கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகளங்கன் கவிதைகள்

Page 1


Page 2


Page 3

அகளங்கன் கவிதைகள்
கவிஞர் அகளங்கன்
★
வெளியீடு: வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்
9 9 6
曾
நா. தர்மராஜா பம்பைமடு, 5 - 06 - 1996 வவுனியா.

Page 4
அகளங்கன் கவிதைகள்
எழுதியவர்: அகளங்கன் முதற்பதிப்பு: ஆணி, 1996,
வெளியீடு முத்தமிழ்க் கலாமன்றம், வவுனியா, பதிப்புரிமை: S(5LDS). , 5 stud Urgr B. A. (Hons, ) அச்சுப்பதிவு: சுதன் அச்சகம், வவுனியா,
அட்டைப்படம்: K. S. பவான், மட்டக்களப்பு
விலை: ரூபா 7O /-
>6 >6 S6
AGA LANGAN KAVITHAIGAL
Poems in Thamizh by AGALANGAN First Edition: June 1996 Published by ; Muththamizhik Kalamantram, Vavuniya. Copy Rights; Mrs. P. Tharmarajah, B. A. (Hons.) Printed by: Suthan Printers, Vayuniya. Cover design K. S. Bayas, Batticaloa.
Price: 701

சிரித்திரன் ஆசிரியர்
அமரர். சி. சிவஞானசுந்தரம்
அவர்களுக்கு
இந்நூல்
பணிவான
கா னி க்  ைக.

Page 5
-
-
二エ一
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ் த் து  ைர.
தம்பி அகளங்கனின் கவிதைகளின் தொகுப்பு "அகண்ங்கன் கவிதைகள் " என்ற பெயரில் நூல் வடிவம் பெறுவதையிட்டு மிகவும் மகிழ்கின்றேன்.
நாடறிந்த நல்ல எழுத்தாளராகிய அவர் சிறந்த கவிஞர் என்பதும், புராணங்களுக்குப் பயன் சொல்லு வதில் (புராண படனம்) வல்லவ்ர் என்பதும், சிறந்த பேச்சாளர் என்பதும் நா ங் க ன் பெருமைப்படக்கூடிய விடயங்களே,
தேசிய சாகித்திய மண்டலப் பரிசு, மாகாண சாகித்திய மண்டலப் பரிசு உட்பட நாடளாவிய ரீதியில் பல பரிசுகளைத் தன் ஆற்றலால் வென்று வன்னி மண் இனுக்குப் பெருமை சேர்த்தவர். பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் அவர்,
இந்து கலாசார ராஜாங்க அமைச்சினால் 'தமிழ் மணி' என்னும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட அகளங்கனின் ஆற்றல் முழுமையாக வெளிவர நாம் அவருக்குப் போதிய ஒத்துழைப்பை நல்ல வேண்டும்:
மண்வளமும், மனவளமும் நிறைந்த வன்னியில் சிந்தனை வளமும், கவி வளமும் மிக்க ஒருவராகத் திகழும் அகளங்கனின் இக் கவிதைத் தொகுப்பு இம்மண்ணின் பெருமை சொல்லும், பலர் மனங்களையும் பலபரிசுகளை பும் வெல்லும், என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. சமூக உணர்வுமிக்க அகளங்கனின் இக்கவிதைநூல் அவரது இலட்சியச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறு துணையாக அமையும் என்பது என் நம்பிக்கை.
தம்பி அகளங்கனின் இந்நூல் சிறப்புறவும், அவர் சிறப்புறவும் மனமார்ந்த வாழ்த்துக்களை வழங்குகின்றேன்
த ன் றி.
இங்ங்ணம் சு. வீரசிங்கம், நெளுக்குளம், தலைவர் , ப, நோ கூ. சங்கம்,
sus asil fr @#@#ur,

Page 6
வெளியீட்டுரை,
(Pகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழுமதி போல், தமிழ்மணி அகளங்கன் வன்னி வளநாட்டின் பம்பைமடுவில் நாகலிங்கனாரின் இளைய மகனாக முத் தமிழ்க் கடலில் முகிழ்ந்தெழுந்து ஒளிவிடும் நல்லறிஞன்
தமிழ்த் தொண்டில் தன்னை ஆழ்த்திக்கொண்டு, இலக்கியப் பணியோடு, சமயத் தொண்டும் ஆற்றிவரும் அகளங்கன் - சொல்லாளன், கட்டுரையாளன், கவித்துவம் துள்ளும் நற்கவிஞன், நாடக எழுத்தாளன், நல்ல மனிதன்.
பழந்தமிழ் இலக்கியப் புலமைபெற்ற இவர், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ' என கவிதை கள், கதைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியும், மேடைகளில் உரையாற்றியும் வருபவர்,
இவரது இலக்கியச் சிமிழ், இலக்கியத் தேறல். தென்றலும் தெம்மாங்கும், அன்றில் பறவைகள் , இலக்கிய நாடகங்கள் ஆகிய நூல்களை வவுனியா முத்தமிழ்க் கலா மன்றம் வெளியிட்டுப் பெருமைகண்டது.
அன்றில் பறவைகள் என்னும் நாடக நூல் தேசிய சாகித்திய மண்டலப் பரி  ைச த் தட்டிக்கொண்டது, இலக்கிய நாடகங்கள் நாடக நூல் வட கிழக்கு மாகாண சாகித்தியமண்டலப் பரிசு பெற்றுள்ளது.
கவிஞர் அகளங்கனுக்கு இலக்கிய உலகில் தனியான தோர் இடமுண்டு. ஆதலினா ல், அவரது கவிதை நூலை வ வு னி யா முத்தமிழ்க் கலா மன்றம் வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றது,
அகளங்கனது ஆக்க இலக்கியங்களுக்கு ஆர்வலர்கள் அளித்துவருகின்ற ஆதரவு அளப்பரியது. அந்த ஆதரவு என்றும் உண்டு என்ற மனநிறைவோடு உங்கள் கைகளில் அகளங்கன் கவிதைகள் நூலைத் தவழவிடுகின்றோம்,
பி. மாணிக்கவாசகம், ச. அருளானந்தம், செயலாளர், தலைவர், (பத்திரிகையாளர்) ( பிரதிக் கல்விப் பணிப்பாளர்
வ, கி, மா. ) முத்தமிழ்க் கலா மன்றம், வவுனியா,

ம தி ப் பு  ைர
uബ
இலக்கியமணி, தமிழ்மணி, கவிஞர் செ.குணரத்தினம் (அமிர்தகழியான்)
விேதை எந்தவேளையில், எப்போது, எங்கே வரு மென்று எவராலும் சொல்ல முடியாது. வயற் 87-19 லும் வரலாம், வாய்க்காலோரத்திலும் வரலாம், கடலி லும் வரலாம், காதலர் மடலிலும் வரலாம்.
。 '' ബ " " இன்று எப்படியாவது ஒரு கவிதையை எழுதியே ஆகவேண்டும் ' என்று மூச்சுப்பிடித்திருந்து எழுதிமுடித்த கவிதையைவிட மனவேதனையிலோ, அல்லது மகிழ்ச்சி யிலோ ஒருத்தன் அவனையும் மறந்து கிறுக்கிய நாலு வரிகள் சிறந்த கவிதையாக அமைந்துவிடுவதுண்டு. ஆம் , உள்ளத்தின் உணர்வே கவிதை.
" அகளங்கன் கவிதைகள் ' என்ற இந்நூலில் பல தலைப்புகளில் அழகழகான கவிதைகளை நாம் அனுபவித் துச் சுவைக்க முடிகிறது. வளமான வன்னிப் பிரதேசத் தைத் தளமாகக்கொண்டு படைக்கப்பட்ட கவிதைகள் சிலவேளைகளில் ஆவேசங்கொண்டு எல்லையைத் தாண்ட வும் முயல்கின்றன. அந்த எல்லை மீறலும் நல்ல கவிதை களை நமக்கு அள்ளித்தராமலும் இல்லை,
நாம் பிறரைப்பார்ப்பதற்கு முன் நம்மை முதலில் பார்க்கவேண்டும். அப்படிப் பார்ப்வோமேயானால் நமக் குள்ளே - நமது குடும்பத்துக்குள்ளே - நமது கிராமத் திலே . அப்பப்பா எத் த  ைன நாவல்களை, கவிதை களை காவியங்களை, நாம் மறைத்து வைத்திருக்கின் றோம் என்பது புரியும்.
கவிஞர் அகளங்கன் மிக உன்னிப்பாக வன்னிப் பிரதேசத்தை அவதானித்து. அணுவணுவாக ரசித்து அதிலே ல யி த் து நம்மையெல்லாம் பூரிக்கவைத்திருக் கிறார். வன்னிநாட்டின் வளத்தை, அங்குள்ள கிராமியச் செல்வங்களை, மனதைத் தொடும் இயல்பான வாழ்க்கை முறைகளை எல்லாம் மிக மிக நேர்த்தியாக நம்முன்னால் கவிதைப்படம் போட்டுக் காட்டுகிறார்.

Page 7
- 7 7 -
வன்னிப் பிரதேசத்தை நான் அறிந்தவரை கவிதை வடிவில்வெளிப்படுத்திக் காட்டிய முதற்கவிஞர் அகளங்கன் தான். தெரிந்த விசயங்களும், தெரியாத புதினங்களும் sills" ... ... * வன்னி நாடு இப்படியா " என்று வியந்து மூக்கில் விரல் வைக்கத் தோன்றுகிறது.
' கண்ணையே மயக்கிடும் கழனிசூழ் பதிதனில்
கானமயில் நடனமாட கருவண்டு பண்பாடும் நிலைகண்டு களிகூடும்
கந்தனே வன்னியிறையே " என்று வன்னித் தெய்வக் கந்தனை வணங்கும் அழகான பாடல் வன்னிப் பிரதேச மணத்தோடு, பக்திச்சுவையையும் நமக்குஅள்ளித் தருகிறது. சற்று நீளமான கவிதைதான் என்றாலும் மூச்சு விடாமற் படிக்கும் அளவிற்கு ஆர்வத்தைத் தூண் டும் ஒசைநயங்கள் நம்மைப் பிரமிக்கச் செய்கின்றன. ' உலகாளும் அம்மையே ' என்ற மற்றுமொரு கவிதை நெஞ்சைப் பிழிகிறது,
' கொலை வாளென் நெஞ்சையே
குறிபார்த்த போதும்நான் குறுநகை புரியவேண்டும்; சிலபோது வாழ்ந்தாலும் சிந்தனைசெய் மனிதனாய்ச் சிறப்போடு வாழவேண்டும் '. என்ற பல நல்ல கருத்துக்களை இப்பாடல் மூலம் நமக்குத் தந்து பரவசப்படுத்துகிறார்.
வன்னிப் பிரதேசத்தை நினைத்ததும் நமக்கு முதன் முதலில் நினைவிற்கு வருவது வன்னிநாட்டை அரசாண்ட பண்டார வன்னியன் தான். அவனது சிலை திறப்பு விழாக் கவிதை, பண்டாரவன்னியனோடு சேர்ந்து வன்னி யின் வளத்தையும், வனப்பையும் நமக்குக் காட்டுவது சிறப்பிலும் சிறப்பு.
கல்லெனத் திரண்ட தோளும், கடலென விரிந்த LAN FT Iff L | Lib... ... ' என்ற கவிதையைப் படிக்கும்போது கம்ப
னின் விருத்தப்பாக்களைப் படிக்கின்ற உணர்வு ஏற்படு

— V / /—
கிறது: ஈழத்தில் பாரதிக்குப் பின் அவன்வழியில் வந்த கவிஞர் பரம்பரையினர்களின் முன்வரிசையில் அகளங்க னையும் அமரவைக்கலாம் என்று, அவரது கவிதைகள் நமக்குச் சிபார்சு செய்கின்றன.
சமாதானம் துளிர்க்க வேண்டும்" என்ற தலைப்பி லான கவிதை நம்மைச் சற்று உசுப்பிவிட்டு ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. இன்றைய பயங்கர நிலை நமது நாட்டை எவ்வளவு தூரத்திற்கு துயரக் குழியினுள் புதைத்துவிட்டது. இந்தநிலை மாறவேண்டும், துக்க புரியாயிருக்கும்நிலைமைமாறி, இலங்கை சொர்க்கபுரியாக மீண்டும் சிறக்கவேண்டும் என்று மனிதாபிமான உணர் வோடு சாடும் இக் கவிதையை முழுமையாகப் படித்தால் தான் அதன் முழுச் சுவையையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
கவிஞர் " அகளங்கன் ஒரு சிறந்த சமய உரை யாளர்; பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைந்த ஈடுபாடும், பரிச்சயமும் மிக்க படைப்பாளர், இவற்றைவிட மேலாக நல்ல உள்ளம்படைத்த ம ணி த நே ப ம் மிக்கவர்? ' மரமொடிந்து போனாலும் மனமொடிந்து போகின்ற . கவிதையுள்ளம் இவருக்குள் இருப்பதனால் மற்றவர்கள் பார்க்கமுடியாததையெல்லாம் இவர் பார்த்திருக்கிறார். வன்னிப் பிரதேசத்தை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார், அநியாயத்தைச் சாடி நியாயத்தைத் தூக்கிக் காட்டுகின்றார்.
அத்தை மகளழகை ஆபாசமாய்ப் பாடும் வித்தைக்குக் கவி வேண்டாம், சொத்தேது மின்றிச் சுவைக்க உணவின்றி. வாடும் சாதாரண தொழிலாள மக்களை, அவர்கள் அவலங்களைப் பாடவேண்டும் என்று இவர் பிறிதோர் இடத்தில் சக கவிஞர்களுக்கு அறைகூவல் விடுகின்றார்.
வன்னிப் பிரதேசத்தில் காணப்படும் பாணிவகை கள், வீடுகளின் அமைப்பு முறைகள் பலகாரங்களின் வரிசைகள், பழவர்க்கங்களின் குவியல்கள், விளைாட்டுக் கள், சடங்குகள், என்று கவிஞர் அகளங்கன் வன்னி

Page 8
— V / / /—
நாட்டை அப்படியே கட்டிப்பிடித்து ஆனந்தக் களிப்பில்
உருள்கின்றார். நாமும் அவரோடு சேர்ந்து இன்பத்தில் உருண்டு மிதக்கின்றோம்.
கர்வம் பிடித்த முயல், நிகரிலா அழகு, புதுவெள்ளம் என்று பல பாடல்களும் இசையோடு பாடக்கூடிய சில மெல்லிசைப் பாடல்களும் இந்நூலுக்கு மேலும் சுவை சேர்க்கின்றன.
பக்கங்களின் ஆக்கிரமிப்புக்கு அஞ்சி இங்கு நான் தொட்டுக் காட்டிய கவிதைகள் சிலவே, இவற்றைவிட மேலும் அதிகமான கவிநயம் சொட்டும் கவிதைகள் இந் நூலில் பரவிக் கிடக்கின்றன. அவற்றை முழுமையாகப் படித்தால்தான் முழுச் சுவையையும் பூரணமாகச்சுவைத்து அனுபவிக்கமுடியும்.
இச்சந்தர்ப்பத்தில் ஒன்றைக் கூறவேண்டும். பல கவிதைகள் சற்று நீளமாக - கவியரங்குகளில் பாடப்பட்ட கவிதைகள் போல காணப்படுகின்றன. அ வ ற்  ைற ப் பொறுமையோடு சுவைத்து ரசித்தால் இன்பம் பயக்கும். வானவில் நீளமானது என்று அதை நாம் பார்த்துப் பரவச மடையாமல் விட்டதில்லையே! வானவில் அழகு காட்டி மறைந்துபோகும். ஆனால் அகளங்கனின் கவிதைகள் காலமுள்ளவரைக்கும் வன்னிப் பிரதேச வளத்தை நமக் குக் காட்டி, வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று உறுதி
யாக நம்பலாம்.
மொத்தத்தில் அகளங்கனின் கவிதைகள் நமது
சித்தத்தை நிறைக்கின்றன - சிலிர்ப்பூட்டுகின்றன. ஆனந்தக் களிப்பைத் தந்து ஆடாமல் ஆடவைக்கின்றன.
3-ம் குறுக்குத் தெரு, இவ்வண்ணம்
அமிர்தகழி, அன்புடன் மட்டக் களப்பு. செ. குணரத்தினம்

முன்னுரை.
* கவிதை கலைகளின் அரசி " என்றான் ஒர் ஆறிஞன் எனக்கு மிகவும் பிடித்தமான இலக்கிய வடிவ மும் கவிதையே,
எனது தந்தையாருக்குக் கவிதைகளிலே மிகுந்த ஈடுபாடு உண்டு. சில கவிதைகளும் எழுதியிருக்கிறார். எனவே, எனக்குக் கவிதை எழுதும் ஆற்றல் தந்தை வழிச் சொத்து.
நான் கவிதை எழுதத் தொடங்கி, இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுகின்ற இந்நேரத்தில் எனது இக் கவிதைத் தொகுப்பு உங்கள் கையில் தவழ்கின்றது.
நிகழ்ச்சிகளோடு உறவாடி, உணர்ச்சிகளோடு போராடி எழுச்சிக் கவிதைகளைப் பிரசவித்து மகிழ்ச்சி காண்பவன் கவிஞன்.
எங்கள் நாட்டுச் சூழல், கடந்த ஒரு தசாப்தத் திற்கும் மேலாக, கவிஞனுக்கே உரித்தான ஆவேசத்தை யும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும், அளவுக்கதிகமாகவே கொடுத்து வருகின்ற போதிலும், அவற்றைச் சுதந்திர மாக வெளிக்காட்ட முடியா த ப டி அமைந்துவிட்ட கொடுமையினால், அவற்றைப் பாடவும் முடியாமல் பாடா மில் விடவும் முடியாமல் அவஸ்த்தைப் பட்டிருக்கிறேன்
பாடியவற்றிலும் சி ல வ ற்  ைற இத்தொகுப்பில் சேர்க்காமல் தள்ளியிருக்கிறேன், உன்ௗவைகளைக் கொண்டு தள்ளியவைகளை உணர்ந்துகொள்ளலாம்.
வானொலி தொலைக் காட்சிக் கவியரங்குகள் உட்பட பல கவியரங்குகளில் பங்கு கொண்டும், பல மெல்லிசைப் பாடல்களை எழுதியும் பல போட்டிகளிற் பரிசுபெற்றும், கவிதைத் துறையில் ஈடுபட்டுக் கொண்டே வந்திருக்கிறேன். பத்திரிகை, சஞ்சிகைகளிலும் சில கவிதை கள் வெளிவந்துள்ளன. நான்கு சிறிய கவிதை நூல்களை யும் வெளியிட்டுள்ளேன்.

Page 9
ܕܚܚܲܝ X܂ ܚ
மாத்தறை மக்கள் சமாதான இலக்கிய மன்ற நடாத்திய கவிதைப் போட்டியில் (1995) பரிசுபெற் எனது கவிதை மனிதநேயம் செழிக்கவேண்டும் (58-1 பக்கம்) என்ற தலைப்பில் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்தி நாவற்குழியூர் நடராஜன் நினைவுக் கவிதைப் போட்டியி இரண்டாம் பரிசு பெற்ற ' சமாதானம் துளிர்க் வேண்டும்" (65-ம் பக்கம்) என்ற கவிதையும் சேர்க்க பட்டுள்ளது.
'சேற்று வயல்க் காட்டினிலே.' சலசலக்கு ஒசையிலே." என்ற வானெலி மெல்லிசைப் பாடல்கள் (78கம், 81-ம் பக்கங்களிற் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நூலுக்கு மதிப்புரை வழங்கிய என் மதிப்பு குரிய இனிய நண்பர் கவிஞர் செ. குணரத்தினம் அவ களுக்கும், எனது நூல் வெளி யீ டு களு க் கு ஆதர6 வழங்கி உற்சாகப் படுத்திக்கொண்டு வருகின்றவரும் வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவரும் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவருமான அன்பிற்குரிய திரு. சு. வீரசிங்கம் அவர்களுக்கும். இந்நூலை வெள யிடும் முத்தமிழ்க் க லா ம ன் ற த் தவைவர் திரு அருளானந்தம், செயலாளர் திரு. பி. மாணிக்கவாசக
ஆகியோருக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
இந்நூலை ஆக்குவதில் எனக்கு உறுதுணையா அமைந்த நண்பர்கள் , திரு. செ. சண்முகநாதன் கவிஞர் சு முரளிதரன், எழுத்தாளர் ஒ, கே. குணநாதன் ஆகியோருக்கும். எனது " இலக்கிய நாடங்கள்' நூல் வெணியீட்டிற்கு உத வி செ ய் த அவுஸ்திரேலியாவின் தற்பொழுதிருக்கும் நண்பர்கள் திரு.எம். குணசிங்கம் (கரை ராயன்குளம் ), திரு. எம். எஸ், செல்வராஜா ( தவசிய குளம்), ஆகியோருக்கும் என் நன்றிகள் என்றும் உள,
இந்நூலாக்க முயற்சிக்கு ஆக்க பூர்வமான பல ஆலோசனைகளை வழங்கிய தமிழ்மணி உடுவை எஸ் தில்லை.நடராஜா (அரச அதிபர், கிளிநொச்சி.) அவர்களுக் கும் என் நன்றிகள். -

:
- X 1 -
*" வன்னிக் கிராமியம் ' கவிதையை ஆக்குவதற்குப் பல விபரங்களையும் தந்துதவிய திரு. க. ஐயம்பிள்ளை (பிரதேசச் செயலாளர், நெடுங்கேணி ) திரு, சு, வீரசிங்கம், (தலைவர், வ. ப. நோ, கூ. சங்கம் ) திரு க. நடராஜா ( உதவிக் கல்விப்பணிப்பாளர், முறைசாராக் கல்வி, வவுனியா ) திரு. நா. யோகராசா, ( கிராமசேவை உத்தியோகத்தர் சாஸ்த்திரிகூளாங்குளம்) ஜனாப், அப்துல் சமத், வ/முஸ்லிம் மகாவித்தியாலயம்) திரு. சு பரமநாதன் ச.நீ பனங்காமம்) ஆகியோருக்கும், எனது கவிதைகளை வெளியிட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகள், வானொலி நிலையம், ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் என்பனவற்றிற் கும் என் நன்றிகள் என்றும் உரியன,
எல்லாவற்றிற்கும் மேலாக, என் நூலாக்க முயற் சிக்கு உறுதுணையாக - உந்துசக்தியா இருந்து, எனது ஆக்கங்கள் அத்தனையும் நூலுருவில் வரவேண்டும் என் பதில் என்னைவிடவும் அதிக ஆர்வத்தோடும், அக்கறை யோடும் இருக்கின்ற தம்பி க. குமாரகுலசிங்கத்திற்கு இன்னும் பல நூல்களை ஆக்குவதே நன்றியாகும்.
ஒரு கவிஞனின் வாழ்க்கைத் துணைவியாக இருப் பதில் உள்ள கஷ்டங்களைப் பூரணமாக உணர்ந்து கொண்டு, என்னை எல்லாவகையிலும் உற்சாகப்படுத்திச் சோர்வகற்றி எழுதத் தூண்டுகின்ற என் இல்லாளின் ஒத்துழைப்பே இந்நூல் வெளிவருவதற்கும் துணையாக அமைகின்றது;
ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் கண்டுகளிக்கப்போகின்ற வாசகர்களுக்கும், இந்நூலை அச்சுப்பதிவு செய்து தந்த சுதன் அச்சகத்தாருக்கும் என் நன்றிகள்.
நா. தர்மராஜா உங்கள் LI I Líb60) Lu 1DG8), , அ ன் பு வவுனியா, I1 ز - U 6 1996سے அகளங்கன்

Page 10
பொருளடக்கம்
ஆசி அருளி - - - என் நாவில் நீ வந்து - - - வன்னி இறையே-- m - - இனிய தமிழ் தந்திடும் தம்பிரானேசிலகணம் அடி தருதி - - - உலகாளும் அம்மையே - - - பண்டார வன்னியன் - - سسسسس : பண்டாரவன்னியன் சிலை திறப்பு - வன்னிக் கிராமியம் - - - மானினம் வகுத்த வாழ்வு ബ - பேடு அடைந்த கேடு - - -
உங்களின் விஞ்ஞான ஊசி மருந்தெல்லாம்.
பொழுது விடிகிறது வாழ்வு விடியவில்லை நியாயப் படுத்தப்படும் அநியாயங்கள் வேள்விகள் - - ബ ബ மானுடம் இல்லா மானிடன் - - தீக்கவிதை படைத்திடுக- - - ஏப்ரல் பூல் எங்களுக்குந் தேவைதானா ? மேதினம் - -- - - -- மனித நேயம் செழிக்கவேண்டும் - சமாதானம் துளிர்க்கவேண்டும் - சிந்தனைசெய் தமிழா ! - - நிகரிலா அழகு - - - கர்வம் பிடித்த முயல் - ബ ബ சேற்று வயல்க் காட்டினிலே - - புதுவெள்ளம் - - - - ஏழைக்கு உன் கருணை கண்துடைப்பு கலகலக்கும் நெற்பயிர் - n - வந்தாரை வாழவைக்கும் வன்னி - பாடுபட்ட உழவனுக்கு - -- - புத்தம் புதுவருசம் - - - கருணைப் பெரும் வடிவே ബ -- இறைவனின் பரிசு - - -- தணல் மீறித் தமிழ் பாடும் - - அன்னையவள் பாதம் வாழ்க - b
0. 02 03 07 08 09 10 1 13 33 35 4 43 46 49
51
53 56
58
66 72 76 78 79 80 8. 82 83 85 魔5
* 86 87
88
 

asal
a Louiò
அகளங்கன் கவிதைகள்
* ஆசி அருளி'
பல்லவி வினைகள் அகல வரந்தர வேண்டும். விநாயகனே உந்தன் அருள் மழை வேண்டும்
அனுபல்லவி மனைகள் பொலிந்து மகிழ்வுற வேண்டும், மானிலம் எல்லாம் மதிப்புற, எழுந்து
சரணங்கள் ஆனை முகனழில் அருள் மழை தோன்றி ஆதி வினையற அருள் தர வேண்டும், ஞானக் கடலினில் அருள் அலை தோன்றி ஞாலம் மகிழ்வுற நல்குதல் வேண்டும்.
பாச வினைகளே பாறிட வேண்டும்.
பாவ நிலைஎன்றும் மாறிட வேண்டும். நேச முனதன்றி வேறென்ன வேண்டும். நேய நினைவுகள் யாரினில் தோன்றும்.
ஆதி முதல்வனே ஆனந்தம் வேண்டும். ஆசி அருளியெனை ஆட்கொள்ள வேண்டும் சோதிச் சுடரொளிச் சொரூபமே கண்ணில் சோர்வு பிறக்குமோ இனியிந்த மண்ணில்,
(வினைகள் . )

Page 11
02
அகளங்கன் கவிதைகள்
* என் நாவில் நிவந்து '
கலை வாணியே தாயே - கருனைக் கடல் தான்நீயே அம்மா
( கலை. )
அலை மோதும் கரைமீது மணல் போலவே - துன்பம் மலை போலக் குவிந்தாலும் துணை தான்நீதுே
( கலை. )
கொலை வாள் போல் அறியாமைக் குழி நீந்தியே - இன்பம் நிலை யாய் உன் நினைவாய்நான்
நிதம் வாழவே
அறி யாமை என்நெஞ்சம் அறி யாமையாய் - கலைகள் தெரி யாமை இன்றோடு தெரி யாமையாய்
என் நாவில் நீவந்து உறைந் தாலென்ன - இனி வெண் தாம ரைப்பூவை மறந் தாலென்ன
 

அகளங்கன் கவிதைகள் O3
* வன்னி இறையே ”
பண்ணொழுகு பாடலைப் பாடியறி யேன் மனப்
பக்குவஞ் சிறிதுமில்லேன் பாவியர் வாழ்கின்ற பாரினில் நானுமொரு
பாவியென வாடுகின்றேன் மண்ணையே பொன்னையே பெண்ணையே எண்ணுமொரு
மனிதனென ஆக்கிவைத்தாய் மாறாத சோகத்தின் ஆறாத துயரத்தில்
மன நொந்து பாடுகின்றேன் விண்ணையே காத்திடும் வெற்றிவே லாயுதர்
வீரனே சூரர்தம்மை வீழ்த்தியே வெற்றியை நாட்டியே தேவ குலம்
விளங்கவே வைத்தவேலா கண்ணையே மயக்கிடும் கழனிசூழ் பதிதனில்
கானமயில் நடனமாட கருவண்டு பண்பாடும் நிலைகண்டு களிகூரும்
கந்தனே வன்னியிறையே. ( 0 1 )
சொத்துச் சுகங்களுஞ் சொந்தபந் தங்களுஞ் சொர்க்கத்தைத் தருவதில்லைச் - சொகுசான வாழ்க்கையின் பவிசான நிலைகளுஞ்
சுகந்தரும் வழிகளில்லை மெத்தைக் களிப்பிலும் மேதைச் சிறப்பிலும்
மேன்மைகள் முடிவதில்லை . - மெல்லியல் குழந்தைகள் தருஞ்சுகம் பின்னரும்
மேலுலகந் தொடர்வதில்லை தொத்திடும் வியாதியெனத் தொடர் திடும் ஆசைகளும்
தோல்வியே வேறு இல்லை" தொந்தியுஞ் சரிந்துகால் தளர்ந்துகை ஊன்றியே
துடித்திடும் முதுமைதனிலே " குத்திடுஞ் சூலமொடு காலனவன் வருமுன்னே
கும்பிட்டு உனையழைப்பேன் குளங்களும் வயல்களும் குளிர்காவும் சூழ்வன்னிக்
குகனே என் வன்னியிறையே, ( ύ 2 λ
ܗ

Page 12
04 அகளங்கன் கவிதைகள்
இளமையின் மிடுக்கிலே இறைவனை மறுத்திடும்
இனத்திலே நானுமொருவன் இன்னாத செய்துதினம் இன்னலில் வாடியே
இறையுணர் வெய்திவிட்டேன் பழமையின் முறையிலே பக்தியொடு பூசனைகன்
பண்ணியது என்றுமில்லைப் பாவியென் மனப்போக்கில் பரமசிவ என்று நித
பாடியே பணிவதுண்டு வழமைகள் மாறினும் வற்றாத பக்தியென்
வாழ்விலே என்றுமுண்டு வறுமையில் வாடுமெனை வாவென் றழைத்துந4
வாழ்வுதனை ஈந்துவிட்டால் அளவினில் பெரியதொரு அருங்கோயில் கட்டி யுனை
அன்போடு பூசைசெய்வேன் அன்பர்கட் கருள்செய்ய அழகான வன்னியில்
அமர்ந்தஎன் வன்னியிறையே, ( 0.3
கொலைபா தகஞ்செயுங் கொடு வாளைப் போல்விழி
கோணத்தைக் கண்டுசொக்கிக் குங்குமக் கொங்கையின் கொடுமையை அறியாது
குக்கலைப் போல்த்தொடர்ந்து இலையோ இடையென்றும் இதழோ அமுதென்றும்
இழுப்புண்டு பின்திரிந்து இதமான மொழிபேசி இன்பமே விலைபேசி
இகலோக மாயைதனிலே வலையிலே சிக்குண்ட மானென்ற நிலைதன்னில்
வாழ்வதோ சாவோ என்று வகைதனை அறியாது வயதுபோய் நரைசேர
வாழ்வினை இழந்தவேளை நிலையாக உனையெண்ணும் நீசரின் நிலையிலெனை
நினையாது இந்தவேளை நின்னடிகள் தனையெந்தன் சென்னிமிசை என்றுே நிலைக்கவை கந்தவேளே. ( 0.4
* குக்கல் - நாய்
 

அகளங்கன் கவிதைகள் 05
தொலைகின்ற பணந்தேடித் தொலையாத செல்வத்தைத்
தொலைக்கின்ற மனிதமனமே ! தொண்டுசெய் திறையடி தொழு திடு பாவங்கள்
தொலையுமே உன்னை விட்டுக், கலைகின்ற கற்பனையைக் காலடியிற் போட்டுநீ
கந்தனை எண்ணுமனமே கவலையும் நோய்நொடியுங் கணப்போதி லகன்றுவிடுங்
கதியென்று வேறுஇலையே; அலைகின்ற சிந்தையை அடக்கியே வாழ்வினில்
அமைதியை ஏற்றிவைப்பான் அழுகின்ற உள் ளத்தின் அவலத்தைப் போக்கியே
அன்பினில் இன்பந் தருவான் கொலையென்ற பயமின்றிக் குலமாதர் போலமான்
குயில்பாட நடனமாடுங் கோலமயில் ஒடுதினங் கூடிநடம் ஆடும் வனம்
குகனேனன் வன்னியிறையே, ( 05 )
பொய்தனைச் சொல்லியே மெய்தனை வளர்க்கின்ற
புரட்டுக்கள் நிறைந்தகாலம்; பொறாமையுஞ் சூதுகளும் பொல்லாப்புப் பேச்சுகளும்
பொதுவாகி விட்டகாலம், கைதனை நீட்டியே லஞ்சத்தை வாங்கியே
காரியஞ் செய்யுங்காலம், கனமுலை விலைபேசிக் காளையரை வலைவீசுங்
கடைகெட்ட காலம்ஐயா ! தையெனத் தாளமிடத் தண்டைகள் ஓலமிடத்
தளிர்நடை யிட்டுமெல்லத் தையலார் இருபுறமும் மையலாய்ச் சேர்ந்துவரத்
தரணியின் குறைதீர்க்கவே மெய்யென உன்னையே நம்பிடும் அடியார்கள் மேலுலகு பெறும்வண்ணமே மெள்ளவே வரவேணும் வள்ளலே குகனே என்
மேன்மைமிகு வன்னியிறையே. ( 06)

Page 13
O6 அகளங்கன் கவிதைகள்
நாளுக்கு நாளிந்த நாட்டிலே கொடுமைகள்
நடப்பதைக் காணவிலையோ ? நலிந்தவர் மெலிந்தவர் நல்லவர் கெட்டவர்
நாமுந்தன் பக்தரிலையோ ? வேளுக்குத் திறந்த உன் விழியிமை மீண்டுமிவ் வேளையிற் திறந்திடாதோ ? வீணரை அழித்திட வாயிதழ் திறந்தொரு
வீரப்புன் ணகை வராதோ ? வேலுக்கு இவ்வேலை விட்டதால் யோகத்தில்
வீற்றிருந் தாறும்நிலையோ ? வீரனே சிவன் மைந்தன் வேலனே வீனரை
வேல்கொண்டு வீட்டியருளே சேலுக்கு இணையான கண்ணோடு கலையினம் செழித்துவிளை யாடுஞ்சோலை சிரித்துமலர் சிந்திமகிழ் சிறந்தவள வன்னியுறை
சேவற்கொடி உயர்த்தகோவே , ( 07)
 

அகளங்கன் கவிதைகள் O7
எனது
உனது
6TCւՔ5
$gorଗy
* இனிய தமிழ் தந்திடும்
தம்பிரானே '
மன முன்னிடம்
நினை வென்னிடம்
ரிய இன்பமுந் உலகி லொளி தந்திடும் உயிரு ருகி வெந்திடும்
உரிய கலை விந்தையும் -
தரு முன்பதங்
கவிதை எழு தென்றதுங்
கதறி
சினம சிரம
an
அழ மென்பதங் கசட னொரு நல்வினை கருத விலை உன்வினை கதியெ னவு னன்பினைக் -
தொடு சூர்களின் லையு மேன்மையுஞ்
சிதறி விட வேல்விடுஞ் -
Goals
சிறிய னென நொந்துயிர் இலபொ (ԼքՑil சிந்துமுன் சிவமு ருக வந்துமுன் -
நிற வள்ளியின்
கணவ னென முன்தினம் கருணை கொடு வந்திடுங் അ
இருமை வினை இன்றொடும் இரிய எனை வென்றிடும்
தந்திடாயோ
வந்திடாவோ
கண்டிடாயோ
காட்டிடாயே"
செங்கைவேலா
நின்றிடாயோ
கந்தவேளே
இனிய தமிழ் தந்திடுந் - கம்பிரானே:

Page 14
08 அகளங்கன் கவிதைகள்
* சில கணம் அடிதருதி "
எனது மன நினைவுமுழு முனது திரு வடியதனி
லெழியனென துயிரதனி - லுறைவோனே எழிலொழுகு கலபமயி லெழுதரிய கவிதைதர
எனது மன வினையகல - அருள் வாயே முனமுமுன தடிசரண முழுமனதி லெழுதியறு
முகவெழிலி லுருகிமன - மழிவேனே முருகனென மருகனென முனிவரரு மடிபரவ
முறுகுசின மனமுருகி - முயல்வேனே தின முமதி பிழையெபுரி சிறியனென தவறுபல
தினமுமுன தடிபர வ - எனையாளே
சிறியனென துடலிலுறு சிறுமைமிகு நினைவுகளை
செருமுகம தெறிகணைபோ -லெறியாயோ செனனமுத லுனது திரு வடியதனை முடியதனில்
செகமெனது மனதிலற - நினைவேனே சிறியனென தருமனது செறிக விதை பொழியவொரு
சிலகண ம தடிதருதி - பெருமாளே.
 

அகளங்கன் கவிதைகள் 09
* உலகாளும் அம்மையே '
உலகாளும் அம்மையே
உனை நாளும் வேண்டினேன்
எனை ஆள வேண்டுமம்மா. அலைபாயும் உள்ளமே
அமைதியாய் மாற நீ
அருள்செய்ய வேண்டுமம்மா. கொலைவாளென் நெஞ்சையே
குறிபார்த்த போதும்நான்
குறுநகை புரியவேண்டும். கொடுமைமிகு உலகிலெனைக்
குடல் கிழித் தெறிந்தாலும்
கோபத்தைத் தள்ளவேண்டும். சிலபோது வாழ்ந்தாலும்
சிந்தனைசெய் மனிதனாய்ச்
சிறப்போடு வாழவேண்டும். சிறியவர்கள் செயல்கண்டு
சிரித்துத் திருத்தியவர்
சிறப்புறச் செய்யவேண்டும். அடிமையெனும் நிலையிந்த
அகிலத்தில் இல்லாமல்
அகற்றி நல் வாழ்வுவேண்டும்: அன்பென்னும் ஒன்றிலே
அனைவரும் சமனென்ற
அரசாட்சி அமையவேண்டும். இல்லாமை என்பதே
இல்லாமை யாயெந்த
இல்லமுந் திகழவேண்டும். இன்பமிவ் வுலகிலே
இல்லாத பேர்களினி
இல்லாதநிலைமை வேண்டும்,

Page 15
O அகளங்கன் கவிதைகள்
கொலைகளுங் கொடுமைகளுங்
குழியிலே புதையுண்டு
குதுரகலம் மலியவேண்டும். குறைவின்றி இவையென்றுங்
குவலயத்தில் நிறைவுறக்
கொடுத்திட வேண்டுமம்மா,
ක්‍රඑළුඑළුළු නළුඑළුළුඑළුඑළුළුෆිදා ෆිඵටළුඑළුට්ට්ෆිට්ෆිට්
● 朝 ● 99 * பண்டார வன்னியன்
கல்லெனத் திரண்ட தோளுங்
கடலென விரிந்த மார்பும், நில்லென எதிரி தம்மை
நிறுத்திடும் வீர வாளுங், கொல்லென வருவேல் காக்கக்
கொடுத்த கேடயமுங் கொண்டு செல்லென எதிர்த்து வெள்ளைச்
சேனையைக் கலைத்த வீரன்.
தோற்றலும் வெற்றிப் பாதை
தொடர்வதும் உலக நீதி ஆற்றலும் புகழும் பண்பும்
அவனியில் நிலைத்து நிற்கும். காற்றிலா விடினும் வாழ்வோம்
கனவிலும் அடிமைத் தாழ்வை ஏற்றிடோம் எனப்போர் செய்த ஏந்தல் பண்டார வன்னி,
நெற்றியில் நிலைத்த நீறும்
நீள்கரம் பிடித்த வாளும் வெற்றியைக் குறித்த நோக்கும்
வீரத்தை விளைத்த நெஞ்சும் உற்றவெம் பகையை வென்று
உயர்கொடி யுடன் அடங்காப் பற்றினை ஆண்ட வீரப்
பண்டார வன்னித் தோற்றம்.

அகளங்கன் கவிதைகள் f/
* பண்டார வன்னியன் சிலை திறப்பு ”
தேவாரம் பெற்றதிருத் தலங்கள் ரெண்டுஞ்
சேர்ந்துதிகழ் வன்னிவள நாட்டை யாண்ட, பூவாரம் பூண்டதிரு மார்பன் வெற்றிப்
புகழ்பூத்த பண்டார வன்னி யற்குப் பாவாரஞ் சூட்டி, யவ்ன் அரசு செய்த
பண்பான வன்னியாம் வவுனி யாவில், நாவாரப் புகழ்பாடிச் சிலையை வைக்கும்
நன்னாளாம் இன்னாளே பொன்னா ளாகும்.(1)
வெள்ளையரை எதிர்த்ததமிழ் இராச்சி யங்கள்,
வீழ்ந்தபின்னும் வீறாப்பாய் மானங் காப்போம்; கொள்ளையெனும் நோயினிலே உயிர்போ னாலுங்
கொடுமைமிகு விஷத்தினிலே உயிர்போ னாலும் மெள்ளவரும் முதுமையிலே உயிர்போ னாலும்,
மேன்மைகள் எல்லாமும் போயே தீரும்; எள்ளவரும் எதிர்காலம் எனப்போ ரிட்ட
எம்.வன்னி மன்னவனே இறுதி மன்னன். ( 0 2 )
முல்லையொடு மருதநிலம் முயங்கி நிற்கும்
முருகன் வாழ் குறிஞ்சியொடு நெய்தல் தானும் எல்லையென இருமருங்கும் கோணேச ரோடு
எழில்மாந்தைக் கேதீஸ்வரம் நிமிர்ந்து நிற்குத் தொல்லையென வந்தவெள்ளை ஆட்சி தன்னைத்
துரத்திப்போர் புரிந்த வன்னி மன்னனுக்கு, இல்லையொரு இணையென்றே மண்ணில் வாழும்
ஈஎறும்பு இனங்கூடச் சொல்லி நிற்கும், (03)

Page 16
12 அகளங்கன் கவிதைகள்
எண்ணரிய மக்களெல்லாம் பணிந்து போற்றும்
எழிலாள கண்ணகியின் கோயி லுண்டு;
தண்ணளிகொள் வன்னியிலே ஒட்டு சுட்டான்
தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயமு முண்டு; பண்ணிறைந்த மருதமடு மாதா வுண்டு?
பலர் கூடி வணங்குகின்ற புதூரு முண்டு! கண்ணிறைந்த கணவர்தமை இழந்து விட்டாற்
கனல்பாயுங் காரிகையர் வாழ்ந்த நாடு; (0.
வந்தாரை வரவேற்கும் வன்னி நாட்டில்
வளமெல்லாம் நிறைந்தபல சோலை யுண்டு; செந்தா மரையடர்ந்த குளங்க ளுண்டு;
செந்நெல்விளை கின்றபல வயல்க ளுண்டு; நந்தா விளக்கனைய மனித ருண்டு;
நற்கதலி மாபலாக்கள் நிறைய வுண்டு; மந்தார நறுந்தெரியல் சூடி எங்கள்
பண்டார வன்னியனார் ஆண்ட நாடு. (05
சோலைகளில் மயில்கள் தினம் ஆடி நிற்கும்;
சோர்ந்துநிதம் நாரைகளே வாடி நிற்கும்; பாலைகளில் மந்தியினம் கூடி நிற்கும்;
பயிர் வயலில் தென்றலிசை பாடி நிற்கும்; ஆலைகளில் நெற்குவியல் கோடி நிற்கும்;
அலையடித்துக் கரையில் மணல் மூடி நிற்கும்; சாலைகளில் கல்லெல்லாம் வன்னி மண்ணின்
சரித்திரத்தை அறிவதற்கே தேடி நிற்கும், (06
மதயானை கரடிபுலி வாழுங் காட்டை
வளமாக்கி நெல்வயலாய் வகுத்து; மேலும் இதமான குளங்கட்டி நீரைத் தேக்கி
எல்லோரும் ஒன்றிணைந்து நெல்விதைத்துப் பதமான பருவத்தில் களைகள் கட்டிப்
பகலிரவு ஆவலொடு காவல் காத்தெவ் விதமான விலங்குகட்கும் வெருவி டாமல்
வீரர்கள்தாம் வாழுகின்ற வன்னி நாடு. (01

り
அகளங்கன் கவிதைகள்
வன்னிக் கிராமியம்
மான் ஒடும் மயில் ஆடும் மரத்தின் கொம்பில்
மந்தியினங் குந்தியன்பாய்க் கொஞ்சிவிளை யாடும் தேன் ஒடும் அருவியிலே தென்றல் நீராடும்,
தெவிட்டாத இனிமைதருந் தேன்கனிகள் ஆடும் , வான்ஒடும் மேகத்தின் மதிதடவும் மரங்கள்
மலர்த்தடா கங்கள் வயல் வளம்நிறைந்த வன்னி, நான்பாடும் இம்மண்ணின் இயற்கை அழகெழிலை
நாங்காண இன்னுங்கண் நாலாயிரம் வேண்டும்.
வே று
எங்கள் பிரதேசம் எழிலான வயல்வெளியும் மங்கா வளம்மிக்க மரஞ்செடியும் நிரம்பியதாய், எங்குங் குளங்கள்; குளமெல்லாந் தாமரைகள் எங்கும் மயில்கள், இசைபாடும் பூங்குயில்கள்;
மந்திக் குரங்குகளும், மான்மரைகள் முயலோடு வந்து விளையாடும் வளவுகளுங் கொண்டதுவாய்ப்
பசு மாடு பால் பொழியப் பாதையெல்லாந் தேன் வழிய, விசுவாசம் மிக்க நாய்கள் வீடுகளில் நிறைந் திருக்க:
தென்றலின் அரவணைப்பில் தெம்மாங்கின் தாலாட்டில் இன்பநிலை எய்தி இருந்ததொரு காலம்.
பிரச்சனைகள் எனும் மேகம் புரண்டு புரண் டசைந்து, போரிருட்டு மூடிய தால் போனதெங்கள் வளங்க ளெல்லாம்:

Page 17
14 அகளங்கன் கவிதைகள்
எங்கள் பிரதேச இயற்கை அழகுகளை இங்கெண்ணிப் பார்க்கையிலே இதயமெல்லாம் நிறைகிறது.
தெய்வங்கள்:
ஐயனார் காளி அருள் நாக தம்பிரானும், அண்ணமார் வைரவர் முனி வீரபத்திரரும். கண்ணகை முத்துமாரி வன்னியர் சிவனாரும். பிள்ளையார் முருகனொடு நரசிங்கர் கோவில்களும். பெருமைமிகு வன்னிக்குப் பெருங்காவல் அளித்திடுமே.
புதூர், நாகதம்பிரான் விவசாயி ஒருவரது வீட்டில் மனைவிக்கு மூத்த தொரு பெண் குழந்தை இளைய தொரு பாம்புமாய்ப் பிறந்து வளர்கையிலே;
பெண்குழந்தையைத் தாய் பிரியமுடன் வளர்த்தார். பாம்பின்மேல் தந்தை பாசமுடன் இருந்தார். அடுப்படி, மால், திண்ணை படுக்கையறை எல்லாம் பாம்பும் திரிந்து ; முகட்டு வளை தீராந்தி முழு இடமும்; ஒடி வளர்ந்து வருகையிலே,
பெண்ணுக்குத் திருமணத்தைப் பேசிவந்தோர் அஞ்சியதால் பாம்பைத் தாய் அடித்துப் பல கொடுமை செய்து வந்தாள்,
 

அகளங்கன் கவிதைகள்
பெண்ணுக்குச் சீதனமாய்ப் பெருஞ் சொத்தைக் கொடுத் திடவும், பாம்பதனால் கோபித்துப் பக்கத்தில் இருந்ததங்கள் காணியிலோர் மரத்தினிலே ஏறிக் கிடந்ததங்கே,
பாம்புக் குழந்தையினைக் காணாமல்த் தேடிவந்த தந்தை அக்காணியையே எழுதிக் கொடுத்துவிட, அப்பாம்பு தங்கியநல் அவ்விடமே புதுார் என்பர். வருடம் ஒருநாள் வரும்பெரிய திருவிழாவில் உளமகிழ்ச்சி கொண்டு ஊரெல்லாம் கூடி நாக தம்பிரானை வழிபட்டுப் பொங்கல்வைத்து நாகபயம் நீங்கிடுவார். புதுTர்ப் பொங்கல் என்றால். பெரியதொரு திருவிழாத்தான். அவ்விரவில் நாமெல்லாம் அடைகின்ற மகிழ்ச்சியினை அளவிட்டுச் சொல்வதற்கு ஆராலும் முடியாது, வீ டு கன் காட்டுத் தடிகம்பால் கட்டிவைத்த வீடுகளில் போட்டு வைக்கோலைப் புரிமுறுக்கிக் கட்டி: மண்ணால் சுவரெழுப்பி ' மால் ' முன்னால் கட்டித் திண்ணைகள் அமைத்துச் சிறப்பாகச் சாணத்தால்,

Page 18
  

Page 19
18 அகளங்கன் கவிதைகள்
ந ட் பு வெயிலோடும் மழையோடும்,
காற்றோடும் பணியோடும் பயின்று பழகிப் பாசத்தால் ஒன்றுபட்டுத், தோழமை கொண்டு தொட்டணைத்துப் பழகியதால், நோயில்லா வாழ்வுபெற்றோம். நோவில்லா உடல்கொண்டோம். குயில் - குரங்கு
*" குயில்' என்னும் இசையரசி
கூவிக் குரலெழுப்பிப் பயில்கின்ற பண்ணிசையைப் பார்த்திருக்கும் மந்தியினம் கவியினம்தாம் என்பதனால் கவிபாட முயன்றுதோற்கும் தெருவோரப் பாலையின்கீழ் சேர்ந்திருக்கும் பிள்ளையாரை, வருவோரும் போவோரும் வழிபட்டுப் பக்தியுடன்
தேங்காயை உடைத்திடவே, தேடியதைப் பொறுக்குதற்குதி, தீங்கேதும் இல்லாத சிறுகுரங்கு கூடிநிற்கும்
நகரத்துப் பெண்ணைவிட்டு நகர்ந்துவிட்ட நாணமதின் அகரத்தைக் கூட அசைவினிலே மான்காட்டும்
விரால் ஜப்பான்
பொட்டியன் கணையனொடு கெளிறு உழுவை குறவை ஒட்டி பனையறி மயறி கொக்கச்சசன் கச்சல்
 

அகிளங்கன் கவிதைன்ை
Sħu nr 69 ST 6T6rji குளங்களிலே மீனினங்கள்,
அயிரை சிறுமாங்கன் அவைபொரித்துத் தின்றவர்கள் அவரன்றோ விண்ணவர்கள் அமுதமது உண்டவர்கள். பால் - தயிர் - நெய் தயிர்பாலை நெய்யைத் தரமான இறைச்சிகளைத் தாமுண்டு வளர்ந்தவர்கள் தரணியையே வென்றவர்கள்: பாற்கடலைக் கலக்கிப் பாடுபட்டுத் தாம்பெற்ற அமுதமது உண்டவர்கள் அமரரென்றார் புராணத்தில், ஊர்க்குளத்தைக் கலக்கி ஒற்றுமையாய்க் கரப்புக்குத்தி, மீன்பிடித்து உண்டவர்கள் அமரரென்பேன் கிராமத்தில் C3 6nu a". 66), L' சுரைக்குடுவை நீர்நிரப்பிச்; சுற்றிவர நாய்பரப்பி; வேட்டைக்குச் சென்று,
விரட்டி, மான் மரை, பன்றி உடும்பு உக்குளான் முயல் அழுங்கு, மர அணில் எய்ப்பன்றி, சாட்டுக் கோழியென வேட்டை முடித்து, இறைச்சியினைச் சுமந்துகொண்டு
சிறுதேன் பெருந்தேன்,எனத் தேனெடுத்துச் சுரைக்குடுவை தனில்நிறைத்துத் திரும்பிவந்து ஊரெல்லாம் பங்கிட்டு உண்ணுகின்ற காட்சிஎன் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்

Page 20
20 அகளங்கன் கவிதைகள்
திசைப்பூண்டில் மிதித்ததனால் திசைதவறி வழிமாறி வேட்டையினை ஆடாமல் 上 வீட்டைஅடை வோருமுண்டு.
விளையாட்டு குளக்கரையில் நிற்குமொரு கொழுத்த மரக்கிளையில் ஏறிக் கிளைதாவி எழும்பிக் குதித்துநன்றாய்,
நீரில் விளையாடி நீச்சலிலே உடல்வேர்த்துப் பாய்ச்சலாய் வீடுவந்து பகற்சோறு உண்டதுதான் எங்கள் கிராமத்து எழிலான வாழ்வாகும். வேட்டையும் விளையாட்டும் வீதிகளில், கோயில்களில் பாட்டையும் பாடிப் பலவகையில் ஆடி,
இயற்கையின் அரவணைப்பில் இனிமைகண்டு வாழ்ந்ததனால், எங்கள் கிராமத்தோர் எல்லோரும் முந்தையநம், சங்கத் தமிழரென்பேன் தங்கத் தமிழரென்பேன்; கிட்டியடியும் கிளித்தட்டும் கீற்றோலை இழுப்பதுவும்: எட்டியடி வைத்தாடும் | எட்டுக்கோடு என்பதுவும்
பிள்ளையார் பந்தும் கொக்கான் வெட்டலும் பாக்கடிக்கும் விளையாட்டும்; வார்ப்பாய்ச்சல் குழையெடுத்தல், | வட்டத்துள் கெந்தியடி
தாரிமுத்தல் கண்கட்டி, தம்கையில் மோதிரம்
 
 
 
 
 

அகளங்கன் கவிதைகள் 2.
யாரடியம்மா தாயாரே
தாயம், பாண்டியொடு, ஓயாத விளையாட்டு
உண்டெங்கள் வன்னியிலே,
( ) கோலாட்டம் கும்மி கூத்துக்கள் நாடகங்கள் காவடியும் கரகங்களும் கம்படியும் மெய்மயக்கும்.
@5 6াm tষ্ট குளக்கரை மரங்கள் குலுங்கிக் கொட்டிய மலர்கள் வர்ண ബ ஆடையாய் மிளிர,
அல்லிப் பூவும் தாமரைப் பூவும் அள்ளி முடித்த கூந்தலில் சூடிய அழகிய மலர்களாய் அலை முந்தானையாய் ஆதவன் கதிர்கள் அலைகளில் பட்டுத் தெறித்துப் பரக்கும் ரத்தினம் ஆபரணமாய்,
காலைச் சூரியன் நெற்றிப் பொட்டாய்ச் சுமங்கலிக் கோலங் காட்டிடும் குளங்கள்.
LD I og SB Sir
எங்கள் காடுகளில் இயல்பாய் வளர்ந்துபுகழ் பொங்கும் மரங்களினைப் பொருமலுடன் நினைக்கின்றேன்,

Page 21
22
அகளங்கன் கவிதைகள்
மருது, அரசு முதிரை, மகிழ், மா விலங்கை, முருக்கு, பாலை, ஆல் பனரை,வேல்,
யாவறனை காஞா,
புன்னை நறு விலிபனிச்சை,
பூவரசு, தவிட்டை, பன்னை, ஒதி.நொச்சி, பம்பை, பலாசு உலுவிந்தை, விளாத்தி,தேவ தாரு நாவல்: வில்வம், சாளம்பை, விண்ணாங்கு, பிராசு, அணிஞ்சில், விடத்தல் , வெப்பாலை,
வெடுக்குநாறி முரலி. உயில், வீரை, வன்னி, நாகை . வெள்ளெருக்கு, தேற்றா, ஆயில், வேங்கை, நெல்லி, வாகை, அத்தி, கருங் காலி,கொண்டல், ஆடுதின்னாப் பாலை, அடம்பு, கல் லால், தறணி, ஆவரை, காஞ் சூரை,
காட்டுமா, துவரை, இத்தி, கறிவேம்பு, கூளா; காட்டா மணக்கு:சமிள், கடம்பு, ஆத்தி, கூமா, குருந்து, ஈஞ்சு, இலுப்பை" கள்ளி, கருவாகை, அகத்தி, செண்பகஞ் , சமண்டலை, புங்கு, அருநெல்லி, அகில்,
மலை வேம்பு, முள்ளிலவு, மருதோன்றி, இலவு, தில்லை, எட்டி, தனக்குமரம், செறிந்தோங்கிச் சூழ்ந்து சொர்க்க லோகத்துக் கற்பக தருக்களாய் எங்கள் மண்ணுக்கு
இவை வளஞ்சேர்த்திடும்,
 

அகளங்கன் கவிதைகள் 23
நா  ைர ஓடிவரும் நீரினிலே உறுமீனைத் தேடியதாய் ஒற்றைக்கால்த் தவமிருந்து உடலிளைக்கும் நாரையினம், புதிர்க்கணக்கின் விடைகாணப் புகுந்தவனை ஒத்திருக்கும்,
வக்கடையில் வயல்வெளியில் வரப்பெல்லாம் நீக்கமறக் கொக்கெல்லாங் கூடிக் கொலுவிருக்குங் காட்சிகளோ திக்கெல்லாங் கவர்ந்திழுக்குந் தேவர்களை மனம்மயக்கும்,
கார்த்திகைப் பூ வார்த்தைகளுக் கெட்டாத வனப்புடனே வயல்வரம்பில் கார்த்திகைப்பூப் பூத்திருக்கும் காளான்கள் முளைத் திருக்கும் ,
பார்த்ததனில் நெஞ்சத்தைப் பறிகொடுத்து மனமகிழ்ந்து சேர்ந்தணைத்துச் சிறுவரெல்லாஞ் சிந்திசைத்து மகிழ்ந்திடுவார்,
இலுப்பைப் பூ
அலுப்பேதும் பாராமல்
அதிகாலை எழுந்து,
அங்குள்ள சிறுவரெல்லாம்
அடைந்தொன்றாய்த் திரண்டு,
இலுப்பைப்பூப் பொறுக்கி, அதை இதமாகப் பிழிந்து, எடுக்கின்ற பாணியதன் இனிமைக்கு நிகராய்
எதைச்சொல்ல என்நாக்கு
எப்போதும் ஊறும்,

Page 22
24
அகளங்கன் கவிதைகள்
பாணி, வற்றல்
பாலைப்பழப் பாணியும் உலுவிந்தம் பாணியும் இலுப்பைப்பூப் பாணியும் எப்போதும் எம்வீட்டில்
பழஞ்சோறு தயிரோடு பசிபோக்கும் உணவாகிக், காலைப் பொழுதைக் கலகலப்பாய் ஆக்கிவிடும்: பன்றிக் கருக்கலொடு பதமாக வாட்டிவைத்த இறைச்சிவற்றல் பரணினிலே எப்போதும் மிகுந்திருந்து
விருந்தினரை அருஞ்சுவையால் பெருமகிழ்ச்சி கொளச்செய்யும் குட்டிச் சாக்குக்குள் குவிந்து தலைநீட்டி எட்டிப் பார்த்தபடி இறப்பில் தொங்குகின்ற விரால்க் கருவாடு வீடெங்கும் மலிந்திருக்கும்.
T (5 g5
பெருத்த ஏரிகள் கொண்ட பலவகை எருத்து மாடுகள் எங்குந் திரியும்,
செருக்கையும் ஆணவத் திமிரையுங் காட்டும் உருத்திரள் காளை மாடுகள் வன்னியின் அடங்காத் தன்மையைக் காட்டினும், அவைகள் உழைப்பின் உறுதியை உலகுக்கு உணர்த்தும்,
 

அகளங்கன் கவிதைகள் 25
வயலை உழுது பலகை அடித்தும், வண்டி இழுத்தும், கதிரை அடிக்குஞ், செயலைச் செய்தும், தியாகிகள் போலத் தின்பது வைக்கோல் என்பது தத்துவம்.
GT (5 GOD LID
கருமை நிறத்தனவாய்க் கல்மலைபோல் உரத்தனவாய், எருமை மாடுகள்தாம் எங்குந் திரிந்தலையும்,
கழுத்திலே தொங்கிடக் கட்டிய சிறப்பைகள் எழுப்பிடும் இன்னிசைச் சிறப்பினை என் சொல்வேன்.
sa u si)
ஏர்பூட்டி உழவுசெய்து எழிலாய் வரம்புகட்டி, நாள் பார்த்து நெல்விதைத்து, நன்றாய் வேலிகட்டி, * கார்பார்த்து நீர்ப்பாய்ச்சிக்
! s, ś களைபறிக்க நெல்வயலில்,
கரும்பினைப்போல் நெல்வளரும், கமுகினைப்போல் நிமிர்ந்துநிற்கும் விரும்பிநிற்கும் உழவன்முக வீறாப்பை என்சொல்வேன்,
காயுஸ் - கனியும் புத்துக்கள் மேலே போட்டுப் படரவிட்ட வித்துக்கள் வளர்ந்து விரைந்து அதைமூடி,

Page 23
26
அகளங்கன் கவிதைகள்
வத்தகப் பழங்களாய் வெள்ளரிப் பழங்களாய் கெக்கரிக் காய்களாய் தீன்பிலாக் காய்களாய் திக்கெல்லாங் காய்த்துத் திகட்டாச் சுவைதருமே காவல் வெட்டிப் பிரித்து GoGo GorffluLUIT ở G) ji gFLD Gorf) * புத்துக்கள் மேலே போட்டுவைத்த குடிலினிலே
தீவறையில் குளிர்காய்ந்து சிறாம்பியிலே கிடந்து, பாவகைகள் பாடிப் பன்றிகளைத் துரத்திக் காவலுக்கு வந்த காளையர்கள் இரவினிலே, கூவிக் குரலெழுப்பும் குரலொசை வானதிர்க்கும்,
மரக்கிளையில் பரணமைத்து மதிபார்த்துக் கிடந்து, வரப்பினிலே எரியவிட்ட மரக்கட்டை இருளகற்ற, உரப்பி எழுப்புகின்ற ஒசையிலே வெருண்டோடும் யானையை அடிமரத்தில் கண்டு சுகங்கேட்கும்
காளைகள் நிறைந்ததின்று கவிபாடும் வன்னிநிலம், காதல் சிறுபோகக் காவலுக்குச் சிறாம்பியிலே கிடந்து
சில்லிட்ட நிலவொளியில் சிந்தனைகள் பரந்து, காதலியை நினைத்திளைஞர் கவிபாடுஞ் சத்தம் ,
 

அகளங்கன் கவிதைகள் 27
காடுகளைக் கடந்திரவு காதலிக்குக் கேட்கும்.
வேதனையில் காதலியும் வீட்டுக்குள் புரண்டு, விடுகின்ற பெருமூச்சு வீரனுக்கும் கேட்கும்.
பொறி பன்றிக்குப் பொறிவைக்கும் பொறியியல் ஆளர்கள் அன்றைக்கு எம்மூரில் அதிகமாய் இருந்தார்கள்
மூலிகைகள்
செடிவகை குப்பைமேனி, கண்டங் கத்தரி கஞ்சாங்கோரை, நாயுருவி, சித்தமட்டி, பேரமட்டி, செம்முள்ளி, சீதுளாய்,
வட்டத்துத்தி, மிளகு தக்காளி, வட்டுக்கத்தரி, நீர்முள்ளி. சுண்டங்கந்தரி, கீழ்காய்நெல்லி, துளசி, ஒளரி, கிளுகிளுப்பை , பூமாதுளை, ஊமத்தை, கொச்சி, பேய்மிரட்டி. நாள்வேளை, பீச்சுவிளாத்தி, கரிசிலாங்கன்னி, பாவட்டை, தயிர்வேளை,
விஷ்ணுகிராந்தி, ஆடாதோடை, பன்னை, எருங்கலை, காஞ்சோண்டி, இன்னும் எங்கள் காடுகள்தோறும் இருக்கும் மூலிகைச்சொடிவகையே.

Page 24
28
அகளங்கன் கவிதைகள்
கொடிவகை நன்னாரி, ஐவிரலி, அல்லை, தாமரை, பாகல், காத்தாளை, சாரணை" சீந்தில், சாத்தாவாரி மொசுமொசுக்கை, முடக்கத்தான்,
குன்றிமணி, உதமாகாணி பெருமருந் துக்கொடி, கொடிக்கன்னி, தூதுவளை கறுத்தப் பூக்கொடி, கொவ்வை, ஆகாசக்கருடன், பேய்ச்சுரை- அல்லி, தூத்துமக்கொத்தன், சிறியாதங்கை, கொடிவகைகள் வாய்த்திடு மூலிகை இனமாய்நின்று வளங்கள் சேர்த்திடும் வன்னிக்கு,
கீரை - புல் - கிழங்கு கையாந்தகரை, பொன்னாங்காணி, கோழிக்கீரை, பனங்கீரை முக்குளிக்கீரை, கொத்துமல்லி, சிறுபாளைக் கீரை, புளியாரை.
கோரை, பன் சாவட்டை. அறுகு, வெள்ளறுகு பேரரத்தை, சாத்தாவாரி பிரப்பங் கிழங்கு, சித்தரத்தை, இஞ்சி மஞ்சள், வசம்பு, லாம்பிச்சை என்னும் கிழங்கு வகைகள் மலி எங்கள் காடுகள் மூலிகைக்காடாய், இன்னும் இவற்றில் பலவுண்டு.
ஊஞ்சல்
புளியமரக் கொப்பினிலே
புரிமுறுக்கிக் கட்டிவைத்துப் பெரியவர்கள் ஆட்டிவிட்ட
பெரும் ஊஞ்சல் பழம் விழுத்தும்,
 

அகளங்கன் கவிதைகள் 29
ம் ய ர ம்
ஆனையுண்ட விளாங்கனியை
ஆசையுடன் பொறுக்கி
அங்கிருக்குந் துவாரத்தில்
அழகாய்த்தடி இறுக்கி, சேனைகளாய்ச் சிறுவரெல்லாஞ் சேர்ந்தொன்றாய்க் குழுமி,
சிங்கார மாயதனைச்
சிறுகையாற் சுழற்றி, பம்பரங்கள் சுற்றிவிளை
யாடுவதைப் பார்த்தால்
பகலிரவு தோன்றாது
பசிதுரக்கம் வாராது அம்புவியோர் வாழ்க்கையினை
அழகாக இந்தப்
பம்பரத்தைப் போலென்றார்
படித்தவர்கள் உண்மை,
தென்றல் ஆற்றங் கரை மரத்தின்
அழகான பூக்களினைக்
காற்று மனம் புரிந்து
கை வீசி நடந்துவரும்.
மனம் மயக்கும்
புதுவெள்ளம் பாய்ந்துவரப்
புரண்டுவரும் மீனினங்கள்
எதிர்செல்ல மீணடிக்கும்
இளைஞர்களின் மகிழ்ச்சிபொங்கும்.
பணிக்காலம் வாய்க்காலில்
பாவையர் இன் அயிரையினைத்
தனிக்கவனத் துடன் வாரித்
தம்சேலை நிறைத்திடுவர்.

Page 25
30 அகளங்கன் கவிதைகள்
குளக்கரையில் மரநிழலில்
குந்தியிருந்தே தூண்டில் களைப்போட்டு மீன்பிடிக்கும்
காட்சிகளோ மனம்மயக்கும்;
கஞ்சிக் கலயத்தைக்
கழுத்துழுக்கச் சுமந்துகொண்டு, பஞ்சியென்றால் என்னவென்றே
பார்த்தறியாப் பாவையர்கள்,
நடைவரம்பில் வரப்பார்த்து,
நாவினிக்க உடல்சிலிர்க்கக் கடைவாயில் தேனூறக்
காதலர்கள் பார்ப்பதனால்,
வெற்றிலையால் சிவந்திட்ட
வெள்ளுதடு துடிதுடித்துக், கற்பனையில் மனம் லயிக்கக்
கன்னங்கள் சிவந்திடுமே.
கச்சைக் கட்டோடு
கலப்பையினைத் தோள் சுமக்க, அச்சமின்றி நடந்துவரும்
ஆணழகன் தோற்றமும்,
களைபறிக்குங் காரிகையர் ܘ ܐ .
கையசைவுங் கண்ணசைவும், விளைவறுக்கும் வீரர்களின்
விரலசைவும் வீறாப்பும்,
அரிவுவெட்டி அங்கெறியும்
அழகும் , அவர் பாடும் பரிவுமிகு பாடல்களின் t பாவனையும் பா வளமும்,
 

அகளங்கன் கவிதைகள் - 31
உப்பட்டி கூட்டி
ஒன்றாக்கி மாவக்கையாய்,
அப்படியே அள்ளி
அணைக்கின்ற அழகுகளும்,
மாவக்கையை அள்ளி,
வயல் மூட்டில் பத்திரமாய்க் காவிவந்து வைத்திருக்குங்
கட்டக்கந்தின் அழகுகளும்,
கட்டக்கந்து கள் பிரித்துக்
கட்டிஅதை ஒரிடத்தில், சூடாக வைத்திருக்குஞ்
சுந்தரநற் காட்சிகளும்,
சூடடித்துப் பொலிநிறுத்தித்
தூற்றிக் குவித்திருக்கும், நெற்குவிய லின் அழகும்
நிமிர்ந்த உழவன் அழகும்,
எருமைக் கடாபூட்டி
இழுத்தடிக்கும் பலகையின்மேல் ஏறிநின்று ஒ.கோ.கோ.
எனஒலிக்கும் இசைஒலியும்,
முற்றத்தில் உரல்நிறுத்தி
முழுநிலவில் நெல்குற்றுஞ், சத்தத்தில் பிறக்கின்ற,
சங்கீதப் பாட்டொலியும்,
பூக்களிலே தேன்குடிக்கப்
புறப்பட்ட வண்டுகளின், பாக்களிலே பிறக்கின்ற
է 16) միjTՈ] சங்கதியும்,
தினைப்புனத்துத் தேவதைகள்
தினையுண்ணும் பறவையினம்.
அனைத்தையுமே கலைக்கின்ற
ஆலோ லப் பாட்டொலியும்,

Page 26
32 அகளங்கன் கவிதைகள்
வக்கடைகள் நிரம்பி
வழிந்தோடும் நீரொலியும்,
கொக்கினங்கள் கூடிக்
குதுரகலிக்கும் பேரொலியும்,
சில்லென்று ஒலிக்கின்ற
சில்வண்டு களின் ஒலியும்,
பல்வேறு தேனீக்கள்
பாடுகின்ற பாட்டொ லியும்,
தென்றலிலே மிதந்துவரும்
தெம்மாங்குப் பாட்டொலியும்,
கன்றுகட்டிப் பால் கறக்கக்
கலயத்தில் விழுமொலியும்,
பச்சைப்புல் வெளிகளும்
பரந்தவயற் கழனிகளும்,
இச்சைக் குகந்தநல்ல
இனிய கனிவகைகளும்,
கண்முன்னால் நின்று
கவிபாடு என்று சொல்லி
எண்ணத்தை நிறைத்துவிட
எழுதி விட்டேன் இக்கவிகள்,
போரிருட்டுப் போயொழிந்து
பொங்குமொளி பிரவகித்தால் ஊர் மனைகள் முன்போலே
உல்லாசமாய் வாழும்,
 

அகளங்கன் கவிதைகள் 33
மானினம் வகுத்த வாழ்வு.
அடர்ந்த ஒர் மணற்பரப்பில் அடுக்கிய முள் மரங்கள் படர்ந்திட முல்லை இல்லைப் பசுமையோ எங்கும் இல்லை,
ஆதவன் சீற்றத்தாலே அம்மணற் பரப்பு வெந்து கானலாய்க் கொதித்திருந்த காட்சியைக் காணினுள்ளம்,
வேனிலாய்ப் பதைபதைத்து மேனியை எரிக்குமம்மா !
அந்த அப் பாலைதன்னில் அன்பொடு கூடிவந்த இன்பமான் சோடியொன்று இணைந்திணைந் தோடிவந்து,
களைப்பிலே உடலம்வாடிக் காலினில் வெப்பங்கடத் துடித்தது; துடித்தும் நில்லாது ஒடிய தங்குமிங்கும்:
தாகத்தின் எல்லையிலே தாரமுந் தானுமாகத் தேடியதங்கே தண்ணிர் தெரிந்தது சிறுபள்ளத்தில்

Page 27
34 அகளங்கன் கவிதைகள்
கலையுமப் பிணையுமொன்றாய்த் தாகமே தணிப்பதற்கோ தண்ணிரின் அளவு போதா திருந்தது கண்டதம்மா !
பருகிடு தண்ணிரென்று பகர்த்திடும் கலைகண்வீச்சால், அருந்திடு அன்பேயென்று அந்த மான் பிணையும்பார்க்கும்,
இறுதியில் இரண்டுமொன்றாய் வைத்தது வாய் தண்ணீரில், இருந்தது அளவு மாறா தப்பாலை வனத்துத்தண்ணீர் !
மானிடர் வாழ்வுக் கிந்த மானிலம் வகுத்த வாழ்வில் மானினம் வகுத்த வாழ்வே
வளருயிர்க் காதல் வாழ்வாம்.
* பழம் பாடலிற் பிறந்த புதுச் சிந்தனை '
 
 

அகளங்கன் கவிதைகள் 35
பேடு அடைந்த கேடு பக்கத்து வீட்டுப் பேடு
பருவத்தின் வாழிப் போடு சொர்க்கத்து வாசல் காட்டும்
சொகுசாக நடக்கக் கண்டு அக்கமும் அயலும் பார்த்து
ஆசையை மனதிற் சேர்த்துப் பக்கமாய் வந்த சேவல்
பகர்ந்ததோர் அன்புக் கூவல்
கொக்கொக்கோ என்னும் கூவல்
கொடுத்ததால் இன்ப ஆவல் பக்கத்தில் வந்த பேடு
படித்ததோர் இன்ப ஏடு வெட்கத்தில் மூழாப் பேதை
விரும்பியே அன்பு வாதைத் துக்கத்தில் சேரா வண்ணம்
தொடர்ந்தது சேவல் பின்னே.
கூவியே அழைக்கும் சேவல்
குரலினால் * அன்பே " என்னத் தாவியே வருமப் பேடு
தரளமாம் மழலைப் பேச்சில் ஆவியே நீதான் ' என்று
ஆருயிர்க் காதல் கொண்டு கூடியே என்றும் சேர்ந்து
குலாவியே வாழ்ந்த நாளில்,
மாலையில் பிரிந்த பின்னர்
மறுநாளில் கூட்டுக் கூரை ஒலையில் மோதும் கீத
ஒலியினில் சேவல் கூவ பாலையில் நீரைக் கண்ட
பயணியின் நிலையே யாகக் காலையில் பேடு இந்து
கதவினில் காவல் நிற்கும்.

Page 28
36 அகளங்கன் கவிதைகள்
கூடியே இன்ப மெல்லாம்
குறைவறப் பெற்ற பின்னர் கோடியின் அயலில் ஒர்நாள்
கோழிகள் இரண்டும் ஊடி வாடிய நிலையில் சென்று
வருத்தமுற் றங்கிங் கோடித் தேடியும் உணவு கொள்ளாச்
சென்றன கூடு நோக்கி,
அந்தியில் கூடு வந்த
ஆருயிர்ப் பேடு நெஞ்சம் வெந்துவெந் துருகிக் கண்கள்
வெள்ளமாய் நீரைக் கொட்ட அந்தநாள் தங்கட் குள்ளே
அடைந்ததேன் துன்பு மென்று நொந்துநொந் தழுது நின்று
நெட்டுயிர்த் திரங்கி வீழும்.
என்றுமே கூவித் தன்னை
இன்பமோ டழைக்குஞ் சேவல் இன்றுமே கூவுந் தானே
என்றுநெஞ் சாவல் பொங்கக் கன்றிய நெஞ்சப் புன்மை
கலைத்திடுங் குரலைக் கேட்கச் சென்றுமே துயிலில் வீழா(து)
இருந்தது இரவு முற்றும்,
குருவிகள் சத்த மிட்டுக்
குமுறின, கொம்பில் சென்று குரங்குகள் ஒல மிட்டுக்
குதித்தன நின்று, மற்றைக் கோழிகள் கூவல் எல்லாம்
குவலயம் அதிரச் செய்ய ஆழியாய்க் கண்கள் மாறி
அலைந்தது பேட்டின் உள்ளம் ,
 
 

அகளங்கன் கவிதைகள் 37
காலையில் வழக்கம் போலக்
காதல னுடனே கூட வேளையில் வந்த போதும்
வேதனை மனதை வாட்டக் கூடுகள் திறக்கும் போது
கூடவே காத்தி ருந்த பேடங்கே துணையைக் காணா(து)
பேதலித் தழுத தம்மா
சேதியோ ஒன்று மில்லைச்
சேவலோ எங்கு மில்லை நரதியோ இல்லை யென்று
நலிந்தது பேடு நின்று, பாதியாய்த் தாங்கள் மாறிப்
பகர்ந்தநற் காதல் வார்த்தை மோதியே உடலை வாட்ட
முனகியே அழுத தம்மா,
ஒடியவ் விடங்க ளெல்லாம்
ஒவ்வொன்றாய்த் தேடித் தேடி நாடியே தாங்கள் சேர்ந்து
நடந்திட்ட இடங்கள் சென்று. கோடியின் அயலே வந்து
கொழுநனின் இறக்கை கண்டு வாடியே சோர்ந்த தம்மா
வருந்தியே வீழ்ந்த தம்மாடு
தடியிலே ஒர் இடத்தில்
தொங்குமோர் கயிற்றின் கீழே அடியிலே ஒவ்வொன் றாக
அங்கேதோ இருக்கக் கண்டு முடிவிலே அங்கே வந்து
முழுவதாய்ச் சிறகைக் கண்டு மடிவிலே சேர்ந்த தென்று
மயங்கியே வீழ்ந்த தம்மா

Page 29
38 அகளங்கன் கவிதைகள்
ஆவியே எங்கு சென்றாய்
ஐயனே வந்தி டாயோ பாவியாய் நான் கலங்கப்
பார்த்துநீ நிற்றல் நன்றோ தாவியே வந்து எந்தன்
தனித்துயர் துடைக்க மாட்டாய் கூவியே குரலால் உள்ளங்
குளிரவுஞ் செய்ய மாட்டாய்.
வாடியே நான் கலங்கி
வருத்தமுற் றிருக்கும் வேளை ஊடியே சென்றாய் ஐயோ
உயிரே நீ வந்தி டாயோ நாடியே வந்து நின்று
நானழைத் திடலும் கேட்காய் பாடியே 'அன்பே என்று
பகர்ந்திடாய் தெய்வ மேரீ.
ஏழைநான் எங்கு செல்வேன்
என்னையுங் கூட்டிச் செல்லாய். கோழைநான் குவல யத்தில்
குதித்திடல் இனியும் உண்டோ? பாளையாய்ச் சிரிக்கும் உந்தன்
பக்குவம் இனிக்காண் பேனோ, மாலையில் ஊடல் மாறா(து)
மடிந்துநீ ஏன் தான் சென்றாய்.
ஊடலில் உள்ளம் நொந்தோ
உயிரே நீ நீங்கிச் சென்றாய் கூடலில் இன்று சேரக்
குறித்து நீ வந்தி டாயோ வாடலில் நின்று மாழும்
வகையோ நீ எனக்குத் தந்தாய் ஆடலில் மயிலே போல்வாய்
ஜயனே அவலந் தீர்க்காய்,
 
 

அகளங்கன் கவிதைகள் 39
யாரிந்தக் கொடுமை செய்தார்
நானின்று கலங்கும் வண்ணம், பாரிந்தச் செயலை எல்லாம்
பார்த்துமே சும்மா நின்றால் நாமிந்த உலகில் வாழல்
நல்லதோ இறைவா சொல்லாய். ஏனிந்தச் சிறுமைப் புத்தி
எம்மையே அழிப்ப தற்கோ
ஆறறி வுள்ள மாந்தர்
அவனியில் எங்கும் நல்ல நூலறி வாற்றல் பொங்க
நுண்ணறி வோடு வாழ்ந்தும் ஓரறி வில்லா எம்மை
ஒழித்தல்தான் நீதி யாமோ பாரறிந் தேத்துங் கோவே
பரமனே நீதி தாராய்,
எங்களை மனிதர் வீட்டில்
இரைபோட்டு வளர்ப்ப தெல்லாந் தங்களின் இரையாய் எம்மைத்
தாங்கொன்று தின்ப தற்கே இங்கிதை உணர்ந்து கொண்டேன்
இவர்களின் வாழ்க்கைப் போக்கு எங்கணும் சுய நலத்தில்
இருப்பதும் தெளிந்து கொண்டேன்.
மாட்டினை வளர்ப்பர், பாலை
மடிதொட்டுக் கறப்பர், வண்டி பூட்டியே எருது தன்னைப்
பொருட்களை எடுத்துச் செல்வர், ஆட்டினை வளர்ப்பர் பாலை
அவர் கறந்தெடுப்பர், பின்பு ஆட்டையும் மாட்டைப் போலே
அறுத்ததன் ஊனைத் தின்பார்.

Page 30
40. அகளங்கன் கவிதைகள்
போட்டனம் முட்டை யோடு
பொரித்திடுங் குஞ்சைக் கூட
வாட்டியே பொரித்துத் தின்பார்:
வளர்ந்தாலும் விட்வே மாட்டார்,
காட்டிலே வாழ்ந்தா லென்ன
- கவர்ந்தெம்மை உண்ண வேண்டி
வேட்டையில் வருவார்; வந்து
வேதனை தருவார் மாந்தர்,
எம்மிலுஞ் சிறந்தா ரென்றே
எல்லோரும் போற்று கின்ற இம்மனி தரினால் நாட்டின்
இழிநிலை தன்னைப் பாரும் நம்மினம் மட்டுந் தானோ
நானிலந் தன்னில் வாழுந் தம்மினத் தவரைக் கூடத்
தயவின்றிக் கொல்கின் றாரே,
இவர்களின் மனதை மாற்றி
இவ்வுல கத்தைக் காக்க எவர்இனி வருவார் இங்கு,
எங்கணும் இருள் பரந்தே கவர்தலில் உலக மெங்கும்
கண்ணிராய் இரத்த ஆறாய் உயர்ந்திடு கிறதே ஐயோ
உலகத்தை யார்தான் காப்பார்,
இயமன்களே வளர்க்கும் எங்கள் இவ்வுல கத்து வாழ்க்கை நியங்களோ நிலையும் உண்டோ ? நீதியும் பேசல் உண்டோ ? மயங்கினோம் சிறிது காலம்,
மகிழ்ந்திட்டோம், காதல் வாழ்வில் இயங்கினோம் இனிவாழ் வுண்டோ ?
இறைவனே 1 எனை அழைப்பாய்.
 
 

அகளங்கன் கவிதைகள் 4./
உங்களின் விஞ்ஞான ஊசி மருந்தெல்லாம்
மலைநாட்டுத் தோட்டத்தில் மரப்பலகைக் கொட்டிலுக்குள் மறைத்து வளர்க்கப்படும் பசுமாடு நான்.
சாதிப் பிரிவினையில் சந்தோசங் காணுகின்ற நீதி நெறியற்ற சமுதாய அமைப்பினிலே உயர்ந்த நல்ல சாதியில் பிறந்ததனால் சந்தோசமாய் என்னை வாங்கி வளர்க்கிறார்.
மலையடி வாரத்தில் மண்டி வளர்ந்திருக்கும் பசும்புல்லை வெட்டிப் பல்கட்டாய்க் கட்டி,
குடியிருக்குங் கொட்டிலுக்குள்ளே
கொட்டி விடுகின்றார்கள்,
வன்னிப் பிரதேச வயல்வெளியில் நான் நின்றால் என்னிஷ்டம் போலே எங்கெல்லாஞ் சுற்றி. பச்சைப் பசும்புல்லின் வகையறிந்து வாய்வைத்து. இச்சை தீருமட்டும் என்னினத்துக் காளையுடன் கொச்சை மொழிபேசிக் குலவிக் குதூகலித்து . see

Page 31
42 அகளங்கன் கவிதைகள்
கொட்டிலுக்குள் கொண்டுவந்து கொட்டிப் பரப்பிய புல்லைநான் பார்த்துப் புழுங்கி மனம் ஏங்கி . . எட்டிக் கடித்து இன்பமா காண்கின்றேன் ?
புண்ணாக்கைப் புல்லைப் போட வருபவரை அண்ணாந்து பார்த்ததன்றி ஆண்வாடை கண்டறியேன் ஆனாலும் நானின்று. கர்ப்பமாய் இருக்கின்றேன்; அதை நினைத் தாலுமே அர்ப்புதமாய் இருக்கிறது.
உங்கள் இனத்து ஆணுக்கு உவமையாய் எங்கள் இனத்தில் இருக்கும் காளைகளை இன்பத்தில் சந்திப்போம், இணையில்லாச் சுகங்காண்போம். ஆனால்
சந்திப்பே இல்லாமல் சங்க மமே செய்யாமல் வந்திப்போ கருவொன்று வளர்கிறது வயிற்றினுள்ளே: உங்களின் விஞ்ஞான ஊசி மருந்தெல்லாம்
உங்களின் மனைவிக்கே ஊட்டிக் குழந்தைபெறும் எங்கள் இனத்துக்கேன் இத்தகை கேடுசெய்தீர்,
 

அகளங்கன் கவிதைகள்
பொழுது விடிகிறது, வாழ்வு விடியவில்லை.
ஈக்களும் கொசுக்களும் இருந்தே இசைபாடுஞ் சாக்கடைச் சோற்றினையே தஞ்சமென உண்ணுகின்ற போக்கிடம் ஏதுமில்லாப் புண்ணிய மானிடப் பூக்களெனப் பூமியிலே பிறந்து வளர்ந்தெங்கள் வாக்காளர் பட்டியலின் வரிசையில் இடம்பிடித்த இந்நாட்டு மன்னர்களாம் இவர்களுந்தான் எந்நாளும் எப்பொழுது விடிவுவரும் என்றேங்கித் தவிக்கின்றார். இருள் விலகி இயற்கையினால் எந்நாளும் தவறாமல் பொழுது விடிகிறது வாழ்வு விடியவில்லை.
* 一。發。一 ↔
தெய்வமாய்த் தேவதையாய்த் தீந்தமிழின் இனிமையதாய்ப் பெண்ணினத்தைப் போற்றுகின்ற பேர்பெற்ற தமிழினத்துக்
கன்னியர்கள் வாழ்க்கையிலே கடும்புயலாய்ச் சீதனமாங் காற்றுச் சுழன்றடிக்கக் கலங்கித் தவித்தபடி அன்றாடம் ஏக்கத்தில் அனற் காற்றை வெளிவிட்டுச் சென்றோடும் நாட்களிலே
43

Page 32
44
அகளங்கன் கவிதைகள்
செத்துப் பிழைக்கின்றனர், காதலித்த ஆண்கூடக் காசுதனைக் கேட்கின்ற காலமாய் இக்காலம் கலிகாலம் ஆனதனால், ஏமாற்றத் தோடு இருக்கின்ற எம்பெண்கள் மாதங்கள் கழிகையிலே மாதவிடாய் அன்றிஏதும் காணாது தவிக்கின்றார், கண்ணீரில் குளிக்கின்றார் பொழுது விடிகிறது வாழ்வு விடியவில்லை,
* ー ★ -ー 泰
ஒருநேரக் கஞ்கிக்கும் உழைத்தே களைத்தவராய் வரும்நேரம் என்றே வழிபார்த்துக் காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர் எலும்பொடியப் பாடுபட்டும் விலைவாசி ஏற்றத்தால் வீனர்களின் சுரண்டல்களால் அலைகடலின் துரும்பாகி அடிவாங்குந் தவிலாகிக் கொலைவாளில் தலைவைத்துக் குடும்பம் நடத்துகிறார், இவர்களுக்கும் இயற்கையினால் எல்லோர்க்கும் போலவே தான் பொழுது விடிகிறது வாழ்வு விடியவில்லை.
* 一 。豫,一 ↔

அஆளங்கன் கவிதைகள் 45
பொய்யும் புரட்டும் புகழ்ச்சியும் திருட்டுகளும், செய்யுந் தொழில்களிலே சிறிதளவும் நேர்மையின்றிக் கைலஞ்சம் வாங்குவோர்க்கும் கையெடுத்துக் கும் பிட்டுக் கணக்கற்ற பொய்சொல்லி ஒட்டுக்கள் வாங்கி உலகத்தை ஏமாற்றும் அரசியல்ப் பித்தலாட்ட அறிவாளிகள் தமக்காயும், கலப்படக் காரர்கள், கள்ளச் சந்தைப் பேர் வழிகள், கலர்ப்படம் எடுத்துக் காமப்பயிர் வளர்ப்போர், இவர்களெல்லாம் உலகினிலே இன்பமாய் வாழ்வதற்கோ பொழுது விடிகிறது. பூமியில் நல்லவர்க்கோ வாழ்வு விடியவில்லை : வளங்கள் நிறையவில்லை.

Page 33
46
அகளங்கன் கவிதைகள்
நியாயப் படுத்தப்படும் அநியாயங்கள்.
வீட்டின் பின்புறத்து வேலியில் தளிர்த்திருக்கும் பச்சை இலைகளுக்குள் பதுங்கித் திரியும்
கறட்டி ஒணானைக் கல்லால் அடித்துச் சித்திரவதை செய்யுஞ் சிறுபிள்ளைப் பருவம். கறுப்பு வண்டைக் கதிரைக் காலினுள் அழுத்தி அழித்து அல்லற் படுத்தும் அறியா வயதுச் சிறிய பருவம்,
வயலில் உழுது களைத்த நிலையில் வரம்புக் கரையில் எருமைகள் வருகையில் சேட்டிக் கம்பொடு வரப்பில் நின்று எட்டி அடித்து இன்பம் காண்கையில்
ஜீவ காருண்யம் என்பது என்ன ? கறுப்பா சிவப்பா ? எதுவும் அறியேன் ஆயிரங்கால் அட்டையை அப்படியே பிடித்து ஒவ்வொரு காலாய்ப் பிய்த்துப் பிய்த்து ஒன்றிரண் டெண்ணிப் பழகும் வயதில்
 

அகளங்கன் கவிதைகள் 47
கணிதம் படிக்குந் துடிப்போ அன்றிக் காருண்ய எண்ணமோ GT LD ல்லை. காசிப் ଛଉ தண்ணிக் கரையில் கலைத்துத் திரிந்து காலால் மிதித்துக்
காவில் வெள்ளை படுவதைக் கண்டு களிப்புக் கொள்ளும் அறியா வயதில், அப்போது எனக்கு இப்போது போன்று ஜீவ காருண்யச் சொல்லே தெரியாது.
வேதனை தெரிந்து விபரம் புரிந்த வயதில். ஜீவ காருண்யத்தின் ஜீவனை அறிந்தபின் நிகழ்ந்தவை களுக்காய் நினைந்து வருந்தி நிகழ்பவை களைநான் நின்று பார்க்கின்றேன்,
துப்பாக்கி ரவைகள் அணுக்குண்டு இயமன்கள் ஏவு கணைகள் என்றுபல வகைகள் மனித இரத்தம் குடிக்கும் பிசாசுகள், அசுரத் தனங்கள் செய்யும் அறிவுகள். ஆம்.
விஞ்ஞான வளர்ச்சியின் இன்றைய கொடுஞ்செயல் அன்று நாம் பாலப் பருவத்தில் செய்த

Page 34
48
அகளங்கன் கவிதைகள்
விளையாட்டுச் செயலே வேறொன்று அல்ல, ஆனால் அதிற்சிறு வேற்றுமை உண்டு,
மனித இரத்தத்தை ஆறுகள் ஆக்கிப் பொருளா தாரப் போரைப் புரிதல் அல்ல எமது அன்றைய கொடுஞ்செயல், மொழியைச் சமயத்தை வளர்ப்பதற் காக முட்டாள்கள் செய்யும் படுகொலை அல்ல அன்றைய எமது அத்தகை கொடுஞ்செயல்.
சாதிப் பூசலின் சங்கதி அல்ல கறுப்பு வண்டைக் கண்டுநாம் வெகுண்டது. அதிகாரம் பிடிக்க அன்று நாம் முயன்று அத்தகை வேலை செய்ததே இல்லை.
அறியாது செய்த அற்பச் செயலே அன்று நாம் உயிர்களை அப்படி வதைத்தது. இலாபம் கருதிநாம் செய்யாக் கொலைகள் நியாயம் தவறி இருந்தது உண்மை இன்று. .
இலாபம் கருதிச் செய்யும் கொலைகள் நியாயப் படுத்தப் படுவதைக் காண்கிறோல்
 

அகளங்கன் கவிதைகள் 49
கதிரைக் காலினுள் கறுப்பு வண்டாய்க் கால்விரல் நடுவே காசிப் பூச்சியாய்
அறியாப் பிள்ளை கையில் இருக்கும் ஆயிரங்கால் அட்டை என்னும் நிலையில் மானுட வர்க்கம் மூழுமையும் இன்று கொலைசெயுங் கருவிகட்கு இடையே உள்ளது
உலக அரங்கில் மானிட வாழ்வைக் கலகத்தால் அழிக்கக் கங்கணங் கட்டும் கொலை ஆயுத மெனும் முப்புரங் களைநாம் மானிட் நேயச் GriffL "LITT Gv GT if "GBurr Lib.
கோழியை ஆட்டைக் கோயிலில் வ்ெட்டி வேள்விகள் செய்யும் வேலைகள் எல்லாம்
மூடப் பழக்கம் என்றே சொல்லி முழுஉலகும் இதைத் தடுக்க முயன்றது அதனால் . -
ஆடும் கோழியும் தப்பிப் பிழைத்தன
அதற்குப் பதிலாய்
மனிதனே வேள்வியில் வெட்டுண்டு வீழ்கிறான்.

Page 35
66),
அகளங்கன் கவிதைகள்
மானுடம் இல்லா மானிடன்
சந்திரனில் காலடியைச்
சாதுரிய மாகவைத்துச் சாதனை படைத்தமனிதன்,
சத்திர சிகிச்சையினால் உருத்திர மூர்த்திக்குச் சவாலாக அமைந்தமனிதன், இருதயத்தை மாற்றி இயங்கவைத்துக் காட்டி இறும்பூது செய்தமனிதன்
தொற்றுநோய் தொடக்கமாய் புற்றுநோய் எயிட்சையும் புறங்காண நின்ற மனிதன், தந்தையுந் தாயுமொன்றாய்ச் சங்கமிக் காமலேயே விந்தையாய்க் குழந்தைதந்து விசித்திர ஞ் செய்தமனிதன்,
வானொலி வானொளி கனணி விமானவகை கணக்கின்றிச் செய்தமனிதன், துப்பாக்கி ஏவுகணை அணுக்குண்டு என்றுபல
இரத்தக் காட்டேறிகளை இவ்வுலகில் உருவாக்கி இரத்தத்தை ஆறாக்கி இவ்வுலகைப் பாழாக்க மானுடம் அழிந்தது மானிடன் வாழ்கிறான்.
மானுடம் இல்லா மானிடனா யாரவன் ? இவனைப் படைத்ததும் இறைவனாம் தலைவனா ? இப்படி ஒன்றைப் படைத்தது பற்றி இதிகாசங் களும் இயம்பிட வில்லையே.
 

அகளங்கன் கவிதைகள் 5/
தீக்கவிதை படைத்திடுக !
கவிதைகள் படைக்கவென்று கனன்றெழுந்த காளைகளே
செவிபோற்றும் கவிதையினைச்
செப்பிடவே வேண்டுமெனில் புவிபோற்றும் பெருமையிலே
புரண்டிடுவார் தமைமறந்து கவிதைக்குக் கருப்பொருளாய்க்,
கண்ணிரில் முகம்மறைத்துப் புவியினிலே வாடிநின்று
புத்தொளியைத் தேடுகின்ற
ஏழைத் தொழிலாளர்களை
இயன்றமட்டும் நீர்பாடும்
முத்தை முறுவலென்றும்
முகத்தை மதியென்றுந்
தத்தைக் குரலென்று ந்
தளிர்க்கொடியை இடையென்றும்
அத்தை மகளழகை
ஆபாச மாய்ப்பாடும்
வித்தைக்குக் கவிவேண்டாம்
வீதியின் ஒரமதில்
சொத்தேது மின்றிச்
சுவைக்க உணவின்றி எத்தனைபேர் பட்டினியில்
ஏங்கித் தவிக்கின்றார். சுத்தத் துணியில்லைச்
சுருண்டிருக்கும் கூந்தலிலே வைக்கும் எண்ணெய்க்கும்
வழியோ பிறக்கவில்லை.

Page 36
52 அகளங்கன் கவிதைகள்
பத்தி எரிகின்ற
பசிநெருப்பில் வேகிநிதம், எத்தனைபேர் சாய்கின்றார்
எத்தனைபேர் இறக்கின்றார், அத்தனைபேர் வாழ்க்கையினை
அன்றாட அவலத்தைச் சத்தான கவிதையிலே
சந்ததமும் நீர்பாடும்.
ஏழைத் தொழிலாளர்
எலும்பொடியப் பாடுபட்டுங் கூழைக் குடிப்பதற்குக்
கூட வழியின்றி நாளை வரும் நல்ல
நாளை எதிர்பார்க்குந் தோழன் துயர் மாயத்
தொட்டுக் கவிபாடும்.
சாக்கடையில் கொட்டுகின்ற
சாதத்தை எடுத்துண்ணும் போக்குடைய வாழ்வுடையார்
பூமியிலே இருக்குமட்டும் பூக்கடைகள் தேவையில்லைப்
பூமாலை எதற்காக, தீக்கவிதை படைத்திடுக
திருந்தட்டும் சமுதாயம்.
சரித்திரத்தில் இத்தகைய
தரித்திரத்தை எழுதாமல் விரித்திடுவார் மேன்மைகளை
விழிதிறந்து இவைகாணார். எரிக்கின்ற பசிநெருப்பை
எடுத்தெறிய உன் கைகன் பொறிக்கட்டும் கவிதைகளைப் பூமிஇனித் திருந்தட்டும்.
 

அகளங்கன் கவிதைகள் 83
*ஏப்ரல் பூல்" எங்களுக்குந் தேவைதானா ?
அன்றொருநாள் சிறுபிள்ளை என்னைப்பார்த்து
அழைத்திட்ட இடத்துக்கு விரைந்துநானுஞ் சென்றுமிக ஆவலுடன் பிள்ளைசொன்ன
செய்தியினை நம்பியே தொடர்ந்தவேளை 'இன்றென்ன திகதிசேர் ஏமாந்தீர்கள்
இன்றுதான் ஏப்ரல்பூல்' என்றுசொன்னாள் இன்றென்ன புதிதாக முட்டாளானேன்
ஏப்ரலின் முதலாம்நாள் வெட்கங்கொள்ள,
சிறுவனாய் இருக்கையிலே எந்தன்தந்தை
சிலநாளில் இனிப்பேதும் வாங்கிடாது. வெறுங்கையாய் வந்துவிட்டால் வீட்டிற்குள்ளே
விழுந்துகிடந் தழுகின்ற என்னைத்தூக்கிப் "பொறுமையாய் இருமகனே இனிப்புக்கப்பல்
பொல்லாத கடலினிலே மூழ்கிப்போச்சு, மறுதடவை போகையிலே வாங்கிவந்து
மடிநிறையத் தந்திடுவேன்' என்றுசொல்லி
அடம்பிடிக்கும் என்னையொரு முட்டாளாக்கி
அன்றைய அப் பிரச்சனையைத் தீர்த்துவைப்பார் . திடங்கொண்ட மனத்தோடுங் காத்திருப்பேன்
திரும்பவும் நான் சிலவேளை முட்டாளாவேன். படம்பார்க்கும் வயதினிலே பலநாட்சென்று
பெளர்ணமியென் றே மாந்து முட்டாளாகி இடம்மாற்றிச் சொல்லிப்பல் இளித்துக்கொண்டு
இருப்பிடத்தை அடைந்தகதை நிறையவுண்டு

Page 37
54 அகளங்கன் கவிதைகள்
சேலையினை வாங்குதற்குக் கடைக்குச்சென்றால்த்
தெரிந்தவனாம் நானென்று விலைகுறைப்பார் நாலைந்து கடைசென்று கேட்டுப்பார்த்து
நான்முட்டாள் ஆனதனைத் தெரிந்துகொள்வேன். சோலையிலே சென்றுமர நிழலில்நின்று
சுற்றியொரு நோட்டமிட்டுக் கடலைவிற்கும் வேலையினைச் செய்பவனை அழைத்துவாங்கி
விரித்ததனைச் சுவைக்கையிலே முட்டாளாவேன்
வீட்டினிலே எரிப்பதற்கு மண்ணெய்வாங்கி
வீணாகச் செலவு செய்ய மனமில்லாமல்
காட்டினிலே விறகுவெட்டுந் தொழிலாளிக்குக்
கர்சுதனை முற்பணமாய்க் கொடுத்துவிட்டால்,
காட்டினிலே பச்சைமரந் தறித்துவந்து
கஷ்டத்தைத் தந்துவிட்டு மெதுவாகத்தன் பாட்டினிலே சென்றிடுவான், எரிக்கும்எந்தன்
பத்தினியும் என்னுடனே முட்டாளாவாள்.
கும்பிட்டு வருவதற்குக் கோயில்சென்று
கோபுரத்தைப் பார்த்துமணம் லயித்துநின்று
கம்பிட்டு மறித்திருக்கும் இடத்தில் எந்தன்
காலணியைக் கழற்றிவைத்து உள்ளேசென்று
கும்பிட்டு வலம்வந்து மெய்சிலிர்த்துக்
குதூகலித்து வாசலிலே வந்துபார்த்தால்
அம்பிட்ட செருப்போடு அகன்றுசெல்லும்
அற்பர்களால் செருப்பின்றி முட்டாளாவேன்,
சங்கமெனுங் கூட்டுறவுக் கடையிலுள்ள
சாமான்கள் வாங்குதற்குச் சென்றாலங்கே அங்மெலாந் தெரிகின்ற ஆபாசத்தில்
அழகிகளின் படங்கொழுவி இருக்கக்கண்டு உங்கள் தாய் சகோதரிகள் இங்கேவந்து
உணவு வகை வாங்குவது இலையோஎன்று அங்கிருந்து நான்கூச்சல் போட்டுஓர் நாள்
அடிமுட்டாள் ஆனதுவும் வாழ்விலுண்டு.
 

அகளங்கன் கவிதைகள் 59
காதலிலே கலந்திருக்குங் கன்னிதன்னைக்
கைப்பிடிக்கக் காதலனும் பொன்னைக்கேட்பான். வேதனையில் அவளிதயம் வெடித்துநோகும்
விழிநீரில் ஏப்ரல்பூல் தினமுங்காண்பாள் சாதனைகள் படைத்திடுவோம் என்றுபேசும் சமதர்ம வாதியொரு சாதிபேசி நாதனையே மாற்றிவிட நங்கையோடு
நாமுமங்கு முட்டாளாய் ஆகிநிற்போம்.
நான்மட்டும் முட்டாளா இல்லைஇல்லை
நானிலத்தில் மனிதரெல்லாம் முட்டாள்தானே? தேனெடுத்துச் சேர்த்துவைக்குந் தேனீகூடத்
தேன்போன பின்னாலே முட்டாளாகும்: வான்கூட முட்டாளாய் ஆவதுண்டு
வருவிக்கும் செயற்கை மழை விஞ்ஞானத்தால் ஏன் இன்று எனைமுட்டாள் ஆக்கிப்பார்த்தாள்
ஏப்ரல்பூல் எமக்கே தான் புதிதோ சொல்வீர்
ஒருநாளா இருநாளா ஒவ்வோர் நாளும்
ஒவ்வொன்றாய்ப் பலதடவை முட்டாளாகும் பெருமையினை இவ்வுலகில் பெற்றுவாழும்
பெரியதொரு வாழ்க்கையினை வாழ்கின்றோமே அருமையாய் ஒருநாளில் முட்டாளானால்
அதிலுண்டு சுவையுண்மை அறிவேன்நானும் எருமையாய் மழைத்துளியை இனங்காணாத
எங்களுக்கும் ஏப்ரல்பூல் தேவைதானோ

Page 38
56 அகளங்கன் கவிதைகள்
மே? தினம்
'மே'டேக்கள் தோறும்ஊர் மேடையெங்கும்
மேன்மையாய்ப் புகழ்ந்திடுவார் தொழிலாளன்தான் கோடைக்கும் ஒய்ந்திடான் குளிரையூட்டும்
கொட்டுபனிக் காலத்தும், கூறுகின்ற வாடைக்கும் கலங்கிடான் இந்தநாட்டை
வாழ்விக்க வந்த பெருந் தோழன்என்றே நாடேய்க்கும் நிலையினிலே பேசுகின்றார்
நமக்கிந்தப் பேச்சொன்றும் புரிவதில்லை.
தொழிலாளர் தினமென்றே 'மே'டேதன்னில்
தொடங்கிடுவார் புரட்சியினைப் பேச்சில் காண்போம் விழிபோல் வான் தொழிலாளி நாட்டுக்கென்பார்; வீட்டினிலே கூழ்குடிக்க வழியைச்சொல்லார். கழிகின்ற காலமெல்லாங் கஷ்டத்தாலே
கழிந்த துவும் போதாதோ இனிமேலாச்சும் வழிபிறக்க மாட்டாதோ வரும் 'மே'டேயும்
வழமைபோல் கழிந்திடுமோ வறுமைதானேர்.
காடுகளை வெட்டிநற் கழனிசெய்வோம்
காற்றில்லாச் சுரங்கத்தில் கல்லுடைப்போம்: வீடுகளைக் கட்டுகின்ற வேலைசெய்வோம்,
வீதிதனில் கால்வேகத் தாரைவார்ப்போம். மாடுகளைப் போல்நாங்கள் உழைத்தபோதும்
மண்ணிலே வைக்கோல்தான் எமக்குமிஞ்சும், நாடுகளைப் பார்த்தறியோம் நம்மைப்போலா
நாடெங்குந் தொழிலாளர் நலிந்துசாவார்.
 

அகளங்கன் கவிதைகள் 5ア
மரமெடுத்து அரிந்துநல்ல தளபாடங்கள்
மகிழ்ச்சியுடன் செய்திடுவோம், இரும்பையொத்த கரமெடுத்து இரும்பதனைக் காய்ச்சிநல்ல
கலப்பைகளுஞ் செய்திடுவோம்; கல்லைப்போலே உரமெடுத்த தோள் கொண்டு வேலையெல்லாம்
உறுதியுடன் செய்திடுவோம்; நாங்கண்வாழ்வில் சிரமெடுக்க வழிதருவார் யாரோ: இந்தச்
சிரத்தையெல்லாம் மேதினத்தின் பின்னுமுண்டோே
பாதங்கள் நோகமலை உச்சிஏறிப்
பசுந்தளிராய்த் தேயிலையைக் கொய்தெடுப்போம்; சாதங்கள் சமைப்பதற்கு எங்கள் கையால்
சட்டி பானைகளெல்லாஞ் செய்திடுவோம். பேதங்கள் எங்களிலே இல்லைஇல்லைப்
பித்தலாட்டம் பண்ணுகின்ற எண்ணமில்லை மாதங்கள் முழுவதுமே 'மே'டேயாகி
மறுநாளும் முதல்நாளாய் ஆகிடாதோ.
முன்னாளில் எம்மினத்தார் பட்டதுன்பம்
முடியாத சோகத்தில் முடிந்தபின்பு இன்னாளும் இன்னலிலே ஏங்கிச்சாகும்
இழிவான நிலையினிலே பிறந்துவிட்டோம், பொன்னாளாம் மேமாதம் முதலாம்நாளில்
போற்றியெம்மைப் புகழ்ந்தெம்மேல் அன்புசெய்வார், எந்நாளும் இந்நாளாய் ஆகிவிட்டால்
எத்தொழிலும் செய்துநாம் வாழலாமே

Page 39
58 அகளங்கன் கவிதைகள்
மனித நேயம் செழிக்கவேண்டும்.
இந்துவெனுஞ் சமுத்திரத்தின் எழில்முத்தாக
இலங்குகின்ற இலங்கையெனும் எங்கள் தீவின் முந்துபுகழ்ப் பெருமைகளை, முன்னேற்றத்தை,
முன்னோர்கள் வாழ்ந்ததனிச் சிறப்புத்தன்னை, விந்தைமிகு பண்பாட்ட்ை, வீரந்தன்னை,
விழியிரண்டாற் காணுதற்கும் அரியதான சிந்தைமகிழ் அழகுகளைச், சிறந்தநல்ல
சீரதனைச் செழிப்பதனைச் சிறிதேநின்று.
எந்தன் மன நினைவினிலே நிறுத்திநாங்கள்
இன்றிருக்கும் நிலைதன்னை எண்ணிப்பார்த்தேன்; சந்திதனில் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய்போல்
தனித்தனியாய்ப் பிரிந்திருக்கும் நிலையைப்பார்த்து வெந்துவிட்ட புண்ணதனில் வேலைப்பாய்ச்சும்
வேதனையில் மனம்வெதும்பி வெடித்துச்சோர்ந்து, தந்துவிட்ட கவிதையிது தமிழில்வல்லீர்
தரம்பார்த்துத் தகுதியினை அறிந்துபாரீர்,
கந்தனவன் அருள்பொழியுங் கதிர்காமத்தைக்
கணபதிவீற் றிருந்தருளும் மாமாங்கத்தைச், சிந்தனைக்கும் எட்டாத சிவனார்வாழுந்
திருக்கேதீஸ் வரத்தோடு முன்னேஸ்வரத்தை, அந்நாளில் இராவணனின் ஆட்சிசொல்லும்
அழகிய கோணேஸ்வரரின் ஆலயத்தை, என்ஆவி தனிலுறையும் நயினைத் தீவின்
எழில்நாக பூஷணியாங் கோயில்தன்னை.
கண்ணகியாங் கற்பரசி அருள்பாலித்துக்
காத்தருளும் வற்றாப்பளை ஆலயத்தை, விண்ண வரைக் காத்திடவேல் ஏந்திவந்து
வீரனருள் பாலிக்கும் நல்லூர்தன்னை மண்வளத்தால் நிறைந்திட்ட வன்னிதன் னில்
மகிழ்ந்திருக்கும் ஒட்டுசுட்டான் ஈஸ்வரத்தைக், கண்ணெனவே கிறிஸ்த்தவரும் சைவர்தாமும்
களிப்போடு போற்றுகின்ற மடு மாதாவை,
 

அகளங்கன் கவிதைகள் 59
பின்னாளில் புகழ்பெற்ற மாத்தளைசேர்
பெருவாழ்வாம் முத்துமாரி அம்மன்தன்னை, எண்ணியதை முடித்துவைக்கும் சிவனார்பாத எழில்மலையை, எனப்பல் வேறு விண்முட்டுங் கோபுரங்கள் மசூதியோடு
விகாரைகளுங் கோயில்களுந் நிறைந்துதோன்றும் புண்ணியமாத் தலங்கள் நிறை புனிதநாட்டில்,
Hண்ணியத்தால் பிறந்தோமே மறக்கலாமோ
சிங்களவர் தமிழரெனும் பேதங்கொண்டா
சீரான மடுப்பதியிற் சேர்ந்துநின்றோம்; எங்களவர் சிவனென்றும். கிறிஸ்துவென்றும்,
எமக்குள்ளே சண்டையிட்டா மடுவில்நின்றோம் பங்கமிலா மனத்தோடு இருவேறாகும்
பரம்பொருளை வணங்குகின்ற பக்குவத்தில் அங்கொருநாள் மடுக்கோவில் தன்னில் ஒன்றாய்
ஆதரவாய் ஒற்றுமையாய் வழிபட்டோமே,
கண்டியிலே நிகழ்கின்ற பெரகராவில்,
கதிர்காமக் கந்தனது ஆலயத்தில், அண்டிமிக நெருக்கமுறும் அழகுமிக்க
அநுராத புரியினிலே போசன் தன்னில், வண்டியிலே முருகவேள் வலம்வந்தேகும்
வடிவழகுத் திருவிழாவாம் ஆடிவேலில், முண்டியடித்தே இலங்கை நாட்டில்வாழும்
முச்சமூகத் தவருஞ்சேர் பூரீபாதத்தில்,
ஒற்றுமையாய் வழிபட்ட நாட்கள் கண்ணை
உறுத்தியதோ , யார் கண் பட்டோ வேற்றுமையில் பிரிவினையில் வீழ்ந்துபோனோம்,
வீதியிலே போரினிலே மாய்ந்துபோனோம். நாற்றிசையும் புகழ்மிக்க இலங்கைத்தீவில்
நாமொன்றாய் வாழ்வதற்கு வழியில்லாமல் வேற்றுமையை விதைத்தவர்யார், விதியாஅன்றி வீணர்களா வீறாப்பு மனிதர்தானா

Page 40
60 அகளங்கன் கவிதைகள்
போயாவில் பெளத்தரொடு விகாரை சென்று புனித முடன் புத்தரது பாதம்போற்றி, மீலாத்து நாளினிலே இஸ்லாம் மார்க்க
விழாவினிலே கலந்துகொண்டு, யேசுநாதர் மேலான நெறியுரைத்த பாங்கைப்போற்றி
மேன்மையொடு நத்தாரில் விருந்தையுண்டு. சைவர்களும் கிறிஸ்தவரும் பெளத்தர் தானும்
சந்திரனை நோக்கித்தம் தொழுகை செய்யும்.
இஸ்லாத்து நண்பர்களும் ஒன்றாய்வாழ்ந்த
இன்பமிகு நாட்களினி வரா மற்போமா, முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் பெளத்தர் என்னும்
மும்மதத்தோர் சைவருடன் ஒன்றிவாழ்ந்து பல்விதமாய் ஒற்றுமையாய்ப் பாடுபட்டால்
பாரினிலே மேன்மையெல்லாம் பல்கிப்பொங்கும் , இல்லாமை விட்டோடும், இன்பம் தங்கும்,
இங்கு ஒரு சொர்க்கபுரி இன்றேதோன்றும்,
சைவ மதம் கூறுவதும் அன்பேயாகும்,
சமதர்ம வழியினையே கூறும்நல்ல கிறிஸ்துமதம் கூறுவதும் அன்பேயாகும்.
கிபுலாவை நோக்கிவழி பாடுசெய்யும் இஸ்லாம் மதம் கூறுவதும் அன்பேயாகும்.
இரக்கத்தைக் கொண்டம கான் தோற்றுவித்த புத்தமதம் போற்றுவதும் அன்பேயாகும்.
புதிர் இதுவே புரியாமல் போரில்வீழ்ந்தோம்.
வீட்டினிலே மனைவியொடு கணவன்பிள்ளை
விருந்தினர்கள் உறவினர்கள் மேவல்போல நாட்டினிலே பலவகையில் மனிதருண்டு,
நம்நாடு எனுமுணர்வு தோன்றிவிட்டால், வாட்டியெமை வதைக்கின்ற துன்பமில்லை.
வறுமையில்லை, வாழாதார் யாருமில்லை. கூட்டியொரு மைப்பாட்டை வளர்ப்பதற்கே
குரலொன்றிப் பாட்டொன்று ஒலிக்கவேண்டும்.
 
 
 

அகளங்கன் கவிதைகள் 61
நம்நாடு எனுமுணர்வு தோன்றுதற்கு,
நாட்டினிலே மக்களெல்லாஞ் சமமாமென்ற நம்பிக்கை தனைக்கொண்டு தலைவர்யாரும்
நல்லதொரு அரசியலை நடாத்தல்வேண்டும், தம்மக்கள் மேலென்றும் ஏனைமக்கள்
தாழ்ந்தவராம் என்கின்ற எண்ணங்கொண்டும், உன்மத்தர் போலாகித் துவேசம்பேசில்
உருப்படுமா நம்நாடு உணர்வாதோன்றும்,
ஒற்றுமையாய் ஒருமித்து ஒன்றுகூடி
உயர்ந்த சுதந் திரப்போரை ஆற்றினோமே, வேற்றுமைகள் பேசிநாம் வெறும்வாய்மென்று
வேறுவே றாய்ப்பிரிந்தே இருந்திருந்தால் நாற்றிசையும் பழிசொல்ல நலிந்துகெட்டு
நாமெல்லாம் அடிமைகளாய்த் துன்பப்பட்டுச் சாற்றுகின்ற உரிமைகளோ எதுவுமின்றிச்
சந்தையிலே மந்தைகளாய் மாய்ந்திருப்போம்.
தேர்தலிலே வெல்லுதற்காய்க் கொள்கைபேசித்
தெருவெல்லாம் இனஉணர்வை எரியச்செய்து மோதலிலே பகைத்தீயை மூட்டிவிட்ட
மூத்த தலை முறையினரோ முடிந்துபோனார், சாதலிலே முடிவதிலும், இந்தநாட்டில்
சமாதான மாய்வாழ வழியைக்கண்டு நோதலிலா வாழ்வுக்கு வழிதிறப்போம்;
நோன்பதுவே ஒற்றுமையில் இன்பங்காண்போம்.
அண்ணனொடு தம்பியர்கள் வீட்டில்வாழ்ந்தால்
அன்போடு ஒற்றுமையாய் ஒன்றுசேர்ந்து கண்ணோடு இமையாக வாழ்ந்தாலன்றோ
களிப்புண்டு முன்னேற்றங் கருதவுண்டு, மண்ணள்ளிச் சோற்றினிலே ஒருவர் மாறி
மற்றொருவர் போட்டுவைத்தால் மண்ணேயாகும், எண்ணாது தங்களுக்குள் சண்டைசெய்தால் எந்தவீ டெரியாது பாழாகாது.

Page 41
62 அகளங்கன் கவிதைகள்
மானுண்டு மயிலுண்டு குயிலுமுண்டு,
மரத்தினிலே தாவுகின்ற மந்தியுண்டு, தேனுண்டு கவிபாடும் வண்டுமுண்டு,
தெவிட்டாத அழகுதருஞ் சோலையுண்டு, கானுண்டு கரியுண்டு, கரடியுண்டு,
காட்டெருமை முயல்முதலாய்க் களிப்போடொன்றாய்த் தானுண்டு திரிகின்ற மிருகமுண்டு
தளிர்க்கொடிகள் தடாகங்கள் நிறையவுண்டு
மரமுண்டு மலருண்டு மண்ணில் நல்ல
மதிப்பான வளமுண்டு மலைகளுண்டு. உரமுண்டு நெஞ்சினிலே உழைப்பதற்கு ,
உண்பதற்குப் பலகனிகள் நாட்டிலுண்டு, பரமுண்டு வெவ்வேறாய் வழிபாடாற்றப்,
பாங்கான தலங்கள்பல நிறையவுண்டு, மனமுண்டு எனில்வாழ மார்க்க முண்டு
மக்களிடை ஒற்றுமைதான்ஜ் இல்லையில்லை.
தாய்தந்தை சேர்த்துவைத்த சொத்துக்காகச்
சகோதரர்கள் அடிபட்டு மாய்ந்துபோனால் பேய்வந்து அனுபவிக்கும்; பித்துக்கொண்ட
பிறர் வந்து சொத்ததனை அள்ளிக்கொள்வர். நாய்வந்து ஊளையிட்டு உரிமைகொள்ளும்.
நரிகளுக்கும் கொண்டாட்டம் ஆகுமன்றோ, காய்தந்த மரத்தினையே சண்டையிட்டுக்
கத்தியினால் வெட்டிவிட்டால் யார்க்குமிஞ்சும்.
( வே று ) கல்வியிலே சுதந்திரத்தைக் கருத்தினிலே சுதந்திரத்தைக்
களிப்போடு ஆலயங்கள் பலவுஞ்சென்று பல்விதமாய் வழிபாடு செய்யும் எங்கள்
பல்வேறு மதங்களதுஞ் சுதந்திரத்தை, எல்லோரும் ஒருவரென எண்ணிக் கொண்டு
ஏற்றமிகு மானிடத்தைப் போற்றிக்கொண்டு நல்லோராய் வாழ்வதற்குச் சுதந்திரத்தை
நாம் நமக்குக் கொடுத்திட்டால் நாடுவாழும்.

அகளங்கன் கவிதைகள் 63
( வே று) தனித்துவங்கள் பேணுமொரு சமத்துவத்தில் சேர்ந்து
தரணியினைச் சொர்க்கமென ஆக்கல் வேண்டும். இனித்தமது மனத்திலுள்ள இகலை நீக்கி
இனித்தமது உண்போரின் நிலையில் நீங்கி ஜனித்தபுது மனிதர்களாய் இந்த நாட்டின்
ஜனத்தொகையோர் ஒற்றுமையில் மகிழ்ந்துதுள்ளிக் கணித்தபழச் சுவையுண்ட மகிழ்ச்சி பொங்கக்
களிப்புடனே வாழஒரு பாட்டி சைப்போம்; ஏழ்மையிலே வாடுகின்ற மக்கள் வாழ,
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆக, வாழ்கின்ற நிலை தன்னை இந்த நாட்டில்
வருவிக்க ஒற்றுமையாய் ஒன்று கூடித், தாழ்வுற்ற நிலையற்ற சகோத ரத்துத்
தத்துவத்தை முன்வைத்து முனைந்து நின்று, சூழ்ந்திட்ட துன்பத்தைத் துடைத் தெறியச்
சுற்றிச்சூழ்ந் தொற்றுமைப்பாட் டிசைத்துப்பார்ப்போம் வடக்கினிலே வாழ்ந்தாலும் கிழக்கில் மேற்கில்
வடகிழக்கில் மலையகத்தில், தெற்கில் என்று கிடக்கும்பல இடங்களிலே வாழ்ந்தா லுத்தான்
வாழ்பவர்கள் மனிதரெனும் எண்ணம் வேண்டும். இடத்தினிலே சிறப்பில்லை, எம்மதத்தைச் சேர்ந்தும்
இயல்பான மொழியெதுவும் பேசி டட்டும், படத்தினிலே விஷங்கொண்ட பனம்பா மக்கள்
பாரினிலே உயர்ந்திட்ட மனிதர் அன்றோ.
( வே று)
பகைமையி னால்பல வளங்கள் அழிந்தன,
பலஉயிர் பலியா ச்சு நகைமுகம் மாறி அழுமுகம் ஆகி
நலிவினில் விழலாச்சு வகை வகை யாகத் துன்பங்கள் வந்தெமை
வாட்டி வதைத்தாச்சுப் பகைமையி னாலே அகதிமுகாம்கள் தேசியச் சொத்தாச்சு.

Page 42
64 அகளங்கன் கவிதைகள்
(வே று) இனஒற்றுமை மதஒற்றுமை
இழிந்தோர் தமைச் சேர்க்கும் மனஒற்றுமை மொழிஒற்றுமை
மனிதத் துவ மேன்மைக் குணஒற்றுமை நிறைந்தாலொரு குழப்பம் இலை யாகும். இனஒற்றுமை இராகம் அது
இனி யாவது வரட்டும்.
(வே று ) பள்ளியிலே ஒதுகின்ற பாங்கின் ஒசை பக்கத்துக் கோயிலிலே ஐயர் சொல்லும் தெள்ளிய மந்திரத்தோடு சேர்ந் தொலிக்கத் தெருவோரத் தேவாலயந் தன்னில் நின்று சொல்லிவழி பாடுசெய்யும் செபத்தின் ஒசை சூழ்ந்தொலிக்கும் பிரித்தொலியோ டொன்றிக் கேட்கும் நல்ல வழி இந்நாட்டிற் பிறந்தா லன்றி நாமொன்றாய் வாழ்வதற்கு வழியே இல்லை, ஆதலினால் நாங்களெல்லாம் ஒன்றாய்க் கூடி, அன்போடு இந்நாட்டின் நலத்தை நாடிக் காதலினால் கல்வியறி வதனைத் தேடிக், கருத்ததனில் வேற்றுமையாம் உணர்வைச் சாடி, மோதலிலா வாழ்க்கையினை நினைந்து ஆடி, முன்னேற்றந் தனைக்காண மகிழ்ந்து ஒடிச் சாதலிலா நிலைபெறுவோம் இன்பங் கோடி, சகோதரத்தில் புரிந்துணர்வைப் புகழ்ந்துபாடி
(வே று ) ஒற்றுமையின் பாட்டொன்று ஒலிக்கவேண்டும் - இன ஒற்றுமைப்பட்டே அதுவும் ஒலிக்கவேண்டும். வேற்றுமையின் நிலை அழிவாம் பழிக்கவேண்டும் - முன்பு விதைத்துவிட்ட துவேசத்தை அழிக்கவேண்டும். நாற்றிசையும் போற்றிடவே களிக்கவேண்டும் - இந்த நானிலத்தில் மனிதநேயம் செழிக்கவேண்டும் போற்றுமொரு இனஐக்கியம் பலிக்கவேண்டும் - எங்கள்
பூமியிலே இறையருள் பாலிக்கவேண்டும்.
 

அகளங்கன் கவிதைகள் 65
சமாதானம் துளிர்க்க வேண்டும். செந்தமிழர் சிங்களவர் என்போர்தங்கள்
தேசமென இந்நாட்டைச் சொந்தங்கொண்டார்.
வந்துகுடி சேர்ந்தவர்கள் வாழுகின்றோர்
வாழ்வளித்த இந்நாட்டைத் தாய்நாடென்றார். நொந்துதுயர் வேதனையில் வீழ்ந்துமக்கள்
நோய்நொடியும் இழப்புக்களும் கழுத்தைக்கவ்வும் இந்தநிலை தன்னில்எம் இலங்கைநாடு
இழிவுமிகு அகதிகளின் நாடாயிற்றே.
சடல் நடுவே கிடக்கின்ற முத்துஎன்றே
காவியத்துக் காலமுதல் புகழ்ந்தநாட்டில் உடல்பொருளும், உழைப்புநிலை யாவும் நீங்கி
ஊரூராய் அகதிகளாய் மக்கள் ஏங்கிக் கிடந்திடவும், கிலிபிடித்து நோயில் வீழ்ந்து
கீழ்நிலையை அடைந்திடவும், துன்பமென்னுங் கடல்நடுவே மூழ்கியதோர் முத்தாய்ப்போச்சுக்
காப்பாற்ற யார்வருவார் காலம்எப்போ :
கல்வியினால் இந்நாடு வளமாய்ப்பொங்கும்,
களிப்பினிலே மக்கள் நிலை செழித்துஒங்கும், கல்வியினால் மானிடத்தை மதிக்கும்பண்பு,
கலகமிலா ஒற்றுமையே தங்கும்என்றார், கல்வியினால் இந்நாடு முன்னேறிற்றா ?
கனரக மாம் ஆயுதங்கள் முன்னேறிற்று, கல்வியினால் துவே சங்கள் பொறாமைமற்றுங்
கணக்கற்ற அதர்மங்கள் முன்னேறிற்று,
இராவணனின் ஆட்சியிலே இந்த நாடு
இருந்ததொரு காலத்தில் மக்களெல்லாம் விராவிஉள மகிழ்ச்சியிலே ஆடிப்பாடி
விண்ணவர்போல் இருந்ததனைப் படித்தோம், அந்தப் புராதனமாம் புகழ்மிக்க இலங்கைநாட்டில்,
போர்மேகம் நெருப்புமழை பொழியளங்கும், இராவணமாய் மக்களெல்லாம் இழந்துஒடி
இடம்பெயர்ந்து அகதியெனும் இழிவில்வீழ்ந்தார்,

Page 43
66 அகளங்கன் கவிதைகள்
ஆடுகளை மாடுகளைக் கோழிதன்னை,
ஆராய்ச்சி வேலைகட்காய்த் தவளைதன்னைக் காடுகளை வெட்டித்தான் வீழ்த்தினாலுங்
கதைப்பதற்குந் தடுப்தற்கும் உலகில்இன்று நாடுகளோ பலவுண்டு, நமதுநாட்டில்
நாய்களிலும் கேவலமாய் மனிதர்சாகும் வீடுகளே மலிந்திருந்தும் இதைத்தடுக்க
விருப்புமிகு அமைப்பெதுவும் உலகிலில்லை.
சிவனொளியும் பூரீபாதச் சுவடும் ஒன்றாய்ச்
சிறந்திருக்கும் இலங்கையிலே ஒளியுமில்லைச், சீவன்களின் வாழ்வுக்கோர் வழியுமில்லை.
சிறுவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் இவன் அவன் என் றெந்தவொரு பேதமின்றி
இந்நாட்டில் கொலையுண்டு வீழ்வதாலே சிவனருளுங் கிட்டவில்லை. புத்தர்செய்த
சிறப்பான போதனையும் பொய்த்ததிங்கே3
சோலைகளுந் தடாகங்களுஞ் சூழ்ந்தநாடு,
சுற்றியநல் மலைவளமும் மலிந்தநாடு, மூலைமுடுக் கெல்லாமும் இயற்கைத்தாயின்
முழு அழகும் மலர்ச்சிபெறத் திகழ்ந்தநாடு. காலைக்கதிர் போலுலகில் களித்துயர்ந்து
கற்பகமாய் அற்புதங்கள் விளைத்தநாடு, பாலைநில மாய்மாறி இன்னல்த்தீயில்
பரிதவித்துப் போவதையும் பார்க்கலாமோ
இனத்துவேச உணர்வுகளை விட்டொழித்து,
இனித்தானும் உரிமையொடு இந்தநாட்டுச் சனத்தொகையோர் வாழ்ந்திடவே திட்டம்போட்டுச்
சரித்திரத்தை மாற்றிடவே முயன்றாலன்றிக், கனத்தபெருஞ் சண்டைகள் தீருதற்குங்,
கண்ணிரின் பெருமழைகள் மாறுதற்கும், மனத்தளவில் நினைத்தேதும் பலனேயில்லை,
மக்களுக்காய்த் தலைவரெல்லாம் உழைக்கவேண்டும்.
 

அகளங்கன் கவிதைகள் 67
சொர்க்கபுரி என்றொருகாற் சொல்லிவைத்த
சுந்தரஞ்சேர் இலங்கையாம் இந்தநாடு, வர்க்க புரி யாயின்று வாழ்விழந்து
வளமிழந்து துன்பமாங் கடலில்மூழ்கித். தர்க்கபுரி யாய்ப்பலருந் தாந்தாம்பேசிச்
சண்டையிட்டுச் சந்தோசந் தனைஇழந்து துக்கபுரி யாயிருக்கும் நிலமைமாறிச்
சுந்தரமாய்ச் சமாதானந் துளிர்க்கவேண்டும்.
(வே று )
எங்கள் நாடு இன்னல்கள் தீர்ந்து திங்கள் போலத் திகழ்ந்திட வேண்டில், சமாதா னம்எனுந் தென்றல் வீசிச் சமத்துவ ஒற்றுமை தோன்றிட வேண்டும். ஆத்மீ கத்தொடு இணைந்த கல்வியால் அறிவினை லிதைத்து அன்பினை வளர்த்தால் மக்களெல் லோரும்மகிழ்ச்சியாய்க் கூடி ஒக்க வாழ்ந் திடவே வசந்தம் வரலாம். அவலக் குரலொலி அகன்றுஇம் மண்ணில் அமுதக் குயிலொலி நிதமும் பெருகுக. எரியும் நெருப்புகள் அணைந்து அகல்வி சொரியுங் கண்ணீர் தோன்றா தொழிக. உலக அரங்கில் எங்கள் நாடு பலவகைப் பெருமையில் பார்புகழ் பெறுக3

Page 44
68 அகளங்கன் கவிதைகள்
சிந்தனைசெய் தமிழா !
அன்றொருகால் அகிலத்தில் வாழ்ந்தமக்கள் அநாகரிக நிலையினிலே ஆடையின்றிக், கொன்றொருவர் தனைமற்றோர் உண்டுவாழ்ந்து கொழுத்திட்ட கால மதில் உலகில்நீயோ; நன்றுஇது தீதென்று அறிந்து வாழும் நாகரிக நிலையினிலே நலமாய்வாழ்ந்து! வன்திறலோடு அரசுமொழி வாழ்க்கைநீதி வகுத்திட்ட தமிழனன்றோ மறந்தாபோனாய்.
பன்றிகளாய்ப் பராரிகளாய் ஏனைமக்கள் பாவிகளாய் அலைந்திட்ட காலந்தன்னில்; ஒன்றிஒரு குலமாகத் தமிழர் என்போர் உயர்ந்திட்டோர் எனளவரும் போற்றும் வண்ணம்; இன்றிருக்கும் நீஅன்று சங்கம்வைத்து இன்தமிழை வளர்த்திட்டோர் மரபில்வந்து குன்றினைப்போல் கொள்கையிலே உயர்ந்துநின்றாய் ச் குடும்பமொடு கல்விநலம் குவியப்பெற்றாய்.
காவியங்கள் செய்தவன்நீ கவிதையென்னுங் கடலாடி முத்தெடுத்துக் களித்தவன்நீ, ஆவியிலும் மேலாக மானங்காத்து அதனிலுமே மேலாக நாட்டைக்காத்துச் சாவினையே துச்சமென மதித்து நல்ல, சரிந்திரத்தில் புகழ்விரித்த தமிழன்நீயா; பாவியெனும் நிலையினில்ே பஞ்சையாகப் பல்வேறு நாடுகளில் அகதியானாய்.
தொட்டளைந்து விளையாடிக் கையில் அள்ளிச் சுவைபார்க்க வாயினிலே போட்டுத்தின்று; பிட்டவித்து விளையாடி மகிழ்ந்த மண்ணைப் பிரிந்துநீ ஈழத்தும் ஏனைநாட்டுந் திட்டியுனை அகதியென்றே மற்றோர்ஏசிச் சிரிக்கின்ற நிலையினிலே துன்பப்பட்டுக் கட்டவிழ்ந்த நெல்லிக்காய் மூட்டையாகக் கதியற்று ஒவ்வொன்றாய்ப் பிரிந்தேபோனாய்.
ای
 

அகனகேன் கவிதைகள் 69
மட்டில்லா மகிழ்ச்சியொடு உன்னைத்தாங்கி மடியினிலே வளர்த்திட்ட மசக்கைக்காலந்: தட்டியுண்ட மாங்காயைக் காய்த்துநின்ற தாழ்வார மாமரத்தை மட்டுமல்ல, எட்டியெடுத்து; ஆசையுடன் உன் தாய்உண்ட இனியதமிழ் முற்றத்து மண்ணைவிட்டுக்; கட்டியநல் மனைவிமனை குழந்தைச்செல்வம் கதியற்றுக் கலங்கிடநீ கடல்கடந்தாய்.
நட்டுவைத்த தென்னைமரம் நாலுபக்கம் நன்றாக வளர்ந்திருந்த பனைமரங்கள், பொட்டுவைத்தாற் போல்க்கிணற்று மூலைதன்னில் பொத்திவந்த படியிருந்த கப்பல் வாழை; தொட்டிலுமாய்க் கமீட்டிலுமாய் உனைச்சுமந்தும்: தூக்கியடி வைத்துநடை பயிலு தற்காய்க் கட்டிவைத்த நடைவண்டில் மரமுமாகிக் காட்டிலுள்ள மரங்களையும் பிரிந்தேபோனாய்,
குரும்பையிலே தேர்செய்து இழுத்தா உந்தன் குழந்தைவிளை யாடிமகிழ் வெய்துஞ்சொல்லாப் அரும்பிவரும் மல்லிகையின் கொழுந்தைப்பிய்த்தா அழுங்குழந்தை தவழ்ந்துவிளை யாடுஞ்சொல்லாய், விரும்பி அது ஆமணக்கின் காய்பறித்து வீட்டின் பின் புறத்துள்ள தென்னங்கீற்றை உருவியெடுத்து ஈக்கிலிலே குத்தித் தையல் இயந்திரத்தைச் செய்துவிளை யாடுமோசொல்,
பப்பாசிக் குழலெடுத்து ஊதிக்கொண்டு பருவமழை பெய்திட்ட முற்றந் தன்னில்: எப்போதுஞ் சறுக்கிவினை யாடிவீழ்ந்த எங்கள் மண் எங்கே நீ இருப்பதெங்கே, அப்பாவின் தோள்களிலே தொத்திக்கொண்டு 'அரோகரா' ஒலிஎழுப்பிக் கச்சான்வாங்கித் தப்பாமல் தின்றுவந்த கோயில்ளங்கே, தமிழா நீ வாழுகின்ற நாடுஎங்கே

Page 45
70 அகனகேன் கவிதைகள்
செல்லடியிற் செத்துநீ மடிவதற்குந் தேசமெங்கும் அகதியெனத் திரிவதற்குங்: கல்வியிலே நிலைதாழ்ந்து போவற்குங் இஷ்டங்கள் துன்பங்கள் கணக்கில்லாமற் பல்கியதால் நோய்நெர்டியில் வீழ்வதற்கும்; பராமரிக்க ஆளின்றிச் சாவதற்கும், இல்லையென்றா நினைக்கின்றாய் காரணங்கள் இருக்கிறது சிந்தனைசெய் தமிழாநன்கு.
பக்கத்து வீட்டவனோ பசியில்வாடிப் பரிதவிக்க உன்வீட்டில் விழாவைச்செய்தாய் பக்கத்துக் கொட்டிலுக்குள் தண்ணீர் சிந்தப்; பாதியிராத் தூங்காமல் எழைவாடப்; பக்கத்தில் மாளிகையைக் கட்டிவாழ்ந்தாய்" பலநூறாய்ச் சாதிகளைப் பழித்துவாழ்ந்தாய் ஏக்கத்தில் வாடிநின்ற எதிர்த்தவீட்டு ஏழையினை அடிமையென ஏவல்கொண்டாய்.
காதலித்த பெண்ணொருத்தி கண்ணீர் சிந்தக் காசுக்கு ஆசைகொண்டு கைவிட்டாய்நீ பேதலித்த உள்ளத்தாய்; கோவில்சென்று பெரும்பகட்டைக் காட்டியதால்ப் பாவஞ்செய்தாய். சூதகத்தில் கொண்டவனாய் அயல்வீட்டானைத் தூற்றியே குழிபறித்து இன்பங்கண்ட்ாய். பாதகத்தால் பலநூறு கொள்கைபேசிப் பலநூறு தலைவர்களை வளர்த்துவிட்டாய்.
இவன்வன்னி. இவன்மட்டக் களப்பான்,தீவான்; இவன்யாழ்ப்பாணத் தவன் இவனோ திருமலையான் இவன்மலைநாட் டான் என்றே இழித்துப்பேசி இங்கிருக்குந் தமிழரிலே நொட்டைசொன்னாய், அவன் இவன் எல் லாந்தமிழன் என்றா வாழ்ந்தாய்; அதிகாரங் காட்டநீ பதவிபெற்றாய். எவனெவனா யிருந்தாலுங் கல்விநோக்கம் இழுபறியில் சீதனத்தைப் பெறுதலன்றோ,
 

அகளங்கன் கவிதைகள் 7/
சிந்தனையில் இதைநினைத்துப் பார்தமிழா சிரிப்பாக வேஇருக்கும்; ஆனால் உண்மை, எந்தஉல கத்திலுமே உனக்குநேராய் எங்கேனும் சுயநலத்தில் இருப்பாருண்டோடு என்தந்தை என்தாயார் என்வீட்டார்கள் என்றென்றே எப்போதும் உழைத்துழைத்து உன்சிந்தை சுயநலத்தில் ஊறிப்போச்சு: ஊரெல்லாம் இரத்தமுடை நாறிப்போச்சு,
அழகான தமிழிருக்க அதனைவிட்டு - அரைகுறையாய் ஆங்கிலத்தில் பேசிப்பேசிப் பழகிய நீ பால்கொடுத்து வளர்த்த தாயைப் பத்துமா தம்உன்னைச் சுமந்த தாயை அழகான தமிழினிலே 'அம்மா' என்றா அழைத்திட்டாய் சொல் நீயும் "மம்மி' என்றாய் மொழியுரிமை கேட்டுப்போ ராடிக்கொண்டே பற்றி, றிங்கோ ஜப்னா என அழைத்துக்கொண்ட்ாய்டு
வீட்டிலுள்ள பிள்ளைகட்கும் நாய்க்குங்கூட வேற்றுமொழிப் பெயர்வைத்தாய்; எக்காலத்தும் ஏட்டினிலே கையெழுத்தைத் தமிழிற்போடாய், எம்தமிழென் றுரிமைக்குரல் எழுப்பிநிற்பாய். பாட்டினிலே கதைகளிலே பள்ளிக்காலம் படித்திட்ட நல்லதை நீ கடைப்பிடிக்காய். காட்டிடுவாய் கல்வியில் நீ பெற்றிருந்த கர்வத்தைக் கடுஞ்செருக்கை மமதை தன்னை2
வேலிக்குச் சண்டையிட்டு வெட்டுக்கொத்தில் வீணாக வழக்காடிச் செலவுசெய்தாய்; வேலியே இல்லாமல்க் காணியெல்லாம் வீதிகளாய்க் காடுகளாய் ஒன்றாயிற்றே தாலிக்குச் சீதனமும் இனாமுங்கேட்டாய்: தமிழாஉன் மனையாளின் கழுத்தில்தொங்குந் தாலியினைக் கொழும்பில்நீ கண்டதுண்டா, த விட்டுப் பானையிலிருக்கும் சென்றுபார் நீ!

Page 46
72 அகனங்கன் கவிதைகள்
திருக்குறளை நீமறந்தாய்; சிறப்புமிக்க தீரமிகு புறநானூ றென்னும் பாக்கள் விருப்பினொடு கற்றாயா, ஒளவைசொன்ன விழிபோலுங் கருத்ததனைக் கற்றாயில்லை. உருப்போட்டுக் கம்பனின்கா வியத்தைநீயும் ஒருபோதும் கற்றிருக்காய்; சிலம்புசொன்ன கருப்பொருளில் மனம்வையாய்; தமிழா நீயுந் தமிழனென்றா சொல்கின்றாய் மானங்கெட்டாய்
ஒற்றுமையாய் இருந்திருந்தால் உந்தன்வாழ்வு உலகத்தில் உச்சநிலை அடைந்திருக்கும், வேற்றுமையை விதைத்ததற்கு வேலிகட்டி விஷமூற்றி வளர்த்திட்டாய் நாசஞ்செய்தாய், நேற்றுவரை வாழ்ந்தநிலை நினைத்துப்பாராய். நேசமொடு மனிதனென வாழ்ந்துபாராய் ஆற்றல்மிகு தமிழ்ப்பண்பைக் கடைப்பிடித்து அகிலத்தில் தமிழனெனத் தலைநிமிர்வாய்,
இனியாச்சுந் தமிழாநி எண்ணிப்பாராய் இளிச்சவாய் தனை இறுக்கி மூடிக்கொள்வாய். கனியிருக்கக் காய்கவர்தல் போன்றஉந்தன் கடும்பேச்சை விட்டொழித்துக் கணிவாய்ப்பேசு, அணிகள் பல வேண்டாமே ஒன்றாய்ச்சேர்ந்து அன்போடு ஒற்றுமையில் இன்பங்காண்பாய். தனிமனித சுகபோகச் சுயநலத்தைத் தவிர்த்துநீ தமிழனெனத் தலைநிமிர்வ்ாய்.
 

அகளங்கன் கவிதைகள் 73
சிறு மி நிகரிலா அழகு அம்மா இன்று பள்ளியிலே چین۔
ஆண்டு விழாவொன் றிருக்கிறது சும்மா சாட்டுச் சொல்லாமல்
சுறுக்காய் வாநாம் போய்வருவோம்:
அந்த விழாவில் தாய்மார்கள்
அனைவரும் வருவார் பள்ளிக்கு இந்த முறையும் வாராமல்
என்னைத் தனியே அனுப்பாதே;
த ம்
இல்லை என்னைக் கேளாதே
இருக்குது எனக்கு வேலைபல
தொல்லை தராமல் நீசென்று
சுகமாய்த் திரும்பி வாமகளே.
பள்ளிக் கூடஞ் சென்றமகள்
பாதி விழா வில் திரும்பிவிட்டாள்; துள்ளிக் குதிக்க மறந்தவள் போல்
துயரம் பொங்க வந்துநின்றாள்"
அன்னை உள்ளம் பதறிற்று
அணைத்துத் தலையை வருடிற்று
* உன்னைத் துயரஞ் செய்தவர்யார்
உடனே சொல்லு என்றாளே,
*" விழாவில் என்ன நடந்ததுசொல்
வீதியில் எதுவும் நடந்ததுவோ ?
அழாதே கண்ணே!' என்றுசொல்லி
அனைத்து உச்சி முகர்த்தாளே,

Page 47
74 அகளங்கன் கவிதைகள்
சிறு மி
என்னுடன் படிக்கும் பிள்ளைகளில்
எல்லோர் தாயும் வந்திருந்தார், என்ன அழகு அவர்களெல்லாம்
ஏன் நீ இப்படி இருக்கின்றாய்.
மல்லிகா வந்தான் தாயோடு
மல்லிகை போலே முகமம்மா,
அல்லியின் தாயின் அழகைநான்
அம்மா சொல்லி முடியாதே,
சந்திரா வின்தாய் முகம்பார்த்தேன் சந்திரன் போலே அழகம்மா,
இந்திரா வின் தாய் அம்மம்மா
இப்படி அழகைப் பார்த்ததில்லை,
ஒவ்வொரு தாயின் மூகமுந்தான்
ஒவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறது,
அவ்வுரு வெல்லாம் உனக்கில்லை
அழகே இல்லை உன்முகத்தில்,
கறுப்புத் தழும்பாய் உன்முகத்தில்
கரடு முரடாய் இருப்பதென்ன.
வெறுப்பாய் இருக்குப் பார்ப்பதற்கு
வேதனை தருது சொல்வதற்கு,
மகளின் வார்த்தை கேட்டஅன்னை
மனமே கலங்கிப் போயிற்று, முகமே நணைய அழுதுவிட்டு
முத்தங் கொடுத்துக் கதைசொன்னாள்.
த ப்
ஆறு மாதக் குழந்தையாய்நீ
அழகாய்த் தொட்டிலில் உறங்கையிலே வேறு வீட்டில் தண்ணியள்ள
விரைந்தேன் ஒருநாள்; அந்நாளில்
 

அகளங்கன் கவிதைகள் 75
அயலில் உள்ள வீட்டினிலே
அடுப்படி தன்னில் தீப்பிடித்துப் புயலாய்ப் பரந்தெம் வீட்டினுள்ளும் புகுந்து அத்தீ எரித்ததம்மா, தண்ணிர் அள்ளி வரும்போது
தகதக என்றே தீப்பிடித்து விண்ணை முட்டும் புகைகண்டேன்
வீட்டுள் ஒட நான்முயன்றேன்" எரியும் நெருப்பில் நான்செல்ல
என்னை யாரும் விடுவாரோ கருகிப் போக உன்னைவிட்டுக்
கண்ணே நானும் இருப்பேனோ கட்டிப் பிடித்த கைகளை நான்
கழற்றி வீட்டுள் பாய்ந்து விட்டேன். தொட்டில் தன்னில் நீகிடந்தாய்
தூக்கிக் கொண்டே ஓடிவந்தேன்
உன்னை அணைத்த பகுதியன்றி
உடலில் மற்றைப் பகுதியெல்லாம்
என்னை நெருப்பு எரித்ததடி
என்று சொல்லி அழுதாளே,
சிறு மி
தாயின் கதையைக் கேட்டவுடன்
ததும்பிய கண்ணிர் வழிந்தோட
வாயால் எதையும் சொவ்வதற்கு
வார்த்தை யின்றித் துடிதுடித்து.
அன்னையை இறுகக் கட்டியவள்
அன்பு முகத்தில் முத்தமிட்டாள்.
* உன்னைப் போலே அழகிந்த
உலகில் இல்லை இல்லை'யென்று
தாயைக் கட்டி முத்தமிட்டாள்
தாமரைக் கையால் வழிந்தோடும்
நீரைத் துடைத்து, முகம்பார்த்தாள்
** நிகரிலா அழகு ' உனக்கென்றாள்

Page 48
76 அகளங்கன் கவிதைகள்
கர்வம் பிடித்த முயல்
தூங்கும் ஆமை முதுகின்மேல் துள்ளிக் குதித்து முயலொன்று இங்கும் அங்கும் ஒடியதே எழுந்து ஆமை பார்த்ததுவே:
ஒட்டம் ஒடும் முயலினையே ஒட்டுள் ஒளிந்த ஆமைதான் வாட்டங் கொண்டு பார்த்ததுவே வந்து முயலுங் குதித்ததுவே.
முதுகில் குதிக்கும் முயலுக்கு முடங்கிக் கிடக்கும் ஆமைதான் எதிரில் நிற்க விரும்பாமல் எழுந்து ஒட முயன்றதுவே.
என்னை முந்த முடியாது எப்படி ஒடித் தப்பிடுவாய்
9
என்று சொல்லி முயல் மீண்டும் ஏறி ஆமை முதுகின்மேல் துள்ளிக் குதித்து விளையாடித் தொல்லை கொடுத்து மகிழ்ந்ததுவே:
* ஊர்ந்து செல்லும் ஆமைநீ
ஒடி எங்கே போய்விடுவாய். பாய்ந்து உன்மேல் ஏறிடுவேன் பார்நீ' என்றே முயல்சொல்லி,
ஆமை முதுகின் மேலேறி அங்கே நின்று குதித்ததுவே ஆமையைப் பார்த்துப் பரிகசித்து அந்த முயலும் சொல்லியது.
* உன்னை அழைத்தேன் வருவாயா
ஓட்டப் பந்தயம் ஒன்றிற்கு '
 

அகளங்கன் கவிதைகள் 77
தன்னை விடஒர் கலையினிலே தரத்தில் குறைந்த பேர்களுடன் போட்டி போட்டு வெல்வதையும் போற்றும் மனிதர் போலவே.
ஆமை தன்னைப் போட்டிக்கு அழைத்தது அந்த முயலன்று:
அடக்கம் முயற்சி உடையவர்கள் அடைவார் வெற்றி எனநம்பி ஆமையும் போட்டியை ஏற்றதுவே: அங்கிருந்தே அவை ஒடினவே,
கர்வம் பிடித்த முயல் ஒடிக் கண்ணை மூடி நித்திரையில் தன்னை மறந்து கிடந்ததுவே. தவழ்ந்து வந்த ஆமைதான்,
மெல்லச் சென்றும் இலக்கினையே முதலில் தொட்டு வென்றதுவே.
நித்திரை விழித்த முயல்பார்த்து * நீதான் வென்றாய் நான்தோற்றேன்.
கர்வம் பிடித்த தன்மையினால்
கவலை அடைந்தேன் தோல்வியிலே."
என்று சொல்லி அகன்றிடவே எதிரே மறித்து ஆமைதான்
** நன்று உந்தன் விருப்பினிலே
நாமிவ் வோட்டப் போட்டியிட்டோம். இன்று எந்தன் விருப்பினிலே இன்னொரு போட்டியும் வைப்போமா ?
நீரில் ஒடிப் பார்த்திடுவோம் நீஎன் னுடனே வருவாயா ? '

Page 49
78 அகளங்கன் கவிதைகள்
என்று ஆமை அழைத்திடவே எதுவும் சொல்லா நிலையினிலே; ' வெல்லும் இடத்தில் வெல்லாமல்
வேறோர் இடத்தில் வெல்வதுண்டோ' என்று சொல்லி அகன்றதுவே எல்லோ ருக்கும் அது பொதுவே,
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
சேற்று வயல்க் காட்டினிலே ஆண் - சேற்று வயல்க் காட்டினிலே
நாற்று நட வந்த பெண்ணே ! நாற்று முடி தன்னையெந்தன் நெஞ்சி னிலே நட்டதேனோ, ( சேற்று ) பெண் ;- ஏர் பதித்து நீ உழுதாய்
விழிபதித்து நான் உழுதேன் உழுத வயல் காயலாமோ உள்ள வயல் ஒயலாமோ (சேற்று ) ஆண்- களைபறித்து நிமிரும் போது
கண்கள் என்னைப் பறித்ததடி முந்தானையைச் செருகும் போதெல்லாம் முழுமனதும் உன்னை நாடுதே (சேற்று) பெண் - துன்பக்களை பறித்து விட்டேன்
இன்பப் பயிர் வளர்த்துவிட்டேன் அன்பு என்னும் பயிர்வளர ஆடி உன்னைத் தேடிவந்தேனே ( சேற்று) ஆண்- நெல்லோடு வளரு தடி
நெஞ்சத்திலே காதல்ப் பயிர் கல்லாமல் கற்று விட்டோம் காலம் வரும் காத்திரடி ( சேற்று ) பெண் - நெல்லு வயல் அறுவடையில்
நெஞ்சம் பொங்கி வழியுதையா கதிரடிக்கும் காலம் வந்தாலே கை இணைந்து சேர்ந்திடுவோம் (சேற்று)
 

அகளங்கன் கவிதைகள் 79
புதுவெள்ளம்
காகக் கூட்டம் போலவே கடலின் அலைகள் போலவே மேகக் கூட்டம் கூடுதே மின்னல் மின்னப் போகுதே,
தாளம் போடும் மேகங்கள் ததிங் கிணதோம் என்னவே மேளம் போல முழங்குதே மின்னல் மின்னித் தெறிக்குதே.
உழவன் முகத்தைப் பார்தம்பி உவகை பொங்கி வழியுதே மழையின் இருளைக் கண்டதால் மயிலின் மகிழ்வைப் பார்தம்பி,
காட்டு நரிகள் நேற்றுஇரவில் கத்தும் சத்தம் கேட்டதே வீட்டுக் கோழி சிறகைவிரித்து வெய்யில் காய்ந்து கிடந்ததே,
நேற்று இந்த நிலைகள் கண்டு நினைத்து மகிழ்ந்து சிரித்திட்டோம் இன்று வந்து பாய்ந்துஒடும் இனிய வெள்ளம் பார்தம்பி.
காய்ந்து வெடித்த நிலமெல்லாம்" கழனி உழவன் மனமெல்லாம் பாய்ந்து ஒடும் வெள்ளத்தைப் பார்தம்பி நீ பார்தம்பி !
பூப்பு நீரில் முழுகியே புதுநல் ஆடை கொழுவியே காப்பு அணிகள் பூட்டியே கன்னிக் கோலம் காட்டியே,

Page 50
80
அகளங்கன் கவிதைகள்
இளமை எழிலில் நிற்குமோரி இனிய கன்னி போலவே வளம் நிறைந்த வயலினை வந்துபார் நீ வந்துபார்.
காணப் போகும் முதலிரவில் காளை உள்ளம் போலவே நாணப் போகும் கன்னியினது நல்ல இதயம் போலவே.
உழவன் முகத்தில் தோன்றுகின்ற உவகை தன்னைப் பார்தம்பி ! உழவே போறான் வயலிலே உவகை முன்பு போகுதே,
ஏழைக்கு உன்கருணை கண்துடைப்பு
உழைப்பவன் பசித்து வாடுகின்றான் - அதை உண்பவன் கொழுத்து ஆடுகின்றான், இதுவோ இறைவா உன்படைப்பு - என்றும் ஏழைக்குன் கருணை கண்துடைப்பு, (உழைப் )
உலகம் மீண்டும் உருப்படுமா - இனி உண்மை சத்தியம் சரிப்படுமா ? உண்டாக்கி வைத்தவனே இறைவிா! - இப்பொழுது உன்னுடைய ஆதிக்கம் குறைவா ? ( உழைப் )
கொடுமைகள் மலிந்து கொலைகளும் மலிந்து கொள்கைகள் மெலிந்தது உலகத்திலே வறுமைகள் மலிந்து வாழ்க்கையில் நலிந்து வாடுது மானிடம் பூமியிலே. ( உழைப் )
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் ஓங்கும் ஒருநாள் வருமா உலகத்திலே நன்மையும் மேன்மையும் நாட்டிலே சிறக்கும் நாட்கள் வருமா பூமியிலே .? ( உழைப் )
 

அகளங்கன் கவிதைகள் 8/
கலகலக்கும் நெற்பயிர்
சலசலக்கும் ஒசையிலே
சந்தணச்செந் தென்றலிலே
கலகலக்கும் நெற்பயிரே சொல்லம்மா - நான்
சதிராட்டம் போடஎப்போ நாளம்மா
( சலசலக்கும் )
கன்னிப் பருவத்திலே கால்க் கட்டுப் போட்டவர்யார் என்னைக் கண்டால்க்கூட இந்தநானமா - அன்று ஏர்பூட்டி உழுதவனே நானம்மா
( சலசலக்கும் )
தென்றலுன்னைத் தாலாட்டும் செவ்வானம் பாராட்டும் செல்வமே வயல்நிறைந்த நெல்லம்மா - கவிதை
சொல்லுவேன் நீயிதனைக் கேளம்மா
(சலசலக்கும்)
பருவம் வாய்த்ததென்று பாய்விரித்துப் படுக்கிறியே பாவையுந்தன் நாணமெங்கே சொல்லம்மா-பலபேர் பார்த்திருப்பார் ஞாயமில்லை நெல்லம்மா
( சலசலக்கும் )
நாளையுன்னை நான் மணப்பேன் ராணியாக்கி வீட்டில்வைப்பேன் அதுவரைக்கும் காத்திருப்பாய் நெல்லம்மா - கண்ணிர் நெல்மணியாய்ச் சிந்தாதே போதுமா?
( சலசலக்கும்)

Page 51
82 அகளங்கன் கவிதைகள்
வந்தாரை வாழவைக்கும் வன்னி
நெற் கதிரால் உடல்மறைப்பாள் நீடு புகழ் வன்னிமங்கை சொற் கதிரால் பாடவந்தேன் சுந்தரச் செந் தமிழினிலே
( நெற்கதிர். )
கற் பனையில் ஊறிவரும் காவி யத்தில் பாடிவரும் விற் பனரின் இதயத்திலே வீற்றிருக்கும் வண்ண மகள்.
(நெற்கதிர்.)
ஆறோடி நிலம் நனைய ஆயிரம் குளம் நிறைய ஏரோடி உலக முய்ய ஏற்றந் தரும் எங்கள் தாயே.
(நெற்கதிரி)
பண்டார வன்னி யனும் பா ராண்ட கயிலை எனும் கொண்டாடும் வன்னி யனும் கோலோச்சும் வன்னி நகர்,
(நெற்கதிர் )
செந்தா மரை மலர்ந்து செந்தூர முகஞ் சிவந்து வந்தாரை வாழ வைக்கும் வளமிகு வன்னி நகர்.
( நெற்கதிர்)
 

அகளங்கன் கவிதைகள் 83
பாடுபட்ட உழவனுக்கு
ஆண்:- வானம் கறுக்கப் போகுது பொன்னம்மா - எங்கள் வயல்களெல்லாம் நிரம்பப் போகுது பொன்னம்மா. கானம் களிக்கப் போகுது பொன்னம்மா - எங்கள் கழனியெல்லாம் கொழிக்கப் போகுது பொன்னம்மா,
( வானம் ) பெண் - மயில்கள் எல்லாம் ஆடப்போகுது பொன்னையா - அதற்கு மத்தளங்கள் போடப் போவது யாரையா குயில்கள் இல்லை பாடல்பாடப் பொன்னையா -நாங்கள்
குரலெடுத்துப் பாடு வோமே பொன்னையா.
( வானம் . ) ஆண்:- கார்கால மேகங்கள் பார் பொன்னம்மா - வானில் கலைந்து போகும் நாரைகள் பார் பொன்னம்மா பெண்:- ஏர் உழவர் முகங்களைப் பார் பொன்னையா - அதற்கு நேர் உளதோ உவமை சொல்லப் பொன்னையா
( வானம்
ஆண்:- கார்த்திகைப் பூப் பூத்திருக்குது பொன்னம்மா - வரம்பில் கதிர்கள் விழுந்து பாத்திருக்குது பொன்னம்மா
பெண் :- வேர்த்த வேர்வை நெல்மணியாய் பொன்னையா-நன்றாய் விளைஞ் சிருக்குது வயலினிலே பொன்னையா re
( வானம்.) ஆண் - பாடுபட்ட உழவனுக்குப் பொன்னம்மா - இந்தப் பாருலகு சொந்தமடி பொன்னம்மா பெண் ;- கேடு கெட்டுப் போகலாமோ பொன்னையா - இந்தத்
கேள்வியத்தான் கேட்கின்றேன் நான் பொன்னையா
(வானம் )

Page 52
84 அகளங்கன் கவிதைகள்
புத்தம் புதுவருசம்
புத்தம் புதுவருசம்
பூரிப்பு நிறைஞ்சிருக்கு அக்கம்பக்க மெல்லாவீடும் கண்ணே கண்மணியே - என் கண்மணியே எங்கும் .
ஆனந்தம் நிறைஞ்சிருக்கு பொன்னே பூச்சரமே - என் பூச்சரமே. .
மரத்தில ஊஞ்சல்கட்டி மடிநிறைய மகிழ்ச்சிகட்டி புத்தாடை உடுத்துவரும் கட்டா கட்டழகா - என் கட்டழகா
புதுவரு சத்தப்பாரு குங்குமப் பொட்டழகா - என் பொட்டழகா. புதுவரு சத்தப்பாரு குங்குமப் பொட்டழகா,
வன்னி வவுனியாவே வளமுள்ள வயல்வெளியே தோகைமயில் ஆடும்மேடை கண்ணே கண்மணியே - என் கண்மணியே எங்கும். சோலைகளே நிறைஞ்சிருக்கு பொன்னே பூச்சரமே என்
 

அகளங்கன் கவிதைகள் 85
மந்தி மரக்கிளையில் மான் கூட்டம் திண்ணையிலே சந்தி தெருவிலெல்லாம் கட்டா கட்டழகா - என்கட்டழகா நல்ல. சங்கீதம் வண்டிசைக்கும் குங்குமப் பொட்டழகா - என் பொட்டழகா. சங்கீதம் வண்டிசைக்கும் குங்குமப் பொட்டழகா.
கருணைப் பெரும் வடிவே.
கருணைப் பெரும் வடிவே கலைமகளே . கைகூப்பினேன் உந்தன் திருவடியே ! அருளைத் தரும் வடிவே அடிமையேந்தன்.
அறிவில் அமர்ந்திடுவாய் அழகுறவே:
( கருணை )
கம்பன் கவிதையிலே அமர்ந்துகொண்டாய், கருத்தாய் திருக்குறளில் விருப்புக்கொண்டாய், இளங்கோ தந்த புதுச் சிலம்புகொண்டாய்,
இளம்பா ரதிப்புதுமை ஏற்றுக்கொண்டாய்.
(கருணை ) அகமும் புறமும்நீயே அறிந்துகொண்டேன்,
ஒளவைத் தமிழும்நீயே தெரிந்துகொண்டேன் ,
இகபரம் தருமெங்கள் பக்திக்கவி இசையும் நீயேதான் உணர்ந்துகொண்டேன்.
( கருணை ) அலைகளின் ஆடலிலே நடமிடுவாய், அருவியின் ஒசையிலே பதம்பிடிப்பாய், கலைக்குயில் பாடலிலே இசைதருவாய், கவிதரும் போதையிலே அசைந்திடுவாய். (கருணை) நானுன்னை அறிந்துகொண்டேன் நாயகியே, நலந்தருங் கவிதைதர நானறியேன். தா யுந்தன் பாதங்களைச் சரணடைந்தேன் தமிழ்தந்து எனை அணைப்பாய் சரஸ்வதியே.
(கருணை)

Page 53
86
அகளங்கன் கவிதைகள்
இறைவனின் பரிசு
எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா - இந்த இயற்கை; உன் பரிசல்லவோ இறைவா
எங்கள் இறைவா,
( எத் )
முத்தென நிலவு வீசி வரவே மோகனம் வண்டுகள் பாட இத்தரை மாந்தர் மனங்கள் இலயிக்கும் இயற்கையின் அழகினிலே, ( στό )
மலர்களில் வந்து தென்றலும் மோத வண்டுகள் சிந்து பாடிடுமே. கலைகளின் அழகைக் கண்களிற் காட்டிக் கலையினந் துள்ளி ஓடிடுமே ( எத் )
மயில்களின் நடனக் கோலத்தைக் கண்டு மீணிக்குயில் கூவிப் பாடிடுமே. வெயில்க்கதிர் கடலின் அலைகளில் வீசி விரித்திடும் ரத்ன தீபங்கள்ே ,
( எத் )
புல்நுனி மேலே பணித்துளிக் கோளம் புதுப்புது வர்ணம் காட்டிடுமே. நெல்மணி குனிந்து தென்றலில் அசைந்து நிர்மலன் தாளை வணங்கிடுமே.
( எத் )
 

அகளங்கன் கவிதைகள் 87
தாமரை மலர்கள் நிரம்பிய குளங்களின் தரிசனம் பிறவியின் பரிசல்லவோ. சாமரை வீசிடும் அலைகளின் கரங்கள் சரித்திரப் பெருமைகள் தருவனவோ,
( எத் ) கானத்து முல்லை வானத்தில் எழுந்த காட்சியோ வானத்து மீனினங்கள் வானத்து நாயகன் கார்த்திகை நாளில் வரிசையாய் வைத்த தீபங்களோ ( எத் )
மலைமகள் முகிலின் ஆடைகள் போர்ப்பது மனதினை மயக்கிடும் காட்சியன்றோ, கலைமகள் ஆடை இதுவென அருவி கரைபுரண் டோடுதல் மாட்சியன்றோ (எத் )
தனல் மீறித் தமிழ்பாம்ே
சந்தனத் தேரினிலே செந்தமிழ்ப் பாரினிலே சந்ததமும் உன்னை நான் காவுவேன் 1 - தமிழ்த் தாயேயுன் பெருமைதனை நான் பாடுவேன் (சந்தனத் )
முத்தென உன் முறுவல் முழுமதி உன் வதனம் முழுநேரமும் எண்ணி நான் பாடுவேன் - உன்னை மூச்சினிலே ஏற்று நான் வாழுவேன் (சந்தனத்)
தாலாட்டும் போதினிலே பாலூட்டும் போதினிலே தாயவள் ஊட்டியது தமிழ் எண்ணமே - இந்தக் தாரணி தனிலுன க்கு இணை யில்லையே (சந்தனத்)
தேனோடு சுவையெனவே பாலோடு நிறமெனவே
ஊனோடு கலந்துவிட்ட தமிழ் மணமே - உயிர் தானோடும் வரை நீயே என் மனமே (சந்தனத்)
தெருவோடு என் உடலின் அருகோடு தமிழ்ப்பாடல் வர வேண்டும் என் உடனே காடுவரை - அங்கே
தணல் மீறித் தமிழ் பாடும் எரியும் வரை (சந்தனத்)

Page 54
88 அஃ கன் கவிதைகள்
அன்னையவள் பாதம் வாழ்க
வாழ்க வாழ்க ! வாழ்க ! வாழ்க ! செந்தமிழாம் அன்னையவள் பாதம் வாழ்க வாழ்க ! வாழ்க!
எங்கள் மொழி உலகினிலே இனிய மொழியே . என்று நாங்கள் கோல்கள் கொண்டு இன்று ஆடோமோ. କ୍ଳିନ୍ଦୁ • • • • • • ଡ୍ର' . . . • • • (வாழ்க வாழ்க
சந்தோச மாக நாமும் சந்தோசமாக . நாமும் சந்தோசமாக. அழகான கைகளிலே கோல்கள் கொண்டு
Lurruq. I 15 TAău 95 sir... ... ஆடுவோமே. ஆடுவோமே அன்னையவள் செந்தமிழே வாழ்க என்று ஆடுவோமே (வாழ்க ! வாழ்க
என்ன இனிமை தமிழே என்ன இனிமை தமிழே என்ன இனிமை ஆசையிலே பெருமைபாடி ஆடுவோம் நன்றாய் ஆ. ஆ. ஆடுவோமே ஆடுவோமே (வாழ்க! வாழ்க
தமிழாலே இன்பமாம் தமிழேநம் செல்வமாம் தமிழாலே எங்கள் வாழ்வு தரணியிலே உயருமாம் தமிழின்றி வாழாத தங்கமனம் எங்கள் மனம் தமிழின்றி வீசாத தென்றல் எங்கள் தென்றலாம் வாழ்க! வாழ்க! செந்தமிழாம் அன்னை யவள் பாதம் வாழ்க, வாழ்க ! வாழ்க !
எங்கள் இனம் உலகினிலே பழைய இனமே என்று நாங்கள் பெருமை கொண்டு இன்று ஆடோ மோ ஒ. ତୁ)
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க எம்முயிராம் அன்னை தமிழ்
நீடு வாழ்க! வாழ்க ! வாழ்க
 


Page 55


Page 56
இலங்கையின் இத இலங்குகின்ற வன்
புழுதியிலே விளை புற்தரையிற் புரண்ே
வைக்போற் வாரியணைத் ஒளித்துப் பி ஓடி விளைய மாலுக்குள்.
பச்சைக் குறியன்
சாக்கிலே கட்டிவை மிச்சமாய் இருக்கின் விதைநெல்லில் படு
இயற்கையின் இனிமைகன வன்னிப் பிரே வளத்தில் வ
சின்னக் கவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமென
னிமண்ணின்
பாடிப்
டெழுந்து
கும்பியினை து அதில்மூழ்கி டித்து
பத்து, ன்ற த்துறங்கி,
அரவணைப்பில்
ர்டு மனமகிழ்ந்து,
தேச
ளர்ந்திட்ட,
ஞன் நான்.
அகளங்கள்.
*