமாவேணும் இடப்படும் மருந்து" ஆகும். பற்கள் சிரிப்பதற்கு தேவைப்படுவதால், நாம் அப்பற்களை உறுதியாகவும், பிரகாசமாகவும் பேணுவதற்கு நல்ல வாய்ச்சுகாதாரத்தைப் பேணுவதுடன், போஷாக்கான உணவுகளையும் உட்கொள்ளல் வேண்டும்.
அடுத்ததாக அழகை மெருகேற்றுவதில் பற்கள் முதலிடம் பெறுகின்றன. பற்களில் கறைகள், சூத்தைகள் ஏற்பட்டால் முக அழகு கெட்டுவிடும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்' சிரிக்கும் போது பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் இருந்தால் வசீகரத்தோற்றம் மேலும் மெருகூட்டப்படும்.
சிறுகுழந்தைகளின் பற்களையும் பற்றீரியாக்கள் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் சிறுபிள்ளைகள் எவ்வித காரணமும் இல்லாது அழுவார்கள். இதற்குக் காரணம் பற்களில் சிறுகுழிகள் ஏற்படுவதாலாகும். இதனால் குழந்தையின் உணவு உட்கொள்ளும் திறன், பேச்சு, பற்கள் வளரும் போது பிரச்சனைகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. பற்களை கூடுதலாக ஸ்ரோகொக்கஸ், லக்ரோபசிலஸ், அக்ரினோ பசிலஸ் போன்ற கிருமிகள் பாதிப்பிற்குட்படுத்துகின்றன.
வாழ்நாள் முழுவதும் எமக்கு பற்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். இவை உணவை நன்கு அரைத்து உண்பதற்கு, தெளிவாகப் பேசுவதற்கு, அழகான புன்னகைக்கு அவசியம். பற்களை பாற்பற்கள், நிரந்தரப்பற்கள் என இருவகைப்படுத்தலாம். பாற்பற்கள் 6ம் மாதத்தில் வெளிவரத் தொடங்கி 2 1/213 வருடத்தில் முளைத்துவிடும். மொத்தம் 20 காணப்படும். நிரந்தரப்பற்கள் 32 காணப்படும். இவை தொழிலுக்கு ஏற்ப வெட்டும்பல், வேட்டைப்பல், முன்கடைவாய்ப்பல், பின்கடைவாய்ப்பல் என வகைப்படுத்தப்படும்.
-26
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வவுனியா மாவட்டத்தில் உள்ள கூடுதலான பாடசாலைப் பிள்ளைகளிடையே பற்சூத்தை காணப்படுகின்றது. இந்நோய் கூடுதலாக கிராமப்புற மாணவர்களை விட நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே தான் அதிகளவில் காணப்படுகின்றது. இதற்கு முக்கியகாரணம் நகள்புற பாடசாலை மாணவர்கள் அநேகம் பேர் (Pocket money யாக) காசு கொண்டுவந்து சிற்றுண்டிச்சாலையில் கூடுதலாக குளிர்பானப் பக்கட்டுக்கள், ரொபி போன்ற இனிப்புப் பண்டங்களையே அதிகளவில் உண்கின்றார்கள். இத்தன்மை கிராமப்புற மாணவர்களிடையே அரிது.
இனிப்பை அடிக்கடி உண்பதால் வாயில் உள்ள பற்றீரியாக்களின் தாக்கத்தினால் பற்களின் மேற்பரப்பு அமிலத்தினால் தாக்கப்பட்டு, பற்கள் மென்மையாக்கப்பட்டு பற்சூத்தை ஏற்படுகின்றது.
பற்சூத்தையைத் தடுப்பதற்கு அடிக்கடி இனிப்புணவை உட்கொள்வதைத் தடுத்தல் வேண்டும். இனிப்புணவிற்குப் பதிலாக பழவகைகளை உட்கொள்ளவேண்டும். புளோரைட்டு அடங்கிய பற்பசையைப் பாவித்தல் வேண்டும். வருடத்திற்கு ஒரு தடவையோ அன்றேல் 6 மாதத்திற்கு ஒரு தடவையோ பற்சிகிச்சையாளரிடம் அல்லது பல்வைத்தியரிடம் சென்று பற்களைப் பரிசோதித்தல் வேண்டும். இனிப்புணவை பிரதான உணவுவேளைக்குப் பின்பு உட்கொள்ளல் வேண்டும்.
பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் இரண்டாவது நோய் முரசுநோயாகும். கூடுதலாக கிராமப்புற மாணவர்களைவிட நகள்புற மாணவர்கள் அநேகம் பேர் பற்துாரிகையைப் பாவித்தாலும் அவர்கள் தகுந்த முறையில் பற்துTரிகையைப் பயன்படுத்தாமையினால் இருசாரரிடையேயும் முரசுநோய் காணப்படுகின்றது. இதற்கு முக்கியகாரணம் பற்பொடி, கரி, உமி போன்ற உராய்வான பதார்த்தங்களினால் பல்துலக்குவது, பற்துாரிகையின் விளிம்பு ஒரேமட்டம் இல்லாத வளைந்த ஒழுங்கற்றவற்றைப் பாவிப்பதனாலாகும்.
இதனால்
1. முரசால் இரத்தம் வரல்
2. வாய் மணத்தல்
3. முரசின் விளிம்பு வீங்கியிருத்தல் 4. முரசு செந்நிறமாக வீங்கியிருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
முரசுநோயைத் தடுப்பதற்கு உராய்வான பற்துாரிகைப் பதார்த்தங்கள் பயன்படுத்தாது, பற்பசையும், பற்துரிகையின் விளிம்பு ஒரேமட்டமான பற்துாரிகையைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் உணவு உட்கொண்டதன் பின்பு பற்துலக்கவேண்டும். பற்களின் வெளி.உள் மேற்பரப்புக்களுடன் உணவை அரைக்கும் பகுதியும், நாக்கும் தகுந்த முறையில் துப்பரவு செய்தல் வேண்டும்.
-27

Page 16
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சில மாணவர்களிடையே பற்களின் மேற்பரப்பில் வெண்ணிற, மண்ணிற
Patches ஐ அவதானிக்க முடியும். இதற்குக் காரணம் நீரில் 1ppm விட அதிகளவில் புளோரைட்டு காணப்படுவதனாலாகும். இந்நிறமாற்றமானது செட்டிகுளம்,நேரியகுளம், மாங்குளம், உளுக்குளம், பட்டாணிச்சூர், ஸ்கந்தபுரம் போன்ற இடங்களில் வசிப்பவர்களிடையே அவதானிக்க முடியும். இதற்கு பல்வைத்தியர்கள் Vital Beaching Composito madterial மூலம் இந்நிறமாற்றத்தைக் குறைக்க முடியும். இச் சிகிச்சையை வவுனியா ஆதார வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ளமுடியும்.
சில பாடசாலை மாணவர்களிடையே Malocclusion அதாவது ஒழுங்கற்ற பற்கள் காணப்படுகின்றது. இவை பரம்பரை மூலமோ (Inherited) செயற்கையாகவோ (Acquired) பெறப்பட்டவையாக இருக்கலாம். செயற்கை முறையில் பெறப்பட்டவை அவர்களது வாயச்சுகாதார பழக்கவழக்கம் மூலம் (Oralhabits) பெறப்பட்டவையாகும்.
1) கைப் பெருவிரல் சூப்புதல்
i) பற்சூத்தையினால் பற்கள் விழும் கால எல்லைக்கு முன் பாற்பற்களை இழத்தல், நகம் கடித்தலினால் நகத்தினுள் உள்ள அழுக்கு வயிற்றில் சேருவதுடன், பல்லின் முன்பகுதியும் தேய்வடையும. மேற்குறித்த காரணிகளினால் ஏற்படும் பற்களின் ஒழுங்கற்ற தன்மையை பெற்றார், பிள்ளையை தகுந்தமுறையில் பராமரிப்பதனால் ஒழுங்கான பற்களைப் பேணமுடியும்.
சில பாடசாலை மாணவர்களுக்கு முன்பற்கள் விளையாடும் போது விழுவதனால் அல்லது விபத்தினால் உடையலாம் அல்லது முற்றாக பல் வெளிவந்துவிடலாம். அவ்வேளையில் உடனடியாக முற்றாக பல் வெளிவந்துவிட்டால் அப்பல்லை இளநீர் அல்லது ஜீவனியில் இட்டு பல்வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெறல் வேண்டும். பல் உடைந்த பாதியாக இருப்பின் அதையும் வைத்தியசாலைக்குச் சென்று பல்வைத்தியரிடம் காட்டுதல் வேண்டும்.
வவுனியாவில் பாடசாலைப் பற்சிகிச்சை நிலையங்கள் வ/தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் பல் வைத்தியர் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றது. ஏனைய பாடசாலைகளான வ/இறம்பைக்குளம் ம.ம.வி, வ/முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் பற்சிகிச்சையாளரிளால் சிகிச்சையளிக்கப்படுகின்றது. இவர்கள் 13வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கிறார்கள். 13 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வ/தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் ஆதார வைத்தியசாலையில் எப்பகுதிமாணவரும் சிகிச்சையைப் பெறமுடியும். அவர்கள் சிகிச்சையைப் பெறவிரும்பின் இம்மூன்று பாடசாலைப் பற்சிகிச்சை நிலையத்தின் ஏதாவது ஒன்றில் இருந்து பெறப்பட்ட கைத்துண்டைச் சமர்ப்பிப்பதன் மூலமே சிகிச்சையை மேற்கொள்ள முடியும். அத்துடன் நடமாடும் பற்சிகிச்சை வாகனத்தின் மூலம் பற்சிகிச்சை சேவை மேற்கொள்ளப்படுகின்றது. இச் சேவையானது பாடசாலைக்கும் மேற்கொள்ளப்படுகின்றது.
-28
 

gepe, essb6, 656) 36&su tõdD6
Jü
ஆசிய மக்களுக்கு வந்த பெருந்தலைவலி நீ தேசியங்கடந்து தேசங்களிலெல்லாம் உன் பெயர் பேசிடும் பொருள் உன்நாமம் தானே நேசமாய் இருக்காத பேரலையே சுனாமி.!!!
காசுதான் கடன் கேட்டோமா உன்னிடம் மாசற்ற மக்களுக்கு நீ தந்தாய் அழிவு பாசத்திற்கே இடமின்றிய நீ கொடியவன் - இங்கே வேசம் போடுபவன் மேல் - உன்னைவிடவும்..!!!
எத்தனை உயிர்களிங்கே எடுத்தியம்ப வார்த்தையில்லை அத்தனையும் அலைமடியில் ஏன் புதைத்தாய்? சொத்துக்கள் சொந்தங்கள் என இழந்து மொத்தமும் கொடுத்துவிட்ட மக்கள்தான் எத்தனை.!!!
சோகத்தில் எம் கண்ணி புதிய கடல் நிரப்ப சாபத்தின் ஆர்ப்பரிப்பாய்ச் சமுத்திரமே நீ! கோபத்தின் காரணத்தைச் சொல்லிவிடு - அன்றேல் பாவத்தின் பிறப்பெடுப்பாய் பாவி நீ கடலே.!!!
மீனவர்க்குத் தொழில் கொடுத்தாய் மீன் கொடுத்தாய் கானமிசைத்துக் களியாட்டமாடக் கரை கொடுத்தாய் ஈனத்தனம் செய்ய எப்படி நீ நினைத்தாய்? - கடலே! மானம் உனக்கில்லையா மழலைகளைக் கொன்றாயே..!!!
அளவை கலைக்கரண்
(எம்.சுதாகரன்)
பொறியியற்படம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
-29
1D/U
DIU
லே. !!

Page 17
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வண்டுகள் வட்டமிட்டு,
ரீங்காரமிடும் வளம் நிறை நந்தவனமாய்
ஏறுநடை போட்டு,
குதுகலம் வழிந்தோடியதெங்கள் வாழ்வு,
வாடி வதங்கி காய்ந்து கருகி, வறண்டு வடிவிழந்து, சுடுகாடாய் சுருண்டு கிடக்கிறது! வாழ்க்கையில் வழி(னி)களும் விழிகளும் இருண்டு, வெளிச்சத்தின் விலாசமே இங்கே, வேரறுக்கப்பட்டிருக்கிறது! முன்பெல்லாம் - எமது வீடுகளின் வாசல்களில் வீற்றிருப்பது அழகிய கோலங்கள் இப்பொழுதோ கொடுரக் கொலைகள். மாத(ம்)மும்மாரி பொழிந்த மாதாவை குருதி மாரி குளிப்பாட்டுகிறது! பூச்சூடி திலகம் தரித்து புதுப்பொலிவுடன் பூமிதன்னை வலம் வந்த பூமித்தாய், இலங்கும் பூவிழந்து பொட்டிழந்து பொலிவழந்து பூட்டிய கை விலங்குடன் விலாவொடியக் கதறி அழுகின்றாள்.
அவள் பிரசவித்த பிஞ்சு மழலைகளோ
விரக்தியின் விளிம்பினில். நாய்கள் கூட இங்கே சாலையில் நடக்க
அஞ்சுதே! பேய்கள் கூட பயந்து நடுங்குதே!
யுத்தம் நின்றது?. சமாதானம் மலர்ந்ததா? தருமம் தழைத்ததா? அழுது அழுதே - எங்கள் கண்களும் காய்ந்து போனதே! மனிதா இருந்து சிந்தனை செய்! உனது மனிதம் மறைந்து விட்டதா? இல்லை!
மரணித்து விட்டதா? நாளை எங்களின்
இதய வானில் விடிவெள்ளி பூக்குமா? முழு நிலா தோன்றுமா? சுதந்திர தீபம் சுடருமா? தென்றல் தாலாட்டி மீண்டும் சந்தோசம் சங்கமிக்குமா? குதுகலம் வழியுமா?
மானிடனே! காலம் பதில் சொல்லட்டும்.
ஆக்கம் அபேனாட் -30
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சிறகும் உறவும்
சிதறிய உறவுகளைத் தேடியலையும் திசைதெரியாத சிறகொடிந்த அன்றில் ஒன்று. நிலவு ஒளியில் சிறகடித்து கடலலையில் கால் நனைத்து உரிமையுடன் உறவாடி விளையாடி குதூகலித்து மகிழ்ந்தது அன்று.
மார்கழிப் பெளர்ணமி
காலைப் பொழுதில் ناؤرو
சிறிய காளியனாலே @' . இதன் வாழ்வும் داؤ అన్యోతో அமாவாசை இரவு اقللك ܘܘܿܙ3 %ܗ போலானது. (xჭგში? 85 هم சிறகையும் உறவையும் ک6ے" கொடுப்பார் யார்? 6.W. قاقيكي اغنية(-
அன்றய கெளரவ நண்பன்
எடுக்கவா? தொடுக்கவா?
என்று கேட்டான்
இன்றோ!
எடுக்கலாமா?
கெடுக்கலாமா?
என்று யோசிக்கிறான். இளையநம்பி
கள்ளிக்குளம்
-31

Page 18
seuparis, eistress, assinau g86nébéulu estaidfa mes படுமாதம்)
விழவு வருமா?
வந்தவரை வாழவைக்கும் வன்னியிலே - பிரிந்திட்ட சொந்தங்களை தேடுகிறேன் ஆறாத துயரில் மூழ்கிய என் வாழ்வை - ஆதரிக்க யாருமின்றி வேதனையில் வாடுகிறேன் வெந்து போன நெஞ்சத்தில் வேதனையும் சோதனையும் - இன்னும் தீரலியே அத்தனை துன்பங்களும்.
முந்நாளில் நானிருந்த கிராமத்தைத் தேடினேன் - அத்தனையும் காடாகி மேடாகத் தெரியுதே தென்னை, பனை, மா, பலா, செந்நெல்விளைநிலம் - இத்தனையும் வீணாகி காடாகத தெரியுதே.
குளத்தின் கரை ஓரத்து புதுமையான கோவிலொன்று - இருந்திட்ட இடத்தினையும் தேடித் தேடிப் பார்க்கிறேன் பச்சைப் பசும் புல்வெளியில் குதித்து விளையாடியதும் கிட்டிப் புல்லும், கிளித்தட்டும் குதுகலித்து ஆடியதும் - இப்பவும் என் நெஞ்சில் ஈரமாக இருக்குதே
எங்கிருந்தோ வந்த பல இயந்திரப் பறவைகள் - இட்டுவிட்டுச் சென்றதினால் விளைந்தது பெரு நாசம் சீறிவந்த பல கணைகள் சீற்றமுடன் சிதறியதால் - வேரிழந்த மரம் போல எல்லாமே சாய்ந்ததங்கே - இப்பவும் என் கண்களில் ஈரமாகி காயுதே.
எப்ப இனி எம் தேசம் விடிவு பெறப் போகிறது - இன்னும் எத்தனை நாள் காத்திருந்தால் அந்நிலை மீண்டும் இப்படி என்மனதேங்கித் துடிக்குதே.
கத.பிரதாபன், கள்ளிக்குளம், வவுனியா. 32

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
Dollgöß106)ühulluITP
செல்வி வேணுகா நவரத்தினலிங்கம் காத்திருந்தேன் கிடைக்கவில்லை பொறுத்திருந்தேன் புரியவில்லை மண்டியிட்டு அழுகின்றேன் மனிதர்களைக் காணவில்லை.
மனிதமே! நீ எங்கே
மாளிகையின் மைந்தர்கள் மதுவறைக்குள் தானா? ஏழையின் புருசர்கள்
ஏலத்தில் தானா? அகப்பை பிடிக்கும் அபலைகள் அடுப்படிக்குள் ஆடை தைக்கிறார்களா?
இதோ இந்த விமர்சனங்கள் வெந்து போகின்றன விழுமியங்கள் வற்றிய போகின்றன
மனிதமே! நீ இன்னமும் LDJGoodbats 66b60)6OuJIT?
மாலை ஏந்தாத மங்கைகள் மார்பில் பால் சுரக்கின்றது LD6örgos Urrut? மாலை சூடிய மன்மதன்கள் விடுதிகளில் தங்குகின்றார்கள்
இதை நீ ஏற்பாயா?
மனிதமே
இதை நீ ஏற்பாயா? -33

Page 19
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒரு போர் வீரனின் டயறியில் இருந்து. வெண்ணிலாவி
பயிர் கருகி விளைநிலத்தை சருகாக்கியது போல அனல் பறக்கும் அவள் கண்களால் - என்னை பிஞ்சிலே பழுத்தது என்கிறாள் என்பின்னால் சுற்றுகிறாய் என்பது போல் மிரண்டு அரண்டு ஓடுகிறாள்
ஆனால் நானோ. முத்துப் பற்கள் தெரிய முகம் நான குளித்துத் துவட்டுகையில் முகத்தில மூடிய கூந்தல் அலையாய் புரள ஒரு தேவதை போல் தெரியும் அவள் பின்னே கவிதை பாடி கண்களால் ஏறிட்டு நோக்கி ஓடுகின்றேன்.
தாவும் விழிகள் (பதினாறில் இருக்கும் தயக்கத்திற்கு மேலாக) சராசரிப் பெண்ணின் பயத்திற்கும் மேலான ஒரு அமானுஷ்ய சோகத்தில் ஆழ்ந்திருப்பது தெரிய
நெருங்க விடவில்லை என்னை தவித்து ஓடி தடுமாறுகிறாள் தட்டிக் கழிக்கிறாள் என்னை என்றுதான் எண்ணினேன் முதலில் ஆனால் பின்னே பருவத்து விளைநிலத்தில். பயிர் செய்யாத கட்டாந்தரையில் உழுது களைத்து வெளிற்றிய வெறுந்தரையில் இறுகி வெடித்த மணற் புழுதி வெளியில் கண்களில் நீருடன்.
'கானல் நீரானதே
கானல் நீரானதே" - என்று பைத்திய ஒலமிட்டுத் திக்குமுக்காடி நிற்கும் அவளை இன்று முதிர் கன்னி பருவத்தில் மீண்டும் மீண்டும் மன உழைச்சல் தாளாமல் தூரத்து நிலவாய்ப் புறப்பட்டு விட்ட அவளைப் பார்த்து செய்வதறியாது அனிச்சையாகவே போகிறது என் கைகள்
துப்பாக்கியை நோக்கி
றவைகள் தீரும் வரை முழங்குகிறேன் நான் தீராத குழப்பத்தில் விடுதலை நோக்கிய அவள் வெறிக் கண்களில் ஒரு கணம் தெரிகிறது சாந்தி போகட்டும் என் காதலி இனியேனும் நிம்மதியாகத் துகிலட்டும்.
-34

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன். நினைவுகளோடு. விழிகள் திறந்தபடி. செயல்களுக்கான காரணத்தொடர்பின்றி.
கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கிறேன். சுதந்திர விடியலுக்காய்.
தேர்தல் மணி ஒலிக்க சங்கு முழங்க
தெருக்களில் மக்கள் யதார்த்தம் புரியாமல் சமாதான கோசமிட O
l1. . .
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்
அழிக்கப்பட்ட பொட்டும் கிழிக்கப்பட்ட சேலையும் அகதி முகாம்களும் அபலைச் சிறார்களும் வெகுஜன தொடர்பியத்தில் வேட்டுக்களாய். பிரசார வேட்டுக்களாய் மாறியது வோட்டுக்களாய் தேர்தல்
காட்டுக்களில்
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்
சுதந்திர
-35
வெண்புறா சிறகடிக்க சமாதான நாதத்தில் மக்கள் மனம் பரிமளிக்க
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்
அடிப்படையில் மாற்றமில்லை அத்தனையும் பச்சைப் பொய்கள் சூதாட்ட அரசியலே. என்ற சூட்சுமங்கள் புரியாமல். நடுச்சாம இருட்டில் விடியலின் வெள்ளிக்காய் வழிகள் திறந்திருக்க கனவு காண்பதை யாருக்குப் புரியவைக்க.
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிரக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய் புயலின் உறுமலை பூபாளமென்று நினைப்பது சரியோ? புகழ்வது தகுமோ? அன்று புகழ்ந்தோர் பலர் இன்னும் புகழ்வோருமுளர் வெறுமை
அத்தனையும் வெற்றுப் பேச்சுக்கள் இத்தனைக்கும்
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்

Page 20
astupef, ESGOG, EHEIMD6u 6535Urábasuu &Fiefs M65
சுடலைக் குருவியின் கூக்குரல் கேட்டது மூலையில் எங்கோ. பல்லியின் முனகலும் கேட்டது நிஷப்தத்தைக் கிழிக்கும் சன்னத்தின் ஒலிகள். பயங்கரமொன்றின் பரிபாஷையானது
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்
ஒட்டியுறங்கிய திண்ணையிலிருந்து ஓடித்திரிந்த முற்றத்திலிருந்து சுற்றித்திரிந்த ஒழுங்கையிலிருந்து சுழட்டி நின்ற சந்தியிலிருந்து கிளம்பச் சொல்லி ஒலை வந்தது பயணத்தின் பாதையில். முடியாமல் கிடந்தோரும் முடிந்து போய்க் கிடந்தோரும் - அவற்றைக் கடந்து போனோரும் மரண ஒலமின்றியே மரணித்த உயிர்கள் புதைகுழி இல்லாமல் புதையுண்ட உடல்கள். பயணம் தொடர்ந்தது
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிரக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்
கல்லறை கடைசித் தரிப்பிடம் உனக்கும் எனக்கும் சுதந்திர வேள்வியில் ஆகுதியானோர்க்கு அதுவே காவியம்
-36
இருட்டில் ஒளிரும் மின்மினிகளுக்கா. இல்லை இருட்டை விரட்டும் சூரியர்களுக்காக இவர்கள் இரத்தம் சிந்தியது
நான் மட்டும் தனியே கும்மென்ற இருட்டில் குந்தியிருக்கின்றேன் சுதந்திர விடியலுக்காய்
நாலுக்கு ஊரடங்கு நாய்களும் பேய்களும் தெருக்களில் தேரிழுக்க
அரிசிக்கும் மாவுக்கும் அகதிகள் வரிசையிலே
இடுகாடு போகையிலும் மண்ணின் மைந்தரை 960)LuJT6b 5TL அனுமதி அட்டைகள்
இதுதான் எங்கள் சுதந்திர விடியல்??
இதுதான் எங்கள் சுதந்திர விடியல் ??
நின்று நிமிர்ந்து உரக்கச் சொல்லுங்கள் நானும் வருகிறேன் வெளிச்சத்திற்கு
g). L6ö6)/T&FLIDITu'r உங்களோடு கைகோர்த்தபடி.
அ.ஜெ.கிறிஸ்டி வவுனியா,

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தாரணியில் யாரறிவார்.
சிவநெறிப்புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி
ஏருக்கு நிகர் இல்லை
என்றே உலகுசொல்லும் ஆருக்குத் தெரியும் அந்த
அளவில்லாத் துன்பமெல்லாம் காருக்குக் காத்திருப்பார்
கைவிட்டுப் போயே விடும் நீருக்குக் காத்திருந்து
நிலமெல்லாம் வெடித்துவிடும்.
ஓர் வழியாய் நீர்வந்து
ஒருவாரம் ஆகையிலே சீர் இல்லா மழைவந்த
சீரழித்துச் சென்றுவிடும் நேரில் மணி ஒன்றாய்
நெல்விளைந்த போதினிலும் போர் ஒன்றிவருவதென
புழுக்கூட்டம் வந்துவிடும்
தப்பித்தவறியது
தான் விளைந்த போதிலுமே சப்பிமிகவாகி
சேதம் விளைந்துவிடும் உப்பட்டி மேல் மழையும்
ஓயாது பெய்துவிட்டால் கப்பிக் கரியாகி
கண்டவிலை காணாது.
இப்படித் துன்பங்கள
இவர்கள் படுவதெல்லாம் செப்பித்திரிபவர்க்கு
சேதி சொல்ல யாருமில்லை தப்பிப் பிழைத்தவர்கள்
தந்த நெல்மணிகள் அல்லோ துப்பாய் துலங்குதிங்கே
தாரணியில் யார் அறிவார்.
-37

Page 21
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கொடிய அலைகள்.
வந்தது டிசம்பர் இருபத்தாறு இரண்டாயிரத்து நாலே சந்ததி இழந்துதவித்தனர் பல்லாயிரத்துக்கு மேலே தாலாட்டும் கடலலை தறிகெட்டு வந்தது பாலுட்டும் பாலகனையும் பறித்திட்டுக் கொன்றது
தனக்கொரு தலையெழுத்தோடு வந்தது சுனாமி கணக்கற்றோர் தலையெழுத்தை மாற்றியது சுனாமி இயந்திரத்துக்கும் இலத்திரனுக்கும் யப்பானே பிரசித்திசுனாமி பயங்கரத்துக்கும் பதைபதைப்புக்கும் யப்பானே உற்பத்தி
ஆமிக்குப் பயந்து அடங்கினோம் அன்று சுனாமிக்குப் பயந்து துவண்டோம் இன்று சாமிக்கும் பெறுக்கவில்லை தமிழர் வாழ்வு பூமிக்கும் பெறுக்கவில்லை தமிழர் பாரம்
உப்பிட்டது கடல் மின் உணவிட்டது கடல் ஒப்பிட்டு எதைச் சொல்வோம் கடல்தாயின் கருணைக்கே கடல் அரசி கடல் அம்மா கடல் அன்னை நீ அடல் கொண்டு அத்துமிறினாய் அடுக்குமோ இது
அன்னையென்று அண்டியிருந்தோரை அரவணைத்தாயே என்ன பிழை கண்டாய் ஏன் இந்த எல்லை மிறல் இரைதேடி வந்தாயா? இறுமாந்து வந்தாயே நீ கரைதாண்டிக் காவு கொண்டாய் கருணையில்லையா?
நிரலையில் நீந்தி விளையாடினோம் தாய்மடியில் குழந்தைகள் போல் ஒடம் விட்டோம் கப்பல் விட்டோம் உன்முதுகில் விட்டோம் கட்டுமரம் பேரலைகள் ஓய்ந்தன பொழுது விடியுமெனக் காத்திருந்தோம் பேரலையாய் பாய்ந்து வந்தாய் பெருங்கடலே பெரும்பிழை செய்துவிட்டாய்
நாட்டையே அழித்தாய் நகரை அழித்தாய் ராஜ பாட்டையை அழித்தாய் நல்ல விடு வாசல் கோவில் அழித்தாய் கொடுமையோ கொடுமை சாவில் சங்கமித்தார் எம்தமிழர் சகிக்கவில்லை
-38

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இம் என்னும் முன்னே இந்தியப் படைகள் அன்று எம் மண்ணை ஆக்கிரமித்து அழிந்ததுபோல் - கடற்கரையில் ஓடிவந்து கால்தொட்டு சாலமிட்டு பின்வாங்கும் நீ தேடிவந்து அழித்துவிட்டாய் செய்வதறியதுதவிக்கின்றோம்.
யார் கொலையைக் குறிவைத்தாய் எதை அழிக்கத்திட்டமிட்டாய் பார் இன்று பதைக்கிறது உன்னைப் பழிக்கிறது மீண்டும் நீ ஊருக்குள் புகுந்து விட்டால் ஓடித்தப்ப வழியில்லை முந்நூறு யார் தள்ளி போய்விட்டோம் கடலே உனைத் தள்ளிவைத்தோம்
கத்தியின்றிரத்தமின்றியுத்தமொன்று செய்தாய் கடலே நீ இத்திகதியென்று சொல்லிவிட்டு வந்திருந்தால் எப்படியோதப்பியிருப்போம் ஏனிந்த பிரகடனப்படுத்தாத யுத்தம் இந்நாட்டு இராணுவம் போல் வினில் இறந்தது பூவும், பிஞ்சும், காயும், கனியும்
உயிர்கள் போயின உடமைகள் அழிந்தன் உறவுகள் பிரிந்தன பயிர்கள் அழிந்தன பாதைகள் தூர்ந்தன பரிதாபப்பட்டு அன்னியன் கொடுத்த அத்தனை பொருளையும் அகதிகளுக்கு எண்ணிக் கொடுக்க இரக்கமில்லாமல் அள்ளிக் கொண்டது அரசு
நிவாரண மெடுக்க நீழுந்திநான்முந்தி என்று அவாக் கொண்டு அலைகிறார் ஆதரவற்றோர் ஐஞ்சுமாதமாக அதோ இதோ என்கிறார் அதிகாரிகள் கொஞ்சமாவது கொடுக்கிறார்கள கொடும்பசி போக்க
ஊன் இல்லை உறக்கமில்லை உடுக்க உடையுமில்லை வானம்தான் கூரையாக வாய்த்துவிட்டது இவர்களுக்கு படைகொண்டு பார்வென்று புகழ்பூத்த தமிழர் நடைப்பிணமாக நலிகிறர்நாதியில்லை இவர்க்கு
ஒரு வயிற்றில் ஒவ்வொன்றாய் வந்தோர் அந்தோ ஒரே சிதையில் ஒன்றாக வெந்தார் எங்கெங்கோ தேடி எடுத்ததையெல்லாம் ஆங்காங்கே அடுக்கி அடக்கம் செய்தார் பார்த்தவர்கள் அழுதார் கேட்டவர்கள் அழுதார் பத்திரிகை படித்தவர்கள் அழுதார் பலருக்காயச் சிலர் அழுதோம் பரிதாபம் இது
கணவனை இழந்த மனைவியர் மனைவியை இழந்து கணவர்
-39

Page 22
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை பிள்ளைகளை இழந்து பெற்றோர்
பெற்றோரை இழந்த பிள்ளைகள்
சகோதரனை இழந்த சகோதரிகள்
சகோதரியை இழந்த சகோதரன்
உற்றோரையும் மற்றோரையும்
ஒன்றாக இழந்த உறவினர்
அதனினும் கொடிது எதுவெனக் கேட்டால் எதனினும் கொடிது இதுவே என்பேன் கொடிய அலை நெடிய அலை கொடுந்துயர் முடியவில்லை முடியவில்லை முடியவில்லை
நீண்ட நெடும் பேரால் இந்நீநிலத்தில் மாண்ட மனிதர்க்காய் மனமிரங்கி மறக்க முடியாமல் ஆண்டாண்டாய் அழுது வடிகின்றோம் அதனால் நீ மிண்டோர்முறை வாராதே வந்தால் பூண்டோடு அழிந்துவிடும் பூமி
冰 冰
நாகலிங்கம் தியாகராஜா பர்மைடு
冰
வவுனியாவில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்
இருவிழிப் பார்வை
ஒரு துளி ஸ்லம்
జీ##ణి భజిభణి
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சறுகதை
உண்கையில் தான் ...
-பமுரளிதரன்
நாளை கல்யாணம் சொந்தங்கள் எல்லாம் வந்தாகிவிட்டது. பட்டு வேட்டியா, கோட்சூட்டா அல்லது சாதாரண உடையா எதுவானலும் நாளை பார்த்துக் கொள்ளலாம். என்று எண்ணினான் சிவா. எதுவானாலும் அம்மாவின் விருப்பப்படி தான் கல்யாணம் என்று கூறிவிட்டாள் தங்கை சுமித்திரா. சிவாவால் மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத இரண்டும் கெட்டான் நிலையில் தான் கல்யாணம்.
பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் குசினியின் அருகிலுள்ள பந்தலிற்குள் வந்தான் சிவா. கலகலப்பாக ஏதோ முக்கியமான விசயம்தான் பேசுகிறார்கள். நமக்கேன் வம்பு என நழுவிச்சென்றவனை தாய் கனகம்மா கூப்பிட்டாள். “என்ன” என ஆர்வமாக வந்தவளிடம் "உன்னுடன் தான ஒரு முக்கியமான விசயம் சொல்லவேணும். நீ கோவிக்கக்கூடாது. நீ தான் நாளை மாப்பிளைத் தோழன் என்றிருந்தோம். ஆனாலும் உறவுக்காரர் எல்லாம் நீ சாதிகுறைந்த இடத்தில கல்யாணம் செய்ததால் நீ முக்கியம் பெறும் கல்யாணத்திற்கு நாம் வரமாட்டோம் என்கிறார்கள். ஏன் உன் கண்ணகி மாமி கூட ஒரே தடவையாக சொல்லிவிட்டாள். ராசா உலகம் தெரிந்தவன் நீ நாளை கல்யாணம் சீராக நடக்க வேண்டும்.
கோவித்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து கலியாணத்தை நடத்தி வைக்க வேண்டும். கலியாணம் நடப்பதும் நடக்காததும் உன்கையில்தான் இருக்கிறது. என்று ஒரேயடியாக கூறிமுடித்தாள் கனகம்மா.
நம்பவே முடியவில்லை சிவாவால். “தான் உயிருக்குயிராக நேசிக்கிற தாயா இப்படிக் கூறினார். இல்லை தாயை யாரும் மிரட்டிப்பணியவைக்கிறார்களா? இருந்தாலும் இனி என்ன", தலைவெடித்து சிதறுவது போலிருந்தது சிவாவிற்கு,
தானே மாப்பிளைத் தோழனாக நின்று இரு அக்காமாருக்கும் கடன் சுமையிலும் சந்தோசமாகத்தானே கலியாணத்தை நடத்திவைத்தான். இன்று அக்காமார் கணவர் பிள்ளைகள் சுற்றமென சந்தோசமாகத்தானே இருக்கிறார்கள். இன்றுமட்டும் என்ன குறைச்சல் அவனுக்கு. கடைசி தங்கை சுமித்திராவின் கலியாணத்தில் மாப்பிளைத் தோழனாக ஏன் இருக்க முடியாது. உள்ளம் உருகியது. தவிர்த்துக் கொள்ள எண்ணியும் இயலாமல் நினைவுகளில் மூழ்கலானான்.

Page 23
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இருபது வருடங்களிற்கு முன் உயர்தரப்பரீட்சை சித்தியெய்தி பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த வேளைதான் அந்த அவலம் நடந்தது. தந்தையும் மூத்த தமையனும் கறுப்பு யூலைக் கலவரத்தில் சிங்களக் காடையரால் கொழும்பில் கடையோடு தீமூட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். குடும்பத்தை காக்கும் பொறுப்பு ஆண்பிள்ளை சிவாவின் தலைமீது ஏறியது. பல்கலைக்கழகம் முடித்ததும் கலியாணம் என பெண்ணை பெற்றவர்களிற்கு இனம் தெரியாத பீதிகள் தொற்றிக் கொள்வது இயற்கையாகிவிட்டது. தந்தையை இழந்தாலும் சிவா குடும்பம் மட்டும் விதிவிலக்கா என்ன?
மூத்த அக்கா காயத்திரிக்கு காணியின் அரைவாசியை வித்தும் இருந்த எஞ்சிய காணி, வீடு, நகைகளைக் கொடுத்தும் கலியாணம் செய்து வைத்தார்கள். மூத்த பிள்ளையைக் கரைசேர்த்த திருப்தி ஆறமுன் முப்பது வயதில் வேலையற்ற பட்டதாரியான இரண்டாமவளைக் கரைசேர்க்க வேண்டுமென்ற ஏக்கம் தொற்றிக் கொண்டது கனகம்மாவிற்கு.
உறவுக்காரரெல்லாம் வசதியாகத்தான் இருந்தார்கள். அவர்களின் காணி நகைகளை வங்கியில் ஈடுவைத்து பட்டதாரி மாப்பிளை பத்துலட்சமென நடத்திவைத்தார்கள் கல்யாணம். வட்டியேறி காணி நகைகளைச் சுவிகரித்துக் கொண்டது வங்கி நகைகளைக்கேட்டும் காணியைக் கேட்டும் சண்டைபிடித்து பொலிஸ் கோட்வரை போனார்கள் சொந்தக்காரர்கள்.
சலித்துப்போன சிவாகுடும்பத்திற்கு கனடாவில் உள்ள சிறியதாயார் சிவகாமியிடமிருந்து கடிதம் வந்தது. நான் கனடாவில் ஒரு பெண் பார்த்திருக்கிறேன் நீங்கள் இஸ்ரப்பட்டால் அவளே ஸ்பொன்சர் செய்து சிவாவைக் கனடாவிற்கு எடுக்கலாம் என்றும் ஏனையவர்களின் சுகதுக்கங்களைக் கேட்டும் எழுதியிருந்தாள்.
எல்லோரும் வெளிநாடுபோய் நல்லா இருக்கினம். என்ர பெடியும் போனால்க் கடனில் இருந்து மீண்டு இருகுமரையும் கரைசேர்த்து விடலாம் என எண்ணினாள் கனகம்மா. தங்கைமாரும் தம்பங்கிற்கு தலையசைக்க ஆட்சேபனையின்றி அனுமதிக்கடிதம் வரைந்தாள் கனகம்மா. பயண ஏற்பாடுகள் பூர்த்தியாகி கனடா சென்றான் சிவா. வெளிநாட்டுக்குடும்பம் என்ற பட்டத்தை சூடிக்கொண்டது கனகம்மா (56th Jib.
சிவாவை ஸ்பொன்சர் செய்த றஜனிக்கும் சிவாவிற்கும் சிவகாமி வீட்டில் கல்யாணம். பெண்வீட்டாரின் ஆடம்பரமான ஏற்பாட்டுடன் கல்யாணம் நன்றாகத்தான் நடந்து முடிந்தது. வீடியோக் கசட்டையும் புகைப்படங்களையும்காட்டி தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள் கனகம்மாவும் பிள்ளைகளும், பிறகென்ன மெல்ல மெல்ல சொந்தம் கொண்டாடினார்கள் சொந்தக்காரர்.
சிவா - றஜனி திருமண பந்தம் எப்படிப்பட்டது. சலனமும் சபலமும்
-42

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை மணத்தம்பதியரிற்கு தொற்றிக்கொள்வது இயல்புதான். ஒருவர் நலனில் மற்றவர் அக்கறைப்பட்டு அன்பால்கட்டியெழுப்பப்படுவது குடும்பம். புதிதாக கல்யாணமான மனைவி ஒருபக்கம். தாய் சகோதரிகளின் வாழ்வு, கடன் மறுபக்கம் இதற்கெல்லாம் நேரம் போதாமலிருந்தது சிவாவிற்கு.
புதுமணத்தம்பதிகள் ஒன்றாய்க் குடித்தனம் நடத்துகிறார்களா? ஒரே வீட்டில் உள்ள ஆலாலசுந்தரம் மாமாவும் திரிபுர சுந்தரி மாமியும் ஏற்றுக் கொள்வார்களா? இந்த விடயம் சிவகாமிக்கும் தெரிந்திருக்க வேண்டும் றஜனி கணவரைக் கண்டுகொள்ளவயிேலலை. அவள் காரில் புறப்படுகிறாள் இரவில் வருகிறாள் என்றுதான் சிவாவிற்கு தெரியும். சுந்தரமும் சுந்தரியும் மருமகன் பொறுப்பானவர், குடும்பக் களில்ரத்திற்காக உழைக்கிறார் - றஜனியும் ஒத்துழைக்கிறாள். எல்லாம் விரைவில் சரிப்பட்டுவிடும் என சமாதானப் பட்டுக்கொண்டார்கள்.
றஜனியின் ஒரே அண்ணன் ஞானம் திருமணமாகி சொந்தத்தொழில் செய்து தானுண்டு தன்குடும்பமுண்டு என தங்கையின் கல்யாணத்தின் பின் ஒதுங்கிக் கொண்டான்.
நாள் ஆக ஆக சுந்தரத்திற்கும் சுந்தரிக்கும் சிவாவைப்போல் கவலை தொற்றிக் கொண்டது. றஜனியின் போக்குகளை அவதானிக்கையில் தமது பிள்ளையின் வாழ்க்கைபற்றின கவலையும் சிவா மீதான அனுதாபமும் அதிகரித்தன. அவர்களிற்கு றஜனியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சிவாவால் வேலையென செல்வதும் போன், நெற் என மூழ்கியிருப்பதும் களைப்பு என தூங்கிக்கொள்வதாக இருந்தான். இவை பற்றியாரிடம் சொல்லான் சிவா?
வீட்டிற்கு வந்திருந்த சிவாவை “என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய் நானும் பார்த்துக் கொண்டுதான்வாறன். என்ன பிரச்சினை உங்களுக்குள். நான் ஒருத்தி இருக்கிறன் எனக்கு தெரியக் கூடாதா? என்னவானாலும் மனம் விட்டு கதைத்து தீர்த்துக்கொள்ளுங்கள். பிறர் தலையிடுவது நல்லதல்ல. நீ கெட்டிக்காரன் உனக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது”
வீட்டிற்கு வந்தான் சிவா கடும் குளிரிலும் வெளியே வந்து வானத்தைப் பார்த்தான். வெளியே வெறுமையாக இருந்தது வானம் எதுவானாலும் இன்று முடிவிற்கு வந்துவிடவேண்டுமென எண்ணி றஜனியைப்பார்த்தவன் றஜனியைப் பார்த்து “உம்மிடம் கதைக்கவேண்டும். உம்முடைய போக்குகள் எனக்கு பிடிக்கவில்லை. நாம் கணவன் மனைவி. நம்மிடம் ஒளிவு மறைவு இருக்க முடியாது. உமக்கு என்னைப் பிடிக்கவில்லையா? நான் ஏதும் தப்பாக நடந்து கொண்டேனா? என்னில் எதும் குறைகளைக் கண்டீரா? எதுவானாலும் கதைத்தால்தானே தெரியும்”
ரீவியைப் பார்த்தவாறே கதைக்க ஆரம்பித்தாள் ரஜனி ரீவியில் “அமிழ்தினும் இனிதே ஆற்ற தம்மக்கள் சிறுகையளாவிய கூழ்”
-43

Page 24
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
"குழலினிது யாழினிது என்பர், தம்மக்கள் மழலைச்சொல் கேளாதாவர்”
என்ற குறள்களிற்கு விளக்கம் கூறி பல உதாரணங்களுடன் வாழ்க்கை பற்றி
உரையாற்றிக்கொண்டிருந்தார் தமிழ்ப்பண்டிதர் ஒருவர்.
நானும் கதைக்க வேண்டுமென்றுதான் இருந்தேன். உம்மிடம் மறைப்பது நல்லதல்ல"என்றவள், அநியாயமாக உம்முடைய வாழ்க்கையில் குறுக்கிட்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடும். அண்ணா பெற்றோரின் நெருக்குதலால்தான் ஒத்துக்கொண்டேன். அவர்களை இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்தான். அவர்களிற்கு எதுவும் தெரியாது. பாவம் அவர்கள்"
“கல்லூரியில் மருத்துவத்துறையில் கற்கும்போது காந்தன் என்பவன் உயிருக்குயிராக காதலித்தான். நானும் கல்வியா, காதலா, காதல்தான் என அதிக நேரத்தைச் செலவிட்டேன். இறுதித் தேர்வில் அவன் சித்தியடைய நான் தோற்றுப்போனேன். காதலும் என்னைத் தோற்கடித்தது. மனம் உடைந்து போனேன். என் தனிமையையும் வெறுமையையும் களைய களியாட்ட கேளிக்கை நிகழ்வுகளிற்கு செல்லத் தொடங்கினேன். அப்போ கிரேக் என்ற ஆங்கில நண்பர் அறிமுகமானார். இன்று அவர்தான் எல்லாம். என்னைப் பொறுத்தவரை அவரை இழக்கவோ உம்மை தொடர்ந்தும் நோகடிக்கவோ முடியவில்லை. நாம் தொடர்ந்தும் மற்றவர்களுக்காக வாழமுடியாது என்றாள்'தலைசுற்றியது சிவாவிற்கு.
"அப்படியானால் அந்த வெள்ளையனையே கல்யாணம் செய்து
வாழ்ந்திருக்கலாமே. கல்யாணமா அது எப்படி முடியும் அவரும் திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். அவருக்கு கல்யாணத்தில் அவ்வளவாக நம்பிக்கையில்லை.
எனக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். வெள்ளையனைக் கல்யாணம் செய்ய
உறவுக்காரர்கள் சம்மதிப்பார்களா? அதிலும் பார்க்க வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்து விட்டுப் போகலாம். காலம் கட்டளையிட்டது. சூழல் இடம் கொடுத்தது." தொடர்ந்து கொண்டிருந்தாள் ரஜனி. எதுவுமே இயலாது அடித்த பாம்புபோல் அடங்கிப் போனான் சிவா.
மறுநாள்காலை விசயத்தை உடைத்தான் சிவா. “இவ்வளவும் நடந்திருக்கிறதே சன்னதியானே முழுப்பூசணிக்காயை சோற்றுக்கோப்பையில்ப் புதைத்து விட்டாளே சுந்தரி. ஒன்றாக படித்து நன்றாகத்தானே பழகினோம். அவளா ஏமாற்றினாள் நம்பவேமுடியவில்லை. யாரைத்தான் நம்புவது. பணமும் வாய்ப்புகளும் கிட்டிவிட்டால் மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். சுந்தரியும் அப்படித்தானோ இல்லை அவளுக்குத் தெரிந்திருந்தால் இக்கல்யாணம் நடந்திருக்காது. தெரியாமல் நடந்து விட்டது என்னை நம்புவாயா எனப்பதறினாள்' சிவகாமி.
உடனே போன் செய்தாள் சுந்தரிக்கு. கத்தினால் பலன் என்ன? சுந்தரமும் சுந்தரியும் திட்டித்திரத்தார்கள் றஜனியை. பதில் என்னால் என்வாழ்க்கை முறையையோ நண்பனையோ இழக்கமுடியாது. என் வாழ்க்கையை வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்துவிட்டு போகிறேன். என் வாழ்க்கை விசயத்தில் தலையிடாதீர்கள் பிளிஸ்

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை எனக் கத்தினாள். ஒன்றும் செய்ய முடியவில்லைச் சுந்தரர்களுக்கு.
சிவா குடும்பத்திற்கும் சாடைமாடையாய் விசயம் தெரிந்து விட்டது. இருந்தும் என்ன செய்வார்கள் அவர்கள். தபால் வந்தது சிவாவிற்கு உணர்ச்சி வசப்பட்டு ஏதும் செய்து விடாதே. கதை வெளியே வந்தாலோ உனக்கு ஏதும் நடந்தாலோ உன்தங்கைமாரின் வாழ்க்கை சீரழிந்துவிடும் உன் தங்கைமாரின் வாழ்க்கை உன்கையில் தான் இருக்கிறது. எல்லாம் அந்த இறைவன் செயல் என எழுதியிருந்தாள் 356350D.T.
சுந்தரம் குடும்பத்தின் நிலையோ பரிதாபம் தமக்கு நேர்ந்த கதி எந்தப்பெற்றோருக்கோ பிள்ளைக்கோ நடந்து விடக்கூடாது என வேண்டாத தெய்வமில்லை.
கனடாவில் சூறைக்காற்று வீசிக்கொண்டிருக்கும் போது தான் யாழில் சிவாவின் தங்கை றமாவிற்கு கலியாணம் நடக்கிறது. சிவாவின் பங்கோ பல லகரங்களும் தொலைபேசி வாழ்த்துக்களும் தான். கல்யாணத்தைப் பார்த்தவர்கள் உபசாரங்களால் பிரமித்துப்போனார்கள்.
“சிவா உன் குடும்பம் நல்லாயிருக்க வேண்டுமென்றே நான்தான் முன்னின்று உன் கலியாணத்தை நடத்திவைத்தேன்." நாம் ஒன்று நினைக்க விதி ஒருபடி முன்சென்று தன்பங்கை நடத்திவிட்டது. நடந்தது நடந்ததுதான். இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும் உன்பண்பிற்கும் குணத்திற்கும் நல்ல வாழ்க்கை அமையும் அதற்கு நான் பொறுப்பு பணம் சேர்ப்பது மட்டுமல்ல வாழ்க்கை. வாழ்க்கையின் ஒருபகுதியாக வேண்டுமானால் பணம் இருக்கும். உனது அறிவு கூர்மைக்கு நீ நன்றாகப்படித்து நல்ல நிலையை அடையலாம். உனக்கு ஈடுபாடான துறையில்படி. எங்கட புளியும் ஒருநாள்ப் பூக்கும் கவலைப்படாதே" என்றாள் சிவகாமி.
கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் தனது குடும்பத்தை கெளரவமான நிலைக்கு கொண்டுவந்து விட்டான் சிவா. கனடாவில் சட்டக்கல்வியைக் கற்று சட்டவாதியாகியதோடு தான் வேலை பார்த்த உணவு விடுதியை நண்பர்களின் உதவியோடு சொந்தமாக வாங்கி நடத்திவந்தான். பலகிளைகளை ஸ்தாபித்து தொழில் சூடுபிடித்தது. விசுவாசமான நண்பர்களிடம் தொழிலைப் பார்க்க விட்டுவிட்டு தாய் நாட்டிற்கு வந்து சேர்ந்தான் சிவா.
இன்று சிவாவின் சிந்தனையும் செயற்பாடுகளும் அகன்று விரிந்தன. சமூகத்தில்
வன்முறைக்கு காரணமான சுரண்டலை ஒழிக்க முயன்றான். இதற்காக கிராமங்கள்
தோறும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதோடு சூழலைப் பாதிக்கின்ற மேலைத்தேய
இரசாயனங்களைத்தவிர்த்து இயற்கையோடு ஒத்துவாழ்கின்ற விவசாய, வாழ்க்கை
முறைகளை கிராமங்கள் தோறும் அறிமுகப்படுத்தினான். கலைபண்பாட்டு
இலக்கியங்கள் மனிதமனஉளப்பாங்குகளை பண்படுத்துவதுடன். கிராமங்களில் 45

Page 25
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அடிப்படைக்கல்வியை ஏற்படுத்திக் கொடுத்தல் மூலம் மனிதனை மனிதன் மதிக்கின்ற ஆற்றல் மிகுந்த சமூக அமைப்பு உருவாகும் என நம்பினான்.
சிவாவின் எளிமைப்படுத்தும் அறிவுக்கூர்மை, சொல்லாற்றல், தன்னம்பிக்கை, உண்மைத்தன்மை, விடாமுயற்சி என்பன அவன் பின் பல இளைஞர்களை அணிதிரளச் செய்தது.
கிராமங்களில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது தான் சாவித்திரி அறிமுகமானாள். குமுதினிப்படகில் இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்தவள். வறுமையால் கல்யாணம் ஆகாதவள். நலன்புரிநிலையத்தில் சிறார்களிற்கு கல்வியும் நற்போதனைகளும் வழங்கிவந்தாள். அவளது சேவையையும் ஆர்வத்தையும் கண்ட சிவாவிற்கு அவளை நன்கு பிடித்துவிட்டது. கல்யாணம் செய்துவிட வேண்டும் என எண்ணியவன் சாவித்திரியின் சம்மதத்தைப் பெற்றவன், ஆடம்பரமில்லாது பதிவுத்திருமணம் செய்து கொண்டான்.
பழைய நினைவுகளில் மூழ்கியவனுக்கு இன்று தங்கை சுமித்திராவின் கலியாணம் மாப்பிளை சுதா சிவா முன் நின்றான். ஒரு நல்ல மனிதருடன் பழக இத்திருமணம் எனக்கு உதவியது. உங்களோடுகதைக்க வேண்டியுள்ளது. வாருங்கள் எல்லோரும் என அழைத்தவன்முன் கனகம்மா சம்பந்தக்குடிகள் என கூடினார்கள் எல்லோரும்.
சிவா உங்களோடு நேற்றுவரை பழகியதில்லை. உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எனக்குத் தெரியாது. உங்களின் சிறயதாயார் சிவகாமி கனடாவில் இருந்து எனக்கு போன்எடுத்தார். கல்யாணமாப்பிளை ஏமாந்து விடக்கூடாது என்றார். மணப்பெண் தனது அக்கா குடும்பம் என சகலவிடயங்களையும் கூறி சம்மதம் கேட்டார். உங்களைப் பற்றி நிறைய அறிந்தேன்.
சிவா நீங்கள் பட்டதுன்பங்களும் ஏமாற்றங்களும் ரொம்பக் கொடுமையானது. ஒரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்க்கையில் திருமணம் முக்கியமானது. அந்தத்திருமணமே சூறாவளிபோல்தாக்கியபோது நிலை குலையாது நின்றீர்கள். சீதனம் பல பெண்களினதும் பெற்றோர்களினதும அவலத்திற்கும் காரணமானது. எனக்கண்டு கொதித்தீர்கள். சீதனத்தை ஒழிக்க உங்கள் இளமையையும் உழைப்பையும் தியாகம் செய்தீர்கள். உங்களை மச்சானாக அடைய நான் பாக்கியம் செய்தவன். நீங்கள்தான் எனக்கு மாப்பிளைத் தோழன். உங்களது சீதன ஒழிப்பு முயற்சியில் நானும் பங்கெடுக்க வேண்டும். என்னையும் வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் என்றான் சுதா,
என்னடா சீதனம் வேண்டாமென பெரிய கதைகள் கதைக்கிறாய். எம்பிள்ளைக்கு நாம் கொடுப்பதைப் பற்றி ஏன்கவலைப்படுகிறாய். என பல குரல்கள் குசுகுசுத்தன. சுதா சிவாவின் அருகில் நிமிர்ந்து நின்றவன் 'அம்மா, மாமி பெரியவர்களே நீங்கள் நடந்து கொள்ளும் விதம் எந்தவிதத்திலும் ஞாயமானதல்ல. என்னை வெட்கப்பட
-46

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை வைக்கிறது திரு.சிவா சீதனம் கொடுக்க வேண்டுமென்பதற்காக கல்வி, திருமணவாழ்க்கையை இழந்து நிற்கதியானபோது பெண்பிள்ளைகளைக் காரணம் காட்டி நழுவிக் கொண்டீர்கள்.
அன்றுமட்டும் சிவகாமியாரது அரவணைப்பும் சிவாவின் தன்னம்பிக்கையும் இல்லாதிருந்தால் எப்படி இருந்திருக்கும். எண்ணிப்பார்த்தீர்களா? சுதந்திரமும் சந்தோசமான வாழ்வும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணிற்கும் கடவுளின் கொடை. அதைப் பெரியவர்கள் ஏன் கெடுக்கிறீர்கள். பெண்பார்க்கும் போதும் கொடுக்கும் போதும் சீதனம் அது இது என குற்றத்தையே செய்கிறீர்கள். எத்தனையோ பெண்களின் வாழ்வையும் உயிரையும் குடித்த சீதனத்தையே கல்யாணத்தின் கெளரவ அடையாளமாக மதிக்கிறீர்கள். மச்சான் சிவா இல்லாமலோ, சீதனம் வாங்கியோ இந்தக்கல்யாணம் நடக்காது" என்றான் சுதா. மணப்பெண் சுமித்திராவும் தலைநிமிர்ந்து தலையசைத்து ஆமோதித்தாள்.
மாப்பிள்ளை சுதா கூறிமுடித்ததும் வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர்பார்த்து வெட்கப்பட்டனர். மனிதனை மனிதன் மதிக்கின்ற நீதியான சமாதானமுள்ள சமத்துவ
சமுதாயம் உருவாகும் என்ற மகிழ்வுடன் தலைநிமிர்ந்து நடந்தான் சிவா.
Woo () 000
ஈழத்தில் வெளியாகும் இலக்கியப் பத்திரிகைகள் மறுகா.(ஆரையம்பதி-3 மட்டக்களப்பு), தெரிதல்.(இல.1, ஓடைக்கரைவீதி, குருநகர், யாழ்ப்பாணம்)
புதிய தலைமுறைக்கான
2.6tlil
yே (கவிதை
வீதியுலாவந்த கடவுளுக்கு வேண்டுதல்கள் எதுவும் கேட்கவில்லை. கோவிலைச் சுற்றி ஊளையிடுகின்றன ஒலிபெருக்கிகள்!
அரங்கண்ண்ண்
இதழ் - 8 பங்குனி - சித்திரை 2006 sfs
-47

Page 26
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சிறுகதை எங்கள் கடல் எங்கள் நிலம்
பூநகர் பொண்தில்லைநாதன்
அந்தக் கோரச் சம்பவத்தைக் கண்ட சம்மாட்டியாரின் மகன் யேசு அதிர்ச்சிக்குள்ளாகிச் சுய நினைவற்ற நிலையில் நிலை சாய்ந்து அடியற்ற மரம் போல் வீழ்ந்தான். தலையில் பட்ட அடியினால் இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. அங்கு நின்றவர்களால் அரச மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். தலையில் இருந்து அதிக இரத்தம் வெளியேறி இருந்ததால் அவன் நிலை மோசமடைந்திருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். மாணவத்தலைவனாகவும், சிறந்த விளையாட்டு வீரனாகவும் இருந்த யேசுவின் நிலையால் அப்பாடசாலையின் மாணவர் ஆசிரியர் மத்தியில் பெரும் வேதனைத் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அவ்வூர் சந்தணமாதா ஆலயத்திலும், விநாயகள் ஆலயத்திலும் யேசுவின் சுகம் வேண்டி விசேட பூசைகள் நிறைவேற்றப்பட்டன.
ஐந்து நாட்களின் பின் சுய நினைவு வந்து கண் விழித்தான் யேசு அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "நான் ஏன் இவ்விடத்தில். எனக்கு என்ன நடந்தது?" அவனது வினாவுக்கு யாரும் விடை கூறவில்லை. எந்தச் சம்பவங்களும் மீண்டும் அவனது நினைவுக்கு வந்தால் அவனது உடல் நிலை பாதிப்படையலாம் என டாக்டர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒவ்வொரு சம்பவங்களும் மெல்ல மெல்ல நினைவுக்கு வந்தன. உறவினர்களாலும் சிலவற்றை அறிய முடிந்தது.
பூரண சுகம் அடைந்த யேசு தன் தந்தைக்கு ஏற்பட்ட நிலையையும், தன் குடும்பத்துக்கும், அயலவர்க்கும், ஏன் அவன் அண்ணனுக்கு ஏற்பட்ட நிலையையும் நினைத்த படி
“எங்கள் பிரச்சினைக்கு எனது பட்டப்படிப்பால் தீர்வு காண முடியுமா? இது அவன் மனதில் எழுந்த வினா. சமாதானமாம். சமாதானம். இதை. சிங்கள அரசு நிறைவேற்றுமா? இன்னும் இராணுவ கெடுபிடி ஓயவில்லை. எங்கள் நிலம் இன்னும் அந்நியன் பிடியில் உள்ளது. போராட்டம் முடிவடைய வேண்டும் என்றால் எங்கள் கடலும். எங்கள் நிலமும் எங்களுக்குச் சொந்தமாக வேண்டும. வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய யேசு அவனது வீட்டுக்குப் போகவில்லை. அவன் நீண்ட தூரம் நடந்தே போய்க் கொண்டிருந்தான். அவன் போவதைப் பலரும் கண்டனர். அவன் எங்கு போனான் என்பது யாருக்கும் தெரியாது.
யேசு, அந்தோனிப்பிள்ளை சம்மாட்டியாரின் மூன்று ஆண்பிள்ளைகளில் இளையவன், கடைக்குட்டி, யாழ்ப்பாணத்து நகரின் குடாக் கடற்கரை ஓரமாக அமைந்திருந்த குருநகள் கிராமத்தில் சம்மாட்டியார் என்று சொன்னால் தெரியாதவர்களே இல்லை. இக் கிராமத்தோடு அண்டியதாக கடற்கரை கிராமங்களான பாசையூர், கொழும்புத்துறை, அரியாலை, கிராமங்கள் எழில் கொஞ்சும் பிரதேசமாக மிளிர்ந்தன.
-48

rape, ests, also no estabau artsbetries
இக்கிராமங்களில் கல்வியில் சிறந்த பேரறிஞர்கள் பலர் பட்டணத்தோடு
மருவிய இக் கிராமத்தின் எழுச்சிக்கு வித்திட்டவர்களாவர். கடல் அன்னை மடியில் படுத்துறங்கி எதிர் நீச்சல் போட்டு கடல்படு திரவியங்களை அள்ளி வந்து எமது நாட்டுக்குப் பொருள் வளம் சேர்ப்பவர்களாக பலர் மிளிர்கின்றார்கள். கடல் அட்டை மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருபவர்களும் இவர்களே.
கரைவலைத்தொழிற் படகுகளுக்கு உரிமையாளரான சம்மாட்டியார் அந்தோனிப் பிள்ளையின் முதல் மூன்று ஆண்பிள்ளைகளும் தமது ஆரம்பக் கல்வியை முடித்த பின் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டு சகல வசதிகளுடனும் வாழ்ந்து வந்தனர். நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் இவர்களின் படகுகளிற் சென்றே தொழிலில் ஈடுபட்டு வந்ததினால் இவர்களின் பெரும் விசுவாசத்துக்குரியவர்களாக சம்மாட்டியார் திகழ்ந்தார்.
மூத்தவன் விக்டர் மண்டைதீவுப் பாட்டுக்கும் குரூஸ் பள்ளிக்குடாபாட்டுக்கும் இளையவன் கல்முனைப்பாட்டுக்கும் பொறுப்பாய் இருந்து பெருந் தொழிலில் ஈடுபட்டனர். தினமும் அந்திசாயும் நேரம் தாயார் கொடுக்கும் உணவுப் பெட்டியுடனும் மரக்கோல் வலையுடனும் புறப்படும் இவர்கள் இரவு முழுவதும் அலைமோதி அடிக்கும் பெருங்கடலில் களமாடி அதிகாலை நேரம் குருநகள் இறங்குதுறையில் மீன்களுடன் வந்து சேருவர். மீன், நண்டு, கணவாய், எனத்தரம் பிரிக்கப்பட்டு கூறு கூறாக்கி பெருவிலை கொடுத்து வியாபாரிகள் கொள்வனவு செய்து குடாநாட்டு மக்களின் உணவுக்கு உவப்பான கறியாக மாற்றம் பெறும். பள்ளிக்குடா விளைமீன், பாரைமீன், என்றால் சந்தையில் தனிமதிப்புண்டு.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கடல் ஆதிக்கம் வந்து கொண்டிருந்த காலம் அது. ஒருநாள் நள்ளிரவு வேளை மண்டைதீவுக் கடற்பரப்பு பெரும் யுத்தகளமாக மாறியிருந்தது. கடல் நடுவே பாரிய வெடிச்சத்தங்கள், கடற்கரைக் கிராம மக்கள் நள்ளிரவு வேளையில் நித்திரையில் இருந்து விடுபட்டு குழப்பமடைந்த நிலையில் காணப்பட்டனர். வீட்டை விட்டு வெளியேறிய பெண்களும் வயோதிபர்களும் தொழிலுக்குச் சென்ற தம் உறவுகளைக் காணாது அவர்கள் நிலையறியாது வேகாமல் வெந்து கொண்டிருந்தனர்.
கடல் நடுவே தீப் பிழம்புகளாக குண்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இறங்கு துறையில் மாதாவே. யேசுவே. என மன்றாடும் ஒலிகள் காற்றில் கலந்த வண்ணம் இருந்தன. போராளிகளின் அதிவேகப் படகுகள் பொங்கும் கடல் அலையைக் கிழித்த வண்ணம் நடுக்கடலை நோக்கிச் செல்வதையும் காண முடிந்தது. பலாலி இராணுவ தளத்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக எறிகணைகள் ஏவப்பட்டு குடாக் கடற்பரப்பிலும் கரையிலும் வீழ்ந்து வெடித்தன. நடுக்கடலில் பெரும் படகு ஒன்று வெடித்துச் சிதறி எரிந்து கொண்டிருந்தது.
கிழக்கு வெளிப்பதை ஊருக்கு அறிவிப்பது போல் ஆங்காங்கே சேவல்கள்
-49

Page 27
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை கூவின. அந்தோனிப்பிள்ளை சம்மாட்டியார் அந்தக் கடற்கரை வீதியில் அங்குமிங்குமாக நிம்மதியற்று அலைந்து கொண்டிருந்தார்.
“தெரு நாய்கள் தொடர்ந்து ஊளையிட்ட வண்ணம் இருக்கின்றன. எல்லாம் கெட்ட சகுனமா இருக்குது. என்ன நடக்கப்போகுதோ” தனக்குள் முணு முணுத்த வண்ணம் நிம்மதியற்றுத் துடித்தார் சம்மாட்டியார்.
"இஞ்சாருங்கோ கண்டபடி செல் குத்துறாங்கள் பாழ்படுவார். வாருங்கோ வங்கருக்குள்ளையாவது போவம்" மனைவியின் குரல்.
“எடி பேய் மனுசி உனக்கு என்ன விசரே. போன பிள்ளைகளைக் காணேல்லை. கடலுக்கை என்ன நடந்துதே தெரியேல்லை. விசைப்படகில கரும்புலிப் போராளிகளும் போனாங்கள் “எங்கடப்பிள்ளையஸ் போனாங்களெண்டால் நேவிக்காரன் கிட்ட நிப்பாங்களே? தங்கட படகு வெடித்துச் சிதறும் எண்டு தெரியும் தானே.” ஓடித்தப்பியிருப்பாங்கள் இது சம்மாட்டியாரின் மனைவி நேசம்மாவின் குரல்.
அதிகாலை வேளை கீழ்வானில் தன் பொற்கதிர்களை நீட்டிக் கதிரவன் புறப்பட ஆயத்தமானான். குருநகர் இறங்குதுறையிலும் அண்டிய பிரதேசங்களிலும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் கண்களில் அந்தக் காலை இளவெயிலில் கடலில் மிதந்து வரும் பொருட்களையும் தலையில்லாத சடலம் ஒன்றையும் காண முடிந்தது. சிதறி உடைந்து போன வள்ளங்களின் பலகைத் துண்டுகளும் மிதந்து கரையில் அடைந்து கொண்டிருந்தன. கடலில் மிதந்து வந்து போராளிகளால் மீட்கப்பட்ட சடலங்கள் துறைக்குக் கொண்டு வரப்பட்டன. குருநகர் பாசையூர் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். பத்துக்கு மேற்பட்டதொழிலாளிகள கடலில் வைத்தே கோரமாகக் கொல்லப்பட்ட செய்தி மறுநாள் தினசரிப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
குடா நாடெங்கும் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. சம்மாட்டியார் வீட்டிலும் மூத்தவன் விக்ரரின் பூதவுடலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். செல்வாக்குடன் வாழ்ந்த சம்மாட்டியார் குடும்பம் நிலை குலைந்து நின்றது. ஒன்றுக்குமே அஞ்சாத அந்தோனிப்பிள்ளை எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
“எங்கட வாழ்வு இனி கேள்விக் குறிதான்" அவரது வாய் முணுமுணுத்தது.
பீச் றோட் வழியாக குருநகள் சேமக் காலைக்கு பத்து உயிரற்ற சடலங்களும் அணிவகுத்துக் கொண்டு வரப்பட்டன. அவ்வூர் பங்குத்தந்தை தலைமையில் அஞ்சலிக் கூட்டம் இடம் பெற்றது. பலர் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்கள். குரூஸ் நிதானமாக
சில கருத்துக்களை விதைத்தான்.
-50

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
“இது எங்கள் கடல், எம் மூதாதையோர் தொடக்கம் எங்கள் சந்ததி வரை காற்றில் பாய் விரித்து கையினால் சவள் வலித்து சுதந்திரமாகத் தொழில் செய்த கடல், அந்நியன் வாடையே படாத கடல் இன்றோ. அதே கடலில் வைத்தே குத்திக் குதறி எங்கள் குருதி கலக்கும் கடலாக மாறிவிட்டது.”
“ஏனோ? அந்நியப்படையின் ஆதிக்கம் எங்கள் கடலில் என்றால் இனியும் எங்களுக்கென்ன வாழ்வு. வாழ்வதா. சாவதா. நாங்களே முடிவெடுப்போம். வாழ்வதற்காக. எங்கள் கடலுக்காக எங்கள் நிலத்துக்காகப் போராடுவோம்.”
நல்லடக்கம் முடிவுற்றது. எல்லோர் சிந்தனையும் சாதாரண தொழிலாளி இளைஞன் குரூஸ் ஆற்றிய உரையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டவர்களாய் வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தனர்.
மறுநாள் குரூசை அவ்வூரிலே காண முடியவில்லை. அவனது மரக் கோலும் உணவுப் பெட்டியும் ஒரு மூலையில் ஓய்வெடுத்துக் கொண்டன. சம்மாட்டியார் வீட்டில் அடுத்து அடுத்து துயர நிகழ்வுகள், சம்மாட்டியார் வீட்டில் மக்கள் தினம் தினம் வந்து ஆறுதல் கூறிச் சென்றனர். எங்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்றால் அவன் குரூஸ் போன பாதையும் சரியாய்த்தான் தெரியுது. அவன்ரை பாதையிலை இன்னும் கனபேர். ம். நிலைமை வர வர மோசமாகுது, எங்கட றோட்டிலை ரெண்டு சந்தியிலையும் ஆமியின்ரை சென்றி வந்திட்டுது. வீடு வளவு எல்லாம் சல்லடை போட்டுத் தேடுறாங்கள். எத்தனை நாளைக்கு இப்படியே துன்பத்தில்.
இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கவே வன்னியின் வாசனையே தெரியாத பலர் வன்னிக்கு இடம் பெயரத் தொடங்கினர். வன்னியில் மீன் பிடித் தொழிலுக்குப் பெயர் போன பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இலவங்குடா, பகுதிகளில் இடம் பெயர்ந்து குடியேறத் தொடங்கினர். சம்மாட்டியார் குடும்பமும் தம் இளைய மகன் யேசுவுடன் நாச்சிக்குடாவில் குடியேறினார்கள்.
நடைபெற்று முடிந்த ஒவ்வொரு நிகழ்வுகளாலும் மனமுடைந்த நிலையில் இருந்த சம்மாட்டியார் தன் இளைய மகன் யேசுவை கடற் தொழிலிற் நாட்டங் கொள்ள விடாது உயர் கல்வியைப் பெற வைப்பதென உறுதி பூண்டார்.
அவர் குடியேறிய பிரதேசத்தில் பிரபலமான பாடசாலையாக முழங்காவில் மகா வித்தியாலயம் மிளிர்ந்தது. தன் மகன் யேசுவை அப்பாடசாலையில் கல்வியைத் தொடர வைத்தார். இடம் பெயர்ந்து வந்து சேர்ந்து கொண்ட மாணவர்களின் நலனில் அதிபரும், ஆசிரியர்களும் காட்டிய அக்கறை கண்டு சம்மாட்டியார் அளவற்ற ஆனந்தம் அடைந்தார். தன் உழைப்பின் ஒரு பகுதியைத் தொண்டர் ஆசிரியர் வேதனமாகவும் பாடசாலை அபிவிருத்திப் பணிக்காகவும் அப்பாடசாலைக்கு வழங்கி உதவினார். அவ்வூரில் அவரது செல்வாக்கும் புகழும், பரவியது. சம்மாட்டியாரின் மதிப்பு உயர்ந்தது. 51

Page 28
erepei, 55ü6l, 55Insu 36udáu ötöd'ED5
இரண்டாவது ஆண்டு நடைபெற்ற மாவட்ட மெய்வல்லுநர் போட்டியில் மேற் பிரிவில் மாவட்டத்தின் வெற்றி வீரனாகத் யேசு தெரிவு செய்யப்பட்டான். தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்றும் பணியில் அயராது ஈடுபட்ட யேசு ஓய்வு உறக்கமின்றிப் படிப்பிலே தனது கவனத்தைச் செலுத்தினான். யேசுவால் தனது பாடசாலை பெருமை பெறும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அதிபர் அவனுக்கு வேண்டிய கற்றல் உதவிகளை விருப்போடு நல்கினார்.
எல்லோருடைய ஆதரவும் அவனுக்குக் கிடைத்ததன் பயனாக அவ்வாண்டு நடைபெற்ற உயர்தரத் தேர்வில் பரீட்சை எழுதி நாடும் வீடும் போற்ற மூன்று "ஏ" சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்று முழங்காலில் ம.வி.யில் இருந்து இரு மாணவர்கள் முதல் முதலாகப் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். பாடசாலைச் சமூகமும், சம்மாட்டியார் குடும்பமும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
முதல் முறையாக பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் இருவருக்கும் பாராட்டு விழா எடுக்கத் தீர்மானித்தனர் அக் கிராம மக்கள். திட்டம் செயலுருப்பெற்றது. மாபெரும் பாராட்டு விழாவுக்கு ஊரே திரண்டு வந்திருந்தது. பாடசாலைச் சுற்றாடலும், வீதியும், சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பட்டம் சூடிப்பட்டதாரிகளாக வெளியேறவிருக்கும் மாணவர்கள் இருவரும் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்படுகின்றார்கள். மகிழ்ச்சிப் பிரவாகத்தில் பட்டு வேட்டி சரிகைச் சால்வை அணிந்து சம்மாட்டியார் முன்னணியில் வந்து கொண்டிருந்தார்.
தானியங்கி வேவு விமானம் ஒன்று அலங்கரிக்கப்ட்ட அப் பிரதேசத்தைச் சுற்றி வட்டம் இடுகிறது. மக்கள் பீதியுடன் ஆகாயத்தைப் பார்த்த வண்ணம். பேரிரைச்சலுடன் குண்டு வீச்சு விமானம் ஒன்று தாழப் பறந்து குண்டுகளை வீசுகிறது. நாலா பக்கமும் மக்கள் சிதறி ஓடினர். சிலர், விழுந்து படுத்தனர். சில வினாடிகளில் காயப்பட்ட சிலர் துடி துடித்துக் கொண்டிருந்தனர். குண்டு வீச்சு விமானம் வந்த வேலையை முடித்துச் சென்று கொண்டிருந்தது. தெய்வாதீனமாக உயிர் தப்பிய யேசுவும் ஏனையவர்களும் காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத இச் சம்பவம் அவ்வூரை பெருஞ் சோகத்தில் மூழ்க வைத்தது. கடவுள் செயலால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என
மக்கள் பேசிக் கொண்டனர்.
என் அப்பா. அவர் எங்கே. அவருக்கு என்ன நடந்தது?. பட்டுத்துணிகளும் சரிகைத் துண்டுகளும் இரத்த் கறையுடன் சிதறிக் கிடந்தன. தாங்க முடியாத வேதனையோடு சதைத்துண்டுகளைப் பொறுக்கி உரைப்பையில் இட்டனர் அவன் உறவுகள். நிலை தடுமாறிய யேசு “அப்பா. அப்பா." என்ற சத்தத்துடன் சுய நினைவிழந்து வீழ்ந்தான் அவன் தலையில் இருந்து குருதி ஓடிக் கொண்டிருந்தது. 0 0 0 (!) • V W
நன்றி:நினைவழியாநினைவுகள்
-52

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒரு பக்க கட்டுரை O. O. ●
மகிழ்ச்சியின் அவசியம்
ைேன7 தமிழ்வாணன் நாம் எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறோம். இதை சுயநலமான ஓர் உணர்வு என்பதாகக் கொள்ளலாமா?
ஒரு கோணத்தில் ஆமாம் என்று ஒப்புக்கொண்டாலும் ஒரேயடியாக இது சுயநலத்தின் உச்சம் என்று எவரும் வாதிட முடியாது. இதற்குக் காரணம் இருக்கிறது.
ஒரு குடும்பத் தலைவர் சொன்னார். “எனக்கு ஆறு பிள்ளைங்க (அந்தக் காலத்து ஆள்) பெரிய குடும்பம். என் மனைவிக்குக் கொஞ்சம் குணம் பத்தாது. ஆனாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அவளை மகிழ்ச்சியா வச்சுக்கிறேன். காரணம் என்னன்னு சொன்னா உங்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். என் மனைவி மகிழ்ச்சியா இருந்தாத்தான் என் பிள்ளைங்க, மருமகள்கள், மாப்பிள்ளைகள், பேரன், பேத்திகள் மகிழ்ச்சியா இருக்க முடியும். இவளோட மகிழ்ச்சி பாதிக்கப்பட்டுட்டா, இவ மத்த எல்லோரோட மகிழ்ச்சியையும் பறிச்சிடுவா. அதனால இந்த விஷயத்தில் நான் ரொம்பக் குறிப்பாவும் கவனமாகவும் இருக்கேன்" அப்படீன்னார்.
அட! புதிய கோணமாக இருக்கிறதே! என்று வியந்தேன். இவர் சொன்னதிலிருந்து ஒருசில உண்மைகளும் பிடிபட்ட மாதிரித் தெரிந்தன.
தனிப்பட்ட ஒருவரின் மகிழ்ச்சி, எத்துணைப் பேரின் மகிழ்ச்சிக்கு வித்தாகவும், மூலாதாரமாகவும் இருக்கிறது! இரண்டாவது நம்மவர்களைப் பொறுத்தவரை உள்ளத்து உணர்ச்சி என்பது ஒட்டுவானொட்டி (தொற்று) வியாதி மாதிரி. அது மற்றவர்களுக்கும் உடனடியாகப் பரப்பப்படுகிறது.
தேவர்களால் கடைந்தெடுக்கப்பட்டது விஷமானாலும் சரி, அமுதானாலும் சரி அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல் ஒரு குடும்பத்தில் ஓர் அலுவலகத்தில் அல்லது ஓர் அமைப்பில் மையப்புள்ளியாய் உருவாக்கப்படும் மகிழ்ச்சி உணர்வு என்பது பிற திசைகளிலும் பரவிப் பாய்கிறது.
“முதலாளி என்ன மூட்ல இருக்கார்? லீவு கேட்கவா, அப்புறம் பார்த்துக்கலாமா?" என்று கீழிருப்பவர் மேலிருக்கும் ஊழியரிடம் நாடி பார்க்கிறார் என்றால் அதில் பொருளிருக்கிறது. அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அவர் மூடு சரியில்லை என்றால் நம் மகிழ்ச்சி பறிக்கப்படும் என்பதுதானே இதன் பொருள்?
ஆக, நாம் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நன்மை செய்கிற விஷயம்.
ஆனால், ஒரு முக்கியக் கேள்வி, நாம் நம் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு உண்மையில் பகிர்ந்து அளிக்கிறோமா என்பதே அது! நன்றி
கல்கண்டு 99.2002 -53

Page 29
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
காடு நாடாய் ஆக்கி வைக்கும்
கடின உழைப்புத் தொழிலாளி ஒடி ஒடி உழைத்தென்ன
ஒன்றும் சேர்த்து வைப்பதில்லை. பாடுபட்டு உழைக்கும்தன்
பயனைக் காண்பான் இன்னொருவன் மாடி வீட்டு முதலாளி
மற்றவர் உழைப்பில் வாழ்கின்றான்.
சேர்க்கும் பணத்தில் முக்காலும்
சேர்ந்து குடித்துக் கூத்தாடி வேர்க்க வேர்க்க உழைத்த பணம்
வினேகரைத்து அழிக்கின்றான். ஊருக்குழைக்கும் தொழிலாளி
உறங்கச் சொந்த நிலமில்லை. ஓரத்தெருவில் உறங்குகின்றான்
ஒட்டி உலர்ந்த மேனியனாய்
-54
 

9്യ, ബ്, ബേൺ ട്രിബിഡ (
கூழும் கஞ்சியும் குடிக்கின்றான்
கொடிய பசியைச் சமாளிக்க பாழும் வயிறு கேளாது
பட்ட கடனும் தீராது நாளும் பொழுதும் வாழ்வினிலே
நலிந்து நலிந்து உருகுகிறான். ஆளும் வர்க்கம் இதறிந்தும்
அவர்க்கு உதவும் எண்ணமில்லை.
உழைப்பை நம்பி அவன்குடும்பம்
உறங்கியெழும் எந்நாளும். உழைப்புக் கிடைக்கா நாளென்றால்
உண்பதற்கே திண்டாட்டம். உழைத்த பணத்தில் சேர்த்துவைத்தால்
உலைவான் ஏனோ உடல்தளர. மழைக்காய்ச் சேர்க்கும் எறும்பினத்தை
மறந்தான் இந்தத் தொழிலாளி.
சங்கம் ஒன்று அமைப்பார்கள்
சந்தாப் பணமும் சேர்ப்பார்கள். சங்கம் என்னும் பெயர் சொல்லிக்
சார்ந்தோர் உறிஞ்சிக் குடிப்பார்கள். சங்கம் முறியும் சிலநாளில்
தலைவர் மற்றோர் தான்மிச்சம். பங்க மாயே முடியுமது
பலனோ எதுவும் கிடையாது.
விட்டுப் பார்த்தால் தொழிலாளி
விரும்பிச் சேரான் தன்னுழைப்பில். சட்டம் வேண்டும் அவனுழைப்பில்
தள்ளாக் காலச் சேமிப்பென் திட்டம் வகுத்து அவனோய்வில்
திருப்பி வழங்க மாதாந்தம் குட்டிச் சுவராய் போகாமல்
குடும்பம் தழைத்து வாழவே!
கண்டாவளைக் கவிராயர்
-55

Page 30
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கவனம்(?) காக்கை வண்ணியர்கள்
அம்மாவும் அப்பாவும் தந்த முகமும் ஆண்டவன் தந்த ஆன்மாவும் இருண்டு போகிறது.
முகில்கள் ஓடிய பால் வீதிகளெல்லாம் ரத்தத் தடங்களாய்
செய்ய வேண்டியிருக்கிறது.
மெளனமாயிரு சந்திக்கும் போது.
பேசிக் கொள் பிரியும் போது.
தொண்டை கிழிய குரல் எடு சுதந்திரம் கிழிக்கும் போது. அடக்கு
அடக்கு உரிமை பறிக்கையில்.
அடங்க மறு தலையில் ஆணி அடிக்கையில்.
-56
6I(Աք 6TC9 விழுந்த பிறகும்.
5Lblஇலக்கை நோக்கி.
ஆகாயம் கையில் சவால் இடும் போது. காலின் கீழ் மேகம் வெற்றியின் போது.
உனைச் சுற்றி ஒரு கூட்டம் பணம் உள்ள போது. ஒரு விழிதிற தூங்கும் போது. மனிதனாய் இரு வெற்றியின் பின்,
கவனம் காக்கை வன்னியர்கள்
க.கோகுலதாஸ் வவுனியா.
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மீண்டும் எழுமோ?
மீண்டும் நம் தெருக்களில் புழுதி கிளர்ந்து மேலெழுந்து உயிர் குடிக்கும் ஆயுதம் பிணம் தின்னுமோ.
கறுப்பு மேகங்கள் சூழ்ந்து கருக் கொண்டு வான் பரப்பில் நெருப்பு - மழை உமிழுமோ கருங்குளவி எமது வான் வெளியில் வட்டமிட்டு எம் வீட்டு முகட்டு வளையில் கூடு கட்டுமோ ஆதிக்கத்தின்
-57
கால் - நிமிர்ந்து அடிவயிற்றில் மீண்டும் இடித்திடுமோ. தினமும் இதை எண்ணி நாட்கள் நகரும். வாழ்க்கை தொடரும். நினைவு தெரிந்த நாள் முதலாக விடை இல்லாத கேள்வி இது. மீண்டும் தொடங்குமோ இந்த யுத்தம்!
மாணிக்கம் ஜெகன்

Page 31
areupah, asts. Ensu 36uáau etidamai
அஞ்சலிக் கட்டுரை-2
சமுதாய நோக்குடன் இலக்கியம் படைத்த புலோலியூர் க. சதாசிவம்
மறைந்து விட்ட புலோலியூர் க.சதாசிவம் அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாராட்சி புலோலி என்ற விவசாயக் கிராமத்தில் பிறந்தவர். தோட்டம் துரவு பயிர் கோயில் குளம் கூத்து உறவு, திருணம் எனப் பசுமை நிறைந்ததும், கலை கலாசார விழுமியங்கள் நிறைந்ததுமான முதுகிராமியத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். பின்பு வைத்தியப் படிப்பிற்காக முற்றிலும் அந்நியமானதும், எதிர்முனையான வாழ்க்கை நெறியும் நெருடலான உறவு முறைகளும், பொருளாதார நெருக்கடிகளும், வறுமையும் கொண்ட மத்திய தரவர்க்கத்தின் அனுபவங்களைக் கொழும்பிலும் மலையகத் தொழிலாளரின் அவலம் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களை மலைநாட்டிலும் பெற்றுக் கொண்டவர்.
மருத்துவத் தொழிலுக்காக மலையகம் சென்று அங்கே நாற்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மலையகத் தொழிலாளர்களின் இன்னல்களை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டவர்.
எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே தேசிய இலக்கியம் மண்வாசனை இலக்கியம் என்பவற்றின் உள்ளியல்பை நன்கு உள்வாங்கிக் கொண்டு புனைகதைகளை இவர் படைத்து வந்தார். இவரது கதைகள் ஆழ்ந்த சமூக ஆராய்ச்சியின் விளைவுகள். கிராமப்புறஞ்சார்ந்த காட்சிகளையும் வாழ்க்கைக் கூறுகளையும் உருக்கமாகவும் நேர்மையாகவும் சித்திரிக்கும் திறன் புலோலியூர் சதாசிவம் அவர்களுக்கு நிறைய உண்டு.
1961 ஆம் ஆண்டில் தனது பத்தொன்பதாம் வயதில் (பிறந்த ஆண்டு 1942) எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து முதற் படைப்பிலேயே அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றார். யுகப்பிரவேசம்’, ‘ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது', ‘புதியபரிமாணம்' 'ஒரு நாட்போர்', "அக்கா ஏன் அழுகிறாய்' என்பன இவரது
சிறுகதைத் தொகுதிகள்.
-58
 

erepet, sösben, 6606u SB6udbeállj ejtőjdons
நாணயம்', 'மூட்டத்தினுள்ளே' என்பன இவரது தேசிய சாகித்திய விருது பெற்ற நாவல்கள். மலையக மக்களின் முழுமையான வரலாற்றைப் பிரதிபலிக்கும் 'பத்திலொரு பங்கு' என்னும் நாவலை எழுதுவதற்கான ஆக்க வேலைகளில் ஈடுபட்டிருந்த சதாசிவம் அவர்கள் அதனை எழுதுவதற்கு முன்பே காலமானது மலையக இலக்கியத்துக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலையாகும். 1971இல் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது பித்து என்ற சிறுகதைக்கு முதற்பரிசான தங்கப் பதக்கம் கிடைத்தன. 1972 இல் நாவலர்சபை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் ஒருநாட்போர் என்ற சிறுகதை முதற் பரிசு பெற்றது. 1973இல் தமிழ் சாகித்திய விழா தொடர்பாக கலாசாரப் பேரவை நடத்திய இலக்கியப் போட்டியில் சதாசிவத்துக்கு ஒரங்க நாடக எழுத்துப் போட்டியில் பரிசில்கள் கிடைத்தது. 1982ல் அரச வர்த்தகக் கப்பல் துறை அமைச்சின் சார்பாக நாடளாவிய ரீதியில் மும்மொழிகளில் நடைபெற்ற போட்டியில் இவரின் "அடிமை விலங்கு அறுகிறது என்னும் சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது. 1983இல் பிரதேச அபிவிருத்தி அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் சதாசிவத்துக்கு முதற் பரிசு கிடைத்தது. 1993 இல் கலை ஒளி முத்தையாபிள்ளை நினைவுப் போட்டியிலும் 1995இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியிலும் இவர்களது கதைகளுக்குப் பரிசுகள் கிடைத்தன.
சதாசிவத்தின் நாணயம்' என்னும் நாவல் 1980இல் வெளியாகியது. இந்த நாவல் வடமராட்சி வாழ்க்கையின் சில அம்சங்களை மிகத் திறமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்ற பிரதேசப் பண்பு வாய்ந்த நாவலாகும். சதாசிவம் தனது தந்தையைத்தான் நாவலின் முக்கிய கதாபாத்திரமாக உருவகித்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இவரது ‘மூட்டத்தினுள்ளே' என்னும் மலையகப் பிரதேச நாவல் வீரகேசரி நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இந்த நாவல் 1983இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்துள்ளது. அவ்வாண்டில் வெளிவந்த சிறந்த நாவலுக்கான இலங்கை தேசிய சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக் கொண்டது. மலையகமக்கள் இந்நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த நாள் தொட்டு அவர்கள் எதிர்கொண்ட சோதனையும் வேதனையும் இந்நாவலில் இழையோடுகின்றது. மலையகத்தின் சமூகவியல் மானுடவியல் என்பவற்றின் பகைப்புலத்தில் இந்நாவல் ஆக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் காத்திரமான "ஞானம்' எனும் கலை இலக்கிய சஞ்சிகையின் இணையாசிரியராக 2002இலிருந்து பணியாற்றி வந்தார்.
இளம் எழுத்தாளர்களை ஊக்கி வளர்த்டுெக்க வேண்டும் என்னும் நோக்கில், ஞானம் சிறுகதைத் தொகுப்புப் போட்டியை வைத்து அதற்கான பரிசினையும், அதனை நூலுருவாக்கும் செலவையும் தானே பொறுப்பேற்றார்.
-59

Page 32
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சதாசிவம் அவர்களின் இலக்கியப் பணியைப் பாராட்டி இந்து சமய தமிழ் அலுவல்கள் அமைச்சு ‘இலக்கியவித்தகர்' என்ற பட்டத்தை வழங்கியது. ஊவாமாகாண இந்து கலாசார அமைச்சு “இலக்கியச் செம்மல்" என்னும் பட்டத்தை வழங்கியது. மல்லிகை 1991 நவம்பர் இதழில் இவரது படத்தை அட்டையில் பொறித்துக் கெளரவித்தது. அவரது மறைவிற்குப் பின்னர் அவருக்கு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது. இவரது சில சிறுகதைகள் ஜேர்மன், பிரென்ஸ், சிங்களம் என்னும் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
"கதாசிரியர் சதாசிவம் ஒரு வைத்தியர். வைத்தியத் தொழில் தரும் அனுபவமும் பக்குவமும் ஆசிரியரின் கதைகளைப் படிக்கும் போது புலப்படுகின்றன. "ஸ்டெதஸ்கோப்' மூலம் கேட்கும் தனிமனித இதய ஓசையின் பின்னணியில் ஒரு நுட்பமான கதையுண்டு என்ற சமூக இரகசியத்தை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார்” எனப் பேராசிரியர் நந்தி இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
2003.1942 இல் புலோலியைச் சேர்ந்த புற்றளையில் பிறந்து 15.09.2004 இல் மரணத்தைத் தழுவிக் கொண்ட சதாசிவம் உழைப்பால் உயர்ந்து, சிறந்த இலக்கிய வாதியாக மிளிர்ந்து சிறந்த வைத்தியராகவும் ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவும் தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் இலக்கிய நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை ‘மாருதம்' சஞ்சிகை தெரிவித்துக் கொள்கிறது.
000 () 000
அஞ்சலிகள்
* சர்ப்பவியூகம் (சிறுகதைகள்), விடியலைத் தேடும் வெண்புறா,
கானகத்தின் கானம், நெருப்பு மல்லிகை (நாவல்கள்) ஆகியவற்றை எழுதிய எழுத்தாளன் செம்பியன் செல்வன் அவர்களுக்கு எம் அஞ்சலிகள்
** மலைக்கொழுந்து, நம்பிக்கைகள் (நாவல்) குரங்குகள் (நாடகம்) தரிசனம் (சிறுகதைகள்) எனப்பல்வேறு எழுத்துக்களை எழுதி அமரரான பேராசிரியர் நந்தி (செ.சிவஞானசுந்தரம்) அவர்கட்கும் எம் அஞ்சலிகள்
ஆழி விழிப்பு, அபகரம் போன்ற நாடகங்களை எழுதி ஈழத்து தமிழ் நாடக உலகில் நவீனத்துவத்தை புகுத்திய அமரர் நா.சுந்தரலிங்கம் அவர்கட்கும் எம் அஞ்சிகள்.
-60

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வட்டத்தின் விருது பெறும் இருவர்
இலக்கியச் செல்வர் பொண் தெய்வேந்திரன்
சைவப்புலவர், இசைக் கலைமாணி, கலைமாமணி பொன் தெய்வேந்திரம் அவர்கள் 1971 முதல் தனது ஆசிரியத் தாழிலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மேற்கொண்டு இன்று வவுனியா மண்ணிலே தனது ஓய்வுகாலத்திலும் ஆசிரியப் பணி, சமயப்பணி, இலக்கியப் பணி என 兹 பல்வேறு தளங்களில் வீறுடன் இயங்கி வருபவர்.இவரின் “சிலம்பின் செய்தி” 2003இல் வெளிவந்தது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, பன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை பன்னாலை சேர்.கனகசபை வித்தியாலயத்திலும் , ஆங்கிலக்கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும், உயர்கல்வியை மைசூர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்று பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியப் பயிற்சி சான்றிதழும் மருதானை தொழில் நுட்பக் கல்லூரியில் ஆங்கில டிப்புளோமா சான்றிதழும் பெற்று 1953ல் ஆங்கில ஆசிரியராக நியமம் பெற்றார்.
தனது அண்ணரும் பலாலி ஆசிரிய கலாசாலை இசை விரிவுரையாளருமாகிய இசைமணி திரு.பொன்.முத்துக்குமாரனிடம் இசை பயின்று இசைத்துறையிலும் தேர்ச்சி பெற்றார். பல்வேறு போட்டிகளிலும் பரிசுகள் தங்கப் பதக்கங்கள் பெற்று தனது திறமைகளை ஊரறிய வைத்தார்.
அகில இலங்கை விவேகானந்தா சபை பண்ணிசைப் போட்டி (1948) மைசூர் பல்கலைக்கழக இசைப்போட்டி (1995) சுத்தானந்த பாரதியார் தலைமையில் நடத்த பேச்சுப்போட்டி ஆகியவற்றில தங்கப்பதக்கங்களும், அகில இலங்கை நாடகப் போட்டியில் (1965) முதற் பரிசும் பெற்றார். இவரது திறமைகளைப் பாராட்டி தெல்லியூர் மகாஜனக்கல்லூரி நுண்கலை மன்றம் பண்ணிசைவேந்தர்' எனும் பட்டத்தினையும் தெல்லிப்பழை கலாரஞ்சன சபா கலைமணி விருதையும், தேனாம்பேட்டை சிவசுப்பிரமணிய கோயிலில் திருமுருக கிருபானந்தவாரியார் கலைமாமணி விருதினையும் வழங்கினார்.
1957 முதல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளிலும், பல்வேறு மேடைகளிலும் சமய இலக்கிய சொற்பொழிவுகளையும், இசை விருந்தையும் நிகழ்த்தி 72ல் இலிருந்து பலாலி. கோப்பாய் ஆசிரிய கலாசாலை இசை விரிவுரையாளராக கடமையாற்றி பிரதி அதிபராக ஓய்வு பெற்றார். வடஇலங்கை சங்கீதசபையின் பரீட்சை கட்டுப்பாட்டாளராக 35 ஆண்டுகள் விரிவுரையாற்றி தற்போது திறந்த பல்கலைக்கழக வவுனியா நிலையத்திலும், விவசாயக்கல்லூரியிலும் ஆங்கில போதனாசிரியராகக் கடமையாற்றுவதுடன் இலக்கிய சமயப் பணிகளிலும் முன்னின்று உழைக்கும் கலைமாமணி பொன் தெய்வேந்திரம் அவர்களுக்கு இலக்கியச் செல்வர் எனும் விருதினை வழங்கி கெளரவிப்பதில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் பெருமை கொள்கிறது. 61

Page 33
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இலக்கியச் செல்வர் கண்டாவளைக் கவிராயர் சி.கு.இராசையா
“கண்டாவளைக் கவிராயர்" என மக்கள் மத்தியில் அறியப்படும் திரு.சித்தள் குமாரவேலு இராசையா ஓர் ஓய்வு பெற்ற கிராமசேவையாளர் ஆவர். கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேசத்தில் உள்ள கண்டாவளைக் கிராமத்தில் வரணியூர் சித்தர் குமாரவேலுவுக்கும் சின்னப்பிள்ளைக்கும் மூத்த மகனாக 1928 வைகாசி 15ல் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை கண்டாவளை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் வரணி அ.த.க.பாடசாலையிலும் பெற்று ஆங்கிலக்கல்வியை கரவெட்டி திரு இருதயக் கல்லூரியிலும் சாவகச்சேரி றிபேக் கல்லூரியிலும் பயின்றார். மரபுத் தமிழ் கல்வியை தானாகத் தேடிப்படித்தார். ஆரியபாஷா விருத்திச் சங்கத்தில் பண்டிதர் வகுப்பும், பண்டிதர் மு.கந்தையாவிடம் சைவசித்தாந்தமும் கற்றார். இயல்பிலேயே தமிலும் சமயத்திலும் நாட்டம் கொண்டார். 1978 முதல் பாடல்களை எழுத ஆரம்பித்து கண்டாவளைக் கவிராயர் எனும் பெயரில் தனது இலக்கியப் பணியை தொடர்ந்தார். கோணங்குள விநாயகர் மீது பாடப்பெற்ற விநாயக மாலையைத் தொடர்ந்து பல்வேறு பதிகங்கள், ஊஞ்சற் பாடல்கள் பாடி நூல்களை வெளியிட்டுள்ளார். உழவன் என்ற பெயரில் உழவுச் சிறப்புக்களையும், தொழிலாளர் மேன்மைகளையும், இளைஞர் வளர்ச்சிகளையும், பாடி சமூக பிரக்ஞை உள்ள இலக்கிய கர்த்தாவாக சிறப்புற் வாழ்ந்து வருகிறார். முரசுமோட்டையிலும் வவுனியாவில் தோணிக்கல் கிராமத்திலும் வாழ்ந்து வரும் கவிராயரின் கோபுரவாயில் எனும் சமயப்பாடல்கள் கொண்ட தொகுப்பை கிளிநொச்சி குருகுலவட்டம் 1999 புரட்டாதியிலும் “கந்தகோட்டமான்மியம்” என்னும் நூலை வவுனியாவில் உள்ள அகில இலங்கை சேக்கிழார் மன்றம் 1999 கார்த்திகையிலும் வெளியிட்டன.
1986இல் கவிமணி எனும் தேசிய விருதும் (கந்தகோட்டமான்மிம் என்னும் நூலுக்கும்) 1999ம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டல விருதும் பெற்றார். இவரது “கோபுரவாயில்” நூலுக்கும் இலக்கிய விருது வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்விருதும் வழங்கப்பெற்று கெளரவிக்கப்பட்டார். வரகவி, தெய்வீகக்கவி, கவிமணி என பல்வேறு அமைப்புக்களாலும் பாராட்டப்பெற்ற கவிராயர் இணுவில் பண்டிதர் மு.திருநாவுக்கரசு இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிபிள்ளை புங்குடுதீவு வித்துவான் சி.ஆறுமுகம் மாவை பண்டிதர் க.சச்சிதானந்தம் ஆகியோரால் பாராட்டப்பட்டார்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை தனது வாழ்த்துப்பாவில் பின்வருமாறு கூறுகிறார்.
"கருணை பெறு கவிதைமழை பொழியும் மேகம் கவிஉழவன் கமஉழவன்
-62
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கிராம சேவைக்கொரு பெருமைதருமுதல்வன் உதாரச்செம்மல் உத்தமன் கு.இராசையா உயர்பண்போனே"
ஒருபுறம் கடற்கரைக் காட்சியின் இதமும், மறுபுறம் பச்சை வயற்புறத்து வெளிதரும் இனிமையும், இன்னொருபுறம் யானைகள் நிறைந்த காட்டின் அழகும் கவிராயரையும் இறைஉணர்வுக்கு இட்டுச் சென்றிருக்கும். கூடிய சமூக உணர்வும் சமய உணர்வும் ஒருங்கே சேர சீரான வாழ்வுதனை வாழ்ந்து காட்டிவரும் கவிராயரை ‘இலக்கியச் செல்வர்' எனப் பாராட்டி மகிழ்வதில் வவுனியா கலை இலக்கிய
நண்பர்கள் வட்டம் பெருமை கொள்கிறது.
தொகுப்பு சங்கரன் செல்வி
we w () www.
ஞானபீட விருது பெறும் ஜெயகாந்தனுக்கு எமது வணக்கங்கள்
விருதுக்குக் **్య,శీళ్ళ

Page 34
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ட் ஓய்வு பெற்ற தஞ்சாவூர்ப் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகப்
பேராசிரியர் “குட்டியானைக்கு கொம்பு முளைச்சது", நாடகப்படைப்பாக்கங்கள் என பல நூல்கள் எழுதியவர்
தமிழக நாடகப் பேராசிரியர் சே.இராமனுஜம் அவர்களுடனான நேர்காணல்
நேர்காண்பவர் : கந்தையா யூனிகணேசன்
நாடக உலகுடனான ஆரம்பகாலத் தொடர்பு பற்றி கூறுங்கள்
1956 இலிருந்து பள்ளி ஆசிரியராக கிராமிய கல்லூரி ஒன்றில் வேலை பார்த்தபோது ஆசிரியரும், பாடசாலை ஆசிரியருமாகிய திரு.ஜி.சங்கரப்பிள்ளை என்பவர் பழக்கிய "அன்புத்தூது’ எனும் நாடகம் என்னைக் கவர்ந்தது. அவர் மூலமாகத்தான் உலக நாடகம் பற்றிய அறிவு எனக்கு கிடைத்தது. அடுத்த ஒரு காரணம் எனக்கு இருந்த மலையாள மொழிப்பரிச்சயம் இளமைக்காலத்தில் தந்தையார் வேலைபார்த்த இடத்தில் வாழ்ந்தமையால் மலையாளமொழியில் எனது ஆரம்பக்கல்வியைக் கற்றமை ஒரு வாய்ப்பாகியது. இதனால் மலையாள மொழியில் வெளிவரும் உலக நாடக இலக்கியங்களை வாசிக்க முடிந்தது. அங்கு கிளப்பப்படும் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடமுடிந்தது. இதை விட எனது முதல் பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம். தொடர்ந்து அதில் முதுகலைமாணியும் பெற்றேன். நாடக ஆர்வத்தோடு பொது உடைமைவாதியாக இருந்தமையால் அக்கால கம்யூனிசவாதிகளான ஜீவானந்தம், பாலதண்டாயுதம் ஆகியோருடன் தொடர்பு இருந்தமையும் சமூக விடயங்களில் அக்கறை கொள்ள முடிந்தது.
டில்லியில் இயங்கும் தேசிய நாடகப்பள்ளியில் படிப்பதற்கு சங்கரப்பிள்ளையின் தொடர்பு தூண்டுகோலாக இருந்தது. எனது தேடல் காந்தி கிராமத்தில் தொடங்கியது. அக்கால தமிழ் நாடகங்கள் அர்த்தமின்றி, பாசிபடர்ந்த குளத்தைப் போல காணப்பட்டது. எனவே அக்குளத்துக்கு தொடர்ந்து கல்லை எறிந்தால் பாசி விலகும் எனக் கருதி தொடர்ந்து கல்லை எறியும் முயற்சியை நாமே செய்தால் என்ன என எண் ணினேன் . பொருளற்ற நாடகங்களை மாற்றும் எத தனிப் பு திரு.ஜி.சங்கரப்பிள்ளைக்கும் எனக்கும் இருந்தது. மேலெழுந்தவாரியாக ஆழமான நாடகங்கள் கையாளப்பட்டு வந்தமையை மாற்ற முனைந்தோம். அவரது நட்பினால் 1967ல் முதல் நாடகப்பட்டறையை தொடக்கிவைத்தார். இதனால் மலையாளமண்ணில் பல்வேறு கலைஞர்களுடன் பழக வாய்ப்புக் கிடைத்தது. அடூர் கோபாலகிருஷ்ணன்,
-64
 
 
 
 

്യങ്ങ, ബി, ഓയെബ് ട്രിബീധ ആളിക്കു கவிஞர் அய்யப்பயணிக்கள், பூரீகண்டன், நாயர், அரவிந்தன், பாரத்கோபி, எம் கோவிந்தன் ஆகியோர் தொடர்பில் தென்னிந்திய, இந்திய அளவில் பழக வாய்ப்பு கிடைத்தது.
கோணல் தென்னைமரமாக பக்கத்து வீட்டுக்கு பலன்கொடுப்பவராக என்னைப் பலர் கருதியமையால் 1977ல் காந்திகிராமத்தில் தமிழில் பட்டறை நடத்த வாய்ப்பு கிடைத்தது. மு.இராமசாமி, ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, பரீக்ஷா ஞானி, சாஜகான் கனி, சிறுகதை, எழுத்தாளர் ஜெயந்தன், எழுத்தாளர் லிங்கன், பரம்பைவச் செல்வன் ஆகியோர் இப்பட்டறையில் பயின்றனர்.
கேரளத்தில் நல்ல சிறப்புடன் இருந்த பொழுது 1970களின் இறுதிகளில் கொச்சியில் தேசிய நாடக விழா நடைபெற்றவேளை நான் இயக்கிய Crime 27 மலையாளத்தில் மேடையேற ஆயத்தமாகியது. அதே வேளை தமிழிலும் ஒரு நாடகத்தை கொடுக்க எனது மனம் விரும்பியது. ஆயினும் இரு மொழிகளில் நாடகங்கள் கொடுக்க அனுமதிக்கவில்லை. எனவே அரங்கம் சிறப்படைய வேண்டு எனக் கருதி என்னுடன் இணைந்து பணியாற்றிய வேணுகொட்ட நாயரை மலையாள இயக்குனராக நியமித்து விட்டு தமிழில் ‘புறஞ்சேரி” எனும் நாடகத்தை இயக்கி மேடையேற்றினேன்.
சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்ட அடைக்கலக்காதையை கருவாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாடகம் அது. சம்பவத்தை மதுரைக்கு அப்பால் நின்று பார்ப்பதாக ஒரு உருவகப்படுத்தி உலக அளவில் எழும் துன்பமாக எரியும் மதுரையைப் பார்க்கும் காட்சியே புறஞ்சேரியாக, நிரபராதிகள் பாதிக்கப்படுவதை, பொதுவான உலக துன்பத்தை புறஞ்சேரியாக, கண்ணகி அலவத்தை வெறும் காட்சியாக பார்க்கும் அவலம் புறஞ்சேரியில் இருக்கும் மக்களுக்கு - இன்றைய உலக அவலத்தை, அழிவைப் பார்க்கும் நாமும் புறஞ்சேரி மக்களாக உள்ளதை நாடகம் காட்சிப்படுத்தியது. கண்ணகி அவலத்துக்கு பின்னாலும் இன்று வரை தொடரும் அவலங்களுக்கு என்னால் எப்படி திரைபோட முடியும் என கேள்வி எழுப்பி நாடகம் முடிகிறது.
ஆனால் இந்த நாடகம் விழாவில் வெற்றி பெறவில்லை. அதே வேளை எனது மலையாள நாடகம் பெற்ற வெற்றியை தமிழ் நாடகம் பெறவில்லை. இயக்கம் நடிப்பு என்பவற்றில் குறை கூறினார்கள்.
இது அ.இராமசாமியின் நிஜ நாடக இயக்கம் தோன்ற உந்துதலாக இருந்தது.
தொடர்ந்து உங்கள் நாடகப்பணி பற்றி.
இன்று தமிழில் காணப்பட்ட கோயில் நாடகம் அழிந்து விட்டது. ஆகவே அதை மீள் உருவாக்கம் செய்து பண்பாட்டு நாடகமாக்க வேண்டும். ஏப்ரலிலிருந்து
6 மாதங்கள் அந்த முயற்சியில் ஈடுபட உள்ளேன்.
-65

Page 35
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
புறஞ்சேரி படைப்புக்குப் பின் குழந்தைகளை நோக்கி திசை திரும்பினேன். ஒரு விரிந்த பார்வையை நடிப்பு முதலான துறைகளில் கொண்டு வரவேண்டி இருந்தது. இலங்கையில் உலக இலக்கியங்கள் பற்றி சாதாரணமாக எல்லாருடனும் பேசமுடியும். தமிழ்நாட்டில் அத்தகைய நிலைமை இப்போது தான் தொடங்குகிறது. சாளரம் விரித்து உலக அனுபவங்களை பெறுதல் தமிழ்நாட்டில் குறைவு. மலையாள உலகில் நிலைமை வேறு. இதனால் பட்டறைகளில் நாட்டம் செலுத்த வேண்டி இருந்தது. படைப்பாளி என்பதை விட தமிழக நாடகச் சூழல் காரணமாகத்தான். ஒரு நாடக ஆசிரியனாக நான் மாறவேண்டி இருந்தது.
இன்றைய தமிழக நாடகச் சூழல் பற்றி.
இன்று பல திறமையானவர்கள் தமிழ் நாடக உலகில் இணைந்துள்ளார்கள். அனுபவம் வாழ்க்கைப் பிடிப்பு இருந்தால் மக்களோடு சேர்ந்து படைக்கும் போது ஆழமான படைப்புகள் தோன்றும். அராமசாமி, கே.ஏ.குணசேகரன், ராஜூ, முருகபூபதி, வேலு சரவணன், சண்முகராஜ, பாலகிருஷ்ணன், பிரசாந்த், மங்கை, பிரளயன் எனப் பல்வேறு முகங்கள் தமிழ்நாடகத் துறையில் எனது மாணவர்களாக பட்டறையில் இணைந்தவர்களாக பல்வேறு போக்குகளில் நடைபோடுகிறார்கள். வித்தியாசமான பார்வைகள் உண்டு. பரவலாக செயற்பாடுகள் இருந்தும் ஒட்டு மொத்தமான வளர்ச்சி காணப்படவில்லை. காரணம் பெரும்பாலான நாடக இயக்கங்கள் சென்னையை ஒட்டி உள்ளன. ராமசாமி மதுரையிலும், குணசேகரன், ராஜி போன்றவர்கள் பாண்டிச்சேரியிலும் வேறு சிலர் தஞ்சாவூரிலும் என ஒரு சில செயற்பாடுகள் உண்டு.
விரைவில் ஒரு செய்தித் தொகுப்பை சென்னையை மையப்படுத்தி செய்ய உள்ளார்கள். கேரளாவில் குக்கிராமங்களிலும் நாடகச் செயற்பாடுகள் நடக்கின்றன. இப்படியான இணைப்பை கோமல் சுவாமிநாதன் நாடகவிழா, சுபமங்களா ஊடாக கிராம மட்டத்தில் ஏற்படுத்தினார். இப்போ Magic Lantem மூலம் பிரவின்குமார் இவ்விணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
முத்துசாமியின் கூத்துப்பட்டறை ஊடாக நல்ல முயற்சி நடக்கிறது. ஆனால் சினிமாவுக்கு நுழைய ஒரு வாய்ப்பாக இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துகிறார்கள். இதை Bando (1960) தனது நாடக நூலில் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மதுரையில் கிராமிய விழாவும், தஞ்சாவூரில் நாடக விழாவும் ஏற்படுத்த விரும்பினோம். டிசம்பரில் இசைவிழா போல ஆனால் பல்வேறு காரணங்களினால் அது முடியவில்லை. நாடகங்கள் பலவற்றை ஒருமுறைக்கு மேல் மேடை ஏற்ற முடியவில்லை.
நாடகம் பன்முகத்தன்மையில் நடத்தப்படக்கூடியது. பிரளயன் வீதிநாடகத்தில் ஈடுபடுகிறார். இது மக்கள் மட்டத்தில் பிரச்சினைகளை கொண்டு செல்லக்கூடிய ஊடகம். இந்தக் குழுவின் செயற்பாடுகளை கமலஹாசன் "அன்பேசிவம்' படத்தில் பயன்படுத்தி உள்ளார். நாடகம் ஒரு வீச்சான சாதனம். இது பல மட்டங்களில்

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை வளர்க்கக் கூடியது. 50 பேர் மட்டும் பார்க்கும் சபா நாடகங்கள் 'சாகுந்தலம்' முதல் 10,000 பேர் பார்க்கும் கிரேக்க நாடகங்கள் வரை அறிந்துள்ளோம். காலமாற்றத்தில் நின்று பிடிக்கும் நாடகம் என்பதுக்கு அப்பால் நிலையான நாடகக் கூறுகளை ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். இதுவே எனது மீட்டுருவாக்கப்பணியூடு அறிந்த ஒன்று.
கூத்துக்கள், நவீன நாடகப் பயன்பாடு பற்றி.
தெருக்கூத்து போன்ற இலங்கை வடமோடி தென்மோடிக் கூத்துக்கள் சமய நம்பிக்கை அடிப்படையில் தோன்றியவை. இதிகாச கருத்துக்கள், கதாபாத்திரங்கள் எம்மோடுஉலவுகின்றன. இன்னும் அவை எம் சிந்தனையில் தாக்கம் செலுத்துகின்றன. கூத்தில் ஆடும் வீமனைத் தொடுகிறோம். திரெளபதி நேரில் வந்து காசுகேட்கிறாள். இந்த ஒட்டுறவு நம்மைப் பிணிக்கிறது. இந்த அரங்கியல் கூறுகள் முக்கியமானவை.
என்னால் தெருக்கூத்தைப் போட முடியாது. அது கண்ணப்பதம்பிரான் போன்றவர்களால் தான் முடியும். என்னால் அதன் தாக்கத்தால் நவீன நாடகம் போடமுடியும். மரபு எமது சொத்து. அதன் நாடகக் கூறுகள் வெளியீட்டு முறைக்கு ஆழமான உரம் தருகிறது.
எளிதான மேடைமுறைகளும், சிக்கலான விடயங்களைக் காட்ட முடிகிறது. உதாரணத்துக்கு ஒரு பிரசவக் காட்சியை சினிமாவில் காட்டும் போது பல சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் எமது மேடையில் ஒரு கிராமியப்பாட்டு “வேண்டிக்கடி.” எனப்பாடி ஒரு குழந்தைச் சத்தத்துடன் முடிகிறது. இப்படி ஒரு புலப்பாட்டு மொழியை கண்டுபிடிப்பது தான் நாடகம், வெறும் உத்திகளைத் தொகுத்து வழங்குவது நாடகம்
966).
இன்னொரு உதாரணம் "செக்கில் ஆட்டுவது போல்' என்னும் படிமத்துக்கு ஒரு உரல் உலக்கை சுற்றும் காட்சியும் மறுபுறத்தில் ஒரு சிறுவன் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறிப் பாடும் காட்சியும் இடம் பெறும். இந்த அர்த்தம் கிராமமக்களுக்கு புரிந்து விடுகிறது. இங்கு காட்சியின் கொடுமையைக் காட்ட நடிகர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. இது Juxtaposition என்பார்கள். சினிமாவில் இது கூட ஒரு உத்தியாக இது கிராமத்தில் எளிமையாக புரிய முடிகிறது.
இன்றைய தொழில் நுட்பபுகத்தில் நாடகம்
இன்று தொழில்நுட்பவளர்ச்சியில் ஒளியமைப்பு துணைசெய்கிறது. ஆனால் ஒலியமைப்பு உதவி செய்ய முடியவில்லை. ஒலிவாங்கி நடிகனை கட்டுப்படுத்தப் பார்க்கிறது. இயற்கையான குரல் கிடைக்காது. ஒரு இயந்திர ஒலியைத்தான் கேட்க முடியும். நாடகத்தில் மற்ற ஊடகங்களை விட கொண்டு கொடுத்து வாங்கும் உறவு உண்டு. இங்கு ஒலிவாங்கி ೧೮ಕ್ಹ6 போடுகிறது.

Page 36
GFeUpNails, 656tb6f, ESGUDGU BGGURábafuu estéfan65
நாடகம் ஒரு காட்சிப் பொருளாக கேள்விப் பொருளாக வேண்டுமே தவிர தொழில்நுட்பத்துடன் இணைந்த கூறாகக்கூடாது. தெருநாடகத்தில் மக்களுடன் நேரடி உறவு கொள்கிறது. இது வானொலி, தொலைக்காட்சியை விட சக்திமிக்கது. ஒளியமைப்புக்கு பந்தம் முதல் வர்ணவிளக்குகள் உதவின. ஆனால் ஒலியமைப்புக்கு குரல் மட்டும் தான் உதவ முடியும். பழைய சங்கீதக்காரர்கள் அடிவயிற்றில் இருந்து பாடி பயிற்சி எடுப்பார்கள். இது ஒலிவாங்கியில்லாமல் நேரடியாக கேட்க முடிந்தது. இதற்காக நடிகரின் குரல்வளம், பேச்சுப்பயிற்சி வளர்க்கப்படவேண்டும். பார்வையாளரும் கேட்கும் பயிற்சியைப் பெற வேண்டும். மொழியைக் கையாளுந்திறம், உச்சரிப்பு வார்த்தை முழுமையாக வரும், சிறப்பு மொழியின் சங்கீதம் வரப்பண்ணுதல், வார்த்தையின் அர்த்தங்களை மேடையில் உச்சரிப்பூடாக கொண்டுவருதல் என்பன முக்கியம். பேச்சுப்பயிற்சி என்பது சொற்களை வெளியே கொண்டுவருவது மட்டுமல்ல சொற்களின் உள்ளே போய், அதன் செயலுக்கான சம்பவத் தொகுப்புக்கான அடிப்படையாக பயிற்சி அமையவேண்டும். பார்வையாளரை செயற்படவைக்க தூண்ட வேண்டும். ஆழமான புலப்பாட்டுடன் சொல் பயன்பாடு ஏற்படுத்தப்படவேண்டும். இங்கு கருத்துப்பரிமாற்றம் மட்டுமல்ல, அதற்கு ஆதாரமான சுகமான ஒட்டங்களை அது புலப்படுத்த வேண்டும்.
கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை சொல் புலப்படுத்த வேண்டும். இதனையே கம்பர், இளங்கோ போன்றவர்கள் சொல்லை நாடகப்பாங்காக பயன்படுத்தினர் என்போம்.
உதாரணத்துக்கு கண்ணகி பாண்டியன் முன் தோன்றுவதை நன்கு காட்சிப்படுத்துவார் இளங்கோ. பாண்டியன் வாயினுடாக, வாயிற்காப்போன் வாயினுடாக எல்லாம் காட்சிப்படுத்துவார். இதனை நவீன நாடக ஆசிரியர் அடைப்புக்குறிக்குள் நாடக ஆசிரியர் எழுதும் விபரணையாக காண்போம். கண்ணகியின் அழுகை கலந்த கோபத்தை நியாயம் கேட்டு போராட வந்த கோலத்தைக் சொற்கள் மூலம் கண்கிறோம்.
கம்பராமாயணத்தில் கூனிகையில் மாலையைக் கொடுக்கிறாள் கைகேகி, இராமன் முடிசூடும் மகிழ்வுச்செய்திக்காக. மாலையை எறியும் செயலை காட்சிப்படுத்துவதன் மூலம் உணர்ச்சியை வெளிப்படுத்துவார் கம்பர். பாரதியாரிடமும் இந்த சொற்பயிற்சியை நாம் காணலாம். பாஞ்சாலி சபதத்தில் வீமன் கூறுவான் “இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டுவர் அண்ணன் கையை எரிப்போம்" என்று கூறவந்த வீமன் அண்ணனின் மரியாதையை மற்றவர் முன் குறைக்காது சத்தம் குறைத்து தன் மற்றைய சகோதரர்களுக்கு கூறுவதாக நாம் ஒரு பார்வையை ஏற்படுத்தினால் இதனை எடுத்தியம்பும் சொற்பயிற்சி நடிகருக்கு தேவை.
கல்வி மற்றும் மொழிக் கல்வி வளர்ச்சிக்கு நாடகம் எவ்விதம்.
ஒட்டுமொத்தமான குழந்தையின் வளர்ச்சிக்கு நாடகப்பாங்கு துணைசெய்யும்.
நாடகப்பாங்கான சூழலை குழந்தை பெறும்போது ஒவ்வொரு சூழலையும் உணர்ந்து -68

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை கொள்ளும். இதற்கு அரங்கு துணைசெய்யும் நேரடி வாழ்வனுபவம் இல்லையென்றாலும் கற்பனை வாழ்வனுபவம் என்றாலும் பிள்ளைக்கு கிடைக்கும். பட்டறிவு கிடைக்கும்.
பள்ளியில் நாடகம் போடல் என்பது ஒருசில பேர் வெறும் அனுபவமாக மட்டும், மட்டுப்படுத்தக்கூடாது. விளையாட்டுப் பயிற்சி உடல் வளர்ச்சிக்கு, ஆனால் நாடகம் மனவளர்ச்சிக்கு உதவுவது. சிறுவயதிலிருந்தே மனதில் காட்சி அமைத்து தீர்வு கண்டுவர உதவும். நாடகம் பார்க்கும் பிள்ளை கூட இந்த அனுபவத்தைப் பெறுகிறது. இந்த நாடகச் சூழலில் பிள்ளை மனரீதியாக வாழ்ந்து வளர்ந்து வெளியீட்டு திறனை வளர்த்து கற்பனையாற்றலை வளர்த்துக் கொள்ளும்.
இங்கு சிறுவர் தேவை அறிந்து இதனைச் செய்ய வேண்டும். திணிக்கக் கூடாது. ஊன்றுகால் போல நாடகம் உதவும். மனேதத்துவ அடிப்படையில் பயிற்சி வழங்கவேண்டும், நாடகப்பயிற்சி ஆசிரியர்களுக்கு உதாரணமாக முள்ளுக்குத்தினால் உணர்வு எப்படி இருக்கும்? அது போல ஐம்புல உணர்ச்சிகளுடன் வாழ்தல் அனுபவம் உண்மையாகப் பெறல் வேண்டும். பூவின் வாசம் பழவாசனை நுகரும் தன்மை, சருகுகள் எழுப்பும் ஒலி உணர்வு, தொடும் உணர்வு என்பன எளிதில் பற்றும் திறன் வளர்க்கப்பட்டு அவற்றினுTடு பிள்ளைகளின் கற்பனை ஆற்றல் தூண்டப்படவேண்டும்.
கல்வியில் நாடகம் எனும் போது பாடங்களைப் பதிக்க ஒரு கருவியாக, மனோதர்மம் மூலம் நாடக உலகில் வாழ்வதன் மூலம் மொழியறிவு வெளியீட்டுத்திறன், சுய அனுபவ வெளிப்பாடு முடிவெடுக்கும் திறன், கற்பனையாற்றல் என்பன வளர்க்க முடியும்.
உதாரணமாக 'காகமும் வடையும் நாடகத்தில் எப்படி முடிவு அமைக்கலாம் என தீர்மானம் எடுக்க மாணவரை அனுமதிக்கலாம். பாட்டியை புகழ்ந்து பாடி வடையைப் பெறலாம். பாட்டி விறகு எடுக்கப் போக தந்திரமாக எடுக்கலாம். உதவி செய்து பெறலாம் என அவர்கள் கற்பனைக்கு விடலாம். குழந்தைகள் கற்பனைக்கு ஒரு பாடல் கூறலாம்.
நாற்காலிக்காரருக்கு நாலுகால் உண்டாம்
ஆனால் நடக்க முடியாதாம்
நாம நினைச்சா நடக்க வைக்கலாம்
நாற்காலிக்காரருக்கு இரண்டுகை உண்டாம்
ஆனால் அசைக்க முடியாதாம்
நாம நினைச்சா அசைக்க வைக்கலாம்
நாற்காலிக்காரருக்கு நீண்ட முதுகுண்டாம்
ஆனா நிமிர முடியாதாம், நிமிரமுடியாதாம்
நாம நினைச்சா குனிய வைக்கலாம்.
நிமிர வைக்கலாம்
-69

Page 37
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
நாற்காலிக்காரருக்கு முகமுண்டோ
இல்லை உண்டு
நானிருந்தா எண்முகம் நியிருந்தா உன்முகம் அவனிருந்தா அவன்முகம் அவளிருந்தா அவள் முகம் இருந்தா முகம் இல்லாட்டி இல்லை.
சிறுவர் பாடசாலை ஆசிரியர்கள் கற்பனை வளமிக்கவர்களாக, புதிய பாடல்களை இயற்றுபவர்களாக, மொழியின் சந்தலயங்களை உணர்ச்சிப் பெருக்குக்கு வெளிப்பாட்டுக்கு ஏற்றபடி பயன்படுத்தும் பயிற்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பெப்ருவரி 2005 000 × 000
ஈழத்தில் வெளியாகும் சஞ்சிகைகள்
############త్రLth ಟ್ರfಟಃ ॠupť. Lákasseriáľaš ibasirafu:áh Eglase seris
கலை இலக்கி சிழக விஞ்ஞ் assif. Eartis 20ts g
-70
 
 
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அமரர் சொக்கனின் பாலையும் சோலையும் நூலுக்கான வெளிவராத முன்னுரை
தமிழாசிரியர் வித்துவான் கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்களின் சுயசரிதை “பாலையும் சோலையும்” எனும் பெயரில் நூலுருவாகின்றது. இதற்கான முன்னுரை ஒன்றை எழுதும் பொறுப்பு அவரின் மாணவனாகவும், அபிமானியாகவும் இருந்து வரும் என்னிடம் விடப்பட்டுள்ளதை மிகப் பெரும் கெளரவமாகவும் பெருமையாகவும் கருதுகின்றேன்.
இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் பலாலி ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக திரு.சொக்கன் அவர்கள் கடமை ஆற்றியபோது அவரிடம் தமிழ் கற்கும் பேறுகிடைத்தது. ஆனால் அதற்கு முன்னரே அவரது எழுத்துக்களை (கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள்) படித்ததினாலும், அவரது பேச்சுக்களைக் கேட்டதினாலும் அவர் மீது எனக்கு ஒரு நாட்டம் இருந்து வந்தது. பலாலிக்காலத்தின் பின்னர் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடாத்தப்பெற்ற பாலபண்டிதர் வகுப்புகளிலும் அவரிடம் தமிழ் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இவற்றுக்கப்பால் நவீன தமிழிலக்கிய மேடைகள், மரபு இலக்கிய கருத்தரங்குகள் என்பவற்றில் அவரது பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்புகளை தேடி பயன்படுத்தும் வழக்கம் தொடர்ந்தது. இதைவிட, எமது இணுவில் கலை இலக்கிய வட்ட கூட்டங்களுக்கும் அவரை தலைமை தாங்கவோ, உரையாற்றவோ அழைத்துப் பயன்படுத்தியுள்ளோம். மேலும் அவ்வப்போது அவர் வீட்டுக்குச் சென்று பல்வேறு தமிழிலக்கிய விடயங்களைப் பேசி விளக்கங்கள் பெறும் சந்தர்ப்பங்களும் இன்று வரை கிடைத்து வருகிறது.
மரபுத் தமிழ்க்கல்வியை வழங்குவதற்கு பல பண்டிதர்கள், வித்துவான்கள் எம் பிரதேசத்தில் இருந்த போதும் சொக்கனின் புதுமையை அவாவும் வேட்கை, முற்போக்குதன்மை இளைஞராகிய எம்மையும் ஈர்த்ததில் வியப்பில்லை. தமிழ்க்கல்வி, சமயப்பாரம்பரியம் என்பவற்றோடு சித்தாந்த விளக்கங்கள், நவீன தமிழிலக்கியப் பரீட்சயம், ஆக்க இலக்கியம் படைக்கும் ஆற்றல், யதார்த்த நிலைமைகளுக்கேற்ற கட்டுரைகள் வரையும் திறன் என்பன கைவரப்பெற்றவர் சொக்கன்.
சொக்கனின் “செல்லும் வழி இருட்டு" (நாவல்), சலதி (சிலப்பதிகாரத்தை ஒட்டியது) பக்திக் சந்த் (சிறுவர் மொழிபெயர்ப்புநாவல்) , இரட்டை வேஷம் (யதார்த்த நாடகம்) என்பன குறிப்பிடத்தக்க படைப்புக்கள். இவை நவீன வாசகர்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அத்தோடு, அவர் எழுதிய ‘சிங்கசிரிக்காலவன்’, ‘கவரிவீசிய காவலன்', 'சங்கிலியன்', 'மாருதப்புரவல்லி’, போன்றவை சிறந்த இலக்கிய நாடகங்களாக போற்றப்படத்தக்கவை. இவற்றில் சிலவற்றை எஸ்.ரி.அரசு நெறியாள்கையில் பார்க்கும் சந்தர்ப்பமும் எமக்குக் கிட்டியது.
-71

Page 38
சமூக கஸ்வி கலை இலக்கிய சஞ்சிகை
பாட நூல்கள் எழுதுவதிலும் பெரும் சேவை புரிந்தவர் சொக்கன். இந்து சமயம், தமிழ் போன்றவற்றிற்கு அவரால் எழுதப்பட்ட நூல்கள் பிரபலம் பெற்றவை. “பைந்தமிழ் வளர்ந்த பதின்மர்" எனும் நூல் நன்குவிதந்து பாராட்டப்பட்ட ஒன்று. இதன் தொடர்ச்சியில் அவரது நாடக ஆய்வுநூல் மிகவும் முக்கியமான தாக்கத்தை நாடகஉலகில் ஏற்படுத்தியது. 'ஈழத்து தமிழ் நாடகங்கள் இலக்கிய வளர்ச்சி' எனும் அந்த நூல் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகியபோதும் அது முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் அரங்க ரீதியில் ஆய்வுகளைத் தொடரும் போக்கை ஏற்படுத்தியது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆழமான தமிழ்ப்புலமை, ஆழ்ந்து அகன்று நுண்ணிய
பார்வை, இந்து சமய அறிவின் தாடனம், கால வளர்ச்சிகளைத் தன்னகத்தே உள்வாங்கி பிரதிபலிக்கும் ஆற்றல், நிர்வாகியாக நேர்மையுடன் பணிபுரியும் பாங்கு என்பவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த தமிழ் ஆசிரியராக அன்று தொட்டு இன்று வரை அயராது உழைத்து வருவது சகலராலும் விதந்துரைக்கப்படுகிறது. இதனையே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களும் சொக்கனின் மணிவிழாக் காலத்தில் எழுதிய மல்லிகைக் கட்டுரையில் பதிவு செய்கிறார். ஆம் ஒரு நல்ல தமிழாசிரியனுக்கு இலக்கணமாக இருந்து பல்வேறு கலை இலக்கிய சமய சமூகப் பணிகள் செய்தும், சமூகத்தை, குடும்பத்தை, உறவுகளை மாணவர்களை நேசித்தும் தன்னடக்கத்துடன் வாழ்ந்துவரும் சொக்கனின் சுயசரிதை நிச்சயமாக இன்றைய பூகோளமயமாக்கப்பட்ட உலகில் வாழும் எமது இளைய தலைமுறைக்கு ஒரு தரிசனமாகும். மேலும் அவர்கால மாற்றத்தினூடு சமூகம் கோருகின்ற தமிழ்ப்பணியிலும் தம்மை ஈடுபடுத்தி அளப்பெரும் சேவையை செய்து வருவதை எதிர்காலச் சந்ததி பதிவு செய்யும். அது ஒன்றே சொக்கன் அவர்களுக்கு மக்கள் வழங்கும் விருதாகும் என்றால் மிகையாகாது
கந்தையா றிகணேசன்
(தொகுப்பாசிரியர்களில் ஒருவர்)
ஆங்கில விரிவுரையாளர்
யாழ்ப்பான பல்கலைக்கழக வவுனியா வளாகம்
வவுனியா
2O2003
(பிற்குறிப்பு: மேற்படி முன்னுரை 2003 டிசம்பரில் வெளிவரவிருந்த சொக்கனின் 'பாலையும் சோலையும் நூலுக்கு எழுதப்பட்டது. சொக்கன் வாழும் காலத்திலேயே வெளிவர ஏற்பாடாகிஇருந்து, இறுதி அச்சு திருத்தமும் செய்யப்பட்டு இருந்தபோதும் பல்வேறு தடைகளால் அவர்காலமாகி இன்றுவரையும் வெளிவராதமையை ஒட்டி இம்முன்னுரை இங்கு பிரசுரமாகின்றது)
-72

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவுகள் 1
நிகழ்வு 85
வட்டத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்திய “ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும், சான்றோர் கெளரவிப்பும்" என்னும் எண்பத்தைந்தாவது நிகழ்வு 15.05.2004 அன்று மாலை 5மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்திலே தமிழ்மணி அகளங்கன் தலைமையில் ஆரம்பமாகியது.
முதல் நிகழ்வான, மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ் வணக்கப்பாடலை செல்வி, உசேனி முறிதரனும், வரவேற்புரையை செல்வி. சி.சிவாஜினியும் நிகழ்த்தினர். விழாவிற்கு பிரதமவிருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்னாட் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் திரு.நா.சேனாதிராஜா அவர்களும் வவுனியா இந்துமாமன்ற தலைவர் திரு.நா.சேனாதிராஜா அவர்களும், வவுனியா ப.நோ.கூ.சங்க தலைவர் திரு.பூ.குமாரகுலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தலைமையுரையை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் நிகழ்த்தினார் அவர் தமதுரையில் ஏழாண்டு கால கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பணிகளை எடுத்து விளக்கினார். மாருதம் சஞ்சிகை பல்வேறு தரப்பினரின் மத்தியில் இருந்து வந்த தரமான ஆக்கங்களை சுமந்து வருவதடன் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதை நோக்கமாக கொண்டு பலபேரின் முயற்சியினாலும் ஆர்வத்தினாலும் வெளிவருகின்றது” என குறிப்பிட்டார். பிரதம விருந்தினர் திரு.க.பேர்னாட் தமது உரையில் “இன்றைய சமூகத்தில் தேசியம் பற்றிய சிந்தனை அனைத்து தரப்பினரிடத்திலும் இல்லாது போனதே இன்றைய சமூக பிரச்சனைகளுக்கு காரணம். தமிழ் தேசியத்தை நிலைநாட்ட நாம் இன்னும் பல தூரம் வரவேண்டியுள்ளது. தமிழ் தேசியம் பற்றிய சிந்தனையை சமூகத்திலே தூண்டுகின்ற நல்லதொருபணியை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் செய்கிறது” என குறிப்பிட்டார்.
‘மாருதம்' சஞ்சிகை இதழ் 5 வெளியீட்டுரையை வவுனியா தேசியக்கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.எஸ்.பவானந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியினை திரு.பூ.குமாரகுலசிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
-73

Page 39
Grupab, 656tbau, a GUNGU BAGONásbau esgléfonas
நூல் அறிமுகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய நாடக வழக்கு' என்ற நூலின் ஆய்வுரையை முல்லை மணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தமதுரையில் "நாடகம் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சபையோரைக் கவருவதாக அமைவதோடு சுவைபடகூறியவை எல்லாம் ஒன்றாக கூடுவதாக அமைவது நாடகவழக்கு" என குறிப்பிட்டு இருந்தார். சிறப்புபிரதியை திரு.நா.சேனாதிராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கலாநிதி முருகள் குணசிங்கம் எழுதிய இலங்கைத் தமிழ் தேசிய வாதம்” என்ற நூலின் ஆய்வுரையை அரசியல் ஆய்வாளர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் நிகழ்த்தினார். அவரது ஆய்வு சபையோரின் தேசிய உணர்வை தட்டி எழுப்புவதாய் உணர்வு பூர்வமான ஆய்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்புப்பிரதியினை திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பாராட்டுப் பெறும் கலை இலக்கிய கர்த்தாக்கள் ஆர்வலர்கள்
ஏழாவது ஆண்டு நிறைவு விழாவில் கவி எழில் திரு.கண்ணையா (மு.இராமையா) அவர்களும் திரு.இ.கா.கணபதிப்பிள்ளை (சூடாமணி) அவர்களும் கெளரவிக்கப்பட்டனர். கெளரவிப்பு உரையை யாழ்பல்கலைக்கழகம் வவுனியாவளாக விரிவுரையாளர் திரு.கந்தையா ரீகணேசன் அவர்கள் நிகழ்த்த பிரதவிருந்தினர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
கலை நிகழ்ச்சிகளாக செல்வன் பத்மநாதன் சிவமைந்தனின் இசைவிருந்தும் வவுனியா திருத்திய நிகேதன கலாமன்ற மாணவிகளது நடனவிருந்தும் வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளது நடனவிருந்தும், வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளது நடனவிருந்தும் சபையோரின் பாராட்டினைப் பெற்றது நன்றியுரையை திரு.ப.முரளிதரனும் வாழ்த்துப்பாடலை செல்வி கீர்த்தனா பூரீதரனும் நிகழ்த்த விழா இனிதே நிறைவு பெற்றது.
pop (d. 000
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவுகள் - 2
நிகழ்வு 86 :
2.06.2004 அன்று 86வது நிகழ்வு வழமையான நேரத்தில் திரு.தமிழ்மணி அகளங்கன் தலைமையில் உற்சாகமாக ஆரம்பமானது நிகழ்வுக்கு நண்பர்கள் வரவு குறைவு என்பதாலும் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆராயவேண்டிய தேவை இருந்ததாலும் இது விடயமாக ஆராயப்பட்டது. அடுத்துவரும் மூன்று மாதகால நிகழ்வுகள் பற்றிய திட்டம் வகுக்கப்பட்டது. வரவேற்புரையை அபேனாட்டும் நன்றியுரையை திரு.ப.முரளிதரனும் நிகழ்த்தினர்.
நிகழ்வு 87 :
02.07.2004 அன்று நிகழ்வு திரு.சு.ஜெயச்சந்திரன் தலைமையில் காலை 11மணிக்கு ஆரம்பமானது வரவேற்புரையை திரு.அ.பேனாட் நிகழ்த்தினார். பாரதியார் கவிதைகள் ஒருபொது நோக்கு “என்ற தலைப்பில் திருதமிழ்மணி அகளங்கன் உரை நிகழ்த்த விருந்த போதிலும் ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டப்படி திரையிசையில் பாரதி பாடல்கள் பற்றியதாக உரை இடம்பெற்றது. வரவேற்புரையை அபேனாட் அவர்களும் நன்றியுரையை செல்வி.சிவாஜினி அவர்களும் ஆற்றினார். சிறப்பு நிகழ்வாக கவிஞர் திரு.க.கோகுலதாஸ் அவர்களது இசைஞானத்துடன் கலந்து இசைநிகழ்வும் நிகழ்த்தப்பட்டது. இதில் திரு.மகாமுனி சுப்பு அவர்கள் மிகவும் சிறப்பாக புல்லாங்குழல் இசைத்தார். கோகுலதாஸ் இதை பாராட்டத்தக்க வகையில் நகர்த்திக்களிப்பூட்டினார்.
நிகழ்வு 88 :
நிகழ்வு 31.07.2004 காலை 11.00 மணிக்கு சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் வவு.விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் திரு.வே.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. திரைப்படமாக்கப்பட்ட தமிழ் நாவல்கள் எனும் தலைப்பில் திரு.நா.தியாகராசா அவர்கள் உரையாற்றினார்.
நிகழ்வு 89 :
நிகழ்வு 29.08.2004 ஞாயிறு காலை 11 மணிக்கு திரு.க.கோகுலதாளில் தலைமையில் நடைபெற்றது. "திரையிசையில் கர்நாடக இசை” என்ற கருப்பொருளில் திரு.தமிழ்மணி அகளங்கன் உரைநிகழ்த்தினார். வரவேற்புரையையும் நன்றியுரையையும் திரு.அ.பேனாட் மற்றும் திரு.ம.ஜெகன் நிகழ்த்தினர். -
நிகழ்வு 90;
நிகழ்வு 28.09.2004 செவ்வாய் காலை 11 மணிக்கு திரு.நா.தியாகராசா தலைமையில் நடைபெற்றது. “தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலம்” என்ற கருப்பொருளில் வவுனியா வடக்கு ஆசிரிய முகாமையாளர், திரு.சு.ஜெயச்சந்திரன் உரையாற்றினார். வரவேற்புரையை திரு.மா.ஜெகன் அவர்களும் நன்றியுரையை திரு.க.கோகுலதாஸ் அவர்களும் நிகழ்த்தினர்.

Page 40
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்வு 91;
27.10.2004 காலை 10 மணிக்கு திரு அகளங்கன் அவர்கள் தலைமையில் கலாசார மண்டபத்தில் முல்லைமணியின் “மழைக் கோலம்” நாவல் வெளியீட்டு நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி உஷேனி பூரீதரன் இசைத்தார். வரவேற்புரையையும் அறிமுகவுரையையும் திரு.க.கோகுலதாஸ் நிகழ்த்தினார். தலைமை உரையை திரு.அகளங்கன் அவர்களும் நூல் நயவுரையை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் திரு.S.கெளரிகாந்தன் அவர்களும் பதிலுரையை திரு முல்லைமணி அவர்களும் நன்றியுரையை ராஜேஸ் அவர்களும் நிகழ்த்தினர். நூலின் முதற் பிரதியை சிவநெறிப்புரவலர் திரு.C.Aராமஸ்வாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். கலை இலக்கிய நண்பர்களின் கருத்தாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்வு 92 :
இலங்கைத் தமிழ்க் கலைப்படைப்புகளின் செல்லுகை என்னும் பொருளில் கருத்தாடல் நடத்தப்பட்டது. திரு.கே.ஆர்.ரறிவன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டு படைப்புக்களுக்கு நிகராக ஈழத்துப் படைப்புகள் திகழ்கிறது. ஆனால் நுகர்வோர் தொகை குறைவாகவே உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வுக்கு வரவேற்புரையை திரு.இ.இராஜேஸ்வரனும் நன்றியுரையை திரு பேனாட்டும் வழங்கினர்.
நிகழ்வு 93;
நிகழ்வு 24.01.2005 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு திரு.அ.பேணாட் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய புதுக்கவிதைப் போக்கு மற்றும் க.கோகுலதாஸ் எழதிய "இருவிழிப்பார்வை ஒரு துளிவிஷம்" கவிதை நூல் விமர்சனமும் இன் நிகழ்வின் கருப்பொருள்களாய் அமைந்தன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை திரு.ம.ஜெகன் அவர்களும் தலைமை உரையை திரு.அ.பேணாட் அவர்களும் நிகழ்த்தினர். இன்றைய புதுக்கவிதைப் போக்கு என்ற கருப்பொருளில் தமிழ்மணி அகளங்கன் அவர்களும் இருவிழிப்பார்வை ஒருதுளி விஷம் நூல் விமர்சனத்தை வவுனியா தே.க.க விரிவுரையாளர் திரு.ந. ரவீந்திரன் அவர்களும் நிகழ்த்தினர். நன்றியுரையை செல்வி.எஸ்.சத்தியாவும் நிகழ்த்தினர். நண்பர்களின் கருத்தாடலுடன் நிகழ்வு பி.ப. 1.30 மணிக்கு நிறைவு பெற்றது.
நிகழ்வு 94
நிகழ்வு 23.02.2005 புதன் காலை 10.30 மணிக்கு வன்னியூர்க் கவிராயரின் "அமுதகங்கை' மற்றும் “சுனாமிப் பேரலையே” கவியரங்கக் கவிதைகள் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வாக கலாபூஷணம் முல்லைமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-76
 
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து மெளனஅஞ்சலி என்பவற்றுடன் நிகழ்வு ஆரம்பமானது. வரவேற்புரையை திரு.இராஜேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தினார். 'அமுதகங்கை நூலின் முதற்பிரதியை சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். நூல் அறிமுகத்தை திரு.ஐ.கதிர்காமசேகரன் அவர்களும், கவிராயர் பற்றிய நினைவுகளை கவிஞர் திருநாவண்ணன் அவர்களும் நிகழ்த்தினர். “சுனாமிப் பேரலையே' என்ற நூலின் முதற் பிரதியை திரு.நா.சேனாதிராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
மீண்டும் எழுவோம் என்ற தலைப்பில் கவியரங்கு நடைபெற்றது. கவியரங்கினை தமிழ்மணி கவிஞர் அகளங்கன் அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர்களான திரு.கே.ஆர் றஜீவன், திரு.சி.ஏ.இராமஸ்வாமி, திரு.க.கோகுலதாஸ், திரு.த.ஐங்கரன் ஆகியோர் கவியியற்றினார். நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்வு 95 :
நிகழ்வு திரு.க.கோகுலதாஸ் அவர்கள் தலைமையில் 23.02.2005 அன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது. வரவேற்புரையை திரு.அ.பேனாட் நிகழ்த்தினார். சிறப்புரை திரு.அளவை கலைக்கரன் அவர்கள் நிகழ்த்தினார். காரசாரமாகக் கருத்தாடல் சென்றது பல கருத்துப் பகிர்வுகளும் இடம் பெற்றன. நன்றியுரையை திரு.இ.இராஜேஸ்வரன் நிகழ்த்தினர்.
நிகழ்வு 96:
நிகழ்வு 23.04.2005 காலை 11.00 மணிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் திரு.மா.ஜெகன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை திரு.மகாமுனிசுப்பு அவர்களும் தலைவர் தலைமை உரையையும் நிகழ்த்தினர். "விஞ்ஞான வளர்ச்சியும் படைப்பிலக்கியமும்' என்ற தலைப்பில் திரு.முல்லைமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கருத்தாடலில் சபையோரால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதில அழிக்கப்பட்டது. “இன்று நவீன படைப்பிலக்கியங்கள் எழுதுபவர்கள் எல்லோரும் தரமான இலக்கியங்களைப் படைப்பதில்லை அதுமட்டுமன்றி இலக்கியப் படைப்பவன் தான் எவ்வாறான வாழ்க்கை முறையை வாழ்கின்றான். தன் வாழ்க்கையில் ஒன்று இலக்கியத்தில் கூறுவது வேறு ஒன்று அல்லவா?" என்ற வினாவிற்கு இலக்கியம் படைப்பவன் எல்லோருமே தன் வாழ்க்கையை எழுதிவிடுவதில்லை அவ்வாறு எழுதினால் 90% ற்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் பல்வேறு தவறுகளை செய்து வாழ்க்கையில் தடுமாறியவர்களே. அந்த தவறுகளை உணர்ந்து பின்னர் திருத்தியிருக்கின்றனர். படைப்புக்கள் அனைத்தும் தரம் அற்றவை என்று முடிவு செய்து விடமுடியாது எழுத விளைந்த எழுத்தாளனும் ஏதோ ஒன்றை உணர்ந்து சிந்தித்து வெளிப்படுத்த முனைந்திருக்கிறான் என்பது உண்மை. அவை சில நேரங்களில் தரக்குறைவானதாக அமைந்து வருகின்றது” என்று சிறப்புரையாற்றிய திரு.முல்லைமணி அவர்கள் குறிப்பிட்டார்.
-77

Page 41
கலை இலக்கிய நண்பர்களின் கருத்துரையுடன் நிகழ்வு 1.30 ற்கு நிறைவு பெற்றது.
நிகழ்வு 97
நிகழ்வு 24.05.2005 காலை 11.30 மணிக்கு சு.இ.இ.ச. கலாசார மண்டபத்தில் திரு.அளவைகலைக்கரன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை திரு.க.கோகுலதாஸ் அவர்களும் தலைமை உரையை நிகழ்வின் தலைவரும் நிகழ்த்தினர்.
"வாசித்தலின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடுகளும்" என்ற தலைப்பில் செல்வி.சி.சிவாஜினி சிறப்புரை ஆற்றினார். தமதுரையில் “அச்சில் வருவன எல்லாம் வாசகனால் வாசிக்கக் கூடியனவா? மனிதனின் மனப்பலவீனங்களை ஊட்டமளிக்கின்ற நூல்கள் மனத்தைப் பண்படுத்துமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது. நவீன அச்சுப் பொறிகளின் வேகத்தினாலும் பலதுறைப்பட்ட அறிஞர்களின் வளர்ச்சியினாலும் பல துறை நூல்கள் வெளிவருகின்றன. வாசகன் வாசிப்பது மட்டும் முக்கியமல்ல. தெரிவு செய்து வாசிப்பதும் அவசியம்" என்று வலியுறுத்தினார்.
சிறப்புரையினைத் தொடர்ந்து கலை இலக்கிய நண்பர்களினால் கருத்துரை வழங்கப்பட்டது நன்றியுரையை திரு.அ.பேணாட் நிகழ்த்தினார். அடுத்த கருத்தாடல் நிகழ்வுகள் குறத்த தீர்மானங்களுடன் நிகழ்வு 1.30 மணிக்கு முடிவடைந்தது.
W P × 0.00
ஈழத்தில் வெளியாகும் சஞ்சிகைகள்
ॐल
-78.
 

arupab, 66thIGn 65GUDGU) 686uábasuu asiléfs D66
ஈழத்தில் வெளியாகும் அரங்க
சிறுகதை
isis 33
ää tässä 8risiä !;i i:: இதரிந்: äätiöiöitä リ :18:
ጳኗኗ፻ኃጃፉ¢፥ ፳w›”t።.፤ጻ፻፯፡፡ጻ 498 :ທຸງ

Page 42
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்நடாத்தும்
எட்டாண்டு நிறைவு விழா
நிகழ்வு = 98 காலம் : 21.06.2005 மாலை 5.00மணி இடம்: நகரசபை மண்டபம், வவுனியா,
தலைமை : திருநஇரவீந்திரன்
(சிரேஷ்ட விரிவுரையாளர், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி) பிரதம விருந்தினர் : திரு.சி.சண்முகம் (அரச அதிபர், வவுனியா) கெளரவ விருந்தினர்கள்:
பேராசிரியை திருமதி.ஆர்.மகேஸ்வரன் (முதல்வர், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம்) திரு.க.பேனாட் (பீடாதிபதி, தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா) சிறப்பு விருந்தினர்கள் :
திருநா.சேனாதிராஜா (தலைவர், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா) திரு.எம்.எஸ்.சரவணபவன்(செயலாளர், நகரசபை, வவுனியா) திரு.சி.ஏ.இராமஸ்வாமி (தலைவர், இந்து மாமன்றம், வவுனியா) திருபூகுமாரகுலசிங்கம்(தலைவர், வவுனியா ப.நோ.கூ.சங்கம்)
மாருதம் சஞ்சிகை இதழ் 6 வெளியீடு ஆய்வுரை திரு.எஸ்.கெளரிகாந்தன் தமிழ் விரிவுரையாளர், வவுனியா கல்வியியற் கல்லூரி
இலக்கிய கர்த்தாக்கள் கெளரவிப்பு இலக்கியச் செல்வர் கவிமணி கண்டாவளைக் கவிராயர் (சி.கு.இராசையா, ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்) இலக்கியச் செல்வர் கலைமாமணி பொன்.தெய்வேந்திரம் (முன்னாள் இசை விரிவுரையாளர், கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசலை) வவுனியா நிருத்திய நிகேதன கலாமன்ற மாணவிகள் வழங்கும்
பாஞ்சாலி சபதம் (நாட்டிய நாடகம்) வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளியினர் வழங்கும் குழுநடனம் -80

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
| உடன் கரையும் பால். |ன்றும் செளகரியமான பால்

Page 43
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
யூனிவேர்சல் ரெக்ஸ்
இல,143, பஜார் வீதி, வவுனியா.
CCGNI CONTRO
தரமான வகையில் காகிதாதிகள், பாடசாலை உபகரணங்கள், போட்டோ கொப்பி, லெமனேட்டிங், மற்றும் சகலவிதமான புத்தகங்களையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற நாடவேண்டிய இடம்
No: 25-46, Bus Stand Complex, Vavuniya. Tal : 024-2222476
-82

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இராசையா மருந்தக்கடை
கோயில் அபிஷேகப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், இந்தியா ஊதுபத்திகள், மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்
கொள்ளலாம்.
53 நவீன சந்தை வவுனியா இல: 202, பஜார் விதி, வவுனியா.
O O லாவண்யா ஜீவல்லரி காலத்தால் அழியாத கண்கவர் தங்க நகைகளை சுத்தமான 22கரட் தங்கத்தில் உங்கள் எண்ணம்போல் தெரிவு செய்திட.
جس
@
தர்மலிங்கம் விதி வவுனியா.
-83

Page 44
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ᎨFᏧ6Ꭳr
YLLLL LLTTTTS T TTLTTTLLLLLL TTTTLLLLSS Ba: 27, uInsteig, Eucastun.
-84

Epa, 66b5 a6 3Guiu aine
அம்பாள் கபே
இல.08, ஹொறவப்பொத்தானவீதி
GaiGajandum.
WESTERN UNON
ΜΟΝΕΥ TRANSFER
அதிகாரமளிக்கப்பட்ட முகவர்
அம்பாள் ஏஜென்சி
(அம்பாள் கபேக்கு அருகாமையில்)
இல. 09, ஹொறவப்பொத்தானவீதிவவுனியா.
T.P. & Fax. 024 222242
GeuGina Griyb: y.L. B.oo - n.u. 9.00
-85

Page 45
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
குளோப் றேடேர்ஸ்
விவசாய இரசாயன, பசளை இறக்குமதியாளர்கள்,
ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் இல: 19, குளோப் பில்டிங், பசார்வீதி, வவுனியா.
தொ.பே. இல : 024 2222345, 2222418 பெக்ஸ் 2221087 (GR)
வெங்கடேஸ்வரா
பல்பொருள் வாணிப நிலையம்
98a): 15, LuGrunfrasigi Guayadult GglI.G.I. Ra: O24222248
-86
 

sepa, 66th6a, 66.06) Boudhau 6tside D65
N.S.RATNAM & BROS
Dealers in all kinds of electonic items and spares
No:6, 1st Cross Street,
Vavuniya. Tel/Fax: 024 - 2221237
-87

Page 46
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
METO TRADERS
Dealers in Electrical Goods & Plvmping Items
35A, Bus Stand Shoping Comlex, Station Road,
Vavuniya. Phone :024 - 2222572
-88

வவுனியா ப.நோ. கட சங்கம் கடைவீதி, வவுனியா. 窃 O24-2222384
முத்தையா மண்டபம்
திருமண, பூப்புனித நீராட்டு விழா மற்றும் கலை கலாசார பொதுக் கூட்டங்களுக்கும் சகல வசதிகளுடன் கூடிய சிறந்த மண்டபம்
எண்ணெய், அரிசி, மா ஆலை
சுத்தமான தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பிண்ணாக்கு, சுத்தமான வறுத்த அரிசிமா என்பவற்றை மலிவு விற்பனையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
குளிரகம்
கோர வெப்பத் தாக்கத்திலிருந்து விடுதலை பெற நாடுங்கள்
தையலகம்
நவீன முறையில் சிறுவர் பெரியவர் அனைவருக்குமான உடைகளைப் பெற்றுக் கொள்ள நாடுங்கள்
தொலைத்தொடர்பு நிலையம்
உள்ளுள் சர்வதேச தொலைத்தொடர்பு சேவைக்கும், குறைந்த விலையில் போட்டோப் பிரதிகளுக்கும், ஒரு நிமிடத்தில் அடையாள அட்டை புகைப்படத்திற்கும், றோனியோ பிரதிகள் பெறுவதற்கும் நாடுங்கள்
நுகர்ச்சிப் பொருட்கள்
தரமான நுகர்ச்சிப் பொருட்களை பெற்றுக்கொள்ள இன்றே நாடுங்கள்
வவுனியா ப.நோ.கூ.சங்கம்

Page 47
மாருதம் சிறப்புற வாழ்த்துகிறோம்
ஜி.எச்.ஏ.டீ 606
பஜார் வீதி,

வா அன் கோ.
வவுனியா.
மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், 024 2223669